கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  புதியதோர் உலகம்  
 

கோவிந்தன்

 

புதியதோர் உலகம்

கோவிந்தன்

இரண்டாவது பதிப்பு

விடியல் பதிப்பகம்
கோவை - 641016

--------------------------------------------

புதியதோர் உலகம்
(நாவல்)

முதற் பதிப்பு - மே 1985
இரண்டாவது பதிப்பு - ஏப்ரல் 1997

வெளியீடு - விடியல் பதிப்பகம்
3, மாரியம்மன் கோவில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை 641 015
தொலைபேசி -

அச்சிட்டோர் - மாணவர் மறுதோன்றி அச்சகம்
சென்னை 600 017

அட்டை வடிவமைப்பு - வசந்தகுமார்

விலை - 70 ரூபா.

PUTHIYATHOR ULAGAM
(Novel)

First Edition - May 1985
Second Edition - April. 1997

Publisher - Vidiyal Pathippagam
3, Mariamman Kovil Street
Upplipalayam
Coimbatore 641 015

Printed at - Manavar Maruthonri Achagam
Madras 600 017

Cover Layout - Vasanthakumar

Price - 70 Rs.

-------------------------------------------------------

முன்னுரை

பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என கண்ட பின்பு அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த விடுதலை அமைப்பு சிறீலங்கா அரசிற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு பலம் மிக்க அமைப்புத்தான். ஆனால் அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடத்தும் போராட்டம் கூட இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக அமைந்து விடும் என்று கருதியதாலேயே நாம் அதிலிருந்து வெளி யேறினோம்.

நாம் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோமேயன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளியேறவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலையெடுக்கும் அராஜகம் அழிக்கப்பட்டு, போராட்டம் வீரியம் கொண்டதாக முன்னெடுக்கப் படுவதற்கு எமது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே யிருப்போம்.

எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம்.

அக் காலத்திலேயே இந் நாவல் படைக்கப்பட்டது!

இந் நாவல் கூறும் விடயங்களை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந் நாவல் படைக்கப்படும் போது கூடவே எனக்கு இருந்தது. கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாத வகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரீத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டு இந் நாவல் படைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறைகள் களையப்பட்டு அது முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அக்கறை யினாலேயாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதமேந்திய போராட்டமாயினும் அது ஒருபொழுதும் அராஜகத் தன்மை கொண்டதாக மாறிவிடுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

நாம் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பின் அராஜகம் தாபனத்திலிருந்து விலகும் உரிமையை மறுத்ததோடு சுதந்திரமாக அரசியல் நடத்தும் உரிமையையும் தடைசெய்தது. அதனால்தான் எம்மைக் கொன்றொழிப்பதற்கு பேயாக அலைந்தார்கள்.

அவர்கள் முயற்சி கைகூடாததால் ஆத்திரமுற்றவர்கள் தமிழீழத்தில் எமது தோழர்களைக் கடத்தியும், சித்திரவதை செய்தும் துன்புறுத்தினார்கள். அந்த அராஜகவாதிகளின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.

அவர்கள் ஒருவேளை எம்மைக் கொலை செய்வதில் வெற்றி பெறலாம்.

அந்தக் கொலைவெறியர்கள் யார் என்பதை நாம் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படி அவர்களுடன் முரண்பட்டு நின்றோம்? என்பதை வெளிப்படுத்துவதற்கு இந் நாவலைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

இந் நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப் பட்ட கூட்டுப் படைப்பே இது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந் நாவல் உருப்பெற்றுள்ளது.

இக் கதையின் கதாபாத்திரங்களில் இறந்தவர்கள் உண்மையில் இறந்தவர்கள் தான். உயிரோடு இருப்பவர்கள் இப்பொழுதும் உயிரோடுதான் இருக்கிறார்கள். 'புதியதோர் உலகம்' ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப் படவில்லை. ஒரு அறைகூவலாகவும் கருதியே இது வெளிவந்துள்ளது. வாசகர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறேன்.

கோவிந்தன்
மே.02.1985

--------------------------------------------------

நாம் சிங்கள முதலாளித்துவ அரசின் அராஜகங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தால் போதாது. தமிழீழ விடுதலை அமைப்பிலும் புதிதாக உள்நுழைந்து வரும் அராஜகப் போக்குகளுக்கு எதிராகவும் போராட வேண்டும். அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும். தன்னளவில் இந்தக் கயமைகளை வைத்துள்ள எந்த அமைப்பாலும் தமிழீழ மக்களுக்கு விமோசனத்தை வழங்க முடியாது.

கோவிந்தன் (பக்கம் 243)

-------------------------------------------------------

பதிப்புரை

ஒடுக்கப்படும் சக்திகளின் போராட்டங்களில் தோய்ந்து எழுந்த இலக்கியங்களில் (தமிழில்) 'புதியதோர் உலகம்' குறிப்பிடத்தக்க ஒன்று. பிரச்சாரத் தன்மைகளை மீறி கலைத்துவத்தை வெளிப்படுத்தி இலக்கியத் தளத்திலும் தன் இருப்பை அது நிலைநிறுத்தியுள்ளது. அராஜகங்களின் பிடிக்குள் சின்னாபின்னமாக்கப்பட்ட மனிதாபிமானங்களின் குரலாகவும் அது பேசுகிறது. பத்து ஆண்டுகளின் முன் மனதை உலுக்கிய ஒரு நாவலாக அது வெளிவந்தது. அனுபவங்களின் ரணங்களோடு ஒரு படிப்பினையை மீட்டுக்கொண்டு அது மீண்டும் மீண்டும் வந்து மனதை தட்டிக்கொண்டிருப்பதால், அதன் குரலை ஒரு தசாப்தத்தின் பின் இந்த இரண்டாவது பதிப்பினூடாக மீள்பதிவுசெய்வது பொருத்தமாகப் பட்டது@ பதிக்கப்பட்டது.
இதற்காக நூலாசிரியரைத் தேடியபோது... தகவல்கள் மட்டுமே கிடைத்தன. இது இன்னொரு துயரம்!
- விடியல்

-------------------------------------------------------

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்

சொந்தப் பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன், கேசவன்
பிறப்பு : 1948.5.02 பாலைய10ற்று, திருகோணமலை
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா

கல்வியும் தொழிலும் :
இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டபடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராக (குமாஸ்தா) பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.

அரசியல் :
பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான ~தீர்த்தக்கரை| எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1980 களின் தொடக்கத்தில் ~சங்கப்பலகை| எனும் குழுவை அமைத்து, மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (Pடுழுவு) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் Pடுழுவு மைப்பிலிருந்து வெளியேறினார். ~தீப்பொறி| ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக் காலகட்டத்தில் Pடுழுவு இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக் காலத்தில்தான் ~புதியதோர் உலகம்| என்ற இந்த நாவல் எழுதப்பட்டது.

1986 இல் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

-----------------------------------------------------------------

அத்தியாயம் 01

தார் வீதியால் நடந்து வந்தவர்கள் அந்தக் குச்சொழுங்கையில் திரும்பிய தும் கடற்கரை அண்மித்து விட்டதை உணரத் தொடங்கினார்கள்.
இரண்டு பேர் மட்டும் அக்கம் பக்கமாக நடந்து போகும் அகலமுள்ள அந்தச் சிறிய ஒழுங்கை ஒன்று அல்லது இரண்டு வீடுகளைத் தாண்டியதும் அந்த மனிதர்கள் போலவே தன்னடக்கத்துடன் வளைந்து செல்லும். அந்தக் கிராமத்து மக்கள் மாதிரி ஒழுங்கைகளும் கம்பீரமாக நீட்டி நிமிர்ந்து செல்லும் துணிச்சலை கண்டறியாததுகள்.
மனிதர்களதும் கால்நடைகளதும் காலடி அடிக்கடி பட்டு நலிந்துபோன புற்களின் மத்தியில் இடையிடையே பீறிட்டு நிற்கும் தரையில், வெண்மையாக கடற்கரைக் குருமணல் கோலம் போட்டிருந்தது.
ஒரே திசையில் வேகமாக சாய்ந்தாடும் தென்னை மரங்களிருந்து வீசிய கடற் காற்றின் குளிர்மை வியர்வையால் நனைந்த உடல்களைச் சில்லிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது.
சங்கர் அனைவருக்கும் பின்பாக சென்று கொண்டிருந்தான். ஒரு மணி நேரத்திற்கு முன்னர்தான் நடேசன் என்ற தன் சொந்தப் பெயரை சங்கர் என்று மாற்றியிருந்தான். எல்லோருக்கும் முன்பாக அவர்களை வழிகாட்டி அழைத்துச் சென்றவர், சற்றைக்கொரு தடவை பின்னே திரும்பிப் பார்த்து வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார். பாதை திடீர்திடீரென்று வளைந்து முறிந்து செல்வதால் அவரை முன்னே விட்டு அதிகம் பின்வாங்காமல் எல்லோரும் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
பூவரசம் வேலிகளைத் தாண்டி வளவுக்குள் இருந்த பெண்கள் அந்தந்த இடத்தில் இருந்தவாறு இவர்களை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படியே இருந்தார்கள். இது அவர்களுக்கு வழமையாகிப் போன பழகிய காட்சிதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ சுவாரசியத்தை புதிது புதிதாகக் காணும் குறுகுறுப்பு குறையாமல் இருந்தார்கள்.
முன்னே சென்ற அந்த வழிகாட்டி வேகத்தைக் குறைத்து பதிந்த சிறிய ஓலைக் கொட்டிலுக்குள் சென்றபோது எல்லோரும் ஒரு ரயிலைப் போல அவரைப் பின்தொடர்ந்து வேகத்தைக் குறைத்து நின்றார்கள்.
நடந்து வந்த களைப்புத் தீர மாமர நிழலின் கீழ் குழுமி நின்ற அவர்கள் மேலே அண்ணாந்து காய்களைத் தேடினார்கள். அதேவேளை அந்தச் சிறிய ஓலைக் குடிசையையும் அதிலிருந்து யார் வெளிப்படப் போகின்றார்கள் என்றும் அடிக்கடி கண்களை அலைபாய விட்டார்கள்.
நடுத்தர வயதான வீட்டுக்காரர் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல கண்களைக் கசக்கிக் கொண்டு வெளியே வந்தார். இவர்களைப் பார்த்தவுடன் மிகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டார்.
~~மொத்தம் பதினைஞ்சு பேர். விபரம் இந்தா இருக்கு||.
பயங்கரப் பறவையொன்றின் கீச்சிட்ட அலறல் ஒலியில் வழிகாட்டி வந்தவர் சப்தித்து விட்டு ஒரு காகிதத்தை நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்டதும் அந்த வீட்டுக்காரர் மறுபேச்சின்றி தொந்திக்கும் மேலாக அவிழ்ந்து விழும் சாரத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு உள்ளே திரும்பினார். போகும் போதே அந்தக் காகிதத்தை எதுவும் புரியாதவர் போல் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்துக் கொண்டார்.
வழிகாட்டி வந்தவர் அதே பயங்கர ஒலியில் கத்தினார்,
~~நான் போயிட்டு வாறன். எனக்கு அவசரமான வேலை இருக்கு|| என்று கூறிக் கொண்டு திரும்பியவர் பின் ஏதோ நினைத்துக் கொண்டவராக அந்த இளைஞர் களைப் பார்த்துக் கூறினார்,
~~இன்னும் ரெண்டு மணித்தியாலத்தில் வண்டி வந்திடும். அதுமட்டும் நீங்க வெளிய திரிஞ்சு இந்த இடத்தைப் பழுதாக்கிட வேண்டாம். வெளியே யாரும் போக வேண்டாம்|| என்று கண்டிப்போடு, கடூரமாகக் கூறியவர் அந்த இளைஞர்கள் முகத்தில் நிழலாடிய சிநேகபாவத்தில் திருப்தி கொண்டவராக அப்படியே நின்று கொண்டு அவர்களில் இரக்கப்படுபவர் போல தொனியை மாற்றினார். ஆனாலும் அது முன்புபோலவே கரடுமுரடாகக் கேட்டது.
~~இன்னும் அரை மணித்தியாலத்தில் உங்களுக்கு சாப்பாடு வந்திடும். சாப்பிட்டுவிட்டு நல்லாத் தண்ணி குடியுங்கோ. பிறகு நடுக்கடலில் தாகத்தில் தவிக்க வேண்டியிருக்கும்.||
அந்த இளைஞர்கள் ஒருவர் இருவராக அவரைச் சூழ நெருங்கி வந்தார்கள்.
~~இண்டைக்கு காத்து கொஞ்சம் உரப்பு. உங்கபாடு கஸ்டம்தான். நல்லா தூக்கி அடிக்கும். ஆனால் பரவாயில்லை. நீங்கள் விடுதலைக்கென்று வந்திட்டு இந்தக் கஸ்டங்களை சமாளிக்கத்தானே வேணும். நாளைக்கு றெயினிங்கிலோ பிறகு சண்டையிலோ இதைவிட மோசமான கஸ்ரங்களை சமாளிக்க வேண்டும் தானே.||
சங்கர் எட்ட நின்றபடியே அவரைப் பார்த்தான்.
