கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2010.01.14

Page 1
a uma a Gue (B ஆரம்பம் விரோதி வடு ஆவணி மீ"26 ஆம் உ(39)
Gិពា្វ oldpւth தைத் (14.01.
புத்தகம் :121 இதழ் 05
கொட்டாஞ்சேனைமுற
gငါ့6\ jrif -
LIனை வயிறும் ஆனை முகமும் மிகவும் இயல்பாக
பருத்த உடலுங்கொண்ட விநாயகப் அப்பளமாய் நொருங் பெருமான், குறுகிய வடிவமும் கோணிய அடியார்கள் Ugo" ೧518- எலியைத் மிகவும் நு
660TLD எவ்வித கவலையுமின்றி றார்கள் புராண வித்
பாரத்தினால் அ ஏற்படாதபடி தன்ை உட்கார்ந்திருக்கின் களுள்ளும் மெதுவா அதன்மூலம் உய்த்து
கொட்டாஞ்சேனை ருநீ வரதராஜ விநாயகர் ஆலய இ
 
 
 
 
 
 
 
 
 

கொழும்புத
we Whind UOrgan.com e-mail editor Chindu organ.com திங்கள் 1ஆம் BT6 2010) eայԼյո, 50.00
5 வரதராஜ விநாயகர்
உட்கார்ந்திருக்கின்றாரே தொப்பையப்பனின் பாரச் சுமையில் கிவிடாதா அந்த அற்பப்பிராணி?
அவ்வப்போது எழுப்பிவரும் கேள்வி இது.
ட்பமான தத்துவமொன்று இதிலே புதைந்திருப்பதாகச் சொல்கின்
தகர்களும் தத்துவச் சித்தர்களும் தன்னுடைய திருமேனியின் பெரும் ந்தச் சின்னஞ் சிறிய பிராணிக்கு எந்தவிதமான விக்கினமும்
ன "இலேசாக்கிக் கொண்டுதான் ஆனைமுகனார் அதன்மேல்
ாராம் தன்னை நாடும் அடியார்களின் மென்மையான உள்ளங் க நுழைந்து 'சுகமாக" வீற்றிருக்கவும் தன்னால் முடியும் என்பதை
னா வைக்கின்றாராம்
ஜகோபுரம் சந்தனக்காப்புடன் மூலஸ்தான விநாயகர்

Page 2
இந்துசாதனம் 4.O
கொழும்பு நகர்க் கொட்டாஞ்சேனைப் பதியில் அருளும் பொருளும் அடியவர் திரளுமாய்க் காட்சிதரும் அருள்மிகு வரதராஜ விநாயகப் பெருமான் ஆலயத்துக்கு நான் சென்றபோது மேற்போந்த தத்துவ விளக்கம் என் நினைவுத் திரையில் தலைகாட்டியது.
ஒன்றை அடுத்து மற்றொன்றும் ஒன்றினுள் மற்றொன்றுமாய், வீடுகளும் வியாபார நிலையங்களும் நிறைந்திருக்கும் இடத்தில், ஆகாயத்தை அளாவும் அடுக்கு மாடிகள் நெருக்கிக் கொண்டிருக்கும் சூழலில், குறுகிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட அந்தக் கோவிலில் அமைதியாக, அழகாக ஆனந்தமாக ஆனைமுகப் பெருமான் வீற்றிருந்து, அருளாட்சி செய்துகொண்டிருப்பதை அதே தத்துவத்தின் அடிப்படையிலேதான் நோக்க வேண்டும் போலத் தெரிந்தது. அகன்று விரிந்த இடமானாலுஞ் சரி, மெலிந்து ஒடுங்கிய இடமானாலுஞ்சரி, இரண்டுமே அவருக்கு ஒன்றுதான்! தனக்குரிய இடவசதியை விட, தன்னுடைய அடியவர்களின் ஈடேற்றந்தான் அவருக்குப் பெரிது!
இப்போதைய அறங்காவலர்கள் - அர்ச்சகர்கள் - அடியவர்கள் போன்ற யாருமே பிறப்பெடுக்காத ஓர் "ஆதி காலத்தில்" இதே இடத்தில் இன்றும் "கலகலத்'துக் கொண்டிருக்கும் அந்தப் பழைய அரச மரத்தின் "குளுகுளு" நீழலில், வடக்குத் திசையில் கருங்கல் விக்கிரகமாகக் காட்சியளித்துக் கருணைமழைபொழியத் தொடங்கினர் கணநாதர் அருகாமையில் அரவரசன் - நாகதம்பிரான். இருவருக்கும் பொதுவாக, கருங்கல்லினாலான ஒரு திருவிளக்கு - கருங்கல்லால் ஆன விளக்குத் தாங்கியில் 1876 என்பதற்குரிய "கஅஎகூ" என்ற தமிழ் எண் குறியீடு! இவை அனைத்தும் இன்றும் புனிதமாகப் பேணப்படுகின்றன; ஆலயத்தின் பழைமைக்குச் சான்று பகர்ந்துகொண்டிருக்கின்றன.
எனினும், இதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரேயே இந்த இடத்தில் ஆலயம் இருந்தது என்ற கருத்தும் நிலவுகின்றது.
இந்த ஆலயம் தமிழ் மன்னன் எல்லாளன் காலத்துக்கும் முந்தியது - போர்த்துக்கீசரின் ஆட்சிக் காலத்தில் இராணுவ வீரர்கள் பாதுகாப்பாகப் பதுங்கி இருப்பதற்கு இந்த ஆலய வளாகம் வசதியாக இருந்தது - ஒல்லாந்தர் காலத்தில், அவர்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாரிச் சுட்டிக்கொண்டு இவ்வால யத்தை அழித்துவிட்டார்கள் - முறையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாதபடியால் முற்றிலும் பொய்யானவை என்றோ, செவி வழியாக இன்னமும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அனைத்துமே அப்பட்டமான உண்மைகள் என்றோ முடிவுகட்ட முடியாத உதிரித் தகவல்கள் இவை.
அரசமர நீழலில் உருவான வழிபாட்டிடத்துக்குச் சற்று அப்பால், கிழக்குத் திசையில் முதலாம் உலகப் போர்க் காலத்திலே இராணுவ முகாம் ஒன்றிருந்தது. ஆங்கில ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட முகாம் அது. இந்தியாவைச் சேர்ந்த சண்முகர் ஜி பட்டேல் என்பவர் முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்தார். விநாயகரை வழிபட்ட பின்னரே தன் நாளாந்தப் பணிகளைத் தொடங்குவதை விரதமாக வரித்துக்கொண்டிருந்தவர் அவர். அரசடி விநாயகரை அனுதினமும் வழிபட்டு வந்த அந்த இராணுவ அதிகாரி, அந்த வழிபாட்டிடத்துக்கு மிக அண்மையில் வசித்து வந்த

2OO விரோதி தை 01
வில்வராஜா என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். அதன்மூலம் தன்னை இந்த மண்ணுக்கும் உரியவராக்கிக்கொண்ட சண்முகர்ஜிபட்டேல்,அரச மரத்துக்குத் தென்மேற்கிலே சிற்றாலயம் ஒன்றை உருவாக்கினார். சிமெந்துச் சுவர்களிற் தகரக்கூரை பொருத்தப்பட்டிருந்த அந்த ஆலயத்திலே கருங்கல்லில் உருவாக்கப்பட்ட, சற்றுப் பெரிய, புதிய விநாயகர் விக்கிரகம் 1917ஆம் ஆண்டிலே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. ஆலயத்தின் வடக்குச் சுவரில் தெற்குத் திசையை நோக்கியபடி பழனிஆண்டவரும், அவருக்குக் கிழக்கே வேற்பெருமானும் இடம்பெற்றனர்.
இராணுவ அதிகாரியின் மேற்பார்வையில் கோவில் வழிபாடுகள் குறைவின்றி நடைபெற்றன. இடமாற்ற ஆணை காரணமாக 1921ஆம் ஆண்டிலே அவர் இலங்கையைவிட்டு விலக வேண்டிய நிலையில், தனக்கு நன்கு அறிமுகமாகி இருந்தவரும் கோவிற் காரியங்களை அதிக ஈடுபாட்டுடன் செய்துவந்தவருமான இராமகிருஷ்ண ஆச்சாரியிடம் கோவிற் பொறுப்பை ஒப்படைத்தார். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் அவரும் இடம்பெயர்ந்தார். கோவிற் பொறுப்பாளர் என யாருமே இல்லாத நிலையிலும் அடியார்கள் ஒருவித சுயகட்டுப்பாட்டுடன் கோவிலின் புனிதத்தைப் பேணித் தம் வழிபாட்டைத் தொடர்ந்தனர். ஆனைமுகத்தானின் அருளிலும் ஆலயத்தின் வளர்ச்சியிலும் நாட்டம்கொண்டிருந்த திருவாட்டி, சொர்ணம்மா சுப்பிரமணியம் அவர்களின் முயற்சியால் அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதும் ஒழுங்கான முறையிற் பூஜைகள் நடைபெறத்தொடங்கின.
"அவனின்றி ஒர் அணுவும் அசையாது" என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் சைவப் பெருமக்கள். தனக்கு மேல் ஒரு தலைவனும் இல்லாத விநாயகப் பெருமான் தன்னுடைய ஆலயத்தை நிர்வகிப்பதற்கு ஒரு தலைமை வேண்டுமெனத் திருவுளங்கொண்டபோது, பிரபல வர்த்தகரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், பின்னொருகால் மூதவை உறுப்பினராகவுமிருந்த அமரர் த.நீதிராசா அறங்காவலரானார்; வளர்ச்சிப் பாதையில் வண்ண நடைபோடத் தொடங்கியது இந்த வரதராச விநாயகர் ஆலயம்.
பெரும்பொருட் செலவில் அவ்வப்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு 1962ஆம் ஆண்டில் முதலாவது மஹா கும்பாபிஷேகமும் 1988ஆம் ஆண்டில் இரண்டாவது மஹா கும்பாபிஷேகமும் 2000ஆம் ஆண்டிலே மூன்றாவது மஹா கும்பாபிஷேகமும் மிகச்சிறப்பான முறையிலே நடைபெற்றன. பிரதிஷ்டா சிரோமணி நவாலி சாமி.விஸ்வநாதக் குருக்கள் தலைமையிலேயே இவை மூன்றும் நடைபெற்றன என்பது குறிக்கத் தக்கது. பஞ்சமுக விநாயகப் பெருமானின் நூதனப் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்தை 1972ஆம் ஆண்டில் நிறைவேற்றி வைத்தவர் சிவழீநாசர்வேஸ்வரக்குருக்கள் ஆவர்.
வரதராச விநாயகப் பெருமான் கருவறையிலே காட்சியளிக்க அர்த்த மண்டபத்து நுழைவாயிலில், - தெற்கே கபாலீஸ்வரரும் வடக்கில் கற்பகாம்பிகையும் அருள் பாலிக்கின்றனர். கருவறைக்கு நேரே விநாயகரைப் பார்த்தபடி மூஷிகமும் பலிபீடமும் காணப்படுகின்றன. ஆலயத்தின் உட்சுற்றின் தென் மேற்கு மூலையில் எழுந்தருளி விநாயகர், மேற்குத் திசையில் மனோன்மணி அம்பாள், ஆஞ்சநேயப் பெருமான் வட மேற்கில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணியர், பழனியாண்டி, வசந்த
2

Page 3
இந்துசாதனம் 4.O.
மண்டபத்திற் பஞ்சமுக விநாயகர், எழுந்தருளி விநாயகர், சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜப்பெருமான், நால்வர் ஆகியோர் ஐம்பொன் விக்கிரகங்களிற் சாந்நித்யம்பெற்று அருளொளி வீசிக்கொண்டிருக்கின்றனர். ஈசானம் என்ற வடகிழக்கில் தெற்குப் பார்த்த வாசலில் நான்கு படிகளில் ஏறினால், முதலிற் காட்சியளிப்பவர் ஆதிகால விநாயகர். தண்ணீரில் அரைவாசி மறைந்திருக்கும் அப்பெருமான் அடியார்களின் அகங்கனிந்த நீராட்டலுக்கு அல்லும் பகலும் ஆளாகிவருகின்றார். விநாயகருக்குப் பின்னால் கருங்கல் விளக்கு இருக்கின்றது. ஆரம்பத்திற் குறிப்பிட்ட பழைய அரசமரம் மேடையின் நடுவே அரசோச்சுகின்றது. பழைய நாகதம்பிரான் மேற்குத் திசையை நோக்க, வடமேற்கிற் சற்றுப் பின்னமடைந்த முருகப்பெருமான், தேவியர் இருவருடன் காட்சி தருகின்றார். தொடர்ந்து வைரவப் பெருமான், சந்தான கோபாலர், விநாயகப் பெருமான் ஆகியோர் சிலாவிக்கிரகங்களாகக் காட்சியளிக்கின்றனர்.
திருவீதி வலம்வந்து இறைவனைச் சுற்றிக் கும்பிடும் போது திருமுறைகள், அருட்பாடல்களைப் பாடவேண்டும் எனப் பெரியோர் சொல்வர். அடியார்களுக்கு இதை நினைவூட்டி வழிகாட்டும் வகையில் ஆலயத்தின் உட்சுற்றின் தெற்கு மதிற்கவரில் ஒளவைப் பிராட்டியாரின் விநாயகர் அகவலுடன் விநாயகர் கவசமும்மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
பலவித சிற்ப சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய 42 அடி உயரமான இராஜகோபுரம் கோவில் முகப்பை அலங்கரிக்கின்றது.
மாதந்தோறும் நடைபெறும் சதுர்த்தி விழா, கார்த்திகைத் திருவிழா, ஆண்டுக்கொருதடவை நிகழும் தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரவிழா, வருடப்பிறப்பு, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம், விநாயகசதுர்த்தி, இலட்சார்ச்சனை, நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை முதலிய பல விழாக்களிலும் விரதங்களிலும் ஏராளமான அடியார்கள் ஆசார சீலராய்க் கலந்துகொள்ளுகின்றனர்.
அனுதினமும் தன்னை நாடித் தன்னுடைய ஆலயத்துக்கு வரும் அடியார்களைத்தானே தேடிச் சென்று அவரவர் இல்லங் களின் வாயிலில் வைத்து அவர்களை ஆசீர்வதிப்பதைப் போன்று ஆவணிச் சதுர்த்தியில் அழகிய இரதத்தில் ஆரோகணித்து பஞ்சமுக விநாயகர் நகர்வலம் வருவது இச்சுற்று வட்டார மக்களின் உள்ளங்களில் நிறைவை ஏற்படுத்தும் உன்னத நிகழ்ச்சியாகும்.
உள்ளன்புடனும் அர்ப்பணிப்புடனும் ஆகம நெறிக்கு இசைவாகவும், அர்ச்சகர்கள் செய்யும் கிரியைகள், பூஜைகள் போன்றவற்றாலும் மன ஒன்றிப்புடன் அடியவர்கள் செய்யும் வழிபாடு, பிரார்த்தனைகளாலும், தெய்வ சாந்நித்யம் பெருகு மென்றும் அறங்காவலர்களின் தன்னலக் கலப்பற்ற சீரான நிர்வாகத்தினால் ஆலயத்தின் பன்முக வளர்ச்சி மேலோங்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இது உண்மைதான் என்பதை இம்முத்தரப்பினரின் கூட்டு முயற்சி தெளிவாக்குவதை இந்த ஆலயத்திற்காண்கின்றோம்.
1952ஆம் ஆண்டிலே, இவ்வாலயம் மிகவும் சிறியதாக இருந்த வேளையிலே, அர்ச்சகராகப் பணிபுரியத் தொடங்கிய சிவபூரீ

2OO விரோதி தை 01
நடராஜ சோமாஸ்கந்தக் குருக்கள் மிக நீண்டகாலம், தன் இறுதிக் காலம்வரை மிகவும் சிரத்தையுடன் தன் பணியைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமான் மிகவும் சக்தியும் அருளும் உடையவராக விளங்கு வதற்குக் காரணமாக இருப்பவர் பிரதம குரு பிரம்மபூரீ ந.சோமாஸ்கந்தக் குருக்கள்; மிகச் சிறிய இடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் வசித்துக்கொண்டு, விநாயகருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற முழு மனதுடன் ஆகம முறைப்படி பூஜை செய்பவர் அவர்" எனச் சிலாகிக்கின்றார். திருப்பணிச் சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.சி.பாலசுப்பிர மணியம், அவருடைய மறைவிற்குப் பின்னர் பிரதம சிவாச்சார் யாராகப் பொறுப்பேற்ற சிவழீ சபேசக் குருக்கள். ஏற்கனவே அவருடைய உதவியாளராக இருந்து அனுபவம் பெற்றவர்; அவருடைய மருகர். தன் மாமனார் உருவாக்கிய பாரம்பரியத்தைச் சிறப்பாகப் பின்பற்றி அடியார்களின் அபிமானத்தைப் பெற்று வருகின்றார். பிரம்மழநீ சண்முகரட்ண சர்மா, பிரம்மழநீ இரத்தினபவசர்மா ஆகியோர் ஆன்மார்த்தமாக அவருடன் இணைந்துபணிபுரிகின்றனர்.
1991ஆம் ஆண்டில் அறங்காவலர் பதவியிலிருந்து நீங்கிய அமரர் த.நீதிராசா, தகுதியும் திறமையும் தன்னல மறுப்பும் மிக்கவர்களிடந் தான் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் என்பதை, இந்தக் கட்டுரையை அடுத்து மறு பிரசுரஞ் செய்யப்பட்டுள்ள திரு.தெ.ஈஸ்வரன், அமரர். திரு.பொ. பாலசுந்தரம் ஆகியோரின் உள்ளக் கருத்துக்கள் காட்டுகின்றன. இத்தகையோரின் வழி காட்டலிலும், கண்காணிப்பிலும் எந்தக் கோவில்தான் வளர்ச்சி அடையாது? திருவாளர் தெ.ஈஸ்வரன், தெ.வீரவாகு, பா.ராகுலன் ஆகியோர் இப்போதுஅறங்காவலர்களாகப்பணியாற்றுகின்றனர்.
ஆலயங்கள், வழிபாட்டிடங்களாக மட்டும் இருக்காமல், மக்களின் கலை, கலாசார, பண்பாடுகளின் கேந்திர நிலையங் களாகவும் இருந்திருப்பதைச் சோழர்காலக் கோவிற் செயற்பாடுகள் காட்டுகின்றன. அத்தகைய சில செயற்பாடுகள் இங்கேயும் தொடர்கின்றன. இந்த ஆலயத்தையொட்டி, அதன் மேற்குப் புறத்திலே கலையெழிலுடன் காட்சியளிக்கும் ஐங்கரன் மண்டபத் திலே அறநெறிப் பாடசாலை, பண்ணிசைப் பயிற்சி, சாயி பஜனை, அம்மா பகவான் பஜனை ஆகியவை குறிப்பிட்ட தினங்களில் நடைபெறுகின்றன. காலத்துக்குக் காலம், சமய, இலக்கியச் சொற்பொழிவுகள், இசை நடன விழாக்கள் என்பன இடம் பெறுகின்றன.
நவராத்திரி விழாக் காலத்தில் நடைபெறும் பட்டிமன்றம், வில்லிசை, நடனம், பண்ணிசை, நாடகம், கவியரங்கு போன்றவை, மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களைத் தூண்டி வளர்க்கின்றன.
"வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்" என்பது இங்குள்ள ஐங்கரன் அடியார்களின் உள்ளங்களில்
ஆழப்பதிந்துள்ள அனுபவத்திருவாக்காகும். 人

Page 4
இந்துசாதனம் 14C
முநீ வரதராஜ விநாய
திரு.தெ.ஈஸ்வரன், தி அறங்கா6
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றி ஓராம் ஆண்டு எங்கள் இருவரிடமும் கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலயம், காலஞ்சென்ற அமரர் திரு. நீதிராஜா அவர்களினால் ஒப்படைக்கப்பட்டது. அன்று இந்தக் கோயில் எப்படி இருந்தது என்பது கொட்டாஞ்சேனை வாழ் பக்தர்கள் அறிவார்கள். இன்று இக்கோயில் வளர்ச்சியடைந்து அருள்மிகு கோயிலாகப் பிரபல்யமாக விளங்குகின்றது என்றால் அதற்கு யார் காரணம்?
அறங்காவலர்களா?-இல்லை
சிவாச்சாரியர்களா?-இல்லை
யார் இக்கோவிலை நடத்துகிறார்கள்? பூரீ வரதராஜப் பெருமான்தான் இக்கோயிலைக்கொண்டு நடத்துகின்றார்.
"அவனின்றி அணுவும் அசையாது" என்ற முதுமொழி முற்றிலும் உண்மை. இதைத் தான் திருநாவுக்கரசர் திருத்தாண்டவத்தில் "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ? அடக்குவித்தால் யாரொருவர் அடங்காதாரோ" என்று பாடினார்.
விநயகர் ஆட்டுவித்தார் நாங்கள் ஆடினோம், பணிவித் தார் நாங்கள் பணிந்தோம். இதுதான் சத்தியமான உண்மை. இக்கருத்து அறங்காவலர் மனத்திலே, சிவாசாரியர்கள் மனத்திலே, கோவிலில் மற்றப் பணியாளர்கள் மனத்திலே, வருகின்ற பக்தர்கள் மனத்திலே, கல்மேல் எழுத்துப்போல் பதிந்திருக்கின்ற வரையிற் கோயில் வளரும், இறைவன் அருள்பாலிப்பார்கள்.பக்தர்கள் பிறவிப் பயனடைவார்கள்.
அறம் என்றால் தருமம் என்று அகராதி பொருள் சொல்லுகின்றது. தருமத்தைக் காப்பதே தமது பணியாகக் கொள்டவர்கள்தான் அறக்காவலர்கள்.
முதலில் அறங்காவலர்களுக்கு நான் என்ற எண்ணம் அறவே இருக்கக்கூடாது. நான் அறங்காவலர் என்று யார் நினைக்கின்றார்களோ அவர்கள் கோவிலை நிர்வகிக்கும் தகுதியை இழந்துவிடுகின்றார்கள். நல்லூர்க் கந்தசுவாமி கோவில்
u }
கொழும்பு - கொ அருள்மிகு முநீ வரதரா நிர்வாகம் வெ6
1. பிள்ளையார் வழிபாடு தயாரிப்பு:
சக்திவழிபாடு தொகுப்பு:
3. சைவ வினாவிடை
4. திருமுறைப்பண்ணிசை தொகுப்பு:
5. சிவவழிபாடு தொகுப்பு:
6. திருக்குறள்
7. முநீவரதராஜ விநாயகர் இரட்டைமணிமாலை

