கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2010.11.17

Page 1
ഞ8ഖ Liിunഓങ്ങ് 8ഞ്ഞു. ബണിun ஆரம்பம் விரோதி இடு ஆவணி மீ 26 ஆம் உ(1889) பத்தகம் 12 விகிர்தி வருடம் கார்த்தி @リU
இத்தர்கள் வாழ்ந்த - அவர்களுடைய திருப்பாத
நடந்து புனிதமான - சிறப்புக்குரிய மண்
சித்தர்கள் பூசித்த சிவலிங்கத்தையே மூலவராகக் கொண் தெய்வீகப் பழமையுடன் திகழும் திருத்தலம்
சித்தர்கள் பதித்த விஷ உறிஞ்சிக் கல்லைத் தன்னுள்ே கொண்ட காரணத்தால் யாருமே பாம்புக் கடிக்கு ஆளாகா அற்புதத்துக்குரிய கேணியைத் தன் பெயருடன் இணைத்து கொண்ட பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் ஊர்!
தற்கே
 
 
 
 
 

Web www.hinduorgan.com
editor(CDhinduorgan.com
GUS Gâcogno օրpւI. 50.00
சிவசிதம்பரேஸ்வரர் ஆலயம் சம்பந்தமான இந்த அரிய
அடிப்படைத் தகவல்கள், அந்தத் திருத்தலத்தைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை யாருக்குமே ஏற்படுத்தும்.
函 స్క్రీ
ਲੰ
கடவுளைக் கான முய்ல்பவர்கள் பக்தர்கள்; கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்ற தெளிவான விளக்கத்தைச் சைவச் சான்றோர்கள் தந்துள்ளனர். எனினும், சித்தர்கள் எல்லோரும் என்றுமே ஒரே மாதிரியானவர்களாகக் காணப்படவில்லை. எந்த வேளையில் எப்படி நடந்து கொள் வார்கள் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாதபடி விசித்திரமாக - வித்தியாசமாக நடந்துகொள்பவர்கள் சிலர், தமக்குள்ளே இருக்கும் சிவானுபவத்திற் திளைத்தபடி, பித்தர்களோ என்று சந்தேகப்படும்படி நடப்பவர் சிலர்;
)
கோபுர வாசல்

Page 2
இந்துசாதனம் 7.
தம்மைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதையோ, மற்றவர்கள் தம்மைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்வதையோ சிறிதும் விரும்பாதவர்களாயிருப்பவர் சிலர்; தம் இறையனுபவத்தின் அடிப்படையில், மக்களின் ஆன்மீக மேம்பாட்டைக் கருதி அவர்களுக்கு நல்வழி காட்டி வருபவர்கள் சிலர்.
இறுதியாகக் குறிப்பிட்ட வகையினர்தான் இந்த மண்ணில் உலாவியிருக்க வேண்டும்; மனிதர்களைப் புனிதர்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும்; அவற்றுள் அத்தி யாவசியமான ஒரு செயற்பாடாகச் சிவலிங்க வழிபாட்டை இங்கே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அனைத்துச் சித்தர்களிடமும் காணப்பட்ட பொதுவான போக்கின்படி எத்தனை சித்தர்கள் இங்கே வாழ்ந்தார்கள்? எந்தக் காலப் பகுதியில் வாழ்ந்தார்கள்? என்ன பெயர்களைப் பூண்டிருந்தார்கள்? என்ற வினாக்களுக்குரிய எந்த விடையையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.
அவர்கள் விட்டுச் சென்றவை அவர்கள் பூசித்த சிவலிங்கம்; அவர்கள் இங்கே வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்ற இந்த ஊருக்குரிய பெயர்; அவர்களால் ஆக்கப்பட்டு இந்த ஊர்ப் பெயரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள கேணி ஆகியவையே
சித்தர்கள் தொட்ட பணியை அவர்கள் விட்ட இடத்திலிருந்து அவர்களுக்குப் பின்னர் வந்த பக்தர்கள் சிலர் தொடர்ந்தனர். குளிர்தரு மரங்கள் நிறைந்த கூடலில் - அமைதி கோலோச்சும் சூழலில், சித்தர்கள் உருவாக்கிய கேணிக்கு அண்மையில் சிறிய அளவிலான சிவனாலயம் ஒன்றை அமைத்தனர்; மூலஸ்தான மூர்த்தியாக, சித்தர்களின் சிவலிங்கத்தையே பிரதிஷ்டை செய்தனர்; அந்த மூர்த்திக்கு பூரீ சிவசிதம்பரேஸ்வரர் என்றும் அம்பாளுக்குச் சிவகாமசுந்தரி என்றும் பெயர் சூட்டினார். ஆகம முறைப்படி பூசைகள் நடக்கவும் வழிவகைகள் செய்தனர்.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கிணங்க, சிறிய அளவில் அமைந்திருந்த அந்த ஆலயம் பெரிய எண்ணிக்கையின ரான அடியவர்களைத் தன்பால் ஈர்க்கத் தொடங்கியது; அதிகரித்து வரும் அடியவர்களின் ஆன்மீகத் தேவைகளைக் கருத்திற் கொண்டு ஆலயத்தைப் பெருப்பிக்க வேண்டிய தேவையும் உருவாகத் தொடங்கியது.
1850ஆம் ஆண்டளவில் ஞானியார் என்ற பெயர் கொண்ட ஒரு பெரியவர், தனுவோடை என்ற காணியையும், பனந்தோட்டங் களையும் பல வயல் நிலங்களையும் நன்கொடையாகக் கொடுத்து, தன் பெயருக்கேற்றபடி தான் ஞானவான் மட்டுமல்லாமல், த ர ன் ஒரு "தானவான்" என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். நல்லவர்கள் செய்யும் நற்செயல்கள் எதுவுமே "தனித்து" நின்றுவிடுவதில்லை. ஞானியார் அளித்த நன்கொடை, சபாபதி பாலசுப்பையர் என்ற அந்தணப் பெரியாரின் உள்ளத்தில் ஊற்றெடுத்த வள்ளண்மையைப் பிரவாகிக்கச் செய்ய, சிவபெரு மானுக்குப் பரிவார மூர்த்திகள் அமைக்கவும் திருவீதிகள் இரண்டினை உருவாக்கவும் வாய்ப்பாகத் தன்னிடமிருந்த காணியின் பெரும் பகுதியை ஆலய வளர்ச்சிக்காக அர்ப்பணித் தார். பெருஞ்செல்வந்தராகவோ நில உடைமையாளராகவோ கருதப்பட முடியாத அவர், அந்த அறப்பணியை ஆற்றுவதற்கு

2OO விகீர்தி கார்த்திகை O]
அடிப்படையாக அமைந்தது அவர் தன்மீது கொண்டிருந்த அத்யந்த பக்தியும் ஈடுபாடுமே என்பதை உலகினர்க்கு உணர்த்துவதற்கு இறைவன் திருவுளங்கொண்டான் போலும் அவரும் அவருடைய பரம்பரையினருமே என்றென்றும் தனக்குப் பூசைசெய்ய வேண்டும் என்பதை எழுதா விதியாக ஆக்கிக் கொண்டான்.
சித்தர்களின் ஆசி சிவாச்சாரியார்களின் கிரியைச் சிறப்பு அறங்காவலரின் ஆர்வம் சிவ பரம் பொருளின் அருள் வீச்சு - ஒன்றுக்கொன்று முரண்படாத இவை தனித்தும் ஒன்று சேர்ந்தும் பக்தர்களின் உள்ளங்களில் ஏற்றி வைத்த நம்பிக்கை ஒளியில் ஆலயத்தின் வளர்ச்சி துரிதகதியில் தொடர்ந்தது.
சிவன், அம்பாள், பிள்ளையார், முருகன் சிவகாமி, அம்பாள் சமேத நடராஜப் பெருமான், பைரவர், சூரியன், அருணாசலேஸ் வரர், சண்டேஸ்வரர் ஆகியோருக்குச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ஏக தளஸ்துTபிகள் அமைக்கப்பட்டுள்ளன. துர்க்கை, லசுஷ்மி, சரஸ்வதி, பிரதோஷ நாயகர், சந்திரன், நவக்கிரகங்கள், தட்சணாமூர்த்தி நால்வர், நந்தி, பலிபீடம் ஆகியோருக்குரிய சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உண்டு. இந்தியாவிலே பஞ்சபூத ஸ்தலங்களாக வன்மீகநாதர் - திருவாரூர், ஜம்புகேஸ்வரர் - திருவானைக்கா, திருக்காளத்தீசர் - காளஹஸ்தி, அருணா சலேஸ்வரர் - திருவண்ணாமலை, சிதம்பரேஸ்வரர் - தில்லைச்சிதம்பரம் ஆகியவை போற்றப்பெறுகின்றன. அவற்றின் மூலமூர்த்திகளை இந்தக் கோவிலிலும் தரிசிக்கலாம். ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தவர் சேர் பொன். இராமநாதன். அவருடைய தந்தையார் பொன்னம்பல வாண முதலியார் காசி யாத்திரையை நிறைவு செய்து 1870 ஆம் ஆண்டில் இந்நாட்டுக்குத் திரும்பிய வேளையில் கொண்டு வந்த சிவலிங்கம் ஒன்றை 1890ஆம் ஆண்டளவில் வாங்கிய ஞானியார், அந்த லிங்கத்தையும் இக்கோவிலிற் பிரதிஷ்டைசெய்வித்தார்.
ஆலயத்தின் முதலாம் வீதிப் பரிவார தெய்வங்களையும் இரண்டாம் வீதி வசந்த மண்டபம், வைரக் கற்களால் கட்டப்பெற்ற அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தக் கேணி பல் வண்ணப் பூஞ்செடிகள், வில்வமரம் முதலியவை நிறைந்த திருநந்தவனம் ஆகியவற்றையுங் கொண்டு விளங்க, ஆலயத்தின் மூன்றாம் திருப்பெரும் விதி, பஞ்சரதத் தரிப்புமண்டபம், சித்தர்கள் அமைத்த திருக்கேணி, சிறிய ஒரு வைரவர் ஆலயம் ஆகியவற்றுடன் திகழ்கின்றது. நவக்கிரக ஆலயம் தேர்வடிவில் இருப்பது புதுமையானது.
ஆகம விதிப்படி தினமும் நான்கு காலப் பூசைகள் நடைபெறும் இவ்வாலயத்திற் சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி முதலிய தினங்களில் விசேட பூசைகள் இடம்பெறுகின்றன. கேதாரகெளரி விரத நாள்களில் அடியார்களே சிவலிங்கம் அமைத்து அபிஷேகம், பூசை செய்தல், திருக்கார்த்திகைத் தீப பூசையிற் சுமங்கலிப் பெண்கள் பக்தி பூர்வமாக ஈடுபடுதல், நவராத்திரி காலத்தில் துர்க்கை, லக்ஷமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களுக்கும் நடைபெறும் விசேட கொலு வழிபாடு, சிறுவர் சிறுமியரின் கலை
நிகழ்ச்சிகள் ஆகியவை குறிக்கத்தக்கவை.
-------->
2

Page 3
இந்துசாதனம் 7.
ஆனி உத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்ட பிரம்மோற்சவம் 1913 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இரவுத் திருவிழாக்களில் யாக தரிசனத்தின்போது முறையே வேதபாராயணம், திருமுறை ஓதல், புல்லாங்குழலிசை, குரலிசை, நாதஸ்வரகானம், மிருதங்க இசை, வீணாகாணம், நிருத்தம் ஆகிய கலை வடிவமான உபசாரங்களால் இறைவனை மகிழ்விப்பது ஈழத்தில் இந்த ஆலயத்திற்கே உரிய சிறப்பம்சமாகும். விநாயகர், நடராஜப்பெருமான், சிவகாமி அம்பாள் சுப்பிரமணியர், சண்டேஸ் வரர் ஆகியோர் அற்புதமான அலங்காரங்களுடன் அவரவர்க்குரிய தேர்களில் இருந்து, மூன்றாவது திருவீதி வலம்வருதல் , அடுத்த அதிகாலையில் நடராஜப் பெருமானுக்கும் சிவகாமி அம்ாபாளுக்கும் நடைபெறும் ஆனி உத்தர அபிஷேகம், ஆனி உத்தர தரிசனம் நண்பகலில் அமிர்த புஷ்கரணியில் நடைபெறும் தீர்த்தத் திருவிழா அடுத்த நாட் பெளர்ணமியில் நடைபெறும் சஹஸ்ர சங்காபி ஷேகம், அன்றிரவு நடைபெறும் பார்வதி - பரமேஸ்வரன் திருக்கல் யாணம் ஆகிய எல்லாமே அடியார் களைப் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்திப் பரவசப்படுத்தும் பண்பு கொண்டவை.
மார்கழித் திருவெம்பாவைக் ধ্ৰুষ্ট காலத்தில் அலங்காரத் திரு சிவகாமசுந்தரி சமே விழாக்கள் நடைபெறுகின்றன. சப்பரத்தில் எழுந் இறுதி நாள் அதிகாலையில் நடைபெறும் ஆர்த்ராபிஷேகமும் ஆர்த்ரா தரிசனமும் அடியார் களின் மனங்களை விட்டகலா நிகழ்ச்சிகள்.
ஆலயத்தின் முதலாவது பிரதிஷ்டா கும்பாபிஷேகம் எந்த ஆண்டில் நடைபெற்றது என்பது தெரியவில்லை. காலத்துக்குக் காலம் நடைபெற்ற திருத்த வேலைகள், வண்ணப் பூச்சுக்கள், கோவிற் கட்டட விஸ்தரிப்புக்கள் போன்றவற்றையடுத்து 1890, 1912, 1945, 1977, 1984, 1997 ஆகிய ஆண்டுகளிலே கும்பாபிஷேக வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற ஆன்றோர் வாக்கை
நினைவில் நிறுத்தி, 1908ஆம் ஆண்டளவில் வைரக்கற்களால்
அமைக்கப்பட்டிருந்த அடித்தளத்தின் மேல், நீண்ட இடைவெளியின்
பின்னர் மிகக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் இராஜ கோபுரத்துக்கு
1977ஆம் ஆண்டிலே குடமுழுக்கு நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டுப்போர் ஓய்ந்து, யாழ்ப்பாணத்துக்கும் ஏனைய
மாவட்டங்களுக்குமிடையேயான போக்குவரத்து சீராக நடைபெறத்
超8 超8 $8 $8 超8》超8 超屁》超辰》$8 超8》$8 88 $念 & அன்பி
O O e
கண்ணப்பனின் என்.
அ
ஒப்பிலா அன்பு தன்
உண்ப
D
@@@@@@@@@@超8 超8 超辰》38 88 超8 88》邑8 &
C
 
 

2OO விகீர்தி கார்த்திகை 01
தொடங்கியதையடுத்து, ஆலயம் முற்று முழுதாகப் புனரமைக்கப் பட்டுப் புது வடிவமும் புது வண்ணமும் பெறத் தொடங்கியதை யடுத்து சென்ற 29.10.2010 வெள்ளிக்கிழமை இவ்வாலயத்தின் பிரதம குரு வித்தியாஸாகரம் சிவபூீ சபா வாசுதேவக் குருக்கள் தலைமையில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சிவாச்சார்யர்கள் நடத்திய முப்பத்து மூன்று குண்ட மஹா கும்பாபிஷேகம் இவ்வாலய வரலாற்றிலே புனிதம் நிறைந்த புண்ணிய நிகழ்ச்சியாக இடம்பெறுவதுடன், அவ்விழாவிற் கலந்துகொள்ளும் பாக்கியம் பெற்ற அடியவர்களின் உள்ளங்களில் என்றென்றும் நீடித்து நிலைக்கும் அரிய நிகழ்ச்சியாகவும் அமையும்.
இசை, நடனம், ஒவியம் போன்ற நுண்கலைகளில் இனம் சந்ததியினர் ஈடுபடுவதை ஊக்கப் படுத்துவதற்கும் அவர்களின் சமய அறிவை விருத்தி செய்தற்கும் திருவிழாக் காலங்களில் மாணவர் மத்தியிலே போட்டிகளை நடத்திப் பரிசு வழங்கும் வழக்கம் கடந்த பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இவ்வாலயத்திற் காணப் படுகின்றது. ஆலயக் குருமார், அறங்காவலர் சபையினரின் கூட்டு முயற்சி இது. யாக தரிசனத்தின் போது அக்லாபூர்வமான உபசாரங்
ளை இளம் பிள்ளைகளைக் தருளும் காட்சிழ்ட ? கொண்டு வழங்க வைப்பதும்
ஊக்குவிப்பாகும்.
உள் நாட்டுப்போர் ஆக்கிரீ மடைந்து மக்கள் அல்லற்பட்டு
ண்ேக்ரீர்வடிக்க அங்கமிங்கம் அலைக்க கிரிர் ஆற்றாது அழுதுக் டித்து அங்குமிங்கும் அலைந்து திரிந்த வேளையில் 1008 தீபமேற்றி இறையருளை வேண்டி ஆராதனை செய்ததும் நவக்கிரஹ மஹாயாகம் செய்ததும் இருபது அடி உயரமான விநாயகப் பெருமானின் திருவுருவப் பவனி நடை பெற்றதும், இன, மத, மொழி வேறுபாடின்றி இந்நாட்டு மக்கள் அனைவரினதும் விடிவுக்காகவும் அமைதி, சமாதானம், சந்தோஷம் முதலியவற்றுக்காகவும் இவ்வாலயத்தைச் சேர்ந்தவர்கள்
قلعه)
கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடுகளாகும்.
சிதம்பரேஸ்வரப் பெருமானை மனம் மொழி மெய்களால் நிதமும் நினைந்து துதித்து வணங்குவோர் நிறைவும் நிம்மதியும்பெற்று வாழ்வர் என்பதற்குச் சான்றுதரும் அடியவர்கள் பலரைக் கொண்டுள்ள சிறப்புமிக்க இவ்வாலயத்திற்குச் செல்வோம்; எம்மை வாட்டும் உட்பகைகளையும் புறப்பகைகளையும் வெல்வோம்! அவன் பாத தரிசனம் எம் பாவ விமோசனம் எனக் கொள்வோம்!
忍》$8 88 $辰 $8 88 &g 88 超辰》88 $8 $8 8辰》邑辰》 ன் உறைப்பை அவனிடம் கண்டோம் ள்ளி அப்பினான் கண்ணைத் தானே புதுமை எச்சில் நீரால் ண்டவ னுக்கே அபிஷேகம் செய்தான் லாலே தலைவனை உதைத்தான் த்திரம் படைத்தான் கண்ணப் பன்தான் தற் காக ஊனைப் படைத்தான் ள்ளத் தூய்மையை உணர்த்தியும் வைத்தான்.
- கவிஞர் வ. யோகானந்தசிவம்
免》超辰》超8》翅8 $8》翅8 88》超屁》超8 超8 超8 超辰》邻念超辰》
3

