கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2010.10.18

Page 1
செய்வதில்லை. கோயில் என்பதின் வரைவிலக்கணத்தி
துலாம்பரப்படுத்துபவையாகவுமுள்ள ១៣៣ இராசே
இங்கில்லை. எனினும், நாளிலும் பொழுதிலும் நா :
கண்நிறைந்த கடவுளாய் - கலியுக வரதனாய்- வேற்பெருமான் ດ. என்ற தனிப் பெரும் பெயருடன்! -
 

web : www.hinduorgan.com e-mail editor Chindu organ.com
ததிங்கள் 1ஆம் நாள் Uస్తో 6606
篡。 elst II. 50.00
ரிய மந்திரங்கள் ஒலிப்பதில்லை; அந்தணர்கள் இங்கே பூசை ஒவமைப்பின் மு கிய ம்சங்களாகவும் அதன் தோற்றப் பொலிவைத் வனப்புமிக்க விமானம், நீண்டுயர்ந்த மதில்கள் போன்ற எவையுமே களிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்ற எண்ணிறந்த அடியவர்களின் ருந்து பேரருள் பொழியும் பெருந்தலமாக இது திகழ்கின்றது - சந்நிதி

Page 2
இந்துசாதனம் 8.
கோவில்களிற் சுவாமி நிலைகொண்டு அருள்பாலிக் கின்ற கருவறை என்ற மூலஸ்தானம், அதனை அண்டிய முன்பகுதி - திருமுன் - போன்றவற்றைக் குறிப்பதே சந்நிதி என்ற தெய்வீகக் கலைச்சொல். இறைவனின் உறைவிடம் என்ற வகையில் “ கோயில் ” என்பது சற்றுப் பரந்த ஒரு கட்டடம் முழுவதையும் குறிக்க, சந்நிதி என்பது அதன் ஒரு பகுதியை - மிகவும் முக்கியமான, மிகவும் புனிதமான ஒரு பகுதியை மட்டும் கட்டுகின்றது, இங்கோ சந்நிதி என்பது கோவில் முழுவதையுமே குறிக்கின்ற சிறப்பை உணர்கின்றோம். இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்.இங்கே மூலஸ்தானத்தில் வேல்“உருவமாக”க் காட்சியளித்து அருள் செய்பவன், மீதிப்பகுதியில் "அருவமாய்” த் தன்னை உணர்த்தி அருள் செய்கின்றான் என்ற தத்துவ விளக்கமாக இந்தச் “சந்நிதி-கோயில் ” பிணைப்பைக்
கொள்ளலாமல்லவா?
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோயில் என்ற நீண்ட பெயரையும், கல்லோடைக் கந்தன், ஆற்றங்கரையான், சின்னக் கதிர்காமம் என்ற மறுபெயர்களையும் கொண்ட இந்த இடத்தில் முருக வழிபாடு எப்போது தொடங்கியது? எவ்வாறு நடைபெற்றது? முதன்முதலிற் கோயிலைக் கட்டியவர் யார்? என்ற கேள்விகளுக்குத் திட்டவட்டமான - எழுத்துச் சான்றுகளுடன் கூடிய-விடைகள் இல்லை.
அவ்வழிபாடு நீண்டகாலமாக இங்கே நடைபெற்று வருவது உண்மை, ஆதித்தமிழ் மக்கள் பின்பற்றிய எளிமையான வழிபாட்டு முறைகள் - அன்பு, பக்தி போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த ஆன்மீகச் செயற்பாடுகள் இன்றும் இங்கே தொடர்வது உண்மை; கோயிலெனக் கருதக்கூடிய ஒரு கட்டடம் நீண்ட காலமாகவே இங்கே காணப்படுவது உண்மை; இங்குள்ள வேற்பெருமான்மேல் தாம் வைத்துள்ள அதிதீவிர பக்தி, அசையா நம்பிக்கை ஆகியவை காரணமாகத் தாங்கள் அனுபவித்துவரும் அருட்பேறுகளை மற்றையோருடன் பகிர்ந்து கொள்ளும் அருளாளர்கள் பலர் இன்றும் இங்கே இருக்கின்றனர் என்பதும் உண்மை
இந்த உண்மைகளின் அடிப்படையிற் பார்க்கும்போது மேற்போந்த வினாக்களுக்குரிய விடைகளின் அடிப்படையாயுள்ள சில செவிவழிச் செய்திகளை வெறும் கற்பனையென்றோ, கலப்படம் என்றோ புறந்தள்ளிவிடமுடியாது என்பதும் உண்மைதான்!
செந்தூர் முருகனின் சிறப்புத் தூதுவராக மகேந்திர பர்வதத்துக்குச் சென்று சூரபத்மனைச் சந்தித்த படைத் தளபதியான வீரவாகு தேவர், இங்கே இருந்த கல்லோடைக்கு இரண்டு தடவை வந்திருக்கின்றார். முருகப்பெருமானின் ஆணைப்படி, திருச்செந்தூரிலிருந்து புறப்பட்ட வீரவாகுதேவர், அக்காலத்தில் இப்பிரதேசத்தை வளப்படுத்திய வல்லிநதி யாறு என்ற சிற்றாறின் கரையிலிருந்த கல்லோடையிலேதான் முதலிற் கால்பதித்தார். மகேந்திரபுரிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அவர், மீண்டும் கல்லோடைக்கு வந்தபோது சந்தியா காலமாகிவிட்டது. வல்லி நதியாற்றிலே நீராடிய அவர் கல்லோடையிலே வேற்பெரு மானைப் பிரதிஷ்டைசெய்து தன் சந்தியாகால வழிபாட்டினை நிறை வேற்றினார். கந்தபுராணத்திலே இதற்குரிய ஆதாரங்கள்

).2OO விகிர்தி ஐப்பசி O
இருக்கின்றனவோ என்னவோ, இங்கே காணப்படும் பாதச் சுவடுகள் வீரவாகுதேவருடையவையே எனச் சொல்லப்படுவதை மறுத்துரைப்பது கஷ்டமாக உள்ளது. வேற்பெருமானுக்கு வீரவாகு தேவர் பூசை செய்யும் சிற்பமொன்றும் இங்கே உள்ளது.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் சோழ நாட்டை ஆண்டவன் குலோத்துங்கன். இந்த மன்னனுடைய ஆணைப்படி இலங்கைச் சிங்கள மன்னனுக்கு எதிரான சோழப் படைக்குத் தலைமை தாங்கி வந்தவன் கருணாகரத் தொண்டைமான். சிங்கள மன்னனை வென்று, மீண்டும் சோழ நாடு திரும்பும் வழியில், தொண்டைமானால் ஆழமாக வெட்டப்பட்டுப் பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதே இன்றைய தொண்டைமனாறு. இந்தத் தொண்டைமானாற்றுடன் இணைந்து, அப்படி இணைந்ததால் தன் பெயரையும் இழந்துவிட்டது முன்னர் குறிப்பிட்ட வள்ளி நதியாறு. ஆனால், அந்த ஆற்றங்கரையிலிருந்த கல்லோடையுடன் கந்தப் பெருமானை இணைத்துச் சொல்லும் வழக்கம் இன்றும் உண்டு.
இலங்கையின் வடமுனையில் இருப்பது சந்நிதி ; தென் கோடியில் இருக்கின்றது கதிர்காமம். இரண்டு தலங்களுக்கு மிடையேயுள்ள தூரம் பெரிது; மிகப் பெரிது, ஆனால் முருகனின் திருத்தலங்கள் என்ற வகையில், அவை இரண்டும் ஒன்றை யொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன! சில வழக்கங்களில்; வழிபாட்டு முறைகளில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.
தேவ குருவாகிய வியாழபகவான் வகுத்த ஒழுக்க நெறிக்கிணங்க வாழத் தவறிய ஐராவசு என்ற கந்தர்வனைத் தண்டிக்கும் வகையில், அவனை யானையாகப் போகுமாறு அவர் சாபமிட்டார். யானையாக மாறிய அவன் கதிர்காமக் காடுகளிலே திரிந்து, யாராலும் அடக்கமுடியாத அளவுக்குப் பல அட்டகாசங் களைச் செய்துகொண்டிருந்தான்; காட்டிலே தவமியற்றிக் கொண்டிருந்த சிகண்டி முனிவரையும் தாக்க முற்பட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியினால் அந்த யானையின் பூர்வீகத்தை அறிந்துகொண்ட முனிவர், முருகப் பெருமானின் சடாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி ஒரு வெற்றிலைநுனியால் அதன் நெற்றியில் அறைந்தார். அந்த வெற்றிலைநுனி, வேலாயுதமாக மாறி யானையைத் தாக்கியது. அலறித்துடித்து விழுந்த யானை மறைய, அங்கே கவலை தோய்ந்த முகத்துடன் கந்தர்வன் காட்சியளித் தான்; முன்னர் செய்த பிழையைப் பொறுத்து, தனக்கு முத்திப்பேறு
ee
அருளும்படி முனிவரைப் பணிந்தான். “ வடதிசையில், நாட்டின் வடகரையில், வல்லியாற்றங்கரையில் அமர்ந்திருக்கின்ற வடிவேற் பெருமானை - கல்லோடைக் கந்தனை வணங்கு உன் எண்ணம் இனிதே நிறைவேறும்” என அவனை ஆற்றுப்படுத்தினார் சிகண்டி முனிவர். கதிர்காமக் காட்டிலிருந்து கல்லோடைத் திருத்தலத்துக்கு வந்த அந்தக் கந்தர்வன் திரிகரண சுத்தியுடன் முருகனைத் துதித்து வணங்கித் தன் காரியம் சித்திக்கப் பெற்றான் - முத்திப் பேறடைந்தான்.
அந்த அற்புத நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் காணப்படும் பூவரச மரமே, இத்தலத்தின் தலவிருட்சமாகப் போற்றப் பெறுகின்றது. அதன் தோற்றம், மிக மிகப் பழைய காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது அதனுடைய
->

Page 3
இந்துசாதனம் 8.
இப்போதைய தோற்றம்! அந்த மரத்தின் இலைகள் சில வேளைகளில் வெற்றிலைபோற் காட்சியளிப்பது; சில சந்தர்ப்பங் களில் இலைகள் எல்லாமே உதிர்ந்து, மரம் பட்ட மரமாகக் காட்சியளிப்பது திடீரென்று புதிய இலைகள் தளிர்த்துப் புதுக் குடை விரித்தாற்போலக் காட்சியளிப்பது - இவை எல்லாமே அது ஓர் அதிசயமரம் என்பதன் அடையாளங்கள்- ஆதாரங்கள்.
இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அன்னியரான போத்துக்கீசர், ஒல்லாந்தர் இருந்த காலம், சைவ சமயத்தின் இருண்ட காலம் என்பது வரலாற்றுண்மை, சைவ ஆலயங்களை இடித்துத் தரைமட்டமாக்குவதையும், அந்த இடிபாடுகளின் உதவியுடன் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியெழுப்புவதையும் வெறித்தனமான வேகத்துடன் அவர்கள் மேற்கொண்டார்கள். சந்நிதியிற் கூடிய அடியார்களின் தொகை அவர்களைச் சன்னதம் கொள்ளச் செய்திருக்கும் என்பது தவறான ஊகமாகாது. போத்துக்கீசர், ஒல்லாந்தரின் போர்க்கோலம் பற்றி நன்கறிந்த முதலியார் குல. சபாநாதன், சந்நிதியில் இடம்பெற்ற அழிவு வேலைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமக் கந்தனின் கோயிலை இடிக்கச் சென்ற ஒல்லாந்தர், வழி தடுமாறி மயங்கி தம் நோக்கத்தை நிறைவேற்றாமலே திரும்பிவிட்டனர்; அதேபோல் செல்வச் சந்நிதி முருகன் கோயிலை இடிக்கச் சென்ற அவர்கள் அதை முற்றாக இடிக்க முடியாது திரும்பிவிட்டதாக முதலியார் எழுதியுள்ளார். எனினும் அந்தத் திருத்தலத்திற் பூசை, வழிபாடுகளைத் தொடரும் துணிவு யாருக்கும் ஏற்படவில்லை.
அழிவுக்குக் காரணமான அந்த ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நாட்டைவிட்டே அகன்ற பிற்பாடு செட்டிமார் சிலர், இந்த இடத்திலே சிறிய ஒரு கோயிலைக் கட்டினார்கள், முருக வழிபாட்டைத் தொடர முனைந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் மத்தியிலே தோன்றிய கருத்து வேறுபாடுகளும் கலகங்களும் கந்தன் கோயிலின் கதவுகளையே பூட்டி வைக்கும் அளவுக்குக் கடுமை
யாகிவிட்டன.
ஆனால், சிற்றறிவாளர்களின் சின்னத் தனங்களைப் பார்த்துக்கொண்டு முற்றறிவாளனான முருகனால் மெளனமாக இருக்கமுடியவில்லை.
முப்போதும் மட்டுமல்லாமல் எப்போதுமே தன்னை மனத்தில் வைத்துத் தியானித்து வாழ்க்கை நிலையில் வலைஞராகத் தொழிற்பட்ட மருதர் கதிர்காமர் என்பவருக்கே தனக்குப் பூசை செய்யக்கூடிய சகல தகுதிகளும் உண்டு என்பதைக் கண்டு கொண்ட முருகப்பெருமான், ஆடுமேய்க்கும் சிறுவனாக அவர் முன்தோன்றித்தன்"அருளாணையைத் தெரிவித்தான்!
அந்த "அப்பாவிச் சிறுவனின் அறியாமையை’க் கண்டு வருந்தியும், மந்திரங்களோ பூசை முறைகளோ தெரியாத தான் முருகனுக்குப் பூசை செய்ய நினைப்பதே மகா பாவம் என்பதை உணர்ந்து பயந்தும், தன் இயலாமையைத் தெளிவாகவே விளக்கித் தன்னை விடுவித்துக் கொள்ளுவதில் முனைப்புடன் நின்றார் கதிர்காமர். ஆனால் சிறுவனோ அவரை விடுவதாக இல்லை.

)2OO விகிர்தி ஐப்பசி O
“மந்திரத்திலும் பார்க்க மனப்பக்குவம்தான் முக்கியம். வாயைக் கட்டிக்கொண்டு பூசை செய்தால், மந்திரம்சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று சொன்ன சிறுவன் , ஒரு கணம் மட்டும் கண்களை மூடும்படி கதிர்காமரைக் கேட்டுக் கொண்டான்.
சிறுவனின் சொல்லைத் தட்ட முடியாத கதிர்காமர் தன் கண்களை ஒரு கணம் மூடி - பின் திறந்து பார்த்தபோது, தான் கதிர்காமக் கந்தனின் ஆலயத்தில் நிற்பதை உணர்ந்தார்.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் ஆலய வாசலை அண்டித் தொங்கவிடப்பட்டுள்ள திரைச்சீலைக்குப் பின்னால் என்ன இருக் கின்றது, என்ன நடைபெறுகின்றது என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத பரமஇரகசியங்கள். சில சந்தர்ப்பங்களில் உள்ளே சென்றுவரும் உரிமையுடையவர்களும், அப்படிச் சென்றுதிரும்பும் போது, அந்த இரகசியச் சூழலைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்வதுமில்லை.
கல்லோடையில் ஆட்டுக்காரச்சிறுவன் ஒருவனுடன் “சும்மா" கதைத்துக்கொண்டிருந்த கதிர்காமரால் இத்தகைய வித்தியாசமான திருத்தலத்துக்கு ஒரு கணப்பொழுதில் வந்து சேர்வதற்கும், கோயில் திரையை விலக்கிக்கொண்டு உள்ளே செல்வதற்கும், தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் தனித்தனியே செய்யப்பட்டிருந்த வேல்களைத் தரிசிப்பதற்கும், அவற்றுள் வெள்ளியினாலான வேலைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு வருவதற்கும் முடிந்ததென்றால்.2
ஆட்டுக்காரச் சிறுவன் யார் என்பது அவருடைய உள்ளத்தில் ஆழமாகப்பதிந்துவிட்டது. அதற்குப்பிறகு அவன் சொன்னவையெல்லாம் அவருக்கு அருள்வார்த்தைகளாகிவிட்டன; இட்டவையெல்லாம் அருட்கட்டளைகளாகிவிட்டன!
ஊருக்குத் திரும்பிய அவரால், பூசை வழிபாடுகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. முன்னர் அப்பணியில் ஈடுபட்டிருந்த செட்டிமார்கள் முட்டுக்கட்டை போட்டனர்.
ஆனால், கதிர்காமரின் முயற்சி இன்றியே மிகவிரைவில் தடைகள் எல்லாம் தாமாகவே நீங்கிவிட்டன.
கதிர்காமத்திலிருந்து கொண்டுவந்த வேலைக் கருவறை யிலே வைத்தார் கதிர்காமர். அழகிய பூக்கள், மாலைகள், பட்டுத் துணிகள் போன்றவற்றால் வேற்பெருமானை அலங்கரித்தார். 65 ஆலம் இலைகளை வைத்து, ஒவ்வொன்றிலும் கோயிற் பிரசாதத்தைப் படைத்தார்; வெள்ளைத் துணியால் தன் வாயைக் கட்டினார். பலவிதமான மலர்களை வேற்பெருமானுக்குச் சமர்ப்பித்து, மிகுந்த பயபக்தியுடன் தீபங்களைக் காட்டினார். விபூதிப் பிரசாதத்தை அடியார்களுக்கு எவ்வாறு கொடுப்பது எனத் தெரியாமல் தயங்கித் தடுமாறிய அவரிடம் “நீ விபூதியை எடு, நான் அடியவர்களிடம் கொடுக்கின்றேன்” எனக் காதிற்குள் கூறி வழிகாட்டினார் வேற்பெருமான். அன்று தொடக்கம் இன்றுவரை, பூசை முடிந்தபின் பூசகர் அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் கொடுக்கும்போது, முருகப் பெருமானே தங்களுக்கு அதைக் கொடுக்கின்றார் என்ற “ பாவனை” யில், பூசகரின் கால்களைத் தொட்டு வணங்கிய பின்பே அடியார்கள் அதைப் பெறுகின்
றார்கள்!

