கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.10.18

Page 1
CDE LiLISOE GOL GEISius
ஆரம்பம் விரோதி டு ഋബട0ി Տելք 2- (1839)
விரோதி வருடம் ஐப்பசி (18.10.2
புத்தகம் :121 இதழ் 02
நீர்வை
உலகெங்கும் பரவியிருக்கும் சைவத்தமிழ் மக்கள் மிகப்ப
அனுஷ்டிக்கும் விரதம் கந்தஷஷ்டி நம் வாழ்வில் எத்தனையோ வி கைக்கொண்டாலும் இந்த விரதத்திற்கு அதி மகத்துவமும் ( இருக்கின்றது. அதி பரிசுத்தர்களாக அந்தக் கந்தஷஷ்டி ஆறு நாளு நீர்கூட உட்கொள்ளாமல் உண்ணாநோன்பு அனுசரிக்கின்ற உ இன்றும் நாம் காணலாம். "ஷஷ்டியில் இருந்தால் அகப்பையில் வ முதுமொழி. இந்தத் திருமொழியில் நம்பிக்கை வைத்துப் ப விரதமிருந்து கருப்பையில் குழந்தையைச் சுமந்துபெற்று மகிழ்ந்த பெண்கள் ஏராளம்.
தமிழகத்தில் முருகனுடைய ஆறுபடைவீடுகளிலும் ஒவ் சிறப்புக்களுடன் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருச்செந்தில் திருக்கோயிலில் நடைபெறும் கந்தஷஷ்டிப் பெரு விழாவில் வரு கலந்து முருகனருளில் திளைக்கும் நம்
ஈழத்தில் யாழ்ப்பாணத்து நீ கந்தஷஷ்டி மகோற்சவம் மிகச் மூவிருநாளும் காலையிலும் மா மூன்றிலும் முத்தமிழ்க் கடவுளான
விநாயகர் - தேவியர் இருவருடன் ஆறுமுகப் பெரும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Whind UOrgan.Com e-mail editor Chindu organ. Com த் திங்கள் 1ஆம் நாள் பிரதி விலை 2009) ebLIIT. 50.00
கந்தவுஷ்ழ விழா
| urაგუუწმ -
யபக்தியோடு சிறப்புக்கள் நிறைந்தது. இறைவன் முருகனைப் ரதங்களைக் பூசனை புரியும் முறையை விபரிக்கும்.
முதன்மையும் "குமாரதந்திராகமம்" கூறும் நம் ஒரு துளி விதி முறையை அணு உத்தமர்களை சரித்து இந்த விழா ரும்" என்பது இங்கே நிகழ் யபக்தியுடன்
5 குடும்பப்
வொரு வித ஆண்டவன்
ன் - சிவன், அம்பாள் - நீர்வை கந்தன் கோபுரவாசல்

Page 2
அந்துசாதனம் 8.
"எழுதினங்களோ அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களோ நிகழும் விழாவை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம் போன்றவற்றுடன் கொடியேற்றி பலி, யாகம் முதலிய அங்கங்களுடன் பெருந்திரு
விழாவாகக் கொண்டாடலாம்" என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்த வகையில் நீர்வை நகரிலே கந்தஷஷ்டி முதல் நாளான பூர்வபக்க பிரதமையில் கொடியேறி சப்தமியில் தீர்த்த உற்சவம் நிகழும் வண்ணம் ஏழுநாள்கள் இந்த விழா நடைபெறுகின்றது. சிற்சில ஆண்டுகளில் பஞ்சாங்கங்களாலும், திதிப்பங்கீடு காரணமாகவும் கந்தஷஷ்டி விரதம் ஆறுநாள் கணக்கிலிருந்து கூடுவதும் குறைவதும் நாமறிந்ததே. ஆனால் திருச்செந்தூரில் நடை பெறுவதைப்போன்று, நீர்வேலி கந்தனுக்கும் இது ஏழுநாள் மஹோற்சவமாதலில் இந்தக் குழப்பங்களுக்கு இங்கே இடமில்லை.
இவ்வாலயத்தில் இவ்விழாவை ஆரம்பித்து நடத்திய பெருமை சிவழீசு.இராஜேந்திரக் குருக்களையே சாரும். 2000ஆம் ஆண்டில் அமரத்துவம் பெற்ற இராஜேந்திரக் குருக்கள் கந்தபுராணத்தேனை அருந்தித் திளைத்தவர்; கலைமகள் பத்திரிகாசிரியர் கி.வா.ஜகந்நாதனுடன் நெருங்கிய தோழைமை பூண்டவர். தமிழக முருகனாலயம் தோறும் சென்று ஆங்காங்கே நடைபெறும் கந்தஷஷ்டி உற்சவங்களைக் கண்டனுபவித்து அதன் பேறாக இங்கே இந்த விழாவை உருவாக்கியுள்ளார்.
இவ்வாண்டு இத்திருக்கோவிலில் 19.10.2009 திங்கட்கிழமை கந்தவுடிஷ்டி உற்சவம் ஆரம்பமாகின்றது. கந்தஷஷ்டி உற்சவத்தில் முதல்நாள் அங்குரார்ப் பணத்துடன் கொடியேறி விழாத் தொடங்குகின்றது. ஐந்தாம் திருநாளில் (கந்த பஞ்சமி) மதியம் விஸ்வரூப தரிசனம் என்ற நிகழ்ச்சி நடக்கும். முருகப்பெருமான் சூரபத்மனுக்கு நல்லுணர்வு உண்டாகும் வண்ணம் தன் திருப்பெருவடிவைக் காட்டும் காட்சி இங்கே ஷண்முகார்ச்சனையுடன் நிகழ்த்திக் காட்டப்படுகின்றது. ஆறாம் நாள் ஷஷ்டி நன்நாளில் மதியம் இறைவன் வேல்பெறும் காட்சியும் மாலையில் சூரசம்ஹார விழாவும் நிகழ்கின்றன.
இன்றைக்கும் தமிழகத்தில் சிக்கலில் சிங்கார வேலர் அன்னையிடம் வேல்பெறும்போது அத்திருவுருவினின்று பெருகிவரும் வியர்வையும், திருச்செந்தூரில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு வரும்போது அலைகடல் பின்னோக்கிச் சென்று அமைதி பேணுவதும் நிகழ்கால அதிசயங்கள். அவற்றையும் நாம் இவ்வேளையிற் சிந்திக்க வேண்டும். நீர்வேலிக் கந்தனுக்கு ஏழாம் நாள் பாரணையன்று நடைபெறும் தீர்த்த விழாவுடன் மாலை மஹோற்சவம் நிறைவுற மறுநாள் அந்த வெற்றிவேல் முருகனுக்கு வைதீக மரபுப்படி கல்யாண உற்சவம் சிறப்புற நடக்கின்றது.
ఆ_

Page 3
இந்துசாதனம் 8B.O
சமயம் ஒரு
கலாநிதி மனோன்
பூமிக்கு இரண்டு எல்லைகள் உண்டு. ஒன்று வானம். மற்றது ஆகாயம். ஆகாயம் வடசொல். இதைவிட விண், வானம் என இரு சொற்களும் பயன்பாட்டில் உள்ளன. மண்ணுலகில் மனிதர் வாழ்கின்றனர். விண்ணிலே தெய்வங்கள் உறைகின்றன. இறைவன் விண்ணிலும் மண்ணிலுமுள்ளான். இக்கருத்து எமது சமய வாழ்வியலின் ஒரு ஆழமான அடிப்படையாக எமது மூத்தோரால் கொள்ளப்பட்டது. இறைவன்மீது பக்திமாலை சாற்றிய மெய்யடியார்கள் இதனைத் தமது பாடல்களிலே தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். 'விண்ணகத்தான்’ என இறைவனின் இருப்பிடத்தைச் சுட்டும் பல பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன.
விண்ணிலே இருக்கும் இறைவனைப் பற்றிய பல செய்திகள் தேவாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
"விண்ணானைமேருவில்லாவுடையான்றன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியினானை."
விண்ணிலுறையும் இறைவன் மேருமலையை வில்லாகக் கொண்டவன் என்ற குறிப்பு விண்ணையும், மண்ணையும் தொடர்புறுத்தும் நிலையை நன்கு விளக்குகிறது. விண்ணிலுள்ள இளந்திங்களை முடியிலே சூடியவன் என இறைவன் கோலம் விண்ணோடு இணைத்துப் பேசப்படுகின்றது. 'விண்ணாகி நிலனாகி விசும்பாகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற இறைவன் என அப்பர் குறிப்பிட்டுள்ளார். இங்கு விசும்பு என்ற சொல் இன்னொரு இடத்தைக் குறிப்பிடுவது நோக்குதற்குரியது. வள்ளுவருடைய குறள் 'விசும்பு என்னும் சொற்பொருளைத் தெளிவாய்விளக்கியுள்ளது.
"விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலைகாண் பரித'
மேகத்தின் துளி மண்ணில் விழாவிட்டால் புல்லின் தலையைக் காணமுடியாது. மழை முகில் என்ற பொருளை விசும்பு என்னும் சொல் தருகிறது.
நாவுக்கரசர் விண்ணுக்கும் மண்ணுக்கும் இறைவன் அருள் செய்வதை நன்கு விளக்கியுள்ளார்.
"விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப் பண்ணுனார் பயிலுந் திருக்கோளிலி அண்ணலாரடி தொழுதுய்மினே"
விண்ணிலே உறைபவர்,மண்ணிலே வாழ்பவர் என இருவகையினர் வாழ்வியலிலும் இறைவழிபாடு இணைந்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றார். உயர்ந்த பேறுகளைப் பெற்றுவிண்ணிலே உறையும் தேவர்கள் தொழுதுவாழும் மரபுடையவர். அவர்களுக்கு வாழ்வின் ஒளி காலும் விளக்காக இறைவன் இருக்கிறான்; ஆனால் மண்ணிலே வாழ்பவருடைய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளான்; பண் பயில்பவர் பயிலும் இசையாகி நிற்கிறான். திருக்கோயிலிலே தெய்வமாகிக் காட்சி தருகின்றான். விண்ணில் வாழ்வோரும் இறைவனைப் பணிந்து வாழும் வாழ்வியலை மேற்கொண்டுள்ளனர்.
 
 
 

2OO9 விரோதி ஐப்பசி இட
ாழ்வியல்- 10 மணி சண்முகதாஸ்
வானவரையும் வணங்க வைத்தார். அவரது வல்வினை யையும் மாளவைத்தார்’ என அப்பர் இறைவன் வானோடு தொடர்புற்ற நிலையையும் விளக்கியுள்ளார். ‘வானவர் கோன்' என இறைவன் போற்றப்படுகிறான். வானவரும் இறைவனை வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவி வழிபாடு செய்வர்.'வானவன் காண்' என இறைவன் வானாகி நிற்பதையும் அப்பர் விளக்கியுள்ளார். வானோரும் மறை மாதவத்தோரும் வழிபட்ட பெருமைபெற்ற இறைவனை மண்ணிலே வந்து பிறந்து வழிபடும் பயன்பெற்றோர் பெரும்பேறுபெற்றவராவர்.
இத்தகைய வழிபாட்டு மரபு இன்று வானத்தில் வளர்முகிலை மதியந்தன்னை வணங்கும் மரபாகத் தொடர்ந்து வருகிறது. மூன்றாம் பிறையைத் தொழும்போது இறைவன் திருமுடியை வணங்கும் அனுபவத்தைப் பெறலாம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற கருத்தை மனதில் ஆழமாகப் பதித்தவர், மண்ணையும் விண்ணையும் ஆளும் பேராற்றலாக இறைவனை மதித்துப் போற்றி வழிபாடு செய்கின்றனர்.
விஞ்ஞான அறிவு மக்களிடையே பரவுவதற்கு முன்னரே இறைவனைப் பஞ்சபூதங்களில் கண்டு வழிபடும் மரபு தோன்றிவிட்டது. வானம், விண். விசும்பு என்ற மூன்று சொற்களும் இயற்கைத் தோற்ற நிலையில் இவற்றுக்கு இடையேயுள்ள இடைவெளி பற்றி விளக்கிநிற்கின்றன. எமது கண்களுக்கு முதலில் தோன்றுவது விசும்பாகும். இதனையே தற்போது முகில் என்கிறோம். மழைமுகில் ஆகி வந்து மழைவளம் தரும் இயற்கைச் சக்தியை மாரி எனப் போற்றி வழிபடும் மரபு உண்டு. வள்ளுவர் வான், விண், விசும்பு என்ற மூன்று சொற்களையும் வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வாழ்வியலோடு வைத்து விளக்கியுள்ளார். முதற் படியில் விசும்பையும் அடுத்து விண்ணையும் அதற்குமேல் வானையும் காட்டுகிறார். வானம் அதிஉயர்ந்த சிறப்புடைய தென்பதை விளக்குமுகமாக அச்சொல்லை 4 குறளில் பயன்படுத்தியுள்ளார்.
மழை, வெப்பம், காற்று, தீ, ஆகாயம் என்னும் ஐந்து பேராற்றல்களையும் மண்ணில் வாழும் மக்கள் பணிந்து வாழவேண்டும். அவற்றின் பயனை முற்றுமாக உணர்ந்தபோது இவ்வியற்கை வழிபாடு தலைமுறைக் கையளிப்புச் செய்யப்பட்டது. மண்ணுலகம் விண்ணுலகம் என்ற இரு உலகு பற்றிய சிந்தனை உருவாகிற்று. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற எண்ணம் தொடரலாயிற்று. வையகத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உறையும் தெய்வத்துடன் சேரும் வாய்ப்பு உண்டென்பது தெளிவாயிற்று. மேற்செல்லும் நோக்கத்தை நிறைவாக்க ஒழுங்கான வாழ்வியற் செயற்பாடு பெரிதும் வேண்டப்பட்டது. இந்த வாழ்வியல் பெரிய மனவுரத்தை நல்கியது. "வானந்துளங்கிலென் மண்கம்பமாகிலென் மால்வரையும் தானந்துளங்கித் தலைதடுமாறி லென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென்" என இயற்கைத் தோற்றங்கள் மாற்றமுறுவதாயினும் மனந்தளராது உறுதியோடிருக்க வழிபாடும் இறைவன் பற்றிய இடையறாத எண்ணமும் எமதுவாழ்வியலாகி நிலைபெற்றுள்ளன. 人

Page 4
இந்துசாதனம் 8C
அழித்தற் கடவுள்
38. சிவபெருமான் எல்லாத் தொழில்களையும் செய்யவல்ல முதற்கடவுள் அன்றோ? அழித்தலாகிய ஒரு தொழிலை மட்டுமே செய்பவன் என்று கருதும்படியாக அவனைச் சங்காரக் கடவுள் அல்லது அழித்தற் கடவுள் என்று சைவ நூல்கள் குறிப்பிடுவது ஏன்?
படைத்தல் முதலிய எல்லாத் தொழில்களும் சிவபெரு மானுடைய தொழில்களேயாம். அதனால் அவன் படைத்தற் கடவுளாகவும் இருக்கின்றான்; காத்தற் கடவுளாகவும் இருக்கின்றான்; அழித்தற் கடவுளாகவும் இருக்கிறான். ஆயினும், அவன் அழித்தல் தொழிலைச் சிறப்பாக உடையவன் என்பதையே நூல்கள் பெரிதாக எடுத்துக்கூறும்; அவன் முதுகாட்டை ஆடரங்காகக் கொள்ளுதலையும் சாம்பற்பூச்சு என்புமாலை தலைமாலை முதலிய அவனது கோலங்களையும் எவ்விடத்தும் எடுத்துக் கூறி அவனே அழித்தற் கடவுள் என்பதை வலியுறுத்தும்.
இவ்வாறு அழித்தல் தொழிலை முதல்வனுக்கு இலக்கணமாக எடுத்தோதக் காரணம் என்னை எனில், அழித்தல் தொழிலைச் செய்பவனே எல்லாத் தொழில்களையும் செய்ய வல்லவன் ஆவான்.
படைத்தல், காத்தல் ஆகிய மற்றைய இரு தொழில்களைச் செய்வோர் தத்தம் தொழிற்கு மட்டும் உரியரே யன்றி எல்லாத் தொழில்களையும் செய்தற்கு உரிமையுடையவரல்லர். இதனால், அழித்தல் தொழிலே முத் தொழில்களுள் சிறந்து நிற்பது என்பது புலனாகும்.
(آساآرام) فهیم
山岳5弹
“2oog - 0949ს اق السات السنة
O 600
ரூழிக்காலம் என்பது உண்டு என்று நூல்கள் கூறுகின்றன. அப்போது எல்லா வுலகங்களும், எல்லா உயிர்களும் ஒருங்கே முழுதுமாக ஒடுக்கப்பட்டுவிடும்.
அந்த முற்றழிப்பைச் செய்பவன்யாவன்? அதனைச் செய்பவன் படைப்புக் கடவுளா? எனில், அவனுக்குரிய தொழில் படைத்தல் ஆகிய ஒன்று மட்டுமே. அதுபற்றி யன்றோ அவன் படைப்புக் கடவுள் எனப் பெயர் பெற்றான்? எனவே அவன் முற்றழிப் பினைச் செய்வதற்கு உரிமைடையனல்லன்.
படைப்புக் கடவுளுக்குச் சொன்னது காத்தற் கடவுளுக்கும் பொருந்தும். அவன் காத்தலாகிய ஒரு தொழிற்கு மட்டுமே உரியன். காத்தற் கடவுள் என்ற பெயரே இதைத்தான் காட்டுகிறது. எனவே அவனும் முற்றழிப்பைச் செய்வதற்கு உரிமையுடையனல்லன். இதனால், படைப்பவனுக்கும் காப்பவனுக்கும் அழித்தல் தொழிலோடு எவ்வகையிலும் இயைபு இல்லை என்பது புலனாகிறது. ஆயின், அழித்தற் கடவுளுக்குப் படைத்தல் முதலிய முத்தொழில்களோடும் இயைபு இருத்தல், ஆய்வு முறையில் நோக்கினால், இனிது விளங்கும்.
அழித்தற் கடவுளாகிய சிவபிரான் முற்றழிப்புக் காலத்தில் எல்லாப் பொருளையும் அழிப்பதோடு ஏனை இருவரையும்
0.
 