2OO விரோதி தை 01
கள் வழிநடத்துகிறார்
ரு.பொ.பாலசுந்தரம்
பலர்கள்
உலகப் பிரசித்திபெற்றது. இலங்கைவாழ் எந்தத் தமிழனும் இக்கோவில் பற்றி அறிவான். இக்கோவிலில் விஷேட நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கந்தனைக் காண வருவார்கள். இங்கே கோவிலுக்கு யார் அறங்காவலர்கள் என்று அறிந்து கொள்ளமுடியாது. அறங்காவலர் திரு.குமாரதாச மாப்பாணர், முதலியார் கூட்டத்திலே முன்னே அல்ல எங்கேயாவது ஒரு பக்கத்திற் சாதாரண பக்தர்போன்று கூட்டத்தோடு கூட்டமாக நிற்பார் என்று சொல்வார்கள். சாதாரண உடையணிந்து பக்த கோடிகளில் ஒருவராகவே அவரைக் காணமுடியும்.இந்தப்பெரியவர் தந்த பாடத்தைச் சற்றேனும் நாம் மனதிற்கொள்ளவேண்டாமா?
அறங்காவலர்கள் ஒருவரை ஒருவர் கலந்து எதையும் செய்வதன்மூலம் பக்தர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கப் பெறுகின்றன. எந்த ஒரு கருத்தையும் இதுதான் சரி என்று நிலை நிறுத்த முயலாமல் விட்டுக்கொடுத்துத் தொண்டு செய்வதுதான் உண்மையான இறைபணி அறங்காவலன் என்று நீ அழைக்கப் படுவது கடமைகளைச் செய்வதற்கு மாத்திரமே. உரிமைகள் எதுவும் கொண்டாடப்படுவதற்கு அல்ல. பூரீ வரதராஜ விநாயகர் எங்களுக்குக் காட்டிய வழியும் இதுவே.
கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கை. பரமசிவனுக் கும் பார்வதிக்கும் இடையே பல கருத்து மோதல்கள் இருந்ததாக நமது புராணங்கள் கூறுகின்றன. நாம் கணவனாக, தந்தையாக, தனையனாக, சகோதரர்களாக, நண்பனாக வாழ்க்கையின் ஒவ்வொரு பாத்திரமேற்கும்பொழுதும் கருத்து வேறுபாடுகளைச் சந்திக்கின்றோம். இதை நல்லமுறையில், அன்பு வழியில், அறத்தை மனதிற்கொண்டு தீர்ப்பவனே உண்மையான அறங்காவலன்.
இறைவனே கதியாக, இறைவனே நினைவாக, இறைவனையே எண்ணங்களில் நிறுத்தி வாழ்பவர்களை இறைவன் வழிநடத்துவான். அபிராமிப்பட்டர் அபிராமி அந்தாதியில் "நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை" என்று சொன்னதுபோற் சிறிதேனும் நடந்தால், அவன் என்றும் எம்மை வழிநடத்திச் செல்லுவான். 人
婷念 an
-
ட்டாஞ்சேனை
ஐ விநாயகர் ஆலய
器
ரியிட்ட நூல்கள்
திரு.தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன், B.Com.
$db.65. FoloolyGör, B.Com.
Sqb.65.FFofooyor, B.Com.
மதுரைதிரு.கி.பழனியப்பனார் ஐங்கரன்மண்டபத்திறப்புவிழா நினைவுவெளியீடு. பண்டிதர் சி.அப்புத்துரை.

Page 5
இந்துசாதனம் 4.O
சிவராத்திரி விரத நிர்
சமயப் பிரசாரகர், திரு
இவ்வாண்டுச் சிவராத்திரி சம்பந்தமாக ஈழநாட்டுப் பஞ்சாங்கங்களிரண்டும் கடுமையாக முரண்படுகின்றன. இதனால் இப்பஞ்சாங்கங்களையன்றி வேறொன்றினையும் அறியாத கோயில் நிர்வாகிகளும் கடுமையாகக் குழம்பி நிற்கிறார்கள். தெளிவான விளக்கமளிக்க வேண்டிய உத்தரவாதம்பெற்ற சமஸ்கிருத அறிவுடையோர் தாமும் தாம் சார்ந்த பஞ்சாங்கங்களுக்கு முண்டுகொடுக்குமுகமாகச் சில எழுதப்பார்க்கிறார்கள். சிலர் "எந்தப் பஞ்சாங்கப்படி கும்பாபிஷேகம் செய்தீர்களோ அந்தப் பஞ்சாங்கப்படியே நிர்ணயிக்க வேண்டும்" என்று தம்மை ஆலோசனை கேட்போருக்குக் கூறுகிறார்கள். இவர்களிடம் சில வினாக்கள் வினாவப்பட்டாக வேண்டியிருக்கின்றன. கோயிற் கும்பாபிஷேகாதிகளுக்குப் பிரமாணம் சிவாகமங்களா? பஞ்சாங் கங்களா? பரமபதியாகிய முழுமுதற் சிவபெருமான் திருவாய் மொழிந்த சிவாகமங்களா, ரிஷிகள், முனிவர்கள் எழுதிய பஞ்சாங்கங்களா பிரமாணங்களிற் சிறந்தவை? பஞ்சாங்கம் வேதாங்கமாறனுளொன்றென் பீராயினும் சைவத்திற்கு வேதம் பொதுப்பிரமாணம். ஆகமம் சிறப்புப்பிரமாணமென்பது அறியீரோ?
வேத உபநிஷதாதிகளுள் சிவாகமவிரோதமானவற்றைச் சைவத்திற்கொள்ளலாகாதென்பது அறியீரோ?
சிவாகம விரோதமான எதனையும் சைவாலயங்களிலே செய்தலாகாது என்பதும் செய்பவர்களுக்குரிய தண்டனைகள் உடனுக்குடன் கிட்டுமென்பதும் ஆகம வசனங்கள், புராணங்களா லன்றி அனுபவ நிகழ்வுகளாலும் ஊர்ஜிதமாகியுள்ளன. சிவாகம விரோதமாக யாழ்ப்பாணத்துப் பிரபல சக்தி ஆலயமொன்றில் கோபுரவாசலுக்கு வெளியே நடைபெற்ற சண்டிஹோமத்தின்போது யாக மண்டபம் தீப்பற்றி எரிந்ததும், அக்கிரியையின் பிரதான குரு அன்றையதினமே வாகன விபத்தில் இறந்ததும் நாடறியும். 2005இல் ஆகம விரோதமாக அபிமானப் பஞ்சாங்கத்தை நம்பி ஐப்பசியில் நிகழ்த்தப்பட்ட விளக்கீட்டுடன் நாட்டின் அரசியலில் நிலவிவந்த சமாதானச் சூழ்நிலை குலைந்து போர்மேகஞ் சூழ்ந்ததும், சிக்குன் குனியா என்ற காய்ச்சலாலே பலர் மாண்டதும், சென்றவருடங்கூட நிஷாப்புயல் வீசிக் கொடிய பல விளைவுகளை ஏற்படுத்தியதும், ஈற்றில் தமிழினமே கைவிரித்து அகதிவாழ்வில் கூடுகளுக்குள் முடங்கிப்போய் நிற்பதும் வந்தனவே அந்த விளக்கீட்டுப் பிரச்சினை தோன்றியபோது உதயன் பத்திரிகையில் தமிழ்த்தாய் பஞ்சாங்ககாரரின் விளக்கம் என ஒன்று வெளியாகியிருந்தது பலரும் அறிந்ததே! அந்நீண்ட விளக்கக் கட்டுரையில் "பஞ்சாங்க அபிமானத்தால் ஆகம விரோதம் செய்யாதீர்கள். ஆகம விரோதம் சிவத்துரோகம். ஆதலால் விதி மீறிய தீபோத்ஸவத்தினால் நாட்டுக்குக் கேடு விளையும்;

2OO 6ists ang Ol
னயம் சம்பந்தமாக.
ஏ.அனுசாந்தன்
நவாவடுதுறை ஆதீனம்
மக்களுக்குக் கொடிய வியாதிகள் நேரிடும்; பசுக்கள் பிராணிகளுக்கு அழிவு வரும்" என்ற சாரப்பட ஆகம மேற்கோள்கள் காட்டி எழுதப்பட்டிருந்தது. ஆயினும் குருமார்களோ, கோயிற் தர்மகர்த்தாக்களோ, பக்த சனங்களோ இதனைப் பொருட் படுத்தவில்லை. இனிமேலாவது இவர்களுக்கு நல்லறிவுதலைப்பட சிவபெருமான் திருவருள்புரிவாராகுக.
சிவராத்திரி பற்றி இயம்பும் ஆகமங்கள் எதுவாக இருந்தாலும் மாசி மாதத்துத் தேய்பிறை சதுர்த்தசியே சிவராத்திரி என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. விசேடமாக உத்தர காரணாகமம்; "மாக பால்குனயோ கிருஷ்ண சதுர்த்தஸ்யாம் சிவராத்திரி" என்று தெளிவாகக் கூறியுள்ளது. இஃதிருக்க பஞ்சாங்க அபிமானிகளொவ்வொருவரும் "மாசி" என்று ஆகமங்கள் கருதுவதெது என்று ஆராய்வதிலே காலத்தைக் கடத்துகின்றனர். மேலும், "சிவராத்திரியை செளரமானப்படியே செய்ய வேண்டும்; சாந்திரமானப்படி செய்தலாகாது" என்றும்
தெளிவாக அவ்வாகமம் கூறியிருக்கின்றது.
"சௌரமானம் போன்று சாந்திரமானமும் கொள்ளத் தக்கது" என்று வேறோரிடத்திலே காரணாகமம் கூறுவதை இவர்கள் சிவராத்திரிக்கும் பிரமாணமாகக் காட்ட விழைவது காரியப் பேயாட்டமாகும். இப்பிந்திய விதி சிவனுக்குச் சாந்திர மானமே கூடாதோ என்ற ஐயநீக்கத்துக்கானதன்றி சிவராத்திரிக்கு ஏற்பட்டதன்றெனல் கூறாமேயமையும்.
2010 சிவராத்திரியைத் தைமாதத்திலே குறித்துள்ளது வாக்கிய பஞ்சாங்கம். இதேவாக்கிய பஞ்சாங்கத்தின் 1887/88, 1906/07, 1925/26, 1944/45 ஆம் ஆண்டுகளில் வந்த பிரதிகளில் சௌரமான மாசியில் நிகழும் சதுர்த்தசியையே சிவராத்திரியாகக் குறித்து வந்துள்ளதைக் காண்கின்றோம். 1963/64ஆம் ஆண்டின் வாக்கிய பஞ்சாங்கத்தின் மீதுதான் முதன்முதலில் ஆட்டம் நேர்ந்துள்ளதைக் காண முடிகிறது. இங்கேதான் பழைய இரகுநாதையரின் கணிப்பு பிழையானதா? அல்லது இப்போதைய கணிதர்கள் பிழையாகிச் செல்கின்றனரா? என்ற வினா எழுகின்றது.
இலங்கை சிவபூமி, முழுமையாகச் சைவ மக்களையே கொண்டிருப்பது; சிவாகம முறைப்படிதீகூைடி, ஆசார்யபிஷேகங்கள் பெற்ற சிவாசாரியர்களையே குருமாராகக் கொண்டு பூர்வக் கிரியை அபரக் கிரியைகளையும், கோயிற் கிரியைகளையும் நிகழ்த்தும் நர்டு (இங்குள்ள பிரபலமான விஷ்ணு தலங்கள் மூன்றிலும் சிவாசாரியர்களே நித்திய, நைமித்தியாதிகளைச் செய்து வருகின்றார்கள்). இவ்வளவில் நூற்றுக்கு நூறுவீதமும் சைவபரமானநாடு இலங்கை. ->

Page 6
இந்துசாதனம் 4.O
சைவ மக்களுக்கு வழிபாட்டுத் தானங்கள் பல உளவாயினும் "கோயில்" என்ற அதியுயர் உத்தரவாத முடையதாக வேத, சிவாகம, புராண, திருமுறைகளாதியயாவிலுஞ் சுட்டப்படும் தலம் சிதம்பரம் ஆகும். வேதாகம மந்திரங்களை ஒதும் முன்பும் பின்பும் சொல்லும் பிரணவ மந்திரம் எதற்காக என்பதையும், திருமுறையோதல், புராணபடனாதிகளின் முன்பும் பின்பும் சொல்லும் திருச்சிற்றம்பலம் ஏன் என்பதனையும் நன்கு சிந்திக்க வேண்டும் (பிரணவ மந்திரம் நடராஜப்பெருமானது நடனத்தின் வடிவம் ஆதலால் மந்திரங்களுக்கு முன்பும் பின்பும் ஒதப் படுகின்றது. சிதம்பரமாய் திருச்சிற்றம்பலத்திலேயே திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டதனாலும் ஐம்பூதவுலகிலே கேட்கும் அசுத்த மாயா சம்பந்தமான ஒலிகள், ஓசைகளைப் போலன்றி சுத்தமாயா சம்பந்தமானவையாகிய திருமுறைகள் சிதம்பரத்திற்கேயுரியன
é6
மஹா சிவராத்திரி கால
p56DIrísò 88IIIDD Sòran 7. OO Daofdpõ6ò 09.00 ജിഖത് அபிஷேகத் திரவியம் : பஞ்சகவ்யம் வஸ்த்திரம் : செம்பட்டாடை '; அர்ச்சனைப் பத்திரம் : த்ரிதள வில்வம், தாமரை ! நிவேதனம் : பால் அன்னம், மிளகு சாதம் ! வேத பாராயணம் : இருக்கு வேதம், சிவபுராணம் : கந்தம் : பச்சைக் கற்பூரம் சேர்த்து
அரைத்த சந்தனம்
தூபம் : வாசனாதி திரவியங்கள் கலந்த !
JITthrily Iroof
தீபம் : புஷ்ய தீபம், அலங்கார பூஜை
epá5pmíò BILDíÎò SòJan O. OO D6 offlyphéð 35.00 Daof66Oor
அபிஷேகத் திரவியம் : பலோதகம், தேன், நெய் வஸ்த்திரம் : 6holodoILIt'LITGOL அர்ச்சனைப் பத்திரம் : முட்கிளுவை, விளத்தி, வில்வம் நிவேதனம் : கிருஷான்னம், நெய் கலந்த :
LIGOasily filesoir
வேத பாராயணம் : சாமவேதம், சிவபுராணம் கந்தம் : கஸ்தூரி கலந்த சந்தனம் தூபம் : பச்சைக் கற்பூரம் தேவதாரு
கலந்த தூபம்
தீபம் : பஞ்சமுக தீபம், அலங்கார റ്റ്രജ
மேலே குறிப்பிட்ட திரவியங்களுடன் விஷேட அலங்கார ஷோடசோபசார பூஜைகளும் செய்து, பஞ்ச வழிபட்டு மஹா சிவராத்திரி விரதத்தின் பலனைப் பூரணட
மாசி மாதத்தில் கிருஷ்ணபசுஷ் சதுர்த்தசியில் மத
பெருமானும், திரேதாயுகத்தில் முருகனும், துவாபர ய அனுஷ்டித்ததாக வாதுளாகமம் கூறுகின்றது.
O6

2OO விரோதி தை 01
என்பதாலுமே திருமுறைகள், புராணங்களை ஒது முன்பும் பின்பும் திருச்சிற்றம்பலம் என்று பக்திபாங்காகக் கூறப்படுகின்றது). ஆதலால் விரத விழாக்களை நிர்ணயித்துக்கொள்ளும் பஞ்சாங்க காரர்கள் சிதம்பரத்திலே எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்பதை யறிந்து அவ்வாறே நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானது.
பஞ்சாங்ககாரர் திருந்தாவிடின் உத்தரவாதமுடைய சைவபரிபாலனசபை, நல்லை ஆதீனம், இந்துக்குருமார் ஒன்றிய - வித்வசபை, சைவக் குருமார் - அர்ச்சகர்சபை, இந்துமாமன்றம், இந்துப்பேரவை போன்ற நிறுவனங்கள்கூடி சிதம்பரதல நிகழ்வுகளுக்கு விரோதமாகாமல் விரதங்களையும் விழாநாள் களையும் நிர்ணயித்து ஒரு பஞ்சாங்கம் வெளியிட்டாலும் தகும். இதன்மூலம் சிவாபராதத்தினின்றும் நாம் தப்பமுடியும். இனியாவது நன்மை விளையும். 人
பம்
) ിഖ്യ fu06്
Šam emī Š. O.00 Dafgpš 2.00 Dafa III
அபிஷேகத் திரவியம் : பஞ்சாமிர்தம், பால்
வஸ்த்திரம் : மஞ்சள் பட்டாடை அர்ச்சனைப் பத்திரம் : குருந்தமிலை, வில்வம், தாமரை நிவேதனம் : பாயாசன்னம், பலாப்பழம்,
வெண்பொங்கல்
வேத பாராயணம் : யசுர்வேதம், திருவாசகம்
கந்தம் : கஸ்துரி கொரோசனை கலந்த
சந்தனம்
துபம் : ежёф6lцпцp.
தீபம் நகூடித்திர தீபம், அலங்கார பூஜை
நான்காம் ஐாமம் அதிகாலை 04.00 மணிமுதல் 06.00 மணிவரை அபிஷேகத் திரவியம் : கருப்பஞ்சாறு,
கந்தோதகம், பால் வஸ்த்திரம் : நிலப்பட்டாடை அர்ச்சனைப் பத்திரம் : விளாத்தி, வில்வம், தாமரை,
நீலோற்பலம், நந்தியாவட்டை
நிவேதனம் : சுத்தான்னம், சர்க்கரைப்
பொங்கல், பழவகைகள்
(665 LIITTILLIGIOOTh அதர்வனவேதம், திருவாசகம்
கந்தம் : புனுகு, மருகலந்த சந்தனம்
தூபம் : அகிற்பொடி
தீபம் : வில்வதீபம், அலங்கார பூஜை
திரவ்ய அபிஷேகம், கலசாபிஷேகம், சங்காபிஷேகம், ாக்ஷர ஜபம், சிவபுராணம், திருவாசகம், திருமுறைஓதி மாகப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.
ஹா சிவராத்திரி விரதத்தைக் கிருதயுகத்தில் விநாயகப் புகத்தில் பிரம்ம தேவரும் கலியுகத்தில் விஷ்ணுவும்
:سانیت)/)
சர்வதேச இந்துமத குரு பீபாதிபதி முநீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சார்யார்