Page 4
இந்துசாதனம் 8.
கனவிலும், யாரோ ஒர் உருவிற் சில சமயம் “நேரிலே” தோன்றியும் முருகப்பெருமான் கதிர்காமருக்கு அறிவுறுத்தலுக் கிணங்க அவர் ஆரம்பித்து வைத்த பூசை மரபு சந்நிதியில் இன்றுந் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
裘翠裘
கதிர்காமரின் பரம்பரையைச் சேர்ந்த, திருமணம் முடித்தவர்கள் கெருடாவிலிலுள்ள சைவக் குருமார்களிடம் சமய தீட்சை பெற வேண்டும். பின்னர், அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவரிடம் பூசை முறைகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் - என்பவை இக்கோவிற் பூசகராவதற்குரிய நிபந்தனைகள்.
கண்டய மாலை, பட்டு வேட்டியும் பட்டுத் துணியும், வாய் கட்டுவதற்குரிய மூக்குத்துண்டு ஆகியவற்றை வீட்டிலிருந்து பனை ஒலைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு சென்று, ஆலயத்திலுள்ள கிணற்றிலே குளித்த பின்னர் அவற்றை அணிந்து கொண்டே பூசை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதன் முதலில் ஒருவர் பூசை செய்யும்போது, அனுபவம்பெற்ற மூத்த பூசகர் ஒருவர் அவரை மேற்பார்வை செய்வார்.
காலை 6 மணிக்கு உதய காலப் பூசை, நண்பகல் 12 மணிக்கு உச்சிக்காலப் பூசை, பிற்பகல் 5 மணிக்கு சாயரட்சைப் பூசை எனத் தினமும் மூன்றுகாலப் பூசைகள் உண்டு. அடியவர் களின் விருப்பப்படி மேலதிக பூசைகளும் சில வேளைகளில் இடம் பெறும்.
ஆனால், சனிக்கிழமைகளில் உதயகாலப் பூசை இடம் பெறுவதில்லை. எள்ளிலிருந்து புதிதாக எடுக்கப்பட்ட எண் ணெய்யை வேற்பெருமானுக்கும், பிள்ளையார், வள்ளியம்மை, நாகதம்பிரான், வயிரவர் முதலிய பரிவாரமூர்த்திகளுக்கும் சார்த்தி, திருமுழுக்கு நடைபெறும். அன்றைய தினம் பிட்டு நிவேதனத்துடன் 12 மணிக்குரிய உச்சிக்காலப் பூசை நடைபெறும். ஏனைய நாள்களில் பச்சை அரிசி அமுதும் பயற்றங்கறியும் ஆலமிலைகளில் நிவேதனமாகப் படைக்கப்படுகின்றது. இது மருந்து' எனப் போற்றப்பெறுகின்றது. அடியவரின் அல்லல் அகற்றும் அருமருந்து என்பது பலரின் நம்பிக்கை
ஆவணி மாத அமாவாசையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு 15/16 பெருந் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. திருவிழாக்காலத்தைக் குறிப்பதைப் போன்று, வள்ளிக்கொடி ஒன்று இக்கோவிலில் தானாகவே முளைப்பது ஆண்டுதோறும் நடைபெறும் “புதுமை” யாகும். இங்கே கொடிமரம் இல்லை; அத்தகைய ஒரு மரத்திற் கொடி ஏற்றப்படுவதுமில்லை. இக்கோவிலுக்கேயுரிய தனித்துவமான - பக்திபூர்வமான சில சடங்குகளின் பின்னர், கோவில் வாசலில் சேவற்கொடி ஏற்றப்படுவதுடன் ஆண்டுப்பெருவிழாக்கள் ஆரம்பமாகின்றன.
பூக்காரர் எனச் சொல்லப்படும் தொண்டர்களால் ஆசார
அனுட்டானங்களுடன் சிறப்பாகச் செய்யப்படும் பூச்சோடனைகள்,
சிறுமிகளால் மேற்கொள்ளப்படும் திருவிளக்கெடுத்தல், ஐந்தாம்
திருவிழாத் தொடக்கம் இரவுத் திருவிழாவில் வடக்கு வீதியின்
பாதித் தூரத்திலிருந்து, வாத்தியங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு
“எச்சரிக்கையும் பராக்கு” ம் பாடப்படுதல் , தேர்த் திருவிழாவின்
GES

D2OO விகிர்தி ஐப்பசி O
போது மிகப் பரந்த வீதிகளையும், வெளிகளையும் நிறைத்து நிற்கும் அடியார் திருக்கூட்டம், அந்த அடியார்களின் மத்தியில் பல்வேறு வண்ணத்திலும் வடிவிலும் காணப்படும் எண்ணற்ற காவடிகள், கற்பூரச் சட்டிகள், தவில், நாதஸ்வரம், சங்கு, சேமக்கலம், மணி, பறை போன்றவை எழுப்பும் தெய்வீகப் பேரோசை, பஜனைப் பாடல்கள் தரும் பக்திப் பரவசம், இவை அனைத்தின் இனிய சங்கமத்தில் “உரு” வந்து ஆடுவோரின் பக்தித் தாண்டவம் - இவையெல்லாம் மிகப் பெரிய அளவிலே காணப்படுவது சந்நிதிக்கேயுரிய தனிச் சிறப்பு.
கதிர்காமத் திருத்தலத்திலே திருவிழாக்கள் தொடங்கு வதற்கு முதல்நாள் வேற்பெருமானை இங்கிருந்து அனுப்பும் பாவனையே"வேல் அனுப்பும் விழா” ஆலய வாசலிலிருந்து 100 யார் தூரத்திலுள்ள அரசமரம் வரை இருபுறமும் அகல் விளக்கு ஏற்றி, பூரண கும்பங்கள் வைத்து இவ்விழா நடைபெறும். வழி அனுப்பும் பூசையின்போது நைவேத்தியமாகப் படைக்கப்படும் உழுத்தம் பிட்டு “பயணப் பிட்டு” என அழைக்கப்படுகின்றது. கதிர்காமத் தீர்த்தத் திருவிழாவன்று முருகன் மீண்டும் வருவதாகப் பாவனை செய்து, வந்த களைப்புத் தீர, பயற்றம் துவையலும் இளநீரும் நைவேத்திய மாகப் படைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும், விசேட உற்சவங்கள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றாலும், ஐப்பசி மாதம் இடம்பெறும் கந்தசஷ்டி விரத விழா, குறிப்பிடத்தக்க வகையிலே சிறப்பாக நடைபெறுகின்றது. ஆலயத்திலேயே ஆறு நாளும் தங்கியிருந்து , தீர்த்தத்தை மட்டும் உட்கொண்டு முருகனுடைய விசேட பூசை களில் கலந்துகொள்வதிலும் அவனுடைய புகழைப் பாடுவதிலும், அவன் செய்த அற்புதச் செயல்களைக் கேட்பதிலும், ஆலயத் திருத்தொண்டுகளைச் செய்வதிலும் அடியவர்கள் பலர் ஈடுபடு வதைப் பார்ப்பது, பக்திப்பரவசத்தைக் கிளர்ந்தெழச்செய்யும் அரிய காட்சியாகும்.
ஆலயச் சூழலில் அமைந்துள்ள மடங்கள் இந்தத் திருத்தலத்தை "அன்னம் பாலிக்கும் செல்லச் சந்நிதி” யாகவும் சந்நிதிக் கந்தனை “அன்னதானக் கந்தன்” ஆகவும் போற்றும் பெருமையை அல்லும் பகலும் அநவரதமும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க, அங்குள்ள சந்நிதியான் ஆச்சிரமமும், சைவ கலை பண்பாட்டுப் பேரவையும் “ஞானச்சுடர்” மூலமாகவும் அதனுடன் இணைந்த நற்பணிகள் வாயிலாகவும் அடியார்களின் ஞானப் பசிக்கு நல்விருந்தினை நல்கிவருகின்றன.
ஆகமக் கிரியைகளை மேற்கொள்ளும் ஆலயங்களுக்குச்
சென்று வழிபடும் அடியவர்கள் தாம், அவற்றுக்குப் புறம்பான நடைமுறைகளைக் கைக்கொள்ளும் சந்நிதிக்கும் திரண்டு சென்று வழிபடுகின்றார்கள்- அளக்கிலா அன்பு, ஆழமான பக்தி, ஆண்டான் அடிமைப்பாங்கு முதலியவை பொதுவான அடித்தள மாக அமைந்திருந்தபடியாற்றான் சிவகோசாரியார் - கண்ணப்பன் ஆகியவர்களின் இருவேறு வழிபாட்டு முறைகளையும் ஒருசேரக் கணித்த இறைவன் இருவருக்குமே தன் திருவருளைச் சொரிந் தான் என்ற மகத்தான உண்மை, இந்த அடியார்கள் யாருக்குமே தெரியாது என்று சொல்லிவிட முடியுமா?
(قريع
4.

Page 5
ෂිjögreritōrth 8.
நாவும் நல்ல
சிவத்தமிழ் வித்த
இறைய நமது சமுதாயத்தில் வாக்கும் வாழ்வம் ஒருமித்து வாழ்பவர்களைக் காண்பது மிக அரிது. நமக்கு இறைவனால் தரப்பட்ட கருவி கரணங்களை ஒழுங்காகப் பேணவேண்டும் என்பதிற் பலரும் தவறிவிடுகிறார்கள். நாம்பெற்ற கல்விக்கும், நமது நாளாந்த வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு இல்லாத அவலநிலை தோன்றியதற்கான காரணம்யாது?
1945ஆம் ஆண்டு தொடக்கம் இலவசக்கல்வி நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதால் எழுத்தறிவு உள்ளவர்களின் வீதம் 90 ஐத் தாண்டிவிட்டது. பெண்களின் கல்வி அறிவும் உயர்ந்த நிலையிற் காணப்படுகிறது. ஆரம்பக் கல்வியில் இருந்து க. பொ. த.(சாதாரணம்) வரை எல்லா மாணவர்களுக்கும் அவர்களுடைய சமயம் கட்டாய பாடமாகப் போதிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங் களிற் சமயம் சார்ந்த துறைகளில் உயர் கல்வியினை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு சமயத்தவரும் வழிபடுவதற்குரிய வழிபாட்டுத் தலங்கள் செறிந்து காணப்படுகின்றன. வழிபாட்டுத்தலங்களிற் சமய போதனைகளும் இடம்பெறுகின்றன. எல்லாச் சமயப் பிரிவின ராலும் அறநெறிப் பாடசாலைகள் நாடு முழுவதும் நடாத்தப் படுகின்றன.
சமயக் கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நமது நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரில் பலரிடம் நெறிபிறழ்வான ஒழுக்கக்கேடான நடத்தை கள் காணப்படுவதற்கு யாது காரணம் என நமது சமயத்தலை வர்கள் அனைவரும் சிந்தித்து அதற்குப்பரிகாரம் காணவேண்டும். நமது மாணவர்கள், இளைஞர்களில் ஒருவரும் ஆகாயத்தில் இருந்து பரசூட்டில் வந்து, இந்த மண்ணில் குதிக்க வில்லை. எங்களுடைய மண்ணில்வாழும் பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறந்து, இந்தச் சூழலிலேயே வாழ்கின்றார்கள். இவர்களின் தவறான நடத்தைகளுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள், சமய சமூக நிறுவனங்களை வழிநடாத்துவோர் ஆகிய அனைவருமே கூட்டுப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு இன்று வெறும் ஏட்டுக்கல்வியே போதிக்கப் படுகிறது. மாணவர்கள் ஏற்றப்படும் தீபங்களே ஒழியத் திணிக்கப் படும் பாத்திரங்கள் அல்ல என்பதைப் பாடசாலை ஆசிரியர்களும் சிறப்பாகத் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் களும், உணர்ந்து கற்பிக்கவேண்டும். பல்கலைக் கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும்தொழிற்சாலையாக இயங்கக் கூடாது. அறவிழுமியங்களைப் பேணுகின்ற ஒழுக்கம் நிறைந்த பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் கேந்திர நிலையங்களாக மாற வேண்டும். தான்பெற்ற அறவிழுமியங்கள் சார்ந்த கல்வி தனது வாழ்க்கைக்குப் பயன்படாது என்ற நினைப்பு மாணவர் களிடம் தோன்றக்கூடாது.
வாக்கும் வாழ்வும் ஒருமித்துச் செயற்படுபவன் மனிதரில் தெய்வமாக மதிக்கப்படுவான். சிலர் பெரிதாகச் சொல்வார்கள். செயலில் எதுவும் இருக்காது. வேறு சிலர் வாழ்விற் பல திருகுதாளங்களைச் செய்வார்கள். ஆனால் வெளியில் தமது சுயரூபத்தை தெரியவிடாமல் இரகசியத்தைப் பேணுவார்கள். வாக்கும் வாழ்வும் ஒருமித்துவாழ்ந்து நமக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்பர் பெருமான். இவரை"நடமாடும் கோயில்” என்று
O

D2OO விகிர்தி ஐப்பசி O
பாழ்க்கையும் 5ïr dflool. In85IT6ölnäIö5.Lb
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் போற்றுகின்றார். திருத்தொண்டு நெறிக்கு இலக்கணமாக வாழ்ந்த அப்பர் பெருமான் தான் திருக்கோயிலிற் செய்த திருத்தொண்டுகளை மற்றைய அடியார்களும் செய்யவேண்டும் என்பதற்காக அவற்றைப் பாடலிலே தந்து இருக்கின்றார்.
“நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழந்து பாடி” என்ற பாடல் வரிகளும்,
"சலம்பூவொடு தாபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்ற பாடல் வரிகளும் இதனை எடுத்து விளக்குகின்றன.
கற்றபடி நடத்தல்தான் கல்வியின் பயன் . கற்க வேண்டிய அனைத்தையும் தெளிவாக ஐயம் திரிபறக் கற்கவேண்டும். பல வகையான கல்வியையும் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. கற்றபடி வாழ்க்கையை நடாத்துதல் மிகவும் அவசியமாகும் என்பதையே
"கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” எனத் தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகிறது. முக்காலமும் உணர்ந்த மகா ஞானியாகிய திருவள்ளுவர் குறளின் இறுதியில் அதற்குத் தக என்ற இரு சொற்களை இணைத்துக் கல்வியின் பயன் எது என்பதைத் தெளிவாக்கி உள்ளார்.
ஆரம்ப வகுப்புக்களிற் கல்வி கற்கும் மாணவர்கள் வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். கள்ளம் கபடமில்லாதவர்கள். தமக்குக் கற்பிக்கும் ஆசிரியரின் வார்த்தைகளை ஆப்த வாக்கியமாக, வேத வாக்கியமாகவே நினைப்பவர்கள். பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சு விதைகளை விதைக்காமல் நல்ல சிந்தனைகளை விதைத்து விடவேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் காணப்படல் வேண்டும். ஆசிரியர் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். நற்பண்புகளின் உறைவிடமாக ஆசிரியர் மிளிர வேண்டும். இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்கள், என்பதை
“ஏடு தரக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடுகாக்கும் தலைவராய்நாளை விளங்கப் போகின்றார்”
எனக் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தனது பாடலிற் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவர் களுடைய செயல்களே காரணமாக அமைகின்றன.
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” என்றே செந்தாப்போதருடைய திருக்குறளும் கூறுகிறது.
வாக்கும் வாழ்வும் வேறுபடாது ஒருமித்த நிலையிற் செயற்படும்
சமூகம் உருவாகுவதற்குச் சமயக் கல்வியே வழிகாட்டும். சமயம் என்பது ஒருவாழ்க்கைமுறை; மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனம். சமயக்கல்வியைப் போதிப்பவர்களுக்குச் சமய பாடம் மட்டும் தெரிந்தாற் போதாது. சமய உணர்வும் வேண்டும். சமய உணர்வு உள்ளவர்கள் வாக்கும் வாழ்வும் ஒருமித்த நிலையிற் சமய போதனை செய்தால் ஆரோக்கியமான நெறிபிறழ்வு நடத்தைகள் அற்ற ஒழுக்கமான சமுதாயம் நம் நாட்டில் மலரும்.

Page 6
இந்துசாதனம் 8.
ருவாசகம்
Lறணிவாசகப்பெருமானின் யாத்திரை, திருப்பெருந்துறைக் குருந்த மர நிழலில் முடிவடைந்த யாத்திரை. அது மிக மிக நீண்டதாகும். திருவாசகம் முழுவதுமே, திருப்பெருந்துறைக் குருந்த மர நீழலில் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பாடப்பட்டதாகும். எனினும், அதனுள் சில சில இடங்களில் இந்த
யாத்திரை பற்றிய புலப்பாடுகள் இல்லாமல் இல்லை. சிவ
புராணத்துள்
"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்து ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்.”
என்ற பகுதியில் நீண்ட யுகம் யுகமாய் நீண்ட இந்த யாத்திரையின் இயல்பு ஒரு பொது முறையிற் பேசப்படுகிறது. அனைத்துயிர்களுமே, விரும்பினால் என்ன விரும்பாவிட்டா லென்ன, இவ்வாறான யாத்திரையிற் செல்லவேண்டியனவே. எனினும் மணிவாசகரது யாத்திரை அதன் தீவிரத்தன்மையி னாலும், சிறப்புப் பெற்றதொன்று. இந்த யாத்திரையில் அவர்
திருவாசகப் பாடல்களின் வித்தாகவும் விை குருந்தமர நீழலில் மாணிக்கவாசகர் பெற்ற யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் முன்னைநா
ஒவ்வொரு விநாடியினையும் அதன் பயங்கரமான உள்ளர்த்தத் தினை உணர்ந்து கழித்தார். ஏன், ஒவ்வொரு வினாடியிலும் உணர்கின்றவர்களுக்கு, உணர்ந்து வாழ்கின்றவருக்கு வாழ்வும் உண்டு தாழ்வும் உண்டு, ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு, இல்லையா? போற்றித் திருவகவலில், யானை முதலாக எறும்பீறாக எனத் தொடங்கும் அடிகள் சிலவற்றில், மணிவாசகர், தான் இவ்வாறு தப்பிப்பிழைத்து வந்த யாத்திரையின் வரலாற்றைச் சிறிதளவு சொல்கிறார்.
அதிகாரத்தின் உயர் பீடத்தில், வளங்களின் மத்தியில், வாழ்க்கை அவருக்கு ஒரு பாலைவனமாகக் காட்சி அளித்திருக்க வேண்டும் - இத்தகைய யாத்திரையிற் செல்பவர்களுக்கு, இந்நிலை, இங்கேயும் பற்றுவதற்கொன்றில்லாமல் அங்கேயும் ஒன்றையும் காணாமல் இருக்கிற இந்நிலை - தவிர்க்க முடியாததொன்று. இந்நிலையும், சில சில கவர்ச்சிகளை உடையது. சில உயிர்கள் இக்கவர்ச்சியை உணர்ந்து, இந்நிலையில் தங்கி விடுவதும் உண்டு. மாணிக்கவாசகரும், இந்நிலையினையும் அதற்குரிய கவர்ச்சிகளையும் கண்டவர்தான். அதனாற்றான்,
அழகமர் பாலையுள் சுந்தரத்தன்மையொடு
துதைந்திருந்தருளியும்

D2OO விகிர்தி ஐப்பசி O
O D ஒரு பொதுநோக்கு
- திரு. சி. முருகவேள்
என்ற அடி பிறந்தது. அழகமர் பாலை என்றது, இங்குவெறும் பாலை நிலத்தை மாத்திரமன்று, தனது காட்சியினையுமாகும்.
இஃது எவ்வாறாயினும் ஆகுக. இப்படியான ஒரு வறண்ட, விடாய்க்கிற ஒரு நிலையிற்றான், மணிவாசகருக்கு குருந்தமர நீழலில் அந்த நிகழ்ச்சி, அந்த அநுபவம் கிட்டியது. வேறு எந்த நிலையிற்றான் அது கிட்டும்? திருவாசகத்தில், இந்நிகழ்ச்சி பல இடங்களிற் பலவாறு பேசப்படுகிறது. ஆனால், திருவண்டப் பகுதியில்,
பரமானந்தப் பழங்கடல் அதுவே கருமா முகிலில் தோன்றி
என்று தொடங்கும் பகுதியிற்போல அது வேறு ஓரிடத்திலும் புலப்படவில்லை என்றே கூறலாம். அப்பகுதி முழுவதையும் கீழே தருகின்றேன்.
பரமானந்தப் பழங்கடல் அதுவே கருமா முகிலில் தோன்றி திருவார் பெருந்துறை வரையிலேறித் திருத்தகு மின்னொளி திசை திசை விரிய ஐம்புலப் பந்தனை வாளர விரிய
0ளநிலமாகவும் அமைந்தது திருப்பெருந்துறைக் பேரநுபவமே என்பதை வலியுறுத்துகின்றார், rள்நூலகரான இக்கட்டுரையாளர்.
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றோன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியிற் கோப மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின்முழங்கிப் பூப்புரை யஞ்சலிகாந்தள் காட்ட எஞ்சா வின்னரு ணுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை நீர்நசை தரவருநெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு மவப்பெருந் தாப நீங்கரதசைந்தன வாயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் துழு ழோங்கிய நங்க ளிருவினை மாமரம் வேர்ப பறித்தெழுந் துருவ வருணி ரோட்டா வருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலி னோக்கி

