கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.03.15

Page 1
சைவ பரிபாலன சபை வெளியீடு
ஆரம்பம் விரோதி வூடு ஆவணி மீ" 26 ஆம் உ (1889)
புத்தகம் : 122 இதழ் 07
ܟܠ ܐ
கே Tவிற்கடவை, கோவிற்குடியிருப்பு, கோவிற்குள கோவில் என்ற பெயருடன் இணைந்த சில இடங்கள் இருப்ப5 போல், திருநெல்வேலியிலுள்ள "திரு"வின் பொருத்தப்பாட் அழுத்தும் விதத்தில் அங்கே அமைந்திருக்கின்றது - கோவிற் காடு! 冢 - -
இதுவரை இந்தப் பெயர், பலர் கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கோவிலுக்குரிய காடு, கோவில்கள் நிறைந்த காடு என்றெல்லாம் விரித்துப் பொருள் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ள இந்தப் பெயரையுடைய குறிச்சியிலே தான் யாழ்ப்பாணத்திலுள்ள மிகப் பெரிய சிவன்கோவில்களுள் ஒன்றாகக் கணிக்கப்படுவதும், திருநெல்வேலிச் சிவன்கோவில் என எல்லோராலும் அறியப்பட்டுள்ளதுமான அருள்மிகு நீலாயதாகூதி அம்பாள் உடனுறை பூரீ காயாரோஹணேஸ்வரப் பெருமான் தன் பரிவார மூர்த்திகளுடன் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
அன்னியரான ஆங்கிலேயர் இந்த நாட்டிற்கு வருவதற்குக் கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டின் முன்னர்
திருநெல்வேலி காயாரோஹனேன்
 
 
 
 
 
 
 

web : www.hinduorgan.com e-mail editor(CDhinduorgan.com
ரோஹணேஸ்வரர்
p500IGOT
1774 ஆம் ஆண்டிலே, திருமடந்தை நாத முதலியார் பரம்பரையினாற் கட்டப்பெற்ற இந்தக் கோவில், கிழக்கே கோவில் வீதியையும் மேற்கே பலாலி வீதியையும் இணைக்கும் ஒரு சிறிய வீதிக்குத் தென்புறத்தே அமைதியும் அழகும் கோலோச்சும் சூழலில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடக்கு வீதியின் ஒரு பகுதி எனச் சொல்லப்படக்கூடிய இடத்தில் அருள்மிகு முத்துமாரியம் பாள் ஆலயமும், வடகிழக்கில் தலங்காவற் பிள்ளையார் கோவிலும், தெற்குத் திசையில் வீரமாகாளி அம்பாள் ஆலயமும் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தசுவாமி கோவில் நல்லூர்க் கைலாசநாதர் சிவன்கோவில் ஆகியவற்றின் கண்டாமணி ஒசையை இங்கிருந்து கொண்டே மிகவும் தெளிவாகக் கேட்கலாம். தலங்காவற் பிள்ளையார், இக்கோவிலின் காவல் தெய்வமாகக் கருதப்படு கின்றபடியால், 'காயாரோகண மூத்த நயினார்"
என்றும் அவர் அழைக்கப்படுகின்றார்.
క్ట్ Տեր ՏՏ Š வரர் கோயில் முகப்புத் தோற்றம்

Page 2
இந்துசாதனம் 15。(
வண்ணச் சிற்பங்களுடன் வானை அளாவிக் கொண்டிருக் கும் இராஜகோபுரத்தை முதலில் வணங்கி அதனூடாக உள்ளே சென்றால், முதலிற் காட்சியளிப்பவர் தம்பத்துப் பிள்ளையார். அவரைக் குனிந்து வணங்கியபின் நிமிர்ந்து பார்த்தால் கொடித்தம்பமும் பலிபீடமும் நந்திகேஸ்வரரும் காட்சி கொடுப்பர். இன்னும் சற்று உள்ளே பார்வையைச் செலுத்தினால் மூலஸ்தானத் தில் அருள்மிகு காயாரோஹணேஸ்வரரைத் தரிசிக்கலாம். மஹாமண்டபத்தில் நின்று வடக்குத் திசையை நோக்க, அருள்மிகு நீலாயதாகூதி அம்பாளின் எழிலுருவம் எம்மை ஈர்க்கும்.
அம்பாள் சந்நிதானத்துக்கு நேரே உள்வீதியில் நந்திதேவர், பலிபீடம், கொடித்தம்பம் ஆகியவை காட்சியளிக்கின்றன. மூலவருடைய கருவறையின் புறத்தேயுள்ள கோஷ்டங்களில் நிர்த்த கணபதி, தெட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்காதேவி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளனர்.
உள்வீதியிலே, தென்மேற்கு மூலையிலுள்ள பிள்ளையார் சந்நிதானத்தை அடுத்து, தெண்டாயுதபாணி, மஹாவிஷ்ணு மூர்த்தி, பஞ்சலிங்கங்கள், மஹாவல்லி கஜாவல்லி சமேத சுப்ரம்மண்யர், மஹாலக்ஷமி ஆகியோருக்குத் தனித்தனிச் சந்நிதானங்கள் உள்ளன. எல்லாமே கிழக்குப் பார்த்த சந்நி தானங்கள்தாம்.
சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தை வடக்கு வீதியில் அவருக்கென அமைக்கப்பெற்ற ஆடலரங்கிற் தரிசித்து மகிழலாம். உள்வீதியின் கிழக்குப் புறத்தில் யாகசாலையை அடுத்து வைரவர், சூரிய - சந்திரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
பஞ்சலோகங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர், சுப்ரம்மண் யர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், சோமாஸ்கந்தர், வீரசக்தி, நீலாயதாகூழி அம்பாள், பைரவர், பிட்சாடனர், சந்தான கோபாலர், மஹாவிஷ்ணு மூர்த்தி, சண்டேஸ்வரர், சமய குரவர்கள் ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் தனிச் சோபையுடன் விளங்கு கின்றன.
ஆகம விதிப்படி தினமும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறும் இந்தத் திருத்தலத்திலே, மாதந்தோறும் வருகின்ற இரண்டு பிரதோஷம், கார்த்திகை, ஆவணிச் சதுர்த்தி, சிவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகைச் சோமவாரம் முதலியவை விசேட அபிஷேக ஆராதனைக்குரிய புண்ணிய தினங்களாகும்; இவற்றுட் சில தினங்களில் விசேட உற்சவங்களும் நடைபெறுகின்றன. நடராஜப் பெருமானுக்குரிய ஆறு அபிஷேகங்களும் சிறப்பாக நடை பெறுவதுடன் ஆனி உத்திரம், மார்கழித் திருவாதிரை ஆகிய தினங்களில் திருவீதியில் இடம்பெறும் திருநடனக் காட்சியும் அடியார்களைப் பரவசப்படுத்தும் சிறப்புடையது. நவராத்திரி காலத்தில் அம்பாளுக்கு விசேட பூஜை நடைபெறுவதுடன், விஜயதசமியில் மஹிடாசுர சங்காரத்தைக் குறிக்கும் வன்னி வாழைவெட்டும் விழா நடைபெறுகின்றது. பிரம்மோற்சவம் என்று சொல்லப்படும் பெருந்திருவிழாக்கள் ஆண்டில் இரண்டு தடவை இங்கே நடைபெறுகின்றன. சுவாமிக்குரிய திருவிழாக்கள் சித்திரா பூரணைக்கு மூன்று தினங்களின் முன்னர் கொடியேற்றத்துடன்

93.2O விகிர்தி பங்குனி O
O2
ஆரம்பமாகித் தொடர்ந்து 19 தினங்கள் நடைபெறுகின்றன. 18ஆம் நாள், பஞ்சரத பவனியும் 19ஆம் நாள் சிவானந்த கூப த்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றன. சுவாமி எழுந்தருளும் பிரதான தேர், தஞ்சைப் பெருவுடையார் கோவில் மூலவரின் விமானத்தைப் போன்று உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். 20ஆம் நாள் நடைபெறும் பூங்காவன உற்சவத்தில், அம்பாள் தவக்கோலத்தில் எழுந்தருளி, அருகிலுள்ள முத்துமாரி அம்பாள் ஆலய மண்டபத்தில் இறைவனையே தன் கணவராக அடைய வேண்டும் எனத் தவஞ் செய்வதும், பின்னர் இறைவன் மாப்பிள்ளைக் கோலத்தில் அங்கே சென்று அந்த ஆலயத்தின் முன் மண்டபத்தில் அம்பாளுக்குத் திருமாங்கல்யமணிந்து அம்பாளை மீண்டும் தன் இடப்பாகத்தில் அமர்த்தும் திருக்கல்யாண வைபவமும் அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் புனிதமான காட்சிகள்.
ஆடிப் பூரத்தை இறுதியாகக் கொண்டு அம்பாளுக்குப் பத்து நாள் உற்சவம் நடைபெறுகின்றது. நாயன்மார்களின் காலத்திலே அதிக அளவில் நடைபெற்ற அற்புதங்கள் அதற்குப் பின்னர் அவ்வப்போது நடைபெற்று வந்தமைக்கு உதாரணங்கள் பல உண்டு. அத்தகைய அற்புதச் செயல்கள் இரண்டு இந்த ஆலயத்திலும் நடைபெற்றுள்ளது.
பல ஆண்டுகளின் முன்னர் மழை இன்றித் தொடர்ச்சியான வரட்சியினால் இப்பிரதேசத்திலிருந்த மக்கள் சொல்லொணாக் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள். வெப்பு நோய், பசி, பட்டினி முதலியவை பலரைக் காவுகொண்டன. மழை வேண்டி, இவ்வால யத்திலுள்ள நந்திதேவருக்கு மிகச் சிறப்பான முறையிலே அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்த கையுடன் பெருமழை பொழிந்து மக்களுடைய உள்ளங்களையும், வரண்டு போயிருந்த நிலத்தையும் குளிர வைத்தது.
ஆனந்த நடேசக் குருக்கள் பிரதம சிவாச்சார்யாராகப் பணிபுரிந்த காலத்திலே கொடிய பஞ்சமொன்று ஏற்பட்டு மக்களைப் பெருமளவிற் பாதித்தது. சுவாமிக்குத் திருவமுது ஆக்குவதற்குக் கூட அரிசி இல்லாத இக்கட்டான நிலை. மனம் வாடி வருந்திய ஆனந்த நடேசக் குருக்கள் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்காமற் சுவாமி சந்நிதானத்திற்பட்டினி கிடந்து தவஞ்செய்தார். சில மணி நேரம் சென்றபின், அவருக்குச் சிறிதும் அறிமுகமில்லாத ஒரு பெண்மணி அவரை நோக்கி வந்தாள். அவள் யார் என்பதையோ அவ்வேளை ஏன் அங்கே வந்தாள் என்பதையோ விசாரித்து அறிவதற்கிடையில், தான் கொண்டுவந்த சிறு பொதியொன்றைக் குருக்களிடம் மிகவும் பயபக்தியுடன் கொடுத்தாள். பொதியை அவிழ்த்துப் பார்த்தபோது, குருக்களால் தன் கண்களையே நம்பமுடியவில்லை - நல்ல பதமான பச்சைஅரிசி அந்தப் பொதியை நிறைத்திருந்தது.
விபரங்களை அந்தப் பெண்மணியே சொன்னாள் தென்மராட்சி மறவன்புலவு என்ற சிற்றுாரைச் சேர்ந்தவள் அவள். முதனாள் இரவு அவள் நித்திரையில் இருந்தபோது, விசித்திரமான உருவம் ஒன்று அவள் கனவிலே தோன்றி, திருநெல்வேலிச் சிவன்கோவிலுக்கு அவள் அரிசி கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டதாம். கனவிலே தோன்றியவர்
-->

Page 3
இந்துசாதனம் 5O
சாதாரண ஒர் ஆளாக அவளுக்குத் தெரியவில்லை. அவர் இறைவனாகத்தான் இருக்க வேண்டும் என நம்பிய அவள், இறைவன் இட்ட கட்டளையை உடனடியாகவே நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டாள்!
இறைவனின் திருவருளை எண்ணிக் கண்ணிர் விட்ட குருக்கள், பஞ்ச கால நெருக்கடி தீரும்வரைக்கும் அந்தப் பெண்மணி அன்று கொடுத்த அரிசியைப் பயன்படுத்தியே
இறைவனுக்குரிய அமுதை ஆக்கினார்!
இந்த ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாகவும் பிரதம சிவாச்சார்யாராகவும் விளங்கிய பரமசாமிக் குருக்கள் பரம்பரை
ஆசிரியர், "இந்துசாதனம்"
32,
நாவலரின் முன்னோரான திருநெல்வேலி ஞான விளக்கம்" 1888,1889,1930 ஆண்டுகளில் பதிக்கப்பட்டது.8
அவர் இயற்றிய "பெளஷ்கரவிருத்தி" இன்னும் அ புதுச்சேரி இந்தோ- பிரெஞ்சுஆய்வு நிறுவனத்தில் உண்( ஹோஷிபார்ப் பூர்விஸ்வேஸ்ராநந்தர் வேத ஆய்வு நிறுவ ஆய்வுசெய்து, திருத்திய ஆய்வுப்பதிப்புவெளிவரவேண்டு தளபாடங்களையும் பாதுகாக்க வேண்டும் என எழுதி படுவதில்லையோ? இவற்றை ஆர் படிக்கப்போகிறார்கள் இவற்றை ஆய்வுசெய்து பல லட்சம் செலவிட்டுப் பின்
மொழியாலும்,பண்பாட்டாலும் வேறுபட்டவர்கள், மடையரா:
ஒருகோடி, 75லட்சம் செலவிட்டுப் பத்துப்பேர் ஒண்டி செலவிட்டுக் குடமுழுக்குச் செய்கின்றவர்கள் அதில் 10 செலவிட்டால் என்ன? பிறெஞ்சில் வெளிவரும் ஆகமங் பிறெஞ்சு அரசாங்கம் இலவசமாகத் தம் மொழியைப்படிப்பி இன்றிஇருக்கின்றன. சைவத்தமிழ்ப்பெரியார்கள் இவை

3.2O விகிர்தி பங்குனி O
யைச் சேர்ந்த ஆனந்த நடேசக் குருக்களின் பின்னர், சதாசிவக் குருக்கள் அவர்களும் இப்போது அவருடைய மகன் சிவகுமாரக் குருக்கள் அவர்களும் இவ்வாலயத்தின் நித்திய, நைமித்திய பூஜைகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள்.
விசேட ஹோமங்கள், சாந்திகள், பிணி நூல் கட்டுதல், காவல் யந்திரங்கள் வழங்குதல் போன்ற காரணங்களால், பக்தர்களின் நடமாட்டம் நிறைந்துள்ள இவ்வாலயத்தை இதுவரை தரிசிக்காத புத்தடியார்களுக்கு, ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி - இந்த ஆலயத்தின் இவ்வாண்டுக்குரிய பெருந் திருவிழா ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
ଝୁମ୍ପୁର୍ବ
பந்த கடிதம் சிக்கலாம்!
ாப்பிரகாச முனிவரின் "சிவஞான சித்தியார் சுபக்க இப்போதுகிடையாது. −
ச்சாகவில்லை. அதன் கையெழுத்துப் பிரதிகள் மூன்று டு. அவருடைய அதே நூல் வட நாட்டில், கிரந்த எழுத்தில், னத்தில் ஏட்டுருவில் உண்டு. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு ம்.நூறுவருடம் பழைய கட்டடங்களையும்பழையதுண்கள், நிக் குவிப்போர் கண்ணில் நூல்கள் இலக்கியங்கள் ான்ற உதாசீனமோ? அப்படியானால் வெளிநாடுகளில் நூல் வடிவிலும் வெளியிடுகின்றவர்கள், மதத்தாலும்,
நிற்க முடியாத ராஜகோபுரங்களைக் கட்டிப் பல லட்சம் 00 இல் ஒரு பங்கையேனும் சமயநூல் வெளியீட்டுக்குச் களைப் படிக்க ஏற்பாடு செய்யாத பல்கலைக்கழகங்கள் த்தாலும்படிக்கும் மாணவரைக் கண்டுபிடிக்க அக்கறை பற்றிச்சிந்தித்துச்செயற்படுவார்களா?
- முதிய உபாத்தியாயர்.

Page 4
இந்துசாதனம் 5.C
வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல் ஏற்படும்போது 6 எடுத்துக் காட்டியவர் காரைக்காலம்மையார். இறைவ காட்டியவரும் அவரே.
சமயம் ஒரு
கலாநிதி மனோன்
UெTழ்க்கையில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்கும்போது அதனை எப்படி எதிர்கொண்டு வெல்லலாம்? இந்தக் கேள்வி எல்லோருடைய மனதிலும் மறைந்து கிடப்பது . இதற்கான விடையைத் தன்னுடைய சமய வாழ்வியலால் ஒரு பெண்மணி விளக்கியுள்ளார். வணிக குலத்திலே பிறந்து வாழ்வின் வளங்கள் எல்லாவற்றையும் செல்வத்தால் பெறலாம் என்ற நம்பிக்கையூட்டிய உறவின் மத்தியில் வாழ்ந்தவர் அவர். புனிதவதி என்ற பெயரோடு பிறந்து ஊர்ப்பெயரால் சிறப்புப்பெற்ற அந்தக் காரைக்காலம்மை யாரின் வாழ்வியல் சமயமாயிற்று. வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை வென்று சமயத்தை ஒரு வாழ்வியலாக மாற்றிப் பெருமை பெற்றவர்; பெண்மையின் கொடையுள்ளத்தை உலகறியச் செய்தவர்.
பெற்றோர் புனிதவதிக்கு ஏற்ற பருவத்தில் திருமணம் செய்து வைத்தனர். கணவன் குலத்தொழில் வணிகம். அதனை அவன் முழுமுயற்சியோடு செய்துவரும்போதும் மனைவியின் சமய வாழ்வைத் தடை செய்யவில்லை. ஒருநாள் புனிதவதியின் வீட்டிற்கு வந்த சிவனடியார் புனிதவதியின் கையால் உணவருந்திச் செல்கிறார். சிவனடியார் வந்தபோது கறியமுது தயாராகவில்லை. அதனால் கணவன் அனுப்பிய மாங்கனி இரண்டில் ஒன்றைப் பரிமாறிப் புனிதவதி விருந்தோம்பினாள். வீடு திரும்பிய கணவன் மாங்கனியை அருந்துகிறான். ஒன்றை உண்டபின்னர் மற்றதையும் உண்ணவிரும்புகிறான். மனைவியிடம் அதைக் கொணரும்படி கேட்கிறான். அப்போது புனிதவதி நடந்ததைக் கூறாமல் இறைவனை வேண்டி ஒரு மாங்கனியைப் பெறுகிறாள். அதைக் கணவன் கையில் கொடுத்தபோது கனியை அவன் அருந்துகி றான். முன்னைய கனியின் சுவையைவிடக் கணியின்சுவை அதிகமாயிருந்தது. எனவே அதனை மனைவியிடம் கேட்கிறான். புனிதவதி ஈசனருளால் கனியைப் பெற்றதைக்கூற, கணவன் சிவனருளால் இன்னொரு கனியைப் பெற்றுக் காட்டும்படி கேட்கிறான். புனிதவதிமீண்டும் இறைவனை வேண்டி இன்னொரு கனியைப் பெற்றுக் கணவன் கையில் கொடுக்கவும் கனி திடீரென மறைந்துவிடுகிறது. கணவன் மிகவும் அச்சம் அடைந்து புனிதவதியைவிட்டு வணிகம் செய்யப்போவதாகக் கூறிப் பிரிந்துசெல்கிறான். அவ்வாறு சென்றவன் பாண்டி நாட்டுக்கரை யூரில் இன்னொரு பெண்ணை மணந்து பெண் மகவொன்றையும் பெற்றுக் குடும்ப வாழ்வுநடத்துகிறான்.
புனிதவதியின் சுற்றத்தார் இதனை அறிந்து அவளைக் கணவனோடு சேர்க்கிறார்கள். ஆனால் அவனோ நடந்தவற்றைக் கூறிப் புனிதவதியின் கால்களிலே குடும்பமாக வீழ்ந்து வணங்குகிறான். இந்த நேரத்தில் புனிதவதியின் சமயவாழ்வியல் தான் சிக்கலைத் தீர்த்து வைக்கிறது. இறைவனிடம் பேய் வடிவம்
ܘܨà
(
 
 
 

