கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நீலாவணன் கவிதைகள்  
 

எம்.ஏ. நுஃமான்

 

நீலாவணன் கவிதைகள்
எம்.ஏ. நுஃமான்

உன்னிடம் வருகையில்
நான் ஒரு சிறுவன்
கண்விடுக்காத ப10னைக் குட்டிபோல்
உலகம் அறியா ஒரு பாலகனாய்
உன்னிடம் வந்தேன்
நீ உன் கவிதை மாளிகை வாசலை
எனது கண்ணெதிர் திறந்து காட்டினாய்
நீலாவணையின் கடற்கரை மணலில்
நீ உன் கவிதை வீணையை மீட்டினாய்...

நீலாவணன் இறந்தபோது அவர் நினைவாக நான் எழுதிய கவிதை இவ்வாறுதான் தொடங்குகின்றது. நீலாவணனுக்கும் எனக்குமிடையே நிலவிய உறவு இரண்டு கவிஞர்களுக்கிடையே இருந்த வெறும் இலக்கிய உறவு மட்டுமல்ல. அண்ணன் தம்பி உறவாகவும், குருசிஷ்ய உறவாகவும் கூட இது இருந்தது. நீலாவணனின் உறவு கிடைத்திருக்காவிட்டால் உண்மையில் நான் ஒரு கவிஞனாக, இலக்கியகாரனாக உருவாகியிருக்க முடியாது என்றே நம்புகின்றேன்.

நான் முதல்முதல் நீலாவணனைச் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. 1960ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். கல்முனையில் க.பொ.த. வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.

அந்நாட்களில் இலக்கியம் - கவிதை போன்ற சங்கதிகள் பற்றி என்கு அதிகம் தெரியாது. பத்திரிகைகளில் வரும் எழுத்துகளை வாசிப்பதுண்டு. கவிதை, கதை என அவ்வப்போது ஏதோ கிறுக்கியதும் உண்டு. எனது இலக்கிய ஈடுபாடு அவ்வளவுதான். இதற்குமேல் ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயம் எதுவும் இல்லை. எனது வகுப்பறை நண்பன் சத்திய நாதனுக்கும் என்போல் எழுத்தில் ஈடுபாடு இருந்தது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்துவதற்குத் தீர்மானித்தோம். ஒரு நு}று ரூபா போல் பணமும் சேர்த்தோம். அதுதான் எங்களது கைமுதல். அதை வைத்துக்கொண்டுதான் ஒரு பத்திரிகையை அச்சிட்டு வெளியிடத் துணிந்தோம். அதை எங்கள் அறியாமையின் துணிச்சல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு நாள் சத்தியன் என்னிடம் சொன்னான். ~~நீலாவணன் என்று ஒரு கவிஞர் இருக்கிறார். நல்ல ஆள் போலத் தெரியுது. நேற்று தபாற் கந்தோரடியில் கண்டு பத்திரிகை அடிக்கிறது சம்பந்தமாகக் கதைத்தேன். ஒரு நாளைக்கு வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். நாம் போய்ச் சந்திப்போம்,|| என்று. நீலாவணனின் கவிதைகள் எவற்றையும் அப்போது படித்திருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அன்று பின்னேரமோ, மறுநாளோ நாங்கள் இருவரும் நீலாவணனை சந்திக்கச் சென்றோம். நீலாவணன் கோயிலடியில் இருப்பதாகச் செய்திகிடைத்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நாங்கள் கோயில் வளவுக்குச் சென்றோம். ஒரு கறுத்து மெலிந்த மனிதர் தன்னந்தனியாக, கோயிலைச் சுற்றி வளர்ந்து கிடந்த பற்றைகளை வெட்டிக்கொத்தித் துப்பரவு செய்து கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்தான் நீலாவணன் என்று சத்தியன் சொன்னான். எங்களைக் கண்டதும் மடித்துக்கட்டியிருந்த சாறனை அவிழ்த்துவிட்டபடி அவர் எங்களை நோக்கிவந்தார். கோயில் திண்ணையில் அமர்ந்து நாங்கள் கதைத்தோம். இந்தக் கோயிலை யாரும் கவனிப்பதில்லை என்று அவர் குறைப்பட்டுக்கொண்டார். எங்கள் முதல் சந்திப்பிலேயே நீலாவணனின் தனித்துவமான ஆளுமையை அவரின் நல்லியல்பை நான் கண்டேன். மற்றவர்களைக் குறைகூறுவதோடு நில்லாது, தானே அதைச் சரிப்படுத்த முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டியது. தனது ஊர் எல்லா வகையிலும் முன்னேற வேண்டும் என்ற நியாயமான அக்கறை அவரது மனதில் எப்போதும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுதிய ~பாவம் வாத்தியார்| கவிதை இதன் வெளிப்பாடுதான். அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகளை முதலில் வாசித்தபோது நீலாவணனை முதல்முதல் கோயிலடியில் சந்தித்த காட்சியே எனக்கு ஞாபகம் வந்தது.

~~ஏழேழ் தலைமுறைக்கும் எம்மூரின் கோயில்
மதிலாய் உயர்ந்து நிற்கும் மாபெரிய காடு
அதிலே உமக்கென்ன அக்கறையோ?. பள்ளிச்
சிறுவரை விட்டுச் சிரைத்து நிலவேர்
அறுத்துப் பிடுங்கி, அகற்றி, அம்மன் வீதியினை
வெட்டை வெளியாக்கி வெள்ளை மணல் கொட்டிவைத்தீர்
புற்றுடைத்துப் பாம்புகளும் போக விடை கொடுத்தீர்.||

கோயிலடிச் சந்திப்புக்குப் பிறகு நாங்கள் பத்திரிகை வெளியிடாவிட்டாலும் (அதுவே பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாடும் மீனாக வெளிவந்தது.) நீலாவணனின் வீடே எங்கள் இலக்கியப் பயிற்சிக் களமாக மாறியது. உண்மையில் நீலாவணனின் தொடர்பின் மூலம் நான் ஒரு புதிய உலகுள் பிரவேசித்தேன். என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்த, அதுவரை நான் காணாத பரந்த இலக்கிய உலகத்தை அவரது உறவின் மூலம் நான் தரிசித்தேன். மருது}ர்க்கொத்தன், மருது}ர்க்கனி, மு.சடாட்சரன், பாண்டிய10ரன், ஜீவா ஜீவரத்தினம், கனக சூரியம் போன்ற எமது பிரதேசக் கவிஞர்கள் எனது நண்பர்கள் ஆனார்கள். மஹாகவி, எஸ்.பொன்னுத்துரை, எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

பாரதி, பாரதிதாசன், ச.து.சு.யோகியார், புதுமைப் பித்தன், அழகிரிசாமி போன்றோரின் படைப்புகள் எனக்குப் பரிச்சயமாகின. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருவாசகம், கம்பராமாயணம் எனப் பரந்த பழந்தமிழ் இலக்கியம் என் ரசனை எல்லையை விரிவுபடுத்தியது. டால்ஸ்டாய், செக்கோவ், கார்க்கி, மாப்பசான், ஹெமிங்வே, செல்மாலாகர்லாவ் என உலகின் சிறந்த படைப்பாளிகள் தமிழ் மொழி மூலம் எனக்கு அறிமுகமானார்கள். இப்பரந்த இலக்கிய உலகின் ஜன்னல்களை எனக்குத் திறந்துவிட்டவர் நீலாவணனன் தான். நீலாவணனுக்கு ஒரு ஆரோக்கியமான இலக்கியப்பசி இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கும் அவர் அதைத் தொற்ற வைத்தார்.

2
நீலாவணன் ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் முக்கியமான இடம்பெறுபவர். ஈழத்து நவீன கவிதைபற்றிப் பேசும்போது மஹாகவி, முருகையன், நீலாவணன் மூவரையும் குறிப்பிடாமல் வேறு யாரையும் குறிப்பிடமுடியாது. மூவரும் தனித்தன்மைகளும் பொதுப் பண்புகளும் உடைய மும்மூர்த்திகள். ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இவர்களது செல்வாக்கு மிக ஆழமானது. முன்னவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தவர். நீலாவணன் கிழக்கின் பிரதிநிதி. கிழக்கிலங்கையின் தனிப்பெரும் கவித்துவ ஆளுமையாக அவர் திகழ்ந்தார். அவரது சமகாலத்தவர்களான புரட்சிக்கமால், அண்ணல் ஆகிய இருவரும் அளவாலும், தரத்தாலும் அவருக்கு அடுத்த இடத்தில் தான் வருவார்கள். கிழக்கிலங்கையில் கல்முனைப் பிரதேசம் தமிழ்க் கவிதையின் தலைநகராகக் கருதத்தக்கது. பல முக்கியமான கவிஞர்கள் இப்பிரதேசத்தில் உருவானதில் நீலாவணனின் செல்வாக்கு கணிசமானது.

நீலாவணன் 30.06.1931ஆம் ஆண்டு பிறந்து 11.05.1975ல் திடீரெனத் தாக்கிய இதய நோயினால் காலமானார். சரியாக 44 ஆண்டுகளே வாழ்ந்தார். பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, மஹாகவி போல் அதிக சாதனைகள் செய்து அற்ப ஆயுளில் மறைந்தவர் அவர். தன் ஆயுளில் அரைவாசிக் காலம், சுமார் இரண்டு தசாப்தங்கள், இலக்கிய உலகில் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரது முதல் கவிதை 1953ல் பிரசுரமானது. இறுதிவரை அவர் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்தார். கவிதை, சிறுகதை, நாடகம், உருவகக்கதை, நடைச் சித்திரம், கட்டுரை என அவரது இலக்கிய அக்கறை விசாலமானது. எனினும் கவிதையையே அவர் தன் பிரதான இலக்கிய வடிவமாகக் கொண்டார். சுமார் இருபது ஆண்டுகால அவரது இலக்கிய வாழ்வில் சில நு}ற்றுக்கணக்கான கவிதைகளும், வேளாண்மை என்ற குறுங்காவியமும், மூன்று பாநாடகங்களும் அவரது கவித்துவ அறுவடையாக உள்ளன. புனை கதைகளும், கட்டுரைகளுமாகப் பல உள்ளன. எனினும் அவரது வாழ்நாளில் தன் கவிதைத் தொகுதி ஒன்றையேனும் வெளிக்கொண்டுவர அவரால் முடியவில்லை. மரணத்தின் பின்பே அவரது கைப்படத் தொகுத்திருந்த 56 கவிதைகளைக் கொண்ட அவரது முதலாவது கவிதைத் தொகுதி வழி என்ற பெயரில் 1976ல் வெளிவந்தது. சில ஆண்டுகளின் பின் 1982ல் அவரது வேளாண்மை காவியம் வ.அ. இராசரத்தினத்தின் முயற்சியால் நு}லுருவாகியது. நீலாவணன் மறைந்த கால்நு}ற்றாண்டு காலத்தில் அவரது படைப்புகள் என்று இவ்விரு நு}ல்கள் மட்டுமே வெளிவந்தன. ம‘hகவி இறந்தபிறகு எனது முயற்சியால் அவரது நு}ல்கள் சில வெளிவந்தன. அதுபோல் நீலாவணனின் நு}ல்கள் ஒன்றிரண்டையாவது வெளிக்கொண்டுவர முடியவில்லையே என்ற மனக்குறையும் குற்ற உணர்வும் எனக்கு நிறைய உண்டு. வழியை அச்சுருவாக்கும் பொறுப்பை நானே ஏற்றுச் செய்தேன் என்ற திருப்தி இதற்கு ஒரு நிவாரணம் ஆகாது. இப்போது நீலாவணன் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படைப்புகள் அனைத்தையும் நு}லுருவாக்க அவரது துணைவியார் என் மரியாதைக்குரிய அழகேஸ்வரி அக்கா அவர்களும், மகன் எழில் வேந்தனும் முன்வந்துள்ளனர். அவர்களது முயற்சியால் இப்போது இத்தொகுப்பு வெளிவருகின்றது. இத்தொகுப்பு முயற்சியில் பங்குகொள்வதற்கும், இதற்கு ஒரு முன்னுரை எழுதுவதற்கும் கிடைத்த வாய்ப்பை ஒரு பிராயச்சித்தமாகவே கருதுகிறேன்.

3
இதுவரை நு}ல் உருப் பெறாத நீலாவணனின் 80 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 1953 முதல் 1974 வரையுள்ள இருபது ஆண்டு காலத்தில் அவர் எழுதிய கவிதைகளுள் சில இவை. ஏற்கனவே வெளிவந்த வழியில் இடம்பெற்ற கவிதைகள் எவையும் இதில் இல்லை. நீலாவணனின் கவித்துவ ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புவர்கள் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளோடு, வழி, வேளாண்மை ஆகியவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். நு}லுருப்பெற வேண்டிய அவரது கவிதைகள் இன்னும் அநேகம் உள்ளன. அவரது பரிமாணத்தை அறிந்துகொள்வதற்கு அவையும் அவசியமானவை. இந்த முன்னுரை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கு மட்டுமன்றி நீலாவணனின் முழுக்கவிதைகளுக்கும் ஒரு அறிமுகமாகவே அமைகின்றது.

நீலாவணன் எத்தகைய கவிஞன்?. தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் அவரும் ஒருவர் என இவ்வினாவுக்கு நாம் ஒரு வசனத்தில் விடை கூறலாம். ஆனால், இந்த முக்கியத்துவம் அவருக்கு எவ்வாறு வருகின்றது?. இதற்கு நாம் ஒற்றை வரியில் பதில் கூறுவது சிரமமானது. இதற்குரிய விடை கவிதைபற்றிய நமது பார்வையைப் பொறுத்துவேறுபடக் கூடும். கவிதை பற்றிய நமது பார்வை ஒற்றைப் பரிமாணம் உடையதெனின் நீலாவணனுடைய முக்கியத்துவத்தையும் நாம் அவ்வகையிலேயே நிறுவ முனைவோம். வாழ்வின் பன்முகத்தன்மையையும் கவிதையின் பன்முகத் தன்மையையும் நமது பார்வை உள்ளடக்குமாயின் நீலாவணனின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீட்டிலும் நாம் இப்பன்முகத் தன்மையை வலியுறுத்துவோம், இதை ஒரு உதாரணத்தின் மூலம் நான் விளக்க விரும்புகிறேன்.

நண்பர் மு.பொன்னம்பலம் சில ஆண்டுகளுக்கு முன் ~யதார்த்தமும் ஆத்மார்த்தமும்| என்று ஒரு கட்டுரை எழுதினார். இதே தலைப்பிலான அவருடைய கட்டுரைத் தொகுதியில் (1991) இது இடம்பெற்றுள்ளது. யதார்த்தத்தை நிராகரித்து ஆர்மார்த்தத்தை இனிவரும் யுகத்தின் கலைப் பார்வையாக மேன்மைப்படுத்த முயலும் ஒரு பலவீனமான கட்டுரை அது. அக்கட்டுரையில் மஹாகவியையும் நீலாவணனையும் ஒப்பிட்டு வேறுபடுத்த முனைகிறார் மு.பொ. ஒரு வகையான பட்டிமன்ற விவாத முறையைப் பயன்படுத்தி, மஹாகவியை ஒரு சாதாரண யதார்த்த வாதியாகக் கீழ் இறக்கும் நண்பர், நீலாவணனை ஒரு ஆத்மார்த்தியாக மேல் உயர்த்துகிறார். என்றாலும், நீலாவணனின் ஆத்மார்த்தம் கூட ஊனமுடையது என்றும் மு.பொன்னம்பலம், சு.விஸ்வரத்தினம், மு.தளையசிங்கம் ஆகியோரே ப10ரண ஆத்மார்த்திகள் என்றும் இவர்களே இனிவரும் யுகத்தின் கலைஞர்கள் என்றும் கூறுகிறார். இவ்வகையில் மஹாகவியை விட நீலாவணன் மேலானவர். நீலாவணனை விட மு.பொ.மேலானவர் என நிறுவ முனைகிறார்.

இந்தப் பார்வை கலை இலக்கியம் பற்றிய ஒற்றைப் பரிமாணப் பார்வை என்பது வெளிப்படை. இப்பார்வையின் அடிப்படையில் ~~நீலாவணனின் தீ, ஓ வண்டிக்காரா, போகிறேன் என்றோ சொன்னாய் ஆகிய இந்த மூன்று கவிதைகளே அவருக்கு இலக்கிய உலகில் நிரந்தர இடத்தைத் தரக் கூடியன|| என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய பார்வையை முருகையன் ~வெளி ஒதுக்கற் கொள்கை|| என்று சொல்வார். அதாவது, தனக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரித்தல். இப்பார்வை முற்றிலும் அகநிலைச் சார்பானது. மஹாகவியை நிராகரிப்பதற்கும், நீலாவணனை ஓர் அளவுக்கேனும் உயர்த்துவதற்கும் மு.பொ. இந்த அகநிலைச் சார்பையே அடிப்படையான பிரமாணமாகக் கொள்கிறார். மு.பொ.வின் இந்தப் பார்வை நீலாவணனின் சமூக சார்பான - சமூக விமர்சனப் பாங்கான கவிதைகளையெல்லாம் புறமொதுக்கி, தனது குறுகிய ஆர்மார்த்தக் கூண்டுக்குள் நீலாவணனை அடைத்துவிட அவருக்கு வாய்ப்பளிக்கிறது. தும்பிக்கையையே யானையாகக் காணும் ஒரு பார்வைக் கோளாறுதான் இது. நீலாவணனின் பன்முகத் தன்மையைக் காணமறுத்து தனக்குப் பிடித்த முகமே அவரது முகம் எனச் சாதிக்க முனையும் இப்பார்வை நீலாவணனுக்குப் பெருமை சேர்க்காததோடு அவரின் முக்கியத்துவத்தையும் வரையறுத்துவிடுகின்றது.

பிற எல்லாச் சிறந்த கலைஞர்களையும் போல் நீலாவணன் என்ற கவிஞனும் தான் வாழ்ந்த காலத்தினதும், தான்வந்த பாரம்பரியத்தினதும் தனது சொந்த ஆளுமையினதும் உருவாக்கம் தான். இவற்றின் கூட்டுக் கலவைதான் அவரது கவிதைகள். ஆனால், வேறு பலமுக்கிய படைப்பாளிகளைப் போல் வாழ்க்கைபற்றிய தீவிரமான தத்துவப் பார்வை எதையும் நீலாவணன் வரித்துக்கொள்ளவில்லை. வாழ்க்கையின் தேவைகளுக்கும் சவால்களுக்கும் தன் சொந்த ஆளுமையின் து}ண்டுதல்களுக்கேற்ப அவர் எதிர்வினையாற்றினார். புறநிலையான சமூக யதார்த்தத்துக்கும், பாரம்பரியமான ஆன்மீகத் தேடலுக்கும், இலக்கிய மரபுக்கும் அவர் ஒரே சமயத்தில் முகம்கொடுத்தார். இதனால் ஒரே சமயத்தில் இவரிடம் பல்வேறுபட்ட போக்குகளை நாம் அடையாளம் காணமுடிகிறது. அவ்வகையில் நீலாவணனை பல போக்குகளின், பலவிதமான உணர்வுகளின் கூட்டுக்கலவை எனக் கூறுவது தவறாகாது.

நண்பர் மௌனகுரு அவர்கள் நீலாவணன் பற்றி எழுதிய கால ஓட்டத்தினு}டே ஒரு கவிஞன் (1994) என்ற தனது நு}லில் நீலாவணனின் கவிதைப் போக்கின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாக வேறுபடுத்திப் பார்க்கிறார். இது ஒரு வகையில் மிகை எளிமைப்படுத்தப்பட்ட வேறுபாடு என்றே எனக்குத் தோன்றுகின்றது. நீலாவணன், பாவம் வாத்தியார், உறவு முதலிய சமூக விமர்சனக் கவிதைகளை எழுதிய அதேகாலப் பகுதியில் தான் பயண காவியம், பனிப்பாலை, தீ போன்ற ஆன்மீகத் தேடல் என்று விளக்கக் கூடிய கவிதைகளையும் எழுதினார். தயவுசெய்து சிரியாதே, ஓவியம் ஒன்று, மங்கள நாயகன் போன்ற அழகிய காதல் கவிதைகளையும் அவர் இதேகாலப்பகுதியில் தான் எழுதினார். கால ஓட்டத்தினு}டு அவரது கவித்துவ முதிர்ச்சியைக் காணமுடிகிறது. அதேவேளை ஒரே கால கட்டத்தில் அவரிடம் பல போக்குகளையும் காணமுடிகிறது. அவ்வவ்போதைய வௌ;வேறுபட்ட உணர்வுத் து}ண்டல்களுக்குத் தன் மரபு நிலைப்பட்டும், ஆளுமை சார்ந்தும் அவர் துலங்கினார். இது அவரது கவிதைகளுக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றது. இவ்வகையில், மொழி உணர்வு, காதல், சமூக விமர்சனம், ஆன்மீகத் தேடல் என்பன அவரது கவிதையின் பலமுகங்கள் எனலாம். இவற்றுள் ஒன்றை உயர்த்தி மற்றவற்றை நிராகரிப்பது நீலாவணனைச் சரியாக மதிப்பிடுவதாக அமையாது.

4

நீலாவணன் எழுத்துத்துறையில் பிரவேசித்த காலம் (1950கள்) இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டமாகும். இலங்கையில் இடதுசாரி இயக்கம் மட்டுமன்றி, இனத்துவ முரண்பாடும், இனவாத அரசியலும் கூர்மை பெறத்தொடங்கியதும் இக்கால கட்டத்திலேயே. சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற சிங்கள தேசிய வாதத்தின் நிலைப்பாடு தமிழ் உணர்ச்சியையும், தமிழ் மொழி உரிமைப் போராட்டத்தையும், தமிழ்த் தேசிய வாதத்தையம் கிளர்ந்தெழச் செய்தது. 1955 முதல் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இது தீவிரமாக வெளிப்பட்டது. உண்மையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இக்கால கட்டத்தை அரசியல் எதிர்ப்புக் கவிதையின் (Pசுழுவுநுளுவு Pழுநுவுசுலு) தொடக்ககாலம் எனலாம். இலங்கையின் அன்றைய முன்னணிக் கவிஞர்கள் பலரும் தமிழ் உரிமைப் போராட்டத்தை ஊக்கப்படுத்திக் கவிதை எழுதினர். மாபாடி என்ற புனை பெயரில் மஹாகவி இத்தகைய ஒன்பது கவிதைகள் எழுதியிருக்கிறார். முருகையன் இதைவிட அதிக கவிதைகள் எழுதினார். நீலாவணனின் மொழி உரிமைப் போராட்டக் கவிதைகள் கணிசமானவை. வீறார்ந்த உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதைகளாக இவை அமைந்தன. சங்ககால வீரயுகமரபில் இருந்தும் இக்கவிதைகள் ஊட்டம் பெற்றன. மொழி உரிமைப் போராட்டத்தில் தான் இறக்க நேர்ந்தால் தன்மகன் எழில் வேந்தனை தகப்பன் சென்ற பாதையில் போருக்கு அனுப்பவேண்டும் என ஒருபாடலில் நீலாவணன் தன் மனைவியை வேண்டுகிறார். எழில் வேந்தன் அப்போது குழந்தைப் பருவத்தில் இருந்தான். முருகையன், மஹாகவி போலன்றி நீலாவணன் தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளிலும் நேரடியாகத் தோன்றியவர். கட்சிக் கொள்கைப் பிரச்சாரம் சார்ந்த சில கவிதைகளும் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இத்தகைய தமிழ் இயக்கப் பாடல்கள் 1958க்குப் பிறகு பெரும்பாலும் முடிவுக்கு வந்தன. 1958இன் இனக் கலவரமும், அது கவிஞர்களுக்கு ஏற்படுத்திய ஒரு தார்மீக அதிர்ச்சியும் இதற்குக் காரணம் எனலாம். 1960க்குப் பிறகு வேறுபல கவிஞர்களைப் போல் நீலாவணனும் தமிழ் அரசியல் இயக்கத்திலிருந்து பெரிதும் ஒதுங்கி இருந்தார்.

இக்காலத்தில் தோன்றிய தமிழ் இயக்கக் கவிதைகள் அவற்றுக்கே உரிய அழகியல் அம்சங்களையும் இலக்கிய வரலாற்று hPதியான முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தன. எனினும், நீலாவணனோ, மஹாகவி, முருகையன் ஆகியோரோ இக்கவிதைகளைத் தங்கள் தொகுதிகளில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கருதியிருக்கவில்லை. இவற்றுக்கான உரிமையை இவர்கள் மௌனமாக மறுதலித்தார்கள் என்றும் கூறலாம். எனினும். இவை நமது சமகாலக் கவிதை வரலாற்றின் ஓர் அங்கமாக உள்ளன என்பதை மறுக்கமுடியாது. இவற்றின் அழகியல் தனியாக ஆராயப்படவேண்டியது. நீலாவணனின் இத்தகைய கவிதைகளுள் ஒன்று மட்டும் - தமிழே எழுவாய் - இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அடுத்துவரும் தொகுதிகளில் ஏனையவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகம் அவரது காதல் கவிதைகளாகும். அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து பெரும்பாலும் இறுதிக் கட்டம் வரை காதல் அவரது முக்கிய கருப்பொருளாக இருந்திருக்கிறது. நீலாவணனின் காதல் கவிதைகளில் இரு வகைகளை நாம் காணலாம். ஒன்று, உடல்சார்ந்த விரக உணர்வின் வெளிப்பாடாக அமைபவை. அவரது ஆரம்பகாலக் காதல் கவிதைகள் பெரும்பாலும் இத்தகையன. இத்தகைய கவிதைகளுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்க இலக்கியத்திலிருந்து இது தொடங்குகின்றது. திராவிட இயக்கக் கவிஞர்கள் இதனை அதன் உச்சத்துக்குக் கொண்டு சென்றனர். பாலியல் கிளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பெண் உடல் வனப்பையும், உடல் உறவு நடத்தைகளையும் இவர்கள் நுணுக்கமாகச் சித்தரித்தனர். கருணாநிதி முதல் கண்ணதாசன் வரை நாம் இதனைக் காணலாம். சங்க இலக்கியக் காட்சிகள் சிலவற்றுக்கு இவர்கள் கொடுத்த கவிதை விபரணம் காமியம் செறிந்தது.

1950, 60களில் தமிழ்க் கவிதையில் இது ஒரு மரபாக நிலை கொண்டது. நீலாவணனின் முதல் கவிதையான ~ஓடிவருவதென்னேரமோ|| இம்மரபின் வெளிப்பாடுதான். 1959ல் அவர் கலித்தொகைப் பாடல் ஒன்றை (கயமலர் உண் கண்ணாய் - குறிஞ்சிக்கலி) தழுவி எழுதிய ~இனிக்கும் அன்பு| இம்மரபின் தொடர்ச்சியாக அமைகின்றது. வழியிலும் இத்தொகுதியிலும் இத்தகைய கவிதைகள் சில இடம்பெற்றுள்ளன. நீலாவணனின் சொல்லாட்சி, கற்பனைத்திறன் ஆகியவற்றை நாம் இவற்றில் காணமுடிகிறது.

நீலாவணனின் இரண்டாவது வகையான காதல் கவிதைகள் வெறும் உடல்சார் விரகத்தைத் தாண்டிய, சூழ்ந்த உள்ளக் கிளர்;ச்சிதரும் காதல் உணர்வை வெளிப்படுத்துபவை. போகவிடு, ஓவியம் ஒன்று, போகின்றேன் என்றோ சொன்னாய்;, மங்கள நாயகன், வேடன், சீவனைத்தான் வேண்டுமடி போன்றவை இத்தகையன. இவற்றிலும் உடல்சார் பாலியல் பொதிந்திருப்பினும் உள்ளக் கிளர்ச்சி அனுபவமே இவற்றின் அடிப்படைத் தொனியாகும். இவற்றில் தமிழ்ப் பக்தி மரபின் செல்வாக்கையும் நாம் காணலாம். இத்தகைய கவிதைகள் நீலாவணனின் தனித்துவத்தை நிலைநாட்டுவன என்பதில் ஐயமில்லை. பாரதியின் காற்று வெளியிடைக் கண்ணம்மா போன்ற தமிழின் அழிவற்ற காதல் கவிதைகளுள் இவையும் இடம்பெறும் என்றே நம்புகிறேன்.

நீலாவணனின் சமூக விமர்சனம் சார்ந்த கவிதைகள் அவரது கவித்துவ ஆளுமையின் இன்னுமொரு முகமாகும். தன் ஆரம்ப காலத்திலிருந்தே சமூக யதார்த்தத்தில் காலு}ன்றி நின்றவர் நீலாவணன். சமுதாய உணர்வு மிக்கவராக வாழ்ந்தவர் அவர். சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள், ஊழல்கள், வறுமை, சாதிப்பாகுபாடு, சீதன முறை, நிறவெறி போன்றவற்றுக்கு எதிரான தன் உணர்வுகளைக் கவிதையில் வெளிப்படுத்தினார். அவ்வகையில் அவரது கவிதைகள் பலவற்றில் சமூக சார்பு முனைப்பாகத் தெரிகிறது. ~பாவம் வாத்தியார்| இவ்வகையில் அவரது உச்ச சாதனை எனலாம். உறவு, போதியோ பொன்னியம்மா, வெளுத்துக்கட்டு போன்றவையும் அவரது முக்கியமான படைப்புகள். அவருடைய வேளாண்மை ஒரு விவரணச் சித்திரம் எனலாம். கிழக்கிலங்கையின் பண்பாட்டு ஆவணமாகவே நீலாவணன் அதனை உருவாக்கினார். ஒரு காவியத்துக்குரிய வலுவான மையம் அதில் இல்லை. எனினும் மானிடவியல் சார்ந்த இலக்கிய முக்கியத்துவம் அதற்கு உண்டு. யதார்த்தத்தைப் புறந்தள்ளும் ஆத்மார்த்திகள் இத்தகைய கவிதைகளை ஒதுக்கிவிடுவது விசனத்துக்குரியது.

மறைஞானப் பாங்கான அல்லது ஆன்மீகத் தேடல்களாக அமையும் கவிதைகள் நீலாவணனின் கவித்துவ ஆளுமையின் பிறிதொரு முகமாகும். நீலாவணன் ஒரு மறைஞானியாக (ஆலுளுவுஐஊ) வாழ்ந்தவர் அல்ல. பாரம்பரியமான சமய நம்பிக்கையின் வழிவந்தவர் அவர். சமய மெய்ஞானத்தில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது. 1960 களில் நடுப் பகுதியிலிருந்து அவரது கவிதைகளில் இதன் செல்வாக்கைக் காணலாம். 1964ல் இவர் எழுதிய துயில் மரணத்தில் நிறைவு காணும் பக்குவம் பற்றிப் பேசுகிறது. பனிப்பாலை, தீ, பயணகாவியம், போகவிடு, ஓ வண்டிக்காரா, ஒத்திகை, விளக்கு முதலிய கவிதைகள் இவரது ஆன்மிகத் தேடல்சார்ந்த கவிதைகளாகக் கருதப்படலாம். இவற்றில் கையாளப்பட்டுள்ள மொழி குறியீடு அல்லது உருவகப் பாங்கானது. அதனால் பலதளப் பொருண்மை உடையது. இவற்றுட் சில கவிதைகள் (பனிப்பாலை, போகவிடு) பாலியல் படிமங்களால் பின்னப்பட்டவை. இவை பாலியல் கவிதைகளாக அல்லது ஆன்மிகக் கவிதைகளாக விளக்கத்தக்கன.

சாதாரண சம்பவங்களையும் குறியீட்டுப் பாங்கில் கையாண்டு அவற்றில் ஒர் ஆன்மீக உட்பொருள் காணும் வகையிலும் இவருடைய சில கவிதைகள் அமைந்துள்ளன. சுமை, புற்று, விடை தாருங்கள், அஞ்சலோட்டம், பலு}ன், பட்டம், முத்தாக்காச்சு போன்றவை இத்தகையன. உண்மை, சத்தியம், பற்றறுத்தல், தீவினை களைதல் போன்ற அரூபமான எண்ணங்கள் இக்கவிதைகளில் அழுத்தப்படுகின்றன. உண்மையைக் காதலிப்பவர் இறப்பதில்லை என்ற கருத்தும் இவரது கவிதை ஒன்றில் வெளிப்படுகிறது.

~~உண்மை என்கிற சாந்தி இடத்திலே
உயிரை வைத்திங்கு வந்தவர் நாமெலாம்
என்னவோய் இறப்பென்று மொழிகிறீர்?
இல்லை நாம் இறவாதவர்.....||

இதுவரை நோக்கியதில் இருந்து நீலாவணனின் பன்முகத் தன்மையை நாம் இனங்காணலாம். இப்பன்முகத் தன்மையே நீலாவணனின் பலம் என்று கூறவேண்டும். வாழ்க்கையின் பன்முகத்தன்மைக்கு இயல்பாக முகம் கொடுக்கும் எந்த ஒரு படைப்பாளியிடத்திலும் நாம் இந்தப் பன்முகத்தன்மையைக் காணலாம். விமர்சகன் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தனக்குப் பிடித்ததை மட்டும் படைப்பாளியிடம் தேடுதலும், அது கிடைக்கும்போது அவனை உயர்த்துதலும், அது கிடைக்காதபோது அவனைத் தாழ்த்துதலும் நேரிய விமர்சனத்தின் பாற்பட்டதல்ல. ஒரு நேரிய விமர்சகன் தன்விமர்சனச் சட்டத்தை ஒரு கூண்டாக அமைத்துக்கொண்டு தன்னை அதற்குள் சிறைவைத்துக்கொள்ள மாட்டான். வாழ்க்கையின் பன்முகத் தன்மைக்கும் இலக்கியத்தின் பன்முகத் தன்மைக்கும் அவன் முகம் கொடுத்தே ஆக வேண்டும். இது மாக்சீய விமர்சகனுக்கும் பொருந்தும். ஆத்மார்த்த விமர்சகனுக்கும் பொருந்தும்.

