கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.02.13

Page 1
ଶ୍ରେoଥରେ, uffium ରdଣ0] ଅଂଶou ଗରାଗୀfiu$(b ஆரம்பம் விரோதி Sb6u6Oof Liff" 26 Ebub SÐ (1889)
Ribash : 22 Sub O6
பயங்கர மொழி யைக் கேள்விப்பட்டவர்களுள் எத்தனை பேர்
கிணறு வெட்டப் பெருமானே வெளிப்பட்ட அற்புதத்தைப் பற்றி அறிந்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளின் முன்னர் இந்த அற்புதத்தை நேரிலே தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் பலர், திருவும் கல்வியும் சீரும் தளைக்கும் திருக்கோணமலையில் வாழ்கின்றார்கள் என்பது பெருமைக்கும் பெருமகிழ்ச்சிக்கும் உரியது.
இலங்கையின் மிகப் பழைய சிவாலயங்களுள் ஒன்றாகத் திகழ்ந்ததும், புராண, இதிகாச வரலாற்றுப் பெருமை மிக்கதுமான திருக்கோணேஸ்வரத் திருத்தலத்தை மதவெறியின் உறைவிடமான போர்த்துக்கீசர் கி.பி. 1624ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அவர்களுடைய
"கிணறு வெட்டப் பூதம் வெளிப்பட்டாற் (Curtas" என்ற
●
 
 
 
 
 
 
 
 
 
 

web : www.hinduorgan.com e-mail : editor(CDhinduorgan.com
6600 BLIT. 50.00
ஆட்சியில் நிலவிய மத சுதந்திரத்தைப் பயன்படுத்தி, ஆகாச வளியில் அம்மையும் அப்பனும் இருப்பதாகப் பாவித்து, காணாமலை உச்சியில் பூசை வழிபாடுகளை நடத்தத் தொடங்கினர். அந்த ஆகாச வெளியில் மட்டுமல்லாமல், சைவப் பருமக்கள் ஒவ்வொருவரினதும் இதயக் கோயிலிலும் இடம் பற்றிருந்த கோணேஸ்வரப் பெருமானை, தட்சண கைலாசமாகிய இமயக் கோயிலிலும் எழுந்தருளச் செய்ய வேண்டும் என்ற அடக்க முடியாத அருளாசை ஏராளமான அடியார்களின் உள்ளத்தில் ஏக ாலத்தில் எழுந்தது. அதன் விளைவாக 1950 ஆம் ஆண்டு ஆடி ாதத்தில் நடைபெற்ற கூட்டத்திலே, திருக்கோவில் அமைய வண்டிய இடம், பிரதிஷ்டை செய்யப்படவேண்டிய திருவுருவங்கள்,
அவற்றைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாடுகள் பற்றியெல்லாம் နို့ငဲ့) | பயபக்தியுடனும் தெய்வீக நம்பிக்கையுடனும் ܕܼܲܒܐܼܼܲ
கலந்துரையாடிக் கொண்டிருந்த போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

Page 2
இந்துசாதனம் 3.C
"இதோ நாம் இங்கே இருக்கின்றோம்; நம்மைத் தேடியாரும்
வேறு எங்கும் செல்ல வேண்டாம்" என்று உணர்த்துவதைப் போல், சற்றுத் தொலைவில் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த கிணறொன்றி லிருந்து மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமான்பார்வதி அம்பாள் சோமாஸ்கந்த மூர்த்தமாகவும், சந்திர சேகரர் பார்வதி திருபங்கத்திருவுருவங்களும்,பிள்ளையார், அஸ்திரதேவர், திருவுருவங்களும் விளக்குமுடி (அன்னம்)யும் வெளிப்பட்டன.
வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்காகத் திருமலை ஏகாம்பரம் வீதியில், நகர சபையினர் வெட்டிக் கொண்டிருந்த கிணறுதான் இந்த அற்புத நிகழ்ச்சியின் அடித்தளம்- ஆதாரத்திருத்தலம்!
போர்த்துக்கீசர் இக்கோவிலை அழித்தே விடுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த கோவில் அர்ச்சகர்களும் பரிபாலகர்களும், விக்கிரகங்களைப் பெயர்த்தெடுத்து நிலத்துட் புதைத்தும் நீர்நிலைகளில் அமிழ்த்தியும் பாதுகாத்தார்கள். அவற்றைத் தேடி எடுக்கும் நோக்கம் இன்றி வேறு தேவைக்காக ஏகாம்பரம் வீதியில் வெட்டப்பட்டுக்கொண்டிருந்த கிணற்றிலிருந்து அவை வெளிப்பட்டமை இறைவனின் அற்புதமேயன்றி வேறில்லை
"நாங்கள் இறைவனைநோக்கி ஒர் அடியை எடுத்து வைத்தால், இறைவன் எங்களை நோக்கி ஒன்பது அடிகளை எடுத்து வைப்பான்" எனச் சமயச் சான்றோர் பலர் சொல்லியுள்ளனர். கோணேசர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய ஆரம்ப முயற்சியாக ஆலோசனைக் கூட்டத்தை அடியவர்கள் நடத்திக் கொண்டிருந்த போது, கோணேசப் பெருமான் தானாகவே கிணற்றிலிருந்து வெளிப்பட்டமை, சான்றோர்களின் கூற்று, சரியென்பதை நிரூபிக்கின்றது.
திருவுருவங்கள் அனைத்தும் இலங்கையின் எல்லாப் பிரதேசங்களுக்கும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்நாட்டிலுள்ள சைவப் பெருமக்கள் அனைவரையும் தேடிச் சென்று ஆசீர்வதித்த பின்னரே கோணாமலையில் நான் கோயில் கொள்வேன்’ என்ற இறைவனின் திருக்குறிப்பு, டொக்டர் பாலேந்திரா போன்ற சைவப் பிரமுகர்களின் உள்ளத்துட் தோன்றி ஊர்வலத்தை ஏற்பாடு செய்ய உந்தியிருக்க வேண்டும்
கோலாகலமாக நடைபெற்ற அந்த ஊர்வலம், கோனா மலையில் நிறைவுற்றபின், தற்காலிகமாக அமைக்கப்பெற்ற சிற்றாலயம் ஒன்றிலே திருவுருவங்கள் வைக்கப்பெற்றன; வழிபாடுகளும் தொடர்ந்தன.
முன்னர் குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட கோணேசர் ஆலயப் புனருத்தாரணச் சபை, அக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. எஸ். சிவபாலன் தலைமையிலே திருப்பணிகளை மேற்கொண்டது. சிறப்பான முறையிலே திருப்பணிகள் யாவும் 1963 ஆம் ஆண்டில் பூர்த்தியானபோது, சபையின் தலைவராகப் பணி புரிந்தவர், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நஇ. இராஜவரோ தயம். முதலாவது மகாகும்பாபிஷேகம் அதே ஆண்டில் நடைபெற்று, டொக்டர் எஸ். சித்திரவேலு தலைமையிலான சபை, ஆலயத்தைப் பரிபாலித்தது. பதினெட்டு ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன் அவர்களின் அனுசரணையுடன்

22O1 விகிர்தி மாசி O
12
திரு. மு. கோ. செல்வராசா அவர்களைத் தலைவராகவும் பண்டிதர் சைவப் புலவர் திரு. இ. வடிவேல் அவர்களைச் செயலாளராகவும் கொண்டிருந்த பரிபாலன சபை, இரண்டாவது மகா கும்பாபிஷே கத்தை நடத்தியது.
காசியிலிருந்து கொண்டுவரப் பெற்ற பாணலிங்க உருவில் கோணேசப் பெருமான் கருவறையில் இருந்து அருள்பாலிக் கின்றார். மகா மண்டபத்தை ஒட்டிய தெற்குப் பார்த்த சந்நிதியில் மாதுமையம்பாள் சிலா விக்கிரகமாகக் காட்சியருளுகின்றாள். ஸ்நபன மண்டபத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமான் தென் திசைநோக்கி ஆடுகின்றார். உரிய இடங்களில் பிள்ளையார் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், நாகதம்பிரான், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோரின் தனிச் சந்நிதானங்கள் இருக்கின்றன. பஞ்ச உலோகங்களாலான பிள்ளையார், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சந்திர சேகரர், அம்பாள், சோமாஸ்கந்தர் அம்பாள் ஆகியோர் வசந்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளாகக் காட்சியளிப்பது கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்கின்றது.
ஆகம முறைப்படி நாள்தோறும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. முன்னர் சொல்லப்பட்ட ஆகாச லிங்க பூசையின் பின்னரே, ஏனைய மூர்த்திகளுக்குரிய பூசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
பங்குனி உத்தரத்திற் கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ந்து பதினெட்டு நாள், பிரம்மோற்சவம் எனப்படும் ஆண்டுப் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. தீர்த்தோற்சவம் புதுமையான முறையில் இங்கு இடம்பெறுகின்றது. பாபநாசத் தீர்த்தக் கிணற்றிலிருந்து இயந்திரம் மூலம் வெளிக் கொணரப்படும் தீர்த்தம் மழையாகப்பொழிய,பக்தர்கள் அதிலே தோய்ந்து தம்பாவங்களைப்
போக்கிக் கொள்வார்கள்.
அடியார் பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஏனைய திருவிழாக்களுள் மகாசிவராத்திரி விழா, ஆடி அமாவாசை, தெப்போற்சவம், மாதுமை அம்பாளின் ஆடிப்பூர உற்சவம், பூரீசக்கர பூசை,திருவெம்பாவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மகா சிவராத்திரிக்கு முன்னுள்ள பதினைந்து நாள்களிலும் கோணேசப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், சிவராத்திரி நாலுசாமங்களிலும் நடைபெறும் விசேட அபிஷேக ஆராதனைகள், அடுத்த நாள் கோணேசப் பெருமான் மேற்கொள்ளும் நகர் வலம் ஆகியவையும், ஆடி அமாவாசையன்று, கோணேசப் பெருமான் மலையிலிருந்து இறங்கி வந்து, திருகோணமலையிலுள்ள பல கோவில்களிலுமிருந்துவரும் உற்சவ மூர்த்திகளுடன் சேர்ந்து கடலிற் தீர்த்தமாடுவதும் பக்திப் பரவசத்திற் பக்தர்களைத் திளைக்கச் செய்யும் மகத்தான விழாக்களாகும்.
தெப்போற்சவத்தின்போது, கோணேசப் பெருமானும் அம்பாளும் தெப்பத்தில் ஆரோகணித்து, மலையைச் சுற்றிச் சமுத்திரத்தில் வலம்வருவது கண்கொள்ளக் காட்சி.
裘 இலங்கையின் மிகப் பழைய சிவாலயங்களுள் ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு முதலாவது மகா ரும்பாபிஷேகம் 1963ஆம் -->

Page 3
இந்துசாதனம் 3.O.
ஆண்டில் நடைபெற்றது என எழுதியிருப்பதை வாசித்த எல்லோருமே குழப்பத்துக்கு ஆளாகியிருப்பர் என்பது நிச்சயம். கீழ்க்காணும் விளக்கங்கள் அவர்களின் குழப்பங்களை
விரட்டியடிக்கும் என்பது நிச்சயம்.
1. போத்துக்கீசரால் அழிக்கப்பட்டு, மூன்றரை நூற்றாண்டு களின் பின்னர், சைவப் பெருமக்களாற் புனரமைக்கப்பட்ட ஆலயம் சம்பந்தமான விபரங்களையே இக்கட்டுரை கொண்டுள்ளது. புனரமைக்கப்பட்டு இப்போது நாம் கானும் ஆலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகந்தான் 1963ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2. போத்துக்கீசத் தளபதி கி.பி. 1624ஆம் ஆண்டிலே கோணேசர் கோவிலை இடித்தபோது, அங்கே கல்வெட்டு ஒன்றிருந்ததைக் கண்டான். அந்தக் கல்வெட்டில், "மனுராசா அல்லது மாணிக்க ராசா எனும் மன்னன் இலங்கையை ஆண்டான். அவன் கி.மு. 1300 ஆம் ஆண்டில் கோணேசர் கோவிலைக் கட்டினான்" என்ற செய்தி இருந்தது. 3. திரு. மைக்வில்சன், திரு. ஆதர்கிளாக் ஆகிய ஆழ் கடல் ஆய்வாளர்கள், கோணேசர் கோவிலை அடுத்த கடற் பகுதியில், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கோவிலொன்றின் தளங்கள், தூண்கள், மணிகள், விளக்குகள் இருப்பதைக் கண்டனர். மூன்றாவது கடல்கோள் நிகழ்ந்த காலத்தில், மாபெரும் கற்கோவிலொன்று சமுத்திரத்தில் மூழ்கியது என்று வழங்கிவரும் செய்தியை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்து கின்றன. 4. இந்தப்புராதன கோவிலுக்குக் குளக்கோட்டன் என்ற மன்னன் செய்த திருப்பணிகள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுக்களில்
உள்ளன.
சிதம்பரம்
புண்ணியநாச்சியம்மையார் முடத்தில் .
அமரர் வி. இராமநாதன் அவர்களின் திருவுருவப்படம் சிதம்பரம் புண்ணிய நாச்சியம்மை யார் மட அலுவலகத்தில் 20.12.2010 அன்று சைவபரிபாலன சபைத் த  ைல வ ர் சிவ நெறி ப் புர வலர் த . சண்முகலிங்கம் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அமரரின் திருவுருவப் படத்திற்கு சிதம்பரம் புண்ணியநாச்சி
அம்மையார் மட நிர்வாகப் பொறுப்பாளர்
g
sー
பரீட்சைச் செயலர் திரு.இரா.செல்வவடிவேல்
இந்நிகழ்வில் அமரர் வி.இராமநாதனின் குடும்ப
寸飞
O.
 

22O 6fišňá5 IDIréF O1
5.
இப்போதைய கோவிலுக்கு அண்மையிற் காணப்படும் மலைப்பிளவு 'இராவணன் வெட்டு" என அழைக்கப்படுகிறது. இராவணன் காலம் கி.மு. 6000ஆம் ஆண்டு என ஆராய்ச்சியாளர் சிலர் கணித்துள்ளனர். தெட்சண கைலாயம் எனப்படும் திருக்கோணமலையையே இராவணன் அசைத்தான் என்று சொல்லப்படுகின்றது. சிவபெருமான் காலை ஊன்ற, மலையின்கீழ் அகப்பட்டு இராவணன் பெருந்துன்பம் அடைந்தான் என்றும், தன் தலைகளுள் ஒன்றை முறித்து, வீணையாக்கிச் சாமகானம் பாடிச் சிவனருளைப் பெற்றான் என்றும் சொல்லப்படுகின்றது. ஆகவே, கி.மு. 6000 ஆம் ஆண்டில், இற்றைக்கு 8000 ஆண்டுகளின் முன்னர் இங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார் என்பது புலனாகின்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் இராவண னின் சிவபக்தி பற்றியும், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார் பெருமான், அருணகிரிநாதர் ஆகியோர் கோணேஸ்வரப் பெருமான் பற்றியும் பாடியுள்ளனர்.
染
தொன்மைப் பெருமையும், திருவருள் மகிமையும் நிறைந்த
சிவத்தலம் ஒன்று, நமது நாட்டில், நமக்கு அண்மையில் இருப்பது நம்
தவப்பயன். வாய்ப்பு உள்ளவர்கள் அங்கே சென்று வணங்கலாம்,
வசதி குறைந்தவர்கள் வீட்டில் நின்று சிந்தையால் அங்கு சென்று
வணங்கலாம்!
பச்சைப் பசுஞ்சோலை பால்நுரையாம் நீரலைகள் அச்சமின்றி மான்மயில்கள் ஆடிவர - உச்சியிலே மாதுமையம் பாள்மகிழ மக்களைக்காக் குமிாேண
நாதனையென்றும்பணிவோம்நீர்ம்.
நிரு. ரி. கணேசன் மலர்மாலை அணிவித்தார்.
தலைமையில் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.
த்தினர் கலந்து கொண்டனர்.
3

Page 4
இந்துசாதனம் 3. O
戸ー -
ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் எல்லாம்வல்ல இறைவனைப் பாடிப் பரவிப் பயன் பெற்றுள்ளனர். ஆ விளக்குகின்றார்கட்டுரையாளர்.
சமயம் ஒரு வ
கலாநிதி மனோன்
இசை மனித மனத்தைச் சீர் செய்யும் ஒரு கலையாகும். இசையைக் கேட்டு விலங்குகளும் பறவைகளும் கூட மயங்கி நிற்கும். வேய்ங்குழல் ஓசை கேட்டு மயங்கி நின்ற பசுக்கூட்டம் பற்றிப் பெரியாழ்வார் தமது பாடலில் குறிப்பிட்டுள்ளார். மகுடி ஓசை கேட்டுப் பாம்பு மயங்கி ஆடும். பாரதி பாடிய குயில்பாட்டில் குயிலின் பாட்டைக் கேட்டு எல்லாப் பறவைகளும் மயங்கி இருந்ததாகக்
குறிப்புண்டு.
நமது முன்னோர் இறைவனையே இசைவடிவமாகக் கண்டு வழிபட்டனர். திருக்கோயில் வழிபாட்டில் இசை இணைக்கப்பட்டிருந்தது. இசை விளங்கும் எழில் அங்கு பரந்திருந்தது. நாயன்மார்களின் பாடல்களிலே இச்சூழல் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவையாறு திருத்தலத்தைப்பாடும் திருநாவுக்கரசர் அங்கு உறையும் இறைவனை ஓசை ஒலியெலாம்
ஆனாய் நீயே என்று பாடியுள்ளார்.
இந்த ஒசையும் ஒலியும் மனித வாழ்வில் பலநிலைகளிலும் உணரப்படுபவை. எமது சமயம் அவற்றை வழிபாட்டு நடைமுறைகளில் இணைத்துக் கொண்டுள்ளது. இயற்கையின் ஒலியாகப் புனல், மழை, கடல், காற்று என்பவற்றின் ஒலி சூழ அமைந்த திருக்கோயில்கள் மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை. சம்பந்தர் இறைவனைப் பாடும் போது சிறப்பாக ஒலி நீர் சடையிற் கரந்தாய்' என்று பாடுகிறார். திருக்கோணேஸ் வரத்திருக்கோயில் குரைகடல் ஒலிச்சூழலில் அமைந்திருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்று இயற்கையான ஒலியுடன் இசைக்கருவிகளின் ஒலியும் வழிபாட்டில் இணைந்திருந்தமையையும் இலக்கியப் பதிவுகள் கூறுகின்றன.
"ஒலி செய்த குழலின் முழுவமதியம்ப
ஒசையாடலறாத." என்ற பாடலில்
வழிபாட்டுத் தலங்களில் ஒலியும் ஒசையும், ஆடலும் தொடர்புற்ற நிலை விளக்கப்பட்டுள்ளது. இசைக்கருவிகளின் பயன்பாடு சமய வாழ்வில் மிக்கிருந்தது. இன்னிசை வீணையர்யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்' என மணிவாசகர் திருக்கோயிலில் ஒலியும் ஒசையும் கண்டு மெய்மறந்து பாடி யுள்ளார்.
சங்கப்பாடல்களில் வழிபாட்டிடங்களில் மணியொலி இணைந்திருந்தமை பற்றிய குறிப்புண்டு. ஆண்டாள் திருப்பாவையிலே வெண்சங்கின் ஒலி பற்றிய செய்தி உளது.
O