கட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி. துருத்திக் கொண்டு நிற்கும் வெண்மையான முன்வாய்ப் பற்கள். கூனலான வளைந்து மெலிந்த உயரமான உடல்வாகு. ~யாருக்காக அழுதான்| திருட்டுமுளி ஜோசப்பின் கெந்தல் நடை. குரல் மாத்திரம் அந்தத் தோற்றத்திற்குப் பொருத்தமில்லாத காலை நேர அலாரம் ஒலியாகக் கீச்சிட்டது.
இளைஞர்கள் அருகில் நெருங்கி, தங்கள் பயபீதிகளை கேள்விகளாக்கிக்; கொண்டிருந்தார்கள்.
~~அண்ணை எவ்வளவு நேரத்தில் இந்தியாவிற்குப் போய்ச் சேருவம்||
~~தோழர்! இப்ப நேவி விட்டுக் கலைக்கிறதில்லையா||
அந்தக் கேள்விகள் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தது. உற்சாகம் அடைந்தவர் போல் அதே கீச்சிட்ட குரலில் அலறினார்,
~~நேவி இந்தக் காத்துக்குள்ளை எங்கை கலைக்கப் போறான். அவங்கட போட்டால இந்தக் காத்துல எங்களை துரத்த ஏலாது. முறையாக ஓடினா ரெண்டு மணித்தியாலம். சிலநேரம் தப்பினா ஆறு ஏழு மணித்தியாலம் எண்டும் செல்லும். அதைப்பற்றி யோசியாதையுங்க|| என்று அமைதியாக அவர்களுக்கு விளக்கம் கொடுத்தவர், பின்பு ஒரு கடமை நினைவுக்கு வந்தவராக பட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
வெளியே செல்லும்போது இவ்வளவு நேரமும் பேசியதற்கு சம்பந்தமில்லாதது போல், ~~நீங்கள் இப்ப போகேக்கை ஒண்டும் தெரியாதது மாதிரித்தான் இருப்பியள். போயிட்டு திரும்பி கையில் ஒரு கலாஸ்னிக்கோவோட வந்தா எங்களுக்கே கதை சொல்லுவீங்க. இஞ்ச அப்பிடித்தான் கனபேர் திரியினம். போகேக்கை ப10னை மாதிரி இருந்துட்டு இப்ப வந்து எங்களையே மிரட்டுறாங்கள்|| என்று தன்பாட்டில் கூறிச் சென்ற வார்த்தைகளில் புதைந்திருக்கும் அங்கலாய்ப்பை உணரமாட்டாதவர்களாக அந்த இளைஞர்கள் குழம்பி நின்றார்கள். அவர்கள் அந்த சிறிய குடிசையைச் சூழ தனிமையில் விடப்பட்டார்கள்.
அந்த வீட்டுக்காரரும் அதன்பின் வெளியே வரவில்லை. இடையிடையே இருமிக் கொண்டு தான் அந்த இருட்டறையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
அந்த இளைஞர்கள் ஒவ்வொரு பக்கமாக இரண்டு மூன்று பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக வெளிமுற்றத்தில் பரவினார்கள். சிலர் முன் திண்ணை யிலேயே மல்லாந்து சாய்ந்தார்கள். எல்லோரும் மறக்காமல் தம் கைகளில் இருந்த உடுப்புப் பார்சல்களை திண்ணையின் ஒரு மூலையில் குவித்தார்கள்.
அவர்கள் எல்லோரும் அறிமுகமாகி அதிக நேரம் ஆகவில்லை. தமது சொந்த ஊர் பெயர்களைக் கூறக்கூடாதென்ற கண்டிப்பான கட்டளையை மீறிவிடாத எச்சரிக்கையுடன் தமக்கு மாற்றப்பட்ட புதிய பெயர்களுடன் பரீட்சயமாகும் குறுகுறுப்புடன் ஒரு புதுமையான அனுபவத்துக்குள்ளாகிக் கொண்டிருந்தார்கள்.
சங்கர் ஒரு மூலையில் இடம்பிடித்துக் கொண்டு கையில் கிடைத்த ஒரு பழைய சஞ்சிகையைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
நாதன் இன்னும் வரவில்லை.
ஒரே அங்கலாய்ப்பாய் இருந்தது.
எப்படியும் சங்கரை வந்து சந்திப்பதாக உறுதி கூறியிருந்தான். அவனுக்கு ஏற்கனவே அந்த இடம் தெரியுமாம்.
சங்கர் சற்றைக்கொரு தடவை விழிகளை உயர்த்தி வெளியே யாரும் வருகிறார் களா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு அந்த சஞ்சிகையைப் படிப்பதிலேயே கவனமாக இருந்தான்.
மனம் லயிக்கவில்லை.
இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் சங்கர் தான் ஆயுதப் பயிற்சிக்கு இந்தியா போகும் விபரத்தை நிர்மலாவிற்கு தெரிவித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தான். நாதனிடம் எல்லா விபரத்தையும் கூறும்போது உன்னிப்பாக அமைதியாக கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவன் பேசிமுடித்ததும் நேரத்தைப் பார்த்துக் கொண்டு நாதன் கூறினான்,
~~சரி நான் எல்லாத்தையும் பார்க்கிறன். நீ வாற ஆட்களோடை சுணங்காமல் கரைக்குப் போ. நீ போக முன்னம் உன்னை வந்து சந்திச்சு விசயத்தைச் சொல்லிறன்.||
சங்கர் சஞ்சிகையில் மனம் லயிக்காமல் நாதனையே எதிர்பார்த்து குழம்பிக் கொண்டிருந்தான்.
நாதனை சந்தித்த அன்றைய மாலைப் பொழுதில் நிர்மலாவைப் பற்றிய கதையிலேயே நேரம் போய்விட்டது. வீட்டுப் பொறுப்புகள் பற்றி எதுவும் சொல்லாமல் போனது மனதை உறுத்தியது.
~~நாதன் வந்திடுவான். வீட்டையும் அடிக்கடி போய்ப் பார்த்து நிலைமையை தெரிவிக்கும்படி சொல்ல வேண்டும்.||
அவன் தனக்குத்தானே நம்பிக்கைய10ட்டிக் கொண்டிருந்தான்.
~~மகன்! நீ ஒரு இயக்கத்தில் இருக்கிறதென்றா அதுக்கு முழுதும் நம்பிக்கை யுள்ளவனா இருக்க வேண்டும். ப10ரணமா உன்னை அர்ப்பணிக்க வேணும். நான் உனக்கு அப்பா மாத்திரம் இல்லை. நான் ஒரு கம்ய10னிஸ்ட். இந்தக் கடமையில் சொல்லிறன். நீ இந்தக் குடும்பத்துக்கு என்ன உதவி செய்தாய் என்று நான் ஒருபோதும் கணக்குப் பார்க்க மாட்டேன். நீ உன் கொள்கைக்கு விசுவாசமா இருக்கிறியா என்ற கணக்குத்தான் பார்ப்பன்.||
இரண்டு நாட்களுக்கு முன் அப்பா ஆணித்தரமாகக் கூறிய அந்த வார்த்தைகளை ஆசீர்வாதமாக ஏற்றுக் கொண்ட சம்பவத்தை நினைத்துப் பார்த்தான்.
அம்மா திக் பிரமை அடைந்தவள் போல் மலங்க மலங்க விழித்ததைக் கண்டு இவன் வாஞ்சையுடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினான்,
~~அம்மா நீங்க வீட்டிலை இருந்துகொண்டு இவ்வளவு நாளும் அப்பாட போராட்டங்க ளுக்கெல்லாம் ஆதரவு காட்டினீங்களே. அதுபோன்ற நியாயமான போராட்டம்தான் அம்மா இது. இதற்குத் தடை சொல்லாதீங்க||
அவள் எதுவும் பேசமுடியாமல் இவன் அடர்ந்த தலைமுடியை பற்றிப் பிடித்து மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
~~தங்கம்! அவனை நீ தடுக்காதை. அவன் உயிரை வெறுத்து இப்பிடிப் போக வில்லை. அல்லது உயிரைக் காப்பாற்றிக் கொள்றதுக்கும் இப்படி ஓடவில்லை. உயிர்வாழும் அர்த்தத்தைப் புரிந்து கொண்டுதான் இந்த முடிவை எடுத்திருக் கிறான்.||
அவள் அழுகையை மீறிய அவசரத்துடன் பீறிட்டுப் பொருமினாள்.
~~நீங்க அபசகுனமா எதுவும் பேசாதீங்க. என்ர பிள்ளைக்கு நான் சாகமுன்னம் எதுவும் நடந்திடப்படாது எண்டுதான் பயப்படுறன்||
சிறு குழந்தை போல் தேம்பி அழும் அவள் பரிதாபத்தை கண்களை அகல விரித்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் தன் முன்னால் இப்படி திடீரென்று ஒரு குழந்தை போல குறுகிப்போய் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருப்பாள் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அம்மாவோடு அவன் இம்மாதிரி விசயங்களை ஒருபோதும் பேசுவதே இல்லை. அப்பாவே அவனுக்கு எல்லாம். அவனது நம்பிக்கைக்குரிய ஆலோசகரும் தூரதிரு ஷ்டியுள்ள வழிகாட்டியும் அவரேதான். அந்த வழக்கத்தில் அவன் தமிழகத்துக்கு பயிற்சிக்குப் போகும் விசயத்தை முதலில் அப்பாவிடமே பிரஸ்தாபித்தான்.
அப்பா அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு வழமைக்கு மாறாக மௌனமாக இருந்தார். சிறிது நேர யோசனையின் பின் அவரே இதை அம்மாவிடம் கூறும்படி அனுப்பியும் வைத்தார். எதையும் வெளிப்படையாகப் பேசிய பழக்கத்தில் அம்மாவிடம் அப்பட்டமாக அவன் கூறிவிட்ட பின்புதான் அவள் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தாங்கமாட்டாமல் குழம்பி நின்றான்.
~~ராசா நீ மூத்த பிள்ளை. எந்த அரசியல் வேலையானாலும் ஊரில் இருந்து கொண்டு செய். எங்களை விட்டிட்டு மட்டும் போயிடாதை||
அவள் பொங்கி எழும் குமுறலை தாங்கமாட்டாமல் பரிதவித்து அப்பா வந்தார். நீண்ட பிரயத்தனமெடுத்து அவளை ஆறுதல் படுத்தினார். அதன்பின் வழிந்தோடும் வியர்வையை துண்டால் துடைத்துக் கொண்டு குழம்பி நிற்கும் அவனிடம் வந்தார்.
~~மகன்! அம்மா நல்லா நொடிஞ்சு போட்டா. அவளை நீ சாதாரணமா நினைக்காதை. அவள் தனக்கென்று அபிலாசைகள் ஏதுமில்லாமல் கடந்த காலம் ப10ராக என்னோடை ஒத்துழைச்சவள். ஆனால் இப்பொழுது அவள் கலங்கிறதெல்லாம் உன்ரை உயிரை நினைச்சுத்தான்|| என்று கூறி சிறிது அமைதியானார்.
அவர் பரந்த மார்பில் திட்டுத் திட்டாய் படர்ந்திருக்கும் கரிய ரோமங்கள் இடை யிடையே பழுப்பேறிக்கொண்டு போவதை ஒருவித கரிசனையோடு அவதானித்து விட்டு அப்படியே இருந்தான் அவன். அவரே தொடர்ந்தார்,
~~மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று சொல்வது எவ்வளவு பெரிய உண்மை தெரியுமா. எந்த மனிதனுக்கும் அரசியல் இல்லாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் இதை பெரும்பாலான மனிதர்கள் அறிவதில்லை. நான் என் காலத்தில் முனைப்பாக இருந்த தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியப்பட்ட சோசலிசப் போராட்ட த்தைச் செய்ய வேண்டும் என்று அரசியலில் ஈடுபட்டேன். அதில் வெற்றிகாண முடியவில்லை. நீ உன் தலைமுறைப் போராட்டமான தமிழீழ விடுதலையினூடாக ஒரு சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க அரசியலில் நுழைந்திருக்கிறாய்.||
அப்பா எப்பவும் இப்படித்தான். எந்த விசயத்தையும் நேரடியாகப் புட்டுவைக்காது சுற்றி வளைத்துத்தான் வருவார். அதையே எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போல் அவன் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினான்.
~~இந்த இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் வடிவத்தில் மட்டும்தான் பேதம். இலட்சியத்தில் ஒன்றுதான். அது மாத்;திரமல்ல. முன்னையதன் அனுபவங்களை பின்னையது பற்றிச் செல்கிறது. பற்றிச் செல்லவும் வேணும். எனது காலத்தில் ஆயுதப் போராட்டம் என்றால் வெறும் வார்த்தைகளில் மாத்திரம்தான். நடைமுறை யில் எங்கள் கட்சி ஒரு ~சொட் கண்| ஐக் கூட கண்டிருக்காது. ஆனால் நீங்கள் அப்படியில்லை. உன் அம்மாதான் பாவம். அவளுக்கு இந்தப் பரிணாம வளர் ச்சியை ஜீரணிக்க முடியவில்லை. அரசியல் என்றால் என்னைப்போல ஊர்வலம், பொதுக்கூட்டம் என்ற மட்டோடு நீ நின்றிடுவாய் என்று எதிர்பார்த்திருக்கிறாள். ஆயுதப் பயிற்சி என்பது அவள் கற்பனை பண்ணாத ஒன்று... ஆனாலும் நீ வீட்டைப் பற்றிக் கவலைப் படாதே. நான் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுறன். நீ ஒரு இயக்கத்தில் இருக்கிறதெண்டா அதுக்கு முழுதும் நம்பிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்...||
சங்கர் கண்களை மூடிக் கொண்டு முகத்தை முழங்காலுக்குள் புதைத்துக் கொண்டான்.
அவனை அறியாமல் விழியோரத்தில் தேங்கி நின்ற நீரை யாருக்கும் தெரியாமல் லாவகமாக சாரத்தில் துடைத்து விட்டான். அது கவலையால் வந்த கண்ணீர் அல்ல; பெருமையால் வந்தது.
அந்த இளைஞர்கள் இது ஒன்றையும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்களுக்குள் நெருக்கமாகிவிட்டதை காலை நேர குருவிகளின் கீச்கீச் ஒலியில் ஒருவர்மாறி ஒருவர் சம்பாஷித்துக் கொண்டிருப்பதிலிருந்து புலப்படுத்திக் கொண்டார்கள். முற்றத்தில் கால்களை நீட்டியும், மல்லாந்து படுத்துக் கொண்டும் அவர்கள் மனம்போன போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள். வௌ;வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒவ்வொருவருடைய பேச்சு வழக்கில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கடல் பயணமே அவர்களுக்கு பெரிய உறுத்தலாக இருந்தது.
அதுபற்றியே அடுத்தடுத்துப் பேசினார்கள்.
சங்கர் நாதனை எதிர்பார்த்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்.
நேரம் செல்லச் செல்ல... நிர்மலாவைச் சந்திக்கும்படி நாதனை அனுப்பியிருக்க வேண்டாம் என்ற சலிப்பு அவனுக்கு ஏற்படத் தொடங்கியது.
உள்ளேயிருந்து இருமிக் கொண்டிருந்த அந்த வீட்டுக்காரர் வெகுநேரத்தின் பின்பு வெளியே வந்தார். அதேசமயம் அவரைத் தேடிக் கொண்டு ஓடோடிவந்த சிறுவன் ஒருவன் அருகில் வந்து இரகசியமாகப் பேசியதும் அவர் புரிந்து கொண்டவர் போல செருமிக் கொண்டு கூறினார்,
~~இந்தியா செல்ல படகு வந்திட்டுதாம். அந்த சிறுவனோடே எல்லோரையும் போகட்டாம்||
அவனுக்கு திக் என்றது.
ஏமாற்றத்தால் மனம் சலித்தது.
நாதனை இன்னும் காணோம்.
எல்லோரும் அவசர அவசரமாக எழுந்து தாம் கொண்டுவந்த அந்தப் பார்சல்களை தேடி கையில் எடுத்தார்கள். அந்தச் சிறுவன் அவர்கள் பரபரப்பையும் சத்தத்தை யும் அடக்கி அமைதியாக அவர்களை கூட்டிக் கொண்டு போனான். அந்தப் பணியில் அவன் நீண்ட காலமாக உழைத்த அனுபவம் அப்படியே தெரிந்தது.
சங்கர் சோர்ந்து குழம்பிப்போய் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
கடல் அலைகளின் ஆக்ரோசமான ஒலி இப்போது மிக அண்மையில் கேட்டது.