5

நீலாவணன் கவிதைகளை முழுமையாகப் படிப்போர் அவரிடம் மரபு வழிச் சிந்தனையும் புதுமை நாட்டமும் ஒருமித்து இருப்பதை அவதானிக்கலாம். இன்னும் ஒரு வகையில் சொல்வதானால் சமூக மாற்றத்தை வேண்டிநிற்கும் புத்துலக நோக்கும் பாரம்பரியமான ஆன்மிக விழுமியங்களும் ஒன்று கலந்;த ஒரு கலவையாக நாம் அவரைக் காணலாம். ஆயினும், கவிதையின் வடிவத்தை, அதன் ஊடகத்தைப் பொறுத்தவரை அவர் முற்றிலும் மரபுவழிச் சிந்தனையின் வயப்பட்டவராகவே இருந்தார். அதாவது, யாப்பே கவிதையின் ஊடகமாக அமையவேண்டும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது. இது மஹாகவி, முருகையன் உட்பட இலங்கையின் நவீன முன்னோடிக் கவிஞர்கள் அனைவரிடமும் இருந்த ஒரு இறுக்கமான நம்பிக்கைதான். கொள்கை hPதியாக இவர்கள் புதுக்கவிதை அல்லது வசனக் கவிதைக்கு எதிராக இருந்தார்கள்.
கவிதை பழைமையில் காலு}ன்றி நிற்கவேண்டும் என்பதே நீலாவணனின் கருத்தாக இருந்தது. பழைமையின் வழியிலேயே புதுமை முகிழ்க்க வேண்டும் என்றும் அவர் நினைத்தார். கவிதை பற்றிய நீலாவணனின் கவிதை ஒன்று பின்வருமாறு :

பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.

~இளமைக் கயிற்றில் கனவைத் தொடுக்கும்| கவிதை பழைமையின் அடித்தளத்திலேயே பயிராகின்றது என்பதை இக்கவிதை கூறுகின்றது. ~~வழியின் பழமை அறியாது இருளில் நுழையின் வருமோ நவமே|| என்று நீலாவணன் தன் வழிக் கவிதையில் கேள்வி எழுப்புகிறார். தமிழ்க் கவிதையின் மரபுத் தொடர்ச்சியை இனங்காட்டும் ஒரு கவிதை முயற்சியே அவரது வழி. யாப்பு மரபை வலியுறுத்தி யாப்பை மீறிய புதுக்கவிதை மரபைச் சாடும் இக்கவிதையில் ~~யாப்பும் முந்தைய வழியும் தேர்ந்த மொழியறி புலவர்|| களே போற்றப்படுகின்றனர். இவர்களே அறவழிப்புலவர். யாப்பை மீறும் ~புதுமை வாணர்கள்| ~தமிழின் கவிதைக் கலையின் மகிமை| அறியாதவர்களாய், அதன் அமிர்தப் பொருளைக் கொலை செய்பவர்களாய்ச் சித்தரிக்கப்படுகின்றனர். நீலாவணன் உட்பட நமது முன்னோடிக் கவிஞர்களைப் பொறுத்தவரை யாப்பு ஒரு புனிதப் பொருளாகவே அமைந்தது.

1960 களின் நடுப்பகுதிவரையுள்ள ஈழத்துக் கவிதையை அவதானித்தால் யாப்போசை அதில் முனைப்பாக இருப்பதை நாம் காணலாம். யாப்போசையைப் பேணும் வகையில் கவிதைகள் சீர்பிரித்து எழுதவும் அச்சிடவும் பட்டன. ஆயினும், 60 களின் நடுப்பகுதியிலிருந்து நாம் இதில் பெரிய மாற்றத்தைக் காண்கின்றோம். யாப்பின் வரம்புக்குள் நின்றுகொண்டே யாப்போசையைத் தளர்த்தி, அதன் இடத்தில் பேச்சோசையைப் புகுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சீர், தளைக்கேற்ப சொற்களைப் பிரிக்காமை, செய்யுளின் அடி அமைப்பைப் புறக்கணித்து பொருள் அமைப்புக்கேற்ற வரி அமைத்தல், சிறு வாக்கிய அமைப்பைப் பேணுதல், ஓசை நிரப்பியாக இடம்பெறும் அசைச் சொற்களைத் தவிர்த்தல் போன்ற உத்திகள் இதன்பொருட்டுப் பயன்படுத்தப்பட்டன. கவிப்பொருளில் ஏற்பட்ட மாற்றமும், வளர்ச்சியடைந்து வந்த புதுக் கவிதை இயக்கத்தின் செல்வாக்கும் இதற்குக் காரணம் எனலாம். 1960களில் யாப்பு மரபுக்குள் பேச்சோசையை அறிமுகப்படுத்தியதில் மஹாகவியின் பங்கு தலையாயது. முருகையன், சில்லைய10ர் செல்வராசன் ஆகியோரும் இதில் முக்கிய பங்காற்றினர். நீலாவணனின் பங்கும் இதில் கணிசமானது. அவரது பல கவிதைகளில் நாம் இதனைக் காணலாம். பாவம் வாத்தியார், உறவு, வேளாண்மை போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம், இத்தொகுப்பில் உள்ள பட்டம், நெருப்பே வா, புதிர், பள்ளங்கள், எட்டாதிரு முதலியவை புதுக்கவிதையோ என்ற மயக்கத்தைத் தருவன. ஆயின் இவை சுத்தமான யாப்பில் அமைந்தவை. வரியமைப்பு மாற்றம் இவற்றுக்குப் புதுக்கவிதையின் தோற்றத்தைத் தருகிறது.

நீலாவணனிடம் லாவகமான செய்யுள் ஆற்றல் இருந்தது. இலங்கையில் தமிழ்ச் செய்யுள் நடையைச் செழுமைப்படுத்திய முன்னோடிகளுள் நீலாவணனும் ஒருவர் என்பதில் ஐயமில்லை. பொதுவாக இலங்கையின் பிறபாகங்களைவிட, கல்முனைப் பிரதேசக் கவிஞர்கள் செழுமையான செய்யுள் நடை வல்லவர்களாக இருப்பதற்கு நீலாவணனின் உடனிருப்பும் செல்வாக்கும் ஒரு முக்கிய காரணம் என்றே கருதுகிறேன்.

நீலாவணன் அலாதியான முறையில் தன் கவிதைகளை வாசித்துக்காட்டுவார். கவி அரங்குகளில் அவரது கவிதைகள் எடுபட்டமைக்கு அதுவும் ஒரு காரணம். கவிதைகளை இனிமையாகப் பாடும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. மாலை வேளைகளில் நீலாவணைக் கடற்கரையில் மணலில் படுத்தவாறே அவர் பாடுவதைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்ததுண்டு. போகிறேன் என்றோ சொன்னாய், ஓ வண்டிக்காரா ஆகிய பாடல்களை அவர் பாடக் கேட்ட அனுபவம் அற்புதமானது. யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கப் பாடலை அவர் உணர்வோடு பாடக் கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நீலாவணன் மென் உணர்வுமிக்கவர். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். இதனால் தன் உண்மையான தோழர்கள் பலரின் நட்பையும் அவர் துண்டித்துக் கொண்டதுண்டு. எஸ்.பொன்னுத்துரை நீலாவணன் நினைவுகள் என்ற தன் நு}லில் (1994) இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். நீலாவணனின் கடைசி ஆண்டுகளில் அவரை விட்டு விலகி இருக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கும் நேர்ந்தது. மஹாகவியோடும் அவர் தன் உறவைத் துண்டித்திருந்தார். நீலாவணன் தன் நண்பர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தவறியதே இதற்குக் காரணம் என்று தோன்றுகின்றது. அதுபோல் நீலாவணனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

எரித்த தீபம் அணைந்திடில் மீண்டும் இங்கு
ஏற்றிவைத்துத் தொழுவதற்காக நாம்
அறிந்திராத புதியர் அப10ர்வமாய்
ஆண்டு தோறும் அவனியில் தோன்றினும்
புரிந்துகொள்ளப்படாமலும் போகலாம்
போற்றவும் படலாம் சில வேளையில்.......

என வேட்கை என்ற தன் கவிதையில் நீலாவணன் எழுதினார். நீலாவணனைச் சரியாகப் புரிந்துகொள்வதும், ஈழத்துக் கவிதையில் அவருக்குரிய இடத்தை உறுதிப்படுத்துவதும் நமது கடமையாகும். இதற்கு ஒரு முன் தேவையாக அவரது படைப்புகள் அனைத்தும் நு}ல் உருப் பெறவேண்டும். அதேவேளையில் அவரது கவித்துவ ஆளுமையின் பன்முகத் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றும் வெளிவரவேண்டும். தமிழின் மிகச் சிறந்த கவிதைகள் சிலவற்றையேனும் நீலாவணன் எழுதியுள்ளார் என்பதை அப்போது வெளிஉலகம் அறிந்துகொள்ளும்.

எம்.ஏ.நுஃமான்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்லைக்கழகம்


தமிழே எழுவாய் !

என்று நீ பிறந்தாய் எனவுனை யாரும்
எழுதிவைத் திலரினி எழுதவு மொண்ணா
அன்றுனை வளர்த்த அருந்தமிழ்ப் பாவலர்
அழிந்தனர் நீயோ அமர்ந்திருக் கின்றாய்
இன்றுனை யழித்திட இதயமில் லார்கள்
இயற்றுகின் றாரடி புதுப்புது வழிகள்!
நன்று நன்றெனவே நகைத்தெழு தாயே
நானதைக் கண்டுள நலிவொழிந் திடவே !

கன்னலென் றுபாற் கடலினிற் கடைந்த
களிதரு அமுதெனக் கனியெனத் தேனென
மன்னிய மலைதவழ் மாருத மெனவும்
மதியென மணமிகு மலரெனப் போற்றி
முன்னுனைக் காத்த மூவரும் புகழ்ந்தார்!
முழுதுமுன் வாழ்வென முயன்றவ ருழைத்தார்
அன்னதெல் லாமின் றழிந்ததோ உவமையில்
அழகியே! அறிவிலார் தமைச்சினந் தெழுவாய் !

உயிரினும் பெரியதிவ் வுலகினி லிலையெனு(ம்)
உண்மையைத் தெரிந்தனர் உயர்வு கொள்புலவோர்
உயிரென உலகினி லுனையவர் மதித்தார்
ஊறுகள் நேர்ந்திடி னுருத்துவ னெழுந்தார்
மயிரிழந் திடினும் வாழ்ந்திடாக் கவரி
மானனை யாய்தமிழ் மாதர சேபசுந்
தயிரிலே வெண்ணெயாய்த் தமியனி னுளம்வாழ்
தையலே தமிழே! தருக்கிநீ எழுவாய்.

வள்ளுவ னுளத்தினில் வாழ்ந்தனை கம்பன்
வாயிலும் இளங்கோ வாசகந் தனிலும்
கள்ளமில் சங்கக் கவிகளின் கருத்தாம்
காப்பியங் களிலுமே கன்னிநீ வாழ்ந்தால்
கொள்ளையர் மொழிவெறி கொண்டலை கின்ற
கொடியவர் தமக்கார் மறுமொழி புகல்வார்
வெள்ளமே கவிதை விரைந்தெனக் கருளும்
வேதமே தமிழே வீறுகொண் டெழுவாய்!

-ஈழகேசரி 8.9.57

ஓடிவருவ தென்னேரமோ..........?

வானத்தில் மதியம் வருகுது !-உன்
வண்ண முகம் என்முன் தெரியுது !
முல்லை மலர் ப10த்துக் குலுங்குது - உன்
முத்துப் பற்கள் கண்ணிற் துலங்குது !
மீன் கயல் ஓடையில் குதிக்குது - உன்
மீன் விழிகள் நெஞ்சைத் துளைக்குது !
கோவைக் கனி அதோ தொங்குது ! - உன்
கொள்ளை இதழ் இன்பம் பொங்குது !
மயிலும் முகில் கண்டு ஆடுது - இன்பக்
குயிலும் குரல் கொட்டிப் பாடுது !
உன்னை நினைத் திங்கே ஏங்குறேன் - நீயும்
ஓடி வருவ தென்னேரமோ......?

-சுதந்திரன் 53
(முதலாவது கவிதை)

இனிக்கும் அன்பு

கூடி வாழ்;ந் தன்பி;ன் குறும்பால் இறும்ப10து}ம்
சேடியே, கேளாய்நான் செப்புவதை வேடிக்கை
பேச்சல்ல! வாழ்க்கையிலே பெண்மைகொண்ட வெற்றியடி
கூச்சம் எதற்கதனைக் கூறுவதில்? மூச்சுவிடேல்!
கொள்ளை அழகுதிரும் குன்றம் அவர்! நகைக்கின்
உள்ளம் குலுங்கும் உயிர் சரியும் வெள்ளைமனம்
திங்கள் இரண்டில் திருடினார் என்னையவர்!
அங்கென் உயிரும் அவரிடமே தங்கிற்று!

பேசாத பேச்செல்லாம் பேசும் அவர் விழிகள்
கூசித் தலையைக் குனியுங்கால் மாசற்றார்
போலுமொரு நு}லிடையே போக்கிடுவார் பார்வையினை
காலத்தின் மேன்மை கருதார் கலைஞரிவர்!

~~கண்ணே உனையானும் காதலிக்கி றே||னென்று
சொன்னாற் தமிழ்தான் சுவைகுன்றிப் போய்விடுமா...?
ஏழை போல் என்னிடத்தே ஏதோ இரக்கின்றார்
நாளையென்று நாளையென்று நாளும் நகர்வதனால்
நெஞ்சு பொருமி நெகிழ்ந்துருகிச் சாகின்றார்
பஞ்சமா பைந்தமிழில் பாட்டெழுது வார்க்கொருசொல்?
எட்டே வரி போதும்@ இதயத்தைப் பாட்டாகக்
கட்டி அனுப்பிவிடின் கற்பனைக்கு ரட்டித்த
வட்டி கொடுக்க வகையிலையா எந்தனுக்கு ?
எட்டாக் கனி யென்றோ எண்ணியுளார் பாவமவர்!

பள்ளியிலே நு}று பயல்களுக்கு மத்தியிலென்
உள்ளத்தை யேனும் உணர்த்தவழி இல்லையடி
வாய்ப்புவரும் போதெனது வாய்திறந்து பேசா@ ப10ந்
தோப்பினிலே கண்டுரைக்கத் தோன்றியது காப்பிட்ட
கைதியெனப் புற்றரையில் காத்திருந்தேன் வந்தவர் என்
செய்தி தனிமையிலே? செப்பென்று கொய் தென்னைத்
தோளிற் சரித்தால் துடித்துப் புலம்புவனா?ஆளில்லா மங்கை அவளோடு பேச்செதற்கு
என்றெண்ணிப் பண்புன்னி ஏகினரா? இல்லையில்லை!
இன்றைக் கிவருள்ளம் எப்படியும் காண்பதெனப்
~~பாம்பு பாம்(பு)|| என்று பதறித் துடிதுடித்துக்
காம் பவிழ்ந்த மென்மலராய்க் கண்மூடி சாய்ந்துவிட்டேன்!
பாம்பெங்கே யென்றிரண்டு பாய்ச்சலிலே ஓடிவந்து
தேம்பும் எனைத் தொட்டார் தேளெதையும் தொட்டாரா!

ஓடிற்றே என்றென் ஒரு கண் திறந்துரைத்தேன்
வாடிற் றவர்முகமென் வல்லி இடைபற்றி
எங்கே கடித்ததுபாம் பென்ன..... விழிக்குள்ளே.......
இங்கே....... எனவே எதிர்நோக்கி நான் சிரிக்க
மாடு மிதித்து மசி;ந்தவயற் சேற்றிடையே
போடும் முளைநெல்லே ப10மியொடும் ஒன்றாகிக்
கூடினாற் போல் விழிகள் கூடிற்று! வேடுவன்கை
அம்பு துளைக்கவொரு ஆண்சிங்கம் வீழ்ந்துபட்ட
சம்பவம் போல் ஆனதவர் சங்கதியும். தெம்புடனே
கையைப் பிடித்தார்.... கனி இதழைக்... கன்னத்தை...
ஐயையோ... என்னென் றறைவே னடியவற்றை...!

காதலின் கல்லறையில் கைதானாள் என்றுலகம்
ஏதேனும் பேசி எனை எள்ளி நகைத்திடுமா
தோழியே? நம் பண்பு தொன்மையது நாணுகிறேன்!
ஊழின் செயலென்று ஒப்பாரோ? பெண்ணென்றால்
பேயும் இரங்குமவர் பேசுவதைப் பேசட்டும்.....
ஆயின் இனிக்குமவர் அன்பு.

-சுதந்திரன் 9.8.59

ஓட்டம் பிடி, வா!

பகலும்; முடியப் படரும் இருளில்
நகலும் அடிவான்: நதியின் கரையிற்
தகவல் தரவெண் நிலவும் வருவாள்
இகமேல் இனிஎன் இதயம் இலையாம்!

காற்றா மிடையிற் கலையும் பொலியும்!
தேற்றாப் பழவிழி தேமொழி சொரியும்!
ஆற்றாப் புதுநோய் தருமே இவைகள்,
தோற்றேன், இனிஉன் துணையென் றடைவேன்?

வருவாய் மதியின் எழிலார் வதனீ!
தருவாய் அமுதந் தனைநேர் இதழும்.
அருளும் இலையோ? அடிஎன் கவிதாய்!
வருமோ இதுபோற் பிறிதோர் சமயம்?

ஓட்டம் பிடி, வா! உறவா டிடுவோம்.
நாட்டம் விடுஇந் நானில மேல்@ உன்;,
வாட்டம் தவிர். உயர் வானம் வரையும்
பாட்டைப் படி,பின் படரென் தோளில்!

- வீரகேசரி - 20.11.55

கண்வளராய்


எந்தன் உயிர்த்துளியே இன்ப எழிலரசி
சிந்தனையில் நான்வரைந்த சித்திரமே கண்வளராய்.....

செந்தமிழிற் கொஞ்சும்
சிலம் பே திருக்குறளே
முந்தைத் தவப்பயனால்
மூப்பகன்று நான் வாழ
வந்துதித்த வானின்
வளர்பிறையே வற்றாத
செந்தமிழர் காவியமே
செக்கர்வான் ஒவியமே
கொந்தார் நறுமலரே
கோவைச் செவ் வாயில் நீ
சிந்தும் சிரிப் பெனக்குச்
சீவனடி கண் வளராய்...

கொட்டும் அமுதுநிறை
கொங்கைகளைக் கச்சுக்குள்
இட்டு மறைத்து
எடுப்பாகத் து}க்கிவிட்டு
பட்டுத் தளிர் மேனிப்
பைங்கிளியே நீ அழுங்கால்
புட்டிப் பால் தந்துன்னைப்
போலியன்பு செய்துவிட்டு
எட்டாத நாகரிக
ஏணிப் படி யேறும்
திட்டம் அறிந்தோடி
தேம்புகிறாய்? கண்வளராய்...!து}ய தமிழ் பாடித்
து}ங்கவைக்க ஒண்ணாது
~ஆயா| இடத்துன்னை
அன்பே எறிந்தங்கே
மேயப் புகு மந்தை
மேனாட்டு நாகரிகப்
பேயாட்டம் ஆடுகின்ற
பேதையர்தம் உள்ளத்தே
தாயன்பை நாட்டத்
தலைப்பட்டுத் தோற்றுப்பின்
நீயழுதால் நான் அழுவேன்
நித்திலமே கண்வள ராய்....

உள்ளம் கவர்ந்தவனை
உத்தமனை வஞ்;சித்தே
பள்ளத்தில் வீழ்த்திப்
பரதவிக்கச் செய்வாரை
எள்ளளவும் எண்ணா(து)
என்னன்பே கண்வளராய்...
கல்லு}ரி வாழ்க்கையிலே
கண்ட இன்பம் பாழான
இல் வாழ்வில் இல்லை
என இசைக்கு மங்கையரை
எள்ளி நகைத் தென்
எழிலே நீ கண்வளராய்....

- தினகரன்- திகதி தெரியவில்லை

உவகை தரும் பொங்கல்

இளம் பரிதி எழிற் பரிதி
எழுந்த(து) அடி வானில்
வளந் திகழும் வயல்களெல்லாம்
வளைந்த கதிர் காணிர்!

பயிர் விளைந்து பயன்வழங்க
பானையிலே பொங்கல்!
உயிர்களித்தான் உழவன் அந்த
உவகை தரும் பொங்கல்!

உழைத்தவர்கள் உளமகிழ்ந்தார்
ஊரெல்லாம் பொங்கல்!
மழைக்குதவி புரிந்த கதிர்
மனங்குளிரப் பொங்கல்!

பசும் பாலும் பச்சரிசும்
பயறும் ஒன்று சேர்த்து
விசும் புயரும் வெய்யோனை
வேண்டுதல் செய் பொங்கல்!

கரும்பு செந்தேன் கனிவகைகள்
கற்கண்டுப் பாகில்
விரும்பி எங்கள் தமிழர் தங்கள்
வீட்டில் வைக்கும் பொங்கல்!

பட்டாசு வெடி வெடித்துக்
கட்டியங்கள் கூற
பட்டாடை கட்டி நாங்கள்
பவனி வரும் பொங்கல்!

-வெற்றிமணி. திகதி தெரியவில்லை

நித்திரைப் பெண்

என்ன வெஞ்சினமோ என்னுடன் உனக்கு
எத்தனை பொழுதுனைக் காத்து
கண்ணிமை மூடிக் கட்டிலில் யானும்
கதறுவ தறிகிலைத் துயிலே
பெண்ணலை யோ நீ? பெரிதுவந் தேத்து
பெருமையின் உறைவிட மன்றோ!
கண்மணி கணமும் தாமதி யாதே
கலந்திடு கண்ணொடு கண்ணாய்

அன்னையின் கருவில் அமைந்த நாள் முதலாய்
ஆதரித் தாண்டனை பின்னும்
இந்நில வுலகில் எடுத்தடி வைத்தும்
எத்தனை யோபல ஆண்டு
என்னுயி ராக இருந்தனை@ இன்று
எங்குசென் றனையடி கண்ணே
தென்னவர் யாமெனத் திறம்பல பேசும்
தீரரத் தமிழர்தம் மிடமோ?

கண்டுநீ வருவாய் களித்திட லாமெனக்
கருதியா ரோ ஒரு மேதை
விண்டுரை செய்து விளக்கிய ~~வேத
வித்தகம்|| நு}லினைக் கையில்
உண்டதும் எடுத்தேன் ஒருசில வரிகள்
ஓடு முன் ஓடிவந் திடுவாய்!
பண்டிது பழக்கம்@ பக்கமோர் பத்துப்
படித்துமென்? பயனிலை இன்றே....

வீட்டினுள் எரிந்த விளக்கினை அவித்தும்
வெண்ணிலா ஒளிநுழை யாது
ப10ட்டியும் சாளரம் போர்வையை இழுத்துப்
போர்த்தியும் புதியசிந் தனைகள்
நீட்டவும் நெஞ்சில் இடங்கொடுக் காது
நித்திரா தேவியுன் அணைப்பை
யீட்டுதல் ஒன்றே இலட்சிய மாக்கி
இருந்துமென் பாவைநீ எங்கோ?
பிணந்தனைச் சுடலையிற் காத்திடு பேயென
~பெரியவர்| ஒரு சில பேர்கள்
பணந்தனை இரும்புப் பெட்டியிற் பதுக்கி
பகலிரா வென்றுபா ராது
மணங்குழை படுக்கையை மறந்துதுப் பாக்கி
மாட்டிய வேட்டுக ளோடும்
இணங்கிநீ வருங்கால் ஏசுவர் அஞ்சி!
ஏழைநான் அப்படி இலையே

மன்னுபா ராளு மன்றினுள் வாழும்
மாபெரும் மந்திரி யோநான்!
வன்னமாங் கவிதை வடித்துல கினுக்கு
வழங்கிடு கவிஞனு மாமோ?
கன்னலும் பாலும் கனியுநற் றேனும்
கசந்திடக் காதலர் வருகை
உன்னியுன் உறவை உதறிடு கின்ற
ஓர் எழில் மங்கையா வேனோ?

இறந்தவ ரோடுளம் இரண்டறக் கலந்து
இருக்கையில் அறிவிலா மாந்தர்
மறந்துபோய் உனையும் மடுவினுள் இட்டே
மண்கொடு மூடின ரோ?இல்
துறந்துபோய் அரசியல் துறைதனில் நீயும்
தொண்டுசெய் திடத்துணிந் தனையோ?
பறந்துவா இனியும் பராமுக மாயின்
பாவிஎன் உயிர்தரி யாதே!

~~உயிர்விடு படலம்|| நாடகத் தினுக்கு
ஒத்திகை பார்த்ததை நன்கு
பயிலுதற் குனையே பார்த்திரு விழிகள்
படுதுயர் அறிவையோ பாவி
அயலவன் மாடி அறையினில் அவனோ(டு)
அமளியில் கொஞ்சுதல் தனையே
குயிலென அவன் விடு குறட்டையின் நாதம்
கூறுது! கூடடி எனையும்.

- சுதந்திரன் 19.7.59

தியாகம்

மங்கிவரும் பகற்பொழுது மடல்விரிந்த
தாழையெலாம் மணம் பரப்பத்
தங்கநிற மணல்மேட்டிற் றனியாக நானிருந்தேன்
தமிழும் வந்தாள்!
பொங்கியெழும் கவியுணர்வுப் போதைக்கு
விசைய10ட்டப் புதுநி லாவும்
எங்கிருந்தோ அடிவானில் முளைத்தங்கே
ஆழியிடை அமுதம் பெய்தாள்;!

கடலழுத பேரொலியைக் கடந்தப்பாற்
கற்பனைய10ர்க் கரைய டைந்தால்
அட! புதுமை ஏதேனும் அகப்படுமே
என்றுவந்தே னந்தோ விந்தப்
படகருகே அமர்ந்தொருபா அடிதொடங்கிப்
பாடுதற்குட் பழைய நண்பன்
கடலெனது சிந்தனையைக் கலைக்கின்றான்
கைக்கிளைசெய் கலக மாமோ?

அன்னையவள் கருவினிலே அடியேனோர்
பனித்துளியாய் அடைந்தவன்றே
தன்னிரண்டு கரத்தாலும் எனைத்தழுவித்
தாலாட்டித் தரணி வந்த
பின்னுமெனைப் பிரியாதே பேரன்பு
காட்டிவரும் பெண்ணாம் து}க்கம்
கண்ணிரண்டை அழுத்திடலுங் கவலையெலாம்
மறந்தினிய கனவு கண்டேன்.

கருமேகக் கல்லடுக்கிக் கதிரவனாம்
சிற்பியவன் கணித்த கோட்டைப்
பெருமதிலைப் பிளந்தெறிந்து வெளியேறிப்
பெண்மைக்கே பெருமை தேடிப்
பொருமுகிறா ளொருகன்னி பொழுதெல்லா
மவளையிந்தப் ப10த லத்தோர்
~~வருகமழை மாதரசே வளந்தருக||
வாழ்விலென வணங்கு கின்றார்.கடலரசன் தான்விடுத்த காற்றாமத்
தோழியவள் கடிதில் வந்தே
உடல்நுழைந்தாள் கோட்டையினுள் ஒழித்திருந்தங்
கவள் செய்த உபாயத்தாலே
கடகடெனச் சரிந்ததங்கே கருமேகக்
கோட்டையதன் கதவு யாவும்
நடமழையே தாமதித்தால் நமனுன்றன்
தந்தையென நவின்றாள் தோழி.

காற்றுரைத்த மதிப்படியே கன்னியவள்
கதிரவன்றன் காவல் தாண்டி
ஆற்றுதற்கும் அளப்பதற்கு மரிதான
ஆகாயம் கடந்து, ப10மி
மேற்பரப்பிற் கால்தாவி மேனியெலாம்
புளகித்தாள்@ மேன்மைக் காதல்
தோற்றிடுமோ! புதுவாழ்வு தொடங்கிடுவேன்
கடலரசன் துணைவி யாவேன்.

தொலையாத பிறவியெனும் பெருங்கடலைத்
தாண்டவன்புத் தொண்டு செய்தே
நிலையான பேரின்ப வீடுபெற
நினைத்துலகை நீத்தார் போலும்
கலைவாணர் தம்முளத்தே கற்பனையா
ய10ற்றெடுத்துக் கனியுங் காதல்
அலைபாயும் நதியாகி அவள்கொண்ட
லட்சியத்தை யடையப் போனாள்.

ஓடுகின்றாள் கடல்நோக்கி உவகையோடும்
ஓர்கணமும் ஓயா தோடிப்
பாடுகின்றாள் ~~காதலின்றேற் சாதலெனும்||
பாரதியின் பழைய பாட்டை
காடுகளைக் கடப்பதற்கே காலமெலாம்
போதாதோ! கனவோ காதல்;?
கூடுவனோ என்னாசைக் குமரனையான்
எனவுள்ளம் குமைந்தவாறே.

பொங்கிவரும் பெருநதியாம் மங்கையவள்
காதினிலோர் புதுமைச் சேதி
எங்கிருந்தோ விழவுமதை எவருரைத்தா
ரெனத்தலையை எட்டிப் பார்க்க
இங்குலகில் விந்தைபல இயற்றுகிற
விஞ்ஞானி எனவே கண்டாள்
அங்கவனோர் குளமமைக்க ஆரம்பஞ்
செய்வதையும் அறிந்தாள் மேலும்,

பக்குவஞ்சேர் காதலுக்குப் பரர்நன்மை
நோக்க முடற் பசிய தொன்றே
முக்கியமாங் காதலது முப்பதே
நாட்களுக்குள் முடிந்து போகும்!
தக்கவர்க ளெஞ்ஞான்றும் தன்னலத்தை
எண்ணார்கள் தங்காய் கேளாய்
இக்கருத்தை நீயேற்றா லிவ்வுலகத்
துன்பமொழிந் தின்பம் பொங்கும்!

புவிப்பெரியான் புத்தனுக்கும், புகழ்யேசு
முகம்மதுக்கும் புனிதன் காந்தி
கவிப்பெரியான் வள்ளலுக்கும் கட்டழகி
நின்போலும் காதல் உண்டே!
கவிக்குயிலே அவரெல்லாம் காதலித்தார்
முழுவுலகைக் கடவு ளானார்!
தவிக்கின்றாய் நீயொருத்தி கடலரசன்
தனைத்தழுவத் தகுமோ தாயே?

ஓடிவந்த பாதையினை ஒருமுறைநீ
திரும்பிப்பார் உடைய10 ணின்றி
வாடிநிற்கும் ஏழைமக்கள் வரண்டுநிற்கும்
வயல்வெளிகள் வனிதை யுன்னைத்
தேடிநிற்க நீயோவத் திரைகடலைத்
தேடுகின்றாய் சேவைக் காக
ஏடியுன் இலட்சியத்தை இவர்க்காகத்
தியாகம்செய் இன்பங் காண்பாய்.


அழிவொன்றே இலட்சியமா யணுப்பிளந்து
உயிர்குடிக்கும் ஆயு தஞ்செய்
பழியஞ்சா விஞ்ஞானப் பரம்பரையி
லொருமகனா! பாரோ ருய்யும்
வழிவகுத்தா யுன்னடியை வணங்குகிறேன்
வாழியநீ! வையம் சாக
இழிகாதல் எனக்கேனென் இலட்சியத்தை
மாற்றிவிட்டே னின்னே யென்றாள்.

செங்கதிரோன் மகள்புரிந்த செப்பரிய
தியாகத்தாற் செய்ய ப10மி
தங்கநிறக் கதிர்காய்த்துத் தலைசாய்க்கும்@
மின்சாரம் தகத கக்கும்
இங்குள்ள மாந்தரிந்த இன்பத்தைப்
பொங்கலென்றே ஏற்று கின்றார்.
மங்கைநதி குளமாகி மணிமேக
லாதெய்வ மாட்சி பெற்றாள்,

காதல்நிறை வேறாத காரணமோ?
கடலரசன் கவிஞ னாகி
மாதவளை எண்ணியெண்ணி மனமுருகிப்
பாடுகிறான் - ~~மனிதா நீயும்
வேதனைசெய் காதலொடும் விளையாட
வேண்டா|| மென் றருகே வந்து
காதோடு மிதையுரைத்தான் கனவழியக்
கண்விழித்தேன் கவிதை கண்டேன்.

-முருகு - கொழும்பு தமிழ்ச்சங்க ஆண்டு மலர் 1960.

தமிழ்த்திருநாள் !

உலகனைத்தும் ஒருமுகமாய் உயர்மறையாம்
எனப்போற்றி
பலமொழியிற் பகுத்தெடுத்துப் பரப்புகிற
திருக்குறளை
நலமுறவே வகுத்தமைத்து நமக்களித்த
ஒரு பெரிய
புலவனவன் பிறந்த தினம் தமிழர்களின் புகழ்த்தினமே!

அறநெறியும் பொருட்திறனும் அகத்துறையும்
தமிழ்மொழியின்,
திறனறியும் திருக்குறளாய்த் தெரிந்தளித்த
புவிப்பெரியான்
பிறப்பதனைத் திருநாளாய்ப் பெருமையுடன்
தமிழரெலாம்
சிறப்புடனே சிரம்வைத்தார் செழித்ததுசெந்
தமிழ்மொழியே!

கற்பனையில் மூழ்கியிந்தக் காசினியோர்க்(கு)
எள்ளளவும்
நற்பயனே நல்காத நாவினிக்கும்
இலக்கியங்கள்
வற்றாது உண்டெனினும், வாழ்வுக்கோர் வழி வகுத்தே
அற்புதமாய்ச் செப்புதிரு வள்ளுவனை
வாழ்த்துவமே !

