கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.10

Page 1
50வது ஆண்டை நோக்கி.
%
கலைஞர்களை
6óðólf? (OMT
ஒக்டோபர் 2011
 
 
 

ᏫᏫᏈᏱ Ꮿ
ரியர்: டொமினிக் ஜீவா

Page 2
15 வருடத்திருமணசேவை நிறைவினை முன்னிட்டு வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
in
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை முன்னோழ, முத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு |மான திருமன ஆலோசகர்/ஆற்றுப்படுத்துநர் குரும்ப சி.ழயூர், மாமியழ வேல் அமுதறுடன் திங்கள், புதன் வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
தொலைபேசி:
48,73929, 23.60694, 236.0488
൬inഗത്വ)
முகவரி 8-3-3 மெற்றோ டிமனை (வெள்ளவத்தை &II6) லயத்திற்கு எதிராக நிலப் பக்கம், 339ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு-06
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சிறந்த முறை சுயதெரிவு முறையே ரம்மிய மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே
 
 
 
 
 
 
 

Tன் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து LT Lப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம்
Te ee S B MMOOyOtBmm Y S00S 00S0S TTg செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆ8:ன:tடுத்திபுரு:து. அத்துடன் ஐடல8 வரலாற்றில் முதன் முதலில் சலு லுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியக்
ஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. ஒக்டோபர்
889
ഠ//%' ീഴൂ
ഭർ0% @ർഗ്ഗര
OOrrGOOlS S TTLu S 00MOTS LLS S ZS Mkm0LlLlLSSTTSS OOMMS ரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல. ஆ ர் ஆரோக்கி:ான இலக்கிய இயக்
கு எழுதிவர்களே பொறுப்பாளவர்கள்
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 232O721 mallikaiJeeva@yahoo.com
பரஸ்அயரத் புரிந்து கொண்ரு @g.@T.
6த்தனை எத்தனையோ பாரிய கசப் பான அநுபவங்களுக்கூடாக, நாம் கடந்த காலங்களில் நீந்தி நீந்தி, புலம்பெயர்ந்து, இன்று பரதேசம் வந்திருக்கின்றோம்.
இதில் நிறைய நிறையப் படைப்பாளி களும், எழுத்தாளர்களும்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாரிய கசப்பான அநுபவங்கள்
எமது பிற்சந்ததியினரின் பார்வைக்குத்
தெளிந்த ஆவணமாகப் பதிந்து வைக்கப்பட வேண்டும். படைப்பாளிகளும், எழுத்தாளர் களும் இந்தக் கடந்தகால ஆவணப் பதிவில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். -
இந்தப் பாரிய எதிர்கால ஆவணப் பதிவுப் பணியில் பங்குகொள்ள முனைந்து முன் முயற்சி எடுத்துவரும் நம்மவர்கள், தம்மைத் தாமே ஒருதடவை சுயவிமரிசனம் செய்து
கொள்வதும் மிக மிகப் பொருத்தமான
தொன்று என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது ST605,45 சிறந்ததாகும்.
நமது சமூகம் தான் வாழும் காலகட் டத்தில் குடும்பம் குடும்பமாகக் கொடுத்த பாரிய விலையைக் கவனத்தில் கொண்டு, எழுத்தாளர்களாகிய நாம் பல்வேறு குழுக் களாகவும், கோஷ்டிகளாகவும் பிரிந்து நின்று கொண்டு, பரஸ்பரம் சென்ற காலங்களைப் போல கோஷ்டிச் சண்டையில் ஈடுபட்டு, வர லாற் னறில் கறைபடிய வைக்கப் போகின் றோமா? என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அதி முக்கியமான

Page 3
தொன்றாகும். கருத்து முரண்பாடுகள், அபிப் பிராய மோதல்கள், பார்வை வேறுபாடுகள், தத்துவப் பொச்சரிப்புகள் தனித்தனியாகவோ, குழுக் குழுவாகவோ இருந்து விட்டுப் போகட் டும் அப்படிப் பல கோஷ்டிகளாக இருப்பது தான் இலக்கிய வளர்ச்சிக்கான தனிக் குணம்.
இவைகள் எதுவுமே நமது மானுட நேசிப் புக்கும், எதிர்காலச் சுபீட்ச முன்னேற்றத்திற் கும் தடையாகவோ, இடைஞ்சலாகவோ இருந்துவிடக் கூடாது என்பதே நமது தலை யாய கோரிக்கையாகும்.
கருத்துச் சண்டையோ, அபிப்பிராய முரண்பாடோ, தத்துவச் செயற்பாடோ தனி நபர் விரோதமாக மாறிவிடக் கூடாது என்பதே நமது பெருவிருப்பமாகும். இதில் விசேஷ கவனம் செலுத்த வேண்டும்.
பேனா பிடித்து எழுதும் சகோதரன், அவன் எத்தகைய கருத்துக்களைக் கொண் டிருந்த போதிலும், எத்தகைய அபிப்பிராய முரண்பாடுள்ளவனாக இருந்த போதிலும் கூட, அவன் எனது சொந்தச் சகோதரன் என்ற புதிய நேச மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனக்கொரு பழைய சம்பவமொன்று நினைவுக்கு வருகின்றது. சாஹறித்திய விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடை பெற்ற அந்தக் காலகட்டம்.
அவ்விழாவில் முற்போக்கு எழுத்தாளர் கள் கலந்துகொண்டு, கூழ் முட்டை அடித்த சம்பவம் ஈழத்து இலக்கிய வரலாற்றில் கரும் புள்ளியாக இன்று வரைக்கும் பதியப்பட்டுள்ள பெரும் துயரம் மிக்க சம்பவமாகும்.
இன்று இந்தச் செயலை ஆவணப் படுத்தி, எழுத்தில் பதிய வைத்துள்ளேன்.
அந்த விழாவில் கலந்துகொண்டு, நமது பக்கத்து நியாயத்தை எடுத்துச்சொல்லி விளங்க வைத்துவிட்டு, நாம் அனைவரும் விழாவை விட்டு வெளியேறிவிடுவதுதான் எட்டப்பட்ட ஏகமனதான தீர்மானம்,
நம்மில் ஒருசில அதிதீவிரவாதிகள் பொதுச் செயலாளருக்கும் தெரியாமலே கோழி முட்டை கொண்டு வந்து, கூட்டத் தைக் குழப்பிவிட முயன்றனர்.
பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், முற் போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த அவலச் சுவையை இன்றுவரைக்கும் மென்று கொண்டு வருகின்றது.
நமது இந்தச் செயலை மிக மிக வன்மையாகக் கண்டித்தவர், ரஸிகமணி கனக செந்திநாதன் அவர்கள். கடுங்கோபத் துடன் விழாவிலிருந்து எங்களையெல்லாம் விரட்டிய அவர், மூன்றாம் நாள் "டேய் சொக்கா! எப்படியடா, இருக்கிறாய்?’ என்ற புன்சிரிப்புடன் மல்லிகைக் காரியாலயத் தின் படியேறி வந்தமர்ந்தார்.
நான் மலைத்துப்போய் விட்டேன். அதுதான் ரஸிகமணி செந்திநாதன்
காலையில் பண்டிதமணியின் இருப் பிடத்தில், பகல் மல்லிகையில், பிற்பகல் றிகல் தியேட்டரில் ஆங்கிலப் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவர்தான், ரஸிகமணி அவர்கள். ஒரு புதுவித மனிதன்
இந்த ஆழமான நேசிப்புத் தன்மை எம் ஒவ்வொருவரிடமும் இருந்தாலே, போதும் நாளை நமது இலக்கிய வரலாறு விதந்து பேசப்பட்டே தீரும்! - இதை நிச்சயம் நம்புங்கள்.

LSSLSLSSLSLSSLSLSSLLLSLSLLLLLSLLLLLSLLLLLLSLSSSLLLSLLLLLSLLLLLL நமது சொந்கு மண்ணின்
குனித்துவத்தையும், வளர்ச்சியையும் பேணி வளர்க்க வேண்டியது,
எழுத்குாளர்களது குலையாய கடமையாகும்.
வேறெந்தக் காலங்களையும் விட, தற்போதைய கணினி வளர்ச்சிக் காலகட்டத்தில் புத்தகங்கள் அடிக்கடி வெளிவருவது தனிமனித மகிழ்ச்சிக்குரியதாயினும், இத்தகைய நூல்கள் காலத்தையும் கடந்து நிலைத்து நிற்கக்கூடியவைதானா? என்றொரு சந்தேகத்தையும் நம்முள் எழுப்பாமலுமில்லை
ஒரு நூல் அதனது உள்ளடக்கக் கருத்துக்கள் மூலமும், நடை, சொல்லாட்சி, பரந்த கற்பனை வளம், ஆழ அகலமான சிந்தனைத் தெளிவு மூலமே நீண்ட நெடுங்காலம் நிலைத்து நிற்கக்கூடியதாகும்.
ஆனால், இன்று வெளிவரும் பல நூல்கள், கடதாசியில் எழுத்து வடிவில் பதியப்பட்டு வரும் புத்தகங்களாகக் கண்ணுக்குத் தெரிகின்றனவே தவிர, காலம் காலமாக - காலம் காலமாகக் கூட வேண்டாம், ஒரு சில ஆண்டுகள் கூட நிலைத்து நிற்கக்கூடியனவா? என்ற சந்தேகத்தைத் தரமான வாசகச் சுவைஞர்கள் மத்தியில் எழுப்பாமலுமில்லை.
நூலொன்று வெளிவந்திருந்தால் - அது படைப்பு இலக்கியமாக இருந்தாலும் சரி, கட்டுரை, கவிதை நூலாக இருந்தாலும் சரி அந்த நூலைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசவேண்டும். அல்லது விமர்சிக்கப்பட் வேண்டும். கருத்துச் சொல்ல வேண்டும்.
ஆனால், இன்று அடிக்கடி பற்பலப் பிரதேசங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளி வரும் நூல்களைப் பற்றி, எவருமே நாலு வார்த்தைகள் பேசுவதில்லையே? இதற்கு என்ன காரணம்?
அந்த நூல்களின் உள்ளடக்கம் பற்றியோ, கருத்து நடை பற்றியோ, எழுதியவர், வெளியிட்டவர் உட்பட தமது முயற்சிகள் நூல் உருவில் வந்தாலே போதும் என்ற அவசர கதியில் புத்தகங்களாக்கி வெளியிட்டு விடுகின்றனர். புத்தகம் வந்தால் போதும் என்ற மனநிலை.
இந்தப் போக்கு ஆரோக்கியமான இலக்கியப் போக்கல்ல. நீண்டு நிலைத்திருக்கக் கூடிய இலக்கியப் பதிவுமல்ல என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொண்டாலே, ஈழத்து இலக்கியம் எதிர்காலத்தில் தனித்துவம் பெற்றுத் திகழும் என்பது சர்வ நிச்சயம்.

Page 4
ட்டைப்படம்
வாழ்நாள் இலக்கியத் தேட்டத்தில் கல்லிமான்
எஸ்.எச்.எம்.ஜெமீல்
- தாஸிம் அகமது
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நாட்டில் மேலெழும்பிய அறிஞர்களுள் முக்கியமான ஒருவர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆவார். தனது பதினேழாவது வயதில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் நடத்திய வாராந்த வானொலி நிகழ்ச்சியான இளைஞர் மன்றத்தின் மூலம் 1957ஆம் ஆண்டில் தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும், தமிழ் மூதறிஞருமான கலாநிதி ஏ.எம்.ஏ.அஸிஸ் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகவிருந்த காலத்தில் கொழும்பில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்கும் முக்கிய இடமாக அக்கல்லூரி விளங்கியது. ஆங்கில மொழி அரசோச்சிய அக்காலத்தில் தமிழ் மொழியைக் கற்பித்தல் அவ்வளவு முக்கியத்துவம் உடையதல்ல என கொழும்பின் பிரபல பாடசாலைகள் கருதிக்கொண்டி ருந்த அக்காலகட்டத்தில் ஸாஹிராக் கல்லூரி தமிழ் மொழி உபயோகத்திலும் அதன் இலக்கிய வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியது. முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி, எஸ்.எம்.கமால்தீன், பேராசிரியர் எம்.எம்.உவைஸ், நவாலியூர் சோ.நடராசன், பண்டிதர் பி.கந்தையா, நூல் வெளியீட்டாளர் எஸ்.எம்.ஹனிபா, ஒலிபரப்பாளர் வி.ஏ.கபூர், ஊடாகத் துறை ஆர்.சிவகுருநாதன், பி.பாலசிங்கம், ஆய்வாளர்களும் அறிஞர்களுமான பேராசிரியர் சிவத்தம்பி, புவியியற் பேராசிரியர் எஸ்.செல்வநாயகம், ஏ.எம்.சமீம், எம்.எம்.எம்.மவுற்றுாப், எஸ்.எச்.எம்.ஜெமீல், எம்.ஏ.எம்.சுக்ரி, ஏ.சி.எல்.அமீரலி மற்றும் எஸ்.இஸட்.எம்.மஸர்ை மெளலானா, ஏ.எச்.எம்.அஸ்வர், சாத்தான் குளம் ஜப்பார், மானா மக்கீன், கே.இராஜ புவனேஸ்வரன் என்போர் அனைவரும் இப்பாரம்பரியத்தின் பங்காளிகளும் வாரிசுகளும் ஆவார்.
எஸ்.எச்.எம்.ஜெமீலின் முதலாவது ஆக்கம் தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில் 'எனது ஊர்' எனும் தலைப்பில் 1949ல் வெளிவந்தது. அப்போது அவருக்கு
மல்லிகை ஒக்டோபர் 2011 季 4.

வயது ஒன்பது. அவரது அங்கத்துவ இலக்கம் 2364. தினகரன் பாலர் கழகப் பிரவேசத்தின் மூலமாகவும் இலங்கை வானொலி மூலமாகவும் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய, எழுத்து வண்மைகள் இடை யூறின்றித் தொடர்ச்சியாக இன்றுவரை நடைபெற்று வந்திருப்பதோடு அவை அனைத்தினதும் விபரப்பட்டியல் எஸ்.எச். எம்.ஜெமீல் அவர்களின் அறிவாக்கங்கள் எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது. நூலக சேவையில் பட்டப் படிப்பும், நூலக வியல் விஞ்ஞானத்தில் பட்டப்பின்படிப்பும், டிப்ளோமா தகுதியும், தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா பட்டமும் பெற்று நூலக வியலாளரான எஸ்.எல்.ஸியாத் அஹமட் அவர்களால் தொகுக்கப்பட்டு, குமரன் புத் தக இல்லத்தினரால் அச்சிட்டு வெளியிடப் பட்டுள்ளது. ஜெமீலைப் பற்றியும், அவரது கல்வி, இலக்கிய மற்றும் நாட்டுப்புறப் பண் பாட்டியல், வரலாற்று ஆய்வுகள் என்பன வற்றையும் பூரணமாக அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவுகின்றது. அவரது சுய ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், பதிப்புகள் அத்துடன் வெளியீட்டுரை, பதிப் புரை, சிறப்புரை, ஆசியுரை, ஆய்வுக் கட்டுரை, பேச்சுக்கள், வானொலி உரை கள், கலந்துரையாடல்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், ஆய்வு அறிக்கைகள், ஜெமீல் பற்றியும் அவரது நூல்கள் பற்றி யும், பிறர் எழுதியவை போன்ற இன்னோ ரன்ன 555 விடயங்களை இந்நூல் உள் ளடக்கி இருக்கின்ற காரணத்தினால் அவரது ஆளுமையை அறிந்துகொள்ள வழி செய்யும் ஒர் ஆவணம் இதுவாகும்.
இவரால் வெளிக்கொணரப்பட்ட வெளியீடுகள் 31ல் அவரது சொந்த ஆக்
கங்கள் 17 ஆகும். ஏனையவையும் இன் னும் பலவும் அவரால் தொகுக்கப்பட்டவை யும், பதிக்கப்பட்டவையுமாகும். பதிப்புத் துறையில் அவரது ஈடுபாடு மிக நீண்ட தாகும். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஸாஹிராக் கல்லூரி அதிபராக விருந்த காலத்திலேயே இப்பணி ஆரம் பித்து விட்டது. அக்கல்லூரி பழைய மாண வர் சங்கத்தின் மூலம் 4 வருடங்களுள் 5 நூல்களை வெளியிடுவதில் முன் நின்றார். அதேபோன்று அட்டாளைச்சேனை ஆசிரி யர் கலாசாலையின் அதிபராகவிருந்த காலத்தில் இப்பிரதேசத்தின் இலக்கிய வாதிகளையும், ஆர்வலர்களையும் ஒன்று சேர்த்து 'இஸ்லாமிய நூல் வ்ெளியீட்டுப் பணியகம்' என்பதனை ஆரம்பித்து அதன் மூலம் 21 நூல்களை வெளியிட்டார்.
இதில் ஒரு முக்கிய விடயம் யாதெனில் இந்நூல்களுள் அனேகமா னவை அந்தந்த எழுத்தாளர்களின் முத லாவது நூலாகும். அத்துடன் 1986இல் வெளியிடப்பட்ட 'எழுவான் கதிர்கள்’ எனும் கவிதைத் தொகுதியானது, 1970ம் ஆண் டின் பின் கவிதையாக்கத் தொடங்கிய தென்கிழக்குப் பிரதேச இளங் கவிஞர்கள் 24 பேரின் கவிதைகளைக் கொண்டிருந் தது. அவர்களுள் பெரும்பாலோரது கவிதைகள் ஒரு நூலில் பிரசுரிக்கப் பட்டமை அதுவே முதன்முறை என்ப தோடு அவர்களுட் சிலர் இன்று நாடறிந்த பிரபல்ய கவிஞர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் பிறரின் ஆக்கங்களைத் தனது முயற்சியினால் பதிப்புச் செய்து வெளியிட்டிருக்கும் பணி மிகச் சிறந்த சமூக எழுத்துப் பணியாகக் கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 5

Page 5
சுவடி ஆற்றுப்படை வெளியிடுவதற் குப் பட்ட கஷ்டங்களையும், கடின உழைப் பையும் நேரடியாக நான் பார்த்து அதிச யித்து இருக்கிறேன். இலங்கையில் முஸ் லிம் ஒருவரினால் 1868இல் அச்சில் வெளி யிடப்பட்ட முதல் நூலில் இருந்து 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்நாட்டில் வெளியான 1977 நூல்களின் விபரப் பட்டி யலை சுவடி ஆற்றுப்படையின் நான்கு பாகங்களும் கொண்டிருக்கின்றன. கடந்த மே மாதம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராசிரியர். முனைவர். சாய்பு மரைக் காயர் சமர்ப்பித்த 'முஸ்லிம் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்’ எனும் ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பட்டியலிட்டதில் மூதறிஞர் பேராசிரியர் ம.மு.உவைஸ், பேராசிரியர் பீ.மு.அஜ்மல்கான் மற்றும் எஸ்.எச். எம்.ஜெமீல் ஆகியோரின் பணிகளை மிக வும் சிலாகித்துக் கூறுகிறார். (ஆய்வரங்கக் கோவை பக்:4-5)
இதேபோன்று 1989-1990ஆம் ஆண்டு களில் நாடளாவிய ரீதியில் எல்லாப் பிர தேசங்களிலும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்புப் பணி யும் உழைப்பும் மிகக் கடினமானதே யாகும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முஸ்லிம் சேவையின் அனு சரணையுடன் இவை ஒலிப்பதிவு செய்யப் பட்டதோடு தொடர் நிகழ்ச்சியாக 40 வாரங் கள் ஒலிபரப்பப்பட்டது. பின்னர் இத் தொகுப்பு ‘கிராமத்து இதயம்' எனும் பெய ரில் நூலாக வெளியிப்பட்டு 1995ம் ஆண் டிற்கான சாஹித்திய மண்டலப் பரிசையும்
பெற்றுக் கொடுத்தது. இந்தியாவில் இஸ் லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தினால் 1998இல் நடத்தப்பட்ட ஆறாவது தமிழ் இலக்கியப் பெருவிழாவில் 'தமிழ் மாமணி பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட்டார்.
1990களில் முஸ்லிம் சபை, பண்பாட் டலுவல்கள் அமைச்சராக ஏ.எச்.எம்.அஸ் வரும், அவ்வமைச்சகத்தின் செயலாளராக எஸ்.எச்.எம்.ஜெமீலுன்ம் கடமையாற்றிய காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினையும், பாரம்பரியத்தினையும் தொகுத்து நூலுருவாக்கும் பாரிய பணி ஆரம்பிக்கப்பட்டது. இத்தொடரில் 12 மாவட்டங்களின் வரலாற்று நூல்கள் இது வரை வெளிவந்துள்ளன. இவற்றுள் 9 நூல் கள் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவ்வமைச்சின் செயலாளராகவும், பின்னர் ஆலோசகராக வும் பதவி வகித்த காலத்தில் வெளிவந் தவையாகும். எனவே அவரது பதிப்பு முயற்சிகளும், வானொலி, தொலைக் காட்சி உரைகளும், உள்நாட்டு வெளி நாட்டுப் பயணங்களும், வகித்த பதவி களும் பிறருக்குப் பயன்தரக்கூடியதாகவே அமைந்திருக்கின்றன.
அகவை 70ஐ எட்டிவிட்ட அல்-ஹாஜ். எஸ்.எம்.எச்.ஜெமீல் அவர்கள் (பிறந்த திகதி 18.10.1940) ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவர். ஆங்கில மொழி மூலமே தனது முழுக் கல்வியைப் பெற்றாலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஜி.ஏ. கியூ. பரீட்சையில் தமிழ்ப் பாடத்தில் அவ்வாண்டில் அதி உச்சப் புள்ளியைப் பெற்று பிரான்ஸிஸ் கிங்ஸ்பெரி பரிசினைப் பெற்றவராவார். இவர் பிறந்து வளர்ந்த சூழல், இவரது மொழி, இலக்கிய ஆற்றல் வளர்வதற்குச் சாதகமாக அமைந்தது.
மல்லிகை ஒக்டோபர் 2011 * 6

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதுவில் பிறந்த ஜெமீல் அவர்கள் தமது ஆரம்பக் கல்வியைப் பக்கத்து ஊரான காரைதீவில் விபுலானந்த அடிகளி னால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண வித்தி யாலயத்தில் பெற்றார். கனிஷ்ட இடை நிலைக் கல்வியைக் கல்முனை சென். மேரிஸ் கல்லூரியிலும், சிரேஷ்ட இடை நிலைக் கல்வியைக் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் கற்றார். பட்டப் படிப்புகளை பேராதனை, கொழும்பு மற்றும் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகங்களில் பெற்றார். இத்தகைய பரந்த சூழ்நிலைகளில் வளர்ந்த காரணத்தினாலேயே எதனையும் அகலமாகப் பார்க்கும் பக்குவம் தனக்குக் கிடைத்ததாக அவர் கூறுவார்.
நெல்லை நடேஸ் எனும் ஊடாகவிய லாளர் சிறந்த அதிபர்களைப் பற்றிய ஆய் வொன்றினை மேற்கொண்டு வீரகேசரிப் பத்திரிகையில் தொடர் கட்டுரையாக எழு திக்கொண்டிருந்த சமயம், சென்.மேரிஸ் கல்லூரியின் (தற்போது அதன் பெயர் கார் மேல் பாத்திமாக் கல்லூரி) அதிபராக கால் நூற்றாண்டு காலம் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்த அருட் சகோதரர் எம்.எம்.இம் மானுவேல் அவர்களையும் பேட்டி கண் டார். 'உங்களுடைய தலைசிறந்த மாண வன் யார்?’ என அதிபர் இம்மானுவேல் அவர்களைக் கேட்டபோது அதற்கு அவர் எஸ்.எச்.எம்.ஜெமீல் என்று பதில் அளித் தார். (வீரகேசரி 4.9.1988)
தொழில் ரீதியாக முதலில் பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும், அதனைத் தொடர் ந்து கல்லூரி அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், கல்வித் திணைக்கண
உயரதிகாரி, பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளர், கிழக்குப் பல் கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர், முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் செய லாளர், சமய கலாசார அமைச்சின் ஆலோ சகர் எனப் பல்வேறு உயர் பதவிகளை வகித்து 2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
கல்விப் பணி, சமூகப் பணி, எழுத்துப் பணி, அரச சேவை ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை உருவாக்கிய துடன், வழிகாட்டியாகவும் வாழ்ந்து வரும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கு சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது பணிகளில் பெரும்பாலானவை சுயமான சமூக அக்கறையின்பாற்பட் டவை. அவை யாருடைய ஆளுமைக்கும் அகப்படாத ஆளுமை கொண்டவை. யாரையும் பாதிப்புக்குள்ளாக்காத நேசிப்புக் குள்ளானவை.
கடந்த மே மாதம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடை பெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக் கிய மகாநாட்டின் இலங்கை ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இவர் ஆற்றிய பணி இன்று பலராலும் பாராட்டப்படுகின்றது. மிகவும் சிறப்பான இலக்கிய நயத்தோடும், ஆழமான அறிவுசால் முறையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் இலங் கைப் பேராளர்களாக 228 பேர் கலந்து கொண்டனர். இம்மகாநாட்டின் அனேக அரங்குகளில் இலங்கைப் பேராளர்கள் சிறப்பான பங்களிப்பினை வழங்கி நாட்டிற் குப் புகழினைச் சேர்த்தமை நாம் அனை வரும் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 7

Page 6
ங்கை
தசேனை!
- வேல்அமுதன்
ஒருவாறு குடும்ப வைத்தியரின் கட்டணத்தைக் கந்தையா கட்டினானே ஒழிய, வைத்தியர் சொன்னது போல் அவனின் மனைவியை உடனடியாகப் பெரியாஸ்பத்திரியில் அவனால் அனுமதிக்க முடியவில்லை.
தாமதம் நோயாளிக்கு ஆபத்தை விளைவிக்கலாம். MRI Scan பண்ணி நோயை இனம் கண்டு, உடன் சிகிச்சையைத் தொடர வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தும், மனைவியை வாடகைக் கார் பிடித்து கூட்டிப் போவதற்கு அவனிடம் பணமில்லை.
அவன் மிக விசுவாசமான தொழிலாளி. காலையில் எட்டுமணிக்கு வேலைத் தளத்திற்குப் போய் இரவு எட்டுமணி வரை மாடாய் உழைப்பவன். கடந்த இருபது வருட நேர்மையான கடும் உழைப்புக்கு அவனுக்கு இன்று கிடைக்கும் மாதாந்த வேதனம் பதினெட்டாயிரம் ரூபாய் மாத்திரமே.
கந்தசாமிக்கு நல்ல அறிமுகமான ஒருவர், அவனின் தொழிலதிபர் கனகசபை மாத்திரமே. அவன் தனது அவசர தேவையை முதலாளியிடம் முறையிட்டு, முற்பணமாகக் கொஞ்சப் பணம் கேட்டான். கனகசபை “சனம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டதால், தொழில்துறை படுத்திட்டுது. ஒருநாளைக்கு ரண்டு தடவை சேல்சுக்குப் போன எங்கட வான், கிடிமைக்கு ஒருதடவையும் போகுதில்லை” என ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.
அன்று போயா தினம். பின்னேரம், கந்தசாமி செய்வதறியாது கால் போன பக்கமாகப் போய், அந்தப் பிரபல பிள்ளையார் கோவிலில் நுழைந்தான்.
ஒரு ஆடம்பர கார், ஆலய வாசலில் வந்து நின்றது. பளபளக்கும் பட்டுப் பீதாம்பரத்தில் பதக்கம் தொங்கும் கழுத்துப் பவுண் சங்கிலியுடன் காரிலிருந்து இறங்கியவர் வேறு யாருமல்ல, அவனது அபிமான முதலாளியும், அவரது அன்பு மனைவுயும் தான் கந்தசாமி ஏதோ நினைத்தவனாக ஆட்களோடு ஆட்களாக தானும் அவர்களைப் பின்தொடர்ந்தான். முதலாளி தம்பதிக்கு கோவிலில் முதல் மரியாதை. அவர்களின் அர்ச்சனைத் தட்டில் தெரியந்தக்கதாக வைக்கப்பட்டிருந்தது ஐயாயிரத்து ஒரு ரூபாய் தட்சணை!
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 8

