கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.07

Page 1

Aāšā

Page 2
5 வருடத் திருமண சேவை நிறைவினை முன்னிட்டு வேல் அமுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
றுவினர் “சுயதெரிவு முறை Hಹಿತ್ಲಿ துவதேச் சகலருக்குமான 霞 டுத்துநர் தரும்பசிட்டியூர், ங்கள், புதண், வெள்ளி
ாயிறு நண்பகலிலோ தயங்காது
ppointment)
খৃষ্ট 2
الأمين في وية
ޕްޟި "$2"2";-: ޑިގްދީ% ஜாமாமனை வெள்ளவத்தை கா ** நிற்கு எதிராக, நிலப்பக்கம், 33 ஆம் ஒழுங்கை வழி)55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை,கொழும்பு-06.
3***:°श्i:*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை
தோ
ib
ே
01.
2008
ஆடி 2011(தி.வ.ஆண்டு-2042)
ஆசிரியர்: சொங்கதிரோன் Gigsm.Gulf/TP -065-2227876 O77-26O2634 f566OTsi,56) / E.mailsenkathirgopalagmail.com
துணை ஆசிரியர்: EleãUgoeseã esegemo G5ITGoGoGué/TP - 0777492861 L5660T65&6)/E.mail - croos aGyahoo.com
தொடர்பு முகவரி செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு,
இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
Batticalloa,
Sri lanka.
Otaouai, a.
கவிதை
‘என்னுடைய இதயத்துள் ஒ 濫盟器器。
> ஆரையூர்த்தாமரையின் கவிதைத்
தொகுதி*விற்பனைக்கு ஒரு கற்பனை -
0 சொல்வளம் பெருக்குவோம் - 24
0 மனிதவள அபிவிருத்தியில் கல்வி -
O கதைகூறும் குறள் - 21
O'கருத்தியல் எனும் பனிமூட்டம் வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்' - நூல் பற்றிய சில கருத்துக்கள்
0 என்னை அறிந்தபோது (சிறுகதை) -
> மின்சாரம் (குறுங்கதை) -
9 பாவச்சொத்து (குறுங்கதை) -
0 மீண்டும் ஒரு காதல் கதை
(தொடர் நாவல்) .
ஆசிரியர் பக்கம்
அதிதிப் பக்கம்
«» Luaálff Ga
6 விளாசல் வீரக்குட்டி
ஆக்கங்களுக்டு ஆக்கியேரே பொறுப்பு
S
8

Page 3
ஆசிரியர் பக்கம்
கடந்தமாதம் யூன் 18ம்,19ம் திகதிகளில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரிக் கலையரங்கில் ‘கண்ணகி இலக்கிய விழா-2011 மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. ஊர்வலம் - தொடக்கவிழா - கண்ணகி இலக்கியவிழாப்பட்டயப் பிரகடனம் - “செங்கதிர்’ கண்ணகி இலக்கியவிழாச் சிறப்பு மலர் வெளியீடு. - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ ஒலிப்பேழை வெளியீடு - நூல் அங்காடி உரையரங்கு - ஆய்வரங்கு - கலையரங்கு என இருநாட்களும் காலை மாலை அமர்வுகளாக நடைபெற்று முடிந்திருக்கும் இவ்விழா மட்டக்களப்பின் அண்மைய வரலாற்றில் மிகப் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்ட விழாவாக ஊடகங்கள் பிரமாதப்படுத்திச் செய்திகள் வெளியிட்டன. உண்மைதான். கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகத்தை ஒரு பண்பாட்டுத் தளத்தில் சகல வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைப்பதில் கண்ணகி இலக்கிய விழா வெற்றி பெற்றிருக்கிறது. இலக்கியவிழாவாக மட்டும் அமையாது ஒரு சமூக நோக்கோடும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையே இவ்விழாவுக்கான வெற்றியாகும். யாழ்ப்பாணத்திலிருந்தும் - வன்னியிலிருந்தும் - திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் மலையகத்திலிருந்தும் - கொழும்பிலிருந்தும் பேராளர்கள் இவ்விழாவில் பங்கேற்றிருப்பது இவ்விழாவுக்குப் பெருமை சேர்க்கும் பிறிதோர் பரிமாணமாகும். கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் மக்களை அனைத்து முரண்பாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைக்க முடியும் என்பதை இவ்விழா மெய்ப்பித்திருக்கின்றது. இந்தத் தடத்திலும் தளத்திலும் கண்ணகி இலக்கியவிழாக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் மென்மேலும் மிடுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ‘செங்கதிர்’ இன் வேணவா.
- செங்கதிரோன்
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்கி "செங்கதிர்” இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
-ஆசிரியர்=
Geisis 20

“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி எழுத்தாளர் குலமணி ஆவார்
பெயர் : மாணிக்கம் குலமணி தந்தை; சின்னத்தம்பி மாணிக்கம் தாயார் : சதாசிவம் சின்னம்மா வயது ; 70 ஊர் : நயினாதீவு, யாழ் மாவட்டம்.
ஆரம்பகாலம்: கல்வி - நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலை - நயினாதீவு மகாவித்தியாலயம். 1956 டிசம்பரில் 16 வயதில் S.S.C சித்தி. அதன் பின்னான A/L படிப்புக்காக 1958 ல் யாழ் வைத்தீஸ்வரா கல்லூரியில் அனுமதி கிடைத்தது. எனினும் 1958 இனக்கலவரத்தில் மருதானையில் இருந்த வியாபார நிலையத்தை இழந்த தந்தையின் ஊர்வருகையால் படிப்பு இடைநிறுத்தப்பட்டது. அதன் பின் சில காலம் எட்டியாந்தோட்டை "டனடின் தோட்டத்தில் தற்காலிக வேலை. 18 வயதில் அரசாங்க சிறாப்பர் பரீட்சையிலும் புகையிரதப்பகுதி நேரக்கணிப்பாளர் பரீட்சையிலும் தேர்வு. எனினும் 16 வயதில் பங்குபற்றியிருந்த ஒரு அரசியல் கட்சியின் மேடைப்பேச்சுக்களினால் அவைகள் இழக்கப்பட்டன. 1958ல் நடந்த தமிழ்மொழி எழுதுவினைஞர் பரீட்சையில் பங்கு கொள்ள முடியாத சிறு வாகன விபத்து. அதன் பின் 1960 எழுதுவினைஞர் பரீட்சையில் தேர்வு. 1961 ஜனவரி 1ம் திகதி எழுதுவினைஞராக திருமலைக் கச்சேரியில் நியமனம்.
இங்கு முதலில் அறிமுகமானவர் திரு.செல்லையா கோடீசுவரன் - மொழி வழக்கின் முன்னோடி. அவர் அப்போது கேகாலைக்கு இடமாற்றம் பெற்றிருந்தார். எளிமையும் அடக்கமும் திரு.கோடீசுவரனிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. 1961 ல் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தில் (மொழி வழி தொழிற்சங்கம்) உறுப்பினர் ஆனேன். சங்கத்தின் முதற்கிளையான திருமலைக்கிளையின் செயலாளராக 1963/64 களில்
9ேங்கி

Page 4
கடமையாற்றினேன். 1965 - 1966 வரை அரசாங்க எழுது வினைஞர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர். அப்போதைய சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான ‘எழுச்சி” யின் துணை ஆசிரியர். (ஆசிரியர்: பெரியார் பத்மநாதன்) என் வாழ்வில் மறக்க முடியாத நண்பன் பெரியார் பத்மநாதன்.
1969 பெப்ரவரி 7ம் திகதி திருமணம் நடந்தது. அதே ஆண்டு 1969 செம்டம்பர் 29 ம் திகதி கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழியைப் படிக்க மறுத்த அரச தமிழ் ஊழியர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற திட்டத்திற்கமைய (அது U.N.P - தமிழரசுக்கட்சி அரசு) அரச பணியிலிருந்து வெளியேற்றம். என்னுடன் பெரியார் பத்மநாதன், நண்பர் சுரேந்திரநாதன்(திருமலை) ஆக மூவர் வெளியேற்றப்பட்டோம்.
அப்புறம் ஒரு விபத்தாக வந்த இடம், அச்சுத் தொழில். ஆரம்பத்தில் ஆத்மதிருப்தி தராத இத்தொழிலில் நாளாக நாளாக உயர்வை அளித்தது. நல்லவர்கள், படித்தவர்கள், எழுத்தாளர்கள், சமூகவியலாளர்கள் என பலருடன் பழகும் சந்தர்ப்பத்தைத் தந்தது. ஆங்கிலப் பத்திரிகை மேதை றெஜி மைக்கல், பேராசிரியர் சின்னத்தம்பி, பகுத்தறிவாளர் ஏபிரகாம் டி கோவூர், திருமதி கோவூர், அருட்தந்தையும் பேரறிஞருமான தாவீது அடிகள், அரசியல் நேர்மையாளரான எட்மண்ட சமரக்கொடி ஆகியோர் நினைவில் நிற்கின்றனர். இவர்களது படைப்புக்களை ஒப்புநோக்கும் பணி கிடைத்ததால்தான் என்வாசிப்பு விரிவுபட்டது.
இக்காலத்தில் ஏற்பட்ட அறிமுகமே திரு.வேல் அமுதனுடனானது. அவரது படைப்புக்களை அச்சிடும் பணியில் ஏற்பட்ட நட்பு அவரது “இலங்கை அறிவு இயக்கத்தில்’ என்னை உறுப்பினராக்கியது. முற்று முழுதாக அரசியல் - சுயமரியாதைக் கோட்பாடுகளிலிருந்த என்னை மாற்றி இலக்கியத்துக்குள் இழுத்து வந்தவர் அமுதர். 40 ஆண்டுகள் அந்த நட்புத் தந்த - தந்து கொண்டிருக்கும் அனுபவங்கள் ஏராளம். 1981 ல் ஆரம்பிக்கப்பட்ட ‘கலைஞர் கருணாநிதி பொதுப்பணி மன்றத்தில் துணைத் தலைவராகவும் (தலைவர் க.நவசோதி M.A) அதன் மாத இதழான ‘தமிழோசை" ஆசிரியராகவும் இருந்திருக்கிறேன். 1982 ல் திரு.தி.வீரமணி (தி.க.தலைவர்) கொழும்பில் எங்களுடன் 12 நாட்கள் தங்கியிருந்தார்.
9ேங்கி

அமுதரின் அறிவு இயக்கத்திலிருந்து அதன் இலக்கிய அமைப்பாக “தமிழ் கதைஞர் வட்டம் முகிழ்ந்தபோது அதன் உறுப்பினர் ஆனேன். (அன்றைய தகவம் அறிஞர் வ.இராசையா மாஸ்டரைத் தலைவராகவும் வேல் அமுதனைச் செயலாளராகவும் கொண்டிருந்தது.) பின்னான நாட்களில் தகவத்தின் சிறுகதை மதிப்பீட்டுத் தெரிவுக்குப் பொறுப்பாகப் பணியாற்றினேன். (இத் தெரிவு முறை மிக நேர்த்தியானது. முதல் தெரிவு உறுப்பினர்களிடமிருந்தும், அடுத்த தெரிவு ஊரறிந்த பல்கோண கருத்துக்கள் கொண்ட இலக்கியவாதிகளிடமிருந்தும், ஒருவருக்கொருவர் அறிந்திராத முறையில் இருந்ததுதான் சிறப்பு தகவத்தின் தெரிவுகள் இதுவரை எவராலும் விமர்சிக்கப்படவில்லையென்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.)
அச்சாளனாக இருந்த நாட்களில் என்னால் உருவாக்கப்பட்ட பலர் இன்று சிறந்த அச்சாளர்களாக உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1984 ல் முதல் முதலில் நவீன (ஒவ்செற்) அச்சுமுறையும், கிராபிக்கமெராமுறையும் அறிமுகப்படுத்தப்படக் காரணமாக இருந்தேன். அங்கு பயின்ற பலர் இன்று வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். 1997ல் கொழும்பில் “சக்தி என்ரபிறைசஸ் அச்சகம் உருவாக்கினேன். அதன் பின் 2003 பெப்ரவரியில் இங்கிலாந்து செல்ல நேர்ந்தது.
லண்டனில் என் நண்பர் சிவானந்தசோதியின் வெளியீட்டகமான ‘திருமுருகன் அறிவகம் மூலம் “லண்டன் தமிழர் தகவல்’ மாத சஞ்சிகை என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இப்போதும் வந்துகொண்டிருக்கிறது. ‘அரவிந்தன்’ என அரசியல் கட்டுரைகளும் ‘கோத்திரன்’ என இலக்கியக் கட்டுரைகளும் ‘புனிதன்” என்ற பெயரில் சிறு செய்திகளையும் எழுதினேன். 2005ம் ஆண்டு ‘தமிழர் தகவல்’ பொங்கல் மலர் 300 பக்கங்களையும், 43 ஈழத்துச் சிறுகதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த ஆக்கங்கள் தந்து உதவிய திரு.பத்மநாபஐயர் அவர்கள் என் மனதுள் நிறைந்திருக்கின்றவர். இம்மலரைப் பார்த்துவிட்டு பேராசிரியர் ஒளவை நடராசன் ‘ஒரு எழுத்துக்கூடப்பிழையின்றி அச்சிட்டிருக்கின்றாய்’ எனப் பாராட்டினார்.
தமிழர் தகவலின் கடைசிப்பக்கம்’ என்றொரு பகுதி. அதில்தான் திருக்குறள் பற்றிய கட்டுரை எழுதுவேன். வை.கோ பற்றிய ஒரு நிகழ்வோட்டமே நான் ஆரம்பித்த முதல் திருக்குறள் கட்டுரை. தொடர்ந்து
இங்கி

Page 5
லண்டன் 'சுடரொளி' யிலும் சில கட்டுரைகள் வந்தன. எனினும் 2009 செப்டம்பர் “செங்கதிர்’ இதழில் “கதை கூறும் குறள் என ஆசிரியர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் அவர்களால் மகுடம் சூட்டிவிட்டமையின் பின்பே அது பலரை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது.
அரசியலில் நான் தமிழர் சுயாட்சிக் கழகத்தைச் சார்ந்தவன். அதன் வெளியீடான “விடுதலை" யிலும் எழுதியிருக்கின்றேன். என் அன்புக்கினிய நண்பர் லண்டன் சிவானந்தசோதியே முதலில் என்னை வெளிப் படுத்தியவன் என்பதை குறிப்பிடவேண்டும். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல பெரியார்களின் சினேகம் என்னை ஆளாக்கியது. பேராசிரியர் அறிவொளி, பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன். பேராசிரியர் ஒளவை நடராசன், நல்லி குப்புசாமி ரெட்டியார், பாவலர் அறிவுமதி, சொல்வேந்தர் சுகி . சிவம், தென்கச்சி சுவாமிநாதன் என.
ஒரு மனிதனுக்கு "அடக்கம் அனைத்தையும் அளக்கும் என நினைக்கிறேன்.
பேராசிரியர் அறிவொளியுடன்
குலமணி அவர்கள்.
இவர்
 

தியத்தலாவ எச்.எப்ளிவினா
وو
“கவின் டீயை குடிப்பா. தயாள் அண்ணா என்னை எழுப்பிய போதுதான் நான் திடுக்கிட்டு எழுந்தேன்.மணி ஆறைத் தாண்டும் முன் என்னை எழுப்பினால்தான் நேரத்துக்கு வேலைக்குப் போகலாம் என்பது அவருக்குத் தெரியும். ஏனெனில் கொஞ்சம் சுணங்கினாலும் எங்கள் மேலதிகாரி வசிட்டராகிவிடுவார். ஏதோ என்னுடைய செலவுகளைக் கொஞ்சமாவது சமாளித்துக் கொள்ளவும்ஆத்திர அவசரமென்றால் லிவு போட்டு விட்டுப் போவதற்கும் கொஞ்சமாவது சுதந்திரம் உண்டு. அதனால்தான் வேறு வேலைகளுக்குப் போக நினைத்தாலும் இவற்றை நினைத்து மெளனியாகி விடுவேன்.
தயாள் அண்ணா ஊற்றித் தந்ததேனிரை வைத்துக் கொண்டு மிக்ஷர், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முடிந்து போயிருந்தது. வீட்டில் என்றால் அப்பா ஏதாவது வாங்கி வைத்திருப்பார். எப்படியோ எனக்கென்றால் யோகட், ஆப்பிள் இப்படி ஏதாவது சாப்பிடுவது பிடிக்கும்.
என்றாலும் நான் வீண் செலவுகளைச் செய்வதில்லை என்ற படியால் நான் எதைக் கேட்டாலும் வசதி இருந்தால் தயாள் அண்ணா வாங்கித் தராமல் இருக்க மாட்டார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றும் ஒரு நாள் அப்படித்தான். நான் ஏ.எல். செய்து கொண்டிருந்த காலமது. அவசரத்தில் சீசன் டிக்கட்டை எடுக்காமல் போய் விட்டேன். எனவே மீண்டும் வீட்டுக்குப் போய் அப்பாவிடம் காசு இருபது ரூபாயும் கேட்க வேணி டும் என்று எணிணியவாறு வந்துகொண்டிருந்தேன். வீட்டு வாசலை நெருங்கும்போது
é4
அண்ணனைப் பாரு எப்பவாச்சும் காசு கேட்கிறானா. நீயும் வந்து வாச்சிருக்கியே.”
தம்பிக்கு அப்பா அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.
GOtmica.

Page 6
நான் வந்த சுவடு கூட தெரியாமல் நழுவிப் போய் விட்டேன்.
எனக்கொன்றும் பெரிய வயதில்லை. பதமான 21 வயசுதான் ஆகிறது. பிரத்தியேகமாக ஏதாவது ஒரு பாடநெறியை நிறைவு செய்யத்தான் நான் இந்த தலைநகரத்துக்கு வந்திருப்பதாக பலரும் நினைத்தாலும் தயாள் அண்ணா இருக்கும் தைரியத்தில் தான் அம்மா என்னை இங்கு அனுப்பியுள்ளார் என்று அவர்களுக்குத் தெரியாது.
ஆம். தயாள் அண்ணா இப்போது என் இலக்கியநண்பன் மட்டுமல்ல. அறை நண்பனும்தான். அவர் தற்போது தனியார் கம்பனியொன்றில் அக்கவுண்டனாக பணி புரிகிறார். அவருக்கு எப்படியோ. ஆனால் அவருக்கொன்று என்றால் என்னால் தாங்க முடியாது. இவ்வளவு நெருக்கம் நமக்குள் வரக் காரணம் சர்வ சத்தியமாய் இலக்கியம் தான்!
() () () () () ()
கவின் என்னனழுதுகிறாய்? என்று என் பாடசாலை நண்பனொருவன் கேட்ட போது எழுதியிருந்ததை அவனிடம் கொடுத்தேன். அது பாடல் வரிகளையும் உள்ளடக்கிய எனது கற்பனைதான். அதற்குச் சிறியதொரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. மாறாக அவன் மற்றவர்களுக்கும் அதைக்காட்டி ஏளனம் செய்தான். (தற்போது என் கவிதைகளை பத்திரிகைகளில் பார்ப்பதும் நண்பர்களிடம் இந்த கவிஞனுடைய நண்பன்தான் நான் என என் பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வேறு கதை) எனினும் நான் என் முயற்சிகளை நிறுத்தவில்லை. சில நாட்களில் என் வரிகளைப் பார்த்து விட்டு வைரமுத்துவின் வரிகளை “கொப்பி’ பண்ணியிருக்கிறான் என்பார்கள். அப்போதெல்லாம் ஆஹா அந்தளவிற்கு நன்றாயிருக்கிறதா என்று மனசுக்குள் சிரித்துக் கொள்வேன்.
நான் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவன் என்று அம்மாவும் கூறுவார். தரம் மூன்றிலிருந்தபோதே அம்மா பல கதைப் புத்தகங்களை வாங்கித் தந்திருந்திருக்கிறார். தரம் ஆறு வரைக்கும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை அடிக்கடி பாடசாலை மாற்றியதால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுத்து செயலிழக்கச் செய்தது. இப்படி நாம் ஊர் விட்டு ஊர் செல்லக் காரணம் அம்மாவின் இடமாற்றம் என்பதை விட எங்கள் அப்பாவின் சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதம்தான் என்று பின்னாட்களில் அறிந்தேன்.
என் சிறு வயதுபராயத்தில் எல்லாம் முதல் ஐந்து நிலைகளுக்குள்வந்தநான் மற்ற பாடசாலைகளில் ஒன்பதுக்கும் பிற்பட்ட ஸ்தானத்துக்கு வந்தபோது முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து யாருக்கும் தெரியாமல்
(8) súlfís a