காலமெனும் கற்றறியாக் காலனையும்
கடந்துலகின்
சீலமெலாம் சிந்தனைக்கோர் விருந்தாக
இன்குறளில்
கோலமுற படைத்தெமக்குப் பரிந்தளித்த
வள்ளுவனை
ஞாலமெலாம் கொண்டாடும் நற்றிருநாள்
தமிழ்த்திருநாள்!

- திகதி, வெளியீடு தெரியவில்லை

அவனொரு மேதை

அவனை ஒரு மேதையென அறைகின்றார்! அதனால்
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
புலியையும் படைத்தான் புள்ளி மானையும் படைத்தான்.
வலிவுள யானை சிற் றெறும்பையும் படைத்தான்
ஒளிபடைத் தவனே அஞ்ச இருளையும் படைத்தான்!
ஒலிபடைத் தவனே செவிடாய் உருவையும் படைத்தான்!

அவனை ஒரு மேதையென அறைகின்றார்! அதனால்....
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
கோபுரம் படைத்தான் அருகே குடிசையும் படைத்தான்.
ஆவலும் படைத்தே சிலரை அடக்கியும் படைத்தான்
காவலும் படைத்தே அருகில் கள்ளரும் படைத்தான்
சாவையும் படைத்தே சகலசந் தோஷமும் படைத்தான்!

அவனை ஒரு மேதையென அறைகின்றார்! அதனால்....
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
ஆணவம் படைத்தான்; அவனே அறிவையும் படைத்தான்.
நாணமும் படைத்தே தெருவில் நாயையும் படைத்தான்.
வீணரும் படைத்தான் உழைப்பு - வியர்வையும் படைத்தான்.
ஊணையும் படைத்தே வயிறுகள் உலரவும் படைத்தான்!

அவனை ஒரு மேதையென அறைகின்றார்! அதனால்...
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
பாசமும் படைத்தான் இறவாப் பழியையும் படைத்தான்.
வாசமும் படைத்தே மலரினை வதங்கவும் படைத்தான்.
மோசமும் படைத்தான் தொண்டு முறைமையும் படைத்தான்.
காசையும் படைத்தே மறுபால் கவலையும் படைத்தான்!

அவனை ஒரு மேதையென அறைகின்றார்! அதனால்....
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
காதலைப் படைத்தான் கண்ணீர்க் கடலையும் படைத்தான.;
வேதனை படைத்தான் இன்ப வெறியையும் படைத்தான்.
ஆதவன் படைத்தான் அழகாய் அம்புலி படைத்தான்.
ப10தலம் படைத்தே அழிவின் பொருளையும் படைத்தான்!

அவனை ஒரு ~~மேதை|| என அறைகின்றார்! அதனால்....
அவனிடத்தே சிறிதேனும் கோபமெனக் கில்லை!
- தினகரன் 4.6.61


நான் என்ன விலைப்பொருளா ?

நிலவு முகம் தாளாக
நினைவெல்லாம் மையாக,
நீண்ட உன்றன்
கலை குலுங்கும் தளிர்க் கரத்தால் கட்டியதோர் காவியமாம்
கடிதம் கண்டேன்.
~~நலமிலை நான் மட்டும்|| என
நவில்கின்றாய்: நான்மட்டும்
நலமா என்ன?
பலகலைகள் மத்தியிலே
பயில்வதெலாம் நின்காதல்
பாடம் ஒன்றே!

அன்பே, உன் ஆசங்கை
அனைத்தினையும் அறிவித்தாய்
அதற்கென் நன்றி.
என்பால்நீ கொண்டிருக்கும்
எல்லையிலா அன்பினுக்கு
இவையே போதும்!
முன்பொருநாள்..... கடற்கரையில்
முத்துமணல் மெத்தையிலே
முழு நிலாவில்
தென்னைகளைச் சாட்சிவைத்துத்
தேனிதழ்கள் சுவைக்கையிலே
தெரிவித் தேனே......?

~~படுக்கை அறை, விருந்தினர்கள்
பழகும் அறை, உணவுண்ணப்
படிக்க என்று
அடுக்கடுக்காய் அறைசேர்த்து
அமைத்தெடுத்த மாளிகையும்,
அதோபார் அந்த
எடுப்பான ~மோட்டா|ரும்
இரண்டுலட்ச ரூபாவும்
இன்னும் எல்லாம்
கொடுத்திடுவோம்! உம்மகனைக்
கொடுப்பீரா என் மகளின்
கொழுந னாக? ||

தந்தையிடம் வந்த ஒரு
தனக்காரர் கேட்டாராம்!
தடித்த வார்த்தை!!
எந்தனை ஓர் விலைப் பொருளாய்
எண்ணியுளார்! அம்மம்மா!!
எழில்உன் இன்ப
செந்தமிழாம் காதலெனும்
சீர்மிகுந்த மாளிகையின்
சிறப்பும் காணார்!
அந்தஒரு மாளிகைக்கே
அடிமையெனப் புகுந்துவிட்டேன்
அவர்வெல் வாரா?

ப10ந்தேர் நீ! அதிலமர்ந்து
புவியெல்லாம் சுற்றிவரும்
புலவன் நான்@ சீ!
ஏன்காரை! ஏதோஓர்
எல்லைக்குள் ஓடுமது
எனக்கேன்? கண்ணே!
ஏன்கலக்கம் ஏழ்மைக்கா?
இல்லையிந்த உலகெல்லாம்
எம்போல் மக்கள்
தான் அதிகம்! வாழ்ந்திடலாம்!
தயங்காதே: அவரெங்கள்
தமர்என் றெண்ணு!

பணம் எதற்கு? நின்னுடைய
பவளஇதழ் நடுவினிலே
பற்கள் என்று
குணம் உயர்ந்த நி;த்திலங்கள்
குவிந்திருக்க@ அதன் வெயிலில்
குளிர் காய் தற்கே
கணமெல்லாம் ஏங்குகிறேன்!
காசென்ற இருட்டறையில்
காலை நீட்டப்
பிணமா நான்? அஞ்சாதே!
பிழைசெய்யேன்... இங்குந்தன்
பிரிய அத்தான்.
- தமிழின்பம் ஜுலை 1961.

அவனொரு சண்டியன் !

~விட்டுவிடேல் அந்த வேசி மகனை!|
வெறியொடு, கை
தட்டுகிறான் தொடை மீதினில்! யாரித்
தமிழ் மகனோ.....?
கட்டிப் பிடித்தான் ஒருவன் @ நெடும்பிடிக்
கத்தியினால்.....
வெட்டிச் சரித்தான், கை வேறு, கால் வேறாய்
விழுந்தனவே!

வேழச் சுறா பங்கு போட்டது போல
விழுந்துள, அவ்
வாளை அடையாளம் கண்டார், அடிமுதல்
அங்கு நின்றோர்!
நாளை இதுபோல், நமக்கும் நடக்கும்
என நடுங்கும்
கோழைகள் அல்லர்@ தன்மானம் புரக்கும்
குடிப்பிறந்தோர்!

துண்டம் பொறுக்கித், துடிக்கும் உடம்பில்
தொடுத் தமைத்து,
வண்டி பிடித்து, மருத்துவம் செய்ய
வழி நடந்தார்!
சண்டியன் பெண்டில் சரஸ்வதிக் கின்று, சந்
தோஷ மென்றால்....
ஒன்றா இரண்டா! ஒருநு}று கோடி! ஓம்@
உண்மையி தே!

~செத்தான் அவன்| எனச் செய்தி கிடைக்கச்
சிரசினில், கை
வைத்தழுதார் பலர்! வாய்மை உணர்ந்து, பின்
வாயடங்கி,
செத்தவன் மீதொரு காவியம் செய்து,
சுடச்சுட, நம்
பத்திரிகைகளில் அச்சாக்கி, வைத்துப்
படிக்கலுற்றார்!

சண்டியன், து}க்குக் கயிற்றைச் சரணா
கதியடைதல்
கண்டும் இவரேன் கலங்குகின் றார்கள்?
மன்றாடுகின்றார்@ மடயர்! அவனொரு
மாபெரிய
சண்டியன்! தொங்கும் கயிறன்றி, வெல்வார்
சகத்துளரோ.....?

- ஈழநாடு 8.11.64

காணேன் உன்னை!

வெள்ளை மணல் மீதிருப்பேன் பாட்டியோடு
விஜயனவன் தவநிலைக்கு விரையும் போது
~~தள்ளி இரு! தள்ளி இரு!! என்றே கூறித்
தடம்புரளும் சனத்துக்குள் தவழ்ந்து வந்து
கிள்ளுங்கள்@ ரகசியமாய்.....@ கிழவி கண்டால்
கிணுகிணுக்கும்,||என்றாயே! கேட்டுஇத் ~தீப்
பள்ளயத்தை| வாழ்த்தி ஒரு பாட்டுப் பாடி,
பாரதியாய்ப் போனேன் நான்! பயன்தான் இல்லை!!


வெண்கலத்தில் உன்மேனி விளங்கக் கண்டேன்;
விளையாட்டுப் பொருள்களில் உன் குறும்பு கண்டேன்
தங்கநிறக் கனிகளிலே தனங்கள் கண்டேன்;
தத்தளிக்கும் கற்ப10ரச் சுடரில் உன்றன்
கண்ணசைவும் கண்டேன்!செங் கரும்பின் சாற்றில்
கனிஇதழின் சுவைகண்டேன்@ ஹனிபா விற்ற
வண்ணவண்ண மிட்டாயில் வார்த்தை கண்டேன்.
வாடுகின்றேன் ஓடோடித் தேடு கின்றேன்.

ஆலையடிச் சதுக்கத்தில் அலைந்து பார்த்தேன்.
~ஆனந்த வட்டந்|தான் சுற்றுகின்ற
மூலைக்கு முந்நு}று தடவை வந்தேன்.
முட்டிசட்டி விற்குமிடம் முழுதும் பார்த்தேன்.
சேலைகளின் பின்னாலே சென்றேன்; காப்பு....
சேணியர்தம் கடைக்குந்தான் போனேன்!ஓர்பால்
பாலைநிகர் மணல்மீது படுத்துத் து}ங்கும்
பாட்டியர்தம் பக்கமெ லாம் பதுங்கிப் பார்த்தேன்.

படக் கடைக்கு ஓடிவந்தேன்; பாயும் விற்கும்
பழக்கடைக்குப் பக்கத்தே பனாட்டு விற்கும்
முடக் கடிக்கும் கிணற்றடியில் அப்பம் சுட்ட
மூதாட்டி மாரிடையும் கடலை விற்கும்
இடத்தினுக்கும் எத்தனையோ முறைகள் வந்தேன்;
எண்ணியெண்ணி மூச்சுவிட்டேன்! இழுத்த தொந்தி
உடற்பருத்த ~முண்டங்கள்| மோதி மோதி
ஒருபாதி உடல் தேய்ந்தேன் உன்னை காணேன்!

- தினகரன் 10.12.61

முழு வாழ்வு

மழலைஇன் மொழிகேட்டு
மகிழாத இதயத்தை
மரமென்று நான் சொல்லவா - இல்லை
மலையென்று தான் சொல்லவா:
குழலோடு எழில் யாழின்
குளிர்கான இசையுந்தன்
குரலுக்கும் பின் பல்லவா - துன்பம்
குறைவிக்கும் தென்பல்லவா ?

விளையாடும் மணல் மீது
அழகான சிறுகைகள்
அழைகின்ற சோறல்லவா - பெறார்
அடையாத பேறல்லவா?
மழையோடு மலர்கின்ற
இளமுல்லை மலர்சிந்தும்
ஒளிஉந்தன் நகையல்லவா - வண்டுன்
விழியோடு பகையல்லவா?

அமுதாகும் உனதன்பு
முகில் சிந்து புனலாடில்
அணுகாது மூப்பல்லவா - கண்ணே
அது எந்தனை காப்பல்லவா !
அமையாது உனையன்றி
முழுவாழ்வு அறிவேன் நீ
அழுமோசை பாட்டல்லவா - துயர்
அகன்றோடும் கேட்டல்லவா?

கனியாகும் கன்னத்தில்
குழிகின்ற சுழியொன்று
கவிய10றும் சுனையல்லவா - அது
கவியாக்கும் எனையல்லவா!
தணியாது உன தங்கம்
தழுவாத பொழு துள்ளம்
தளிர்விட்ட தீயல்லவா - விழி
ஒளியாகும் நீயல்லவா!

மனோரஞ்சிதம் - ஒக்டோபர் - நவம்பர் 1960

இரங்கிடு

கள்ளத் தனமாகச் சன்னலில் நின்று கணைதொடுத்து
கொள்ளை அடித்தெந்தன் நெஞ்சிலே தீயைக் கொழுத்தியின்று
அள்ளச் சுரக்கின்ற ஊற்றுநீர் என்ன அகத்துறையும்
கள்ளி உனக்கிந்தக் காதல் பிரிவு கனிரசமே ....?

போர்த்த இருளைப் புறங்காண விண்ணில் புதுநிலவு
ப10த்துப் பொலியும் அடியே!என் நெஞ்சிற் புயலெழுந்து
ஆர்த்துப் புலம்பி அனுங்கும் அதனை அடக்கமுத்து
கோத்த நகைநீ வரவிலை யேல்வரும் கூற்றுவனே!

வில்லின் வளைந்த புருவச் சுவருள் விளங்குமிரு
கொல்லும் சுழல்விழிக் கோல்கொடு நெஞ்சம் குடைந்துகுடைந்(து)
அல்லும் பகலும் அகலாது வாழ்வமென் றன்றுரைத்த
எல்லாம் பழங்கதை யாகிய தோஎன் இனியவளே!

சந்திரன் தன்னையும் வெல்லவிஞ் ஞானம் சமைத்தெடுத்த
எந்திரம் போலும்விண் நோக்கி எழுந்த இளமுலைகள்
சந்ததம் எந்தன் மனக்கிர கத்தினைச் சாடுகின்ற
விந்தை அறியாய்! விதிவசம் யான்படும் வேதனையே!

சாலிக் கதிரென நாணம் தலையைச் சரித்துவைக்க
தாலி கழுத்தினைத் தாவிய பின்னர் தனியறையில்
போலிக் கதைகள் புகல்வர் அதிலென் புதுமையடி?
ஆலிலை மெத்தை அதன்றோநம் காதல் அரண்மனையே!

மூச்சை இறுக்கிப் பிழிகையில் “முத்தமிட் டார்” எனமுன்
கீச்சுக் குரலில் கிளிசெய்த கிண்டலைக் கேட்டதனால்
போச்சுது பெண்மையின் மானமென் றஞ்சிப் புலம்பிய அக்
காய்ச்சல் இனுமா தணியா? திரங்கிடு கண்மணியே!

- கலைச்செல்வி - ஆடி – சர்வாரி

விமர்சனம்

கடவுளெனும் மாகவிஞன்
கவி உணர்வாம் மது வெறியில்
உடலிலளாம் கற்பனையாள்
ஒருத்திவசப் பட்டதனால்
நடனமிடும் “உலகம்” எனும்
நறுங்கவிதை தனைப்படைத்தே
அடகெடுவான் விமர்சனத்துக்(கு)
அனுப்பினனாம் அவசரமாய்!

~~அற்புதம்அற் புதமெனவும்
அமரகவி! இதுவெனவும்
சொற்களிலே ததும்புகிற
சுவையே ஓர் சுவை யெனவும்
கற்பனைக்கோர் விளக்க” மெனக்
கவிதிறனை புகழ்ந்தபடி
விற்புருவம் மேலெழவும்
விமர்சகன்மேற் தொடர்கையிலே...

அங்கு...,“முதல் மானிடப் பெண்
ஆடவனை அடித்தணைத்து
பொங்கியெழும் இருதனத்தைப்
போர்மார்பில் புதைப்பதுவும்
இங்கிதங்கள் கண்டவள்போல்
இனியகவி இசைப்பதுவும்
சிங்கமெனும் காளை, அவள்
செய்கையில்மெய் மறப்பதுவும்....

கட்டியணைத் தனன்அவளை
கால்சேர ஏறினன்போய்
தட்டவிலை! அவள்! விழிகள்
தடம்;புரண்டு தவிக்கையிலே
மொட்டொன்று விரிந்திடலும்
மூசுவண்டு போய்நுழைய....
கட்டாணி முத்தெனவும்
கரும்பெனவும் கதைமொழிந்தார்?

ஓடிஒழிந் தனதிங்கள்
ஒன்பதுவே@ ஓர்நாளில்
வாடியமென் கொடிபோலும்
வஞ்சிகிடந் தாள்@ அருகில்
தேடியதோர் தேட்டமென
தேம்பும்மூன் றாம்குரலை
வேடிக்கை பார்த்தபடி
வீரனவன் நின்றிருந்தான்!”

“அலையெறியும் கடலுடனே
ஆகாயம் அனல்காற்றும்
கலைசொரியும் கதிர்மதியும்
கவின்பொழிலும் சிற்றாறும்
மலைஅருவி, மழைமுகிலும்,
மதுசுரக்கும் மலர்க்குலமும்
“உலகம்” எனும் காவியத்தின்
ஒப்புயர்வில் பாத்திரங்கள்!”

இத்தனையும் கற்பனையின்
எழில், மிளிர இயற்றியென்ன?
அத்தனையும் அழித்துலகின்
அழ(கு) அமைதி குலைத்துவிடும்
புத்தியிலா மானிடமாம்
புழுவினையும் படைத்தனையே!
அத்தா உன் காவியத்தில்
அங்கேதான் ஓட்டையடா!!

எல்லையில்லா எழில் அனைத்தும்
இயற்கைஎன சிதைத்தவற்றை
பொல்லாத விஞ்ஞானப்
புதுப்பொருளைக் கண்டடைந்து
கொல்வாரே உலகத்தின்
குவிந்தஉயிர் அத்தனையும்!
தொல்லைதரும் மானிடன்உன்
து}யகவிக் கிழுக்காவான்!
உண்மையிந்த விமர்சனத்தின்
உரைமுழுதும் உண்மையுண்மை!
கண்மணியாள் கற்பனையின்
கனிஇதழின் சுவை மயக்கில்
கண்ணிழந்து காவியத்தின்
கருவினையும் கவிமறந்தான்
மண்ணாயிற்(று) அவன்கவிதை
மானிடனை ஏன்படைத்தான்? - சுதந்திரன் 30.10.60குறிக்கோள்

பஞ்சினும் து}ய பனியென மேகம்
படர்ந்தது@ விசும்பினை தழுவிக்
கொஞ்சுது@ மோகம் கொடுமிடி யாகக்
குமுறிடும்! மின்னொளி கண்டே
அஞ்சவும் உலகம் ஆற்றினர் காதல்
அங்குசூல் அடைந்தனள் மேகம்
கொஞ்ச நா ழிகையே@ கொட்டுது மழையும்
குன்றினில் தவழ்ந்து குழவி!

வீதியிற் புழுதியை விரும்பியும் அழைந்து
விளைவுறு கழனியில் வீழ்ந்து
ஆதியில் உழவன் அமைத்திடும் நீண்ட
அணைகளைக் குளங்களை உடைத்து
மோதிடும் உளமே முழுதுமாய் மாறி
மூர்க்கமாம் வாலிபம் பெறவும்
கோதிலா நதியெனக் குவலயத் தவர்தொழ
குதித்தது இளநதி யாகி.

பழமையில் பிறந்து பழமையே பயின்று
பழமையே வழமையாய் பாயும்
கிழ நதி யோடும் கிண்டலாய்ப் பேசி
கிளுகிளு எனநகை சொரிந்து
இளமையின் துடிப்பில் இலட்சிய கீதம்
இசைத்திடும் இள நதி, வாழ்வின்
பழமையில் சலிப்புப் படர்ந்திட ஏதோ
பகர்ந்திடும் பாட்டனா ரோடு...

பலகலை தெளிந்த பகுத்தறி வாளர்
பாரினில் மனிதர்என் றிருப்போர்
இலதென உளதென இனுமினும் பேசி
ஏடுகள் பலப் பல விரித்தார்@
நிலமும் அக் காற்றும் நின்னொடு யானும்
நெருப்பொடு நீண்டதோர் விசும்பும்
அலைகிறோம் இறைவன் அவனடி தேடி@
ஆகுமோ? இது அறி யாமை!“இளமையில் இவன்போல் இருக்கையில் நாமும்
இசைத்ததே! இவனுமிங் குரைத்தான்@
வழமையே@ அவன்நம் வாரிசு! வாழ்வு
வரண்டதோர் இலட்சிய மன்று!
கிழவன்என் னுரையைக் கேட்டவன் சிரிப்பான்!
கிண்டலும் செய்திடக் கூடும்!!
பழமையை அறிந்து புதுமையை உணரும்
பக்குவம் எய்திடாப் பருவம்....”

பாட்டனார் ஏதும் பகர்ந்திடா வாறுதன்
பாட்டிலே ஓடுதல் பார்த்து
“மாட்டினார் வகையாய் மடையர்கள் இவர்கள்!
மனிதரை மிஞ்சிட லாமா?
காட்டுவேன் புதிய பாதை” யென் றெண்ணி
காட்டிலே பாய்ந்தனன் இளைஞன்!
வீட்டிலே கருத்தாய் விரைந்திடும் கிழமோ
விரைந்தது@ பேரனை விடுத்து!

சோலைகள், புதிய சுந்தர மலர்கள்
சோறிடும் கழனிகள்.... தொடர்ந்து
பாலையின் வெளிகள் பாறைகள் மடுக்கள்
பார்த்தறி யார்இவை பாட்டன்!
தோலையே போலும் மூளையும் சுருங்கி
தொட்டிலில் து}ங்கிடும் வாழ்வு
வாலையில் நினைத்தால் வசப்படா எதுவும்
வையக மீதினில் உளதோ!

இலட்சிய மற்ற இவர்களைத் தொடரின்
எய்துமோர் பயன்எனக் கெதுவோ?
அலட்சியம்@ புதுமையை அனுபவித் திடுவதற்(கு)
ஆர்வமே சிறிதுமற்றவர்கள்!
குலத்தவர் புரிந்தார் என்பதற் காகத்
குருடனாய் வாழ்வதோ? குறிக்கோள்
நிலைத்தது@ பாதையும் நீண்டது@ மேலும்
நீண்டது கிளைநதி ஓடி.போக ப10 மியிலே புகுந்தவர் போலும்
புரட்சியை விளைத்தவர் போலும்
“ஏகனாம் இறைவன் எங்குளன் விடைதான்
இயம்புதற்(கு) எவருளர் ஈங்கு?
ஆகவே புதுமை அனுபவித் திடுவோம்
ஆம்!” எனக் கிளைநதி பாய
மேகமோ! இதுவே மேருவோ! எனும்படி!
மிடுக் கொடும் நின்றதோர்; மலையே!

தோற்றது நதியின் துடிப்பொடு குறிக்கோள்!
தொலைந்தது இளமையின் கீதம்!
ஆற்றுதற் கிதயம் அதனிடம் ஏது?
அனுபவம் அடைந்ததவ் வேளை!
நேற்றது வரையும் நெடும்பிர யாணி!
நின்றது நிலைதடு மாறி!
மாற்றரும் கொள்கை மடிந்தது மலையால்!
மண்ணொடும் போனது இளமை!

“பழமையும் புதுமையும் பகுத்தறி யாததோர்
பண்புடை யதுபரம் பொருளாம்!
இளமையின் துடிப்பில் இலட்சிய நடிப்பில்
எய்திடக் கூடிய தன்று!”
கிழநதி கடலைக் கிட்டிய போது
கேட்டது@ இளநதி நெஞ்சம்
உளையவும் திரும்பி ஓடிடும் பாட்டன்
ஓடிய பாதையில் விரைந்து!

- சுதந்திரன் 18.12.60

மறுக்கின்றார் எனைமணக்க!

கறுப்பியென்று பாராமற் காதலித்தார்.
கற்கண்டே கனிரசமே என்றுரைத்தார்.
பிறப்பெதிலும் உனைப்பிரியேன் என்று சொன்னார்
பிரிந்தாலும் நம்காதல் அழியாதென்றார்;.
பொறுப்பற்ற சமுதாயம் புனைந்துசொன்ன
பொய்யுரையைக் கேட்டின்று புறக்கணித்தார்.
இறப்பதற்குத் துணிந்தாலும் முடியவில்லை -
ஏனென்றால் அவர்நெஞ்சில் இருக்கின்றாரால்!

வெறுக்கின்ற தவருள்ளம் என்னைக்காண.
வேதனையோ டெனைப்பார்த்து விம்முகின்றார்
மறுத்துநான் உண்மைசொன்னால் “பொய் பொய்” என்று
மண்டையிலே அடித்தடித்து மாழுகின்றார்.
~சறுக்கியிங்கு சமூகத்தில் வீழ்ந்தபெண்ணை
சடங்கு செய்க| எனச்சொல்வார் சங்கந்தன்னில்,
மறுக்கின்றார் எனைமணக்க, உபதேசங்கள்
மக்களுக்குத் தான்சொன்னார் - அவருக்கில்லை!

இன்றவர்க்குக் கல்யாணம் என்றுவள்ளி
என்னிடத்திற் கூறியதும் என்மூச்செல்லாம்
நின்றுவிட்ட தப்படியே! நிலத்தில் வீழ்ந்தேன்.
நீர்தெளித்து மீண்டுமெனை எழுப்பினார்கள்.
கொன்றிருப்பேன் அவரைநான், என்ன செய்வேன்
கொலைகாரி என்றுலகம் கூறாதாயின்.
நன்றாக வாழட்டும் புதுப்பெண்ணோடு.
நமக்கேது இனிவாழ்வு? நடைப்பிணந்தான்!

- வீரகேசரி - திகதி தெரியவில்லை

கவிஞன் சபதம்

துளியும் கவி நினைவென்
துயர்மீ றிய மனதில்
ஒளிசெய் திட முடியா
உதவா ளொரு சதமும்
எழியேன் அவள் வழியே
எடுபட் டிட விழையின்
பழியே பல பெருகும்
பலபே ரெனை நகுவார்!

“கவிதைக் கிவன் அடிமை
கழிமோ இனி மிடிமை!
புவியிற் பல புலவோர்
புகழால் உயிர் உலர்வார்!”
செவியில் இவை விழுமுன்
செயல்செய்திட எழுவேன்
குவியா தினி வறுமை
குருடா ய தென் பொறுமை!

வெயிலைக் கடு மழையை
விரவும் குளிர் பனியை
துயிலைப் பொரு ளெனநான்
துயரின் வச மழியா
வயலில் உழு திடுவேன்
வளவாழ் வினை அடைவேன்
குயிலின் னிசை எனது
குறியைத் தொட முடியா!

ஆலைத் தொழி லாளி!
ஆவேன் அது வாழி!
நு}லைத் தறி பெய்வேன்
நுண்ணா டைகள் நெய்வேன்
கூலிக் கிடு காசு
கொண்டே மனை செல்வேன்
மாலைம் மதி வந்தென்?
மன்றா டினும் ஒப்பேன்!கல்லால் எழில் மனைகள்
கட்டித் தரல் கூடும்
பொல்லா அணு வதனால்
புத்தம் புதி தாகக்
கொல்லும் கலை செயலாம்
கொள்ளும் அதை வையம்
சொல்லால் ஒரு கவிதை
சோடிப் பதும் உண்டோ?

வானும் வரை கடலும்
வற்றா நதி மலரும்
மானும் இள மயிலும்
மாதர் எழில் “மதுவும்”
கூனல் உடல் பெறினும்
“கூடீர் எமை” எனுமால்
“நானோர் கவி அலவே!
நன்றீ!” என நவில்வேன்.

சுதந்திரன் - 21.6.59

மானிடன்!

“கூடு விட்டுயிர் ஓடி விட்டது
பாடு பட்டிவன் தேடி வைத்தவை
வீடு மட்டுமே@ வீண்உ ழைப்பது
காடு மட்டுமா காணவந்திடும்?

கட்டு வீர்பிணம் காவு வோம்விழி
கொட்டு நீர்இனிக் கூற்று வன்செவி
எட்டு மோ? இவர்க் கெட்ட டிநிலம்
மட்டு மென்றதோ கொட்டு து}பறை!”

சுற்ற மொன்றெனச் சூழ்ந்து நின்றழக்
கற்ற பண்டிதர் கண்ட வாறொரு
சுற்ற றிக்கையைச் சொல்லி வைத்தனர்
முற்ற மெங்கணும் மூச்செ ழுந்தது!

ஆடை சுற்றிஅ லங்கரித் தஅப்
பாடை மீதினிற் பாவை போலவர்!
மேடை யாடிய மேன்மை யைப்பலர்
கூடிப் பேசியுங் கொண்டு சென்றனர்

“நல்ல வனிவன் நாளும் ஏழைகட்
கில்லை யென்றறி யாத ஈகையன்!
தொல்லை யற்றொரு து}ய வாழ்வதன்
எல்லை கண்டவன்!” என்ற னர்சிலர்

“பொல்ல வனிவன்! பொய்ய னுமிவன்!
எல்ல வர்க்குமே இன்னல் செய்தவன்
கொல்ல அஞ்சிடாக் கொடிய” னாமென
நல்ல பண்புளார் நாவ சைத்தனர்!

இன்றி வர்க்கிது நாளை நம்மையும்
கொண்டு சென்றிடும் கோவன் ஆயினும்
தின்ற தும்பிறர் தீமை கொன்றதும்
நன்றி காப்பதும் நல்ல தென்றனர்.

இட்ட னர்சுடு காட்டி லே@ நடை
கட்டி னார்பெருஞ் சுடலை ஞானிகள்
“இட்டு வாழ்வதே இன்பம்” என்றவண்
மட்டு மேமரி யாதை கொண்டவர்!

கத்த ரிச்செடி காய்த்த பிஞ்சினை
பிய்த்த வன்றனைப் பேயெனவொரு
கத்தி யாலுடல் கண்ட துண்டமாய்க்
குத்து கின்றகு ருட்டு மானிடன்!

- தினகரன் 27.7.58

பாரதியைப் பாடு!

அன்னியர்தம் ஆட்சி அடிமை விலங்கறுக்க
கன்னியர்தம் கண்ணீரைக் கையேந்த - மண்ணின்மேல்
எல்லாமே இன்பம் எனஇசைக்க வந்தவொரு
வல்லவனாம் பாரதியை வாழ்த்து!

“பல்லுடைக்கும் செந்தமிழில்” பண்டிதர்கள் பாட்டெழுதி
வல்லவராய் வாழ்ந்த வடுப்போக்க - கல்லார்க்கும்
கற்றுத் தெளிந்தார்க்கும் கற்கண்டு போலினிக்கும்
நற்கவிதை தந்தான் நயந்து.

கண்ணன் திருப்பாட்டும் காதற் குயிற்பாட்டும்
மண்ணில் விலையில்லா மாணிக்கம் - எண்ணுகையில்
பாப்பாவின் பாட்டுக்கு பாரெல்லாம் ஈடாமோ?
சாப்பாடு தானேன், சவம்!

பெண்குலத்தைப் பேயென்றும், பேரடிமை, நாயென்றும்
எண்ணி இருந்தார் இழிவுறவே - பெண்குலத்தின்
காவலனாய் வந்து கவிதை மழைபொழிந்த
பாவலனாம் பாரதியைப் பாடு!

பழித்திருந்தார் பெண்கள் படுமவதி பார்த்துக்
களித்திருந்தார் கண்ணில்லா மாக்கள் - விழித்தெழுந்து
பெண்ணடிமை நீங்கவெனப் பேரிடிபோற் கர்ச்சித்த
பண்பாளன் பாரதியைப் பாடு!

கற்பென்றாற் பெண்களுக்கே கட்டாயம் என்றுரைத்த
அற்பர் திருக்கூட்டம் அஞ்சிடவே - வெற்பதிர
வீரக் குரல் கொடுத்த வித்தகனாம் சுப்ரமண்ய
பாரதியைப் பண்ணுடனே பாடு!

“காதலின்றேற் சாத” லெனக் கர்ச்சித்தான் நம்மிடையே
பேதமைகள் பிய்த்தெறிந்தான் பேய்க்காற்றில் - ப10தலமேல்
ஆணோடு பெண்ணுக்கும் நீதியிங்கே உண்டென்றான்
வீணாக வில்லையவன் வேல்!

இத்தனையும் சொன்னான் இறந்தான் உணவின்றி,
செத்த பிறகே சிலை செய்தோம்! - கத்துகிறோம்!
வித்தகரைப் போற்றாத விந்தைச் சமுதாயம்
எத்தனைதான் செய்தாலும் என்?
- வீரகேசரி - 9.9.56

பலவீனம்!

என்னை ஒரு “பலவீனன்” என்றுரைத்தாய் நண்பா
இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடா!
இந்நிலத்து மாந்தரெலாம் ஏற்றுகிற மொழியாம்
“இங்கிலீசு” மொழியருமை என்னுளமும் ஒப்பும்
மன்னுமறை வேதியரின் வேதமொழி யான
மறைமொழியாம் சமஸ்கிரத மாண்புதெரிந் திடினும்
என்னருமை தமிழ்த்தாய்க்கு இன்னொருத்தி ஈடோ
என்றெண்ணும் பலவீனம் எனதுபல வீனம்!

காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வீனம்
களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல வீனம்!
சாதலுக்கும் வாழ்வுக்கும் சலியாமல் எதையும்
சமமாக ஏற்கின்ற சமத்வபல வீனம்!
மேதைகளின் சரிதத்தை மென்மேலும் மேலும்
மீட்டுகிற பலவீனம்! மேலும்உல கத்தே
ஏதினிமேல் பலவீனம் இயம்பிவிடுவாய் நண்பா
இத்தனையும் என்னிடத்தே எய்துபல வீனம்!

