கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2009.12.16

Page 1
ഞ5ഖ Lirബങ്ങ് 560) ബണിuë ஆரம்பம் விரோதி டு ஆவணி மீ 26 ஆம் உ (1889)
பல்லாண்டுகளுக்கு முன்புவரை முதலிலே நேருக்கு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் செல் சென்றுவந்தோர்.அ வதற்கு யாருக்கும் எவ்விதமான தடைகளோ கில்லை கட்டுப்பாடுகளோ இருக்கவில்லை. தென்னிந் தியாவிலுள்ள பாடல்பெற்ற திருத்தலங் சௌந்தரிக்கும் நலி களுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து மனம் குளிர வணங் வருவதை வழக்கமாகக்கொண்ட பல செய்யும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்தனர். பூலோக யாழ்ப்பான அரச கைலாயம் எனச் சொல்லப்படும் தில்லைச் ভাগ্য কোেনা
*酶gé 強óóJ贏
காலத்திலும், ஆறுமுகப் பெரு மானுக்கும் சூரபன்மனுக்கும் முதன்
தேர் பவனிக்கு எழுந்தருளும் பஞ்சமூர்த்திக
 

"induorgane *TorGhinduorgan |

Page 2
இந்துசாதனம் 6.
கடமையைப் புறக்கணிக்கவும் முடியாமல், தன் நீண்ட நாளைய ஆவலைத் துறக்கவும் முடியாமல், மனம் குழம்பிய நிலையில் நித்திரைக்குச் சென்ற அவருக்குத் தெரிந்தது ஒர் அதிசயக் கனவுக் காட்சி; அதனுடன் இணைந்தது ஒர் அசரீரிக்குரல்.
"நீண்ட தூரம் யாத்திரை செய்துதான் என்னை நீ தரிசிக்க வேண்டுமா? அண்மையிலுள்ள திண்ணபுரத்துக்கு வா. உன் எண்ணம் நிறைவேறும்.
அரச அதிபர் என்ற நினைவைத் துறந்து, சாதாரண அடியாராகவே காரைநகர்த் திண்ணபுரத் திருத்தலத்துக்கு அவர் சென்றார். எனினும் அங்குள்ள மூல மூர்த்திகட்குப் பின்னிரவில் நடைபெற்ற அபிஷேகத்தையும், அதையடுத்து வசந்த மண்டபத்தில் நடராஜப் பெருமானுக்கும் சிவகாமி அம்பாளுக்கும் மிக நீண்டநேரம் நடைபெற்ற ஆர்த்தராபிஷேகத்தையும் மிக மிக அண்மையில் நின்று பார்க்கும் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. முன்னர் தான் கேட்ட அசரீரிக் குரலுக்கு உரியவன் தில்லைக் கூத்தன்தான் என்பதையும், இங்குள்ள அடியார்களுக்கு அருள் புரிவதற்காகத் திண்ணபுரத்தில், அதே கோலத்தில் எழுத்தருளி யிருப்பவனும் "அவன்" தான் என்பதையும் ஆர்த்ராபிஷேகத்தைப் பார்த்த பரவசநிலையில் அவரால் உணர முடிந்தது.
இவரைப்போன்று ஆயிரமாயிரம் அடியவர்களை இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வெளிநாடுகள் பலவற்றிலுமிருந்தும் திருவெம்பாவைக் காலத்தில் தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் இந்தத் தலம் உருவாவதற்கு அடிகோலியவர் அரசர் அல்லர்; ஓர் ஆண்டி-ஆண்டி என்னும் பெயரைக்கொண்ட ஒர் அடியவர்
இராமநாதபுரம் சேதுபதி மஹாராஜாவின் கட்டளைப்படி சேதுக்கரையைக் காவல் செய்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்த அவர், தல யாத்திரையை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தார்; பல தலங்களைத் தரிசித்த பின்னர் காரைநகருக்கு வந்தார்; ஆனால் வியாவில் என்னுமிடத்திற் கோயில் கொண்டிருந்த ஐயனாரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. - முன்னர் நல்ல நிலையிலிருந்த அந்த ஆலயம் போத்துக்கீசரால் அழிக்கப்பட்டுச் சிதைவுற்றிருந்தது.
ஆனால் தன் அடியவரின் மனக் குறையை அந்த ஆண்டவனே தீர்க்க முன்வந்தான். "இங்கிருந்து வடகிழக்குத் திசையில், துர்வாசகிரிக்கு அண்மையில் ஒர் அரச மரத்தின்கீழ் நான் இருக்கின்றேன்." எனக் குரல் கொடுத்தான் "அவன்". இறைவனுடைய குறிப்பின்படி அரசமரத்தைத் தேடிக் கண்டுபிடித்து,
UJ
།།།།---- திண்ணபுரம்
முன்னுறு ஆண்டுகளுக்கு முன்னர், துளுவ நாட் மேற்கொண்டு முனிஸ்வரம், திருக்கேதீஸ்வரம், திரு கதிர்காமம் முதலிய தலங்களைத் தரிசித்த பின், காரைதீ செய்ததாகச் சொல்லப்படும்.துர்வாகிரி (தும்பில்) என்ற பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார்; கவிதை என்னும் பெயர் ஏற்பட்டது. அவர் வசித்த இடம் திண்ணை பிட்டியில் ஒரு வைரவர்கோவிலும் ஆலமரமும் உண்டு. தி

2OO9 விரோதி மார்கழி 01
தன்னிடமிருந்த சூலாயுதத்தை வைத்து வழிபடத் தொடங்கினார் அந்த அடியவர். ஆண்டி முனிவரின் பூசைச் சிறப்பால், ஊர்மக்கள் பலர் அங்கே வந்து வழிபாடாற்றத் தொடங்கினர். சில வாரங்களின் பின்னர், அந்த இடத்துக்குத் தென்கிழக்குத் திசையில் திடீரென ஒர் ஒளி தெரிந்தது. அந்த அதிசயத்தைக் கண்ட ஆண்டி, அந்த இடத்திலே நிலத்தைத் தோண்டினார்; அவர் வணங்க விரும்பிய ஐயனார் உருவம் வெளிப்பட்டது. அந்த ஐயனார் உருவத்தையும் சூலத்துடன் சேர்த்து-சிறிய ஆலயம் அமைத்து வழிபட்டார்.
ஆண்டி நிலத்தைத் தோண்டிய இடம் "ஆண்டி கேணி" ஆனது அவர் எடுத்த ஐயனார், "ஆண்டி கேணி ஐயனார்" ஆனார்! கனவிலே கண்டபடி அவர் தேடிக் கண்டுபிடித்த அந்த அரசமரம் கோவிலின் தெற்கு வீதியில் இன்றும் செழிப்புடன் விளங்குகின்றது.
இறைவனே அடையாளப்படுத்திய இடம்; தானாகத் தோன்றிய ஐயனார்; முழுக்க முழுக்க இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்த ஆண்டி இந்த மூன்றினதும் சங்கமம், அந்த இடம் அருள் அலை அடிக்கின்ற-அருட்காற்று வீசுகின்ற-அருள் ஒளிபிரகாசிக்கின்ற ஒரு திருத்தலமாக உருவாகிக்கொண்டிருப்பதை உணர்த்தியது.
காரைநகர் கிழக்கில் - களபூமியைச் சேர்ந்த அம்பலவி முருகர் என்னும் பெரியாரையும் அது கவர்ந்தது. ஆண்டியுடன் இணைந்து கொண்ட அவர் ஐயனாருக்குத் தனிக் கோயில் கட்டினார். வேதாகம விற்பன்னர்களைக்கொண்டு கும்பாபிஷேகம் செய்வித்தார். ஊர் மக்களிடம் நெல் முதலிய பொருட்களைப் பெற்றுக் கோவிற் பூசைகள் முறையாக நடக்க வழி சமைத்தார். ஐயனாரைச் சிவபெருமானாகவே "பாவித்து" திருவெம்பாவைத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்தினார். சிதம்பரத் திருத்தலத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஐயனார் ஆலயத்தின் பூசை, அபிஷேகம், திருவிழாக்களை நடத்தி வந்த அவருக்குச் சிவபெருமானுக்குத் தனியான ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.
எண்ணம் ஏற்பட்டால் மட்டும் போதுமா? அதை நிறைவேற்று வதற்குப் பொன்னும் பொருளும் வேண்டாமா? ஐயனார் கோவிற் பூசைகளை நிறைவேற்றுவதற்கே அடியவர்களிலும் அடுத்தவர் களிலும் தங்கியிருந்த அம்பலவி முருகருக்குச் சாஸ்திரங்களுக்கு அமைவாகப் பெரிய கோவிலொன்றைக் கட்டி எழுப்புவது சாத்தியப்படுமா?
"ஆம்" என்று யாருமே சொல்லவில்லை! ஆனால் அம்பலவி முருகளின் பக்தி வைராக்கியத்தையும், நேர்மைத் திறனையும்,
->
—~
டைச் சேர்ந்த தினகரன் என்னும் அந்தணர் தல யாத்திரை க்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், சிவனொளிபாதம், வுக்கு வந்தார். துர்வாச முனிவர் சில காலம் தங்கித் தவம் இடத்துக்குச் சமீபமாக இருந்து, வீட்டுத் திண்ணைகளிற் களும் பாடினார் ஆகவே அவருக்குத் "திண்ணைக் கவி" 0ாக்களி, தினகரன்பிட்டி என அழைக்கப்பட்டது. தினகரன் நிண்ணைக்களியேதிண்ணபுரம் ஆனது.
விே.சிவகுருததன் குத்தwடல்

Page 3
இந்துசாதனம் 6.
எளிமையான வாழ்க்கையையும் நன்குணர்ந்த ஒவ்வொருவரும் தம்மாலியன்ற அத்தனையையும் அந்தச் சிவத் தொண்டர்முன் கொண்டுபோய்க் கொட்டிக் குவித்தார்கள் கோவிலைக் கட்டி முடிப்பதற்கு அம்பலவி முருகருக்குக் கைகொடுத்தார்கள்.
ஆனால், கோவிலைக் கட்டிமுடித்ததனால் ஏற்பட்ட மகிழ்ச் சியையும் நிறைவையும் அம்பலவி முருகருக்கு ஏற்பட்ட கவலை யொன்று விரட்டிவிட்டது.
கோவிலிற் பிரதிஷ்டை செய்வதற்குரிய சிவலிங்கத்துக்கு எங்கே போவது?
இலங்கையிற் சிவலிங்கம் கிடைக்காது. அதைச் செய்யக்கூடிய சிற்பாசாரியார்களும் இங்கு இல்லை. இந்தியாவுக்குச் சென்றாலும் அதையாரிடம்,எங்கே, எப்படிப்பெறலாம்.?
கவலையளிக்கக் கண்ணயர்ந்தார் அம்பலவிமுருகர்; கனவிலே தோன்றினார் கண்ணுதற் கடவுள்!
"தில்லைச் சிதம்பரத்துக்கு வா. சிற்பாசாரியார் ஒருவருடைய வீட்டிலே பதினாறு லிங்கங்கள் இருக்கின்றன. நான் அடையாளம் காட்டும் லிங்கத்தை வாங்கிக் கொண்டு வந்து இந்த ஆலயத்திற் பிரதிஷ்டைசெய்"
சிதம்பரத்துக்குச் சென்று சிற்பாசாரியாரிடமிருந்த லிங்கங் களை அம்பலவி முருகர் மிகுந்த பணிவுடனும், பயபக்தியுடனும் பார்த்தபோது, ஒரு லிங்கத்தினின்று காற்று எழுந்து வீசியது ; அவருடைய கவனத்தை அது கவர்ந்தது; முன்னர் அவர் கண்ட கனவை நினைவூட்டியது.
அந்தச் சிவலிங்கத்தையே வாங்க முடிவுசெய்தார் அம்பலவி முருகர். ஆனால், அதை வாங்குவதற்கென அவர் வைத்திருந்த பணம் சிற்பாசாரியார் கேட்ட தொகையிலும் குறைவாகவே இருந்தது. கவலை மீண்டும் அவருள்ளத்தைக் கப்பிக்கொண்டது. சித்தத்தைச் சிவன்பால் வைத்த அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஆனால், அடுத்த நாளே சிவலிங்கம் அம்பலவி முருகளின் கையிற் கிடைத்துவிட்டது; சிற்பாசாரியாரே அவரை அழைத்து அதைக் கொடுத்துவிட்டார்!
நடந்தது என்ன? மனத்திருந்த கருத்தறிந்து முடித்து வைக்கும் மறை முதல்வன் மெளனமாக இருக்கவில்லை. முதனாளிரவில் சிற்பாசாரியாரின் கனவிலே தோன்றி, " அம்பலவி முருகன் என் அடியவன்; அவன்
firi im - EGO பிணைந்த
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்துடன் நெருக்க மடாலயமும் மணிவாசகர் சபையும். திருவிழாக் காலத்தி சேரும் ஏராளமான அடியவர்களுக்கு அன்னதானம் அளி திருப்திகரமாக ஆற்றி வருகின்றது, மாணிக்கவாசகர் ம இத்திருக்கோவிலின் வசந்த மண்டபத்திலே மணிவாச வருகின்றது காரைநகர் மணிவாசகர் சபை. தலைசிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயனுறுவோர் தொகை மணிவாசகர் விழாமலர்ஆன்மீக அறிவுக்களஞ்சியமாகத்
o

22OO9 விரோதி மார்கழி0
கொடுக்குதுபண்தன்தப் பெற்றுக்கொண்டு, அவன் விரும்பிய சிவலிங்கத்தைக் கொடுத்துவிடு" என்றுகட்டளை இட்டுவிட்டான்!
தில்லைக் கூத்தனின் திருவருளால் மெய் சிலிர்த்த அம்பலவி முருகர் மேலும் சில நாள் அந்தத் திவ்ய ஸ்தலத்திலே தங்கியிருந்து அம்பாள், பிள்ளையார், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், நந்தி, பலிபீடம் முதலான திருவுருவங்களையும் செய்வித்துக்கொண்டு திண்ணபுரத்துக்குத் திரும்பிவந்தார்.
வேதாகம கணித விற்பன்னர்களைக் கொண்டு முகூர்த்த நிர்ணயஞ் செய்து, மிகவும் சிறப்பாகக் கும்பாபிஷேகத்தையும் நிறைவேற்றினார் அம்பலவி முருகர். சிவலிங்கப் பெருமான், அம்பாள் ஆகியோரின் அழகுப் பொலிவையும், அருட்சிறப்பையும் உணர்ந்த சிவாச்சாரியார்களும் பெரியோர்களும் சிவபெருமானுக் குச் சுந்தரேஸ்வரர் என்றும் அம்பர்ளுக்குச் செளந்தராம்பிகை என்றும் திருநாமங்கள் சூட்டித்தொழுதுமகிழ்ந்தனர்.
இந்தக் காரைநகர்த் திண்ணபுரச் சிவன்கோவில் உலகெங் கிலும் வாழும் சைவத் தமிழ் மக்களிடையே ஈழத்துச் சிதம்பரம் எனப் பேரும் புகழும் பெறுவதற்குச் சில ஆண்டுகள் எடுத்ததாயினும் இந்த இருபெருந் தலங்களுக்கிடையேயான - ஆத்மீக - அருள்" தொடர்புக்கு, அதன் ஆரம்ப காலத்திலேயே அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.
பிரம்மழநீ மு. இராமசாமி ஐயர் என்பவர் நித்திய பூசகராக நியமிக்கப்பட்டார். குளக்கோட்டு மஹாராஜாவின் கேள்விப்படி முத்துமாணிக்கம் செட்டியார் என்பவரால் திருவுத்தரகோசமங்கை யிலிருந்து அழைத்துவரப்பெற்றுக் காரைநகர் வியாவில் ஐயனார் கோவிற் பூசகராக நியமிக்கப்பெற்ற சிவபூரீ மங்களேஸ்வரக் குருக்களின் வழித்தோன்றலே பிரம்மழரீ இராமசாமி ஐயர். தம் ஈடுபாடு, பக்தி ஒழுக்கம், கிரியைச் சிறப்பு போன்றவற்றால் இவ்வாலயத்தின் அருளையும் புகழையும் மேன்மேலும் ஓங்கச் செய்த சிவழீச.கணபதீஸ்வரக்குருக்கள் சிவபூரீகமங்களேஸ்வரக் குருக்கள் ஆகியோர்வரை, முன்குறிப்பிட்ட மங்களேஸ்வரக் குருக்களின் ஆண்வாரிசுகளே பிரதம சிவாச்சாரியார்களாகக் கடமையாற்றினர். இப்போது பிரதம சிவாச்சாரியாராகப் பணி புரிபவர் சிவழீ ச.கணபதீஸ்வரக் குருக்களின் மகள் வயிற்றுப் பேரனான சிவபூீவி.ஈஸ்வரக்குருக்கள்.
இதேபோல், அம்பலவிமுருகரின் வாரிசுகளே அறங்காலர்களாக இருந்துவந்துள்ளனர். இப்போதைய அறங்காவலர்கள் திருவாளர் கள் அம்பலவி முருகன், மு.சுந்தரலிங்கம் ஆகியோரும்
அத்தகையோரே.
->
"ー「下
மாகப் பின்னிப் பிணைந்திருப்பவை மாணிக்கவாசகர் ல், நாலா திசைகளிலிருந்தும் இத்திருத்தலத்துக்கு வந்து க்கும் அரும் பணியைக் கடந்த பல ஆண்டுகளாக மிகத் டாலய அன்னதான சபை. திருவெம்பாவைக் காலத்தில் கர் விழாவைச் சிறப்பாக நடத்தி ஞானதானம் செய்து இலங்கை, இந்திய அறிஞர்களின் மிகச் சிறந்த ஆன்மீகச் மிகப் பெரிது. இவ்விழாவை ஒட்டி வெளியாகும் திகழ்கின்றது. - கவிஞர் விே.குமரசAசி أهA/سا600 عن

Page 4
இந்துசாதனம் 62
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கிரியை - பூசை, திருவிழா முறைகள் எவ்வித மாற்றங்கள், குழப்பங்களின்றி ஒரே சீராக இன்றும் பின்பற்றப்பட்டு வருவதற்கு இந்த ஒரே பரம்பரைத் தொடர்பே பிரதான காரணமாகும்.
பங்குனி மாதத்தில் சிவனுக்கு நடைபெறும் பெருந் திருவிழாவில், தேரிவர்ந்து வரும் பஞ்சமூர்த்திகளில் நடுநாயகமாகத் திகழ்பவர் பூரீ சோமாஸ்கந்தமூர்த்தி. இப்பெரு மானின் எழிலுருவமும் சிதம்பரத்திலேயே வார்க்கப்பட்டது. பல தடவை வார்ப்பு வேலை நடைபெற்றும் உருவம் சரியான முறையில் அமையவில்லை. அதை அவதானித்துக் கொண்டிருந்த அம்பலவி முருகர், கண்களில் நீர் மல்க, தன் காதுகளில் இருந்த கடுக்கன்களைக் கழற்றி அவற்றையும் சேர்த்து உருக்கி விக்கிரகத்தை உருவாக்குமாறு சிற்பாசாரியாரிடம் கொடுத்தார். கடுக்கன்கன் சேர்க்கப்பட்டவுடன் கனகச்சிதமாக அமைந்து விட்டது சோமாஸ்கந்தர் விக்கிரகம். ஆனால், அடுத்த கணமே அம்பலவி முருகளின் ஆவியும் பிரிந்துவிட்டது சோமாஸ்கந்த மூர்த்தத்திலே அம்பலத்தான் என்ற சிவனுக்குப் பக்கத்திலே இருப்பவன் முருகனல்லவா? தன் அடியவனுக்கு உரிய இடத்தை அம்பலத்தான் அம்பலவிமுருகனுக்குக் கொடுத்துத்தான் விட்டான்
தன்னுடைய இறுதிக்காலம் பற்றி அம்பலவி முருகர் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்னவோ, தன்னுடைய மகன் சண்முகம் என்பவரையும் அந்தத் தடவை தன்னுடன் சிதம்பரத் துக்கு அழைத்துச் சென்றிருந்தார். தந்தையாரின் இறுதிக் கடன்களைச் சிதம்பரத்திலேயே நிறைவேற்றிவிட்டு, சோமாஸ்கந்த மூர்த்தியை இங்குகொண்டுவந்து பிரதிஷ்டைசெய்தார் சண்முகம்.
அனைத்து மக்களையும் கவரும் ஆதிநாயகன், ஆதிரை நாயகன் ஆனந்த நடராசனின் அற்புதத் திருவுருவம் இந்தத் திண்ணபுரச் சிவன் கோவிலிலேயே வார்க்கப்பட்டது. தமிழ்நாடு சோழவந்தான் என்ற இடத்தைச் சேர்ந்த குருசாமி என்பவர் - "சாமிக்கே குருவாய்நின்று"சாமியை உருவாக்கியிருக்கிறார்!
பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுடன் கூடிய நடராஜப் பெருமானின் அழகுத் திருவுருவம் இந்தியாவிலேயே இரண்டொரு தலங்களில் மட்டும்தான் இருக்கின்றதாம். அழகொளிரும் இத்திருவுருவத்தைத் தரிசிப்பதற்கென்றே இத்தலத்துக்குப் பலர் வருகின்றார்கள். விக்கிரக அமைப்பு முறையில் நிரம்பிய அறிவுபெற்ற தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், சித்தாந்த சிகாமணி, க.வச்சிரவேலு முதலியார், திருமுருக. கிருபானந்த வாரியார், திருவாவடுதுறை ஆதீன வித்துவான் வீரசிவசுப்பிர மணியம், வித்துவான், சதண்டபாணி தேசிகர், கி.வா.ஜகந்நாதன்,
سعسع
下 g) sipa)T LIGJI
ஆண்டி எனும் அடியவர்கலாயுதத்தையும் ஐயனாை ஐயனாருக்குத் தனியாக ஆலயம் அமைத்தவர் அம்பலவி மு. பூசையை ஒழுங்காகச் செய்வித்து வந்தார், ஒரு நாள் ஒரு 6 முருகனும் வயிறு வளர்க்க வந்துவிட்டான்" என அவ்வீட்டு மனமுடைந்த அம்பலவி முருகர் அன்று தொடக்கம் அரிசிச்ே வகைகளை உப்புப் போடாமல் பாகம் பண்ணி உண்ணத் தெ
இறைவனுக்குரிய நிவேதனங்கள் செய்யப்படுகின்றன. "உப் பண்டம்கோவிலிலே" எனமாறியிருக்கிறது

