கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.09.17

Page 1
IN DUU
Gogol urium6060 golu Golcio ஆரம்பம் விரோதி டு ஆவணி மீ"26 ஆம் உ(39)
விரோதி வருடம் புரட்டா (17.09.
- பேராசிரியர் அமரர் SETT. GODs
அம்பிகைக்குரிய தேவி தினங்களுள் சாரதா நவராத்திரியும் வசந்த நவராத்திரியும் தலைசிறந்தன வாகும். சரத் காலத்திலே புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் வரும் நவராத்திரி பெரிதும் பிரசித்திபெற்றது. சாந்திராயன வருஷப்பிறப் பின்போது-பங்குனி மாதத்து அமாவாசைக்கு அடுத்த பிரதமை தொடங்கி ஒன்பது நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவே வசந்த நவராத்திரி என வழங்குவது. பால்குண சுத்தத்திற்கேற்ப இந்நவராத்திரி பங்குனியிலும் சில வேளை சித்திரையிலும் நிகழுவதாகும். பூரீ ராம நவமி நாளே அம்பிகைக்குமுரிய மகா நவமியாகும். அம்பிகை உபாசனைக்குச் சிறப்பாகவுரியது அஷ்டமியா தலால் புரட்டாதி நவராத்திரியில் வரும் அஷ்ட மியையும், பங்குனியில் வசந்த நவராத்திரி யில் வரும் அஷ்டமியையும் மகா அஷ்டமி எனப்பெரியோர் வழங்குவர்.
E
முப்பெரும் சக்திகள்
நவராத்திரி தினங்கள் ஒன்பதையும் மும்மூன்றாக வகுத்து துர்க்கை லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Web whinduorgan.com e-mail editor Ghinduorgan.com நித் திங்கள் 1ஆம் நாள் பிரதி விலை 2009) ei II. 50.00
பத்திரி
லாசநாதக் குருக்கள் MA PhD -
க்திகளின் வழிபாட்டிற்குரிய சிறந்த நாள்களாகக் கொண்டு விரதம்
பூஜை முதலியவற்றை அநுஷ்டிக்கின்றோம். இவ்வழிபாட்டுமுறை இரு வராத்திரிகளுக்கும் பொதுவானதாகும்.
சரஸ்வதி, இலக்குமி, உமை என்றெல்லாம் e umgesies dit : கூறுவர். ஆனால் அம்பிகே, நீ இம்மூவரையும் உள்ளடக்கி இவர்களுக்கு அப்பாற்பட்ட நான்காம் நிலையின ளாகிய பராசக்திே ன்று தோத்தரிக்கும் பக்தர் கருத்து நவராத்திரி விழாவில் பாசிக்கப்படுபவள் துர்க்காலசுஷ்மி, சரஸ்வத்யாத்மிக சண்டிகா
ஸ்வரி என்பது தெளிவாகின்றது. இவ்வழிபாடு வீரம், செல்வம் கல்வியாகிய முப்பெரும் பேறுகளை, அதாவது உலகியல் நிலையில் நமக்கு வேண்டுவன யாவற்றையும்
பெருக்கும் என்பது நாம் பாரம்பரியமாக அநுபவ
ரீதியாக அறிந்து வருவதே.
மூன்று சக்திகளின் இணைப்பாகத் திருவுருவந் தாங்கித் திருவருள் பாலிக்கும் பராசக்தி பராபட்டாரிகை
மகாதிரிபுரசுந்தரி சண்டிகா பரமேஸ் 6. லலிதாம்பிகை எனப் பலவா திருநாமங்களால் ஏத்தி வழிபடு வதற்குரியவள் அம்பிகையின்

Page 2
இந்துசாதனம் 7. OS
உபாசனை சாதாரண தினங்களைக் காட்டிலும் நவராத்திரி வேளைகளிற் பன்பமடங்கு சிறப்பும், சக்தியும் வாய்ந்து பல்வேறு வகைகளில் அவளின் திருவருள் பெருக்கத்துக்கு உரியது.
அம்பிகை உபாசனை
எல்லாம் வல்ல அம்பிகையை நாம் உபாசிக்கும் வழிகள் பலவுள. அவற்றுள் கலியுகத்தில் யோகியர், ஞானியர் தவிர்ந்த பொதுமக்களால் அநுட்டிக்கப்பெறுவனவற்றுள் மிகப் பிரசித்தமானவை மூன்று. அவற்றுள் வேதசிவாகமங்கள் காட்டும் வழிகள் இரண்டு.வைதிக மரபையே அடியொற்றிக் கிரியா காண்டம் வகுக்கும்தந்திர சாஸ்திரங்கள் வழங்கும்வழி இன்னொன்று.
வைதிக மரபில் வெளிப்படும் அம்பிகை, அக்கினியில்
ஆவிர்ப்பவித்து அடியார்கள் வழங்கும் ஆகுதிகளை ஏற்றருளி அநுக்கிரகம் புரிகின்றாள்.
ஆகம மரபுக்கமையப் பிரதிட்டிக்கப் பெற்றிருக்கும் திருவுருவிற் சாந்நித்தியமாகும் அன்னைத் தெய்வம்,அர்ச்சிப்பவர் நீராட்டி, புத்தாடைகள் புனைவித்து, அழகுமிகு அணிகலன்களை
அணிவித்து, அறுபத்து நான்கு உபசாரங்களையும் சமர்ப்பிக்க மனங்கனிந்து ஏற்றுத் திருவருள் பாலித்தருளுவாள்.
அம்பிகை எங்கும் எழுந்தருளித் திருவருள் பாலிப்பினும் அவள் விசேடமாக வெளிப்பட்டு எழுந்தருளுமிடம் பூரீசக்கரம். இதன் சிறப்பினை விதந்து விதந்து ஆழ்ந்து அநுபவித்துப் பாடியருளிய அநுபூதிமான்கள் பலருள் திருமூலநாயனார் தலைசிறந்தவர்.
வைதிக மரபில் அம்பிகை வழிபாடு
அம்பிகை சிதக்நிகுண்டத்தில் தோன்றியவள். தேவர்கள் காரியங்களைச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றியருளியவள். இவ்வாறு அக்கினியில் தோன்றும் விசேட இயல்பு வாய்ந்த மரபினைக் கிரியா கலாபங்களால் எரியோம்பி, அக்கினியில் ஆவிர்ப்பவிக்கச் செய்து அவளருள் வேண்டினால் பேறுகள் யாவும் கிடைக்கப்பெறுவோம் என்ற அடிப்படையே அம்பிகையை நோக்கி நிகழ்த்தும் யாகத்தின் தனி நோக்கு. யாகத்திற் குண்டங்களில் தீ வளர்த்து அவ்வக் குண்டங்களில் அவள் பல்வேறு அம்சங்கள் ஓங்கி விளங்க எழுந்தருளுகிறாள். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் இணையப் பேருருவந்தாங்கி நிற்கும் சண்டிகை என்பாளை அக்கினியில் வழிபடும்போது நிகழ்வது சண்டியாகம். இதனைச் சண்டியஞ்ளும் எனவும் வழங்குவர்.
 

2OO9 விரோதி புறபீடாதி 01
யாக குண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்றெழும் ழநீசக்கரத்தில் உச்சியில் உள்ள பிந்துவில் அம்பிகை பராசக்தியாக, பரமேசுவரனான பரமசிவனின் மடியில் வீற்றிருக்கின்றாள். அவனிடமிருந்து அவளைப் பிரிக்கமுடியாது. அவள் திருக்கரங்கள் நான்கு. அவற்றுள் பாசமும், அங்குசமும் பின் கைகளை அணி செய்கின்றன. முன் கைகளில் ஒன்றிற் கருப்பம்வில், மற்றதிற் பஞ்ச பாணங்கள். இங்கே திருவருள் பாலிக்கவும், காப்பாற்றவும் கைகள் இல்லையே என்ற கவலைக்கு இடமில்லை. அவற்றை அவள் திருவடிகளே அநாயாசமாகச் செய்தருளுகின்றன.
அம்பிகையை வழிபடும் அடியவர்கள் அக்கினியிற் பொலிந்து தோன்றும் இவ்வரிய திருவடிவங்களை அவரவர் தகுதிக்கேற்பப் பாவனை முதலியவைகளால் உணருகின்றனர். திருக்கோயிற் கருவறையுள் மந்திர சக்தி முதலியவற்றால் வெளிப்பட்டருளி நிற்கும் திருக்கோலம் காணும் அன்பர் கூட்டத்திற்கு அக்கினியில் இதே அடிப்படையில் அருள்பாலிக்க வெளிப்பட்டிருக்கும் காட்சி மனதிற் பதிவதிற் சிரமம் எதுவும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. பாரம்பரியச் சமய உணர்வு இதை நன்றாக உணர்த்தி நிற்கும்.
ஒருவர் எமக்கு ஒரு பொருளைக் கொடுக்கும்போது அதைக் கைகளினாற் பெறுகின்றோம். கை எமது உடம்பின் ஒரு உறுப்பு
மட்டுமே. அதேபோல், இறைவன் திருவுருவில் எட்டு உறுப்புக்களில் ஒன்றான அக்கினியிலே அவளுக்கு நாம் சமர்ப்பிக்கும் பொருளைக் கொடுத்தல் மரபு. அம்பிகையின் அம்சமான அக்கினியிற் கொடுக்கப்படும் உபசாரங்களை அம்பிகை ஏற்றருள் செய்கின்றாள் என்பதேயாகத்திற் கொடுக்கப்படும் ஆகுதிகளின் பயன்.
அக்கினியில் ஆவிர்ப்பவித்திருக்கும் அம்பிகைக்குப் பூசனைக்குரிய பொருள் யாவையும் அறுபத்து நான்கு உபசாரங்கள் உட்படச் சமர்ப்பிக்கும் மனப்பாங்கு பக்தியின் உச்சநிலையை அடைகின்றது.
அம்பிகையின் அருளின்றேல் எமக்கு இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் உய்வில்லை. சிவத்தை அடையச் செய்பவள் சக்தி. சிவஞானப்பேற்றை வழங்கும் சிறப்பினளாதலால் இவளுக்குச் சிவஞானப்பிரதாயிநீஎன்றொரு திருநாமமுண்டு.
இதுகாறும் கூறியதற்கேற்ப வைதிக மரபினின்று அக்கினி மூலமாகவும் ஆகம மரபு தழுவிய விக்கிரக ஆராதனையாலும் சாக்த தந்திர முறைகளைத் திரட்டித் தரும் திருமூலநாயனார் எடுத்துக் கூறியருளும் சிறப்பு வழி நின்று பூரீசக்கரத்தில் ஆவாகித்தும் மூவகை வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கும் ->

Page 3
இந்துசாதனம் 7.O9
போது அம்பிகையின் உபாசனை கைகூடுகின்றது. அம்பிகை எளிதில் வழிபடற்குரியவள். விரைந்து திருவருள் புரிபவள். வேண்டுவார் வேண்டுதற்கதிகமாகவே வழங்கும் இயல்பினள். எங்கள் மேற்பதியும் அவளின் கடைக்கண் பார்வை நல்லன எல்லாந்தரும் என்பதனால் இவளையே குலதெய்வமாகக் கொள்பவர் பலர். இவர்களுக்கு வேண்டுவது யாதுமே இராது. தங்கள் நன்றிக்கடனைச் செலுத்த இவளைப் பூசிக்கும் தினங்களாக நவராத்திரி தினங்களையே நாம் தேர்தெடுக்கின் றோம். இத்தினங்களில் அம்பிகையை உபாசிப்பவர்களுக்குப் பல்வகை நன்மைகள் மென்மேலும்பல்கிப் பெருகும் என்பது துணிபு.
அம்பிகையின் உபாசனை
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி வழிபடும் முறையை அப்பர் சுவாமிகள் காட்டி யுள்ளார்கள். வழிபாட்டில் ஏத்திப் புகழ்ந்து பாடுவது ஒர் அம்சம். மகாத்மியம் என்றால் : பெருமை, புகழ் என்பது பொருள். தேவி மகாத்மியம் என்னும் நூல் அம்பிகையின் புகழ் கூறு வது. மதுகைட பன், மகிடாசுரன், சும்பன், - நிசும்பன் முதலிய பேராற் றல்மிக்க அரக்கர்களைத் தடிந்து தேவரைக் காத் தருளிய வரலாறு அம்பிகை யின் வீரம்பற்றியதேயாகும். இது வெறும் வீரம்காணும் மகாத்மியம் மட்டுமன்று. இது மந்திர சாஸ்திரமாயும் உள்ளது. இதனைப் பக்தி யு டன் படிப்பதனால் இம்மையிற் போகபோக்கி யங்களை அநுபவிக்கும் வாய்ப்புக்கள் மட்டுமல் லாமல், மந்திரசக்தி பெரிதும் சுவறிய நூலாதல் பற்றி இதனால் தெய்விக பலத்தை யும் அசாத்திய நிலையில் அடையலாம். இது இம்மை மறுமைப் பயன்களைத் தருவது. இம் மகாத்மிய ஜபம் ஹோமம் எல்லையற்ற நன்மைகளைத் தரவல்லன.
ஆகம மரபில் அம்பிகை
ஆ க ம க் கி ரி  ைய முறையில் மூர்த்திகளைத் தேவாலயங்களிற் பிரதிட்டை செய்து வழிபடுதல் முக்கிய அம்சமாகும். பக்தியை அடிப்படையாகக் கொண்ட ஆகமக் கிரியைகள், தெய்வத்திற்கு அபிடேகஞ் செய்தல், ஆடை புனைதல்,
முரீ கமலாம்பிை
(நல்லூர் முரீ கைலாஸநாத
O
 

2OΟ9 விரோதியுறிபீடாதி 01
அணிவகைகளால் அலங்கரித்தல், மாலை சாத்துதல், மலரால் அருச்சித்தல், நிவேதித்தல், தூபதீபங்களால் ஆராதித்தல், தோத்திரஞ் சொல்லுதல், தலையாரக் கும்பிடுதல், கூத்தாடுதல் முதலியவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்ட உபகுலு முறைகளைக் கொண்டு விளங்குவன. iசீனை அறுபத்துநான்கு உபசாரங்களைக் கொண்டதி ற்றின் விரிவு விரிந்த வழிபாடாகவும் அமையும்
தாந்திரிக முறையில் முறிந்வித்யோபாசுனன்
சாக்தமத சம்பிரதாயங்களை, தய்ாசனை முறைகளை விரித்துரைப்பன தந்திர சாஸ்திரங்கள், சக்திபரமான இந்நூல்கள் கூறும் வழிபாடுகளிற் சிவபெருமானுக்கு உயர்ந்த இடமுண்டு. ஆனால், அம்பிகையின் இணைப் பினாற் சிவத்தின் சிறப்பு ஒங்கு X வதைத் தாந்திர சாஸ்திரங்கள் அடிக் கடி கூறுகின்றன. இவற்றைச் சுருக்கிக்கூறுவ தாயின் சிவனும் சக்தியும் அ பின் ன மா ன வ ர் க ள் என்பதேயாகும். தாந்திரிக வழி பா ட் டு நெறி யி ல் அம்பிகையை பூரீசக்கரம் என்ற யந்திரத்தில் நடுவில் பிந்துவில் எழுந்தருளுவித்துப் பரிவாரங் கள் தனித்தனி ஆவரணங்க ளாக ஏனைய கோணங்களில் அம்பி கை யை நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதாகப் பாவனை செய்து வழிபடுவது பூரீசக்கர பூசையாகும்.
பூஜை மந்திரத்துள் நுழைந் தவர் ஆசமனத்தால் தன்னைத் தூய்மையாக்கிக் குருவைத் தன் சிரசிற் பூசித்து, தேவர்கள் வருகையையும் தீய சக்திகள் அகல்வதையும் உன்னி, மணி யின் நாதத்தை எழுப்பிச் சங்கற் பித்துத் தான் அமர இருக்கும் ஆசனத்தை அர்ச்சித்துத் தன் உடம்பிற்குப் பாதுகாப்பளிக்கும் தேகரட்சை செய்து, தேவி எழுந் தருளுவதற் காக அமைக்கப் பெற்றழரீ சக்கரத்தைச் சுற்றிலும் மதில் களினதும், கோட்டைகளி னதும் நாற்பத்து நான்கு வரிசை களைப் பாவனையாகப் பூசித்தல் பூரீ சக்கர பூசையின் முதலம்ச மாகும்.
க அம்பாளும் Dரு யந்திரமும் சுவாமி தேவஸ்தானம்)
பூரீ சக்கரத்திற் பூசை செய்யும்முன் பூசை செய்பவர் தன் பெளதிகஉடம்பைத் தெய்விக உடம்பாக மந்திர தந்திர பாவனாதிகளால் ஆக்கிக் கொள்ளுதல் கிரியையின் இரண்டாவது நிகழ்ச்சியாகும். இடையிலே வரக்கூடிய விக்கினங்களை விரட்டி அகற்றுதல் விக்நோத்ஸாரணம் எனப்படும் கிரியையாகும்.
-->

Page 4
இந்துசாதனம் 7OS
தெய்வ அம்சமே நிறைந்த தெய்விக சரீரத்தில் உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை தெய்வங்களைத் தனித்தனி இடத்தையும், திருநாமத்தையும்கூறி எழுந்தருளச் செய்யும் கிரியை நியாசம் எனப்படும் கிரியையாகும். உடம்புமுழுவதுமேயூரீ சக்கரமாகிவிடும், உடம்பில் ஆறு சக்கரங்களிலேயும் அவ்வத் தேவதைகள் நியாசம் செய்யப் பெறுவார்கள். இவ்வாறாகப் பதினெட்டு வகையான
நியாசங்கள் உபாசிப்பவனைத் தெய்வமாக்கிவிடுகின்றன.
தன்னைத் தகுதியாக்கிக் கொண்ட உபாசகன் அம்பிகையின் பூசையில் பிரவர்த்திக்கின்றான், பிரவேசிக்கின்றான். பூசைக்கு முக்கியமாக வேண்டுபவை பாத்திரங்கள். பல்வேறுதரப்பட்ட பாத்திர தீர்த்தங்கள், பூசையில் அவ்வத் தேவதைக்கு உரியவையாகும். கலச பாத்திரம், சாமானியார்க்கிய பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், சுத்திபாத்திரம், குருபாத்திரம், அலிபாத்திரம், பலிபாத்திரம், ஆத்ம பாத்திரம் என்பவை கிரமப்படி பூசித்து அமைக்கப் பெறுவனவாகும். இவை நீ சக்கர பூசையின்போது அவ்வப்போது பயன்பெறுவன. விசேஷார்க்கிய பாத்திரமே பூசையில் விசேடமாகப் பயன்படுவதாகும். இவ்வாறு பூஜாபாத்திரங்களை ஒழுங்குபடுத்தி அமைக்கும கிரியை பாத்திர சாதனம் எனப்படும்.
அடுத்து நிகழ்வது பூரீ சக்கர பூஜையின் சிகரமாய் விளங்குவது. எங்கும் நிறைந்துள்ள இறைவி விசேடமாக நாமுணரும் வண்ணம் உறைந்தருளும் இடம் உள்ளக்கமலமாகும். உள்ளக்கமலத்திற் கொலு வீற்றிருக்கும் அம்பிகைக்கு இனி வெளியே நடைபெறவிருக்கும் பூஜையை மானசீகமாக உள்ளே நிகழ்த்தி, அவ்வவ்வாதார சக்கரங்களிற் பரந்திருக்கும் ஆவரண தேவதைகளை அம்பிகையில் ஒடுங்க வைத்து, அம்பிகைக்கு நவாவரண பூஜை மானசீகமாக நிறைவுற நிகழ்த்துவித்து, சுழிமுனை வழியே பிரமரந்திரம் அடைப்பித்து, உபசாராதிகளின் பின் நாசிகைத்துவார வழியாகத் திரிகண்ட முத்திரையுட் குவித்து, நிறைந்த புஷ்பாஞ்சலிக்குட் புகுவித்து, வெளியேயுள்ள பூரீ சக்கர மகாயந்திரத்தின் நடுவே விளங்கும் பிந்துவில் எழுந்தருள வைப்பது ஆவாகனம் ஆகும். ஆவாகனத்தைத் தொடர்ந்து அம்பிகைக்கு
Nasio
தத்துவங்களை அறிந்து வழிபடுங்கள்
குடும்பங்களிலும் சமூகத்திலும் நல்லுறை மகிழ்ச்சியையும் நற்பண்புகளையும் உறுதிசெய்ய இை கடமைகளாக மட்டும் நோக்காமல் அவற்றின் தத்துவங் அப்போதுதான் சமய வழிநின்று வாழலாம்; பயனும் தன்னம்பிக்கையும்தானாகவேவந்துவிடும்.
 