மரண மருந்து
மண் சிரித்து அதன் உள்ளம் வெள்ளையான போது பூப்பந்தல், முழுதும் அமுத மழைத்துளியில் குளித்து சொர்க்கத்தை உருட்டி உள்ளங்கையில் வைத்துக்கொள்ள உள்ளம் நினைத்த பொழுது.
குருத்து விட்டுச் சிரித்த ஒரு ஓங்கி வளர்ந்த தென்னை மீது இடிவிழுந்த சோதனையில் வாழ்வு கருகி மலையேறிப் போகிறது மனசு.
ஆங்காங்கு குளிர்விட்டுத் தளைத்த கனவுப் பசுங்கொடி சொட்டுச் சொட்டாய் பசுமை குறைந்து அறுந்து போவதற்கு யார் காரணம்?
இனம் இல்லாத இடை எழுத்துக்களாகி தனித்து எரியும் அடுப்புக்குச் சுமையான மனிதன் ஏற்றிய பாரம்
இந்தப் பாரம் குளிசைக்குக் குறைவதில்லை
மல்லிகை ஒக்டோபர் 2011 & 9
- ஜே.வஹாப்தீன்

Page 7
தண்ணி ஓதி அடித்தாலும் இறங்காது ஊதிப் பார்த்தாலும் ஒடி ஒளியாது.
ஆனால், மரணத்தால் மட்டும் முடியும்.
O O
அடிசாய்ந்த இரவு
பயங்கரமான ஒரு கருப்பு அரக்கனாய் என்னைப் பயமுறுத்திய இருட்டுக்கசம் நெடுநேரமாய் செத்துக் கிடக்கிறது செங்கதிர் தொலைத்து
கனவுக் கண்ணாடி பளபளக்கும் போது மொழிக்கல் வீசிய வெக்கையான இரவுக்கு முன்னால் நம்பிக்கை பூஞ்சணம் பிடித்துக் கிடக்கிறது.
ஒவ்வொரு பொழுதும் மரத்தின் வேர் பிடுங்கி அடிசாய்ந்த இரவு அசையாமல், அகன்று விரிந்து வளர்ந்து இருட்டுக் காடாகி இன்னும் விடியாமல்.
மூடிய கண்கள் விழித்து ஒளியில் குளிக்க நினைத்து ஆசைத் தூண்டிலில் மாட்ட துடித்துத் துடித்துக் கதைபேச.
பட்சிகளும் கதைபேசி தென்னந் தோட்டத்து குயில் பாட்டும் கேட்கிறது காகம் கண்கெட்டு
கிணற்றில் விழுந்து கரைகிறது.
சேவல் கூவி தொண்டை கம்மி பேடுகளும் கூவி
காலைக்குரிய வரவேற்பு ஆரவாரம்
ஆனால்
இறுகிக் கிடக்கிறது இரவு அம்மிக்கல்லாய்.
பூக்களின் இதழ்களும் புதுத் தென்றலும் திருமணம் செய்து வாசக் குழந்தை பிரசவமாகும் காலைப் பொழுது காணாத்துவிட்டது.
பூமியின் பச்சை முழுதும் கறுப்புப் பேய்ப் பயங்கரவாதம். இந்த இரவு அடிசாய்ந்த பொழுது இனி - மேற்குத் திசை வெழுக்கும் அதுவரை பேய் உலகம் தின்னும்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 10

எதிர்பாராமல் ஏற்படும் மரணங்கள் மலிந்த பூமியில்தான் சாரங்கனும் வாழ்ந்து கொண்டிருந்தமையினால் அவனது மரணமும் சற்று முன்னர்தான் அகாலமாக நிகழ்ந்தது. அவன் இறந்தபோது அருகே யாருமில்லை. அழுவதற்கென உறவுகளும் இல்லை. வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த போது காப்பரணிலிருந்து சிறிது தூரத்திற்கு அப்பாலும் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையாகவும் இந்த அவலம் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின்ன்ால் அமர்ந்திருந்தவன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு விரைந்து சென்றுவிட்ட பின் அவன் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அனுங்கிக்கொண்டிருந்தான்.
இதோ மரணம் தன்னை நெருங்கிவிட்டதாக சாரங்கன் உணர்ந்த வேளையில் அவனது மனத்திரையில் அவனது மனைவி, பிள்ளைகள், அம்மா என அனைவரும் அணிவகுத்து வந்தபோதிலும், இறுதியில் அன்பு ததும்பும் மனைவியின் முகமும், அவளது வேண்டுதலும் நினைவை ஆக்கிரமித்தன. வேதனையில் முனகிக் கொண்டி ருந்த இந்த இறுதிக் கணங்களில் மனைவியின் வேண்டுதல்தான் காதோடு ஒலித்தது.
"இஞ்சாருங்கோ. இனி இந்த எழுதுற வேலையை விடுங்கோ. பத்திரிகை நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் வேலை செய்ததும் போதும். நீங்கள் தனி ஆளில்லை. உங்களை நம்பி நான் மட்டும் இருக்கேல்லை. இரண்டு குழந்தையஞம் இருக்கெண்டதை மறந்திட்டு, உண்மைகளைப் புட்டு வைக்கிறனெண்டு எழுதுறி யள். இக்கணம் இதால உயிர் ஆபத்து வந்திட்டால் உங்களை நம்பியிருக்கிற நானும் பிள்ளையஞம் அநாதையாகி விடுவம். இதுகளைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறியளே? மற்றவங்களைப் போல பேசாமல் இருங்கோவன்.”
"ரஞ்சினி. அநியாயங்களைக் கண்டு சும்மா இருக்கிறதெண்டால் எழுத்தாள னாக இருக்க முடியாது. சும்மா ஒப்புக்கு எழுதுறதை விட எழுதாமலே இருக்கலாம் கண்டியோ? கருத்துரிமை என்பது எங்கட அரசியலமைப்பிலையும் வழங்கப்பட்டி ருக்கு. கருத்துச் சுதந்திரம் இல்லை யெண்டால் நாட்டிலை சுதந்திரம் (Agrobgép இல்லையெண்டுதான் பொருள்." அவன் மனைவியைத் தேற்றுவான். a o
- ச.முருகானநதன ரஞ்சினி அவனுக்குக் கிடைத்த அற்புதமான மனைவி. அவனுடைய எண்ணங்களை எல்லாம் அனுசரித்து நடப்பவள். அவனோடு எதிர்வாதம் செய்து சண்டையிட மாட்டாள். தனது அபிலாஷைகள் எவையாக இருந்தாலும் அவற்றை வலியுறுத்தாமல் கணவனுடைய கருத்துக்களோடு உடன்பட்டுப் போவாள். ரஞ்சினியை மனைவியாகப் பொறுவதற்குத் தான் கொடுத்து வைத்ததாக சாரங்கன் உணர்வான்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 11

Page 8
கடந்த சில காலமாக ஊடகவிய லாளர்களும், எழுத்தாளர்களும் கொலை செய்யப்பட்டதை அடுத்து ரஞ்சினியின் மனதில் கலக்கம் ஏற்பட்டது. “அத்தான் உயிர் என்பது பெறுமதி மிக்கது. அதை வீணாக இழக்கக் கூடாது. இந்த நாட் டிலை இப்ப கருத்துச் சுதந்திரம் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறவரையில் ஏனைய சட்டங்கள் செல்லாக்காசுதான். நிதானமாக எழுதுங்கோ.”
“ரஞ்சினி. உண்மையை மறைக் கிறதும் பொய்க்கு ஒப்பானதுதான். அதிகார பீடத்தில் இருக்கிறவங்களின்ர முகத்திரையைக் கிழிக்கிறதுதான் ஊடக வியலாளன்ர கடமை. நாட்டிலை நடக் கின்ற அநியாயங்களைப் புட்டுக்காட்ட வேணும். மனித உரிமை மீறல்களைப் பகிரங்கப்படுத்த வேணும். பேனாவும் ஒரு கூர்மையான ஆயுதம்தான்.”
“உங்கட ஆயுதத்தால எதையும் சாதிக்கிறதுக்கு முதல்ல அவங்கட ஆயு தங்கள் உங்களைச் சாப்பிட்டு விடும் அத்தான்.”
"நீதனி மனிதனைப் பற்றிப் பேசு கிறாய். நான் சமுதாயத்தைப் பற்றி பார்க்கிறன்.”
அவனோடு வாதிட்டு வெல்ல முடி யாது என்பது அவளுக்குத் தெரியும். எனினும் மனம் கேட்காது. அவள் அவ னோடு வாதிடுவது இந்த ஒரு விடயத் தில்தான். அதுவும் அவனை இழக்க முடியாது என்பதனால்தான். அவனும் மனைவி, குழந்தைகள் என்ற பாசம் உள்ள குடும்பத் தலைவன்தான். எனவே அவளைத் தேற்றுவான்.
"ரஞ்சினி. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. எது எது எப்ப நடக்குமோ அது அது அப்ப நடக்கவே செய்யும். மரணத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தால் மனிதன் வாழவே முடியாது. மரணத்துக்கு அஞ்சி மனிதன் தன் கடமைகளையும் புறந் தள்ள முடியாது.”
நினைவின் ஒட்டத்தினிடையே அவனது உடலில் சில மாற்றங்களை உணர்கிறான். உடல் சோர்வாகி வரு வதை உணர்ந்த இந்தவேளையில் அவன் வாழ வேண்டும் என எண்ணினான். யாராவது வந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல்மாட்டார்களா என மனது ஏங்குகிறது. துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்தில் வெளியே வரமாட்டார்கள். பொலிஸ் நிலையத்தில் இருந்தும், காப்பரணி லிருந்தும் வரப்போவதில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது.
ஊடகத்துறையை அவன் விரும்பித் தான் தேர்வு செய்திருந்தான். வெகுஜன ஊடகங்களில் பல ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாக, நியாயத்தின் பக்கம் சாராமல் செயற்படுவதை அவன் வெறுத்தான். அவன் மனித உரிமை பற்றிச் சிறிதள வேனும் சிந்திக்காமல் ஜால்ரா போடு வது வெறுப்பை ஏற்படுத்தியது. இன் னும் சில எமக்கேன் வீண் வம்பு’ என அநியாயங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை அவனால் தாங்க முடிய வில்லை. கருத்துரிமை இல்லாது விட் டால் வாழ்வுரிமையும் அல்லவா அற்றுப் போகிறது? கருத்துரிமை மறுக்கப்பட்ட சமூகங்களால் ஒருபோதும் உயிர்த்துடிப்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 12

புடன் இயங்க முடிவதில்லை. ..ம் ...மரணத்தைப் பொருட்படுத்தாமல் கருத்துக்களை வெளியிட்டதனால்தான் நான் இன்று தண்டிக்கப்பட்டிருக் கிறேன்.
காலையில் வேலைக்குப் புறப்பட்ட போது ரஞ்சினி, ‘அத்தான், இண்டைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்கோ. சின்னவன்ர பிறந்தநாள்” என ஞாபகமூட்டினாள்.
அட அதுக்கிடையில ஒரு வருஷ மாயிட்டுதே' என்றபடி தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையைத் தூக்கி முத்தமிட்டான். குழந்தையும் அவனை அடையாளம் கண்டு குதூகலமாகச் சிரித்தபோது அவன் இன்பப் பூரிப்பில் திளைத்தான். அதேநேரம் ‘அப்பா' என்றபடி அவனது காலைக் கட்டியபடி நின்ற மூத்தவளை வழமை போல் தூக்கி முத்தமிட்டான். 'குழந்தைக்கு மட்டுந் தானா’ என்பதுபோல் ரஞ்சினியும் அருகில் வந்தாள். அவன் அவளை நெருங்க, அவள் சற்று விலகி, “இன்னும் கலியாணமான புதிசெண்ட நினைப்பு.’ என்று கண்சிமிட்டியபடி "எல்லாம் இரவைக்கு” என்றாள்.
அந்த நினைவுகளோடு நினை வறுந்து அவனது நா வறண்டுகொண்டு வருகிறது. யாராவது ஒரு மிடறு தண்ணீர் பருக்கமாட்டார்களா? g எண்ணியபோது மீண்டும் அன்பு மனைவியின் முகம்!
ரஞ்சினிதான்! நடந்த அவலத்தை கேள்விப்பட்டு கதறிக்கொண்டு gig. வருகிறாள். அவனை மடியில் தூக்கிக்
கிடத்தி தாகத்திற்கு பாலூட்டுகிறாள். “சொல்லச் சொல்லக் கேட்டியளே, இப்ப பார்த்தியளே. என்ர கடவுளே. யாராவது ஓடிவாருங்களேன், அவரை ஆஸ்ப்பத்திரிக்குக் கொண்டு போவம்.” கதறி அழும் அவள் கண்களிலிருந்து வடிந்தோடும் கண்ணீர்த்துளிகள் அவ னது முகத்தை நனைக்கிறது.
கண் விழித்துப் பார்க்கிறான். யாரும் இல்லை. எல்லாமே பிரமை தான்.
வானத்திலிருந்து சொட்டுச் சொட் டாக மழைத்துளி! அவனுக்காக, ஒரே சாட்சியான வானமும் தனக்கு வாயில் லையே என்று கண்ணீர் சிந்துகிறதோ? ம். ரஞ்சினியால் இந்த நேரத்தில் எப்படி வரமுடியும்? என்னருகே இது வரை எவரும் வராதபோது, அவளுக்கு யார் தகவல் சொல்வது?
ஒ. இந்த அவலம் எப்போது அவளது காதுக்கு எட்டும்? கேட்டதும் துடிதுடித்துப் போவாளே!
மழை சற்று கனதியாகப் பொழிய ஆரம்பித்தது. அது அவனது தேகத்தை நனைத்த அதேவேளை, வரண்டு போயி ருக்கும் அவனது நாவுக்கும் அந்த நீரி னால் சற்று ஆறுதல் கிடைக்கிறது. சோர்ந்துபோன அவனது உடலிலும் சற்று தென்பு ஏற்படுவதாக உணர்ந் தான், சாரங்கன்.
மீண்டும் அவன் மனதில் எண்ணச் சுழற்சி!
ஓ! சமூக நெருக்கடிகளைப் புட்டு வைக்கும் எழுதுகோல்கள் முறிக்கப்படு கின்றனவே! என்னுடையது எத்தனை
மல்லிகை ஒக்டோபர் 2011 & 13

Page 9
மரணத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், உயி ரோடு இருந்தால் இன்னும் பல வற்றைப் புட்டுக் காட்டியிருக்கலாமே. அத்துடன் எனது குடும்பத்திற்கு ஆதார மாக இருந்திருக்கலாமல்லவா?.
யாவது? ம்.
'ம். குழந்தையின் பிறந்தநாளுக்கு நான் நேரத்துடன் வரவில்லையே என என்னிடம் கோபமாக இருப்பாள். பாவம். அவளுக்கு இதுபற்றி தெரிந் திருக்காது. குதூகலமாகக் காத்திருப் பாள். ம். மனித நடமாட்டத்தையே காணவில்லையே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன். கட கதறிக் குளறவேண்டும் போலிருக்கிறது, அவ னுக்கு. எனினும் தொண்டைக் குழி யால் சத்தம் வெளிவர மறுக்கிறது. அவயங்கள் எல்லாம் சோர்வதாக
வுளே நான் சாகக் கூடாது.
உணர்கிறான்.
மழை 'சோ' என்று இரைச்சலோடு பொழிகிறது. அவனது குருதி மழையில் கரைந்து, வெள்ளம் செந்நிறமாகிறது. செங்கடலில் காகிதக் கப்பல் செய்து விடலாம் என்ற நினைப்பு. தெளிவற்ற நினைவுகள் அறுபடுவதாகவும், மறுபடி துளிர்ப்பதாகவும்.
8
ம். மனித உரிமைகளும், அவற் றிற்கான போராட்டங்களும் கூட பக்கச் சார்பானவைதானே? ஒரு கொடிய விலங்கைக் கொன்றாலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், மனிதர்கள் அநியாய மாகக் குரூரமான முறையில் கொல்லப் படும்போது, வெடி கொழுத்தி கொண் டாடுகிறார்களே...!” சாரங்கனின் நினைவுகள் மெல்ல மெல்ல முழுமை யாக அறுந்து போகிறது.
ஒ. ஒரு பேனாவின் சுடர்முனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது!
A. R. R. HAR DREssERs
89, Church Road, Matakuliya, Colombo - 15. Tel: 0112527219
( குளிரூபிடர் பெற்ற சலூன்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 14
 

இலக்கிJம்
2ாலத்தின் ള1ങുറ?
- Guറീമസേ
இலக்கியம்
2millsGO
ஒடு
Unfo)).
- தாஸிம் அகமது -
ரிழத்தில் போர் ஏற்படுத்திய அனர்த்தங்கள் சொல்லில் அடங்காதவை. தற்போது போர் முடிவுக்கு வந்தாலும் அது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய உடல், உள தாக்கங்களில் இருந்து அவர்கள் விடுபட முடியாதவர்களா கவே இன்றும் இருக்கிறார்கள். போர் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில் போரின் அவலம் குறித்து எழுத்தாளர்களும், போராளி களும் பல்வேறு படைப்புகளைப் படைத்திருந் தனர். எழுத்தாளர்கள் தம்மைச் சூழவுள்ள சமூ கத்தில் நிலவும் பிரச்சினைகளையே மையப் படுத்திப் படைப்புகளை பிரசவித்து வருவத னால் ஈழத்தில் ப்ன்னெடுங்காலமாய் 560) பெற்று வந்த போராட்டத்தின் உக்கிரம் அவர் களது எழுத்துகளுக்கு ஆதாரமானது தவிர்க்க முடியாத ஒன்றே. தமிழக இலக்கியத்தையும், ஈழத்து இலக்கியத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதில் போர்க்கால இலக்கியங்கள் ஒரு பிரிகோடாய் விளங்கி இருந்தன. போராட்டத் திற்கு ஆதரவான பல படைப்புகளும், ஈழப் போராட்டத்தின் உள் முரண்பாடுகளை வெளிக் கொணர்வதான சில படைப்புகளும் வெளிவந் திருந்தன.
ஈழத்தில் போர்க்கால இலக்கியங்கள் நடு நிலைமையோடு படைக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தும் எழுத்தாளர்களும் நம்மி டையே உள்ளனர். அதாவது போர்க்கால இலக்கியங்களைப் படைத்தவர்கள் ஒரு பக்கச் சார்பாகவே அதனைப் படைத்துள்ளனர் என் பது அவர்களது வாதம். அவ்வாறு குறைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்கள்தான் முன்பு போர்க் கால இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி யாக விளங்கியவை என்றும் குறிப்பிட்டிருந் தார்கள். இவர்களது முன்னுக்குப் பின் முர னான கருத்து வெளிப்பாட்டிற்கு இதைவிடவா வேறு ஆதாரம் தேவை?
மல்லிகை ஒக்டோபர் 2011 霹 15

Page 10
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் எழுதப்பட்ட படைப்பு களை தற்போது தொகுத்து நூலாக்கு வதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஒரு காலகட்டத்தின் பதிவு என்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போராட்டம் முடிவடைந்துள்ள இன்றைய சூழலில் சில படைப்பாளிகள் போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதான ஒர் மனநிலையில் படைப்புக்களை எழுதிக் கொண்டு இருப்பது நியாயமானதா? ஒரு வகையில் இதனை எதையாவது எழுதி படைப்பாளி ஆகிவிட வேண்டும் என்ற அங்கலாய்ப்பின் வெளிப்பாடாகவும் கருதிக் கொள்ளலாம்.
இவர்கள் இலக்கிய நீரோட்டத்தில் யதார்த்தப்பூர்வமான வெளிப்பாடுகளின் பிரக்ஞையற்ற ஓர் அபத்தமான சூழ் நிலைக்குள்ளேயே வாழ்ந்து கொண்டி ருப்பது, புலனாகின்றது. காலாவதியான விடயங்களை கருப்பொருள் ஆக்கி படைக் கப்படும் இலக்கியங்களால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது? ஒருமுறை தமிழ கத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பகீரதன் அவர்கள் ஈழத்து இலக் கியம் பத்தாண்டு காலம் பின்தங்கியுள்ளது என்று கூறியதை நிரூபிப்பதற்கு இவர்கள் முயன்று வருகிறார்களோ தெரியவில்லை. உண்மையில் இலக்கியம் என்பது எப் போதும் வாசகர்களை முன்நோக்கி நகர்த் தும் விதமாக இருத்தல் வேண்டும்.
மூத்த எழுத்தாளர் சு.வே. அவர் களின் பாற்காவடி முன்னுரையில் சு.வே. “இந்தப் பாற்காவடியே எனக்கு இவ்வுலக வாழ்வின் எச்சங்கள், மிச்சங்கள், வாரிசு கள். இவை என் பெயர் விளங்க வந்த குழந்
தைகள். இந்தக் குழந்தைகள் சிலவற்றின் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனது மறதி இருள் திரையை நினைவுக் கூரம்பால் கிழித்து குத்துமதிப்பாகச் சில வற்றின் பிறப்பை அறிந்து குறித்துள் ளேன்’ என்று குறிப்பிடுகின்றார்.
இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றால், ஒரு படைப்பைக் கொண்டு அதன் காலத்தை சரியாகக் கணிப்பிட முடியாத பொழுது இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கு கின்றது என்ற கூற்று கேள்விக்குரியதாக் கப்படுகிறது எனவும் பொருள் கொள்ள suorTLb. அல்லது அந்தப் படைப்பு ஒரு உன் னத படைப்பு என்பதற்குரிய வரையறை யில் இருந்து விலகி காலத்தைச் சரியாகச் சித்திரிக்கத் தவறி விட்டதெனவும் கொள்ள லாம் அல்லவா? அந்தவகையில் சு.வே. யின் சிறுகதைத் தொகுப்பை மேற்கூறிய எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்பது வாசகர்களின் இறுதி முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
அவ்வாறே எழுத்தாளர் இதயராசன் அவர்கள் எழுதிய 'முரண்பாடுகள்’ சிறு கதைத் தொகுப்பில் மொத்தம் உள்ள பதினைந்து சிறுகதைகளில் பதின்மூன்று சிறுகதைகளுக்கு கதையின் முடிவில் கதை எப்போது நிகழ்ந்தது என்பதை குறிக்கும் விதமாக கதைக்கான களம் இத் தனையாம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. உதாரணமாக முதல் கதையான 'பத்துச்சதம் கதையின் கீழ் கதைக்கான களம் 1971ஆம் ஆண்டு எனவும், கடைசிக் கதையான 'விதைப்பு கதையின் கீழ் கதைக்கான களம் 1966ஆம் ஆண்டு எனவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 16

உண்மையில் மேற்படி கதைகளில் கதைக்கள ஆண்டு பிரசுரிக்கப்படாம லேயே இச்சிறுகதைகளை வாசித்து முடித் ததும் இது குறிப்பிட்ட காலப்பகுதியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என் பதை வாசகன் உணரக் கூடியதாக இருந் திருத்தல் வேண்டும். ஆனால் இச்சிறு கதைத் தொகுப்பில் இவ்வாறு கதை நிகழ்ந்த களத்தின் ஆண்டைப் பிரசுரித் தமை கூட காலத்தைச் சரியாகப் படைப் பில் வெளிக்கொணரத் தவறியதன் வெளிப் பாடோ என எண்ணத் தோன்றுகிறது.
இவ்விடத்தில்தான் நந்தினி சேவியர் அவர்களால் 2003ஆம் ஆண்டு எழுதப் பட்ட ‘தவனம்' என்ற சிறுகதை 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தினை அதில் எந்தவொரு இடத்திலும் காலம் சுட்டிக்காட்டப்படாமலேயே சம்பவங்களின் சித்திரிப்பு மூலம் இது ஜூலை கலவரம் தான் என்பதை வெளிப்படுத்தி இருந்தது நினைவிற்கு வருகின்றது.
அத்தோடு இலக்கியம் என்பது எப் போதும் சமகாலத்தை மட்டும்தான் பிரதி பலிக்க வேண்டுமா? அப்படியாயின் சரித் திர நாவல்களின் சமூகப் பயன்பாடு குறித்து பேராசிரியர் கைலாசபதி அவர்கள் முன்வைத்த விமர்சனப் பார்வைகளைப் புறந்தள்ளி வைத்துவிட்டு கல்கி, சாண்டில் யன் படைத்த 'பொன்னியின் செல்வன்', 'கடற்புறா போன்ற சரித்திர நாவல்களை இலக்கியங்கள் என்று பல்லாயிரக்கணக் கான வாசகர்கள் ஏற்றுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
அதுபோல இந்தியா சுதந்திரம் அடை வதற்கு முன்னதாகவே பாரதியார் தீர்க்க
தரிசனமாய்,
"ஆடுவோமே
பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று”
பாடிய சுதந்திரப் பாடல்களை இலக் கியமாக அங்கீகரித்ததோடு, இந்த யுகத் தின் மகாகவியாகவும் பாரதியைத்தானே நமது இலக்கிய உலகு இன்றும் கொண் டாடுகின்றது.
சுஜாதா போன்றவர்கள் எழுதிய எதிர் காலம் குறித்த அறிவியல் புனைகதை களையும் இன்று அவர் மறைந்துள்ள நிலையிலும் அறிவியல் கதைகளின் முன் னோடி என்ற ரீதியில் அவரைத்தானே போற்றிப் புகழ்கின்றோம்.
இவ்விடத்தில் இன்னொரு கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இலக்கியம் காலத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி ஆயின், போர் முடிந்தபின் படைக்கப்படும் போர் பற்றிய இன்றைய இலக்கியங்களைக் காலத்தின் பிரதி பலிப்புகளென கொள்ள முடியுமா?
எனவே, ‘இலக்கியம்/ காலத்தின் கண்ணாடி என்பதையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகவே கொள்ளவேண்டும்.
அத்தோடு போர்க்கால இலக்கியத் தின் தொடர்ச்சியாகப் போரினால் பாதிக் கப்பட்ட மக்களுக்கான பணி எழுத்து வடி வத்திலும் தொடரப்பட/வேண்டும் என்ற தொரு கருத்தும் தெர்டர்ச்சியாகக் கூறப் பட்டு வருகின்றது. கலை மக்களுக்காகவே என்பதில் எனக்கு/எந்தவிதமான மாற்றுக்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 17