Page 7
இந்துசாதனம் 4.O
சிெவ ஆலயங்களில் நடைபெறும் கிரியைகளில்
பூர்வாங்கக் கிரியைகள் எனப்படும் ஆரம்பக் கிரியைகள் பற்றியும்
பஞ்சகவ்ய பூஜை, புண்யாக வாசனம் என்பன பற்றியும் அறிந்துகொண்டோம். நமது பெயர் நட்சத்திரம் முதலியவற்றைக் கூறிச் சங்கல்பம் செய்யும்போதும் அங்கு நிகழ்வன என்ன என்பதைமட்டுமன்றி, அங்கு சொல்லப்படும் மந்திர வாசகங்களின் பொருள்களையும் கண்டறிந்தோம். அதனைத் தொடர்ந்து இப்போது, நித்திய பூஜைக் கிரியைகள் என்ற வகையில் நாளாந்தம் நமது ஆலயங்களில் நடைபெறும் கிரியைகளின் வகைகள், கால நியதிகள், கிரியையின் அங்கங்கள், அவற்றின் வரிசைக்கிரமம் முதலியனவற்றை இங்கு நோக்கலாம். இங்கு செயற்பாடுகள் மிக அதிகமாகவும் ஒதப்படும் மந்திரங்கள் குறைவாகவும் இருப்பதால் மந்திரங்களின் பொருள் என்பது இங்கு குறைவாகவே இருக்கும். செயல்முறைகள் ஆகிய கிரியைகளின் விளக்கங்களே இக்கட்டுரை யில் அதிகம் இடம்பெறும் என்பது கவனிக்கத்தக்கது.
கிரியைகளின் வகை
கிரியைகளை ஆன்மார்த்தக் கிரியைகள், பரார்த்தக்
கிரியைகள் என வகுப்பது ஒரு முறை. சிவாசாரியர் (அல்லது ஒரு
அடியார்) தாமே
எங்கள் விபயரால் இறைவனுக்கு "இவர்" என்ன சொல்கிறார்? 06
قفقالققیاسyuقیقa
தமது ஆன்ம லாபம் கருதிச் செய்கின்ற சந்தியாவந் தனம், சிவபூஜை முதலிய நித்திய கர்மானுஷ்டானங்கள் ஆத்மார்த்தம் ஆகும். ஆலயங்களில் அடியார்களுக்கும், ஊருக்கும் உலகுக்கும் நன்மை வேண்டி (பொதுநலம் கருதி அல்லது பிறருக்காக) செய்யப்படும் கிரியைகள் பரார்த்தமாகும்.
பரார்த்தக் கிரியைகள் நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை, காமியக் கிரியை என மூன்றாக வகுக்கப்படும். நித்தியம் எனப்படுவது நாளாந்தம் நடைபெறும் கிரியைகள், நைமித்திகம் என்பது குறித்த சில விசேட நாள்களிற் செய்யப்படும் கிரியைகள். உற்சவங்கள், விரதகால வழிபாடுகள், மஹோற்சவம் முதலியன இதில் அடங்கும். காமியம் என்பது தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கிணங்க அவர்களது நேர்த்திக்கடன், வேண்டுதல் முதலியவற்றை முன்னிட்டுச் செய்யப்படும் கிரியைகள் ஆகும்.
ஆலயத்தின் அளவு, தகுதி, பொருள்வளம், அடியார் களின் தொகை முதலியவற்றின் அடிப்படையில் ஒருகாலப் பூஜை முதல் ஆறு காலப்பூஜை வரை நித்திய பூஜை நடைபெறுவதுண்டு. திருச்செந்தூர் முதலிய மிகச்சில ஆலயங்களில் பன்னிரு காலப்பூஜை நிகழ்வதும் உண்டு. இவ்வாறு நிகழும் பூஜைகள் நிகழ்த்தப்படவேண்டிய காலங்கள் எவை என்பதையும் ஆகமங்கள் தெளிவுபடுத்தியுள்ள. "சைவ கால விவேகம்" முதலிய வழிநூல்களிலும் அவை விபரிக்கப்படுகின்றன.
சூரியன் உதிப்பதற்குச் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கு முன் நிகழவேண்டியது முதலாவது பூசை. இது உஷத் காலப்பூஜை எனப்படும். இரண்டாவதாக நிகழும் காலை சந்திப் பூஜை, சூரியன் உதித்து மூன்று மணித்தியாலங்களுக்குள் நிகழும். உச்சிக் காலப்பூஜை நடுப்பகலுக்குரியது. சூரியன் மறைவதற்கு ஒன்றரை
 
 
 
 
 
 

2OO விரோதி தை 01
மணி நேரத்திற்கு முன் நிகழ்வது சாயரட்சைப் பூஜை (சாயங்காலப் பூஜை). இதன் பின் நிகழும் ஐந்தாவது பூஜைக்கு இரண்டாங்காலப் பூஜை என்று பெயர். சாயங்காலப் பூஜையிலிருந்து ஒன்றரை மணித்தியாலத்தின் பின் நிகழ்வது இது. இரண்டாம்காலப் பூஜை நடந்து ஒன்றரை மணித்தியாலம் வரை அர்த்தயாமப் பூஜைக்குரிய காலமாகும்.
தொகுத்து நோக்கின் அதிகாலை நான்கு மணி, காலை எட்டு மணி, பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் நாலரை மணி, மாலை ஆறுமணி, இரவு ஏழரை மணி ஆகியவை முறையே ஆறுகாலப்பூஜைகளுக்கும் உரிய நேரங்கள் எனலாம்.
கிரியைகளின் ஒழுங்குமுறை
பூஜைக் காலங்கள் அதிகரிக்கும்போது எல்லாக் கால பூஜைகளிலும் எல்லாச் சந்நிதானங்களுக்கும் பூஜை நிகழ்வ தில்லை. எந்தெந்தக் காலப் பூஜைகளின்போது எந்தெந்த சந்நிதிகளில் பூஜை நிகழ்வதவசியம் என விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அர்த்தஜாமப் பூஜையின்போது விநாயகர் சந்நிதியிலும் சுவாமி சந்நிதியிலும் அம்பாள் சந்நிதியிலும் மட்டும் பூஜை நிகழ்ந்தபின் பள்ளியறைப் பூஜை நிகழும். இறுதியில்
வைரவசுவாமியின் பூஜை நிகழ்ந்து அங்கேயே
திறப்புக்கள் வைக்கப்படும்.
,வித்யாபூஷணம் 2۔ ۔ NGrupulëse; ப. சிவானந்தசப்மா B.A. (Hons.) (GBatsmůLmruiu floomb)
காவல் தெய்வமானவைரவரிடம் காவல் கடமையை ஒப்படைத்தலை இதுகுறிக்கும்.
மேலும், காலைப் பூஜையில் சூரியனுக்கு முதற்பூஜை நிகழ்ந்தபின்னரே விநாயகர் சந்நிதியில் பூஜை நிகழும். இதேபோல் மாலைப்பூஜையில் சந்திரனுக்குப்பூஜைமுதலில் நிகழும். ஆலயத்தில் என்ன முறையில் இக்கிரியைகள் நடைபெற வேண்டும் எனவும் பூஜைகளின்போது என்ன நிகழ்கின்றன என்பதையும் நோக்குவோம்.
சிவாசாரியர் பரார்த்த பூஜையாகிய ஆலய பூஜையை நிகழ்த்துவதற்குத் தகுதியாக ஆத்மார்த்த பூஜையை முதலில் செய்வர். அதிகாலையில் நித்ய கர்மானுஷ்டானங்கள் எனப்படும் காலைக்கடன்கள் ஸ்நானம் முதலியனவும் சந்தியாவந்தனம், சிவபூஜை என்னும் (நித்யாஹ்னிக த்வயம்) இரண்டையும் நிறை வேற்றியபின் ஆலயம் செல்வர். அல்லது ஆலயம் சென்று அங்கேயே இந்த ஆத்மார்த்தக் கிரியைகளைச் செய்வாருமுளர்.
ஆலயத் திறவுகோல் முதல்நாள் இரவுப்பூஜை நிறைவேறியபின் கூேடித்ரபாலகராகிய வைரவப் பெருமானிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவரிடம் பிரார்த்தனை செய்து அவரது அனுமதியுடன் அதனைப் பெற்று மூலாலயத்தையும் ஏனைய பரிவாரங்களையும் அஸ்திரமந்திரம் (ஒம் அஸ்த்ராய நம:) உச்சரித்துத் திறப்பர்.
பஞ்சசுத்தி
ஆத்மகத்தி, மந்த்ர சுத்தி, ஸ்தானகத்தி, திரவ்ய சுத்தி, லிங்கசுத்தி ஆகிய பஞ்சசுத்திகளைச் செய்தபின் பூஜை ஆரம்பிக்கப்பிடும்.
=>

Page 8
இந்துசாதனம் 4.O
ஆத்மசுத்தி என்பது சிவாசாரியர் தம்மை மந்திரங்களி னால் புனிதமாக்குதல், மந்த்ர சுத்தி என்பது மந்த்ரங்களைச் சரியான முறையில் சொல்வதற்குத் தம்மைத் தயார்செய்து கொள்ளுதல் எனக் கருதலாம். (சங்கீத பாடத்திற்கு முன் சுருதி சேர்ப்பது போல) ஸ்தானசுத்தி என்பது கிரியை நிகழும் இடத்தைப் புனிதப்படுத்தல், திரவிய சுத்தி என்பது பூஜைக்குப் பயன்படும் பொருட்களையும் உபகரணங்களையும் புனிதப்படுத்தல், லிங்க சுத்தி என்பது பூஜிக்கப்படும் தெய்வ உருவைப்புனிதப்படுத்தல்.
கரந்நியாசம், அங்கந்நியாசம் முதலியவற்றைச் செய்து சிவோஹம் பாவனை செய்வது ஆத்மகத்தி ஓம் முதல் நமஹ வரை மஹாமந்திரங்களை உச்சரித்தல் மந்திரசுத்தி திக்பந்தனம் செய்து பாத்ய அர்க்ய ஆசமனியங்கள் கல்பித்து (கலசபூஜை செய்து, சாமான்யார்க்கியம் கூட்டி) தெளிப்பதன்மூலம் ஸ்தானசுத்தி, திரவிய சுத்தி என்பன நிகழும். இதன்பின் மூர்த்திகளின் நிர்மாலியங்கள் களைந்து நீரினால் அபிஷேகம் செய்தல் லிங்கசுத்தி.
சிவோகம்பாவனை
ஆத்ம சுத்தியில் சிவாசார்யர் தாமே சிவமாந்தன்மை பெறுகிறார். முத்தி நிலைகளில் சாரூபமுத்தி என ஒன்று உண்டு.
அந்நிலையில் ஆன்மா சிவரூபம் எய்துகிறது. ஸ்னபனகும்ப பூஜையில் (இதுபற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்) சிவனைச் சூழ்ந்திருக்கும் இரண்டாவது ஆவரண தேவர்கள் யாவரும் அவரை நோக்கியவாறு அவரது வடிவத்தையே பெற்றிருப்பதை அவதானிக்கலாம். இவ்விதமாக சிவனைப் பூஜிக்கும்
சிவாசார்யரும் சிவமாம் தன்மை பெறுதல் அவசியம். அதனால் சகளிகரணம் அல்லது சிவோகம்பாவனை எனப்படும் கிரியைழுலம் தம்மைச் சிவசொரூபமாக்கிப் புனித நிலையடைந்த பின்னரே சிவனுக்குரிய பூஜை ஆரம்பமாகிறது. உயர்தன்மை வாய்ந்த மந்திரங்களை உச்சரித்தவாறு தமது உடலின் பாகங்களைத் தொடுவதன்மூலம் அந்த மந்திர சக்திகளை அந்த உறுப்புக்களில் பதித்தல் மரபு. பஞ்ச ப்ரம்ம மந்திரங்கள் எனப்படும் ஐந்து மந்திரங்களும் ஷடங்க மந்திரங்கள் எனப்படும் ஆறு மந்திரங்களும் சேர்த்துப் பதினொரு மந்திரங்கள் சம்ஹிதா மந்திரங்கள் எனப்படும். இவை நமது சிவாகமங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. முதலைந்தும் (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) இறைவனின் ஐந்து முகங்களையும் ஏனைய ஆறும் இறைவனது இருதயம், சிரசு, சிகை, ஆடை, கண்கள், ஆயுதம் என்னும் உறுப்புக்களையும் குறிக்கின்றன.
சிவோகம்பாவனை செய்யும்போது நிகழ்வதைச் சிறிது விரிவாக நோக்கலாம். ஓம் அஸ்த்ராய பட் என இடது கையால் வலது கையை ஒரு தடவையும் வலது கையால் இடது கையை இரு தடவையும் தடவுதல் மூலம் சுத்திசெய்தபின் ஓம்சக்தயே வளஷட் என இரு கைகளாலும் நெற்றிக்கு நேரே வணங்கி, நெற்றிப்பொட்டி லிருந்து பெருகும் அமிர்த தாரையால் கழுவியதாகப் பாவித்தபின் இருகைகளையும் ஒருங்கு சேர்த்து, இரு பெருவிரல்களாலும் (கட்டைவிரல்) உள்ளங்கைகளில் தொட்டு
 

2OO விரோதி தை 01
ஓம் ஹாம் சிவாசனாயநம: ஒம் ஹாம் சிவமூர்த்தயே நம: என்று பதித்தபின் ஓம் ஹாம் ஈசானமூர்த்தாயநம:
எனச்சுட்டுவிரலால் பெருவிரலிலும் அதன்பின்
ஒம் ஹேம் தத்புருஷ வக்த்ராயநம: ஒம் ஹ"ம் அகோரஹ்ருதயாயநம: ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாயநம: ஓம் ஹம்சத்யோஜாத மூர்த்தயே நம: என்னும் நான்கு மந்திரங்களாலும் பெருவிரலால் முறையே சுட்டுவிரல் முதல் சுண்டு விரல் வரையான நான்கு விரல்களிலும் நியசித்தபின் இரு பெருவிரல்களாலும் உள்ளங்கைகளில் ஓம் ஹாம் வித்யாதேஹாய நமஹ எனவும் நடுவிரல்கள் மூன்றினாலும் உள்ளங்கையில் ஒம் ஹெளம் நேத்ரேப்யோ நம: எனவும் பதிக்கப்படுகிறது.
இதன்பின் கட்டை விரல்களால் முறையே சுண்டு விரல் (சின்ன விரல்) முதல் சுட்டுவிரல்வரை
ஓம் ஹாம் ஹ்ருதயாயநம: ஒம் ஹரீம் சிரசேநம: ஓம் ஹ9ம் சிகாயை நம: ஓம் ஹேம் கவசாய நம:
எனவும் சுட்டுவிரலால் கட்டை விரலில் ஓம் ஹஹ அஸ்த்ராய நம: எனவும் பதித்தபின் ஓம் சிவாய வெளஷட் என அவகுண்டனம் செய்தபின் மறுபடியும் மூலமந்திரம் பதித்தபின் அங்க நியாசம் செய்யப்படுகிறது.
ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவாசனாய நம: ஒம் ஹாம் சிவ மூர்த்தயே நம: எனவும் வலதுகைக் கட்டைவிரல், மோதிர விரல்களால் சிரசில் ஒம் ஹோம் ஈசான மூர்த்தாய நம: எனவும் முகத்தில் ஒம் ஹேம் தத்புருஷ வக்த்ராயநம எனவும் ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் அகோர ஹ்ருதயாய நம: எனவும் மர்மஸ்தானத்தில் ஒம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம: எனவும் பாதங்களில் ஓம் ஹம் சத்யோஜாத பாதாப்யாம் நம: எனவும் ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் வித்யாய தேஹாய நம: எனவும் கண்களில் ஒம் ஹெளம் நேத்ரேப்யோ நம: எனவும் ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: எனவும் தலையில் ஓம் ஹிம் சிரஸே ஸ்வாஹா எனவும் குடும்பியில் ஓம் சிகாயை வெளஷட் எனவும் மார்பின் நடுவில் ஒம் கவசாய நம: எனவும் உள்ளங்கையில் ஒம் அஸ்த்ராய நம: எனவும் மந்திரங்களைப் பதிப்பர்.
இந்தப் புனிதத் தன்மை தீய சக்திகளால் குலைந்துவிடாமல் காப்பதற்காக ஒம் அஸ்த்ராய நம: திக்பந்தனம் செய்வதன்மூலம் நாற்றிசையும் காவலிடப்படுகிறது. ஒம் கவசாயநம அவகுண்டனம் செய்வதன் மூலம் தம்மைச்சூழ ஒர் அகழி அமைந்திருப்பதாகப் பாவனை செய்யப்படுகிறது.
அபிஷேகம்
இதன்பின் முன்னர் கூறிய ஏனைய சுத்திகள் நடைபெற்று பிறகு இறைதிருவுருவத்துக்குரிய அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று அதன்பிறகே தீபாராதனை ஆரம்பமாகிறது. விசேட ->

Page 9
இந்துசாதனம் 4.O
அபிஷேகங்கள் அடியார்கள் கண்டின்புறும் வகையில் நிகழ்ந்தாலும் சாதாரணமாக அபிஷேகங்கள், அலங்காரங்கள் திரையிட்டிருக்கும் நிலையில் நடைபெறுவது வழக்கம். அபிஷேகம் என்ற சொல் மந்திர நீராட்டு அல்லது முழுக்கு என்ற வகையில் சாதாரணமாக இறைவனை முழுக்காட்டும் நித்திய சேவையைக் குறிப்பதெனினும் பலர் இதை அறியாதிருக்கின்றனர். கும்பம் வைத்து திருமுழுக் காட்டுவதுமட்டுமே அபிஷேகம் என நினைக்கிறார்கள்.
மூர்த்திகளின் திருவுருவங்களை மந்திர நீரால் முழுக்காட்டு தலே அபிஷேகம் எனப்படுகிறது. சுத்தமான நீர் இதற்கு அவசியம். ஆற்று நீர் கிடைக்கும் இடங்களில் அதனைப் பயன்படுத்துவர். வசதியுள்ள இடங்களில் புனித நதியிலிருந்து நீரை எடுத்து யானை மீது ஏற்றி சகல மரியாதைகளுடனும் ஆலயத்துக்குக் கொண்டு வந்து அபிஷேகத்திற்குப் பயன்படுத்துவதுண்டு. பொதுவாகக் கோயிலில் மூலஸ்தானத்திற்கு ஈசான திசையில் மகாமண்ட பத்துக்கு வடக்கே அமைந்திருக்கும் தீர்த்தக் கிணற்றிலிருந்து அபிஷேகத்திற்கு நீரைப் பெறுவர்.
ஏறக்குறைய அரைமணித்தியாலத்திற்கு மேற்பட்ட நேரத்தை அபிஷேகத்திற்கு ஒதுக்குதல் வேண்டும் என ஆகமங்கள் உரைக்கின்றன. அபிஷேக நீரில் பாதிரி, அலரி, தாமரை முதலிய மலர்களை இடுவதன் மூலம் நறுமணமும் குளிர்ச்சியும் ஊட்டப்படுவ துண்டு.
நல்லெண்ணெய், அரிசிமா, மஞ்சள்மா, அபிஷேகக்கூட்டு (சம்பக்கூட்டு), பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், வெந்நீர், தேன், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர், அன்னம், விபூதி, குங்குமம், சந்தனம், கும்பஜலம் என்பன அபிஷேகத்துக்குரிய விசேஷ திரவியங்களாகும். இவற்றை இவ்வரிசையிலே பயன்படுத்துவது முறை. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் என்பன பூர்வாங்கக் கிரியைகளில் கூறப்பட்டபடி ஏற்கனவே பூஜித்துத் தயார் செய்யப்பட்டிருக்கும். அபிஷேக ஆரம்பத்திலும், இவை ஒவ்வொன்றும் அபிஷேகம் செய்வதற்கிடையிலும் சுத்த ஜலத்தால் அபிஷேகம் செய்வது அவசியம். ஒவ்வொரு தடவையும் கற்பூர நீராஜனம் செய்வது நன்று.
இவ்வளவு காரியங்களும் தினசரி செய்யப்படுவது கஷ்டமே. ருத்ராபிஷேகம் முதலியன நிகழும் வேளைகளிலாவது இவற்றைக் கிரமமாகக் கடைப்பிடிப்பது ஆலயத்தில் தெய்வ சாந்நித்தியத்தை வளர்க்க உதவும். நித்திய பூஜையின்போது சுத்த ஜல அபிஷேகம் முக்கியமாக நடைபெறும்.
அபிஷேகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது பூநீருத்ரம், சமகம், புருஷசூக்தம், ழரீசூக்தம், பஞ்ச சாந்தி முதலிய வேத மந்திரங்கள் ஒதப்படுதல் அவசியம். அம்பிகையின் ஆலயங்களில் விரிவான அபிஷேகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பூரீலலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், லலிதா திரிசதி ஸ்தோத்திரம் என்பன ஒதப்படும் வழக்கமும் உண்டு. வேதகோஷம் நிகழ்த்த வாய்ப்பில்லாத இடங்களில் தமிழ் வேதமாகிய திருமுறை களைப் பண்ணுடன் ஒதுவதும், நாதஸ்வர கானம் இசைப்பதும் பொருத்தமானவை.
அபிஷேகம் ஆரம்பித்து அலங்காரம்வரை இடையீடின்றித் தொடர்ந்து நடத்துதல் முக்கியம். ஆரம்பத்தில் எண்ணெய் அபிஷேகத்தின்போது நீரை வார்ப்பதுபோல வார்த்து விடுதல் முறையன்று. இரு கைகளாலும் பூசித் தேய்த்து விடுவதும், கைகால் பிடித்து விடுதல் போன்றவற்றைப் பாவனையாகச் செய்வதும் நன்று. இவ்வாறு சில சிவாச்சாரியர்கள் பொறுமையுடனும், பக்தியுடனும் செய்கின்றபோது தரிசனம் செய்யும் பக்தர்கள் அதிலே ஒன்றிப் போய்க் கண்ணிர்மல்கப்பார்த்துக் கொண்டிருப்பர்.
அன்னாபிஷேகம் நிகழும் போது திரையிடப்படுவது மரபு.