2OO9. விரோதி மார்கழி 01
திருவாவடுதுறை ஆதீனத்தின் இப்போதைய குருமுதல்வர் சீர்வளர் சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோர் நடராஜப்பெருமானின் அமைப்பிலும் அழகிலும் அருட்பொழிவிலும் தம் நெஞ்சைப்பறிகொடுத்த தமிழ்நாட்டுப்பெருமக்களுட் சிலராவர்.
திருவெம்பாவைக் காலத்தில் தேரிவர்ந்து வரும் பஞ்சமூர்த்தி களில் நடுநாயகனாக விளங்கும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தையும் அன்றிரவு வசந்த மண்டபத்தில் நடைபெறும் ஆர்த்ராபிஷேகத்தையும் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் கொடுத்துவைத்தவர்களே!
இரட்டைக் கோயில்கள் என்றுசொல்லக்கூடியவாறு, கிழக்குப் பார்த்த சிவன், ஐயனார் சந்நிதிகள் அழகான, தனித்தனி இராஜகோபுரங்களுடன் திகழ்கின்றன. ஆடல் வல்லானின் 108 வகையான நடனத் தோற்றங்களைக் காட்டும் சிற்பங்கள் ஆலயத்தின் உள்வீதியை அலங்கரிக்கின்றன. மூன்றாவதான தேரோடும் வீதி ஒருகிலோ மீற்றர் நீளமுடையது. பங்குனி மாதப் பெருவிழாவிலே வெய்யில் சுட்டெரித்தாலும், திருவெம்பாவை விழாவிற் பெருமழை கொட்டி, வீதியே வெள்ளத்தில் மூழ்கினாலும் பஞ்சரத பவனி ஒழுங்காக நடைபெறுவது வழமையாகிவிட்டது. சுனாமிப் பேரலை கோவில்வரை வந்தபோதும், பஞ்சரதப் பவனியைத் தடுத்துநிறுத்த அதனால் முடியவில்லை.
ஆடிப்பூரத்தை அந்தமாகக் கொண்ட அம்பாள் திருவிழாவில் அம்பாளின் தனித்தேரை இழுப்பதில் அடியவர்களிடையே போட்டி
காலை; மாலை இரு வேளைகளிலும் திருவெம்பாவை ஒதப்படுவது, எல்லா நாள்களிலும் ஒருவரே அதை ஒதுவது, இருவேளைகளிலும் மாணிக்கவாசகர் வீதிவலம் வருவது - நிண்டகாலமாக இங்கே நடந்துவருபவை.
"திருவாரூரிலே பிறக்க முத்தி, காசியிலே இறக்கமுத்தி,தில்லை நடராஜரைத் தரிசிக்க முத்தி" என்பது சைவச் சான்றோர் வாக்கு. முன்னவை இரண்டும் சிலருக்கே சாத்தியப்படும். பிறப்பதும் இறப்பதும் எங்கள் பொறுப்பில் இல்லை. தில்லை நடராஜரைத் தரிசிப்பது இலகுவிற் கைகூடக் கூடியது. ஆனால் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் காரைநகர்த் திண்ண புரத்துக்குச் சென்று ஈழத்துச் சிதம்பரேஸ்வரனைத் தரிசித்து நிறைவு பெறலாம்.
இம்மாதம் 16ஆம் திகதி (16.12.2009) பஞ்சரத பவனியும், அன்று இரவு ஆர்த்ராபிஷேகமும் நடைபெறும் என்பதை உங்கள் காதிற் போட்டுவைக்கின்றேன். 人
XMപ9
Duரயும் வைத்து வழிபட்ட அரசமரத்துக்கு வடபாலுள்ள நிலத்திலே நகர். பொது மக்களிடம் நெல், காசு முதலியவற்றைப் பெற்றுப் வீட்டில் பூசைத் தருமம் பெற அவர் சென்றபோது " அம்பலவி நீக்குரியவர் முணுமுணுத்தது அவருடைய காதில் விழுந்தது. சாறு சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். இலை, கிழங்கு, காய், தாடங்கினார். கோவிலில் உப்புச் சேர்க்காமலே நிவேதனங்கள் வட, ஈழத்துச் சிதம்பரம் கோவிலில், உப்புச் சேர்க்கப்படாமலேயே liboor LIGior h groo " என்பது "இங்கே உப்பில்லாப்
சிவருீ. வி.ஈஸ்வரக்குருக்கள்

Page 5
மெய்யியல் கலாநிதி க.
இருக்கு யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் 'ஓம்' என்ற பிரணவத்தினுடனேயே தொடங்கு கின்றன. இந்த ஓங்காரமே எங்கும் எல்லாவற்றிலும் நிலையாக உள்ளது. இந்த 'ஓம்' என்பது அனைத்து மந்திரங்களுக்கும் அடிப்படையாகவும் உள்ளது. அங்ங்ணம் அமைந்துள்ள பிரணவத் திலிருந்தே பிரபஞ்சங்களும், ஜீவராசிகளும், புல், பூண்டுகளும் உண்டாயின. இந்த 'ஓம்' என்பதன் முழு உருவாய்த் திகழும் பெருங்கடவுளாக விளங்குபவரே விநாயகப்பெருமான் ஆவார்.
விநாயகமூர்த்தம், சிவபெருமான் கொண்ட அருள் மூர்த்தங்களுள் ஒன்றாகும். சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் இருப்பதுபோல விநாயகப்பெருமானுக்கும் ஐந்து திருமுகங்கள் உண்டு. ஐமுகன் என்று அவர் போற்றப்படுவதால், விநாயகப் பெருமான், சிவபெருமானின் வேறல்லர், எனினும் உபசாரமாக அவர் சிவபெருமானின் புதல்வர் என்று குறிப்பிடப்படுகிறார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது திருமூலர் திருவாக்கு.பக்தர்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் விரும்பும் வடிவில் இறைவனை வழிபட்டுத் திருப்தி அடைகின்றனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் முதலான அருளாளர்கள் சிவன் வடிவிலும், அபிராமிப்பட்டர் முதலானோர் சக்தி வடிவிலும், அருணகிரிநாதர் முதலானோர் முருகன் வடிவிலும் இறைவனை வழிபட்டுப் பேறுகளைப் பெற்றனர். "யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்" என்று சிவஞானசித்தியாரிலும், "யாதொரு பொருளை யாவர் இறைஞ் சினும் அதுபோய் முக்கண் ஆதியை அடையும் அம்மா" என்று கந்த புராணத்திலும் வருவன எமது சிந்தனைக்குரியனவாகும்.
விநாயகப் பெருமானுக்கு விக்னேஸ்வரன், கணபதி முதலான பல திருநாமங்கள் உண்டெனினும் பிள்ளையார் என்ற திருநாமமே பெருவழக்கில் இருந்து வருகிறது. அவர் சிவபெருமானின் முதற் பிள்ளையாக இருப்பதனாலும், என்றும் இளையோனாக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்படுகின்றார் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
விநாயகப் பெருமான் தம்மை வழிபடும் அடியவர் களுக்குக் காட்சிகொடுத்துத் திருவருள் செய்யும் வண்ணம் கொண்டருளிய மூர்த்தங்களுள் பிரதானமானவை முப்பத்திரண் டாகும். திருமால் எடுத்த அவதாரங்களுக்கு முன்னரே அவை அனைத்தும் நிகழ்ந்துவிட்டன என்பது ஆராய்ச்சியாளரின் முடிவாகும்.
e-ga பெற்ற தவில் வித்துவாள்
ஒரு காலத்தில், கர்நாடக இசையுலகில் மிகச் சி இருவர். ஒருவர் வலங்கைமான் சண்முகசுந்தரம்; மற்றவர் u பயிற்சிக்களமாக விளங்கியதுஈழத்துச்சிதம்பரமே!
 

2OO9 விரோதி மார்கழி O
ரgநபன்
வைத்தீஸ்வரக்குருக்கள்
புத்தபகவான் இராஜக்கிருகத்தில் தங்கியிருந்த போது இறுதிக் காலத்தில் தம் சீடரான ஆனந்தருக்கு கணபதி ஹிருதயம்' என்னும் மந்திரத்தை உபதேசித்ததாக மஹாயானம் என்னும் பெளத்த சமய நூலிற் கூறப்பட்டுள்ளது. கி.பி.5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம் என்னும் நூலில் விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருத்தலையும், நாடக அரங்கின் நாயகனாக அவர் அழைக்கப்படுவதாக எழுதப்பட்டிருத்தலையும் காணலாம். அன்றியும் அக்காலத்தில் எழுதப்பட்ட வடமொழி, தென்மொழி நூல்களிற் பிள்ளையார் சுழியும், விநாயக வணக்கமும் இடம்பெற்றிருப்பதையும் அவதானிக்கலாம். மேலே கூறப்பட்டன வற்றை நோக்கும்போது விநாயகர் வழிபாடு மிகப் பழங்காலந் தொடக்கம் இருந்துவருவது நன்கு புலனாகிறது.
அம்பாள் திருவுருவம், முருகன் திருவுருவம், ஐயனார் திருவுருவம் முதலியன சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவைகள். அவை சிற்ப இலக்கணத்துக்கு மாறுபட்டிருந் தால் வழிபாடு புரிவோருக்கு நன்மை பயக்கமாட்டா. ஆனால், பிள்ளையார் திருவுருவம் அப்படியன்று. சந்தனம், மஞ்சள், சாணம் முதலான பொருள்களை உருவம் இல்லாமல் உருட்டி வைத்தாலே போதும்,பிள்ளையார் எழுந்தருளி அருள்புரிவார்.
பவிஷ்ய புராணம், கணபதி உப நிஷதம், விநாயகர் புராணம், முதலான நூல்கள் விநாயகப் பெருமானின் திருவவதாரங்கள், அவரின் அருட் செயல்கள் முதலியனவற்றை எடுத்துக்கூறுகின்றன. 11ஆம் திருமுறையிற் காலதேவர் பாடிய மூத்தநாயனார் திருவிரட்டைமணிமாலையும், அதிராவடிகள் பாடிய மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையும், நம்பியாண்டார் நம்பி பாடியவிநாயகர்திருவிரட்டைமணிமாலையும் இடம்பெறுகின்றன.
ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல் மிகப் பிரசித்திபெற்றது. பிற்காலப் புலவர்கள் பலர் விநாயகப்பெருமானை உபாசித்து, பிள்ளைத் தமிழ், கலம்பகம், பள்ளு முதலிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்கள்.
சுன்னாகத்தில் வாழ்ந்த வரதபண்டிதர் என்னும் அந்தணர் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டு, பிள்ளையார் கதை என்னும் செய்யுள் நூலை இயற்றியுள்ளார். இது விநாயகர் சஷ்டி விரதகாலத்திற்படிக்கப்பட்டுவருகிறது. கார்த்திகை மாதத்து அபர பக்கப்பிரதமை முதல் மார்கழிமாதத்துப் பூர்வபக்கச் சஷ்டியிறாகிய இருபத்தொரு நாளும் அனுட்டிக்கும் விரதம் விநாயகர் சஷ்டி விரதமாகும். நாம் எல்லாம் விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக. حلهر
(രപ9 A
றந்த தவில் வித்துவான்களகப் புகழ்பெற்றிருந்தவர்கள் ாழ்ப்பாணம் வி.தட்சணாமூர்த்தி இவர்களின் ஆரம்பகாலப்
- சிது

Page 6
இந்துசாதனம் 62
மக்கள் தொண்டே
நயினை நா. யே
Tெந்தவிதமான சுயநலநோக்கமும் இல்லாமல் பணம், புகழ் போன்ற வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான், சிறப்பான பணியை ஆற்றுகின்றான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது அவன் ஒரு மகாத் மாவாக ஆகிவிடுகின் றான். உலகத்தையே மாற்றியமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகின்றது.
நம்மால் ஒருவருக்கும் உதவிசெய்ய முடியாது; மாறாக சேவைதான் செய்ய முடியும். கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், அவர்களுக்குத் தொண்டு செய்வதன்மூலம், ஆண்ட வனுக்கே நீ தொண்டு செய்தவனாகின்றாய். ஆண்டவனின் குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது சேவை செய்யும் வாய்ப்பை உனக்குக் கொடுத்தால், அதன்மூலம் நீபாக்கியம்பெற்ற வனாகின்றாய். ஆனால் அது காரணமாக உன்னைப் பற்றி நீ மிகவும் பெருமையாக நினைத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர் களுக்குக் கிடைக்காத இந்த அரியவாய்ப்பு உனக்குக் கிடைத் திருக்கின்றது. இதனால் பாக்கியசாலி ஆகின்றாய். எனவே நீ செய்யும் இந்தச் சேவையைக் கடவுள் வழிபாடாகவே செய். கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கின்றார். இதைத் தவிர
தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை உணரும்போது மக்களுக்குச் சேவைசெய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகின்றான். ஒரு காரியத்தின் முடிவில் எய்தப்போகும் பயனில் கருத்தை செலுத்தும் அளவுக்கு அந்தக் காரியத்தைச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். அதாவது குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை, அதை அடையப்போகும் பாதையிலும் செலுத்த வேண்டும் என்பதில் தான் வெற்றிக்குரிய எல்லா இரகசியமும் அடங்குகின்றது.
நாம் மற்றவர்களுக்குச் செய்யவேண்டியவை அவர் களுக்குச் சேவை புரிவதும், உலகுக்கு நன்மைதரக்கூடியதைச் செய்வதும்தான். நாம் ஏன் உலகுக்கு நன்மை செய்யவேண்டும்? மேலோட்டப் பார்வைக்கு உலகுக்கு நன்மை செய்வதாகத் தோன்றி னாலும், உண்மையில் நமக்கு நாமே நன்மை செய்தவர்களாக ஆகின்றோம். ஒரு பிச்சைக்காரனுக்குப் பணம் கொடுக்கும்போது இதை வாங்கிக் கொள் என்று நீ சொல்லாதே. மாறாக அவனுக்குக் கொடுப்பதனால் உனக்கு நீயே நன்மை புரிந்துகொள்ள முடிந்ததை நினைத்து, அந்த ஏழை தனக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பத்தை உனக்குத் தந்துவிட்டமைக்காக அவனுக்கு நீ நன்றியுள்ளவனாக இரு. கொடுப்பவன்தான் பாக்கியசாலியே தவிர பெறுபவன் அல்ல.
 

2OO9 விரோதி மார்கழி O
மகேசன் தொண்டு
maspirgor B.A.
அந்தப் பாக்கியத்தை உனக்குத் தந்தது அவன் என்று உணர். இந்த உலகில் உன்னுடைய தர்ம சிந்தனையை, இரக்கமனப்பான் மையை பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றி யுடையவனாய் இரு.
இதன்மூலம் தூய்மையும், பரிபூரணத் தன்மையும் உன்னை வந்தடையும். இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெற முடியாமல் எத்தனையோ ஜீவன்கள் இன்று ஏங்கிக்கொண் டிருக்கும் நிலையில், ஒருவனால் ஒரு நாளைக்கேனும் இன்னொரு வனுடைய இதயத்திற்குச் சிறிது இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்க முடியுமாயின் அது ஒன்றே அவன் வாழ்வை ஆசீர்வதிக்கும் செயலாகவும், அவன் பெற்ற பாக்கியமாகவும் அமையும். உலகுக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுப்பதற்காக பண்டைக்காலத்தில் பலர் தம்மைத் தியாகம் செய்தார்கள். பலரின் நன்மைக்காகவும் அனைவரின் சுகத்திற்காகவும் தைரியமும், சிறப்பும் பெற்றிருந்த வர்கள் தங்களைத் தியாகம் செய்யத்தான் வேண்டி இருந்தது. அதேபோல் இன்றைய உலகில் என்றென்றும் நிலைத்த அன்பும், மாறாத கருணையும், பொருந்திய பல மகாத்மாக்கள் தேவைப் படுகின்றார்கள். காலத்தின் கட்டாயத் தேவையாகவும் அது உள்ளது.
யார் ஒருவர் எதைப்பெறுவதற்கு தகுதியுடையவராக
இருக்கின்றாரோ அதை அவர் பெறாமல்தடுத்து நிறுத்துவதற்கு எந்தச் சக்தியாலும் முடியாது. தூய்மையாகஇருப்பதும், மற்றவர் களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளினதும் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயுற்றவர்களிட மும் இதனைக் காண்பவனே உண்மையில் இறைவனை வழிபடுபவனாகின்றான். இறைவனை விக்கிரகத்தில் மட்டுமே காண்பவனுடைய வழிபாடு முழுமையான வழிபாடாக அமைய முடியாது. பரந்த இந்த உலகத்தில் உள்ள மனிதகுலத்திற்கு நன்மை செய். மற்றவர்களுக்கு முத்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்குச் செல்லவேண்டி இருந்தாலும் பெருமைப்படு. ஏனெனில் மரணம் வருவது நிச்சயமாகி இருக்கும்போது நல்லதோர் காரியத்திற்காக உயிரைத் துறப்பது மேலல்லவா?
தீமையைச் செய்வதனால் நாம், நமக்கும் மற்றவர் களுக்கும் தீமையே செய்கின்றோம். நன்மை செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்ளுகின்றோம். நாம் ஒரு தீய செயலைச் செய்வதால் அதற்குரிய துன்பத்தை அனுபவித்தேயாக வேண்டும். இந்த உலகத்தில் எந்தச் சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. அதேபோல் நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்தால் அதற்குரிய நல்ல பயன் விளைவிக்கப்படுவதையும் எந்தத்