Page 7
இந்துசாதனம் 8.
அருச்சனை வயலு என்புவித் திட்டுத் தொண்ட வுழுவ ராரத் தந்த அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க.
இந்தப் பகுதிக்குப் பல பல வித்துவான்கள் பலவாறு உரை கள் எழுதியுள்ளார்கள். வினைமுதலைப் பிடித்து, எச்சங்களைப் பிடித்து, பயனிலையைக் கண்டு, எவ்வளவுதான் முக்கிப் பார்த்தாலும், இலக்கணத்தினைக் காணமுடிவதில்லை இங்கு. பரமானந்தப்பழங்கடல் அதுவே தந்த அண்டத்தரும் பெறல் மேகன் வாழ்க என்று ஒருவாறு கொண்டு கூட்டி முடிக்கலாம். காண்க காண்க என்று தான் கண்டதை மீண்டும் கண்டு அமைதியாகச் சொல்லி வந்த அடிகளை, திருப்பெருந்துறையிற் குருந்த மரநீழலிலே அன்றொரு நாள் ஆட்கொண்ட “அது” மீண்டுமொரு முறை ஆட்கொண்டு, நெகிழ்ந்து, ஆயத்தமாய் நின்ற தமிழ்ப் பாஷையிலே தன் முத்திரையினை என்றென்றும் அழியாதவாறு பதித்துவிட்டுப் போன இடம் இது. இலக்கணங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஒருநிகழ்ச்சி உருவமாகப் (உருவகமா?) பார்த்தால், பொருள் தெளிவு பெற்று விடுகிறது; மணிவாசகருக்குத் திருவார் பெருந்துறைவரையில் நிகழ்ந்ததனை, கிடைத்த, அனுபவத்தினை ஒரளவு ஆழம் கண்டு கொள்ளமுடிகிறது.
இப் பகுதிக்குக் கருவாக அமைந்த அனுபவத்தினை வசனத்திற் சொல்லிவிடமுடியாது. அவ்வாறு சொல்ல முடியு மென்றால், இப்பகுதி கவிதையாக மலர்ந்திருக்க வேண்டிய தில்லை. சில சில குறிப்புக்களை மாத்திரம் கூறலாம். துயர் தரும் கோடைக் காலத்திலே, சோனாவாரியான மழையில் நிற்கின்ற ஓர் உழவன் எத்தகைய அனுபவத்தினைப் பெறுவானோ, அத்தகைய, அதுபோன்ற அனுபவமே இப்பகுதியின் அடிப்படையில் உள்ளது. அகில பிரபஞ்ச சக்திகளையும், அவை அவற்றிற்குரிய ஸ்தானங் களில் அமைவுறக் காட்டி, ஆனந்தமயமான, கருணைமய மான, ஒருவனை நிலைகுலையச் செய்கிற வேகத்துடன் வந்த மழையில் தன்னை இழந்து, மாண்டு, நிற்கின்ற ஒரு மணிவாச கரை நாம் இங்கு இனம் கண்டுகொள்ள முடிகிறது. திருவாச கத்திற் பிற இடங்களிலும் இது, இவர் இவ்வாறுமாண்டது, வலியுறுகின்றது.
அயல்மாண் டருவினைச் சுற்றமுமாண் டவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகம்மாண் டென்னுடைய செயல்மாண்ட வாயாடித் தெள்ளேனங் கொட்டாமோ.
திருத்தெள்ளேணம் 1. ஊன்கெட்டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய் நான்கெட்ட வாயாடித் தெள்ளேணங் கொட்டாமோ.
திருத்தெள்ளேணம் 18.
இவ்வாறு மணிவாசகப்பெருமான் குருந்தமரநிழலிற் பெற்ற அநுபவம் தன் இழப்பினால் வந்த ஒரு விடுதலை அநுபவம் மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. மீண்டும் மீண்டும் தேடித்தேடி அநுபவிக்க வேண்டிய, உயிரையும் உடலையும் உலுப்பி விடுகிற, ஒரு புதுமையான அநுபவமுமாம்.
ઉલ્લો

O2OO 6fiáSí5 aüuéF oi
"சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தானெனைச் செய்தது.” "அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன்.” "புரை புரை கனியப்புகுந்து நின்று உருக்கி." என்று வரும்பகுதிகளைக் காண்க.
இவ்வாறமைந்த அநுபவத்தில் இருந்துதான் திருவாசகம் ஊற்றெடுக்கிறது. இவ்வனுபவத்தினை மீண்டும் மீண்டும், ஒரு சந்தர்ப்பத்தில் அன்று, அனந்தம் சந்தர்ப்பங்களிற் பற்றிப்பிடிக்க மணிவாசகர் முயன்றிருக்க வேண்டும். அச்சந்தர்ப்பங்களி லெல்லாம் அம்முயற்சிகளிலெல்லாம் அவருக்குக் கிடைத்த பலாபலனைப் பொறுத்தே ஒவ்வொரு பதிகத்தின் தன்மையும், ஒவ்வொருபாட்டின் தன்மையும் அமைந்திருக்கின்றது.
முயற்சியில் எதிர்பாராத முறையிற்பயன் கிட்டியிருந்தால்,
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
என்ற பாட்டுப்போல பாட்டுக்கள் மலர்ந்திருக்கும். பயன் அவ்வாறு கிட்டியிராவிட்டால்,
கையால் தொழுதுன் கழற்சேவடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யாதென்றன் தலைமேல் வைத்தேம் பெருமான்
பெருமானென்
றையா என்றன் வாயாலரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே.
என்றபாட்டுப்போலப்பாட்டுக்கள் மலர்ந்திருக்கும்.
திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னர், மணிவாசகரது
நிலை, காந்தத்தினை அணைந்தும் அணையாமலும் இருக்கக்கூடிய ஒரளவு தூரத்தில் உள்ள ஓர் இரும்புஊசியினைப் போன்ற நிலை . திருவாசகப்பாடல்களுக்கு அழகும், கவர்ச்சியும், ஒட்டமும், தன்மையும் இருக்கின்றனவென்றால், அவையாவும், அவர் அன்று குருந்தமர நீழலில் பெற்ற அநுபவத்திலிருந்து பெறப்பட்டனவாகும். அப்பரது வாசகத்திற் சொல்கின்றதென்றால், பெருந்துறை அநுபவந்தான் திருவாசகத்துக்கு "நடு தறி" திருவாசகத்தில் அழகு இருக்கிறது. கவிதை இருக்கிறது. நல்லாக எவராலும் அநுபவிக்க முடிகிறது. ஆனால், குருந்தமரநிழலிலே மணிவாசகருக்குக் கிடைத்த அநுபவத்தின் அழகினையும், கவிதையினையும் சுவையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தில்லை என்பது விபரீத விளக்கம் ஆகும். பெருந்துறைப் பேரநுபவத்திற்குப் புறம்பாக, திருவாசகத்திற் சத்தியம் ஒன்றும் இல்லை.
(ప్రొ9)

Page 8
இந்துசாதனம் 8.
சைவக் கோயில்களில் நடைபெறுகின்ற கிரிை கருத்துக்கள் முதலியவற்றைத் தெளிவாக விள வரவேற்புக்கு உள்ளாகியிருப்பது மகிழ்ச் மஹாகும்பாபிஷேகம் சம்பந்தமான கட்டுரையிc
சிம்ஹிதா ஹோமம், மூர்த்திஹோமம், சாந்திஹோமம் Фрдвөбшат:
சம்ஹிதா மந்திரங்கள், பிரதான மூர்த்தி, அட்ட மூர்த்திகள் இவர்களைத் தனித்தனியே கும்பங்களில் ஆவாகனம் செய்து பூஜித்து, அக்கினி வளர்த்து அங்கு இவர்களை ஆவாகனம் செய்து ஹோமங்கள் நடத்தப்படும்.
பூரணமான பூஜையின்றி இருந்த மூல விக்கிரகத்தில் தெய்வ சாந்நித்தியத்தைப் படிப்படியாக உருவாக்கும் கிரியைகள் இவை. சிவாகமங்களிற் கூறப்படும் மந்திரங்களில் மிக முக்கியமானவையும் அதிக இடங்களிற் பயன்படுபவையும் சம்ஹிதா மந்திரங்கள் ஆகும். ஈசானம் முதிலிய பஞ்ச ப்ரம்ம மந்திரங்களும் ஹ்ருதயம் முதலிய ஆறு அங்க மந்திரங்களுமாகப் பதினொரு மந்திரங்கள் இவை. இறைவனுடைய லயாங்கமாக அணி செய்திருக்கும் இம் மந்திரங்கள் அவரது போகாங்கமாகவும்
எங்கள் பெயரால் இறைவ sஇவ 而”
மஹாகும்பா
முதலாவது ஆவரணத்தில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்து அருள் செய்யும் வலிமை வாய்ந்தவை. இம் மந்திரங்கள் ஒரு கும்பத்திலும் அக்னியிலும் பூசிக்கப்படுவது சம்ஹிதா ஹோமம்.
அட்ட மூர்த்திகளின் வடிவானவன் இறைவன். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், யஜமானன்(ஆன்மா) ஆகிய அட்ட மூர்த்திகளையும் அவற்றுக்குரிய அதிபதிகளையும் ஒருகும்பத்திலும் அக்கினியிலும்பூசிப்பதுமூர்த்திஹோமம்.
அஸ்திர சக்தியானது தீமையைப் போக்கவல்லது. காவல் செய்வது. மனச்சாந்தி தருவது. நமது ஆலயக் கிரியைகள் பலவற்றிலும் அவ்வப்போதுபாசுபதாஸ்திர மந்திரம்பூசிக்கப்படுவது வழக்கம். இங்கேயும் பாசுபதாஸ்திரமும், அதனைச் சுற்றி தசாயுதங்களும் பூசிக்கப்படுவது சாந்தி ஹோமம். இந்த மூன்று ஹோமத்தின் முடிவிலும் இக் கும்பங்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அங்கு அருள்விளக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
நவக்கிரகமகம்:
பரிவார, தெய்வங்களில் நவக்கிரகங்களுக்குத் தனியிடம் உண்டு. ஆன்ம கோடிகளோடு நேரடித் தொடர்புகொண்டு தமது கதிர்வீச்சுக்களால் உலகியல் வாழ்க்கையிற் பல்வேறு மாற்றங்களை யும், பலாபலன்களையும் செய்கின்றவர்கள் நவக்கிரக நாயகர்கள்.
O:
 

D2OO விகிர்தி ஐப்பசி O
யகளின் விபரம், ஒழுங்குமுறை, மந்திரங்கள், க்கும் இக்கட்டுரைத் தொடர் அன்பர்கள் பலரின் சிக்குரியது. சென்ற இதழில் இடம்பெற்ற ன் இரண்டாம் பகுதியை இங்கே காணலாம்.
இவர்களைக் கும்பத்திலும், அக்கினியிலும் ஆவாகனம்செய்து உபசாரங்கள், ஆகுதிகள் வழங்கி வழிபடுவது நவக்கிரக மகம் எனப்படும். (மகம்-யாகம்)
வாஸ்து சாந்தி :
நிலத்தில் உள்ள குற்றங்குறைகளை நீக்குவதற்காகச் செய்யப்படுவது வாஸ்து சாந்தி என்னுங் கிரியை.
பூமிக்கு அதிபதி பிரம்மா. மழைக் கடவுள் இந்திரன். இவர்களை மகிழ்வித்து வழிபாடியற்றுவது வாஸ்து சாந்தியில் இடம்பெறுகிறது. வாஸ்து சாந்தி ஆலய மண்டபத்திலே செய்யப்படுகிறது.
நெல்லினை மேடையாகப் பரப்பி அதன்மேல் வாழையிலை இட்டு, அதன்மேல் அரிசியைப் பரப்பி அதன்மேல் எள்ளினால் அல்லது அரிசி மாவினால் கோடுகள் வரைந்து வாஸ்து
பனுக்கு என்ன சொல்கிறார்?*
gases -2
வித்யாபூஷணம், பிரம்மழுநீ L I. aflooroorgi5g5Firmmr B..A. (Hons.) (கோப்பாய் சிவம்)
சாந்திக்குரிய வாஸ்து மண்டலம் அமைக்கப்படும். இம்மண்
டலம் இரு வகையாக அமைக்கப்படும். ஆண் தெய்வங்களுக் குரியது மண்டூகபத வாஸ்து சாந்தி மண்டலம். பெண் தெய்வங் களுக்குரியது பரமசாயிபத வாஸ்துசாந்தி மண்டலம். சக்தி அம்சமான முருகனுக்கும் இதுவே உரியது.
இம் மண்டலத்துக்கு ஈசான திக்கில் காயத்திரி, சாவித்திரி ஆகிய இரு சக்திகளுடன் கூடிய பிரம்மாவிற்கும், சிவம் வர்த்தனிக்கும், மண்டலத்துக்கு கிழக்கில் புண்ணியாக வாசனத்துக்கும் கும்பங்கள் வைத்து அதன்முன் ஒமகுண்டம் அமைக்கப்பட்டிருக்கும்.
விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் முதலிய பூர்வாங்கக் கிரியைகளைச் செய்து பிரம்மாவைக் கும்பத்தில் பூஜித்து மண்டலத்தில் வாஸ்துபுருஷனையும் பிற தேவதைகளையும் பூஜித்து, நெற்பொரியினாற் பலிதானமும் கொடுத்து முறைப்படி அக்கினி காரியமும் செய்வர்.
இங்கும் கிராமசாந்தியைப் போலவே நீற்றுக்கா யொன்றைப் பலியிடுவர். அதன்பின் வைக்கோல், தர்ப்பை முதலியவற்றால் மனித உருவாகச் செய்யப்பட்ட வாஸ்து
புருஷனைப் பூஜித்து அக்கினியில் பொருத்தி எரிமூளச் செய்தபின்
- S»

Page 9
இந்துசாதனம் 8.
அவ்வுருவத்தை ஆலய மண்டபங்கள், வீதிகள் முதலிய இடங்களில் இழுத்து வந்து ஈசான திக்கில் போட்டுவிடுவர். இவ்வுருவத்தின் பின்பாக வாஸ்துகும்ப நீர் தெளித்துச் செல்வர். வெட்டிய நீற்றுப் பூசணிக்காயையும் இதனுடன் எடுத்துச் சென்று போட்டுவிடுவர். இவற்றைக் கொண்டு சென்றவர்கள் நீராடிவிட்டு ஆலயத்தினுள் வருதல் வேண்டும். (கைகால்களையாவது நன்கு சுத்தம் செய்ய வேண்டும்).
மிருத்சங்கிரகணமும் அங்குரார்ப்பணமும் :
நற்காரியங்கள் எதனையும் தொடங்கும்போது முளைப் பாலிகையிடுதலாகிய அங்குரார்ப்பணம் மிக முக்கியமாகச் செய்யப்படும். இதற்கு வேண்டிய மண்ணை மந்திரசகிதமாகப் பெறுவதே மிருத்சங்கிரகணமாகும். (மிருத் மண் - சங்கிரகணம் : சேகரித்தல்).
ஆலயத்தின் ஈசானம், மேற்கு, வாயு அல்லது வடக்குத் திசையில் இது செய்யப்படும். அஸ்திர தேவரையும் எழுந்தருளச் செய்துமங்கலவாத்திய சகிதம் குரு இங்கு வந்துசேருவார்.
அஸ்திர தேவரையும், அதற்குமுன் (கிழக்கே) சப்த வாரிதி கும்பத்தையும் ஸ்தாபிப்பர். அதற்குக் கிழக்கே நவப்தம், அதற்கும் முன் அஷ்டதள பத்மம் (எட்டிதழ்க் கமலம்), அதற்கும் முன் நாற்கோணம் என்பவற்றை அரிசிமாவினால் அமைப்பர். நாற்கோணத்தில் மண்வெட்டி ஒன்று கூர்ச்சம், மாவிலை என்பன கட்டப்பட்டதாக வைக்கப்பட்டிருக்கும்.
பூர்வாங்கக் கிரியைகளை நிறைவேற்றியபின் கும்பத்திலே ஏழு சமுத்திரங்களையும், நவகோஷ்டத்தில் பிரம்மாவையும் எட்டு மண்டல தேவர்களையும், பத்மத்திலே அஷ்டதிக்கு பாலகர்களையும் பூமிதேவியையும் பூஜிப்பர். மண்வெட்டியின் குற்ற நீக்கத்திற்காக தைலம், பால், தயிர், இளநீர் என்பவற்றால் அபிஷேகித்த பின் மும்முறை மண்ணை வெட்டி ஒரு தட்டிலிட்டுப் பட்டினால் மூடுவர். சப்தரிஷி கும்ப ஜலத்தினால் மண் எடுத்த இடத்தை அபிஷேகம் செய்து நவதானியமிட்டுச் சமதளமாக்குவர்.
மண் நிரப்பிய தட்டத்துடன் வீதிவலம்வந்து யாக சாலையை அடைவர்.
யாகசாலையின் வாயுதிக்கிலே (வடமேற்கு) கார்த்திகை, ரோகினி, சகிதமாக அமிர்தேஸ்வர கும்பம் வைத்து (அமிர்தேஸ் வரன் - சந்திரன்) சுற்றிவர துவாதசாத்தியர்களுக்கு (பன்னிரு சூரியர்கள்) பன்னிரண்டு மண்சட்டிகளும் வைக்கப் பட்டிருக்கும். மிருத்சங்கிரகணத்தில் எடுத்துவந்த மண்ணினால் இவை நிரப்பப்பட்டு வில்வம், அரசு, மாவிலை இவற்றால் அலங்கரிக்கப் படும்.
பூர்வாங்கக் கிரியைகளை அடுத்து சந்திரனையும், பன்னிரு சூரியர்களையும் பூஜித்தபின் தூய்மையான பாத்திர மொன்றில் பசுப்பால் விட்டு அதில் நவதானியத்தை இட்டுப் பூஜித்து மந்திரங்களுடன் பாலிகைகளில் (மண்சட்டி) அதனை விதைப்பர். சந்திரகும்ப நீரை இவற்றுக்கு வார்த்து மீண்டும் கும்பத்தை நீரால் நிரப்பிஸ்தாபிப்பர்.
இவ்வங்குரார்ப்பண முளையானது பசுமையாக நன்கு செழித்து வளர்ந்தால் கிராமம் சிறக்குமென்பது ஐதீகம். (அங்குரம் முளை).
O