------------------------------------------------

அத்தியாயம் 02

கடல் அலைகளை கிழித்துக் கொண்டு அசுர வேகத்தில் அந்தப் படகு பறந்தது. ஒவ்வொரு அலையும் படகின் மேல் அணியத்தில் முட்டி எம்பித் தள்ளும்போது உள்ளே இருந்தவர்கள் கையில் அகப்பட்டதை
இறுகப் பற்றிக் கொண்டு மேலே பாய்ந்து ஒருவரோடொருவர் முட்டிமோதி துள்ளி விழுந்தார்கள். மூன்று எஞ்சின்கள் பொருத்தப்பட்ட அந்த விசைப் படகு புறப்பட்டபோது ஒரு எஞ்சின் மாத்திரமே முடுக்கிவிடப்பட்டது. ஐந்து நிமிட நேரத்தின் பின் அடுத்த இரு எஞ்சின்களும் முடுக்கி விடப்பட்டபோது வண்டியில் உள்ளோர் நிலைகொள்ளாமல் தவித்தார்கள்.
மூன்று ஓட்டிகளில் ஒருவர் வண்டியின் பின்புறம் எஞ்சினோடு இணைந்த கானா கம்பியை பிடித்துக் கொண்டு வேகத்தை கூட்டிக் குறைத்துக் கொண்டு நின்றார். மற்றொருவர் அவருக்கு உதவியாக அவர் அருகிலேயே நின்று அவர் பணிக்கும் ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருந்தார். மூன்றாமவர் முன் அணியத்தி ற்கு வந்து ஏதும் படகு தென்படுகிறதா என்று அந்த கும் இருட்டிலும் பார்வையைக் கூராக்கி துளாவிக் கொண்டிருந்தார்.
~~அடேய்! கவனமா பார்! ஏதும் புள்ளி தெரியும். இங்கினதான் திரிவாங்கள்||
பின்னாலிருந்த ஓட்டி சற்றைக் கொரு தடவை குரல் கொடுத்தார்.
சங்கர் படகின் நடுவில் இருந்து கொண்டு படகின் ஒவ்வொரு துள்ளல் பாய்ச்ச லுக்கும் தன்னை ஆசுவாசப்படுத்த கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தான்.
காங்கேசன்துறை வெளிச்ச வீட்டு விளக்கு வெளிச்சம் தெளிவாக இன்னும் மின்னிக் கொண்டிருந்தது. தரையைக் காட்ட அதுதவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் எங்கும் ஒரே கடல்பரப்பு.
முன்புறமிருந்த இளைஞன் ஒருவன் வாந்தி எடுத்து கலவரப்படுவதும், அவன் அருகிலிருந்த மற்றிருவரும் அருவருப்பால் முகத்தைச் சுழிப்பதும் அந்த கடும் இருளிலும் துல்லியமாகத் தெரிந்தது. ஓட்டிகள் அதுபற்றி எந்த சிரத்தையுமின்றி வேறு படகுகள் கண்களில் தென்படுகிறதா என்று பார்வையை கூராக்கிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அந்தப் படகின் வேகம் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டு போனது. அணியத்தின் மேல் நின்ற ஓட்டி கலவரப்பட்டுத் திரும்பினான். கானா கம்பியை பிடித்துக் கொண்டு நின்ற ஓட்டி இடது கரை எஞ்சினைப் பரிதாபமாகப் பார்த்து குழம்பினார். அந்த எஞ்சின் ~புட்புட்| என்ற சத்தத்தோடு இயங்க மறுத்தது.
~~அடேய்! நாற்பது ஒன்று நின்றிட்டுது. என்ன அறுப்போ தெரியாது||
முன்னே நின்றவன் திரும்பிக் கேட்டான்,
~~அதுக்கென்ன பரவாயில்லை. ரெண்டு எஞ்சினில இப்படியே போவோமா||
பின்னேயிருந்து ஆத்திரத்தோடு கத்தினான்,
~~மடக்கதை கதைக்கிறாய். நேவி துரத்தினா இந்த ரெண்டிலையும் ஓடித் தப்ப முடியுமா. இது காபறேட்டரிலை அடைப்பு ஏற்பட்டிருக்கும் அல்லது பிளக்கில் காபன் பிடிச்சிருக்கும். பிளக்கை களற்றிப் பார்ப்பமா||
எஞ்சின் சத்தத்தை மீறி அவர்கள் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
அடுத்த இரண்டு எஞ்சின்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. படகு நின்றதால் துள்ளல் பாய்ச்சல் குறைய அவர்கள் உடல் வேதனையை சிறிது ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கண்டார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் இப்போது நேவி வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் ஆழமாக அலைமோதியது.
~~டேய்! கவனமாக நாலு பக்கமும் கழுத்தை வளைச்சுப் பார். ஏதும் புள்ளி தெரியும்||
முன் அணியத்திற்கு மேல் ஏறிநின்ற ஓட்டி வேறு படகுகளின் அசுமாத்தம் தெரிகிறதா என்று பார்வையால் துளாவினான். படகு ஓடாமல் நின்றதால் முன்னையதைப் போல் துள்ளல் பாய்ச்சல் இல்லாவிட்டாலும் இடைவிடாமல் தொட்டிலாட்டம் மோசமாக படகில் இருந்தவர்களை இருபக்கமும் புரட்டி எடுத்தது. மேலும் இருவர் புதிதாக வாந்தி எடுக்கத் தொடங்கினார்கள்.
ஒரு இளைஞன் களைப்பு மேலீட்டால் தலையை சங்கர் மடியில் கிடத்தினான். சங்கர் ஆதரவாக அவன் தலையை வருடிக் கொடுத்தான்.
பரந்த அந்தக் கடற் பரப்பில் தன்னம் தனியாக அந்தப் படகு மிதப்பது இனம்புரியாத ஏகாந்த உணர்வை அவனுக்கு புதிதாகத் தட்டியெழுப்பியது. அந்த இளைஞன் இவன் மடியில் உரிமையுடன் முகத்தைப் புதைத்திருப்பதும் கூட அந்த உணர்வுக்கு மெருகூட்டுவதாகவே இருந்தது.
காற்சட்டைப் பையில் ஏதோவொன்று துருத்தியது. காலை சிறிது தூக்கி வலது கையினால் தடவிப் பார்த்தான்.
அது ஆண்கள் அணியும் ஐம்பொன் வளையல்!
நிர்மலா நாதனிடம் கொடுத்தனுப்பியிருந்தாள்.
மூச்சு இரைக்க கரைக்கு ஓடோடிவந்து நாதன் அதை அவனிடம் கொடுத்தான்.
இறுதி நேரம் வரை நாதனைக் காணாமல் போய்விடுவோமோ என்று தவித்திருந்த சங்கருக்கு அது முழுத் திருப்தியைக் கொடுத்தது.
நாதனோடு பத்து நிமிட நேரமாவது கரையில் நின்று பேச முடிந்தது.
நிர்மலா முதலில் அதிர்ச்சியால் எதுவும் பேசவில்லையாம். சங்கரின் முடிவு அவளை பெரிதும் குழப்பியிருந்தது.
சிறிது நேரம் நாதன் பேசுவதை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் பேசி முடிந்ததும் வழிந்தோடும் கண்ணீரை மறைப்பதற்கு கடுமையாகப் பிரயத்தனப்பட்டாள். ஒரு வருடத்திற்கு முன்னர் மாணவர் அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய பாதயாத்திரை யொன்றில் கலந்து கொள்ளும்படி அவளது கல்லூரிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்ட கம்பீர இளைஞனாக அவளுக்கு முதன்முதலில் அறிமுகமான சங்கர், இவ்வளவு விரைவில் ஆயுதப் பயிற்சிக்காக அக்கரை செல்லும் முடிவெடுப்பான் என்று அவள் எண்ணியிருக்க வில்லை.
சங்கர் அப்பொழுது ஏ.எல். இறுதியாண்டு மாணவன். மாணவர் போராட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என்றால் அவனுக்கு தண்ணீர் பட்ட பாடு. சிறையி லிருந்து தம் மாணவர் தலைவர் விடுதலையாகி வந்தபோது ரயில் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பின் வெற்றிக்கெல்லாம் சங்கரின் பங்களிப்பு அநேகம்.
சங்கரின் மாணவ வாழ்வு முடிந்த வேளையில் அவன் சார்ந்த மாணவர் இயக்கமும் அதன் போராட்டங்களும் ஏனோ அமைதிக்கு வந்தன.
ஆனால் நிர்மலா மாத்திரம் அப்படியில்லை.
அவன் இதயத்தை அமைதியில்லாமல் அலைக்கழித்து ப10தாகரமாக ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள்.
குழப்பம்!
தடுமாற்றம்!
மயக்கம்!
தவிப்பு!
எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து புதியதொரு இலட்சிய வாழ்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வளர்ந்தபோது அப்பாவின் அனுபவ முத்திரைகள் அவனை அனாயாசமாக வழிகாட்டும்.
~~மகன்! ஒரு கம்ய10னிஸ்டா வாழ்வது எவ்வளவு புனிதமானது தெரியுமா. வெறுமனே கட்சி அங்கத்தவனாகிற பெருமை மட்டும் போதாது. மார்க்சியம் ஒரு வாழ்க்கை முறை. உயிரோட்டமான வாழ்க்கை அது. ஆனால் எங்கடை கட்சியில் பலர் அதை உணரத் தவறிவிட்டாங்கள். தமது சொந்த நலனுக்காக, ஒரு நாள் மகிழ்ச்சிக்காக, சில பத்து ரூபா லாபத்திற்காக எல்லாம்கூட தங்கள் ஆன்மாவைக் கொன்றழிச்சாங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு சுயநலமும் சோம்பேறித்தனமும் கட்டோடு இருக்கப்படாது. அவனுக்கென்று இருக்கும் ஆசாபாசம் எல்லாமே ஒரு இலட்சிய வாழ்வுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். காதல், திருமணம் இவற்றிலெல்லாம் இது மிகமிக முக்கியம்||
ஒரு மத்தியதர வர்க்கப் பெண்ணான நிர்மலாவின் கனவுகள், கற்பனைகள், மோக மயக்கங்களின் பலவீனங்களைப் புரியும் அளவிற்கு இந்த வழிகாட்டல்கள் சங்கருக்கு போதுமானதாக இருந்தது.
எந்தவகையிலும் அவள் அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கமாட்டாள் என்பது அவனுக்கு உறுதியாயிற்று.
அதேசமயம் பிழையான கற்பனையிலோ அல்லது ஆற்றாமை பரிதாபத்திலோ அவள் இவனில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன என்பது இவனுக்கு தெளிவாகத் தெரிந்தது. அந்த எச்சரிக்கையில் மிகவும் எட்ட நின்றே அவன் தன் காதலை வளர்த்துச் சென்றான். அவனது அந்த விலகலில் மிளிர்ந்த அலட்சியம்கூட அவளுக்கு விருப்பமானதாகவே இருந்தது.
அந்த அலைகடலின் மத்தியில் பழுதடைந்த படகில் எல்லோரும் அச்சத்துடன் பரபரப்பாயிருக்கும்போது இவனால் மட்டும் அந்த மிருதுவான உணர்வுகளில் லயிக்க முடிந்தது.
அந்த ஐம்பொன் வளையலை மீண்டும் ஒருதடவை கைகளால் தடவிப் பார்த்துக் கொண்டான்.
அவனுக்கு உள்@ர சிரிப்பாக இருந்தது.
அவள் நினைவை இதயத்தில் மட்டும் சுமந்தால் போதாது. கண்களிலும் சுமக்க வேண்டும் என்ற பேராசை அவளுக்கு! அவன் கரத்தில் காணும் போதெல்லாம் கண்கள் கனத்து குழம்ப வேண்டுமோ!
அவன் ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா செல்வதை நாதன் கூறியபின்பு திரும்பிவர ஆறுமாதங்கள் செல்லும் என்று கூறினாலும், அது வருடக் கணக்கில்கூட செல்லும் அல்லது அவனைக் காணாமலேயே போகக் கூடும் என்ற அச்ச மேலீட்டில் அவள் ஒருகணம் அழுதுவடிந்தவள், மறுகணம் நாதனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு பரபரப்பாக கையில் கிடந்த காசை பொறுக்கி எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடிப்போய் அவசர அவசரமாக அதை வாங்கி நாதனிடம் கொடுத்தனுப்பியிருக்கிறாள்.
காபறேட்டரை கழற்றி புதுப் பிளக்கை மாற்றியபின்பு முழுமூச்சாக பழுதடைந்த எஞ்சினை இயக்கியபோது பந்தயக் குதிரையின் வேகத்தோடு அது பட்டென்று வேலைசெய்ய ஆரம்பித்தது.
எல்லோர் முகத்திலும் ஆனந்தக் கிளர்ச்சி.
மீண்டும் புதுவேகத்தில் படகு வடக்குத் திசையைக் குறிவைத்து ஓட ஆரம்பித்தது. ஓட்டிகளின் தலைவன்போல் சக ஓட்டிகளை இதுவரை அதட்டி, மிரட்டி, எரிந்து விழுந்தவன் அதற்கெல்லாம் சேர்த்து மன்னிப்புக் கேட்பவன்போல் மிகக் குழைவாக இப்பொழுது அவர்களுடன் பேச்சுக் கொடுத்தான்.
~~பெற்றோலை வடிச்சு ஊத்தச் சொன்னா, கரையில் நிக்கிறவனுகளுக்கு எங்க விளங்கப்போகுது. அப்பிடியே ஊத்துவாங்கள். நாமதான் நடுக்கடலில் நிண்டு தத்தளிக்கிறது. எல்லோரும் கழகம் கழகம் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு வந்திடுவாங்கள். ஆனால் கொடுத்த வேலையை மட்டும் ஒழுங்கா செய்யிறதில்லை.||
முன் அணியத்தில் நின்றவன் இப்போது உற்சாகமாக பேச்சில் கலந்து கொண்டான்.
~~நாங்கள் கழகம் என்றபடியால் இப்படியெல்லாம் கஸ்டப்படுறம். கூலிக்கு கடத்தல் வண்டி ஓட்டியா பிடிச்சிருந்தா இப்படியெல்லாம் கஸ்டப்படுவானுகளா||
~~அவனுகளுக்கு காசுலதான் குறி. விடுதலையென்று வந்தால் மட்டும்தான் இப்பிடி கஸ்டங்களை சகிச்சுப் போகலாம்.||
தலைமை ஓட்டி பெற்றோல் மணந்ததால் ஏற்பட்ட அருவருப்பை காறி கடலில் துப்பிவிட்டுச் சொன்னார்,
~~தரையில் போற வண்டியெண்டா ஆமி துரத்தினா எப்படியும் விட்டிட்டாவது ஓடித் தப்பலாம். இது கடலிலை போற வண்டி. நேவி துரத்தேக்க எஞ்சின் பழுதாப்போன பின்பு நாம என்ன செய்யிறது. இந்த நாற்பது எஞ்சின் வாங்கின காலத்திலிருந்தே இப்படித்தான். புதிசு ஒன்று வாங்க வேணுமெண்டு நானும்தான் சதா சொல்லிப் பார்க்கிறன். ஆரு கேட்கிறான்|| என்றவர் உரத்த குரலில் சொன்னார்,
~~ஒன்று மட்டும் நிச்சயம். எனக்கெல்லாம் சாவு கடலிலைதான்||
அந்த வார்த்தைகளை தாங்கமாட்டாதது போல கடல் அலையொன்று துள்ளி யெழுந்து படகை எம்பித் தள்ளியது.
அந்த வார்த்தைகளால் நிலைகுலைந்துபோன அவர்கள் கணநேரம் அமைதியாக இருந்தார்கள்.
எல்லோர் கவனமும் இப்போது அவர் பக்கமே திரும்பியது.
அருகில் இருந்த இளைஞன் ஒருவன் சங்கரின் தோளைப் பற்றிக் கொண்டு காதுக்குள் குசுகுசுத்தான்.
~~இவர்தான் சேரன். சிவராசா பொலிஸ் கொலை வழக்கில் நாலாவது எதிரி. மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி வந்தவர்|| ஓட்டிகளின் தலைவன் போல் கம்பீரமாக அந்தப் படகின் பின்புறமிருந்த கரிய, நெடிய உருவத்தைக் காட்டிக் கூறினான்.
படகில் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது குறிப்பாக அவரைப் பார்க்கத் தொடங்கினார்கள்.
~~இவர் திறமையான ஓட்டி. நேவிக்கு பயமே கிடையாது. சிறையில் ஆறு வருசமா இருந்தவர். தப்பிவந்த பின்பும் இப்பிடி கடலில் கஸ்டப்படுகிறார்.||
எல்லோரும் வாஞ்சையுடன் சேரனைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் நிழலாடிய சிநேகபாவத்தை இனம்கண்ட ப10ரிப்பை வெளிக்காட்டாமல் சேரன் தன் வேலையிலேயே கருத்தாக இருந்தான்.
படகு முன்னிலும் வேகமாகக் கடலைக் கிழித்துக் கொண்டு பறந்தது. படகில் இருந்தவர்கள் தடுமாறித் தத்தளித்தார்கள். சங்கர் மடியில் மீண்டும் முகம்வைத்துப் படுத்த அந்த இளைஞன் ஒவ்வொரு துள்ளலுக்கும் மெதுவாக முனகுவது கேட்டது. சீறி அடிக்கும் கடல்நீர் முகத்தில் பட்டுத் தெறித்தபோது கண்கள் உப்பு நீரால் எரிந்து சிவந்தது.
உடம்பின் அத்தனை எலும்புகளும் முறிந்து நொறுங்குவது போன்ற வேதனை. வாய்விட்டு அழமுடியாத ஆண்மையின் கம்பீரத்தை பல்லைக் கடித்து சகித்து பொறுத்துக் கொண்டு அந்த இளைஞர்கள் கடல் அலையின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் பரிதாபமாக ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
~~தம்பியவையளுக்கு இப்பவே உடற்பயிற்சி கொடுக்கிறம். இதுதான் முதல் பயிற்சி. எப்படி இருக்கு|| என்று சிரித்துக் கொண்டே சேரன் படகின் வேகத்தைக் குறைத்தான்.
வேகம் குறைந்தது. எல்லோருக்கும் ஆறுதலாக இருந்தது.
அவன் நகைச்சுவையை இப்போது ரசித்துச் சிரித்தார்கள்.
படகின் வலப்புறமிருந்து நிலவு தோன்றி கர்ப்பிணிப் பெண்ணின் அமைதியுடன் மெல்ல மெல்ல மேலெழுந்து வந்தது. கடலில் ஓரளவு வெளிச்சம் பரவத் தொடங்கியது.
~~நல்ல வேளை! பின்வெளிச்சம் வரமுன்னமே ஆழ்கடலை தாண்டிட்டம்|| சேரன் நான்கு புறமும் கழுத்தை வளைத்து சுற்றிப் பார்த்துக் கொண்டு சொன்னான். ~~ஆனாலும் சொல்ல ஏலாது. கழுதைகள் இங்கினக்கையும் போட்டிட்டுக் கிடப்பாங்கள். எதுக்கும் அணியத்திலேயே நிண்டுக்கோ|| என்று எச்சரித்தவன் ~~இன்னும் கொஞ்சம் வேகமாக்கலாம்தான்; ஆனால் பாவம் தோழர்கள், சரியா கஸ்டப்படுறாங்கள்|| என்று இவர்களைப் பார்த்து அனுதாபத்துடன் கூறிமுடித்தான்.
இப்போது படகின் வேகம் சாதாரண நிலைக்கு வந்தது. ஒரு கடல் பயணத்தின் உல்லாசத்தை அனுபவிக்கும் அளவிற்கு அது போதுமானதாக இருந்தது.
நிலவு வெளிச்சம் இப்போது தாராளமாக கடற் பரப்பெங்கும் பரவி குளுமை ஊட்டியது. மேகங்கள் விதம்விதமான பயங்கர மிருகங்களின் வடிவம் குலையாமல் படகின் ஓட்டத்திற்கு எதிர்த்திசையில் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்தன. சங்கர் படகின் வலதுபுறத்துக்கு மெதுவாக நகர்ந்து வந்து நடுவானத்திற்கு ஏறிவரும் நிலவின் அழகை தன் பாட்டிற்கு ரசிக்கத் தொடங்கினான். அவன் மடியில் கிடந்த அந்த இளைஞனும் இப்பொழுது களைப்பு நீங்கி நிமிர்ந்து உட்கார்ந்தான். படகு வடக்கே தெரியும் அருந்ததி நட்சத்திரத்தை குறிபார்த்துச் சென்றுகொண்டிருந்தது.
அருந்ததி நட்சத்திரத்தை எப்படி அடையாளம் காண்பதென்பதை நிர்மலாதான் அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்தாள்.
வடதிசையில் சற்சதுரமான நான்கு நட்சத்திரங்கள். அந்த சதுரத்தின் வலக்கை கீழ்நட்சத்திரத்தினைத் தொடர்ந்து ஒரு கோடு போட்டது போல அடுத்தடுத்து இரு நட்சத்திரங்கள். அந்த இரண்டாம் நட்சத்திரம்தான் வசிட்டராம். அதற்கு அருகில் எப்பொழுதும் அந்த நட்சத்திரத்தோடு ஒட்டிக் கொண்டிருக்குமாம் அருந்ததி நட்சத்திரம்.
ஒவ்வொரு நட்சத்திரமாக விரலை நீட்டி சுட்டிக்காட்டி அருந்ததி நட்சத்திரத்தை அடையாளம் காட்டிவிட்டு குறும்பாகச் சிரித்தாள் நிர்மலா.
~~தன்னைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாமாம். வாழ்ந்தால் உன்னோடுதான் என்று உறுதியாக நம்பட்டுமாம்.||
நாதன் விரசமேதுமின்றி அவன் உணர்ச்சிகளைக் கௌரவித்து அவள் செய்தியைக் கூறினான்.
சங்கர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
படகில் ஏறுமுன் மணலில் இருந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
~~வீட்டை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொள். தம்பி தங்கச்சிக்கு எந்தக் காரணம் கொண்டும் படிப்பைக் கைவிட வேண்டாம் என்று சொல். நான் வந்து அவர்களைக் கவனிப்பன்||
~~நீ வீட்டைப் பற்றி யோசியாதை. நான் எல்லாத்தையும் பார்க்கிறன்|| நாதன் ஆதரவோடு கூறினான்.
~~நீயும் மிகவும் கவனமா வேலைசெய். கண்டபடி ஓடித் திரிஞ்சு ஆமி பொலிசிலை மாட்டிடாதை||
பொதிகளை ஏற்றியபின்பு, படகில் ஏறுவதற்கு இடுப்பளவு ஆழத்தில் அவர்கள் இறங்கி நடந்தார்கள்.
இருவரும் உறுதியாக கைகளைப் பற்றிக் கொண்டார்கள். கணநேரம் எதுவும் பேசத் தோன்றாமல் மௌனமாக இருந்தார்கள். அதன்பின் சங்கரும் அவசர அவசரமாக ஓடிப்போய் படகில் ஏறினான். முண்டியடித்துக் கொண்டு இடத்தைப் பிடித்தவன் சப்பாணை கட்டிக் கொண்டு அமரவும் எஞ்சின் உறுமத் தொடங்கியது. அது புறப்பட்ட வேகத்தில் ஏற்பட்ட தள்ளாட்டத்தில் நாதனுக்கு கைகளை அசைத்து விடைகொடுக்கவும் அவனால் முடியவில்லை. மானசீகமாகத் தனக்குள் கூறிக்கொண்டான்,
~~நண்பனே! நாம் மீண்டும் சந்திப்போம்||
வானம் இப்போது நிர்மலமாகக் காட்சி கொடுத்தது. முகில் கூட்டங்களின் அந்தப் பயங்கர மிருக தோற்றங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்துவிட்டன. நிலவும் நட்சத்திரங்களும் ப10ரண ஆதிக்கம் செலுத்தின. வடதிசையில் இடையிடையே வெளிச்சமொன்று தோன்றி மறைந்தது. எல்லோரும் ஆவலோடு அதை நோக்கினார்கள்.
இந்தியக் கரை அது!
அந்த வெளிச்சம் இப்போது துல்லியமாகத் தெரிய ஆரம்பித்தது. படகினுள் இப்பொழுது சலசலப்பு அதிகரித்தது. வாந்தியெடுத்து சோர்வுற்றவர்கள் கூட தமது செய்கைக்காக வெட்கப்படுபவர்கள் போல் நாணிக் கொண்டு அந்த மகிழ்ச்சியில் கலந்;தார்கள்.
வெளிச்சம் வரவர பெரிதாகி பிரகாசித்தது.
பயணம் வெற்றிகரமாக முடிந்ததில் எல்லோருக்கும் நிறைவு. சங்கர் அந்த நிறைவிலும் ஒரு கலக்கத்தடன் தவித்தான்.
~~ராசா! நீ திரும்பி வருவாய் என்ற உறுதியோட இருக்கிறன். நான் சாகேக்கை என் முன்னால் நீ எப்பிடியும் நிற்க வேணும்.||
அம்மா இறுதிநேரத்தில் அவனை வழியனுப்பிய வேளையில் அவன் தலைமயிரைப் பற்றிப் பிடித்து கன்னத்தில் அழுத்திக் கொஞ்சிக் கொண்டு கூறியபோது ஏனோ அவனது உறுதி ஒருகணம் ஊசலாடியது. அவனது தம்பியும் தங்கையும் அந்தக் காட்சியை மிரளமிரள விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. விபரீதமாக ஏதோ நடக்கப் போகிறது என்று மாத்திரம் உணர்ந்தார்கள்.
அப்பா அதே கம்பீரத்துடன் தலையசைத்து வழியனுப்பினார்.
படகு கரையை நெருங்கிவிட்டது. முன்னே நின்ற ஓட்டி ஒருவன் நீண்ட கம்பை விட்டு கடலின் ஆழத்தை அளந்து திருப்திப்பட்டுக் கொண்டான்.
எஞ்சின் நிறுத்தப்பட்டது.
வண்டி வேகமாகத் திருப்பப்பட பட்பட்டென்று படகிலிருந்து எல்லோரும் கடலில் குதித்தார்கள். தண்ணீர் இடுப்பு மட்டத்திற்கு சற்று கூடுதலாக இருந்தது.
~~அப்படியே நடந்து போங்கள். அந்த விளக்கடியில் ஆட்கள்; காத்துக் கொண்டிருப் பார்கள். நாங்கள் வருகிறோம்||
சேரன் கைகளை படகில் ஊன்றியபடி தலையைக் குனிந்து கடலைப் பார்த்துக் கூறிக்கொண்டு விடைபெற்றான்.
சங்கர் திரும்பிப் பார்த்தான். இப்பொழுது சேரன் அதே கம்பீரத்துடன் எஞ்சின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
~~ஒன்று மட்டும் நிச்சயம். எனக்கெல்லாம் சாவு கடலில்தான்||
அவன் வார்த்தைகள் கடல் அலைபோல பாய்ந்து வந்து மீண்டும் ஒருதடவை செவிப்பறையில் முட்டிமோதியது.
கடல் அன்னை என்ன அவ்வளவு மோசமானவளா!
கைகளில் உள்ள பார்சல்களை நனைந்துவிடாதபடி தலைக்குமேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு கரையை நோக்கி எல்லோரும் கூட்டமாக நடந்தார்கள். கரையில் இறங்கியதுமே, ~~உடுப்பை மாற்றிக் கொண்டு அவசரமாகப் புறப்படுங்கள். இங்கு அதிக நேரம் சுணங்கக் கூடாது|| என்று இவர்களை இனங்கண்டவர்கள் போல் அங்கு காத்திருந்த ஒருவர் உசார்ப்படுத்தினார். எல்லோரும் அவசர அவசரமாக தலையைத் துவட்டி சாரத்தை மாற்றிக் கட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.
வேகமாக நடந்து வந்து சதுப்பு நிலங்களையும், தாளைப் பற்றைகளையும் தாண்டி தார்வீதிக்கு வந்தார்கள். சங்கர் ஏதோ நினைவுக்கு வந்தவனாக அப்பொழுது கைகளில் இருந்த ஈரக் காற்சட்டைப் பையில் கைகளை விட்டுத் துளாவினான்.
மனம் சோர்வுற்று துணுக்குற்றது.
அந்த ஐம்பொன் வளையலைக் காணவில்லை.
கடற்கரையில் அல்லது கடலில் விழுந்திருக்க வேண்டும்!
இதயம் கவலையால் துவண்டது.
~~என்னை மன்னித்துக் கொள்|| என்று அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டது அருகில் சென்ற ஒருவனுக்கும் இலேசாகக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