Page 4
7.
***৪ யாக உணவு வகைகள் pu s6006, தானிய வகைகளின் sueurass முன்னோர்.மக்களுக்குஉணர்த்தினார்கள்
đ#ưDu Huñ {{#{IL Gh
கலாநிதி மனோன்
சிெவ வாழ்வியலில் காலமாற்றம் பெரிதும் கணிப்புக் குள்ளாகியுள்ளது. பருவ மாற்றங்களும் விளைபொருளின் வளத் தோடு தொடர்புபட்டுள்ளதால் நமது முன்னோர் அவற்றை வழிபாட்டு நடைமுறைகளோடு இணைத்துள்ளனர். மாரி, கோடை என்ற இருபெரும் மாற்றங்களை மட்டுமே நாம் இப்போது கருத்தில் கொண்டுள்ளோம். ஆண்டுக் கடப்பில் உருளும் மாதங்கள் மக்கள் வாழ்வியலில் சில புதிய வளங்களைத் தருவனவாக உள்ளன. தை, மாசி, பங்குனி, சித்திரை என்னும் மாதங்களில் மக்களின் செயற்பாடுகள் எப்படி நடந்தன என்பதை ஆண்டாள்தன் பாடலில் பதிவு செய்துள்ளாள். மார்கழி மாதத்தின் சிறப்பைத் தனித்துவமாகத் திருப்பாவைப் பாடல்களில் விளக்கியுள்ளாள். சைவவாழ்வியலில் மணிவாசகர் மார்கழி மாதத்தின் வழிபாட்டு நடைமுறையைச் சிறப்பாகத் திருவெம்பாவைப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை மாதம் சைவ வழிபாட்டு நடைமுறையில்
சிறப்பாகத் தொடர்புற்றிருந்ததைச் சம்பந்தர் திருமயிலாப்பூர்த் திருப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"வளைக்கை மடநல்லார் மாமயிலை வண் மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான்றொல் கார்த்திகை நாள்
தனத்தேந்திள முலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்"
கபாலீச்சரத் தலத்திலே நடைபெறும் கார்த்திகை விளக்கீடு இப்பாடலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கீடு பெண்களின் வழிபாட்டு நடைமுறையெனச் சம்பந்தர் உணர்த்தி யுள்ளார். சங்க இலக்கியமான பரிபாடலில் வழிபாட்டுநடை முறையில் பெண்கள் விளக்கு ஏற்றும் செயற்பாடு பதிவுசெய்யப்பட் டுள்ளது. திருக்கோயில் அமைப்பு உருவாவதற்கு முன்னரேயே இந்நடைமுறை இருந்துள்ளது. பின்னர் முருகன் உறையும் திருக்கோயில்களில் மாவிளக்குப் போடும் மரபு தோன்றியுள்ளது. தினைமாவுடன் தேன் கலந்து பிசைந்த களியிலே வயற்பாத்திபோல உரு அமைத்து அதனுள் நெய் ஊற்றித் திரியிலே விளக்கேற்றும் கவிளான நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. கார்த்திகை மாதம் மழைக் காலமாகையால் உணவைச் சேமித்து வைக்க வேண்டியிருந்தது. அதனால் தொடக்ககால உணவாகப் பயன்படுத்திய திணைமாவைத் தெய்வத்திற்கு மடையிடும் மரபு தோன்றியது. தினைக் கதிரைத் தெய்வ மடையாகப் பேணியதை கடியுண் கடவுட்கிட்ட செழுங்குரல் என்ற சங்கப் பாடலடியும்
விளக்கி நிற்கிறது. கார்த்திகை மாதம் மழையிருட் காலமாதலால்
 
 
 
 
 
 
 

2OO விகிர்தி கார்த்திகை O]
பாழ்வியல் -23
ாமணி சண்முகதாஸ்
வீட்டுவாசலிலே விளக்கு ஏற்றி வைத்து ஒளியூட்ட வேண்டி யிருந்தது. இன்று இந்நடைமுறையின் எச்சமாகக் கார்த்திகை விளக்கீட்டு நாளன்று வீட்டு வாசலிலே வாழைக்குற்றியை நட்டுத் தேங்காயின் உடைந்த பாதியிலே நெய்யை ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றும் நடைமுறை உள்ளது. தத்துவார்த்த நிலையில் விளக்கீடு பற்றிய விளக்கங்கள் இருந்தபோதும் நாட்டார் வாழ்வியலில் இது ஒரு சமய நடைமுறையாக அன்றி வழிபாட்டு நடைமுறையாகவே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சில கிராமங்களில் கார்த்திகை விளக்கீடு ஒரு படையல் மரபையும் பேணும் சடங்காக உள்ளது. பனையின் முளைப் பாத்தியைப் பறித்து ஒடியலாக்கி அதன் மாவில் பிட்டு அவித்து விளக்கடியில் படையல் செய்யும் வழக்கம் உண்டு. பிட்டுடன் கொழுக்கட்டையும் இப்போது சேர்ந்துள்ளது. குரக்கன், தினை, சாமை, ஒடியல் என்பன மழைக்காலத்திற்குரிய உணவுப் பண்டங்களாக இருந்தன. அவற்றைத் தமது முன்னோரது நினைவாக மடையிட்டுப்
பிதிர்படையல்' எனவும் வழங்கினர்.
கோடைகாலத்து விளைபொருட்களை மட்டுமன்றி மாரி கால விளை பொருட்களையும் தெய்வ மடையாக்கிப் பாதுகாக்கும் பண்பாடு நம்முன்னோரிடமிருந்தது. வள்ளுவர் இல்வாழ்வானுடைய கடமைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என ஐவகையினரைப் பேணும் தன்மையைச் சுட்டியுள்ளார். இப்பண்பு நிலை கார்த்திகை விளக்கீட்டு நடைமுறையில் சிறப்பாக இன்றுவரையும் பேணப்பட்டுவருகிறது.
இன்று எம்மவருடைய உணவுப் பழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டன. நமது நிலத்து விளை பொருட்களை விரும்பி யுண்பவர் சிலரே. குறிப்பாக இளைய தலைமுறை இப்பண்பாட்டு மரபான உணவுப் பண்டங்களை வெறுக்க முற்படுகின்றனர். ஆனால் நமது முன்னோர் தம்முடைய அடுத்த தலைமுறையினர் உடல் நலத்தோடும் பலத்தோடும் வாழவேண்டுமென விரும்பினர். அதனால் பல உணவு நடைமுறைகளை வழிபாட்டுடன் இணைத்து விட்டனர். காலம் கருதி வாழ்ந்த அவர்களுடைய சிந்தனை பரநலவயப்பட்டிருந்தது. வள்ளுவரும் குறளில் அதனையே வரையறை செய்ய முற்பட்டுள்ளார். கார்த்திகை விளக்கீடு வெறுமனே ஒளியேற்றும் செயற்பாடல்ல. எதிர்காலத்தில் வாழ்வியலில் எதிர்கொள்ளும் கொடிய துன்பத்தை நீக்குவதற் கான முன்னேற்பாடே. தெய்வத்திற்கு எனச் சிறப்பாகச் சேமித்தது
மக்கள் கொடைக்காகவே,

Page 5
இந்துசாதனம் 7.
நாவலர் ே
pflooCOT DIT {
நா வலர்பெருமான் வாயாற் பேசி, நூல்களில் எழுதி, நெறி பிறழாமல் வாழ்ந்தவர். சொல்வேறு, செயல்வேறாக நாவலர் வாழ்ந்ததே கிடையாது. அவரது பணிகளிலும் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் சுயநலம் என்பதே இல்லை. தமிழுக்கும், சைவத்திற்கும் வரும் தீமைகளைப் போக்குவதே அவரின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அவர் ஏற்றிய சைவ ஒளி மாணவர் களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. நீராடி நீறணிந்து, நெற்றிக்குப் பொட்டிட்டு, கல்லூரிக்குச் சென்று ஆசார சீலராய் நம் மூதாதையர்களாகிய அக்கால மாணவர்கள், கல்வி பயின்றனர். அவர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் இன்று அவ்வழி வாழ்ந்து வருகின்றோம். இவற்றிற்கெல்லாம் வித்திட்டவர்
நாவலர் பெருமானே. அவர் அவதரித்திலரேல் நமது சமயமும், கலாசாரமும் சீர்கெட்டுச் சிதைந்து போயிருக்கும்.
அவர் சைவமக்களையும், மாணவச் செல்வங்களையும், தன்பால் ஈர்த்து நல்வழி நடத்தியது. அக்காலப் பாதிரிமாருக்குப் பிடிக்காத படியினால், பாதிரிமார்கள்
தங்கள் கல்லூரிகளில் சைவ மாணவர் களுக்கு அனுமதி மறுத்தனர். நாவலர் உள்ளம் கொதித்தார். செயலில் இறங்கி னார். ஆங்கில - தமிழ் கல்லூரியை நிறுவினார். சைவ மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பளித்தார். அக்காலத்தில் கல்விக்காக மதம் மாறும் நிலை சர்வ
ஐந்தாம் குரவர் எனப் போற்றப்படும் நாவலர் பெருமான் சை விதந்துரைக்கும இக்கட்டுரையின் தொடக்கப் பகுதி 'இந்துen
ர்த்திகை 12ஆம் கதி என்பதைக்
சாதாரணமாக இருந்தது. ஆறுமுகநாவலர் அவர்கள் புறச் சமயவாதிகளுக் கெல்லாம், மாறு முகமாக நின்று தம் சமயத்தை வளர்த்தார். அன்றைய சூழ்நிலையில் ஆறுமுகநாவலர் அவதரித் திலரேல் எதிர்நீச்சல் போட்டு, எம் மதத்தையும், இனத்தை யும், கலாசாரத்தையும் காப்பாற்றி வளர்த்தெடுத்திருக்க முடியாது.
நாவுக்கரசர் பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, பெயருக்கேற்ற நாவன்மையால் நாவுக்கரசனாகி, சைவத்தை எதிர்நீச்சல்போட்டு வளர்த்தது போலவே, நாவலரும் பிரம்மச் சாரியாகி நாவன்மையால் நாவலராகி சைவத்தை வளர்த்தார். அவரிடம் காணப்பட்ட பிரம்மசாரிய நிலை, அஞ்சாமை, நாவன்மை, சைவப் பிரசாரம் என்பன சைவத்தமிழ் உலகுக்குப் பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கின. சைவத்திற்கும் தமிழுக்கும் தம் வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க அவரின் பிரம்மச்சாரிய வாழ்வே உதவியாக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 

2OO விகீர்தி கார்த்திகை O]
سمجھنے ცuptb'-4 ფuნlgo?
பெருமான்கொ
LLIT855Irg56öT, B.A.
நாவலர் கிறிஸ்தவ சமயத்தை நிந்திக்கவில்லை. கிறிஸ்தவர்களின் வேத நூலாகிய பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ சமயத் தொண்டிற்கு உதவினார். ஆனால் அசைக்கமுடியாத பெரும் சைவனாகவே விளங்கினார். எவரிடமும் காணப்படாத சிறந்த பண்பு அவரிடம் இருந்தது. அக்கால கட்டத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் அதிபராக இருந்த பேர்சிவல் பாதிரியார் இவரை அக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியராக நியமித்து, நாளடைவில் ஆங்கிலமும், தமிழும் கற்பிக்கும் ஆசானாக்கினார். அக்காலத்தில் தான் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது (19) பத்தொன்பது. அதேவேளை சென்னையில் உள்ள கிறிஸ்தவ சபையினரும்
பைபிளை மொழிபெயர்த்து, தம் மொழி பெயர்ப்பே சிறந்தது என வாதிட்டனர். பேர்சிவல் பாதிரியார் அவர்கள் நாவலரைச் சென்னைக்கு அழைத்துச் சென்று, நாவலரது மொழிபெயர்ப் பையும் அவர்களது மொழி பெயர்ப்பையும் நடுவர் முன் வைத்தனர். நடுவர்கள் யாழ்ப் பாணத்து நல்லூர் நாவலரின் மொழி பெயர்ப்பே சிறந்தது என தீர்ப்பளித்து ஏற்றுக் கொண்டனர். அவரிடம் காணப் பட்ட ஆங்கில - தமிழ் புலமைக்கு இது ஒர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
நாவலர் தமது 23ஆம் வயதில்
அதாவது 1845ஆம் ஆண்டு முதல் மாணவர்களை ஒன்றுசேர்த்து சைவமும்
தழில் இடம்பெற்றது. நாவலர் குருபூசை
தமிழும் புகட்டத் தொடங்கினார். காலையும் மாலையும் கைமாறு கருதாமல் கற்பித்தார். 1848ஆம் ஆண்டு நாவலர் அவர்களின் அறப் பணிகளில் ஒன்றாக சைவப்பிரகாச வித்தியாசாலை உருவாகிற்று. 1864ஆம் ஆண்டில் சிதம்பரத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலையை உருவாக்கினார்.
நாகரீகத்தின் வேகம் அச்சுப் பொறியில்தான் இருக்கின் றது என்பதை உணர்ந்து, 1849ஆம் ஆண்டில் வண்ணையில் வித்தியானுபாலன அச்சகத்தை உருவாக்கினார். இது அறிக்கை கள், புத்தகங்கள், உருவாகவும், ஏட்டுச் சுவடிகள் அச்சுவாகனம் ஏறவும் வழிவகுத்தது. அத்துடன் அவர் எண்ணிய இலட்சியம் விரிவுபட்டு வளரவும் உதவியது. நாளடைவில் நாவலரின் வெளியீட்டுப் பணி பெரிதாகியதும் அவற்றை இலகுவாக்குவதற் காகச் சென்னையிலும் 1858இல் அச்சியந்திர சாலையை உருவாக்கிநூல்களை மேலும் சிறப்புற வெளியிட்டார்.

Page 6
இந்துசாதனம் 7.
இலக்கண வழுவின்றியும், அச்சுப்பிழை இன்றியும் தமிழ் நூல்கள் உருவாக வேண்டும் என விழைந்து, அதன் தனித்து வத்தையும், பெறுமதியையும் உயர்த்திக் காட்டியவரும் நாவலரே.
நாவலர்பெருமானின் நூலாக்கங்கள் தனிச்சிறப்புடை யவை, நாவலர் எழுத்துலகில் வசன நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வீரர், "நாவலர் வசன நடை" என்ற ஒரு தனி நடையே உருவாக இவர் காரணமாக இருந்தார். கடவுளை வணங்கு, குருவை வழிபடு, உண்மையே பேசு, உயிர்களைக் கொல்லாதே போன்ற நீதி வாக்கியங்களைப் பிஞ்சு உள்ளங்களிலே பதிய வைத்து, கல்வியுடன் ஒழுக்கமும், மனித விழுமியங்களும், வளர வைத்தமையை நாம் நாவலரின் முதலாம் பாலபாடம் என்ற புத்தகத்தில் காணலாம். இரண்டாம் பாலபாடத்தில் சர்வ மதங்களுக்கும் பொதுவான நீதி புகட்டப்பட்டது. கோள் கேட்பவன் இல்லையானால் , கோள் சொல்பவனும் இல்லை போன்ற நீதிக் குறள்களை இதில் காணலாம். இவைபோன்ற பல படைப்புக்கள் அவரால் உருவாக்கப்பட்டன. இவை அக்கால இளம் சமுதாயத் திற்கு நல்வழிகாட்டி நின்று, அவர்களை நல்வழிப்படுத்தின.
உரைநடைத் தோற்றத்திற்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் காலத்தில் இருந்து காலம் தோறும் உரைநடை வளர்ச்சிபெற்று வந்தது. 19ஆம் நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சியில் ஆறுமுகநாவலரின் பங்கு மிக முக்கிய இடத்தை வகித்தது. உரையாசிரியர் காலத்தில் தோன்றி வளர்ந்த உரைநடை, நாவலர் காலத்தில் அவரது அருந் தொண்டால் மேலும் பெருகூட்டப்பெற்று, புதுப்பொலிவுபெற்றது. நாவலர் அவர்களால் தமிழ்மொழி பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி உரைநடை வளர்ச்சியே. இதனால்தான் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள், "வசன நடை கைவந்த வல்லாளர்" என நாவலரைக் குறிப்பிட்டார்கள். தமிழ் உரைநடையின் தந்தையாக அவர் மதிக்கப்படுவதற்கு இதுவே காரணமாயிற்று. இவர் எழுதிய நடையோ செந்தமிழ்நடை எளிமையும், இனிமையும், தவழ இவர் எழுதினார். வினா விடை வடிவில் இலக்கணத்தையும் சைவசமய உண்மைகளையும் எழுதினார். மாணவர்களால் எளிதில் மொழியின் நுட்பங்களையும் சமயத்தின் சால்புகளையும் விளங்கிக் கொள்ளவும், மனப்பாடம் செய்யவும் இது உதவியது. ஏட்டுச் சுவடிகளாய் இருந்த பொக்கிசங்கள் அச்சகங்களில் நூலுருப் பெற்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம், கந்தபுராண வசனம், பாலபாடம், சைவ வினாவிடை, சிதம்பர மான்மிய வசனம், போன்ற பல நூல்களையும் நாவலர் திறம்பட எழுதினார். உதயதாரகை,இலங்கைநேசன், என்ற யாழ்ப்பாணத்து இதழ்களிலும், நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற புத்தகத்திலும் எழுதிய கட்டுரைகள், அவரது வசனநடைச் சிறப்பின் மகிமையை வெளிப்படுத்தி நின்றன. இவற்றைவிட, நாடக நூல்களையும் எழுதினார். தகப்பனாரால் எழுதப்பட்டு, குறையாக விடப்பட்டிருந்த "இரத்தின வல்லி விலாசம்" என்ற நாடக நூலை இவரே பாடி முடித்து வைத்தார். அக்காலத்தில் உரை காணப்படாது, பாட்டாக வெளிவந்திருந்த பல வகையான தமிழ்ப் படைப்புகளுக்கு, உரை எழுதி அவற்றிற்கு பெறுமதியூட்டிச் சிறப்பாக வெளிப் படுத்தினார். இவை எம்மவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன.
இனிய உவமைகள், பழமொழிகள் முதலியன இவரது உரைநடையில்

2OO விகிர்தி கார்த்திகை O]
D6
விரவி இருக்கும். அவை எடுத்துக்கொண்ட பொருளை இனிது விளக்கவும் சிந்தையில் பதிக்கவும் பெரிதும் பயன்பட்டன. தக்க் மேற்கோள் இல்லாது இவரது உரைநடை செல்வதில்லை. இது அவரிடம் காணப்பட்ட ஒரு தனிச்சிறப்பாகும்.
நாவலர் பெருமான் தீர்க்க தரிசனம் மிக்கவராக வாழ்ந்தார். 1846 இல் இலவசக் கல்வியைப் போதித்து வளர்க்கத் தொடங்கினார். சுமார் நூறு வருடங்களின் பின்னர், இலங்கையில் 1945இல் இலவசக் கல்வி நடைமுறைக்கு வரலாயிற்று. 1848இல் தாய்மொழி மூலக்கல்வியை நாவலர் தொடக்கி வைத்தார். இலங்கையில் 1946இல் தாய்மொழிமூலக் கல்வியை நடைமுறைக்கு வந்தது. சமய பாடம் கட்டாய பாடம் நாவலர் 1848இல் அதை ஆரம்பித்து வளர்த்தார். இது இலங்கையில் 1955இல் நடைமுறைக்கு வந்தது. இவை எல்லாம் அவரின் தொலை நோக்குடன் கூடிய தீர்க்க தரிசனச் செயல்களாக எமக்கு வெளிப்பட்டு நிற்கின்றன. சிறுவர்களுக்கான பாடங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென இன்று பல ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னரே நவலர் தமது படைப்புக்களில், சின்னஞ் சிறு பிஞ்சு உள்ளங்கள் உவந்து ஏற்கக்கூடியவிதத்தில் ஆக்கங்களைத் தந்திருக்கின்றார். வெற்று வசனங்களிலும், பயனில்லாத வசனங்களும் அவரிடம் இல்லை. எல்லா வசனங்களும் பொருள் பொதிந்த வசனங்களாகவே இருந்தன. இவற்றிற்கு அவரின் பாலபாடம் என்ற படைப்பு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
காடடர்ந்து மண்மூடி கவனிப்பாரற்று அந்நியர் ஆட்சியின்போது அழிக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருந்த பாடல் பெற்ற திருத்தலமாகிய திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தை 1872இல் "மறைந்துபோய் ஒரு மருந்து இருக்கின்றது." என்றும் தேன்பொந்து இருக்கின்றதென்றும் திரவியம் இருக்கின்ற தென்றும் நினைவூட்டி உணர்வூட்டி நம்மவர்களைச் சிந்திக்க வைத்த பெருந்தகை நாவலர் பெருமான் அவர்கள். இதன்மூலம் சைவமக்களை விழிப்படையச் செய்து, அவ்வாலயத்தினை மீண்டும் கட்டி எழுப்ப வழி செய்த மகான் நாவலர். 1585இல் போர்த்துக்கீசர் திருக்கேதீஸ்வரத்தை இடித்ததில் இருந்து 1903ஆம் ஆண்டு வரையும், சுமார் 318 வருடங்கள் திருக்கேதீஸ்வரநாதர் அஞ்ஞாத வாசம் புரிந்திருந்தார். என்றே கூறலாம். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக அதன் திருப்பெயரை இலங்கைச் சைவ மக்களும், ஏனையோரும் கூறாமலும், கேளாமலும், சிந்தியாமலும் இருந்தனர். நாவலர் பெருமான் திருக்கேதீஸ்வர நாதனைச் சைவ மக்களுக்கும், சைவ உலகுக்கும், முதன்முதலில் 1872 இல் நினைவூட்டி பிரசாரம் செய்து, அறிக்கைகளையும், துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார். அச்சமயம் பிற மதத்தவர்களின் எதிர்ப்பினாலும், அக்காலத்திருந்த சைவ நன்மக்களின் உணர்ச்சிக் குறைவினாலும், வேண்டியபோது தக்க உதவிகள் கிடைக்காததினாலும் நாவலர் பெருமான் மிகவும் வருந்தினார். நாவலர் பெருமான் அவர்கள், திருக்கேதீஸ்வரநாதனின் திருக்கோவிலின் நினைவாகவே இருந்து சிவனடி எய்தினார்கள். அவரின் தீர்க்க தரிசன சிந்தனை அவருடைய அறிக்கை வெளிவந்து 21 வருடங்களின் பின் கைகூடலாயிற்று. 1893ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி கத்தோலிக்க குருமாரின் போட்டியின் மத்தியில் கோவிலை சூழ்ந்திருந்த நாற்பது (40) ஏக்கர்
-->