D2OO விகிர்தி ஐப்பசி O
ரட்சாபந்தனம் :
ரட்சா என்பது காப்பு. காவலுக்காகக் கட்டுவது. காப்புக் கட்டுதல் எனவும் கூறுவர். எடுத்த கருமம் தடையின்றி நிறைவேறு வதற்கும், வேறு செயல்களில் ஈடுபடாது தடுப்பதற்கும் காப்புக் கட்டப்படும்.
சிவாச்சாரியாரும், ஏனைய குருமாரும் தர்மகர்த்தாவும் ரட்சாபந்தனம் செய்துகொண்ட பின் கும்பாபிஷேகம் முடியும்வரை ஆலயச் சூழலை விட்டு அப்பாற் செல்லலாகாது. இக்கால எல்லையில் அவர்களின் உறவினரால் ஏற்படும் ஆசௌசம் முதலியன அவர்களைத் தீண்டா.
காவலுக்காகக் கட்டப்படும் காப்பு மூர்த்திகளுக்கும் கட்டப்படுவது வழக்கம். எல்லா உலகங்களையும் காக்கும் அவருக்கே காவலா என ஐயுறலாம். சகல பிரபஞ்சங்களும் இறைவனுள் அடங்கும். அவருள் அடங்கிய அனைவருக்கும் காவல் செய்யும் காரணமாகவே அத் திருவுருவங்களுக்கு காவல் செய்யப்படுகிறது. மேலும், தன் குழந்தைகளின் நோய் தீர தான் மருந்துண்ணும் தாய்போல, நமக்காக இறைவன் காப்புக்கட்டும் பாவனை இதில் தொனிக்கிறது.
"கங்கணம் கட்டுதல்" என்ற மரபுச் சொற்றொடர் இங்கு நோக்கற்பாலது. ஒரு காரியத்தை விடாது முயன்று செய்து முடிக்கத் தீர்மானிப்பதைக் கங்கணம் கட்டுதல் என்று சொல்லுவர். கங்கணம் என்பது காப்பு. எடுத்த காரியத்தை நிறைவேற்றி முடிக்கும் தீர்மானம் கொள்வது இக்கிரியையின் நோக்கம்.
ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மாவிலை, விபூதி என்பனவும், ரட்சா சூத்திரம் (காப்புக் கயிறு) எனப்படும் மஞ்சள் பூசிய நூலும் வைக்கப் பட்டிருக்கும்.
சிவாச்சாரியார் பூர்வாங்கக் கிரியைகளைச் செவ்வனே நிறைவேற்றியபின் ரட்சாபந்தன பொருட்களைப் பூஜிப்பர். இதன் பின் மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் தனது வலக்கை மணிக்கட்டில் ரட்சை நூலைக் கட்டி விபூதியால் முடிச்சிலே காப்பிட்டுக் கொள்வார்.
நூதனமூர்த்திகளுக்கான அதிவாசாதிகிரியைகள் :
புதிதாகச் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நயனோன் மீலனம், ஜலாதிவாசம், தான்யாதிவாசம், சயனாரோபணம் ஆகிய கிரியைகள் செய்யப்படும்.
நயனோன்மீலனம் :
நயன உன்மீலனம் எனப் பிரித்து கண்திறத்தல் என்ற பொருளை இச் சொல் வெளிப்படுத்தும். ஒவியம், சிற்பம் என்பன உருவாகி முடிந்ததும் இறுதியாகவே கண் திறத்தலைச் செய்வர். இங்கு முறைப்படி பூஜை அக்கினி காரியம் என்பவற்றை நிகழ்த்தி திரையிட்டு மூர்த்தியின் திருவுருவத்திலே தங்க ஊசியால் கண்களைத் திறந்து தானியக் குவியல் மீது விக்கிரகத்தை வைத்து பொன், தேன், நெய், தானியங்கள், பிராமணர்கள் தீபம் கண்ணாடி நிறைகுடம் சந்நியாசி, பக்த ஜனங்கள் ஆகியோரை தரிசிக்கச் செய்வர். சிற்பசாரி சம்பாவனை செய்து கெளரவிக்கப்
படுவர்.
ஜலாதிவாசம் :
நயன உன்மீலனம் செய்யப்பட்ட விக்கிரகத்தை நீரில் அமிழ்த்தி வைத்தலே ஜலாதிவாசம் எனப்படும். இதற்கெனத் தயார்

Page 10
இந்துசாதனம் 8.
செய்யப்பட்ட சிறு தொட்டியிலே புனித தீர்த்தங்களை நிரப்பி அதனுள் ஆசனத்தின் மீது கழுத்தளவு நீரில் கிழக்கு நோக்கி விக்கிரகத்தை இருக்கச் செய்வர். தொட்டி தயார் செய்யும் சிரமத்திற்காகப் பெரிய பாத்திரங்களை பயன்படுத்துவதும் உண்டு.
மீன், தவளை, பாம்பு முதலிய நீர்வாழ் பிராணிகளை பொன்னால் அல்லது வெள்ளியால் செய்து இதனுள் போடுவதும் உண்டு.
தான்யாதிவாசம் :
இத பின் விக்கிரகத்தைத் தானியங்களால் மூடி வைப்பர். இதுவே தான்யாதி வாசம் எனப்படும். இவ்விரு அதிவாசக் கிரியைகளும் பிருதுவி, அப்பு ஆகிய இரு அம்சங்களுடனும் பரம்பொருளுக்குள்ள தொடர்பை வலுப்படுத்துவதாக அமைகிறது.
ағашөлпtёппшаяі» :
தானியங்களைப் பரப்பி மான்தோல் விரித்து, அதன்மேல் மெத்தை, தலையணை, விரிப்பு, அமைத்து, மூர்த்தியை அங்கு எழுந்தருளச் செய்து கிழக்கே தலைவைத்து மேல்நோக்கியபடி சயனிக்கச் செய்து, செந்நிறத் துணியால் மூடி, இறைவனைத் துயிலவைக்கும் பாவனையே சயனாரோபணம் ஆகும். பிரசன்னாபிஷேகம், பிரசன்னபூஜை :
புனராவர்த்தன கும்பாபிஷேகத்திற்கு மட்டும் இக்கிரியை
SS SSSMMMMSMSiiiiiiy YYYY YYSSLS
தலைசிறந்த சம இந்துவித்தியாநிதி பிரம்மழுநீ இந்துசாதனம் -2010 ஆவணி இதழ் சம்பந்தம கருத்துக்களைநன்றியுடன் மறுபிரசுரம் செய்கி
இலங்கையில் "இந்து சாதனம்’ எனும் இதழ் கடந்த 121 வருடங்களாக வெளிவரும் சஞ்சிகை ஆகும். இந்து சமயம், சமய நெறி, கோவிற் கிரியை, கலை, கலாசாரம், பண்பாடு முதலான விடயங்களைத் தாங்கி வெளிவருவது இந்து சாதனம், யாழ்ப்பாணம், சைவ பரிபாலன சபையினர் பன்னெடுங் காலமாக ஆற்றிவரும் அரும்பணிகளுள் “இந்து சாதனம்" வெளியீடும் ஒன்றாகும். இஃது ஒர் அரிய புண்ணிய செயல் எனலாம். இலங்கையின் முதுபெரும் எழுத்தாளரும், "கலைச்செல்வி" சஞ்சிகையின் முன்னைநாள் பிரதம ஆசிரியரும், இளைப்பாறிய யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி அதிபருமான சிவசரவணபவன் எம்.ஏ.இச்சஞ்சிகையின் ஆசிரியர் ஆவார்.
ஓர் அனாதையின் கண்ணீர் ஆண்டவனின் கையிற்படும் என்பர். அனாதைகளுக்கு உதவுவோர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் பாக்கியசாலிகள். நாம் இறைவனின் அன்பைக்கான ஏழை எளியோர்க்கு உதவுதல் வேண்டும். ஒருவனின் இல்வாழ்வில் மனைவி, மக்களிடையே அன்பும், அறஞ்செய்யும் குணமும் இருந்தால் இல் வாழ்வு சிறப்புறும் என இல்லறம் என்பது நல்லறம் ஆகும்” என இச்சஞ்சிகையில் விளக்கங் கூறப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில், எமது நாட்டின் யுத்தச் சூழ்நிலையால் அல்லற்பட்டு அவதியுறும் அனாதைகள் ஏழைகன்ள நாம் ஆதரித்தல் ஓர் இறைபணியாகும் என விதந்துரைக்கப்படுகிறது.
மும்மலங்களில் ஆணவம்பற்றிப்பலரும்பல விளக்கங்களைத் தருவர். உயிரைப் பல விடயங்கள் பற்றிக் கொள்வது இயல்பு. ஆணவம் மின்சாரம் போல உயிரைப்பற்றிக் கொள்ளும். ஆணவம் என்று உயிரை விடுமோ, அன்று உயிர் பரிசுத்தம் அடையும். நன்நிலைக்கு வரும்போது ஒருவன் நல்ல மனிதன் ஆகின்றான் என்பது சைவ சித்தாந்த விளக்கம் ஆகும். இவ்வரிய கருத்து இந்த நூலில் ஆராயப்பட்டு உள்ளது பொருத்தமுடையது.
நாம் மண்ணில் நின்று விண்ணைத் தொழுகின்றோம். ஆன்மாக்கள் ஆணவத்தினின்றும் நீங்கி வாழ சிவ வழிபாடு எமக்கு உள்ளது. வானளாவி நிற்கும் கோவில் கோபுரத்தை சிரசின் மேல் கைவைத்து சிவ சிவ என்றும் ஒம் நமசிவாய எனவும் வழிபடுகின்றோம். சமயகுரவர், சந்தான குரவர்களால் இவ்

2OO விகிர்தி ஐப்பசி O
உண்டு. மூலமூர்த்தியிலுள்ள தெய்வசாந்நித்தியத்தைக் கும்பத் திலே ஒடுக்குமுன் விசேஷ ஸ்நபனாபிஷேகம் செய்து தீபாராதனை, பூஜைகள் செய்வது மரபு. இதுவே பிரசன்னாபிஷேகம், பிரசன்ன பூஜை எனப்படுகிறது.
கடஸ்தாபனம் :
கும்பம் வைப்பதற்கான நெல், அரிசி, பயறு, உழுந்து, எள், நவதானியம், நெற்பொரி, தர்ப்பை இவற்றை உரிய மந்திரங்கள் ஒதியவாறு முறைப்படி பரப்பி, குடத்தை கழுவி நூல் சுற்றி தூபம் காட்டி இதனுட் சந்தனம், நீர், பவித்திரம், நவரத்தினம், பொன் முதலியவற்றை இட்டு மாவிலை தேங்காய் என்பவற்றை வைத்து பட்டு, பூனூல், மாலை, கூர்ச்சம், பூ, சந்தனம் இவற்றைச் சாத்தி கும்பாபிஷேகத்திற்குரிய பிரதான கும்பங்களை அமைத்தலே கடஸ்தாபனம். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வேத மந்திரங்கள் ஒதப்படும்.
கலாகர்ஷணம் :
பிம்பம் எனப்படும் விக்கிரகத்திலிருந்து இறைசக்தியை - தெய்வசாந்நித்யத்தை- கும்பத்திலே வரச்செய்தலே கலாகர்ஷணம் ஆகும். பலவிதமான நியாசங்கள் மூலமாக இதனைச் செய்து கடஸ்தாபனம் செய்யப்பட்ட கும்பத்தில் மூர்த்தியை எழுந்தருளச் செய்த பின்னர் கும்பத்தையாகத்தில் ஸ்தாபிப்பர்.
மய சஞ்சிகை சோ. குஹானந்த சர்மா
ாகக் கொழும்பு'தினகரன்" இதழில் வெளியான
வழிபாடு எமக்குக் காட்டப்பட்டுள்ளது. அதே போலவே வெள்ளிக்கிழமை வழிபாடு வீட்டிலும் கோவிலிலும் உள்ளது. இவை எனக்கு என்றும் நன்நெறியைக் கூறுகின்றன என 1965இல் வெளிவந்த இந்து சாதன மலரின் மறுபிரசுரம் இவ்விதழில் காட்டுகின்றது.
“உயர் பண்பாட்டு வலயங்கள்” என்ற ஆசிரியர் கூற்றிலே சைவ
சமயப் பண்பாடு எடுத்தாளப்பட்டமை வரவேற்கக்கூடியது. நல்லூர் கந்தனின் இவ்வாண்டுத் திருவிழாவிலே பக்தர்கள் சமய முறைப்படி ஆசார சீலராக வர வேண்டும் என்ற உயர் கருத்து கடைப்பிடிக்கப்பட்டமை வரவேற்கக்கூடியது. பெளத்தர்கள் தமது சமய அனுட்டானத்தில், உடையிற் கூடத் தமது முறைப்படி செல்கின்றனர். இதனையே சைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். நமது பண்பாடு, கலாசாரம் வரை இவைகளை நாம் கவனத்திற் கொள்ளல் அவசியம் என்பது ஆசிரியரின் விளக்கம் ஆகும். குப்பிளான் கற்பகப் பிள்ளையார் பற்றிய கட்டுரை, கவிதைகள் உள்ளன. குப்பிளான் கற்பகப் பிள்ளையாரின் 6 ஆந் திருவிழா திருமுறைத் திருவிழாவாகும். கொடிக்கவி பாடிக் கொடியேற்றம் நிகழ்வதும் திருப்பல்லாண்டு பாடித் தேர் இழுக்கப்படுவதும் இவ்வாலயச் சிறப்பாகும். இவைகளை ஏனைய ஆலயங்களும் கவனத்திற்கொள்ளல் நல்லது. இவை மட்டுமா தெல்லிப்பழை துர்க்கா அம்மன் ஆலய படம் சஞ்சிகையின் முகப்பை அலங்கரிக்கின்றது. கோப்பாய் சிவம் அவர்களின் பாலஸ்தாபனம் பற்றிய தெளிவான விளக்கம் உள்ளது. இவை ஆலய வழிபாட்டை எமக்கு எடுத்துக் கூறும் விடயங்களாம்.
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவோம் என்ற வாக்குக்கமையத் திருமுறைகளைப் பொருளோடு வெளியிட்டு வருவது மெச்சக்கூடியது. மாணவ சமுதாயத்துக்கும் சிவனடியார்களுக்கும் இது நல்ல பலனைக் கொடுத்து வருகின்றது. புரட்டாதி மாதம் சனீஸ்வரப் பெருமானை வழிபடும் மாதம் ஆகும். கோளறுபதிகத்தைப்பொருளோடு வெளியிடும் பணி ஆவணி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எல்லாவகையிலும் "இந்து சாதனம்"தலைசிறந்த சமயசஞ்சிகை. இஃது எல்லா இடங்களிலும் இருத்தல் அவசியம்.

Page 11
இந்துசாதனம் 8.
சொல்லிய பாட்டின் பொரு (2010 புரட்டாதி இதழ் 13
திருஞானசம்பந்தமூர்த்தி நா கோளறு
திருச்சிற்றம்பலம்
பொது பண்பியந்தைக் காந்தாரம்
நஞ்சணி கண்ட னெந்தை மடவாட னோடு
விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமே லணிந்தெ
னுளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுண ரோடு முருமிடியுமின்னு
மிகையான பூதமவையு மஞ்சிடு நல்ல நல்ல வவை நல்ல நல்ல
வடியாரவர்க்கு மிகவே.
பதவுரை: நஞ்சணி கண்டன் -நஞ்சை அணிந்த திருக்கண்டத்தை உடையவரும், எந்தை - எமது பிதாவும், மடவாள்தன்னோடு-உமாதேவியாரோடு, விடை ஏறும் நங்கள் பரமன் - இடப வாகனத்தில் வந்தருளுகின்ற எங்களுடைய தலைவருமாகிய சிவபெருமான், துஞ்சு இருள் வன்னி - மிக்க கருநிறத்தையுடைய வன்னியையும், கொன்றை - கொன்றை மலரையும், முடிமேல் அணிந்து - திருமுடியிலே தரித்து, என் உளம் புகுந்த அதனால் - என்னுடைய மனத்தில் வீற்றிருக்கும் காரணத்தினால் வெம் சின அவுணரோடு - கொடிய கோபத்தை உடைய அசுரர்களும், உரும் இடியும் மின்னும் -அச்சத்தை உண்டுபண்ணும் இடியும் மின்னலும், மிகையான பூதம் அவையும் - மிகுதியான பூதங்களும், அடியார் அவர்க்கு - திருத் தொண்டர்களுக்கு, மிகவேஅஞ்சிடும்-மிகவும் பயப்படுவனவாகி நல்ல நல்ல அவை நல்ல நல்ல - அவை எல்லாமே
நல்லவையாக இருக்கும்.
பொழிப்புரை தன்னுடைய திருக்கண்டத்தில் நஞ்சையும் திருமுடியிலே வன்னியையும் கொன்றை மாலையையும் அணிந்த வரும், எமது தந்தையுமாகிய சிவபெருமான், உமாதேவியாரோடு இடப வாகனத்தில் வந்து என் உள்ளத்திலே இருக்கின்ற காரணத்
தால், கொடிய கோபத்தையுடைய அசுரர்கள், இடி, மின்னல்,
 

D2OO விகிர்தி ஐப்பசி O
ளுணர்ந்து சொல்லுவோம்
ஆம் பக்கத் தொடர்ச்சி.)
யனார் திருவாய் மலர்ந்தருளிய
பதிகம்
பூதங்கள் முதலான எல்லாம் எங்களுக்கு எவ்வித தீங்கையும்
செய்யாமல், நல்லவையாகவே இருக்கும்.
வாள்வரியதளதாடை வரிகோவணத்தர் மடவாடனோடுமுடனாய் நாள் மலர் வன்னிகொன்றை நதிசூடிவந்தென்
னுளமே புகுந்த வதனால் கோளரியுழுவையோடுகொலை யானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல வவை நல்ல நல்ல
வடியாரவர்க்கு மிகவே.
பதவுரை: வாள்வரி யதள தாடை வரிகோவணத்தர் - ஒளி பொருந்திய, புள்ளிகளையுடைய, புலித்தோலாடையாற் கட்டிய கோவணத்தையுடைய சிவபெருமான், நாள் மலர் வன்னி - அன்றலர்ந்த புதிய மலர்கள் பொருந்திய வன்னியையும், கொன்றை - கொன்றை மாலையையும், நதி - கங்கையையும், சூடி -முடியிலே அணிந்து, மடவாள் தன்னோடும் உடனாய் வந்து - உமாதேவியாருடன் எழுந்தருளி வந்து, என் உளம் புகுந்த அதனால் - அடியேனது உள்ளத்துட் புகுந்த காரணத்தினால், கோள் அரி - கொலைத் தொழிலைச் செய்யும் சிங்கம், உழுவை ஓடு - புலியோடு, கொலை யானை - கொல்லுகின்ற யானை, கேழல் - பன்றி, கொடுநாகமோடு- கொடியபாம்பினோடு, கரடிகரடி, ஆளரி - மனிதக் குரங்கு, ஆகிய இவைகள், அடியார் அவர்க்கு-சிவனடியார்களுக்கு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
- அவை எல்லாமே நல்லவையாக இருக்கும்.
பொழிப்புரை- புலித்தோலாடையாற் கட்டிய கோவணத்தை யுடையவரும், மலர்களுடன் கூடிய வன்னி, கொன்றை மாலை, கங்கா நதி ஆகியவற்றைத் திருமுடியிற் தரித்தவருமான சிவபெருமான் உமாதேவியாருடன் சேர்ந்து என் உள்ளத்துட் புகுந்த காரணத்தினால், சிங்கம், புலி, யானை, பன்றி, நாகம், கரடி, மனிதக்
குரங்கு ஆகிய எல்லாம், சிவனடியார்களுக்குத் தீங்கு செய்யாமல்,
நல்லவையாகவே இருக்கும்.