 
 
 
 
 

2OO9. விரோதி புறபீடாதி01
அறுபத்துநான்கு உபசாரங்கள் நிகழ்த்தற்குரியன. இவற்றுக்கு உரியவள் இவளே. அடுத்து நிகழ்வது பரிவாரார்ச்சனை என்பதாகும். பரிவாரங்கள் அம்பாளைச் சுற்றிலும் ஒவ்வொரு கோணத்திலும் தனித்தனியாக எட்டு வரிசைகளிற் சுற்றியிருப்பன. எட்டெட்டு வரிசையிற் சேரும் அம்பாளுடன் பொருந்தியுள்ள பரிவாரங்களுக்குமாக ஒன்பது வரிசையில் நடைபெறுவது
நவாவரணபூஜை எனப்படும்.
அம்பாளின் பூஜை
அதைத் தொடர்ந்து வேறு பரிவாரங்களுக்கும் பூஜை நிகழ்ந்த பின் அம்பிகையின் பூஜை, திரிசதி அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம், குலதீபம், கற்பூரநீராஜனம், மந்திர புஷ்பாஞ்சலி, காமகலாத்தியானம், பலிதானம், தோத்திரம் ஆகிய அம்சங்கள் இடம்பெறவிரிந்துநிகழும்.
அடுத்து நிகழ்வது அம்பிகைக்குத் திருப்தியளிக்கும் சுவாஸினிபூஜா எனப்படும். உபாசகன் அம்பாளின் அர்க்கிய விசேட தீர்த்தத்திலிருந்து தத்துவ சோதனை செய்து தன்னை நிறைவு செய்துகொள்ளுகிறான்.
இதுவரையும் நிகழ்ந்த பூஜையை அந்தர்யாமியாகிய இறைவி தாமே உள்நின்று நிகழ்த்தியமையால், தான் தவறேதும் நிகழ்த்தியிருப்பினும், அது அவள் நிகழ்த்திய தவறே என்பதை அவளுக்குப் பணிவுடன் நினைவூட்டி, தான் இதுகாறும் நிகழ்த்திய பூஜையை அம்பிகையின் வரதகரமான இடக்கையிற் சமர்ப்பிக் கிறான். எக்குறையாயினும் பொறுத்தருள வேண்டுவதுடன் அமையாது, அம்பிகையை நன்கு உபாசிப்பவர், நாட்டைப் பரிபாலிப்பவர், இந்திரியங்களை அடக்கி இறைவழிபாடாற்றும் தபோதனர்கள், தேசம், ராஷ்ட்ரம், மனிதகுலம் அரசோச்சும் பரம்பரை யாவர் மாட்டும் சாந்தி நிறைதல் வேண்டும் என்பது
பூஜையின் இறுதி வேண்டுகோளாகும்.
உலகத்திலுள்ள யாவும் பிரமம் முதல் ஸ்தம்பம் வரை யாவும் - சுருங்கக்கூறின் உலகம் யாவும் யஞ்ஞத்தால் -யாகத்தால் நிறைவு பெறுவதாக என்பதேபூஜையின் இறுதியிற் கேட்கும் முழக்கவொலி
வயும் மன நிம்மதியையும் நிலைநாட்டி வாழ்வில் றவழிபாடு அவசியம். சமய வழிபாடுகளை சம்பிரதாயக் களையும் புரிந்து கொண்டு அவற்றில் ஈடுபடவேண்டும். கிடைக்கும். இறைவன் மீது நம்பிக்கை ஏற்படும்போது,
-தமனோகரன்
அ.இ.இந்துமாமன்றத்
துணைத் தலைவர் காலிங்கமாவத்தை பூனி பத்திரகாளியம்பாள் கோவிலில்.)

Page 5
இந்துசாதனம் 7OS
6lFITib6ŭjlul LIITIL'IpiñT 6LIT(j
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
தலம்: திருவதிகை வீரட்டானம் பண்: லகால்லி
திருச்சிற்றம்பலம்
நெஞ்சம் உமக்கே யிடமாகவைத்தேன்
நினையா தொருபோ துமிருந் தறியேன் வஞ்சம் மிதுவொப் பதுகண் டறியேன்
வயிற்றோ டுதடக் கிமுடக் கியிட நஞ்சா கிவந்தென் னைநலி வதனை
நணுகா மல்துரந் துகரந் தரமிடீர் அஞ்சே லுமென்னிர் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
பதவுரை: அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நெஞ்சம்- எனது மனதை உமக்கே - கடவுளாகிய உமக்கே இடமாக வைத்தேன் - உறைவிடமாக அமைத்தேன், ஒருபோதும் - ஒரு காலத்தும், உம்மை நினையாது இருந்து அறியேன் - உம்மை நினைக்காமல் இருந்ததில்லை, (எனினும்) இது ஒப்பது - இதைப் போன்றதாகிய, வஞ்சம் - வஞ்சத்தனம் உள்ள ஒரு நோயை, கண்டறியேன் - நான் காணவில்லை, வயிற்றோடு - குடரோடு, துடக்கி முடக்கியிட-கலந்துமுறுக்கும்படி, நஞ்சு ஆகி வந்து - விடம்போல் தோன்றி, என்னை நலிவதனை - என்னை வருத்துவதை, நணுகாமல்- என்னைச் சேராமல், துரந்து - நீக்கி, கரந்தும் இடீர் - ஒழியச் செய்தீருமில்லை, அஞ்சேலும் என்னிர் - அஞ்சற்க என்றுகூறி அருளினீருமில்லை.
பொழிப்புரை: வீரட்டானத்திலிருக்கின்ற பெருமானே! என் மனத்தை உம்முடைய இருப்பிடமாக்கி வைத்திருக்கின்றேன். எப்போதும் உம்மையே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். நஞ்சைப்போன்று இந்த நோய் வந்து குடரோடு கலந்து என்னை முறுக்கி வருத்துகின்றது. இதைப் போன்ற (கொடிய) நோயை நான் முன்னொருபோதும் காணவில்லை. இந்த நோயை நீர்
ஒழிக்கின்றீரில்லை; பயப்பட வேண்டாம் என்று எனக்குச்
C
 

2O09 விரோதி புறபோதி 01
ஊநனர்ந்து சொல்லுவோம்
சொல்கின்றீருமில்லை.
பணிந்தா ரனபா வங்கள்பாற் றவல்லீர்
படுவெண் தலையிற் பலிகொண் டுழல்வீர் துணிந்தே உமக்காட் செய்துவா ழலுற்றால்
சுடுகின்றதுசூ லைதவிர்த் தருளிர் பிணிந்தார் பொடிகொண் டுமெய்யூ சவல்லீர்
பெற்றம் ஏற்றுகந் தீர்சுற்றும் வெண் தலைகொண்டு அணிந்தீ ரடிகேள் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம் மானே.
பதவுரை: அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! பணிந்தாரன - வணங்கினவர்களுடைய, பாவங்கள் - பாவங்களை, பாற்றவல்லிர் - ஒழிக்கும் வலிமையுடையீர், வெண்படுதலையில் - வெள்ளிய படுதலையில், பலி கொண்டு உழல்வீர் - பலி ஏற்றுத் திரிவீர், பிணிந்தார் - இறந்தவர்களுடைய, பொடி கொண்டு - சாம்பலாலே, மெய்பூசவல்லீர் - திருமேனியிற் பூசும் வலிமையுடையீர், பெற்றம் - இடபத்தை, உகந்து எற்றிர் - விரும்பி, ஊர்தியாகக் கொண்டீர், வெண்தலை கொண்டு - வெள்ளிய தலைகளை மாலையாகக் கொண்டு, சுற்றும் - திருமேனி முழுவதும், அணிந்தீர் - அணிந்து கொண்டீர், அடிகேள்- கடவுளே,உமக்கே தேவரீராகிய உமக்கே, துணிந்து - துணிவுடன், ஆள் செய்து ஆட்பட்டு, வாழலுற்றால் - வாழத்தொடங்கினால், சூலை சுடுகின்றது - சூலை நோய் வருத்துகின்றது, தவிர்த்து அருளிர் - (இந்த நோயை) விலக்கி, எனக்கு அருள்புரிவீராக.
பொழிப்புரை: தலை ஒட்டிற் பலி ஏற்கின்றீர்; இறந்தோரின் சாம்பலைத் திருமேனியிற் பூசிக்கொள்கின்றீர்; இடபத்தை வாகனமாக ஏற்றுள்ளிர்; தலை ஒடுகளை மாலையாக அணிந்துள்ளீர்; உம்மை வணங்குபவர்களின் பாவங்களை ஒழிக்கும் வல்லமை உமக்கு உண்டு (எனினும்) உமக்கு ஆட்பட்டு வாழத் தொடங்கினால், சூலைநோய் என்னை வருத்துகின்றது; அதை விலக்கி அருள்புரிவீராக. 人
ヒつ

Page 6
இந்துசாதனம் 7OS
திருமணவிழா
எங்கள் ஊரிலே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிப் பெண்ணின் தந்தைக்கு நான்கு சோடி செருப்புத் தேய்ந்ததாகக் கூறுவார்கள். இங்கே பெண்ணைப் பெற்றவர்கள் பெண் வளர வளரக் கவலையினால் தேய்ந்துபோவதைத்தான் காண்கின்றோம். எங்கள் சமூகத்தில் காசுக்காகத்தான் கல்யாணம் நடக்கிறது. கல்யாணத்துக்காகக் காசு கொடுப்பதில்லை. இந்தியாவில் வரதட்சணை என்ற பெயரில் வழங்கப்படுவது இங்கு சீதனம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஸ்திரீதனம், பூரீதனம் ஆகி அது சீதனம் ஆகிவிட்டது. பெண்ணின் அழகிற்கோ, குணத்திற்கோ, குலத்திற்கோ, கல்விக்கோ இருந்த முக்கியத்துவம் எல்லாம் மறைந்துபணத்திற்கே தான் சமூகம் முதலிடங்கொடுத்துள்ளது.
பணம் கூடக்கூடக் கருமை நிறமுடைய பெண் செம்மை நிறமுடையவளாகிறாள். குணமில்லாதவள் குணவதியாகி விடுகிறாள். இதனால் கல்வி, ஒழுக்கம், குணத்தில் சிறந்த பெண்கள் திருமணமாகாது வீட்டுக்குப் பாரமாயிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.
s آنها بلفاسالمصری روستش ششته به
సోలో
இதி
- ஆத்மஜோதி நா. முத்தையா -
வரனுக்குக் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்று கூறப்படும். அன்னதானம், கோதானம், பூதானம் போன்ற எந்தத் தானத்தைக் கொடுக்கும்போதும்தானம் கொடுப்பவர்தானத்தைப் பெற்றுக் கொள்பவருக்குத் தட்சணை கொடுப்பது வழக்கம், அதுபோல, கன்னியைத் தானஞ்செய்பவர் கன்னிகாதானத்தைப் பெற்றுக்கொள்பவருக்குத் தட்சணை கொடுப்பது வழக்கம். தட்சணைக்கு வரையறை இல்லை. ஐந்து சதம் வைத்தாலும், தட்சணைதான்; ஐயாயிரம் ரூபா வைத்தாலும் தட்சணைதான். ஆனால் மக்கள் மனம்போல வரதட்சணை வளர்ந்து அதுவே முக்கியத்துவம்பெற்றுவிட்டது.
இந்தோநேசியத் தமிழர்களிடையே மாப்பிள்ளை வீட்டார்கள் பெண்கேட்டுச் செல்வது வழக்கம். சிவபெருமான், உமாதேவியார் திருமணத்தின்போது சிவபெருமான் சப்தரிஷிகளை இமயமலை அரசனிடம் பெண்கேட்ட வரலாறு கந்தபுராணத்தில் காணப்படுகின்றது. அதே வழக்கமே இந்தோநேசியத் தமிழரிடம் இன்றும் காணப்படுகின்றது. பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டுச் செல்லுதல் பெண்ணுக்கு இழுக்கு, மாப்பிள்ளை வீட்டார் பெண்கேட்டுச் செல்வதால் சீதனப்பிரச்சனை என்பது அங்கு இல்லை.
இருபகுதியாரும் திருமணத்திற்குச் சம்மதிக்குமிடத்து ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தம் நடைபெறும். அதில் பல

2OO9 விரோதி புறபீடாதி 01
பெரியார்கள் கலந்துகொள்வர். நிச்சயதார்த்தத்திலன்று பரிச விழா எப்போ என்பதுபற்றிநிச்சயிக்கப்படும்.
பரிசவிழா
இவ்விழா பெண்ணின் இல்லத்திலோ அன்றிப் பெண்வீட்டார் குறிக்கும் ஒரு கோயிலிலோ அன்றிப் பொது இடம் ஒன்றிலோதான் நடைபெறும். இவ்விழாவில் மாப்பிள்ளை கலந்து கொள்வதில்லை. மாப்பிள்ளை வீட்டாரும், நெருங்கிய உறவினரும் கலந்துகொள்வர். நூறு இருநூறுபோர் வரையிலும் சில பரிசவிழாவில் கலந்துகொள்வதுண்டு. இதில் விருந்து கொடுக்கும் செலவு முழுவதும் பெண்வீட்டாருடையதாகும். மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டுக்கு வரும்போது ஏழு அல்லது ஒன்பது தாம்பாளங்களில் மங்கலப்பொருட்களுடன் பெண்ணுக்கு வேண்டிய உடுப்பு, நகை முதலியனவும் தின்பண்டங்களும் கொண்டுவருவர், பெண்வீட்டார் அவர்களை நல்லமுறையில் வரவேற்று, கொண்டு வந்த பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வர். மணமகள் சபைக்கு வந்து மணமகன் வீட்டாரிடம் அவர்கள் கொண்டுவந்த உடு
புடைவையையும் நகையையும் பெற்றுக்கொண்டு செல்வார். பின்
அதே புடைவையையும், உடுத்தி, நகையையும் அணிந்துகொண்டு வந்து பெரியோர்களுக்கு வணக்கம் செலுத்தி ஆசிபெறுவார். பரிசு என்ற சொல்லிலிருந்து வந்ததுதான் பரிசம் என்ற சொல்லுமாகும். பரிசவிழாவில் முதலாவது மணமகனின் தந்தையிடமிருந்தும், இரண்டாவது மணமகளின் தந்தையிடமிருந்து வாக்குறுதி பெற்றுக்கொள்வது மரபு.
மணமகனின் தந்தையின் உறுதிமொழி
ஒம் நமசிவாய; ஒம் நமசிவாய;ஓம் நமசிவாய.
இங்கு வருகைதந்துள்ள சபையோர்களின் முன்னிலை யில் இந்தப் பரிச விழா நடைபெறும். இந்த நன்னாளிலே அடியேன் வாக்குறுதி அளிப்பது யாதெனில் திரு (மணமகளின் தந்தைபெயர்) அவர்களுடைய குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத் தினருக்கும் ஏற்படப்போகும் திருமண உறவானது. எங்கள் இரண்டு குடும்பத்தினருக்குமிடையில் என்றென்றும் நிலையான உறவாக இருந்துவரும் என்பதுடன், எங்கள் குடும்பங்களுக் கிடையில் அபிப்பிராய பேதங்கள் ஏற்படாமலும், மனஸ்தாபங்கட்கு இடம்கொடாமலும் ஒற்றுமையுடன் நாங்கள் வாழ்ந்து வருவோம் என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். இதற்கு இறைவன்
திருவருள் பாலிப்பாராக,
-e)
6

