கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கத்தமிழ் 2011.07

Page 1
العنقروي قيقية
3.
 


Page 2
Inta Lank
“House of
Importers and
Rice Mill Grinders, D. Electric Motors, A Water Pumps
141A, Messenger Tel: 2430300, 486
 
 
 

a (Pte) Ltd Machinery'
ଷ୍ଟି
Distributors of Machinery, iesel Engines, ll Types of Belting, , Bearings Etc.
Street, Colombo 12. 2331, Fax: 2330492

Page 3
கொழும்புத் தமிழ்ச்சங்கம் திருவள்ளுவர் ஆண்டு : 2042
இதழ் 03 ஆடித் திங்கள் 2011 சங்கத்தமிழ்
தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் பொதுச் செயலாளர் : திரு. ஆ. இரகுபதி பாலழறிதரன் நிதிச் செயலாளர் : திரு. செ. திருச்செல்வன்
ஆசிரியர் : திரு.மு.கதிர்காமநாதன்
ஆசிரியர் குழு : பேராசிரியர் சபா ஜெயராசா
முனைவர் வ. மகேஸ்வரன் திரு. க. இரகுபரன் சைவப் புலவர் சு. செல்லத்துரை திருமதி பத்மா சோமகாந்தன்
ஒருங்கிணைப்பு செல்வி சற்சொரூபவதி நாதன்
திருமதி வசந்தி தயாபரன் திரு. ப. க. மகாதேவா திரு. எஸ். பாஸ்க்கரா திரு. சி. கந்தசாமி திரு ஆழ்வாய்பிள்ளை கந்தசாமி
நிர்வாக ஆசிரியர் : திரு. எஸ். எழில்வேந்தன்
கணினி வடிவமைப்பு : திருமதி கு. சத்தியஜோதி
முகப்பு அட்டை கொழும்புத் தமிழ்ச்சங்கம்
தொலை பேசி : 0123687.59 தொலை நகல் : 011, 23618
இணையத்தளம் : www.coldmbotamilsangam.com
மின்னஞ்சல் : tamilsángamcolombo Gyahoo.com ISSN : 201294.91
ஈழத்துத் தனித்துவம் பேணும் வகையில், படைப்பாளிகளிடமிருந்து தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் குழுவின் செம்மைப்படுத்தலின் பின் சங்கத்தமிழில் அவை பிரசுரமாகும். அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், 'சங்கத்தமிழ்' கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7.57வது ஒழுங்கை,
,கொழும்பு -06. இலங்கை ܢܠ
சங்கத்தமிழில் வெளிவரும் படைப்புக்கள் யாவற் பொறுப்பாகின்றனர் என்கின்ற கம்பீரமான கோட்ப
(ஆடி 2011)
 

9 стGGп.
* ஆசிரியர் பக்கம் 2
* பொதுவிருப்புக் கலை
இலக்கியங்களை வாசித்தல் 3
* கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகள்
ஒரு கண்ணோட்டம் 6
* இலங்கையில் சிங்கள மக்களிடையே
கண்ணகி வழிபாடு - இருப்பும் நடப்பும் 13
* சிலப்பதிகாரத்தில் இசை 21
* ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில்
இராமாயண மகாபாரதச் செல்வாக்கு 24
* இஸ்லாமியர் தமிழர் ஊடாட்டம் 32 * அகநானூற்றில் ஓர் அகத்திணைக்
கவியின்பம் 35
காக்கையுடன் நட்புறவாடிய காரிகை 38 ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் ஈழகேசரி பொன்னையா 4O
Ο
0.
X
தமிழ் வளர்த்த மேலை நாட்டுப் பெரியர்கள் வரிசையில் பேய் ஐயர் 46
* அமிழ்தின் தெளிவே தமிழ் 48 * ஈழத்து வசன இலக்கியத்தின் மூலவர் 49 * பல்துறைக் கல்விமான் 59 * சங்கத் தமிழ் 63 * ஆதி மொழி தமிழர் மொழி. 64
* கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று. 65 * கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 2010. 68
அடுத்த இதழ்
2011 செப்டெம்பர் محم
க்கும் அவற்றைப் படைத்த இலக்கியச் சிற்பிகளே ாட்டுப் பலத்தைச் சார்ந்து இவ்விதழ் எழுகின்றது.
C1)

Page 4
ஆசிரியர் பக்கம்:
"கொழும்புத்தமிழ்ச்சங்கம் தனது எ இத்தருணத்தில் அது பாரிய அபிவிருத் பெருமகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அத பூரணத்துவத்தை எய்துவதாக மூன்ற ஒன்று நிறுவப்பட்டு அண்மையில் த அகநிலைப்பட்ட வளர்ச்சியாக தமிழ் ெ ஆற்றிவரும் பணிகள் இடையறா வருகின்றன. சங்கத்தின் நூலகம் தமிழ்த்தாகம் - அறிவுத்தாகம் கொ அறிவுடையோர், தம் அறிவை ஊருக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்ற விருந்தான போதிலும் காற்றோடு அவ்வாறன்றி அறிஞர் தம் உள்ள நிலையான நல்ல களமாக சங்கத்தின் அதன் ஒரு வெளிப்பாடே"சங்கத்தமிழ்". போதிலும் ஓர் இதழைத் தொடர்ச்சியாக பொறுத்தவரையில் இலகுவான காரி காணாவகையில் ஒழுங்காக மேற்கெ கொண்டுள்ளோம். அதன் விளைவா உங்கள் கரங்களில் தவழ்கின்றது. படித் அவற்றையும் உணர்த்துவது உங்கள்
"குனம் நாடி, குற்றமு மிகைநாடி மிக்க கொ
அறிஞர்கள், தங்கள் சிந்தனைகள் 'சங்கத்தமிழ் அமையும். அதன் தரத்ை எடுப்போம். அதற்கு அறிஞர்தம் ஒத்து
“ஊருணிநீர்நிறைந்த பேரறிவாளன் திரு.”
வணக்கம்!
(ஆடி 2011)

ாழுபதாவது அகவையில் தடம்பதிக்கும் நதிகள் பலவற்றைக் கண்டு வருவது ன் புறக்கட்டமைப்பின் வளர்ச்சிகளில் றாம் மாடியிலே “விருந்தினர் அகம்” திறந்து வைக்கப்பட்டது. சங்கத்தின் மாழிக்கும் இலக்கியத்துக்கும் சங்கம் த வகையில் மேற்கொள்ளப்பட்டு
“நடுவுரில் ஊருணி”யாக நின்று ாண்டோர்க்கு உதவி வருகின்றது. உபகரிக்கத்தக்க களங்களாக இலக்கிய ன. அந்நிகழ்ச்சிகள் செவிக்கு நல்ல காற்றாகக் கலந்தும் விடுகின்றன. த்தெழுந்த புதிய கருத்துக்களுக்கு ன் வெளியீட்டுப் பணி அமைகின்றது.
என்னதான் வாய்ப்பு வசதிகள் இருந்த வெளியிடுவதென்பது நமது கழலைப் ரியமல்ல. இடையிடையே நைந்தும் ாள்ள வேண்டும் என்று உத்வேகம் ாக "சங்கத்தமிழ்” மூன்றாவது இதழ் துப் பயன்பெறுவதோடு குறைகாணின்
கடன்.
ம் நாடி, அவற்றுள் ளல்”
ளை வெளியிடுவதற்கு ஏற்ற களமாக தைப் பேணுவதில் நாம் அதிக சிரத்தை
oopÜL ÉSi6Jésuub.
ற்றே உலகவாம்

Page 5
வபாதுவிருப்புக் கலை இ
உயர் நிலை இலக்கியங்கள் (HIGH LITERATURE) 6Numg565ÜL ÉS6oäsaéluu Jab6ĪT (POPULAR LITERATURE) 6T6ögD CBD6oo6oü புலத்து வகைப்பாட்டிலே பொருண்மைநிலைகள் காணப்படுகின்றன.அதிக மக்களால் வாசிக்கப் படுபவை பொதுவிருப்பு இலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படு கின்றன. தரம் என்பது அங்கே கருத்திற் கொள்ளப்படவில்லை. உயர் நிலை இலக்கிய வகைப்பாட்டில் தரமே வலியுறுத்தப்படு கின்றது. கனங்காத்திரமான பொருட் பரப்பைக் கொண்டவையும் கலைப் பாங்கு மேலோங்கி யவையும் உயர் நிலை இலக்கிய வகைப்பாட்டில் உள்ளடக்கப்படுகின்றன.
கலை இலக்கிய மதிப்பீட்டுப் பெறுமானங்கள் வர்க்கச் சார்புடையனவாகவே வளர்ந்து வந்துள்ளமை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பியப் பின்புலம் தெளிவாகப் புலப்படுத்து கின்றது. பெருங்கைத்தொழில்களின் உண்மை யாளரும், பெரும் வர்த்தகர்களும் கலை இலக்கிய உற்பத்திகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய விதிகளை நடைமுறைப்படுத்து (36)ing Tui (ENFORCERS) LDITS60T. se(3JITuurt விலே தோற்றம் பெற்ற அந்த நிலவரம் மூன்றாம் உலக நாடுகளிலும் விரிவாக்கமும் உறுதியும் பெற்றுள்ளது. அத்தகைய ஒரு நிலவரமே "கலையின்பம் கலையின் பத்துக்காக” என்ற வலியுறுத்தலை முன்வைத்தது.
பெருந்தொகையினரை வாசிப்பில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் புலங்களாகப் பின்வருவன கண்டறியபட்டன.
(அ) உள்வெழுச்சியைத் தூண்டும்
ஆக்கங்கள் (SW) 2 –DjusÖDé856006IT (SENTIMENTAL)
துளாவும் ஆக்கங்கள் (இ) எழுபயமூட்டல் (HORROR)
புனைவுகள். (*) L56085üum6ö6OLD (OVER SEX)
ஆக்கங்கள்
(ஆடி 2011)

மக்கியங்களை வாசித்தல்
பேராசிரியர் சபா ஜெயராசர்
(உ) வன்செயலைத் தூண்டும்
ஆக்கங்கள்
(ஊ) விடுகற்பனைகளைக் கொண்ட
விஞ்ஞானப் புனைகதைகள்.
பொதுவிருப்புப் பற்றிய அறிகை முயற்சி கள் அதிகரிக்கத் தொடங்க அதற்குரிய அழகியலின் தேவையைத் திறனாய்வாளர் டேவிட் மெடன் வலியுறுத்தலானார்.
உளவியல் நோக்கிலே பொதுவிருப்பு இலக்கியங்களை ஆராய்ந்த வேளை மலினமான சுவையான உருவாக்கப்படத் தக்க பொறி முறைவயப்பட்டது என அறியப்பட்டது. ‘வாழ்க்கை நிலவரங்களில் இருந்து மேலெழும் சுவைக்கும் வலிந்து உருவாக்கப்படும் சுவைக்குமிடையே இணக்கமும் முரண்பாடுகளும் ஒரே நேரத்திலே தோற்றம் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது: அந்நிலையில் வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்த சுவை, இணையாத சுவை என்ற இருநிலை முனைவுகள் தோற்றம் பெற்றன. வாழ்க்கை அனுபவங்களோடு இணைந்த சுவை முகாமை செய்யப்படத்தக்க சுவை என்று குறிப்பிடப்படும்.
மார்க்சியத் திறனாய்வு முகாமை செய்யப்படக் கூடிய சுவை மீதே அதிக கவனக் குவிப்பை ஏற்படுத்திவருகின்றது. சுவை மூழ்கலில் இருந்து மீண்டெழ வைக்கும் தீர்மானிப்பு விசைகள் முகாமை செய்யப்படத்தக்க சுவையாக்கங்களிலே உட்பொதிந்திருக்கும்.
பொதுவிருப்புக் கலை உற்பத்தியின் வலு ஒரு சிலரிடமேயுள்ளது. அவர்கள் கலைக் குரிய வரையறுக்கப்பட்ட முறையியலை மேலும் மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளும் பொறிமுறைக் கையாட்சியை மேற்கொள்வர். விற்பனை முகவரின் மனப்பாங்கில் அவர்கள் செயற்பட்டவண்ண மிருப்பர். போலி உலகம் ஒன்றைச் சித்திரிக்க முயலும் பொழுது நடப்பியலில் இருந்து விலகியும் நாட்டார்
-G3)

Page 6
"క్కే డీ.
bahnmah ബ
மரபுகளைத் திரிபுபடுத்தியும் எழுத வேண்டியுள்ளது.
மனித உணர்வுகளை அவ்வகை எழுத் தாக்கங்கள் கேடுறுத்தலுக்கு உள்ளாக்கிக் குதூகலித்து நிற்கும்.
நடப்பியலில் இருந்து விலகிச் செல்லும் ஆளுமை வழிபாட்டை உருவாக்குதலும் பொதுவிருப்பு ஆக்கங்களின் பண்புகளுள் ஒன்றாகின்றது. தனிமைப்பட்டு நிற்கும் நபரைக் குவியப்படுத்தியே பொரும்பாலான பொதுவிருப்பு ஆக்கங்கள் உருவாக்கப்படுதலை வால்டர் பென்ஜமின் ஒரு சமயம் சுட்டிக் காட்டினார்.
பொதுவிருப்புக் கலை இலக்கியங்கள் தொடர்பான அண்மைக் காலத்து ஆய்வுகளில் "LDplus lism is asypus" (CONVENTION AND INVENTION) 6T60TD GT60060Orisset up60t வைக்கப்படுகின்றது. முன்னர் அறிந்தவற்றைச் சித்திரித்தல் மரபு. அதேவேளை முன்னர் அறிந்தி ராத புலக்காட்சிகளைச் சித்திரித்தல் புத்தாக்கம். இவை இரண்டையும் இணைத்தல் கலை இலக்கிய ஆக்கங்களின் செயற்பாடுகளாகின்றன. வியப்பு, எதிர் பார்ப்பு ஆவல், கிளர்ந்தெழும் உணர்வுகள், தன்னோங் கலை அடிப்படையாகக் GasTeodril 5Bugs (EGO SATISFACTION) முதலியவற்றை எட்டுவதற்கு மரபும் புத்தாக்கமும் இயன்ற அளவும் வேண்டிய அளவும் எடுத்தாளப்படுகின்றன.
பொதுவிருப்பு இலக்கிய உருவாக்கத்தில் "வாக்கியத்தைக் கடந்து செல்லல் அல்லது அப்பாற் Ghafgbeoso" (BEYOND THE SENTENCE) என்ற செயற்பாட்டிலே தீவிர கவனம் செலுத்தப் படுகின்றது. அதாவது கருத்தாடலுக்குரிய அடிப்படை அலகாக அமையும் வாக்கியத்திற் பேசப்படாத நீட்சியை ஏற்படுத்துதல் கலையாக்கத்தின் ஒரு சிறப்பு நுட்பவியலாகும். தனித்த மனநிலையைக் குவியப்படுத்தி வசனத்துக்கு அப்பால் உள்ள பேச்சை உருவாக்குதலில் பொதுவிருப்பு ஆக்கங்கள் நீடித்த கவனம் செலுத்துகின்றன.
பொதுவிருப்பு விஞ்ஞானப் புனைகதை கள் நடைமுறையில் சென்றடைய முடியாத கற்பனை (UTOPIAN IMAGINATION) umässä 5L6ö மேலெழுகின்றன. மாறுபட்ட சமூகம், மாறுபட்ட உலகம், முதலியவற்றுடன் மேலெழுகின்றன.
)2011 gلجی)

சங்கத்தமிழ்
அவற்றில் எண்ணங்களே (IDEAS) வீரர்களாக (HEROS)ச் சித்திரிக்கப்படுகின்றனர்.
நூல்களின் எண்ணிக்கை நூல்களின் விற்பனை இரண்டிலும் பொதுவிருப்பு எழுத்தாள ர்கள் ஊன்றிய கவனத்தைச் செலுத்துகின்றனர். எடுத்தக்காட்டாக பில்லி பண்டர் என்ற ஆங்கில எழுத்தாளர் ஒரு நாளில் பதினெண்ணாயிரம் சொற்களை எழுதுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. டென்சி ரொபின்ஸ் நூற்று எழுபதுக்கு மேற்பட்ட உளக்கவர்ச்சி நாவல்களை எழுதியுள்ளார். உர்சலா புளம் 450 நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஸ்டீபன் கிங்ஸ் எழுதிய நான்கு நாவல்கள் பத்து ஆண்டுகளில் நாற்பது மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
தமிழில் அவ்வகையான பெரும் விற்பனை நிகழாவிடிலும் பொதுவிருப்பு இலக்கிய விற்பனை யில் ரமணி சந்திரனின் ஆக்கங்கள் முன்னணி 6|alifiedrpoT. giDITL6BIT616 (SPY NOVEL) எழுதுவதில் வல்லவராகி கென் பொல்லெட் மூன்று நாவல்களை எழுதுவதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று மூன்றுமில்லியன் டொலர் கெளரவிப்புநிதி வழங்கியது.
வெகுசனச் சுவைப்பு நாவல்கள் புனைவதில் வல்லவராகிய குரூஸ் சிமித் என்பவர் தமது எழுத்து அனுபவம் பற்றிக் கூறும் கருத்து குறிப்பிடத்தக்கது.
“இரண்டு வாரங்களில் என்னால் ஒரு பொதுவிருப்பு நாவலைப் புனைய முடி கின்றது. கூடிய காலப் பகுதியை நாவல் எழுதுவற்கு எடுப்போர் தரங்குன்றிய நாவல்களையே தருகின்றனர்." (பொப் ஆஸ்லியின் மேற்கோள், 1997)
நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட வெகுசன நாவல்களைப் படித்து அவற்றிலே பயன்படுத்திய நுட்பங்களைப் பகுத்தாராய்ந்த ரொபின் குக் என்ற அமெரிக்கக் கண் மருந்துவர் எழுதிய "கொமா என்றநாவல் பெரும் விற்பனையை எட்டியது. அது திரைப்படமாக்கப்பட்டுப் பெரும் வகலை வழங்கியது. அதாவது பொதுவிருப்புப் புனைவுகளிலே உள்ளடக்கத்தைக் காட்டிலும் நுட்பவியலும் அதிரவைக்கும் உத்திகளுமே ஆட்சி செய்வதை அந்த நிகழ்ச்சி புலப் படுத்துகின்றது.
G4)

Page 7
莒。
பின்னைய முதலாளியத்தில் பிரசுர முயற்சி அதிக இலாப மீட்டும் தொழிலாக மட்டுமன்றி இருப்பைத்தக்க வைப்பதற்குரிய கருத்தியல் ஏற்றத் துக்கும் சாதகமாக அமைந்து வருகின்றது. மிகக் குறுகிய காலத்தில் இலாபமீட்டலுக்கு அந்தத்துறை வழியமைக்கின்றது. அந்நிலையில் வெளியீட்டா ளர் பொதுவிருப்பு நாவல் எழுது வோரை நாடிச் செல்லும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
brigò aspasmi.B6ÍT (BOOKCLUBS) 676ÖTAD நூல் நுகர்வோர் அமைப்புக்களின் வளர்ச்சியும் இலாபமீட்டும் பொதுவிருப்பு எழுத்தாக்கங்களுக்குச் சாதகமான வகையிலே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, வாசகர் தெரிவுச் சுதந்திரத்துக்கு இடமளிக்கப்படாது, வெளியிடப்படும் பொதுவிருப்பு ஆக்கங்கள் நுகர்வோருக்கு அனுப்பி வைக் கப்படுகின்றன. அவற்றுக்குரிய பணத்தை வாசகர் அனுப்பி வைக்கின்றனர். வெளியீட்டாளர் தமது தொடர்புகளை நூற் கழகங்களுடன் நேரடியாக ஏற்படுத்திக் கொள்ளும் நிலையும் வளர்ச்சியடைந்துள்ளது.
வளர்ந்து வரும் முதலாளியம் கலைகள் அனைத்தையும் விற்பனைப் பண்டமாக்கிவரும் நிலையில் பொதுவிருப்பு எழுத்தாக்கங்கள் குறைந்த உற்பத்திச் செலவோடு கூடிய இலாப மீட்டக் கூடிய நிலையில் உள்ளன. பிற பண்டங்கள் தரக் காப்பீட்டுக்கு உட்பட்டுள்ளநிலை யில் பொதுவியல் நாவல்களும் திரைப்படங்களும் தரக்காப்பீடுகள் இன்றியே சந்தைக்கு விற்பனைக்கு விடப்படுகின்றன. “வளர்ந்தவர் களுக்கு மட்டும்” என்ற குறிப்போடு பாலியல் வக்கிரங்களும் விற்பனைக்கு விடப்படுகின்றன. வாசகரின் நேரம், பணம், வலு முதலியவை தொடர்பாக ஏற்படும் விரயங்களைத் தவிர்ப்பதற்கு பொதுவியற் கலை இலக்கியங்கள் தொடர்பான வழிகாட்டலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படல் வேண்டு மென்ற கருத்து ஆரோக்கியமான வாசகர்களிடமிருந்து எழுப்பப்பட்டு வருகின்றது.
பொதுவிருப்புக் கலை இலக்கியங்களுக்கு “மக்கள் நிலை அழகியல்” என்ற பெயர் சூட்டும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறான பெயர் சசூட்டும் முயற்சியில் முதலாளிய அரசியலின் தென்படாக்கரம் இயங்கிய வண்ணமுள்ளது. மக்கள் மத்தியிலே
(ஆடி 2011)
 

சங்கத்தமிழ்
E56orfuum6oT &S6ošsafuub (SERIOUS LITERA TURE) சென்றடையச் செய்யாது தடுக்கும் முயற்சியாகவும் அந்தப் பெயர் சூடல் செயற்படு கின்றது. இலக்கியத்தை வாழ்க்கையுடன் ஒன்றிணைக்காத முயற்சியின் உள்ளடக்கமே பொதுவிருப்பு ஆக்கங்களுக்கு மக்கள் நிலை அழகியல் என்ற போலியான அறிதலைப்பு இடலாகும்.
மூன்றாம் உலகின் பொதுவிருப்பு இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை பிறிதொரு வர்த்தக முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதாவது ஆங்கில மொழியில் பெரிதும் விற்பனையாகும் நாவல்களைப் பொருத்தமான மாறுதல்களுடன் தேசிய மொழிகளில் எழுதிச் சந்தைப்படுத்தும் முயற்சி களும் மேற்கொள்ளப்படுவதுடன் அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. மூலத்துடன் சம்பந்தப்படாத வகையில் அவை திட்டமிட்டு ஆக்கப்படுவதனால் சொந்த ஆக்கம் போன்ற புலக்காட்சியை ஏற்படுத்தி விடுகின்றன.
மூன்றாம் உலக நாடுகளின் பொது விருப்புக் கலை இலக்கியங்களிலே பேச்சு வாயிலாக மலினமான சுவைகளை எழச் செய்து திரிபு படுத்தும் மட்டரகமான பொதுவிருப்புச் செயற் பாடுகள் முன்னெடுக் கப்படுகின்றன. எழுத்தறிவு குன்றிய சமூகச் சூழலிலும் உயர்தர வாசிப்பு மட்டம் இடம்பெறாத சூழலிலும் மலினமான பேச்சுக்கலை இரசித்து மகிழ்ந்து சுவைக்கப் படுகின்றது. இந்தியத் தமிழகத்திற் காணப்படும் இந்த அவலநிலை கேரளாவிற் காணப்படா திருத்தல் இருபுலங்களுக்குமிடையேயுள்ள உயர்ந்த வாசிப்பு மட்டத்தின் வேறுபாட்டைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றது.
பொது விருப்பின் மலினமான முன்னெடுப் பின் கொடு முடிகளாகத் தமிழக மலினத் திசைப்படத்துறையும் மலின இலக்கியங்களும் வளர்ந்து வருதலால் உயர்தர வாசிப்பு மட்டமும் உயர்நிலை இலக்கியங்களும் பின்னடைவுகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. வாசகரும், பார்வையாளரும், கேட்போரும், மலினமான சுவை நுகர்ச்சியிலே தொடர்ந்து தள்ளப்படு கின்றனர். 米
G5 )

Page 8
கவிஞர் சச்சிதானர்
“சாவிற்றமிழ் படித்துச் சாக வேண்டும் -
என்தன் சாம்பல் தமிழ் மணத்து வேகவேண்டும்". மேற்கூறிய கவிதை அடிகள் ஈழத்து இலக்கிய ஆர்வலர்களால் மட்டுமன்றி, தமிழக ஆர்வலர்க ளாலும் பரவலாக அறியப்பட்டதொன்று. ஆயினும், அதன் சொந்தக்காரர் யாரென்பது பற்றிய ஐயம் - சர்ச்சை - இன்றுவரை நிலவி வருகிறது. பாரதி தாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, பார தியார், கவிஞர் காசி ஆனந்தன் என வெவ்வேறு பெயர்கள் அது தொடர்பாக வாசகரொருவராற் கேள்வி எழுப்பப்பட்டபோது இக்கட்டுரையாளரும், கவிஞர் சோ.பத்மநாதனும் அதற்கு விளக்க மளிக்கின்ற நிலையும் ஏற்பட்டிருந்தது. அதுமட்டு மன்றி, ஈழத்து மூத்த கவிஞர்களான இராஜபாரதி, யுவன் ஆகியோரும் இதையொத்த கவிதைகளை பின்னர் எழுதியுள்ளனர். ஆக, இவ்வாறு ஒரு கவிதையின் ஓரிரு அடிகளால் நன்கறியப்பட்ட - புகழ்பெற்ற - கவிஞர் வேறு யாருமல்லர்: கவிஞர் சச்சிதானந்தனே!
கவிஞர் சச்சிதானந்தன் மேற்கூறியவாறான தனிக்கவிதைகள் மட்டுமன்றி, நவீன காவியங்கள், கவிதை நாடகங்கள், மொழி பெயர்ப்புக் கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதுகின்ற முயற் சியிலும் ஈடுபட்டவர். இவ்வேளைஅவரதுகவிதைகள் பற்றி மட்டும் சுருக்கமாக அவதானிக்கும் முயற்சி இடம்பெறுகிறது.
கவிஞரது கவிதை உள்ளடக்கங்களை இருவகைப்படுத்த முடிகிறது.
1) மரபு வழிப்பட்ட உள்ளடக்கங்கள்: கடவுள் வாழ்த்து, கோயில் மீது பாடப்பட்டவை, வரவேற்புப் பா; இரங்கற்பா 2). நவீன உள்ளடக்கங்கள்: சமூகம், அரசியல், இயற்கை, காதல் மொழி, குடும்பம், அன்றாட அனுபவங்கள்.
(ஆடி 2011)

O O
தனின் கவிதைகள்
- ஒரு கண்ணோட்டம் பேராசிரியர் செ. யோகராசா
மரபு வழிப்பட்ட உள்ளடக்கங்கள் கொண்ட கவிதைகள் கவிஞருக்கு முற்பட்டோர்களாலும், சம காலத்தவராலும் அதிகளவு பாடப்பட்டு வந்துள்ளன. எனினும், இவரது அத்தகைய கவிதைகளில் தனித்துவமான பண்புகள் ஓரளவு இடம் பெற்றுள்ளன. உதாரணமாக 'கல்கி ஆசிரியருக்கு எழுதப்பட்ட வரவேற்புப் பாவிற் கல்கியின் புகழ் வெறும் பாராட்டாகவன்றி கல்கி புனைகதை எழுத முற்பட்ட காலச் சூழலில் அவரது முக்கியத்துவம் இனங்காணப்படுகின்ற விதத்தில் பேசப்படுகிறது. அன்னைக்கான அஞ்சலிக் கவிதை வழக்கமான பாணியிலன்றி அன்னையின் கையைக் கவனத்திற்குட்படுத்தி குடும்ப உறவு தொடக்கம் ஊர்வரை அக்கை செய்த நற்செய்கைகள் பற்றி விபரிப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு:
"தம்பன் கதிரன் சங்கரன் சின்னவன் தத்தம் பணிமுடித்து தாங்கிக் கலம் பிடித்து வட்டமிருக்க வாயுறும் சோறு கறி இட்டுக் குழைக்கும் கை இன்முகத்தால்
ஊட்டுங்கை தெய்வானை சீதேவி முதலிச்சி கொத்திக்கு நெய்வார் கைவண்ண மாங்காய்க்
கரைச்சீலை வீசி எறியுங்கை விருந்திட்டு நன்நாளில் காசு கொடுக்கும் கை ஆசி வழங்குங்கை நிலமில்லை என்றார்க்கும் நிழலில்லை
என்றார்க்கும் குலமொன்றி வந்த குடிநிலங்கள்
பங்கின்றி புதியான் புதுக்காடும் பூஞ்சோலை
assTL60LL|b விதியால் உறுதிசெய்ய கையெழுத்து
வீசுங்கை
(6)

Page 9
முற்குறித்தவாறான நவீன உள்ளடக்கங்கள் கொண்ட கவிதைகளும் இவரது காலத்தைச் சார்ந்த கவிஞர்களான யாழ்ப்பாணன், அல்வையூர் மு.செல்லையா வேந்தனார், மு.நல்லதம்பி முதலான பலராலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆயினும், இவர்களது கவிதைகளிலிருந்து இக் கவிஞரது கவிதைகள் வேறுபட்டுள்ளன என்பது கவனிக்கப்படத்தக்கது. இத்தகைய வேறு பாடுகளுள் தலையாயது இவரது கவிதைகள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆக இருப்பதாகும்.
56örg16OOTréfé justL6) (lyric Song) 6T6 DIT6) என்ன? இதுவும் நவீன ஏனைய இலக்கிய வடிவங்கள் பல போன்று ஆங்கிலத்தினூடாக தமிழுக்கு அறிமுகமான தொன்றுதான். கைலாசபதி இதுபற்றிச் சிலாகித்து எழுதியிருப்பினும் தமிழ் ஆய்வாளர்கள் இது பற்றி பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை. தனியொரு உணர்ச்சி அல்லதுநிகழ்ச்சி அல்லது சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் கவிஞனது சொந்த உணர்ச்சியையோ, மனச்சலனத்தையோ, எண்ணப்படிவத்தையோ வாசகருக்கு எடுத்துரைப் பதை நோக்கமாகக் கொண்டும் வெளிப்படு வனவே தன்னுணர்ச்சிப் பாடல்களாகும். தமிழில் பாரதியே இதன் முன்னோடியாகிறான். இக் கவிஞரின் கவிதைகள் பலவும் தன்னு ணர்ச்சிப் பாடல்களாகவுள்ளன. அது மட்டுமன்றி அவை புதிய மொழிப்பிரயோகம். புதிதான கற்பனை, வித்தியாசமான பார்வை, புதிய பா வடிவங்கள், புதிய சுவை பெற்றும் அமைந்து ள்ளன. இவ்வடிப்படையில் ஈழத்து தன் உணர்ச்சிப் பாடல் முன்னோடிகளுள் இவர் முக்கி யமான ஒருவராகின்றார் என்பதில் தவறில்லை. ஆகவே இது பற்றி விளக்குவது அவசியமாகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாடலடிகள் கொண்ட "தமிழ்க் கவிப்பித்து” என்ற கவிதையே தன்னு ணர்ச்சிப் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகிற தெனலாம்.
இவ்வேளை அக்கவிதையின் விரிவான ஒரு பகுதியைக் கவனிப்பது பொருத்தமானது
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - 9 ulüäѣ கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று க்கக் கிடக்கக் கமிடம் வேேைமயபா
பாட்டில் ஒரு வரியைத் தின்று களிப்பேன் பாயுமிடங்களிலே தன்னை மறப்பேன்
கால்கள் குதித்துநடமாடுதே யடா - கவிக் கள்ளைக் குடித்த வெறி ஏறுதேயடா நூல்கள் கன்னித்தமிழில்அள்ள வேண்டும்
ජීව{60x5 நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறவேண்டும்
தேவர்க்கு அரசு நிலை வேண்டியதில்லை -
sibly தின்னும் சுவையமுது வேண்டிய
தில்லை சாவிற்றமிழ் படித்துச் சாக வேண்டும் -
என்றன் சாம்பல் தமிழ் மனத்து
(8ഖങ്ക8ഖങ്ങQLD"
இயற்கை அனுபவவெளிப்பாடு சார்ந்த "உயிர்கூவும் அங்கே" என்ற கவிதையின் ஆரம்பப்பகுதியை இங்கு தருவது பயனுடையது.
"அன்னநடை நடந்து நதியுர பின்னற் கொடியசைய வளியூர மின்னும் பணித்துளிகள் இலையாட சின்னஞ்சிறு பறவை இசை பாட மலர் விரியும் போதென் மனம் விரியும்
sitGBas குயில் கூவும் போதென் உயிர் கூவும்
அங்கே!”
மேலுள்ள இரு கவிதைகளிலும் கவிஞர் தமது உணர்ச்சியான பசியோடும், மனித இயக்கத்தின் அடிப்படையான உயிரோடும் கலந்து வெளிப்படுத் தியிருப்பது விதந்துரைக்கப்பட வேண்டியது.
கவிஞர் குடும்பம் பற்றி எழுதியுள்ள கவிதை களிலும் தன்னுணர்ச்சி சிறப்புற்றோங்கிக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. குடும்ப உறவு
-Gy)

Page 10
இரத்த உறவாகிய நிலையில் அது தவிர்க்க இயலாததுங்கூட மனைவி கொடுத்த கட்டுச் சோற்றுணவை கந்தையர் புகையிரத்தில் உண்ண எடுத்தபோது, கேலி செய்த நண்பர்க்கு, அவர் கூறிய மறுமொழி இவ்வாறமைகின்றது.
தங்க வளைக்கைகள் தொட்டுச்
சமைத்தது சாலக் கமழுதையா - இதில் அங்கமெலாம் மிகப் பாங்கி வழிந்திடும்
அன்புங் கலந்த தையா
கொட்டிய உப்புக் கசப்பதென்றாலுமுள்
கூடியினிக்குதையா - இது விட்டுப் பிரிகையிற் சொட்டுக்
கண்ணிர்பட்ட 660dreofloor supg5 60LDUIT ஆகக் கரிந்து பொரித்த தென்றாலுமே
அன்பு மணக்குதையா - இது வேகவைக் காததென்றாலும்எனக்கொரு
65605 dipá 60Duurt
ஊது குழற்சத்தம் கேட்டவதிப்பட்டு
ஓடி வருகையிலே - இது
பாதி வழி வந்து தாமரைக்கை தந்த
Löfgoaf eup5 60LDust
கட்டிய அன்புக் கயிற்றினிற் சுற்றிய
கட்டுப் பொதியிதையா - இதைத் தொட்டுச் சுவைக்கையில்
உள்ளமெல்லாமொரு சோதி மிளிருதையா"
கவிஞரது உணர்ச்சிக் களிப்பு - உணர்ச்சித் திளைப்பு - என்பது சாதாரண நிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. இவ்விதத்திற் கவிஞரது இயற்கை அனுபவஞ் சார்ந்த 'வைகறையின் சாந்தி என்ற கவிதை ஆத்மார்த்த வெளிப்பாட்டிற்கு நல்லெடுத்துக் காட்டாகும்.
“பூமியானது போர்வை நீக்கி வெளித்தது: மேவு கீழ்த் திசைக் கன்ன மெல்ல
ஒளிர்ந்தது:
(gિ 2011)

சங்கத்தமிழ்
சோதியான பொன்வானச் சீலையிற்
றோன்றுதே காத தூர மரங்களும் கறுப்பாகவே ஆவி தென்னமென் தென்றலும்
eleofurt DG36) ஓவியம் வரைந்தென்ன யாவும்
உறங்குதே; மந்த மோன மயக்கில் நீர்நிலை
தூங்குதோ! சிந்தியாது மரங்கள் யோக தியானமே கொண்டவோ? இதிற்கூடு சாத்தி
அமுதினை உண்டதும் குளிர்ந்துள்ள முள்ளு
மினிக்குதே! உள்ளமே மெலநிற்குதே உயிர்
உள்ளிலே மெள்ள வந்ததோர் சாந்தவின்ப
விளைவினைச் சொல்லவோ முடியாத புவி தூங்குறள் மெல்ல மோனமதாகி மந்த ஏணியிலே” (ஆத்மார்த்தப் பண்பு விரவிய கவிதைகளி யற்றிய கவிஞர் வில்வரத்தினம், ஒரு தடவை காட்டுச் சூழலிலே தங்க நேரிட்டு அங்கே காலை வேளையில் நடந்து சென்றபோது மேற்குறிப்பிட்டது போன்ற அனுபவத்தினை இக்கட்டுரையாளருடன் பகிர்ந்தமை இவ்வேளைநினைவிற்கு வருகிறது)
தன்னுணர்ச்சி வெளிப்பாடு ஒரு புறமாக அவற்றை உள்ளடக்க நோக்கில் அவதானிக்கும் போது அவை பெறுகின்ற முக்கியத்துவம் ஒப்பீட்டு ரீதியில் அவற்றின் தனித்துவப் பண்புகளும் இக்கவிஞரது கவிதைகளின் சிறப்பினை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. இவ்விதத்தில் முதற்கண் ஈழத்து அரசியலுடன் தொடர்புபட்ட இவரது கவிதைகள் முக்கிய கவனிப்பை கோரு கின்றன. ஈழம் சுதந்திரம் பெறுவதற்கு முற்பட்ட காலந்தொடக்கம் அண்மைய இடப் பெயர்வு வரையான சில சம்பவங்கள் கவிஞரைக் கவர்ந்துள்ளன.
தாயும் குஞ்சும் குண்டுக்குப் பலி, குண்டு வெடிப்பில் தாய் சேய் இறப்புகுறிப்பிடும் இரண்டாம் உலக யுத்தக் காலச் சூழலாயிருக்க வேண்டும். தாய், சேய் மீது கொண்ட பாசத்தை அழகாக
C8)