32O விகிர்தி பங்குனி O
தை எப்படித் தீர்க்கலாம் என்பதைத் தன் வாழ்வியலால் னின் வண்ணங்களை இயற்கையிலிருந்தே எடுத்துக்
வாழ்வியல் -27 மணி சண்முகதாஸ்
கேட்டுப் பெற்று மீண்டும் முழுநேர சமயவாழ்வியலை மேற்கொண்ட புனிதவதி, காரைக்காலம்மையாராகிறார். பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் புராணம் புனிதவதியின் வாழ்வியலைப் பாடலிலே பதிவுசெய்துள்ளது. புனிதவதிக்குப் பயிற்றப்பட்ட சமயவாழ்வியல் இக்கட்டான ஒரு நிலையை மிகவும் நிதானமாகச் சீர்செய்யும் ஆற்றலைக் கொடுத்துள்ளது. சைவசமயம் அன்பு, தொண்டு என்ற இரு குணவியல்புகளையும் அடிப்படையாகக் கொண்டது. கணவனுடைய வாழ்வியல் பற்றிப் புனிதவதி நன்கு அறிந்திருந்தாள். அதனால் அவன் மாங்கனியைக் கேட்டபோது இறைவனை வேண்டிப் பெற்றுக்கொடுத்தாள். ஆனால் குடும்ப வாழ்வியலில் செய்த குழப்பத்தைச் சரிசெய்யத் தன்னுடைய இல்லற வாழ்வையே துறந்து ஒரு வழிபாட்டு வாழ்வியலை மேற் கொண்டாள்.
இறை பற்றிய எண்ணத்தோடு வாழும் வாழ்வியலைப் புனிதவதி ஏற்றுக்கொண்டபோது பல பக்திப் பாடல்களைப் பாடினார். சமயகுரவர் நால்வரினது பக்தி இலக்கியப் பாடல்கள் தோன்றப் புனிதவதியாரின் மனத்தில் இருந்த இறைவன் திருவுருவமே காரணமாயிற்று. குழந்தைப் பருவத்தில் பெற்ற வழிபாட்டுப் பயிற்சி வாழ்வில் வந்த துன்பத்தை மறக்க வழிகாட்டிற்று. இறைவன் திருவுருவத்தை இயற்கை அழகிலே காணும் ஆற்றலைத் தந்தது. அதை அவர் பாடிய பாடல் தெளிவாக விளக்கிநிற்கின்றது.
"காலையே போன்றிலங்கு மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு-மாலையின் றாங்குருவே போலுஞ்சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலுமிடறு"
காரைக்காலம்மையார் இறைவனின் திருக்கோல வண்ணங் களை இப் பாடலிலே அழகாக எடுத்தியம்பியுள்ளார். திருமேனி, வெண்ணிறு, சடைக்கற்றை, மிடறு என்பவற்றின் வண்ணங்களை இயற்கைத் தோற்றத்தின் வண்ணங்களிலே எல்லோரும் காணவைக்கின்றார். மனிதர் இயற்கையின் கோலங்களை மதிக்கும், வணங்கும் ஒரு சமய வாழ்வியலை இப்பாடல்மூலம் அம்மையார் விளக்கியுள்ளார். இறைவன் தோற்றத்தைக் காட்ட முடியுமா? எனக் கேட்போருக்கு நல்ல விடையாக இப்பாடல் அமைந்துள்ளது. இறைவன் திருக்கோலத்தை வண்ணச் சித்திரமாக வரைவோருக்கும் வழிகாட்டியுள்ளார். இறைவன் மிடறு மட்டுமே கரியது. திருமேனி, காலையின் தோற்ற வண்ணம் கொண்டது என்பதை முதலிலே எடுத்துக் கூறியவர் அம்மையாரே. இன்று இறையுருவை வண்ணத்திலே அமைப்பவர் இதனைக் கவனிக்கவேண்டும். எமது சமயம் இயற்கையுடன் இணைந்த ஒரு வாழ்வியல் என்பதை எல்லோரும் நன்குணர அம்மையாரே வழிகாட்டியவராவார்.
人
-<- s
)4

Page 5
இந்துசாதனம் 15。(
நாதஸ்வர, தவில் வித்துவான்கள், நாடகக் கலைஞர்கள் அலங்காரஞ் செய்யும் அழகுக் கலைஞர்கள் போன்றவர்கள் செறிந்த சமயத் தொண்டும், கலைத் தொண்டும் செய்து வருகின்றது அங்கு öT6DT6OTö.
"திருப்பணி செய்யு
-ចង្វាo
உதாத்தம் (எடுத்தல்) , அனுதாத்தம் (படுத்தல்), ஸ்வரிதம் (நலிதல்) ஆகிய ஏற்ற இறக்கங்களுடன், நடுத்தர வயதுச் சிவாச்சார்யார்கள் பலர், ஒன்றாக இருந்து, எவ்வித ஸ்ருதி பேதமுமின்றி வேத பாராயணம் செய்வதை - இளம் மாணவர்களின் தரத்தை உணர்ந்து, தேவையை அறிந்து தெளிவான விளக்கங் களுடனும் பொருத்தமான உதாரணங்களுடனும் அவர்களுக்கு வியாகரண (இலக்கணம்) வகுப்புக்கள் நடத்தப்படுவதை - ஏன்? எப்போது? எப்படி? எங்கே? முதலிய கேள்விகளின் அடிப்படையில் அந்தணச் சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் சமயக் கிரியை களிற் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுவதை - ஆலயங்களில் நடைபெறுகின்ற ஆகமக் கிரியைகள், இல்லங்களில் நடைபெறும் வைதிக கிரியைகள் சம்பந்தமாக அவ்வப்போது எழுகின்ற சந்தேகங்கள், பிரச்சினைகள் முதலியவற்றுக்கான விளக்கங்களும் தீர்வுகளும் உரியவர்களுக்கு அளிக்கப்படுவதை - தேவாரம், வேதசாரம்; காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி அவற்றை ஒதுவோர் இறைவனுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்ந்து, ஒவ்வொன்றுக்கு முரிய பண் - இராகங்களில் அவற்றைப் பாடும் முறையில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை - வீணையை மீட்டுவதில், புல்லாங்குழலை இசைப்பதில், வயலின், மிருதங்கம் ஆகியவற்றை வாசிப்பதில் இசைப்பிரியர்கட்குப் பயிற்சி அளிக்கப்படுவதை - பார்த்து இரசித்துப் பயன்பெற விரும்பும் அன்பர்கள் - கலாரசிகர்கள் - செல்லவேண்டிய இடம் ஒன்று உண்டு. ஆனால், அது ஒரு கலைக்கூடமல்ல - ஒரு கோவில் யாழ்ப்பாணத்து வலிகாமம் தெற்கிலுள்ள இணுவில் என்னும் பேரூரில், இணுவில் ஆஸ்பத்திரிக்கு அண்மையில் யாழ். காங்கேசன்துறை வீதிக்கு மேற்கில், சற்று உள்ளே தள்ளி இருக் கின்ற வட்டுவினி இராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்!
இணுவிலில் உள்ள ஆலயம் என்றவுடன் விண்ணை முட்டும் இராஜகோபுரங்கள், கலையம்சம் நிறைந்த சிற்பங்களும் வர்ணக் கலவைப் பூச்சுக்களும் நிறைந்த மண்டபங்கள், மதில்கள் முதலியவற்றுடன் கூடிய பெரிய கோவில்களுள் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கக்கூடாது. பழைய காலத்து மடாலயங்களை நினைவூட்டும் சிறிய கோவில்தான்; ஆனால் அவ்வூரிலுள்ள ஏனைய பெரிய கோவில்களிற் காணமுடியாத மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் மூலம் தனக்கெனத் தனித்தன்மையைக் கொண்டி லங்கும் ஆலயம் அது. இந்த நாட்டில் மட்டுமல்லாமல், தென்னிந்தி யாவிலும் மலேஷியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா முதலிய கடல் கடந்த நாடுகளிலும் வாழ்கின்ற சைவத் தமிழ்

3.2O விகீர்தி பங்குனி 01
கல்விமான்கள். தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆண்டவனை வாழும் சீரினுவைத் திருவூரின் சிறப்பை மேலும் பெருக்கும் வகையிலே Iள தர்மசாஸ்தா குருகுலம் அதைப் பற்றிய விபரங்களைக் கட்டுரையிற்
b குருகுலம் ஒன்று
மக்களிடையே பிரசித்தி பெற்று விளங்கும் தர்மசாஸ்தா குருகுலம், காயத்ரிபீடம் ஆகியவற்றின் "மூலஸ்தானமாக" விளங்குவதும் இந்தச் சிறிய ஆலயந்தான் !
எந்தவிதமான அதிகார ஆர்ப்பாட்டமுமில்லாமல், மிகச் சீரான முறையில் இடம்பெறும் பல்வேறு செயற்பாடுகளுக்கெல்லாம் ஆதார சக்தியாக விளங்கும் சிவபூரீ தா. மஹாதேவக் குருக்கள் அவர்களைச் சமீபத்திற் சந்தித்தோம். விபரங்களைக் கேட்டோம்.
"இப்படியான ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது என் இலட்சியமாக இருக்கவில்லை. சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்று திரண்டு என்னைக் கருவியாக்கிக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்" என மிகவும் அடக்கத்துடன் கூறும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றோம். அவரிடம் பெற்றுக்கொண்ட சுவையான பல தகவல்களைச்
சுருக்கமாகத் தருகின்றோம்.
பல்லாண்டுகளின் முன்னர்
குருகுலத்தில் நிகழ்ந்த ஒரு உபநயன நிகழ்வு.
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாதேவ சர்மா, வீட்டிற்கு மிக அண்மையிலிருந்த வீமன்காமம் ஆங்கில பாடசாலையிற் கல்வி கற்கத் தொடங்கினார். க.பொ.த.சாதாரண பரீட்சையிற் சித்தியடைவதும், பின்னர் அரசாங்கத்திலோ, தனியார் துறையிலோ உத்தியோகம் பார்ப்பதுந் தான் அந்தக் காலத்து மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நோக்கமாக இருந்தது. சர்மாவின் நோக்கம் வேறாக இருக்கவில்லை. ஆனால் க.பொ.த. பரீட்சையிலே அவர் விசேட திறமைச் சித்திகள் பெற்றமை, கல்வியை மேலும் தொடர
அவரைத் தூண்டியது. கந்தரோடை ஸ்கந்தவரோதயக் 一>

Page 6
இந்துசாதனம் 5. O
கல்லூரியிலே ஒராண்டு படித்த பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் மாணவனாக ஆனார். அதேவேளை, மாவைக் கந்தன் ஆலயத்தின் கிரியைச் சிறப்புக்களும், மந்திர ஒலியும் அவரைக் கவரத்தொடங்க, சம்ஸ்கிருதத்திற் பாண்டித்யம் அடைய வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. இவ்விஷயத்தில் அவருக்குக் கைகொடுத்தவர் பிரம்மபூீ இராமையர் என்பவர். கீரிமலையில் நகுலேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு அண்மையில் வாழ்ந்த அவர், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மனமுவந்து சர்மாவுக்குச் செய்த உதவிகளும் அளித்த உற்சாகமும் சமஸ்கிருதத்தில் பூரண அறிவு பெறுவதற்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ், சம்ஸ்கிருதம், பாளி ஆகிய பாடங்களிலே சிறப்புச் சித்தி பெறுவதற்கும் காலாக இருந்தன. தொடர்ந்து இலண்டன் பல்கலைக் கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளுக்குத் தோற்றி ஒரு பட்டதாரியாக வரவேண்டும் என்ற விருப்பமே சர்மாவிடம் இருந்தது. பூர்வாங்க ஏற்பாடுகள் சிலவற்றைப் பூர்த்தி செய்தும்விட்டார். எனினும் பொருளாதார முடை, அவருடைய விருப்பம் நிறைவேறு வதற்குத் தடையாக அமைந்துவிட்டது
குருகுலத்தில் நடைபெறும் சிவாகம வகுப்பு
இந்த நிலையில், கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்த அகில இலங்கை சிவப் பிராமண சங்கம், யாழ்ப்பாண மாவட்டத்து அந்தணச் சிறுவர்களுக்குச் சம்ஸ்கிருதக் கல்வியை அளிக்கும் தன் திட்டத்தைச் செயற்படுத்த முன்வந்தது. அமரராகி விட்ட முகாந்திரம் யா.தி.சதா சிவஐயர் சுன்னாகத்தில் முன்னர் நடத்திய பிராசீன பாடசாலையைப் பொறுப்பெடுத்து "சதாசிவ பிரசீன பாடசாலை" எனப் பெயர் மாற்றஞ் செய்து, வகுப்புக்கள் நடத்தும் திட்டத்தைப் பகிரங்கப்படுத்தியது. வார இறுதி நாள்களுக்குரிய அந்த வகுப்புக்களின் பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டவரும், முன்னர் குறிப்பிட்ட பூரீ இராமையர் அவர்கள்தான். மேலதிக வேலைகள் காரணமாக வார இறுதி நாள்களிலும், விசேட விடுமுறை நாள்களிலும் அவர் இராமநாதன் கல்லூரிக்குச் சமுகமளிக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் தன் மனங் கவர்ந்த மாணவனும் நம்பிக்கைக்குரியவருமாக இருந்த மஹாதேவ சர்மாவைக் கொண்டே அவர் தன் பிராசீன பாடசாலைக்
கடமைகளை நிறைவேற்றுவித்தார்.
 

32O விகீர்தி பங்குனி O
மாணவன் என்ற நிலையில் இருந்து கற்றுக்கொண்டபோது சர்மா பெற்றுக்கொண்ட அறிவு, ஒர் ஆசிரியர் என்ற நிலையில் மற்றவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கியபோது மேலும் விரிவடைந்தது; பிரகாசித்தது. ஏற்கனவே கணிசமான அளவுக்கு விளங்கிய இலக்கண நுட்பங்கள் இப்போது மேலும் துலக்கமடைந்தன. ஆழமான இலக்கண அறிவின் அடிப்படையில், சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கற்பித்தபோது, அவற்றின் அழகும். நயமும் அவரைத் தம்வசப்படுத்தத் தொடங்கிவிட்டன.
தன் ஆசிரியரின் மனங்கவர்ந்த மாணவனாக முன்னர் விளங்கிய மஹாதேவ சர்மா, இப்பொழுது தன் மாணவர்களின் மனங்கவர்ந்த ஆசிரியராகவும் உயர்ந்துவிட்டார்.
நீண்ட பஸ் பயணத்தை மேற்கொண்டு, எவ்வித ஒய்வுமின்றி இரண்டு நிறுவனங்களிற் கல்வி கற்பிப்பது பூரீ இராமையர் அவர்களுக்குச் சிரமமாயிருந்தது. அத்துடன், தன் முதன்மை மாணவனின் பொருளாதார நிலையை ஓரளவாவது உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது. இளமைச் சுறுசுறுப்பும் திறமையுமுடைய மஹாதேவ சர்மாவை முழுநேர ஆசிரியராக ஆக்கினால் பிராசீன பாடசாலை மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதைச் சிவப்ராமண சங்கத்தினருக்கு விளக்கிவிட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டார் அவர்.
ஏற்றுக்கொண்ட பொறுப்பை எவ்விதச் சோர்வுமின்றி
நிறைவேற்றிய போதிலும், அந்த நிலை நீடிக்குமா என்ற சந்தேகம் காலப்போக்கில் சர்மாவுக்கு ஏற்படத் தொடங்கியது.
குறிப்பிட்ட சில நாள்களில் மட்டும் படிப்பது மாணவர்கள் பலருக்குத் திருப்தியளிக்கவில்லை. கொழும்பிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட பாடத்திட்டத்துடன் மட்டும் நிற்காமல்; மேலும் பல விஷயங்களைப் பற்றிப் படிப்பதற்கும், அவர்கள் ஆவலுடன் இருந்தார்கள். மஹாதேவ சர்மாதான் அவற்றைப் படிப்பிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்தார்கள். மாணவர்களின் விருப்பத்தைச் சிவப்பிராமண சங்கத்தினர் ஏற்றுக்கொள்வார்களா என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. அதே வேளை, சுன்னாகத்திலுள்ள பாடசாலையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற சங்கத்தி னரின் ஆர்வத்திலே தொய்வு ஏற்பட்டுக் கொண்டிருந்ததையும் அவரால் ஓரளவுக்கு உணர முடிந்தது.
மாணவர்களின் விருப்பத்தைத் தட்டிக் கழிக்க முடியாமல், அதே வேளையில், சிவப்பிராமண சங்கத்தினரின் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிந்து கொள்ளவும் முடியாமல், மிகுந்த தயக்கத்துடன் இணுவிலிற் சில வகுப்புக்களை நடத்தத் தொடங்கினார் அவர்.
அவர் தயங்கியதற்கு முக்கியமான காரணம், தன்னுடைய செயற்பாடுகள், சிவப்பிராமண சங்கத்தினருக்கு எதிரானவை
யாகக் கருதப்பட்டுவிடுமோ என்ற பயந்தான்.
"சங்கத்தினருடைய நோக்கம் அந்தணச் சிறுவர்களுக்குச் சமஸ்கிருதக் கல்வியை ஊட்ட வேண்டும் என்பதுதான் உங்களுடைய நோக்கமும் அதுதான். ஆர் குற்றினாலும்
)6

Page 7
இந்துசாதனம் 5C
அரிசியானாற் சரிதானே 1 ஆகவே, உங்களுடைய முயற்சியை யாருமே தவறாகக் கருதமாட்டார்கள். இன்னுமொரு சிறப்பையும் நீங்கள் செய்திருக்கின்றீர்கள். நீங்கள் இங்கே வகுப்புக்களை நடத்தத் தொடங்கியபடியாலேதான். பண்ணிசை கர்நாடக இசை போன்றவற்றையும் கற்பிக்கின்ற ஒரு நுண்கலைக் கழகமாகவும் இந்த இடம் இன்று விளங்குவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது" என்ற எமது விளக்கத்தினால் ஏற்பட்ட தெளிவு - திருப்தி - காரணமாக, மேலும் பல தகவல்களை அவர் கொடுத்தார். அவற்றுள் மிகவும் முக்கியமானது மாணவர்களின் கட்டணம் சம்பந்தமானது. ஆரம்பத்தில் இரண்டொரு வருடங்கள் மாணவர்கள் ஒரு சிறு தொகையைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், மிக விரைவில், மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டு விட்டது. சம்ஸ்கிருதக் கல்விக்கும், குருத்துவப் பயிற்சிக்கும் எவ்வித கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்தத் தேவையில்லை
என அறிவித்துவிட்டார் அவர்.
எல்லாமே இலவசந்தான்! அதுமட்டுமல்ல, மாணவர்கள் இங்கேயே தங்கியிருந்து படிக்கக்கூடிய ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன. தங்குவதற்கோ, உணவு உண்பதற்கோ கூடக் கட்டணம் அறிவிடப்படுவதில்லை!
விண்வெளியை நோக்கி விலைவாசிகள் ஏறிக்கொண்டி ருக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஓர் இலவச சேவையா என்ற ஆச்சரியத்தில் மூழ்கி இருந்த எங்களுக்கு அவர் அளித்த விளக்கம் மேலும் ஆச்சரியத்தையே அளித்தது.
"மாணவர்களுக்குப் படிப்பிடித்து, அதற்காக அவர்களிடம் பணம் வாங்கித்தான் என் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற நிலையை ஆண்டவன் நீடிக்கவில்லை; நிரந்தரமாக்கவில்லை. ஆலயங்களில் நடைபெறுகின்ற கும்பாபிஷேகங்கள், விசேட ஹோமங்கள், அந்தணர்களின் இல்லங்களில் நடைபெறும் சமய சம்பந்தமான வைபவங்களுக்குப் பலர் என்னை அழைக்கின் றார்கள், ஆச்சார்ய சம்பாவனையை மிகத் திருப்திகரமாக நிறை வேற்றுகின்றார்கள். மாணவர்களுக்குப் போதிப்பதும் பயிற்சி அளிப்பதும் ஆன்மீகச் செயற்பாடுகள் என்ற வகையில், அவற்றை இலவசமாகச் செய்வதன் மூலம் நான் ஆன்ம திருப்தியை அனுபவிக்கின்றேன்" எனப் பணிவுடன் சொன்ன அவர் தொடர்ந்தார்.
"ஏனைய சமயங்களைச் சேர்ந்த குருமார்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும், கெளரவமும் இந்துக் குருமார்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற பொதுவான ஒரு கருத்து நிலவுகின்றது. விதி விலக்காகச் சிலர் கெளரவிக்கப்படு கின்றார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. பொதுவான கருத்தைத்தான் நான் குறிப்பிடுகின்றேன். அளிக்கப்பட வேண்டிய கெளரவமும் மதிப்பும் அளிக்கப்படாமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இந்துக் குருமார்களுக்கு அறிவு குறைவு: செய்யும் கிரியைகளின் தத்துவங்கள், விளக்கங்கள் அவர்களுக் குத் தெரியாது? என்பது அவற்றுள் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றேன். அதனாலே தான், பணத்தைப் பற்றிச் சிந்திக்காமல், எல்லா மாணவர்களுக்கும்
எல்லா விஷயங்களையும் தெளிவாகச் சொல்லிக் கொடுக்கின்

