கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2010.02.13

Page 1
GOD3Fe5 Jf JIFTEDESTO சபை வெளியீடு
வடு ஆவணி மீ 26 ஆம் உ(39)
விரோதி வருடம் மாசித் (1з.o2.
முரீ பொன்னம்பல்
ငါ့6\um g
கொழும்புத் துறைமுகத்திலே அவர் நிற்கின்றார். அழகான
இந்தியாவிலிருந்துவந்த பலர் அந்தக் கப்பலிலிருந்து இற
அவர்தம் தர்ம பத்தினியும் அவருடைய கவனத்தை ஈர்ச் இருவரையும் வணங்கி வரவேற்கின்றார். அவர் : விருந்தோம்பி உபசரிக்கின்றார். அகம்மிக மகிழ்ந்த கொடுக்கின்றார். பக்தி கலந்த ஆவலுடன் அந்த
திளைக்கின்
பொன்னம்பலவாணேஸ்வரர் கோவில் ராஜே
 
 
 
 
 

திங்கள் 1ஆம் நாள்
2010) ELBI IIT. 50.00 மவாணேஸ்வரம் வாழும் g
கெ 鷲 ரனன் స్ట్రో كوري( கப்பலொன்று ஆடி ஆடி வந்து, இத்திலே தரிக்கின்றது ங்குகின்றனர். அவர்களுடன் வந்த அந்தண சிரேஷ்டர் ஒருவரும்,
கின்றனர். ஒருவித உள்ளுணர்வு உந்த, ஒடோடிச் சென்று அவர்கள் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று உரிய முறையிலே 5 அந்த அந்தணர் அரியதொரு மாதுளங்கனியை அன்புடன் அவரிடம் த மாதுளங்கனியை உடைத்துப் பார்த்த அவர் பக்திப் பரவசத்தில் pTi. உள்ளே மாதுளை முத்துக்கள் இருக்கவில்லை; பதிலாக ாரு T356T- பார்வதி அம்பாள் சமேதரான பரமேஸ்வரன் அருளொளி சிக்கொண்டிருக்கின்றார்
இது நடந்த ஒரு நிகழ்ச்சியன்று என் கற்பனையுமன்று - ஒரு
கனவு
ஆமாம், கனவேதான் ஒன்றரை நூற்றாண்டின் முன்னர், இந்த அதிசயக் கனவைக்
காணும் புண்ணியம் செய்தவர் பூரீமான் பொன்னம்பல முதலியார்
ாபுரம் மூலவர் உத்ஸவமூர்த்தி அம்பாள்

Page 2
இந்துசாதனம் 3.O
யார் இந்தப்பொன்னம்பல முதலியார்?
நாமெல்லாம் நன்கறிந்துள்ள சேர்.பொன்.இராமநாதன். சேர்.பொன். அருணாசலம் ஆகிய தமிழ்ப் பிரமுகர்களின் பெயர்களுடன் இணைந்துள்ள "பொன்"னைச் சற்று நீட்டினால், ஒரு "பொன்னம்பலம்" காட்சியளிப்பார் அல்லவா? அவரேதான், தன் பல்வேறு சிறப்புக்களாலும் பணிகளாலும் கொழும்பு மாநகரின் கெளரவம் மிக்க குடிமக்களுள் ஒருவராகிப் பொன்னம்பல முதலியாராகப்பிரகாசித்தவர்.
யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாயிலே வேர்கொண்டு கொழும்பிலுள்ள கறுவாக்காட்டு வட்டாரத்திலே விழுதுவிடத் தொடங்கிய வியத்தகு குடும்பம் அவருடையது. சேர்.வை. முத்துக்குமாரசாமி முதலியார், கலாயோகி ஆனந்தக்குமாரசாமி போன்றவர்களும் அதே குடும்பத்தைச் சேர்த்தவர்கள்தாம்.
பொன்னம்பலமுதலியார் சக்தி உபாசகர்.
ஆன்மாக்கள் அனைவரையும் அவரவரின் நிலைக்கு ஏற்ப, பக்குவப்படுத்தி, உரிய காலத்தில் இறைவனுடன் இணைய வைக்கின்ற - ஈடில்லாச் சிறப்புடையவள் சக்தி; அந்தச் சக்தியிலிருந்து இம்மியும் வேறாகாமல், என்றும் ஒன்றாகவே இருப்பவர் இறைவன், சிவபெருமான்.
இந்த உண்மையை இதயபூர்வமாக உணர்ந்துகொண்டு சக்தியின்மேல் பக்தி கொண்டிருந்தவர் பொன்னம்பல முதலியார்; பூரீ சக்கரத்திலே சக்தியை எழுந்தருளச் செய்து அதற்குப் பூஜைசெய்து வழிபடுவதைத் தன் நித்திய கடமையாக வரித்துக்கொண்டவர்.
எனினும், காலம் செல்லச்செல்ல, அவருடைய நெஞ்சிலே சிறிதுசிறிதாக ஒருவித குறுகுறுப்பு ஏற்படத்தொடங்கியது.
"நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்றல்லவா தாயுமானவ சுவாமிகள் சொல்லியிருக்கின்றார்கள்! அந்தவகையிற் பார்த்தால், மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் என்னுடைய ஈடேற்றத்தில் மட்டும் நான் கவனமாயிருப்பது "சுயநலம்"தானே!
இந்தக் குறுகுறுப்பு மேன்மேலும் வலுவடைந்து அவருடைய மனத்தை இடைவிடாது குடைந்துகொண்டிருந்த வேளையிலே தான் அற்புதமான அந்தக் கனவைக் கண்டார் பொன்னம்பல முதலியார்.
பலனை அறிந்துகொள்வதற்குப் பஞ்சாங்கத்தைப் பார்த்தாரோ இல்லையோ "நீ விரும்பும் இடத்திலே நான் அமர்ந்து அருள்புரிவேன்" என்பதே இறைவனின் திருக்குறிப்பு என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.
அம்மையும் அப்பனுமாய் வந்து வழங்கிய அருட் கட்டளையை நிறைவேற்றுவதைத்தாமதிக்க அவர் விரும்பவில்லை.
கொச்சிக்கடையிலே ஐந்து ஏக்கர் காணியை வாங்கினார். கட்டடக்கலைஞர்களைத் தென்னிந்தியாவிலிருந்து வரவழைத்தார். இறைவனின் அருளும் இடைவிடா மனிதமுயற்சியும் இணைய, இரண்டு ஆண்டுகளிற் சிற்றாலயம் ஒன்று உருவாகியது; மூலஸ்தானத்திற் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. வெளியே தெற்குவாசல் கொண்ட தனிக்கோவிலில் அம்பாள்
O.

22OO விரோதி மாசி0
திருவுருவமும், முதலியார் பூசை செய்த யந்திரம் அம்பாளின் திருவுருவத்திற்குக் கீழேயும் பிரதிஷ்டை செய்யப்பெற்றன. முதலாவது கும்பாபிஷேகம் 1857 ஆம் ஆண்டிலே நிறைவேற்றப் பட்டது.
கோவிற் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்த பொன்னம்பலம் முதலியார், 1873ஆம் ஆண்டில் இரண்டாவது கும்பாபிஷேகத்தையும் சிறப்பாகச் செய்வித்தார். தந்தையார் செய்த சிவப்பணிகளிலே தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட அவருடைய மூத்த குமாரர் குமாரசாமி முதலியார் புதிய சில பரிவார மூர்த்திகள், அவர்களுக்குரிய தனிக் கோவில்கள், மண்டபங்கள் முதலியவற்றை அமைத்து மூன்றாவது கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார்; 1887ஆம் ஆண்டிலே தந்தையார் சிவகதியடைய ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
கடவுட் பணியில் ஈடுபடுபவர்கள் இந்து சமயத்தின்மூல நூல்களான வேதங்கள், அவற்றின் வழிவந்த ஆகமங்கள் போன்றவற்றில் தெளிந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதை நன்குணர்ந்த குமாரசாமி முதலியார் கோவில் வளாகத்தில் மேற்கு வீதியிலே வேதாகம பாடசாலைக்கெனத் தனியான ஒரு கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு வசதிகள் பல செய்துகொடுக்கப்பட்ட போதிலும் முதலியார் எதிர்பார்த்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை. தமையனாரின் இந்த அனுபவங்களைச் சீர்தூக்கிப் பார்த்த பின்னர்தான் சேர்.பொன்.இராமநாதன், சுன்னாகத்தில் இராமநாதன் கல்லூரியையும், திருநெல்வேலியிற் பரமேஸ்வராக் கல்லூரியையும் தன் காலத்தில் உருவாக்கினார் என்பதை நினைவூட்டுகின்றார். இந்து வித்தியாநிதி பிரம்மபூரீ சோ.குகானந்த சர்மா ஆலய வளர்ச்சியிற் கண்ணும் கருத்துமாக இருந்த அவர் சிவகதியடைந்த பின்னர், அவருடைய இளைய சகோதரரும் பொன்னம்பல முதலியாரின் இரண்டாவது குமாரருமான இராமநாதன் முதலியார் அவர்களிடம் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் வரலாற்றில் மட்டுமல்லாமல், இராமநாத முதலியாரின் சொந்த வாழ்க்கையிலும் குறிக்கத்தக்க மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு இந்த நிர்வாக மாற்றம் பெருமளவிற்குக் காரணமாக இருந்தது என்பது மிகையான கூற்று 96OTO).
பொன்னம்பலவாணேஸ்வரம் எனப் பெருமையுடன் குறிப்பிடப்படும் இந்த ஆலயம், "இராமநாதன் சிவன் கோயில்" என்றும் பலராற் போற்றப்படுகின்ற அளவுக்கு அவருடைய கோயிற் பணிகள் மகத்தானவையாகவும், மனம் நிறைந்தவையாகவும் மிளிர்கின்றன.
தன்னுடைய அரசியல், சமூக சேவைகளுக்கு எந்தளவு முக்கியத்துவத்தைக் கொடுத்தாரோ, அந்தளவு முக்கியத்துவத்தை, இந்த ஆலயத்தை மேலும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கும், சீராக நடத்துவதற்கும் அவர் கொடுத்தார்.
அடிக்கடி தென்னிந்தியாவுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த இராமநாத முதலியார் அவ்வேளைகளில் அங்குள்ள பாடல்பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதையும், இடையறா வழக்கமாகிக் கொண்டிருந்தார்.
அவற்றுள் தில்லை நடராஜர் ஆலயமும், இராமேஸ்வரம் جلامحسیت

Page 3
இந்துசாதனம் 3C
திருக்கோயிலும் குறிக்கத்தக்கவை. அவற்றைப்போன்று கோவிற் கட்டடக் கலைக்கும், திராவிடச் சிற்பங்களுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழக்கூடிய வகையில் முற்றிலும் கருங்கல்லினால் மிகப்பிரமாண்டமான கோவிலாகப் பொன்னம்பலவாணேஸ் வரத்தைப் புனரமைக்கவேண்டும் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலே குடிகொண்டது. அவருடைய எண்ணத்தை அறிந்துகொண்ட பலருக்கு அதன் நடைமுறைச் சாத்தியத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. எனினும் அவருடைய உறுதி தளர வில்லை.
"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்". என்பது என்றும் "பொய்யா மொழி" அல்லவா?
திண்ணிய நெஞ்சம் மட்டுமல்லாமல், தேடிப்பெற்ற செல்வமும், தேடாமலே கிடைத்த செல்வாக்கும் நிறைந்திருந்த இராமநாத முதலியார் உடனடியாகவே திருப்பணியைத் தொடங்கினார். அக்காலத்திற் பிரதம சிவாச்சாரியாராகப் பணிபுரிந்த சிவழீ வே.கார்த்திகேயக் குருக்கள் (தம்பையாக் குருக்கள்) ஆகம ரீதியான ஆலோசனைகளை வழங்கினார். பல்லவர் காலச் சிற்பங்களின் சிறப்பைப் பறைசாற்றும் மகாவலிபுரத்திலே, சிற்ப பாடசாலையை நிறுவி, அதன் முதலாவது அதிபராகப் பணிபுரிந்த கணபதி ஸ்தபதியின் தந்தை வைத்யநாத ஸ்தபதியின் மூத்த தமையனான மகிழவனம் ஸ்தபதியும், அவருடைய குழுவினரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டனர். இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் கருங்கற்கள் கொண்டுவரப்பட்டன. காரணாகம விதிகளுக்கு அமையக் கோவில் உருவாகத் தொடங்கியது. இராமநாதன் அவர்களே நேரில் பிரசன்னமாகி, "நீங்கள் செய்துகொண்டிருப்பது சிவப்பணி - தவப்பணி - திருப்பணி - அருட்பணி" என அடிக்கடி நினைவூட்டிக் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டினார்.திருப்பணிக்குத் தேவையான பொருட்களைத் தாராளமாகவே வழங்கினார்; பணியில் ஈடுபட்டிருந்தோரின் சொந்தத் தேவைகளையும் குறைவின்றி நிறைவேற்றினார்.
1906 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1915ஆம் ஆண்டில் இருபது இலட்சம் ரூபா செலவிற் பூர்த்தியாக்கப்பட்ட இவ்வாலயம் முற்று முழுதாகக் கருங்கல்லாலான கீழ்த்தளம், மேற்றளம், சுவர்கள் தூண்கள் முதலியவற்றுடன் இலங்கை மணித் திருநாட்டின் மிகப் பெரிய, மிகச் சிறந்த - மிக அழகான கற்றளியாகக் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. காலதர் எனப்படும் ஜன்னல்களும் கருங்கல்லாலானவை என்பது குறிக்கத்தக்கது.
அழகாகக் குடைந்தெடுக்கப்பட்ட மரம், செடி, கொடி, பறவை, மிருகம், பாம்பு, போன்றவற்றை அடிப்பாகத்திலும் மத்தியிலும் கொண்டுள்ள 350வரையிலான கருங்கற் தூண்கள் கோயிலின் உள்ளே இருக்கின்றன. கோவில் வாசலில் இருப்பவை இருமுகத் தூண்கள், தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு மூலைகளிலுள்ளவை மூன்று முகத் தூண்கள் 660)6OTL 606) ஒரு முகம் கொண்டவை. தூணின் மேற்புறம் பொதிகையை அண்டி இருக்கும் சிங்கராஜாக்கள் கருங்கல் தீராந்திகளைச் சுமந்து கொண்டிருக்க, அந்தத் தீராந்தியிலேயே, கோவிலின் மேற்குப்பகுதி கவிந்திருக்கின்றது. கோவிலின் மேற்கு வீதியில் சிங்கராஜாவுக்குப் பதிலாகச் சிவபூத கணங்களையே காண்கின்

22OO விரோதி மாசி01
றோம். நீண்ட காலமாக மிகப் பெரும் சுமையை இடைவிடாது தாங்கிக் கொண்டிருக்கும் களைப்புப் பிரதிபலிக்கும்படி சிங்கங்களின் முகங்கள் காணப்படுவது, சிற்பக் கலைஞர்களின் கற்பனைச் செழிப்புக்கும் கைவண்ணத்துக்கும் சான்று.
சுவாமி தரிசனத்துடன் மட்டும் அமையமல், கலை நயத்துடன் அமைக்கப்பட்ட தூண்கள், மண்டபங்கள், பல்வேறு வகையான சிற்பங்கள் போன்றவற்றை நுணுக்கமாக ஆராய்பவர்கள், "கலை அனுபவம், சமய அனுபவம் ஆகியவை ஒரே அனுபவத்தின் இருவகையான வெளிப்பாடுகள்" என்ற கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்களின் விளக்கத்தையும், "கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம், இன்பம் அதன் பயன். கலையானது தன்னலமும் பழிவாங்கலும் நிறைந்த உலகைவிட்டு நம்மை அப்பால் இழுத்துச் செல்லவல்லது" என்ற தாகூரின் கூற்றையும் நினைத்துத் திருப்தி அடைவார்கள்.
இராமநாத முதலியார் என இதுவரை நாம் குறிப்பிட்ட சேர்.பொன் இராமநாதன் சிவகதி அடைந்த பின்னர் அவருடைய இரத்த உரித்துடையவர்களே அறங்காவலர்களாகப் பணியாற்றி யுள்ளனர். பின்னர், அதே உரித்துடையவர்களைக் கொண்ட தர்மகர்த்தாசபை உருவாக்கப்பட்டபோது பொன்னம்பல முதலியாரின் மூன்றாவது குமாரரான சேர்.பொன்.அருணாசலம் அவர்களின் மூத்த குமாரர் சேர்.அருணாசலம் மகாதேவா, அந்தச் சபையின் தலைவரானார். தர்மகர்த்தா சபையின் இப்போதைய தலைவர் திரு.பாலகுமார் மகாதேவா. முன்னர் மேல்மாகாண சபை ஆளுநராக இருந்தவரும் பிரபல சட்டத்தரணியும், இராமநாதன் பரம்பரையைச் சேர்ந்தவருமான திரு.டி.எம்.சுவாமிநாதன், இப்போது முகாமைத்துவதர்மகர்த்தாவாகப்பணியாற்றிவருகின்றார்.
காலத்துக்குக் காலம் இடம்பெற்ற திருத்த வேலைகள், பிரதிஷ்டைகள், கும்பாபிஷேகங்கள் போன்றவற்றின் பின்னர் இவ்வாலயம் புது மெருகுடன் இப்போதுகாட்சியளிக்கின்றது.
இப்போது உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்வோர் கொட்டாஞ்சேனை ஜம்பட்டா ஒழுங்கையில் அமைந்துள்ள, சிறிய கிழக்குக் கோபுர வாசலூடாக உள்ளே சென்று நமக்கு வலப்பக்கத்தில் உள்ள பெரிய அரசமரத்தின்கீழ் மண்டபத்துடன் கூடிய சிறு கோவிலில் ஆண்வ்ேப் பிள்ளையாரைத்
தரிசிக்கின்றோம். மூ திட்வை வலம் வந்து பிள்ளையார் ே ஓம் நழசிவாய' என்ற பஞ்சாட்சர ஒளியுடத்தி ம் தூலலிங்கமாதியடிர்ஜகோபுரத்தை வணங்கிக் கொண்டு :::::
கோபுர வர்தீன் உட்புறத்தில், வலப்பக்கத்திற் சூரிய மூர்த்தியும் இடப்பிக்கத்தில் சந்திரபகவானும் காட்சி அளிக்கின் றனர். மேற்கே நோக்க வெள்ளியாலான கொடித் தம்பம், அதற்கப்பாற் பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காண்கின்றோம். கருவறையில் பொன்னப்பலவாணேஸ்வரர், சிவலிங்க உருவில் அருள்பாலிக்கின்றார். மஹா மண்டபத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானின் தெற்குப்பார்த்த சந்நிதி காணப்படுகின்றது. மஹாமண்டபத்திற்கு வெளியே தேவிக்குரிய ஆலயத்திற் சிவகாமசுந்தரி அம்பாள் சிலா விக்கிரகமாகக் காட்சி அளிக்கின் றாள். கருவறையின் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அம்பாள் வீற்றிருக்கின்றனர்.
->

Page 4
இந்துசாதனம் 3.O
உட் பிரகாரத்தில் முதலிற் காட்சியளிப்பவர்கள் தேவார முதலிகள் மூவரும், திருவாசகம் தந்த மணிவாசகருமாவார். மேற்கு வீதியில் விநாயகப் பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தி, பஞ்சலிங்கங்கள், பூரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணுமூர்த்தி, மஹாவல்லி கஜவல்லி சமேத முத்துக்குமாரசுவாமி ஆகியோர் தனித் தனிக் கோவில்களில் இருந்து அருட்காட்சி புரிகின்றனர். முத்துக்குமாரசுவாமிக்கு அண்மையில் தேவியருடன் கூடிய சண்முகப்பெருமான் தெற்கு நோக்கி வீற்றிருக்கின்றார். சற்று அப்பாற் சனீஸ்வரப் பெருமானின் தனிச் சந்நிதி இருக்கின்றது. பஞ்சலோகத்திற் பளபளக்கும் உற்சவ மூர்த்திகள் அனைவரையும் ஒன்றாகத் தரிசிக்கும் வாய்ப்பு வடக்கு வீதியிற் செல்லும் எல்லோருக்கும் ஏற்படுகின்றது. உரிய இடத்தில் அமைந்துள்ள யாக சாலையை அடுத்து, மேற்குப் பார்த்த வைரவர் சந்நிதி உண்டு. அடுத்த சந்நிதி தேவியுடன் கூடிய சுவர்ண வைரவருடையது இலங்கையில் வேறு எந்தச் சிவாலயத்திலும் சுவர்ண வைரவர் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது. தமிழ் நாட்டிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேதான் சுவர்ண வைரவர் இருக்கின்றார், சிவலிங்கப் பெருமானின் கோமுகைக்கு அணித்தாகச் சண்டேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்றது. இரண்டாம் வீதியிலே தென்கிழக்கில் ஆஞ்சநேயரும் மாரியம்பாளும் தனித்தனி ஆலயங்களில் இடம்பெற்றுள்ளனர். தென்மேற்கு மூலையில் முனியாண்டி சுவாமி இருக்கின்றார். ஆலயத் தீர்த்தத் தடாகமான சுவர்ண புஷ்கரணி வட கிழக்குத் திசையில் தேர் முட்டிகளுக்கு அப்பால் அமைந்துள்ளது.
சிவாலயங்களில் என்ன என்ன பூசைகள், விழாக்கள், எந்தெந்தக் காலத்தில் எப்படி எப்படி நடத்தப்படவேண்டும் என விதிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவை அனைத்தும் உரிய காலங்களில் உரிய முறைப்படி இவ்வாலயத்திலும் இடையீடின்றி நடத்தப்படுகின்றன.
தினமும் ஆறுகாலப் பூசை நடைபெறுகின்றது. காலை ஏழு மணிக்கும் பிற்பகல் ஐந்தரை மணிக்கும் நடைபெறும் பூசைகளுக்கு முன்னர் ருத்திர கும்ப அபிஷேகம் தினமும் இடம்பெறுகின்றது. நித்யாக்கினி வளர்த்தல், நித்தியோற்சவம், பள்ளியறைப் பூசை, காவல் தெய்வமாகிய வைரவரிடம் ஆலயத்தின் திறப்புக்களை
AVA G w
G