Page 11
ئي
விவரித்துவிட்டு குண்டு வீச்சுக்கு அவர்களிறப் பதைச் சுருக்கமாகக்கூறுகிறார்கவிஞர். இரண்டாம் உலக யுத்தச் சூழல்சார்ந்தது ஒரு சில கவிதைகளே (உதாரணம்: 'சாரதா த.பிச்சமூர்த்தி ஆகியோர் சில எழுதியுள்ளனர்) வெளிவந்த சூழலில் இப் பதிவும் முக்கியமானது.
ஆரம்பத்திலே குறிப்பிட்ட தமிழ்க்கவிப் பித்து, மொழி உணர்ச்சிக் கவிதைகள் அதிகமாக வெளி வந்த (ஐம்பதுகளின்) கழலில் உருவாக்கியிருக் கலாமெனத் தோன்றுகிறது.
ஐம்பத்தெட்டு இனக்கலவரம் பற்றிய இவரது கவிதையொன்றும் மிக முக்கியமானது. கலவரத் தின்போது கப்பல் வழியாக பருத்தித்துறையில் வந்திறங்கிய கந்தையா என்பது காற்றாக அமையும். "கந்தையாவின் மனமாற்றம்” என்பது அதன் பெயருக்கேற்ப அமைகிறது; அதாவது, இனக் கலவரத்தின் பின் சுதந்திர பூமியில் வாழ்வதே நல்லது என்பதும் அதற்கு முன்பு கொழும்பில் வீடு வாங்கியமை பற்றிய கழிவிரக்கமும் அதன் விளைவுகள் பற்றியும் வடக்கு கிழக்குத்தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை அவசியம் பற்றியும் பொருளாதாரத் தன்னிறைவு வடக்குக் கிழக்கிலே ஏற்படுவதற்கான திட்டம் பற்றியும், அக்கவிதை விவரிப்பது கவனத்திற் குரியது. (பாரதியின் “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்ற இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பொருளாதார நோக்கு மிக்க கவிதையுடன் இலக்கிய ஆர்வலர் இக் கவிதையை ஒப்பிட்டுப் பார்ப்பின்சுவைபயக்கும்)கவிதையின் சிறப்பிற்கும், கவிஞரின் சிந்தனைச் செழுமைக்கும் உதாரண மாக, அக்கவிதையின் முடிவுப் பகுதியை இங்கு எடுத்தாள்வதேபோதுமானது.
"ஆலைகள் பல ஆனையிறவிலே
சாலைகள் பல சாய்ந்த மருதிலே
வேலை தோறும் மிளிர்வன பொற்கலம்
தால நீரும் தருவது செல்வமே”
ஐம்பத்தெட்டினைத் தொடர்ந்து சத்தியாக் கிரகம் இடம்பெற்றுவந்த சூழலில் 1961இல் யாழ்ப்பாணக் கச்சேரிச்சத்தியாக்கிரகத்திலிருந்த பெண்கள் நடுச் சாமத்தில் ஒரு தளபதி பீரங்கிக் கவச வாகனப் படைகளைக் கொண்டு கலைத்த
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
சம்பவம் தொடர்பாகப் பரவலாக அறியப்படாத விடயமொன்று கவிஞரால் சுவையுறப் பதிவாக்கப் பட்டுள்ளது. அதாவது, அத்தளபதிக்குப் பதவியு யர்வும் வீரவாளும் கிடைத்ததுபற்றிக் குறிப்பிடும், ஆயுதமற்ற பெண்களை வென்ற தளபதி நையாண்டித் தொனியுடன் எழுதப்பட்டுள்ளது.
வாளை எடுத்தாராம் - உடுகம
வாயைக் கடித்தாராம் தோளை நிமிர்த்தினராம் - உடுகம
துவக் கெடுத்தாராம் சேனை தெரிந்தாராம் - உடுகம திட்டம் வகுத்தாராம் ஆனை தெரிந்தாராம் - படைக்கு ஆண்புலி கேட்டாராம் கோட்டை தகர்த்திடும் பீரங்கியாயிரம்
குண்டுகள் கொண்டிடும்
படையெடுத்தாராம் உடுகம தடையெடுத்தாராம்”
நாட்டார் கதைப் பாடல் (உதாரணம்: கட்டப்பொம்பன் பாடல்கள்) பாணியில் அக்கவிதை அமைந்திருப்பதும் சுவை மிகுவிக்கிறது.
கவிஞரால் தொண்ணுற்றைந்திலே நிகழ்ந்த இடப்பெயர்வு பற்றியும் எழுதப்பட்டுள்ளது. அதில் கவிஞரது தனிப்பட்ட மன உணர்வின் - அவ்வேளை அவர் மாவை முருகனை அவர் மனத்திலே சுமந்தமை பற்றி முதன்மைப் படுத்தப்படுகிறது எனினும்
"பொன்னைச்சுமந்தார் பொருளைச்
சுமந்தார் புடவை யொடு
மின்னும் அணிகள் சுமந்தார்; மிகச்
சுமந்தார் ஆசைதனை”
என ஏனையோர் பற்றிச் சுருக்கமாகவேனும் கவிஞர் குறிப்பிடத் தவறவில்லை.
இடப்பெயர்வுகள் அழிவுகளின் பின்னர் வீட்டிற்குத் திரும்பியவேளையில் தமது வீடிருந்த நிலைபற்றி மகாகவிக்குக் கடிதமுறையில் எழுதிய தாழிட்டறியா தலைவாசல்", என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கதே. வீட்டுக் கட்டிடநிலைவரங்கள் நுணுக்கமாகவும் விரிவாகவும் அவற்றுாடே
O9)

Page 12
siaia msten
பழைய நிகழ்வுகளை வெளிப்படுத்தியும் தனது கவிதையிலே சித்திரமாக்கியுள்ளார் கவிஞர். கவிதையுடு குடும்பத்தின் நீண்டகால வரலாறும் ஊர்நிகழ்வுக்கு அழகுறப்பதிவாகியுள்ளன. உதார னமாக அதன் ஒரு பகுதி, பின்வருமாறமையும்.
“வீதி முருகன் வருங்கால் விளக்கிட்டு சோதிச் சுடரேற்றும் வாசலுண்டு - சாதிக் கலவரத்திற் குண்டெறிந்து கட்டவிழ்ந்த
மேல் முகடும் தலைவர்களோடிருக்கும், சற்றே
திறந்திருக்கும் ஐந்து தேர் வந்து அலங்காரமாய்த் திரும்ப பந்தலிட்டுப் பாக்குப் பழம் பரவும்
வாசலுண்டு கோழிக் கொடியேறி ஆடியமாவாசை
LDÜGLib தாழிட்டறியாத் தலைவாசல் - கழவே காவடிகள் வந்தாடக் கண்ணுட்டும்
afetyLib யாவுமிருக்கும்.”
அன்றாட - சாதாரண வாழ்க்கை அனுப வங்களும் கவிஞரால் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. கலாசாலை வீதியுடே செல்கின்ற போதான அனுபவங்கள் பற்றிய கவிதையொன்று இவ்விதத்தில் விதந்துரைக்கத்தக்கது. போகின்ற போது கவிஞருக்கும் ஏற்படும் விடுதலை உணர்வு, இயற்கைக் காட்சி தரும் இரசனை, பெண்களின் நெருக்கம், விமானப்பறப்பு, கவலையற்ற இடையனொருவனின் செயல்கள் என்றவாறான வெவ்வேறு அனுபவங்களும் அவற்றினூடே வாழ்க்கை பற்றிய மனித நடத்தை பற்றிய விசாரங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன; எடுத்துக்காட்டாக ஒரு பகுதி இங்கே இடம் பெறுகிறது.
"வானளக்கும் பறவைகட்கு மேலே
வட்டமிடும் பறவையெனக் காற்றில் தானிறங்கும் விமானத்தைக் காண்பேன் சந்தோசம் இதுவென்று சொல்வேன் இரும்பாலே ஆனவிதற்குள்ளே
இருப்பவனின் இதய உருக்காலே
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
நரம்பான ததிர்கின்ற போட்டி
நாசமலால் நிம்மதியும் உண்டோ
அம்புவியில் மண்னெடுத்து வந்து
ஆராய்ந்து கண்டதெலாம் வாழும்
நம்புவியை நாசமுறச் செய்ய
நாடியெனின் நாம் கண்டதென்ன?
மனிதனிரும் பாகின்றான், அன்னை
மண்ணுலகின் மடியழகைக் காணும் புனிதவிழி குருடாகிப் போனான்!
புள்ளேநீபெருஞ் செல்வன், பாடு” காத்திருக்கின்றதான மனிதகுல அனுபவம் சங்ககாலந்தொட்டு (எ-டு: முல்லைத் திணை - இருத்தல்), காத்திருப்பு நாவல் வரை இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளது.
இன்றைய வாழ்விற்கூடப் பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு நிலைகளில் 'காத்திருப்பு நிகழ்ந்து வருகின்றது. அத்தகைய முக்கியமான சமூக அனுபவங்கள் ஒருங்கி சைந்து நல்லதொரு கவிதையாகின்றது. முடிவிற் சுவைபுதிதான அனுபவம் கிடைக்கின்றது. அதன்பொருட்டு முழுக் கவிதையும் இங்கே தரப்படுகின்றது.
காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும் “தூரத்துச் சிவப்பெல்லாம் வசுவாகத்
தோன்றும் Öró0LDLL606D LDrtibgpigsböös asT6)
ஒருகால் மாறும் நேரத்தை அளந்த நெஞ்சு நீட்டிவிடும்
மூச்சு நின்றலுத்தோம் காத்திருப்போம்
காத்திருப்போம் வரட்டும்.
கோழிப் பொழுதெழுந்து குலைந்தோடி
வரிசைக் கொலுவிருந்தோம் துண்டெடுத்து
வைத்தியரைக் கான ஊழியரின் தோழியர்கள் உட்செல்வார்
bTC3LDIT உட்கார்ந்து காத்திருப்போம்
காத்திருப்போம் வரட்டும்.
G10)

Page 13
இந்தமுறை எடுபடுவோம் என்றென்று தம்பி இருந்தநகை அடைவேற்றி நேர்முகத்திற் சென்றோம் சொந்தநகை போனதல்லாமல் வேலை யில்லைச் சேர்ந்தோம் துணிவோடு காத்திருப்போம்
காத்திருப்போம் வரட்டும்.
சித்திரையாய்த் தையாகி ஆவணியாய்ச் சென்று செம்பதுமைக் கன்னிக்கு முப்பது
போய்ச் சேர்ந்த அத் தரகர் தேநீர்க்கே உலையேற்றிச்
சாய்ந்தாள் அவர் வாரார் காத்திருப்போம்
காத்திருப்போம் வரட்டும்”
காதல் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற கவிஞரின் தன் காதலை வெளிப்படுத்துவன; பிறர் காதலை வெளிப்படுத்துவன என்றவாறு இரு நிலையில் இடம்பெற்றுள்ளன; காதலின் ஒன்றிப்பு, காதலின் மேன்மை, பிரிவுத் துன்பம், ஏக்கம் முதலான பல்லுணர்ச்சிகளும் நயம் பெருகும் விதத்தில்
தண்ணிர் துடைத்துக் கருணை மழை
பெய்து பெண்ணே என அனைத்துப்
பேசுகிறான் - கண்ணாளன் கோடை வெயில் வெதுப்பக் கொதிக்கின்ற
மக்களுக்கு நீடு நிழலாக நின்றேனே நின்றுகளை தீர்க்கேனேல் நேரிழாய்
elഞ്ഞുങ്ങഖjäന്ദ്ര பொன்றாப் புகலாரோ சொல் தாயின்றிக் குஞ்சினங்கள் தவிக்கின்றார்
சேரியிலே பாயின்றி மக்கள் படுக்கின்றார்;- வாயின்றி நீதி சொல மாட்டாத நெஞ்சினர்க்கு
யானன்றி ஏதுரைப்பார் எங்கே எவர்?
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
எவருமறியாதே ஏழைகளின் பின்னின்று அவர்க்குதவியாவேன் அறி"
நவீன தமிழ்க் கவிதையுலகம் மேற் குறித்தவாறான "காதலன்' எவரையும் இன்று வரை கண்டிருக்குமா என்பது ஐயமே!
கவிஞரது ஆதங்கமாக, நிரந்தர ஏக்கமாக உள்ளுறைத்திருப்பதும் ஏழைகளின் வடிவுதான் என்பதனை பின்வரும் பாடல் தெளிவாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்துகிற தெனலாம்!
ernsögl sjöuGuðm? (உரையாடல்)
மேனியெலாம் புண்பூத்து, வீதியெலாம் தன் பாயாய்க்கானருகே ஓர் ஏழை நோயாகிக் கிடக்கி றான். தேனமுதப்பாவழகும் சிந்தைக்கலையழகும் கம்பன் கவிப்பேச்சும் காம்போதி ராகமுமாய் இன்பம் நுகர்வதுதான் எப்படியோ? என்தேவா
கைதூக்கி யவ்வேழை கண்ணிர் துடைத் தாலும் மெய்பூத்த புண்நீக்கி மினுக்க யான் வல்லேனோ”
இவ்வேளை இவ்விடத்தில் சுவாமி விபுலானந்தரும் தவிர்க்கவியலாதவாறு நினைவுக்கு வருகின்றார். அன்னாருக்கும் இக்கவிஞருக்குமிடையில் நட்பு நிலவியது மட்டு மன்றி, கல்விப்புலமைத்திறனினும் ஒற்றுமை யுண்டு இக்கவிஞர் கவிதை மொழி பெயர்ப்பு முயற்சிகளிலும் சுவாமி விபுலானந்தர் போன்று ஈடுபாடு காட்டியுள்ளார். இவை அனைத்திற் குமப்பால் மேற்குறித்த கவிதைகளில் மட்டுமன்றி நடைமுறை வாழ்விலும் சுவாமி விபுலானந்தர் போன்று ஏழை மக்களிடம் - சேரிமக்களிடம் - நெருங்கிப் பழகியவராகவும் இக்கவிஞர் காணப் படுவது வற்புறுத்திக் கூறப்படவேண்டியதொன்று.
தன்னுணர்ச்சிப் பாடல்களைச் சிறப்புற பாடியவரென்ற விதத்திலும் மேற்கூறிய உள்ள டக்கச் சிறப்புகளாலும் கவனத்திற்குரியவரான கவிஞரது கவிதைகள் முற்குறிப்பிட்டது போன்று வேறு விதங்களிலும் சிறப்புற்றுள்ளன. அவற்றிற்கான எடுத்துக் காட்டுக்களை முற்குறிப்பிட்ட கவிதைகளிலிருந்தே கண்டு கொள்ளலாம்; அவற்றை மீண்டும் இவ்வாறு நினைவு கூறலாம்.
G11)

Page 14
aaSA
badhibbig
mdaqq
புதிய கற்பனை மணவாளன் வந்த
(335|T6Db வித்தியாசமான பார்வை; அன்னைக்கு
அஞ்சலி, காத்திருப்போம் காத்திருப்போம் வரட்டும் கந்தையாவின் மனமாற்றம், ஆயுதமற்ற பெண்களை வென்ற தளபதி புதிய பாவடிவம்; உயிர்கூவும் அங்கே ஆயுதமற்ற பெண்களை வென்ற தளபதி புதியசுவை, காத்திருப்போம்
காத்திருப்போம் வரட்டும் கலாசாலைக்குப் போகும் வழி
கவிஞரது புதிய மொழிப் பிரயோகங்கள் சில ஏலவே தரப்பட்ட கவிதைகளில் இடம் பெற்றிருப்பினும் வேறுசில உதாரணங்களை தருவதும் அவசியமானது. உதாரணம்:- உயிர்த்திரி, மோகனவாய், கணித்தமிழ், உளமுலர்தல், மொழிக் குருடாதல், நேயச்சுடர், காலமெனும் கன்னி, முகச்சித்திரம், உள்ளம் நரை, காதல் வெயில், நின் பெயர்நஞ்சு, உன்னுயிரின்வேர். ஆக இதுவரை கூறிய வற்றைத் தொகுத்து நினைவு கூர்கின்றபோது புலப்படுவது இக்கவிஞர் தன்னுணர்ச்சிப் பாடல் களைச் சிறப்புறப் பாடியுள்ளாரென்பதும் உள்ளடக்க
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
ரீதியில் முக்கியமான விடயங்களைப் பாடற் பொருளாக்கி அவை புதிய கற்பனை, வித்தியாச மானபார்வை, புதிய பாவடிவங்கள், புதிய மொழிப் பிரயோகங்கள், புதிய சுவை பெற்றுள்ளன வென்பதுமாகும்.
அதுமட்டுமன்றி தனது சமகாலக் கவிஞர்களுள் பழந்தமிழிலக்கியப் புலமை, இடைக்காலக் கம்பன் பாடல்களில் அதிக ஈடுபாடு, பாரதியார் கவிதைகளில் நாட்டம் மிக்கவர் இவரென்பதும் அதனால் இவரது கவிதைகள் வளமும் வனப்பும் வலுவும் பெற்றுள்ளன வென்பதும் கவனத்திற்குரியனவே. அதே வேளையில் அக்காரணத்தினால் பழந்தமிழ்ச் சொற்கள் இவரது கவிதைகளில் அடிக்கடி தலையிட்டு ஊறு விளைவிப்பதையும் மறப்பதில்லை.
அதேவேளையில் நாற்பதுகளின் பிற்பகுதியில் மஹாகவி - முதலானோர் ஆரம்பித்து வைத்த ஈழத்து நவீன கவிதையின் புதிய தனித்துவமான இயல்புகள் இவரது கவிதைப் போக்கில் பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்பதும் அவ்வடிப்படையில் இவரது கவிதைகள் அணுகிமதிப்பிடக் கூடாதென் பதும் நன்றாக மனங்கொள்ளவேண்டிய விடயங்களாகின்றமையும் கவனத்திற் குரியதாகிறது. *

Page 15
இலங்கையில் சிங் கண்ணகி வழிபாடு
சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய மரபினதும், மொழியினதும், பண்பாட்டினதும் அடையாளமாக நிலைபேறாக்கம் பெற்ற பேரிலக்கியமாகும். அதனுடைய நிலைத்த கருத்தாடல், அதன் மீட்டெ டுப்பு எனப் பல முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தேறியுள்ளன. இவ்வாறான பண்பாட்டு அடையாளமான சிலப்பதிகாரக் கதை மரபு இலங்கையிலும் மிகவும் ஆழமாக வேரூன்றி யுள்ளது. சிலப்பதிகாரம் என்ற இலக்கியம் தமிழகத்தில் தமிழ்ப்பண்பாட்டு மீட்டெடுப்பு இலக்கியமாகவும் அடையாளமாகவும் மட்டுமே நினைவு கொள்ளப்படுகின்றது. சிலம்பின் கதைவழி சிலப்பதிகார நாயகி கண்ணகி கேரளாவில் கொடுங் கோளுரில் தெய்வமாக வழிப்படப்பட, இலங்கையிலோ, அக்கதைமரபு பல்வேறு கிளைக்கதைகளாக விரிவடைந்த அதே வேளை கண்ணகி, பத்தினித் தெய்வம் என்ற கருத்தியலுக்கு அமைய அதி தேவதையாக, காவற்றொய்வமாக, வழிபடு தெய்வமாக நிலைத்தி ருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அது மட்டுமன்றி இலங்கையில் வாழ்கின்ற தமிழ் - சிங்கள மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்ற பண்பாடாகவும் இது நிலை பேறடைந்து ள்ளது. அந்த வகையில் இலங்கையில் வாழும் சிங்கள மக்களிடையே இக்கதை மரபினதும், வழிபாட்டினதும் இருப்பும், அதன் நடைமுறை களும் இன்று எவ்வாறு நிலைத்துள்ளன என்பது பற்றியே இக்கட்டுரை ஆராய்கின்றது.
இக்கட்டுரையின் பீடிகையாக சிலப்பதி காரத்தில் கூறப்படும் ஆதாரமான செய்தி களைமுன் நிறுத்துவது அவசியமானதாகும். சிலப்பதிகார இலக்கியத்தின் வழி இரு நிலைகளில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு
(ஆடி 2011)

கள மக்களிடையே - இருப்பும் நடப்பும்
- கலாநிதி வ. மகேஸ்வரன் -
பரவிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. சிலப்பதி காரத்தின் உரைபெறு கட்டுரை
அதுகேட்டுக் கடல்கழி இலங்கைக் கயவாகு வெண்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டமுந் துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங் களகவை யினாங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப, மழை வீற்றிருந்து வளம்பலபெருகிப் பிழையா விளையு நாடாயிற்று.
எனக் குறிப்பிடுகின்றது. இதுபோலவே சேரன் செங்குட்டுவண் வஞ்சிமாநகரில் கணிணகி சிலையைப் பிரதிட்டை செய்தபோது கயவாகு வேந்தனும் பிரசன்னமாகி இருந்தான் என்று வரந்தரு காதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.*
மேற்கூறிய ஆதாரங்கள் சிலம்புவழி அறியப்பட்டவையாகும். சிங்கள இலக்கியங்கள் வழி கண்ணகி வழிபாடு இலங்கைக்கு வந்ததற் கான பல்வேறு கதை மரபுகள் உண்டு. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கருதப்படும். இராஜாவலிய எனும் நூல் கஜபாகு வேந்தன் காலத்தில் (கி.பி. 114-136) பத்தினி வழிபாடு நிலை பெற்றது என்ற தகவலைத் தருகின்றது. ஆனால் அந்த வழிபாடு சேர அரசுடனான தொடர்பின்றி பாண்டிய அரசுடனான தொடர்பினாலேயே ஏற்பட்டதென்று அறிஞர் கூறுவர்? மேலும் இவ்வழிபாடு கி.பி 16, அளவிலே கண்டி இராச்சியத்திலே நிலை பெற்றிருக்க வேண்டும் என்ற முடிவிற்கும் சிங்கள அறிஞர்கள் வந்துள்ளனர்.* எனினும் கஜபாகு மன்னன் இலங்கையில் பத்தினி வழிபாட்டை ஏற்படுத்தி அதை நிலை பெறச்செய்தான் என்ற கண்ணகியின்காற்சிலம்பு ஒன்றைக் கொணர்ந்து
- 13)

Page 16
AA
அதனைப் பாதுகாத்தான் என்றும், மலையகம், தென் இலங்கை முதலிய இடங்களில் பத்தினிக்குக் கோட்டங்கள் அமைத்தான் என்றும் தொன்மங்கள் தொடர்ந்தும் நிலவுவதை அவதானிக்கலாம்.
இலங்கையில் தமிழ்ச் சூழலில் நிலவும் மரபுவழிக்கதைகள் கண்ணகி இலங்கைக்கு வந்த கதையையும் பலபடக் கூறுகின்றன.
eleo66)6OT:
(அ) கண்ணகிக்கு சேரன்செங்குட்டுவன் எடுத்த விழாவில் கலந்து இலங்கை மீளும்போது வடக்கே சம்புத்துறை வழியாகவே வந்தான். அங்கணாக் கடவை என்ற இடத்தில் கண்ணகிக்கு கோயில் அமைத்தான். (ஆ) ஐந்துதலை நாகமாக உருவெடுத்து
கண்ணகி இலங்கைக்கு வந்தாள். (வழுக்கி ஆறு: நயினாதீவு, சுருட்டுப்பனை அளவெட்டி) (இ) நாகதீவிலிருந்து புறப்பட்ட கண்ணகி வன்னியில் உள்ள வற்றாப்பளை ഖങ്ങ] வந்தடைந்தாள்? (ஈ) மட்டக்களப்பில் - பட்டிநகர் முதலாக சித்தாண்டிவரை பரவியவாற்றை ஊர்சுற்று காவியம் குறிப்பிடும்.°
மேற்கூறிய கருத்துக்களுக்குப் புறம்பாக மட்டக்களப்பில் ஆதியில் பத்தினித் தெய்வ வழிபாடு நிலவியது என்றும் அது கஜபாகு வழிவந்த வழிபாடாகலாம் என்றும் அது பெளத்த செல்வாக்கிற்கு உட்பட்ட வழிபாடு என்றும் கி.பி 8ஆம் நூற்றாண்டளவில் பாண்டியநாட்டின் வழி கண்ணகி அம்மன் வழிபாடு தமிழரால் கொண்டு வரப்பட்டது என்றும் இது இந்துசமய சக்தியாக மாற்றம் பெற்றது என்றும் இவ்விரண்டு வழிபாடு களுக்கு இடையேயும் மட்டக்களப்பில் பல தொடர்புகள் ஏற்பட்டன என்றும் மகேஸ்வர லிங்கம் குறிப்பிடுகின்றார்?
(ஆடி 2011
 

சங்கத்தமிழ்
மேற்குறித்த வரைலாற்றுத் தகவல்களுக்குப் புறம்பாக நாட்டுப்புற கதையாடல்களிலும், இலக்கியங்களிலும் இந்த வழிபாடு பற்றிய பல செய்திகள் உண்டு. சிங்கள மரபிலும் தமிழ்மரபிலும் அவை பல்வேறு வடிவங்களில் வழங்கி வருகின்றன. தமிழ் மரபில் கோவலன் கதை, சிலம்புகூறல், கண்ணகி வழக்குரை எனப் பலவாறாக இது தோற்றங்கொண்டதுமல்லாது யாழ்ப்பாணம், வன்னி நிலப்பரப்பு, கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் பரந்த செல்வாக்கைப் பெற்றமையையும் அறியலாம். அது போலவே சிங்கள கிராமிய இலக்கிய மரபில் பன்திஸ் கோள்முற - என அழைக்கப்பட்ட முப்பத் தைந்துக்கும் மேற்பட்ட கதைகள் உண்டு. இவற்றுக்குச் சிலப்பதிகாரக் கதையே ஆதாரமாக அமைந்த போதும் அவை இலங்கையுடன் தொடர்புபட்ட பல்வேறு கதைகளைக் குறிப்பிடு கின்றன. எனினும், அமரசாரயா - (பாண்டிய அரசும்-நாடும் அதன் சிறப்பும்) பாதசா, சோளிபுர சகத்ய, பத்தினிபத்தும், அம்ப விதமன்ன, காவேரி கங்கா தியகெலிய, கரிகால் உபத, கங்கபன்டிம, தண்அவவாத, ருவன் நளுவ, மாதவி ரங்குன் துக்கேலி கத்தாவ, கவேரி பட்டுண ஹறகிலிய வலிநட, வெள்ளிமடம, பாலன்ககோவலன்) வத கொத, பாலன்க மரிம, மறா இபத்திம், சத்பத்தினி கத்தாவ, வேடபூகொவ, மேவன் பஹன (குளிர்த்தி) ஆகியவை பாண்டிநாடு, சோழநாடு, கண்ணகி, கோவலன், மாதவி முதலான பாத்திரங்களுடன் தொடர்புடையதாகவும், சிலப்பதிகாரக் கதையோட்டத்துடன் தொடர் புடையதாகவும் அமைந்து கானப்படுகின்றன. மேற்குறித்த 35 கதைகளுக்குப் புறம்பாக பத்தினிஹல்ல, பளங்கஹல்ல எனும் இரண்டு கதைகளுமுண்டு. எல்லாமாக பன்திஸ்கோள்முற என்ற தொகுதியில் 4000 பாடல்கள் உண்டு.7
இவற்றைத் தவிரவும் பத்தினி கத்தாவ, பத்தினிவிலாபய, சலம்பகத்தாவ, பத்தினி பிளிம, பாளங்க மாறுவே சிந்துவ என பல உதிரிக் கதைகளும் உண்டு என்று ஆய்வாளர்
குறிப்பிடுவர்.
G14)

Page 17
sikaia margas a
சிங்களமக்கள் மத்தியில் பத்தினித் தெய்வ வழிபாடு பெருஞ் செல்வாக்குடன் விளங்கியதை கனநாத் ஒபயசேகர விரிவாக விளக்கியுள்ளார். இலங்கையின் மேற்கு, தென்கரையோர மாகாணங்களிலும் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டிப் பிராந்தியத்தில் கண்டி, மாத்தளை, ஹங்குரான் கெத்த மற்றும் பதுளை ஆகிய இடங்களிலும் இவ்வழிபாடு நிலைபெற்றது என அவர் குறிப்பிடுகின்றார்.°மேற்குறித்த இடங்களில் பத்தினித் தெய்வ வழிபாடு இருவகையில் நிகழ்ந்துள்ளது.
(அ) பத்தினித் தெய்வக் கோயில்களூடான
வழிபாடுகள் (ஆ) பத்தினித் தெய்வத்துடன் தொடர்
புடைய கிராமியச் சடங்குகள் என்ப 606).03u &leopolu IITS5b.
முதலில் பத்தினித் தெய்வத்துடன் தொடர்புடைய கிராமியச் சடங்குகளை நோக்குவது அவசிய மானதாகும். இச் சடங்கு கம்மடுவ, மற்றும் அங்கெலிய என இருவகையாகக் காணப் படுகின்றன.
கம்மடுவ என்ற சடங்கின் மூலம் சிலப்பதிகாரக் கதைவழியே வந்ததாகும். பத்தினி சேரமான் கனவில் தோன்றினாள். அவன் தீராத தலை வலியில் வேதனைப்பட்ட போதே அவள் அவன் கனவில் தோன்றினாள். அவள் பிராமணர் களை இலங்கைக்கு அனுப்பி அங்கு ஒரு மடுவத்தை அமைத்து வழிபாடு செய்யுமாறு கேட்டாள். அவ்வாறு அமைக்கப்பட்ட மண்டபமே மடுவ, கம்மடுவ எனப்பட்டது. அவ்வாறான கம்மடுவ எனப்படும் மண்டபத்திலே நடைபெற்ற சடங்கே கம்மடுவ சடங்கு என வழங்கப்பட்டது. இதனால் அரசன் தலைவலி நீங்கப் பெற்றான் என்று மடுப்புறய என்ற சடங்கு நூல்
°".لتقbuildBédedyDيB
இந்த வழிபாடு வருடாந்தம் கொண்டா டப்படுகின்றது. தமது வயல் நிலங்களின் அறு வடையைப் பாதுகாப்பதற்காகவும், தொற்று
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
நோய்களிலிருந்துதம்மைப் பாதுகாப்பதற்காகவும் அமைதியான வாழ்விற்காகவும் வளத்திற்காகவும் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்தச் சடங்கின்போதே பன்திஸ்கோள்முற என்ற நூல்கள் படிக்கப்படுகின்றன. இந்தச் சடங்கு நடைபெறும் இடம் மக்கள் கூடும் இடமாகவும், கடவுள் வந்து உறையும் இடமாகவும் விளங்கு கின்றது. இதனைத் தேவசபையாகக் கருதுவர். இதனை நடத்துவிக்கும் கபுறாளை மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான தூதராக விளங்குவார். சொர்க்கத்தில் இருந்து பூமிக்குக் கடவுளரை வரவழைத்து தேவ சபையில் இருத்தி வழிபாடு செய்து மக்களிடையே நிலவும் பீடைகளைப் போக்க வழி செய்வார். இந்தக் கப்புறாள மரபு என்பது வம்சாவளியாக வருவது. அவர்கள் கிராமத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவராக விளங்குவார். கப்புறாளை கம்மடுவ சடங்கினை நிகழ்த்தும் போது பத்தினி போலவே வேடமிட்டு இதனை நிகழ்த்துவார். இவ்வாறான சடங்குகள் பல இடங்களில் நடைபெற்றதாக ஒபயசேகர குறிப்பிடுகின்றார்." எனினும், காலமாற்றத்தால் இது சிறிது சிறிதாக அருகி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. இது தமிழ் மக்களடையே நிலவும் அறுவடைக்குப் பிந்தியவைகாசிச் சடங்கினை அல்லது கண்ணகி வழிபாட்டினை ஒத்ததாகக் காணப்படுகின்றது. வைகாசிச் சடங்கும் அறுவடைக்குப் பின்பு, கண்ணகி கோயில் நடைகள் திறந்து, சடங்குகள் நடைபெற்று, குளிர்த்திப் பாடல்கள், காவியங்கள் பாடி வழிபடும் வழிபாட்டு முறையைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. கபுறாளை கம்மடுவ சடங்கின் போது பெண் வேடமிட்டுச் சடங்குகளை நிகழ்த்துவது போல கிழக்கி லங்கயையில் கண்ணகி வழிபாட்டை நிகழ்த்தும் கட்டாடிகள் எனப்படுவோர் பெண் போலவே வேட்மிட்டுச் சடங்குகளை நிகழ்த்துகின்றனர்.
அம்மனுக்குப் பூசை செய்பவர் கட்டாடியார் என்று அழைக்கப்படுவார். வெண்பட்டை
G15)

Page 18
t
இடுப்பிலே உடுத்திபடுத்திச் சால்வையினால் மார்பிலே ஏகவடம் போட்டு, பட்டுச் சால்வையிலே தலைப் பாகையும் கட்டிக் கொள்வர். கழுத்திலே உருத்திராக்க மாலையும் கையிலே சிலம்பும் அணிந்து மேனியெங்கும் திருநீறும் மஞ்சளும் பூசி பொட்டும் இட்டு அம்மன் போலவே திகழ்வார். இடுப்பிலே வேப்பிலை செருகியிருப்பார். கட்டாடியார் எனப்படும் இவர் சில இடங்களில் கப்புறாளை எனவும் அழைக்கப்படுவர்?
இவ்வாறானதொரு அலங்கார முறை மையை கம்மடுவசடங்குநிகழ்த்தும் கப்புறாளையும் இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 1.32 மணிவரை மேற்கொண்ட பின்னரே சடங்கை நடத்தி மக்களை ஆசிர்வாதம் 61stigny. ஒரே வழிபாட்டு முறைமை தமிழ் சிங்கள மக்களிடையே பரவியிருந்தமைக்கு இவை சான்றாக அமைகின்றன.
‘அங்கேலிய" என இன்னுமோர் சடங்கு சிங்கள மக்களிடையே நிகழ்த்தப்படுகின்றது. இச்சடங்கு கம்மடுவ போன்று நேரடியாக பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடையதன்று. எனினும், பத்தினிச் சடங்கின் கூறுகள் இச்சடங்கிலும் இடம் பெறுகின்றன. இலங்கையின் கிழக்குக் கரையில் "பாணம" என்ற இடத்திலும் மாலிதுவ என்ற இடத்திலும் மேல்மாகாணத்தில் பியன்வில, மத்திய மாகாணத்தில் துணுகெல எனும் இடங் களிலும் நடைபெற்ற அங்கேலிய சடங்கு பற்றி ஒபயசேகர விளக்குகிறார். அங்கெலிய என்பதை "கொம்பு விளையாட்டு எனலாம். கொம்புகள் மான் கொம்பாக அல்லது மரக்கொம்பர்க இருக்க லாம். இரண்டு கொம்புகள் கயிற்றால் மரத்தில் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கும். இதில் ஓர் மரம் "அங்கஹ' எனப்படும். மற்றையது'ஹெண்டகந்த எனப்படும். இவை இரண்டுநீளமான கயிறுகளால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கிராமத்தவர் இரண்டு குழுக்களாகப் பிரிவர். உடுபில, யட்டபில என இக்குழு அழைக்கப்படும். உடுபில அல்ல்து
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
மேல்குழு என்பது பத்தினியினுடைய குழுவாகும். யட்டபில அல்லது கீழ்க்குழு என்பது பத்தினி யினுடைய பரிவாரமாகும். இக்குழுக்கள் கயிற்றினைப் பலங்கொண்டு இழுப்பர். கொம்புகள் முறியும்வரை இது நிகழும், தோற்ற குழுவை வென்றகுழுவினர் கேலி செய்வார்கள். அனேகமாக இந்த விளையாட்டு பத்தினி தேவாலங்களுக்கு 660droLDuh(36008u &LLö. பெற்றது. இந்த விளையாட்டுச் சடங்கு பசநாயக்க நிலமே எனும் அதிகாரியின் மேற்பார்வையில் கப்புறாளை அல்லது வட்டாண்டி எனும் பூசகரது வழிகாட்டலில் நடைபெறும். இவ்விருவரும் இக்காலங்களில் புனிதம் பேணவேண்டும். இது போலவே கிராமத்தவர்களும் புலால் உணவு தவிர்த்து, காய்கறி உணவை உண்ண வேண்டும் தீட்டு, துடக்கு உள்ளவர்கள் கிராமத்தில் இருக்கக்கூடாது. கப்புறாளை மாலை 5 மணிக்குப் பின் உணவு அருந்தக்கூடாது. உடலுறவிலிருந்து அவர் தவிர்க்கப்படுவார். கோயில் வளவை விட்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வெளியில் செல்ல முடியாது. அவர்கள் புதிய பானையில் சமைத்த உணவை உண்ண வேண்டும். கைக்குத்தல் அரிசியும், முருங்கை இலையுமே உண்ண வேண்டும்.
அங்கெலிய சடங்கு பதினைந்து நாட்கள் நடைபெறும். முதலாம் நாள் கொளு ஆன் எனப் படும். ஆறாம்நாள் பிரதான சடங்குகள் தொடங்கி ஒவ்வொரு இரவும் கொம்பு விளையாட்டு இடம் பெறும். பதினான்காம் நாள் இரவு பத்தினிக் கடவுள் ஊர்வலம் வரும் நிகழ்வு இடம்பெறும். இறுதி நாளன்று திய கெலிய" எனப்படும் நீர்விளையாட்டு இடம்பெறும். இதனை நீர்வெட்டு என்றும் குறிப்பிடுவர்.
மேற்குறித்தது போன்ற சடங்கு அல்லது கொம்பு விளையாட்டு மட்டக்களப்புத் தமிழ கத்திலும் நிலவுகின்றது. மழை குறைந்து பயிர் வரண்ட காலங்களில் மழைபொழியும்படி கண்ணகி அம்மனை வேண்டி நேர்த்தி செய்வர். அதன்படி மழை பொழிந்தால் அந்த நேர்த்தியைப்
G16)