3.2O விகீர்தி பங்குனி 01
றேன். கிரியைகளைச் சரியான முறையில் அவர்கள் செய்வதை உறுதிப்படுத்துகின்றேன். உண்மையைச் சொல்வதானால், குருத் துவம் என்பது ஒரு தொழில் அல்ல; அது ஒரு தொண்டு; மகத்தான தொண்டு அந்தத் தொண்டை மேற்கொள்வதற்குப் பயிற்சி அளிப்பதும் ஒரு தொண்டுதான். பயிற்சி சீராக நடைபெறுவதும்
முக்கியம்" ހ
ஆலயப் பூசைகள் ஒழுங்காக நடைபெற்றால், மழை ஒழுங்காகப் பெய்யும்; விளைபொருள் பெருகும் நோய் நொடி நீங்கும், கள்ளர் பயம் ஏற்படாது; ஆட்சியாளர்களுக்கும் பல நன்மைகள் ஏற்படும் எனத் திருமூலர்தன் திருமந்திரத்திற் சொன்னதை நாம் நினைவூட்டுகின்றோம்.
"ஆலயங்களிற் பூசை செய்பவர்களும் செய்விப்பவர்களும் இவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்" எனச் சொன்ன
அவரிடம், அவருடைய முதன்மை மாணவர்களின் விபரங்களைக்
கூறும்படி கேட்டோம்.
குருகுலத்தின் தலை மாணாக்கர் பிரம்மபூரீ விஸ், நாராயணசர்மா இப்போது பயில்கின்ற புதிய மாணவர் ஆகியோருடன் குருகுல அதிபர்.
"கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தக் குருகுலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்றுள்ளார்கள். இலங்கையின் பல பாகங்களிலும், கடல்கடந்த நாடுகளிலும் ஆலயப் பணிகளில் அவர்கள் ஆத்ம சுத்தியுடன் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்திற் சிறந்தவர்கள்தான் சிலரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனையோரைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும்"
நீங்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்கின்றோம். உங்கள் மாணவர்களைத் தரப்படுத்தி, அதைப் பகிரங்கப்படுத்துவது பொருத்தமில்லைத்தான். ஆனால், முதல் மாணாக்கர்கள் - முதன் முதலில் உங்களிடம் படித்தும் பயிற்சிபெற்றுமுள்ள மாணவர்களைப் பற்றிச் சொல்லலாமல்லவா?
"தெல்லிப்பளை நாராயணர், மயிலனி வரதராசர், அளவெட்டிச் சந்திரர் ஆகிய மூவரும் மிகுந்த ஆர்வத்துடனும், தீவிர தேடலுடனும் இங்கு கற்று, ஏனையவர்களுக்கு முன்னோடிகளாகச் செயற்பட்டார்கள். துரதிர்ஷ்ட வசமாக மயிலனி வரதராசர், அமரராகிவிட்டார். மற்றைய இருவரும் தத்தம் கடமைகளைச் சிறப்பாகச் செய்துவருவது எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கின்றது. 'pക -§കം

Page 8
இந்துசாதனம் 5.O
சமஸ்கிருதக் கல்வி - குருத்துவப் பயிற்சி சைவசித்தாந்த போதம், பண்ணிசை - போன்றவற்றில் அந்தணர்களுக்கும் ஆர்வமுடைய ஏனையவர்களுக்கும் பயிற்சி அளிக்கின்ற ஒரு நிறுவனத்தை நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும் என ஆறுமுகநாவலர், சேர். பொன். இராமநாதன் உட்படப் பலர் ஆலோசனை கூறியுள்ளார்கள். காலத்துக்குக் காலம் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் உள்ளன. ஆனால் நிரந்தரத் தன்மை என்பது இல்லாமலே போய்விட்டது. இத்தகைய பின்னணி யிலே தர்மசாஸ்தா குருகுலத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அவைகளைச் சாதனைகள் என்றே சொல்ல வேண்டும்.
சிவபூரீ மஹாதேவக் குருக்கள் தம்பதிகளுக்கு லண்டனில் அளிக்கப்பட்ட வரவேற்பில்
சிவபூரீ நாகநாதசிவக் குருக்கள், பிச்சைக் குருக்கள் ஆகியோர்
ஏழிசையாய், இசைப்பயனாய் விளங்கும் இறைவனை இசையாலும் வசமாக்கலாம். இசையில் ஆர்வமுடைய மாணவர் களுக்கு, அதன் இனிமையும், பாரம்பரியச் சிறப்பும் தனித்தன்மை யும், என்றும் விஞ்சி நிற்கும் முறையில் அதிற் பயிற்சியளித்து, அதை இறைவனுக்கே அர்ப்பணிக்கத் தூண்டும் வகையில் இசையாசிரியர் களாக இந்தக் குருகுல வளாகத்தில் பூரீ ம.தானுநாத சர்மா, றுநீ. ம. சோமசுந்தரசர்மா, பண்ணிசைச் செல்வர், சங்கீத பூஷணம் சிவஞானரத்தினம் முதலியோர் கடமையாற்றுகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் - இலங்கையின் பல பாகங்களுக்கும், கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் அழைப்பின் பேரிற் செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் குருகுல அதிபருக்கு அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால் அந்தப் பயணங்கள் குருகுலச் செயற்பாடுகளில் எவ்வித தடைகளையோ பாதிப்புக்களையோ உண்டாக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவருடைய சகோதரர் சுப்பிரமணிய சர்மா, அதிபரின் இளைய மகன் பூரீவத்ஸசர்மா, அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுள் ஒருவராகவே கருதப்படும் சிவபால சர்மா முதலிய பலர் பயன்மிக்க
பதிலாசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.
 

32O விகீர்தி பங்குனி 01
கல்லூரிகள், பாடசாலைகளிலெல்லாம் பழைய மாணவர் சங்கங்கள் இயங்குவதையும், பாடசாலைகளின் அபிவிருத்திக் காகப் பலவகையான உதவிகளைச் செய்து வருவதையும் நாம் பார்க்கின்றோம். அப்படி அமைப்பு ரீதியாக, இந்தக் குருகுலத்தின் பழைய மாணவர்கள் இயங்காவிட்டாலும், அவர்களுட் பலர், நன்றி மறவா நல்லுள்ளத்துடன் செய்துவரும் உதவிகள் குருகுலத்தின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றன. திருக்கோணாமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவும், பிரதம சிவாச்சாரியாருமான சிவபூரீ சோ. இரவிச் சந்திரக்குருக்கள், மாணவர்கள் தங்கி இருந்து படிப்பதற்கு வசதியாகப் பல லட்ச ரூபா செலவில் மாணவர் விடுதியொன்றைக் கட்டி அன்பளிப்புச் செய்தமை குறிக்கத் தக்கது.
தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்த வேதாகம விற் பன்னர்கள் பலர், இதன் செயற்பாடுகளை நேரில் அவதானித்து விதந்து பாராட்டியுள்ளார்கள். ஆண்டிலும் அறிவிலும் அனுபவத் திலும் முதிர்ந்த சிவாச்சார்யார்கள், ஆர்வமும் ஆற்றலும் நிறைந்த இளஞ்சிவாச்சார்யார்கள், சமூகப் பணியாளர்கள் போன்றோருட் சிலர் தெரிவு செய்யப் பெற்றுக் கெளரவிக்கப்படுகின்றார்கள். இசைவேளாளர்களை மட்டுமல்லாமல் இசைத் துறையில் விற்பன்னர்களான ஏனையவர்களையும் காயத்ரி நுண்கலை மன்றம் பாராட்டி வருகின்றது. சரியான தகவல்களையும் விளக்கங் களையும் கொடுப்பதன் மூலம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்தக் குருகுலம் பேருதவி புரிந்து வருகின்றது.
"பல்கலைக்கழகப்பட்டதாரியாக வேண்டும் என்ற என் கனவு, வறுமை, வசதியின்மை காரணமாக, நனவாகவில்லை; ஆனால் Blessing in disguise ஆக, மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு அனுசரணையாக இருக்கும் இந்தப் பணியை நான் மேற்கொள்ள என்னைத் தூண்டிவிட்டது" என்ற அவருடைய வார்த்தைகள், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய அவருடைய ஆற்றலைப் பிரதிபலித்தன.
"நூற்றிருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்து சமயத் தொண்டு புரிந்துகொண்டிருக்கும் "இந்து சாதனம்" இந்தக் குருகுலத்தைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட முன்வந்ததை, என் பணிகளுக்கு அளிக்கப்படும் ஒரு கெளரவ மாகவே நான் கருதுகின்றேன் இந்து சாதனத்தின் தொண்டுகள் மேலும் தொடரவேண்டும் என்றும் என் குலதெய்வம் தர்மசாஸ் தாவைப் பிரார்த்திக்கின்றேன்" என மனநிறைவுடன் பாராட்டி வாழ்த்திய சிவாகமஞான பாஸ்கரன் சிவபூரீ மஹாதேவக் குருக்கள் அவர்களுக்கும் அவர் "காரியம் யாவினும் கைகொடுக்கும்" தர்மபத்தினி பூரீமதி புவனேஸ்வரி அம்மாளுக்கும் அதே மனநிறை வுடன் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு, பயன்மிக்க இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் கோப்பாய் சிவம் அவர்களும் நானும் அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.

Page 9
இந்துசாதனம் 5.O
181. இதுவரை விளக்கிய மும்மலங்களும் எவ்வாறு சேர்ந்து
நின்று உயிரைப்பந்திக்கின்றன? அறியும் ஆற்றல் உடைய ஆன்மாவை அறிய விடாமல் அதன்
அறிவை மறைப்பதாக உள்ளது ஆணவமலமாகும்.
தனு கரண புவன போகங்களாக அமைந்து நின்று, ஆன்மாவைத் தானல்லாத அப்பொருள்களையே அறிந்து வரச் செய்து, அப்பொருள்களில் அழுந்தும்படி செய்து, மயக்கத்தைத் தருவதுமாயாமலமாகும்.
அந்த மாயாகாரியங்களால் இன்ப துன்பங்களாகிய வேறுபட்ட
உணர்வுகளை உயிரறிவில் தோற்றுவிப்பதுவே கன்மமலமாகும்.
ஆணவம், மாயை, கன்மம் ஆகிய இம் மும்மலங்களும் நெல்லில் உள்ள அரிசியைப் பொருந்தியுள்ள உமியும், தவிடும், முளையும் (முளைத்தற் சக்தியும்)போல உயிரைப் பொருந்தியுள்ளன.
அரிசியில் உள்ள முளைத்தற் சக்தி முளையைத் தோற்றுவிக் கிறது. எனவே, முளைத்தல் ஆகிய காரியத்திற்கு முளைத்தற் சக்தியே முதற் காரணம் ஆயிற்று.
அம் முளைத்தற் சக்திபோன்று இருப்பது கன்மம். முளை போன்று இருப்பது இன்பந் துன்பம் ஆகிய நுகர்ச்சி, அந்நுகர்ச்சி காரியம் ஆதலின் அதனை உயிருணர்வில் தோற்றுவிக்கின்ற கன்மம் அதற்கு முதற் காரணம் ஆயிற்று.
சைவசித்தாந்தம் (இந்துசாதனம் - மாசி மாதம் 2011 - 18ஆம் பக்கத் தொடர்)
NWA 深
இனி, உவமையில் அரிசியைப் பொருத்தியுள்ள தவிடு, முளைத்தற் சக்தி முளையைத் தோற்றுவித்திற்குத் துணைபுரிந்து நிற்கின்றது. அதனால், முளைத்தல் என்னும் காரியத்திற்குத் தவிடுதுணைக்காரணமாய் அமைகின்றது.
இத்தவிடு போன்று இருப்பது மாயை, கன்மம் முதற் காரணமாய் நின்று இன்ப, துன்ப நுகர்ச்சியாகிய காரியத்தைத் தோற்றுவிக்க, மாயை அதற்குத் துணைக் காரணமாய் நின்று உதவுகின்றது. அஃது எவ்வாறு எனில், கன்மம் தானே நேராக இன்பதுன்பவுணர்வை உயிருக்குத் தருவதில்லை. நுகர் பொருளாய் உள்ள மாயா காரியப் பொருள்களை உயிரோடு கூட்டியோ, உயிரின் நீக்கியோ இன்ப, துன்ப நுகர்ச்சியை உயிருக்குத் தருகின்றது கன்மம். மாயா காரியங்களின் வழியாகவே இன்ப, துன்பங்கள் வரும் என்பது விளங்கும். அம்முறையில் மாயை உயிர் இன்ப, துன்பங்களை நுகருமாறு அவற்றுக்குச் சார்பாய் உள்ள தனது காரியப்பொருள்களைத் தந்து, கன்மத்திற்குத் துணை புரிவதால் மாயை துணைக் காரணமாயிற்று.
இனி, உவமையில் முளைத்தல் ஆகிய காரியத்திற்கு நிமித்த காரணமாய் அமைவது உமியாகும். உமி, முளைத்தற் சக்தி

32O விகிர்தி பங்குனி O
முளையைத் தோற்றுவிக்குமாறு அச்சக்தியைக் கெடாது காத்து நிலைபெறுமாறு செய்து உடன் நிற்கும். அதனால் உமி நிமித்த காரணம் எனப்பட்டது.
இந்த உமியைப்போன்று இருப்பது ஆணவமலம், அதுவே உயிருக்கு 'யான் எனது' என்னும் உணர்வைத் தருவது. அவ்வுணர்வு உள்ளவரையில் உயிர் செய்யும் செயலெல்லாம் கன்மம் ஆகிறது. எனவே, ஆணவம் உள்ள வரையிற் கன்மமும் உயிரைப் பற்றியேயிருக்கும்.
மேலும், ஆணவம் உயிரை உலகையே நோக்குமாறு செய்து உலகப் பொருள்களின்மேல் அவாவை உண்டாக்குகின்றது; உயிருணர்வில் விருப்பு வெறுப்புக்களைத் தூண்டி உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுத்துக் கன்மம் நுகர்ச்சியில் ஈடுபடுத்துகின்றது.
இந்த வகையிற் கன்மம் உயிரைவிட்டு நீங்காதவாறு அதனைக் காத்து நிலைநிறுத்தி நின்று அக்கன்மம் இன்ப, துன்பங்களைத் தோற்றுவித்தற்கு நிமித்தமாகிறது ஆணவம், அதுபற்றியே, இன்ப, துன்ப நுகர்ச்சியாகிய காரியத்திற்கு ஆணவம் நிமித்த காரணம் எனப்படுகின்றது.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்கினால் முளைத் தல் என்னும் காரியத்திற்கு முளைத்தற் சக்தி முதற்காரணமும்,
முனைவர் ஆ.ஆனந்தராசன்
தவிடு துணைக்காரணமும், உமி நிமித்த காரணமும் ஆதல்போல, இன்ப, துன்ப நுகர்ச்சியாகிய காரியத்திற்குக் கன்ம மலம் முதற்
காரணமும், மாயாமலம் துணைக் காரணமும், ஆணவமலம் நிமித்த
காரணமும் ஆதல் விளங்கும்.
பொருள் முளை:
கன்மம் - முதற் காரணம் [}瘤夺)篮熊 - தவிடு - துணைக்காரணம் ஆணவம் - உமி - நிமித்த காரணம்
ஆணவ மலம் உயிரின் அறிவைச் செயற்படவொட்டாது தடுத்து நிற்றலால் உயிருக்கு நேர்ப்பகையாதல் பற்றி அது பிரதிபந்தம் எனப்படும். பிரதி-எதிரானது.
கன்மம் மலம் ஆணவத்தின் வழியாக வந்து உயிரைப் பற்றுதலால் அது அநுபந்தம் எனப்படும். அநு - வழி; அநுபந்தம் - ஆணவத்தின் வழிவந்த கட்டு.
மாயா மலம் கன்மத்தோடு தொடர்புடையதாய், உயிரைச் சார்ந்துநின்று பிணித்தலால் அது சம்பந்தம் எனப்படும்.
முக்தியில் இம்மூன்றும் ஆன்மாவைவிட்டு நீங்கிவிடும். முளை, தவிடு, உமியினின்றும் நீங்கிய அரிசி பின் முளைக்காது.
ー> 19

Page 10
இந்துசாதனம் 50
அதுபோல, மலம் மாயை கன்மங்களின் நின்றும் நீங்கிய
ஆன்மாவிற்குப்பிறவி உண்டாதல் இல்லை.
7. வீடுபேறு
பிறவித்துன்பம்
182. தளைகளால் வரும் பிறவித் துன்பத்தை உயிர்கள்
உணராதது ஏன்?
உலகம் துன்பத்தையே மிகுதியாகக் கொண்டது. துன் பத்தைத் தரும் பல பிணிகளை உடைய உடம்பிலே அப்பிணி களுக்கு இடையிற் கட்டுண்டிருக்கும் உயிர், அதில் இருந்து கொண்டே உலகில் மிகச் சிறியதாய் உள்ள இன்பத்தை நுகர விரும்புகின்றது. அந்நிலையை ஞானசம்பந்தர் ஒர் உவமையில் வைத்து விளக்கிக் காட்டுகிறார்.
பாம்பின் வாயில் அகப்பட்டுள்ள தவளையின் வாயிற் பிடிபட்டிருக்கும் வண்டு, அந்நிலையில் தன்முன் உள்ள ஒரு பூவில் இருக்கும் சிறிய தேனை உறிஞ்சி உண்ண விரும்புதலைப் போன்றது என்கின்றார்.
இங்ங்ணம் அருளாளர் யாவரும் உலகின் துன்ப நிலையை நன்கு உணர்த்தியிருப்பினும் மக்கள் அதனைச் சிறிதேனும் உணர்கின்றார்களா? உலக வாழ்க்கையில் தம் உடலையும்; பெண்டிர், பிள்ளைகள், சுற்றத்தார் ஆகிய இவர்களது உடல்களை யும் ஒம்புதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின் றார்களேயன்றிப் பெரியோர் சொற்கேட்டு அதன்படி நடக்க யாரேனும் விரும்புகிறார்களா?
அவர்களது அறிவு சரியாகச் செயற்பட்டால் அன்றோ உலகின் துயர மிகுதியை உணர இயலும்? அகவிருளாகிய ஆணவத்தின் அதோ நியாமிகா சத்தி - கீழ்ப்படுத்தும் சத்தி அவர்களைத் தவறான வழியில் அல்லவா செலுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் உண்டாகும் திரிபுணர்வையன்றோ அவர்கள் உண்மை
யறிவு என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையிற் பிறவியைத் துன்பம் என்று அவர்கள் உணர
மாட்டார்; யார் உணர்த்தினாலும் அதனைக் கொள்ளவும் மாட்டார்.
இதனால், ஆணவ மலம் பரிபாகம் அடையாத பொழுது உயிர்கள் பிறவித் துன்பத்தைத் துன்பம் என அறியாமல் அதிலே வீழ்ந்து உழலும் என்பது விளங்கும்.
மல பரிபாகம்
183. பிறவியினின்றும் நீங்க வேண்டும் என்ற விருப்பம்
உயிருக்கு எப்பொழுதுநிகழும்? இறைவன் உயிர்களைப் பந்தத்துட்படுத்தி, பிறவித் துன்பத்
தில் அகப்படுத்தி உழன்று வரும்படி செய்வான். அவன் அங்ங்ணம்
செய்வது மலம்பரிபாகம் ஆதற்பொருட்டேயாம்.
இந்த மலபரிபாகம் உயிரறிவிற் சிறிது சிறிதாகவே நிகழும்.
அங்ங்ணம் ஆணவம் தேய்ந்து தேய்ந்துவர, அதிலிருந்து படிப்படியாக விடுபடும் உயிரினது அறிவு சிறிது சிறிதாக வளரும். அறிவு வளர்ச்சியால் முன்பு அறியாதிருந்த துன்பத்தை அறியும்.