22OO 6fiÚBund; IDmé* O1
지
ஒப்படைத்தல் ஆகியவற்றுடன் நாளாந்தக் கிரியைகள் நிறை வுறுகின்றன.
ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு பிரம்மோற்சவம் எனும் பெருந் திருவிழா நடைபெறுகின்றது. ஆடி மாதத்திலே ஆடிப் பூரத்தை அந்தமாகக் கொண்டு அப்பாளுக்கு இலட்சார்ச்சனை நடைபெறுகின்றது. தைப்பூசம், மகாசிவராத்திரி சித்திரைப் புத்தாண்டு, நவராத்திரி, திருவெம்பாவை உட்பட மாதந்தோறும் நடைபெறும் அபிஷே கங்கள், விழாக்கள் எல்லாமே பக்தர்களுக்கு மனநிறைவையும் பரவசத்தையும் ஏற்படுத்துவன.
ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகாலப் பழமைமிக்க இந்த ஆலயத்தில் உதவிச் சிவாச்சார்யாராகவும், பின்னர் பிரதம சிவாச்சார்யாராகவும் 56 ஆண்டுகள் பணிபுரிந்த பெருமைக் குரியவர் பிரதிஷ்டா சக்கரவர்த்தி, அமரர் சிவபூரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள். ஆலய அறங்காவலர்களுடன் இணைந்து ஆலயத்தின் சிறப்பை மேலோங்கச் செய்த அவர், தன் வேதாகம, சோதிடப் புலமையாலும், கிரியைச் சிறப்பாலும் இந்தப் பெருமக்களின் கணிப்புக்கும் மதிப்புக்கும் உள்ளானவர்.
உலகின் ஒரேயொரு இந்து இராச்சியம் என்ற பெருமையைச் சமீப காலம்வரை பெற்றிருந்த நேபாள தேசத்தின் முடிமன்னர் மகேந்திரவீர விக்கிரமன் ஷா என்பவர் 1957ஆம் ஆண்டிலும், முடிமன்னர் பிரேந்திரவீர விக்கிரமன் ஷா என்பவர் 1980ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர்கள் விரும்பி வந்து பக்திபூர்வமாக வழிபாடு செய்த ஆலயம் பொன்னம்பல வாண்ேஸ்வரம் ஆகும்.
தென்னிந்தியாவிற் கலையழகு மிளிரும் கருங்கற் கோவில்களைப் பார்த்துப் பிரமிப்படைவோர் "மன்னர்கள் இருந்தபடியாற்றான் இவ்வாறெல்லாம் கட்டமுடிந்தது என்று சொல்வார்கள். அந்தக் கோவில்களின் சிறப்புக்களையும் பிரதிபலிக்கும் வகையிலே பொன்னம்பலவாணேஸ்வரம் என்ற ஆன்மீக - கலைக் கோவிலைக் கட்டிய சேர்.பொன்.இராமநாதன் யார்? இலங்கைத் தமிழ் மக்களின் "முடிசூடா மன்னனாக"த்தானே அவர் சிறப்புப்பெற்றிருந்தார்!
44
D4

Page 5
இந்துசாதனம் 3.O
EFLDULIIb d5
கலாநிதி மனோன்
‘அழகுபடுத்தல் எல்லோருக்கும் மிகவும் விருப்பமான செயற்பாடாகும். மனித மனம் அழகைப் பெரிதும் விரும்புவது. எனவே தம்மை அழகுபடுத்துவதில் மனிதர் பெரிதும் அக்கறை செலுத்துகின்றனர். உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை உடலுறுப்பு களை அழகுபடுத்துகின்றனர். எமது சமயம் அழகுபடுத்தலைப் பற்றிப் பல செய்திகளைத் தந்துள்ளது. இறைவனை அழகுக் கோலங்களிலே காண்பதற்குப் பல தேவாரப் பாடல்கள் உதவுகின்றன. எல்லோரும் விரும்பும் அழகுத் தோற்றத்தை இறைவனில் கண்டு மகிழலாம். அழகு எமது சமய வாழ்வியலில் பேணப்பட்ட முறைமையைப் பற்றி இன்று மீள நினைத்துப்பார்ப்பது பயனுடையதாகும்.
இறைவனை அழகுக் கோலத்திலே பார்க்கும்போது பரவசம் ஏற்படுகின்றது. கண்ணும் மனமும் களிப்படைகின்றது. தேவாரம் பாடிய சமயகுரவர்கள் தமது பாடல்களிலே இறைவனின் அழகுக் கோலங்களை அனுபவித்துப் பாடுகின்றனர். திருவடியிலிருந்து திருச்சென்னிவரை இறையழகை அனுபவித்த உணர்வைப் பாடல்களிலே பதிவு செய்து வைத்துள்ளனர். தேடிப்படிக்கும்போது அந்தக் கோல அழகுகள் எம்மையும் பரவசப்படுத்தும். திருஞானசம்பந்தர் சிதம்பரத்திலே உறையும் சிவனின் திருவடியைக் கழற்கால் சேவடிக்கோலம்' எனப் பாடியுள்ளார். கழல் அணிந்த கால், சிவந்த அடிகள் என அவர் காட்டும் அழகு தெய்வீகமானது. வீரர்காலில் அணியும் கழல் ஆண்களுக்குக் கால் ஆபரணம் மட்டுமல்ல. அவர்கள் வீரத்தை வெளிப்படுத்திக்காட்டும் சின்னமுமாகும். சிவந்த நிறமுடைய கால்களில் அந்த அணிகலம் சேரும்போது காலின் அழகுக் கோலம் மேலும் பொலிவுறுகின்றது.
இன்னொரு பாடலில் திருவடியைச் சீரடி’ எனக் குறிப்பிட்டுள்ளார். சீர் என்பது தனித்துவமான ஒரழகாகும். திருவடியின் வடிவம் சீரொடு பொலிந்திருக்கிறது. திருவடியில் செம்மையான உருவமைப்பு விரல்களின் ஒழுங்கமைப்பு என்பவற்றால் அழகு தோற்றமளிக்கின்றது. திருவடியிலே உள்ள கழல் ஆரவாரம் செய்ய இறைவன் நடமாடும்போது இன்னொரு புத்தழகுமிளிர்கின்றது.
அப்பர் பாடலிலே சிவனின் திருவடிக்கோலம் பிறிதொரு புதிய அழகைக் காட்டுகிறது. அவர் இனித்தமுடைய பொற்பாதம் என இறைவன் திருவடியைக் காட்டுகிறார். பொன்போன்ற இறைவன் திருவடியைப் பார்க்கும்போது உள்ளமெங்கும் இனிமை பரவுகிறது. வாயால் காணும் சுவையை மனத்தில் அநுபவிக்கின்ற பக்திநிலை இது. பிற்காலத்தில் கம்பர் இந்த இனிமை அநுபவத்தைச் செவிநுகர் கனிகள் என்ற தொடரால் பாடியுள்ளார். பாரதி, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேஎனத் தன் அநுபவத்தைப் பாடியுள்ளான். ஆனால் அப்பரின் அநுபவம்
 

22OO விரோதி மாசி01
ாழ்வியல் - 14
பணி சண்முகதாஸ்
வியப்பானது. இறைவன் திருவடி நம்மணம் விரும்பும் இனிமையான பொருளாய்த்தெரிகின்ற புதுமைபத்தியின் வெளிப்பாடாகும்.
திருஞானசம்பந்தர் இறைவனின் திருவடியின் செயற்பாட்டு நிலையான கோல அழகை காலனைக் காலால் கடிந்த காட்சியாகக் காட்டுகின்றார். திருநடனம் செய்யும்போது காணும் அழகைவிட கூற்றுவனைக் கோபத்தால் காலினாலே இடறியபோது கண்ட காலின் அழகுக் கோலம் புதுப்புனைவுடன் தோன்றுகிறது. வார் கழல் அணிந்த காலினால் கூற்றுவனை உதைத்த திருவடியின் வீரக்கோலமது. இத்தகைய திருவடிகளை மேலும் அலங்கரிக்க நறுமணமுடைய தாமரை மலர்களைத் தூவி விடும் அழகு பிறிதொரு அழகாகும். சிவனின் தூக்கிய பாதம் வார்கழலோடு பொலியும் காட்சியைக் காட்டிய பின்னர் நிலத்திலே படிந்திருக்கும் திருவடிகள் கமல மலர்கள் பொலிய நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
இறைவன் திருவடிகளின் அழகுக் கோலத்தைக் கண்டு மனம் பரவசப்படும் நிலையை விடப் பிறிதொரு அழகுநிலையும் உண்டு. எமது வாழ்க்கையில் இடர் தொடரா வண்ணம் அவனுடைய கழலடிகளை மனத்திலே நினைந்து அகத்தால் வழிபாடு செய்யும் நிலை. நேரில் காணாமல் நெஞ்சில் வரைந்து வைத்திருக்கும் திருவடிகளை வழிபடுதல் மிகவும் சிறந்தது. அலைபாயும் மனித மனத்தை பொறிவழிச் செல்லாமல் கட்டுப்படுத்தத் திருவடிகளின் கோல அழகே சாலச் சிறந்தது. மணிவாசகர் இவ்வனுபவத்தை இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவனின் கோல அழகில் திருவடிச்சிறப்பைப் பெரிதும் வியந்து பாடியவரும் அவரே. தாள், அடி, கழல் என இறைவன் அடிகளைப் பகுத்துப் பாடியுள்ளார். குருமணிதன் தாள்', 'ஈசனடி', 'கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள்' என மூவகையாகக் காட்டியுள்ளார். திருவடிகளின் தோற்றத்திற்கு ஏற்ப குருமணியாகவும், ஈசனாகவும், கோனாகவும் இறைவன் தோன்றுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார். இறைவனின் இணையடிகள் பற்றியும் பல தேவாரங்கள் குறிப்பிட்டுள்ளன. அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப என இறைவனின் அர்த்தநாரீஸ்வரக் கோலமும் பாடல்களிலே குறிப்பிடப்பட்டது. இத்தோற்றமே மிக அற்புதமான தோற்றமாகும். எங்குமே காணமுடியாத அழகுக் கோலமிதுவாகும்.
நின்றகோலம், இருந்த கோலம், ஆடுங்கோலம், கூற்றுவனை உதைத்த கோலம் என இறைவனைப் பல்வேறு கோலங்களிலே நாம் வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு கோலத்திலும் இறைவன் திருவடி புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் அந்த அற்புதமான அநுபவங்களைத் தேவாரப் பாடல்கள் மூலமாக முன்னோர் எம்மிடம் கையளித்துள்ளார். அக்கோலங்களை மனத்திலே இருத்திவழிபாடுசெய்யும் வாழ்வியல் எம்முடைய தனித்துவமாகும். 人

Page 6
பண்டிதர் தி.பொ
சிெவத் தமிழ் மக்களாகிய நாம் ஓதி அருள்பெறவும், தீவினை தீரவும், அறிவும் நல்லுணர்வும் அடையவும் வாய்ப்பாக உள்ள நூல்கள் திருமுறைகளாம். இத்திருமுறைகள் பன்னிரண்டாக வகுக்கப்பெற்றுள்ளன. இவை தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை ஓதி நலனடைந்தவர்கள் எண்ணில்லாதவர். திருமுறைகளால் தாம் அடைந்த நலன்களைப் பிறரும் அடைந்து சிறக்க வேண்டும் என்று அவற்றின் பெருமைகளைப் பாடியும் எழுதியும் ஆவணப்படுத்தியிருப்பவர்களும் எண்ணில்லாதவர்களே.
இப்படியிருந்தும் நம்மவர்களில் மிகப் பெரும்பாலான வர்கள் திருமுறைகளின் சிறப்புக்களை அறியாமலும் அவற்றைப் பாராயணம் செய்து அடையத்தக்க நலன்களை அடையாமலும் சிறுமைப்படுவதுமிக்க அனுதாபத்துக்கு உரிய நிலையாக உள்ளது.
நம்மில் ஒருசிலர் துன்பம் காரணமாகவும் நல்லோர் இணக்கம் வற்புறுத்தல் காரணமாகவும் திருமுறைகளை ஒதும் நியமம் உடையவராயும் அதனால் கணிசமான அளவு பயன் பெறுபவராகவும் உள்ளனர். ஆனால் இப்படிப்பட்டவர்கள் திருமுறைகளின் பெருமைகளை உள்ளபடி அறியாதவர்களாகவும் திருமுறைகள் ஒதலால் தாம் அடையும் நலன்களில் தெளிவு இல்லாதவர்களாகவுமே உள்ளனர். இதுமட்டுமன்றி திருமுறை களின் தன்மை திருமுறை ஆசிரியர்களின் தகுதி என்பவற்றை அறியாது வேறுபல பாடல்களைத் திருமுறைகளுக்கு நிகராக மதித்து வருகின்றார்கள். இவ்வளவு குறைபாடுகளுடன் இப்போது ஆலயங்களில் எவ்விடத்தில் நின்று திருமுறைகளை ஒத வேண்டும் என்று அறியாமல் ஆலயத்தில் அர்ச்சகர் நின்று பூசை வழிபாடு போன்ற கிரியைகளைச் செய்யும் இடத்தில் நின்று திருமுறை ஒதினால்தான் நன்மை வரும் எனக் கருதுகின்றார்கள். இந்நிலை மிகமிகப் பரிதாபத்துக்கும் அநுதாபத்துக்கும் உரியதாகும். இவ்விடயத்தில் இரு உண்மைகளை நாம் அவதானிக்க வேண்டும். இன்று ஆலயத்தில் நடைபெறும் கிரியைகளுக்கு உரிய இடம் வகுக்கப்பட்ட அடிப்படை என்ன என்பது. மற்றது திருமுறை ஆசிரியர்கள் எந்த இடத்தில் நின்று திருமுறை ஓதி வழிகாட்டியிருக் கின்றார்கள் என்பது ஆலயங்களில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகியவற்றைச் செய்யும்போதுதவிர வேறெந்தக் காரணத்திற்காகவும் அர்ச்சகரோ அர்ச்சகருக்கு நிகரானவரோ சுவாமிக்குச் சமீபமாகச் செல்வதில்லை என்பது பகிரங்க உண்மையாகும். கும்பபூசை - கொடியேற்றம் - கும்பாபிஷேக யாகபூசை - கும்பாபிஷேகத்திற்கான சாந்திக்கிரியைகள் வெளிவெளி மண்டபங்களில் நடைபெறுகின்றன. மூலமூர்த்திக் கான தீபாராதனை - வேதமோதல் போன்ற கிரியைகள்கூட மூலமூர்த்திக்கு இப்பால் உள்ள மண்டபங்களிலேயே நிகழுகின்றன. அர்ச்சகருக்கோ அவருக்கு இணையான தகுதி உடையவருக்கோ கூட சுவாமிக்குக் கிட்ட அடிக்கடி செல்லத் தேவையுமில்லை. செல்லவேண்டுமென்றகட்டாயமோ - வழக்கமோ இல்லை.
அதிகமாக வசந்த மண்டப பூசையில்கூட ஒரே அர்ச்சகரே தீபாராதனை செய்வது வேதம் ஒதுவது என்ற கிரியைகளைச் செய்வதாயிருந்தாலும் தீபாராதனையின்போது சுவாமிக்குச்
 

22OO விரோதி மாசி 01
ஒதுவோம் stroorthLIGoorooorfr
சமீபமாகவும் வேதமோதும்போது சிறிது விலகித் தூரமாகவும் நின்றே செயற்படுகின்றார். எனவே ஆலயக் கிரியை ஒழுங்கில் பூசையின் அங்கமாகத் திருமுறை ஒதுபவர் சுவாமிக்குக் கிட்டச் சென்று ஓத வேண்டும் என்பதில்லை. அப்படிக் கிட்ட நின்று ஒதுவதில் சிறப்போ மதிப்போ விசேட பயனோ எதுவுமில்லை.
இனி; திருமுறை ஆசிரியர் எப்படித் திருமுறை வழிபாட்டைச் செய்தனர் என்பதையும் கவனிப்போம். ஆலய வழிபாட்டில் திருமுறையால் வணங்கிய திருஞானசம்பந்த சுவாமிகள் அப்பர் சுந்தரர் போன்ற அனைவரும் ஆலயத்திற்குச் சென்றமை வழிபட்டமை திருமுறைகளை அருளித் துதித்தமை அவர்களுக்குச் சிவபெருமான் அருள்புரிந்த தன்மை - எல்லா வற்றையும் மிகத் தெளிவாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளார்.
கோபுர வாயிலை வணங்கி உள்சென்று வீதிவலம் வந்து சுவாமி சந்நிதானத்தை அடைந்து சுவாமி முன்நின்று துதிக்கும்போதே திருமுறையால் துதித்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் நின்று துதித்த இடம் தம்ப மண்டபமாகவோ தரிசன மண்டபமாகவோ இருக்குமேயன்றி அதனுள் உள்ள மண்டபங்கள் அல்ல என்பது தெளிவு.
இது மட்டுமன்றி திருஞானசம்பந்தர் இராமேஸ்வரக் கடற்கரையில் நின்று திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம் ஆகிய தலங்களையும் திருக்காளத்தியில் நின்று திருக்கயிலாயம் திருக் கேதாரம், இந்திரநீல பருப்பதம் பூரீசைலம் போன்ற தலங்களையும் வணங்கித் தேவாரம் பாடியிருக்கிறார். இவர் இப்படிச் செய்தருளி யமை நாம் நம் இடத்தில் இருந்தவாறே எல்லாத் தலங்களுக்கும் உரிய திருமுறைகளை ஓதி வழிபடலாம் என்பதைத் தெரிவிக் கின்றது.
திருநாவுக்கரசர் தம்மைக் கல்லுடன் கட்டிக் கடலில் இட்டபோது சொற்றுணை வேதியன் என்ற பதிகத்தை அருளியிருக்கிறார். சுந்தரமூர்த்திசுவாமிகள் கண்இழந்த இடத்தில் நின்றவாறே "அழுக்கு மெய் கொடு" எனத் தொடங்கும் பதிகத்தை அருளியிருக்கிறார். பாண்டியனுக்கு வெப்பு நோய் தீர்க்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவன் அரண்மனையிலும் புனல்வாதம் செய்த சந்தர்ப்பத்தில் வைகையாற்றங்கரையில் நின்றவாறும் திருஞான சம்பந்தர் தேவாரங்களை அருளிச் செய்திருக்கிறார். இந்தச் செயல்கள் நாம் ஆலய வழிபாட்டில் ஈடுபடாத சந்தர்ப்பங்களிலும் திருமுறைகளை ஒதி உய்யலாம் என்பதைக் குறிப்பிடு கின்றன எனலாம்.
எனவே, நாம் சிரத்தையுடனும் நியமமாகவும் தூய உடல் உள்ளங்களுடனும் திருமுறைகளை ஒதி வணங்குதல் அவற்றின் பொருளைக் கற்றும் சிந்தித்தும் மேன்மையடைதல் என்பன அவசியமே அன்றி, ஆலயத்தில் சுவாமிக்குக் கிட்டநின்று ஒதுதலில் சிறப்போ நன்மையோ அதிகம் என்று கருதுவதும் முயல்வது அவசியமற்றன என உணர்தல் வேண்டும். 人