Page 7
இந்துசாதனம் 7.O.
திரு(மணமகளின் தந்தையின் பெயர்) அவர்களுடைய புதல்வி திருவளர் செல்வி (மணமகளின் பெயர்) எங்கள் குடும்ப அங்கத்தினருள் ஒருவராக வரப்போவதை முன்னிட்டு அச்செல்விக்கு எங்கள் நல்லாசியைச் சமர்ப்பித்து எங்கள் நல்லன்பும் நல்லாதரவும் அச்செல்விக்கு இருந்து வரும் என்ப தனைச் சபையோர்கள் முன் தெரிவிக்கும் அறிகுறியாக இந்தப் பரிசப்பொருட்களை எங்கள் குடும்பத்தின் சார்பில் முழுமனதுடனும் உள்ளன்புடனும் மகிழ்ச்சியுடனும் சமர்ப்பிக்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றோம்.
மணமகளின்தந்தையின் உறுதிமொழி
ஓம் நமசிவாய;ஓம் நமசிவாய; ஒம் நமசிவாய.
திரு(மணமகனின் தந்தையின் பெயர்) அவர்கள் உள்ளன்புடன் எமது செல்விக்கு வழங்கும் பரிசப்பொருட்களை எங்கள் குடும்பச் சார்பில் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதுடன். இன்று முதல் எங்கள் இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஏற்படப்போகும் இந்தத் திருமண உறவானது பல்லாண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தழைத்தோங்குவதற்கு அன்னை பராசக்தி அருள்புரியவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்தப் பரிசப்பொருட்களை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
மாப்பிள்ளை வீட்டார் தாம்கொண்டு வந்தபரிசப் பொருட்களைப் பெண்வீட்டாரிடம் கொடுத்தபின் மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவந்த உடையையும், நகைகளையும் மணமகள் அணிந்து கொண்டு சபையோரின் முன்னிலையில் வந்து வணக்கம் செலுத்துவார். மணமகள் உடை உடுத்திக்கொண்டு வரும சுமார் அரைமணித்தியால இடைவெளிக்குள் அருளுபதேசங்களும் பிரார்த்தனையும் இடம்பெறும். மணமகள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றுக்கொண்டபின். வந்திருந்தோர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும்.
புரோகிதர்கள்
சுமாத்திராவில் இந்து ஸ்தாபனங்களுக்கெல்லாம் தலைமையானதாகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது மேடான் பூரீ மாரியம்மன் கோயிலாகும். சமய சமூக சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கெல்லாம்பூரீமாரியம்மன் கோவில் வழிகாட்டலையே எப்பொழுதும் பொதுமக்கள் எதிர்பார்த்திருப்பர். நன்கு படித்தவர்களாகவும், கடவுள் பக்தி உள்ளவர்களாகவும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும் உள்ளோரைத் தெரிந்தெடுத்து பூரீ மாரியம்மன் கோவில் நிர்வாகம் புரோகிதராக நியமித்துள்ளது. இவர்கள் எவ்வித சாதிப்பாகுபாடு மின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் திருமணக் கிரியைகளையும் அந்திமக்கிரியைகளையும் செய்துகொள்ளுந் தகுதியுடையவர். புரோகிதர்கள் எல்லோரும் கோவிலில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். வீட்டிலும் கிரமமான கடவுள் வழிபாடு செய்யவேண்டும். எல்லாவிதமான பொதுப்பணிகளிலும் ஈடுபாடுடையவராக இருக்கவேண்டும். மக்கள் மகிழ்வுடன் கொடுக்கும் தட்சணையைத் திருப்தியான மனத்துடன் புரோகிதர் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிரப் பணத்திற்காக எவ்விதக் கிரியைகளும் செய்யலாகாது.
C

2OO9 விரோதி புறபீடாதி 01
பொதுமக்களின் முறைப்பாட்டின் பேரில் புரோகிதர் தகுதியூற்ற வழியில் நடந்து கொண்டார் என்பது நிரூபிக்கப் டத்து, கோவில் நிர்வாகம் பகிரங்கமாகக் குறிப்பிடி? புரோகிதரின் புரோகிதத் தொழிலை நிறுத்திவைக்குழ்டபூர்வமாக 96), gil புரோகிதத்தொழில் செல்லுபடியாகாத்தீர்க்கப்பட்டுவிடும்
சீதனம்
மணமகன் வீட்டார் பெண் தட்டுச் செல்வதாலும், பெண்ணுக்கு வேண்டிய அணிகலன்களை மாப்பிள்ளையே கொடுக்கும் வழக்கம் இருப்பதாலும் சீதனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. திருமணத்தின்போது வீட்டில் அன்று நடைபெறும் விருந்துச் செலவு முழுவதையும் மாப்பிள்ளை வீட்டாரே பொறுத்துக்கொள்வர். சீதனம் வாங்கித் திருமணஞ் செய்வது ஒரு ஆண்மகனுக்கு இழுக்கு என்று இங்குள்ளார் கருதுகின்றனர். ஒரு பெண்ணைப் பராமரிக்க இயலாதவன் ஏன் திருமணஞ் செய்துகொள்ளவேண்டும்? என்று இளக்காரமாய்ப் பேசுவர். இதுபோன்றே ஒரு ஆண்மகன் மாமியார் வீட்டில் வசிப்பதும் ஆண்மைத்தனம் இல்லாததாகக் கருதப்படுகின்றது. பெண்ணினுடைய கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்துவிட்டால் அன்று தொடக்கம் அப்பெண் கணவனுடைய வீட்டிலேயே வாழவேண்டியவளாவாள். சில பெண்கள் ஒருசில வீடுகளில் மாமியார். நாத்தனார் கொடுமைகளுக்கு ஆளாவதுண்டு. இது மிக அருமையாக நிகழ்வதொன்றாகும். தற்காலத்தில் இது எவ்வளவோ குறைந்துவந்துள்ளது.
திருமணப்பதிவு அதாவது இந்துக்களுக்குரிய பதிவு விடயத்தை அரசாங்கம் பூரீ மாரியம்மன் தேவஸ்தானத்திடமே ஒப்படைத்துள்ளது. மணமக்களுக்குள் பிரிவினை ஏற்படுமிடத்து அதனையும் தேவஸ்தானமே சமரசப்படுத்திவைக்கின்றது. தேவஸ்தானத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மேலிடத்திற்கு மனுச்செய்யலாம். மனுச்செய்த கொப்பியையும் இணைத்து மறுபடியும் புனராலோசனைக்குத் தேவஸ்தானத்திற்கே அரசாங்கம் திருப்பி அனுப்பிவைக்கும். தேவஸ்தானம் மறுபடியும் இருவரையும் அழைத்து சமரசத்திற்கான திட்டங்களைக் கூறும். அதனையும் கேட்காத இடத்து தேவஸ்தானம் தமது பூரணமான விசாரனையுடன் தமது தீர்ப்பையும் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். தேவஸ்தானத்தின் தீர்ப்பு எதுவோ அதனை ஒட்டியே அரசாங்கத்தின் தீர்ப்புக்கிடைக்கும். அதனையும் ஏற்றுக் கொள்ளாத இடத்து அப்பீல் செய்யலாம். அப்பீல் முடிவுகள் வர ஆண்டுக்கணக்காகலாம். தேவஸ்தானத்தினதும் கீழ்க் கோட்டினதும் தீர்ப்பை ஒட்டியே அப்பீல் தீர்ப்பும் அமைந்திருக்கும். இதனால் தேவஸ்தானத்தவர் இருவருக்கும் அறிவுரை கூறும்போதும் விசாரனை செய்யும் போதும் எமது விசாரனை இருவரையும் சேர்த்து வைப்பதற்காகவே தவிர பிரித்து வைப்பதற்காக அல்ல என்பதை நன்கு உணர்த்திவிடுவர். நீங்கள் பிரிவுதான் வேண்டும் என்றால் அதனை நாங்கள் செய்யத் தயாரில்லை. நீங்கள் மேலிடத்தில் சென்று முறையிட வேண்டியதுதான் என்று ஆணித்தரமாகக் கூறிவிடுவர். மேலே செல்பவர்கள் பணப்பலத்தால் தமது காரியத்தைச் சாதித்துக் கொள்வதுமுண்டு. 人
とつ

Page 8
இந்துசாதனம் 7,09
ഞFഖി
(இந்துசாதனம்-ஆவணி 2009 - (poo6OT6) is able
32. சடமாகிய மாயையிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்பதுதானே சித்தாந்தம். ஆனால், அதற்கு மாறாக, ‘எல்லாம் பிரமத்தினின்றே தோன்றின' என உபநிடதங் களிலும் சில சிவாகமங்களிலும் கூறப்பட்டுள்ளதே. அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மாறுபாடு உடையவைபோலத் தோன்றினாலும் நீ எடுத்துக் காட்டிய இரு கருத்துக்களும் உண்மையில் தம்முள் மாறானவையல்ல. உலக வழக்கு ஒன்றை எடுத்துக்காட்டி இதனை விளங்க வைப்போம்.
தாவரங்களுக்கு முதற் காரணம் விதை. ஆயினும் அவ்விதை தனியே இருப்பின், அதினின்றும் தாவரம் தோன்றமாட்டாது. அது நிலத்திற் பதிந்து நிற்பின் நிலம் குளிர்ச்சிடைந்த பொழுது அவ்விதையினின்றும் தாவரம் தோன்றும்.
அந்த விதை போன்றது மாயை. நிலம் போன்றவன் இறைவன். மாயை தனியே நின்று தன் காரியங்களைத் தோற்றுவிக்க மாட்டாது. விதை, நிலத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பது போல, மாயை இறைவனை ஆதாரமாகக் கொண்டு பதிந்து கிடப்பதால், நிலம் குளிர்ந்தபொழுது தாவரம் தோன்றுவது போல, இறைவன் நினைத்தபொழுது மாயையினின்றும் உலகம் தோன்றும்.
மாயையினின்றும் தோன்றிய உலகத்தைப் பிரமத்தி னின்றும் தோன்றியதாக உபநிடதம் முதலிய நூல்கள் கூறும்.
உலக வழக்கு ஒன்றை ஒட்டியே அவை அங்ங்ணம் கூறுகின்றன. இடத்து நிகழ் பொருளின் செயலை இடத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் என்பதே அவ்வழக்காகும்.
'வயல் விளைந்தது என்கிறார்கள். வயல் தானே பயிராக மாறவில்லை. வயலிற் கிடந்த விதைதான் பயிராக மாறுகிறது; விதைதான் விளைகிறது. அந்த விதையினது செயலை அதற்கு இடமாகிய வயலின்மேல் ஏற்றி விளைந்தது என்று கூறுகிறார்கள்.
கிழங்கினின்றும் தோன்றுவது தாமரை. அந்தக் கிழங்கிற்கு இடமாக இருப்பது சேறு. அவ் இடத்து நிகழ் பொருளாகிய கிழங்கினின்றும் தாமரை தோன்ற, இடமாகிய சேற்றினின்றும் அது தோன்றியதாகக் - கொண்டு அதற்குப் பங்கஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பங்கம்-சேறு, ஜம் - தோன்றுவது. பங்கஜம். சேற்றினின்றும் தோன்றுவது. சேற்றிற்பிறந்த செந்தாமரை எனத் தமிழிலும் வழங்கும்.
இந்த எடுத்துக் காட்டுகளால் இடத்து நிகழ் பொருளின் செயலை இடத்தின்மேல் ஏற்றிக்கூறுதல் என்பது நன்கு விளங்கும்.
விதை போன்றது மாயை என்றும், அவ்விதைக்கு ஆதாரமாகிய நிலம் போன்றவன் இறைவன் என்றும் குறிப்பிட்டோம். எனவே இறைவனும் மாயையும் முறையே இடமும், இடத்து நிகழ் பொருளும் ஆதல் விளங்கும்.

2OO9. விரோதி புறபீடாதி 01
தாந்தம்
09ஆம் பக்கத் தொடர்) ஆனந்தராசன்
மாயையினின்றும் உலகம் தோன்றியது என்பது இடத்து நிகழ் பொருளின் செயலாகும். அச் செயலை இறைவன் அல்லது பிரமம் ஆகிய இடத்தின் மேல் ஏற்றிப் பிரமத்தினின்றும் உலகம் தோன்றியதாக உயர்ந்த நூல்கள் கூறுகின்றன.
கடவுள் ஒருவரா? பலரா?
33.
34.
வேதத்திலும் புராணங்களிலும் பல கடவுளர் பேசப்படுகின் றனர். நாட்டிலும் பல கடவுளர்க்கு வழிபாடுகள் நடை பெற்று வருகின்றன. அவற்றையெல்லாம் காணும் பொழுது கடவுள் ஒருவரா? பலரா? என்ற ஐயம் எழுகிறது. அதனைத் தெளிவிக்க வேண்டும்.
புராணங்கள்ை மெய்ப்பொருள் நூல்களாகக் கொள்வோர் பெளராணிகர் எனப்படுவர். அவர்கள் பல கடவுளரை உலகிற்குத் தலைவராகக் கொள்வர். அவர்கள் பின்வருமாறு கூறுவர். உலகிற் சிறுசிறு காரியங்களையும் பலர் கூடிச் செய்வதைப் பார்க்கிறோம். அவ்வாறிருக்கும் பொழுது இவ்வளவு பெரிய உலகத்தை நடத்துதல் ஒருவனால் எங்ங்ணம் இயலும்? கடவுளர் பலர் வேண்டும் அன்றோ?' என்பர்.
தத்துவ ஆராய்ச்சி இல்லாத அவர்களது கூற்று, கடவுளது முதன்மையையும் பேராற்றலையும் உணராமையால் எழுந்த தாகும்.
கடவுள் எல்லா அறிவும் உடையவர்; எல்லா ஆற்றலும் உடையவர்; எல்லாத் தொழிலும் செய்ய வல்லவர் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட ஒப்பற்ற கடவுள் ஒருவராய் இருந்து இந்த உலகத்தை ஆள முடியாதா? மற்றும் சிலரோ, பலரோ எதற்கு வேண்டப்படுகிறார்கள்?
கடவுள் ஒருவரே;பலர் இல்லை என்பதுதான் சித்தாந்தம். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்று திருவாசகம் கூறும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் திருமூலர் வாக்கு இதனைத் தெளிவிக்கும்.
ஒருவரே கடவுள் எனின், நூல்களிற் பேசப்படுகின்ற பிற கடவுளரெல்லாம் யார்?
பிற கடவுளர் எல்லாம் பசுக்களாகிய உயிர் இனத்தவரே யாவர். உயிர்களுக்குக் கடவுளாற் பலவகைப் பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. அப்பிறவிகளுள் சிறந்த பிறவியாகக் கருதப்படுவது தேவர் அல்லதுதெய்வம் என்பது.
மிகுந்த புண்ணியம் செய்துள்ள உயிர்கள் கடவுளின் அருளால் தேவர் அல்லது தெய்வம் என்னும் பிறப்பு நிலையை அடைந்து, அவ்வப் பதவியைப் பெற்று, ஒவ்வொரு தொழிலை மட்டும் செய்தற்கு உரியவராய் நின்று, அவ்வத் தொழிலைச் செய்வர்; உரிய காலம் முடிந்தபின் அப்பதவியினின்றும் நீங்குவர். நூல்களிற் பேசப்படுகின்ற பிற கடவுளரெல்லாம் இவர்களே.
எனவே, கடவுள் வேறு; தெய்வம் வேறு எனவும், கடவுள் ஒருவரே; தெய்வங்கள் பல எனவும் உணர்தல் வேண்டும்.
-->

Page 9
இந்துசாதனம் 7.09
தெய்வங்களின்நிலை
35. கடவுளின் சிறப்புத் தன்மை என்ன? தெய்வங்களுக்கு
உரிய சிறப்புத்தன்மை என்ன?
பிற பொருளிடத்திற் செல்லாமல், அந்த அந்தப் பொருளிடத்தில் மட்டுமே உள்ள இயல்பு சிறப்பியல்பு எனப்படும். சிறப்பியல்பைவிசேடம் என்பர்.
கடவுள், தெய்வம் என்னும் இரண்டினுள், கடவுட் பொருளிடத்தில் மட்டுமே உள்ள சிறப்பியல்பு எக்காரணம் பற்றியும் ஒரு காலத்திலும்பிறவாமையேயாகும்.
தெய்வங்கள் எனப்படும் உயிர்களிடத்திற் பொருந்தி யுள்ள சிறப்பியல்பு, எக் காரணத்தாலாயினும் உலகத்தில் உடம்பைப்பெற்றுப்பிறத்தலாகும்.
பிறந்துவரின் இறந்தே ஆகவேண்டும். ஆதலால், இப்பொழுது வாழும் அத்தெய்வங்கள் இனியொரு காலத்தில் இறந்துவிடும். வாழுகின்ற இக்காலத்தில் அவைகளும் இன்ப துன்பங்களை நுகரும்; அதனால் வினைகளைத் தேடிக் கொள்ளும்.
தெய்வங்கள் இறந்தமையும் பிறந்தமையும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு உடம்பொடு கூடிப் பிறத்தல் என்பது கடவுட் பொருளிடத்தில் செல்லாமல், உயிர்களாகிய தெய்வங்களிடத் தில் மட்டுமே அமைந்துள்ள சிறப்பியல்பாகும்.
மும்மூர்த்திகள்
36. சைவ சமயத்தில் மும்மூர்த்திகள் என்போரின் நிலை
என்ன?
பிரமன், மால், உருத்திரன் என்ற மூவரும் மும்மூர்த்திகள் எனப்படுவர். இவர்கள் படைத்தல் முதலிய முத்தொழில்களில் ஒவ்வொன்றை நடத்துவர். அதுபற்றி இவர்கள் படைத்தற் கடவுள், காத்தற் கடவுள், அழித்தற் கடவுள் என்று கூறப்படுவர்.
முக்குணங்களாகிய சத்துவம், இராசதம், தாமசம் என்பவற்றில் ஒவ்வொன்றோடு மும்மூர்த்திகளில் ஒவ்வொரு வரைத் தொடர்புபடுத்திக் கூறுதல் உண்டு.
படைத்தலுக்கு இராசதம் என்ற குணம் வேண்டப்படும். படைப்புக் கடவுளாகிய பிரமன் இராசத குணம் உடையவனாய் நின்றுதன்தொழிலைச்செய்வான்.
சத்துவ குணம் காத்தல் தொழிலைச் செய்தற்கு வேண்டப்படுவது. காத்தற் கடவுளாகிய மால் சத்துவ குணம் உடையவனாய் நின்றுதன் தொழிலைச்செய்வான்.
பொருள்களிடத்தில் அழிவை உண்டுபண்ணுவது தாமச குணமாகும். அழித்தற் கடவுளாகிய உருத்திரன் தாமச குணத்தை உடையவனாய் நின்று அழித்தலைச்செய்வான்.
இவர்களுள் ஒவ்வொருவரை முதற் கடவுளாகக் கூறும் மதங்கள் உள்ளன. பிரமனை முதற்கடவுளாகக் கூறும் மதம் ஒரு காலத்தில் இருந்து, இக்காலத்து வழக்கொழிந்து போயிற்று. மால் அல்லது மாயோனை முதற்கடவுளாகக் கூறும் மதம் வைணவம் ஆகும். உருத்திரனை முதற் கடவுளாகக் கூறும்மதம்பாசுபதம்'எனப்படும்.
இக் கடவுளரை அதிகார மூர்த்திகள் என்று சைவ சமயம் குறிப்பிடும். இவர்கள் அரசனது ஏவல் வழி நின்று தொழில்

