கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2010.12

Page 1
WERC
நூலகம்
மார்கழி 2010
ஆய்வுநிலைபெ
பெண்நிலை வாதம், ஆய்வு நிலையில், இரு வகையான குறிக்கோள்களைக் கொண்டுள் ளது. ஒன்று செயல் முறை சார்ந்தது, மற்றது அறிவாதார மானது. இலங்கை யில் உள்ள சில குழுக்கள் இவற்றின் ஒன்று அல்லது இரண்டு குறிக்கோள் களையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. அந்த வகையில் கருத்தரங்குகள், கலந்துரையாடல் கூட்டங்கள், மகளிர் தினக் கொண்டாட்டங்கள் போன்றவற்றைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன. அத்தகைய தருணங்களில் ஆய்வுக்கட்டுரை கள் வெளிக்கொணரப்படுகின் றன. பெண்கள் கற்கை நெறி யானது பல்கலைக்கழக மட்டத் திலும், சில பெண்கள் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் பட்டப்படிப்பு, கலைமானிப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் போன்ற மட்டங்களில் மேற் கொள்ளப்படுகின்றது. இவற்றில் - ங்களால் வெளி யிடப்படுகின்ற சஞ்சிகைகள் மற்றும் வெளியீடுகளும் மிகவும் வளமூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் பல்கலைக்கழக மட்டத் தில், ஒருசில துறைகளில் பெண் கள் கற்கை நெறியானது பாடத் திட்டத்திற்குள் ஒன்றிணைக் கப்பட்டுள்ளது. அதாவது சமூக 6flu 65 g560) D (Sociology) வரலாற்றுக் கல்வி (History) மற்றும் தமிழ், சிங்களம் ஆங்கில பாடத்திட்டத்தினுள்ளும் உள் ளடக்கப்பட்டுள்ளது. பெண்கள் குழுக்களால் ஒழுங்குபடுத்தப் படுகின்ற பால்நிலைக் கற்கை நெறியின் பாடத் திட்டமும் பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்
குள் உள்ளடக் ஆனாலும் இ முறையானது acadamia 6ül கொள்ளப் பட்டு (Մ) 19 եւ T Ֆl. { பேராசிரியர்கள் யாளர்கள் மத்தி கற்கைநெறியெ அதன் அவசிய போன்ற அவர கருத்துக் கள் இதனைத் தொ படிப்பு மற்றுப கற்கை நெறியா கழகங்களால் வருத்தத்திற் (pLLT6TTg560TLDIT லாக இருப்பது காட்டாக வ கொழும்பு பலி இவ்வாறு நடந் எம்மில் பலருக் தைக் கொடுத்து 6) I LD IT 60 L | 6) பெண்கள் இய நிலைவாதிக கொண்டுவரும் சில பெண்கள் { பூர்வமாக விள இயலாதது எ1 கியமே. நிகழ்ந்த தின விழாக் கள கள் மூலம் சில பெணி களும் ஈடுபட்டது காலத் செயலாக என: இள வயதினா திறமையினை 6 வாக்குச் சாதுரி செய்வதற்கும் ட உதவலாம். அ முதிர்ந்தோரும்
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31
 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
డి, քեւ9:5Ք. 31 -ټو
O ?رسمبر کی ہے
நிலைவாதம் ്" "ക. క్తి
கப்பட்டுள்ளது. விவறிவாதார Main stream னாலும் ஏற்றுக் ள்ளது என கூற இனி நூறு வரை மற்றும் விரிவுரை யில் பெண்கள் ன்றால் என்ன? ம் தான் என்ன? நம்பிக்கையான உள் ளன. டர்ந்து பட்டப் ம் கலைமாணி னது பல்கலைக் நிறுத்தப்பட்டது குரியது. இது ன ஒரு செய டன், எடுத்துக் ரிளங்குகினி ற கலைக்கழகம் து கொண்டது $கும் ஏமாற்றத் ள்ளது. அறிவுபூர் விடயங்களை க்கமும் பெண் ளும் செய்து இக்காலத்தில் இவற்றை அறிவு ாங்கிக்கொள்ள மது துர்ப்பாக் இரண்டு மகளிர் ரில் பட்டிமன்றங் விவாதங்களில் ஆணி களும் திற்கு ஒவ்வாத க் குப்படுகிறது. ரின் விவாதத் வளர்ப் பதற்கும், பத்தை விருத்தி Iடடி மனறங்கள ஆனால் வயது பெண் நிலை
வாதத்திை புரிந்துகீெரீன்iš f. டோரும் இத்தகைய செயல் களில் ஈடுபடுவது எமது துர்ப்பாக்கியமே. இராமன் சிறந்த வனா? பரதன் சிறந்தவனா? கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவள்? பெண்கள் வேலைக் குப் போகலாமா கூடாதா என்று பட்டிமன்றங்களை வைப்பது சிறு பிள்ளைத்தனமாகத் தோன்று கின்றது.
ஒரு பெண் பொருளாதார நிலை யில் வேலைக்கு போக வேண்டு மென்றால் வேலைக்குப் போயே தான் தீரவேண்டும். இதில் பட்டி மன்றம் வைத்து பெண்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை தான் என்ன? இனியாவது பெண்கள் அறிவுபூர்வமாக பெண்களின் பிரச்சினைகளை முன் வைத்து கட்டுரைகளும் கருத்தரங்கு களும வைபபாாகள எனறு எதிர்பார்க்கின்றோம். சிறு பிள்ளைகளுக்கு ஆர்வம் உண்டாக்கப் போட்டிகள் வைக் கலாம் பரிசுகளும் வழங்கலாம், ஆனால் வயது முதிர்ந்த பெண்களும் இத்தகைய செயல் களில் ஈடுபடுவது கேவலமாக உள்ளது.
இந்த இதழில்.
PெNGO க்கள் பற்றி துெணிச்சல்மிக்க
பெண்மணி விருது *ெஇந்துசமய வழிப்பாட்டு
முறைகள் *ெமதசார்பற்ற இலங்கை ம்ெபால்நிலை எண்ணக்கருக்கள் Pபேர்னடின் சில்வா ஞாபகார்த்த
நாடகவிழா ట్
r" ఫ్లో స్ట్క్యో " " ***"
这

Page 2
“NGO”க்கள்பற்றிய எதிர்ப்புக்
“NGO” க்கள் என்று அழைக்கப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாக இடதுசாரி சிந்தனை யாளர்களினாலும் வேறு சில மேதாவிகளாலும் மிகக் கொடுரமாக விமர்சிக்கப்படுகிறது. இம்மாதிரியான விமர்சனங்கள் யானையைப் பார்த்த குருடர்கள் போல ஒரு மேலோட்டமான பூரணமாக விளங்காத ஒரு அறியாமையைப் பிரதி பலிக்கின்றது என்பது எமது நிலைப்பாடு. எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒரே கணிப்பீல் பார்ப்பதும் அறிவு நிலையின் குறைபாடே. பலவிதமான செயல்திட்டங்களும் பல விதமான ஆதரவு நிலைகளும் கொணி டவையாக இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிலவுகின்றன. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடங்குவதற்கான காரணங்களை நாங்கள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி விளங்கிக் கொள்ளலாம்.
1) எந்நிலையிலும் அரசாங்கங்கள் அபிவிருத்தி யையோ சலுகைகளையோ எல்லா மட்டத்திற்கும் ஒரே தரத்திலோ ஒரே அளவிலோ கொடுப்ப தில்லை. விடுபடும் அலகுகள் பல. நகரங்களை மையமாக்கி கிராமங்களைத் தொலைப்படுத்தி கிராம அபிவிருத்தியை புறக்கணிப்பது பொதுவாக அரச இயந்திரங்களின் செயற்பாடாக இருக்கும்.
2) சிறுபான்மை இனத்துவ, மத சார் குழுக்களின் நன்மைகள், ஜனநாயகத்தின் பெரும்பான்மைத்துவ அரசாங்கங்களினால் புறக்கணித்து ஒரம் கட்டப்படு கின்றன. இத்துடன் வர்க்கம், சாதி நிலையில் உள்ள மக்களின் அபிலாஷைகளும் தேவைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. இதனாலேயே அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, பல-குறிக்கோள்களை முன்வைத்து தனித்த நிறுவனங்களாக அரச கட்டுப்பாட்டுக்குள் வராமல் இயங்கத் தொடங்கின. இதற்கு பல வரலாறே உண்டு. நம்நாட்டில் Civil Rights Movement (CRM) FLDITg56015.5gb(5ub நீதிக்குமான பல்லின மக்களின் இயக்கம் (MERUB) இலங்கையின் சிறுபான்மை இனத்தவரான தமிழ் மக்கள்பட்ட அல்லல்கள் மற்றும் உரிமை மறுப்புகள் பற்றி அரசுக்கும், சர்வதேசத்திற்கும் எடுத்தெழும்பி அளப் பெரிய சேவை செய்ததை எம் வரலாற்றிலிருந்து நீக்க முடியாது. இவ் இயக்கங் களில் உயர்ந்த எண்ணங்களும் மனிதாபிமான உணர்ச்சிகளும், ஜனநாயக பண்புகளைப் போற்றியவர்களுமான பல உயர்ந்த ஜன்மங்கள் இணைந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் அடிப்படையில் இடதுசாரி சிந்தனை உடையோராக இருந்தனர். தற்போது சமூக விஞ்ஞான கழகம்
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