Page 7
இந்துசாதனம்
70. இறைவன் உயிர்களோடு உடனாய் நிற்றல்
எவ்வாறு?
இறைவன் உயிர்களோடு உடனாதலாவது, உயிர் செயற்படும்போது உயிர்க்கு உயிராய் நின்று அதனைச் செயற்படும்படி ஏவுதல். இதற்குச் சொல்லப்படும் உவமை, "கண்ணொளியும் உயிர் அறிவும்போல்" என்பது. கண்ணுக்கு ஒளி இருந்தாலும் அதுமட்டும் நின்று பொருட்களைக் காண இயலாது. கண்ணொளியோடு உயிர் அறிவும் பொருந்தி உடன் நிற்க வேண்டும். அப்பொழுதுதான் கண்ணொளி பொருள்களைக் காணமுடியும்.
அதுபோல, இறைவன், சற்றுமுன் சொன்னபடி, வேறாயிருந்து உயிர்களின் அறிவை விளக்க, அதனால் அறிவு விளங்கப்பெறினும் அவ்வறிவுதனியே சென்று பொருள்களை அறிய மாட்டாது. இறைவனும் உடன் நின்று அறிந்த பொழுதே அறிய முடியும். இவ்வாறு இறைவன் உயிர்க்கு உயிராய் உடன் நின்றுஅறிதலே உடனாதல் ஆகும்.
இதனால் ஓர் உண்மை தெளிவாகும். அஃதாவது,
இறைவன் உயிர்களுக்குப் பொருள்களை அறிவிப்பது மட்டும் போதாது; அறியும்பொழுது உடன் நின்றும் அறிதல் வேண்டும் என்பதாகும்.
.கக்தொடரி ழ்பக்கத் uff፨ይ
13.O.
71.
இம் மூன்று அத்துவித நிலைகளையும் மூன்று உவமைகள் கொண்டு விளக்கியது ஏன்? ஓர் உவமையே போதாதோ? ஓர் உவமையில் வைத்தே அம் மூன்று வகைகளையும் உணர்த்த இயலாதோ? அம் மூன்றனுள் ஒவ்வொன்றும் இனிது விளங்குதற் பொருட்டுச் சிறப்பாக வேறு வேறு உவமைகள் கூறப்பட்டனவேயன்றி வேறில்லை.
ஆயினும் உடல் உயிர் போல்' என்னும் ஓர் உவமையே இம் மூன்று நிலைகளையும் உணர்த்தி நிற்கும் இயல்புடையதாகும். அஃது எவ்வாறெனில்,
உயிர் உடலிற் கலந்து உடலேயாய் ஒன்றிநிற்பதனாலேயே உடல்நிலை பெற்று நிற்கின்றது. அதுபோல இறைவன் உயிரில் கலந்து உயிரேயாய் ஒன்றி நிற்பதனாலேயே உயிருக்கு நிலைபேறு அமைகின்றது.
இவ்வாறு உடலோடு ஒன்றாகி நின்ற உயிர் உடலுக்கு வேறாயும் நின்று அதனை இயக்குகின்றது. உயிர் இயக்குவதனாலேயே கண், செவி முதலிய கருவிகள் தத்தம் புலன்களை அறிவன ஆகின்றன. அதுபோல, இறைவன் உயிரின் வேற்ாய் நின்று அதனை இயக்கி அறிவிப்ப தனாலேயே உயிர் அறிவு விளங்கப்பெறுகிறது. இவ்வாறு உடலோடு ஒன்றாய் நின்று அதனை நிலைபெறுவித்தும்,
O
 
 
 
 
 
 

2OO 6fiC3pnĝ5 Dariéf Oil
வேறாய் நின்று உடலையும் கண் முதலிய பொறிகளையும் இயக்கி அறிவித்தும் நிற்பதாகிய உயிர், அவற்றோடு உடனாயும் நின்று அக்கருவிகளை உலகப் பொருள்களின் மேல் ஏவித் தானும் அறிகிறது. அதுபோல, இறைவன் உயிரோடு உடனாய் நின்று செலுத்தி அவ்வுயிர் அறிவன வற்றைத் தானும் அறிந்துவருகிறான்.
இவ்வாறு உடல் உயிர் போல்' என்ற ஓர் உவமையே ஒன் றாதல், வேறாதல், உடனாதல் என்ற மூன்று நிலைகளையும் உணர்த்திநிற்கக் காணலாம்.
அநாதித் தொடர்பு
72.
73.
சைவசித்தாந்தம்
பதியாகிய இறைவனுக்கு ஏனைப் பசு பாசங்களோடு உள்ள இந்த அத்துவிதத்தொடர்புஎன்று ஏற்பட்டது? இத் தொடர்பு இறைவனுக்கு என்றும் உள்ளதேயன்றி, ஒரு காலத்திலே ஏற்பட்டு மற்றொரு காலத்திலே நீங்கி விடுவதன்று. அதனால், அத்துவிதமாய் இருத்தல் அநாதி என்பது அறியற்பாலது.
ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்ற இம் மூன்று தன்மைகளையும் ஒருங்கே உடைய இயைபே உபநிடதங்களில் அத்துவிதம் எனச் சொல்லப்படுகின்றது என்னும் சைவ சித்தாந்தத்தின் முடிவு சாஸ்திரங்கள் தோன்றிய
முனைவர் ஆ.ஆனந்தராசன்
காலத்தில்தான்ஏற்பட்டதா?
அவ்வாறு கொள்ளுதற்கில்லை. சாத்திரங்கள் தோன்று வதற்கு மிக முற்பட்ட காலத்திலேயே இக்கொள்கை தமிழரிடையே நிலவியது என்ப எேட்டுத்திசை தானாய், வேறாய் என்பதை Sir ன் இடம் வீழிம்மிழலையே (திருமுறை k ன்னும் ஞானசம்பந்தர் திருமொழியால்
உணரலாம்.
இன்னும், நாவுக்கர் தாரைக்காலம்மையார் போன்ற அருளாசிரியன்மார் 數 இவ்வத்துவித நிலையைத் தங்கள் பதிகங்களில் விளங்க உரைத்துள்ளமையும் மேற்கூறிய கருத்திற்குச் சான்றாகும்.
இறைவன் உருவங்கொள்ளுதல்
74. உயிர்களோடும் உலகத்தோடும் ஒன்றாய், வேறாய்,
உடனாய் இயைந்து நின்று அவற்றைச் செயற்படுத்து கின்ற இறைவன் தான் உருவம் உடையவனாய் நின்று செயற்படுத்துவானா? உருவம் இன்றியே செயற்படுத்து ο)ΙΙΙοσIII2
உருவம் இல்லாததாகிய உயிர் உள்நின்று உடம்பைச் செயற்படுத்தவில்லையா? அது போல இறைவன் உருவம் இல்லாமலே எல்லாவற்றையும் செயற்படுத்த வல்லவன் ஆயினும் உயிர்களின் பொருட்டாக அவன் உருவம்
உடையவன் ஆகின்றான்.

Page 8
இந்துசாதனம் 3O2.
75. அவன் உருவம் கொள்வதால் உயிர்களுக்கு என்ன
நன்மை? உருவம் இல்லாத பொருளை உயிர்கள் மனத்தால் நினைக்கவும் இயலாது ஆதலால் உயிர்கள் தன்னை மனத்தால் நினைந்தும், மொழியால் வாழ்த்தியும், மெய்யால் வணங்கியும் உய்தல் வேண்டும் என்னும் கருணையினால் இறைவன் பல்வேறு வடிவங்களை உடையவன் ஆகின்றான்.
மூவகை வடிவங்கள்
78.
77.
78.
வடிவம் எத்தனை வகைப்படும்? வடிவங்கள் யாவும் மூன்று வகையுள் அடங்கும். அவை உருவம், அருவம், அருவுருவம் என்பன.
உருவம் என்பது கண்ணுக்குப்புலனாகிநிற்பது. அருவம் என்பது கண்ணுக்குப் புலனாகாதது; ஆயினும் வரம்புபட்டு நிற்பது.
அருவுருவம் என்பது ஒருகால் புலப்பட்டும், ஒருகால் புலப்படாமலும் இருப்பது.
ஆகாயம் அருவப்பொருள். நிலம், நீர் முதலியவை உருவப் பொருள்கள். தீஅருவுருவப்பொருள். அது விறகைக் கடையும் வழிப் புலப்பட்டும், கடையாத வழிப் புலப்படாமலும் இருத்தல் பற்றி அருவுருவம் எனப்பட்டது.
உருவம், அருவம், அருவுருவம் என்ற இம் மூன்றில் எவ்வடிவம் கடவுளுக்கு உள்ளது?
இம் மூன்று வகை வடிவங்களுமே ஒருவனாகிய கடவுளுக்கு உள்ளனவாம். அவன் அவற்றுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு நிலையில் கொள்வான்.
ஒன்றோடு ஒன்று மாறுபாடான இம் மூவகை வடிவும் ஒருவனுக்கே உண்டு என்பதனால் அவை அவனுக்கு இயற்கையல்ல என்பது விளங்கும். மேலும் அவை, வேண்டும் பொழுது கொண்டு வேண்டாத பொழுது அவனால் விடப்படுவன ஆதலால் அவை அவனுக்குச் செயற்கை என்பதும் விளங்கும்.
இறைவன் இம் மூவகை உடம்புகளைத் தானே கொள்வானா? அல்லது, நமக்குப் போல அவனுக்கும் உடம்பைப் படைத்துக் கொடுக்க வேறொருவன் இருக்கிறானா?
பிறவிக் கடலில் வீழ்ந்துள்ள உயிர்களைப் போன்றவனா
Hum
இத்தனை கட
பகவான்இடத்தேபரசமயத்தவர் ஒருவர் வந்து உருக்கமாய்க் கேட்டார் "இந்துமதத்தில் இத்தனை கடவுள்கள் ஏன்படைத்தார்கள்? இவை என்ன தேவையா? இறைவன் ஒருவன் என்னும் பொழுது இத்தனை வடிவம் இருப்பது சரியா?" பகவான் அவனைப்பார்த்துச்சொன்னார்

22OO விரோதி மாசி01
79.
இறைவன்? உயிர்களின் நிலையில் அவன் இருந்தாலன்றோ அவனுக்குரிய உடம்பைப் படைத்துத்தர வேறொருவன் வேண்டும்? இறைவன் பிறப்பிற்படாத பெருமையுடையவன்; மேலும் பிறப்பிற் பட்டுள்ள நம்மனோர்க்கெல்லாம் அவனே உடம்பினைத் தருபவன். ஆதலால் அவன் தான் விரும்பிய உடம்பை விரும்பியபடி தானே கொள்வான்.
2 lushires(86ET 2-dioILDIraSu 2 Lihool 2 locoLuIGOTOIril உள்ளன. உடம்பு காரணமாகவே உயிர்களுக்கு அறிவும் செயலும் உடம்பு அளவிலே சிறிதாய் நிகழ்கின்றன. அதனால் உலகப் பற்று உண்டாதலையும், அப்பற்றினால் இன்பதுன்பங்கள் விளைதலையும் அறிவு வேறுபடு தலையும் காண்கின்றோம். இறைவனும் உருவமாகிய உடம்பை உடையவன் என்றால் உயிர்களுக்கு உள்ளது போல அவனுக்கும் இக்குற்றங்கள் உள்ளன என்று ஆகிவிடாதா?
உயிர்களே சிற்றறிவும் சிறு செயலும் உடையவை. இறைவனோ இயல்பாகவே முற்றறிவும் பேராற்றலும் உடையவன். ஆதலால் அவனது அறிவும், செயலும் உடம்பளவில் நில்லாது எவ்விடத்தும் நிகழ்வனவாம்.
மேலும், அவன் வேண்டுதல் வேண்டாமை யில்லாதவன். ஒன்றை விரும்புதலும் மற்றொன்றை வெறுத்தலும் அவன்பால் இல்லை. ஆதலால் உலகப் பற்றும், அதனால் விளையும் இன்ப துன்பங்களும் அவனுக்கு இல்லை.
எல்லாம் வல்ல அவனுக்குத் தான் நினைத்தவாறு ஆக மாட்டாமையாகிய குறையில்லை. ஆகையால் தான் நினைத்த உருவை நினைத்தவாறே அவன் 'கொள்வான். அங்ங்ணம் கொள்ளினும் மேற்கூறிய குற்றங்கள் இல்லாதவனாய் நிற்பான்.
உருவத்திருமேனியின் இன்றியமையாமை 80. எல்லாம்வல்ல இறைவன் தான் நினைத்ததையெல்லாம்
H
வுள்கள் ஏன்?
"ஐயா! நீவிர்அழகாய்க்கேட்டீர்! நீங்கள் ஒருவர்,நிச்சயம் ஒருவரே! ஆனால் நீங்கள் அன்னைக்குப்பிள்ளை பிள்ளைக்குத்தந்தை, பேரர்க்குப்பாட்டன் மாமிக்குமருகன், மனைவிக்குக் கணவன் தம்பிக்கு அண்ணன்,தங்கைக்கும் அப்படி இந்த உமக்கே இத்தனை வடிவம் இறைவனுக்கு ஏனையா இருக்கக்கூடாது?
உரு இன்றியே செய்யலாம் அல்லவா? அவன் உருவைக் கொள்வான் என்று வற்புறுத்துவது எதற்கு?
உயிர்களுக்கு உலகையும் உடம்பையும் படைத்துக் கொடுத்து அவைகளை நடத்தும் தலைவனாகிய கடவுள் உருவம் கொண்டு மக்களுக்கு உலகியல் ஒழுக்கத்தை உணர்த்தும் அறநூலாகிய வேதங்களையும், பக்குவர்களுக்கு மெய்ந்நெறியை உணர்த்தும் அருள் நூலாகிய ஆகமங்களை யும் அருளிச் செய்துள்ளான். அங்ங்ணம் அவன் உருவங் -->
கவிஞர் கன்னதாசன்

Page 9
இந்துசாதனம் 3.O.
கொண்டு நூல்களை வெளிப்படுத்தவில்லை யென்றால் வீட்டுநெறியை மக்கள் அறிந்து வீடுபேறு பெறுவது இல்லையேயாகும்.
அவ்விருவகை நூல்களையும் அருளிச் செய்த பின்னர் அந்நூற் பொருள்களை மக்கள், தேவர் முதலிய யாவர்க்கும் உணர்த்தவேண்டிக் குரு பரம்பரையை உண்டாக்குதற் பொருட்டு அவனே கல்லால் நிழற் கடவுளாய் உருவுகொண்டு முனிவர் முதலியோருக்கு உணர்த்தினான். இவ்வாறு ஆசிரிய வழிமுறையை உலகில் நிறுவுவதற்கும், பிரமான நூல்களை அருளிச் செய்தற்கும் இறைவன் உருவங் கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று.
இன்னும், மாணிக்கவாசகர் திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்களுக்கு முதல்வன் தனது உண்மைத் திருவுருவைக் காட்டியே மெய்யுணர்வை வழங்கியிருக்கின்றான்.
அப்பர்பெருமானுக்கு அவர் விரும்பியபடியே அவரது தலைமீது திருவடி சூட்டி அருளுவதற்கும், நம்பியாரூரரை நீதி மன்றத்தில் வழக்கிட்டு ஆட்கொள்வதற்கும், திருநீலகண்டர் அயல் அறியா வண்ணம் வாழ்ந்த அவரது வாழ்வின் அருமையை உலகம் அறிய வெளிப்படுத்தற்கும் இறைவன் திருவுருக் கொண்டு வருதல் இன்றியமையாததாயிற்று.
மாயை உடம்பு ஆகாமை 81. உடம்பு எனப்படுவனவெல்லாம் மாயையின் காரியம் தானே. மாயையினின்றும் வரும் உடம்பைத் தானே கொண்டானாயினும், அவன் மாயையாகிய தளையுள் அகப்பட்டவன் ஆவான்அன்றோ?
உடம்பு என்றவுடன், அது மாயையின் காரியந்தான் என்று நீமுடிவுசெய்துவிட்டாய்போலும்,
ابر
சித்தாந்த முத்தி
சித்தாந்தமுத்தியைச் சிறப்பாய் பெற்றிடத்
திருவைந்தெழுத்தைத் தானே ஓதிடத்
தத்துவம் ஒவ்வொன்றிலேயும் நிலைபெறும்
சாதனம்பற்பலவிதமானதாகும்
சித்தாந்தசாத்திரம் மும்மலநீக்கம்
சிவத்தினைக் கூடும் முத்தியாகும்
முத்தானமுத்தியம் சிவானந்தபரவசம்
மூழ்குதல் நிர்க்குணநிறைவுதானே.
கவிஞர். யோகாநந்தசிவம்
O
 
 
 

22OO விரோதி மாசி0
ஆடை என்றவுடன் எல்லா ஆடைகளும் பருத்தியால் ஆனவை தாம் என்றும், வீடு என்றவுடன் எல்லா வீடுகளும் மண்சுவரால் ஆனவையே என்றும் முடிவு செய்தல் பேதமையன்றோ?
ஆடையிலே பட்டினால் ஆனவை, கம்பளியினால் ஆனவை, தோலால் ஆனவை எனப் பலவகையுண்டு. அதுபோலவே விடும் செங்கல்லால் ஆனது, கருங்கல்லால் ஆனது எனப்பலவகைப்படும்.
அணிபவர் தகுதிக்கு ஏற்ப ஆடையின் திறமும் வேறுபடும். உடையவர் தகுதிக்கு ஏற்ப வீட்டின் திறமும் வேறுபடும்.
அம் முறையில், உடம்பினைக் கொள்ளும் பொருளின் தன்மைக்கு ஏற்றபடி உடம்பும்மாறியே வரும்.
மாயையினால் ஆகிய உடம்பு சிற்றறிவையும் சிறு தொழிலையும் உடைய உயிர்களுக்கு உரியதாகும். உயிர்கள் மலம் உடையனவாகலின் மலத்தின் வகையாகிய மாயா சரீரம் அவற்றிற்கு உரியதாயிற்று.
இறைவன் மலம் இல்லாதவன் ஆகலின் அவனோடு மலத்தின் வகையாகிய மாயைக்கு யாதும் தொடர்பு இல்லை. அவன் உயிர்களைப்போல அன்றி, எல்லா அறிவும் எல்லாச் செயலும் எல்லா முதன்மையும் உடையவன் ஆதலால் குற்றம் பொருந்திய மாயையினால் ஆகிய உடம்பு அவனுக்குப் பொருந்தாது.
அவன் இயல்பிற்கேற்றபடி, அறிவே உருவாய் உள்ள அவனது சக்தியே அவனுக்கு உடம்பாகும். அச்சக்தி அருள் எனப்படுதலின் அவன் உடம்புஅருள்திருமேனிஎனப்படும். A உருை$.
வேதாந்தத் தெளிவே சைவசித்தாந்தம்
-
ஒன்றாய் வேறாய் உடனாய் நின்றான்
உயிர்கள் தோறும் இறைவன் தானே
நன்றாய் உருக்கிய அரக்கி னோடு
நன்கு கலந்த கற்பொடி போலே
என்றும் இறைவன் இருப்பதனாலே
எல்லாச் செயலும் அவன ருளமே
முன்னர் வகுத்தவே தாந்தத் தெளிவே
முடிந்த சைவசித் தாந்த மாகும்.
கவிஞர் வ. யோ

Page 10
இந்துசாதனம் 3O
ஐம்புலன்கள் ே
நயினை நா. ே
நிம் உயிருக்கு உருவம் ஏதும் இல்லை. ஆனால் அது உடலில் அடைபட்டு இயங்கும் நிலையில், அந்த உடலின் உருவத்தைப் பெறுகின்றது. அது உருவம் பெறுகின்றதோ இல்லையோ, உயிரை அந்த உடலின் உருவத்திலேயே நாம் காண்கின்றோம். உருவத்தைப் பெற்றதோடு மட்டுமன்றி உடலின் தன்மைகளுக்கெல்லாம் உயிரும் உள்ளாகிவிடுகின்றது. ஐம்பூதங்களில் ஒன்று காற்று. அதற்கு உருவம் இல்லை. ஆனால் ஒரு றப்பர் பலூனில் அடைபட்டதும் பலூனுக்கு ஏற்றபடி உருண்டை வடிவமாகவோ, நீள் உருண்டை வடிவமாகவோ, அதை நாம் காண்கின்றோம். றப்பர் பொம்மையில் அடைக்கப்படும் காற்று, அந்தப் பொம்மை வடிவத்தில் அமைந்துவிடுகின்றது. உயிருக்கும் உடலுக்கும் உள்ளதன்மையை இவ்விளக்கத்தினால் ஊகிக்கலாம்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளின் வழியாகவே உடலில் அடங்கியுள்ள உயிர், உருவத்தை அனுபவிக்கின்றது. இப்பொறிகளில் ஒன்று இல்லையென்றாலும் கூட உலகவாழ்வு பூரணமாவதில்லை. உடலை ஒரு தேராகவும், ஐம்பொறிகளைத் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளாகவும்,மனத்தைக் கடிவாளமாகவும், உயிரை தேரில் அமர்ந்து செலுத்தும் சாரதியா கவும் கூறுவதுண்டு. ஆனால் ஐம்பொறிகள் என்ற குதிரைகள் சாதாரணமானவை அல்ல. கடிவாளத்தையும் மீறிக்கொண்டு ஐம்பொறிகள் அவற்றின் விருப்பப்படியே இழுத்துச் சென்றுவிடு கின்றன.
இன்பத்தை நாடியே இந்த ஐம்பொறிகளும் இயங்கு கின்றன. இன்ப வேட்கை இப்பொறிகளின் இயல்பாகிவிடுகின்றது. எந்தப் பொருள்களில் இன்பம் கிடைக்கின்றதோ அந்தப் பொருள்களையெல்லாம் இவை ஆர்வத்துடன் தேடிச் செல்கின்றன. உடலில் இணைந்துள்ள இந்த ஐம்பொறிகளின் வேட்கை வெள்ளத்தில் சிக்குண்டு தவிக்கின்றது நம் உயிர். உடலோடு ஒன்றியுள்ள நம் உயிர் ஐம்புலன்களின் ஆதிக்கத்தால் அடக்கப்பட்டு அதன் மயமாகிவிடுகின்றது. எனவே உயிரும் புலனின்பங்களை நாடுகின்றது. சிற்றின்பங்களைத் தேடிச் சீரழிகின்றது. இதனால் ஐம்புலன்களை அடக்கும் ஆற்றல் இயலாததாகிவிடுகின்றது.
ஐம்புலன்களில் சிக்குண்டு நிற்கும் நாம், உடலுக்கும், உயிருக்கும் உள்ள வேடுபாடு தெரியாமல், இரண்டும் ஒன்று என்று மயங்கி விடுகின்றோம். உடல்தான் உயிர் என்று நினைத்து, உடலின் தன்மைகளையும், வேட்கைகளையும் உயிரின் தன்மை எனக் கருதி விடுகின்றோம். இது எமது அறியாமையேயாகும். எலும்பும், தசையும் கொண்ட இவ்வுடலின் தன்மை, தூய்மையான நம் உயிருக்கு உரித்தானது அல்ல. இந்த உண்மையினை நாம் உணர்ந்துகொள்ள மறப்பதால்தான் உடற்பொறிகளின் வயப்பட்டு நாம் உழலுகின்றோம் என்கின்றனர் ஞானிகள் "உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உரைத்தேன் விரதமெல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழா நெஞ்சே" நெஞ்சமே உனக்கு உரித்தானதல்ல இந்த உடலின் தன்மை என்பதை நமக்கு உணர்த்தி நிற்கின்றதுநாவுக்கரசரின் இந்த நல்வாக்கு.