-------------------------------------------------------

03

பனிமூட்டங்கள் வானத்து நட்சத்திரங்களை விரட்டி அடித்து விட்ட மமதையில் மலைமுகடுகளை தம் இஸ்டம் போல் ஆலிங்கனம் செய்த மயக்கம் தெரியாத பரவசத்தில் அப்படியே வீழ்ந்து உறங்கிக் கொண்டிருந்
தன. சந்திரனின் ஒளி மாத்திரம் இந்தக் காட்சிகளை கண்டும் காணாதது போல இடையிடையே தெறித்துச் சிதறியது. புற்தரையில் படிந்த பனித்துளிகள் பட்டு அந்தக் களித்தரை சேறாக மாறிக் கொண்டிருந்தது. சவுக்கு மரங்கள் மட்டும் நலுங்காமல் குலுங்காமல் அமைதியாக பனித்துளிகள் பட்டு அழுது வடிந்துகொண்டிருந்தன. பனித்துளிகள் சொட்டுச் சொட்டாக கீழே விழும் சத்தம் அந்த நிசப்தமான அமைதியில் அவனை உஷாராக்கிக் கொண்டிருந்தது.
சற்றைக்கொரு தடவை தலையைக் குனிந்து நிலத்தில் ஏதும் தென்படுகிறதா என்று கவனித்துவிட்டு திருப்தியுடன் அப்படியே நின்றான் சங்கர். முகாமின் தெற்குப்புறக் காவலில் அவன். இருபது நிமிடத்திற்கு ஒரு தடவை ~றவுண்ட் டிய10ற்றி| யில் வருபவன் அவனை தாண்டிச் செல்லும் போது ஓரிரு நிமிடமாவது ஏதாவது பேசிச் செல்லும் வழமைக்கு மாறாக அன்று ~உம்| என்று மூச்சை இழுத்து வைத்துக் கொண்டு நிற்பது மனதிற்கு என்னவோ போல் இருந்தது.
றவுண்ட் டிய10ற்றி போன பின்பு மீண்டும் அவன் வரும்வரை அந்த கும்மிருள் தான் துணை.
கழுத்தில் மாலையாகத் தொங்கிக் கொண்டிருந்த விசிலை சற்றைக்கொரு தடவை இடது கையினால் நெருடிவிட்டுக் கொண்டிருந்தான். வலது கையில் பற்றிப் பிடித்திருந்த ~கிளிப் கிறனேட்| கையில் பரீட்சயமாகாமல் இன்னும் உறுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் காவலில் நிற்போருக்கு கிறனேட் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு குறுந்தடி மாத்திரம் தான். யாராவது கெட்ட நோக்கத்துடன் முகாமிற்குள் பிரவேசிக்க முனைந்தால் விசில் சத்தமெழுப்பி எல்லோரையும் உஷார்படுத்துவதோடு, தற்பாதுகாப்பிற் கான முதலாவது தாக்குதலாக கிறனேட்டையும் வீசி எறியலாம் என்று அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
கால்களில் மாட்டியிருந்த சப்பாத்துகளுக்கு மேல் சொக்ஸ் உள்ள பகுதியில் நீண்ட புற்களில் படிந்த பனித்துளி அவ்வப்போது பட்டு கால்கள் சில்லிடும் போது அவன் பற்களை இலேசாக கெட்டிக் கொண்டு அப்படியே நின்றான்.
இரண்டு மணிநேர கடமையில் அரைமணிநேரம் தான் கழிந்திருக்க வேண்டும்.
அந்த முகாமில் சுமார் நூற்றைம்பது பேர் பயிற்சி பெறுகின்றார்கள். வடக்குப் புறம் இருக்கும் சிறிய கொட்டகையில் முகாம் பொறுப்பாளர், பயிற்றுனர், வைத்தியர் உட்பட முக்கியமானவர்கள் ஆறேழு பேர் வரை தங்குவார்கள். அதற்கு எதிர்ப்புறம் எதிரும் புதிருமாக இருக்கும் நான்கு கொட்டகைகளில் பயிற்சி வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்கப்பால் சமையலறை, வாசிகசாலை, சுகயீன கொட்டகை எல்லாம். நடுவில் பயிற்சி மைதானம் பரந்து கிடந்தது.
சங்கர் அந்த சூழலுக்கு இசைவாக தன்னை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டான். இராணுவப் பயிற்சி அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் கடுமையானதாகவே இருந்தது. ஜீரணிக்க முடியாத நடைமுறைகள் அவனை திக்கு முக்காடச் செய்தன. முதல் நாளே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக றணிங் சோட்ஸ், பெனியன், பாய், பெட்சீட், தகர பீங்கான் கோப்பை என்று கொடுத்தபோது இனம்புரியாத வேதனை நெஞ்சை ஊடுருவிச் சென்றது.
தான் என்ற அகம்பாவம், தனித்துவம் யாவற்றையும் இல்லாமல் செய்து ஒரு கூட்டுறவு உணர்வை வளர்க்கச் செய்யும் நடைமுறைகளுக்கு மிகச் சிரமப்பட்டே அவன் இசைவாக்கிக் கொண்டான்.
குறித்த நேரத்தில் காலையில் எழுந்து பரபரக்க காலைக் கடன்களை முடித்து பயிற்சிக்கு செல்லும் போதும், பீங்கானுடன் நீண்ட வரிசையில் உணவுக்காக நிற்கும் போதும், விருப்பமில்லாத சாப்பாட்டை வேண்டாமென்று மறுக்கவும் உரிமையில்லாமல் அதை எப்படியும் உண்ண நிர்ப்பந்திக்கும் போதும் ஆரம்பத்தில் அவனுக்கு வேதனையாகவும், வெப்புசாரமாகவும் இருந்தது.
~~தோழர்களே! இராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பதே அதன் கட்டுப்பாடு, ஒழுங்கு, கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் தன்மை போன்றவைகள் தான். நாம் எம் விடுதலையில் பிரியமுடையவர்களாக இருக்கலாம். ஆனால் எமது இராணுவத்தின் வெற்றியை எமது விடுதலை உணர்வு மாத்திரம் தீர்மானிக்கப் போவதில்லை. எமது கட்டுப்பாடான கடுமையான பயிற்சியே அதைத் தீர்மானிக்கப் போகின்றது. இங்கு உங்கள் சுயகௌரவம், தனித்துவமான செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டுறவு உணர்வை வளர்ப்பதாகவே இருக்கும்.||
இராணுவ பயிற்றுனர் அடிக்கடி இதைக் கூறுவார்.
பயிற்சியின் போது விடும் தவறுகள் ஒவ்வொன்றிற்கும் தண்டனை வழங்கும் போது, ~~நீங்கள் விடும் தவறுகள் ஒவ்வான்றும் மிகவும் பாரதூரமானவை. இவை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் தண்டனை பெறத் தயாராக வேண்டும். மீண்டும் இத்தகைய தவறுகள் வராமல் இருக்க வேண்டும். இந்த உணர்வு உங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்|| என்பார்.
சங்கர் அந்த வாழ்வை இப்பொழுது ஒருவாறு திக்கு முக்காடி ஜீரணிக்கக் கற்றுக் கொண்டான். வெகுவிரைவில் பயிற்சி முடிய வேண்டும், மீண்டும் ஊருக்குச் சென்று நாதனுடன் கூடி பழையபடி புதிய அனுபவங்களுடன் கழக வேலைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் வென்று வந்தான்.
நாதன், தான் இல்லாமல் தனியாக எவ்வாறு வேலைப்பளுவில் மூழ்கித் திளைக்கின்றானோ என்ற கவலை மாத்திரம் புதிதாக அவனைப் பற்றிக் கொள்ளும்.
எவ்வளவு விசித்திரமான பிறப்பு அவன்.
அவனுடைய முதல் சந்திப்பு இவனுக்கு எப்பவும் இன்பக் கிளுகிளுப்பை ஊட்டும். அந்தச் சந்திப்பின் போதிலேயே அவனது ஜீவனுள்ள வாழ்வின் துடிதுடிப்பை அனாயாசமாக வெளிப்படுத்திக் காட்டினான் நாதன்.
நாதன் பிறந்து வளர்ந்ததெல்லாம் கொழும்பில்தான். யாழ்ப்பாணத்துப் பெண்ணான அவனது தாயின் உறவென்று யாரையும் நாதன் அறிந்ததில்லை. அவன் தந்தை கொழும்பில் ஒரு பணக்காரரின் பிள்ளை என்று அடிக்கடி பெருமையாக பீற்றிக் கொள்வார்.
றோயல் கல்லூரியில் மாணவ வாழ்வை ஆரம்பித்த நாதனுக்கு ஓ.எல் க்கு அப்பால் போகமுடியவில்லை. பதினெட்டு வயதுவரை கிரிக்கெட் மட்ச், கிளப் டான்ஸ், பொப் பாடல் என்பதைத் தாண்டி இவனது உலகக் கண்ணோட்டம் செல்ல வாலிபம் விடவில்லை. வீட்டில் அப்பாவும் அம்மாவும் மோசமாக சண்டை போடும் நாட்களில் அந்தக் காட்சிகளைப் பார்க்க மனமில்லாமல் அப்படியே ஏதாவது கிளப்புக்குச் சென்று விடுவான்.
அரசாங்க நிறுவனம் ஒன்றில் கொழுத்த சம்பளத்துடனும் இலவச சலுகைகள் பலவற்றுடனும் பதவி வகித்த அவன் அப்பாவுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு கசினோதான். அந்த சூதாட்டத்தின் மூலமே எல்லா சொத்துக்களையும் அழித்து சீரழிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுபவர் போல் வன்மத்துடன் இரவு பூராக பொழுதை அங்கேயே கழிப்பார் அவர்.
வீட்டில் பணம், நகை எல்லாம் படிப்படியாகக் கரைந்து போவதைப் பொறுக்க மாட்டாத ஆற்றாமையில் நாதனின் அம்மா வெகு காலத்திற்கு முன்பே சண்டை போட்டுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடன் தனியாக வாழத் தொடங்கி விட்டாள்.
நாதன் அதுபற்றி கவலை ஏதுமின்றி எப்பொழுதும் போல் அப்பாவின் செல்லப் பிள்ளையாக அவருடனேயே இருந்தான். சூதாட்டத்தில் எக்கச்சக்கமாக தோல்வி ஏற்பட்டால் அவர் சோர்ந்துபோய் வீட்டிற்கு வந்து மதுவெறியில் வாய்க்கு வந்தபடி தனக்குத் தெரிந்த தெய்வங்களையெல்லாம் தூசண வார்த்தையால் திட்டித் தீர்ப்பார். அப்பொழுது அவர் வேதனை நியாயமென்பது போல அவருக்கு ஆறுதலளித்து, நாளைய வெற்றிக்கு நம்பிக்கையூட்டி அமைதிப்படுத்துவான் நாதன்.
அவன் முன்னால் யாரும் கலங்குவதும், அழுவதும் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்துவிடும். எப்பொழுதாவது அவர் சூதாட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் போதும். மறந்து விடாமல் எங்கிருந்தாலும் இவனைத் தேடிப்பிடித்து அப்படியே இவன் கையில் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் பூரித்து நிற்பார். ஒரு இரவுக்குள் எப்படியாகிலும் அதை செலவழித்து விட்டு நாதனும் அலட்சியமாக நிற்பான்.
ஒருநாள் மாலையில் அவர் என்றுமில்லாதபடி சோர்வுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
~~நாதன்! நாளையோடு நீ இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும்|| மிகக் கடுப்பாக ஆனால் உறுதியாகக் கூறினார். இவன் பட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்து ஏன் என்று பார்வையாலேயே கேட்டான். அவர் முகத்தில் தொங்கும் தசைகள் அன்று மிக மோசமாக தளர்ந்து போயிருந்தன.
தலையைக் கவிழ்ந்து கொண்டு சோகமாகக் கூறினார்,
~~என்னை வேலையில் இருந்து நிற்பாட்டிட்டாங்கள். இனி எவனும் எனக்கு செப்புக் காசும் தர மாட்டான். இந்த வீட்டை விற்கலாம். கொஞ்சம் காசு வரும். ஏதாவது வியாபாரம் செய்யலாம். ஆனால் உன் அம்மா அதற்கெல்லாம் சம்திக்க மாட்டாள். கிடக்கட்டும். நான் இதை வாடகைக்கு விடப் போறன். விளங்குதா? நீ இனிமேல் உன்பாட்டுக்கு எதையாவது பார். நீ ஒன்றும் பொட்டச்சி இல்லை. ஆம்பிள தெரியுமா!||
~~தெரியும்||
இரு நாட்களின் பின்பு வீதிக்கு தார் ஊற்றும் தொழிலாளர்களுக்கு சுப்பர்வைசராக நாதன் வேலையில் சேர்ந்தான். தார் ஊற்றும் தொழிலாளர்களின் சம்பளம்தான் இவனுக்கும். ஆனால் அவர்களை மேற்பார்வை செய்கிறவன் என்ற கௌரவத்துடன் வேலை.
சுட்டெரிக்கும் வெய்யிலில் கதகதவென்று கொதிக்கும் தாரை அள்ளி உடம்பில் படாமல் அந்தத் தொழிளாளர்கள் லாவகமாக தம் கடமையைச் செய்யும் போது, இவன் வளர்த்துவிட்ட ஹிப்பி தலைமுடியுடன் கையில் சிகரெட்டுடன் நிழல் மரத்திற்குக் கீழ் நின்றுகொண்டு அவர்களை அனுதாபம் நிறைந்த பிரமிப்புடன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பான்.
இரு வாரங்களுக்கு மேல் இவனால் அந்த வேலையில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஓவசியர் வழமையான கெடுபிடியுடன் இவனோடு சீறிப்பாய்ந்த போது... அவர் அதை எதிர்பார்க்கவில்லை.
இவன் ஆவேசத்துடன் ஒரே பாய்ச்சலில் தாவி அவரை தள்ளி வீழ்த்தி...
பொலிஸ்... வழக்கு... என்று எதுவும் இல்லாமல் மிக அமைதியாக அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்றான்.
அதன் பின்பு இருவாரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் இவனுக்கு வேலை கிடைத்தது.
சூதாட்டக் கிளப்பில் அறிமுகமான நண்பர் ஒருவர் மூலம் தனக்கென்று ஒரு கௌரவமான வேலையைப் பெற்ற பின்பு இவன் அப்பா தான் மறக்காமல் தன்பகுதியின் கீழ் நாதனுக்கும் நல்லதொரு வேலையை போட்டுக் கொடுத்தார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் மாத்திரமின்றி, ஏனைய வசதிகளும் மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டிருந்தன. வெகுவிரைவில் தொழிலாளர்கள் குறைபாடுகள் கவனிக்கப்படும் என்று கூறிக் கொண்டு தன்னைப் பலமாக்குவதற்கு நிர்வாகம் வேகமாக இயங்கியது. அதேவேகத்தில் அந்தத் தொழிலாளர்களும் இயங்கினார்கள்.
அங்கு வேலைசெய்யும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும் தமக்கென ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் வேலையை மிகத் துரிதமாக செய்து கொண்டிருந்தார்கள். மதியபோசன இடைவேளைகளிலும், மாலைப் பொழுது களிலும் அவர்கள் கட்டெறும்புகள் போல் ஒருவரோடொருவர் ஓடிஓடிப் பேசுவதும், துடிப்பதும், நெளிவதும்... நாதனுக்கு அந்த வேகம் வெகுவாகப் பிடித்திருந்தது. கண் இமைக்காமல் ஆச்சரியத்துடன் அவர்கள் உணர்வுகளை எடைபோட்டுப் பார்த்து திகைத்து நின்றவன் கூடவே சீரழிந்த அவன் வாழ்வின் கசப்பான அனுபவங்களின் கொடூரங்களையும் நினைத்து தனக்குள் புளுங்குவான்.
ஒரு மாதத்தின் பின்பு தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு நிர்வாகக் குழு தெரியப்பட்ட போது அவர்களில் நாதனும் ஒருவனாக இடம்பெற்றான். மறுவாரம் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்ட போது நாதனும் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாகக் குரல் கொடுத்து சீட்டி அடித்து ஆரவாரித்தான்.
இரவு சாப்பாட்டின் முன்பே அப்பா கடுகடுப்புடன் கத்தினார்,
~~நாதன்! இந்தா பார். நாம ரெண்டு பேரும் வீட்டில் ஒருக்காலும் சண்டை போடல்லை. நான் யாரோடையும் சண்டை போடுறதா இருந்தா அவர்கள என் பகையாளியாத்தான் நினைப்பன். உன் அம்மாவையும் அப்பிடி நினைச்சுத்தான் சண்டை போட்டன். நாளைக்கு பாக்டரியில் நடக்கப்போற வேலைநிறுத்தக் காரங்களையும் என் பகையாளியா நினைச்சுத்தான் சண்டை போடப் போறன். விளங்குதா||
இவன் எதுவும் பேசாமல் சிவந்த அவர் விழிகள் படக் படக் கென்று மூடித் திறப்பதை காலை ஆட்டிக் கொண்டு ஒரு சினிமா பார்ப்பது போல சுவாரசியமாக ரசித்தான்.
~~இப்போது நீ ஒன்றை தீர்மானிக்க வேணும். என்னால் உன்னோடு சண்டை போட முடியாது. ஏனென்றால் நான் உன்னை விரும்புகிறேன். நீ இப்போது எனக்குச் சொல். இந்த பக்டரியில் நீ வேலைசெய்வதா அல்லது நான் வேலை செய்வதா. ரெண்டில் ஒருவர்தான் வேலை செய்ய முடியும். அதை நீயே தீர்மானி|| என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு இவன் முகத்தை வெறித்துப் பார்த்தார்.
இவன் எவ்வித கவனமுமின்றி, ஒருகணம் ஆழ்ந்து சிந்திப்பவன் போல் கண்களை மூடித் திறந்துவிட்டு பட்டென்று கூறினான்,
~~நீங்களே வேலை செய்யுங்கள்||
அவர் மறுபேச்சின்றி அவன் முகத்தைக் கூட ஏறெடுத்தும் பாராமல் கைகளை ஆட்டிக் கொண்டு ரயில் பயணம் போகின்றவர் போல் படுக்கையறைக்கு தள்ளாடிச் சென்று கட்டிலில் அப்படியே தொப்பென்று விழுந்தார். சிறிது நேரத்தில் உள்ளே இருந்துகொண்டு கத்தினார்,
~~நாதன்! மை டியர் சன். தாங்கிய10. குட்நைற்!||
~~குட்நைற்!||
இரண்டு நாட்களின் பின் நாதன் கையிலிருந்த சில்லறையுடன் தன் நண்பன் ஒருவனைத் தேடி கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றான்.
நகரம் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குள்ளான மாதிரி இடிபாடுகளுடனும், எரிபாடு களுடனும் கோரமாக விழுந்து கிடந்தது. தமிழ்க் கடைகள் எரிக்கப்பட்டு அழிக்கப் பட்ட காட்சியை ஏனோதானோவென்று பார்த்துக் கொண்டு சென்றான்.