2O09 6fgni5uguras Ol
37.
செய்யும் அமைச்சர், படைத்தலைவர் முதலியோர்போல, முதற்கடவுளாகிய சிவபெருமானின் ஆணைவழி நின்று அவ்வத் தொழிலைத்தம் தம் எல்லையளவிற் செய்து வருவர்.
சிவபெருமான் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனே என்று பிற சமயத்தார் கருதுகின்றனர். அது
Ffu unr?
அவ்வாறு கருதுவது அறியாமை. அம்மூவருக்கும் வேறாய், அவர்களுக்கு மேலாய், நான்காமவனாய் உள்ள முதற் கடவுளே சிவபெருமான்.
சிவபெருமானை மூவருள் ஒருவன் என்றால் பொருந்தாது என்பதையும், அவன் அம்மூவரையும் இயக்கி ஆளும் தலைவன் என்பதையும் திருமுறைகள் தெளிவாய் எடுத்துக் காட்டியுள்ளன. குறிப்பாகத் திருவாசகத்தில், செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி எனவும், முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவர் எனவும் வரும்பகுதிகள் இதனை நன்கு வலியுறுத்தும்.
இனி, மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரன் தான் செய்த புண்ணிய மிகுதியாற் சிவனது உருவத்தையும், அழித்தல் தொழிலையும், சிவனுக்குரிய உருத்திரன் என்னும் பெயரையும் பெற்று, ஏனைய இருவரினும் மேம்பாடு உடையவன் ஆயினான்.
சிவன் செய்யும் சங்காரம், எல்லாவற்றையும் ஒன்றுகூட எஞ்சாமல் ஒருங்கே அழித்தலாகிய முற்றழிப்பு ஆகும்.
இவன் செய்யும் சங்காரமோ ஒர் எல்லையளவில் செய்கின்ற ஒரு புடை அழிப்பாகும்.
முற்றழிப்பு, மகா சங்காரம் எனப்படும். ஒரு புடையழிப்பு ஏகதேச சங்காரம் எனப்படும். முதல்வனாகிய சிவபெருமான் மகாசங்கார காரணன் எனப்படுவான். மூவரில் ஒருவனாகிய உருத்திரன் ஏகதேச சங்கார காரணன் எனப்படுவான்.
மகாசங்காரமாகிய முற்றழிப்பைச் செய்யும் காலத்திற் சிவபெருமான் படைத்தற் கடவுளையும், காத்தற் கடவுளையும் ஒடுக்குவதுபோல, அழித்தற் கடவுளாகிய உருத்திரனையும் ஒடுக்கிவிடுவான்.
மேலும், மும்மூர்த்திகளும் முக்குணங்களை உடையவர் எனவும், அவருள் உருத்திரன் தாமச குணத்தன் எனவும் முன்னே குறிப்பிட்டோம். முதற்பொருளாகிய சிவபெருமான் அருட்குணங்கள் உடையவனேயன்றி, மாயையின் காரியமாகிய இம்மருட் குணங்களை உடையவனல்லன். அது பற்றியே குணாதீதன் என்றும், நிர்க்குணன் என்றும் அவனை நூல்கள் குறிப்பிடும்.
இவ்வேறுபாட்டை உணர்த்தும் வகையில், ஒருபுடை அழிப்பைச் செய்கின்ற உருத்திரனைக் குணிருத்திரன் என்றும், முற்றழிப்பைச் செய்கின்ற சிவபெருமானை மகாருத்திரன் என்றும் கூறுவர்.
இதனால், மூவருள் ஒருவனாகிய உருத்திரன் வேறு; சிவன் என்னும் பெயராற் சிறப்பித்துக் கூறப்படும் மகாருத்திரன் வேறு என்பது நன்கு விளங்கும்.
இவற்றை யெல்லாம் உணராமல், உருத்திரன் என்னும் பெயர் ஒற்றுமையை மட்டுமே நோக்கி, சைவ சமயம் கூறும் சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனே என்று
பிறசமயிகள் மயங்கிக் கூறுவர்.
(வளரும்.)

Page 10
7.09
பண்டைத் தமிழர் விளக்கின் அடிஇைை
EFLDULIIb d5 6 கலாநிதி மனோன்ம
இருளைப் போக்குவது ஒளியாகும். நாம் வாழும் உலகில் இயற்கை நிலையில் இரு சுடர்கள் இருளைப் போக்குகின்றன. ஞாயிறு, திங்கள் என அவ்விருசுடர்களையும் வழிபடும் மரபு இன்றுவரை தொடர்கிறது. பண்டைத்தமிழ் இலக்கியங்களிலும் இவ்வழிபாட்டு மரபு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சி என்னும் நெடும்பாட்டில் "குடமுதற் றோன்றிய தொன்று தொழ பிறை" என்னும் அடி திங்களைத் தொழும் வழக்கம்பழைமையானது என்பதை உணர்த்துகிறது.
இவ்வழிபாட்டைப் பெண்களே செய்வதாக அகநா னூற்றில் குறிப்பு உள்ளது. மாலைக்காலத்தில் இவ்வழிபாடு நடைபெற்றுள்ளது. "ஒள்ளிழை மகளிர் உயர் பிறை தொழுஉம் புல்லென்மாலை" (239:9:10) ஒளிவீசுகின்ற சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்ட அணிகலன்களை அணிந்த பெண்கள் வானத்தே தோன்றும் பிறையை மாலைக்காலத்திலே தொழுகின்ற செய்தியை இப்பாடலடிகள் குறிப்பிட்டுள்ளன. குறுந்தொகை என்னும் நூலில் இரு செய்யுளில் பிறைதொழுதல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது.
"தொழுது காண்பிறையிற்றோன்றி" (178:5)
"வளையுடைத்தளையதாகிப் பலர்தொழ செவ்வாய்வானத்தையெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே." (307:1-3)
இக்குறிப்புகள் பிறையைத் தொழுவதில் சிறப்பாகப் பெண்கள் ஈடுபட்டிருந்ததைப் புலப்படுத்துகின்றன. மூன்றாம் பிறையைச் சிவபெருமான் சடையிலே சூடியிருப்பதைப் பல தேவாரங்கள் குறிப்பிட்டுள்ளன. பித்தா பிறை சூடி’ எனச் சுந்தரர் இறைவனை விளித்துப்பாடியுள்ளார்.முற்றிலா மதிசூடும் முதல்வன்' என அப்பர் இறைவன் தோற்றத்தைப்பாடியுள்ளார்.
இயற்கையின் தோற்றங்களான இருசுடர்களில் ஞாயிறும் இறைவன் தோற்றமே என்பதைத் திருநாவுக்கரசர் பாடலடி குறிப்பிட்டுள்ளது.ஞாயிறாய் நமனுமாகி வருணனாய் சோமனாகி என இயற்கைத் தோற்றங்களில் இறைவனைக் கண்டு வியக்கிறார்
அபபா.
இரு சுடர்களை வழிபடும் மரபு இன்றுவரை எமது சமயத்தில் இணைந்துள்ளது. ஒளிகாலும் விளக்கை வழிபடும் வழிபாட்டுமரபு இதன் வளர்ச்சிநிலையாக உள்ளது. ஒளிவளர் விளக்கு என மணிவாசகர் சிவனைப் போற்றுகிறார். வாழ்வியல் நடைமுறையில் வீட்டு வழிபாட்டு நிலையில் விளக்கேற்றி வழிபடுவது இன்றும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தாய்மனையில் மாலையில் விளக்கேற்றி வைத்து அந்த ஒளியையே இறை உருவாகக் கண்டு வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நெடுநல்வாடை என்னும் நெடும்பாட்டில் மகளிர் விளக்கேற்றி வழிபடும் முறைமை கூறப்பட்டுள்ளது.
 

"செவ்வியரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதங்கமழுப்பொழுதரிந்து இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக்கொளிஇ நெல்லும் மலருந்தரய்க் கைதொழுது" (41-43)
மாலைக் காலத்திலே விளக்கேற்றி வழிபாடு செய்யும் பெண்கள், பித்திகை மலர்ந்து மணம் வீசுவதன்மூலம் வழிபாடு செய்யும் நேரத்தை அறிந்து கொள்கின்றனர். இரும்பினாற் செய்யப்பட்ட விளக்கில் நெய்தோய்ந்த திரியை இட்டு ஒளி ஏற்றுகின்றனர். நெல்லையும் மலரையும் தூவிக் கை தொழுது வழிபாடு செய்கின்றனர்.
இன்றைய வழிபாட்டு நடைமுறையில் மாலையில் நெய்விளக்கேற்றி மலர்தூவி வழிபாடு செய்யப்படுகின்றது. நெல்துவும் நடைமுறை அருகிவிட்டது. விளக்கும் இரும்பு விளக்கு மட்டுமன்றிப் பல்வேறு விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் வரும் 'விளக்கீடு என்ற வழிபாட்டில் நெல்துரவும் மரபு உண்டு. தினைமாவில் விளக்குகளைச் செய்து நெய்விட்டு விளக்கேற்றி வழிபடும் முறைமையும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
விளக்குகள், விஞ்ஞானத் தொழில்நுட்பத்தாலும் மின்சாரத்தின் பயன்பாட்டாலும் எமது சமய வாழ்வியலில் மாற்றம் பெற்றுள்ளன. நெய்விட்டு விளக்கேற்றும் நடைமுறை கைவிடப்பட்டு வருகிறது. அலங்காரமான விளக்குகளும் வண்ண விளக்குகளும் வழிபாட்டுநிலையை மாற்றி வருகின்றன. ஒளியேற்றும் திரிகளில் மலர்ச்சரங்களைத் தொங்கவிடும் புதியதொரு அலங்காரம் இப்போது புகுந்து விட்டது. மலர்கள் நெருப்பில் பொசுங்கும் காட்சி யாருடைய மனத்தையும் வருத்துவதில்லை. பண்டைத் தமிழர் விளக்கினடியிலே மலரை மென்மையாகத் தூவிவழிபட்ட மரபு மாற்றம் அடைந்துள்ளது. விளக்கின் அடிப்பாகத்தை இறைவனுடைய திருவடிகளாக எண்ணியே மலர் தூவப்பட்டது. விளக்கை மகாலக்குமி என நினைந்து வழிபடும் நடைமுறையும் உண்டு. குத்துவிளக்கிற்குச் சேலை அணிந்து அடிப்பாகத்திலே மலர்தூவியிருக்கும் காட்சி மகாலக்குமியையே நேரில் தரிசனம் செய்வதுபோலவிருக்கும்.
இன்று கோவில்களில் பெண்கள் செய்யும் திருவிளக்குப் பூசை மகளிர் ஒளியை வழிபட்ட மரபின் தொடர்ச்சியாக உள்ளது. வீடுகளிலும் பொது இடங்களிலும் விளக்கு வழிபாட்டு நிலையிலே ஏற்றப்படுவது எமது வாழ்வியலில் சமயம் இணைந்திருப்பதை நன்கு உணர்த்துகின்றது. சிறப்பாகப் பெண்களிடம் விளக்கேற்றும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்பரது தேவாரம் விளக்கின் வழிபாட்டு நிலையை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
"இல்லக விளக்கதுஇருள்கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கதுநமச்சிவாயவே"

Page 11
இந்துசாதனம் 7C
102.
103.
104.
105.
O6.
107.
108.
109.
10.
1.
112.
நாவலர் சரிதமோது
கவிஞர் இராசை (இந்துசாதனம் - 2009 ஆவணி - 1
ஆர்த்தெழுமுணர்ச்சி தன்னை அடக்கியவாறு வேலை பார்த்தவரிருந்தபோதும் பாதிரி முன்னர் போல சேர்ந்திடஆசைகாட்டிச்செய்பல சேவை தன்னைக் கூர்த்திடுஞானத்தாலே குறித்துணர்சின்நாளின்பின்,
சேர்ந்திட மறுத்துவிட்ட சின்னப்பா பிள்ளை வேலை சேர்ந்திடஇணங்கிடாதும் இருதில்லைநாதபிள்ளை சேர்ந்திடுமாறு வேலை நீக்கமும் செய்ததாலே சார்ந்திடுபாதிரியார் சகக்குணம் கண்டுநொந்தார்.
வெந்திடுமுளத்தினோடு வேலைபார்த்திருந்த ஞான்று செந்தமிழ் யாழ்பாணத்தே சிவாலயமவைகளோடு குந்தகமெவையும் போக்கும் குகாலய மிவைகளுள்ளே இந்தநற்பதியைப் போல்வேறில்லையென்றோது நல்லூர்.
பதியதிலாதிநாளில் அருமறை சிவாக மத்தில் நிதிபதி தமிழகத்துப் பிராமண குலோத்தமரும் பதிசைவராசாவான சிங்கையாரியர்க்குநல்ல மதியுரை மந்திரி மாருள் மதிமுதன் மந்திரியாய்.
அருமறையாக மத்தில் அதிசமர்த்தவருமான திருபுவனேகவாகு சிவாகமப்பிரமாணங்கள் திருமுறைப்படியமைத்தே தருகந்தசுவாமி கோவில் வருபெரு விழாக்கள் பூசை வரைமுறை நடந்த காலை.
பறங்கியர் வந்தே யந்தப் பரமனின் கோவிற் பூசை இறங்கிடுமாறடியோ டிடித்தழித்ததன்பின்னாலே உறங்கிடுநிலையை மாற்ற ஒருசிலர் சேர்ந்து இப்போ சிறந்திடு மிடத்திலேயோர் செழிநாறு வருடம் முன்பே.
உளப்பட வைத்தல் லாது உயர்சைவ சமயந்தன்னை வெளிப்பட அநட்டிப்பதற்கே வேட்டுவை யுலாந்தர் காலம் களிப்புடனவர்கச்சேரிக் கந்தோர்க்குச்சிறாப்பர் வேலை அளித்திடுமிரகுநாத மாப்பாண முதலி யாரை.
அதிகாரியாகக் கொண்டு அமைநல்லூர்க் கந்தன் கோவில் விதியான ஆகமத்தின் விரோதமாய் மூலத்தானம் தரதிபாடு வேலை வைத்தும் தரபிகள் வைத்தி டாதே கதியீயுகருவறைக்குக் கட்டிடம் அமைத்த பாங்கும்.
எழுந்தருள் மூர்த்தியாக இலங்குவேலருகதாக செழும்வள்ளி தெய்வயானைத்தேவியர் வருதலோடும் தொழுஞ்சிவ தீட்சை யில்லாப்பிராமணர் பூசைசெய்தல் அழுந்திருமுறையின் ஒதா தளித்திடு சிறப்பு எல்லாம்.
உலகெங்கும் மோங்கச்செய்மகோற்சவ தினம தான பிலவங்க வருடமாடி ஆயிரத்தெட்டுநாற்றி அலைபொங்குநாற்பத்தேழுக்கோயிலதிகாரியாக நிலமெங்குமேர்நிர்வாகி இரகுநாத மாப்பாணர்க்கு.
பெரும்பிழையென்று கோவிற் திருவிழா நடத்திவைக்க வருந்திருவேதக் குட்டி விளைவேலிக் குருக்கள் முன்பே

9,2O09 விரோதி புறபீடாதி0
ம் நற்றமிழ் மாலை
பா குகதாசன்
ஆம்
13.
114.
15.
116.
17.
8.
119.
120.
2.
பக்கத்தின் தொடர்ச்சி)
அருந்திருப்பிரமாணங்கள் அனைதீதையும் போதித்தாங்கே திருந்திடுமென்னப்பாணர் திருந்திடமறுத்துவிட்டார்.
செய்தவா லயஅமைப்புச் சிவாகம விரோத மென்றல் மெய்யதாமென்ற பின்பும் மேதினியதனை மாற்றிச் செய்யவேயுடன்படாத செய்கையால் வெந்து ஆறீர் கையனா லயத்து வாசல் கடிதினிலகன்று சென்றார்.
சென்றவரிருந்த பின்பும் சிலர் சைவ மதத்தை விட்டே பின்வருகிறீஸ்துவத்திற் பிரவேசம் செய்யக் கண்டு என்னிவரெங்கள் சைவத் துண்மையை யறிந்திடாதும் தன்னிலை மறந்தும் செல்லும் தகவறியாமை யென்றே.
வாழ உறையுள்தருவோம் வளரநல்லுணவு தருவோம் சூழணிமணிகள் தருவோம் சுடர்விடுபணமும் தருவோம் ஆழவுத் தியோகம் தருவோம் ஆங்கிலம் தருவமென்றே தாழவைத்தவரை ஞானஸ்நானமும் செய்ய வைத்தே.
Soul திண்டாடிடு சைவர்தமை சிலவாசைகள் காட்டி பண்டார்மதம் மாறில்வரும் எல்லாமுமக்கென்றே தண்டாடிடவவர்மாறிவந்திணையும்செயல் கண்டே கொண்டாடிடல் கண்டாருளம் நொந்தார் மனம் வெந்தார்.
வேறு ஆங்கிலம் படித்திட வருபவர்க்காசைகள் பலவிதம் காட்டியும் பாங்கொடுவாழிட வேண்டுமாம் பலவித உதவிகள்நாட்டியும் ஓங்கிடப்பலஉத்தியோகங்கள் உஞற்றிடலாமெனச்சாட்டியும்
ஈங்குளமிசனரிமார்கள்செய்ஈனத்தைக் கண்டுளம் குமுறினார்.
வேறு அன்னிய தேசத்தா ரிங்குவந்தவரது சமயத்தை நம்மவர் பன்னிடுமாறுமே போதித்து பரமதப் பிரவேசம் செய்கிறார் நன்னரிசைவத்தின் உண்மையைநாங்களும்நித்தமும்போதித்தால் தன்மனம்மாறியே போவதைத் தரணியில்விடுவரென்றுணர்ந்தனர்.
அற்புதமதமென அறைகுவர் அவர்பினே செல்லுதலொழித்திட நற்சைவ சமயமாஞ்செஞ்சாலிநாட்டினில் வளர்த்திடவேண்டியே சற்பிரசங்கங்கள் மூலமெம் சமயத்தினுண்மைகள் சொல்லிடும் நற்கருமந்தனைத்தொடங்கிடல்நல்லதென்றுள்ளத்திலுன்னியே.
ship ஆலயந்தோறும் சைவ ஆகமம் புகன்றவாறே வாலய மண்டபங்கள் வடிவத்திற் சைவ வாழ்வில் மாலய மானோர் சைவ மேன்மைகள் நாளு மோதி காலம தளவரைக்கும் கருத்துரை பிரசாரங்கள்.
எந்தவோர் கோயிலாரும் இயற்றில ராதலாலே வந்தபே ராய் ரெல்லாம் வகுத்துரை செய்து தங்கள் சொந்தமா மதம் பரப்பும் சூட்சும வழியுரைகள் தந்துமே சைவ மேன்மை தரணிநாட்டிடவிழைந்தார்.
(வளரும்.)