Page 11
கருத்துகளும் இல்லை. ஆனால் தனி யொரு எழுத்தாளரினால் அதனை சாத்தி யப்படுத்துவது என்பது கடினமே. எனவே பல்வேறு எழுத்தாளர்கள் ஒன்றுகூடி இது குறித்து தீவிரமாய் விவாதித்து அதன் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண் டும். இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இதனையும் செய்விக்க முயன் றுள்ள போதிலும், பலதரப்பினராலும் எழுப் பப்பட்ட கண்டனம் இன்றைய சூழ்நிலை யில் இவ்வாறானதொரு மாநாடு அவசியந் தானா? என்பதே. எனவே நிலைமை இவ் வாறிருக்கையில் போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக எழுத்துப் பணி மூலம் தீர்வினை முன்வைக்க முடியும் என்பது கேள்விக்குரிய ஒன்றா கவே எனக்குப் படுகின்றது.
போர் முடிந்த பின்னர் தோற்றம் பெறும் இலக்கியங்கள் போர் பற்றிய கொடு ரத்தை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் போருக்குப் பின்னரான வாழ்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லல் வேண்டும் என் பது குறித்து சிந்திப்பதே பொருத்தமாக இருக்கும்.
குறிப்பாக, கடந்த காலங்களில் அவர் களுக்கு ஏற்பட்ட ரணங்களை ஆற்றுப் ܢܠ படுத்துவதையே இன்றைய நமது எழுத் தாளர்களும் முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தல் வேண்டும். தனிப்பட்ட ரீதி u(86)rt அல்லது ஒர் அமைப்பு சார்ந்ததா கவோ, குறிப் تاتا சில வட்டத்தினரையா வது சென்றயைக் கூடியவாறு சில பிர சுரங்களை வெளியிடலாம். தெமதுசூத னன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 'ஆறுதல் அமைப் னரால் வெளியிடப்
படும் 'ஆறுதல் உள சமூக இதழின் வகி பங்கை இவ்விடத்தில் உதாரணமாகச் 8si L"Lç?é5 85ITL"LL6\)rTLifb.
ஆனாலும், இதையும் மீறி எழுத் தாளனின் சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப யுத்தம் மனதில் ஏற்படுத்திய வடுக் களை காலப்போக்கிலாவது படைப்புக் களாக்கி வெளியிடும் முயற்சிகளையும் நம்மால் தடுத்துவிட முடியாது.
இன்று போர் நடத்தியவர்களை விமர் சித்து இலக்கியம் படைப்பதென்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. உயிர் அச்சுறுத் தல் காரணமாக தமது பேனாக்களை மூடி வைத்தவர்கள் போர் முடிவுக்கு வந்தவுடன் போராட்டத்தின் பல் பரிமாணங்களை இதன் மூலம் எடுத்துக் காட்டுகின்றனர். இவர்களைக்கூட மன்னித்து விடலாம். ஆனால் காற்று அடிக்கும் Luisa, GLD66)T b சாய்வதைப் போல் இயங்கும் சில படைப் பாளிகளை என்ன செய்வது?
வருங்கால சந்ததியினருக்கு ஆவணப் படுத்தும் முகமாகவும், போர் நிகழ்ந்தது பற்றிய ஆவணங்கள், கட்டுரைகள் என்ப வற்றைக் காட்டிலும் போர்க்கால இலக் கியங்களின் தோற்றுவாய்கள் மிகுந்த பயனைத் தரக்கூடியவை என்பதாலும் காலங் கடந்தாவது அவற்றைப் பதிவு செய் தல் வேண்டும் என்பதும் ஒரு சாராரது வாத மாக இருக்கிறது. ஆனாலும் போர்க்கால புனைவுகள் ஆயினும் சரி, ஏனைய புனைவுகள் ஆயினும் சரி நூறு வீதம் உண்மைத்தன்மை வாய்ந்தவைதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இன்று தன் வரலாறு கூறும் நூல்களி லேயே உண்மைக்குப் புறம்பான தகவல்
மல்லிகை ஒக்டோபர் 2011 霹 18

களைப் பதிவு செய்து வரலாற்றையே திரிபு படுத்தும் கைங்காரியங்கள் நடைபெற்று வரும் நிலையில் புனைவுகளை உண்மை யென எவ்வளவு தூரத்திற்கு கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்? சுஜாதா தனது கதைகளில் வரும் உண்மை மற்றும் கற்பனைகளின் விகிதம் தனது தொழில் ரகசியம் என்பார்.
எனவே, போர் குறித்த இலக்கியங் களைப் படைக்க முற்படுகின்ற பொழுது கடந்த காலத்தில் யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை மாத்திரம் தனியே புனைவு களாக மாற்றி வெளியிடாமல், காய்தல், உவத்தலற்ற சமூக விமர்சனங்களாகவும் அவற்றை ஆக்கிக்கொள்ளும் பட்சத்தி லேயே எதிர்காலவியல் நோக்கில் இன் னொரு வரலாற்றுத் தவறு நிகழ்வதை நம் மால் தடுக்க முடியும்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 19 ---

Page 12
அறுத்தல் அல்லது அழித்தல்
- பெரிய ஐங்கரன் நேற்றைய மரணங்களை
முற்றாகவே மறக்க முயன்றுகொண்டிருந்தேன்
என் முற்றத்தின் ஊடே இன்றும் ஒரு சவ ஊர்வலம் ஒலத்துடன் நடந்து போயிற்று அதையும் மறந்து விடலாம் என்று நினைத்தேன்
உண்மையில் அடுத்தநாள் காலையில் எல்லாம் மறந்து போயிற்று அடுத்த வீட்டு இளம்பெண்ணின் முலைக்காம்பை மர்மமனிதன் அறுத்துக்கொண்டு ஒடினபடியால்.
ஒரு வரி
அவர்கள் சொல்வதைப் போல இதிகாசம் பாட வேண்டும் என்ற ஆசை ஒன்றும் எனக்கில்லை நான் பாட நினைப்பதெல்லாம் ஒரேயொரு வரியிலான ஒரேயொரு கவிதை மட்டுமே
மல்லிகை ஒக்டோபர் 2011 & 20

வேண்டுமானால் அது இதிகாசமாகக் கூட இருக்கலாம் அல்லது அதை விஞ்சியதாகக்கூட இருக்கலாம் ஆனால் அதில் எழுத்துக்களோ முற்றுப்புள்ளியோ இருக்கக்கூடாது இருப்பினும் உலகக்கரையில் அது பெரிய அதிர்வுகளை உண்டாக்க வேண்டும் அல்லது நவீன உலகக்கரை ஒன்றை படைக்கும்படியானதாக இருக்க வேண்டும் நான் சாவதற்குள் எழுதியாக வேண்டும் அந்த ஒரேயொரு வரியை
அல்லது அதைப் போன்றதான இன்னொரு வரியை.
சமீபத்தில் கொழும்பில் நடந்த கொடகே இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த எழுத்தாளர் தெணியான் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் 85-வது பிறந்தநாளையொட்டிய வாழ்த்தை நேரில் தெரிவிப்பதற்காக மல்லிகைப் பந்தல் நிறுவனத்திற்கு நேரில் வந்து பாராட்டியபோது, அவருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம்,
மல்லிகை ஒக்டோபர் 2011 & 21

Page 13
நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.
முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது "ஃபோர்வேட் பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் "மெசஞ்சரில் (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக் கின்றார்கள்.
எல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம். அந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று கொம்பி யூட்டர்கள் மாற்றி விட்டான். தொழில்நுட்ப ரீதியில் எல்லாமே பெரிய மாற்றங்கள் அடைந்துவிட்டன.
ஆனால், இன்று பொறுக்கியெடுத்து மூன்று பேருக்கு மட்டும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. “சோழியன் குடும்பி சும்மா ஆடாது.” எல்லா விதமான கொடுர வைரசுகளையெல்லாம் தாக்கி அழிக்கும் ‘மக்கபீ என்ற அன்ரி வைரஸ்', ‘யாமிருக்க பயமேன் என்று ராகவனை ஏளனம் செய்தது. "கிளிக் செய்ய வேண்டாம் என்று மனம் ஒலமிடுவதற்கு முன்பு 'மவுஸ் முந்திக் கொண்டது.
புதிDதோரி ஊக6
- கே.எஸ்.சுதாகர்
"யங் மெயிலிற்குள் இருந்து சுழன்று வந்தது செய்தி. இதைத் தொடுபவர்கள் புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே ஒரு இணையத் தளத்தின் முகவரி இணைக்கப்பட்டிருந்தது. ஆசை யாரை விட்டது? மருமகள் அல்லவா அனுப்பியிருக்கின்றாள்! புதியதோர் உலகைப் பார்க்கும் ஆவலில் அதை க்ளிக் செய்தான், ராகவன். அது விரிந்து இன்னொரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒன்றையும் காணவில்லை வெற்றிடம். ஆனால், இன்ரநெற் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருந்தது.
'நீங்களும் உங்களுடைய இன்ரநெற்றும். பத்து டொலருக்கு இருநூறு 'ஜிகாபைற்’ என்றால் இப்படித்தான். இன்ரநெற்றின் வேகம் போதவில்லை. அது தான் வரவில்லை. திரும்பவும் க்ளிக் செய்யுங்கோ’ மனைவி உசாரானாள்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 22

திரும்பவும் மவுசைப் பிடித்து அழுத்தினான், ராகவன். திரும்பவும் புதிய உலகம் விரிந்தது. வெற்றிடம்.
மூன்றாவது தடவை மவுசை அழுத்திவிட்டு, "நாங்கள் மத்தியானச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரு வோம். ஆறுதலா டவுண்லோட் செய் யட்டும்” என்றான் ராகவன். மதியச் சாப்பாடு முடிவடைந்து பார்க்கும் போது கொம்பியூட்டர் தானாக நின்று போயிருந்தது. அதன் பிறகு எந்தப் பகீரதப் பிரயத்தனத்திற்கும் அது அசைந்து கொடுக்கவில்லை.
"நீங்களும் உங்கடை மருமகளும்!” தலையிலே குட்டிவிட்டுப் போனாள், மனைவி.
கொம்பியூட்டரை காரின் முன் சீற் றில் இருத்தி, சீற் பெல்ற்றும் போட்டு, ஒரு கைக்குழந்தையைக் கூட்டிச் செல்வது போல Dr. PCயிடம் எடுத்துச் சென்றான், ராகவன்.
அவர் கொம்பியூட்டரின் பின்புற நட்டுக்களைக் கழற்றிவிட்டு உள்ளே பார்த்தார். பறவைக் காய்ச்சல் நோயாளி ஒருவரைத் தொட்டு விட்ட வர் போல, மருண்டு போய் கதிரையில் இருந்தார். முகம் கோபமாகி விகாரமாக இருந்தது. அவர் ஏற்கனவே திறந்து வைத்திருந்த பக்கத்தினூடாக உள்ளே எட்டிப் பார்த்தான், ராகவன். உள்ளே இரண்டு கிலோ தூசு படிந்திருந்தது.
“எப்போது கொம்பியூட்டரை எடுக்கலாம்?’ என்ற ராகவனது
கேள்விக்குப் பதில் தராமல் ஒரு எதிர்க்
கேள்வி கேட்டார்.
“எப்போது கடைசியாக இதை சர்விஸ் செய்தீர்கள்?”
"வாங்கியதற்கு இன்னமும் செய்ய வில்லை.”
“நீங்கள் கார் வைத்திருக்கின்றீர் களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
"ஆம்" என்றான் ராகவன்.
'அதற்கு எத்தனை மாதத்திற்கு ஒரு தடவை சர்வீஸ் செய்வீர்கள்?”
“ஆறு மாதத்திற்கு ஒரு தடவை.” "அதைப் போலத்தான், இதுவும். ஆறு மாதத்திற்கு ஒரு தடவை சர்வீஸ் செய்ய வேண்டும்.”
“எவ்வளவு செலவாகும்” என்ற தற்கு,
“மூன்று நாட்களின் பின்பு வந்து என்னைப் பாருங்கள்’ என்றார் அவர்.
பொறுக்கியெடுத்த மற்ற இரண்டு பேரில், ஒருவரிடமிருந்து ராகவனிற்கு “உங்களுடைய மருமகள் செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று தொலைபேசி அழைப்பு வந்தது.
மூன்று நாட்களில் ராகவனது கொம்பியூட்டர் இருநூறு டொலர்களை விழுங்கி விட்டது. கொம்பியூட்டரை கிளின் செய்ததற்கும் வைரசை அழித்த தற்கும் என கணக்குப் போட்டு வைத் திருந்தார், அவர்.
ராகவன் இதைப் பற்றி ஒருவரிட மும் மூச்சு விடவில்லை. வீட்டிற்கு
மல்லிகை ஒக்டோபர் 2011 & 23

Page 14
கொம்பியூட்டரை எடுத்துச் சென்று மீண்டும் அதை இயக்கினான். அவசர அவசரமாக மின்னஞ்சல்களைப் பார்வையிட்டான். மீண்டும் யங் மெயிலை கிளிக் செய்தான். மரு மகளின் மூன்று மின்னஞ்சல்கள் அங்கி ருந்தன. “என்னுடைய முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை தயவு செய்து திறக்க வேண்டாம். அவற்றில் வைரஸ் இருக்கின்றன. அவை தானா கவே என்னையறியாமல் அனுப்பப் படுகின்றன” என்று அதில் இருந்தன.
சூடு கண்ட பூனை அல்லவா? அத் தனை "யங் மெயில்களையும் சம்ஹாரம் செய்தான், ராகவன். சூடு தணிவதற் குள் மருமகளிற்கு தொலைபேசி எடுத்து எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டாள் அஞ்சலி,
சத்தமிட்டான்.
“எனக்கு வந்த ஒரு ஈ.மெயிலை, என்ரை கொம்பியூட்டர் வைரஸ் பிடிச் சிட்டுது போல, இருந்தது. அதுதான் இந்த ஈ.மெயிலை உங்களுக்கும் இன் னும் இரண்டு பேருக்கும் அனுப்பிப் பாத்தனான். நீங்கள்தானே சொவ்ற் வெயர் இஞ்சினியராச்சே! அதுதான் உங் களுக்கும் அனுப்பினனான். பட், நீங்கள் ரூ லேட் மற்ற இரண்டு பேரும் அதிலை வைரஸ் இருக்கெண்டு எப் பவோ ரெலிபோன் எடுத்துச் சொல்லி விட்டினம்.” மறுமுனையில் சிரித்தாள் அஞ்சலி.
வெறி பிடித்தவன் போல கத்தத் தொடங்கினான், ராகவன். மறுமுனை யில் இருந்து எதுவித சத்தமும் அதன் பிறகு வரவேயில்லை.
২১১
&
Happv
N
Poto
Excellent Photographers
S Modern Computerized,
Š
Photography s
For Wedding Portraits & Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences à Within 15 Minutes
S.
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
மல்லிகை ஒக்டோபர் 2011 & 24

இரண்டு இலக்கிய விழாக்களுக்கான கொழும்பு நோக்கி எனது பயணம்
- தெணியான்
நீண்ட காலமாக எனக்கும் மனதில் ஒரு ஆசை. வேறொன்றுமல்ல, ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டுமென்று. எழுத்தாள நண்பர்கள் இங்கிருந்து வெளிநாடு ஒன்றுக்குப் புறப்பட்டு விட்டார் என்றால், அவர் மீண்டு வந்ததும் அவரிடம் இருந்து குறைந்தது ஒரு பயணக் கட்டுரையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். நானும் ஒருசமயம் தமிழ்நாடு முழுவதும் பயணம் பண்ணிச் சுற்றிப் பார்த்துத் திரும்பி இருக்கின்றேன். ஆனால் அப்பொழுது ஒரு பயணக் கட்டுரை எழுதுவதற்கு நான் நினைக்கவில்லை. அது 1963ஆம் ஆண்டு. அந்தக் காலத்தில் நான் எழுத்தாளனாக இல்லை. அடுத்த ஆண்டுமுதல்தான் எழுதுவதற்கு ஆரம்பித்தேன். அக்காலத்தில் நான் பயணக் கட்டுரை எழுதி இருந்தாலும் யாரும் பிரசுரித் திருக்க மாட்டார்கள். இந்த அநாமதேயம் யார் கண்ணிலும் அப்பொழுது பட்டிருக்க நியாயமில்லை,
அண்மைக் காலத்தில் பல அழைப்புகள். கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி எனப் பல நாடுகளில் இருந்தும் அழைப்புகள். அதிகம் சொல்லுவானேன்? கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பெறுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து அழைப்பு. இந்த அழைப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு சென்று, பின்னர் ஒவ்வொரு பயணக் கட்டுரையாவது எழுதித் தள்ளி இருக்கலாம். அப்படிச் செய்து முடிக்க வேண்டுமென மனதில் ஆசை இருந்தால் மாத்திரம் போதுமா? உடிலுமல்லவா இடங்கொடுக்க வேண்டும். முன்னர் போல இடையிடையே கொழும்பு வந்து ஊர் திரும்பவும் முடிய வில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்று வந்தேன். இந்த ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்கு கொழும்பு சென்று திரும்பிய பின்பு, அதனை ஒரு பயணக் கடடுரையாக எழுதுவதா? சீச். சீ. கொழும்பென்ன வெளி நாடா? நான் முன்னர் போய் வராத இடமா? மற்றவர்கள் சிரிப்பார்களென மெளனமாக இருந்துவிட்டேன்.
இந்த மாதம் 'கொடகே தேசிய சாகித்திய விருது விழா - 13 அழைப்பிதழ் கைக்கு வந்து சேர்ந்தது. இரண்டு நூல்கள் (நாவல், சிறுகதைத் தொகுப்பு) விருதுத் தேர்வுக்காக அனுப்பி திைதேன். இந்த இரண்டு நூல்களும் இறுதித் தேர்வில் தேறி இருந்தன. பத்திரி கைகளில் செய்திகள் வெளியாகி இருப்பதனைப் பார்த்தேன். ஆயினும் தேர்ந்தெடுக்கப்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 25

Page 15
பெறும் முதல் நூலுக்குத்தானே விருது அந்த முடிவை 'ஒஸ்கார் விருது போல விழாவில் அறிவிப்பார்கள் என்றார்கள்.
எனது உடல்நிலையில், விருது பற்றிய தெளிவில்லாமல் நான் பயணம் செய்யத் தயாராக இருக்கவில்லை. விருது பற்றிய முடிவைத் தெரிவிக்காது, கொழும் புக்கு வாருங்கள் வாருங்கள் எனச் சிலர் அழைப்பு விடுத்தார்கள். விருது கிடைக்கப் பெற்றால் என்னைக் கெளரவித்து விருது வழங்கும் போது அவர்களைக் கெளர வித்து நான் நேரில் சென்று விருதினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே நியாயம்
இங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன். சிறுகதைத் தொகுதிக்குத் தந்த விருதி னைப் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பி விட்டேன்.
இதைப்போய் ஒரு பயணக் கட்டுரை யாக எழுத வேண்டுமென்னும் வேணவா மனதில் இருக்கவில்லை.
ஆனால், பயணக் கட்டுரை எழுதும் ஆவல் மனதில் இல்லாதவனல்ல நான் என்பதனை முன்னரே சொல்லி விட்டேன். என்ன அதிசயம் கொழும்பு வந்து வீடு திரும்பிய மறுநாள் டொமினிக் ஜீவா அவர் களிடம் இருந்து தொலைபேசியில் ஒரு செய்தி. கொழும்பு வந்து ஊர் திரும்பிய தகவல்களை ஒரு பயணக் கட்டரையா எழுதி மல்லிகைக்கு அனுப்புங்கள். இதென்னரெலிபதியோ! நான் அறியேன். கரும்பு தின்னக் கைக்கூலியா வேண்டும்! என்னும் பழமொழி எழுப்புகின்ற வினா இப்பொழுதுதான் எனக்குள் அர்த்தப்படுவ தாகத் தோன்றுகிறது. ஜீவா வேறு வேண்டு
கோள் விடுத்திருக்கின்றார். விடுவேனா! என்னுடைய பயணக் கட்டுரையை எழுத ஆரம்பித்து விட்டேன்.
துணை யாருமில்லாது நீண்ட தூரம் பயணம் செய்ய மனைவி பிள்ளைகள் என்னை அனுமதிக்க மாட்டார்கள். கவனத்தில் கொள்ளுங்கள், இப்பொழுது பயணம் பண்ண மனைவி, பிள்ளைகளின் அனுமதி தேவைப்படுகிறது. மகன்மார் இருவரில் ஒருவரைத் துணையாகக் கொண்டு வரவேண்டும். அல்லது உற வினர்கள், நண்பர்களில் யாராவது உடன் வரவேண்டும். எனக்கு நெருக்கமான இரு வர் என்னுடன் வருவதற்கு உடன்பட்டார் கள். விழாவைக் காண்பதும், எனக்குத் துணையாக வருவதும் அவர்கள் நோக்க மாக இருந்தது. அவர்கள் வேறு யாரு மல்ல. எழுத்தாளர் அநாதரட்சகன் (மு.இராசநாயகம், யாழ். வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்), மற்றையவர் கவிஞர் சித்திரா சின்னராசா (ஓய்வு நிலை வங்கி முகாமையாளர்) ஆகிய இருவருந்தான். சின்னராசாவும் நானும் வடமராட்சியில் இருந்து புறப்பட வேண்டும். அநாதரட்சகன் யாழ். நல்லூரில், நாங்கள் மூவரும் ஒன் றாக இணைந்து பிரயாணம் செய்யத் தகுந்த வண்ணம், வடமராட்சியில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று, கொழும்பு நோக்கிப் போகும் பஸ் வண்டியைத் தேடி மூவருக்கும் ஆசனங்களைப் பதிவு செய்து கொண்டோம். நெல்லியடிப் பட்டினத்தி லுள்ள ‘போன் சொப் ஒன்றில்தான் ஆசனப் பதிவு.
ஆறாந் திகதி சனிக்கிழமை எங்களு டைய கொழும்பு நோக்கிய பயணம். அன் றைய தினம் ஆறுமணிக்கு நெல்லியடி
மல்லிகை ஒக்டோபர் 2011 & 26

போன் சொப்பில் நிற்க வேண்டும் என்று முதல்நாளே கண்டிப்பாகச் சொல்லி வைத் தார்கள்.
ஆறாந் திகதி மாலை ஐந்து மணியள வில் எனது வீட்டில் இருந்து புறப்பட்டோம். சின்னமகன் துஷ்யந்தன் தனது மோட்டார் சயிக்கிளில் கவிஞர் சின்னராசாவை ஏற்றிக்கொண்டான். மூத்தமகன் ஆதவன் தனது மோட்டார் சயிக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டான். சுமார் 5.30 மணியள வில் நெல்லியடி போய்ச் சேர்ந்து விட்டோம். இன்னும் அரைமணி நேரந்தானே! தாம தித்து நின்று பஸ் வண்டியில் ஏற்றிவிட்டுப் போவதற்கு எனது மகன்மார் விரும்பினர். இப்பொழுது எங்கள் பகுதிகளில் ஒளிந் தோடிச் சேட்டைகள் செய்து கொண்டிருக் கும் கிறிஸ் பூதங்களின் நினைவு மனதில் எனக்கு வந்தது. மாலை இருள் சூழ்ந்து வருவதற்கு முன்னம் வீடுகளுக்குச் சென்று அங்கு குடும்பத்தவர்களுக்குப் பாதுகாப்பாக இவர்கள் இருவரும் இருக்க வேண்டுமென எண்ணினேன். இதனை அவர்களிடம் சொல்லாமல் இருவரையும் வற்புறுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத் தேன். எனக்குத் துணையாகக் கவிஞர் சின்னராசா நிற்கின்றார் என்னும் மனத் திருப்தியுடன் இருவரும் புறப்பட்டுச் சென் றார்கள்.
போன் சொப்புக்கு வெளியே வட்ட வடிவமான பெரிய ரீப்போ ஒன்று வைக்கப் பட்டிருந்தது. அந்த ரீப்போவில் எங்களு டைய பயணப் பைகளை வைத்துவிட்டு இருவரும் நின்றோம். குளு குளுவென மெல்லிய காற்று எங்களைத் தழுவிக் கொண்டு போனது. ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக்
களிக்கின்றேன்’ என இது போன்ற சுகத்தை அனுபவித்துத்தான் பாரதி பாடி இருக்க வேண்டுமென எண்ணிச் சிலிர்த் துக்கொண்டேன்.
நேரம் ஆறுமணி தாண்டி விட்டது. போன் சொப்புக்குள் நின்ற ஒரு இளைஞர் கதிரை ஒன்றைத் தூக்கி வந்து வெளியில் வைத்துவிட்டு, "இதிலே இருங்கோ ஐயா" எனச் சொல்லிக்கொண்டு போனான்.
எனக்குள் எவ்வளவு பெருமை தெரியுமா அந்த இளைஞன் என்னை இனங்கண்டு விட்டான். நாளைய தினம் விருது வாங்கப் போகும் இந்த நாட்டு எழுத் தாளனை நிற்க வைக்கக் கூட்ாது என்று அவன் உணர்ந்து விட்டான்.
கெளரவித்துப் போட்ட கதிரையில் அமராமல் நிற்பதா? நான் அமர்ந்து விட்டேன்.
நேரம் ஏழுமணி தாண்டி விட்டது.
கொழும்பு செல்லும் பஸ் வண்டிகள் ஒவ்வொன்றாக நெல்லியடியில் இருந்து புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன.
எங்களுக்குரிய பஸ் வண்டி மாத்திரம் இன்னும் வந்து சேர்ந்த பாடிலில்லை.
கவிஞர் பொறுமையை இழக்கிறார். போன் சொப்புக்குள்ளே போய் விசாரிக்கின் றார். "என்ன தம்பி, பஸ்ஸை இன்னும் காணவில்லை” என. "பஸ் வெளிக்கிட்டு விட்டுது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும்” என்கின்றான் அந்த இளைஞன். சொல்லி முடித்த கையோடு இன்னொரு கதிரையைத் தூக்கி வந்து என்னருகே போடுகின்றான்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 27

Page 16
எனக்கு உள்ளூர விளங்கி விட்டது. நீண்ட நேரம் இன்னும் நாங்கள் இருக்கப் போகின்றோம் என்பது. எட்டுமணி தாண்டி கவிஞர், "சாப்பிடுவம் ஸேர்' என்கிறார். இரவுச் சாப்பாட்டை அந்த நேரத்தில் சாப் பிடுவது அவர் வழக்கம். எனக்குப் பத்து மணி தாண்ட வேணும். படுக்கைக்குச் செல்ல 11-12 மணியாகும். இது எனக்குப் பழகிப் போன ஒன்று. ஒருகாலத்தில் வாசித்து, எழுதி நேரங்கடந்து படுக்கைக் குப் போனேன். பின்னர் நாட்டு நிலைமை காரணமாக மனைவி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக விழித்துக் கிடந்தேன். கவி ஞரிடம் மனைவி கட்டிக் கொடுத்த உணவுப் பார்சல் பயணப் பையில் இருந் தது. அதை எடுத்துச் சென்று ஒரு கடை யில் வைத்துச் சாப்பிடுமாறு சொன்னேன். என்னை விட்டு தான் போய்ச் சாப்பிடு வதில் கவிஞருக்கு உடன்பாடில்லை. இந் தச் சமயம் மனசார விளக்குகள் எல்லாம் பக்கென்று அணைந்தன. திறந்திருந்த கடைகளுக்குள் ஏற்றி வைத்த சிறிய வெளிச்சங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
கவிஞர், "இருங்கோ ஸேர், வாறன்’ எனச் சொல்லிக்கொண்டு வீதியைக் கடந்து எதிரேயுள்ள தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். சற்று நேரத்தில் திரும்பி வரும்போதுகாகிதத்தில் சுற்றிய சிறிய பார்சல் ஒன்று கையில். பார்சலைப் பிரித்து பெரிய கேக் துண்டொன்றை எடுத்து எனது கையில் தந்து, "சாப்பிடுங்கோ ஸேர்' எனக் கூறிக்கொண்டு தானும் உண்டார். எனக்கு நன்றாக விளங்குகிறது, அவருக் குப் பசி வந்துவிட்டதென்று. "பார்சலை எடுத்துச் சாப்பிடுங்கோ தம்பி” என்று திரும் பவும் கூறுகின்றேன். மின்சாரம் மீண்டும்
ஒளிர ஆரம்பித்து விட்டன. மூத்த மகன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தான். கடைகள் பல மூடிக் கொண்டு விட்டன. நேரம் ஒன்பது மணி ஆகின்றது. அநாதரட்சகன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண் ணம் இருக்கின்றார். பயணத்தைக் கை விட்டு, வீட்டுக்குத் திரும்பிப்போய் விடு வோமா? என்ற எண்ணடும் மனதில் எழு கின்றது.
"பஸ் திருத்தி முடிஞ்சுது. இப்ப வந்து கொண்டிருக்கிறது” என்ற உண்மையைச் சொன்னான் ஆசனங்கள் பதிவு செய்த அந்தக் கடைக்கார இளைஞன். அவன் பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. வரு கின்ற நேரம் பஸ் வரட்டும் என மனதை அடக்கிக்கொண்டு இருந்து விட்டேன். இரவு 9.30 மணிக்கு ஒருமாதிரிபஸ் வண்டி வந்து சேர்ந்தது. பெரிய ஆயாசத்துடன் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டோம். அதன் பிறகுதான் தொலைபேசியில் மனைவி, மக்களுடன் தொடர்பு கொண்டேன். நெல்லியடிக்குள் போய்க்கொண்டிருப்பது அறிந்து அவர்கள் அதிசயப்பட்டார்கள். யாழ்ப்பாணம் சென்று கச்சேரி நல்லூர் வீதியில் அநாதரட்சகனை ஏற்ற இரவு நேரம் பத்து மணியாகி விட்டது. எனக் கருகே அநாதரட்சகனை அமரவிட்டு, கவி ஞர் எழுந்து முன்னாலுள்ள ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டார். கவிஞர் தூங்கப் போகின்றார் என்பதனை நான் விளங்கிக் கொண்டேன். நான் எதிர்பார்த்தது போல சற்று நேரத்தில் அவர் உறங்கி விட்டார்.
அநுராதபுரத்தில் ஒரு ஹோட்டல் முன்வந்து பஸ் வண்டி தரித்து நின்றது. கவிஞர் சின்னராசா மனைவி கட்டிக்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 28