 
 
 
 
 

2009 விரோதி ஐப்பசி O
சைவசித்தாந்தம்
அழிப்பான் என்றே கூறவேண்டியுள்ளது. படைத்தலோ, காத்தலோ நிகழாத அந்நிலையில் அவ்விருவரையும் வாளா நிறுத்தி வைத்தல் எதற்கு? மேலும், ஒருவர் இருவர் அழியாது எஞ்சிநின்றார் எனில், அது எப்படி முற்றழிப்பு ஆகும்? ஆகவே முற்றழிப்புக் காலத்தில் அவ்விருவரும் ஒடுக்கப்பட்டுவிடுவர் என்றுகொள்ளுதலே பொருத்தமாகும்.
இவ்வாறு அழித்தற் கடவுளால் அழிந்த உலகம் மீளத் தோன்ற வேண்டிய காலத்தில் அதனைத் தோற்றுவிப்பவன் யார்? அழித்தற் கடவுளன்றி அப்பொழுது வேறொருவர் இல்லாமையால் அவனே தோற்றுவிப்பான் என்பது, தானே பெறப்படும்.
இவ்வாறு அழித்தற் கடவுள் அழித்தலும் படைத்தலும் ஆகிய இரு தொழில்களைச் செய்பவன் ஆகின்றான். சங்காரத்தையும் படைத்தலையும் செய்பவன் ஒருவனே என்று ஏற்பட்ட பின்,இடை நிற்கும் காத்தலையும் அவனே செய்வான் என்று கூறுதற்கு என்ன தடை?
இங்ங்ணம் ஆராய்ந்து காணும்பொழுது, அழித்தல் தொழிலால் ஏனை இரு தொழில்களும் பெறப்படுகின்றமை பற்றித் அத்தொழிலே மேம்பட்டது என்பதும், அழித்தற் கடவுளே முத்தொழிலையும் செய்யவல்ல முதல்வன் என்பதும் இனிது விளங்கும்.
இது பற்றியே சைவ நூல்கள் அழித்தல் தொழிலையே முதல்வனாகிய சிவபெருமானு குரிய சிறப்பிலக் கணமாக எ டு த் தோ து கி ன் ற ன .
முனைவர் ஆ.ஆனந்தராசன்
சைவசித்தாந்தம் முத்தொழிற்கும் அவனே முதல்வன் என்பதை இனிதுணர்த்தும் வகையில் சங்கார காரணன் என்று அவனைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
ஐந்தொழில்கள்
39.
4.O.
முத்தொழிலும் செய்ய வல்லவனே முதல்வன் என்பதை விளக்கினிகள். இறைவன் செய்வது இம்முத்தொழில் மட்டுமா? அவற்றிற்கு மேலும் வேறு தொழில்கள் உண்டா? படைத்தல், காத்தல், அழித்தல் என்ற இம்மூன்றோடு மறைத்தல், அருளல் என்ற இரு தொழில்களைச் சேர்த்து இறைவன் செய்வன ஐந்தொழில்கள் என்பர். இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்பதைச் சைவசமயம் ஒன்றே கூறுகிறது. பிறசமயங்கள் இறைவன் செய்யும் தொழில் மூன்று என்றே கூறுகின்றன.
இவ்வைந்தொழில்களில் முதலில் உள்ளதாகிய படைத்தல் தொழில் என்பது என்ன?
இறைவன் மாயையாகிய காரணப்பொருளிலிருந்து உலக மாகிய காரியப் பொருளைத் தோற்றுவித்து உயிர்களுக்குக் கூட்டுவித்தலே படைத்தல் ஆகும்.
-->

Page 5
இந்துசாதனம் 83.O
உலகம் தனு, கரணம், புவனம், போகம் என நான்கு வகையாய் அமையும். தனு என்பது உடம்பு கரணம் என்பது மனம் முதலிய உட்கருவிகள்; புவனம் என்பது உடம்பு இயங்குதற் குரிய இடமாகிய நிலம்; போகம் என்பது நிலத்தில் காணப்படும் நுகர்ச்சிப்பொருள்கள்.
உயிர்கள் இப்பிறவியில் நுகர்ந்து கழிப்பதற்கு என்று எடுத்து வந்த வினைகளுக்கு ஏற்றபடி, இறைவன் உடம்பு முதலிய இந்நான்கையும் வெவ்வேறு வகையில் அமைத்துத் தருகின்றான்.
தனு, கரணம் முதலியவற்றைப் பெற்ற உயிர்கள் அவற்றால் தமது வினைகளை நுகர்ந்து கழிக்கும் போது அவ்வனுபவத்தால் தொன்றுதொட்டு அவ்வுயிர்களைப் பிணித்துள்ள ஆணவமலத்தின் ஆற்றல் படிப்படியாகத் தேய்ந்து மெலிவு அடையும். கன்மம் நீங்கு முகத்தால் இவ்வாறு மலபாகம் வரச் செய்தலே படைத்தல் தொழிலின் நோக்கமாகும்.
40. காத்தல் தொழில் என்பது என்ன?
மாயையிலிருந்து உண்டாக்கிக் கொடுத்த தனு, கரண, புவன, போகங்களை அழியாமல் நிறுத்தி வைத்தலே காத்தலாகும். உயிர்கள் தாம் எடுத்து வந்த வினைகளை நுகர்ந்து முடிக்கும் காலம் வரையில் அதற்குத் துணையாக உடம்பு முதலியவை நிறுத்திவைக்கப்படும். எனவே வினையாகிய தளை நீங்குதற் பொருட்டு வினைப்பயன்களை நுகர்வித்தல் காத்தல் தொழில் ஆகிறது.
42. அழித்தல் தொழில் என்பது யாது?
உயிர்கள் பல்வேறு உடம்புகளை எடுத்துப் பிறந்து பின் இறந்து உழலும் நிலையினின்றும் நீங்கிச் சிறிது காலம் ஒய்வு பெற்று இருக்குமாறு அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றைப் பிரித்து மாயையில் ஒடுக்கி விடுதலே அழித்தல் தொழிலாகும்.
இதனால், உயிர்கள் மாறிமாறி வருகின்ற பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பொருந்தி நிலவுலகமும், மேல் உலகமும், கீழ் உலகமும் ஆகிய உலகங்களில் புகுந்து அலைந்த பெரிய இளைப்புநீங்கப்பெறும்.
43. மறைத்தல் தொழில் என்பது என்ன?
இறைவன் உயிர்களின் பின் மறைந்து நின்று, அவற்றைப் பிணித்துள்ள மும்மலங்களைச் செயற்படுத்தி, அம்மலங்கள் செய்யும் காரியத்தால் உயிர்கள் உலகப் பொருள்களின் மேல் பற்று வைத்து அப்பொருள்களிடத்திலேயே அழுத்தி நிற்கும்படியான மயக்க நிலையைச் செய்வான். இதுவே மறைத்தல் எனப்படுகிறது.
இந்நிலையில் உயிர்கள் தம்மை அறியாமல், தம்மை உடையவனாகிய இறைவனையும் அறியாமல் உலக மயக்கில் ஆழ்ந்து நிற்கும்.
 

2OO9 விரோதி ஐப்பசி O
44. இறைவன் இவ்வாறு தன்னை அறியவிடாது உயிர்களின் அறிவை மறைத்தல் தகுமோ? அஃது உயிர்களுக்கு நன்மை செய்வது ஆகுமோ?
மறைத்தலைச் செய்வது இறைவனுக்கு இயல்பன்று. அவனது இயல்பு அறிவை விளக்குதலேயாகும்.
உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலமே. அந்த
ஆணவ மலத்தின் சத்தியைத் தனது சத்தியால் தூண்டி உயிர்களின் அறிவை மறைக்கும்படி செய்கிறான்.
ஏன் அவன் அவ்வாறு செய்ய வேண்டும் எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவமலத்தின் பிடிப்பை நீக்க வேண்டுமானால் அதனை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? அம்மலத்தைச் செயற்பட வைத்தால் தான் அதன் ஆற்றல் செயற்படச் செயற்படத் தேய்ந்து தேய்ந்து மெலிவடையும்.
ஆணவத்தின் சத்தி மெலிவடைய, மெலிவடைய உயிர்களின் அறிவு, மறைப்பு நீங்கி விளக்கம் பெறும்; இறைவனை யறியும் தகுதியைப் பெறும்.
அந்நன்மையைக் கருதியே இறைவன் உயிர்களுக்கு உடம்பைக் கொடுத்து உலக வாழ்வில் செலுத்தி, ஆணவம் முதலிய மும்மலங்களைத் தனது சக்தியினால் செயற்படுத்து கிறான்.
ஆணவம் இருள்போன்றது ஆதலின் மறைப்பது அதன் இயல்பாகின்றது. அஃது உயிர்களின் அறிவை மறைத்து அறியாமையை உண்டாக்குகிறது; மாயை கன்மங்களோடு
கூடி, உயிர்களின் அறிவைத்திரிபுபடுத்துகிற, அதாவது யான் எனது என்னும் தன் முனைப்பை உண்டாக்கி, எச்செயலுக்கும் தன்னையே தலைவன் என்று மதிக்க வைக்கிறது; உலக போகமே நிலையானது என்றும், உலக போகத்திற்கு ஏதுவாகிய எல்லாவற்றையும் பெற்றுத் துய்க்க வேண்டும் என்றும் எழுகின்ற ஆசையுட்படுத்தி உயிர்களின் அறிவைத் திசைதிருப்புகிறது.
இவ்வாறு பலப்பல பிறவிகளில் ஆணவ மலம் செயற்படச் செயற்படக்காலப் போக்கில் அதன் ஆற்றல் மெலிவடையும். அதன் பிணிப்பிலிருந்து படிப்படியாக விடுபடுகின்ற உயிரின் அறிவு சிறிதுசிறிதாக வளரும்.
அவ்வறிவு வளர்ச்சியால் முன்பு அறியாதிருந்த துன்பத்தை உயிர் உணரும். அதாவது பிறவியால் வருவது துன்பம் என்பதை உயர்ந்து அத்துன்பத்தினின்றும் நீங்க விரும்பும், உய்யும் நெறியின் தொடக்க நிலை இதுதான்.
ஆணவமலம் தேய்ந்து வரும் இநிநிலையே மலபரிபாகம் எனப்படுகிறது. இதனை வருவித்தற் பொருட்டே இறைவன் பாசத்தின் வழி நின்று மறைத்தலைச் செய்கின்றான. இதனால் மறைத்தல் தொழில் உயிர்களின் நன்மையின் பொருட்டே என்பது விளங்கும்.
->

Page 6
இந்துசாதனம் 8. O 45. இறைவன் மும்மலங்களைத் தனது சத்தியினால் செயற்படுத்தி உயிர்கள்ைப் பந்தத்துட்படுத்துகிறான் என்றீர்கள். அந்நிலையில் அவனது சத்தி என்ன பெயர் பெறும்.
மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியாக உயிர்களின் அறிவை மறைக்கச் செய்கின்ற இறைவனது சக்தி திரோதான சத்தி என்று சொல்லப்படும். திரோதானம் என்பதற்கு மறைத்தல் என்பது பொருள். தமிழில் திரோதான சத்தி மறக்கருணை எனப்படும்.
மருத்துவன் சில நோய்களுக்குக் கசப்பு மிக்க மருந்துகளைக் கொடுத்துத் தீர்க்கின்றான்; சில நோய்கள் தீர்வதற்கு அறுவைச் சிகிச்சை, சுடுதல் சிகிச்சை என்பவற்றையும் செய்கின்றான். அச்சிகிச்சைகளால் நோயாளி அப்பொழுது துன்புறுதல் இயற்கை. அது போன்றதே திரோதான சத்தி உயிர்களைப் பந்தத்துட்படுத்துதலும். அது உயிர்களுக்குத் துன்பமாகத் தோன்றுதலால் மறக்கருணை எனப்படுவ தாயிற்று.
உயிரைப் பற்றியுள்ள நோயாகிய ஆணவ மலம் மெலிவு அடைந்தால் உடனே மறக் கருணையாகிய திரோதான சத்தி அறக்கருணையாகிய அருட் சத்தியாய் மாறிவிடும். நோய்
வருகின்றான். ஆபிரிக்க LO நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயம் என முன்ன வித்தியாலயத்தில் நடைபெற்ற விஜயதசமிப் பெருவிழாவி சுவாமிகள் அந்தச் சிறுவனின் சாதனைகளை இலகு த மாணவிகளிடம் தொண்டுசெய்யும் ஆர்வத்தைத்துாண்டி
வித்தியாலய அதிபர் திரு.மகேசன் கஜேந்திரன்த பரிபாலன சபையின் பிரசார அமைச்சர் சைவப்புலவர் பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்; இந்துசாதனம் Lomorofilasopásefu I LIGoorů LuflonočFuph வழங்கினார். பரிசு சீதுர்க்காயினி, செல்வி வ. தனுஜா ஆகியோருடன் தி கஜேந்திரன்ஆகியோர் நிற்பதையும்படத்திற்காணலாம்.
o
 

D2OO9. விரோதி ஐப்பசி O
தீர்ந்தபின் நோயாளியின் உடல் வலிமை பெறுவதற்கு மருத்துவர் உரிய வழிமுறைகளை மேற்கொள்வது போல, இறைவன் தனது அருட்சத்தியினால் அவ்வுயிரை உய்யும் நெறியில் செலுத்துவான்.
46. அருளல் தொழில் என்பது என்ன?
ஆணவத்தின் சத்தி மெலியப் பெற்ற உயிர்களுக்கு இறைவனை அடையும் விருப்பம் நிகழும். அப்பொழுது இறைவன் அவ்வுயிர்களுக்குத் தன்னைக் காட்டி, உயிரியல்பையும் உயிரைப் பற்றியுள்ள பாசத்தின் இயல்பையும் நன்கு உணருமாறு காட்டிப் பகையாகிய பாசத்தினின்றும் விடுவித்து, உறவாகிய தன்னை அடைந்து இன்புறுமாறு செய்வன். இதுவே அருளல் ஆகும்.
இவ்வருளலைச் செய்வது இறைவனது அருட் சத்தியாகும். முன்னே கூறிய திரோதான சத்தியும், இவ்வருட் சத்தியும் வேறானவையல்ல. இறைவனது ஒரு சத்தியே திரோதான சத்தியும் அருட்சத்தியும் என இரண்டாகி நின்று, மறைத்தல் அருளல் என்னும் இரு தொழில்களைச் செய்யும்.
திரோதான சத்தி மறைமுக அருளாகும். அருட்சத்தி நேர்முக அருளாகும். எனவே இரண்டும் அருளேயாம். 人
ーイ 9یہ(مجھ
விழா
"தொண்டு செய்வதற்கு வயதுக் கட்டுப்பாடு இல்லை. மாணவிகளான நீங்களும் மக்கட் தொண்டில் மனமுவந்து ஈடுபடலாம். ஆபிரிக்க நாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியி லிருந்த மக்கள் குடிதண்ணிர் இன்றிப் பட்ட கஷ்டம், பிறெயலி என்ற ஏழு வயதுச் சிறுவனின் நெஞ்சைத் தொட்டது. தன் ஓய்வு நேரத்தில் குளிர்பானம் தயாரித்து விற்ற பணத்தைக் கொண்டு தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்து, குடி தண்ணிர்க் கஷ்டத்தை நீக்கினான். அந்தச் சிறுவன், இப்போ பிரபல்யமான தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி க்கள் அவனுக்குப் பெருமதிப்பு அளிக்கின்றார்கள்." Iர் வழங்கப்பெற்ற நல்லுர் இந்துத் தமிழ் மகளிர் பிற் பேசிய ஹாவாய் சைவ ஆதீன ரிவழி தொண்டுநாதன் மிழில் கம்பீரமான தொனியில் அழகாக எடுத்துககூறி
αστΠή.
லைமையில் நடைபெற்ற இந்த விழாவிலே, யாழ். சைவ திரு.மு.திருஞானசம்பந்தபிள்ளை " சக்தியின் மகிமை" - நடத்தும் சமய அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற tபெற்ற மாணவிகளான செல்வி வ. கிருஷாந்தி, செல்வி ரு.மு. திருஞானசம்பந்தபிள்ளை அதிபர், திரு. மகேசன்
22உல் : தீ அர்க்20லிகி

Page 7
எங்கள் விபயரால் இறைவனுக் பஞ்ச கள்
வித்யாபூஷணம், பிரம்மழுநீ ப. சிவானந்
பூர்வாங்கக் கிரியைகள் என்ற வகையில் நமது சமயச் சடங்குகள், கிரியைகள் யாவற்றிலும் முதல் அம்சமாக அமைவது விநாயக வழிபாடு. அதை அடுத்து அமையும் புண்யாக வாசனத்தின் ஓர் அங்கமாக அதிகமான சந்தர்ப்பங்களில் இடம் பெறும் இன்னொரு கிரியை பஞ்சகவ்ய பூஜை ஆகும். இதன் சொற்பொருள் முதலில் அவதானிக்கத் தக்கது. பஞ்ச என்பது ஐந்து. கவ்யம் என்பது பசுவுடன் தொடர்பானது. பசுவுடைய ஐந்து பொருட்கள் பஞ்சகவ்யம் ஆகின்றது. பால், தயிர், நெய், கோஜலம், கோமயம் என்னும் ஐந்தும் பசுவிலிருந்து பெறப்படுகின்றன. இவற்றை முறைப்படி சேர்க்கும்போது அற்புதமான ஒரு பொருள் தோன்றுகின்றது.
"சர்வ பாய கூடியகரம் சர்வ வ்யாதி விநாசனம்" என்று "குமாரதந்த்ரம்" கூறுகிறது. "பஞ்சகவ்யமானது எல்லாப் பாபங் களையும் போக்கவல்லது, எல்லா நோய்களையும் அழிக்கவல்லது" என்ற இக்கருத்து குமாரதந்த்ர ஆகமத்தின் இருபதாம் படலமாகிய பஞ்சகவ்ய விதியிற் கூறப்படுகிறது.
அதே படலத்தின் இறுதியில் மீண்டும், பஞ்வகவ்ய அபிஷேகேன மஹாபாதக நாசனம்" என்று வலியுறுத்தி முடிகின்றது. பஞ்சகவ்யத்தினால் அபிஷேகம் செய்வதன்மூலம் பெரிய பெரிய பாதகங்கள்கூட அழிந்துவிடுகின்றன என்பது இதன் பொருள். "காலையில் செய்யும் பஞ்சகவ்ய அபிஷேகத்தினால் எல்லாப் பாபங்களும் அழிகின்றன, மத்தியானத்திற் செய்யப்படும் அபிஷேகத்தினால் அமைதி கிட்டுகின்றது, மாலையிற் செய்யும் அபிஷேகத்தினால் எல்லா நோய்களும் அழிகின்றன" என்று மேலும் விரிவாக விளக்கம் தருகிறது குமாரதந்த்ரம்.
காரணாகமம் முதலிய ஏனைய ஆகமங்களிலும் பஞ்சகவ்ய விதி என்பது தனித்துவமாகவும் சிறப்பாகவும் சொல்லப்பட்டி ருக்கிறது.
"பம்காரம் பாபநாசம் ஸ்யாத்சகாரம் ஆத்ம சுத்திகம்
ககாரம் ஜன்மநாசம் ஸ்யாத் வ்யகாரம் மோக்ஷ ஹேதுகம்" என்பது பூர்வ காரணாகமம்.
பஞ்கவ்யம் என்ற சொல்லில் உள்ள யம் என்பது பல நிவிர்த்தியையும் ச என்பது ஆத்ம சுத்தியையும் க என்பது பிறவி
 

2OO9 விரோதி ஐப்பசி O
பிராணாயாமம், விநாய வணக்கம் சங்கல்பம், 500శాuరమిరొ * விபரங்களும் விளக்கங்களும்'இந்து சாதனத்தில் இடம் இந்த இதழில் இடம்பெறுகின்றது. கிரியைகளைச் செய்வோர்; ணுறும் sயில் இத்தகைய விளக்கங்கள் தொடர்ந்
த "இவர்" என்ன சொல்கிறார்? IUI GUDE
5ēFIOm B.A. (Hons.) (BESITŮLIITuiu 35mid)
நீக்கத்தையும் வ்ய என்பது மோகூடிகாரணத்தையும் குறிக்கிறது என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
இவற்றின்மூலம்பஞ்சகவ்ய பூஜையின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். பஞ்சகவ்யம் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு மிக உகந்தது. அவ்வாறு அபிஷேகம் செய்வதன்மூலம் முன்னே கூறிய நற்பலன்களை நாம் பெறலாம் என்பது தெளி வாகின்றது. அதுமட்டுமல்லாமற் பஞ்சகவ்யத்தை அருந்துவதும் அதனால் ஸ்நானம் செய்வதும்கூட ஆகமங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. அச்செயல்களும் முன்கூறிய பலன்களைத் தரவல்லவையே. பஞ்சகவ்யம் அருந்துதல் சாதாரணமாக ஆலய அபிஷேக காலங்களில் நடைமுறையில் உள்ளது. உபயகாரர்களை அதனை அருந்தச் செய்வது மரபு. ஆசௌசம் நீக்கும் வேளையிலும் பஞ்சகவ்யம் அருந்துகின்றோம்.
மஹோற்சவ காலத்திற் பேரீ தாடனம் என்ற கிரியையில் மேளத்தில் நாத தத்துவத்தை ஆவாஹனம் செய்து சிவாச்சாரியார் பூசித்தபின் பாரசைவம் என அழைக்கப்படும் இசை வேளாண் மரபைச் சேர்ந்த தவில் வித்துவான் கணபதி தாளத்தை அந்த வாத்தியத்தில் வாசிக்கும் மரபு உண்டு. அவ்வேளையில் அதனை வாசிக்கும் முன்னர் வித்துவானுக்குப் பஞ்சகவ்யம் அருந்தக் கொடுக்கும்படி ஆகமம் கூறுகிறது.
எனவே, சிவப்பணியில் ஈடுபடும் ஒருவர் முதலில் தம்மைத் தூய்மை செய்து சிவப்பணிக்குத் தகுதியுடையவராக ஆகவேண்டும் என்பது புலனாகின்றது. அந்தப் புனிதத் தன்மை பஞ்சகவ்யத்தினால் கிட்டுகிறது. பஞ்சகவ்யத்தின் பலன்களைக் கூறும் ஆகமசுலோகத்தில் 'ஆத்ம சுத்திகம் என்ற சொற்றொடர் இடம் பெறுவதைக் காணலாம். பஞ்சகவ்யபூஜையின் ஆரம்பத்திற் சங்கல்பம் செய்யும்போதும் "ஆத்ம சுத்யர்த்தம்" (ஆத்ம சுத்திக்காக) என்று கூறப்படுவதுண்டு.
ஸ்நானம், தோய்த்துவலர்ந்த வஸ்த்ரம் அணிதல், விபூதி தரித்தல் முதலியவற்றின்மூலம் புறச்சுத்தி சாத்தியமாகிறது. அகச்சுத்தியாகிய ஆத்ம சுத்திக்கும் நம்மிடம் உள்ள சகல தோஷங்களையும் போக்குவதற்கும் பஞ்சகவ்ய பூஜையைச் செய்து அதனை அபிஷேகம் செய்வதும் அருந்துவதும் அவசியமாகின்றன. -- Φ
7