2.2O விகிர்தி மாசி O
எங்கள் சிவபெருமான். சிவனடியார்கள் பலர், இசைமூலம் ன்மீக வளர்ச்சிக்கு இசை உறுதுணையாக இருப்பதை
பாழ்வியல் -26 மணி சண்முகதாஸ்
பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் வழிபாட்டில் இசைக்கருவிகளின் பங்களிப்புப் பற்றிய விரிவான செய்திகள் உண்டு. ஒலிக்கும் இசைக்கருவிகளுடன் ஒசைநயம் செறிந்த பாடல்களும் இணைந்தபோது ஒரு கூட்டு வழிபாடு நடைமுறை யாயிற்று. இத்துடன் ஆடலும் இணைந்தபோது சமயம் வாழ்வியலாக வளம் தருவதாயிற்று.
இசை கோயிற்கலை என்ற புனிதநிலை எய்திற்று. மனத்தை ஒருவழிப்படுத்தி இறை சிந்தனை வயப்பட இசை பக்க பலமாக நின்றது. கோயில் இனியதொரு கலையரங்கமாக மாறி நொந்த உள்ளங்களைப் பண்படுத்தும் மருத்துவ நிலையமாயிற்று. இசைகேட்டு உடல் புத்துணர்வுபெற்றது. உள்ளம் அமைதி பெற்றது. தனியாகவும் கூட்டாகவும் க்லை பயில் பயிற்சிக் கூடமாகக் கோயில் திகழ்ந்தது. இசை மட்டுமன்றி உரையும் இறைவன் குணநலம் பற்றிக் கூறும் கருவியாயிற்று. இத்தகைய ஒரு சமயச் சூழல் எமது நாட்டிலே இருந்ததைச் சம்பந்தர் பாடல் பதிவுசெய்துள்ளது.
"பாடல் வீணையர் பலபல சரிதையரெருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவரமரர்கள் வேண்டநஞ்சுண்டிருள் கண்டத்தர் ஈடமாவது விருங் கடற்கரையினிலெழிறிகழ் மாதோட்டம் கேடிலாதகேதீச்சரந்தொழுதெழுக்கெடுமிடர் வினைதானே".
எல்லோரும் ஒன்று கூடி இறை பற்றிய எண்ணத்துடன் மட்டும் செயற்படும் வாழ்வியல் கண்டு சம்பந்தர் பக்தி வயப்பட்டவர். இளவயதில் அவர் உள்ளத்தில் இசை ஒரு புலனடக்கத்தைத் தந்தது. முன்னோரின் வழிபாட்டு நடைமுறைகள் கடல் கடந்தும் பரந்திருப்பது பரவசம் தந்தது. எனவே அந்த வாழ்வியலைப் பின் வரும் இளந்தலை முறையினரும் அறிய வேண்டுமென விரும்பினார்; அதைப் பாடலில் பதிவு செய்தார்.
இத்தகைய சமயவாழ்வியல் பற்றிய விளக்கம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்து இயம்பப்படவேண்டியது. அழகையும் புதுமையையும் விரும்பும் இளையோரைக் கோயில்களில் இசையோடு இயைபுபடுத்த வேண்டும். துள்ளி வரும் இளமைவேகம் ஒலியாலும் ஒசையாலும் பண்பட்ட நடையாகப் பக்குவப்பட வேண்டும். ஆனால் இன்றைய கோயில் நிர்வாகம் இது பற்றி நினையாதிருப்பது கண்கூடு. கோயிலை ஒரு பயிலரங்கமாகவும் பண்பாட்டுப் பயிற்சிக் களமாகவும் மாற்றுவதற்குரிய முயற்சி விரைவாக முன்னெடுக்கப்படவேண்டும். சம்பந்தர் காட்டிய புதிய வழியை நம்நாட்டவரும் பின்பற்ற வேண்டும். எமது இளைய தலைமுறையை, பண்பட்ட சமய வாழ்வியலில் ஈடுபடச் செய்தல் வேண்டும். 人
A. it.

Page 5
இந்துசாதனம் 3. O,
416.
47.
48.
419.
420.
421.
422.
423.
424.
425.
426.
நாவலர் சரிதமோது கவிஞர் திரு. இரா6
(இந்துசாதனம் - 2011 தை 11
அத்திருநகரிற் சின்னாள் ஆலயந் தொழுத பின்னர் கொத்தலர் சோலை சூழும் கும்பகோணத்தை நீங்கி பித்தொடுவருளை வார்திருக்கேதீச்சரஞ் சென்றிறைஞ்சி வித்தகர்கும்பகோன வியன்பதிவந்தார் மீண்டும்.
அன்னவருறைதல் கேட்டவாவடுதுறையுள்ளார்கள் தன்னரும் வித்துவான்மீனாட்சிசுந்தரனா ரோடு பன்னிரு முறைகளோதும் பலரையுமனுப்பித் தாங்கள் மன்னிடுமடம தற்கே மாண்புசெய்தழைத்து வந்தார்.
இன்னருட் பிரசங்கங்கள் இயற்றவைத்தவைகள் கேட்டும் பன்னருமறையிற் காணுட்பொருளுரை பாடங்கற்றும் பின்னருஞ் சந்தேகங்கள் பெருகிடநிவர்த்திசெய்தும் துன்னிடுஞான வெள்ளத் தழுந்தியே மகிழ்ந்திருந்தார்.
அழைத்திடுபதிதான வாவடுதுறைய கன்றே வழித்தடம் மேவிநின்றே வளருபுள்ளிருக்கு வேளுர் தழைத்திடுபதிசீர்காழித்தலமதையிறைஞ்சிநீங்கி செழித்திட வாடல் காட்டுஞ்சிதம்பரம் வந்து சேர்ந்தார்.
கோதில்சீர்காழி சேரக்கரம்சிரங்குவித்தவாறே தீதிலா வருளை வாருந்திருத்தோணியப்ப ரோடு காதலாள் பெரியநாயகிப்பெயரம்மைகண்டு மீதுலாவன்பினாலே மென்பதமிறைஞ்சிநின்றார்.
வந்தவரங்கு முன்னர் வாங்கிய நிலத்திற்கேகி அந்தவாயிரத்து வெண்ணுாற்றறுபத்து மூன்றாமாண்டில் வந்தஆவணியாம் மூன்றில் வாய்த்தஅத்திவாரமிட்டு சிந்தையிலிருந்த சைவம் பள்ளிக்கோர் உருக்கொடுத்தார்.
மீண்டுமெம் சைவ மேன்மை மிளிர்ந்திடப் பிரமச் சார்யம் பூண்டெழு லினுவை வாழ்ந்த வெங்கடாசலையர் தாமே வேண்டிய மரங்கள் தச்சு வேலைகள் முற்ற வைத்தே நீண்டிடிப்பணிகட்காக நிறைவுறவனுப்பிவைத்தார்.
அறுபதும் நாலும் வந்தே யணைபுரட்டாதிவேலை நிறைவுற அடுத்ததான ஐப்பசி மாதந் தன்னில் அறிசிதம்பரச்சைவப்ர காசவித்யாசாலைக்காய் முறைசிவபூசைசெய்யும் முதுதமிழ் அறிஞரான.
பச்சிலைப்பள்ளி தோன்றிபரனவனாடுங் கோவில் நச்சியங்கிருபதாண்டாய் நாடிவாழ் காசிநாதர் இச்சைகள் தீருமாறே இயற்றுவாரென்று தேர்ந்தே அச்செயலாற்ற வேண்டியதிபராய் நியமித்தார்கள்.
தில்லைவாழந்தணர்கள் செந்தழலோம்புவோர்கள் நல்லவா சாரியார்கள் நற்றவர் யாவருந்தம்
இல்லமா பிள்ளை மாரை யிக்கலாசாலை சேர்த்தால் நல்லவாரறிவரென்றே நாளுமிங் கனுப்பிவைத்தார்.
திருவினார் பாடசாலைக் குருவினார் மாணவர்க்கே கருவிநூலவையுஞ் சைவ சமயநூலவையுஞ் சொல்லி வருவதால் தாபி வாஞ்சையும் மதிப்பும் வைத்தே தருவிதா மென்றே காக்கத் தலைப்படுவார்களானார்.

22O 6ĥä5iĝ5 Dariéf ol
ம் நற்றமிழ் மாலை
சையா குகதாசன்
ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.)
427. சிதம்பர விறையை வந்தே சேவிக்குந் தம்பிரான்மார்
நிதம்பணி பிரபு மார்கள் நிகரரியாதீனத்தார் விதம் விதம்பரிசோதித்தே வெகுசமர்த்தரினைத் தேர்ந்தே பதம்புகழ் நூல்களெல்லாம் பரிசளித்தாக்கினார்கள்.
428. நேசவிப் பாடசாலை நிர்வகிமுறைமை பார்த்தும்
பாசமுள்ளாசான்மார்கள் படிப்பியு பாங்கு பார்த்தும் வீசொளிரறிவும் நோக்கிவியந்திடுபெரிய ரெல்லாம் பேசிடு மிடங்கள் தோறும் பேசினர் பணியைப் போற்றி
429. அத்தலத்திருந்த கன்றே அருட்தலம் பலவணங்கிச்
சித்தமுள் புதியதான திருநாகைக் காரோணத்துள் நித்தனையிறைஞ்ச வேண்டு நெஞ்சுறை கருமந்தன்மேற் பித்தினராகிச் சென்றே பீடுறு பதியடைந்தார்.
430. இவ்வுலகெங்கும் போற்ற வின்நாகைதனிலிருந்தே வெவ்வினை யகற்றியாள விருந்தருள் புரியுநாதன் திவ்விய பதமிறைஞ்சித் தோத்திரம் பலவுஞ் சொல்லி அவ்விடமறிஞர் சூழ அடியவரிருந்தபோது
431 அணியுடைசைவ நீதி அகிலமதோங்கு மாறே
துணிவொடு பாடசாலை தொடங்கியிப் பாரினுக்கே பணிசெயவிழைந்தார் தம்மேற் பரிவுடைநாட்டுக் கோட்டை வணிகரப் பணிக்கு வென்றே வளநிதி வாரியீந்தார்.
432. மன்னற நிதியினோடு மாணவர் வேலுப் பிள்ளை
அன்பொடு அழைக்க அந்தத் திருவேட்டங்குடியிறைஞ்சிப் பின்திருக்கடவூரோடு பெருந்தலம் பலவுந்தன்கை சென்னிவைத்திறைஞ்சிக் கொண்டே சிதம்பரப்பதியடைந்தார்.
சிதம்பரத் தீட்சிதர்மாரும் நாவலரும்
433. f$ தீட்சிதர்சில்லோர் சிவதீட்சையின்றி
நிதம் பூசை கண்டு நிட்டூர மிஃது என்றும் இதந்தரு லிங்கபூசையியற்றிடா தெவருமையன் பதம்பர விடல்சிவாகமப்படி பிழையும் என்றார்.
434. பார்முழுதேத்தும் கோயிற் பரனுமார் கழிநல் மாதம் தேர்தனி லேறுந் திருவா திரைத்திருவிழா முதல்நாள் பேர்பெறு சைவ மேன்மை பெருகிடு பணிகளாற்ற ஊரமை பாடசாலை உஞற்றினார்பிரசங்கத்தை.
435. ஆட்சியிலுள்ள சைவ ஆகமங்களைநிந்தித்தே
தீட்சைகளாற்றலால்யாதொருபயனில்லையென்றும் மாட்சிமையில்லையாற்பிரமாணமென்றதையெடுத்தே நாட்செடி பூசைக்கெல்லாம் நாமிதைக் கொண்டிடாதே.
436. தீட்சைகள் பெற்றி டாதும் சிதம்பரக் கிரியை யெல்லாம்
வாட்டம தகற்ற வேண்டி வைதிக முறையிற் றானே நாட்டுவமென்றம் கூறி நாணாமற்றுரைசெய் வார்மேல் மாட்படு சிலருமிஃதே மெய்யென நம்பினார்கள்.
437. நிந்தைகள் செய்யக் கேட்டும் நிகழ்த்திடுபூசை பார்த்தும்
வெந்திடக் கண்டிக் கார்மேல் விளைந்திடு பாவ மெல்லாம் முந்துற வருளிச்செய்த மூலவனாணை நெஞ்சி
லுந்திட வறியுமாறே வுரைத்திட விளைந்தாருண்மை.
(... وقار) مملo)

Page 6
இந்துசாதனம் 3.O
அமரர்களான வ. செல்லையா (இளவாலை), ச. சச்சிதான இ. திருநாவுக்கரசு (இணுவில்), வ. கந்தசாமி (கந்தர் குமாரசுவாமிப்பிள்ளை (கொக்குவில், இன்றும் செயற்படும் இ. ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அகில இலங்கைச் சைவப் புலவ! பொன்விழாவைக் கொண்டாடியது. "சைவநாதம்" பொன்மல சைவப் புலவர் தேர்விற் சித்தியடைந்து சைவப் பணியில் ஈ சிறப்புக் கட்டுரைகளும் மலரில் இடம்பெற்றுள்ளன. சங்கத்தி தொடர்ந்தும் வெற்றியடையவேண்டும் எனப்பிரார்த்திக்கின்றே சிறப்பை நமது வாசகர்கட்கு உணர்த்தும் வகையில் கலாநிதி என்ற தலைப்பில் எழுதிய வாழ்த்துச் செய்தியையும் சை சைவசித்தாந்தம்" என்ற கட்டுரையையும் வெளியிடுகின்றோம் நாதன், சி. நந்தகுமார், சு.செல்லத்துரை ஆகியோர் முறையே பணிபுரிகின்றனர் என்பது குறிக்கத்தக்கது. 153,காங்கேசன் மனையில் "சைவநாதம்" மலரைப்பெற்றுக்கொள்ளலாம்.
.."
fanILDGOJUTLİ
LDக்கள் அனைவரும் ஒரே படியினராக இல்லை. அவர்கள் வாழும் இடம் அதன் தட்ப வெப்பநிலை என்பவற்றால் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் வளர்ச்சி பல்வேறு தரத்தில் இருத்தல் என்பன காரணமாக அவர்கள் அனைவருக்கும் ஒரே சமயம் பயன்படுமாறில்லை. ஆகவே தான் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்திக் கூறும் பல்வேறு சமயங்கள் அவ்வக்காலத்துக்கு ஏற்றனவாகவும், இடத்துக்கு ஏற்றனவாகவும் தோன்றலாயின.
உலகில் வழங்கும் பல்வேறு சமயங்களும், இனித்தோன்றும் சமயங்கள் உளவேல் அவையும் தன்னுள் அடங்குமாறு அவற்றுக்கெல்லாம் தலைமைத்தாய் விளங்குவது சித்தாந்த சைவம். உண்மைகளை வெறும் நம்பிக்கைக்கு உரியனவாக மட்டும் கூறாமல், ஆராய்ந்து காணும் அறிவுக்கும் பொருத்தமான முறையில் அவற்றைக் கூறி நிறுவுவது இச்சமயம். சமயம் வெறும் குறிகளும் அடையாளங்களுமன்று, சமயம் இவற்றையெல்லாம் கடந்து நிற்பது. குறிகள் அடையாளங்கள் ஒன்றையும் போற்றாமல் சிறந்த சமயி ஆக வாழ முடியும். இவைகள் அனைத்தையும் மேற்கொண்டும் சமய விரோதியாக வாழமுடியும்.
மனித மனத்தின் மாசை அகற்றிப் பண்புடையவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும், பிறர்க்குப் பயன்படுபவனாகவும் வாழ முற்படுவதே சமய வாழ்க்கையாகும். இதற்கு அப்பால் அனைத்தையும் கடந்து நின்ற ஒன்றைக் - கடவுள் என்ற ஒற்றை மனத்தில் ஏற்றுக் கொண்டவனாய் வாழ்பவனே சமயவாதியாவான்.
சைவ சமயத்திற்குரிய நூல்களாகத் தோத்திரம், சாத்திரம் என இரண்டு வகை உண்டு. திருமுறைகளைத் தோத்திரம் என்றும் மெய்கண்ட நூல்களைச் சாத்திரம் (மெய்கண்ட சாத்திரம் - சித்தாந்த சாத்திரம்) என்றும் கூறுவது ஆன்றோர் வழக்கு. இவைகள் சைவ சமயத்துக்குக் கண்போன்றன.
திருமுறைகள், சிவபெருமானது முழுமுதற்றன்மையையும் , அடியவர்களுக்கு அப்பெருமான் அவ்வப்போது தோன்றிச் செய்த பேரருளையும் இனிது விளக்கி அவனிடத்தில் அன்பு விளையச் செய்வன, ஆகவே, அவை தோத்திரங்களாகும்.

22O1 விகிர்தி மாசி O
எந்த சிவம் (ஏழாலை) தங்கம்மா அப்பாக்குட்டி (மல்லாகம்) மடம்) கா. அருணாசல தேசிகமணி (மட்டக்களப்பு), த. செல்லத்துரை (சிறுப்பிட்டி) ஆகியோரின் பெருமுயற்சியால் 1960 ர் சங்கம் சென்ற 2010 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான முறையில் ரையும் வெளியிட்டது. சங்கத்தின் வரலாறு சங்கம் நடத்திய டுபட்ட, ஈடுபட்டுள்ள சைவப்புலவர்கள் சம்பந்தமான விபரங்கள் ன் பணிகளைப் பாராட்டுகின்றோம். அதன் சமயப் பணிகள் ாம். பொன்விழா மலரில் இடம்பெற்றுள்ள சமயக் கட்டுரைகளின் க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் "சிவமணம் கமழ்க" வசப்புலவர் சு. துஷ்யந் எழுதிய "சிவாகமங்களின் சாரம் 1. திருவாளர்கள் மு. திருஞானசம்பந்தபிள்ளை, கந்த சத்திய தலைவர், செயலாளர், பொருளாளர்,தேர்வுச் செயலாளர் ஆகப் துறை வீதி, கொக்குவில் என்ற முகவரியில் உள்ள சங்கப்பணி
கமழ்க.
தோத்திரங்களில் அமைந்திருக்கும் தத்துவக் கொள்கை களைத் தருக்க அடிப்படையில் வகைப்படுத்திக் கூறுவன சாத்திரங்கள்.
சைவ சமயத்துக்குத் தோத்திரம், சாத்திரம் என்னும் இரண்டும் இரண்டு கண்களாக அமைந்துள்ளன. சிவபிரானார், தோத்திரமாகவும், சாத்திரமாகவும் விளங்குகிறார் என்பது சைவ நூற்றுணிவு.
"அல்லும் பகலுமாய் நின்றார் தாமே.00................
தோத்திரமும் சாத்திரமுமானார் தாமே. திருவாலங்காடுறையும் செல்வர்தாமே".
என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்.
திருமுறை என்னும் பெயரில், திரு என்பது சிவத்தையும் சிவனருளையும் அவ்வருளால் எய்தும் பேரின்பத்தையும், முறை என்பது நூலையும் குறிக்குமாதலின், திருமுறை என்பதற்குச் சிவநூல், அருள்நூல், பேரின்பநூல் என்று பொருளுரைப்பதே பொருத்தமானதென்பது சைவநுாற் பயிற்சிமிக்க பேரறிஞரின் கருத்தாகும்.
வாழ்க்கைச் சிக்கலில் வீழ்ந்து சுழலும் மக்களுக்கு மனக்கவலை போக்கும் மாமருந்தாகத் திருமுறைகள் விளக்கு கின்றன.
வேதம் பசு எனவும், ஆகமம் பால் எனவும், திருமுறை நெய் எனவும் கூறப்படுவது திருமுறைகளின் சிறப்பை எடுத்துக் காட்டும்.
வினை என்பதற்குச் சிறந்த மருந்து திருமுறைகளாகும். "திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே" என்பது சம்பந்தப் பெருமான் திருவாக்கு.
வேண்டுவார் வேண்டுவதை உதவுதலின் திருமுறைகள் கற்பகதருவை நிகர்ப்பன அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திய பெருமையும் திருமுறைகளுக்கு உண்டு.
சைவசமயத்தின் தத்துவக் கொள்கையையே சைவ சித்தாந்தம் எனப்படும். இவ்வுலகில் உண்மைத் துறையில் முடிந்த முடிவாக உள்ளது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தம்.