கொடுத்த உணவுப் பொதியைக் கையில் எடுத்துக்கொண்டார். உணவு ஆக்கும் பொழுது ஒவ்வொரு குழந்தையும் விரும்பி உண்ணும் உணவில் அந்தக் குழந்தை கள் முகம், கணவன் முகம் தாய்க்குத் தெரியும் எனப் பாரதிதாசன் பாடிய பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது. நமது கவி ஞருக்கும் மனைவியின் அன்பு முகம் தெரியும் என நினைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் சாப்பிட்டோம். மூவரும் தேநீர் பருகிவிட்டு, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
மறுநாள் (07.09.2011) காலை 8.30 மணியளவில் ஐந்துலாம்படிச் சந்தியில் இறங்கி சென்றல் றோட்டிலுள்ள நாகம் இன் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம்.'பிர யாண அலுப்புத் தீர தலையில் நீரை ஊற்றித் தோய்ந்த பின்னர், காலை உணவை முடித்துக்கொண்டு, ஜீவா அவர் களைத் தேடி மல்லிகைக் காரியாலயம் சென்றோம். அப்பொழுது ஜீவா அவர்கள் அங்கில்லை. காரியாலயத்தில் வேலை செய்யும் சகோதரியிடம், எங்களை இருக்கு மாறு சொல்லி வைத்துவிட்டுத்தான் வெளியே போயிருந்தார். அதிக நேரம் காத் திருக்க வைக்கவில்லை. ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் ஜீவா வந்து சேர்ந்தார். ஜீவா என்றுமுள்ள ஜீவாதான். பழைய உற் FTsots வரவேற்புத்தான். ஆனால் என்னதான் சொன்னாலும் முதுமையின் பிடியில் இருந்து யார்தான் தப்பித்துக் கொள்ள முடியும் முதுமை என்பது ஒரு பிணி, மனதினால் பிணியாகக் கொள்ளாது விடினும், உடலால் அந்தப் பிணியை வெற்றி கொள்ள இயலாது. இது ஜீவா வுக்கும் பொருந்தி வரும் என்பதனைச்
சொல்லவா வேண்டும்? இருவரும் வெகு உற்சாகமாகப் பேசிக்கொண்டு யாழ்ப்பாண நகர வீதிகளில் திரிந்த காலத்தை நினைத் துக் கொண்டேன். இப்பொழுது இருவருந் தான் நடை தளர்ந்து போனோம். ஜீவா அவர்களின் வயதுடன் ஒப்பிடும் பொழுது நான் முன்னதாகவே தளர்ந்து போய்விட் டேன் என்பதனையும் விளங்கிக் கொண் (3L6óT.
என்னோடு வந்திருந்த எழுத்தாளர், கவிஞர் ஆகிய இருவரையும் அவர்கள் படைப்புகள் வழியாக ஜீவா நன்றாக அறிந்து வைத்திருந்தார். இருவரையும் நேரில் நான் அறிமுகஞ் செய்து வைத் தேன். அதன்பின் ஜீவா வழமையான தனது கேள்வியைக் கேட்டார். “யாழ்ப் பாணத்தில் என்ன இலக்கியப் புதினம்?” என்பதுதான் அந்தக் கேள்வி. அதனைத் தொடர்ந்து சற்று நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். பின்னர் திடீரென என்னுடன் வந்தவர்களைப் பார்த்து, "கொஞ்ச நேரம் இருங்கோ. நானும் மாஸ் ரரும் வெளியிலே போய்விட்டு வாறம்’ என்று சொல்லிக் கொண்டு ஜீவா கிளம் பினார். மகன் திலீபனிடம் என்னை அழைத்துப் போகின்றார் என்பதனை நான் விளங்கிக் கொண்டேன். திலீபனைச் சந்திப்பதில் எனக்கும் பெரிய விருப்பம். தனது மகன் இருக்கும் உயர்ந்த நிலை யைத் தங்களோடு நெஞ்சுக்கு நெருக்க மான ஒருவருக்குக் காட்டுவதில் எந்தத் தகப்பனுக்கு நாட்டமில்லாது போகும்
ஒருகாலத்தில் திலீபன் பற்றிய கற் பனைகள் எனக்கு மனதில் இருந்து வந் திருக்கின்றன. திலீபன் பல்கலைக்கழகப் படிப்பை நிறைவு செய்து பட்டதாரியாக
மல்லிகை ஒக்டோபர் 2011 & 29

Page 17
வேண்டும் என மிகவும் விரும்பி இருந் தேன். எனது மனவிருப்பம் ஜீவாவுக்கும் தெரியும்; திலீபனுக்கும் தெரியும். ஜீவா ஆட்டோ ஒன்றை அமர்த்தி இருவரும் அதில் ஏறிக்கொண்டோம். ஆட்டோவில் வைத்து எனது பிள்ளைகளின் சுக செய்தி களை ஜீவா வழமைபோல் விசாரித்து அறிந்து கொண்டார். திலீபனின் HAPPY DIGITAL CENTRE (PVT) LTD gets இருவரும் போய் இறங்கினோம்.
உண்மையில் எனக்கு பிரமிப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் நான் பார்த்து பழகிய 'சின்னப் பையன்' என்ற பார்வை என் மனதை விட்டு இன்னும் அகல வில்லை என்பதனை நான் உணர்ந்து கொண்டேன். திலீபன் இப்பொழுது பெரிய ஒரு புள்ளி. மனமகிழ்ச்சியுடன் திலீபனை மெல்ல அனைத்துக் கொண்டேன். யாழ்ப் பாணத்தில் என்னுடன் பழகிய திலீபனா கவே, என்னருகே நின்று கொண்டிருந் ததை நான் அவதானித்தேன். ஜீவாவும் நானும் இணைந்து நின்று புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டு, ஒரு பிரதி எனக்கு அனுப்பி வைக்குமாறு திலீபனைக் கேட்டுக் கொண்டேன். "ஐந்து நிமிஷம் இருங்கோ, இப்பவே தந்து விடுகிறேன்” என்றார். சொன் னது போல படம் கையில் கிடைத்தது. ஜீவா படத்தை வாங்கிப் பார்த்தார். “எங்களுக்கு வயது போய் விட்டுதுதான்” என்றார். நான் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டேன். இரு வரும் கதிரைகளில் அமர்ந்திருக்க இன் னொரு படமும் பிடித்துக் கொண்டோம். திலீபனை வாழ்த்தி விட்டு மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டேன். மீண்டும் ஆட்டோவில் ஏறி மல்லிகைக் காரியாலயம் வந்து சேர்ந்தோம்.
நாங்கள் தங்கி இருந்த அறைக்கு மூவரும் திரும்பி, விழாவுக்குச் செல்வதற்கு ஏற்றவண்ணம் உடைகளை உடுத்திக் கொண்டு, மதிய உணவும் உண்டு முடித்த பின்னர், மீண்டும் மல்லிகைக்குச் சென் றோம். ஜீவா தயாராக எங்களை எதிர்பார்த் துக் காத்திருந்தார். எல்லோரும் ஆட்டோ வில் ஏறி, கொடகே தேசிய சாகித்திய விருது விழா - 13 நடைபெறும் ஜே.ஆர்.ஜய வர்தன கலாசார கேந்திரம் போய்ச் சேர்ந் தோம். நட்புக்குரியவர்களான மேமன்கவி, திக்குவல்லை கமால், பத்மா சோம காந்தன், உபாலி லீலாரத்ன ஆகியோர் கண்டு பேசி உபசரித்தார்கள். விழா சரி யாக பி.ப. 3.15 மணிக்கு மங்கள விளக் கேற்றலுடன் ஆரம்பமானது. பேராசிரியர் ஏ.வீ.சுரவீர அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கினார். உரைகள் யாவும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து சிங்களத்துக்கும் உடனுக்குடன் மொழி மாற்றஞ் செய்யப்பட்டன. பேரா சிரியர் சபா ஜெயராசா அவர்கள் சிறப்புரை வழங்கினார். தேசிய ஒற்றுமையைக் கட்டி வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத் துடன் எடுக்கப் பெற்ற அந்த விழாவில், தேசிய ஒற்றுமையை உருவாக்கும் நோக் கத்துடன் ஆரம்ப காலம் முதல் முற் போக்கு எழுத்தாளர் சங்கம் எடுத்த நடவடிக்கைகள், மல்லிகை மேற்கொண்ட பணிகள் என்பவற்றை வரலாற்று நோக் கில் சுருக்கமாக, அதேசமயம் கனகச்சித மாக எடுத்துச் சொன்னார். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் கெளரவ ரீ.பீ.ஏகநாயக்க கருத்துரை வழங்கிய துடன், விருது பெற்ற சிங்கள, தமிழ், ஆங் கில எழுத்தாளர்கள் அனைவருக்கும்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 30

விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தி னார்கள். ஒடுக்கப்பட்டவர்கள் சிறுகதைத் தொகுப்புக்குரிய விருதினை நான் பெற்றுக் கொண்டேன். இந்த நாட்டின் மூத்த படைப் பாளி, சிறந்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்கள் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கிக் கெளரவிக்கப் பெற்றமை தமிழர்களைப் பொறுத்தவரை இந்த விழாவின் சிறப்பம்சம் எனலாம். விருது வழங்கும் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் எனது நீண்டகால நண்பர்கள் சபாஜெயராசா, கே.எஸ்.சிவகுமாரன் ஆகி யோரையும், கே.பொன்னுத்துரை வேறுபல நண்பர்களை எல்லாம் சந்தித்துப் பேசக்
கிடைத்தது எனக்கு மனமகிழ்ச்சியைக்
கொடுத்தது. இது எனது தனிப்பட்ட மகிழ்ச்சி. ஆனால், கொடகே அவர்கள் செய்யும் இந்தப் பணியினால் இந்தத் தேசமே பெருமைப்பட வேண்டும்.
விழா மேடையில் திரு. கொடகே, திருமதி. கொடகே இருவரையும் கண்டு கொள்ள முடிந்தது. ஓர் அரசு செய்ய வேண் டிய காரியத்தைத் தனி மனிதராக நின்று செய்யும் கொடகே அவர்கள் மிக எளிமை யாகவும், அடக்கமாகவும் அமர்ந்திருந்தார். கொடகே அவர்களைப் போன்று பரந்த உள்ளமும், நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்கும் உணர்வும் உடைய ஒரு சிலர் இருந்தால் இந்தத் தேசம் இவ்வாறு சீரழிந்து போகமாட்டாது என்பதனை மனதில் நினைத்துக் கொண்டேன்.
விழா நிறைவடைந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்த சமயம், எனது அன்புக்குரிய லெனின் மதிவானம் எங்களைத் தேடிக் கொண்டு அங்குவந்து நிற்பதைக் கண்டு கொண்டேன். அவரையும் அழைத்துக்
கொண்டு காலஞ் சென்ற பேராசிரியர் இல்லம் சென்றோம். அக்கா (பேராசிரியர் மனைவி), மருமகள் (கோதை), மரு Lapas56slesör assooTeshur ஆகியோரைச் சந்தித்து உரையாடிக் கொண்டு புறப்பட்டோம். லெனின் மதிவானம் எங்களுடன் வந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் இரவு உணவையும் முடித்துவிட்டு தங்கி இருந்த அறைக்குத் திரும்பினோம். முதல்நாள் கண் விழித்துப் பிரயாணம் செய்து வந்த களைப்பு. ஆழ்ந்து உறங்கி (360TT b.
மறுதினம் (08.09.2011) நண்பர் மேமன்கவி எங்களைத் தேடிக்கொண்டி தங்கி இருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு பேசிக்கொண்டு புறப்பட்டுச் சென்று காலை உணவு உண்ட பின்னர் மல்லிகைக்குச் சென்றோம். ஜீவா முதல் நாள் போலவே புறப்பட்டு எங்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். காலை 10 மணிக்கு மாபெரும் ஒன்றுகூடல். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு இணைந்து அரச அணு சரணையில் முதல் முறையாக நடை பெறும் இலங்கை எழுத்தாளர்களின் தேசிய அமைப்பின் ஒன்றுகூடல். தேசிய நூதனசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறுகிறது. இரண்டு ஆட்டோக்களில் எல்லோரும் விழா மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோர் தலைமையில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. சிங்கள, தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் ஒன்றுகூடல் இது. எழுத்தாளர்கள், கலை ஞர்களுக்கூடாக தேசிய ஒற்றுமையை
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 31

Page 18
உருவாக்குவதே இந்தக் கூடலின் நோக் கம் என்பதனை அமைச்சர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவர்களது சொற்பொழிவு கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டன. தேசிய நூலக அபிவிருத்தி கவுண்சில் தலைவர் எழுத்தாளர் குணசேன விதான அவர்கள் சுருக்கமாகப் பேசிவிட்டு, இலங்கை எழுத்தாளர்களின் தேசிய அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை வாசித்தார். அந்தப் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்தது. எனக்குப் பின் வரிசையில் இருந்த பெண் மணி முன்னரே குறுகுறுத்த வண்ணமே இருந்தார். சபையினரால் தெரிவு செய்யப் படாமல் நியமனம் எவ்வாறு நடைபெற முடியும் என்பதுதான் அவர் கேள்வி. அது நியாயமானதுங்கூட. அத்துடன் சபையின் ஒழுங்குமுறை அமைதி குழம்பியது. எல் லோரும் எழுந்தெழுந்து சிங்களத்தில் பேசி னார்கள். எனக்கு ஊமை கண்ட கனவு போல ஒன்றுதானும் சொல்லிக் கொள்ள இயலவில்லை. ஊமை கனவை விளங் கிக் கொள்ளும். அதை வெளியில் எடுத்துச் சொல்ல இயலாது. எனக்கு விளங்கவு மில்லை. வெளியில் சொல்லவும் இயலாது. என்போன்றவர்களின் நிலைமை மிகப் பரிதாபம். தர்மசங்கடம், எங்கே வந்து மாட் டிக்கொண்டேன் என்றிருந்தது. நான் செயற் குழு உறுப்பினர் நியமனம் பெற்று, கூட்டங் களுக்குக் கொழும்பு போய்வரவா போகி றேன்? தலை தப்பினது தம்பிரான் புண்ணி யம் என்றிருந்தேன். பிரேரணைகள் மூலம் தெரிவுகள் நடந்து முடிந்தன. எனக்குப் பின் னால் இருந்த சிங்களப் பெண்மணி அடிக் கடி எழுந்து பம்பரமாகச் சுழன்று சுழன்று பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு அரசி யல் பின்னணி ஒன்று இருக்கலாம் போலத்
தோன்றியது. பெண் அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்ணிய வாதிகள் அந்தப் பெண்மணியை வந்து பார்த்திருக்க வேண்டும்!
தமிழ் எழுத்தாளர் சார்பில் ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார். பெருமை யாக இருந்தது. கருத்து சொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணம் வரமுடியாதிருந்த நெருக்கடி களையும், முஸ்லிம்கள் கட்டுக் கொல்லப் பட்ட நிகழ்வுகளை இப்போது எடுத்துச் சொன்னார். சபாஷ் போடலாம் போல் அப் போது தோன்றியது. இடம், காலம் அறிந்து பேச வேண்டும் என்பதனை உணர்ந்து வைத்திருக்கும் எழுத்தாளர். சஞ்சிகை ஆசிரியர் இவர் போன்றவர்கள்தான் பெரும் பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருந்து தமிழுக்கு, தமிழிலக்கியத்துக்கு அரும்பணி ஆற்றவல்ல திறமைசாலிகள் என்று நினைத்துப் பெருமைபட்டுக் கொண் டேன்.
விழா முடிய, மதிய உணவும் தந் தார்கள். உணவினால் வயிறு நிறைந்தது என்று சொல்வதற்கு இயலாது. உள்ளம் நிறையாத நிலையில் வயிறு நிறையுமா! தனி மனிதன் கொடகே எடுத்த விழாவை மேலும் சிறப்பித்துக் காட்டுவதற்காகவே இந்த ஒன்றுகூடல் மறுநாள் நடைபெற்ற தோவென எண்ணத் தோன்றுகின்றது.
விழா முடிவுற்ற பின்னர், நானும் என் னுடன் வந்திருந்த இரு படைப்பாளிகளும் (3LDLosistessSuqL6ët கொடகே புத்தக நிலை யம் சென்று பார்வையிட்டோம். பிரமிப்பாக இருந்தது. சகோதர மொழியான சிங்களத்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 32

தைக் கற்றுக்கொள்ளவில்லையே என்ற வேதனை மனதை வாட்டியது. காலையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரித்த உபாலி லீலாரத்ன அவர்களை அங்கு மீண்டும் நேரில் கண்டு பேசினேன்.
எல்லோரும் வெளியே வந்தோம். ஒரு ஆட்டோவை மறித்து நிறுத்த எத்தனித்த மேமன்கவி வீதியோரக் குறுங்கல்லி தடக்கி கீழே விழுந்து விட்டார். கண் ணாடிப் பிரேம் மூக்கில் வெட்டி இரத்தம் 6նԼԶա ஆரம்பித்தது. நாங்கள் திகைத்துப் போனோம். எப்பொழுதும் கலகலப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டி ருக்கும் நண்பனுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என மனதுக்கு வேதனையாக இருந்தது. ஆட்டோ ஒன்றில் ஏறி நாங்கள் அறைக்குப் போய்ச் சேர்ந்தோம். அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
மாலை நேரம் வதிரி சி.ரவீந்திரன் எங் களைத் தேடிக்கொண்டு நாங்கள் தங்கி யிருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். அவ
முக்கிய குறிப்பு :
மல்லிகையின் 47-வது ஆண்டு மலர் தயாராகின்றது.
ஆண்டு மலருக்குக் கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வ முள்ள அத்தனை படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் இப்போதே தத்தமது படைப்புகள் ஊடாக எம்முடன் தொடர்பு கொள்வது பெரிதும் விரும்பத்தக்கதாகும்.
காலம் கடத்துவதைத் தவிர்த்து, இப்போதே மல்லிகையுடன் தொடர்பு கொள்ள முயற்சியுங்கள்.
ரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, எல்லோருமாகக் கிளம்பி வெளியே சென்றோம். எனக்கு என் பேரக் குழந்தை களின் நினைவு. அவர்களுக்கு விருப்ப மான பண்டங்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டேன். உடன் வந்தவர்களும் தேவையானவற்றை வாங்கிக் கொண்டார் கள். மூவரும் அறைக்குத் திரும்பினோம். நாங்கள் யாழ்ப்பாணம் திரும்புவதற்காகப் பதிவு செய்திருந்த பஸ் வண்டி இரவு 8 மணிக்கு வரும் என்றார்கள், குறித்த நேரத் துக்குச் சற்று முன்னதாகவே பஸ்வண்டி வந்து சேர்ந்தது. நாங்கள் மூவரும் எங்கள் பயணப் பைகளைத் தூக்கிக் கொண்டு அந்த பஸ் வண்டியில் ஏறி அமர்ந்தோம். எங்கள் பயணம் யாழ்ப்பாணம் நோக்கி splbuLDIT60Tg5).
நான் எத்தனையோ தடவைகள் கொழும்பு சென்று ஊருக்குத் திரும்பி இருக்கின்றேன்! ஆனால் இந்தப் பயணம் சற்று வித்தியாசமானதுதான்.
ஆசிரியர்)
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 33

Page 19
காலத் தெருக்களில் - எண் இலக்குத் தொலைத்து இளைக்கையில்
βδω6πύυπgo தோள் தருகிறாய்.
கதறும் கடல் அலையில் - என் கனா கவிழ்ந்து போக முத்துக் குளித்ததை எண் முன்னே
நீட்டுகிறாய்.
půp. 6uog56uU
முடிவிண்றி முதிர்ந்த (လ်)
எண் கதையை முற்றும்" என
நான் மூடிக்க
முடியும்? என - என் இரத்த நாளங்களில் நம்பிக்கை பாய்ச்சுகிறப்.
இரு வேறு இனம். UMaD6guNéb UMGUMG. மதத்தில் மாறுபாடு. நம் நிறத்தில் கூட வேறுபாடு. இத்யாதி முரண் துளைத்து நம் நட்பு
66565tlugs.us
நான் மலைக்க
மனிதம் தின்றே மனிதாபிமான மீட்பு யுத்த முரணுக்குள் மூழ்கிய தீவில் சனம் முரண்களை முடிச்சவிழ்க்க நட்பு யுத்தம் நடத்தலாம் வா" என என் வாயடைக்கிறாய்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 34

2OI சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு முகங்கள் மீது ஒரு பார்வை
- 6TLb.6Tib.LD6öT6nyoff
கடந்த இரண்டு வருடங்களுக்கு முந்திய முப்பது வருட காலத்தைக் கொண்ட மூன்று தசாப்த காலத்தில் இலங்கையில் நிலவிய கொடூர உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் நிலவிய அவலங்களைச் சொல்லில் வடிப்பது கடினம். அவற்றை நேரிடையாகக் கண்டவர்களையும், ஊடகங்கள் மூலமாகவும், விடயங்களை அறிந்தவர்களையும் விட அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வேதனையும் சோதனையும் புரியும்,
தலைக்கு மேலே குண்டு மாரி பொழிகின்ற போது தமது உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடியவர்கள், தமது கண்ணெதிரிலேயே தமது சொந்தங் களின் உடலங்கள் குண்டு பட்ட சிதறிய காட்சியைக் கண்டவர்கள், அதனால் தனது சுய சிந்தனையை இழந்து பைத்தியமாகிப் போனவர்கள் என எண்ணிலடங்கா உயிர்கள், பச்சிளம் குழந்தைகள், தள்ளாத வயது கொண்ட முதியவர்கள் உட்பட லட்சக்கணக் கானவர்கள் பாடசாலைகளிலும், கோவில் குளங்களிலும் தத்தமது தூரத்து உறவினர் வீடுகளிலேயும் தஞ்சம் புகுந்ததை இலகுவில் மறந்துவிட முடியாது. இதனால் இழக்கப் பட்ட சொத்துக்களின் பெறுமதியோ கோடான கோடி. இவர்களில் சிலர் இந்தியாவிலும், உள்நாட்டிலும் உள்ள உறவினர்களிடமும், அகதிமுகாம்களிலும் தஞ்சம் புகுந்தனர். இவர் களிலும் மேலாக புலம்பெயர்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, சுவிஸ்லாந்து, இத்தாலி, பெர்லின் என ஐரோப்பிய நாடு களிலும் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அவ்வவ்நாடுகளில் அகதி அந்தஸ்த்துப் பெற்று வாழ்ந்து வருவதை நாம் காணுகின்றோம்.
நிகழ்ந்து முடிந்த யுத்த அவலங்களைப் பற்றி நோக்குவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அப்படியாயின் கொண்ட நோக்கம் திசை மாறிப் போய்விடலாம் என்பதனால் வந்த நோக்கத்துக்கு வரலாம் என்று நினைக்கிறேன்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 35

Page 20
ஈழத்து இலக்கியப் பரப்பிலே மூன்று தசாப்த காலத்துக்கு முன்னர் நிலவிய இலக்கியப் பண்புகளோடு புலம்பெயர் இலக் கியம் என்ற ஓர் இலக்கியச் செயற்பாடு இப்பொழுது பிற்சேர்க்கையாக வந்து சேர்ந் திருப்பதை ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் ஒரு அங்கமாகக் கொள்வது சிறப்புடைய தாகும்.
இத்தகைய இலக்கியம் படைப்பவர் கள் வேறு யாருமல்ல, நம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளும், அறி ஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், எழுத் தாளர்கள்தான். அவரவர்கள் தத்தமது நாடு களில் இருந்துகொண்டு தமது படைப்புக் கள் மூலம் வாழ்நிலைத் தத்துவங்களை யும், சடங்கு சம்பிரதாயங்களையும் இலக் கிய மயப்படுத்தி வருகின்றனர். ஒன்று கூடல்கள், கலந்துரையாடல்கள், நூல் வெளியீடுகள், சஞ்சிகைப் பிரசுரங்கள் என இலக்கியம் படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் இவ்வருட ஆரம் பத்தில் இலங்கையின் தலைநகர் கொழும் பில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு ஒன்றை நடத்த வேண்டிய சர்வதேச தேவை ஒன்று ஏற்பட்டது. அந்த மாநாட்டில் சர்வதேசத் திலும் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளர் களையும் ஒன்று திரட்டி மாநாட்டைச் சிறப் பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் ஏற்பாட்டாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு உழைத்தார்கள்.
குறிப்பாக மாநாட்டு அமைப்பாளர் எழுத்தாளர் அவுஸ்திரேலிய லெ.முருக பூபதி, இலங்கை அமைப்பாளர் ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா, கவிஞர்
ஜின்னா சரிபுதீன், கவிஞர் அஷ்ரப் சிஹாப் தீன் உட்பட சம்பந்தப்பட்ட குழுவினர் திறமையான முறையில் தமது உழைப்பை யும், பங்களிப்பையும் செலுத்தி மாநாடு குறித்த தினத்தில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நான்கு நாள் விழாவாக நடத்தி முடித்தனர். இது இமாலய சாதனை தான் என்று குறிப்பிடலாம்.
சர்வதேச எழுத்தாளர் மாநாடு 2011 நினைவாக மலர் ஒன்றும், கட்டுரைக் கோவை ஒன்றும், சர்வதேச எழுத்தாளர் களின் புலப்பெயர்வு பற்றிய சிறுகதைத் தொகுதி ஒன்றும், எழுத்தாளர் முருகபூபதி யின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான Be Alive என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
முகங்கள் என்ற சிறுகதைத் தொகுதி யில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எமது படைப்பாளர்கள் ஐம்பது எழுத்தாளர்களது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. விஸ்வ கேது இலக்கியப் பாலம் சார்பாக வி.ஜீவன் குமார் இதனைத் தொகுத்து வழங்கியிருக் கிறார்.
இனி ஐம்பது எழுத்தாளர்களும் தமது படைப்புகள் மூலமாக எமக்கும், ஏனைய சர்வதேச மக்களுக்கும் என்ன செய்தி சொல்லுகிறார்கள் என்பதை அறிய முகங் களைத் தரிசிப்போம்.
ழுதிர் பனைகள்
- அகில் - நியூசிலாந்து
யாழ்ப்பாணத்திலே பெயர் பெற்ற
இராஜரட்ணம் குடும்பம் அவுஸ்திரேலியா வுக்குப் புலம்பெயர்ந்தது. ராஜரட்ணம் பல்
மல்லிகை ஒக்டோபர் 2011 $ 36