இவனை உரசினாற் போல் டாக்சி ஒன்று வந்து நின்றது. உள்ளேயிருந்து நடுத்தர வயது மதிக்கத் தக்க குடும்பம் ஒன்று கலவரத்தோடு இறங்கி மிரண்டு நின்றது. முகத்தில் பொட்டில்லாமல் அந்தப் பெண் என்னதான் தன்னை ஒரு தமிழ்ப் பெண் இல்லை என்று காட்ட முனைந்தாலும் அவர்கள் முகத்தில் தெறித்த பயபீதி முழு விபரத்தையும் தோலுரித்துக் காட்டிற்று.
ஏதோ நினைப்பால் உந்தப்பட்டவன் போல் அவர்கள் அருகில் சென்று கேட்டான்,
~~நான் இதைத் தூக்கி வரவா||
அவன் தமிழில் பேசியது அவர்களுக்கு அச்சத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. தடுமாறிக் கொண்டே தலையசைத்தார்கள்.
ரயில் நிலையத்தின் மறுபுறம் கூச்சலும், ரகளையும் காதைப் பிளந்தது.
கோஷ்டி கோஷ்டியாக தமிழர்களை தேடிக்கொண்டு அவர்கள் அலைந்தார்கள்.
இவர்களைக் கடந்து செல்லும்போது நாதன் மிகப் பலமான சத்தத்தில் அந்தக் குடும்பத்துடன் சிங்களத்தில் சம்பாஷித்துக் கொண்டு வந்ததால் அவர்கள் கவனம் இங்கு திரும்பாமல் பார்த்துக் கொண்டான். அந்தக் குடும்பத்தில் ஒருவன் போல் அவன் தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களை அந்தக் காடையர் கவனத்தில் படவிடாமல் மறைப்பதற்கு கடினமாக நடிக்க வேண்டியிருந்தது.
ரயில் நிலையத்தில் நின்ற பொலிசார் அந்தக் காட்சிகளை வேடிக்கையாக ரசித்துக் கொண்டு அப்படியே இருந்தார்கள். மறுபுறம் காடையர் கூட்டம் ஓநாயின் வேட்கையோடு, கையில் பயங்கர ஆயுதங்களையும் பெற்றோல் தகரங்களையும் தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்தார்கள். வெகுவிரைவில் அவர்களுக்குப் பலியாகிவிடப் போகும் ஒரு குடும்பம் ஒன்று இப்பொழுது அவன் கரத்தில் இருந்தது. அந்த உணர்வே அவனை பம்பரமாய்ச் சுழல வைத்தது. அவர்களை எப்பிடியும் காப்பாற்றி அனுப்பிவிட வேண்டுமென்று உள்@ரத் துடித்தான்.
அவர்களிடம் அவனே கேட்டான்,
~~நானும் உங்களுடன் பாதுகாப்பாக வவுனியா வரைக்கும் வரவா. எனக்கு திரும்பிவர பயணத்திற்கு காசு தந்தால் மட்டும் போதும்||
அவர்கள் அந்தப் பேருதவியை எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண் சத்துரு சங்கார வேற்பதிகம் சொல்லி வருவதன் பலன்தான் இது என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவளாக இன்னும் வேகமாக அதையே திரும்பத் திரும்ப மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
ரயிலின் ஏனைய பெட்டிகளுடன் தொடர்பில்லாமல் தனியாக இருந்த ஒரு பெட்டியாகப் பார்த்து அவர்கள் ஏறிக் கொண்டார்கள்.
ரயில் ஒவ்வொரு ஸ்டேசனிலும் நிற்கும்போது பயங்கரச் சத்தங்களுடன் கூவிக் கொண்டு காடையர்கள் ரயிலை மொய்ப்பார்கள். இவன் வாசலிலேயே நின்று கொண்டு அவர்களது உணர்ச்சியுடன் ஒன்றிக் கலந்தவன் போல் சிநேகபாவத்துடன் சிங்களத்தில் பேசுவான்.
~~இங்கு தமிழர்கள் யாருமில்லை. எல்லோரையும் அடித்துக் கலைத்து விட்டோம்.||
அவர்கள் நகை, பணம் பறிக்கக்கூடிய இடங்களைத் தேடிப் பறந்து கொண்டிருந் தார்கள்.
அவனது போலிச் சண்டித்தனமும், நட்புக் கலந்த பேச்சும், நடத்தையும் அவர்களை உண்மையிலேயே நம்ப வைத்தது.
கண்ணுக்குப் புலப்படாத புதிய உலகம் ஒன்று அந்தப் பயணத்தின்போது அவன் கண்களை நனைய வைத்தது.
மனித இனம் ஒருவரையொருவர் இப்படி அநாகரிகமாகக் கொல்வதும், கொள்ளையிடுவதும், இம்சிப்பதும் அவன் மனதை பெரிதாக ஆட்டிப் படைத்தது. வவுனியா வந்து சேரும் வரைக்கும் அவன் விழிப்பாகவும் துடிப்பாகவும் நடிக்க வேண்டியதாயிற்று.
ஏதோ தன்னால் முடிந்த அளவிற்கு அந்தப் பெட்டியில் இருந்த ஓரிரு குடும்பங்களையாவது பாதுகாத்த மனத்திருப்தியில் இவன் விடைபெறப் போனான். அவர்கள் இவன் கைகளைப் பற்றிக் கொண்டு வாஞ்சையுடன் அழைத்தார்கள்.
~~இல்லை, தம்பி! இப்பிடியே போக விடமாட்டோம். எங்கட வீட்டையும் வந்திட்டுத் தான் போக வேண்டும்.||
அந்தப் பாசமான வேண்டுகோளை அவனால் தட்ட முடியவில்லை.
வவுனியா தாண்டி அந்த ரயில் போகும்போதே அவர்கள் எல்லோரும் அச்சம் நீங்கி பேசத் தொடங்கினார்கள்.
சிலர் இறந்துபோன உயிர்களுக்காகவும், இழந்துபோன உடைமைகளுக்காகவும் அழுது குளறவும் துணிவு பெற்றார்கள்.
நாதன் மனம் குழம்பித் தவித்தான்.
அந்த மக்கள் இவனிடம் நிறையவே வேண்டியிருந்தார்கள்.
சங்கருக்கு நாதன் வெகு சுவாரசியமாகத்தான் அறிமுகமானான். கொழும்பிலிருந்து வந்த சி.ஐ.டி ஒருவனை பிடித்திருப்பதாக சங்கரிடம் அவன் தோழர்கள் கூறியபோது ஆர்வமேலீட்டில் அவன் வேகமாக அங்கு சென்றான்.
தன்னைச் சுற்றி நடப்பது என்னவென்று தெரியாத குழந்தைத்தன மருட்சியுடன் எல்லாவற்றையும் வேடிக்கையாக ரசித்துக் கொண்டிருந்த நாதனைப் பார்த்த வுடனேயே அவன் கண்ணில் நிழலாடிய வசீகரம் பட்டென்று இவனைச் சுண்டி யிழுத்தது. அவன் பற்றிய விபரங்களையும், அவனை கொழும்பிலிருந்து அழைத்து வந்தவர் கூறிய விபரங்களையும் பார்த்த பின்பு அவன் எவ்வளவு பெரிய மனிதாபிமானி என்ற உணர்வு சங்கருக்கு அவனில் அளவு கடந்த பிரியத்தை ஏற்படுத்தியது.
பாசமுடன் அவனை அணுகினான்.
தமிழீழப் போராட்டம் ஒரு மனிதாபிமானப் போராட்டம் என்பதையும் அதை தமிழர்கள் மாத்திரமின்றி சகல மனிதாபிமானிகளும் ஆதரிக்க வேண்டும் என்பதையும், அது எங்ஙனம் ஒரு சமதர்ம ஆட்சிக்கு வழி வகுக்கப் போகின்றது என்பதையும் சங்கர் மிகச் சிரமப்பட்டு புரிய வைத்தான். சமதர்ம ஆட்சியின் அவசியம், புரட்சியின் தேவை பற்றியெல்லாம் விளக்கி சிறீலங்கா அரசின் கொடூரத்தை வீழ்த்துவதற்கு தமிழ் மக்களுக்கு இதுதவிர வேறு வழி இல்லை என்பதையும் பொறுமையாக விளக்கினான். தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் அவர்களின் உரிமை வேட்கை பற்றிக் கூறியபோது நாதன் மெய்சிலிர்த்து நின்றான்.
~~நாதன் தமிழீழம் கேட்பது சிங்கள மக்களின் அன்பிலிருந்து பிரிந்து வாழ்வதற் கல்ல. சிங்கள அரசின் இன வெறியிலிருந்து விமோசம் காண்பதற்குத்தான்.||
~~இது நாங்கள் ஆரம்பித்த யுத்தம் இல்லை. எம்மீது திணிக்கப்பட்ட யுத்தம். இதற்கு நாம் முகங் கொடுத்தேயாக வேண்டியுள்ளது.||
~~எமது தலைமுறை இந்தப் போராட்டத்தில் அழியட்டும். பரவாயில்லை. அடுத்த தலைமுறையாவது நிமிர்ந்து வாழும்தானே.||
~~நாம் குறுகிய வட்டத்தில் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. இது உலகப் புரட்சியின் ஒரு பகுதி. எமது போராட்டத்தின் வெற்றியே சிங்களத் தொழிலாளர் களின் விமோசனத்திற்கும் வழிசமைக்கப் போகிறது||
இரண்டு மணிநேரம் நடைபெற்ற அந்த உரையாடலின் பின்பு நாதனுக்கு புரியாத விடயங்கள் இன்னும் பல இருந்தாலும் அவர்கள் போராட்டத்தின் உயிர்த்துடிப் புள்ள வாழ்வு அவனுக்குப் பெரிதும் பிடித்திருந்தது.
கொழும்பிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களையும், வியாபாரிகளையும் மாத்திரமே தமிழர்கள் என்று கருதியிருந்த நாதனுக்கு யாழ்ப்பாணத்து மண்ணோடும் கடலோடும் ஒட்டி உலர்ந்து உருமாறிக் கொண்டிருந்த அந்த மனிதர்களின் ஜீவனுள்ள வாழ்வு ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.
மறுநாள் நாதன் சங்கரின் வீட்டிற்கு குறித்த நேரத்தில் வந்து கதவைத் தட்டியபோது சங்கர் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
சங்கர் இங்கு வரும் வரைக்கும் இருவரும் வேலையை பகிர்ந்தே செய்து வந்தார்கள். எந்த வேலையைiயும் முழுமையாகவும் முன்யோசனையுடனும் செய்து முடிக்கும் அவன் சாதுரியம் மிக வேகமாக அவனிடம் பல பொறுப்புக்கள் வந்து சேரக் காரணமாயிற்று. அவனது கொழும்பு எழில் நடை யாழ்ப்பாணத்து செம்மண் சேற்றுக்குள்ளும் களிமண் சகதிக்குள்ளும் விழுந்து புரண்டு தடம் மாறிச் சென்றது. செருப்பில்லாமல் திரிவதே யாழ்ப்பாணத்திற்கு உகந்தது எனக் கண்டு விரைவிலேயே வெறும் காலுடனும், சாரத்துடனும் முழுநேர ஊழியனாக மாறினான்.
சங்கருக்கு அவனைப் பிரிந்தது பெரும் துயரம்தான்.
பனிமூட்டம் விலகியதாக இல்லை. ஆனால் நிலவு வெளிச்சம் மாத்திரம் முன்னிலும் சிறிது பிரகாசமாக இருந்தது. ஒரு கரும்பறவை இவன் தலைக்கு மேலாகப் பறந்துபோய் வேப்பமரக் கிளை உச்சியில் நிற்குமாப் போல் இருந்தது. பின் அந்த இடமும் பிடிக்காமல் அந்த இருளிலேயே அது வேறு இடம்தேடி மறைந்தது.
றவுண்ட் டிய10ற்றியில் மூன்றாவது தடவையாக வந்தவன் இம்முறை இவன் அருகில் வந்ததும் நின்றான். இதற்கு முன் பேசாமல் போனதற்கு வருத்தம் தெரிவிப்பவன் போல தலையை ஒருபுறம் சரித்து சிரித்தான். அவன் பெயர் ப10பாலன். எல்லாவற்றையும் துருவித் துருவி அவதானமாக நோட்டம் விடுவான். முகாமில் ஏதும் பிரச்சினையென்றால் இவன் தானே எல்லாவற்றிற்கும் முந்திக் கொண்டு ஒரு தீர்ப்புக் கொடுப்பான்.
~~சோப் காணவில்லையா. அது இந்தக் கரிமுண்டத்தின் வேலையாகத்தான் இருக்கும்.||
~~பிளேற் ஓட்டையாயிற்றா. புல்டோசர்தான் நேத்து கையிலை ஒரு ஆணி வைச்சிருந் தான். அவன்தான் போட்டிருப்பான்.||
~~சமைச்ச ஆக்கள்ல பாலைக் குடிச்சது இந்தப் ப10னைக் கண்ணன்தான். இவன்தான் ராத்திரி பசியில்லை என்று முணுகினவன்.||
அவன் தீர்ப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருந்துவிடுவதால் அவனை பலருக்குப் பிடித்திருந்தது.
இன்று ப10பாலன் மிக குழம்பிப்போய் சங்கரின் முன் வந்து நின்றான். வழமையாக அவன் அப்படி ஒருபோதும் நடந்து கொள்வதில்லை. ஒருவகையில் அது சங்கருக்கு சங்கடமாகக்கூட இருந்தது. அந்த நிசப்தத்தைக் கலைக்க வேண்டி சங்கரே பேச்சை ஆரம்பித்தான். அந்த முகாமில் மறுநாள் காண்பிக்கப்பட இருக்கும் ஆங்கில சினிமாப் படம் பற்றியும், கடமை ஒழுங்குகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதால் ஏற்படப்போகும் அசௌகரியங்கள் போன்ற உப்புச்சப்பற்ற விடயங்களைப் பேசும்போது ~உம்| கொட்டிக் கொண்டிருந்த ப10பாலன் ஒரு முடிவுக்கு வந்தவனாக இவன் தோள்மீது ஒரு கையை அமத்திக் கொண்டு கேட்டான்,
~~சங்கர்! எனக்கென்னமோ ஒரு விசயம் உன்னிடம் பேசவேண்டும் போல் இருக்குது. நீ இதைப் பற்றி யாரிடமும் கதைக்கக்கூடாது. என்ன|| என்று சத்தியம் வாங்கும் சிறுபிள்ளைபோல் ஒரு கையை நீட்டிக் கொண்டு கேட்டான்.
அவனது சிவந்த நீண்ட முகமும், வெளியே தள்ளிக் கொண்டு நிற்கும் இரு கண்களும், தடித்த உதடுகளும்கூட அவன் கூறப்போகும் விடயத்தால் அஞ்சி நடுங்குவதுபோல் துடிதுடித்துக் கொண்டிருந்தன.
ஓட்டப் பந்தய வீரன்போல் கால்களையும் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டான்.
இவன் தனக்குள் சிரித்துக் கொண்டு கேட்டான்,
~~ஏன் என்ன விசயம்! பயப்படாமல் சொல்லு.||
~~நான் இந்தக் கழகத்துக்கு வரும் முன்னர் எத்தனையோ தாபனங்கள் என்னை பயிற்சிக்கு வரும்படி கேட்டது. ஆனால் நான் அப்பிடிப் போகவில்லை. எப்படியும் இந்தக் கழகத்தில் சேருவதென்ற ஆர்வத்தில் பல நாட்கள் தேடி அலைஞ்சிருக்கிறன். நான் எப்படியும் ஆயுதப் பயிற்சி பெற்றால் போதுமென்று மட்டும் இந்தக் கழகத்திற்கு வரவில்லை||
இவனை நோட்டம் விடுவது போலவே அவன் பேசி முடித்தான்.
~~நானும் அப்படித்தான். எனக்கும் எங்கட கழகத்தில் சேர்ந்ததில் முழுத் திருப்தி. பலர் இந்தக் கழகத்தில் சேர்க்கிறம் என்று சொல்லி நல்லா ஏமாற்றப்பட்டு வேறு இயக்கங்களுக்குப் போயிருக்கிறாங்கள்||
ப10பாலன் இன்னும் நெருங்கி இவன் தோளோடு உரசிக்கொண்டு சொன்னான்,
~~நாம உயிரைப் பணயம் வைச்சு ஒரு இயக்கத்தில் சேருறதெண்டால் அது நல்ல இயக்கமா இருக்க வேணும். ஆனால் எனக்கு இப்போது எங்கட கழகத்தைப் பற்றி கேள்விப்படுற சில விசயங்கள் என்ர மனதை பெரிசா சஞ்சலப்படுத்துது||
அவன் பேசும்போது தொண்டை கம்மிப் போய் அப்படியே நின்றான்.
~~கொஞ்சம் விபரமா சொல்லன். என்ன கேள்விப்பட்டனி||
ப10பாலன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு மெதுவாகக் கூறினான்,
~~சங்கர்! இந்த விசயத்தை யாருக்கும் சொல்லிடாதை. இதை யாருக்காவது சொல்லாமலும் இருக்க எனக்கு ஏலாது. எனது நம்பிக்கையான ஒரு நண்பன் மூலம் நான் கேள்விப்பட்டன். எங்கள் பயிற்சிமுகாம் ஒன்றில் சித்திரவதைக் கூடம் ஒன்று இருக்குதாம். நாலாம் மாடி என்று அதை ரகசிய பரிபாசையில் அழைக்கிறார்களாம். அந்த சித்திரவதைக்கூடத்தில் பயிற்சிக்கு வந்த பல தோழர்கள் சித்திரவதைக்குள்ளாகி யிருக்கிறார்களாம். ஒருவனை கொலையும் செய்துவிட்டார்களாம்.||
சங்கர் அதிர்ச்சி மேலிட அவனை உற்றுப் பார்த்தான். அந்த உடம்பு இலேசாக நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கத்திற்கு பனிக்குளிர் பொறுப்பாக இருக்க வில்லை. எச்சிலை விழுங்கி தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான்,
~~நீ அறிந்தது உண்மைதானா|| குரலின் நடுக்கம் தெரியாத வகையில் இருக்கும் பொருட்டு மிக இரகசியமாகக் கேட்டான்.
~~உண்மைதான். இன்று ஆஸ்பத்திரிக்கு சுகயீனம் என்று போன ஒருவன் கூறினான். அவன் நண்பன் ஒருவன் நேரில் இந்தச் சித்திரவதையை அனுபவித்திருக்கிறானாம். அழாக்குறையாக இவனை ஆஸ்பத்திரியில் கண்டு சொல்லியிருக்கிறான்||
~~அவன் ஏன் சித்திரவதைக்குள்ளானான். என்ன பிழை விட்டவனாம்|| சங்கர் இப்போது அமைதியாகவே கேட்டான்.
~~கழகத்தில் அவன் நடத்தை சந்தேகத்திற்குரியதாம். எங்கள் செயலதிபருக்கு அவன் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு கடிதம் எழுதியிருந்தானாம். ஆனால் உண்மையில் அவன் அப்படி ஏதும் எழுதவில்லை. எங்கள் இராணுவம் சோசலிச இராணுவமா அல்லது முதலாளித்துவ இராணுவமா என்று மட்டும்தான் கேட்டு எழுதினவனாம்||
~~அப்படி எழுதியதில் என்ன பிழை? சந்தேகத்தை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம்தானே. அதற்கு சித்திரவதைதான் பதிலா||
சங்கர் குரல் சற்றுச் சூடேறி இந்த நிசப்தத்தை சிறிது கலைத்தது. ப10பாலன் அவனை கையைக் காட்டி அமைதியாக்கிவிட்டு அடங்கிய குரலில் சொன்னான்,
~~நீ சொல்லிறதுதான் நியாயம். நான் நினைக்கிறன்- இது இடையில் நிக்கிற வங்களுடைய வேலையா இருக்க வேண்டும். எங்கள் செயலதிபர் அப்படிச் செய்ய மாட்டார். அவர் படிச்சவர். நியாயமான விசயம் தெரிஞ்சவர். அவருக்குத் தெரியாமல்தான் இதெல்லாம் நடந்திருக்கும்||
ப10பாலன் அவன் தோள்கள் இரண்டையும் தொட்டுக் கொண்டு பேசியவன் ஒரு பெருமூச்சுடன் மெதுவாகச் சிணுங்கினான்.
~~நான் போயிற்று பிறகு வாறன். நீ இதெல்லாவற்றையும் உன்னோட வைத்துக் கொள்ளு||
ப10பாலன் போய்விட்டான். சங்கர் மீண்டும் அந்தத் தனிமையில் கொட்டும் பனியில் நனைந்து கொண்டிருந்தான்.
சங்கருக்கு அந்த முகாம் இப்பொழுது ஒரு மயானத்தின் சூனியத்தைக் கொடுத்தது. அவன் அணிந்திருந்த ய10னிபோம்கூட பனித்துளிகளினால் ஈரம்பட்டு உடலை முட்டும்போது நடுக்கத்தை மீறிய அருவருப்பையும் கொடுத்தது.