Page 7
இந்துசாதனம் 3.O
தமிழகத்துச் சான்றோர்கள் அறிவாராய்ச்சியால் உருவாக்கி வழங்கிய உயர்தனிக் கோட்பாடு. முன்பொருளின் இயல்பு, இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் முதலான பல தலைப்புகளின் கீழ் வைத்துப் பலமேற்கோள்களோடு, பன்னிரு திருமுறை, பதினான்கு சாத்திரங்களின் துணை கொண்டு போதிக்கப்படுவது சைவசித்தாந்தம்.
சித்தாந்த சாத்திரங்களுக்கு மூலநூல்களாகத் திருமுறைகள் திகழ்கின்றன. ஆகவே தோத்திரத்தையும், சாத்திரத்தையும் கற்பவரே சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.
இதனைக் கருத்திற்கொண்ட சைவப்புலவர் வித்துவான் வ.செல்லையா, சைவப்புலவர் வித்துவான் ச.சச்சிதானந்தவம், சைவப்புலவர் பண்டிதர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, சைவப்புலவர் பண்டிதர் இ.செல்லத்துரை முதலான நல்லறிஞர்களால் நிறுவப்பட்ட அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ஐம்பது ஆண்டுகளாகச் சோர்வின்றித் திறம்படச் சைவப்பணிசெய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.
இச்சங்கம், திருமுறைகள் சைவசித்தாந்த சாத்திரங்களைக்
சிவாகமங்களின் சார
"லித்தாந்தேன நிவேதிதம்" (காமிகம் 1.10)
சிவாகமங்கள் சிவவழிபாட்டு இலக்கியங்கள் மாத்திரமன்றி சிவதத்துவமான சைவ சித்தாந்தத்தின் பிரமாண நூலும் ஆகும். சந்தான குரவர்களுள் முதல்வராகக் கருதப்படும் மெய்கண்ட தேவநாயனார் சைவசித்தாந்தத்தை மேம்பட நிலை நிறுத்தியவர். முதல் முதலில் ஆகமத்தின் வித்தியாபாத பொருள்மரபின் சாராம்சங்களை சைவத் தமிழில் சைவசித்தாந்த அமிர்தமாக சிவஞானபோதம் எனும் நூலாக கடைந்தெடுத்தவர் அவரேயாவார். சிவாகமங்களைத் திருமேனியாக உடைய சிவனுக்கு நிவேதனப் பொருளாகக் கொள்வது அச்சிவாகமங்களின் ஞானாபதப் பொருளாகிய சித்தாந்தமேயாகும்.
"சைவசித்தாந்தம்'என்ற பெயர், சிவாகமங்களுக்கும், சைவசித்தாந்தத்திற்கும் உள்ள தொடர்பினை உறுதிசெய்கின்றது. "சைவ", "சித்தாந்த" என இரண்டு சொற்களைக் கொண்ட ஒரே தொகைச் சொற்றொடராகும். அவற்றுள் 'சைவ" என்பது பெயர் விகுதி பெற்ற சொல்லாகும். "சித்தாந்த" என்பது தொகைச் சொற்றொடராகும். எனவே, பெயர் விகுதி பெற்ற சொல் மற்றும் தொகைச் சொற்றொடர் ஆகிய இரண்டினையும் உள்ளடக்கிய தொகைச் சொற்றொடரே "சைவசித்தாந்தம்" என்பதாகும். சித்தாந்தம் எனும் சொல்லுக்கு "முடிந்த முடிவு" என்றே பொருள் கூறுவர். எந்த ஒன்றினைப் பரீட்சகர்கள் பல விதங்களில் பரீட்சித்து பல்வேறு காரணங்களால் சாதித்து, நிலைநிறுத்துகிறார் களோ, அந்த நிர்ணயத்திற்கு, முடிவிற்கு "சித்தாந்தம்" என்று சரகர் என்பவர் கூறுகின்றார்.
சிவாகமங்களுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றுள் "சித்தாந்தம்" என்பதும் ஒன்று. சிவபெருமானே ஆப்தர், அவர்

22O விகிர்தி மாசி O
கற்பித்துத் தேர்வு நடாத்தி விருது வழங்கி வருகிறது. சைவப்புலவர் விருது பெற்றோர் பலர் இலங்கையின் பலபாகங்களிலும், இலண்டன், ஜேர்மனி, முதலான வெளிநாடுகளிலும் சைவப்பணி செய்து வருகின்றனர்.
சங்கத்தினர் ஆலயங்களில் நிகழ்த்தி வரும் சொற்பொழிவு களைச் செவிமடுத்தபலர், திருமுறைகளையும், சைவ சித்தாந்த சாத்திரங்களையும் தேடித்தேடி வாங்கிப் படித்து இன்புற்று வருகின்றார்கள் என்பது மிகையாகாது.
யாழ். பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த பீடம் அமைப்பதற்குக் காரணமாக இச்சங்கமும் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சைவப்புலவர் சங்கம், பொன்விழாவை நடத்தவிருப்பதும், விழா நினைவாக சைவநாதம் என்னும் மலரொன்று வெளியிட விருப்பதும் பாரிய மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. மலர் சிவமணமும் பொருளழகும், தமிழ்ச்சுவையும் பொருந்தித் திகழ வேண்டுமெனக் கூத்தப்பிரானைச் சிந்தித்து என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
10 சைவசித்தாந்தம்
அருளிய "ஸித்தாந்தமே" ஆப்த வாக்கியமாக, ப்ரமாணமாக அமையும் என அகோரசிவாசார்யர் பத்ததி நூல் குறிப்பிடுகின்றது. சைவமதத்திலுள்ள சிவபேதம் 10, உருத்திரபேதம் 18 என்னும் சிவாகமங்கள் 28 உம் சைவசித்தாந்தம் என்பது "பிறநூல் திகழ் பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தமாகும்" என்று கூறுவது அருள்நந்தி சிவாசாரியாரின் திருவாக்கு. "ஸித்தாந்தம்" சிவாகமங்களின் காரண இடுகுறிப்பெயர் என்பதை "ஸித்தாந்த, மந்த்ரதந்த்ரம்ஸ்யாத்" எனும் காமிய ஆகம வசனங்களிலும் தெளிவுறக் காணலாம்.
இனி சிவாகமங்களில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் எங்கு உளது என்பதை இரத்தினச் சுருக்கமாக நோக்குவோம். ஆகமங்கள் நான்குபாத நெறிகளால் ஆக்கப்பட்டவை. அவற்றுள் ஞானபாதமே சைவசித்தாந்த நெறியைப் போதிக்கின்றது. இன்று கிடைக்கும் ஆகமங்களுள் சுப்பிரபேதம், கிரணம், மகுடம், இரெளராகமம், சுவாயம்புவம் ஆகிய நூல்களில் மட்டுமே ஞானாபாதம் கிட்டி யுள்ளன. மேலும் வேறு சில ஆகமங்களான பெளஷ்கரம், மிருகேந்திரம், மதங்க பாரமேஸ்வரம் முதலான உபாகமங்களிலும் ஞானாபதம் கிடைத்துள்ளன. மேற்குறிப்பிட்ட அனைத்தின் ஞானா பாதத்திலும் பல பல படலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்கள், பசு பாசங்களில் நின்று நீங்குவதற்கான சாதனங்கள் அதன் பயனாக பசு அடைய வேண்டிய முக்திப் பேறு என்பன தனிச் சிறப்பாய் அமைந்து கிடக்கின்றன. அவற்றுள் கிரணாகமத்தின் ஞானாபாதம் அமைப்பைக் காட்டுவது இவ்விடத்தில் சாலப் பொருத்தமாகும். கிரணம் என்பது ஒளி, பசுவுக்கு ஞான ஒளியை ஊட்டுவதால் இப்பெயர் வரலானது. இது பன்னிரு படலங்களால் ஆனது அவை

Page 8
இந்துசாதனம் 3.O
முறையே 1. பசுப்படலம், 2. மாயா படலம், 3. கன்மபடலம், 4. பதிப்படலம், 5. சக்தி நிபாதபடலம், 6. தீட்சா கன்ம படலம், 7. மந்திரபடலம், 8. புவனப்படலம், 9. சிவதத்துவ படலம், 10. சந்திராவதாரபடலம், 11. மாதிருகோற்பத்திபடலம் 12. மந்திரலோத்தார படலம் என்பனவாகும்.
இப்படல அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டுதான் சாத்திர நூல்கள் 14லும் உருவாக்கம் பெற்றன. சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் போன்ற சித்தாந்த நூல்கள், 12 சூத்திரங்களில் சைவசித்தாந்தக் கருத்துக்களை விரிவாக்கிச் சொல்வதை இத்தாற் கவனத்திற் கொள்ள வேண்டும். அதுபோல திருவருட்பயனும் 10 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இந்நூல் சைவசித்தாந்த நுட்பங்களைத் தெளிவாக குறளோவிய மாக வரைந்திருப்பதையும் ஈண்டு கவனிக்கத்தக்கது.
இனி, சைவ சித்தாந்தச் சாத்திரத்தின் பொருளும் சிவாகமங்களையே மூலமாகக் கொண்டவை என்பதையும் நிரூபணமாக்க வேண்டும். 14 சாத்திர நூல்களை உள்ளடக்கிய சைவசித்தாந்தச் சாத்திரத்தினைத் தமிழில் மேம்பட விளங்க வைத்தவர் மெய்கண்டார் ஆவார். இவர் இயற்றிய நூலாகிய சிவஞான போதமானது. அதே சிவபெருமான் அருளிய 16வது மூல சிவாகமமாகிய ரெளரவாகமத்தின் 73 படலமாகிய பாசவிமோசனப் படலத்தில் வரும் துவாதஸ சூத்திரத்தைத் தழுவி, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். சிவாகமத்திலிருந்து சிவஞானபோதம் 12 சூத்திரங்களை ஒத்தாற் போலவே மெய்கண்டதேவரும் சிவஞா னபோதத்தைப் பாடினார். அதாவது முப்பொருள் உண்மைக்கு சைவாகமங்களே முதற் பிரமாணம். அதனை அவ்வாறே புரிந்துகொள்ள உலகத்தவர்களால் முடியாது என்பதாலேயே, வாதங்களோடு, எடுத்துரைக்கவே அனுமானம் முதலிய பிரமாணங்களோடு 'சிவஞானபோதம் இயற்றப்பட்டது என்பதனை
கீழ்கண்ட பாடல்வரிகள் ஊர்ஜிதம் செய்கின்றன.
"எந்தை சனற்குமரன் ஏத்தித்தொழ இயல்பாய் நந்தி உரைத்து அருளுஞானநூல்- சிந்தை செய்து தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியார்
தாமுணரஏது திருட்டாந்தத்தால் இன்று"
-நூல்மரவு-சிவஞானபோதம்
எனவே, சிவாகமங்களின் சாரம் 'சைவசித்தாந்தம் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தாலும், சைவ சித்தாந்த சாஸ்த்திர நூல்களில் விளக்கப்பட்டுள்ள விடயங்கள் அதுபோன்றே. சிவாகமங்களில் உள்ளத்தைக் கண்டால், "சிவாகமங்கள் மூலநூல்" என்பதும், சைவசித்தாந்த சாஸ்திரம், அதன் அரியதொரு உரைநூல் என்பதும் உள்ளங்கைக் கனி என விளங்கும். இவற்றைச் சற்று தெரிந்துகொள்ளச் சில உதாரணங் களை மட்டும் கருத்திற்கொள்வோமாக.
உண்மை விளக்க நூலில் மனவாசகம் கடந்த தேவர்
நடராஜரின் ஆடல் முறைகளைக் கீழ்வருமாறு ஒரு பாடலிற் காட்டுகின்றார்.
 

22O விகிர்தி மாசி 01
"தோற்றம் துடி அதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முக்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு"
இப்பாடல் உணர்த்துபவை உண்மையா அல்லது கற்பனையா என்பதனைச் சிவாகமத்தின் மொழி பெயர்ப்பாய் வரும் கீழ்வரும்
வரிகள் உண்மை என்று பறைசாற்றுகின்றன.
"டமரோ ஜாயதே ஸ்ருஷ்டி, அபயாத்ஸ்திதி, உச்சுயதே அக்நே:துப்ரோக்த: ஸம்ஹார திரோதானம் - து குஞ்சிதாத் அநுக்ரஹோஹி ஊர்த்வபதம் க்ருதயம் பஞ்சஸ்பாபதே"
சிவஞான சித்தியாரின் சுபக்கப்பாடலொன்று சைவச் சாதனைகள் நான்கால், சங்கரனை அடையும் முறை அதன்மூலம் ஈட்டும் பேறு என்பனவற்றை கீழ்வரும் பாடலொன்றால் உணர்த்து கின்றது.
"சன்மார்க்கம், சகமார்க்கம், சத்புத்ரமார்க்கம் தாசமார்க்கம் என்னும் சங்கரனை அடையும் நன்மார்க்கம் நாலவைதாம் ஞானயோகம்
நற்கிரியா என நவிற்றுவதும் செய்வர்."
இதுவும் காமிக ஆகம்ம் முன்னே உரைத்தவைதான். அது அவ்வாகமத்தில்
"ஸந்மார்கீபுத்திரமார்கீசஸஹமார்கீததா அபர" தாஸ் மார்கீ, சதுர்தா ஏஷாம் க்ரமாத்."
என்று குறிப்பிடப்படுகின்றது.
அதுபோலவே "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்." என, சிவஞான சித்தியார் சுபக்கத்தில் அருள்நந்தி சிவாசாரியார் கூறுவது, சொந்தக் கருத்தல்ல. அது ஆகமங்களின் மறுமொழியே என்பதனை
"யேநயேநஹிரூபேண ஸ்ாதக, ஸம்ஸ்மரேத் ஸ்தா தஸ்ய தந்மயதாம் யாதி சிந்தாமணி"
எனும் ஆகம வாக்கியம் தெளிவு கூறுகின்றது. இவ்வாறு சிவாகமங்களின் வழிநின்றே சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் சைவசித்தாந்தக் கருத்துக்களைப் போதிக்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகின்றது.
சுருங்கக் கூறின் "சிவாகமங்களின் சாரமே சைவ சித்தாந்தம்" என்பது புலனாகின்றது. சிவாகமங்களையும், சைவசித்தாந்தத்தையும் அருளியவர் ஒருவரே என்பதனால் இரண்டிற்கும் தத்துவ நிலையிற் பேதம் இருக்காது. இருப்பினும் வடமொழி மரபிற்கும், தமிழ்மொழிமரபிற்கும் இந்து தத்துவ உலகில் ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. சிவாகமங் களும், சைவசித்தாந்தமும் சிவனுக்கு உவப்பான நிவேதனங் களாகும்.

Page 9
இந்துசாதனம் 3. O.
மனிதனுக்கு எது
உலகில் அழகை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அழகு என்பது எது? ஈர்ப்புத் தன்மையையும், கவர்ச்சியையும், விருப்பத்தையும், ரசனையையும் எது ஏற்படுத்து கின்றதோ அதுவே அழகு. இந்த அழகு என்பது இரண்டு வகை. ஒன்று தற்காலிகமானதாகவும், கலையக் கூடியதாகவும், அழியக்கூடியதாகவும் இருக்கின்றது. மற்றையது, நிரந்தரமான தாகவும் , அமரத்துவம் பெற்றதாகவும், பெறுமதி மிக்கதாகவும், மதிப்பிற்குரியதாகவும் இருக்கின்றது. முன்னையது அலங்காரத் தால் உண்டாவது. ஓரளவு அகங்காரத்தையும் கொண்டது. பின்னையது அறிவினால் ஏற்படுவது. ஆனந்தத்தைக் கொடுப்பது. அறிவை ஒருவருக்கு ஆழமாகவும், அகலமாகவும் ஏற்படுத்துவது கல்வி, கல்வியினால் ஏற்படும் இந்த அழகே உண்மையான அழகாக நிலைத்து நிற்பதை யதார்த்தமாகக் காண்கிறோம்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஒருவனுக்கு அகத்தழகை கொடுப்பதும் கல்விதான். மனிதனை சிந்திக்க வைத்து, சீரிய வாழ்க்கைக்கு வழிகாட்டி, நல்வாழ்வு
நல்லவை எவை, தீயவை எவை என்பதைப் பகு
உள்ளத்தைப் பண்படுத்தும் கல்வியே கல்வி உள்
இத்தகைய கல்வியால்வரும் அழகே அழகு என்கி
வாழவைப்பதும் கல்வியே. இதனால் நாம் ஆன்ம திருப்தியைப் பெறுகின்றோம். ஆன்ம திருப்தியை ஒருபோதும் அலங்கார அழகினால் பெற்றுவிட முடியாது. அறிவினால் தான் பெற்றுக் கொள்ளமுடியும், ஆன்ம திருப்தியால் ஏற்படும் மனநிறைவு நமக்கு மேலதிக அழகினையும் கவர்ச்சியையும் தந்துவிடுகிறது. அப்போது நாம் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்களாகப் பார்க்கப்படு
கின்றோம். இதற்கு மூலகாரணம் கல்வியழகேயாகும்.
மனிதர்கள், தம்மை அலங்காரம் செய்து கொள்வதால் உண்டாகும் அழகையும் தம்மிடம் இயல்பாகவுள்ள அழகையுமே அழகு என எண்ணி விடுகிறார்கள். நம் மனதில் ஆழப்பதிந்து புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொணரும் கல்வியினால் ஏற்படுகின்ற அழகே நிரந்தரமான அழகென்பதை எவரும் நினைத் துப் பார்ப்பதில்லை. மற்றைய அழகெல்லாம் கலையக்கூடியன. கல்வி அழகே ஒருவனது ஆயுள் வரையும் நிலைத்து நின்று. அதற்கப்பாலும் சென்று தொடரக்கூடியது. 'ஒருமையில் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்பது திருக்குறள். ஏழேழ் பிறப்புக்கும் தொடர்ந்து, தன் தனித்தன்மையை
 

22O1 விகிர்தி நாசி O
9905
- Buffl6oo6OT 5IT. (BuLITSIIBIğGGör, B.A.
இழக்காதிருக்கும் சிறப்புக்குரியது கல்வி. கல்வியால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் அவ்வாறே தொடர்ந்து செல்லக்கூடியது.
கல்வி பயிலப் பயில, அறிவு வளர வளர நல்லவை எவை தீயவை எவை என்ற தெளிவு ஏற்பட ஏற்பட நல்லவற்றையே செய்யும் அனுபவம் தொடர்ந்து மேன்மேலும் பொலிவு பெற்று வளர்ந்து செல்லக்கூடிய அழகு கல்வியழகு மட்டுமே இத்தகைய கல்வியழகு, காலம் செல்லச் செல்ல வளர்ந்து பொலிவு பெறும். மற்றைய அழகு காலம் செல்ல செல்ல தேய்ந்து மறைந்து விடும். முன்னர் குறிப்பிட்டதைப் போல், கற்றவர்கள் முகத்தில் அழகு பொருந்திய இனம்புரியாத கவர்ச்சியுடன் கூடிய வெளிச்சம் ஒன்று எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். கற்றவர் ஒருவருடைய முகப் பொலிவைப் பார்த்தே, அவரை புலமையுடைய ஒருவராகத் தான் இருக்க வேண்டுமென் நாம் தீர்மானித்துவிடலாம். அவரது செயற்பாடுகளும் நமக்கு கவர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும். நம்மனதில் ஆழப் பதிந்துள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தி, நமக்குத் தகமையையும் பெறுமதியையும் தரவல்லது
த்தறிந்துகொள்ளும் ஆற்றலை வளர்த்து, மனித ாளத்தின் - அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் ன்றார்கட்டுரையாளர்.
கல்வி அழகு ஒன்று மட்டுமே. எவ்வளவுக்கெவ்வளவு கல்வியை நாம் கற்கிறோமோ, அவ்வளவுக் கவ்வளவு நாம் கல்வியால் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் பெற்று விடுகின்றோம். இந்நிலை நமக்கு ஏற்படும்போது, அறிஞர்கள் சபையில் நாம் கலந்து கொள்வதற்கான தகுதியையும், அங்கீகாரத்தையும் பெற்று விடுகிறோம். மற்றைய அழகுகள் ஒருபோதும் இதனைத் தந்துவிடாது.
கல்விப் புலமையால் வரும் தகுதிக்கும் பொலிவுக்கும் ஏற்ப நம்பிக்கையும் மனத்துணிவும் நமக்கு ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் ஆன்றோர் சபையில் அச்சமின்றி அமரக்கூடிய துணிவு பிறந்து விடுகின்றது. அந்தத் துணிவு நம்மனதில் முடியும் என்ற நம்பிக்கையுடன் கூடிய மனோநிலையை ஏற்படுத்தி விடுவதைப் பார்க்கின்றோம். இந்நிலைமை பிறர் மத்தியில் நம்மீது ஒரு கவர்ச்சியையும், அபிமானத்தையும் ஏற்படுத்தி தனிப்பட்ட ஒரு கெளரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்துவிடுகின்றது. மற்றவர்கள் மனதில் இடம்பிடித்துவிடக்கூடிய அங்கீகாரத்தை
ஏற்படுத்தித் தருவது இக்கல்வியழகே. ஒப்பனைகளாலும்
<سسسسه