Page 7
இந்துசாதனம் 6.
சக்தியாலும் தடுத்துவிட முடியாது. பிறருக்கு நன்மைசெய்யப் பிறந்த நாம், ஒவ்வொருவரும் இதை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்திருக் கின்றார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மையை உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் துறந்துவிட விரும்பினால் அது பாராட்டப்பட வேண்டிய விடயமல்ல. உலகத்தின் நன்மைக்காக உன் முத்தியை நீ தியாகம் செய்துவிட விரும்புவாயானால் நீ கடவுளாகவே ஆகி விடுவாய். ஏழை எளியவர்களிடமும் தாழ்ந்தவர்களிடமும் ஒடுக்கப் பட்டவர்களிடமும் கொண்ட இரக்கம் காரணமாக அவர்களை மேன்மைப்படுத்தக்கூடிய துணிவையும், ஆற்றலையும், கொண்ட தூய்மையானவர்களே சமூகத்திற்கு இன்று தேவையாகவுமுள்ளது. துன்பத்தில் மூழ்கியபடி ஏராளமான ஏழைமக்கள் இன்னமும் நீ வாழும் பகுதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை அணுகிச் சென்று உன்னுடைய ஆர்வத்தைச் செலுத்தி அவர்களுக்குத் தொண்டுசெய், நோயால் வருந்துபவர்களுக்கும் பசியால் வாடுபவர்களுக்கும் தொண்டு செய். அறியாமையில் உழல்பவர்களுக்கு உன்னால் முடிந்தளவு கல்வியறிவைப் புகட்டு. நீ தொண்டுசெய்ய ஆரம்பிப்பாயானால், நிச்சயம் உனக்கு மன அமைதியும், ஆறுதலும் கிடைக்கும். இத்தகையதோர் மனநிறைவை ஆத்மதிருப்தியை நாம் ஒருபோதும் பணத்தினாலோ, புகழினாலோ அல்லது வேறு எந்த மார்க்கத்தினாலோ பெற்றுவிடமுடியாது.
முன்னாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல், தன்னடக்கம், பிறருக்காக இரங்கும்பண்பு என்பன இன்று அருகிவிட்டன."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். அந்த நிலை இன்று உண்டா? துன்பத்தால் வாடுகின்றவர்களுக்கு இரக்கங்கொள்ளுங் கள். பின்னர் உதவிக்காகக் கடவுளை நோக்குங்கள்; உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயமாகவே வந்துசேரும். இரக்கமுள்ள இதயம், சிந்தனையாற்றல் படைத்தமூளை, வேலை செய்யக் கூடியகைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத்தேவை. இவை உன்னை வலிமைமிக்க ஒரு மனிதனாக உருவாக்கிவிடும். முதலில் உலக மக்களின் துன்பங்களைக் கண்டு நீ வருந்து, வெறுப் புணர்ச்சியாலோ,பொறாமையினாலோ, உன்னுடையமனம் அலைக் களிக்கப்படாமல் இருக்கின்றதா என்று உறுதிப்படுத்திக்கொள். நீ தூய்மையுள்ளவனாக இருந்தால், வலிமையுள்ளவனாக இருந்தால் நீ ஒருவனே அத்தனைபேருக்கும் சமனானவனாவாய். மற்றவர் களின் நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகின்ற அந்த நாளும் வருமா என்று எண்ணு. அன்று அவ்வாறு எண்ணி ஏங்கினார்கள். "என்னைான்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு பயனேதும் கிடைக்குமாயின் செத்தழியும் நாளெனக்குத்
అ_y€
O திருத்தேர்ச்
நடராஜப்பெருமானிடமிருந்தே நாட்டியக் கலை ே நூற்றெட்டும் ஈழத்துச் சிதம்பரத்திலுள்ள தேரிலே சிற்பங்கள கரணங்களும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உடைய தேர், இந்திய திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதால், மேல் விமான
என்பதே ஆகம விதியாகும். இத்தேரில் அமைந்திருக்கும் தேர்ச்சீலைகள் என்பன கும்பகோணத்திலிருந்து தருவிக்கப்பட்
O

22OO9 விரோதி மார்கழி O
திருநாளாகும்" ஜர்று ஆசைப்பட்டார்கள் ஆர்வலர்கள். மற்றவர்களின் நலனுக் காகத் தங்களின் இதயத்தில் இரத்தத்தை உணர்வுபூர்வமாக ஓடச்செய்து பாதை அமைத்துக் காட்டுபவர்களே மகாத்மாக்களாக ஆகின்றார்கள். இவர்கள் தன்னலம் மறந்து பிறருக்காக வாழும் பெருந்தகைகள்.
பாவமும் புண்ணியமும் செயல்களைச் சாராது, செயல்களின் நோக்கங்களையே சாரும் என்பது கீதாவுபதேசம். மக்களின் துயரறிந்து துன்பமறிந்து மனவிருப்போடும், மகிழ்ச்சி யோடும் சேவை செய்யப்பட வேண்டும். அந்தச் சேவை துன்பப் படுகின்ற எத்தனையோ ஜீவன்களுக்கு ஆறுதலளிப்பதாக அமையும். "ஏழைகளின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான்" என்பர். அதனை யதார்த்தமாக அனுபவிக்க முயலுங்கள். "ஈதலில் இன்பம் கண்டு, இன்பத்தில் இறைவனைக்கண்டனர்" ஆன்றோர். எம்மிடமும் அந்த வளமும், மனமும் உண்டு. அது பயன்படுத்தப்பட வேண்டும். இறைவனின் நாமங்களைப் போற்றும் உதடுகளைவிட சேவைசெய்யும் கரங்கள் உன்னதமானவை என்பதை உணருங்கள். மற்றவர்களுக்காக வாழும் மகாத்மாக்களாக நாம் மாறவேண்டும். அவ்வாறு மாறும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக ஆகின்றோம்.
யார் உன்னிடம் உன் சேவையை எதிர்பார்த்து வருகின் றானோ அவனே சிறந்த மனிதன் என எண்ணு. அவரைத் திருப்திப்படுத்த உன்னால் என்ன சேவைசெய்யமுடியுமோ, அதுவே சிறந்த செயல் எனக்கருது. அவ்விடத்திலே அக்கணமே உன்னால் அச்சேவையை செய்யமுடியுமாயின் அதுவே சிறந்த நேரம் என உணர். அப்போது உன்னுடைய வாழ்வின் இருப்பு அர்த்தமுள்ளதாக அமைகின்றது. எவன் சிறந்த மனிதன்? எது சிறந்த நேரம்? எது சிறந்தசெயல்? என்ற கேள்விக்கு ஒரு தத்துவஞானியின் பதிலே மேல் உள்ள வாசகங்கள். இது எமக்கும் உணர்வூட்டுவதாக அமையட்டும். ஒருவருடைய சேவை தூய்மையானதாகவும், விசுவாசமுடையதாகவும் அர்ப்பணிப்பு மிக்கதாயும் அமையுமாயின் அவன் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு புனிதனாகின்றான். அவ்வாறான வர்கள் இருந்தார்கள். இன்னும் வரலாற்று நாயகர்களாக நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். தன்னலமற்ற சேவையால் மக்களின் மனதில் உறைந்து உயிரோட்டத்துடன் கலந்துவிட்ட உத்தமர்களானோர் என்றும் சாவதில்லை. அவர் களின் சேவையால் அவர்கள் நாமமும் வாழ்ந்துகொண்டே இருக்கும். அவ்வாறான வாழ்வு நம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அவ்வாறான வாழ்க்கையை இதயசுத்தியுடன் நாம் ஏற்படுத்திக் கொள்வோமாயின் அது எமக்கு அர்த்தமுள்ள வாழ்வாக அமைந்து, மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அந்த மகத்தான இலக்கை நோக்கிப் பயணிப்பதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. "எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்ற பெருநோக்கோடு நாம் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாக வாழ்வோமாக." حلهر
xళిசிறப்பு
தோற்றம் பெற்றது. பெருமானுடைய நாட்டிய கரணங்கள் ாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நூற்றெட்டு நாட்டியக் ாவிலோ, இலங்கையிலோ இல்லை. பஞ்ச கிருத்தியத்தில் தேர்த் ாம் துணிவேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்படல் வேண்டும் கொடிகள், அலங்கார வேலைப்பாடுகளுடன் அமைந்த
L6.
- அமரர் திலாகராசா மகேஸ்வரன்
7

Page 8
இந்துசாதனம் 6.2
அத்துவிதத் தொடர்பு
54. இறைவன் உயிர்களின் பொருட்டே ஐந்தொழில் களைச் செய்கிறான் என்றால், அவனுக்கும் உயிர்களுக்கும் இடையே ஏதேனும் ஓர் இயைபு இருத்தல் வேண்டும். அவ்வியையுயாது?
பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களும் வியாபகப் பொருள்கள்; அதாவது, இடம் என்ற எல்லைக்கு உட்படாமல் எங்கும் நிறைந்து நிற்பவை; ஆயினும் சூக்குமம், தூலம் என்னும் தன்மைகளால் தம்முள் வேறுபட்டவை. சூக்குமம் என்பது நுண்மை. தூலம் என்பது பருமை. பதி அதிசூக்குமப் பொருள். பசு சூக்குமப்பொருள். பாசம் தூலப்பொருள்.
சூக்குமம், தூலம் என்பனவற்றுள் சூக்குமமாய் உள்ளது வியாபகமாயும், தூலமாய் உள்ளது அதனுள் அடங்கி வியாப்பியமாயும் நிற்கும். வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்பது என்பதுபொருள்.
பதியாகிய கடவுட் பொருள் அதிசூக்குமப் பொருள் ஆகலின்அது வியாபகமாய் ஏனை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கித்தான் மற்றொன்றில் அடங்குதல் இன்றிநிற்கும்.
பசுவாகிய உயிர் கடவுளை நோக்கப் பருமையான தூலப்
பொருள். ஆகவே, உயிர்கள் கடவுளது வியாபகத்தில்
8mኴff "تلفون شركسية
அடங்கி வியாப்பியமாய் நிற்பவையாகும். ஆயினும் அவ்வு யிர்கள் ஆணவம், மாயை முதலிய பாசப் பொருள்களை நோக்க, அவற்றினும் நுண்ணியதாகிய சூக்குமப் பொருளாகும். ஆகவே, உயிர்கள் கடவுளிடத்து அடங்கியும், தம்மினும் தூலமாகிய ஆணவம், மாயை, கன்மங்களைத்
தம்முள் அடக்கியும் நிற்கும்.
ஆணவம், மாயை, கன்மங்கள் சடப்பொருள்கள் ஆதலின் அவை உயிர்களினும் தூலமாய், உயிர்களிடத்து உள்ளடங்கி
நிற்பனவாம்.
இம்முறையிற் கடவுள் வியாபகம். உயிர்கள் கடவுளிடத்து வியாப்பியம். அவ்வுயிர்களிடத்துப் பாசங்கள் வியாப்பியம்
என்பது விளங்கும்.
இங்ங்ணம் பதி, பசு, பாசம் ஆகிய அனைத்துப் பொருள்களும் வியாபகமேயாயினும், சூக்குமமும் தூலமுமாம் முறைமை பற்றி வியாபகமும் வியாப்பியமுமாய் நிற்கும்.
இந்த வியாபக வியாப்பியத் தொடர்பினாலே பதியாகிய
கடவுள் பசுக்களாகிய உயிர்களையும், பாசமாகிய மலம் மாயை
 
 
 
 
 

2OO9 விரோதி மார்கழி 01
கன்மங்களையும் தனது நிறைவினுள் அடங்கிக் கொண்டு அவ்வெல்லாப்பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்பன்.
அவன் உயிர்களோடும் பிற பொருள்களோடும் இவ்வாறு இயைந்து நிற்றலாகிய தொடர்பு அத்துவிதம்' எனப்படும். அத்வைதம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் அத்துவிதம் என்றுவழங்குகின்றது.
அத்வைதம் என்ற சொல்லின் அமைப்பு
55. அத்வைதம் என்ற அச்சொல் எந்நூலில் இடம்
பெற்றுள்ளது?
அத்வைதம் என்ற சொல் வேதத்தின் இறுதிப் பகுதியாகிய உபநிடதங்களில் இடம்பெற்றுள்ளது.
56. அத்வைதம் என்பதில் இரண்டு சொற்கள் சேர்ந்துள்ளன என்று தெரிகிறது. அச் சொற்கள் யாவை? அவை எம்முறையில் இணைந்துள்ளன?
அத்வைதம் என்பதில் ந என்ற சொல்லும், த்வைதம் என்ற
சொல்லும் சேர்ந்துள்ளன.
சைவசித்தாந்தம்
முனைவர் ஆ.ஆனந்தராசன்
ந என்பது எதிர்மறையினை உணர்த்தும் சொல். த்வி என்பது இரண்டு எனப் பொருள்படும். அதிலிருந்து வந்தது த்வைதம் என்ற சொல். ந + த்வைதம் என்பது வடமொழி விதிப்படி அத்வைதம் என்றாகும்.
எதிர்மறையை உணர்த்தும் நகாரம் தன்னோடு சேரும் மொழியின் முதலில் உயிரெழுத்து நின்றால் முன்பின்னாக மாறி நிற்கும். அதாவது ந (ந் + அ) என்பது அ + ந் என மாறிவிடும். காட்டாக ந + ஆதி என்பதில் வருமொழியின் முதலில் ஆஎன்ற உயிரெழுத்து நிற்பதால் நந்+அ) என்பது முன்பின்னாக மாறி அ+ந்+ஆதி= அநாதி என்று ஆகிறது.
இனி, வருமொழியின் முதலில் மெய்யெழுத்து நின்றால், ந என்பதில் ந் கெட்டு அ மட்டும் நின்று வருமொழியோடு
சேரும்.
அம்முறையில் ந+த்வைதம் என்பதில் வருமொழியின் முதலில் த் என்ற மெய்யெழுத்து இருப்பதால், ந என்பதில் உள்ள ந் கெட்டு அமட்டும் நின்று அத்வைதம் என்றாயிற்று.

Page 9
இந்துசாதனம்
எதிர்மறைப்பொருள்கள்
57.
58.
59。
நகாரம் எதிர்மறையை உணர்த்தும்பொழுது என்னென்ன பொருள்களைத்தரும்?
எதிர்மறை நகாரம் இன்மை, அன்மை, மறுதலை என்ற மூன்று பொருள்களைத் தரும்.
இன்மைக்கும் அன்மைக்கும் வேறுபாடு உண்டா? உலக வழக்கில் 'இல்லை’ என்ற இன்மைச் சொல்லும், “அல்ல" என்ற அன்மைச் சொல்லும் ஒரே பொருளில்தானே வருகின்றன.
இன்மையும் அன்மையும் பொருள் வேறுபாடு உடையவை. இன்மை என்பது முற்றிலும் மறுப்பது. அன்மை என்பது சிறிது மறுத்துச் சிறிது உடன்படுவது. அதாவது ஒரு பொருளை மறுத்து அதனோடு ஒரு வகையால் ஒத்த வேறொரு பொருள் உண்டு என்பதை உடன்படுவது. எடுத்துக்காட்டிக் கூறினால்
இது விளங்கும்.
முயலுக்குக் கொம்பு இல்லை என்னும்போது, அந்த இன்மைச் சொல் முயலின் தலையிற்கொம்பு என்ற பொருளை முற்றுமாக மறுக்கிறது. இனி, அன்மைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு வருமாறு இரவு நேரத்தில் வீதி ஓரத்தில் ஓர் உருவம் இருப்பது தென்படுகிறது. நம்முடன் வந்தவர் அங்கே இருப்பது மனித உருவமா?’ என்று கேட்கிறார். மரக் கட்டைதான் மனித உருவம் போலத் தோன்றுகிறது என்று தெரிந்து அது மனித உருவம் அன்று என நாம் விடை கூறுகிறோம். இங்கே, அன்று என்ற அன்மைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அந்த அன்மைச் சொல் மனித உருவம் என்ற பொருளை மறுத்து அதனோடு ஒத்த தன்மையை உடைய மரக்கட்டை யாகிய வேறொரு பொருள் இருப்பதை உடன்படுகிறது.
எனவே, இன்மை ஒரு பொருளின் இல்லாமையை மட்டுமே உணர்த்தும். அன்மை, அதனோடு ஒருவகையால் ஒத்த மற்றொரு பொருள் உண்டு என்பதை உணர்த்தும். இவ்வாறு இன்மையும் அன்மையும் பொருள் உணர்த்தும் முறையில்
வேறுபாடு உடையனவாம்.
இந்த வேறுபாடு தெரியாத காரணத்தால் உலக வழக்கில் இன்மைச் சொல்லையும் அன்மைச் சொல்லையும் ஒரே பொருளில் வழங்குகிறார்கள்.
எதிர்மறையை உணர்த்தும் நகாரம் இன்மை முதலிய மூன்று பொருள்களைத் தரும் என்றீர்கள். அந்த நகாரம் இன்மைப்பொருளைத்தருதல் எவ்வாறு?
ஒரு பொருளின் இருப்பினை மறுப்பது இன்மை, இறைவன் அமலன்' என்ற எடுத்துக்காட்டில் ந+ மலன் என்பது முன்னர் காட்டிய விதிப்படி நகாரத்தில் உள்ள ந் என்ற மெய் கெட்டு அ என நின்று அமலன் என்றாயிற்று.
மலன் என்பதற்கு மலத்தோடு கூடியவன் என்பது பொருள். அதனோடு நகாரம் சேர்ந்து மலம் இல்லாதவன் என இன்மைப்
6.2
O

2009 விரோதி மார்கழி 01
60.
61.
62.
பொருளைத் தந்து, மலம் என்ற பொருளின் இருப்பையே மறுத்தது.
நகாரம் அன்மைப்பொருளைத் தருதல் எவ்வாறு?
பிராமணன் என்ற பெயர்மேல் நகாரம் வரும்பொழுது, ந + பிராமணன் என்பது அப்பிராமணன் என்று ஆகும்.
பிறப்பால் பிராமணனாய் இருந்தும் பிராமணனுக்கு உரிய ஒழுக்கத்தைக் கொள்ளாதவன் அப்பிராமணன் எனப்
படுவான்.
அப் பிராமணன்' என்பதில் நகாரம் அன்மைப் பொருளைத் தந்து நிற்கிறது. அன்மையாவது சிறிது மறுத்துச் சிறிது உடன்படுவது என்று கூறினோம். இங்கே, இவன் பிறப்பால் பிராமணன் என்பதை உடன்பட்டுத் தன்மையாற் பிராமணன் அல்லன் என மறுப்பதால் நகாரம் அன்மைப்பொருளைத் தந்து நிற்கிறது என்பது எளிதில் விளங்கும்.
நகாரம் மறுதலைப் பொருளைத் தருதல் எவ்வாறு?
நகாரம் சில இடங்களில் வருமொழிப் பொருளுக்கு எதிரான மறுதலையான பொருளைத் தரும்.
காட்டாக, நகாரம் தர்மம் என்னும் வருமொழியோடு சேரும்பொழுது ந + தர்மம் - அதர்மம் என்று ஆகும். தர்மம் என்பது புண்ணியச் செயல் ஆதலால் அதர்மம் என்பது புண்ணியத்திற்கு மறுதலையான பாவச் செயலை உணர்த்துகிறது. இவ்வாறு நகாரம் இங்கே மறுதலைப் பொருளைத் தந்து நிற்றல் காணலாம்.
இனி, அத்துவிதம் என்ற சொல்லுக்கு வருவோம். அதிலுள்ள நகாரம் இன்மை, அன்மை, மறுதலை என்ற மூன்று வகையான எதிர்மறைப் பொருள் களைத் தரும் என்றீர்கள். அவ்வாறாயின், இன்மை முதலியவற்றுள் ஒவ்வொரு பொருளையே கொண்டு அத்துவிதம் என்ற சொல்லுக்கு மூன்று வகையான வெவ்வேறு விளக்கங்களைத் தரலாம் என்று ஏற்படுகிறது அன்றோ? அம்முறையில், அந்த நகாரத் திற்கு இன்மைப் பொருள் கொண்டு அத்துவிதம் என்பதற்கு விளக்கம் கொடுத்தவர்கள் யாவர்?
தத்துவவுலகில் நன்கு அறியப்பட்டவர்கள் மூவர். அவர்கள் சங்கரர், இராமாநுசர், ஆனந்த தீர்த்தர் என்ற மத்துவர் ஆகியோர். அவருள், ஆனந்த தீர்த்தர் ஒருவர் தவிர மற்ற இருவரும் நகாரத்திற்கு இன்மைப்பொருளே கொண்டனர்.
அபேத சம்பந்தம்
63.
இன்மைப்பொருள் கொண்ட சங்கரர் இறை வனுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள சம்பந் தத்தை எவ்வாறு விளக்குகிறார்?
உப நிடதங்களில் வரும் பிரமம் அத்துவிதம்' என்னும்
தொடருக்குப் பிரமம் ஒன்று மட்டுமே உள்ளது. பிரமம் தவிர ->