------------------------------------------------------------------

04

அந்தச் சிறிய குடிசையில் நாதன் என்றுமே இல்லாத மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கித் திளைத்தான்.
அந்த அனுபவம் அவனுக்குப் புதிதாக இருந்தது.
இவன் சாப்பிட அமர்ந்ததும் கூடவே இருபுறமும் அவர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள்.
அப்பு கண்களால் சிரித்துக் கொண்டு, இவன் ஒவ்வொரு செயலுக்கும் ஒப்புதல் வழங்குபவர் போல தலையை அடிக்கடி ஆட்டிக் கொண்டு அவன் அங்க அசைவுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இடையிடையே ~~தம்பி நல்லா சாப்பிடுங்கோ. காலையிலை சாப்பிட்டதோ தெரியாது|| என்று மட்டும் கூறிக் கொண்டார்.
மறுகரையில் இருந்து கொண்டு ஆச்சி இலையில் சோறும் கறியும் குறையாமல் அடிக்கடி பரிமாறிக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அப்படிப் பரிமாறும்போது ~~எங்கட கறி பிடிக்குமோ, ருசியா இருக்குமோ தெரியாது.|| என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டாள்.
அவனுக்கு அது முதல் அனுபவம்.
அவர்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
அவன் தாராளமாக உண்ணும் வண்ணம் வேறென்ன கைங்கரியங்களைச் செய்ய வேண்டும் என்ற சாகசங்களை தாம் தெரிந்துகொள்ளாமைக்கு கவலைப்படுபவர்கள் போல தமக்குத் தெரிந்த அந்த வார்த்தைகளையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாதன் இவ்வளவு பாசத்துடன் உணவு பரிமாறப்பட்ட அனுபவத்தை இதற்குமுன் ஒருபோதும் அனுபவித்திராத கிளர்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான்.
அந்த வீட்டிற்கு அவன் அடைக்கலம் தேடிவந்து இரண்டு மணிநேரம்கூட சென்றிருக்காது. அதற்குள் இவ்வளவு நெருக்கமான ஒட்டுறவு ஏற்பட்டது அவனுக்கே புதுமையாக இருந்தது.
~ஏய் நில்லு| என்று அதட்டும் அந்தக் குரலை அப்பொழுதும்கூட அவனால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
மயிரிழையில் உயிர்தப்பி அவன் வந்ததுகூட இந்தப் பாசமுள்ள மக்களை தரிசிப்பதற்குத்தானோ என்ற தாபமும் அவனுக்கு ஏற்பட்டது. பணத்தினால் பெற்றுக் கொள்ள முடியாத உறவுகளும் உணர்வுகளும் உலகில் நிறையவே இருக்கின்றன என்பதை இந்தக் குறுகிய கால அனுபத்தில் அவன் பெருமளவிற்கு கற்றுக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் சங்கருக்கு எடுபிடியாக அவன் பணிக்கும் வேலைகளைச் செய்துமுடிப்பதும், மீதி நேரங்களில் அவன் அப்பாவின் அனுபவ முத்திரைகளில் திளைப்பதுமாக இருந்த நாதனுக்கு அந்த வாழ்வில் சங்கமமாக உந்து சக்தியாக இருந்ததே அவன் வாழ்வில் இதுவரை கண்டறியாத ஒரு ஆத்ம சுகத்தை அதில் அனுபவித்ததுதான்.
எத்தனை மனிதர்கள்!
எத்தனை உணர்வுகள்!
தனக்கென்று ஒரு வாழ்வு வேண்டாமென்று உதறித் தள்ளியவனை அரவணைக்கத் தான் இங்கு எத்தனை கரங்கள்.
எந்தச் சுகத்தை எதிர்பார்த்து அவர்கள் இப்படியாக பாசத்தைப் பொழிவதற்கு போட்டி போடுகிறார்கள்.
அவன் கடந்தகால வாழ்வில் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் இப்பொழுது அவனுக்கு வேதனைதரும் முட்களாக நெஞ்சில் தைக்கும்.
ஒரு புதிய வாழ்வுக்காக தன்னை மறந்து உழைத்தான்.
அன்று காலையில் கழகப் பத்திரிகைகளை மூன்று கிராமங்களுக்கு கொண்டு போய்க் கொடுக்கும் போதும் அதே வேகத்துடன்தான் பறந்தான்.
அந்தக் கிராமத்தில் தொடர்புகொள்ள ஆரம்பித்து அதிக நாட்கள் இல்லை. ஆகையால் வேளைக்கே பத்திரிகைகளைச் சேர்ப்பித்துவிட வேண்டும் என்ற துடிப்பில் அவன் வேகமாக பைசிக்கிளை மிதித்துத் தள்ளிக் கொண்டிருந்தான். முன்பெல்லாம் 10 கிலோ மீற்றர் தூரமுள்ள அந்த இடத்திற்கு எப்படியும் ஏதாவதொரு மோட்டார் வாகனத்தையே பாவித்திருப்பான். சைக்கிளில் போவது நேரமும் சிரமமும் அதிகமாயினும் பாதுகாப்பு உத்தரவாதம் அதிகம் என்பதோடு கண்டிப்பான கழக வேண்டுகோள் என்ற உணர்வும் உடலைச் சோர்வடைய விடாமல் அந்தப் பணியை உற்சாகமாகச் செய்ய வைத்தது.
இரு வாரங்களுக்கு முன்புதான் கோபாலன் அந்தக் கண்டிப்பான வேண்டுகோளை உத்தரவாகப் பிறப்பித்திருந்தார்.
~~நாம் மக்களுக்காக வாழ்பவர்கள். அவர்களுக்காக எம்மை அர்ப்பணிப்பவர்கள். மக்களைக் காட்டிலும் அதிக சலுகைகளையும், சௌகரியங்களையும் அனுப வித்துக் கொண்டு அமைப்புகளை உருவாக்கக் கூடாது.||
கோபாலன் கண்டிப்பாகக் கூறினார்,
~~மோட்டார் வாகனங்களை நாம் அவசிய தேவையென்றால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக் காரணம் கொண்டும் ஆயுதம் காட்டி வாகனங்களைக் கடத்தக் கூடாது.||
அந்தக் கண்டிப்புக்கு எதிராக எவரும் எதுவும் சொல்லவில்லையானாலும் சிலர் மாத்திரம் இரகசியமாக சலித்துக் கொண்டார்கள்.
~~எல்லா இயக்கமும்தானே வாகனங்கள் கடத்துது. நாங்கள் மாத்திரம் கடத்தினால் என்னவாம்||
~~நாம் எல்லா இயக்கமும்போல் நடந்துகொள்ளத் தேவையில்லை. எமக்கென்று இருக்கும் கொள்கையிலும் எமக்கென்ற பாதையிலுமே போக வேண்டும்|| அதற்கான பதில்களையும் அவர்கள் இரகசியமாகப் பெற்றுக் கொண்ட பின்பும் தம்பாட்டுக்குள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள்.
அதேபோல அந்த உத்தரவை மீறி கழகத் தோழர்கள் சிலர் வாகனங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இடையிடையே வந்து கொண்டே இருந்தது.
யார் செய்கிறார்களோ இல்லையோ அன்றிலிருந்து நாதனின் சகல பாவனைக்கும் பைசிக்கிள்தான்.
மதியத்திற்குமுன் அந்த வேலைகளை முடித்து திரும்பிவிட வேண்டும் என்ற அவசரத்தில் வேகமாக மிதித்தான். மாலையில் நிர்மலாவை சந்திப்பதாகக் கூறியிருந்தான். அதற்கு முன்னர் மாணவர் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மகளிர் அமைப்பு பாசறைக்கும் இடம் ஒழுங்கு செய்ய வேண்டும். அன்றைய பொழுதுக்குள் அவை எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் பறந்து கொண்டிருந்தான்.
நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாமல் விடப்பட்ட தார்வீதிகள் குண்டும் குழியுமாக வேகத்தை தடுத்துக் கொண்டிருந்தன. அந்த வீதியால் பாதுகாப்புப் படைகளின் எந்த வாகனமும் செல்லும் வழமை இல்லாதபடியால் அந்த மோசமான வீதியையே தேர்ந்தெடுத்திருந்தான். பின் கரியரில் இருந்த பார்சல்களைப் பார்த்து போவோர் வருவோர் எல்லாம் குறுகுறுப்பாக பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையில் அனுதாபமும் இருக்கும், விநோதமும் இருக்கும்.
சந்திகளைக் கடக்கும்போது மட்டும் மிகவும் நிதானமாக கூர்ந்து நடமாட்டங்களை அவதானிக்கும் வகையில் வேகத்தைக் குறைத்துக் கொள்வான்.
மதியத்திற்கு முன்னர் வேலைகளை முடித்துவிட வேண்டும் என்ற அவதியில் அவன் போலவே தோட்டங்களில் இருந்தவர்களும் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கைபட்டு நேரடிக் கண்காணிப்பில் வளர்ந்த வாழைமரங்கள் பிரமாண்ட மான குலைகளைத் தள்ளிவிட்டு தம் கடமையை நிறைவு செய்த பெருமையில் அசையாமல் நின்றன. புகையிலைச் செடிகள் ப10ரித்த சிரிப்பாக இலைகளை நாலாபக்கமும் சிலிர்த்துக் கொண்டு கம்பீரமாகக் காட்சி கொடுத்தன. நெற்பயிர்கள் மாத்திரம் கதிர் மணிகளைச் சுமந்து கொண்டு தமக்குள் இரகசியம் பேசுபவர்கள் போல் ஒன்றோடொன்று சிணுங்கிக் கொண்டு மெதுவாக தாலாட்டுப் பாடின.
அந்தப் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் மனிதர்களுக்கும் ஒரே உற்சாகமான வேலை. நீரிறைக்கும் இயந்திரத்தின் தொடர்ச்சியான சத்தம் நின்றுவிட்டால் போதும் தண்ணீர் கட்டும் வேலையை விட்டுப்போட்டு கிணற்றை நோக்கி பதறிப்போய் ஓடுவார்கள்.
கல்லுக் கிளறும் தொழிலாளர்கள் வரிசையாக நின்றுகொண்டு நிலத்தைக் கொத்தி அந்தப் பாரிய கற்களை வெளியே எடுத்து ஒருபுறமாகக் குவித்து வைத்தார்கள். அந்தச் செம்பாட்டு மண் அவர்கள் மேனியெங்கும் அழகிய ~ஒறேஞ்ச்| கலர் கலவையால் செதுக்கப்பட்ட நடமாடும் சிற்பங்களாக அவர்களை மாற்றியிருந்தது. அவர்கள் எல்லோருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் போல விலா எலும்பு வெளியே தெரிய, வாயில் வெற்றிலைக் காவியேறிய பற்களைக் காட்டிக் கொண்டு, முகத்தில் இனம்புரியாத ஒரு சோகத்தை அப்பிக் கொண்டிருந்தார்கள். கரடிபோல கழுத்தை நிமிர்த்த முடியாமல் தடுமாறுபவர் களாட்டம் அடிக்கடி தலையை தொங்கப் போட்டுக்கொண்டு தம் முகபாவங்களை மற்றவர்கள் பார்த்துக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டார்கள்.
வெண்தலைக்கு மேலாக ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு முதுகில் ஸ்பிறேயரைச் சுமந்துகொண்டு வந்த கிழவர் இவனைப் பார்த்து கையைக்காட்டி மறித்துக் கூறினார்,
~~தம்பி சந்தியிலை ஆமி நிக்குது. கவனம்||
தான் சொன்னது இவனுக்குக் கேட்டதோ என்று உறுதிப்படுத்திக் கொள்ள திரும்பிப் பார்த்தார். இவன் குச்சொழுங்கை யொன்றில் லாவகமாக பைசிக்கிளைத் திருப்புவது கண்டு திருப்திப்பட்டுக் கொண்டார்.
பிரதான வீதிக்குச் சமாந்தரமாகச் செல்லும் ஒழுங்கை வளைந்து நெளிந்து சென்றது. அது முன்னைய பாதையிலும் எப்படியும் இரண்டு கிலோமீற்றராவது கூடுதலாக இருக்கும். கிறவல் பாதையும் சில இடங்களில் மணல் பாதையுமாக அது மாறி மாறி முகம் கொடுத்தது. குடிமனைகளைத் தாண்டிச் சென்றாலும் வாழைத் தோட்டங்களுக்கு மாத்திரம் குறைவில்லை. நீர் இறைக்கும் சத்தமும் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அந்தப் பாதை ஒற்றை யடியாகச் சிறுத்து பின் அதுவும் இல்லாமல் வெறும் நெடுஞ்சிப் பற்றைகளாகவும் மாறி ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது.
கோவில்களைச் சுற்றியுள்ள ஆலமர நிழல்களில் உழைத்துக் களைத்த முதியவர்கள் தம் கூன்விழுந்த உடம்புகளை அப்படியே மல்லாந்து கிடத்தி உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வழமையாக அவர்களை சந்திக்கும் சிவன் கோவிலில் இவனுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளைக் கொடுத்தவுடன் ஆர்வமாக அவர்கள் பெற்றுக் கொண்டு, வழிந்தோடும் வியர்வையோடு மூச்சிரைக்கும் இவனை ஆயாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த இளைஞர்கள் எல்லோருமே இருபத்தைந்து வயதிற்குட்பட்டவர்களாக இருந்தார்கள். எல்லோரும் சுத்தமான சாரமும் சேட்டும் அணிந்திருந்தார்கள். ஒருவர் மாத்திரம் அகன்ற தாடியை அடிக்கடி தடவிக் கொண்டிருந்தார். மறுநாள் நடைபெறப்போகும் உதைபந்தாட்டத்திற்காக ஓய்வெடுக்கும் வீரர்களின் அமைதியான பாவத்துடன் அவர்கள் மிக ஐக்கியமாக இருந்தார்கள். அவர்களுக்கு இம்மாதிரி கழக வேலைகளில் ஈடுபடுவதில் ஆர்வமும் இருந்தது. அதேசமயம் நாளாந்தம் வீடுகளில் இதற்காக முகங்கொடுக்கும் எதிர்ப்புகளை வெல்வதற்கான சாதுரியமில்லாத இயலாமையும் இருந்தது.
நாதன் சேட் பட்டன் இரண்டைக் கழற்றி மெலிந்த அந்த உடல் வெளியே தெரிய காற்றோட்டத்தில் உடம்பை இதமாக்கிக் கொண்டு ஒவ்வொருத்தரின் முகத்தையும் தனித்தனியாகப் பார்த்துக் கூறினான்,
~~பத்திரிகையை நீங்கள் முதலில் படியுங்கள். விளக்கம் தேவையென்றால் உடனுக்குடன் தொடர்புகொண்டு கேளுங்கள். ஒவ்வொரு பத்திரிகைக்கும் காசுக் கணக்கு தந்திட வேண்டும். பத்திரிகை விற்பதோடு மாத்திரம் இல்லாமல் அந்தச் சாட்டிலேயே மக்களுக்கு எங்கள் கருத்துக்களை பிரச்சாரம் செய்து தொடர்புகளை ஏற்படுத்துங்கள்.||
பேசி முடிந்ததும் அவர்கள் முகங்களை ஏறப் பார்த்துக் கொண்டு வாயைச் சிறிது திறந்தபடி ஏதும் கேட்க நினைக்கிறார்களோ என்பது போலப் பார்த்தான். அவர்களோ அதே பாவத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இவன் புறப்படத் தயாரானபோது அவர்கள் ~~சாப்பிட்டிட்டுப் போகலாம். கொஞ்சம் இருங்கள்|| என்று மறித்தபோது, இவன் ~~வேண்டாம். நேரம் இல்லை. வேண்டுமானால் டீ குடிக்கிறேன்.|| என்று கூறவும், அந்தத் தாடிக் கார இளைஞன் எழுந்து சென்றான்.
டீயைக் குடித்து முடித்துவிட்டு ஒரு கடமை முடிந்துவிட்ட நிம்மதியில் பைசிக்கிளைத் திருப்பினான். நேரம் ஒரு மணியைத் தாண்டியிருக்க வேண்டும். வந்த பாதையாலேயே திரும்பவும் சென்றான். மிக நிதானமாக பிரதான பாதையொன்றைக் கடக்கும்வரை அவதானமாகச் சென்று கொண்டிருந்தான்.
அந்த அகன்ற ஒழுங்கை வழமைக்கு மாறான அமைதியுடன் இருந்தது. பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு மெதுவாகச் சென்றவன் இலேசான வளைவொன்றில் சைக்கிளைத் திருப்பும்போது திடுக்கிட்டான்.
ஒரு ஜீப்பும், அதன் பின்னால் ஒரு ட்ரக்கும் ஐம்பது யார் தூரத்திற்கப்பால் பயங்கர மிருகம்போல ப10தாகரமாக மிரட்டியபடி நின்றன.
மறுகணம் சைக்கிளை நிறுத்தித் திருப்பினான்.
பின்புறம் சத்தம் கேட்டது.
~~ஏய் நில்லு!||
நிதானிக்க நேரமில்லை.
பைசிக்கிளை அப்படியே போட்டுவிட்டு, அருகிலிருந்த வேலிக்கு மேலால் தாவிப் பாய்ந்தான்.
படபடவென்று ஓட்டோமற்றிக் ரைபிள்கள் சத்தம் முழங்கி அந்தப் பிராந்தியத்தை அதிரவைத்தன.
அது யாரும் இல்லாத ஒரு பாழடைந்த வளவு. முன்னே கிளிசரியா மரங்களும் பின்னே வாழைமரங்களும் கேட்பாரற்றுக் கிடந்தன. வலப்புறம் திரும்பி அடுத்த முள் வேலியைத் தாண்டினான். துப்பாக்கி வேட்டுக்கள் அப்பொழுதும் கேட்டன. சப்பாத்துக் கால்களின் கசமுசாச் சத்தமும் கேட்குமாப்;போல் இருந்தது. பனைவடலிகளைத் தாண்டி ஓடும் அவன் திரும்பிப் பார்த்தான். பின்னால் யாரும் வருவதைக் காணோம். கையில் முட்கம்பி கீறி பீச்சிடும் ரத்தத்தை அப்படியே வழியவிட்டு தொடர்ந்தும் அந்தத் திக்காலேயே ஓடினான்.
இனி அவர்கள் அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைக்கலாம். அதற்குமுன் பிரதான பாதையைத் தாண்டி இடப்புறமாக அந்தக் கிராமத்திலிருந்து நழுவ வேண்டும்.
நாதன் ஒருகணம் நிலைமையை நிதானித்து எடைபோட்டான். ஓடும்போதே சேட் பையினுள் கையைவிட்டு துளாவி ஏதும் தடயங்கள் இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டு, தேவையற்ற காகிதங்களை வாயில் போட்டு விழுங்கிக் கொண்டான். பனந்தோப்பொன்றை நெருங்கியதும் சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, சேட்டை கழற்றி கையில் எடுத்தான். ஆமி சில வீடுகளில் நுழைந்ததும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. பெண்களின் கீச்சிட்ட அவலக் குரலும் கேட்டது. புதுத் தெம்பை வரவழைத்துக் கொண்டு அந்தப் பனைமரங்களி னூடாகவே பாய்ந்து ஓடினான்.
தெற்கு மூலையில் திரும்பும் போது இடிபோல ஒரு வெடிச் சத்தம் இவனை ஸ்தம்பிக்கச் செய்தது. நிலைகுலைந்து நின்றான்.
கிறனேட்டா? கிணற்று வெடியா?
சரியாக அனுமானிக்க முடியவில்லை.
மேற்கில் பனைவடலிகளுக்கூடாக வாழைத் தோட்டம் ஒன்று தெரிந்தது. அதையே குறியாக வைத்து ஓடினான். வாழை மரங்கள் அவன் பாதுகாப்புக்கு நம்பிக்கை ய10ட்டுமாப் போல இருந்தது.
வாழைத் தோட்டங்களை நெருங்கியதும் நடுவில் ஒரு கிணறும், மூலையில் ஒரு குடிசையும் கண்ணில் பட்டது.
மூச்சு இரைத்தது.
ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையுடன் குடிசையை நோக்கி ஓடினான். திறந்திருந்த கதவைத் தள்ளி உள்ளே சென்று அப்படியே வழிந்தோடும் வியர்வையோடு மூச்சிரைக்க நின்றான்.
அந்தக் குடிசைக்குள் படுத்திருந்த கிழவி துணுக்குற்றுத் திரும்பினாள். எதுவும் பேசமுடியாத தவிப்பில் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கிடையில் வெளியில் ஏதோ அலுவலாய் இருந்த கிழவர் ஒருவரும் இவன் குடிசைக்குள் ஓடுவதைக் கண்டு பதைபதைத்து ஓடிவந்தார். அவர்கள் இருவரும் பேசமுன்னரே இவன் ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து தன்னை சுதாகரித்துக் கொண்டு உறுதியோடு சொன்னான்,