Page 8
இந்துசாதனம் 8.
சிவாச்சார்யர்களுக்குச் சில சந்தர்ப்பங்களிற் பஞ்சகவ்ய ஸ்நானமும் சொல்லப்படுகிறது. தசவித ஸ்நானம் எனச் சொல்லப்படும்பத்துவித ஸ்நானங்களில் இதுவும் ஒன்று.
"பஸ்சாத் ஸ்நானம் பஞ்ச கவ்யை ராஜஸ்நானம் அதஹ்பரம்" என்ற வாமதேவ பத்ததி சுலோகம்மூலம் இதனை நாம் அறியலாம்.
மேலும் இதே நூலில் "சங்க தோஷ நிவிர்த்யர்த்தம் ஸ்நானம் ஸ்யாத் பஞ்ச கவ்யகம்" எனக் குறிப்பிடப்படுவதனால், சேரக்கூடாத சேர்க்கைகளினால் ஏற்படக்கூடிய தோஷங்களைப் போக்கும் வலிமை பஞ்சகவ்யத்திற்கு உண்டு என்பது புலனா கின்றது.
"பஞ்சகவ்ய சாதனம்" என்ற சொற்றொடர்மூலம் பஞ்சகவ்யம் எவ்வாறு சேர்க்கப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. கும்பாபிஷேகம் போன்ற கிரியைகளிற் பயன்படுத்தப்படும் ஒன்பது பொருட்களைக் கொண்டு செய்யப்படுகின்ற மிக விரிவான பஞ்சகவ்ய பூஜை பற்றிய விபரங்கள் இங்கு தரப்படுகின்றன. சாதாரணமாக ஸ்நபனாபிஷேகம் முதலிய கிரியைகளின்போதும் துடக்குக் கழிவு முதலிய வீட்டுக் கிரியைகளின்போதும் ஆணைந்து எனப்படும் பசுவின் ஐந்து பொருட்களும் தர்ப்பை நீரும் கலந்து செய்யப்படுவதே மரபு. அதிலும், இப்போதெல்லாம் தனியே பால் மாத்திரம் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டு ஏனைய ஐந்து பொருட்களும் ஐந்து பாத்திரங்களிற் வைக்கப்பட்டிருப்பதாகப் பாவனைசெய்து அதற்குரிய மந்திரங்களை ஒதிப் பூசிப்பதே வழக்கமாக நடைபெறுகின்றது.
பால் கிடைக்காத இடத்தில் தயிரையும் தயிர் கிடைக்காத இடத்தில் பாலையும், அதேபோல் ஏனைய பொருட்கள் கிடைக்காத இடத்து, பால், தயிர் அல்லது நெய் இவற்றில் ஏதாவதொன்றை ஒரு பாத்திரத்தில் வைத்துமுறைப்படி பூசிக்கலாம் என அம்சுமத் ஆகமம் கூறுகின்றது.
டம் ப்ரக்ருதிதத்வ கோஷ்டம் வாயுதத்வ கோஷ்டம் புருஷததவ கோஷ்டம் a v ரத்னோதக பாத்ரம் அவயகத பாதரம சமயுகத பாதரம SS SS SSL SSS0SS S LLL L
கோஜலம் குசோதகம் (தர்ப்பைநீர்) மஞ்சள் மா சரஸ்வதி
p 9ے} க்னி கர்க்க மஹரிஷி f
ஆத்ரேய மஹரிஷி சக்தி மஹரிஷி
காலதத்வ கோஷ்டம் சிவதத்வ கோஷ்டம் சதாசிவதத்வ கோஷ்டம் அமிர்தாத்மக பாத்ரம் சுப்ரதிஷ்ட பாத்ரம் சுசாந்த பாத்ரம் கோமயம் UITs), தயிர் ப்ரஹஸ்பதி விஷ்ணு சோமன் கௌதம மஹரிஷி பாரத்வாஜ மஹரிஷி காஸ்ய மஹரிஷி
அப்தத்வ கோஷ்டம் வித்யாதத்வ கோஷ்டம் ப்ருத்வீதத்வ கோஷ்டம் செளர பாத்ரம் தேஜோவத் பாத்ரம் வ்யக்த பாத்ரம் ஆமலகம் நெய் அரிசிமா
அகஸ்திய மஹரிஷி விஸ்வாமித்ர மஹரிஷி பார்க்கவமஹரிஷி

D2OO9 விரோதி ஐப்பசி O
தானியத்தினால் மேடை செய்யப்பட்டு அதன்மேல் அரிசிமாவினால் நவபதம் எனப்படும் ஒன்பது சதுரங்கள் போடப்படும். இச்சதுரக்கட்டங்கள் கோஷ்டம் எனப்படும். இக்கோஷ்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவங்களாகப் பூசிக்கப்படும். அங்கு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களுக்கும் சிறப்பான பெயரிட்டுப் பூசிக்கப்படும். அதன்பின் அந்தக் கோஷ்டத்திற்குரிய பொருள் அதற்குரிய மந்திர ஜபத்துடன் வைக்கப்பட்டு ஒவ்வொரு தெய்வசக்தியும் ஒவ்வொரு ரிஷியும் அங்கு பூசிக்கப்படுவர்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய பஞ்ச ப்ரம மந்திரங்களும் அவற்றுக்குரிய வேத மந்திரங்களும் லக்ஷமீ, சரஸ்வதீ, சிவன் ஆகியோரின் மூலமந்திரங் களும் காயத்ரி மந்திரங்களும் இங்கு ஜபிக்கப்படுகின்றன. இவை பொருள் கூறுவதற்குரிய மந்திரங்களல்ல என்பதும் அவற்றின் ஒசைகளினால் பெறப்படும் அதிர்வுகளையே தமது பயனாக
உடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின் பாலைத் தயிருடன் சேர்த்து அவற்றை நெய்யுடன் சேர்த்து அம்மூன்றின் கலவையைக் கோஜலத்துடன் சேர்த்து அவற்றைக் கோமயத்துடன் சேர்த்து அதன்பின் தர்ப்பை நீரை எடுத்து இக்கலவையினுள் விடவேண்டும். இங்கே பொருட்கள் மட்டுமன்றி அவை வைக்கப்படும் ஸ்தானங்களும் அதிற் பூசிக்கப்படும் தேவர்களும் அதன்பின் அவற்றை ஒன்றுசேர்க்கின்ற முறையுங்கூட மிகவும் முக்கியமானவையாகும்.
இரசாயனச் சேர்க்கையொன்று சரியான பொருட்கள் சரியான விகிதத்திற் சரியான வெப்ப நிலையிற் சேர்க்கப்படும் போதுதான் அதன் சரியான விளைவைத் தருகின்றதென்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆயுர்வேத மருந்துகள் சரியான அனுபானங்களுடன் சரியான முறையிற் பயன்படுத்தப்படாவிட்டாற் பலன்தருவதில்லை என்பதும் யாவரும் அறிந்ததே. நமது இந்துசமயக் கிரியைகளின்போதும் இவ்விடயம் நன்கு கவனிக்கப்படவேண்டும். இன்னும் ஒரு விடயம் இங்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது. "நம்பிக்கை". இங்கு உருவாக்கப் பட்டிருப்பது வெறும் பெளதிகக் கலவையன்று. இது ஒரு தெய்வீக மருந்து என்ற நம்பிக்கை ஆஸ்திகனிடத்தில் உள்ளதால் அதன் பலன் இரட்டிப்பாகின்றது.
பஞ்சகவ்யத்திற் சேர்க்கப்படுகின்ற பால் மோக்ஷத்தைத் தரும் என்றும், தயிர் நோய் நீக்கத்தைச் செய்யுமென்றும், நெய் குஷ்டரோகம் முதலியவற்றைப் போக்குமென்றும் குமாரதந்த்ரம் கூறுகிறது.
பால் சத்ருநாசத்தையும், தயிர் புத்ரவிருத்தியையும், நெய் மோகூடிப்ரதத்தையும், கோஜலம் செல்வப் பேற்றையும், கோமயம் ரோகநாசனத்தையும் பலனாகக் கொண்டுள்ளது எனப் பூர்வ
காரணாகமம் சொல்கிறது.
இந்துசமயம் பசுவைத் தெய்விகமாகப் போற்றும்
மரபையுடையது. பசுஞ்சாணத்தினாற் செய்த விபூதி நமது சமயச் <<سسسسس

Page 9
இந்துசாதனம் 8.1O
சின்னமாக, பிறவி நோய்க்கு மருந்தாக இருப்பது கவனிக்கத் தக்கது. பசுவின் பாலும் தயிரும், சுவையும் புஷ்டியும் தரும் உணவுப் பொருட்களாக இருப்பதோடு, இறைவனுக்குரிய அபிஷேகப் பொருட்களாகவும் இருக்கின்றன. நெய் அபிஷேகத்திற்கும் ஹோமத்திற்கும் உதவுவதோடு, விளக்கேற்றவும் பயன்படுகின்றது. சாணத்தினால் மெழுகுவதன்மூலம் புனிதம் கிட்டுகின்றது. பிள்ளையாரை அழைக்கும் சாதனமாகவும் பசுஞ்சாணம் திகழ்கின்றது. இத்தனை மகிமை பொருந்திய பொருட்கள் ஒன்று சேர்ந்தால் அதன் பலன் எவ்வாறிருக்கும்?
மேலும் ஒரு தத்துவார்த்த சிந்தனையையும் முன்வைக் கலாம். சீவன் சிவனாக வேண்டுமென்பதே சமயத்தின் நோக்கம். சீவனுக்கு அடையாளச் சின்னம் பசு. ஆன்மாவைப் பசு என்பது சைவசித்தாந்த மரபு இடபத்தை இறைவனுக்கு வாகனமாக்கு கிறோம். அது நந்தியாகிமலநீக்கத்தினால் இறைசிந்தனை வலுத்து (அல்லது இறை சிந்தனையின் பலத்தால் மலநீக்கமாகி) இறைவனையே நோக்கிய வண்ணம் ஆலயத்தில் அமர்ந்
திருக்கிறது. பக்குவமடைந்த ஆன்மாவின் சின்னமாக அஸ்திர
வேதாகம விற்பன்ன தேவஸ்தானத்தின் பி LIGoofljipo66).d5LOIToor குருக்கள் அவர்கள் கெளரவிக்கும் வகை aboloui 66ITIT8556,o p66oo6ouucp h 29. O
வைக்கப்பட்டன. வ
ஆர்வலருமான மகா மேற்கொண்ட பெரு மகனும் மெய்யியல் திறந்துவைத்தார்.
திரு. க. சோமசேகரம், முன் எஸ்.ஏ. ஈ. ஏகநாதன் ஆகியோ க.வைத்தீஸ்வரக் குருக்கள் நாடா6 திறந்து வைப்பதையும், வலிகாமம்க விக்னேஸ்வரன் உரையாற்றுவதை திரைநீக்கஞ் செய்யப்பெற்ற சிவ குருக்கள், முன்னைநாள் இந்து மகேஸ்வரன் ஆகியோரின் உரு படங்களுக்கு மாலை சூட்டிக் கெளர அவர்களையும் இப்புகைப்படங்களி
O
 
 

D2OO9. விரோதி ஐப்பசி O
தேவரை முதுகில் தாங்கிய வாகனமாகக் கொடிச் சீலையில் வரையப்படுகிறது. இவற்றால் பசு என்பது ஆன்மா என்பதை உணர்கிறோம்.
பசுவின் பொருட்கள் ஐந்தும் சேர்ந்தே ஆத்ம சுத்தியை அருள்கிறது என்பதனால் ஆன்மாவுக்குள்ளேயே ஆத்ம சுத்திக்கான அருமருந்து அமைந்துள்ளது. அதனை வெளியிலே தேடுவது பேதைமை என்பது சுட்டிக் காட்டப்படுவதாகக்
கொள்ளலாமல்லவா?
சாதாரணமாக ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தத்தை நாம் மிகவும் புனிதமாக, அருட்சாதனமாகக் கருதி அதனை வாங்கிப் பருகி ஆனந்தமடைகிறோம். முறைப்படி பூசிக்கப்பட்ட பஞ்கவ்யம் அதைவிடப் பலமடங்கு பெருமை வாய்ந்தது என்பதையும், அவ்வாறு பூசிக்கப்பட்டபின் இறைவனுக்கு அது அபிஷேகமாகி, அதன்பின் நமது கைக்குவந்து சேருகின்றபோது அது எத்துணை புனிதமும் மேன்மையும் சக்தியும் உடையதாக இருக்கும் என்பதையும் இப்போது உணர்கின்றபோது வியப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கிறதல்லவா? 人 9یہ(تص�
|]&l୬
ாரும் காரைநகள் ஈழத்துச் சிதம்பரம் ரதம சிவாச்சார்யாராகப் பல்லாண்டு அமரர் சிவழுநீ ச. கணபதீஸ்வரக் ரின் நினைவை நிலை நிறுத்திக் sயில் காரைநகர் வியாவில் ஐயனார் நூல் நிலையமும் கணனிப் பயிற்சி 8.2009 சனிக்கிழமை திறந்து ர்த்தகப் பிரமுகரும் சைவத் தமிழ் ராணி திரு.க. சோமசேகரம் அவர்கள்
முயற்சியின் விளைவான இந்த நூலகத்தை அமரரின் கலாநிதியுமாகிய பிரம்மழுநீ. க. வைத்தீஸ்வரக் குருக்கள்
னைநாள் நீதிவான் திரு. ர் புடைசூழ பிரம்மமுநீ வை வெட்டி நூலகத்தைத் ல்விப் பணிப்பாளர் திரு. ப. யும், நூலக மண்டபத்திலே பழுநீ ச. கணபதீஸ்வரக் க்கலாசார அமைச்சர் தி. 6Is, படங்களையும், அப் வித்த திரு. க. சோமசேகரம்
ib LIIIríiräis&t56xoTíb.
19

Page 10
மேல் நாட்டிலே
டி.எஸ். மஹ6
"கிரேக்க நாட்டுத் தத்துவஞானி பிளேட்டோ இறந்து போய்ச் சற்றேறக்குறைய இருபத்துமூன்று நூற்றாண்டுகள் ஆகின்றன. அவர் வாழ்ந்த காலம் கி.மு. 428 முதல் கி.மு.347 வரை. அவருடைய சிந்தனை மிக்க சொற்கள் இன்றும் பெரிய அறிவாளிகளுக்கு ஆத்மிகத் துறையில் ஆராய்ச்சி செய்யத் தூண்டுகோலாகப் பெரிதும் பயன்படுகின்றன. அவர் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்பே இருந்தவர். அவ்வளவு புராதனமான ஞானியின் நூல்களில் ஹிந்துவேத சாஸ்திர ரீதியான ஆத்மிகத் தத்துவங்களைக் காண்கிறோம். பிளேட்டோவின் காலத்துக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் முந்தி வாழ்ந்த இந்திய ஞானிகளின் ஆத்மிகத் தத்துவங்கள் அவருடைய நூல்களில் பிரதி பலிக்கின்றன" என்று ப்ளாவட்ஸ்கி அம்மையார் கூறுகிறார். இது எவ்வளவு உண்மை என்பதைப் பிளேட்டோவின் அரிய வார்த்தைகளை ஊன்றிப்படிக்கிறவர்கள் அறிவார்கள்.
(பிளேட்டோ இருவகை நூல்களை இயற்றினார். அவற்றுள் ஒரு வகையைச் சேர்ந்தது மொழி, கவிதை, கல்வி, மக்கள் உறவு போன்றவை பற்றி விளக்கும் குடியரசு (Rupublic) என்னும் நூல். இதை உலக அறிஞர்களெல்லாரும் போற்றியிருக்கிறார்கள். இரண்டாவது வகை நூல் ஸிம் போஸியம்' (Symposium) என்பது. வாதப் பிரதிவாத முறையில் ஆத்மிகக் காதல் எப்படி மனிதத் தன்மையையும் தெய்விகத் தன்மையையும் பிணைக்கும் என்பதை இதில் அவர் கூறுகிறார். மெய்ப்பொருள் ஒன்றை விரும்புகிற தத்துவ அறிவாளிகளுக்கு இது பெரிதும் பயன்படும். பிளேட்டோவின் தத்துவ நூலில் ஒரு பகுதி, ஃபாய்டோ' (Phaedo) என்பது. இதில் 'உயிர் இறப்பதில்லை; அழிவற்றது. உலக வாழ்க்கை மனிதனுக்கு அமைந்த சிறையே. நம் உடலான சிறையிலிருந்து விடுபட முயல்வதே தத்துவ ஞானம்' என்று விளக்குகிறார். இரண்டாவது, தியாட்டெட்டஸ்' (Theaetetus) என்பது. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன?’ என்பதை இதில் ஆராய்ந்து கூறுகிறார். கடவுளின் நிலையை அடைய மெய்யறிவையும் நேர்மையையும் புனிதத் தன்மையையும் மனிதன் பெறவேண்டும் என்பது பிளேட்டோவின் போதனை. மூன்றாவது பகுதி, ஃபாயட்ரஸ் (Phaedras) என்பது. இது அறிவையும் அழகையும்பற்றி ஆராய்வது. தவிர, இந்தப் பிறவியையும் முன் பிறவியையும் ஒப்பிட்டுப் பார்த்து மெய்யறிவு பெறுவதுதான் வாழ்வின் சிறந்த நிலை என்பதை இதில் அறிவுறுத்துகிறார். அழகு என்பது உலகையெல்லாம் தன் பக்கம் இழுக்கும் சக்தி உடையது. அதைக் கண்டு மனிதன் மதி மயங்கிவிடுகிறான்; அறிவு தடுமாறுகிறான். வெளித்தோற்ற அழகே அவனுக்கு மயக்கத்தைத் தருகிறது. இந்த உண்மையை அறிந்தவனே சிறந்தவன்' என்று அவர் கருதுகிறார்).
1C
 