அழுதிருக்கிறேன். அம்மாவைத் தவிர அனைவரும் என்னைக்குறைத்து மதிப்பிடும் போதெல்லாம் எனக்கென்று அன்பு st க்கால். என்றெண்ணியெல்லாம் உள்ளுக்குள் மருக்கிற்ே? கனவை எல்லாம் நனவாக்கத்தான் நான்ருக்கிறேன் என்று தயாள் அண்ணா எனக்குச் சொல்வதுபோல் இப்போது உணர்வதுண்டு.
ஏதோ வாழ்க்கையைக் கடந்து கொண்டிருந்த போதுதான் என் வகுப்பு நண்பர்களுக்கும் உயர் வகுப்பு அண்ணாமார்களுக்கும் இடையில் பாடசாலையில் சண்டை நடந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமும் சம்மந்தப்படாத நானும் அம்மாவின் முன்னாலே அதிபரால் தண்டிக்கப்பட்ட போது வாழ்க்கை மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போயிற் று. அம் மாவின் முகம் பார் கி க முடியாதளவுக்கு வேதனையாயிருந்தது. அதற்கான காரண கர்த்தாக்கள் சில ஆசிரியர்களும் தான் என்ற போது அதிர்ச்சியடைந்தேன். தன் முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் என்றும் அவர்கள் உதட்டில் தேனும் நெஞ்சில் விஷமுடனும் பேசுபவர்கள் என்றும் சொல்லி அம்மா என்னைத் தேற்றினார்.
எப்படியோ புதிய பாடசாலையில் இருந்த மூன்று வருடங்களும் படிக்க முடியாதவர்களுடன்தான் நட்பு கொள்ள முடிந்தது. கெட்டிக்காரப் பிள்ளைகள் ஒரு ஆசிரியையின் மகன் என்று கூட எண்ணாமல் என்னை ஒதுக்கியதும் ரொம்பவும் வருத்தமாயிருந்தது. பிறகு நான் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகியிருந்ததால் என் சுட்டித் தனங்கள் யாவும் தற்காலிகமாக விடைபெற்றோடின. பின்னே? என் குடும்பத்தார் யாவரும் படித்துப் பெரியவர்களாயிருக்கும் போது நான் மட்டும் இப்படியே இருப்பதா என்ற சவாலுடன் பரீட்சைக்கு என்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் என் தலையெழுத்தில் சீர்குலைவு ஏற்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் என் அம்மாவின் ஆப்பரேஷன் நடந்தது. அதனால் மிகவும் நொந்துபோயிருந்தேன். என் தந்தையின் வருமானத்திலும் முன்னேற்றங்கள் இருக்கவில்லை. பாவம் அவரும்தான் என்ன செய்வார்? மிகவும் உருக்குலைந்து யாரோ போல் ஆகியிருந்தார். இந்த நேரம் பார்த்துத் தான் அந்த சந்தோஷமானதும் சங்கடமானதுமான செய்தியை என் சின்னம்மா என்னிடம் கூறினார்.
ஆம்! அம்மா வைத்தியசாலையில் இருக்கும் நேரம் பார்த்து என் தங்கை பருவமடைந்திருந்தாள். மூளை கசங்கிப் போனது. சுயமாக எதையும் சிந்திக்கும் அவகாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவாறு மற்ற அனைத்து அத்தை பெரியம்மாமாருக்கும் சாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினேன்.
() () () () () () 9ேங்க

Page 7
எண் இளமையின் நான் கில் ஒரு பகுதி அவ்வாறு கழிந்தது. இதற்கிடையில்தான் உயர்தரத்துக்கும் தெரிவாகியிருந்ததுடன் அறநெறி பாடசாலையில் ஆசிரியனாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். இடைப்பட்ட இந்தகாலத்தில் தான் என் வாழ்வின் திருப்புமுனை ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மனதில் தோன்றிய அத்தனையையும் கவிதைகளாக மொழி பெயர்த்தேன். அவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புமாறு அம்மா தான் சொன்னார். நன்றாய் இருந்திருக்க வேண்டும். மாதமொன்று செல்லமுன்பே பிரசுரமாகியிருந்தது.
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை கூச்சல்!
இதையெல்லாம் காட்டிய பின்பு “இங்கே பாருடா கழுதை கவிதை எழுதுது என்று என்னை கேவலப்படுத்திய நண்பன் தன் காதலிக்குகொடுப்பதற்காக என்னிடம் கவிதை எழுதி கேட்கத் தொடங்கினான். நான் பெருமை பட்டுக் கொள்ளவில்லை. அவன் தான் அசடு வழிந்தான். எனினும் மென்மேலும் என் திறமையை வளர்க்கும் முயற்சிக்கு உத்தரவாதங்கள் இருக்கவில்லை. எப்படி எழுதுவது எதில் எழுதுவது என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் தான் ‘கவின் உனக்கொரு கடிதம் வந்திருக்கு’ என்று அம்மா தந்துவிட்டு போனார்.
முக்கியமானதொரு விடயத்தைக் கூற மறந்து விட்டேன். உயர்தர வகுப்பில் இருந்த காலத்தில் சின்னதாய் ஒரு காதல் அரும்பியது. ஆனால் அவளுக்கு அப்படியிருக்காது. என்னைப் பார்த்து ஒரு நாளாவது வெட்கப் பட்டதில்லை. நகம் கடித்ததுமில்லை. நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டதுமில்லை. எதுவுமில்லை. எனவே நட்பு ரீதியாகவேனும் கடிதம் போடுவதென்றால் எனக்கு அவளைத் தவிர யாரும் இருக்கவில்லை.
அவளே இல்லை என்று ஆன பிறகு. இப்போது யாராக இருக்கும்?? என்று கலவரமடைந்தேன். கடிதத்தை வாசிக்க வாசிக்கக் கலக்கமும் சந்தோஷமும் ஒன்றாக உற்பத்தியானது. சாராம்சம் இது தான்.
நான் தயாள். எழுத்தாளன். உங்கள் கவிதைகளின் தரம் பற்றி என் நண்பனி கூறக் கேட்டேன். கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தொடர்பு கொள்க. தயாள்
ஓரிரு மாதங்களுக்குள் என் படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரமா? அல்லது வேறு யாருடைய கவிதை வரிகளாவது தெரியாமல் என்

கவிதைகளில் உள்ளடக்கப்பட்டு விட்டதா என்ற பயம் என்னைத் தின்றது. தயங்கிய படியே ‘கோல்” பண்ணிய போதுதான் தயாள் அண்ணா மிக அன்புடன் கதைத்தார்.
என் கவிதைகள் பற்றிச் சிலாகித்துப் பேசினார். நன்றாக எழுதுவதாகச் சொன்னார். என் நண்பர்களுடன் அவரை ஒப்பிட்டுவியந்தேன். விளையாட்டாக நான் அவரை போஸ்ட்காட் தயாளன் எனும் போது வஞ்சகமில்லாமல் சிரித்து அதை ரசிப்பார்.
0 0 () () () ()
நாட்கள் செல்லச் செல்ல நானும் தயாள் அண்ணாவும் மரியாதைஎனும் போர்வையிலிருந்து விலகி அன்பென்ற பந்தலுக்குள் இணைந்து கொண்டோம். நீண்ட ஒரு விடுமுறையின் போது தயாள் அண்ணா எங்கள் வீட்டுக்குவந்து தங்கியிருந்த போதுதான் இலக்கியத்தின் சுவை உணர்ந்து அதையே மூச்சாக எண்ணிச் செயல் பட்டேன் நான்.
இதைப் பார்த்து இலக்கியம் சோறு போடுமா என்று என்னை பரிகசித்தவர்களும் இருக்கிறார்கள். எனினும் என் இலக்கிய வேட்கைக்கு நல்ல பதிலை தயாள் அண்ணா தந்து கொண்டிருந்தார். அவர் தலை நகரில் வீடெடுத்தவுடனேயே என்னையும் அழைத்துக் கொண்டார். இங்கு வந்த பிறகுதான் நான் புதிய உலகமொன்றைக் கண்டு கொண்டேன். இலக்கியத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். என் சிறுசிறு குறைகளைச் சீர்படுத்தினார். எதிர்மாறான எண்ணங்களிலும் பல சிக்கல்களிலும் துவண்டிருந்த என்னை உற்சாகப் படுத்தினார். ‘என் நண்பன் துணிச்சல் காரன்’ என்று சொல்லி என்னைப் பாராட்டினார்.
தலை நகரில் நடக்கின்ற பல இலக்கிய விழாக்களையும் நான் தரிசிக்கக் காரணம் தயாள் அணிணாதான். பிரபல எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் என்னுடனும் பேசும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா? என் குடும்பத்தார் கூட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களே.
தற்போது என்படைப்பும் நூலுருப் பெறப் போகிறது. முழுக் காரணமும் என் தயாள் அண்ணாதான். அவருடைய மேலிடு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. நான் அவரை மிக மதிக்கிறேன். நேசிக்கிறேன். ஆம்! அவர் தான் இப்போது என்குரு உலகம் எல்லாமே!
0ேர்.
(பெயர்கள் மட்டும் கற்பனை)

Page 8
睦 S(6)
எழுதிதாளர்களே /கலைஞர்களே /ஊடகவியலாளர்களே /இலக்கிய ஆர்வலர்களே நீங்களி பgதீததை-பாரீதீததை-கேட்டதை-அறிநீததை இங்கே பகிர்நீது கொளிளுங்களி LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSGSSLSLSSLSLSSLSLGLLLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLuL
பிரஞ்சு மன்னர் 15ம் லூயியின் அரசவையைச் சேர்ந்த இளவரசன் ஒருவன் எதிர்பாரா வண்ணம் வீடு திரும்புகின்றான். அவன் வீட்டுக்கு வந்த வேளை அங்கு கண்டகாட்சியானது இளவரசனை திணறடித்தது. வீட்டினுள்ளே அவனது மனைவி ஓர் ஆயருடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு கணம் தயங்கிய இளவரசன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அமைதியாக ஜன்னல் ஓரம் சென்று வெளியே நோக்கியபடி தெருவில் நடமாடிக் கொண்டிருந்த மக்களுக்கு ஆசீர்வதிக்கத் தொடங்கினான். இதைக் கண்டுவிட்ட அவனது மனைவி “அங்கே என்ன செய்கிறீர்கள் இளவரசே” என புலம்பினாள்.
அதற்கு இளவரசன் அளித்த பதில் "ஆயர் என் கடமையைச் செய்கிறார். ஆகவே அவரது பணிகளை நான் ஆற்றுகிறேன்”
- செம்மாதுளன் நன்றி - ஏ.ஜே.கனகரட்னா *சிரிப்பின் இலக்கணம்” என்ற கட்டுரை
* இருவேறு முரண்பட்ட தளங்களின் மோதலே நகைச்சுவையை உண்டுபண்ணுகிறது என்ற வாய்ப்பாடு எல்லாவகை நகைச்சுவைக்கும் பொருந்தும் பொது உண்மை.
- கேஸ்லர் -
(12) Pikis 2o

மொழி பெயர்ப்புக் கவிதை
என்னுடைய இதயத்துள் ஒரு காரிகை (THERE IS AGIRL IN MY HEART)
ஆங்கல வடிவம் : நீலிகா அபே சூரிய
(Daily News 10.11.2010 Wednesday - Page - 19) தமிழ் வடிவம் : கலாபூஷணம் அ.மு.பாறுாக்
என்னுடைய இதயத்துள் ஒரு காரிகை - அவள் என்னைத் திடகாத்திரமாக்கினாள். அனைத்துப் பகலிலும், இரவிலும் - அவள் அற்புதமான இரகசியங்களை வேடிக்கையாகச் சொன்னாள்.
அவளின் அழகான சிந்தனைகள் கவலையும் களிப்பும் சேர்ந்த கலவையாகச் சுடர் பாய்ச்சின - அவைகள் என்னை ஆகர்ஷித்தன. நிதமும் என்னுடைய உள்ளத்தை இதமாக்கி வைத்தன. ஆதியந்தமில்லாத காதலுக்கு அவளின் தெய்வீக ஆசிகளும் கிடைத்தன. நான் ஆச்சரியமடைந்தேன் - அதாவது காதல் சக்தி கொண்ட நேசம் நிறைந்த காரிகை அவள் - என்னுடைய ஆத்மாவின் துடிப்பாக - அவள் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள். இரவின் பிரகாசமான ஆகாய முற்றத்தில் பளபளப்புடன் அவள் - உலா வருகிறாள் அவள் அதிசயமான பெண்
9ேர்.

Page 9
அவள் - எனது மனசாட்சியை வருத்துகிறாள். அது மட்டுமா - எதை நம்புவது எப்போது நம்புவது விவேகம் நிறைந்த விவாதமாக ஆக்கினாள். என்னை ஆச்சரியப் பட வைக்கிறாளா? என்னைச் சிந்திக்கத் தூண்டுகிறாளா ? மேதினியின் யதார்த்தம்பற்றி ஜீரணித்துக் கொள்ள நேத்திரங்களை மூடிக் கொண்டபொழுது நான் உணர்ந்து கொண்டேன். என்னால் தரிசிக்க முடிந்தது - அது அவளின் வசீகரமான வடிவம் வனப்புடன் தேவதை போன்று என்னை நோக்கி கையசைக்கிறாள் - அவள் வழிகாட்டும் பாதையை நான் காதலிக்கின்றேன்.
அது - வாழ்க்கையில் ஒரு உண்மைக்குத் தொடர்புள்ள ஒரு விடயத்தைக் காட்டுகின்றது. அங்கே அவள் - என் மனதைப் பதமாக்குவதற்காக அதிசயமான ஞாபகங்களை உருவாக்குகிறாள். சில நேரங்களில் என்னை விட்டு விட்டு. தனிமையாக நான் சிந்திக்க வேண்டுமென்றா? அந்த நிலையில்; எனது குறிக்கோள்களை இரை மீட்டிப் பார்க்க முடிந்தது. அது ஒரு விந்தையான இடம் - அது எனது பயணத்தின் முடிவாகும் இடமாக இருந்தது. அங்கே நான் பெறுமதி வாய்ந்த தெரிவுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது அந்தத் தெரிவுகள் என்றும் எப்பொழுதும் புளகாங்கிதமுடன் வாழ என் மனதை ஆயத்தம் செய்தது - ஆனால் உயிர் வாழ்வதற்காக அல்ல.
9ேங்கி

ஆரையூர்த் தாமரையின் கவிதைத் தொகுதி 'விற்பனைக்கு ஒரு கர்பனை
- தமிழன்பன்
*தாமரைக் கவிதைகள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக் கவிதைத் தொகுதி *விற்பனைக்கு 9 (5 கற்பனை” என்ற நூலாக வெளியிடப் பட்டதாகும். புரவலர் புத்தகப் பூங்கா கடந்த 07.03.2010 இல் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட நான்கு பெண் எழுத்தாளர்களின் நூல்களில் இதுவும் ஒன்று. நூல் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
சுமார் 50 கவிதைகள் கொண்ட இந்நூலில் ஒவ்வொரு கவிதையும் வித்தியாசமான தலைப்புகளுடன் அமைந்துள்ளது. ‘விற்பனைக்கு ஒரு கற்பனை’ ஒரு உதாரணம். பெரும்பாலும் புதுக் கவிதைகளாக அமைந்த இத் தொகுதியில் ஒன்றிரண்டு மரபுக் கவிதை வடிவங்களும் இடம்பெறுகின்றன. அதில் “தேயிலைத் தோட்டத்துப் பூங்குயில்கள்’ என்பது ஒன்று. தேயிலை கொய்து உருக்குலைந்து போகும் பெண்களை பூங்குயில்கள் என்று கொள்வது மனிதாபிமானம். அதை இன்னும் ஆழமாக எடுத்துக் காட்டும் ஒரு அடி.
(5) ia 2a

Page 10
மலையோரம் ஊர்ந்தோடும் ஈரங்களே - வந்து விழியோரம் சேர்ந்தோடும் பாருங்களே தலையோரம் கயிறோடும் தூரங்களே - தேய்ந்து நிலைமாறும் மடுவாகும் பாருங்களே
மற்றொரு அடி இந்த சோகத்தை இன்னும் மிகுத்துக் காட்டுகிறது.
கொழுந்துகள் பறித்திடும் கரங்களே - கருந் தழும்புகள் கை சேரும் கணங்களே கூடையில் கூனலேறும் முதுகுகளே - மலை நாட்டோட முகுகெலும்பும் நீங்களே.
மட்டக்களப்பில் வாழும் ஒரு இளங் கவிஞையின் இதயத்தை மலையகத்துப் பெண்களின் துயரம் கீறியிருப்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இவ்வாறே ஒவ்வொரு கவிதையும் நம் இதயத்தை தொட்டுச் செல்கின்றது.
சில வித்தியாசமான தலைப்புகள், கருப்பைத் தீவுப் புத்தாண்டு, ஒரு ஜோடிக்கால்கள், பிரேமம் நட்சத்திரங்களை ரசிப்பதற்காக, அம்மா வயிற்றில் குங்குமப் பூக் குழந்தை, பூக்களின் உலக அழகி , சர்க்கரைச் சிணுங்கல், தாமரைக் குளத்தில் தங்க மீன்கள், ஒரு பனை மரத்தின் டைறி, இரகசியத் தாலாட்டு, பெண்மை என்பது, புல்லாங்குழலாய் மாறும் வேர்கள், நிலாப்பாட்டியின் தீய்ந்த நிலாச்சோறு, திருமணிப்பூரம், ஈமத்தி, ஏழையின் பணக்கார வியாதி - இவ்வாறு வித்தியாசத் தலைப்புகள் தொடர்கின்றன.
ஒவ்வொரு கவிதையிலும் வித்தியாசமான சிந்தனையும் வித்தியாசமான கற்பனையும் இடம்பெறுகின்றன.
அரவாணிகளைப் பற்றியும் இக் கவிஞையின் சிந்தனை தொட்டிருக்கிறது. ‘மூன்றாம் பால் மனிதர்கள்’ என்ற கவிதையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
டுவழி

மீசை முளைத்த தாமரை / கூந்தல் வளர்த்த சூரியன்
ஆண்கோணி முத்திரை / பதித்த தாமரைப் பெண்
பெண்கோணி முத்திரை / பதித்த சூரியப் பொடியன்.
இவ்வாறு ஆரம்பமாகும் இக் கவிதை -
ஆண்டவனிட்ட சதியால் ஆண் பெண்ணற்ற இவர்கள் ஜாதி அர்த்த நாரீசுவரர் என்றும் / சிவசக்தி என்றும் தெய்வங்களால் பூசிக்கப்படுகையில்
எனத் தொடர்ந்து . வாக்குரிமை பெற இரண்டாயிரத்து ஒன்பது ஆண்டுகள் சங்கம் வைத்தும் போராட வேண்டியுள்ளதோ - இந்த மூன்றாம் பால் மனிதர்கள்
என முடிகிறது.
அரவாணிகளின் பரிதாபம் கவிஞையின் இதயத்தில் தைத்த சோகம் இவ்வாறு வெளிப்படுகிறது.
*தாமரைக் குளத்துத் தங்க மீன்கள்’ என்ற கவிதை இவ்வாறு பேசுகிறது. உதிரிப்பூக்களாய் / ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் எனது கவிதை - அதை / நூற்கும் பணிக்கான நோக்கத்தில் - என் திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறேன்.
இவ்வாறு ஆரம்பமாகும் கவிதை நாம் எதிர்பாராத விதத்தில் சோகமாய் முடிகிறது.
குப்புறப் படுத்துக் கொண்டு கவிதை எழுதுவதில் மூழ்கியிருக்கும் கவிஞையின் முதுகின்மேல் அயல் குழந்தைகள் வந்து வீழ்ந்து கலாட்டா செய்து குழப்புகின்றன. ஆனால் கவிஞை மனம் நோக வில்லை. காகிதத்தில் வடிக்கும் கவிதைகளை விட உயிர்த்துடிப்புடன் விளையாடும் இக் குழந்தைக் கவிதைகள் எவ்வளவோ மேல் என்று முடிக்கிறார்.
வேழி 20