கல்லு}ரிப் பட்டங்கள் தாங்கி அலை வோரை
காலாட்டிக் கொண்டுழைக்கும் கனவான்கள் தம்மை
செல்வாய செல்வங்கள் சேர்த்துவைத்தும் வாழ்வைச்
செம்மையிலே ஓட்டாத சின்னவர்கள் தம்மை
சொல்லாத பலவீனம் சொந்தமெனக் காயின்
சோர்ந்துவிடப் போவதிலை! வேந்தர்களின் முன்பும்
நல்லவரை நாடுய்ய உழைப்பவரைக் காணின்
நலிந்துருகும் பலவீனம் நமதுபல வீனம்!

கொள்கை நெறி மாறாத கொடியபல வீனம்
கொடியவரைக் கூடாத நெடியபல வீனம்,
வள்ளல் எனத் தமிழ் அள்ளி வழங்குபல வீனம்
வாயாலே வீணர்களை வாட்டுபல வீனம்
எள்ளிநகை யாடியெங்கள் இனஉரிமை விற்கும்
எட்டப்பர் கூட்டத்தைக் குட்டுபல வீனம்
கொள்ளையன்பா பலவீனம்! வெளவாலைப் போலும்
கொள்கைவிற்கும் பலவீனம் என்னிடத்தே இல்லை!
என்னன்புத் தாய்நாடே இனியேனும் செவியை
என்பக்கம் தாவென்று ஏங்குபல வீனம்!
என்னருமை இளைஞர்களே தாய்நாட்டின் ஏற்றம்
எண்ணி உழைத் திடுகவெனச் சொன்னபல வீனம்!
இன்னுமின்னும் இப்படியே பலவீனம் கோடி
இருக்கு தன்பா இவையெல்லாம் எனதுபல வீனம்
உன்போலும் வீரனில்லை என்றாலும் சொந்த
ஊரைவிற்று உண்ணமனம் ஒப்பவிலை! ஒப்பா?


- 17.4.60 சுதந்திரன்

கல்முனைக் கடற்கரை

வில்லென வளைந்தபெரும் ஆழி - உங்கள்
வேல்விழியின் மேற்புருவம்@ ஊழி
“கல்முனைக்க டற்கரைநீ வாழி” - என்று
காண்போர் உரைத்திடுவார் - தோழி!

பாலைவனம் போலமணல் மேடு - இதற்கு
பாரினில் எங்குமில்லை ஈடு!
வேலையரு கேதென்னைக் காடு - சுகம்
வேண்டுமெனில் நீஅங்கே கூடு

தெங்கோலை காற்றினிலே சீறும் - நெஞ்சில்
தேமொழியாம் செந்தமிழும் ஊறும்!
எங்கிருந்தோ தாழைமலர் நாறும் - அதில்
என்னைமறந் தேவேண்டேன் சோறும்!

தோணியிலே எறிமிகத் து}ரம் - வலையர்
துணையோடு செல்லுகிற வீரம்
காணில்அ வர்குடும்பப் பாரம் - நமது
கண்முன்னே தோன்றுமந்த நேரம்.

பள்ளிச்சி றார்ஒன்று கூடி - கொக்கு
பாட்டமென வந்திடுவார் ஓடி
துள்ளிக்கு தித்திடுவார் ஆடி - மனத்
துன்பம்ம றந்திடுவார் பாடி

“காணிநிலம் வேண்டு” மெனும் பாட்டு - தென்றல்
காற்றில் கலந்துவரும்@ கேட்டு
வானில் பிறைவாடி வீட்டு - முற்றம்
வந்திருக்கும் முத்துநகை போட்டு!

பட்டுமணல் மீதுநிலாப் பாயும் - இளம்
பருவத்தோர் உளமன்பில் தோயும்.
கொட்டும் “அ டடா!” அவர் வாயும் - அழகுக்
கோதைக்குத் துதிஅள்ளி ஈயும்!

- வீரகேசரி - திகதி தெரியவில்லை

ஏன் விளங்கவில்லை?

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

தேன் சுரக்கும் நின்னுடைய திருவாய் மதுரமொழி
தான் கலந்து நான்கலந்து தமிழோடும் வாழ்ந்தொருநாள்
வான் கலந்து போனபின்னர் வையம் உணர்ந்திவனை
ஏன் விளங்க வில்லையெமக் கென்றழுமே.... ஆதலினால்.....

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

ஏழையாய் எம்மிடையே எந்நாளும் வாழ்ந்திருந்து
நாளை உணவினுக்கே நாமெங்கு போவதெனும்
கூழின் பிரச்சினையே கூவினான் எம்போல!
ஆளில்லை இன்று! என்(று) அழுவார்கள்........ ஆதலினால்........

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

பார் அழுதல் கண்டே பசிப்பிணியை ஓட்டவெண்ணி
ஏர் உழுதான் எம்முடனே எங்கே மறைந்து விட்டான்
ஆர்இருந் திங்கிவனை அன்பு செய்தோம்? என்றழுது
சீர் எடுப்பார் நல்விழவும் செய்வார்! அதை யெண்ணி......

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்வர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

~~பாட்டாளி யாகிப் பதைக்கும் கொடுவெயிலில்
பாட்டையிலே வண்டிவைத்துப் பாவம் எனைச் சுமந்தான்!
ஒட்டைக் குடிசைக்குள் ஒன்றினான் எம்முடனே!
~போய்ட்டானே|| என்றும் புலம்புவார் ஆதலினால்....

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!


~மக்கள் மலங்கழுவி மாபெரிய தொண்டு செய்தான்
துக்கத்தில் நம்மைத் தொடர்ந்தான்@ தொழிலகத்தும்
ஒக்க உழைத்தெம்மை ஊக்கினான்! உத்தமனைப்
பக்கத் திருக்கையிலே பார்த்தோமோ?| என்பர்....... எண்ணி......

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

~மந்திரிபோல் வந்தான்@ மருத்துவனாய் மாண்புரைத்தான்!
தந்திரங்கள் கூறி எமைத் தட்டி எழுப்புதற்கே
விந்தைக் கவிகள் விளம்பித் துடி துடித்தான்!
சிந்தினோம் செல்வம்| எனச் செந்நீர் வடிப்பர் எண்ணி...

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

பக்கத்தில் நின்றவனைப் பார்க்கத் தவறிவிட்டு
திக்கெல்லாம் சென்றே திருக் கோவில் கண்டதற்குள்
புக்கு எனைக் காண்பதற்கே பூண்பார் பல விரதம்
எக்காலம் காண்பாரோ? என்றெண்ணும் வேளையிலே

நான் கலங்கவில்லை! எனை நையாண்டி செய்பவர்க்கு
ஏன் விளங்கவில்லை இது? என்னருமைக் கண்மணியே!

- தேசிய முரசு - 5.5.63.

அறிவுகெட்ட மயிர்

கந்தண்ணன் கத்தரிக்கோல் ~கருக்|கெனவே நறுக்கக்
காலடியில் சுருண்டுவிழும் கரியதலை மயிரே,
இந்தவிதம் உன்கருவம் இருந்தவிடம் தெரியா
திறங்கிவிழும் என்றுபல முறையிடித்துச் சொன்னேன்.
என்றனுரை கேட்டாயா?.. ~இவ்வ10ரில் நானே
எல்லார்க்கும் மேலெ|ன்று என்னவெலாம் சொன்னாய்!
சொந்தஉழைப் பில்லாமல் ஊரானின் காசில்
சுகித்திருந்த நீ, பெரியன் ஆவதும் எவ் வாறே!

பன்றிமுள்ளே போல்நிமிர்ந்து நிற்பதனைப் பார்த்துப்
பரிதாபப் பட்டிரங்கிப் ~பாபர்சலு}ன்| கடையில்
சென்றுபல்லைக் காட்டி, யொரு சீசாவில், வாசம்
சேர்த்தஎண்ணெய் ப10சியங்கே சீப்பிரவல் வாங்கி
கந்துவிட்டு நின்றஉனைக் கசக்குகசக் கென்று
கசக்கியபின், கண்ணாடி பார்த்தழகாய்ச் சீவ
நன்றிகெட்டு, ~நான்பெரியன்| என்றுரைத்தாய் உன்னை
நறுக்காமல் விட்டுவைத்தால் நாளையென்ன சொல்வாய்

கொழுத்தமரக் கொப்புகளை பற்றியுடல் பேணி
குடும்பத்தைக் காப்பாற்றும் குருவிச்சை போல், என்
வழுக்கைமண்டை மீதினிலேன் வந்துமுளைத் தாயோ?
வையகமெல் லாமெனையும் ~அறிஞன்| என வாழ்த்தல்
புளுக்கையுன்றன் நெஞ்சினிலே புகைச்சலையுண் டாக்கிப்
போருக்குத் து}ண்டியதோ! போதொலைந்து போநீ!
அழுக்கொதுக்கும் மூலையில்உன் ஆணவத்தைப் பார்பார்
அழுதினிமேல் என்னபயன் அறிவுகெட்ட மயிரே!

- திகதி, வெளியீடு தெரியவில்லை

மானம்!

பாட்டொன்று கேட்டீர்
பழைய நட்பாயிற்றே பாவமென்று
~மாட்டேன்| எனமறுத் தாளை இரந்து
மலையகழ்ந்த
தேட்டை, உமக்கு
திருத்தி மினுக்கி அனுப்ப உங்கள்
~ஆட்டிஸ்ற்| விளைத்த
அதிசயத் தோடொரு ஆண்டுமலர்...

போட்டீரா, அற்றைப்
பொழுது முழுதும் - புறு புறுத்து
வீட்டிற் கலகம்
விளையும் வரையும் விசரனைப்போல்
கூட்டாளி மாருடன்
குந்திக் கவியில் குழைந்திருந்தேன்@
பாட்டுக்கும் நாளை
பணம்வரும் என்றொரு பாவிசொன்னான்

எத்தனை நாட்கள்
இவர்கள் வருகிறார் என்விருந்தாய்
பத்துச் சதம் செல
வானதிலை மிகப் பாவம்! இன்று
பத்திரி கைக்கும் எழுதி
பணமும் வருகிறதே!
முத்தன் கடையில்
இரு சோடாப் புட்டி முகந்தளித்தேன்.

காத்திருந் தேன்கவி தைக்கெதும்
காசு கிடைக்குமென
ஆத்திரக் காரன்-இம் முத்தன்
அடிக்கடி வீதியிலென்
கோத்திரம் பற்றியும்
சொற்பொழி வாற்றுதல் கூடியவன்!
நேற்று வழியினில்,
கண்ணை நெரித்ததும் நீரறியீர்!


ஆதலினால் இந்த
ஆபத்தி னின்றும் அகன்று வந்து
காதற் கவிதை
படைத்துத் தருவேன், கருணைசெய்து
ஏதும் உதவி புரிக@ விரைந்து
இலையெனிலோ
மீதமிருக்குமென் மானத்தை
முத்தன் மிலாறடிப்பான்!...

செய்தி 1.5.63

வேடன்

அப்பொழுது நீ,என்னை யார் என்று பார்த்தாய்,
அக்கணந்தான் யானும் என் அந்தநிலை ஓர்ந்தேன்!
எப்படி நான் உன்னுடைய மாளிகையுள் நுழைந்தேன்?
என்துணிவை எண்ணி,என்மேல் இரங்கிமிகக் குழைந்தேன்!
கொப்புளங்கள் உடைந்தருவி கொப்பளிக்கும்@ காலின்
குதிநனையும்@ திடுக்கிடுவேன்! குனிந்தருகே பார்த்தால்@
அப்பப்பா என்ன அழுக்@ கத்தனையும், ஆசை
அகத்தினையே கழுவிவெளி யான வியர் நீரோ!

உன்னுடைய மாளிகையின் வெண்படிகத் தரையை,
ஓர்நொடியில் கறையாக்கி விட்டபெரும் குறையை
எண்ணி, மிக வருந்திநின்றேன்@ என்னையுணர்ந் தனைநீ!
என்னரசி உன்மனதின் சன்னல்களைத் திறந்து
மன்னித்தாய்! என்னுடைய மானமெலாம் துறந்து,
மாயஇசைப் போதையிலே மயங்கியுள்ளே புகுந்தேன்!
பின்னுமொரு முறையிந்தப் பிழையினைச் செய் வேனோ-
பேரழகே, நீ வாழ்க! போய்வருவன் யானே!

அறிவென்னும் அங்குசத்தால் ஆனைகளை வெல்லும்
ஆசையொடும் போகையிலுன் வீணையிசை சொல்லும்,
விரிகின்ற பேரழகில் வேட்கைகொண்டு, விட்டேன்@
வேடனைப்போல் நுழைந்துனது விழிவலையில் பட்டேன்!
அரிதந்த அழகு!முழு வதையுமொரு வேளை
அனுபவிக்கக் காத்திருப்பேன் ஆயுளெலாம் ஏழை!
கரியகடல் விழிதிறந்து விடுதலைசெய் வாயோ!
காதலின்ப வாரியிலே மூழ்க விடு வாயோ!

உன்னழகு, மாளிகையின் பொன்மதிலின் ஓரம்
ஓங்கிவளர்ந் திருக்குமொரு கோங்குமர நீழல்
அந்நிழலில் காத்திருப்பேன் எந்நேர மேனும்
அரசமர மீதுதென்றல், அருவியிசை! நடனம்!
உன்னுடைய பளிங்கறையுள் நீஆடும் ஆட்டம்
ஊகத்தால் உணர்ந்தரசின் கிளையாடும் ஊஞ்சல்!
என்னையுமோர் பொருட்டாக ஏற்றருளு வாயோ?
எனவேங்கும் என்னிதயம் போர்வேட்டை நாயாய்!


மதில்மீது ப10த்திருக்கும் மல்லிகைமென் மலர்கள்@
மலர்மீது போர்த்திருக்கும் வெண்பனியின் துளிகள்@
அதி து}ரப் பார்வைக் கண்ணாடி யவை யாவும்!
அன்பே, உன் பேரெழிலைப் பிரதிபலிப்பன@ நீ,
புதுவேனில் வருகைக்காய் நல்வரவு கூறி,
புனையாத புதுஅழகின் பொலிகோல மாகி,
விதிவீணை நரம்பில் விரல் விளையாடல் கண்டேன்!
வேட்கை,வெறி யாகி யந்தப் ப10க்களின் வாய் உண்டேன்!

தினகரன் 21.3.68

கவிதை பிறந்த கதை

~தேனருவி | என்னுமின்பத் திங்களிதழ் ஆசிரியர்
தானே தெரிந்தோர் தலைப்பினையும் தந்து விட்டு
ஏனோ எனையும் எழுதென்றார்: ஏனைய்யா
இத்தனைநாள் மட்டுமெங்கள் ஈழத்திலக்கியத்தை
செத்தழிந்து போகாமல் செப்பனிட வந்து தித்த
பத்திரிகை கட்கில்லா பைத்தியமேன் வந்ததுவோ?
~கட்டுரைகள் சின்னக்கதைகள், கடிதங்கள்
திட்டுதல்கள் என்றிவற்றைத் தீட்டுபவர், நாட்டுபவர்
மட்டும் எழுத்தாளர்@ மற்றவர்கள் இல்லை| என்று
சாதித்து வந்த சரித்திரத்தை மாற்றி விட்டு
நாதியற்றுப் போய்க் கிடந்த நம்மிடையே நும் கடைக்கண்
நீதியே@ நாமும் நிசமாய் எழுதுபவர்!
காதலினால் கேட்டீரோ, காசுக்கே கேட்டீரோ?
ஏதெனினும் சந்தோஷம்@ என் கவிதை தோன்றிய அக்
காதையினைப் பாடுகிறேன் காது கொடுத்தருள்வீர்!

வேறு
கம்பனுக்கு வெற்றிலைக்காவி யீந்து காவியம்
பொங்கவைத்த வாணி என்றன் பொய்யுரைக்கும் நாவிலும்
தன்கரத்தை வைத்ததால் தமிழ்சுரக்க வில்லையென்
வெம்பி நொந்த காதல் நெஞ்சு விண்டதே நற் கவிதையாம்
கருவை விட்டு வந்த பாதை காணும் மூல ஆசையும்
உருவியுண்ட வரைகள் மீது ஊர்ந்த ஆசை நோக்கமும்
பெருக நெஞ்சில், அருகு சென்று பேசுகின்ற விழியினார்
பருகவென்று அழகுசெய்த பண்படாத பருவமாம்.

வேறு
சுடச்;சுடக் காதல் தாங்கி சுடச்சுட வி;ற்கும் அட்டைப்
படக்கதை இதழ்கள் வாங்கி படித்தும்நம் படங்கள் பார்த்தும்
அடக்கமாய் வகுப்பில் குந்தி ~அதுகளை| ரசித்தும், இன்பம்
கிடக்கவே கிடக்கின்றெண்ணி கிளர்ச்சியில் குதித்த காலம்
கணக்குக்கும் எனக்கும் எந்தக் காலத்தும் தீரா நீண்ட
பிணக்கென்று தெரிந்தும் என்னைப்
பேர் சொல்லி அழைத்துக் கண்ணால்
~~எனக்கிந்திக் கணக்கைக் கொஞ்சம்
எழுதிக்காட்||(டு) என்றாள்@ ப10வை
மணக்கவென் றாசைவைத்தேன்@ மனக்கருத் துரைத்தாள் மங்கை.

கணக்குச் செய்தோமா? இல்லைக் காதல்செய் தோமா? தெய்வம்
உனக்குத்தான் தெரியும்@ நாட்கள் ஓடிற்று ஓராண்டின் பின்
“வணக்கம்! வாதம்பி!” என்றார் வாத்தியார்@ பாPட்சை குண்டு
~உனக்கென்ன படிப்ப10! என்றார்@ உதையொன்று தந்தார் தந்தை.

அவளுந்தான் முட்டை, ஆனால் அடியுதை அடியோ டில்லை!
~சிவசிவா| என்று வீடுசென்றவள் திரும்பவில்லை.
~அவன்மிக அழகன்! நல்ல அரசினர் உத்தியோகம்
கவனமாய் கேட்டேன் என்றன் காதலி கணவன் பற்றி.

தெய்விகக் காதல் என்று திரிந்தெனை ஏற்று காதல்
செய்தவள் மணந்தாள்@ இந்த சேதியைக் கேட்டென் வாழ்வும்
உய்யுமோஇனி? “யென் றேங்கி எழுந்தஎன் உணர்ச்சி நெஞ்சம்
பொய்இந்தக் காதல் என்றே பொழிந்தது கவிதை ஒன்று.

~கண்டதே காதல் என்பார்| என்றடி தொடங்கி ஈற்றில்
~மண்டையில் அடித்து நொந்தேன்| என்றதை முடித்தேன் தாள்கள்
கொண்டன@ மேலும் பாடிக் கொண்டிருக் கின்றேன்@ யாவும்
கண்டென்றீர், மகிழ்ச்சி@ இஃதே கவிதையின் கதையாம்@ நன்றி

- தேனருவி ஆனி ஊற்று 1962

ஓ... என் வண்டிக்காரா!

ஓ என் அருமை வண்டிக்காரா,
ஓட்டு வண்டியை ஓட்டு!
போவோம் புதிய நகரம் நோக்கிப்
பொழுது போமுன் ஓட்டு!


காவில், ப10வில், கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு!
நாமும் நமது பயணந் தொலையக்
கலந்து கொள்வோம் கூட்டு ! - ஓட்டு

ஓ...! என் அருமை வண்டிக்காரா...

பனியின் விழிநீர் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தேயும் பிறையின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே.. - ஓட்டு

ஓ...! என் அருமை வண்டிக்காரா...
ஓட்டு வண்டியை ஓட்டு!
போவோம் புதிய நகரம் நோக்கிப்
பொழுது போமுன் ஓட்டு!

- ஈழநாடு 21.6.65

தீப்பள்ளயம்

சாப்பிட்டேன்@ சற்றுச் சாய்ந்தெழுந் தாலன்றி
சரிப்படாதெனும் சஞ்சலம் உட்புகக்
கூப்பிட்டாளிவள், ~கோயிலடி மட்டும்
கொண்டு விட்டுப்பின் கூட்டி வரும்படி”
தீர்ப்புத் தான் இதற்கேது? மறுத்திடில்
திட்டுத் தான்பிற கெட்டுநாள் மட்டிலும்!
ஆப்பிட்டேன்@ என்றன் ~~புத்திரச் செல்வங்கள்||
ஆட்டம் பார்க்கக்கண் ஆயிரம் வேண்டுமே!

பெட்டியென்ன விலை? இதைப் பார்க்கிலும்
பெரிய தாக எடுதம்பி@ ஓம் அந்தச்
சட்டிக் கென்னதர அண்ணை? கைப்பிடிச்
சருவப் பானையில் எவ்வள(வு) ஆக்கலாம்?
வட்டா சின்னன், அரசிலை தொங்கினால்
வடிவு! என்பவர் வார்த்தைப் பெருக்கமும்
சட்டைச் சீலை விலையென்ன? கூடவே
சாந்துப் பொட்டையும் சேர்த்தெடு என்பவர்.

சோப்புச் சீப்புச் “சுடுதண்ணீர்” போத்தலும்
சுத்தமான கிலிட்டு நகைநட்டு
கோப்பை பீங்கான் குடங்கள் விளக்குகள்
கொண்டு வந்தவர் கூப்பிடு சத்தமும்
காப்புக் காப்பென்று கத்துவர் ஓசையும்
கடலைக் கொட்டை, பனாட்டுக் கொய்யாப்பழம்
“து}ப்பான்கட்டு” சுளகுமிதியடி
தொங்குஞ் சாமிப் படக் கடைப் பேரொலி

கரும்புக்காரன் கதையும் “தலப்பத்து”
கட்டுக்காரன் இடுகிற கூய்ச்சலும்
எறும்பு போலங்கு மக்களைச் சேர்க்குது
இன்னும் சற்றுத் தொலைவில் நடந்;திடில்
திரும்பிப் பார்க்க இடமிலைக் கண்கட்டி
திறமை யாளரின் வித்தை நடக்குது
துரும்பு து}சுதம் தொண்டுதான் காரணம்
தும்மல் ஓசை பிறந்து முழங்குது.காந்தி யேசு முஹம்மது புத்தரின்
கருத்துச் சொல்லும் புத்தகம் விற்பதும்
ப10ந்திதேனீர் சருபத்து மிட்டாயும்
புதுமை யான பணியாரப் பண்டமும்!
சோர்ந்து போனதென் கால்களும் கைகளும்
சுற்றிச் சுற்றி அளந்தனம் வீதியைச்
சாந்தி தேடியிங் காரும் வரவிலைச்
சந்தை தான் அவர் வந்ததன் நோக்கமோ?

ஆடை அவிழ்ந்திட ஆனந்த வட்டத்தில்
ஆண்களும் பெண்களும் ஆடி மகிழ்ந்திட
தாடைகையினில் தாங்கிஇக் காரியம்
தன்னை வியந்திடு பெத்தாக் கிழவிகள்@
கூடைக் கடுபுளி யம்பழம் மீதில்
குறியை வைத்துக் குளறுஞ் சிறார்களும்
ஓடைக் குள்விளை யாட்டுப் பொருட்களை
உற்றுப் பார்த்தழும் சின்னப் பயல்களும்.

பார்த்துப் பார்த்தலுத் தேனிந்தக் காட்சிகள்
பார தம்படிக்கின்றனர் கோயிலில்
போர்த்துக் கொண்டங்கு பாரதம் கேட்பவர்
பொக்கை வாய் கிழம் போன வயதர்தாம்
வேர்த்துக் கொட்டினால் காரியம் இல்லையாம்!
வேண்டும் யாவும் விடியுமுன் வாங்கிடக்
காத்துக் கிடந்தவள் என்னைக் குழந்தைகள்
காவலாக இருத்தி நடந்தனள்.

கொக்கட் டீயடிக் குன்றி மணல்தனில்
கொண்டு சென்றமேல் துண்டை விரித்தொரு
பக்கத் தேமணல் மேடு தலையணை
பண்ணி என்னுடல் தன்னை விழுத்தினேன்
தொக்கை யான கிழவர் ஒருவர்தம்
தொண்டை பாரத கண்டின் ஒலிசெய
சொக்கிப் போய்கண்கள் து}ங்கத் தொடங்கவும்
சொப்பன மொன்றுகண் டேனந்தப் போதிலே.தோளில் சோழியைப் பையொன்று தொங்கவும்
தொள்ளைக் காதில் கடுக்கன் துலங்கவும்
ஆளைப் பார்க்க வயதொரு நு}றுக்கும்
அதிகம் போல@ நரைதிரை தோன்றவும்
வாழி கண்ணன் பதமெனப் பொல்லுடன்
வந்த அந்தக் கிழவரைப் பார்க்கையில்
ஏழை யாயினும் கற்றவர் என்பதை
எண்ணத் து}ண்டிய கண்களில் காந்;தியே!

குங்குமந் திரு நீறு குழைத்ததில்
கொட்டைப் பாக்கெனும் பொட்டு நுதலிடை@
சங்கு போற் சிறு கொண்டைபின் து}ங்குது@
சால்வை யொன்றும் இடையில் கிடக்குது@
அங்கு மிங்குந்தம் ஆந்தைக்கண் பார்வையை
அலைய விட்டென் அருகினில் வந்துதான்
தங்கினார்@ அவர் கைத்தடி மேனியைத்
தடவ, யாரென்று கேட்டனன் சத்தமாய்.

என்னையா தம்பி யாரென்று கேட்டனை?
ஏது நீயிந்த ஊர்க்குப் புதியனோ?
முன்பு வந்ததும் இல்லை? எனைப்பற்றி
மூத்தவர் யாரெனும் சாற்றவும் இல்லையேல்
அன்னை திரௌபதி ஆலய முன்றிலில்
ஆர்த்தெழு பாரதம் கேட்டது மில்லையோ?
என்னடா தம்பி கண்ணைப் பிசைகிறாய்
எழுந்து பாரந்தப் பாரதக் காட்சியை

கிழவரே என்றன் இல்லத் தரசிக்கு
கெட்ட தாயினும் மட்டமில் தாயகம்
அழகு@ நேற்றைக்குத் தானிங்கு வந்தனம்
அதற்குள் உம்மையான் ஆரென் றறிகுவன்?
பழக நல்லவர் போலக் கதைக்கிறீர்
பாட்டும் பாடுதல் கூடுமோ? என்றனன்
இளமை வந்ததோ என்னவோ? ஆம்@ இவர்
இசையில் வல்லவர் என்பதும் உண்மைதான்.


தம்பி யோடொரு தாயதி ஆதனச்
சண்டை காரண மான விரக்தியில்
நம்பி ஓடொரு கையினில் ஏந்தியும்
நாடு தோறும் இரந்து வருகையில்
எம்பிரான் அருளா லொரு பாரத
ஏடு கிடைத்தது ஏழ்மை குடிலினில்
தும்பி போல அதனைச் சுவைத்தனன்,
சோறு தேடி அலைந்தபின்(பு) அந்தியில்

குடிசை யோரம் குவிந்து கிடக்கிற
குப்பை கூழம் கொளுத்தி இரவெலாம்
விடியு மட்டுமிப் பாரத வாசிப்பில்
வேதனை யாவும் மறந்து கிடந்தனன்
இடையில் பக்கத் திருப்பவர் வந்தனர்
~ஏதப்பா இந்தக் காவியம்| என்றனர்
படை திரண்டது பாரதம் கேட்டிட
பண்டம் எண்ணெயும் கொண்டுதந் தாரிவர்

கருக்கலுக்குள் கதையைத் தொடங்கினால்
கண்ணைத் து}க்கம் கடிக்கும் வரையிலும்
உருக்க மாகநான் பாரதம் பாடுவேன்
உட்பொருள், ஐயா வன்னியர் கூறுவார்
இறுக்க மான இடங்களில் வாத்தியார்
இளைய தம்பி இதன்பொருள் சொல்கையில்
முறுக்கு வார் சிலர் மீசையை வீமன்போல்!
மோது வார் கதை என்றுதம் கைகளை!

நாளும் நீண்டு நகர்ந்தது@ பாரதம்
நாட்டில் யாங்கணும் நற்பெயர் பெற்றது@
மேலும் மேலும் சனத்திரள் சேர்ந்தது@
மெத்த ரசித்திதன் சத்தை அறிந்தது
கோளும் நாளும் குறித்த தினத்தினில்
கோயில் என்றோர் குடிசை எழுந்தது
சூழ எங்கும் விளக்கும் எரிந்ததச்
சுடரைத் திரௌபதி கற்பெனச் செப்புது


அன்று தான்முதல், ஆரம்பமானது
ஆமப்பா இதை அறிவில் லாதவர்
நன்று கண்டு படித்திட வேண்டுமாய்
நாம் நினைந்திதை நாடக மாகவும்
ஒன்றிரண்டு கதைகளைக் காட்டினோம்
ஊரெல்லாம் இதைச் சேர வியந்தது.
என்று கூறி நிறுத்தினர் வேதியர்
எந்த வாறிதை நம்புதல் கூடும் நான்?


ஐவர் கானகம் ஏகியகாதையும்,
அர்ச்சுனன் தவ யாத்திரைக் காட்சியும்,
செய்த பாவம் அகன்றிட யாவரும்
தீயில் மூழ்கி எழுந்திடுங் கோலமும்
மைய மாகப் பதினெட்டு நாட்களும்
மாபெரும் விழா இங்கு நிகழ்ந்தது
உய்ய நோக்கம் உடையவர் வந்தனர்
உட்கருத்தை உணர்ந்து திருந்தினர்.

அன்றிக் கோயிலை ஆக்கிய அந்தணன்
ஆரென்றா எனை ஐயத்தில் பார்க்கிறாய்?
என்று கூறி எழுந்தவர் தம்மையான்
ஏனையா உங்கள் பேரென்ன என்றலும்
இன்னுமா இதை நீயறி யாயென்று,
இந்த ஏழையைத் தாதன்என் றேசொல்வார்
இன்று மட்டுமென் ஆவி உலவுது
ஏனென்றா லிங்கு பாரதம் கேட்குது

சொல்லி அந்தக் கிழவர் மறைந்தனர்@
சொக்கிப் போய்க்கிடந் தேனவர் பேச்சினில்!
கிள்ளி என்னை உசுப்புதல் யார்...? இல்லக்
கிழத்தி தான்@ அவள் வாங்கிய பானையை
மெல்ல என்றன் தலையில் சுமத்தினாள்!
மேலும் என்ன கதையிங்கு சொல்லுவேன்?
இல்லை நோக்கி நடந்தனம்@ பிள்ளைகள்
எம்பின் னேதொடர்ந் தார்கள் நிலாவிலே.

- தினகரன் 12,13.10.62

ஒருசொல்!

இதுவரை உலகிடை எவனொரு புலவனும்
இசைத் திடா ததுவாய் - மக்கள்
சுவைத்திடா ததுவாய்
புது எழில் பொலிகிற கவிபுனை வழியினை
நினைத்து மாளுகிறாய் - நெஞ்சம்
கனத்து நீ ளுகிறாய்

புழுதியில் ஒரு பிடி எனினும் இன் உணவெனப்
புசித்து வாழுகிறாய் - இயற்கை
வசத்தில் மூழ்குகிறாய்.
எழுதிய கவிதையில் வழுவறு பொருளினை
இணைக்க நாடுகிறாய் - தோற்றே
உனக்குள் மூடுகிறாய்!

பல பல படையல்கள் மிக மிக அழகொடு
படைத்த தாலெனவோ? - புகழ்
கிடைத்த தாலெனவோ?
சலசல எனுமொலி துடிநடை அவைகளில்
நுழைத்த தாலெனவோ? - சந்தம்
விளைத்த தாலெனவோ?

~உயிரிலை அவைகளில்@ நிறைவிலை ஒருசொலை
ஒளித்த தாலறிவோம்!| - என்றே
பழித்த லாலறிவாய்@
மயிரிழை தனிலது மறைவது புரியுது@
வளைக்க லாமெனிலோ - வாழ்வு
நிலைக்கு மோ நெடிதே !

- வீரகேசரி 20.5.62

ஒரு நாள்

குறுகி இருள் பிரிகிறது குணதிசையில்@ ஆழிக்
குமரிபனிக் குளிர் முழுகிக் கொடுகிட, நீள் வானத்
தறியிடை நுண் ஒளி இழைகள் தழைகிறது. தங்கச்
சருகையொடு புடவைநெய அருணன் எழுகின்றான்.
வறியவரும் அணிதல்தகும் வடிவுமிகும் ஆடை
வளர்கிறது@ நொடியினிலும் அழிகிறது@ மேகப்
பறியிடையே உயிர்கருதிப் பதறியழும் மின்மீன்@
பலபலெனப் பொழுதுமலர் விரியும்@ எழில் சொரியும்!

இளமையிலோர் குறைவுமிலை@ இவள் அழகி@ எனினும்
இவளுடலோ சிறுகுடிசைப் புளுதியிலும் புரளும்
உழவனிவள் கணவனதில் செழுமை கொளும் வயலாள்!
உடையகலும் நிலைமைதனை விடியுமுனம் நாணி
களவினொடு கனவுதிரும் விழிகளினில் இரவு,
கணவனொடு பழகியவை நினைவுவர எழுவாள்@
வழமையிது, புதுவருடம் வருகிறது ஒருநாள்
“வருக”வென அதை மகிழப் பொழுதெழுமுன் எழலாம்.

“ஒருவருடம் முழுவதிலும் உவகைதரும் திருநாள்
உழுதவர்கள் பெறுமதியை உலகறியு மொருநாள்
வருகிறது@ கவலைகெட மனதுமகிழ் வுறுவோம்@
வருக!” வென இதழ்மலர்கள் குவியமனம் உருகி
புருஷனது திருவடிகை தொழுதெழுத மாதின்
புடவைசிறி துயர்கிறது@ செயல்கள்முடி கிறது
சிறுவர்களும் இனி எழுவர்@ புதிய உடை அணிவர்
சுடுவர்வெடி@ உலகமிடி சுருள்கஇதி லெனவே!