3
2O விகிர்தி பங்குனி O
அதனால் துயரமே மிகுந்த பிறவியினின்றும் நீங்க விரும்பும்.
சத்திநிபாதம்
184. மலபரியாகத்தினால் நிகழ்வது யாது?
இறைவன் தனது திரோதான சத்தியால் மலங்களைக் கூட்டி
உயிர்களைப் பிறவித் துன்பத்தில் அகப்படுத்தி உழல்வித்து, அவை
அங்ங்ணம் உழல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
துன்புறுவதைப் பார்த்துக்கொண்டிருத்தல் தகுமோ? எனில், மருத்துவர் செய்யும் பல வகையான சிகிச்சை முறைகளால் நோயாளி துன்புறுதல் இயற்கை. அத்துன்பத்தைப் பார்த்துக் கொண்டு அது பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாரோ என்று மருத்துவரைக் குறைசொல்ல முடியுமா? நோய் நீங்கவேண்டு மாயின் சிகிச்சை முறையினால் வரும் துன்பத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதுபோன்றதே இறைவன் உயிர் களைப் பந்தத்துட்படுத்தலும்.
உயிரைப்பற்றியுள்ள தீராத நோயாகிய ஆணவ மலத்தைத் தீர்க்கும் பொருட்டே அவன் உயிர்களைப் பந்தத்துட்படுத்திப் பிறவித் துன்பத்தைத் தருகின்றான். இதுதான் மல நோயைத் தீர்க்க அவன் மேற்கொள்ளும் சிகிச்சை முறை.
நாக்கு பித்தத்தில் மூழ்க்கியுள்ள வரையில் தித்திப்பதாகிய பால் அதற்குக் கசப்பாகவே தோன்றும். அதுபோல, உயிர்கள் பந்தத்துட்பட்டிருக்கின்றவரை, அவ்வாறு பந்தத்துட்படுத்தும் அருள் உயிர்களுக்குத் துன்பமாகத் தோன்றும். அதுபற்றி, அருளாகிய திரோதான சத்தி'மறக் கருணை எனப்பட்டது.
உயிர் நோயாய் உள்ள ஆணவமலம் பரிபாகம் ஆகிவிட்டால்வலியிழந்து நீங்கும் நிலைமையை அடைந்துவிட்டால், உடனே அந்த மறக்கருணை அறக் கருணையாக - அருட்சத்தியாக மாறி உயிரிற் பதியும். அப்பதிவு சத்திநிபாதம்'எனப்படும்.
மலபரிபாகம், சத்திநிபாதம் இரண்டும் நிகழ்கின்ற இடம் உயிரேயாகும். மலத்தின் சக்தி எந்த அளவுக்குத் தேய்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு அருட்சக்தியும் படிப்படியாக உயிரின்கண் மேம்பட்டு விளங்கி நிகழும்.
இருவினையொப்பு 185. ஒருவருக்கு மலபரிபாகம் ஏற்பட்டுள்ளது என்பதை மற்றையோர் தெரிந்துகொள்வதற்கு அறிகுறி ஏதும் உள்ளதா? ஒருவரது அறிவைப்பிணித்திருந்த ஆணவ மலத்தின் ஆற்றல் தேயத் தொடங்குமானால் அவருக்கு, முன்பு இருந்த உலக நாட்டம் குறையத் தொடங்கும். அவர் உள்ளத்திற் கடவுள் உணர்ச்சி மிகுந்துவரும். இன்பம் வந்தபோது ஒரேயடியாக மகிழ்ந்து போகாமலும், துன்பம் வந்தபோது ஒரேயடியாகக் கவலையில் ஆழ்ந்துபோகாமலும் எது வந்தால் என்ன?’ என்ற உணர்வோடு இரண்டையும் வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலை உண்டாகும். இந்நிலை'இருவினையொப்பு எனப்படும்.
உயிரறிவை மறைத்திருந்த மல சத்தி தேய்ந்து அறிவு வளரும்போதே இந்த இருவினையொப்பு ஆகிய சமநிலை நிகழும்.
ஆதலால் இச்சமநிலை வருவதற்கு மலபரிபாகமே காரணமாகும்.
LO

Page 11
இந்துசாதனம் 5.O
உலகியலில் விருப்புவெறுப்பின்றி இருத்தலும், இன்ப, துன்பங்கள் வரும் நேரங்களில் அவற்றாற் பாதிப்புறாது வழக்கம் போலத் தனது கடமைகளைச் செய்துகொண்டிருத்தலும் ஆகிய போக்கினைச் சிலரிடம் கண்டு ‘எப்படி இவரால் இப்படியிருக்க முடிகிறது?’ என்று எண்ணி வியப்படைகிறோம்; புறத்தில் றிகழும் அவரது செயல்களின் வழியாக வினையொப்பு ஆகிய அவரது
பக்குவநிலை வெளிப்படக் காணலாம்.
எனவே, ஒருவர் மலபரிபாகம் வரப்பெற்றவர் என்பதை இந்த முறையில் நாம் தெரிந்துகொள்ளலாம். இதனால், இருவினை யொப்பு மலபரிபாகத்தின் அறிகுறி என்பது புலனாகும்.
பக்குவம் 183. பக்குவம் என்று எதனைக்குறிப்பிடுகிறார்கள்?
உயிரின் அறிவு மலப் பிணிப்பினின்றும் விடுபட்டுப் படிமுறையால் வளர்ந்து, மேன்மேலும் விளங்கிவரும் நிலையே பக்குவம் ஆகும்.
மேலே கூறிய மலபரிபாகம், இருவினையொப்பு, சத்தி நிபாதம் என்னும் மூன்றும் ஒருங்கே நிகழும் நிலையில் உயிர் இப்பக்குவத்தை அடையும்.
அருட்சத்திப் பதிவிற் படிநிலைகள்
187. அருட்சத்தியினதுபதிவில் உள்ளபடிநிலைகள் யாவை?
சத்திநிபாதம் ஆகிய அருட்சத்திப் பதிவு மந்ததரம், மந்தம்,
தீவிரம், தீவிரதரம் என்னும் நான்கு படிநிலைகளாக நிகழும்.
மிக மெதுவாக நிகழ்தல் ஆகிய தொடக்க நிலை மந்ததரம் ஆகும். பின், மெதுவாக நிகழ்தல் மந்தம் ஆகும்.
விரைவாக நிகழ்தல் தீவிரம் ஆகும். மிக விரைவாக நிகழ்தல் தீவிர தரம் ஆகும். தீவிரதரம் அதிதீவிரம் என்றும் சொல்லப்படும்.
ஈரவிறகில் நெருப்புப் பற்றுதல், காய்ந்த விறகில் நெருப்புப் பற்றுதல், துணியில் நெருப்புப் பற்றுதல், சமையல் வாயுவில் நெருப்புப் பற்றுதல் என்பவற்றைப் போன்றவை இந்நான்கு நிலைகளும் என்றுகொள்ளலாம்.
188. சத்தி நியாதத்தின் தொடக்க நிலையில், அதாவது மந்ததரம் என்ற முதல் நிலையில் உயிருக்கு நிகழ்வது என்ன? ஆணவ மலம் பரிபாகம் அடையாத பொழுது உயிர் பிறவித்
துன்பத்தைத் துன்பம் என அறியாமல் அதிலேயே உழன்று
வரும்படியாக மறைத்தலைச் செய்துவந்த முதல்வன், ஆணவமலம்
பரிபாகத்தை அடையலுற்ற இம்முதல் நிலையில் முன்னைய
மருட்பார்வையை மாற்றி, அருட்கண்ணால் நோக்கி அவ்வுயிரை
ஞானநெறியாகிய உய்தியடைதற்குரிய நெறியிற் செலுத்துவான்.
உய்யும் நெறி
189. உயிர்களுக்கு உய்யும் நெறியாவதுயாது?
சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் தான் உயிர்களுக்கு
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த இதழில் இடம்பெறா சிவம் அவர்களின் கட்டுரைத் தொடர்) அடுத்த இதழி

32O விகிர்தி பங்குனி O
உய்யும் வழி என்று சித்தாந்த நூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன; இம்மூன்றையே தவம் என்றும் ‘சிவ புண்ணியம் என்றும் சிறப்பித்துக் கூறுகின்றன.
முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை நோக்கிச் செய்யும் வழிபாடுகளே இவை என நீ உணர்தல் வேண்டும். இவை மூன்றும் படிமுறையில் அமைந்தவை.
பல பிறவிகளினின்றும் விடுபட்டு மக்கட் பிறப்பை அடைதல் என்பது ஒருவன் கடலைக் கையால் நீந்தின செயல்போல அருமையானது. மக்கட் பிறப்பிலும் நன்மக்கள் வாழ்கின்ற நாட்டில், நல்ல நூல்கள் வழங்குகின்ற சூழலில் தோன்றுதல் சிறந்த பேறாகும். அதிலும் சரியை முதலிய வழிபாட்டு நெறியில் நின்று வீடு பெறுதற்குரிய சைவ சமய நெறியில் வந்து பிறத்தல் மிகச் சிறந்த பேறாகும்.
சரியை முதலியவற்றைச் செய்தற்குரிய சைவ சமயத்தில் வந்து பிறப்பதற்கு நாமெல்லாம் முற்பிறப்பிலே மிக்க புண்ணி யத்தைச் செய்திருக்கவேண்டும் என்பதில் ஐயமே இல்லை.
சிவபுண்ணியங்கள் 190. சரியை முதலியசிவபுண்ணியங்கள் எவ்வாறுநிகழும்?
சிவபிரானே முதற்கடவுள். அவனே உலக முதல்வன்; மற்று யாரும் தன்னொப்பார் இல்லாதான் என அப்பெருமானையே தலைவனாக உணர்ந்து ஆசிரியர்பால் தீக்கை பெற்று அவரது சொல்வழி நின்று சரியை, கிரியை, யோகங்களாகிய சிவபுண்ணி யங்களை விரும்பிமேற்கொள்ளுதல் வேண்டும்.
புறத் தொழிலால் இறைவனது உருவ நிலையை நோக்கிச் செய்யும் வழிபாடு சரியை எனப்படும். அதுவே முதிர்ந்து கிரியையாகின்றது.
கிரியையாவது முதல்வனது அருவுருவம் எனப்படும் மந்திரத் திருமேனியை நோக்கிப் புறம், அகம் என்னும் இரண்டாலும் வழிபடுவது இதன் முதிர்ச்சியே யோகமாகும்.
யோகமாவது முதல்வனது அருவத் திருமேனியை நோக்கி அகத்தே வழிபடுவது.
சரியைக்கு உரிய தீக்கை சமய தீக்கை. கிரியைக்கு உரிய தீக்கை விசேட தீக்கை. கிரியையிற் செய்யப்படும் அகப்பூசையின் தொடர்ச்சியாகவே யோகம் அமைவதால் யோகத்திற்குத் தனித் தீக்கையில்லை.
மந்ததரம் என்னும் முதற் சத்திநிபாத நிலையில் உயிர் சரியையாகிய வழிபாட்டில் ஈடுபடும். மந்தம் என்னும் அடுத்த சத்தி நிபாத நிலையிற் கிரியையினை மேற்கொள்ளும். பின் தீவிரம் என்னும் சத்தி நிபாத நிலையில் யோகநெறியில் நிற்கும்.
இவ்வாறு சத்தி நிபாத நிலைகளுக்கு ஏற்ப இவ்வழிபாடுகள் படிமுறையில் நிக்ழும்.
த "அற்புதக் கருத்துக்களும் ஆனந்த ரசனையும்" (கோப்பாய் லிருந்து தொடரும் என்பதை அறியத் தருகின்றோம்.

Page 12
இந்துசாதனம் 5,O
திருச்சிற்றம்பலம் oIIIúgas é9556oorfir oIIIooroII JTorofloorth வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
விகிர்தி வூல பங்குனி மீ" 1ஆம் உ (15.03.20r)
ിജ് ഖങ്ങ Galledushunib
ஒரு காலத்தில் உலக நாடுகள் எல்லாவற்றிலும் முடியாட் சியே நடைமுறையில் இருந்தது - அரசபரம்பரையினரே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள் என்பதும்
நாட்டின் சகல வளங்களையும் தங்களதும் தங்கள் குடும்பத்தினரதும் நலனுக்கும் சொகுசுக்கும் மகிழ்ச்சிக்குமாகப் LuIGöTU(3ööj6gs 2 IIILI L6o 2 f6oLO56o6IIuph ögpJGoö56o6r யும் அதிகாரங்களையும் அனுபவித்த அவர்கள் தங்களது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யும் நிலை உருவாகக் கூடாது என்பதற்காகவே அவர்களுக்குச் சில நன்மைகளையும் வசதிகளையும் செய்தார்கள் என்பதும்
மக்கள் மத்தியில் தங்கள் ஆட்சி சம்பந்தமாக அதிருப்தியோ வெறுப்போ இருப்பதை உணர்ந்த - ஊகித்த - வேளைகளி லெல்லாம் சாம - பேத - தான - தண்டங்கள் மூலம் அவற்றை அடக்கினார்கள்- இல்லாதொழித்தார்கள்- என்பதும்
வரலாறு கூறும் செய்திகள். அதேவேளையில் - மக்களின் நலன் - மேம்பாடு - என்பவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நல்லாட்சி செய்த மன்னர்களும் இருந்தார்கள் என்றும்
அவர்களுள் இந்தியாவை ஆண்ட - தமிழ் நாட்டை ஆண்ட சில மன்னர்களும் அடங்குவர் என்றும்
வாழ்க்கையின் நிரந்தர விழுமியங்கள் - தர்மக்கோட் பாடுகள் போன்றவற்றிலே தெளிந்த ஞானமும் மிகுந்த நம்பிக்கையும் கொண்டிருந்த முனி சிரேஷ்டர்கள் - தவயோகிகள் போன்றவர்களின் வழிகாட்டலில்
மக்களின் வாழ்க்கைச் சிறப்பை மட்டுமல்லாமல் அவர் களின் ஆன்மீக ஈடேற்றத்தையும் இலட்சியமாகக் கொண்டு நல்லாட்சி செய்தார்கள் என்றும் -
இலக்கியங்களும் இதிகாசங்களும் விபரிக்கும் செய்திகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்து கின்றனர்.
எனினும்கல்வி வளர்ச்சி - அவ்வப்போது தோன்றிய சிந்தனை யாளர்கள் பலர் சுதந்திரம் - சமத்தும் - சகோதரத்துவம் சம்பந்த மாக வெளியிட்ட ஆக்க பூர்வமான கருத்துக்கள் - விஞ்ஞான ஆராய்ச்சியின் விளைவாகப் பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட
 

3.2O விகிர்தி பங்குனி O
மாற்றங்கள் போன்றவை ஒன்று திரண்டுமன்னராட்சியைமடியச் செய்ததும்-மக்களாட்சியை மலரச் செய்ததும்
மக்களை மக்களே ஆள்கின்ற - மக்கள் தம்மைத் தாமே ஆள்கின்ற - இந்த ஆட்சி முறையை மக்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றதும்
Inisasonrmlaf என்பது Lnaiss6floor பிரதிநிதிகளின் ஆட்சியாகப் பரிணமித்ததும்
மக்கட் சமுதாயத்தில் இயல்பாக இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் - கொள்கைகள் - விருப்பங்கள் - போன்றவற்றுட் சிலவற்றையோ பலவற்றையோ பிரதிபலிக்கின்ற அரசியற் கட்சிகள் தேர்தலிற் பெரும் பங்கு வகிப்பதும்
நாமறிந்த உண்மைகள்-நாடறிந்த உண்மைகள் வெறும் சொல் அளவுடன் நிற்காமல் - மக்களாட்சித் தத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை - அதன் உயர்ந்த நோக்கத்தை - உள்ளத்தால் உணர்ந்து - அதை விரைவில் அடையக்கூடிய நடவடிக்கைகளை அந்தரங்க சுத்தியுடன் மேற்கொள்பவர்கள் மட்டும் மக்களாற் தெரிவு செய்யப்பெற்று ஆட்சியாளர்களாகப் பணிபுரிந்தால் -
உலகின் ஈடினையற்ற ஆட்சிமுறையாக மக்களாட்சி கணிக்கப் பெற்று - ஏற்றுக்கொள்ளப்பட்டு - அது என்றுமே நின்று நிலவும் என்பதும் உண்மையேயாயினும்
துரதிர்ஷ்டவசமாகஇந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சமீப காலமாகவே வெறும் கனவாகவும் - கற்பனையாகவும் கானல் நீராகவும் மாறி வருவதும்
இரண்டொரு தடவை ஆட்சிக்கதிரையில் அமர்ந்து - ஆடம்பரச் சொகுசில் மிதந்து - அதிகார போதையில் மயங்கிய வர்கள்
அந்த நிலையைத் தம் ஆயுட்கால உரிமையாக்க முனை வதும்-தம் வாரிசுகளுக்கு"முதுசொம்" ஆக்க முயல்வதும்
அதைத் தட்டிப் பறிக்க முடியாதபடி - தடுப்புச் சுவர்களை எழுப்பி-அவற்றுள் மிடுக்குடன் நின்று அட்டகாசம் புரிவதும்
தம் எதிரிகள் எனத் தாம் கருதுவோரின் தலைகளை உருளச் செய்வதில்-தயவுதாட்சண்யமின்றிச் செயற்படுவதும்
ஜனநாயகப் போர்வையிற் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தும் சதிமுயற்சியாகவே சான்றோர்களாற் கருதப்படுகின் spoor -
ஆண்டவனின் அருட் கடாட்சத்தில் அபரிமித நம்பிக்கை வைத்து - அறம் சார்ந்த கருத்துக்களையும், உண்மை, அஹிம்சை, நேர்மை போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளையும் அரசியலிற் புகுத்தி-தன் ஆன்ம பலத்தால், ஆங்கிலேயரின் ஆயுத பலத்தை முறியடித்து நாட்டிற்குச் சுதந்திரத்தை வென்றெடுத்து மகத்தான சாதனை புரிந்த மஹாத்மா காந்தியடிகளைத் தம்மவர் எனக் கொள்வதிற் பெருமை அடையும் இந்திய ஆட்சியாளர்களும் -
தமிழ் இனத்தின் தனிப் பெருமையையும் தமிழ்ப் பண் பாட்டின் தனிச் சிறப்பையும் சொல்லிச் சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ள தமிழக ஆட்சியாளருங்கூட
வாரிசு ஆட்சியை வாழவைத்தே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதும்
அந்தவகையில் நாடுகளுக்கும் பிழையான வழிகாட்டி களகப் பிறழ்வதும்
நெஞ்சைக் கசக்குகின்றனநினைவைப்பிழிகின்றன. இந்த j866oul6 =
நாட்டிலே தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகின்ற வேளைகளில் - அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந் தோறும் நான் அவதாரம் எடுக்கின்றேன் என்ற கண்ணனின் கீதாவாக்கியத்தை நினைந்து
அந்த அவதாரம் மிக மிக விரைவில் நிகழ வேண்டும் என அந்த ஆண்டவனையே வேண்டுவதைத் தவிர சர்வாதிகார முயற்சிகள் நிர்மூலமாவதற்கு வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. 人

Page 13
இந்துசாதனம் 5.O
சமயமும் சமூகமும்
முருகன் அருள் ஆட்சி புரியும் பல இடங்களில் தொண்டை மானாறு செல்வச்சந்நிதி ஆலயம் ஒன்றாகும். ஆற்றங்கரையான் என அழகாக அழைக்கப்படும் இத்திருத்தலம் ஆகமம் சாராத ஆலயமாகும். இலங்கையிற் குறிப்பாகத் தமிழர் வாழும் பகுதிகளில் "வேல்" வழிபாடு நிகழ்வதைப் பலரும் அறிவர். அறிவுக்கு முதன்மை கொடுக்கும் தமிழினம் அறிவின் அடையாளமாக வேலினைப் பிரதிஷ்டைசெய்து வழிபடுவதில் வியப்பில்லை.
இறைவனைப் பயபக்தியுடன் மனம் ஒன்றிநின்று வழிபடுதல் சிறப்பான வழிபாடாகும். இக்கருத்தினையே திருமூலநாயனார் "புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்" எனக் குறிப்பிடுகிறார். தெய்வத்தைக் கூவி அழைத்துக் கண்ணிர்மல்கப் பிரார்த்தனை செய்யும் முறை நம் பழைய முறையாகும். இத்தகைய வழிபாட்டு முறையைச் செல்வச் சந்நிதியிற் சிறப்பாகக் காண்கின்றோம்.
சமயம் சமூகத்தை நோக்கியதாக அமைய வேண்டும். நம் முன்னோர்கள் ஆலயத்தை அமைத்ததன் நோக்கம் ஆன்மா லயப்படுவதற்கு மட்டுமல்ல. சமூகத்திற்கு தொண்டு செய்வதற் காகவுமே ! ஆலயத்தின் திருக்குளம் திருமடம் அமைக்கப்பட்டது விரிந்த சிந்தனையின் விளைவாகும். அப்பூதியடிகளின் "சமூகப்பணி" நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் உள்ள "சந்நிதியான் ஆச்சிரமம்" முன் உதாரணமாகச் செயற்பட்டு வருகிறது. அன்னதானம் மட்டுமல்ல, மருத்துவசேவை, ஏழைகளுக்கு உதவுதல், இலவசமுன்பள்ளி, ஞானச்சுடர் இதழ் வெளியீடு எனப் பலதரப்பட்ட சமூகப்பணிகள் இங்கு நடைபெறுகின்றன.
சந்நிதி முருகன் "அன்னதானக் கந்தன்" என அழைக்கப் படுகிறான். இதற்குச் சான்று சுற்றாடலிலிருந்த மடங்களாகும். இன்று பல மடங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டபோதிலும், இரண்டொரு மடங்கள் சிறப்பாகச் செயற் படுகின்றன. இவற்றில் ஒவ்வொருநாளும் அன்னதானப் பணி செய்து வருவது சந்நிதியான் ஆச்சிரமமாகும். போர் நடைபெற்ற காலங்களிலும்கூடத் தவறாது இப்பணி நடைபெற்றதை யாவரும் அறிவர். முருகனின் திருவருளே இதற்குக் காரணமாகும். ஆச்சிரமத்தில் உணவு உண்ணும்போது கிடைக்கும் அனுபவம்பற்றி விசேடமாகக் குறிப்பிட வேண்டும். இங்கு தொண்டுசெய்யும் இளைஞர்கள் உணவு பரிமாறும் அழகு ஒருபுறம், மறுபுறம் மக்கள் எதையும் ஒதுக்கி வைக்காமல் "முருகனின் பிரசாதம் எல்லோர்க்கும் ஒத்துக்கொள்ளும்" எனும் முறையில் இலையில் மிகுதியில்லாமல் உண்ணும் பழக்கம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அன்னதானப்பணிக்குத் தேவையான மரக்கறி, அரிசி அனைத்தும் வந்து குவிவது சந்நிதியான் திருவருள்தானே!
சந்நிதியான் ஆச்சிரமத்தின் மக்கள் சேவைக்கு மிகவும் சிறந்த உதாரணமாக அமைவது "மருத்துவசேவை"யாகும். யாழ்.