Page 11
என்னை மறக்கிறேன் / என் கனவை மறக்கிறேன். சலிக்கவில்லை எனக்கு / அலுக்கவில்லை எனக்கு - காரணம் எல்லாமே இந்த / தாமரைக் குளத்துத் தங்க மீன்களாச்சே. இரகசியமாய் சிரிக்கிறது / என் கவிதைக் கனவு
நெகிழ்ந்து போகின்றோம். தனது கவிதைகளைத்தான் தாமரைக் குளத்துத் தங்க மீன்கள் எனக் கவிஞை கூறப் போகிறார் என எதிர்பார்த்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்பு ஏமாற்றத்திலேயே முடிகிறது.
கவிதையின் பாடு பொருள் மனித அவலங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது. வன்னி அகதிகளின் அவலம், வறுமைப்பட்ட பெண்களின் அவலம், காலின் கீழ் துவைபடும் மனிதம், சுயநலப்பிண்டங்களால் அப்பாவி மக்கள் படும் அவலம் எனப் பல்வேறு சோகங்கள் பற்றி இவரது கவிதைகள் பேசுகின்றன.
வித்தியாசமான கவிதை நடை, வித்தியாசமான உருவகங்கள், வித்தியாசமான படிமங்கள் என்பன இவரது கவித்துவத்துக்கு முத்திரைகளாக அமைகின்றன. பல விடயங்களை நேரடியாக கூறாமல் பூடகமாகக் கூறி நம்மை அசரவைக்கிறார்.
இவரது இத் தனித்துவத்தை பதிப்புரை , அணிந்துரை முதலியனவும் எடுத்துக் காட்டுகின்றன.
பதிப்புரை பின்வருமாறு குறிப்பிடுகிறது. “.ஆரையூர்த் தாமரையின் கற்பனைத் தடாகத்தில் ஊற்றெடுத்த கவிதைத் தொகுப்பே ‘விற்பனைக்கு ஒரு கற்பனை' இது புரவலர் புத்தகப் பூங்காவின் இருபத்து மூன்றாவது வெளியீடாகும். மீன்பாடும் தேனாட்டில் கவி பாடும் பெண் மானாக நடைபோடுகிறாள் ஒரு இளம் கவிதாயினி.”
அணிந்துரை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“ஏனைய கவிஞர்களின் பார்வையைவிட இவரது பார்வை சற்றுக் கூர்மையானது. அதுவே இவரது கைவண்ணமாகவும் அமைகிறது எனலாம். உதாரணமாக ஜப்பானிய கவிதை மரபான SOKA
(18) Gefisiális 20

முறையை சில கவிதைகளில் காணலாம். நீளமான இக் கவிவடிவம் ‘முகாரி பாடும் முகில்கள்’ என்ற கவிதையில் புத்துயிர் பெறுவதைக் காணலாம்.
ஆசிரியையும் முகவுரையில் சில விஷயங்களை கூறுகிறார். “நானுந்தான் கவிதை எழுதுகிறேன் - ஆனால் என்னால் அவனைப் போல் எழுத முடியவில்லை நிலத்தின் மேல் விழாது உயர்ந்தபடி இருக்கும் - நீள் சுளகைக் கவிழ்த்தது போல் வானம் சோளனப்பம் ஒன்று சுடச்சுடக் கீழே விழாது வானையும் சுட்டுத் தீய்க்காது ஒட்டியிருக்கும் சூரியத் தீ.
இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ - அழகிய அற்புதக் கவிதைகளை படைத்த கடவுளெனும் மாபெரும் கவிஞனின் இரசிகையான படியால் ஓரளவு நானும்தான் கவிதை எழுதுகிறேன்.”
இவ்வாறு கூறுகிறார் நூலாசிரியை.
(நூல் விபரம் - அளவு டிமை 1/8,
பக்கம் - 80,
விலை - ரூபா 150/=
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா , கொழுது
நூல் கிடைக்குமிடம் - செ. தாமரைச் செல்வி, தவபதி,
- ஆரையம்பதி. -01)
இலங்கை இலக்கியப்பேரவையின் 2009ம் ஆண்டுக்கான சான்றிதழ் லபறும் நூல்களில் ஒன்றாக ஆரையூர்த் தாமரையின் விற்பனைக்கு ஒரு கற்பனை யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
9ேங்கி

Page 12
ைேமின்சாரம்
- வாசுகி குணரத்தினம் - இரவு வேளை சாமரியறை திடீரென இருட்டாகியது. அதற்குள் பூட்டியிருந்த ‘பல்ப்” எரிந்து விட்டதோ என யோசிக்கும் வேளையில் - s ~ மீண்டும் பற்றியது. சிறிது நேரத்தின் பின் மீண்டும் (% அணைந்தது.
இது ‘கோல்டரில் உள்ள வழமையான பிழைதான் எனப் பின்பு புரிந்தது. மின்சாரக் اتيكي குமிழில் கை வைத்துப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது. சம்சாரத்தை மின்சாரத்திற்கு ஒப்பிடுகிறார்கள். ஆனால் பெண்ணுக்கு மின்சாரத்தில்
கை வைப்பது என்றால் சரியான பயமாக இருந்தது.
அம்மா எனது காதுக்குள் தொன தொணத்தபடியே இருந்தார். பிள்ள சாமி வீட்டுக்குள்ள விளக்கில்ல இருண்டு கிடக்குது என்ற படிக்கு.
எனக்கும் அன்று விடிந்ததிலிருந்து பல வேலைகள் மண்டைக்குள் குடைந்தபடி கிடந்தன. சாமி வீடு பற்றியும் மின் குமிழ் பற்றியும் நினைக்க நேரம் போதவில்லை. வெளியலுவல்களை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது இருள் மூடத் தொடங்கியிருந்தது.
“லைற்றைப் பற்றி ஒருத்தரும் யோசிக்கல என்ன? உங்களுக்கு கடவுள் பக்தி இருந்தாத்தானே வீடு இருட்டா இருக்கிறதப் பற்றி யோசிப்பியள். நான்தான் இனி விளக்கக் கொழுத்தி வைக்க வேணும்.” அம்மாவின் கடவுள் பயமும் மின்சாரத்தின் மேலுள்ள பயமும் அப்போது புரிந்தது.
சாமி அறைக்குள் எனக்குப் பல வேலைகள் காத்துக் கிடந்தன. நாளை மாமாங்கப் பிள்ளையார் கோயில் கொடியேற்றம். அதற்குப் போக வேண்டி புதிதாகத் தைத்து வந்த “பிளவு’சைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று போட்டு அளவு பார்க்க வேண்டும்.
கடன் வாங்கியவர்கள் திருப்பித்தந்த பணம் மேசையில் கிடந்தது. அதை எடுத்து அலுமாரியில் வைத்துப் பூட்ட வேண்டும் இதற்கெல்லாம் விளக்குச் சரிவராது. மின்சாரம் துலங்கினால்தான் முடியும்.
9ேங்கி

அம்மா மீண்டும் என்னிடம் வருகிறாள். “பிள்ள அப்பா வந்திட்டார். அவரிட்ட ஒருக்காச் சொல்லி பல்ப்ப சரிப்படுத்து பாப்பம்” என்கிறாள். “சரி சரி பேசாம இருங்க. சொல்றன்” என்றேன் எரிச்சலுடன்.
இனிச் சரி, ஒரு வேலையைச் செய்து முடிப்பதென்றால் அப்பாவைப் பூப்போட்டுக் கும்பிட வேண்டும். இன்று நான் “பிளவுஸ்’ போட்டுப்பார்த்த மாதிரித்தான்.
வேலைத் தலத்தால் வந்து உடை மாற்றி தலை தடவிக் கொண்டு மேசையில் இருந்த வெற்றிலைப் பெட்டிக்கு அருகில் செல்கின்ற அப்பாவை அழைக்கின்றேன். “ஒருக்கா சாமியறைக்குள் போய் அந்த பல்ப்பக் கொஞ்சம் ஆட்டி விடுங்களன். இரவில இருந்து பத்தல் ல.” அப்பாவிடமிருந்து எந்த ஆரவாரமும் இல்லை. வெற்றிலையை எடுத்து இரண்டாகக் கிழித்து காம்மை நோண்டியபடி “இரு வாறன்’ என்றார்.
நானும் பொறுத்தபடி நிற்கின்றேன். இவர் வெற்றிலைப் பெட்டிக்கு பக்கத்தில போனார் என்டால் விடியும். வெற்றிலையைக் கிழித்து எடுத்து காம்பை வெளியே எறிந்து சுண்ணாம்பை எடுத்து அதில் தடவவே பத்து நிமிடம் பிடிக்கும்.
எனக்கு நேரம் போய்க் கொண்டிருந்தது. அம்மா அப்பாவைப் புதினம் பார்க்க கதிரையில் வந்து அமர்ந்து கொண்டாள். அப்பா வெற்றிலையை வாய்க்குள் குதப்பி முடிப்பதற்குள் நான் ஒரு கிழிந்த பாவாடையைத் தைத்து முடித்திருந்தேன்.
இது எதனையும் தெரிந்து கொள்ளாமலேயே அப்பா காலில் வேலைவிட்டு வந்து கழற்றிய செருப்பை மாட்டுகிறார். வெளியே முற்றத்தில் கிடந்த பிளாஸ்டிக் கதிரையைக் கையில் பிடித்துக் கொண்டு சாமியறைக்குள் நுழைகிறார்.
இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிற்கு ரெளத்திரம் கிளம்புகிறது. “சாமியறைக்குள்ள செருப்போட என்ன சாதாரணமாகப் போகுது இந்த மனுஷன்! ஒரு பல்ப்பத் தட்டி விடுகிறதுக்கு இவ்வளவு ஆயுதம் தேவ இவருக்கு.” கோபத்தின் சன்னதம் கொண்டு அம்மா அப்பாவைத் திட்டித் தீர்த்தாள்.
அப்பாவோ எந்த மின்சாரத்திற்குப் பயப்படுவது என்று புரியாமல் கண்கள் பிதுங்கியபடி கதிரையில் நின்றார்.
0ேர்

Page 13
பன்மொழிப்புலவர். த. கனகரத்தினம்
கலைச் சொல்லாகத்தில் ஈடுபட்டுள்ளஅறிஞர்கள் ஐந்து முறைகளைக் கையாள்கின்றனர். அவற்றுள் ஒன்றுதான் பழஞ் சொல்லைப் பயன்படுத்தல். பழஞ்சொல்லைப் பயன்படுத்தலில் பண்டைய இலக்கியங்களில் பயின்று வந்த சொற்களை மீண்டும் வழக்குப் பெறச் செய்கின்றோம். சங்க இலக்கியங்களில் பயின்று வந்த எத்தனையோ அருமந்த சொற்கள் வழக்காறற்றுப் போய்விட்டன. பொருள் பொதிந்த அச் சொற்களைக் கலைச் சொல்லாக்கலிற் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழைப் போலச் சொல்வளமுள்ள மொழி உலகத்தில் வேறெதுவுமில்லை. ஆயினும் ஆங்கிலக் கலைநூல்களை மொழிபெயர்க்க போதிய சொற்கள் தமிழில் இல்லையே என்ற ஒரு குறை அடிக்கடி கூறப்படுவதையும் நாம் கேட்கிறோம். ஆங்கிலம் எத்துணையோ சொல்வளம் மிக்கதெனக் Qa5IT6 (S6) stiff, 25L/Sggj6ft 6T L6 (Great Grand Father),038Eust 6ir(Great Great Grand Father), பகல், வெயில் முதலிய பல பொருள்களை உணர்த்த தனிச்சொல் கொண்டிருக்கிறதா? இல்லை. தமிழில் அருந்தமிழ்ச் சொற்கள் இருந்திருக்கின்றன. ஆனால், பல சொற்கள் உலக வழக்கிறந்து விட்டன. நூல் வழக்கிறந்த சொற்கள் அகராதியிற்றானும் இல்லாதொழிந்தன. காரணம் தமிழில் ஏழாம் நூற்றாண்டுக்கு முன் அகராதியிருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டுக்கு முன் விரிவான அகராதிகளும் இருந்தில. ஆதலினாற்தான் வழக்கிறந்த சொற்களெல்லாம் மீளா இருளில் மூழ்கி விட்டன. மேலும், எஞ்சிய சொற்களையும் வழங்காமையினால் அவை வழக்கிறந்தன. இவ்வாறு நீண்ட காலம் வழங்காத சொற்கள் இன்று அருஞ் சொற்களாகத் தோன்றுகின்றன.
பண்டித புலவர்.ஞா.தேவநேயனார் தென்னாட்டில் தொன்று தொட்டு உலக வழக்காக வழங்கி வரும் சொற்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். அவை பற்றி இன்னொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார்.
தென்னாட்டார்க்கு எளிய சொற்களாயினும் ஏனையோருக்கு அவை அரிய சொற்களேயென்பதையும் அவர் குறிப்பிடுகின்றார். அவர்குறிப்பிடும் சொற்களாவன.
69ங்க
 

அவசியம் என்பதைக் குறிப்பிடும் சொல் - அகத்தியம் முறையீடு என்பதைக் குறிக்கும் சொல் - ஆவலாதி குறிப்பிட்ட இடம் என்பதைக் குறிக்கும் சொல் - இலக்கு
அறை என்பதைக் குறிக்கும் சொல் - அரங்கு உத்தியோகம் என்பதைக் குறிக்கும் சொல் - அலுவல் தடை என்பதைக் குறிக்கும் சொல் - குதாவிடை சுத்தம் என்பதைக் குறிக்கும் சொல் - துப்புரவு ஜனம் என்பதைக் குறிக்கும் சொல் - நரல்
மேலதிகாரிகள் என்பதைக் குறிக்கும் சொல் மேலாள்
இவ்வாறு அழகான சொற்களிருப்பவும் அயற் சொற்களை வழங்கினர். தமிழின் தன்மையும் தூய்மையும் வளமும் கெடும். அத்துடன் நல்ல தமிழ்ச் சொற்களின் பொருளும் இழக்கும். உதாரணமாக ‘உயிர்மெய்" என்ற சொல்லைக்காட்டலாம். இது பிராணி எனப் பொருள் தந்து நின்றது. அதாவது உயிரையுடையமெய் - பிராணி, பிராணி போல உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்தை உயிர்மெய் என்கிறோம். அது உவம ஆகுபெயர். ஆனால், பிராணி என்பது வடசொல். இதை வழங்கிய பின் நல்ல, தென் சொல்லாகிய உயிர்மெய் வழக்கிறந்து விட்டது. பொருளும் இழந்து விட்டது.
உத்தியோகம் என்ற சொல்லுக்கு அலுவல் என்பது இலங்கை மக்கள் வழக்கில் பரவலாக வந்துள்ளது. உத்தியோகத்தர் என்பதை அலுவலர் என்கிறோம். உத்தியோக தலத்தை காரியாலயம் என்று கூறாது அலுவலகம் என்று வழங்குகின்றோம். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பனவும் வழக்கில் வந்துள்ளன.
சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் வளர வேண்டுமென்பதே எமது விருப்பம். இவை நடைபெறாவிட்டால் நல்ல தமிழ் சொற்களைத் தானும் தரமறியா நிலை ஏற்படும். உதராணமாகத் தீர்மானம் முடிவு சேர்க்கக் கருதியது என்ற பொருள் தரும். என்பது தூய தென் சொல். அவ்வாறிருக்கவும் இதன் பொருளை அறியாது வடசொல் எனக் கருதி ஒதுக்குகின்றனர் தூய தமிழர் சிலர். எனவே ஆர ஆய்க, ஆய்ந்த பின்பு முடிவு செய்க.
9ேங்கி

Page 14
தவள அபிவிருத்தியில் 6ải பிரகாஷ்ணி ಅಗಣಿಜ್ಙ
புவியியல் சிறப்புக் கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம்
அறிமுகம்: உலகின் இயக்கத்திற்கு மனிதவளம் இன்றியமையாத ஒன்றாகும். மனிதவளம் இல்லையென்றால் உலகம் ஒரு சூனியப் பிரதேசமாகவே காணப்படும். மனிதவளம் இயற்கை வளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற போதிலும் கடந்த சில தசாப்தங்களில் மருத்துவ துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் அவ்விதமான ஒரு எண்ணத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்த வகையில் மனிதவள அபிவிருத்தி என்பது “மனிதனது உருவம், தோற்றப்பாடு உட்பட அவனது அறிவு, செயலாற்றல் திறன் விருத்தி, தொடர்பாடல் விருத்தி, அறிவு பிரயோக விருத்தி, தொழில் நுட்ப திறன் சார்ந்த விருத்தி என்பவற்றுடன் அவனது ஆளுமை, பண்பட்டதான வாழ்க்கை முறை, கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றை பேணுவதில் ஏற்பட்ட விருத்தி என வரைவிலக்கணப்படுத்தலாம்.
இவை மறைமுகமாக மனிதவள அபிவிருத்தியை குறித்து நின்றாலும் நேரடியாக மனிதவள அபிவிருத்தி என்னும் போது நாட்டின் பொருளாதார உற்பத்தி ஆற்றல், உற்பத்திவேகம், சமூக கட்டமைப்பினை உருவாக்குதல் என்பவற்றில் மேற்கொள்ளப்படுகின்ற பங்களிப்பினையே மனிதவள அபிவிருத்தி அடிப்படையில் குறித்து நிற்கின்றது.”
மனிதவளத்தை அளவிடும் குறிகாட்டிகளில் கல்வி, சுகாதாரம், ஊழியப்படை என்பன உள்ளடங்குகின்றன. இவற்றினுடைய விருத்தியினாலேயே மனிதவளம் என்பது சிறப்புடையதாகிறது. இதில் கல்வியானது மிக முக்கியமானதாகவும் ஏனைய இரணர் டு குறிகாட்டிகளுக்கு அடிப்படையானதாகவும் காணப்படுகின்றது. மனித வாழ்க்கையின் சகல
9ேழி 20

அம்சங்களின் மேம்பாடும், முன்னேற்றமும் கல்வியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. 21 ம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டு , தகவல் மைய நூற்றாண்டு என்றும், அந் நூற்றாண்டின் சமூகம் அறிவு சார் சமூகம் என்றும் வர்ணிக்கப்படுகிறது.
கல்வி என்பது முதுகெலும் பைப் போன்றதாகும். தனி மனித அபிவிருத்தியில் மட்டுமன்றி சமூகம் மற்றும் நாட்டின் அபிவிருத்திற்கு கல்வியே உந்து சக்தியாக திகழ்கின்றது. கல்வித் துறையில் எழுச்சி பெற்ற சமூகங்கள் தேசிய நீரோட்டத்தில் இலகுவாக இணைந்து கொள்ளும் நிலை உருவாகும். எனவே ஒரு நாட்டின் கல்வித் திட்டம் சிறந்த முறையில் உருவாக்கப்படுவதோடு கல்வித் துறையானது சிறப்பாக இயங்குவதற்கும் வித்திடப்படுதல் வேண்டும்.
மனிதவள அபிவிருத்தியில் கல்வியின் பங்களிப்பு தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள். 01. 1990 Psacharo Polos என்ற ஆய்வாளர் கல்வியின் மீதான முதலீடு பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பதை 1973 இல் 32 நாடுகளிலும், 1985ல் 60 நாடுகளிலும் மேற்கொண்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு கருத்து வெளியிட்டுள்ளார். இவருடைய ஆய்வின் மூலம் கண்டறிந்த முடிவுகளாக .
(அ) கல்வியின் மீதான முதலீடுகளின் விளைவாக சமூகம் அடைகின்ற நன்மைகளைவிட தனியாட்கள் அடைகின்ற நன்மைகள் அதிகமானவை. (ஆ) ஆரம்பக் கல்வியில் ஏற்படும் முதலீடானது உயர் கல்வியை விட அதிக பயனை தருகின்றது. (இ) கல்வியின் விளைவுவீதம் அதிகமானது. ஆனால் கல்வியின் மீதான முதலீடு குறைவாகவே காணப்படுகின்றது. (ஈ) கல்வி முதலீட்டில் ஆம்பக் கல்விக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். (உ) பெண்கள் கல்விச் செயற்பாட்டில் அதிக அளவில் பங்கு பற்றும்போது ஏற்படும் விளைவுகளும் பயன்களும் ஆண்களின் பங்கு பற்றலுடன் ஒப்பிடக்கூடியவை. (ஊ) தொழில்சார் கல்வியில் செய்யப்படும் முதலீடுகளால் பெறப்படும் நன்மைகளை பொதுக் கல்வியில் இருந்தான முதலீட்டில் இருந்தும் பெற முடியும்.
இவர்