Page 12
இந்துசாதனம் 8.
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விகிர்தி Su) ஐப்பசி மீ" 1ஆம் 2 (18.12.2010)
தொடரும் சந்தேகம்
Uல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட_
இதுதான் சரியான தீர்ப்பு இதுதான் நியாயமான_ நேர்மையான நீதியான தீர்ப்பு என்ற முடிவுக்கு நீதிபதிகள் வருவதற்கு அறுபது நீண்ட ஆண்டுகளை ‘விழுங்கிய
இராமஜன்ம பூமி பாபர் மசூதி சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருப்போரும் அரச அதிகாரிகளும் காவல் துறையைச் சேர்ந்தவர்களும் எதிர்பார்த்துப் பயந்ததைப் போல், இந்தத்தீர்ப்பின் விளைவாக வன்செயல்களோ ஆர்ப்பாட்டங்களோ இடம் பெறவேயில்லை என்பதும் _
மாறாக, ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல்வாதிகள், சமூகத்தொண்டர்கள், சாதாரண பொதுமக்கள் எனப் பல்வகைப்பட்டோர் அந்தத்தீர்ப்பைப் பெரிதும் பாராட்டி, வரவேற்றுத் தம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் மீண்டும் மீண்டும் வெளியிட்டுள்ளனர் என்பதும் _
குறிப்பிடத்தக்கவை. இந்துக்கள் என்ற பொது நிலையில் இந்தத் தீர்ப்பினால் நாங்களும் உவகையும் உற்சாகமும் நிறைவும் நிம்மதியும் அடையலாமாயினும்
ஈழம்வாழ் இந்துக்கள் என்ற சிறப்பு நிலையில், அவற்றுடன் திருப்திப்படாது அந்த வழக்கின் மூலகாரணத்திலிருந்தும் அதன் வளர்ச்சியிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை பற்றிச் சிந்திக்கவும் வேண்டும்.
பாபர் என்ற இஸ்லாமிய மன்னன் இந்தியாவுக்கு வெளியே யிருந்து படையெடுத்துவந்து இந்தி யாவைக் கைப்பற்றியதன் விளைவாகக் கட்டப்பட்டது பாபர் மசூதி_
இந்துக்கள் தெய்வமாக வழிபடும் இராமபிரான் அவதாரம் செய்த அயோத்தியில் இருந்த இராமர் கோவிலை இடித்தழித்தே அந்த மசூதி கட்டப்பட்டது என்பது இந்துக்களின் குற்றச்சாட்டு_
அந்த இடத்தில் அப்படி ஓர் இந்துக்கோவில் இருக்கவுமில்லை, அது இடிக்கப்படவுமில்லை என்பது முஸ்லிம்களின் நிலைப்பாடு.
வழக்கின் அடிப்படை இதுதான்.
 

)2OO விகிர்தி ஐப்பசி O
இதைப் போன்ற ஒரு சூழ்நிலை இந்த நாட்டிலும் உருவாகி வருகின்றதோ என்ற சந்தேகத்தைச் சென்ற இதழின் ஆசிரியர் தலையங்கத்திற் கிளப்பியிருந்தோம் _
அந்தச் சந்தேகம் வரவர வலுவடைகின்றதேயன்றிச் சிறிதள வாவது குறைவதாகத் தெரியவில்லை!
சில நூறு ஆண்டுகளின் முன்னர் எங்கள் நாட்டிலே இந்துக் கோவில்கள் இடித்தழிக்கப்பட்டன என்பது உண்மைதான் புனிதமான விக்கிரகங்கள் அடித்து நொருக்கப்பட்டன என்பதும் உண்மைதான்.
ஆனால் அந்த அநியாயங்களைச் செய்தவர்கள் _ அந்நியர்கள்_ எண்ணிக்கையிற் சிறுபான்மையினராக இருந்த வர்கள்!
அதனால், அவர்களுடைய அழிவு வேலைகளுக்கு_ ஒரேயடியாக முற்றுப்புள்ளியிடுவதற்கு முடியாவிட்டாலும், ஒரளவுக்காவது அவற்றைத்தடுத்து நிறுத்துவதற்கு இங்கிருந் தவர்களால் முடிந்தது.
அதுமட்டுமல்ல_ ஆரம்பத்தில் இங்கு வந்த போத்துக்கீசரை, அடுத்து வந்த ஒல்லாந்தர் விரட்டிக் கலைத்ததைப்போல்_
அதே, ஒல்லாந்தரை, பின்னர் வந்த ஆங்கிலேயர் வெற்றிகொண்டு விரட்டியதைப்போல் -
ஏதோ ஒரு காலத்தில் - யாரோ ஒரு பிரிவினரால் ஆங்கிலே யரும் இந்நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் இந்த நாட்டு மக்களிடம் இருந்தது!
அதன் அடிப்படையிலே மக்கள் பொறுமை காத்தார்கள் _ கோவில்களின் பாதுகாப்பிற் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
ஆனால் சமீப காலமாக நமது சமயத்துக்கும் சமய தலங் களுக்கும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் விளைவிப்பவர்கள் இந்த நாட்டையே தமது சொந்த நாடாகக் கொண்டவர்கள்_
பெரும்பான்மையினர் என்ற நிலையில் அவர்களுக்கு இருக்க வேண்டிய பெருந்தன்மையைக் கைவிட்டு, அடக்கு முறைக்கு அத்தியாவசியமான ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் வீம்பையும் விதண்டாவாதத்தையும் தம் ஆயுதங்களாகக் கொண்டு செயற்பட்டு வருபவர்கள்!
ஒரு காலத்தில் இந்த நாடு முழுவதும் செழித்தோங்கிச் சிறப்புற்றிருந்ததாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் தம் மதத்தை மீண்டும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நுழைத்துவிட வேண்டும் என்னும் முனைப்புடன் செயற்பட்டும் வருபவர்கள்
தம்முடைய நிலைப்பாட்டை நிரூபிப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் புதைபொருளாராய்ச்சியில் எடுக்கப்படுபவை
முன்னொரு காலத்திற் புதைந்துபோன பொருட்கள்அல்ல - அவர்களாலேயே சமீபத்திற் "புதைக்கப்பட்ட” பொருட்களே!
அந்தப் பொருட்களின் "பழமையையும் புனிதத்தன்மையையும் அருமையையும் பெருமையையும்" பற்றிப் பரப்புரை செய்வதற்கு அவர்களின் கட்டுப் பாட்டிலுள்ள ஊடகங்கள் அத்தனையும் ஓயாது ஒழியாது உழைத்து வருகின்றன!
இந்த நாட்டிலே சிறுபான்மை இனம் என ஒன்றுமே இல்லை எனச் சொல்வதைச் சமீப காலமாகத் தம் வழக்கமாக்கிக் கொண்ட வர்கள்_
சிறுபான்மை மதம் என்பதும் இல்லை என்றோ_ அரச மரங்கள் எல்லாமே அரச மதத்தின் இருப்பிடங்கள் தாம் என்றோ
சொல்லமாட்டார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை
அதே வேளை சைவசமயத்தைக் காப்பதற்கு உருவாக்கப் பட்ட சபைகள் தம் மெளனத்தைக் கலைத்துச் செயற்படும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதுதான் சைவ உலகைக் கப்பியுள்ள மிகப்பெரிய சோகம்!
人

Page 13
இந்துசாதனம் 8.
நக்கீரர் ஆணவத்தின் எல்லை தொட்டார், தமிழ்ப்புலவன் எனும் தரத்தால், அப்போதும் அவர்க்கு அறிவூட்ட விரும்பிய ஆண்டவன், நெற்றிக்கண் திறந்து சிறிது காட்ட அதுகண்டும் நக்கீரர் ஆணவம் அசையவில்லை. ஞானக்கண் திறந்து இறைவன் காட்டியும், நக்கீரரின் ஊனக்கண் திறக்கவில்லை.
ஆண்டவன்,
தன்னை அடையாளம் காட்டிய பின்னும், செந்தமிழால் வந்தனை செய்யாது நிந்தனை செய்தார். முக்கண் உடைய முதல்வனேயானாலும், மொழிந்த உம்பாட்டில் குற்றம் குற்றமே என, தன்குற்றம் அறியாது தருக்கோடு உரைத்துநின்றார்.
கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப் பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம் முற்றுநீர் கண்ணானாலும் மொழிந்த உம்பாடல் குற்றம் குற்றமே என்றான் தன்பால் ஆகிய குற்றம் தேரான்.
தமிழறிந்தும் தருக்கொழியா நக்கீரர் செருக்கால், சினம் கொண்டனன் சிவன்.
கண் திறந்தது.
கனல் பறந்தது.
கதை முடிந்தது. அனல் தாங்காது கீரர் புனல் சேர்ந்தார் பொற்றாமரைக்குளம் அவரைப் புதைத்துக் கொண்டது.
தேய்ந்த நான்மதிக் கண்ணியான் நுதல்விழிச்செந்தீப் பாய்ந்த வெம்மையிற் பொறாத பொற்பங்கயத் தடத்துள்
 

O2OO விகீர்தி ஐப்பசி 01
குற்றம் குற்றமே 1
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
ஆய்ந்த நாவலன் போய்விழுந்(து) ஆழ்ந்தனன் அவனைக் காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்.
திருவிளையாடற் புராணத்தின் திருஆலவாய்க்காண்டத்தில் வரும், தருமிக்குப் பொற்கிழி அளித்தபடலம் கூறும் கதையிது, முதலில் வாசகர்க்குக் கதைதெரிவதற்காய், சற்று அழகூட்டிக் கதையுரைத்தேன். இனி விசயத்திற்கு வரலாம். திருவிளையாடற்புராணக்கதை கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இன்று படித்தவர்கள் மட்டுமன்றிப் பாமரர்கள் கூட, ஒருவரைக்குற்றஞ் சாட்டும் போது, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என, கூறி வருகின்றனர். அங்ங்ணமாய்க் கூறுவோர்தம் மனத்தில், நக்கீரன் இறைவனது பாட்டில் குற்றம் கண்டது சரியென்றும், இறைவன் பாடல் குற்றமுடையது என்றும் இறைவன் தன்னையுணர்த்திய பின்பும், சிவனேயாகிலும் குற்றம் குற்றமே என அஞ்சாது நக்கீரர் உரைத்தது, அறிவின் தெளிவால் வந்த திமிர்ந்த ஞானச்செருக்கென்றும் நினைப்புண்டு. அவர்கள், அதுபோலவே தாமும் உரைப்பதாயும் கூறி, தம் வாதங்களை நியாயப்படுத்த முனைகின்றனர். நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே எனும் நக்கீரர் கூற்றை, இன்று மரபுத் தொடராய்ப் பயன்படுத்துவோர், பெரும்பாலும் மேற்சொன்ன கருத்துடனேயே, இத்தொடரைப்பயன்படுத்துகின்றனர். அக்கருத்துப் பிழையானது என்பதை உணர்த்தவே இக்கட்டுரை

Page 14
இந்துசாதனம் 8.,
சிவன்மேற்கொண்ட பக்தியால், நக்கீரரைப் பழிகாணும் முயற்சியோ இதுவெனின், இல்லை, நிச்சயமில்லை. அங்ங்ணமாயின் நெற்றிக்கண்காட்டினும் குற்றம் குற்றமே என்ற, நக்கீரர் கூற்றின் பிழைதானென்ன?
கேள்வி பிறக்கும்
ஆராய்வோம்.
<><><>
இறையனார் தந்த கவிதையை, தருமிகு தமிழ்ச்சங்கத்தார்க்குக் காட்டுகிறான். சங்கத்தில் இருந்தார் அனைவரும் தரம் மிக்கபுலவர்கள் "அளக்கில் கேள்வியார்" என அவர்தமை குறிப்பிடுகிறார் புராண ஆசிரியர். சங்கத்தை அமைத்த பாண்டியனும் தமிழ் வல்லவனே. அவர்கள் அனைவரும் தருமியின் கவிதையைத் தரமென்று பாராட்டுகின்றனர். நக்கீரர் மட்டும் பிழையுரைக்கிறார். பிழையான கவிதையாயின், சங்கத்துப்புலவோர் அதைக்கண்டிக்காமல் விட்டது ஏன்? இதுமுதற்கேள்வி. தருமியின் கவிதை பிழையாயின், அவைக்கு அக்கவிவந்த உடனேயே பிழைசொல்லாமல், அரசனிடம் சென்று தருமி பாராட்டுப் பெற்று, பொற்கிழியை எடுக்கப் போகும்போது, கவிதையில் குற்றம் சொல்லி நக்கீரர் தடுத்தது எதற்காக? இது இரண்டாம் கேள்வி. இக்கேள்விகளை எழுப்பி ஆராய, சங்கத்தலைவராயிருந்த தன்னால் இயற்றமுடியாத கவிதையை, மற்றொரு சிறுபுலவன் இயற்றியதில், நக்கீரர் பொறாமை கொண்டனர் என்பது புலனாகிறது. அப்பொறாமை மெல்லமெல்ல வளர்ந்து, தருமியை அரசன் பாராட்ட அதிகரித்து, பொற்கிழி வழங்கப் பொங்கி வெளிவந்தது போலும், அப்பொறாமைத்தீயே. இறையனார் பாடலிற் பொருட்குற்றம்காணத் துணையாயிற்றோ? <><><> இனி, இறையனார் அவைக்கு வந்து, என்பாடலிற் பிழையென்ன? என்று கேட்க, பொருட்குற்றம் என்கிறார் நக்கீரர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை. இதுநக்கீரர் வாதம், மணம் இயற்கையாய் இருப்பதாய்க் குறிப்பினாற் கூறும், இப்பாடற் பொருள் பிழை என்கிறார் நக்கீரர். இங்கும் ஒர் கேள்வி பிறக்கிறது. பெண்ணென்பது ஒர் பிறவி வகையே எனினும், அதனுள் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என வேறுபாடுண் டென்று, இன்பநூல்கள் பேசும். ஆதலால் இப்பிரச்சினையில், சாதி ஒருமையால் நீதியுரைக்க முடியாதென்பது தெளிவு.

2OO விகிர்தி ஐப்பசி 01
அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என, நக்கீரர் கூறுதல் எங்ங்ணம்? நக்கீரர் இல்லறத்தார் ஆயினும், ஒரு பெண்ணின் கூந்தல் பற்றி உரைக்கவே, அவர்க்கு உரிமை உண்டு. பலபெண்களைக்கூடி அவர்தம் இயல்பறிந்து உரைக்கும் வன்மை, இன்பத்துறையில் எளியரானார்க்கே கைகூடும். கல்விச்சிறப்பாலும் ஒழுக்கத்தாலும், தமிழ்ச்சங்கத்தின் தலைமையேற்றநக்கீரர், அங்ங்னம் இன்பத்துறையில் எளியராய் இருந்திருக்க நியாய மில்லை. அப்படியிருக்க, பெண்கள் கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா? எனும் பொதுப்பிரச்சினையில், இல்லையென உறுதிபடக்கூற நக்கீரரால் எப்படிமுடிந்தது? இறையனார்கவியிற் குற்றம் காணும் நோக்கத்தால், தன் அறிவுக்கு உட்படாத விடயம் எனத்தெரிந்தும், நக்கீரர், இறையனார் பாடலிற் பிழை கண்டிருக்கிறார் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
<><><> மேற்சொன்ன வாதத்தினைக் கடந்து, நூலறிவால் பெண்கள் கூந்தலுக்கு இயற்கை வாசனை இல்லை என்பதை, நக்கீரர் தெரிந்திருந்தார் எனக்கொள்ளினும், அம்முடிவு இவ்வுலகில் வசிக்கும் மானுடப் பெண்களைப் பற்றியதாய்த்தான் அமைய முடியும். இறையனார் தெய்வப் பெண்களைப் பற்றிக் கேட்கவும், நக்கீரர் அவர் கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லை என வாதிடுவது, நிச்சயம் அறியாமையின்பாற்பட்ட வாதமே. அவ்வாதமே அவர்தம் மனக்கோட்டத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
<><><> படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும், ஐந்தொழிலைச் செய்பவன் அப்பரமன். வரம்பில் ஆற்றலுடைமை கொண்ட அப்பரமன், எப்பொருளையும் எப்படியும் படைக்கவல்லான். தமிழைத் தெளிவுறக்கற்று தமிழ்ச் சங்கத் தலைமை ஏற்ற நக்கீரர், தமிழ்நூல்கள் கூறும் மேற்சொன்ன கருத்துக்களை அறியாதவர் அல்லர். அப்படியிருக்க, இறைவன் நெற்றிக்கண்ணைத்திறந்துதன்னை இனங்காட்ட, வந்தது பரமன் எனத்தெரிந்த பின்பும், அவனே இவ்வுலகைப் படைத்தவன் என்பதறிந்தும், அவன் நினைத்தால் எப்பொருளையும் எப்படியும் படைக்கமுடியும் என்பதறிந்தும், அவன் படைத்த உலகியல்பை, அவனை மறுத்துத் தானுரைப்பது தவறென்றுணராது, நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே எனக்கூறிநின்ற நக்கீரர்

Page 15
இந்துசாதனம் 8C
செயல், அறிவாணவத்தின் உச்சநிலை அறியாமையின் உச்சநிலையுமாம். இறைவன்தன்கவிதையை, தருமியின் கவிதையாய்க் கொடுத்தனுப்பியது குற்றம் அல்லவா? கேள்வி பிறக்கும், கற்றோர் அவையில் கரவியற்றும் இச்செயல், மற்றோர் செய்தால் குற்றமே. இறைவன் உலகில் எப்பொருளோடும், ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்பவன். அத்தகுதி கொண்டதால், தருமிவடிவிலும், பரமன் பதிந்தே நிற்கிறான். அஃதுணர, தன்கவிதையை மாற்றானிடம் கொடுத்தனுப்பியது குற்றம், எனும் கூற்று, இறைவற்குச் செல்லாது என்பதறியலாம்.
<><><> இச்சம்பவம் நடந்தது மதுரையில், மதுரை முழுதாண்டு மாண்புடன் நிற்கும் மீனாட்சி அருகிருக்க, நக்கீரரிடம் கேள்வியெழுப்பும் சிவனார், அவ்வன்னை கூந்தலுக்கு வாசனையுண்டோ எனக் கேளாது, எங்கோ இருக்கும் காளத்தியான்தேவி ஞானப்பூங்கோதையின் பெயர் சொல்லி, அவள் கூந்தலுக்கு மணம் உண்டோ எனக் கேட்பது ஏன்? ஞானமே வடிவான செறிந்த கூந்தலைக் கொண்டவள் என்பது, ஞானப்பூங்கோதை எனும் பெயரின் விளக்கம் ஞானவடிவத்தில் புறப்பொருள்கள் கலத்தல் கூடுமோ? கூடாதென்பது திண்ணம். கூந்தலுக்கு மணம் உண்டு என்பதை ஒப்பும் நக்கீரர், அம்மணம் புறப்பொருள்களின் கலப்பால் செயற்கையாய் அமைந்தது என்றே, வாதம் செய்கிறார். அது உண்மையாயின், புறப்பொருள்களின் கலப்பு சாத்தியமாகாத, ஞானமே வடிவான அன்னை கூந்தலில்,
கிளிநொச்சியிலிருந்து ஒரு வேண்டுகோள்ா
1952ஆம் ஆண்டளவில் சுவாமி சுத்தானந்த பாரதியாரால் சொத்துக்கள், ஆவணங்கள் பலவற்றை இழந்த நிலையிலும், கைப்பற்றிய இராணுவம், இன்றுவரை அதைத்திருப்பிஒப்படைக்கை
மகாதேவா ஆச்சிரமம், குருகுலம், காந்தி நிலையம் போன்ற முடியவில்லை. யோகர்சுவாமி திருவடி நிலையம், இந்து இளைஞர் வன்னிமாவட்டங்களின்நிலையும் இதுதான்.
மதமாற்றம் என்னும் பேய் வேறு வடிவங்களில் இங்கு புகமு தக்க பிரசாரம் செய்யவேண்டும். இந்துமாமன்றம், சைவ ! செயற்படவேண்டும். அறநெறி வகுப்புக்களில் சைவப் புலவர்க சிறுவர்களின் சமய உணர்வை மேம்படுத்த உதவும். பத்திரிகைக சமய
சென்ற புரட்டாதி "இந்துசாதனம்" இதழில் வெளியான எச்சரிக்கின்றது.
திருநெறிக் கழகம் கிளிநொச்சி.