“தமிழ்இனிது” எனவுரைசெய் புலவரிவள் செங்கைத்
தளிர்கள் தலை இலையினிலே படையலிடு பண்டம்
இமியளவு சுவை நுகரின்...”இதுவுமொரு தமிழோ?”
என எறிவர்@ தமிழ்மடியும்@ எனமிகவும் அஞ்சித்
தமர்கள் தமை ரகசியமாய் வரவுசெய வைத்துத்
தருவள்அமு தத்தையிது தமிழர்முது சொத்து!
குமிகிறது சிறுவர்படை புளியடியில்@ ஊஞ்சல்
குளறுவதும் சிறுவர்கவிச் சுருதியென ஓங்கும்!

தினகரன் 14.4.63

பரிவு

நான் நடந்து போவதனை
நாணமுற நோக்கிப்புன்
நகைய ரும்பி
“ஏன் நடந்து போகின்றீர்?
எங்கே உம் வண்டி?” என
இரக்கத் தோடு
தான் வியந்து கேட்டீர் இத்
தள்ளாத பருவத்தும்
தமிழ்வா சிப்பீர்!
ஏன் நடக்கக் கூடாது?
என் பெயர்தான் ~நடைராசன்|
எழுத்தாளன்தான்.

இப்பொழுதும் புரிகிறதா
என்னருமை வாசகரே?
என்மட் டில் நீர்
துப்புரவே@ நும்முடைய
தோளுக்கு பதிந்தவளைத்
துணையாய்க் கொண்ட
அப்பிழையைத் தவிர@ அதும்
தப்பன்று! வயதுமக்கும்
அனுப தன்றோ?
எப்படியும் கேட்டுவிட்டீர்,
இது போதும்@ இலக்கியமிங்(கு)
கினிமேல் வாழும்.

என்ன மச்சான் இளையதம்பி,
என்னுடனே படித்தவன் நீ@
எனினும் இன்று முன்னேறித் தான் விட்டாய்,
முதலாளி! உன்புதிய
மோட்டார்க் காரை
“என்னருகில் நிறுத்தி, “அடேய்,
எங்கிருந்து வருகின்றாய்?
இளைத்தே போனாய்!
முன்சீற்றில் ஏ” று என
மொழிந்தாயே வாழ்க எங்கள்
முன்னாள் நட்பே!


பத்திரிகைக் கடைக்காரன்
பவளசிங்கம் பல்லெல்லாம்
பரக்கக் காட்டி
“வெத்திலைபோ டுங்களையா,
வெகுது}ர மோ நடையில்
மெலிந்தே போனீர்@
எத்தனை நாள் வண்டியின்றி
இப்படியே....?” என்பெயரை
இறவாநின்ற
பத்திரிகை ஒன்றிரண்டில்
பார்த்திருப்பான் பாவம்! அவன்
படிக்கும் பிள்ளை.

ஒழுங்கையிலே கூடிநின்று
ஓரக் கண் பார்வை வைத்து,
“உத்தியோகம்......!
விழுங்கத்தான் காணுங்கா,
வெள்ளாமைக் காரனைப்போல்
விழுப்பம் இல்லை”-
விளங்கத்தான் வள்ளியக்கை
விமரிசனம் பண்ணுகிறாள்.
வீரன் போடி
கிழங்கு மகள், மகன் இல்லக்
கிழத்தியென்ற கற்பனையால்
கிளைத்த ஆசை.

கொட்டாசிக் கிழவர் மகன்
குழந்தையண்ணர் கால்நடையிற்
கொஞ்ச து}ரம்
கொட்டாவி விட்டபடி
குரல்பதித்துப் பேச்செடுத்தார்
கோடிவீட்டு
~வட்டானைப் பொடியனுக்கு
மாறாக வன்னியர்க்கு
வரையச் சொன்ன
பிட்டிசத்தைப் பற்றியல்லால்
பிறிதொன்றும் அவர்வாயில்
பிறக்கா தென்றும்!


வீதியிலே நு}றுவித
வித்தைகளைத் தன்னுடம்பால்
விளைத்துக் காட்டும்
நாதியற்ற ~கலைஞ|னுக்கு
நான்கு முறை கைதட்டி
~நன்|றென் றோர்சொல்
காதினிக்கச் சொல்லாத
கலா ரசிக சிகாமணிகாள்,
கவலை யோடும்
“ஏதிது நீர் நடையினிலே?
எங்கிருந்;தோ?” என்கின்றீர்
ஹீ! ஹீ!! நன்றி

இத்தனைக்கும் நான் பிழைத்து,
எப்படியோ என் இல்லம்
எய்தி, யாங்கு
வைத்தனன் கால் திண்ணையிலே@
“வஸ்ஸிலே ஏன் வரல்லை
வாவா என்றென்
புத்திரிதான் ப10நாணப்
புன்னகைத்துப் பைகளினைப்
புரட்டுகின்றாள்@
பத்திரிகைச் சுருள் தட்டுப்
படவிலையேல் அவள் முகத்தைப்
பார்க்க லாமோ?

- சுதந்திரன் 19.8.62 மற்றும்
வாணி கலைக்கழக 6வது ஆண்டு மலர் 1962

எது வாழ்வு ?


மாமரங்கள் காய்த்து மருட்டும்@ வளவெங்கும்
ப10மணமே தொக்கைப் புளிய மரங்களொடு
நீண்டு வளர்ந்த நெடும் பனைகள்... ஆங்கொருபால்
தோண்டாத சிற்றோடை, மேல் தொங்கு பாலமரமொன்று
ஓடை மருங்கில் உயரா இளந்தெங்கு
சோடிக்கும் நீழல் சுகத்தை நுகர்ந்தபடி
மேற்கே திரும்புகிறோம், மேல்மாடி யோடமைந்து
யார்க்கும்யாம் அஞ்சோம் எனுங்கர்ம வீரனைப் போல்
நிற்கிறதே, வெள்ளை நிறத்திலொரு கட்டிடம்....
கற்பிக்கும் நுண்கலையைக் கற்றுப் பழக்குமிடம்!
கண்டீர்@ அது, எம் கலாசாலைப் போதனைறு}ம்
இன்னுமொன்று கூறின் மிகையன்று, என்னவென்றால்......
பின்னேரமாகி மயண்டை பிறக்கையில்
செல்வந்தர் வீட்டில் செழும்பாலும் சோறும்போல்
இல்லையெனினும், ஒரு ஏழைக் குடிசையிலே
வெள்ளை இறுங்கு வெடித்துப் பொரிந்த பொரி
போலப், புதிய நிலா ப10க்குமிடத் தென்னையின் மேல்!
காலாறல் இன்றிக் கடமையிலே கண்ணாகத்
தென்றல் நடந்து திரிவதையும் காண்பீர்கள்!
தென்தமிழை மட்டும் தெரிந்தவர்கள் சொர்க்கமிதில்
வந்து பயில்வதற்கும் வாய்ந்ததெனில் யார்தவமோ.....!
என்றிருந்த காலம், எது வாழ்வெனக் கேட்டால்
இன்றுபோல் அன்றி, அதுவே என் வாழ்வென்பேன்
மற்றொன்றால் என்றன் மடைத்தனத்தை மாற்றும் முன்
அற்புதமொன்றங்கே அமைந்தென் கருத்தினிலும்
மாற்றம் புதிதாய் மலர்ந்தது. ஒரு பிற்பகலில்,
வீற்றிருந்தேன் தன்னந் தனியாய், வகுப்பறையில்
நண்பன் ஒருவன், ~அடேய் நாணமெதும் இல்லாமல்
பெண்களது மேசைப் பிரிவில் அமர்ந்தென்ன
கல்வி உள நு}லா கற்கின்றாய்? அப்பனே,
கள் மொழியார் கண்ணின் கடலுட் கவிழ்ந்தனையோ!


நல்லது.... நீ வெல்க!| என நாவாரப் பொய்யுரைத்துச்
செல்வான். எவளோ சிரிப்பாள் எனதுள்ளே!
அன்னவளின் மேசை அறைதிறந்து ஆராய்ந்தால்......
தின்று குறைவைத்த தேமாங் கனியொன்றைக்
கண்டெடுத்துக், கொண்டு கழுவாமல் அப்படியே,
நின்றவளின் தேனதரம் தின்பதுவாய்த் தின்கையிலே
~எச்சிலதை ஏனெடுத்தீர்? என்பாள் இளங்குமரி
எச்சிலா? ஈதா? இனிப்பென்ற அச்சுவையின்
உச்சம்!| என நான் உரைத்ததனைக் கேட்டுமவள்,
எச்சிலென்பாள், சிச்சீ@ இதுவே அமுதமென்று
சொல்லாமல் மீண்டுமதைச் சூப்பிச் சுவைக்கையில்....
கொல்வாள் நெஞ்சைக் குடைந்து, குனிவாளை
அள்ளி விழியிரண்டும் ஆரப் பருகுமுனம்
கள்ளி எனக்குக் கணக்கடித்தே போவாள்!
அதிபர் அலுவல் அறையில் அழைத்து
இதுவா நின் வாழ்வென்று ஏசுகின்ற போதும்,
மதுவ10ற்றும் மாங்கனியை மங்கை இதழ்கள்
பொருந்தப் புகுந்த பல்லின் பொந்தினிலே, எச்சில்
விருந்தைய்யா என்று விடையிறுக்க, ஏற்காமல் -
~அல்ல! ஒழுக்கமே ஆசிரியன் வாழ்வென்று
சொல்வார் அதிபர் அவர், சொல்லத் தகுதியுளார்!
மற்றுமிங்கு வாழுகின்ற மன்பதையும், வாழ்வெதென்று
கற்றுள்ளதோ? அதையும் கண்டு விசாரித்தால்......

இயற்கையெலாம், சுதந்திரமே எங்களது
வாழ்வின்றிங் கியம்பிவாழும்
அயல் தேசம் அடிமை கொளல் அதுவொன்றே
வாழ்வென்றார் அழிய நின்றார்!
வியக்கு நவவிந்தைகளை வளைப்பதுவே
வாழ்வென்பார் விஞ்ஞானத்தார்
துயர்க் கடலில் இன்றுழலும், தொல்தமிழன்
வாழ்வெல்லாம் காதல்! வீரம்!
இல்லறத்தின் இனிய சுகம் எய்தியவர் விருந்தோம்பல்
எம் வாழ்வென்பார்
தொல்லையெனத் துறந்தவரோ தொண்டென்பார்
தொழிலாளர் தோளேயென்பார்
கல்வியென்பார் பேரறிஞர், கடவுளென்பான்
வேதாந்தி, கருத்தில் வெல்லும்
சொல்லென் பார் பேச்சாளர், சொகுசென்பார்
பணத்துக்குச் சொந்தக்காரர்


உறக்கமென்றான் சோம்பேறி@ ஊர்சுற்றித் திரிகின்ற
ஒருவன் எச்சில்
பொறுக்கலென்றான் துணிவாக! கடதாசி விளையாட்டில்
புலிகள், தாளை
இறக்குவதில் உளதென்றார்! என்மனைவி, நகை புடவை
வையே என்பாள்,
குறிக்குவழிக் கோணேசர் கறுப்பென்று கொடுப்புக்குள்
குறிப்பாய்ச் சொல்வார்.
சிங்களமே இங்கு மக்கள் வாழ்வென்று செப்புகிறார்
சிறிமா மாதா!
எங்கள் மொழி இல்லாமல் ஏதெமெக்கு வாழ்வென்பார்
எமது தந்தை!
கங்குலென்றாள் விபச்சாரி@ கள்ளென்றான் குடிகாரன்
காதை மூடிச்

~சங்கராசய|! என்பார் சன்மார்க்க நெறிதாங்கும் தாடிச்சாமி!
புத்தகங்கள் புனைவித்துப் புவியெல்லாம் தம்பெயரைப்
புகுத்த நின்ற
வித்வ சிரோன் மணிகளையும் விசாரித்தேன்
வாழ்வெதென்று விளம்பச் சொல்லி
சத்தங்கள் ஏன்காணும்? சச்சரவுப் படநாம் யார்!
சான்றோர் யாங்கள்!
புத்திமதி கூறுகிற போதகரே! போங்காணும் புகழ் வாழ்வென்றார்.
பொய்யென்பார் வழக்கறிஞர் புவிதொழுமே
பெருங்கலைஞர், அவர்கள் மட்டும்
மெய்யென்பார்! உழுபவரோ உணவின்றி
மெலிகையிலும், மேழியேந்தும்
கையென்பார் பிறர் தயவில் பிழைக்கின்ற
கனவான்கள் கடனே என்பார்!
ஐயன்மீர், ஒன்றிரண்டா! அனைத்தையும் யான்
இவ்வரங்கில் அறைதலெங்ஙன்?
~ஒழுக்கமப்பா வாழ்க்கை! யிந்த உலகமொரு மாயை!
அதில் உளத்தை விட்டால்
வழுக்கி விழ வேண்டிவரும்| என்றதிபர் கூறியதும்
வாய்மையே ! என்,
உளக்கருத்தை யன்றோ நீர் உரைப்பதற்குச்
சொன்னீர்கள் உலகில் என்றும்
இழப்பதற்கு முடியாத பெருஞ்செல்வம் எழுத்தே,
என்வாழ்வாம்@ ஈங்கு!இருட்டினிலும் ஒளிந்திருந்து, வெளிச்சத்தில்
நிகழ்கின்ற இவைபோல், வேறும்
பொருட்டமைந்த வாழ்வுகளில் பொதிந்துள்ள
உண்மைகளைப் புந்தி யாலும்
உருட்டியொரு முறையலசி, உலகுமிவை
உணர்ந்துள்ளம் உருகும் வண்ணம்
சிருட்டிகளில் சிறைசெய்து சீவிக்கும் படி வார்த்தல்
எனக்கு வாழ்வு.
வாழ்வனைத்தும் இலக்கியமாய் வாய்ப்பதிலை
என்றறிவேன், எனினும், மக்கள்
வாழ்விலிருந் தொரு கலைஞன் வடிப்பவை தாம்
என்றென்றும் வாழ்ந்து நிற்கும்!
தாள்களிலே அச்சடிக்கும் தமிழெல்லாம்
இலக்கியமா? தனித்துவாழ
ஆழமுள்ள பொருள் கண்டு அழியாத தமிழ் பாடல்
எனக்கு வாழ்வு
காலத்தின் கோரவுடல் கசக்கியதைப் பற்களிலே
கடித்து வென்று,
ஞானமெலாம் தமிழ்மீதும் நாட்டத்தைத்
திருப்பி நமை நயக்கும் வாறு
ஏலத்தால் மலியாத கோல எழில் கவி படைத்தல்
எனக்கு வாழ்வு!
காலமோ கரைகிறது@ கவிதையினி முடிகிறது
கதைக்கலாம் நீர்!

வீரகேசரி 6.9.64

நன்றி

மாணிக்க கங்கையில் பாய்ந்தேனும், மாயை மலங்கழுவிக்
காணிக்கை யாக்கக் கருதி, நடந்து கதிரைமலை
யானிடம் போகிற வீரப்பனென்ற அப்பாவியினை
தீனென்று கொத்தித் திருகிய பாம்பினைத் தேடுகிறார்.

நன்றியைக் கொன்றவன் நஞ்சு மனத்தின் நகலினைப்போல்
கன்னங் கரிய இருளில், வீரப்பனின் கால் உசும்ப,
பின்னாலே வந்த புடையன், எலியென்று பேய்ப்பசியில்
புண்ணியம் தேடப் புறப்பட்ட காலினைப் பொத்தியதாம்!

~உஞ்ச விருத்தி எடுத்த உணவினை உண்ணவிலை!
பஞ்சமா பாதகம்! பாம்பா கடித்தது? பாவமப்பா!|
நெஞ்சில் பிறவாத செஞ்சொற்கள் வீசி நெகிழ்ந்துருகி
அஞ்சலித்தார், தம் அனுதாபம்! போனார் அறிவுடையார்!

ஊரார் இவர்கள், உலகம் முழுதும் உறவுடையார்,
ஆராயிருந்தாலென்? வீரப்பன் அன்னார் அதிதியன்றோ!
ஊரே திரண்டு உதவிக்கு வந்த தொரு குறையும்
வீரப்பனுக்கினி நேராது@ பாம்பின் விஷமிறங்கும்!

தம்பிப் பிள்ளையும் மிகத் தக்க வைத்தியர்@ மந்திரத்தில்
தம்பால் அப் பாம்பைத் தருவிக்க வல்லார் தழை குழையால்
செம்படி வித்தைகள் செய்வார்! அவரது சேவையினால்
எம்மான் எமனிடம், வீரப்பன் தப்பி எழுந்து நின்றான்!

வீரப்பனுக்கு விடைதந்து, கோயிலின் வீதியெல்லாம்
காரை வளர்ந்து, முள் ளாகவே காடு கனத்திருக்கும்
ஓரத்திலுள்ள தெருவால் நடக்கையில் மஞ்ச வண்ணாப்
போரை யடுத்தசெம் புற்றினில் பாம்பர் புறப்படுவார்!

~ஆரோய்அது?| என்று கேட்டேன்@ அதற்குள் அவசரமாய்,
வீரப்பன் காலை வெறியோடு கௌவிய வீரரவர்,
கூறுவார்@ ~ஐயஎன் மீதினில் கோபம் கொளாதருள்க!
ஓரா தெலியென்று, வீரப்பன் காலை உதறி விட்டேன்!|
~ஏசுகிறார்கள் இவ்வ10ரார்கள்@| என்று கரும்புடையன்
பேசிய துண்மை பசியால் விளைந்த பிழையிதென்று
யோசித்தேன் போ....போ! இனிமேல் எவரையும் நோண்டியிங்கு
நாசம்புரியேல்! என நான் நடந்தேன் நடக்கையிலே....

ஐயா! பசியென் றழுமந்தப் பாம்பின் அருகினிற்போய்
கையில் எடுத்ததை வீட்டினில் கொண்டுஎன் கட்டிலிலே
பைய வளர்த்திப் பணியாரம், முட்டைகள், பால்பழமும்
தொய்யும் வயிறு நிமிரக் கொடுத்தேன்@ கண் து}ங்கியது.

ஆம்பெரியீர், பசியற்றால் இப்பாம்புகள் ஆரிடமும்
வீம்பே புரியா! இதற்கோர் புதிய விதிசமைப்போம்!
பாம்பும் ஒழுங்காய்ப் பழகிற்று வீட்டிலென் பாட்டிமட்டும்
து}ங்கா திருந்தாள் இரவும் பகலும் தொடை நடுங்கி!

கொட்டாவி நின்று, குறட்டை இரட்டைக் குழலிசைக்க
கட்டிப் பிடித்தென்றன் பாம்போடு கட்டிலில் கண்வளர்ந்தேன்
முட்டாள் புடையன்! என் மூக்கினைக் கௌவி முகர்ந்ததனால்
சொட்டுச் சொட் டாகப் பொசியும் குருதி, நான் சோருகிறேன்.

பாம்புகள், மெத்தவும் நல்லவை பாருங்கள்! பாவமிது,
நாம் விட்ட சீறல் குறட்டையில், வேறொரு நாகமெனும்
பாம்பே கடிக்கப் பதுங்கிய தென்று, பரிவுடனே
நாம் செய்தநன்றிக் கடன் தீர்க்க மூக்கை நறுக்கியது!

வைத்தியர் வந்தினி ஏதும் புரிய வகையுளதோ!
சத்த மிடாதே@ சனங்கள் திரண்டு தடியெடுத்துப்
~பொத்துப்பொத்| தென்றுனைப் போட்டு நொறுக்கிப் பொசுக்கிடுவார்!
புற்றே உனக்குப் பொருத்தம்@ புடையனே போய்விடு நீ!

தினகரன் 16.8.64


பலு}ன் !

பச்சை, சிவப்பு, மஞ்சள், பாம்பு ~பலு}ன்| முட்டை ~பலு}ன்|
இச்சைக்குகந்தவையாம் ஏழு நிறம் ஏந்தியவை.
கம்பியிலே கொத்தாகக் கட்டி, திருவிழவில்
தம்பிடித்துக் கூறி விற்கும் தம்பீ, பலு}னொன்று
என்ன விலையாய் இருக்கிறதுன் சந்தையிலே?

பொன் முதலாய் உள்ள, பொருட்களினை விற்பதற்கே
திண்டாடுகின்றார், திறமான வைசியர்கள்!
கண்டிருப்பாய்! ஆனாலும்... கைராசிக் காரன்நீ!
காற்றை, ~இறப்பர்| கடதாசிப் பைகளிலே
ஊற்றி, அடைத்தெங்கள் ஊராரை ஏமாற்றிக்
காசு கறக்கின்ற, கைராசிக் காரன் நீ!
பேசுகிறேன் என்று பிழையாய் நினைக்காதே!

ஊரார்கள் போல் யானும் உன்காற்றுப் பைமீது
பேரம் விசாரித்தால்... பிள்ளையென எண்ணுகிறாய்!
இல்லையா? உன்னுடைய கையில் இருக்கையிலே,
நல்ல நிறத்த பல நாடங்காய் போன்றவைகள்
~பட்|டென் றுடைந்து பறந்த கதை ஊரறியும்!
நட்டம், உனக்கே@ என் நண்ப, அதில் ஒன்றுகொடு!
இப்பொழுதில் லா விடினும், எப்பொழுதோ ஓர் பொழுதில்
இப்பெரிய உன் காற்றுப் பொட்டலம், ~பட்|டென்றுடையும்!
நானறிவேன், ஆயினுமென்...? நண்பா, உன் கையிலுள்ள
வானத்து வில்லனைய வண்ண ~பலு}ன்| வாங்கிவைத்து,
கொஞ்சி மகிழ்ந்து, குலவி விளையாடற்கென்
நெஞ்சம் விழைகிறதே! நீல ~பலு}ன்| ஒன்றுகொடு!
~பட்|டென் றுடைந்து பறந்தால்... பறக்கட்டும்
மற்றொன்று வாங்கி, மகிழ்வேன் விளையாட்டை!
பித்தென்றும், என்னை வெறும் பேதையென்றும் நீ சிரித்தால்...
குற்றம் யார் மீதோ? கொடு!

- தினகரன் 18.10.64


பவள மல்லிகைப் பூ

தவள வானில் ஒளிரும் தாரை
தளர் நடைபயில் இரவின் வேளை
தவறி வாசல் தனில் உதிர்ந்தன
தலைகள் து}ய மணம் கமழ்ந்தன!

பவள மல்லிகைப்பூ - கமகம.....
பவள மல்லிகைப்பூ

பனியின் கண்ணீர் சொரியும் வானம்
பரிவின் பொங்கிய துயரம் போலும்!
இனிய தென்றல் மருவி வீசும்
இணையவண்டுகள் சுருதி கூடும்

பவள மல்லிகைப்பூ - பட்டுப்
பவள மல்லிகைப்பூ

பனியின் ஈரம் பசந்து காயும்
பருகும் வண்டுகள் அசந்து ஓயும்!
இனிய வாழ்வும் கசந்து து}ய
இதழ்கள் சோரும்! அழுது வீழும்!

பவள மல்லிகைப்பூ - பாவம்
பவள மல்லிகைப்பூ


- சங்கமம் ஆகஸ்ட் 1974


நெருப்பே வா!

அம்மா, இவளுக்கு
வேலை கிடையாது
எந்நேரம் பார்த்தாலும்
எச்சரிக்கை
கண்டிப்பு!
நெருப்பென்றால் .......
எனக்கு, மிகநேசம்!
தொடப்போனால் ....... கத்துகிறாள்!
கை எரிந்து போகும்,
சுடுமென்று
மீறி ஒருக்கால்
விளக்கை விளையாடின்
பிடித்துப் பிரம்பெடுத்துப்
பரிகாரம் பண்ணுகிறாள்!
அப்பா, அறிஞரிவர்
எப்போது பார்த்தாலும்
பென்னம் பெரிய
தலையணை போல் புத்தகங்கள்
கற்பார், அதற்குக்
கணக்கில்லை!
அப்படிப்பட்ட அவரே,
தினந்தோறும்
வாயிலேவைத்து
நிமிடத்திற் கொன்றாய், நான்
~ஐஸ்| பழம் தின்பது போல் விழுங்குகிற,
நெருப்புத் தடிகள்
அப்பாவை அடியொடு
சுட்டுப் பொசுக்க விலை
நெருப்புத் தடி தின்னும்
போதில். அவர் முகத்தில்
நெளி நெளியாய் புகைபோல
நீந்துதல் ஆனந்தம்!
இவள் அம்மா.......
அடுப்படியில்
அப்பாவை மிஞ்சி
அதிகம் படித்துவிட்டாள்!எல்லாம் வெறும் பொய்!
நெருப்பேவா விளையாட
நேரம் கடத்தாதே!
கோயிலுக்குப் போயிருக்கும்
அம்மாதிரும்பும் முன்
ஒருக்கால் உனைத் தொட்டுப்
பிடித்தழகு பார்க்கின்றேன்
நெருப்பே வா வீணாக
நேரம் கடத்தாதே!

தினகரன் 3.1.65போட்டோ பிடிக்காமல் போம்

பட்டப் படிப்புப் படிக்காமல் தத்துவத்தில்
கெட்டித் தனப்பெயரும் கேளாமல், எம்பழைய
காவியங்கள் கற்றுக் கலை நயங்கள் ஆயாமல்
ப10வியல் உண்மை, பொருளாதா ரப்புலமை
சட்டம், தருக்கம், சமயம், வரலாறு,
நுட்பமிவை பற்றி, ஒரு நு}லும் எழுதாமல்
ஊரிலொரு மூலை, ஒடுக்கில் கிடக்குமெனை.......
யாரோ சிறுவர், அறிஞர் என உரைத்தால்
தோளில் ~கமிரா|வும் தொப்பியுமாய் - பேட்டியென்று
காலால் நடந்தீர்@ அதற்காகக் கூறுகிறேன்.
பத்திரிகைச் செய்தி படைக்கும் நிருபர்களே
அத்தனையும் பொய்யப்பா! ஆயாசம் கொள்ளற்க
மொட்டைத் தலைக்கும் முடிபோட வல்லவர்கள்
கட்டும் புரளிக் கதையப்பா! .......
முன்னாளில்
எல்லோரும் போன்றே இருந்தேன் மயிரோடு
எல்லாம் சுருள் மயிரே என் தலையில் காப்பிரிபோல்
கண்டென்னைக் காதலித்த பெண்கள் மயிர்க்கொருவர்
உண்டு மதிப்பு மயிருக்கும் என்றிருந்தேன்.
ஏனோ, ஒருநாள், என் காதலியர் எல்லோரும்
போனார்! அதற்குப் பொருள் தேடி....... என் தலையைத்
தொட்டுத் தடவும் பொழுதில், தலை, வழுக்கை
மொட்டையாய் நிற்பதனைக் கண்டு, பெருமூச்செறிந்து
மங்கையரைச் சற்றே மறக்க, மனம் எதிலோ
தங்கியதும் என்னுடைய மூளையிடம் .......

~முட்டாளே!
என்றன் முக அழகை ஏன்குலைத்தாய்? கெட்டழிவாய் |
என்றே சபிக்கும், அதற்கெனது மூளையார்,
~பற்றுக்கள் என்ற பயிரை மயிரென்று
கற்றையாய் நட்டு நட்டுக் காதலித்து மென்மேனும்
உற்பத்தியாக்கி உலகின் துயரத்தைப்
பற்பலவாய்ப் பற்பலவாய் பல்லாயிரங்கோடி
உண்டாக்கிவிற்க, ஒரு சிறிதும் ஆசை நான்
கொண்டறியேன்! உன் தலையாம் வளையி னிலே, கண்டாகி
உண்டு முடித்தேன் உனது மயிரத்தனையும்

என்ற(து) இதுவரையில் யானுரைத்த, என்னுடைய
மண்டை மனதின் மடக்கதையைப் ~பேப்பரி| லே
போட்டுமது விற்பனைக்குப் பொல்லாங்கு தேடாதீர்!
நாட்டார் படித்து நகைப்பார்!
எனையொன்றும்,
~போட்டோ| பிடிக்காமல் போம்.

ஈழநாடு 31.1.65படம் பார்ப்போம்

~படம் பார்க்கப் போவோம்| என்றாய் பார்க்கலாம் அதிலே என்ன
தொடங்குன்றன் அலங்காரங்கள்! தொண்ணு}று நாட்களாகத்
தொடர்ந்தோடும் படமாம்@ கூட்டம் தொங்கலே இல்லை@ நீளம்!
இடம் வலம் இலையாம் அந்த எழில் மிகு தியேட்டருள்ளே.

ஒளியிருள் இரண்டும் சேரும் உல்லாச மாளிகைக்குள்,
எழியவர் தொடங்கி, செல்வர் எல்லோரும் சுவாசித்தற்காய்
வளி வர வசதி@ மேலும் ~வார்| அதற்குள்ளே! வாவா,
ஒழியவு மிலையா உன்றன் உடையலங் கார மின்னும்?

நட நட@ கதை யாரம்பித்து நாயகன் வருவான். கண்டு
பட படத் திடுவாள், ப10த்த பருவப்பெண் அவர் அன்புக்குத்
தடை வரும் வில்லனாலே@ தவறினால் தகப்பன் நிற்பார்!
முடிவிலெம் நாயகர்க்கே முழுவெற்றி! அறிவோம் எல்லாம்

முடிவினைத் தெரிந்துகொண்டு, முன்னேயே எழுந்து செல்லும்
பொடிகளைக் கவனிக்காதே போகட்டும்@ அவரோடும் நாம்
இடையிலேன் எழுதல் வேண்டும்! இருமிரும் திரையிலின்னும்
கொடி, ~சுபம்| விழவே யில்லை, குதிக்கிறாய் எதற்கிப்போது

கதைமிக அருமை@ நல்ல ஹாசியம், கரகோ ஷங்கள்
உதைசுதி, சீழ்க்கை யாவும் உயர்வான படமீ தென்ற
அதையே தான் முரச டிக்கும், ஆமிங்கு இருளில் சற்றே
புதையவும் வந்த நாங்கள் போகிறோம் வீடு நோக்கி!

எதிர்வரும் மனிதர் கூட, இதற்கேதான் வருகின் றார்கள்!
அதிலொரு தவறுமில்லை ஆயிரம் நாட்கள் மேலும்
புதுப்படம் தொடர்ந்திங் கோடும்! போவார்கள்! முடிவை எண்ணி
அதற்கெலாம் கவலைப்பட்டால்....? ஆர்படம் பார்க்கப் போவார்!

- ஈழச்சுடர் - திகதி தெரியவில்லை.மங்கள நாயகன்

ஓலைக் குடிசை ஒழுகிக் கரையும்
உள்ளே நான் தனியே
மாலைப் பொழுதின் மழைநாள் எனது
மங்கள நாயகன், முன்
ஓலை எதுவும் எழுதான்@ நினைய
ஒண்ணா வேளையிலே
ஏழைக் குடிசை யதனுள் எதுதான்
இன்பம் பெறவந்தான்!

ஓராண்டின் முன் ஒருநாள், கனவை
உதறிப் பிரிகின்றான்!
ஊரா ரறியாப் பொழுதேன் குடிசை
யுள்ளே நுழைகின்றான்!
ஆரோ? எவனோ? என்று}ர் என்மேல்
அம்பல் விளைவானேன்?
~வாhPர் திருடன் வந்தான்| என என்
வாயும் முடியாதேன்!

ஒழுகிக் கரையும், களியின் தரையில்
உதறும் என் கால்கள்@
ஒருகால் இழுபட் டொருபால் நிலமேல்
வழுவி விழுகின்றேன்!
தழுவா இருகை தழுவுந் தழையுந்
தழலில் விழி மூடும்!
தவறும் நொடியின்பொழுதில் இதழ்கள்
தயவாய் மலர் சூடும்!

என்னு ளிருந்த கோழையைஎள்ளி
எட்டி நகர்கின்றேன்!
~என்ன... எதற்கிவ் வெத்தன மெல்லாம்?
என்று சினக்கின்றேன்!
~இன்று பிறந்த தினம் நீ| என்றான்
இனுமோர் ப10த் தந்தான்!
எத்தனை தொல்லை அதற்குளும் எப்படி
என்னை நினை வந்தான்!
காலையி லென்றன் நாயகர் சென்ற
காலடி தெரியாது!
கனியிதழ் மீதவர் சூடிய, அன்பின்
கடிமலர் கருகாது!
ஏழைத் தனிமை வாழ்விலு மோர்நொடி
இன்பம் இருந்தடி!
ஏழேழ் வழியும் இதுவே நினைவென்
இதயம் உருகுமடி!

- தினகரன் 25.7.65 (25வது ஆண்டுமலர்)அஞ்சலோட்டம்

ஆரம்பம் இங்கு தான்@ பின்
ஆட்டத்தின் முடிவும் இங்கே!
ஆரம்பம் - ஆயத்தம் ... போ!
அஞ்சலின் தடியை உன்னாள்
மாறிடும் வரையில் ஓட்டம்@
மாணவர் நீங்கள் ~மானம்!
வீரரே விரைக என்றோர்
வெடிச் சத்தம்@ தொடங்கிற் றோட்டம்.

ஓடுவான் ஓட்டம் அந்த
ஒல்லியன்... கொக்குக் காலன்!
போடுவார் மக்கள் கூய்ச்சல்@
~போதம்பி மேலே போபோ!
ஆடுவார் தாமும், பின்னால்
அவன் கூட ஓடுவார் போல்
பாடுவார் அறிவிப் பாளர்,
பறங்கியர் மொழியில்! பாட்டாம்...

வெல்பவர் தம்மைச் சுட்டி
விளம்பரம் செய்தே வாழும்
~சொல்வலார்| அறிவிப் பாளர்!
சுதி விட்டுப் பாடல் கண்ட,
வெள்ளைக் கால்சட்டை கார
வீரனோ பறந்தான்@ பாய்ந்தான்!
நல்வர வுரைத்தார் நண்பர்
நாலைந்து பாகம்... இன்னும்..