32O விகிர்தி பங்குனி 01
சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல்
போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சிலர் உட்படத் தகுதியான வைத்தியர்கள்மூலம் முற்றிலும் இலவசமாக இச்சேவை நடைபெற்றுவருகின்றது. நல்ல விலையுயர்ந்த மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன. மக்களுக்கும், ஆலயச் சுற்றாடலில் தங்கியுள்ள முதியவர்களுக்கும் அளப்பரிய சேவை இதன்மூலம் நடைபெறுகின்றது. இதற்குச் சகல வகையிலும் உதவும் வள்ளல்கள் நெஞ்சாரப் போற்றப்படவேண்டியது அவசியமாகும்.
ஏழை மக்களுக்கு உதவும் பணியும் சிறப்பாக நடை பெறுகின்றது. ஏழை மாணவர்களின் கல்விக்கு மாதந்தோறும் பண உதவி வழங்கப்படுகின்றது.
துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களுக் குத் தையல் இயந்திரம், ஆண்களுக்குத் தொழில் செய்வதற்குத் தேவையான உதவிகள் விளம்பரமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பயனடைந்துள்ள பலரின் வாழ்த்துரைகள் நிறைவு தரும் அதிர்வுகளாக எதிரொலிக்கின்றன.
உணவு மட்டுமல்லாமல் கல்வியும் அடிப்படைத் தேவையே இதனையுணர்ந்த ஆச்சிரமத்துச் சுவாமிகள் முற்றிலும் இலவசமாக ஒரு முன்பள்ளியைச் சிறந்த ஆசிரியைகள்மூலம் நடத்தி வருகின்றார். ஏழை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களின் சகல தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவசேவை, முன்பள்ளி போன்றவை, தனியான கட்டடத் தொகுதியில் ஆச்சிரமத்தின் பிற்பகுதியில் நடைபெற்று வருகின்றன.
சைவத்தமிழ் வளர்ச்சிக்கு உதவும் "ஞானச்சுடர்" எனும் மாதாந்த இதழ் கடந்த 14 ஆண்டுகளாகத் தவறாது வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமயம், மொழி தொடர்பான இதழ்களை வெளியிடுவது கஷ்டமானதாக அமைந்துள்ள இக்காலகட்டத்தில் ஞான வடிவான கந்தப்பெருமானின் வேலினை முகப்புப் படமாகக் கொண்டு கம்பீரமாக ஞானச்சுடர் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதழ் வெளியீட்டிலுள்ள பிரச்சனை கட்டுரைபெறுவதும் இதழை விற்பனை செய்வதுமாகும். ஞானச்சுடருக்கு ஆர்வலர்களால் கட்டுரைகள் எழுதிக் குவிக்கப்படுவதும், இதழ் வெளியாகிய மறுதினம் பிரதி முடிந்துவிடுவது என்பதும் முருகன் திருவிளை யாட்டால்தானே!" எல்லாம் அவன் செய்கின்றான்; என்னில் ஒன்றுமில்லை" எனும் ஆச்சிரம சுவாமிகளின் வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஒரு திறந்த வெளி முதியோர் இல்லமுமாகும். ஏறத்தாழ 150 பேருக்கு மேலாக, ஆணும் பெண்ணுமாக இச்சூழலில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது பிள்ளை களினாற் புறக்கணிக்கப்பட்டவர்கள், கணவர் மனைவி சண்டை, யுத்தத்தினாற் குடும்பத்தை இழந்தவர்கள், நோயாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள், இருப்பது தெரியவந்தது. இவர்கள் ஏனைய முதியோர் இல்லங்களில் இருப்பதுபோல அல்லாமல் கோயிற் சூழலில் ஆற்றிற் குளித்து, ஆற்றங்கரையானை வழிபட்டு,
23ஆம் பக்கம் பார்க்கு
يخصصعصص=

Page 14
இந்துசாதனம் 5. O3
438.
439.
440.
441.
442.
443.
444.
445.
446.
447.
448.
449.
நாவலர் சரிதமோது கவிஞர் திரு. இரான
(இந்துசாதனம் - 2011 மாசி 05 ஆ
வாசரை வழுத்தவாற்றும் வைதிகக் கிரியை சொல்லும் பூசகர் வேதம் மார்க்கத்தின் பொதுநர லாகுமென்றும் ஆசகல் முத்தியீயாதவர்நிந்திசமய தீட்சை பேசிடுமாக மந்தான் சிறப்புநரலாகுமென்றும்.
பதிபசு பாசமென்றே பகருமத்திரியதார்த்த கதியிலக்கணங்களெல்லாம் காட்டியப் பரார்த்த பூசை விதியதும் விளம்பியவ்வா கமஞ்சொலுதீட்சைதானே அதியுயர் தீட்சையென்றும் அவைமல பாசமாகும்.
மூன்றையும் நீக்குமென்றும் முன்னரெம் சிவபி ரானார் ஆன்றிடு தில்லைநின்றே அருட்சிவகாமிகாண மான்றிருச்சூலமோடுமழுவையும் கரத்திற் தாங்கி தான்றரு நிருத்தம் கண்டே தரிமுனிபதஞ்ச லியார்.
நிதம்நடமாடுநாதன்நின்றருள்தில்லையென்னும் சிதம்பர வாலயத்தே செய்திடுகிரியைக் காக இதந்தருமாக மக்கள் இயம்பிடுமுறைமை பேணி பதந்தனைப் பரவ வென்றே பத்ததிசெய்தாரென்றும்.
ஆதியிற் தில்லை வாழ்ந்த அந்தணர் தீட்சைபெற்றும் தீதக லாக மத்தே தேர்ச்சியுற்றாற்ற விப்போ ஒதரி தீட்சைநீத்தாகமவறிவேதுமில்லா மாதவர் மாறியாற்ற மதிபிரமாணங் கேட்டும்.
ஏதமிலாக மந்தான் எங்களின் தகுதிப் பாடென் றோதிடுநாவலர்மேல் உறுனரியெனவெகுண்டே தீதுரை கூறித்தாற்ற தெய்விகரதற்கஞ்சாதே காதலுட் பிரமாணங்கள் காட்டினார் சைவர் ஒர.
நூலுரையவையெடுத்தேநவன்றதிற் பிழையுண் டாலவ் மாலினைத்தீர்க்குமாறோர் மார்க்கம தறிந்திடாதே ஒலமிட்டெனைத்தாஷித்தும் ஒருங்கிணை போலிச்சைவர் பாலுறை தீட்சிதர்மார் பரிதாபம் பாருமென்றார்.
மூண்டெழுதீட்சி தர்மார் முனிவுடனொன்று சேர்ந்தே ஈண்டவர்க்கெதிரதாக இறையவன் பொதுவிற் கூடிக் காண்டகு பாடசாலைக் காவடிப்பாலையேற்றே ஆண்டகைக் காற்றமாட்டோம் அபிஷேக மென்று தீர்த்தார்.
நீடுவிபூதியோடுநிலமணிருத்தி ராக்கம் சூடிடுமேனிகொண்டார் சிவனின் வாகினைத்தம் வாயாற் சாடியும் தரதிப்போரீந்த திரவியம் சிவனாருக்கே ஆடிடலாகா தென்றே அறையுதீட்சிதர்கள் மாரின்.
பேதமை கண்டுந்தாங்கள் பிடிசிவதீட்சைபெற்றே ஏதமிலநட்டானங்களியற்றினர் சிந்தியாதே தரதனைப் பூசி சைவர் தாஷகரோடு கூடும் பாதகநிலைக்கென் செய்வேன் பரிதாபம் பாரிலென்றார். வள்ளலாரும் நாவலரும் கள்ளமா வினையில் மூழ்கு கருங்குழிராம லிங்க வள்ளலாரென்று பின்னாள் வழங்கினரியற்று பாடல் தெள்ளுலாந்திருவருட்பா விதவென்றும் முறைகள் யாவும் தள்ளியாமிழுைத்த பாடல் தயக்கம தேதுமின்றி.
உன்றனாலயங்கள் தோறும் உறுபரன்பூசை நேரம் நின்றுநீரோது மென்றே நிலமிசைமாந்தர் தம்மை நன்றுமே தூண்டல் கேட்டுநாவலர் சகித்திடாதே சென்றுளே யுறைத்தலோடு செழுமறை தழைக்க வேண்டி,

i2O1 விகிர்தி பங்குனி O
ம் நற்றமிழ் மாலை
Fu IIT ÜBöötsjöIraF6ör
பூம் பக்கத்தின் தொடர்ச்சி.)
450. ஆங்கவன் கோவிற் பூசை அவன்நித்ய நைமித்(தி)யங்கள்
தீங்கற நிகழ்த்துங்காலை திருமுறையவைகள் தாமே பாங்குநின்றேத்திப் பாதம் பரவிட வுகந்த தென்றே ஈங்குசெல்லிடங்கள் ெேதாறும் எடுத்தரை செயவிழைந்தார்.
451. சிவஅநுபூதிபெற்ற செல்வராம் நால்வர் போற்தான் தவரருளாலே யோதாதுணர்ந்தனரென்றும் பாடல் அவருரையாகக் குரவரளிதிருமுறையைப் போல இவரது பூதிபெற்றே இயம்பருட்பாக்களென்றும்.
452. வாசகரருளுகோவை வாசக மிரண்டும் மன்றின்
வாசரங்கவர்கரத்தால் வரைந்தது போல வந்தென் நேசமுள் பாடலேற்றுநிலமிசை வரைவாரென்றும் ஈசனென் முன்னிருந்தே எழுதிட வருவானென்றும்
453. பொன்னினம் பலத்திலுள்ளார் பூங்கரங்கொடுக்கவென்றே
பொன்னெழுத்தானியோடுபொன்னேடும் வேண்டுமென்றும் இன்னவவ்வேலையான்செய் இரசவாசத்தாற் பெற்ற பொன்னினைக்கொண்டேயெல்லாம்பூதலம் முடிப்பமென்றும்
454. திரவிய மவைகள் தேடிச்சிதம்பரம் போல நீங்கள் பரவிட பார்ப தீபுரம் பதியதை நிறுவியாங்கே விரவிநின்றாடக் கனகசபையதும் நாட்டியங்கே அரவினையணியுநாதன் அனைவருங்காணுமாறே.
455. அரும்பகல் சபையில் நின்றே ஆடிடச்செய்வனென்றும்
மருந்ததில் லாது மாண்டால் மறுபடி தருவமென்றும் வரும்மகவிலார் தமக்கப்பாக்கியமளித்துப் பார்வைப் பெருங்குறைநீக்கிக் கேட்கார்பேசிடச்செய்வமென்றும்.
456. அரும்பசியுடைய யார்க்கு மன்னமதளிப்பமென்றும்
விரும்பிடு தண்ணிராலே விளக்கதையெரிப்பமென்றும் அருந்தவ ரிருவர் தேடி யறிந்திடற் கரியநாதன் திருவடி நோவச்சென்னைத் தெருவுளகற்கள் மேலே,
457. நிர்த்தனார் நடந்து வந்தே நிகரரிமகனே யென்றே
கர்த்தனாமெனையழைத்துக் கதவினைத் திறக்க வைத்தே வர்த்தமானவைகள் சொல்லிவாங்கிக்கொள்ளிதனையென்றே அர்த்தராத் திரியிலன்போடளித்தனர் தமக்கென்றென்றும்.
458. நாலதன் பொருளை வேண்டநவன்றிடக் கோவில் சென்றே
மாலொடு பிரமன் காணா மலரடி கூடித்தானும் பாலொடுநீர்கலந்த பான்மையில் மறைந்தார் போல சீலமுள் நானுஞ் சேர்வன் சிதம்பரத்திறையை யென்றார்.
459. அவஞானமில்லார் பேச்சையருந்தவர் பொறுத்தபோதும்
சிவஞானச் செல்வரானோர் திருமுறைப் பாடல் விட்டே பவஞானப் பாடலைப்பாராயணஞ் செய்தே தம்மைத் தவஞானச் செல்வரோடு சமத்துவரென்றுங் கூறல்.
460. கேட்டுளஞ் சகிக்கலாற்றாத்திருவினர்சனங்கள் முன்னே
நாட்டிடுபாடலெல்லாம் தவில்பசு கரணம் நீக்கி தீட்சையுள் வாழ்வு வாழ்ந்து சேர்சிவ கரணம் பெற்றே ஆட்கொழுநாயன்மாரால் அருளிடப்பட்ட தென்றும்.
461. வேதம் நான் கினிலும்பார்க்க மேன்மைகள் கொண்டதென்றும்
ஏதமிலாலயத்தே இயற்றிடுகரும மெல்லாம் ஒதிடத்தக்கதென்றும் உமையவ ளறியு மாறே
ச் சிவனா ரீந்த சிவரகசியமுஞ் சொன்னார். தீதற ፴፵j PÉb ( ܣܺ...(

Page 15
ஆலயங்கள் ஏன் வழிபாடுகள் எத
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், பார்க்குமிட
மெங்கும் நீக்கமற நிறைந்து அனைத்திலும் சங்கமமாகிக் கட்புலனுக்கு அப்பாற்பட்டு நிற்கும் பரம்பொருள், ஆன்மாக்கள் உய்திபெறும் பொருட்டு உருவத்திருமேனி கொண்டு காட்சிதரும் இடங்களே ஆலயங்கள் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். புலன் வழிப்பட்டு அலையும் மனிதனை ஒரு மனப்படுத்தும் இடமாக இவ் ஆலயங்கள் அமைகின்றன. அவன் ஒரு மனப்படுத்தப்பட்டு புனிதனாகும்போது தெய்விகம் அவனிற் குடிகொள்கிறது. நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினை யாது ஒருபோதும் இருந்தறியேன்' என்ற பக்குவநிலைக்கு உள்ளாகி நின்று அவன் நெஞ்சுருகி பக்திப் பரவசத்தோடு பாடிப்பரவும் போது, சிறந்தடியார் சிந்தனையுள் தேனாக ஊறி நிற்கின்றான் இறைவன் என்பது, ஆன்மீக சீலர்களின் அனுபவ உண்மை. ஆன்மா ஒடுங்கும் இடம், ஆன்மா இலயித்திருக்கும் இடம், ஆன்மாவில் உள்ள ஆணவமலம் அடங்கும் இடம், என்றெல்லாம் ஆலயத்திற்குப் பொருள் கூறுவர். எமது சமய மரபும், கலைமரபும், சங்கமமாகும் இடமாகவும், ஆசாரசீலர்களாகவும், அனுட்டான சீலர்களாகவும், அடியார்கள் வந்து ஒன்று கூடும் இடமாகவும், நமது பழம்பெரும் பண்பாடும், கலாசார விழுமியங்களும், சமய நெறிகளும் கட்டிக்
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், ஆன்மாக் காட்சி தரும் இடம் ஆலயம். ஆன்மா ஒடுங் அடங்குகின்ற இடமும் அதுவே. உடலுக்கும் உடலா உயிாநலத்துக்கும் ஆன்மநிறைவுக்கும் ஆலய
காக்கப்பட்டுப் பேணப்படும் இடமாகவும், ஆலயங்கள் மிளிர்ந்து
கொண்டிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகின்றது.
இறைவனை வழிபட ஆலயத்திற்குச் செல்வதில் தனிச்சிறப்பு உண்டு. அனைவருடைய பக்தி உணர்வும் ஒருமுகப்பட்டு ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் ஆண்டவன்மீது இலயிப்பதும், அந்தத் திருக்கூட்டத்தில் நம்மையும் ஒரு அங்கமாக்கிக் கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவதும், ஒரு தனி அனுபவமாகும். இந்த அனுபவத்தை பெறுவதற்காக, ஆலய தரிசனம் அவசியமாகின்றது. இந்த அனுபவத்தினால் வாழ்க்கைத் துன்பங்களை மறக்கவும், மனச்சுமைகளைக் குறைக்கவும், சாந்தியும், அமைதியும் கலந்த மனோரம்மியமான ஒரு தெய்விக நிலை உருவாகவும் ஏதுவாகின் றது. மனித உணர்வுகளூடாக அதனை ஊடுருவ வைத்து ஆன்மீக உணர்வுகளை ஊட்டுவிக்கும் அமைவிடங்களாக ஆலயங்கள் அமைகின்றன. ஆலய அமைப்பிலும், ஆலயக் கிரியைகளிலும்கூட ஆகம விதியும் தத்துவக் கருத்துக்களும் தெய்விக உண்மைகளும் இழையோடி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆலயங்கள் வெறும் பிரார்த்தனை மண்டபங்களாக மட்டும் இருக்கவில்லை. கோபுரத்தாலும், சிற்பத்தாலும், நாதத்தாலும் வேதத்தாலும் வேறுபல
 
 

3.2O விதித்தி, பூந்தனி O
r? Ο
கு? D P - நயினை நா, யோகநாதன், B.A.
தெய்விகப் பிரதிபலிப்புகளாலும், ஆன்மீக உணர்வுகளையும் தத்துவக் கருவூலங்களையும், தந்து கொண்டிருக்கும் அற்புதமான ஆன்மீக ஊற்றுக்களாகும். நீண்டகாலமாக ஆலயவழிபாடு எமது சமயத்திலும், சமூகத்திலும் வேரூன்றிய ஒன்றாகும். ஊர்கள் தோறும் ஆலயம் அமைத்து வழிபாடியற்றி மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்தவர்கள் நம் ஆன்றோர். ஆலயக் கட்டுமான அமைப்பிலும், கோபுரங்களிலும், ஏன் கொடித்தம்பங்களிலும் கூட தத்துவப் பேருண்மைகள் பல புதையுண்டிருக்கின்றன. வாழ்க்கைப் பேருண்மைகளை விளக்கும் உயர்ந்த சிற்பங்கள் வடிவமைக்கப்ப ட்டிருப்பதே இதற்குச் சான்றாக உள்ளது. ஆண்டவனின் திருவிளையாடல்கள்கூட மனித வாழ்க்கையையொட்டி அமைந் திருப்பதை அவதானிக்க முடிகிறது. வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவேண்டுமென இந்து தர்மம் உபதேசிக்கின்றது. அப்படி வாழத் தெய்வ பக்தி அவசியம் என்று, இந்து மதம் வலியுறுத்துகின்றது. அந்தத் தெய்வ பக்தியை நிலைநிறுத்தும் உயர்ந்த இடங்கள்தான் ஆலயங்களாகும்.
உதாரணமாக: திருக்கோவிற் கோபுரங்களின் கீழ்ப்பாகத்தின் இருமருங்கும் காட்சி தருகின்ற துவாரபாலகர்கள் ஆட்காட்டி விரலைக் காட்டி நிற்பது உள்ளே வழிபடச் செல்வோருக்குக் கடவுள்
கள் உய்திபெறும் பொருட்டு உருவத்திருமேனியுடன் தகின்ற - இலயித்திருக்கின்ற - ஆணவமலம் ரோக்கியத்துக்கும் உணவு விளங்குவதைப்போல், வழிபாடு இன்றியமையாதது.
ஒன்றே என்பதை வலியுறுத்திக் காட்டுகின்றது. அதேபோல் ஒரு கையை விரித்துக் காட்டுவது கடவுள் ஒன்றைத் தவிர வேறொன்றில்லை என்பதை உணர்த்தி நிற்பதாக அமைகின்றது. இவ்வாறான பல தத்துவக் கருவூல அமைப்புகளைக் கொண்டதே கோபுர வடிவமாகும். இக்கோபுரம் தூல லிங்க வடிவமாகவும் போற்றப்படுகின்றது.
எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் மாமணிச் சோதியான இறைவன், விறகிற் தீயினனாகவும், பாலிற் படு நெய்யாகவும், மறைந்திருப்பினும் ஞானிகளின் திருவுள்ளத்திலும், திருக்கோவில் களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றான். மற்றைய இடங்களில் இறைவனை நாம் நினைந்து தியானிப்பதாலும் துதிப்பதாலும், வழிபடுதலினாலும், வினைகள் வெதும்புகின்றன. ஆனால், ஆலயம் சென்று அங்கு இறைவனை வழிபடும்போது வினைகள் வெந்து எரிந்து நீறாகி விடுகின்றன. பரந்து விரிந்து இருக்கின்ற கதிரவனின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழே சூரிய காந்தக் கண்ணாடி பாய்ச்சுகின்றது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது, வெய்யிலில் வேட்டியை வைப்பது போலாகும். ஆலயத் தில் இறைவனை வழிபடுவது சூரிய காந்தக் கண்ணாடியின் கீழ்
—>