Page 10
இந்துசாதனம் 6.
காரை சிவனாலயத்தி - |
அழகு கொழிக்கும் ஆனந்த நடராஜரின் அற்புதத் திருவுருவம் 1908 ஆம் ஆண்டிலே ஈழத்துச் சிதம்பரத்திலே பிரதிஷ்டைசெய்யப் பெற்றது. சென்ற 2008ஆம் ஆண்டில் சதாபிஷேகம் நடைபெற்றது. அதன் சிறப்பைக் கூறுகின்றது கவிதை.
9 பக்கத் தொடர்ச்சி.
இரண்டாவது பொருள் இல்லை என்று விளக்கம் தந்தவர்
சங்கரர்.
பிரமத்தைத் தவிர மற்றைய பொருள்கள் யாவும் வெறுந் தோற்றமே. பிரமமே தன்னை உயிராகவும் உடலாகவும் உலகமாகவும் தோற்றுவித்துக்கொண்டு அவற்றுள் இடம்பெற்றிருக்கும். அவித்தை (மாயை) யின் காரணமாக அந்தப் பிரமம் தன்னை உயிராகவே கருதி நிற்கும். விவேக ஞானம் தோன்றிய காலத்தில் அவித்தை நீங்கி அது தன்னைப் பிரமம் என்று உணரும். இது சங்கரரது கொள்கையின் சாரமாகும்.
இக் கொள்கையின்படி, கடவுளும் உயிரும் பொருளால் வேறல்ல; ஒன்றே. சில காரணங்களால் அவை வேறுபோலத் தோன்றுகின்றன. அத் தோற்றம் பொய்யானது. கடவுளும் உயிரும் ஒன்றுஎன்பதே உண்மை.
கடவுளும் உயிர்களும் பொன்னும் அணிகலனும் போல்வன. பொன், அணிகலனாக மாறியபின் அதனைப் பொன் என அறியவிடாமல் மறைத்து அவ்வணி கலனை வேறாக எண்ணச் செய்வன அதனிடத்துத் தோற்றுவிக்கப்பட்ட நாம ரூபக் கிரியைகளாகும். நாமம் என்பது பெயர். சங்கிலி,
جمجمع
 

2009 6īBurrá5 Darias ou
ன் அற்புதமுங் கண்டார்
bin -
எண்டிசையிலிருந்துவரு மீசனடியார்கள்
இனியதிரு நடனமிடு மெழிலரசனார்க்கு மண்ணுமுயர் விண்மகிழ மறையவர்கள் புரிந்த
மங்கலச்சங் கபிஷேக மாட்சியினைக் கண்டார் கண்களுற்ற பாக்கியத்தை எண்ணிக் களி கொண்டார்
காரைசிவனாலயத்தி னற்புதமுங் கண்டார் திண்ணபுரத்தாடலிறைத் திருப் பொலிவினுள்ளே
தில்லைநடராஜனையுங் கண்டுமகிழ்வுற்றார்.
※ தாயெனத்தந்தையெனவித் தாரணியைக் காத்தே தனி யீழச் சிதம்பரத்தி லாடுஞ்சிவனார்க்கே தூயவுளத் தோடுபல சூரணமுங் கலந்து
தோத்திரமுந் திருமுறையும் பாடித்துதி செய்து ஆயிரத் தெட்டுக்கலச சங்கினிற்கங்கையால்
ஆதிசைவ ராற்றியநல் லபிஷேகப் பொழிவாம் துயமுழுக் கினைப் பார்த்த கண் ஒளிருங் கண்ணே சுந்தரநட் டம்முகந்த கண்ஒளிருங் கண்ணே.
வளையல், மோதிரம் என்றாற் போல்வன பெயர்கள். ரூபம் என்பது வடிவம். அணிகலனிற் காணப்படும் வளைவு, நீட்சி முதலியனவே வடிவமாகும். கிரியை என்பது தொழில். அவ்வணிகலன் உடலுறுப்புகளிற் பொருந்தி அழகைத் தோற்றுவித்தலே தொழில் ஆகும்.
பொன்னே அணிகலன் என்பது தோன்றாதபடி வேற்று மையைச் செய்வன இந்த நாம ரூபக் கிரியைகளேயாம். விவேக உணர்வால் இதனை உணர்ந்து இந்த நாம ரூபக் கிரியைகளைத் தள்ளி நோக்கினால் அணிகலன் பொன்னே யன்றி வேறல்ல;ஒன்று என்னும் உண்மைதோன்றும்.
அதுபோல உயிர்களும் உலகமும் ஆகிய எல்லாம் பிரமமே என்பதை அறிய விடாமல் மறைத்து வேறாக எண்ணச் செய்வன மாயையால் தோற்றுவிக்கப்பட்ட நாம ரூபக் கிரியைகளேயாகும். விவேக ஞானத்தால் அவற்றை நீக்கி நோக்கினால் எல்லாம் பிரமமேயன்றி வேறல்ல என்னும்
உணர்வு தோன்றும்.
இவ்வாறு இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள சம்பந்தம், பொன்னும் அணிகலனும்போல அபேத சம்பந்தம் என்றார் சங்கரர். 人

Page 11
இந்துசாதனம் 6.
tfIDLIh glth II
கலாநிதி மனோன்
ஆடை பாதி ஆள் பாதி என ஒரு முதுமொழி எம்மிடையே வழக்கில் உள்ளது. ஒருவருடைய தோற்றத்தையும் குண வியல்பையும் அவர் அணியும்ஆடை வெளிப்படுத்தி நிற்கும். எமது சமய வாழ்வியலில் ஆடை ஒரு பண்பாட்டு அடையாளமாக உள்ளது. நாம் வழிபடும் தெய்வங்களுக்குச் சாற்றப்படும் ஆடைகள் இதற்குச் சான்றாக உள்ளன.
மனிதன் தொடக்க நிலையில் வெப்பதட்ப நிலைகளி லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆடையை அணிய முற்பட்டான். ஆனால் அது பின்னர் மானம் காக்கும் கவசமாகக் கருதப்பட்டது. பல்வேறு இனக்குழுக்களாக மனித வாழ்வியல் வளர்ச்சியடைந்தபோது அந்தந்த இனங்களை அடையாளம் காட்டும் சின்னமாக மாறியது. இப்போது அழகை மிகைப்படுத்தும் ஒப்பனையாகிவிட்டது.
இறையுருவங்களின் ஆடை பண்பாட்டுச் சின்னமாகவும் காலப்போக்கில் ஏற்பட்ட கைவினை மாட்சியை ஆவணப்படுத்து வதற்காகவும் அமைந்துள்ளது. சிற்பங்களிலும் ஒவியங்களிலும் ஆடையின் வகைப்பாடும் அதன் மாற்றங்களும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சமயவாழ்வியலில் ஒருமரபான ஆடை அணியும் வழக்கமும் தோன்றியது.
பரிபாடல் என்னும் பண்டைத் தமிழ் இலக்கியம் குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனுடைய ஆடைப்புனைவுகளையும் முல்லைநிலத் தெய்வமான திருமாலின் ஆடைப்புனைவுகள் பற்றிய குறிப்புகளையும் தருகிறது. முருகனுக்குச் செவ்வாடை சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. திருமாலுக்குப் பொன்னிறமான பீதாம்பரம் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. கரிய மேனியோடு மாறுபட்ட பொன்னிற ஆடை திருமாலின் மேனியழகிற்கு மேலும் அழ கூட்டியது.
"மாமெய்யொடுமுரணிய உடுக்கை என்ற தொடர் இதற்குச் சான்றாகவுள்ளது. (பரிபாடல்4:8)
வழிபாட்டிற்குச் செல்லும் பெண்கள் நல்ல துகில்களையே அணிந்து சென்றதாகச் செவ்வேள் பற்றிய பாடலில் (19) சிறப்பான குறிப்பொன்று காணப்படுகின்றது.
திருமுருகாற்றுப்படையில் முருகனுடைய ஆடை கோபத்தன்ன தோயாப்பூந்துகில்' எனப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திரகோபத்தையொத்த (தற்காலத்தில் கம்பளிப்பூச்சியென அழைக்கப்படுகிறது) நிறம் பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத் தொழிலினையுடையதுகில் என உரையாசிரியர் கூறியுள்ளார்.
தேவாரப் பாடல்களில் தெய்வங்களின் ஆடைக்கோலம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. சிவனுடைய ஆடைக்கோலம் பற்றிச் சம்பந்தர் பாடும்போது உரிந்த கூறை உருவம்' என்று குறிப்பிட்டுள்ளார். சுந்தரர் புலித்தோலை அரைக் கசைத்தவனே என்று பாடியுள்ளார். நாவுக்கரசர் பாடும்போது "உரித்தவுடையார் துவரால் உடம்பை மூடியவர்" என்று பாடி
 

2OO9. விரோதி மார்கழி 01
வாழ்வியல் - 12
மணி சண்முகதாஸ்
யுள்ளார். சிவனுடைய உடுக்ை ப் புலித்தோல் குறிப்பிடப் படுகிறது. இது தொடக்ககால “மனிதனுடைய ஆடையணியும் பழக்கத்தைச் சுட்டி நிற்கிறது. பார்வதியின் ஆடையைப் பற்றிய குறிப்பை நாவுக்கரசர் ‘பூந்துகிலாள்’ என்ற தொடரால் குறிப்பிட்டார். இறைவியின் ஆடைக்கும் இறைவன் ஆடைக்கு மிடையே உள்ள வேறுபாடு இதன்மூலம் தெளிவாகப் புலப் படுகின்றது. நாவுக்கரசர் சிவன் யானையின் தோல் போர்த்தவர் என்ற குறிப்பையும் திருவதிகை வீரட்டானப் பதிகத்திலே தந்துள்ளார். வேறு சில பாடல்களில் சிவனுடைய ஆடையாகச் செந்துவராடையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஆடை பற்றிய குறிப்புக்களை நோக்கும்போது ஆடை அணியும் நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு வேறுபாடு பேணப்பட்டதை அறிய முடிகின்றது. ஆண்களின் ஆடை பீதாம்பரம் எனவும் துகில் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆடை துகில் என அழைக்கப்பட்டுள்ளது. தோலாடை ஆண்களுக்கேயுரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பராமாயணத்தில் சீரைசுற்றிச் சீதை பின்செல' என ஒர் அடி வந்துள்ளது. சீரை என்ற சொல் பின்னர் சேலை என மருவி வழங்கப்பட்டது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வண்ணப் பொற்சேலைஎன வரும் தொடர் இதற்குச் சான்றாகும்.
வழிபாட்டிடங்களுக்குச் செல்லும்போது மரபான ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை பரிபாடல் பாடல்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிறப்பாகப் பெண்கள் வழிபாட்டிடங்களுக்குச் செல்லும்போது மரபான ஆடைகளை அணிந்து சென்றனர். அவர்களால் பண்பாடு பேணப்பட்டது. பிற்காலத்தில் பிற சமயச் செல்வாக்கு ஏற்பட்டபோது வழிபாட்டு நிலையில் பண்பாடு பேணவேண்டிய தேவையும் ஏற்பட்டது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற மதங்கள் செல்வாக்குப் பெற்றபோது அவற்றின் பண்பாட்டு ஆடைகளும் சைவசமயத்தில் புகுந்தன. அதனால் வேகமான ஆடைமாற்றம் ஒன்றும் ஏற்பட்டது.
கோவில்களுக்குச் செல்லும்போது அணியும் ஆடை களின் வண்ணமும் முற்காலத்தில் பேணப்பட்டது. மஞ்சள், பச்சை, சிவப்பு, நீலம், வெண்மை என்னும் நிறவாடைகளே பெரும்பாலும் அணியப்பட்டன. துகில் எனக் குறிக்கப்பட்ட நீண்ட ஒற்றாடை வெண்ணிறமானதாக ஆண்களின் ஆடையாக விளங்கியது. அதனைப் பழந்தமிழ் இலக்கியங்கள் அறுவை எனக் குறிப் பிட்டுள்ளன. அவரவர் அளவுக்கேற்ப அறுத்துச் செய்யப்பட்டதால் அப்பெயரைப் பெற்றது. தற்போது வேற்றுமொழிச் சொல்லான வேட்டி’ என அழைக்கப்படுகிறது. எனவே எமது மரபான வாழ்வியலில், சமயம், ஆடை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட் டத்தை எமக்கு ஏற்கெனவே தந்துள்ளது. நாம் அதைவிட்டுப் பிற இனத்தவர் ஆடைகளை எமது வழிபாட்டிடங்களுக்கு அணிந்து செல்வது நம் அடையாளத்தை நாமே அழித்துக்கொள்ளும் செயற்பாடாகும். இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். 人

Page 12
இந்துசாதனம் 6.2
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி வூல மார்கழி மீ" 1ஆம் உ (16.12.2009)
இலங்கையிற் சைவம்.
சிவ வழிபாடு என்பது உலகம் முழுவதிலும் இருந்தது என்று சொல்ல வேண்டுமே தவிர, உலகம் முழுவதிலும் பரவியது என்று சொல்வது பிழை
ஏதோ ஒர் இடத்திலே ஆரம்பித்து, மெல்ல மெல்ல மற்ற எல்லா இடங்களுக்கும் சிவ வழிபாடு பரவியது என்றில்லாமல் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத மிகப் பழங் காலத்திலே, உலகம் முழுவதிலும் சிவ வழிபாடே-சிவ வழிபாடு மட்டுமே - இருந்தது; வேறு எந்த வழிபாடுமே இருக்கவில்லை என்ற விளக்கத்தைத் தரும் மேற்போந்த கருத்தை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் வெளியிட்டவர் ஜெகத்குரு பரீ காஞ்சி காமகோடி பரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யஸ்வாமிகள்.
பன்னிரண்டு வயதிலேயே சங்கர மடத்தின் ஆன்மீகப் பணிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு, உரிய கல்வியும் பயிற்சியும் பெற்றுக் காஞ்சி காமகோடி பீடாதிபதியாக மிக நீண்டகாலம் மகத்தான சேவை செய்தவர்அவர் என்பதையும்
இந்து சமயத்தின் பல்வேறு உட்பிரிவுகளின் புறச் சமயங்களின்- தத்துவங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் சம்பந்தமான தெளிவு, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களுடைய மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய உணர்வு, பன்மொழிப் புலமை, பரந்த மனப்பான்மை போன்றவற்றுடன் அன்பு, பக்தி, அஹிம்சை, இன்சொல், நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றின் அடிப் படையில் எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த அவர் செய்த பூசைகள், பிரார்த்தனைகள், சொற்பொழிவுகள் எல்லாமே உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருந் தன என்பதையும்
சமுதாயத்தின் பல்வேறு துறைகளிற் சிறப்புற்று விளங்கியவர்கள், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், கல்விமான்கள், உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரமுகர்கள், சாதாரண பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் அவரைத் தரிசிப்பதில் - அவரை வணங்கி ஆசீர்வாதம் பெறுவதில்அவருடைய அருளுரைகளைச் செவிமடுப்பதில் - நிறைவையும் நிம்மதியையும் பெற்றார்கள் என்பதையும்--
 

2OO9. விரோதி மார்கழி O
ஒன்று சேர்த்துப் பார்க்கும் எவருக்கும்தான் பின்பற்றும் சமயத்துக்கு இப்படி ஒரு சிறப்பு உண்டு என்று சொல்லிப் பெருமைப்படுவதற்காகவோ
இத்தகைய சிறப்புமிக்க சமயத்தின் பீடாதிபதி என்ற வகையிலே மேலதிகமான முக்கியத்துவத்துக்குத் தான் உரிமையானவன் என்பதை வெளிப்படுத்துவதற்காகவோ -
ஏனைய சமயத்தவர் மத்தியில் மதமாற்ற முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவோ ட
அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதும் எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கக்கூடிய உண்மையைத்தான் அவர் சொன்னார் என்பதும், சைவ உலகம், ஏன் சைவப் பிரதேசங்களாகச் கருங்கிவிட்டது என்பதைச் சைவப் பெருமக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது என்பதும் இலகுவிற் புலனாகாமற் போகா.
வடமேற்கு இந்தியாவில் இந்துநதிப் பள்ளத்தாக்கில் மொகெஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் - மத்திய அமெரிக்காவில், மெக்சிக்கோவில் இடம்பெற்ற அகழ்வாராய்ச் சிகள் பற்றிச் சேர். சி.பி.இராமசாமி ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலுள்ள தகவல்கள் - இந்தோநேஷியாவில் இந்துத் தமிழர்கள் என்ற தலைப்பில் "இந்து சாதனம்" இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைத் தொடர் -இந்திய இலங்கை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மேலைத்தேய ஆய்வாளர்களும் வெளியிட்டுள்ள கருத்துககள் ஆகிய எல்லாமே சிவ வழிபாட்டின் உலக வியாபகத்தை உறுதிப் படுத்தியுள்ளன.
"உலகம்" என்பதில் நமது தாய் நாடாகிய இலங்கையும் அடங்குகின்றது. இந்த நாட்டிலும் பெளத்த மதம் வருவதற்கு முன்னர் சிவ வழிபாடே இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. பெளத்தத்தைத் தழுவிய தேவநம்பியதீசனுக்கு முன்னர் ஆண்ட அரசர்களுட் பலரின் பெயருடன் "சிவன்" என்ற பெயரும் சேர்ந்திருந்தது என்பதற்கு "மஹாவம்ச"மே சான்று பகர்கின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங் களாகக் கருதப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அப்பாலும் சிவாலயங்கள் பல இருந்ததை அகழ்வாராய்ச்சிகள் தெளிவாக்கியுள்ளன.
எனினும், ஆட்சியதிகாரத்தில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர்களுட் பெரும்பாலானோர் - பெளத்த சிங்கள மன்னர்கள், போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கிலேய அதிகாரிகள், சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் - மதம் மாறுவோருக்கும் மாற்றப்படுவோருக்கும் விசேட சலுகை களையும் சன்மானங்களையும் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், ஆறுமுக நாவலரைப் போன்று, தீர்க்க தரிசனத்துடனும், அர்ப்பணிப்புடனும் திட்டமிட்ட வகையிலும் நேர்மையாகவும் சைவசமய வளர்ச்சிக்காக உழைக்கக்கூடியவர்கள் அவருக்குப் பின்னர் தோன்றாத படியாலும், சைவ சமயம் "நாளொரு குடும்பத்தையும், பொழுதொரு மனிதனையும்" இழக்கும் நிலைக்குப் பல காலமாகவே உட்பட்டு வருகின்றது. இப்போது நடைபெறும் சில செயற்பாடுகளைப் பார்க்கும்போது, "இலங்கையிற் சில பிரதேசங்களில் ஒரு காலத்திலே சைவ சமயம் இருந்தது" என இறந்த கால வினைமுற்றை உபயோகிக்கவேண்டிய ஓர் எதிர்காலம் அண்மித்துவிடுமோ என்ற சந்தேகம் வலுப்பட்டுக் கொண்டிருப்பதாற்றான் காமகோடி பீடாதிபதியின் கருத்தை நினைவூட்டமுடிவுசெய்தோம்.
சைவத் தமிழ் மக்கள் சிந்திப்பார்கள் - செயற்படுவார்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். 人
2