Page 10
இந்துசாதனம் 3.C
மினுமினுப்புகளாலும் ஏற்படும் அழகு இவ்வாறான ஒரு தகுதியையும் பெறுமதியையும் மனநிறைவையும் தந்துவிடமாட்டாது. மனம் நிறைவடையும்போதும் நாம் மற்றவர்களால் மதிக்கப்படும் போதும் நாம் நம் புலமையைப் பிரயோகிக்கும் போதும் ஏற்படும் ஆன்ம திருப்தியும் நம்மை அறியாமலே நம்மைப் பிரகாசிக்க வைத்து விடுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தை மற்றைய எதிலும் நாம் பெற்றுவிடமுடியாது எதிர்பார்க்கவும் முடியாது.
கல்வியைப் பெறாமலும், அனுபவிக்காமலும், அதனை தம்மிடையே வளர்த்தெடுக்காமலும் ஒதுங்கிப் போய் விட்டவர் களுடன், ஒப்பிடும்போது, கல்வி பெற்றவர்களின் நிலையும் அவர்கள் மீதுள்ள கவர்ச்சிமிக்க அழகும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்படுத்தி விடுகின்றது. இதனை நாம் யதார்த்தமாக உலகியல் வாழ்க்கையில் காண்கிறோம். ஒளவைப் பிராட்டி இதனை அழகாகச் சொல்லுவார். "கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள். சபை நடுவே நீட்டோலை வாசியாது நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் தான் மரம்" காட்டில் அடர்ந்து வளர்ந்து செழித்து நிற்கும் மரங்கள் நல்ல மரங்களல்ல. சபை நடுவே ஒன்றினை எடுத்துச் சொல்லும் தகுதியையும், ஆற்றலையும், இழந்து, மற்றவர்கள் முன்னிலையில் கண்மூடி மெளனியாகி நிற்பவர் எவரோ? அவரே உண்மையான மரம் என்று கூறிவிடுகின்றார். ஒருவர் எவ்வளவு ஆடம்பரமான வராக இருந்தாலும் அழகானவராக இருந்தாலும், அந்த இடத்தில் மரத்திற்கு ஒப்பானவராகி விடுவதை இங்கே நாம் காண்கிறோம். இங்கே அழகுபடுத்தப்பட்டவனாக அவன் ஆகவில்லை அவனுடைய அழகு பெறுமதி இழந்து விடுகிறது. கவர்ச்சியற்றுப் போகிறது.
கல்லாதவன் ஒன்றைச் சொல்லமுடியாதவனாக ஊமையாக செயற்கையாய் ஊனமடைந்து விடுகின்றான் என்பதையும், அவ்வாறின்றி ஒன்றை சொல்லப்போனாலும், தகுதி இன்மையால் அவமானப்பட்டு விடுகின்றான் என்றும் ஒளவை கூறும்போது, "இருப்பினும் நாய் இருந்தற்றே இராது உரைப்பினும் நாய் குரைத்தற்றே" என்று அவனுக்கு உவமையாக்கப்பட்ட வாசகத்தை நமக்குக்கூறி நம்மையும் சிந்திக்க வைத்துள்ளாள். இவ்வாறான நிலையில் உள்ள ஒருவனிடத்து ஒரு கவர்ச்சியோ அன்றி மதிப்போ எற்படுவதில்லை. அவன் உடலழகுள்ளவனாக இருந்தாலும் அவமானப்படுபவனாகத்தான் இருப்பான். இங்கே அவனை தாழ்த்தி ஓரங்கட்டிவிட்டது கல்வியின்மை என்பதை உணருகின் றோம்.
புற அழகினை நாம் எவ்வளவுதான் பெற்றிருந்தாலும், ஒரு தேர்வுக்குச் செல்லும்போதோ, நேர்முகப் பரீட்சைக்குச் செல்லும் போதோ வெற்றியுடன் மீண்டுவர முடியாது. அவ்வாறான ஒரு இடத்தில் நம்மை அழகுபடுத்துவதும் கவர்ச்சியுடையவனாகத் தகுதியளிப்பதும் கல்வியேயாகும்.
"மன்னனுக்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோருக் குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பது ஒளவைப் பிராட்டியின் அமுத வாக்காகும். ஒருவன் சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவதற்கும் மதிக்கப்படுவதற்கும் மூலதனமாக இருந்து

2,2O விகிர்தி மாசி 01
1O
அவனுக்கு முழுமையைப் பெற்றுக்கொடுப்பது கல்வியழகு. கல்வி, ஒழுக்கத்தினை மேம்படுத்தும், தெரியாத எத்தனையோ விடயங்களை தெரிந்து கொள்ள உதவும். விவேகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டி நிற்கும். இவை எல்லாம் ஏற்படும்போது அகப்பொலிவையும், முகப்பொலிவையும் நாம் பெறுகின்றோம். மனித ஆன்மாவை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வதும் மனிதனிடத்தில் உள்ள சிறந்த ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதும் மனிதர்கள் தங்களுக்கு தாங்களே மகிழ்ச்சியாக இருக்கவும், மற்றவர்களுக்கு சேவை செய்கின்ற மனப்பான்மையை ஏற்படுத்தவும் வாழ்நாள் பூராகவும் கல்வி என்பது அவசியமா கின்றது. ஒருவனிடம் உள்ள எந்தச் செல்வங்கள் அழிந்தாலும் அழியாது நீடித்து நிற்பதும், கொடுக்க கொடுக்க வளர்வதும் கல்வியேயாகும்.
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு" என்பார் வள்ளுவர். அறிவு வளர வளர அகத்தின் அழகும் வளரும். முகத்தின் அழகு பொலியும். கல்லாதவனின் சிறுமையாற்றிக் கூறவந்த வள்ளுவன் விலங்குக்கும் மனிதனுக்கும் உள்ள வேற்றுமையை உவமையாக்கி விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்" என்று கூறிவிடுகின்றார். இங்கே கல்வி அழகின்
பெறுமதி உயர்த்திக் காட்டப்படுகின்றமையைக் காண்கின்றோம்.
பொம்மையானது மனிதனைப் போல் அழகாகத்தான் செய்யப்படுகின்றது. ஆனால் அதனிடம் மனிதனுக்குள்ள நுண்மை, மாண்பு, கூர்மையறிவு, விவேகம் எதுவும் இல்லை. இந்த நுண்மை, மாண்பு, கூர்மையறிவைத் தருவது கல்வி. கல்வி என்ற அந்த மூலப்பொருள் இல்லாதவன் ஒரு பொம்மைக்குச் சமனாவான் என்பதும் வள்ளுவர் கூறும் வாக்கு. "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண்புனை பாவையற்று" என்பது அக்குறள்.
வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருந்தவர்களில் லிங்கனும் ஒருவர். அவர் ஒய்வு நேரமெல்லாம் படித்துக் கொண்டே இருப்பாராம். அவரிடம் அறிவுத்தாகம் நிரம்ப இருந்தது. எதற்காக இவ்வளவு படிக்கிறீர்கள் பணம் சம்பாதிப்பதற்கு கல்வி இனி எவ்விதத்திலும் தேவை இல்லையே என ஒரு நண்பர் அவரிடம் கேட்டாராம். அதற்கு ஆப்ரகாம் லிங்கன் என்ன சொன்னார் தெரியுமா? நான் பயிலுகின்றேன். சம்பாதிப்பதற்காக அல்ல எப்படி வாழ்வது? வாழ்க்கையை எப்படி அழகுபடுத்துவது என்பதை அறிந்து கொள்வதற்காகப் படிக்கின் றேன் எனப் பதிலளித்தாராம். மற்றவர்களுடைய மகிழ்ச்சியால் உங்கள் இதயத்தை நிரப்பிக் கொள்ளுகின்றபோது அது அன்பு நிறைந்த இதயமாகி விடுகிறது. அதனால் ஏற்படும் உள்ளத்து அழகையும், முகமலர்ச்சியையும் தரும் மூலதனம் கல்வியே தான்
என்றாராம்.
கல்லாதவனுடைய ஆலோசனைகளை அபிப்பிராயங்களை மற்றவர்கள் ஏற்கத் தயங்குவர். சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. சமூகத்தின் மத்தியில் அவன் செல்வாக்குச்
செலுத்த வேண்டின், அவன் கற்றவனாக இருக்க வேண்டியது -->

Page 11
இந்துசாதனம் 3.
காலத்தின் தேவையாக உள்ளது. ஒரு சமூகத்தின் மத்தியில் விரும்பப்படுபவனாக கவர்ச்சிக்கு உரியவனாக திகழ வேண்டு மானால் கல்வி என்ற கலவை அவனில் சங்கமித்திருக்க வேண்டும்.
இதுவே யதார்த்த நிலை.
உடலும் ஆன்மாவும் பெறக்கூடிய மிகச்சிறந்த அழகையும், தெளிவையும் எது கொடுக்கிறதோ அதுவே சிறந்த கல்வி என்றார் பிளேட்டோ. இங்கே ஆன்ம திருப்தியைத் தரும் அழகு கல்வியில் தான் உண்டு என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.
ஒருவனுக்கு அழகைக் கொடுப்பது கல்வியேதான் என்பது யதார்த்தமாக உணர்த்தப்படுவதை நம் முன்னோர் வரலாற்றாலும் புராண இதிகாச இலக்கியங்களாலும் ஏனைய வரலாற்று நூல்களாலும் அறிகிறோம். ஏனைய அழகெல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும், நிரந்தரமற்ற போலித்தன்மை உடையவை என்பதையும் உடலோடு அவையும் மறைந்துவிடுபவை என்பதையும் இங்கே உணர்கிறோம். உடல் மறைந்தாலும் எம்மையும் எம் நாமத்தையும் வாழவைத்துக் கொண்டிருக்கும் ஆற்றல் கல்வி என்ற அற்புதமான பரிசுக்கு உண்டு. இன்று உலகம் எத்தனையோ பேரை இழந்துவிட்டது. ஆனால் ஒரு பாரதியை, வள்ளுவனை, ஒளவையை, இளங்கோவை, கம்பனை இழக்க முடியவில்லையே. அவர்களை நாம் மறக்க முடியவில்லையே அவர்கள் உடலால் மறைந்தாலும் அவர்களின் கல்விப் புலமையால் நம் உள்ளத்தில் உணர்வு பூர்வமாக விரும்பப்படுபவர்களாக ஈர்ப்பு மிக்கவர்களாக கவரப்படுபவர்களாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அது ஏன்? அவர்களுக்கு கல்விதான் அந்தப் பெறுமதியான கவர்ச்சியையும், அழகையும் கொடுத்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?
ஒரு சிற்பி, ஒருசிலையை நேர்த்தியாகச் செதுக்க, செதுக்க, அந்தச் சராசரி மனிதனைத் தலை சிறந்த சிற்பி என்ற தகுதிக்கு, அந்தச் சிலை உயர்த்துவது உண்மையல்லவா? அதேபோல்தான் கல்வியைப் பயிலப் பயில கல்வி நம்மையும் புலமையழகு மிக்கவனாகச் செதுக்கிவிடுகின்றது. எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தைச் சம்பாதித்து விடலாம். ஆனால் ஒரு புத்திசாலியால் தான் அதனை நல்ல வழியில் செலவு செய்ய முடியும். காப்பாற்றவும் முடியும். அதே போல் தான், எந்த வீரனிடத்தும் எல்லையற்ற ஆற்றலும் திறமையும் இருக்கலாம். விவேகம் என்ற நுண்ணறிவைத் தரும் கல்வி அவனிடத்து செயற்படவில்லையாயின் அந்த வீரம் வெற்றியைத் தராது. எல்லாத் துறைகளிலும் கல்வி என்ற மூலதனம் தன் அறிவழகை இழையோடவிட்டு செல்வாக்கைச் செலுத்தினால்தான், அது பூரணத்துவம் பெறுகிறது. இவை எல்லாவற்றினையும் நாம் சீர்தூக்கிப் பார்க்கின்ற மனித வாழ்க்கையை அழகுபடுத்தி, மனிதனையும் அழகுபடுத்துவது கல்வியே என்பது தெளிவாகின்றது. உடல் அழகு நாளாக நாளாகத் தேயும். கல்வி அழகு நாளாக நாளாக வளரும். இதுவே
 

22O விகிர்தி மாசி 01
V
e
யதார்த்தம். இதனை தெளிவுபடுத்தும் பாடல் ஒன்றினைக் கவனியுங்கள்
குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சள் அழகும் அழுகல்ல-நெஞ்சத்து நல்லம் நாமென்னும் நடுவுநிலைமையான் கல்வியழகே அழகு.
ஆண்களின் குடுமி, கரையுள்ள ஆடை, மஞ்சள் முதலியவற்றால் ஏற்படும் அழகு, உண்மையான அழகு அன்று. நடுவு நிலைமையில் நின்று " நாம் நல்லவர்கள் தாம்" என்று சொல்லக் கூடிய தகுதியையும் திறமையையும் உருவாக்கும்
கல்வியால் வரும் அழகே அழகு.
கல்வி அறிவு என்பது தீர்க்கதரிசிகள், ஞானிகள், மகான்கள், மேதைகள் என்போரின் பரம்பரைச் சொத்து. செல்வமோ வீரமோ வேறு எதுவுமோ இதற்கு ஈடாகாது. உங்களிடம் செல்வம் இருந்தால் நீங்கள் தான் அதனைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் உங்களிடமுள்ள கல்வியறிவோ எப்போதும் உங்களைக் காப் பாற்றும் என்பதை மறவாதீர்கள். செல்வத்தை உடையவனுக்கோ வீரமுடையோனுக்கோ எப்போதும் விரோதிகள் தான் அதிகம். ஆனால் கல்வியறிவுடையவனுக்கு நண்பர்கள் தான் அதிகம். கல்வியறிவுள்ளவன் எப்போதும் அதை பிறருக்கு வாரிவழங்கிக் கொண்டே இருப்பான் அதனால் அவனிடம் தாராளத் தன்மையும் பிறரை வளர்க்கும் பொதுநல நோக்கும் இருக்கும். செல்வத்தை உடையவனிடம் கஞ்சத்தனம்தான் இருக்கும். மற்றைய வளங் களுக்கு ஒர் எல்லையுண்டு, நிறை உண்டு, அளவும் கணக்கும் உண்டு. ஆனால் கல்விக்கு எல்லையே இருக்காது. மற்றைய வளங்கள் மனிதனிடத்து செருக்கை அதிகரித்து ஆணவத்தை ஏற்படுத்தி மனித இயல்பையே மாற்றியமைத்துவிடும். ஆனால் கல்வி அழகு பணிவையும், பண்பையும் மனித நேயத்தையும் வளர்த்துச் செல்லும். கல்வியறிவானது இருளடைந்த உள்ளத்தில் ஞானதீபமாக நின்று ஒளிபரப்பி அஞ்ஞான இருளை அகற்றிவிடும். மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராக அது நிற்கும். அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே என்பது மணிவாசகம். பெறுமவற்றுள் எல்லாம் பெரியதாகவும் சிறந்ததாக வும் அழகுமிக்கதாகவும் கவர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் என்றும் இருப்பது கல்வியறிவேயாகும். பிறருக்கு கொடுக்கக் கொடுக்க வளருவதும், நம்மை வளரவைப்பதும் கல்வியறிவுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். அந்த அழகே மனிதனுக்கு என்றும் நிறைந்த அழகாகவும் நிரந்தரமான நீங்காத அழகாகவும் இருக்கக்கூடியது. காலவோட்டத்தில் மற்றைய அழகெல்லாம் அழிந்து போய்விட்டாலும் அழியாத அமரத்துவம் மிக்க அழகாக என்றும் நிலைத்து நிற்பது கல்வி அழகு மட்டுமேயாகும். அது இன்று காலத்தின் தேவையாகியும் விட்டது என்பதை நாம் உணர்வு பூர்வமாக
சிந்தித்துச் செயற்படுவோமாக.
محمحمد
هلمملكي

Page 12
இந்துசாதனம் 3.O
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் 655 d'IT56)rd Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விகிர்தி வூல மாசி மீ" 1ஆம் உ (13.02.2011)
நில்லவை நடக்கும் நம்புவோம் நாம்
bட்ட நடுநிசியில் மட்டுமல்லாமல், பட்டப் பகலிலுங்கூட ஓட்டைப்பிரித்து வீட்டுக்குட் குதித்து நகை, பனம், விலையுயர்ந்த பொருட்கள் என உள்ளவை எல்லாவற்றையும் கொள்ளை யடித்துக் கொண்டு போகின்றவர்களை - பாடுபட்டுத் தேடிய தம் பொருட்களை எப்படியாவது பாதுகாத்துவிட வேண்டும் என்ற முனைப்பிற் கொள்ளையர்களுக்கு எதிராகச் செயற்பட முயல்கின்ற உரிமையாளர்களை வெட்டியும் சுட்டும் கொலை செய்கின்ற "வேகக்" கொலைஞர்களை - வீடுகளிலே தனியாக இருக்கும் பெண்களை - வேலைக்காக வெளியே தனியாகச் செல்லும் பெண்களை - ஆசைவார்த்தை பேசியும் - பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தும் வார்த்தைகளை உபயோகித் தும் வல்லுறவுக் குட்படுத்துபவர்களை - சட்டத்துக்குப் புறம்பான முறையிலும், சம்பிரதாயங்களுக்கு மாறான முறையிலும், தம் இச்சையைப் பூர்த்தி செய்த பின்னர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்த அப்பாவிப் பெண்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் தள்ளிவிட்டு - தாம் தப்பிவிட்டோம் என்ற ஒருவித 'குரூர திருப்தியில் திளைப்பவர்களை - வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக விளம்பரப்படுத்தி - பிரயான ஏற்பாடு களுக்கும் பிறவற்றுக்குமெனச் சுளை சுளையாகப் பணத்தைக் கறந்துகொண்டபின், காணாமற் போனோர் பட்டியலில் "தாமாகவே" இடம்பெறுபவர்களை - இயற்கை அனர்த்தங் களால் - இருபதாண்டு கால உள்நாட்டுப் போரால் அகதிகளாய் - அநாதைகளாய் ஆக்கப்பட்டோருக்குக் கொடுக்க வேண்டிய நிவாரணங்களை உரிய நேரத்திலும், உரிய அளவிலும் கொடுக்காமல் 'இன்று போய் நாளை வா’ என இழுத்தடித்தும் - அரை, கால், அரைக்கால் என "அளந்து" கொடுத்தும் - பெரும்பகுதியைத் தம்முடைமை ஆக்கும் பெருச்சாளிகளை - வீதிக்கு வீதி - சந்திக்குச் சந்தி - குழுக்களாகவும், கும்பல் களாகவும் கூடி நின்றுகொண்டு - தம் ஆபாச வார்த்தைகளாலும் - அசிங்கமான செயற்பாடுகளாலும் - வீதிப் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு - அச்சத்தையும் அருவருப்பையும் ஊட்டுபவர்களை - கைபேசிகளைக் காதுடன் ஒட்ட வைத்து - கல்வி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றைக் கைகழுவிவிட்டுக் காமக் களியாட்டத்திலும், கபட நாட கங்களிலும் கயமைச் செயற்பாடுகளிலும், ஈடுபடுபவர்களை
பத்திரிகைகள் கண்டிக்கின்றன -
 