Page 16
இந்துசாதனம் 5.O
வேட்டியை வைப்பது போலாகும். சூரிய காந்தக் கண்ணாடியின்கீழ் இத்துணி வெந்து சாம்பராகி விடுவதுபோல் ஆலய வழிபாடு செய்வதன்மூலம் வெவ்வினைகள் வெந்தழிந்து சாம்பராகி விடுகின்றன.
பசுவின் உடல் முழுவதிலும் பால் பரவி இருப்பினும் மடியின் மூலமாக நாம் அதனைப் பெறுவதுபோல் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் திருவருளைத் திருக்கோவிலில் உள்ள திருவுரு வங்கள் மூலமாகவே நாம் பெறுதல் வேண்டும். ஒரு மருத்துவ மனையில் மருத்துவர் தங்கி இருப்பதன் நோக்கம் அம்மருத்துவ மனையை நாடிவரும் பிணியாளர்களின் பிணிகளைப் போக்குவதற் கேயாம். அதேபோல் இறைவனும் ஆலயத்தில் எழுந்தருளி இருப்பது தன்னை நாடிவரும் அன்பர்களின் பிறவிப் பிணியைப் போக்கி ஆனந்தமான பெருவாழ்வைக் கொடுப்பதற்கேயாகும். அங்கே இறைவன் வைத்திய நாதனாக இருந்து பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகவும் இருந்து தன் அனுக்கிரகத்தால் அன்பர்களை ஆசீர்வதிக்கின்றார்.
ஆலய வழிபாடு என்பது மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாததொன்றாகும். உடலுக்கும், உடல் ஆரோக்கியத் திற்கும் உணவு எப்படி முக்கியமானதாக விளங்குகின்றதோ, அதேபோல், உயிர் நலத்திற்கும் ஆன்ம நிறைவுக்கும், வழிபாடு முக்கியமானதாக உள்ளது. அல்லல்களும், தொல்லைகளும், கவலைகளும் தீர்ந்து, மனஅமைதி பெற்று, மனிதன் இன்புற் றிருப்பதற்கு இறை வழிபாடு அவசியமாகின்றது. வழிபாடு என்பது நம்மை நாமே தூய்மைப்படுத்தவும் பக்குவப்படுத்தவும், எடுக்கும் சிறந்த நன் முயற்சியாகும். 'தனக்குவமை இல்லாதான் தாழ் சேர்ந்தாற் கல்லால் மனக்கவலை மாற்றலரிது என்ற வள்ளுவனின் வாசகம் இங்கே பொருத்தமாகி நின்று வழிபாட்டின் பயனை வலியுறுத்தி நிற்கின்றது. நமது புற உடம்பிற் படியும் அழுக்குகளை நீராடுவதன் மூலம் போக்கிக் கொள்கின்றோம். அக அழுக்குகளை அவ்வாறு நீக்கி கொள்ள ஒருபோதும் இயலாது. நம் உள்ளத்தைப் பற்றியுள்ள பலவகையான அழுக்குகளையும் மாசுகளையும், இறைவனைத்தியானித்து வழிபடுவதன்மூலம் தான் நாம் போக்கிக் கொள்ளவேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, மயக்கம் முதலிய மன அழுக்குகளைத் தியானத்தாலும், பொய் பேசுதல், புறங்கூறுதல், இன்னாச் சொல், பயனில் சொல் எனும் வாய் மூலமான அழுக்கைத் துதியினாலும், தீச்செயல்கள் புரிதலாகிய மெய் மூலமான அழுக்குகளை அர்ச்சனைகளாலுமே நாம் போக்கிக் கொள்ள முடியும். இங்ங்ணம் மனம், மெய், மொழி எனும் முக்கரணங்களின் அழுக்கையும் தியானம், துதி, அர்ச்சனை என்ற மூன்றினாலும் போக்கிக்கொள்ள முனையும் நன்முயற்சியே வழிபாடாகும். நம்முடைய மனம் மிகச் சிறந்த ஒரு அற்புதமான கருவியாகும். அது மிகவும் புனிதம் வாய்ந்தது. நாம் அதனைப் பயன்படுத்துவதற்கேற்ப அது உயர்ந்ததாகவோ, இழிந்ததாகவோ அமைகிறது. நமது மனதை ஒரு சிறந்த மாளிகையாக்கவும் அதை ஒரு பன்றிச் சகதியாக ஆக்கவும், நம்மால் முடியும். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குப்பைகளை எல்லாம் உள்ளடக்கினால் மனம் என்பது பன்றிச் சகதியைவிடக் கீழான நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டு விடும் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
வழிபாடு என்பது அகவழிபாடு, புறவழிபாடு என இருவகைப்
படுத்தப்பட்டுள்ளது. புற வழிபாட்டிலும் அக வழிபாடே மேலானது. புற வழிபாடு புரியப் புரிய அது நம்மை அக வழிபாட்டுக்கு இட்டுச்

3.2O விகிர்தி பங்குனி O
சென்றுவிடும். நெஞ்சமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், என்னும் நிலையில் நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டு இறைவனைத் தியானித்து முறைப்படி பூசிக்கும் நெறியே அக வழிபாடாகும். இதனையே நாவுக்கரசன் "காயமே கோயிலாக, கடிமணம் அடிமையாக" என்றும், உள்ளம் பெருங்கோயில்ஊனுடம்பு ஆலயம் எனத் திருமூலர் பெருமானும் கூறிப் போந்தனர். அகவழிபாட்டின் சிறப்பினை இச் சிவநெறிச் சான்றோர்கள் இப்பாடல்கள்மூலம் தெளிவாக விளக்கிக் காட்டி இருப்பதை இங்கே காண்கின்றோம்.
புற வழிபாடு என்பது புறத்தே வழிபாடு செய்தல் என்பதாகும். இறைவனுக்குப் பூச்சாத்துதல், சந்தனம் பூசுதல், நிவேதனம் படைத்தல் தூபமிடுதல், விளக்கேற்றுதல், துதிபாடுதல் ஆகிய செயல்களைச் செய்தலாகும். இதனைத் தெளிவாகக் கூறின் இறைவனுக்குத் திருமால்போல பூச்சாத்தியும், மூர்த்தி நாயனார் போற் சந்தனம் பூசியும், அரிவாட்ட நாயனார்போல் நிவேதனம் படைத்தும், குங்குலியக்கலய நாயனார்போல் தூபமிட்டும், கலய நாயனார்போல் திருவிளக்கேற்றியும், திருஞானசம்பந்தர்போல் துதிபாடியும் அன்புடன் நாம் வழிபாடியற்றி வாழ்ந்தால் ஆன்ம திருப்தியுடன் கூடிய ஆனந்தமயமான வாழ்வைப் பெறலாம்.
அக வழிபாடு புரிந்த நம் சிவனேயுச் சான்றோர்கள் தம் யோகஞான நுண்ணறிவால் தம் உடம்பையே கோயிலாகக் கண்டுணர்ந்தார்கள். அங்ங்ணம் கண்டுணர்ந்தபடியே அக்கோயில் களை உடம்பின்கண் தம் இயல்புக்கேற்ப இனிதமைத்துக் கொண்டனர். மனித உடம்பின் கண் முதன்மையான ஆறு இடங்கள் உள்ளன எனவும்; அவை, மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம் மிடறு, புருவநடு எனவும் எடுத்துக்காட்டினர். அவை முறையே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களாகக் கூறப்படுகின்றன. இதைக் கருத்திற்கொண்டே "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்" எனத் திருமூலர் பெருமானும், "காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக" என நாவுக்கரசு நாயனாரும் கூறிச் சென்றார்கள்.
இந்த வழிபாட்டின்மூலம் ஆன்மீக தாகம் உள்ளவர்களாக நாம் ஆகிவிடுகின்றோம். தன்னைப்பற்றி அறிவதும், தன்னைப் புரிந்துகொள்வதுதான் ஆன்மீகத்தின் அடிநாதமாகும். எங்கும் தேடி அலையாமல், இருந்த இடத்திலேயே சம்பாதித்துக் கொள்வதும் விலை கொடுத்து வாங்க முடியாததும், விற்க முடியாததும் பக்தியாகும் ஆன்மீகம் என்ற செடிக்கு, பக்தி என்ற நீர் பாய்ச்சப்படும்போதுதான் அது செழிப்புற்று வளருகின்றது. உலகைப் பற்றிச் சரியானபடி, சரியான பாதையிற் புரிந்து கொள்ளவும், அறிந்துகொள்ளவும் ஆன்மீகம் அவசியம். ஆன்மீக நெறியானது ஐம்புலன்களை அடக்கிப்பழக வழிகாட்டி நிற்கின்றது. ஐம்புலன்களை ஒருவன் எப்போது கட்டுப்படுத்துகின்றானோ அப்போது அவனால் ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்த முடியும். கடலில் உள்ள அழுக்குகளை எல்லாம் கடலலைகள் நுரையாக வெளியேற்று கின்றன. மனதின்கண் உள்ள அழுக்கை எல்லாம் ஆன்மீக அலைகள் வெளியேற்றுகின்றன. இவ்வாறு அழுக்குகள் வெளியேறி மனிதன் உள்ளத்தூய்மை பெறுவதற்கு ஆலய வழிபாடும், ஆன்மீக ஈடுபாடும் மிகச் சிறந்தது.
ஆன்மீகத்தை உலகம் இன்று எதிர்க்கலாம். அதுதான்
கலியுகத்தின் இயல்பு, எதிர்ப்பைக் கண்டு துவளாமல் நமது
- Σε

Page 17
இந்துசாதனம் 15。○
கடமையைச் செய்துகொண்டே இருந்தால் இறுதியில் ஆன்மீகம் தான் வெல்லும், கசப்பு இருந்தாற்றான் ஆன்மீகத்தின் வளர்ச்சி உரம் பெறும். ஆன்மீக பலம் ஏற்படும்போது பொறுமையும், நிதான மும் தேவைப்படுகின்றது. காட்டில் புலி ஆட்டை அடக்கும் இது உலகம். ஆன்மீக உலகில் ஆடுபுலியை அடக்கும் என்பதை உணரத் தவறிவிடாதீர்கள்.
தெய்வ பக்தியையும், மனித சக்தியையும் அறியவும்; உலக வாழ்வின் உயிரோட்டத்திற்கான உண்மையை உணரவும் ஆன்மீகம் தேவையாகவுள்ளது. ஆன்மீகத்தில் உயர்வதற்குப் பக்குவம் தேவைப்படுகின்றது. கடல்நீரிலே உப்பு உண்டு. அதனால் அந்தக் கடல்நீரையே எடுத்துச் சமையலுக்குத் தேவையான அளவு பயன்படுத்த முடியாது. அந்தக் கடல் நீரை உப்பளங்களிற் பாய்ச்சி கண்டவைத்துப் பக்குவப்படுத்தி உப்புத் தயாரித்து, அதன் பிறகே சமையலுக்குப் பயன்படுத்த முடியும். பக்குவப்படுத்தாமல் எதையும் பயன்படுத்த முடியாது என்பதை இங்கே உணருகின் றோம். இதேபோல் ஒருவன் மனப் பக்குவம் பெற்றிருந்தால்தான் ஆன்மீகத்தில் ஈடுபடவும் முடியும். அதற்குத் அலய வழிபாடு அவசியமாகின்றது.
அடிமேல் அடி அடித்தாலும் துணிமேல் உள்ள அழுக்குப் போய்விடுவதில்லை. அதிகமாக அடித்தாற் கைவலிக்கும். துணியும் கிழிந்துவிடும். அதே துணியைச் சோப்பு இட்டுப் பதமாகப் பக்குவப்படுத்தி ஊற வைத்தால் அழுக்குகள் போய்விடுகின்றது. அதேபோல் ஆலய வழிபாட்டின்மூலம் மனதைப் பக்குவப்படுத்திப் பதப்படுத்தும்போதுதான் மன அழுக்குகள் நீங்கப்பெற்று மனத்துாய்மைபெற்று, ஆன்மீகத்தில் முன்னேறமுடியும். பொன்னை உருக்கிச் சுத்தப்படுத்தும்போதுதான் அதில் உள்ள அழுக்குகள் நீங்கித் தூய்மையாகி ஒளிவீசிப்பிரகாசிக்கின்றது. அதேபோல் மன அழுக்குகளைக் களைந்து உள்ளம் தூய்மையடையும்போது ஆன்மீக ஒளியும் உள்ளே பிரகாசிக்கத் தொடங்குகின்றது.
ஆலயங்கள், மனிதனை நல்வழிக்கு இட்டுச்செல்லுகின்ற இடமாக மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் வேதனைகளையும், துன்பம் துயரங்களையும் தீர்க்கும் இடமாகவும் இருக்கின்றன. இந்நிலையில் ஆலயங்களை நிருவகிக்கும் பரிபாலகர்களும், ஆலயங்களிலே ஆன்மீக தாகத்தையும், இறை நாட்டத்தையும், அருட்பிரவாகத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய அந்தண சிவாச்சாரியார்களும் அதற்கேற்பத் தார்மீகப் பணியாற்ற வேண்டியவர்களாய் உள்ளனர். ஆலயத்தை நாடி வருபவர்களை ஆன்ம திருப்தியுடன் அனுப்பிவைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும், தார்மீகக் கடமையும் அவர்களுக்கு நிறையவே உண்டு. மனச் சுமைகளை எல்லாம் இறக்குவதற்காக ஆலயத்தை நாடி வருபவர்களுக்கு சுமையாற்களைப்படைந்த வர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகின்றேன். என்று ஆர்வத்துடன்கூடிய அழைப்பும், அவர்கள்
மேலான அன்பும் அனுதாபமும், அவர்களிடையே ஏற்படுமானால் அக்கணமே ஆலயம் ஆனந்த சொர்க்கமாக அமைந்துவிடும். எமது சமுதாயத்தின் மத்தியில் ஆன்மீக தாகமும், ஆலய வழிபாடும் அருகிப்போய் விடாமல் இருப்பதற்கு இன்றைய நிலையில் இவர்கள்
இந்து சாதனம் - காவியுடையில்
1.
 
 
 

32O விகிர்தி பங்குனி O
விழிப்புணர்வுடன் செயலாற்றவேண்டியுள்ளமை காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இதுவே இன்று எல்லோராலும் எதிர்பார்க்கப் படும் இலக்காகவும் உள்ளது. இதனைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்துச் சிரமேற்கொண்டு செயற்படுவார்க ளாயின், உலகம் உய்வடையும். ஆலயங்களில் ஆகம விதிகளை அனுசரித்து கிரியைவழி நின்று முறைப்படி சீராகப் பூஜா கருமங்கள் நடைபெற வேண்டும். அவ்வாறின்றேல் அனை வருக்குமே கேடாகிவிடும். இதனை மிக அழகாகவும் தெளி வாகவும் திருமந்திரம் கூறும்.
"முன்னவனார் கோயில் பூஜைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள. மாரி வளங்குன்றும் கன்னங்களவு மிகுந்திடுங்காசினிக்கு என்னருள்நந்தி எடுத்துரைத்தானே
ஆற்றருநோய் மிகும், அவனிமழை குன்றும்
போற்றரு மன்னரும் போர்வலிகுன்றுவர்,
கூற்றுதைத்தான் திருக்கோயில்களானவை
சாற்றிய பூசைகள் தம்பிடிற்றானே"
இத் திருமந்திரப் பாடல்கள்மூலம், ஆலயத்தில் இறைவழி பாட்டுக்குரிய - பூஜைகள் கிரமமாகவும், முறையாகவும், விசுவாச மாகவும், நடைபெறவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இறைவனின் மறுவடிவம் இயற்கை. இயற்கையே, இறைவன். இறைவழிபாடும், பிரார்த்தனைகளும் இறைபூசைகளும் தடங்கலாகும்போதும் சீராக நடைபெறாதபோதும் இயற்கை சீற்றம் கொள்வதும் தவிர்க்க முடியாததாகிவிடும், சிவடினயார் ஒருவர் நெற்றிமீது கல் நிறுத்தித் தண்டிக்கப்பட்டபோது, வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடியதை வாதவூரர் வரலாற்றால் அறிகின்றோம். இறையும், இறையடியார்களும் பக்திபூர்வமாக நமஸ்கரிக்கப்பட வேண்டியவர்கள், உள்ளன்போடு வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாகச் சிந்திக்க வேண்டும்.
கருணையே வடிவான இறைவன் இந்த உடம்பை உயிர்கள் மீதுள்ள இரக்கத்தினால் வழங்கினான். அந்த உடம்பினால் அவனை வழிபட வேண்டியது நமது தார்மீகக் கடமை என்பதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது. இதனை அப்பர் பெருமான் அழகாகச் சொல்லுவார் "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே" என்பார்.
எண்ணரிய பிறவிகளில் இனிதாகிய, அரிதாகிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம். "இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்" என்ற நாவலர் பெருமானின் நல்வாக்கைக் கருத்திற்கொண்டு, 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் கோயில் இல்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம் என்றும் எமக்கு வலியுறுத்திச் சென்ற ஒளவையின் அமுத வாக்குக்கு மதிப்பளித்து மனித வாழ்வுக்கு இறைவழிபாடு, ஆலய தரிசனம் இன்றியமையாததென உணர்ந்து ஆலய வழிபாடியற்றி, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வ நிலைக்கு உயருவோம்; உயர்த்தப் படுவோம் என்பதை உணர்வோமாக.
சித்திரை2011 - இதழில் ஒரு கருணைக் கடல்.
- நீர்வை தி. மயூரகிரிசர்மா

Page 18
இந்துசாதனம் 5.O.
இந்துக்களுக்கு ஒரு 6
இன்றைய உலகம் மிக வேகமாகச் சுழன்றுகொண்டிருக்கி றது. வழியில் குறுக்கிடுவது எதுவாயிருப்பினும் தூக்கி எறிந்து விட்டு ஒடும் தடைதாண்டும் ஒட்டம் அது. விழுமியங்கள், பாச உணர்வுகள் என்பனகூடக் காலாவதியான விடயங்களெனக் கருதப்படுகின்றன. உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, மிகுந்த கூர்மையும், முனைப்பும் பெற்றவையாய் சிந்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன.
சமயங்கள்கூட இந்த மாற்றங்களுக்கும் அறைகூவல்களுக் கும் காலாகாலமாக உட்பட்டே வந்துள்ளன. நவீனப் போக்குகளுக் கும் சமயத்துக்கும் இடையே பெரியதோர் இடைவெளி இருப்பதாக வும் அது என்றுமே சீர்செய்யப்பட முடியாதது என்பதாகவும் நம்பவைக்கப்படுகின்றது. இளைய தலைமுறையினர் இந்து சமயத்தின்மீது முன்வைக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டும் இதுவேயாகும். இதன் விளைவாக இளைஞர்கள் மெல்ல மெல்ல சமயத்திலிருந்தும், சமய நிறுவனங்களிலிருந்தும் விலகி நிற்பதும்; சந்தர்ப்பத்திற்காகக் காத்திருப்போரின் மாய வலைகளுள் சிக்கிக் கொள்வதும் கண்கூடு
இத்தகைய சூழலில் இந்துப் பெருமக்கள் தமது கண்களைத் திறக்கவேண்டும். எதையும் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக
இருத்தல் ஓர் உண்மையான இந்துவின் பண்பாகாது. தானும், தன்
வழிபாடும், முத்தியும் என்று விட்டேற்றியாக இருப்பது, தப்பித்துக் கொள்ளும் மனோபாவமன்றி வேறன்று. இன்று எமது சமயத்தின்
நிலை என்ன? எமது பொறுப்பு என்ன? இந்து மதத்தில் ஆழமான பற்றுள்ள ஒருவர், நிச்சயமாக இவை குறித்துச் சிந்திக்கவே செய்வார், சிந்திக்கவும் வேண்டும். அல்லாதவிடத்து விமர்சனங் களையும் கண்டனங்களையும், களைவது இயலாத காரியமாகி விடும்.
ஆன்மா சுதந்திரமானது, சுயமான சிந்தனை உள்ளது. நீ முக்தன்! உன்னை யாரும் முக்தனாக்க முடியாது' என்று துணிவுடன் கூறுவது இந்துமதம். அதனாற்றான் ஆன்மீக நெறி குறித்த இறுக்கமான சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் முதலிய தளைகள் அங்கு விதிக்கப்படவில்லை. ஒருவனை, அவன் எப்படி உள்ளானோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இந்து மதத்துக்கு உரியது. இறையை வழிபடும் முறைமை குறித்த பார்வையும் அத்தகையதே. இறைவனை வடிவமற்றவனாகவும்,
பெயரிலியாகவும், உணர்வுநிலையில் வழிபட்டு இறை அனுபவம்
 