2OO விரோதி தை 01
பச்சரிசி அன்னத்தை உருட்டி உருட்டி இறைவன் திருவுருவிலே அங்கங்கள் மேல் பதித்து உருவம் முழுவதும் அன்ன உருவமாகக் காட்சி தரும்படி செய்து குங்குமம் புஷ்பம் முதலியவற்றால் அலங்கரித்த பின் திரை விலக்கிக் கற்பூர நீராஜனம் செய்வார்கள். அன்னாபிஷேகத்தில் செய்வதுபோல் அரைத்த சந்தனத்தைச் சாத்தி அலங்கரித்தல் சந்தனக்காப்பு எனச் சொல்லப்படுகிறது. சந்தனக் காப்பு நோய்களை நீக்குவதைப் பலனாகக் கொண்டது. ஒவ்வொரு பொருளால் அபிஷேகம் செய்வதற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
அலங்காரம்
அபிஷேகம் நிறைவுற்றதும் தோய்த்துலர்ந்த திருவொற் றாடையினால் ஈரம் போகுமாறு உத்வர்த்தனம் செய்து (துடைத்து) அதன்பின் விதவிதமாக அலங்கரிப்பர். ஒரு தாய் தன் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி நீராட்டுவாளே, அதே அளவு தாய்மையும், பாசமும் பொங்க இவற்றைச் செய்யவேண்டும். இறைவனே நமக்குத் தாயாய் இருக்கும் பேரருளாளன். எனினும் குழந்தைகள் தமது தாய் தந்தையர்க்குத் தாமே தலைசீவி விடுதல், அலங்கரித்தல் முதலிய பணிகளை விருப்புடன் செய்து மகிழ்வது போல நாமும் நமது தாயுந் தந்தையுமாயிருக்கும் இறைவனுக்கு இவ்வாறு பணிசெய்து மகிழ்தல் இனிமை பயக்கும் ஒர் அனுபவமாகும்.
இறைவனுடன் ஓர் இறுக்கமான பற்றுதலையும், நெகிழ்வோடு கூடிய பக்தி உணர்வையும் இயல்பாகவே இனிமை, கனிவு, பொறுமை, பாசம், தாய்மை, கருணை, தூய்மை ஆகிய நற்குணங்களையும் எம்மிடத்தில் வளர்க்க இவை பயன்படும். குழந்தைகளுக்காகத் தாய் மருந்துண்ணும் தன்மைபோல ஆணவாதி மல அழுக்குகளைக் களைந்து தூய்மை பெறுவதற்காக ஆன்மாக்கள் திருவருட்கடலில் திருமுழுக்காடுவதன் அவசியம் பற்றி இறைவனையே நாம் திருமுழுக்காட்டி இன்பமடைகின்றோம். அவனது திருவுருவம் குளிர அவனது உள்ளம் குளிரும். ஆண்டவனின் அகம் குளிர இவ்வுலக மாந்தரின் இதயமெல்லாம் குளிருமன்றோ?
நம்மைக் காக்கத் தாமே வெண்ணிறு பூசி நிற்கும் வைத்திய நாதனாகிய பரம்பொருளை நமக்காக நாம் நீராட்டி மகிழ்கின்றோம்.
"உன்னைச் சிங்காரித்துன்னழகைப் பாராமல்
என்னைச் சிங்காரித்திருந்தேன் பராபரமே" என்று கழிவிரக்கமுற்றுப்பாடுகிறார் தாயுமானவர்.
அபிஷேகம் நிறைவுற்றதும் வாசனைப் பொருள்களினால் தூபமிட்டு விதவிதமான ஆடை ஆபரணங்களாலும், மலர் மாலைகளாலும், சந்தனம், குங்குமம் முதலியவற்றாலும் அலங்காரம் செய்வர்.
நைவேத்தியம்
இறைவனுக்கு அமுது செய்வித்தலையே நைவேத்தியம் என்கின்றோம். விஷேச அபிஷேகங்களைத் திரை நீக்கி அடியார்கள் தரிசிக்கும் வகையில் செய்வர். அதன்பின் திரையிட்டு அலங்காரம், தூபம், நைவேத்தியம் என்பன நிகழ்த்துவர். உணவிற்கு நிவேதனம், அன்னம், அமுது, ஹவிசு என்று பலவகையான பெயர் வழங்குகிறது. நன்கு சமைக்கப்பட்ட அன்னம் (சாதம்) தினசரி நைவேத்தியமாகப் பயன்படுத்தப்படும். சுத்தோதனம் என்று இதனைக் கூறுவர். பச்சரிசியே நைவேத்தியத் திற்குரியது. பஞ்சஹவிஸ் என்று ஐவகையாகக் கூறப்படும் சுத்தான்னம், பாயசான்னம், எள்ளன்னம், பயற்றன்னம், சர்க்கரை யன்னம் என்பனவும் புளிச்சாதம், எலுமிச்சம்பழச்சாதம், தயிர்ச் சாதம் என்னும் பலவயைான அன்ன வகைகளும் மோதகம், வடை, முறுக்கு முதலிய சிற்றுாண்டி வகைகளையும் நைவேத்தியமாகப் பயன்படுத்துவர்.

Page 10
இந்துசாதனம் 4. O
இவற்றைத் தயார் செய்வதற்காக ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி அமைந்திருக்கும். பரிசாரகர் கள் எனப்படுவோர் இதனைத் தயார் செய்வதற்கு நியமிக்கப்படுவர். இவர்கள் சிவதீஷை பெற்றவர்களாயும், நித்தியகர்மானுஷ்டானங் களை உடையவர்களாயும், ஆசாரசீலர்களாயும் இருத்தல் வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, நன்கு கனிந்த வாழைப்பழங்கள், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம் முதலிய பழவகைகள் என்பன நிவேதனத்திற்கு உகந்தன. பழங்கள் நன்கு கனிந்தவையாக இருப்பது அவசியம். நமது கனிந்த உள்ளத்தை ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்கும் பாவனையே கனிகளை நைவேத்தியம் செய்வதன் உட்கருத்து. அதேபோல அவற்றிலுள்ள இனிமையும், சுவையும் எமது வாழ்க்கையில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக வும் கொள்ளலாம்.
வாழைப்பழத்தை நிவேதனம் செய்வதில் நம்மவரிடையே ஒரு தவறான மனப்பான்மை காணப்படுகிறது. கதலி வாழைப்பழம் தவிர்ந்த ஏனைய இனங்களான கப்பல், இதரை முதலியவற்றைச் சுவாமிக்குச் சமர்ப்பிக்கக்கூடாது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். "கதலிப்பழம் நிவேதயாமி" என்று சிவாச்சாரியர்கள் சொல்வதைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் பிழையாக விளங்கிக் கொண்டமையே இதற்குக் காரணம். கதளி என்ற வடமொழிச் சொல்லின் பொருள் வாழை. கதளி, பழம்' என்றால் வாழைப்பழம். இச்சொல் வாழையின் எல்லா இனங் களையும் குறிக்கும். எனவே எல்லா இன வாழைப்பழங்களையும் நைவேத்தியம் செய்யலாம்.
வெற்றிலை பாக்கு, பழவகை முதலியவற்றையும், பக்தர்கள் செய்து படைக்கின்ற பொங்கல் முதலியவற்றையும் தீபாராதனை, அர்ச்சனை என்பவற்றின் பின் நிவேதனம் செய்வதே மரபு.
தேங்காயைக் குடுமியுடன் உடைத்து அதன்பின் குடுமியை நீக்கி இரு பாதிகளையும் நிவேதிப்பது வழக்கம். மாசு நீக்கிய வெள்ளையுள்ளத்திற்குத் தேங்காய் குறியீடாக அமைகிறது. அதை மூடி நிற்கும் பலமான ஒட்டை உடைத்த பின்பே தேங்காயின் வெண்மை புலப்படுகிறது. வலிய மல நீக்கத்தை இது குறிக்கின்றது.
தீபாராதனை
பூஜையின் முக்கிய அம்சம் தீபாராதனையே. பலவகையான தீப வகைகளை இறைவனுக்குக் காட்டி ஒளியேற்றி பக்தர்கள் இறைவன் திருக்கோலத்தைக் கண்டுகளிக்க வகை செய்வது தீபாராதனை. (ஆராதனை - வழிபாடு) தீபங்களால் வழிபடுதல் என்பது பொருள்.
தீபங்கள் பல வகையாக உண்டு. பொதுவாக வழக்கி லுள்ளவை. (வரிசைப்படி) அடுக்குத்தீபம், நாகதீபம், பஞ்சமுகதீபம், வில்வதீபம், கும்பதீபம், ஈசானாதி பஞ்சதீபங்கள், நட்சத்திரதீபம், ஒற்றைத்தீபம், கற்பூரதீபம், பஞ்சாராத்திகை என்பனவாம்.
கும்பதீபமும், ஈசானாதி பஞ்சதீபங்களும் முதலிலேயே ஏற்றிவைக்கப்பட்டு அவற்றுக்கு உபசாரங்கள் செய்யப்படும். முதலில் கும்பதீபம் காட்டப்படும். அதன் நான்கு திக்குகளிலும், ஈசான திக்கிலுமாக (வடகிழக்கு) வைக்கப்பட்ட ஐந்து தட்டுக்களும் ஈசானம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்ற வரிசைப்படி எடுத்துக்காட்டப்படும். (வலமாக வருகின்றதெனினும் வடக்குத் தட்டின் பின்னரே மேற்குத் தட்டு என்பது கவனிக்கத்தக்கது) இதன்பின் ஒற்றைத்தீபம் காட்டப்படும்.
தீபங்கள் காட்டும்போது வலமாக காலிலிருந்து தலை வரை மும்முறை சுற்றி அந்தந்த இடங்களில் நிதானமாக நிறுத்திக்

D2OO விரோதி தை 01
காட்டவேண்டும். முதல்முறை சுற்றிக் காட்டுவது உலக நன்மைக்காகவும், இரண்டாம்முறை காட்டுவது கிராம நன்மைக் காகவும் மூன்றாம்முறை காட்டுவது உயிர்களின் நன்மைக்காகவும் என ஆகமங்கள் கூறும்.
தீபங்களின் பின் கண்ணாடி, குடை, சாமரை, விசிறி, கொடி, ஆலவட்டம் என்ற உபசாரப்பொருட்களையும் முறைப்படி காட்டி உபசரிப்பார். ஒவ்வொரு தீபத்தையும், உபசாரப் பொருட்களையும் காட்டும்போது அவற்றுக்குரிய வேத மந்திரங்களை வேதாத்யயனம் பயின்ற அத்யயனபட்டர் ஒதுவார்.
தீபங்கள் பல முகங்களையுடையனவாக ஆரம்பித்து படிப்படியாகக் குறைந்து ஒரு முகமுடையதாக நிறைவு பெறுகிறது.
இதுவும் ஆன்ம கோடிகள் பலபொருளுடன் ஒன்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.
அர்ச்சனை
இதனையடுத்து நிகழ்வது அர்ச்சனை. அதுபற்றி விரிவாகத் தனியே முதலில் நோக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு அது பற்றிக் கூறப்படவில்லை.
அர்ச்சனையின் இறுதியில் வேத மந்திரம் கூறி புஷ்பாஞ்சலி செய்தல் மரபு. ஸ்வர்ண புஷ்பம், மந்திர புஷ்பம், லாஜபுஷ்பம் என்று இவை பல வகைப்படும். ஸ்வர்ணம் என்பது தங்கம். மன்னராட்சிக் காலத்தில் மன்னனுக்குக் காணிக்கையாகப் பொன்னோடு, பூவைச் சமர்ப்பித்தனர். அவ்விதம் நாணயத்தோடு சேர்த்துப் புஷ்பாஞ்சலி செய்தல், ஸ்வர்ண புஷ்பம், நெற்பொரியுடன் சேர்த்து புஷ்பாஞ்சலி செய்தல் லாஜபுஷ்பம், லாஜம் என்பது நெல்மலர் (நெற்பொரி), மந்திர சகிதமாக இவை வழங்கப்படுவதனால் மந்திர புஷ்பம் எனப்படும்.
தோத்திரம்
இசையோடு கூடிய பாடல்கள்மூலம் இறைவனைத் துதித்துப் பாடுதல் அடுத்த அம்சமாகும். நால் வேதங்களும் ஞானிகளால் இயற்றப்பட்ட சுலோகங்களும் தமிழ் வேதமான திருமுறைப் பாடல்களும் மற்றும் துதிப்பாடல்களும் இதில் இடம்பெறும். வேதங்களை முறைப்படி பயின்ற அத்யயணப்பட்டர் வேதங்களை முதலில் ஒதுவார். தொடர்ந்து வடமொழித் துதிகளும் தமிழ்வேத பாராயணமும் நடைபெறும். திருமுறை ஒதும் நிகழ்ச்சி பக்தர்கள் நேரடியாகத் தாமும் இறைவழிபாட்டுடன் ஒன்றிநிற்க வழிசேர்க்கும் ஒன்றாகும்.
இறையருள் பெற்ற நாயன்மாராற் செய்யப்பட்ட திருவருட் பாக்களைப் பன்னிரு திருமுறைகளாக வகுத்துள்ளனர் சான்றோர். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் என்பனவே அவை. இவற்றை இந்த வரிசை தப்பாமலும் உரிய முறைப்படியும் ஒதுதல் முக்கியம். இவற்றின் பின் ஏனைய அடியார்களின் பாடல்கள் (திருப்புகழ், அபிராமி அந்தாதி, கந்தரனுபூதி முதலியன) ஒதப்படலாம்.
திருப்புராணம் ஒதுமிடத்துப் பெரியபுராணம் மட்டுமே ஒதப்படவேண்டும். ஏனைய கந்தபுராணம், அபிராமி அந்தாதி முதலியன திருமுறை வரிசைகளின் பின்னரே ஒதப்பட வேண்டும்.
ஆசீர்வாதம்
இதன்பின் நிகழும் ஆசீர்வாதம் என்பது இறுதி நிகழ்வாகும். இதுபற்றியும் முன்பு விரிவாக நோக்கினோம். நிறைவாக இறையருட் பிரசாதங்களான விபூதி, சந்தனம், தீர்த்தம் முதலியன வழங்குதலுட்ன் நித்திய பூஜைக் கிரியைகள் நிறைவு பெறுகின்றன. இதனையடுத்து விசேட கிரியைகளின்போது முக்கிய இடம்பெறும் கும்பபூஜை என்பதன் விளக்கத்தையும் அங்கு இடம்பெறும் மந்திரங்களின் கருத்துக்களையும் அடுத்த கட்டுரை யிற்பார்ப்போம். 人

Page 11
கலாநிதி மனோன்ம
அதுன்பம் வரும்போது அதனை எதிர்கொள்ளும் ஆற்றலை எப்படிப் பெறுவதென எல்லோரும் தேடுகின்றனர். நமது சமயத்திலே நம்பிக்கைகொண்டு வாழ்ந்த மெய்யடியார்கள் அதற்கு வழி கூறியுள்ளனர்; இறைவன் பற்றிய நினைப்புடன் வாழும் முறைமையொன்றைக் காட்டியுள்ளனர். வாழ்வில் அடுத்தடுத்துத் துன்பம் நேரும்போது சமய நம்பிக்கையை இழந்துவிடும் நிலையும் ஏற்படலாம். அவ்வாறு நம்பிக்கை இழந்த நாவுக்கரசர் சைவசமயத்தைவிட்டுச் சமணசமயம் சார்கிறார். பெற்றோரின் இறப்பு அவரை, அவர்கள் பயிற்றிய சமயத்தைக் கைவிடச் செய்கிறது. சமண சமயம் வாழ்க்கையில் அமைதியைத் தரும் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. தன்மீது பேரன்பு பூண்டு வளர்த்த தமக்கையையும் பிரிந்து வாழும் மனத்திடத்தையும் தருகிறது. ஆனால் நாவுக்கரசர் வாழ்வில் பிறிதொரு துன்பம் தொடர்கிறது. கொடுமையான சூலைநோய் அவரைப்பீடிக்கின்றது. சமணசமய வைத்தியர்களால் கட்டுப்படுத்தமுடியாத அந்நோயால் அவர் பெரும்துன்பம் அனுபவிக்கிறார். அச்சமயத்தில் மீண்டும் சைவ வாழ்வியலை நினைத்துப் பார்க்கிறார். தன் தமக்கையின் வழிபாட்டுப்பயிற்சியை மீண்டும் கைக்கொள்ள எண்ணுகிறார்.
மனித நிலையில் இவ்வாறு நினைப்பது புதுமையல்ல. துன்பத்தை அனுபவிக்கும்போது அதிலிருந்து விடுபட நினைக்கும் நிலையில் முன்னைய வாழ்வியல் பற்றி எண்ணிப் பார்ப்பது மனிதக் குணமாகும். இத்தகைய ஒருநிலைக்கு ஆளாகும்போது மனிதன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். நாவுக்கரசரின் மன மாற்றமும் அத்தகையதே. இறைவனிடம் தன்னுடைய நிலையை எடுத்துக்கூறும் நாவுக்கரசர் ஒரு வழிபாட்டுப் பயிற்சியையும் குறிப்பிடுகிறார்.
"ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்"
இறைவனுடைய அடிகளை இரவும் பகலும் வணங்குவதே அந்தப் பயிற்சி. 'வணங்குதல்' என்பது சைவவழிபாட்டில் ஒரு முக்கியமான செயற்பாடாகும். உடலை மற்றவர் முன்னே வளைத்துத் தன்னைத் தாழ்த்தி நிற்கும் நிலையே வணங்குதலாகும். இரவும் பகலும் தொடர்ந்து வணங்கும் நாவுக்கரசர் இறைவன் அடித்தலத்தை வணங்கும் மரபை மீண்டும்தான் செய்வதாக எடுத்துரைக்கின்றார். பிற சமயத்தைத் தழுவி நின்ற தன்னை இறைவன் மீண்டும் காணவேண்டும் என்பதே அவருடைய விருப்பாக உள்ளது. அதனால் இறைவனைத் தன் நெஞ்சில் இருத்தி எப்போதும் நினைந்து வழிபடுவதாகக் கூறுகிறார்.
"நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன்"
 

2OO விரோதி தை 01
றவனை உடலாலும் உள்ளத்தாலும் ລຫຼືມ@ລeໆ அவற்றிலிருந்து னத்தினின்றும்
缀
ாழ்வியல் - 13 னி சண்முகதாஸ்
என இறைவனை எப்போதும் நெஞ்சால் நினைந்து வழிபடுவதைக் குறிப்பிடுகிறார். இந்த நினைத்து வாழும் வழிபாட்டை விடப் பிறிதொருவழிபாட்டையும் செய்வதாகப்பாடியுள்ளார்.
"சலம்பூவொடுதாபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்"
துன்பத்தால் வருந்தியழியும் மனத்தை ஆறுதலடையச் செய்யும் வழிபாட்டு நடைமுறைகளை நாவுக்கரசர் இப்பாடற் பகுதியிலே குறிப்பிட்டுள்ளார். நீரும், பூவும், தூபமும் வழிபாட்டிற்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் தமிழ் இசையும் பாடலும் வழிபாட்டில் இணைந்திருந்தன. துன்பத்திலே துவஞம் மனத்தை இசையால் அமைதிப்படுத்தலாம். நாவுக்கரசரின் வழிபாட்டுப் பயிற்சியில் நன்மையிலும் தீமையிலும் இறைவனை மறவாதிருக்கும் மனப்பாங்கு சுட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இறைநாமம் எப்போதும் நாவில் சொல்லப்பட வேண்டும். அதைச் சொல்லுவதை தான் மறக்கவில்லை என நாவுக்கரசர் கூறுவது அவரது பக்திநிலையை நன்கு வெளிப்படுத்துகின்றது.
சைவசமயம், வழிபாடு மனத்தாலும் உடலாலும் செய்யப்படும் நடைமுறை என விளக்கியுள்ளது. சமயகுரவர் நால்வருள்ளும் நாவுக்கரசர் இத்தகைய வழிபாட்டில் நின்று இறையருள் பெற்றவர். அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட துன்பங்கள் எல்லாவற்றையும் வாழிபாட்டின்மூலம் வென்றவர். உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் வழிபாடு செய்ய வேண்டும் என எண்ணியவர். தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை, கால் என எல்லா உறுப்புகளாலும் இறைவழிபாடு செய்யாவிட்டால் அவற்றால் எவ்வித பயனும் இல்லையெனப் பாடியுள்ளார். மனித நிலையிலான செயற்பாடுகளுக்கு உதவும் உறுப்புகளின் தலையாய கடமையாக, வழிபாடு செய்வதையே அவர் எடுத்துக்கூறியுள்ளார். நாவினுக்கு அருங்கலமாக அமைவது நமச்சிவாயவே என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். எமது பாவத்தைப் போக்கவும், நடுக்கத்தைக் கெடுக்கவும் நன்னெறியா வதும் நமச்சிவாயவே என அப்பர் கூறுவது இறைவன் நாமமே எல்லாவற்றிற்கும் உற்றதுணை என்பதை உணர்த்தி நிற்கின்றது. மனிதப் பிறவியே எல்லாப் பிறவியிலும் சிறந்த பிறவி என்பது அவருடைய கருத்து. வழிபாட்டைச் செய்யவும் இறைவன் திருக்கோல அழகைக் கண்டு எல்லாத் துன்பங்களையும் மறக்கவும் மனிதநிலையில் செய்யும் வழிபாடு உறுதுணையாக இருப்பதால் மனிதப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே எனப் பக்திபரவசமாகிப்பாடியுள்ளார். 人