22O1 விகிர்தி மாசி O
படித்தவர்கள்-பண்பாளர்கள் கண்டிக்கின்றார்கள்சமயப்பெரியார்கள் - சமூகப் பிரமுகர்கள் - அரசியல் தலைவர்கள் - ஆட்சி அதிகாரிகள் - எனப் பலதரப்பட்டவர்களும் கண்டிக்கின்றார்கள். -
எனினும் - சமூக விரோதச் செயல்கள் நாளொரு வகையும் பொழுதுதொரு வண்ணமுமாக - பேரிலக்கப் பெருக்கற் கணக்கின் விடைகளாகப் பெருகிக்கொண்டு போகின்றனவே தவிர - கொஞ்சமேனும் குறைவடைவதாகவோ - குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவோ தெரிய 66660,
காரணம் என்ன?
வெள்ளித் திரைக் காட்சிகளையும், சின்னத்திரை நாடகங் களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்றனர் சிலர்
பண்பாட்டைப் பற்றியோ நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாத - பனம் பண்ணும் தொழில்களை மட்டும் செய்வதற்குப் பயிற்சி அளிக்கின்ற - இப்போதைய கல்விமுறையை நோக்கித் தம் சுட்டு விரலை நீட்டுகின்றனர் வேறுசிலர்
இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் எவராலும் புறக் கணிக்கப்பட முடியாத காரணங்கள்தாம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே 8orGoouចាំ៦ -
இவற்றுக்கும் மேலாக - பலருக்குத் தெரிந்திருந்தும் பகிரங்கமாகச் சொல்ல விரும்பாத - சொல்ல முடியாத - மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அடுத்தடுத்துச் செய்பவர்கள்
களவெடுப்பதையும், கழுத்தை நெரிப்பதையும் "கர்ம சிரத்தை"யுடன் செய்பவர்கள்
தண்டனை பெற்றுத் - தலை குனிந்து-தனி ஒரு மூலைக்குட் கிடந்துதவிக்கவேண்டிய-சந்தர்ப்பங்களைவிட
சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் எல்லாம் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று சொல்லிக்கொண்டு. தப்பேதும் செய்யாத தம்பிரான்கள் ஆகவும் - தவறேதும் செய்யாத தலைவர்களாகவும் - மீண்டும் பவனிவரும் சாத்தியக் கூறுகள் அதிகமாகக் காணப்படுவதே மிகவும் வலுவான அந்தக் காரணம் ஆகும்
படைத்தவனுக்கே சவால்விடும் அதிகாரம் தனக்குண்டு என்று செயற்படுகின்றான்பணம்படைத்தவன்
நீதி குறுகி நிதி ஆகிவிட்டது என்று பல்லாண்டுகளுக்கு முன்னரே பகர்ந்திருக்கிறார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை
யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்படவேண்டும் - எப்போது கொடுக்கப்பட வேண்டும் - யார் மூலம் கொடுக்கப்பட வேண்டும் - என்ற விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவருவ தில்லை - பாடசாலைகளிற் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை - ஆனால், படித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் - பாமரர்களுக்கும் இந்த விபரங்கள் நன்றாகவே தெரியும் -
எனினும் - ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் வேண்டும் போதில் வெளிப்படுவான் என்பதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் இல்லாமலில்லை- இந்த நிலையில் -
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட் டெல்லார்க்கும்பெய்யும் மழைஎன்ற ஒளவை மொழியை நினைவில் நிறுத்தி நல்லாரைக் காக்கும் இறைவன் நம்மையும் காப்பான் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்- 人

Page 13
இந்துசாதனம் 3.O.
இம் கணேஸ்வராய நம என ஆரம்பிக்கிறது விக்னேஸ்வர சஹஸ்ரநாமம். கணங்களுக்குத் தலைவன் என்பது இதன் பொருள். இதே பொருளமைந்த கணநாதாய நம, கணாதிபாய நம என்ற நாமங்களும் அடுத்து வருகின்றன. கணம் என்பது கூட்டம் என்ற பொருளையுடையது. தெய்வக்கூட்டம் என்ற பொருளிலேயே இச்சொல் பெரிதும் பயன்படுகின்றது. அவ்வகையில் தெய்வங்களுக்கெல்லாம் தலைவன் என்ற கருத்தில் கணபதி என்ற பெயரே விநாயகருக்குரிய நாமங்களில் முதன்மையானதும், பழமையானதும் அதிக வழக்கிலுள்ளதுமாக உள்ளது. கணானாம் த்வா கணபதி. என்று வேதங்களிலேயே காணப்படுகிறது.
எனவே, இப்பொருளுடைய நாமங்கள் சிலவற்றால் துதித்து, அவரது தலைமைத்துவத்தை வியந்தபின், அவரது தோற்றத்தை வர்ணிக்க ஆரம்பிக்கிறதுசஹஸ்ரநாமம்.
அர்ச்சனை மந்திரங்களிற் காணப்படும்
அற்புதக் கருத்துக்களும், ஆனந்த இரசனையும்3
விநாயக வணக்கம் ஒதாடர். வித்யாபூஷணம், பிரம்மழுநீ ப. சிவானந்தசர்மா
B.A. (Hons) (GBöömrČILIITui I ởflooIIIb) NV2
ஏக தந்தாயநம - ஒற்றைக் கொம்பனுக்கு வணக்கம்
வக்ரதுண்டாயநம - வளைந்த துதிக் கையனுக்கு வணக்கம்
கஜவக்த்ராயநம - யானை முகவனுக்கு வணக்கம்
லம்போதர - பெருவயிறன் (பிரபஞ்சம் யாவற்றை
யும் தமக்குள் அடக்கியவர்)
தரம்ரவர்ண - புகை நிறத்தவர்
விகட - வேறுபட்ட அல்லது விகாரமான
தோற்றமுடையவர் (கவனத்தை ஈர்க்கத்தக்க)
விநாயகர் யானை முகம் கொண்டவர் என்பதனால் அவர் யானையின் நிறத்தையும் கொண்டிருப்பார் என்ற கருத்தில் இந்த நாமம் அமைகிறது. சில தியானங்கள் அவரைப் புகை அல்லது கபில நிறத்தவர் என வர்ணிக்கின்றன. எனினும் அவர் சிவந்த நிறத்தையுடையவர் என்றும் வெண்மையான திருமேனியுடையவர் என்றும் வேறுபல இடங்களிலும் வருகின்ற வர்ணனைகள் ஒப்பிட்டு நோக்கற்பாலன. அவர் பல்வேறு தோற்றப் பொலிவுகளைக் கொண்டிருப்பவர் என்பதும், நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் என்பதும் இதனால் உணர்ந்துகொள்ளத்தக்கது.
விநாயகரின் தோற்றத்தை இவ்வாறு வர்ணித்தபின் அவரது குண இயல்புகளைக் கூறுகின்றன சில நாமங்கள்.
விக்கின நாசன - விக்கினங்களை அழிப்பவர்
சுமுக -மகிழ்வான முகமுடையவர்
துர்முக - தம்மை மதிக்காத கொடியவர் களுக்குத் தாமும் கொடியவராகக் காட்சிதருபவர்
 

22O1 விகீர்தி மாசி O
புத்த - அறிவே வடிவானவர் விக்னராஜ - விக்கினங்களுக்குத் தலைவர்
விக்கினங்களுக்கு இவர் தலைவராயிருப்பதால் தீயவர்களை நல்வழிப்படுத்தவும், அடியவர்களைப் பக்குவப்படுத்தவும் இவரே விக்கினங்களை - இடையூறுகளை - ஏற்படுத்துபவராகவும், பின்னர் உரிய காலத்தில் அந்த இடர்களைக் களைபவராகவும் இருக்கிறார். இக்கருத்தை விரித்துப்பின்னர்
விக்ன கர்த்ரு - இடையூறு விளைவிப்பவர் விக்ன ஹர்த்ரு - இடையூறு அகற்றுபவர் என இரு நாமங்களை அடுத்தடுத்துக் கூறி விளக்குவதையும் காணலாம்.
ப்ரமோத - பெருமகிழ்வைத் தருபவர்
ஆனந்த - ஆனந்த வடிவினர் (இவரது உல கத்தை ஆனந்த லோகம் என்றே கூறுவது புராண வழக்கம்)
சுரானந்த - தேவர்களுக்கு மகிழ்வைக் கொடுப்
பவர்
சங்கர - நன்மையைச் செய்பவர்
வீர - வீரத்தை உடையவர்
சூர -விரத்தை உடையவர்
வரப்ரத - வரங்களை நல்குபவர்
கூவிப்ர ப்ரஸ்ாத - விரைந்து அருள்கொடுப்பவர்
அகநாசன குற்றங்களை (தோஷங்கள்) அழிப்
L!6).ls
ஸித்திப்ரத மிவற்றியைநல்குபவர்
பூபதி - பூமியின் தலைவன்
புவனேச - பூமியின் தலைவன்
பூதானாம் பதி - உயிர்களின் தலைவன்
விஸ்வகர்த்ரு - இப்பிரபஞ்சத்தையே உருவாக்கு
பவர்
விஸ்வமுக - இப்பிரபஞ்சத்தின் முகமாயுள்ளவர்
விஸ்வரூப - பிரபஞ்சவடிவினர்
நிர்குண - குணங்கள் அற்றவர்
ப்ரமண்ய - பிரம்மத்துடன் தொடர்புடைய
ப்ரம்மனஸ்பதி - பிரமத்துடன் தொடர்புடைய
வர்களுக்கெல்லாம் தலைவன்.
விநாயகரின் தோற்றப்பொலிவை வர்ணிக்கும் பல நாமங்கள் இங்கு மீண்டும் மீண்டும் இடையிடையே கலந்து வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். (இங்கு எல்லா நாமங்களும் எடுத்தாளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) முதலில் தோற்றப்பொலிவும், அதையடுத்து அவரது குண இயல்பும், செயற்பாடுகளும் வர்ணிக்கப்பட்ட நிலையில் இங்கு தரப்பட்ட இறுதி மூன்று நாமங்களும் சற்று வேறுபட்ட நிலையில் அவதானிக்கத்தக்கன. நன்மை தருபவராக, தீமையை விலக்குப வராக, உயிர்களுக்கெல்லாம் தலைவனாக, இப்பிரபஞ்ச வடிவாக எம்மோடு கலந்துறைகின்ற போதிலும் விநாயகர் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒர் உயர்ந்த நிலையும் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்காகத்தான் அவர் குணங்கள் அற்றவர். பிரம்மத்துடன் தொடர்புடையவர் என்ற நாமங்கள் இடையிற் புகுத்தப்படுகின்றன. நம்முள் இருப்பவர், யாவற்றையும் கடந்தும் இருப்பவர் என்ற இரு நிலைகளின்
இணைப்புத்தானே கடவுள்.

Page 14
இந்துசாதனம் 3.C
விநாயகரின் மிக உயர்ந்த நினையைச் சுட்டியபின் மறுபடி அவரை நம்மோடு மிக நெருங்கியவராகக் காட்டும் முயற்சியில்
இன்னும் சில நாமங்கள் வருகின்றன.
நிதிபதி - செல்வங்களுக்குத் தலைவன்
நிதிப்ரிய பதிப்ரிய - செல்வங்களின் தலைவனான குபேர
னுக்குப்பிரியமானவர்
ஹிரண்மயபுராந்தஸ்த - பொன்மயமான பட்டினத்தருகே இருப்பவர்
துர்நிமித்தஹ்ருத் - துர்நிமித்தங்களைப் போக்குபவர்
துஸ் ஸ்வப்னஸ்ருத் - துர்க்கனவுகளை இல்லாமல் செய்பவர்
நமக்கு எவ்வாறான நன்மைகளைத் தரவல்லவர் என்பதை இவ்வாறு கூறிவந்தபின், மிக இயல்பான நிலையில் மீண்டும் தோற்றப்பொலிவு வர்ணனைகள் கூறப்படுகின்றன. இப்போது இடம்பெறும் வர்ணனைகள் பெரும்பாலும் அவரது பராக்கிரமங் களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளக்குவதாக அமையக் காணலாம்.
கண்டேந்து க்ருத சேகர - வெட்டப்பட்ட சந்திரனைச் சிரசிற் சூடியவர். (சிவபிரானிலிருந்து வேறானவரல்லர் என்பதும், சந்திரனுக்கு அணுக்கிரகம் பண்ணியதுபோல் எமக்கும் அருள்தரக்கூடிய இரக்க சிந்தை உடையவர் என்பதும் இத்தால் உணரப்படவேண்டியது. மேலும் இங்கு கையாளப்பட்டிருக்கும் சொற்பிரயோகம் இரசிக்கத் தக்கது.)
தைத்ய விமர்த்தன - அசுரர்களை அழித்தவர் சம்பு வக்த்ரோத்பவ - சிவனது முகத்தில் தோன்றியவர் சம்பஹாஸ்பூ - சிவனத் சிரிப்பிலே தோன்றியவர் சம்ப தேஜஸ் - சிவனது ஒளிப்பெருக்கை உடையவர் கெளரீதேஜோபூ - அம்பிகையின் ஒளிப்பெருக்கி
லிருந்து தோன்றியவர். உமாங்கமலஜ - அம்பிகையின் உடல் அழுக்கிலிருந்து
தோன்றியவர் (உமா - அங்க - மல -
ஜ)
(இதற்கு முந்திய நாமங்கள் தத்துவார்த்தமாக விநாயகரின் உற்பத்திபற்றிக் கூற, இந்த நாமம் புராணக் கதையின் அடிப்படையிலிருந்து - ஸ்நாநம் செய்துகொண்டிருக்கும்போது, உமையம்மை தமது உடல் அழுக்கை உருட்டி உருவமாக்கி அதிலிருந்து விநாயகரைச் சிருஷ்டித்தார் என்று கூறுகின்றது.
ஜகஜ்ஜன்ம லயோன்மேஷ நிமேஷ!
கண் இமை கொட்டுவதாலேயே உலகத்தை ஆக்கி அழிக்கும் வல்லமை உடையவர்.
இந்த நாமம் மிக நீண்டதாகவும், சொல்லும்போது இனி மையைத் தரும் ஓசை கொண்டதாகவும், விநாயகப்பெருமானுடைய பராக்கிரமத்தை விபரிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த நாமத்தை லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் "ஊன்மேஷ நிஷோத்பன்ன விபன்ன புவனாவலி" என்ற நாமத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம். அதுமட்டுமல்லாமற் செளந்தர்ய லஹரியிலும் "நிமேஷோன்மேஷாப்யாம். என வரும் ஐம்பத்தைந்தாம் சுலோகமும் இக்கருத்தைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

22O1 6ĥiášñiĝ5 LDméo, ol
கிரீந்த்ரைகரத - ஒற்றைத் தந்தத்தையுடைய உயர் மலை போன்றவர். ஒற்றைத் தந்தத்தையுடைய புனிதமான உயர்தெய்வமாயுள்ளவர். கிரி - இந்த்ர - ஏக - ரத இங்கு கிரி என்பதற்கு மலை எனவும் இந்த்ர என்பதற்கு தலைவன் எனவும் நேர்ப்பொருள் யானை வடிவினர் என்பதும் அதன் விளக்கம். கிரிந்த்ர என்பதற்கு உயர்வான எனப் பொருள் கொள்ளும் மரபும் உண்டு. சிவனை இப்பெயர் குறிக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டு இரண்டாவது கருத்துக் கூறப்பட்டது.
இனிவரும் நாமங்கள் சில கணேசரின் பராக்கிரமத்தை வியந்து போற்றும் வகையில் - அவருடைய விஸ்வரூப தரிசனமொன்றை விளக்குவதுபோல அவரது ஒவ்வோர் உறுப்புக்களும் எவ்வாறிருக்கின்றன என வர்ணிக்கும் வகையில் அமைகின்றன. இந்த வர்ணனைகளில் அங்கங்களோடு தொடர்புபடுத்தும் பொருள் அவரது ஆற்றலை விளக்கும் வகையில் எவ்வாறு பொருத்தமுற இணைக்கப்படுகின்றன என்பது ஆர்வத் துடன் அவதானித்து வியந்து இரசிக்கத்தக்கன. உதாரணமாக: அவரது நாக்காக இருப்பது சரஸ்வதி என்கிறது ஒரு நாமம். சரஸ்வதி வாக்தேவதை என்பதால் அவ்வாறு கூறுவது பொருத்த
மானதல்லவா?
வாணிஜிஹ்வா - சரஸ்வதியை நாக்காக உடையவர். வாசவநாசிக - மஹாவிஷ்ணுவை மூக்காக உடையவர் குலாசலார்க்க - குலமலைகள் சேர்ந்த சூரிய ஒளியை
உடையவர் (குல - அசல - அர்க்க)
ஸோமார்க்க கட- சந்திரன், சூரியன் இருவரையும் மஸ்தகங்
களாகக் கொண்டவர்
ருத்ரசிரோதர - பூரீருத்ரரை உதடாக உடையவர்
நதீநதபுஜ - நதிகளைத் தமது புயங்களாக உடையவர்
(இங்கு நதி என்பது கிழக்கு நோக்கி ஒடுபவை. நகம் என்பது மேற்கு நோக்கி ஒடுபவை. பாரத புண்ணிய பூமியில் உள்ள நதிகளை இவ்வாறு இரு பிரிவாகப்
பிரிப்பது வழக்கம்) ஸர்ப்பாங்குளியக- பாம்புகளை மோதிரங்களாகவுடையவர் தாரகாநக - நட்சத்திரங்களை நகங்களாக உடையவர் ப்ருமத்யஸம்ஸ்திதிகர -
தமது புருவமத்தியை அனைத்துப் பிரபஞ்ச
இருப்பாக உடையவர். ப்ரம்மவித்யா மதோத்கட
பிரம்மவித்தையைத் தமது மதஜலமாகக்
கொண்டவர். வியோமநாப - ஆகாயத்தை நாபியாக உடையவர் பூரீஹ்ருதய - இலக்குமியை இதயமாகக் கொண்டவர் மேரு ப்ருஷ்ட - மேருமலையை பின்புறமாகக் கொண்டவர் அர்னவோதர - சமுத்திரங்களை வயிறாக உடையவர்
குசுஷிஸ்தயசஷகந்தர்வ ரசஷ கின்னர மானுஷ
யட்சர், கந்தர்வர், ராட்சசர், கின்னரர், மானுடர் எனப்படும்
சகலரையும் தமது வயிற்றிலே அடக்கியிருப்பவர்.
ப்ருதுவீகட - பூமியை இடுப்பாயுடையவர் விஷ்ணுலிங்க - விஷ்ணுவை லிங்கமாக உடையவர் சைலோரு - மலைகளைத் தொடையாக உடையவர்
18 ஆம் பக்கம் பார்க்க. -->