22OO விரோதி மாசி O
படங்கும் அற்புதம் LITEspirg56ör B.A.
ஐம்புலன்களும் ஐயுணர்வும் மனிதனுக்கு அவசியம் இருக்க வேண்டியவை தாம். ஐயுணர்வின் துணை கொண்டுதான் மனிதன் இயற்கையினைக் காண்கின்றான். இறைமையினை உணர்கின்றான். மெய்யுணர்வு பெறுவதற்கும் ஐயுணர்வுகளே ஆதாரமாகவும் உள்ளன. ஆனால், பெரும்பாலும், ஐயுணர்வுகள் பொய்யுணர்வுகளையே தோற்றுவிக்கின்றன. இன்பநாட்டங்களில் மனிதனை ஈடுபடச்செய்து இறுதியில் அவை இன்னல்களையே விளைவிக்கின்றன. புலனின்ப வேட்கையால்தான், புன்மையான பல செயல்களில் மனிதன் இறங்குகின்றான். கள்ளுண்ணல், களவு, காமம் போன்ற செயல்களினால் ஒழுக்கத்தைவிட்டு உயர்நிலை இழப்பதும், பண்பினை மறந்து பழிச்செயல் புரிவதும், இகழப்படும் வகையில் இழிநிலை எய்தலும், புலனின்ப பொறியால்தான் விளைகின்றன. ஐம்புலன்களின் ஆதிக்கத்தினால் நாம் எய்தும் அல்லல்கள் எத்தனை எத்தனை.
அறிஞர்களும் கலைஞர்களும் அதிகெளரவமிக்கவர் களும்கூட, புலன்வழிச் சென்று புல்லர்களாய் ஆவதை நாம் பார்க்கின்றோம். காரணம், நூலறிவாலும், நுண்ணறிவாலும் புலன்களை அடக்கி அவற்றை நெறிப்படுத்த அவர்களால் இயலுவதில்லை. இறைவன் திருவருளால்தான், ஐம்புலன்களின் வெறியினை நாம் அடக்கமுடியும் என்கின்றனர் ஆன்மீக சீலர்கள். புலனடக்கம் என்றால் உலகவாழ்வை வெறுத்துத் துறவியாகப் போவது அல்ல. உணவைவெறுத்து உடலை ஒடுக்கி ஓய்ந்து இருப்பதல்ல. புலன்களை வெல்ல முயலும் பல திறத்தாரையும்விட எல்லை கடவாத இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் மேம்பட்டவன் என்பார்திருவள்ளுவர்.
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"
எல்லை கடவாத இயல்பான இல்வாழ்க்கைதான், அளவோடு வாழும் அறவாழ்க்கை யாகிறது. இன்ப நாட்டங்களை அளவோடு கொண்டு, வரம்பு கடவாமல் வாழ்வதே இயல்போடு இசைந்த இல்வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வுக்கேற்ற புலனடக்கம் பெறவேண்டும் என்றுதான் நாம் இறைவனின் அருளை நாடுகின்றோம். அது எவ்வாறு சாத்தியம் எனில், இறைவன் நம் இதயத்தில் வீற்றிருக்கின்றான் என்பதை நாம் முதலில் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். "உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யே" என்பார் மணிவாசகர். "சிந்தைதெளியத் தெளியவல்லார் கட்குச் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே" என்பார் திருமூலர். இறைவன் நம் ஊன் புகுந்து, உளம் நிறைந்து நம்முள் உறைகின்றானே. அதுவே அவன் நம்மை ஆட்கொள்ளுதல் என்று காண்போம். இறைமையோடு நாம் இசைந்துள்ளோம் என்ற மெய்யுணர்வு நமக்கு ஏற்பட்டதுமே நம் இதயத்தில் ஓர் இன்ப உணர்வுஏற்பட்டு விடுகின்றது.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியானவன் இறைவன். அற்பமான ஒர் ஊன்உடலுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் உயிர் நாம். இத்தகைய இழிவான உடலுக்குள் இறைவன் புகுந்து நின்று, அருள்புரிகின்றான் என்பதை எண்ணும்போது, எல்லை இல்லாத பரம்பொருளோடு இழிவான நம் உயிர் இசைந்துள்ளது

Page 11
இந்துசாதனம் 3O.
என்பதை நாம் உணரும்போது, அற்புதத்திற்கும் அற்புதமான இறைவனோடு அற்பமான நாமும் ஒன்றியுள்ளோம் என்ற உண்மையினை நினைந்து, நினைந்து, உள்ளம் உருகும்போது, நம் உள்ளத்தில் பெருகும் இன்பமே எல்லை இல்லாத பேரின்பமாகும். அது வருணிக்க இயலாதது; வார்த்தைகளில் அடங்காதது.
இவ்வாறு நாம் எய்தும் இன்ப உணர்வு பரம ஞானிகள் எய்தும் இறைமை இன்பத்தில் கோடியில் ஒரு பங்காகவே இருக்கலாம். ஆயினும் ஒருமுகப்பட்ட சிந்தனையில் நாம் பயிலப் பயில, இறைமையின் இன்ப உணர்வுபெருகிக் கொண்டே செல்லும். "வாக்கு இறந்த அமுதம் மயிர்க்கால்தொறும் தேக்கிடச் செய்தனன்" என இறைவனின் ஈடில்லா இன்பத்தை இயம்புகின் றார் மணிவாசகப் பெருமான். உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் அமுதம் தேங்கி நின்றால் எத்தகைய இன்பம் ஏற்படுமோ அத்தகைய அற்புதமான இன்பத்தை அருளுகின்றான் இறைவன் என்கின்றார் அடிகள். அந்தமில்லா ஆனந்தம் என்றும், ஆனந்த மாகடலே என்றும், தெவிட்டாத அமுது, என்றும் இறை இன்பத்தை ஒதுகின்றனர் மெய்யடியார்கள். இத்தகைய ஈடில்லா இறை இன்பத்திற்கும் ஐம்புலன்களால் நாம் அடையும் இன்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைநமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.
நம் ஐம்புலன்களோ உடலோடு ஒட்டியவை, உடலுடன் அவையும் அழியக் கூடியவை.இவ்வாறு அழியக்கூடியஐம்புலன்கள், அழியத்தக்க உலகப் பொருள்களில் இருந்துபெறும் இன்பமே, புலனுணர்வு இன்பமாக உள்ளது. ஆனால், இறை இன்பம் அழிவில்லாதது. இறைமையினைக் கருவாகக் கொண்ட நம் உயிரும் அழிவில்லாதது. என்றும் உள்ள இறைமையோடு என்றும் உள்ள உயிர் இசைந்து பெறும் இன்பமே இறையுணர்வு இன்பமாகின்றது. எனவே, புலன் இன்பம் அளவுடையது, அழியத் தக்கது. இறை இன்பமோ அளவு கடந்தது. அழிவே இல்லாதது. "இன்பம் இன்பம் இன்பம் இன்பத்திற்கோர் எல்லைகாணில் துன்பம் துன்பம் துன்பம்" என்பது ஐம்புல இன்பத்தின் இயல்பு அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பர். ஆனால், இறை இன்பமோ தீராதது. திகட்டாதது. ஈடில்லாத இறை இன்பத்திற்கு முன்னால், புலன் இன்பங்கள் பொய்த்துப்போய்விடுகின்றன. அவை ஆதவன் முன்னால் வைத்த அகல்விளக்குப்போல் ஆகிவிடுகின்றன. "புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேலுந்தி அலமந்தபோதாக அஞ்சேல் என்று அருள் செய்பவன்" இறைவன். அது அவனது அருட்கடாட்சமாக அமையும்போது ஐம்புலன்களால் உயிரும் உடலும் பெற்ற இன்பம் மாயை ஆகிவிடுகின்றது. எனவேதான் இறை இன்பத்தைப் பேரின்பம் என்றும், புலன் இன்பத்தைச் சிற்றின்பம் என்றும் நாம் கூறுகின்றோம்.
மனிதன் இன்பத்தைத் தேடி ஐம்புலன்களுக்கு அடிமையாகி விடுகின்றான். அதனால்தான் இன்பவெறிகொண்ட ஐம்புலன்களும் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இறை இன்பத்தினை எள்ளளவாவது அனுபவித்துவிட்டால், மனிதனுக்குப் புலன் இன்ப நாட்டம் புளித்துவிடுகின்றது. ஈடில்லாத இன்பத்தை அளித்துப் புலன் இன்ப நாட்டத்தினை அடக்கி விடுகின்றான் இறைவன். இதனை பக்குவமடைந்த ஆன்மீக சீலர்கள் அனுபவித்தார்கள். "மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்புலனைந்தின்
வழியடைத்து அமுதே.
ஊறிநின்று என் உள்எழுபரஞ்சோதிஉள்ளவாகாண வந்தருளாய்"

2.
2OO விரோதி மாசி01
என்பார் மணிவாசகர். இறை இன்பத்தால் புலன் இன்பங்கள் அடக்கப்பட்டு விடுகின்றன என்பதை இப்போது நாம் உணர்கின்றோம். இறைமை ஒளிநம் உள்ளத்தில் புகுந்தவுடனேயே ஐம்புல வேட்கைகள் அகன்று விடுகின்றன. இறை இன்பத்திற்கே இந்திரியங்களின் ஆதிக்கத்தை அடக்கும் ஆற்றல் உண்டு என்ற பேருண்மையை ஆன்மீக சீலர்களின் அனுபவத்தாலும் அருளுரைகளாலும் அறிகின்றோம்.
மெய்ஞ்ஞானமாகிய இறை இன்பம் நம் மனத்தகத்தே குடிகொள்ளும்போது, புலன்வழி நுகரப்படுகின்ற பொய்யான இன்பங்கள் எல்லாம் போய் அகன்று விடுகின்றன. உருகும் உலோகத்தில் இருந்து அழுக்குகள் அகல்வதுபோல், இறைவனைச் சிந்தித்து நம் உள்ளம் உருகும்போது, உள்ளத்தின் உள்ளிருக்கும் புலன்வழியான கள்ள எண்ணங்கள் அகன்று விடுகின்றன. இதனை "உருகுவித்து என்னுள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி" என்று நாவுககரசர் சொல்ல "பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே" என்றார் மணிவாசகப் பெருமான். இறைமை என்பது நம் ஐம்புலன்களுக்கும் அகப்படாததாக உள்ளது. ஐம்புலன் களுக்கும் அகப்படாமல் உள்ளத்து உணர்வாக உள்ள இறைவனை எவ்வாறு சொற்களால் வருணிக்க இயலும்? இயலாது. ஏனெனில் அவன் உணர்வின் மூர்த்தி. இதனை நம்மாழ்வார் ஞானத் தமிழாலே நயமாகச் சொல்லுவார். "தோய்விலன் புலனைந்துக்கும் சொலப் படான் உணர்வின் மூர்த்தி" என்றார். இவ்வாறு உள்ளத்து உணர்வாகவுள்ள ஒண்பொருளை ஐம்புலன்களால் அழி ாது. ஒர்ந்து உணர்ந்துதான் அறியவேண் ழ்மிதிரீஸ் வேண்டும். அவ்வாறு தெளியும்போது,ாஜகிரி ன்பங்கள் தோற்கடிக்கப் படுகின்றன.
புலன் இன்பங்களை நடுவூதுபாவம் என்றோ அது கூடாதது என்றோ ஐம்புலன்கை அரும்பாடுபட்டாவது அடக்க வேண்டும் என்றோ கூறவில்லை ஞானிகள். இறை இன்பத்தை ஈடில்லாத அந்த அமுதத்தை இதயத்திலேயே நாம் உணர்ந்து அனுபவித்தவுடனேயே புலன்வழி இன்பங்கள் எல்லாம் பொய்த்துப்போய் விடுகின்றன. எவ்வித முயற்சியும் இல்லாமலே ஐம்புலன்கள் அடங்கி, ஒடுங்கி, ஒய்ந்து விடுகின்றன. இவ்வாறு பேரின்பத்தைச் சுரந்து சிற்றின்பத்தை மறக்க வைக்கின்றான் இறைவன்.
ஒப்பில்லாத இறை இன்பத்தில் திளைப்பவர்கள் உடலின்பத்தை நாடுவதில்லை. புலன் இன்பத்தை மறக்கச் செய்து இறை இன்பத்தை நாடும் தாகத்தினைக் கூறும் மணிவாசகர் "தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே, நினைத்தொறும் காண்தொறும், பேசும் தொறும் எப்போதும் அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ" என்றார். அகம்புகுந்து இறைவன் நம்மை ஆட்கொள்ளும் அற்புதத்தால் ஐம்புலன்களை அடக்கி ஆளும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். நம் இதயத்தின் உள்ளே புகுந்து இலங்கும் இறைவனின் அருளால் அகந்தை அழிந்து ஐம்புலன்களும் அடங்கி, அவனருளாலே அவன்தாள் வணங்கும் ஆனந்தப் பேறையும் பெறுகின்றோம். அந்த இறை இன்பத்தினைப் பெறும்போது, ஐம்புலன்களும் அடங்கும் அற்புதத்தையும் நாம் காண்கின்றோம். 人

Page 12
இந்துசாதனம் 13.02
திருச்சிற்றம்பலம் VM வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விரோதி வூல மாசி மீ” resió 2. (r3.02.2oro)
ஒவ்வொரு மனிதனும்.
நாகரிகத்தின் உச்சியில் நிற்பதாக இந்த உலகம் அடிக்கடிக் கூறிக்கொண்டிருக்கின்றது. விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவத் துறைகளின் மகத்தான வளர்ச்சி யால் பல்வேறு வசதிகளும் வாய்ப்புக்களும் நிறைந்ததாக இந்த உலகம் விளங்குகின்றது. ஆனால் நாகரிகம் என்றால் என்ன என்பதையே அறியாமல் உண்பதும் உறங்குவதும் உடலின்பம் அனுபவிப்பதுந்தான் வாழ்க்கை என்ற போக்கிற் திரிந்த ஆதிமனிதர்களிடம் காணப்படாத ஏமாற்று, வஞ்சகம், சூழ்ச்சி நம்பிக்கைத் துரோகம், பொய்கூறல் போன்றவற்றை யும் அவற்றினடியாக உருவாகும் அடிதடி, ஆட்கடத்தல் பழிக்குப் பழிவாங்குதல், கொலை கொள்ளை போன்றவையும் நாளாந்த - "நிமிடாந்தத்" தொல்லைகளாகிவிட்டன. சமுதாயத் தலைவர்களாகத் தம்மைப் பிரகடனப்படுத்தியுள்ளவர்கள், பொதுப்பணியில் ஈடுபடுவதாகக் காட்டிக்கொள்பவர்கள். அதிகார பீடங்களில் அமர்ந்திருப்பவர்கள் போன்ற பல வகையினர் தம் அடியாட்கள்மூலம் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் எண்ணில்லாதவை. கையும் மெய்யுமாகச் சில சமயம் அகப்பட்டுக்கொண்டாலும் "காணவேண்டியவர் களைக் கண்டு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து" தம்மை அப்பாவிகளாகவும் அப்பழுக்கற்றவர்களாகவும் நிரூபித்து விட்டு முன்னர் இருந்ததைவிட இன்னும் "பெரிய" மனிதர்களாக வலம் வருவதற்கு அவர்களால் முடிகின்றது. " பழி ஓரிடம் பாவம் ஓரிடம்" என்பதற்கிணங்க குற்றமற்றவர்கள் சில சமயம் கொடுந் தண்டனைக்கு உள்ளாவதும், குற்றஞ் செய்தவர்கள் வெற்றிக் கதாநாயகர்களாகிய வீரம் பேசுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
உள்ளே இருட்டையும் வெளியே பகட்டையும் கொண்டு திரியும் இத்தகைய உருத்திராட்சப் பூனைகளின் உலுத்தத் தனங்களைத் தடுக்கவே முடியாதா? தவிர்க்கவே முடியாதா? தகர்க்கவே முடியாதா? தீயவர்களிடமிருந்தும் தீமைகளிலிருந்தும் இந்தச் சமுதாயத்தை மீட்கவே முடியாதா?
 

2OO விரோதி மாசி01
இந்தக் கேள்விகளைக் கேட்டவர்கள் சில இளைஞர்கள்; சமுதாய அக்கறையும் இலட்சிய நோக்கமும் நிறைந்த இளைஞர்கள். கேட்கப்பட்டவர் உள்ளத்தால் உயர்ந்த ஒரு பெரியவர்; அன்பும் அடக்கமும் மனநலமும் மனித நலமும், அறவழி நாட்டமும் அருள்வழித் தேட்டமும் நிறைந்த ஒரு 6)urfau6Jr.
இளைஞர் ஒவ்வொருவரையும் அவர் உற்றுப் பார்த்தார்; வெறும் பதிலுக்காக அல்லாமல் வெற்றிகரமான பரிகாரத்துக்காகவே அவர்கள் காத்திருப்பதை அவரால் உணர முடிந்தது.
விடை அவருக்குத் தெரிந்திருந்தபோதிலும், எடுத்த எடுப்பிலேயே அதைக் கூறுவதற்கு அவர் விரும்பவில்லை.
தனக்கு அண்மையிலிருந்த ஒரு பெட்டிக்குள்ளிருந்து சில படங்களை எடுத்தார். உலகப் படங்கள் இளைஞர் களுக்குக் காட்டிவிட்டு, ஒவ்வொரு படத்தையும் ஒழுங்கற்ற முறையிலே பல துண்டுகளாகக் கிழித்தார். ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குவியலைக் கொடுத்தார்.
"உலகத்தின் உருவத்தைப் பார்த்தீர்கள். நான் கிழித்த துண்டுகளைச் சரியாகப் பொருத்தி உலகத்தை மீண்டும் புராணமாக்குங்கள்"
ஒரு நொடியில் முடித்துவிடும் நம்பிக்கையுடன் அவர்கள் செயற்படத்தொடங்கினர்.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அது இலகுவானதாக இருக்கவில்லை; களைப்பையும் மனக் குழப்பத்தையுமே அது ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
திடீரென ஓர் இளைஞன் சொன்னான் "நான் உலகத்தைச் சரியாக்கிவிட்டேன்"
அனைவரும் அந்த இளைஞனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
"இவ்வளவு விரைவாக இதைச் செய்து முடிக்க எப்படி முடிந்தது?" ஒவ்வொருவருடைய பார்வையும் இந்தக் கேள்வியைேைய கேட்பதைப் போன்றிருந்தது.
"வெறும் கோடுகளை வைத்துக்கொண்டு என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. துண்டுகளின் பின்புறத்தை எதேச்சையாகப் பார்த்தேன் மனிதக் கால், கை, கண் போன்றவற்றின் பாகங்கள் இருப்பதைக் கண்டேன். அந்த உறுப்புக்களைச் சரியாகப் பொருத்தினேன். மனிதன் உருவாகினான்; மறுபுறத்தைப் பார்த்தேன் உலகமும் சரியாக உருவாகியிருந்தது"
பெரியவர் மிகவும் தெளிவாகச் சொன்னார்"பெரிய ஓர் உண்மை இங்கே செயல் முறையில் வெற்றி அளித்திருக் கின்றது. தனி ஒரு மனிதன் என்றிருக்காமல் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே திருத்திக்கொண்டால் தன்னைச் சரியாக்கிக் கொண்டால் உலகமே திருந்திவிடும்; சரியாகி விடும். மற்றவர்கள் என்ன பிழைகளைச் செய்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்காமல் நாம் சரியானவற்றை நீதியான வற்றையே செய்வோம் என்ற உறுதியுடன் ஒவ்வொருவரும் செயற்படுவதே உலகம் திருந்துவதற்குரிய ஒரே வழி; ஒரே ஒருவழி"
சைவ சமயத் தத்துவங்களும் வலியுறுத்துகின்ற இவ்வுண்மையை வாசகர்கட்கும் சமர்ப்பிக்கின்றோம். 人