Page 13
இந்துசாதனம் 16.2
தமிழ் மாணவரும் இந்துசமயப்பாடமும்
தமிழ்ப் பிள்ளைகளிற் சிலர் இந்தோநேசிய மொழிமூலமே இந்து சமயப் பாடங் கற்கின்றனர். பாலி இந்துக்கள் கற்கும் பாடத்திட்டமே இவர்களுக்கும் உரியதாகும். பாலி இந்துக்கள் கற்கும் சமய பாடத்தில் வழிபாட்டு முறையோ பக்தியோ காணப்படுவதில்லை. இந்து சமய தத்துவங்களுக்கே முதலிடங் கொடுக்கின்றனர். பாமர மக்களுக்கேற்ற பாடங்களோ பாடத் திட்டங்களோ அவர்களிடமில்லை.
சுகர்னோ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பாலித்தீவிலிருந்து நன்கு கற்றபத்துப் பட்டதாரிகளைப் பொறுக்கி எடுத்து, காசிச் சர்வகலாசாலைக்கு அனுப்பிவைத்தார். பத்துப் பேரும் வேதாந்தத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள். பகவத் கீதை, வேதங்கள், உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் என்பவற்றை நன்கு கற்று, பரீட்சை எழுதி, பட்டப்படிப்பில் நன்கு தேறியவர்கள். அந்தத் தரத்திலுள்ள பாடப் புத்தகங்களே அவர்களுடைய பரீட்சைக்கும் நியமிக்கப்பட்டவையாகும்.
வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்களை நன்கு கற்ற
மேதாவிகளிடமே அவர்கள் கற்றமையினால் அந்த மேல் மட்டத்திலேயே அவர்களுடைய பாடத்திட்டங்களும் அமைந்தன. காசிச் சர்வகலாசாலையிற் படித்துப்பட்டம்பெற்ற பத்துப்பேரும் ஊர் திரும்பியபின் பகவத்கீதைபோன்ற உயர் தத்துவ நூல்களை இந்தோநேசிய மொழியில் மொழி பெயர்த்தனர். அவையே பாடத் திட்டங்களிலும் அமைந்தன. கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புகள் பயன்படவில்லை.
தமிழரிடம் ஒரு சிறந்த பண்பாடு உள்ளது. தாம் சென்று குடியேறிய தேசங்களில் உள்ள மக்களோடு இரண்டறக் கலந்துவிடுகின்றார்கள். அதேபோல் தம் மத்தியில் வாழ்ந்துவரும் அந்நியர்களையும் அரவணைத்து அவர்களையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். இந்த உயர் தனிப்பண்பாடுதான் அவர்களைத் தாய்மொழியை மறக்கச் செய்துள்ளது. இதனால் வருங் கேட்டினை அவர்கள் உணரவில்லை. தாய்மொழியாந் தமிழ்மொழி தெரியாதவன் தமிழனாக வாழமுடியாது. தமிழ்மொழி இல்லையேல் மதமும் இல்லை; மதம் இல்லையேல் ஒன்றும் இல்லையாகும்.
மேடான் நகரிலே வாழும் தமிழர்களிடையே சமய வேறுபாடு இருக்கலாம்; ஆனால் சாதிவேறுபாடு இல்லை என்றே கூற வேண்டும். சாதிக்குரிய பெயர்களாகிய முதலியார், பிள்ளை,
 

2009 விரோதி மார்கழி 01
சேர்வை, கோனார், ஐயர், சர்மா போன்ற பெயர்களை நீக்கியதோடு உயர்வு தாழ்வு பார்க்காமலேயே திருமணங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கு வாழும் இருபத்தையாயிரம் தமிழர்களும் திருமணத்தால் ஒன்றாகிவிட்டனர். ஏதோ ஒரு வழியிற் சொந்தக்காரராகியும் விட்டனர். மிகச் சிறுபான்மையின ராகிய தமிழ் மக்கள் மற்றைய சமூகத்தினரின் நன்மதிப்பைப்பெற்று வாழ்வதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே சாதி வேறுபாடில் லாமையாகும். இதேநிலை ஈழத்திலும் தமிழகத்திலும் புரட்சிகரமாக ஏற்படவேண்டும். மகாத்மாகாந்தி அடிகள் இதற்காகவே தமது உயிரைத் தியாகம் செய்து முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனால் எம்மை விட்டுச் சாதிக்கொடுமைகள் ஒழியவில்லை; இனப் பூசல்களும் நீங்கவில்லை. சாதிப் பாகுபாடுகள் நீங்கும் வேகம் போதியதாக இல்லை என்றே கூறவேண்டும். சூழலின் தாக்கம் அடைந்த வேகத்தோடு ஒப்பிடும்போது இது மிக மந்த நிலையிலேயே உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
"அங்கமெலாங்குறைந்தழுகு தொழுநோயராகி ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கலத்தார்க்கன்பராகில் அவர்கண்டீர்தாம்வணங்குங்கடவுளாரே"
இவையெல்லாம் மேடைப் பேச்சுகளாகி விட்டன; நடைமுறையில் இல்லை. பேச்சுக்கும் செயலுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகிவிட்டது.
புலால் உண்பவன் புலையன், இது காரணப் பெயர். இதற்கு விளக்கங்கொடுத்தாலே சிலரால் அதனைச் சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.
மலாக்காச்செட்டியார்கள்
மலேசியாவில் மலாக்கா என்ற பகுதியில் வாழ்ந்துவந்த வணிகச் செட்டியார்கள், மலாக்காச் செட்டியார்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இன்றும் அவர்கள் அப்பெயராலேயே அழைக்கப்பட்டாலும், இந்துக்களாயிருந்து இந்துசமயமுறைப்படி வழிபாடுகள் ஆற்றினாலும், ஒரு தமிழ்ச் சொல்தானும் வாசித்து அறியமுடியாத நிலைக்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். தேவாரங்கள் மலாய்மொழியில் எழுதிப்பாடஞ்செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். பரம்பரையாக வந்த ஒருசில பண்பாடுகளைக் கைவிடாது காப்பாற்றி வருகின்றார்கள். எப்படி இருந்தாலும் தாய்மொழியை மறக்கும் நிலைக்கு வரும்போதுதமிழ்ப்பண்பாட்டையும் படிப்படியாக மறக்கும் நிலை வந்துவிடும். ஒரு மலாக்காச் செட்டியார் வீட்டில் நான்கு தலைமுறையினரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மணிமேகலையின் மகள் அபிராமி. அபிராமியின் மகள் ஜானகி, ஜானகியின் மகள் புஷ்பம் இப்பெயர்களைக் குடும்பங்களிலே காணமுடிந்தாலும் அவை கால வெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என்று சொல்வதற்கில்லை.
தமிழ்ப் பெயர்கள் உச்சரிப்பில் மலாய் மொழியின் உருவத்தை அடைந்துவிட்டன. தமிழ்ப்பெயர்கள் வைக்கப்பட்டாலும் உச்சரிப்புக்களிற் பலவித மாற்றங்கள். காரணம் தமிழ் உச்சரிப்புத் தெரியாமையாகும். வீட்டில் தமிழில் பேசும் பழக்கம் இல்லாதபடி ->

Page 14
இந்துசாதனம் 62
தமிழ்ச் சொற்களின் உச்சரிப்பின் உருவத்தை அவர்களால் உணர முடிவதில்லை. பதிவுப் பெயர் ஒன்றாகும். கூப்பிடுகின்ற பெயர் இன்னொன்றாகும். லெச்சி என்ற பெயர் இலட்சுமணன் என்ற பெயரின் திரிபாகும். முத்தையா என்று உச்சரிக்கத் தெரியாது; முத்தியா என்றே உச்சரிப்பார்கள். வேலுப்பிள்ளை என்ற பெயரை வேப்பிலை என்றே உச்சரிப்பார்கள். திருத்தினாலும் அவர்கள் நாவு திருந்துவதில்லை. இந்திராதேவி என்ற பெயர் இண்டாதேவி என்றே உச்சரிப்பார்கள். பிருந்தாதேவி, பிந்தாடேவி ஆகி விடுகின்றார். இப்படி உச்சரிப்புமாற்றங்கள் அநேகம்; அநேகம்.
தமிழ் தெரிந்த, தமிழ் பேசுகின்ற, அதுவும் செந்தமிழ் பேசுகின்ற ஈழத்திலும் தமிழகத்திலும் தூய தெய்வத் தன்மையான பெயர்கள் மறைந்து, சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும், நாவல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. சில தமிழ்க் குழந்தைகளினுடைய பெயர்களை, தமிழ் தெரிந்த தமிழர்களாலேயே உச்சரிக்க முடிவ தில்லை. மொழிமூலம்தான் ஒரு இனம் காப்பாற்றப்படுகிறது. மொழியில் ஈடாட்டம் காணப்பட்டால் இனத்திலும் ஈடாட்டம்
காணப்படும்.
தாய் பேசுகிற மொழி தாய்மொழி, வீட்டிலே எப்பொழுதும் தாய்மொழியிலேயே பேச்சுவழக்கு இருந்துவருமானால், தாய் மொழியை எப்பொழுதுமே மறக்கவேண்டிய சூழ்நிலை உண்டா காது. இன்றும் சில தமிழ்க் குடும்பங்களில் உள்ளவர்கள் வீடுகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதற்காக ஆங்கிலம் தெரிந்த ஆயாமார்களையே வீடுகளில் வைத்திருக்கின்றார்கள். நண்பர் ஒருவருடைய இல்லத்தில் தைப்பொங்கல் பொங்கியிருக்கிறார்கள். பொங்கல் முடிந்து பூசை நடக்கும்போது தந்தையார் மகனைப் பார்த்துத் தேவாரம் பாடுமாறு கேட்டுள்ளார். பையனோ "ட்விங்கிள் ட்விங்கிள் லிற்றில் ஸ்ரார்" என்று பாடியிருக்கின்றான். இதனைக் கேட்ட தந்தையாருக்கு ஒருபக்கம் சிரிப்பு இன்னொரு பக்கம்
அழுகை.
T-J అ_y(N Similuକg flaps
இரண்டாவது உலக இந்து மகாநாடு ஞாபகார்த்த மாக, இலங்கை இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு (அமரர்) மாண்புமிகு தியாகராசா மகேஸ்வரன் அவர் களின் பெருமுயற்சியால் உருவாக்கப் பெற்ற அறப்பணிச்சாலை தேர்முட்டிக் கண்மையில் மங்கள மாகக் காட்சியளிக்கின்றது. திருவாவடுதுறை ஆதீனக் குருமுதல்வர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசார்ய சுவாமிகளால் 2003ஆம் ஆண்டிலேயே இது திறந்து வைக்கப்பட்டது. குருமகா சந்நிதானம் அவர்களால் அமைச்சர் மகேஸ்வரன் அவர்களுக்கு "அறப்பணிச் செல்வர்" என்ற விருதும் வழங்கப் பெற்றது. இந்த மண்டபத்தில் அன்பர்கள் தங்கி நின்று ஈழத்துச் சிதம்பரேஸ்வரனைத் தரிசிக்கலாம். திருவிழாக் காலங்களில் இங்கே அன்னதானம் நடைபெறுகின்றது.
 
 
 

aooә விரோதி மார்கழி0
இத்தகைய பிள்ளை வளர்ப்பினாற் சமயப் பண்பாடே அற்றுப்போகின்றது. தமிழ்மொழி முறையாகக் கற்காமையினால் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடாகிய தருமமும், தமிழ் மொழியின் பண்பாடாகிய பக்தியும் இல்லாமல் போகின்றது.
மலேசியா சிங்கப்பூர், இந்தோநேசியா போன்ற இடங்களில் சில குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பாடசாலை மாணவராக இருக்கும்போதே போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகி விட்டார்கள். இதற்குக் காரணம், வீட்டிலே கடவுள் வழிபாடு இல்லை; குடும்பமே கோயிலுக்குச் செல்வதில்லை. பெரியோர் களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்காத குடும்பம். அப்பாவும் மகனும் ஒரே மேசையில் இருந்து ஒரே போத்தலிலுள்ள பீர், விறண்டி, விஸ்கியை இருவரும் மாற்றி மாற்றி ஊற்றி ஊற்றிக் குடிக்கும் குடும்பம். அதனால் அவர்கள் நன்மை எது? தீமை எது? பாவம் எது? புண்ணியம் எது? என்று தெரியாதுவாழ்கின்றார்கள்.
இந்தோநேசியாவில் கல்விக்கூடங்களிலே சாதாரணமாகக் கல்வி பயிலும் மாணவர்களிடம் புகைக்கும் பழக்கம் அநேகமாக உண்டு. ஆசிரியர்களிற் பெரும்பாலோரும் புகைக்கும் பழக்கம் உடையவர்கள். பெண்களும் சர்வ சாதாரணமாகப் புகைக்கும் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். இதனாற் புகைக்கும் பழக்கம் மரியாதையற்ற பழக்கம் என்பதைப் பலரால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களை ஆசிரியர்களாற் கண்டிக்கவும் முடிவதில்லை.
தாய்மொழியும் சமயமும் தாயினாலேயே பிள்ளைகளுக்கு ஊட்டப்படவேண்டியவை. தாயினாலேயே வீட்டில் வளர்க்கப்பட வேண்டியவை. இதை மறந்த குடும்பங்களிலே மொழிப்பற்று, மொழி வளர்ச்சி, மதப்பற்று. மதவளர்ச்சி, இனப்பற்று, இன வளர்ச்சி, மத அனுட்டானங்கள் என்பவற்றைக் காண முடிவதில்லை.
=== $رQ)26۲۹ھ﴾
9یہ(تصX
யாழ்ப்பாறு
மார்கழியில் யாழ்ப்பாணக் காரைதீவில் மாதம்
முழுவதும் திருவிழா. அங்கு ஈழத்துச் சிதம்பரக்
கோயிலில் பாடும் திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்
பாவையும் தில்லையில் கூத்தப் பெருமானுக்கே
கேட்குமாம். இலங்கை அரசின் தடைகளைத் தாண்டி,
தமிழ் நாட்டில் சிதம்பரத்துக்குப்போக முடியாதவர்கள்
மார்கழியில் ஈழத்துச் சிதம்பரத்தில் கூட்டுவார்கள்.
தில்லைச் சிற்றம்பலம் ஈழத் தமிழகத்தின் நெஞ்சங்
களில் நிறைந்த கோயில்.
-மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Page 15
இந்துசாதனம் 62
FTibu LIITI"põTLIIT
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
தலம்: திருவதிகை வீரட்டானம் பண்: விகால்லி
திருச்சிற்றம்பலம்
வலித்தேன் மனைவாழ்க் கைமகிழ்ந்த தடியேன்
வஞ்சம் மனம்ஒன்றுமிலா மையினால் சலித்தால் ஒருவர் துணையாருமில்லைச்
சங்கவெண் குழைக்கா தடைஎம் பெருமான் கலித்தே என்வயிற் றினகம் படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்ததின்ன அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே. (8)
பதவுரை- அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! அடியேன் - அடியேனாகிய நான், வஞ்சம் - வஞ்சம் பொருந்திய, மனம் ஒன்றுமிலாமையினால் - மனம் ஒரு சிறிதும் இல்லாதால், மனை வாழ்க்கை - இல் வாழ்க்கையில், மகிழ்ந்து - மகிழ்ச்சி அடைந்து, வலித்தேன் - மன உறுதிகொண்டு தருக்கினேன்,
(எனினும்) சலித்தால் - மனம் சலிப்படைந்தால், துணை துணையாவார், யாரும் இல்லை - யாரொருவருமே இல்லை; வெண் - வெள்ளை நிறம் பொருந்திய, சங்கம் குழை
சங்கினாலான குண்டலத்தை அணிந்த, காது உடை - திருச் செவியையுடைய, எம் பெருமான் - தலைவரே, (சூலையானது) என் வயிற்றின் அகம்படியே - என் வயிற்றினுள்ளே, கலித்து - இரைந்து, கலக்கி - குழம்பி, மலக்கிட்டு - முறுக்கி, கவர்ந்து - என் உயிரைக் கொள்ளை கொண்டு, தின்ன - உண்ணலால், அலுத்தேன்-தாங்க முடியாமல் இளைத்தேன்.
பொழிப்புரை வீரட்டானத்தில் இருக்கின்ற பெருமானே வஞ்சக மனம் இல்லாதபடியால், இல்வாழ்க்கையில் மகிழ்ந்து தருக் குடனிருந்தேன். என்றாலும் என் மனம் சலிப்படைந்தால், எனக்குத்
__N)
6"సా@gXత్రలోణాs@gXర్తిహోs@gXశ్రీహోs@gXర్తిహోs@gXఫ్రిహా
O O s இந்துசாதனம் - உள்நாடு தனிப்பிரதி:50/- ஆண்டுச் சந்தா : ரூபா 600/-
வெளிநாடு
Australia (AUS) - 35 Europe - 25 India (Indian Rs) - 500 Malaysia (RM) — 50 Canada (S) - 35 UK (£) - 15 Olher (USS) - 25
Q_y(NXఉఆNXAReNX4ఆNX4ఆNXAR

.2O09 விரோதி மார்கழி O
ஊருனர்ந்து சொல்லுவோம்
துணையாக யாருமே இல்லை, சூலை நோய் என் வயிற்றைக்
குடைந்து முறுக்கி என்னை வருத்துவதால் நான் இளைத்துப் போனேன்.
பொன்போலமிளிர்வதொர்மேனியினிர்
gojir சடையீர் மெலியும் பிறையீர்
வலை பிணியென்றிவற்றை தற் காமல்துரந்துகரந் துமிடீர் ண்போ லிகளும் மையினித் தெளியார்
அடியார் படுவதிதுவே ஆகில் அன்பே யமையும் மதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
பதவுரை: அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! பொன்போல-பொன்னைப் போல, மிளிர்வது-விளங்குவதாகிய, ஓர் மேனியினிர் - ஒப்பற்ற திருமேனியை உடையவரே, மெலியும் - நலிந்து தேய்ந்த, பிறையீர் - பிறையை அணிந்தவரே, துன்புதுன்பமும், கவலை - கவலையும், பிணி - நோயும், என்று இவற்றை - என்று எண்ணப்பட்ட இவற்றை, நணுகாமல் என்னைச் சேராமல், துரந்து - அகற்றி, கரந்து மிடீர்ஒழித்தீருமில்லை, அடியார்-தேவரீருடைய அடியவர்கள், படுவது இதுவே ஆகில் - படுந்துன்பம் இதுவென்றால், என் போலிகள்என் போன்றவர்களாகிய அறிவிலிகள், இனி - இனிமேல், உம்மை உம்மை, தெளியார் - தலைவராகக் கண்டு உறுதி கொள்ளார், (எனினும்), அன்பே- தேவரீரிடத்து செய்யும் அன்பு என்ற ஒன்றையே, அமையும் - நான் செய்வதற்குரியதாய் அமையும்.
பொழிப்புரை வீரட்டானத்தில் இருக்கின்ற பெருமானே, பிறையணிந்த, பொன்போன்ற திருமேனியுடையவரே என்னை வருத்துகின்ற துன்பம், கவலை நோய் போன்றவற்றை நீர் ஒழிக்கவில்லை. உம்முடைய அடியவர்கள் படுவது இப்படியான துன்பமென்றால், என்போன்ற அறிவிலிகள் உம்மைத் தலைவ ராகக் கொள்ள மாட்டார்களே. என்றாலும் உம்மேல் அன்பு வைத்தலே நான் செய்யும் செயலாய் அமையும். 人
9یہ(A
"SX9లోegX9హోseXశ్రీహోs@gXర్తిహోs@gXస్త్రz*"
O O ad சந்தாவிபரம் காசோலைகள்
Saiva Paripalana Sabai
ACCount No. 1090946
Bank of Ceylon, Jaffna Branch.
என்று எழுதப்பெறுதல் வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கெளரவ முகாமையாளர் இந்துசாதனம் இல,66, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்.
ఆNXARఆNXARఆNX*ReNXఉఆ(NX4ఫ్రె<_9

Page 16
இந்துசாதனம் 62
ஆலய வழிபாடு செய்யும் அடியவர்கள் யாவரும் அர்ச்சனை செய்விப்பதிலே ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். தங்களதும், தங்களைச் சார்ந்தவர்களதும் பெயர், நட்சத்திரம் முதலியவற்றைச் சொல்லி இறைவனுக்கு அர்ச்சனை செய்விக்கின்றார்கள். அர்ச்சனை என்பதன் அர்த்தம் என்ன என்பதையோ அல்லது அர்ச்சனை செய்யப்படும்போது அங்கே என்ன சொல்லப்படுகிறது. என்பதையோ புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருந்தாலும்கூட இறைவன்மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள் என்பதனால், அர்ச்சனை செய்வதன்மூலம் இறைவனை மகிழ்விக்கமுடியும், அவனது அருளைப் பெறமுடியும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அர்ச்சனை என்பது ஆலயக்கிரியைகளில் ஓர் அங்கம். அபிஷேகம், அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை, அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, வேதபாராயணம், திருமுறை ஒதுதல், ஆசீர்வாதம் என்று தொடர்கின்ற கிரியைகளின் வரிசையில் அர்ச்சனை இடம்பெறுவதைக் காணலாம்.
இந்த ஒழுங்கில் ஒரு காலத்துக்குரிய பூஜை நிறைவுபெற்றதும் அடியார்களின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. அதுவரை நிகழ்வது பொதுவாக அனைவருக்கும் உரியதாகப் பரார்த்த பூஜையாக அமைகிறது. அடியார்கள் ஒவ்வொருவரதும் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களது பெயரிற் செய்யப் படும் அர்ச்சனை வழிபாட்டை
எங்கள் பெயரால் இறைவனுக்கு "இவர்" என்ன சொல்கிறார்? O5 ,
t
அவர்களுக்கான ஆன்மார்த்த வழிபாடு என்றும் சொல்லலாம். (உண்மையில் ஒருவர் தமது ஆன்மலாபம் கருதிச் செய்கின்ற
சந்தியாவந்தனம், சிவபூஜை முதலியனவே ஆன்மார்த்த பூஜை எனப்படும்).
"அர்ச்" என்ற வடமொழி வினைச்சொல் வணக்கம்,
மரியாதை முதலிய பொருட்களைக் கொண்டது. எனவே, அர்ச்சனை என்பது வணங்குதல் என்ற பொருளைத் தரும். நம என்பதும் வணக்கம் என்ற பொருளை உடையதே. அதனால்தான் அர்ச்சனையின்போது நம என்ற சொல் பயன்படுகின்றது.
இங்கே நாம் முன்னர் பார்த்த கிரியைகளின் அம்சங்க ளான அபிஷேகம் (நீராட்டு) அலங்காரம் முதலியன வெல்லாம் நமக்குப் பிடித்தமானவற்றை அவனுக்குச் செய்கின்ற செயற் பாடுகள்தாம். வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகிய இறைவன் இவற்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை. தாய் தனக்குச் செய்யும் அன்பான செயற்பாடுகளைத் தானும் தன் தாய்க்குச் செய்துபார்க்க விரும்புகின்ற குழந்தை போன்ற மனநிலையில் அவனது குழந்தைகளான அடியார்களும் அவனுக்கு இவற்றைச் செய்துபார்த்து மகிழ்கின்றனர்.
அவ்வகையில் அவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற முறைதான் அர்ச்சனை என்பதாகும். இக்கிரியையில் இரண்டு
 