குரலின் விதணடாவாதங்கள்
(SSA) ஆய்வறிவு நிலையில் பிரசுரிக்கும் நூல்கள் இலங்கையில் பல கற்கை நெறிகளுக்கு உதவிக்கொண்டு இருக்கின்றன. பல்கலைக் கழகங்கள் செய்யாத சேவைகளை இக்கழகம் வழங்கிக் கொண்டு இருக்கிறது. இவற்றின் வெளியீடுகள் சிங்களம் மற்றும் தமிழிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதேபோல் மும் மொழியிலும் இயங்கும் எமது நிறுவனம் பெண்கள் கற்கை நெறிக்கு சாலச் சிறந்த பணி புரிவதாக பல மட்டங்களில் பல அறிஞர்கள் எடுத்து இயம்பியுள்ளனர். இந்நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிலையில் நோக்கி காணக்கொடுரமாக விமர்சிப்பது தவறான ஒரு செயல் என்பது எமது கணிப்பு. இவர்கள் இப்படி விமர்சிப்பதற்கு முதலாவதாக வைக்கும் காரணம் வெளிநாட்டு பண உதவியை இந்நிறுவனங்கள் பெறுகின்றன என்பதே. இது ஒரு விதண்டா வாதமாகவே எமக்கு படுகின்றது. சர்வதேச பண நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியும் எம் அரசாங்கத்திற்குக் கொடுக்கும் பணத்தினால் வரும் அபிவிருத்தியையும் ஏனைய சலுகைகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களை விமர்சிப்போர் அனுபவிப்பதில்லையா? அந்த உணவுப் பண்டங்களையும், தார் வீதிகளையும், ஏனைய அரச கட்டிடங்களையும் இவர்கள் பகீஷ்கரிக் கிறார்களா?
3) அரசாங்கத்திற்கு பண உதவி அளிக்கும் அதே நிறுவனங்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக் கும் பண உதவி அளிக்கின்றன. ஆகவே நாய் விற்ற பணம் குரைக்காது என்பதல்ல எமது வாதம். எதற்காக அந்தப்பணம் பெறப்படுகிறது? எப்படி செலவிடப்படுகிறது? அதன் பயன் யாரை சென்றடைகின்றது என்பதே முக்கியம். பணம் இல்லாதவர்களின் நலன் கருதி பணம் உடைய வர்கள் பணம் கொடுப்பதில் ஒரு பிழையும் இல்லை. கால்மாக்ஸ் கூட பிலிப்ஸ் வணிக நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று தன்னுடைய முயற்சிகளுக்கு பயன்படுத்தியுள்ளார். இதனால் உலகமே நன்மை பெற்றது. அவருடைய நண்பன் “எங்கஸ்” கொடுத்துதவிய பணத்துக்கு மேலாக இப்பணமும் அவருக்கு உதவியது. ஆனாலும் எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கக்கூடாது. ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மைத் தாமே ஏமாற்றியும், யாருக்காக பணம் பெற்றார்களோ அவர்களையும் ஏமாற்றிய வரலாறும் உண்டு.
(தொடர் 3 ஆம் பக்கம்)

Page 3
(2ம் பக்கத் தொடர்) “NGO” š56 Luggu.....
இப்படிப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை இனங்கண்டு அவற்றை தனியாக விமர்சிக்க வேண்டும். அதற்காக எல்லா அரச சார்பற்ற நிறுவனங்களையும் இவ்வாறு விமர்சிக்க முடியாது. இன்னுமொரு வாதம் இடது சாரிகளால் முன்வைக்கப்படுவது என்னவென்றால் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொழிலாளர் வர்க்கங்களை சிறு சலுகைகள் பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களது தீவிரத்தன்மையை குறைத் து விடுகிறது. அவர்களுக்குள்ளே பிரிவுகளை உண்டாக்குகிறது. இவ்வாதம் தற்போதைய கால கட்டத்தில் பலவிதமான முன்னேற்றங்களும் மாறு பாடுகளும் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில் எடுபடாத வாதகமாகவே தோன்றும். ஏனெனில் தொழிலாளர் வர்க்கம் ஒரு ஒருங்கிணைந்த கூட்டு மையமாக இப்போது இல்லை. சாதி நிலையிலும் பால்நிலையிலும் தங்களுக்குள் பிரத்தியேகமாக பிரச்சினைகளையும் உரிமை மறுப்புக்களையும் இனங்கண்ட இம்மக்கள் தனித்தனியாகவே போராட ஏற்கனவே பிரிக்கப்பட்டுவிட்டனர். இடதுசாரியாரில் பலர் இவர்களது பிரச்சினையை போதியளவு கவனத்தில் எடுக்கவில்லை. வர்க்கப் போராட்டத் தின் பின்வரும் புரட்சியின் பின் எல்லா பிரச்சினை களும் தீர்ந்துவிடும் என்ற இவர்களுடைய வாதம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பொய்த்து விட்டது. இறுதியாக நாம் கூறுவது என்னவெனில் அரச சார்பற்ற நிறுவனங்களை விமர்சிப்பவர்கள் சிறிது அவதானம் செலுத்த வேண்டும். முழுமையான வாதங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பொதுவாக சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
O .. *ကွီဗွီ gamuflăřEFGiudišas GuantinoGUudi Seguna அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெரிவு செய்யப்பட்ட 10 பெண்களில் இலங்கையைச் சொந்த மண்ணிலேயே இடம் பெயர்ந்து அகதியா சிறுபான்மையினருக்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்ட நம்பிக்கை நிதியத்தின் நிருவாக நம்பிக்கையாளரா மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும் பு செய்வதற்கும் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதாக அரசியல்மயப்படுத்தப்பட்ட சூழலில் சிறுபான்ை அமைப்பொன்றை உருவாக்க ஜென்சிலா பாடுபட்( 女女★ கனடாவில் திருக்குறள் பெயர
கனடாநாட்டின் உள்ள வெற்றிபெற்றுள்ளார்.
ஏற்றுக் கொண்டதுதான் பெற்ற அவர்கடந்த டிச அப்போது அவர் தமிழ உறுதி மொழி எடுத்து
கடவுளின் பெயரால் உ
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31
 