Page 12
இந்துசாதனம் 4.O.
வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி வூல தை மீ" 1ஆம் உ (r4.01.2012)
இலங்கையிற் சைவம் - 2
டெக்கே காங்கேசன்துறை தொடக்கம் தெற்கே கதிர்காமம்வரையும், கிழக்கில் பொத்துவில் தொடக்கம் மேற்கே புத்தளம் வரையும் இலங்கையில் முன்னொரு காலத்திலே சைவ சமயமே நிலவியதுட
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் முன்னர் இந்த அழகிய நாட்டை ஆண்ட இராவணன் தீவிர சிவபக்தனாகவே இருந்தான்; அது காரணமாகத் திருமுறைகளிலே பலமுறை பாராட்டப்பெறும் பாக்கியத்தையும் பெற்றான்.
திருமந்திரம் தந்த திருமூலர், இலங்கை முழுவதற்கும் சிவபூமி என்ற சிறப்புப் பெயரைத் தந்து மனம் உவந்தார்.
நேர்மையான புதைபொருள் ஆராய்ச்சிகள் - கல் வெட்டுக்கள்தரும் காத்திரமான கருத்துக்கள் - இலக்கியக் கற்பனைக்கு ஆதாரமான அடிப்படைத் தகவல்கள்-செவி வழியாக நீண்டகாலம் தொடர்ந்துவரும் செய்திகள் அயல் நாடுகளிலிருந்து வந்து சென்ற பயணிகளின் பதிவுகள் -
போன்றவற்றிற் புதைந்துள்ள-உண்மைகள், உண்மை தானா என்பதை உறுதிப்படுத்தும் நோக்குடன், சொந்த விருப்பு வெறுப்புகளை விரட்டிவிட்டுப் பக்கச் சார்பற்ற நடுநிலைமையில் நின்று அவற்றை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் இணைத்தும் ஆராய்ந்து பார்ப்பவர்கள் -
தமிழ் அறிஞர்கள் பலர் அடிக்கடி நினைவூட்டிவந்த மேற்போந்த உண்மைகளை மறுக்க மாட்டார்கள்; மறக்க மாட்டார்கள், மறைக்கவும் மாட்டார்கள்;
அதுமட்டுமல்லாமல், அவற்றுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் தாமும் எழுதியும் பேசியும் வருவார்கள்.
எனினும் அத்தகையோரின் தொகை, பல்வேறு காரணங்களால், நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவது கவலைக்குரியது!
முருகன் தமிழ்க் கடவுள் என்பது பலரறிந்த உண்மை. பூமி உருவாகியபோது முதன் முதலில் தோன்றியது மலையே எனப் பூகர்ப்பவியலாளர்கள் கூறுகின்றனர். மலையும் மலை
 

2OO விரோதி தை 01
சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிக்குத் தெய்வம் முருகனே என்கின்றது தொல்காப்பியம். அவனுடைய ஆறுபடை வீடுகளுள் "குன்று தோறாடல்" என்பதும் அடங்கும்; குன்று தோறும் நின்று அருளுபவன் அவன். இலங்கையின் தென்கோடியிலுள்ள கதிர்காமத்துக் கதிரமலையிலும் அவன் அருளாட்சி புரிவதை அருணகிரியார் தன் திருப்புகழில் அழகாகப் பாடியுள்ளார்.
எனினும் அங்கே சென்று முருகனை வழிபட்டுத் "திரும்பும் உரிமைதான்" சைவத் தமிழ் மக்களுக்கு இன்று உண்டு.
யாத்திரைத் தலம் என்ற புனித நிலையிலிருந்து சுற்றுலாவுக்குரிய சொகுசு நகரமாக அது மாற்றப் பட்டுக்கொண்டு வருகின்றது!
தேவாரப் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரத்தைப் புனிதப் பிரதேசமாக ஆக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்தனையும் அடக்கப்பட்டுவிட்டன.
உயர் பாதுகாப்பு வலயங்களுள் இருந்த ஆலயங்கள் சில எறிகணைக்கு இலக்காகிச் சிதறுண்டு கிடக்கின்றன. பூசை, வழிபாடுகள் இன்றிப் பல கோவில்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
நட்ட நடுநிசியில் மட்டுமல்லாமல், பட்டப் பகலிலும் சைவாலயங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன; சூறையாடப் படுகின்றன; வணக்கத்துக்குரிய விக்கிரகங்கள் வணிகப் பொருளாய்க் கைமாறுகின்றன. கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டிய வர்கள் "கண்டும் காணாமல்" தம் காவல் நிலையங் களிற் களிப்புடன் நிற்கின்றனர்!
அகதிகளாய், அனாதைகளாய் அல்லற்பட்டு அலைந்து திரியும் நம் மதத்தினரின் அவல நிலையைப் பயன்படுத்தி அவர்களைத் தம் மதத்திற்கு வலிந்திழுத்துக்கொண்டிருக்கின் றார்கள். "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் கலை"யிற் கைதேர்ந்த வேற்று மதத்தினர் சிலர்!
இவை அனைத்தும் எவ்விதமான எதிர்பார்ப்போ தடையோ இன்றித் தொடர்ந்துகொண்டிருந்தால், சென்ற இதழிலே நாம் குறிப்பிட்டதைப் போன்று, "இலங்கை முழுதும் ஒரு காலத்திற் சைவ சமயம் இருந்தது" என இறந்த காலத்தில் எழுதும் நிலை உருவாக நாமே உதவியும் ஒத்துழைப்பும் வழங்குபவர்களாக ஆகிவிடுவோம்; சைவர்களின் தொகை சைவர் ஆகுவதற்கு நாமே சுழிபோடுபவர்களாகிவிடுவோம்.
யாரும் எதையும் செய்யலாம் ; அவர்களுக்கு அந்த உரிமை உண்டு என்பது சமயப் பொறை அல்லர் அது சமயக் கறை!
உண்மையென ஒருவர் நம்பும் சமயத்தைக் கைக் கொள்வது - வழிபாட்டுமுறைகளை மேற்கொள்வதுஅவற்றுக்குத் தடைகள், இடையூறுகள் ஏற்பட்டால் அவற்றை உடைத்தெறிவது சமயவெறியல்ல; சமய நெறி!
அமரர் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களும் திருக்கேதீஸ்வரத் திருப்பணிச் சபையினரும் இணைந்து உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால், பாடல்பெற்ற திருத்தலமும் நாவலர் பெருமானால் "தேன் பொந்து" என்று வர்ணிக்கப்பட்டதுமான திருக்கேதீஸ்வரத் தை அண்டியுள்ள பிரதேசங்கள் அத்தனையுமே வேற்று மதத் தினரின் நாற்றுமேடையாகித் திருக்கேதீஸ்வரப் பெருமானுக் குத் திரையும் போடப்பட்டிருக்கும்!
ஆகவே, ஊன்றிச் சிந்தித்து உரிய நடவடிக்கைகளை
எடுக்கும்படி சைவப் பெருமக்களை மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம். 人
2

Page 13
இந்துசாதனம் 4.O
"செயல் குணத்ை
நயினை நா. யே
இன்பங்களும் மகிழ்ச்சியும்தான் வாழ்வின் இலட்சியங்கள் என்று நினைப்பது பெரும் தவறாகும். இன்று உலகத்தில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம் மனிதன் முட்டாள்தனமாகத் தன் வாழ்வின் இலட்சியம் இன்பம் என நினைத்து, அதைத்தேடி அலைவதுதான். தேடி அலைந்து இளைத்தபின் அவனது பட்டறிவினால் இறுதியில் உணர்வது வாழ்வின் இலட்சியம் இன்பமல்ல என்பதுதான். அப்போதுதான் வாழ்வின் இலட்சியம் ஞானத்தைத் தேடுவதே என்பதும் புரிகின்றது.
2. இன்பமும் துன்பமும் பெரிய ஆசிரியர்கள். நன்மையைப் போலவே, தீமையில் இருந்தும் மனிதன் பெரும் பாடத்தைக் கற்றுக்கொள்ளுகின்றான். அதன்மூலம் இன்பமும் துன்பமும் மனித ஆன்மாவைக் கடந்துசெல்லும்போது, ஆன்மாவின் மேல் பல வகையான அனுபவங்களைப் பதித்துச் செல்கின்றன. ஒருவனின் பண்பையும். குணத்தையும் உருவாக்குவதிற்கூட, துன்பமும் இன்பமும் சரிசமனான பங்கை வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தைவிட, துன்பமே சிறந்த ஆசானாக அமைகிறது. இந்த உலகத்தில் தோன்றிய மகோன்னதமான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தோமானால், அவர்களில் பெரும்பாலோருடைய வாழ்க்கையில் , இன்பங்களைவிடத் துன்பங்களே, செல்வத்தைவிட, தாங்கொணா வறுமையே, அரவணைப்புகளைவிட, அடி உதைகளே அவர்கள் மனதில் ஆழப் புதைந்துள்ள சக்தியை
வெளியே கொண்டுவந்துள்ளதைக் காணலாம்.
3. ஞானம் என்பது மனிதனிடத்தில் இயல்பாக இருப்பதாகும். எந்த ஞானமும் மனிதனுக்கு வெளியே இருந்து வருவதில்லை. அவை நமக்குள்ளேயே இருக்கின்றன. ஒரு மனிதன் கற்கிறான், அறிகின்றான், உணர்கின்றான், கண்டுபிடிக்கின்றான் என்றால், அவனது மனச் சுரங்கத்தின் உள்ளே தன் ஆன்ம பலத்தை மூடியுள்ள திரைகளை நீக்கித் தன் இருப்பாகிய ஞானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கின்றான் என்பதே அர்த்தம்.
4. நியூட்டன் புவிஈர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகின் றோம். அது வெளி உலகத்தில் இருந்து நியூட்டனால் கண்டுபிடிக்கப்படவில்லை. அவருடைய மனத்தில்தான் இருந்தது. காலம் கனிந்து கனி வடிவமாகவே வந்து உணர்த்தியது. அவர் அதனைக் கண்டுபிடித்தார். உலகம் பெற்றுள்ள எல்லா வகையான அறிவியல்களும் மனத்தில் இருந்து வந்தவையேயாகும். உலகத்தில் எல்லையற்ற எத்தனையோ அறிவியல் நூல்களும் ஆன்மீக நூல்களும் அறிவுக்களஞ்சியங்களாக வெளிவந்து மக்களுக்காகக் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. அவை எல்லாம் ஒவ்வொரு மேதாவிகளின் உள்ளத்தின் உள்ளே இருந்து உருவாகியவே

2OO விரோதி தை 01
த மேம்படுத்தும்" Iraspirg56r B.A.
யன்றி வேறில்லை. இந்த உலகம் ஒரு புத்தகம் என்பதையும் அதைப் படிக்கின்ற வேலை மட்டுமே நம்முடையது என்பதையும், நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகமாகிய அந்தப் புத்தகத்தில் இருந்து நமக்கு வேண்டிய ஞானத்தை நாம் பெற்றுக்கொண்டபிறகு அந்தப் புத்தகத்தால் நமக்குப் பயன் ஏதுமில்லை என்பதை உணர வேண்டும். உலகம் என்பது மனத்தின் ஆழத்தை அறிவதற்காக ஆராய்வதற்காக அமைந்த ஒரு தூண்டுகோலேயாகும். மரத்தில் இருந்து அப்பிள் கீழே விழுந்தது நியூட்டனுக்கு ஒரு தூண்டுதல். அதன்மூலம் அவர் தன்னுடைய மனத்தை ஆராய ஆரம்பித்தார். தன்னுடைய சிந்தனைத் தொடர்புகளை எல்லாம் முறைப்படுத்தி நெறிப்படுத்தி அமைத்து ஆராய்ந்தபோது, புத்தம் புதியதொரு தொடர்பை அவர் கண்டுபிடித்தார். அதையே நாம் புவி ஈர்ப்புவிதி என்று கூறுகின்றோம். இது அப்பிள் மரத்திலோ அல்லது புவியின் நடுவிலோ இருக்கவில்லை. அவரது ஆய்வினால் அவரின் மனதில் இருந்து அறியப்பட்டது. எனவே அறிவியல் ரீதியான கண்டுபிடிப்போ, ஆன்மாவைப் பற்றிய ஞானமோ இந்த உலகத்தைப் பற்றிய அறிவோ எல்லாமே மனிதனின் மனத்தில்தான் இருக்கின்றது.
5. ஒருவனுடைய அறிவின் அளவு என்பது, அவனது மனத்திரையை விலக்குகின்ற அளவையே பொறுத்திருக் கின்றது. எந்த மனிதனிடம் மனத்திரை நீக்கப்பட்டிருக் கின்றதோ அவன் மீதியான ஞானத்தை (அறிவை) உடையவனாக விளங்குகின்றான். எந்த மனிதனின் மனத்திரை நீக்கப்படாமல் இருக்கின்றதோ அவன் அறியாமையே உருவானவனாகக் காணப்படுகின்றான். இந்த மனத்திரை நீக்கப்பெற்றவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருக்கப் போகிறார்கள். விறகில் தீயாகவும், பாலில் நெய்யாகவும் உட்பொருள் மறைந்திருப்பதுபோல் ஞானமும் மனத்தில் மறைந்திருக்கின்றது. விறகு உராய்வடையும்போது தீயாகவும், பால் கடையும்போது நெய்யாகவும் மாறுவதுபோல், வெளித் தூண்டுதல் என்னும் மோதல் மனத்தை உராயும்போது, அல்லது தாக்கும்போது மனதில் மறைந்து, உறைந்திருக்கும், ஞானமும் வெளிப்படுகின்றது.
6. மனிதனுடைய எல்லாவகையான உணர்வுகளும் உள்ளிருந்து வெளிவருவதற்குக் காரணமாக இருப்பது புற உலகத் தூண்டுதல்களே, உடல்மூலமாகவும் மனம்மூலமாகவும், ஆன்மாவுக்குத் தரப்படுகின்ற தாக்குதல்கள் ஒவ்வொன்றின் மூலமும், ஆன்மாவில் இருந்து எதிரொலிகள் வெளியே கிளம்புகின்றன. அந்த எதிரொலிகளே ஆன்மாவில் புதைந்துகிடக்கும் ஆற்றலும் ஞானமுமாகும். இவ்வாறு ஆன்மாவால் வெளிப்படுத்தப்படுகின்ற எதிரொலிகளே செயல்
-- Σ»

Page 14
இந்துசாதனம் 4.O.
என்ற சொல்லில் மிகப்பரந்த பொருளில் பயன்படுத்தப் படுகின்றது. நாம் எல்லோரும் செயல்புரிந்து கொண்டிருக்கின் றோம். எல்லாக் காலங்களிலும் செயலைச் செய்து கொண்டிருக்கின்றோம். உடல்மூலமாகவும், மனம் மூலமாகவும் நாம் என்னென்ன செய்கின்றோமோ அவை எல்லாம் செயல்களே. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும், அதன் சுவட்டை நம்மீது பதிய வைக்கின்றது என்பதை மறந்துவிடக்
கூடாது.
7. ஒரு மனிதனின் உண்மையான குணத்தை அறிய விரும்பினால் அவனுடைய மகத்தான காரியங்களைப் பார்த்து முடிவுக்கு வந்துவிடக்கூடாது. ஏனெனில் ஒரு முட்டாள்கூட குறிப்பிட்ட ஒரு நேரத்தில், அல்லது சில நேரங்களில் அவன் தன்செயலின் மூலம் மகத்தான காரியங்களை முடித்துவிடுகின்றான். அதனை மட்டும் கொண்டு ஒரு மகத்தான மனிதனாகத் தீர்மானித்துவிடமுடியாது. சாதாரண காலத்தில் ஒரு மனிதன் செய்கின்ற மிகச் சாதாரண செயல்களைக் கவனியுங்கள். அவையே அந்த மனிதனின் உண்மையான குணத்தைத் தெரிவிக்கும். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய குணம் உயர்ந்ததாக இருக்கின்றதோ அவன் உண்மையில் சிறந்த மனிதனாகின்றான். நத்தையானது ஊர்ந்து செல்லும்போது, தற்செயலாக அது ஊர்ந்துசென்ற விதத்தால் நிலத்தில் 'அ' என்ற எழுத்து எழுதப்பட்டுவிட்டது. அதனால் நத்தை படித்துள்ளது. என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாதல்லவா. "ஒரல் எழுத்துப் போல் இழுக்குடையதாதலின் கொள்ளார் அறிவுடையார்" என்ற சூத்திரம் இக்கருத்தை வலியுறுத்தி நிற்பதைக் காண்கின் றோம்.
8. ஒருவனின் செயல்களே அவனது குணத்தை உருவாக்குகின் றன. செயல் எத்தன்மையதோ அத்தன்மையதே மன உறுதியின் வெளிப்பாடுமாகும். மிகச் சிறந்த மனவுறுதிகொண்ட மனிதர்கள் எல்லோருமே, மற்றவர்கள் கனவிலும்கூட நினைக்காத, உலகமே பார்த்து வியக்கும் காரியங்களைச் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அத்தகைய பிரமாண்டமான மன ஆற்றல் படைத்தவர்கள்தான் பின்னர் ஒரு புத்தராகவும் ஒரு இயசுேவாகவும், ஒரு மகாத்மாவாகவும் உருவெடுத்தார்கள். அவர்களின் மனித வடிவம் மறைந்து எத்தனையோ ஆண்டுகளான பிறகும், இன்னும் மனித சமுதாயத்தை வழிநடத்தி வாழவைத்துக் கொண்டிருக்கி றார்கள். இத்தகையவர்களின் ஆற்றல்களெல்லாம் செயலால்
தான் உருவாகியுள்ளன.
9. ஒருவன் உலகத்தில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம். அவற்றைத் தன்னுடைய நூலகத்தில் சேர்த்தும் வைக்கலாம். ஆனால் அதில், அவனுடைய தகுத்திக்கு ஏற்றவைகளை மட்டுமே அவனால் படிக்க முடியும். இந்தத் தகுதியை ஒருவனின் செயல்தான் உருவாக்குகின்றது. நம்முடைய செயல்தான் நமக்கு இருக்க வேண்டிய
தகுதியையும், நாம் அனுபவிக்க வேண்டியதையும் நிர்ணயிக்

2OO விரோதி தை 01
10.
11.
கின்றது. நடுச் சமுத்திரத்தின் மத்தியில் நாம் சென்றிருந்தாலும் கூட, நாம் வைத்திருக்கின்ற பாத்திரத்தின் அளவுக்கே நீர் கொள்ளுமேயன்றி அதைவிட மேலாகக் கொள்ளமாட்டாது. பாத்திரத்தை விசாலமானதாக்க வேண்டியது நமது செயலிலேயே உள்ளது. நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டுமென விரும்புகின்றோமோ அப்படியாகு வதற்கு நம்மைத் தயார் செய்துகொள்ளுகின்ற ஆற்றல் நம்மிடம்தான் இருக்கின்றது. இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதற்கு முற்பிறவியிலே செய்த செயல்களே காரணம் என்றால்கூட, எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது இந்த நிகழ்காலத்தில் நாம் செய்கின்ற செயல்களை ஒட்டியே அமையும். அதை நல்லபடியாகச் செய்யவேண்டிய தேவை
எமக்கு உண்டு.
அனைத்துச் செயல்களும், நம்மிடமுள்ள மனத்தின் ஆற்றலை ஆன்மாவை எழுப்புவதற்கான ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதனிடம் ஆற்றல் நிறைந் திருக்கின்றது. அதேபோல ஞானமும் நிறைந்திருக்கின்றது. அவன் செய்யும் பல்வேறு வகையான செயல்கள் அந்தச் சக்தியையும் ஞானத்தையும் வெளியே கொண்டு வருவதற்கான அடி உதைகளாகும். உலகில் மகத்தானவர்களைச் செயற்பட வைப்பதற்கான தூண்டு கருவியாக, காரணங்களாக அவை
அமைகின்றன.
சிலர் புகழையும் சிலர் பணத்தையும் விரும்பிச் செயல்களைச் செய்கின்றார்கள். சிலர் அதிகாரத்தை விரும்புகிறார்கள். அதற்காகச் செயல் புரிகிறார்கள். பலன் எதையும் கருதாமல் செயலுக்காகச் செயல்புரிபவர்களும் உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும், அந்நாடு வாழ்வதற்கான உரமாகச் சிலர் அமைகிறார்கள். அவர்களே செயலுக்காகச் செயல் புரிபவர்களாகின்றார்கள். பணம், பெயர், புகழ் இவற்றைப் பற்றி அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. கவலைப்படுவதுமில்லை. ஏன் சொர்க்கத்தைப் பற்றியும்கூட நினைப்பதில்லை. நன்முயற்சி யாக இருக்கின்றது. அதனைச் செய்வோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நன்நோக்கத்தோடு அவர்கள் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இன்னொரு வகையில் ஏழைகளுக்கும் மனித சமூகத்திற்கும் உயர்ந்த இலட்சியத்திற்குமாகவும் செயல் புரிகிறார்கள். அன்னை திரேசா அம்மையார் அவ்வாறு அண்மைக் காலத்தில் வாழ்ந்தார்கள். இவர்கள் பிறருக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற தாகமும் விருப்பமும் கொண்டவர்களாய் இருந்தார்கள். பிறர் நலனுக்காகவே வாழ்ந்தவர்கள்.
ஒரு மனிதன் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் செயல்புரிந்தால் அவனுக்குக் கிடைக்கும் பயன் எதுவுமில்லை என்பதல்ல. உண்மையில் மிக உயர்ந்த பலனை அடைபவன் அவன்தான். சுயநலமின்றி செயல் செய்வதுதான் உயர்ந்த பலனையும் ஆத்ம திருப்தியையும் தருவதாகும். இப்படிப் பலன் கருதாமல் செயல் புரிவது உடல்நலத்திற்கும் மிகுந்த பலனைத்
二>

Page 15
இந்துசாதனம் 4.O
சொல்லிய பாட்டின் பொரு
(2009 கார்த்திகைமாதம் 15
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
தலம்: திருவதிகை வீரட்டானம் பண்: விகால்லி
திருச்சிற்றம்பலம்
போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரிதோல் புறங்கா டரங்கா நடமாடவல்லாய் ஆர்த்தா னரக்கன் றனைமால் வரைக்கீழ்
அடர்த்திட்டருள்செய் தவது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தால்
என்வே தனையா னவிலக் கியிடாய் ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில்
வீரட் டானத் துறையம் மானே. (8)
பதவுரை- ஆர்த்து - ஆரவாரித்து, ஆர் புனல்சூழ் - மிக்க நீர் சூழ்ந்த, அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே! அங்கு - காசியில், ஒர் யானையின் - ஒரு யானையினது, ஈர் உரிதோல் - (நகத்தால்) வகிர்ந்து உரித்த தோலை, போர்த்தாய் - போர்த்தருளியவரே, புறங்காடு - பேரொடுக்கச் சுடுகாட்டை,
அரங்காக - ஆடரங்காகக் கொண்டு, நடமாட வல்லாய் -
(49%டு ق فار^وار) فهيضل ...(
தருகின்றது. அன்பு, உண்மை, இரக்கம், சுயநலமின்மை இவை எல்லாம் வெறும் ஒழுக்கம் பற்றிய பேச்சு மட்டுமல்ல. அவை நம்மிடம் மிக உன்னதமான இலட்சியங்களை உருவாக்கு கின்றன. ஏனென்றால், அவற்றின் உள்ளேதான் அளவில்லாத ஆற்றல்கள் மறைந்திருக்கின்றது. சுயநலம் எதுவுமே இல்லாமல் செயல்புரிகின்ற மனநிலையை நாம் என்று அடைகின்றோமோ அன்று நம்முள் மறைந்துள்ள எல்லா, எல்லையில்லா ஆற்றல்களும் ஒன்று திரளும் அப்போது நம்மில் புதைந் திருக்கும் ஞானமும் வெளிப்படும். இன்பம் மனிதவாழ்வின் இலட்சியமல்ல. ஞானம் ஒன்றுதான் மனித வாழ்வின் இலட்சியம் என்பது அப்போதுதான் நமக்குப் புரியும். பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது ஒருவனது தேவை. பலனை எதிர்பாராமற் செய்யப்படுவதே உண்மையான ஒருவனின் சேவை என்பதை உணர்வோம். செயலைச் செய் பலனை எதிர்பாராதே என்பதே கீதாவுபதேசமும்கூட
உன்னிடத்தில் நம்பிக்கை வை. எதையும் நான் சாதிக்க
வல்லவன் என்ற உறுதியுடன் இரு உன் வாழ்வு பெறுமதியுடைய
1.