D2OO விகிர்தி ஐப்பசி O
வாசனை செயற்கையால் அமைவது எங்ங்ணம்? இக்கேள்வி பிறக்க, அன்னை கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டென்பது புலனாகும். அது புலனாக அன்னையின் வடிவான பெண்கள் கூந்தலும், இயற்கை மணம் கொள்ளும் என்பதுணரலாம். நக்கீரர் இவ்வறிவைப் பெற்றேனும், தன்பிழை திருந்தட்டும் எனும் கருணையினாற்தான், இறையனார், அருகிருந்த அன்னை மீனாட்சியைத் தவிர்த்து, ஞானப்பூங்கோதையின் கூந்தலுக்கும் மணமில்லையோ எனக் கேட்டனர்போலும் தன்விருப்புக்குரிய மாணவன் பதில்கூறி வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காய், விடைக்குறிப்புக் கொண்ட வினாவை ஆசிரியன் கேட்பது போன்றதாய், ஆண்டவன் செயல் அமைகிறது. அவ்வருட்பெரும் கருணையுணராது நக்கீரனார், அன்னை கூந்தலும் செயற்கை மணமுடையதே எனச்சாதித்துப்பழிகொண்டார்.
<><><>
மொத்தத்தில், இறையனார் நெற்றிக்கண் காட்டவும் மெய்யுணராது, குற்றம் குற்றமே என உரைத்து நிற்கும் நக்கீரனார் கூற்று, அறிவுத்தெளிவால் விளைந்ததல்ல. ஆணவச்செறிவால் விளைந்தது. அஃதுணராது, இன்றும் குற்றம் குற்றமே எனப்பேசி, நக்கீரர் போல் தாமுமென நினைவார், நக்கீரர் வார்த்தைகளின் குற்றம் உணர்தல் அவசியம். நக்கீரர்தம் கூற்றாய்வரும், குற்றம் குற்றமே! எனும் தொடரின் முடிவில்வரும் ஏகாதரத்திற்கு, தேற்றப் பொருள் கொடுப்பது தவறு. வினாப்பொருள் கொடுப்பதே, அறிவுடையார் கருத்துக்குப் பொருத்தமாம்.
"குற்றம் குற்றமே
முற்றுப்பெற்றது.
ம், கிளிநொச்சியில்ஆருமூழுககப்பட்ட திருநெறிக் கழகம், தன் இன்றும் இயங்கிவருகின்றது. பணிமனை இருந்த காணியைக் ിടbങ്ങ6.
வை இயங்கினாலும், அவற்றால் பழைய ஆற்றலுடன் செயற்பட TTLML GTTTLL MLL sTLLT LCLLLT TLeLeLeT T TTLMLS
உயும். அவற்றைத் தடுத்து நிறுத்த, சைவசமயப் பிரசாரக் குழுக்கள், பரிபாலனசபை இவ்வேண்டுகோளைக் கவனத்தில் எடுத்துச் ள் சமூகமளித்து உண்மையான சமய நெறியைப் போதிப்பது, பச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
ன ஆசிரியத் தலையங்கள் உண்மைநிலையை எடுத்துக்காட்டி
வே. மகாலிங்கம், தலைவர்.

Page 16
இந்துசாதனம் 8.
ஆணவமும் இறைவனும் 149. ஆணவம் அறிவை மறைப்பது ஆகலின், அஃது இறைவனது ஞானத்தையும் மறைத்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஆன்மாவின் அறிவை மட்டும் மறைத்தல் ஏன்? சிவமும் சீவனும் அறிவுப் பொருளாயினும் அவற்றிடையே உள்ள வேறுபாடு பெரிது.
சிவத்தினது அறிவு நுண்ணிய பேரறிவாகும். அது சூக்கும சித்து எனப்படும். சீவன் ஆகிய உயிரினது அறிவு பருமையான
சிற்றறிவாகும். அது தூல சித்து எனப்படும்.
பருப்பொருளாகிய ஆணவ மலம் தூல அறிவைப் பற்று மேயன்றிச் சூக்கும அறிவைப் பற்றமாட்டாது. அதனால் சிவம் "அநாதி முத்த சித்துரு" எனப்படும். அஃதாவது, இயல்பிலே கட்டின்றி நிற்கும் அறிவுப் பொருளாகும். சீவன் "அநாதி பெத்த சித்துரு" எனப்படும். அதாவது இயல்பிலே பாசத்திற் கட்டுண்டு நிற்கும் அறிவுப்பொருளாகும்.
இதனை விளக்கிக்கொள்ளுதற்குக் கடலும், அதன் கண் உள்ள நீரும், அந்நீரைப் பற்றியுள்ள உப்பும் என்னும் உவமையைக் காட்டுவர்.
கடல் என்பது நீருக்கு இடம்கொடுத்து நிற்கும் வெளி. அது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு அதனைப் பற்ற மாட்டாமல்,பருமையானதாக விளங்கும் நீரையே பற்றிநிற்கிறது.
சைவசித்தா முனைவர் ஆ.ஆனந்தராசன்
அதுபோலச் சிவமாகிய முதற் பொருள் மிக நுண்ணியது ஆகலின் பருப்பொருளாகிய ஆணவம் அதனைப் பற்ற மாட்டாமல், பருமையானதாய் உள்ள உயிரையே பற்றுவதாயிற்று.
இவ்வுவமையால், கடலாகிய வெளிக்கும் உப்புக்கும் யாதோர் இயைபும் இல்லை யாதல் போலச் சிவத்திற்கும் அஞ்ஞானத்திற்கும் யாதோர் இயைபும் இல்லை என்பது விளங்கும்.
இடையில் உள்ள நீருக்குக் கடலோடும் இயைபு உண்டு; உப்போடும் தொடர்புண்டு. அதுபோல இடைப்பட்டதாகிய உயிருக்குச் சிவத்தோடும் இயைபுண்டு; அஞ்ஞானத்தோடும் இயைபுண்டு என்பதும்புலனாகும்.
ஆணவம் அறிவை மறைப்பதாகலின் அஃது இறைவனது அறிவையும் மறைத்தல் வேண்டும். அஃதின்றி, ஆன்மாவின் அறிவை மட்டும் மறைத்தல் ஏன்? என்ற உனது ஐயத்தை மற்றுமோர் உவகையாலும் தெளிவிக்கலாம்.
சூரியனது ஒளிபேரொளி ஆகையால் இருள் அதனை மறைக்க மாட்டாது. ஆனால் கண்ணினது ஒளி சிற்றொளியாய் இருப்பது. ஆகையால் அதனை மட்டும் இருள் மறைக்கிறது.
அதுபோல, இறைவனது ஞானம் சூக்கும ஞானம் ஆகையால் ஆணவம் அதனை மறைக்க மாட்டாது; ஆன்மாவின் ஞானம் தூல ஞானம் ஆகையால் அதனை மட்டும் மறைக்கின்றது என அறிந்துகொள்.

D2OO விகிர்தி ஐப்பசி O
ஆணவத்தின் பொதுவியல்பு
150.ஆணவத்தின் பொதுவியல்புயாது?
சகல நிலையில் ஆணவ மலத்தோடு மாயை கன்மங்கள்
சேர்ந்து செயற்படுவதால் ஆணவம் முழுமறைப்பைச் செய்ய
மாட்டாது அதன் சத்திசிறிது பெறுகிறது.
இருள் செறிந்த அறையிற் சிறுவிளக்கினை எடுத்துச் சென்றால் இருளின் செறிவு சிறிது குறைந்து அங்குள்ள பொருட்கள் சற்றே புலப்படுகின்றன. அந்நிலையில் இருள் விளக் கொளியோடு சேர்ந்து, அவ்வொளியாற் புலப்படும் காட்சியைத் திரிபுக் காட்சியாகச் செய்கிறது.
நாம் ஏதேனும் ஒரு பொருளைத் தேடி எடுக்க அவ்வறைக்கு வந்திருப்போம். அதோ, அந்த மூலையிற் கிடக்கிறதே என்று விரைந்துபோய் எடுத்தால் அது தேடி வந்த பொருளாக இருக்காது. வேறொன்றாக இருக்கும்.
வேறொரு பொருளை, தேடி வந்த பொருளாகக் கருதும்படி திரிவுபடுத்திக் காட்டியது எது? ஒளியா? இருளா? ஒளியின் இயல்பு எப்பொழுதும் எதையும் விளக்கிக் காட்டுவதுதான். எனவே, இருள் தான் ஒளியோடுகலந்த மயக்கக் காட்சியை உண்டாக்கி அங்ங்னம் திரிபுபடுத்திக் காட்டியது எனலாம்.
அது போலச் சகல. நிலையிலும் ஆன்மாவிடத்தில் உள்ள ஆணவமாகிய இருள், மாயை கன்மங்களாகிய ஒளியால் ஆன்ம
(இந்துசாதனம்- புரட்டாதி மாதம் 2010 - 10ஆம் பக்கத் தொடர்)
SVZ 深
அறிவில் ஏற்படும் விளக்கத்தைத் திரிபுபடுத்தி மயக்கவுணர்வை உண்டாக்குகின்றது. பொருள்களின் இயல்பைத் தவறாக உணரச் செய்கின்றது. இழிந்த பொருளை உயர்ந்த பொருள்போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள்போலவும் காட்டிச் சகல நிலையில் மெய்யுணர்வு தோன்றாமல் விபரீதவுணர்வு தோன்றும்படி செய்கிறது.
இவ்வாறு ஆணவம் விபரீத அறிவைத் தரும்போது அத்தவறான அறிவையே சரியான அறிவை ஆன்மாவுக்குக் காட்டி நிற்கும். பலர் தமக்குத் தீங்கு பயக்கும், தவறான பழக்கத்தை-அது தீங்கு தரக் கூடியது என்று தெரிந்தும்- மேற்கொண்டு ஒழுகுவதைக் காண்கின்றோம்.
இது தீமைதரக் கூடிய ஒரு பழக்கந்தான். ஆனால், நமக்கு அதனால் கெடுதல் ஒன்றும் வந்துவிடாது. அதனால் நாம் எவ்வளவு நன்மைகளை அடைகின்றோம்! எவ்வளவு சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கமுடிகிறது! அது நம்மை என் செய்து விடும்?’ என்று இப்படித் தமது போக்கிற்கு ஏற்றபடி, தமக்குப் பிடித்தமான முறையில் எண்ணிக்கொண்டு அப்பழக்கத்தை விடாமற்கைக்கொள்வார்கள்.
இவ்வாறு ஆணவமலம் பொருளியல்பைத் தவறாக உணரச்செய்து, அதனையே சரியான அறிவுபோலக் காட்டிநிற்பது காரணமாகவே உயிர்கள் அறிவு மயங்கித் துன்பத்தை
அடைகின்றன.

Page 17
இந்துசாதனம் 8,
பாலை உடைய பாத்திரத்தின்மேல் அமர்ந்திருந்த பூனை பக்கத்துச் சுவரிலே ஒடிய கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் உயர்ந்ததாகிய பாலை மறந்தது; இழிந்ததாகிய கரப்பான் மீதே அதன் நாட்டம் சென்றது. பாலைப் பருக விரும்பாமற் கரப்பானைத் தாவிப் பிடிக்க முயன்றது. அதுபோல, ஆணவத்தின் சக்தி செய்யும் மயக்கவுணர்வாலே உயிர்கள் உயர்ந்ததில் வெறுப்பும், தாழ்ந்ததில் விருப்பும்கொண்டு, இன்பத்தை அடைய முயல்வதாக எண்ணிக் கொண்டு துன்பத்தையே அடைகின்றன.
இவ்வாறு சகல நிலையில் விபரீத உணர்வைமயக்கவுணர்வை உண்டாக்கும் ஆணவ மலத்தின் சத்தி அதோ நியாமிகா சத்தி எனப்படும். கீழ்நோக்கிச் செலுத்தும் சத்தி என்பது அதன் பொருள். அது- கீழே, நியாமிகா- செலுத்துவது. இது தமிழில்வீழ்க்கும் ஆற்றல் எனப்படும்.
ஆன்மா தன்னை நோக்க விடாது தடுத்து, உலகப் பொருளையே நோக்கும்படி செய்வது இவ்வாற்றலாகும். இவ்வியல்பு ஆணவத்திற்குப் பொதுவியல்பு எனப்படும் தடத்த இலக்கண
DITELD.
ஆணவமலத்தின் உண்மையியல்பு 151. ஆணவமலத்தின் உண்மையியல்புயாது?
அஞ்ஞானத்தை - அறியாமையைச் செய்வதே ஆணவத்தின் தன்னியியல்பு அல்லது உண்மையியல்பு ஆகும்.
உயிர்களின் முதல்நிலையாகிய கேவல நிலையில் மாயை கன்மங்களின் செயற்பாடு இன்மையால் ஆணவமலம்தான் தனியே நின்று தனது மறைத்தல் தொழிலைத் தடையின்றிச் செய்யும்.
அது கண்ணை மறைக்கின்ற இருள்போல ஆன்மாக்களின்
மிகச் சிறந்த சமய தத்துவம் என்ற பெருமைக்குரிய ை விளங்கிக்கொள்ளும் வகையில் qpGoGoroiữ அ.ஆனந்த 17 மாதங்களாக 2009 வைகாசி இதழிலிருந்து ஒவ் வாசகர்களுக்கு நினைவூட்டுகின்றோம். பழைய பிரதிகே
யாழ்ப்பாணம் என்றமுகவரியிலுள்ள சைவபரிபாலனசன
அறிவு இச்சை, செயல் என்னும் மூன்றினையும் ஒரு சிறிதும் நிகழவொட்டாது தடுத்து, ஆன்மா என்பதொரு பொருள் உண்டு என்பதே தோன்றாதபடி அவைகளைச் சடம்போல ஆக்கி, அறியாமையுட்படுத்தி அறியாமையே வடிவமாகச் செய்யும். இங்ங்ணம் ஆணவத்தின் சத்தி ஆன்மாவின் அறிவை முழுவதுமாக மறைத்துப் பேரறியாமையைத் தரும்போது‘ஆவாரக சத்தி’ என்று கூறப்படும்.
ஆவாரகம் - மறைத்தலைச் செய்வது. இதுவே ஆணவத்தின் சொரூபநிலை அல்லது இயற்கை நிலை,
ஆணவமலம் நீங்குதல் என்பதன் பொருள் 152. ஆன்மாவைப் போல அதனைப் பற்றியுள்ள ஆணவ மலமும் வியாபகப் பொருள். ஆதலால், ஆணவம் இடம்பெயர்ந்து ஆன்மாவை விட்டு நீங்கிச்செல்லுதல் என்பது நடவாது. ஆகவே அஃது எக்காலத்தும் ஆன்மாவோடு கூடியேயிருக்கும் என்றுதான் கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறாயின், ஆனவ மலம் ஆன்மாவை விட்டு நீங்குதல் எப்படி?
ஆணவமலம் நீங்குதல் என்பது அஃது ஆன்மாவைவிட்டு இடம் பெயர்ந்துநீங்கிச் செல்லுதல் அன்று. அதன் சத்தி கெடுதலேயாகும்.
சத்தி கெடுதல் என்றால் சத்தி அறவே இல்லாது அழிந்தொழிதல் அன்று. சத்தி என்பது பொருளின்குணம். ஆதலால் ஆணவத்தின் குணமாகிய சத்தி அழியுமாயின்

D2OO விகீர்தி ஐப்பசி O
ஆணவமாகிய பொருளும் அழிந்துவிடும் என்று கொள்ள நேரிடும். என்றுமுள்ள, நித்தப் பொருளாகிய ஆணவத்திற்கு அழிவு கூறுதல் பொருந்தாது.
சத்தி கெடுதல் என்பதற்குச் செயலிழந்து நிற்றல் என்பது தான் பொருள். முத்தி நிலையில் ஆன்ம அறிவில் முற்பட்டு நிற்கும் பேராற்றல் ஆகிய திருவருட்சத்தியின்முன் ஆணவமலத்தின் சத்தி செயலிழந்து மடங்கி நிற்பதாகும். சூரியனது பேரொளியின்முன்னர் இருள் தலையெடாது அடங்கிக் கிடத்தல் போன்றது இது.
அங்ங்ணம் ஆணவமலத்தின் சத்திசெயலற்று நிற்குமிடத்து ஆணவ மலம் இருந்தும் இல்லைத் தானே. அதைத்தான் ஆணவ மலம் நீங்கிற்று என நூல்கள் கூறுகின்றன.
5. தளை (கன்மம்)
வினை உண்மை 153.கன்மம் அல்லது வினை என்பது உண்டு என்பதை
எவ்வாறு அறிவது? தோன்றி அழிவன யாவும் காரியங்கள் என்பதை முன்னே கூறியுள்ளோம். நாம் நுகரும் இன்பங்களும் துன்பங்களும் நம்மோடு என்றும் இருப்பவையல்ல. அவை ஒரு காலத்தில் வந்து, மற்றொரு காலத்தில் நீங்கி விடுகின்றன. இவ்வாறு தோன்றிப்பின் நீங்கியொழிகின்ற இன்ப, துன்பங்கள் யாவும் காரியங்களேயாகும்.
காரியம் எதுவாயினும் அதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். காரணம் இல்லையேல் காரியம் நிகழாது. அம்முறையில், உயிர்களுக்குவரும் இன்பமும் துன்பமும் காரியங்கள் ஆதலின்
சவ சிந்தாந்தத்தைச் சாதாரண வாசகர்களும் நன்றாக girfoir எழுதியுள்ள இந்தவினா བ་ விடைத் தொடர்சென்ற வொரு மாதமும் இடம்பெற்று வருகின்றது என்பதை ள் தேவைப்படுவோர், இல. 68 கல்லூரி விதி, நீராவியடி oபயுடன் தொடர்புகொள்ளலாம்.
அவற்றிற்குக் காரணம்இருத்தல் இன்றியமையாதது. அக் காரணமே கன்மம் அல்லது வினை என்று சொல்லப்படுகிறது.
154.இன்ப, துன்பங்கள் வருவது இயற்கை என்று கொண்டால் என்ன? அதற்குப்போய் வேறொரு காரணத்தை ஏன் தேட வேண்டும்?
என்றும் ஒரு தன்மையாய் இருப்பதுதான் இயற்கை. மாறுதல் அடைவது இயற்கையாகாது.
நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதால் அத்தன்மை அதற்கு இயற்கையாகும். சில சமயங்களில் நீர் சூடாக இருக்கும். ஆனால் அச்சூடு எப்பொழுதும் இருப்பதில்லை. சிறிதுபொழுது இருந்து பின் நீங்கிவிடும். ஆதலால் சுடும் தன்மை நீருக்குச் செயற்கை. அச்செயற்கைத் தன்மை நெருப்பாகிய காரணத்தால் வந்தது.
அதுபோல இன்பம் உயிருக்கு இயற்கை எனின் அஃது உயிரை விட்டு எப்போதும் நீங்காதிருத்தல்வேண்டும். அவ்வா றின்றி, இன்பம் நீங்கிவிடக் காண்கின்றோம். துன்பமும் இவ்வாறே வந்து நீங்குவதைக் காண்கின்றோம். ஆதலால், இன்ப, துன்பங்கள் உயிர்களோடு என்றும் இருக்கும் இயற்கைப் பொருட்களல்ல. அவை காரணத்தால் வந்து பொருந்திய செயற்கையே யாம். உலகில் உயிர்கள் அடையும் இன்பத் துன்பங்களுக்கு அவை முன்செய்த வினையே காரணமாகும். ിgി.