2OO9 விரோதி ஐப்பசி O
இந்து தத்துவம்
oாநொபீஸ்
ஏதென்ஸ் மக்களைத்தம் கொள்கைகளில் ஈடுபடச் செய்யப் பிளேட்டோ பெரிதும் முயன்றார். கிரீஸ் நாட்டின் அந்தக் கால அரசியல் நிலைக்கு ஏற்றபடி புதை பொருள் கொண்ட மொழிகளில் பிளேட்டோவின் வாக்கு அமைந்தது. பல துறைகளில் ஈடுபட்டுள்ள மனிதர்கள் ஒன்றுகூடி ஒரு கவிஞருடைய மாளிகையில் விருந்துண்ணும் சமயம் ஆத்மிகக் காதலை அவர் விளக்குகிறார். இந்தச் சம்பாஷணைகளே அவருக்குப் பெருமை தேடித் தந்தவை. தம் தத்துவங்களை மறை பொருளாகவே பிளேட்டோ கூறினார் என்று பார்ஃபிரி என்பவர் சொல்கிறார். அன்றிருந்த கிரேக்க நாட்டின சூழ்நிலை பிளேட்டோவின் தத்துவங்களை வெளிப்படை யாகச் சொல்லக் கூடியபடி இல்லை. ஸாக்ரட்டீஸின் போதனைக ளால் விழிப்படைந்திருந்த மக்களைக் குடியாட்சியின் தலைவர்கள் நசுக்கிவிடத் தீத்மானித்திருந்தார்கள். அதனால்தான் ஸாக்ரட்டீஸின் ஆத்மார்த்த சிஷ்யரான பிளேட்டோ தம் கருத்துக் களைப் புதைபொருள் கொண்ட மொழிகளில் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் ஸாக்ரட்டீஸின் கதி இவருக்கும் நேர்ந்திருக்குமே! "(1) உருவங்கள் எல்லாம் எண்கள்; (2) எண்களின் மூலாதாரங்கள் பெரியதும் சிறியதும், 'ஏகவஸ்து என்பவை" என்று பிளேட்டோ கூறுகிறார். இதை விளக்க இந்திய தத்துவ ஞானிகளின் வேதவாக்கியங்களையே வழிகாட்டிகளாக நாம் கொள்ளவேண்டியிருக்கிறது.
பிளேட்டோ கூறும் பெரியதும் சிறியதும் என்பது இந்திய ஸாங்கிய மதத்தினர்களின் பிரகிருதி என்பதைக் குறிக்கிறது. பெரியது என்பதும் ப்ரதான என்பதும் ஒன்றே. சிறியது' என்பது பிரகிருதி' யின் நுண் கூறுகளான சூட்சும குணங்களைக் குறிக்கும். பிரகிருதி எல்லை அற்றது. இந்த அகண்ட வெளியில் காணும் உலகம் எல்லாம்.'உருவற்ற, எல்லை கடந்த, எங்கும் பரந்த, குறையாத, தொடக்கமோ முடிவோ இல்லாத பிரகிருதி என்னும் ஒன்றின் சாயையே என்று ஸாங்கிய மதம் கூறுகிறது. மானிட தேகம், பிரபஞ்சம் இவற்றுக்குக் காரணம் இந்தப் பிரகிருதித் தத்துவமே.
பிளேட்டோவின் தத்துவங்கள் முற்றும் இந்திய தர்சன சாஸ்திரங்களைப் பின்பற்றியவையே. அவர் இந்திய சமய முறைகளை நன்கு உணர்ந்து பின்பற்றியிருக்கிறார். இந்த ஒற்றுமையை, ஏதோ தற்செயலாக ஏற்பட்டது என்று தள்ளிவிட முடியாது; ஏனென்றால், இரண்டையும் ஒப்பிடக்கூடிய எண்ணற்ற ஒற்றுமையான அம்சங்கள் இருக்கின்றன. இதற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையாரின் மேற்கோள் ஒரு வழிகாட்டியாகும். கிரேக்கர்களின் தத்துவங்கள் எவ்வளவு தூரம் இந்திய ஞானிகளின் பிரபாவங்களை ஏற்று உருவாக்கப் பெற்றிருக்கின்றன என்பதை ப்ளாவட்ஸ்கி தமது அற்புத ஞான திருஷ்டியால் கண்டு உணர்ந்தார்.
-Y

Page 11
இந்துசாதனம் 8C
ஆனால் அவர் சொன்னதை மற்றும் பல அறிஞர்களும் ஆமோதிக்கிறார்கள். கோல்ப்ரூக், ராயில், போகோக், ஹெர்னல், வைஸ், ஜாலி, என்ஃபீல்டு, காரிஸன், ஸர்வில்லியம் ஜோன்ஸ், ராலின்ஸன் போன்ற கல்விமான்கள், ப்ளாவட்ஸ்கி சொன்னது போலவே சொல்லுகிறார்கள். கீழ்நாட்டுத் தத்துவங்களை ஆராய்ந்த நிபுணர்கள் இவர்கள் அனைவரும். போகோக் என்பவர் கூறுகிறார்: "கிரேக்க நாகரிகம் என்பது பாஷை உட்பட அனைத்துமே இந்தியக் கலாசாரத்தின் மாறுபாடே. ஆதிநாளில் இந்தியாவிலிருந்து கிரீஸுக்கு வந்து குடியேறியவர்கள் கொண்டு வந்ததே இது." பிரின்ஸெப் என்பவர் சொல்கிறார்; "ஆதி கிரேக்க பாஷை என்பது ஸம்ஸ்கிருதத்தின் தாறுமாறான மாற்றமே."
வைஸ் என்பவர் லான்ஸெட் என்ற பத்திரிகையில் எழுதுகிறார்: "கீழ் நாட்டவர்களின் பாஷையை உணர்ந்த வர்கள்தான் புராதனக் கீழ்நாட்டவர்களின் விஷயஞானமும் அறிவு வளர்ச்சியும் எவ்வளவு மகோன்னதமானவை என்பதையும் கிரேக்கருக்கும் எகிப்தியருக்கும் முன்பே அவர்கள் மிகுந்த அறிவு வளர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதையும் உணர்வார்கள். கீழ்நாட்டினரின் கணித சாஸ்திரமும் வானசாஸ்திரமும் டாலமியின் கணித - வாண சாஸ்திரங்களைவிட மிகச் சிறந்தவை; இசை, பிதகோரஸின் இசையை விடச் சிறந்தது; யந்திர சாஸ்திரம், ஆர்க்கிமிடீஸின் யந்திர சாஸ்திரத்தைவிடச் சிறந்தது; பிளேட்டோவின் பாரமார்த்திக தத்துவங்களைவிட அவர்களுடைய தத்தவங்களும், அரிஸ்டாட்டிலின் தர்க்க சாஸ்திரத்தைவிட அவர்களுடைய தத்துவ சாஸ்திரமும் சிறந்தவை"
என்ஃபீல்டு குறிப்பிடுகிறார்: "பிதகோரஸ், அனக்ஸார்டஸ், பைரோ போன்ற கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள்."
டெய்லர் என்பவர் சொல்லுகிறார் : "இந்திய தத்துவ ஞானத்தைப் பிதகோரஸின் தத்துவத்துடன் ஒப்பிட்டால், முந்தியது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவும். பிந்தியது நேற்றுப் பிறந்தது போலவும் தோன்றுகின்றன. பிதகோரஸின் தத்துவத்துக்குப் பிளேட்டோ தரும் விளக்கங்கள் எல்லாம் சர்வசாதாரணமானவையாகவே இருக்கின்றன."
"இந்திய ஞானிகளின் உபதேசங்களது அடிப்படையைக் கொண்டு தான் பிதகோரஸ், பிளேட்டோ இவர்களின் உயர்ந்த லட்சியக் கோட்பாடுகள் உருவாக்கப் பெற்றிருக்கின்றன" என்று ஸர்வில்லியம் ஜோன்ஸ் சொல்கிறார்.
"கிரேக்க நாட்டுக்கு உரியதல்லாத ஏதோ ஒரு தத்துவத்தைப் பிளேட்டோவும் பிதகோரஸும் அந்த நாட்டில் உபதேசித்தார்கள் என்று கிரேக்க இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கவனிக்கையில், பிரபாவம் மிக்க இந்திய தத்துவங்களே அதற்கு மூலம் என்று ஐதிகத்தாலும் ஆராய்ச்சியாலும் புலனாகிறது" என்று ராஷ்டிரபதி ராதா கிருஷ்ணன் கூறுகிறார்.
கிரேக்கர்களின் கர்ணபரம்பரைத் தகவல்களின்படி, தேல்ஸ் (Thales). 6Tot îNLITé66b6ño (Empedocles), 960Të 6mo(GGSTIJ6ňu (Anaxagoras), GILLOITëft"L6) (Democrats) (GUIT6óTO göğög|6) ஞானிகள் கீழ் நாடுகளுக்கு வந்து தத்துவ சாஸ்திரங்களைக் கற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்திய தத்துவஞானம் பெர்ஸியா மூலமாகக் கிரேக்க நாட்டவர்களுக்குப் பரவியிருக்கிறது என்பதற்குச் சரித்திர பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன.

2OO9 விரோதி ஐப்பசி O
"புனர்ஜன்மம் உண்டு என்று பிதகோரஸ் கொண்டுள்ள நம்பிக்கை, தங்களுக்குப் பழைய ஆதாரம் இல்லாததும் புதியதுமான அந்நிய நாட்டுக்கொள்கை என்று கிரேக்கர்களே கருதியிருக்கிறார்கள். அது எகிப்து தேசத்தினரின் கொள்கை அல்ல; அங்கே அவ்விதக் கொள்கை இல்லை. இந்தியர்களைத் தான் பெர்ஸியாவிற் சந்தித்துப் பிதகோரஸ் இந்தக் கெள்கை யைக் கற்றிருக்க வேண்டும்" என்கிறார் மக்டொனெல்.
பிதகோரஸ், பிளேட்டோ முதலான க்க தத் ஞானிகள், நம் உபநிஷத்தில் உள்ள தத்துவத்தினில் நம்பிக் உள்ளவர்கள். ஆத்மாவின் அழியாமை, டிலுவிற்ப்பின் 10,
மனிதன் இறந்தபின் அடையும் நிலை இன்வ பற்றியூஇபநிஷத வாக்கியங்களை ஒட்டியே பிளேட்ட்ேரிவின் ர்ேத்னைகள்
அமைந்திருக்கின்றன.
பிதகோரஸ்,பிளேட்டோ ஆகியவர் எவ்விதபிஇந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் என்ற கேள்வி எழுகின்றது. பிரயாண வசதிகள் ஏதும் இல்லாத காலம்; பல்லாயிரக்கணக்கான மைல்துTரம் இந்தியாவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் இடையில் இருக்கின்றது. ஆயினும், இதைக் கடக்கத் தரைமார்க்கமாய் நடந்தே வருவது அந்த நாளில் பெரிய காரியமில்லை. பிளேட்டோ இறந்து 21 ஆண்டுகள் கழிந்த போதே, அதாவது, கி.மு. 32 இலேயே, அலெக்ஸாந்தரின் படை வீரர்கள் இந்திய நாட்டின் எல்லையில் நுழைந்து வந்திருக்கிறார்கள். அப்படியிருக்க, பிளேட்டோ போன்ற மகாபுருஷர்கள் - கட்டுமஸ்தான தேகம் படைத்தவர்கள் - தங்களுடைய தத்துவ விசாரப் பேரவாவினாலும் ஞானத்தை அறியும் வேட்கையாலும் தொலைவைப் பொருட்படுத்தாமல் தேசங்கள் பல சுற்றித் திரிந்து நடந்தே பல்லாயிரம் மைல்களைக் கடந்து இந்தியாவுக்கும் ஏன் வந்திருக்கமுடியாது? பிளேட்டோ எந்த எந்தத் தேசங்களுக்குப் போயிருக்கக்கூடும் என்று சரியாகக் கூற முடியவில்லை. இருந்தாலும், "எகிப்து, ஸிஸிலி, இத்தாலி, யூதேயா, இந்தியா இங்கெல்லாமாக 12 ஆண்டுகள் சுற்றித் திரிந்து இவற்றின் தத்துவ ஞானிகளைக் கண்டும், அவர்களின் உபதேசங்களைக் கேட்டும், தெய்வங்களைத் தொழுதும், சமயக் கோட்பாடுகளைப் பரிசீலனை செய்துந்தான் சென்றிருக்கிறார். வழியில் கங்கா நதிக்கரையிலும் சிலகாலம் தங்கியிருக்கிறார்; அங்கே யோக வழியில் கண்மூடித் தியான நிஷ்டையில் உள்ள ஞானியரின் நிலையில் தாமும் இருந்து பயின்று சென்றிருக்கிறார்;" என்று வில் டியூரன்ட் என்ற பேராசிரியர் தமது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
"உலக தத்துவ சர்ச்சைகள் எல்லாம் ஸாங்கிய மத அடிப்படையிலேதான் உதிக்கின்றன. இந்த ஸாங்கிய மதத்துக்கு உரிய உபநிஷத் வாக்கியங்கள், ஈசாவாஸ்யம், சுவேதாச்வதரம், கடோப நிஷத் போன்றவற்றில் இருக்கின்றன. இந்த மதத்தின் ப்ரவர்த்தகர் கபிலமுனிவர். உலக தத்துவ ஞானிகள் என்றும் அவருக்கு வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவரைப் படைத்ததற்காக ரிஷிம் கபிலம் ப்ரஸ9தம் யஸ்தமக்ரே' என்று வேதமேகூடப் பகவானுக்கு வணக்கம் தெரிவிக்கிறது. அவருடைய மதம்(தர்சனம்) எவ்வளவு ஆச்சரியமானது!
"பிளேட்டோ போன்ற தீர்க்கதரிசிகள் கபிலரைப் போன்ற மகான்களின் வாக்கியங்களையும் உபதேசங்களையும் நுணுக்கமான ஆராய்ச்சிகள் செய்து ஸ்திரமான பொருள் நுட்பங்களைக் கண்டிருக்கிறார்கள். இந்த ஸாங்கிய மத தத்தவந்தான் முதன்முதல் கிரேக்க நாட்டின் தத்துவத்துக்கு அடிக்கல் ஆக இருந்திருக்கிறது" என்கிறார் ஸ்வாமி விகேகானந்தர். 人

Page 12
இந்துசாதனம் 18.1 (
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி வூல ஐப்பசி மீ" 1ஆம் உ (18.10.2009)
EFLDuisbrfladůT LIGUOf — II
அகில உலகிலும் காணப்படும் அசாதாரண நிலைபற்றி - கொடூரமும் கொந்தளிப்பும், கொலையும், கொள்ளையும், பலாத்காரமும், பழிக்குப்பழியும் அங்கிங்கெனாதபடி எங்கும் தலைவிரித்தாடும் அராஜக நிலைபற்றிச்-சென்ற இதழிற் குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டுகின்றோம்.
சமயங்கள் தம் கடமைகளிலிருந்து தவறிவிட்டனவா?
வேறு ஒரு சக்தி, சமயங்களின் பணியை மட்டுப்படுத்தி வருகின்றதா? கட்டுப்படுத்தி வருகின்றதா? மழுங்கடித்து வருகின்றதா?
மக்கள் தாம் குற்றவாளிகளா?
பதில்களை எதிர்பாராமல், வாசகர்கள் மத்தியில் அர்த்தம் நிறைந்த, ஆக்கபூர்வமான சிந்தனையைத் தூண்டும் நோக்குடன் தொடுக்கப்பட்ட கேள்விகளையும் நினைவூட்டுகின்றோம்.
சமயங்களின் அடிப்படைத் தத்துவங்கள் எவ்விதமான மாற்றங்களுக்கோ திருத்தங்களுக்கோ உட்படாமல் அப்படி யேதாம் இருக்கின்றன.
சமயக் கிரியைகள், சமய விழாக்கள், மகாநாடுகள், கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின் றன.
இவை அனைத்திலும் கலந்துகொள்வோரின் தொகையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
அதேவேளையில், இவற்றுடன் சேர்ந்து, மேலே குறிப்பிடப்பட்ட - விரும்பத்தகாத, வேண்டத்தகாத - வெறுத் தொதுக்கப்பட வேண்டியவற்றின் பட்டியலும் மேன்மேலும் நீண்டுகொண்டுதானே போகின்றது.
தடுத்து நிறுத்தும் தகைமையோ சக்தியோ யாருக்குமே இல்லையா?
ஒரு காலத்தில், கனவாகவும் கற்பனையாகவும் இருந்தவை பல இன்றைய அறிவியலின் அபரிமித வளர்ச்சியால்,
1.
 

2OO9 விரோதி ஐப்பசி O
நனவாகவும் நடைமுறைச் சாத்தியமானவையாகவும் ஆகிவிட் டன; கற்பனைக்கும் எட்டாமலிருந்தவைகூட, கைக்கெட்டுமள விற்கு அண்மித்துவிட்டன. எண்ணிக்காட்ட முடியாத அளவுக்கு, எழுதிக்காட்டத் தேவையில்லாத அளவுக்குச் சாதனைகளின் பட்டியல் வகையாலும் தொகையாலும் வளர்ந்துகொண்டே வருகின்றது.
இவை காரணமாக, கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் மனிதன் வைத்த நம்பிக்கை, அடியோடு அற்றுப்போகா விட்டாலும், சிறிது சிறிதாக ஆட்டங்காணத் தொடங்கிவிட்டது. "எல்லாம் அவன் செயல்" என்பதிலும் ஐயம் ஏற்படத் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் -
தம்மிடமுள்ள பதவி ஆசை, புகழ் ஆசை, பண ஆசை முதலியவற்றைத் தந்திரமாக மறைத்துக்கொண்டு 'என் கடன் பணி செய்துகிடப்பதே" என இன்முகத்துடனும் புன்முறுவலு டனும் பொதுமக்கள் முன் "நன்மொழி" பேசித் திரியும் அரசியல் வாதிகளுக்கு, அவர்களுடைய ஊதுகுழல்களும் ஊடகங்களும் கொடுக்கும் முக்கியத்துவமும், அவர்களால் ஆகாதது எதுவும் இந்த அவனியிலேயே இல்லை என அவர்களுக்கு முன்னால் தொங்கவிடப்படும் மாயத்திரையும் மக்களின் எண்ணத்தில், எதிர்பார்ப்பில், நோக்கில் - போக்கில் - மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தி விட்டன.
சமயம் என்பது வாழ்க்கைமுறை - சமயம் வலியுறுத்தும் உண்மை அன்பு, நேர்மை, இன்சொல், ஈகை போன்றவற்றை என்றுமே வாழ்க்கையிற் கைக்கொள்ள வேண்டும் - என்ற நிலை மாறி, கோவில்களுக்குக்குப் போவதும், சில நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்வதுமே சமயம் எனத் திருப்தி அடையும் போக்கு, பலரிடம் காணப்படுகின்றது.
வாழ்க்கையை இனிமையாக, பகட்டாக, சொகுசாக வாழ்வதற்கு உதவும் கருவிகளும், பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது உண்மை. அவற்றை வாங்கி, உபயோகிப்பதற்குப் பெருந்தொகைப் பணம் தேவை என்பதும் உண்மை. இதனால், நீதிக்கும் நேர்மைக்கும் அப்பாற்பட்ட வழிகளிலே பணத்தை ஈட்டுவதற்கும் பலர் தூண்டப்படுகின் றார்கள். கொள்ளை அடித்தல், நம்பிக்கை மோசடிசெய்தல், இலஞ்சம் பெறுதல் போன்றவை சர்வசாதாரணமாகிவிட்டன.
ஆண்டவனின் பாதங்களைப் பணியாமல், ஆட்சியில் இருப்பவர்களின் - அதிகாரத்தில் இருப்பவர்களின்-அடிகளை வருடி அதிக ஆதாயம் அடையவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது.
மக்களின் இந்தப் பலவீனத்தைத் தம் பலமாக்கிக் கொண்டு, தம் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் மேன்மேலும் உறுதிப்படுத்துவோரின் தொகையும் பெருகிவருகின்றது.
இந்த நிலை இப்படியே தொடர்ந்துகொண்டு போனால்.? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
பேரழிவை - பெரும் அவலத்தைத் தடுத்து நிறுத்தும் சக்தி, சமயங்களுக்குத்தான் உண்டு; உண்மையான சமயிகளுக்குத் தான் உண்டு; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் நிர்மலனின் அருளிலும் ஆற்றலிலும் நிறைந்த நம்பிக்கையும் உடைய வர்களுக்குத்தான் உண்டு.
அத்தகையவர்கள் இன்று இருக்கின்றார்களா? இருந்தால், இந்த உலகை"மீட்க" முன்வருவார்களா?
விடையைத் தேடி விடிவையும் காட்டுவதற்கும் அறி வியலுக்கும் அரசியலுக்கும் அறவியலை அடிப்படையாக்கு
வதற்கும் சமயங்கள்தாம் முன்வரவேண்டும்! வளரும்.