Page 19
sí innis
milia
பூர்த்தி செய்வதற்காக கொம்புவிளையாட்டு என்னும் சடங்கை நிகழ்த்துவர். இதுபோலவே தொற்று நோய்களிலிருந்தும் மக்களைக் காக்க வேண்டி நேர்த்தி வைத்துக் கொம்பு விளையாட்டை நிகழ்த்துவர்."
மட்டக்களப்புப் பிரதேசத்தில் நடைபெறும் கண்ணகி குளிர்த்திச் சடங்குகள் தொடர்பான நடைமுறைகள், கொம்பு விளையாட்டு என்ப வற்றை அங்கெலிய சடங்குடன் ஒப்பிடுகின்ற போது இவற்றுக்கு இடையேயான ஒற்றுமை புலப்படுகின்றது. மேலும் அங்கெலியச் சடங்கை நிகழ்த்துபவர் 'வட்டாண்டி ஆசிர்வாதப் பாடலைப் பாடுவர். அக்குடும் பத்திவருக்கு 98 ரோகங்களில் (தொற்று நோய்கள்) இருந்தும் 99 வியாதிகளில் இருந்தும் 203 அபாயங்களில் இருந்தும் காப்பாற்ற வேண்டி ஆசீர்வாதம் செய்வார். சிங்களக் கிராமங்களிலே இவ்வழிபாட்டுச் சடங்கு "கிரியம் மாக்களின் தானம்" என்ற பெயரில் இன்றும் நடைபெறுகின்றது.
இனி பத்தினித் தெய்வ கோயில்களையும் அதனுடன் தொடர்புடைய சடங்குகளையும் நோக்குவது அவசியமானது. கஜபாகுவினது காலத்திலேயே இலங்கையில் பத்தினி ஆலயங்கள் நிலைபெறத் தொடங்கின என்பது தொன்மமாக நிலவிவருகின்ற செய்தி ஆகும். எனினும், இடைக் காலத்தில் பொலன்னறுவைக் காலத்தின் பின் பத்தினிக் கோயில் வழிபாடுகள் அதிகரித்தன. கம்பளை, கோட்டை இராச்சிய காலங்களில் இவை மேலும் செழித்தன. அரச ஆதரவும் அதற்குக் கிடைத்தது. ஆறாம் பராக்கிர மபாகு தனது தலைநகர் வளாகத்துள் பத்தினித் தெய்வத்துக்கு மூன்றடுக்குக் கொண்ட கோயில் ஒன்றைக் கட்டுவித்ததற்கான குறிப்புகள் உண்டு." கஜபாகு மன்னன் இலங்கைக்கு கொண்டுவந்த மரத்தால் ஆன பத்தினிபடிமத்தை யும். சிலம்பையும் கண்டியில் வைத்துப்பூசித்தான் என்ற வாய்மொழி மரபும் உண்டு. எனினும் கண்டியில் தலதா மாளிகாவ என்ற, புத்தரது புனித தந்தம் வைத்து வணங்கப்படுகின்ற கோயிலுக்கு
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
அண்மித்த வளாகத்துள் பத்தினித் தெய்வத் திற்கான கோயில் இன்றும் உண்டு. மேலும் முத்துராசவெல, குருநாகல், கட்டுக்கம்பளை, மினுவாங்கொட, நீர் கொழும்பு, ஹங்குரான் கெத்த, தெவிநுவர, குண்டசாலை, மாத்தளை, நவகமுவ, தம்பறாவ, நுவரெலியா, பதுளை, பொல்காவெல ஆகிய இடங்களில் பத்தினித் தெய்வத்துக்கான ஆலயங்கள் இருந்துள்ளன. 32 இடங்களில் இவை இருந்துள்ளன. இவற்றுள் சில பெளத்த தேவாலயங்களின் மேலாதிக்கத்தில் செல்வாக்கு இழந்து போய்விட்டன. அதாவது அவை உபதெய்வங்களாக உள்வாங்கப்பட்டு விட்டன. சில பத்திரகாளி அல்லது அம்மன் என்ற பெயரில் உருமாற்றம் பெற்று விட்டன. ஆயினும் சில கோயில்கள் தமது தனித்த அடையாளத்துடன் இன்றும் நிலைபெற்று விளங்குகின்றன.
இவற்றுள்களப்பணிக்குரிய ஆலயமாக கண்டி தலதாமாளிகை வளாகத்தினுள்ள ஆலயம் தெரிவு செய்யப்பட்டது. தலதா மாளிகை வளாகத்துள் ஒரு குழுமமாக பத்தினித்தெய்வம், நாததெய்வம் (சிவன் என்பர்), விஷ்ணு தெய்வம், கதிர்காமத் தெய்வம் (முருகன்) ஆகிய தெய்வங்களுக்கான சிறு சிறு கோட்டங்கள் உள்ளன. இவற்றுள் பத்தினித் தெய்வக் கோட்டமும், கதிர்காமத் தெய்வக் கோட்டமும் பெருமளவிலான அடியார்கள் வணங்குகின்ற இடங்களாக உள்ளன.
பத்தினித் தெய்வக் கோட்டம் தலதா மாளிகை வளாகத்தின் பிரதான வாயிலருகே அமைந்து ள்ளது. கேரள மரபிலான மரத்தால் ஆன கட்டடக் கலை மரபையே இக்கோட்டம் பிரதிபலிக்கின்றது. பழைமையான கருங்கல் சுவர்களால் கழப்பட்ட இக்கோட்டம். ஒரு சிறிய கருவறை, அர்த்த மண்டபம் என்பவற்றைக் கொண்டுள்ளது. அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து குறுக்கான நீள்மண்ட பமும், அதனைத் தொடர்ந்து தாழ்வாரமும் அமைந்துள்ளன. தாழ்வாரத்துக்கு வெளியே தோரணவாயில் அமைந்துள்ளது. கோயிற் சுவர்கள் செங்கல்லால் கட்டப்பட்டு சுண்ணச் சாந்து பூசப்பட்டுள்ளன. கோயிலன் அர்த்த
G17)

Page 20
hadigt nahing
மண்டபத்தாங்கு தூண்கள் நுணுக்கமான மர வேலைப்பாடு கொண்டவையாகக் காணப்படு கின்றன. அவற்றின் மேற்பாகம் நான்கு கோமுகைகள் கொண்டனவாக அமைந்துள்ளன. கோயிலின் மேல்விதானம் முழுவதும் மரங்களால் தாங்கப்பட்டுள்ளது. விதானத்தின் ஓரங்கள் ஒரேசீராகச் செதுக்கப்பட்ட மரவேலைப் பாடுகொண்டனவாகக் காணப்படுகின்றன. கூரை ஒடுகள் நாட்டு ஓடு என்று சொல்லப்படுகின்ற வேலைப்பாடுகள் உடைய ஒடுகளாலும், பீலி ஒடுகளாலும் வேயப்பட்டுள்ளன.
கருவறையினுள் மரத்தால் ஆன கண்ணகி சிலை அல்லது பொற்சிலம்பு உண்டு என்பது ஐதீகம். பூசை நிகழ்த்துகின்ற கப்புறாளை எனப் படும் பூசகரைத் தவிர எவரும் உள்நுழைவது தவிர்க்கப்பட்டுள்ளது. கருவறை முகப்பில் திரைச் சீலை ஒன்று தொங்குகின்றது. அதில் இரு கைகளிலும் சிலம்பை ஏந்திய பத்தினியின் உருவம் வரையப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த உருவத்தையே வழிபடுவதற்கான சாத்தியம் உண்டு. பிரதான பூசைக்காலத்தில் கூட திரைச் சீலை மேல் இழுக்கப்படுவதில்லை. கதிர் காமத்தில் நடைபெறுவது போன்றே இங்கும் திரைச்சீலைக்கு அப்பால் என்ன உள்ளது என்பது நம்பிக்கைத் தொன்மமாகவே உண்டு. ஆயின் கபுறாளைகள் இங்கு பூசை செய்யும் போது வாய்கட்டிப் பூசை செய்வதில்லை. கருவறையின் இருபக்கமும் கத்தி (அரிவாள்) கையில் ஏந்திய துவார பாலகர் இருவரது உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அவர்களது தலைகளில் கோண வடிவிலான முடிகள் காணப்படுகின்றன. சுருக்கு நிறைந்த ஆடையை அவர்கள் அணிந்துள்ளனர். ஆயின் பழைமையான ஒவிய உருவம் போல அது தெரியவில்லை. காலத்தால் பிந்தியதாக இருக்க வேண்டும்.
குறுக்காகக் காணப்படும் முன் மண்டபத்தின் பக்க அறைகளில் பரிவார தேவதைகளாக, காளி, விஷ்ணு ஆகியோரது படிமங்களும் கலமும் உண்டு. கருவறையின் வலப்பக்கத்தில் பரிசாரகர்
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
சாலையும். இடப்பக்கத்தில் புத்தர் படிமம் கொண்ட சிறு கோட்டமும் உண்டு. மற்றும் கப்புறாளை தங்குவதற்கான அறைகளும் குறுக்கு மண்ட பத்தின் கடைக்கோடியில் உண்டு.
இங்கு தினமும் மூன்று வேளை பூசை இடம்பெறுகின்றது. அதிகாலை 5.15, முற்பகல் 10.15, இரவு 7.15 ஆகிய வேளைகளில் பிரதான பூசைகள் நடைபெறுகின்றன. இவ்வாறான பூசைகள் வளாகத்தில் அமைந்துள்ள பிரதான கோயிலான தலதா மாளிகையின் பூசைகள் நிகழ்ந்த பின்பே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தலதாமாளிகையின் மேலாதிக்கம் இவ்வாறான செயற்பாடுகளூடாக நிலை நிறுத்தப்படுகின்றது. பிரதான பூசைகள் தினமும் மூன்று வேளைகள் நடைபெற்றாலும் சனி, புதன் கிழமைகளில் நடைபெறும் பூசையே விசேடமானதாகக் கருதப்படுகின்றது. தலதா மாளிகையில் பூசை முடிவடைந்ததும் இங்கே பெற, தம்பட்ட என்ற வாத்தியங்கள் முழங்கத் தொபங்குகின்றன. அதற்கேற்றாற்போல் மணியும் ஒசையெழும்படி அடிக்கப்படுகின்றது. கப்புறாளை பாக சாலையில் சமைக்கப்பட்ட அவி உணவை (காய்கறிகலந்து சமைக்கப்பட்ட அன்னம்) மூடிய தட்டிலேந்தி கருவறை நுழைவார். கருவறையில் பூசை நிகழும். தூபமும், தீபமும் காட்டப்படும். இது திரைச்சீலையில் உள்ள உருவச்சிலைக்கும் நிகழும். தூபதீபம் முடிந்த பின் படைக்கப்பட்ட அவியுணவுடன் கப்புறாளை மீண்டும்பாகசாலை திரும்புவார். அத்துடன் பூசை நிறைவு பெறும். பிரசாதம் (அவிசு) யாவருக்கும் வழங்கப்படும். புதன், சனி ஆகிய தினங்களில் விசேடமாக 5 வகை நாதம் எழும் வகையில் சங்கு, மேளம், உண்பெர, தவில், ஊதுகுழல் என்பன வாசிக்கப்படும்.
பூசை நிகழ்த்தும் கப்புறாளைகள் பரம்பரை உரிமைகொண்ட பூசாரிகளாக விளங்கு கின்றனர். தலைமுறை தலை முறையாக இந்த உரிமை அவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகி ன்றது. கோயிலில் தலைமைக்கப்புறாளையுடன்
G18)

Page 21
துணைக்கு உப கப்புறாகைளும் உளர். இவர்கள் தூய வெண்மையான ஆடைகளை அணிந்து ள்ளனர். பூசை செய்பவர்கள் தூய்மையுடன் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். பிரதான கப்புறாளையே பூசையை நிகழ்த்துவார். அவ்வப் போது வழிபட வரும் அடியவர்களுக்கு அவர்களது வேண்டுதலுக்காக மன்றாடும் (பூசை செய்யும்) செயற்பாட்டை உய கப்புறாளைகள் நிகழ்த்துவர் அடியார்களுக்குச் சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. மக்கள் தமது பயிர்களைக் காக்கின்ற தெய்வமாகவும், கடவுளரது நோய்கள் எனப்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் தெய்வமாகவும் கருதி இக்கோயி லுக்கு வந்து வழிபடுகின்றனர். குறிப்பாகச் சிறுவர்களின் உடல்நலம் வேண்டியே இவ்வழி பாடு நடைபெறுகின்றது. அவர்கள் தமது வேண்டு தல்கள் நிறைவேறும் போது விளக்கு ஏற்றியும். தென்னம்பிள்ளை தானம் வழங்கியும் கிரி அம்மாக்களுடைய சடங்கு நிகழ்த்தியும் பத்தினி படிமங்களை வழங்கியும் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மேற்படி பத்தினி ஆலய நிர்வாகம் ஓர் ஒழுங்குமுறையில் நிகழ்கின்றது. பழைய காலத்தில் அரசரும், மந்திரிமாரும் தலைமை அதிகாரிகளாக இருந்துள்ளனர். தற்போது பஸ்நாயக்கநிலமை என்றதலைமைநிர்வாகியின் கீழே இக்கோயிலின் பரிபாலனம் நடைபெறு கின்றது. இவரைத் தொடர்ந்து கப்புறாளை, விதான என்போர் முக்கியம் பெறுகின்றனர். இவர்களுக்குக் கீழே பல பணியாளர்கள் கோயிலுடன் தொடர்புபட்டுள்ளனர். சலவை செய்வோர் (ஹேனமாமா), பிரசாதம் தயாரிப்போர் (முல்சந்ரால), நெல்குத்து வோர் (கம்பரால), மடப்பள்ளியில் இருந்து விசேட தினங்களில் உணவுத் தட்டு எடுத்து வருபவர் (கத்தியரால), இன்னும் பூசைப் பொருட்களை தூக்கிக் கொண்டு செல்வோர் (ரந்தோலி பங்குவ), காவற்காரர் (முறைபங்குவ), கொடி பிடிப்போர் (நிலப்பங்குவ), தீப்பந்தம் பிடிப்போர் (பந்தம்பங்குவ), தீவர்த்தி பிடிப்போர் (அத்பந்தம்பங்குவ), சட்டிபானை
(alp 2011) −

சங்கத்தமிழ்
செய்வோர் (வளங்பங்குவ), இரும்புப் பொருட்கள் செய்வோர் (ஆயுதபங்குவ), மரக்கறி தருவோர் (மாலுமுறபங்குவ) எனப் பல பணியாளர் eleofabeir d 600rG.
மேற்கூறிய கோயிற்பணியாளர் யாவருக்கும் மானியமாக 2/2 ஏக்கள் வயல் நிலம், 72 ஏக்கர் வீட்டுநிலம், 1 ஏக்கர் சேனைப் பயிர்ச் செய்கை நிலம் என்பன வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் ஒழுங்குமுறைகளை ஊரில் பராமரிப்பதும் நடை முறைப்படுத்துவதும் விதான என்ற அதிகாரியின் கடமையாகும். கோயிலுக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உண்டு. அவற்றி லிருந்தே இவ்வாறு பணியாளர்களுக்கான நில மானியம் வழங்கப்படுகின்றது.
இந்தக் கோயிலில் நிகழும் பிரதான விழாவாக எசல பெரஹர விளங்குகின்றது. எசல (ஆவணி) மாதத்தில் வரும் பூரணை தினத்தை இறுதி நாளாகக் கொண்டு தலதா மாளிகையின் பெருந்திருவிழா நடைபெறும். இந்த விழாவின் பெரஹர எனும் ஊர்வலத் தொடரணியில் தலதா மாளிகையில் உள்ள புனித தந்தப் பேழை யானைமீது பவனி வரும். இதனைத் தொடர்ந்து உப தெய்வங்களான நாத, விஷ்ணு, கதிரகம, பத்தினி தெய்வங்களின் புனிதப் பேழைகளும் ஊர்திகளும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும். இலங்கையின் தேசிய கலாசார விழாவாக இது நிகழ்கின்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் புத்த ருடைய புனித தந்தம் தவிர்ந்த ஏனையவை இந்து தெய்வக் குழுமங்கள் என்பவை குறிப்பிடத்தக்கது.
பெரஹரா என்ற சொல்லை பிரஹாரம் என்ற சொல்லின் திரியாகக் கொண்டு, ஆரம்ப காலத்தில் இங்கு பத்தினித் தெய்வ கோயிலே இருந்தது என்றும் வைகாசிப் பூரணையில் பத்தினிக்கான விழா நடந்தது என்றும், அந்த விழாவில் பிரகாரம் சுற்றுதல் (வீதிவலம் வருதல் நிகழ்ந்தது என்றும் பின்னர் பெளத்தமதச் செல்வாக்கும், புனித தந்தத்தின் முக்கியத்துவமும் அதிகரிக்க பெளத்தமதநிகழ்வாக பெரஹராமாறிவிட்டது என ஆனந்தக் குமாரசாமி குறிப்பிடுகின்றார்.
G19)

Page 22
१
înythig
கேரளாவில் இருந்து இந்த வழமை இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பதன் எச்சமாக யானைகளின் அணிவகுப்பையும், பாரம்பரியக் கண்டிய நடனத் தையும் சிலர் குறிப்பிடுவர். 18 எது எவ்வாறாயினும் கண்டியில் (செங்கடகல) சிங்கள, மக்களிடையே பத்தினி வழிபாடு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது என்பதற்குப் பெரஹரா பிரத்தியட்சமான சான்றாக உள்ளது.
(ԼքւՔ63|6ՓՄ
(e)
(૭)
(S)
(FE)
(உ)
பத்தினி வழிபாடு இலங்கையில் பன் முகத் தன்மை கொண்டதாக பரவி யுள்ளது. தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் வெவ்வேறு வகை யில் பரவியும் நிலைபெற்றுமுள்ளது. பிரதான கதை மரபிலிருந்து வேறு பட்ட பல கிளைக் கதை மரபுகள் வளர்ந்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் தொண்மை யானதாக பத்தினி வழிபாடு நிலைத் துள்ளது. எனினும் அதனை ஆய் வாளர்கள் பெளத்த சமண வழிவந்த மரபாக இதனைக் கட்டமைக்க முற் படுகின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் சடங்கு நிலையிலும், கோயில் வழிபாடாகவும் பத்தினி வழிபாடு தொடர்ந்தும் பயிலப் பட்டு வருகின்றது.
அடிக்குறிப்புகள் 01. சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம்
உரைபெறுகாதை. 02. வரந்தரு காதை - 160 - 164. 03. Anuradha Seneviratna (2003) Manifestation of Goddess Pattini in Sri Lanka Society,
(ஆடி 2011)
சிலப்பதிகாரப் பண்பாட்டுக் கோலங் கள். இந்து சமய கலாசார அமைச்சு. கொழும்பு. ப. 92.

04.
05.
06.
07.
09.
10. 11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
சங்கத்தமிழ்
Gananth Obeyesekara (1984) The Cult of Goddess Pattini, Chicago University Press. P.365. கனகரத்தினம், இரா. வை.(1983) வன்னியிற் கண்ணகி வழிபாடு, இளங்கதிர் - பேராதனைப் பல் கலைக்கழகம். பக். 58 - 59. சற்குணம், எம். (1976) ஈழத்தில் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும். திருக்கேதிஸ்வர குட முழுக்கு விழா மலர். ப. 115. மகேஸ்வரலங்கம், க. (1996) மட்டக்களப்பு சிறு தெய்வ வழி பாடு ஓர் அறிமுகம். தில்லை வெளியீடு, மட்டக்களப்பு. ப. 30. Anuradha Seneviratna, opcitp. 96. சற்குணம், எம். மு.கு கட்டுரை. LJ. 117. Gananth Obeyesekara, opcit. p. 3. Anuradha Seneviratna, op cit. p.98. Gananth Obeyesekara, op cit. pp. 18 — 20. தங்கேஸ்வரி, க. (2008) கிழக் கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரி யங்கள். மணிமேகலைப் பிரசுரம். சென்னை. பக். 172 - 173. Gananth Obeyesekara, op cit. p. 17. நவநாயக மூர்த்தி, நா. (1999) தம்புவில் கண்ணகி வழிபாடு, வானதி வெளியீடு, அக்கரைப் பற்று. பக். 30 -35. Vide - Anuradha Seneviratna, op cit-p. 107. மலர், நீர், ஆடை, கொம்பு, பாறை, சக்கரம், நீலமாம்பழம் - நீலமாம்பழம் ஏழாவது பிறப்பு. UCHC Vol — 1, pt ii, p. 776. பார்க்க - சற்குணம், எம். முற். கு. கட்டுரை. ப. 118. *
G20.)

Page 23
சிலப்பதிகா
முத்தமிழ்ப் பெருங்காப்பியமான சிலப்பதி காரம் இசைச் செய்திகள் நிறைந்த ஒரு கருவு லமாகும். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் இரண்டறக் கலந்த சிலப்பதிகாரத்தின் பெருமை யை நன்கு உயர்த்தியுள்ளது. அரங்கேற்று காதை, வேனிற்காதை, ஆய்ச்சியர் குரவை, கானல்வரி ஆகிய பகுதிகளில் காணப்படும் செய்திகள் இசை இலக்கணம் தொடர்பானவை. இவற்றைத் தவிர மங்கல வாழ்த்துப்பாடல், மனையறம் படுத்த காதை, கானல்வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை ஆகிய பகுதிகளில் இசைப் பதற்குரிய பாடல்கள் நிறைந்துள்ளன. காப்பி யத்தின் முதல் காதையே மங்கல வாழ்த்துப் பாடல் என அழைக்கப்படுகின்றது. இதன் தொடக்கப் பகுதிநான்கு சிந்தியல் வெண்பாவால் ஆனது. இவை அனைத்தும் இசைக்கக் கூடிய இனிமையான பாடல்களாகும்.
மேலும் கானல் வரிப்பாடல்கள், வேட்டுவ வரிப்பாடல்கள், ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள், குன்றக் குரவைப்பாடல்கள் என்பன கூத்துடன் கலந்த அருமையான பாடல்கள். அக்கால இசை மரபை வெளிக்கொணரும் பாடல்களாக அவை காணப்படுகின்றன. மக்கள் மத்தியில் பெரு வழக்காக உள்ள கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப் பாட்டு, என்பன நாட்டுப்புற மரபைப் பின்பற்றி எழுதப் பெற்றவைகளாகத் தேன்றுகின்றன.
'பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்
(29, 26, 5) என்ற அடி வெள்ளைப்பாட்டு பாவையார் மகிழ்ந்து பாடும் பாடல் என்ற குறிப்பைத் தருவதாகும்.
'குடங்கை நெடுங்கண்பிறழஆடாமோ ஊசல் (29; 23; 4)
)2011 واجی)

ரத்தில் இசை
கலாநிதி மீரா வில்லவராயர்
'கார் செய் குழலாட ஆடாமோ ஊசல்
(29; 24; 4) மின் செய் இடை நுடங்க ஆடாமோ ஊசல்
(29; 25; 4) போன்ற அடிகள் மங்கையர் மகிழ்ந்து பாடும் ஊசல் பாட்டை நினைவுபடுத்துவனவாகும். சாதாரண மக்களின் இசை வழக்குகளை நன்கு அறிந்த இளங்கோ அடிகள் முறைப்படுத்தப் பெற்ற இசை முறைமை, விதிமுறைகளையும் சிறப்பாக அறிந்து நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் பல இசைக் குறிப்புகளையும் தந்துள்ளார்.
ஆடலும் பாடலும் கலைநிலையிலும் அமைப்புமுறையிலும் இருவேறுபட்ட கலைகளா யினும் உணர்விலும் உறவு நிலையிலும் இரட்டைக் கலைகளாக கருதப்படுகின்றன. அவை தனித்து இயங்கு வதைவிட இணைந்து இயலும் போது பயனும் சுவையும் மிகுதியான இன்பத்தை தரவல்லதாகையால் அடிகளார் பல இடங்களில் இவ்விரு கலைகளின் இணைவையும் இன்பக் கலப்பையும் இயல்பாகவும் இனிதாகவும் விளக்கிக் காட்டுகின்றார்.
அரங்கேற்றுக்காதையில் இசை யாசிரியன், தண்ணுமையாசிரியன், குழலோன், யாழாசிரியன், கவிஞன் ஆகியோரின் இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆடலாசிரியன் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள் ஆடல், இசை ஆகிய இரு கலைகளிலும் பயிற்சி தேவை என வலியுறுத்திக் கூறுகின்றார்.
இருவைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பலவகைக் கூத்தும் விலக்கினிற்
புனர்த்து பதினோராடலும் பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க
அறிந்தால் ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்தும் காலை
(சிலப்; 3; 12-17)
G21)

Page 24
எனக் கூறும் இளங்கோவடிகள் தேசி, மார்க்கம் ஆகிய இருவகை கூத்துக்களின் அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டு மெனவும் வலியுறுத்துகிறார்.
"யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை
ஆடலொடிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கம் உரிப்பொருள் இயக்கி" (3; 26-29) என்ற அடிகள் வாயிலாக இசையாசிரி யனுக்குரிய இலக்கணத்தை கூறுகின்றார். "ஆடலுக்குரிய பாடல்களை நன்கு உணர்ந்து இசை கூட்டும் ஆசிரியர் இசையுணரும் ஆற்றலு டையவராகவும் இசைபுணர்க்கும் திறமையு டையவராகவும் இருத்தல் வேண்டும். யாழ்ப் பாடல், குழல்பாடல் (வங்கியப்பாடல்), இரு வகை யான தாளங்களின் கூறுகள், மிடற்றுப்பாடல், தண்ணுமையின் தாளவிசைக்கூறுகள் அனைத் தையும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும். இரு பிரிவு பாடல்களுக்குப் பொருளான இயக்கம் நான்கினையும் (முதனடை, வாரம், கூடை, திரள்) அறிந்து இசை புணர்த்தல் வேண்டும். மேலும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் ஆகிய நான்கு வகையிலும் இசை இணைவிக்கும் திறமை வேண்டும்.
தண்ணுமை ஆசிரியன் பற்றி கூறுமிடத்து அனைத்து கூத்துக்கள், பாடல்கள், இசைகள், ஆகியவற்றின் கூறுபாடுகளை அறிந்திருப்பதுடன் இருவகைத் தாளங்கள், ஏழுவகைத் தூக்குகள் ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும். யாழ், குழல், வாய்ப்பாட்டு என்பவற்றுடன் தண்ணுமை இணைந்திருத்தல் வேண்டும். மற்ற கருவி களுடன் சேர்ந்து அவற்றின் குறை நிரப்பி, அக்கருவிகளின் மிகையடக்கி, ஆக்குமிடத்திலும் அடக்குமிடத்திலும் இசைக்கேற்ப வாசித்தல் தண்ணுமை யோனின் சிறப்பு எனக் கூறுகிறார். ஆடல், பாடல், இசை, தமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் ஆகிய ஒன்பது கூறுகளைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்கள் பற்றியும் அறிந்து தண்ணுமை ஆசிரியர்கள் தொழிற்படவேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார்.
(gિ 2011)
 

சங்கத்தமிழ்
பண்ணிசைக் கருவிகளில் யாழை அடுத்து மிகச் சிறப்புடன் விளங்கும் குழலைப் பற்றியும் விளக்கமாக இளங்கோவடிகள் கூறுகின்றார். பல வகையான குழல்கள் பற்றியும் குழலை எவ்வாறு வாசிக்கவேண்டும்என்றும்விளக்கம் அளிக்கின்றார். இளங்கோவின்காலத்தில் யாழ்மிகச்சிறந்த இசைக் கருவியாக மதிக்கப்பட்டது. அதில் இசைய மைத்துப் பண்படைத்துக் காட்டும் பாங்கினை மிக விளக்கமாக சிலப்பதிகாரத்தில் கூறுகின்றார். யாழாசிரியனது திறமைகளை விளக்கும்போது அக்காலப் பண்ணிசை வழக்கங்களையும் விளக்குகிறார். கானல்வரியில் மாதவி யாழிசை மீட்டுவதை மிக விரிவாக விளக்குகிறார்.
பண்ணல் பரிவட்டனை ஆராய்தல்
தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூர் நண்ணிய குறும் போக்கென்று நாட்டிய எண்வகையால் இசையெழீஇப் பண் வகையால் பரிவு தீர்ந்து மரகத மணித் தாள் செறிந்த மணி
காந்தன் மெல்விரல்கள் பயிர் வண்டின் கிளை போலப்
பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் நெருட்டல் அள்ளல் எருடைப் பட்டடையென இசையோர்
வகுத்த எட்டுவகையி சைக்கரணத்துப் பட்டவகைதன் செவியினோர்த் தேவலன்பின் பாணியாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும்
(சிலப்; 7; 5-18) இவ்வாறு யாழ் மீட்டுவதற்குரிய விதிகளைக் குறிப்பிடுகிறார்.
கானல்வரியில்பலவகையான வரிப்பாடல்களை எழுதியுள்ளார். வரி என்பது பாடல், ஆடல் ஆகிய
யும் கானல்வரி பாடலையும் குறிப்பிடுகின்றன. வரிப்பாடல்கள் யாழ் மீட்டி அதன் இசைக்குத் தக்கவாறுபாடப்படுவதாகத் தோன்றுகிறது.
சங்கப் பாடல்களில் வீணை என்ற இசைக் கருவி பற்றிய குறிப்பு இல்லாவிடினும் சிலப்
G22)

Page 25
A40
hiå bå
பதிகாரத்தில் வீணை பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.
நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை நயந்தெரி பாடலும்
(&l6օն: 6; 18-23) மேலும் வேனிற் காதையில் குரல் - இளி முறையில் (ஸ்-ப முறை) பன்னிரு ஸ்வர நிலைகளை பழந்தமிழ் மக்கள் எவ்வாறு கண்டு பிடித்தனர் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"வரன் முறை மருங்கின் ஐந்தினும்
ஏழினும் உழை முதலாகவும் உழையிறாகவும் குரல் முதலாகவும் குரலிறாகவும்
வேனிற் காதை 36-38)
ஆய்ச்சியர் குரவைக் கூத்து நிகழ்ச்சியில் எவ்வாறு மாதரி ஏழு பெண்களை நிறுத்தி அவர்களுக்கு குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்டாள் என விவரித்துள்ளார். மேலும் ஒரு இயக்கிலுள்ள குரல், துத்தம், கைக்கிளை முதலிய ஒவ்வொரு ஸ்வரத்தையும் குரலாக அதாவது ஆதார சுருதி யாக வைத்து ஏழு பெரும்பாலைப் பண்களை வகுத்தனர். இம்முறை பண்ணுப் பெயர்த்தல், எனப்படுகின்றது. தற்காலத்தில் கிரகபேதம் என்றும் (3LDbassiflu 66Odau56) model shift of tonic முறை எனவும் அழைக்கப்படுகின்றது. இம்முறை பற்றி இளங்கோவடிகள் கானல் வரியில்
தீத் தொடைச் செவ்வழிப் பாலை எழீஇப் பாங்கினில் பாடியோர் பண்ணுப்
பெயர்த்தாள் (கானல்வரி அடி 49, 5O) எனக் கூறியுள்ளார்.
“எந்த ஒரு இலக்கியத்தினதும் (இங்கு முழு இலக்கியத் தொகுதியையுமே குறிப்பிடு இலக்கியத்தின் ஊற்றுக்காலான சமூகத்தி இருக்கும். உதாரணமாகத் தமிழை எடுத்து இலக்கியத்தினதும் அமரத்துவத்துக்குக் கா உண்மைத்தன்மையும் உணர்வாழமுமே பெற்றுக் கொண்ட உணர்வுத் தேட்டம்தான்
(ஆடி 2011)
 
 

சங்கத்தமிழ்
பல இசை ஆய்வாளர்கள் சிலப்பதிகாரப் பாடல்களை இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளனர். டாக்டர் எஸ்.இராமநாதன் சிலப்பதிகாரத்து ‘ஆய்ச்சியர் குரலைப் பாடல்கள் (1968) என்னும் நூலில் ஆய்ச்சியர் குரவைப் பகுதியிலிருந்து சில பாடற் பகுதிகளை எடுத்து மோகனம், மத்திய மாலதி, ஹிந்தோளம், சுத்தஸாவேரி, சுத்த தன்யாஸி ஆகிய இராகங்களில் இசையமைத்துள்ளார். சிலப்பதிகாரத்தின் யாப்பமைதியை ஆராய்ந்த டாக்டர் ந.வீ.செயராமன் 6 இசைக் கூறாகப் பிரித்து (மங்கல வாழ்த்து, கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை) 56 இசைப்பாடல் வகைகளை இனங்கண்டு அப்பாடல்களின் யாப்பினை ஆராய்ந்துள்ளார். பேராசிரியர் டாக்டர் எஸ்.சீதா சிலப்பதிகாரத்தில் ஒன்பது சுவைகளை உணர்த்தும் வகையில் பாடல்களைத் தெரிந் தெடுத்து ஒன்பது இராகங்களில் இசையமைத்து ஸ்வரதாளக் குறியீடுகளுடன் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் இ.அங்கயற்கண்ணி அவர்களும் 'சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப் பாடல்கள் என்னும் நூலில் சில பாடல்களை ஸ்வரதாளப் படுத்தியுள்ளார்.
துணை நூற்பட்டியன் 1. அங்கயற்கண்ணி.இ -சிலப்பதிகாரத்தில்
காணப்படும் இசைப்பாடல்கள் 2. இராமநாதன்.எஸ் - சிலப்பதிகாரத்து
இசைத்தமிழ் 3. சேலம் செயலட்சுமி.எஸ் - சிலபத்தி
காரத்தில் இசைச் செல்வங்கள் 4. தனபாண்டியன்.து.ஆ - இசைத்தமிழ்
வரலாறு பகுதி1 5. பெருமாள் ஏ.என் - தமிழர் இசை :
இலக்கியம் எனும் பொழுது ஒரு மொழியின் கின்றேன்) கவர்ச்சியும் உணர்வாழழம் அந்த ன் அநுபவ ஆழத்தைப் பொறுத்தனவாகவே க் கொண்டால் சங்க இலக்கியத்தினதும் பக்தி ரணம் அந்த அந்த வரலாற்றனுபவங்களின் ஒரு சமூகம் தனது வரலாற்று அநுபவத்திலே அதன் இலக்கியத்திலே பேசும்”.
கா.சிவத்தம்பி
G23

Page 26
ஈழத்துத்தமிழ் Syrtoprtuar ШоавтL
கலாநி
இராமாயண மகாபாரதக் கதைகள் தென்னாசிய தென்கிழக்காசிய கலை இலக்கியங்களிலே தம்முடைய சுவடுகளைப் பதித்துள்ளன. தென்னாசியாதென்கிழக்காசியநாடுகளிலேயுள்ள கோவில்களின் தூண்களிலே இராமாயண மகாபாரதக் கதைகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டு ள்ளன. இராமாயணமும் மகாபாரதமும் சமஸ் கிருதம் முதலான பல இந்தியமொழிகளில் பல ஆக்கங்களுக்குக் கருப்பொருளாகின. வட மொழி யில் பாரதத்தை இயற்றியவர் வேதவியாச முனிவர். அகஸ்தியபட்டர் வடமொழியில் பால பாரதம் என்ற பெயரில் பாரதத்தை எழுதியுள்ளார். தமிழ்மொழியில் கி.பி2ம் நூற்றாண்டு காலத்தில் பாரத வெண்பா பெருந்தேவனாரால் பாடப்பட்டது. பிற்காலத்திலும் 12 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மொழியில் பாரதவெண்பா பாடப்பட்டது. அதுவும் பெருந்தேவனாரால் பாடப்பட்டதாகும். இது கம்பன் காலத்ததாகும். வில்லி புத்தூரரால் தமிழில் யாக்கப்பட்ட பாரதம் வில்லிபாரதம் என அழைக்கப் படுகின்றது. நல்லாப்பிள்ளை பாரதமும் பேரிலக்கியமாக தமிழ்மொழியில் காணப் படுகின்றது. வட மொழியில் வால்மீகரால் இராமாயணம் இயற்றப்பட்டது. கம்பன் தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப தனது பேரறிவினாலும் ஆழ்ந்த புலமையினாலும் இராமாயணத்தைப் படைத்தான். ஒப்புயர்வற்ற இலக்கியமாக இராமாயணத்தைப் படைத்தான். அவனது படைப்பின் ஆற்றலினால் கம்பராமாயணம் பேரிலக்கியம் என அழைக்கப்படுகின்றது. நேபாள மொழியிலும் இராம சரித்திரத்தை இராமவதாரம் என்றபெயரில் நூலை இயற்றியுள்ளனர். துளசிதாசர் ஹிந்திமொழியில் இராமாயணத் தையும் அகஸ்தியர் வடமொழியில் அத்யாத்ம இராமாயணம் என்ற பெயரிலும் படைத்துள்ளனர். இவ்வாறு பல்வேறு மொழிகளிலும் வளர்ச்சி
(ஆடி 2011)

நிலக்கியங்களில் ாரதச் செல்வாக்கு
தி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம், முதுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை,
கண்ட இராமாயண மகாபாரதக் கதைகள் தமிழ் இலக்கியங்களிலும் ஆரம்பகால இலக்கியங் களிலிருந்து தமது செல்வாக்கைச் செலுத்தி யுள்ளதைக் காணலாம். சங்ககால இலக்கியங் களில் சில பாடங்களில் இராமபிரான் செயல் களும் கண்ணன் செயல்களும் உவமையாகவும் வேறுசெயல்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
"கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை"
எனவரும் புறநானூற்றுப் பாடலில் இராமாயணக் கதைக்குறிப்பு வருகின்றன.
"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி?
எனவரும் மணிமேகலையில் திருமால் மயக்கம் உற்று நில உலகிலே இராமனாகத் தோன்றினான் என்னும் இராமகதை சொல்கின்றது.
“அருங்கான் அடைந்த அரும் திறல் பிரிந்த அயோத்திபோல9
எனவரும் சிலப்பதிகார வரிகள் இராம கதைக் குறிப்பைத்தருகின்றது. நாயன்மார் ஆழ்வார்களது பாடல்களிலும் இராமாயண மகாபாரதக் குறிப்புக்களைக் காணலாம். ஆழ்வார்கள் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் கண்ணனைக் குழந்தையாகவும், தாயாகவும், காதலனாகவும் பாடிய பாடல்களில் பாரதக்கதை வருகின்றது. ஆழ்வார்கள் திருமாலிடம் ஆழ்ந்த பக்திகொண்டு பாமாலை புனைந்தவர்கள் அவர்களுடைய பாடல்களிலே இராமனுடைய பெருமை களைக்
5T600T6OTLD.
G24)