Page 13
இந்துசாதனம் 3.C
இவ்வாண்டு மகாசிவராத் திரு. தே.க
ல்ெலாம் வல்ல முழுமுதற்கடவுளான சிவபெருமானை வழிபட்டு பெரும்பேறு பெற்றவர்கள் சைவர்கள். சைவர்களுக்குப் பல சிவவிரதங்கள் இருந்தாலும், அதில் சிறந்த விரதமாவது சிவராத்திரி (பூசை) விரதமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை திரயோதசி சதுர்த்தசி கூடிய நாளில் அனுஷ்டித்து வருவது மாத சிவராத்திரியாகும். விசேஷமாக மாசி மாதத்தில் அனுஷ்டிப்பதை மகா சிவராத்திரியாக சிவாகமங்களும் தர்ம சாஸ்திரங்களும் கூறுகின்றன.
இந்த (விரோதி) ஆண்டில் மகா சிவராத்திரியை தை மாதத்தில் (12.02.2010) அனுஷ்டிக்க வேண்டுமா? மாசி மாதத்தில் (13.03.2010) அனுஷ்டிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில் கீழ்க்காணும் கட்டுரை அமைகிறது.
மாதமானது சாவனம், சாந்திரம், நக்ஷத்திரம், செளரமென
நான்கு வகைப்படும். எந்தெந்த விரதத்திற்கு எந்தெந்த மாதம் விதிக்கப்பட்டதோ, அந்தந்த விரதத்தை அந்தந்த மாதத்திற் செய்தல் வேண்டும் என்று சிந்தியம் என்னும் ஆகமம் கூறும். இந்த பிரமாணத்தால் எந்தக் கர்மாவுக்கு எந்த மாதஞ் சொல்லப் பட்டதோ, எது அனுஷ்டானத்திலிருந்து வந்ததோ அந்தவிதமே நடத்தவேண்டும் என்பது பெறப்படுகின்றது.
ஸ்தாபனம் புரோக்ஷணம் தீக்ஷா சிவராத்ரிசிவோத்ஸவ: !
சௌரமாஸே துகர்த்தவ்ய:சாந்திரமானோப்ரசஸ்தக: 1 (ஸ்தாபனம், சம்புரோக்ஷணம், தீகூைடி, சிவராத்திரி, சிவோத்சவம் என்பவை சௌரமாதத்திற் செய்யத்தக்கன; சாந்திரமானம் தள்ளத் தக்கது) என வீராகமமும்,சிந்தாந்த சேகரமும் விதிக்கின்றன.
ஸ்தாபனம், ப்ரோக்ஷணம், தீகூைடி, சிவராத்திரி, சிவோத்சவம் என்பவை செளரமாதத்திற் செய்யத்தக்கன; பவித்திரோற்சவத்தைச் சாந்திரமாதத்திற் செய்க என்று சிந்திய விசுவசாதாக்கியம் விதிக்கின்றது. மாதபூஜை முதலியவைகளைச் சௌரமாதத்திற் செய்க, கும்பமாதத்துக் கிருஷ்ணசதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க என்று பீமசங்கிதை பகருகின்றது.
"துலாஸ்நாதமுஷாப்யங்கம் கிருத்திகா தீபமேவச
தநர்மாஸிஹரே:பூஜா சிவராத்ரிவ்ரதந்ததா ஐ
சௌரமானேனகர்த்தவ்யம் சாந்த்தரமானேநகாரயேத்"
துலாஸ்நானம். உஷத்கால அப்பியங்கம் (நரகசதுர்த்தசி ஸ்நானம்) காத்திகை விளக்கீடு, மார்கழி மாத உத்கால பூஜை,
1
 

22OO 6fiĉ3pnĝ5 Daréo Ol
திரி நாள் பற்றிய சிந்தனை
டலைமுத்து
சிவராத்திரி விரதம் என்பவை சௌரமாதத்திற் செய்யத்தக்கன; சாந்திர மாதத்திற் செய்யற்க என்று தர்மசாத்திரச் சுருக்கம் கூறுகின்றது.
சூரியன் மேஷம் முதலிய இராசிகளிற் செல்லும் மாதம் சௌரமாதமென்று சொல்லப்படும். சௌரமாதத்தில் மாத நக்ஷத்திரம் பிரதானமென்று கூறப்படுகிறது. மேட மாதத்தில் சித்திரை நக்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுவதால் அந்த மாதம் சைத்திரமென்று சொல்லப்படுகின்றது. இடபமாதத்தில் விசாக நக்ஷத்திரம் பிரதானமாகக் கொள்ளப்படுதலால், அந்த மாதம் வைசாகமென்று கூறப்படுகிறது. விருச்சிக மாதத்தில் கார்த்திகை நகூடித்திரம் விசேஷமாகையால் அந்த மாதம் கார்த்திகை மாதமென்று சொல்லப்படுகிறது. கும்பமாதத்தில் மகா நக்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுவதால் அது மாகமாத மென்று சொல்லப்படுகிறது எனக் காரணாகமம் கூறும். மற்றைய மாதங்களுக்கும் இவ்வாறே அவ்வாகமத்திற் சொல்லப்பட்டது. எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கின்றானோ அந்த மாதம் மாகமாதமென்று நினைக்கத்தக்கது எனப்புரோத்கீதாகமம் பகருகின்றது.
சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கின்றானோ, அதுதானே மாகமாதமாகும்; அம்மாதத்தில் வரும் கிருஷ்ண சதுர்த்தசி நாளில் சிவனைப்பூசிக்க - என்று சூசுஷ்மாகமம் கூறுகின்றது.
ஸெளரய கூேடிமாகமாசி கிர்ஷ்ணபச்சேஷவிசேஷதl
சதுர்த்தக்யாம் ஜாகருக:சிவராத்திரிவிரதம் கரோத்
செளரயகூஷமாக மாகமாதத்தில்; கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க வேண்டும் என்றுபிம்பம் என்னும் ஆகமம் கூறுகின்றது.
கும்பமாதத்து கிருஷ்ணசதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்துச் சிவராத்திரி விரதம் அனுட்டிக்க வேண்டும் என்று கிரணாகமம் செப்புகின்றது. கும்பமாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன் கூடிய திரயோதசியும் அதற்குமேல் சதுர்த்தசியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும் என்று வீராகமம் விளம்புகின்றது. சூரியன் கும்பராசியை அடைந்த காலமே மாகமென்றபெயரை அடை கின்றது. அந்த மாகமாத கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசியில் சிவராத்திரி பூஜை செய்ய வேண்டுமென்று வேறோராகமத்தில் =->

Page 14
இந்துசாதனம் 3.O.
விதிக்கப்பட்டது. லளிதம் முதலியவற்றிலும் இவ்வாறே சொல்லப்படு கின்றது. சூரியன் கும்பராசியில் செல்கின்ற மாசிமாதத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி சிவராத்திரியாகும்; அது கோடிபாவங்களை நாசஞ் செய்யும் எனப் பராசரம் பகருகின்றது. இராத்திரி முழுவதும் தைமாதத்தையடைந்த சிவராத்திரியானது பாவத்தைக் கொடுக்கக் கூடியது; விதிக்கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது.
"கும்பரெளவது சம்ப்ராப்தே கிருஷ்ணபக்ஷே விசேஷத: த்ரயதேஸ்யா சதுர்த்த சியாசம்யுக்தே தந்நிசிஸ்ததா சிவராத்ரிவ்ரதம் சூர்யாத பரேஹநிபாரணம் கர்விதச் சாந்திர
பக்ஷேது சிவராத்ரிவிரதம் சரேத் தத்ராத்ரீபூபதீநாஞ்சஐநாநாமபிஸர்வ ச: சிவராத்ரிவ் ரதீநாஞ்சரெளவம் நரகம்ப வேத்தததோஷசம் நார்த்தாய சாந்திராயணன் ரதம் சரேத் புனச்சாஸ்த்ரோக்தவத் குர் யாத்செளரமாஸேவ்ரதம் சதேத்"
சூரியன் கும்பராசியில் இருக்கும் பொழுது கிருஷ்ண பகூடித்தில் திரயோதசி சதுர்த்தசிகளோடு கூடின அந்த நிசியில் சிவராத்திரி விரதமனுட்டித்து மறுதினம் பாரணை செய்க. சாந்திரபசுஷத்தில் சிவராத்திரி விரதத்தை அனுட்டித்தால் அந்தத் தேசத்து ஜனங்களுக்கும்; ராஜாக்களுக்கும் சிவராத்திரி விரத மனுட்டிப்பவர்களுக்கும் ரெளரவ நரகமுண்டாம்.
இத்தியாதி பிரமாணங்களினாலே சிவராத்திரி விரதம் பூசை உற்சவங்கள் சௌர மாதத்திலேயே செய்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது.
நவராத்திரி கந்தசஷ்டி விரதங்கள் சந்தேகத்துக்கிட மின்றிச் சாந்திரமாதத்திலும், சிவராத்திரி சௌரமாதத்திலும் நடைபெற்று வருதல் வேண்டுமென்பது ஆகம விதிகளால்
S&SLLILDITélairpg).
சிவபெருமானது திருமுகங்களிலிருந்து தோன்றிய சிவாகமங்கள், நித்தியம், நைமித்தியம், காமியம் என்ற பூஜைகளையும் அவற்றை அனுட்டிக்கவேண்டிய முறைகளையும் கூறுகின்றன. அவ்வாகமங்களில் கூறப்பட்ட முறைக்கு மாறுதலாகச் செய்வது தீங்கு என்றும், தவறாக அனுட்டித்தால் அதற்குப் பிராயச்சித்தமும் அவ்வாகமங்களிலேயே கூறப்பட்டிருக் கின்றது.
ஆலயங்களில் சிவராத்திரிமகோத்ஸவம் முதலியவைகள் சௌரமாதத்திற் செய்யவேண்டும் என்று ஆகமவிதி கூறுகின்றது. சிவராத்திரி பூஜையை நிர்ணயஞ் செய்யும் வசனரத்னாவளியில் ஆவணி மாதத்தில் பூரீ ஜெயந்தி முதல் எண்ணி, 184வது நாள் சிவராத்திரிஎன்று கணக்கிட்டுக் கூறும் வாக்கியம் வருமாறு:
சிம்ஹேசரவிசம்ப்பராப்தே ரோஹிணிஸ்ஹிதாஷ்டமீ
ததாதிகணனம்கிருத்வாசாசீதிசதுருத்தாரா! சதோபேததினாந்தேது சிவராத்ரிரிதிஸ்மிருதா!
அதாவது ஆவணி மாதத்தில் ரோஹிணிநகஷத்தி ரத்துடன் கூடிய அஷ்டமி என்று வருகிறதோ, அத்தினம் முதற்

22 OO விரோதி மாசி01
கொண்டு நூற்றெண்பத்து நாலாவது நாள் சிவராத்திரியாகும் என்பதாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 26ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி(109.09) முதற்கொண்டு184வது நாள் மாசி மாதம் 29ஆம் தேதி (13.03.2010) வருகிறது. ஆகவே மேலே உள்ள சுலோகப் படி மாசி மாதம்தான் சிவராத்திரி ஆகிறது. ஆகையால் சிவராத்திரி விரதானுஷ்டானம் சௌரமாத ரீதியில் மாசிமாதத்தில்தான் அனுஷ்டிக்க வேண்டும்.
"ரவெளகும்பங்கதே பூர்வ மகாராந்தே ப்ரபூஜயெத்" - என்னும் பூர்வகாரணாகம வாக்கியத்துக்கு "சூரியன் கும்ப ராசியையடைந்த பொழுது தை மாதக் கடைசி தினத்தில் பூஜிக்க வேண்டும்" - என்பதே அர்த்தமாகும். உத்தரகாரணாகமத்து இரண்டாவது சுலோகத்தில் "மாகபால் குணயொ : கிருஷ்ண சதுர்த்ஸ்யாம் சுபேதினே" - என்றிருக்கிறதேதவிர "புஷ்ய மாகயோ" என்று வந்திருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். இதற்கு மாகமாதத்தில் (மாசியில்) பால் குணத்தில் (பங்குனியில்) என்றுதான் அர்த்தமாகும்.
இராத்திரி எட்டாவது பாகத்திலிருக்கிற திரயோதசியில் சதுர்த்தசி கூடினாலும் சிவராத்திரி என்பது விஜயாகமம். இதற்கு விரோதம் கவாயம்புவம்; முதல் நாளோ மறுநாளோ சதுர்த்தசி அதிகமாயிருந்தால் சிவராத்திரி என்று கூறும். இதற்கு விரோதம் சந்தானாகமம். சதுர்த்தசி பூரணமாகவும் அமாவாசையானது கலையளவாயிருக்கின்ற சிவராத்திரியானது கர்மத்தை நாசஞ் செய்யும் என்பதாம்.
இனி வித்தியா வார்த்திகத்தில் மோகூடிசாதனல கூடிணத்திலுள்ள சிவராத்திரி நிர்ணயத்தில் மாதநிர்ணயஞ் செய்திருப்பதை இங்கே காணலாம்.
அச்சுலோகம்
கும்பஸ்தா கடமீன காமகரகும்பஸ்தா நிசாயாம் திதி: மீனஸ்தா விஹரிதிதொத்தராயதிநபூர்வாகப்ரதானக்ரகா சந்தயாயாமிவளலாந்தியகர்மதபசிப்ரோகதம்தபோப்யர்ச்சனம்பத்ரே
சாபக புஷ்யவன் மகரகம்த்யா ஐயம் தயஸ்தத்வ்ரதே
என்பதாம். இதன் பொருள் கிருஷ்ணபட்ச சதுர்த்தசிராத்திரியில் அ) மாசிமாத சம்பந்தம்மாத்திரம் உடையது. ஆ) மாசி,பங்குனிமாத சம்பந்தம் உடையது. இ) தை, மாசிமாத சம்பந்தம் உடையது. ஈ) பங்குனி மாத சம்பந்தம் மாத்திரம் உடையது என நான்கு
வகைகளில் சிவராத்திரிமாத நிர்ணயம் அமைகிறது.
அ) முதற் பிரிவு இல்லாத விசயத்தில் இரண்டாவது பிரிவு விதிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது பிரிவு இருந்த போதிலும் முதல் பிரிவு இருக்குமேயானால் அந்த முதற் பிரிவே விதிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது பிரிவு தள்ளத்தக்கது என்றே அர்த்தம். இதற்கு உதாரணம் நந்தன வருடம் மாசி மாதம் 30ஆம் தேதி 13.03.1953, வெள்ளிக் ép6OLO, திரயோதசி திதி 38.24, மீனரவி 53.05 (சுமார் அதிகாலை 3.00 மணிக்கு) எனக் குறிப்பிட்டிருப்பினும் அன்று மாத சிவராத்திரி என்றே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்

Page 15
O
ஆ)
9)
FF)
டுள்ளது. மேற்கூறிய விதிப்படி இரண்டாவது பிரிவு மாசி, பங்குனிமாத சம்பந்தமுடையது இருந்தபோதிலும் முதல் பிரிவு மாசி மாத சம்பந்தமுடையதான 12.02.1953இல் மாசி மாதம் 1ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசி திதி 12,27 கும்பரவி 4.41 (காலை மணி 7.45க்கு) என உள்ளதையே மகா சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
மாசி சங்கிராந்தியானது பகலில் வருமானால் அப்பொழுது இராத்திரி முழுவதும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியானது மாசி மாதத்தில் இருக்கிறதாக ஆகும். அது முதல் மாசி மாதமே ஆதலால் மிகவும் மேன்மையானது. உத்தமோ உத்தமமாகும். இதற்கு உதாரணம் நந்தன வருடம், மாசி 1, 12.02.1953, வியாழன், கும்பரவி 4.41 (காலை மணி 745க்கு) மாதப் பிறப்பு அந்த சிவராத்திரி மேற்சொன்ன சிவராத்திரி இல்லாத பட்சத்தில் இராத்திரியில் மாசி, பங்குனி இரண்டு மாத சம்பந்தத்தை உடையதான சிவராத்திரி யானது மாசி மாதத்தின் கடைசித் தேதி இராத்திரியில் பங்குனி மாத பிறப்பும் ஆகும். அப்பொழுதும் மாசி மாதத்தின் கடைசித் தினமே அப்படி இருந்தபோதிலும் இராத்திரி பாகத்தில் பங்குனி மாத சம்பந்தத்தால் உத்தமம் என்று கூறப்படும். (இவ்விடத்தில் மாகபால் குணயோ கிருஷ்ண சதுர்த்தஸ்யாம் சுபேதிநே மேற்சொன்ன இரண்டாவது சிவராத்திரி இல்லாத பட்சத்தில் என்பதுபொருத்தமுடையதென அறியப்படும்).
இராத்திரியில் தை, மாசி இரண்டு மாத சம்பந்தத்தை உடையதான சிவராத்திரியானது, தை மாத கடைசித் தேதி இராத்திரியின் பாகத்தில் தை மாத சம்பந்தத்தினால் அந்த சிவராத்திரியானது மத்தியம சிவராத்திரி ஆகும். (இவ்விடத்தில் பூர்வகாரணத்தில் வரும் "ரவளகும்பங்கதே பூர்வமகராந்தே ரபூஜயெத்" என்பது பொருத்தமாகின்றது. இதற்கு உதாரணம் பிரமோதுத வருடம் தை மாதம் 30ஆம் தேதி (12.2.1991) செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி 3716 கும்பரவி (5428) அதாவது மாசி மாதப் பிறப்பு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மாசி மாதம் பிறந்து விடுவதால் நான்காவது யாமத்தின் கடைசிப் பகுதி மாசி மாதம் சம்பந்தம் உடையதாகிறது.
13.02.1991 - மாசி மாதம் 01ஆம் தேதி சதுர்த்தசி 40:31 இரவு 10.00 மணிக்கு மேல் அமாவாசை வருவதால்
மகாநிசிக்கு முன்னமையே அமாவாசை சேர்வதால் குச
தோசத்தினால் விரதம் அனுட்டிக்கமுடியாது.
மாசி மாதம் 30 ந் தேதி 14.03.1991 வியாழக்கிழமை திரயோதசி 1929 இருப்பினும் மீனரவி 4252 - இரவு (112 மணிக்கு) பங்குனி மாதம் பிறந்து விடுவதால் நான்காவது யாமத்தில் மாசி மாத சம்பந்தம் இல்லாத காரணத்தால் மாசி மாதம் சம்பந்தம் உடைய, தை-மாசிசம்பந்தமான சிவராத்திரி அனுட்டிக்கப்பட்டது. (மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி இல்லாத நிலையில்)
இராத்திரி முழுவதும் பங்குனி மாதத்தில் இருக்கிற சிவராத்திரி ஆனது பகலில் வருகிற பங்குனி மாத சங்கிராந்தி
3.O.
1.

22OO விரோதி மாசி O
யினால் ஆகும். அந்த தினம் முதல் பங்குனி மாதம். அப்பொழுது பங்குனி மாத சம்பந்தம் மாத்திரத்தால் அந்த சிவராத்திரி அதம சிவராத்திரி.
இராத்திரி முழுவதும், தை மாதத்தை அடைந்த சிவராத்திரியானது பாபத்தைக் கொடுக்கக்கூடியது. விதிக் கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது. ஏனென்றால் சந்தியா என்பது முதலான வாக்கியத்தினால் சந்தியா காலத்தில் சந்தியா வந்தனாதி கர்மத்தைப் போல மாசி மாதத்தில் சிவராத்திரி பூசை பூதம்வதிஷயே. போவதிஷ்யே என்ற சுருதியினாலும், பூதம் தபஸ் என்று சொல்லப்படவே, (தபோமாஸஏவ விஹிதம்) மாசி
மாதத்திலேதான் விதிக்கப்படுகின்றது.
கேவலம் தை மாதத்தையடைந்த சதுர்த்தசி திதியானது விதிக்கப்படாமலிருப்பதனாலே சந்திரகிரஹணத்தைத்விர இதரமான இராத்திரியில் பிதிர்தர்ப்பணம் எப்படியோ அப்படிப் பாபத்தைக் கொடுக்கிறதாய்த் தள்ளத்தக்கது என்பதாம். இதற்கு உதாரணம் தாரண வருடம், தை மாதம் 29ஆம் தேதி (102.1945), ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தசி 49.51 மறுநாள் 12.02.1945, திங்கட்கிழமை, கும்பரவி 0.31 (காலை 6.15க்கு) மாதப்பிறப்பு ஆகவே 1203.1945 மாசி மாதம், 29ஆம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசி 1913 அன்றே சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட்டி ருக்கிறது.
சைவர்களுக்குச் சௌரமாதம் சாந்திரமாதம் இரண்டும் உடன்பாடேயாம். எந்தக் கர்மாவுக்கு எந்த மாதம் சொல்லப் பட்டதோ எது அநுட்டானத்திலிருந்து வந்ததோ அந்த விதமே நடத்தவேண்டும்.
சிவராத்திரியை கெளரமாதத்திலேயே அநுட்டிக்க வேண்டும் என்பதே ஆகம சம்மதம், சூரியன் கும்பராசியில் வரும் மாசி மாதக் கிருஷ்ண சதுர்த்தசி சிவராத்திரியாகும். உத்தர காரணாகமம் சிவராத்திரி விதிப்படலத்தில் சௌரமாத மாசியில் வரும் சாந்திரமான பால்குண கிருஷ்ணசதுர்த்தசியில் சிவராத்திரி விரதம் கொள்ளத்தக்கது. சாந்திர மாதத்தில் அனுட்டித்தல் குற்றம் என்று செப்புகின்றது.
நவராத்திரி, கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி விரதங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சாந்திர மாதத்திலும், சிவராத்திரி, கேதார விரதம், மஹோத்சவ தீர்த்தம் முதலியவை சௌரமானத்
தாலும் அனுட்டிக்க வேண்டும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
இக்காரணம் பற்றியே (சௌரமான) மாசியில் வரும் (சாந்திரமான) மாககிருஷ்ண சதுர்த்தசியில் மஹாசிவராத்திரி பஞ்சாங்கங்களில் குறிக்கப்பட்டு வரலாயிற்ற, பிரோமதூத (199091), சோபகிருது (1963-64), தாரண (1944-45), குரோதன (192526), பராபவ (1906-07), சர்வஜித் (1887-88) ஆகிய வருடங்களில் மாசி மாதத்தில் குறிக்காது தை மாதத்தில் வரப்பெற்ற மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி குறிக்கப்பட்டிருப்பதைக்
காணலாம்.