Page 7
இந்துசாதனம் 7.
காணியும் ஏலத்தின்மூலம் அறுதியாக இந்துக்களால் பெறப்பட்டது. நாவலர் பெருமான் அமரத்துவமாகி 14 வருடங்களின் பின் இந்நிகழ்வு இடம்பெறலாயிற்று. இதையடுத்து ஆலயக் கட்டுமானத் திருப்பணிகள் நடைபெற்று 1903ஆம் ஆண்டு யூன் மாதம் 28ஆம் திகதியன்று (28.06.1903) கும்பாபிஷேகம் செய்யப்பட்டு சிவாகம விதிப்படி சிவாச்சார்யார்களைக் கொண்டு நித்திய பூசைகள் முதலியன நடைபெற ஆவன செய்யப்பட்டன. திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வரலாற்றில் நாவலர் பெருமானின் கனதிமிக்க பங்களிப்பு காலத்தால் மறைக்கப்பட முடியாத வரலாற்றுப் பதிவாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.
இலங்கை வரலாற்றில் நாவலர் வகித்த பாத்திரம் பிரதானமானது. பிரதேச பண்பாட்டு ஆக்கிரமிப்பை, ஊடுருவலை, எதிர்நீச்சல் போட்டு அன்று அவர் புரிந்த தியாகப் போராட்டம் வரலாற்றுத் தேவையாகவும் சரித்திர முக்கியத்துவம் பெற்றதாகவும் இருந்தது. வட இலங்கையில் அவர் அன்று ஆரம்பித்த இயக்கமே, பின்னர் தென் இலங்கையில் அந்நியர் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிக்கும் இயக்கம் தோன்ற வித்திட்டது. வெறுமனே சைவத்திற்கும் தமிழுக்கும் மட்டுமல்லாது, தேசிய உணர்வுக்கும் உழைத்து ஏகாபத்திய எதிர்ப்பிலும் பங்காற்றி தமிழ்பெருங் குடிமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பதற் காகவே, அவர் தேசிய விழிப்பின் சின்னமாக எல்லோராலும் போற்றப்படுகின்றார். அவர் சைவ மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கு. முதுபெரும் குரவர்களாகிய அவரது பெற்றோர் ஆறுமுகம் என்னும் அழகிய நாமத்தை அவருக்கு அளிக்க, அவர் தமது மாபெரும் நாவன்மையால் 1849 இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட நாவலர் என்னும் செவ்விய பெயரையும் இணைத்துக்கொண்டார். எந்த இலட்சியங்களுக்காக நாவலர் பெருமான் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அந்த உன்னத இலட்சியங்கள், இந் நாட்டின் தற்போதைய சந்ததியினருக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் உயிர்நாடியாகத் திகழும்.
தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட நாவலர் சபை, நாவலர் சிலை, நாவலர் மணிமண்டபம், நாவலர் ஆச்சிரமமண்டபம், நாவலர் கலாசார நிலையம், அரசினரால் வெளியிடப்பட்ட நாவலர் முத்திரை என்பன நாடு நன்றியுடன் அவர்க்களித்த கெளரவங்களாகும். என்றோ, எங்கோ, எப்பொழுதோ, ஒரு அற்புத மனிதன் அவதரிக் கின்றான். அறுவடையின் பின் அளக்கும் நெல்மணிபோன்று சிலருடைய சிறப்பு அவர்களுடைய வாழ்வு முடிந்த பின்னரே போற்றப்படுகின்றது. ஆனால் நாவலர் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னரும் எதிர்காலத்திலும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை நிரந்தரமாக்கிக்கொண்டவர். இன்று நாம் நினைவுகூரும் அவதார புருஷர் அன்று பண்டிதரோடும் பாமரரோடும், வாழ்ந்தார்கள். வாழ்த்தப்பட்டார்கள். சைவத்திற்கும் தமிழுக்கும் உறையுளாய் இருந்த ஆதீனங்களும் அவரைப் போற்றிப் புகழப் பின்னிற்க வில்லை. "கற்றுணர் புலவருட்களிக்கும் முற்றுணர் ஆறுமுக நாவலனே" எனப் பேரறிஞர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் வாழ்த்தியதையும் "நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே" எனத் தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வினா எழுப்பி விதந்துரைத்ததையும், நாம் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது. அன்று நாவலரை ஈன்றெடுத்த முதுபெரும் குரவர்களாகிய அவரின் பெற்றோரும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவுகூரப்பட

2OO விகிர்தி கார்த்திகை 01
வேண்டியவர்கள். அதேபோல் அவரை ஈன்றெடுத்த மண் இது என நாம் நினைக்கும் போது நமது நல்லை நகர் மண்ணும் பெருமை பெறுகின்றது. நாவலராகிய யுக புருஷரின் நினைவால் நாம் பூரிப்படைகின்றோம்.
இன்று நாவலரின் நற்பணிகளை உள்வாங்கிப் பொலிவு பெற்ற சைவத் தமிழ் உலகம், சைவத்தையும் தமிழையும் காக்க வந்த நாயன்மார்கள் நால்வருக்கும் அடுத்தாற்போல், ஐந்தாம் குரவர் என அவரை மதித்துப் போற்றுகின்றது. நாவலர் இந்துக்களின் சீர்திருத்தச் செம்மல் என்ற குரல், அன்று சட்ட சபையிலும் ஒலித்தது என்பதையும், இங்கு நாம் பெருமையுடன் நினைவு கூர வேண்டியவர்களாய் உள்ளோம். ஐம்பத்தாறு வருடங்கள் மட்டும் இம்மண்ணில் வாழ்ந்து அர்ப்பணிப்புடன் நற்பணி புரிந்து, ஒளி பரப்பிய ஞானதீபம் 05.12.1879 இல் இறைபதமடைந்து அமர தீபமாகியது. 1879 ஆடி மாதம் நடைபெற்ற சுந்தரர் குருபூசைத் தினத்தில், அவர் ஆற்றிய பிரசங்கமே அவரின் கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. அப்பிரசங்கத்தில் இதுவே எனது இறுதிப் பிரசங்கமாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிட்டுக் காட்டி அப்பிரசங்கத்தை முடித்து வைத்ததும், அவரின் தீர்க்க தரிசனப் பலமே என நாம் வியக்க வேண்டியுள்ளது.
சமயத்தில் பிறந்து, சமயத்தில் வளர்ந்து, சமயத்தில் அடங்கியது அவரின் புனித ஆத்மா. அவர்தம் நற்பணி வளர்க! அவரின் நாமம் வாழ்க! அவர் காட்டிய தூய வாழ்வு எம்மை என்றும் நல்வழிப்படுத்துவதாக அமைய வேண்டும். நாவலர் பெருமான் பிறந்திலரேல் நடந்து முடிந்த நற்கருமங்கள் பல, நடவாமல் போய்விட்டிருக்கும். நாமும் நம் சமுதாயமும் நலிவுற்றுப் போயிருப்போம். அந்த யுக புருஷர் என்றென்றும் நம்மால் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர். ஆம் ஐந்தாம் குரவராக வைத்துப் போற்றப்பட வேண்டியவர். இதோ அவரை ஐந்தாம் குரவராக நினைவூட்டும் அரிய பாடல்,
"ஆரூரனில்லை, புகலியர்கோன் இல்லை, அப்பனில்லை சீருரும் மாணிக்க வாசகனில்லை திசைஅளந்த பேரூரும் ஆறுமுகநாவலனில்லை பின்னிங்கு யார் நீரூரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கும் நீர்மையரே"
அவரை ஐந்தாம் குரவராக சைவ உலகம் அங்கீகரித்தமைக்கு இது ஒர் சான்றாதாரமாகும். சைவத் தமிழ் பெருமக்களே! நம் நற்றவப் பயனால் அவதரித்த நாவலர் பெருமானை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எம் எல்லோரதும் உள்ளக் கிடக்கையாக இருக்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் நன்றியுணர்வுடன் செய்யும் கெளரவமாக இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக்கிக் கொள்வோமாக.
"ஆக்காத நாளில்லை ஆய்ந்து தேர்ந்து
அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக தாக்காத தர்க்கமில்லை உந்தன் நெஞ்சில்
தழைக்காத உவமையில்லை ஈழமண்ணில் நோக்காத தலங்களில்லை நினைந்து சொல்லி
நிலைக்காத பொருளில்லை நீதிகூடக் காக்காத நாட்டினை நாவல! நீ காத்தாய்
நீங்காதிருப்பாய் எம் நெஞ்சில் நாளும்."
"வாழ்க நாவலர் நாமம் வளர்க நாவலர் நற்பணி"
人

Page 8
இந்துசாதனம் 7.
சொல்லிய பாட்டின் பொரு (இந்து சாதனம் 2010 ஐப்பசிட
திருஞானசம்பந்தமூர்த்தி நாய கோளறு பொது பண்: பிபந்தைக் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
செப்பின முலைநன் மங்கை யொருபாக மாக
விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார ரவர்க்கு மிகவே. (7)
பதவுரை: செப்பு இளமுலை நல்மங்கை - புகழ்ந்து பேசுதற்குரிய இளமை பொருந்திய தனங்களை உடைய, நன்மை வாய்ந்த உமாதேவியார், ஒரு பாகம் ஆக - ஒரு பாகத்திற் பொருந்த, விடை ஏறு செல்வன்-இடபத்தில் ஏறியருளுகின்ற செல்வராகிய சிவபெருமான், அடைவார்- தம்மை அடைவோர், ஒப்பு இளமதியும் அப்பும் - விரும்பத்தக்க அழகும் இளமையும் பொருந்திய பாலச் சந்திரனையும் கங்கையையும், முடிமேல் தரித்து - திருமுடியிலே சூடி, என் உளம் புகுந்த அதனால் - அடியேனது உள்ளத்திலே வீற்றிருக்குங் காரணத்தினால், வெப்பொடு குளிரும் - வெப்பு நோயும் குளிர் சுரமும், வாதம்வாத நோயும், மிகையான பித்தும் - அதிகரித்த பித்த நோயும், வினையான - பழவினையால் வரும் நோய்களும், அடியார் அவர்க்கு-சிவனடியார்களுக்கு, மிகவேவந்து நலியா-மிகவும் வந்து வருத்தாத விதத்தில், நல்ல நல்ல அவை நல்ல நல்ல - அவை அனைத்துமே, (அடியார்களுக்கு) என்றுமே நன்மை செய்து கொண்டிருக்கும்.
பொழிப்புரை: புகழ்ந்து பேசுவதற்குரிய இளமை பொருந்திய தனங்களையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்தில் வைத்திருப் பவரும், அடியார்கள் தேடிச்சென்று அடைபவருமாகிய சிவபெருமான் அழகும் இளமையும் பொருந்திய சந்திரனையும் கங்கையையும் திருமுடியிற் தரித்தபடி, என் உள்ளத்துட் புகுந்த காரணத்தினால், வெப்புநோய், குளிர்சுரம், வாதநோய், பித்தநோய்
சித்தர்கள்
இந்த உடம்பு மிகப்பெரிய சாதனம். இதனுள் ட கொண்டிருக்கிறான் என்று கண்ணாரக் கண்டு இந்த உடற் இடமாகப் பரிசுத்த நிலையிற் பேணியோக சமாதி உகர் தெய்வ ஆற்றல்கள் வெறும் செப்பிடுவித்தைகள் அல்ல பேரின்ப ஆற்றல்களாகும்.

2OO விகிர்தி கார்த்திகை O]
எருணர்ந்து சொல்லுவோம் மாதம் 11ஆம் பக்கத் தொடர்ச்சி.) பனார் திருவாய் மலர்ந்தருளிய
று பதிகம்
ஆகியவையும் பழவினையால் வரும் நோய்களும் அடியார்களாகிய எங்களை வருத்தாமல், நன்மையையே செய்யும்.
வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து
மடவாட னோடுமுடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் ஏழ்கடல்சூழிலங்கை யரையன்ற னோடும்
இடரான வந்து நலியா ஆழ்கட னல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. (8)
பதவுரை: வேள்பட அன்று விழி செய்து - மன்மதன் அழியும்படி அந் நாளில் திருக்கண்ணாற் பார்த்து, மடவாள் தனோடும் உடனாய்-உமாதேவியாரோடும் கூடியவராய், வாழ்மதி வன்னி கொன்றை மலர் சூடி- ஒளி பொருந்திய சந்திரனையும், வன்னியையும் கொன்றை மலரையும் சிரசிலே தரித்து, விடைமேல் இருந்து வந்து-இடப வாகனத்தின் மேல் எழுந்தருளி வந்து, என் உளம் புகுந்த அதனால் - அடியேனது உள்ளத்திற் புகுந்த காரணத்தினால், ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தன்னோடு - ஏழு கடலாற் சூழப்பட்ட இலங்காபுரியை ஆண்ட இராவண னோடு, ஆழ்கடல் இடரான வந்து நலியா - ஆழ்ந்த கடல்களும் மற்றைய துன்பங்களும் நெருங்கி வந்து வருத்தமாட்டாவாய், அடியாரவர்க்கு-திருத்தொண்டர்களுக்கு, மிகவேநல்ல நல்ல, அவை நல்ல நல்ல - அவை எல்லாம் மிகவும் நல்லவையாகவே இருக்கும்.
பொழிப்புரை: முன்னொரு நாள் மன்மதனைத் தன் விழிப்பார்வை யால் எரித்த சிவபெருமான், சந்திரனையும் வன்னியையும் கொன்றை மலரையும் தலையிற் சூடி, உமாதேவியாருடன் இடப வாகனத்தில் ஏறி என் உள்ளத்துட் புகுந்த காரணத்தினால், இலங்கை மன்னன் இராவணனாலோ, ஆழ்கடல்களாலோ, சிவபெருமானின் அடியவர்களாகிய எங்களுக்கு எந்தவிதமான துன்பங்களும் ஏற்படமாட்டா. அவை எல்லாம் எப்போதும் நல்லவையாகவே இருந்து எமக்கு நன்மையைச் செய்யும். 人
ருடோத்தமாைன பரமாத்மா இறைவன் கோயில் கோயிலைப் பக்குவமாகப் பாதுகாத்து இறைவனுக்குறிய தவர் யாரோ அவரே மெய்யான சித்தர். சித்தர்கள் பெற்ற ), அந்தத் தெய்வ ஆற்றல்கள் உலகையே உய்விக்கின்ற
- செல்வி கே. உமாசந்திரா (இந்துக்கலைக்களஞ்சியம்)
8

Page 9
இந்துசாதனம் 7,
சிவபெருமானுடையபாட்டுக்கு நக்கீரர் குற்றம் சொல்லியபோது-சிவபெருமான், தன்பாட்டின் குணச்சிறப்பை எடுத்துக்கூறி வலியுறுத்தாது தன் நெற்றிக் கண்ணைக் காட்டினார். நெற்றிக்கண்ணைக் காட்டி, தான் சிவபெருமானே
என்பதைப் புரியவைத்தால் நக்கீரர், சிவன் பாட்டில் குற்றமிராது எனத் தெளிந்து தன்பிழையை உணர்ந்து திருந்துவார், தன்பாட்டைச் சரியானது என்று ஏற்பார் என்பதனாலேயே சிவ பெருமான் நெற்றிக்கண்ணைக் காட்டினார். அப்போதும் நக்கீரர் திருந்தாமல், மனத் தெளிவுறாமல் "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே" என்று வாதிட்டார். நெற்றிக்கண் நக்கீரரைச் சுட்டது, அவர் பொற்றாமரை வாவியில் விழுந்தார். பின் சங்கப் புலவர் பிரார்த்தனைக்கு இரங்கி, சிவபெருமான் வெப்பிலி ருந்து நக்கீரரை விடுவித்து அகத்தியரிடம் தமிழ் கற்பித்தார். அகத்தியரிடம் கற்று நக்கீரர் தெளிவடைந்தார் என்கிறது திருவிளையாடற்புராணம்.
அகத்தியர் நக்கீரருக்கு என்ன கற்பித்தார் என்பதைப் புராணம் தெளிவுறுத்தவில்லை
கூந்தலுக்கு மணம் உண்டு; கற்புடைப் பெண்கள் கூந்தலுக்கும் தேவப் பெண்கள் கூந்தலுக்கும் நறுமணம் உண்டு என்பதையே அகத்தியர் கற்பித்திருக்க வேண்டும்.
சரநூல் என ஒரு சிறு நூலை பலநாட்களுக்குமுன் வாசித்த ஞாபகம். மனித உடலில், பஞ்சபூதங்களின் தன்மையும் தாய் தந்தையரின் கூறுபாடுகளும் அந்த உடலுக்குரிய ஆன்மாவின் தன்மைகளும் இடம்பெற்றிருக்கும் என்பதை அந்த நூலிலிருந்து அறியமுடிந்தது.
மனித உடலில் பஞ்சபூதங்களின் தன்மை இருந்தால் அவற்றின் குணமும் இருக்கும் என்பது உறுதி. மனித உடலில் மண் தொடர்பான பகுதிகளில் மணமும், நீர் தொடர்பான பகுதிகளில் சுவையும், தீ தொடர்பான பகுதிகளில் ஒளியும் என அந்தப் பூதத்தின் குணங்கள் இருக்கும். சைவ சித்தாந்தத்தில் பஞ்சபூதங்களுக்கும் உள்ள தன்மை இது இது என விளக்கப் பட்டுள்ளது.'உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த ஆரம்ப நூலில் இப்பகுதி தெளிவாக உள்ளது. எனவே மனித உடலில் மண்
 

2OO விகீர்தி கார்த்திகை O]
தொடர்பான பகுதிக்கு மணம் இருக்கும் என்பது உறுதி. மயிர் மண்தொடர்பான பகுதி என்பதை உறுதி செய்ய முடியுமா? "மண்
திண்மையானது" என்ற கருத்துக்கு இசைவாக மயிர் திண்மையாகவே உள்ளது. இத்தகைய மயிரில் மணம் உள்ளதா என்பதை எப்படி அறியலாம்.
நெருப்பிலிட்டால் துர்நாற்றம் உண்டாவதிலிருந்து மயிருக்கு மணம் உண்டு என்பது தெரிகிறதல்லவா? ஆனால் கற்புடைய பெண்களின் கூந்தலில் நறுமணம் உண்டாக வாய்ப்பு உண்டு.
உலகியலில் நறுமணமுடைய பொருட்கள் பழுதடையும்போது துர்நாற்றமாவதையும்; துர்நாற்றமுடைய பசளையில் நறுமணப் பொருள் விளைவதையும் அவதானிப்பதன்மூலம் நல்லொழுக்க முடைய கற்புடைய பெண்களின் கூந்தல் நறுமணமுடைய தாயிருப்பது அசாத்தியமன்று.
பதினோராம் திருமுறையில் நக்கீரர் இயற்றியருளிய திருமுருகாற்றுப்படை, கோபப் பிரசாதம் - திருவெழுகூற்றிருக்கை, போற்றிக் கலிவெண்பா, கயிலைபாதி காளத்திபாதி என்னும் நூல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் "அறிவில்வாசகம் பொறுத்தருள்" எனவும் "மெய்யெரிவு தீரப்பணித்தருள்" எனவும் இருமுறையீடுகள் உள்ளன.
மகளிர் கூந்தலுக்கு இயற்கை வாசனை இல்லை என்று தான் கூறியது அறிவில் வாசகம் எனவும் சிவபெருமான் நெற்றிக் கண்பார்வையால் தனக்கு உண்டான வெப்பையே "மெய்யெரிவு தீரப்பணித்தருள்" என்றும் பொருள் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு நிகழ்ச்சிகளுக்குப் பின்னரும் அருணகிரிநாதரும் கச்சியப்ப சிவாசாரியாரும் நக்கீரரைப் போற்றி மதித்திருப்பதை அறிய முடிகின்றது. கச்சியப்பர் கந்தபுராண இறுதியில் "பொய்யற்ற கீரனின்" தோத்திரத்தை ஏற்ற முருகன் தன் புராணத்தையும் ஏற்கவேண்டும் என்கிறார்.
இக்கச்சியப்பர் வாக்கிலிருந்து பெருமையோ அகந்தையோ இன்றித் தன் மனச் சாட்சிக்கு விரோதமற்ற நிலையிலே நக்கீரர் சிவபெருமானை மறுத்துரைத்தார் எனவும் அகத்தியரிடம் கற்று அறிவு தெளிந்த பின் தன்பிழையை உணர்ந்து அஞ்சி வருந்தி சிவபெருமானைத் துதித்தார் எனவும் தெளியவேண்டும். நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்பதில் நக்கீரரின் அறிவல்ல, அவரது மன உறுதியே புலப்பட்டது. பின் அவரது துதி நூல்களில் சிவபரம் பொருளின் மகிமைகளும் நக்கீரரின் பணிவும் புலப்படுகின்றன. 人