Page 15
இந்துசாதனம் 3.O
ஐந்துவகை உடம்புகள் 179. சகலர் ஆகிய ஆன்மாக்களுக்குத் தனு, கரணம்
முதலியவை எவ்வாறு வந்து பொருந்துகின்றன?
சுத்தம், அசுத்தம் என்னும் இருவகை மாயைகளுள் சுத்த மாயை வினை வயத்தாற் பிறந்து இறக்கும் சகலராகிய உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களாய் வந்து பொருந்தா, அசுத்த மாயையே அவர்களுக்கு உடம்பு முதலியனவாய் அமையும்.
கேவல நிலையில் தன் அறிவைத் தடுத்து நிற்கும் ஆணவ மலத்தினால் ஆன்மா அறிவு விளக்கத்தை இழந்து நிற்கிறது. இது ஞாயிற்றின் ஒளியைப் பெறமாட்டாது கண்படலத்தால் மறைக்கப்பட்டு இருளில் மூழ்கி நிற்பதைப் போன்றது. இம் மறைப்பை நீக்கிச் சிறிது விளக்கத்தைப் பெற வைப்பனவே
மாயையின் காரியங்கள்.
அசுத்த மாயையினின்றும் தோன்றும் தத்துவங்கள் ஆகிய காரியங்கள் ஏழாகும். அவை மாயை, காலம், நியதி, கலை, வித்தை
அராகம், புருடன் என்பவை.
அவற்றுள் முதலில் ஆன்மாவைக்கூடி அதன் ஆற்றலைப் பொதுவாக விளக்குவது மாயை என்னும் தத்துவமாகும். இம்மாயா தத்துவம் விரிவுடைய அசுத்த மாயையின் ஒரு சிறுபகுதியாகும்.
AA AA சைவசித்தாந்தப
(இந்துசாதனம் - தை மாதம் 2011
15ஆம் பக்கத் தொடர்) Sé 7ANN
குடத்தை வனைவோன் அதற்கு மூலப்பொருளாகிய களிமண்ணைப் பெறுவதற்கு நிலம் முழுவதையும் அகழ்வதில்லை. அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் அகழ்ந்து மண்ணைப் பெற்று அதனை நீரிட்டுப்பிசைந்து முன்னர்ப்பக்குவப்படுத்துகிறான்.
அதுபோல; அசுத்த மாயையின் ஒரு சிறு பகுதியே காரியப்படுதற்கு ஏற்ற வகையிற் பக்குவப்படுத்தப்பட்டு மாயா தத்துவம் என்னும் பெயரைப் பெறுவதாயிற்று.
இருளிற் கிடந்த ஆன்மாவுக்கு மாயாதத்துவம் முதலிற் சேர்க்கப்பட்ட நிலையில் அது ஆன்மாவுக்கு முதல் உடம்பாய் அமைந்து காரண சரீரம் என்னும் பெயரைப் பெறுகின்றது. இனித் தோன்றும் தத்துவங்களுக்கெல்லாம் காரணம் ஆகலின் இம்மாயா தத்துவம் காரண சரீரம் என்றும் சொல்லப்பட்டது.
இறைவனால் தரப்பட்ட இம்மாயா தத்துவமாகிய முதல் உடம்பினுள் ஆன்மா பொருந்தி, மல சக்தியால் மறைக்கப்பட்டிருந்த தன்அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்கள் பிரிப்பின்றிப் பொதுமையாக விளங்கி நிற்கும்.
முதல் உடம்பாகிய காரண சரீரத்தைப் பெற்று, ஆன்மாவின் அறிவிச்சைச் செயல்கள் மலமறைப்புச் சிறிது நீங்கி மெதுவாக

2,2O 6fiế5řá5 IomáF OI
இயங்கத் தொடங்கியபோது, அதனால் ஆன்மா ஒருவிதமான களிப்பை அடைகிறது. அஃது எதுபோலும் என்றால், ஒளியும் காற்றும் புகாத இருட் சிறையில் ஒருவன் பலகாலம் அடைபட்டிருந்து துன்புற்ற நிலையில் அவன் இருந்த இருட்டறையின் மேலே ஒரு சிறிய பலகணி திறந்துகொண்டு அதன் வழியாக மெல்லிய ஒளியும் காற்றும் புகுமானால் அவனுக்கு ஒரு புத்துணர்வும், சிலிர்ப்பும் உண்டாகுமல்லவா? அதுபோன்ற ஒரு களிப்புநிலை, மாயா தத்துவத்தால் மலம் சிறிது நீங்கி அறிவு விளக்கம் பொதுமையாக நிகழ்ந்தபோது உயிருக்குத் தோன்றும்; ஆதலால், அக்காரண சரீரம் ஆனந்தமயகோசம் என்றும் சொல்லப் பெறும்.
ஆணவ மலத்தோடு கூடிநின்ற பசுவாகிய உயிர் காரண சரீரம் எனப்பட்ட மாயையுள் நின்றபோது அதன் அறிவு, விழைவு, செயல்கள், பொதுவாகப் பிரிப்பின்றி விளங்கின என்று கூறினோம். பின், அசுத்த மாயையின் காரியங்களாக முன்னே கூறப்பட்ட காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்களை ஆன்மா பொருந்தி நிற்கும்போது அதன் அறிவிச்சைச் செயல்கள் பிரிந்து விளங்குகின்றன.
மாயா தத்துவம் என்பது ஆன்மாவுக்கு உட்சட்டை போன்றது. காலம், நியதி முதலிய இவ்வைந்தும் மேற்சட்டை போல் அமைந்தவை. இவை பிறகருவிகள் போலச் சில பொழுது ஆன்மாவோடு கூடுதலும், சிலபொழுது ஆன்மாவோடு கூடாது
பிரிதலும் இன்றி, எக்காலத்தும் ஆன்மாவிற்குக் கஞ்சுகம்போல a
mmmmmmmmmmmmmmmmmmmmm
முனைவர் ஆ.ஆனந்தராசன்
உடனாய் நிற்கும். கஞ்சுகம் - சட்டை, அதுபற்றி இவை பஞ்ச கஞ்சுகம் எனப்படும். இவ்வைந்து தத்துவங்களையும் கஞ்சுக சரீரம் என்று ஆகமங்கள் கூறும். இவ்வைந்தும் உயிரை அறிவு, விழைவு, செயல் உடையோனாக ஆக்குதலினால் இவை விஞ்ஞானமய கோசம் எனவும் சொல்லப்பெறும்.
இப் பஞ்ச கஞ்சுகங்களைப் பெற்ற ஆன்மா அறிவிச்சைச் செயல்கள் விளக்கப் பெற்றுப் போகத்தை நுகரும் தன்மை உடையோனாதல் பற்றிப்புருடன் எனப்படும்.
மாயை முதல் புருடன்வரை கூறப்பட்ட இத்தத்துவம் எழும் வித்தியா தத்துவம் எனப்படுகின்றது.
மல இருளில் அழுந்திக் குருடனைப்போல் கிடந்த ஆன்மாவுக்கு அதன் அறிவிச்சை செயல்களை எழுப்பி உலக நுகர்ச்சியில் நோக்கு உடையனாகச் செய்யும் கருவிகளே இவ்வித்தியா தத்துவங்கள் என்பது இனிது விளங்கும்.
இங்ங்ணம் ஆன்மா உலக நுகர்ச்சியில் நோக்கு உடையதாய் அசுத்த மாயைக்குக் கீழே உள்ள மூலப்பிரகிருதியைப் பொருந்தும்.
மூலப் பிரகிருதி என்பது மேற்கூறிய வித்தியா தத்துவங்கள்
எழனுள் கலை என்னும் தத்துவத்திலிருந்து தோன்றிய ஒரு காரியப் ------>

Page 16
இந்துசாதனம் 3.C
பொருளாகும். இது முக்குண வடிவினது. முக்குண மாவன சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன. இம் முக்குணங்களும் சிறிதும் வெளிப்படாது நுட்பமாய் நின்ற நிலையே மூலப்பிரகிருதி யாகும். பின் முக்குணங்களும் வெளிப்பட்டு விளங்கி நிற்கும் நிலையிற் குண தத்துவம் பெயர்பெறும். இக்குண தத்துவமே குண சரீரம் எனப்படுகிறது. குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக் கரணமாய் நின்று சிந்தனை செய்யும் என்றும் கூறப்படுதலின் இக்குண சரீரத்திற்கு மனோமயகோசம் என்ற பெயரும் உண்டு.
இதுவரையில் நாம் பார்த்த காரண சரீரம், கஞ்சுக சரீரம், குணசரீரம் ஆகிய மூன்றையும் ஒன்றாகத் தொகுத்துப் பரசரீரம் என வழங்குபவர். பரம் - அதி சூக்குமம். அதனை தமிழில் மிகு நுண்ணுடம்பு எனலாம்.
மிகு நுண்ணுடம்பைப் பெறுதலினால் உயிர் ஒன்றை அறிதற்கும், விழைதற்கும், செய்தற்கும் தகுதி பெறுகிறதேயன்றிச் செயற்படாது. அதன்பின், நுண்ணுடம்பாகிய சூக்கும சரீரத்தையும், பருவுடம்பு ஆகிய தூல சரீரத்தையும் பெறும்போதே உயிர் நல்லவும் தீயவும் ஆகிய வினைகளை ஈட்டுதலும் அவற்றின் பயன்களை நுகர்தலும் ஆகிய செயற்பாடுகளை உடையதாகும்.
இனிச் சூக்கும சரீரமும் தூல சரீரமும், எவ்வாறு அமையும் என்பதைக் கூறுவோம்.
மூலப்பிரகிருதியில் தோன்றும் தத்துவங்கள் இருபத்து நான்கு ஆகும். அவை அந்தக் கரணம் நான்கு, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, தன்மாத்திரைகள் ஐந்து, பூதங்கள் ஐந்து என்பனவாகும். இவ் இருபத்து நான்கு கருவிகளும் ஆன்மதத்துவங்கள் என்று சொல்லப்படும்.
இவற்றுள் எட்டுத் தத்துவங்கள் சூக்கும சரீரமாய் அமையும். அவை ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரை, ஐந்தும், புத்தி, ஆங்காரம், மனம் என்னும் அந்தக் கரணம் மூன்றும் ஆகும்.
அந்தக் கரணம் நான்கினுள் மேல் நிற்பதாகிய சித்தம்பரசரீரப் பகுதியாய் அமையும் என்று மேலே கூறினோம். ஆதலால், அது நீங்கிய ஏனை மூன்றுமே சூக்கும சரீரப் பகுதியாயின என்பதை அறிதல் வேண்டும்.
இந்த எட்டும் கூடியதே சூக்கும சரீரம் ஆகலின் அது புரி அட்டக சரீரம் என்று சொல்லப்படும். புரியட்ட காயம் என்றும் குறிப்பிடுவதும் உண்டு. காயம் என்று குறிப்பிடுவதும் உண்டு. புரி முறுக்கு, முப்புரிநூல் என்பதுபோல, இவ்வெட்டும் தம்முள் முறுக்குண்டு நிற்றல் பற்றி இப் பெயராயிற்று. இச்சூக்கும சரீரம் பிராண வாயுவின் இயக்கத்தாற் செயற்படுதலின் பிராணமய கோசம் என்னும் பெயரையும் பெறும்.
இனி, சூக்கும சரீரத்தினின்றும் பருவுடம்பாகிய தூல சரீரம் தோன்றும் பூதங்கள் ஐந்து ஞானேந்திரியம் ஐந்து கண்மேந்திரியம் ஐந்து என்னும் இப்பதினைந்து தத்துவங்கள் தூல சரீரம் ஆகும்.
உண்மையில் பூதங்களே என்பு, தோல், தசை, நரம்பு, குருதி முதலியனவாகப் பரிணமித்துத் தூல தேகம் உண்டாகும்.

22O1 விகிர்தி மாசி O
பூதங்களின் ஆக்கப் பொருளாகிய என்பு, தோல் முதலியவற்றைத் தாத்துவிகம் என்பர். தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.
மேற்கூறிய தத்துவங்கள் பதினைந்தோடு தாத்துவிகங்கள் அறுபது சேர, இவ் வெழுத்தைந்தும் கூடியதே தூல சரீரமாகிய பருவுடம்பு என அறிதல் வேண்டும். பருவுடம்பிலுள்ள தத்துவங்கள் கண்ணுக்குப் புலப்படாதவை. தூல சரீரம் உணவால் வளர்ந்து நிலைபெறுதலின் அன்னமயகோசம் என்றும் பெயர்பெறும்.
மேற்கூறிய ஐந்து உடம்புகளையும் காரண சரீரம் முதலான பெயர்களாற் குறிப்பிடும் முறை ஆகமங்களிற் காணப்படுவது. அவற்றை ஐந்து கோசங்களாகக் கூறும் முறை உபநிடதங்களிற்
காணப்படுவது.
கோசம் என்பதற்கு உறை என்பது பொருள். இவ்வுடம்புகள் உறைபோல ஆன்மாவை உள்ளடக்கிக் கட்டுப்படுத்துதல் பற்றிக் கோசம் எனப்படுகின்றன.
ஆகம வழக்கு உபநிடத வழக்கு காரண சரீரம் ஆனந்தமயகோசம் கஞ்சுக சரீரம் விஞ்ஞானமயகோசம் குண சரீரம் மனோமயகோசம் சூக்கும சரீரம் பிராணமயகோசம் தரல சரீரம் அன்னமயகோசம்
ஆன்மா விழிப்பு நிலையில் இவ்வைந்து சரீரங்களோடும் பொருந்தியிருக்கும்.
கனவு நிலையில் தூல சரீரத்தை விடுத்துச் சூக்கும சரீரம் முதலிய நான்கு சரீரங்களோடு பொருந்தியிருக்கும்.
உறக்க நிலையிற் சூக்கும சரீரத்தையும் விடுத்துக் காரணம், கஞ்சுகம், குணம் என்னும் மூன்று சரீரங்களோடு பொருந்தி யிருக்கும்.
பேருறக்கத்தில் குணசரீரத்தின் நீங்கிக் காரணம், கஞ்சுகம் என்னும் இரண்டு சரீரங்களோடு நிற்கும்.
உயிர்ப்படங்கல் என்னும் நிலையில் காரண சரீரம் ஒன்றோடு மட்டும் தொடர்புற்றுநிற்கும்.
இவ்வாறு ஆன்மா தனது முதல் நிலையாகிய கேவல நிலையில் உடம்பு ஏதும் இல்லாதிருந்து, பின் காரண சரீரம் முதலிய ஐந்து உடம்புகளையும் மேற்கூறிய முறையில் பெற்று அவற்றுட் கட்டுண்டு, அவற்றிற்கு உள்ளாய் நின்று அவைகளை இயக்கிப் புறப்பொருள்களை அறிந்துவரும்.
நால்வகை வாக்குகள் 180. சுத்தம் மாயை சகலருக்கு நேரே தனு, கரணமாய் வந்து பொருந்துவதில்லை. என்றீர்கள். அவ்வாறாயின், சுத்த மாயை வேறு எவ்வகையிற் சகலருக்கு உதவி செய்கின்றது? ஆன்மாக்களின் அறிவுக்குக் காரணமாய் நிற்பது சொல் உலகம் எனப்படும் மொழியாகும். மொழியின் உதவியில்லாது பொருளைப் பற்றிய சிறப்பு உணர்வு எத்தகையோர்க்கும் உண்டாதல் இல்லை. விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் ஆகிய
-->

Page 17
இந்துசாதனம் 3.O
மூவகை உயிர்களுக்கும் அவ்வுயிர்கட்கு ஏற்றவகையில் மொழி
உளது.
மொழியாகிய சொல்லுலகம் முழுவதும் தோன்றுவது சுத்த மாயையிலிருந்தேயாம். அசுத்த மாயையிலிருந்து பொருளுலகம்
தோன்றுமேயன்றிச் சொல்லுலகம் தோன்றுவதில்லை.
சுத்த மாயையின் காரியமாகத் தோன்றும் மொழி, அசுத்த மாயையில் உள்ள உலகங்களிலும், பிரகிருதி மாயையில் உள்ள
உலகங்களிலும் சென்று அங்கு உள்ளார்க்குப் பயன்தருகிறது.
நுண்ணியதாகிய சுத்த மாயையின் காரியங்கள் கீழ் உள்ள மாயைகளில் உள்ளார்க்குப் புலனாவதில்லை. அம்முறையில், சொல்லுலகம் ஆகிய மொழி சுத்த மாயையின் காரியம் என்றால் அது பிரகிருதி மாயையில் உள்ள நம்மனோர்க்குப் புலனாதல் கூடாது. அதற்கு மாறாக மொழி சகலராகிய நமக்குப் புலப்படுதலை உடையதாகிறது. அதற்கு என்ன காரணம்? எனில்,
சுத்த மாயையின் காரியமாகிய மொழி தனித்து நிற்கின்றதன் இயற்கை நிலையில் அசுத்த மாயையில் உள்ளவர்கட்கும், பிரகிருதி மாயையில் உள்ளவர்கட்கும் புலனாகாது என்பது உண்மை. ஆயின், அது பிரகிருதி மாயா உலகமாகிய இங்கு, இவ்வுலகின் தன்மையால் செயற்கை நிலையை - பருமை நிலையை அடைகின்றது. அஃதாவது, பல், நா, இதழ் முதலிய உறுப்புக்களின் தொழிற்பாட்டோடு, உதானன், பிராணன் என்னும் காற்றுக்க ளோடு சேர்ந்து செயற்கையாகிப் பருநிலையை அடைந்து இவ்வுலகில் வாழ்வார்க்குப் புலனாகிறது. மொழியே வாக்கு எனப்படுகின்றது.
நம் செவியிற் படுகின்ற எழுத்தும், சொல்லும் ஆகிய ஒசைகளையே மொழி என்று பொதுவாகக் கருதி வருகிறோம். ஆனால், மொழி அல்லது வாக்கு என்பது காதினாற் கேட்கின்ற
அவ்வோசையன்று.
எழுத்தும் சொல்லும் ஆகிய அவ்வோசைகளுக்கு வேறாகப் பொருளை உணர்த்தும் ஆற்றல் என்பது ஒன்று உண்டு. அதுவே உண்மையில் வாக்கு எனப்படுவது; அதுவே பொருளுணர்வை
உண்டாக்குவது.
நுண்ணியதாய் நிற்கும் அவ்வாற்றலே சுத்த மாயையில் தோன்றி, இவ்வுலகில் ஒசை வடிவாய் உள்ள எழுத்தும் சொல்லும் ஆகிய இவற்றைத் தனக்கு வாயிலாகக் கொண்டு புலப்படுகின்றது.
இதனால், வாயினாற் சொல்லப்படும் சொற்கள் தாமே பொருளை உணர்த்துவன அல்ல என்பதும், அச்சொற்கள் பொருளுணர்த்தும் ஆற்றலை எழுப்ப, சொற்களாகிய ஓசையின் வழியே எழுகின்ற அவ்வாற்றலே நமக்குப் பொருள் உணர்வை
உண்டாகின்றது என்பது விளங்கும்.
எழுத்தாலும் சொல்லாலும் எழுப்பப்படும் ஆற்றலை எழுத்தோசை" எனக் குறிப்பிடுவர்; அவ்வாற்றலைப் புலப்படுத்தும் எழுத்தும், சொல்லும் ஆகிய ஓசைகளை இசையோசை என்று குறிப்பிடுவர்.

22O1 6fiếSñ5 DmáF OI
எனவே, பொருளுணர்வை உண்டாக்குகின்ற எழுத்தோசை யாகிய ஆற்றல் வேறு; அவ்வெழுத்தோசையைப் புலப்படுத்து கின்றது. இசையோசை வேறு என்பதைத் தெரிந்து கொள்ளுதல்
வேண்டும்.
இவ்வேறுபாடு பற்றியே ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று இரண்டாகக் குறித்தருளினார் அப்பர் பெருமான். அவர் ஓசை என்றது இசையோசையை, ஒலி என்றது எழுத்தோசையை
என உணர்க.
எனவே, உண்மையிற் பொருளை உணர்த்தும் மொழி என்பது இங்கு குறிப்பிட்ட ஆற்றலேயாயினும், அதனை மக்கள் உணர்ந்து கொள்ளுதல் அரிது. ஆகலின், அவ்வாற்றலைப் புலப்படுத்தும் எழுத்தும் சொல்லும் ஆகியவற்றையே மொழி என்று கூறினர். முன்னைய ஆசிரியர்.
சுத்த மாயையில் தோன்றும் எழுத்தோசையே மொழி அல்லது வாக்கு எனப்படுவது. அது சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நான்கு நிலைகளை உடையதாகும். இவை முறையே
ஒன்றை விட மற்றொன்று தூலமாய், வளர்ச்சியுற்று நிற்கும்.
முதலிற் சுத்தமாயையின் ஒருபகுதி பின்னர் சொல் வடிவாய் வளர்தற்கு ஏற்ற தகுதியைப் பெற்று நிற்கும். அதுவே சூக்குமை வாக்கு எனப்படுகின்றது. எனவே, சூக்குமை என்பது ஏனைய வாக்குகளுக்கெல்லாம் முதலாய், மிக நுட்பமானதாய், காரண நிலையில் நிற்பது என்பது புலனாகும். இது மொழியின் முதல் நிலை இதில் எழுத்துக்கள் சிறிதும் தோன்றுதல் இல்லை.
இந்தச் சூக்குமை வாக்குச் சிறிது விரிவடைந்து பைசந்தி எனப் பெயர் பெறும் இறுதியில் வைகரி வாக்கில் தெளிவாக அறியப்படுகின்ற எழுத்துக்கள் இப்பைசந்தி வாக்கில் நுட்பமாய் விளங்கி நிற்கும். எழுத்துக்கள் விளங்காதது சூக்குமை எனவும், எழுத்துக்கள் நுட்பமாய் விளங்குவது பைசந்தி எனவும் அறியலாம். இது மொழியின் இரண்டாவது நிலை.
பைசந்தி வாக்கு உதானன் என்னும் காற்றோடு கூடி மேலும் வளர்ச்சி பெற்றுக் கழுத்தையடைந்து எழுத்து வடிவில் மெல்ல ஒலித்து நிற்பது மத்திமை வாக்காகும். இது மூன்றாவது நிலை.
கழுத்தளவில் நின்ற சொற்கள் பிராணன் என்னும் காற்றால் வெளிப்படுத்தப்பட்டுத் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி சொல்லப்படுவது வைகரி வாக்காகும். இது, பல், நா, இதழ் முதலிய உறுப்புக்களின் தொழிற்பாட்டால் பல வேறுபாடுகளை அடைதலின் வைகரி எனப் பெயர் பெற்றது வைகளி - விகாரம் அடைவது. இது மொழியின் நான்காவது
நிலையாகும்.
இந்த நால்வகை வாக்குகளாலேயே எவ்வகை உயிர்க்கும் சவிகற்ப ஞானம் எனப்படும் சிறப்பு உணர்வு உண்டாகும். இவை இல்லையேல், நிருகவிகற்ப உணர்வாகிய பொதுவுணர்வே
உண்டாகும்; சிறப்புணர்வு உண்டாகாது.