Page 27
“மன்னனுடைய யிலங்கை அரண் காய்ந்த மாயவனே?
"கற்பார் இராமனை யல்லால் மற்றும்
கற்பாரோ9
இவ்வாறு பெரிய திருமொழியில் இராமகதை வருகின்றது. தமது இராமாயண மகாபாரதக் கதைகள் ஈழத்தில் சமயமரபில், கலை இலக்கியம் எனப்பல்வேறு விடயங்களிலும் தம்முடைய செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. இவற்றுள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் இவற்றின் செல்வாக்குப் பற்றி ஆராய்ந்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2. தொடக்ககால ஈழத்து இலக்கிங்
களில் காணப்பட்ட இராமாயண மகாபாரதச் செல்வாக்கு. ஈழத்து வரலாற்றைக் குறிப்பிடுகின்ற வரலாற்று ஆசிரியர்கள் தமது வரலாற்று நூல்களில் இராமாயணக் கதைகளை எடுத்தாள் வதைக் காணலாம். வையாபாடல், கைலாய மாலை, மட்டக்களப்பு மான்மியம், யாழ்ப்பான வைபவமாலை என்னும் வரலாற்று நூல்கள் இராமாயணக் கதைகளைத் தொட்டுச் செல்வதைக்
560,
யாழ்ப்பாணத்து அரசர்கால இலக்கியமான வையாபாடல் இராமாயணத்தில் உள்ள விபீஷணனது கிளைக் கதையோடு தொடங்கு கின்றது. இக்கதையின்படி
“இராமர் இராவணனைக் கொன்று
இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் விபீஷணனுக்கு
அவ் அரசுரிமையைக் கொடுத்துப் பட்டஞ் சூட்டி போனான்°
என்ற குறிப்பைத் தருகின்றது. “விபீஷணன் சபையில் யாழ் வாசித்துக்
கொண்டிருக்கும் ஒருவன் வட இலங்கைக் குடாநாட்டை
காடு வெட்டித் திருத்திதோட்டங்கள் வைத்து வடநாடு
சென்று
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
ஓராயிரம் குடிகளை அழைத்து
அவ்விடத்தில் குடியேற்றிய பின் அக்குடிகளை ஆள
அரசன் ஒருவன் வேண்டுமெனக் கருதி வடநாட்டில்
தசரதனின் மைத்துனனாகிய குலகேதுவிடம் ஓர்
அரச மைந்தனைக் கேட்டபோது அவன் ஒரு கை
கூழையனாயிருந்த தன் மகனை மகிழ்ந்து கொடுக்க அவ்
மைந்தன் விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என்ற
பெயரோடு யாழ்ப்பாணத்தை ஆண்டான்'7
என்கின்ற இராமாயணக் கதையை வையாபாடல் தருகின்றது. இராமாயணக் கதை இவ்வரலாற்றுடன் தொடர்புறுகின்றது.
மயில் வாகனப் புலவரும் யாழ்ப்பான வைபவமாலையைத் தொடங்கும் போதும் இதிகாச புராணங்கள் தரும் செய்தியாகவே வரலாற்றைத் தொடங்குகின்றார். இலங்கையை இயக்கர்கள் அரசாண்டார்கள் என இதிகாசங்கள் கூறுகின்றன எனவும் குறிப்பிடுவார்.
“இராவண சங்காரம் முடிந்த பின்னர்
இலங்கை ஆட்சாட்சியை விபீஷணன் அரசாண்டு
தேகமுத்தி அடைந்தானென்றும் அவன் நீங்கிய
பின்னர் வேற்று அரசனின் கீழ் குடிகளாயிருப்பது
நெறியல்ல என்று இயக்கக் குடிகளாயுள்ள அனைவரும்
இலங்கையை விட்டு நீங்கினர்?
என்ற குறிப்பை மயில்வாகனப் புலவர் தருகின்றார்.
மட்டக்களப்பு மாண்மியம் மட்டக்களப்பின் அரசியல் வரலாற்றைக் குறிப்பிடும் போது
-G25)

Page 28
t
இராமாயணமகாபாரதக் கதையைத் தருகின்றது. மட்டக்களப்பை ஆண்ட ஆடகசவுந்தரிக்கு.
"இராமமூர்த்தி தோன்றி நூற்றி இருபது
பருவத்தில் ஆயுள் என்றும் நூற்றிப் பதினேழாவது
பருவத்தில் ஒரு புத்திரியைப் பெறுவாய் என்றும் உன்
இராம மந்திரத்தை தியானிக்க பூதம்
நூற்றெட்டும் உன் அடிமையாய் வாழும் என கூறி
LD6DDB5ITÚo
எனவும் மட்டக்களப்பு மான்னியம் தரும் செய்தியில் உள்ளது. மட்டக்களப்பு வரலாறும் இராமாயண சமூகத்துடன் தொடர்புறுத்தி அமைகின்றது. இராமபிரானை இறைவனாகவும் மந்திரமாகவும் ஆடகசவுந்தரி வழிபட்டதை மட்டக்களப்பு மான்னியம் தரும் செய்தியால் அறிகிறோம்.
இராமாயணக் கதைக்கு புதுவடிவம் கொடுத்துப்
பேசுவதையும் மான்மியத்தில் காணலாம்.
“ஆடக செளந்தரியே இலங்கையை அரசு
புரிந்த இராவனேஸ்வரத்துக்குப் புத்திரியாகப்
பிறக்க இராவனேஸ்வரன் சோதிடரை
அழைத்து அவனது பிறவிநோக்கைப் பார்வையிட்டுச் சோதிடர் இந்தப்பிள்ளை இராச்சியத்துக்காகாது
எனக் கூற அவனது பிதாவாகிய இராவனேஸ்வரன்
élഖങ്ങാണ് பேழையில் அடைத்து ஆழியில் விட
அந்தப்பேழை வடகடல் மருங்காயடைய சனகன்
அவனை எடுத்து வளர்த்துப் பருவகாலத்தில் அயோத்தியைப் பரிபாலிக்கும் தசரதன்மகன் சிறிராமனுக்கு
D6D
(e.g. 2011)

சங்கத்தமிழ்
செய்து வைக்க சிறிராமனும் பதின்னான்கு
eങ്ങ്(B வனத்தரசனாகி தம்பி இலட்சுமணனைத்
துணைக்கொண்டு அவளையும் கூட்டிக்கொண்டு யோகி
யிருக்க இராவனே - ஸ்வரனின் தங்கை கர்ப்பனகை
சிறிராமனைக் கண்டு மோகங்கொள்ள இலட்சுமணன் காதும்
மூக்கும் அரிந்து விட கர்ப்பனகை இராவணனிடம்
முறையிட அவனும் அவளை இலங்கையில் சிறைவைக்க
சிறிராமன் அவனைக் கொன்று அவன் தம்பி விபீசனனுக்குப்
பட்டஞ்கட்டி வாவியில் இருவரும் ஸ்நானஞ்செய்து
பாவம் நீக்கி அயோத்திக்குப் போய் வாழும் காலம்"9
என இராமகதைக்கு புது மெருகூட்டுவதைக் காணலாம். மட்டக்களப்பை ஆண்ட ஆடக சவுந்தரியே இராவணனுக்கு மகளாகப் பிறந்து பின்னர் பேழையில் விட அது வளர்ந்து சிறிராமர் மனைவியாக (சீதை) மாறும் பாத்திரமாக மட்டக்களப்பு மான்மியம் காட்டுகின்ற விதம்
g560 DusteoTg5.
எதிர்மன்னசிங்கன் மட்டக்களப்பை ஆண்டபோது வடநாட்டு கொங்குநகரில் உள்ள தாதன் என்பவன் நாகர்குல குரியோதனாதிகள் பண்டுவின் குலத்தவர்களுக்கு செய்த அபராதங் களையும் மகா பாரதத்தோடு சேர்த்துப் புலவர் களால் பாடிய இதிகாசத்தை மடலில் வரைந்து கொண்டு கொங்கு நாட்டிலிருந்து இலங்கை மட்டக்களப்பில் உள்ள ஆலயத்தில் போதித்தான். துரியோதனாதிகள் செய்த அட்டுழியங்களை போதிக்க வந்ததாகக் கூறி பாரதக்கதை கூறப் படுகின்றது. அந்த ஆலயத்தில் பாண்டவருடைய உறுப்பை ஆறுபேருக்கு உண்பாக்கிஅதனைநம்பும் படி தீவளர்த்து பின்பு கட்டிமுடித்தான். இவ்வாறு ஆலய முண்டாக்கி பாண்டுறுப்புமுனை எனவும் பெயரிடப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் தரும் செய்தியால் அறிகிறோம்.
G26)

Page 29
40
கண்டில்
3. மரபுவழி இலக்கியங்களின்
காணப்பட்ட செல்வாக்கு
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் மட்டக் களப்பை பிறப்பிடமாகக் கொண்ட புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையும் இராமாயண மகா பாரதக் கதைகளைத் தமது இலக்கிய வடிவங்க ளுக்குக் கருப்பொருளாக்கினர். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இராமாயணத்தை அடிப்படையாக வைத்து கம்பராமாயணக் காட்சிகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகளை வரைந்துள்ளார். இந்தக் கட்டுரைத் தொடரிலே கம்பனது கவித்துவ ஆற்றலை விரிவாக எடுத்துக் காட்டும் பண்டிமணி அவர்கள் சிந்திக்கத்தக்க வகையில் சில கருத்துக்களை முன்வைத்து ள்ளார். வான்மீகியிடமிருந்து கம்பன் பல இடங்களில் வேறுபட்டுப் புதுமைகள் நிகழ்த்தி னாலும் கம்பன் செய்த உண்மையான புதுமை பற்றி பண்டிதமணி கூறும் கருத்து மனங் கொள்ளத்தக்கது.
"வடமொழி வான்மீகம் காலந்தோறும்
வளர்ந்து கதைகண்ைடு பிடிக்க முடியாமர் பிறழ்ந்து. முரண்பட்டுக் கிடந்தது.-அதையறிந்த
கம்பன் மறைவல்ல அந்தணர்களை வைத்துக்
ଗ&mଶOditG வான்மீகத்தில் மறைந்து இடையிடையே
தோன்று கின்ற கதையை ஆராய்ந்து முதலிற்
கண்டுபிடித்தான். கம்பனுக்கு இராமாயணம் பாடியது ஒரு
5|Tifluub அன்று கதை கண்டுபிடிப்பதே பெரிய
காரியம். வான்மீகியே நம்பமுடியாத பிரகாரம் அப் பொழுதையை வான்மீகம் பிறழ்ந்து
கிடந்தது. அதை ஆராய்ந்து வான்மீகி கண்ட
3560D560Duu கதாபாத்திரங்களை - சந்தர்ப்பங்களை
கற்பனை
(ஆடி 2011)
 
 

சங்கத்தமிழ்
செய்து கண்டதுதான் கம்பன் செய்த வம்பு (புதுமை)"
என பண்டிதமணி நோக்கும் பார்வை குறிப்பிடத்தக்கது. கம்பராமாயணக் காட்சியில் இடம்பெறும் 'கம்பன் அபிரமிரமன், எய்திய மாக் கதை', 'ஆவி நின்றது அறன் அன்று', பென்ணென நினைத்தான்', 'மைவரை நெருப் பெரிய வந்தென வந்தான்', 'தாடகை சரிதம்", 'அரசியில் பொரியோடு திருவாரூர், வழிநடைக் கதை', 'கோது என்று உண்டிலன்" என்ற கட்டுரைகள் இராமாயணத்தை பண்டித மணி புதுமை நோக்கில் ஆராய்வதாக தோன்றும் விதம் குறிப்பிடத்தக்கது. பணடிதமணி அவர்கள் மகாபாரதக்கதையை கருவாக் கொண்டு பாரத நவமணிகள் என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி யுள்ளார். பாரதநவமணிகள் என்ற நூலில் இடம் பெறும் கிருஷ்ணன் தூது, என்னும் கண்ணன் காட்டும் வழி, மந்திராலோசனை, தூது நிகழ் வென்னும் கண்ணன் சூழ்ச்சி', 'கண்ணுக் கணிகலம்-கண்ணோட்டம்’, தருமவேறுபாடு, தருமத்தின் இன்றியமையாமை", "கீதாபோதம் என்ற கட்டுரைகள் மகாபாரதத்தின் முத்துக்களாக பண்டிதமணியினால் கோக்கப்படுகின்றன. "மகாபாரதத்தில் கண்ணனுக்கு முதன்மை யிடம் பண்டிமணியினால் வழங்கப்படுகி ன்றது. யுத்தத் தொடக்கத்திலும், தூது செல்வ திலும் கண்ணன் பெருமை துலங்குவதாக பண்டிதமணி கருதுகிறார். தூது பற்றி விரிவாக நோக்கும் பண்டிதமணி துதின் இரகசியத் தைப் பெரியாழ்வார் நன்கு உணர்ந்தி ருந்ததாகக் கூறுகின்றார்.? இவ்வாறு மகாபாரதக் கதையின் முக்கியத்துவத்தை பண்டிதமணியின் பாரத நவமணிகள் துலக்க மாகக் காட்டுகின்றன.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மகா பாரதக்கதையில் உள்ளடங்கிய பகவத்கீதையை வடமொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்த்து பகவத் கீதை வெண்பா என செய்யுள் நூல் ஒன்றைதந்துள்ளார். புலவர்மணி அவர்கள் பகவத்கீதை சுலோகங்களில் கருத்துக்களை தமிழ் மரபுக்கு ஏற்ப சைவசமய
G27)

Page 30
عشحعفسة
சாரத்தைக் கலந்து மொழி பெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கீதா சாஸ்திரம் கூறும் அரிய கருத்துககளை பொருட்செறிவும் யாப்பமைதியும் இசைநயமும் பொருந்த கீதை வெண்பா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4. ஈழத்து நவீன இலக்கியங்களில்
காணப்படும் செல்வாக்கு 4.1 சிறுகதைகளில்
இதிகாச மரபுகளை அடியொற்றியே ஈழத்து மக்கள் வாழ்க்கை நடாத்துகின்றனர். இதிகாசக் கதைகளைச் சமகால சூழலுடன் இணைத்து கதை எழுதும் முறையினை ஈழத்து சிறுகதைகளில் காணலாம். படிமங்கள், குறியீடுகள், நம்பிக்கைகள் பாத்திரங்கள் வாயிலாக ஈழத்துஎழுத்தாளர்களால் இராமாயணமகாபாரதக் கதை எடுத்தாளப்படுகின்றது. ஈழத்து சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான ரஞ்சகுமாரின் கோசலை என்ற சிறுகதை இராமாயணத்தை நினைவுபடுத்துவதாகும். அரசியற் பின்னணி காரணமாகச் சீலன் கோசலையாகிய தாயை விட்டுப் பிரித்து நாட்டைக் காப்பாற்ற விழை கின்றான். அவன் வீட்டைவிட்டுப் பிரிந்தநாள் முதல் கோசலை படும் துன்பத்தையும் கண்ணி ரையும் ஏக்கத்தையும் ஆசிரியர் நூல் முழுவதும் சித்தரிக்கின்றார்.
சீலனின் பிரிவு,
நினைக்க நினைக்க அம்மாவுக்கு
நெஞ்சைப் பிளக்கும்படி நெடுமூச்சு எறிந்தது. சீலன் ஏன்
அடிஅப்படிப்போனான்? அம்மா மெல்லமெல்ல போரிலிருந்து
ങ്ങഖ&&bങ്ങബt பிடுங்கி இழுத்தான். நாய் அம்மாவிடம்
ஓடி வந்தது கால்களில் ஈரமூச்சை தேய்த்தது.9
இவ்வாறுஎதைச்செய்தாலும்எதைக்கண்பாலும் தன்மகனின்நினைவலைகளில் உருகும்தாயின் மனக்கோலங்களை நிகழ்வுகள் மூலம் ரஞ்சகுமார் காட்டுகின்றார். கம்பராமாயணத்தில் தசரதனும் கோசலையும் இராமர் பிரிவால் பட்ட
)2011 ?ابھی)
 
 

சங்கத்தமிழ்
வேதனையைக் கம்பர் காட்டிய நோக்கில் சிறுகதை எழுத்தாளரான ரஞ்சகுமார் சீலனின் பிரிவால் கோசலை படும் வேதனையைக் காட்டும் நோக்கு ஒப்புநோக்கத்தக்கது.
ரஞ்சகுமாரின் கதை இறுதியில் "சீலன் புனர்பூச நட்சத்திரம் ராமன்கூட புனர்பூச நட்சத்திரம் தான் அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது. கடலைக் கடக்க நேர்ந்தது. அதர்மங்களுடன் நெடுகலும் போரிட்டுக் கொள்ள நேர்ந்தது." ஓ ஆயினும் ராமன் பேரில் அன்பு கொண்டவர்கள் அவன் பிரிவால் துன்புற நேர்ந்தது.
"தசரதன்.கோசலை.சீதை'
இவ்வாறு கோசலை என்ற சிறுகதைகளை ரஞ்சகுமார் நிறைவு செய்கின்றார். இச்சிறுகதை யில் ஆசிரியர் சீலனை இராமனுடன் ஒப்பிடுவதன் வாயிலாக கோசலையின் மகன் சீலனை இராம னாக காட்ட முற்படுகின்றார். அவன் தாயைக் கோசலை என்பதன் வாயிலாக இதனைப் புரிய வைக்கின்றார். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறையை அரசியற் பின்னணியினூடாக ஆசிரியர் இச்சிறுகதைகளில் குறிப்பிட முனைகிறார்.
இராமாயண மகாபாரதத்தில் கிளைக் கதையாக அமைந்த அகலிகைக் கதை ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கியங்களுக்குப் பொருளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவராக தளையசிங்கம் "உள்ளும் வெளியும்” என்ற தலைப்பில் அமைந்த சிறுகதையில் அகலிகையினது கதையை புதிய பாணியில் நோக்கும் நோக்கு குறிப்பிடத்தக்கது. வால்மீகி இராமாயணத்தில் அகலிகை குற்றவுணர்வு உள்ள பாத்திரமாகப் படைக்கப்பட்டாள்.
ஆனால் கம்பனோதமிழ்ப்பண்பாட்டுக்கு ஏற்ப அகலிகை நெஞ்சினால் பிழைப்பினள் அல்லள் எனக் காட்டுவார். தளைய சிங்கத்தினது சிறுகதை சாபவிமோசனத் திற்கு பின்னர் அகலிகைக்கு இருக்கக்கூடிய மனப்போராட்டங்களைச் சித்திரிப்பதாக அமைகின்றது. இச்சிறுகதையில் சாப விமோசனத்திற்கு பின்னர் தான் அவளது வாழ்க்கையின் வீழ்ச்சி தொடங்குகின்றது. கெளதமர் குற்றவுணர்வு இன்றி நடந்து முடிந்தவையெல்லாவற்றையும் பின்னர்
G28)

Page 31
É606015g. 66135i LIL6)TLDIT uuuuuL-6pmLDIT 6T60T ஞானநிலையை அகலிகைக்கு ஏற்படுத்த முனைவதாக ஆசிரியர் காட்டுகிறார். ஆனால்
அவளைக் கெளதமரோடு சேர்த்த நாள் தொட்டு இந்திரன் செயலை கெளதமரின் உருவில் சந்தித்துக் கொண்டிருந்தாள். ஞாபகம் என்பது குற்றவுணர்வுதான்.
“அகலிகைக்கு இயற்கை தன்னை
வஞ்சிக்க முயல்வது போலவே தெரிந்திற்கு. உண்மையில்
©ഖങബാഖ இயற்கையிலேயே வஞ்சிக்க முயன்றாள்? έ960Tπου அவளுக்கு அந்த வித்தியாசம்
தெரியவில்லை. எல்லாமே அவளுக்கு இந்திரன் எடுக்கும் LDTUIIFab வாகவே பட்டது."9 (அகலிகை 160)
இவ்வாறு அகலிகையை குற்றவுணர்வு உள்ள பாத்திரமாக ஆசிரியர் காட்டுகிறார். இராமன் கால்பட்டுத்தான் அகலிகையின் சாபம் தீர்ந்தது. என விஸ்வாமித்திரர் குறிப்பிடுவதாக இராமாயண செய்தியை சிறுகதையில் ஆசிரியர் காட்டுகின்றார். கெளதமர் மறைந்து செல்ல வேணும் என்றும் அவர் திரும்பி வரக்கூடாது எனவும் அகலிகை இறுதியில் வேண்டுவதாக சிறுகதை ஆசிரியர் காட்டும் நோக்கு வித்தியாச மானது. அவளது மனப் போராட்டம் அவளை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதை தளைய சிங்கத்தின் சிறுகதை காட்டும்.
மகாபாரதத்திலிடம் பெறும் சம்பவங்களையும் கருப்பொருளாக வைத்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை சிறுகதை எழுதியுள்ளார். மகாபாரதத்தில் இடம்பெறும் சம்பவமே பண்டித மணியினால் “கலியுகம் 1ம் திகதி” என்ற சிறுகதைப் படைப்பாக ஆக்கம் பெற்றது. பாரத யுத்தம் முடிவடைந்து பாண்டவர்நாட்டை ஆளும் போது இளவரசனாக இருந்த வீமனிடம் தீர்ப்பிற் காக வந்த ஒரு வழக்கு கலியுகம் 1ம் திகதி என்ற கதையாகப் பண்டிதமணியால் உருவாக்கப்பட்டது.
(gિ 2011)
 
 

சங்கத்தமிழ்
"காலம் உணர்ச்சியைத் தன்வசஞ் செய்வது, தவத்தாலன்றி அதனை வெல்லுதலரிது. கலியில் மிகமிக அரிது கலி ஐயாயிரத்தின் மேல் தரும்பத்தின் சாயலையே காண்டலரிது"9 என்பதை உணர்த்துவதை நோக்காகக் கொண்டது இச்சிறுகதை.
மேலும் மகாபாரதத்தில் இடம் பெறும் பாத்திரங்களை மையமாக வைத்து நவ பாரதம்" என்ற சிறுகதையையும் பண்டிதமணி புனை பெயரில் எழுதியுள்ளார். அநீதியும் நேர்மை யீனமும், பதவிப்போட்டியும் ஊழலும் மலிந்த யாழ்ப்பான சமுதாய சூழ்நிலையை சித்திரிக்க மகாபாரதப் பாத்திரங்களைப் பாத்திரங்களாகப் படைத்து எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4.2 கவிதையில்
ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவரான மஹாகவியும் 'அகலிகை" என்னும் ஒரு கவிதையைப் படைத்துள்ளார். மஹாகவி தமக்கு உரிய ஒரு பாணியில் அகலிகைக் கதையை நோக்குகிறார். மஹாகவியின் அகலிகை பதினாறு விருத்தங்களால் அமைந்தது. அளவில் சிறிதாக அமைந் தாலும் கருத்தாலும் கவித்துவத்தாலும் சிறந்த படைப்பாக உள்ளது. மஹாகவியின் படைப்பில் கெளதமர் நடந்த தவறு கண்டு சிறிதும் சலனப்படாது நிற்கும் ஒருவராகக் காட்டப் படுகின்றார். இராமாயணத்திலும் ஏனைய படைப்புக்களிலும் பெளதமரின் சாபத்தினாலே அகலிகை கல்லாகின்றாள். ஆனால் மஹாக வியோ கெளதமரின் சாபத்தால் அன்றி அகலிகை தான் தவறியதை எப்பொழுது அறிகிறாளோ அப்பொழுதே கல்லாகி விடுகிறாள் எனப் புதிய பாணியில் நோக்கும் விதம் புதுமையானது. இந்திரன்செய்ததவறுக்காக அவனது மனச்சாட்சியே அவனைக் கேட்கின்ற பாத்திரமாக மஹாகவி யினால் காட்டப்படுகின்றது.
அகலிகையின் உடல் கவந்ததாகக் கூறவந்த மஹாகவி.
"பார்த்ததும் துவண்டுமேனி uடபடத்திட மேலெல்லாம் வேர்த்தது வேர்த்தபோதே விளைத்தது. விறைப்பு மூச்சை
-G29)

Page 32
t
நுகர்த்தது நூர்ந்து போனாள் நொடியிலே நொடிந்து கண்கள் பார்த்ததே பார்த்த பாங்கிற் பாவை கல்லாகி விட்டாள்.'7
என மகாகவியின் பாடல் அடிகள் அகலி கையை புதுநோக்கில் பார்க்கின்றதைக் காட்டு கின்றன. நல்லவர்கள் மிதிக்கும் வரை கல்லாகி இருந்தாள் என இராமாயண கதையைக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹாகவியின் குறும்பா என்னும் கவிதை யினுடாகவும் இராமகதை எடுத்தாளப்படுவதைக் காணலாம். மஹாகவிதான் வாழ்ந்த கால சமூக நிலைமைகளை வெளிப்படையாகவும் மறை முகமாகவும் குறிப்பிடுபவர்.
“சீதையை இராமபிரான் மீட்பான் சிற்றிடையின் கற்பை எடைபோட்டான் ஏதும் அவர்க்கையம் இல்லை என்றாலும் நாட்டவர்பால் நீதி இல்லையேல் செய்வாரா?.
LDITLmij."18 என்ற குறும்பா வரிகள் இராமகதையை இவ்வாறு முற்போக்கு சிந்தனையோடு நோக்கு கின்ற விதம் புதுமையானது. இராமர் தனக்குச் சீதையில் சந்தேகம் இல்லையெனினும் நாட்டில் உள்ளவர்களின் ஐயத்தைத் தீர்க்கவே சீதையைத் தீயில் இட்டு கற்பை நிலைநாட்டினார். நாட்டவர் பால் நீதி ஊரவரின் பெயரால் கற்பை எடை போடுகிறான். நாட்டவர்பால் நீதிஎன நையாண்டி யாகக் குறிப்பிடுகின்றார். முற்போக்கு சிந்தனை யோடு மஹாகவி இராமனை நோக்கும் நோக்கு. குறிப்பிடத்தக்கது.
4.3 நாடக இலக்கியத்தில்
ஈழத்து நாடக ஆசிரியர்களுள் ஒருவரான கதிரேசர்பிள்ளையவர்கள் இராமாய ணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் அதீத ஈடுபாடுடையவர். அறத்தை அடிப்படையாக வைத்து நாடகம் எழுதும் பாணியை மேற்குறிப்பிட்ட இலக்கியங்களி னுடாகப் பெற்றார். கதிரேசர் பிள்ளையவர்கள் மகாபாரதத்தில் செறிந்து பரந்த கருத்தாழம் மிக்க
િિg 2011

சங்கத்தமிழ்
உபகதைகளில் ஐந்தினைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு நாடக வடிவம் கொடுத்து ஐந்து நாடகங்களாக அமைத்தார். காங்கேயன் சபதம், ஜீவமணி, அம்பையின் வஞ்சினம், கோமகளும் குருமகளும், குருதட்சனை என்ற ஐந்துநாடகங் களும் மகாபாரதக் கதையின் கருக்களாகும். இவை ஐந்தையும் சேர்த்து பாரதம்தந்தபரிசு என்ற தொகுப்பாக ஆசிரியர் வெளியிட்டார். மகாபாரதக் கதைகளிலே நாயகர்களாக விளங்கிய மகாபுருடர்கள் கதிரேசர் முயற்சிக்கு அடிப்படை யாயினர். பீஷ்மாச்சாரியார் எனப் புகழ் பெற்ற காங்கேயன் கதிரேசர் மனத்தில் நிறைவான இடத்தைப் பெற்றதனால் இளமை வாழ்வைத் துறந்த காங்கேயரைப் பாத்திரமாக்கத் துணிந்தார். இந்த முயற்சியே காங்கேயன் சபதம் என்ற பெயரைத் தாங்கியே நாடகமாகியது. பயில முனிவரிடம் மாணாக்கனாகப் பயின்ற உதங்கன் பல்வேறு வகையான அனுபவங்களைப் பெற்று குருபக்தியின் உயர்வை உலகறிய உணர்த்திய உத்தமனாகக் குருதட்சனை நாடகத்தில் சித்திரிக்கப்படுகின்றான்.
5. நிறைவுரை
பாரதமும் இராமாயணரும் ஈழத் தமிழரின் வாழ்வுடனே இறுக்கமாகப் பிணைந்து ள்ளன. எம்முடைய இலக்கியங்களும் இதற்கு விதிவிலக்காயில்லை. பாரத இராமாயணச் செல்வாக்கினால் எம்முடைய இலக்கியங்கள் செழுமை பெற்றுள்ளன. காலத்தாலோ, ஏலத்தாலோ விலைபோகாக் காப்பியங்களின் செல்வாக்கினைப் பெறுவதே பெரும் பாக்கி யமாகும். இன்னும் பல இலக்கியங்கள் இந்த மண்ணிலே இக்காப்பியங்களின் செல்வாக் கினடிப்படையிலே தோன்றுவதற்கு வாய்ப்புண்டு.
அடிக்குறிப்புக்கள்.
1. புறநானூறு, சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 1951, LT. 378
2. மணிமேகலை, சைவசித்தாந்த நூற்
பதிப்புக்கழகம், சென்னை, 1946, உலக அறவிப்புக்காதை 9 - 1O.
G30)

Page 33
3. சிலப்பதிகாரம், சைவசித்தாந்த நூற்
பதிப்புக்கழகம், சென்னை, 1973, காதை 13 வரி 14 - 15. 4. பெரிய திருமொழி, பத்தாவது தொகுதி, 2ம் திருமொழி, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை. 5. மே.கு. பத்தாவது தொகுதி, 3ம்
திருமொழி, சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம். 6. வையாபாடல், கொழும்பு தமிழ்ச்
சங்க வெளியீடு, 1980, ப.33 7. மே.கு, ப.34 8. யாழ்ப்பாண வைபவமாலை,
சரஸ்வதி புத்தகசாலை வெளியீடு, கொழும்பு, 1953, ப.3 9. LDLis856ITL LDIT6orfu JLib, 856,ort
நிலையம் வெளியீடு, கொழும்பு, 1962, J.3O 1O. (SLD.g5, U.31 11. கணபதிப்பிள்ளை, பண்டிதமணி.சி,
சிறப்புப்பாயிரம், கம்பராமாயணக்
"மொழி மூலமே நாம் சமூக மொழியைக் கையாள்கின்றோம் மொழியினால் கையாளப்படுகிறோம் மொழி நம்மைத் தீர்மானிக்கிறது. மொழிகளுக்கு எதிரான புரட்சியுமா பின் ஒரு புதிய மொழி நியதி வந்து
(ஆடி 2011)
 

12.
13.
14.
15.
16.
17.
18.
சங்கத்தமிழ்
காட்சிகள், செந்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1990, ப.9 கணபதிப்பிள்ளை, பண்டிதமணி.சி. பாரதநவமணிகள், செந்தமிழ் மன்றம், இரண்டாம் பதிப்பு, 1980. ரஞ்சகுமார், “கோசலை”, மோகவாசல், தொகுப்பு, விஜயா அச்சகம், யாழ்ப்பாணம், 1989, ப.78 மே.கு., u.79. தளையசிங்கம், உள்ளும் வெளியும், அகலிகைத் தொகுப்பு, அகில இலங்கைக் கம்பன் கழக வெளியீடு, 1984, u-16O கணபதிப்பிள்ளை, பண்டிதமணி.சி. கலியுகம் முதலாம் திகதி சிந்தனைக் களஞ்சியம், விஜயா அச்சகம், யாழ்ப்பாணம், 1989. மஹாகவி, அகலிகை, அகலிகைத் தொகுப்பு, அகில இலங்கைக்கம்பன் கழக வெளியீடு, 1984, ப.77 மஹாகவி, குறும்பா, அரசு வெளியீடு, தமிழ்நாடு, 1966. *
ப் பிராணிகள் ஆகிறோம். நாம் என்று சொல்வதிலும் பார்க்க நாம் ) என்பதே உண்மை என்பர் சிலர். ஒரு சமூகப் புரட்சி என்பது கூட சில கவே அமைந்து விடுகிறது. அதன் விடுகிறது".
கா. சிவத்தம்பி
-G3D

Page 34
இஸ்லாமியர் தமி
பல்வேறுபட்ட மதப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் செவ்விலக்கியங்களைக் கொண்ட தாயும் அம்மதங்களை அநுட்டிப்பவர்களால் உரிமை பாராட்டப்படுவதாயும் அமையும் சிறப்பு, தமிழ்மொழிக்கு உண்டு. இச்சிறப்பு உலகில்வேறு எந்தமொழிக்கும் இல்லாத தனிப்பெருஞ் சிறப்பு என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இவ்வுண் மையை மனங்கொள்ளும்போது, ஏறக்குறைய இரண்டாயிரம் வருடத் தொன்மை வாய்ந்ததும் இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தின் கோட்பாட்டு வாசகமாக முன் வைக்கப்படுவதுமான "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உளப்பாங்கின் நடைமுறைச் சாத்தியப்பாட்டை - வெற்றியை - உணர்ந்து கொண்டவர்களாவோம்.
இந்தியப் பண்பாட்டு வட்டத்துள் முகிழ்த்த சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலான மதங்களும் இந்தியாவுக்குப் புறம்பான பண்பாட்டுச் சூழலிலே தோன்றி, பிற்காலத்தே வந்தடைந்த இஸ்லாம், கிறித்தவம் என்பனவும் அவ்வவற்றின் உட்பிரிவுகளுமாகப் பல்வேறு மதங்கள் தமிழை வளப்படுத்தின் பல்வேறு மதங்களைத் தமிழ் வளப்படுத்திற்று.
இவ்வுண்மையை வலியுறுத்தும்போது, வேறொரு விடயத்தையும் நாம் மனங்கொள்ளல் வேண்டும். அதாவது ஒவ்வொரு மதமும் தத்தமது கோட்பாடுகளைப் பயில்வதற்கும் பரப்புவதற்கும் உரிய ஊடகமாக மாத்திரம் தமிழைக் கொள்ள வில்லை மாறாக பிறமதங்களைக் கண்டிப் பதற்கும் வீழ்த்துவதற்குமான சாதனமாகவும் தமிழைக் கையாண்டன. தத்துவசாத்திர நூல்களில் அமைந்த பரபக்கங்கள் மாத்திரமன்றி, தோத்திர நூல்கள்கூட பரமத விரோத மனப் Uneir6oLD e 6oLu60T6mu éooLD556oLD6Duê தமிழிலக்கியப் பரப்பிலே பரக்கக் காணலாம். முன்னைக் காலத்தில் வைதிக - அவைதிக
(gિ 2011)

啤 ● O O igj 2alprillo
க. இரகுபரன், மொழித்துறைத் தலைவர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
மதங்களிடையேயும் பின்னைக் காலத்தில் இந்து - கிறிஸ்தவ மதங்களிடையேயும் எழுந்த கண்டன இலக்கியங்கள் வெகு பிரசித்தமானவை.
அத்தகு கண்டன இலக்கியங்களால் தமிழுக்கு தர்க்க வண்மை, வசன நடை விருத்தி என்று இன்னோரன்ன சில நன்மைகள் கைகூடின என்பது உண்மையே. ஆயினும், அவற்றுட் பயின்றுள்ள மதரீதியான விரோத, குரோத மனப்பாங்குகள் இன்றைய நிலையில் பாராட்டுக் குரியன வாகா என்பதை ஏற்றுக் கொள்ளவே
8ഖങ്ങf(BLD.
சமூகநல்லிணக்கம் அல்லது குறைந்த பட்சம் சமூகங்களுக்கிடையிலான சகிப்புத் தன்மை என்பது உலகினில் நவீன காலத்திலேயே பெரிதும் சாத்தியப்பட்டது. நவயுகத்தில் உலகம் போற்றத் தலைப்பட்ட முற்போக்கான விடயங் களுள் அத்தகைய சகிப்புத்தன்மை மிக முக்கியமானது. பத்தொண்பதாம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய ஓட்டத்தை உன்னிப்பாக அவதானிப்பவர்கள், அது எவ்வாறு கடுமையான சமயப் போட்டியிலிருந்துசமயப்பொறையை நோக்கி நகரத் தொடங்குகிறது என்பதைக் கண்டு கொள்வார்கள். சமய ரீதியான முரண்பாடுகளை அநாகரிகமானவையாகக்கண்டு வெறுத்தொதுக்கும் போக்கு நவீன தமிழிலக்கிய உலகு கண்ட நல்விருத்தியாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இஸ்லாம் - தமிழ் இலக்கிய ஊடாட்டத்தை நோக்கும்போது, மிக முக்கியமானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஓர் உண்மை புலனாகின்றது. இஸ்லாத்துக்கு விரோதமான குரல் எதுவும் தமிழுலகின் பழைய மதங்களுக்குரிய இலக்கியங்களிலோ அப்பழைய மதங்களுக்கு எதிரான குரல் எதுவும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களிலோ காணப்பெறவில்லை என்பதே அவ்வுண்மையாகும். தமிழ் நாட்டுக்கு
G32)