Page 10
இந்துசாதனம் 7,
அன்பின் வ
LDக்களை ஒருவரோடொருவர் பிணைக்கும் மகத்தான சக்தியாக அன்பே திகழ்கிறது. இல்லறம் நடைபெறுவதற்கு அன்பே அடிப்படைக் காரணம். இல் வாழ்க்கையின் பண்பு அன்பு, அதன்
பயன் அறம் என்பதை
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
எனத் தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகிறது. குடும்ப உறுப்பினரிடையே இருக்கும் இறுக்கமான பிணைப்பிற்கு அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருப்பது ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருக்கும் தூய்மையான அன்பே ஆகும். அன்பிற்கு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் போடமுடியாது. அன்புடையார் படும் துன்பத்தால் ஒருவர்க்குத் தோன்றும் கண்ணிர் அவரது அன்பினை எல்லோரும் அறியக் காட்டிவிடும்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண் நீர் பூசல் தரும்" - திருக்குறள் - 71
இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கும் காதலர்களிடம் ஒருவரை ஒருவர் உளமார நேசிக்கும் அன்பு இல்லாவிட்டால் குடும்ப வாழ்க்கையே பாலைவனமாகிவிடும். கொடிது எது? என்று கூற வந்த தமிழ் மூதாட்டி ஒளவையார்
"கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை அதனிலும் கொடிது ஆற்றொணாக்கொடுநோய் அதனிலும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனிலும் கொடிது இன்புற அவள் கையில் உண்பதுதானே"
எனப் பாடுகிறார். பாட்டின் இறுதியில் அன்பிலாப் பெண்டிர் ஒருவனுக்கு அமைந்தால் அதுவே அவனுக்குப் பெரிய துன்பம் என்கிறார். அன்பில்லாதவளின் கையினால் வாங்கி உண்பதுவே
கொடியவற்றுள் எல்லாம் மிகவும் கொடியது என்கிறார்.
சக + உதரம் என்பது சகோதரமாயிற்று. ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை நாம் சகோதரம் என்கின்றோம். சகோதர பாசம் என்பது மிகவும் வலிமையுடையது. ஒரு சகோதரம் படும் துன்பத்தைக் கண்டு மற்றைய சகோதரம் துடிக்கிறது. "தானாடாவிட்டாலும் தன் தசையாடும்" என்பது நம்மிடம் உள்ள முதுமொழியாகும். முருகப் பெருமானுடன் செய்த போரிலே பல இழப்புக்கள் ஏற்பட்டபொழுதும் கலங்காத சூரன், தன் தம்பி சிங்கமுகாசுரன் இறந்த பொழுது தேம்பித் தேம்பி அழுகின்றான். பொன்னை, நிலத்தை, புதல்வர்களை, மங்கையரை, வேறு உலகியல் செல்வங்களை இழந்தால் மனித முயற்சியால் மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சகோதரத்தை இழந்தால் வாழ்வில் மீண்டும் பெறமுடியாது என்பதைப் பின்வரும் கந்தபுராணப் பாடல் தெளிவாக விளக்குகிறது.

2OO விகிர்தி கார்த்திகை 01
GO)
சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
"பொன்னை நிலந்தன்னைப் புதல்வர்களை மங்கையரைப் பின்னை உளபொருளை எல்லாம் பெறலாகும் என்னை உடைய இளங்கோவே இப்பிறப்பில் உன்னை இன்றிப் பெறுவது உண்டோ உரையாயே"
தாய் தன் பிள்ளையில் வைக்கும் அன்பு பிரதிபலனை எதிர்பாராத அன்பாகும். ஒரு பிள்ளை தன் தாயில் வைக்கும் அன்பும் அத்தகையதே. தாயன்பிற்கு நிகராக எந்த அன்பினையும் கூற முடியாது. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் முற்றாகத் துறந்த பட்டினத்தடிகளாலேயே தாயன்பைத் துறக்க முடியாதிருந்த நிலையினை
"ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று" என்ற அவருடைய பாடலில் இருந்து அறியமுடிகிறது.
இறைவனோடு அடியவன் வைக்கும் அன்பு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். காரைக்காலம்மையார்இறைவனிடம் இறவாத அன்பையே வேண்டுகின்றார். தன் உள்ளத்தில்இறைவனை நினைந்து உருகுகின்ற இடையறா அன்பினைத் தந்து உதவுமாறு ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானிடம் மணிவாசகர் வேண்டு
ഖങ്ങg,
"ஆடு அகம் சீர் மணிக்குன்றே
இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே
நின்றுருகத் தந்தருள் எம் உடையானே"
எனத் திருவாசகம் குறிப்பிடுகிறது. வீரவாகுதேவர் முருகப் பெருமானிடம் வேறு எதனையும் வேண்டாது ஞானபண்டிதரின் அன்பை மாத்திரம் வேண்டி நின்றதை
"சால நின் அன்பையே வேண்டுவன் தமியேன்"
எனக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.
அன்பின் முதிர்வு நிலையில் ஏற்படுவதுதான் பக்தி அடியவன் பக்திவலை வீசினால் இறைவன் அதில் அகப்பட்டே தீருவான். "பக்தி வலையில் படுவோன் காண்க" எனத் திருவாசகம் இதனைக் குறிப்பிடுகின்றது. காந்தக்கல் இரும்புத் துகள்களைக் கவர்வது போலவும், படர்கொடியானது மரத்தை நோக்கிப் படர்வதுபோலவும் ஆற்றின் பிரவாகம் கடலை நோக்கி ஒடுவதுபோலவும், தர்ம பத்தினியாள் ஒருத்தியின் கற்பு அவள் நெஞ்சத்தில் குடிகொண்டவனைக் கவர்வதுபோலவும், பக்தன் ஒருவனின் பக்தி இறைவனை நோக்கி ஒடிக்கொண்டேயிருக்கும் எனச் சங்கரர் உண்மையான பக்திக்கு விளக்கம் கொடுக்கின்றார்.
பூரண சரணாகதியாகிய பிரபத்தி நிலையில் நின்று அடியவர்கள் வணங்கினால் இறைவனின் திருவருள் உடனே கிடைக்கும் என்பதற்கு மகாபாரதத்தில் பாஞ்சாலியின் பக்தி நிலை உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. இரண்டு கைகளையும் மேலே தூக்கிய நிலையில் பாஞ்சாலி பூரண சரணாகதியாக கிருஷ்ண
பரமாத்மாவைக் கூவி அழைத்தாள். கோவிந்தா, கிருஷ்ணா,
11ஆம் பக்கம் பார்க்க-2

Page 11
இந்துசாதனம் Π7. Η
விநாயக
ஆன்மாக்களின் அல்லல், வல்வினை, துன்பம் அகல
சிவபெருமானால் எமக்குத் தரப்பட்டவர் விநாயகர். குணம்
குறியற்ற இறைவன், விநாயகரை எமக்குத் தந்ததன்மூலம் மிகுந்த கொடைவள்ளலாக ஞானசம்பந்தருக்குத் தோன்றுகின்றார்.
திருவலிவலம் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் போற்றித் துதிக்கின்ற_
"பிடி அதன் உரு உமை கொழ". எனும் தேவாரத்தில் -
"வழிபடும் அவர் இடர்கடி கணபதிவர அருளினர் மிகுகொடை வடிவினர்" எனக் குறிப்பிடுகிறார்.
சித்தாந்தப் பொருளை விளக்க வந்த மெய்கண்ட தேவர் சிவஞான போதத்தின் காப்புச் செய்யுளில்,
"கல்லா னிழல் மலை வில்லா ரருளிய பொல்லா ரிணை மலர் நல்லார் புனைவரே" என மொழிவதும் நோக்கற்பாலது.
விநாயக வழிபாட்டினால் சிவப்பேறு பெற்றவர்களில் முதன்மையானவர் தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார்
"பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்கு சிந்தாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் நான்றவாயும் நாலிரு புஜமும்
இரண்டுசெவியும் இலங்கு பொன் முடியும்
10ஆம் பக்கத் தொடர்ச்சி. பார்த்திபா, பரந்தாமா, கேசவா, கண்ணா, மாயவா, கோகுலா எனக்
கதறி அழுதாள். துச்சாதனன் உரிந்த அவளது துகில் வண்ண வண்ணச் சேலைகளாய் வளர ஆரம்பித்தது.
வண்ண வண்ண சேலைகளாய் வளர்ந்தது வளர்ந்தது வளர்ந்தது கண்டீர்
என மகாகவி பாரதியார் தான் எழுதிய பாஞ்சாலி சபதத்திலே இதனைக் குறிப்பிடுகின்றார். கண்ணப்பனின் பக்தியினைப் பெரியபுராணம் விதந்து கூறுகின்றது. கண்ணப்பனைப் போலக் கண்ணையே பிடுங்கிக் காளத்தி அப்பனின் கண்ணில் வைக்கின்ற உயர் பக்தி நிலை தன்னிடம் இல்லையேயென மணிவாசகர் குறிப்பிடுவதைக் "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்ற திருவாசகத்தின் திருக் கோத்தும்பிப்பாடலில் காணலாம்.
அன்பு உள்ள இடத்தில்தான் உரிமை வரும் என்பது உலகியலில் நாம் அறிந்த உண்மை ஆகும். உண்மையான அன்பு இல்லாதவர்களிடம் நாம் உரிமையோடு பேசுவதில்லை. மணிவாசகர்

2OO விகிர்தி கார்த்திகை 01
சஷ்டி விரதம்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்" என அருவமாய் இருக்கும் இறைவனை உருவமாக எம் மனக்கண்முன் நிறுத்துகி
றார் ஒளவையார்.
விநாயகரின் பேரருளினாலே "சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞானம்" பெற்றுச் சித்தத்துக்குள்ளே சிவத்தைக் கண்டவர் அவர்.
விநாயகரைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் பிரதானமானது விநாயக சஷ்டி விரதம். கார்த்திகைத் தீபத் திருநாளுடனும் மார்களித் திருவெம்பாவையோடும் மருவி வரும் இருபத்தொரு தினங்கள் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மார்கழி மாத வளர்பிறைச் சஷ்டித் திதியன்று விரதம் நிறைவு பெறும்.
இவ்விரத நாட்களில் விநாயகப் பெருமானுக்குப் பிரீத்தியமான, கணி வகைகள், சர்க்கரை, பருப்பு, நெய், எட்பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பிட்டு, வெள்ளரிப்பழம் போன்ற
பட்சணங்களை நிவேதனம் செய்து வணங்குவது வழக்கம்.
உலகில் நடைபெறும் அட்டூளியங்கள், அவற்றால் விளையும் அவலங்கள்; சொல்லொணாத் துயரங்கள் அகல்வதற்கு விநாயக வழிபாடு மிகவும் வேண்டப்படும் நிலையில், எதிர்வரும் கார்த்திகை மாதம் 6ஆம் திகதி (22.11.2010) திங்கட்கிழமை விரதம் ஆரம்பமாகிறது.
ஐங்கரனை திரிகரண சுத்தியுடன் இருபத்தொரு தினங்களும் வழிபட்டு; உலகம் நன்மை பெறப் பிரார்த்திப்போமாக.
zస్థN **
இறைவனை அன்புடன் வழிபட்டமையால் உரிமையுடன் அவரிடம் வேண்டுவதை
"நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்குநாயகமே" என்ற திருவாசகத்தின் குழைத்த பத்து வரிகளின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
அன்பு தான் கனிந்து பூரணம் பெற்றுச் சிவமாகிறது என்கிறார் திருமூலர். அன்பும் சிவமும் வேறு என்பது அறிவிலிகளின்; வார்த்தை; அன்பே சிவம் என்பதைப் பலரும் அறியாதிருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்துவிட்டால் பின்பு அவர்களே அன்புருவமான சிவமாய் அமர்ந்திருப்பார்கள் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து இருப்பார்கள்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

Page 12
இந்துசாதனம் 7.
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம்
இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
afiláßřfio (GBQ) Shaf? Lf5* febló el (r7. rt. 2oro)
மெளனம் கலையட்டுமே!
மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சி - தன்னுடைய வசதிக்காக தன்னுடைய -- சுய நலனுக்காக - தன்னுடைய நாட்டு மக்களையேபணயக் கைதிகளாக்குதல்--
தன்னுடைய நன்மைக்காகத் தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்தல் - அதைத் திசை திருப்புதல் - தன் மனம் போனபடி தேர்தல் முடிவுகளை அறிவித்தல்
மிகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஒரு அரசியற் கட்சியின் தலைவரைப் பொய்யான காரணங் களுக்காகச் சிறையில் அடைத்து வைத்தல் - போன்ற ஜனநாய கத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடும் எந்த நாட்டையும் - ஜனநாயக முறைகளைக் காப்பாற்ற விரும்புகிற- ஜனநாயகம் தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உண்மையான அக்கறைகொண்ட-ஏனைய ஜனநாயக நாடுகள்--
கண்டிக்க வேண்டும் - கண்டித்தே ஆகவேண்டும் - உண்மைநிலையை உலகுக்கு அம்பலப்படுத்தவேண்டும்--
அப்படிக் கண்டிப்பதும் தவறுகளை அம்பலப்படுத்துவதும்
தவறு செய்கின்ற நாடுகளின் இறையாண்மையில் தலை யிடுவதாக ஆகாது
LDITg|DIT85 -------
கண்டிக்கின்ற அந்த நாடுகள் அனைத்தும் உண்மையான ஜனநாயக நெறியில் நிற்கின்றன என்பதை அது உறுதிப் u(Bğiğjıh
சர்வாதிகாரப்போக்கிலிருந்து ஆசியாக் கண்டத்தை மீட்கும்
அதன்மூலம் உலகின்பாதுகாப்பையும் உறுதியாக்கும்--
ஆனால், சர்வ தேச ரீதியில் இத்தகைய பிரச்சினைகள் சம்பந்தமாகத்தன்கண்டனத்தை வெளியிடுவதை
தவறு செய்யும் நாடுகளைத் தட்டிக் கேட்பதை - இந்தியா - உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா - தவிர்த்தே வந்துள்ளது!
இந்தியாவின் இந்தப் போக்கை - இந்தியாவின், இந்த மெளனத்தை - இந்திய மண்ணில் நின்றுகொண்டே இந்தியாவின் லோக்சபா - ராஜ்ய சபா ஆகிய இரு சபைகளைச் சேர்ந்தவர்களும் ஒருங்கே இருந்த கூட்டத்திலே - எவ்வித ஒளிவு மறைவுமின்றி - 666firmouras-õlaõlas 666foouTasäGÕl
 

2OO விகிர்தி கார்த்திகை O]
தன் வருத்தத்தையும் வெளியிட்டவர் --
பராக் ஒபாமா!
இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்தியாவின் விருந்தினராக வந்த - உலகின் வலிமை மிக்க ஜனநாயக நாடாகக் கருதப் படுகின்ற அமெரிக்க நாட்டின் தலைவராக மக்களாற் தெரிவு 6Firu. In IIL
TITäs SQL IIIImnr! இராணுவ - பொருளாதார ரீதியாக இந்தியாவுடன் மேலும் இறுக்கமாகக் கைகோத்துக்கொண்டு செயற்படுவதைப்பற்றியும்
ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னத்தை மேலும் வலுப்படுத்துவதைப்பற்றியும்--
இந்தியாவுடன் விரிவாகப் பேசுவதையும் ஒரு நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வருகைதந்த பராக் ஒபாமா
இந்திய மண்ணில் நின்றே இந்தியாவின் தவறைச் சுட்டிக் காட்டச் சிறிதும் தயங்கவில்லை என்றால் - தென் ஆசியப் பிராந்தியத்தின் அரசியற் களத்திலே சமீப காலமாக முளைகொண்டு - தளிர்விட்டு - இலை விரித்து - கிளை பரப்பி - விழுதும் விடத்துடிக்கும்--
குடும்ப - தனிக்கட்சி - இராணுவ - சர்வாதிகாரப் போக்கை அடியோடு ஒழித்து ஜனநாயக விழுமியங்களைச் சீராக நடை முறைப்படுத்துவதற்கே அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பதும் அந்தப் பணியில் இந்தியாவும் ஈடுபட வேண்டும் என்பதும்தான் காரணங்களாக இருக்கவேண்டும்
கண்டிக்கப்பட வேண்டிய நாடென்று அவர் குறிப்பிட்டது மியன்மார் என்ற பழைய பர்மாநாட்டைத்தான்!
அந்த மியன்மாரின் வழியிற் பயணிக்கத் தொடங்கியிருக்கும் வேறு நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை--
தனக்கெதிராகத் தெரிவிக்கப்பட்ட குற்றச் சாட்டுச் சம்பந்தமான இந்தியாவின்நிலைப்பாடு என்ன என்பதுந் தெரியவில்லை--
எனினும், முழுக்க முழுக்க e9 gTafu Gio Fbll Igbg5oToor செயற்படுகள் பற்றி இப்பத்தியில் நாம் எழுதுவதற்கு முன்வந்த நோக்கங்கள்
"சமயச் சார்பற்ற அரசு" என்பதற்கு
தர்மம், நீதி, மனித நேயம், நல்லொழுக்கம் சம்பந்தமாகச் சமய நூல்களிற் காணப்படும் விழுமியங்களையும் விளக்கங்களையும் குழி தோண்டிப் புதைத்தல் என்ற அர்த்தம் இல்லவே இல்லை என்பதையும்--
அறம் சார்ந்த கருத்துக்களையும் செயற்பாடுகளையும் அரசியலுக்கு அடிப்படையாகக் கொள்வது சமயச் சார்பற்ற நிலையை எவ்வகையிலும்பாதிக்காது என்பதையும்--
இந்தியத் தலைவர்களுக்கு எடுத்துக்கூறி, காந்திஜீ-- ராஜாஜி - நேருஜி போன்ற தன்னலமற்ற தனிப்பெருந் தலைவர்களின் வழியில் அறஞ்சார்ந்த அரசியலுக்கே அவர்கள் முதலிடமும் முக்கிய இடமும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி--
ஆபத்தான அர்த்தமற்ற - மெளனத்தைக் கலைத்து -- ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் வெளிப்படையாக அவர்கள் ஈடுபடவேண்டும் எனக் கோருவதும்--
"இப்போதைய சந்ததியினராகிய நாம், கெட்ட மனிதர்களின் தீய செயல்களுக்காக வருந்துவதிலும் பார்க்க, இந்தச் செயல்களைக் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கின்ற நல்ல மனிதர்களின் பயங்கர மெளனத்திற்காகவே அதிகம் வருந்த வேண்டி இருக்கும்"-
எனக் கறுப்பினத் தலைவர் மாட்டின் லூதர்கிங் பல்லாண்டு களுக்கு முன்னர் கூறியவற்றை நமது நாட்டிலும் மெளன விரதத்தைக் கடைப்பிடித்துவரும் கல்விமான்கள்-கனவான்கள்சமூகப்பெரியார்கள் போன்றவர்களுக்கு நினைவூட்டுவதுமே--
என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 人

Page 13
இந்துசாதனம் 7.
155. இன்ப, துன்பங்களுக்கு முன்செய்த வினையே காரணம் என்றீர்கள். அவ்வாறு ஏன் கொள்ளவேண்டும்? உலகில் முயற்சியுடையோர் யாவரும் பெரும் பொருளை ஈட்டி அதன் பயனாக இன்பத்தை நுகர்கிறார்கள். முயற்சி யில்லாதவர் பொருள் இல்லாமல் வறியவராய் வாழ்ந்து துன்பப்படுகிறார்கள். இவ்வுண்மையை நாம் கண் கூடாகக் காண்கின்றோம். ஆதலால், மக்கள் அடையும் இன்ப, துன்பங்களுக்கு அவர் செய்யும் முயற்சியும், முயற்சியின்மையுமே காரணம் என்று கொண்டால் என்ன?
முயற்சியுடையோர் செல்வத்தையும் இன்பத்தையும் அடைவர் என்றும், முயற்சி இல்லாதவர் வறுமையையும் துன்பத்தையும் அடைவர் என்றும் நீ கூறியது ஓரளவுக்கு உண்மையே தவிர, அதுவே முடிந்த உண்மையாகாது. சில இடங்களில் இதற்கு மாறாக நிகழ்வதையும் காண்கின்றோம். ஒரு முயற்சியும் செய்யாதவர் ஓங்கிய செல்வ வாழ்வில் திளைப்பதையும் சிலர் பொருளிட்டுவதற்காக அயராது முயன்றும் போதிய பயனைப் பெறாமற் போதலோடு, இருந்த கைப் பொருளையும் இழந்து வருந்துவதையும் காண்கின்றோம். இதனால், உயிர்கள் அடையும் இன்ப, துன்பங்களுக்கு முயற்சியும், முயற்சியின்மையுமே காரணம்
அல்ல என்பது விளங்கும்.
156.இன்ப, துன்பங்களுக்கு முன்செய்த வினையே காரணம்
என்பது உண்மையானால், முயற்சியின்றியே அவை வருதல் வேண்டும் அன்றோ? அவ்வாறின்றி, முயற்சி யின் விளைவாகவே அவை வருவது ஏன்?
ஒரு காரியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணங்கள் தேவைப்படலாம். காரணங்கள் பலவாக இருப்பினும் அவற்றுள் ஒன்றுதான் முதன்மைக் காரணமாக இருக்கும். ஏனைய காரணங்கள் காரியம் நிகழ்வதற்குத் துணையாய் அமைவன
வாகும்.
காட்டாக, மரம் ஆகிய காரியத்திற்கு வித்து,நிலம்,நீர், சூரியவொளி, காற்று முதலிய பலவும் காரணங்களாகும். அவற்றுள் வித்து என்னும் காரணமே முதன்மையானது. பிற காரணங்க ளெல்லாம் அது முளைத்துப் பயன் தருவதற்குத் துணை செய்வன
бјLI
அதுபோல, உயிர்களின் இன்ப, துன்பங்களுக்கு வினையே முதன்மைக் காரணம். முயற்சி துணைக்காரணமாய் அமையும். ஆதலால், வினை இன்ப, துன்பமாகிய தன் பயனைத் தருவதற்கு முயற்சியாகிய துணைக் காரணமும் வேண்டப்படுகிறது என்பதை
அறிவாயாக.
 