சமூகத்திலிருந்த ஒரம் கட்டப்பட்ட மக்களுக்கு அரசோ, அரசியல் கட்சிகளோ செய்யாத செய்ய முடியாத பல நன்மைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் தான் இந்த 50 வருட காலமாகச் செய்து வருகின்றன. ஒரே நாளில் அகதிகளாக வந்த தமிழ் மக்களை கொழும்பு விடுதிகளிலிருந்து வெளியேற்ற எம் அரசாங்கம் மிகவும் கொடுரமான முடிவு எடுத்தபோது மாற்று கொள்கைகளுக்கான அமைப்புத் தான் நீதிமன்றத்தின் மூலம் சென்றவர்களை திருப்பி அழைத்த வரலாற்றை நாம் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அரசியல் கட்சிகள் வாளாக இருந்த சமயம் மாற்றுக் கொள்கை களுக்கான அமைப்பே (CPA) இதைத் தடுத்து நிறுத்தியது. இவ்வகையான வேலைகளைச் செய்யும் அரச சார் பற்ற நிறுவனங்கள் கொலை மிரட்டல் களை பலவிதங்களில் பெறுவதும் நிஷரூட கடிதங்களை பெற்றுக்கொள்வதும் மிகவும் சகஜம் தான். இப்பயங்கர வாதங்களை அவர்கள் எதிர்கொள் கிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. அடிக்கடி கொள்கை மாறும் சந்தர்ப் பவாத அரசியல் கட்சிகளை இப்போது மக்கள் நம்பி நன்மைக்குத் தேடுவதில்லை. அரசசார்பற்ற நிறுவனங்களையே அவர்கள் அணுகுகிறார்கள். அண்மையில் சாந்தியகம் என்ற நிறுவனம் வைத்தியர்களையும் கலாநிதிகளையும் ஒன்றி ணைத்து யாழ்ப்பாண தற்போதைய பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக ஒரு அருமையான நூலை வெளியிட்டுள்ளது. இவை யாவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூகத்திற்குச் செய்யும் சேவைகளாகும் . இவை மெச் சப்பட வேண்டியவையாகும்.
( உயிர்ப்பு என்பது அந்நூலின் பெயர்) ( x x O i65ITENT dosboddias. Gallailgydio II luodi ’துணிச்சல்மிக்க பெண்மணி’ என்ற விருதுக்காக சேர்ந்த ஜென்சிலா மஜீத் என்பவரும் ஒருவராவார். ாக புத்தளத்தில் வசித்துவரும் ஜென்சிலா மஜித், ங்களை, மேற்கொண்ட புத்தளம் பிராந்திய சமூக ாக திகழ்கின்றார். இடம்பெயர்ந்த முஸ்லீம், தமிழ் அந்த சமூகங்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள் ளதுடன், மயினர் மற்றும் பெண்களுக்கான பரந்துபட்ட ஐதாகவும் தெரிவித்துள்ளது.
ால் பதவியேற்ற தமிழ்ப்பெண்
ாட்சித் தேர்தலில் முதல்முறையாக ஒரு தமிழ்ப் பெண் அதைவிட சிறப்பு, திருக்குறளின் பெயரில் அவர் பதவி 1. இந்தத் தேர்தலில் 60 சதவீத வாக்குகளுடன் வெற்றி ம்பர் 6ஆம் திகதிஉறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார். ரின் பொதுமறை எனப் புகழ்ப்படும் திருக்குறள் மீது க் கொண்டார். அவருடன் பதவிஏற்ற மற்றவர்கள் றுதிமொழி ஏற்றனர்.

Page 4
இந்துசமய வழிபாட்டுமுறைகள், சமய
பங்களிப்பு எவ்ெ
இவ்வாய்வு நடவடிக்கையானது மார்கழி 2009 இல் ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்தபோதிலும் ஆய்வு உதவியாளர்களை அந்தந்த பிராந்தியங்களில் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஆய்வு பணியானது இவ் வருடம் தை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தந்த பிராந்தியங்களி லிருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று ஆய்வு உதவியாளர்களுக்கும் பெண்கள் உரிமை ஆய்வு முறை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் களநிலை ஆய்வினை மேற்கொண்டார்கள். இவ் ஆய்வின் போது பெண் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், பெண் தெய்வ வழிபாடானது சமூகத்தில் பெண்களின் நிலையில் எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது. இந்து சமுதாயத்தில் பெண்களுக்குள்ள உரிமை என்ன? ஆரம்பகால இந்து மதத்தில் பெண்களின் நிலை எவ்வாறு காணப்பட்டது? தற்போத எவ்வாறு காணப்படுகிறது. ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அந்தந்த பிராந்தியங்களில் இந்துக் பெண்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது. மற்றும் கோயில் நிர்வாகத்தில் பெண்கள் அங்கத்துவம் வகிக்கின்றார்களா? கோயில் வளர்ச்சிக்கு பெண்கள் எவ்வாறு பங்களிப்பு செய்கிறார்கள். கோயில் கிரியைகளின் போது பெண்கள் எவ்வாறு நிராகரிக்கப்படுகிறார்கள் போன்றவை இவ் ஆய்வில் ஆராயப்பட்டது. இந்து சமயத்தில் பெண்களின் நிலை பற்றி ஒருவர் கூறியதாவது, இந்து சமயம் பற்றி மனித விடுதலை இயக்கங்கள் நிறையவே கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்திய விடுதலை இயக்கங்கள்,
★★★
பிரான்சில், வாழ்க்கைத் துணையினை மனரீதியில்
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் மன ரீதியான குடும்ப வன்முறைகள் அதிகமாக ஏற்படுவதால் அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இதுவரை காலமும் எந்த நாட்டிலும் இல்லாத புதிய சட்டத்தினை உருவாக்கியுள்ளனர்.
குற்றவியல் நீதிபதிகள் இந்த மசோதாவை ஆராய்ந்தபோது எந்தெந்த காரணங்களால் ஒருவர் மன ரீதியில் துன்புறுத்தப்படுகிறார் என வரையறுக்க முடியாமையால் இதனை நீதிமன்றத் தில் நிரூபிப்பது கடினம் எனக் கூறினார். ஆனாலும் இச்சட்டத்தினை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் இடதுசாரிக் கட்சியும் சேர்ந்து முன்மொழிந்து இச்சட்டமானது மத்திய அரசாங்கத்தால் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
குடும்ப விவகார அமைச்சர் நடினி கொறானோ இதுபற்றி பாராளுமன்ற கீழ் வட்டாரத்திற்கு விடுத்த செய்தியில் “மன ரீதியான வன்முறை எந்தெந்த முறையில் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதற் கான சொற் பிரயோகங்களை நாம் அறிமுகப்படுத்தி யுள்ளோம் என்று கூறினார்.
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

FLIfjöst undbleiblianstößigst ாறு உள்ளது?
தலித்துகள்,பெண்கள் அமைப்புகள் எல்லாமே இந்தியாவில் இந்தூத்துவத்துக்கு எதிராக குரலெழுப்பியுள்ளன. அத்துடன் சாதியம், பெண்ணியம் என்பன பற்றியும் நிறையவே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்து சமயத்தில் பெண்கள் எந்த விதத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள் என்று பார்த்தோமென்றால் சடங்குகள் எல்லாவற்றிலுமே பெண்கள் ஒரம் கட்டப்படுகிறார்கள். மேலும் சமயக் சடங்குகளை செய்வதற்கும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் பெண்கள் உதவிகளைச் செய்து கொடுப்பது வழக்கம். சில காலப் பகுதிகளில் பெண்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். சமூகத்தின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் ஆணாதிக்கம் என்ற நிலை ஓங்கி காணப்படுவதால் இந்து சமயத்திலும் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் ஒரம் கட்டப்படுகிறார்கள். ஏனைய சமயங்களுடன் ஒப்பிடுமிடத்து இந்து சமயத்தில் தான் இந்நிலை (ஆணாதிக்க நிலை) அதிகமாகக் காணப்படுகிறது. பண்டைய கவிஞரான ஒளவையாரால் எழுதப்பட்ட ஆத்திசூடியிலும் “உண்டி சுருங்கல;” என்று கூறப்பட்டுள்ளபடி பெண் என்பவள் ஆணின் நலனுக்காக வாழுபவளாகவும், எச்சந்தர்ப்பத்திலும் ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளாகவும் இருக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. பெண்கள் கோயில் கிரியைகளிலும் பங்கேற்பதில்லை. சாதி குறைந்தவர்கள் எவ்வாறு கோயிலின் கர்ப்பக கிரகத்துக்குள் போவதற்கு அனுமதிக்கப்படுவ தில்லையோ அதேபோன்று பெண்களும் கர்ப்பகக் கிரகத்துக்குள் போவதற்கு அனுமதிக்கப் ழவதில்லை. 女
குடும்ப வன்முறைக்குள்ளாக்குவது குற்றமாகும்.
யாராவது இச்சட்டத்தினை மீறும் பட்சத்தில் அதிக பட்சமாக 3 வருட சிறைத்தண்டன்ையும் 75,000 யூரோ (அமெரிக்க டொலர் 91,530) தண்டப்பணத் தையும் செலுத்த வேண்டும். இச்சட்டத்தில் குறிப்பிடப்படட்டபடி மன ரீதியான வன்முறையானது பலமுறை உருவாக்கப்படுகின்ற சில சொற்பிர யோகங்களாகும். இவ்வாறான சொற்பிரயோகங்கள் ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதுடன், அக்குறிப்பிட்ட நபர் மன ரீதியிலும் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது.
இவ்வாறான வழக்குகளை விசாரிக்கும்போது, கண்கண்ட சாட்சிகளை விசாரிப்பதற்காக அழைப்பதுடன் அக்குறிப்பிட்ட நபர் மருத்துவ பரிசீலணைக்கு உட்படுத்தப்படுவார். அத்துடன் அந்நபர் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் அதுவும் குற்றவாளிக்கு சந்தேக நபருக்கு எதிரான ஒரு சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மொறானோ கூறினார். மேலும் ஒருவரை அவமதிக்கிற முறையில் எழுதப்படுகின்ற கடிதங்கள், அனுப்பப்படுகின்ற குறுந்தகவல்கள் (SMS) மற்றும் தொடாச்சியாக அனுப்பப்படும் குறிப்புகள் மன ரீதியான வன்செயல்களில் அடங்கும் என்று கூறினார்.
4