Page 35
வடக்கேயுள்ள சில மொழிகளின் இலக்கிய ாங்களில் அத்தகைய எதிர்ப்புக் குரல்கள் ஆங்காங்கே காணக் கிடக்கின்றன என்பதையும் இங்கு மனங்கொள்ள வேண்டும்.
இவ்வுண்மையை அறியும் நிலையில் நாம், இஸ்லாம் தமிழுலகில் பரவிய முறைமையை தமிழ்ச் சூழலில் நிகழ்ந் தேறிய இஸ்லாமியப் பாரம்பரியத்தன்மையை உணரக் கூடியவர்களா வோம், ஆய்வாளர்கள் கூறுவதுபோல,
"இவர்கள் (இஸ்லாமியர்கள்), கிறித்தவர்கள் ஆரம்பத்தில் இருந்தது போன்று திணிக் கப்பட்டவர்களாக வாழாமல் முதலிலிருந்தே இணைந்தவர்களாக வாழ்ந்தனரென்பது மனத்தே நிறுத்தப்பட வேண்டிய உண்மையாகும்."
இந்த இணைவு ஒருவழிப் பாதையாலன்றி இருவழிப்பாதையால் நிகழ்ந்தது என்றே கொள்ள
8ഖങ്ങBb.
இஸ்லாத்தின் தோற்றத்துக்கு நெடுங்காலம் முன்பதாகவே அராபியர்கள் வணிக நோக்கிலே தமிழ் நாட்டுக்கு வந்து அங்கே குடியிருப்புக் களையும் அமைத்துக் கொண்டார்கள். யவனர் என்னும் சொல் கிரேக் கரையோ, ரோமரையோ, அன்றேல் அராபியர்களையோ, ஒருவேளை அம் மூவரையுமோ குறிப்பதாயிருந்திருக்கலாம். ஆனால், அந்த யவனரும் பிறருமாகிய வெளிநாட்டவர்கள் தமிழக நகரங்களிலே கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பதாகவே குடியேறத் தொடங்கிவிட்டார்கள். அக்குடியிருப்புக்கள் பற்றிய சங்க இலக்கியப்பதிவுஒன்று அவதானிப்புக்குரியது. "புலம்பெயர் மாக்கள் கலந்துஇனிது உறையும் முட்டாச்சிறப்பிற் பட்டினம்” (பட்டினப்பாலை பக். 217, 218)
புலம்பெயர் மக்களாகிய வெளிநாட்டவர்கள் கலந்து இனிது உறைகின்ற சமுதாய நிலைமை அக்காலத் தமிழுலகில் அமைந்திருந்தது. அல்லது அவ்வாறாக வெளிநாட்டவர்கள் கலந்து இனிது உறைகின்றமை இலட்சியப் பூர்வமானதாகக் கருதப்பட்டிருக்கிறது எனலாம்.
இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர் இஸ்லாமியர்களாக வந்த அராபியர்களும்
(gિ 2011)
 

சங்கத்தமிழ்
இத்தகையதொரு சுமுகமான சமூகச் சூழலையே தமிழகத்தில் அநுபவித்திருக்கிறார்கள். மாணிக் கவாசகர் காலம் முதலாக அல்லது அதற்கும் சிறிது முன்பான காலம் தொடங்கி இஸ்லாமியர் படை யெடுப்புக்குப் பின்னருங்கூட இத்தகைய சுமுகச் சூழ்நிலை தமிழுலகில் நிலவிற்று என்று கொள் வதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அச்சான்றுகளுள் முக்கியமானது, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்துக் (கி.பி. 1238-1250 கல்வெட்டு ஒன்றாகும் (S.I.I. Vol. VIII, No. 402) eäs 856ð66up6ò அம்மன்னன் இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்றுக்கு நன்கொடை வழங்கினான் என்ற செய்தி அமைந்துள்ளது. அக்கல்வெட்டில் கீட்செம்பி நாட்டுப் பெளத்திர மாணிக்கப்பட்டினக் கீழ்பால் சோனகச் சாமந்தப்பள்ளியான பிலால்ப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மன்னர்கள் இஸ்லாமியர்களை அரவணைத்து நடந்ததற்கான சான்றுகள் முன்பு குறிப்பிட்டது போல, கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதலாகவே உண்டு. அதுபோல வணிகர்களகவும் நிலக்கிழார் களாகவும் விளங்கிய இஸ்லாமியர்கள் இந்து மதத்தை அநுசரித்து நடந்தமைக்கான சாசனச் சான்றுகளையும் அறிஞர்கள் ങ്കങ്ങ് (B காட்டியுள்ளார்கள்.
தமிழரும் இஸ்லாமியரும் இவ்வாறாகக் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த தன்மையைப் பல்வேறு அம்சங்களிலும் கண்டுகொள்ளலாம். உதாரணமாக மொழி அடிப்படையில் நோக்கும் போது, இஸ்லாமியர் வழியாகத் தமிழ் உள்வாங்கிக் கொண்ட பிறமொழிச் சொற்கள் பலவுள்ளன. இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தமிழிலிருந்து தம்முடையதாகச் சுவீகரித்துக் கொண்ட இரு சொற்களைக் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். ஒன்று: பள்ளி, மற்றையது: நோன்பு,
பள்ளி என்ற சொல் சங்ககாலம் முதலாகவே தமிழிற் பயின்றுவந்த ஒரு சொல்லாகும். அச்சொல்லுக்குத்தமிழிலே ஒரு வரலாறு உண்டு.
-G33)

Page 36
அது படுக்கை, வணக்கத்தலம், பாடசாலை என்ற பல பொருண்மைகளைத் தனது வரலாற்றிற் கண்டுள்ளது. வணக்கத்தலம் என்ற பொருளில் அச்சொல் அவைதிக மதங்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தது. பிற்காலத்தில் அச்சொல் அப்பொருணன்மையை இஸ்லாத்தோடு சம்பந்தப் பட்ட நிலையிலேயே கொள்ளலாயிற்று என்பது கருதத்தக்கது. இவ்வரலாற்றின் தொடக்கத்தை மேற்குறித்த மாற வன்மன் சுந்தரபாண்டியனின் கல் வெட்டிலே காணக்கூடியவர்களாகிறோம். நோன்பு என்பதும் அவ்வாறே அது ஆன்மிக சம்பந்தமாய் வழங்கிய ஒரு பழந்தமிழ்ச் சொல். ஒரு காலகட்டத்திலே அவைதிக மதத் துறவிகளின் ஒறுப்புவாழ்க்கையை - சமய அநுட்டானத்தையே அது பெரிதும் குறிக்கத்தலைப்பட்டதால் வைதிகர்கள் விரதம், தவம் என்னும் வடசொற்களை அப்பொரு ண்மையிற் கையாளத் தொடங்கினார்கள். காலகதியில் தமிழ்பேசுவோரில் அவைதிக சமயம் சார்ந்தோர் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கை யினரானார்கள். அந்நிலையில் நோன்பு என்ற அத்தூய தமிழ்ச் சொல்லை இஸ்லாமியர்கள் தமக்கே உரியதாகச் சுவீகரித்துக் கொண்டார்கள். ஏனைய வழிகளிலெல்லாம் இஸ்லாமியர்கள் தமதுமதசம்பந்தமான கலைச்சொற்களாக அரபுச் சொற்களையே கையாளும் இயல்பினர் என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கதே.
தமிழுலகத்து இஸ்லாமியர்கள் 'இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்ற கோட்பாட்டினை வரித்துக் கொண்டவர்களாய் வாழ்ந்து பழகியவர்கள். நவீன யுகத்திலும்
(ஆடி 2011)
 

சங்கத்தமிழ்
அவர்கள் அந்நிலையினின்றும் பெரிதும் நெகிழவில்லை எனலாம். தமிழிலக்கியத்தின் மையப்பொருளாக மதமே பெரிதும் தொழிற்பட்டு வந்த நிலை மாறி சமூக நோக்கிலான விடயங்கள் இலக்கியத்தின் மையப் பொருளாகத் தலைப்பட்ட காலத்தில் தமிழிலக்கியம் படைத்த இஸ்லாமியரின் ஆக்கங்கள் எத்தகையனவாய் அமைந்தன என்று நோக்கும் முநீபோதும் அவ்வுண்மையை உணரக்கூடியவர்களாவோம். இளங்கீரன் முதலான பெரும் எழுத்தாளர்கள் பலரும் இலக்கிய உலகுக்கான தமது புனை பெயரைத் தமிழ் மயப்பட்டதாக வைத்துக் கொண்டது முதல் தங்களின் முற்போக்குச் சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற பாத்திரங்களாகத் தமிழர்களையும், ஏற்ற சூழலாகத் தமிழ்ச் சூழலையுமே பெரிதும் கையாண்டது வரையில் அவ்வுண்மையைக் கண்டு கொள்ளலாம். தமிழர் களும் அத்தகு நடவடிக்கைகளைச் சுமுக மாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கதே. இலங்கையில் நிலவிய அரசியற் கழ்நிலைகளால் இப்பண்புகள் ஆட்டங்கானத் தொடங்கின. வெளிப் படையாக மிக முரண்பட்டு நின்ற கிறிஸ்தவர்களும் சைவர்களும் ஒன்றுபட்டு நிற்க, எக்காலத்தும் இலக்கியவழியால் முரண்பட்டிராத இஸ்லாமியர்களும் தமிழர்களும் பிளவுற்று நின்றார்கள். ஆயினும், இரு சாராரிடத்தும் உள்ள தமிழுணர்வும் இலக்கிய ஈடுபாடும் அம்முரண் பாடுகளை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கை மனதுக்கு ஆறுதல் தருவதாகும். :
G34D

Page 37
அகநானுற்றில் ஓர் அ
- கலாபூஷணி
தமிழ் இலக்கியப் புலத்தில், சங்க இலக்கியங்கள் தனித்துவம் மிக்கன. அவை பிற்கால இலக்கியங் களுக்கு ஊற்றுக்கண் போற்றவை. வயல் நிலம் எப்படிக் கால மெல்லாம் விளைவு தந்து கொண்டிருக்கின்றதோ, அப்படியே சங்கச் செய்யுட் களும் புதிய புதிய இலக்கிய ஆக்கங்களைத் தந்துகொண்டிருக்கும் பண்புடையவை.
சங்க காலப் பாடல்களில் இக்காலத்தவர்க்குச் சற்றுக் கடினமான சிலசொற்களும், தொடர்களும் இருந்தாலும் சொல்லும் முறையும், சொல்லப்படும் செய்திகளும் எக்காலத்தும் இன்பம் பயப்பனவாகும்.
ஒவ்வொரு செய்யுளும், தனித்தனி ஒவ்வொரு கதைப் பண்புடையதாக, நாடகக் காட்சியாக விரிந்து இலக்கிய இன்பம் தருவதைக் asTeoOT6pmb.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். இவற்றில் தனித்தனிப் பாடல்களாயிருந்து தொகுக்கப்பட்டவை எட்டுத் தொகை நூல்கள். இவற்றில் அக ஒழுக்கமாகிய காதல் வாழ்வுசார்ந்த நானூறு பாடல்களை உடையது அகநானூறு. இதைத் தொகுத்தவர் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்னும் பெரும்புலவர். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறில் 1, 3, 5, 7, 9 ஆகிய ஒற்றை எண்பாடல்கள் பாலைத் தினைக்கும். 2, 8 எண்ணுடையவை குறிஞ்சித்திணைக்கும் 4 எண் முல்லைத்திணைக்கும் 6 மருதத் திணைக்கும், 10 நெய்தல் திணைக்கும் உரியவை.
இந்த நானூறு பாடல்களில் முதல் 120 பாடல்கள் கறிற்று யானை நிரை எனவும், அடுத்த 18O பாடல்கள் மணிமிடை பவளம் எனவும் இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை எனவும், அழகான காரணப் பெயர் கொண்டு அழைக்கப்படும் சிறப்பு நயக்கத்தக்கது.
(ஆடி 2011)

கத்திணைக் கவியின்பம்
ாைம், சைவப்புலவர் சு. செல்லத்துரை -
ஒவ்வொரு பாடலும் அகவல் யாப்பில் 13 அடி முதல் 31 அடி வரையுடையவையாயிருப்பதும் இதன் தனித்துவம் ஆகும்.
இங்கு 2 எண்ணுக்குரியதும் புலவர் கபிலரால் பாடப்பட்டதுமான குறிஞ்சி நிலப் பாடல் ஒன்றை நோக்குவோம். ஒரேயொரு செய்யுள் ஒரு தனிக் கதைப் பண்பு உடையதாக, நாடகக் காட்சி போல விரிக்க விரிந்து இலக்கிய இன்பம் தரும் அத்தினைச் செய்யுள்களுக்கு இது ஒரு அருமையான எடுத்துக்காட்டாய் இருப்பதைக்
BIT600Teotl b.
புலவர் கபிலர் கண்ட குறிஞ்சிக் காட்சி இது: கடுவன் எனப்படும் ஒரு ஆண்குரங்கு, மிளகுக்கொடிகள் படர்ந்திருக்கும் ஒருபெரிய சந்தன மரத்தை நோக்கித் தாவிப் பாய்ந்து வருகின்றது. வரும் வழியில் தானாக முற்றிக் கனிந்த மலை வாழைக் கனியைக் காண்கி ன்றது. நாவுறுகிறது. உடனே வாழையிற்பாய்ந்து, வாழைக் கனியைப் பறித்து உண்கிறது.
அப்போது அதன் அயலில் நிற்கும் சாரற் பலாவில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வாசனை அதன் கவனத்தைத் திருப்புகிறது. உடனே பலாவிற்பாய்ந்து பலாக்கனியைப் பறித்துப்பிய்த்து அதன் தேன் ஒழுகும் சுளைகளைச் சுவைக்கிறது. இனிமை மிகுதியால் அதனை முழுமையாக உண்ண முடியாமல் தெவிட்டுகிறது.
கீழே பாறையில் இருந்து சுரந்து வரும் குளிர்ந்த சுனைநீர் அதன் கண்ணிற்படுகிறது. இறங்கிவந்து குளிர் நீரைப் பருகுகிறது.
அதன் அருகே மரப்பொந்தில் நன்றாக வினைந்த நறுந்தேன் தெரிகிறது. உடனே அங்கு தாவிச் சென்று ஆசை தீரத் தேனை அருந்துகிறது.
எதிர்பாராமற் கிடைத்த வாழையின் தீங்கனியையும் பலாவின் இனிய சுளையையும், சுளையின் குளிர்ந்த நீரையும் விணைந்த நறுந்
G35)

Page 38
2
盖个
தேனையும், அடுத்தடுத் துண்டால் என்ன செய்யும் என்பதை அறியாது உண்ட கடுவன், தான் நினைத்து வந்த சந்தன மரத்தில் தாவ முடியாமல், தடுமாறிப்பக்கத்தே கிடந்த பூம்பந்தலில் இன்பமயக்கத்தில் கிடந்து உறங்குகிறது.
இக்காட்சியைக் கண்ட புலவருக்குத் தூரத்தே இன்னொரு காட்சியும் தெரிகிறது. அழகும் இளமையும் ஒருங்கே அமைந்த தலைவன் ஒருவன்தன்தலைவியைக் காண்பதற்காகப் பகல் நேரத்தில் குறித்த இடத்திற்கு வருகின்றான். தலைவியைத் தேடுகின்றான், எங்கும் காணவி ல்லை, அங்கு தோழி வருகின்றாள். தலைவ னுக்கு ஏதோ சொல்லி விட்டு மலர்ந்திருக்கும் வேங்கை மரத்தையும் காட்டிவிட்டுச் செல்கின்றாள். அவள் என்ன சொல்லியிருப்பாள் எனப் புலவரின் கற்பனை ஓடுகின்றது. தான் கண்ட இரு காட்சி களையும் இணைத்துப் பார்க்கின்றார். குறிஞ்சித் திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள் அமைந்த அற்புதமான செய்யுள் ஒன்று அவர் மனதில் சுரந்து வருகிறது. செய்யுள் இதோ. சுவைத்துப் பார்ப்போம் -
கோழிலை வாழைக் கோள்முதிர்
பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுணர்த் தடுத்த வேரற் பலவின் சுளையொடு ஊழ்படு பாறை நெடுஞ்சுனை விணைந்த தேறல் அறியா துண்ட கடுவன் கறிவளர் சாந்தம் ஏறாது நறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின்மலை பல்வேறு விலங்கும் எய்தும் நாட குறித்த இன்பம் நினக்கெவன் அரிய வெறுத்தஏர் வேய்புரை பனைத் தோள் நிறுப்ப நில்லா கொஞ்ச மோடு நின்மாட்டு இவளும் இணையார் ஆயின் தந்தை இருங்கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக் கங்குல் வருதலும் உரியை பைம்புனால் வேங்கையம் ஒற்றினர்
விரித்தன
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
நெடுவண் திங்களும் ஊர் கொண்
டன்றே எனத் தோழி தலைவனுக்குச் சொல்வதாகப் புலவர் கற்பனை செய்து பாடுகின்றார். இதன் பொருளையும் பார்ப்போம்.
செழுமையான மலை வாழையின் பெருங் குலையில் தாமாகவே முற்றிக் கனிந்த இனிய வாழைப் பழத்தையும்,
உண்பவர்களைத் தம் இனிமை மிகுதியால் தெவிட்டச் செய்து அதிகமாக உண்ணாதபடி தடுக்கும் சாரற் பலாவின் இனிய சுளைகளையும், முறைமையான பாறையிலிருந்து சுரந்து வரும் குளிர்ந்த நீரையும்,
நன்கு விளைந்த நறுத்தேனையும் அறியாது உண்ட கடுவன் -
பக்கத்தே மிளகுக் கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் தாவி ஏற முடியாததாகிக் கீழே கிடந்த நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த பூம்பந்தல் படுக்கையில் களிப்புடன் கிடந்து உறங்குகிறது.
தாம் எதிர்பாராத இன்பத்தை உன்மலை வாழும் பல்வேறு விலங்கினங்களும் எளிதாகப் பெற்று மகிழும் மலை நாடனுேன்! எதிர்பார்த்து வரும் இன்பம் உனக்கு எவ்வாறு அரியதாகும்.
மிக்க அழகினையுடைய மூங்கிலை யொத்த பனைத்த தோள்களை உடைய தலைவியும் நிறுத்தவும் நில்லாது நின்னையே தொடர்கின்ற நெஞ்சத்தை உடையவனாக நின்னிடத்தே காதல் உடையவள் என்றால்,
இவளுடைய தந்தையின் கட்டுக் காவலிலுள்ள காவலர்கள் சோர்ந்திருக்கும் நேரம் அறிந்த இரவிலே நீ வருவாயாக,
பசிய புதர்கள் கழ்ந்த வேங்கை மரங்களும் ஒளிபொருந்திய பூக்கொத்துக்களை சந்திரனும் நிரம்புதலையுற்று வளர்பிறையாயுள்ளது. அதனையும் அறிவாயாக.
என்பது இப்பாடலின் பொருள் ஆகும். இச்செய்யுளில் உய்த்துணர வைக்கும் ஓர் இனிமை பயக்கும் உள்ளுறை உவமை நயத்தையும் காணலாம். தோழி தலைவனுக்கு
-G36)

Page 39
அறம் உரைக்கும் வகையில் அமைந்தது இப்பாடல்.
கடுவன் குரங்கு எவ்வித முயற்சியுமின்றித் தானாகக் கிடைத்த, வாழைக் கனியையும், பலாச்சுளையையும், குளிர் நீரையும், நறுந் தேனையும் உண்டுகளித்து, அதன் இன்ப மயக்கத்தில் தான் அடைய வேண்டிய சந்தன மரமாகிய இலக்கை மறந்து சோம்பிக்கிடப்பதைப் போல்,
தலைவன் சிரமமின்றிய பகற்குறியில் களவாக வந்து தலைவியைச் சேர்த்து இன்புற்றுப் போகாமல், கட்டுக் காவலைக் கடந்து போய்த் தலைவியைக் கற்பு மணம் புரிய வேண்டும் என்பது தோழியின் மூலம் உய்த்துரை வைக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி வேங்கை மலர்ந்து விட்டது. சந்திரன் நிரம்பி வளர்பிறையாய் விட்டது என்று தோழி குறிப்பாகக் காட்டும் செய்தி, கற்பு மனத்துக் குரிய காலம் கனிந்து விட்டது, மங்கல மன விழாவுக்கேற்ற வளர்பிறைக் காலமும் வந்து விட்டது, என்பதைச் சொல்லாமற் சொல்வதும் உய்த்துணர்ந்துநயக்கத்தக்கது.
தமிழர்க்குரிய அன்பின் ஐந்தினைப் பண்பை இச்செய்யுள் முழுமையாகக் காட்டும் சிறப்பும் சிந்திக்கத்தக்கது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்தினையும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருட்பண்புகள் உடையவை.
'சங்கத்தமிழ் - விளப் பின் அட்டை வெளிப்புறம் முன் அட்டை உட்புறம் பின் அட்டை உட்புறம் உட்பக்க விளம்பரம் (முழு) உட்பக்க விளம்பரம் (அரை) விளம்பரதாரர்களே! ‘சங்கத்தமிழ்
(s.19 2011)
 

சங்கத்தமிழ்
முதற்பொருள் எனப்படுவது காலமும் நிலமுமாகம். இச்செய்யுளில் குறிஞ்சித் திணைக் குரிய நிலமாகிய மலையும் மலை சார்ந்த இடத்தினை செப்பமும் செழிப்பும், காலமாகிய வேங்கை மரம்பூக்கும் வேனிற் காலமும், சந்திரன் நிரம்பும் வளர்பிறைக் காலமுமாகிய பெரும் பொழுதும், பகற்குறி இரவுக்குறி ஆகிய சிறு பொழுதுகளும் சொல்லப்படுகின்றன.
கருப்பொருள் எனப்படுவது மரமும் மக்களும் விலங்கும் உணவும் என்பனவாகும். இங்கு சந்தனமரம், வேங்கை, பலா, வாழை முதலான மரங்களும், மலைவாழ் மக்களாகிய குறவர் தலைவன் தலைவி தோழி, தந்தை காவலர் ஆகியோரும் கடுவன் ஆகிய குரங்கும், கனிகளும், சுனைநீரும், நறுத்தேனும் ஆகிய உணவுகளும் காட்டப்படுகின்றன.
குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் புணர்தல் ஆகும். இங்கு பகற்குறியில் சந்தித்துக் களவு நெறியில் இன்புற்ற தலைவனும் தலைவியும் இரவுக்குறியில் சந்தித்துக் கற்பு மணம் புரிதல் ஆகிய புணர்தல் ஒழுக்கமும் காட்டப்படுகின்றன. இந்த ஒரேயொரு அகநானுற்றுப் பாடலில் அகத்தினைப் பண்புகள் அனைத்தையும் காணக் கூடிய சிற்பு ரேகாக்கத்தக்கது.
சங்கச் செய்யுட்கள் கதைப்பண்புடை யனவாக, நாடகக் காட்சியாக விரிந்து தெவிட்டாத இலக்கிய இன்பம் தரவல்லன எண்பதற்கு இச்செய்யுள் பொருத்தமான சான்றாகும். >k
bபரக் கட்டணம்
ரூபா 7,000/= (நான்கு கலர்) ரூபா 5,000/= (தனி ஒரு கலர்) ரூபா 5,000/= (தனி ஒரு கலர்) ரூபா 4,000/= ரூபா 3,000/- கலை இலக்கிய மேம்பாட்டு
-G37)

Page 40
காக்கையுடன் நட்பு
- G
கா, கா, கா என்ன பராசக்திப் பாடலா? இல்லை உண்மையான காகம் எழுப்பும் ஒலியைத்தான் குறிப்பிடுகிறேன். இப்படிக் காகம் எமது வீட்டு யன்னலுக்கருகே கரைந்ததும், "அட க" அப்பால் போ, இல்லாவிட்டால் இன்னும் ஒரு படி மேலாகச் சென்று "அட சனியனே சூ, க” என்று விரட்ட முற்படுகிறோம். சனி பகவானின் வாகனத்தை எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், சனியனாகவே உருவகித்தும் விடுகிறோம். ஆனால் இந்தக் கா என்பதை சுபச் சொல்லாக எண்ணி காகங்க ளுக்கு அன்புடன் உணவளித்தாள் ஒரு தமிழ் நங்கை அவள்தான் நச்செள்ளை என்ன ‘கா இது சுபச் சொல்லா? ஆமாம் கா என்றால் காப்பாற்று, காலையில் கதிரவனின் இளங்கதிர்கள் தோன்றும் போதே கா, கா"உலகைக் காப்பாற்று காப்பாற்று” என்று பொதுநலப் பண்புடன் காகங்கள் திருப் பள்ளி பாடுவதாக, எண்ணியவள் அந்த நங்கை.
உச்சிவெய்யில் காலம் வந்ததும் நெய் ஊற்றிய சோற்றை ஏழு கலங்களில் எடுத்து வந்து வீட்டு வாசலில் வைத்து குழைவாகநச்செள்ளை கூவிய ழைப்பாள். சூ என்று நாம் பல வேளைகளில் துரத்தும் காகங்களை குறிப்பிட்ட சில நாட்களில் நாமும் கூவி அழைக்கவே செய்கிறோம். சிலர் நச்செள்ளை போல் தினமும் மதிய உணவு அருந்தும் வேளையில் காகத்தை அழைத்து சோறு போடுவர். பலர் சனிக்கிழமைகளில் அதிலும் குறிப்பாக புரட்டாதிச் சனியில் விரதமிருக்கையில் காகத்தை அழைப்பர். ஆனால், நச்செள்ளைக்கும் இதமாக அழைத்ததும் கா, கா இரைச்சல் காதைத் துளைக்கும். போவோர், வருவோர் இப்படி அவள் காகங்களுக்கு விருந்து படைப்பதை வேடிக்கையா கப் பார்ப்பர். காக்கை மீது கவிபாடி மகிழ்பவள் நச்செள்ளை என்ற செய்தி தொண்டித்தலைநகரம் நன்கு அறிந்த செய்தியன்றோ. இந்தச் செய்தி கேட்டு சேரநாடாம் பொறைநாட்டு மன்னன் ஆடு கோட்பாட்டுச்சேரவாதன் இந்தக்காக்கைக் கவிதா சிரோ மணியைக் காண ஆவலும் கொண்டான்.
செல்வந்த குலத்தில் பிறந்த நச்செள்ளை காலம் காலமாகச் சோறுவடித்த நெய்யுடன் காக்கைகளுக்கு உணவு படைத்தாள். காக்கை
(ஆடி 2011)

றவாடிய காரிகை
செல்வி சற்சொரூபவதி நாதன் -
களுக்கு நல்ல யோகம். சென்ற பிறவியில் இவள் காக்கையாக இருந்திருப்பாளோ இப்படிச் சிலர் சிந்தித்தனர். நச்செள்ளை நிறமும் கறுப்புத்தான். ஆனால் அவள் நாவற்பழம் போல் அழகாக இருந்தாள். பலர் அவள் கரம்பற்ற வந்தனர். அவளோ என்னை அனுபவிக்க இவர்கள் விரும்பு கிறார்கள். என் தமிழை அல்ல, என காக்கைத் தொண்டை இவர்களில் எவரும் விரும்பப் போவ தில்லை என்று தந்தையிடம் மறுப்புச் சொல்லித், திருமணத்தைத் தடை செய்து வந்தாள்.
இந்த நச்செள்ளையைக் கண்டுவிட்ட பக்கத்து ஊர்ச் செல்வந்தன் ஒருவன் இவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று விரும்பினான். செம்மலை என்ற அந்தச் செல்வன் கறுப்பழகி, காக்கைப் பாடினியை அடைந்து விடுவதற்கு ஒரு திட்டமும் தீட்டினான். நச்செள்ளையைக் கடத்திக் கற்பழித்து விடுவதே அவன் திட்டம்.
ஒரு நாள் நச்செள்ளை முற்றத்தில் அமர்ந்து காக்கை பற்றி கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு அண்டங்காக்கை அவளருகே வந்து அடித்தொண்டையிலிருந்து அவலமாகக் கத்த ஆரம்பித்தது. இந்தக் காக்கைக்கு தான் சோறு போடவில்லைப்போலும் என்று எண்ணி, நச்செள்ளை ஒரு பிடி சோறு எடுத்து வந்து போட்டாள். காகமோ அதனைச் சாப்பிடாமல் தொடர்ந்து கத்தியது - அங்கு வந்த தோழியிடம் நச்செள்ளை அதன் விசித்திரப் போக்கு பற்றிச் சொன்னாள். தோழியோ “ஒஉன் தலைவன் வருகை பற்றிச்சொல்கிறதாக்கும்” என்று கிண்டல் செய்தாள் - காகமும் கரைவதை நிறுத்தி விட்டுப் பறந்தோடியது.
நச்செள்ளை தன் தோழியுடன் திருமணம் செய்யப்போகும் மற்றுமொரு தோழியான அயிரையைப் போய்ப் பார்த்துவரப் புறப்பட்டாள்.
கிராமத்தின் அருவிக்கரைக் கால்வாயைக் கடந்து இருவரும் நடந்தனர். பக்கத்துக் கிராமத்துச் செல்வந்தன் செம்மலை, வழி மறித்தான். நச்செள்ளை நீ யார் என்று அதட்டிக் கேட்டாள். செம்மலை, "ஓயாமல் உன்னைப் பெண் கேட்டு அனுப்பும் அடுத்த கிராமத்தவன்” என்று பதில்
-G38)

Page 41
வந்தது. வழி விடு' என்றாள், நச்செள்ளை. அவனோ அவள் கரத்தைப் பற்றி இழுத்தான். தோழிப் பெண், அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள். செம்மலையின் தோழர்கள் ஓடி வந்து, தோழியை அப்பால் இழுத்துச் செல்ல, செம்மலையோ, நச்செள்ளையை ஒரு மரத்தடியில் தள்ளி வீழ்த்தினான். அவன் தீய எண்ணத்தைப் புரிந்து நச்செள்ளை யாரைத் துணைக்கு அழைப்பது என்று மருண்டுமரத்தைப் பார்த்தாள். அங்கு ஒரு காகம் தெரிந்தது. உடனே என் காகங்களே” என்று உரக்கச் சத்தம் போட, அவள் குரல் கேட்டு அந்தக் காகம், கா, கா என்று கத்தியதும், ஒன்றா, இரண்டா நூறு காகங்கள் அவ்விடத்தில் ஒரு நொடிப் பொழுதில் திரண்டு விட்டன.
செம்மலை காரியமே கண்ணாக அவளைப் பலாத்காரம் செய்ய, துகிலை நீக்குகிறான். அச் சமயம், வட்டமிட்டுப் பறந்த அத்தனை காகங்க ளும் அவனைத் தமது கூரிய அலகுகளால் கொத்தத் தொடங்கின. அவன் முகமெங்கும் காயம், ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. செம்மலை கத்தினான். நண்பர்களே காக்கைக் கூட்டத்தின் உத்வேகத்தைக் கண்டு, பயந்து ஓடினர். செம்மலையின் கண் களைக் காகங்கள் கொத்தி விடுகின்றன, அவன் மயங்கி விழுந்தான். இதற்கிடையில் ஊர் மக்கள் அங்கு கூடிவிட்டனர். நச்செள்ளை காப்பாற்றப்பட்டாள். ஊரே அதிசயித்தது, காகங்களுக்கு நன்றி சொன்னது.
ஒரு வாரகாலம் கழிந்தது. ஆடு கோட்பாட்டுச் சேரவவாதர் இச்செய்தி கேட்டதும், நச்செள்ளை யைக் காண விரைந்து வருகிறார். அரசன் வருவ தால் நச்செள்ளையின் தந்தை பிரமாதமான மதிய போசன விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.
மன்னார் வந்தார், நச்செள்ளையின் அழகால் சிறிது மயக்கம் உற்றாரெனினும், தமிழ்க் காதலால் மட்டுமேதான் அங்கு வந்ததை நினைவு படுத்தி மனதைக் கட்டுப்படுத்தினார்.
அவரை வரவேற்று உபசரித்த நச்செள்ளை, “என் அன்பிற்குரிய காகங்கள் காத்துநிற்கின்றன. அவற்றிற்கு சோறு படைத்து விட்டு வருகிறேன்.” என்று மன்னரை விட்டு முற்றத்துக்குச் சென்றாள். மன்னரோ நச்செள்ளை நான் இரண்டைக் கண்டு களிக்க இங்கு வந்தேன். ஒன்று உனது தமிழ்ப் புலமை, மற்றையது காக்கைகளிடம் நீ
(ஆடி 2011)

&[El555Լճլք
காட்டும் பரிவு” என்று சொல்லி அவள் காக்கை களுக்கு உணவுட்டும் அரிய காட்சியைக் காண அவள் பின்னால் சென்றார் - காக்கைகள் கூட்டமாக வந்து உணவருந்தின. 'இவள் என்ன, காக்கையை மட்டும் பாடவில்லையே. காக்கை களை உயிருக்கும் மேலாக நேசிக்கிறாளே என்று மன்னன் வியந்தான். அந்தச் செம்மலை எங்கே என்று கேட்ட மன்னனுக்கு, "அவன் பிழைத்து விட்டான்" என்று நற்செள்ளை பதில் சொன்னாள். ஆனால், காகங்களின் செயலால் அவன் நடமாட முடியாதிருப்பதாக தந்தை சொன்னார். உடனே, அரசன் அவளுடன் கிராமத்தை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். கண்வாயில் அமர்ந்தான் நச்செள்ளையிடம் அவள் பாடிய காக்கைப் பாட்டில் ஒன்றைப் பாடும் படியும் கேட்டான் - அவள் இனிமையாக ஒரு பாட்டைப் பாடிக் காட்டினாள்.
திண்டோர் நள்ளி கானத்தண்டர் பல்லாப் பயந்த நெய்யின் தொண்டி முழுவதுடன் விளைவித்த வெண்ணெல்
சோறு எழுகலத்தேந்தினும் சிறிது என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது
பலியே
பாடலைக் கேட்டு மகிழ்ந்த அரசன், அன்றி ரவும், அவ்வுபூரில் தங்கி நிலாச்சோறு உண்டு மகிழ்ந் தான். அடுத்த நாள் புறப்படும் பொழுது தனது அரண்மனை வந்து புலவர் பீடத்தில் அமருமாறு அழைப்பு விடுத்தான். நச்செள் ளையோ பண்போடு அதனை மறுத்தாள் - மன்னனும் கிராமத்துமக்களிடம், காக்கைகளை விரும்பும் கிராமத்துக்கு "காக்கையுர்" என்றுதான் பெயரிடுவதாகக் கூறி, நச்செள்ளைக்கு 'காக்கை பாடினி என்று சிறப்புப் பெயரையும் கட்டி விடைபெற்றான்.
காக்கையுர் மக்கள் காக்கை பாடினியைப் போற்றி மகிழ்ந்து வாழ்ந்தனர். என்ன எங்கள் நாட்டில் இருக்கும் காக்கை தீவுகளுக்கும், இப்படித் தான் பெயர் வந்திருக்குமோ, எம் நாட்டிலும் நச்செள்ளைகள் இருந்திருப்பார்களோ? என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா? *
-G39)

Page 42
ஈழத்தின் மூத்த 1 ஈழகேசரி வ
யாழ்ப்பாணம் கல்வி கலாசாரம் பண்பாடு இலக்கியம் எனப் பலதுறைகளிலும் பெற்றிருந்த பெருமைகளோடு நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர் களையும் தன் மண்ணின் மைந்தர்ளாகக் கிடைக்கப்பெற்ற அதிர்ஷ்டத்தையும் பேற்றினை யும் கொண்டிலங்கியது குறிப்பிடக்கூடியதே. அத்தகைய மைந்தர்களுள் மக்களோடு மக்களாக மண்ணையே சுவாசித்து மன்பதையின் உயிர் நாடியாக வாழ்ந்த மறக்கவே முடியாதவர் ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான ஈழகேசரி பொன்னையா என்னும் பெருமகன்.
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் என்ற பெருமைக்கு வெகு பொருத்தமான இப்பத்தி ராதிபர் ஈழகேசரி என்ற தமிழ் வார வெளியீடு, கேசரி என்ற ஆங்கில வார வெளியீடு என்பவற்றின் பொறுப்புகளோடு மாத்திரமின்றி மயிலிட்டி கிராமச் சங்கத் தலைவர், குரும்பசிட்டி சன்மார்க்க சங்கத் தலைவர், யாழ் - மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச்சங்கத்தின்நிர்வாக உறுப்பினர், ஐக்கிய நாணய சங்கத்தின் தலைவர், பண்டகசாலைச் சங்கத்தின் தலைவர், வலி-வடக்கு பண்டக சாலைச் சமாஜத்தின் நிர்வாக இயக்குநர், சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் இன்னும் பல பொறுப்புவாய்ந்த பதவி களையும் வகித்துத் தன் வாழ் நாளின் பெரும் பகுதியைப் பொதுமக்களின் ஈடேற்றத்திற்காகவே பாடுபட்டுழைத்தார். இத்தலைமைப் பதவி களையும் பொறுப்புக்களையும் கூடத் தன் புகழுக் காகவோ பேருக்காகவோ அன்றித் தன்னை முன்னிலைப்படுத்தவோ அல்லாமல் உண்மை யிலேயே மக்களின் நலன் கருதி மக்கள் சேவக னாகவே அர்ப்பணிப் போடு செயல்பட்டார்.
இத்தனை பொறுப்புக்களும் கடமைகளும் மிக்க பதவிகளில் வினையாற்றிக் கொண்டிருந்த தோடு 'பத்திராதிபர்” என்ற கத்தி முனையில்
(412 2011)