~~நான் கள்ளன் இல்லை. இயக்கத்தைச் சேர்ந்தவன். என்னை ஆமி துரத்துது. எனக்கு எங்காலை ஓடவேண்டும் என்று தெரியாது. இனி நீங்கள் என்ன வேணுமெண்டாலும் செய்யலாம். நான் உங்கள் பொறுப்பு||
அவர்கள் முன்னிலும் அதிர்ச்சியடைந்தவர்களாக ஒருகணம் அப்படியே நின்றார்கள். மறுகணம் அந்த வயோதிபத் தம்பதிகள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு தம் கடமையை உணர்ந்தவர்கள் போல கலவரம் நீங்கி உஷாரானார்கள்.
சுறுசுறுப்பாக அவர்கள் அந்த முதுமையின் தளர்ச்சியை விரட்டியடித்துக் கொண்டு வேகமாக இயங்கினார்கள்.
கிழவர் விரைவான ஒரு நடையுடன் வெளியே சென்றார். போகும்போதே, ~~தம்பி நீ உள்ளே இரு. நான் நிலைமையைப் பார்த்து வாறன். பயப்பிடாதை|| என்று திரும்பிப் பாராமல் கூறிக்கொண்டு சென்றார்.
கிழவி ஒரு வெள்ளிக் குவளையில் நீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கூறினாள்,
~~அப்பன்! நீ யோசியாதை. இங்கால ஒருக்காலும் ஆமி பொலிசு வந்தது கிடையாது. அப்பிடி வந்தாலும் இந்தா தெரியுது பார். இந்த ஓடைக்குள்ளால போயிடு|| என்று குடிசையின் தெற்குப் புறம் புல்மண்டிக் கிடக்கும் சிறியதொரு ஒற்றையடிப் பாதையைக் காண்பித்தாள்.
நாதன் அவர்களின் ஏற்பாட்டில் ப10ரண திருப்தி கொண்டவன்போல் தன் பாதுகாப்பு க்கு உத்தரவாதம் கிடைத்துவிட்ட திருப்தியில் கால்களை நீட்டி அப்படியே நிலத்தில் சாய்ந்தான். அந்த ஆச்சி பரபரப்போடு வந்து ஒரு பழைய புற்பாயை முன்னே விரித்து நின்றாள்.
அவள் முகத்தில் நிழலாடிய தாய்மையின் பரிவு அவன் மனதை அப்படியே கெட்டிப் பிடித்தது.
~~ஏய் நில்லு|| என்ற குரலுக்கு ஒருகணம் அவன் தாமதித்திருந்தாலும் நிலைமை வேறுவிதமாக முடிந்திருக்கும். அவன் உயிர்தப்பி வந்ததுகூட அந்தப் பரிவையும் பாசத்தையும் கண்டுகொள்ளத்தானோ என்ற கேள்வி அவனை பரவசத்தில் ஆழ்த்தியது. அந்த முதுமையின் தளர்ச்சியையும் மீறி குழிவிழுந்த கண்களுக்குள் பிரகாசமாக நிறைந்திருந்த தாய்மையின் அரவணைப்பை அவள் அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
~~நீங்கள் மக்களை நம்புங்கள். அவர்களே உங்களுக்குப் பாதுகாப்பு|| அரசியல் வகுப்பில் இவன் கண்ணிமைக்காமல் வாயை சிறிது திறந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறான்.
~~தோழர்களே! உங்களில் பலர் பாதுகாப்புக் கருதி றிவோல்வரும் கிரனேட்டும் கேட்பதை சகலரும் அறிவார்கள். ஆயுதங்கள் பாதுகாப்பு தரக்கூடியவை தான். ஆனால் நீங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்காவிட்டால் அந்த ஆயுதங்கள்கூட பலனில்லாமல்தான் போகும். நீங்கள் மக்களை நம்புங்கள். அவர்களே பலமான சக்தி||
நாதன் தனக்குள் நகைத்துக் கொண்டான்.
சொல்லி விளங்காத சில உண்மைகள் அனுபத்தில் பட்டென்று பதிந்து விடுகின்றன.
நிமிர்ந்து உட்கார்ந்து அந்தச் சுவரில் சாய்ந்து கழுத்தை வளைத்துப் பார்த்தான்.
அந்தக் குடிசை பழங் காலத்திலேயே கட்டப்பட்டதாயினும் உறுதியாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. முகட்டில் வளை, கம்பு, சிலாகை எல்லாமே பனை மரத்தால் செய்யப்பட்டிருந்தது. மிக அண்மையில் வேயப்பட்டிருந்தபடியால் வெள்ளை நிறத்தில் மிகக் கம்பீரமாக அந்த ஓலைகள் துருத்திக் கொண்டு நின்றன. உள்ளே சாணி ப10சப்பட்ட தரை சுத்தமாக மெழுகப்பட்டிருந்தது. மண் சுவரில் குளவிக் கூடொன்று வட்டவடிவில் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில் இருந்தது. அதன் உள்ளே குளவியொன்று போவதும் வருவதுமாய் இருந்தது. நாதன் அந்தக் குளவிக் கூட்டையே விநோதமாகப் பார்த்தான். ஆச்சி அவனைப் பார்த்துச் சொன்னாள், ~~இதுதம்பி என்ரை மருமகள் ஆருக்கோ பிள்ளை உண்டாகியிருக்கு. பெண்பிள்ளை பிறக்கப் போகுது. எந்த மருமகளுக்கோ தெரியவில்லை.|| என்று கையைவிரித்துச் சிரித்துக் கொண்டு கூறினாள்.
நாதன் எதுவும் புரியாமல் விழித்தான். அவளே விளக்கினாள். நெருங்கிய உறவுக்காரப் பெண்கள் யாரும் கர்ப்பமானால் வீட்டில் இப்படி குளவி கூடு கட்டுமாம். பெண்பிள்ளை பிறப்பதாக இருந்தால் வட்டவடிவிலும், ஆண்பிள்ளை யானால் நீள்வட்டத்திலும் அந்தக் கூடு அமைந்திருக்கும் என்றபோது அவன் தனக்குள் சிரித்துக் கொண்டே அவள் நம்பிக்கையை விநோதமாக ரசித்தான்.
அப்பு வந்ததும் கைகளை அசைத்துக் கொண்டு சொன்னார்,
~~ஆமி உமக்கு வெடி வெச்சவங்கள் என்ன. அங்கனைக்கை கதைச்சவங்கள். நீர் பயப்படாதையும் தம்பி. பொழுது சாயப் போயிடுவாங்கள். அதுக்குப் பிறகு போகலாம்||
அதன்பின் அவர்கள் இருவரும் சேர்ந்து அவசரம் அவசரமாக சமைத்து அவன் அருகில் அமர்ந்து தம் அன்பைக் குழைத்து அவனை திக்குமுக்காடச் செய்து கொண்டார்கள்.
சாப்பாடு மிக சுவையாகவும், எளிமையாகவும் இருந்தது.
கை அலம்பிக் கொண்டு திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்தான் நாதன்.
~~தம்பி கதைக்கிறன் என்று கோவிக்கக் கூடாது. உங்களிட்ட ஒண்டு கேட்க வேணும்.||
அப்பு அருகில் வந்து அமர்ந்துகொண்டார். அவரது இலேசான பொக்கை வாய் பேசமுன்னரே துடிதுடித்துக் கொண்டிருந்தது.
~~தம்பி! நாங்கள் எளிய சாதியள். இண்டைக்கு நீங்கள் பெடியளெல்லாம் சாதி வித்தியாசம் பாராம எல்லா வீட்டிலும் கையலம்பிப் போறியள். எங்களுக்கும் அது விருப்பம்தான். நாங்களும் ஏலுமானதைச் செய்யிறம். ஆனால் இந்தத் தமிழீழம் கிடைச்ச பிறகும் நீங்கள் இப்பிடி வந்து போவியளோ அல்லது முன்னமாதிரி வித்தியாசம் பார்ப்பியளோ. நீங்கள் தமிழீழம் கிடைச்ச பிறகு மாறியிடுவியள் எண்டு கதைக்கினம் உண்மையா||
நாதன் அந்தக் கேள்வியில் பொதிந்துள்ள ஆற்றாமையையும், துயரத்தையும் புரிந்துகொண்டு கணநேரம் மௌனமாக இருந்தான்.
~~ஏன் தம்பி பேசாம இருக்கிறியள். நான் பேசினது பிழையா||
அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவசரமாகக் கூறினான், ~~இல்லை அப்பு! உங்களையெல்லாம் இந்தமாதிரி கேட்கிற அளவுக்கு மோசமாக நடத்திட் டாங்களே என்றுதான் வருத்தப்படுறன்|| என்றவன் குரலை சிறிது செருமிவிட்டுச் சொன்னான்,
~~அப்பு! நாங்கள் தமிழீழம் கேட்கிறது சிங்கள ஆட்சியின் கொடுமையிலிருந்து தப்பிறதுக்கு மாத்திரமல்ல; எல்லாத் தமிழ் மக்களும் சமத்துவமா இருக்க வேணும். சாதி சமய சண்டையில்லாமல் வாழவேண்டும் என்ற நோக்கத்தில் தான்...||
அவருக்கு புரியும்படி கழகத்தின் கொள்கைகளை எளிமையாக்கிக் கூறுவதில் சிரமப்பட்டான். வழமையாக இளைஞர்களுக்கும் கருத்தரங்குகளிலும் பேசும் சொற்களைத் தவிர்த்தும் அவருக்கு விளங்குவது மிகவும் கடினமாகவே இருந்தது.
அப்பு எல்லாவற்றிற்கும் பெரிதாக தலையை ஆட்டிக் கொண்டு சகலதும் விளங்கிக் கொண்டவரென்ற பாவனையில் ~ஓம் தம்பி! அப்பிடித்தான் இருக்க வேணும்| என்று ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பொழுதுபடும்வரை அங்கேயே இருந்து அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தான்.
அந்த வயோதிப தம்பதியருக்கு பிள்ளைகள் நால்வராம். எல்லோரும் கூலிகளாக பதினைந்து பதினாறு வயதிலேயே திருமணம் செய்து பெரும் குடும்பஸ்தர்களாகி விட்டார்களாம். பிள்ளைகளால் உதவி இல்லாவிட்டாலும் பரவாயில்லையாம். உபத்திரவம் இல்லாமல் ஒதுங்கியிருப்பதே போதுமாம். பேரக் குழந்தைகளை மாத்திரம் தங்களோடு அண்ட வைத்துக் கொள்வதில் கொள்ளை இன்பம் அவர்களுக்கு.
இருட்டியபின்பு அந்த வீட்டிலிருந்து சுருக்கமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான் நாதன்.
நிர்மலா இவனை சந்தித்தபோது இவன் தாமதத்திற்குக் காரணமான அந்தச் சம்பவத்தைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றாள்.
~~நான் வேளைக்கே இந்தச் சேதியைக் கேள்விப்பட்டன். ஆனால் உங்களைத்தான் சுட்டாங்கள் என்று தெரியாது||
அவள் குரல் இலேசாக தழுதழுக்கத் தொடங்கியது. சங்கர் நாதன்மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். அதனாலேயே அவளுக்கு எப்பொழுதும் நாதனில் ஒரு கருணை உணர்வு சுரக்கும். சொந்த பந்தங்களைத் துறந்து அந்தப் போராட்டத்தில் தன்னை மறந்து நிற்கும் அவனை பிரமிப்போடு ஒரு கணம் நோக்கியவள், பின்பு கேட்டாள்,
~~நாதன்! சங்கரிடமிருந்து கடிதம் ஏதும் வந்ததா|| அவள் வெட்கம் ஏதுமின்றி சாதாரணமாகவே கேட்டாள்.
~~இல்லை நானும் எழுதினனான். அவனுடைய அப்பாவும் எழுதினவர். எதற்கும் பதில் இல்லை|| ஒரு கொட்டாவியுடன் கூறிமுடித்தான்.
அவள் சோர்வுடன் தலையைக் கவிழ்த்தாள். பின் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு முறையிடுமாப் போல் கூறினாள்.
~~வீட்டில அம்மா அப்பாவுக்கு எங்கட விசயம் தெரிஞ்சிற்று. அவங்களுக்கு சங்கரைப் பிடிக்காது. கடுமையாக எதிர்க்கிறாங்கள். வீட்டிலை இப்ப எப்பவும் ஒரே ஏச்சுப் பேச்சுத்தான். அண்ணா மாத்திரம்தான் கொஞ்சம் ஆதரவு|| அவள் சஞ்சலத்தோடு கூறிக் கொண்டாள்.
அவன் கதிரைக் கைகளில் தாளம் போட்டபடி கேட்டான்,
~~அண்ணாவுக்கு விசயம் தெரியுமா||
~~தெரியும். அவர் என் காதலுக்கு எதிர்ப்பில்லை. ஆனால் உங்கட இயக்கம்தான் அவருக்குப் பிடியாது. அவர்கூட ஏதோ இயக்கத்தோட தொடர்பு வைச்சிருக்க வேNணும். என்ன இயக்கம் என்று சரியாகத் தெரியாது. நீங்கள் மலையக மக்களைக் கவனிக்கிறதில்லை என்று குறைகூறுவார். மலையகத்தையும் சேர்த்து ஈழம் காணவேண்டும் என்பார்.||
கதை வேறுபக்கம் திரும்புவதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஆர்வத் துடன் கால்களை மடக்கிக் கொண்டு சொன்னான்,
~~மலையக மக்களை நாங்கள் கவனிக்கிறதில்லை என்பது பொய். அந்த மக்களின் விமோசனத்திற்கான தீர்வுகளை வடக்கு கிழக்கு மக்களின் போராட்டங்களுக் கூடாகப் பார்ப்பதில் பல தவறுகள் இருக்கின்றன. நாம் எந்தப் போராட்டங்களையும் வலிந்து மலையக மக்கள்மீது திணிக்க முடியாது. அவர்கள் தாமே தமது வருங்காலத்தை கையிலெடுத்துப் போராட வேண்டும். அந்த மக்களே தமது விடிவிற்கான பாதையை தேர்ந்தெடுத்துப் போராட நாம் உதவ வேண்டும். அதேவேளை தமிழீழப் பகுதிக்குள் வந்து குடியேறும் மக்களை சமத்துவமாக நடத்தி அவர்களையும் தமிழீழ விடுதலைப் பேராட்டத்தில் ஒன்று கலக்கச் செய்யும் பணியும் அவசியமாகும். இதனை நாம் செய்து வருகிறோம்.||
~~அது எனக்குத் தெரியும். அண்ணாதான் நாம் தமிழீழம் கேட்பது இனவெறி என்றும், தமிழீழம் என்று சொல்லாமல் ஈழம் என்று சொல்ல வேண்டும் என்கிறார்|| என்று அந்தக் கதைக்கு முற்றுப் புள்ளி வைப்பவள் போல் அவசரமாகப் பேசிவிட்டுக் கேட்டாள்,
~~நான் சங்கருக்குக் கடிதம் போடக்கூடாதா||. இப்பொழுது அதில் கொஞ்சம் நாணம் கலந்திருந்தது.
அவனுக்கு உள்@ர சிரிப்பாக இருந்தது.
~~வேண்டாம் நிர்மலா! முகாமிற்குச் செல்லும் கடிதங்கள் எல்லாம் படித்து தணிக்கை செய்த பின்பே கொடுப்பார்கள். உனது கடிதமும் அப்படிப் போவது நல்லதில்லை.||
~~ஏன் அப்படி? கழகம் காதலிப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் எதிர்ப்பாக இருக்கிறதா||
அவள் வெடுக்கென்று கேட்டாள். புருவம் குறும்புச் சிரிப்போடு உயர்ந்து தாழ்ந்தது.
அவன் அவசரமாக தலையாட்டி மறுத்தான்.
~~இல்லை கழகம் காதலுக்கோ திருமணத்திற்கோ எதிர்ப்பாக இல்லை. காதல் திருமணம் எமது சமூக அமைப்பில் சீதனத்திற்கும் சாதிப் பாகுபாட்டிற்கும் எதிராக இருப்பதால் நாம் அதை வரவேற்கிறோம். ஆனால் பிரச்சினை அதுவல்ல. முகாம் பாதுகாப்புக் கருதி அங்கே உள்ளே வரும் கடிதங்களையும், வெளியே போகும் கடிதங்களையும் தணிக்கை செய்வது அவசியம். இந்த நடைமுறைக் கூடாக உனது கடிதம் போவது எனக்கு அழகாகப் படவில்லை.|| என்று விபரமாகக் கூறினான்.
அவள் சிரித்துக் கொண்டே கூறினாள்,
~~நான் நேரடியாக எனது பெயரைப் போட்டு காதல் கடிதம் எழுதப் போவதில்லை. அவரது சினேகிதன் ஒருவன் போல எழுதுவேன். என் கையெழுத்திலிருந்து அவருக்கு யார் என்று தெரிந்துவிடும்.||
அவள் விடைபெற்றுப் போகும்போது இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது.
இரவுச் சாப்பாட்டை முடிக்கும்போது, அன்று செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் பல குறையில் இருப்பது அவனுக்கு அங்கலாய்ப்பாய் இருந்தது. மதியம் ஆமிக்காரனின் துப்பாக்கி வேட்டிலிருந்து மயிரிழையில் தப்பியதையும், அந்த முதிய தம்பதியினரின் உபசரணையையும் நினைத்துப் பார்த்தான். இந்த அனுபவங்கள் மனதுக்கு இதமாக இருந்தன. சங்கர் இருந்தால் அவனிடம் ஒன்றும் விடாமல் சொல்லி மகிழலாம்.
திறந்திருந்த கதவை தாண்டிக் கொண்டு பாரதி வந்தான். இவனைக் கண்டதும் உற்சாகத்துடன் அருகில் வந்து இலேசாக தொட்டுக் கொண்டு அமர்ந்தான்.
~~கற்பகப் பிள்ளையார் கோவிலடியில் உன் சைக்கிளைக் கண்டம். உனக்குத்தான் ஏதும் நடந்திட்டுதோ என்று பயந்து போனம். நல்லவேளை காயம் ஒன்றும் இல்லையா|| அவன் கலக்கத்துடன் உடலை வருடிக்கொண்டு கேட்டான்.
அவன் சிறிய விழிகள் ஆச்சரியத்தால் அங்குள்ள ஒவ்வொரு பொருளையும் கண்டு அஞ்சுவது போலவும், துயரச் செய்திகளை சதா கேட்டுக் கொண்டு இருப்பது போன்ற சோகத்துடனும் அலைமோதிக் கொண்டிருந்தன.
நாதன் கேட்டான்,
~~சைக்கிளுக்கு என்ன நடந்தது.||
~~ஆமிக்காறர் ஜீப்பால சைக்கிளை மிதித்து நெளிச்சுப் போட்டுப் போயிட்டாங்கள். சைக்கிள் இப்ப எங்கட பொறுப்பிலைதான் றிப்பயருக்குக் கிடக்குது. சைக்கிள் போனால் பரவாயில்லை. நீ தப்பினதே போதும்.||
நாதன் சிரித்துக் கொண்டான். பாரதி தொடர்ந்து பரபரப்போடு கூறினான்,
~~ஆமிக்காறர் வேறை ரெண்டு பேரை ஏற்றிக் கொண்டு போறாங்கள்||
~~ஆர் அவங்கள். ஏதும் இயக்கமே|| கலவரத்தோடு கேட்டான்.
~~இல்லை. அவங்கள் கோப்பிறட்டியிலை வேலைசெய்யிற ஆக்கள்.||
சிறிதுநேர யோசனையின் பின் நாதன் கேட்டான்,
~~வேறு ஏதும் புதினம் இருக்கோ||
~~இருக்குது. அதுதான் உன்னட்ட வந்தனான்.|| என்றவன் குரலை மேலும் தாழ்த்திக் கொண்டு கலங்கித் தவிக்கும் விழிகள் மேலும் சோர்ந்து போகுமாப் போல சோகமாகக் கூறினான்,
~~எங்கட இராணுவம் காலையிலை சி.ஐ.டி என்று ஒருத்தனை பிடிச்சாங்கள். அடிபோட்டு விசாரிச்சாங்கள். அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்த ஆள் அடியிலேயே செத்திட்டான்||
நாதன் திகைத்துப் போய் குழம்பி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தான். பாரதி கலக்கத்துடன் மேலும் தொடர்ந்தான்,
~~பிறகு விசாரிச்சுப் பார்த்ததிலை அந்த ஆள் சி.ஐ.டி இல்லையென்றும் கொஞ்சம் மூளைப்பிசகென்றும் தெரிஞ்சிருக்கு.||
அவன் அதைத் தாங்க முடியாமல் சோர்ந்து துவண்டான்.
மனித உயிர்கள் இவ்வளவு மலிவாகிவிட்டதா? முகம் தெரியாத அந்த அப்பாவி மனிதனின் அவலத்திற்காக தனக்குள் தவித்தான்.
அவனை நம்பி எத்தனை உயிர்கள் வாழ்கிறதோ?
மௌனமான கோபம் ரத்தத்தைச் சூடேற்ற வெறுப்பால் நிலத்தையே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான். பாரதி தன் பாரம் எல்லாவற்றையும் இறக்குவது போல படபடவென்று மீதியையும் சொன்னான்.
~~செத்த பிறகு றிவோல்வரால் தலையில் சுட்டாங்கள். ரத்தம் ஏதும் வரவில்லை. இப்போது ~லைற் போஸ்ற்| இல் கட்டிப் போட்டிற்று காட்டிக் கொடுக்கிற சமூக விரோதி என்று எழுதிவிடப் போறாங்கள்.||
நாதன் பிரமை பிடித்தவன் போல் குழம்பி நின்றான். பற்களை தன்பாட்டிற்கே இலேசாக நறுமிக் கொண்டான்.
~~சீ! இப்படி அப்பாவி உயிர்களைக் கொன்றொழிக்கிறதுக்கு இவங்களுக்கு எப்பிடி மனசு வந்தது. விசாரணையென்றால் சாகிறமாதிரி அடிக்கிறதா. மிருகங்கள்|| சபித்துக் கொட்டினான்.
பாரதி அருகில் இருந்தவாறே சொன்னான்,
~~இதெல்லாம் சும்மா விடப்படாது. நாங்கள் வெளியில இதை மறைச்சாலும் உள்ளுக்க கேட்கத்தான் வேணும். கொமிட்டி மீட்டிங் வாற கிழமைதானே, அதில பார்ப்பம்.||
நாதனும் ~ஆம்| என்பது போல தலையாட்டினான்.
அன்றைய பொழுதின் உற்சாகம் குழம்பிய நிலையில் நாதன் அப்படியே விழுந்து படுத்தான்.