Page 5
2016 இற்குள் சிறுவர்களைே glašas asiyasi GaGa
இலங்கையில் 2016 ஆம் ஆண்டளவில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றாக ஒழிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 32.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட இருப்பதாகவும் இத்தொகையானது சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றாக தடை செய்வது தொடர்பான நிர்வாகக் கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்காகவும் சிறுவர்களை வேலைக்கு அனுப்புகின்ற குடும் பங்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு நேரடி உதவி வழங்கவும் செலவிடப்படவுள்ளது. எமது நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கட்டாயம் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களை வேலைக்கமர்த்துவது குற்றமாகும். இலங்கை அரசாங்கம் கல்வியை இலவசமாக வழங்குவதுடன் பாடப்புத்தகம், இலவச உடை போன்ற பல உதவிகளையும் வழங்கி வருகின்ற போதிலும் இலங்கையில் அணி மையில நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி பல இலட்சம் சிறுவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். எதிர்காலத்தில் இலங்கையில் ஏற்படக்கூடிய பொருளாதார சமூக காரணங்களால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் விகிதமானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அமுல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டமானது பெருந்தோட்டப் ★★★★★
LogăřEfrimus arkena5 (சமயத்தினையும் அரசாங்கத்தினையும் தனித்தனி பிரிவுகளாக்குவதற்கான போராட்டம் ஒன்று உருவாகிறது)
சமயச்சார்பற்ற இலங்கையினை உருவாக்கு வதற்கு ஒவ்வொருவரும் செய்யக்கூடியது. தமது இன, மத வேறுபாடு என்ற மனப்பான்மையை களைந்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பது, அத்துடன் அதுவே மற்றவர்களை திருத்துவதற்கு நாம் எடுக்கும் மிகப் பெரிய முயற்சியுமாகும்.
அரசியல்வாதிகள் சமயத்தினையோ அல்லது சமய செல்வாக்கினையோ ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஆட்சி செய்வதை நிறுத்துவதற்கான காலம் வந்துவிட்டது.
அரசியல் ஆய்வும் விடியலுக்கான காரணமும்: சமயத்தினையும் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசினையும் தனித்தனியாகப் பிரித்து சமய செல்வாக்கு இல்லாத ஆட்சியை அமைத்தல். நன்றி.
www.secularsrilanka.com
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

வலைக்கமர்த்துவதை முற்றாக L. BelenajLLib
பகுதிகளில் உள்ளடக்கப்படுவதில் சில தடைகள் உள்ளன.
1) பெருந்தோட்டப் பகுதிகள் நகரங்களி லிருந்து வெகு தூரத்தில உள்ளதால் போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. 2) தமிழ்மொழி உத்தியோகத்தர்கள்
நியமிக்கப்படாமை. 3) மேலும் பிரதேச சபைகளின் சேவைகளை பெருந்தோட்டப் பகுதி களுக்கு வழங்குவதில் பிரதேச சபை சட்டங்களும் தடையாக உள்ளன.
2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப் படுவதை முற்றாக ஒழிக்க வேணி டுமானால் அரசின் சேவைகள் பெருந்தோட்ட பகுதியை சென்றடைய வேண்டும். இதற்காக முழு மலையகமும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். மலையகப் பகுதிகளில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் இது தொடர்பாக தங்களுடைய ஆலோசனைகளை வழங்கி அரசியல்வாதி களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசின் இத்திட்டமானது மலையகத்தைச் சென்றடைந்தால் மட்டுமே 2016 ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழில் அமர்த்தும் விடயத்தை முற்றாக ஒழிக்க முடியும்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகள்
O பால்நிலை சமத்துவத்திற்கான பயி லரங்கு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் ஆடி 17 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்றது.
O கடந்த புரட்டாசி மாதம் 1ம், 2ம், 3ம், 4ம் திகதிகளில் எமது நிறுவனத்தில் நரல்களின் கண்காட்சி நடைபெற்றது.
O பேர்னடின் சில்வா ஞாபகார்த்த நாடக விழா கார்த்திகை 4ஆம் திகதி புஞ்சித் தியேட்டரில் நடைபெற்றது.

Page 6
சுவிட்சலாந்தின் முதல் பெண் சபாநாயக *Guaööntag5h” (Pascale Bruderer)
சுவிட்சலாந்தில் முதற் தடவையாக பெண் சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிட்சலாந்து சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமை நிலையில் உள்ள பெஸ்காலே புறுதர் (வயது 32) 182 க்கு 174 வாக்குகள் பெற்றுத் த்ெரிவாகியது குறிப்பிடத்தக்கது. சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படுகின்ற சபாநாயகர் அடுத்துவரும் 12 மாதங்களுக்கு இப்பதவியினை வகிப்பார். அத்துடன் இவர் மேற்சபை மற்றும் கீழ்ச்சபைக்கான சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 24 வயதில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த இவர் அரசியலில் மிகவும் வேகமாக முன்னேறிவருபவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகங்களிடையே ஒன்றிணைவு (Social Integration) சமத்துவமாக நடாத்துதல் என்பவற்றில் அக்கறை கொண்டவர் என அந்நாட்டு பத்திரிகைகள் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் பெண்கள் 1971 ஆம் ஆண்டு வரை வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் இன்று பெண்களின் அரசியல் பிரதிநிதித் துவம் 24% ஆக உள்ளது. 40 வருடத்திற்கு குறைந்த காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட அதிகமான பிரதிநிதித்துவத்தை சுவிஸ் பெண்கள் பெற்றிருக்கிறார்கள். மாறாக 1931 ஆம் ஆண்டி லிருந்து வாக்குரிமையைப் பெற்றுக் கொண்ட இலங்கையில், உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய இலங்கையில், பெண்களின் அரசியல் பங்களிப்பு இன்றும் 5% ஆகவே உள்ளது.
★★★
பால்நிலை சமத்துவத்திற் மேற்கூறிய பயிற்சிப் பயிலரங்கு யாழ்ப்பாண பிராந்தி 2010 இல் நடைபெற்றது. இப்பயிற்சிப் பயிலரங்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள். மு: வகிபாகம் என்ன? எமது நாட்டு சட்டங்கள் பென பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என அத்துடன் வீட்டு வன்முறை தொடர்பான சட்டம் காரணங்கள் என்ன? இச் சட்டமானது வீட்டு வன்( என்பனவெல்லாம் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலு (சொத்து மற்றும்திருமண பந்தம்) என்பவை தொடர் ஆராயப்பட்டது.
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