Page 15
(எ) பொதுவாக பாடசாலைக் கல்வியின் மீதான முதலீட்டினால் கிடைக்கும் விளைவு வீதமானது 10 இற்கும் அதிகமானதாகும்.
02) Wheeler என்பவரின் ஆய்வின்படி “எழுத்தறிவில் ஏற்படும் மாற்றங்கள் உற்பத்தி வெளியீட்டில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எழுத்தறிவானது கருவளத்தை குறைக்க உதவும்” என்றும் கூறியுள்ளார்.
03) Denison என்பவர் “உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பிற்கு கல்வி அறிவில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணமாகும். அத்துடன் முழுமையான ஆராய்ச்சி , அவதானம், அனுபவம், என்பவற்றால் கிடைக்கப்பெற்ற தொழில்நுட்ப முகாமைத்துவ அறிவு என்பன உற்பத்தியில் பங்களிப்புடன் மனிதவள அபிவிருத்தியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.” என்றும் கூறியுள்ளார்.
04) Corner 1991 இல் மனிதவள அபிவிருத்தி என்பது “இன்றைய கால கட்டத்தில் நவீன தொழில்நுட்பக் கல்வி / நவீன இலத்திரனியல் பற்றிய கல்வி / தொடர்பாடல் தொடர்பான தொழில்நுட்பக் கல்வி என்பவற்றை கட்டாயமாக உள்ளடக்கி இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
05) Welch (1970), Grichee (1964) என்பவர்களினால் ஐக்கிய அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி விவசாய கல்வியில் ஏற்பட்ட 10 % முன்னேற்றமானது விவசாய உற்பத்தியில் 3-5 % அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஆனால் நிலம், உரம் இயந்திர சாதனங்கள் என்பவற்றில் ஏற்பட்ட 10% அதிகரிப்பு விவசாய உற்பத்தியில் 1-2 % அதிகரிப்பையே ஏற்படுத்தி உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
06) Kali Barath என்ற ‘பண்டைய சமூகங்களில் உடல் வலுவுள்ளவன் மானியமுறை சமூகத்தில் நிலவுடைமையானதும், முதலாளித்துவ சமூகத்தில் மூலதனத்தை உடையவனும் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் இன்றைய நவீன சமூகத்தில் கல்வி அறிவுடையவனே பெறுகின்றான்” என்றார்.
07) 1984 இல் மெக்சிகோவில் நடைபெற்ற உலக மக்கள் தொகை மாநாட்டில் Schutz என்பவர் “மனித குலத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதில் கல்வி அறிவிலும் மக்களின் தராதரத்திலும் இடப்படும்
9ேர்தி

முதலீடு முக்கிய இடம்பெறும் என்றும் வறிய மக்களின் நலனை முன்னேற்ற உதவக்கூடிய உற்பத்திக் காரணிகள், நிலம், சக்திவலு, பயிற் செய்கை நிலம் என்பவற்றை விட அதற்கான முக்கிய காரணிகள் கல்வியறிவும் மக்களின் தராதரங்களில் ஏற்படும் பண்பு ரீதியான முன்னேற்றமுமே” என்றும் கூறியுள்ளார்.
வளர்முக நாடுகளில் மனிதவள அபிவிருத்தியும் கல்வியும் பெரும்பாலான வளர்முக நாடுகள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியை அடுத்து சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு ஒன்றிணைந்த வகையில் சமூக அபிவிருத்தியும் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வளர்முக நாடுகள் தமது தொழிற்படையை வளப்படுத்திக் கொள்வதற்கு 1970 களில் உருவாகிய புதிய கண்ணோட்டத்திற்கு அமைவாக கல்வி வளத்துடன் தொடர்புடைய மனிதவளம் என்ற தொனிப்பொருளில் பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் கொள்கைளையும் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறது.
ஆரம்பக் கல்வி என்பது பல நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக இலவசக் கல்வியின் அறிமுகமானது இலங்கையில் 1945ம் ஆண்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந் நாட்டினுடைய எழுத்தறிவு வீதம் உயர்வடைந்து வருகின்றது.
அட்டவணை -1
ஆண்டு எழுத்தறிவு% 1953 .4
(e) leis 20

Page 16
எனவே கல்வி தொடர்பாக எதிர் நோக்கப்பட்ட சவால்கள் கூடுமான வரையில் குறைத்துக் கொள்ளும் முகமாக பல செயற்றிட்டங்கள் வகுத்தமைக்கப்பட்டன. அந்த வகையில் 5 தசாப்பதங்களாக வளர்முக நாடுகளில் கல்வித் துறை சார்பு ரீதியில் முன்னர் இருந்ததைவிட முன்னேறிய ஒரு நிலையில் காணப்படுகின்றது.
அட்டவணை -2 எழுத்தறிவு வீதம் 1985 - 2005
வலயங்கள் 1985(%) 1995(%) 2005(%)
TL M F TL M F TL M F உலகம் 72.579.7 65.4 77.483.6 71.2 81.7 86.7 76.1 வளாச்சி அடைந்த நாடுகள் 97.5 98.4 96.7 98.798.9 98.4 99.2 99.3 99.1 வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் 62.9 73.0 52.5 70.478.9 61.7 76.5 83.3 69.3 வளர்ச்சி
அடையாத நாடுகள் 40.5 51.9 29.2 48.859.5 38.1 56.7 66.3 47.0
TIL - மொத்த எழுத்தறிவு M n ஆண்கள் F பெண்கள்
உலகமயமாதல் காரணமாக இப்போது உலகம் ஒரு கிராமமாக சுருங் கிவிட்டது. உலகமயமாக கலி நிலைமைகளுக்கு ஏற்ப கல்வித்துறையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது முக்கியமாக உயர் கல்வித் தளநிலையில் உலகளாவிய ரீதியிலும் அபிவிருத்தியடைந்து நாடுகளில் பல விருத்திச் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால்கல்வியில் சாதக பாதக நிலை ஏற்பட்டு வருகின்றன.
கல்வித்திட்டத்தை தமது நாட்டுக்கு பொருத்தமான முறையில் தயாரித்துக் கொள்ளமுடியாமைக்கு உலகமயமாக்கமும் ஒரு காரணம் என்று
9ேங்கி

கூறப்படுகின்றது. உலக மயமாக்கலினுடாக கல்வித்தர மேம்பாடுகளும் உருவாகும் என்ற போதும் கல்விக்கான முதலீடு அதிகரிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனால் வறிய கல்விக்கென முதலீடுகளைச் செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகும். இந் நிலையில் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படுகையில் உலகமயமாக்கலை அனுசரித்துக் செல்லக்கூடிய அளவுக்கு விடயங்கள் உள்ளடக்கப்படுவதும் அவசியமாகின்றது.
அட்டவணை - 3
எழுத்தறிவு வீதம் 1985 - 2005
வலயங்கள் நாடுகள் 1985 1995 2005
TL M F TL M F TL M F
உபசகாரா ஆபிரிக்கா 145.6 56.7 134.9 156.8| 66.6 47.3 166.9171.9 59.2 அராபிய நாடுகள் 46.4 59.9 32.2 56.6 68.4 44.2 65.9 75.5 55.9 லத்தின்
அமெரிக்கா/ கரீபியின் 82.4 84.3 80.5 86.6 87.7 85.5 89.6 90.1 89.1 கிழக்கா சியா / ஒசானியா 75.2 84.7 65.3 183.6 90.6 176.3 189.8 194.7| 84.7 தென்னா சியா 42.9 56.3 28.5 50.2 62.9 36.6 57.2 68.8 44.9 சீனா 72.5 83.4 60.9 81.5 89.9 72.7 88.5 94.5 82.3 இந்தியா 44.6 58.9 29.3 52.0 65537.7 59.3 71.3 46.4
TIL - மொத்த எழுத்தறிவு M ஆண்கள் F பெண்கள்
மனிதவள அபிவிருத்தியில் கல்வி என்கின்ற மூலக் கூறானது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றபோதிலும் வளர்முக நாடுகள் தமது சுதந்திரத்தின் ஆரம்ப காலங்களில் தமது தொழிற்படையை வளப்படுத்துவதில் பின்வரும் சவால்களை எதிர் நோக்கியது.
9ேழி

Page 17
01. கல்வி வசதிகளை பெருக்குவதற்கு தேவையான நிதி வசதிப் பற்றாக்குறை 02. கல்வி என்பது சமூக அபிவிருத்தியின் ஒரு அடிப்படை என்கின்ற விழிப்புணர்வு மக்களிடையே காணப்படாமை. 03. அரச மட்டத்தில் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்றமை. 04. கல்வியோடு கூடிய வசதிகளில் காணப்பட்ட பற்றாக்குறை (பாடசாலைகள், ஆய்வுகூடங்கள், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலை உபகரணங்கள் ) 05. தொழில்நுட்பம் சார்ந்த தொழிற் கல்வி ஒன்றினை வழங்கக்கூடிய எந்தவிதமான நிறுவனங்களும் காணப்படாமை. 06. ஆண்களைப் பொறுத்தவரை மேலதிகமாக கற்பதில் (உயர் கல்வி) தடைகள் காணப்படாவிட்டாலும் பெண்களைப் பொறுத்தமட்டில் இன்றைய நிலைபோல் அல்லாது அக்கால கட்டத்தில் கல்வி கற்பதில் பல தடைகள் காணப்பட்டமை. இதற்கு சமூக சமய கலாசார காரணிகள் பங்களிப்புச் செய்துள்ளது. 07. ஐக்கிய நாடுகள் தாபனத்தினி UNESCO அமைப்பு உருவாக்கப்பட்டபோதிலும் அதனது சேவைகள் வளர்முக நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்டே காணப்பட்டமை. 08. சர்வதுேச அடிப்படையிலான நிதி உதவிகள் அக்காலங்களில் காணப்படாமை. 09. கல்வி தொடர்பான பொருத்தமான திட்டங்களை வகுப்பதற்கு போதுமான அளவு ஆலோசகர்கள், திட்டமிடலாளர்கள், வளர்முக நாடுகளில் காணப்படாமை. 10. ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர்களுக்கான உயர்கல்வி, அவர்களுக்கான சிறப்புத் தேர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டமை. 11. உயர்கல்வி அமைப்புக்களான பல்கலைக்கழகங்கள் , தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வியல்கல்லூரிகள் போன்றன நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்பட்டமை.
வளர்முக நாடுகள் எதிர் நோக்கிய கல்விச் சவால்களை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வளர்முக நாடுகளில் பல்வேறான சவால்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் கல்விக் கொள்கைள் வகுக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் உலகளாவிய பொருளாதார கட்டமைக்கு ஏற்ற வகையில் கல்விச்
9ேங்கி

செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது. இத்தகைய செயற்றிட்டங்களை அமுல் படுத்திய வேளையில் உலகளாவிய பொருளாதார கட்டமைப்பு மாத்திரமின்றி தமது சொந்த நாடுகளின் பொருளாதார கட்டமைப்புக்களும் கருத்தில் கொள்ளப்பட்டது.
இந் நாடுகளில் கல்வி தொடர்பான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டது.
(உதாரணம்)
6 கட்டாயக்கல்விச்சட்டங்கள்
9 சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக எடுக்கக்கூடிய
எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்கள்.
வருடாந்த வரவு செலவு திட்டத்தில் கல்விக்காக கணிசமான தொகை ஒதுக்கப்பட்டு வளர்முக நாடுகளின் கல்விவசதிகள் விஸ்தரிக்கப்பட்டது. அந்தஅடிப்படையில் கிராமிய மட்டத்தில் பாடசாலைகளின் உருவாக்கம், தேவைக்கேற்ப ஆசிரியர்களின் நியமனம், ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சி நடவடிக்கைள், பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகள் விஸ்தரிக்கப்பட்டமை, கட்டடங்கள் உபகரணங்கள் தளபாடங்கள் என்பன போதுமான அளவில் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டமை போன்ற விடயங்கள் இந்நிதி ஒதுக்கீட்டின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. (உதாரணமாக)
அட்டவணை - 4 இலங்கையின் மொத்த செலவிலி கலி விக்காக ஒதுக்கப்பட்ட
ஆண்டு நிதி ஒதுக்கீடு
2008 2.3
2.1
வளர்முக நாடுகள் பலவற்றில பல கலைக் கழகங்களினி உருவாக்கம்இடம்பெற்றது.
9ேங்கி 20

Page 18
(உதாரணம்-1)
இலங்கையில்
9 1970 ம் ஆண்டில் 04 பல்கலைக்கழகங்களும் 9 1998 ம் ஆண்டில் 12 பல்கலைக்கழகங்களும் * தற்போது 15 பல்கலைக்கழகங்கள் என உருவாக்கம் பெற்றுள்ளது.
(உதாரணம் -2)
இந்தியாவில் பல்கலைக்கழக உருவாக்கம் என்ற காலப்பகுதியை நோக்கின் இது 1917 ஆம் ஆண்டு தொடக்கம் 1947 வரை நீடித்தது. 1887ல் அலகபாத் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின் ஏறக் குறைய 3 தசாப்தங்களுக்கு பல கலைக் கழகம் - எதுவும் உருவாக்கப்படவில்லை. பின்னர் 1939இல் ஏற்பட்ட அரச தீர்மானம் புதிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறியது. மேலும் 1917இல் நியமிக்கப்பட்ட கல்கத்தா பல்கலைக்கழக ஆணைக்குழுவும் புதிய பல்கலைக்கழகங்களின் உருவாக்கம் பற்றி பரிந்துரை செய்தது. இதனி பலனாக 1947இல் பல புதிய பல கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திலிருந்து உயர் கல்வி என்ற காலப்பகுதியை நோக்கும் போது தற்போது உயர் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் கலை,விஞ்ஞானம், வர்த்தகம், தொழில்சார் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கூடாக வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப கல்லூரிகளின் உருவாக்கமும், அதன் அடிப்படையில் தொழிநுட்பம் சார்ந்த கல்வியின் அறிமுகங்களும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஒருசில நவீன கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சில வளர்முக நாடுகளில தற்போதைய கல வித் திட்டம் மாணவர்களினி தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் வளர்ப்பதற்கு பதிலாக முரண்பாட்டுச் சூழ்நிலைகளை தோற்றுவிப்பதன் காரணமாக அரசாங்கங்கள் கல்விமறுசீரமைப்பு தொடர்பாக பல விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
உதாரணமாக 9 இலங்கை ஆட்சி மாறினாலும் மாறாவிட்டாலும் கல்விமுறையில் மாற்றம் ஏற்படாது இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகிறது. 9 ஒன்பதாம் தரத்தில் தேசிய பரீட்சை ஒன்றினை நடத்துவது குறித்தும் சித்தியடையாதவர்களை தொழிற்பயிற்சி பாடநெறிகளில் சேர்த்துக் கொள்வது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
9ேவழி

9 ஐந்தாம் தரத்தில் நடத்தப்பட்டு வரும் புலமைப்பரீட்சையை எதிர்காலத்தில் ஏழாம் தரத்தில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் எதிர்கால கல்வி மறுநீரமைப்பின் ஊடாக ஆளுமை மற்றும் தன்னம்பிக்கை மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான வித்து இடப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெணி களை பொறுத்தமட் டி ல சமூக கட்டுப் பாடுகள் களைந்தெறியப்படுவதற்கு தேவையான ஆரம்ப விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் அரச மட்டத்தில் இதற்கான முயற்சிகள் குறைவாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் பெண்கல்வியின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் பெண் சமூகத்தினர் மத்தியில் விழிப்பணர்வின் ஆரம்பம் இடம்பெற்ற காலப்பகுதியாக வளர்முக நாடுகளின் சுதந்திரத்தை அடுத்த காலப்பகுதிகள் காணப்படுகின்றது.
பெண் கல்வியும் தொழிற்படையும் ஒரு நாட்டின் தொழிற்படையில் ஆண் பெண் இரு பாலாரதும் பங்களிப்பு சமனாக இருக்கும் வேளையில் அந்நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உயர்ந்த நிலையில் காணப்படும். ஆனால் வளர்முக நாடுகளில் உற்பத்தி சார்ந்த முயற்சிகளில் காட்டுகின்ற பங்களிப்பு ஆண், பெண் இருபாலாரிடையேயும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது.
அட்டவணை - 5
இலங்கையின் தொழில் புரியும் ஆண்,பெண்களின் பங்களிப்பு
ஆண்டு ஆண் பெண்
(%) (%)
1996 1.6 2000 67.2 33.9
2006 6 மாதம்) 2006 (பின்னருள்ள 6 மாதம்)
9ேண்க

Page 19
அட்டவணை - 6 பெண்களின் உற்பத்திப் பங்களிப்பு நாடுகள் 1965
பங்களா 12
இ T 24 பாகிஸ்கான் 12
இலங்கை 27
இவ்வாறாக பங்களிப்பு கடந்த ஒரிரு தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து
வருகின்ற போதிலும் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது பெண்களின்
உற்பத்தி சார்ந்த பங்களிப்பு வளர்முக நாடுகளில் குறைவாக இருப்பதற்கு
பின்வரும் சமூக பொருளாதார காரணிகள் அடிப்படையாக அமைகின்றது.
01. பெண்களின் கல்வியறிவு குறைவாக இருத்தல்
02. பெண்களின் உடலமைப்பு
03. சமூகக் கட்டுப்பாடு
04. ஆண்பெண் சமத்துவமற்ற நிலை
05. அரச, தனியார், தொழில்களுக்கு பெண்களை விட ஆண்கள் அதிகம
ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அட்டவணை - 7
எழுத்தறிவு வீதம் (ஆண், பெண்)
ஆண்டு நாடுகள் மொத்த எழுத்தறிவு ஆண்கள் பெண்கள்
(%) (%) (%) 2000 பிலிப்பைன்ஸ் 92.6 92.5 98.7 2000 மாலை தீவு 96.3 96.2 96.4 2001 I இந்தியா 61 73.4 47.8 2001 இலங்கை 90.7 92.3 89.1 2005 நைகர் 28.7 42.9 15.1
இவ்வட்டவணையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பொதுவாக வளர்முகநாடுகளில் பெண்களின் எழுத்தறிவு வீதத்தை விட ஆண்களின் எழுத்தறிவு வீதம் உயர்வாக காணப்பட்ட பொழுதிலும் பிலிப்பைன்ஸ் , மாலைதீவு போன்ற நாடுகளில் இந் நிலமை எதிர்மாறானதாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
9ோழி
 

இலங்கையில் பெண்கல்வியானது 1965ல் 65% ஆகவும், 1987 இல் 87% ஆகவும், 1994ல் 87.9% ஆகவும், 2004ல் 94.5% ஆகவும் உயர்வடைந்து செல்கின்றது. அடுத்ததாக இரண்டாம் நிலைக்கல்வி கற்ற பெண்களின் வீதத்தை வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது 1987 களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக பங்களாதேஷரில் 11% ஆகவும் சிங்கப்பூரில் 87% ஆகவும் அவுஸ்திரேலியாவில் 99% ஆகவும், ஜப்பானில் 97% ஆகவும் இருக்கின்றது.
இவ்வாறு இருப்பினும் சமூக, சமய, கலாசாரக் கராணிகள் என்றஅடிப்படையில் முன்னைய காலத்தில் ஒரு சிலர் எடுத்துக் காட்டிய கட்டுப்பாடுகள் பின்னர் களைந்தெறியப்பட்டு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பெண்களின் கல்வி விருத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பானது இனறைய காலங்களில் தொழிற்துறைகளில் மிகப் பெரும் பங்களிப்பினை செலுத்தி வருகின்றது.
ஆசியநாடுகளிலி தொழிற்படையை கலிவித்தரம் கொண்டதாக மாற்றியமைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை இன்றுவரை தொழிற்படை அளவு வளப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாமல் இருப்பதை இனம்காண முடிகின்றது. குறிப்பாக தெற்காசிய நாடுகளின் தொழிற்படை, தொழிற்கல்வி தொழிற்பயிற்சிக் கல்வி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது நவீன பொருளாதார வேகத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கவில்லை.
மேலும் சிறந்த தொழிற்படையை உருவாக்குவதில் கணனிக்கல்வி தொடர்பான அறிவு இன்றைய நவீன யுகத்தில் முக்கியதொன்றாக காணப்படுகின்றது. ஆனால் ஆசியநாடுகளில் கணனிக் கல்வி தொடர்பாக அடிப்படை அறிவு கூட முழுமையாக மக்களிடையே போய்ச்சேராத அளவிற்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது. இவ்வாறு இருப்பினும் சில நாடுகளில் கணனிக்கல்வி மக்களிடையே உள்வாங்கப்பட்டாலும் வளாச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் கணனிக்கல்வி அறிவு 2009 இல் 20.3% ஆக (ஆனூற். 22.0%, பெண் - 18.7%) காணப்படுகின்றது.
9ேங்க