Page 16
இந்துசாதனம் 3.O.
தொடர்ச்சியாக 18 வருடங்கள் மாசிமாத கிருஷ்ண சதுர்த்தசியில் மஹா சிவராத்திரியைக் குறித்த பஞ்சாங்க கணிதர்கள் 19 வருடங்களுக்கு ஒருமுறை தை மாதத்தில் குறித்ததற்குரிய காரணம் யாதெனில், சௌரமாதமும், சாந்திர மாதமும் இணைந்து வரினும் 12 சௌரமாதங்களில் ஒரு அதிக சாந்திரமாதம் வரும், 19 வருடத்திற்கு ஒருமுறை பங்குனி (மீன) மாதத்தில் அதிக சாந்திரமாதம் வரும், 19 வருடத்திற்கு ஒருமுறை பங்குனி (மீன) மாதத்தில் அதிக சைத்ரம் வரும், அப்போது மாசி மாதத்தில் அதிக சைத்ரம் வரும், அப்போதுமாசி (கும்ப) மாதத்தில் பாற்குணமும், தை (மகர) மாதத்தில் மாகமும் வரப்பெறும். அதேபோல இவ்வருடம் தை மாதத்தில் மாகமாசம் குறிக்கப்பட்டி
ருப்பதைக் காணலாம்.
19 வருடத்திற்கு ஒருமுறை தை மாதத்தில் வரும் மாககிருஷ்ண சதுர்த்தசியில் மஹா சிவராத்திரி குறிக்கப்பட்ட தற்குரிய காரணம் ஆராய்வோம். பூர்வகாரணாகமம் சிவராத்திரி பூஜைாவிதிப்படலம் 12வது சுலோகத்தில், சூரியன் கும்பராசிக்குப் பிரவேசிக்கும் முன் தை மாதக் கடைசியில் பூஜிக்க வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது.
இக்கூற்றை ஆழ்ந்து சிந்திக்குமிடத்து பூர்வகாரணாக மம் (சௌரமான) மாசி மாதத்தில் வரவேண்டிய (சாந்திரமான) மாகமாதம் சில காலங்களில் அவ்விரதம் இசைந்து வராது தை மாதத்தில் வரப்பெறுவதால் அம்மாதத்தில் இருக்கப்பெறும் மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி கொள்ளப்படவேண்டு மெனக் கருதியே அவ்விதம் குறிக்கப்பட்டுள்ளது. (மாசி கிருஷ்ணபட்சசதுர்த்தசி இல்லாதபட்சத்தில்)
நாரதஸம்ஹிதையில் அர்த்தராத்திரி சம்பந்தமுடைய மாககிருஷ்ண சதுர்த்தசியில் யாவனொருவன் சிவராத்திரி விரதம் அனுட்டிக்கிறானோ அவன் அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பான பலனையடைவான் எனவும், காமிகாகமம் உத்தரபாகம் சிவராத்திரி பூஜாவிதிப்படலம் 4ம், 5ம் சுலோகங்களில், மாக மாதத்திலே கிருஷ்ணபசுஷ சதுர்த்தசி வருகிற இரவு சிவராத்திரியாகும். (அது) எல்லாப் புண்ணியங்களையும் நன்மைகளையுந் தருவது. அந்த நாளில் சிவாலயத்திலே சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதின் கருத்தை நோக்குமிடத்து மாகமாதமே சிவராத்திரிக்கு விசேடமுடையதென்பது புலனாகிறது.
இக்காரணங்கள் பற்றியே பஞ்சாங்க கணிதர்கள் (செளர) மாசியில் வரும் சாந்திரமாத பால்குண கிருஷ்ண சதுர்த்தசியிற் குறிக்காது தை மாதத்தில் வரும் மகாகிருஷ்ண சதுர்த்தசியில் மஹாசிவராத்திரியைக் குறிக்கலாயினர் என்று சொல்லலாம்.
சௌரமானமாசி மாத கிருஷ்ண சதுர்த்தசியானது
C

22OO விரோதி மாசி O
இல்லாமல் இருக்கும் போது, மாசியோடு சேர்ந்த பங்குனி மாத ராத்திரியில் வருகிற சதுர்த்தசி கிரகிக்கத்தக்கது. மார்கழி மாதத்தை அடைந்த புஷ்ய மாதத்திற்கு போல், தை மாதத்தை அடைந்த மாகத்திற்கு நிஷேதம் என்று சொல்லி இருப்பதால் தை மாதத்தை அடைந்த மாகமாத கிருஷ்ண பகூடி சதுர்த்தசியானது தள்ளத்தகுந்ததாக இருக்கின்றது.
மாசிமாதத்தை அடைந்த மாக கிருஷ்ண சதுர்த்தசி தானே கிரகிக்கத் தக்கதாக இருக்கிறது. சூரியன் கும்பராசியை அடைந்த காலமே மாகம் என்ற பெயரை அடைகிறது. மேற்படி மாகமாத கிருஷ்ண சதுர்த்தசி மகாநிசியில் சிவராத்திரி பூசை செய்யவேண்டும் என்பது காரணாகமம் கூறும் விதி.
காமிகாகமத்தில் அனாதி சைவ (சிவபெருமான்), ஆதி சைவ (தீட்சை பெற்ற சிவாசாரியார்கள்), மஹாசைவ (தீட்சை பெற்ற அந்தணர்கள்), அநுசைவ (தீட்சை பெற்ற சைவர்கள்), அந்திய சைவ (தீட்சை பெற்ற வேளாளர்கள்). அவாந்தர சைவ (தீட்சை பெற்ற ஹரிஜன்), பிரவர சைவ (பிற மதத்திலிருந்து சைவராக மாறியவர்கள்) ஆகியோர் சௌரமானம் அனுஷ்டிதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
சைவப் புராணத்தில் த்விஜர் முதலியவர்களுக்கு விரதாதிகளின் பலனை சாந்திரமானத்தால் அடைய விரும்பினும் உபாகர்மம், பிதுருகார்யம், சிவராத்திரி விரதம் இவைகளுக்குச் சாந்திரமானம் கூடாதென கூறியிருக்கின்றது. காமிகாகமத்தில் பாரார்த்தாலயங்களில் சௌரமானத்திலேயே செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. செளரமானத்தை நீக்கி சாந்திரம் முதலிய மாதத்தால் செய்வாராகில் ஆயுசு, புத்திரன் ஆகியவை நாசமாவதோடு கர்மம் பயனற்றதாகும்.
விரோதி வருடம் தை மாதம் 30ஆம் தேதி (12.02.2010) வெள்ளிக்கிழமை சதுர்த்தசி திதி 60.00 கும்பரவி 49.22 மாசி மாதப் பிறப்பு (இரவு 01.48 மணிக்கு) இருந்தாலும், தை - மாசி சம்பந்தமுடைய சிவராத்திரிமத்தியம் எனக் கூறுவதால்,
மாசி மாதம் 29ஆம் திகதி (13.03.2010) திரயோதசி திதி 42.38 நாழிகை இருப்பதால் மாசி மாதம் 30ஆம் திகதி (14.03.2010) சதுர்த்தசி 47.33 இருப்பினும் மீன ரவி 37.46 பங்குனி மாதப் பிறப்பு (9.00 மணிக்கு) ஆரம்பித்து விடுவதால் மாசி - பங்குனி சம்பந்தமுடையதாகிவிடுகிறது.
தை - மாசி சம்பந்தமுடையது, மாசி - பங்குனி சம்பந்தமுடையது இரண்டில், மாசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசியே கிரகிக்கத்தக்கது என்பதால் 13.03.2010 மாசி மாதம் 29ந் திகதி மகாசிவராத்திரி விரதம் அனுட்டிக்க வேண்டும் எனத் தெளி வாகிறது. 人
ܧܽ

Page 17
இந்துசாதனம் 3C
உலகம் முழுவதிலும் தமிழினம்
இத்தகைய தமிழினம் எல்லாத் தேசங்களிலும் மிக இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மனவருத்தத்திற்குரிய ஒன்றாகும். இதற்குக் காரணம் தமிழன் தருமத்தை மறந்துவிட்டமையாகும். தன்னுடைய தனித்துவத்தையும் இழந்துவிட்டான். இதனால் தன்னலம் தலையெடுத்துப் பரநலம் அழிந்துகொண்டே வருகின்றது. உயர்ந்த வழிபாட்டைச் செய்துவந்த தமிழனோ உருக்குலைந்து வேற்றுமொழி பேசுபவனாகி, வேற்றுச் சமயக் கொள்கை களைத் தன்னகத்தே பொருந்துபவனாக மாறிவிட்டான்.
உலகத்தில் முதன்முதல் தோன்றிய மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள் ளார்கள். உலகத்தில் முதன் முதல் தோன்றிய மதமும் சைவம் என்பதை எல்லாமத ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதேபோல் உலகில் நாகரிகம் அடைந்த சமூகங்களில் தமிழ்ச் சமூகம் காலத்தால் முந்தியது என்பதைச் சரித்திர ஆராய்ச்சி யாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அயல் நாடுகளில் சென்று இந்நிலையை எண்ணிப் பார்க்கும்போது தமிழன் என்னதான் பாவஞ்செய்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகில் எல்லாச் சமூகத்தவருக்கும் ஒரு இராச்சியம், ஒரு தேசம், ஒரு மாகாணம், ஒரு கட்டுக்கோப்பு இருப்பதைக் காண்கிறோம். தமிழனுக்கு என்று இன்றைய உலகில் எதுவுமே இல்லை.
இன்றைய உலகில் தமிழ் இனத்திற்கென்று தனியான ஒரு உலக அமைப்பு ஏற்படவேண்டும். அதில் எல்லாத் தேசங்களிலு முள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் விகிதாசாரப்படி இடம்பெற வேண்டும். உலகின் எந்தவொரு மூலையிலாயினும் தமிழர்களுக்கு இனவாரியாகத் துன்பம் ஏற்படும்போது இந்த அமைப்பு முன்வந்து அநீதியை உலகுக்கு எடுத்துக்காட்டி நீதி கோரிக்குரல் எழுப்ப வேண்டும். இன்று தழிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அங்கங்கெல்லாம் அவர்கள் வாழ்கிற தேசத்திற்கு நம்பிக்கை உடையவர்களாக வாழவேண்டும். பெரும்பான்மைச் சமூகம் நீதியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறுபான்மைச் சமூகம் கவலையின்றி வாழலாம். பெரும்பான்மைச் சமூகம் நீதியினின்று தவறுமானால் சிறுபான்மைச் சமூகம் பல இன்னல்களுக்காளாக நேரிடும். அத்தருணங்களில் உலக அமைப்பு அநீதியை எடுத்துக்காட்டி நீதியை நிலைநிறுத்த முடியும்.
 

22OO விரோதி மாசி0
இந்த விடயத்தில் இந்தோநேசிய அரசாங்கமும் அங்குள்ள தமிழர்களும் புத்திசாலித்தனமாக நடந்துள்ளார்கள் என்றே
கூறவேண்டும். இந்தோநேசிய அரசாங்கம் பஞ்சசீலக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொண்டதால் தமிழ்ச் சிறுபான்மை இனத்தினருக்குச் சட்டரீதியான பாதுகாப்பு எந்த இடத்திலும் காணோம். இந்தோநேசியாவில் தமிழ்ச் சமுதாயம் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் தமிழர்கள் இந்தோநேசியாவின் சனத்தொகையில் ஒருவீதம்தானுமில்லை. இந்தோநேசியா மதத்திற்கே முக்கியத் துவம் கொடுப்பதால் இந்தோநேசியத் தமிழர்கள் அங்குள்ள இந்துக்களோடு தம்மைப் பிணைத்துக்கொண்டார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகமான இந்துக்கள் வாழும் பிரதேசம் இந்தோநேசியாவாகும். ஆகவே இந்தோநேசியத் தமிழர்கள் இந்தோனேசியாவில் மதத்தால் இரண்டாவது இடத்தைப் பெற்ற இந்துக்களோடு சேர்ந்தபடியினால் இந்தோ நேசியாவில் இரண்டாவது பெரும் பான்மையினராக வாழுகின்றனர். இந்து சமயப் பாதுகாப்பில் இந்தோநேசியத் தமிழர்கள் தகுந்த இடத்தைப்பெற்றுக்கொண்டனர்.
பாலி இந்துக்கள்
பாலி என்பது ஒரு தீவு. அங்கு வாழும் ஒன்றரைக் கோடி பேரும் இந்துக்களே. வேற்றுமதத்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் நிரந்தரவாசிகளாக இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்துக்களே. ஆனால் அவர்களுடைய மொழி இந்தோநேசிய மொழியாகும். உலகம் முழுவதிலும் பஞ்ச மாபாதகங்களை நீக்கி, இந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழும் ஒரு சமூகம் உண்டடென்றால் அது பாலித் தீவிலுள்ள இந்துக்களாகும். கொலை, களவு, கள், காமம், பொய் ஆகிய பஞ்ச மாபாதகங்களையும் ஒழித்து பஞ்சசீலத்தைக் கடைப்பிடிக்கின் றனர். பாலி இந்துக்களுடைய பெருமைக்கு அவர்கள் அநுட்டிக்கும் பஞ்சசீலக் கொள்கையே முக்கிய காரணமாகும்.
கோட்டில் குற்றப்படுதலும் சிறைக்குச் செல்லுதலும் அவர்களுடைய வாழ்க்கையில் காணமுடியாது. மறியற்கூடங்களில் மனிதர் இல்லை. குற்றவாளிகளைத்தேடி அலையும் வேலை பொலிசாருக்கு இல்லை. சட்டத்தரணிமார் இருந்தும் அவர்கள் அங்கு வேலை செய்வதில்லை. அவர்கள் வேறு இடங்களில் சென்று தொழில் புரிகிறார்கள். இந்தோநேசிய அரசியலில் சிறு பான்மையினருக்குப் போதிய பாதுகாப்பு உண்டு. எல்லா மக்களும் யாதோர் பயமுமின்றி வாழும் வாழ்வுக்கு முக்கிய காரணம் அரசியலார் கடைப்பிடிக்கும் பஞ்சசீலக் கொள்கையாகும்.

Page 18
இந்துசாதனம் 3O
உலக யாத்திரீகர்கள் எவ்வித பயமுமின்றி யாத்திரை செய்யும் இடம் பாலித் தீவு ஒன்றேயாகும். இன்றைக்கு மூன்று நான்கு தலைமுறை கதிர்காமம் செல்பவர்கள் ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுவிட்டால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. காரணம் அதனைக் கண்டெடுத்தவர் கோவிலுக்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் கட்டித் தொங்கவிட்டு விடுவார். பொருளுக்குரியவர்கள் அங்கு வந்து அதனைப் பெற்றுக்கொள்வார்கள். இதேபோன்ற ஒரு நிலையைப் பாலியிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது யாத்திரீகர்கள் ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டுச் சென்று பின்பு எந்த நேரம் வந்தாலும் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். மேலைத் தேசத்திலுள்ள யாத்திரீகர்கள் பெருந்தொகையாகப் பாலித்தீவுக்கு வருகின்றார்கள். அவர்களோடு பாலித் தீவு மக்களுக்கு வேண்டாத சில பழக்க வழக்கங்களும் வந்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கென்றே கடற்கரை ஓரமாக ஒரு பகுதியை ஒதுக்கி விட்டுள்ளார்கள். யாத்திரீகர்கள் நீச்சல் உடையுடன் வெயில் காய்வது போன்றவை அந்தப் பிரத்தியேக எல்லைக்குள் செய்யலாம். ஆனால் மற்றைய எந்த இடங்களிலும் அப்படிச் செய்யமுடியாது. தமது நாட்டுக்கு வரும் யாத்திரீகர்களைத் திருப்தி செய்வதே இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணமாகும்.
வாகனம் ஒட்டிகள் போக்குவரவுச் சட்டங்களின் படி நடந்து கொண்டாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களையும் மீறி, காத்திராப் பிரகாரமாக விபத்துக்கள் நேர்ந்து விடுவதுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் வாகனம் ஒட்டிகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தால் அத்தகையவர்கள் சிறைச்சாலைக்குச் சென்று தான் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. காலையில் சென்று கையொப்பம் இட்டுவிட்டுத் தனது தொழிலுக்குச் செல்லலாம். தொழில் முடிந்து வீடு திரும்பும் போது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட்டுவிட்டுத் திரும்பலாம். ஒருநாளைக்கு இருமுறை பொலிஸ்நிலையம் சென்று கையொப்பம் இடுதல் ஒன்றே அவர்களுக்குரிய சிறைத்தண்டனையாகும். பாலித் தீவிலுள்ள மறியற்சாலைகள் மூடிக்கிடக்கும் அதே நேரத்தில் மற்றைய தேசங்களில் மறியற்சாலைகள் போதவில்லை என்ற குரல்கள் ஒலிக்கக் காண்கிறோம்.
பாலி இந்துக்கள் இந்தோநேசியாவின் எந்தப் பகுதியில் வசித்தாலும் எந்தப் பகுதியில் தொழில் பார்த்தாலும் அவர்கள் தங்கள் தருமத்தினின்று தவறுவதில்லை. இது உண்மைதானா என்று அறிவதற்காகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமயப் பிரதிநிதி ஒருவரும். இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவரும், புத்த சமயப் பிரதிநிதி ஒருவரும், கிறிஸ்தவ சமயப்பிரதிநிதி ஒருவருமான நால்வர் பாலித் தீவு சென்று தம்மை யாரென்று காட்டிக் கொள்ளாமலே அங்குள்ள மக்களின் ஒழுக்கம்பற்றிப் பரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் நால்வருடையவும் ஏகோபித்த முடிவு ஒன்றாகவே இருந்தது. அதாவது உலகம் முழுவதிலும் விபச்சாரம் செய்பவர்கள் இல்லாத நாடு ஒன்று உண்டு என்றால் அது பாலித்தீவு மாத்திரமே என்றும் விபச்சாரம் செய்யாத சமூகம் ஒன்று உண்டு என்றால் அது பாலி இந்துக்கள் மாந்திரமே என்று முடிவுக்கும் வந்தனர்.