அவுஸ்திரேவியத்தேர்தலில்முதல் gogůGuerů
எட்டு வயதுக் குழந்தையாக அவுஸ்திரேலி யாவுக்குச் சென்ற பிராமி ஜெகன், இன்று 30 வயதில் அவுஸ்திரேலிய நடாளுமன்றப் பொதுத் தேர்தலில், மேலவைக்கு (செனட்) போட்டியிடு கிறார். தமிழ் பெண் ஒருவர் வெள்ளைக்காரர்கள் மட்டுமே போட்டியிடும் பொதுத் தேர்தலில் அவர்களுக்குச் சமமாக அரசியல் களம் காண்பது ஆச்சரியம் தான். சிறு வயதிலிருந்தே அவுஸ்திரேலியாவில் வளர்ந்த பிராமி அவரது 22 ஆவது வயது வரை இலங்கைக்கு வந்திருக் கவில்லை. இலங்கை நிகழ்வுகளைச் செய்தி களாகப் படித்திருந்தாலும், போரின் கோரத் தாண்டவத்தை நேரில் சென்று பார்த்தபோது நிலைகுலைந்து போனதாகக் கூறுகிறார். அதன் தாக்கத்தால், இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதழியல் படித்தேன் என்றும் அதனைத் தொடர்ந்து கிரீன்ஸ் கட்சி சார்பாகப் போட்டியிடுவதாகவும் கூறுகின்றார். கிரீன்ஸ் கட்சியானது சராசரியாக 12 முதல் 16 சதவிகிதம் வரை வாக்குகளைக் கொண்ட, அவுஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய கட்சியாகும். நேர்மை, மனித நேயம், சுற்றுச் சூழல், வறியவர்களைச் சுரண்டுதலை எதிர்த்தல், எல்லோருக்கும் எல்லாம் போன்ற கொள்கை களைத் தன் உயிர்நாடியாகக் கொண்ட கட்சி கிரீன்ஸ் கட்சி மட்டுமே.
SMED Lullayligij
திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் 17-20 ஆடி யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பல துறைசார் தல் இரண்டு நாட்களில் எமது சமூகத்தில் பெண்களின் ண்களை எவ்வாறு பாதுகாக்கின்றது. சட்டங்களைப் iன என்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
என்றால் என்ன? வன்முறைகள் ஏற்படுவதற்கான முறைக்கு உட்படுபவரை எவ்வாறு பாதுகாக்கின்றது ம் தேச வழமைச் சட்டம் தொடர்பான விளக்கம் பாக என்ன விளக்கங்களை வழங்குகின்றது எனவும்

Page 7
சமாதானம்: ஒரு அறிக்கையின் பிரகாரம் பெண்களின் பங்களிப் பானது மிகக்குறைவு
சமாதானத்தை உருவாக்குதல்/ஏற்படுத்துதல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளில் பெண்களை வேலைக கமர்த்துதல் தொடர்பாக ஐக்கிய நாட்டுச் சபை பத்து வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த கூட்டறிக்கை முடிவானது இதுவரை எட்டப்படாத ஒரு இலக் காகக் காணப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் அரச ஊழியர்கள் இக்கூட்டறிக்கை சம்பந்தமான பணிகளைச் சரிவர செய்வதில்லை. அவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணராமல் புறக்கணிக்கின்றனர் என்பது உண்மை யும் புதுமை யான செயலாகவும் காணப்படுகிறது என்று MIT நிறுவனத்தின் இயக்குனரான ஜோன் ரிர்மன் (John Timan) கூறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கான சம உரிமை, சமாதானத் தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பிரச்சினை களைத் தீர்த்தல் போன்ற செயற்பாடுகள் மற்றும் சமாதானம் பாதுகாப்பு போன்றவற்றைப் பேணிப் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளின் பெண்க ளின் பங்களிப்பு முக்கியம் என்பதை முதலில் கண்டறிந்தது ஐக்கிய நாடுகள் சபைதான். மேலும் பெண்களுக்கெதிரான குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்தல், போர் காலங்களில் பெண்கள், இளம் யுவதிகள் மீதான பாதுகாப்பினை அதிகரித்தல் முக்கியமாக பாலியல் வல்லுறவு, பெண்களுக்கெதிரான வன்முறை போன்றவற்றை கண்காணிக்கும் செயற்பாடுகளில் கூடுதலாக பெண் களை ஈடுபடுத்தவேண்டும் எனக் கண்டறிந்துள் ளது. இவ்வாய்வானது விரிவான நேர்காணல்கள் அரசாங்க தகவல்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அனுபவத்தின் உதவியுடன் செய்யப்பட்டுள்ளது.
★★★★★ புரட்சித் தலைவி ஆங்சான் சூகி விடுதலை
மியன்மாரின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவியான ஆங் சான் சூகி கடந்த 21ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவ ஆட்சியின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா ஜனாதிபதி
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

பராக் ஒபாமா ஆங் சான் சூகியை ஒரு ஹீரோ என்று வர்ணித்ததுடன், அவரது காலங்கடந்த விடு தலையை அமெரிக்கா வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரோனும் அதே கருத்தைத் தெரிவித்ததுடன் ஆங் சான் சூகி பேச்சுச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லோருக்கும் ஒரு உந்து சக்தியாகத் திகழ்கிறார் என்றும் கூறியுள்ளார். இதுவரையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ந்ைத சந்தர்ப்பமும் இல்லாமல் செய்யப்பட்டிருந்தாலும் இன்று நடமாடும் சுதந்திரம், மற்றும் பேச்சுச் சுதந்திரம் போன்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுவில்டு அரசியல் செயற்பாடுகளில் முழுமையாகப் பங்கு பற்றலாம் என ஐரோப்பிய ஆணையாளர் ஜோஸ் மனுவேர்தூல பரோஸ்னோ கூறியுள்ளார். இவரை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் வாழ்த்து
கின்றது.
யாழ்ப்பாணத்து பெண்கள் நிலைபற்றி எமது யாழ்ப்பான ஆய்வாளர் எழுத்தாளர் கவிஞர் எஸ்.கருணாகரனுடன் நடாத்திய நேர்காணவிலிருந்து சில முக்கிய அவதானிப்புகள்.
ஒரு இலக்கிய ஆய்வாளர் என்ற வகையில், நீங்கள் இராமன் சீதையை தீக்குளிக்கச் சொன்னது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்று வினவிய போது அவர் கூறியதாவது அது மிகவும் தவறானது ஏனெனில் சீதை விரும்பி இராவணனுடன் போகவில்லை. பலாத்காரமாகக் கடத்தப்பட்டவள் ஆனாலும் அவள் தன்னை நிருபிக்க நிர்பந்திக்கப்பட்டது பரிதாபத்துக்குரிய விடயமாகும். மேலும் இராமனுக்கு சீதையில் நம்பிக்கையிருந் ததாகவும், நாட்டு மக்களுக்கு நிருபிக்கவே அவளை தீக்குளிக்கச் சொன்னார் என சொல்லப்படுவது மிகப்
பெரிய குற்றமாகும் என்று சொன்னார்.
யாழ்ப்பாணத்தில் வெளிவரும் சஞ்சிகைகள் பற்றி அவர் கூறுகையில். ‘அம்பலம்’, ‘மறுபாதி’, ‘கலைமுகம் போன்ற சஞ்சிகைள் பெண்ணியம்பற்றிய பிரக்ஞையுடன் செயற்படுகின்றன. எழுத்தாளர்கள் இவ்விடயத்தில் கவனமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். யாழ்ப்பாணப் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என கேட்ட போது பெண்கள் நிறையப் பேர் கல்வி கற்கிறார்கள். நல்ல பதவிகளில் உள்ளார்கள் என்றும் கூறினார்.