Page 12
இந்துசாதனம் 7OS
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனா மமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி வூல புரட்டாதி மீ"1ஆம் 2 (7.09.2009)
EFLDuuniles6rfleiůT LIGUOf...”
சமயம் என்பது வாழ்க்கை நெறி, வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு.
எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் தத்தம் சமயத்தைப் பற்றிய இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள்; எடுத்துச் சொல்கின்றார்கள்.
சாந்தி, சமாதானம், சந்தோஷம் முதலியவை நிறைந்த வாழ்க்கையைச் சமயத் தத்துவங்களும் சமய அனுஷ் டானங்களும் உறுதிப்படுத்துகின்றன.
எப்படியும் வாழலாம் என்பதை எந்தச் சமயமும் ஏற்றுக் கொள்வதில்லை; உயர்ந்த குறிக்கோளுடனும், உள்ளத் தூய்மையுடனும் வாழ்வதே உத்தமமான வாழ்க்கை என்பதில் ஒவ்வொரு சமயமும் உறுதியாக நிற்கின்றது.
அன்பு, இரக்கம், கருணை, உண்மை, நன்மை, நேர்மை, இன்சொல் போன்ற பண்புகளையும் விட்டுக்கொடுத்தல், கூடி வாழ்தல், பிறர்க்குதவி செய்தல் முதலிய செயற்பாடுகளையும் சமயங்கள் வலியுறுத்துகின்றன.
பிறர்க்குத் தீங்கு செய்வதை, துன்பம் விளைவிப்பதை, பகைமையை வளர்ப்பதை, பொய் சொல்வதை, புறங் கூறுவதை, திருடுவதை, சமயங்கள் ஆதரிக்காதது மட்டுமல்ல; தடுக்கவும் செய்கின்றன.
எங்கோ ஏதோவொரு இடத்தில் மட்டும்தான் இறைவன் இருக்கின்றான் என்பதில்லை. அவன் எங்கும் நிறைந்திருக்கின் றான். அனைத்து மக்களும் அவனின் பிள்ளைகள்தாம்; அனைத்து மக்களும் அவனுடைய இல்லங்கள்தாம் ஆகவே, அந்த மக்களுக்குச் செய்யும் அரிய சேவை இறைவனுக்கே செய்யும் புனித சேவை ஆகின்றது என்பது இந்துக்களின் நம்பிக்கைகளுள் தலையாய ஒன்று.
கோபத்தைக் கோயத்தினால், பகைமையைப் பகைமையி னால் வெல்லவே முடியாது; பரிசுத்தமான அன்பினால்தான் அனைத்தையும் வெல்லலாம்; அனைவரையும் வெல்லலாம் என்கின்றது பெளத்தமதம்.
எந்த உயிருக்கும் எள்ளளவு இம்சையும் செய்யவே கூடாது என்பதில் இறுக்கமாக இருக்கின்றது சமண சமயம்.
 

2009 6fiĉ3gnĝ5 uqpn°Lumé5 ol
உன்னுடைய வலது கன்னத்தில் ஒருவன்அறைந்தால், உன்னுடைய இடது கன்னத்தையும் அவனுக்குக் காட்டு என்பது கிறிஸ்தவம் வலியுறுத்தும் பொறுமைப் பண்பு.
சகோதரத்துவம் சமத்துவம் போன்றவற்றின் அடிப் படையில் சாந்தியுடனும் சமாதானத்துடனும் வாழும் வழியை இஸ்லாம் மதம் காட்டுகின்றது.
இவ்வாறே ஏனைய மதங்களும் இன்பமும், இனிமையும் நலமும், வளமும், நிறைந்த வாழ்க்கைக்கு, சண்டையும் சச்சரவுமற்ற சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன.
தத்தம் சமயத் தத்துவங்களை எளிமைப்படுத்தி மக்களுக்குத் தெளிவுபடுத்தவும், சமய அனுஷ்டானங்களை மக்கள் மேற் கொள்வதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் சமயத் தலைவர்களும் குருமாரும் போதகர்களும் எடுக்கும முயற்சிகள் எண்ணற்றவை. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விகாரைகள், தாதுகோபங்கள், பிரார்த்தனை மண்டபங்கள் போன்றவை இல்லாத இடங்கள் இந்த உலகிலே இல்லை.
சமய விழாக்கள், மகாநாடுகள், கருத்தரங்குகள், வகுப்புக்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் சமய நூல்கள் சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை வெளியிடுவதற்கும் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகின்றது.
பழைய ஏடுகள் தொடக்கம் நவீன ஊடகங்கள்வரை, அனைத்துச் சாதனங்களும் சமய விளக்கங்களுக்காக, சமயப் பிரசாரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இவை அனைத்தும் - தனித்தும் சேர்ந்தும் - இந்த உலகை ஒர் அமைதிப் பூங்காவாக, ஆனந்த மாளிகையாக, அற்புதப் பொற்பதியாக அல்லவா புடம்போட்டிருக்க வேண்டும். புத்தெழிலும் புதுமலர்ச்சியும் புத்தெழுச்சியும் கொண்ட புனித உலகமாகவல்லவா பொலிவுறச் செய்திருக்க வேண்டும்.
ஆனால்,
அப்படியான ஓர் உலகத்தை இன்றுவரை நம்மால் காண முடியவில்லையே! கண்டு களிக்க முடியவில்லையே! அந்த உலகில் நிம்மதியு டனும், நிறைவுடனும் வாழ்க்கையை நீடிக்க முடியவில்லையே!
அநியாயமும் அக்கிரமமும் அராஜகமும் ‘அசுர ஆட்சி செய்யும் ஒர் பயங்கர உலகத்திற்றானோ நாம் அனைவரும் பயந்து நடுங்கிப்பதற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்!
கொலையும் கொள்ளையும் லஞ்சமும் வஞ்சமும் போட்டியும் பூசலும் இல்லாமையும் பொல்லாமையும் மலிந்த ஓர் உலகத்திற்றானே நாம் குற்றுயிரும், குலையுயிருமாய்க் குடங்கிக் கொண்டிருக்கின்றோம்!
ஒர் இனத்துக்கும் இன்னோர் இனத்துக்கும், ஒரு நாட்டுக்கும் இன்னோர் நாட்டுக்கும் இடையே உள்ள அற்ப அளவிலான கருத்து வேறுபாடு அகில உலகப் போராகி அனைவரையும் அழிக்கக்கூடிய ஆபத்து நிறைந்த உலகத்திற் றானே நாம் அல்லற்பட்டு அவலப்பட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கின்றோம்!
இந்த இழி நிலைக்கு யார் காரணம்? அல்லது யாது காரணம்? சமயத் தலைவர்களா? மக்களா? சமயநிறுவனங்களா?
அத்தனைசமயங்களும் மொத்தமாகவே தோல்வியைத் தழுவிவிட்டனவா?
சமயங்கள் தத்தம் கடமையிலிருந்து தவறிவிட்டனவா?
வேறு ஒரு சக்தி சமயங்களின் பணியை மட்டுப்படுத்தி வருகின்றதா? மழுங்கடித்து வருகின்றதா?
சிந்திப்போம்; ஆற அமரச் சிந்திப்போம்; ஆழமாகச் சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம். حالر

Page 13
இந்துசாதனம் 7OS
பிரார்த்தனை
நயினை நா.ே
இறைவனோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வதுதான் பிரார்த்தனையின் நோக்கம். பிரார்த்தனையின்போது, மனதை அலையவிடாமல் ஒருமுகப்படுத்தவேண்டும். பிரார்த்தனை நம்முடைய வாழ்க்கையை நிலைப்படுத்தி அதற்குப் புதிய அர்த்தத்தை ஏற்படுத்துகின்றது. பாதுகாப்பு உணர்வினை உண்டாக்குகின்றது. நம்முடைய முயற்சிகள் அனைத்துக்கும் நல்ல முடிவினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இதனால் நம்பிக்கை யுள்ள வாழ்க்கையாக நம் வாழ்க்கைமாறுகின்றது.
நாம் ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போதும், இரவு படுக்கைக்குச் செல்லும்போதும் பிரார்த்தனை செய்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் வாய்ப்பு ஏற்படுகின்றபோதெல்லாம்பிரார்த்தனை செய்யலாம்.
பிரார்த்தனை எளிமையானதாகவும், முழு ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கட்டும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் மனதில் உள்ளதை இறைவனிடம் மனம் திறந்து பேசுங்கள். உங்களை அவரிடம் பரிபூரணமாக ஒப்படையுங்கள். அவர் எதை உங்களுக்குக் கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பிரார்த்தனையை ஆக்கபூர்வமான
சக்தியாக ஆக்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இறுக்கங்கள்
ஏற்படும்போது பிரார்த்தனையைப்போல் மனதைச் சாந்தப்படுத்து வது வேறு எதுவுமில்லை. பிரார்த்தனை என்பது அமைதி, நம்பிக்கை, அன்பு என்பதை மறந்துவிடாதீர்கள். அனுபவத்தின் மூலம் அதனை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.
வரலாற்றுப் புகழ்பெற்ற கொலம்பஸ்கூடத் தன்னுடைய கண்டுபிடிப்புப் பயணத்தைப் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் தொடங்கினார். புறப்படுவதற்குமுன் ஜெனொவாவில் உள்ள கொன்வென்ற்றுக்குச் சென்றார். கொன்வென்ரின் கதவைத் திறந்த கன்னியாஸ்திரியிடம் சொன்னார், "சிஸ்டர் நான் நீண்டதுTரம் கடற் பயணம் புறப்படுகின்றேன். என்னுடைய முயற்சியில் நான் வெற்றிபெறுவேனோ இல்லையோ என்பது கடவுளுக்குத்தான் தெரியும். கடவுளிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யும்படியாக உங்களைக் கேட்டுக்கொள்வதற்காகவே வந்திருக் கின்றேன். நிச்சயமாக நீங்கள் கடவுளுக்குப் பிரியமானவராக இருப்பீர்கள்" அப்போது அந்தக் கன்னியாஸ்திரி, "உங்கள் முயற்சி கடவுளுக்காகவும் உலகுக்காகவும் இருக்குமானால், உங்கள் பங்கை நீங்கள் செய்தால், கடவுள் நிச்சயம் அவருடைய பங்கைச் செய்வார்" என்றார். அவரது நம்பிக்கையும் முயற்சியும் நீண்ட கடற்பயணத்தில் அவர் செய்துகொண்டிருந்த பிரார்த்தனையும் வீண்போகவில்லை.
 

2009 விரோதி புறப்பாதி 01
IT GEFutab
LΠTabμ5Πέ5σότ (Β.Α.)
உலகத் தலைவர்கள், பிரார்த்தனையில் தங்களுக்குள்ள நம்பிக்கையினை வெளியிட்ட கருத்துக்கள் "நாங்கள் பிரார்த்தனை யில் நம்பிக்கை வைத்திருக்கின்றோம்." என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளிவந்திருக்கின்றன. மனிதன் தன்னலத்தை மறந்து பொதுநலத்தை நினைத்துச் செயற்படு வதற்குப் பிரார்த்தனை பேருதவி செய்வதாக உலகப் பெருந்தலைவர்களில் பலர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். மனித முயற்சிகள் தோற்றுப்போகும்போது பிரார்த்தனையில் அவன் தவிர்க்க முடியாத நம்பிக்கை வைத்தேயாகின்றான்.
நோபல் பரிசுபெற்ற, புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி யான அலெக்சிஸ் கேரல் பிரார்த்தனையை நம்பாத அறிவைவிடப் பிரார்த்தனையை நம்புகின்ற அறிவு மிகுந்த சக்தியுடன் செயற்படுவதாக ஒப்புக்கொண்டிருக்கின்றார். பிரார்த்தனைக்கு நோயைக் குணப்படுத்துகின்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றார். இவரைப்போன்ற வேறு பெரிய மேதைகளும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பிரார்த்தனை நமது உடலில் உள்ள சுரப்பிகளை இயக்கி உடல் ஆரோக்கியத்தை இயற்கை நிலைக்குக் கொண்டுவருவதாக அவர்களாற் கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் நம்முடைய தேவை முறையான பிரார்த்தனையை மனுக்குலத்திற்குச் சொல்லிக்கொடுத்து மனித
நேயத்தை, ஆன்மீகத் தேடலை வளர்க்கின்றவர்கள் மகான்களே யாகும். ஆன்மீகத் தேடலில் நாம் வெற்றிபெற்று, இந்த மண்ணுக்கு எதன் பொருட்டு வந்தோமோ அதைத் தெளிவாகத் தெரிந்து, அந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதற்குப் பிரார்த்தனையானது உந்து சக்தியாக உதவும்.
மிகவும் இக்கட்டான வேளைகளில் எல்லாம் தம் பிரார்த்தனைகளின் வலிமையால் ஆறுதல்பெற்று விமோசன மடைந்த எத்தனையோ அன்புள்ளங்கள் உண்டு. கடவுள் எங்கும் நிறைந்திருக்கின்றார். ஏழையின் அருகிலும், நோயாளியின் அருகிலும் அவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி நிற்கின்றார். அழுகின்ற உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார். அவருடைய அன்பு வியாபிக்காத இடமே இல்லை. நம்முடைய தேவைகளை உணரக்கூடிய ஒருவர் எப்போதும் அருகில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவரை நம் அருகே வரவழைப்பது பிரார்த்தனையே. "எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்" என்றார்கள் அனுபவம்பெற்ற ஆன்றோர். இறைவனை அண்மிக்க வைக்கும் சக்தி, நம்பக்குவநிலையிற்றான் உண்டு.
தங்களுக்குத் தாங்களே உதவுகின்றவர்களுக்குக் கடவுளும் துணையாயிருக்கின்றார் என்பது ஒரு விதி. மேரி கியூரியின் கணவன் பியரிகியூரி தன்னுடைய அலுவலகத்தில்
->

Page 14
இந்துசாதனம் 7OS
அமர்ந்து மைக்ராஸ்கோப்பின் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த ஒரு மாணவன் அதைக் கவனிக்காமல்,அந்த விஞ்ஞானி பிரார்த்தனை செய்வதாக எண்ணி வெளியில் போகத் தொடங்கினான். கியூரி அவனைக் கூப்பிட்டார். "நீங்கள் பிரார்த்தனை செய்வதாக எண்ணி என்வரவு அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது எனக் கருதிக் கிளம் பினேன்" என்றான் அந்த மாணவன். "ஆமாம் நான் பிரார்த்தனை தான் செய்து கொண்டிருக்கின்றேன்." எனச் சொல்லி மறுபடியும் தன்னுடைய வேலையில் ஈடுபட்டுக்கொண்டே கியூரி தொடர்ந்து கூறினார். "விஞ்ஞானம், ஆராய்ச்சி, படிப்பு எல்லாமே பிரார்த் தனைதான். ஏனெனில் இந்தப் பிரார்த்தனையின்போதுதான் கடவுள் தன்னுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்து கின்றார். கடவுளிடம் பல இரகசியங்கள் இருக்கின்றன. நாம் பயபக்தியுடன் முயற்சிக்கின்றபோது கடவுள் அவற்றை நமக்கு வெளிப்படுத்துகின்றார். தேடுகின்றவர்களுக்கு அவர் அவற்றை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார். தேடுங்கள் கிடைக்கும் என்பதே அவரின் ஆய்வு"
நாம் முயற்சி செய்யாமற் கடவுளிடம் எமக்கு உதவிகேட்க முடியாது. நம்மிடம் இருக்கும் பலத்தைப் பயன்படுத்தாமல் எனக்குப் பலம் கொடுங்கள் என்று கடவுளைக் கேட்கமுடியாது. நமக்கு இறைவன் தந்திருக்கின்ற வளங்களையும் வழிகளையும் சரியாக உணராமல், வழிகாட்டும்படி கடவுளைக் கேட்கமுடியாது. எம்மிடமுள்ள வளங்களை ஊதாரித்தனமாகச் செலவுசெய்து விட்டுக் கடவுளிடம் வசதிகளைக் கேட்கமுடியாது. பாவங்களைச் செய்துகொண்டே கடவுளிடம் மன்னிப்புக்கோர முடியாது. தெரிந்த காரியங்கள், செய்யக்கூடிய காரியங்களைக்கூட செய்யாமல் இருந்துகொண்டு எனக்குப் பயனளியுங்கள்; நம்பிக்கை அளியுங்கள் என்று கடவுளிடம் கேட்கமுடியாது. எமது முயற்சி களுக்கும், நம்பிக்கைகளுக்குமே பிரார்த்தனை வழிகாட்டி யாக அமையும் என்பதை இவ்விடத்தில் மறந்துவிடக்கூடாது.
அமடோ நெர்வோ என்ற மெச்சிக்கன் ஞானி சில பிரார்த்தனை வாசகங்களை எப்படி வெளிப்படுத்துகிறார் தெரியுமா? என்னுக்குள்ளே எல்லாம் இருக்கின்றது. நான் முயற்சிக் கின்றேன் பிரார்த்திக்கின்றேன். ஆசீர்வதிப்பீராக. நான் ஒரு பொறிதான், என்னைப் பெரிய நெருப்பு ஆக்குங்கள். நான் வெறும் தந்திதான் என்னை வீணை ஆக்குங்கள். நான் வெறும் எறும்புப் புற்றுதான் என்னை மலை ஆக்குங்கள். நாள் ஒரு சிறு துளிதான், என்னை நீரூற்று ஆக்குங்கள். நான் ஒரு சிறு இறகுதான்,
சரணாகதி
மனிதன் பூமியில் பிறக்கின்றான்; நீருக்குள் வ மனிதனின் வாழ்வும். நீருள் அடைந்த நிம்மதியை மீன்நி6 போன்றே மனிதனும் பூமியிற் கிடந்து துடிக்கின்றான். மீ6 ஏற்படும். அதுபோன்றே மனிதனும் பூமியிலிருந்து தன அடைவான். ஆண்டவனை நினைத்து, சரணாகதி அ ՑlooLաdՈւՔպth.
 