2OO விகிர்தி கார்த்திகை O]
இருவகை வினைகள் 157. இருவினை தோன்றுதல் எவ்வாறு?
உயிர்கள் உடம்போடு கூடிவாழும் சகல நிலையில், ஆணவமலம் உயிர்களுக்குத் திரிபுணர்ச்சியை உண்டாக்கும். அத்திரிபுணர்ச்சியாலே, எல்லாவற்றிற்கும் தன்னையே வினை முதலாக - தலைவனாகக் கருதி யான் யான்’ என்று முனைத்து எழும். மேலும், தனது அல்லாத பல பொருட்களைத்தனதாகக் கருதி அவற்றை எனது எனது' என்று பற்றும்.
இவ்வாறு ஆணவமலம் காரணமாக எழும் யான் எனது' என்னும் செருக்கினால் உயிர்களின் அறிவு புறப்பொருட்களை நோக்கிச் செல்லும், செல்லுமிடத்து அப்பொருள்களின் இயல்பு காரணமாக அவற்றின்மேல் விருப்பு வெறுப்புக்கள் நிகழும். அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக அவற்றினிடத்து நல்ல செயலையேனும், தீய செயலையேனும் செய்யும். இவ்வாறு நல்வினையும் தீவினையும் ஆகிய இருவகை வினைகள் தோன்றுவனவாம்.
செயல் வினையாதல்
158. செயல் வினையாவது எங்ஙனம்?
உயிர்கள் செயலைச் செய்வதற்கு உடலாகிய இடம்
வேண்டும். உடலில் அமைந்துள்ள ஐம்பொறிகளாகிய
AA s (இந்துசாதனம் - ஐப்பசி மாதம் 2010 -
17ஆம் பக்கத் தொடர்)
- முனைவர் ஆ.ஆனந்தராசன்
புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும் வேண்டும். காலம் என்பதும் வேண்டும். இவை கூடினாலன்றி உயிர்கள்
செயற்படமுடியாது.
சடமாகிய இப்பொருட்கள் தாமே சென்று உயிரைக் கூடமாட்டா; உயிரும் இவைகளைத் தேடிச்சென்று அடைய மாட்டா. இறைவனே உயிர்கள் மீது கொண்ட இரக்கத்தால் இவைகளை உயிர்க்குக் கூட்டுவிக்கின்றான்.
பெருஞ் செல்வர் ஒருவர் வளமனை கட்டுவதாக வைத்துக்கொள்வோம். அதற்குவேண்டிய இடமும், கட்டுமானப் பொருட்களும் ஆகிய எல்லாவற்றையும் அவர் அமைத்துக் கொடுக்கின்றார். அவற்றைக் கொண்டு தொழிலாளர்கள் வீடுகட்டி முடிக்கின்றார்கள். முடித்தவுடன் அவர்கள் நாங்கள் கட்டியது. ஆகவே வீடு எங்களுடையது ’ என்று உரிமைகொள்ள முடியுமா? அப்படி உரிமை கொண்டாடினால் அது நகைப்பிற்குரிய செயலல்லவா? எல்லாவற்றையும் தந்து, கட்டும்படியாகப் பணித்த அச்செல்வர் அல்லவா அவ்வீட்டின் உரிமையாளர்? அவ்வீட்டைப் பார்த்த யாவரும் அச்செல்வரின் பெயரைச் சொல்லி அவர் கட்டிய வீடு என்பார்களேயன்றித் தொழிலாளர்கள் கட்டிய வீடு என்று சொல்லமாட்டார்கள்.

Page 14
இந்துசாதனம் 7.
அச்செல்வர் செய்ததுபோல இறைவன் இடம், காலம், கருவி இவைகளை அருள் காரணமாகக் கூட்டுவிக்க, அவற்றைக் கொண்டு தொழிலாளர்கள்போல உயிர்கள் செயல் செய்யும் போது, கட்டிய வீடு செல்வரது உடைமையாதல்போல, அச்செயல்கள் இறைவனது பணியாகின்றன. ஆயின் உயிர்கள் இறைவன் இட்ட பணி என உணர்ந்து செய்யாமல் தம் பணி எனவே கருதுகின்றன; தமக்குத் தலைமை உள்ளதாக எண்ணி நடக்கின்றன.
இங்ங்ணம் நாமே நம் விருப்பத்தால் மேற்கொண்டவை எனக் கருதிச் செய்யும் அச்செயல்களே உயிர்களுக்கு வினையாகின்றன.
159. நல்வினை என்பது யாது? தீவினை என்பது யாது?
நல்வினையாவது, அறநூல்களில் விதிக்கப்பட்ட செயல்களைச் செய்தலும், விலக்கப்பட்ட செயல்களைச் செய்யாமை யும் ஆகும்.
தீவினையாவது நல்வினைக்கு மாறானது. அஃதாவது, அறநூல்களில் விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யாமையும், விலக்கப்பட்ட செயல்களைச் செய்தலும் ஆகும்.
160. உயிர்கள் வினைகளைச் செய்வதற்கு எவை
கருவிகளாய் உதவுகின்றன?
மனம் , வாக்கு, காயம் (உடம்பு ) ஆகிய மூன்றும் வினை செய்வதற்குக் கருவியாய் உதவுகின்றன.
161. மனம், வாக்கு,காயம் ஆகியவற்றாற் செய்யும் வினைகள் எப்பெயர்களைப் பெறுகின்றன?
மனத்தினாற் செய்யும் வினைகள் மானத கன்மம் எனப்படும். நல்ல செயலையோ, தீய செயலையோ செய்யவேண்டும் என்ற நினைப்பு மனத்தில் எழுங்கால் அந்நினைப்பினால் தோன்றுவதுமானத கன்மமாம்.
இனி, வாக்கினாற்செய்யும் வினைகள் வாசிக கன்மம்' எனப்படும். அஃதாவது, தான் நினைத்தவற்றை வாயினாற் சொல்லும்போது அச்சொற்களால் தோன்றுவது வாசிக கன்மமாம்.
காயம் ஆகிய உடம்பினாற் செய்யும் வினைகள் காயிக கன்மம்' எனப்படும்.
இவ்வாறு உயிர்கள் தம் மனம், மொழி, மெய் என்னும் மூன்றினாலும் நல்வினை தீவினைகளைத் தேடிக் கொள்கின்றன.
வினையினது நிலைகள் 162. மனம் மொழி மெய்களால் தோன்றிய வினைகள் நிகழ்ந்த அப்பொழுதே அழிந்து போகின்றனவே. அவை எங்ஙனம் பின்னே வந்து பயனைத் தரும்?
உள்ளதுபோகாது;இல்லது வாராது என்ற அடிப்படை உண்மையைத் தொடக்கத்திலேயே கூறியுள்ளோம். அதனை நீ நினைவிற்கொள்.
உள்ளதாகிய பொருள் எக்காலத்திலும் அடியோடு இல்லாமற் போதல் இல்லை. உள்ள பொருள் அழிந்தது என்றால், புலப்படுகின்ற தூல நிலையை விட்டுப் புலப்படாத சூக்கும நிலையை அடைந்தது என்பதே பொருளாகும்.
மனம் மொழி மெய்களால் நல்லனவும் தீயனவுமாகச்
செய்யப்படும் வினைகள் அவை நிகழும் காலத்தில் கண், செவி

2OO விகிர்தி கார்த்திகை O]
முதலிய புறக் கருவிகளுக்கும் மனம் முதலிய உட்கருவிகளுக்கும் புலனாதலின் தூல வினைகள் ஆயின. அவை ஆகாமியம்
எனப்படும்.
தூலமாய் நிகழ்ந்த அவ் ஆகாமிய வினைகள் அந் லையினின்றும் நீங்கி நுண்ணிலையை அடைந்து புலப்படாது
அடைந்து
நிலைபெற்று நிற்கும்.
வினை தனியே நில்லாது, ஒரு பொருளைப் பற்றியே நிற்கும் ஆதலின் நுண்ணிலையை அடைந்த வினைகள் அவற்றைச் செய்த உயிர்களது புத்தியையே தமக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு கிடக்கும். மறைந்து கிடக்கும் அச்சூக்கும நிலையில் அவை சஞ்சிதம் எனப்படும்.
நூல்களில் பழவினை எனவும், தொல்வினை எனவும் கூறப்படுவது சஞ்சிதமேயாகும். செய்யப்படும் காலத்தில் நல்வினை என்றும் தீவினை என்றும் பெயர் பெற்ற தூலவினைகள் இவ்வாறு பழவினையாகும்பொழுது முறையே புண்ணியம் என்றும், பாவம் என்றும் பெயர் பெற்று மறைந்து நிற்கும்.
புண்ணிய பாவமாய் நின்ற சஞ்சித கன்மம் இப்பிறவியில் வந்து பயன் கொடுக்கும் நிலையில் பிராரத்தம் எனப் பெயர் பெறும். அஃது அதி சூக்கும கன்மம் ஆகும். இது தமிழில் நுகர்வினை எனப்படும். ஊழ்வினை என்பதும் இதுவே.
பிராரத்தம் அதி சூக்குமமாய் வந்து பயன்தருமிடத்து அது தரும் பயன் சாதி, ஆயு.போகம் என மூன்றாகும்.
சாதி என்பது பிறக்கும் இனம் . தாவரம், பறவை, விலங்கு, மக்கள் எனப் பலவாறாகக் காணப்படும் படைப்புகளில் தத்தமக்கு ஏற்றதை உயிர்கள் பெறுவது வினையினால் ஆவதே. இன்னும், மக்கட் பிறப்பிலும் ஆண் பெண் என்னும் பால் வேறுபாடு அமையப் பிறத்தலும், கல்விச் சூழல் பொருந்திய குடியிற் பிறத்தலும், கல்லாத சூழலிற் பிறத்தலும், செல்வச் செழிப்புமிக்க இடத்திற் பிறத்தலும் வறுமை குடிகொண்ட இடத்தில் பிறத்தலும் போன்றவை யாவும் சாதி என்பதில் அடங்கும். இவையெல்லாம் வினைக்கேற்ப
அமைவனவாம்.
ஆயு என்பது ஆயுள்; வாழ் நாள். நீண்ட வாழ்நாளும் குறைந்த வாழ்நாளும் என அமைவதெல்லாம் வினையின் பயனே.
போகம் என்பது உயிர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்.
இவை பிராரத்த வினையின் பயன் என்பது சொல்ல வேண்டா.
பேறு, இழப்பு, இன்பம், துன்பம் முதலிய யாவும் அவ்வப் பொழுது புதிதாய்த் தோன்றுவன அல்ல; உயிர்கள் கருவில் உற்ற அப்பொழுதே வந்து நுட்பமாய் பொருந்தியனவாம். இவ்வாறு நுட்பமாய் பொருந்திய அவையே உயிர்கள் பிறந்து வாழ்கின்ற காலத்தில் அவ்வுயிர்கள் செய்யும் முயற்சியின் வழியாக விளக்கமாகத் தோன்றி நிகழும்.
இங்ங்ணம் வினைகள் ஆகாமியமாய்த் தோன்றி, சஞ்சிதமாய்க்கிடந்து, பின் பிராரத்தமாய் வந்து தம் பயனைத் தரும்
என அறிவாயாக.
一>

Page 15
இந்துசாதனம் 7.
வினையும் இறைவனும் 163. நீங்கள் சொல்லுகிறபடி வினையே ஒருவன் பிறக்கும் இனத்தையும், அவனது வாழ்நாளின் எல்லையையும் வாழும் நாளில் நிகழும் இன்ப துன்பங்களையும் வரையறைப்படுத்துகிறது என்றால், வினையே எல்லாம் செய்யவல்ல ஆற்றலை உடையது என்று ஆகிறது. அங்கனமாயின், இறைவன் என்ற ஒருவன் எதற்கு? உலகை நடத்துவதற்கு வினை ஒன்றே போதாதா? வினை உயிர்களுக்குச் சாதி, ஆயு , போகம் ஆகிய எல்லாவற்றையும் தரவல்லது என்றாலும், வினை அறிவில்லாத சடம் என்பதையும், அது தானே செயற்படமாட்டாது என்பதையும், அறிவுடைப் பொருளாகிய இறைவன் வினையைச் செயற்படுத்தி னால்தான் அது செயற்படும் என்பதையும் நீ எவ்விடத்தும் மறந்துவிடக் கூடாது.
இறைவன் வினையை எவ்வகையில் செயற்படுத்துகிறானோ அவ்வகையில் அது செயற்படுவதாகும்.
வினை உயிர்களுக்குச் சாதி, ஆயு, போகங்களைத் தருகிறது என்று கூறினாலும், இறைவன் தான் உயிர்களுக்கு அவற்றைத் தருகின்றான் என்பதே கருத்தாகும். அவ்வாறு தருவதற்கு வினை அவனுக்கு ஒரு கருவியாக அமைகிறது.
இறைவனை எழுத்தாளனோடு ஒருவகையில் ஒப்பிட்டுக் கூறலாம். இறைவனைப்போல எழுத்தாளனும் படைப்பாளிதான். இறைவனது படைப்புக்கு வினை கருவியாகிறது. எழுத்தாளனின் படைப்புக்கு அவனது பேனா கருவியாகிறது எனலாம்.
எழுத்தாளன் என்பவன் சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வல்லவன். இதையே இன்னொரு வகையாகச் சொன்னால், அவனது பேனா முனை சமுதாயத்தில் விழிப் புணர்வை ஏற்படுத்தக்கூடியது எனலாம். இவ்வாறு எழுத்தாள னுக்கு உரிய செயலைக் கருவியாகிய பேனாவின்மேல் ஏற்றி, அக்கருவியே செய்வதாகக் கூறினாலும் முதன்மை எழுத்தாளனுக் கேயன்றி அவனது கருவிக்கு இல்லை.
எழுத்தாளனுக்குப் பேனா எப்படியோ, அப்படியே இறை வனுக்கு வினையும்.
இதனால், எல்லாவற்றையும் செய்யும் தலைவன் இறைவன் என்பதும், அவனுக்குக் கருவியாய் அமைவது வினை என்பதும் தெளிவாகும். ஆகவே, வினை என்ற ஒன்று இருக்கும்பொழுது இறைவன் எதற்கு? என்ற உனது வினா பொருளற்றதாகும்.
வகுத்தான் 164. திருவள்ளுவர் ஊழ் என்ற அதிகாரத்தில் இறைவனை "வகுத்தான்" என்று குறிப்பிடுகிறார். எதனால் இறைவனுக்கு அப்பெயர்? சிற்றுயிர்கள் செய்த செயல்கள் பரு நிலையினின்று நீங்கி நுண்ணிலையை அடைந்தாலும் அவை அறிவில்லாதனவே ஆதலால் அவை தாமே வந்து தம்மைச் செய்த உயிர்களுக்குப் பயன்தருதல் இல்லை.
எவ்விடத்திலும் நிறைந்து எல்லாவற்றையும் எப்பொழுதும் காண்பவனாகிய இறைவன் உயிர்கள் நன்முறையில் இயற்றிய செயல்களை இவை புண்ணியம்’ எனவும், தீய முறையில் செய்தனவற்றை இவை பாவம்' எனவும் வகுத்து அவற்றை நிலைபெற வைத்துப் பின்பு அது அதற்கு ஏற்ற பயனை அவற்றைச் செய்த உயிர்கட்குத் தருகின்றான்.
இவ்வாறு செய்யப்பட்டு முடிந்த அடுத்த நொடியிலேயே அழிந்தொழிவனவாகிய செயல்களை நீடு நிற்குமாறு வைத்து, தான் அருளிச் செய்துள்ள அறநூலிற்கு ஏற்ப அவற்றை அறம்