Page 8
பால்நிலை எண்ணி
அதிகாரமளித்தல் 'எம்பவர்மென்ட்" என்ற ஆங்கிலச் சொல் லைத் தமிழில் அதிகாரமளித்தல் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம். 1995 ஆம் ஆண்டு கோப்பன்வேற்கள் நகரில் இடம் பெற்ற சமூக அபிவிருத்தி தொடர்பான உச்சி மாநாட்டின் (World Summit on Social Development) SusL60Tub இவ்வாறு குறிப்பிட்டது: சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளித்தல் அபிவிருத்தி செயல் முறையின் பிரதான நோக்கமாகும். நலிந்த பிரிவினர்கள் சமூகத்தில் கிடைக்கும் பிரதான வளங்களில் ஒன்றாகும். இந்த மாநாடு இச் சொல்லைப் பிரபலப் படுத்தியது, அபிவிருத்தித் துறையின் முக்கிய கலைச்சொற்களில் ஒன்று என்ற தகுதியை இச்சொல் பெற்றது.
நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளித்தல் என் பதன் நடைமுறை விளைவு என்ன? சமூகத்தில் இருந்து வரும் அதிகார உறவுகள்(Power Relations) மாற்றமுறுவதே இதன் நடைமுறை விளைவாகும். அதிகாரமளித்தல் மூலம் நலிந்தவர்களான , வசதி வாய்ப்புக்கள் அற்ற மக்கள் பிரிவினருக்கு ஆற்றலை அளிப்பதனால் அபிவிருத்திக்கான தடைகள் நீக்கப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரங்களை அளிப்பதன் மூலம் பால்நிலைச் சமத்துவமின் மையினை நீக்க முடியும்.
பேண்தகு மானுட அபிவிருத்தியும், பால்நிலைசார் விஞ்ஞானமும்
1. தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வினைத்திறன் உடையதாக விஞ்ஞானத்தை யும், தொழில்நுட்பத்தையும் எல்லாாப் பெண்களும் பயன்படுத்தக்கூடியதாக விஞ்ஞான, தொழில்நுட்பவியல் சார் எழுத்தறிவில் நிலவும் தந்தையாதிக்க இறுக்கப்பாட்டினை முடிவுக்குக் கொண்டு வருதல்.’ 2. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் விஞ்ஞான தொழில்நுட்பவியல் உயர் பயிற்சிக்கான வாய்ப்புக்களை வழங்குதல். 3. விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் சார் நிறுவனங்களுள், கொள்கை வகுப்பு, தீர்மானம் மேற்கொள்ளும் விடயப் பரப்பினுள் பால்நிலை சார் கூருணர்வை (Gender sensitiveness) LL(5$glg56). 4. ஆய்வு முன்னுரிமைகள், வடிவமைப்புகள், பிரயோகித் தல் என்பவற்றில் இருபாலாரின் அபிலாஷைகள், தேவைகளின் அடிப்படையில் கணக்கில் எடுப்பதனை உறுதிப்படுத்துதல். 5. ஆண்களும், பெண்களும் தமது வாழ்க்கைத் தரத்தையும், வாழ்க்கைப் பண்பையும் முன்னேற்றுவதற் காக சம அளவில், தகவலையும், அறிவையும் பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்துதல். 6. நிலைத்து நிற்கும் வகையில் மானுட அபிவிருத்தியை அசமத்துவம் இன்றி முன்னெடுக்கத் தக்க வகையில் உள்ளுர் அறிவுப் பாரம்பரியத்தையும் பால்நிலைப் பட்ட இயல் பூக்கங்கள், திறன்களையும் உரியவாறு பயன்படுத்துதல்.
சசீதரன்.
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

ணக்கருக்கள் - 6
Empowerment)
O பெண்களின் வறுமையை நீக்கல்
O கல்வி வாய்ப்புக்களை பெறுவதில்
உள்ளதடைகளை நீக்கல்
0 சுகாதார வசதிகளை பெறுவதில் உள்ள
தடைகளை நீக்கல்
O பெண்கள் மீதான வன்முறையை
ஒழித்தல்
0 திட்டமிடல், செயற்படுத்தல், மீளாய்வு செய்தலும் மதிப்பிடுதலும் ஆகிய
பணிகளில் முடிவெடுக்கும் அதிகாரம்
உடையவர்களாக பெண்களை
ஆக்குதல். என்பன அதிகாரமளித்தலுக்கு உதவும் செயற் திட்டங்களாகும். அதிகாரமளித்தல் என்ற கருத்தாக் d5605 gipai GLDLburiG (Capacity Building) என்ற இன்னொரு கருத்தாக்கத்தில் இருந்து வேறுபடுத்தி நோக்குதலும் அவசியம். ஆற்றல் மேம்பாடு, நிறுவனங்களின் செயல் திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளையும், அவற்றில் பணியாற்றும் ஆளணியினரின் அறிவு, திறன்கள் என்பவற்றை மேம்படுத்தலையும் குறிப்பிடுகன்றது. அதிகாரமளித்தல் விரிந்த பொருள் உடைய சொல் ஆகும்.
அதிகாரமளித்தல் செயற்பாடுகள் யாவற்றி லும் மிக முக்கியமானது ஆணாதிக்க மதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்குதல் ஆகும். ஏனெனில் பெண்கள் இயல்பிலேயே பலமற்றவர்கள், அவர்களின் உள்ளார்ந்த பலவீனம் (Inherent WeakneSS) அவர்களின் பின்னடைவுக்குக் காரணம் என்றவாறான கருத்து சமூகத்தில் பலமாக வேரூன்றி யுள்ளது. ஆகவே மதிப்பீடுகளின் முறைமை (Value System) உடைக்கப்பட வேண்டும் என்று பெண்ணி யவாதிகள் கூறுவர்.
★★★★★ - சண் - தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டிருக்கும் றிசானா'
றிசானா, அவளது 17வது வயதில் (2005ம் ஆண்டு) குடும்ப நிலை காரணமாக பணிப்பெண்ணாக சவூதி அரபியாவுக்கு சென்றிருந்தார். அங்கு சென்று ஒரு சில வாரங்களில் நான்கு மாத குழந்தைக்கு பால் பருக்கிக் கொண்டிருந்த நிலையில் அக் குழந்தை தவிர்க்கமுடியாமல் இறந்து போனது யாவரும் அறிந்த விடையம். ஆனாலும் அக் குழந்தையை கொலை செய்தாள் என்ற பெயரில் றிசானா இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை வளர்ப்பதில் முன் பின் அனுபவமில்லாததால் ஏற்பட்ட எதிர்பாராத மரணத்தினால் றிசானா மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. றிசானா மீது சுமந்தப் பட்டிருக்கும் குற்றத்திலிருந்து அவர் விரைவில் விடுபட வேண்டும் என நாமும் பலமுயற்சிகளை எடுத்தோம் அவை ஓரளவு பயன் அளித்துள்ளன.

Page 9
ஒரு கவிதையும், அக்கவிதை பற்
இவ்வாண்டின் நடுப்பகுதியில் 'பெண் சஞ்சிகையில் (வெளியீடு, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம்) வெளிவந்த பாரதி கெனடியின் கவிதை, 'அன்பு கலந்த மற்றுமோர் கணவனுக்கு அழகு மனைவியின் நன்றிகள்." பற்றிய ஒரு சிறு இரசனைக் குறிப்பே இதுவாகும்.
கவிதையின் வடிவம் புதுக்கவிதை சார்ந்ததாக வெளிப்பட்டாலும், கவிதை அமைப்பினுள் ஒரு மரபோசை உள்முகமாக ஒலிப்பது கவிதையை வாசகர்கள் உள்வாங்க எளிதாய் இருக்கிறது. உயிர் உணர்வற்ற சடப்பொருளான மோட்டார்வண்டியை கணவனுக்கு ஒப்பாக்கியிருப்பது சமகால சமூகக் கட்டமைப்பில் மாறிவரும் மணமுடித்த பெண் களின் நேர்நிலையான ஆளுமை மாற்றத்தை குறியீட்டு படிமப்பாங்கில் எடுத்துரைக்கிறது. கவிதையை வாசிக்கும் ஏனைய பெண்களுக்கும் சில வாழ்வியல் நடைமுறைசார் பிரச்சினைகளுக் கான தீர்வுகளை கூறாமல் கூறி நிற்பது சிறப்பு. பெண்களின் கவிதைகள் ஒரே புலம்பல் L DLL JILDT60TG60)G) u, ஒப்பாரித் தன்மை மிக்வை, அறிவு நுட்பம் சாராத உணர்ச்சிமயமானவை என்று Bias ஆக முற்சாய்வுடன் விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் பாரதியின் கவிதையைக் கட்டாயம்
உள்வாங்குதல்நலம்.
இறுதியாக எனக்கு இக்கவியை வாசித்ததும் பிரபல ஆங்கில நாடக ஆசிரியரான இப்சனின் GuiTLbaOLD 69G) (The Doll House) 15ITL5lb நினைவுக்கு வந்ததோடு, காலம்/வெளி தாண்டி இப்சனின் உணர்வலைகளுக்கு பிரதிபலிப்பைச் செய்கின்ற பெண் சித்திரிப்பின் வார்ப்பாக இக்க விதை பிரசவிக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணமும் தோன்றுகின்றது. குடும்பத்தை உடைக்காமல், தனது சுய ஆத்ம சக்தியை வளர்த்துக்கொள்ளும் நவீன பெண்னை பாரதியின் கவிதையில்தரிசிக்கின்றோம். பாரதி தொடர்ந்து இத்தகைய நேர்நிலையான கவிதைகளைப் படைக்க வேண்டும்.
- சந்திரசேகரன் சசீதரன் -
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31