 
 

2009 விரோதி மார்கழி O
அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று இறைவனைப் பல பெயர்கள் சொல்லி அழைத்து அவனுக்கு வணக்கம் சொல்வது. மற்றது அவனது பாதங்களில் மலர் தூவி மகிழ்விப்பது. இவ்விரண்டும் ஒருசேர நிகழ்கின்றன.
குழந்தையைத் தாய், பாசத்தின் மிகுதியாற்பல பெயர்கள் சொல்லி அழைத்து மகிழ்வது கண்கூடு. இதேபோன்ற ஒரு பாவனை காதலர்களுக்கிடையிலும் உண்டு. "கண்ணே, மணியே, கற்கண்டே, கட்டிக் கரும்பே" என்றெல்லாம் இந்த அழைப்பு இருக்கும். இதையும் கடந்து செல்லமாக அழைக்கும் அழைப்பிற் கிண்டல் வார்த்தைகள், திட்டும் சொற்கள்கூட இடம்பெறுவதை அனுபவித்திருப்பார்கள், பலர். ஆனால், இவை யாவற்றுக்கும் அடிப்படை அன்பு ஒன்றே. அன்போடு இவர் அழைக்கிறார். அழைக்கப்படுபவர் அந்த அன்பில் திழைத்து மகிழ்கிறார். இதே செயற்பாடுதான் அர்ச்சனையிலும் காணப்படுகிறது.
இங்கு உச்சரிக்கப்படும் இறைவனின் பெயர்கள் சில அவனது தோற்றப் பொலிவுகளையும் அவனது திருக்கரங்கள் தாங்குகின்ற ஆயுதங்கள், ஆடை அணிகலன்கள் முதலிய வற்றையும் வர்ணித்துப் போற்றுபவையாக அமையும். வேறு சில, அவனது வீரதீரச் செயல்கள், வெற்றிகள் முதலியவற்றை வியந்து போற்றுபவையாக அமையும். இன்னும் சில, அவனது அருட் சிறப்புக்களையும் கருணையையும் புகழ்ந்து, நமது தேவைகளை வேண்டிநிற்பவையாக அமையும். இவ்வாறான நாமங்கள் நாலாம்
வேற்றுமையில் அமைந்து
வித்யாபூஷணம், பிரம்மழுநீ ப. சிவானந்தசர்மா الااكلله
B.A. (Hons.) (GBSITŮLmruiu áf6mh)
(கணேச - கணேசாய-கணபதிக்கு, தேவீ-தேவ்யை - தேவிக்கு, சிவ-சிவாய - சிவனுக்கு,கேது - கேதவே - கேதுவுக்கு, கணபதிகணபதயே - கணபதிக்கு என்றிவ்வாறு.) அதைத் தொடர்ந்து நமஹ (வணக்கம்) என்ற சொல்லோடு சேர்ந்து "இன்னாருக்கு வணக்கம்" என்றபொருளில் நிறைவுறும்.
இறைவனைப் பலவிதமான பெயர்களால் அர்ச்சகர் அழைக்கிறார். அந்த அழைப்புடன் சேர்த்து ஒவ்வொரு அழைப்புக்கு ஒவ்வொரு பூவாக மலர் சொரிவதும் நிகழ்கிறது. இரண்டு செயற்பாடுகளும் இறைவனை மகிழ்விப்பதனால் அவன் நமக்கு அருள் செய்கிறான் என்பது நமது நம்பிக்கை.
பெளராணிக மரபில்வந்த பாரம்பரியமான இந்த நம்பிக்கை ஒருபுறம் இருக்க, தத்துவார்த்தமாக இதனை நோக்குவதும் பயன்தரும். இறைசிந்தனை என்பது மன ஒருமைப்பாடு. சீவான்மா தன்னை உணர்ந்து பரமான்மா லயிப்பில் திழைப்பதே முத்தியின்பம். இதுவே சமயத்தின் நோக்கம். அதற்கான பயிற்சியே சமய வழிபாடும் கிரியைகளும். இங்கே அர்ச்சனை நிகழுகின்றபோது அர்ச்சகரின் கைகள் மலர்களை இறைபதத்தில் தூவுகின்றது. வாய் அர்ச்சனை நாமங்களை உச்சரிக்கின்றது. அந்த நாமங்களாற் சுட்டப்படும் இறைவனின் திருவுருவப் பொலிவு. திருவருட் செயற்பாடு, வீரதீரச் செயல்கள்
Na Y

Page 17
இந்துசாதனம் 6.
முதலியவற்றில் அவரது மனம் ஈடுபடுகின்றது.மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களும் இறைசிந்தையில் லயிக்கின்றன. ஒருமைப்பாடு சித்திக்கின்றது.
அதுமட்டுமல்ல, அந்த அர்ச்சனை யாருக்காக நிகழ் கின்றதோ, அந்த அடியவரும் இவ்வித அனுபவத்தைப் பெறுகிறார். சில வேளைகளில் அர்ச்சகர் ஒருவர் நாமங்களைச் சொல்லிக் கொண்டிருக்க இன்னோர் அர்ச்சகர் மலர் சொரிகின்ற சந்தர்ப்பங் களும் உண்டு. பஞ்சமுகார்ச்சனை, ஷண்முகார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, லட்சார்ச்சனை முதலியன நிகழும்போது ஒருவர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்க முறையே ஐந்து ஆறு, ஒன்பது, பத்து முதலிய எண்ணிக்கைகளில் அர்ச்சகர்கள் இறைவனைச் சூழ்ந்துநின்று பூக்களை இறைவனின் பாதங்களிற் போடுவதுண்டு. இதனைப் பெருந்தொகையான பக்தர்கள்கூடி நின்று தரிசித்து மகிழ்வர். இவ்வேளைகளில் மிக அதிகமான அன்பர்களின் உள்ளங்கள் ஒரே சிந்தனையில் ஒருமித்து இலயித்து நின்று ஆன்மீகப் பெருநிதியைப் பெருகச் செய்யும் அற்புதத்தைக் காணலாம். இவ்வகை நிகழ்வுகளில் மலர் சொரிகின்ற சிவாச்சார்யார்களின் உள்ளத்தை மேலும் லயப்படுத்துவதற்காக அவர்கள் மீளவும் அந்த நாமங்களை உச்சரித்துக்கொண்டு மலர் இடுகின்ற வழக்கம் முன்னர் பல ஆலயங்களில் நிகழ்ந்து வந்தது. அது அதிக நேரம் எடுக்கும் என்பதால், அர்ச்சனை நாமங்களை ஒருவர்மட்டும் சொல்ல, அந்தந்தத் தெய்வ மூர்த்தங்களின் பீஜாட்சரங்கள் எனப்படும்மந்திர எழுத்துக்களை மட்டும் (விநாயகர்
ஓம் கம், சுப்பிரமணியர் ஓம் ஸாம் ஸெளம், சிவன் - ஓம் ஹாம் ஹெளம்) ஏனையோர் ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னர் உச்சரிக்கின்றமரபும் உண்டு.
அறிவியல் நோக்கில் இதனை நோக்கினால் மன ஒருமைப்பாடு (Concentration) என்னும் எண்ணக் குவிப்பு இங்கு நிகழ்வதால் ஒரு சக்தி வெளிப்பாடு ஏற்படுகிறது. பலர் இங்கு ஒருமித்த சிந்தனையில் ஈடுபடும்போது எண்ணக் கதிர்வீச்சுக்கள் பல ஒத்த அதிர்வுகளுடன் காணப்படுவதால், பரிவு எனப்படும் உயர்திறன் வெளிப்பாடு ஒன்றை அங்கு எதிர்பார்ப்பது நியாயமாகின்றது.
இனி, இந்த அர்ச்சனைகள் கால நேர வசதிக்கு ஏற்பப்பல எண்ணிக்கைகளைக் கொண்ட நாமங்களாகப் பயன்படுத்தப்படு வதைக் காணலாம். சாதாரணமாகப் பதினாறு நாமங்கள் வரையில் சொல்லப்படும்போது நிறைவான ஓர் அர்ச்சனையாகக் கருதப் படுகிறது. அதற்குமேல் தேவைப்படும்போது பயன்படுத்த வசதியாக 108 நாமங்கள் (அஷ்டோத்தர சத நாமம்), 300 நாமங்கள் (திரிசதி நாமம்), 1000 அல்லது 1008 நாமங்கள் (சஹஸ்ர அல்லது அஷ்டோத்தர சஹஸ்ரநாமம்) என்று இந்த வகையில் ஒவ்வொரு தெய்வ மூர்த்தங்களுக்கும் நாமாவளிகள் (அர்ச்சனைக்குரிய இறைநாமவரிசை)நம்முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
 

2009 விரோதி மார்கழி O
இத்தகைய நாமார்ச்சனை முறைக்கு ஆரம்ப மூலவித் தினை நாம் யஜுர் வேதத்தின் மத்தியிற் காணலாம். சிவபிரானை பூரீருத்ரனாக வணங்கும் அந்தப் பகுதி பூரீருத்ரம் எனப்படும். மிகப் புராதனமான இந்த வேதமந்திரம் ருத்ரனைப் பலவித நாமங்கள் சொல்லித் துதிப்பதால் இப்பகுதிக்குச் சதருத்ரியம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள சத என்ற சொல்லுக்குநூறு என்ற நேர் பொருள் இருப்பினும் இந்த இடத்திற் பல' என்ற பொருளே கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இங்கு நூறுக்கு மேற்பட்ட பெயர்கள் இடம்பெறுகின்றன.
இதையடுத்து அர்ச்சனை பற்றிய சிறப்பான ஒரு கதையைப் புராணங்களிற் காணமுடிகிறது. மஹாவிஷ்ணு சிவபிரானுக்குத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்கிறார். ஆயிரம் தாமரை மலர்களை எண்ணித் தயாராக வைத்துக் கொண்டு சஹஸ்ரநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்கிறார். அவரது பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் ஒரு தாமரை மலரை மறைத்துவிடுகிறார். அர்ச்சனை செய்துகொண்டிருந்த விஷ்ணு கடைசி நாமத்துக்கு மலர் இல்லாமையைக் கண்டு மனம் பதைத்தவராகத் தமது கண்களில் ஒன்றையே (அவர் தாமரைக் கண்ணனல்லவா?) அகழ்ந்தெடுத்து அர்ச்சிக்கிறார். அதனால் மகிழ்ந்த சிவபிரான், அவரது கண்ணை வழங்கியது மட்டுமல்லாமல் அவருக்குச் சக்கராயுதத்தை அன்பளிப்பாக அருளுகிறார். (மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன். திருப்பல்லாண்டு)
அர்ச்சனைக்குரிய சஹஸ்ர நாமங்கள் முதலியவை
பெரும்பாலும் புராணங்களிலேயே காணப்படுகின்றன. (உதாரணமாக பிரம்மாண்ட புராணத்தில் லலிதா சஹஸ்ர நாமாவளி காணப்படுகிறது). அங்கே அவை சுலோக ரூபத்திற் காணப்படும். அதனை அப்படியே பாராயணம் செய்வதும் உண்டு. ஸ்தோத்திர வடிவம் என இதனைக் கூறுவர். நாமங்களாகப் பிரித்து அர்ச்சனை செய்வதும் உண்டு. நாமாவளி (நாம அவளி - நாமங்களின் வரிசை) என இதனைக் கூறுவர்.
உதாரணமாக லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் லலிதா சஹஸ்ரநாமாவளியிலும் சிலவற்றைப்பார்ப்போம்.
ஸ்தோத்திர வடிவம்
பூரீமாதாறுரீமஹாராஜ்ஞ்றுரீமத் சிம்மாசனேஸ்வரீ சிதக்னிகுண்ட சம்பூதா தேவகார்ய சமுத்யதா
இதன் நாமாவளிவடிவம்:
ஒம்பூரீமாத்ரே நமஹ ஒம்பூரீமஹாராஜ்ஞ்யை நமஹ ஒம்பூரீமத் சிம்மாசனேஸ்வர்யை நமஹ ஓம் சிதக்னிகுண்ட சம்பூதாயை நமஹ ஒம்தேவகார்ய சமுத்யதாயை நமஹ
இனி, சில நாமங்களின் பொருளமைதியை நோக்குவோம்.
7

Page 18
இந்துசாதனம்
விநாயகர்
ஓம்சுமுகாய நம:
ஓம் ஏகதந்தாயநம: O
ஓம்கபிலாயநம сын
ஓம்கஜகர்ணாய நம
ஓம்லம்போதராயநம D
ஓம் விகடாயநம
ஓம் விக்னராஜாயநம -
ஓம்கணாதிபாயநம
ஒம்மஹாகணபதயே நம
நாநாவித பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி
முருகன்;
ஓம்ஸ்கந்தாயநமஹ
ஓம்குஹாயநமஹ'
ஒம்ஷண்முகாய நமஹ -
ஒம்பாலநேத்ரசுதாய நமஹ
ஒம்ப்ரபவேநமஹ ஒம்பிங்களாய நமஹ ar
16。I2
ஓம் நல்ல (அழகிய, சாந்தமான) முகமுடையவருக்கு வணக்கம் ஓம் ஒற்றைக் கொம்பருக்கு வணக்கம். ஓம் கபிலநிறமுடையவருக்கு வணக்கம். ஓம் யானைக் காதருக்கு வணக்கம். ஓம் தொங்கிய (பெரிய) வயிறுடையவருக்கு வணக்கம். ஓம் வினோதமானவருக்கு வணக்கம். ஒ ம் விக் கி ன ங் களின் அரசருக்கு வணக்கம். ஒம் கணங்களின் அதிபருக்கு வணக்கம்.
-ஓம் மஹாகணபதிக்கு வணக்கம்.
பலவிதமான பத்திர புஷ்பங் களைச் சமர்ப்பிக்கிறேன்.
ஓம் ஸ்கந்தருக்கு (ஒன்று சேர்க்கப்பட்டவர்) வணக்கம். ஓம் குஹனுக்கு (இதயக் குகை யில் இருப்பவன்) வணக்கம். ஓம் சண்முகருக்கு (ஆறுமுகத் தவர்) வணக்கம். ஓம் நெற்றிக் கண்ணரின் மகனுக்கு வணக்கம். ஒம்பிரபுவுக்கு வணக்கம். ஓம் தீ வடிவான வருக்கு
வணக்கம்.
ஓம் க்ருத்திகாசூனவே நமஹ - ஓம் கார்த்திகை மைந்தருக்கு
ஒம்சிகிவாஹனாயநமஹ
ஓம் த்விஷட்புஜாய நமஹ -
வணக்கம் ஓம் மயில் வாகன ருக்கு வணக்கம் ஓம் பன்னிரு கரத்தருக்கு
வணக்கம்.
ஏலவே, கூறியதுபோல, பல்வேறு வகைப்பட்ட விடயங்கள்
அர்ச்சனை நாமங்களிற் கையாளப்படுவது மொழியறிந்த இலக்கிய
இரசனையாளர்களாற் போற்றிப் படிக்கப்படும் ஒரு விடயமாகும்.
நமது ஆன்மீக நூல்கள் பல தத்துவ உண்மைகளை விளக்குதல்,
பிரார்த்தனைக்குப் பயன்படுதல் என்ற நிலைகளையும் கடந்து,
கவைமிகுந்த இலக்கியங்கள் என்ற நிலையிலும் உள்ளன என்பதை ஆழ்ந்துபடிப்போர் கண்டின்புறுகின்றனர். அந்த அளவுக்கு உவமை, உருவக அணிச் சிறப்புக்கள், சிருங்காரம் முதலிய இரசங்களின்
அழகு, ஓசை நயம் மிகுந்த சொல்லடுக்கு இவையெல்லாம் விரவிக்
காணப்படுகின்றன.
அந்த வகையிலும் சில உதாரணங்களை இங்கு
காணலாம்.
1.