மற்றைய வீரர்க் கெல்லாம்
மனஞ்செத்துப் போகச் சோர்ந்தார்!
வெற்றி நாம் முன்னே சொன்ன
வெள்ளைக் கால்சட்டை கேதான்!
சுற்றிநின் றவர்கள் கூவிச்
~~சுச்சுச்சூ! சுச்சூ! போச்சு!
வெற்றியைக் கெடுத்தான்... அஞ்சல்
வீணன் கை சோர விட்டான்வீரனென் றவரே பின்னால்
வீணனென் றுரைத்தார்@ வெட்கி
போரிலே விதியால் தோற்ற
புலியெனத் திரும்பி வந்தான்
ஆரோபின் னாலே வந்த
அசமந்தம் வென்றான்! கொண்டு
சீர் செய்து தங்கத் தாலே
சிறகொன்றும் பரிசு தந்தார்!

நடுவரோர் மடையரா... நம்
நண்பரா ஏதும் பண்ண?
அட தம்பீ, ஓட்ட மன்று,
அஞ்சல்தான் இதிலே முக்கியம்!
இடையிலே அதனை விட்டாய்!
இனியதில் கவனம்! உள்ளம்
உடையாதே@ போபோ இந்த
உலகமோர் அஞ்சலோட்டம்.

சுதந்திரன் 18.7.65நிலவுக்குப் போகும் முன்...........

வானத்தை வில்லாய் வளைத்தீர் வளரும் விஞ்
ஞானத்தால் கோடி நலந்தந்தீர் - ஞானிகள் நீர்
கூனற் பிறையிற் குடியேறி வாழ்வதற்கும்
வேணவாக் கொண்டீர் விரைந்து.

எல்லாம் சரியே, இலட்சியத்தில் நீர்பெரிதும்
வெல்வதையே யானும் விரும்புவதால்..... சொல்லுகிறேன்
வெள்ளை நிலவில் போய் வீடுகட்டு முன், எமையும்
வெள்ளை நிறமாக்கி விடும்.

நெஞ்சில் களங்கம் நிறைய இருந்தாலும்
அஞ்சோம், மதிக்கும் அதுவுண்டே - தஞ்சமென்று
காசினியில் வாழும் கறுப்பர்யாம் போக, நிலா
கூசிச்சுடலாம் ஓர் குண்டு.

ஆகையினால், விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களே
காகநிறமா மான கடையரெமைச் - சோகைநிறம்
ஆக்கும் வகைபாhPர் அப்பொழுதே வெண்ணிலவும்
து}க்கா, துவக்கைத் துணிந்து.

- ஈழநாடு 8.8.65
சீவனைத்தான் வேண்டுமடி

எத்தனையோ பேர்களடி என்னிதயம் தம்பால்
இன்றுவரும் நாளைவரும் என்றெதிர்பார்க் கின்றார்
அத்தனைபே ரும்படித்த ஆரணங்கு மாரே!
அதிலுனக்குச் சந்தேகம் கடுகேனும் வேண்டாம்
புத்திமதி கூறாதே! காதலிக்கும் போதுன்
பொருளுக்காய் வீங்கியுனைப் பாங்கிலணைப் பேனோ!
சித்திரத்தில் நான் மயங்கிப் போவதிலை@ யுன்றன்
சீவனைத்தான் வேண்டுமடி சாவதற்கு முன்னால்!

நமக்குளொரு நாடகத்தை ஆடிமுடிப் போமேல்
நாழிகையாம் மென்மலர்கள் பாழினிலே உதிரும்!
இமைக்குளெதோ கனப்பதுவும், கன்னங்கள் மீதில்
இழிவதையும் உன்சேலைத் தலைப்பறியும் முன்னே,
~தமுக்| கடித்தே எனக்குணர்த்தும் என் பெலவீ னங்கள்
தந்தியடிக் காதேயென் சிந்தனையி னு}டாய்!
சுமைகனத்தென் மனம் வெடித்துச் சுக்கலுறு வானேன்?
சொல்லடி ~நான் என்றென்றும் சொந்தமுனக்| கென்றே!

ஒரு நோக்கின் இருகிளையாய் நதிகள்பிரிந் தாலும்
ஓர்மடியில் வீழ்ந்துருளும் ஒன்றுபடும் வாழும்!
அருள் நோக்கில் மழையாகும் அம்புவியில் வீழும்
அங்கு தழைத் தோங்குவதே மானிடத்தின் விந்தை!
பெருநிதியம் நீயன்றிப் பிறிதொன்று முண்டோ!
பிச்சையிட வேண்டுகின்றேன்! பிடியைவிட மாட்டேன்.
கருணை வழி எவ்வளவோ தொலைவிலுள தன்பே!
காலமெனும் தேர்வடத்தில் கைகளைவைத் தேனே!

திகதி சஞ்சிகை தெரியவில்லை.பட்டம்

பட்டம் தரும், ஓர் பாPட்சைக்காய்,
பட்டணத்து, ஹொட்டலிலே
கூலி கொடுத்து, குடியிருந்து,
புத்தகத்தை வைத்துப் புலம்பும்
புது நண்பா,
நித்திரை நான் கொள்ளவிடாய்!
நீ படித்துத் தேர்வுற்று,
பட்டம் பதவி பவுசோடு வாழ்கையில்...
நான் கெட்டலைந்து வந்தேதும்... கேட்டால்
மறுப்பாயோ!
என்னால் முடிந்ததையும்
இப்பொழுதே ஏற்றிடுக
கண் விழித்துக் கற்பதற்காய்க்
கோப்பி கொஞ்சம் சாப்பிடுக!
உன்னாணை... என்னை, இனி
ஒன்று மட்டும் கோராதே,
என்னவென்றால்:
இந்த எளிய லிகிதனையும்
~பட்டம்படி| யென்று
பாடாய்ப் படுத்தாதே!
நொட்டை பல கூறி... எனை
நோண்டாதே! வாழ்விலுள
ஒவ்வோர் நொடியும் பாPட்சைகளே!
வௌ;வேறு கோலத்தில்......
வௌ;வேறு கோணம்!
எனை வெல்லவும்......
மெத்த விருப்பம் உடையனவாய்
மல்லுக்கும் நிற்கும்!
மறுநொடியே நான் சித்தீ!
ஒன்றிரண்டா பட்டங்கள் உள்ளன,
என் உள்ளறையில்!
என்றால்.....
அதற்கேதும் அத்தாட்சிப் பத்திரங்கள்
கேளாதே!


என்னுடைய தேர்வு முழுவதையும்
பாழாகா வாறமைந்த பத்திரத்தில்
அச்சடித்து,
வைரவிழா கல்லு}ரி கொண்டாடும் போதில்,
கௌரவமாய் நல்குவதாய்க்
காகிதம் மேலிடத்தால் வந்துளது!
பத்திரத்தை வாங்குதற்குப் போம்வழியில்,
சந்தித்தோம்,
நாளை, அந்தி சாய்கையிலே......
நாம் பிரிவோம்!
வந்தனமும்,
என்னுடைய வாழ்த்தும் உனக்குரித்தே!
சிந்தனையை நன்கு செயல் படுத்தி,
உன்றன் இறுதிப் பாPட்சையிலும்
தேறிடுக!
காண்போம்,
பெரிய இடஞ் சேர்ந்த பின்.

தினகரன் 10.10.65


வட்ட நிலவே!

வட்டநிலவே! வா வா வா - எங்கள்
முற்றத்திலே விளையாடலாம் - மணல்
முற்றத்திலே விளையாடலாம் ! - வட்டநிலவே

முட்டாசு வாங்கி வைத்திருக்கு - தின்ன
மோதகம் கொழுக்கட்டை அவித்திருக்கு
பட்டுச் சட்டையும் தைத்திருக்கு
பாலும் பழமும் கரைத்திருக்கு ! - வட்டநிலவே

வேந்தன், ஊர்மிளை எழிலரசி - எங்கள்
விநோதன், கௌரி, விக்கிரமன்
சாந்தினி யோடும் விளையாட
சந்தோஷ மாகப் பறந்து வா! - வட்டநிலவே

கட்டிப் பிடித்துநாம் ஆடிடலாம் - இன்பக்
கவிதைகள் பலப் பல பாடிடலாம்!
மட்டக்களப்புப் பாலப்பம்
மாதிரி நிலவே விரைந்துவா - வட்டநிலவே

- ஈழநாடு சிறுவர் மலர் 1966


போதியோ பொன்னியம்மா

பொன்னியம்மா நீயிறந்து போனாய்@ புதைப்பதற்கும்
உன்னிக் கருமங்கள் ஊரார் புரிகின்றார்.
செல்வக் குடும்பத்தின் சீமாட்டி என்றுலகம்
சொல்லும் படியாய்ச் சுகத்தோடும் வாழ்ந்தவளே,
காலத்தின் போக்கில் கலாம்விளைந்த காரணத்தால்,
கோலம் குலைந்து குளிரில் கிடப்பவளே!
சாம் பொழுதில்... நீ, மிகவும் சாந்தி நிறைந்தவளாய்
சூம்பும் கரங்களினைக் கூம்பினையோ! கோப்பியெனும்
பானம், உனக்குப் பலகால மாய் விருப்பம்
ஆனதுவே. அம்மா அதையே நினைந்தனையோ!

~~ஆறாண்டாய் எங்கள் அரசின் பெருங்கருணைப்
பேராறு, தந்தபிச்சைக் காசை நிறுத்துவதே
எங்கள் பொருள் வளத்தை ஏற்ற வழியென்ற
தங்கருத்தை, எம்மூர்த் தலைவர், அரசினர்க்குப்
புள்ளி விபரப் பொழிப்போடு காட்டியதால்
தள்ளினார் என்னுடைய தாபரிப்புக் காசினையும்||

என்றாய். உனதுபசி எவ்வளவு என்பதையும்,
ஒன்றும் உறவு முறைகளுத வாததையும்,
பாரிச வாதம் படுக்கையிலே போட்டதையும்,
து}ரத்துப் பார்வை தொலைந்ததையும், ஒவ்வொன்றாய்க்
காட்டிப் பிறகுமந்தக் காசைத் தரும்படியாய்க்
கேட்டு, மிகமன்றாட்டம் கேட்டு, ~~முறைப்பாடு
வன்னிய னார்க்கு வரைந்துதா தம்பி|| யென்றாய்.
என்னவோ பாவம் எழுதி யனுப்பிவைத்தோம்.

~எம்பீ| யைக் கண்டு எடுபிடியாய் வேலைசெய்தால்
சம்மதம் கூடவரலாம்! அதற்குள்ளே
என்ன அவசரமோ பொன்னியம்மா, நாம் எழுதி
ஒன்பதுவே ஆண்டு! இன்னும் ஓராண்டு காத்திருக்க
ஒண்ணாமல், எங்களது ஊராரை ஏய்த்து விட்டுக்
கண்மூடிக் கொண்டதென்னே! பொன்னியம்மா! போம்பொழுதில்

என்ன நினைந்தாய் உன் இறுதிச் சுடர் மூச்சில்?
பொன்னியம்மா போய்வருக!... போதியோ! என்றிரங்கும்
ஊரோடு, வானும் உருகி, அழுதரற்றும்
மார்கழி மாத மழை!
- சுதந்திரன் 2.1.66


கூத்து!

கூத்தாடிகளே, விரைவா யாடுங்கள்
கூதல் போகக்குதித்து - வேர்த்துக்

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

பார்த்த மக்கள் நீத்துப் போகார்!
பனியில், பட்டுமணலில் - நிலவில்
ராத்திரி முழுதும் கூத்துப் பார்க்கும்
ரசிகர் இவர்கள் பெருமைப் படவே

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

கட்டியக் காரன் பட்டயம் முடிய
எட்டடித் தாளக் கட்டொடு, பாட்டும்,
முட்டி மோதிப் பெரும் அட்ட காசத்தொடும்
முக்கிய நாயகன் கொலுவொடு தோன்றிக்

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

பாங்கியும் பட்டத் தரசியும் தோன்றி,
ஆங்கொரு சோலை அடைவதும், அரசர்,
மாங்கனிச் சுவையில் மயங்கி மல் லாந்து,
பாங்கியர் தயவால் பாவையைப் புணர்ந்தும்

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்

கூத்தாடி கள்நீர் குடிப்ப தற்காகக்
குடங்கள் அந்தக் கொட்டகைப் பின்னால்
பார்த்திடும் ரசிகரும் அதிலே அள்ளிப்
பருகத் தராதீர்@ குறை கிறை யில்லைக்...

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

பொழுதும் புலரப் போகுது பாhPர்!
புலர்ந்தால்... ஜிகினாப் பொட்டுகள் அந்தோ!
வெளுக்கப் போகுது சாயம்! கண்டால்...
விரையப் போகுது சனங்கள் வீடு!

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்

இருட்டு மடியும் முன்னே, கூத்தை
எப்படி யேனும் நடத்திப் போடுக!
மருட்டு வேஷம் குலைந்து போனால்!
மக்கள் கூட்டம் கலைந்து போகும்!

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

போக்கிரிப் பொன்னன் தருமனுக் கென்றும்
பொண்டுகச் சின்னான் அருச்சுனன் என்றும்
மோக்கான் முருகன் திரௌபதி யென்றும்
முழுவதும் காரிய பாகங்கள் விளங்கும்!

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

விடிந்தால்... வேஷம் கலைந்தால் - உங்கள்
வெட்டிய ஒட்டிய வேலைகள் மழுங்கும்!
படிந்த பகலில், பக்கத் துற்றுப்
பார்த்தால்...... நுங்கள் கலைமனம் நோகும்!

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்
குதித்துச் சதங்கைத் திமித்துத் தா! தெய்
குலுங்கக் குலுங்கக் குலுங்கச் சிலம்பிக்
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

மல்லிகை ஆகஸ்ட் 1966கண்டிக்குப் புகை வண்டி

புக்புக் - புக்புக் - புகைவண்டி -
புறப்பட ஆயத்த மாம் கண்டி@
புக்புக் - புக்புக் - புகைவண்டி -
புறப்பட்டு விட்டது பார் முண்டி!

~கண்டியை அறியாக் கல்லாத மனிதன்
பன்றி!| என்றனர் மிகப் பயின்றவர் அதனால்
அன்றுதொட் டொருபேர் ஆசையுந் தியதால்
ஆண்டவன் ஆருளால் வாய்ந்ததிப் பயணம் -

புக்புக் - புக்புக் - புகைவண்டி -
புறப்பட்டு விட்டது பார் கண்டி!

அனுபவ நிரையென அமைவுறு மரமேல்
அருளொடு அறிவிணை என இரு தடமேல்
மனிதனின் உயரிய கனவுகள் தொடராய்
மழைபுயல் இருள்குளிர் இவைகளை மதியா -

புக்புக் - புக்புக் - புகைவண்டி -
புறப்பட்டு விட்டது பார் கண்டி!

பாசங்கள் எனும்வண்டி நிலையங்கள் வரவர,
பருவத்தின் விருப்பங்கள் எனும்பசி மிகமிக,
ஆசையின் சுமையொடும் அதிற்பலர் இறங்கிட
அனுபவித் தலுத்தோர் ஆங்கேறி அமர்ந்திட -

புக்புக் - புக்புக் - புகைவண்டி -
புறப்பட்டு விட்டது பார் கண்டி @

பட்டணம் விரைகிற முதல்வகுப் பினிலுள
படுக்கைகள் வெறுமையாய்க் கிடப்பதென்? குறைந்த
கட்டண வகுப்பினில் கனசனம்! காசுள்ள
கனவான் கண்டியின் குளிரைஅண் டாரோ!

புக்புக் - புக்புக் - புகைவண்டி -
போவது பார் மலை மேல் முண்டி!
புக்புக் - புக்புக் - புகைவண்டி -
பொழுதும் புலர்கையில் நாம்கண்டி.

- தினகரன் 25.3.67


வெறி

~சந்திரக் கிரகம் மீதும்
சயக்கொடி நாட்டி வென்றீர்!
சந்தோஷம்@ நமது வாழ்த்து!
சோதாPர் வருக!| என்றோர்
சந்தம் எம் காதில் மோத,
சந்திர னிடத்தே நம்மை
முந்தியார் வந்தார்? நண்பன்
முகத்தினை உற்றுப் பார்த்தேன்

வந்தானங் கொருவன்@ உண்மை
வானவன் இவனே போலும்!
சந்திரன் ஒளியைப் பெற்ற
சங்கதி அறிந்தோம்! என்ன
சுந்தரன்! தொழுதோம்@ அன்னான்
சுடர் மணிக் கரங்கள் கூப்பி
வந்தனை புரிந்தான்@ வாழ்த்தி
வரவேற்றான் வசனம் பேசி

~ப10மியில் இறைவன் வைத்த
புதுமைகள் முழுதும் ஆய்ந்து.
சாமியாய்ப் போனார் போக,
சரித்திரம் சமைக்க வென்று
காமியம் எதுவும் இன்றிக்
கலைமதி மீது வந்தீர்@
நாமினிப் பணிந்தோம் இந்த
நாடுங்கள் அடிமை! கொள்வீர்!,

~ப10மியின் ரகசியங்கள்
புரிந்திருப் பீர்கள்| என்றான்.
ஆமிதில் ஐயமென்ன
அப்பனே! என்றோம் நாங்கள்
நாமிப் போ தரண் மனைக்கு
நடவாது போவோம் என்றோர்
ப10 விமா னத்தில் ஏற்றிப்
புறப்பட்டான் போனோம் உள்ளே!
மாணிக்கக் குவியல், வைரம்,
மரகதம், பவளம், முத்து.
ஆணிப் பொன் அடுக்கே எங்கும்
அளவில்லாத் திரவி யங்கள்!
~காணிக்கை யாக அந்தக்
கந்தர்வர் கொண்டு வந்தெம்
ராணிக்குப் படைத்த தெல்லாம்
நண்பர்காள், காண்மின்| என்றான்.

~அந்தரம் முழுதும் ஆளும்
அரசியைக் காண்கின் றீர்கள்@
சந்திரன் அவள்வாழ் கோட்டை
சகத்திருந் திங்கு வந்து,
முந்தியார் இறங்கு வாரோ,
முறைப்படி அவரை இந்தச்
சுந்தரி மணப்பாள்@ நாடு
சொத்தெலாம் அவர்க்கே!| என்றான்.

கண்கள்பொய் யாமோ? கண்ட
காட்சிதான் பொய்யோ? தெய்வப்
பெண்ணிந்த வாறு வந்து
பிறப்பதும் உண்டோ? எங்கள்
மண்ணிலும் வாழ்கின்றாரே.....
மங்கையர்......? பார்த்த கண்கள்
புண்களே! புண்கள்! இன்றே
புண்ணியக் கண்கள் பெற்றோம்.

ஆசையோ டவளைப் பார்த்தோம்@
அதரத்தில் அமுதம் ஊற,
வேசி போல் பார்த்துக் கண்ணை
வெட்டினாள்@ வெறித்து வீழ்ந்து
நேசித்தோம்@ காதல் நெஞ்சை
நிமிண்டிட, நண்பன் என்னை
ரோசத் தோ டுற்றுப் பார்த்தான்@
ரௌத்திரம் பொங்க நின்றான்!
ஆர் என்றன் ஆசை அத்தான்?
அன்பரே என்னை வந்து
சேருங்கள் என்றாள், அந்தச்
சிறை, காமச் சிரிப்பினாலே!
~வார்முலை அணங்கே@ உன்றன்
மணவாளன் நானே!| என்று
ஓர் அடி எடுத்து வைத்தேன்,
ஒரு வெடி! அம்மா...... செத்தேன்!

கையில்துப் பாக்கி யோடென்
காசினி நண்பன் நின்றான்!
ஐயையோ..... பாவீ! என்றேன்,
அவனோ அவ் வழகி யோடு
கைகோத்துப், பாடி, ஆடி,
காதலை அனுப வித்தான்!
செய்வதென் இனிமேல்.....? செத்தேன்
சிவனே! என்றழுது சோர்ந்தேன்!

கோட்டைக்குள் கொண்டு சென்ற
குமரன் என் அருகில் வந்தான்@
~வேட்டையே! முதுகில் பாவம்
வெடி வாங்கிக் கொண்டீர்! முன்பே
கேட்டேனே...... இறைவன் மண்ணில்
கிடத்திய யாவும் கண்டு
நாட்டினோம் வெற்றி யந்த
நானிலம் மீதில்!| என்றீர்!

~நம்பினேன்@ நீயோ, உன்றன்
நண்பனை நம்பி வந்து,
வம்பிலே மடிந்தாய் பாவம்!
வகை மோசம் புரிந்தான்@ ஆத்ம
பிம்பத்தைப் படம் பிடிக்கும்
பிறிதொரு ~கமரா| தன்னை
அம்புவி விஞ்ஞானத்தால்
அடையவும் இல்லைப் போலும்!


ஆத்மாவைப் படம் பிடிக்கும்
அற்புதக் ~கமரா| கொண்டுன்
ஆத்மார்த்த நண்பன், உண்மை
ஆத்மாவை அறிந்து, பின்னர்
யாத்திரை தொடங்கி, வந்தெம்
யவ்வன ராணி யோடும்
கூத்தாடி இருக்கலாம்@ சைக்!
கொன்றானே கூட வந்து!

~ப10மியில் இறைவன் வைத்த
புதையல்கள் முழுதும் கண்டீர்!
நாமென்ன செய்யலாம், உம்
நண்பனை அறிந்தீர் இல்லை!
சாமியா காமல் வாழும்
சரித்திரம் எழுத வந்தீர்!|
~ஆம்!| என்றேன்@ விழித்தேன்@ மீண்டும்
அகிலத்தில் கிடந்தேன் பாவி!

தினகரன் வாரமஞ்சரி 6.7.67அழுகின்ற வசந்தம்

சித்திரைக்குச் சித்திரையுன் சிரித்த முகம் பார்த்து
செம்மாந்தோம்@ செருக்குற்றோம்@ செழுங்கவிதை கோத்து
உத்தமியுன் பொன்னடிக்கே வைத்து மகிழ்வுற்றோம்
உள்ளமுரு கும் பொழுதில் உன்னடியில் வீழ்ந்து,
கத்தியதும், கதைத்ததுவும், களித்தனவும் யாவும்
காவியமே! என்றதனைக் கற்றவர் பின் சொன்னார்!
நித்தமும் நின் தவத்தினிலே நிலைத்திருந்தோம் பெண்ணே!
நீ கலைந்த ஓவியமாய் நின்றழுதல் என்னே?


ப10த் தலர்ந்து வண்டுகளைக் காத்த, மக ரந்தப்
பொடி கழுவிப் போம்படியாய் ப10வில் விழி சிந்தும்!
பார்த்திதனைச் சகிக்காது பறந்தனவோ குயிலும்?
பாடுகின்ற பிறஉயிரும் பாட்டடங்கித் துயிலும்?
போர்த்தது, பொய்போல இருள்@ வான்முழுதும் காலன்!
போக்கிரியின் ஆட்டமதில் போனதுவோ மானம்?
வார்த்த மழை விழியோடும் வந்து நின்றாய் பழியாய்!
வசந்தமகளே, உனக்கு வாய்ந்ததுயர் மொழிவாய்!

தாசி முலை மீதுமய லாகி, ஒரு காமி,
தாய்முலையை வேசிகளின் வாசல் மனைஏறி
ஏசி நகை யாட, அது கூசி அழுவார் போல்
என்னதுயர் எய்தியடி ஏங்கி யழுவாய் நீ?
வாசமலர் வாடி விழ, வண்டுகளொன் றாகி,
வாழ்வியலை ஓர் மரண காவியமே பாடும்!
ஆசைகளின் ஓசை, எதிர் ஓசை, ஒலி வேகம்!
ஆமடிஉன் பேரழகோர் சோகம்! ஒரே சோகம்!

சத்தியம்வாழ் கோயில்களின், சன்மார்க்க நீதிச்
சாறுண்டார்@ தம்மீது சாமி வரப் பெற்றார்,
பித்தர்வசம் பட்டுழன்றுன் பேரழகின் பெண்மை
பேய்க்கிட்ட பெரும்படையல் ஆனதுதான் உண்மை!
கத்தி கிறிஸ் வாள்துவக்குக் கைக்குண்டு தீயால்
காதலித்தும் மகிழ்ந்தாரோ...... கண்ணியத்தின் நேயார்?
சித்திரைக்குச் சித்திரையுன் சிரித்த முகம் கண்டோர்
சீக்கிரமே நீ சிரிக்க வேண்டிக்கொள் கின்றோம்!

- ஈழநாடு 29.6.67ஏக்கம்

என்னை நிலை நாட்டுதற்கே ஏக்கமடி இப்புவியில்,
தம்மை நிலை நாட்டிவிட்ட தக்கவர்கள் தம்மிடையே

என்னைநிலை நாட்டுதற்கே ஏக்கமடி எப்பொழுதும்!

பொய்யாலும் செய்தெடுத்துப் போலிஎனும் பொன்தடவி
கை முதலைப் போட்டு, புகழ் காணவிழை வாரைவிட்டு
வையகத்தின் மூலையெங்கும் வெய்யவனை போல்விளங்கி
மெய்யாகி நிலைத்துவிட்ட மேதைகளின் மத்தியிலே

என்னைநிலை நாட்டுதற்கே ஏக்கமடி எப்பொழுதும்!

தின்றுதின்றிங் குடல் வளர்த்துத் தீக்கடைந்து, தலைநிமிர்ந்து
நின்றிருக்கும், நிதிபதிகள், நிலைமையிலே - பெரியவர்கள்
குன்றனையார்! எனினுமவர் குன்றிமணிக் கோட்டையுளும்
என்றனையோர் அகல்விளக்காய் ஏற்றிவைத்துப் போற்றுவணம்

என்னைநிலை நாட்டுதற்கே ஏக்கமடி எப்பொழுதும்!

கலகத்தின் சந்தடியால் காலத்தை வென்று விட
~பலகற்றோம்| எனமுழங்கும் பறையொலிகள் அலுத்தபின்னர்
உலகத்து மலர்கின்ற ஒப்பற்ற மலர்களிலென்
பழுதற்ற மனத்தழகைப் பார்த்துருகிப் பாடுவண்ணம்

என்னைநிலை நாட்டுதற்கே ஏக்கமடி எப்பொழுதும்!

உண்மையெனும் என்னரசி, உன்காதற் சன்னிதியின்
வெண்கொற்றக் குடைநீழல் வீற்றிருந்து... நோற்றிருந்து.
என்னை நிலை நாட்டலெல்லாம் - உன்னை நிலை நாட்டுதற்கே
உன்னை நிலை நாட்டிவிட்டால் - உலகத்தின் உச்சிமிசை.....

என்னைநிலை நாட்டிடலாம் என்றொருபேர் ஏக்கமடி!

- தினகரன் 12.10.67


புதிர்

சிந்தித்தால்..., ஏதோ
சிலவே விளங்கி, அதே
சந்தேக மாகி, ஒரு
சந்தேகமாய் வளர்ந்து
வந்து நிற்கும்!
ஈது வழமை.
அதைத் தொடர்ந்துஞ்
சிந்தித்தால்
மீண்டும் சிலவே விளங்கி,
மறுசந் தேக மாகிச்
சறுக்கல் விளையாடும்!
இந்த விதமே
இது தொடர்ந்து கொண்டிருந்தால்
எந்த வழி என்றீர் இனி?- சுடர் பலாலி ஆ.ப.கலாசாலை -1966
ஒத்திகை

மென் மலர் மீது மிதந்தலை தென்றல் என்
மேதைக் கலைஞானி,
மண்ணிடைபாயும் வெண்ணில வாறு
மருதின் குளிர் நீழல்,
அன்னை இதயம், இன்னிசை மழலை,
அன்பர் சகவாசம்,
என்னும் இவைபோல் இனியன யாவும்
எனது குருநாதர்!

நின்னொடும் எவ்வணம் மென்மையதாய் உற
வாடுதல் வேண்டுமெனும்
உண்மையை, யிந்த உலகத்திடையான்
ஒத்திகை பார்க்கின்றேன்!
இன்னும் சிலநாள் உள@ அக் கலையை
இனிதே பயில் வேனேல்,
உன்னை யடையுந் திருநாள் வரும்@ உன்
ஊரை அடைவேனே!

- சிந்தாமணி 19.12.66முத்தக் காச்சு

கொத்துக் கொத்தாய் முளைக்கிறதே...
கோதாரிப்புல்! கொத்து கொத்து!
முத்தக் காச்சு முடியவில்லை
மூதேவியை முயன்று கொத்து!

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரியைக் கொத்து கொத்து!

ஆழமாக ஓங்கிக் கொத்து
அடிமுடிகள் அகலக் கொத்து
வாலா மண் வெட்டி கொண்டு
வடிவாக வழித்துக் கொத்து!

கொத்தக் கொத்த முளைக்கிறதே.......,
கோதாரிப்புல் குடைந்து கொத்து!

கிழங்கை விட்டுச் செருக்கி விட்டால்,
கிடந்து, மழை விழுந்தவுடன்
இளங் குமரி தனத்தை யொத்து
எழும் மூன்றாம் பிறையை விற்று!

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப்புல் தொலையக் கொத்து!

நாலு பக்கமும் சூழல் இப்புல்@
நடுவில் வந்து நிலைத்த துன்னில்!
காலை எட்டி வைக்கும் இப்பால்
காற்றும் விதை து}வும் அப்பா.....!

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப்புல் கொலைசெய் கொத்து!

சூழல் நாலு வளவும் கொத்தி
சுத்தமாக்கி, வேலி கட்டும்
காலம் வரும் மட்டும் இந்தக்
கவலை களுக் கொழிவும் இல்லை.


கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப்புல்! கொத்து கொத்து!

ஒழுங்காகத்தான் கொத்தி வைத்தும்
ஒன்றி ரண்டு ஒளிந்து கொண்டு
களங்க மாக முளைக்குது மண்,
கண்ணாடி போல் துலங்கக் கொத்து!

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப் புல்! கொத்து கொத்து!

தெங்கு மரம் உயர்ந்தெழட்டும்
தியாக மெனும் நிழல் விழட்டும்
கொங்கைகளாய்க் குலை தரட்டும்
குறையு மிந்தக் கோரை கொத்து!

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப் புல்! கொத்து கொத்து!

அறிவெனும் மண்வெட்டி கொண்டு,
அடி மனத்தை அகழ்ந்து கொத்து!
அரித்த ரித்துக் கிழங்க கற்று!
ஆசையெனும் கிழங்க கற்று

கொத்தக் கொத்த முளைக்கிறதே........
கோதாரிப்புல் கொத்து கொத்து!
முத்தக் காச்சு முடியவில்லை
மூதேவியை முயன்று கொத்து

(கீழ்க் குறிப்பு முத்தக்காச்சு - முற்றக்காச்சி - ஒருவகைக் கோரைப்புல்).

வீரகேசரி 9.12.67
புற்று

அரசாங்கம், பகிரங்க பாதையொன்றை
அமைப்பதற்காய், அந்த நாளில்,
ஒருமுறைதான் எம்மூரை ஊடறுத்த
துண்டதன் பின் மறந்தே போகும்!
பெரியநீ லா வணையைத் தெரியீரோ
பெரியவரே? பேச்சி யம்மன்,
உறைகின்ற பெரும்பதியென் றுலகெல்லாம்
பேர்போன ஊரே எம்மூர்!

அம்மையவள் ஆலயத்திற் கருகினிலே -
பகிரங்க பாதையோரம் -
செம்மண்ணால்..... மஞ்சவண்ணா மரத்தோடு
சேர்ந்தெழுந்த செல்லின் கோட்டை!
அம்மம்மா... அதன் பழமை பலநு}று
ஆண்டாகும் தொல்லாய்வாளர்,
தம்முடைய ஆராய்ச்சி தனைநடத்தத்
தகுந்தவிடம்! தயங்கி விட்டார்?

~ஆருக்கும் கவலையிலா திருந்திடலாம்
அதுபற்றி! ஆனால்..... எங்கள்,
ஊருக்குள் வாழ்பவரும் உணர்வின்றி
இருப்பதுவோ? ஒன்று கூடி
வாருங்கள் புற்றுடைப்போம்! வழிப்போக்கர்
பயந்தொலைப்போம்!| என்றார், இவ்வ10ர்
ஆறுமுகம் ஆசிரியர்@ அலவாங்கு
பிக்காசும் அவரே தந்தார்!

~புற்றுக்குள் பொல்லாத ப10ச்சிபுழு
மிருகங்கள் புழங்கும் தம்பீ!|
பற்றைகளும் போர்பொந்தும், பார்ப்பதற்கே
பயங்கரமாய்ப் படர்ந்த காட்டைச்
சுற்றிவந்து புத்திசொலும் சோம்பேறிப்
ப10சாரி சொல் கேட்காது,
பற்றையினை வெட்டுகிறார் ஆறுமுகம்
ஆசிரியர்@ பயமில்லாது!
பள்ளியிலே படிக்கின்ற பிள்ளைகளும்
வந்ததனைப் பார்த்தார்@ பாம்பைக்
கொல்லுகிறோம் என்றார்கள்@ மண்வெட்டி
கோடரியும் கொண்டே வந்தார்!
கல்லுகிறார்@ அதைக்கண்ட கல்வீட்டுக்
கந்தையா, ~கடவுளே!..... ஏய் -
பிள்ளைகளே, அதற்குள்ளே...... பெரும்புடையன்!
பேய்வேலை செய்யேல்!| என்றார்.