2OO விரோதி தை 01
எநணர்ந்து சொல்லுவோம்
ஆம் பக்கத் தொடர்ச்சி.)
நடனமாட வல்லவரே, ஆர்த்தான் - ஆரவாரித்து வந்தவனாகிய, அரக்கன்தனை- அரக்கனாகிய இராவணனை, மால்வரைக்கீழ், பெரிய கைலாயமலையின்கீழ், அடர்த்து இட்டு - நெருக்கியிட்டு, அருள் செய்த அது - (பின்), இரக்கத்தால் அருள் செய்த அந்தச் செயலை, கருதாய் - இப்போது நினைக்கின்றீரில்லை (அதனால் தானோ), வேர்த்தும் - வியர்த்தும், புரண்டும் - புரண்டும், விழுந்தும் - கீழ் விழுந்தும், எழுந்தால் - பின் எழுந்தால், என் வேதனை ஆன - என் வேதனைகளை, விலக்கியிடாய்
விலகாதிருக்கின்றீர்.
பொழிப்புரை: - வீரட்டானத்தில் இருக்கின்ற பெருமானே! யானையின் தோலை உரித்துப் போர்த்தருளியவரே சுடுகாட்டை அரங்காகக் கொண்டு நடனமாட வல்லவரே ஆரவாரித்து வந்த இராவணனைக் கைலாய மலையின் கீழ் நெருக்கி அவனுடைய கொட்டத்தை அடக்கினீர். பின்னர் இரக்கம் காரணமாக அவனுக்கு அருள் புரிந்தீர். அதேபோல் (சமண சமயத்துக்குச் சென்ற, பாவச்செயலை நினைந்து வேதனைப்படும் எனக்கு ) அந்த
வேதனையை நீக்கி அருள் செய்கின்றீரில்லையே! 人
مجھ
தாய் அமையும். பலவீனர்களின் பாதையில் தடைக்கல்லாக இருந்த கருங்கற்பாதை பலசாலிகளின் பாதையில், படிக்கட்டாக அமைந்துவிடுகின்றது என்பதைச் சிந்தித்துப் பார்" என்று மகத்தான மாமனிதர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே, நமக்குள் உள்ள அறிவும் ஆற்றலும் வளமும் ஏற்கனவே இறைவனால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கைச் சொத்துக்கள் என்பதை உணர்ந்து, அவற்றை வெளிக்கொணரும் வகையில் எமது செயல்களைப் பயனுள்ளதாகச் செய்வோமாக! நல்லபடியாக நாம் எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைவிட, நல்லபடியாக நம் செயல்கள்மூலம், எத்தனைபேரை வாழவைத்தோம் என்ற ஆத்மதிருப்தியை ஏற்படுத்திக்கொள்வோமாக! இதுவே நம் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், நம் இருப்பை வெளிப்படுத்தி நிற்பதாகவும் அமையும். அப்போது, யாம்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற தாரக மந்திரம் யதார்த்தமாக்கப்படுகின்றது. இதன்மூலம், இன்பமே சூழவும் எல்லோரும் வாழவும்.அமைத்தும் கொடுக்கப்படுகின்றது. 人
”نیاف& Rخ

Page 16
இந்துசாதனம் 4.O.
நாவலர் சரிதமோது கவிஞர் திரு. இரான (இந்துசாதனம் - 2009 கார்த்திகைமாதம்
சென்ற கார்த்திகை மாத இதழில் "சிவனிலும் பார்க்கச் ே செய்யுளை அடுத்து இடம்பெற்றிருக்கவேண்டிய ஏழு செய்யு சரியாகத் தொடர்வதற்காக அந்த ஏழுசெய்யுள்களை மீண்டும்
159. பெத்தநிலை யுளே நமக்குப் பின்னாகி மறைந்து நின்று
முத்திநிலையிலே நம்மை முழுதுந்தனதுளே யடக்கி வைத்தவர் தாம்நமக்கே முன்னாயுமுள்ள சிவன்பால் சித்தமதை வைத்தல் தானே சிறப்பென அன்பை வைத்தார்.
160. இகமதிற் கடமையோடு இவையிவை ஒழுக்க மென்றே
161.
மகளிருமறியுமாறு மாதவருரைக்கக் கேட்டே அகமதில் மகிழ்வை யூட்டும் அருநெநிவழியிலேயே தகவுடை வாழ்வு தன்னைத் தரணியிற் தொடங்கினார்கள்.
வாணவேடிக்கை பாடல் வடிவுடை மாத ராடல் பூணுமா சதுர்க்கச்சேரி பெரும்பலி வேள்வியெல்லாம் பேணியே திருவிழாக்கள் புரிந்தவர் செயலுக்காக நாணியே யவைவிடுத்தே நல்வழிநடத்தலுற்றார்.
162. திரிபசு மாடடித்தே தின்றலை மாந்தராரத்
தருசிவலோகம் விட்டே தரணிக்கு வந்த தென்றும் அருமையுள் பஞ்சகவ்யம் அபிஷேகத்தரதவுமென்றும் எருவெனுஞ் சாணத் தானே எரிந்துநீறாகு தென்றும்.
163. இருவிழியிரவிசோம னிருசெவியஸ்வினிகுமாரர்
பெருமுகநடுவிற் சிவனும் பிறங்கிடுநாசி மீதே திருவறு முகவனோடு பெருகரிமுகனுங் கூட இருவளை கொம்பு தோறும் இந்திரன் வீமன் மேவ.
164. தொழுகழுத்திராகு கேது தொடங்குகால் மாருதிமலைகள்
பழுதில முன்னங் காலில் பைரவன் விந்திய மலைகள் எழுபெருமேரி பிரமன் எழிற்கலை மகளும் விஷ்ணு வழுவில வயிற்றிற் பூமாதேவியும் பொருந்திநிற்க.
165. புடைகனைக் காலில் மந்திர துரோணர்பர் வதசாலங்கள்
தொடைதனில் விஸ்வாமித்(திரர் தொழுபராசரருந்தேவர் தொடைமுதல் கங்கா தேவி துலங்குநாரதர்வ சிட்டர் மடியினிலமிர்த வாரி மடிமுதல் ஜனக குமாரர்.
166. வாலின் நாக ராஜன் வால்முடிநாக லோகர்
தரலநற் கோசவெல்லை துலங்கிடை லட்(க)மியாளும் சீலமுள் பழுவிற்குபேரன் சிறப்புடை பரத்து வாசர் கால்மழை வருண னக்னி கடவுளர் யாரும் நிற்க.
167. திண்டிறலுடைய தாயும் தெய்வங்கள் முனிவர் கோள்கள்
அண்டமு எாமரர் மாதரனைத்தையுமழகு மேனி கொண்டொரு வடிவமாகிக்கும்பிடுமாறு வந்தே மண்டனிலுலவு நற்கோ மாதாவென்றுரைத்தல் கேட்டே.
1

2OO விரோதி தை 01 ம் நற்றமிழ் மாலை
Fu IIT Ööö,55ITaf6ör
- 19 ஆம் பக்கத்தின் தொடர்ச்சி)
சர்ந்த சொந்தபந்தங்கள் மீது" எனத் தொடங்கிய 158ஆம் ள்கள் தவறுதலாக விடப்பட்டுவிட்டன. நாவலர் சரிதத்தைச் வெளியிட்டு இந்த மாலையைத் தொடர்கின்றோம். (ஆசிரியர்)
168. ஆவினமவைக்குப் புல்லும் அருந்துநன் னிர்குடிக்க
மேவிடு குளங்கள் கேணிமிகுபல வெட்டுவித்தும் தாவிடுமாவு ரோஞ்சுக் கல்பல நாட்டு வித்தும் கோவின மதனைப் போற்றிக்கும்பிடத் தொடங்கினார்கள்.
169. கல்வியைக் கற்றிடாதே காலத்தை விரயஞ் செய்தோர்
நல்லறிவுளரை நாடல் நன்மையென்றறிந்தும் வாழ்வில் கல்வியிற் சிறந்த செல்வம் காசினியதில்வேறொன்று மில்லையென்றுணர்ந்தும் கல்விகற்றிடத்தொடங்கினார்கள்.
170. பாதிரிமார்கள் தங்கள் பள்ளியிற் கருவிநூலும்
பாதக மதத்தின் நூலும் படிப்பித்துக்கொடுக்க வெங்கள் மேதகு சைவர் தாபி வித்தியா சாலை தோறும் ஏதமில் கருவிநூலே எடுத்தோதப் படுதல் கண்டார்.
வித்தியாசாலை தாபித்தல் (1848)
171. கருவிநா லவைகளோடு சமயநாலவையுஞ் சொல்லித் தருவதால் ஞால மாந்தர் தம்மதம் நிலைத்தலோடு பரவிவேர் விட்டெழும்பும் பரமத கண்டனங்கள் அருவிபோ லாற்றும் சக்தியதுமடை வார்களென்றே.
172. இருதிற நால்கள் யாவும் இணைந்துகற்பிக்க வேண்டி
ஒருபெரு வித்(தி)யா சாலை உருவாக்கநினைந்து ஐயன் பெருகலியப்த மேழு ஏழொடு ஒன்றிணைந்து வருமொருநல்ல சாலி வாகனசகாப்தமான.
173. ஓராயிரத்தேழு நாற்றி எழுபத்தியொன்று சேரும்
பேராரும் கீலக வாண்டினாவணித் திங்களைந்தில் சீராருமாயிரத் தொண்ணுரற்றி நாற்பத்தியெட்டா மாண்டு நேராரில் சுக்கிரகிருஷ்ணபட்ச சதுர்த்தியாகும்.
174. திதியொடு ரேவதி நட்சத்திரமதும் சூல நாம வதியுறு யோக மோடு பாலவ கரணங் கூடி விதிதரு லக்னமாக விருச்சிகம் சேர்தினத்தே பதியருள் வண்ணார் பண்ணை தாபித்தார் பாடசாலை.
175. ஒரெழு மாதமாக உறுகோவிற்கெதிருள் வீட்டும்
சீரோடு பின்னராலயச் சிறுமட மதனிலேயும் மாருற வாழு மன்னார் மாணாக்க ராதலாலே தாருறுவேதனங்களின்றியே கற்பித்தார்கள்.
176. வேதனங்கள் கொடுப்பதற்காய் வெறும்பிடி யரிசி தேடி
மாதன மெனஅளித்தேழ் மாதங்கள் செல்லத் தண்டிச் சேர்தினக் கூலி யிற்கே சேராமை கண்டு நொந்தே ஒதினர் பலரும் நீங்க ஒருசிலர் தொடர்ந்திட்டார்கள்.
(... فارح)صعله)

Page 17
இந்துசாதனம் 14, C
மொணவச்செல்வங்களே,
பெணக்கம், சமயம், பண்பாடு, நல்லொழுக்கம் போன்ற வற்றிற்கு, முன்னர் கொடுக்கப்பட்ட சிறப்பிடம் இப்போதைய கல்வி முறையிலே இல்லை என்பதைக் கல்விமான்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சமயச் சான்றோர்கள், சமூகத் தலைவர்கள் முதலானவர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றார்கள். மாணவர் மத்தியிலே பலவிதமான சீர்கேடுகள் நிலவுவதற்கு இதுதான் அடிப்படைக் காரணம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். தெய்வ நம்பிக்கையும், சமய நெறிகளை வாழ்க்கையிற் கடைப்பிடிப்பதும் நல்வாழ்க்கைக்கு அவசியமானவை என்பது மிக இளவயதிலேயே எல்லோருடைய உள்ளங்களிலும் பதிய வைக்கப்பட வேண்டும். உங்களுக்காகத் தனிப் பகுதி ஒன்றை நாம் ஆரம்பித்ததற்குரிய காரணம் இதுதான். "இந்துசாதனம்" இதழில் வெளியாகின்ற கட்டுரைகள், கவிதைகள், தகவல்கள் எல்லாவற்றையும் வாசித்தால், சமய உண்மைகளை விளங்கிக் கொள்ளலாம் ; சமய வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்; சமயப் பெரியார்களின் வாழ்க்கையைப் பின்பற்றலாம்; பழி, பாவங்களைச் செய்யாமல், எல்லோருக்கும் நன்மையைச் செய்து என்றுமே நல்லவர்களாக, நாடு போற்ற வாழலாம். கட்டுரைகள், கவிதைகளை வாசிக்கத் தூண்டும் நோக்குடன்தான் சமய அறிவுப் போட்டியை நாம் நடத்தி வருகின்றோம். கேள்விகள் இலகுவானவை. கேள்விகளுக்குரிய விடைகள் எல்லாமே "இந்துசாதன' த்திலேதான் இருக்கின்றன. பிறருடைய உதவியின்றி நீங்களாகவே விடைகளைக் கண்டு பிடித்துவிடலாம். ஒரு புத்தகத்தை - ஒரு கட்டுரையை எவ்வாறு வாசிக்கவேண்டும் என்பதற்குரிய பயிற்சியாகவும் இது அமையும். உங்கள் எழுத்து, உறுப்பாகவும் அழகாகவும் அமைய வேண்டும் என்பதற்காகத்தான், கேள்விகளையும் விடைகளையும் நீங்களே எழுதவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளோம். எங்க ளுடைய இந்த நோக்கங்களை நன்குணர்ந்து, அதிக அளவில் இந்தப் போட்டியிற் கலந்துகொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு மாதமும் இந்தப் போட்டியிற் கலந்துகொண்டு பல தடவை பரிசுபெற்ற யாழ். மத்திய கல்லூரி மாணவன் ஏகபிர்த்தன்
என்பவரைப்பாராட்டுகின்றோம்.
 
 

2OO விரோதி தை 01
1/2
வர் பக்கம்
வரக் குருக்கள் நூல் நிலையம் எங்கே
வில் ஐயனார் கோவில் வளாகத்தில்
வி. பிரசாந்தினி கணேசலிங்கம் ாலை யா/இந்துமகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.
அதிபர்களையும் பாராட்டுகின்றோம். பரிசுத் ல் அனுப்பிவைக்கப்படும்.
திக்கு பின்னர் வந்த விடைகள் பரிசீலனைக்கு
பின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே - என லில் இடம்பெற்றுள்ளது?
IIL 6066,1650TGh.
Թարմացth, உங்கள் வகுப்பாசிரியர் மும் இருக்கவேண்டும்.
02.2010 அல்லது அதற்குமுன் கிடைக்கக் வப் போட்டி இல 08, இந்து சாதனம், இல. 66, வியடி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு

Page 18
இந்துசாதனம் 4.O.
பேதாபேதம்
64. இன்மைப்பொருள்கொண்ட மற்றொருவராகிய இராமாநுசர் இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை எவ்வாறு விளக்குகி றார்?
இராமாநுசர் சைவ சித்தாந்திகளைப்போல முப்பொருள் உண்மை கொண்டவர். அசித்து ஆகிய உலகம், சித்து ஆகிய உயிர்கள், ஈசுவரன் ஆகிய இறைவன் என்பவையே அவர்கொண்ட மூன்றுபொருள்கள்.
"உலகு கிடையாது. உயிர்கள் கிடையா. பிரமம் மட்டுமே உள்ளது" எனக் கொண்ட சங்கரருக்கு அத்துவிதம் என்பதன் பொருள் இரண்டில்லை; ஒன்றே என விளக்குவது எளிதாயிற்று. ஆனால் "இறைவன் வேறு உயிர்கள் வேறு. இவ்விரண்டு பொருள்களும் உண்மை" எனக் கொண்ட தோடு, "அத்துவிதம் என்பதன் பொருள் இரண்டில்லை; ஒன்றே" எனவும் கொண்ட இராமாநுசருக்கு அத்துவிதம் என்பதற்கு விளக்கம் கொடுப்பது அவ்வளவு எளிதன்று. அவர் என்ன வகையான விளக்கம் கொடுக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
இறைவனே உயிர்கள் அனைத்திற்கும், உலகம் யாவைக்கும் அந்தர்யாமியாய் அவற்றை உள்நின்று இயக்கு கின்றான்; அவற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு, தான் அவற்றிற்கு உயிராக
• - பக்கதி )آلسا آقلم *கழிமாதம் 09 - 1ജ് d hآ آلاس இந்துசாத
நிற்கின்றான். இவ்வாறு உயிர்கள் இறைவனுக்குச் சரீரமாகவும், இறைவனை அச்சரீரத்தை உடைய சரீரியாகவும் கொள்கின்றார் இராமாநுசர். இங்ங்ணம் கொண்டு உலகு, உயிர்கள், இறைவன் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு பொருள் என்கிறார். இவ்வாறு கொள்வதால், இறைவனுக்குப் புறம்பாக அவனிலிருந்து வேறுபட்டதாகப் பொருள் எதுவும் இல்லை என்பது பெறப்படுகிறது.
இவ்விதமாக இராமாநுசர் உலகமும் உண்மை; உயிர் களும் உண்மை என்ற கொள்கையை விடாமல், அதேசமயம் பிரமம் ஒன்றே உள்ளது என்பதற்கும் மேற் கூறியவாறு நுட்பமான விளக்கம் கொடுத்தார்.
சரீரம் சரீரியை விட்டுத் தனித்து இருக்க இயலாது; தனித்து இயங்கவும் முடியாது. சரீரம் நிலைப்பதற்குச் சரீரி இன்றியமையாதது. அதுபோலவே உயிர்களுக்கும் உலகுக்கும் இறைவன் இன்றியமையாதவன்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள இச்சம்பந்தம் பேதாபேதம் எனப்படும். இது சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது என்பர். சொல் வேறு பொருள் வேறு; ஆதலின் பேதம். சில இடங்களில் சொல்லே பொருளாக அபேதமாகக் கூறப்படும்.
 