Page 20
அட்டவணை - 8 கணனிக்கல்வி அறிவு 2009 - இலங்கை
6Alա5] கணனிக்கல்வி அறிவு
(%) 05 - 09 10.2
10 - 14 31.5
15 - 19 47.6
20 - 24 40.6
25 - 29 27.7
30 - 34 19.4
>35- 39 15.6
40 - 49 10.3
50 - 59 6.4
60 - 69 2.8
அடுத்ததாக இந்நாடுகளின் சமூக பொருளாதார பின்புலங்களின் அடிப்படையில் நோக்கும்போது கல்வித்தரத்தில் குறைவான ஒரு நிலையில் இருப்பதை இன்று வரையில் அவதானிக்க முடிகின்றது. இங்கு திட்டமிட்ட முறையில் கல்விக் கொள்கையினை கையாண்டு அதனை செம்மையான முறையில் அமுல் நடத்துவதில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது.
குறிப்பாக நிதி சம்மந்தமான பிரச்சினைகள், ஆளணிகள் பற்றாக்குறை, தொழில்நுட்ப ஆலோசகர்களது பற்றாக்குறைபோன்ற காரணிகளின் அடிப்படையில் இந்நாடுகள் தொழிற்படை பின்தங்கிய ஒரு நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் இந்நிலமையை மாற்றியமைப்பதற்கு கல்வித்துறை சார்ந்த திட்டமிடலாளர்களுக்கு பொருளியலாளர்கள் சில ஆலோசனைகள் முன்வைக்கின்றனர். அவையாவன.
01. கல்வித்துறை சார்ந்த முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். 02. கல்வி வசதிகள் விரிவாக்கப்பட வேண்டும். 03. தொழில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். 04. உலக பொருளாதார போக்கிற்கு இசைவாக நவீன கல்வித் துறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் 05. பெண்களுக்கான தொழிற்படை அமைப்புக்களை உருவாக்க

வேண்டும். 06. கல்வித்துறை சார்ந்த தெளிவான திட்டம் இருக்க வேண்டும்.
எனவே தொகுத்து நோக்கும் போது ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார,அரசியல் மற்றும் பல்வேறு துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு காரணிகளுள் கல்வி என்பது முக்கிய ஒன்றாக இருப்பதுடன், மனிதவள அபிவிருத்திக்கும் அடிப்படையாய் விளங்குகின்றது. இதனால் அனைத்து நாடுகளும் கல்வி விருத்தியடைவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு நாட்டின் மனிதவள அபிவிருத்திக்கு வித்திட்டு அதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கும் வித்திட வழிசமைக்க வேண்டும்.
DFISG) 6956 01.Rao.TV, 1991, “Readings in Human Resource Development, IBHPublishing Co.Pvt Ltd, New Delhi 02. Decey.S., 2004 “Human Development”, Published by McGraw-Hill, Newyork 03. Goh cheng, 1994, :Human and Economic Geography”, Oxford University Press, Newyork. 04. Kumar.P. 2004, “ Human Resource Development”, Capacity Building”, National TB Institute, Bangalore.
-Y
26.05.2011 அன்று காலமான மட்டக்களப்பு தமிழறிஞர், இலக்கிய கலாநிதி அமரர் வ.சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு “செங்கதிர் இன் அஞ்சலி
17.08.1918 - 26.05.2011
VS
0ோழி

Page 21
VIVIND HUMVillWI GILGISMUND
இவர் தமிழர்களின் அறிவுத் தகமையை உயர்த்தியவர். எழுதாத அரசியல் இல்லை, ஆனால் இவர் அரசியல்வாதி அல்லர். “அரசியல் அலைகள்? என்ற இவரது நூல் அதற்கோர் உதாரணம். சீர்திருத்தக்காரர்சுயமரியாதைக்காரர். எனினும் திராவிடம் பேசியது இல்லை. சாதியத்தைச் சாடினார். பார்ப்பனியத்தைப் பழித்தார். படித்த இளைஞர்களை ஒரு துடிப்புள்ள இலக்கிய களத்துக்கு இழுத்து வந்த பெருமையர். சுய நம்பிக்கையுடனான தமிழ்ப்பெண்மை தளைக்கவேண்டி அவாப்பட்டவர். ஒரு காலகட்டத்தின் கண்ணாடி, கதாநாயகன் என்று கூடச் சொல்லாம். விளம்பரம் தேடியதில்லை - வீதிகளில் இறங்கியதுமில்லை. ஆனால் மேடைகளில் விளக்கியதுண்டு; அவை இலக்கிய மேடைகள் - ஆய்வு அரங்கங்கள். தமிழ்நாட்டில் நடந்தேறிய ஒரு மெளனப்புரட்சியின் வழிகாட்டியானவர். எளிமையும் ஆளுமையும் கலந்த வள்ளுவ வாழ்க்கை நெறியுடன் வாழ்ந்து காட்டியவர். தமிழ், பெருமைப்பட்ட பேராசான். தன்னை மறைத்துக்கொண்ட சீராளன். தேடி வந்த பதவிகளைத் தவிர்க்க ஓடி ஒளிந்து கொள்ள முனைந்தவர். ஒரு பல்கலைக்கழக உபவேந்தர் பதவி கூட இவரைத்தேடி இவர் இல்லம் வந்தது. அப்படி இவருக்கு முடிசூட்டிட வந்தவர் தமிழகத்தின் அன்றைய முதல்வர். உளவியல் விளக்கங்களை முதலில் தமிழில் வெளிக்கொணர்ந்தவர். நாவல்களுக்கும் கதைகளுக்கும் அவற்றின் பாத்திரங்கட்கும் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டிப் பேசவைத்தமை இவரதுஆளுமையின் அடையாளங்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - இவை தமிழ்ப்பெண்மையின் அணிகலன்கள் என்கிறோம். ஒரு தமிழ்ப்பெண் தன் வருங்காலத்துக்கு வழி காட்டிட இவை தடையாக இருக்குமானால் இவ் நான் வகைப் பண்புகளால் பயன் என்ன? நமது பலவீனங்கள் பலங்களென எண்ணப்படுவதைத் தவிர்க்க வேண்டாமா? என "மலர்விழி யில் பெண்மைக்காகப் பேசியவர்.
பேராசிரியரின் பிறப்பு 1912 ஏப்ரல் 25ம் திகதி. சிறுவயது வறுமை இவர் உயர் கல்வியைப் பாதித்தது. ஒரு எழுதுவினைஞராக அந்த வாழ்க்கை
9ோழி
 

ஆரம்பித்தது. ஆயினும் படிக்கும் ஆர்வம் துடிக்கும் இதயமானது. 1935ல் நடந்த “வித்துவான்’ தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவர் ஆகிறார். அன்றைய பணமாக 1000/- பரிசும் பெறுகிறார், பாராட்டும் கிடைத்தது. இவரது கனவான தமிழ் ஆசிரியர் பதவி தேடிவந்தது. அதன் பின் திருமணமுமானது - பேனாவும் திறந்துகொண்டது. எழுத்தில் பேசத் தொடங்கி விட்டார். சில நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் B.O.L. பட்டம் அடுத்த இரண்டாண்டுகளுள் அதே பல்கலைக்கழகத்தின் MA இலக்கியப்பட்டம் - அதைத் தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவி. அப்புறம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சங்க இலக்கியத் திறனாய்வுக்கான ‘முனைவர்’ பட்டம் தொடர்ந்தது. பின்னான நாட்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் ஆனார். அந்த நாட்களில் இவரது நூல்களே தமிழில் அதிகம் விற்பனையாகின என அறியமுடிகின்றது. ‘வள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்” என்ற நூலைத் தொடர்ந்து ‘திருக்குறள் தெளிவுரை” என்கின்ற கைநூல் வெளியானது. சென்னை சைவசித்தாந்த நூற்பதிவுக்கழகத்தின் வெளியீடான இந்நூல் இந்தியாவிலே அதிகம் பிரதிகள் அச்சான நூல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. 2006 ம் ஆண்டில் இந்நூல்(1,100,000) பதினொரு லட்சம் பிரதிகளையும் நூற்றுக்கு மேற்பட்ட பதிப்பினையும் கடந்து நின்றது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த நாட்களில் அப்பல்கலைக்கழகத்தில் திருக்குறள் திறனாய்வுக்கான தனிப்பிரிவுஒன்று உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தால் 1965 ல் வெளியிடப்பெற்ற "English Tamil Dictionary” மிகப் பெரியதும் 1252 பக்கங்களைக் கொண்டதும் ஆகும். இதன் அளவு 111/2”X83/4”X21/2” ஆக உள்ளது. இவ்வகராதியின் ஆய்வுக்குழுவில் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்கள் எழுவர் இடம் பெற்றிருந்தனர். டாக்டர் ஆர்.பி.சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், டாக்டர் ஏ.சிதம்பரநாத செட்டியார், டாக்டர் வணசேவியர் தனிநாயகம் அடிகளார், பேராசிரியர் பி.பாலசுந்தரம், போராசிரியர் எஸ். ஆறுமுகமுதலியார் ஆகியோருடன் இவரும் இடம்பெற்றிருந்தார். இதன் மறு பதிப்பு 1981 ல் வெளியாகியிருந்தது. 74,400 ஆங்கில - தமிழ் சொற்கள் இடம்பெற்றிருக்கும் இவ்வகராதி தமிழ் கூறும் உலகிற்குக் கிடைத்த அளப்பரிய செல்வம் ஆகிறது. அந்தநேரம் இப்பேராசான் அதன் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார்.
9ேங்கி

Page 22
இவர் எழுதி ‘பாரி நிலையம் வெளியிட்டிருந்த நூல்கள்; குறுந்தொகை, முல்லைத்திணை, மணல் வீடு, ஒவச் செய்தி, கள்ளோ காவியமோ, பெற்ற மனம், பாவை, மலர்விழி, செந்தாமரை, அல்லி, இளங்கோ, மனச்சான்று, அரசியல் அலைகள், அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு என எண்பதைத் தாண்டியிருக்கிறது. நாவல்கள், சிறுகதைகள், அறிவியற் கட்டுரைகள், இலக்கிய, அரசியல் ஆய்வுகள் என்று எல்லாத் துறைகளிலும் இவர் விசுவரூபமெடுத்திருந்தார். தனித்தமிழ்ப் பெயர்கள் இவரது வரவால் நமக் குக் கிடைத்தவை. கவி அரசர் தாகூரையும் , அறிஞர்பெனாட்ஷாவையும், அண்ணல் காந்தியையும் தமிழ் உலகம் அறியவைத்தார். “ஆண்டவன் பற்றிய அறிவு மக்கட்கு இருக்குமாயின் ஊரில் இத்தனை திருவிழாக்கள் நடைபெறுமா?’ என இவரது எழுத்துக்கள் எடுத்தியம்பின.
பரிசில்கள் பல தேடிவந்தன; படைப்புக்கள் விரிந்தபோது, பாராட்டுக்களுடன் பட்டங்களும் வந்தன. தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கழகம், சாகித்திய அகடெமி என்ற அமைப்புக்களிடமிருந்து. அந்தப் பரிகளில் வந்த பணத்தை எல்லாம் வறிய மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கினார். இவர் தன் கடமைநாட்களில் ஆரம்பகாலத்திலிருந்தே ஒரு நாள் கூட ‘விடுமுறை பெற்றுக் கொண்டிராத பெருமைக்குரியவர். இது அதிசயமான ஒரு 2-60060) D.
1971ல் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். அந்தநியமனக் கடிதத்தை இவர் இல்லம் சென்று வழங்கியவர் அன்றைய முதல்வர் கலைஞர் மு.க. அப்பதவி பேரறிஞர் அண்ணாவின் ஆசைப்படி நடைபெற்றிருந்தது. அல்ல ஏற்க வைக்கப்பட்டது என்பதைப் பலர் அறியார். “ஓய்வு காலத்தில் உட்கார்ந்து எழுதவும், படிக்கவும் போகிறேன். என் ஆசைப்படி என்னை விட்டு விடுங்கள்!” என விநயமாகக் கேட்டுக் கெஞ்சினாராம் இவர். இரண்டு ஆண்டுகள் எனப் பேசப்பட்ட ஒப்புதல் மேலும் இரு ஆண்டுகள் வற்பறுத்தி நீடிக்கப்பட்டது. தன் கடமையில் இருந்த போதே காலன் இவரை(10.10.1974) கவர்ந்திட்டான். அந்தப்பதவி காலத்துள் தொண்ணுறுக்கு மேற்பட்ட விஞ்ஞான மருத்துவ நூல்கள் தமிழில் ஆக்கம் பெற்றன. மறைவுக்கு சற்று முன்னே, அமெரிக்காவின் லாஸ்டர்’ பல்கலைக்கழகம் ‘முதுமுனைவர்’ என பட்டமளித்துக் கெளரவப்படுத்தியது. எவர் கடிதம் வரைந்தாலும் பதில் எழுதும் பண்பு கடைசிவரை இருந்தது இவரிடம் என்கிறார்கள்.
மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியேற்றிருந்த நாட்களில் ஒரு நாள் மதியம் பேரூந்துள் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
9ேங்க

இவரது மாணவர் ஒருவர் இவரைப்பார்த்துவிட்டார். “சேர்! தங்களுக்காக அலுவலக வண்டியும், செலுத்துநரும் உண்டல்லவா, இந்த வெய்யிலில் இப்படிக்கஸ்டப்பட்டு பிரயாணம் செய்கிறீர்களே” என்றார். இவர் சொன்னார் “அது அலுவலகப்பணி காரணமான வண்டி, கடமைக்காகத் தரப்பட்டது. இப்போது மதிய உணவுக்காக இல்லம்போகிறேன். இது என் தனிப்பட்ட பயணம். இதற்கு அந்த வண்டியைப் பாவித்தல் எப்படி?” என்றிருக்கிறார். அவர் அதிர்ந்துபோனார்; இப்படியும் ஒரு மனிதரா என்று. யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் விழா நடந்தது. விசேடமான அழைப்பில் இவர் வந்திருந்தார். அங்கு பேசிய ஈழத்துப் பண்டிதரொருவர் இவரது தமிழ்ப்புலமை குறித்து மறைமுகமாகக் கிண்டல் செய்து பேசியிருந்தார். மேடையில் இருந்த பலர் முகம் சுழித்துப் போயினர். விழா முடிவின் பின் இவர் தங்கியிருந்த இல்லம் சென்ற அந்த விழாவின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் இவரிடம் மன்னிப்புக்கோரி நின்றார். இவரோ மிகவும் சாதாரணமாக, “அதை நான் அங்கேயே விட்டுவிட்டேன்! நீங்கள் ஏன் நினைத்தக் கொண்டிருக்கிறீர்கள், வாருங்கள்! உணவருந்துவோம்” என்றிருக்கிறார். அந்த நாட்களிடையே திருகோணமலை நகரில் ஒரு விழாவுக்குப் போயிந்தார் . இந்துக்கல்லூரிக்குப் பக்கமுள்ள பத்திரகாளி அம்மன் கோயில் மண்டபத்தில் விழா நடந்தது. தனது பாத அணிகளை வெளியே கழட்டிவைத்துப் போனார். இரவு எட்டரை மணிக்கு வெளியில் வந்தபோது பாத அணிகள் இரண்டும் காணாமல் போயிருந்தமையை அறிந்தார். எதுவும் பேசாமல் தன் தங்குமிடத்துக்கு வெறுங் காலுடன் நடந்துபோய்விட்டார். சில நாட்களின் பின் இவரது சென்னை முகவரிக்கு இலங்கையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. "ஐயா! நானே உங்கள் பாத அணிகளைத் திருடியவன். என்னை மன்னித்து விடுங்கள். என்னால் கோயில் மண்டபத்துள் வர இயலாது. உங்கள் நினைவைப்பாதுகாக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் என்னுடன் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றேன். என்னை மன்னிப்பீர்களாக!” என்றெழுதப்பட்டிருந்தது. இவர் பதில் எழுதினார், “இதில் மன்னிப்பு எதற்கு? நான் உன்னுடன் இருக்கிறேனே போதுமா?’ என்று. (இவரது பாத அணிகளைக் களவெடுத்த அந்த இளைஞன், தனது 46வது வயதில் இக்கட்டுரையாளரைச் சந்தித்திருந்தார், திருமலைக்குச்சவெளியில்)
சோவியத் ஒன்றியத்தின் மாஸ்கோ நகரிலிருந்து லெனின் கிராடிற்குப் பறந்துகொண்டிருக்கிறார் இவர். பக்கத்தில் ஒரு ரஸ்ய இளைஞன். அவனுடன் அவனது மூன்று வயதுக் குழந்தை. அந்தக் குழந்தை தந்தையின் மடியில் விளையாடிக் கொண்டிருந்த வேளை விமான
9ோழி

Page 23
ஆட்டத்தில் சற்றுத் தள்ளாடி நிலை குலைந்ததை இவர் கண்டார். தன் கரங்களால் அக்குழந்தையைப் பற்றிக் கொண்டார். உடனே அக்குழந்தை அருவருப்புடன் பார்த்தது. அத்துடன் இவர் கரம் பட்ட இடத்தை தன் துணியில் தேய்த்துக் கொண்டது. அந்த இளம் தந்தை இதைக் கவனித்தார். குழந்தையை மடியில் இருத்தியவன் ரஸ்ய மொழியில் அக்குழந்தையுடன் பேசலானான். இவருக்கு ரஸ்ய மொழி சிறிது தெரியும். அதை அவதானித்துக் கொண்டிருந்தார். அதிகம் படிக்காத ரஸ்ய மொழியைத் தவிர வேறு மொழி தெரியாத அந்த இளைஞனின் அறிவுரைகள் கேட்டு இவர் அதிர்ந்துபோனார். அப்புறம் லெனின் கிராடில் இறங்கும்போது இவரது மடியில்தான் அக்குழந்தை இருந்தது என்பது அதிசயமான உண்மையாகும். இவரிடம் அந்த இளைஞன் சொன்னான் “நான் லெனின்கிராடில் ஒரு சுரங்கத் தொழிலாளி. என் மனைவி மாஸ்கோவில் அரசபணியில் உள்ளாள். மாதத்தில் ஒரு தடவை தன் அம்மாவை பார்ப்பதற்காக குழந்தையை அழைத்துவருவேன். என் மனைவி விடுதியில்தான் தங்குகிறாள். எனவே அவளால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அடுத்த வருடம் அவளுக்கு லெனின்கிராட் நகருக்கு இடமாற்றம் கிடைத்துவிடும். அப்புறம் நாம் ஒன்றாகிவிடுவோம். உங்களைப் பார்த்ததில் எனக்கும், குழந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. இந்திய மக்கள் எங்கட்கு வேண்டியவர்கள். அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக் களைத் தெரிவியுங்கள் என்று. ஒரு ரஷ்ய சாதாரணத் தொழிலாளியின் விரிந்த கண்ணோட்டத்தை கண்டு கண்கலங்கி நின்றார்.(இது இவரது பயணக்கட்டுரையில் உள்ளது)
1965ல் ஜேர்மானிய ஆய்வுத்துறை மாணவி ஒருவர் வந்திருந்தார். ஒன்பது நாட்கள் தமிழகத்தில் தங்கி அவர் செய்த ஆய்வில் இப்படி எழுதுகிறார். “தமிழ் நாட்டில் பழைய கோட்பாடுகளுக்கு எதிரான பகுத்தறிவு சுய மரியாதைக் கருத்துக்கள் இளைஞர்களைச் சுண்டி இழுத்து வருகின்றன. பெரியார் ஈ.வெ.ரா வின் தீவிரம், அண்ணாவின் பேச்சுக் கவர்ச்சி என்பவற்றுடன் இவற்றிற்கு அப்பால் பல்கலைக்கழக மட்டத்திலும் எழுத்து, வாசிப்பு என்ற நிலையிலும் இளைஞர்களை இழுக்கும் இன்னொரு சக்தியாக ஒரு வரை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். டாக்டர் மு.வ. என அழைக்கப்படுகிறார். ஒரு மெளனப்புரட்சி தமிழகத்தில் இவரால் ஏற்படுத்தப்படுகிறது. இவரின் நூல்களே இங்கு உள்ள நூலகங்களில் அதிகம் விற்பனை ஆகின்றன.” என்றிருக்கிறார். தமிழகத்தில் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்திய பெருமை இவருக்குண்டு
(2) Gilis 2