றிய ஒரு வாசகரின் விமர்சனமும்
இதோ அந்தக் கவிதை.
அன்பு கலந்த மற்றுமோர் கணவனுக்கு அழகு மனைவியின் நன்றிகள்.
காலை முதல் மாலை வரை என்னுடனே வாழ்கின்றாய், காலையில் பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளைக் கூட்டிச் செல்ல என்னுடன் வருகின்றாய் பிள்ளைகளின் தோற் பைகளை உன்தோள்மேல் தாங்குகின்றாய்
சந்தை, கோயில் கலிக்க்ாம்ல் வருகின்றாய் என்னுடன்
என் உணர்வுகட்டு மதிப்பளித்து பொறுமையுடன் எனக்காகக் காத்திருக்கின்றாய் கடைத்தெருவில் உனக்கு அலுப்புமில்லை, சலிப்புமில்லை பள்ளிக்கூடம் விடபிள்ளைகளை ஏற்றி இறக்க என்னுடனே வருகின்றாய் மாலையில் ரியூசனாம் கொண்டுபோய் விடுகின்றாய் கொண்டு வந்து விடுகின்றாய்,
நான் எவரையுமே எதிர்பார்ப்பதில்லை என்னுடன்நீஇருப்பதனால் நான் விரும்பு நேரம் நீ என்னுடனே வருவாய்.
என்னுடன்நீ இல்லையென்றால் செயலிழந்தது விடுவேன்நான்
தாலிகட்டவில்லை என்றாலும் பந்தங்கள் பலகோடி என் உள்ளத்து கிடக்கையெல்லாம் கொட்டுகின்றேன் உன்னுள் உணர்ந்துகொள் என் உணர்வுகளை
என்னைப் போன்ற பல பெண்களுக்கு செயற்கையின் ஜடமான மோட்டார் வண்டி ஆனாலும் நீதான் என் மற்றுமோர் கணவன்
(நன்றி- பெண் சஞ்சிகை)
(2009 தொகுதி 14, இலக்கம் 2)
9

Page 10
பேர்னடின் சில்வா ஞாபகா
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் காலஞ்சென்ற இயக்குனர்களில் ஒருவரான பேர்னடின் சில்வாவின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட நாடகப்பிரதி எழுதும் போட்டியானது சென்ற வருடம் தமிழ் மற்றும் சிங்களப் பத்திரிகைகளில் மூலமாக அறிவிக்கப்பட்டு நாடகப் பிரதிகள் பெற்றுக்கொள்ளப் பட்டது. அவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு நாடகங்களை மேடையேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்தவகையில் இந்நாடகங்கள் 04ம் திகதி கார்த்திகை, 2010 புஞ்சி தியேட்டரில் மேடையேற்றப்பட்டது. அந்நாடகங்களின் சுருக்கம் வருமாறு
01. "என்னைப் போகவிடு"
(நாடக ஆசிரியர், உபாலி கமகே - குருநாகல்)
இந்நாடகமானது, பொதுவாக எல்லா இடங்களிலும் நடைபெறுகின்ற ஒரு குறிப்பை எடுத்துரைக்கின்றது. ஆணும் பெண்ணும் சமமான வர்கள் என்று நாம் பொதுவாகக் கூறினாலும், சமூகம் பெண்களை சமமாகப் பார்ப்பதில்லை. பெண்களை நாம் கருதுகின்ற/அணுகுகின்றவிதம் FrîuurT என்பதை சிந்தித்துப் பார்க்க இந்நாடகம் உதவும்.
ஒரு பெண் “தவறான” முறையில் பிறந்த குழந்தையை வீதியில் ஒரத்தில் மறைத்து வைத்து விட்டு விலகிச் செல்ல முயல்கின்றாள். அந்நேரத் தில் ஒரு காவலாளி அதைப் பார்த்துவிட்டு அவளை வழிமறித்து ஏன் குழந்தையை மறைத்து வைத்து விட்டு போகிறாய் நீ யார்? இக் குழந்தையின் தகப்பன் யார்? என கேட்கின்றான். அவளை பொலிஸில் ஒப்படைக்கப் போவதாகக் கூறி பொலிசாருக்குத் தகவல் கொடுக்கின்றான். அத்துடன் நின்று விடாமல் மேலும் மேலும் கேள்வி கேட்கின்றான். அதனால் விரத்தியடைந்த அப்பெண் இக்குழந்தையின் தகப்பன் நீயாகவும் இருக்கலாம். யாராகவும் இருக்கலாம் எனக் கூற காவலாளி கலக்கமடைந்து மேலும் மேலும் கேள்விகளைத் தொடுக்கின்றான். அப் பெண் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவள் 6T67 அறிந்து கொண்டதும் தானும் அவளுடன் தவறாக பழக முயல்கின்றான். இது தான் இவ்வுலகத்தின் நியதியாக உள்ளது. பொதுவாக ஆண்கள் கலை, கலாச்சாரம் பேணுபவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டாலும் ஒரு பெண் தவறிழைப் பதற்கு அவள் மட்டுமே காரணமில்லை என்பதைப் புரிந்து கொள்வதில்லை. ஆயினும் இந்நாடகத்தின் இறுதியில் காவலாளி அப்பெண் மீது இரங்கி அவளை பொலிசாரி டமிருந்து தப்புவித்து அவளை அவ்விடத்திலிருந்து போக அனுமதிக்கின்றான்.
பிரவாகிவி டிசம்பர் 2010 இதழ் 31

ாத்த நாடக விழா - 2010
02. நியதிகள் மாறுவதில்லை"
(நாடக ஆசிரியர் தமிழரசி கோவிந்தசாமி, யாழ்ப்பாணம்)
நியதிகள் மாறுவதில்லை அல்லது மாற்றப்பட வேண்டியநியதிகள்
காலமாற்றம் மனிதர்களையும் மாற்றுகின்றது என்ற எடுத்துரைஞர்களின் கருத்துப் பகிர்வுகளோடு நாடகம் ஆரம்பமாகின்றது. முதியவரை மையமாகக் கொண்டே கதை நகர்த்தப்படுகின்றது.
ஆரம்பத்தில் முதியவர்தனிமையில் வாடும்நிலை காணப்படுகின்றது. இத் தனிமையினை போக்குவ தற்காக சிறுவயதில் வியைாடித் திரிந்து தூரத்து உறவுக்காரரான கந்தையாவை தனக்கு துணையாக வைத்துள்ளார். முதியவர் மீது பாசம் கொண்ட கந்தையா ஒரு பணியாள் போன்று முதிய வருக்கு தேவையான அனைத்துக் கடமைகளையும் செய்கின்றார். இத்தனை நெருக்கமாக இருந்த போதிலும் முதியவருடைய இடைக்கால வாழ் வியல் சம்பவங்கள் தெரியாத கந்தையா தன்னைப் போல் முதியவரும் ஒரு அநாதை என்றே எண்ணு கின்றார். ஒரு நாள் முதியவரின் வாயிலிருந்து எதிர் பாராத விதமாக வந்த வார்த்தை பரிமாற்றங் களிலிருந்தே கந்தையா (பணியாள்) அவர் ஒரு குடும்பஸ்தன் என்பதை அறிந்து ஆச்சரியமடை கிறார். அந்த சமயத்திலேயே முதியவர் தன் கடந்த காலங்களினை எடுத்துரைக்கின்றார்.
இங்கு உலாவுகின்ற முதியவர் மூன்று பிள்ளைகளுக்கு தந்தை, இரண்டு ஆண் பிள்ளைகளும், ஆசைக்கொரு பெண்ணுமாக அன்புடனும் அரவணைப்புடனும் வளர்த்து பெரியவர்களாக்கி இரண்டு மகன்களுக்கும் லண்டன் விசா எடுத்து வெளிநாடு அனுப்ப எண்ணுகின்றார். இந்த சமயத்தில் இரண்டு மகன்களும் ஒன்றாக லண்டன் செல்லுகின்றனர். இதில் மூத்த மகன் கைது செய்யப்படுகின்றான். இரண்டாவது மகன் சிவா உழைத்து தன் தங்கைக்கு மாப்பிளை பார்த்து கூப்பிடுகின்றான். சீதனம் போதாது என்று எண்ணுகின்ற மாப்பிள்ளை மனைவி வீட்டு தொடர்புகளை அறுக்கும்படி கூறுகின்றார். .இளையர்:கிகனும் உழைப்பில் கவனம் செலத்தினாலும் சூழ்ந்து வந்த பிரச்சனைகள் வெள்ளைக்காரியை திருமணம் செய்யவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. இவற்றால் மனமுடைந்து முதியவருடைய மனைவியும் இறந்துவிட முதியவர் தனித்துப்போகிறார். சொந்தங் களையும் இழக்கின்றார்.
மேற்கூறப்பட்டவை யாவும் முதியவர் கூறுகின்ற நினைவுக்காட்சியாகவே நகர்த்தப்படும். இத் தனிமையிலும் முதியவர் தன்னை அடிக்கடி தேடிவரும் சின்னஞ்சிறார்களால் சுகம் காண்கின் றார். அவர்கள் முதியவரிடம் வருவதும் கதை கேட்பதும், ஆடிப்பாடுவதும் முதியவருடைய உளமாற்றத்துக்கான சிறந்த வழியாக நகர்த்தப்படுகின்றது.
இறுதியாக ஆரம்பத்தில் வந்தது போல் எடுத்துரைஞர்கள் வந்து மாற்றப்படவேண்டிய நியதிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு நாடகம் முடிவடையும்.
10