Page 18
இந்துசாதனம் 8.
33O.
33.
332.
333.
334.
3.35.
336.
337.
338.
339.
340.
341.
நாவலர் சரிதமோது
கவிஞர் திரு. இரா (இந்துசாதனம் - 2010 புரட்டாதி -
இந்திர லோகமாக விலங்குயாழ்ப்பாண மெங்கும் மந்திரவொலியும் சைவ ஆகமங்களினா ராய்வும் சந்ததங்காலை செய்யும் சதாசிவ லிங்க பூசை
நந்திருமுறைபுராணம் நவின்றிடுமொலியினோடு
சிவனது பூசையாற்றச்சிறப்பினதாகவுள்ள பவரவரகலவென்றே பாவிகை மணியோ சையும் குவலயம் பரவியாளக் குலவுவை திகர்கள் தாள தவருரை சைவ மார்க்கம் தழைத்ததித்தரணியோங்கி.
காவலிற் சைவ மார்க்கம் கவினுறப் பரப்பு தற்கே தேவனினருளினாலே திருஅவதாரஞ் செய்தே மேவிடுமாறு வாற்ற மிகுபிரசாரஞ் செய்யும் நாவலர் கீர்த்தி மேலும் நாடெலாமோங்கிற்றம்மா.
நற்றவர் வயசு வந்து நாற்பது வாகும் போதே சிற்பரன் நெறியதாம்சிவாகமம் பரவியோங்கும் பொற்றிருப்பணியையிந்தப் புவிநனயாற்ற வைத்த அற்புதனருளை நாங்களார்க்கெடுத்துரைப்ப மம்மா.
இறுதிஇந்தியப்பயணம் (1863-1870) அறுபதொ டெட்டுவந்தேயணையுமார்கழியில் வையம் நிறுவிடு சாலை (யிரண்டின் நிர்வாகப் பொறுப்பை யெல்லாம் உறுநிதிதில்லையர்கையொப்புவித்ததன்பின்னாலே குறுகிய பயணமாக கொழிசென்னை செலவிழைந்தார்.
நண்ணிவந்தணையுந்தைமாதத்தினர்த்தோதயத்துப் புண்ணிய காலந்தன்னில் புகழுள சேதுஸ்நானம் பண்ணிடு மாசை யாலே பன்னுராமேஸ்வரம்போய் எண்ணியதியற்றிச் சுவாமி எழிற்தரிசனமுங் கண்டார்.
மாசியிற் சிவனையேத்துமாசிவராத்திரிக்குத் தேசுடைமதுரை சென்றே தொழுதிட வேண்டுமென்று நேசர்தன் நினைவைத்தேக்கி நீடருள் பதியை நீங்கிப் பேசரி (இராமநாதபுரத்திற்குப் போயினார்கள்.
நாவலரும்தேவரும் (8649 அங்கமர் கிளைய தாமா வடுதுறை மடத்திற் கேக தங்கருள் விசுவலிங்கத்தம்பிரான் வேண்டவாங்கே தங்கிய போது மந்தச் சமஸ்தானத்ததியராகப் பங்கமுள் பணிசெய்வாரைப் பார்த்திடவிரும்பவில்லை.
சென்னையிலிருந்தபோது சேர்ந்திருபொன்னுச்சாமி என்னுமித் தேவருக்கும் இவருக்குமிடையிலாங்கோர் பன்னிடுவிடயமொன்றால் பாருறு வருத்தத்தாலே அன்னவர் சமஸ்தானத்துக்கிவர்செலவிழையவில்லை.
நாவலர் வரவும் பார்க்கநண்ணிடாச்செயலும் வையக் கோவெனுந் தேவர் தேர்ந்து குறித்ததையறியுமாறு பாவல ரொருவனாரைப் பதியுளமடம தேகி ஆவலையுரைத்துப் பாங்கை யறிந்திடு மெனவிடுத்தார்.
வன்றிறல் வித்து வான்நல் வார்த்தைகள் அளவளாவிப் பின்றிகழ் தேவரைப்போய்ப்பார்த்திடல் முறைமை யாமே என்றவர் மொழியக் கேட்டு இளநகைமுகத்தராகிச் சென்றவர்தம்மைப் பார்க்கச் சிந்தையதில்லையென்றார்.
என்னிவர் புகன்றாரென்றே எழுந்துசெல் வித்துவானார் அன்புடைத் தேவர் முன்போயனைத்தையும் விளம்பிநிற்ப நன்றெனச் சிரித்த பின்பு நாவலர் முன்பு நாளை சென்றெம சிறப்பை வெயலாம் செப்புமினெனவுரைத்தார்.

0.2OO 6fiá55 eủuáF OI
juh
நற்றமிழ் மாலை
சையா குகதாசன்
07 ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.)
342.
343.
344.
345.
346.
347。
348.
349.
350.
35.
352.
353.
அம்பரன் நெறியெடுத்தே அவனியருய்ய வோதும் செம்மனரென்றே பொற்றிச்செகமது வேற்றும் சீலர் நம்முடைதேசம் வந்தே நம்மைக்காணாது போயின் வெம்பவமான மன்றோ வேண்டிடும் மீண்டுமென்றார்.
வாள்வலிமிக்க தேவர் வார்த்தையையேற்றுப் பின்னோர் நாளினில் வித்துவானார் நாவலர் திருமுன்சென்றே ஆளிடுவோரைக் காண்தன்னகத்துள கருமங் கூற தாளினைப் பணிந்து வாழார் தான்வரவில்லையென்றார்.
மறுத்திடு சேதி கேட்டமாண்புடைத் தேவர் பின்பும் வெறுத்திலர் மீண்டும் போய்நீர் வருபவழ் சமஸ்தானத்தைப் பொறுப்புடன் சென்று பார்த்தல் பொதுவழக்காகுமென்றே அறத்தவர்க்குரைக்கு மாறே அனுப்பினர் வித்து வானை.
காவலருரைத்ததெல்லாம் கருத்துடன் கேட்டபின்பும் நாவலர் மறுக்க வந்த நாணமில் வித்துவானார் தேவரின் அதிகாரஞ் சொல்அனுமதியின்றியேகல் மேவலர்க்கரிதா மென்றே மிகுபயங்காட்டினார்கள்.
ஆண்டவரொருவர்க்கல்லால் ஆள்பவர் தமக்கு அச்சம் பூண்டிடின் புவிநடாத்தப் பொருந்திடுகரும மெல்லாம் ஈண்டிவர் விரும்புமாறே இயற்றிட வேண்டுமென்றே காண்டவர் வெறுப்பினோடுகாணிட மறுத்து விட்டார்.
அருத்தமில் வார்த்தை கேட்டுவதிசயங்கொண்டேயென்னை விருப்பமதில்லா வொன்றை வேண்டிடல் பிழையதென்றும் ஒருப்பிடலில்லா வேலை உஞற்றிடமாட்டேனென்றும் திருப்பிட வந்த நீரே தேர்ந்திடுமென்று சொன்னார்.
மன்னரென்றாகுதேவர் மக்களின் குறைபோக்காதே அன்னவர்க்கெதிரதாக ஆற்றிடுகிளர்ச்சிக்கெல்லாம் சன்னிதியழுைத்துப் பேசா சர்வாதிகாரமாக
மன்பதையடக்கியாளல் மனுநீதிதானோ வென்றார்.
கிளர்ச்சியிற் காலம் போக்கிக் கீழ்நிலைக்காகுமாந்தர் அளர்ச்சியைப் போக்க வேதும்ஆற்றிடவேண்டுமென்றும் தளர்ச்சியை நீக்கிநாட்டைத் தயவுடனாண்டுநாளும் வளர்ச்சியிற் திழைக்கும் வாழ்வை வழங்கிடவேண்டுமென்றார்.
ஆங்கில வரசு நன்றே அறிந்திடுமறிஞரான பாங்குடை ஒருவனாரைப் போற்றிடல் மூலம் தேவர் ஈங்கவர் சமஸ்தானங்காண் சூழ்நிலையதனினோடு ஆங்குள வரசைக் காக்கவமைதியைத் தரமுனைந்தார்.
முற்றவருரையினாலே முனிவுடைமுகத்தராகி பற்றறு படையையேவி பற்றிலை யென்றே சொன்ன நற்றவர் நாணு மாறு நற்சபை கொணர்கவென்றே கொற்றவர் தமக்குரைத்தார் கொடுமண வித்துவானார்.
கற்றவர்தமையழைத்தால் கடுகியெம் சபையை தாடி பொற்கிழியதனை வாங்கிப் போகுவர் மகிழ்வினோடு நற்றவரிவற்றிற்கெல்லாம் நாட்டமற்றிருப்பதாலே சற்சபை வரமறுத்தார் தப்பிலை யென்றே பின்னர்
ஆங்கிலப் புலமைமிக்கார் அறிஞரொடாதீனங்கள் தாங்கொழு சாத்திரங்கள் தருக்கசந்தேக மெல்லாம் நீங்கிடப்பாடங் கேட்கும் நிபுணரென்றுலவலோடு
பாங்குள சென்னை வாழும் பாதிரி மார்களெல்லாம்.
(...فرجxصعله)

Page 19
8.
நாவலர்
செந்தமிழையும் சிவநெறியையும் தன் இரு கண்களாகக் கொண்ட தமிழ் மகன் நாவலர் பெருமான். சிவநெறியின் மறுமலர்ச்சிக்கும், செந்தமிழின் வளர்ச்சிக்கும் கல்வித்துறையில் தமிழினத்தின் விழிப்புணர்வுக்கும், அவர் ஆற்றிய அரும்பணி களுக்காக அவர் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர். ஏற்றிப் போற்றிட வேண்டியவர்.
தமிழ் மக்கள் செய்த தவப்பயனால் கந்தன் கருணையே கந்தப்பிள்ளை தம்பதியினருக்கு ஆறாவது மைந்தனாக ஆறு முகத்தை பிறக்கச் செய்தது. பரசமய இருள்நீக்கும் ஞானச்சுடராக 1822 ல் ஆறுமுகம் அவர்கள் அவதரித்தார்கள். நாவலரது மதிநுட்பம், சமயப்பற்று, தமிழார்வம், நல்லொழுக்கம், தன்னலமற்ற தியாகசிந்தை, வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப்
நயினை நா.
புலமை, ஆகியவையே எதிரி களையும் கவர்ந்த சிறப்பியல்புகளாக அவரிடம் காணப்பட்டன.
சைவமும் தமிழும் காலத்துக்கு காலம் பல எதிர்ப்புக்களுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்திருக்கின்றன. அந்நியர் படையெடுப்பு, ஆதிக்க அடக்கு முறை, சுதேசிய சூழ்ச்சி முதலியன வரலாற்றில் பல தடவை இவற்றை அழிக்க முயன்றும், எல்லா ஆபத்துக் களையும் தாண்டி, சைவமும் தமிழும் வளர்ந்துகொண்டே இருந்தன. இறைவனின் பூரண திருவுளமும், அவனருள்பெற்ற மெய்த்தொண்டர்களின் பணிகளும், சிவநெறியையும், செந் தமிழையும் செழித்தோங்கச் செய்தன. இந்த வகையில் எமது நாட்டில் சைவத்திற்கும், தமிழுக்கும் சென்ற நூற்றாண்டில் ஏற் படவிருந்த பேராபத்திலிருந்து அவற்றைக் காத்த பெருமகன் நாவலர் பெருமான் ஆவர்.
பல்லவ மன்னர் ஆட்சிக் காலத்தில் சமய கலாசார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விடிவெள்ளியாக நாயன்மார்களும் ஆழ்வார்களும் வரலாற்றில் வகிக்கின்ற இடத்தினை, சென்ற நூற்றாண்டில் நல்லை நகர் நாவலர் பெற்றுள்ளார். இதனால் தான் இவரை ஐந்தாம் குரவர் என்ற நிலைக்கு எம் சமூகம் உயர்த்திக் கெளரவித்திருக்கின்றது. அத்துடன் அவரைப்பற்றிய சிந்தனை களையும், ஆராய்ச்சி முடிவுகளையும், சமூகப்பற்றுள்ள எழுத்தா ளர்களும், அறிஞர்களும், ஆய்வாளர்களும் காலத்துக்குக் காலம் முன்வைத்ததன் விளைவாக தேசிய வரலாற்றில், தலை சிறந்த பெரியார் வரிசையில் ஒருவராகவும் மதிக்கப்படுகின்றார்.
 
 

2OO விகீர்தி ஐப்பசி O1"
பெருமான்
யோகநாதன், B.A.
நல்ல கல்வியால் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கலாம் என்ற திடமான நம்பிக்கை நாவலர் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. தமிழ் மொழியின் தனித்துவத்தினை வசன நடையாகவும், கவிதை வடிவாகவும், வினா விடை அமைப்பிலும் அமைத்து நூல்களை எழுதினார். கல்லூரிகளை நிறுவியும், அச்சகங்களைத் தோற்றுவித்தும், சைவ சமயத்தின் தொன்மையையும், தமிழின் சிறப்பையும், மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தி அவர்களை தெய்வீக வாழ்வு வாழும் ஒழுக்கசீலர்களாக ஆக்கினார். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாம்” என்ற பாரதியின் கூற்றுப்போல், தூய்மையான உள்ளத் தோடும், உறுதியான மனத்தோடும், நாவலர் பேசிய பேச்சுக்களும், எழுதிய எழுத்துக்களும், மக்களிடையே தனி மதிப்பையும் பெரும்
ஐந்தாம் குரவர் -யாழ்ப்பாணத்து நல்லூர் முநீலழுநீ
ஆறுமுக நாவலர் அவர்களின் திருவுருவச் சிலை
கொழும்பிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பெற்று நல்லுர்க் கந்தனாலயத்தின் தென் கிழக்குத் திசையில்
உருவாக்கப்பட்ட நாவலர் மணிமண்டபத்தில் 1969
ஜுன் 29ஆம் திகதி பிரதிஷ்டை செய்யப்பெற்றது. சில ஆண்டு களின் பின் நாவலர் கலாசார மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப் பட்ட அத் திருவுருவச் சிலை சென்ற 2010, 08, 31இல் மீண்டும் நாவலர் மணிமண்டபத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையையும் ஊட்டின. மக்களின் அறிவுக்கண் களை அகலத்திறந்து, தமிழ் காத்து, சமயம் காத்த நாவலரின் சேவையின் பரிணாம வளர்ச்சியை நாம் இன்று அனுபவித்துக் கொண்டி ருக்கின்றோம்.
நம்மவர்கள் மதியின்மையால் பிறமதம் புகுந்து சீரழியப் போகிறார்கள் என்ற அச்சமே, நாவலர் அவர்களின் உள்ளத்தில் ஒரு புத்துணர்வை ஊட்டியது. மதமாற்றத்தின் இரகசியம் அவருக்குப் புரிந்தது. மனமாற்றம் இன்றி மதமாற்றம் நடை பெறுகின்றது என்ற உண்மையையும் உணர்ந்தார்.
கிறிஸ்தவர்கள் கல்வி என்ற போர்வையில் மக்களை வசீகரித்து மதமாற்றுகின்றனர் என்பதையும் கண்டார். இதே வழியில் ஏன் நாம் சிவ நெறியின் உள்ளீட்டைக் காட்டலாகாது எனச் சிந்தித்தார். சமயம் பரவ வேண்டுமாயின் பாடசாலைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். கிராமம் தோறும், ஊர்கள் தோறும் பாடசாலைகள் தாபிக்க வேண்டும் என்றும், எண் எழுத்துடன் சமயமும் புகட்டப்பட வேண்டும் என்றும் உணர்ந்தார். அத்துடன் சமயப் பிரசாரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தார். அவரது உள்ளம் என்னும் விளைநிலத்தில் விளைந்த சமய உணர்வென்னும் உணர்ச்சிக் கொடியில் பூத்துக் கனிந்த சிவதர்மங்களே இன்று பரந்து விரிந்து காணப்படுகின்றன. அவற்றை நாம் இன்று விரும்பி ருசித்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். 本

Page 20
இந்துசாதனம் 8,
சென்ற 2009ஆம் ஆண்டில் யாழ் - சைவ பரிபாலனசபை நடத்திய முன்று இடங்களைப் பெற்றவர்களுக்குரிய பரிசளிப்பு விழா 2011 வீதியில் அமைந்துள்ளநாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைெ
* ༼༡༽ (&
FCOL(Buff GD G10005896, ការថ្វាយិកា ឆ្នា២យ៉ា GogoLifiLITopGOrgGOLuoofioបំ pTOGOff{3gnoយ60
முன்பள்ளிச் சிறார்களின் வரவேற்பு நடனம்.
சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஒரு காட்சி. "முத்தா? மாணிக்கமா?" நாடகத்தில் யா/ சாவகச்
சேரி இந்துக்கல்லூரி மாணவர்கள்.
 
 
 

D2OO விகீர்தி ஐப்பசி O]
அகில இலங்கை சைவநெறித்தேர்வில் வகுப்பு ரீதியாக முதல் 09 - 19 ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் நீராவியடி கல்லூரி றபோது எடுக்கப்பட்ட சில படங்களைக் காணலாம்.
តាង៉ាញnOfficó Śថ្ងៃថ្លា Gិញឆ្នាoOF Lm/ groយចំ8ចប្រឹ இந்துக்கல்லூரி அதிபர் திரு. அருணாசலம் sueOTLIិorGoom <១Gរាំយថា លោកំgoo offionចំ (Bយឆ្នា விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.
→\~<র্ণে fall
عيديرية فتح الحج
Lī Goបចំ 68L1OOTOTរាំ ត្វា, 686boOp36160
அவர்கள் உரையாற்றுகின்றார்.
இடமிருந்து வலமாக சபையின் உப தலைவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள், பிரதம விருந்தினர், சபைத்தலைவர் சிவநெறிப்புரவலர் g5. Fodoropeso)liesh 36 lirtsoir, FGOLI3-6lau IGOIT6Irir ឆ្នាញ ទ្រ.g6165TLIT60 <៦៩3LIT BL០GOLuិob அமர்ந்திருக்கின்றனர்.