Page 13
இந்துசாதனம் 8O
தெய்வ வழி
in.6LITot
கிடவுள் உண்மையாகவும் அறிவாகவும், இன்பமயமாகவும் இருப்பதாக வேதம் கூறுகிறது. அதனாலே தான் உண்மையே கடவுள் என்றும், அறிவே தெய்வம் என்றும் அன்பே ஆண்டவன் என்றும் நாம் கூறுகிறோம். அப்படிப்பட்ட கடவுள்தான் நமக்கு வேண்டும் என்று அந்தக் கடவுள் முன் நின்று தியானம் செய்கிறோம். "எவர் என்னை எங்ங்ணம் வேண்டுகின்றார்களோ, அவர்களை நான் அவ்வண்ணமே சார்கிறேன்" என்று கீதையில் பகவான் கூறுகின்றார். மலரில் மணமாய், எள்ளில் எண்ணெயாய் நிற்கும்பரம்பொருளைத்தியானம் செய்கிறோம்.
தியானம் செய்து கொள்ளுதல் என்பது கடவுள் முன் நம்மை முழுக்க இழந்து நம்மை நாமே மற்நது மெய்ப்பொருளோடு ஐக்கியமாகும் நிலையைத்தான் குறிக்கும். அப்படி நாம் என்றாவது நம்மை மறந்து லயத்தில் இருந்தோமா, அந்த நிலையில் ஆண்டவனை அணுகினோமா என்பது பெரிய பிரச்சனை.
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்றே இன்றைய மனிதன் கடவுள் வழிபாட்டை மதிக்கிறான். அவசரக்கோலத்தினால் யந்திரமாகிவிட்ட நம் வாழ்க்கைக்கு அநுசரணையாக நாம் தெய்வ வழிபாட்டையும் வேதமாக்கிக்கொண்டுவிட்டோம்.
ஆதிகாலமாகிய வேதகாலத்து மக்கள் இறைவன்
வழிபாட்டுக்கென்று தனிக்கோயில்கள் அமைக்கவில்லை. தங்கள் இதயத்திலேயே பரந்தாமனைக்கண்டு இடைவிடாத தியானத்தி னால் அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணையைத் தங்கள் உள்ளம் முழுவதும் நிரப்பினர். நாளடைவில் பரந்த நோக்கமும் நிறைந்த அன்பும் குறையவே, மண்ணாலும், கல்லாலும் கடவுளுக்கென உருவமைத்தார்கள். வன்னிமரத்தின் அடியிலும், மாமரத்தின் அடியிலும், கடம்பமரத்தின் அடியிலும் குறும்பலாவின் அடியிலும் புன்னை மரத்தின் அடியிலும் இறைவனை வழிபட்டார்கள். மக்களது ஆழ்ந்த அன்பிற்கும் சக்திக்கும் கட்டுப்பட்டு எங்கும் நிறைந்த இறைவன் அவ்வுருவங்களிலும் அமர்ந்திருந்துதன் அருளை மக்களுக்கு வழங்கிவருகின்றான்.
உலகமெனும் நந்தவனத்தில் மனிதனாகிய ஆண்டி, பிரமனாகிய குயவனை வேண்டி, பத்து மாதங்கள் தாய் வயிற்றிலிருந்து குடமென்ற இந்த உடம்பைப் பெற்றான். அதை பூமிக்குக் கொண்டு வந்தவன் திறம்பட பாதுகாக்காமல் தான் என்ற அகம்பாவத்தினால் செருக்கடைந்து போட்டு உடைத்துவிட்டான். இதைத்தான்,
 

l2OO9 விரோதி ஐப்பசி 01
நிபாட்டில்.
எனுச்சாமி
நந்தவனத்தி லோராண்டி அவன் நாலாறு மாதமாய்க்குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
என்ற பாடல் சூட்சுமமாகக் கூறுகிறது. இந்த ஆண்டியின் பரிதாபத்திற்குரிய நிலையில்தான் இன்று நாம் இருக்கிறோம். தெய்வத்தை வழிபடவேண்டும் என்று நமக்கு நினைவிருந்தாலும் வழிபடுவதற்கு நேரமில்லை அல்லது நேரத்தை ஒதுக்குவதற்கு வகை செய்யவில்லை.
காலையில் எழுந்திருந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு குழாயடிக்கு ஒடிக்குளித்துவிட்டு அதே வேகத்தில் அடுப்படியை நோக்கி ஓடி சமையல் தயாராவதற்கு ஒத்துழைத்து, சாதத்தை ஒன்றிரண்டு கை அள்ளிச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு விரைகிறோம். இந்த அவசரத்திற்கிடையில் பூஜையறைக்கோ, சுவாமி படத்திற்கு முன்போ போய் நின்று வணங்க எங்கே நேரமிருக்கிறது.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்றோ, "பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும்" என்றோ மனத்திற்குள்ளாவது ஒரு நாலடியைப் பாடித்தொழ நேரமே கிடையாது. அப்படி நேரம்
கொஞ்சம் கிடைத்தாலும் விபூதிக் கப்பரையிலிருந்து விபூதியை விரலில் தொட்டும் தொடாமலும் எடுத்து அதை நெற்றியில் பட்டும் படாமலும் பூசிக்கொண்டு ஒடுகிறோம். கடவுள் கருணையுள்ள வன். ஆதலால் இத்தகைய நடவடிக்கைகளையெல்லாம் பொறுத்துக்கொள்கிறான். நமக்கு அருளவும் செய்கிறான்.
காலையில்தான் இப்படி நேரமில்லாமல் போய்விட்டது என்றால் மாலையிலாவது ஆண்டவனைச் செம்மையாகத் தொழலாம் அல்லவா? அப்பொழுதும் அந்த அவசரக்கோலந்தான். வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு கோயிலில் பூஜைமணி அடிக்க கற்பூரத்தட்டு அர்ச்சகர் கையிலிருந்து பகவான் முன் வட்டமிட மக்கள் சூழ்ந்து நிற்கக் கண்ட அவசர மனிதன், தெருவில் நின்றபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு விரைந்து சென்று விடுகிறான். அவன் கண் ஒன்று நாட கருத்தொன்று நினைக்க, கை மட்டும் கும்பிடுகிறது.
காரிலே சவாரி செல்கின்றவர் செய்வதைக் கேளுங்கள்; கார் வேகமாகச் செல்கிறது. ஒரு ரோடு திரும்புகிறது. அங்கே ஒரு கூட்டம்கூடி நிற்கிறது. "எனை கூட்டம்?" என்று கனவான்

Page 14
இந்துசாதனம் 8C
டிரைவரிடம் கேட்கிறார். "பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது" என்று கூறுகிறார் டிரைவர். ஆண்டவா என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, டிரைவரை அடுத்ததெரு வழியாக சினிமாவுக்கு காரை ஓட்டச் சொல்கிறார்.
ஆண்டவனைத் தொழவும் வேண்டும், இந்த அசுரவேகமான உலகத்தில் வாழவும்வேண்டும் என்று நினைக்கிற வர்கள் தொகை பெருகப் பெருகத்தான் ஆண்டவன் மேல் பக்தி குறைந்து வருகிறது. உண்மையில் பக்தி செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மனிதற்கு இல்லாமலில்லை.
"புதிய தொழில் ஆரம்பிக்கப் போகிறீர்களே. தொடக்க விழாப் பூஜை போட வேண்டாமா" என்று நண்பர்களின் நச்சரிப்புத் தாங்காமல் தொழில் அதிபர் பகவான் பூஜைக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறார். தொழில் அதிபர் புதிய தொழில் ஆரம்பம் என்றால் கேட்க வேண்டுமா? உள்ளூரிலும் அயலூரிலும் இருந்து பலபிரபலஸ்தர்கள் வருவதற்கு அழைப்பிதழ் அனுப்பியாகிவிட்டது. பலரிடமிருந்து பதில்களும் வந்துவிட்டன.
"நீங்கள் பத்தரைக்குப் பூஜையென்று எழுதியிருக்கிறீர்கள். எனக்குப் பதினொன்றுக்குப் பம்பாய் செல்ல விமானம் ஏறவேண்டியிருக்கிறது. ஆதலால்" என்று விட்டுவிடுகிறார் ஒருவர். இன்னொருவர், "பத்தரைக்கு பூஜை ஆரம்பித்து பத்தே முக்காலுக்கு முடித்துவிடுவார்களா?" என்று கேட்கிறார். இப்படியாக எந்த நாளிலும் எந்த மணியிலும் முன்கூட்டியே அலுவல்களை நிறைத்து வைத்திருக்கும் பிரபலஸ்தர்களின் பதில்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியம் என்ன?
தொழில் அதிபர் என்ன செய்வார், பாவம், பூஜை வைக்க வேண்டுமென்று நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பூஜைவைத்தாகிவிட்டது. இனிமாற்ற இடமில்லை. ஆனால் இந்த நேரத்தில் தொழில் அதிபரின் மனைவியார் வந்து, "பூஜையெல்லாம் கால் மணி நேரத்தில் முடிக்க ஏற்பாடு செய்து விட்டேன். அர்ச்சகர் கையிலேயே கடிகாரத்தையும் காலில் சக்கரத்தையும் கட்டிக் கொண்டு வருவார். அவரும் இன்னும் பல இடங்களுக்குப் போகவேண்டுமல்லவா?" என்று சொல்லும்போது, தொழில் அதிபருக்கு வயிற்றில் பால் வார்த்ததுபோலிருந்தது.
தொடக்கவிழாப் பூஜை ஜாம் ஜாம் என்று கால்மணி நேரத்தில் கச்சிதமாக முடிந்துவிட்டது. பின்னால் விருந்து இரண்டுமணி நேரம் நடந்தது. இப்படி அவசர நிலைகள் பிற்காலத்தில் நிகழும் என்று தான் பெரியோர்கள் விழாக்களையும் விரதங்களையும் நம் வாழ்க்கையில் அநுஷ்டிக்க முன் காலத்தி லேயே நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். தற்கால மனிதன் சில விழாக்களையும், விரதங்களையும் சாரமற்றது என்று தன் சிந்தனா சக்தியினால் தள்ளிவிட்டபோதிலும் பகுத்தறிவிற்கு உட்பட்டு இன்னும் எத்தனையோ விழாக்களும், விரதங்களும் நம்மிடையே இருந்து வருகின்றன. அவற்றையாவது அவன் பக்தி சிந்தையோடு வழிபட்டு வருகிறானோ, என்றால் அதுவுமில்லை. நேரத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியில் அழகும் பொருளும் பொதிந்த பழக்க வழக்கங்களை கைநழுவ விட்டுவிட்டு பொருளற்ற முறையில் கடவுள் வழிபாட்டைக் கையாண்டு வருகிறான். மாதத்திற்கு ஒருமுறைகூட நல்ல முறையில் ஆண்டவனை வழிபடத் தவறிவிடுகிறான்.

2OO9 விரோதி ஐப்பசி O
இப்படியாக வீட்டிலும் சரி கோயிலிலும் சரி, நாம் ஆண்டவனை முறைப்படி தரிசிக்காமல் தட்டிக் கழிக்கும் முறையில் சேவைசெய்துவருகிறோம்.
கோயிலில் உற்சவங்களை ஏற்படுத்திய நம் முன்னோர்கள் அவற்றை வெறும் கேளிக்கைகளாகக் கருதி ஏற்படுத்தவில்லை. அவை சமய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருப்பது ஒருபுறமிருக்க, சமூக நலன், சமுதாய ஒற்றுமை, சுகாதாரம், பொருளாதாரம் முதலியவற்றையும் அபிவிருத்தி செய்யும் முறைகளிலும் அமைந்திருக்கின்றன. சில விழாக்கள் மக்களின் கிரகங்கள், நட்சத்திரங்களின் கதிகளைக் கொண்டு அந்த அந்தக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் கிரகக் கோளாறுகளுக்குப்பரிகாரமாக அமைக்கப்படுகின்றன.
தெய்வ வழிபாட்டைத் தத்தம் இல்லங்களில் வைத்து நடத்துவதை ஆத்மார்த்த பூஜையென்றும், கோயிலில் வைத்து நடத்துவதை பரமார்த்த பூஜையென்றும் சொல்லுவார்கள்.
நமது இல்லங்களில் நடத்தும் பூஜைக்கும், தெய்வ ஆராதனைக்கும் நாம் பொறுப்புள்ளவர் ஆவது போல, கோயில் களில் நடத்தும் பூஜைகளுக்கு அர்ச்சகர்கள் பொறுப்புள்ளவர் ஆகிறார்கள்.
இந்தப் பொறுப்பை அர்ச்சகர்கள் எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறார்கள் என்பதை பூஜை விதிமுறை இலக்கணம் தெரிந்தவர்கள்தாம் கூறக்கூடும். சாதாரணமாக ஆண்டவன் சேவைக்குச் செல்லும் பாமரனுக்கு எதுவும் தெரிய நியாயமில்லை.
அர்ச்சனை செய்யச் சொல்லி ஒருசேவார்த்தி அர்ச்சகரிடம் சொல்கிறார். அவர் அர்ச்சனை மந்திரம் குறிப்பிட்ட முறைப்படி செய்தால், காலதாமதமாகுமென எண்ணி, "ஒரு நாமம், ஒர் உருவம் இல்லார்க்கு ஆயிரநாமம்" என்ற முறையைக் கைவிட்டு, அவர் விருப்பப்படி நாமாக்களைச் சுருக்கி, அவசரமாக முடித்து விடுகிறார். வழிபாடு செய்யச் சென்றவரும் "தேங்காய் உடைத்தாய் விட்டது. புஷ்பாஞ்சலி செய்தாகிவிட்டது, கற்பூரம் காட்டியாகி விட்டது" என்று, தாம் சுவாமிக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்கிறார். இதனால் சேவைக்கு வந்தவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
கடவுளின் சிலாரூபங்களுக்குச் சக்தியிருக்கிறபடியால், அந்தச் சக்தி வெளிப்பட வேண்டுமானால், அந்தந்த மூர்த்தி களுக்கு ஏற்பட்ட மந்திரம், நாம உச்சாடனம் செய்ய வேண்டும். இல்லையேல், "நானும் சென்றேன் கோயிலுக்கு" என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, பலன் இருக்காது.
மாதந்தோறும் விழாக்களைப் பெரியோர்கள் மக்கள் நலனுக்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே அவற்றை மக்கள் மதித்துவிழா நடத்திவருகிறார்கள். சித்திரையில் சித்திரா பெளர்ணமியும், வைகாசியில் விசாக விழாவும், ஆனியில் திரு மஞ்சனமும், ஆடியில் ஆண்டாளை நினைவூட்டும் ஆடிப்பூரமும், ஆவணியில் அவிட்டம், வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜயந்தி ஆகிய சிறப்பு நாள்களும் புரட்டாசியில் நவர்ாத்திரி விழாவும், ஐப்பசியில் தீபாவளியும், கந்தசஷ்டியும், கார்த்திகையில் தீபவிழாவும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியும், தையில் -->

Page 15
இந்துசாதனம் 8B.O
பொங்கல் விழாவும் மாசியில் மகமும், பங்குனியில் உத்திரமும், புராதன விழாக்களாக அமைந்திருக்கின்றன.
இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் ஆண்டவன் வழிபாட்டோடு பிணைக்கப்பெற்று, மக்களின் நலனுக்காக நடத்தி வரப்படு கின்றன. இவற்றில், சில விழாக்களும், விரதங்களும் தத்துவ ஞானிகளான முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில விழாக்களும், விரதங்களும் தத்துவ ஞானிகளான முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில விழாக்கள் இயற்கைச் சூழ்நிலைக்கு இசைந்தவாறு தோன்றி வளர்ந்தவை. இவற்றைச் செவ்வையாகச் செய்து வரும் மனிதன் பாக்கியவான் ஆகிறான்.
யந்திர யுகமாகிய இக்காலத்தில் நேரமில்லை, பொழு தில்லை என்று கூறிக்கொண்டே, நாம் நேரத்தையும் பொழுதையும் வீணடிக்கிறோம். ஒரு சில முக்கிய பணி மேற்கொண்டவர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் தினம் ஒரு முறையாவது ஆண்டவனைப் பக்தியுடன் வழிபட நேரமில்லாமற் போகாது. நேரமிருந்து கோயிலுக்குச் செல்லும் சிலரும், கோயிலைக் கடவுள் சந்நிதியாகக் கொள்ளாமல், வம்பு அடிக்கவும், புறம்பேசவும், வியாபார ரகசியம் பேசவும், அலுவலகக் குட்டிக்கதைகள் அளிக்க வும், கேலி, கிண்டல், நையாண்டி கிளப்பிவிடவுமே செல்கிறார்கள்.
நம் பெரியோர்கள் அப்படிச் செய்யவில்லை. இறைவன் சந்நிதியில் நின்று அபிஷேக ஆராதனைகளின் உண்மைத் தத்துவங்களை அறிந்து, அவற்றைத் தாமே செய்வதாகப் பாவித்து, ஒவ்வொரு நிலையிலும் தம்முடைய பஞ்சகோசங்களையும் ஒவ்வொன்றாய் இறைவனுக்கு அர்ப்பணித்து, கடைசியாக கற்பூர ஆரத்தியாகும்போது, தம்மையே மறந்து, தாமும் இறைவனும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்து, தெய்வ வழிபாட்டின் பலனைப் பெற்றார்கள். இதே உணர்ச்சி ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.
இந்த அனுபவம் பெறாமல் தேங்காய், பழம், பூ வாங்கிச் சென்று ஒர் அச்சனையோடு எல்லாம் முடிந்துவிட்டது. "எங்கே தெய்வத்தின் அருள்?" என்று கேட்டால் என்ன சொல்வது?
అ_yశN
யாழ்ப்பாணம்
அகில இலங்கை சைவ மாணவிகளுக்குரிய பரிச ஞாயிற்றுக்கிழமை சபை தலைமை ஏற்க, நெல்லி அதிபர் திரு. செ. சேதுர கலந்து சிறப்பிக்க, யா!
துறைப் பேராசிரியர் திரு. மா. 'சின்னத்தம்பி கல்வியில் ெ சிறப்புரை வழங்க திருவாட்டி கெளரி சேதுராஜா தங்கப் பதக் மாணவ மாணவிகளுக்கு வழங்க, மிகவும் கோலாகலப சோலை முன்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனப் வித்தியாலய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியன மாகேஸ்வர பூசையுடன் இனிதே நிறைவெய்தியது. பரீட் செல்வர் இரா.செல்வடிவேல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தின
1.
 