2OIO விகிர்தி கார்த்திகை O]
எனவும் மறம் எனவும் வகுத்து அவற்றின் பயனை உயிர்கட்கு ஊட்டுகின்ற இறைவனது செயலை, நாட்டினை ஆளும் அரசனது செயலோடு ஒப்பிடுதல் பொருந்தும்.
தன் கீழ் வாழும் மக்கள் புரியும் நற்செயல்களையும் தீய செயல்களையும் அரசன் எப்பொழுதும் கண்காணித்து நின்று, உரிய காலத்தில், அவற்றைச் செய்தோர்க்குக் கருணையையும், ஒறுப்பாகிய தண்டத்தையும் வழங்குகின்றான்.
அங்ங்ணமே, சிற்றுயிர்கள் செய்யும் செயல்களை எப்பொழுதும் நோக்கி நின்று, இவை புண்ணியம்' எனவும், இவை பாவம்' எனவும் வகுத்துப் பயன் தருபவன் இறைவனேயன்றி, அச்செயல்களே தாமாக அவ்வாறு வகைப்படுத்தல் இல்லை. அது பற்றியே இறைவனை'வகுத்தான்’எனக் குறிப்பிட்டார் வள்ளுவர்.
சஞ்சிதம் 165. சஞ்தம் என்ற சொல்லின் நேரான பொருள் என்ன?
உயிர்களால் நல்லனவும் தீயனவுமாகச் செய்யப்பட்ட தூல வினைகள் புண்ணிய பாவமாய்ச் சூக்கும நிலையில் இருக்கும் பொழுது சஞ்சிதம் எனப்படும்.
சஞ்சிதம்'என்ற சொல்லின் நேர் பொருள் நன்கு பெறப்பட்டது என்பதாகும்.
செய்த அடுத்த நொடியில் அழிந்தொழியும் வினைகளை இறைவனே நுண்ணிலையில் நிறுத்தி, அவற்றைப் புண்ணியம் எனவும், பாவம் எனவும் வகைப்படுத்தி, அவை பிராரத்தமாய் வரும்வரையில் புத்தியின் கண் பற்றி நிற்குமாறுசெய்பவன்.
இவ்வாறு உயிர்களின் வினை இறைவனால் முறைப்படுத்தப் பட்டு அவரவர் புத்தியில் விளங்கிக் கிடத்தலின், நன்கு பெறப்பட்டது என்ற பொருளில் சஞ்சிதம் எனப்படுகிறது.
பிராரத்தம் 166. பிராரத்தம் என்ற சொல்லின் நேரான பொருள் என்ன?
ஒரு பிறப்பை எடுக்கும்போது அப்பிறப்பில் நுகர்வதற்கு என்று சஞ்சிதத்திலிருந்து முகந்து கொள்ளப்பட்டு வரும் வினைகள் பிராரத்தம் எனப்படும்.
பிராரத்தம் என்ற சொல்லின் நேரான பொருள் நேர்ப்படுவது அஃதாவது, வந்து பொருந்துவது.
எனவே ஆன்மா பிறப்பெடுத்து வாழும்போது அக்காலத்திற்கு வருவதற்கு உரியனவாய் அமைந்த வினைகளே வந்து பொருந்தும். பிற வினைகள் வாராது எஞ்சி நிற்கும் என்பது அறிந்துகொள்ளத் தக்கது.
ஆகாமியம்
167. ஆகாமியம் என்ற சொல்லின் நேரான பொருள் என்ன?
சஞ்சிதத்திலிருந்து இப்பிறப்பிற்கென எடுத்துக் கொள்ளப் பட்டுவந்த பிரார்த்த வினை தன் பயனைக் கூட்டுவிக்கும்பொழுது உயிரின் உள்ளத்தில் நல்வினைப் பயனை நுகர்தலில் விருப்பும், தீவினைப் பயனை நுகர்தலில் வெறுப்பும் உண்டாகும். எனவே, அவ்விருப்பு வெறுப்புக்கு ஏற்ற சொல்லும் செயலும் நிகழாமற் போகா. இவ்வாறு மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் செயற்படுவதே உயிர்களுக்குப்புதுவினை ஆகும்.
இம்முறையில், பழவினை நுகர்ச்சியில் புதுவினையின் தோற்றம் நிகழவே செய்யும், இப்புது வினைகளே ஆகாமியம் என்று சொல்லப்படும் ஆகாமியம் என்ற சொல்லின் நேரான பொருள்
விரும்பிச் செய்யப்படுவது لحیحG۶۹(Q۔ ۔ ۔ بخار

Page 16
இந்துசாதனம் 7.
நாவலர் சரிதமோது
கவிஞர் திரு. இரான (இந்துசாதனம் - 2010 ஐப்பசி 18 அ
354. ஏற்றிடு மறிஞ ராயு மிகம்புகழ் பெரிய ராயும்
மாற்றரு மயக்கந் தீர்க்க மாற்றுரை மீவ ராயும் ஆற்றலு ளவர்க்கு நாங்க ளவமரி யாதை செய்தால் கூற்றொடு பொருத மாபோல் குவலயத் தாகு மன்றோ.
355. ஆதலிற் கோப மில்லை யழைப்பினில் மாற்ற மில்லை காதலிற் குறைவு மில்லை கவின்சபைக் கழகு மில்லை மோதலு மின்றி யிந்த மேலவை நண்ணு மாறோர் சூதினைச் செய்வ மென்றார் சுடரறி வுடைய தேவர்
356. பேணுவை ணவம தஞ்சார் பெரியரை யழைத்துத் தேவர்
காணுமெம் மதத்து மேன்மை காசினி யுயர்ந்த தென்றும் பூணுமுஞ் சைவ மார்க்கம் புவியினிற் தாழ்ந்த தென்றும் நாணிடு மாறெ டுத்தே நாட்டுவ மென்றுங் கூறி.
357. காவல ரான தேவர் கவின்சமஸ் தானத் துள்ள
ஆவல ரறிஞர் வல்லோர் அமர்ந்திடு சபையில் வைத்தே மேவிடு கருமஞ் செய்வேன் மேலவை முன்பு தோன்றி நாவலர் நீருஞ் சைவம் நிலைபெற வாதஞ் செய்தே.
358. சீலவும் ஞான மார்க்கம் சிறந்ததோ வன்றி யானை ஒலமென் றழைக்க வந்தே உயிரளி யரியின் சீலம் சாலவும் பெரிய தென்றோ சகத்தினி லோர்வ மென்றே ஒலையொன் றெழுது மென்றார் உயர்சபை வரவைத் தேக்கி
359. வரையொரு மடலைத் தானும் வார்த்தையிற் பிழையில்லாமல் தரைதர முடியார் தாமோ ஹரிமத முயர்ந்த தென்றும் பரைசிவ நெறியதிந்தப் பாரினிற் தாழ்ந்த தென்றும் உரைசெய வல்ல ரோவென் றுளமதி லிரக்கங் கொண்டார்
இராமநாதபுரத்தில் மரியாதை
360.தாயகல் கன்று வேறோர் தனியிடத் திருக்குங் காலை
ஏயநல் லமுதை யூட்ட யிருவிடஞ் செல்லல் போல தரயவனருளைப் பெற்றீர் தொண்டரெம் பிழைபொ றுத்தே. சேயரெம் மவையிற் தோன்றிச் சிறப்பியு மென்ற வாறே.
361. இகத்தாசை தீரச் சீட்டில் எழுதியோர் கவியைத் தேவர் சமஸ்தானத் தாதராயோர் சால்புறு மறிஞ னாரை அகத்தாறு மகிழ்வி னோடு அருஞ்சைவ மேன்மை காட்ட சகத்தாறு முகவரைப்போய்ச்சபையினுக் கழைக்கச் சொன்னார்.
362. அன்னவர் தாத ரான அறிஞரம் மடத்திற் கேகி
முன்னுற நின்று வாங்கே முகமன்கள் பலவுங் கூறி நன்குறெம் நெறிதா னுண்மை நெறியென நாட்டல் தேவர் தன்னுடை யாசை யென்றே தாழ்ந்தெதிரிறைஞ்சி நின்றார்.
363. மும்முறை மறுத்தபோதும் முயன்றிடு தன்மை பார்த்தும்
நம்மத வுண்மை யார்க்கும் நாட்டிடு கடமை யேற்றும் இம்முறை மறுத்து ரைத்தா லெனக்கிழுக்காகு மென்றும் நம்நிபந்தனையை யேற்றால் நல்சபை வருவ னென்றார்.
364. அவைவர எழுதல் பின்னர் அமர்ந்திடத்தலைவ ணங்கல்
சபையதி லெழுந்து பேசல் சபைமுடி வெழுந்து நிற்றல் குவையவை யளிக்க வேற்றல் குவலயம் வாழ்த்துச் சொல்லல் இவைகளை யாற்றி டாதே இசைவன்வி வாதத் திற்கே
1.

2OO விகிர்தி கார்த்திகை 0
நற்றமிழ் மாலை
சயா குகதாசன் பூம் பக்கத்தின் தொடர்ச்சி.)
365,
366.
367.
368.
369.
370.
37.
372.
373.
374.
375.
அற்புத (உ)ருத்தி ராக்கம் அணியுமெம் முத்தரீயம் மற்றுள மணிக எார மணிதலைப் பாகை யோடு கொற்றவ ரறிஞர் கூடு கொலுநடு விருந்தே யாற்ற உற்றவ ரான நீவி ருடன்படின் வருவ னென்றார்
ஆங்கவருரையைக் கேட்டவரசனின் தாத ரானார் ஓங்கிடு மகிழ்ச்சி யோடு உறுபணி முடிந்த தென்றே தாங்கருந் தவத்தி னாரின் தாளினை வணங்கித் தேவர் ஈங்கவர் விருப்பம் போல இயற்றுவ ரெனவ கன்றார்
அங்கிருந் தகன்று தேவர் அரண்மனை யடைந்த தாதர் இங்கவர் வரவி சைந்த தியம்பிடச் செவி மடுத்தே பொங்குள மகிழ்வி னோடு புகலரி வாதங் காண சங்கம ததனைக் கூட்டிச் சகலதும் செயவி சைந்தார்.
பரனது நெறியைப் பாரிற் பரப்பிட வந்தார் வாதம் தரவரு வைண வர்க்கும் தரணிக்கும் சபையி னார்க்கும் வரமெனுஞ் சைவந் தானிவ் வையகத் துயர்ந்த தென்றே அரனரு ளாலே நாட்ட அவைசெல நாட்கு றித்தார்.
ஆங்கவர் குறித்தநாளில் அறிஞரொ டான்றோர் சான்றோர் ஞாங்கரி லிருக்கத் தேவர் நாயக னாகு கண்ணன் பூங்கழற் பெருமை நாட்டப் பொருந்தின பெரிய ரோடு ஈங்கிவர் வரவை நோக்கி எழிற்சபை யமர்ந்திருந்தார்.
மடமுள சந்நி தானம் மற்றைபண் டார மெல்லாம் புடைவரப் பணிகள் ஞானம் பொழிசுடர் விரியப் பாங்கில் திடமுடை யறிஞர் சூழத் திவ்விய கோலந் தாங்கித் தடமதிற் துவசம் மேவு சமஸ்தானத் தெல்லை வந்தார்.
அங்கதை யறிந்த தேவர் அரண்மனை வாசல் வந்தே செங்கரம் பற்றி யன்பாய்ச் சிறப்புக்கள் பலவுஞ் செய்து மங்கல வாத்தி யங்கள் குடைகொடி யால வட்டம் சங்கிசை பொழிந்து வார்ப்பச் சபையினுக் கழைத்துச்சென்றார்.
சற்சபை நுழைய வாங்கே சகலரு மெழுந்து நின்றே பற்றொடு வணக்கஞ் சொல்லப்பற்றில ருடலா லேற்று நற்சபை நடுவ ணாக நாவலர்க் கென்றே யாக்கு பொற்றவி சிடைய மர்ந்தார் புடைவரு மறிஞர் சூழ.
போர்வலி யுடைய ரேனும் புலவரைப் போற்றிப் பேணும் சீர்நிறை தேவர் தேர்ந்த சிற்றுரை பேசிப் பின்னே ஆர்வல ரையா மேன்மை யகிலத்தில் நாட்ட வென்றே நீர்சபை யுணரு மாறே நிகழ்த்துமும் முரையை யென்றார்.
இமயமா மலையில் வாழும் இறைமத மேன்மை யெல்லாம் தமரெலா மறியு மாறும் சாஸ்திரி யுனரு மாறும் அமையவே பேச வெண்ணி அதற்கமை வாகச் சைவ சமயமே சமயம் சமயா தீதப்பழம் பொருளை யென்றே
ஆடிடு பாத னிநால் அரியதத் துவங்க ளோடு தேடியு மறிய வெர்ண்ணத் தேவிலக் கணங்க ளெல்லாம் நாடிடு தாயு மானார் நவிலரி பாடல் தன்னைப் பீடிகை யாகக் கொண்டே பிரசங்க மழைபொழிந்தார்.
(... نقاره) مملo)

Page 17
இந்துசாதனம் 7.
விசேஷ சந்தி:
பூர்வாங்கக் கிரியைகள் நிறைவுற்றதும் சிவாச்சாரியர்கள் தமது நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்தபின் ஓரிடத்தில் வரிசையாக விசேஷ சந்தியாவந்தனத்தில் ஈடுபடுவர். இது சகளிகரணம், அங்கநியாசம், காயத்திரி ஜபம் மற்றும் பல்வேறு வகையான தர்ப்பணங்களும் அடங்கிய கிரியையாகும். (தர்ப்பணம் - மந்திரநீர் சொரிந்துதேவர்கள் முதலானோரை மகிழ்வித்தல்)
தீபஸ்தாபனம்:
மண்டபத்திலே வைத்து சர்வ அலங்காரங்களுடன் கூடிய ஒன்றை ஏற்றி அதனை அர்ச்சித்து சுமங்கலிப் பெண் அதனை ஏந்தியபடி வீதி வலம் வரச் செய்து மூலஸ்தானத்தில் அதனை வைத்தலே தீபஸ்தாபனம் எனப்படும் . இத்தீபம் கும்பாபிஷேகம் முடியும்வரை அணையாது பாதுகாக்கப்படும்.
பிம்பஸ்தாபனம்
ஆதாரசிலை எனப்படும் பீடக்கல்லினை உரியமுறைப்படி பொருத்தி அமைத்தபின் அதன்மேல் நவரத்தினங்களையும் பஞ்சலோகம் முதலியவற்றையும் உரிய முறைப்படி மந்திரசகித மாகப் பதித்து நியாசம் செய்து அதன்மேல் யந்திரத்தையும் ஸ்தாபித்து அது சேதமுறா வண்ணம் அதன்மேல் பஞ்சினைப்பரப்பி வைப்பர்.
சயனத்திலிருந்து மூர்த்தியை எழுந்தருளச் செய்து வீதி வலமாகக் கொண்டுவந்து இந்த ஆசனத்தின்மீது வைத்து அஷ்ட பந்தன மருந்தினைச் சாத்தி மூர்த்தியைப் பீடத்துடன் இறுகப் பொருத்துவர்.
எங்கள் பெயரால் இறைவனுக்கு "இவ
மஹா கும்பாபி
NNMA NMA NMA O O XXX வித்யாபூஷணம், பிரம்மழுநீ
யந்திரபூஜை
இங்கு பதிக்கப்பெறும் யந்திரமானது உலோகத் தகட்டில் வரையப்பட்ட அந்தந்த மூர்த்தியின் அம்சங்களைக் கொண்டதாக அமையும். இது கும்பாபிஷேகத்திற்கு சுமார் ஒரு மண்டலம் முன்பதாகவே தயார் செய்யப்பட்டு தினமும் அபிஷேகம் பூஜை செய்து தெய்வ சாந்தியத்தைப் பெற்றதாக இருக்கும்.
தைலாப்பியங்கம் (எண்ணெய் சாத்துதல்)
விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டதும் சிவாச்சாரியார் அதற்கு எண்ணெய் சாத்திய பின் பக்தர்கள் யாவரும் தாமே தமது கைகளால் எண்ணெயைச் சாத்தி வணங்குவர். நல்லெண்ணெய் , சந்தனாதிதைலம் முதலிய வாசனைத் தைலங்கள் இதற்குப் பயன்படும். இது பாபநிவர்த்தியைச் செய்யும்.
பிம்பசுத்தி:
மூர்த்தியின் திருவுருவத்திலுள்ள தோஷங்களை நீக்குவதற் காக பிம்பசுத்தி செய்யப்படுகின்றது. பலவிதமான புண்ணிய தீர்த்தங்களாலும் இதற்கென விதிக்கப்பட்ட பலவிதமான மரப்பட்டை கஷாயங்களாலும் மூர்த்திக்கு அபிஷேகம் செய்வர். இதனால் பிம்ப சுத்தம் அடைகின்றது.

2OO விகிர்தி கார்த்திகை 0
விசேஷதிரவிய ஹோமம்:
பலவிதமான சமித்துக்கள் தானிய வகைகள் என்பவற்றை
அவற்றுக்குரிய மந்திரங்களை ஒதி அக்கினியில் இட்டு ஆகுதி வழங்குவர். இந்த விசேஷ திரவியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது.
யாகசாலையின் அமைப்பு:
பஞ்சபூத விளக்கமாக யாகசாலை அமைவதை முன்னர் கண்டோம். கோயில் பிரகாரத்தின் உள்ளே ஈசானம், அக்கினி, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளில் யாகசாலை அமையலாம். நன்கு மெழுகி தூய்மைப்படுத்திய தரையையும் நடுவிலே வேதிகை என்று சொல்லப்படும் மேடையையும் யாகசாலையின் பிரமாணத்திற்கு ஏற்ப எண்ணிக்கையுள்ள தூண்களையும் கொண்டதாக மேலே வேயப்பட்டு வெள்ளை கட்டிய விதானத்துடன் யாகசாலை அமையும்.
ஐந்து வகையான யாகசாலைகள் உள்ளன. யாகசாலையைப் பதங்களாகப் பிரிப்பதில்தான் இந்த வேறுபாடு ஏற்படுகின்றது. மாவில் தோய்த்த நூலினால் சூத்திரங்களை அடித்து (கோடுகள்) பதங்களை ஏற்படுத்துவர். 44 சூத்திரங்களையும் இருபுறமும் இடுவது ருத்திர ஆத்திரக் கிரமம் எனப்படும். இதில் 43x44=1892 பதங்கள் உண்டாகும். 34 சூத்திரங்கள் அடிப்பது விஷ்ணு சூத்திரக் கிரமம். 24 சூத்திரங்கள் அடிப்பது பிரம்ம சூத்திரக் கிரமம், 14 சூத்திரங்கள் அடிப்பது மனு சூத்திரக் கிரமம், 12 சூத்திரங்கள் அடிப்பது ரவிசூத்திரக் கிரமம்.
ரவி சூத்திரக் கிரமத்தில் 121 பதங்கள் உருவாகும்.
O O O () S2 S2 S2 ர்" என்ன சொல்கிறார்?15 2328 23
O AY 2AN வேரகம் - 3
I. fomTooröğöēFirmIT B.A. (Hons) (GBBITŮLIIruiu fori)
கும்பங்களுக்கான வேதிகை நடுவில் அமையும். அதனைச் சுற்றிலும் சஞ்சார பதங்கள், ஒமகுண்டங்கள் பரிவார யாக
கும்பங்கள் என்பன அவற்றுக்குரிய இடங்களில் அமையப்பெறும்.
ரவி சூத்திரக் கிரம யாகசாலையில் முப்பத்துமூன்று குண்டங்களும், விஷ்ணு சூத்திரக் கிரமத்தில் இருபத்தைந்து குண்டங் களும், பிரம்ம சூத்திரக் கிரமத்தில் பதினேழு குண்டங் களும், மநுசூத்திரக்கிரமம், ரவிசூத்திரக்கிரமம் இரண்டிலும் ஒன்பது குண்டங்களும் அமையும்.
வசதி குறைந்த இடங்களில் ரவிசூத்திரக்கிரம யாகசாலை அமைத்து அங்கு ஐந்து குண்டங்கள் அமைப்பர். ஒவ்வொரு வரிசையிலும் கிழக்கே சதுரக் குண்டமும், தென்கிழக்கே யோனி குண்டமும் தெற்கில் அர்த்தசந்திரக் குண்டமும் தென்மேற்கில் திரிகோண குண்டமும், மேற்கில் விருத்த குண்டமும் வடமேற்கில் அறுகோண குண்டமும், வடக்கில் பத்மகுண்டமும் ஈசானத்தில் எண்கோண குண்டமும் அமையும். பிரதான குண்டம் வேதிகைக்கு
முன்பாக அல்லது ஈசானத்திலும் கிழக்குக்குமிடையே அமையும்.
----Σ»

Page 18
இந்துசாதனம் 7.
ஐவகை யாகசாலைகளுக்கும் முறையே நூறு, அறுபத்து நான்கு, முப்பத்தாறு, பதினாறு, என்ற வகையில் தூண்கள் அமையும் மாவிலை, தோரணம், மாலை, பட்டு, கொடி, கரும்பு, கமுகு, இளநீர் இவற்றால் யாகசாலையை அலங்கரிப்பர். அஷ்ட மங்கலம், தசாயுதம் என்பனவும் யாகசாலையை அலங்கரிப்பன.
நவகுண்டயாகசாலை
இறைவன் அட்டமூர்த்தி வடிவானவன் என்பதிற்கிணங்க ஒவ்வொரு குண்டத்திலும் ஒவ்வொரு மூர்த்தியாக பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், எசமானன் (ஆன்மா) ஆகிய எட்டு மூர்த்திகளையும் அம் மூர்த்திகளின் அதிபதிகளான மூர்த்தீஸ்வரர்களையும் எட்டுக் குண்டங்களிலும் எழுந்தருளச் செய்து அவர்களுக்கு ஆகுதி வழங்கப்படும். பிரதான குண்டத்தில் பிரதான மூர்த்தியாகிய மூலவர் எழுந்தருளுவார்.
33 குண்ட அதியுயர் பட்ச யாகசாலை
மிகவும் அரிதாக இந்த மஹா யாகசாலையை அமைப்பர். நான்கு ஆவரணங்களாகப் (வரிசை) பிரித்து ஒவ்வொன்றிலும் எட்டுக் குண்டங்கள் (எட்டுத் திக்குகளிலும்) வீதம் முப்பத்திரண்டு குண்டங்கள் அமையும், முதலாவது ஆவரணத்தில் கிழக்கிற்கும் ஈசானத்திற்கும் நடுவில் பிரதான குண்டம் அமையும்.
இப்படி அமையும்போது மூர்த்தியும் மூர்த்தீஸ்வரரும் ஒரு கண்டத்தில் இடம்பெற மூர்த்தீஸ்வரி இன்னொரு குண்டத்திலும் இதேபோல் தத்துவம், தத்வேஸ்வரன் ஒரு குண்டத்திலும் தத் வேஸ்வரி தனியாக இன்னொரு குண்டத்திலும் இடம்பெறும்போது நான்கு குண்டங்கள் ஒருதிக்கில் வரும். இவ்வாறு எட்டுத் திக்கிற்கும் நான்கு வீதம் முப்பத்திரண்டும் பிரதானம் ஒன்றுமாக முப்பத்துமூன்று குண்ட யாகசாலை உருவாகிறது.
ခြံ ၌ 3.
 