த்திfகையாளர் பான்னையா
- பத்மா சோமகாந்தன் -
நடைபோடும் வெகுநுட்பமான கைங்கரியத்தையும் வெகு சிறப்பாகச் செய்தமையே இவரது பெரும் சாதனையாகும்.
இவருடைய பெற்றோர் குரும்பசிட்டியில் கமத் தொழிலையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்தநாகமுத்தர் மனைவியார் தெய்வானைப் பிள்ளை ஆவார். இவர்களின் நான்கு பிள்ளை களான பரமானந்தர் பொன்னையா, நாகமுத்து, வள்ளிப்பிள்ளை என்போருள் கடைசிமகனாகப் பிறந்தவரே பொன்னையா. இவர் 1892ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ந் திகதி பிறந்தார். இவருடைய பேரனார் பண்டிதர் பரமானந்தர். கமக்காரப் பரம்பரையாயினும் கல்வியிலே ரிக்க நாட்டம் கொண்ட பண்டிதர் பரமானந்தர் சைவப் பிள்ளைகள் கற்பதற்காகவென மகாதேவ வித்தியா சாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்றை ஆரம்பித்து வைத்தார். காரணம் அக்காலத்தில் மிஷனறி மார்களே பாடசாலைக் கல்வியை அறிமுகப்படுத்தியதோடு சமய மாற்றத்திற்கும் அடி கோலியபடியே இருந்தனர். பொன்னையா தனது பேரனார் ஸ்தாபித்த பாடசாலையிலேயே ஐந்தாம் வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்தார்.
சாதாரண தொழிலில் ஈடுபடுவோருக்கு அக்கால ஐந்தாம் வகுப்புக்கல்வியே பெரும்படிப்பாகக் கருதப்பட்டது. காரணம் அன்றைய 5ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஆத்திகடி, நீதிநூற் கொத்து, நாலடியார், தேவார திருவாசகங்கள், நிகண்டில் சில பகுதிகள் என மிகவும் கடினமான காத்திர மான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அல்லாமலும் பெரும்பாலான செய்யுட்கள், பகுதிகள், கருத்துரை கள், சூத்திரங்கள் என்பன மனப் பாடம் பண்ணி ஒப்பிப்பதே கற்றல் முறையாகவும் கருதப்பட்டது. எனவே ஐந்தாம் வகுப்போடு தமிழ்மொழியில் நல்ல தாடனமும் போதிய அறிவையும் பெற்றுக் கொண்டு நன்றாக எழுதவும் வாசிக்கவும்
G40)

Page 43
இலக்கண இலக்கிய மடங்கிய கல்வியில் நல்ல பரிச்சயமுற்றிருந்தாலும் தந்தையாரோடு இணை ந்து துலா மிதித்தல், உழுதல், நிலத்தைப் பண் படுத்தல், பசளையிடல் போன்ற கமத்திற்குத் தேவையான தொழிலிலே ஈடுபட்டான் பொன்னையா.
ஓய்வான வேளைகளில் கல்லடி வேலுப்பிள்ளை நடாத்திய 'சுதேச நாட்டியம்’ என்ற பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்வான். 'சுதேச நாட்டியம் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவான் படிப்பான் மனம் சிறிது சிறிதாக அதில் பதியவும் அச்சுக் கோர்ப்பதிலும், புத்தகங்கள் கட்டுவதிலும் பயிற்சி பெற்றான். சிறுவனின் நுட்பமான வேலைத் திறனையும், விடயங்களைக் கையாளும் நுட்பத் தினையும் கண்ணுற்ற பெரியோர் இவனை வியந்து பாராட்டினர்.
தானாகவே இத்தகைய திறமைகளை வளர்த்துக் கொண்ட இச்சிறுவனை நல்லையா அன்ட் சன்ஸ்’ எனும் ஸ்தாபனத்தின் அதிபர் திரு.நல்லையா என்பவர் தனது தேசாபிமானி பத்திரிகை ஸ்தாபனத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். பத்திரிகை, அச்சுவேலை, புத்தகங்கள் என்பவற்றையே மந்திரமாக உச்சாடனஞ் செய்து கொண்ட பொன்னையாச் சிறுவனின் இயல்புக்கு தேசாபிமானி என்ற பத்திரிகையின் தொடர்பு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
பல திட்டங்களோடு பாரிய கனவுகளோடும் கற்பனைகளோடும் சிறகடித்துப் பறந்து கொண்டி ருந்த பொன்னையாவின் வாலிபம் இந்த வேலை யிலும் மனம் அமைதி கொள்ளாமல் பரபரத்தது. இவற்றையெல்லாம் கைவிட்டுவிட்டுத்தன் கனவு களை நனைவாக்கப் பொருள்தேட வெளியுர் சென்றார். வியாபாரத்தில் ஈடுபடத் துணிந்தார்.
1918இல் தனது மாமனாரின் மகளான மீனாட்சியம்மாளைத் திருமணம் செய்தார். ஊரோடு வந்து சுருட்டுத் தொழிற்சாலையைத் தொடங்கினார். திரும்பவும் வெளிநாடு சென்றார். இரங்கூனிலே இருந்து வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் மனம் லயித்தது; அப்பத்திரிகையின் உதவியாசிரியராக நியமனமும் பெற்றார். சுதேச
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
மித்திரன் நடாத்தும் போதே பத்திரிகைத்துறை அனுபவத்தையும், காந்திய இயக்கத்தின்போராட்டம் பற்றியும்நன்கு தெரிந்து கொண்டு ஊர்திரும்பினார். இத்தகைய அறிவும் அநுபவங்களுமே 1926இல் தனலகூழ்மி புத்தகசாலையைச் சுன்னா கத்தில் தொடங்க உந்து சக்தியாக அமைந்தது.
மனைக்கேற்ற சகல குணாம்சங்களும் பொருந்திய மீனாட்சி அம்மாளுக்கும் இவருக்கும் இல்லறத்தின் இனிய கனிகளாக நவகுமார் எனப்பெயர் கொண்ட ஒரு ஆணும் தனலகூழ்மி, திலகவதி, புனிதவதி எனப்பெயர்கள் பூண்ட மூன்று பெண்ணும் பிறந்தனர். பெண்களுள் மூத்தவள்தனலக்ஷமியே. அவருடைய பெயரிலேயே புத்தகசாலையை ஸ்தாபித்தார். இக்குழந்தைகளில் மூவர் மரணிக்கவும் கடைசிப்பெண் புனிதவதியே மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டார். பின்னர் வண்ணார்பண்ணையில் புகழ்பூத்த குடும்பத்தில் உதித்ததிருபசுபதியின் மகன் சிவா பசுபதியையே புனிதவதிமனம் செய்து இருபெண்குழந்தைகளும் ஒரு ஆணுமாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இளமையிலே தமிழ் எழுத்துக்களோடும், அச்சுக்களோடும் புத்தகங்களோடும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பொன்னையா என்னும் கமக்காரன் இளைஞனாக இருக்கும் போதே அறிவின் உற்பத்தி மையமான புத்தகசாலை யொன்றினையே 1926இல் தொடங்கினார். இத்துறையிலேயே ஈடுபாடு அதிகமதிகமாகவும் 1929இல் அச்சகம் ஒன்றையும் ஆரம்பித்து நூல்களை அச்சேற்றி விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டார். தமிழகத்தின் சிறந்த தமிழறிஞரும் முற்போக்குச் சிந்தனை வாதியும், பெண் விடுதலையில் நாட்ட முள்ளவராகவும் கிராம ஊழியன் பத்திரிகையின் ஆசிரியராகவு மிருந்த திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் அநேகமான நூல்களை விற்பனை செய்யும் பாக்கியத்தையும் இவர் பெற்றிருந்தார். ஒரு எழுத்துப்பிழையோ அன்றி வேறெவ்விததப்பிதங் களோ இன்றி வெகு கச்சிதமாகவும் திருத்த மாகவும் திருப்திகரமாகவும் வெளிவந்த இவரது நூல்களின் அச்சுப் பதிவே இலங்கை முழுதும்
G4D

Page 44
புகழ்ந்து வரவேற்கப் பெற்றது. பாட புத்தகங்கள், உயபாட நூல்கள், சமய நூல்கள் என்பவற்றோடு அறிவுப் பொக்கிஷங்களான வித்துவான் கணேசையரின் தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள், உரைக்குறிப்புக்கள், பண்டிதர்கள், புலவர்கள், அறிஞர்களெனப் பல்லோருடைய நூல் களையும் அச்சேற்றி வெளியிட்ட பெருமையும் இவருக்குண்டு.
இவற்றோடு இத்துறையில் பொன்னையாவின் தாகமும் வேகமும் தணிவதாக இருக்கவில்லை. மேற்கொண்டும் புதிய துறையில் காலூன்றவே பேரவாக் கொண்டார். அதன் உதயம்தான் "ஈழகேசரி என்ற வாரவெளியீட்டின் தோற்றம் ஆகும். அச்சகத்தை ஸ்தாபித்து ஓகோ என வர வேற்பும் வாழ்த்துக்களும் கீர்த்தியும் ஓங்கவும் ஒரு வருட கால எல்லையில் அதாவது 1930இல் "ஈழகேசரி" எனும் பத்திரிகையை ஆரம்பித்து நடாத்தினார்.
சாதாரண மக்களுடைய வாழ்வின் அபிலாஷைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டு புத்தக சாலை, அச்சுப் பதிவு, பத்திரிகை என்ற துறை களை விரும்பிநிற்கும் இவருக்கு கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெறும் வாய்ப்பும் கிட்டியது. அதனைப் பயன்படுத்த ஆசிரியகலாசாலைக்குச்சென்றிருந்தார். ஏற்கனவே இவரது தமிழார்வத்தையும் சமூகத்தின் மேம்பாட்டிலிருந்த அக்கறையையும் அவதானித் திருந்த அக்கலாசாலை அதிபர் அவரும் திரு (அ) பொன்னையா என்ற பெயரினர்தான் முதல்நாளே இவரை அழைத்து ஈழத்தின் வளர்ச்சிக்கும், தேசிய எழுச்சிக்கும் தமிழ் உணர்வோடு புத்தகங் கள், அச்சகம் பத்திரிகை எனக் காத்திரமான சேவைகளைத் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ்ப் பூமிக்கும் செய்யக் கூடிய ஆர்வமும் திடகாத்திரமும் மிக்க இவர் ஆசிரியப் பயிற்சி பெற்றுப் பெரிதாக என்னத்தைச் சாதிக்கப் போகிறா ரெனக் கருத்துரைக்கவும் திரு.பொன்னையா அப்பயிற்சியை மேற்கொள்ளாது கைவிட்டு விட்டு அந்த அதிபரின் வார்த்தைகளை ஆசீர்வாதமாக ஏற்று வீடு திரும்பினார். அத்தோடு அவ்வாசான்
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
குறிப்பிட்டதே போல தனலகூழ்மி புத்தகசாலையும் திருமகள் அழுத்தகத்தையும் ஈழகேசரி வார இதழையும் மேன்மேலும் மெருகேற்றி, தாம் பொருளும் புகழும் ஈட்டுவதைவிட இவற்றால் மக்கள் பெரும் பயனை அடைய வேண்டும் நாடு மேலோங்கி வளர வேண்டுமெனத் திடமான உறுதிபூண்டார்; அத்தகைய இலக்கை நோக்கியே அவர் பயணித்துப் பல வெற்றிப் படிகளையும் இலகுவில் தாண்டினார்.
ஈழகேசரியில் பண்டிதமணிகணபதிப்பிள்ளை, கவிஞர் பீதாம்பரம் வித்துவான் கணேசையர், வித்துவான் ஆறுமுகம் போன்ற பெரும் பெரும்
பதித்த வரதர், கனக செந்தில்நாதன், சொக்கன், அ.செ.முருகானந்தன், பஞ்சாட்சர சர்மா போன்றோரின் விடயங்கள் பெரிதும் இடம்பெற்றன. ஈழகேசரியின் பாலர் பக்கம், இளைஞர் சங்கம் என்பவற்றில் அன்று எழுதிப் பயிற்சிபெற்ற பலர் பிற்காலத்தில் புகழ்பூத்த எழுத்தாளர்களாகப் பரிமணித்திருக்கும் பெருமை ஈழகேசரியையும் அதன் பத்திராதிபருமான பொன்னையா அவர் களையே சாரும்.
அக்காலத்திலே தொடர்பாடல் நிலை இல்லை யென்றே கூறுமளவிற்கு மிக மோசமானநிலையி லிருந்தது புகைவண்டி, பஸ் என்பன அறிமுகப் படுத்தப்பட்டவில்லை. பைசிக்கிள் இன்றுபோல ஏராளமாகக் காணமுடிகிறது. பயணம் கால்நடை யாகவோ அல்லது மாட்டு வண்டியையோ தான் நம்பியிருந்த காலம். தொழில் நுட்ப வளர்ச்சியும் அறிமுக மற்றிருந்த வேளை. தொலைபேசியைச் சாதாரனர்கள் பயன்படுத்த முடியாத காலம். செய்திகளையோ புதினங்களையோ வானொலி மூலம்தான் அறியமுடியும். வானொலியும் இன்று போல் எல்லோருடைய வசதிக்கும் எட்டமுடியாத பயன்படுத்த முடியாத நிலை.
இத்தகைய பின்னணியில் மக்கள் செய்திகளை அறியவும், அறிவிக்கவும், நாட்டு நடப்புகளைத் தெரிந்திருக்கவும் உதவியாக அமைந்திருந்தது ஈழகேசரி வார ஏடே
G42)

Page 45
م/
Adiabais amabhuphu
அன்றைய நிலையில் ஈழகேசரி இதழின் அரும்பணி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒன்றே. அதற்குப் பல காரணங் களை நாம் குறிப்பிடலாம். இவ்விதழ் தமிழ் o க்குச் செய்தி த் தெரிவிக்கவும் அறிவை வளர்க்கவும் வாசிப்புப் பண்பாட்டை வளர்க்கவும் சிறந்த முறையில் பொழுதைக் கழிக்கவும் பயன் படும் வகையில் மிக உதவியாக அமைந்தது. அதனை வெளியிட்டவர்கள் தமிழ் மொழியிலும், தமிழ் மக்களின் நலன்மீதும் ஆறாக் காதல் கொண்ட தமிழ் அறிஞர்கள், தன்னலங்கருதாத பெரும் உடல் வளர்ச்சிக்கு அவனைப் பெற்றதாய் எத்தனை கரிசனையும் கவனமுமெடுத்து இதம் பதமாக அப் பிள்ளைக்கும் பொருத்தமான உணவைப் பக்குவமாக ஆக்கி அன்போடு ஊட்டு வாளோ அந்த ரீதியில்தான் ஈழகேசரிப்பத்திரிகை விடயங்களும் மக்களுக்குப் பயனைக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வோடு மிகக் கவனிப் போடும் அக்கறையோடும் வெளியிடப்பெற்றது. தமிழ் மொழியைத் திருத்தமாக எழுதவும், வாசிக்கவும், கருத்துக்களை லாவகமாகத் தமிழ் மொழியில் வெளிப்படுத்தவும், மொழி மீது பற்று தலையும் மதிப்பையும் ஏற்படுத்தும் வகையிலும் செய்திகளைப் பரிமாறி விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் கூடியவகையில் ஈழகேசரியின் சேவை பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பத்திரிகையின் கொள்கை, வடிவ மைப்பு என்பவற்றைப் பொன்னையா அவர்கள் தன்கையில் வைத்துக் கொண்டாலும் கருத்துக்கள், விடயங்களையெல்லாம்சமூக உணர்வும்மக்களை நேசிக்கும் மனப்பான்மையும் கொண்ட பெரும் அறிஞர்கள் சிந்தனாவாதிகளின் அறிவுரைக ளோடும் அங்கீகாரத்தோடுமே அச்சேறின.
இதற்கு உதாரணமாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியின்அதிபரும்பொன்னையா அவர்களின் மிகநெருங்கிய நண்பரும் மக்கள் நலமே தன்னலமாக வரித்துக்கொண்டு வலம் வந்த அறிஞர்ஹண்டிபேரின்பநாயகம் அவர்களே குறிப்பிடும் ஒரு சம்பவத்தை நினைவு கூரலாம்.
)2011 ggی)
 
 
 

சங்கத்தமிழ்
நோபல் பரிசுபெற்ற தாகூரின் நூற்றைம் பதாவது ஆண்டை நாம் நினைவில் வைத்து ஆராதித்துக் கொண்டாடுகிறோம் இன்று. ஆனால் அன்று கவிஞர் தாகூர் மரணித்த செய்தி செவியு ற்றதும் அவர் பற்றிய விபரத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பேரவாவில் பொன் னையா அதிபர் கடுமையான வேலைப் பழுவில் ஹண்டி அவர்கள் சிக்கிக் கிடந்த வேளையில் தாகூருடைய கவிதை, நாடகம், சித்திரம் என்பவற்றைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை உடனே எழுதித்தருமாறு ஹண்டி அவர்களிடம் கேட்டுப் பழிகிடந்தார் என்றே அவர் குறிப்பிட்டு ள்ளார். நட்பின் இறுக்கம் காரணமாகவும், பத்திராதிபர் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கை யின் நிமித்தமும் தான் அன்றுமாலை 7 மணியளவில் தன்கல்லூரியின் நூல்நிலையத் திலிருந்து வேண்டிய நூல்களை எடுத்துப் படித்துக் கட்டுரையை எழுதிக்கொடுத்ததாக பத்திராதிபரின் ஊக்கத்தையும் உழைப்பையும் பெருமைபடக் குறிப்பிட்டுள்ளார் திரு.ஹண்டி அவர்கள். இது பத்திராதிபரின் திரு.பொன்னையாவின் கரிசனைக்கு ஓர் சான்று.
பாடநூல்கள் எப்படி மாணவரின் அறிவை வளர்க்க உதவியாக அமைகிறதோ அதே போல பத்திரிகைகளும் பல்வேறு தளங்களிலும், பல்வேறு கொள்கைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எவ்விதத்திலாவது பயன்படவேண்டு மென்பதில் மிகுந்த அக்கறை பூண்டிருந்தார் பொன்னையா. வெறுமனே தான் கொண்ட கொள்கையை நிலைநாட்டவும், தன்னையும் தன்னச்ை சுற்றியுள்ள மக்களுடைய அபிலாஷை களை, நிறைவேற்றவுமே இப்பத்திரிகை என்ற நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்டு ஊர் நடப்புக்கள் உலகச் செய்திகள், புதினங்கள் யாவற்றையும் யாவரும் அறிந்திருக்க வேண்டு மென்ற அவாவோடு செயல்பட்டார்.
வாசிப்புக் கலாசாரத்தை ஏற்படுத்தவும் மக்களிடையே அதனை வளர்த்தெடுக்கவும் கூடிய வகையில் பத்திரிகையின் பக்கங்களை அழகாக வடிவமைத்தார். செய்திகளின் முக்கியத்துவத்தி ற்கும், தரத்திற்கும் ஏற்ற வகையில் தலைப்புக் களும் வாக்கியச் செறிவுகளும் பொருத்தமாக
G43)

Page 46
ܛܒ݂ܵ
t
4
Romeonentza
ath
அமையவேண்டும் என்பதில் கண்ணுங் கருத்து மாக இருந்து செயல்பட்டார். வாசகர்களின் ரசனைக்கும் ஈடுபாட்டிற்கும் தீனி போடுவதாக ஈழகேசரி சுமார் ஆறு ஆண்டுமலர்களைக் கனதி யாகவும் காத்திரமாகவும் வெளியிட்டு முத்திரை பதித்தது. இவற்றுள் காலஞ்சென்ற தமிழறிஞர் கா.பொ.இரத்தினம் அவர்கள் தொகுத்த நாவலர் மலரும்', 'கல்வி மலரும் மிக மிகச் சிறப்பானவை எனக் குறிப்பிடலாம்.
இவற்றோடு மாத்திரமன்றி ஈழகேசரியில் சில நாவல்களும் வெளிவந்தன. வரணியுர் இராசையா எழுதிய பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்' கவிஞர் கல்லடி வேலுப்பிள்ளை மகன் சாரங்க பாணி என்பவர் எழுதய சத்தியேஸ்வரி என்ற நாடகமும் ஈழகேசரியில் வெளியாகியது.
“இதனை இதனால் இவள்முடிக்கும் என்றறிந்து அதனை அவன்கண் விடல்” என்ற திருக்குறளின் கருத்திற்கமைய ஈழகேசரி பொன்னையா ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆற்றல்களையும் அறிவின் திரட்சியையும் நன்றாக எடைபோட்டுக் கணித்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஒவ்வொரு காரியத்தையும் மிகத் திறம்பட நிறைவேற்ற அதற்குப் பொருத்த மானவர்களையே வெகு நுட்பமாகத் தெரிவு செய்து கடமைகளை அவரவரிடமே பொறுப்பித்து விடும் வல்லமை மிக்கவராக வாழ்ந்தார். இக்காரணத்தினாலேதான் எத்தகைய பாரிய பணி களையும் மிகக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் பெருமை அவரது கைவந்த கலையாக அமைந்தது. நட்பிற்காகவோ முகத்திற்காகவோ தேவையானவ ரென்பதாலோ தரமற்ற ஒரு வரைத் தூக்கி வைத்துப் பம்மாத்துக் காட்டிப் பாராட்டும் பழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது.
பத்திரிகை வெளியிடல் நூல்கள் அச்சிடல் என்பவற்றை மையமாக வைத்து அதற்குரிய அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆற்றல் மிக்கோரை அணுகித் தனது குறிக்கோளை நிறைவேற்று முகமாக மக்களிடையே ஒற்றுமையையும் தமிழ்ப் பற்றையும் வளர்த்தல், தாய்மொழி மூலம் கல்வி யூட்டல், தேசப்பற்றையும் சுகந்திர வேட்கை
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
யையும் ஏற்படுத்தல் தீண்டாமையையொழித்தல் நாட்டைச் சீர்திருத்தி முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்தல், பொருளாதாரத்தை ஊக்குவித்தல் விவசாயத்தை மேம்படுத்தல் என்பன போன்ற பல பொதுநலசேவைகளுக்கான அடிஅத்திவாரமாக இவற்றைப் பயன்படுத்தினார். கிராமங்களே ஒரு தேசத்தின் ஆண்மா என்பதை நன்கு இவர் உணர்ந்திருந்ததன் தன்மையினாலே கிராமங்க ளின் எழுச்சி, கலை, பண்பாட்டு நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நாடகங்கள், செய்திகள் என்பனவற்றிற்கெல்லாம் பத்திரிகையில் முக்கிய இடம்கொடுத்தார்.
"கேசரி என்ற பெயரில் வார வெளியீடாக ஒரு ஆங்கில இதழையும் வெளிக்கொணர்ந்த பெருமை இவருக்குண்டு. இதன் ஆசிரியராக யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக இருந்த ஹண்டி பேரின்ப நாயகம் அவர்களிடமே கருத்து, கட்டுரைகள் என்ற பொறுப்பை விட்டிருந்தாராயினும், பத்திரிகையின் பக்கங்களின் வடிவமைப்பு. கலம் அமைத்தல், பந்திகள் பிரித்தல் அமைத்தில் என்பவற்றை யெல்லாம் தனது கண்காணிப்பில் மிகக் கச்சித LDTaböf 6aFuig (UppģBITÜ. 661aFTuLuğấ6ö LD60ör6Oý6ÖT வகைகளையும் விதைகளின் தரத்தையும் நீரின் போக்கையும் எப்படி அத்துப்படியாக அறிந்திரு ந்தாரோ அதை விடச் சிறப்பாகப் பத்திரிகைத் துறை பற்றியும் நன்கு பரிச்சயமுள்ளவராகத் திகழ்ந்ததே இன்னும் எத்தனையோ வருடங்கள் அவர் சேவை நினைவு கூரத்தக்க வகையில் அமைந்துள்ள தெனலாம்.
இவரின் முயற்சியால் வெளியான "கேசரி என்ற வார இதழ் பத்து சதம் விலையாகப் போடப் பட்டிருந்தது. யோகர் சுவாமி, சம சமாஜக் கட்சிப் பெரியார் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பல பெரியவர்கள் இதனை மிகவும் பாராட்டி வரவேற்ற தோடு பொதுமக்களிடமும் அப்பத்திரிகையின் வரவு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
தன்னாலியன்றவரை மிகுந்த அர்ப்பணிப் போடு தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக உழைத்த திரு.பொன்னையா உடல் தளர்வுற்று சுகவீனமானார். சில நாட்கள் படுக்கையிலிருந்த
G44)

Page 47
Mahali
Aqabaq
பின் 1951ஆம் ஆண்ட மார்ச் மாதம் 30ஆம் திகதி அமரரானார். நாடே சோக இருளில் மூழ்கியது.
வடஇலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், திருமகள் அழுத்தகம், குடும்ப சிட்டிசன் மார்க்க சபை ஆகிய ஸ்தாபனங்களின் ஊடாகப்பாரிய பணிகளை முன்னெடுத்துச் சென்ற இப்பெருமகனின் பிரிவை யிட்டு ஏராளமான பெரியவர்கள், கல்விமான்கள், நிபுனர்கள் எனப் பலரும் தமது துயரங்களை வார்த்தைகளில் பதித்துள்ளனர். சக்கரவர்த்தி ராஜாஜி கோபாலாச்சாரியார் அவர்கள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சென்னை கிறீஸ்தவக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.ஆலால சுந்தரஞ் செட்டியார், கி.வா.ஜ. அகிலன், வி.வி.சட கோபன், பெ.தூரன், கல்கி என எண்ணற்றோர் வெளி ஊரிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் தம் துயரைப் பகிர்ந்துள்ளனர்.
சென்னை சக்திகாரியாலயத்தைச் சேர்ந்த புதுமைப் பித்தனின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காலஞ் சென்ற ரகுநாதன், "ஈழகேசரி தனக்கென ஒரு தனிப்பண்புடன் வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகை. பழைமையை மறந்து மறுமலர்ச்சிப் பாதையிலும் செல்லாமல், புதுமையை மறுக்கும் பண்டிதப் பாதையிலும் செல்லாமல் பழைமையின்
'சங்கத்தமிழ் - சஞ்ச
இலங்கை : தனிப்பிரதி ரூபா 10 இந்தியா : ஒரு வருடம் இந்தியா ஏனைய நாடுகள் : ஒரு வருடம்
சந்தாக்காரர்கள் தங்கள் சந்த Colombo Tamil Sangam கணக்கு இல ; 1100014906 Commercial Bank Gaurism
செலுத்
(gિ 2011)
 

சங்கத்தமிழ்
அஸ்திவாரத்தில்தான் புதுமை இலக்கியம் உருவாக வேண்டு மென்ற அபிப்பிராயத்தைச் சொல்லாமற் சொல்லிப் பணியாற்றி வருவது ஈழகேசரி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரு.பொன்னையாவின் இரு கண்களே தனலகூழ்மி புத்தகசாலையும் திருமகள் அழுத்த கமும் என்ற கருத்தில்.நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் அவர்கள்
"திருவோங்கு தென்னிலங்கைச்
சிரமாகும் யாழ்ப்பாணத்தேசந் தன்னில் மருவோங்கு தண்டலைகழ்
ഞ്ഞങ്ങാഞ്ഞTഖണb பதிவாழ வந்த தோன்றல் உருவோங்கு சிறியவிதை தனிற்பெரிய
மரமோங்கி உதிப்பதேபோற் கருவோங்கு சிறுமுயற்சி தனிற்பெரிதாய் பலர்மதிக்கக் கதித்த செல்வா"
என விழித்து அவர் செயல்திறனைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இன்றைய இளம் சந்ததியினருக்கு திரு.பொன்னையாவினுடைய வாழ்வும் பணிக ஞ்ம் பெரும் உந்துசக்தியை அளிக்கு மென்பதில் ஐயமேயில்லை. :
சிகையின் சந்தா விபரம்
0/= ஒரு வருடம் ரூபா 600/=
ரூபா 450/-
20 அமெரிக்க டொலர்
5T606)
Society Ltd.
வத்தை என்ற கணக்கில் த்தும் வண்ணம் வேண்டுகிறோம்.

Page 48
தமிழ் வளர்த்த மேலை
வரிசையில்
"பல்லுயிரும் பலவுலகும் படைத்
தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி
இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமும் துளுவும் உன்னுதரத்துதித் தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கழிந்
தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே.” என்று எல்லையற்ற பரம் பொருளோடு, தமிழ் மொழியைச் சிறப்புற உவமித்துள்ளார். மனோன் மணியம்’ தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள். அத்தகைய சிறப்புமிக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய மேலை நாட்டு அறிஞர்கள் பலர். அவர்களுள்ளே வீரமா முனிவர், போப் ஐயர், எல்லீசர், கால்வெல்ட் என்போர் மறக்க முடியாதவர்கள்.
18ம்நூற்றாண்டில் பாரதநாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்ட பின்னர் ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ சமயமும் நாடு முழுவதும் வேகமாகப் பரவின. உவெஸ்லியின் மிஷனைச் சேர்ந்த பாதிரிமார்கள் பலர் தமிழ் நாடு வந்தனர். இவ்வாறு வந்த பாதிரிமார்களுள் போப் ஐயரும் ஒருவர்.
பாதிரிமார்கள் 5ԼD5] பணிகளைச் செய்வதற்காக பாரத நாட்டு மக்களால் பேசப்பட்ட மொழிகளைக் கற்க வேண்டி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் இவர்கள் சிறந்த புலமை உடையவர்களாக விளங்கினர். தமிழ் நாட்டுக்கு சமயப் பணிபுரியவந்தபோப் ஐயர் அவர்களுக்கும் திராவிடமொழிகளைக் கற்க வேண்டிய அவசியம்
(ஆடி 2011)
(

நாட்டுப் வபரியார்கள் 3upt aluf
பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம்
ஏற்பட்டது. இவர் வித்துவான் இராமானுஜக் கவிராயரிடம் தமிழை முறையாகக் கற்றார். தெலுங்கு மொழியிலும் நிறைந்த புலமையு டையவராக விளங்கினார். இவரது பன்மொழிப் புலமை சமயம், கல்வி, தமிழ் முதலியதுறைகளில் தொண்டாற்ற உதவியது.
1820ம் ஆண்ட இங்கிலாந்தில் பிறந்த இவர் உவெஸ்லியற் மிஷன்” பாதிரியாக தமிழ்நாடு வந்தார்.
இவர் 1886ல் திருக்குறளையும், 1893ல் நாலடியாரையும், 1900ம் ஆண்டில் தமது 80வது வயதில் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இவற்றைவிட மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களையும், ஆங்கிலத்தில் மொழி 6huuujjig.6irelT6OLD eleb60Lu 6LDIT பெயர்ப்புத் திறன், சிந்தனை சக்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த நிறைந்த புலமையை எடுத்துக் காட்டுகின்றது.
மணிமேகலையை இவர் மிகவும் நுணுக்க மாக ஆராய்ந்தார். அதன் மூலக்கருத்துக்கள் சிதையாமல் ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அது ஆங்கில இலக்கிய வாணர் களுக்கு ஒரு நல்விருந்தாய் அமைந்தது.
புறநாநூறு, புறப்பொருள் வெண்பா மாலை முதலிய நூல்களிலுள்ள பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமை அவருக்கு மொழி பெயர்ப்புத் துறையில் உள்ள ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகின்றது. புறப்பொருள் வெண்பா மாலை ஓர் இலக்கண நூல். தமிழெழுத்துக் களுக்கும், ஆங்கில எழுத்துக்களுக்கும் இடையில் ஒற்றுமை இல்லை. போப் ஐயர் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள பாடல்களுக்குக் கொடுத்துள்ள விளக்கம் ஆங்கிலேயருக்கு
G46)

Page 49
f a4atbugh
தமிழிலக்கண அறிவை ஊட்டுவதாக அமைக்கின்றது.
இவர் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதோடு, இன்னும் பல நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஒரு தமிழ்ப் பாடப்புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார். இது மேலை நாட்டவர்கள் தமிழைக் கற்பதற்குப் பெரிதும் உதவியது.
"தமிழ்ச் செய்யுள் கலம்பகம்” இவர் தொகுத்து வெளியிட்ட இன்னும் ஒரு நூலாகும். பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில், இலண்டன் கேம்பிறிஜ், ஒக்ஸ்போர்ட் என்பன பழைமையும், செழுமையும் உடையவை. போப் ஐயர் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1895இல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் பேராசிரியராய் விளங்கினார்.
இவர் விமர்சனத்துறையிலும் சிறந்து விளங்கினார். வீரமாமுனிவர் இயற்றிய வேத விளக்கம்’ என்ற நூல் அப்போஸ்தலர்களின் சீவியத்தையும், அவர்களின் வேலைகளையும்
(ஆடி 2011)
 

சங்கத்தமிழ்
எடுத்துக் கூறுகின்றது. இதை "உரை நடையி லுள்ள சிறந்த நூல்” என்று போப் ஐயர் பாராட்டியுள்ளார்.
"கல்விகரையில்லாதது. வாழ்க்கை முழுவதும் கல்வி கற்க வேண்டும்” என்ற உயரிய தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெரியார் இவர். இவர் இறக்கும் வரையும் ஒரு மாணவனாக விளங்கினார்.
“சித்தாந்த தீபிகை” எனும் சஞ்சிகைக்கு இவர் 20.1O.190Ob &60örp6) 6Tup5u 85.25556) 35LDg கல்லறையில் "போப் ஐயர் ஒரு மாணவர்” என்று எழுத வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். இது இவரின் தமிழ்ப் பற்றை எடுத்துக் காட்டுகின்றது.
1820ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து, தமிழ் நாட்டில் சமயப் பணியும், தமிழ்ப் பணியும், கல்விப் பணியும் புரிந்த இவர் 1882ல் தாய் நாடு திரும்பினார். பல நூல்களை எழுதி வெளியிட்டார். தமிழ் நாட்டிலும், தான் பிறந்த பொன் நாட்டிலும் ஏற்றம் மிக்க வாழ்வு வாழ்ந்து, 1907ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். தமிழ் வளர்த்த மேலை நாட்டுப் பெரியார்கள் வரிசையில் இவரொரு சிறப்பான இடத்தைப் பெறுகின்றார். *

Page 50
அமிழ்தின் வித
தாய்மொழியாய்த் தமிழ்மொழி தரணியிலே வேறதுபே வேய்ங்குழலின் நாதமொடு வீ விரவுமொலி தமிழொ6 வாயினிக்கும் தமிழ்வார்த்தை வேற்றுமொழிக் கில்ல தாய்மொழிக்குத் தெய்வத்தின் செந்தமிழன் சீர்மைக்
தமிழ்பேசா நாடுலகில் ஒன்றும் தமிழரில்லா நாடுமின் அமிழ்தென்பார் மொழியறிந்தே அமிழ்தினிலே தெளிந் உமையாளும் பெருமானும் உ ஒப்பில்லாத் தமிழென் இமைமூடும் காலமட்டும் என்ற இசைப்பதென்றன் தாய
பற்பலவாய்க் காவியங்கள் தெ பாடிவைத்தார் புலவர்க சொற்சுவையும் பொருட்செறிவு செந்தமிழின் தொன்ன அற்புதமாம் அவையனைத்துப் ஆண்டாண்டு காலத்து பொற்புறுமல் வனைத்தையுே புதுமைகளை ஒதுக்கா
(ஆடி 2011)

fவேதமிழ்
யைப் பெற்றிட் டோமே ால் பேறுண்டாமோ னை நாதம் மிக்கு நிகர தாமோ விளம்புங் காலே ாத வரமாம் எங்கள் கொடையாம் என்பேன் த வேறென் வேண்டும்
இல்லை
று தரணியில்லை தார் பொய்யே இல்லை ததுதான் தமிழாம் என்பேன் உரைத்த தெங்கள் பேன் உண்மை என்பீர் றன் நாவும் ப்மொழியே வேறொன்றில்லை
ான்று தொட்டுப் 5ள் பாடுகின்றார் ம் செறிந்த போதம் )மதனைச் சிறப்பைச் சாற்றும் ) அறிவின் தேறல் ம் அழியாச் செல்வம் D போற்றிக் காப்போம் து அவையும் காப்போம்
ஜின்னாஹ ஷரிபுத்தினர்
துணைத்தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
G48)

Page 51
ஈழத்து வசன இல
சங்க காலத்துக்குப் பின்னர் தமிழ்மொழி சமயப் பெரியார்களால் வளர்ச்சியுற்றது. சமணரும் பெளத்தரும் வைதீக சமயத்த வரும் தத்தம் சமயக் கருத்துக்களை உயிர் நாடியாகக் கொண்ட இலக்கியங்களை எழுதினர். பிற்காலத்தில் அவர்களைப் போலவே கிறிஸ்த வரும் இஸ்லாமியரும் தமிழ் மொழியின் சமய இலக்கியங்களைப் படைத்தனர். கிறிஸ்தவ சமய போதகராக வந்தவருட் சிலர் தமிழ்மொழிக்கு ஆற்றிய தொண்டு தனிச் சிறப்பு வாய்ந்தது. அச்சிறப்பு வாய்ந்த தொண்டு தமிழில் 6F6 இலக்கியத்தைப் u60DL-555IT85b.
16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவைச் சார்ந்த யேசுசபைத் துறவிகள் தமிழ்நாட்டுக்குத் தம் சமயத்தைப் போதிக்க வந்தார்கள். தம் சமயத்தைப் போதிப்பதற்கு அவர்கள் தமிழ்மொழியைக் கற்கவேண்டியிருந்தது. தமது மதத்தின் செபங்களையும் தமிழிலே மொழிபெயர்க்க ஐரோப்பாவில் அச்சுயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் யேசுசபைக் குருக்களால் கொல்லத்தில் ஓர் அச்சகம் நிறுவப்பட்டது. கிறிஸ்துநாதர் தம் திருவாயால் மலர்ந்தருளிய (பரமண்டல மந்திரம் என்ற) செபம் அந்த அச்சகத்தில் கென்றிக்கன் என்ற யேசுசபைக் குருவால் பதிக்கப்பட்டது. இந்தியாவிலேயே அச்சில் வெளியான முதல் நூல் அதுதான். பரமண்டல மந்திரம் என்று தற்போது வழங்கப் படும் அச்செபம் தம்பிரான் வணக்கம்" என்ற பெயருடன்தான் முதலிற் பதிப்பிக்கப்பட்டது. வீரமா முனிவராற் செய்யப்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்களுக்கு முன்பாக மெய்யெழுத் துக்களுக்குப் புள்ளிகளின்றியும் எகர,
(@g% 2011)