கல்வியொளி கண்டறியாக் கசட்டுமனப்
பொந்துக்குள் கரந்து வாழும்
பொல்லாத உட்பகைவர் உருவம் போல்
புடையன்கள் புற்றின் ஆழத்
துள்ளிருந்து புறப்படலும் ஆறுமுகம்
அலவாங்கைத் து}க்கி, ஓங்கிக்
கொல்லுகிறார் ஒருபாம்பை! பிள்ளைகளும்
மீதியினைக் கொலையே செய்வார்!

புற்றுடைத்துப் பற்றையினைப் போக்கியதால்
போயினவே தேளும் பாம்பும்!
சுற்றியுள்ள காரைமுள்ளும் சூரைமுள்ளும்
சுருண்டனவே சுடராம் தீயில்!
கற்களையோர் புறமகற்றி, அதைச்சூழ்ந்த
கள்ளிமுள்ளாம் கசடு போக்க,
கற்றவர்தம் இதயம்போல் காட்சிதரும்
காணிநிலம் மிகவும் நேர்த்தி!
விழா!

ஊர்குலுங்க, ஒலிபெருக்கி ஓசையெங்கே இருந்து!
உடையாரின் பக்கத்து வீட்டினிலே ஒருத்தி
பேர் வள்ளி பிள்ளை யென்பார்@ வயதுமுப்ப திருக்கும்@
பெரிய கந்தோர் ஒன்றினிலே சேவகராய்ப் பணி செய்
ஆறுமுகம் என்பானை மணம் புரிந்தாள்@ சில நாள்
ஆகவில்லை@ மாப்பிள்ளை ஆள்பெரிய பலவான்!
வேறெவரும் துணியாத வேலையிலே முனைந்தான்
வெற்றி பெற்றான்! அதற்காக விழாவெடுத்து மகிழ்ந்தான்.

கற்தரையில் கிணறொன்று தோண்டுதற்கு விரும்பி
காசென்று பாராமல் கனதுயரப் பட்டும்
சற்றேனும் களையாமல் சாதனைகள் செய்தும்
சலக்கொட்டுத் திறக்கு முன்னே சா செத்துப் போனார்
கற்பகத்தின் கண்ணாளன்@ வள்ளியம்மை அப்பன்!
கண்மூடிப் போன பின்னர் கைம்பெண்ணாய் நின்று
பட்டகடன் தீர்ப்பதற்கே பாடுபடலானாள்
பருவத்தின் பக்குவத்தை வள்ளியிடம் காணாள்!

வயதிருபத் தெட்டாயும் வள்ளிக்கு வாழ்வின்
வழி திறக்க வில்லை யென்று வருந்துகின்றாள் அன்னை!
பயல்களோ, சினிமாவில் பார்க்கின்ற படியே
பகட்டான பெண்ணுடனே, பல்வேறு துறையில்
நயமுடைய நாரியரை நாடி அலை கையிலே
நம்வள்ளி யம்மைக்கு நாயகனார் வருவான்?
வயல்வளவு வாழமனை வசதி பல வாய்ந்தும்
வரனின்றி வள்ளியம்மை வாடியுடல் தேய்ந்தாள்!

ஆறுமுகம் கற்பகத்தை ஓர் நாள் சந் தித்தான்
அழகி வள்ளி யம்மையின் மேல் ஆராத காதல்
ஏறிய தாய் எடுத்துரைத்தான்@ ~குடித்தனமாய் வாழ
எனக்கவளை இல்லாளாய்க் கொடுத்தருள்க| என்றான்!
ஆறின பின் சில நாட்கள்@ அதற்குப் பின் ஓர் நாள்
அவசரமாய்க் கச்சேரி அடைந்திருவர் சத்யம்
கூறியபின் மணந்தார்கள்! குடும்பத்தை உள்ளுர்க்
கோயிலுக்கும் சுற்றத்தார் கூட்டிப்போய் வந்தார்.


கற்பகம்கண் ணீர் துடைத்தாள் கழறுகிறாள்@ ~தம்பீ
காண்பதற்கு வள்ளியம்மை அப்பனிங்கே இல்லை
அற்பரல்ல அவர்@ அயலில் தண்ணீர் அள் ளுதலை
அசிங்க மென எண்ணியன்றோ கிணறுகிண்டிப் பார்த்தார்
நற்பயனைக் காணுமுன்பே கயிலாயம் சேர்ந்தார்
நானென்ன செய்திடலாம்? நாலுமிருந் தாலும்......
கற்தரையில் சலக்கொட்டை கண்டு கிணறொன்று
கட்டுவதும் கடமை| என மருமகனைப் பார்த்தாள்!

ஆறுமுகம், மாமிக்குத் தேறுதல்கள் கூறி
ஆழமாய்ச் சிந்தனையில் அழுந்தியதில் ஊறி
ஆறேழு மாதங்கள் அரும்பாடு பட்டான்@
அறுதியிலே கல்வெடியால் சலக்கொட்டுக் கண்டான்!
ஊரெல்லாம் அதிசயமாய் உதைப் பேசி மகிழும்!
உண்மையிலே ஆறுமுகம் வீரன் தான்! அதனைப்
பேராகக் கொண்டாடி மகிழ்வதற்காய் ஒலியைப்
பெருக்குகிற கருவியினை உடன் கொண்டு வந்தான்!

கல்லுடைத்துத் தண்ணீரைக் கண்டதிலே கிணறும்
கட்டி முடித் தான்@ துலவும் நட்டு பற்றிக் கையை
நல்லவடி வாய்ப்புதைத்து நீர்மொண்டு குடித்தான்!
நல்லதென்று சொல்லாமல் நம்மூரார், ஏதோ
சொல்லுகிறார்! பழங்கிணறு சொந்தமுள்ள பெண்கள்
~சூய்க்| காட்டி அங்கதங்கள் பாடுகிறார்! ஏனோ?
வல்லவனாம் ஆறுமுகம் என்பவனை வாழ்த்த
வருவதிலே நாகரிகம் எதுவுமிலை என்பார்!

எழுத்தறியா மூடன் ~நான் எழுத்தாளன்| என்றே
எவனெவனோ எழுதியதை பத்திரிகைகளிலே
அழுத்தியதற் காக, விழா அமைத்திடலா மானால்.......
ஆறுமுகம் பெண்சாதி வள்ளியம்மை வீட்டில்
கொளுத்துகின்ற வெடி குரவை ஒலிபெருக்கி மேளம்
கொண்டாட்டம்..... ~நாகரிகம் இல்லை| யென லாமோ?
கழுத்தறுப்புச் செய்யவில்லை கற்றரையைத் தோண்டி
கண்டு திறந்தான் கிணற்றை! கொண்டாடின் என்ன?

வீரசேகரி - 28.3.68அமரன் ய10ரி ககாரின்

என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை...!
உண்மையிலே மாஸ்க்கோ ஒலிபரப்புத் தான் இதுவா....?
உன்னை மரணம் உறிஞ்சிக் குடித்தது வாம்
என்னாலே நம்ப முடியவில்லை! இல்லையில்லை.....!

நீரில் மீன் போல,விண்ணில் நீந்திவிளை யாடிய என்
ஆருயிர்த் தோழனே! ய10ரி க காரினே யோ!
ஓர்வான ஊர்தியில் போய் உன்னுயிரை மாய்த்தனையாம்!
ஊரும் உலகும் ஒருசேர நம்பிடினும்...
என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை.....!

அண்டம் அளந்தோம், அணுவைப் பிளந்து@ பின்னும்
கண்டோம், உலகம் கதிகலங்கும் கொல்படைகள்!
~அன்று போய் விண்ணை அகழ்ந்து துழாவியும்
கண்டிலேன் அந்தக் கடவுள் இருப்பிடத்தை|
என்ற உனைக் கொல்ல எமன்படைத்து விட்டதெவன்...?
என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை.....!

~விண்வெளியில் காணாத வித்தகனை அப்பா லோர்
வெண்ணிலவில் தேடி விரைந்த முதலவனும்
யானே| எனும்புகழும் நானாக வேண்டுமெனப்
போனாயோ.....? போம்பொழுதில் போர்மூண்டு மாண்டனையோ!
என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை.....!

மாற்றிப் பொருத்த மனித உடல்களுக்கு
வேற்றுறுப்புச் சந்தையிலே விற்பனைக்கு வந்திங்கே
நேற்றே தொடங்கி நிகழ, நீ இன்றைக்குக்
கூற்றுவனால் ஆவி குடிக்கப் படுதலெங்ஙன்?
என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை.....?
தன்னையே தேடித் தவித்துப் ~பறந்த வுன்னை,
அன்னையவள் அள்ளி அணைத்து, முலைய10ட்டி,
தன்னை எளிதாய்த் தரிசிக்கத் தந்தனளோ!
அன்னவளை அப்பாழில் பின்தொடர்ந்து சென்றனையோ.....!
என்னாலே நம்ப முடியவில்லை இக்கதையை.....!


இலங்கையில் நீ நட்ட, இளமரத்தின் செய்ய
இளந்தளிர்கள், தென்றலினை ஏக்கத்தில் கட்டி
குலுங்கி அழுவன@ உன், ~விண்வெளியின் வெற்றிச்
செழுங்கவிதை| புத்துலகின் தெய்வீக சித்திரங்காண்.....!
என்னருமைத் தோழா! ஓ.....! ய10ரி க காரினேயோ!
என்னாலே நம்ப முடியவில்லை உன்னிழப்பை.....!

- தினகரன் 4.4.1968


விளக்கு

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்@
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காடுகளின் ஊடே ஓர் காடாகிவீடும்
காட்சிதரும் மையிருட்டு! கள்வர்கள் - பேய் - பாம்பு!
ஓடோடித் திரும்புகிறேன்@ ஓர் துணையும் இல்லை!
உள்ளிருந்து பேசுவதும் யார்? உற்றுக்கேட்டேன்.....

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்@
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

காலமெனும் கருங்கிழவன் காத்திருந்தான்@ எண்ணெய்
கலங்களிலே ~~கலன்கலனாய் நிறைந்திருந்த துண்மை!
கோல எழில் விளக்குகளும் குறைவில்லை! குச்சி
குறையாத தீப்பெட்டி மூலையிலே து}ங்கும்!
மூளவில்லை - விளக்கெரிய முடியவில்லை! உள்ளே
மூதேவி அரசுசெய்ய முயல்கின்றாள்! வல்லே.....

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

எண்ணெய் விளக் காய்விடுமா? எண்ணெயைவிட் டெரிக்கும்
ஏனந்தான் விளக்காமோ? எரிகின்ற திரியா?
மின்னி இரைந் தே புகைந்து எரியுந்தீக் குச்சி
விளக்காமோ? விளக்கென்னில் மேற்குறித்த யாவும்
ஒன்றுகுறை யாமலுள்ளே உள்ளனவே! ஏனும்
உள்ளுக்குள் ஒளியில்லை! வழிதெரியவில்லை!

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்@
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

இருட்டில் மெய்ப் பையின்பை துழாவுகிறேன்@ சாவி
எடுத்தில்லின் தலைவாசல் கதவுதிறக் கின்றேன்!
திருட்டொன்றும் போகவில்லை! உள்ளறையும் திறந்து.
தீப்பெட்டி எடுத்ததனைக் கிழித்து விளக்கேற்றித்
தெருப்பக்கச் சன்னல்களைத் திறந்துவைத்தேன்! தனியே -
திருடர், பிற பயமின்றித் தெம்பொடிருக் கின்றேன்!

வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன்
வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!

தினகரன் 31.5.69


உச்சியை நோக்கி ஓடும் ஆறுகள்!

வெண்ணிலா காய்ந்திட வெதும்பிய பாறைகள்,
உண்ணெக் குருகின@ உயர்ந்தன ஆவியாய்!
வெண்முகில் வானெலாம் விரவின@ கறுத்தன!
மின்னின@ முழங்கின@ மிரட்டின@ உலகினை
கருவினில் மாரி கனியுமுன், ககனப்
பருவக் குமரி படிற்றொழுக் கத்தினை,
உருவி லாளன் உணர்ந்தனன், சினந்தான்!
கருவொடும் துரத்திக் கழுத்தினைத் திருகினான்!
வற்றியே கிடந்த, நம் வங்கக் கடலிடை
மற்போர் முடிவினில் மழைபொழிந்ததுவே!

வங்கக் கடலில் கங்கைய10ற் றெடுத்தது!
பொங்கிப் பாய்ந்தது ப10மியை நோக்கி@
கங்கைநீர் காசினிக் கசடுகள் கழுவியே,
தங்கமும் மணிகளும் தரளமுந் தந்தது!
இங்கிவை இனிமேல் எவர்க்கும் பொதுவெனச்
சங்குகள் முழக்கின@ சந்தோஷத்தால்,
கங்கையை நோக்கியிக் காசினி கேட்டது:
~கங்கையே கங்கையே எங்குசெல் கின்றனை|?

~~தோழர்காள், நுமது தொண்டர்யாம்@ வையகம்
வாழவும் - நுங்கள் வயிறலைப் பெரும்பசி
மாளவும் வேண்டி - மாமலை நோக்கி
நாளெலாம் முயல்வமோர் மாபெரும் பயணம்
அதோ ஒருநெடிய அம்புவிச் சிகரம்
மதமதத் துயர்ந்த அம் மலைச்சிக ரத்தை
எதுதடை வரினும் ஏறுவோம்! - ஏறி.....
பொதுமையைப் பேணிப் புதுவுல காள்கிற
அதிகாரத்தினை அடைகுவோம்@ நுமக்காய்!
அதுவரை தோழர்காள், அயரா துழைப்போம்!
புதுஉல கத்தையோர் புரட்சியில் படைக்கவே!||

~~மலைகளை குடைவீர்! மடுவினில் இடுவீர்!
தொலைமிக உளதே..... தோண்டுக@ மேடுகள்
இலையா கிடில்.....யாம் விரைவாய் ஓடலாம்!
களையேல்! மலைகள் பறிமின்! எறிமின்!
பள்ளமும் மேடும் பரவலாய் விட்டால்....
துள்ளியும் பாய்ந்து தொடுவோம் உச்சியை!
எல்லா உலகமும் எமதே!|| - பாடலை,
எல்லாத் தோழரும் இசைத்தனர்! - ஆறுகள்,
அச்சம் தரும் பேர் அகில உலக
உச்சியை நோக்கி ஓடவுந் தொடங்குமே!

- ஈழநாடு 18.9.69சிகரங்கள்

து}ரதிட்டிக் கண்ணாடி துணையின்றி
து}க்கிவைத் தணு தன்னை@ உதாரண
காரணங்களும் காரிய பாகமும்
காட்டி நல்ல கசாப்புக்காம் கத்தியால்
வீரமாகப் பிரசங்கம் செய்தபின்,
விந்தையாக - அணுவைப் பிளப்பவர்
பேரைக் கேட்டு விசாரித்த போதிலே
பெரிய ஆள்இவர்! ஈழத்து ஐன்ஸ்டினாம்!

~~பாடவன்று, நம் பாவினம்! சொற்சொலாய்ப்
பறைதற் காக!..... படிமம், குறியிடு
தேடலாம் எனில் நல்லது@ நாம்செயும்
திருகு தாளங்க ளேகவி தைப்பொருள்!
சாடலா மெனில் யாரையும்..... ஆ.....சபாஷ்!
சகல லட்சண மும்உள பாடலே!
சூடலாகும் அதை நம் ரசிகர்கள்@
சூக்குமம் இது தான்|கவிக் கென்பவர்......

ஆரென்றால்.....உயர் ஆங்கிலத் தாலிந்த
அவனியாவும் அறிந்து..... விதந்திடும்
சீர்மிகுந்திடு ஷேக்ஸ்பிய மாகவி
சிக்கினார் இச்சிறியன் என் கண்களில்!
பேறுதா னென்று ப10ரிப் படைகையில்!
பிழையென் றோர்குரல் கேட்டது! பின்னரும்,
ஆரென்றேன்...... இவர்...... ஈழத் தெலியெட்டாம்!
அவரும் நல்லவ ரேயென்று நான் சொன்னேன்!

கம்பெனும் படியான, ஓர் கம்பனை
கம்பு து}க்கி முகத்தில் அடிப்பவர்
எம் ஜீ யார் கொல்? ~ நம் ஈழத்தின் எம் ஜீ ஆர்|
எனத் திருத்திடுவா னென எண்ணினேன்
நம்பினால் நம்புவீர்கள்..... இந் நம்பியோ.....
~நமதிலங்கை நெப் போலியன் நான்| எனக்
கம்பைவீசி, குதிரையில் ஏறி, வாள்
கையில் ஏந்திக் கடுஞ்சமர் செய்கிறான்!
கட்டையான சுருட்டினை வாயிலே
கௌவிக் கொண்டு பிரசங்கம் செய்கையில்......
குட்டைக் கைவிரல் கொண்டு ~வீ| என்னுமோர்
குறியும் காட்டுகின்றார்! இவர் யார் கொலோ?
கிட்டப் போய் நும் பெயரென்னவோ? என்றேன்
கீச்சுக் கீச்சென வேநகை செய்தபின்......
திட்டமாக நம் ஈழத்துச் சேர்ச்சில் யான்!
தெரிந்து கொள்ளுக என்று முழங்குவார்!

அங்கொடைக் கொரு அன்பர் சுகத்தினை
அறிதற் காகவும் போயிருந்தேன்@ ஐய
அங்கு தானிச் சிகரங்கள் தோன்றியும்
ஆடல் பாடல் நிகழ்த்துதல் கண்டனன்!
எங்கு நோக் கிடி னும் சிக ரங்களே!
ஈழநாட்டின் உலக சிகரங்கள்!
தங்கள் தங்களின் தன்மய மாகியே
தருக்கி நின்றன@ தம்மை தடவியே!

வீரகேசரி 8.9.70


ப10க்கொய்ய வரவில்லை!

ப10க்கொய்யவரவில்லை@ அன்பன்
ப10பாலபிள்ளை யைத் தேடி
தீக்கொய்து, வெய்யிலில் வேர்த்து
தீய்ந்து நான் உன்வீடு சேர்ந்தேன்
பாக்கள் போல் அழகான ப10க்கள்!
பார்க்கையில் நேர்த்தியே! றோஜா
சோக்கென்ன! கண்மூடி நின்று ......
சொக்கினேன்...... தெய்வமே! ப10க்கள்...!

ஆசையா...? கொய்திடுக! என்றாய்
அல்ல... அவை வாழ்கிறவை! என்றேன்.
~வாசனை போய் நாளையிவை வாடும்
வாழ்வதனை உங்களொடும் வாழ,
ஆசையெனில் கொய்தெடுங்கள்!, என்றாய்,
~அல்ல... அவைதாம் சாதல் மேன்மை!
ஆசையிலை! ஆசையிலை!, என்றேன்
ஆனால் மேல் வார்த்தையிலை... நின்றேன்!

பேசாது போனதொரு போது
பெண்ணே, நீ... பின்திரும்பி நின்று,
~றோசாவின் வாசனையைத் துய்க்க
ஆசையற்ற மூடனிவன்|... என்று
பேசாமல் உன்மனதுள் பேசும்!
பின்...ன தையே நானுணர்ந்து கூசி...
ஆசையென்றேன்@ கொய்தெடுங்கள்! என்றாய்
ஆண்மையினை வீழ்த்தியெனை... வென்றாய்!

அன்பொடும் நான்கொய்த மலர்... வாடல்
ஆகிவெகு காலமடி! ஆயின்
என்னொடு நீ கொண்ட அபி மானம்
என்றேனும் வாடா! தேன் ஊறும்!
உன்திருப்தி எண்ணி... மனம் நோகா
தோர் மலரை கொய்தது மெய்யேனும்
உன்னடிக்கே மீண்டுமதை வைத்தேன்!
ஊறி வடியுந் தேனைத் துய்த்தேன்!

வீரகேசரி - 18.7.1970தாடிக்குள் மூடி தனியாய் ஒதுங்கிவிட்டேன்!

கூடிய கூட்டமொன்றும் குற்றமில்லை:
நான்தான் ஓர் மோடி! - அதனால்
முடியவில்லை வந்து விட்டேன்!
நாடியிலே, நம்பிரிய
நண்பர் விட்ட குத்துகளைத்
தாடிக்குள் மூடித்தனியாய் ஒதுங்கி விட்டேன்!

நீதி யுடையரே நீங்கள்!
அது காரணமாய்ச்
சாதி, மதம் குலத்தைச் சாராமல் -
சத்தியத்தைச் சார்ந்தீர்!
வெறுஞ் சண்டை, சச்சரவைப், பாவத்தைப்
பேர்த்தெறிய வென்றே
பெருஞ் சபதம் ப10ண்டவர்கள்!
ஐய, அடியனையும்
அப்படியே எண்ணுவதோ!...

பொய்யா உலகின்
புகழ்ப10ண்ட மூத்தமகன்
மானிடன்! ~ பொய்க்கூடு|
~மாயம்|என்று பேசிடினும்...
ஆன பெருமை அதிகம் உடையவனே!
ஆவல் வழிந்து அவிந்த கடுங்காமம்
பாவமென்று பேர்மாறிப்
பாரில் அவதரித்தோன்!
பாவி நான்! நீரோ
பரலோக ராஜ்ஜியத்தில்
போவதற்கு மெத்தப்
பொருத்த முடையவர்கள்!

உம்பால் அமரஇடம் ஒன்றுமிலை! என்றாலும்
அம்ம, பஞ்ச பாதகங்கள்
அத்தனையும் முக்குளித்து
இன்னும் எதுமிருந்தால்... எங்கே எனத்தேடும்
என்னருமை நண்பர் இடையில்
எனக் கொரிடம்
போட்டுக் கொடுத்தால்...
பொறுத்தருள வேண்டுமெனக்
கேட்டுக்கொள்கின்றேன் கிடந்து!

கூடிய! கூட்டமொன்றும் குற்றமில்லை - நான் தான் ஓர்
மோடி! அதனால்... முடியவில்லை வந்து விட்டேன்
நாடியிலே நம்பிரிய நண்பர்விட்ட குத்துகளைத்
தாடிக்குள் மூடித் தனியாய் ஒதுங்கி விட்டேன்!

வீரகேசரி - 8.8.1971


புதிய மயில்

~ஆய்மயில்| என்றே வாய்விட் டெங்கள்
வள்ளுவன் பாடல் சொல்லிய மயிலே
பேகன் எனவோர் சாகா மனிதன் நின்
தோகை மழையில் தோய்தல் ஆற்றனாய்
வழங்கிய போர்வையிவ் வையகம் பெறுமே!
அழகின் காதலன் அவன்! ஒரு கவியலன்!
கம்பனைக் காளி தாசனை மயக்கிய
அம்சிறை புனைந்த அழகிய மயிலே
பழையவுன் அழகிலே புதியதோர் கவிஞன்
பழைமையைச் சாடிய பகுத்தறி வாளன்
பாரதி தாசனும் பைத்திய மாயினான்!
ஆரவன் அழகின் ஆர்வம் தடுப்பவர்!

முருகனை வள்ளி தெய் வானையைச் சுமக்கும்
பேறு பெற்ற பேரெழில் மயிலே,
வாழ்வினை நுகராதவராய் வதைந்து
வாழ்வெலாம் மூட்டை சுமந்திடும் எம்போல்
நீயும்... சுமக்கும் ஒருதொழி லாளியே!
என்பதும் நானுனை விரும்ப ஓர் காரணம்!

உலகெலாம் படைத்த ஒரு முதல் - சிவனார்
தலைமிசை..., தலைவனுக் கில்லாச் செருக்கொடும்
படத்தினை விரித்த படியே... சினத்துடன்
உடம்பெலாம் நெளியு மோர் நாகப் பாம்பு!
படைத்தவன் தனையே சுமக்கிறாய் நீ@ அப்
படைத்தவனோ ஓர் பாம்பினைச்சுமக்கிறான்!
படைத்தனம் உலகினைப் பாட்டாளிகள் நாம்!
படைத்தவர் மீதிலோ..., பணப்படம் பாம்புகள்
விரித்தன! கொடிய விஷப்பல் பாய்ச்சியும்
உறிஞ்சின உயிரை! ஓ இள மயிலே!
சிவன் முடி சேர்ந்த செருக்கினைக் கொத்திச்
சவமாய் ஆக்கிச் சரித்தனை! வாழிய!

அப்பொழு துனது அழகினில் மிளிர்ந்த
சத்திய வேட்கையோ தனியழகன்றோ!
இளமைகள் முதுமையை எய்தலாம்...என்பதால்
அழகுகள் பழையவை ஆவ தும் உண்டுகொல்?
அழகிய மயிலே, என்றும் உனது
அழகு புதியது@ ஆடலும் புதியது!
உலகுக் கதனால் உதவும்,
பொருளும் புதியது! புரட்சியும் புதிதே!
தினகரன் 10.3.74பள்ளங்கள்

பள்ளங்கள்,
பார்க்கப் பயங்கரமாய்ப்...
பள்ளங்கள்!

வெள்ளம் சுழித்து...
விரையும் வற்றாத நதி
கல்லில் விழுந்து
கவிதை நுரை பொங்கியெழும்
துள்ளலை...
மீண்டும் -
துரிதப் படுத்துகின்ற
பள்ளங்கள்...
பார்க்கப் பயங்கரமாய்ப்...
பள்ளங்கள்!

வீரகேசரி திகதி தெரியவில்லை.
கவிதை

சனத்துள், மனித
குலத்துள் சமைந்து பொதுவாகித்
தனித்துப் புவியில்
நிலைக்கத் தகுந்த பொருளாகி
மனத்தின் அகண்ட
வலைக்குள் புகுந்து சிறையாகும்
நினைப்பில் குதிர்ந்த
தொகுப்பின் விளக்கம் கவியாகும்.

கணக்கில் குறித்த
இடத்தில் இலக்கம் பிசகாமல்
இணக்கப் படுத்தல்.
அதைப்போல் இசைத்துத் தெளிவாக
மினுக்கி மினுக்கி
விதிர்த்து மதர்த்த அழகோடு
உணர்ச்சிப் பெருக்கில்
நனைத்துப் பிழிந்த கவியாகும்.

பழைமை கிடந்த
மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து
புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து
அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில்
கனவைத் தொடுத்தல் கவியாகும்.

தினகரன் 16.6.63


பொங்கல்: உவர்ப்பு

உண்மையின் புன்முறுவல் போலக் கிழக்கெல்லாம்
வெண்ணெய் பரந்துவெளுப்பாகி, மெல்லமெல்லக்
கங்குல் நடுங்கிக் கடைகட்ட, ஆழியிடைச்
சிங்கம் பிடரிசிலிர்த்தாற் போற் செங்கதிரோன்
தோன்றுதற்கு முன்பே துணைவி துயிலெழுந்து
தேன் தமிழைக் காதில் தெளித்தாள்@
குளித்தேன் போய்.
பொங்கலுக்கு தேங்காய் உடைத்து. புதுப்ப10நார்ச்
சங்கிலியும் போட்ட புதுப்பானைக் குள், நிலவை
சாறு பிழிந்த சலவைப்பால் ஊற்றி, அதில்
நீறும் புனைந்தாள்@ நெருப்புச் சிறிதிருந்த
புத்தம் புது அடுப்பில் புத்தமுதம் ஏற்றுமிவள்
கைத்தலங்கள் கண்டு, கனன்று சினங்கொண்டு
செத்துக் கிடந்த சிறுநெருப்புச் சீறி, அழற்
கொத்தாய் எரியும் கொழுந்தின் பொறாமையினை
எள்ளி நகைத்தாள் இவள்@ அதனைக் கண்டு, வெகு
பள்ளத்தில் நின்ற பசும்பால் வெகுண்டெழுந்து
துள்ளிற்று, பொந்தினிலே து}ண்டிவிட்ட நாகம்போல்!
கொல்ல வரும்புலியைக் கூட, வசப்படுத்தும்
தாய்மையின் செங்கோல் அகப்பை தடவியபின்
வாய்மை மனவயலில் வந்த அரிசிகொட்டி
இஞ்சி கரும்பு இளநீர் பழப்பாகு
மஞ்சளும் சர்க்கரையும் மாதுளையின் தேறலொடு
கொட்டி, வயிறு குளிரத் துலாவுகிறாள்.
~~கெட்டோம்! தாய் அன்புக்குக்கேடு நினைத்தவர் நாம்
முட்டாள்!|| என, தன் முகம் பொங்கி மூச்சுவிட்டு
கொட்டி முழக்கியழும் பாற்குழம்பின்...
கண்ணீரில்,
பொங்கல் புளுங்கிப் பொதும்பி அவிந்ததுவோ?
செங்கை அமுதங் கடைதல் பொறுக்காத
கங்குல் அசுரனது கண்ணீர் ஒழுகிற்றோ?
எங்கும் இனிக்கின்ற பொங்கல், எமக்கு மட்டும்
உப்பாக மாறி உவர்ப்பானேன்? உன்வாயால்
செப்படியே! என்னச், சிணுங்குமிவள் கன்னங்கள்
உப்பும் படியாய் உறிஞ்சினேன்@ ஓரக்கண்
செப்படி வித்தைகளும் செய்தபின்பே...
செப்பலுற்றாள்@
நீசரின் பாவ நெருப்பேந்தி நீறான
யேசுவும், ஆட்டுக் கிரங்கியழும் புத்தனும்,
பேசரிய வெற்றிப் பெருமானார் நாயகமும்,
மாசற்ற காந்தி, மகான்கள் அவதரித்த
புண்ணியஞ்சேர் ஆசியாப் பூமியிலே..
வந்தவர் நாம்@
பென்னம் பெரிய உலகின், பெரு மனிதன்
~கென்னடி|க்கு நேர்ந்துவிட்ட கேட்டில் உலகமெலாம்
கண்ணீர் நதிகள் கதறியதைக் கண்டேனும்
எண்ணிச் சிறிதே இரங்கி, ஒரு சொட்டுக்
கண்ணீர், அனுதாபம் காட்டாத ~கார்ட்டூனிஸ்ற்|
புண்ணிய வான்கள் தமையெண்ணி, நம்பொங்கல்
கண்ணீர் சொரிந்ததொரு காரணத்தால்,
பொங்கல்
உப்பாயிற் றென்றாள், உது சரியே.
ஆனாலும்,
ஓர் நாள் உழவர் உவகைத் திருநாளில்
ஆரார் சிறுமைக்காய் ஆர்நாம் அழுதற்கு?
சீர்கண்டு பொங்கும் செழும்பாலே!
நீ அழுது,
ஊரெல்லாம் பொங்கல் உவர்ப்பு.


இரகசியம்

இன்றோர் கவிதை
எழுதல் கூடும்@ ஏனென்றால்
இன்றென் மேசை
எழுதுந் தாள்,மை இவையெல்லாம்
நன்று படுத்தி
வைத்தது ஒன்றும் நானல்லன்!
என்றால் தெரியும்
இலையா? இவள்பின் ஏனிங்கே?

~சம்பவ விந்து|
தேடி நடந்து சருகாகி
வெம்பிய கால்கள்
தங்கிய நீரின் கனியாக!
தம்படி கூடப்
பைகளில் இல்லை@ தனியேதான்@
நம்பி நடந்தால்...
நண்பர்கள் ஒருகால் வரல் கூடும்?

வண்டி நடத்தி
வாழ்க்கை நடாத்தும் வடிவேலன்
உண்டு குடித்துத்
திரிகின் றானாம் உடையோடும்!
கண்டு கதைத்தால்
காரியம் ஏதும் கைகூடும்?
என்று... நினைக்கச்
சென்று நிமிர்ந்தேன் அவனில்லம்.

சுக்குத் தண்ணீர்,
வெற்றிலை யோடு சுதிபீடி
செக்குப் போலும்
செய்வன யாவும் செய்கின்றான்
~புக்குப் புக்|கென்(று)
ஊதும் அடுப்புப் புகைஏறி
~கக்குக் கக்...கீ!|
தும்மல் எழுந்து கதைபேசும்!கடைசியில் வந்த
அலுவலை வடிவேல் காதுக்குள்
விடவும், இடுப்புச்
செருகல் அவிழ்த்தான்@ எடடாநீ
கொடையிற் குணன்
என்றென் மனதுட் கூறும்முன்-
அடைவுத் துண்டாம்!
அறுவான்@ அதையேன் வெளியாலே?

தினகரன்-


எட்டாதிரு!

உன்னையே நானாய் உருவகித்து,
ஊரிலுளார் கண்ணில் தெரியாமல்,
கண்ணீர் சொரிந்ததெலாம்
பெண்ணே! அறிந்தனையோ?
பேராச் சரியமிதே!
என்னையே நீயாக,
எப்பொழுதோ உன் உள்ளில்
கற்பனைகள் பண்ணிக்
களவாய் மகிழ்ந்தாயா?
உற்பவித்த இல்லில்
ஒளியேற்றி... அவ்வொளியில்
நிற்கையில் - உன் கண்ணில்
நெளியும் சுபசகுனம் அற்புதந்தான்!
வாழ்வோர் அதிசயந்தான்!
அப்படியே...
எட்டாத ஒன்றாய் இரு.

ஈழநாடு 27.6.65


கூடல்

உணர்வுகள் பிணங்கித் தினவுகொள் பருவ
மனதினில் மலர்ந்து, மடிந்தும் முடிந்த
கனவின் துளிகள் கடுப்பவெண் ணிலவு@
புனமுருங் கையின்கீழ்ப் பொட்டுப் பொட்டாய்ச்
சிதறிக் கிடந்து, செதுக்காத் திரண்டநின்
கொங்கைகள் மீதினிற், றேமல்
தங்கிய ரகசியந் தனையுணர்த் தும்மே.

நெருநல் தவழ்ந்த நிலவே முதிர்ந்து
சுரந்து கனிந்த சுவைப்பலாச் சுளையாய்ப்
பிலிற்றுந் துளித்தேன் பீலித் தெங்கிலை
வழியே யொழுகி வடியும் பொழுதில்,
தென்றலில் முலைமுகத் திரைசரிந் திழியவும்
நின்றனை போலுமென் நினைவிற்@ றுமிகள்
வந்துன் மதர்த்த வனமுலைத் தடங்களிற்
குந்தியு மழகிற் குளித்தவை கொழித்ததுந்
தேரா, தேமலைப் பிரிவின்
பேராற் பேத்துமிப் ~பெருங்குடி| ய10ரே.