2OO விகிர்தி கார்த்திகை O]
இவ்வாறு குண்டங்களில் ஆகுதி வழங்கி அனைத்தும் ஒன்றுசேர்க்கும்போது இறையருட்சக்தி மிக அதிகமாகக் கிடைக் கின்றது. (உருவேறத் திருவேறும்) பலர் கூடிக் கூட்டுப்பிரார்த்தனை நடத்துவது போன்றது இது.
LLIT3514,600&9
யாகசாலையில் பிரவேசிக்கும் சிவாசாரியார் முதலில் விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகவாசனம் என்பவற்றைச் செய்தபின் சூரிய பூஜை, துவார பூஜை தோரணங்கள் திரிசூலங்கள், கொடிகள் ஆகியவற்றின் அதிதேவதைகளுக்கான பூஜை , பரிவார கும்ப பூஜை, அஷ்டமங்கல பூஜை, யாகேஸ்வர யாகேஸ்வரி பூஜை என்பவற்றையும் செய்வர்.
இதன்பின் பிரதான வேதிகையிலுள்ள ஸ்நபன கும்பங்களில் பஞ்சாசனை பூஜை, ஆவரண பூஜை என்பவற்றை நிகழ்த்திப் பலவித நியாசங்கள் மூலமாக மந்திர சக்திகளைக் கும்பத்திலே பதித்துப் பூஜிப்பர்.
பின்னர் பிரதான குண்டத்திலே பிரதான சிவாசாரியார் அக்கினி காரியம் செய்ததும் அதிலிருந்து அக்கினியைப் பிரித்து ஏனைய குண்டங்களுக்குரிய சிவாசாரியார்கள் தங்கள் குண்டங் களில் இட்டு அக்கினிகாரியம் செய்வர்.
ஸ்பர்சாகுதி:
யாகசாலையிலே அக்கினியிலும், கும்பத்திலும் ஆவாகனம் செய்து பூஜிக்கப்பட்ட தெய்வ சாந்நித்தியத்தை பிம்பத்திலே ஒடுக்குவதே ஸ்பர்சாகுதியாகும். அக்கினியுடன் கும்பத்தையும் கும்பத்துடன் பிம்பத்தையும் தர்ப்பைக் கயிறு, நூல் முதலியவற்றால் நாடீசந்தானம் செய்து (தொடுத்து) மும்முறை யாககுண்டத்திலும் மூலமூர்த்தியிலுமாக ஸ்பர்சாகுதி செய்து இறுதியில் நாடீசந்
தானத்தை மூலமூர்த்தியில் சேர்த்து விடுவர்.
22 ஆம் பக்கம் பார்க்க ->
சோமவாரத் திருவிழா
இங்குள்ள சிவாலயங்கள் பலவற்றில் கார்த் திகை மாதத்துத் திங்கட்கிழமை (சோமவாரம்) களில் விசேட அபிஷேகம், பூசை, திருவிழா ஆகியவை நடைபெறு கின்றன. சுன்னாகம் மயிலனி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி கோவிலில் பிற்பகலில் நடைபெறும் விசேட அபிஷேகம் பூசை ஆகிய வற்றைத் தொடர்ந்து அதிகார நந்தியை வாகன மாகக் கொண்டு விஸ்வநாதப் பெருமானும் விசாலாட்சி அம்பாளும் வீதிவலம் வருவது அடியவர்களின் நெஞ்சை நிறைக்கும் அரிய காட்சியாகும். சோமவார விரதம் சிவ விரதங் களில் ஒன்று.
இவ்வாண்டில் 22.11, 29.11, 06:12, 1812 ஆகியவை
சோமவார விரத நாள்களாகும். s - சேகர்

Page 19
இந்துசாதனம் 7.
İhlG
'கற்பு எனும் சொல்லும், கல்வி யெனும் சொல்லும் ஒரே தாதுவின் அடியாகப் பிறந்த இரு சொற்களாம். கற்பு, கல்வி யென்றும் பொருள்படும். ஆடவர்க்கு அமைந்த கல்வியும், மகளிர்க்கு அமைந்த கற்பும் ஒரே பயனை அளிப்பனவாக வேயாயின. முற்காலத்துப் பெண்கள் பெற்ற கல்வி முழுவதும் கற்பு என்னும் ஒரு சொல்லில் அடங்கும். கற்பெனும் திண்மை' என்ற ஆன்றோர் வாக்கால், கற்பு கல்போன்று திண்மை பெற்றிருத் தலையும் தொனியால் குறிப்பதாகும். அறம், பொருள், இன்பம், வீடெனும் நான்கு உறுதிப் பொருளையும் ஈயவல்லது கல்வி என்பதை நன்குணர்ந்த நம்முன்னோர் இருபாலார்க்கும் கல்வியை ஊட்டி வந்தனர். அதன் பயனாகப் பெண்கள் உயர்ந்த ஒழுக்கமும் ஆழ்ந்த கல்வியறிவும் பெற்று, இல்லங்களிலே மணி விளக்குகளாக ஒளிர்ந்தனர். இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை எனும் பழமொழி பொன்றாது இன்றுவரை வாழ்ந்து வருவதே, மக்கள் கல்வியறிவு பெற்றிருந்ததற்குப் போதிய சான்றாகும். இல்லம் பெண்கட்கே உரிமையாயிற்று; அவர்கள் வாயிலாகவே
ஆடவர்க்கும் உரித்தாயிற்று. 'இல்லாள் என்ற மொழி இருப்பது போன்றே, ஆண்பாலில் இல்லான்’ என்ற மொழி அப்பொருளில்
கற்பு என்பது ஆணாதிக்க சமுதாயத்தால் பெண்கள் விளங்கி, அதைப் புறக்கணிக்கவும் இகழவும் பலர் மு கற்பொழுக்கத்தில் அடங்கிய தத்துவம் கற்பின் பயன் இக்கட்டுரை பல ஆண்டுகளின் முன்னர் "ழரீராமகிருஷ் மறுபிரசுரஞ் செய்கின்றோம்.
இல்லாமையே இவ்வுண்மையை மெய்ப்பிக்கும்; இல்லானை இல்லாளும் தான் வேண்டாள்' எனும் மேற்கோளில் கைப்பொருள் அற்றவனே இல்லான்’ எனப்படுதல் அதற்குச் சான்று. இல்' எனும் மொழி இல்வாழ்க்கை’யெனும் தொடர்மொழியிலும், 'புகழ் புரிந்தில்லிலோர்’ என்ற குறட் பகுதியிலும், இல்லாளையே குறிக்கின்றது. மனை வாழ்க்கையை உயர்த்திய மாதர் குடும்ப வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் மேம்படுத்தி, நாட்டிற்கே அணிகலன்களாயினர். கல்வியின்றி இத்தகைய மாண்பு வாய்ப்பது அரிதாகலின், பெண் மக்கள் பெற்றிருந்த கல்வியின் சீர்மையை இதனான் உய்த்துணரலாகும். கற்றலிற் கேட்டலே நன்று என்பதாலும், செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் என்பதாலும், செவிவாயிலாகப் பெரும்பாலும் முற்காலப்பெண்டிர் வாழ்க்கையின் உயர்ந்த இலகூழியங்களையும், கற்புடைய பெண்டிரின் வரலாறுகளையும் ஆர்வத்தோடு பருகி வந்தனர்; ஆதலின் அப்பெண்டிர் குடும்பப் பாரத்தையும், அதனினும் மிகப் பெரிய
பொறுப்பையும் நன்கணம் தாங்க வல்லவராயினர். எல்லாம்

2OO விகிர்தி கார்த்திகை 01
பண்பும் பயனும்
அறிந்திருந்தும் அறியாதது போன்று அடக்க ஒடுக்க வணக்கங்களோடு வாழ்ந்து வந்தனர். இதுவே பெண்டிர் பெற்ற கல்வியின் அருஞ்சிறப்பு.
கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றபின் அதற்குத்தக நிற்றலே கல்வியின் பயனாகின்றது. வாழ்க்கையைத் திருத்தி யமைக்கும், உயர்ந்த இலகூழியங்களைக் கடைப்பிடிக்கவும் பயன்படாத கல்வியால் ஆவதென்? அது புற அணியாகவும், போலிக் கல்வியாகவும் அறிவிற்குச் சுன்மயாகவும், புகழையும் செல்வத்தை யும் பெறச் சாதனமாகவும் அமைந்து, மெய்ப் பயனை இழக்க ஏதுவாகும். முற்கால மகளிர் பெற்ற கல்வியறிவு அங்ங்ணம் வீணாகாது, இல்லறத்தைச் செவ்வனே நடத்துதற்கும், கற்பினை ஒம்புதற்கும் வளர்த்தற்கும், மனைவாழ்க்கையினை ஓங்குவித் தற்கும் பயன்பட்டு வரலாயிற்று. அக் கல்வி மனைக்குள்ளே அறத்தின் வளத்தினைப் பெருக்கியதோடு, இல்லத்தில் தொண்டு மணங்கமழ்தற்கே அருந்துணையாயிற்று. ஆணவத்தை வளர்க்கும் வறண்ட நூலறிவாக மட்டும் அமையாது, தனக்கென வாழாது
பிறர்க்கென வாழும் பெருந்தகையினை ஈனும் நல்வித்தாயிற்று.
மீது திணிக்கப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடு எனத் தவறாகி ற்படுகின்றனர். கற்பு என்பதன் பொருள் அதன் பண்பு
அதன் திண்மை ஆகியவற்றைத் தெளிவாக விளக்கும் ண விஜயம்" இதழில் வெளிவந்தது. நன்றியுடன் இங்கே
மகளிரது நெஞ்சத்திலே அன்பூற்றைத் தோண்டுதற்கும், ஒழுக்க விழுப்பத்தை வெளிக்கொணர்தற்கும் கருவியாயிற்று. இந்தியரது தனி வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும், நாட்டு வாழ்க்கைக்கும், உயிராயும் வலிமையுற்ற அரணாயும் இருந்தது அறத்தின் பயனாக முத்தியை நாடும் இச்சையே;ஆதலின் கல்வியின் இலகூழியமும் ஞான வாழ்க்கையின் இலகூழியமும் ஒன்றாயின. மனிதத் தன்மையில் உள்ளடங்கி யிருக்கும் பூரணத்தன்மையை வெளிக் கொணர்தலே கல்வியாகும். மனிதத் தன்மையில் உள்ளடங்கி யிருக்கும் தெய்வத் தன்மையை வெளிக்கொணர்தலே ஞான மாகும்; ஆதலின் மெய்யான கல்வி உண்மையான ஞானத்தோடு மருவி முற்றுப் பெறுவதாயிற்று. வாழ்க்கையில் நிகழும் முயற்சிகள் அனைத்தையும் ஞான சாதனமாகக் கைப்பற்றலே முந்தையோரது பெரு நெறியாயிற்று. இம்முறைப்படியே பெண் மக்கட்கு முன்னாள் அளித்த கல்வி கற்பாகவே அரும்பி மலர்ந்து ஞான வாழ்வாகக் காய்த்துக்
கனிந்தது.
->

Page 20
இந்துசாதனம் 7.
கற்பு நெறியில் அடங்கிய அடிப்படைத் தத்துவத்தைச் சற்று இனி ஆராய்வோம். பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைவது பரிபூரணமான பரம்பொருளேயன்றோ? இக்காட்சியைப் பெறுதலே ஞானத்தின் அறுதி நிலையாகும். இந்நிலையை அடையச் சாதனமாகும் பொருட்டு, வேதம் அன்னையைத் தெய்வமாகக் கருதுக, தந்தையைத் தெய்வமாகக் கருதுக, ஆசாரியனைத் தெய்வமாகக் கருதுக. அதிதியைத் தெய்வமாகக் கருதுக, என்று போதிக்கின்றது. ஒரு பெண் தனது கணவனைத் தெய்வமாகக் கருதி ஒழுகுதல் வேண்டும் என்பதும் இப்போதனையின் ஒரு பகுதியாகின்றது. உலக வாழ்க்கையிலே கருமங்களைப் புரிந்து வாழ நேரும்போது செய்யும் செயல் ஒவ்வொன்றையும் இறை வனுக்கு வழிபாடாகுமாறு எண்ணி இயற்றுதலே வாழ்க்கைப் பயனை எய்துதற்கேற்ற எளிய இனிய முறையாகும். இது கருமயோகம் எனப்படும். எவ்வுயிரும் பராபரன் தன் சந்நிதிய தாகும். இலங்கும் உயிரனைத்தும் ஈசன் கோயிலாகும்; இது மெய்யுணர்ந்தோர் காட்சியில் தெளிந்த உண்மையாதலின் நாயகனது உடலைக் கோயிலாகவும், அதன்கண் எழுந்தருளி யிருப்பவனை ஈசனாகவும் எண்ணி, நாயகனுக்குச் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஈசனை வழிபடும் முறையாகக் கருதி இயற்ற முயன்றால், நாயகனது உடல் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு அருள் சுரப்பான். இதுவே மாதர்க்கு ஏற்ற பூஜையாகும். மாதர் இல்லத்துக்குள்ளே உழைத்துத் தொண்டுபுரிதலும், ஆடவர் இல்லத்துக்கு வெளியே உழைத்துத் தொண்டாற்றிக் குடும்பத்தை ஒம்பலும் பெரும்பாலும் நிகழ்ந்து வந்தன, இன்றும் நிகழ்ந்து வருவன; ஆதலின் நாயகனைத் தெய்வமாக வழிபடும் முறை, ஆடவர்க்கு ஏற்பட்ட வழிபாட்டு முறையினும், மிக எளியதும், மிகச் சிறந்ததும், பெண்களது இயல்புக்கும் கடமைக்கும் மிக ஏற்றதாகவும் உள்ளதொன்றாம். கொண்டானிடத்து அன்பு செலுத்துதல் குலமகளிர்க்கு இயல்பாதலின், அவனையே தெய்வமாகக் கருதி அன்பு செய்து வழிபடுதல் இருவர்க்கும் இனிமையை நல்கும் எழில் முறையாகும். பேசாத் தெய்வத்தை வழிபடலினும் பேசும் நடமாடும் தெய்வத்தை வழிபடுதல் எளியதும் மேன்மையானதும் ஆகும். ஒரு சடப்பொருளினிடத்தே (கல்லுரு வத்தும் செம்புருவத்தும்) வெளிப்படுவதினும் பார்க்க மிகுதியாக ஒரு மனித வடிவத்திலே தெய்வத்தின் விளக்கம் பொசிதல் வெளிப்படை, அன்றியும், உள்ளடங்கிய தெய்வத்தன்மை கொழுநன் வாயிலாகப் பெருகத் தொடங்கும்போது, கொழுநனது உடலும் உள்ளமும் தெய்வத் தன்மையினை ஒரளவு பெற்றுத் திகழலாகும். வாழ்க்கையிலே எச்செயலையேனும் செவ்வனே இயற்றுதற்கு இன்றியமையாது வேண்டப்படுவது, தன்னலங்கருதாத தூய அன்பே, அன்பே சிவம் என்பர் மெய்யுணர்ந்தோர். கொழுநனை மனிதனாகக் கருதி அன்பு செய்வதினும் நூறு மடங்கு தூய்மையும் வலிமையும் வாய்ந்தது அவனைத் தெய்வமாகக் கருதி அன்பு செய்தல்; ஆதலாலே கொழுநனைத் தெய்வமாக நினைந்து வாழ்வை நடத்தும் கற்பு நெறி இல்வாழ்க்கையைத் தூயதாக்கித் தெய்வ மணங்கமழச் செய்கின்றது. இத்தகைய பொற்புடைய கற்புநெறி நிற்பார் தூய அன்பைத் தம்மிடமிருந்து வெளிப்படுத்து கின்றனர். அதாவது, தம்முள் அடங்கிய தெய்வத்தன்மையை

2OO விகிர்தி கார்த்திகை 01
(சிவத்தை, அன்பை) வெளிக்கொணர்கின்றனர்; நாயகனைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதன் மூலம் அவனுள் அடங்கியிருக் கும் தெய்வத் தன்மையை வெளிக்கொணர்கின்றனர். ஆகத் தமக்கும் கொழுநர்க்கும் தெய்வத்திற்கும் செய்தற்குரிய கடமையை இந்நங்கையர் ஆற்றிவிடுகின்றனர்; இல்வாழ்க்கையின் வட்டாரத்
துக்குள்ளே தம் வாழ்க்கைப் பயனை அடைந்து விடுகின்றனர்.
இல்லத்திலே கொழுநனை வழிபடும் முறைக்கும், கோயிலிலே ஆடவர் இறைவனது திருவுருவத்தை வழிபடும் முறைக்கும் வேறுபாடு இல்லை என்பது இதுவரை கூறியவற்றால் பெறப்பட்டது. கோயிலிலே திருவடிவத்தின் வாயிலாக வழிபடுவது இறைவனையே; அதுபோல் இல்லங்களிலும் நாயகனது வடிவத்தின் வாயிலாக மனைவி வழிபடுவதும் தெய்வத்தையே; இரண்டிடத்தும் இறைவனையே அவ்வுருவங்கள் வாயிலாக வழிபடும் முறை ஞானசாதனமாகும். அதற்கு மாறாக, கணவனை ஒரு பெண் மனிதனாக எண்ணி வழிபடுதலும், கோயிலிலுள்ள திருவுருவங் களைக் கல்லாகவும் செம்பாகவும் எண்ணி வழிபடுதலும் அஞ்ஞானத்தையே வளர்ப்பனவாம். (கொழுநனை ஒரு தற்காலப் பெண் மனிதனாகக் கருதும்போதே, அவனை வணங்க மறுக்கிறாள்; மனிதனான நிலையை வணங்கவேண்டுமெனக் கூறினவர் முன்பும் இருந்திலர். அன்றியும் கொழுநனை இறைவனாக வணங்கும்போது, வணக்கம் இறைவனுக்கே உரியதாகின்றது, கொழுநனுக்கு அன்று. இதனைக் கொழுநனும் இல்லாளும் நன்கறிதல் வேண்டும்) கோயிலிலுள்ள திருவுருவம் சிறியதாயினும், பெரியதாயினும், அழகுள்ளதாயினும், அழகற்ற தாயினும், படமாயினும் சிலையாயினும், அவ்வேறுபாடுகளால் வழிபாடு இடர்ப்படுவதில்லை; வழிபடும் பக்தனது கண்ணிற்கு அவ்வடிவத்திலே பகவான் தமது தெய்வத்தன்மை முழுவதும் விளங்கக் காட்சியளித்தருள்வான். அதுபோல் கொழுநனைத் தெய்வமாக வழிபட முன்னிற்கும் கற்புடைய நங்கைக்குக் கொழுநனது வடிவ அழகின்மையோ, குணவழகின்மையோ, கல்வியறிவின்மையோ அவளது வழிபாட்டிற்கு எவ்வகையிலும் இன்டயூறாகாது. வழிபாட்டை இடர்ப்படுத்துவதுமாகாது. மேலும், தூய அன்பு உள்ளத்தே தலையெடுக்குங்கால், அவளது காட்சிக்கு நாயகனது வடிவத்திலே உலவா இன்பச் சுடர் வடிவினனான இறைவனே காட்சியை அருளுகிறான். உயர்ந்த தூய அன்பு மனைவியின் உள்ளத்தே உதயமாகும்போது, அவளது மனத்திற் கொண்ட இலகூழியத்தின் வடிவமாகவே நாயகன் தோன்றுவான். அன்புக் கண்ணுக்கு அன்பு செயப்பட்டாரது அழகின்மையும் எழிலாகவே காட்சியளிக்கும். இதனால் இல்லமே கோயிலாக, நாயகனே தெய்வமாக, இல்வாழ்க்கைக்குரிய செயல்கள் யாவும், பூஜையாக, இல்லறமே விழுமிய ஞான வடிவாக விளங்கிற்று. நாயகரைத் தெய்வமாக வழிபட்ட பத்தினிப் பெண்டிர் நாயகரை இழக்க நேரினும், பின் தெய்வத்தையே நாயகராக நினைந்து, அந்நாயகரோடு உடனுறையும் வாழ்க்கைக்காக உயிருள்ளளவும் நோற்று வந்தனர். மனிதனிடத்துச் செலுத்தும் அன்பு இவ்வாறு தெய்வத்தினிடத்துச் செலுத்தும் பக்தியாக மலர்ந்து, பரம்பொருட் காட்சியெனும் ஞானக் கனியை ஈந்தது. இதுவே நமது ஆன்றோர்
பெண்கட்கென வகுத்த கற்புநெறியின் பண்பும் பயனும் ஆகும்.
<-سمسحسسحہ