2OO விரோதி மாசி01
உலகிலுள்ள நல்லொழுக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 05 இடத்திலே இருக்கின்றன என்றால் அது பாலித் தீவாகும். பிரமதேவன் தனது படைப்பிலே அணு அணுவாக அழகை ஒன்று சேர்த்து, திலோத்தமை என்ற தெய்வப் பெண்ணைப் படைத்தான் என்றொரு கதை உண்டு. அதுபோல நல்லொழுக்கம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பாலித் தீவைப் படைத்துள்ளான் என்றே சொல்லவேண்டும்.
இத்தகையதொரு சமூகத்தை உருவாக்கி ராமராச்சியம் காணவேண்டுமென்றுமகாத்மாகாந்தி அடிகள் பல தியாகங்களைச் செய்து பாடுபட்டார். அவருடைய கனவு நனவாகவில்லை. இந்தப் பாலித்தீவை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்கும் வாய்ப்பும் காந்தியடிகளுக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நல்ல எண்ணங்களை எண்ணி அவற்றையே செயல்படுத்த எண்ணிய காந்தியடிகளுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு துவக்குச் சூடாகும்.
இயேசு, முகம்மது, புத்தர் போன்றவர்களும் இதற்காகவே தம்மை அர்ப்பணஞ் செய்துள்ளனர். இக்கலியுகத்திலும் இப்படிப்பட்டதொரு சமூகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போதே உள்ளத்தில் ஒரு இனிமை கிளுகிளுக்கிறது. பாலி இந்துக்களின் இந்த உயர்தனிப் பண்பாட்டை இத்தோநேசிய அரசாங்கமே பாராட்டியுள்ளது. கலியுகத்திலே சத்திய யுகம் தோன்றிவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.
பாலித்தீவுபற்றிய பொதுக் குறிப்புக்கள்
பாலித் தீவு கிழக்கு மேற்காக 200 கி. மீற்றர் நீளமும், வடக்குத் தெற்காக 100 கி. மீற்றர் அகலமும் உள்ளது. சிற்பங்கள் நிறைந்த தீவு. "வீதி தோறும் இரண்டொரு பள்ளி" என்று பாரதி யார் பாடினார். அதேபோன்று வீடுதோறும் கோவில் வழிபாட்டைப் பாலியிலே காணலாம். வீட்டு முற்றங்களை அலங்கரிப்பன கோவில்களே. பாலித் தீவின் பெரிய கோயில் திரிமூர்த்தி கோவில் எனப்படும். பல இடங்களிலும் சிறிய அளவில் திரிமூர்த்தி கோயில்களே உண்டு. வீடுகளிலும் திரிமூர்த்திகோவில்கள் உண்டு திரிமூர்த்தி என்பது பிரமா, விஷ்ணு, உருத்திரன் ஆகியோர். மூன்று பெரிய தூண் வடிவில் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்ததாய் இருக்கும். நடுவில் உள்ளது பெரியதாயும் பக்கங்களில் உள்ளவை சற்றே சிறியனவாயும் இருக்கும். நடுவில் இருப்பது சிவம், இரு பக்கங்களிலும் பிரமாவும் விஷ்ணுவுமாகும். எந்தக் கோவில்களுக் குள்ளேயும் சுவாமியின் திருஉருவங்கள் இல்லை.
முஸ்லீம்களின் படையெடுப்புகளும் போர்த்துக்கீசிய ஒல்லாந்தர்களின் படையெடுப்புகளும் நிகழ்ந்த காலத்திலே விக்கிரகங்களை எடுத்து மறைத்து வைத்திருக்கவேண்டும். பின்பும் அவர்களுக்குப் பயந்து விக்கிரகங்களைக் கோவிலில் வைக்காமலேயே வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் பூஜைகளில் இறைவனின் திருவுருவங் களும் திருவுருவப்படங்களும் இடம்பெறுகின்றன. பிரம்மகாயத்ரி எல்லோராலும் செபிக்கப்படுகின்றது. பிரம்மகாயத்ரிகாலையில் 108 முறையும் மாலையில் 108 முறையும் செபம் செய்யும் வழக்கம்அவர்களிடத்துக் காணப்படுகின்றது. இதனால்தான் அவர்களிடத்து ஒரு தேஜஸ் இருப்பதைப்பார்க்க முடிகிறது.

Page 19
இந்துசாதனம் 3O
பாலியில் ஒரு பண்டிதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். எங்கள் ஊரில் இலக்கிய இலக்கணத்தில் பாண்டித்தியம் உடையவர்களையே பண்டிதர் என்று சொல்வது மரபு அங்கு அப்படியல்ல. சமய ஞானம் பெற்றவர்களாகவும், அவற்றில் பயிற்சி உடையவர்களாகவும், மக்களையெல்லாம் ஒன்றுபோல் கருதிச் சேவை செய்பவர்களாகவும் உடையவர்களுக்குத்தான் அரசாங்கம் "பண்டிதேயா" என்றபட்டத்தைக் கொடுக்கின்றது.
பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர் ஆகிய நான்கு வர்ணத்தாரும் இருக்கின்றனர். இவை நான்கும் அங்கு தவிர்க்க முடியாத வர்ணப் பிரிவினைகள் ஆகும். திருமணம் போன்றவை ஒரு வர்ணத்தைவிட்டு மற்ற வர்ணத்தவரோடு செய்வதில்லை. அப்படி வர்ணத்தை விட்டுச் செய்பவர்களை அன்றைக்கே எல்லாத் தொடர்புகளையும் நீக்கி விட்டுவிடுவார்கள். பின்பு அவர்கள் தாய் தந்தையர் என்று கருதியோ வேறு முறை கொண்டாடியோ வந்து சேர்ந்துகொள்ள முடியாது. மரணத் தறுவாயிலும் அவர்கள் அனுமதிக்கப்படுதில்லை.
அடியேன் பார்க்கச் சென்றிருந்த பண்டிதர் ஒரு பிராமணர், ஆனால் புலால் உண்பவர். எங்கள் ஊரில் எந்தப் பிராமணரும் புலால் உண்பதில்லை என்றேன். அவருடைய முகத்தில் ஆச்சரியம் ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் ஒரு சூத்திரன், ஆனால் நான் புலால் உண்பதில்லை, புலால் உண்ணுகிறவர்கள் வீட்டில் நாங்கள் சாப்பிடுவதில்லை என்றேன். இன்னும் ஆச்சரியத்தோடு நோக்கினார், எங்கள் ஊரில் புலால் உண்பவர்களைப் புலையர் என்றுதான் சொல்வார்கள். நான்காவது வர்ணத்தவராகிய சூத்திரர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாரும் விவசாயிகளே, மற்றைய மூன்று வர்ணத்தாருக்கும் உணவு கொடுத்து அவர்களை வாழவைக்கும் சூத்திரதாரிகள் இந்த நாலாவது வர்ணத்தவர்கள். ஆதலால்தான் இவர்களைச் சூத்திரர் என்று அழைக்கிறார்கள் என்றேன்.
புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். இன்று மத்தியானம் எங்கள் வீட்டிலே சாப்பிட வேண்டும். சாப்பிடுவீர்களா? என்று கேட்டார் சுத்தமான பாத்திரங்களில் மரக்கறி ஆக்கித் தந்தால் சாப்பிடலாம் என்றேன். நாங்கள் புலால் ஆக்கிற பாத்திரங்கள் வேறாகத்தான் வைத்துக் கொள்வோம். எல்லா நாளும் புலால் உண்பது இல்லை என்றார். வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாத்திரம்தான் முட்டை அல்லது மீன் மாத்திரம் ஆக்கப்படும் என்றார்.
அடியேனுடன் உடன் வந்த இருவர் அவர்களில் மூவருமாக ஆறுபேர் உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லாருக்கும் உணவு வாழை இலையில்தான் பரிமாறப்பட்டது. சாப்பிடுவதற்கு முன்பாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சாப்பிட்டோம். அவர்களும் அப்படியே தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சாப்பிட்டார்கள். புலால் உண்ணும் தினங்களிலும் இப்படிச் செய்வீர்களா எனக் கேட்டேன். இல்லை என்றார். எதை உண்டாலும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துதான் சாப்பிட வேண்டுமென்று வேதங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படாத உணவு மலத்திற்குச் சரியானது, அதனை உண்ணக்கூடாது என்று வேதங்கள் கூறுகின்றன என்றேன். என்றாலும் புலாலை
భ్యరీ

2OO விரோதி மாசி O
இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எனது மனம் சம்மதிக்கவில்லை என்றார். அப்படியானால் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் உணவை நாம் உண்டால் என்ன என்று கேட்டேன். உணவு பரிமாறிக்கொண்டிருந்த அவரது மனைவியும் மகளும் நாங்கள் இன்று தொடக்கம் மரக்கறியைத் தவிர வேறு உண்பதில்லை என்று உறுதிமொழி கூறினார்கள். இனிமேல் பாலித் தீவுக்கு அடியேன் வரும்போதெல்லாம் உங்கள் வீட்டில் தான் எனக்கு உணவு என்றேன். நீங்கள் இனிமேலும் எப்போதும் வரவேண்டும் என்பதற்காகவே எங்கள் குடும்பம் தாவர போசனிகளாக மாறிவிட்டது என்று மிக மகிழ்வுடன் கூறினார்கள் அடியேனுக்கும் பெரிய மகிழ்ச்சி.
பாலித் தீவு முழுவதும் பச்சைப்பசேல் என்றிருக்கும் காட்சி மிக ரம்மியமானது. பச்சைக்கம்பளம் விரித்தாற் போன்றிருக்கும் நெல் வயல்கள், தென்னஞ் சோலைகள், தென்னங் குலைகள் மண்ணில் பொருந்தக் காய்த்து நிற்கும் காட்சி மிக அழகானது. சுமார் 10 கி மீற்றர் தூரத்திற்கு வீதியின் இரு புறங்களிலும் திராட்சைப் பந்தல்கள் தனி ஒரு காட்சி, வீடு இடங்கொண்ட பகுதியைத் தவிர மற்றைய நிலப் பரப்பு முழுவதும் ஒரே திராட்சைப் பந்தலாகவே காணப்பட்டது.
பெளர்ணமி தினம் வழிபாட்டு நாட்களுள் மிகச்சிறந்தது. எல்லாத் தெய்வங்களுக்குமே விசேட வழிபாடு நடக்கும் தினமாகும். வீடுகளிலிருந்து கோயிலுக்குவரும் போது தத்தமக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைத் தயாரித்துக் கொண்டுவந்து இறைவன் சந்நிதியில் படைத்து வழிபாடு நடத்துவர். குருவாக இருப்பவர் முக்கியமாகப் பிரம்மகாயத்ரி மந்திரத்தைச் செபித்துப் பூஜை நடத்துவார். முடிந்ததற்கடையாளமாக உணவுப் பண்டங்கள் மீது தீர்த்தம் தெளிப்பதோடு, வந்திருந்தவர்கள் மீதும் தீர்த்தம் தெளித்து, தீர்த்தம்பருகவுங்கொடுக்கப்படும்.
பக்தர்கள் செல்லும் நேரங்களில் எல்லாம் பூஜையும் வழிபாடும் நடைபெறும். ஒரு நாளைக்கு இத்தனைமுறை இன்னநேரம் என்ற கணக்கு இல்லை. திரிமூர்த்தி கோவிலுக்குப் பத்துப் பூசகர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் பெண். மற்ற ஒன்பது பேரும் ஆண்கள், அவர்களுடைய பெயர்கள் பின்வருமாறு:
மங்குதம்பக் - பெண் மங்கு சுகெணாடி-ஆண் மங்குருமி-ஆண் மங்குழநீணாசா-ஆண் மங்கு சுதாமதா - ஆண் மங்கு முன்டி-ஆண் மங்குழரீவேந்தன்-ஆண் குஸ்டிமங்கு நுறா - ஆண் குஸ்டிமங்கு சீதமன் - ஆண் மங்குகந்தன் - ஆண்
1
0.
ஆண்,பெண் இருபாலாருடைய பெயர்களிலும் மங்கு என்ற சொல் இடம்பெறுவதை முக்கியமாகக் கவனிக்கலாம். மங்கு என்ற சொல் அவர்களுக்குத் தெய்வத்தன்மையை விளக்கும் சொல்லாகும். 人

Page 20
உலகம் என்பது` உயர்ந்தோர் மேற்றே
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உலகமானது ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டது எனினும் செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களையும் அறிவுடைய சான்றோர்களையும் குறிக்கும் சொல்லாகவே உலகம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது; அவர்களை உள்ளடக்கும் போதே உலகமானது முழுமை பெறுகின்றது. இக்கருத்து நிலையைத்தான் பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறியுள்ளது.
மனித வாழ்வின் சிறப்புக்கும் உயர்வுக்கும் காரணமாக அமைவது சான்றோர்களின் அறிவும் அநுபவமும் ஆகும். இறைவன் நேரடியாகவந்து மனிதனுக்கு அருள் வழங்குவதில்லை; சான்றோர்களின் வாயிலாகவே வந்து வழிகாட்டுகின்றான். இதனாற்றான் காலம் அறிந்து உதவியவர்களையும் நல்வழிகாட்டிய வர்களையும் துயர் துடைப்பவர்களையும் "தெய்வம் போல் உதவினிர் கள்" என்று கூறுகின்றோம். சான்றோர்களும் பெரியவர்களும் தெய்வத்துடன் ஒப்புநோக்கும் சிறப்புடையவர்கள். இவர்கள் தமது வாழ்நாளில் தமக்கே மட்டும்பாடுபடாது தமது முயற்சியும் உழைப்பும் மற்றையோருக்கும் பயன்படும் வண்ணம் வாழ்பவர்கள். இதன் பயனாகவே இவ்வுலகம் நிலைத்துநிற்கின்றது.
நீரானது அது சேர்ந்திருக்கின்ற நிலத்தின் தன்மை யினால் தன்னுடைய இயல்பான தன்மையில் மாறுதலடையும். இயற்கையான தண்ணிருக்கு மணம், நிறம், சுவை முதலிய இயல்புகள் இல்லை. ஆனால் அத்தண்ணிர் எந்த மண்ணுடன் சேர்ந்திருக்கின்றதோ அந்த மண்ணுக்கேற்ற மணம், சுவை, நிறம் முதலிய தன்மையைப் பெற்றுவிடுகின்றது. அதுபோன்று மனிதர்களும் அவர்கள் சேர்ந்து பழகுபவர்களுடைய குணத்திற்குத் தக்கபடி தம்முடைய இயல்பான அறிவிலும் மாற்றம் பெறுவார்கள்.
இக்கருத்தினைத்திருக்குறளும்,
"நிலத்தியல்பானிர்திரிந்தற்றாகுமாந்தர்க் கினத்தியல்பதாகுமறிவு" (குறள்:452)
என விளக்கியுள்ளது. ஒருவனுக்கு நல்லவர்களின் சேர்க்கை நன்மையையும், தீயவர்களின் சேர்க்கை தீமையையும் விளைவிக்கின்றது. நல்லவர்களைக் காண்பது, அவர்கள் சொற்களைக் கேட்பது, அவர்கள் குணங்களை உரைப்பது, அவர்களோடு இணங்கி இருப்பது நன்றே என்றும், தீயவரைக் காண்பது, தீயவர் சொற்கேட்பது, அவர்கள் குணங்கள் உரைப்பது, அவர்களோடு இணங்கி இருப்பது தீமையே என்றும் ஒளவையார் நல்லவர், தீயவர் சேர்க்கைகளின் விளைவுகளைக் கூறியுள்ளார். நல்லவர்களோடு கொண்டுள்ள நட்பு ஒருவனின் உயர்வுக்கு வித்திடும். தீயவர்களோடு கூடுதல் அவனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும், எமது புராண காவியங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் மனித வாழ்க்கைக்குப் படிப்பினையை ஊட்டுவனவாக அமைந்துள்ளன. மந்தரையின் சொற்கேட்டு நின்ற கையேயி பழிசுமந்து நின்றதையும் வசிட்டரின் அறிவுரை கேட்ட இராமன் போற்றப்பட்டதையும் இராமாயணம் காட்டுகின்றது. சகுனியின் சொற்கேட்டுத் துரியோதனன் அழிவுற்றதையும் கிருஷ்ணபகவானின் நட்பினால் அருச்சுனன் உயர்வடைந்ததையும் மகாபாரதம் காட்டுகின்றது.
ஒரு நாட்டின் அடித்தளம் நல்லவர்களாகலேயே கட்டி எழுப்பப்படுகின்றது. நாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு

22OO விரோதி மாசி0
செல்வி அம்பிகை நடராஜா
வீட்டு வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும். மனிதனின் வாழ்க்கை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. அவனது நற்பண்புகளை வளர்க்கும் பயிற்சிக்கூடமாக வீடு அமைகின்றது. குழந்தைகள் பெற்றோர்களைப் பின்பற்றி வாழ்க்கைப் பயிற்சியினைப் பெறுகின்றனர். மகாத்மாகாந்தி, விவேகானந்தர், சித்தார்த்தர் போன்ற மகான்கள் சிறுவயதில் தம்முடைய தாய் தந்தையரைப் போற்றி, அவர்கள் வழங்கிய பண்பாட்டுப்பயிற்சியிலே வளர்ந்தவர்கள். நாட்டில் சான்றோர் பலர் தோன்றிய நாடு உயர்வடையக் காரணமாவது வீட்டு வாழ்க்கையே ஆகும். இதனைப் புறநானூற்றுப் பாடலொன்று எடுத்துக் காட்டுகின்றது. கோப்பெருஞ் சோழனைக் காணும் பொருட்டுப் பிசிராந்தையார் என்னும் புலவர் சோழநாடு வந்து சேர்ந்தார். அவர் வருகையை அறிந்த சோழநாட்டு மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஐயா உங்களை நாங்கள் நேரிற் கண்டதில்லை. மிக்க வயது முதிர்ந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனாலும் உங்கள் தலைமுடி நரைக்கவில்லையே! என்ன காரணம்? அதனை விளக்குவீரா?" எனக் கேட்கின்றனர். புலவரும் விடை பகருகின்றார்.
"யாண்டு பலவாக நரையிலவாகுதல் யாங்கா கியரென வினவுதிராயின் மாண்ட என் மனைவியொடுமக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" (புறநானூறு.19) (LOIT6ööTL — LDIT6ööTLq60)LLLI) அறிவு ஒழுக்கங்களால் மாட்சிமைப்பட்டவள் என் மனைவி என் பிள்ளைகளும் அத்தகையோரே. எனது பணியாளர்கள் நான் விரும்பும் வண்ணம் நல்லவர்களாகத் தாமாகவே நடந்து கொள்கின்றார்கள். வேந்தனும் தீங்கு செய்வதில்லை. புறப்பகைகள் யாவற்றினின்றும் எமக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றான். இவற்றிற்கெல்லாம் மேலாக ஐம்புலன்களையும் வென்றுள்ள நற்குண நற்செய்கைகளால் நிறைந்துள்ள சான்றோர் ஒருவர் இருவரல்லர்; பலர் எமது ஊரில் இருக்கின்றார்கள். இவையே எனக்கு நரை ஏற்படாமைக்குக் காரணம். புலவரின் கருத்துப்படி நரைதிரை தோன்றுவதற்குக் காரணம் முதுமையன்று, மனக்கவலையே புலவரது வீட்டிலோ ஊரிலோ நாட்டிலோ, கவலை ஏற்படக்கூடிய காரணிகள் ஏதுமில்லை.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றதன்படி பிறரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து வாழ்பவர்கள் தாம் பெரியவர்களும் சான்றோர்களும் ஆவர்.உலகம் என்பது இடத்தைக் குறித்து வழங்காது அங்குள்ள மக்களைக் குறித்து ஆகிவரும் இடவாகுபெயராகும். இவர்கள் வாழ்ந்தால் உலகம் வாழும். நாமும் சான்றோர் வழியைப் பின்பற்றி உலகம் மகிழும் வகையில் இனியராக வாழ்வோமாக.
உலகம் என்பது ஆகு பெயராய் உலகிலுள்ள மக்களைக் குறிக்கின்றது. அறிவுடைய சான்றோர் பெரியோர்கள் உலக மக்களின் வழிகாட்டியாய் இருக்கின்றார்கள். சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் நல்வழியில் இட்டுச் செல்லப்படவேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தமிழ் விரிவுரையாளர்

Page 21
இந்துசாதனம் 3O
ஆலயங்களில் நிகழும் விசேஷ கிரியைகள் எல்லாவற்றிலும் கும்பம் முதலிடம் பெறுகின்றது. தமிழர்களின் வாழ்வோடு, சிறப்பாக, இந்துக்களின் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒரு மங்கலத் திருவுருவமாக நிறைகுடம் அமைந்துள்ளது. இதே நிறைகுடம் கிரியைகளிற் பயன்படுத்தப் படும்போதுகும்பம் எனப்படுகின்றது.
நிறைகுடம் ஓர் அடையாளப் பொருளாகவும், மங்கலச் சின்னமாகவும் இருக்க, கும்பம் இறைவனை ஆவாகனம் செய்து
வழிபடும் ஒரு பூஜாஸ்தானமாக அமைகின்றது.
உருவமற்ற அருவமான பரம்பொருளை எங்கள் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் திருவுருவங்களாக அமைத்து வழிபடுவது ஒருவகை வழிபாடாகும். உருவமல்லாமலும் அருவமல்லாமலும் இடைப்பட்ட நிலையில் ஒரு குறியீடாக அருவுருவமாகக் காட்சி தருவது லிங்கம். இது சிவபிரானைக் குறித்தலின் சிவலிங்கம் என்பர்.
இதேபோன்ற ஒரு குறியீடாக, எல்லாமூர்த்திகளையும் ஆவாகனம் செய்து வழிபடுதற்குக் கும்பம் உதவுகின்றது. கும்பம் சர்வதேவதா ஸ்வரூபம், அது ஒரு தெய்வீகத் திருமேனியாகப் பாவனை செய்யப்படுகின்றது. மந்திரங்களை அதில் பதித்து இறைவனை அங்கு எழுந்தருளச் செய்து சகல உபசாரங்களும் வழங்கிப்பூஜைகளை நிகழ்த்துவர்.
எங்கள் வபயரால் இறைவனுக்கு "இவர்" என்ன விசால்கிறார்?0%
الالقاق
கும்பம் உருவாக்கப்பட்ட உலோகம் அல்லது மண் உடலாகவும், கும்பத்திற் சுற்றப்படும் நூல் எழுபத்திரண்டாயிரம் நாடிகளாகவும், தண்ணீர் இரத்தமாகவும், உள்ளே இடப்படும்
நவரத்தினங்கங்கள் முதலியன எலும்புகளாகவும், தங்கம் அல்லது நாணயம் சுக்கிலமாகவும், தேங்காய் சிரசாகவும், மாவிலை மயிராகவும், கூர்ச்சம் குடுமியாகவும், அதிற்பதிக்கப்படும் மந்திரம்= உயிராகவும் கொள்ளப்படவேண்டுமெனச் சகலாகம சங்கிரகம்
கூறுகின்றது.
இவ்விதம் அமைக்கப்படும் கும்பங்கள் இருவகை. ஒன்று நவராத்திரி, வரலக்ஷமி விரதம் போன்ற பூஜைகளுக்காக வீட்டிலோ ஆலயத்திலோ வைக்கப்படும் கும்பம். பூஜை வேளையிற் கும்பத்தில் ஆவாகனம், பூஜை உபசாரம் முதலிய வழிபாடுகள் முடித்தபின் மூர்த்தியை மீண்டும் ஸ்வஸ்தானத்துக்கு (சொந்த இடத்துக்கு) எழுந்தருளச்செய்துகும்பத்தைக் கலைத்துவிடுவர்.
மற்றொருவகைக் கும்பம் அபிஷேகத்திற்குரியது. எங்கும் நிறைந்த பரம்பொருட் சக்தியைச் சிவாசாரியார் தமது மனோசக்தியாலும், மந்திர சக்தியாலும் ஆகர்ஷித்துக் கும்பத்திலே ஆவாகனம் செய்து, அதிற் பூஜைசெய்து தெய்வ சாந்நித்தியத்தை
 