2OO9. விரோதி ஐப்பசி O
தெய்வமும் கொடுக்காது, மனிதனும் கொடுக்கமாட்டான். தெய்வ சிந்தனைக்குப் பதிலாக தெய்வ நிந்தனை செய்தால், யாராவது பரிசு கொடுப்பார்களா?
இறைவனை வழிபடும் அடியார்கள் பக்தியோடு முறைதவறாமல் வழிபடவேண்டும். வீண் ஆடம்பர வேஷங்க ளாலும், அர்த்தமற்ற சடங்குகளாலும் இறைவனை அணுக முடியாது. நேரம் இல்லையே என்று அவதிப்பட்டுக் கொண்டி ருக்கும் இந்நாளில், எப்போதாவது கிடைக்கும் நேரத்தில், இறைவனை தகுந்த முறையில் வழிபட வேண்டும். அப்படி அல்லாத தியானம் உண்மை உணர்ச்சியற்ற வெற்றுக் காரியமாகவே இருக்கும். எள்ளளவும் பலன் அளிக்காது. நாயன் மார்களும், அபிராமிப்பட்டரும் ஆழ்வார்களும், மற்றும் ஆன்மீக சீலர்களும், சித்தர்களும், யோகிகளும் தத்தம் பிரார்த்தனைகளின் வலிமையால் அற்புதங் களையும், சித்துக்களையும் வெளிப்படுத்தி எம் எல்லோரதும் சிந்தனைகளைத் தூண்டிவிட்டுள்ளார்கள். கம்பர் காளமேகம், காளிதாசர், குமரகுருபரர் பாரதியார் போன்ற கவிஞர் பெருமக்கள் தேவியைப் பிரார்த்தித்து மனமுருகி வழிபட்டதால் புலமைபெற்று அரசசபைக் கவிஞராகவும் உயர்ந்தனர். அவர்களின் வேண்டு தல்கள் யாவும் பிரார்த்தனைகளாலும், ஆன்மீகத் தாகங்களாலும் நிறைவேறியுள்ளன. இவை எல்லாம் நம்முன்னோ ருடைய வாழ்க்கையில் நாமறிந்தவை. இவ்வாறாக வாழ்ந்தவர் களின் வாழ்க்கை எல்லாம் வாழ்பவர்களுக்குப் பாடமாக அமையட்டும். எப்போதும் எல்லோருக்கும் பிரார்த்தனை என்பது கட்டாயமான தொன்றாகும். அதை அலட்சியப்படுத்திவிடமுடியாது. இதனை உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, அதன் பெறுமதியை அறிந்து வாழ்க்கையில் அதனைக் கடைப்பிடித்து நம் வாழ்வினை வளப்படுத்திக்கொள்வோமாயின் நாம் நிறைவடைவோம். பிரார்த் தனையின் பெறுபேற்றினை உணர்ந்து எதிர்காலத்தில் அதனை மனமுவந்து பின்பற்றக்கூடிய ஆன்மீகத் தாகமுள்ள சந்ததியினரை உருவாக்குவதில் நாம் வாழ்ந்து காட்டும் வாழ்வு வழிகாட்டியாக அமையவேண்டும். இதுவே எல்லோரதும் விருப்பமாக அமையுமாயின் இவ்வுலகில் "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற அந்தத் தாரகமந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும். A
ーニ وی گ 五ニー
eeleo சைவ பரிபாலன சபையினர் 2008 ஆம் ஆண்டில் நடத்திய நெறித் தேர்வில் விசேட சித்திகளைப் பெற்ற மாணவ, Fளிப்பு விழா, நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் 2009.10.04 த் தலைவர் சிவநெறிப் புரவலர் திரு. த. சண்முகலிங்கம் யடி மத்திய மகா வித்தியாலய ாஜா பிரதம விருந்தினராகக் ழ் பல்கலைக்கழகக் கல்வித் சல்நெறி" என்ற தலைப்பிலே கங்களையும் பரிசில்களையும் 0ாக நடைபெற்றது. நாவலர், ம், நெல்லியடி மத்திய மகா வயும் இடம்பெற்ற இவ்விழா odagröf 6FuLu6oToIII 6NaFT6o6ól6öIT
rITir.
s

Page 16
இந்துசாதனம் 8C
122.
23.
24.
125.
126,
127.
128.
129.
130.
131.
நாவலர் சரிதமோது
கவிஞர் திரு. இராை
(இந்துசாதனம் - 2009 புரட்டாதி - 1
போலியாம் பிரசாரத்தைப் பொசுக்கியெம் சைவம் காக்கும் வேலியாய் விளங்குநர்கலியப்தமீரேழு ஏழில் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்தெழுநூற்றெழுபது சூலியாம் பிலவங்கம் வருமார்கழிபதினெட்டாந்நாளாய்.
மிக்கொளிராண்டாயிரத்து எண்ணுரற்றிநாற்பத்தேழில் திக்கொளிர் திசம்பர் மாதம் திகழ்முப்பத்தோராம் தேதி சுக்கிரவாரம் கவாதி சுபநட்சத்திதிரமும் சேர்நாள் தக்கநல் ஒரையாகத் தழைசுப தினமென்றோர்ந்து
வண்ணையிலே மாபிரபுவாக விருந்த
வைத்திலிங்கச்செட்டியார் கட்டுவித்த பெண்ணுமைவாலாம்பிகையொ டமர்ந்திருந்தே
பெருவருளைப் பொழிவைத்தீஸ்வரனார் கோவில் மண்ணதவே சைவமதை மலர்த்து மென்றே
மனதுணர்ந்து அநுமதியை மகிழ்வாய்ப் பெற்றே கண்ணிறைவாயுற்சவங்கள் கானு மாறே
கவினழுகா யமைவசந்தமண்டபத்தே.
தெய்வமத னருளினாலே திருஅவதாரஞ் செய்தார் மெய்யறிவு தேடுமாசை மீதாரு மக்கள் முன்னே மையணியு கண்டன் பாதம் மனமொழிமெய்யிருத்தி சைவமெனும் பயிரே யோங்கப் பிரசங்க மழைபொழிந்தார்.
அத்தின மிருந்து ஒவ்வோர்சுக்கிர வார (இ)ராவும் சொத்தனை சைவ மேன்மை சொரிமறை சுருகிசாரச் சத்தினைப் பிழிந்தெடுத்தே தண்டமிழ்நடையி லார்க்கும் வித்தகர் விளங்கு மாறே விரித்துரை செய்யலுற்றார்.
சகத்திலிப் பணியில் நீள்சதாசிவப் பிள்ளையோடு அகத்துறை தில்லைநாதபிள்ளையுமுதவிசெய்ய மகத்துவராகு கார்த்திகேயருமிணைய யாரும் நெகத்தகு பிரசங்கத்தை நிகழ்த்திடப் பலரும் கேட்டார்.
விரித்துரை புரிந்தவத்தைவியனெழில்நல்லூர்க் கந்தன் தரித்துளநிலையும் சாத்திரப் பிரமான மவையுங் காட்டி உரித்துடனுரைத்த வாக்கும் ஒப்பிடாதவர்கள் போக்கும் சரித்திர மவையெடுத்தே சகலர்க்கும் போதித்தார்கள்.
சுவமதம் தாபித்தற்கும் பரமதம் சேதித்தற்கும் அவசியம் தேவையான அனைத்தையு மெடுத்துக் காட்டி பவமெது நன்மை யேது உயர்வெது தாழ்வெ தென்றே தவமகர் சைவங்காக்கத் தமிழினிலிடித்துரைத்தார்.
உதித்தெழு சூரியன்போலொளிர்சைவ உண்மைநாட்டி குதித்தெழு கிறிஸ்து வத்தின் கொடுமையு மெடுத்துக் காட்டி விதித்துள முறையும் மேவி வகுத்துள சதியுமோதி கதித்தெழுந்தாற்ற வேண்டுங்கடமையும் பிரசங்கித்தார்.
போதனை கேட்டு உள்ளம் புழுங்கிய கோயி லார்கள் வேதனை யளிக்க வேண்டி விடயத்தைத் திரித்து வந்த தரதனை சுப்(பி)ரமணிய தரஷணை செய்வதாக நாதனையெண்ணிடாதேநாதனைத் தரவித்தார்கள்.

2009 விரோதி ஐப்பசி O
ம் நற்றமிழ் மாலை
சயா குகதாசன்
ஆம் பக்கத்தின் தொடர்ச்சி)
32.
133.
134.
135.
136.
137.
138.
139.
140.
141.
142.
பாதிரி மாருட் சிலரப் பார்சிவ லிடத்திற் போயிம் மாதிரி யெம்மதத்தைப் பரப்பிட முன்போ பின்போ ஒதரி யிடைஞ்சல் யாரு மொருகாலுஞ் செய்த தில்லை பாதிரி யும்மிட டத்தே பண்டித ராயிருப்பார்.
தம்மதம் மெய்யதென்றும் எம்மதம் பொய்ய தென்றும் பொய்ம்மதம் பரவ விந்தப் புவிவிட மாட்டே னென்றும் தம்மருஞ் சொல்லி னாலுந் தானறி கல்வி யாலுந் தெம்பொடு சபதங் கூறிச் செயலிலும் காட்டு கின்றார்.
ஒப்பொடித் தேச மெங்க ளுயர்மதம் பரப்ப வந்தீர் அப்படி வந்த நீவி ரதற்கெதி ராக நாளும் இப்படிப் பேசு வோரை யின்னமும் பண்டித ராக எப்படி வைத்திருப்பீ ரிதுபிழை நீக்கு மென்றார்.
மொழிந்தவை யாவுங் கேட்டு முனிவுடை முகத்தராகி இழிந்தவிச்செயலை யானு மேற்கலை யென்று பாடம் பொழிந்திடப் போன வோர்நாள் புலவரைப் பார்த்தேயசடு வழிந்திடுமுகத்தி னோடு வந்தவப் பாதி ரியார்.
வெள்ளிகள் தோறும் வண்ணைச் சிவனவன் கோவில் சென்று கள்ளிலும் போதை யூட்டும் கனிமொழிப் பேச்சி னாலே எள்ளிநஞ் சமயத் திற்கே யெதிர்மறை யாகப் பேசித் தள்ளிட லென்னை யென்றார் தாமறி யாதார் போல.
என்றவர் கேட்டபோதி லிளநகை முகத்த ராகி நன்றுவென் கடமை தன்னை நான்நிறை வேற்ற லாலே பொன்று மெத் தவறு முண்டோ புகலுமி னெனவி னாவ ஒன்றையு முரைத்தி டாதெழுந் துட்சென்றார் பாதி ரியார்
முறையிடு பாதி ரிமார் முன்புநின் றிவரைப் போல துறையினிற் சிறந்தார் கோடி தேடினுங் கிடைக்க மாட்டார் குறையித குறித்துப் பேசா விடுதலே தகுதி யென்றே பொறையிது காத்துநீவிர் போமினென் றனுப்பி வைத்தார்.
வருபர மதங்க ளெல்லாம் வகுபிரச் சார மல்லால் இருசுவ மதத்து ளோரிங் கிருபிர சங்க முறையை பெருநெடுங் கால மாயே புரிந்தில ராத லாலே தருமறு முகவ னாரின் தமிழ்ப்பிர சங்கந் தானே.
வேட்பதற் கினிமை யாயும் விளங்குதற் கெளிமை யாயும் கோட்படு நரல்க ளெல்லாம் கொடுபல சார மாயும் ஆட்படு மறுமை யின்மைக் கரும்பய ணென்ப தாலே கேட்பதற் காசை யோடும் கிளர்வுறு மூக்கத் தோடும்.
அந்தண ரறிஞர் சைவர் ஆலய ஒது வார்கள் செந்தன லோம்பு சீலர் செட்டிமார் ரெட்டி மார்கள் எந்தமர் பிறரென் றின்றி எத்திறத் துள்ள பேரும் வந்தமர்ந் திருந்து பேசும் வாசகம் செவிம டுத்தார்.
சமயமிப் படியதென்றும் வழிபடு கடவு ளார்தம் அமைவுஇத் தன்மை யென்றும் அத்தியா வசிய மாகச் சமயிகள் தரிக்க வேண்டுஞ் சின்னங்க ளிவைக ளென்றுந் தமரது இலட்சணங்கள் இவையிவை யென்றுஞ் சொன்னார்.
(வளரும்.)
5

Page 17
இந்துசாதனம் EBO
திருமண உறுதியுரை
பெரும்பாலான திருமணங்கள் பிள்ளையார் பூஜையுட னேயே நடைபெறுகின்றன. ஒரு நிறைகுடம், இரு குத்து விளக்குகள், மஞ்சளில் பிடித்த பிள்ளையார், இவற்றுடன் பூசை ஆரம்பமாகும். "ஐந்து கரத்தனை" என்ற திருமுறைப் பாடலுடன் தீபாராதனை நடக்கும். பெரியவர் ஒருவர் தலையில் தலைப்பா கட்டித் தேங்காய் உடைப்பர். தேங்காய் உடையும் வகையைச் சபையோர் உன்னிப்பாகக் கவனிப்பர். நல்ல முறையில் தேங்காய் உடைந்தால் எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி மலரும். இந்த நம்பிக்கையில் எல்லாரும் உறுதியாயிருப்பதைக் காணலாம். ஒரு முறை ஒரு பெரியவர் மிகக் கவலையுடன் வந்து தனது பேரப்பிள்ளையின் கலியாணத்தின்போது தேங்காய் ஒழுங்காய் உடையவில்லை; தாறுமாறாக உடைந்து விட்டதே; இதனால் ஏதாவது கெடுதி ஏற்படுமா என்று கவலையுடனேயே கேட்டார்.
"பெரியவரே, எவ்வித பயமுங் கொள்ளத் தேவையு மில்லை. உடைத்தவனும் அவன்தான்; உடைப்பித்தவனும் அவன்தான்; அவனின்றி ஓரணுவும் அசையாதல்லவா? பிள்ளையார் சிதறுதேங்காயைத்தான் பெரிதும் விரும்புகிறார். ஆதலால் இதிற் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை". பெரியவரும் மகிழ்வுடன் வீடு சென்றார். மணமக்கள் சீரும் சிறப்பும்
பெற்று இன்றும் வாழ் கின்றனர். ஆனால் ஒரு வருடத்தின்பின் பாட்டி இறந்துவிட்டாள். சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தாற் சொல்லவேண்டுமா? என்று சொல்வார்களே! அதே போன்று தேங்காய் உடைக்கும் போதே எங்களுக்குத் தெரியுமே, ஏதோ நடக்கப் போகிறதென்று. அது நடந்து விட்டதே என்ற மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறவர்கள் உண்டு.
ஒரு தாம்பாளத்திற் பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் பூசிய தேங்காயுடன் தாலியும் வைத்துச் சபையினரின் ஆசிக்கள்க அனுப்பப்பெறும். தாலி மஞ்சள் நூலிலேயே கட்டப்பெறும். திருமாங்கல்யதாரணம் செய்யும்போது மஞ்சள் கலந்த அரிசியினால் ஆசீர்வாதம் செய்வர். பெரியோர்கள், உற்றார், உறவினர் மாலை மாற்றுதல் மூலம் ஆசீர்வாதம் செய்வர்.
திருமண மண்டபத்துக்கு மணமகனும், மணமகளும் வந்து சேருவதற்கு முன்பாகத் தனித்தனி தங்களுக்குக் கிட்ட உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடாற்றிக் கோயிலிற் காளாஞ்சி பெற்றுக்கொண்டு வருவர்.
திருமாங்கல்யதாரணத்திற்கு முன்பு மணமகனும் மணமகளும் தனித்தனி உறுதியுரை எடுத்துக்கொள்வர். திருமணக் கிரியைகளுள் இது முக்கிய இடம்பெறுகின்றது.
 

2OO9. விரோதி ஐப்பசி O
மணமகனின் உறுதியுரை
ஒம் நமசிவாய; ஓம் நமசிவாய; ஒம் நமசிவாய.
இங்கு சமுகம் கொடுத்திருக்கும் சபையோர்கள் முன்னிலையில் திரு. (மணமகளின் தந்தை) பெயர் அவர்களுடைய புதல்வி சௌபாக்கியவதி (மணமகளின்) பெயர் என்னும் பெயர் கொண்ட கன்னிகையை எனது பிரிய மனைவியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகின்றேன்.
எனக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்த எனது
மனைவியுடன் இன்றுமுதல் இல்லறத்தை நடத்துவது என் கடமையாகும் என்று நான் உறுதிமொழி கூறுகின்றேன்.
நெறிதவறாமல் பிழை செய்யாமல் இல்லற தருமத்தின்படி நடந்து, வாழ்விலும் தாழ்விலும் சமபங்கேற்று உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என் கடமையாகும்.
என் உயிர் உள்ளவரையில் எனக்குத் துணையாக வாழும் எனது மனைவிக்கு எந்தவிதத் துரோகமுஞ் செய்யமாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் என் மனைவியைக் காப்பது என் கடமை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.
இறுதிவரை இல்லறத்தை என் மனைவியுடன் நல்லறமாக நடத்துவேன் என்று இறைவன் பெயரால் உறுதிமொழி துெது, இங்கு கூடியுள்ள பெரியோர்கள் முன்னிலையில் வரதீகைத் துணைவியாக ஏற்றுக் கொண்ட என் மனைவிக்கு இத்திருணத்தில் உள்ளன்போடு திருமாங்கல்யதாரணம் செய்கின்
மணமகளின் உறுதியுரை
ஓம் நமசிவாய; ஓம் நமதியூாய ஓம் நம
இங்கு நடந்து கொண்டிருக்கும் இத் விழாவில் எனக்குத் திருமாங்கல்யதாரணம் செய்தவர்ைXர்ன் கணவராக ஏற்றுக்கொண்டு கட்டுப்பாடாகவும் கண்ணியமாகவும் இல்ல றத்தை நல்லறமாக நடத்துவது எனது கடமையாகும் என்று உறுதிமொழி கூறுகின்றேன்.
நெறிதவறாமல், பிழை செய்யாமல், இல்லற தருமத்தின்படி நடந்து, வாழ்விலும், தாழ்விலும் சமபங்கேற்று, உண்மையாகவும், நேர்மையாகவும் நடப்பது என் கடமையாகும். என் உயிர் உள்ளவரை யில் எனக்குத் துணையாக வாழும் எனது கணவருக்கு எவ்வித துரோகமும் செய்யாமல், கற்பு நெறிதவறாமல், வாழ்நாள் முழுவதும் பணி செய்வதே எனது கடமையாகும் என்பதை மனதுட்கொண்டு நடப்பேன்.
இறுதிவரை எனது கணவருக்குத் துணையாக நின்று இல்லறத்தை நல்லறமாக நடத்துவேன் என்று இறைவன் பெயரால் உறுதிமொழி செய்து, இங்கு கூடியுள்ள பெரியோர்கள் முன்னிலை யில் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட எனது கண வருக்கு இந்தக் கணையாழியை உள்ளன்போடு அணிவிக்கின் றேன்.
மணமக்களுக்கு அறிவுரை
பெரியோர்களே! சகோதர சகோதரிகளே! தாழ்மையான
வணக்கம்.
—>