 
 
 
 
 
 
 

2OO விரோதி தை 01
சொல்லையும் பொருளையும் வேறு வேறாக வைத்துக் கூறும் இடங்களையும், சொல்லே பொருள் என ஒன்றாக வைத்துக்கூறும் இடங்களையும், இலக்கண நூல்களிற் காணலாம்.
"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள" என்பது தொல்காப்பியம் (உயிரியல்). கறுத்தல் என்ற சொல்லும், சிவத்தல் என்ற சொல்லும் சினங்கொள்ளுதல் என்ற பொருளை உடையன என்பது இந்நூற்பாவின் கருத்து. இதிற் சொல்லும் அதன் பொருளும் வேறாகக் கூறப்பட்டுள்ளன. இது பேதம். இனி, "தெவ்வுப் பகையாகும்" என்பது மற்றொரு நூற்பா."தெவ்வு" என்ற சொல் பகை என்ற பொருளைத் தரும் என்பது இதன் கருத்து. ஆனால் இந்நூற்பா எப்படி அமைந்திருக்கிறது? சொல்லே பொருள் என்னும்படி இரண்டையும் ஒன்றாகக் கூறுகிறது. இது அபேதம்.
வேதம் சில இடங்களில் கடவுளும் உலகமும் ஒன்றே என அபேதமாகவும், சில இடங்களில் அவை வேறுவேறு எனப் பேதமாகவும் கூறுதலால் இவ்விரண்டையும் ஏற்றுக்கொண்டு, கடவுளும் உலகமும் வேறுதான்; ஒன்றும்தான் எனப் பேதாபேதம் கூறுதலே பொருந்தும் என்பர்.
ஓரிடத்திலேயே பேதம், அபேதம் இரண்டும் இருத்தல் எவ்வாறு என்று எழும் ஐயத்தை
சைவசித்தாந்தம்
முனைவர் ஆ.ஆனந்தராசன்
நீக்குவதற்காகச் சொல்லப்பட்டதே "சொல்லும் பொருளும் போல" என்ற இவ்வுவமையாகும்.
பேதவாதம் 65. மூன்றாமவராகிய மத்துவர் நகாரம் தரும் பொருள்
மூன்றில் எந்தப்பொருளைக் கொள்கிறார்?
அத்துவிதம் என்பதில் உள்ள நகாரத்திற்கு மத்துவர் மறுதலைப்பொருள் கொண்டார்.
அதன்படி, அத்துவிதம் என்பது இரண்டிற்கு மறுதலை யானது என்ற பொருளைத் தரும். இரண்டிற்கு மறுதலை யாவது ஒன்று என்பதே. அந்த ஒன்று பிரமமே என்பதும், அஃது இரண்டிற்கு மறுதலையானது என்பதும் விளங்கும்.
பிரமம் இரண்டிற்கு மறுதலையானது என்பதால், இரண்டாகிய உயிர், உலகம் என்பனவும் இருத்தல் பெறப்படும்.
இங்ங்ணம் ஒன்றாய் நிற்கும் பிரமமும் அதற்கு மறுதலையாய், வேறாய் நிற்கின்ற உயிரும் உலகமும் ஆகிய இவை தம்முள் ஒளியும் இருளும் போன்றவை என அவர்தம் கொள்கையை நிறுவுவார்.
பிரமமும் உயிரும் எவ்வகையில் மறுதலையான
பொருள்கள் எனில், பிரமம் பெரிது; அறிவே வடிவாயும் ->

Page 19
இந்துசாதனம்
l4O
ஆனந்தமே வடிவாயும் உள்ளது; தூயது. உயிர் சிறிது; அறியாமையையும் துன்பத்தையும் உடையது; மலங்களிற் பட்டு நிற்பது. இவை போன்ற தன்மைகளால் அவை தம்முள் ஒளியும் இருளும்போல்வனவாம்.
இவ்வாறு கூறுவதால் இவரது வாதம் பேதவாதம் எனப்படும்.
மெய்கண்பார்தரும் விளக்கம்
66. அத்துவிதத்திற்கு விளக்கம் கூறிய சங்கரர் முதலிய
67.
மூவரும் தத்தம் கருத்திற்கு ஏற்ப இன்மைப் பொருளையோ, மறுதலைப் பொருளையோ கொண்டனர் என்று கூறினீர்கள். எஞ்சியுள்ள அன்மைப் பொருளைக் கொண்டவர் யாரும் இல்லையோ?
சித்தாந்த சைவப்பெருமக்களை நீமறந்தனையோ? சித்தாந்த சைவத்தின் கோட்பாட்டினை நிலைநாட்டிய மெய்கண்டார் என்னும் அருட்குரவரே அன்மைப் பொருள் கொண்டு அத்துவிதம் என்பதன் உண்மைப் பொருளைக் கண்டு கூறியவர் ஆவார். அத்துவித மெய்யைக் கண்டமை பற்றியே அவருக்கு மெய்கண்டார் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று.
மெய்கண்டார் அன்மைப் பொருள் கொண்டு அத்துவிதம் என்பதன் பொருளை எங்ங்னம் ofî6ITäisá8äis ESIT”IglooTITr?
"பிரமம் அத்துவிதம்" என்று உபநிடதம் கூறுகின்றது. அத்துவிதம் என்பதற்கு அன்மைப் பொருள் கொண்டால், இறைவன் இரண்டு அல்லன் என்ற பொருளை அது தரும்.
அன்மைச் சொல்பற்றி முன்னேயே கூறியுள்ளோம். அன்மை என்பது சிறிது மறுத்துச் சிறிது உடன்படுவது என்றோம். "இரண்டு அல்லன்" என்பதிலுள்ள அன்மை எதனை மறுக்கிறது, எதனை உடன்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
"இரண்டு" என்பதற்கு வேறு என்பது பொருள்; எனவே, இறைவன் இரண்டு அல்லன் என்றால், இறைவன் வேறல்லன் என்பது பொருளாகிறது. எவற்றின் வேறல்லன் எனில், உயிர் உலகு என்பவற்றின் வேறல்லன் என்றுகொள்ளல்வேண்டும்.
இதில் உள்ள அன்மை, இறைவன் பொருள் தன்மையால் உயிர் உலகு என்பவற்றின் வேறுதான் என்பதை முன்னர் ஒருவகையால் உடன்பட்டது. இதனை முன்னர் உடன் பட்டதனால் தான், அங்ங்ணம் ஆயினும் அவன் கலப்பினால் உயிர்களேயாயும் உலகமேயாயும் ஒன்றுபட்டுள்ளமையால் அவனை அவற்றின் வேறு என்றல் பொருந்தாது என்ற கருத்தில் "இரண்டு அல்லன்" எனப் பின்னர் ஒருவகையால் மறுத்தது.
எனவே "இறைவன் இரண்டல்லன்" (பிரமம் அத்துவிதம்) எனின், அவன் உயிர்கள் உலகம் என்பவற்றோடு ஒரு வகையால் ஒன்றாயும், ஒரு வகையால் வேறாயும் இருப்பவன் என்பது பொருளாகும்.
1

2OO விரோதி தை 01
68.
இதுவே சைவ சித்தாந்தத்தில் இறைவன் உலகு உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் நிற்பன் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்ற மூன்று தன்மையும் ஒருங்கே தோன்ற நிற்கும் நிலையே அத்துவிதமாகும் என்பது மெய்கண்டார் தரும் விளக்க மாகும்.
இவ்விடத்தில் பின்வருவன உளம் கொள்ளுதற்கு உரியவை. ஏனைய உரைகாரர்கள் அத்துவிதம் என்ற சொல்லுக்கு ஒன்று என்றே பொருள் கூறினர்; அந்த ஒன்று பிரமத்தைக் குறிக்கும் என்றும் கொண்டனர். அந்தவகையில் ஒற்றுமைப்பட்ட அவர்கள் பிரமப் பொருளுக்கு விளக்கம் கூறும் வகையில் தம்முள் பெரிதும் வேறுபட்டனர்.
ஆயின், மெய்கண்டார் அத்துவிதம் என்பது ஒன்று என்னும் எண்ணுப்பெயரைக் குறிக்க வரவில்லை என்னும் கருத்தினராய், அடிப்படையிலேயே அவர்களினின்றும் வேறுபட்டார். உபநிடதங்களில் வந்துள்ள அச்சொல் பிரமத் திற்கும், ஏனைய உயிர் உலகங்களுக்கும் இடையேயுள்ள விட்டு நீங்காத, வேறல்லாத, தொடர்பை - உறவைக் குறிக்க எழுந்தது எனக் கொண்டார்.
அத்துவிதம் என்ற சொல் இரு பொருள் பிரிவின்றி இயைந்து நிற்கும் இயைபினையே உணர்த்தும் என்பதும், அதனால் இறைவன் உலகத்தோடு ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்னும் இம் மூவகையும் அமைய இயைந்து நிற்பன் எனப் பொருள் கூறுதலே பொருந்தும் என்பதும், இதுவே "பிரமம் அத்துவிதம்" என்னும் வேத மொழிக்குப் பொருளாகும் என்பதுமே அவர் திருமுறைகளின் வழிநின்று கண்டுகாட்டிய உண்மைகளாகும்.
இறைவன் உயிர்களிடத்தில் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இயைந்து நிற்பன் என்றீர்கள். இம் மூவகையுள் அவன் உயிர்களிடத்தில் ஒன்றாய் நிற்றல் எவ்வாறு?
இறைவன் உயிர்களோடும் பிறவற்றோடும் ஒன்றாய்க் கலந்திருக்கும் நிலைக்கு "உடலில் உயிர்போல்" என்னும் உவமை கூறப்படும்.
இப்பிறப்பு நிலையில் உயிர் உடம்போடு கூடி நிற்கிறது. உடம்பும் உயிரும் கூடியிருப்பினும் உடம்பினுள் உயிரின் இருப்புச் சிறிதும் புலனாவதில்லை. உடம்பு ஒன்றே உள்ள தாகத் தோன்றுகின்றது. அதனாலேயே உலகாயதர் போன்றோர் "உயிர் என ஒன்றில்லை, உடம்புதான் உயிர்" என்று கூறுவாராயினர். அவ்வாறு அவர்கள்கூறும் அளவிற்கு உயிரானது உடம்போடு இயைந்து நிற்கிறது; உடம்பே தானாய் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றது.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் பொழுது, புலப்படாத உயிரை நோக்கிப் பெயர் இடுவதில்லை; கண்ணுக்குத் தெரிகின்ற உடம்பை நோக்கித்தான் பெயர்
இடுகிறார்கள்.
->

Page 20
இந்துசாதனம் 4.O.
இவ்வாறு உடம்பிற்கு இட்டபெயரைச் சொல்லி யாரேனும் அழைத்தால் உயிர் வாளா இருப்பதில்லை; அப்பெயர் தனக்கு உரியதன்று என்றும் நினைப்பதில்லை. அது தன்னை அழைத்ததாகவே கருதிக்கொண்டு "என்ன?" என்று எதிர்க்குரல் கொடுக்கின்றது. இஃது எதைக் காட்டுகிறது? உயிர், தான் வேறு, உடம்பு வேறு என்பதின்றி, உடம்பாகவே ஒன்றிநிற்கிறது என்பதைத்தானே காட்டுகின்றது.
உடம்பில் கலந்து நிற்கும் உயிர்போல, இறைவன் உயிர்களோடு கலந்து உயிர்களேயாய் நிற்கின்றான். அவனது இருப்புச் சிறிதும் புலப்படுவதில்லை. இங்ங்ணம் உயிர்களோடு அவையேயாய்க் கலந்து நிற்பினும் அவன் உயிர்களாகிவிட மாட்டான். அவன் அந்நிலையிலும் அவையாகாது தானேயாய் வேறு நிற்பவன் என்பதை உணர்தல் வேண்டும்.
இங்ங்ணம் இறைவன் சித்தாகிய உயிர்களோடும், சடமாகிய உலகத்தோடும் கலந்து அவையேயாய் இருத்தலே "கலப்பினால் ஒன்றாதல்"எனப்படும். இதற்குச் சொல்லப்பட்ட உவமையே "உடலில் உயிர்போல்" என்பது.
69. இறைவன் உயிரிற் கலந்து உயிராய் நிற்பினும் அவன் அவையாகான் என்றும், தானாய் வேறு நிற்கும் தன்மை அவனுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டீர்கள். அவன் அங்ஙனம் வேறாய் நிற்பவன் என்பதைச் சித்தாந்தம் எவ்வாறு விளக்கிக் காட்டுகிறது?
தானாக அறியும் சுதந்திர அறிவு உயிருக்கு இல்லை. யாதொன்றையும் இறைவன் அறிவிக்கவே உயிர் அறியும்.
உயிரின் அறிவை ஆணவம் என்னும் இருட்படலம் இயல்பாகவே மறைத்து நிற்கிறது. அவ்விருளைச் சிறிது நீக்கி அதன் அறிவை முதலில் விளங்கச் செய்தல் வேண்டும். அதாவது, அறியுந் தகுதியை முதலில் உயிரின் அறிவில் ஏற்படுத்தவேண்டும்.
al
மகா சிவராத்திரி பற்றி அகில
சிவராத்திரி விரததினம் இவ்வருடம் இரு பஞ்சாங்கங் குழப்பமடைந்த நிலையில், எப்போது சிவராத்திரி விரதத்தை அணு கேட்டுவருகின்றார்கள். அதற்குரிய சரியான பதிலை வழங்கவேண்
இவ்வருடம் மார்ச் 15ஆம் திகதியன்றே மஹா சில
விடுமுறையாகப் பிரகடனம் செய்வதற்கு முன்பதாகவே கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. இதன்போது எடுக்கட் மலை, இராமேஸ்வரம், சிதம்பரம் போன்ற திருத்தலங்களில் ம கவனத்திற்கொண்டு மார்ச் 13ஆம் திகதியன்றே மஹா சில இந்துமாமன்றம் வலியுறுத்தியிருந்தது.
அத்துடன் 2010ஆம் ஆண்டிற்குரிய அரச விடுமுறை 2009 மே மாதம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு அன முன்வைக்கப்பட்டது. எனவே மார்ச் 13ஆம் திகதி சனிக்கிழபை என்பதை அகில இலங்கை இந்துமாமன்றம் இந்துமக்கள் அனை
2.

2ΟΠΟ விரோதி தை 01
இவ்வுதவியை இறைவன் தான் செய்கிறான். அவன் தனது ஆற்றலால் ஆணவ இருளைச் சிறிது விலக்கி, உயிரின் அறிவை விளங்கச்செய்து அதற்கு அறியும் நிலையை உண்டாக்கிப் பின், உலகப் பொருள்களை அதற்கு அறிவிக்கின்றான். இவ்வாறு ஒவ்வோர் உயிரிடத்திலும் அவன் கலந்திருந்து இவ்வுதவியை இடையறாது செய்து வருகின்றான்.
இறைவன் அறிவைத் தருபவனாகவும், உயிர்கள் அறிவைப் பெறுவனவாகவும் உள்ளன. அறிவு நிகழ்வதற்கு அறிவிப் பவனும் அறிபவனும் வேறாய் இருத்தல் வேண்டும். அது பற்றியே இறைவன் உயிர்களிடத்தில் ஒன்றாயிருக்கும் அந்நிலையிலேயே பொருள் தன்மையால் வேறாகவும் நின்று அறிவிப்பவனாக உள்ளான். இதற்குக் "கண்ணொளியில் சூரியவொளிபோல்" என்பது உவமையாகக் கூறப்படும்.
கண்ணுக்குக் காணும் ஒளி உண்டு. ஆனால் அக் கண்ணொளி தானே பொருளைக் காணமாட்டாது. பிறிதோர் ஒளியின் துணை அதற்கு வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் விளக்கின் ஒளியும், பகலில் சூரியவொளியும் கண்ணுக்குப் பொருள்களைக் காட்டுகின்றன.
சூரியவொளி எவ்வாறு உதவி செய்கிறது என்பதைப் பார்ப்போம். அவ்வொளி கண்ணோடு பொருந்திக் கண்ணில் உள்ள இருளை ஒட்டிக் கண்ணொளிக்குக் காணும் நிலைமையை ஏற்படுத்துகின்றது. பின் அக்கண்ணொளிக்கு உலகப்பொருள்களை அச்சூரியவொளியே காட்டுகிறது.
இவ்வாறு சூரியவொளி காட்டும் ஒளியாகவும், கண்ணொளி காணும் ஒளியாகவும், பொருள் தன்மையால் வேறுபட்டு உள்ளன. கண்ணிடத்தில் இவ்விரு ஒளிகளும் கலந்துநின்று வேறாய்ச் செயற்படும்போதே காட்சி நிகழ்கிறது. கண்ணில் சூரியவொளிபோல, இறைவன் உயிரிடத்தில் வேறாய் நின்று அதற்குப் பொருள்களை அறிவிக்கின்றான். 人
* ೨ಿ உருைக்.
ککلیس S es Հ*
இலங்கை இந்துமாமன்றம்
களிலும் வெவ்வேறாகக் காணப்படுவதால் இந்து மக்கள் பலர் ரஷ்டிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்திடம் ண்டியபொறுப்பு:இந்துமாமன்றத்துக்கு இருக்கின்றது.
வராத்திரி என்பதை அரசாங்கம் குறிப்பிட்டு அதனை அரச இந்துமாமன்றம் சமய அறிஞர்கள் பலருடன் இதுபற்றிக் பட்ட தீர்மானத்தின்படியும் இந்தியாவிலுள்ள திருவெண்ணா கா சிவராத்திரி பூசை வழிபாடுகள் நடத்தப்படும் தினத்தையும் வராத்திரி விரதத்தை அனுட்டிப்பது பொருத்தமானது என்று
தினங்களைக் கணிப்பது தொடர்பாகப் பதிவாளர் நாயகத்தால் ழக்கப்பட்டிருந்த இந்து மாமன்றப் பிரதிநிதியாலும் இதே கருத்து nயன்றே மஹா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட வேண்டும் னவருக்கும் அறியத் தருகின்றது.
O

Page 21
இந்துசாதனம் 4.O
சைவபரிபாலனசபை - தோற்றமு
இத்துக்கல்லுM அதிகAரசை
1. இத்தால் நிரல் A யில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மேற்குறித்த கல்லூரியின் தற்போதைய அதிகாரிகளாவர். நிரல் B யில் விதிக்கப்பட்டபடியும், குறிக்கப்பட்டபடியும் இப்போதுள்ள அதிகாரிகளின் பின் காலந்தோறும் நியமிக்கப்படும் அதிகாரிகளும் "யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிகார சபை" என்னும் பெயர்கொண்ட சபையாகச் சேர்ந்து இருப்பாராக. இந்தப் பெயருடனேயே இவர்களும் இவர்களுக்குப்பின் குறித்த சபையின் அங்கத்தவர்களாக வருவோரும் என்றென்றும் இருந்து கருமம் ஆற்றுவாராக. விருப்பப்படி மாற்றவோ திருத்தவோ முடியுமானதோர் பொது முத்திரையை இவ்வதிகாரசபையார் உபயோகிப்பாராக.
2. இந்த அதிகார சபையாரும் இவர்களுக்குப் பின்னர் அதிகார சபையின் அங்கத்தவர்களாக வருபவர்களும் மேலே சொல்லப் பட்ட அதே பெயருடன் இவ்விலங்கைத் தீவில் உள்ள எந்தவொரு நீதிமன்றிலும் எந்த நீதிபதி முன்னும் மற்றும் நீதி செலுத்தும் எந்த உத்தியோகத்தர் முன்பும், எவ்வகையான சித்தாரிப்பு, முறைப்பாடு, மானநட்டப்பிராது என்பனவற்றில் சித்தாரிக்கவும், சித்தாரிக்கப்படவும், உறுதிமொழி கொடுக்க வும், மறுமொழி கொடுக்கும்படி கேட்கப்படவும், பிராதை
எதிர்க்கவும் எதிர்ப்பிக்கவும் உரித்துடையவராவார்.
3. இவர்களும் இவர்கள் பின் வருபவர்களும் மேற்குறித்த பெயரில் தாம் இதுவரை காலத்தில் வாங்கியுள்ள அசைவற்ற, அசையும் சொத்துக்களையும், ஆதனங்களையும், நன்கொடை, உரிமை, கொள்விலை என்பவற்றால் பெற்ற அசைவுள்ளதும் அசைவற்றதுமான ஆதனங்கள், சொத்துக்களைக் குறித்த கல்லூரியின் நலனுக்காக வைத்திருக்கவோ, விற்கவோ,
மாற்றவோ உரித்துடையோராவர்.
4. குறித்த கல்லூரியின் பாதுகாப்பாளர் என்ற ரீதியில், எவர் பெயரிலாவது காசுக்கு, ஆதனங்களுக்கு, அதனோடு சேர்ந்த பொருள்களுக்கான சகல ஈடுகளும், ஏனைய பிணைகளும் இத்தால் குறித்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் அதிகார சபையாருக்கும் அவர்களுக்குப்பின் அச்சபையில் அங்கத்தவர் களாக வருவோருக்கும் அந்தப் பாதுகாப்பாளராலேயே மாற்றப் பட்டமைபோல மாற்றப்பட வேண்டும். அதன்பின் வரும் காலத்தில் வரும் அவ்வதிகார சபையாரும், அவ்வாறான ஈடுகள், பிணைகள் போன்றவற்றை மாற்றம் செய்யவோ, தம் தீர்மானப்படி வேறேதும் செய்யவோ முழு உரிமையும்
உடையவராவார்.
5. இச்சட்டம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்வதற்கான சட்டம் என்று அழைக்கப்படும். எக்கரு
மத்துக்கும் இச்சட்டத்தை அப்பெயருடனே குறிப்பிடலாம்.
21