கலைக்கழக விரிவுரையாளராகக் கடமை யாற்றியவர். இறுதியாக நியூசிலாந்தில் அமைச்சு ஒன்றில் உயர்பதவி கிடைத்த தால் அங்கு கெளரவமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்.
சிவரூபன், சிவநேசன், சிவச்செல்வன் என மூன்று ஆண் பிள்ளைகளின் மரியா தைக்குரிய அப்பா அவர். மனைவி பெயர் பார்வதி கணபதிப்பிள்ளை. மூன்று பிள்ளை களினதும் தாய்தான் அவர். திருமணத்துக் குப் பிறகு ராஜரட்ணத்தை இணைத்து பார்வதி இராஜரட்ணம் ஆகிவிட்டார்.
மூத்த மகன் ஹாட் சேர்ஜன் சிவ ரூபன் 46வது. மூத்தவரை விட, ஏழு வயது இளையவர் மறைன் எஞ்ஜினியர், கடைக் குட்டி சிவச்செல்வன் வயது 32. விமானத் துறையுடன் கொம்பியட்டர் துறையிலும் பட்டம் பெற்றிருந்ததோடல்லாமல் நியூ யோர்க்கில் போர் விமானியாகப் பயிற்சி பெற்றிருந்தார். ராஜரட்ணம் இறைபக்தராக இருந்ததனால் தனது மூன்று மகன்மாருக் கும் சிவன் என்ற சொல் வரவேண்டும் என்ப தற்காக சிவரூபன், சிவநேசன், சிவச் செல்வன் என்ற பெயர்களை இட்டிருந்தார். இவர்களை மையமாகக் கொண்டதுதான்
565
இராஜரட்ணம் மாரடைப்பால் கால மாகி விட்டார். இப்பொழுது பார்வதி ராஜ ரட்னமும் காலமாகி விட்டார். காலமா வதற்கு முன்னரே பெற்றோர் தம் பிள்ளை களுக்கு செய்து வைக்க வேண்டும் என்று வரண்களைத் தேடினர். ஆனால், மூன்று காரணங்களுக்காகவும் மகன்மார் திரு மணத்தை விரும்பவில்லை. பெற்றோர் அது தெரியாமலேயே காலமாகிப் போய் விட்டனர். பிள்ளைகளின் வாயிலாகவே
அந்தக் காரணங்கள் வாசகர்களுக்கு முன் வைக்கப்படுகின்றன. இதோ அந்தக் கார னங்களை நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்.
மூத்த மகன் சிவரூபன் நிர்மலா என்ற பெண்ணை விரும்பினார். இருவரும் ஒரே யுனிவசிற்றிதான். என்றாலும் சாதீயத் துக்கு முன்னுரிமை கொடுத்ததினால் பெற் றோர் அவளை விரும்பவில்லை. காதலுக் காக பெற்றோரைக் கஷ்டப்படுத்த வேண் டாம் என்று அவனிடம் சொல்லிக் கொண்டு ஒதுங்கிக்கொண்டு விட்டாள். “பெரிய ஹாட் சேர்ஜன் என்று பெயர், பட். ஹாட்லெஸ் பேரன்ஸறக்கு பிள்ளையாகப் பிறந்து விட் டேன்’ என வருத்தப்பட்டார். அதனால் கடைசி வரையில் திருமணமே செய்து கொள்ளவில்லை.
இரண்டாவது மகன் சிவநேசன், கொன்றோல் றிமோவல் லிமிட்டட் கம்பனி யின் கப்பல் ஒன்றில் பிரதான இஞ்சினிய ராகக் கடமையாற்றுகிறார். மாதக் கணக் காகக் கடலில் பிரயாணம் செய்யும் அவர், கப்பல் நங்கூரம் இடும் நாடுகளில் இறங்கி நங்கையரிடம் சுகம் அனுபவிப்பவர். சுகத் துக்குப் பஞ்சமே இல்லை. ஆபிரிக்கப் பெண்களிடமோ, இத்தாலியப் பெண்களு டனோ கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் அவருக்கு நிரந்தரமாகத் திருமணம் செய் தாலும் மனைவியுடன் தங்க முடியாத விதி. பாலியல் நோய் வேறு தொற்றலாம். அந் நோயைத் தன்னை நம்பி வருபவளுக்குக் கொடுத்து அவளையும் எச்.ஐ.வி. தொற் றுக்கு ஆளாக்கி கஷ்டப்படுத்த விரும்பாத தால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து விட்டார். பெற்றோருக்கு இது தெரி யவே தெரியாது. பெற்றோர் திருமணப்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 37

Page 21
பெண்களின் புகைப்படங்களை அனுப் பினாலும் செக்ஸ் உணர்வுடன் அவற்றைப் பார்த்து விட்டு ஒதுக்கிவிடுவார். என்றாலும் தாய், புகைப்படங்களை அனுப்பிக் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதுவும் நின்றுபோய்விட்டது.
கடைசி மகன் சிவரூபன், பைலட்டாக வும், விமானத்துறை சம்பந்தமான கம்பி துறையிலும் பட்டம் பெற்று அமெரிக்க யுத்த விமான ஒட்டியாகவும் கடமை புரிந்தார். கலிபோர்னியாவில் இருக்கும் மாமாவின் சியாமியை முடித்து வைக்க விரும்பி இவரது பட்டமளிப்பு விழாவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இடையில் ஈராக் யுத்தத்தின் போது குறித்த இலக்குகளுக்கு குண்டுகளைப் பொழிய வேண்டும் என்பது கட்டளை. ஈராக் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையின் போர் புரொஜெக்டில் இணைக்கப்பட்டத னால் தனது தாய் நாட்டின் மீது தமது மக்களின் மீது குண்டுகளை வீச வேண்டிய துரதிர்ஷ்டம். பத்து இலக்கில் ஒரு கணிப் பீட்டைப் பிழையாக அனுப்பியதால் அது ராணுவ முகாமின் மீது விழுந்து வெடித்துச் சிதறியதனால் புலி சப்போட்டர் எனக் குற் றஞ் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட
யூட்டர்
தால் திருமணம் முடியாமல் போனது. சியாமியை வேறு இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டார்கள். இதனால் சிவ ரூபனுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இட மில்லாமல் போய்விட்டது.
இப்படியாக மூன்று மகன்களினதும் திருமணம் தடைப்பட்டுப் போன காரணங் களை தாய் அறியாவிட்டாலும், ஒருவருக் காவது திருமணம் செய்து வைக்க முடி யாமல் போனது என்ற ஏக்கம் அந்தத்
தாயுள்ளத்தில் தாளாத கவலையை ஏற் படுத்தத்தான் செய்தது. அந்தக் கவலை யோடு கண்களை மூடிவிட்டாள் அவள்.
உலகத்தின் பல பாகங்களிலிலு மிருந்து உற்றார் உறவினர்கள் எனப் பலர் மரணச் சடங்கில் பங்குகொண்டனர்.
முதிர் பனைகள் வயது போன தமது அப்பா அம்மாவைக் குறித்தாலும், திரு மண வயதைத் தாண்டிவிட்ட பிறகும் திரு மனம் முடிக்காமல் மூன்று மகன்களும் இருந்து விட்டதால் அவர்கள் வயதாகிக் கொண்டு போகிறார்கள் என்ற அர்த்தத் தில் அவர்களைச் சுட்டினாலும் சுட்டலாம். மொத் தத்தில் சிறந்ததொரு சிறுகதையை வாசித்த திருப்தியை இந்த முதிர்பனைகள் தரும் என்பதில் எதுவிதச் சந்தேகமும் இல்லை.
பேரனங்கு
- தேவகாந்தன் - கனடா
ரமணிதரன் சதாசிவம் தனது தாய் தமக்கையுடன் கனடாவில் தங்கியிருக் கிறார். குளோபல் குழுமத்து தொழிற் சாலை ஒன்றில் வேலை. ஒரு வாரக் காலத் துக்கு இன்னொரு தொழிற்சாலையில் போய் வேலை செய்கிறான். சென்ற இடத் தில் தன்னுடன் வேலை செய்யும் அஸர் பைஜன் நாட்டைச் சேர்ந்த ஐயூன் என்ற பெண்ணுடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் இல்ங்கையைப் போலவே அஸர் பைஜானும் சோவியத்தில் இருந்து பிரிந்து சென்ற நாட்டில் பிரச்சினை காரணமாக கனடாவுக்குச் சென்று
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ-38

உழைத்து வருகிறாள் என்ற உண்மை தெரிய வருகிறது.
இருவருக்கும் இடையில் காதல் அரும்புகிறது என்று சதாசிவம் நினைத் திருந்தாலும் தனது காதலின் வெளிப் பாடாக ஐயபூன் எதனையும் காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்குள்ளும் காதல் உள்ளம் இல்லாமல் இல்லை. இனம் காணத்தான் முடியவில்லை.
பெரும் பெரும் பலகைகளை அள வாக அறுத்து துளையிடுவதுதான் அவர் களது வேலை. தளபாடம் செய்யும் தொழிற் சாலை அது. சதாசிவம் அவளுக்கு உதவி யாளனாக இருந்தார். வேலை நேரத்தில் அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் வெளிப்படையாகவே கேட்டு விட் டாள் “எனது முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?” என்று. "உன் முகத்தில் ஒரு சோகம் விரவிக் கிடக்கிறது. நீ அழகி தான். அந்தச் சோகம் மாத்திரம் இல்லா விட்டால் பேரழகியாக இருப்பாய்’ என்று அவன் சொன்ன போது அவள் மகிழ் வடைந்தாள்.
SDötoan, Selatöboanganéãal
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம் - இலங்கை
மதுராவும், கணவன் பிள்ளைகளும் லண்டனில் இருக்கிறார்கள். அவளின் அக்கா மற்றும் தம்பிகள் இருவரும் கனடா வில் உள்ளனர்.
அப்பா, அம்மா, கடைக்குட்டி தங்கை ரேவதி, ரேவதியின் கணவர் மருதவாணன், அவர்களது குட்டி மகன் அனைவரும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில்தான் வசிக்
கிறார்கள். யுத்த அரக்கனின் பிடியில் யாழ்ப் Lumresoort Lib அகப்பட்டிருந்த வேளை மதுராவும் உறவுகளும் இடம்பெயர்ந்தனர். தற் பொழுது இலங்கையில் அமைதியான சூழ் நிலை நிலவுவதனால் தாய் நாட்டைக் காணப்போகும் மகிழ்ச்சியில் அவர்கள் லண்டனில் இருந்து 12,40ற்குப் புறப்பட்டு விட்டார்கள். மறுநாள் யாழ்ப்பாணத்தில் இருக்கப் போகிறோம் என்ற மகிழ்வு அவர் களிடத்தில்.
லண்டன் வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்ததால் நடை உடை பாவனை களும், பழக்க வழக்கங்களும் மாறியிருந்த தால் மதுரா சற்றுக் கூடுதலாகவே அச்ச மடைந்தாள். ஏனெனில் ஒழுக்க விழுமியங் களோடு அம்மாவின் கட்டுப்பாட்டில் வளர்ந் தவர்கள் அவர்கள். உடையும் அவ்வாறு தான் கழுத்து முதல் ப்ெருவிரல் தெரிகிற அளவுக்கு அணியும் பண்பாட்டோடு கலந்த ஆடைகள்.
லண்டன் வாழ்க்கைக்குப் பழகியிருந் ததால் அவர்கள் சேர்ட்டும் ஜீன்சும் அணிந்து மாறியிருந்ததால் அம்மா ஏதாவது சொல்லுவாள் என்றுதான் பயந்து போயிருந் தாள். ஆனால் மதுராவின் பிள்ளைகளான சுஜியும், ரேணுவும் சேர்ட்டும் ஜீன்சும் அணிந்து காணப்பட்டனர். மதுராவின் கை களைப் பற்றிக்கொண்டு கண்கலங்கிய அப்பா அடுத்து சுஜியையும் ரேணுவையும் அனைத்துக் கொண்டனர். அப்பாவின் கைவிலக அவ்வாறே அம்மாவும் "ரேணுக் குட்டி” என அவளை ஆரத்தழுவி அணைத் துக் கொண்டபோது மதுரா மெய்மறந்து தான் போனாள். அம்மாவின் முகத்தில் எந்தவித மாறுதலும் தென்படவில்லை. "எண்ட பேரப்பிள்ளையைப் பார்தியலே, என்ன ஸ்ரைலாஸ்மாட்டாய் இருக்கிணம்”
மல்லிகை ஒக்டோபர் 2011 & 39

Page 22
என பெருமைப்பட்ட போது அம்மா அம்மா தான் என அவளது உள்ளம் எண்ணிக் களிப்பெய்தியது.
காலங்களும், நாடுகளும் மாறும் போது நாமும் அவ்வாறே எம்மை மாற்றிக் கொள் வதில் தப்பில்லை என்பதை எடுத்துக் காட்டும்படியாக கதை அமைந்து காணப் படுகிறது.
ayabatuay
- ஜோதிலிங்கம் - பிரான்ஸ்
இன்றைய அவசர உலகில் சந்தடிகள் நிறைந்து காணப்படுவதும், நவீன நாகரிகங் கள் பிறக்கின்ற இடமும் பிரான்ஸ் நகரில் தான் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க (upgurgl.
எமது இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வாழ்பவர்கள், குடும்ப சகிதம் வாழ்ந்து வருபவர்கள் அநேகம் பேர் அங்கு இருக்கின்றார்கள்.
லாசப்பல் என்பது வட பிரான்ஸில் இருக்கும் ஒரு சந்தடி மிகுந்த வர்த்தக நகர மாகும். மேற்கு நாடுகளில் வேறு எங்கும் இல் லாத வகையில் இங்கு தமிழ் மக்களின் வர்த் தக நிலையங்கள் காணப்படுகின்றன. இந் நகரைக் குட்டி ஈழம் என்று கூட அழைப்பார் களாம். அடுக்குமாடிகளைக் கொண்ட 10 கட்டிடத் தொகுதிகளுக்கு மேல் வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றனவாம். இங்கு வணிகம் செய்து வருபவர்கள் இலங்கையில் இருந்தும், பாண்டிச்சேரியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள்தாம் நடத்தி வருகின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
லாசப்பல் வீதி மாலை நேரங்களில் பெண்பிள்ளைகள் நடமாடுவதற்கு ஏற்ற
தொரு தெருவல்ல. அதிலும் சனி, ஞாயிறு மாலை நேரம் என்றால் மிகவும் பயங்கர மானது. இங்கு இளைஞர்களும், போதை தலைக்கேறியவர்களும் காணப்படுவார்கள். ஆபிரிக்காவின் கஞ்சா போதைப் பொருளும் இங்கு தாராளமாகக் கிடைக்கும்.
1985ம் ஆண்டு நிருமாணிக்கப்பட்ட மாணிக்க விநாயகரின் முதலாவது சைவக் கோயில் இங்குதான் இருக்கிறது. தமிழ் மக்களின் வணக்க வழிபாடுகள் தினமும் நடந்தேறுகின்றன.
புலம்பெயர்ந்து சென்ற பாக்கியநாதன் தம்பதியினர் பிரான்ஸில்தான் குடியிருக் கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகள் சிவ ரஞ்சனி கம்பியூட்டர் என்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பஸ்ஸில் தான் சென்று வருகிறாள். வீடு வந்து சேரும் வரை யில் தாய் பரிமளத்துக்கு உடம்பில் உயிர் இருக்காது. ஆரம்பத்தில் பரிமளம் அங்கு வர முடியாது என்று மறுத்தாலும் கணவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் அவள் இருந்தாள். பாக்கிய நாதன் அங்கே ஓர் ஆபீஸில் வேலை செய்து வருகிறார்.
அன்று பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவை சக மாணவ மாணவி யுடன் விரிவுரையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட இருப்பதாகக் கூறிப் புறப்பட் டாள். சிவரஞ்சினி செல்லும் அவசரத்தில் கழுத்தடிபட்டனைக் கூடச் சட்டையில் பூட்ட மறந்து விட்டாள். தாய்தான் நினைவு படுத்தினாள்.
ரயிலை விட்டு இறங்கிய சிவரங்சினி உடை மாற்றுவதற்குத் தேவையான ஆடை களுடன் கழிவறைக்குள் நுழைந்தாள்.
வீட்டில் பட்டனைப் பூட்ட மறந்தவள், வெளியில் வந்தபோது பட்டன்கள் எதுவும்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 40

அற்ற ஆடையுடன் அலங்கரித்து கொண்டு வந்து தனது சக தோழியருடன் இணைந்து கொண்டாள்.
பாரிஸ் நகரம் இரவின் மின்விளக்கு களால் நிரம்பி வழிந்தது. அப்பொழுது அங்கு எதுவும் நடக்கலாம். ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒன்று நடக்கும் நகரம் தான் பாரிஸ். ஆனால் என்ன நடக்கும் என்பதை எவரா லும் சொல்ல முடியாது.
வேலைக்குப் போன பாக்கியநாதன் மனைவி பரிமளத்துடன் சென்று மகளையும் அழைத்துப் போகலாம் என இரவு 10.00 மணிக்கு குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அதற்குள் அங்கே சிவரஞ்சினியின் நிலை என்னவாகியிருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது.
லாசப்பல் வீதிக்கு இருவரும் வந்த போது பரபரப்புக் காணப்பட்டது. யாரோ ஒரு பெண்பிள்ளை ஸ்ரேஷன் ரொயிலற்றுக் குள்ளே கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம் என்று பேசிக்கொண்ட போது பரிமளத்துக்கு இரத்தம் உறைந்து விட்டது. காலையில் அவள் அணிந்து கொண்டு வந்த உடுப்பு மாற்றிய பாதி, மாற்றாத பாதியாக பிணமாகக் குப்புற விழுந்து கிடக்கக் காணப் பட்டாள். அவளை முன் பக்கம் திருப்பிய போது அவளின் தோளிலும், மார்பிலும் நீல நிறத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. தொப் புளுக்கருகே வளையம் ஒன்றும் குத்தப்பட்டி ருந்தது கண்டு அதிர்ந்து போனாள் பரிமளம்.
இவ்வாறு சம்பவக் கோவைகளையும், நிகழ்ச்சிகளையும் தனது கதையில் பின்னி வெளிநாட்டு வாழ்க்கையையும், வெளிநாட்டு நிகழ்வுகளையும், தன்மைகளையும் தந்து வாசகர் மனதை யோசிக்கச் செய்திருக்கிறார் ஆசிரியர்.
எல்லால் இடிந்தபின்புல்
- சாந்தனி வரதராஜன் - ஜேர்மனி
சொந்த மண்ணையும், சொந்த பந்தங் களையும் விட்டு தூரதேச ஜேர்மனிக்கு வந் தும் நிம்மதியில்லாத வேலை. துடைப்பும், மொப்பும் அவளை விட்டுப் போகாமல் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. மாதா மாதம் முப்பது ஈரோவுக்காக நாய்படாத பாடுபட்டும் நல்ல பெயர் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
வெள்ளைக்காரி சும்மா மகாராணி யாட்டமாக இருந்துகொண்டு வேலைக்காரி யிடம் உயிர்வதை வாங்குவதை நினைக்கும் போது அவளுக்கு சொந்த வீடு நினைவு வரும். என்றாலும் தீக்குள் சாம்பராகிப் போன பெற்றவரும் உற்றவரும் இன்றி அண்ணா வையும் பிள்ளைகளையும் வாழ வைக்க இப்படி மாய்கிறாளே! ஏராளமான கற்பனை களையும், கனவுகளையும் சுமந்தவளாக எவருக்கும் விளங்காதபடி விலங்கு பூட்டப் பட்டவளாக அவள் இருக்கிறாள். கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் சுவரை உடைத்துக் கொண்டு ஒன்றிணைந்தது போல இவளும் இணையும் நாள் எந்நாளே என்று ஏக்கம் தான் அவளிடத்தில்:
எனக்காகவிதைன்ை
- பாடும் மீன் சு.ழுநீகந்தராசா - அவுஸ்திரேலியா
வசதியாக வாழ்ந்த குடும்பம் வடபுல யுத்த அனர்த்தத்தால் உறவுகள் பறிக்கப் பட்டு, உயிர்கள் காவுகொள்ளப்பட்டு அவுஸ் திரேலியாவில் வசிக்கும் கந்தையா முதலாளி யின் ஒன்றுவிட்ட தமக்கையின் மகன் சந்திரனைத் திருமணம் முடித்த சுகந்தி, திரு
மல்லிகை ஒக்டோபர் 2011 & 41

Page 23
மணம் முடிந்த புதிதில் ஆனந்தமாகவே காணப்பட்டாள். என்றாலும் இடையில் அறிய வந்த தனது கணவனின் மற்றைய மனைவி யின் தொடர்பு தெரிய வந்ததும் புழுவாய்த் துடித்தாள். விவாகரத்து என்ற முடிவோடு இருந்தவள் தங்கையின் திருமண ஏற்பாடு களை சந்திரன் முடித்து வைக்க முன்வந்த போது சுகந்தியால் அதனை மறுக்க முடிய வில்லை. தனது விவகாரத்து எண்ணத்தை மாற்றிக்கொண்டு விடுகிறாள்.
தனது தாய் நாட்டை விட்டுச் சென்றபின் தஞ்சம் புகும் ஐரோப்பிய நாட்டுக் கலாசாரத் தைப் பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படு கிறது. சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டிய பொழுதுகளில் மேலைத்தேச நாகரீகம் அவற்றை மூழ்கடித்து விடுகிறது.
திருமணங்களை எடுத்துக்கொண்டால் சர்வசாதரணமாக பல பெண்களை முடிக்க முடிக்கிறது; பழக முடிகிறது. ஏன் பிள்ளை குட்டிகள்கூட பெற்றுக்கொள்ள முடிகிறது. இவை ஒன்றும் ஒரு பெரிய பண்பாட்டுபிறழ்வு களாகத் தெரிவதில்லை.
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான ஒழுக்க விழுமியங்களில் பெரி தாக அலட்டிக்கொள்ளும் அளவுக்குப் பாதிப் புக்களை ஏற்படுத்தி விடுவதில்லை என்பதை கதாசிரியர் நல்ல முறையில் தனது கதை யின் மூலம் விளக்குகிறார்.
இர்த்தழுன் ைைெைைல்
- நிலக்கிளி பாலமனோகரன் - டென்மார்க்
வன்னிப் போரின் போது 2009 மே மாத நடுப்பகுதியில் அவலத்தில் சிக்கி ஒருவாறு
வெளியேறிய சுமதியின் தந்தை வவுனியா முகாம் ஒன்றில் இருப்பதை அறிய முடிந் தாலும் உடனடியாக தனது டென்மார்க் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள முடியாமல் போனது எப்படியும் தந்தையைத் தன்னோடு எடுத்துக்கொள்ள ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாள்.
தாயை இழந்த நிலையில் சுமதியை யும், தம்பி சிவாவையும் தாயில்லாக் குறை தெரியாமல் வளர்த்தார். என்றாலும் சிவா ஆயுதப் போராட்டக் குழுவுடன் இணைந்து கொண்டு போராடி நாட்டுக்காக உயிர் துறந் தான். சுமதி தனது அத்தை மகனையே மணம் புரிந்து டென்மார்க்கிலேயே வாழ் கிறாள்.
ஒருவாறு, 'கொப்பன் கேகன்’ விமான நிலையத்தில் தந்தை வந்திறங்கிய போது சுமதியால் தந்தையைத் தந்தையாகப் பார்க்க முடியவில்லை. அவர் கோலம் அழிந்து பேசா மடந்தையாக அமைதியாகவே காணப்பட் டார். சுமதிக்கு காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யுத்த அனர்த்தங்களையும், அவலங்களையும் நேரடியாக அனுபவித்த தால் அவரது மனதை மெளனம் கெளவிக் கொண்டது.
டென்மார்க்கிலுள்ள நகரங்களில் ஒன் றான வயில நகரத்தின் குடாக்கடலினுள் திமிங்கிலம் ஒன்று திசைமாறு வந்து தரை தட்டிப் போயிருந்ததால், கடலுக்குள் திரும்ப முடியாமல் அவலப்பட்டுக் கொண்டிருந்ததை வன்னி மக்கள் இறுதிக்கட்ட நாட்களில் முள்ளியவாய்க்காலில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவித்த மக்களின் நிலையும் ஒன் றாக இருந்திருக்கும் என்ற எண்ணச் சிந் தனை இழையோடுகிறது. யுத்தத்தின் இறு திக் கட்டத்தில் பெருந்திரளான மக்கள் நந்திக் கடலைக் கடந்தபோது வயோதிபர்கள்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 42

விழுந்து மிதிபட்டும், நீரில் மூழ்கியும் அக் காலத்தில் இறந்துபோனதை யாரால்தான் மறக்க முடியும்? என்பதை கதை விளக்கிச் செல்கிறது.
தற்கொலை
- கலையரசன் - ஹோலண்ட்
அவலம் நிரம்பிய நாட்களில் நாடு விட்டு நாடு இடம்பெயர்ந்தவர்களில் இக்கதையில் வரும் நாயகனைக் குறிப்பிட வேண்டும்.
பலர் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறா மல் போனதால் தற்கொலை செய்து கொள் கின்றார்கள். ஆனால் தனது லட்சியம் நிறை வேற வேண்டும் என்பதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் ஒருவரை இக்கதையில் காண முடிகிறது.
உயிர்களைக் காத்துக்கொள்ளவும், சம் பாதிக்கவும், குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிடவும் கூடிய இடம் ஐரோப்பிய நாடுகள் தான் என்பதை இப்பொழுதெல்லாம் மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். முன்னர் மத் திய கிழக்கு என அலைந்தவர்கள் இப் பொழுது ஐரோப்பிய நாடுகளை நாடு கின்றனர்.
ஜேர்மன் போவதற்குரிய வாயில்கள் தடைப்பட்டதன் பின்னால் ஹோலண்டுக்குப் போகலாம் என்ற ஐடியாவில் புறப்பட்ட போது அம்ஸ்ரடாம் ஸ்கிப்பொல் விமான நிலையத் தில் வைத்துக் கைது செய்யப்பட்டு அகதி முகாமுக்கு அனுப்பப்பட்ட போது வேறுவழி காணப்படவில்லை. அந்த அகதி முகாமில் இலங்கையர் மாத்திரம் இருக்கவில்லை. சர்வதேசத்தையும் சேர்ந்தவர்கள் இருந்
தார்கள்.
குர்திஸ் இனத்தவர்கள் தமது குடும்பத்
தில் ஒரு போராளியைப் பெற்றெடுப்பதைப் பெருமையாகக் கொள்வார்களாம். அங்கு தமது தாய்மொழியைப் பேசவோ, கற்பிக்கப் படவோ அனுமதிப்பதில்லையாம். துருக்கிய இராணுவம் மூலம் வீடுகள் மாத்திரமல்லா மல் பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் அழி க்கப்பட்டதுதான் காரணமாம். பல ஐரோப்பிய நாடுகளுக்குரிய அகதிகள் அரசியல் சிறை களில் முடங்கிக் கிடக்கிறார்களாம்.
நெதர்லாந்திலும் உள்ள குர்திய அகதி கள் எந்த முடிவுமில்லாமல் தஞ்சம் கோரிய வர்களைத் திருப்பி அனுப்பப்படுவதையிட்டு போராட்ட ஆர்ப்பாட்டங்களின் போது சிலர் தீக்குளித்திருக்கின்றனர்.
லண்டனில் அத்தகையதொரு தற் கொலை முயற்சியில் இறங்கிய இளம் பெண்ணின் தற்கொலை முயற்சி தோல்வி யில் முடிந்ததால் நாம் சுகபோக வாழ்க்கை வாழ இங்கு வரவில்லை. எமது இனத்தின் விடுதலைக்காக எங்கு வேண்டுமானாலும் உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டிக் கொடுத்ததால் தான் தற்கொலை முயற்சியை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு அந்த இளைஞன் தள்ளப்படுகிறான்.
விநாயக மூர்த்தியின் தற்கொலை யானது பாராளுமன்றத்தை எட்டச் செய்தது. அகதிமுகாமில் உள்ளவர்கள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதாக எதிர்க் கட்சியினர் ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதன் முடிவு அகதிகள் மனிதாபி மான முறையில் நடத்தப்படுவதாகவும், அவர் கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் தான் தற்கொலைக்குப் பதிலாக போராட்ட உணர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 43