“அழகிய ஓவியம் ஒன்று தீட்டப்படுகின்றது. தீட்டியவன் சிறந்த கலைஞன். அதன் கலை உணர்ச்சி ஒவியத்தைக் காண்பவர் உள்ளத்தில் பதியவேண்டும். அதற்குத்துணை ஒவியத்தின் அடியில் உள்ள ஒரு சிறிய குறிப்பு. ஒவியம் கண். அடிக்குறிப்பு அதை உணருவதற்கான துணை பாட்டு ஓவியம் போன்றது. பாட்டைப் பற்றிய விளக்கம் அடிக்குறிப்பை போன்ற சிறுதுணை. நற்றிணை விருந்து நூலின் முன்னுரை இது.
பதவிகட்குரிய பவிசுகளை என்றும் ஏற்றுக் கொண்டதில்லை இவர். பதிலாக பணிவினையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அந்த ஆளுமை, அரசியல் இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் என ஆழ்ந்து பரந்து கிடந்தது. திருக்குறளின் அடிநாதமாக ஒலிந்திருந்தது. இறுதிவரை (10.10.1974) இவர் வாழ்வு தமிழ் மணக்கும் கற்பூரமாக ஒளிவிட்டுத் தீர்ந்தது. இவரது எளிமைக்கு ஒரு எடுத்துக்காட்டு; தன் கடிதத்தலைப்பை இவர் இப்படி வடிவமைத்திருந்தார். மு.வரதராசன், தமிழ்ப் பேராசிரியன். பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை,6000 030
மு.வ.வின் நாவல்கள் விவாதத்துக்குரியதாக ஆக்கப்பட்டதுண்டு. தன்நிலை விளக்கம் சொல்லும் இவர் கதாபாத்திரங்கள் பற்றிய பிரதான சர்ச்சைதான் அது. இலங்கையில் பேராசிரியர் க.கைலாசபதி, தினகரன்’ ஆசிரியராக இருந்த நாட்களில் ஒரு நீண்ட விவாதம் நடந்தது. ‘நாவலாசிரியர் வரிசையில் மு.வரதராசனாரின் இடம்’ என்பது இதன் தலைப்பு. பிரபலமான அந்த விவாதத்தின் இறுதிக் கட்டுரையை எழுதியவர் காவலூர் இராசதுரை அவர்கள் என ஞாபகம்.
ஆடம்பரமின்றி அடங்குதல், புலன்களை அடக்குதல், நாவடக்கம், கற்றிந்தடங்குதல் என வள்ளுவம் சொல்லும் அத்தனை ஒழுக்கங்கட்கும் ஒன்றிப்போனவர் மு.வ.
“தனது பெருமித நிலையினின்றும் சிறிதும் திரிபுபடாது அடங்கிநடப்பவரது ஆளுமை மலையின் உச்சியைவிட மாணப்பெரிதாகும். அடக்கம் என்பது தற்கட்டுப்பாடுமாம். பெருமையை விடுவதன்று அடக்கம், பெருமை விளங்கித் தோன்றத் தற்கட்டுப்பாடாய் இருப்பதே அது.’ இவ் வரிகள் திருக்குறளினால் பேராசான் மு.வ. உள் வாங்கப்பட்டடிருப்பதை உணர்த்துகின்றது.
“நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் மலையினு மானப் பெரிது”
(அடக்கமுடைமை - குறள்: 124) 9ேர்

Page 24
குறுங்கதை
பாவச் சொத்து
வேலிஅமுதன்
பொதுச் சந்தைக்கு எதிராக நடைபாதை ஓரத்தில் மர நிழலில் இருந்து சப்பாத்து திருத்தும் வேலை (Shoe mending) செயப் து கொணி டிருந்த தொழிலா ளியிடம் கட்டறந்த எனது 35|T6)60 flouds (Pump Shoe) கொடுத்து அவர் அதனைத் தைத்துத் தரும் வரை காத்துக் கொண்டிருந்தேன்.
தொழிலாளி அக்கறையாக சப் பாதி தைத் தைத் துக் Y− L கொண்டிருந்தார்.
அவரினி மூலதனம் ஒரு சாக்கு விரிப்பும் பழைய தகரப்பெட்டியும்தான்! தகரப்பெட்டியுள் இருந்தவை தொழில் தொடர்பான ஆயுதங்கள், ஆணிகள், ஊசிகள், பசைப்பேணிகள், நூற்பந்துகள், தகரப் பெட்டியின் மூடியின் உட்பக்கத்தில் முருகப் பெருமானின் படம் ஒட்டப்பட்டு இருந்தது. பெட்டியின் ஒரு மூலையுள் வெற்றிலை பாக்கு ஒரு கடுதாசியுள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. வேண்டிய நேரம் சப்ப, சோர்வைப் போக்க.
இந்த நடமாடும் ஏழைத் தொழிலாளி தொழிற்படும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டு நின்ற எனக்கு “இந்தாங்க ஐயா
fissig to
 
 
 

செருப்பு’ என அவர் சொன்ன போது எனது நிஸ்டை கலைந்தது. “நான் எவ்வளவு தரவேணும்” எனக் கேட்டேன். “முப்பத்தைந்து ரூபா ஐயா’ என்றார் தொழிலாளி.
சப்பாத்தை வாங்கிய நான் எனது ‘மணிபேஸ்சை திறந்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தபோது எனது “பேஸ்’சுள் ஓர் ஆயிரம் ரூபாய் இல்லாதது தெரிய வந்தது. அந்தத் தொழிலாளியிடம் வருவதற்கு முன் பலசரக்குக் கடை ஒன்றுக்குப் போயிருந்தேன். அந்தப் பலசரக்குக் கடையில் எண்ணுற்று ஐம்பது ரூபாவுக்குச் சாமான் வாங்கி இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததும் நினைவுக்கு வந்தது. கடைக்காரன் மீதிப்பணமாக நூற்று ஐம்பது மாத்திரம் தந்தமை அப்போதுதான் மனத்தில் பளிச்சிட்டது.
அன்று காசுத் தட்டுப்பாட்டால் ஆபத்துக் காலத் தேவைக்கெனப் பணப்பெட்டியுள் பதுக்கி வைத்திருந்த காசில் மூன்று இரண்டாயிரம் ரூபாவையும் மேலதிகமாகக் கொஞ்சம் சில்லறைக் காசையையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வந்தமை நினைவுக்கு வர அந்தப் பல சரக்குக் கடை நோக்கி விரைந்தேன்.
அந்நேரம் "ஐயா! ஐயா” எனக் கூப்பிட்டபடி சப்பாத்துத் திருத்தும் தொழிலாளி என்னைத் தொடர்ந்து ஓடோடி வந்தார். "ஐயா மீதி பதினைந்து ரூபாவை வாங்க மறந்து போனிங்க” எனச் சொல்லி பக்குவமாக மீதியைத் தந்தார்.
அந்த பலசரக்குக் கடை முதலாளியிடம் போய் நான் விசாரித்தபோது நான் ஆயிரம் ரூபாய் மாத்திரம் தந்ததாகப் பச்சைப் பொய் சொல்லி தான் மீதியைச் சரியாகச் செலுத்தி இருந்தாகவும் அடம்பிடித்தான்.
என் ‘மணிபேர்ஸ்’சுக்குள் ஆயிரம் ரூபாய் நோட்டே அன்று இருந்ததில்லை என்பது நினைவுக்கு வர, “பாவி! நான் வலு இழந்த முதியவர் என்றும் இரங்காது, என்னை முறையாக ஏமாற்றி விட்டானே’ என என் மனம் நொந்தது.
9ேங்க

Page 25
*கருத்தியல் என்னும் பனிமூட்டம்
- வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்
நூல் பற்றிய சில கருத்துக்கள்
- சா. திருவேனிசங்கமம்
‘கருத்தியல் என்னும் பனிமூட்டம் - வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்’ என்னும் நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூல் கருத்தியல் என்பது பனிமூட்டம் போல் சமூகத்தின் மீது கவிந்து அதன் உண்மைத் தோற்றத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் செய்து விடுகிறது என்ற அடிக்கருத்தை உட்கிடையாகக் கொண்டது. இந்த பனிமூட்டத்தை விலக்கி உண்மை ஒளி பாய்ச்சும் பல்வேறு துறைசார் ஆய்வாளர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் சுருக்கித் தருகிறார் நூலாசிரியர் சன்முகலிங்கம். இடையிடையே அந்நூல்கள், கட்டுரைகள் பற்றிய தனது கருத்துக்களையும் முன்வைக்கிறார். இந்தப்பனிமூட்டம் ஆதிக்க வர்க்கம் தனது நிலைப்பாட்டை சமூகத்துள் நிறுவ உதவி அவ்வர்க்கத்தை மேலாதிக்கத்துக்கு உட்படுபவர்கள் கண்டுகொள்ளாமலும் செய்தும் விடுகின்றது என்கிறார் நூலாசிரியர். இவ்வாறான ஆழமான கருத்துக்களை முன் வைக்கும் இந்நூலின் வரவு தமிழ் ஆய்வறி உலகில் ஒரு முக்கிய நிகழ்வெனலாம்.
இந்நூலில் பதினொரு கட்டுரைகள் உள்ளன. அவைகள் தம்தம் துறைகளில் துறைபோகிய அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள் பற்றியவை. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான துறைகளில் படிந்திருக்கும் கருத்தியல் மாயையை விலக்கி வாசகர்களுக்கு உண்மை ஒளிகாட்டும் பான்மையது. இந்த அறிஞர்களின் ஆக்கங்களை அறிமுகஞ் செய்யும் சண்முகலிங்கம் தனது ஆழமான புலமையாலும் பரந்துபட்ட வாசிப்புப் பரிச்சயத்தாலும் நூற்பொருளை உள்வாங்கி செரித்து தமிழில் இலகுபடுத்தித் தருகிறார். சாதாரணமாக ஒருவர் இங்கு சொல்லப்படும் நூல்களில் ஒன்றிரண்டை படித்து - தனது துறைசார் ஈடுபாடு காரணமாக - தன்துறைசார் பனிமூட்டத்தை மாத்திரம் விலக்கி உண்மையைத் தரிசிப்பார். ஆனால்
9ோழி

இந்த நூலைப்படிக்கும் ஒருவர் சமூகத்தின் மீது படிந்திருக்கும் ஒட்டுமொத்த பனிமூட்டத்தையும் விலக்கி உண்மை ஒளியை தரிசிக்க முடியும். இது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.
இந்நூலில் உள்ள முதலாவது கட்டுரை மிகச் சுவாரஸ்யமானது. வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்கின்றன.நிகழ்ந்த பின்னர் வரலாற்றாசிரியன் அச் சம்பவங்களைப் பற்றி எழுதுகின்றான். அவ்வாறு எழுதும்போது அவன் வாழ்கின்ற சூழலின் அரசியல், சமூகத்தேவைகள் என்பவைகளோடு அவனின் விருப்பு, வெறுப்புக்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் அவனின் எழுத்தக்களைப் பாதிக்கின்றன. இவை பற்றிய ஆய்வை வரலாற்றெழுத்தியல் என்பர். இலங்கை தமிழர்களின் வரலாற்று நூல்களை எழுதியவர் யாவர்? எக்காலத்தில் அந்நூல்களை எழுதினர்? அவர்கள் அந்நூல்களை எழுத உந்திய சமூகத் தேவைகள் எவை? இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஓர் ஆய்வாகத் “தமிழர்களின் கடந்த காலம் பற்றிய அரசியல்” என்ற ஹெல்மன் இராசநாயகத்தின் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது என்று சண்முகலிங்கம் விபரிக்கிறார்.
தமிழர்கள் தங்கள் வரலாற்றை இந்தியாவையும் உள்ளடக்கிய விரிந்த பண்பாட்டு பின்னணியில் நோக்கி வந்தனர். இலங்கையில் தமக்கு தனித்துவமான வரலாறு ஒன்று இருப்பது குறித்து நிறுவவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. ஆதலால் இலங்கையில் வரலாறு குறித்த விழிப்புணர்வு 19ம் நூற்றாண்டில் தோன்றிய போதும் இலங்கையில் தமிழர் வரலாறு பற்றிய தேடல் - ஆவணப்படுத்தல் - 1920 வாக்கில்தான் தோன்றியது. சிங்களவர்களால் அப்படியோசிக்க முடியவில்லை. அவர்களுக்கு சொந்தம் என்று கூற இலங்கை மட்டும்தான் இருந்தது. இங்கு தங்கள் வரலாற்றை - இருப்பை நிறுவுதல் அவர்களுக்கு ஒரு கட்டாயமாக தேவையானது. இப்படியொருதேவை தமிழர்களுக்கு இருக்கவில்லை. தமிழர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் நாம் என்று கூறிய போது சிங்களவர்கள் கொதிப்புற்றனர். இந்தியாவுடன் தமக்குள்ள தொப்புள் கொடியுறவை பிரஸ்தாபித்த போது நாட்டுப்பற்றில்லாத நாய்கள், துரோகிகள் என்றனர். இந்த இருதலைக்கொள்ளி எறும்பு நிலைதான் இராசநாயகம் போன்றவர்கள் இந்திய தொடர்பை கைவிட்டு இலங்கை தமிழர் என்றும் இந்நாட்டை உருவாக்கியதில் எங்கள் பங்கு பெரிது என்றும் கூறத்தூண்டியது. ஆகவே 1920 களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் “இலங்கை எம் நாடு’ என்று அழுத்துவதுதான்.
வேதிய

Page 26
இவ்விடத்தில் விடுபட்ட ஒரு கருத்தைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். தமிழர்களின் வரலாற்றெழுத்தியல் பற்றி விமர்சித்த ஹெல்மன் இராசநாயகம் மட்டக்களப்புத் தமிழர்கள் பற்றிக் கவனம் செலுத்தவில்லை. இலங்கைத் தமிழர் என்னும் போது அது யாழ்ப்பாணத் தமிழரை மாத்திரம் குறிக்காது. மட்டக்களப்பு, திருகோணமலை வாழ் தமிழரையும் குறிக்கும். வரன்முறை ஏடுகள் அங்கும் உள்ளன. திருகோணமலையில் கோணேசர் கல்வெட்டு மட்டக்களப்பில் மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் மற்றும் பல் வேறுகல்வெட்டுக்கள், செப்பேடுகள் அவ்விடங்களில் நிறைய காணப்படுகின்றன. யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் முதலியார் இராசநாயகத்தின் நூலுக்கு நிகராக மட்டக்களப்பின் வரலாற்றைப் பேசும் கனகரெத்தினத்தின் நூல் உள்ளது. இருவரும் முதலியார் பட்டம் பெற்றவர்கள். ஆங்கிலத்தில் தம் நூல்களை எழுதியவர்கள். முதலியார் இராசநாயகம் 1926லும் முதலியார் கனகரத்தினம் 1921 லும் தம் நூல்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு நூலாசிரியர்களை மாத்திரமல்லாது நூல் அடக்கத்திலும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய பண்புகள் நிறைய உள்ளன. இது பற்றி கட்டுரையாசிரியர் குறிப்பிட்டிருந்தால் அவரது ஆய்வு இன்னொரு முக்கிய அம்சத்தை தொட்டுக்காட்டுவதாய் அமைந்திருக்கும். அவரின் கருத்துக்களை தமிழில் தரும் சண்முகலிங்கம் கூட ஹெல்மன் இராசநாயகத்தின் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை.
அண்மையில் கலாநிதி சரவணபவன் என்பவரை தினக்குரல் நாளேடு(11.07.2010) பேட்டி கண்டது. இலங்கையில் ஆய்வு முயற்சிகள் எப்படி உள்ளதென்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் “யாழ்ப்பாணக்குடாநாட்டை விட்டு வெளியே வந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவில்லை. எனினும் ஏனைய இடங்கள் பற்றிய ஆய்வுகளும் வெளிவரவேண்டும். சில இடங்களில் நல்ல ஆய்வாளர்கள் இல்லாதிருக்கலாம். வரலாற்று ஆய்வுகள் சிறு வட்டத்துக்குள் இருக்கிறதே தவிர அது தேவை கருதி இன்னும் வெளியே வரவில்லை. குறிப்பாக ஆய்வாளர்கள் தமது பிரதேசத்தை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள் என்பது எனது குற்றச்சாட்டு’ அதாவது கல்வியிற் சிறந்த யாழ்ப்பாணம் மற்ற தமிழ் பிரதேசங்களையும் வழி நடத்தி செல்லும் தார்மீக பொறுப்பு கொண்டது என்று அவர் கருதுகின்றார்.
9ேங்கி

இந்நூலின் இரண்டாவது கட்டுரை ஆரியர் என்ற கருத்தியலின் 6nÎle60)6T68660)6T & G8FFT 6ð6ugbi. The People of the Lion 616öi gD குணவர்த்தனாவின் கட்டுரையின் சாரத்தை இதில் சுவைபட விபரிக்கின்றார் சன்முகலிங்கம். குறித்த ஒத்த தன்மையுள்ள மொழிகளை ஆரியமொழிக் குடும்பம் என்ற வகைக்குள் மொழியியலாளர்கள் உட்படுத்தினர். பின்னர் இம்மொழிகளைப் பேசுவோர் ஆரியர் எனப்பட்டனர். சிங்களமும் படிப்படியாக ஆரிய மொழிக்குள் வந்தது. அதே வேளை கால்டுவெல் போன்றோரின் ஆய்வின் வழி திராவிட மொழிக்குடும்பம் ஒன்றும் கட்டமைக்கப்பட்டது. இதனுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன பிரதான இடம் வகித்தன. இதனால் சிங்களம், தமிழ் என்பன எதிர் எதிர் குடும்பமொழிகள் என்றும் அம்மொழிகளைப் பேசுவோர் எதிரிகள் என்றும் ஒரு கற்பிதம் வளரத் தொடங்கியது. இந்தக் கருத்தியலின் விளைவுகளை இன்றைய இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்று சரியாகவே சுட்டிக்காட்டுகிறார் சண்முகலிங்கம்.
இந்தியாவும் இலங்கையும் நிலத்தொடுவையால் இணைந்திருந்த காலத்திலும் பின்னரும் மக்கள் கூட்டத்தினர் அங்கிருந்து இங்கே பரவினர். அவர்களுள் ஒரு பகுதியினர் பெளத்தத்துடன் இணைந்து வந்த பண்புக் கூறுகளை உள்வாங்கி ஒரு இனத்தினராகவும் மற்றொரு பிரிவினர் தென்னிந்திய பண்பாட்டு கூறுகளைத் தக்கவைத்து இன்னொரு இனத்தினராகவும் பரிணமித்தனர். இதற்குச் சான்றாக பொம்பரிப்பு, பலாங்கொடை போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் உள்ளன. (இலங்கை நூதனசாலையில் இது பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் போய்ப்பார்க்கலாம்.)
வரலாற்றில் ஏற்படும் கருத்து ஒன்று என்றும் மாறாத உண்மை என்றும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வரலாறும் வளர்கிறது. மறைந்து கிடக்கும் ஆவணங்கள் வெளிச்சத்துக்கு வரல், தொல்லியலில் நிகழும் புதிய கண்டுபிடிப்புக்கள், மானிடவியல், சமூகவியல் மற்றும் மொழியியல் துறைகளில் நிகழ்த்தப்படும் புதிய புதிய ஆய்வு முடிவுகள் வழி வரலாறும் சதாதன்னை புதுப்பித்துக் கொள்கின்றது. இது இவ்வாறு இருக்க 19ம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட கருத்தொன்றை நித்திய உண்மையெனக் கொண்டு சிலர் பரப்ப முனைந்ததின் தாற்பரியம்
9ேங்கி

Page 27
என்ன? அறிஞர்கள் உலகைவிட்டு அதைப்பாடப்புத்தகங்கள், ஜனரஞ்சக எழுத்துக்கள் மூலம் அடிமட்டத்துக்கும் காவிச் சென்றதன் மர்மம் என்ன? மக்களை சுலபமாக இந்த ஆரியமாயைக்குள் ஆழ்த்தி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த மாயைக்குள் மக்கள் ஆழ்ந்திருக்கும் மட்டும் உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது என்று பொரும்பான்மை இனமேலோர் குழாம் எண்ணியதன் விளைவே இச் செயற்பாடு என்று சண்முகலிங்கம் மிகத் தெளிவாக கருத்துரைக்கிறார்.
சிங்களவர் போல இந்தியாவில் பிராமணர் என்னும் வகுப்பினர் ஆரியமாயைக் குள் வாழ்கின்றனர். அறிஞர்கள் தொட்டு ஜவகர்லால்நேரு போன்ற அரசியல் வாதிகள் வரை இக்கருத்தியலை பரப்புவதில் ஈடுபட்டனர். இதனால் பனிய - பார்ப்பனிய கூட்டு நலனை ஒம்பும் இந்திய அரசின் (பார்க்க, இந்து, இந்தி, இந்தியா, - எஸ்.வி.ராசதுரை) அடிப்படை இந்தக்கருத்தியலாகும். ஆரிய சிங்கள கருத்தியலை உட்கிடையாகக் கொண்ட இலங்கை அரசுக்கும் ஆரிய பிராமணர் நலனைக்காக்க உருவான இந்திய அரசுக்கும் நெருங்கிய உறவுண்டு. நண்பன் சிவராம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன என்று அடிக்கடி கூறுவான். இந்த உறவு காரணமாகவே ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க இந்தியா இலங்கைக்கு உதவி புரிந்தது என்று கூறப்படுகின்றது. இது பற்றி விளங்கிக் கொள்ள மேலும் விளக்கங்கள் தேவை. ஆகவே சண்முகலிங்கம் அவர்கள் அடுத்த பதிப்பிலாவது அல்லது தனி புத்தகமாகவாவது இந்தியாவின் ஆரிய கருத்தியலைப்பற்றி அறிஞர்களின் எழுத்துக்களை தொகுத்து தருமாறு வேண்டுகிறேன்.
அடுத்துள்ள முக்கிய கட்டுரை விற்றோக்கரின் ‘பன்மைத்துவ வரலாறுகள்: கிழக்கு கரையோர தமிழ் சமூகத்தின் வரலாற்றுப்பார்வைகளின் பன்மைத்துவம்’ பற்றியதாகும். மட்டக்களப்பு தமிழ் சமூகத்தில் எழுவகை வரலாற்றுப் பார்வைகள் அல்லது வரலாறுகள் உள்ளன என்று விளக்கி எழுதியிருக்கிறார் அமெரிக்க மானிடவியலாளரான பேராசிரியர் விற்றேக்கர் என்பவர். அவைகள் தமிழில் நாம் படிக்கும் வரலாற்று எழுத்துக்களிலிருந்து மாறுபட்டன என்று சண்முகலிங்கம் கூறுகின்றார். மட்டக்களப்பில் உள்ளதாக விற்றேக்கர் கூறும் ஏழுவகை வரலாற்று மாதிரிகளையும் உள்வாங்கி சுருக்கி அவர் தமிழில் தருகிறார். இவைகள் மானிடவியல்
9ேவழி