க்கியத்தின் மூலவர்
த்தின்
'திரிகூடம்’, மூதூர்.
ஒகரங்களுக்குமேற் புள்ளியிட்டு ஏகார ஒகாரங்களாகக் கொண்டதுமான பழைய வரிவடிவத்தில் அச்செபம் பதிக்கப்பட்டிருந்தது. வகுப்புக் கலவரங்களால் எரிக்கப்படுவதற்கு முன்பு யாழ்ப்பான நூல் நிலையத்தில் அச்செபத்தின் பிரதியைப் பார்த்திருக்கிறேன்.
ஆனாலும் தமிழ் வசனநடையில் பெரிய நூல்களை எழுதி வசனநடைக்கு வித்திட்டவர் இத்தாலியிலிருந்து வந்த யேசுசபைக் குருவான றொபேட்டி நொபிலி என்னும் தத்துவ போதகர் ஆவர். ஞானோபதேசப்பர்வதகாண்டம் ஆத்தும நிர்ணயம் போன்ற பெரிய வசன நூல்களைப் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மதுரைக்கு வந்த தத்துவ போதகர் எழுதினார்.
அவரைத் தொடர்ந்து 1711ஆம் ஆண்டு மதுரைக்கு வந்து, காமநாபக்கன்பட்டி, குருக்கள் பட்டி, எயிலுTர், இராமநாதபுர மாவட்டம், ஏலாக் குறிச்சி, புதுச்சேரி, வடுகர் பட்டி, தூத்துக்குடி மனப்பாடு, அம்பலக்காடு ஆகிய இடங்களிற் சமயப்பணி புரிந்த கொன்ஸ்ரன்ரியூஸ் ஜோசப் வெஸ்கி ஆகிய வீரமாமுனிவர் என்ற யேசு சபைக் குரவர், வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், பேதக மறுத்தல், ஞானம் உணர்த்துதல், திருச்சபைக் கணிதம், வாமன் கதை, பரமார்த்த குரு கதை ஆகிய வசன நூல்களை எழுதித் தமிழ் வசன நடையை வளர்த்தார்.
தமிழ் நாட்டில் வசன நடைக்கு வித்திட்டு, அதை வளர்த்த கிறீஸ்தவக் குருக்களைப் போல ஈழ நாட்டிலும் ஒரு கிறீஸ்தவக் குருவே வசனநடைக்கு வித்திட்டார். அதை வளர்த்தார் ஆனால் அவர் தத்துவ போதகரைப் போலவோ, வீரமாமுனிவரைப் போலவோ
G49)

Page 52
இத்தாலியரல்லர். யேசு சபையைச் சேர்ந்த வருமல்லர். ஈழத்தில் வசன நடையைத் தோற்றுவித்த அந்தக் குரு இந்தியர். கோவையைச் சேர்ந்தவர். பிராமணர்.
இத்தாலியர்களான றொபேட் டி நொபிலியும் டி பிறிற்றோவும் ஜோசப் பெஸ்கியும் முறையே தத்துவ போதகர், அருளானந்தர், வீரமா முனிவர் எனத் தமிழ்ப் பெயர்களால் அறியப படுவதுபோல யாக்கோமே கொன் சால்வெஸ் என்ற ஈழத்துத் தமிழ்ப் பெயரால் அறியப்படுகிறார்.
1505ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர். 1542ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குருக்கள் மதம் பரப்புவதற்காக இலங்கை வந்தனர். அவர்களாற் கோட்டை மன்னன் பராக்கி ரமபாகு மதமாற்றஞ் செய்யப்பட்டான். அரசனைத் தொடர்ந்து கோட்டை ராச்சியத்து மக்கள் பலரும் கிறீஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், களுத்துறை ஆகிய மேற்குக் கரைப் பகுதிகளிலும் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் கிறீஸ்தவ மதம் பரவியது.
ஆனால் 1638ஆம் ஆண்டு இலங்கையிற் போர்த்துக்கீசர் ஆட்சி அஸ்தமித்தது. கல்வீனிய மதப்பிரிவைச் சார்ந்தவர்களான டச்சுக்காரர் போர்த்துக்கீசரைத் தோற்கடித்து அவர்கள் ஆண்ட இடங்களைக் கைப்பற்றினர். அவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களைத் தகர்த் தார்கள். கத்தோலிக்கக் குருக்களை நாட்டை விட்டுத் துரத்தினார்கள். கத்தோலிக்க மக்களைத் தமது மதவழிபாடுகளிற் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். பிள்ளைகள் தமது புரொட் டெஸ்தாந்த மதத்தையே கற்கும்படியும் தமது மதபோதகர்கள் நடத்தும்
)2011 واgی)
 

சங்கத்தமிழ்
பாடசாலைகளிலே படிக்கும் սւքայլք நிர்ப்பந்தித்தார்கள்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டுக் கத்தோலிக்க மக்களால் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. கத்தோலிக்கக் குருக்களே நாட்டில் இல்லை. ஆனாலும் சில கத்தோலிக்கர் மறைவாகத் தம் மதத்தைத் தம்மாற் கூடியவரை அனுட்டித் தனர். அவருக்கு வழிகாட்ட எவருமே இல்லை. இந்த நிலையைக் கோவாவிலுள்ள கத்தோலிக்கக் குருவான வந். யோசப் வாஸ் அடிகளாருக்குத் தெரிய வந்தது. அவர் இலங்கைக்கு வந்து அங்குள்ள கத்தோலிக்க மக்களுக்கு உதவ வேண்டும் என விரும்பினார். 1686ஆம் ஆண்டு நவம்பரிற் கோவாவை விட்டுப் புறப்பட்டு மங்களூர் வழியாகத் தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து கடல் கடந்து மன்னாரை 1687 மே மாதத்தில் அடைந்தார். ஒல்லாந்தரின் சட்டங்களுக்குப் பயந்து இரகசியமாக மன்னார். யாழ்ப்பாணம், புத்தளம் ஆகிய இடங்களிற் சமயப்பணி புரிந்தார். 1692இல் கண்டியை அடைந்தார். ஆரம்பத்திற் கண்டியரசன் அவரைச் சந்தேகித்தாலும் பின்னர் அவருக்கு ஆதரவளித்தான்.
இலங்கையிற் பணி செய்வதற்காக மேலும் சில குருக்களை யோசேப் வாஸ் அடிகளார் அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று மூன்று குருக்கள் 1705ஆம் மே மாதம் கோவாவை விட்டுப் புறப்பட்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி இலங்கையை அடைந்தனர். அவர்களில்
என்னும் சாங்கோபாங்க அடிகளார்.
கொன்சால் வெஸ் கோவாவில், திவாரி என்ற ஊரில் தன் தாய்வழிப் பாட்டியார் இல்லத்தில் 1676ஆம் ஆண்டு பிறந்தார். இளவயதிலேயே லத்தீன், போர்த்துக்கீச
G50)

Page 53
ه/
மொழிகளையும் தாய்மொழியான கொங் கணியையும் கற்றார். விவேகமுள்ள மாணவரான அவர் மேற்கல்வி கற்க றோமுக்குப் போக விரும்பினார். ஆனால் அது வாய்க்கவில்லை. அதனாற் கோவா சர்வகலாசாலையிற் சேர்ந்து கலைப்பட்டம் பெற்றார். பியானோ, வயலின் ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதிலும் வல்லவரானார். குடும்பத்தைத் தாவரிக்க வேண்டியவனான மூத்த மகன் உலகை வெறுத்துக் குருவாவதைத் தந்தை தாயர் விரும்ப வில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்தை மீறி 1700ஆம் ஆண்டில் குருப்பட்டம் பெற்றார். குரு மடத்தில் இறையியல், தர்க்கம் ஆகிய கற்பிக்கும் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அப்பணிகளைவிட இலங்கை யில் சமயப்பணி செய்வதே மேல் எனக் கண்டு இலங்கையை அடைந்தார்.
இலங்கை வந்தடைந்தபோது அடிகளா ருக்கு 29 வயது. வீரமாமுனிவர் தனது முப்பதாம் வயதுக்குமேல் தமக்கு முற்றிலும் அந்நியமான தமிழ்மொழியைக் கற்றார். சுப்ரதீபக் கவிராயரிடம் அவர் தமிழ் கற்றதாக அறிகிறோம். ஆனால் கொன்சால் வெஸ் அடிகளார் யாரிடம் தமிழ் கற்றார் என்பது தெரியவில்லை. 1705இல் கோவாவில் இருந்து இலங்கைக்கு வரும்போதே திருவாங்கூரில் தமிழைப்பிழையறப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். வந்த அடுத்த வருடத்தில் அவர் சமயப் பணியாற்றிய இடங்கள் அரிப்பு, முசலி, அருவி யாற்றுக்கு மேலேயுள்ள புளியங்குளம், இலுப்பைக்கடவை, குருக்கள் குளம், தேக்கம் பிட்டி, வெள்ளங்குளம், பல்லவ ராயன்கட்டு, மாலாவி, பனங்காமம் என்ற தமிழ்ப் பிரதேசங்களே. தான் திருவாங்கூரிற் கற்ற தமிழை இந்த ஊர்களில் அவர் விருத்தி யாக்கியிருக்கலாம். 1706இல் uகேல் மெல்லோ
(ஆடி 2011)
 

சங்கத்தமிழ்
என்ற குரவர் தம் இளவயதிலேயே இறந்தபின்னர், அவர் பணிபுரிய இருந்த மூன்று கோறளை, சப்ரகமுவா, மணியங் கன்ன, ஊவா, குருபோவில, சீதவாக்க, கொஸ்கம என்ற ஊர்களும் கொண்சால் வெஸ்ஸிற்குக் கொடுக்கப்பட்டன. அங்கு பணி புரிவதற்காக அவர் சிங்களத்தையும் கற்க வேண்டியிருந்தது. மிக விரைவாகவே அம்மொழியையும் கற்றார். அவர் மொழி களைக் கற்கும் வேகத்தை அவதானித்த குரு முதல் வரான யோசேப் வாஸ் அடிகளார், அவரைத் தம்மோடு கண்டி நகரிலேயே வைத்துக் கொண்டார். கண்டி நகரிலே அவர் தமது சிங்கள அறிவையும் விருத்தியாக்கினார். பெளத்த சங்கத்தினர் "பண" சொல்லும்போது உயர்ந்த இலக்கண சுத்தமான சிங்களத்தில் மக்களுக்கு உபதேசிப்பர். (பன என்றால் சொல் என்று அர்த்தம். அதாவது புத்தபிரானின் சொற்கள்). அந்த உபதேசத்திற்காகப் பெளத்த பிக்குகள் சிங்களத்தைத் துறைபோகக் கற்றனர். சிங்கள பெளத்த பிக்குகளைப்போல இலக்கண சுத்தமான சிங்கள மொழியிற் பேசவும் எழுதவும் இரண்டு ஆண்டுகளிற் கற்றுக் கொண்டார். பெளத்த பிக்குகளிடமே அவர் சிங்களத்தைக் கற்றார். பின்னர் தென்கரை யோரப் பட்டினமான மாத்தறையிலும் அவர் சிங்களத்தைக் கற்றார். சிங்களத்திற் பாண்டித்தியம் பெற்ற அவர் 1715ஆம் ஆண்டிலே "கிறிஸ்தியானி பள்ளிய' என்ற சிங்கள நூலை எழுதினார். அதன் பின்னர் இரண்டு போர்த்துக்கேய - சிங்கள அகராதி களையும் சேர்த்து இருபது சிங்கள நூல்களை எழுதினார்.
அவர் தமிழில் எழுதிய வியாகுல பிரசங்கம், சுவிசேஷ விரித்துரை என்னும் இரண்டு நூல்களும் இன்னமும் கத்தோலிக்கத் தமிழ் மக்களிடையே பயிலப்படுகின்றன. வியாகுலப்
G50

Page 54
பிரசங்கம் என்ற நூலை 1730ஆம் ஆண்டில் எழுதினார். இது பல பதிப்புக்களாக யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்தது. ஏறத்தாழக் கத்தோலிக்க மக்கள் எல்லாரது வீடுகளிலும் இந்நூல் இருக்கின்றது. இந்நூல் கிறிஸ்துநாதர் தம் திருப்பாடுகளுக்கான நேரம் சமீபத்ததைக் கண்டு பூங்காவனத்திற் செபித்தது தொடக்கம் யூதராற் பிடிக்கப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, முள்முடி தரிக்கப்பட்டு, சிலுவையைச் சுமந்து கபால மலைக்குச் சென்று. அங்கே சிலுவையில் அறைபட்டு மரணித்து, சடலம் அடக்கம் பண்ணப்பட்டது வரையிலான சம்பவங்களை ஒன்பது பிரசங்கங்களாக (ஒன்பது அத்தியாயங்களாக)ச் சொல்லுகின்றது. தபசு காலத்தில் இந்நூல் மக்களால் பாராயணம் பண்ணப்படுகின்றது. மேலம் பாஸ்கு என்ற சிலுவை மரணக் காட்சிகளைப் பொம்மலாட்டப் பாணியில் காட்டும் காட்சிகளின் போதும் இந்நூல் படிக்கப்படுகின்றது. இந்நூலின்
Upg56om Lb பிரசங்கத்தை இப்படி ஆரம்பிக்கின்றார்.
"வானமும் பூமியும் விருகூடி மிருக பகூழி
முதலான சகலத்தையும் Ф -600ї (6 பண்ணினவரான சருவ வல்லப பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய திரித்துவத்தின் இரண்டாம் பேராகிய எங்கள் நாயக யேசுக்கிறிஸ்து பாவிகளாயிருக்கிற எங்களுக்காகத் தமதனந்த செல்வ பாக்கியமுள்ள மோகூடி ராச்சியத்தினின்று, துக்க சமுத்திர மாயிருக்கிற பூமியிலே மனுஷ னாகப் பிறந்து பாடுபட்ட அளவற்ற பாடுகளைப் பிரசங்கமாக இந்தத் தபசு நாளையில் துவக்கம் பண்ணுவதாவது. அதேதெனில் நெறி நீதி பொருந்திய சுகிர்த மகிமையுடைத்தான நரபதியான இராயனுக்குத் தன் குடியானவன் செய்த
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
துரோகத்துக்காக அவனை வதைக்கப் பறையிட்டுக் கொண்டு போகிறதை அந்த இராசன் குமாரன் கணிடு மகா தயாபர கருனை யாயிரங்கி அவனைக் கொல்ல வேண்டாம். நானந்தக் குற்றத்தை உத்தரிப் பேணவனுக்காக நான் கொலை யுண்பே னென்றவன் விலங்குகளைத் தானணிந்து கொலைக்களத்துக்குப் போவானாகில் அந்தக் குமாரன் பேரிலெத்தனை தயாபர பகூடிமாயிரார்களோ? இந்தக் கிருத்தியத்தை மகா கீர்த்தியாய்ச் சகல லோகத்துக்கும் பிரசித்தம் பண்ணிச் செப்புப் பத்திரங்களி லெழுதி நித்தமும் நினைக்க மாட்டார்களோ" நூல் தொடர்கிறது. இரண்டாம் பிரசங்கம், யேசுநாதர் யூதர் கையிலகப்பட்ட குறிப்பிடங் காண்பிக்கப்படுவது என்றும், மூன்றாம் பிரசங்கம் யேசுநாதர் கற்றுாணிலே கட்டுண்டு அடிபட்ட குறிப்பிடங் காண்பிக்கப்படுவது, என்றும் இப்படியாகப் பாடுகளின் பின்னர் அவரது afL6OLD திருச்சிலுவையிலே நின்றிறக்கப்படுவது வரை ஒன்பது பிரசங்கக் குறிப்பிடங்களாக நூல் தொடர்கின்றது. நான்கு நற்செய்திகாரர்களும் தெரிவிக்கும் கிறீஸ்து நாதரின் பாடுகளை வர்னாலங்காரங்களோடு இந்நூல் தெரிவிக்கின்றது.
சுவிசேஷவிரித்துரை என்னும் நூல் ஞாயிற்றுக்கிழமை விசேடதிரு நாட்களிலும் பூசையில் வாசிக்கின்ற நற்செய்திகளை விவரித்துச்சொல்கின்றது. 1965இல் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூடித் தங்கள் பிரகடன த்தை வெளிப்படுத்தும் வரையும் பூசைப்பலி, லத்தீன் மொழி யிலேயே ஒப்புக்கொடுக் கப்பட்டது. பூசையின் போது வாசிக்கப்படும் நற்செய்தியும்கூட லத்தீன் மொழியிலேயே வாசிக்கப்பட்டது. வாசிக்கப்படும் நற்செய்தி யையே அன்றைய பிரசங்கத்தின் பொருளகவும்
G52)

Page 55
y
霹雳 翡 ご /له ستستك saudhugadh
எடுத்துக் கொள்கிறார் குரு. இதனால் அந்த நற்செய்திகளை மக்கள் தெரிந்துகொள் வதற்காகத் தமிழிலே எழுத வேண்டும் என்று கொன்சால் வெஸ் அடிகளார் எண்ணினார். எழுதினார் தமக்கே உரிய பாணியில். உயிர்த்த ஞாயிறன்று வாசிக்கின்ற சிவிசேஷத்தை,
"கருமுகில்களால் மறைக்கப்பட்ட கரியக்கதிர் முகிற்திரையைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது போலவும் பூமியில் புதைத்த வித்து முளையாகி ഥങ്ങ് ഞങ്ങ பீறிக்கொண்டு வெளி வருவது போலவும் எங்கள் நாயக யேசுக் கிறிஸ்து மரணம் என்ற கருமேகத்தை யும் கல்லறை என்ற மண்ணையும் கிழித்துக் கொண்டு ஒட்டோலகமாய் உயிர்த்தெழுந்த மகிமை இன்று கொண்டாடப்படுவது. இதைச் சுவிசேஷ கர்லுக்கா எழுதியுள்ள பிரகாரமாவது." என்று தொபங்குகிறார்.
பெரிய வியாழனன்று பூசையில் வாசிக்கும் நற்செய்தியை
"சதுரிகை தபசு காலத்தின் மகோற்சவ வியாழக்கிழமையில் வாசிக்கிற சுவி Gof62Lb........ என்று தொடங்குகிறார். ஆனால் தற்போது பூசைகள் அந்தந்தப் பிரதேசத்துத் தாய்மொழியிலே சொல்லப்பட்டு நற்செய்திகளும் தாய்மொழியிலேயே படிக்கப் படுவதனால் சுவிசேஷ விரித்துரை கோயில்களில் வாசிக்கப்படுவதில்லை. சுவிசேஷ விரித்துரை 1728ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.
இவ்விரு நூல்களோடு கிறீஸ்தியானி ஆலயம், தேவ அருள் வேத புராணம், புனிதர்கள் சிலரின் சரித்திரத்தைக் கூறும் தர்ம உத்தியானம் (1728) தேவ அற்புதங்கள்
(gિ 2011)
 

சங்கத்தமிழ்
சிலவற்றைக் கூறும் ‘அற்புத வரலாறு (734) ஞான உணர்ச்சி (734) சுகிர்த தர்ப்பணம் (1736) வட்டியானும் குடியானவனும் (1732) (சீர்திருத்த சபையின் போக்குகளைக் கண்டிக்கும் சம்பாசனை) (அதே பாணியில்) நவதர்க்கம் (1732) முசல்மான் வேதம் (734) (இந்து மதக் கோட்பாடுகளைக் கண்டித்த) கடவுள் நிர்ணயம் (172O) (இந்து, பெளத்தம், இஸ்லாம், கல்வீனிய மதம் ஆகியவற்றைக் கண்டித்த) நாலு வேதம் (1738) என்னும் நூல்களையும் கொன்சால் வெஸ் அடிகளார் எழுதியுள்ளார்.
அவர் தன்னோடு எப்போதும் இரண்டு எழுத்தாளர்களையாவது வைத்திருப்பாராம். சாப்பிடும்போது கூட அவர்களிடம் தான் சொல்வதை எழுதும்படி கேட்பார். அப்படி இருந்திருக்காவிட்டால் தன் சமயப் பணியையும் செய்து கொண்டு, அப்பணியைச் செய்வதற்காக நீண்டதூரம் கால்நடையாக நடக்க வேண்டிய நிலையில் இருந்தவரால் இத்தனை நூல்களை யும் எழுதியிருக்க முடியாது. தன் நூல்களுக்குப் பெரும் பணம் செலவு செய்து முன்னூறுக்குக் குறையாத பிரதிகளும் எடுத்துக் கொண்டார். பெளத்த சிங்கள மக்கள் அன்னாரது மொழி நடைக்காகவே அவரது நூல்களைப் படித்தார்கள். இப்போதுங்கூடச் சிங்கள மக்கள் அவரை நன்றி யறிதலோடு நினைக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஏறத்தாழ அவரை மறந்தே விட்டார்கள். வீரமாமுனிவர்க்குச் சற்று முன்பே தமிழில் வசன நடையைக் கொண்டு வந்த சாங்கோபாங்க அடிகளாரைத் தமது இலக்கியச் சரிதை நூல்களில் எந்தத் தமிழ் அறிஞருமே குறிப்பிடவில்லை என்பது வேதனைக்குரியது. அவர் ஈழத்திலல்லாமல் வீரமாமுனிவரைப் போலத் தமிழ்நாட்டிற் தன் பணியைச் செய்திருப்பாராயின் அவர் அறியப்பட்டிருப்பார் போலும்!
G53)

Page 56
ஈழநாட்டில் சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து தமிழிலும் சிங்களத்திலும் இலக்கியப் பணிபுரிந்த கொன்சால் வெஸ் அடிகளார் தமது 66ஆம் வயதில் 1742ஆம் ஆண்டு ஜூலை 17இல் மரணமானார். இலங்கையின் மேற்குக் கரையில் நீர் கொழும்புக்கு அண்மையில் உள்ள போள வத்த மரியநாயகி ஆலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அன்னாரது தமிழ் ஆக்கங்களைத் தேடி ஆராய்ச்சிக்குட்படுத்துவதற்கு இந்தக் கட்டுரை உதவுமானால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும். இலங்கை நாடு சமீபகாலத்திலிருந்த நிலையில் இந்த ஆராய்ச்சியைச் செய்வது மிகச் சிரமமானதாக இருக்கிறது. ஆனால் காலம் இப்படியே இராது. அது மாறத்தான் செய்யும். அப்போது கொன்சால் வெஸ் அடிகளாரின் தமிழ்த் தொண்டு பற்றிய Jé00TLDIT60T ஆய்வை blji)6On Lib. இப்போதைக்கு இலங்கைத் தமிழ் வசன நடையின் மூலவர் அவர்தான் என்பது அறியப்பட்டால் அதுவே போதும்.
ஆதார நூல்கள்:
o1. Life of Jacome Consalves, by Rev. Fr. S.B. Perera, S.J.
O2. The Cotholic Church in Sri
Lanka, Vol.I,II&III, by Rev. Fr. V. Perniola, S.J.
o3. History of Ceylon for Schools,
Dutch Period, by Rev. Fr. S.G. Perera. S.J.
(ஆடி 2010
ஆடி 2011

O4.
Օ5.
O6.
O7.
O8.
O9.
1O.
1.
12.
13.
சங்கத்தமிழ்
யோசேப் வாஸ் அடிகளார் வரலாறு, கபிரியேல் பச்சேக்கு அடிகள் யோசேப் வாஸ் சரித்திரம், வண. ம. பாவிலுப்பிள்ளை, அ.ம.தி வியாகுல பிரசங்கம், யாழ்ப்பான மேற்றிராசன வெளியீடு. சுவிசேஷ விரித்துரை, யாழ்ப்பான மேற்றிராசன வெளியீடு இலங்கை சரித்திரம், யாழ்ப்பாணம் கத்தோலிக்க அச்சகம். வீரமாமுனிவர், தனியான யூத அடிகளார். ஆங்கிலத்திலும் தமிழிலுமான பல இலங்கைச் சரித்திர நூல்கள். தேம்பாவணி, அணிந்துரை, திரு. up. elGgräélu a’ITLól, M.A., Ph.D. தேம்பாவணி முன்னுரை, வீரமா முனிவர் வரலாறு, வித்வான் ரா.லோ. ஆரோக்கியம்பிள்ளை. கிறிஸ்தவத் தமிழ்த்தொண்டர், ரா.பி. சேதுப்பிள்ளை.
(ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்பெறும் அமரர் வ.அ. இராசரத்தினம் அவர்களால் எழுதப்பெற்ற இக்கட்டுரை எங்கும் பிரசுரமானதாக அறியவர வில்லை. இதன் கையெழுத்துப் புகைப்படப் பிரதியைத் தந்துதவிய பேராசிரியர் செ. யோகராசா அவர்களுக்கு நன்றி)
&一節
G54)

Page 57
கொழும்புத் த தலைவர்களும் அ
36T6
முதலியார் க.சு.பொன்னம்பலம் முதலி திரு.அ.சபாரத்தினம் திரு.க.அருணந்தி திரு.வே.அ.கந்தையா திரு.க.மதியாபரணம் பண்டிதர்.க.பொ.இரத்தினம் திரு.கோ.ஆழ்வாப்பிள்ளை திரு.மு.வைரவப்பிள்ளை
b.5.<6|TLDL6Olb திரு.கு.பாலசிங்கம் திரு.எச்.டபிள்யூதம்பையா கியூசி திரு.மு.வைரவப்பிள்ளை கலாநிதி க.செ.நடராசா திரு.பொ.சங்கரப்பிள்ளை திரு.து.தர்மராசா திரு.நா.மாணிக்க இடைக்காடர் திரு.வ.மு.தியாகராஜா திரு.செ.குணரத்தினம் திரு.இ.சிவகுருநாதன் பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் திரு.சோ.தேவராஜா திரு.இ.சிவகுருநாதன் திரு.கந்தையா நீலகண்டன் திரு.பெ.விஜயரத்தினம் திரு.கு.சோமசுந்தரம் திரு.இரா.சுந்தரலிங்கம் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் GuJITëjtuj.&UT 6guJITEFIT பேராசிரியர்.சோ.சந்திரசேகரம் திரு.மு.கதிர்காமநாதன்
(ஆடி 2011)

மிழ்ச் சங்கம் வர் தம் தலைமைக்
(upLD
JTj'
1942
1943 - 46
1947 - 52
1953 - 54
1955 - 56
1957 - 59
196O - 62
1963 - 65
1966 - 68
1969 - 71
1972 - 74
1975 - 77
1978 - 8O
1981 - 82
1983 - 84
1985 - 86
8B9 سے 1987
1990 - 97
1997 - 1999
சங்கத்தமிழ்
1999 - 20OO
2OO
2OO1 - 20O3
2OO3
2OO3 - 20O5
2OO5 - 20O6
2OO6 - 20O7
2OO7
2OO7 - 2009
2OO9 - 201O
2O 1O - 2O11
-G55)

Page 58
அகவை
தமிழ்ச் சங்கத்தை அ6
3.5.6UT60,T60TLDL6|DLD
முதலியார் 1942
வே.அ.கந்தையா க.மதிய
1953 - 1954 1955
கோ.ஆழ்வாப்பிள்ளை (UP.606) Je
196O - 1962 1963
1975
(ஆடி 2011)
 
 
 

சங்கத்தமிழ்
70 வரை லங்கரித்ததலைவர்கள்
ரத்தினம் க.அருணந்தி - 1946 1947 - 1952
ாபரணம் கலாநிதி - 1956 க.பொ.இரத்தினம்
1957 - 1959
க.அருளம்பலம் 1966 - 1968
வப்பிள்ளை
- 1965
- 1977
G56)

Page 59
அகவை
தமிழ்ச் சங்கத்தை அ
கு.பாலசிங்கம் 1969 - 1971
கலாநிதிஏ 5lb60)Liu 1972 -
பொ.சங்கரப்பிள்ளை து.தர் 1981 - 1982 1983 .
வ.மு.தியாகராசா 1987 - 1989
(ஆடி 2011)
 
 
 
 
 

சங்கத்தமிழ்
70 ഖഞ്ഞു லங்கரித்ததலைவர்கள்
ச்.டபிள்யூ கலாநிதி ா கியூசி க.செ.நடராசா 1974 1978 - 198O
DJITöIT நா.மாணிக்க
- 1984. இடைக்காடர் 1985 - 1986
ரத்தினம் திரு.இ.சிவகுருநாதன்
1997 1997- 1999
2OO1 - 20 O3
-G57)

Page 60
ܪ ܐ
羲
அகவை
தமிழ்ச் சங்கத்தை அல
பேராசிரியர் சோ.தே.
சோ.சந்திரசேகரம் 2O (
1999 - 20 OO
2OO9 - 201O
திரு.பெ.விஜயரத்தினம் திரு.கு.சோ
2OO3 - 20 O5 2OO5 -
திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் பேராசி - 2OO7 afLJIT 632 2OO7 -
(ஆடி 2011)
 
 
 

70 உரை
சங்கத்தமிழ்
2ங்கரித்த தலைவர்கள்
JTegT
Ο1
f
மசுந்தரம்
2OO6
uJIT3FIT
2OO9
கந்தையா நீலகண்டன் 2OO3
திரு.இரா.சுந்தரலிங்கம் 2OO6 - 20 O7
திரு.மு.கதிர்காமநாதன்
2O1O - 2011
G58)

Page 61
பல்துறைக்
தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப் புலமையாளர், தலைசிறந்த விமர்சகர், சமூக வியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப் பண்புகளை உடையோரைக் கல்விமான் என்று வர்ணித்தால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஒரு சொல்லாகும். பொது வாகவே பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெரும்பாலும் தமது துறை சார்ந்த ஒரு சிறு in 66i50pi (a Small facet of a proble m) பற்றிய நுணுகிய ஆய்வொன்றைச் செய்து உயர் பட்டங்கள் பெற்று அத்துறையிலேயே சிறப்பறிஞர்களாக மிளர்வதுண்டு. பல்கலைக் கழகப் பாட நெறிகளின் வரலாற்றில் அறிவுத் தொகுதி யானது முழுப் பொருளாகவும் பருப்பொரு ளாகவும் இருந்து காலப் போக்கில் அவ்வறிவுத் தொகுதி ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சிறப்புப் பாடநெறிகளாகப் பிரிவு படுத்தப்பட்டது. எடுத்துக் காட்டாக இன்றைய பல பல்கலைக்கழகப் பாட நெறிகள் ஒரு காலத்தில் மெய்யியல் துறையின் கூறுகளாக அமைந்து அல்லது மெய்யியல் ஆய்வுப் பொருளாக ஆராயப்பட்டுப் பின்னர் இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் என்றும் அதன்பின்னர் இவ்விருதுறைகளும் இன்று யாமறிந்த பல்வேறு பாடத்துறைகளாகவும் பிரிவுபடுத்தப்பட்டு எதுவித ஒன்றிணைப்பு மின்றிச் சிறப்புத் துறைகளாக வளர்ச்சி பெற்றன.
(ஆடி 2011)

கல்விமான்
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
இப்பாடத் துறைகளில் உயர் தேர்ச்சி பெற்றவர்கள் அத்துறை சார்ந்த சிறப்ப றிஞர்களாக (Specialists) மிளிர்ந்தனர். ஆயினும், இப்பல்வேறு பிரிவுபடுத்தப்பட்ட அறிவுக்கூறுகளாக அமைந்த பாடநெறிகளில் ஆழமும் அகலமும் மிக்க ஆய்வுகள் செய்யப்பட்டபோது பிற்காலத்தில் ஒரு முக்கிய குறைபாடு உணரப்பட்டது. ஒரு சமூக நிலைமையை முறையாகவும் சரியாகவும் விளங்கிக் கொள்ள ஒரு துறை அறிவுமட்டும் பயன்படாது. ஒரு துறை சார்ந்த அறிஞர் சமூக நிலைமையின் பல பரிமாணங் களுக்குள் மட்டும் ஒரு பரிமாணத்தையே உற்று நோக்குகின்றார். அவ்வொரு பரிமானம் மட்டும் ஒரு சமூக நிலைமை பற்றிய முழுமையான அறிவையும் புரிந்துணர்வையும் பெற்றுக் கொள்ளப் போது மானதல்ல என்ற நிலை ஏற்பட்டது. எனவே ஒரு சமூக நிலை பற்றி அறிய வரலாறு, பொருளியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், உளவியல் சார்ந்த பல்துறை அறிவும் தேவை என உணரப் பட்டதும் சமூக ஆய்வுகளின் பன்னெறி airijb2 &lgoglöcup60p (inter-disciplinary approach) தேவைப்பட்டது. பல்கலைக் கழகங்களிலும் இத்தகைய ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட்டு பல்துறை அறிஞர்களின் கூட்டு முயற்சிகள் சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பெரிதும் தேவையாயின. இத்தகைய ஒரு நிலை இயற்கை விஞ்ஞானத்துறைக்கும் ஏற்பட்டது.
G59)

Page 62
அரசியற் பொருளாதாரம், மானிடப் புவியியல், பொருளாதார புவியியல், சமூக வரலாறு, சமூக வியலும் இலக்கியமும், கல்வி முறைகளும் வரலாறும், அரசியலும் கல்வியும், கல்வியின் தத்துவ சமூக, உளவியல் அடிப்படைகள் போன்ற பாடத்துறைகளும் ஆய்வுநெறிகளும் இத்தகைய பன்னெறிசார்ந்த பாடநெறிகளின் வளர்ச்சியைக் குறித்தன.
இத்தகைய அறிவுத் துறையின் புதிய பன்னெறி சார்ந்த செல்நெறிகளின் பின்புலத்திலிருந்தே பேராசிரியரை ஒரு உயர்ந்த கல்விமானாக இனங்கான முடிகின்றது. ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்ற முறையில் மரபுரீதியாக அவர் பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்கள், நவீன இலக்கிய வகைகள் - அவற்றின் வரலாறு, பண்புகள், மொழி நடை, இலக்கிய சிறப்புகள் என்பவற்றை ஆராய்பவராக இருந்தால் போதுமானது. ஆனால் பேராசிரியர் அவர்கள் தமிழ், அம்மொழி சார்ந்த இலக்கியங்களுடன் மட்டும் நில்லாது அவற்றை உலகளாவிய இலக்கியங் களுடனும் இலக்கியச் சிந்தனையின் உலகளாவிய செல்நெறிகளுடன் இணைத்து ஆராயமுற்பட்டார். அவருக்கிருந்த ஆங்கில், மற்றும் வடமொழி இலக்கியப் பரீட்சயமும் அறிவும் இவ்வகையான ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கைகொடுத்தன. இவ்வாறான ஆய்வு நோக்கும் பேராசிரியரின் பன்னெறி சார்ந்த புலமை நோக்குக்கு ஓர்
o 5mgooOTLDT&b.
இலக்கியங்களைப் பலவாறு ஆய்வு செய்யலாம். இலக்கிய வரலாற்றைக் கால அடிப்படையில் வரையறுத்தல், ஒவ்வொரு
)2011 Qاہی)
 

சங்கத்தமிழ்
காலத்திற்குரிய இலக்கியங்களில் காணப்படும் பண்புகளை இனங்காணுதல், இலக்கியங்களின் சிறப்புகளை நோக்குதல் என்ற முறையில் இலக்கியங்கள் பற்றிய மரபுவழி அணுகுமுறைகள் அமைந்தன. இத்தகைய ஆய்வுகளில் முக்கியத்துவம் பெற்றவை கைக்குக் கிடைத்த இலக்கி யங் களே. அவற்றின் உள்ளடக்கமே இவ்வாய் வுகளுக்கு அடிப்படை ஆதாரங்களாக அமைந்தன. தமிழ் இலக்கியங்களைப் பொருளறிந்து ஆழ்ந்து நோக்கும் எந்தத் தனித் தமிழ் அறிஞரும் இதனைச் செய்யக் கூடியதாக இருந்தது.
ஆனால் பேராசிரியர் அவர்கள் இம்மரபு வழிப் போக்கில் செல்லாது, இலக்கியங்கள் எழுந்த காலங்களில் காணப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலாசார சூழ் நிலை அல்லது தளங்கள் எவ்வாறு இலக்கியங்களின் எழுச்சி, அவற்றின் உள்ளடக்கம், பாத்திர வார்ப்பு என்பவற்றடன் இலக்கிய கர்த்தாவின் இலக்கியக் கோட்பாடு என்பவற்றைப் பாதிக்கின்றன என்ற முறையில் ஒரு புதிய தளத்திலிருந்து இலக்கிய எழுச்சியை விளக்கவும் வியாக்கியானஞ் செய்யவும் முற்பட்டார். நவீன இலக்கியங்களைப் பொறுத்த வரையில் பொருளாதார அடியமைப்பும் உற்பத்தி உறவுகளும் எவ்வாறு அவற்றின் உள்ளடக்கங்களையும் இலக்கியக் கோட்பாடுகளையும் பாதிக்கின்றன; நிர்ணயிக்கின்றன என்பதைப் பேராசிரியர் எடுத்துக்காட்ட முனைந்தார். இதற்கு அவருடைய சமூகவியல், பொருளியல், அரசியல் துறைசார்ந்த ஞானமும் அறிவார்வமும் நன்கு பயன்பட்டது.
G60)

Page 63
இத்தகைய முறையிலான அணுகுமுறை காத்திரமான இலக்கியங்களையும் சமூக மேம்பாடு நோக்கிய எழுத்துக்களையும் இனங்கான உதவியது. சமூக மாற்றம், சமூகப் பயன்பாடு என்ப வற்றை நோக்கி எழுத்துலகில் வலம் வந்தோருக்கு பேராசிரியர் அணுகுமுறை இலக்கிய நோக்கில் floo தெளிவுகளையும் ஏற்படுத்தியது.
தமிழ்த்துறை சார்ந்த சிறப்பறிஞராக விளங்கிய பேராசிரியர் அவர்கள் தமிழ் இலக்கிய ஆய்விலும் விமரிசனத்திலும் இவ்வாறான பன்னெறி ஆய்வு முறையைப் பயன்படுத்திய அதேவேளையில் பொருளியல் சமூகவியல், மானிடவியல், கல்வியியல் முதலிய பிற துறைகளிலும் தேர்ச்சி பெற்ற கல்விமானாக விளங்கினார். யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் என்ற தலைப்பில் ஆரம்பித்து அவர் எழுதிய ஏராள மான கட்டுரைகள், மலையகக் கலாசாரம், நாட்டாரியல் பற்றிய நூலொன்றின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியமை, இலங்கையில் இனப்பிரச்சினை பற்றிய பேராசிரியரின் எழுத்துக்கள் என்பன அவரைப் பல்துறையும் கற்றறிந்த கல்விமானாக இனங்கான எமக்கு உதவுவன. எத்தனை போற்றுதலுக்குரிய பெரியாராக இருந்த போதிலும் அவர்க ளுடைய சமூக நேயஞ்சாராத எதிர் மறைக் கருத்துக்களை வரலாற்று ஆவணங் களிலிருந்து அகழ்ந்தெடுத்துக் காய்தல், உவத்தல் இன்றி விமரிசிக்கும் போக்கு, அத்தகைய விமர்சனங்களல் ஏற்படக் கூடிய கண்டனங்களை உறுதியுடன் எதிர்நோக்கும் துணிவு என்பவை பேராசிரியரிடம் யாம்
િિg 2011)
 