Page 24
ஜேர்லிையில், ஒரு
baѣotó
- ரவி அருணாச்சலம் - லண்டன்
ஒட்டில் இருந்து அடுப்புக்குள் விழுந்த
கதையாக போரில் தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கும் எமது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ச் சகோதரர்கள் சொல்லொணாக் கஷ்டத் துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை அறியாதவர்கள், அச்சகோதரர் கள் பல வசதிகளுடன் பிள்ளை குட்டி களுடன் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் என்றே நினைக் கின்றனர். ஆனால் எல்லாம் உண்மை யல்ல. அங்கு அவர்கள் சிற்றுாழியம் செய்து வருகின்றனர் என்பதை ஜேர்மனி யில் ஒரு நகரம் என்ற கதையின் மூலமாக ரவி அருணாச்சலம் லண்டன் வாழ்வு நிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த சிற்றுாழியத்தைக்கூட தரகர் கள் குறிக்கிட்டு உண்மை நிலையை மறைத்து ஊழியருக்குக் கிடைக்கக்கூடிய சம்பளத்தில் இருந்து ஒருதொகைப் பணத் தைக் கறந்து விடுகின்றனர். வேலை கொள்வோர் வழங்கும் கூலியை இடைத் தரகர் ஊழியருக்குத் தெரியாமல் காரணங் களைக் காட்டி முழுச் சம்பளத்தையும் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர். தன் இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சுரண்டிப் பிழைக்கும் தரகரின் LD60TLb 6T6óT6OT assosom?
இழிலி(லிப்பான்ை - வீரகேசரி மூர்த்தி - கனடா
புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் நட ராசரும் ஒருவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து அவர் கனடாவில் தனியாகவே வாழ்கிறார். வாழ்க்கையை வகைப்படுத்தி கட்டுப்பாட்டோடு வாழ்ந்து வருபவர். எந்த விதக் கெட்ட பழக்கங்களோ, தீய குணங் s086TTT அவரிடம் இல்லை. தான் வாழ்க் கையில் ஒழுங்காக நடப்பதனால் ஒழுங் கீனமாக நடப்பவர்களைக் கண்டால் பிடிக் காது. எழுத்தாளனான அவர் அத்தகைய வர்களின் முகமூடிகளைத் தனது கதை கள், கட்டுரைகள் வாயிலாக அம்பலத்துக் குக் கொண்டுவர அவர் பின் நிற்பதில்லை.
தில்லுமுல்லுகளில் ஈடுபடுபவர்களின் செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்ததனால்தான் கனடா அறிவுள்ளவர் களை மாத்திரம் கனடாவுக்குள் வர அனு மதிக்கிறது என்பதை கனேடிய அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றின் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறது.
அன்று அறிவிப்பாளன் காரைக் குமரன் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக் கும் ஒருவரால் சமூக சேவைகளில் ஈடுபட முடியாது. நாலைந்து பேரைக் கொண்ட குடும் பத்தை நடத்த முடியாத ஒருவரால் எப்படி சமூகத்தை வழிநடத்த முடியும்? என்ற ஒரு கேள்வியைத் தன்னபிப்பிராய மாகக் கேட்டு வைத்ததில் இருந்து அந்த ஒலிபரப்பின் மீதும், அதன் அறிவிப்பாளர் மீதும் தீராத கோபம். ரேடியோவை மூடி ஓரங்கட்டி விட்டார்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 44

கனடாவைப் பொறுத்தவரையில் கணவன், மனைவி, இருவரும் உழைத் தால் தான் குடும்பத்தை ஒழுங்காக நடத்த முடியும். இல்லாது போனால் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் விடும். அதேவேளை மனைவியருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ள நாடு கனடாதான் என்பதற்கு காரணம் மனைவி யர் மீது கை வைத்தால் உள்ளே போக வேண்டியது தான்.
கணவன் மனைவியருக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு பிணக்குகளால் மனைவி மீது கோபித்துக் கொண்டாலும்கூட படுக் கையில் சரியாகி விடும்.
கனடாவில் கணவனைப் பிரிந்து வாழும் சிங்கிள் மதர்ஸ்களுக்கும், பிள்ளை களுக்கும் மாதாந்தம் கொடுப்பனவுகளைக் கொடுப்பதனால் சிலர் வேண்டுமென்றே பிரிந்து சென்று அந்தச் சலுகைகளை அனுபவிக்கின்றனர். அதனால் மனைவி
யைப் பிரிந்து வாழ்பவர்கள் எல்லோரும் அறிவிலிகள் அல்ல. அப்படிப் பார்த்தால் நடராசனார் சொல்வது போல சந்திரமதி யைப் பிரிந்த அரிச்சந்திரன், சீதையைப் பிரிந்த ராமர், இளவரசி டயனாவைப் பிரிந்து கமீலாப்பாக்கரை மறுமணம் புரிந்த சாஸ்ஸ் இளவரசர், மனைவி பேர்கு சனைப் பிரிந்திருக்கும் அன்று இளவரசர், கனடாவின் ஒன்றாறியோ மாகாண முதல்வர் மைக் ஹரிஸ் எல்லோரும் முட்டாள்களா? எனக் கேள்வி கேட்கிறார்.
வானொலியில் தரமான நிகழ்ச்சி களைத் தயாரித்து வழங்காமல் தரங்கெட்ட நிகழ்ச்சிகளை வழங்கும் அறிவி(லிப்பாளர் களைக் கண்டிக்கும் நடராசர், புலம்பெயர் நாடுகளில் தமிழும், தமிழ்க் கலாசாரங் களும் பாதுகாக்கப்பட வேண்டும். அறி வாளர்கள், மொழிப்பற்றாளர்கள், எழுத் தாளர்கள் முன்வரவேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் நடராசர்.
a gg Vr a 丐 N in u s - ❤ na se is a .*
உங்கள் கவனத்திற்கு
V மல்லிகை இதழ் சம்பந்தமாகத்
Λ தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள்,
W உறவுகொள்ள நினைப்பவர்கள், தத்தமது ஆக்கங்களை அனுப்ப எண்ணுபவர்கள், நூல்களின் விமரிசனங்களை
எதிர்பார்ப்பவர்கள் அனைவரும் V
V
நேரடியாகவே மல்லிகை ஆசிரியருடன் Λ தொடர்பு கொள்வது கண்டிப்பாக விரும்பப்படுகின்றது. Λ
மல்லிகை ஒக்டோபர் 2011 & 45

Page 25
சொந்தமில்லாத பந்தங்கள்
- அ.விஷ்ணுவர்த்தினி
இறைவனை நொந்து நொந்துதான் மீதமுள்ள என் வாழ்நாளையும் கழிக்க வேண்டும் என்ற விதமாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
யாரை நொந்து என்ன பயன்? எல்லாம் எம் தலைவிதி.
தலைவிதி என்றால் அதை ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் சேர்த்துத்தான் இறைவன் எழுதுவானோ?
இந்த முட்கம்பி வேலிக்குள் சிறைப்பட்டிருக்கும் எல்லோருக்குமே ஒரே தலைவிதி தானோ?
எங்களோடு சேர்ந்து இந்த நரக வேதனைகளை அநுபவிப்பதற்கு இந்தப் பிஞ்சுகள் என்ன பிழை செய்தார்கள்?
அந்த மூன்று குழந்தைகளையும் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டி ருக்கிறேன். அவர்கள் மூவரும் தங்களுக்குக் கிடைத்த உணவை "அரக்கப் பரக்க”ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! இந்த முகாமுக்கு வந்த பின்புதான் இப்படியாவது சாப்பிட முடிகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக உயிர்க் குலையையும் கையில் பிடித்துக் கொண்டு, அலைந்து திரிந்த பெற்றோரின் பின்னால் இழுபட்டுத் திரிந்த இவர்களுக்கு சாப்பாடும் தண்ணிரும் அரைவயிறும் கால்வயிறும்தான்.
வேகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்கையில் எனக்கு அவர்கள் மேல் பச்சாதாபமே மேலிடுகிறது. அழகான உடல்வாகு கொண்ட அக் குழந்தைகளைப் பார்த்து, எனக்கு அப்படிப் பேரப்பிள்ளைகள் அமையவில்லையே என்று எத்தனை நாள் கவலைப்பட்டிருக்கிறேன். இன்று அந்த அழகெல்லாம் கெட்டு, எலும்பும் தோலுமாய் இருக்கும் இவர்கள் பெற்றோரையும் இழந்து என் அரவணைப்பில்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 46

"கடவுளே!” என்று முன்பெல்லாம் வழக்கமாகச் சொல்லி வந்த அந்த வார்த்தை இப்போது தொண்டைக் குழிக் குள்ளேயே அமுங்கிப் போய் விடுகிறது.
தெய்வம் என்று ஒன்று இருந்திருந் தால் இவ்வளவு துன்பமும் எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்குமா? குஞ்சு குருமான் முதல் தொண்டு கிழங்கள் வரை எவ்வளவு தூரம் அல்லாடிப் போய் விட்டார்கள்? இந்தக் குழந்தைகளும் தான், குதூகலிப்பும் கும்மாளமுமாய் ஓடித் திரிந்தவர்கள் தானே. இன்று பரட்டைத் தலையும், தடி போன்ற மெலிந்த உடலும் கொண்டவர்களாய் அரையும் குறையுமாய், அழுக்கேறிய துணிகளை உடலில் சுற்றிக் கொண்டு, போரின் அடையாளங்களைச் சுமப்பவர் களாய்த் தெரிகின்றனர்.
இவர்கள் என்னிடம் வந்து சேர்ந்த கதையே பெரிய கதை. இவர்கள் எனக்கு உறவோ, இரத்த பந்தம் உள்ள வர்களோ இல்லை. இவர்களின் பெற் றோர்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கிளி நொச்சியில் குடியேறியவர்கள். என் னுடைய வீட்டுக்குச் சற்றுத் தள்ளி யிருந்த காணியொன்றில் குடிசை யொன்றை அமைத்துக் கொண்டு அவர் கள் தமது வாழ்க்கையைத் தொடங் கினர்.
அவர்களின் அறிமுகம் எனக்கு உடனடியாகவே கிடைத்தது. அப்போது நான் என் சீவியத்தை ஒட்டுவதற்காய் பிட்டு, இடியப்பம், தோசை என சாப்பாட்டு
வகைகளை எல்லாம் செய்து விற்று வந்தேன். என்னோடிருந்த என் ஒரே ஒரு பிள்ளையும் இந்த நாட்டுச் சூழலுக்குப் பயந்து வெளிநாடு சென்று விட நான் என் முதுமைக் காலத்தைத் தனியே கழித்துக் கொண்டிருந்தேன்.
என் பிள்ளையை நினைக்கும்போது எனக்கு இப்போதும் கண்ணிர் முட்டிக் கொண்டு வருகிறது. மணம் முடித்து நீண்ட காலத்துக்குப் பிறகு பிறந்த ஏக புத்திரன் அவன். பிறக்கும்போதே தகப் பனைத் தின்று விட்டுப் பிறந்தவன். நிர்க்கதியான நிலையில், அவனை வளர்த்து ஆளாக்குவதற்காகவே நான் பாடுபட்டு வந்தேன்.
அவனை நான் "பொத்திப் பொத்தி” வளர்த்தேன். விடலைப் பருவத்தையும் கடந்து வளர்ந்த அவனின் வளர்த்தி "கண்ணுக்குள் குத்துவதாக” இருந்தது. யார் யாரையோ கும்பிட்டு மன்றாடி அவனை அரபு நாடொன்றுக்கு அனுப்பி வைத்த பின்புதான் மனதுக்கு நிம்மதி. ஆனாலும், தகுந்த வேலையுமின்றி, அதிக சம்பளமுமின்றி அங்கும் அலைந்து கொண்டிருந்தான் என்பது மட்டும் தெரிந்தது.
என்னுடைய மகனைப் பிரிந்த சோகத்திலிருந்த எனக்கு, அந்தப் புதுத் தம்பதியினரின் தொடர்பு ஒத்தடமாக இருந்தது. என்னிடம் தினமும் காலைச் சாப்பாடு வாங்கிச் செல்ல வந்தவர்கள் என்னுடன் ஒட்டிக் கொண்டார்கள். அவன் முகுந்தன், அவள் சுமதி. அவர் களுடைய தொடர்பினால் சவூதியி லிருந்த என் பிள்ளையுடனும் இடை
மல்லிகை ஒக்டோபர் 2011 & 47

Page 26
யிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தாக இருந்தது.
முகுந்தன் முயற்சி உள்ளவன். சிறந்த உழைப்பாளி. சுமதி சம்பாத்தி யக்காரி. கணவனின் உழைப்பிலும் கணிசமான தொகையைச் சேமிக்கத் தொடங்கினாள். கடவுள் மூன்று குழந் தைகளையும் அவர்களுக்குக் கொடுத் தான். மூன்று குழந்தைகளும் செல்ல மாகத்தான் வளர்ந்தார்கள்.
விதி யாரைத் தான் விட்டது. யுத்தம் எல்லோரையும் சூறையாடியது. இலட்சக் கணக்கானோரின் வாழ்க்கையுடன் விளையாடிய யுத்தம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு வேளை சாப்பாட்டுக்காக கை யிலிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இழந்தனர். உயிரைப் பாதுகாக்க ஊர் ஊராய் இடம்பெயர்ந்தனர். உடுத்த துணி யுடன் நாட்கள், வாரங்கள், மாதங்கள் என பதுங்கு குழிகளுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர். வானில் வட்டமிட்ட "பருந்துகள்” எப்போது குண்டு மழை பொழியும் எனத் தெரியாமல் வெளியே தலைகாட்டவே பயந்தனர்.
இந்த விதி எல்லோருக்கும் பொது வானது. பாதுகாப்புத் தேடி ஊர் ஊராய் அலைதல், பதுங்கு குழி வாழ்க்கை, உணவும் நீரும் அருந்தலாகிப் போன பட்டினி வாழ்வு, எங்கே போய் முடியும் என்ற ஏம்பலிப்பு.
உணவுக் காகவும் உடலியற் தேவைகளுக்காகவும் வெளியே தலை காட்டியவர்கள் குண்டு மழையில்
நனைந்து உடல் சிதறிப் பலியாகினர். எங்கும் ஒலம். எங்கும் அவலம். எங்கும் பிணக் குவியல்கள். எங்கும் இரத்த
6T60).
முகுந்தனும் சுமதியும் கூட குழந் தைகளையும் சுமந்தபடி விதியின் பாதை யில் எற்றுண்டு அலைந்தனர். எத்தனை எத்தனை கொடுமை நிறைந்த சம்ப வங்கள், காட்சிகள்.
குடும்பமாகவே ஒருகணத்தில் உடல் சிதறி மடிந்தவர்கள்
குழந்தை பிறந்து இரத்த வாடையும் ஈரமும் காயும் முன்னரே "ஷெல்" பட்டு மடிந்த தாயும் குழந்தையும்
நடக்க முடியாமல் பின்தங்கியத னால் குண்டு மழையில் சிக்கி மடிந்த முதியவர்கள்
யாரையும் எவரும் காப்பாற்ற முடி யாத அவலம். தங்கள் தங்கள் உயிரே பெரிதென எண்ணி ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கும் அவலம். மனிதம் செத்துக் கொண்டிருந்தது.
காயம் பட்டுத் துடித்துக் கொண்டி ருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டி, அவளிடம் ஒடிச்சென்ற வேளை மீண்டும் அவ்விடத்தில் வந்து வீழ்ந்து வெடித்த ஷெல்லில் சுமதி அந்த இடத் திலேயே சிதறிப் போனாள். முகுந்தன் கால்களை இழந்து முனகிக் கொண்டி ருந்தான்.
தெய்வாதீனமாகத் தான் அவ்விடத் துக்கு வந்தேன். மூன்று குழந்தைகளும் முகுந்தனை நெருங்கி நின்று அழுது
மல்லிகை ஒக்டோபர் 2011 * 48

கொண்டிருந்தார்கள். அருகில், உருத் தெரியாமல் சுமதியின் உடல். என்ன GabП(660)шD!
என்னைக் கண்டதும் அந்த வேளை யிலும் முகுந்தனின் கண்களில் சிறு ஒளி, குழந்தைகள் என்னைச் சுற்றி என் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "அம்மம்மா’ என்று அழுதார்கள்.
முகுந்தன் களைக்கக் களைக்க, அந்த வேளையிலும் தன் அவலங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை. இரத்தம் பெருகிக் கொண்டி ருந்தது. சொற்ப நேரத்திலேயே அவனின் உயிரும் பிரிந்தது. ஒருகணம் தான் அந்த வேதனை. உடனடியாகவே உயிர் பற்றிய பயம் தலை தூக்க, பிள்ளை களையும் இழுத்துக் கொண்டு ஓடினேன். கடைசிக் குழந்தை கைக்குழந்தை. தன் கைகளால் என் இடுப்பைச் சுற்றிக் கொண்டது. மற்றைய இரு பிஞ்சுகளும் என்னோடு இழுபட்டார்கள்.
அந்தப் பிரதேசத்தை விட்டு எல் லோரும் கட்டாயமாக வெளியேறி விட வேண்டும் என்ற அறிவிப்பு வந்ததுமே, சனத்தோடு சனமாக, நானும் குழந்தை களை அழைத்துக் கொண்டு சென்றேன்.
முட்கம்பியால் சுற்றி வர வேலி அடித்த கூடாரமொன்றுள் முகாம் வாழ்க்கை. வெயில், மழை, குளிர் எல் லாம் சர்வசாதாரணமாகிப் போக, குழந் தைகளையும் அணைத்துக் கொண்டு, கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போய் கண்ணிரும் கம்பலையு மாக என் வாழ்வு இந்த ஒன்றரை வருடங்ளாகக்
கழிந்து போய்க் கொண்டிருக்கின்றது.
சவூதியில் இருக்கும் என் பிள்ளை யின் நினைவு அடிக்கடி தலை தூக்கி னாலும், இந்த மூன்று பிள்ளைகளினதும் அவலம் என்னை வாட்டி வதைக்க, இவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்ற யோசனையில் இவர்களைச் சுற்றியே என் நினைவுகள் வட்டமிடுகின்றன.
இன்று காலையில் தான் சில அதி காரிகள் வந்து சொந்த இடத்திலேயே என்னை மீண்டும் குடியேற்ற அழைத்துப் போக வருவதாகச் சொல்லியிருந்தார் கள். அப்போது முதல் இந்தக் கணம் வரை இக்குழந்தைகளைப் பற்றிய யோசனையே என்னை அரித்துக் கொண்டிருக்கிறது.
இவர்கள் மூவரையும் என்னால் காப் பாற்ற முடியுமா?
மனித சஞ்சாரமே குறைந்த மண் னில் என் முன்னைய தொழிலைப் பார்க்க முடியுமா?
இந்த மூன்று குழந்தைகளையும் அழைத்துச் சென்ற வேளையில் எனக்கு ஏதாவது நடந்து விட்டால் இக்குழந்தை களின் கதி?
ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் கைக்குழந்தையைத் தூக்கிக் கொள் கிறேன். ஏனைய இரு குழந்தைகளையும் அணைத்து முத்தமிடுகிறேன். அவர் களுக்கு என்ன விளங்கப் போகிறது? அலங்க மலங்க என்னை விழித்துப் பார்க்கிறார்கள்.
“மீனாட்சி, மீனாட்சி”
மல்லிகை ஒக்டோபர் 2011 & 49

Page 27
1.10.2011-ல் பவள விழாக் காணும் நமது எழுத்தாளரும் மல்லிகையின் நண்பருமான
திரு. K.S.சிவகுமாரன் அவர்களை
மல்லிகை வாழ்த்தி மகிழ்கின்றது.
ஆசிரியர்.
என்னைப் பெயர் சொல்லி அதிகாரி கள் அழைக்கிறார்கள்.
கைக்குழந்தையுடன் நான் மெல்ல நகருகிறேன்.
என்னைச் சுற்றி என் கால்களைப் பிடித்துக் கொண்டு நிற்கும் இரு குழந் தைகளினதும் கைகளை மெல்ல எடுத்து விடுகிறேன்.
"அம்மம்மா இப்ப வருவன், இங்கை நில்லுங்கோ குஞ்சுகள்”
என்னை அறியாமலே பீறிட்டுக் கொண்டு வரும் கண்ணிரை அடக்க மாட் டாதவளாய், அவர்களைக் கலங்கிய கண்களோடு நோக்குகிறேன்.
இந்த உலகத்தின் சூது, வாது தெரியாதவர்களாய் அக்குழந்தைகள் என்னையே "குத்திட்டு’ப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரி யாதிருக்கிறது.
"இந்தக் குழந்தையை வளர்த்து, எனக்கு ஒன்றென்றால் யாரிடமாவது கை யளிக்கலாம். இக்குழந்தைக்கு விதி யிருந்தால் என் பிள்ளையிடமே சேர்ப் பிக்கலாம். இக்குழந்தையை நான் தத் தெடுத்தது போல மற்றப் பிள்ளை களுக்கும் யாராவது வாழ்வு கொடுக்க முன்வருவார்கள்”
என் நடையைச் சற்று விரை வாக்கிக் கொண்டு, காத்திருக்கும் பஸ்ஸை நோக்கிச் செல்கின்றேன்.
தூரத்தில் அந்த இரு குழந்தை களும் என்னைப் பார்த்துக் கொண்டே நிற்பது தெரிகிறது.
மீண்டும் என்னிடத்தில் இறை நம்பிக்கை தொற்றிக் கொள்கிறது.
"கடவுளே, இவர்களைக் காப் பாற்றும்!"
என் அந்தராத்மா மன்றாட்டமாய் அவனிடம் இறைஞ்சுகிறது.
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 50
 

ஆர்வலம்
- ரியாத்திலிருந்து. இனியவன் இஸாறுத்தீன்
ஊர்வலம் வருகிறது. ஊர்வலம் வருகிறது. அமைதி ஊர்வலம் வருகிறது.
ஊக்கமுள்ளோர் உற்சாகமுள்ளோர் கலந்துகொள்ளுங்கள்.
ஊரை ஏய்ப்பவர் ஊழல் செய்பவர் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
இது இனபேதமில்லாத இதயங்கள் வழிநடத்தும் ஊர்வலம் சமூகங்கள் ஒன்றிணைக்கும் &LDITsmsOT 26tfreusolb.
எல்லோருக்கும் ஒரே முகம் எல்லோருக்கும் ஒரே குரல்.
எந்த முகத்தையும் தனியாய்ப் பார்க்க இயலாது எந்தக் குரலையும் தனியாய் கேட்டக முடியாது.
ஏந்தி வருவது கொடிகளல்ல, மதலையர் அசைக்கக் கொஞ்சம் மலர்க்கொத்து. சிறகு விரிக்க வெண்புறாக்கள் தூய மானுடத்தின்
சகோதர வாஞ்சை.
இதோ ஒன்றுபட்ட இதயங்களின் ஊர்வலம் வருகிறது எல்லோரும் வாருங்கள்.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டால் கடந்த காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி நிகழ்காலக் கொடுமைகளை எடுத்துரைத்து நம்பிக்கை மிக்க எதிர்காலத்திற்கு வழி நடத்தும்.
மோசக்காரர்களின் முகத்திரை கிழிக்கும் நீசக்காரர்களின் அகக்கறை கழிக்கும் ஆதிக்கக்காரர்களின் கொடுமைகள் ஒழிக்கும்.
அநியாயம் செய்பவர்களே என்ன செய்கிறீர்கள்.? எங்கள் கோஷம் கேட்டதா? சமத்துவத் தொனியில் சமரசம் பேசினோமா. உங்களைச் சுட்டதா?
வறுமைப் பிணியை விரட்டியடிக்கவும் வசந்தம் சேர்க்கக் கரங்களைக் கோர்க்கவும் ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்கவும் ஊக்கமுள்ளோர் உற்சாகமுள்ளோர் கலந்துகொள்ளுங்கள்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 51

Page 28
அநுராதபுர மடல் :
960^340 con62)CUசமுக வலுவnக்க பிறnந்திய இலக்கிய நிகழ்வுகள்
- இப்னு ஆயிஷா
அநுராதபுர மாவட்ட கலை இலக்கியச் செல்நெறிக்கென்றேயான சில பிராந்திய வலுவாக்க கலை இலக்கிய சமூக கருத்தாடல் நிகழ்வுகள் கடந்த மாதத்தில் பல இடம்பெற்றன. அந்நிகழ்வுகள் தொடர்பான சில குறிப்புக்களை மல்லிகை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
55pQ. 01. அநுராதரர் ரணியர்கள் இலக்கிய குழு அங்குரார்பனக் கூட்டர்
அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணியளவில் கலாபூஷண்ம் அன்பு ஜவஹர்ஷா லைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் படிகள் 28வது இதழ் அறிமுகம் சய்யப்பட்டதுடன், இன்னும் சில முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா வர்கள் தமதுரையில்: அநுராதபுர மாவட்ட கலை இலக்கிய முயற்சிகள் தேசி பளவில் முக்கியத்துவப்படுத்தி பேசப்படுகின்றது. அதற்கு இப்பிரதேசத்தில் வரு ன்ெற படிகள் சஞ்சிகை முக்கியத்துவம் பெறுகின்றது. படிகள் சஞ்சிகைக்கு |ப்பால் கடந்த காலங்களில் நமது கூட்டு முயற்சியின் விளைவாக அநுராதபுர ல்லிகைச் சிறப்பிதழ், அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள் தொகுதி இப்படி ல முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. தவிர கெகிராவ ஸஹானா, சுலைஹா, ாச்சியாதீவு பர்வீன், வஸம் அக்ரம் போன்றோர்களது தனிநபர் வெளியீடுகள் |ப்பிராந்திய இலக்கியத் தடங்களாகின்றன. இந்த நிலை சார்ந்த கோர்வைகளை
மல்லிகை ஒக்டோபர் 2011 & 52

எடுத்து நோக்கினால், எமது பிராந்திய இலக்கிய வலிமை நமக்கு நன்கு துலங்கும்.
கடந்த காலங்களில் குறிப்பாக 1970 களில் இப்பிரதேசத்தில் இவ்வாறான கூட்டு முயற்சிகள் இடம்பெற்றன. அதன் அறுவடைகளை கண்டவன் என்ற அடிப் படையில் இதனை குறிப்பிடுகின்றேன். பொதுவாக இலக்கிய முயற்சிகளுக்கு ஆட்கள் சேர்ப்பது கடினம். அதேவேளை அதற்கு பொருளாதாரம் சேர்ப்பதும் கடி னம். ஆனால் குறைந்த ஆர்வலர்களைக் கொண்டேனும் இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். அது முடியும் என்பது எமது நம்பிக்கை மற்றும் அது கண்கூடு என்று குறிப்பிட்டார்.
நாச்சியாதீவு பர்வீன் இந்நிகழ்வில் கருத்துரைக்கும் போது, அநுராதபுர பிராந்திய இலக்கிய முயற்சிகளை மென்மேலும் உயர்த்திக் கொள்வது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பிராந்திய மட்டத்தில் பல எழுத்தாளர்கள் இலைமறைகாயாக இருக்கின்றனர். அவர்களது எழுத்துக் கள் ஊடாக நாம் புதிய தலைமுறை எழுத்தாளர் பரம்பரை ஒன்றை இனங் காண வேண்டியுள்ளது. இந்த அடிப் படையில் ஒரு பிராந்திய இலக்கிய மாநாடு ஒன்றை நடத்த நாம் துணிய வேண்டும் என்பதனை இங்கு முன் மொழிகின்றேன் என்று குறிப்பிட்டார்.
படிகள் 28வது இதழ் தொடர்பான அறிமுகவுரையை படிகள் ஆசிரியர் வஸிம் அக்ரம் நிகழ்த்தினார். அவரது உரையில் படிகள் கடந்து வந்த பாதை
பற்றிய விடயங்கள் பகிரப்பட்டதுடன், படிகள் இதழ்கள் எப்போதும் அநுராதபுர மாவட்ட இலக்கியச் செல்நெறியில் முக் கிய பங்கு வகிப்பதையும் முன்னிலைப் படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு அங்குரார்ட் பணம் இடம்பெற்றது. இவ்வமைப்பின் போசகராக கலாபூசணம் அன்பு ஜவ ஹர்ஷா அவர்களும், தலைவராக நாச் சியாதீவு பர்வீன் அவர்களும், செயலா ளராக ஜன்சி கபூர் அவர்களும், பொரு ளாளராக எல்.வளியீம்அக்ரம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர், தவிர இவ்வ மைப்பின் அமைப்பாளராக எம்.ஏ.எம்.டில் சான் அவர்களும், உபசெயலாளராக நேகம பசான் அவர்களும், உபதலைவ ராக அநுராதபுரம் றஹ்மதுல்லா அவர் களும் தெரிவு செய்யப்பட்டனர். அமைட் பின் இணைப்பாளராக றிஸ்வி ஹமீட் அவர்கள் செயற்படுவதாகவும் தீர்மானிக் கப்பட்டது.
இவ்வமைப்பின் செயற்பாட்டாளர் களாக அநுராதபுரம் ஜமீல், இக்கிரி கொள்ளவ சப்ராஸ், நாச்சியாதீவு மாபீர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர் இந்நிகழ்வில் அநுராதபுரம் றஹற்மதுல்லா எம்.ஏ.எம்.டில்சான், றிஸ்வி ஹமீட் ஆகி யோர் கருத்துக்களை தெரிவித்தனர் இவ்வமைப்பின் ஊடாக மாதாந்த இலக் கிய அமர்வுகள், தனி நபர் வெளி யீடுகள், அநுராதபுரம் தமிழ்ச் சிறுகதை கள் தொகுதி ஒன்று மற்றும் பிராந்திய இலக்கிய மாநாடு போன்றனவற்றுக் கான முயற்சிகள் மேற்கொள்வதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 53