எவ்வாறுசமூகத்தை நோக்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைவன என்கிறார். மட்டக்களப்பில் உள்ள ஏழுவகை வரலாற்று பார்வைகளும் அங்குள்ள சமூகத்தின் உண்மைத் தோற்றத்தை காணமுடியாமல் செய்துவிடுகிறது என்பது இக்கட்டுரை வழங்கும் முக்கிய செய்தி.
*கொல்லனின் உலைக்களம்” என்ற தலைப்பில் அமைந்துள்ள அடுத்த கட்டுரையும் அமெரிக்க மானிடவியலாளர் ஒருவரின் ஆய்வு பற்றியதாகும். மட்டக்களப்பின் சாதி, சமூக அமைப்பு பற்றியதாக அது அமைந்துள்ளது. மக்ஜில்வரே என்ற அந்த மானிடவியலாளர் அக்கரைப்பற்றை மையப்படுத்தி இவ்வாய்வை மேற்கொண்டார். 575 பக்கங்கள் நீளும் இவ்வாய் வேட்டை 18 பக்கங்களில் இரத்தினச் சுருக்கமாக சண்முகலிங்கம் விபரிக்கின்றார். அக்கரைப்பற்றுப்பகுதியில் வாழும் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் குடியமைப்புக்கள், வர்க்க வேறுபாடுகள் பற்றியும் தமிழர்களிடையே சிறப்பாக உள்ள சாதியமைப்புக்கள் பற்றியும் அவைகளில் காலவோட்டத்தில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்களை உந்தும் சமூக பொருளாதார காரணிகள் பற்றியும் மக்ஜில்வரே மானிடவியல், சமூகவியல் கண்ணோட்டத்தில் நோக்கினார். இவைகள் எல்லாம் கொல்லனின் உலைப்பானையில் உள்ள உலோகங்களாக உள்ளன. சில உலோகங்கள் உருகி ஒன்று கலக்கின்றன. சில உருகுகின்றன; ஒன்று கலக்கவில்லை, சில உருகவும் இல்லை ஒன்று கலக்கவும் இல்லை, அதே போல்தான் சமூகத்தின் இயல்புகளும் உள்ளன என்று நாம் வலிந்து வியாக்கியானப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தை உள்முரண்பாடுகள் நிறைந்த சமூகமாக எம்மால் கண்டுகொள்ள முடிகிறது.
இந்நூலில் உள்ள மக்ஜில்வரே, கணநாத் ஒபயசேகர ஆகியவர்களின் ஆய்வு முடிவுகள் மட்டக்களப்பு சமூகம் பற்றிய பல்வேறு கருத்தியல்களை விலக்கி உண்மை ஒளி பாய்ச்சுகின்றன. உதாரணமாக தாங்கள் அரபு வழித்தோன்றல்கள் என்று பெருமிதம் கொள்ளும் ஒரு கற்பிதம் இலங்கை முஸ்லிம்களிடம் உண்டு. அரபு நாடுகளின் செல்வச் செழிப்பு மீதுள்ள கவர்ச்சி, மத ஒருமை, மேலெழுந்து வரும் அடிப்படை வாதம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு அப்படிச் சொல்வர். இதனோடு இன்னொரு காரணமும் உண்டு. இலங்கையின் வடக்கு தெற்கு இழுபறியில் தம்மை தனித்துவமாக்கிக்
9ேண்டி

Page 28
கொண்டால் கூடிய இலாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணம். இதைப் பேராசிரியர் அமீர்அலியின் வார்த்தைகளில் கூறுகிறேன். “மூன்றாவது இனமான முஸ்லீம்களின் தலைவர்கள் மற்றைய இரு இனங்களின் பிரிவாற் சுகம் காண விளைந்தது அதனால் கிடைத்த நன்மைகளை நிரந்தரமானதென நினைத்து செயற்பட்டமை அவர்களின் வியாபார அரசியல் போக்கினை வெளிப்படையாக காட்டுகின்றது. (தினக்குரல் 28.02.2010). இந்த காரணங்களால் அரபு பூர்வீகம் என்னும் பனிமூட்டம் அவர்களின் சிந்தனையில் ஆழமாக படிந்துள்ளது. இந்த கற்பிதத்தை மக்ஜில்வரே, கணநாத் ஒபயசேகர போன்றவர்களின் ஆய்வு முடிவுகள் கேள்விக்குறியாக்குகின்றன.
மக்ஜில்வரேயின் ஆய்வு முடிவின் சுருக்கம்: தாய் வழிமூலம் தமது கால்வழியை அடையாளம் காணும் முஸ்லீம் சமூகங்கள் உலகில் சிலவே உள்ளன. அவர்களிடையே தந்தை வழிமுறையே பரவலாக உள்ளது. கிழக்குமாகாண முஸ்லீம்கள் சமூகம் இதற்கு விதிவிலக்கு. வடகேரளத்தின் மாப்பிள்ளை முஸ்லீம்கள், மேற்கு சுமத்திராவின் மினங்காபோ முஸ்லீம்கள் என்று தாய்வழி உரிமைச்சமூகங்கள் வேறு இரண்டையும் மக்ஜில்வரே உதாரணம் காட்டுகிறார். கிழக்கு மாகாணத்தின் பள்ளிவாசல்களின் நிர்வாகம் தாய்வழிக்குடிகளின் பிரதிநிதிகளான மரைக்காயர்களால் நடத்தப்படுகின்றது. குடிகளின் பிரதிநிதிகள் கோவில்களை நிருவகிக்கும் இந்துக்களின் முறைக்கு ஒப்பானதாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் நிர்வாகமுறையுள்ளது. குடிகளுக்கு வெளியே திருமணம் செய்தல் என்னும் வழக்கம் முஸ்லீம்களிடமும் உள்ளது. இவ்வாறான தாய்வழிக்குடிகளின் கிளைபரப்பல் இந்துக்களை விட முஸ்லீம்களிடம் ஆழமானதாக உள்ளது என்றும் மக்ஜில்வரே கூறுகின்றார். திருமணமான ஆண்கள் பெண் வீட்டில் குடியிருக்கும் வழக்கத்தை தாய்வழி வாழிடம் (Matrilocalresidence) என்பர். இது தமிழர்களின் வழக்கத்தை ஒத்ததே (கருத்தியல் என்னும் பனிமூட்டம் பக்.66-67)
கணநாத் ஒபயசேகர கூறுகிறார்: மச்சான் - மச்சாள் திருமணம் திராவிட திருமண முறையின் விசேட அம்சம். இம்முறையில் தாயின் சகோரர்களின் மகளை ஒரு ஆடவன் மணம் புரியலாம். முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் மச்சான் - மச்சாள் திருமணம் முஸ்லீம் பண்பாட்டிற்கு அந்நியமானது. ஏனெனில் மத்திய கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் தந்தையின் சகோதரனின் மகளை திருமணம்
sås 2o

செய்யும் வழக்கத்தைக் கொண்டவர்கள். ஆனால் இலங்கை மக்களிடையே இது தகாப்புணர்ச்சி என விலக்கப்பட்ட ஒன்றாகும். மட்டக்களப்பின் தாய் வழிக்குடும்ப முறையிலான குடிமுறை அப்பகுதிக்கே உரிய சிறப்பாக உள்ளது. ஆச்சரியத்துக்குரிய இன்னொரு விடயம் மட்டக்களப்பு முஸ்லீம்களிடமும் தமிழர்களிடம் காணப்படும் குடிமுறை இருப்பதுதான். கணவன் மனைவியின் வீட்டில் வதியும் வழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. மலாயாவின் நெகிரி செம்பிளான் பகுதி முஸ்லீம்களிடமும் சுமத்திராவின் மென்கபோ முஸ்லிம்களிடமும் இது போன்ற தாய் வழிக்குடி முறை அம்சங்கள் இருந்தபோதும் முஸ்லீம்களிடையே தந்தைவழிக்குடும்ப முறையே செல்வாக்குடையதாக உலகெங்கும் காணப்படுகின்றது. மட்டக்களப்பு முஸ்லீம்களின் தாய்வழிக்குடிமுறை ஒரு புதுமை. கேரளாவின் மாப்பிள்ளை முஸ்லிம்களிடையிலும் தாய்வழிமுறை உள்ளதும் ஒரு விதிவிலக்கே. மட்டக்களப்பு முஸ்லிம்கள் தாய்வழிக்குடிமுறை, கணவன் மனைவி வீட்டில் குடியிருத்தல், மச்சான் - மச்சாள் திருமணம் என்ற புதுமைகளையும் ஒரு சேர ஏற்றுள்ள முஸ்லிம் சமூகமாக உள்ளனர். (கருத்தியல் என்னும் பனிமூட்டம் பக். 71-74)
அடுத்துள்ள கட்டுரை வரலாற்றுப் பேராசிரியர் இந்திரபாலாவின் நூல் பற்றியதாகும். பேராசிரியரின் நாற்பது வருடகால தேடலின் விளைவாக மலர்ந்த தலைசிறந்த நூல் இது. இலங்கையின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான சுதர்சன்செனிவிரத்தின, சிரான்தெரனியகல, குணவர்த்தன போன்றோரும் இந்திரபாலாவும் இலங்கையின் ஆதிவரலாறு பற்றி ஏறக் குறைய ஒத்த கருத்துடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையும் இருந்த தென்னிந்தியா - இலங்கை நிலத்தொடுவையூடாக வந்த மக்கள் இரு பிரிவினராக கிளைக்கத் தொடங்கினர். இப்பரிமாணம் கி.பி. 1200 வாக்கில் திட்டவட்டமாக இரு இனங்களாக முடிவெய்துகின்றதென்கிறார் பேராசிரியர் இந்திரபாலா. இதில் யார் முதலில் வந்தது என்ற கேள்வி சுத்தமாக ஓர் அபத்தம் என்கிறார். ஆரியர் என்ற புதிர் பற்றிய வரலாற்றெழுத்தியலை ஆராய்ந்த குணவர்த்தனவும் அதை வரலாற்றடிப்படையில் ஆராய்ந்த இந்திரபாலாவும் ஒரே முடிவுக்கு - அது ஒரு புனைவு என்ற முடிவுக்கு வருகிறார்கள். தமிழிலும் எழுதப்பட்டுள்ள இந்திரபாலாவின் நூலை ஆர்வமுள்ள யாவரும் வாசிக்க வேண்டும்.

Page 29
இந்நூலின் எட்டாவது அத்தியாயமாக வரும் கட்டுரை யாழ்ப்பாணத்து தேச வழமைச்சட்டம் பற்றியதாகும். குரே என்பவர் எழுதிய (An Introduction to the Legal System in Srilanka) 6T6 D Telesi பகுதியொன்றை மேற்கோள் காட்டி இலங்கையில் உள்ள சட்டமுறைகளில் ஒன்றான தேச வழமைச்சட்டத்தின் இன்றைய நிலை பற்றி சண்முகலிங்கம் விளக்கியுள்ளது எமது புரிதலை இலகுவாக்கிறது. இச்சட்டத்தின் வரலாறு நான்கு கட்டங்களை கொண்டதென்றும் தற்போது அது யாழ்ப்பாணத்து மக்களின் சொத்துடமை சட்டமாக எஞ்சியுள்ளதென்றும் சண்முகலிங்கம் குறிப்பிடுகின்றார். பண்டைய யாழ்ப்பாணச் சமூகம் தூய தாய்வழியுரிமை சமூகமாக இருந்து இன்று தந்தைவழியுரிமை, தாய்வழியுரிமை ஆகிய இரு அம்சங்களையும் கலந்த கலப்புரிமை சமூகமாக மாறியுள்ளதென்பதை இச்சட்டம் பற்றிய ஆய்வு எடுத்துக்காட்டுகின்றதென்று அவர் கூறுகிறார். இவ்விடயம் பற்றி மேலும் அறிய நாட்டமுள்ளவர்களுக்கு அண்மையில் வெளிவந்த மூன்று நூல்களின் விபரங்களை நூலாசிரியர் இணைத்துள்ளார்.
‘புலம் பெயர் தமிழர் வாழ்வு; ஒரு சமூகவியல் நோக்கு” என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை ஒரு மரண அறிவித்தலை சொல்லி மிக சுவாரஸ்யமாக தொடங்குகின்றது. புலம்பெயர் தமிழர்களின் கூட்டு மனத்தின் தன்மைகளை இது விபரிக்கிறது. தமிழர் அங்கும் இங்கும் சிதறி வாழ்ந்தாலும் ஒருசமூகமாக வாழ நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் துணை புரிகின்றன. (இன்று முகம்பார்த்து கதைக்கும் கையடக்கத் தொலைபேசிகளும்இணையமும் வந்துவிட்டன.) ‘கறியில்லை யென்று சாப்பிடவில்லை’ என்று தம்பி லண்டனிலிருக்கும் அண்ணனிடம் தொலைபேசியில் சொல்கிறான். உடனே அண்ணண் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி வசிக்கும் தமக்கையிடம் தொடர்பு கொண்டு கறிக்கு ஒழுங்கு செய்கிறான். இந்த நிலைமை புலம்பெயர்ந்தோரை தாயகத்துடன் பிணைக்கிறது. புலம் பெயர் நாடுகளிலுள்ள சமூகத்தவர்களுடன் தமிழர்கள் இணைந்து கரைந்து விடுவார்கள் என்று நாங்கள் நினைத்ததுக்கு மாறாகவே அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தமிழர்கள் மாத்திரமல்ல புலம்பெயர்ந்த மற்ற சமூகத்தவர்களின் நிலைமைகளும் இவ்வாறுதான் இருக்கிறதென்று நான் வாசித்திருக்கிறேன். புலம்பெயர்ந்த
ர்மீனியர்கள் ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கி தமது தாயக
செங்க 20

உறவுகளுடன் தங்கள் மொழியில் உறவாடுவார்கள் என்றும் அவர்கள் ஒரு சமூகமாக நிலைப்பதற்கு அவர்களின் புவியியல் இருப்பு ஒரு தடையாக இல்லை என்றும் அறிந்துள்ளேன். இது பற்றி அதிகம் பேசப்பட்ட பெனடிக்ற் அண்டர்சனின் கருத்துக்களை அறிய வேண்டும் என்ற ஆவலை சண்முகலிங்கத்தின் கட்டுரை தூண்டுகின்றது.
பத்தாவது அத்தியாயம் சோழ அரசு பற்றி வரலாற்றறிஞர் சுப்பராயலு என்பவரின் கட்டுரையை பற்றி பேசுகின்றது. ஒவ்வொரு அறிஞரும் தன் தன் கோணத்திற்கு தக ஒவ்வொரு அரசுமாதிரி பற்றி கூறி அந்த மாதிரியில்தான் சோழ அரசு அமைந்திருந்தது என்பர். நீலகண்ட சாஸ்திரி சோழ அரசு மத்தியப்பட்ட அரசு என்ற வகைக்குள் வருகிறதென்றும் பேர்ஸ்டன் ஸ்டெயின் அது கூறாக்க நிலை அரசு என்றும் கத்தின்கோ அதை தொன்மை அரசுக்குள் அடையாளம் காணலாம் என்றும் வாதிடுகின்றனர். சுப்பராயலு அதை முந்து நிலை அரசு என்கின்றார். ஆயினும் அதை தூய முந்து நிலை அரசு வகைக்குள் உட்படுத்தமுடியாது என்கிறார். 400 வருடங்கள் கொடி கட்டிப்பறந்த சோழ ஆட்சியின் மர்மங்களை சுப்பராயலுவின் கட்டுரை விளக்குகிறது.
இவ்வத்தியாயத்தில் கூறப்பட்ட அரசு மாதிரிகளை விளக்குதாகவும் நவீன காலத்துக்கு முந்திய அரசுருவாக்கம் பற்றிய கற்பிதங்களை களைவதாகவும் அடுத்த அத்தியாயம் அமைகிறது. நவீன காலத்துக்கு முந்திய அரசுகள் மத்தியப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சியைக் கொண்டிருக்கவில்லை. அநுராதபுர காலத்திலிருந்து இந்நாட்டில் ஒற்றையாட்சி நிலவியதென்பது ஒரு கற்பிதம் என்று ஆய்வாளர்கள் விளக்கியிருப்பதை சில பக்கங்களில் சணி முகலிங்கம் எடுத்துரைக்கின்றார்.
நவீன கால அரசுகளின் உருவாக்கத்தில்தான் தேசியவாதம் உருக்கொண்டது. அன்றைய அரசுருவாக்கத்தில் தேசியவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நவீன காலத்துக்கு முந்திய அரசுருவாக்கம் பேர்ட்டன் ஸ்டெயின் கூறாக்க நிலை அரசின் மாதிரியில் அல்லது ஹெலி னரின் குடியான சமூக அரசின் பணி புகளைக் கொண்டமைந்ததாக அல்லது அண்டர்சனின் தேசிய வாதத்துக்கு முந்திய அரசு மாதிரியில் அல்லது தம்பையாவின் மண்டல அரசின்
இவர்

Page 30
தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்று கருதலாம். இந்த அரசு மாதிரிகளில் தம்பையாவின் மண்டல அரசு நவீன காலத்துக்கு முந்திய அரசு மாதிரிக்கு சிறப்பாக பொருந்துகின்றது. பொதுவாக எலி லா மாதிரிகளுமே மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சி 2000 வருடங்களாகத் தொடருகிறது அல்லது ஒற்றையாட்சி எப்போதும் இருந்தது என்ற பொய்மையை உடைக்கின்றன.
தனது குறிப்புகளை வழிகாட் டியாக வைத்து மூல ஆய்வேடுகளைவாசகர்கள் வாசித்தறிய வேண்டும் என்ற வேணவால் உந்தப்பட்டு அவ்வாய்வேடுகளின் மையப்பொருளை இரத்தினச் சுருக்கமாக இந்நூலாசிரியர் 123 பக்கங்களில் தருகிறார். உண்மையில் இந்தப் புத்தகம் ஆய்வறிவில் நாட்டம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். தமிழ் நூல் வெளியீடுகளில் வழமைக்கு மாறாக நூல்கள் வெளிவருவது அத்திபூத்தால் போல்தான். அவ்வாறானதொரு வருகைதான் சண்முகலிங்கத்தின் “கருத்தியல் என்னும் பனிமூட்டம் வரலாறும் கருத்தியலும் பற்றிய கட்டுரைகள்’. மூல நூல்களின் ஆசிரியர்களது கருத்துக்களை இலகுபடுத்தியும் சுருக்கியும் தருவது பயன் உடையதே. இருந்தாலும் சண்முகலிங்கம் அவற்றை எழுதிச் செல்லும் பாங்கில் தனது கருத்துக்களையும் இடையிடையே சொருகி விடும்போது மூல நூலாசிரியரின் கருத்துக்கள் எவை? என்ற தொரு குழப்பம் எழுகிறது. இது நூலின் பிரதான குறைபாடு எனலாம்.
மக்ஜில்வரே, விற்றேக்கர், கணநாத் ஒபயசேகர, ஹெல்மன் இராசநாயகம், இந்திரபாலா,சுப்பராயலு, குணவர்த்தன என்று பலரை இந்நூல் அறிமுகம் செய்கிறது. இவர்களின் எழுத்துக்களில் வெளிப்படும் ஆழம் பற்றிய வியப்பு ,பிரமிப்பு என்பன சண்முகலிங்கத்தின் சொற்களிலும் வசனங்களிலும் வெளிப்படுகின்றன. கட்டுரைகள் “பாராட்டு விமர்சனங்களே’ அன்றி நூலாசிரியர்களின் கருத்துக்களை எச்சந்தர்ப்பத்திலும் கேள்விக்குட்படுத்தும் வகையில் அமையவில்லை. ‘நானும் ஒரு மாணவன்தான்’ என்ற தன்னடக்கம் சண்முகலிங்கத்தின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.
இங்கி