சங்கத்தமிழ்
கண்டு கொண்டவை. இவையாவும் கல்விமானுக்குரிய பண்புகளாகவே கண்டு தெளிய வேண்டும்.
இலங்கைக்குள் மட்டும் ஆய்வுப் பணிகளை நடத்தாது தமிழகத்தில் இவரு டைய ஆய்வு அணுகுமுறைகளுக்குப் பெரும் வரவேற்பிருந்ததனால் சென்னையில் உள்ள உலகத்தமிழாராய்ச்சிநிறுவனத்தின் வருகைதரு அறிஞராகவும் பணியாற்றுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார். பேராசிரியரின் வழிகாட்டலில் அந்நிறுவனம் இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இடம் பெற்று வந்த இலக்கிய வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வரங்கை நடாத்தியது. இலங்கையில் தமிழரின் கல்வி நிலை பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை நான் எழுதி அக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப் பேராசிரியரின் பரிந்துரை முக்கிய காரணமாக அமைந்திருந்தது. அவ்வாறே பல இலங்கை அறிஞர்கள் (பேராசிரியர்கள் சண்முகதாஸ்,மெளன குரு,சித்திரலேகா, சிவலிங்கராஜா, யோகராசா) அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள முடிந்தது. அக்கருத்தரங்கின்போது தமிழக அறிஞர்கள் பேராசிரியர் அவர்க 6560 Lu புலமைக்கு வழங்கிய கெளரவத்தை நேரில் கண்டு பெருமை கொள்ள முடிந்தது. பேராசிரியரின் பரிந்து ரையால் ஏராளமான தமிழகத்து அறிஞர்களின் அறிமுகம் எமக்குக் கிடை த்தது. அவர்களுடனான கலந்துரை யாடல் களும் பயனுடையவனாய் அமைந்தன.
மற்றொரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் அவர்களைக் கல்விமானாகக் காண முடிந்தது. 1999நவம்பர் மாதம் புதுடில்லியில் டில்லிப் பல்கலைக்கழகம் நடாத்திய
-G61)

Page 64
haddad
ndhuwA
‘தென்னாசியாவில் கல்வி என்னும் கருத்தரங்கில் சிறப்புரையாற்றப் பேராசிரியர் விசேட அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். இக்கருத்தரங்கின் நிறைவு அமர்வு களின் போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமாருத்திய சென், இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த திபெத்திய தலைவர் தலாய் லாமா அவர்களின் பேருரைகளும் இடம்பெற்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், நேபாளம், மியான்மார், இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு நிறை அமர்வின் போது பேராசிரியர் அவர்கள் தென்னாசியாவில் காலனித்துவ ஆட்சிக் காலக் கல்விமுறை ஏற்படுத்திய தாக்கம், அதிலிருந்து விடுபட்டுத் தேசியக் கல்வி முறையொன்றை அமைப்பதில் தென்னாசிய நாடுகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி ஆற்றிய பேருரை அனைவரது பாராட்டையும் பெற்றது. கல்வி முறைகள், கல்வி வளர்ச்சி, அதில் காணப்படும் முரண்பாடுகள், பிரச்சினைகள் பற்றிய பேராசிரியரின் பேச்சு அவருடைய பல்துறை அறிவுக்குச் சான்று பகன்றது.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஜேர்மன் நாட்டில் இருவாரகாலமாக நடந்த ஒரு செயலமர்வுக்கு தலைமை தாங்கிய
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
பேராசிரியர் கடும் முயற்சியை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயிலும் தமிழ்ப் பிள்ளை களுக்கான பாடசாலைத் தமிழ்ப் பாடநூல்களைத் தயாரித்தார். ஏராளமான உதவியாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து பிரச்சினைகள் எழுந்த போதெல்லாம் தீர்த்து வைத்து இறுதியில் முதல் நான்கு வகுப்புக்களுக்குரிய பாடநூல்களைத் தயாரிப்புச் செயற்றிட்டத் துக்குக் கல்வி ஆலோசகராக அவர் என்னையும் பரிந்துரைத்து அழைத்துச் சென்றமையால் அவருடைய முயற்சியை யும் உழைப்பையும் நேரில் கண்டறிய முடிந்தது. இப்பணிக்கு உதவ வந்திருந்த சிங்கப்பூர், தமிழக அறிஞர்கள் பேராசிரியர வர்களின் தமிழ் மொழி அறிவையும், பல்துறை சார்ந்த மேதா விலாசத்தையும் பெரிதும் பாராட்டியதை நன்கு அவதானிக்க முடிந்தது.
இத்தகைய ஆற்றலும் செயற்றிறனும் தமிழ்ப் புலமையும் பல்துறை அறிவும் கொண்டபேராசிரியர் அவர்கள் எழுதி முடித்த ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் ஏராளம். அவருக்குத் தமிழக அரசு திரு.வி.க விருதை வழங்கிப்பாராட்டியமை வியப்பிற்குரியதல்ல; அவருக்குரியது அவரை வந்தடைந்தது குறித்து நாம் ஈழத்தவர் பெருமை கொள்ள
8ഖങ്ങb. 米
நன்றி: கரவையூற்று)
G62)

Page 65
O சங்கத்தமிழ்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ( செழும்புனலாய் நடைபயின் எழும் போதிசைக்கின்ற சா தொழும்படியாச் செய்திடுே போல்
வீசுகின்ற காற்றலைகள் வெ பேசுகின்ற தமிழலைகள் ெ நேசமுடன் கேட்டிட்ட நெஞ்சு வாசமிகு தாமரையாய் மன
பாவையடி நானுனக்கு பாடு நாவெடுக்க வைத்தவளேந பாவெடுக்க வைத்தவள்நீப பூவெடுத்து சரம்தொடுக்க ே
O O திருக்குறள் மர
தமிழாலே குறள்செய்ததன் அமிழ்தான மொழிதனுக்க எமதான தமிழனங்கை எ எமதாவி உடல்தந்து எந்நா
தேனான தமிழெடுத்து திரு மேனாட்டு அறிஞர்களும் ெ மாநாடு நாமெடுத்து மகிழ்கி மாநாட்டு மலர்கோத்து கட்(
வித்தாரக் குறள்செய்த முத்த புத்தேழு உலகமுமே புகழ்ெ சத்தான கருத்தாலே சன்மா முத்தாரம் கட்டியுனை முப்ே
முப்பாலும் உரைத்திட்ட மு 6úUT6oITuiu o 6o60TüUTL GT அப்பாலுக் கப்பாலாய் அணு தப்பாமல் நானுன்னைத்த
(ஆடி 2011

கொட்டும் தமிழ்மழை ாறு திக்கெட்டும் சென்றதுயின் வ்கத் தமிழ் நாதம் மே யாழிசையின் இனிமை
பள்ளவத்தை தனிலிருந்து பரும்பயணம் செய்துயர்ந்து Fங்கள் சென்றுநிதம் ாம்வீசும் சங்கமிது
பொருள் நீயெனக்கு ற்றமிழே நாயகியே ாரதியாய் நானுனக்கு பாதவில்லை சொல்லெனக்கு
நாடு சிறந்திடுக
ങ്ങിന്റെ ബഖങ്ങഖങ്ങ னிசெய்த தலைவனவன் ல்லோரும் ஏற்றிடவே ளும் காத்திடுவோம்
க்குறளைச் சமைத்தவன்நீ மச்சுகின்றார் மிகவாக ன்ற இவ்வேளை நிகின்றோம் உன்மார்பில்
தான கவிஞனவன் பற்ற பெரும்புலவன் ார்க்கம் கண்டிட்டான் போதும் ஏற்றிடுவோம்
ழமைக் கவிஞன்நீ ன்றெனக்குத் தெரியவில்லை |வைத் துளைத்தவனே மிழாலே பாடிடுவேன்.
ப.க.மகாதேவா

Page 66
ஆதிவமாழி
காதில் வமாழி
ந.கணேச துணைத் த கொழும்புத் த
ஆதி மனிதன் கண்ட மொழி ஏது மொழி சைகை மொழி மீதி அறிவு வளர வளர கா திணிக்க கனிந்த மொழி ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
சேர சோழ பாண்டிய மன்னர் வீரப் புலவர் வளர்த்த மொழி சாதி மதம் தோன்ற முன்னே நாவுரைத்த முந்தை மொழி ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
வேதம் இதிகாசம் குறள் வெண்பா காப்பியங்கள் பிற நாலும் தமிழ்ச்சங்கம் ஈந்த காலம் முந்திப் பழமை மொழி ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
சிங்களமும் கன்னடமும் தெலுங்கு மலையாளமும் பைந்தமிழின் பக்க வேராய் முளைத்தெழுந்த மொழிகளன்றோ ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி
வீரம் படை வெற்றி வலிமை தானம் தர்மம் தளரா உண்மை மானம் மரபு வழுவா செங்கோல்
(gિ 2011)

தமிழர் வமாழி உலகுக்கினி
லிங்கம் தலைவர்,
மிழ்ச்சங்கம்
யாவும் பண்டைத் தமிழர் பண்பாய் கூறும் சிறப்பு தமிழர்க்கன்றோ மாறும் கருத்து மரபில் உண்டோ? வதை புரிய வகையு முண்டோ?
யோகம் சித்த மருத்துவம் கலைகள் யாவும் சுத்த கருத்துடை வாழ்வும் பாகம் பலவுறு பகர்வான் வாகிச் சைவம் தமிழொடு இசை வனவாகும் பாவம் பண்டைத்தமிழர் பண்பாய் வளரும் தமிழுக்கு முண்டோ? சாகும் சமிக்கை தமிழுக்கு உண்டோ?
ஈழம் இந்தியா மலேசியா தாண்டி ஞாலம் முழுக்க மூலை முடுக்கில் வாழும் தமிழர் காலப் போக்கில் மூழ்கித்தவிக்கும் விந்தை காணிர்! நாலும் காற்று நமது பண்பை நாறும் சேற்றில் வீசலாமோ? பாழும் கிணற்றில் வீசலாமோ? பண்பும் விலகிப் போகலாமோ?
காலம் தந்த கடமை இது வளரும் தமிழின் வாஞ்சை இது பாழும் உலகின் பகையை வென்று நாளும் தமிழின் மகிமை காக்க மீதம் இரத்தம் உள்ள வரை பாடும் படு படையும் எடு காலம் தந்த கடமை இது ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக் கினி தாரும் வழி தமிழுக் கினி

Page 67
கொழும்புத்தமிழ்ச் சங்கத்தி மாவபரும் திருக்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் பத்தாண்டு நீண்ட இடைவெளியின் பின்னர் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் நடாத்திய மூன்று நாள் திருக்குறள் மாநாடு. 22.07.2011 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலிலிருந்து மேள தாள ஊர் வலத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
ஊர்வலத் தொடக்கத்தில் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களின் பல்லிய இசை நிகழ்ச்சி, தொடர்ந்து ஒரு குட்டி யானை மீது திருக்குறள் அரிச்சுவடு, அதன் தொடர்ச்சியாக அலங்காரம் செய்யப்பட்ட இரதத்திலே திருவள்ளு வரின் திருவுருவப்படம், இரு மரங்கிலும் தமிழகத்திலிருந்து சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருந்த சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், முனைவர் சீர்காழி வி.ராமதாஸ், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர், நிதிச் செயலாளர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழ் கூறும் நல்லுலகத்தின் அறிஞர் பெருமக்கள், கலைஞர் கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என நீண்ட வர்ணமயமான ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சி
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதாகவே ஊர்வலம் தமிழ்ச்சங்கத்தை வந்தடைந்தது. ஊர்வலம் வந்துசேரும் முன்னரே தமிழ் ஆர்வலர்களின் கூட்டத்தினால், சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபம் நிறைந்து வழிந்தது.
சரியாக மாலை 5.45 மணிக்கு மங்கல வாத்தியங்கள்,முழங்க வெண்சங்கு, தாமரை, ஏட்டுச் சுவடிதாங்கிய மஞ்சள் நிற அழகிய தமிழ்ச் சங்கக் கொடியை தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்கள் சங்க வளவின் முன்றலில் ஏற்றி வைத்தார். சங்க வாயிலில் அக்கொடி பட்டொளி வீசி பிரகாசித்து காற்றில் அசைந்தாடியது கண்கொள்ளக் காட்சியாகும்!
(e.g 2011)

ல் மூன்று நாள்திருவிழா குறள் மாநாடு!
ஆ. இரகுபதி பாலழறீதரன்
மூன்று நாள் மாநாடு: ஐந்து அரங்குகள்: முறையே பண்டிதர் கா.பொ.இரத்தினம் அரங்கு, தமிழ்த்துாது தனிநாயகம் அடிகள் அரங்கு, முத்தமிழ் முனிவர் விபுலானந்த அடிகள் அரங்கு, பேராசிரியர்எம்.எம்.உவைஸ் அரங்கு, தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம் அரங்கு எனப் பெயரிடப்பட்டு. அலங்கரிக்கப்பட்ட அரங்குகள் - இவரங்குகள் புரட்சிக் கவி பாரதிதாசனின், “தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை!" என்ற வரிகளை மீண்டும் ஞாபகப்படுத்தின!
மூன்று நாட்களும், ஐந்து அரங்குகளிலும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிவுற்றமை மக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.
தினமும் காலை, மாலை நடைபெற்ற மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்து, வரவேற்புரை. தலைமையுரை, தொடக்க வுரை, நன்றியுரை. சங்ககீதம் என்பன கனகச்சிதமாக நடந்தன. அவற்றை விபரித்தால் இக்கட்டுரை மிக நீண்டதொன்றாக அமையுமென்பதால் மூன்று தினங்களுமநடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்புச்சொற் பொழிவுகள், பட்டிமண்டம் போன்ற மனம் கவர்ந்த, கருத்துப்பொதிந்த நிகழ்ச்சிகள் பற்றிச் சற்று ஆராய்வது சாலப் பொருத்தமாகும்.
மாநாட்டுக்குப் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டபடி நாடளாவிய ரீதியில் மாணவர் களுக்கிடையே மேற்பிரிவு, மத்திய பிரிவு, கீழ்ப்பிரிவு, பாலர்பிரிவு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனனப் போட்டி, வினாவிடைப் போட்டி என நான்கு போட்டிகள் நடாத்தப்பட்டு 45 மாணவர்களுக்கான பதக்கங்கள், பணப் பரிசு, சான்றிதழ்கள் என்பன 23.07.2011 சனி மாலையில் வழங்கப்பட்டது.
இப்போட்டியை பிரமாண்டமாக நடாத்தி, வெற்றிகரமாகப் பரிசுகள் வழங்கிய கொடை
G65)

Page 68
ه tendhébriga umalihugurAu
வள்ளல்கள், தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள், கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே!
இனி, மாநாட்டில் தினமும் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல்நாள் மாலை பணடிதர் கா.பொ.இரத்தினம் அரங்கிலே கலாநிதி மு.கதிர்காமநாதன் தலைமையில் மாநாட்டுச் சிறப்பு மலர் "முப்பால்” சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரும் வைத்திய கலாநிதியுமான டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களுடன் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்த இந்நூலின் முதற் பிரதியை சட்டத்தரணி திருமதி ஜெயந்தி விநோதன் பெற்றுக்கொண்டார்.
அண்றைய சிறப்புச் சொற்பொழிவாக "திருக்குளில் இறைநெறி" என்ற தலைப்பிலே சென்னைப் பல்கலைக்கழப் பேராசிரியர் அரங்க ராமலிங்கம் சொற்பொழிவாற்றினார். மண்டம் நிறைந்த அரங்கிலே அன்னார் தமதுரையில் "திருக்குள் ஒரு பொதுமறை நூல்" என்று வற்புறுத்தியதும்" உலகில் பரந்து வாழும் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அரிய பொக்கிசம் என்றும் எம்மதமும் சாராமல் படைக்கப்பட்ட உயர்ந்த இலக்கியக் காவியம் என்றும் வாயாரப் புகழ்ந்தார்.
அன்றைய இறுதி நிகழ்ச்சியாக காலகரி முநீமதி வாசுகி ஜெகதீஸ்ரனின் நாட்டிய கலாமந்திர் மாணவியரின் "திருக்குறட் பரதம்” என்ற பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மனநிறைவான இம்மங்கள நிகழ்ச்சியுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் சரியாக இரவு 8.OOமணிக்கு இனிதே முடிவுற்றன.
இரண்டாம் நாள் கலை நிகழ்வு தமிழ்தூது தனிநாயகம் அடிகள் அரங்கிலே 23.07.2011 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டத் தரணி கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெற்றது.
அன்று திருக்குறள் பேச்சுப் போட்டியில் பாலர் பிரிவில் முதற் பரிசு பெற்ற சின்னஞ் சிறுசிறுமி செல்வி ராஜமாணிக்கம் தனுஷாவின் பேச்சு இடம்பெற்று அனைவரது அமோக பாராட்டுதல் களையும் பெற்றது.
(ஆடி 2011)
 
 

சங்கத்தமிழ்
சிறப்புச் சொற்பொழிவாக தமிழ்நாடு முனைவர் வி.ராமதாஸ் "வள்ளுவர் காட்டும் வாழ்வியல்" என்ற தலைப்பிலே சொற்பெருக்காற்றினார். "ஏழு சொற்களிலே, இரண்டு அடிகளிலே உள்ள ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு மனிதனுக்கும் எக்கால கட்டத்திலும் வழிகாட்டும்” என்று கூறிப் பல உதாரணங்களுடன் சிறந்த சொற்பொழி வாற்றினார்.
தொடர்ந்து காலை நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சியான "பன்முக நோக்கில் திருக்குறள்” என்ற தலைப்பில் பேராசிரியர் சிதில்லைநாதன் தலைமையில் ஆய்வரங்கு நடைபெற்றது.
“கல்வியியல் நோக்கு" என்ற தலைப்பில் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு.சி.ரி.இரா ஜேந்திரா, “அரசியல் நோக்கு" என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி துரை மனோகரன், “ஒப்பியல் நோக்கு” என்னும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செ.யோகராசா, “பெண்ணிய நோக்கு” என்னும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதிவ.மகேஸ்வரன், ஆகியோருக்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள். கருத்தாழம் மிக்க ஆய்வுக்கட்டுரைகள் அவையோரின் பாராட்டைப் பெற்றது. பார்வையாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்ற அன்று மாலைநிகழ்ச்சியில் ஏறத்தாள ஒரு மணி நேரம் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டிகளிலே பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பதக்கங்கள், பணப்பரிசு, சான்றிதழ்கள் போன்றன அவற்றை நல்கிய கொடை வள்ளல்களாலேயே வழங்கப் பட்டன. பெற்றோர், ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்கள் என அனைவரும் பெரு மகிழ்ச்சியுறும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. அதே சமயம் திருக்குறள் பேச்சுப் போட்டியில் மத்திய பிரிவில் முதற் பரிசு பெற்ற செல்விசாமந்தி நகுலகுமாரின் உரையும் நிகழ்ந்தது.
அடுத்து பேராசிரியர் அரங்க ராமலிங்கம் "திருக்குளில் சித்தர் நெறி" என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
-G66)

Page 69
؟*A2 ܨ
༣༽
budówił muruhwpMis
இறுதி நிகழ்ச்சியாக கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகளின் “செம்மொழி நடனம்" கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நடன அமைப்பைப் புரிந்த திருமதி கீதாஞ்சலி சுதர்சன் பார்வையாளர் அனைவரதும் பாராட்டைப் பெற்றார்.
இறுதிநாள், ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிகள் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.
அன்றைய தினம் நிறைய நேரம் "வழிவழி வள்ளுவர்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கு ஒதுக்கப்பட்டிருந்தபோதும் மாணவச் செல்வங்களினது தனித்துவத்தையும் சிறப்பையும் காட்டும் முகமாக திருக்குறள் கீழ்ப்பிரிவு பேச்சுப் போட்டியிலே முதற்பரிசு பெற்ற கிளிநொச்சி /திருவையாறு மகாவித்தியாலய மாணவி செல்வி அபிராமி நகுலகுமாரின் பேச்சு இடம்பெற்றது.
“வழி வழி வள்ளுவர்” என்ற ஆய்வரங்கு பேராசிரியர் அ.சண்முதாஸ் தலைமை தாங்கினார்.
"வள்ளுவத்தில் எண்” என்ற தலைப்பில் கலாநிதி மனோன்மணி சண்முதாஸ், "திருக்குறள் பனுவலும் அதன் வாசிப்பும்" நவீனகோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் உசாவல் என்னும் தலைப்பில் பேராசிரியர் சி.மெளனகுரு, "திருக்குறளைக் கையாளல்” 20ஆம் நூற்றாண்டு அரசியற் சூழலை முன்நிறுத்தி. என்னும் தலைப்பில் பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, "அகத்தினை மரபில் காமத்துப்பால்” என்ற தலைப்பில் கலாநிதி முரீ பிரசாந்தன், "பாயிர மரபில் திருக்குறட் பாயிரம்" என்ற தலைப்பில் திரு.க.இரகுபரன் ஆகியோரின் மிகவும் பெறுமதிமிக்க, காத்திரமான, சிந்தையைத் துTண்டும் ஆய்வரங்குக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். மதியபோசனத் துடன் பகல்நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுற்றன.
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
ஞாயிறு மாலை சங்கத்தலைவர் மு.கதிர்காம நாதனின் நிகழ்ச்சிகளின் இறுதி நிகழ்ச்சி: கம்பவாரிதி இ.ஜெயராஜ் நடுவராகக் கடமை யாற்றிய பட்டிமண்டபம்’ நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ கூட்டம் அலை மோதியது. சங்கரப்பிள்ளை மண்டபம் நிறைந்து வழிந்து வெளிமுற்றங்களிலும் நாற்காலிகள் அடுக்கப் பட்டன. போதாதற்கு வெளியே பெரிய தொலைக் காட்சித் திரையும் அமைக்கப்பட்டது.
அன்றுமாலை பேச்சுப் போட்டி மேற் பிரிவில் முதற்பரிசு பெற்ற செல்வன் அஜன் பாலகுமாரின் கம்பீரமான பேச்சு இடம்பெற்றது. அவர் அகில இலங்கைத் தமிழ்த்தினப் பேச்சுப் போட்டியிலும் முதற்பரிசு பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் பேராசிரியர் அரங்க ராமலிங்கம் அவர்களின் சிறப்புச் சொற் பொழிவு "திருக்குறள் - சில புதிய பார்வைகள்” என்ற தலைப்பிலே இடம்பெற்றது.
இறுதியாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் "வள்ளுவர் பெரிதும் வலியுறுத் துவது. "இல்லறச் சிறப்பையே!” என முரீபிரசாந்தனும், "துறவற மாண்பையே” என ச.லலீசனும், "ஊழின் வலிமையே!” என கு.பாலசண்முகனும் சுவாரசியமாக வாதிட்டார்கள்.
நடுவர் கம்பவாரிதி 8.682ugre! கலகலப்பிற்கும், கைதட்டலுக்கும் கேட்க G36600TGLDIT?
இறுதியில் கம்பவாரிதி வள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது "இல்லறச் சிறப்பையே! எனப் பலத்த ஆரவாரத்திற் கிடையே தீர்ப்பளித்தார்.
சங்ககீதத்துடன் மூன்று நாள் நிகழ்ச்சிகளும் இனிதே முடிவடைந்தன. மூன்று நாட்களும் திருவள்ளுவருக்கருகாமையில் இருந்ததோர் நிறைவான எண்ணம் பார்வையாளருக்கு ஏற்பட்டி ருத்தால் அது விந்தையல்ல! *

Page 70
கொழும்புத்தமி 2010ம் - 2011ம் ஆண்டு வச
கடந்த ஒரு வருட காலமாக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வழமையாக புதன் கிழமை தோறும் நடைபெறும் 'அறிவோர் ஒன்று கூடல்’ நிகழ்ச்சி, பிரதி வெள்ளி தோறும் நிகழும் 'இலக்கியக்களம் மாதந் தோறும் பெளர்ணமி தினங்களில் தனித் துவம் மிக்க அற்றைத்திங்கள் நிகழ்ச்சி, பிரதி சனிக்கிழமை காலை வேளைகளிலே சிறுவர்க்கான சிறுவர் கதைநேரம் மாதம் தோறும் இலவச மருத்துவப்பரிசோதனை, மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலே பிரசித்தி பெற்ற வைத்தியகலாநிதிகளால் நடாத்தப்படும் ஆலோசனைகள், இசை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் என அனைத்தும் ஒழுங்காக கனகச்சிதமாக நடைபெற்றன.
மேலும் தலைவர் திரு.மு.கதிர்காம நாதன் தலைமையில் 15.01.2011 அன்று நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் கவிஞர் அக்கரைசக்தி பொங்கல் கவிதை, திரு.க.இரகுபரன் சிறப்புச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாலர் நடனம், கவிஞர் சடாகோபனின் தலைமையில் ஏழு கவிஞர் களின் கவியரங்கம் என்பன சிறப்பாக நடைபெற்றன.
அதே போல் O5.11.2010 வெள்ளிக் கிழமை அன்று பரிசில் நிதியச் செயலாளர் ஆ.குகளுழர்த்தி அவர்கள் தலைமையில் தீபத்திருநாள் நிகழ்ச்சிகள் கொண்டா டப்பட்டன. வெள்ளவத்தை இராமகிருஷ்ண பாடசாலை மாணவர்கள் வழங்கிய "இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை” என்ற நாடகமும் சட்டத்தரணிந.காண்டீபன் தலைமையில் தேசமெல்லாம் தீப ஒளி துலங்கும்ாமோ?” என்ற தலைப்பிலே கவியரங்கமும் சிறப்பாக நடைபெற்றன.
(gિ 2011)

ழ்ச் சங்கத்தின் பற்பாடுகள் ஒரு மீள்பார்வை
பொதுச் செயலாளர்,
கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
29.01.2011 சனிக்கிழமை அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விக்குழு பாடசாலை மாணவர்களுக்கிடையே விவாத விழா ஒன்றை வெற்றிகரமாக நடத்தியது. இந்தப் போட்டியில் ஒன்பது பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
09.03.2011 அன்று சர்வதேச மகளிர் தினம் செல்வி. சற்சொரூபவதி நாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதி யாக முன்னாள் கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி இராஜமனேகரி புலேந்திரனும், சிறப்பு அதிதியாக கண் வைத்திய நிபுணர் (திருமதி மரீனா தஹாறெபாய் அவர்களும் கலந்து கொண்டார்கள். கலாநிதி செல்வி திருச்சந்திரன், திருமதிபத்மா சோமகாந்தன் பங்கு பற்றிய சர்வதேச மகளிர் தொணிப் பொருள் விளக்கம்’ என்ற நிகழ்ச்சியும் "ஐம்பதுக்கு ஐம்பது” என்ற வில்லுப்பாட்டு திருமதி ரஜனி சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச்சங்கம் தனது புறக்கட்டமைப்பின் வளர்ச்சிகளில் கவனம் செலுத்தியது. முதற்கட்டமாக தலைவர் மு.கதிர்காமநாதனின் கண்களிலே தென்பட்டது. சங்கரப்பிள்ளை மண்டபத்தின் ஒரத்திலே அமைந்திருந்த செயற்கை நீர் வீழ்ச்சியும், மீன் தடாகமும்தான். அந்த மீன் தொட்டியிலே ஒடித்திரியும் மீன்களைப் பார்க்க விரும்பும் சின்னஞ்சிறார்கள் ஏன் பெரியவர்கள் கூட தொட்டிக்குள் தடுக்கி விழப்பார்த்ததை அவதானித்தார். உடனே ஆட்சிக்குழுவின் அமைதியுடன் மீன் தடாகத்தைச் சுற்றி எவர்சில்வர் கம்பிகளால் வேலி அடைக்கப்பட்டது. தற்போது அத்தடாகம் அனைவரது மனத்தையும் கவரும் அமைப்புடன் திகழ்கிறது.
G68)

Page 71
இலங்கை அரசு பிரதி அக்டோபர் மாதத்தையும் வாசிப்பு மாதமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. அனைவரும் அறிந்ததே - அதனையொட்டி அக்டோபர் மாதம் 29ம், 3Oம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் &Jea 7.OO LD600f 660 Frpigs Digib36Odr காட்சியும், விற்பனையும் கொழும்புத் தமிழ்ச்சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த இரண்டுநாள்நிகழ்வில் கொழும்புத் தமிழ்சசங்கம் உட்பட சேமமடு பொத்தக சாலை, குமரன் புத்தகநிலையம், இனிய தென்றல் பதிப்பகம், முரீலங்கா புத்தகசாலை தேசிய கலை இலக்கியப்பேரவை, இந்து கலாசார அமைச்சு போன்ற பதிப்பாளர்களின் அண்மைக்கால வெளியீடுகள் கண்காட்சிக் கும் விற்பனைக்கும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வைக்கப்பட்டிருந்தன.
புத்தக வெளியிட்டாளர்களையும் விற்பனையாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக இரண்டு நாட்களும் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபம் இலவசமாக வழங்கப்பட்டது.
அழகான அறிவியற் புத்தகங்கள், இனிமையான கவிதை நூல்கள், சிறுவர் இலக்கியம், வண்ணமயமான வரலாற்றுப் படைப்புக்கள், பலவிதமான சமயநூல்கள் என இருதினங்களும் சங்கரப்பிள்ளை மண்டபம் கலகலத்தது.
சங்க அங்கத்தவர்களினது மனமார்ந்த வரவேற்பு: வாசகர்களுக்கு அதிக நூல்கள் மலிவு விலையில் கிடைத்த மகிழ்ச்சி, நூல் பதிப்பாளர்களுக்கோ பரவசம்
அடுத்த நிகழச்சி கண்களையும், மனத்தையும் கொள்ளை கொண்ட நடன நிகழ்ச்சி முற்றினும் தங்கள் செலவிலேயே வருகை தந்த 16 அங்கத்தவர் கொண்ட ஐதராபாத் இசை நடன அக்கடமியின் பரத
(ஆடி 2011)

சங்கத்தமிழ்
நாட்டியம், கிராமிய நடனங்கள், குச்சுப்பிடி அடங்கிய மூன்று மணிநேர கலைநிகழ்ச்சி O5.03.2O11860slistiup6OLDLDIT60060560606), திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது.
மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சியாக 18.03.2011, வெள்ளிக்கிழமை அன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினுடைய காலாண்டு சஞ்சிகையான “சங்கத்தமிழ்” தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை யில் வெளியிடப்பட்டது.
இதுவரை காலமும் “ஓலை” என்ற பெயரில் வெளிவந்த சங்கத்தின் காலாண்டு சஞ்சிகை "சங்கத்தமிழ்” என்ற பெயரில் இரட்டைச் சிறப்பிதழாக வெளிவந்தது சிறப்பம்சமாகும்.
2011 கொழும்புத் தமிழ்ச்சங்க நிறுவனர் நாள் விழா 06.05.2011 வெள்ளிக்கிழமை தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலே மனிதநேயமாமணி வி.கயிலாசபிள்ளை, பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கம், சமூகஜோதி ச.இலகுப்பிள்ளை ஆகியோர் சங்க சான்றோர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
எமது சங்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த முன்னாள் பொதுச்செயலாளர் தமிழ்வேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப்பேருரை 17.06.2011 தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. "யாழ்ப்பாணத்தில் பண்டிதர் பரம்பரை" என்ற நினைவுப்பேருரையை G3Lug TaffluuỬ எஸ்.சிவலிங்கராசா நிகழ்த்தினார்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது எழுபதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் புறக்
-G69)

Page 72
鲨 教
翡 40 Eskiesiigát mży,
கட்டமைப்பின் வளர்ச்சிகளில் பூரணத்து வத்தை எய்துமுகமாக மூன்றாம் தளத்தில் ஐந்து அறைகள் கொண்ட “விருந்தினரகம்” ஒன்று அமைக்கப்பட்டு 24.06.2011 அன்று கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமண்டபத்தை தலைவர் திரு.மு.கதிர்காமநாதனும் முறையே "தங்கத்தாத்தா அகத்தை” திரு.சண்முகுக வரதனும், “விபுலானந்தர் அகத்தை" திரு.வ.கயிலாசபிள்ளையும், “கம்பர் அகத்தை” திரு.ச.குகநாதனும், "வள்ளுவர் அகத்தை” திரு.ந.கருனை ஆனந்தனும், "நாவலர் அகத்தை” வைத்தியகலாநிதி மு.கதிர்காமநாதனும் திறந்து வைத்தார்கள். எதிர்காலத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றவரும் அறிஞர்கள், உள்ளூர் வெளியுர் கலைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், வைத்திய சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள், அவர்தம் உதவி யாளர்களுடன் தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்ற தலைவரின் தூரநோக்கோடு ஐந்து கொடைவள்ளல்களின் நிதி உதவி யோடும் அவர்களாலேயே திறந்து வைக்கப் பட்டன அந்த அறைகள்!
ஜூலை 2011இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது. 22, 23, 24ம் திகதியில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு உள்ளூர் அறிஞர்கள், கலைஞர்கள், தமிழகப் பேராசிரியர்கள் கலந்து சிறப்பித்த மாநாடு
ஊடகங்களாலும், மக்களாலும் போற்றப் uÜL- UDTBGB!
மூன்று நாள் மாநாடு, ஐந்து அரங்குகள் முறையே பண்டிதர் கா.பொ.இரத்தினம் அரங்கு, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் அரங்கு, முத்தமிழ் முனிவர் விபுலானந்த அடிகள்அரங்கு, பேராசிரியர்எம்.எம்.உவைஸ் அரங்கு, தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம்
(gિ 2011)
 

சங்கத்தமிழ்
அரங்கு எனப் பெயரிடப்பட்டு, அலங்கரிக் கப்பட்ட அரங்குகள் - இவ்வரங்குகள் புரட்சிக் கவி பாரதிதாசனின், “தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை" என்ற வரிகளை மீண்டும் ஞாபகப்படுத்தின
மூன்று நாட்களும், ஐந்து அரங்குகளிலும் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிவுற்றமை மக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.
தினமும் காலை, மாலை நடைபெற்ற மங்கல விளக்கேற்றல், தமிழ் வாழ்த்து, வரவேற்புரை, தலைமையுரை, தொடக்க வுரை, நன்றியுரை, சங்ககீதம் என்பன கன கச்சிதமாக நடந்தன.
தவிர தமிழகப் பேராசிரியர்கள் அரங்க ராமலிங்கம், வி.ராமதாஸ் ஆகியோரின் சொற்பொழிவுகள், கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையில் பட்டிமண்டம், இரு நாட்கள் காலையிலே ஆய்வரங்குகள், கலைநிகழ்ச்சி கள் என பலப்பல. (விரிவான கட்டுரை இச்சஞ்சிகையின் பிறிதொரு பகுதியில் உள்ளது.)
தமிழ்ச் சங்க வளாக நுழை வாசலில் அலங்கார வளைவு ஒன்று அமைப்பதற்காக O3.07.2011 ஆம் திகதி காலை அத்திபாரக் கல்நாட்டப்பட்டு அதற்கான ஆரம்ப வேலை கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். சங்கரப்பிள்ளை மண்டபத்தின் மேற்குப் புறமாக காணப்படும் வெற்றிடத்திற்கு கூரை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிரைவில் நிறைவு செய்யப்பட்டவுள்ளன.
மொத்தத்தில் இந்த ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சாதனை ஆண்டு என்று கூறினால் அது மிகையகாது. *
Czo)

Page 73
22. O7.2O11 வெள்ளிக்கிழமை оперсо 4. o கோயிலிருந்து மேளதாள ஊர்வலத்துடன் கே நோக்கி ஊர்வலமாக வரும் காட்சி.
மாலை 5.45 மணிக்கு மங்கல வாத்தியங்கள் தாங்கிய மஞ்சள் நிற அழகிய தமிழ்ச்சங்கக் 8ெ சங்க வளவின் முன்றலில் ஏற்றுகிறார்.
2011 gl2جی)
 
 
 

சங்கத்தமிழ்
O மணிக்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ாலாகலமாக கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினை
முழங்க வெண்சங்கு, தாமரை, ஏட்டுச் சுவடி ாடியை தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்கள்
G71)

Page 74
திருக்குறள் மாநாட்டின் கடைசி ந சிறப்பு பட்
 
 

சங்கத்தமிழ்
ாள் கலைநிகழ்ச்சியில் இடம் பெற்ற 12LD60rplb.

Page 75
Jayanithiy Jewe
ஜூவலர்ளில்
3rf24ae
(10ealers in 6tenuine 22e
U6išģšrm (8a
) 22, Foor
NO,22, CHILAW RO Te: O31
 
 
 

85/A, Green's Road, Negombo. Te: 031-2233376
NOLD HOUSE
t, K.d.umz.gold (Jeuvellery
ால்ட் ஹவுஸ்
ruửb 6iÎg5, Faisas60L.
AD, KOCHCHIKADE. 2279696

Page 76