2OO9. விரோதி மார்கழி O
1. கணபதி சஹஸ்ரநாமாவளியிற்சிலநாமங்கள் இதோ.
பிரபஞ்சம் யாவற்றையும் தன்னுள் அடக்கியவராயும்
பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருப்பவராயும் விளங்கும் விநாயக
பரத்துவத்தை விளக்கும் சில நாமங்கள்,
நதீநதபுஜாயநம - நதிகளைப் புயங்களாக உடையவருக்கு
வணக்கம். ஸர்ப்பாங்குளியகாய - பாம்புகளை விரல்களாக உடையவர். தாரகாநகாய - நட்சத்திரங்களை நகங்களாக உடையவர் குசுழிஸ்தயகூடி கந்தர்வ ரக்ஷகின்னரமானுஷாய - வயிற்றினுள்ளே யகூஷர், கந்தர்வர், கின்னரர், ராக்ஷசர், மானுடர் ஆகிய யாவரையும் உள்ளடக் கியிருப்பவர். ப்ருதுவீகடயேநம - பூமியை இடுப்பாக உடையவர்.
சொல்லடுக்கிற்குச் சில உதாரணங்கள் ஸர்ப்பஹாரகடிசூத்ராயநம - பா ம் பி  ைன இ டு ப் பில் ஆபரணமாக உடையவருக்கு
வணக்கம் ஸர்ப்பயஜ்ஞோபவிதவதே - பாம்பினைப் பூணு லாக
அணிந்தவர் ஸர்ப்பகோடீரகடகாய - பாம்பினை க் காப்பாக
அணிந்தவர் ஸர்ப்பக்ரைவேயகாங்கதாய - பாம்பினைக் கழுத்தணியாகக்
கொண்டவர் ஸர்ப்பகக்ஷோதராபந்தாய - பாம்பை உதரபந்தனமாகக்
கொண்டவர். ஸர்ப்பராஜோத்தரீயகாய - பாம்பை உத்தரிய மாக
அணிந்தவர்.
மிக நீண்ட அழகிய வாக்கியமாக அமையும் ஒரே நாமம்
ஐராவதாதிசர்வாசா வாரணாவரணப்ரியாயநம
ஐராவதம் முதலிய எல்லா யானைகளும் ஆவரணமாகச்
சூழ்ந்திருக்க விரும்புபவருக்கு வணக்கம்.
2. லலிதாத்ரிசதிநாமாவளியில் சில நாமங்கள்:
ஹ்ரீங்கார மணிதீபார்ச்சிஷேநம ஹ்ரீங்காரமாகிய மணித்தீபத்தினால் அர்ச்சிக்கப்படுபவளுக்கு வணக்கம்
ஹ்ரீங்காரதருசாரிகாயை ஹ்ரீங்காரமாகிய மரத்திலிருக்கும் மைனாக் குருவி போன்றவள்
ஹ்ரீங்காரபேடகமனயே ஹ்ரீங்காரமாகிய பெட்டகத்திலிருக்கும் இரத்தினம் போன்றவள்
ஹ்ரீங்கார ஆஸ்தானநர்த்தக்யை ஹ்ரீங்காரமாகிய ஆஸ்தானத்திற்குநர்த்தகியானவள் (ஹ்ரீங்காரம் என்பது அப்பிகையின் மந்த்ர அக்ஷரமாகும்).
3. முந் சுப்ரமண்யத்ரிசதிநாமாவளியில் சில நாமங்கள்
சசீமாங்கல்யரக்ஷனாயநம இந்திராணியின் மாங்கல்யத்தைக் காத்தவனுக்கு வணக்கம். (அசுரர்களிடமிருந்து இந்திரனைக் காத்தவன் என்பது பொருள்)
──────མ་མ─────མ་མཁ->>

Page 19
இந்துசாதனம் 6.2
சதகோடி ரவி ப்ரபாயநம நூறுகோடி சூரியர்கள் சேர்ந்த ஒளியை உடையவன்
சசீநாத சதுர்வக்த்ர தேவதைத்யாதிவந்திதாய சசியின் கணவனான இந்திரன், நான்முகன் ஆகிய பிரமன், தேவர்கள்,அசுரர்கள் முதலியோரால் வணங்கப்படுபவன்.
சசீசார்த்திஹராய சசியின் தலைவன் ஆகிய இந்திரனின் துன்பத்தைப் போக்கியவன் (சசீச-சசிஈச, ஆர்த்தி-துன்பம், ஹர-அழித்த)
சங்கபாணி விதிப்யாஞ்ச பார்ஸ்வயோருபசேவிதாய சங்கைக் கையில் ஏந்தியவராகிய விஷ்ணுவாலும் விதி ஆகிய பிரம்மாவினாலும் இருபுறத்திலும் நின்றுசேவிக்கப்படுகின்றவர்
வஜ்ரஹஸ்தசுதா வல்லீவாம தகூவினசேவிதாய வஜ்ராயுதமேந்தியவனாகிய இந்திரனின் புதல்வியாகிய தெய்வயானையினாலும் வள்ளியாலும் முறையே இடதும் வலதுமாகிய இருபுறங்களிலும் நின்றுசேவிக்கப்படுகின்றவர்.
பக்த சாலோக்யசாமீப்ய ரூப மோக்ஷ வர ப்ரதாய பக்தர்களுக்குச் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம் ஆகிய முத்திகளை அருள்பவர்.
பவவைத்யாய-பிறவிப்பிணிக்கு வைத்தியர் பவெளஷதாய-பிறவிப்பிணிக்கு மருந்து பவக்ன- பிறவியை அழிப்பவர் பவாந்தகாரமார்த்தாண்டாய - பிறவியாகிய இருளைப்
போக்கும் சூரியன் பவ சாகர நாவிகா - பிறவியாகிய சமுத்திரத்தைக்
கடக்கும் ஒடம்
இவ்வாறு அர்ச்சனையிற் பயன்படும் நாமங்களைப் பொருளுணர்ந்து சொல்லிப் பக்தியுடன் மலர் சொரிந்து வழிபடும் போது ஏற்படும் ஆனந்த நிறைவிற்கு ஈடு இணை ஏது!
Q_-N
Frf
சரிக்கும் பிழைக்கும் GE ப
சுவாமிக்கு எல்லாஞ்சரி, எப்படிச் செய்தாலும் சுவாமி ஏ அதிகமாக நிலவுதல் கண்கூடு. சுவாமிக்கு எல்லாஞ்சரிதான். ஏ சரி. அன்றி, சரியாய்ச் செய்வது, பிழையாய்ச் செய்வது எல்ே எண்ணுதல் பிழை, சரிக்கு நற்பலன், பிழைக்குத்தீப்பயன்நிச்ச நன்குணர்ந்துள்ளது. சுவாமி எல்லாவற்றையும் ஏற்றுக்கெ விளக்கத்தில் உள்ளது வேறு. பிழையாய்ச் செய்யுங் காரியத்ை செய்யவிட்டு, அதற்குத் தக்கபடி பலன் கொடுப்பது அதன் தர்ம குற்றஞ் சார்வதில்லை. ஏலவே சரி பிழைகளை வேதாகமங் அறிவையுங் கொடுத்திருக்கின்றது. மேலும் பிழையாய் நடப்பத எதுவும் செயல்முறையிற் சீராய் நடப்பதுமில்லை; உகந்த முை கவனம் இவை பற்றிய விளக்கத்தைப் பெறுதலிலும் அவ்வி செலுத்தப்படவேண்டுதல் இயல்பே.

2OO9 விரோதி மார்கழி O
அதனாற்றான் முன்னர் குறிப்பிட்டவாறு பல்வேறு எண்ணிக்கை களில் நாமாவளிகள் அமைந்துள்ளன. இவற்றை வசதிபோல் இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்துகின்றனர். சிவபிரானுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) விநாயகருக்கும் இவ்விதமாக அமைந்து பஞ்சமுக விநாயகர் காணப்படுகின்றார். இவர்களுக்கு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வோர் அர்ச்சகராக நின்று அர்ச்சனை செய்வது பஞ்சமுகார்ச்சனை எனப்படும்.
இவ்வைந்து முகங்களுடன் அதோமுகம் (அல்லது அம்பிகையின் முகம்) சேர்ந்து ஆறுமுகத்தோடு காட்சிதரும் சண்முகப் பெருமானுக்கு ஆறு அந்தணர்கள் நின்று அர்ச்சனை செய்வது சண்முகார்ச்சனை ஆகின்றது.
அம்பிகையை நவசக்தி எனும் ஒன்பது சக்திகளின் வடிவாகப் பாவித்து ஒன்பது அர்ச்சகர்கள் சுற்றிநின்று அர்ச்சிப்பது நவசக்தி அர்ச்சனை ஆகின்றது.
எந்த ஒரு மூர்த்திக்காவது பத்து அர்ச்சகர்கள் ஒரு தடவை சஹஸ்ர நாமத்தினால் அர்ச்சனை செய்யும்போது பத்தாயிரம் தடவை அர்ச்சிக்கப்படுகிறது. இவ்வாறு பத்து நாள் அாச்சித்தால் இலட்சம் அர்ச்சனை ஆகின்றது. இது இலட்சார்ச் சனை எனப்படும். இதனை ஐந்துபேர் இருபது நாட்களில் அர்ச்சிப்பதன்மூலமும் செய்யலாம். ஒரே நாளில் இருபது தடவை ஐந்துபேர் அல்லது பத்துத் தடவை பத்துப் பேர் சஹஸ்ர நாமார்ச்சனை செய்வதன்மூலம் ஏகதின இலட்சார்ச்சனை நடைபெறுகிறது.
இவ்வாறு தொடர்ந்து நூறு நாட்கள் செய்து கோடி அர்ச்சனை நிகழ்த்துவதும் உண்டு.
அர்ச்சனை பாட்டேயாகும் என்று அடியவர் ஒருவர் பாடியிருக்கிறாரல்லவா? ஆண்டவனுக்கு மிகவும் பிடித்தமான இந்த வழிபாட்டை உண்மை அன்போடு உளம் உருகிப் பொருள் உணர்ந்து நிகழ்த்துவோமாக. حلهم
(ఉసౌ~_9
ulu
—
ற்றுக்கொள்ளும் என்றெண்ணிக்கொள்ளும் ஏமாளிப்போக்கு னெனில் அதற்கு விருப்புவெறுப்பில்லை. அவ்வளவுக்கு அது லாவற்றிற்கும் சுவாமி ஒரே மாதிரிப் பலன்கொடுக்கும் என்று யம். இது சுவாமியின் நடுநிலைப்பண்பு. இதைச் சைவஞானம் ாள்ளும் என்றதன் சரியான அர்த்தம் வேறு. நடைமுறை தயும் அது எதிர்நின்று தடுக்காது. அது, அதன் விசேட இயல்பு. ம். இதுவே குறித்த கருத்தின் விளக்கம். இதிலே சுவாமி பேரிற் 5ளிற் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றை உணர்ந்தொழுக ற்குச் சுவாமி பொறுப்பாகாது. தன்னறிவில் விளக்கம் பெறாத றயில் பலன் தருவதுமில்லை. எனவே இன்றைய நமது முதற் ளக்கத்தைச் சைவ சமூகத்தில் எங்கும் பரவச் செய்தலிலும்
- அமரர் மு. கந்தையா, ஏழாலை,

Page 20
இந்துசாதனம் 6.2
முநீலமுறிநீ ஆறுமுகநாவல
6afooofil I
ஈழ நன்னாட்டிலும் தென்னகத்திலும் சைவ நன்னெறியும் தண்டமிழ்மொழியும் ஏற்றம் குன்றி நின்ற காலத்திலே ஆங்கிலமே நாகரிகம், கிறிஸ்தவமே அரசியல் மதம் என மக்கள் மதிமயங்கி நின்ற நேரத்திலே பாதிரிமார் சூழ்ச்சியும் வஞ்சகமும் மக்களைப் பலி கொண்ட நேரத்திலே சைவம், தமிழ் என்ற இரு கண்களிற்கும்
ஒளியேற்றுவதற்குத் தோன்றிய ஞானசூரியனே பூநீலழரீ ஆறுமுக நாவலராவார்.
ஈழநாட்டின் மணிமுடியெனத் திகழும் யாழ்ப்பாணத்தின் நல்லூர்ப் பிரதேசத்திலே, பசுவதைக்கு அஞ்சி ஈழநாடு விட்டு இந்திய நாடு சென்ற ஞானப்பிரகாச சுவாமிகள் மரபிலே கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினருக்கு 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த மண்ணுலகில் காலடி எடுத்த வைத்த இவரது பிள்ளைத் திருநாமம் ஆறுமுகம் என்பதாகும்.
தாயின் மடியில் தவழ்ந்த கடைக்குட்டிப் பிள்ளையான ஆறுமுகத்திற்கு 5 வயதிலே வித்தியாரம்பம் செய்யப்பட்டது. இவர் தனது இளமைக் கல்வியை நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியா யரிடமும். இருபாலை சேனாதிராஜாவிடமும், நல்லூர் சரவண முத்துப் புலவரிடமும் கற்றுத் தமிழ் இலக்கண, இலக்கியத்தில் சிறந்த பாண்டித்தியம் பெற்று விளங்கினார். "வளரும் பயிரை
முளையிலே தெரியும்" என்ற பழமொழிக்கு இணங்க சிறுவயதிலே ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளையுந் தேடிக் கற்றார். இவர் ஆங்கிலக்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலே பெற்றுக்கொண்டார். பின் தனது கல்வித் திறமையால் 1841ஆம் ஆண்டு அக் கல்லூரியில் ஆசிரியப் பணியினைப் பெற்று மாணாக்கர்களுக்குச் சிறந்த கல்வி வழங்கினார்.
பாதிரிமாரின் கிறிஸ்தவ மதமே சிறந்தது என்ற பொய்ப்பிரசாரங்களாலும், பணம், பதவி, பட்டம், கல்வி, கெளரவம் என்பவற்றைப் பெறும் நோக்குடனும் சைவ சமயிகள் பலர் மதம் மாறினர். சிலர் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். இதனைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ளமாட்டாதவரான நாவலர் தன் சமயத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய கல்வியையும் காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு எனக் கருதி 1848ஆம் ஆண்டு மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியைத் துறந்து சமூக சேவகனாக மாறினார்.
இவரின் தன்னிகரில்லாப் பணியினைக் கூறின் முற்றுப்புள்ளிவைக்க முடியுமா? அவ்வளவு சிறந்த சமூக சேவையாளன். சைவமதம் அழிந்து அன்னிய மதமான கிறிஸ்தவ மதம் மேலெழுவதைப் பார்த்து, சைவசமயப் பணி, தன்னைப் பெற்றெடுத்த தாயைப் போலத் தனது தாய்மொழியையும் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்ப்பணி, சமூகப்பணி, இலக்கியப்பணி,
 

O
2OO9. விரோதிமார்கழி0
is consiblfleft Louflabbi
J. öelg
கல்விப்பணி போன்ற அளவிடமுடியாத பல பணிகளைப் புரிந்த மாமனிதன் இவர். சைவ சமயிகளாகிய நாம் மண்ணில் வாழும் மாந்தரின் நன்மைக்காக அவர் ஆற்றிய பணியினை நினைவுகூர வேண்டியது எமது தலையாய கடமையாகும். அந்த வரிசையிலே அவரின் ஈடு இணையில்லாப்பணியை நோக்குவோம்.
முகத்தில் பால்வடியும் சிறு வயதினிலே தன் தந்தையை இழந்து தாயின் நிழலில் வளர்ந்த இவர் 13 வயதினிலே, அழிந்தும், அழிக்கப்பட்டும், வீழ்வதற்கு இனி இடமில்லை எனும் அளவிற்கு வீழ்ந்தும் நின்ற சைவத்தின் நிலை கண்டு சிவனை நினைத்து வெண்பா பாடியமை இவர் சிறு வயது முதலே ஒரு முன்னோடியாக இருந்தமையைப் பறைசாற்றி இருக்கிறது.
அழிவடைந்துகொண்டும், குற்றுயிராயும் இருந்த சைவத்தின் நிலை கண்டு பிரசங்கம் மேற்கொள்ள முடிவெடுத்தார். இவரது முதலாவது பிரசங்கம் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலிலே ஆரம்பித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. இவரது பிரசங்கம் வண்ணார்பண்ணையோடு நின்றுவிடாது திருவாவடுதுறை, திருவண்ணாமலை, மதுரை, சிதம்பரம் என வியாபித்து நின்றது. இவரது நாவன்மையை அறிந்த திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு 1849ஆம் ஆண்டு "நாவலர்" என்றபட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
क्षं
சைவ மாணவர்கள் சைவ ஆசாரத்தோடு சென்று கல்வி
கற்பதற்காக வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியா சாலையையும், கோப்பாய் சைவப்பிரகாச வித்தியாசாலையையும் நிறுவிக் கல்விப் பணிபுரிந்த ஒரு ஒளி விளக்கே இவராவார். அவரது இப்பணி இலங்கையோடு மட்டும் நின்றுவிடாது தென்னிந்தியாவின் சிதம்பரத்திலும் தொடர்ந்தது.
அது மட்டுமல்லாது ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்காக வண்ணார்பண்ணை ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். இப் பாடசாலை நிதி பற்றாக்குறையினால் சிறிது காலத்தில் இடைவிடப்பட்டாலும் அன்று நாவலர் கண்ட கனவு இன்று யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி எனும் பெருவிருட்சமாகக் கிளைபரப்பிக் கல்விஎனும் கனிகொடுத்துவருகின்றது.
செல்களால் அரிக்கப்பட்டும் கிறிஸ்தவர்களால் சிதைக்கப்பட்டுமிருந்த நூல்களை அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கிலே வண்ணார்பண்ணையிலும், சிதம்பரத்திலும் "வித்தியானுபாலன" அச்சியந்திரசாலையை நிறுவி" அவற்றைச் சரியான முறையில் அச்சிட்டு வெளியிட்ட
உன்னத மனிதன் இவர்.
"மனிதன் மனிதனாய் வாழ வேண்டும்" என்பதற்காகப் பல சைவசமய நூல்களை எழுதி வெளியிட்டார். அந்த வகையிலே 1ஆம் 2ஆம் 3ஆம் 4ஆம் பாலபாடம், 1ஆம், 2ஆம் சைவவினாவிடை - G

Page 21
இந்துசாதனம் 6.2
சிவாலய தரிசனவிதி, சிதம்பர மான்மியம், பெரியபுராண, கந்தபுராண, திருவிளையாடற்புராண உரை என்பவற்றினை எழுதி வெளியிட்டு சைவத்திற்கும் தமிழிற்கும், கல்விக்கும், பணிபுரிந்த சிற்பி இவராவார்.
கிறிஸ்தவ மதத்தவர்கள் தம் மதத்திற்கு ஆட் சேர்ப்பதற் காக 19ஆம் நூற்றாண்டிலே பிரசங்கங்கள்மூலமும், நூல்கள் மூலமும் சைவ மதத்தைத் தாழ்த்திப் பேசினர். இதனைக் கண்ணுற்ற நாவலர் பெருமான் அவர்களுக்கு எதிராகப் பல கண்டனங்களையும், சுதேச மத மாற்றிகளுக்கு எதிரான பல கண்டனங்களையும் எழுதி வெளியிட்டார். அப்போது உண்மையை அறிந்த சுதேச மதவாதிகள் நாவலரை ஐந்தாம் - குரவராகவும் அறுபத்துநான்காம் திருத்தொண்டராகவும் ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை.
நாவலர் பெருமான் தனது கருத்துக்களைப் பாமர மக்களும் விளங்கவேண்டும் என்ற நோக்கிலே எளிமையான வசன நடையிலே வெளிவிடுவார். இதனால் "வசனநடை கைவந்த வல்லாளர்"என, சூரிய நாராயண சாஸ்திரியார் அவரைக் குறிப்பிடுகிறார்.
தமிழ் மொழியில் குறியீடு இடும் வழக்கத்தையும் கொண்டு வந்தவரும் இவராவார். ஆம், ஒரு வாக்கியத்திற்குக் குறியீடு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்ததுடன், பல வரைவிலக் கணங்களையும் மக்கள் மனதிலே பதியும் வண்ணம் கூறிய விடிவெள்ளியே இவராவார்.
பல புராண படனங்களைச் செய்து மக்கள் மத்தியில் சைவ பக்தி, வித்துவத் திறமை, சிவபக்தி, என்பவற்றை வளரச்
అ_y(NX
تتسبیحسسسسسس س- - - - - - - - சிதம்பரம் - புண்ண
யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக்களுக்குச் சிதம்பரம் தாய்வீடு என்று பலர் சொல்வார்கள். "கோவில்" எனத் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடப்படும் தில்லைச் சிதம்பரத்துக் குத் திருவெம்பாவைக் காலத்தில் இந்த நாட்டிலிருந்து சென்ற யாத்திரிகர்களின் தொகை முற்காலத்தில் மிகவும் அதிகமாக இருந்தது. பசுவைக் கொல்லும் பாவச் செயலைச் செய்ய விரும்பாமல் இந்த நாட்டிலிருந்து வெளியேறிய ஞானப்பிரகாச சுவாமிகளை வாரி அணைத்துக்கொண்டது சிதம்பரம் திருத்தலம். அங்குள்ள "ஞானப்பிரகாசர் திருக்குளம்" இன்றும் அப்பெரும கனாரை நினைவூட்டிக்கொண்டிருக்கின்றது. நாவலர் பெருமான், தில்லைநடராஜரை அடிக்கடி தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டி ருந்தவர் என்பது பலரறிந்த உண்மை. அவரால் உருவாக்கப்பட்ட "சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலை" இன்றும் கல்விப் பணியையும், சைவப் பணியையும் சிறப்பாகச் செய்து வருகின்றது. சிதம்பரத் திருக்கோயிலுக்குச் சொந்தமான காணிகள் பல யாழ்ப்பாணத்திலுள்ளன. இங்குள்ள சைவப் பெருமக்களாற் தரும சாதனஞ் செய்யப்பட்டவை அவை. இங்கிருந்து அத்திருத் தலத்துக்குச் செல்பவர்கள் தங்கிச் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக யாழ்ப்பாணத்தவர்களாற் கட்டப்பட்ட மடங்களின் தொகை இருபது. அடிக்கடி மாறிய அரசியற் சூழ்நிலையாலும், வேறுபல காரணங்களாலும் அவைகளுட் பல செயலிழந்துவிட்டன. எனினும் சிதம்பரம் மாலைகட்டித் தெருவிலுள்ள "புண்ணிய நாச்சியார் மடம்" மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. 1934ஆம்