காதலை ய10ரார் கண்டுவம் புரைத்தல்
மாதருந் தாங்குவர் கொல்|லென மருள்வாய்
காமங் கிறங்கிக் கயல்பாடு காட்டத்
தேமலென் மார்பிடைத் தேய்ந்துதேய்ந் தழியும்
அம்பல் து}ற்று மிந்த
வம்ப10ர் திறந்த வாய்மூ டும்மே.

மல்லாகம் ஆ.ப.க. - பண்டிதன்நாசமாய்ப்போன நரைக்குயிலே...!

நாசமாய்ப் போன நரைக்குயிலே, கத்தாதே
காசநோய் வந்து...
கழுத்தைப் பிடித்தறுத்தால்,
வாசலிலே வந்துன்
மரணத்தைச் சோதித்து,
ஏசவும் கூடுமெனை இவ்வ10ர்! - அதனாலே...
நாசமாய்ப் போன நரைக்குயிலே, கத்தாதே!

போன பலவசந்தப்
போதுகளில் ப10க்காத
ஈனங்கள் என்ன,
புதிதாய் மலர்ந்ததின்று?
வானவெளிக்கு வசமாகி,
வான் பிறையில்
ஞானம் - நவமாக
நாங்கள் பெறும் வரையில்...
நாசமாய்ப் போன நரைக்குயிலே, கத்தாதே!

~ஆற்றின் படுக்கையிலே
அம்மணமாய்... கன்னிஎழில்
நேற்றே தலையரிந்தான்!
நேர்த்தியென்ன! நேர்த்தி!| - என்று
போற்றுவன@ நம்மூர்ப்
புகழ்வாய்ந்த சஞ்சிகைகள்!
ஆற்றாத அந்த
அழகின் வெறியேற...
நாசமாய்ப் போன நரைக்குயிலே, கத்தாதே!

நாகாPக மாந்தர்
வியக்கும் விதமாக,
நாகரிக மாய்ப் பெண்
தலையரிந்தும்... தப்பிவிட்டால்,
ஏக, பரி சோதனை கொலையில்!|
என்றெண்ணும்
நாகரிக மான கொலைகாரர்,
காண்பாரேல்...
பழைய குயிலே... கிழவி! உனையும்
அரிவார் தலையை! அவர்தம், கொடிய
பரிசோ தனையைச் சகியேன்! அதனாலே...
நாசமாய்ப் போன நரைக்குயிலே, கத்தாதே!

சுதந்திரன் 17.6.66

அன்புள்ள வாசகனே!

அன்புள்ள வாசக! உன் அஞ்சல் வரப்பெற்றேன்,
என்பால் நீ கொண்டுள்ள எல்லையிலாக் காதலுக்கு
நன்றி@ இதுவரையில் நான் உன்னைப் போதமுற்ற
வாசகனாய் எண்ணி மதித்திருந்தேன்@ கொண்டிருந்த
பாசத்தை ஏனோ நீ பாழடித்து விட்டாய்! முன்
நேசத்தை நெஞ்சில் நினைத்தேனும் நீ கேட்ட
வார்த்தைக்கு யானும் வரையும் பதிலிதுவே!...
மூட்டுநோய் வாட்ட முடங்கி இருட்டறையில்
ஆர்த்த நுளம்பை அடித்த விரல்நுனியும்
கண்ணிலே பட்டுவிட்டால் கையைக் குறைப்பதுண்டோ!

~அன்பேநம் தெய்வமெனு| ஆதித் தமிழரது
பண்பை மிதித்துழக்கும் பன்றிக் குலமோ நாம்!
தம்பிதுரி யோதனன் பால் தர்மர்க்கு மூண்டபகை
அம்புவியில் பாரதமொன்(று) ஆக்கியதை நீயறிந்தும்...

எம்பியர்செய் பொச்சாப்பை எண்ணி மனம்குலைந்து
சாடுங்கள் என்றாயே! சண்டாளா!! புத்திசொல்லிக்
கூடிழந்த சின்னக் குருவிகளின் காதையினை
நாடறியும்@ என்றாற்பின் நாமறிய மாட்டோமா?
உண்மை ஒளியற்ற ஊத்தை உளங்களை நாம்
வண்ணானாய் மாறி வளமான சொற்கல்லில்
வெண்மைவரப் போட்டு வெளுத்தாலும் ஊத்தையையே
தேடுதுகள் என்று தெரிந்தும் இதற்காக
வாடுவதால் ஏதுபயன் வாய்ந்திடுமோ? வம்புகளை
நாடாமல் மெல்லத்தான் நாம்விலகிச் சென்றிடுவோம்!
தேனென்(று) இருக்குமின்பத் தீந்தமிழை ஏனத்தின்
ஊணாக மாற்றமனம் ஒவ்வா(து)@ எம் கொள்கையோ
வானளவு! நாய்வந்து ~வள்|ளென்றால் மானிடரும்
~வள்|ளென்று சண்டை வளர்ப்பதுண்டோ வையகத்தில்?
~சள்|ளென்னும் காய்ந்த சருகினைப் போல் பச்சோலை
சொல்லா(து) அழகற்ற சொல்லென்(று) அறியாயோ?
பொன்னான வற்றைப் புரிந்துகொள்ளப் போதமற்ற
~சின்னதுகள்|! சும்மா சினைக்குதுகள்!! பாவங்கள்!!!
மன்னிப்போம்@ நீயும் மகிழ்!

தினகரன் 15.4.62


கூழைப்பலா

இன்னுஞ் சிலநாள் இருந்துதான் பாருங்கள்,
என்வீட்டு வாசல் இளம்பலவின் காய்முதிர்ந்து
தின்னச் சுவை மிகுந்த தேன் சுளைகள் நல்குவதை-
இன்னுஞ் சிலநாள் இருந்துதான் பாருங்கள்!

கற்கண்டின் கட்டி@ கடித்தால்... கனிரசமே
கக்கும்!- வருக்கன் கனியில் சுளை களைந்து-
பாத்தியிலே நட்டுப் பலநாள் நீர் வார்க்க, நிலம்
பேர்த்தோர் முளைகிளம்பி, மொட்டு வெடித்திலைகள்
பார்க்கப் பசுந்தாய்ப் பலாக் கன் றெழுந்ததுபார்!
ஆர்வத் தொடுமதனை அன்றாடம் பேணிவந்தேன்.

ஏற்கனவே நல்ல எருவும் இலைகுழையும்
ஏற்பாடு செய்து, பொச்சி மட்டைகளும் ஏராளம்
போட்டுப் புதைத்த புலத்தில் அதை நட்டேன்,
வாட்டம் அடையாமல் வார்த்தேன் தினமும் நீர்,
கூடுகட்டித் தெங்கோலை கொண்டு மறைவுகட்டி
மாடாடு வாய்வைக்க மாட்டாமல், வைக்கோல்
புரிசுற்றி, நன்றாகப் போஷித்தேன்@ நோய்கள்
அறியாத வந்தப் பலாமரமோர் ஐந்தாண்டில்
காய்த்தது@ கண்டார் களிப்படைய மாட்டாரோ!
வாய்த்த துயர்ந்த வருக்கன் பழமென்று
ப10ரித் திருந்தேன்! சிலதிங்கள் போனபின்னர்

பாறி, ஒருநாள் பகல் நேரம் வந்தாள்
பலாக் கனியைக் காகம் பதம்பார்த்தல் கண்டு
விலா வெடிக்கக் கத்தி வெருட்டித் துரத்திவிட்டுக்
கூப்பிட்டாள் எம்மை@ குனிந்துவாய் ஊறுகின்றாள்!
பார்ப்பமென்று போய்த் திரும்பும் பத்தினியாள் கைக்குள்ளே

வாசம் நிறைந்த வருக்கன் சுளையொன்று !
ஆசையுடன் வாங்கி, அதைநான் கடித்தேனா...
கூழன்!- வருக்கன் குலம்மாறிக் காய்த்தகனி!

ஏழையென் ஆசை இடிந்து தரைமட்டம்
ஆக... நான் யோசித்தேன், அந்தப் பலாபற்றி
ஊகம் பிழையாக உள்ளம் மிகவருந்தும்!
சூழல் நிலம் பசளையால் நேர்ந்த தொந்தரவோ?
மேலும் பரம்பரையின் மீதேதும் குற்றமுண்டோ?
நான்வைத்த நம்பிக்கை நாசமாய் போம்படியாய்
ஏன் கூழையான திது?
- எழுதியது 5.8.71

வானொலியும் டெலிவிஷனும்
வாங்க வேண்டாம்!

இனிய மகன் இளஞ்சேரன்,
இன்றுனது மடல் என்னை எய்தும் அன்பின்,
கனி ரசத்தைக் கடிதத்தில்
கட்டியனுப் புதற்குனக்குக் கற்றுத் தந்த
உனதன்பின் ஆசிரியர்
ஒவ்வொருவர் தமக்கும் என் உயர்ந்த அன்பு.
இனி, உனது சுகசேமம்@
பாPட்சையிலே சித்தி@பிற எல்லாம் நன்றே.

நான் ஒருநாள், உன்னிடத்தே
நவின்றவற்றை ஞாபகத்தில் நாளும் வைத்து
~ஏனப்பா... வானொலியை
எடுத்தினிமேல் தருவீர்கள்|! என்றும் கேட்டாய்
நானென்றும் பொய்த்தேனா?
ஞாபகமாய் வாங்கிவந்து கொடுப்பேன்@ ஆமாம்,
வானொலியும் டெலிவிஷனும்
வைத்திருக்கும் உனக்கெதற்கு மற்றும் ஒன்று!

அப்பாவுக் கேதேனும்
சுகவீன மோ? என்பாய்@ அன்பர் கூட,
அப்படித்தான் சிலவேளை
அனுமானம் செய்கின்றார்! அதனால் ஒன்றும்
தப்பிலையே@ இது நமது
பக்குவத்தைப் பொறுத்துளது! தம்பி, உன்னை
எப்படியும் ஏமாற்றேன்.
என்றாலும் என்கதையைச் சிறிது வாங்கு

வண்ணவண்ண வானொலிகள்
வந்துள நம் சந்தையிலே@ வாங்கினாலும்
உன்னிடத்தே உள்ளதுபோல்
உயர்ந்ததுவாய் உறுதிமிக உடையதான
ஒன்றினை இவ்வுலகத்தில்
உருவாக்க, ஒரு கலைஞன், உண்மையாக
இன்றுவரை பிறந்ததிலை!
இனிமேலும் ஒருநாளும் இருக்க மாட்டான்!


ஒவ்வொருவ னிடத்துமொரு
வானொலியும் டெலிவிஷனும் உண்டே! எண்ணில்
எவ்வளவோ வானொலிகள்!
இருந்தாலும் எல்லாமே இயக்கம் இல்லை!
அவ்வளவு கறள்கசடு
அழுக்கதனால் அவையெல்லாம் பேசா! பாடா!
செவ்வையாய் மிகச்சிலவே
சேவைசெயும்! அறிவாய் என் செல்வமே நீ.

உள்ளவற்றை உள்ளபடி
உணர் வோடும் உரைசெய்யும் உறுதிவாய்ந்த
நல்ல ஒலி அலைகளினைப்
பிடிப்பதிலை நாம் வாங்கும் ஓல்ரான்சிஸ்ரர்
உள்ளமெனும் வானொலி உன்
னிடத்துளது@ நீ, அதனை உபயோகிக்கும்
வல்லமையைப் பெறுவாயேல்.......
வாங்கலாம் அவ்வொலியை வாய்மை மின்னால்!

ஒளிவிரியும் உன் து}ய
இதயம் போல், உலகத்தில் உச்சமாயோர்,
~டெலிவிஷ|னும் உண்டாமோ?
உண்மையெனும் வெண்திரையில் உலகம் யாவும்
பளீரென்று தோன்றுமடா!
பயிலுவதோ சிரமந்தான்! பயப்படாமல்
வழிவழியே போவாயேல்,
வானொலியும் டெலிவிஷனும் வாங்க வேண்டாம்!


கற்பனையில் வாழும் கவின்

உன்னைக்கண் டென்விழிகள் தொழவில்லையா? - பொங்கி
உணர்வலைகள் என்முகத்தில் எழவில்லையா?
உன்னையுணர்ந் தென்னிதயம் அழவில்லையா? - இந்த
உலகத்தின் அலர்காதில் விழவில்லையா!

பருவமகள் கனவை முழுப் பளிங்கு நிலாத் து}வும்!- வெள்ளிப்
பாற்கடலில் ஓடமொன்று பாய்விரித்தே தாவும்!
இரவுமகள் திருக்கோலம் எங்குமெழில் பாவும்! - தென்றல்
இளந்தென்னைக் கீற்றுகளோ டின்ப இசை பாடும்!

பனித்திரையில் உன்மேனி மறைந்திருத்தல் கூடும்!- து}ங்கும்
பட்சிகளோ டுன்குரலும் துயின்றிருந்தல் கூடும்!
கனிந்தொழுகும் நிலவில்விழி கலந்திருத்தல் கூடும்! - இங்கு
காத்திருந்தே மாந்தமனம் கற்பனையில் ஊடும்!

சொல்லிவைத்த வேளையெனும் எல்லைவிரைந் தோடும்! - முன்னர்,
சுகித் திருந்த போதுகளை எண்ண, எரி மூளும்!
கல்லாகி அமர்ந்தினிய கவிதை இரா நீளும்! - உன்னைக்
காத்திருந்து களைத்த கவின் கற்பனையில் வாழும்!
வெள்ளையா நான்வளர்த்த வீரா.......!

வெள்ளையா நான் வளர்த்த வீரா.... எனதன்பின்
பிள்ளையே, இன்று பிரிந்தாய் எனைவிட்டு!
நல்ல சுகமாய் நடந்தாய்... பகல் வாசல்
மல்லிகையின் கீழே மடுக்கிண்டிக் கொண்டதற்குள்
காலை மடக்கி, கவட்டுக்குள் உன்னுடைய
வாலைச் சுருட்டி வடிவாய்ப் படுத்திருந்தாய்!
வாசல்கிண்டும் உன்றன் வழக்கம் பிழையென்று
ஏசியுள்ளேன் எத்தனைநாள்... என்றாலும் மன்னிப்பாய்!
கோடிப் புறத்தில் குரக்கன் பயிருக்குள்
ஓடிப் புரண்டாய்... ஒருவாய் அதில் கடித்தாய்...
பார்த்துநின்ற என் இளையபையன் உனை மரணம்
ப10ர்த்த விதத்தை புகன்ற விதம் என்நெஞ்சை
பேர்த்தெறியச் சோற்றைப் பிடித்த படி
வேர்த்தேன்... வெயிலுக்குள் வெள்ளையன் நீ மல்லாந்து
சாய்ந்து கிடந்தாய்@ சலனம் இலைச் சவம்நீ!
ஆய்ந்தால்... நினது அரிய குணங்களெலாம்
தோன்றி, மனது துடிக்குதடா வெள்ளையா!
நீண்டு தொங்கும் உன்றன் நெடிய செவியழகும்
கொட்டன்வால் வெண்பஞ்சின் குப்பை மயிரழகும்
கட்டையாய் வாய்ந்துவிட்ட கால் நான்கும்... எல்லாம்
பயனற்று போய்க் கிடத்தல் பார்த்தேன் நான் பார்த்தேன்
பயணம் போய் விட்டாய்... பகலுணவு பண்ணுமுன்பே!
காத்திருந்து வந்த கவிதை சுரப்பெடுக்க
வார்த்தைகளில் தோய்ந்து வசப்பட்டு நிற்கையிலே
உப்புப் புளி அரிசி ஊர்க்கருமம் காரியங்கள்
செப்பிச் சினந்தெனது சிந்தனையைத் துண்டாடும்!
அற்ப செயல்கள் அறியாய் ஒருநாளும்...!
நெற்பயிரை மாடு வயிறு நிறைக்கையிலும்
ப10க்கன்றை நக்கும் பொழுதும்... துரத்தாது
து}க்கத்தில் மண்ணுக்குள் தோண்டிப் படுத்திருப்பாய்!
அப்பொழுதுன் மேல் எனக்கு ஆத்திரமாய் வந்ததுண்மை
துப்பாக்கி து}க்கித் துரத்தியதும் உண்மைதான்!
வீட்டுக்குக்கு காவல் இருப்பவன் நீ... அங்குவரும்
மாட்டை துரத்தி மறித்தல் கடனென்றும்
ஊட்டுதற்கே அப்படியும் உன்னை பயமுறுத்திக்
காட்டினேன் உன்மேல் கருணையின்றிச் செய்யவில்லை
நாய்க்குலத்தில் நீபிறந்தாய்... நல்லதம்பி உன்னவர் பெண்
நாய்க்குப் பின் னோடி நடுத்தெருவில் நின்றுகொண்டு
ஆளையாள் காமக் குரோதத்தால் கொல்வதற்காய்
வாலை முகத்தை வயிற்றைக் கடிப்பது போல்
வெள்ளையா நீ எதுவும் வெட்கமுள்ள காரியங்கள்
உள்ளி அறியாய் நீ உத்தமனே! பக்கத்து
வீட்டில் கிடக்கின்ற வீரனோடு வெண்ணிலவுக்
காட்டில் பிடித்துக் கடித்து வளவெங்கும்
ஓடிப் பிடித்து ஒளித்துவிளை யாடுவதும்
வேடிக்கை பார்த்த விநோதன் தடியெடுத்துப்
போட்டால் முதுகில், புறவளவில் போய்ப் படுத்து
வீட்டுக்குப் பின்சுற்றி வேலிக்குள் ளால் நுழைந்து
வாலாட்டிக் கொண்டே வருவாய் வழக்கம் போல்!
காலெல்லாம் வெள்ளைமயிர்க் காடு சொறிவந்து
பின்கால் சதை தெரியப் பெற்றாய்@ தக்காளியைப் போல்!
கண்N;டார் அருவருத்தார்.... காணத் தகாததிதைக்
கொன்று விடும்படியும் கூறினார் சிற்சிலபேர்
என்றதற்காய்... உன்னை யான் ஏசித் துரத்தவிலை
தேங்காயை நீ திருடித் தின்றதுவாய்... என்மனைவி
ஏன்கொணர்ந்தீர் இச்சனியை என்று முறைப் பாடுசொல்லும்
போதில் உனைநான் புறுபுறுத்த தெல்லாம் பொய்!
ஏது நடந்து இறந்தாய் என அறியேன்!
கோடிப்புறத்தில் மடுவெட்டி கொண்டுன்னை
சோடினைகள் மேளம்... வரிசையெதும் இன்றியே
மண்போடும் போதில் மனது கனப்பெடுத்த
கண்ணீரே இந்தக் கவி.


பேச்சுவார்த்தைகளும் வாத்துக் கறியும்!

சீனத்தைக் கண்டு, சிணுங்கிச் சினந்துநின்ற
~ஆனா| அறிந்த அமெரிக்கா வும் துணையும்
போனார்கள் சீனா! புகழ்ந்தார் இதை, உலகின்
ஆனானப் பட்ட அரசியல் மேதையெல்லாம்

நேற்று வரை பகைவர்@ நெஞ்சறியத் து}ற்றியவர்!
போற்றிப் புகழ்ந்தார்கள்! புன்னகையும் ப10த்தார்கள்!
ஏராள மான இறைச்சிக் கறிகளொடும்
ஆர்ப்பாட்ட மான விருந்துகளும் உண்டார்கள்!
~நேர்த்தியே| என்றதனை நேருக்கு நேர்வியந்தார்@
வா(ர்)த்தைக் கறிசமைக்கும் வண்ணம் படித்தார்கள்!

~சீர்கெட்ட வையகத்தில் செம்மை நிலவட்டும்!
போர்ப்பாட்டை நிற்பாட்டு வோ|மென் றறிக்கைவெளி
யிட்டார்கள்@ மாமா மருமக்களாயிருந்தோர்...,
கட்டித் தழுவி விடை பெற்றார்! கண் ணீர் துடைத்தார்!
ஒப்பரிய இந்த உயர்மட்டப் பேச்சிடையே
அப்பிக் கிடந்த அகந்தையின் ஒற்றுமையே
இன்றிவ்வுலகம் இரத்தக் கடலாகக்
கண்டோம்! விடுதலையாம் வாத்தை அறுத்துரித்து
குண்டு துளைக்கும் மனிதக் குருதியொடும்
மண்டை நொறுக்கி எடுத்த மசாலைகளும்
சேர்த்துக் கறிவைக்கச் செப்பினரோ ஆத்ம நண்பர்!
வார்த்தையும் பேச்சும் வளர்த்து?


சிலுவையும் செங்கோலும்!

ஏசுபிரான் சொன்னார் ~~இடதுபக்கக்
கன்னத்தில்
கூசாதடித்தவர்க்கே
கொடுப்பாய் வலக்கன்னம்!
நேசிப்பாய் நெஞ்சார நின்னயலில் உள்ளவனை
ப10சிப்பாய் மற்றுயிரைப் புண்ணியனே என்று கண்டு
என்னதான் குற்றம் இழைத்தாலும் எவரையும்
மன்னிப்பாய்! என்மகனே, மன்னிப்பாய்!|| என்று
உண்மையென்று ஆத்மா உடைய சிலர் மகிழ்வார்
விண்ணர்கள் சொல்வார், விஷமச் சிரிப்போடு :
ஆத்மாவாம் ஆத்மா! அடுப்படியில் போடுகொண்டு
ப10த்த புதுயுகத்தின் புத்தி அறுவடையை
பார்த்துச் சகிக்காப் பழமை அழுகிறது
ஆத்மாவாம் ஆத்மா!
அடுப்படியில் போடுகொண்டு!
மன்னித்தல் ஒன்றும் மனிதன் கலையன்று!
மன்னித்தல் மாந்தர் இயலாமை! மண்டைகளில்
நுண்மை அறிவால் நுணுகிமிக ஆராய்ந்து
கண்டறிந்து ஆளும் கலைமேன்மை என்றாகும்!

மீண்டும் சிலுவைகளே வேண்டாம்! இனியுலகில்!
ஆண்டார் விருப்பமோ செங்கோல்!
சிலுவையன்று!
ஆண்டவனார் கூடஅதற்குள்!


நீ எங்கே ?

இருட்டு @
இவள் குழலை வெல்லும்
களைத்துக் கிடக்கின்றேன்
அறைக்குள்@ தனியாக
இரவின் பெரும் பகுதி
துயிலின்றிக் கழிந்தாலும்
அனுபவித்த புதுமைகளை
நினைவுறுத்தி நினைவுறுத்தி...
முடிவில் தெளிவு பெற்ற
மனத்தில் சுமை கனக்க
எழுதல் தகும் புதிய
கவிதை@ என எழுந்தேன்.

மேசையில் போய், குந்தும்முன்
மின்சார விளக்குகளின்
பொத்தான் பதித்திருக்கும்
இடத்தைத் தடவி விரல்
அழுத்தியும் விளக்குகளேன்
எரிவதற்கு மறுத்தனவோ?
~~இயந்திரத்தின் கோளாறு
இரவு மணி பத்தோடு
மின்சார விநியோகம்
நிறுத்தப்படும்,|| இதை நான்
மறந்தும் விடுவதுண்டு!

மூலையிலே பெட்டி
இடுக்கின் புழுதிக்குள்
நிலவுத் தடிபோல
நீ கிடந்தாய்@ கண்டெடுத்தேன்
அழகாகத் தான் நீயும்
எரிகின்றாய்@ அதற்கென்ன?
யாருக்காய் உன்குருதி
ஒளியாகி, துளியாகி.......
வழிகிறது இருளுக்குள்?
இதற்கென்ன பெயரென்றும்
எனக்கின்னும் விளங்கவில்லை!

ஆனாலும்......
இரவெல்லாம் விழித்திருந்து
ஈஸ்டர் திருநாளின்
மலருக்கு, மேரி
மகன் பற்றி ஒரு கவிதை
எழுதி முடித்து விட்டேன்
இதற்குள்...... நீ ...?

தினகரன் 7.4.63. (சின்னான் கவிராயர் என்ற புனைபெயரில்)


வெளுத்துக் கட்டு

கேளப்பா ஊர்ப்போடி, உலக நாதா
கிட்டவந்து நான் கூறும் ரகசியத்தை
ஆளப்பா ஊரை அழகாக உன்னை
ஆரப்பா அதிகாரம் செய்தல் கூடும்!
ஏழைபர தேசி, உள்ள எழிய சாதி
எல்லோரும் உமக்கு மரியாதை செய்வார்!
தாளக்கட் டாட்டங்கள் போட்டு, நல்ல
தமிழ் பேசத் தெரிந்தவன் நீ! தலை சாயாதே!

~எங்கையடா வண்ணானைக் காணவில்லை?|
என்றே நீர் இரைகின்ற வார்த்தை கேட்டால்
சங்கை செய்வான் கம்மாஞ்சி சால்வை து}க்கி
சவமெடுக்க வேணுமென்பாய்@ போடியாரே
எங்கடனைத் தாருமென்பான் வண்ணான் நின்று
எதிர்த்தோடா பேசுகிறாய் கையை நீட்டி
உங்கள் ஊர் இல்லையிது கவனம் என்பாய்:
ஓம் என்று வணங்கிடுவான் வண்ணான் சென்று!

அம்பட்டன், கடமைகளைச் செய்ய, ஏதும்
அசமந்தம் நேர்ந்தாலும் - அலறித் துள்ளி
அம்பட்ட பயலே உன் அலுவல் என்ன?
அடித்தேனோ பல்லுடையும் என்பாய் நீயோ!
தம்பட்டம் கொட்டுபவன் தரித்தால் என்ன,
தடிப்பயலே பறைப்பயலே தவிலைத் தட்டு
தும்புக்கட் டடிதருவேன் என்பாய்@ கேட்டு
துடிதுடித்தே பறையடிப்பான் தொம்தொம்தொம்தொம்!

சாவீடு கலியாண வீடு கோயில்
சபை சந்தி, நீ அல்லால் சரிப்படாதே!
காவோடு போகின்ற கடையன் கூடக்
கண்டுன்னை அஞ்சுகின்றான் என்றால், உன்றன்
நாவோடு குடியிருக்கும் நளின வார்த்தை
நாலைந்தே காரணமாம்! நன்றே, நெஞ்சில்
நோவோடு பறைவண்ணான், போனால் உன்னை
நொட்டிவிட முடியாதோ! போடி யாரே!

கன்னத்துக் கொண்டையினை வெட்டினாலும்
கடுக்கனையும் காதைவிட்டுக் கழற்றினாலும்
இன்னும் இவை போன்ற சில பழைய கொள்கை
எவைஎவையோ ஒழித்தாலும், நமது சாதி
முன்னாளில் கடைப்பிடித்த கொள்கை யாவும்
முழுதாக அழியாமல் காத்து நிற்கும்
என்னருமை ஊர்ப்போடி யாரே@ உம்மை
எதிர்காலம்! பகைதீர்க்க எழுந்த தப்பா!

உழைப்பவர்தம் உலகமிது போடியாரே
உம்போல உட்கார்ந்து ஊரை மேய்க்கும்
பிழைப்புடையார் பெரியாராய் வாழ நாங்கள்
பேசுதற்கும் உரிமையற்ற புழுக்கையாமோ
புழுக்களல்லர் தொழிலாளர்! கவனம்... நாளை
புரட்சித்தீ! உம்வாயைப் பொசுக்கித்தின்னும்
இழக்காரம் பேசாதே எதிர்காலத்தை
எதிர்க்க உம்மால் இயலாதே! என்பான் போல!

ஊதுகிறான் பறைகுழலை அதனை! ஓம் ஓம்!
உண்மையெனத் தவிலடிப்பான் ஒருவன்! சாவில்
வாது செய்த வண்ணானோ கல்லில்... மோதி
வஞ்சினத்தைத் தீர்க்க அதோ பயிற்சி செய்வான்!
ஆதலினால் ஊர்ப்போடி! உலக நாதா
அவமானம் ஏதேனும் ஒருநாள் நேரும்
வேதனையும் சோதனையும் விளையக் கூடும்
விடாதேயுன், வீரத்தை வெளுத்துக் கட்டு!

பாடும் மீன் 2ம் இதழ்

நம்பிக்கை

இருட்டுக்குள் நிற்கின்றாய் @ எல்லோரும் உன்னைத்
~திருட்டுப் பயல்| என்றுதிட்டி - வெருட்டுகிறார்@
பாதையிலே, சோர்ந்து பனிக்குள் கிடக்கின்றாய்!
ஆதலினால் உன்னிடத்தே அன்பு.

கொண்டேன் நான்@ என்னைக் குறைவாகப் பேசுகிறார்!
கண்டால் தலையைக் கவிழ்க்கின்றார்! - நின்றாரா...?
சண்டைக் கிழுத்தென்னைச் சாதியிலும் நீக்கி, விட்டு
கொண்டாடு கின்றார் குலம்,

நண்பா, நீ யார்?உனக்கு நான்யார்? நமக்குள்ளே
உண்டான இந்த உறவேதோ? - பண்டேநாம்
பார்த்ததுவாய், வார்த்தை பழகி மகிழ்ந்ததுவாய்
சாத்திரந்தான் சொன்னாய் சரி.

வீட்டுக் கழைத்தேன்@ விருந்தில்லை@ ஆனாலும்
காட்டுத் தழையைக் கறியாக்கி - ஓட்டில்
சமையல் படைத்தேன்@ சயனிக்கச் சன்னல்
அமையாத சின்ன அறை.

பஞ்சுமெத்தை இல்லை@ பன் பாயும் தலைக்கணையும்
கொஞ்சம் கிழிசல், கொடுக்கின்றேன், - துஞ்சுகின்றாய்
ஊத்தை உடைக்குள் ஒடுங்கி@ கனவிலெதோ
கூத்தை ரசித்தாய் குளிர்ந்து.

மையிருட்டில் மின்மினியின் மாணிக்கச் சிற்றொளிபோல்
ஐய, முகத்தில் அரும்புநகை - கொய்தவர்யார்?
இன்பியலில் ஆரம்பித் திறுதியிலே நாடகத்தைத்
துன்பியலாய் மாற்றும் துயர்.

பொழுது புலர்கையிலே புல்லாங் குழலில்
எழு மோதை யாரை எழுப்ப? - அழுதீரா?
ஆலையிலே சங்கம் அலறும்@ அதைத்தொடர்ந்து
வேலையர் போவார் விரைந்து.

நீரும் அவர்பின் நெடுஞ்சாலை மீதிறங்கி
போர்வையொடும் போனீர் புலரியிலே! - யாருக்காய்
இன்னும் உழைக்கின்றீர்? என்தயவில் வாழ்ந்திருக்க
ஒண்ணாதோ சொல்லும் உமக்கு?

மாலையிலே மீண்டும் மலரும் குழலோசை
கூலியொடும் தங்கள் குடிசைக்கு - வேலையர்கள்
வந்தார்கள்@ நீரோ வரவில்லை! நான்மிகவும்
நொந்தேன் இதுபிரிவின் நோய்.

என்றோ ஒரு நாள் எனைத்தேடி நீர்வருவீர்
என்றெனக்குள் யாரோ இடிக்கின்றார்! - அன்று
அழுக்குடையில் கண்டும்மை அன்புசெய்த நெஞ்சை
இழக்கத் துணிந்ததுவும் ஏன்?

- தினகரன் 5.1.64


பிழையாய் நினையாதீர்

என்னைப் பிழையாய் நினையாதீர்
~எதனால்? என்பீர்,
அவசரமாய்
என்னைப்பற்றி, நானேயாய்
எடுத்துக்கூறல்... அதையுன்னி
என்னைப் பிழையாய் நினையாதீர்!
பொன்னைப்
புகழைப் பெரும்பொய்யைப்
ப10வைப் பெண்ணைப் புதுநிலவைப்
பண்ணிப் படைத்து விட்டிருந்தால்....
பாவம் இவையே போதாவோ?
~உண்மை| எனவும் ஒன்றிங்கே
உலவும்!
அதனால்... அடியார்காள்!
என்னைப் பிழையாய் நினையாதீர்

- 20.3.64


ஆவதோ?

என்றன் நெஞ்சிடை நின்றுதிர் கின்றதாம்
இனிமை யென்ப திலாத வரண்டபா
என்று கேட்குமென் றேங்கும் செவிகளும்
என்னையே எதிர்நோக்கும் விழிகளும்
ஒன்றை யேனும் பிறர்அறி யாவணம்
ஓது மௌன மொழியின் பொருள்களும்
கண்டு கண்டுனைக் காதல் கயிற்றிலே
கட்டி, என்னையும் கூடப் பிணித்தனன்.

எப்படீயிதை நண்பர் அறியவும்
இயலும்? எங்கள் ரகசியக் காதலை
ஒப்பினேன். இதைக் கேட்டு நகைத்தனர்!
ஒருவன், ~உன்னையோர் ஊமை|யென் றோதினான்
~அப்பப்பா அவள் கண்கள் இரண்டுமே
அவிந்து போனவை| என்கிறான் மற்றவன்
செப்புவானங்கு வந்த மூன்றாமவன்
செவிடியாவுன் சினேகிதி? என்றெலாம்

கண்ணிழந்த குருடியென் றாலுமென்
கவிதை கேட்டு மகிழ விதியிலா
துன்செவிப் பறை ஓட்டைக ளாயினும்
ஒருகி வாழ்த்திட நாவிலை யாயினும்
என்னவோ உனைக் காணும் பொழுதிலே
இனியதான கனவுகள் காண்கிறேன்.
உண்மை யெப்படி யாயினும் ஆகுக
உனைம றப்பதென் றாவதும் ஆவதோ?

- 27.3.64