Page 18
இந்துசாதனம் 8C
இப்பொழுது இவ்விளைஞர்கட்கு நடந்த திருமண சந்தர்ப்பத்தில் மணவாழ்க்கை சம்பந்தமாகச் சில நல்லுரைகளை நினைவுகூருவோமாக!
காதலர் கருத்தொருமித்து ஒன்றுபட்டு மணம் புரிந்து கொள்வதே இன்பம் என்பது கொள்கை. எனினும் இதைவிட மேலான இன்பம் அறநெறிகளை விளங்கிக்கொண்டு அதன்படி வாழ்க்கை நடத்தவேண்டும்.
தன் மனைவியை நேசிக்கும் ஒருவன் திருமணத்தினால் நன்மையை எதிர்பார்ப்பவன். தன் மனச்சாட்சிக்கு விசுவாசமாக இருப்பதுபோல மனைவியிடமும் விசுவாசமாக இருக்கவேண்டும். மனைவி அவனுக்குத் தியாகம் செய்வாள்; அவனைக் கெளரவிப் பாள்;உதவிபுரிவாள்.
தன் கணவனிடம் அன்பு கொண்ட மனைவி ஒருத்தி திருமணத்தினால் நன்மையை எதிர்பார்ப்பவள். தன் மனச் சாட்சிக்கு விசுவாசமாக இருப்பதுபோன்று தன் கணவனிடமும் விசுவாசமாக இருக்கவேண்டும். அவனை அவள் பூரணமாக நம்பவேண்டும். அவனைக் கெளரவிக்க வேண்டும். அவனை நன்கு பாதுகாக்க வேண்டும்.
உண்மையில் திருமணம் என்பது ஆசீர்வாதங்களால் சூழப்படும் புனித சம்பந்தமாகும். அதனால் அவர்கள் சந்ததியும் அவர்கள் போன்றே வளர்ந்து, இருவரினதும் சந்தோஷத்திற்குச் சாட்சியாக இருப்பார்கள்.
ஆதலால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட சகோதரரே, சகோதரியே, மணமகன் கடமை மனைவியைக் காப்பாற்றுதல், அவள் வாழ்க்கையிற் சந்தோஷமாக இருக்கச் செய்தல்; அவளிடம் அகத்திலும், புறத்திலும் விசுவாச்மாக நடந்து கொள்ளுதல்; அவள் வியாதியுற்ற காலங்களில் கவனித்துச் சிகிச்சை ஆற்றுதல்; குழந்தைகளைப் பராமரித்தல்.
மனைவியின் கடமை தன் கணவனை அன்போடு நேசித்தல்; அவனுக்கு உதவி செய்தல்; பொறுமையைக் கையாளுதல்; எல்லா அம்சங்களிலும் விசுவாசமாக இருத்தல்; கீழ்ப்படிதலுள்ளவர்களாக நடந்துகொள்ளுதல், என்பன என்பதை நன்கு சிந்தித்து உணரவேண்டும்.
உலகக் கடமைகளுக்கிடையே மாயையின் மயக்கும் ஜால ஒளிக்கிடையே அறநெறிகளை இடைவிடாது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!பிற உயிர்களையும் மதித்து நடந்து கொள்ளுங்கள்! உங்களைச் சூழ்ந்துள்ள எல்லோரிடமும் அன்பு என்னும் அமிர்தத்தை வழங்கப் பயின்று வரவேண்டும். இவைகளுக்குத் தடையாக உள்ளது கோபம். கோபம் அகங்காரத்திலிருந்து உண்டாவது. ஆதலால் ஒவ்வொரு நாளும் உங்களை அடக்கி ஆள்வதில் முயற்சிப்பீர்களாக
உங்கள் தாய் தந்தையரிடம் பட்சமாக நடந்து கொள்ளுங் கள். மனைவி மக்களுக்குச் செய்யவேண்டிய Loss ஒழுங்குடன் செய்க! பிறருக்கு நன்மையையும் சாந்தியையும் தரும் சேவைகளையும் புரியுங்கள்!
இவ்வாறாக அன்பும், அறிவும், ஆனந்தமும் உங்களிருவர் உள்ளத்திலும் செழித்து வளர்ந்தோங்கட்டும். நீங்களிருவரும்
1.

D2OO9 விரோதி ஐப்பசி O
இன்னும் எல்லா ஜீவர்களோடும் சாந்தியும் சமாதானமுமாகப் பல்லாண்டுபல்லாண்டு வாழ்வீர்களாக
மரணக் கிரியை
எல்லா மரண வீடுகளிலும் சிவபுராணம் ஒதுதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. இறந்தவரின் பிள்ளைகள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு ஒவ்வொரு பாத்திரங்களில் நீர் எடுத்துக்கொண்டு வருவர். தாம் எடுத்துக்கொண்டு வந்த நீராற் பிரேதத்தைக் குளிப்பாட்டுவர். எல்லா மரண வீடுகளிலும் பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பர். கடைசியிற் பேரப்பிள்கைள எல்லாம் சுற்றியிருந்த பந்தம் பிடித்துப் பாடும் கிரியை ஒன்று நடைபெறும். அதாவது அந்த ஜீவாத்மா இருள் வழி செல்லாது ஒளி வழியே செல்வதாகப் பாவனை.
இறுதி மரியாதை வசனம்
அனுமுதல் இவ்வண்ட சராசரம் அனைத்திலும் சர்வ வியாபியாகச் சார்ந்திலங்கம் சச்சிதானந்த சோதியின் அதிமர்மமும் அற்புதமுமான நியதியில் ஜடப் பொருட்கள் அனைத்துமே பிறப்பென்னும் விதிக்கு இலக்காக வேண்டியிருப்பதுபோல், இன்று மரணமென்னும் மர்மமான வாயிலில் நுழைந்து மறைந்துபோன முதியவரின் நண்பரின் - இளைஞரின் - அம்மையாரின் - சகோதரியின் - குழந்தையின் - சடலம் இதோ நம் முன் இருக்கின்றது.
நம்மோடு நம்மைப்போல் உடல் தாங்கி உலகில் உலவிய இவரை நாம் இனிக் காணப் போகின்றோமில்லை. வாழ்க்கையின் அந்தத்தில் - நடுவில் - தொடக்கத்தில் - திடீரென அழைத்துக் கொள்ளப்பட்டார். அனைவற்றையும் மறந்தார். இவ்வுடலைத் துறந்தார். அவருடைய வாழ்க்கைத் தீபம் அணைந்துபோயிற்று.
இந்த ஜகம் மாபெரும் பாடசாலை. இதில் உயிர் வாழ்வனவெல்லாம் மாணவ மாணவிகள்.
ஒவ்வொரு மாணவனும் மாணவியும் காலையில் துயில் கலைந்து, புதிய உடை அணிந்து, பாடசாலைக்குச் சென்று தமது கடமைகளை நிறைவேற்றுவதுடன், புதிய பாடங்களைக் கற்று, சிறிதளவு விருத்தியாக்கிக் கொண்டு, மாலையில் வீடுதிரும்பி, தனது புழுதியடைந்த ஆடையை அகற்றிப் புதிய ஒன்றை அணிகின்றான். இவ்வாறு தினம் தினம் செய்கின்றான். அதுபோலவே இவ்வுடலைத் தாங்கித் திரிந்த உண்மை, உண்மை மனிதராகிய ஆத்மா தனது கடமைகள் முடிந்து தான் கற்க வேண்டியவைகளைக் கற்று இன்ற திரும்புகின்றார். ஜகம் என்னும் இப்பாடசாலையில் அம்மமாணவரை இனிநாம் காணப்போகின்றோ மில்லை. அவருக்குத் தேவையானவைகளைக் கற்கவும் கடமைகளை ஆற்றவும் ஏற்ற வேற்றுடலில் மீண்டும் தோன்றுவார் என்பது புனர்ஜன்ம நியதி.
"கிழிந்த உடையை அகற்றி
புதிய ஒன்றை அணிவது போலாம் மரணம்" என்று கீதையில்பூரீகிருஷ்ணபரமாத்மா உபதேசித்தருளியதுபோல் நமது - முதியோர் - நண்பர் - இளைஞர் - அம்மையார் - சகோதரியார் - குழந்தை அணிந்திருந்து அகற்றிய உடையாகிய அவர் உடலைச் சுற்றி நமது அந்திய மரியாதைகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டுச் சூழ்ந்துள்ளோம். - ajonGibò

Page 19
இந்துசாதனம் 8.O
மாணவச் செல்வங்களே, Y
வணக்கம். தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர், நண்பர்கள், அயலவர், ஆசிரியர், அன்னியர், போன்ற யாருடனாயினும் நாம் உரையாடும்போது, இனிமையான நல்ல சொற்களையே உபயோகிக்க வேண்டும். நல்ல எண்ணங்களையும் நல்லுணர்வையும் வெளிப்படுத்தும் எளிய, இனிய சொற்களால், ஏனையோரின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். தீய கடிய சொற்கள் கோபம், பகை, வெறுப்பு போன்றவற்றையே உருவாக்கும். இனிமையான சொற்களை உபயோகிக்காமல், இனிமையற்ற சொற்களை உபயோகிப்பது, மரத்திலுள்ள இனிய பழங்களை விட்டுவிட்டு, கசப்பான காய்களைப்பறிப்பதைப் போன்றதுஎன்கிறார் திருவள்ளுவர்.
இனி உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்ததற்று (திருக்குறள் 100)
என்ற குறளை என்றும் நினைவில் நிறுத்தி, எல்லோருடனும் இனிமையாக உரையாடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
இந்து சாதனம் புரட்டாதி (2009) இதழில் இடம்பெற்ற"சமய அறிவுப்போட்டி 05" இற்குரிய கேள்விகளையும் சரியான விடைகளையும் தருகின்றோம்.
1. மந்திரமாவது எனத் தொடங்கும் தேவாரத்தை வரிக்கிரமமாக
எழுதுக.
திருச்சிற்றம்பலம் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவதுநீறு துதிக்கப்பபடுவது நீறு
தந்திரமாவதுநீறு சமயத்தி லுள்ளதுநீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
2. சேனாதிராய முதலியார் என்ற இலங்கைத் தமிழ் அறிஞர் எந்த
ஊரில் வாழ்ந்தார்? இருபாலை என்னும் ஊரில்
3. குறிஞ்சித்திணைக்குரிய கடவுள் யார்?
முருகன்
4. "ஈழமண்டல சதகம்" என்ற நூலின்படி முதன் முதலில் நல்லூரில் முருகப்பெருமானுக்குக்கோயில் கட்டியவர்யார்? நல்லூரிலிருந்து அரசாண்ட சயசிங்கையாரியச் சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த புவனேகபாகு என்பவர்.
5. முதன் முதலில் "இந்துசாதனம்" பத்திரிகையின் ஆசிரியராகப்
பணிபுரிந்தவர் யார்? திருதம்பு கைலாசபிள்ளை
مـــــــــــــــــــــا
 

2OO9 விரோதி ஐப்பசி O
பர் பக்கம்
சரியான விடைகளை அனுப்பியோருள் கீழ்க்கண்டோர் பரிசுக்குரியவர்களுகத் ஹதரிவுளுசய்யப்பட்டுள்ளனர்.
s TN முதற் பரிசு:நபா 100/- செல்வி வி.பிரசாந்தினி கணேசலிங்கம் 34/4, சேர்.பொன்.இராமநாதன் வீதி,திருநெல்வேலி, பாடசாலை: நல்லூர் இந்துத் தமிழ்ப்பெண்கள் பாடசாலை.
இரண்டாவது பரிசு:gநபா 50/- செல்வி வினோதினிமகேந்திரன் கேணியடி லேன், திருநெல்வேலி, யாழ்ப்பாணம். பாடசாலை: நல்லூர் இந்துத் தமிழ்ப்பெண்கள் பாடிசாலை.
மூன்றாவது பரிசு:gநபா 25/-
செல்வன் ஏ. கபீர்த்தன்
இல,620,நாவலர் வீதி, அரியாலை.
பாடசாலை: யாழ். மத்தியகல்லூரி.
பரிசு பெறும் மூவரையும், அவர்களை நல்வழிப்படுத்தி
ஊக்கமளித்து வரும் அதிபர்களையும் பாராட்டுகின்றோம். பரிசுத்
தொகை விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
முடிவுத் திகதிக்குப் பின்னர் வந்த விடைகள் பரிசீலனைக்கு
t இக்கப்படவில்லை
சமய அறிவுப் போட்டி இல. 06 一「
முதற் பரிசு ரூபா 100/-; இரண்டாம்பரிசு:ரூபா 50/- முன்றாம்பளிக: ரூபா 25
1. இப்போதைய தொண்டைமானாறு என்பதின் பழைய பெயர் என்ன?
2. "அமுதசுரபி அன்னதான சபை" எந்தக் கோவிலுடன்
தொடர்புடையது?
3. தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” எனத் தொடங்கும்
திருத்தொண்டர்தொகை பாடியவர் யார்?
4. மலேஷியாவில் நடைபெற்ற பண்ணிசைப்போட்டியில் ஆறுதல் பரிசு
பெற்ற சீனப் பெண்மணியின் பெயர் என்ன?
5. நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ என்பதில் "உமக்கே"
யாரைக் குறிக்கின்றது?
நீங்கள் செய்யவேண்டியவை (அ) வெள்ளைத் தாளிலே ஒவ்வொரு கேள்வியையும் அதற்குரிய
பதிலையும் எழுதுக. (ஆ) கேள்வியும் பதிலும் உங்கள் சொந்தக் கையெழுத்திலேயே இருக்க
வேண்டும். (இ) விடைகளின் முடிவில் உங்கள் பெயர், முகவரி, படிக்கும் வகுப்பு,
பாடசாலை, ஆகியவை எழுதப்படல் வேண்டும். (ஈ) விடைத்தாளில் உங்கள் கையொப்பமும் உங்கள் வகுப்பாசிரியர்
அல்லது அதிபரின் கையொப்பமும் இருக்கவேண்டும். (உ) உங்கள் விடைகளை 03.11.2009 அல்லது அதற்குமுன் கிடைக்கக் கூடியதாக, சமய அறிவுப் போட்டி இல 05, இந்து சாதனம், இல. 66, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
இவ்வாண்டில் வெளியான "இந்து சாதனம்" இதழ்களில்
விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். குருநாதன்

Page 20
இந்துசாதனம் 8., O
சொல்லிய பாட்டின் பொரு
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
தலம்: திருவதிகை வீரட்டானம் பன்: விகால்லி
திருச்சிற்றம்பலம்
முன்னம் அடியேன் அறியாமையினான்
முனிந்தென்னைநலிந்துமுடக்கியிடப் பின்னை அடியேன் உமக்கா ரூம்பட்டேன்
சுடுகின்றதுசூலைதவிர்த்தருளிர் தன்னை அடைந்தார் வினைதீர்ப்பதன்றோ
தலையா யவர்தங் கடனா வதுதான் அன்னம் நடையார் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே. (4)
அன்னம் நடையார். அன்ன நடையினையுடைய பெண்கள் வாழ்கின்ற, அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! முன்னம் - முன்னே, அடியேன் - அடியேனது, அறியாமையினான்-அறியாமை காரணமாக, (சூலை) என்னை - அடியேனை, முனிந்து- சினந்து, நலிந்து- வருத்தி, முடக்கியிட - முறுக்குதலினால், பின்னை - பின்னே , அடியேன் - ஏழையேன், உமக்கு ஆளும்பட்டேன் - உமக்கு ஆட்படவும் செய்தேன், (ஆதலால்) சுடுகின்றது ஆலை - வருத்துவதாகிய சூலை நோயை, தவிர்த்து அருளிர் - விலக்கி அருள்செய்வீராக, (யாது பற்றியெனின்) தன்னை அடைந்தார்-தம்மை அடைக்கலம் புகுந்தவர்களது, வினை - வினைகளை, தீர்ப்பது அன்றோ - ஒழித்தருளுவதன்றோ, தலையாயவர் தம் - பெரியாரது, கடன் ஆவது-செய்கையாவது என்றவாறு.
பொழிப்புரை வீரட்டானத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே (என் அறியாமை காரணமாக நான் சமணத்திற் புகுந்தமையால்) சூலை நோய் என்னைப் பற்றியது. அதனால் , நான் உமக்கு
ஆட்பட்டுவிட்டேன். தஞ்சம் என்று அடைந்தவரைக் காப்பாற்றுவது
لاة جيمسحيم
நாவலர் &
9 நாம் இரகசியமாகக் குற்றம் செய்யும் தப்லிக்கொள்வோமாயினும், நம்முை தப்லிக்கொள்ளமாட்டோமே!
ぐ> நாம் செய்த குற்றங்களை நாமே ெ அறிவினால் மூத்த பெரியோர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

2OO9 விரோதி ஐப்பசி O
ஊநணர்ந்து சொல்லுவோம்
தலைவராகிய உமது கடமையல்லவா? கொடிய சூலை
நோயிலிருந்து என்னைக் காப்பாற்றுவீராக.
காத்தாள்பவர்காவலிகழ்ந்தமையால்
கரைநின்றவர்கண் டுகொளென்றுசொல்லி நீத்தாயகயம் புகநாக்கியிட
நிலை கொள் ஞம்வழித் துறையொன் றறியேன் வார்த்தை இதுவொப் பதுகேட் டறியேன் வயிற்றோ டுதடக் கிமுடக் கியிட ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே. (5)
ஆர்த்து- ஆரவாரித்து, ஆர் - நிறைந்த, புனல் ஆர் - நீர் பொருந்திய, அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! கரை நின்றவர் - கரையில் நின்றவர்களாய், காத்து ஆள்பவர் - (வீழாமற்) காத்து ஆள்பவர்களது. காவல் - பாதுகாப்பை, இகழ்ந்தமையால் - அவமதித்த காரணத்தால், கண்டுகொள் என்று-நீயே அறிந்துகொள்வாய் என்று சொல்லி, நீத்தாயகயம்நிலைத்தலில்லாத குளத்தில், புக-முழுகுமாறு, நூக்கியிட - தள்ளிவிட, நிலைகொள்ளும் - நிலைபெறும், வழிதுறை - வழியாவது, துறையாவது, ஒன்று - ஒன்றை, அறியேன் - அறிகின்றேனில்லை ; இது ஒப்பது வார்த்தை (தள்ளி நீயே கண்டுகொள் என்று சொல்லும்). இதுபோல்வதாகிய வார்த்தையை, கேட்டறியேன் - வேறு எங்கும் கேட்டறிந்தேன் இல்லை, வயிற்றோடு-வயிற்றினிடத்துக் குடரோடு, துடக்கி முடக்கியிடகலந்துமுறுக்கியிட, ஆற்றேன் என்றவாறு.
பொழிப்புரை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் பெருமானே குளத்தின் கரையில் நின்று உள்ளே விழாமற் காத்து ஆள்பவர்களது காவலை அவமதித்தபடியால், நீயே அறிந்துகொள்’ என்று என்னைக் குளத்தினுள்ளே தள்ளிவிட, அதிலிருந்து மீளும் வகை தெரியாமல் தவிக்கின்றேன். சூலைநோய் என்னைப் பெரிதும் வருத்துகின்றது;
என்னால்தாங்கிக்கொள்ள முடியவில்லை. خلهم
وصحية
ЗибојаоU போது, பிறர் நம்மைக் கண்டியாவண்ணம் டய மனம் நம்மைக் கண்டியாவண்ணம்
வஸ்படுத்திப் பச்சரத்தாUப்படுவோமாவின், ர் நம்மேல் இரங்கி, அவைகளைப்

Page 21
இந்துசாதனம் 8O
9) 6JJTir6bh6hhIIT6
கலாபூஷணம், பண்
உளப்பக்குவ நிலைக்கேற்ப மக்கள் வழிபாட்டுமுறைகளும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். நாளொன்றுக்கு ஒருமுறை வணங்குவது என்றும், காலை, மாலை வணங்குவது என்றும், காலை, நண்பகல், மாலை வணங்குவது என்றும், குளித்தபின் வணங்குவது என்றும், கை, கால், முகம் கழுவிய நேரத்தில் எல்லாம் வணங்குவது என்றும் வணங்குதல் விரிவடையும். இன்னும் விசேட காலங்களில் வழிபடுவது, விசேட தேவைகளின்போது வழிபடுவது, மகோற்சவ காலங்களில் வழிபடுவது என்றும் வழிபாடு விரிவடை யும். எந்த வேலையைத் தொடங்கும்போதும் இறைவழிபாடு செய்வது ஒன்று ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்து முயற்சி களுடன் தொடர்புகொள்பவர்கள் என்று உள்ளவர்கள் எல்லாம் பிள்ளையார் சுழியிட்டு முதலில் விநாயகனை வேண்டிக் கொண்டு பின்னர் எல்லாம்வல்ல பரம்பொருளை நினைத்து சிவமயம் என்று எழுதி பேனாவின் நுனிமுதல் இதயத்தின் அடித்தளம்வரை சிவமயமாகக் கண்டு முயற்சியைத் தொடருவர். வாகனங்களை ஒட்ட ஆரம்பிப்பவர்களும் இந்த வகையிலான இறை சிந்தனையை மானசீகமாகச் செய்துகொண்டே தமது வேலைகளைத் தொடங்குவர். எந்த ஒரு தொழிலைச் செய்பவர்களும் ஏதோ ஒரு வகையில் தெய்வசிந்தனைக்கு உள்ளாகின்றனர்.
ஆலயங்களுக்குச் செல்பவர்கள் செல்லும் முறையிலும் ஆலயங்களில் இடம்பெறும் வழிபாட்டு முயற்சிகளிலும் வேறுபாடுகளைப் பார்க்கிறோம். ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வழிபாட்டு நிறைவுடன் திரும்பும்போதும் இறை சிந்தனையுடனேயே போக்குவரவு நிகழவேண்டும். ஆலயத்தைச் சமீபித்தவுடன் தூல இலிங்கமாகிய கோபுரத்தையோ, 9,6bu முன்றிலையோ வணங்கிக்கொண்டு, நீரினால் பாதங்களைப் புனிதப்படுத்தி உள்ளே சென்று வணங்கி மனத்திலே திருமுறை களை ஒதி வழிபடலாம். அங்கு செய்யவேண்டுவனவாயுள்ள சரியைத் தொண்டுகளில் ஈடுபடுவது மற்றுமொருவகை வழிபாடுதான். கோயிலுக்குவேண்டிய பூசைத் திரவியங்களைக் கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல் குடை, கொடி, ஆலவட்டம்
ةمحميع
சிவஞானக் கருவுலம் சித்தியார்
முடிந்த முடியை எடுத்துக் காட்டும்
முக்கிய கருவூ லமாகும் சித்தியார் உடம்பழி யப்பர முத்தி கிட்டும்
உயிரது சதசத் தாகி நிற்கும் சுட்டி யறியப் பெறுவன சடமாம்
சுலப மாக அழிவெய் துவனவாம் உடனாய் வேறாய் ஒன்றாய் இருந்து
உலகை ஆள்பவன் இறைவன் ஒருவனே
- கவிஞர். வ. யே
2.
 