2OO9 விரோதி மார்கழி O
செய்தவரும் இந்த மாமனிதனே. மக்கள் பசித்திருந்த வேளையிலே அதாவது வறுமையில் வாடிய மக்களுக்குக் கஞ்சித்தொட்டி தருமம் செய்து கஞ்சிவார்த்தார்.
இவர் சைவ சமய மறுமலர்ச்சியாளராகவும், சைவ சமயப் பாடசாலைத் தாபனத் தந்தையாகவும் இன்றும் மக்கள் மனதிலே உறைந்துள்ளார். ஆம் இவ்வளவு தன்னிகரில்லாத பல சேவைகள் செய்த இம் மகான் 1879ஆம் ஆண்டு 12ஆம் திகதி தனது 57 வயதிலே இறைவனது பாதத்திற்குச் சென்றுவிட்டார். ஆனால் அவர் மறைந்தாலும் அவர் புகழ் இன்றும் நிலைக்கின்றது. அவரது பூதவுடல் பல ஆயிரக்கணக்கான சைவமக்கள் கதறியழத் தீயுடன் சங்கமமாயிற்று.
எனினும் இவரை நினைவு கூரும் முகமாக நாவலர் சபை, நாவலர் மணிமண்டபம், நாவலர் ஆச்சிரம மண்டபம் நாவலர் கலாசார சபை அமைக்கப்பட்டதோடு 1979ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் சுதேசிய பெரியாரில் ஒருவராக இவரை அங்கீகரித்து முத்திரை ஒன்றையும் வெளியிட்டுக் கெளரவித்தது.
"நல்லைநகர்நாவலர் பிறந்திலரேல்
சொல்லு தமிழ் எங்கே? சுருதினங்கே? - எல்லவரும்
ஏத்து புராண ஆகமங்கள் எங்கே? பிரசங்கம் எங்கே?
ஆத்தன் அறிவு எங்கே?அறை"
என சி.வை.தாமோதரம்பிள்ளை கூறுவதைப்போல் ஓர் சமய, சமூக தமிழ் சீர்திருத்தவாதியாகவும் மறுமலர்ச் சியாளனாகவும் எல்லோர் மனதிலும் நாவலர் நிறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 人
ഭിപ്ര9
se
fluupõrrë-fuums LDLub
ஆண்டிலே இந்த மடத்தின் பொறுப்பை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினர் ஏற்றுக்கொண்ட பின்னர், அதன் சேவைகள் பலரின் கவனத்தையும், பாராட்டையும் ஈர்க்கத் தொடங்கின. பழைய கட்டட அமைப்பில் நாற்சார்வீடாக இருந்த இந்த மடம், நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வணிகப் பெருமகன் அமரர் என்.கே.மயில்வாகனம் அவர்களின் உள்ளத்தில் உருவாக, அதை யாழ் சைவபரிபாலன சபைத் தலைவர் திரு.த.சண்முகலிங்கம் அவர்களின் பேராதரவுடனும், நேரடிக் கண்காணிப்பிலும் செயற்படுத்தி வெற்றி கண்டவர் புங்குடுதீவு - கொழும்பு - வணிகப்பிரமுகரும், சைவப் பெருமகனுமாகிய திரு.வி.இராமநாதன். 6000 சதுர அடியைக் கொண்ட இரண்டுமாடிக் கட்டடமாக மாலைகட்டித் தெருவிலே சிவப் பொலிவுடன் இந்த மடம் காட்சியளிக்கின்றது.இலங்கைப்பணம் 60 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள இம் மடத்திலே சகல வசதிகளுடனும் கூடிய பன்னிரண்டு அறைகள், வரவேற்பு மண்டபம், உணவு மண்டபம், களஞ்சிய அறை, அலுவலக அறை, சமையல் அறை, குளியலறை, கழிவறை என்பன உள்ளன. மடப் பொறுப்பாளர் திரு.தி.கணேசதேசிகர் அங்கேயே தங்கி நின்று, மடத்துக்கு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுக்கின்றார். சிதம்பரத்துக்குச் செல்லும் நம் நாட்டினர் கட்டணம் ஏதும் இன்றி மிகவும் பாதுகாப்பாகத் தங்கி, தில்லை நடராஜனைத் தினமும் தரிசிப்பதற்கு ஏற்ற இடமாகப் புண்ணிய நாச்சியார்மடம் திகழ்கின்றது. 人

Page 22
இந்துசாதனம் 62
ஆலயங்களில் நே - Q30.5 L D606) "சிவத்தமிழ்ச் சொல்லழகர்"
இன்று எமது ஆலயப் பூசைகளை நாடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாகக் கவலை தெரிவிக்கப் படுகின்றது. கோளமயமாதலின் விளைவுகளால் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நேரத்தை முகாமை செய்வதற்குப் பலர் சங்கடப்படுகின்றனர். போக்குவரத்து வசதி பெருகி, தொலைத்தொடர்பாடல் வசதி விரிவடைந்து பன்முக வளர்ச்சி எய்தப்பட்டிருப்பினும் "நேரமில்லையே" என்ற பேச்சு பலர் வாய்ச்சொல்லாக உள்ளது.
ஆலயச் செயற்பாடுகளில் நேரமுகாமை குறித்த விழிப்பூட்டலை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்குடன் அறிமுகக் குறிப்பாக இக்கட்டுரை அமைகின்றது.
மனித வாழ்வியலில் நேரம் மிக முதன்மையான ஒரு வளம் ஆகும். எனவே, ஆலயச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் நேரம்பற்றிய எண்ணக்கருவை விருத்திசெய்யவேண்டியவர்களாக உள்ளனர். நடை திறத்தல், பூசை, அர்ச்சனை, நடைமூடல் முதலிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நேரத்திற்கு முதன்மைகொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
நேர முகாமைத்துவம் என்ற எண்ணக்கருவில் ஒருவர் எப்படித் தனக்குரிய வேலைகளை / கருமங்களை நேரத்தை வீணடிக்காமற் செய்து முடிக்கலாம் என்ற விடயம் உள்ளடக்கி யிருக்கிறது. அதாவது நேரத்தைத் திறமையாகப் பயன்படுத்தல் என்பது இதன் கருத்தாகும். பொன் போன்ற நேரம் பல சந்தர்ப்பங்களிற் பிரயோசனமற்ற வழிகளில் கழிகின்றது. அவசியமற்ற தொலைபேசி உரையாடல்கள், கவனத்தை ஈர்க்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வரையறை இல்லாத கூட்டங்கள் என்பன அவற்றுட் சிலவாகும். இந்த வரிசையில் திட்ட மிடப்படாத ஆலயச் செயற்பாடுகளும் நேரவிரயத்தை உண்டுபண்ணுகின்றன.
ஆலயம் ஒன்றின் நிலைத்திருப்பு (Survival), உறுதித் தன்மை (Stability), வளர்ச்சி (Growth) என்பனவற்றிற்கு நேரமுகாமைத்துவம் இன்றியமையாதது. ஆலயங்களில் நேர முகாமைத்துவத்திற்குப் பொறுப்பானவர் யார்? - என்பது குறித்து வாதப் பிரதிவாதங்கள் எழலாம். சிவாச்சார்யர்கள், பரிபாலகர்கள், உபயகாரர்கள், அடியவர்கள் என யாவருக்கும் இவ்விடயத்திற் பங்கு இருக்கிறது.
ஆலயக் கிரியைகள் நேரமுகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்பட முடியாதவை என்ற தவறான எண்ணப்பாங்கு நம்மிற் பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் நல்லூர், தெல்லிப்பழை போன்ற பக்தர் அதிகம் நாடும் ஆலயங்களிற் சிறப்பான நேரமுகாமை கைக்கொள்ளப்படுவதையும் காண முடிகின்றது. ஆனால், நேர முகாமையில் இடர்கள் ஏற்படுகின்ற போது ஒரு சாரார் இன்னொரு சாரார்மீது குற்றங்களைக் காணும் பண்பும் வருந்தத்தக்கதாகும்.
 
 

2009 விரோதி மார்கழி 01
ர முகாமைத்துவம் பப் பார்வை -
F. oso6öFor M.A. Gó) M.ED.
நேரமுகாமைக்கான இடர்ப்பாடுகள்
சிவாச்சார்யர் சார்ந்தவை: சிவாச்சார்யர்களுக்குள்ள பற்றாக்குறை காரணமாக (மனித வளம் பொருளாதாரம்) ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆலயங்களிற் சேவையாற்ற வேண்டியவராக இருக்கிறார்.
பரிபாலன சபையைச் சார்ந்தவை ஆலயமொன்றில் குறித்தல் மூல மூர்த்தியை விடப் பரிவார மூர்த்திகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். இதனால் எல்லாப் பரிவார மூர்த்திகளுக்குமான பூசை ஆராதனைகளுக்கு அதிக நேரம் தேவைப்படல்.
அடியவர் சார்ந்தவை: கிரியைகளின் சிறப்புத் தன்மை பற்றிய போதிய அறிவு அடியவர் பலரிடம் காணப்படுவதில்லை. எடுத்துக் காட்டாக மகோற்சவம் ஒன்றில் வசந்த மண்டபப் பூசையைவிடக் கொடித்தம்பப்பூசை முக்கியமானது.இது கொடியேற்றப்பட்ட காலங் களிலேயே இடம்பெறக்கூடியது. ஆனால், ஆலய தரிசனத்தை நாடும் அடியவர்கள் வசந்தமண்டபப்பூசை நேரத்திற்கே ஆலயங்களை வந்தடைகின்றனர். இதன் சிறப்புக் கருதியோ அன்றி அடியவர் வசதி கருதியோ நல்லூர்க் கந்தன், நீர்வேலி வாய்க்காற்றரவைப்பிள்ளையார் முதலிய ஆலய மகோற்சவங்களில் வசந்த மண்டபப் பூசையின் பின்பே தம்ப பூசை நடைபெறுவதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
கலைஞர்கள் சார்ந்தவை: சிவாச்சார்யர்களுக்குள்ள பற்றாக் குறைக்கு ஒப்பாகத் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது. சிறப்புத் தேர்ச்சியடைந்த கலைஞர்களின் சேவைக் கட்டணம் உயர்வாக இருக்கும் நிலையில் அவர்களிடமிருந்து அதிக நேர உழைப்பை எதிர்பார்க்கும் தன்மையும் காணப்படுகின்றது. எமது ஆலய மரபுகளில் வடக்கு வீதியில் இடம்பெறும் மேளச்சமா இதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும்.
உயயகாரர் சார்ந்தவை: ஆலயக் கிரியைகள் பூர்வாங்கமாகச் சங்கற்பம் மேற்கொள்வதுடன் (உறுதி எடுத்தலுடன்) ஆரம்ப மாகின்றன. எனவே, உபயகாரர் தர்ப்பை அணிந்து சங்கற்பம் மேற்கொள்ள வேண்டியவராகிறார். இந்நிலையிற் குறித்த நேரத்திற்குச் சமுகந் தராத உபயகாரர்களது செயற்பாடுகளாலும் நேரமுகாமை பாதிப்புக்குள்ளாகிறது.
ஏனைய செயற்பாடுகள்: சிறு தெய்வ வழிபாடுகள் இன்று பெருந்தெய்வ வழிபாடுகளாக மாறிக்கொள்கின்றன. காவல் தெய்வமாக அமைக்கப்பட்ட வைரவருக்கான சிறிய கோவில்கள் கூட இன்று தேரோடும் ஆலயங்களாகப் பரிணமித்து வருகின்றன. புதிய ஆலயங்களுக்கான வள்ங்கள் பகிரப்படுவதால் (சிவாச்சாரியர், பக்தர்கள், கலைஞர்கள்) ஒட்டுமொத்தமாக ஆலயச் செயற்பாடுகளில் நேரமுகாமையைக் கைக்கொள்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.
->

Page 23
இந்துசாதனம் 6.2
நேரமுகாமையைக் கைக்கொள்ளமையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள்
"நேரம்" என்ற எண்ணக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத செயற்பாடுகளாற் கிரியைகளிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அவசர அவசரமாக மந்திரங்களை உச்சாடனம் செய்தல், கிரியைச் செயற்பாடுகளைக் குறைத்தல் முதலிய தன்மைகள் இதனால் ஏற்படுகின்றன. அத்துடன் திருமுறைப் பாடல்களுக்கான முக்கியத்துவமும் வலுவிழந்து போகின்றது. பஞ்சபுராணம் பாடவேண்டிய சூழலில் தேவாரம், புராணம் பாடுவதோடு பாராயணம் நிறைவடைகின்றது.
நேர முகாமைக் குறைபாடு காரணமாக ஆலயத்தை நாடும் அடியவர்களுடைய எண்ணிக்கையிலும் வீழ்ச்சி காணப் படுகின்றது. இதேநேரம் ஆலயத்திற்கான கோல உடையுடன் (வேட்டி, சால்வை) நாடுவதைவிட அலுவலகத்திற்குச் செல்லும் கோலத்துடன் ஆலயத்தை நாடுவோர் தொகை அதிகரித்து, வருகின்றது:
கிரியைகளில் திதி, நட்சத்திரம் முதலிய அம்சங்கள்
செல்வாக்குச் செலுத்துவதால், இவற்றை அனுசரித்து நேர முகாமை செய்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.
சில ஆலோசனைகள்
நேரமுகாமை பற்றிய எண்ணக்கரு, ஆலயத்துடன்
అ_<@N
سےے سے سیسسر -------------
தேவாசுரயுத்தம் என்பது எங்கோ என்றோ நடந்துமுடிந்துவிட்டது இருக்கின்றன; அசுரகுணங்களும் இருக்கின்றன; அவற்றுக்கிடையே அசுரகுணங்களை நாம் அழிக்க வேண்டும். மகிடாசுரவதம், சூரபன்ம உள்வாங்குவோம்; உய்தியடைவோம்.
O O O
அகந்தை இருள் நீங்கி ( சைவப்புலவர் சு தேவர் அசுரர் போராட்டம் தினமும் எங்கள் மன தேவர் என்பது நல்லெண்ணம் அசுரர் என்பது தேவர் வென்றால் கொண்டாட்டம் அசுரர்வெ தேவர் அசுரர் என்பதெல்லாம் எங்கள் செயலின் நல்லன செய்பவர் தேவரென்பர் தீயன செய்ய6 சொல்லும், செயலும், நினைவுகளும் நல்லன6 அல்லனவென்றால் அவனகரன் அதனால் வ அல்லவை நீக்கிநல்லனசெய்து அனைவரும்
மகிஷாசுரனை வதைத்ததினம் விஜயதசமி ம0 நரகாசுரனை வதைத்ததினம் தீபாவளிநன்ன சூரபன் மனைவதைத்ததினம் கந்தசஷ்டிப்பெ கஜமுகாசுரனை வதைத்ததினம் விநாயகசஷ் கொலையும் களவும்கள் காமம் கொள்ளை ெ நிலைதடுமாறிடும் பேராசை நீசத்தனங்கள் அ நிலையெனச் செய்யும் இழிசெயலை அழிப்பதே மலைபோல் இருக்கும் உண்மையிது மறவாதி எங்கள்மனதில் இருக்கின்ற அசுர குணங்கள் தங்காமல் நாம் அழிக்கின்ற நாளே இந்த விரத எங்கோயாரோ செய்ததென எண்ணிநாங்கள் இங்கே இந்தக் கொண்டாட்டம் எல்லாம் வீன பழைய உடைகள் பண்டங்கள் கழித்துப் புதிய6 பழையன தீயன நீங்கி நிதம்புதியனநல்லனெ அழைக்கும் தினமே தீபாவளி அதுவே நரகாசுர பிழையாம் அகந்தை இருள்நீங்க அருளம் ஒ6
2

2OO9. விரோதி மார்கழி 01
தொடர்புடைய யாவரிடத்திலும் உணர்வுபூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய மேலைத்தேய, கீழைத்தேய எண்ணக்கருக்கள் பற்றிய செயலமர்வுகளை, தொடர்புடைய அமைப்புக்கள் மேற்கொள்ளலாம்.
ஆலயக் கருமங்களுக்கான நாட்களைத் திட்டமிட்டு வகுப்பதைப்போல ஒவ்வொரு செயற்பாடுகளுக்குரிய நேரமும் திட்டமிடப்பட்டு வகுக்கப்படவேண்டும். அவைபற்றிய செய்திகள் முதற்கூட்டியே அடியவர்களுக்கு அறியத்தரப்படவேண்டும்.
திருமுறைப் பாராயணத்தின்போது பஞ்சபுராணம் பாடப்பட வேண்டுமா? தேவாரம், புராணம் போதுமானதா? - என்பன பற்றிய் மறுவாசிப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆலயங்களில் மகோற்சவத்திற்கு முன்னர் சிவாச்சார்யர், உபயகாரர், அடியவர், பரிபாலகர், தொடர்புடைய கலைஞர் என யாவரும் ஒன்றுகூடி ஆராய்வதன் ஊடாகச் செயற்பாடுகளைத் திட்டமிட வழியேற்படுத்தப்படவேண்டும்.
UD്യബ്
நிறைவாக, திட்டமிடப்பட்ட நேரமுகாமையைக் கைக்கொள்வதற்கு முயல்வோம். ஆலயம், சமயம், பொது
வாழ்வியல் என எச்சந்தர்ப்பத்திலும் இது வளர்ச்சியை நாடிய உறுதுணையாக அமையும். 人
ويصحيه
-—
என்று கருதக்கூடாது. எங்களுக்குள்ளேயே தேவ குணங்களும் சண்டைகளும் நடைபெறுகின்றன. தேவகுணங்களைப்பலப்படுத்தி ன் வதம், கஜமுகாசுரவதம் ஆகியவற்றின் தத்துவக் கருத்துக்களை
அருள் ஒளி ஏற்றிடுவோம் 1.செல்லத்துரை
Soof(3oo
தீயெண்ணம் ன்றால் திண்டாட்டம் ன் வடிவங்கள்.
வர் அசுரரென்பர் ான்றால் அவன் தேவன் ருவதும் அழிவேதான் தேவர்கள் ஆகிடலாம்.
நோன்பு
ΓΟΠΙΤΦιb
ருவிரதம் டிப்பெருநோன்பு. 5ாடுமை வஞ்சனைகள்
அசுர சங்காரம் நப்போம்மனதினிலே. அத்தனையும்
வ்கள்.
ஏமாந்தால் ய்ப்போமன்றோ. Tபுனைவதெல்லாம் ய்திடவே
வதமாம் ரியை ஏற்றிடுவோம்.

Page 24
இந்துசாதனம் 16.12.
Kachchiapparin o iiva law) should
ises as to what is Saiva Law. Law
System of ru a society sets to maintain order and protect pers and property from harm. Law is ancient, dating back at least to the Cod of Hammurabi, written by an ancient Babylonian ki around 1760 BC. Today, most Countries hav
a tens or hundreds of thousands of pages of law. The an 3. Hindu Laws are : known as Manusim riti. The Saiva laws that Kachchiappa speaks of are also part of Hindula S. 犯
ACCOrding to Cekkilar, the author riyapuranam,
the thought of dharma generates deep infidence in
the Hindu mind in Cosmic justice. Dharma is the law that maintains the cosmic order as well as the individual and social order. Dharma sustains human life in harmony
When we follow dharma, we are in
Dharma is of four kinds: Universal dharma, human
harma, there is also another concept
us law. Religious law refers to the c us System or document being used toncept that the word of --- ti is based on several practices including these three In his first Canto of his
Priyapu Panam, Lord Siva Himself comes in the form of a
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalfo Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 1612
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2OO9. விரோதி மார்கழி0
AIVA INTI ?
, Ph.D. (Edinburgh)
Brahmin to file a case against Saint Sundarar. Lord maintained that Sundarar Was his slave. The Court requested Him to submit any one of the following as evidence: the right of ownership, document or eye - witness. These three are mentioned in the following
VESE
* "ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலவர்தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்."ஆ"
e هيه A document Stating that Sundara, and his
リ ܪ݇ܢ forefathers were His slayewas produced jaħd the final judgement was in His favour
ܪ_ܣܛܘ
The concept that the Word of God is law is expressed in several instances by Cekkilar in his composition. One instance is connected with the story of Thiruneelakanda Nayanar. Heretoo, Lord Siva himself comes as a Sage and entrusts a "Tiruvodu" (a vessel used for eating) with Thiruneelakanda Nayanar. After some days the Sage returned and demanded his "Tiruvodu' from him. He Could not find it. He was prepared to give the Sage a better one. But the Sage was in fury and refused to accept anything other than his original one. Finally, God Himself suggests an action to settle that case. He requests Nayanar to dip into the water with his son. Since Nayanar did not have a son, Lord ordered him to do it with his wife. Nayanar could not do it. In his early days, he had intimate connection with a prostitute and his wife came to know about it and ordered him in the name of Lord (Thiruneelakandam) not to touch her thereafter. None of his neighbours knew this secret. But the Lord insisted that he must dip into the water with his wife. The Court consisting of Brahmins from Thillai too endorsed what the Lord had insisted. Finally Nayanar publicly lets out the Secret and dipped into the water holding his wife's hand. By the grace of Lord, they became young and beautiful.
f the Saiva Paripalana Sabai, No.450, K.K.S. Road, Jafna &
2009 (1 Day of Markalith thingal). Phone: 0212227678