Page 29
நிகழ்வு 02. பெனிகள் தொடர்பான கருத்தாடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள்
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்தின் அனுசரணையில் படிகள் பதிப்பகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வுகள் ஹொரவப் பத்தான, அநுராதபுரம், நாச்சியாதீவு போன்ற இடங்களில் இடம்பெற்றது. பெண்களது திருமணம் என்ற தலைப் பில் ஹொரவப்பத்தானையிலும், பெண் களது கல்வி தொடர்பான நிகழ்வு அது ராதபுரத்திலும், பெண்களது தொழில் தொடர்பான நிகழ்வு நாச்சியாதீவிலும் இடம் பெற்றது.
இந்நிகழ்வுகளில் ஆண் பெண்கள் என்ற வேறுபாடுகளைக் களைந்து ஆர்வமுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், மருத்துவ பீட மாணவர்கள் என்று நூற்றுக் கணக் கானவர்கள் கலந்து சிறப்பித்து மேற்படி தலைப்புகளுக்கு இசைவாக கருத்துக் களை பதிவு செய்தனர். இந்நிகழ்வில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்தின் நிகழ்ச்சிப் இணைப்பாளர் பஸ்லான் மொஹமட் (கொழும்பு பல் கலைக்கழக விரிவுரையாளர்), சிரேஷ்ட வளவாளர் மர்கும் மெளலானா (சட்டத் தரணி), பிரபாகரன் (ஒலிபரப்பாளர் இலங்கை வானொலி) போன்றவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நிகழ்வில் கல்விப் பணிப்பாளர் அஷசெய்க் சமட் அவர் களும், போதனாசிரியர் எம்.எஸ்.லத்தீப்
அவர்களும், நாச்சியாதீவு பர்வீன் அவர் களும் கலந்து கருத்துரைத்தனர்.
நாச்சியாதீவு நிகழ்வில் சட்டத் தரணி இப்ராகிம் அவர்களும், அநுராத புர மாவட்ட அஹதியா பாடசாலைகள் அமைப்பின் தலைவர் எம்.ஏ.எம். டில்சான் அவர்களும், படிகள் ஆசிரியர் வஸீம் அக்ரம் அவர்களும் கலந்து கருத்துரைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பெண்களது சமூக பொருளாதார சமய கல்வி தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக் களும் வாதப்பிரதி வாதங்களும் மரபு களைத் தாண்டி இடம்பெற்றமை வர வேற்கத்தக்கதாக இருந்தது.
நிகழ்வு 03. ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய மீட மாணவர் களினி துடிப்பு வருடாந்த மலர் வெளியீடு ágir
ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களின் துடிப்பு என்ற வரு டாந்த வெளியீட்டின் முதலாவது தொகுதி வெளியீடும் இணையத்தள அறிமுகமும் அநுராதபுரம் சீடி.சி. வர வேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி மாணவர்களின் கடந்த 5 ஆண்டுகால சமய சமூக கல்வி மற்றும் கலை இலக்கிய ரீதியலான செயற்பாடு களும் அவர்களது எதிர்கால செயற் பாடுகளும் இந்நிகழ்வில் நினைவூட்டப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 54

துடிப்பு மலர் பற்றிய அறிமுகவு ரையை கலாபூசணம் அன்பு ஜவஹர்ஷா நிகழ்த்தினார். அவரது உரையில் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள், இலங்கை முஸ்லிம்களின் கல்விச் செல் நெறியும் விருத்தியும், சமூக மாற்றங் களின் பின்புலத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது வெளியீடும் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் புதைய லாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அநுராதபுரம் சமூக சேவையாளர் களில் ஒருவரான அல்ஹாஜ் முத்தலிப் அவர்கள் முதற் பிரதியை பெற்று நிகழ்வை சிறப்பூட்டி
unsgreat
னார். இந்நிகழ்வில் புத்திஜீவகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியாலாளர்கள், மாணவர்கள், வைத்தியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.
அநுராதபுரத்தில் சமூக சமய கல்வி மற்றும் கலை இலக்கிய முயற்சிகளை நோக்காக கொண்டு பல அமைப்பு களும் தனிநபர்களும் செயற்படுவதை அவதானிக்கும் போது, அப்பிராந்திய சமூக வளர்ச்சி நம்பிக்கை கொள்ள இந்நிகழ்வுகள் நமக்கு சான்றுரைக்
கின்றன.
20.09.2011.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 55

Page 30
கடிதங்கள்
ஐம்பது ஆண்டை நோக்கி மல்லிகை.
இலங்கையில் ஒரு தமிழ் எழுத்தாளன் தன் சுயமுயற்சியால் நடத்திவரும் இலக்கிய சஞ்சிகை தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடத்தி வருவது பெரும் சாதனை. பல்வேறு தடை களின் மத்தியில் தங்குதடையின்றி தொடர்ச்சியாக மல்லிகை வெளிவந்து கொண்டி ருப்பது பாராட்டத்தக்கது.
மறைந்தும், மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட எழுத்தாளர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து, அவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது உருவப்படங்களை அட்டையில் பதிப்பித்தும் அவர்களை இலக்கிய உலகில் பிரகாசிக்க மல்லிகை வழிகாட்டி வருவது ஒரு முக்கிய அம்சமாகும்.
'தம்பு சிவா’ என்ற எழுத்தாளர் ஜூலை மல்லிகையை இலண்டனிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். இந்த வெளியீட்டில்தான் மல்லிகை 50வது ஆண்டை நோக்கிப் பயணிக்கிறது என்ற நல்ல செய்தி எனக்குத் தெரியவந்தது.
உடன் எனது ஞாபகத்திற்கு வந்தது, இற்றைக்கு 30-35 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத் தெருவில் தோளில் ஒரு பை தொங்கும். கையில் சில மல்லிகை இதழ் களுடன் ஆசிரியர் டொமினிக் ஜீவா நடந்து திரிந்து, தெருவில் தெரிந்தவர்களைக் கண்டவுடன் மல்லிகை ஒன்றை எடுத்துக் கொடுப்பார். பணம் கேட்க மாட்டார். ஆனால், பிரதியைப் பெற்றுக்கொண்டவர்கள் அவர் கேட்காமலேயே பணத்தைக் கொடுப்பார்கள். நானும் இப்படிப் பலமுறை மல்லிகையைத் தெருவில் வாங்கியது நினைவுக்கு வரு கின்றது.
இவ்வாறு பல கஷ்டத்தின் மத்தியிலும் மனத்துணிவுடன் வளர்த்தெடுத்த மல்லிகை இன்று வானளாவ வளர்ந்து விட்டது. இது தமிழர்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர் களுக்குக் கிடைத்த பெருமையாகும். இந்தப் பெருமையைத் தேடித் தந்தவர் ஒரு சலூன் தொழிலாளி. தான் ஒடுக்கப்பட்டவன் என்று தமிழ்த் தாயை நேசிக்கத் தவறவில்லை. தமிழ்த் தாய் சாதி பேதம் பார்ப்பதில்லை. எல்லோரையும் நேசிப்பவள். தமிழ்த் தாய் மீது கொண்ட பாசத்தால் எழுத்துலகில் கால்பதித்து சிறந்த எழுத்தாளனாக, பத்திரிகை யாளராக தமிழ் உலகில் பிரசித்தி பெற்றவர் 'மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள்.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 56

சாதிவெறிப் பிடித்தவர்களுக்குச் சாட்டை அடி கொடுத்து அந்த வியாதியை வடபகுதியிலிருந்து போக்க மல்லிகை பல போதனைகளை செய்து வந்ததை மனமாரப் பாராட்டுகிறேன்.
கடந்த 50 ஆண்டு காலத்தில் மல்லிகை மூலம் சமுதாயப் புரட்சியோடு எழுத்துலகில் மல்லிகை பல சாதனைகளைப் புரிந்துள்ளது. எழுத்தே தமது மூச்சாகக் கொண்ட ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வயது முதிர்ந்த நிலையிலும் இளைஞராகவே காட்சியளிக் கின்றார். மல்லிகைப் பந்தல் ஊடாக பல வெளியீடுகளை வெளிக்கொணர்ந்துள்ளார். இலக்கிய உலகில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெறுவதற்கு மல்லிகை அடித்தளமாக விளங்கியது.
அரை நூற்றாண்டை நிறைவு செய்யும் மல்லிகை மேலும் விருட்சம் போல் வளர்ந்து தமிழ் எழுத்துலகிற்கு நற்பணிபுரிய சுடரொளி வெளியீட்டுக் கழகம் வாழ்த்துகிறது.
லண்டன். ஐ.தி.சம்பந்தன்
2011 செப்டெம்பர் மல்லிகை இதழ் அட்டைப் படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தேன். பேராசிரியர் இரா.சிவச் சந்திரன் அவர்களோடு 1978களில் ஒரு மணி நேரம் கலந்து உறவாடி மகிழ்ந்ததை இப்போது இரை மீட்டுப் பார்க்கிறேன். ஆம், அந்நாளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் ஒலிபரப்புச் சேவையில் பிரதி வியாழக்கிழமைகளில் இரவு 9.30 மணி யளவில் கலைக்கோலம் என்னும் சஞ் சிகை நிகழ்ச்சி இடம்பெறுவது வழக்கம். குறித்த நிகழ்ச்சியில் ஈழத்து இலக்கிய சம்பந்தமான விடயங்களே இடம்பெறும். இரா.பத்பநாதன் தயாரித்தளிக்கும் கலைக்
கோலம் என்னும் சஞ்சிகை நிகழ்ச்சியை எஸ்.பொ. அவர்கள் நெறியாள்கை செய் வார். குறித்த நிகழ்ச்சியை எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கேட்டு ரசித்து மகிழ்வார்கள். ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறந்த கவிஞராகத் திகழ்ந்த வன்னியூர்க் கவிராயர் காலமான போது அவரைப் பற்றிய நினைவுக் குறிப்பொன்றை எழுதி மேற்படி கலையகத்தில் வாசிப்பதற்காகச் சென்றிருந்த வேளையில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரனோடு ஒரு சிலமணி நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. அன் றைய உரையாடல் அவர் எழுதிய 3 சிறு கதைகள் பற்றியதே! அமுதம் என்ற சஞ்சிகையில் நிலா சிரித்தது என்ற முதற் பரிசு பெற்ற சிறுகதையும், தினகரனில் பேய்கள் வாழ்கின்றன, ஒளியின் சிதறல் ஆகிய இரண்டு கதைகள் பற்றியே எமது உரையாடல்கள் தொடர்ந்தன. நல்ல கதைகள் எழுதக் கூடியவர் 20 கதை களோடு நிறுத்திக் கொண்டு இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதும் பாராட்டுக் குரியதே.
கிளிநொச்சி க.இரத்தினசிங்கம்
ஆரம்ப காலத்திலிருந்தே மல்லிகை யின் தொடர் வாசகன், நான்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த காலகட்ட மல்லிகை இதழ் களையும், இன்றைக்கு கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை இதழ்களையும் ஒழுங்கு தவறாமல் இன்றள வும் சேமித்து வைத்துள்ளேன்.
வெறும் தனிமனித ஆர்வ முயற்சி என்ற கட்டத்தையும் தாண்டி, இன்று தமிழ் கூறும் நல்லுலகில் எங்கும் தரமான இலக்கியச்
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 57

Page 31
சுவைஞர்களினால் விதந்து பேசப்படும் ஓர் இலக்கிய இதழாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதே, அதனது பெரும் வெற்றிக் கும், சாதனைக்கும் காரணமாக எதிர்காலத் தில் தொடர்ந்து பேசப்படப் போவதும் உண்மைதான்.
மல்லிகை வடபிரதேசத்தில் வெளிவந்த காலகட்டம் மிகப் பெரும் நெருக்கடியான காலகட்டமாகும்.
இந்தப் பாரிய உள்நாட்டு யுத்த நெருக் கடிகளுக்குள்ளும் திணறாமல், நின்று போகா மல், கொழும்பு மாநகரில் நிலை கொண்டு, மீண்டும் இந்த இதழை வெளியிட்டு வருவது மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றுதான்!
ஒன்றை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
மல்லிகையின் இத்தனை ஆண்டு வரு கைப் பிரபலத்திற்குப் பின்னாலும் மட்டுப் படுத்தப்பட்ட பிரதேசங்களில்தான் மல்லிகை இதழ்களை மாதா மாதம் பொதுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அதனை மேலும் மேலும் இலக்கியச் சுவைஞர்கள் மத்தியில் நாம் இன்னும் பெரு மளவில் கொண்டு சேர்ப்பது அதி முக்கிய மான இலக்கியப் பணி என்றே நான் கருது கின்றேன்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகையதான சிற்றிலக்கிய ஏடுகள் வளர வளர - பிரபலம் பரவப் பரவத்தான் சிக்கல் கள் தோன்றுவது எதார்த்தமான ஒன்றாக எனக்கு விளங்குகிறது.
அரை நூற்றாண்டுக் காலகட்டத்தைத் தொட்டு நிலைக்கப் போகும் சிற்றேடுகளில் மல்லிகை ஒன்றுதான் இன்று வரைக்கும் பெயர் சொல்லத்தக்கதான ஒர் இலக்கிய
ஏடாக மலர்ந்து வருகின்றது என்பது தனிப் பெரும் வரலாறாகும்.
எதற்குமே அஞ்ச வேண்டாம். என் னைப் போன்ற எதார்த்தவாத இலக்கிய நெஞ்சங்கள் தொடர்ந்தும் மல்லிகைக்குப் பின்பலம் சேர்க்க உதவுவோம்.
வெள்ளவத்தை எஸ்.கணேஷ்வரன்
ஐம்பதாவது ஆண்டை நோக்கி இலக் கிய நடைபோடும் மல்லிகைக்கு இலக்கிய நண்பர்கள் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மல்லிகையின் பல காலகட்ட இதழ் களை இன்று இந்த நாட்டிலுள்ள பல பல் கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்குட் படுத்தி, தமது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப் பித்து வருகின்றனர்.
மல்லிகையின் வளர்ச்சியும், அதன் இலக்கிய ஆழ அகலங்களும் பிரமிப்புத் தருவதாக அமைந்திருக்கின்றன. இதற்கு நீங்கள் தரும் உழைப்பை நினைத்து நான் பெருமிதம் கொள்கின்றேன். அர்ப்பணிப்பும், இலக்கிய நேசிப்பும் இல்லாது போனால், இத் தகைய ஒர் இலக்கியச் சாதனையை நிலை நாட்டவே முடியாது.
நீங்கள் மல்லிகைக்காகச் செலவழிக் கும் ஒவ்வொரு மணித்துளி நேரமும் இந்த மண்ணுக்குப் பயனுள்ளதாகவே அமைகின் றன. இத்தனை ஆண்டுக்காலம் இத்தகைய தோர் இலக்கியச் சிற்றேடு தொடர்ந்து வெளி வருவதை வருங்காலச் சந்ததி பெரும் பெருமிதத்துடன் ஞாபகம் வைத்திருக்கும் என்பது நிச்சயம்.
6166tum செல்வி. ரஞ்சிதா
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 58

கதவைப் பலமாகத் தட்டியும் திறக்காததால் திறப்பு வைக்கும் இடத்திற்குச் சென்று பார்த்தபோதுதான், யமுனாவும் தேவியும் இன்று பின்னேரம் ஷொப்பிங் போவது பற்றிக் காலையில் கூறியது நினைவிற்கு வரவே ரூமைத் திறந்து போனேன்.
அலுவலகத்திலிருந்து ரூமிற்கு வந்ததும் உடனே ஒரு ரீ குடித்துத்தான் மறு காரியம். ஆனால், இன்று அந்த ரீயும் வெறுத்துவிட, கான்ட் பாக்கைக் கழற்றிப் போட்டுவிட்டு கட்டிலில் விழுந்து படுத்த எனக்கு இன்னும் அந்தத் துடிப்பும் கோபமும் அடங்கவேயில்லை. என் கோபத்தை ஆற்றித் தணிப்பதற்குத்தான் ரூமிலும் யாரும் இல்லையே!
என் மனம்.
அதுவும் மீண்டும் மீண்டும் அதையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. ஏதோ கனவோ என எண்ணிப் பார்க்கிறேன்.
நெஞ்சு பொறுக்குதில்லை
- றாதிகா
இல்லை. இப்பொழுதுதான் என் கண்முன்னே நடந்தவை, எப்படிக் கனவாகும்?
எப்போதும் ஆடுமாடுகளை அடைத்து வைக்கும் பண்ணையைப் போல் செல்லும் பேருந்து இன்று வழமைக்கு மாறாக நெரிசல் குறைவாகத் தன் இருப் பிடத்திலிருந்து புன்னாலைக் கட்டுவன் நோக்கித் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.
பேருந்தின் கடைசி ஆசனத்திற்கு முன் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு எதிர்ப்பக்கத்திற்கு முன் உள்ள ஒற்றை ஆசனத்தில் தனியாய் ஒரு மாணவி. அவள் தன் கைகளால் புத்தகங்களை அணைத்தவாறு, பேருந்தின் யன்னலூடாகத் தன் பார்வையைத் செலுத்தியபடி இருக்கிறாள். சும்மாவேனும் அவள் தலை மறுபக்கம் திரும்புவதாயில்லை.
எப்படித் திரும்புவது? அவளின் சீற்றுடன் உரசிக்கொண்டு ஒருவன். அவன் கண்கள் அவளை காமப் பார்வைகளால் மேய்கின்றன. அவளைப் பார்த்துத் தன் முரட்டுச் சிரிப்பை உதிர்க்கிறான்.
அவளைத் தன் சகோதரியாய் பார்க்க வேண்டியவன், சகோதரியாய்
வேண்டாம். ஒரு சக பயணியாகவே அவளைப் பார்த்துப் போகலாமே. அவன்
ஏன் இப்படி இழிக்கிறான்?
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 59

Page 32
திரும்பியவாறிருந்த அவள் முகத் தைப் பார்க்கப் பலவாறும் தன் தலையை அசைக்கிறான். பேருந்தில் தலையை முட்டுக்கொடுத்து நிற்கிறான். அவளோ அவனின் தொடைகள் தன் தோளில் உரசிக்கொள்ளாதவாறு ஒடுக்கமாய் இருந்தும் அவன் உரசல்கள் விடுவதாயில்லை.
அவன் மட்டுமா? அவனோடு சேர்ந்து இன்னும் ஒருவன். அவன் சீற்றில் அமர்ந்திருந்ததாலோ என் னவோ லிலைகள் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அவன் கண்களும் பெண் களை மேய்வதில் தப்பிவிடவில்லை.
என் கண்களோ அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
காதுகளில் வெள்ளித் தோடுகள். கழுத்தில் வீட்டு நாய்களுக்குக் கட்டு வது போன்ற மொத்தமான வெள்ளிச் சங்கிலி, கைம்னிக்கட்டில் அகலமான இறப்பர் பட்டி. தலைமயிர் காடைகள் தான் என்பதற்கு அடையாளமாக கழுத்திலிருந்து நீண்டு வளர்ந்திருந்தது ஒருத்தனுக்கு.
முள்ளம் பன்றியை தலையில் சுமக் கிறானோ என்ற நினைவு மற்றவனைப் பார்க்கும்போது.
a 60L2
அதற்கும் குறைவில்லை. கழன்று விழுவதற்கு ஆயத்த நிலையில் அவர்கள் நீளக் காற்சட்டைகள்.
அவர்களிடத்தில் பண்பாட்டைத்
தேடவேண்டியிருந்தது.
மனிதர்களா
கவே இல்லை. பிறகெங்கே பண்பாடு?
“ டேய் குழந்தையோட ஏறுற அம்மாவுக்கு எழும்பி சீற்றைக் குடடா" என்ற வார்த்தைகள் அவர்களைப் பண்பாடாய்ப் பார்க்க வைத்தது.
பேருந்து! அது தன்பாட்டில் பயணிக்கிறது. அதற்கு யார் எப்படி நடந்துகொண்டால்தான் என்ன? வரு மானம் வந்தால் போதுமே.
பாவம் குழந்தையை அணைத்தபடி இருந்த அந்த இளம்தாய் மீது அவனின் இரு கண்களும். இதற்குத்தானா அவன் எழும்பி சீற் கொடுத்தான்?
குழந்தை தாயின் நெஞ்சோடு அணைந்து தூங்கி வழிந்து கொண்டி ருந்தது. பேருந்து சரிவதைவிட அந்த இளந்தாய் மீதான இவன் உரசல்களும், சரிவுகளும் அதிகம்.
அவள் அணிந்திருந்த பஞ்சாபியின் கழுத்து குழந்தையின் அழுத்தத்தால் சற்று கீழிறங்கிற்று. அதை ஏன் இவன் பார்த்து இழகிக் வேண்டும்? தன் நண்பனுக்கும் சுரண்டிக் காட்டி ரசிக்க வேண்டுமா?
“டேய் ப்றீ சோ போகுது. என்
கொண்டு நிற் கிறாய்?” மெதுவாய்த் தட்டிச் சொன்ன
னடா விண்ணாந்து
வனிடம்,
"அங்க பாருடா, அந்த நிலாவ. இன்னும் திரும்பியே பார்க்கலேடா. என்னடா இவ்வளவு வெட்கமோ?” அந் தப் பள்ளி மாணவியையேப் பார்த்து பல் இழித்து உரசிக் கொண்டவனின்
முணுமுணுப்பு.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 60

ச்சீ. தாயின் முலைகளில் பால் குடித்து வளர்ந்தவனா, இவன்? இப்படி அவற்றைக் காம இச்சையுடன் பல் இழித்துப் பார்ப்பதா? இவர்களை என்னவென்று சொல்வது?
'இந்தப் பெடியளுக்குத் தங் களைத் தட்டிக் கேட்கிறதுக்கு ஆருமே இல்லை என்ற நினைப்புத்தானே. இந் தக் காலத்தில் ஆரும் வில்லங்கத்துக் குப் போகேலாது, பிள்ளை. எந்த இடத் தில் என்ன செய்வாங்களெண்டு தெரி யாது. இப்படிச் சீர்கெட்டுக் கிடக்குது சமுதாயம். நாமடங்க நம் குலமடங்க என்று எங்கள நாங்கள் பாதுகாத்துக் கொண்டு போய்வரப் பழகவேணும்.”
என் பக்கத்திலிருந்த அறுபது வய தானவரின் வார்த்தைகள். என் கோபத் தைப் புரிந்து வெளிவந்தவையாயிருந் தன. பெருமூச்சோடும் கோபத்தோடும் வந்த வார்த்தைகள் இவர்களின் அட்டகாசங்களை அடக்க முடியாதென் பதை வெளிப்படுத்தவே, நானும் கொஞ்சம் அடக்கமாய் இருக்கிறேன்.
எனக்கேதும் சொல்லவில்ன்ல என்று சுயநலமாய் ஒதுங்கிக்கொள்ள முடியாதிருந்தது, அவர்களின் அதி கரித்த சேட்டைகள்.
அந்த இளம் தாய் மீதான அவ னின் பார்வைகளும் உரசல்களும் முணு முணுப்புகளும் குறைவதாகத் தெரிய வில்லை. அவன் கையில் ஒரு கமராத் தொலைபேசி. பேருந்தின் கம்பிகளைப் பிடித்திருந்த கைக்கு தொலைபேசி போகிறது. ஏதோ, பட்டின்களை அடிக்கடி அழுத்துகிறான்.
அவளின் தலைக்கு மேலாகக் கம்பியைப் பிடித்திருக்கும் கை கொஞ் சம் முன்னால் நகர்கிறது. பெருவிரல் பட்டினை அழுத்துகிறது.
அவன் என்ன செய்கிறான்.?
எனக்கு முதலில் ஒன்றுமே புரிய வில்லை. இரண்டு தடவைகள் அவன் விரல்கள் அழுத்த சிவப்பு நிறத்தில் வட்டம் சுழல்வதும்,
யாரிடம் சொல்வது இதை ? அவனை எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது எனக்கு. அந்த இளம் தாய் இதை அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்?
அவள் அதிலேயே உயிர்விடவும்
தயங்க மாட்டாள்.
யாரிடமாவது சொல்வோமென் றால். வேண்டாம், நாளை அவளைக் காணும் போது அவர்களுக்கும் இது தான் நினைவு வரும். பக்கத்தில் நிற்ப வரிடம் எப்படியும் பரிமாறப்படும்.
அவளிடமே சொல்லி விடலாமா?
"பஞ்சாபியூடாகத் தெரியும் உன் மார்வை போட்டோ எடுத்து விட்டான்' என்று. வேண்டாம் அவளுக்கென் றொரு வாழ்க்கை இருக்கிறது. என் மனம் என்னிடம் மன்றாடிக் கேட்கிறது.
எல்லோரும் தத்தமது சுயகவனிப்பு களில். எத்தனை பேர் இதைப் பார்த் தும், பார்க்காதது போல் இருக்கிறார் அந்த இருவரையும் தட்டிக் கேட்கத் திராணியற்று.
கள்,
மல்லிகை ஒக்டோபர் 2011 季 61