2OO9) விரோதி ஐப்பசி O
ப்ாறிய வழிபாடு
ாடிதர் திரு.சி.அப்புத்துரை
பிடித்தல், கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல்,
பாத்திரங்கள் தீபங்கள் தூயதாக்கல், விளக்கேற்றுதல், பூ எடுத்துக் கொடுத்தல், மாலை கட்டிக்கொடுத்தல் முதலியவை சரியை வழிபாட்டு முறைகளாம். இந்த நிகழ்வுகளெல்லாம் உள்ளத்து உணர்வுடன் ஒன்றியன ஆகவேடும். வழிபடும் நேரம் சிறியதாயினும் அது மனப் பதிவுடன் சேர்ந்ததாகவேண்டும். மனம், மொழி, மெய் என்பன ஒரு வழிப்பட்டு இயங்க வேண்டும். ஐந்து பேரறிவும் கண்களேயாக அந்தக்கரணங்கள் சிந்தையாக தொழிற்பட வேண்டும். கேட்டுப் பார்த்தல், சுவைத்துப் பார்த்தல், முகர்ந்து பார்த்தல், பரீட்சித்துப் பார்த்தல், கண்டு பார்த்தல் என ஐம்பொறிகளுமே பார்க்க வேண்டும். இந்த நிலை கைவரப்பெற்றால் பிற நிகழ்வுகள் எதுவுமே புலப்பட முடியாது. அபிராமி அம்மையிடம் தம்மைப் பறிகொடுத்த அபிராமிப்பட்டர் சரபோஜி மன்னன் உரையாடியபோது அமாவாசையைப் பெளர்ணமி என்று குறிப் பிட்டதும் அன்னை அவரைக் காப்பாற்றியதும் நாம் அறிந்தவையே.
இந்த வழியில் நாம் இறைவனை யாசிக்க வேண்டும். அது பழக்கத்திற்குள்ளாகி இறை அனுபவத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அடைய வைக்கும். இந்த அனுபவத்திற்கு உதவும் வகையில் ஆலயப் பணிகள் அமைகின்றன. ஒழுங்கு, அமைதி, நறுமணம், புனிதம், சுகந்ததுTபம், இனிய பக்திஇசை என்று எல்லாமே எமக்குச் சாதகமாகின்றன. இவ்வழி நாம் இறை அனுபவத்துடனாகி மனச் சஞ்சலங்களினின்றும் தூர விலகிவாழமுயலுவோம். எல்லாம்வல்ல பரம்பொருளே! அடியேன் உன்னை நினைந்து வணங்கும் ஒரு கணக்பொழுதாவது உணர்வொன்றி உன்னுடனாகி இருக்க அருள்வாயாக.
"சிந்தனைநின் தனதாக்கி நாயினேன்தன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கிவாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம்புலன்கள் ஆர
வந்தெனையாட்கொள்.
என்று வேண்டுதல் செய்து பயன் காண்போம். 人
Xans
நாவலர் பெருமான் நாமம் வாழ்க
எமது சமயமும் கலாசா ரங்களும்
எதிர்நோக் கியஇடர் எல்லாம் போக்கி தமது அறிவால் ஆற்றல் பொருந்திய
தமிழின் பேச்சால் எழுத்தால் உரையால் சமயப் பிரசங் கங்கள் செய்து
சாதனை படைத்தவர் நாவலர் பெருமான் நமது தமிழ்சை வத்தை வளர்த்த
நாவலர் பெருமான் நாமம் வாழ்க.
ாகானந்தசிவம்

Page 22
இந்துசாதனம் 83O)
இறை அன்பு இ
சிவத்தமிழ்ச் சொல்லி
காப்பியம் ஒன்றைப் பாடும்போது தன்னிகரில்லாத் தலைவன் ஒருவனைச் சித்திரிக்க வேண்டும் என்பது இலக்கண ஆசிரியர்கள் கூறிய விதி. ஆயினும் 'தொண்டு என்னும் பண்பு நிலையை முதன்மைப்படுத்திக் காப்பியம் பாடிய புரட்சிக்காரனாகச் சேக்கிழார் விளங்குகின்றார். அவர் வாழ்ந்த அநபாயச் சோழனுடைய காலத்தில் தொண்டு நெறியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டியதாக இருந்தது. எனவே தொண்டு செய்யும் திருக்கூட்டத்தினரைப் பக்தி நெறியினூடாகச் சமூகத் தவர்க்கு அறிமுகம் செய்து மதிப்பளிக்கும் புனிதப் பணியைத் தமது பெரியபுராணத்தினூடாகச் சேக்கிழார் மேற்கொண்டார்.
அருண்மொழித் தேவர் என்ற இளமைத் திருநாமம் கொண்ட சேக்கிழார் தமிழகத்திலே தொண்டை நாட்டிலே புலியூர்க் கோட்டத்திற் குன்றத்துரிற் பிறந்தவர். கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்கியமையால் 'உத்தம சோழப் பல்லவன்’ என்றும் 'தொண்டர் சீர் பரவுவார்’ என்றும் சிறப்பிக்கப்பட்டார். திருத் தொண்டர் புராணம் என்ற பெயரில் 63 தனியடியார்களதும் 9 தொகையடியார்களதும் பெருமைகளை, சிறப்பை விரித்து உரைத்துக் காலத்தின் தேவை கருதிய கருமத்தைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
உண்மையான வழிபாட்டு நெறியில் நிற்போருடைய இயல்புகள் யாவை? என்பதற்குச் சங்கத்தமிழ் நூலாகிய பரிபாடல் விளக்கம் தருகிறது.
.யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளினார்க் கடம்பின் ஒலிதாரோயே"
(பரிபாடல் 5.79:84)
எனவரும் அடிகள் இதனைக் குறிக்கின்றன. பிறருக்குத்
தொண்டாற்ற விரும்பும் அடியார் இறைவனிடம் அருள், அன்பு,
அறம் என்னும் முப்பெரும்பண்புகளையே வேண்டுகின்றனர்.
"தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
(புறநானூறு: 182)
என்ற புறநானூற்றுப் புலவருடைய கூற்று, தொண்டின் மகத்துவத்தைப் புரிய வைக்கிறது.
சேச்கிழார் குறிப்பிடும் தொண்டு நெறியை விளங்கிக்
 

2OO9 விரோதி ஐப்பசி O
ல்லாத தொண்டு
oழகள் திரு.ச.லலீசன்
கொள்வதற்குப் பின்வரும் பெரிய புராணப் பாடல் நமக்குத் துணை செய்கின்றது.
"ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார் ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ"
(பெரிய புராணம் :144)
தொண்டு செய்யும் திருக்கூட்டத்தாரின் புறத்தோற்றத் தையும் பாடலூடாகத் தரிசிக்கின்றோம். கழுத்திற் கண்டிகை, இடுப்பில் ஒரு கந்தை என இவர்களுடைய புறத்தோற்றம் எளிமை யாக இருக்கிறது. உள்ளத்தில் ஈர அன்பு நிறைந்திருக்கிறது. ஈசன் பணியை மேற்கொள்வதனால் ஈர அன்பு நிறைந்திருக்கிறது.
ஈசன் பணி என்பதற்கு, ஈசனுக்குப் பணி என்றும், ஈசனைப் பணி என்று, ஈசனால் இடப்பட்ட பணி என்றும் வெவ்வேறு கோணங்களில் பொருள்கொள்ள முடிகின்றது. ஈசனுக்குப் பணி என்னும்போது திருக்கோவிலுக்குச் செய்யும் பணியையும் ஈசனைப்பணி என்னும் போது வழிபாட்டையும் ஈசனால் இடப்பட்ட பணி என்னும் போது நேரடியாக மக்களுக்குச் செய்யும் பணியையும் சேக்கிழார் உணர்த்தியுள்ளார். மூன்று கோணங்களில் எம்மைச் சிந்திக்க வைக்கின்ற சேக்கிழாரின் கவித்திறத்திற்கு ஈடு இணை ஏது?
எனினும், மக்கள் பணி செய்வோருக்கு இறை அன்பு அவசியமானதா? என்ற எண்ணம் மனதில் எழுகின்றது. இறை யுணர்வு அறவே இல்லாதவர்களும் மக்கள் பணி மேற்கொள்கின் றார்கள்தானே? என்ற கேள்வியும் பிறக்கின்றது. இறையன்பு இல்லாதுமக்கள் பணிசெய்தால்
"நாம்தான் செய்கிறோம்"
"நான் இல்லாவிட்டால் யாரிதைச் செய்வார்?"
என்ற அகங்காரம் ஆழ்மனதில் ஏற்பட்டுவிடுகின்றது. அதாவது இறையன்பு இல்லாத தொண்டில் நான் தலை தூக்கிவிடுகின்றது. இது தொண்டின் திறத்தையே தவறான வழிக்கு இட்டுச்செல்லக் காரணமாகிவிடுகிறது.
தொண்டின் உன்னதத்தை அறிந்து ‘தொண்டை மேற்கொள்வது, தொண்டு நெறிக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. 人

Page 23
அந்துசாதனம் 18.1
காற்றில் மிதந்து.
காதில் விழுந்து.
്ള
ஆலயங்களில் நடைபெறும் கிரியைகளின் 2 அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்; அதற்கான வேண்டும். கிரியை களை மட்டும் நடத்தினாற் போதாது. ஏ செய்யும் தொண்டு ஓர் அங்கமாக அமையவேண்டும். ச பணிகள் பெருகவேண்டும்.
நூற்றாண்டு வாழ்க்கையி
காரணம் திரு.தி.சுந்தரமூர்த்தி
மிகச் சிறுவயதிலிருந்தே சமயத் துராவது பிறந்தநாள்விழா வயதிலேயே சமய தீட்சையும் ெ
தொடர்பில் ம.பா. மகாலிங்கசிவம் éssalas GaribassêTL. Soussib
உணவுண்பேன். சைவ உணை பிறழாத வகையில் வாழ்க்கை பூரண சுகத்துடனும் மனநிறைவு
மற்றையோரை அழிக்கின்ற, துன்பப்படுத்துகின்ற வீரம் எங் இருக்கின்ற தீய எண்ணங்களை அழிக்கின்ற வீரமே வேண் செல்வங்கள் அல்ல. நல்ல எண்ணங்கள், சிந்தனைகளே சிற வேண்டாம். முழுமையான அறிவைத்தரும் அநுபவக் கல்வி
அறிவியல் - அறவியல்
திரு.ஜே.விஸ்வநாதன்
குடியியல் மேல்முறையீட்டு O
நீதிமன்ற நீதிபதி றயீ அறிவியல் சார்ந்த கல்வி மட்டும்
போன்றவற்றுடன் தொடர்புடை
(யாழ். இந்துக்கல்லூரிப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்
sfartsfiliigsfigmsflóð) விழுமியங்கள் முதலியவற்றை இ
ஏற்பட்ட விஞ்ஞான, தொழில்நு கவலைகளும் கூடியிருக்கின்றன
நாம் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கு உள்ளது. நாம் உண்மையான சமயிகளாக, உண்மையான மனதில் உள்ள பிரச்சினைகளும் வெளியே உள்ள பிரச்சிை வாழலாம்.
 
 
 
 
 
 
 
 

2009 விரோதி ஐப்பசி O
ற் பதிந்தவை !
கிரியைகளின்
உயிலபாருளை அறிக
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
உட்பொருள், தத்துவங்களை (ænsopæi, skumsfisögusvinst ஆலயத்தில் நிகழ்ந்த கணபதீஸ்வரக் குருக்கள்
நினைவு நூலகத் திறப்புவிழாவில்)
முயற்சிகள் மேற்கொள்ளப்பட ழைகள், நாதியற்றவர்களுக்குச் மயத்துடன் இணைந்த சமூகப்
திற் பற்றுக்கொண்டவனாக நான் இருந்து வருகிறேன். இள பற்றுவிட்டேன். தினமும் குளித்து அநுட்டானம் முடித்துத்தான் வயே உண்பேன். விரதங்களும் பிடிப்பேன். சைவத்திலிருந்து யை அமைத்துக்கொண்டேன். நூறு வயதைத் தாண்டியும் புடனும் நான் வாழ்ந்துவருவதற்கு இவைகாரணமாகலாம்.
O O வீரம், செல்வம், கல்வி திரு.ஆர். வசந்தசேனன்
Harri torraill. 55ugé
களுக்கு வேண்டாம்; எமக்குள் யாழி, மகளிர் அபிவிருத்திநிலையத்தின்
ஆதரவில் யாழ் மத்திய கல்லூரியில் Γ06Ιή. Ι ΙοOOTτή, 6)LIITΦ56ίT 6Τοότι αστ நடைபெற்ற உலக சமாதானதின ந்த செல்வமாகும். ஏட்டுக்கல்வி ജില്ല്ലി)
யே வேண்டும்.
பூரணமான கல்வி ஆகாது. ஒழுக்கம், பண்பாடு, விழுமியங்கள் ய அறவியற் கல்வியும் அதனுடன் இணையவேண்டும். குக் கடவுள் பக்தி, நல்லொழுக்கம், கலாசார, பண்பாட்டு ளம் வயதிலிருந்தே எடுத்துக்கூறவேண்டும். அறிவியலினால் ட்ப வளர்ச்சியால் மக்களின் துன்பங்களும் துயரங்களும் வேஅன்றிக் குறையவில்லை.
ரச்சினைகளுக்குத் தீர்வு திரு.செ.சேதுராஜா அதிபர், நெல்லியடி ம.ம.வி. th Bing Otou;55&ooéu $fo urg. Boss, usurposer souturf சைவர்களாக வாழ்ந்தால் நமது நடத்திய சைவநெறித் தேர்விற் னைகளும் நீங்கிச் சந்தோஷமாக சித்தியடைந்தவர்களின் uflarofitu sálgrsflóð)

Page 24
இந்துசாதனம் 8-O,
Murthy Thalam, Sri Vallipura Alvar
Prof. A. Sanmugadas,
A Hindu Temple becomes famous by one of the above three. First the deity that resides there. Second the place where the temple is situated. The third is the holy water-spot where the annual sacred bath of the deity takes place. Sri Vallipura Alvar Temple situated in Thunnalai, Katkovalam area in Point Pedro has some unique features in respect of the above three. This is a Vishnu Temple. In all the Vishnu Temples, an idol in the garbhagriha is worshipped. Sri Vallipura Alvar Temple is the one and the only temple where there is no idol of the deity in the garbhagriha. Instead, a chakra is there and people for alongtime has been worshipping it. Chakra is Lord Vishnu's weapon. At Vallipuram, it represents Lord Vishnu. This is a unique feature that has to be reckoned in Connection with the Murthy of this temple.
Let us look at the second aspect of the temple, i.e. Thalam, the place where the temple is situated. In the Vedic period there were no temples. The main object of worship was fire. The holy fire was lit on a platform in the open air under the sky, and oblations were offered to the fire. We do not know when exactly the Indo-Aryans first started building temples for worship. Long before the Indo-Aryans, the Indus Valley people at Mohanjadaro and Harappa, if we have understood correctly their writings and figures on the seals, had been worshipping animals, trees and a deity associated with animals. They too had not built a temple. The System of building temples must have started with the idea of idol worship. In time to come temples became important because they served as a Sacred meeting place for the community to Congregate
هیچ مجمع
2ம்:A
A great landmark in the history of religion is here, duty for duty's sake for the first time let fall from t for first time in the history of humanity upon the so,
For get first the love for gold, and name ours. Then only then you will understand the of th everything, too sacred to be understood until the sc
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 18.1
శ్లోకి

2009 GiīG grá5 gửuáF OI
and Trittan. At Temple in Jaffna
Ph.D. (Edinburgh) * ழும் فيورن
and revitalize their Spiritual energies. Large temples Were usually built at picturesque place, especially on river ba $Oಣ top of hills, and on the sea shore. Sri Vallipura Alvar Temple is situated on the seashore.
機 ܣܝ݂ܥ ܵܡ݂ܬ݂݂ܵ * (*
The third aspect tirtam of Sri Vallipura Alvar Temple also has certain unique features. If a temple is not in the vicinity of a natural water body, a reservoir of freshwater is built on the temple premises. The water is used for rituals as well as to keep the temple floor clean or even for a ritual bath before entering the holy abode. At Vallipuram, there is no artificial reservoir for the deity to have the annual Sacred bath, known as Tirtotsava. The deity at Sri Vallipuram in the form of chakra is taken to the seashore for the annual sacred bath. It takes place on the full moon day of the month of Avani (SeptemberOctober). Here also another unique practice is followed. Sri Vallipura Alvar is takenin procession to the sea shore and He stays near the sea. On behalf of Him, the idol of Anchaneya is taken on a Boat into the Sea and sacred bath is taken. There are three Vaishnava temples in the Jaffna peninsula. They are: Vannarponnai Vengadesvara Varatharaja Perumal Temple in Jaffna Town, Ponnalai Sri Krishnan Temple and Thunnallai Sri Vallipura Alvar Temple. In all the Vaisnava Temples, during the Puja, Vaishnava hymns like Thiruvaymoli, Tiruppallandu, etc. are recited . But in Sri Vallipura Alvar Temple, Panchapurana is recited. It is amzing to listen to Saiva hymns sung at a Vaishnava temple. It is the kind of tolerance that is practised by the people of this part of the country. ܝܐ 人
(சிஓ)அ
Ďaly Saale
he ideal of love for love's sake work for Work's sake, he lips of the greatest of incarnations, Krishna and
of India.
and fame and for this little three-penny World of e Gopis too holy to be attempted without giving up
bul has become perfectly pure.
- Swami VĩVekananda
if the Saiva Paripalana Sabi, No.450, K.K.S. Road, Jaffna & 0.2009 01“Day of Mypasith this gal). Phone: 021222 7678