2OO விரோதி தை 01
ம் வளர்ச்சியும் பணிகளும் - 30
ச் சடேல் (nதMLர்ச்சி.)
அதிகாரசபையின் விதானங்கள்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிஸ்தாபகர்கள் சம்மதித்து ஒழுங்கு
படுத்திய விதானங்கள் வருமாறு:
1.
இந்த நிறுவனம் "யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி" என்று அழைக்கப்படும்.
2. தூய இந்து முறைப்படி இந்த நிறுவனம் நடப்பிக்கப்பட வேண்டும். இதன் அதிகாரசபையார் இந்து சமயிகளாக இருத்தல் வேண்டும்.
3. இந்நிறுவனத்தின் நோக்கம் இக்கல்லூரியில் சேர்க்கப்படும் எல்லா மாணவர்களுக்கும் பூரணமான பொது அறிவையும் தினமும் இந்துசமய சம்பந்தமான போதனைகளையும் அளித்தலாகும்.
4. இக்கல்லூரியைப் பரிபாலித்தலும் நடப்பித்தலும் முப்பதிற்கு மேற்படாததும் இருபதிற்குக் குறையாதது மான அங்கத்த வர்களைக் கொண்டவோர் அதிகாரசபையிடம் இருக்கும். இவ்வதிகார சபையார் (உபவிதி (6) இன்படி இளைப்பாறுதல், தேர்தல் என்பவற்றின் பொருட்டு) முறையே A, B, C எனப்படும் மூன்று நிரல்களில் ஒழுங்குபடுத்தப்படுவர். ஒவ்வோர் நிரலிலும் பத்துக்கு மேற்பட்டோர் இருக்க வொண்ணாது.
5. இந்த விதானங்கள் நிறைவேறியதும் பின்வருவோரை அதிகாரசபையானது அங்கத்தவர்களாகக்கொள்ளும். அவர்கள் மேலே காட்டப்பட்டபடி பின்வருமாறு மூன்று நிரல்களில் பிரிக்கப்படுவர்.
Šrdo A
திரு.அ.கனகசபை, B.A. $5.9. Louhi)6) irrö560Th, J.P., U.P.M. திரு.இ.கந்தையா திரு.க.மு.சின்னையா திரு.ச.சபாரத்தினம் திரு.வை. ஆஅம்பலவாணர் திரு.மு.சிதம்பரநாத முதலியார் திரு. வீ.முதலியார் சிற்றம்பலம் திரு.கு.முத்துக்குமாரசூரியர் திரு.சு.கனகரத்தினம்
நிரல் B
ராவ்பகதூர்.கு.முருகேசம்பிள்ளை, B.A Dr. (p. 5i,605u IIT திரு.இ.இ.முதலியார் தில்லைநாதர்

Page 22
இந்துசாதனம் 4.O
திரு.ச.சிவகுருநாதர் திரு.ச.துரைச்சாமி திரு.வ. வேலாயுதம்பிள்ளை திரு.சி.சுப்பிரமணியம் திரு.வை. முதலியார் சிவசிதம்பரம் திரு.இ.கா.அருளம்பலம் திரு.வ. குமாரசுவாமி
Êrro C
திருதா.செல்லப்பாபிள்ளை, B.A.,B.L. திரு.வி.காசிப்பிள்ளை திரு.சித.மு.பசுபதிச்செட்டியார் திரு. அ.சபாபதி திரு.சி.வேலுப்பிள்ளை திரு.சீ.கந்தையா
திரு.சி. விசுவப்பா திரு.க.முதலியார் நவரத்தினம் திரு. சு. நாகலிங்கம் திரு.வை.சண்முகம்
உபவிதி (8) இன்படி தெரிவு செய்யப்படும் நிரல் A யில் காட்டப்பட்டுள்ள அதிகாரசபை அங்கத்தவர்களும் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்களும் உபவிதி (6) இற்கமைய அதிகார சபையினரைத் தெரிவுசெய்யும் முதல் தேர்தல்வரை கடமை ஏற்றுப் பணிபுரிய வேண்டும். நிரல் B யில் உள்ளவர்களும் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்களும் இரண்டாவது தெரிவு வரைக்கும், நிரல் C யில் உள்ளவர்களும் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப் படுபவர்களும் மூன்றாவது தெரிவுவரைக்கும் பணியாற்றலாம்.
6) இவ்விதானத்தின் உப விதி (9) இற்கமைய நடக்கும் முதல் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அதிகார சபையாரின் தெரிவு இத்திட்டத்தின்படி முதன்முறையாக நடைபெறும். அந்தத் தெரிவில், அப்போது நிரல் A யில் இருப்பவர்கள் இளைப்பாற வேண்டும். ஆனால் அவர்கள் மீண்டும் தெரிவு
செய்யப்படுதற்கு உரிமையுடையவராவர்.
அப்போது நிரல்கள் B,C க்களில் உள்ள அதிகாரசபை அங்கத்தினர் அடுத்த மூன்று வருட காலத்திற்குமான நிரல் A அதிகாரசபை அங்கத்தவர்களை (பத்துக்கு மேற்படாமல்) தெரிவுசெய்வர்.
இதுபோலவே இவ்விதானப்படி இரண்டாம், மூன்றாம் தெரிவுகளும் இரண்டாம் மூன்றாம் வருடாந்தப் பொதுக் கூட்டங்களில் முறையே நிகழும். நிரல் B அங்கத்தினர் இரண்டாம் வருடாந்தப் பொதுக்கூட்டத்திலும் நிரல், C அங்கத்தினர் மூன்றாம் வருடாந்தப் பொதுக்கூட்டத்திலும் இளைப்பாறுவர்; ஆனால் அவர்கள் திரும்பவும் தெரிவு செய்யப்படலாம். இவ்வாறாக மாறி மாறி இளைப்பாறுதல் (மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியுடன்) இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி நடத்தல் வேண்டும்.

2OO விரோதி தை 01
7)
8)
10.
1.
12。
மேற்கண்டவாறு நடைபெறும் ஒவ்வோர் தெரிவிலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிப்பவரும், இக்கல்லூரியின் வளர்ச்சியில் சிரத்தை கொண்டுள்ளவருமான எந்த இந்து சமயியும் அதிகாரசபை அங்கத்தவராகத் தெரிவுசெய்யப்பட அருகதையுடையோராவர். ஆனால் பாரதூரமான குற்றத்தின் பொருட்டு தண்டனைபெற்ற எவரும் அவ்வாறு தெரிவு
செய்யப்பட அருகராகார்.
அதிகாரசபை அங்கத்தவரொருவர், மரணித்தால் அல்லது தாமாகப் பதவிவிலகினால் ஏற்படும் வெற்றிடத்திற்கு வருடாந்தப் பொதுக்கூட்டமொன்றிலே (13) ஆம் உய விதிக்கு அமைவாகத் தெரிவுசெய்யப்படத் தகுதி உடைய ஒருவரை அதிகாரசபை அங்கத்தவராகத் தெரிவுசெய்யலாம். அவ்வாறு தெரிவு செய்யப்படுமொருவர் தாம் அங்கத்தவராக இருக்கும் நிரலில் உள்ளவர்கள் இளைப்பாறவேண்டிய காலவெல்லை வரும் வரைக்கும், அல்லது தாமே விலகும்வரைக்கும் அதிகாரசபை அங்கத்தவராகக் கடமையேற்றுப்பணிபுரிவார்.
கல்லூரிக்குரிய கரும ஆண்டு உபவிதி(14) க்கமைய எப்போது முடிவுபெறுமோ, அதன்பின் சொற்ப நாட்களில், அதிகார சபையார் நிச்சயம் செய்யும் இடத்திலே, நேரத்திலே அதிகார சபையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் கூட்டப்படும். அக்கூட்டத்திற்கான அறிவித்தல் தபால்மூலமாகவேனும் நேர்முகமாகவேனும், கூட்டம் கூடும் தினத்திற்கு ஏழு நாட்களின் முன்பதாகச் செயலாளரால் அதிகாரசபை அங்கத்த வர்களுக்குத் தனித்தனி கொடுக்கப்படல் வேண்டும். அப்படிப்பட்ட ஒவ்வோர் வருடாந்தப் பொதுக் கூட்டத்திலும் கல்லூரியின் நிலைமை, நிருவாகம் முதலான எல்லாவித அறிக்கையும் கணக்குப் பரிசோதகரால் பரிசோதித்துச் சரியெனக் காணப்பட்ட கல்லூரியின் பண வரவு - செலவுக் கணக்கு விபரம் ஒன்றும் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தபட்சம் ஒருதடவையாவது அதிகார சபையின் கூட்டமொன்று, அச்சபை காலந்தோறும் நிர்ணயிக்கும் இடம் அல்லது இடங்களில், திகதி அல்லது திகதிகளில் கூட்டப்படவேண்டும்; இத்துடன் உபவிதி (17)க் கமைய அதிகாரசபையினர் அல்லது நிரந்தரநிருவாக சபையின் எழுத்து மூலமான கேள்விப்படியும் கூட்டப்படல் வேண்டும். கூட்டம் கூடும் இடம், திகதி என்பன அதிகார சபையார்
ஒவ்வொருவருக்கும் செயலாளரால் அறிவிக்கப்பட வேண்டும்.
முறைப்படி கூட்டப்படும் ஒவ்வொரு அதிகாரசபைக் கூட்டத்தில் ஒன்பது அங்கத்தவர்கள் கூட்டம் கூடுதற்கும் போதிய தொகை (Oduorum) g6Jř.
அதிகாரசபை உத்தியோகத்தர்கள் பின்வருமாறு: தலைவர்
ஒருவர், உபதலைவர் ஒருவர், கணக்குப் பரிசோதகர் ஒருவர்,
பொருளாளர், செயலாளர்,உபசெயலாளர், இவர்கள் உபவிதி(6)
(...قارنهyxاC)

Page 23
இந்துசாதனம் 4.O
இந்தோநேசிய இராச்சியமும் கொம்மியுனிச இராச்சியமும்
மேடான் நகரைத் தவிர இந்தோநேசியாவின் மற்றைய பகுதிகளிலும் 5, 10 குடும்பங்கள், 25, 30 குடும்பங்கள் என்ற வகையில் பரந்துபட்டு வாழுகின்றார்கள். இத்தகைய தமிழ் மக்கள் எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் வாசிக்கும் வாய்ப்பு இல்லை. தமிழை மறந்துபோவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். வெளி இடங்களி லிருந்து தமிழ் நூல்களையோ, தமிழ்ப் பத்திரிகைகளையோ வரவழைப்பதில் பல கட்டுப்பாடுகளும், பல சிரமங்களும் உண்டு. நூல்களை இறக்குமதி செய்வதற்குரிய கட்டுப்பாடு வேறு எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இருக்கவில்லை. போதைப் பொருளுக்கு அடுத்தபடியாக மிகக் கடுமையான சட்டம் நூல்கள் இறக்குமதிக்கு உண்டு. இக்கட்டுப்பாடு ஏற்பட்டதற்கும் காரணங்கள் உண்டு.
கொம்மியுனிச சித்தாந்தங்கள் எந்த உருவத்திலும் பரவிவிடலாம் என்ற அச்சமே இக் கட்டுப்பாட்டிற்கு மூலகாரண மாகும். சிங்கப்பூர், மலேசியா, இந்தோநேசியா, ஆகிய தேசங்கள் கொம்மியுனிசுக்களின் கொடுமைகளை நன்கு அனுபவித்தவர்கள். அதனால் கொம்மியுனிசுக்களை ஒழித்துக்கட்டுவதற்கு மூன்று இராச்சியங்களுக்கிடையிலும் ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. சாந்தியையும், சமாதானத்தையும் இழந்து பயத்தினால் தினமும்
செத்துக்கொண்டே இருந்த காலம் ஒன்றிருந்தது.
அடியேன் மேடான் செல்லும்போது அடியேனால் எழுதப்பட்ட "திருமுறைச் செல்வம்" என்ற பெயருடைய முப்பது நூல்கள் கொண்டு சென்றிருந்தேன். முகப்புப் படத்தைப் பற்றி விளக்கம் கொடுத்தேன். அதற்கு "வெளியிலே தோற்றம் வேறு; உள்ளே வாசித்தால் உட்பொருள் வேறாகப் பல நூல்கள் வந்துவிடுகின்றன. போதைப்பொருள் கடத்துபவர்களும் அப்படித்தானே கடத்துகி றார்கள்" என்றுகூறி சுங்க அதிகாரிகள் அத்தனை புத்தகங்களை யும் தடுத்து நிறுத்திவிட்டார்கள். ஒருவாரங் கழித்துச் சுங்க அதிகாரியிடம் சென்று புத்தகம் பற்றிய விளக்கம் கொடுத்தோம். புத்தக முகப்புப்படத்தின் தத்துவ விளக்கமும் கொடுக்கப்பட்டது.
அடியேனுடைய கடவைச் சீட்டில் அடியேனுடைய தொழில் தலைமை ஆசிரியர் என எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உடனே சிறிது விலகியிருந்த சந்தேகம் மேலும் வலுவடைந்தது. தலைமை ஆசிரியராக உள்ளவர் இந்த நூல்களை இங்கு ஏன் கொண்டுவரவேண்டும்? ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அது என்ன என்று அடியேனை வினவினார். சந்தேகம் வலுவாகிவிட்டது என்பது அவருடைய முகத்திலே காணக்கூடியதாய் இருந்தது.
தெய்வாதீனமாகக் கூடவந்த நண்பர் நல்ல விளக்கம் கொடுத்தார். இவர் இந்து சமயப் பாடசாலைக்குத் தலைவராக இருக்கிறார். ஆனபடியினால்தான் இந்துசமய நூல்களை எழுத
 

2OO விரோதி தை 01
முடிந்தது. இங்கும் இந்து சமயப் பிரசாரத்திற்காகத்தான் வந்துள்ளார். அரசாங்கமே மதத்திற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசாங்கக் கொள்கைக்கு உதவியாக இந்து சமய மக்களுக்கு இந்து சமயப் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார் என்று கூறியதும் சுங்க அதிகாரியின் முகத்தில ஒரு தெளிவு ஏற்பட்டதைக் காண முடிந்தது.
உடனே சுங்க அதிகாரி "உங்களுக்குச் சிரமம் தந்ததற்கு மன்னியுங்கள். ஒரு சிலர் விடுகின்ற பிழையினால்தான் நாங்கள் சில விஷயங்களில் சிறிது கடுமையாக இருக்கவேண்டியுள்ளது. நீங்கள் அடிக்கடி வாருங்கள்! எமது மக்களுக்கு நல்லதைக் கூறி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்" என்று கூறி எழுந்து இரு கைகளையும் கொடுத்து அன்போடு அனுப்பிவைத்தார்.
அகழ்வாராய்ச்சி
முதன் முதல் தோன்றிய நூல் இருக்கு வேதம் என்று உலகம் முழுவதிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏகோபித்த முடிவு செய்துள்ளார்கள். வேதநூலை அடிப்படையாகக் கொண்ட சமயம் வைதிகம் எனப்படும். வேதநூல் தோன்றுவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவலிங்க வழிபாடு தோன்றி விட்டது. ஒருகாலத்தில் சிவலிங்க வழிபாடே உலகம் முழுவதி லுமிருந்தது. இந்தோநேசியாவின் அகழ்வின்போது கண்டெடுத்த சிவலிங்கங்களும் மற்றைய விக்கிரகங்களுமே அதற்கு அத்தாட்சியாகும்.
குமரிக்கண்டம் என்று அழைக்கப்பெறும் லிமூறியாக் கண்டத்தை ஆராய்ந்தவர்கள், வட மொழியில் வேதங்கள் நான்கு இருந்தது போன்றே தமிழ் மொழியிலும் வேதங்கள் நான்கு இருந்தன என்று அபிப்பிராயப்படுகின்றனர். அவ்வேதங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்று பெயர் பெற்றிருந்ததாகவுங் கூறுகின்றனர். கடல்கோளினால் பல நூல்கள் அழிந்துவிட்டன என்பதே அவர்களுடைய கோட்பாடாகும்.
நிலத்தைத் தோண்டும் இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கமோ அன்றி இந்துக்களின் ஒரு விக்கிரகமோதான் தோன்றிக்கொண்டிருக்கின்றன. காஞ்சிப்பெரியவர்கள் ஒருமுறை, "சிவவழிபாடு என்பது உலகம் முழுவதிலும் இருந்தது என்று சொல்ல வேண்டுமே தவிர பரவியது என்று சொல்வது பிழை" என்று சொன்னார்கள்.
பின்னால் வந்த சமயங்கள்தான் உலகம் முழுவதிலும் பரவித் தொன்றுதொட்டிருந்து வந்த சிவ வழிபாட்டினை மறைத்துவிட்டன. சிவ வழிபாடு இருந்தபடியேதான் இருந்தது. மற்றைச் சமயங்கள் எல்லாம் ஏதோ ஒரு நோக்கத்தோடு பரவின. தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழின் தொன்மைக்கும், தமிழின் பண்பாட்டிற்கும் சான்றாக விளங்குகின் றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு தருமம், தமிழ் மொழியின் பண்பாடு பக்தியாகும். ஆகவேதான் நமது முன்னோர் எம்மால் எப்பொழுதும் மறக்கவேண்டாத இரண்டு விடயங்களைக் குறிப் பிட்டார்கள். அவை கடவுளும் தருமமும் ஆகும். கடவுளும் தருமமும் ஒன்று, என நமது முன்னோர் கருதினர். கடவுளுக்குப் புறம்பாகத் தருமத்தை அவர்களால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடிய வில்லை.
தருமமாகிய இடபத்தின்மீது எமது வழிபடு கடவுளாகிய சிவபரம்பொருளை ஏற்றிவைத்து ஒன்றாகப் பார்த்த பெருமை சைவ சமயத்திற்குரியது. அன்பும் சிவமும் ஒன்று எனக் கண்டது போலவே அறமும் சிவமும் ஒன்றெனக் கண்டனர் சைவத் தமிழர்கள். சைவநீதி என்று கடவுளை அழைத்த பெருமையும் நமது சமயத்திற் குரியதாகும். )ارامل...(

Page 24
இந்துசாதனம் 4. O
PRAYING W
Prof. A. Sanmugadas
Flowers which stand for beauty, freshness, happiness, purity and divinity enjoy a conspicuous place in the religious, cultural and social life of the Hindus have been associated with many religions in one or the Other manner. Hinduism, Buddhism, Jainism, Christianity, Islam, Sikhism, Judaism, Baha Faith, Confucianism, and Shintoism are some of those
religions.
In Hindhu religion, flowers play an important role. The word "puja" itself rveals this fact. This very name of the Hindu worship ritual, can be translated as 'the flower act'. The lotus is considered to be par excellence among the flowers. Apparsays,
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரணஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங்கோட்டமில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
That which Sets of the beauty of flowers is the attractive
OutS
That which sets off the beauty of cows is Aaran Civan
bathing in their five products.
that which sets off the beauty of rulers is their
partiality that which sets off the beauty 9. is
seramatdivāya."
羁 - * The line "siglipp விக்கிாமரை
("that which sets off tdey of flowers is the attracive lotus") explains the status of the Lotus flower. According to Hinduism, within each human inhahiting the earth there is the spirit of the sacred Lotus. It represents eternity, purity and divinity and is widely used as a Symbol of life, partiality, ever-renewing youth and describes feminine beauty, especially the eyes. In the postures of Yoga, the lotus position, padmasana, is
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf a Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 14.0.
 
 

2OO விரோதி தை 01
TH FLOWERS
剔
Ph.D. (Edinburgh)
adopted. For the Buddhist, the Lotus flower symbolizes the Buddha. In the Bhagavad Gita, Man is adjured to be like the Lotus - he should work without attachment, dedicating his actions to God, untouched by sin like the water on a Lotus leaf and the beautiful flower standing high above the mud and water.
Water, flower and fragrantsmoke are important items in worship. Appar Syas, "iGOLD 1616) ICB g|Tulb LDD555Gugör" ( I have never forgotten to worship γου with Water, flower and fragrant Smoke). Flower in its bud, in its bloomed stage is chosen to worship God. In Hinduism, different colours of flowers are offered to different Gods. Saraswathy, Goddess of Learning prefers white lotus whereas Mahalakshmi, Goddess of wealth prefers red lotus. Red flowers are especially offered to load Pillaiyar and lord Murugan. Lord Shiva is associated with golden colour Konrai flower. Saint Sundarar sings as follows:
'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றையணிந்தவனே"
In these Thevaram lines, Sundarar says "மின்னார் செஞ்சடைமேல் គ្រឿងរ៉ា கொன்றையணிந்தவனே' ('One who adorned his red catai which is like the lightning, with Shinning konrai flowers") that Lord Shiva has adorned his a taiwith Shining Konrai flowers.
Thevaram hymns have numerous instances where flowers are associated with Gods, rituals and beauty of the premises. Flowers occupy a high position in the religious and cultural life of the Hindhus. But now they prefer plastic flowers in their cultural life. It is a pity to see our Bharata Natyam dancers wearing artificial plastic flowers. We Wonder whether they will soon make use of plastic flowers even for religious rituals. We are happy the natural flowers are still used in the temples and in Hindhu Weddings.
ينتقنية :
if the Saiva Paripalana Sabai, No.450, K.K.S. Road, Jaffna &
1.
2010 (1" Day of Thaith thingal). Phone: 0212227678