Page 11
நரலக புத
ஆசிரியர் - ஆதித் தூயர்(ஃபஹிமா ஜஹான) ஃபஹிமாஜஹான’ தேர்ந்தெடுத்த கவிதைகளின் ெ கவிதைகள் பெண் என்ற உயிரியல் அம்சத்தில் சமூகம் சூழலை எதிர்த்து மீறி மானுடப் பெருெ கொண்டவை. சமத்துவமான அன்பையும், பாசத்ை என்பவற்றின் குரலாகவும் இயற்கையின் குரலாகவும் ஆ எளிமையானவை.
சப்தங்கள் (ஆசிரியர் வைக்க வைக்கம் முகம்மது பஷரின்
மற்றும் முனுசீட்டு விளையாட் ஒரே உலகத்தின் இரு வேறு
இரண்டாம் ஜாமங்களின் கதை(ஆசிரியர் சல்மா)
இந்த நாவலைப் படிக்கிற எவரும் சல்மாவின் கவி இருக்க முடியாது. அவற்றுள் சந்தித்த சில பெண்க பார்க்கிறோம். சல்மாவின் மொழி இந்த நாவலிலி செய்திருக்கிறது. கவிதைகளில் தென்பட்ட இளம் ெ மூதாட்டிகள் நடுவயது பெண்கள் பலரும் இதில் இந்தநாவல் இஸ்லாமிய பெண்ணுலகைப் பெண்ணி
அம்பை சிறுகதைகள் (19721960களின் பிற்பகுதியில் எழு வெளிப்படுத்தும் வகைமையி கதைகளில் பெண்கள் உ கோபதாபங்கள், சமரசங்கள் வெளிப்படுகின்றன.இத் தொகு மூலையில் ஒரு சமையலை தொகுப்புகளிலுள்ள கதைகள்
அபிதா (பா.ச.ராமாமிருதம்)
தன் காலத்துப் படைப்பு மொழியை அதன் உச் படைப்பாளர்களில் லா.ச.ராமாமிருதம் முக்கியமான வாசகர்களின் மனதில் அழியாக் காவியமாக வீற்றி
காலச்சுவடு பெண் படைப்புகள் 1994-2004 தொகுப்பாசிரியர் - ராஜமார்த்தாண்டன. பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கி வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படட பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்ப இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடகளையும் படைப்பாளர்களின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31
 
 

வரவுகள்
தாகுப்பு இந்நூல் . இந்தக் ஊற்றி நின்று ஆணாதிக்கச் வளியில் விரியும் வேட்கை தயும், சமத்துவமான காதல் மையும் இவரின் கவிதைகள்
f
5ம் முகம்பது பவர்) புகழ் பெற்ற இரண்டு குறு நாவல்கள் - “சப்தங்கள்” டுக்ளின் மகள் ஆகியன இத்தொகுப்பில் உள்ளன. | தோற்றங்கள் இந்த குறு நாவல்கள்
སོ།།
தைகளை நினைவு கூறாமல் ளை நாம் இந்த நாவலிலும் ) விந்தாரமாகப் பிரயாணம் பெண்களோடு கூட சிறுமிகள் வருகிறார்கள். சல்மாவின் ன் கண்களால் பார்க்கிறது.
2000) தத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை லான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி, இவரது றவுச் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக ப்பில் அம்பையின் சிறகுகள் விரியும் (1976), “வீட்டின் ற (1986)”, "காட்டில் ஒரு மான்(2000)” ஆகிய
அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
*சத்திற்கு எடுத்துச் சென்ற ாவர்."அபிதா தன் காலத்து நக்கும் ஒரு படைப்பு.
யத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வற்றின் தொகுப்பு இது நவீனத் தமிழன் முன்னோடிப் ளியான கவிதா வரையிலான தமிழகம் மட்டுமல்லாமல்
உள்ளடக்கிய இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ரகள், நேர் காணல்கள், மதிப்புரைகள், விவாதங்கள்
11

Page 12
மொழி பெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினது கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் ?" மற்றும் சமகால மொழி பெர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர், வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் பூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படம் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்.
*,
WERC
Auditorium Charges
Hall Charges A/C
* Full Day (8 hours) 8,500/=
* For TWO Hours 3,500/=
* Every Additional
One Hour 750/=
Facilities
Television 400/= VCR 300/= Overhead Projector 300/-
MultiMedia Projector 5,000/=
Mikes (each) 75/-
Simultaneous Translation Unit 5,000/=
Head Phones (each) 300/=
Service Charges 10% of the total amount Food from out will not be permitted Maximum Seating capacity 50 Ample Parking Space.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
58, தர்மராம வீதி, கொழும்பு 06 தொலைபேசி 2595296, 2590985 தொலைநகல் 2596313
ஆக்கம் கோபிகா, மகேஸ், செல்வி
Women's Education & Research Centre
58, Dharmarama Road, Colombo 06 Sri Lanka. T.P. 2595296. 2590985 Fax: 2596313 E-mail : Womedre GSltnet.lk
பிரவாகினி டிசம்பர் 2010 இதழ் 31
 
 

எமது நிறுவனத்திற்குள் இவ்வருடத்திற்குள் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள்
0 லக்மினி பிறேமரத்ன இவ்வருடம் மாசி மாதத்தில் எமது நிறுவனத் தில் இணைத்து ஆறு மாதங்கள் வரை எம்முடன் பணியாற்றி தற்போது மேற்படிப்பினை மேற் கொள்வதற்காக இங்கிலாந்திற்குச் சென்றுள் 6TITIT.
0 ஹர்சனி பின்னவல இவர்கள் இருவரையும் எமது நிறுவனம் அன்போடு வரவேற்கின்றது.
பிரியாவிடை
இவ்வருடத்தில் எம் நிறுவனத்திலிருந்து விடைபெற்றுச் சென்ற
எல்.என்.கே. பெர்ணான்டோ
அபிராமி வைகுந்தன்
திருமகள் மோகன்
சங்கரன் சந்திரசேன ஆகியோர் ஆற்றிய சேவையை எம் நிறுவனம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
திரு. ச.சந்திரசேன
திரு. சந்திரசேன அவர்கள் ஏழு வருடங்கள் எம்முடன் சேர்ந்து சேவை செய்து தற்போது விடை பெற்றுச் சென்றுள்ளார். இவர் தமது சேவைக் காலத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்மையுள்ள நபராக இருந்ததுடன் எல்லோரு டைய நம்பிக்கையையும், அன்பையும் பெற்றுக் கொண்டார். இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டிநடத்திய பிரியாவிடை நிகழ்வின் போது ஒவ்வொரு அங்கத்தவரும் பாராட்டியதையும், அவரது பிரிவையிட்டு மனம் வருந்தியதையும் இன்றும் யாராலும் மறக்க முடியாது. சந்திரசேன அவரது தனது சேவைக்காலத்தில் அவருடைய நேர்மையான, பொறுப்புமிக்க நடத்தையால் அனைவருடைய மனதிலும் இடம்பிடித்துக்
கொண்டார். "--
- - سے کسی سے ---------------------------- M
".
"on- ۔ ۔ ۔ وہ "^" ما مستعريفها- - * ' .. ( Sત્ર ખ્ય દ્રુત્ર પ્રા ܨܢܟ ܢܩܝܐ - ܐ -> ר حیاالحxحمcuفاU) ܢܗ}ctܢܝVR ,) مسالکیہہ مٹا%C
12