“வழங்கும் வானமே நீவாழ்க.’ என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின. காற்றுக்குச் சினம் பொங்கியது ‘என்ன கொடுமை வானமா வழங்கியது?’ பூமிக்காகக் காற்றுப் பொருமியது.
நீர் கொடுப்பதோ பூமி
நன்றி: "காசி ஆனந்தன் கதைகள்" ノ ܢܬ இங்கி

Page 31
மீண்டும் ஒரு காதல் கதை
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
உள்ளே நுழைந்த ராதாவுக்கு கண்ணில்பட்டது தன்னைப்போலவே உருவ ஒற்றுமையுள்ள ஒருபடம்! அது அவனது மனைவியின் படம் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் ஒற்றைரோஜா செருகப்பட்டு பிறப்பு இறப்பு தேதிகளுடன் அந்தப்படம் இருக்கவே அவளுக்கு கடற்கரையில் குழந்தை கூறிய அரைகுறை மழலைக் கதையின் புரியாத பகுதிகள் புரிந்தன. படத்தைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றவளின் மெளனத்தை ஜயலத்தின் குரல் கலைத்தது.
“அவ எட்டு மாசம் முந்தி தன் ரெண்டாவது கொளந்தையப் பெத்துக்க அவங்க அம்மா வீட்டுக்கு போனப்ப றெயின் குண்டு வெடிப்பில மாட்டிக் கிட்டு செத்துப்போனா. அவ கூடப்போன அவ அம்மா தங்கச்சி எல்லாமே செத்துப்போனது” அவனது குரல் கரகரத்தது.
“அப்போ இந்த வீட்ல குழந்தையோட தனியாக இருக்கிறீங்களா?”
“இல்லே நம்ம தங்கச்சி நம்மகூட இருக்கா. இன்னம் ஒரு பொடியனும் எங்ககூட இருக்கான்.”
“நீங்க சொல்றமாதிரி இங்க யாரையும் காணவில்லையே?.”
எங்ககூட இருக்கிற பையன் தெமள. அவருக்கு தெமள சினிமா பார்க்க விருப்பம் சொல்லி நங்கிகூட சாந்தி தியேட்டர் போறாங்க.
உள்ளே போன ஜயலத் சில நிமிடங்களில் கையில் தேநீருடன் வந்து “பிளாஸ்கில நங்கி வைச்சிருக்கா. குடிங்க மேடம்” என்று சொல்லியபடி அவளிடம் கொடுத்துவிட்டு "பீடிங்கப்பில் கொண்டு வந்த தேநீரைக் கொடுத்தான். மீண்டும் உள்ளே போன அவன் தனக்கான தேநீருடன் வந்து அவளெதிரில் உட்கார்ந்தான்.
9ேவழி
 

“ஏன் மேடம்! நீங்க யாரு? எங்க இருக்கீங்க? என்ன பண்ணிறீங்க? எதுவுமே சொல்லலியே?’
“ஏன் பீச்ல வச்சி சொன்னேனே?”
“ஆமா சொன்னிங்க. அப்போ ரொம்ப குழப்பமாகிப் போச்சு. நீங்க என்ன சொன்னிங்ககன்னே நினைவில்லே.”
“என் பெயர் அனுராதா. மட்டக்களப்பில் அம்மா அப்பாவோட இருக்கிறன் ஆஸ்பத்திரியில் வேலை செய்யிறன். நேரம் கிடைக்கிறபோது அடிக்கடி பீச்சுக்கு வருவன். சரி நல்லா நேரமாயிற்று. நான் வீட்டுக்குப் போக வேணும். பாப்பா அழுமோ தெரியாது . என்ன பண்றது.”
“நான் நிலுவை உள்ளே எடுத்துக் கிட்டு போறன் நீங்க போங்க ரொம்ப நன்றி.”
குழந்தைக்கு வேறு சட்டை மாற்றுவதாகச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான் ஜயலத்.
சுவரில் தொங்கிய சித்ரா மயூரியின் படத்தை மீண்டும் ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு புறப்பட்டுச் சென்றாள் ராதா.
குறுக்கு ரோட்டிலிருந்து மெயின் ரோட்டை அண்மிக்கும் சமயம் இருபது மதிக்கக்கூடிய ஒரு அழகான பெண்ணும் பதினொன்று பன்னிரண்டு வயதுக்குட்பட்டவனாக ஒரு சிறுவனும் அவசர அவசரமாக காரைக் கடந்து சென்றனர். ஜயலத்தின் தங்கையும் வேலைக்கார பையனும் தான் அவ்விருவரும் எனப் புரிந்தபோதும் நேரமாகி விட்டதால் காரை நிறுத்தி அவர்களுடன் பேச ஏற்பட்ட விருப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமலேயே சென்றாள்.
வீடு வந்த ராதாவுக்கு அந்தக் குழந்தையின் அழகு கண்ணுக்குள்ளும் தன்னைத் தாயென எண்ணி அது பேசிய பேச்சுக்கள் காதுக்குள்ளுமாய் இருக்க , அவனது மனைவியின் சாயலில் தான் இருக்கும் நிலையை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. ஓரளவு உருவ ஒற்றுமை மோலோட்டமாக இருப்பது அவளுக்குத் தெரியும். ஆனால் இந்த ஒற்றுமை மிக அதிசயமாக இருந்தது. கண்களின் அமைப்பு, புருவங்கள், நெற்றி, தலைமுடி எல்லாமே ஒரே மாதிரி. எந்த வேலையை செய்தாலும் அம்மூவரின் முகங்களே கண்ணுக்குள் மாறி மாறி நிழலாடியது.
9ேர்

Page 32
தான் புறப்பட்டு வந்த பின் சட்டை மாற்றிக் கொண்டு வெளியே வந்த குழந்தை தன்னைக் காணாது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கும். பாவம் அந்தக் குழந்தை எனக் குழந்தைக்காகப் பரிதாபப்பட்டவள் குழந்தையைச் சமாதானப்படுத்த ஜயலத் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என அவனுக்காகவும் கவலைப்பட்டாள்.
முற்று முழுதாக அவ்விருவரின் நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டவளாய் அன்று இரவு நெடு நேரம் வரை தூக்கம் தொலைந்தவளாய் படுக்கையில் புரண்டு கிடந்து விட்டுத்தான் நித்திரையானாள் ராதா.
அதிகாலையில் அந்தக் குழந்தை தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அம்மா . அம்மா என்று திணறுவது போன்ற பிரமையில் கண் விழித்தாள். அவளையறியாமலேயே தன் கழுத்தை தடவிக் கொண்டாள் ராதா
இன்று பிற்பகல் ஜயலத்தின் வீடு சென்று குழந்தையைப் பார்த்து விட்டு வந்தாலென்ன? எனத் தோன்றிய எண்ணத்தைச் சடுதியாகவே மாற்றிக் கொண்டாள் ராதா.
அவள் அங்கு போவது ஜயலத்திற்குச் சங்கடமாக இருக்கும். குழந்தையின் ஏக்கத்தைப் அவ்வப்போது கிளறி அதன் மனசை நோகடிப்பதாக இருக்கும். எனவே அந்தப் பக்கமே போகக்கூடாது. ஏன் பீச்சுக்கே போகக் கூடாது என்றெல்லாம் எண்ணினாள்.
எந்த விடயமானாலும் தாயிடம் மனம் விட்டு கதைக்கும் ராதாவுக்கு இந்த விடயம் பற்றி ஏனோ கூறத் தோன்றவில்லை. அவளே அந்த விடயத்தை வலுக் கட்டாயமாக மறந்து விட எண் ணினாலும் குழந்தையினதும் ஜயலத்தினதும் நினைவுகள் அத்துமீறி அவள் மனசில் இடம் பெறுவதை அவளால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
மட்டக்களப்பு வைத்தியசாலையின் வழக்கமான சனக்கூட்டம் நிறைந்த காலை நேரப் பரபரப்பு. சிகிச்சை பெற வருவோரும் நோயாளிகளைப் பார்க்க வருவோரும் வைத்தியசாலை ஊழியர்களுமாக ஏகப்பட்ட சனக்கூட்டம்.
அது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான வைத்தியசாலை என்பது மட்டுமல்லாது கிழக்கின் நாலா புறங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் வருவதுண்டு. அதனால் எந்நேரமும் வைத்தியசாலை பரபரப்பாகவே காணப்படும். அதிலும் காலை மதிய நேரங்களில் மிக அதிகம்.
தன்னிடம் ஒவ்வொருவராக வந்த நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் டாக்டர். அனுராதா.
60 Bisiga 20

அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் அவளை "ராதாம்மா’ என்றே அன்பாக அழைப்பது வழக்கம். அவளின் ஆறுதலான வார்த்தைகளும் அன்பான பரிசோதனையும் இதமான ஆலோசனைகளும் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தன.
“ராதாம்மா குழல் (ஸ்டெதஸ்கோப்) வெச்சுப் பாத்தாலே போதும். பாதி வருத்தம் போயிரும்” என வயசான நோயாளிகள் மனசாரப் பாராட்டுவர்.
வரிசையில் நிற்பவர்களை ஒவ்வொருவராக போவதையும் அவள் அவர்களோடு மென்மையாக் பேசியபடி பரிசோதித்து மருந்தெழுதிக் கொடுப்பதையும் ஆலோசனைகள் கூறுவதையும் பாார்த்து இவள் ஒரு டாக்டரா? என வியப்புற்றபடி வரிசையில் நின்ற ஜயலத் தன் முறை வந்ததும் பெயர்சிட்டையை நீட்டினான்.
நிலூக்கா பிரியதர்சினி. வயது இரண்டரை. என்ற தகவல்களுடன் சிட்டையைப் பார்த்த ராதா ஒரு திடுக்கிடலுடன் சரேலென நிமிர்ந்தாள்.
குழந்தை அவனது தோளில் கிடந்தது. அவன் வியப்பிலிருந்து விடுபடாமலேயே
“ராத்திரிபூரா சரியான காச்சலுங்க மேடம்” என்றான்.
99.
ஒ.’ புரிந்து விட்டது அவளுக்கு,
குழந்தை அவனது தோளில் சாய்ந்தபடியே இருக்க அவனைக் கதிரையில் உட்காரச் சொல்லி அவள் எழுந்து அருகே வந்து குழந்தையைப் பரிசோதித்தாள்
குழந்தை காய்ச்சலில் சோர்ந்து போயிருந்ததாலும் ராதா சாரிக்கு மேலாக ஓவர்கோட் அணிந்திருந்ததாலும் ராதாவை குழந்தையால் அடையாளம் காண முடியவில்லை. அவளும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முயற்சிக்கவில்லை.
வைத்தியசாலையை விட்டு வெளிவந்த ஜயலத்திற்கு ராதாவை பற்றிய சிந்தனையாகவே இருந்தது. அவள் கடற்கரைக்கு காரில் வந்திருந்ததாலும் நல்ல தோற்றப் பொலிவுடன் இருந்ததாலும் ஏதோ வசதியான வீட்டுப் பெண்ணாக இருப்பாள் என்றுதான் அவன் நினைத்தான். கடமையுணர்வும் மனிதாபிமானமும் கொண்ட ஒரு டாக்டராக இருப்பாள் என அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
Gofaldwi...

Page 33
அவளும் பேச்சு வாக்கில் மட்டக்களப்பு ஆஸ்பதிரியில் வேலை செய்வதாகச் சொன்னாளே தவிர என்ன வேலை என்று சொல்லவில்லை. அவனும் கேட்கவில்லை. தன் தொழில் பற்றிய கர்வமோ பணச் செருக்கோ சிறிது மின்றி பண்பும் பணிவுமாக இருக்கும் ராதா அவனுக்கு ஒரு அதிசயமாகத் தோன்றினாள். இவளது பெற்றோர் மிக நல்லவர்களாக இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி பணி பான பெண் உருவாக்கப்பட்டிருக்கிறாள் என எண்ணினான் ஜயலத்.
அன்று பிற்பகல் வீடு வந்த ராதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தன்னால்தான் குழந்தைக்குக் காய்ச்சல் வந்ததென்று அவள் திடமாக நம்பினாள். அதனால் அவள் மிகக் கவலையடைந்தாள்.
குழந்தையைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமா இல்லையா என்பது பற்றி அவளால் ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை. மீண்டும் குழந்தையைப் போய்ப் பார்த்து அதன் மனசில் தன்னை அம்மா என நிச்சயப் படுத்தும் ஒரு மாயை தோற்றுவிப்பது தவறென நினைக்கும் அதே சமயம் குழந்தை காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கும்போது போய்ப் பார்க்காமல் இருப்பது சரியல்ல எனவும் எண்ணினாள்
இறுதியில் குழந்தையைப் பார்க்கும் எண்ணமே மேலோங்கியது குளித்து உடை மாற்றி கொண்டு அவள் தயாராகும் போது கையில் தேநீருடன் வந்த சுந்தரி “என்னக்கா வந்ததும் வராததுமாக எங்க போறிங்க? என்று கேட்டாள்.
“தெரிஞ்சவங்க குழந்தையொன்றுக்கு சுகமில்ல சுந்தரி, போய்ப் பார்த்திட்டு வாறன்.”
“எங்கக்கா?” “கல்லடிப் பக்கம். அம்மா கோவிலால வந்தா சொல்லு. நான் அம்மா வர்துக்குள்ள வந்தாலும் வருவன்.”
“சரியக்கா.”
தேநீரைப்பருகியதும் புறப்பட்டுச் சென்றாள். ஜயலத்தையும் குழந்தை நிலுக்காவையும் பற்றி சிந்தனை செய்தவாறு காரைச் செலுத்திய ராதா கடையொன்றில் காரை நிறுத்தி ஹோர்லிக்ஸ், பிஸ்கட் போன்ற சில பொருட்களை வாங்கிக் கொண்டு சென்றாள்.
9ேங்கி
(கதை தொடரும்.)

“என்ன கதிராமா, ரவுணில புதிசா கண்ணகிை அம்மனுக்கு சடங்கு செய்யிறாங்கெண்டு போனணி ஈக்கில் வாணம்போல திரும்பிவந்திற்றா? கணிணகித் தாயப் க்கு கோவிலிலயெல்லாம் வருசாவருசம் சடங்கு செய்யிறாப்ப இந்த வருசமும் செஞ்சம். அதுக்குப்புறத்தால ரவுணில கண்ணகித் தாய்க்கு இலக்கியவிழா எடுக்கிறாங்க! எல்லாம் ஒண்டுதானே?
“இல்ல கதிராமா” கோவில் கதவத்துறந்து சடங்கு செய்யிறதும், உருவேத்தி ஆடுறதும், பொங்கல் பொங்கி மட வெச்சி குளுத் திபாடுறதும் வருசாவருசம் நம்மட சனங்கள் செய்யிற வழிபாடு.
S. M ஆனா ரவுணில ரெண்டுநாளா நடந்தது கண்ணகி இலக்கிய விழா. அடிச்சி விலகேலாத சனம்.
சக்கரப் பொங்கல் பொங்கி தாமரை இலையில எல்லாருக்கும் கொடுத்து விழாவ கோலாகலமாக நடத்தி வெச்சாங்க.
ஜி.ஏ, பிரதேச செயலாளர் இன்னும் பல படிச்சவங்கெல்லாம் வந்து நிறையப் பேசினாங்க. இவ்வளவு நாளும் நாம அறியாம இருந்த கண்ணகிதாயிட பெருமையெல்லாம் ஆய்வு செய்து உரையாற்றினாங்க.
கண்ணகி எப்படி நம்மட நாட்டுக்கு வந்தாவு? எப்படித் தெய்வமானாவு? எண்டதையெல்லாம் கூத்து,கோலாட்டம், கும்மியெண்டு எவ்வளவு வடிவா செய்து காட்டினாங்க. சும்மா சொல்லப்போடாது. சோக்கான விழா. நேரம் போனதே தெரியல லடா! ஒவ்வொரு வருசமும் இப் படிவிழா எடுக்கப்போறாங்களாமெண்டு பட்டயமெல்லாம் எழுதி வாசிச்சாங்க. இதையெல் லாம் பார்த்த போது என ட உடம் பெல லாம் புல்லரிச்சிப்போச்சிக்கதிராமா!
இன்னொண்டு. ரெண்டுநாளும் வந்தவங்களுக்கெல்லாம். மத்தியானம் வயிறுமுட்டச் சோத்துப்பார்சலும் குடுத்தாங்க. ச்சா! விழாவெண்டால் விழாதான். இந்தவிழாவ நடத்திமுடிச்சவங்கள எவ்வளவு பாராட்டினாலும் தகும்டா!
நீயும் அங்க இருந்ததக் கண்டன். அதேன் இடையில ஒழும்பித்து போனணி?
என்ன? இந்த விழாச்சாட்டில முக்கியமான சாமான் சட்டுக்களை வாங்கிறதுக்கு பொயித்தயா? நீ போன புறகுதான் கதிராமா நல்ல நல்ல கூத்தும் டான்சும் நடந்த நீ தவற உட்டுத்தா! அடுத்த வருசம் விழா நடத்துறவங்களோட சேந்து நாமளும் காசப்பணத்தக் குடுத்துக் கலந்து கொள்ளவேணும். விழா நடந்த மண்டபத்த உட்டுப்போட்டு வெளியால வர மனமில்லாம நான் எல்லாத்தையும் பாத்துப்போட்டுத்தான் வந்தனான்.
இந்த இலக்கிய விழாவுக்கு வந்திருந்த சனத்தப்போல மட்டக்களப்பில எந்த ஒரு விழாவுக்கும் இப்படித்திரளாகச் சனம் வந்தத நானென்டா இது வரைக்கும் பார்த்ததேயில்ல. சரி கதிராமா, நீ பொயித்துவா, இன்னும் கணக்க விழாவைப்பத்திக் கதைக்கவேண்டியிருக்கு, ஆறுதலாக் கதைக்க \வேணும், பொயித்துப்புறகுவா!

Page 34
2 “கண்ணகி இலக்கிய விழா சிறப்பு மலர்” நன்றாகவுள்ளது. முகப்பு அட்டையில் கண்ணகியின் படத்தைப் பார்க்கும்பொழுது தமிழ்த்தாய் தனது பிள்ளைகளுக்காக நீதி கேட்டு நிற்பது போல இருக்கின்றது. கட்டுரைகள் பெறுமதியான தகவல்களைக் கொண்டுள்ளன. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் வடமாகாணத்திலே முதன்மை பெற்ற கண்ணகி கோயிலாகும். இக்கோயில் பற்றிய முழுமையான விபரம் இம்மலரில் காணப்படுகின்றது. ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை அண்டிய திங்கட்கிழமையில் பொங்கல் உற்சவம் நடைபெறும். பங்குனித்திங்கள் ஆடிப்பூரம் ஆகிய
தினங்களிலும் விசேட பூசைகள் நடைபெறுகின்றன.
கா.தவபாலன்
گل"R" کے==========sمجمع عنصیحح
1 மறுபடியும் ஒரு மனுநீதி'
நூல்
(சிறுகதைத் தொகுப்பு) எழுதியவர் ரவிப்ரியா (வை.க.ரவீந்திரன்) வெளியீடு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் முதற்பதிப்பு செம்டம்பர் 2008 விலை 5.250/-
வெளியீட்டுவிழா 28.05.2011 அன்று பெரியகல்லாறு மட்/உதயபுரம் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் "றோசாலயா” தலைவர் திரு.எஸ்.எஸ். சவுந்தரநாயகம் தலைமையில் நடைபெற்றது.
తిa.
二ツ
 
 
 
 

“செங்கதிர்’ ஆண்டுச் சந்தா : ரூ.1000/-க்குக் குறையாத இயன்ற அன்பளிப்பு
* "செங்கதிர் இன் வரவுக்கும் வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் நேரில் வழங்கலாம்.
அல்லது * மக்கள் வங்கி நகரக்கிளை), மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
இல; 13100158588996 க்கு வைப்பிலிடலாம். People's Bank (Town Branch) Batticaloa. Current account No.: 113100.138588996 - For bank deposit
அலிஸ்து
* அன்சல் அலுவலகம், மட்டக்களப்பில் மாற்றக் கூடியவாறு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For money orders
* காசோலைகள்/காசுக்கட்டளைகளைதகோபாலகிருஸ்ணன் எனப் Gujrbas Cheques/Money orders in Favour of TGopalakrishnan

Page 35
irst 126