Page 33
நீயும் அவர்களைப் போலத்தானே இருக்கிறாய்? என் மனசாட்சி கூறு கிறது. என் கண்கள் அவர்களையே, அந்தக் காமுகர்களையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு நிச்சயம் விளங்கியிருக்க வேண்டும். பின்னால் நிற்கும் தன் நண்பனைப் பார்க்கும் சாட்டில் அவன் பார்வைகள் ள்ன் மீதும் விழுகின்றன.
“என்னடா கண்ணகி, பாத்திட்டே இருக்கிறா? தன்னோட கதைக்கேல்ல யெண்டு கோபமா இருக்கிறாடா.”
"அப்படியெல்லாம் பார்க்கக் கூடா துடா கண்ணா.” இருவரும் முதுகில் தட்டிச் சிரிக்கின்றனர்.
நான் அப்போதும் விறுமனாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருக் கிறேன்.
அந்த மாணவி, அவள் இன்னும் இறங்கவில்லை. இதுவரை அவள் தலையும் மறுபக்கம் திரும்பவுமில்லை. எப்படித் திரும்புவது?
அவனின் பருத்த தொடைகள் தான், இன்னமும் காத்திருக்கின்றன உரசல்களுக்காக,
பேருந்தில் பயணிகள் கூடுவதும் குறைவதுமாய் இருந்தது. திருநெல் வேலிச் சந்தியில் ஒரு தொகையாய் மக்கள் இறங்க, அந்தத் தாயும் தன் குழந்தையை அணைத்தபடி பெளவிய மாய் இறங்குகிறாள்.
ஒருதடவை சொல்லி விடலாமா?
வேண்டாம். அவள் துணையில்லா
மல் தன் குழந்தைக்காக வாழ்கிறாள் என்பதை திலகமில்லாத அந்த நெற்றி யும், வெற்றுக் கழுத்தும் காட்டின.
தனக்கு எழும்பி சீற் தந்தவனைப் பார்த்து, வஞ்சகம் அற்ற அவளது சிரிப்பு, அவனைக் கட்டாயம் உறுத்தி யிருக்கும்.
தாவணியைச் சரிப்படுத்தி, இறங் கிச் செல்கிறாள். என் பக்கத்திலிருந்த அறுபது வயதான ஐயா முந்திக் கொண்டு அந்தச் சீற்றில் தானும் தன் பாடுமாய் உட்கார்ந்து விட்டார்.
பேருந்து திடீரென தன் வேகத்தை அதிகரித்துப் பறக்கிறது. பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். ஒ. பின்னால் இ.போ.ச.வின் பேருந்து.
ஒரு சிறிய கடதாசித் துண்டு. அவன் தொலைபேசி இலக்கங்களாய் இருக்க வேண்டும்.
“ஹலோ! நாங்க இறங்கப் போறம். நீங்க இறங்கினதும் இதுக்கு கோல் பண்ணுடா!” அவள் மடியில் போட்டுவிட்டு பேருந்தின் பின்வாச லால் இருவரும் இறங்க,
"அப்பாடா..!" நான் விடுதலை பெற்றுவிட்டதாக உணர்கிறேன். அப்படியொரு பெருமூச்சு.
“என்னடா, இண்டைக்கு ஒண் டுமே வாய்க்கேல்ல. உன்ர ஆள் இப் பிடித் திமிர் காட்டுறா!'
‘ஒண்ணுமில் லேடா.
சும்மா
ஊடல்!”
மல்லிகை ஒக்டோபர் 2011 & 62

இருவருமே தோளில் கைபோட்டு பெரிதாகச் சிரிக்கின்றனர்.
பேருந்தில், நான் முந்தி, நீ முந்தி என மக்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர்.
கோண்டாவில் சந்தியிலிருந்து சற்றுத் தள்ளித்தான் நானும் இறங்க வேண்டும். ஏறிய ஒருவருக்குச் சீற் றைக் கொடுத்துவிட்டு நான் எழுந்து நிற்கிறேன்.
இறங்கியவனின் கைகளில் ஒன்று ஜன்னலுரடாக, வம்பு வார்த்தைகள் பேசியதில் எதையோ தவற விட்டு விட்டார்களோ?
அவர்களைப் பார்க்கவே கூடா தென்று திரும்பி இருந்து பயணித்த வளின் கன்னங்களைத் தட்டியது அந்தக் கை.
அவனின் சிரிப்பை என்னவென்று சொல்வது?
அப்படி ஒரு பெருமிதச் சிரிப்பு.
அவள் எதுவும் அறியாது திடுக் குற்றுப் பார்க்கிறாள்.
கன்னங்களைத் தட்டிய அவன் கை களைப் பிடிக்க, பின்னாலிருந்த ஒரு வரின் கை நீண்டு எட்டிப் பிடிப்பதற் கிடையில் அவன் பாய்ந்து விட்டான்.
அவன் தன் காம வெறியை, அவள் திரும்பிப் பார்க்காமலே ஒதுங்கி இருந் ததை எல்லாம் சேர்த்து தன் நண்பனு டன் இணைந்து தீர்த்துக் கொண்டான்.
ச்சி. தப்பீற்றான் பாவி. அவனை
எதுவெல்லாமோ சொல்லித் திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
நான் நினைத்து முடிப்பதற்குள்,
கிறீச். என்று தன் முழு பிறேக் கையும் அழுத்தி எதிரிலிருந்து வந்த வெண்ணிற டொல்பின், பாதையி லிருந்து விலகுகிறது.
அதில். சிவப்பு நிறமாக தெறித் திருந்த அவன் இரத்தங்கள். கீழே, தலை பலமாக அடிபட்டு அவன்.
அவளின் கன்னங்களைத் தட்டிய கையில், இன்னமும் விலத்தாமல் தாய்ப் பால் குடித்த தாயின் முலைகளை படம் பிடித்த கமராத் தொலைபேசி.
அவனுக்கெங்கே தெரியப் போகி றது. நாளை தனது தொலைபேசியே தனக்கெதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லப் போகிறதென்பது.
“பிரியா. பிரியா.” என் அறைக் கதவு பலமாகத் தட்டும் சத்தம் கேட்கிறது. ஓ! சொப்பிங் போன என் நண்பிகள் வந்துவிட்டார்கள்.
கதவைத் திறக்கிறேன். வெளியே வானம் கீழிறங்கி பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
“என்ன பிரியா நல்ல நித்திரை போல. எவ்வளவு நேரம் கூப்பிட்டது.” எப்போதும் போல் யமுனா அதட்டு கிறாள். "மழைதானே எனக்குக் கேட் கேல்ல” சலிப்புடன் கூறினேன். அவர் களை ஏதோ சொல்லிச் சமாளிக்க முடிந் தது. ஆனால் என் மனம்? அது, ஏனோ மறந்து விடாதபடி மீண்டும் அதையே அசை போடுகிறது.
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 63

Page 34
வீடுகள் தோறும் விதி வரையினிலும் காடுகள் போலொரு கருமை Uடர்ந்தே
Unடுகள் தொடரும் UMதையெங்கிலும் unவம், எம்மக்கள்Uயத்தினிலே,
வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள் O இ ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள் తో ෙක් பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட ஒ کعبہ
uெலனில்லா மனங்களால் புவினிலே. s so கல்லோடும் வாளோடும் காடையர்களிர்வில் عاكگی uெnல்லோருந்தடியோரும் புலரும்வரை இருeடில் - த.எலிசபெத்
வல்லோர்கள் Angeu6qJaponóoyob Dawa)ni) வந்ததும் Uறந்தானாம் சிக்காமலே.
வால் வழியாய் வந்திeட வதந்தியுமிங்கே வரிளைவே விந்து வில்hபித்தும் நின்றது நோய் uேnலெம்மை பீடித்து மனதில் நோக்கமெல்லாம் சிதறிeடு பித்தானது.
காலலோனே காவலோனே காத்திரமால் நீரும் unவப்Ueட மக்களினை காத்திருவில் unரும் ஏவலோனால் வந்துபோகும் மnயந்தனை தீரும் ஒளேைம செய்யாமல் வேகமாய் நீவில் வாரும்.
மல்லிகை ஒக்டோபர் 2011 * 64

கொடகே சாஹித்திய
விருது விழா - 2011
- மேமன்கவி
சமூகத்தில் பெரும் மாற்றங்கள் தாக்கபூர்வமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவைதான் கலை இலக்கியங்கள் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக அறிவோம்.
இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனங் களிடையிலான தவறான புரிதல்களும், அதிகார உணர்வு களால் புரிந்துணர்வு அற்றுப் போகும் ஆபத்தும் எதிர்கொள்ளப் படுவதை நாம் கண்டு இருக்கிறோம். அத்தகைய ஆபத்தினை கடந்து வந்த நாம், அத்தகைய ஆபத்து இலங்கை வாழ் மூன்று இனங்களிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்மை, சந்தேகம் ஆகிவற்றை இல்லாதொழிக்க பெரும்பணி ஆற்ற வேண்டிய தேவை ஒன்று கடந்த காலம் தொடக்கம் இருந்து வந்துள்ளது. அப்பணியினை கலை இலக்கியங்கள் வழியாக செய்கின்ற வேன்ல இலக்கிய வாதிகளைச் சார்ந்தாக இருந்தது. ஆனால் அப்பணியினை வெறுமனே தனிநபராக நின்று ஒரு கலை இலக்கியவாதி செய்வதை விட, ஒரு நிறுவனமாக அல்லது ஒர் இயக்கமாக நின்று செயற்படுவதில் அப்பணியின் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று அறியப்பட்ட பொழுது, இந்த நாட்டினை சார்ந்த இனங்களிடையே புரிந்துணர்வு ஏற்படுவதில் ஆர்வமிக்க மூன்று இனத்தைச் சார்ந்த கலை இலக்கியவாதிகள் ஒன்றிணைந்து சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்ற அமைப்பினை 2007ஆம் ஆண்டு அளவில் உருவாக்கினார்கள். இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரும் அனுசரணையாக இருந்தவர்தான் தேசபந்து சிரிசுமண கொடகே அவர்கள்.
தேசபந்து சிரிசுமண கொடகே அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழ் நூல்களை வெளியிடுவதிலும், சிங்கள தமிழ் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராகத் திகழ்கிறார்.
ஏலவே தான் ஸ்தாபித்த, நீண்ட காலமாக இலங்கையில் பதிப்பகத்துறையில் பிரபலமான தனது கொடகே நிறுவனத்தின் மூலம் ஆற்றும் பணியில் சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில நூல்களையும்,
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 65

Page 35
தமிழ் கலை இலக்கிய நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்த தேசபந்து சிரிசுமண கொடகே அவர்கள் கலை, இலக்கியம் மூலம் இந்த நாட்டின் மூன்று இனங்களிடேயே புரிந்துணர்வையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்க அமைக்கப்பட்ட சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அனுசரணையாளாராக அமைந்தமை மிகப் பொருத்தமாக அமைந்தது.
இத்தகைய ஒரு சூழலில்தான் கொடகே நிறுவனம், ஏலவே 10 வருட காலமாக இலங்கையில் வெளிவந்த சிங்கள, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவரும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கு "கொடகே சாகித்திய விருது” வருடந் தோறும் வழங்கிக் கொண்டிருந்தது. அத்தோடு, அவ்விரு மொழிகளில் நீண்ட காலம் பணியாற்றி வந்த மூத்த கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கு "கொடகே வாழ்நாள்” விருதினையும் வழங்கிக் கொண்டிருந்தது. அதேவேளை தமிழ் கலை இலக்கியத் துறைக்கு கொடகே விருதுகள் திட்டத்தைத் தமிழ் பேசும் கலை இலக்கியவாதி களுடனான பரவலான தொடர்பு அந்த நிறுவனத்திற்கு இல்லாதிருந்ததன் கராணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் போயிற்று.
சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றிய உருவாக்கத்தின் பின், அந்த ஒன்றியத்தின் மூலம் தமிழ் கலை இலக்கியவாதிகளின் தொடர்பின் காரணமாக, அந்த ஒன்றியத்தின் பரிந்துரைக்கு அமைய 2008ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் கலை இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் கொடகே சாகித்திய விருது வழங்கும் திட்டம் அமுலாக்கப்பட்டது. அத்தோடு பரவலாக பரஸ்பர மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களையும், சுயமான தமிழ் நூல்களையும் கொடகே நிறுவனம் வெளியிடத்
22-223 தொடங்கியது.
கொடகே சாகித்திய விருது தமிழ் கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களுக்கு வருடந் தோறும் வழங்கும் அத்திட்டத் தின் ஆரம்ப கட்டமாக 2009ஆம் ஆண்டு நடந் தேறிய கொடகே சாகித்திய விழாவில், தமிழ் நூல்களுக்கு வழங்க நடை முறை சாத்தியம் இல்லாததன் காரணமாக வாழ்நாள் சாதனையாளர் விருது - அன்றைய விழாவில், மூன்று தமிழ் கலை இலக்கியவாதிகளுக்கு வழங்கப்பட்டது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும், திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களுக்கும், கவிஞர் ஏ.இக்பால் அவர்களுக்கும் அவ்விருதுகள் வழங்கப்பட்டன.
அவ்விழாவினைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு தொடக்கம் தமிழில் வெளிவந்த சிறந்த நாவல், சிறுகதை, கவிதை ஆகிய நூல்களுக்கு கொடகே சாகித்திய மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 66
 

விருதினையும், தமிழ் கலை இலக்கியத்துறையில் பணியாற்றிய மூத்த கலை இலக்கியவாதி ஒருவருக்கு கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருதினையும், சிறந்த புதிய படைப்புக்கான சான்றிதழையும் வழங்கி வருகிறது.
அதன் பிரகாரம் 2010ம் ஆண்டு கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருதினை பேராசிரியர் கா.சிவதம்பி அவர் களுக்கு வழங்கியது. அத்தோடு கொடகே சாகித்திய விருதினை 2009ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிறந்த நாவலான "துயரம் சுமப்பவர்கள்’ என்ற நூலுக்காய் திரு. நீபி.அருளானந்தனும், சிறுகதைத் தொகுப்பான ‘கண்ணுக் குள் சுவர்க்கம்' என்ற நூலுக்கு காத்தான்குடி நஸிலாவும், கவிதைத் தொகுப் V பான "அவாவுறும் O * நிலம்’ ଶ ଗi [b நூலுக்கு முல்லை முஸ்ரிபாவும் பெற்றுக்கொண்டதோடு, புதிய சிறந்த படைப்புக்கான சான்றிதழை "அலைகள் தேடும் கரை” என்ற நூலைத் தந்த ஸனிரா காலிதீனனும் பெற்று கொண்டார்கள்.
அந்த வரிசையில் கலை இலக்கியத்துறை யில் பணியாற்றிய மூன்று மொழியைச் சார்ந்த பெரியவர்களுக்கும் கொடகே வாழ்நாள் சாதனை விருதுகளையும், 2010ஆம் ஆண்டு மும்மொழி களிலும் வெளிவந்த நூல்களில் சிறந்தவை என தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல், சிறுகதை, கவிதை, இளைஞர் இலக்கிய நூல்களுக்கும் கொடகே சாகித்திய விருதுகள் வழங்கும் வைபவம் 2011ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 7ம் திகதி பி.ப 3.00 மணிக்கு கொழும்பு-7, ஜே.ஆர்.ஜயவர்த்தன கலாசார கேந்திரத்தில் நடைபெற்றது.
இம்முறை தமிழ்மொழி மூலத்திற்கான கொடகே வாழ்நாள் சாதனை விருதினை தமிழ் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அத்தோடு 2010ம் ஆண்டு தமிழ்மொழியில் வெளிவந்த சிறந்த நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் வெளிவந்த நூல்களுக்கும் கொடகே சாகித்திய விருதுகள் வழங்கப்பட்டன.
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 67

Page 36
இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூல்களில் சிறந்தவையாக தேர்தெடுக்கப்பட்ட நூல்களுக்கு கொடகே சாகித்திய விருது வழங்கப்பட்டது.
இறுதிச் சுற்றுக்கு தெரிவான நூல்களின் விபரங்கள் பின்வருமாறு :
BIT616)
வவுனியூர் இரா.உதயணனின் "பணி நிலவு” அல் அஸஉமத்தின் "அறுவடை கனவுகள்” தெணியானின் "தவறிப் போனவனின் கதை”
கவிதை
கந்தையா கணேசமூர்த்தியின் "தழலாடி வீதி” மூதூர் முகைதீனின் "ஒரு காலம் இருந்தது” ஜமீலின் "உடையக் காத்திருத்தல்” ஷெல்லிதாசனின் "செம்மாதுளம்பூ”
சிறுகதை
தெணியானின் 'ஒடுக்கப்பட்டவர்கள் மு.சிவலிங்கத்தின் ‘ஒப்பாரி கோச்சி’
நீ.பி.அருளாந்தனின் "வெளிச்சம் திக்குவல்லை கமாலின் முட்டைக் கோப்பி மருதூர் ஏ.மஜீத்தின் “கூடு கட்டத் தெரியாத குயில்கள
இதில் வவுனியூர். இரா.உதயணனின் பனி நிலவுக்கு சிறந்த நாவலுக்கான விருதும், கந்தையா கணேசமூர்த்தியின் தழலாடி வீதிக்குச் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதும், தெணியானின் ஒடுக்கப்பட்டவர் களுக்குச் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதும் வழங்கப்பட்டது.
அத்தோடு புதிய சிறந்த படைப்புக்கான சான்றிதழும், விருதும் காத்தநகர் முகையதின்சாலிக்கு அவரது "வாழ்தல் மீதான வன்முறைகள்” என்ற சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப் LILL.g.
மல்லிகை ஒக்டோபர் 2011 & 68
 
 
 
 

9ܓ݂ܶܘܟܸ74ܐܳܗܶܗܗ2
இ இன்று பற்பல ஊர்களில் இருந்தெல்லாம் எழுத்தாளர்கள் தத்தமது படைப்புகளை நூல் உருவில் வெளியிடுகின்றனரே, இப்படியாகத் தங்களது நூல்களை வெளியிடு பவர்களிடம் பரவலான தகவல் தொடர்பு உள்ளதா?
வெள்ளவத்தை. ஆர். கருணாகரன்
* நமது புத்தகம் என்ற வகையில் முதன் முதலில் வெளிவந்த நூல் கணேச லிங்கன் எழுதி அந்தக்காலத்தில் சென்னையில் தமிழ்ப் புத்தகாலயம் வெளி யிட்ட சிறுகதைத் தொகுதிதான் படைப்பாளிகளின் முதல் நூலாக வெளி வந்தது.
இன்றோ ஏராளமான புதுப் புது நூல்கள் வெளிவந்து கொண்டேயிருக் கின்றன. பற்பல தேசங்களில் இருந்து தமிழ் நூல்கள் அடிக்கடி வெளிவருகின்ற படியால் ஒரு முறையான பட்டியல் கிடைப்பது பெரும் சிரமமாக இருக் கின்றது.
O O O
இ உங்களது கடந்த கால இலக்கிய வாழ்க்கையை நீங்கள் அடிக்கடி நின்ைத்துப் பார்ப்பதுண்டா?
வவுனியா. எஸ்.சிவதாசன்
* இரவில் தூக்கம் வராது போனால், வெளியே நாற்காலியில் சாய்ந்து இருந்து கொண்டு நான் எனது வாழ்க்கையின் பல கட்டங்களையும் என்னுள் நானே எடைபோட்டு, யோசித்துப் பார்ப்பதுண்டு.
ஒன்றை முற்றாக நம்புங்கள். இப்படியான ஆழ்ந்த இரவுச் சிந்தனையின் வெளிப்பாடுகள்தான், எனது இன்றைய செயற்பாடுகள். நாளை என்றொரு
மல்லிகை ஒக்டோபர் 2011 தீ 69

Page 37
காலம் வரத்தான் செய்யும். அந்தக் எனது ஆக்கபூர்வமான செயல்கள் விமர்சிக்
காலகட்டத்தில் நானல்ல,
கப்படும் என மெய்யாகவே இன்று நம்புகின்றேன்.
O O. O.
& மல்லிகைக் காரியாலயதிற்கு நேரில் தேடி வந்தால், உங்களிடம் கொஞ்ச நேரத்திற்குப் பேசலாமா?
தெஹிவளை.
* நான் பல சோலிக்காரன். நேரம்
ஆர்.கந்தவனம்
ஒதுக்குவது என்பதே முக்கியமான தொன்று. இத்தனை ஆர்வத்துடன் மல்லிகை ஆசிரியரை நேரில் சந்தித் துக் கதைக்க விருப்பமெனக் கேட் டுள்ளீர்கள். முதலில் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, நேரம் ஒதுக் கிய பின்னர், நீங்கள் என்னைச் சந்தித் துக் கதைப்பது உங்களுக்குச் செள கரியமானது.
இ உங்களுடைய நீண்ட நாள் இலக்கிய வரலாற்றில் பல்வேறு வகைப்பட்டவர் களையெல்லாம் அடிக்கடி சந்தித்து வந்திருப்பீர்கள். இவர்களினது குணாம் சங்களையெல்லாம் எப்படி எடை போட்டுப் பழகி வருகின்றீர்கள்?
கிளிநொச்சி. ஆர்.தவநேசன்
* எனக்கு உள்ளுணர்வு வெகுதுரித மாகச் செயற்பட்டு, வழிதுறைகளைத் தெளிவாகத் தெரியப்படுத்தி உதவும்.
பல சந்தர்ப்பங்களில் எனக்கு அது பல வழிகளிலும் உந்து சக்தியாகப் பயன்பட்டு வந்திருக்கின்றது.
பழகிய சில காலகட்டங்களுக் குள்ளே சம்பந்தப்பட்டவரை இனங் கண்டு பிடித்துவிடும் அநுபவ ஞானம் நிரம்பப் பெற்றுள்ளேன். ஆனால், அதை வெளிக்காட்டுவதில்லை. காலப்போக்கில் நான் ஆரம்ப கட்டத் தில் அனுமானித்தபடியே அவரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என் பதை நடைமுறை பூர்வமாகக் கண்டு தெளிந்துள்ளேன்.
O O O
இ மல்லிகை கோஷ்டிகளில் நம்பிக்கை வைத்து இயங்கி வந்ததுண்டா?
шо6öт6олптії. எஸ்.மருசலின்
* கருத்து உடன்பாடு கொண்டவர் கள் ஒருங்கு சேர்ந்து கூட்டாக இயங்குவதில் தப்பில்லை. ஆனால், கோஷ்டிகளாகப் பிரிந்து, குழு குழு வாக இயங்கி வந்தால், அது வளர்ந்து வரும் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக் குப் பெருந் தீங்காகவே முடிவில் அமையும்.
O O O
& மல்லிகைக்கென்றே ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மாத்திரம்தான் எழுத வேண்டுமா? அல்லது விரும்பிய சகல ருமே எழுதி அனுப்பலாமா?
நல்லூர். ஆர்.கந்தவனம்
மல்லிகை ஒக்டோபர் 2011 & 70

* மல்லிகைக்கென்றே முத்திரை பதிக்கப் பெற்ற எழுத்தாளர் என்று எவருமே இல்லை. மல்லிகையின் இலக்கிய நேர்மையை விசுவசிக்கும் அனைவருமே எழுதலாம். தகுதி இருந்தால் நிச்சயம் மல்லிகையில் அவர்களது ஆக்கங்கள் வெளிவரும்.
& நான் மல்லிகையுடன் தொடர் வைக்க மனசார ஆசைப்படுகின்றேன். ஆனால், மனதில் என்னமோ பயம் வந்து கவ்விக்கொண்டு, தொடர்பு கொள்ள விடாமல் பயமுறுத்துகிறது. இதற்கு 6T6ö76oT GsFui Juu6oTLb?
சுன்னாகம். செல்வி. வசந்தி
* இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கின்றது? பயந்து பயந்து செயற் பட்டால் வாழ்க்கையே அர்த்தமற்றுப் போய்விடும். இதோ இப்போது மனந் திறந்துதானே மல்லிகைக்கு இந்தக் கேள்வியை எழுதி அனுப்பியுள்ளீர் கள். இளந்தலைமுறை துணிந்து காரியமாற்றப் பழக வேண்டும். இதில் என்ன தப்பு? எனவே, இனிமேலாவது பயந்து பயந்து பொது வாழ்விலிருந்து ஒதுங்கிப் போகாமல் துணிந்து செய லாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
O O O
இ உங்களுக்குச் சமீபத்தில் ஏற்பட்ட இலக்கிய அதிர்ச்சி?
தெஹிவளை. என்.சுந்தரவதனன்
* நம்ம பேராசிரியர் சிவத்தம்பியின் பெரும் இழப்பு.
O O O
இ உங்களது இளம் வயதுக் காலத்தில் இப்படியாகப் பிற்காலத்தில் எழுத்தாள னாக - ஒரு இலக்கிய இதழின் ஆசிரிய ராக வருவீர்கள் என எண்ணிப் பார்த்த துண்டா?
சாவகச்சேரி. எம்.கனகராஜன்
* இல்லை. ஆனால், ஏதோ ஒரு வகையில் தமிழ்ச் சமூகத்தில் ஒரு முக்கியமான ஆளாக - ஒரு மேடைப் பேச்சாளனாகப் பிற்காலத்தில் மலரக் கூடும் என்றொரு மெல்லிய உள் உணர்வு என் நெஞ்சைத் தொட்டுச் சென்றது என்பது என்னமோ, உண்மைதான்.
$ இந்த இலக்கியத் துறைக்கு ஏன் வந்தோம்? என்ற சலிப்புணர்வு எப்பொழு தாவது உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?
கண்டி. ச.கண்ணன்
* இல்லவேயில்லை. என்னை உள் ளூர வளர்த்துக் கொள்வதற்கும், எனது திறமையை வெளிக்காட்டிக் கொள்வதற்கும், பற்பல மனோபாவம் கொண்ட எழுத்தாளர்களுடன் மனம் விட்டுப் பழகுவதற்கும் வெகுசனங் களின் எதார்த்தப் பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும் எனக்கு இந்தத் துறையில் நுழைந்த
மல்லிகை ஒக்டோபர் 2011 奉 71

Page 38
தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனப்பூர்வ மான திருப்திக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. எனவே முழு மன நிம்மதியுடனும் மகிழ்ச்சி யுடனும் எனது தினசரிக் கடமைகளை மனச் சந்துஷ்டியுடன் செய்து வரு கின்றேன்.
O O O
இ 47-வது ஆண்டு மலரைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டீர்களா? இந்த முறை மலர இருக்கும் ஆண்டு மலரில் என்ன புதுமை?
மல்லாகம். க.ஜெயந்தன்
* ஆண்டுக்காண்டு மல்லிகை மலர் கள் ஆழமான உழைப்பாலும், இலக்கிய நேசிப்பிலும் மலர்வது. இலக்கியத்தை மெய்யாகவே ஆழ மாக நேசிப்பவர்கள் தத்தமது ஆக்கங் களை இப்போதே எமக்கு அனுப்பத் தெண்டிக்கவும்.
O O O
& உண்மையைச் சொல்லுங்கள். உங் களுக்கும் வயதாகி விட்டது. மனிதன் எத்தனைதான் திறமைசாலியாக இருந் தாலும் இயற்கை தனது கடமையைச் செய்துதான் தீரும். உங்களுக்குப் பின் னர் மல்லிகையின் எதிர்காலம் எப்படி யாக மலரும் என்பதை இலக்கிய நண்பர் களுக்குத் தெளிவாகச் சொல்லி வையுங் களேன்!
மானிப்பாய். வி.இளங்கொடி
* உங்களுக்கு மாத்திரமல்ல, இலக் கியச் சுவைஞர்கள் அனைவருக்கும் அறுதியிட்டும் சொல்லி வைக்கின்றேன். மல்லிகை
தெளிவாகவும்,
யின் 100வது ஆண்டு மலரை உங் களது பிற்சந்ததியினர் நிச்சயமாக தெளிந்த ரசனையுடனும், சுவையுட னும் படித்துச் சுவைப்பார்கள். இது திண்ணம்!
O O O
இ இளந்தாரி வயதிலே - அந்தக் காலத் தில் நீங்களும் உங்களைப் போன்ற இளந்தலைமுறை எழுத்தாளர்களும் செய்த சூரத்தனமான ஒரு வேலையை சொல்ல இயலுமா?
கொழும்பு 6. எம்.தியாகேசன்
* பருத்தித்துறையில் இலக்கியக் கூட்டம், மாலையில். இங்கிருந்து நாம் இலக்கிய விசர் பீடித்த ஒன்றிரண்டு பேர், சைக்கிளில் புறப்படுவோம். பின்னர் அதே சைக்கிளில் அங்கிருந்து திரும்பி வருவோம். போக வர 36 மைல்கள். விடிகாலை வேளை 3 மணி செல்லும். தேகமெங்கும் அலுப்பு. அத்துடன் கடைக்குச் செல்ல வேண்டும். இன்றைய இலக்கிய இளந்தலைமுறை இதை யெல்லாம் பாடமாகப் படித்திருக்க வேண்டும். சுடச் சுட எழுதிப் புத்த கமாக வந்தால் சரி. இதுதான் இன்றைய இளசுகளின் நிலை.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

į } |
# | } } } }
S
ị | | |
1s 御 |
|
| } { ģ }
என்பதை குயகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல்
aprootsud 23.2072.

Page 39
NO-JĘ,1||1||SĪSIIII anatissa MāWaisia ]]薨 Īēķ009ȚíQ93||336.