 

22OO விரோதி மாசி0
ஏற்படுத்துகின்றார். இதன்பின் இக்கும்பமானது பிம்பம் எனப்படும் திருவுருவத்தில் அபிஷேகம் செய்யப்படும்போது தெய்வ சாந்நித்தியமும், இறையருட் சக்தியும் அத் திருவுருவத்திலே மேலும் பொலிகிறது. மந்திரங்கள் உருவேற்றப்படும்போது (மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும்போது) அபரிமிதமான சக்தி உருவாகு வது போலத் திருவுருவத்திலே மீண்டும் மீண்டும் அபிஷேகங்கள் பூஜைகளைச் செய்யும்போது அங்கு அருட்சக்தி மிகுவதில் வியப்பென்ன? இது விஞ்ஞானபூர்வமாகவும் ஏற்புடையதன்றோ!
கும்பம் அமைத்தலிற் பலவகையான முறைகள் உண்டு. ஒரு கும்பம் மாத்திரம் அமைத்து அதில் மூர்த்தியை எழுந்தருளச் செய்து, பூஜைசெய்தல் ருத்திர கும்பம் பூஜை எனப்படும். இதனுடன் அஷ்ட வித்யேஸ்வரர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பரிவாரத் தெய்வங்களுக்கும் வேதிகையில் எட்டுத் திக்கிலும் ஒவ்வொரு கும்பமாக ஒன்பது கும்பங்கள் வைத்துப் பூஜித்தல் நவகலசஸ்நபன கும்பபூஜைஎனப்படும்.
இதற்குமேல் விரிவாகப் பதினேழு, இருபத்தைந்து, நாற்பத்தொன்பது, எண்பத்தொன்பது, நூற்றெட்டு, இருநூற் றொன்பது, நாநூற்றொன்பது, ஆயிரம், ஆயிரத்தொன்பது என்ற எண்ணிக்கையிற் கலசங்களை ஸ்தாபித்து வழிபடும் ஸ்நபனாபி ஷேகங்களும் ஆகமங்களிற் சொல்லப்பட்டுள்ளன.
தற்போது 108, 1000 என்ற எண்ணிக்கைகளிற் சங்காபி ஷேகங்கள் செய்யப்படுகின்றன வெனினும் விரிவான ஸ்நபன
கும்ப அபிஷேகம் வழக்கில்
வித்யாபூஷணம், ................"raitمقالاقv
B.A. (Hons.) (GBasTŮLIIruiu floomid)
அதிகமில்லை. ருத்ர கும்ப அபிஷேகமும், நவகலச ஸ்நபன கும்ப அபிஷேகமுமே சாதாரணமாக எங்கும் நிகழுகின்றன.
இக் கும்பங்களை ஸ்தாபிப்பதற்காக, ஆசனங்களாக வாழையிலைகளைப்பரப்பி அவற்றில் நெல், பச்சரிசி, பயறு, உழுந்து, எள்ளு, கடலை, துவரை ஆகிய தானியங்களும், நெற்பொரி,
தர்ப்பை என்பனவும் அடுக்கடுக்காக இடப்படுகின்றன.
இவற்றை ஆசனங்களாகக் கொண்டு கூழிதி (நிலம்) எனப்படும் பிருதுவி தத்துவம் முதல், குடிலை எனப்படும் சுத்த மாயை ஈறாக முப்பத்தாறுதத்துவங்களையும் இவற்றிலே விரிவாகப் பூஜிப்பர். அல்லது அனந்தர், தர்மர், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம், பத்மம் என ஆறாக வகுத்து ஷடுத்தாசனமாகப் பூஜிப்பதும் உண்டு. முன்னையதைப் பஞ்சாசன பூஜை என்பர். அனந் தாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம்,
விமலாசனம் என்பனவே பஞ்சாசனம் எனப்படுபவை.
இவ்வாறு ஆசன பூஜைகளின்மூலம் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த மெய்ப்பொருளைப் பிரதான கும்பத்திலே ஆவாகனம் செய்வர் (எழுந்தருளச் செய்தல்). ஆவாகனம் செய்த
இறைவனை ஸ்தாபனம் (அமருமாறு வேண்டுதல்) சந்நிதானம் —>

Page 22
இந்துசாதனம் 3.O.
(அங்கிருந்து அருள் சுரக்குமாறு வேண்டுதல்) சந்நிரோதனம் (பூஜை நிறைவு பெறும்வரை அவ்விதமே நிலைபெற வேண்டுதல்) முதலிய கிரியைகள்மூலம் இறையருளை அங்கு பொலியச் செய்வர். இதன்பின் பாத்தியம் (சுத்திகரித்தற் பொருட்டாகப் பாதங்களில் நீர் விடுதல்) ஆசமனம் (அருந்துவதற்கு ஒரு துளி நீர் வாயிலே விடுதல்) அர்க்கியம் (பூஜைக்குரிய விசேஷஜலம் சிரசிலே ஒரு துளி விடுதல்)முதலிய உபசாரங்களை வழங்கிப்பூஜிப்பர்.
இத்தகைய உபசாரங்கள் ஷோடசோபசாரங்கள் எனப் பதினாறு வகையாகவும் சதுஸ்ஷஷ்டி உபசாரங்கள் என
அறுபத்துநான்கு வகையாகவும் கூறப்படுவன.
இவ்வுபசாரங்களின்போதும், வேறுபல கிரியைகளின் போதும் பலவகையான முத்திரைகள் சிவாசாரியாரால் பயன் படுத்தப்படும். முத்திரை என்பது அடையாளம். பரத நாட்டியத்திற்போல அநேகமுத்திரைகள்மூலம் பல தத்துவார்த்த உட்பொருட்களை விளக்குவது கிரியைகளில் ஒரு சிறப்பம்சம். மேலும் இவை பாவனைகளாகவும் அமைகின்றன. மந்திரம், பாவனை, கிரியை என்ற மூன்றும் இணைந்ததே நமது ஆலய வழிபாட்டு முறை. பாவனைகளை முத்திரைகள்மூலம் காட்டுவது மரபு. உதாரணமாக வணக்கம் செலுத்தும் பாவனையை நமஸ்கார
முத்திரைமூலம் காட்டுவது வழக்கம்.
இவ்வாறு கிரியைகளிற் பயன்படும் முத்திரைகள் மிகப் பலவாயும், ஆழமான கருத்துக்கள் உள்ளனவாகவும் இருப்பதால்
அவற்றை இங்கு ஆராய்தல் முடியாது.
பிரதான கும்பபூஜையின்பின் (பஞ்சாசன பூஜையின்பின்) ஆவரண பூஜை செய்யப்படும். பிரதான மூர்த்தியைச் சூழவுள்ள பரிவார கணங்களை ஒவ்வொரு ஆவரணமாக ( வரிசையாக,
சுற்றுவட்டமாக) பூஜித்தலே ஆவரண பூஜை
ஸ்நபன கும்ப பூஜையில் ஐந்து ஆவரணங்கள் உள்ளன. முதலாம் ஆவரணத்திற் பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் எனப்படும் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து மந்திரங்களும் ஷடங்க மந்திரங்கள் எனப்படுகின்ற ஹ்ருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம் என்ற ஆறு மந்திரங்களுமாகப் பதினொரு மந்திரங்களும் பூஜிக்கப்படுகின்றன. இது எல்லாமூர்த்திகளுக்கும் ஒரேவிதமாகவே அமையும்.
இரண்டாம் ஆவரணத்தில் அஷ்டவித்தியேஸ்வரர்கள் எண்மர் பூஜிக்கப்படுவர். இவர்கள் பிரதான மூர்த்திகளுக்கேற்ப
மாறுபடுவார்கள்.
மூன்றாம் ஆவரணத்திற் கணநாதர்கள் எண்மர் பூஜிக்கப்படுவர். இவர்களும் பிரதான மூர்த்திகளுக்கேற்ப மாறுபடுவார்கள். நான்காவது ஆவரணத்தில் எண்திசைக் காவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அட்டதிக்குப் பாலகர்களும் பிரம்ம
விஷ்ணுக்களும் பூஜிக்கப்படுவர்.
ஐந்தாவது ஆவரணத்தில் வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம்,

2OO விநோதி மாசி0
பாசம், அங்குசம், கதை, த்ரிசூலம், பத்மம், சக்ரம் ஆகிய தசாயுதங்களும் பூஜிக்கப்படும்.
இவ்வளவும் சாதாரண கும்பபூஜையில் இடம்பெறும்.
பொதுவாக, ஸ்நபன கும்ப பூஜை நடைபெறும்போது நடுவிலே ஒரு பெரிய குடத்திலே பிரதானமூர்த்தி எழுந்தருளி யிருப்பார். அதற்கருகில் இடப்பாகத்திலே சக்திக்குரிய கும்பம் இருக்கும் (விநாயகருக்கு வல்லபாதேவி, சிவனுக்கு மனோன்மணி, வைரவருக்குச் சாமுண்டாதேவி, வீரபத்திரருக்கு பத்திரகாளி, முருகனுக்கு இருபுறமும் இரு கும்பங்களில் வள்ளி - தெய்வானை, ஐயனாருக்கு இருபுறமும் பூர்ணா-புஷ்கலா, விஷ்ணுவுக்கு இருபுறமும் பூமாதேவி - மஹாலக்ஷமி) பெண் தெய்வங்களுக்கும் இவ்வாறு சக்தி கும்பம் வைக்கப்படுவது வழக்கம். அது பீடசக்தி எனப்படும். அதாவது சிவலிங்கத்தில் எவ்வாறு லிங்கமாகிய சிவனுக்கு ஆவுடையாராகிய பீடம் சக்தியாக அமைகிறதோ அவ்வாறே பீடம் என்பது (ஆசனம்) சக்தி வடிவமாகப் பாவிக்கப்
படுகின்றது.
இவர்களைச் சூழ்ந்து எண்திசைகளிலும் எட்டுக் கும்பங்கள் இருக்கும். இவற்றில் முன்னர் குறிப்பிட்டதுபோல ஐந்து ஆவரணங்களில் இரண்டாவது ஆவரணமாக அமைகின்ற அஷ்டவித்யேஸ்வரர்கள் பூஜிக்கப்படுவர். சக்தி கும்பத்திற்கும் பிரதான கும்பத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில் முதலாவது ஆவரண தேவர்களான பஞ்ச ப்ரம்ம ஷடங்க மந்திரங்கள் பூஜிக்கப்படுவர். எட்டுக் கும்பங்களுக்கும் அடுத்த ஆவரணங்களாக அதற்கு வெளியில் ஏனைய மூன்று ஆவரண தேவர்களும் மூன்று சுற்று வட்டங்களிற் பூஜிக்கப்படுவர். எனவே, ஸ்நபன கும்ப பூஜையானது பஞ்சாவரண சகித பஞ்சாசன பூஜை எனக் கூறப்படுகிறது.
ஒர் ஆலயத்திலே பிரதான மூர்த்திக்குரியதாக (உதாரணமாகச் சிவன்) இந்த ஸ்நபன கும்பங்கள் அமைந்திருக்க, அதற்கும் வெளியே நாற்புறங்களிலும் ஏனைய பரிவாரத் தெய்வங்களான விநாயகர், முருகன், வைரவர், சந்தானகோபாலர், நாகதம்பிரான் போன்றவர்களுக்கான கும்பங்கள் தனித்தனியே
வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் காட்சியை ஒருகணம் மனக்கண்ணில் நிறுத்திப் பார்த்தாற் சக்கரவர்த்தி ஒருவர் தமது பரிவாரங்கள் புடைசூழ அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கின்ற திருவோலக் காட்சி நினைவுக்கு வரும். அதனால், இங்கு வழங்கப்படும் தேவோபசாரம் என அழைக்கப்படும் உபசார பூஜைகள் ராஜோபசாரம் எனவும்
சொல்லப்படலாம்.
கும்பங்களிலே எழுந்தருளும்படி வேண்டும்போது சில முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன. கும்பத்தை இறைவன் திருவுருவாகப் பாவனை செய்தபின் அந்தத் திருவுருவத்தை மனக் கண் நிறுத்தி இறைவனின் தோற்றப்பொலிவை அங்கங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், ஆடைகள் என்பவற்றுடன் வர்ணித்துக் கற்பனை செய்யும் தியான சுலோகங்கள் ───────────────མ────ཕྱི་

Page 23
இந்துசாதனம் 3O
உச்சரிக்கப்படுகின்றன. அப்போது கும்பத்தில் இறைவன் திருவுருவம் தோன்றுகின்றது. இதன்பின் அந்தந்தத் தெய்வத்திற் கான வேத மந்திரம், மூலமந்திரம் என்பன உச்சரிக்கப்படுகின்றன. இவை அத்திருவுருவத்தினுள் இருக்கும் உயிராகின்றன. எனவே இப்போது அங்கு இறைவன் உயிரோடும் உடலோடும் எழுந்தருளி விட்டார் என்பது கருத்து.
இவ்வாறு கும்பத்தில் எழுந்தருளிய இறைவனை அக்கினி வளர்த்து அங்கும் எழுந்தருளச் செய்து அங்கிருக்கும் இறைசக்தியை மறுபடி கும்பத்திலுள்ள இறைசக்தியுடன் சேர்ந்தபின் அவருக்கு வேண்டிய உபசாரங்களை முன்னர் கூறியபடி பாத்தியம், அர்க்கியம் முதலியனவாகவும் தூப தீபம் முதலியனவாகவும் நைவேத்தியம், தாம்பூலம் முதலியனவாகவும் அர்ச்சனை, தோத்திரம் முதலியனவாகவும் திருமுறை, இசை முதலியனவாகவும் வழங்கி மகிழ்வித்தல் நடைபெறுகிறது.
இதன்பின் சகல மங்கள வாத்திய கோஷங்களுடன்
கும்பத்தை எழுந்தருளச் செய்து வீதிவலம் வரச் செய்தபின்
ዖ وخلا
புண்ணிய நாச்சி (
சைவ சமயத்தை வளர்ப்பதில் அரும்ப நினைவு தினம், விரோதி ஆண்டு மாக வெள்ளிக்கிழமை; யாழ்ப்பாணம் நீராவியடி நாவலர் ஆச்சிரமத்தில் அனுஷ்டிக்கப்படும்.
அன்று; இத்தினத்தையொட்டி மான நடைபெற்ற பண்ணிசை, திருக்குறள் மன பெற்றவர்களுக்குப்பரிசில்கள் வழங்கப்படும்
விழாவினைத் தொடர்ந்து அம்மை இடம்பெறும்.

22OO விரோதி மாசி01
மூலவராகவும், பரிவாரத் தெய்வங்களாகவும் இருக்கின்ற இறை திருவுருவங்களில் அபிஷேகம் செய்து அங்கிருக்கும் தெய்வ சாநித்தியம் அதிகரிக்கச் செய்தல் நிகழ்கிறது. இந்நிகழ்வுக்கு முன்னோடியாக அந்தத் திருவுருவங்களுக்குப் பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல் வழக்கம். இவை யாவும் சேர்ந்து இறை திருவுருவத்தைத் தூய்மை செய்தல். குளிர்வித்தல், அருட்பொலிவு கூட்டுதல் என்பனவற்றை ஏற்படுத்துவதுடன் அடியார்களை ஆண்டவனுடன் ஐக்கியப்படுத்துவதுடன் மன ஒருமைப்பாடு, மன அமைதி என்பவற்றை உருவாக்கும் சாதனங்களாகவும் அமைவதை
உணரலாம்.
கும்பத்தில் எழுந்தருளிய இறைவனை, அக்கினி வளர்த்து, அங்கும் எழுந்தருளச் செய்து, அங்கிருக்கும் இறை சக்தியை மறுபடி கும்பத்திலுள்ள இறை சக்தியுடன் சேர்க்கும் அந்த நிகழ்வு "அக்கினி காரியம்" எனப்படும். அதைத் தனியாக அடுத்த கட்டுரையில் நோக்கலாம். 人
N G * 从
=ー「下
அம்மையார் தினம்
Iணியாற்றிய புண்ணிய நாச்சி அம்மையார் சித் திங்கள் 7ஆம் நாள் (19.02.2010) உயில் அமைந்துள்ள சைவபரிபாலனசபை
ணவர்களுக்குகிடையே 04.02.2010 இல் ானப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள்
நிகழ்வும் நடைபெறும்.
பாரின் நினைவாக மகேஸ்வர பூஜையும்
சைவபரிபாலனசபை யாழ்ப்பாணம்.

Page 24
இந்துசாதனம் 1з.oa
| RED AND WHI
Prof. A. Sanmugadas,
In our temples we receive white holy ash and red kunkumam as prasadham. The walls of our temples are almost inevitably covered with red and white stripes. Why does this conjunction of red and white occur? It is because, according to a number of the Tamil myths (these myths are explained in David Dean Shulman's Tamil Temple Myths), both blood and milk are associated with a sacred site. Shuleman gives a folk tradition about the temple at Cucindramas follows:
A shepherdess used to cross the Jnanarniya ("the forest of knowledge") each day to sell milk and Curds. Each time she passed a clump of bamboo, her feet would become entangled, and she would spill the milk and curds. After this had gone on for sometime, she told her husband, and he rushed to the spots with his friends and cut down the bamboos. To their amazement, blood flowed from the cut bamboos. Impressed with the sanctity of the spot, they erected a shrine which became the nucleus of Cucindran
temple.
According to this myth, spilling of milk marks the Sacred site and the actual site had been revealed by the flow of blood. This folk tradition has been acknowledged in Tamil literary tradition too. There were two poets called rattaiyar ("twin brothers), one of them was lame and the other was blind. The blind poet used to carry the lame one and they went round Tamilnadu visiting important shrines. One who could see Would compose the first two lines and the other would will complete the poem. When they visited Thirunelvely, they came to know about the deity called "veyinramuttar" (Bamboo born Whité Linga). In this story, a shepherd used to take milk to the king everyday. Every time he of bamboo, his feet would tread upon it and the pot of milik would spill down. One day he became angry
the bamboo joint and to his amazement the
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 13.0
 

2OO விரோதி மாசி 01
TE SYMBOLISM
Ph.D. (Edinburgh)
pear-like Linga. Ira t t aiyar Composed the following
OOen:
வேயின்ற முத்தர்தமை வெட்டினானோரிடையன் தாயீன்ற மேனிதயங்கவே-பேயாகேள் எத்தனைநாளென்று இடறுவான்பாற்குடத்தை அத்தனையும் வேண்டும் அவர்க்கு.
"One shepherd cut the God who is in the form of bamboo-born white linga as though he had slain a - mother-born body." This is the first part of the poem composed by the lame poet. The blind poet: "You fool Listen to me! How long can this shepherd tread upon this bamboo joint and drop his pot of milk. This God who had been under this bamboo should have safe-guarded him and therefore He deserves this punishment."
Both myths point to the red-white Symbolism. This red-white combination is very rare in Sanskritic tradition. It often appears in Tamil Hindu rituals.
Brenda Beck, a noted anthropologist, put forward the theory of hot-COO combination occurring generally in Tamil rituals, medicines, food, etc. According to her, the "cool" white is needed to surround and contain the "hot" red. There are many myths that offer examples Where milik "White' is seen as the Cooling antidote to blood "red" which is considered extremely hot. The Combination of COO. White and hot red OCCurs at all levels. The temple Where God resides is a place that brings a balance among all types of Contradictions, especially the milk-blood, cool-hot and white-red Contradictions. God himself is possessing Contradicting Substances. For example, Appar in his Thevaram mentions,
பவள்ம்போல்மேனியில் பால்வெண்ணிறும்
The milik like White holy ash on the red-Coral like body (of Lord Shiva)"
|-
Thus the temple has white and red stripes to impress upon the devotees that it is a place that neutralizes all contradictions and inside they are
provided with white holyash and red kun kunmam.
if the Saiva Paripalana abai, No.450, K.K.S. Road, Jaffna & 2.2010 (1 Day of Masithingal). Phone: 0212227678