 
 

2OO9. 6figures unurs Ol
என்னைப் பெரிய இறக்கை ஆக்குங்கள். நான் வெறும் கந்தல் துணிமனிதன்தான், என்னை மன்னராக்குங்கள்.
இரவீந்திரநாத் தாகூரின் பிரார்த்தனைப் பாடலின் சுருக்கம் என்ன தெரியுமா? "இறைவா என்னுடைய பிரார்த்தனை இதுதான்! என்னுடைய இதயத்தின் அடித் தளத்திலுள்ள சோகத்தை வெட்டிவீழ்த்து. என்னுடைய சுகங்களையும் துக்கங்களையும் எளிமையாகத் தாங்குகின்ற வலிமையினை எனக்குக்கொடு. ஏழைகளைக் கைவிடாமற் காக்கின்ற மனத் தைரியத்தை எனக்குக் கொடு. ஆணவத்தின் முன் அடிபணியாத பலத்தினை எனக்குக் கொடு. அன்றாடச் சிறுமைகளிலிருந்து உயர்ந்து நிற்கின்ற மனதை எனக்குக் கொடு. உன்னுடைய எண்ணத்தைப் பூர்த்திசெய்ய என்னை உனக்கு முழுமையாக அர்ப்பணிப்புச் செய்துகொள்ளுகின்ற மன வலிமையை எனக்குக் கொடு." என்பதாகும். இறைவனோடு ஐக்கியப்பட்டுக் கேட்டுக்கொண்டபிரார்த்தனைகள் இவை.
இவ்வாறே நாயன்மார்களும், அபிராமிப்பட்டரும் ஆழ்வார்களும், மற்றும் ஆன்மீக சீலர்களும், சித்தர்களும், யோகிகளும் தத்தம் பிரார்த்தனைகளின் வலிமையால் அற்புதங் களையும், சித்துக்களையும் வெளிப்படுத்தி எம் எல்லோரதும் சிந்தனைகளைத் தூண்டிவிட்டுள்ளார்கள். கம்பர் காளமேகம், காளிதாசர், குமரகுருபரர் பாரதியார் போன்ற கவிஞர் பெருமக்கள் தேவியைப் பிரார்த்தித்து மனமுருகி வழிபட்டதால் புலமைபெற்று அரசசபைக் கவிஞராகவும் உயர்ந்தனர். அவர்களின் வேண்டு தல்கள் யாவும் பிரார்த்தனைகளாலும், ஆன்மீகத் தாகங்களாலும் நிறைவேறியுள்ளன. இவை எல்லாம் நம்முன்னோ ருடைய வாழ்க்கையில் நாமறிந்தவை. இவ்வாறாக வாழ்ந்தவர் களின் வாழ்க்கை எல்லாம் வாழ்பவர்களுக்குப் பாடமாக அமையட்டும். எப்போதும் எல்லோருக்கும் பிரார்த்தனை என்பது கட்டாயமான தொன்றாகும். அதை அலட்சியப்படுத்திவிடமுடியாது. இதனை உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, அதன் பெறுமதியை அறிந்து வாழ்க்கையில் அதனைக் கடைப்பிடித்து நம் வாழ்வினை வளப்படுத்திக்கொள்வோமாயின் நாம் நிறைவடைவோம். பிரார்த் தனையின் பெறுபேற்றினை உணர்ந்து எதிர்காலத்தில் அதனை மனமுவந்து பின்பற்றக்கூடிய ஆன்மீகத் தாகமுள்ள சந்ததியினரை உருவாக்குவதில் நாம் வாழ்ந்து காட்டும் வாழ்வு வழிகாட்டியாக அமையவேண்டும். இதுவே எல்லோரதும் விருப்பமாக அமையுமாயின் இவ்வுலகில் "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற அந்தத்தாரகமந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும். A
ாழும் மீனை நிலத்திற் கொண்டுவந்து போட்ட நிலைதான் மத்திற்கிடந்து, பெறமுடியுமா? நிலத்திற்கிடந்துமீன் துடிப்பது ண்டும் நீருக்குட் செல்லும்போதுதான் மீனுக்குச் சந்தோஷம் து நிலையான இடத்துக்குத் திரும்பும்போதுதான் மகிழ்ச்சி டைந்து வேண்டுவதன்மூலம் மனிதனால் அந்த நிலையை
ஜேர்மன் நாட்டுத்துறவி. சுவாமி வாசுதேவதத்தா (கொழும்பு ரீகிருஷ்ணபக்திக் கழக விழாவில்)

Page 15
இந்துசாதனம் 7.O9.
வாரத்தின் ஏழுநாளுள் வெள்ளிக்கிழமையை மிகப்பு க்களின் மரபாக இருந்துவருகின்றது. பெரும்பாலானவ
ன விபரங்களையும், விளக்கங்களையும் தருகின் கலாபூஷணம் விருதுபெற்ற இவர் நல்ல சொற்பொழிவாளரும
een LIFf
சைவப்புலவர் தி
சைவசமய வாழ்வியலுக்கு வழிகாட்டியாகவும், அனுசரணை யாகவும் இருப்பது விரதம் ஆகும். சைவசமயிகளுக்கு எல்லா நாள்களும் விரதமிருந்து கோயிலுக்குப்போய் இறைவனை வழிபாடு செய்யவேண்டிய நாள்களே. எனினும் அவசரமும், சஞ்சலமும் நிறைந்த வாழ்விற் குறித்தசில நாள்களிலாவது விரதமிருந்து கோயிலுக்குப்போய் இறைவழிபாடு செய்வதற்குப் பொருத்தமான நாள்களை நம்முன்னோர் வகுத்துவைத்துள்ளனர்.
கடவுள், காலதத்துவமாயிருந்து எம்மை வாழ்விக்கிறார் என்று சைவசமய தத்துவங்கள் கூறுகின்றனர். வருடம், மாதம், வாரம், திதி, நட்சத்திரம் முதலிய சிறு பிரிவுகளே அவை. இப்பிரிவுகளிற் குறிக்கப்பட்ட சில நட்சத்திரங்கள், வாரங்கள், திதிகள் என்பன விரதகாலங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இவ்வுலகிற் சூரியனாற்றான் பகல் இரவும் பருவகாலங்களும் ஏற்படுகின்றன. உயிர்கள் வாழ்வதற்கும் சூரியனே உபகாரியாக உள்ளான். சூரிய வீதியாகிய வானவட்டம் பன்னிரு இராசிகளா யுள்ளது. கிரகங்கள் ஒன்றையொன்று சுற்றுதலும், சூரியனைச் சுற்றுதலும் ஆகிய செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சந்திரனுடைய ஒருசுற்றில் இருபத்தேழு நட்சத்திரங்கள் தொடர்புபடுகின்றன. இந்த இருபத்தேழில் ஒவ்வொன்று சூரியன் செல்வாக்கினால் ஒவ்வொரு இராசிகளில் மேன்மையுறும். அத்தொடர்பில் அவ்வந் நட்சத்திரப் பெயரின் சார்பிலேயே மாசப் பெயரும் ஏற்படுகின்றது. இத்தொடர்பிலேதான் வாரம், திதி என்பனவும் பெயர்பெறுகின்றன. இதற்குக் கிரக சஞ்சாரம் தொடர்பான விஞ்ஞான காரணமும் உள்ளதாகத் தெரிகிறது.
கிரகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இறைவனுடைய அனுக்கிரகத்தினால் அதிதெய்வங்கள் உள. அவையே வழிபாட்டுப் பயனைத் தரவல்லன. வாரப்பெயர்களாகிய ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழும் அவ்வக் கிரகங்களின் பெயர்களில் அமைந்தவை.
இக்கிரகங்கள் வான வட்டத்தை வலம் வருகையிற் பூமி அவற்றின் செல்வாக்கிற்கு (கதிர் வீச்சு) உட்படும் நாள்கள் அவற்றின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
இவ்விதமாக வெள்ளிக் கிரகத்தினுடைய செல்வாக்கின் தாக்கம் பூமியில் ஏற்படும் நாள் வெள்ளிக்கிழமை என அழைக்கப்படுகின்றது. வெள்ளிக்கிரகத்துக்கு அதிதெய்வமான கக்கிரன் செல்வத்தையும், சீர் சிறப்பையும் தரவல்லது. ஆதலால் வெள்ளிக்கிழமை, விரத வழிபாட்டுக்குரிய நாளாகக்கொள் ளப்படுகிறது.
1.
 
 
 
 
 

றார். ஓய்வு நிலை அதிபர், சைவப்புலவர் சு.செல்லத்துரை. ாவார். εί:::
3:
வெள்ளி
ந. சு.செல்லத்துரை
ஐப்பசி மாதத்திற் சுக்கிரன் பூமிக்கு ஆட்சியாதலால் ஐப்பசிவெள்ளி இறையருள் பெறச் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை விரதம் சிவன், முருகனுக்குரியதாக நூல்கள் கூறுகின்றன. எனினும், சைவமக்கள் ஏழு நாள்களிலும் வெள்ளிக்கிழமையையே இறைவழிபாட்டுக்கு ஏற்ற புனிதமான நாளாகக்கொண்டு விரதமிருந்து தத்தம் குலதெய்வங்களை வழிபடும் நடைமுறை இருந்துவருகின்றது.
வெள்ளிக்கிழமை விரதம் ஐப்பசி மாதத்து முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வெள்ளிக்கிழமை தோறும் அனுட்டிக்கும் விரதம் ஆகும். இவ்விரத நாளில் உபவாசம் இருப்பது உத்தமம். அதற்கு இயலாதவர்கள் இரவிலே பழம் முதலியன உண்பர். அதற்கும் இயலாதவர்கள் ஒருநேர உணவு உண்பர்.
இவ்விரதத்தை மூன்று ஆண்டுகளுக்கேனும் அனுட்டித்தல் வேண்டும். விரதத்தை நிறைவுசெய்யும்போது விரதபலனைத் தரவல்ல உத்தியாபனம் என்னும் சாந்திக்கிரியையை ஐப்பசிக் கடைசிவெள்ளியிற் செய்யலாம். எனினும் தொடர்ந்து வெள்ளிக்கிழமைதோறும் அனுட்டித்தல் உத்தமம் ஆகும்.
ஐப்பசி மாதமும் வெள்ளிக்கிழமையும் முருகப்பெருமானுக்குச் சிறப்பான விரதகாலங்களாகக் கொள்ளப்படும்.
சிவாலயங்கள் சிலவற்றில் ஐப்பசிக் கடைசி வெள்ளியில் இயமசங்காரம் நடைபெற்று வருகின்றது. சிவபெருமானுடைய அட்டவீரட்டச் செயல்களில் இயமசங்காரமும் ஒன்றாகும். பதினாறு வயதுவரை மட்டும் வாழ வரம் பெற்ற மார்க்கண்டேயர் குறித்த வயதெல்லை முடிவுறும்போது சிவபூசையில் இலயித்திருந்தார்.தன் கடமையில் தவறாதவனான இயமதர்மராசன் அவ்வேளை பாசக் கயிற்றை வீசி மார்க்கண்டேயரின் உயிரைக் கவர முற்பட்டபோது சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் இயமனை உதைத்துச் சங்காரம் செய்து, பின் உயிர்பெற்றெழச்செய்தார். சிவபூசையில் இலயித்திருக்கும் சிவனடியாரை அணுகாதே என இயமனுக்கு உணர்த்திய நாள் இதுவாகும்.
இது நடந்தது திருக்கடவூர்த் திருத்தலத்திலாகும். ஆதலால், ஆண்டுதோறும் இத்தலத்தில் ஐப்பசிக் கடைசி வெள்ளிக் கிழமையில், இயமசங்கார விழா நடைபெற்று வருகின்றது. இதனால் வேறு பல சிவாலயங்களிலும் இயமசங்காரம் நடைபெறு வது இயல்பே.
இன்னோரன்ன காரணங்களால் ஐப்பசிவெள்ளி சிறப்பும், புனிதமும் உடையதாகும். சமயதீட்சை முதலான நற்கருமங் களுக்கும் இது சிறப்பான நாளாகக் கொள்ளப்படுகின்றது. 人

Page 16
இந்துசாதனம் 7O
சைவர்களின் கொடி எது? என்ற வினாவுக்குத் திருமுறைப் பாடல்களூடாகவும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுடாகவும் விடை காண முடிகின்றது.
"சோலைப் பசுங்கிளியே தரநீர்ப்பெருந்துறைக்கோன் கோலம் பொலியும் கொடிகூறாய் - சாலவும் ஏதிலர் துண்ணென்னமேல்விளங்கி ஏர்காட்டுங் கோதிலா ஏறாங்கொடி"
(திருவாசகம் - திருத்தசாங்கம் -10)
சோலையில் வாழ்கின்ற பச்சைக் கிளியே தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடியாவது பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி அழகு காட்டுகின்ற இடபக் கொடியேயாகும் என அழகு விளங்கும் அக்கொடியினைக் கூறுவாயாக. என்பது இப்பாடலின் பொருள்.
"ஏறுகொண்டகொடிஎம் இறையனாரே"
(தேவாரம் - 01-26-04) "விடை தரு கொடியும் வைத்தார்"
(தேவாரம் - 04-38-03) போன்ற பல பாடலடிகள் இறைவன் இடபக் கொடியினை உடையவன் எனச் செப்புகின்றன.
புறநானூறு என்ற சங்கத் தமிழ் இலக்கியத்தின் கடவுள் வாழ்த்து பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இங்கு இறைவன் வாகனமாகவும் கொடியாகவும் வெள்ளை நிற இடபத்தைக் கொண்டிருக்கின்றார் என்ற செய்திகாணப்படுகின்றது.
"ஊர்திவால்வெள்ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப"
என்ற அடிகள் மேற்குறிப்பிட்ட செய்திக்கு ஆதாரமாக அமைவனவாம்.
இறைவன் இடபத்தை ஏன் தெரிவு செய்தார் என்பதற்குப் பல்வேறு காரணங்களை நம் சமய இலக்கியங்கள் உரைக்கின்றன. இறைவன் முப்புரங்களை எரிக்கச் சென்றபோது திருமால் இடய வடிவமெடுத்து சிவபிரானைத் தாங்கிச் சென்றார் எனவும் உலகம் சங்கார காலத்தில் ஒடுங்கும்போது தர்மதேவதை நந்தி வடிவெடுத்துச் சிவனைத் தாங்கிச் சென்றார் எனவும் சிவனே நந்தியாகவும் வீற்றிருக்கிறார் எனவும் செய்திகள் உள்ளன. திருமூலர் நந்தி பற்றிய பல செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார். நந்தி மகன் என விநாயகரைக் குறிப்பிடுகிறார். திருமந்திரம் ஒன்பதாவது தந்திரத்தின் நிறைவுப்பாடல்,
வாழ்வே வாழ்கவென்நந்திதிருவடி
என அமைந்துள்ளது. வெள்ளை எருதேறி அருள்பாலிக்கும் அப்பனாக எம்பெருமான் திகழ்வதனால் இறைவனின் கொடியாக வெண்நந்திக்கொடியை அமைத்தார்கள். பல்லவ மன்னர்களும் ஈழத்தை ஆண்ட யாழ்ப்பாண மன்னர்களும் தமது அரசகொடியாக நந்திக் கொடியை விளங்கச் செய்தனர். சமணர்களது சூழலில்
 
 
 