Page 21
இந்துசாதனம் 8.
அமரர் வி.
"தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே"
எனும் அப்பர்பெருமானின் அருள்வாக்கை நினைவுபடுத்தி அவ்வழியில் நின்று, ஆதுலர் சாலை அமைப்பது முதல் கன்னிகாதானம் வரையான முப்பத்தி இரண்டு அறங்களிற் பலவற்றை மிக அடக்கமாகவும், காலமறிந்தும் செய்துவந்த பண்பாளர் அமரர் விநாசித்தம்பி இராமநாதன்.
புங்குடுதீவு, மடத்துவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் வாழ்ந்தவர். தன் உழைப்பால் உயர்ந்து
பெரும் தொழிலதிபரானவர் அவர்.
யாழ்ப்பாணம், சைவ பரிபாலன சபையின் ஆயுட்கால அங்கத்தவரான அவரின் அன்பான உள்ளம், ஆழ்ந்த அறிவு, ஆற்றல்மிகு செயற்திறன் என்ப வற்றை நன்குணர்ந்த சைவபரிபாலன சபை அவரின் சேவையை நன்கு பயன்
படுத்திக் கொண்டது.
சைவ சமயத்தவர்களின் மூலஸ் தலம் எனப் போற்றப்படும் சிதம்பரத்தில், யாழ்ப்பாணத்தவர்களுக்குச் சொந்தமான புண்ணிய நாச்சி அம்மையார் தர்ம - திருமடத்தின் புத்துயிர்ப்பு பன்னெடும் காலமாக நிலவிவரும், தமிழக - ஈழ, தாய் 鄒 சேய் வரலாற்றின் ஒரு புதிய பக்கமாகும்.
ஏறக்குறைய நூற்றைம்பது வருடங்களின் முன்பு நிறுவப்பட்டதும், ஒலையாலும் நாட்டோடுகளாலும் வேயப்பட்டுப் பழைய நாற்சார கட்டடமாக, சிதம்பரம் மாலைகட்டித் தெருவில், சைவபரிபாலன சபையின் பரிபாலனத்தில் உள்ள இந்தத் திருமடத்தினை நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடிகளைக் கொண்ட எழில்மிகு இறைபயணிகள் இல்லமாக உருப்பெறச்செய்தவர்களில் அமரர் இராமநாதனின் பணி அளப்பரியது.
கதிர்காமரைக் கல்லோடையிலிருந்து கதிர்காமத்துக்கு அழைத் அழைத்துக்கொண்டும் வந்த கந்தப்பெருமான், சந்நிதியில் எவ் நில்லாமல், வேறும் பல சந்தர்ப்பங்களில் கோவிற் பூசைகள், நிர்6 பின்னாற் காணப்படும் திண்ணையில் இருவரும் இருந்து உரைய அதனால் அந்தத்திண்ணையைப் புனிதமாகக் கருதி, அதற்குக் குறு
வெளிவீதி உலாவுக்காகப் பிரதான வாசலால் சுவாமி TTLLTmmeeMTmmLmS mTTmmS kkmmLmmLmmMmLLLS TLTmlmmTTLLmmTmLL LL0kkmmTmmeek
s
2
 
 

D2OO விகீர்தி ஐப்பசி 01
இராமநாதன்
தன் மூதாதையினரால் ஸ்தாபிக்கப்பட்டுச் சிறிய மடாலய மாக இருந்த புங்குடுதீவு மடத்துவெளி பூரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தை ஆகமவிதி முறைப்படி அமைப்பித்து சிற்பத்தேர், தேர்த் தரிப்பிடம், திருக்குளம் என்பவற்றையும் தன் சொந்தச் செலவிலே நிர்மாணித்து, மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கமைந்த திருத்தலமாக மிளிரச் செய்தவர் அவர்.
தான் பிறந்த கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிய அவர், மாணவர்களின் உடல், உள வலிமை உயர் நிலையிற் பேணப்படவேண்டும் எனும் நோக்கில் தனது சொந்தக் காணியை விளையாட்டு மைதானம் அமைப்பதற்காகப் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியா சாலைக்கு நன்கொடையாக வழங்
கினர்.
மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட அவர் இமாலயத்தி லுள்ள ரிஷிகேஷம், பத்திரிகேதார, காசி முதலாய திருத் தலங்களுக்கு யாத்திரை செய்துள்ள துடன், மார்கழித் திருவாதிரை உற்சவத் திற்குச் சிதம்பரம் சென்று, உலகின் பல
பாகங்களில் இருந்துவரும் எம்ம வர்க்குப் பணிசெய் வதைத் தனது வழக்கமாகவுங் கொண்டிருந்தார். \ அன்பர் பணி செய்யத் தன்னை அர்ப்பணித்த திரு. இராமநாதன் அவர் கள் 28.09.2010 அதிகாலையில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தமை பேரிழப் பாகும். அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு " எனது ஒருகையை இழந்து விட்டதுபோல் உணர்கிறேன்” எனச் சைவபரிபாலன சபைத் தலைவர், சிவ நெறிப்புரவலர் திரு. த. சண்முகலிங்கம் அவர்கள் கூறிய வார்த்தைகள் - திரு. இராமநாதன் அவர்களின் மறைவு எப்படியான ஒரு இடை வெளியைச் சபைக் கு ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
மு. நா. நடராசா
துச் சென்றும் , அங்கிருந்து கல்லோடைக்கு அவரைத் திருப்பி ாறு பூசைகள் செய்யப்படவேண்டும் என்பதை விளக்கியதுடன் ாகம் பற்றி அவருடன் உரையாடியதுண்டு. கோவிலில் நந்திக்குப் டினார்கள் என்ற நம்பிக்கை முருகனடியார்களிடம் இருக்கின்றது. $காகவும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவருமே போவதில்லை.
யைக் கொண்டு வந்தால், அந்தத் திண்ணைக்குக் குறுக்கால் புர வாசல் வழியாகத்தான் வெளியேகொண்டுவருகின்றார்கள்.

Page 22
இந்துசாதனம்
ர்வேலி ܕܗ
"பினத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே" என்பது திருநாவுக்கரசு நாயனாரின் திருவாக்கு. மனம், மொழி, மெய்களால் இறைவனை இறைஞ்சிடும் மெய்யடியார் பலரின் எண்ணங்களை இறைவன் என்றுமே நிறைவேற்றுவான் - எளிதில் நிறைவேற்றுவான் என்பதற்குச் சான்று பகரும் நிகழ்ச்சிகள் நமது சமய நூல்களிலும் ஆலய வரலாறுகளிலும் நிறைந்துள்ளன.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டின் முன்னர் நடந்த அத்தகைய நிகழ்ச்சி இது.
நீர்வேலிக் கிராமத்தின் வடபால் வாழ்ந்தவர் செல்லாச்சி
அம்மையார் என்ற முருக பக்தை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் என்றும் கந்தப் பெருமானையே நினைத்து வாழ்ந்தவர்.
பசியால் வாடித் தன்னிடம் வருபவர்கட்கு ருசியாக உணவு கொடுப்பதில் என்றுமே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தவர். பலா மரமென்று அவருடைய வளவில் செழித்து வளர்ந்திருந்தது. அந்த மரத்தின் முதற் பழத்தைக் கதிர்காமக் கந்தனுக்குக் கொடுக்க வேண்டும் என நேர்த்தி வைத்திருந்தார் அவர்.
உரிய காலத்தில் அந்த மரத்தியிலேயே காய் ஒன்று தோன்றியது; காலப் போக்கில் முற்றிக் கனிந்துவிட்டதையும் அவர் கண்டார்.
உடனடியாக அதை இறக்காவிட்டால் காகங்களும் குருவிகளும் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிடும்!
 

O2OO விகிர்தி ஐப்பசி 01
ல்லக்கதிர்காமம்
*- ចyo00Tòr
மலர்ச்சி அடையவேண்டிய அம்மையாரின் மனத்தில்
இப்பொழுது ஒரு தளர்ச்சி - குழப்பம் - நேர்த்தியை நிறை வேற்றுவது எப்படி?
கால் நடையாகவோ கட்டை வண்டியிலோ, கரிக் கோச்சியிலோ கதிர்காமம் செல்வது தான் அந்தக் காலத்து நடைமுறை உடனடியாகப் புறப்பட்டாலும் கதிர்காமத்தை அடைவதற்கு எத்தனையோ நாள் எடுக்குமே! அந்தப் பழத்தைப் பத்திரமாகக் கொண்டு செல்வதும் முருகனுக்குப் படைப்பதும்
சாத்தியமா?
முயற்சி எடுப்பது என் கடமை - அதை முற்றுவிப்பது
முருகன் பொறுப்பு என்று நினைத்தாரோ என்னவோ
பலாபழத்தை மரத்திலிருந்து இறக்குவித்தார் அவர்.
அதைச் சுத்தமாக்கி விட்டுக் கையில் தூக்கிக்கொண்ட மறுகணம்
கதிர்காமத்தில், மாணிக்க கங்கைக் கரையில் தான் நிற்பதை உணர்ந்தார்!
மெய் சிலித்தது!
கங்கையில் நீராடிவிட்டு, பழத்துடன் கோவில் வாசலுக்குச் சென்றார்; பழத்தை இரண்டாக வெட்டிக் கந்தனுக்குப் படைத்தார்; கண்களில் நீர் கசியக் கந்தனை வணங்கினார்.
அடுத்த நிமிடம்

Page 23
இந்துசாதனம் 8.
பாதிப் பலாப்பழம், விபூதி, மாவிளக்கு, வேல், யந்நதிரம், கதிர்காமத் தீர்த்தம் ஆகியவற்றுடன் மீண்டும் தன் வீட்டு முற்றத்தில் ஈரத் துணியுடன் நிற்பதை உணர்ந்தார்!
خم
முருகப் பெருமானின் அருட்குறிப்பை நன்கு தெரிந்து கொண்டு, தன்னுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சகோதரி சின்னாச்சி அம்மையாரின் உதவியுடன் வீட்டு வளவிலுள்ள நெல்லி மரம் ஒன்றின் கீழ் ஒரு கொட்டிலில் வேலாயுதத்தையும் யந்திரத்தையும் அவர் பிரதிஷ்டை செய்து தினமும் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினார் செல்லாச்சி
அம்மையார்.
முருகன் அருள் தூண்ட இருவரும் வீடு வீடாக, ஊர், ஊராகச் சென்று பணமும் பண்டமும் சேகரித்து மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் கோவில் ஒன்றைக் கட்டுவித்து 1936ஆம் ஆண்டிலே சிவாச்சார்ய திலகம் சிவபூீ க. தியாகராஜக் குருக்கள் அவர்களைக் கொண்டு பிரதிஷ்டா கும்பாபிஷேகத் தைச் செய்வித்தனர். தவ மூதாட்டி களின் ஆன்மீக சக்தி, பல்வேறு திறமை களும் நல்லொழுக்கமும் பக்தி பூர்வ மான குருக்கள் அவர்களின் கிரியைச் சிறப்புக்களும் முருகன் அருளும் ஒன்று சேர, செல்லக் கதிர்காமம் என்ற அந்த ஆலயத்தின் அருட் கதிர்கள் அடியவர் பலரை ஈர்க்கத் தொடங்கின. ஆடித் திரு வோனத்தை அந்தமாகக் கொண்டு அலங்கார உற்சவங்களும் நடை
பெற்றன.
முதுமை காரணமாகக் குருக் கள் அவர்களாற் தொடர்ந்து இறைபணியைச் செய்ய முடியாத நிலையில் அவருடைய மகன் அப்பணியைத் தொடர்ந்தார். பின்னர் சிவபூரீ நீலகண்டக் குருக்கள் பூசகரானார். எனினும், நிர்வாகத்திலும் சில தளர்ச்சிகள் ஏற்படவே, ஆலய வளர்ச்சியிற் சிறு தேக்கம் காணப்பட்டது. திருமதி இராசா குடும்பத்தினரும், திருவாளர்கள் க. அப்பாத்துரை, இ.கந்தசாமி ஆகியோரும் ஏற்றிய திருவிளக்குத்தான் சில காலம் இந்தக் கோயிலை அடையாளங் காட்டியது!
கதிர்காமத்திலிருந்து தானாகவே இந்தத் தலத்தைத் தேடிவந்த வேற்பெருமான், மிக விரைவிலேயே தன் "தனிமைக்கு ஒரு முடிவு காணத் திருவுளம் கொண்டான். தினமும் ஒரு வேளை பூசை செய்வதற்கு ஒப்புக் கொண்ட சிவபூரீ கு. தியாகராஜக்குருக்கள் அவர்களுடன் திருவாளர்கள் க. அப்பாத்துரை, த. சின்னத்துரை, இ. கந்தசாமி, த. தர்மலிங்கம், பண்டிதை திருமதி சத்தியதேவி துரைசிங்கம், திருமதி இராசா வள்ளிப்பிள்ளை ஆகியோரையும் இணையச் செய்தான்; தன் "எண்ணங்களை’ அவர்களின் திட்டங்களாக்கி அவர்களைக் கொண்டே அவற்றை நிறைவேற்றி வைத்தான் அவன்!
 

2OO விகிர்தி ஐப்பசி O
கருவறைக்குமேல் விமானம் எழுப்பப்பட்டது; இந்தியா விலிருந்து எடுத்துவரப்பட்ட வலஞ்சுழி விநாயகருக்குத் தனிச் சந்நிதி உருவாக்கப்பட்டது; ஆலயம் புதுப் பொலிவு பெற்றது. 1985ஆம் ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
திரு. தங்கேஸ்வரன் குடும்பத்தினர் 1989ஆம் ஆண்டில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமானுக்குத் தனிச் சந்நிதி அமைத்தனர்; 1991 ஆம் ஆண்டில் நவக்கிரக ஆலயத்தையும் உருவாக்கினர்.
கதிர்காம வழிபாட்டினைப் பின்பற்றி, வள்ளிக்கொடி நாட்டி, கமுகமரத்தில் கொடியேற்றி ஆடித் திருவோணத்தைத் தீர்த்தத் தினமாகக் ெேகாண்டு 16 நாட்பெருந் திருவிழாக்கள்
நடைபெறத் தொடங்கின.
1995-96 ன் மஹா இடப்பெயர்வு ஆலயத்தைப் பெருமளவிற் பாதித்த போதிலும், திரு. த. சின்னத்துரை அவர்களின் பெருமுயற்சியாலும் அடி யார்களின் ஒத்துழைப்பாலும் கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு 1997ஆம் ஆண்டில் மஹாகும்பாபிஷேகம் செய்யப் பட்டது. ஆலய ஸ்தாபகர் செல்லாச்சி
அம்மையாரின் சமாதிலிங்கம் கடம்பர
நிழலில் ஸ்தாபிக்கப்பட்டது.
திரு. க. பரமநாதன் (உள்வீதி நில, கூரை வேலைகள்) திருவாளர்கள் வே. செல்லத்துரை, அ.சுப்பிரமணியம் (கோபுர வாயில், முகப்பு மண்டபம்) திருமதி
நாகேஸ்வரி (கொடிமரம்) திருதங்கேஸ் வரன் (மணிக்கோபுரம்) திரு. ந. அருளம்பலம் (வைரவர் ஆலயத் தூபி) திரு.அசுப்பிரமணியம் (பூீ குமார புஷ்கரணி 2003) தி. பொன்னம்பலம் (கைலாய வாகனம்) போன்றவர்களின் திருப்பணிகள் கோவிலை மேலும் பொலிவுறச் செய்ய, ஆலயப் பிரதம குரு சிவபூரீ கு. தியாகராஜக் குருக்கள் அவர்களையே மஹோற்சவ குருவாகவுங்கொண்டு, 2001ஆம் ஆண்டு தொடக்கம் பிரம்மோற்சவமு நடைபெற்று வருகின்றது. குருக்கள் அவர்கள் எழுத்தாளராகவும் இருப்பதால், சமய சம்பந்தமான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வருகின்றார்கள். மஹா வித்துவான் அமரர் வீரமணி ஐயர் ஆக்கிய கீர்த்தனைகளும் திருவூஞ்சற் பாடல்களும் ஆலயத் தின் அருட்பொலிவைப் பிரதிபலிக்கின்றன.
ஊரின் நடுவே கோவில் அமைந்திருப்பது மக்களுள் ளத்தில் தெய்வ சிந்தனையைக் கிளர்தெழச் செய்வதுடன் அவர்களிடையே புரிந்துணர்வு, ஒற்றுமை, ஒத்துழைப்பு போன்ற பண்புகள் வளரவும் வழிவகுக்கும் என்பதற்கு நீர்வேலி செல்லக்
கதிர்காமம் தக்க சான்றாகத் திகழ்கின்றது.

Page 24
பல்வேறு சமயநிலைகளில் வழிபாடு பற்றிய கருத்துக்கள் பேசப்படுகின்றன. அவை யாவும் மனிதருக்கும் இறைவனுக்கு மிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதில் இன்னமும் வெற்றியடையவில்லை என்றே கூறவேண்டும் உலக மகாகவிகளில் ஒருவரான பாரதியார் பாடிய தெய்வப்பாடல்கள் இம்முயற்சியில் ஒரு முன்னேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன. அவற்றிலும் சிறப்பாகப்
முறைகளையும் சிந்தனைகளையும் தெளிவுபடுத்துவதாகவே
அவருடைய பாடல்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாகச்
சிவசக்தி என்னும் பாடலை நோக்கலாம்.
猪 ணமுடிகிறது. முதலிரு பாடல்களிலும் சிவசக்தி பற்றிய பிறர் கருத்தினைப் பாடியுள்ளார்.
னங்கம் தம் தங்கள் ກະບໍ່ຍ
-
செயற்கையின் சக்தியென்பார்-உயிர்த்
யப்புறு தாய் நினக்கே இங்கு
வேள்விசெய்திடுமெங்கள் ஒம் என்னும் நயப்படு மதரவுண்டே-சிவ
ட்டியங் காட்டிருல் லருள் புரிவாய்"
இயற்கையை வழிபட்ட காலத்தில் பராசக்தியை இயற்கைச் அதனால் ஐம்பூதங்களும் உருவத்தோற்றமெனக் கருதி வழிபாடு செய்தனர்.
சக்தியின் உருவாக எண்ணினர். அவளுடைய
இந்த நிலையைப் பாரதியார் பாடலில் பயன்படுத்திய இருசொற்கள்
நன்கு விளக்கிக் காட்டுகின்றன. உரைத்தல், இசைத்தல் என்ற இரு என்பது
சொற்களும் இப்பாடலில் கவனத்திற்குரியவை உரைத்தல் தான் தெளிவாக உணர்ந்த ஒரு பொருளை மற்றவரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் கூறுவது இசைப்பர் என்பது தாம் அறிந்துகொண்ட பொருள் பற்றி பிறர் மனதில் விருப்புடன் றுவது. ஓர் இனிய பாடலை இசைக்கும்போது
லோரும் விரும்பிக்கேட்பர். எனவே பாரதியார் பாடல் ஒர் ஒழுங்கு முறையில் சக்திபற்றிய விளக்கத்தை கூறமுற் பட்டுள்ளது. பராசக்தியை வேறுசிலர் தியாகவும் அறிவாகவும்,
| Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 18.1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O-2OIO விகிர்தி ஐப்பசி O
ாழ்வியல் 22
மணி சண்முகதாஸ்
ஈசனாகவும் காண்பதை அடுத்துக் கூறியுள்ளார். தீ எல்லா வற்றையும் எரிக்கும் தன்மை கொண்டது. அறிவு எல்லாவற் ឬ தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு உதவுவது ஈசன் இறைவடிவம் அந்த வடிவாகச் சக்தியைப் பார்ப்பது அறிவு முதிர்ந்த க்தி நிலையாகும். ※
இவ்வாறு பலராலும் பலவாறு விதந்துரைக்கப்பட்ட பராசக்
தியைப் பாரதி வியப்புறு தாயாகக் காண்கிறார். தாயா சக்திக்கு வேள்விகள் செய்திடும் செயற்பாட்டைக் காட்டு ஓம் என்ற மந்திரச்சொல்லால் பராசக்தியை அழைக்கும்போது அவள் தன்னுடைய சில நாட்டியத்தைக் காட்டி நல்லருள் fiតmតាំ என்ற விளக்கத்தை எல்லோருக்கும் சொல்கின்றார். பாரதியார்
சிவநடனம் காணும் விருப்பை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தி
យុ៣TT.
அடுத்த
பாடலில் பராசக்தி ற்றிய பிறகருத்துக்களை எடுத்துக் கூறுகின்றார். 缀
புன் பலி கொண்டுவந்ே தாம அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
வீரை நின் திருவ குந்தோம்"
வடிவான காளியென்பர் சிலர் இன்பத்தின் வடிவமென்பர் சிலர் நினைக்கமுடியாத ஒன்றென்பர் சிலர் உன்னைக் காண வரும்
போது எளிமையான பொருட்களைக் கொண்டுவந்தாலே போது
நிற்கிறது. மக்கள் வாழ்வில் அன்னையிடம் இத்தனை நன்மை களையும் பெறமுடியும் தாயிற் சிறந்தொரு கோயில் இல்லை என்பது மு
பராசக்தியை வழிபடும் முறையையும் எமக்குப் பயிற்றியவள்
of the Saiv alana Sabai, N
0.2010 (1",