Page 18
இந்துசாதனம் 3O
சிறப்புணர்வு என்பது எது? பொதுவுணர்வு என்பது எது? எனில் ஒரு பொருளைப் பற்றி அதன் பெயர், இனம், குணம், தொழில் முதலிய கூறுபாடுகள் பலவற்றையும் உணரும் திட்டவட்டமான உணர்வே சிறப்புணர்வாகும். அக் கூறுபாடுகளைத் தெரிய வழியின்றி, இஃது ஒரு பொருள்' என்ற அளவில் உணர்வது பொதுவுணர்வாகும்.
சுத்த மாயையின் காரியமாகிய எழுத்தோசை அல்லது வாக்கு, மக்கட் பிறப்புக்குக் கீழ்ப்பட்ட பிறப்பில் விளங்கி நில்லாமையால், அப்பிறப்பை எடுத்த உயிர்களுக்குப் பொருளைப் பற்றிய பொதுவுணர்வு உண்டாகின்றதேயன்றிச் சிறப்புணர்வு உண்டாவதில்லை. மக்களது அறிவு அவ்வாறின்றி நாளும் வளர்ந்து செல்லுதற்குக் காரணம் இந்த வாக்கு எனப்படும் ஆற்றலை அவர்கள் நன்கு பெற்றிருத்தலேயாகும்.
இவ்வாறு சுத்த மாயை வாக்காகிய சொல்லுலகைப் பயந்து,
அது வழியாகச் சகலராகிய உயிர்களுக்கு அறிவு விளங்குதற்கு உதவி செய்கிறது.
------E
14ஆம் பக்கத் தொடர்ச்சி.
ருத்ரஜானுக - ருத்ரரை முழங்காலாக உடையவர் பாதாளஜங்க - பாதாளத்தைக் கணுக்காலாக உடையவர் முனிபத - முனிவர்களே அவரது பாதங்கள் காலாங்குஷ்ட - காலமே பெருவிரலாக உள்ளவர்.
தத்துவார்த்தமான இந்த வர்ணனைகளையடுத்து இன்னும் சில நாமங்கள் அவரது ஒவ்வோரங்களிலும் பெளதீக நிலைப் பெருமையை - ஸ்தூல விசால இயல்பை வர்ணிக்கின்றன.
ஸ்விக்ன நாஸினிபீட - விக்கினங்களை அழிக்கும் பீடத்தி
லிருப்பவர்
சர்வசக்தி அப்புஜாலய-சர்வ வல்லமை பொருந்திய தாமரை
ஆசனத்திலிருப்பவர்.
உந்நத ப்ரபத - உயர்வான பாதங்களையுடையவர்
கூடகுல்ப்ப - மறைந்திருக்கும் கணுக்கால்களை
உடையவர்
ஸ்ம்விருதி
பார்ஷ்ணிக - நன்கு உருவமைந்த குதிக்கால்களை
யுடையவர்
பீனஜங்க - பருத்த கெண்டைச் சதையையுடையவர்
ஸ்லிஷ்டஜானு - ஒட்டிய முழங்கால்
ஸ்தாலோரு - பருத்த தொடை
நமத்கட - வளைந்த இடுப்பு
நிம்னநாபி - ஆழ்ந்த தொப்பூழ்
ஸ்தரலகுகூழி - பருத்த வயிறு
பீநவசஷஸ் - அகன்ற மார்பு
இவ்வாறு தொடர்கின்ற வர்ணனைகளில் ஆண்தெய் வங்களைப் பதாதி கேசமாக வர்ணித்தல் என்ற நியதிமுறையைப் பின்பற்றிப் பாதங்களிலிருந்து சிரசு பர்யந்தம் விரிவாக வர்ணித்திருப்பதைக் காணலாம்.
1.
 

22O1 விகிர்தி மாசி 01
இவ்விடத்து ஒருண்மையைக் கூறி, இவ்விடையை
நிறைவுசெய்யலாம்.
மொழி அல்லது வாக்கு ஆகிய கருவியை உயிர்கள் தமக்கு இன்றியமையாததாகக் கொண்டிருக்கின்ற வரையில் அவை
கட்டினின்றும் நீங்கமாட்டா.
இவ்வாக்குகளே உயிர்களுக்குப் பரம பந்தம் (நீங்குதற்கரிய மேலான கட்டு) எனப்படுகின்றன. இவை உயிரறிவை விட்டு எப்போதும் நீங்காமல் ஒற்றுமைப்பட்டு நின்று உலகப் பொருள் களைப் பற்றிய சிறப்புணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆதனால், உலகப்பற்றையே விளைத்து நிற்கின்றன.
ஏனை உலகப் பொருள்களைத் தன்னின் வேறாகக் காணுதல் போல, இவ்வாக்குகளைத் தன்னில் வேறாகக் கண்டு நிங்கினவர் உலகத்தை விட்டவர் ஆவர், வீட்டுநிலையைப் பெற்றவர் ஆவர்.
الحر
இதன்பின் அவரது ஆடை அணிகலன்கள் வர்ணிக்கப்
படுகின்றன.
ரத்ன மெளலி - இரத்தினக்கிரீடம்
நிரங்குச - ஒப்பற்ற அங்குசம்
ஸர்ப்ப ஹார கடீசூத்ர - பாம்பு மாலையால் ஆன இடுப்பு அணிகலன் (அகடசக்கரவு - அகடு - அசக்கு - அரவு - கந்தபுராணக் காப்புச் செய்யுள் ஒப்பிடுக)
ஸர்ப்பயஜ்ஞோபவித - பாம்புப் பூனூல்
ஸர்ப்ப கோடீரகடகம் - பாம்புக் காப்பு
ஸர்ப்பராஜோத்தரீய - பாம்பை உத்தரீயமாக உடையவர்
ரக்தயுக்தாம்பரதர - செம்பட்டாடை தரித்தவர்
ரக்தமால்ய விபூஷண - செந்நிறமாலையணிந்தவர்.
இவ்விதம் அவரது கரங்களிலுள்ள பொருட்கள் வர்ணிக்கப் படும் போது அவை மிகப்பலவாக அமைந்து வியக்கவைக்கின்றன. ஆனால், அவை விநாயகரின் முப்பத்திரண்டு வித வடிவங்களில் ஒவ்வொன்றிற்குப் பொருந்தும் தன்மையையும் அவதானிக்கலாம். சார்ங்கம் எனும் வில், கரும்புவில், கொய்யாப்பழம், சக்கரம், சூலம், பாசம், நீலோத்பலம், அங்குசம், தமது ஒடிந்த தந்தம், ருத்ராட்ச மாலை, ஞானமுத்திரை என்று இவை பலவாக அமைகின்றன.
ஸர்வமங்கல மங்கலர், ஸர்வகாரணகாரணர், ஸர்வலட்சன லட்சிதர், ஸர்வாபரண பூஷிதர், ஸர்வ சோபா ஸமன்விதர், ஸர்வ அவயவ சம்பூர்ணர் என்றெல்லாம் பூரணத்துவமான பொலிவை வர்ணித்தும்கூட அவருடைய போற்றி நிறைவுபெற முடியவில்லை. இன்னும் தொடர்ந்து அவரது செயற்பாடுகள் அழகாக வர்ணிக்கப்படும் நாமங்களை நாம் மேலும் மேலும் பார்த்து மகிழலாம்.
'. விநாயகர் நாமார்ச்சனை இன்ம்ை கொட(ாம்.
òÉK. 西 இன்னும் தொடரு

Page 19
இந்துசாதனம் 3C
வேதநெறிதழைத்தே மிகுசைவத்துறை விளங்
C
ஊன் வேள்விகள் சைவத்தில் உண்டா?
பாக வேள்விகள், ஊன் பெய்து செய்யும் வேள்விகள்,
இவற்றை ஆகமங்கள் சொல்லவில்லை. அதாவது இவற்றைச் சைவர்கள் செய்யலாகாது. பெருமான் சைவத்துக்காக அருளிச் செய்த சிவாகமங்களிற் பாக வேள்விகளைக் கூறாமையைக் கொண்டு இக்கருத்தை உணரலாம்.
ஊன் வேள்விகள் யாருக்கு உரியன? - என்ற வினாவுக்கு விடைகாண வேண்டும். அதற்கு, மேற்காண் புறநானூற்றுப் பாடல் பகுதிக்குப் பழைய உரையைப் பார்ப்பது முதல் தேவையாகிறது. அவ்வுரைப்பகுதிவருமாறு:-
பெரிதும் ஆராயப்பட்ட மிக்க, நீண்ட சடையினை உடைய, முதிய இறைவனது வாக்கைவிட்டு நீங்காது, அறம் ஒன்றையே மேவிய, நான்கு கூற்றை உடைத்தாய். ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட, ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு, மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி, அவரது மெய் போன்ற பொய்யினை உளப்பட்டு அறிந்து, அப்பொய்மையை, மெய் என்று கருதாமல், உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி, இருபத்தொரு வேள்வித் துறையையும் குறையின்றாகச் செய்து முடித்த, புகழ் அமைந்த, தலைமையுடைய, அறிவுடையோர் மரபில் உள்ளோனே!
விண்ணந்தாயனின் முன்னோர் இருபத்தொரு வேள்விகளும் செய்தவர்கள் என இவ்வுரை தெளிவு செய்கிறது. அதில் ஏழு பாக வேள்விகளும் அடக்கம்தானே. அப்படியென்றால் பார்ப்பனர்கள் ஊன் பெய்து வேள்வி செய்தார்கள் என்றாகும். மோட்சம் விரும்புபவர்கள் காமிய வேள்விகள் செய்தல் ஆகாது என்பதே ஸ்மார்த்தர்களுக்கான சாஸ்திர நூல்கள் விதித்துள்ள கட்டளை. அவ்வேள்விகளில் செய்விப்போராக இருந்து நடத்துவது அவர்களின் தொழில் ஆகும். இதுவேட்பித்தல்' எனப்படும்.
சித்தாந்த அறிஞராகிய அருணை வடிவேல் முதலியார்: "வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுட் கூறப்பட்ட அறங்கள் அவ்வத் திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும், எல்லார்க்கும் உரியன அல்ல; அவற்றால் ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வி யன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்புகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திற் கூறப்பட்டுன்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபு ஆகலின் வேதத்தை விட்ட அறமில்லை என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் (திருமூலர் தேவ) நாயனார். திருவள்ளுவ நாயனாரும்.
'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் - 259)

22O1 விகிர்தி மாசி O
TFSE
BuloooGo LmöBIT (p6ofl6DI நீலழுநீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித்தம்பிரான்
என, ஊன் வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல' என்பது மாத்திரையே கூறியதல்லாது ஒருவர்க்கும் ஆகாது என, முற்றக் கடிந்து கூறினாரலர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்காமைக்குக் காரணம்; அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உளதாதல் பற்றியேயாம். புத்த-சமண மதங்கள், கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின், அவை அவற்றை மறுக்கு முகத்தான், கடவுள் வழிபாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும் ஊன் வேள்வியை விலக்குதலைத், தம் மதத்தினைப் பரப்புதவதற்குத்தக்கதொரு கருவியாகவும் கொண்டு, தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, கொல்லாமை மறைத் துறையும் அமண் சமயம் (தி.12. தி.நா.பு.37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன்குணரலாம்.
"வேத வேள்வியை நிந்தனை செய்து, உழல்
ஆதம் இல்லி, அமணொடு தேரரை
என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் திருமொழியும் இக்கருத்தேபற்றி எழுந்தது.
கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு. கூடினும் அமைக. என்பது வேதங்களின் கருத்து. கடவுள் வழிபாடு, செய்யப்படாது ஒழியினும் ஒழிக, உயிர்க்கொலை கூடாது' என்பது புற மதங்களின் கொள்கை. இப்புறமதக் கொள்கைகளால், ஒழிவது கடவுள் வழிபாடேயன்றி, உயிர்க் கொலையன்று என்பதை ஊன்றி உணர வல்லார்க்கு, அம்மதங் களால் விளையும் தீங்கு புலனாவதாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடன்பட்டு ஒழுகினர் என்க.
அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்' (குறள் - 543)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நால்மறப்பர் காவலன் காவான் எனில்" (குறள் - 560)
என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடன்பட்டமை புலனாகும். ' வேதத்தில் அறம் எல்லாம் உள என்றதனால் வேதம் அறத்தைக் கூறும் பொது நூல்' என்பது பெறப்பட்டது"
என்று விரிவாக எழுதியிருப்பதைக் கொண்டு சைவத்தின் நிலைப்பாட்டை உணரலாம். பார்ப்பனரின் முதல் தொழில் ‘வேதம் ஒதுதல் ஆகையால், வேதத்தை 'அந்தணர் நூல்' என்றார்கள். வேதத்தில் அறங்கள் உள்ளமையாலும், அதிகாரம் பெற்று யாவரும் ஒத உரிமை உடையது ஆகையாலும் பொது என்றனர்.
சிவத்தை நோக்கியதே வேதம்
மேலே கர்ட்டிய புறநாறுாற்றுப்பாடல் வேதம், இறைவனின் வாக்கைவிட்டு நீங்காதது என்கிறது. வேத வேள்விகள் அவ்விறைவனை நோக்கியனவே என்ற குறிப்பும் அப்பாடலில்
->

Page 20
இந்துசாதனம் 3.C
உள்ளது. திருஞானசம்பந்தப்பெருமான் இருக்கு மந்திரம் கொண்டு, ஒன்றி வழிபாடாற்றுதல் பற்றிக் கூறியுள்ளார். இருக்கில் பெருமான் இருக்கும் நிலையறிந்துதானே அவர் இருக்கு மந்திரங்கள் இறைவனை வழிபட உரியன என்றார்! அப்பரடிகள் இருக்கு நான்மறை ஈசனையே தொழும். கருத்தினை அறியார் கன்மனவரே என்று அருளினார். நான்கு வேதங்களும் சிவனையே தொழுகின்றன என்பதனால், அதனுட்பட்ட வேள்வி களும் மூல முதலாம் அவனையே அடைகின்றன; அவற்றிற்கான பயனளிப்பவனும் அவனொருவனே என்றாராயிற்று. உண்மை இவ்வாறிருக்க வேதத்திற் சிவனே இல்லை' என்பது எப்படிப் பொருந்தும்?
அருட்பெருங் கவிஞர் பூரீ குமரகுருபர சுவாமிகள், இறைவன் தாம் அருளிய வேதத்தில் தம்மையே புகழ்ந்து கொண்டது, தற்புகழ்ச்சி ஆகாது; தம்மை ஒப்பார் பிறர் யாரும் இல்லாமையால், தம்மை அறிவிக்கும் உரைகளே அவை என்றார், அப்பனுவற் பகுதிவருமாறு:
"எழுதாக்கிளவி, நின்மொழி, எனப்படுதலின் நின், பெருந்தன்மை நீயே நவிற்றுதல் மன்பெரும் புலமைத்தன்றே; உம்பரின் நின்னோர் அன்னோர்இண்மையின்,நின்நிலை கூறாய் நீஎனில், தேறுநர் இலரால்! தன்னுடை ஆற்றல் முன்னார், முன்னர்த் தற்புகழ் கிளவியும் தகும்; என்று, அம்ம! நின்புகழ்ந்து இசைத்தனை நீயே!
(எழுதாக் கிளவி - வேதம், நின்மொழி - தாங்களே அருளியவை; நவிற்றுதல் - சொல்லுதல்; மன் - நிலையான; உம்பரின் - தேவர்களில்; நின்னோர் அன்னோர் - உமக்கு ஒப்பானவர்; தேறுநர் - தெளிவடைபவர்கள்; முன்னார் - கருதார், அறியாதார்; தற்புகழ் கிளவி - தற்புகழ்ச்சி வார்த்தைகள்; அம்ம - வியப்பிடைச் சொல், இசைத்தனை - உரைத்தருளினீர்)
வேதம் மொழிபெயர்ப்பா?
வேதம் சூட்சுமமானது. இறைவனே வந்து விளக்கினால் அன்றி அதன் நுண்பொருள் முற்ற உணர முடியாதது. வேத மந்திரங்கள் நாதமாக மாறிப்பயன்தருபவை.
பொருள் புரியாததைக் கொண்டு வழிபாடுகள் - வேள்விகள் செய்வதா? என்பது இன்று சிலரின் வாதமாக உள்ளது. நோய் தீரவும், ஆரோக்கியம் பெறவும் மாத்திரைகள் உட்கொள்ளும் நாம், அவற்றில் என்னென்ன மூலப்பொருட்கள் கலக்கப் பட்டுள்ளன? அவை எவ்வாறு வேலை செய்கின்றன? என்று அறிந்த பிறகுதான் உட்கொள்வேன் என்று அடம்பிடிப்பதில்லையே!
‘வேதம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது' என்றும் ஓரிருவர் கற்பனா வாதம் வைப்பதுண்டு. அப்படி என்றால் இறைவனே மொழிபெயர்த்தானா? எந்த ஒரு மொழிபெயர்ப்பிலும் மூலத்தின் முழு அழுத்தமும், மூலத்தின் முழுச் சுவையும் இருக்காது. வேதத்தை ஆராய்ந்த எவரும் அது மொழிபெயர்ப்பு என்று ஐயப்பட்டதுமில்லை.
ஐரோப்பியரும், மேலை நாட்டினர் பலரும் இன்னமும் வேதத்தை ஆராய்ந்து அதன் நுட்பங்களை வெளிக்கொணர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அதன் மந்திர சக்தியைக் கிறிஸ்தவர்கள் மலிந்த அமெரிக்க மாகாண சபைகளில் ஒலிக்கச் செய்கிறார்கள். வேத ஆராய்ச்சிக்கென்றே பல்கலைக் கழகங்கள் உள்ளன. வேத