திர்ை. சைவத்தின் எற்றத்திற்காய் ாகதகபாடசாலைஅதிபர், சிறந்தசொற்பொழிவாளர்.
ர் கொடி
ழகர் திரு. சலலிசன்
இருந்து சைவம் வென்று, எழுச்சி பெற்ற சூழல் பல்லவர் காலத்தில் நிலவியது. காரைக்கால் அம்மையார் இட்ட பக்தி விதை பல்லவர் காலத்தில் பக்திப்பயிராகச் செழிப்புற்று ஓங்கியது.
சைவம் சார்ந்த விசுவாசத்தின் வெளிப்படுத்துகையாக, பக்தி நெறியின் அறிகுறியாக, விடைக் கொடியினைத் தமது வீட்டு வாயில்கள் தோறும் மக்கள் ஏற்றினர். இச்செய்தியை நாயன் மார்களது பாடலடிகள் உறுதிப்படுத்துகின்றன.
திருவாரூரின் அழகை இரசிக்கும் சம்பந்தர், மாடமாளிகைகள் சூழப்பெற்று அழகிய ஊராக விளங்கும் அவ்வூரில் சைவக்கொடி நெடிதுயர்ந்துநிற்கின்றது என்கிறார்.
"கருக்கொள் சோலை சூழநீடுமாடமாளிகைக்கொடி அருக்கன் மண்டலத்து அணாவும் அம்தண் ஆரூர் என்பதே"
(தேவாரம் :02 - 101 - 01)
திருநெல்வேலியின் சிறப்பைச் சொல்லலுரும் சம்பந்தர் அங்கு மாடங்களில் கொடியேற்றப்பட்டிருப்பதைக் குறித்துக் காட்டுகிறார். "மருஅமர்நீள்கொடிமாடமலிமறையோர்கள் நல்லூர் உருஅமர் பாகத்துடையவள் பாகனையுள்குதுமே"
(தேவாரம்:04-97 - 10)
இந்த வகையில் வீடுகளின் வாயில்களில் சைவச் சின்னத்தை ஏற்றி வைத்த செய்தி, வரலாற்றுப் பெருமைக்குரியதாகும்
நாட்டில் விடைக்கொடி பற்றிய விழிப்புணர்வு கடந்த 2003ஆம் ஆண்டில் இடம்பெற்ற அகில உலக இந்து மாநாட்டுடன் படிமலர்ச்சி அடைந்தது. எனினும் அவ்வப்போது வாழ்ந்த சைவாபிமானிகள், தமிழுணர்வாளர்கள் விடைக்கொடியை ஏற்றி விழிப்பூட்டியிருக்கின் றனர். இவர்களுள் செனட்டர் நடராசா குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர். தனது மேசையிலும் வாகனத்திலும் விடைக் கொடியை வைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அவர் செயற்பட்டார். அண்மைக் காலங்களில் விடைக்கொடியின் மகிமையைப் பரப்புரை செய்வதில் விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவும் உழைத்துவருகின்றார்.
கோவில்களில் பெருந்திருவிழாவின் (மகோற்சவம்) தொடக்கத்தைக் குறிக்கவே கொடியைப் பறக்கவிடும் மரபு எமது பிரதேசப்பெரும்பாலான ஆலயங்களின் நடைமுறையாக உள்ளது.
சைவக் கொடி, விடைக்கொடி எம் சைவ ஆலயங்கள்தோறும் எந்நாளும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். சைவத்தின் இருப்பையும் எழுச்சியையும் நல்கும் குறியீடாக, எமது ஏற்றத்தின் நல்லறிகுறியாக ஏற்றுயர் கொடியைப் பறக்க விடுவது நம்மனங்களிலும் புத்துணர்ச்சியை உண்டுபண்ணும். இதற்கு அனுசரணையாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினர் இலவசமாக நந்திக்கொடியை வழங்குகின்றமையும் பாராட்டிற்குரிய தாகும். 人

Page 17
இந்துசாதனம் 7.O.
தமிழர் ண்ட பெருநெறியாகிய சைவசித்தாந்தம் தெளிவாகவும்தருகின்றார்யாழ்-புதியஉயர்கல்லூரி
தமிழர் கன
திருவாட்டி அருள்நங்கை
சிவசம்பந்தமுடைய மதமாகிய சைவத்தின் உயரிய தத்துவமே சைவசித்தாந்தம் ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் நூல்மூலம் தெளிய வைக்கப்பட்ட தத்துவ சிந்தனை இதுவாதலால் தமிழர் கண்ட பெருநெறி என இது சிறப்பிக்கப்படுகிறது. இந்தச் சித்தாந்தம் தமிழகத்தில் சோழப்பெருமன்னர் ஆட்சியில் சைவசமயம் பெற்றிருந்த பேராதரவின் பெரும் பேறாகத் தோன்றிய தத்துவ சிந்தனையாகும். சைவசமயத்தின் பொற்காலம் என்றும் சைவசித்தாந்தத்தின் தெளிவு நிலைக்காலம் என்றும் சிறப்பிக்கப்படும் வகையில் சைவசமயப் பேரிலக்கியங்களாகிய பெரியபுராணம் கந்தபுராணம் ஆகியவையும் சைவசித்தாந்தத் தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்தும் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், நெஞ்சுவிடுதூது, வினாவெண்பா, உண்மைநெறி விளக்கம், சங்கற்பநிராகரணம் போற்றிப் பஃறொடை, கொடிக்கவி ஆகியவையும் அக்காலத்தில் எழுந்தன. இந்தச் சாஸ்திர நூல்கள் அனைத்திற்கும் மூலகமாக திருமூலர் அருளிய திருமந்திரம் விளங்குகின்றது. இதுவே சைவசித்தாந்தத் தத்துவத்தின் மூலநூல் எனவும் சிறப்பிக்கப்படுகின்றது. சைவசித்தாந்தம் என்ற சொற்பதத்தை முதன் முதல் பயன்படுத்தியவரும் திருமூலரே ஆவார். காரைக்கால் அம்மையாரின் பாடல்களிலும் சைவம் வளர்த்த நால்வர் எனும் சம்பந்தர் அப்பர், சுந்தரர், மாணிக்கர் தந்த தேவார திருவாசகங்களிலும் சைவசித்தாந்த உட்கிடக்கைகள் காணப்படுகின்றனவாயினும் சித்தாந்த சாஸ்திரங்களிலேயே இவை விளக்கம் பெற்றன.
சைவசித்தாந்தத் தத்துவம் "தமிழர் கண்ட பெரு நெறி" தென்னாட்டில் சைவம் என்றால் அது சைவசித்தாந்தம் சித்தாந்த தத்துவத்தைத் தென்னாட்டவருக்கும் சைவத்திற்கும் உரிய தத்துவமாகக் குறிப்பிட்டாலும், இத்தத்துவச் சிந்தனைக்குரிய மூலக் கருத்துக்கள் வடமொழி நூலாம் உபநிஷதத்தில் இருந்து பெறப்பட்டவையாகும். சைவசித்தாந்த தத்துவமோ அல்லது ஏனைய தத்துவங்களோ ஆராயும் இறை ஆன்ம உலகு பற்றிய ஆய்வுகளுக்கு வேதங்களே நிலைக்களனாக விளங்குகின்றன. இவ்வேதங்கள், ஆய்வைத் தொடங்கினவாயினும் ஆன்மீக சிந்தனையாளர்கள் அல்லது பக்குவ நிலையாளர்களாக விளங்கிய குருவினரும் சிஷ்யர்களும் தம் அறிவாராய்ச்சியின் மூலம் பெற்ற கருத்துக்களை, இறை ஆன்ம உலகு பற்றிய ஆராய்வோடு கூடிய மெய்மைக் கருத்துக்களை வழங்கிய இலக்கியமாக உபநிஷதங்கள் கூறப்படுகின்றன. உபநிஷதங்கள் தந்த மெய்மையான கருத்துக்கள் வேதங்களோடு அந்தப்பகுதியிலே (முடிவுப்பகுதியில்) இணைந்து வேதாந்தம் என்ற பெயர் பெற்றன. வேதங்களின் பகுதிகளிலே மந்திரம் பிராமணம், ஆரணியகம், என்பவற்றோடு அந்தத்தில் இணைந்த உபநிஷதங்கள் "வேதசிரசு" என்றும்
 
 
 
 

D2OO9. விரோதி புறபீடாதி 01
iDTL 6lpinjl
Fodoropas BITg56ör M.A., M.Phil.
"மறைமுடி" என்றும் அழைக்கப்படும் அளவிற்கு தனித்துவச் சிறப்புப் பெற்றன. இதனையே இந்து தத்துவத்தின் மூலகம் அல்லது மூலதத்துவம் எனச் சிறப்பித்தனர்.
மூலதத்துவமாம் உபநிஷதம் அறிவாராய்ச்சி செய்த முப்பொருள்களுமே பின் எழுந்த அனைத்து இந்து தத்துவச் சிந்தனைகளுக்கும் மூலமாகக் கொள்ளப்பட்டன. ஆனாலும் அவற்றைத் தெளிவாகவும் இலகுவாகவும் விளங்க வைத்த பெருமை சைவசித்தாந்த தத்துவத்திற்கே உரியது என்பதனால் "வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம்" என சைவசித்தாந்தம் சிறப்பிக்கப்படுகின்றது.
சைவ சித்தாந்தம் அறிவாராய்ச்சி முடிவுகளைத் தரும் மெய்யியலாக மட்டுமல்லாமல் சமயத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட தத்துவவாதமுமாகும். சிவசம்பந்தமுடைய காரணத்தால் "சைவ" என்ற அடை இதற்குக் கிடைத்தது.
சைவ ஆகம வழியில், சமயக் கருத்துக்களை ஏற்றுள்ள தத்துவம் இதுவாகும். இதனால் "சமயத்தையும் தத்துவத்தையும் மிக நெருக்கமாக இணைத்துக் கொண்டதில் சைவ சித்தாந்த தத்துவம் வெற்றி கொண்டது" என இத் தத்துவ வாதத்தை சிறப்புப்படுத்துவர்.
சைவசித்தாந்தம் லெளகீக வாழ்வியலையும் ஆதரித்து அவ்வாழ்வியலை நெறிப்படுத்தும் வகையிலான அன்பியல், அறவியல் ஒழுக்கவியல் முதலான வாழ்வியற் கொள்கைகளையும் சிறப்பித்திருப்பதைக் காணமுடிகிறது. லெளகீக வாழ்க்கையைப் பயனுடைய வாழ்க்கையாக்கி இறை இன்பத்தை அடைய வைக்கச் சைவசித்தாந்தம் வழிகாட்டி நிற்றலால் சைவசித்தாந்தம் தத்துவமாகவும் சமயமாகவும் வாழ்வியல் நெறியாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. "தமிழர் கண்ட பெருநெறி"யாகிய இந்தச் சைவசித்தாந்தத்தை அதன் சிறப்பைக் கருதி மேலை நாட்டுத் தத்துவ சிந்தனையாளர்கள் பொதுமையான தத்துவமாகக் குறிப்பிடுவர். "தியாஸ்பெர்னாட்" என்ற தத்துவ அறிஞர் மனிதர்கள் அனைவரையும் தழுவி அவர்களது எண்ணங்கள்
"உலக
வளர்ந்த வரலாறு ஒன்று எழுதப்படுமானால் அதன் மணிமுடியாகத் திகழ்வது சைவ சித்தாந்தம்" என்கின்றார். டாக்டர் கெமில் ஸ்வெலபில் என்ற பேரறிஞர் "மனித குலத்தின் சிந்தனையிலே முழுநிறைவானதும் மூதறிவார்ந்ததும் பெரிதும் மதித்துப் போற்றத் தக்கதாக விளங்குவதும் சைவசித்தாந்தமேயாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சிறப்புக்கும் பெருமைக்குமுரிய இந்தச் சமயத் தத்துவத்தை நன்கு விளங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் நமது வாழ்க்கைய அமைப்பது சாலச்சிறந்தது. 人

Page 18
இந்துசாதனம் 7, OS
மாணவச்செல்வங்களே,
வணக்கம், கோடிக்கணக்கான நூல்கள் உலகிலே குவிந்து கிடக்கின்றன. உங்களால் மட்டுமல்ல, யாராலுமே அத்தனை நூல்களையும் கற்க முடியாது. அதுமட்டுமல்ல, உங்களைப் பிழையான வழியில் இட்டுச்செல்லக்கூடிய நூல்களும் இருக்கின்றன. எப்படியான நூல்களை நீங்கள் கற்கவேண்டும் என்பதைக் கற்றோரும் உங்கள் பெற்றோரும் அறிவர். அவர்களைத் துணையாகக் கொண்டு. நீங்கள் கற்கத் தகுந்த நூல்களைப் பிழையின்றிக் கற்றுக்கொள்ளுங்கள்; கற்றவற்றின்படி வாழ்க்கை யில் ஒழுகுங்கள் என்று சொல்கின்றார். திருவள்ளுவர்
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (திருக்குறள் 391)
என்ற குறளையும் கற்று, நல்ல நூல்களையும் கற்று, அவற்றிற் கண்டபடி நல்லொழுக்கத்துடன் வாழுங்கள்.
r y
"இந்து சாதனம்" ஆவணி இதழில் இடம்பெற்ற "சமய
அறிவுப் போட்டி 04" இற்குரிய கேள்விகளையும் சரியான
விடைகளையும் தருகின்றோம்.
1. "இந்து சாதனம்"எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1889ஆம் ஆண்டு - விரோதி வருடம் ஆவணி மாதம் 26ஆந் திகதி.
2. "நீறில்லா நெற்றி பாழ்" எனத் தொடங்கும் பாடலைப்
பாடியவர் யார்? ஒளவைப்பிராட்டியார்
3. தேவாரத்தைப் பாடத் தொடங்கும்போதும் பாடி முடிந்த
பின்பும் சொல்லவேண்டிய சொல் என்ன?
திருச்சிற்றம்பலம்
4. மாவிட்டபுரம் கோவில் சம்பந்தமாக "மாருதப்புரவல்லி"
என்ற நாடக நூலை எழுதியவர் யார்?
"சாகித்ய ரத்னா"க.சொக்கலிங்கம்
5. சமண சமயத்தைச் சேர்ந்திருந்தபொழுது திருநாவுக்
கரசருக்கு வழங்கிய பெயர் என்ன? தருமசேனர்.
SSLLS SL SLSSLSSSSSSLSLSL SSSLSS SLSS SS SSL SSL SSLSLSSSL SSL SS SLSLSLSL SSSLS SSSSSSS qqq SSS SSS
நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு அமைவாகக் கீழ்க் கண்ட இருவர்மட்டுமே சரியான விடைகளை அனுப்பியிருந்தனர்.
dypsib Lirfari: els III 100/- செல்வன் ஏ.கபிர்த்தனன் 620,நாவலர் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். பாடசாலை: யா/மத்தியகல்லூரி.
السـ ܢܠ
 

2OO9
இரண்டாவதுபரிசு:gநபா 50/- செல்விவித்யா இரவீந்திரன் 1823,நாவலர் வீதி, யாழ்ப்பாணம். பாடசாலை யா/இந்து மகளிர் கல்லூரி.
பரிசு பெறும் இருவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்தி ஊக்கமளித்து வரும் அதிபர்களையும் பாராட்டுகின்றோம். பரிசுத் தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
முடிவுத் திகதிக்குப் பின்னர் வந்த விடைகள் பரிசீலனைக்கு
எடுக்கப்படவில்லை
இவ்வாண்டில் வெளியான "இந்து சாதனம்" இதழ்களில் விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
Gīgi

Page 19
இந்துசாதனம் 7O9
billIIIt Isilt;IMLI !
சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்ல வல்ல நல்வித்தையுந் தந்தடிமைகொள்வாய்நளினாசனஞ் சேர் செல்விக்கரிதென்றொரு காலமுஞ்சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப்பேறே சகலகலாவல்லியே.
-குமரகுருபரசுவாமிகள்
தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர
மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல
காட்டல், கண்ணிர்த்
துளிவரஉள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்
நீஅருளும் தொழில்களன்றோ?
ஒளிவளரும் தமிழ் வாணி அடியனேற் கிவையனைத்தும் உதவுவாயே.
- பாரதியார்
கைநிறைய மலர்கொண்டு பணிவேனம்மா
கருணை மலர்க் கண்கொண்டு காப்பாயம்மா
மெய்நெறிகொள்பாமாலை புனைவேனம்மா
மேவுகலாஞானமருள் கண் பாரம்மா
நெய்செறிவுத் தீபமலர் தொடுப்பேனம்மா
நினதருட்கண் பார்வைமலர் நிறைப்பாயம்மா
வையகத்தில் அறிவுமலர் வாசம் வீச
வாணியெநின்மலர்ப்பதத்தைவணங்கினேனே.
- கவிஞர் அரியாலையூர் ஐயாத்துரை
ஈரைந்து பத்து என்பது ஓர் உண்மை. இ வருடங்களுக்கு முன்னேயும் ஈரைந்து பத்தேயாம். ஈரை அன்று. இப்படியே உண்மைகள் எவற்றுக்கும் தொடக்
என்று சொல்லப்படும். சைவசமயக்கொள்கைகள் உண்
1s
 
 
 

2OO9. 6fiöpné5 upnoLé5 O1
வேண்டுதல்
உன்னிஉருகியபோதுள்ளத்தினில் வந்து கன்னிக் கவிதந்த கற்பகமே - அன்னையே பூவும் புதுக்கவியும் புன்னகையும் இன்முகமும் தாவென் னுளங்குளிரத் தான்.
- மதுரைப்பண்டிதர் கசச்சிதானந்தன்
கல்லுக்குள் வீரமுங் காட்டுவாய்-அடர்
காட்டுக்குள் வீட்டையும் நாட்டுவாய் தொல்லைக்குளின்பமு மூட்டுவாய்-கம்பன்
தோய்ந்தவருட்கலை வாணியே சொல்லுக்குள் தெய்வப்பொருள்வைத்து-நெஞ்சைத்
தொட்டுப்பிணைக்கு மணியிட்டு பல்லக்கில் வேந்தன் பவனியை-ஒத்த
பாட்டுப்பிறந்திடவேண்டுவேன்.
-வி. கந்தவனம்
அறம் அன்பு ஆன்மீக நேயம் நேர்மை
அகத்தினிலே அனவரதம் ஆறாய்ப்பாய்ந்து உறவினிலே ஒற்றுமையாம் பண்பைப் பெய்து
உலகினரை உயர்மனத்தர் ஆகச் செய்து சிறப்புமிகு சொர்க்கமெனச் செகத்தையாக்கும்
செம்மையுடைநூல்களினைச் சுகமாய் ஆக்கும் திறமையினை அருள்வாய்செந்தமிழின் வாணி
தேசமெலாம் அதையுணரும் திறமும் செய்வாய்.
-சிற்பி
து எக்காலத்திலும் உண்மையாயுள்ளது. ஆயிரம் ந்து பத்தானது ஒரு குறித்த காலத்திலே தோன்றியது கமில்லை. ஆதலால் உண்மைகள் எல்லாம் அநாதி
மை. ஆகையால் சைவசமயக் கொள்கைகள் அநாதி.
- சைவப்பெரியார் திரு.சு.சிவபாதசுந்தரம்

Page 20
இந்துசாதனம் 70
நாவலர் முன்பள்ளி விள
யாழ்ப்பாணம் சைவ பரிபாலசன சபையினரால் சோலை" முன்பள்ளியின் விளையாட்டு விழா நாவ6 நடைபெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ய தனரஞ்சினிதுரைசிங்கம்; முன்பள்ளி ஆசிரியை, செல்விட (சபையின் உப செயலாளர்), சபைத் தலைவரும், விழாத்த செயலாளர் திரு.இ.தவகோபால், தேர்வுச் செயலாளர் திரு ஒன்றிற்கலந்துகொள்வதற்கான தயார் நிலையில் இளஞ்சி
A ty
 

2009 விரோதி புறப்பாதி01
HFIEDEN
ளயாட்டு விழா
முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வரும் "நாவலர் oர் ஆச்சிரம வளாகத்தில் 10.06.2009 திங்கட்கிழமை ாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் திருவாட்டி ா.சுபாசினி, குத்துவிளக்கேற்றும்திரு.தி. மாணிக்கவாசகர் தலைவருமான சிவநெறிப்புரவலர் திரு.த.சண்முகலிங்கம், ந.இரா.செல்வடிவேல் ஆகியோர் நிற்பதனையும், நிகழ்ச்சி சிறார்கள் சிலர் நிற்பதையும்படங்களிற்காணலாம்.