Page 21
இந்துசாதனம் 7.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்" (இல்லாளிடத்துக் கற்பென்னும் கலங்கா நிலைமை உண்டாகப்பெறின் ஒருவன் அடையும் பொருள்களுள் இல்லாளினும் மேம்பட்ட பொருள்கள் யாவை உள) என்றார் திருவள்ளுவர். மக்களின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மேன்மையளிப்பது மாதரது கற்பு, மடவாரது கற்பின் வலிமை மாதவ முனிவரது வலிமைக்கு ஒப்பாகும். தவ வலிமையுடையார் அறத்திற்குப் பகைவரை அழிக்கும் ஆற்றலும், பிரியமானவரை உயர்த்தும் ஆற்றலும் உடையவராவார்; அதுபோற் கற்புடைய நங்கையரும் தம் சொல்லின் ஆற்றலால் நெறி திறம்பும் மக்களையும் நாட்டையும் சுட்டழிக்கவும், அறம் வழுவா
தொழுகுவாரை வாழ்த்தவும் வல்லவர். தவ ஆற்றல் மிக்கார்
qYS LLY0LS SLqLY0 LqLY0S SqLYSS SLqY0S LqLY00S LqYL0LS SLqYhSS LqY0S SLqqY0S SLqLY0S LLY0S SqiLi 深深深深深深深深深深深深深湾
6
S. {
தாரங்கள்
"அவதாரா" என்ற சொல்லுக்கு இறங்குவது ( மனிதனைக் கை தூக்கிவிட மனித உலகுக்கு இ கடவுளின் நிலை குறைவதில்லை; ஆனால் மனித எடுப்பது புதிய சூழ்நிலையைத் தோற்றுவித்துத் அவர் அவதாரம் செய்யும்போது, ஒரு மனிதன் எ காட்டி இருக்கிறார். அதர்மம் எவ்வளவு தூரத்து நல்லவர்களை எப்படி மீட்க முடியும் என் படிக்கும்போது காண்கிறோம்.
வெறுப்பையும் கொடூரத்தையும் விட உயர் அதிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். தர்மம் கடைசியில் நிலைக்கும் என்பதையும் புரிந்து( நடைபெறும்போது, இன்றும் அதைப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட்டு விடுகின்றன.
தர்மம் என்பது அவரவருக்குரிய பண்பைப் பா இதில் இருந்து யார் பிசகினாலும் இயற்கையின் இருப்பதில்லை. இயற்கையின் நிலையை மீண்டும் தர்மமும் சுயநிலைக்கே திரும்பிவிடுகிறது. கட விட்டுவிடவில்லை. அதன் இயக்கம் தர்மம் தவறா கவனித்துக்கொண்டிருக்கிறார். அந்தநிலை தவ விடுகிறார். இன்றும் உலகியலில் நடக்கும் பெரிய உண்மையை உணர முடியும். அவருடைய கரு
வழிநடத்திச் செல்லுகின்றன.
LL0 LLLL0LL LLL0 LLLL0LL LL0L LLL0 LL0L LLq0L LL0L LLL0 LLLL0LL LLL0L LLL0 LLLS 深深深深深深深深深深深深深痴

2OO விகீர்தி கார்த்திகை O]
யமனையும் வெல்வதும் போன்று, கற்பின் திண்மை மிக்காரும் மரணத்தை வெல்லுவர். இருவரும் சாபமாகிய சரங்களை விடுத்து, வேண்டுங்கால் தம்மைக் காத்துக் கொள்ளும் தகையுடையராவார். பழம் பெரு நாடாகிய பாரத நாட்டின் நயத்தக்க நாகரிகத்திற்கு மன்னுதவ முனிவரும் திண்ணிய கற்புடைப்பெண்டிரும் இருபெருந் தூணாவர். பெறுதற்கரியதொன்று இருவர்க்கும் இல்லாதொழியும்; இருவரும் வேண்டியவற்றை வேண்டியபடியே, எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவராதலின், ஆடவரது உயர்வை அளக்கும் கோல் தவமாயின், மகளிரது உயர்வை அளக்கும் கோல் கற்பேயாம். கற்பு இத்தகைய சிறப்பு வாய்ந்ததாதலின் அதனைப் பெண்கள் உயிரினும் பெரிதாகப் ஒம்பித் தமக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அன்புநலனை நாடுவாராக. 人
2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 S2 悉深深深深深深深深深深深深深
ால்லாம்வல்ல இறைவன் பல்வேறு அவதாரங்கள் எடுத்துப் பூவுலகத்துக்கு வந்திருக்கின்றான் எனப் புராணங்கள், இதிகாசங்களிலிருந்து அறிகின்றோம். அத்தகைய அவதாரங் :ள் இப்போது ஏன் நிகழ்வதில்லை என்ற கேள்வி சிலரிடம் தான்றுவதுண்டு. அவதாரம் சம்பந்தமான தெளிவான ருத்துக்களை இந்தியத் தத்துவஞானியும் முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான டொக்டர் ச. இராதாகிருஷ்ணன் கூறி புள்ளார். வாசித்துப் பாருங்கள்.
என்று பெயர். தெய்வீக நிலையிலிருந்து கடவுள் றங்கி வருவதே அவதாரம் எனப்படும். இதனால் னின் நிலை உயர்த்தப்படுகிறது. கடவுள் அவதாரம் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். அப்படி ப்படித் தர்மம் தவறாமல் வாழமுடியும் என்பதைக் |க்குப் போக முடியும் என்பதையும், அதிலிருந்து பதையும் நாம் அவதார மகிமையைப் பற்றிப்
ந்தது அன்பும் கருணையும் என்பதையே நாம்
அதர்மத்தை வெல்லும் என்றும்; உண்மையே கொள்கின்றோம். இதற்கு மாறாகச் செயல்கள் |க்கொண்டு சும்மா இருப்பதில்லை. அதற்குரிய
துகாத்துக்கொண்டு நெறியுடன் வாழுவதேயாகும். நிலை மாறிவிடுகிறது. கடவுள் அப்போது சும்மா D சரிப்படுத்திவிடுகிறார். அப்போது மனித உலகின் டவுள் உலகைச் சிருஷ்டி செய்து சும்மா ஒட மல் நடக்கிறதா என்பதை ஒவ்வொரு நிலையிலும் றும் பொழுதெல்லாம் குறுக்கிட்டு சரி செய்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும்பொழுது, நாம் இந்த ணை மிகுந்த கரங்கள்தாம் நம்மையெல்லாம்
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்.
篷藻类粪淡秦濠类粪濠濠粪藻类
7AN ZAN 7AN ZAN 2N 7AN

Page 22
இந்துசாதனம் 7,
18ஆம் பக்கத் தொடர்ச்சி.
பூர்ணாகுதி:
இறுதியில் பிரதான சிவாசாரியார் பிரதான குண்டத்தில்
பூர்ணாகுதி வழங்கியதும் ஏனைய சிவாச்சாரியர்களும் தத்தம்
குண்டங்களில் பூர்ணாகுதி கொடுத்துப் பிரதான குண்டத்தில்
மஹாபூர்ணாகுதி வழங்கி ரகூைடி எடுத்துக் கும்பத்திற்குச் சாத்தி
அதனை அனைவருக்கும் வழங்குவர்.
கும்பஉத்தாபனம்:
குறிக்கப்பட்ட சுபநேரத்தில் சகலவித தோஷங்களும் நிவர்த்தியாகும் பொருட்டு நவக்கிரகதானம், யாத்ராதானம் என்பன வழங்கிய பின் பரிசாரகரை அலங்கரித்து அவரை வாகனமாகப் பாவித்து அவர் சிரசில் பிரதான கும்பத்தை வைத்து மங்கல வாத்தியங்கள் முழங்க ராஜோபசாரங்களுடன் வீதிவலமாக எழுந்தருளிவிப்பர். ஸ்தூபிக்கென அமைக்கப்பட்ட கும்பத்தையும் இதனோடு அல்லது முன்பே வலமாகக் கொண்டு வந்து முதலில் ஸ்துபிக்கு அபிஷேகம் செய்வர்.
கும்பாபிஷேகம்:
மங்கல வாத்தியங்களும், வேதகோஷங்களும் முழங்கப்
பிரதான கும்பமும் அஷ்டவித்யேஸ்வரகும்பங்களும் மூலமூர்த்திக்கு
முன்னர் வைத்து நியாசங்கள் செய்யப்பட்டபின் அபிஷேகம்
செய்யப்படும். மஹாஹவிர் நிவேதனம் நிவேதித்தபின் கதவைச்
சாத்திவிடுவர்.
தசதர்சனம்:
இதன்பின் பண்ணிசை நிகழ்த்திக் கதவினைத் திறந்து மங்கலப் பொருட்களான பசு, நிறைகுடம், தீபம், கண்ணாடி
முதலியவற்றையும் சுமங்கலியையும் தரிசிக்கச் செய்வர். பின்பு
 

2OO விகிர்தி கார்த்திகை 01
தர்மகர்த்தாக்கள், உபயகாரர் முதலியவர்களுக்கு அபிஷேகம் நிகழும்.(அவயிருத ஸ்நானம் என்று இதனைக் கூறுவர்)
மஹாபிஷேகம்:
பஞ்சாமிர்தம், பால், இளநீர் முதலிய சகல பொருட்களாலும் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்து ஸ்நபனாபிஷேகம் செய்வது மஹாபிஷேகம் எனப்படும். இதன்பின் ஆசார்ய பூஜை நிகழும். சிவாச்சார்யர்களை உபசரித்து தட்சிணை தாம்பூலங்கள் வழங்கி நமஸ்கரித்து அவர்களது ஆசி பெறுவதுடன் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நிறைவுபெறும். இரவு கல்யாண உற்சவம், திருவூஞ்சல் என்பன நிகழும்.
மண்டலாபிஷேகம்:
கும்பாபிஷேகம் நிகழ்ந்த நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் கொண்ட ஒரு மண்டலத்துக்கு விசேஷ அபிஷேகம் ஆராதனைகள் நிகழும். திரிபட்சம் (மூன்று பட்சங்கள் கொண்டது) ஒரு மண்டலம் ஒரு பட்சம் பதினைந்து நாள். எனவே நாற்பத்தைந்து நாட்களே மண்டலாபிஷேகத்திற்கு உரிய காலமாகும்.
சங்காபிஷேகம்
நாற்பத்தைந்தாம் நாள் சங்காபிஷேகம் நடைபெறும். பூஜைக்குரிய உபகரணங்களுள் சங்கு மிகத் தூய்மையானது. சங்கில் விடப்படும் நீர் புண்ணிய தீர்த்தத்திற்கு நிகராகிறது. நூற்றெட்டுச் சங்கினாலும் (அஷ்டோத்திர சத் சங்கம்) ஆயிரத்தெட்டுச் சங்கினாலும் (அஷ்டோத்தர சஹஸ்ர சங்கம்) வசதிக்கேற்பச் சங்காபிஷேகம் நிகழும்.
பிரதான கும்பத்தில் வலம்புரிச்சங்கும் ஏனையவற்றிற்கு இடம்புரிச்சங்கும் உபயோகிக்கப்படும்.
-ழறரிசிருங்கேரி
சங்கராச்சாரிய
மஹாசுவாமிகள்

Page 23
இந்துசாதனம் 7.
-4s 4-e-ey4S 4e–e4s 4-9- நீர்வேலி இைைலத் தளத்தில்
6
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரின் வெளியி மலரும் "இந்து சாதனம்' பத்திரிகையில் ஐப்பசி மாத சிறப்புக் அருள்வளர் செல்லக்கதிர்காம ஸ்வாமி கோயிலின் சிறப்புக்க
சிறப்புக் கட்டுரை ஒன்றுவெளியாகியுள்ளது.
சென்ற ஆண்டு ஐப்பசி மாத இதழில் நீர்வேலி கந்த நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயில் பற்றியும் நீர்வை இதழில் கோப்பாய் சிவம் அவர்கள் எழுதிய வாய்க்காற்தரவை நிலையில் இம்முறை இந்து சாதனத்தில் நீர்வேலி செல்லக் கதி பெருமையும் சிறப்பும் சேர்ப்பதாக அமைந்துள்ளமை குறிப்பி தெளிவான கட்டுரைகளை வழங்கிவரும் இந்துசாதனத்தின் பணி
இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பழம் பெரு சரணன் என்றுதற்பொழுது எழுதிவரும் பிரம்மபூரீசிவசரவணப சபையினர்மிக ஈடுபாட்டுடன் இப்பணிகளில் ஈடுபட்டு உழைப்
குழந்தைகளை வளர்ப்பது
பெற்
பெற்றோர் கவனிப்பு இல்லாததாலும் சரியான வேளை உண்g சீர்கெட்டுவிடுகிறது. அசுத்தமான நீரை அருந்தி ஆரோக் எவரும் இல்லை. ஏன் தான் மனைவி வெளியே சென் ஆசிரியையாக மற்றக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டு சொல்லிக்கொடுப்பார்? அதனால் உங்கள் குழந்தைகளை நன்(
அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து ந பெறுவதற்கு ஒப்பாகும். தன் கணவனை, குழந்தைகளைக் க குழந்தைகளுக்குச் சரியான வேளையில் உணவு கொடு போதுமானது. உங்கள்சம்பளம் எல்லாம் சமையற்கார செய்பவருக்கென்றுபோய்விடும். வீடு சரியான திறமையின்றி
வேலை செய்யும் சமையற்காரர், வீட்டைக் குழ சம்பாத்தியத்தை மிஞ்சிவிடும். உங்கள் வேலையை நீங்க விதமான வாழ்க்கையைப் பெண்கள் அனுசரிப்பது நல்லது கு கற்றுக்கொள்ளவேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் எந்தப்பொ எது உடனே தேவைப்படுகிறது? தண்ணீர் பற்றாக்குறையிரு சென்றுவாளியில் தண்ணீர் எடுத்துத்துக்கொண்டு வரவேண் என்று அவன் நினைக்கக்கூடாது. ஒரு குடும்பமென்றால் 6 சந்தோஷப்படுத்தத் தெரிந்துகொள்ளவேண்டும்.

2OHO விகிர்தி கார்த்திகை O]
34s 4-9-e-S 4e–e4S 4A
s
இந்துசாதனம்"
டாக 122 ஆண்டுகளாக பழம்பெருமையுடன் மாதந்தோறும் 2
ஆட்டுரையாக நீர்வேலி செல்லக் கதிர்காமம்' என்று நீர்வேலி
ளையும் வரலாற்றையும் தாங்கிய சிவா சரணன் அவர்களின்
ஈவாமி கோயிலைப் பற்றியும் சென்ற புரட்டாதி மாத இதழில் மணி அவர்கள் எழுதிய கட்டுரைகளும் சென்ற ஆடி மாத பிள்ளையார் கோயில் பற்றிய கட்டுரிையும் வெளியாகியுள்ள ர்காமம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இது ஊருக்குப் டத்தக்கதாகும். அத்துடன் நீர்வேலியூர்க் கோயில்கள் பற்றிய விபோற்றுதற்குரியதாகும்.
ம் எழுத்தாளரும் 'கலைச்செல்வி' இதழாளருமாகிய சிவn - வன்(சிற்பி) அவர்கள் பணியாற்றி வருவதும் சைவபரிபாலன பதும் பெருமையோடு குறிப்பிடத்தக்கதாகும்.
- தகவல்: தி. மயூரகிரி
றோரின் கடமை
ணும் வழக்கமின்மையாலும் குழந்தைகளின் ஆரோக்கியம் கியத்தைக் கெடுக்கிறார்கள். ஏனெனில் வீட்டில் வழிகாட்ட று வேலை செய்ய வேண்டும்? பள்ளிக்கூடம் சென்று ம்போது அவளுடைய குழந்தைகளுக்கு யார் பாடம் த வளர்ப்பது உங்கள் கடமையாகிறது.
ல்லவர்களாக வளர்த்தால் அதுவே நல்ல சம்பாத்தியம் வனிக்காத பெண்ணைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. து அவர்களை ஆரோக்கியமாக வளர்த்தால் அதுவே ர், குழந்தையைக் கவனிப்பவர், வீட்டைச் சுத்தம் நிர்வகிக்கப்படும்.
தையைக் கவனிப்பவர் போன்றோரின் செலவு உக்ங்ஸ் ளே செய்தால் நிறையப் பணத்தைச் சேமிக்கலாம். இந்த ழந்தைகளும் வீட்டில் அவசியமான உதவியைச் செய்யக் டுள் இருக்கிறது எது இல்லை எனத்தெறிந்துகொள்ளுங்கள். ப்பின் பையன், சும்மா இருக்கக் கூடாது வெளியே ஒடிச் ம்ெ. நான் படித்தவன் எதற்குத் தண்ணீர் சுமக்க வேண்டும்? ட்டு வேலைகள் இருக்கும். மாணவர்கள் பெற்றோரைச்
- LaB6 ITGör Usj FjöuuaFruńN LIITILITr
-وهډكے پ<گونهوهډ(>ك پ<کونهوهډ{Rہك پ<هو
l

Page 24
Conso
male-fer ale duality is essential the universe. - இ example is that of Agni. Agni consort is Svaha, the daught important in Hindu rituals b.
e God of Fire. His Daksha. Svaha is se it is believed that
Agni does not accept any offerinig made to the sacrificial fire unless the name 'Svaha' is uttered while making the
e importance of couples also finds place in
lu rituals. Any worship of magnitude needs to ormed together by the husband and the wife.
sis the kanyadānam. If either of the parents of 綠 who is getting married is not there then the
kanyadānam has to be performed by a husband - wife couple closest to the girl. ---
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2OO விகிர்தி கார்த்திகை O]
CE ANDSATVAISM
is, Ph.D. (Edinburgh)
kan or Arthanariewaran clearly indicats a male powers are indispensable to the
23
Apart from the male and the female being together another fact is also brought out by the Saints who composed devotional hymns on these representations. Though Parvati bears the half position, the Saiva religion always speaks about her first. A typical example in Sanskrit is the usual phrase "Parvati Sametha Parameswara' in the mantras that are uttered in the temple PUjas. Saint Thirugnanasampanthar at Tirukkalumalam temple has a beautiful and meaningful sight of the Lord and His consort. His Tevaram reveals it as foOWS.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர் பெண்ணில் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே.
In this hymn, Sampanthar mentions Goddess Parvati first and then says that Lord resides in this temple with a woman who excels among the Women-folk. He is considered as a 'great person'. Because He is seated next to her. Here the emphasis is that though the Goddess has gained only a half position she is considered as an important one. Samkhya is one of the six main Schools of Hindu philosophy. It was founded by Sage Kapila. According to Samkhya the formless God manifests as Purusha and Prakriti. Purusha is the male principle, without cause and without causing anything. It is the Supreme Consciousness that knows everything but remains unknowable. Prakriti is the prime cause of everything in the universe except Purusha. Like Purushaitis without cause. It is the female principle and gives rise to all material and energy content of the universe. The creative process of Prakriti commences only when the Purushabecomes established init.
The gender balance that we speak of in the present mundane life is highly embodied in Saiva religion. It is exhibited by no less a person than Lord Shiva.
f the Saiva Parípalana Sabai, No.450, KKS, Road, Jafna á (2010 (1' Day of Karththikaiththingal). Phone: 021222 7678