22O1 விகிர்தி மாசி 01
நுணுக்கங்களை அறிவதற்காகவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்கலைக்கழப்பாட மொழியாகச் சமஸ்கிருதத்தை வைத்துள்ளனர். இந்திய நடுவணரசு சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனைச் செம்மொழி என முதலில் அறிவித்ததும், பேசுமொழி யாக்க முயல்வதும், அதற்காகக் கோடிக்கணக்கிற் செலவு செய்வதும் அம்மொழியில் வேதம் இருப்பதனாலேயே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற தத்துவ அறிஞரும், எழுத்தாளரும், சமூக விமர்சகரும் ஆகிய ஹென்றி டேவிற் தோரா (1817 - 1862) வேதங்களில் ஏதாவது ஒரு பகுதியை நான் படிக்கும்போது, தெய்விகமான - இதுவரை அறிந்திராத ஒளி என்னுள் வெளிச்சம் தருவதை உணர்கிறேன். வேதங்களின் ஒப்பற்ற போதனையிற் பேதம் இல்லை. அது அனைத்து வயதியினருக்கும், பிரதேசத்தினருக்கும், நாட்டினருக்குமானது. அது பேரறிவை அடைவதற்கான பெருவழி, அந்த வழியிற் செல்லும்போது, கோடைக்கால இரவில் நட்சத்திரங்கள் ஒளிரும் வான்வெளியின்கீழ் இருப்பதைப்போல உணர்கிறேன்’ என்றார்.
மிகத் தூய்மையான வடிவில், நிலையான உண்மையை எடுத்துரைப்பவை வேதங்கள்தாம்; அவைதாம் என்னை முதன் முறையாக இந்தியாவுக்கு வரச்செய்தன; இங்குத் தங்கும்படிச் செய்தன என்றார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் பால் வில்லியம் ராபர்ட்ஸ், இப்படியான வெளிநாட்டறிஞர்களின் புகழுரைகளைத் தொகுத்தால் வேத அளவுக்கு விரிவாக அமையும். இருப்பவர்கள் அள்ளிமுடித்துக்கொள்கிறார்கள்.
வேதத்தைப் பற்றிய புகழுரைகளில் வேத உடன்பாட்டுச் சமயமாகிய சைவத்திற்கும் பெருமை உண்டு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
நான்மறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முன்பொரு காலத்தில் தமிழகத்திற் சிலராக இல்லாமல், சிலபலராக இருந்தார்கள். அவர்களைப் புறப்புறச் சமயிகள் என்றே சைவம் ஒதுக்கியது. அந்தப் புறப்புறச் சமயிகளின் வேத மறுப்புக் கொள்கையை, சைவத்துக்குள்ளே புகுத்த முயற்சிக்கும் விபரீதம் முன்னெப்போதும் நடந்ததில்லை.
சைவர்களிடம் வேதமறுப்பு என்பது சேருமானால், வேத உடன்பாட்டுத் திருப்பனுவல்களைக்கொண்ட தேவாரங்களையும், திருமுறைகளையும் மறுப்பதாகும். மறுப்புக் கொள்கை என்பது, புறப்புறச் சமயக் கொள்கை என்ற மெய்கண்ட சாத்திரங்களையே மறுப்பதாகும்.
திருமுறைகளையும், மெய்கண்ட சாத்திரங்களையும் மறுத்தபிற்பாடு, சைவம் என்பது எதிலே நிற்க முடியும்?
வேதத்தை மறுப்பதுடன், திருமுறைகளில் அப்படி யெல்லாம் சொல்லவில்லை; வேத மந்திரங்கள் உள்ளிட்ட ஆகம மந்திரங்களைப் பின்பற்ற அறிவிக்கவில்லை என்று முழுப் பூசணிக்காயைக் கைப்பிடி சோற்றில் மறைக்க முற்பட்டால், முன்பெழுதிய வண்ணம் உலகமே ஏற்ற வேத உண்மைகளை உளங்கொள்ள முயலாத அவர்களை நினைக்கும்போது,
'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துள்
அலகையா வைக்கப்படும்'
என்ற குறள் நிறைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
வளரும்.

Page 21
இந்துசாதனம் 3.O
வாழ்வில் நிதானம்ட
LDனிடப்பிறவி எடுத்து வாழ்கின்ற நமக்கு நமது செயற்பாடுகளில் நிதானம் வேண்டும். உண்பது, உழைப்பது, ஒய்வெடுப்பது, மற்றவர்களுடன் உரையாடுவதுபோன்ற சகல விடயங்களிலும் ஒழுங்குமுறை தேவை. சிலர் பிறவி முதலே முன் கோபிகளாகவும், வேறு சிலர் சிந்தித்துச் செயற்படுபவர்களாகவும், சிலர் ஆரம்பம்முதற் சோம்பலின் ஆதிக்கத்தில் உள்ளவர்களாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். இவைதான் முறையே ராஜசம். சாத்வீகம், தாமஸம் ஆகிய முக்குணங்களும் ஆகும்.
உயிர்வாழ்வதற்கு உடலுக்கு உணவு அவசியமாகும். நாம் உண்ணும் உணவு நம் உடலுக்குச் சக்தியைக் கொடுப்பதோடு மனதையும் பாதிக்கிறது. நமது மனம் எவ்வாறு செயற்படுகிறதோ அந்த முறையில்தான் நம் சக்தியும் உபயோகப்படுகிறது. உடல் பலமாக இருப்பதற்கு ஊன் உணவு அவசியம் என்ற கருத்துச் சிலரிடம் நிலவுகிறது. ஆனால் மரக்கறி உணவே மனித உடலிற்கும், உள்ளத்திற்கும் சிறப்பானது என்பதை இன்று அறிவியலாளர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மேற்கத்தைய நாடுகளிற் பலர் தாமாகவே விரும்பிச் சைவ உணவிற்கு மாறி வருகிறார்கள். ஆனால் நம்மவர்களிற் பலருக்கு ஊன் உணவு இல்லாவிட்டால் உணவில் விருப்பமின்மையே ஏற்படுகிறது. இறந்த உயிர்களைப் புதைக்கும் இடத்தைச் சுடுகாடு என்கிறோம். மிருகங்களைக் கொலை செய்து உயிர்போன பின்பு அதன் ஊன் உடலைப் பதப்படுத்தி உணவாக நம்மவர்களிற் பலர் உண்கிறோம். இறந்த உயிர்களைப் புதைக்கும் புதைகுழியாகவே நமது உடலில் உள்ள வயிறும் இரைப்பையும் மாறுகின்றன. இறைவன் வீற்றிருக்கும் கோயிலாகிய இந்த உடலை நாங்களே சுடுகாடாக மாற்றுகின் றோம். ஊன் உணவினை உண்பதால் ராஜோகுணம் அதிகரித்துக் காணப்படும். பழைய உணவுகள், புளித்துப்போன உணவுகளை உண்பதால் தமோ குணம் விஞ்சி நிற்கும். மாமிசக் கலப்பே இல்லாத மரக்கறி, தானியங்கள், பால் என்பவற்றை உண்பதாற்
சாத்வீக குணம் மேலோங்கிநிற்கும்.
தூய்மையான உணவு மாத்திரமல்லாது உண்ணும் அளவிலும் கவனம் வேண்டும். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழி இதையே உணர்த்துகிறது. உணவை உண்பதில் நேரக் கட்டுப்பாடு வேண்டும். உணவுப் பிரியர்களாக மாறி உடலில் நோய்களை வரவழைக்கக்கூடாது. அளவு அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைத்திருக்கும். அளவில்லாமல் நினைத்த போதெல்லாம் உண்கிற பெருந்தீனிக்காரரிடம் நோயும் நீங்காது குடிகொண்ட டிருக்கும் என்பதைத் தெய்வப் புலவரின் திருக்குறள் தெளிவாக விளக்குகிறது.
"இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும் கழியே ரிரையான்கண் நோய்"
ஒவ்வொரு மனிதனிடமும் தன்னிடம் இருக்கும் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஊக்கம் அவசியமாகும். சுடர்மிகு

22O1 விகிர்தி மாசி O
- சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்
அறிவு பிரகாசிப்பதற்கு வல்லமை வேண்டும். சக்தி உபாசகராகிய மகாகவி பாரதியார் அறிவோடு ஆற்றலையும் தரவேண்டுமென்று அம்பிகையிடம் உரிமையுடன் வேண்டுகின்றார்.
"நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி-எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே"
ஒருவனுக்கு உள்ள வலிமையையெல்லாம் அவன் பெற்றிருக் கின்ற ஊக்கமே ஆகும். ஊக்கம் இல்லாதவன்; உருவில்
மனிதனைப்போல இருந்தாலும் அவன் மரமாகவே காட்சிதருவான்.
"உரமொருவற்கு உள்ள வேறுக்கை அஃதில்லார் மரம் மக்களாதலே வேறு"
"தூயலை துணிந்தபோது பழிவந்து தொடர்வதில்லை" என்ற கம்பன் வாக்கிற்கு அமையக் காலம் தாழ்த்தாது எடுத்த காரியத்தைச் செய்துமுடித்தல் வேண்டும். காலந்தாழ்த்தல், மறதி சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும் அழிவைத் தேடிப்போக நினைப்பவர் விரும்பி ஏற்கும் மரக்கலம் ஆகும் எனத் திருக்குறள் செப்புகிறது.
"நெடுநீர் மறவிமடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்"
வார்த்தைகளை வாயால் வெளியில் விடும்போது மிக அவதானமாக இருத்தல்வேண்டும். மற்றவர்களின் மனம் புண்படும்படியாக வார்த்தைகளைப் பேசக்கூடாது. யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே" என்பது தவயோகி திருமூலநாயனாரின் கட்டளை.
சிலர் எதுவித சிந்தனையுமில்லாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். மூளைக்கும், அவர்களுடைய வாயால் வரும் சொற்களுக்குமிடையே எதுவித தொடர்பும் இருப்பதில்லை. இவ்வாறு பொருளில்லாமல், எதுவித பயனுமில்லாமற் பேசுவதைப் பிதற்றல், உளறல் எனப் பலவாறு கூறுவார்கள். பயனுடைய சொற்களைச் சொல்ல முடிந்தாற் சொல்லுங்கள். இன்றேல் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருங்கள். வீண் வார்த்தைகள் எதுவும் பேசவேண்டாம் எனத் தெய்வத்தமிழாகிய திருக்குறள் நமக்குக் கட்டளையிடுகிறது.
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச்சொல்"
எந்தச் செய்கையிலும் வாழ்வியல் நிதானம் வேண்டும். தப்புத்தாளம் போட்டால் வாழ்வில் எல்லாமே சீரழிந்துவிடும். சமநிலை தவறாத மனநிலையோடு காரியங்களை ஆற்றும் பொழுது
->

Page 22
இந்துசாதனம் 13.C
எல்லாக் காரியங்களும் சித்தி பெறும். சிறப்பாக இருக்கும். பாடுபட்டு உழைக்கும் பணத்தைப் பயன் அறிந்து செலவுசெய்தல் வேண்டும். "ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு" என்பது நம்மிடம் உள்ள முதுமொழி. உழைக்கும் காலத்தில் ஊதாரித்தன மாகச் செலவு செய்தால் வாழ்வின் இறுதிக் காலத்தில் யாசகம் செய்து வாழவேண்டிய நிலை ஏற்படும். பணத்தைச் சரியாகத் தேவை அறிந்து செலவிடுதல்போல நேரத்தையும் பயனுள்ளதாகப் பயன்படுத்துதல் வேண்டும். காலம் நம் கையிற் கட்டுண்டு கிடவாது" என்பது முதுமொழி. ஒடிக்கொண்டு இருக்கும் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துபவன் வாழ்விற் பல வெற்றிகளைக் குவிப்பான். "பதறாத காரியம் சிதையாது என்பதற்கேற்ப, உணர்ச்சிவசப்படாமல் மன ஒருமைப்பாட்டுடன்
ܐ ܊6ܢ ܠ<
S2's حدود سهیلبرت ؟ ill-a2S2 a.2) リ --M2số***òl(K SA NA NA2: XNJáč** &دلاڑ} *కభజిక్తభ***జిల్ల్లోజి 深深深ーお宋。 Sa 深
* புண்ணியநாச்சியம்மையார் தி
* காலை 7.00 மணிக்கு யாழ். கடையிற் * ஆரம்பமாகும்.
* 9.00 மணிக்கு சைவபரிபாலன சபைநாவல்
ܓ݂ܵܪܵ
XX
தலைவர்-சிவநெறிப்புரவலர் த.சண்முகலி
ટ્ર
XX
பிரதம விருந்தினர் - திருமதி சுகுன
யாழ்ப்பாணம்.
XX
யா/கொட்டடிநமசிவாய வித்தியாலயமான
ك
பட்டி மன்றம் -நடுவர் திரு.இரா.செல்வவடிே
y
தலைப்பு: குறள்வழி பெரிதும் வலியுறுத்
恋&
பொருட்பால் கருத்துக்களா? * பண்ணிசைப்போட்டி / திருக்குறள்
களுக்கான பரிசளிப்பு.
* அடுத்துமாகேஸ்வரபூசை இடம்பெறும்.
S.
:YY *`¥*ሳዥS ܗܝ ܀ «܇cܢܳܐܐܠ ܖ܆ ܕ݁ܫܰ2# ※2迷、2送s※※※2送s察送
te * R2 NA2 SR2YA2
yS2 S2 S2vs2 ృ్మ &桑深深。リ
 
 
 
 
 

22O1 6íîé5ñiĝ5 Dniéf Ol
தமக்குரிய கடமைகளைச் செய்பவனே கர்மயோகி ஆவான். "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற நினைப்புடன் செயற் படுகின்றவன் மனிதருள் மாணிக்கமாக உயர்ந்துவிடுவான்.
உலகியல் வாழ்க்கையிலே, படிப்பறிவிலும் பார்க்கப் பட்டறிவே வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறது. நல்வாழ்வு வாழ்ந்த அனுபவஸ்தர்களின் வார்த்தைகளை ஆப்த வாக்கியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். "அளவுக்கு மிஞ்சி உண்ணாதே. அளவுக்கு மிஞ்சி உறங்காதே, அறிவுக்கு மிஞ்சி உளறாதே" என்ற வாக்கினை அனைவரும் மறைமொழியாக ஏற்று, மானிடப் பிறவியை மகத்தான பிறவியாக மாற்றி, மனிதரில் தெய்வமாக
உயர்வோமாக. 人
Y-4-
னம் - 19.02.2011 சனிக்கிழமை *
சுவாமி ஆலயத்தில் விசேட அபிஷேகத்துடன் :
ஸ்ர் கலாச்சாரமண்டபத்தில் விழா நடைபெறும்.
‘ங்கம்.
னரதி தெய்வேந்திரம், பிரதேச செயலாளர்,
s
s
னவர்களின் காலைநிகழ்வுகள் இடம்பெறும்.
激
வேல்.
&
நதப்படுவது அறத்துப்பால் கருத்துக்களா? /
岁、
-၇၃
மனனப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்
糕燃
N
深
SV2
深
co y S2, S2 SY2 (YA? Cry. C-S2 S2s2S2s2c2a4C. r.) ృ్య 学s察※※豪。光宝※※※※※。光s※

Page 23
* R. S. S. SJS
వస్తికలిచ• • ప్తి
々 7N 7N 7N,
காற்றில் மிதந்து.
காதில் விழு
5d.
நல்லலாழுக்கம்
மாணவர்களின் ஒழுக்கம் பல பாடசாலைகளில் இன்று கேள்விக் சரியான வழிப்படுத்தல் இல்லாமை இதற்கு முக்கிய காரணம். எ மூலம் மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக வாழ முடியும். சைவ ஒழு மாணவர்களையும் வழிப்படுத்துவதன்மூலம் நல்லொழுக்கமும், பண் எழுப்புவதற்கு ஆசிரியர்கள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.
நாவலர் பதிப்பு
சிவத்தமிழ் வித்தகர் நவீன கணினி, ஒவ்செற் வசதிகள் afblinassrsssasif இலக்கணப் பிழைகளும் நிறைந்தை
கைலாசபதி அரங்கில் நடைபெர201நாட்காட்டி
sausfb sfigm
குறைந்த அந்தக் காலத்தில் எந்த ஏராளமான தமிழ்நூல்களை நாவலர்
மனித விழுமியங்கள்
மனித குலத்தின் மேம்பாட்டிற்காகக் கூறப்பட்டுள்ள விழுமியங்கள் வாழ்வு, ஒற்றுமை உணர்வு, அன்பு, பகைமையை வளர்க்காத அறி கடைப்பிடிப்பதில் யாருமே பின்நிற்கக்கூடாது. நல்லுணர்வுடனும் ந
வாழவேண்டும்.
O சக்திகிரீவன் திருமுறைகள் இந்து சமயம் பேரவைச் baru GUTTSTs வேத சாரமான திருமுறையை, ( உடுவில் கற்பகம் பிள்ளையார் நடைபெறும்போது பக்திப் பரவசத்தோ ஆலயத்தில் நடைபெற்ற திருமுறைகளைப் பாடிப் பரவுவதன்மூல திருவாசக விழாவில். கண்டு மகிழமுடியும்.
பழந்தமிழர் நாகரிகம்
இந்தியாவின் வரலாற்றைக் காவிரிக்கரையிலிருந்து தொடங்கி எழு 1910ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதற்குரி கிடைக்கவில்லை. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. வரல நாகரிகத்துக்குப் பிறகு வேதகால ஆரியர் நாகரிகம் உள்ளது. இ தமிழர் நாகரிகம்" என்ற பகுதியை இடம்பெறச் செய்யும் முயற்சிகள் ே
2 S2 SZo cyణ9,>

Page 24
இந்துசாதனம் 3O2
NATURE IN GOD AN
Prof. A. Sanmugadas,
God is not subject to spatial limitations and He is truly present in every place orthing - that he is omnipresent or ubiquitous follows from the fact that He is the cause and ground of all reality. In other words God Himself, or the Divine nature, is in immediate contact with, or immanent in, every Creature. Hindu religion believes that nature is in God and vice versa. The ancient Tamils and the Japanese were nature worshippers. They believed that God is in nature. They worshipped the Sun, moon, Sea, river, the mountain, tree, forest, animals, birds, etc. The ancient Tamils and the Japanese while recognizing a set of sky gods, also worshipped deities who exclusively dwelt on mountains. For them mountain itself was the god. Tree worship has been very popular among them. Japanese and Tamil literary texts bear evidence to 社 The Tami || Saiva Saints Campanthar, Appar, Cuntarar and Manikkavasakar in their devotional hymns have several instances where the existence of God in nature and the vice versa are referred t First let us look at a verse Composed by Saint Karaikkal Ammaiyar in her Atputat Tiruvantati அற்புதத் திருவந்தாதி. 65)
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் s (មាត្រាល(ទ័យ போன்றிலங்கும் வெண்ணிற - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு 9ܓ
His body is resplendent like the morning; the white
holy ash On His person is like the fierce mid-day; the strands
Of His matted hair are like the evening sky;
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf o Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 13.01
 

2O 6fīä5ñá5 DmáF OI
D GOD IN NATURE
Ph.D. (Edinburgh)
His neck is like the night of swelling darkness
Karaikal Ammaiyar sees the day's changes in Lord Siva's physical form. The shining morning is seen in His body. The white holy ash on His body is seen as the hot mid-day. The Cool evening sky shows His matted hair. His neck resembles the dark night.
The natural phenomena are seen on Him.
On the other hand, the nature looks like Him for some Saintly poets. Appar while entering Tiruvaiyaru temple saw a male and a female elephants coming. And suddenly he saw the holy feet of Lord Siva and Parvati. Apparsings as follows: மாதர்ப்பிறைக்கண்ணியானைமலையான்மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன் பாதுஞ் சுவடுபடாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடியோடுங்களிறு வருவன கண்டேன் கண்டேனவர்திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.
"Singing (the glory of ) the Lord Who is adorned with the beautiful crescent like the
chaplet, I always follow those who enter (the Terra le) praising and carrying flowers with water. wh reached Aiya-ru without leaving any foot -
I saw male elephant Coming along with its ܓܵܘ ܬ fဇဗဲ့။g young female elephant and I saw their (Lord and Umai) feet; I saw what I had not seen
previously."
This aspect of Hindu Gods has inspired the Tamil poets to Create beautiful devotional hymns.
Tamil classical poetry bears evidence to this.
the Saiva Paripalana Sabai, No.450, K.K.S. Road, Jaffna & 2011 (1"Day of Masiththingal). Phone: 0212227678