Page 21
இந்துசாதனம் 7,09
2010 dolib d66ůUTıp
சிவழுநீ க.கிருப
விரோதி வருட இந்துசாதன இதழ்களில் 2010 ஆம் ஆண்டில் அமையும் மகாசிவராத்திரி நிர்ணயம் தொடர்பில் பலரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இவ்வகையில் ஆவணி மாத இந்துசாதனத்திற் பிரம்மழநீ பூரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா அவர்கள் எந்த ஆலயம் எந்தப் பஞ்சாங்கத்தைப் பின்பற்று கின்றதோ அந்தப் பஞ்சாங்கத்தின்படி சிவராத்திரி விரதத்தை அந்தந்த ஆலயங்களில் அனுஷ்டிக்க வேண்டுமென்று ஓர் உபாயத்தினை முன்வைத்திருக்கின்றார்.
சாஸ்திரங்கள், ஆகமங்கள், புராணங்கள் குறிப்பிடுகின்ற நியாயங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பஞ்சாங்கத்தை மட்டும் பின்பற்றி எல்லாவற்றையும் செய்யலாமா? இது எமது சமயத்திற்கே இழுக்கான விடயமல்லவா? இவருடைய கருத்துப்படி ஐப்பசி மாதத்தில் விளக்கீடும், புரட்டாதியில் தீபாவளியும், தைமாதத்தில் மகாசிவராத்திரி என்றும் குறிப்பிட்டிருக்கும் பஞ்சாங்கத்தினைப் பின்பற்றுவதால் எவ்வித தோஷமுமில்லை என்றே கருதவேண்டி யுள்ளது. ஆகமப் புலமை மிக்கோர் இவற்றை ஏற்றுக்
கொள்வார்களா?
மேலும் சர்மா அவர்களாற் குறிப்பிட்ட சில விடயங்களை நோக்கின், காரணாகமத்தில் "மாகபால்குனயோ கிருஷ்ண சதுர்த்தஸ்யாம் சுபேதினே" என்று கூறுவதாற் சாந்திரமானம் என்றுபின்பற்றுவதாகக் கூறுகிறார்.மாகம் என்ற சொல்லை மட்டும் வைத்துச் சாந்திரமானம் என்று சொல்லிவிட முடியாது. மாகம் என்பது சாந்திர மாசிக்கும் அமையும். சௌரமாசிக்கும் பொருந்தும். இடம்நோக்கியே பொருள் கொள்ள வேண்டும். சமயானுஷ்டானங் கள், ஆலயக் கிரியைகள் ஒரு ஆகமத்தைத்தான் பின்பற்றவேண்டு மென்று கூறுவது தவறு. பிரமாணங்கள் எந்த ஆகமத்தில் இருந்தாலும் வரவேற்கக்கூடியதே.
"மாகம்" என்பது சாந்திர மாசி என்று கொள்வாராயின் சிராவண கிருஷ்ண ஜெயந்தியை சாந்திரமானத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பஞ்சாங்கத்திற் சாந்திரமானப்படி குறிக்கப்படாது
C
 

ன் மகாசிவராத்திரி
ானந்தக் குருக்கள்
சௌரமானப்படி ஆவணி கிருஷ்ண அஷ்டமியிற் குறிக்கப் பட்டிருப்பது சரியா?
பூரீ கிருஷ்ண ஜெயந்திக்கும் மஹாசிவராத்திரிக்கும் ஒரு தொடர்புண்டு. பூரீ கிருஷ்ண ஜெயந்தியிலிருந்து 184ஆவது நாள் மஹாசிவராத்திரி அமையும் என்ற ஆகம சுலோகம் வருமாறு:
"ஸிம்மேது ரவிஸம் ப்ராப்தே
ரோகின்'ஸஹிதாஷ்டமீ
ததாதிகணனம் கத்வா
ஸாசீதிசதுருத்தரா சதோபோ தினாந்தேது
சிவராத்ரீதிம் நிச்சய"
இதன்படி சூரியன் சிம்மராசியிலிருக்க அஷ்டமியோடு கூடிய ரோகிணி தினத்திலிருந்து கணிதம் செய்து 184ஆவது நாள் மகாசிவராத்திரிஎன நிச்சயம் செய்யவேண்டும்.
மேலும் சிராத்திரிபுராணத்தில்,
"மாசிமாதத்திற்றோன்று மதிக்கலை குறைந்து தேயு
மாசில் பன்னான்காம் பக்கத்தரையிருளியாமந்தன்னிற் றேசினால் விளங்குஞ் சோதிச்செழுஞ் சுடராகிநின்ற
மாசிலாநதற்கட்பெம்மான் தனதுருக்காட்டிநின்றான்."
என்று கூறப்பட்டுள்ளதை நோக்குமிடத்து மாசிமாத சதுர்த்தசியன்றுதான் மகாசிவராத்திரி என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகின்றது.
மேற்காட்டிய பிரமாணங்களைப் புறந்தள்ளிவிட்டு விரும்பிய வண்ணம் விரதானுஷ்டானங்களைக் கொள்ளலாமென்றால் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள் யாவும் தேவையற்றதாகின்றன. எனவே முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களிற் சரியான வழியைப் பின்பற்றுவதற்குப் பிரம்மழரீ கிருஷ்ணானந்தசர்மா போன்ற கற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டியது அவசியம். 人
2

Page 22
இந்துசாதனம் 17. OS
கோஹ் பெங் சூ "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என மகாகவிபாரதியார் விரும்பினார் என்பது நாம் அறிந்ததே. அவர் இன்றிருந்தால் அவரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தக்கூடிய அரிய செய்தியொன்று - தேமதுரத் திருமுறைகளைச் சீனப்பெண்மணி ஒருத்தி சிந்தை கலந்து சிறப்பாகப் பாடிக்கொண்டிருக்கிறாள் என்ற அதிசயமான
செய்தியொன்று-சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது.
"மிகப் பழமையான காலத்தைச் சேர்ந்த திருமுறைகள் இறைவனது புகழைப் போற்றுவன. இந்தப் பாடல்களை அனுபவித்துப் பாடும்பொழுது என்னுள்ளே கீ என்கின்ற சக்தி எழுந்து என் உடல் முழுவதும் பரவுகின்றது. என் மனம் சாந்தியும் அமைதியும் அடைகின்றது. என் வாழ்க்கையில் உயர்ந்த ஒரு குறிக்கோள் இருப்பதையும் நான் உணர்கின்றேன். போதிய பயிற்சியும் தேர்ச்சியும் பெற்று, திருமுறைகளை இன்னும் நன்றாகப் பாடி எல்லோரும் மகிழ்ச்சியும் அமைதியும் பெற என்னால் முடிந்ததைச் செய்வேன்" எனக் கூறுகின்றார் 57 வயதான கோஹ
பெங் சூ என்ற இந்தப் பெண்மணி.
2 LSAeTSAeATS SAeATS SAeTS ASAeS SeS SeeSS SATS SATS SAAASSASASA as 56
பிறருடைய துன்பத்தைக் காணுவது ஒரு கருணை: தாம் ஏற்றுக்கொள்வது ஒரு கருணை; அப்படி ஏ 556ODGOOT - SÜLITIQLäs ē556ODGOOT 6lēSITG5ēFLh6lāSIIS5aFLIDT
LLLLLLSSASLSSASLSSASLSSTLSS SeTLSS SAALLLSS SAALTSA SALTS SALTS SSLASTSS
 

2OO9 விரோதி புறபீடாதி 01
ருமுறைகள் !
திருமுறைகளில் இவருக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது? பாடும் ஆற்றலை எப்படி அடைந்தார்?
அவரே கூறுவதைக் கேட்போம்.
"ஆறு ஆண்டுகளின் முன்னர் ஒரு நாள் சிங்கப்பூர் கலைமன்றம் வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தேன். சுதா ரகுநாதன் என்ற பெண்மணி இசையுடன் பாடிக் கொண்டிருந் ததைக் கேட்டேன். அந்த இசை என்னை ஈர்த்தது. இசையுடன் வந்த பாடலைக் கேட்டு மெய்மறந்தேன். என் கண்ணில் கண்ணிர் பெருகியது. மனம் நெகிழ்ந்தது. அப்படிப் பாடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது"
சிங்கப்பூரில் குளத்துச் சாலையிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் ஒவ்வொரு புதன்கிழமையிலும் திருமுறை வகுப்பு நடைபெறுவதை அவர் அறிந்துகொண்டார். தருமபுர ஆதீன, தேவார இசைமணி, திருமுறைக் கலாநிதி திரு.எஸ்.வைத்தியநாதன் ஒதுவார் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அந்த வகுப்பில் இந்தப் பெண்மணியும் கலந்துகொண்டார். தமிழ் மொழியை எழுதவோ பேசவோ தெரியாத காரணத்தால் திருமுறைப் பாடல்களை றோமன் எழுத்துக்களில்
எழுதி மனனம் செய்துகொண்டார்.
சிங்கப்பூரில், ஆண்டு தோறும் நடத்தப்பட்டுவரும் திருமுறைப் பண்ணிசைப் போட்டி, இவ்வாண்டு 29 ஆவது தடவையாக நடைபெற்றது. தன்னுடைய குருநாதர் வைத்தியநாதன் ஒதுவார் கொடுத்த உற்சாகத்தினால் 18 வயதிற்கு மேற்பட்டவர் களுக்குரிய போட்டியில் இந்தச் சீனப் பெண்மணியும் கலந்து கொண்டார். எல்லோரும் மெச்சும்வகையில் நான்காமிடத்தைப் பெற்றார்.
"அந்தச் சீனப் பெண் ஆர்வமாக முன்வந்து போட்டி யிற் கலந்துகொண்டது எங்களை வியப்பில் ஆழ்த்தியது" என்கிறார் திருமுறைப்போட்டி அமைப்புக் குழுவின் துணைத்தலைவர் எ.இரா.சிவகுமாரன்.
அவர் பாடியதையும், பரிசு பெற்றதையும் நினைத்துப் பெருமகிழ்ச்சி அடைவதாக அவருடைய கணவர் திரு.ஜிங் பே அன் அவர்களும் மகள் கொரின் அவர்களும் கூறுகின்றனர்.
அந்த அம்மையாரைப் பாராட்டி வாழ்த்துவதில் "இந்து சாதனம்" பெருமைப்படுகின்றது.
C
LSsTLS seeLSeeeeLSeLeLSseTeLS ATS SseTSYLeLSeLeLS ASALeLSAAAL LLS D650
கண்டு இரங்குவது ஒரு கருணை; அந்தத் துன்பத்தைத் ற்றுக்கொண்டு அந்தத் துன்பத்தைத் துடைப்பது ஒரு க வளரும். -கி.வா.ஜகந்நாதன்
7 SrS SqSASASqq S LLLLSSMSTSMS SLrS
7ܓ

Page 23
இந்துசாதனம் 7. OS
TUNED IN
The first Chinese to take part in a contest f
The Wife of a C C aim ed Chinese Writer and Cultural Med a i on winner Ying Pei An is making her own mark on the Cultural scene - by Singing in Tamil.
TranslatOr Goh Beng Choo, 57, Famous Indian - Karnatake came in fourth Vocalist Sudha Ragunathan this month in her section of the highly regarded annual Thirumurai Vocal Competition/now in its 29th year. There were 28 Contestants in the Section for adults over 18 and she received a consolation prize.
The former Straits Times journalist was the firstever Chinese participant in the Contest featuring ancient Tamil Songs called Thirumurai, which are recited to praise Hindu gods.
The mother of one does not understand Tamil. She was inspired to learn the poignant Songs six years ago after she walked by the Singapore Art Museum and heard Sudha Ragunathan, a famous classcial Indian Singer, Performing in a concert.
"I was moved to tearsby the energy" she says, and started taking lessons.
Madam Goh, a Who practi Ses yoga, e n joys Thirumurai because it helps her "qi" energy to circulate. In addition, the Songs are calming and make her feel like She in "in
Goh Beng Choo was movec Sudha Ragunathan Singing
 
 

2OO9. விரோதி புறபீடாதி 01
TO) "TAMIL
eaturing ancient Tamil Songs Comes in fourth
dialogue with an ancient voice"
"Singing these songs makes me feel like I have found an aim in life", she said. "I want to work towards a day when I can make people feel happy and calm with my singing"
To memorise the songs for the competition, she drew upon her knowledge of both Chinese and Indian Culture.
She says that both Thirumurai and Tang poetry consist of rhyming verses. Once she realised Thirumurai verses came in pairs like Chinese couplets, they became easierto memorise.
She has lessons every Wednesday at the Sri Thendayuthapani Temple in Tank Road and practise reciting the songs from Romanised versions of Tamil textS.
It was madam Goh's teacher SVaithyanathan, 47, who persuaded her to enter the competition organized by the Thirumurai Performance Organizing Committee.
Organizers said she sto od o ut a mong the Contestants. "We were very impressed by her enthusiasm. It is very Special, especially in a Chinese lady," says Dr.A. Ra. Sivakumaran, 54, Vice - President of the Organising Committee.
Madam Goh's husband and daughter Corrine, 28, are similarly Proud of her
SUCCESS.
Mr.Ying, 62, Who owns a bookshop in North Bridge Road, Says: "I Love to Watch her sing. On the day of the " to rears when she heard competition , even closed in Tani in a concert. my Chinese bookshop for the entire day to see her perform" By Courtesy of Straits Times.

Page 24
இந்துசாதனம் 17.O.
S THERE
Prof. A. Sanmugada:
Very often the question" is there a God?" is posed from various quarters Normally, those who pose this type of question expect that it would be answered with enough evidence and sometimes may expect that it would be proved scientifically. One importantithing that we all should note is that all truths need not be proved scientifically. There are many truths which no one expects to be proved beyond doubt. Proofs are required only when a truth is not perceived. If someone wants a logical explanation regarding the existence of God, one logical reply is: Who asks for proof for the existence of the air even when nobody physically sees it? When one can experience that Supreme Being in the self what other proof is required.
God is omnipresent. He is not just Something that stays in a far off heaven, who would be met with after death, if one gets to heaven etc., He is right in front of us. He is right inside us too. He is in each and every minute of the minute particle Present / void anywhere. Vedas and Mantras hail the Supreme to be the earth, the world around and the skies beyond. Mahakavi Subramaniya Bharati brings that Lord who hails to be the world around and skies beyond right in front of us on this earth. He sings.
"மழைக்குக் குடை பசிநேரத்துணவு
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்"
"In our life, Our God Kannan (Krishna) is like
umbrella for rain and like food when we are hungry"
When Someone is in a difficult situation, if Somebody comesto help him, he would immediately say "You have Come at this time like God"Yes God Comes like that. Imagine you have to keep an appointment and it is raining cats and dogs. What can you do? You have to get to the destination at any cost. You will be happy if you have an umbrella. Who will give it at that time? At this time somebody brings an umbrellato you. What will you say? Surely you will feel that it is Godsend. It will be the same when you get food at a time when you are really hungry. God is so simple. Even the lowest beings could approach Him and get His blessings. Sundaramoorthy Swamigal has the following to say:
இயக்கர்கின்னர் ஞமனொடு வருயர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 17.

9,2OO9.
, Ph.D. (Edinburgh)
அயர்ப்பொன்றின்றிநின்திருவடியதனை
அர்ச்சித்தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன்றின்றிநின்திருவடி அடைந்தேன்
செழும்பொழில்திருப்புன்கூர் உளானே.
Translation:
Daemons, Kinnaras, Deva of death, Deva of rain, mobile fire, air, Sun and moon, illusionless tiger, monkey, Snake, Vasus, heavenly people and under the earth people worship Your Holy Feet relentlessly. Seeing the great glory out of Your grace they have attained, without any surprise, I surrender to Your Holy Feet, Oh the Lord offertile Thiruppunkur!
This gives us a simple explanation how the almighty God gives His grace not only to great Devas but also to simple beings like tiger, monkey, Snake, etc.,
In general Hinduism considers God not just as the Supreme All-powerful Gigantic One but also a personal God Whom the individual can worship out of love and not necessarily out of fear. The fear brings one only up to a certain point and beyond that it repels, but love takes through to the point. Devotion or bhakti as often referred to is a very key concept in Hinduism, even for the philosophically inclined ones. It is through devotion, many have realized the existence of God.
Appar Confesses that the God is in his mind and he has prepared it for Him to be there. He also pleads to God to cure his dangerous disease:
நெஞ்சம்உமக்கேயிடமாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இதுவொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகிவந் தென்னைநலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இeர் அஞ்சேலும்என் னிர்அதிகைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே.
I kept my mind as a place for you only. I do not know having spent even a moment without thinking of you. have never experienced anything Comparable to this cruelty. Having disabled me bringing together the intestines with the belly, you neither destroy this disease which afflicts me like the poison, drawing near me, by driving it away from Coming near me nor do you say Do not be afraid.
Appar has demonstrated clearly that there is a God and He will come to relieve us from any difficulties. 本
of the Saiva Paripalana Sabai, No.450, K.K.S. Road, Jaffna & 09.2009 (1' Day of Puraddathythingal). Phone: 0212227678