32O விகிர்தி பங்குனி O
filedUTGJJTüLLİb...
ఫ్ఘ வசந்தி தயாபரன்
பெறமுடிந்தோர் சிலர். அதேசமயம், இறைவனை உருவத் திருமேனியில் நெருக்கமாகக் கண்டு, நாமசெபம் செய்து, அன்பு செலுத்துதல் சமூகத்தின் பெரும்பாலானோரின் விருப்பு. ஒவ்வொருவரதும் மனப்பக்குவத்துக்கும், பயிற்சிக்கும், உள்ளார்ந்த விருப்புக்கும் ஏற்றபடி வழிபடுமுறை அமைந்துவிடுவது இயல்பே. இதில் எவ்விதத் தவறுமில்லை. பல படிநிலைகளிலும் நின்று வழிபாடு செய்யும் நெகிழ்வுத் தன்மை உடையதாய் இருத்தல் இந்துமதத்தின் சிறப்பே ஆகும். ஆனால், கால மாற்றத்துக்கு ஒவ்வாத சில சடங்குகளையும், வறட்டுச் சம்பிரதாயங்களையும் இறுகப் பற்றிப் பிடித்திருத்தல் முறைதானா? கண்மூடித்தனமான வழிபாட்டு முறைகளைக் கைவிடாமல், அவற்றிலேதான் சமயத்தின் உயிர்நாடியே உள்ளது என்று எதிர்காலச் சந்ததியை நம்ப வைக்கலாமா? நவீன உலகோடு ஒத்துப்போகாத, நம்புவதற்குக் கடினமான சில விடயங்கள் இந்துமதத்தின்பால் அவநம்பிக் கையை ஏற்படுத்த மாட்டாவா? ஒருசில குறைகளைக் களையத் தவறுவதால், ஒட்டுமொத்தமாக இந்துமதத்தையே விமர்சிக்கின்ற பலரை நாம் நாளாந்தம்பரக்கக் காண்கின்றோம். எம் குறைகளைக் காண விரும்பாது கண்களை இறுக மூடிக்கொள்தல் அசட்டுத் தனமானது. எம்மை நாமே மீள்பார்வை செய்து கொள்வது காலம் இடும் கட்டளை.
ஆன்மீகம் என்பதன் பொருள், உயிரின் தகுதி அல்லது
வளர்ச்சி என்பதே ஆகும். மனிதனிடம் இயல்பாகவே உள்ள தெய்விகத்தன்மையானது ஆன்மீகத்தைச் சார்ந்து உயர்நிலை எய்தவல்லது. உயர்ந்த உண்மைகளை அறிந்துகொள்ளும் தகைமையும் அதற்குண்டு. எனவே, ஆன்மாவின் முன்னேற்றம் அல்லது வளர்ச்சிக்குச் சமயம் ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டும். ஞானத்தில் உயர்நிலை பெற்ற குருவின் வழிகாட்டல் சமய வாழ்வின் மிக முக்கிய அங்கமாகிறது. தொன்மையான நம் இந்துமதத்திலே மகான்களும், ஞானிகளும் தோன்றியதும், சமயப் பாதையினைச் சீர்செய்ததும் நாமறியாதவை அல்ல! அதன்மூலம் , குழம்பியிருந்த மக்களிடையே சமயங்குறித்த, தெளிந்த நோக்கு நிலைபெற்றது. நற்சீடர் பரம்பரையும் உருவானது. இன்றோ வான்மழைக்கு ஏங்கும் பயிர்போல, ஞானமும், ஆற்றலும் மிக்க சற்குருநாதர்களை இந்துமதம் வேண்டிநிற்கிறது. புறப்பூச்சுகளால் மூடிமறைக்கப்பட்ட எமது சமய உண்மைகளை மீட்டெடுத்து உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில், தருக்கரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் எடுத்துரைக்கும் சமயப் பெரியார்கள் நமக்குள்ளி ருந்து முகிழ்க்க வேண்டும். சமயத்தை உபதேசிப்பதுடன் அதனை
->

Page 19
இந்துசாதனம் 5.
வாழ்ந்துகாட்டுவதும் அவரது தொண்டாகட்டும். அதன் வழி இந்துமதத்தில் புதிய வீறும் ஆற்றலும் பெருகவேண்டும். அவர்தம் போதனைகளின் வழியே சமய உண்மைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இன்றைய சமுதாயம் எப்போதும் தயாராகவே இருக்கும்.
எமது சமய நிறுவனங்களில் தலையாயது கோயில், ஆன்மா இலயிக்கும் இடம் ஆலயம் என்றும் நாம் கற்றுக்கொண்டுள்ளோம். அகக்கோயிலின் சாயலாகப் புறக்கோயிலில் வழிபாடுகள் இயற்று கின்றோம். தூய்மை, எளிமை, கருணை இவையெல்லாம் குணங்களாகக் கொண்டவன் நாம் வழிபடும் இறைவன். ஆனால், ஆலயங்களில் தூய்மையைத் தேடவேண்டியுள்ளது. ஆடம்பரமும் அதிகாரமும் கோலோச்சுகின்றன. சகமனிதனைச் சமமாக நோக்காத வன்பு புலப்படுகிறது.
வழிபாட்டின்போது ஒருவரை ஒருவர் முட்டிமோதி முந்துதல், வரிசை பேணாமை, ஆலயத்தில் அமைதிகாக்காமை எனப்பலப்பல. ஒழுங்கும் தூய்மையும் பேணவேண்டிய புனிதமான இடம் ஆலயம் என்ற அடிப்படைச் சிந்தனை நம்மவரிடம் அற்றுப்போன்மை வேதனைக்குரியது. இறை சந்நிதானத்திலாவது எல்லோரும் ஒன்றே என்ற மனப்பக்குவம் இன்மை, இன்னொரு விடயம். பணம், அந்தஸ்து என்பன கொண்டு இறைவனை நெருங்கிநின்று தரிசிக்கும் சலுகைகள்! இறைவன்கூட வசதிபடைத்தோரிடம் மட்டும்தான் இறங்கி வருவானா என்ற விரக்தியையும், கசப்பையும் இளையோரிடம் தோற்றுவிப்பவை, இந்த நடைமுறைகள். சக மனிதனில் உறையும் ஆன்மாவும் நானே' என்கின்ற இந்துமதத் தத்துவம், எப்போது செயல்வடிவம் பெறும்?
தனிமனிதன் ஒருவனது சொந்த வாழ்வின் சுகதுக்கங்களில் சமயம் வழங்கும் பங்களிப்புப் போதுமானதா என்ற கேள்வியும் எம்முன் எழுப்பப்படுகின்றது. நிறுவன ரீதியான முறையில் எமது சமயம் வளர்த்தெடுக்கப்படாமை காரணமாக, சடங்குகள் என்ற வகையில் மட்டும், சிலவற்றைச் சமயத்தின் பெயரால் நிகழ்த்தி அமைகின்றோம். ஆனால், கையறுநிலையிலுள்ள ஒரு இந்துவைக் கைதுக்கிவிடவோ, இழப்பின் சோகத்தால் துவண்டவனுக்கு ஆறுதல் கூறவோ, அவனது சமூக இருப்பினை நல்லபடி பேணவோ எம்மிடம் திட்டங்களில்லை. சமயம், அவனது வாழ்விலிருந்து முற்றிலும் அந்நியப்பட்ட ஒன்றாக, வெறுமனே ஓர் ஆபரணமாக மட்டும் ஒளிர்கிறது. சமூகநோக்கற்ற சமயம் என்பது, இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது. சரியான தொலைநோக்குள்ள சமய நிறுவனங்களின் வழிகாட்டல் எமக்கில்லாமை கவலைக்குரியது. ஆன்மநேய அணுகுமுறை என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டு இந்துமத நிறுவனங்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
இந்தமதத்தின் அடிப்படைத் தத்துவங்களுக்கும் பிற்காலத்தே முளைத்த சமத்துவமற்ற வாழ்க்கைமுறைகளுக்கும் இடையே ஒரு முரண்பாடு நிலவுகிறது. அதன் விளைவாக, பொது மனிதனிட மிருந்து எங்கோ தூரத்திற் சமயத் தத்துவங்கள் நிலைபெற்று விட்டன. அவை செயல்வடிவம் பெறாமல் உறைந்துவிட்டன. இனிமே லாவது, அவை சாமானியனுக்கு நெருக்கமாக இறங்கிவர வேண்டும். சமீப காலத்தில் வாழ்ந்த குன்றக்குடி அடிகளாரின் ஆழமான, நுட்பமான நோக்கு இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கது.
1

3.2O விகிர்தி பங்குனி O
சமயத்தின் உண்மைப் பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத இந்து ஒருவன், பிறரது கேள்விக்கணைகளின்முன் வாயடைத்து நிற்கிறான். தனது சமயம் பற்றிய தெளிவான, உறுதியான கருத்துக்கள் அவனிடமில்லை. சமய உண்மைகள் எக்காலத்திலும் அவனுக்கு ஆழமாகப் போதிக்கப்படவில்லை. சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால் உள்ள இந்துமதம் அவன் அறியாததொன்று. வெறும் பழக்கதோஷத்தி னாலும், பய பக்தியினாலும் அவன் சமயத்தின் சில நடைமுறைகளைப் பின்பற்றுகிறான். எனவே, குதர்க்கமான வாதங்களின்முன் அவன் தோற்றுவிடுகிறான். சடங்குகளின் கூட்டு வடிவந்தான் இந்து சமயமோ என்ற சஞ்சலம் அவனிடம் குடிகொள்கின்றது. ஆன்மீகப் புதையல்களை இனிமேலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் தேக்கிவைக்காமல், இந்துக்களின் ஊனிலும் உயிரிலும் அவற்றைக் கலந்து முழுமையான இந்துக்களாக அவர்களை வாழ வைப்பது எமது தலையாய கடமை.
இவற்றை எமது சிந்தனைக்குள் உள்வாங்கி, குறைகள் களையாவிடில், இந்துமதம் குறித்த விமர்சனங்களும் புறக்கணிப்பு களும் தொடர்கதையாகிவிடும். தகவற்ற மதவாதிகளின் மீதான வெறுப்பும் அதிருப்தியும் மதத்திற்கே சேறு பூசக்கூடும். இந்து ஒருவன் இன்னும் உயர்பக்குவ நிலையை அடைய நாம் செய்ய வேண்டிய விடயங்கள் பலவுள. அடிப்படையான சில கட்டுக் கோப்புக்களையும், புதிய சிந்தனைத் தளங்களையும் நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.
ஆலயங்களில் நித்திய பூசையின்பின் ஐந்து நிமிடங்களுக் காவது சமய உரை ஒன்று நிகழ்த்தப்பட வேண்டும். அது அர்த்த முள்ளதாக, அளவானதாக, எளிமையானதாக அமையவேண்டும். கோயிலிலுள்ள அர்ச்சகர்கள், ஆசாரியர்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கப்படவேண்டும். திருமுறைகளில் ஒன்றைப் பண்ணோடு ஒதி, அதன் பொருள் கூறப்பட வேண்டும். ஆலயத் தர்மகர்த்தாக்கள் இதுகுறித்து அக்கறை செலுத்தவேண்டும். அவ்வாறே, தூய்மை, ஒழுங்கு, அமைதி என்பன பேணலும், கடினமான விடயமல்ல. மொத்தத்தில், ஆலயங்கள் வியாபார நிலையங்களாகத் தோற்றம் அளிக்கும் அவலநிலை மாற்றம் பெற்று அங்கு ஆன்மீகச் சக்தி குடிகொள்ளல் வேண்டும். இளைஞர் களுக்கு, சமயம், சமூகத் தொடர்பு கொண்டது என்ற நம்பிக்கை ஏற்படும்படி எமது சமயத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இளைய தலைமுறையின் சமயம் பற்றிய பார்வையை ஆரோக்கியமானதாக மாற்ற இது உதவும்.
கயிற்றை நீளமாக விட்டுவிட்டால், காலவோட்டத்தில் சிக்கல்கள் தோன்றுவது என்பது எந்த ஒரு விடயத்துக்கும் பொருத்தமானதே. சமயத்திற்கும் சில வரையறைகள் இன்று தேவைப்படவே செய்கின்றன. எமது சமய மரபை மதித்தல், போற்றுதல், பேணுதல், விளக்கியுரைத்தல் என்பன சமகால உணர்வுடன் ஒட்டியதாக மேற்கொள்ளப்பட வேண்டும். சாத்திரங் கள், சடங்குகளைப் பேணலும், நெகிழ்த்தலும், இரண்டுமே குறிப்பிட்ட அளவுகளில் செய்யப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் திறந்த மனதுடனான, நேர்மையான சுய விமர்சனம் தேவைப்படுகிறது. எமது ஆன்மீகப் பயணத்தின் தொடக்கப் புள்ளியும் அதுவேயாகும்.
9

Page 20
இந்துசாதனம் 量5。O
வேதநெறிதழைத்தே மிகுசைவத்துறை விளங்கி
CU
வேதப் பயனாம் சைவம்
நம் சித்தாந்தசாத்திரங்கள் அறிவியல் நெருங்க முடியாத கூறுகளையெல்லாம் நெருங்கித் தெளிவுசெய்து காட்டும் பேரறிவியலாகும். மெய்ப்பொருளியலாம் இச் சாத்திரங்கள் வேதோக்தமானவை; வேதத்தை உடன்பட்டுப் போற்றுபவை. தேவாரங்களும் வேதசாரமானவை. இது பற்றியே சைவம் "வேதப்பயன்’ எனப்படுகிறது. சைவத்தின் தலையாய பஞ்சாக்கரத்தை "வேதம் நான்கினும் மெய்பொருள்' - அதாவது நான்கு வேதங்களிலும் சத்தியமானதாகவும், தத்துவமானதாகவும் இருப்பது - என்று தேவாரம் அறிவித்துள்ளமை, சைவத்தின் வேதசம்பந்தத்தை உறுதிப்படுத்துகின்றது.
இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மேம்பட்டது' என்றார் ஜி. யு.போப், சைவ சித்தாந்தம் இந்திய சிந்தனைகளதும், உணர்வினதும் சிகரம்' என்றார் கெளடி. இந்திய தத்துவஞானம், பக். 403). இப்படிப்பட்ட சித்தாந்தங்களைச் சொல்லும் மெய்கண்ட நூல்களை, அவற்றின் ஆதார நிலைக்களன் களாகிய திருமுறைகளை உலகப் பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளுக்கு உட்படுத்த ஓர் அடிகூட முன்னெடுத்து வைக்க முயலாமல், கோயிற் பூசைக்கும், புரோகிதருக்கும், வேள்விக்கும்
பயன்படுத்தப்படுவதை, நடுவுநிலைப்பார்வையுடன் பார்த்தால்,
"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"
என்ற குறள்தானே நினைவுக்கு வருகிறது.
வேதத்தின் மிகப்பல பகுதிகள், வடமொழியிலும், தமிழிலும் வல்ல புலவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவே வடமொழி வேதம் புரியவில்லை என்பது மட்டுமே கருத்தானால், அம்மொழி பெயர்ப்புக்களை, "நம்மிடமிருந்து வடமொழிக்குப் போனவை
நம்மிடமே வந்துவிட்டன" எனக் குதூகலித்துக்கொண்டாடலாமே!
சிவாகமங்களில் நம் திருக்கோயில் அமைப்பு, நித்திய, நைமித்திய வழிபாட்டு நெறிகள், வேள்விகள், மந்திரங்கள், கிரியைகள், வாழ்க்கை வைபவச் சடங்குகள் யாவுக்குமான செய்முறைகள் உள்ளன. சிலர் இவற்றையெல்லாம் "தமிழிலேயே செய்யவேண்டும்" என்பதைக் காட்டிலும், "நானே செய்ய
வேண்டும்." என்பதிற்றான் அதிகமாக ஆசைப்படுகின்றனர்.
"எனதுரை தனது உரையாக" என்றபடி, பெருமான்
உள்நின்று உணர்த்த, ஒளிநெறித் தமிழ்ப் பனுவல்களாக

32O விகிர்தி பங்குனி O
TTE
கயிலை மகா முனிவர்
நீலழுநீகாசிவாசி முத்துக்குமாரசுவாமித்தம்பிரான்
முகிழ்த்தவை, நால்வர் பெருமக்களின் திருவாக்குகள், அவற்றைத் "திருநெறிய தமிழ் என்று போற்றி, உச்சிமீது வைத்து நாம் துதிக்கின்றோம். வேத மந்திரங்களும், ஆகம மந்திரங்களும் கிரியைகள் வழியாக இறைவனைச் சென்றடைந்து பயன்தரச் செய்கின்றன. அதனால் அவை "மந்திரங்கள்" என்ற தகுதி உடையன. நால்வர் பெருமக்களின் "அருள்பழுத்த கனிகள்" கிரியைகள் வழியின்றி, நேரே இறைவன் திருச்செவி அடைந்து, அனைத்து நலன்களும் பெற்றுத்தருபவை. ஆகையால் இவை "பெருமந்திரங்கள்" எனும் உயர்தரம்உடையன.
இப்பெருமந்திரங்களை, மந்திரங்களுக்கு உள்ளதுபோல் கிரியைகளில் வைத்தால், தரம் குறைந்ததாகத்தானே ஆகும்? திருநெறிய பெருமந்திரங்களாம் தோத்திரங்களை - ஒதிய மாத்திரையிலேயே பயன்பெற்றுத்தரவல்ல அதியற்புதப் பெருமந்திரங்களை - கிரியைகளில் இறக்கிவிடுவதாகிய செயலா திருமுறைப்பற்று.
மந்திர உச்சரிப்புக்களை, இடம் மாற்றிச் சொன்னால் நகைப்புக்குரியதும், விபரீதமும் ஆகும். அங்க நியாசங்களில் "ஈசான மூர்த்தயே நம" என்று உச்சந்தலையைத் தொட்டுச் சொல்ல வேண்டும். " அப்படி ஏன் சொல்ல வேண்டும்? நான் சிரசைத் தொட்டு "அகோர ஹிருதயாய நம" என்றுதான் சொல்வேன். என்றால் , அதை வக்ரபுத்தி என்பார்கள். அது மந்திர அவமதிப்பு. அதனால் எதிர்ப்பலன் நிகழும் என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன.
வழிபாட்டின் தொடக்கத்திற்கே இவ்வளவு பிடித்தமான விதிகள் உள்ளன என்றால், வழிபாட்டில், வேள்வியில், குடமுழுக்கு முதலிய நிகழ்வுகளில் மந்திரங்களைச் சொல்லவேண்டிய இடங்களில், பெருமந்திரங்களாம் திருமுறைகளைத் தரம் இறக்கிஇடம் மாற்றிச் சொல்லுவது எவ்வளவு விபரீதமானது என்பதைச் சைவப் பெருமக்கள் அறிந்துகொள்வதுடன், அறியாதவர்களுக்கு அறிவுறுத்தியும், அறிந்தும் அறியாதவர்கள்போல நடிப்பவர்களுக்கு விளங்குமாறு விளக்கியும், நம் உயிர்ச் சைவத் திருமுறைகளின்
உச்சப் பெருமைகள் கொச்சைப்படுவதைத் தவிர்த்தாக வேண்டும்.
திருக்கோயில் வழிபாடு பார்த்த வழிபாடாகும். உலக நலன்கருதிய அவ்வழிபாடுகள் எல்லாத்தரப்பினருக்கும் - சகலருக்கும் ஆனது. ஆகவே அங்கே கிரியைகள் தேவை. ஆகம மந்திரங்களால் கிரியைகளை நிகழ்த்தி - அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, நைவேத்தியம் நிகழ்த்தி - அடியார், பக்தர் செவிக்கும்
—>

Page 21
இந்துசாதனம் 5O
கேட்கும்வண்ணம், சகலரும் தூய்மையும் நன்மைகளும் பெறுதற்பொருட்டுத் திருமுறைகளைப் பண்ணோடு இசைக்கும் மரபு, காலம் காலமாக உள்ளது. இந்நிகழ்விற் பெருமந்திரங்கள் அடியார்கள் செவிவழி மனத்திற்குச் சென்று பதிய வேண்டும் என்பதனால், வாத்திய முழக்கம், மணியோசைகள் நிறுத்தப்படும். இச்சமய மரபுகளின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள மறுத்துக் குணம்பண்ணும் அருள்ஞானக் குவியல்களைப் பணம் பண்ணும் பாதையாக வெட்டி நிரவ முயல்வது. சமயக் கட்டுப்பாட்டை மீறும் - ஆன்றோர் வாக்கு, சமயாசாரியர், சந்தானாசாரியர்கள்
ஆணைகளை மீறும் - அக்ரமங்களே ஆகும்.
ஆகமங்களின் கர்த்தா இறைவன்; வேதத்தின் பொருளே இறைவன்!
"மறையுமாய், மறையின் பொருளுமாய் வந்து என்
மனத்திடை மன்னிய மன்னே"
என்பார் மாணிக்கவாசகர். மறைந்த பொருளுடைமையின் "மறை" என்று பெயர் அமைந்தது. (காள் - தொல் எழுத்து பாயிரம். நச்சினார்க்கினியர் உரை) வேதத்தை அருளியவேத வடிவானவனே, வேதத்திற்குப் பொருளாக மறைந்தும் உள்ளான் - இது அவ்விறைவனே வந்து உபதேசிக்கப் பெற்றவரிடம் இருந்து வந்து அனுபவ அறிவிப்பு. திருவிளையாடற் புராணத்தில் உள்ள வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்த படலத்தில் சாரமும் இதுவேயாகும். ஆகவே " வேதத்திற்குப் பொருள் தெரியவில்லை; அதனால் அது வேண்டாம்" என்று ஒருவர் சொன்னால், "சிவபெருமான் எனக்குப் புலப்படவில்லை; அதனால் சிவம்
தேவையில்லை" என்று சொன்னதாகத்தானே ஆகும்
மாமரம் பாதுகாக்கப்படுமானால், அதன் பயனாக மாங்கனிகளை துய்க்கலாம். "சைவம், வேதப்பயன்" - வேதம் பழமரம். அதன் பயன் சைவம் மரம் கூடாது; கனிமட்டும் வேண்டும். என்பதைச் சாத்தியக்கூறுடைய வாதம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இத்தகு பொருந்தாவாதம் செய்பவர்கள்,
"மிருதி புராணம் மற்றும் எல்லாம்
மெய்ந்நூலின் வழி, புடைநாலாம்" என்னும் சித்தியாரையும் வெறுப்பர்போலும்
மன்னர்களின் மன வேட்கை
தேவாரங்கள் தோன்றிய காலத்திற்குப் பின்னர் இறை திருக்கோயில்கள் கற்றளிகளாக மாறின. சுடுமண் கற்களால், மரங்களால் அமைந்த கோயில்கள், கருங்கற்களால் வடிவம் அமைக்கப்பட்ட நிலையே கற்றளிகள். முன்புபோலவே, ஆகம விதிப்படியே மன்னர்கள் அவற்றைக் கற்றளிகளாக வடிவமைத்
தனர்.
சமணம் போன்ற புறப்புறச் சமயங்கள், கலைகளை
வெறுத்த சமயங்கள், நம்பெருமான் ஆடல்வல்லான்; கலைகள்
ஆயவல்லான்; சக்தியை உள்ளக்கிழியின் உருவெழுதிய ஓவியன்,
2

3ς 32OH விகிர்தி பங்குனி O
திருமுகப் பாசுரம் முதலியன படைத்த பெருமான், கவிதைக் கலைக்கு மூலமானவன், மண்ணில் நல்ல வண்ணம் வாழ மகிழ்கலைகள் எல்லாமும் தேவைதாம். ஆகையால் சைவம், கலைகளை உள்ளடக்கியதும், மக்கள் தொண்டை உள்ளடக்கியதும் ஆகிய பெரும் சமயமாக ஆதிமுதல் விளங்குகிறது. சைவத்தின் இவ்வியல்புகளுக்கும் இடம்தர வேண்டும் என்பதைக் கற்றளிகளாக அமைக்கும்போது, மன்னர்கள் கவனத்திற்கொண்டு கற்றளிகளை
விரிவாக அமைத்தனர்.
அக்கற்றளிகளில் ஆகம பூசைகள், முன்பு நடந்தது போலவே பிறழ்ச்சியின்றி நடைபெற நிலதானங்கள் முதலியன அளித்துக் கல்வெட்டுக்கள் பதித்தனர் நம் மன்னர்கள். எல்லாக் காலங்களிலும் திருக்கோயில்களிலும் ஆகம வழிபாடுகளே நிகழ்ந்தன என்பதற்கு வரலாற்றுப் பெருங்காப்பியமாகிய பெரியபுராணத்தில் பல சான்றுகள் உள்ளன. பின்னர் வந்த
தலபுராண நூல்கள் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.
pE6iTGle5m 60Lut6fl66fisit (SET66uh (Donorsintentin) எதுவோ அதை மாற்றுவது சட்டப்புறம்பான செயலாகவே கருதப்படும். இன்றைய சட்டத்திலும் இவ் விதியுள்ளது. மன்னர்கள் சைவ சமயத்தினருக்காகப் பெரும் பொருட் செலவில் "பெரும் பொருட்கிளவியான்" பெயரில் ஆக்கியளித்த நன்கொடைகளே திருக்கோயில்கள். ஆக்கி அளித்தோரின் நோக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, திருக்கோயிலை வெறும் சொத்தாக மட்டும் பார்ப்பது ஒருவகை ஏய்ப்புத்தானே!
தொல்லியற்றுறைக்கு உட்பட்ட கோயில்களில், ஒரு சிறுமாற்றம் செய்வதற்குக்கூடச் சட்டம் இடம்கொடுப்பதில்லை. ஆனால், "உள்ளே நடக்கிற பூசையை மட்டும் மாற்றிக் கொள்கின்றேன்" என்றால் அந்தச் செயல், "பழமையை மாற்றுதல்" என்ற தலைப்பிற்றானே அடங்கும். சான்றாக ஒன்றைப் பார்ப்போம். தஞ்சைப் பெரியகோயில், 28 ஆகமங்களில் ஒன்றாகிய மகுடாகம விதிப்படிக் கட்டப்பட்டது ஆகும். அங்கு, மகுடாகம விதிப்படியான பூசைகளே உரியன; திருவாரூர்க் கோயிலுக்கும் மகுடாகமவிதிகள் உரியன; தஞ்சைக் கோயிலில்,
SLLLL0LLLLL00LLLLLSLLLLL0CL0LLL0LLLLLLLLLLLS பண்புமிகு ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆரணத்தில் ஒதுஇசையில் செய்பூசை உட்கொண்டு"(கண்ணில்23)
விளங்குதலைத் தஞ்சைப் பெருவுடையார் உலா, தெரிவிக்கின்றது. இது பழமைதானே! இதை மாற்றுவதற்கு விரும்பினால் தொல்லியற் சட்டத்தை, இரட்டை வேடம் போடும்படி வற்புறுத்துவதாகத்தானே அமையும்.
தொகுமொத்தமாகப் பார்த்தால், "மன்னர்கள், ஆகம
வழிப்பட்ட பக்திமார்க்கத்தை உடையவர்களே; அவர்களின் நோக்கத்தை மாற்ற நமக்கு உரிமையில்லை" என்பது பெறப்படும்.
-லுவுரும்- کیسه
1.

Page 22
இந்துசாதனம் 5C
ஒவ்வொரு மனிதனின் &
சிந்தோஷம்,சந்தோஷம் இல்லாதுவாழ்க்கையில் ஏது பலன்?
மனித வாழ்வு அநுபவங்களினாலான ஒரு தொடர் ஆகும். மனிதரில் ஒரு சாரார் லெளகீக வாழ்க்கையில் இன்பத்தில் மூழ்கியிருப்போர்; ஆனால், மன அழுத்தத்தின் மிகுதியால் தவிப்போராகவும், மற்றைய சாரார் சாதாரண எளிமையான
வாழ்க்கையில் மிகுந்த மனஅமைதியுடனும் காணப்படுகின்றார்.
மனிதரில் உணர்ச்சித்ததும்பலே பலவீனமாக வெளிப்படுகின் றது. உணர்ச்சி வெளிப்பாட்டினைத் தத்தமது பலமாக (Strength) மாற்றிக்கொள்ள வழிவகுப்பதே வேதாந்தம் என்னும் விஞ்ஞானம் ஆகும்.
படைப்புக்களில் மனிதன் மட்டுமே தான் விரும்பிய பாதை யைத் தேர்ந்தெடுத்து வாழும் சக்தி படைத்தவனாக இருக்கின் றான். மற்றைய படைப்புக்கள் அனைத்தும் தத்தமக்கு முன்கூட்டியே அமைத்துக் கொடுக்கப்பட்ட விதி முறையிலேயே வாழ நிர்ப்பந் திக்கப்பட்டுள்ளன.
மனம், புத்தி ஆகிய இரண்டில் எதனைக் கொண்டு தீர்மானிக்கின்றோம் நாம் என்பதிலேயே, எமது வெளிப்புறச் செயல்களின் ஆற்றலும் அவற்றின் பலன்களும் தங்கியிருக்கின்
sŋGOT.
மனிதன் உடல், மனம், புத்தி என்னும் மூன்று கரணங்களால் ஆக்கப்பட்டவன். வேதாந்தம் உடலாலும், மனதாலும், புத்தியாலும் முறையான பாதையில் மனிதன் வாழுவதற்கு வழிகாட்டுகின்றது.
பிரம்மம் தனித்திருக்கும்போது பரப்பிரம்மம். அது மாயையுடன் சேரும்போது சிருஷ்டி ஆகிறது. மாயை சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களை உடையது. காரணத்தின் குணங்கள் காரியத்தில் வெளியிடப்படுகின்றன. பிரம்மம் மாயையுடன் சேர்ந்து ஈஸ்வரனாக பஞ்ச பூதங்களைத் தோற்றுவித்தார். ஆதியில் தோன்றியது ஆகாயம். ஆகாயத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து நீர், நீரிலிருந்து மண் தோன்றின. மாயையின் முக்குணங்கள் அதனாலான பஞ்சபூதங்களிற் பிரதிபலித்தன. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய சத்வ அம்சங்கள் முறையே காது, தோல், கண், நாக்கு, மூக்கு என்ற ஐந்து ஞான இந்திரியங்கள் ஆகும். சாத்வீக அம்சங்கள், ஒன்றாகும் போது மனோ, புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்கள் தோன்றி, உடலினுள்ளே இருந்து செயற்படுகின்றன. ரஜோ குணங்களினால் தோன்றிய வாக்கு, கை, கால், கருவாய், பெருவாய் என்ற கர்ம இந்திரியங்களின் இயைந்த தொழிற்பாட்டாற் பிராண, அபான, சமான, உதான, வியான என்ற ஐந்து பிராணங்கள் உண்டாயின. தமோ குணமானது, சூக்ஷமை குணங்களால் ஸ்தூல நிலையை உருவாக்கும் குணமாகும். இத் தொழிற்பாடு பஞ்சீகரணம் எனப்படும்.

32O விகிர்தி பங்குனி O
a SY இலக்கும் இன்பமே
இராஜினி தேவராஜன்
இந்த 24 தத்துவங்களும் அடங்கிய மனிதன்' என்ற அற்புதப் படைப்பை உருவாக்கியவர் ஈஸ்வரர்.
மாயையின் பெரும் தேவை காமினி (woman) காஞ்சனி (Comforts), é5ñ55 (fame) ஆகும். ஒருவன் துர்க்குணங்களாலும், தகாத செயல்களாலும் தன் உடலுக்கும், மனதுக்கும் இன்பத்தைத் தேடிக்கொள்ளலாம். ஆனால், அந்த நிரந்தரமற்ற தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இன்பத்தை நாடாது, அப்பழக்க வழக்கங்களை விலக்கிவிடுவது சிறந்ததாகும்.
24 தத்துவங்களையும் கடந்து மாயையிலிருந்து விடுபட்டு உள்ளிருக்கும் பரம்பொருளை அறிந்தவன், வாழ்ந்து கொண்டி ருக்கும்போதே ஜிவன் முக்தன் ஆகிறான். ஆத்மாவை அறிந்தால், இறைவனை அறிகிறாய்.
பக்தி, பரவசம், தர்மம், ஜீவகாருண்யம் என்ற மனித குணங்கள் இருக்கும்போதுதான் வேதாந்தம் உள்வாங்கப்பட்டு, சரியான முறையில் ஞானம்பெற முடியும். அப்போதுதான் நிலையான இன்பமான பேரின்பத்தை அடையமுடியும்.
ஒரு குழந்தை பிறந்து ஏறத்தாழ 25 வயதுக்குப் பின்பே தனித்து நின்று செயலாற்ற ஆரம்பிக்கின்றது. ஆனால், ஒரு மிருகம் ஈன்ற பொழுதின் சில மணி நேரங்களிலேயே சுயமாக ஓடி, ஆடிப் பின் இரைதேடி மீண்டும் தன் தாயின் இருப்பிடத்தை வந்து அடைகின்றது.
பாடசாலையில் நாம் கற்பிக்கப்பட்ட பாடவிதானத்துக்கமைய தயார்செய்யப்பட்ட (சோதனை) பரீட்சைக்கு முகம் கொடுக்கின் றோம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையிற் சோதனைக்கு
உட்பட்டு, பின் அதன்மூலம் கற்றுத் தெளிவு அடைகின்றோம்.
நாம் வாழ்க்கைக்கு முகம் கொடுத்து, வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளப் பயிலவேண்டும்.
ஒவ்வொரு மனிதனிலிருந்து எதிர்பார்க்கப்படுவது மனிதத்
தன்மையே.
மனிதன் பகுதியை முழுமையென்றும், முழுமையைப் பகுதியென்றும் மாறாகக் கடைப்பிடிப்பதால், வாழ்க்கையின் அறைகூவல்களுக்கு முகம் கொடுக்கவோ, வெற்றியடையவோ முடியாது அல்லற்படுகின்றான். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட துறையிற்பட்டப்படிப்பினைத் தனது இலக்காகக் கொண்ட ஒருவன், அலுவலக நேரத்தில் தனது கடமையில் அதிசிறந்த ஆற்றலின் வெளிப்பாட்டால் உயர்ந்த மனத்திருப்தியைக் காணலாம். ஆனால், ஏனைய நேரத்தில் தான் முகம்கொடுக்க வேண்டியுள்ள பல்வேறுபட்ட சமூக, குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனற்றவனாய் அல்லற்படுவதைக் காண்கிறோம். தனது உத்தியோகக் கல்வியை முழுமையாக நினைத்து, மிகுதியைப்
22

Page 23
இந்துசாதனம் 5.O
பகுதியாக நினைத்ததினாலேயே இந்நிலை ஏற்படுகின்றது.
ஒவ்வொருவரும் செயலாற்றுவது மனத்திருப்திக்காகவே என நாம் அறிவோம். அதாவது ஒவ்வொருவரது இலக்கும் இன்பமே.
ஒரு தற்கொலையைப் புரிபவனும், தன் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக அல்லது தன் இன்பத்துக்காகவே செயற்படுகின் றான் என்பதை உணர்ந்துகொள்ளும்போது, அவனது இலக்கும் அந்நேரத்தில் இன்பமே ஆகும்.
நிரந்தர இன்பத்தை எங்ங்ணம் வழி வகுத்துக்கொள்ளலாம் எனவேதாந்தம் கூறுகின்றது.
அன்பு, இரக்கம், ஈகை போன்ற வழிகளால் நாம் பரிபூரண
மனத்திருப்தி அடையமுடியும்.
அன்பு என்பது எந்த ஒருவருடனும், சமுதாயத்துடனும், பரந்த சாகித்தியத்துடனும், ஒன்று (Oneness) என்ற ஒருமைப்பாட்டு உணர்ச்சியுடன் வாழ்வது ஆகும். நாம் எல்லா ஜீவராசிகளிடத்தும், எம்மைப் போலவே நேசித்து அன்பைச் சொரியும்போது மிகுந்த மனத்திருப்தியும் பூரணத்துவமும் எமக்குக் கிடைக்கின்றது.
ஒருவரது உள்ளுணர்ச்சித் ததும்பலின் பலமே (Strength) இரக்கமாக வெளிப்படுகின்றது. உயர்ந்ததும், மென்மையானது மான உணர்வுகளான இரக்க உணர்ச்சி, அறிவு பூர்வமாகக் கையாளப்படும்போது பலம் தோற்றுவிக்கப்படுகின்றது. இரக்கம் ஒரு ஆன்மீகவாதியின் இன்றியமையாத இயல்பு ஆகும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக் கோட்பாடு கொடுப் பதுவே அன்றி எடுப்பதாக அமையக்கூடாது. கல்விச் செல்வமாக இருந்தாலென்ன? பொருட்செல்வமாக இருந்தாலென்ன? எம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழும்போது, கொடுக்கக் கொடுக்க மனதின் செல்வச் செழிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. அடுத்தவரிடத்தில் அன்பு காட்டி இரங்கும்போது, அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து பூரணத்துவம் அடையும் ஒவ்வொரு பிரஜையும் ஒற்றுமையையும், நாட்டிற்கே ஒரு மேம் பாட்டையும் தோற்றுவிக்கின்றான்.
/3ஆம் பக்கத் தொடர்ச்சி. ஆச்சிரமத்தில் மூன்று நேரமும் உணவும், தேநீரும் அருந்தி அருகிலுள்ள மடங்களில் நித்திரை செய்வதுமாக வாழ்கிறார்கள். ஆச்சிரமம் இவர்களுக்கு உணவு மட்டுமன்றி தேவைப்படும். மருந்துகள், உடைகளையும் வழங்கிவருகின்றது.
ஆலய வீதிகளிற் பக்தர்களின் பக்திப் பரவசம் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். பூவரசம் மரத்தடியிலும், ஆலமரத் தடியிலும் நடைபெறும் பஜனை சிறப்பானது. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலியவை ஆடலும், பாடலுமாகத் திகழ்கின்றன. ஆனந்த நடனமாடுதல் பக்தியின் உச்சமாகும். வேறு எங்கும் காணமுடியாத காட்சிகள், கற்பூரச் சட்டியும், காவடியும் உற்சவ காலத்தில் மட்டுமல்ல; மற்றைய தினங்களிலும் காண முடியும்.
2:

3.2O விகிர்தி பங்குனி O
ஈகை என்பது கொடை. அது ஒரு தனிப்பட்டவருக்கோஅன்றி ஒரு கூட்டுத்தாபனத்துக்காகவோ இருக்கலாம். கொடுக்கும்போது குறித்த நேரத்தில் அத்தியாவசியமானதைப் பெறுபவர் மனம் திருப்தி அடையுமாறுகொடுத்தல் வேண்டும்.
நாம் வாழ்க்கையில் நிரந்த இன்பத்தை அடைய வேண்டு மாயின் உயர்ந்ததும், உறுதியானதுமான ஒரு இலக்கை நாம் அமைத்து, அதை நோக்கிச் செயற்பட வேண்டும். இலக்கு எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு பிரதிபலனையும், மனத்திருப்தியையும்
நிச்சயம் ஈட்டமுடியும்.
இன்பத்துக்கும், துன்பத்துக்கும் ஒருவனது மனமே காரணமாகிறது. மனம் என்பது எண்ணங்களின் ஒட்டமாகும். வெளிப்புறச் சூழலுக்கமையப் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு மனதைச் சரிப்படுத்திக்கொள்ளும் உயர்ந்ததும், ஆழமானதுமான ஆற்றலை ஒருவன் எய்தினால் மனம் அமைதியாக இருக்கும். நிரந்தர இன்பம் கிடைக்கப்பெறும்.
எல்லாவற்றிலும் மேலானதும், பரிபூரணமானதுமான அளப்பரிய செல்வம்; எமக்கு உள்நிறைந்திருக்கும் பரம்பொருளே என்பதை அறியாத மனிதன், கோயில்களுக்குச் சென்று இறைவனைத் தேடுவதும், வேண்டுதல்களைச் செய்வதுமாகத் தன் காலத்தைக் கழிக்கிறான்.
மனம், சொல், செயல் ஆகிய மூன்று கரணங்களாலும் அடுத்தவனின் நன்மையையும், இன்பத்தையும் எப்பொழுதும் கருத்திற் கொண்டு வாழ்வதால் உயர்ந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் அடையலாம் என்பது திண்ணம்.
நிரந்தரமன அமைதி அடைந்தவன் உள்நிறைந்த இறைவனை அநுபவத்தால் உணர்கிறான். நிரந்தர இன்பம் அடைகின்றான்.
"அனைத்தும் ஒன்று' என உணர்ந்திடுவாய் செல்வம் அனைத்தும் பகிர்ந்திடுவாய் உண்மை இன்பம் உள்நிறைந்த-"பரம்பொருள்" என்பதை அறிந்திடுவாய்"
లిr
மக்கள் உளப் பூர்வமாக இறைவனைப் பிரார்த்தனை செய்வதைக் காணமுடிகின்றது. கலியுகன் கந்தன் எம்குறை நீக்குவார் என்ற நம்பிக்கை இங்கு வேரூன்றியிருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆலயம் எப்படி இயங்க வேண்டும்? என்பது வினாவானால், செல்வச்சந்நிதியும் ஆச்சிரமமும் போல் என்பது விடையாகும். சமயமும், ஆலயங்களும் சமூகச் சிந்தனையுடன் செயற்பட வேண்டும். பொருளாதாரம் தேடும் செயல்களைக் கட்டுப்படுத்தி, வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கான தொண்டுகளைச்
செய்வதற்குச் சமயிகள் எல்லோரும் முன்வரவேண்டும்.

Page 24
d that high places were im regnated with sacred forces. Thus the mountains were considered to be sa Cred by the ancient and rega rded by them as objects of
worship.
regarded as being guarde
nanuru (158), for example,
runtirat katavukakkumuyar (அருந்திறற் கடவுள் காக்கும் உயர் "the high peaks of larg
guarded by Valiant gods."
Narrinai (14), anoth cient Tamil text,
nitions about men practisi ceticism on sacred
ains in the following li
Sometimes the sacredness of the mountain is realized by the magical effect of some herbs O fruits mountains. A poetess named Avv. the king Attikaimaan. OnCe he obtained from the Nelli (phylla mountain. It was believed tha
marvelous virtue of prolonging
Edited & Published by Mr.S.Shi Printed at Harikanan Printers, N.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e mountain
is or stones