------------------------------------------------------------------------------

05

சங்கர் தன் பொறுப்புக்களை சரிவர நிதானப்படுத்திக் கொண்டான். ஒரு வாரத்திற்கு முன்புதான் அவன் இரண்டாம் இலக்க பிளட்டூன் சார்ஜன்டாக நியமிக்கப்பட்டான். முகாம் பயிற்றுநர் அந்தப் பதவியைக் கையளிக்குமுன்
கண்டிப்பாகக் கூறினார்,
~~இராணுவத்தில் பதவியுயர்வு திறமைக்கேற்ப கிடைக்கும். அதை சரிவரச் செய்யாவிட்டால் என்றுமே முன்னேறமுடியாத வீழ்ச்சிதான். மிகவும் பொறுப்போடு கடமையைச் செய்ய வேண்டும்.||
அவன் அட்டென்சன் பொசிசனிலேயே நின்று கேட்டுவிட்டு கம்பீரமாக திரும்பவும் இராணுவ சல்ய10ட் மரியாதையைச் செய்துவிட்டு வெளியேறினான். புதிய பொறுப்புக்கள் மனதுக்கு உற்சாகமாக இருந்தாலும், கூடவே ஒரு அச்சத்தையும் பரவவிட்டது.
இவனுக்கென்று நிரந்தரமாக விசில் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அதை கழுத்தில் மாலையாகப் போட்டுத் தொங்க விட்டான். தன் பிளட்டூனைச் சேர்ந்த நாற்பது பயிற்சி வீரர்களையும் உடன் கூட்டுவதற்கு அந்த விசில் சத்தம் ஒன்றே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
தனிமையில் அவள் நினைவு வரும் வேளையில் மட்டும் அதை வலதுகையில் காப்புப் போல சுற்றி அழகுபார்த்து மகிழ்வான்.
நிர்மலா அவனுக்குக் கொடுத்த அந்த ஐம்பொன் வளையல் வழியில் தொலைந்து போனபின்பு ஏனோ அவ்வாறு செய்வதில் ஒரு திருப்தி. இந்த இரகசிய சமிக்ஞை அவனுக்கு மாத்திரம் புனிதமான அந்தரங்க ஆலிங்கனமாகும்.
அது எப்பொழுதும் அவனை பரவசப்படுத்தி ஒரு சோக உணர்வோடு அவனை வாட்டும்.
~~இந்தா பார் நிர்மலா! நீ நினைக்கிற மாதிரி என்னால் வாழமுடியாது. நான் பல்கலைக் கழகப் படிப்பை முடித்து ஒரு கௌரவமான வேலை தேடிக்கொண்டு உனக்கு மாத்திரம் சொந்தமானவனாக வாழ என் மனம் இடம் தராது. இந்தச் சமூகத்தை மறந்து மனிதனாக என்னால் ஒருபொழுதும் வாழமுடியாது. எப்பொழுதும் சமூகப் பிரச்சினைகளோடு ஈடுபாடு காட்டும் மனிதனாகவே இருக்கப் பிரியப்படுகிறன்.
இது என் உயிரோடு கலந்துவிட்ட உணர்வு. இந்த உணர்விலிருந்து நான் விலகும்போது எப்படி சோர்வுற்று, சலிப்புற்றுப் போகிறேன் தெரியுமா. வாழ்க்கையே எனக்கு வெறுத்தது போலாகிவிடுகிறது. தயவுசெய்து இந்த உணர்விலிருந்து என்னைப் பிரித்துவிட மட்டும் முனையாதே|| அவன் கண்டிப்பும் கெஞ்சலுமாக அவளிடம் கூறியபோது அவள் குழம்பி நின்றாள்.
அவன் கழகத்தில் சில முக்கிய பொறுப்புகளை எடுத்ததும் அவளிடம் இதைத்தான் கூறினான். கழகத்தை அந்தப் பிரதேசத்தில் பிரபல்யப்படுத்தும் அந்த வேலையில் கடுமையாக உழைக்கப் போகும் அவன் போக்கு தடைப்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இதைச் சொன்னபோது அவளோ இனம்புரியாத பயங்கரம் ஒன்றை எதிர்நோக்கும் அச்சத்தில் கலங்கி விம்மி அழுதாள்.
அந்த அழுகையை ஆறுதல்படுத்த இவன் அவள் கைகளைப் பற்றிக் கொண்ட போதே அது நடந்தது. தம்மை அறியாமலே இருவரும் அந்த ஆலிங்கனத்தில் பரவசமாகி நின்றார்கள்.
அதன்பின் அந்த நெருக்கத்தை அவர்கள் தவிர்த்து வந்தார்கள்.
அந் நினைவு இப்பொழுது அவன் இதயத்தை இதமாக வருடிச் சென்றது.
இந்த இரண்டு மாதங்களுக்குள் அவன்தான் என்னமாய் மாறிவிட்டான். கூன்விழுந்த மெல்லிய உடம்பு நிமிர்ந்து, உடம்பில் சதைப்பிடிப்பேறி திடகாத்திரமாக உருமாறியிருந்தான். ஆரம்பத்தில் நாற்பது நிமிடத்தில் ஏறிக் கடந்து திரும்ப முடியாமல் தடுமாறிய அந்த மலையுச்சியை இப்பொழுது பதினைந்து நிமிடத்தி லேயே அனாயாசமாகக் கடப்பது அவனுக்கு மாத்திரமின்றி அந்த முகாமின் எல்லாப் பயிற்சி வீரர்களுக்கும் சாதாரணமாக இருந்தது. களைப்பே தெரியாமல் உடம்பு உற்சாகத்தில் எப்பொழுதும் துடிதுடித்துக் கொண்டிருந்தது.
பத்து நாட்களுக்கு ஒரு தடவை அவர்கள் எல்லோருக்கும் சமையல் பொறுப்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் திறமாக சமைக்கக் கற்றுக் கொண்டிருந் தார்கள். அதேவேளை தற்செயலாக சாப்பாடு மோசமாகி விட்டால்கூட அதுபற்றியும் அலட்டிக் கொள்ளாமல் எதையும் தின்று தீர்க்கப் பழகிக் கொண்டார்கள். தாம் ஒரு விடுதலை இராணுவம் என்ற உணர்வு அவர்களை எந்தத் தியாகத்திற்கும் தயாராகச் செய்தது.
அந்த முகாமில் நாற்பது பேர் கொண்ட பிளட்டூனின் சார்ஜன்டாக நியமிக்கப்பட்ட பின்பு அவன் அணியில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியால் உள்@ர பெருமைப் பட்டார்கள்.
இதற்கு முன்பிருந்த பிளட்டூன் சார்ஜன்ட் அருள் ஒருவாரத்திற்கு முன்புதான் விலக்கப்பட்டான். அவன் பதவியிறக்கப்பட்டது எல்லோருக்கும் திருப்திதான் என்றாலும் அவனுக்கு வழங்கப்பட்ட அந்த மோசமான கொடூர சித்திரவதையும் பின்பு அவனுக்கு நேர்ந்த கதியும் அவர்களுக்கு அவனில் ஒரு கழிவிரக்கத்தையும் வரவழைத்திருந்தது.
அருள் பிளட்டூன் சார்ஜன்டாக நீண்ட காலமாக இங்கு பணியாற்றியிருக்கிறான். தனக்கு எதிராக முறைப்பாடு செய்பவர்கள் மீது பழிவாங்கும் வகையில் மோசமான தண்டனைகளை வழங்கி அந்த பிளட்டூனில் பலரது பகையை சம்பாதித்து வைத்திருந்தான்.
அவனது பேச்சில் சுடர்விடும் ஆணவமும், தண்டனை முறைகளில் காண்பிக்கும் குரோதமும் அவன் எவ்வளவு மோசமான இதயம் படைத்தவன் என்பதை தெளிவாகப் புலப்படுத்தும்.
ஒரு மாதத்திற்கு முன்பு தமிழீழத்திலிருந்து சர்வேசுவரன் என்னும் ஒரு அரச உளவாளியை முகாமிற்குக் கொண்டு வந்தார்கள். இவன் கழகத்திற்காக அதன் ஆரம்ப காலத்திலிருந்தே வேலை செய்கின்றவனாம்.
மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிவந்த தோழர் ஒருவர் இவன் சிறீலங்கா இராணுவத்திற்கு தகவல் கொடுப்பதை தான் கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாமில் இருந்தபோது அவதானித்ததாகக் கூறிய தகவலையடுத்து இவன்மீது சந்தேகம் கொண்டு, இவனை தமிழகத்திற்கு அழைத்து விசாரணைக்காக வைத்திருந்தார்கள்.
சர்வேசுவரனை தனிக் கொட்டகையொன்றில் அடைத்து அவன் காவல் பொறுப்பை பிளட்டூன் சார்ஜன்ட் அருளிடமே கொடுத்திருந்தார்கள். அருள் ஆரம்பத்தில் மிகக் கவனமாகவே அந்தக் கடமையை மேற்கொண்டிருந்தான்.
பின் அவனுக்கு என்ன தோன்றியதோ!
இரவு எல்லோரும் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சர்வேசுவரனோடு சேர்ந்து அருளும் முகாமை விட்டு தப்பியோடியிருக்கிறான். இரவு பத்து மணிக்குப் பின்பே அவர்கள் தப்பியோடிய செய்தி முகாமிற்குத் தெரிந்தது. முகாம் பொறுப்பாளர் அச்சத்துடன் கலவரப்பட்டுக் கூறிக்கொண்டிருந்தார்.
அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் முகத்தை கடுகடுப்பாக்கிக் கொண்டு எல்லோரையும் தாறுமாறாகத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.
பதினொரு மணிக்குப் பின்பு கார் வரவும் தப்பியோடியவர்களைத் தேடி, நான்கு பேரை றிவோல்வர்கள் சகிதம் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
இரவு படுக்கையில் இருந்தபடி உறக்கம் வராமல் அந்தச் சம்பவத்தைப் பற்றியே அவர்கள் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள். அருளின் கபடத்தனம் அம்பலமாகி யதில் சிலருக்கு திருப்தி வேறு.
மறுநாள் காலை ஐந்து மணிக்கு அருளை மாத்திரம் முகாமிற்குள் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
தப்பியோடிய இருவரும் ஒரு பண்ணையார் வீட்டில் இரவு ஒளிந்திருந்தார்களாம். காரில் தேடிச் சென்றவர்களைக் கண்டதும் சர்வேசுவரன் பாய்ந்து தப்பியோடி விட்டானாம். அருள் மாத்திரம் ஓடும்போது அகப்பட்டிருக்கிறான். அவனைப் பிடிக்கும்போது அவனுக்கு அபயம் கொடுத்த பண்ணையார் தடுத்து மோதினாராம். துப்பாக்கியால் வேறு இவர்களை நோக்கிச் சுட்டாராம். இவர்களும் பொறுக்க முடியாமல் அந்தப் பண்ணையாரை மிரட்டுவதற்காக திருப்பிச் சுட்டுவிட்டு அருளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பண்ணையாருக்கு உயிருக்கு ஆபத்து இல்லையாம். காயம் மட்டும்தான்.
அருள் கலங்கி, கதறி கையெடுத்துக் கும்பிட்ட வண்ணம் பரிதாபமாக நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.
~துரோகி!|
~சமூக விரோதி!|
~இவனை அடித்து நொறுக்க வேண்டும்|
ஆவேசம் கொண்டு ஒரு கூட்டம் கூக்குரல் எழுப்பியது.
~தாபன விசுவாசம் இல்லாத துரோகி|
முகாம் பொறுப்பாளர் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்று, அவர்களை கையமர்த்தி ~~ஒவ்வொருவராக இவனுக்கு அடிபோடுங்கள்|| என்றார்.
அவனைச் சுற்றி வேடிக்கை பார்க்க எல்லோரும் குழுமி நின்றார்கள். முன்னே போட்டியிட்டு பாய்ந்து கொண்டு தமக்குத் தெரிந்த கராட்டி, ஜுடோ, பொக்சிங், றெஸ்லிங் ஒவ்வொன்றையும் மனம்போன போக்கில் விளாசி சரிபார்த்துக் கொண்டார்கள். முகத்தில் ரத்தம் குபுகுபுவென்று பாய அவன் தலைகுப்புறக் கீழே விழுந்தான். சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒரு பகுதியினர் இப்போது பரிதாபமாக அவனைப் பார்த்து இரக்கப்பட்டார்கள். உற்சாகம் குறை யாமல் ஒரு பகுதியினர் அவனை உருட்டி விரட்டி உதைப்பதிலேயே தம்மை மறந்த வெறியில் ஈடுபட்டார்கள்.
~~அம்மா! அய்யோ! என்னை விட்டிடுங்கோ||
~~இனி இந்தப் பிழை செய்ய மாட்டேன்||
~~எனக்கு உயிர்ப் பிச்சை தாங்கோ||
அவன் கதறல் அவர்களுக்குக் கேட்டதாக இல்லை. அதே ஆரவாரத்துடன் அமர்க்களமாக அவனை வதைத்தார்கள்.
அந்த வதையிலும் ஒரு புதுமையைச் செய்யத் துடித்த அவர்கள் குணராசா என்ற சோணகிரியைக் கொண்டுவந்து அவன் முன்னே நிறுத்தினார்கள்.
குணராசா சண்டைக்கே பயந்தவனாம். அவனுக்கு பயம் தெளியட்டும் என்று அவனை அருளுக்கு விரும்பியபடி தாக்கச் சொல்லிவிட்டார்கள்.
குணராசா ஏக்கம் தொனிக்கும் தன் சிறிய கண்களை கூராக்கிக் கொண்டு, தன் முன்னால் அச்சத்தோடு தடுமாறும் அருளின் ரத்தக் கறை படிந்த முகத்தின் கோரத்தைக் கண்டு மிரண்டுபோய் குழம்பி நின்றான்.
இருவரையும் சற்றிவளைத்துக் கொண்டு அவர்கள் உற்சாகப் படுத்தினார்கள்.
~~குணராசா விளாசடா||
~~விடாதை இறுக்கு! பயப்பிடாதை!||
~~அவன் ஒரு சமூக விரோதி||
குணராசா மனதைக் கல்லாக்கிக் கொண்டு பற்களை இறுகக் கடித்துக்கொண்டு, அருளின் இரத்தக்கறை படிந்த முகத்தில் ஓங்கி இரு குத்துக்களை விட்டபோது அவர்கள் ஆரவாரித்து கரகோசம் செய்தார்கள்.
குணராசா அவசரமாக அந்த அவமானத்திலிருந்து தன்னை விடுவிக்க வெளியேறி னான். கைகளில் நனைந்த அவன் இரத்தத்தை அவசரமாகத் துடைத்துவிட்டான்.
சங்கர் நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் புழுங்கினான்.
~~ஒரு மனிதன் என்னதான் பிழைவிட்டிருந்தாலும், அவனைத் தண்டிப்பதில்கூட மனிதாபிமானம் மிளிரவேண்டும். இது சுத்த காட்டுமிராண்டித்தனம்||
ப10பாலன் எங்கிருந்தோ வந்து இவன் கைகளைப் பற்றிக்கொண்டு அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கினான். நடுங்கும் அவன் கரம் அதைப் பொறுக்க முடியாமல் தவிக்கும் வேதனையைப் புலப்படுத்தியது.
அருள் அறிவு மயங்கி மல்லாந்து கீழே கிடந்தான். அவசரமாக தண்ணீர் வரவழைத்து தெளித்தார்கள். அவன் கண்விழித்ததும் முன்னைய உற்சாகம் குறையாதபடி முகாம் பொறுப்பாளர் ஆர்ப்பாட்டமாக சிரித்துக் கொண்டு கூறினார்,
~~ஓடிப்போய் ஒருவர் கத்தியும் கொச்சிக்காய்த் தூளும் கொண்டு வாருங்கள். இவன் முதுகுத் தோலை உரிச்சு கொச்சிக்காய்த் தூள் வைத்துத் தைக்க வேணும்||
வேடிக்கையாகக் கூறுகிறார் என்றுதான் முதலில் நினைத்தார்கள்.
ஆனால் பின்பு அதுவே அடுத்த கட்ட செயற்பாடானபோது அவர்களுக்கு மயிர் சில்லிட்டது.
அருள் அந்த முகாம் அதிர இடியோசைபோல அலறிக்கொண்டிருந்தான்.
நான்கு பேர் அவனை மரக் குற்றியொன்றோடு சேர்த்து இறுக்கிப் பிடிக்க ஒருவன் சவரக் கத்தியால் அவன் முதுகைப் பிளந்தான். வழிந்தோடும் குருதி பற்றிய கருத்தேயில்லாமல் மிளகாய்த் தூளையும் மஞ்சள் தூளையும் உப்புடன் கலந்து தடவியபின் ஊசிநூலால் முதுகை தைத்தார்கள். சதையும் குருதியும் ஒருபுறம் தொங்கி படுபயங்கரமாகக் காட்சி கொடுக்க அருள் வேதனையின் விளிம்பில் நின்று துடிதுடித்து அலறிக் கொண்டிருந்தான். ஒரு பயங்கர மிருகத்தின் அபசுர ஓலமாக அது அவர்கள் எல்லோரையும் நடுங்க வைத்தது. அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் பலர் கண்களை மூடினார்கள். ஒருவன் மூர்ச்சித்து விழுந்தான்.
யாராலும் அதைத் தடுக்க முடியவில்லை.
இரண்டு மணி நேரத்தின்பின்பு பேச்சுமூச்சற்று கிடந்த அருளை வைத்தியசாலைக் குக் கொண்டுபோவதாகக் கூறிக்கொண்டு கார் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள்.
அதன்பின்பு அந்த மைதானம் ஆரவாரம் அடங்கி அமைதியாயிற்று.
இரண்டு நாட்களின்பின் மதிய சாப்பாட்டின்போதுள்ள ஒருமணி நேர இடைவெளியில் ப10பாலன் சங்கரைத் தேடிவந்து சந்தித்தான்.
~~அருளுக்கு நடந்த தண்டனை நியாயமென்கிறாயா|| அவன் வட்டக் கண்களை பெரிதாக உருட்டிக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டவன் தடித்த உதடுகளை பற்களால் இறுகக் கடித்துக் கொண்டு நின்றான். மிகக் கனமான சேதிகள் பலவற்றை தாங்கமுடியாமல் தடுமாறும் அவன் சிவந்த முகத்தின் கண்கள் இரண்டும் சுவர்க் கடிகார பென்டூலம் போல இருபக்கமும் மாறிமாறித் தாவியது.
சங்கர் பேசமுடியாமல் மௌனமாக இருந்தான்.
அவனுக்கு அருளின் அந்த அவல ஒலி மீண்டும் ஒரு தடவை அந்த முகாமைச் சுற்றி கேட்பதுபோல் இருந்தது.
அக்கம் பக்கம் கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு ப10பாலனே மீண்டும் கேட்டான்,
~~அது கிடக்கட்டும். அருள் இப்போது எங்கே என்று தெரியுமா||
~~வைத்தியசாலையிலாக்கும்||
~~இல்லை. அவன் செத்துப்போனான். நான் சொன்னேன் சித்திரவதை முகாம் -அங்கு கொல்லப்பட்டுவிட்டான்.||
சங்கர் எதுவும் பேசத் தோன்றாமல் தன்னை மறந்த அதிர்ச்சியில் நின்றான். தன் உணர்வுகளை மறைக்க கைகளிரண்டாலும் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான்.
~~அவன் கொல்லப்பட வேண்டியவன் என்றே வைத்துக் கொள்வோம். அதுக்கு இப்படி சித்திரவதைசெய்து கொல்வதா. இவங்களெல்லாம் விடுதலைப் போராளிகள் என்று நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். இவர்கள் அராஜகவாதிகள்தான்.||
திரும்பவும் அவனே பேசிவிட்டு பதில் பேச முடியாமல் இருக்கும் சங்கரின் காதுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்,
~~அருளைக் கொண்டு வரும்போது பாதுகாப்புக் கொடுத்த பண்ணையாரைச் சுட்டுவிட்டதாகக் கூறினார்களே. அந்த ஆள் செத்துவிட்டானாம். அவன் அப்படி யொன்றும் இவர்களைச் சுடவில்லை. அபயம் கொடுத்தவன் என்ற வகையில் பொலிசில் போய் முறையிடுங்கள் என்று இவர்களோடு விவாதித்திருக்கிறான். இவங்கள்தான் சர்வேசுவரன் தப்பிப்போன ஆத்திரத்தில் அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இதை மெதுவாக மூடிமறைக்கத்தான் அவன் சுட்டதாகக் கதைவிட்டார்கள்|| என்றவன் மூச்சை இழுத்து இன்னும் நன்றாக அந்தக் கண்களை உருட்டிவிட்டு ~~இன்றைய பேப்பர் பார்த்தாயா. விவசாயி கொலை என்ற பெயரில் செய்தி வந்திருக்கு. இதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா. எல்லாம் சுத்த மோசம். இப்பொழுது அந்தக் கொலையுண்ட பண்ணையார் ஒரு கள்ளக் கடத்தல்காரன் என்று கதையளக்கிறார்கள். எனக்கென்னவோ கழகத்தில் நடப்பது எல்லாம் பெரும் மர்மமாகத்தான் இருக்கு|| திகிலுற்றவன் போல் ப10பாலன் கூறினான்.
சங்கர் என்றுமில்லாதபடி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே இருந்தான்.
இராணுவத்தில் தண்டனைகள் வழங்கப்படுவதை சங்கரால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அது மரணதண்டனையாக இருப்பதை ஏனோ அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படித்தான் மரணதண்டனை வழங்குவதாயினும் அது பண்டைக்கால அநாகரிக சித்திரவதையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பான கொள்கையுடையவனாக இருந்தான். அவனுக்கு வழங்கப்பட்ட அந்தக் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை அவன் இதயத்தை மோசமாகத் துன்புறுத்தியிருந்தது. தண்டனைகள் திருத்தும் நோக்கிலில்லாமல் பழிவாங்கும் குரோத உணர்வில் நடத்தப்படுவது அவன் மென் உணர்வுகளை மோசமாகப் பாதித்தது.
~~மகன்! முதலாளித்துவ இராணுவம் எப்பொழுதும் முதலாளித்துவ நலன்களுக்கு சேவை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது. அந்த இராணுவத்தை அதற்கேற்ப அராஜகப் போக்கில் மிருக உணர்வுகளோடு கட்டமைத்திருப்பார்கள். ஆனால் ஒரு மக்கள் இராணுவம் அப்படிப்பட்டதல்ல. அது மானுட விமோசனத்திற்காக வேண்டி புதிய உலகம் படைக்கத் துடிக்கும் போராளிகளின் உணர்வில் பிறந்தது. அது உயர்ந்த மனிதாபிமானத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டிருக்கும். நீ அப்படிப்பட்ட ஒரு மக்கள் இராணுவத்தின் போர்வீரனாக இருப்பதற்கு பெருமைப் பட வேண்டும்.||
அப்பா எவ்வளவு நம்பிக்கையோடு இவனை வாழ்த்திச் சொன்னார்.
இன்று அந்த நம்பிக்கை ஈடாட்டம் காண குழம்பி நின்றான்.
ஆழ்ந்த யோசனையின் பின் ப10பாலனின் அகன்ற விழிகளுக்குள் பார்த்துக்கொண்டு கூறினான்,
~~கழகம் ஒரு புரட்சிகர விடுதலை இயக்கம் என்றுதான் இங்கு வர முன் நினைத்திருந்தேன். இப்பொழுது இதில் இன்னும் அராஜகப் போக்குத்தான் மேலோங்கியிருப்பது தெரிகிறது. தளத்தில் இருக்கும்போது இம்மாதிரி எதுவும் தோன்றாமல் இருந்தது ஆச்சரியம்தான்.||
ப10பாலன் அவசரப்பட்டு கைகளாலேயே அவனை அடக்கினான்.
~~இந்தா பார்! நான் என்னமோ எனக்கு மனம் பொறுக்க முடியாமல்தான் இதெல்லாம் உன்னோடு கதைக்கிறது. நீ கேட்டிட்டு பேசாம இரு. நீ சும்மா வாயைக் குடுத்திட்டு வம்பிலை மாட்டாதை. இங்கெல்லாம் இப்போ சி.ஐ.டி இருக்கு தெரியுமோ. இவனுகளுக்கு துப்பறியும் திறமையே கிடையாது. தங்களை சி.ஐ.டி என்று காட்டுவது மட்டும்தான் தெரியும். நீ ஒன்று சொல்ல, அவனுகள் தங்களுக்குப்; புரிஞ்ச பாணியில் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லி விடுவாங்கள்.|| என்று கூறும்போது ஏதோ ஒரு பாச மேலீட்டில் நா தழுதழுக்க அவன் கண்கள் நீர் முட்டி நிறைந்தது.
சங்கர் ப10பாலனை நெருங்கி நோக்கினான். அவனது பெரிய கண்கள் குளம்போல கலங்கி நின்ற பாச உணர்வை அன்போடு ஏற்றுக் கொண்டான்.
ப10பாலனின் மெல்லிய இதயத்தை எப்பொழுதோ அவன் இனங்காட்டிய அந்தச் சம்பவத்திற்குப் பின்பு சங்கர் இன்றுதான் அவன் கண்ணீரை மீண்டும் தரிசித்தான்.
முகாமிற்கு வந்து ஒரு வாரத்தின் பின் அந்தச் சம்பவம் நடந்தது.
எல்லோரையும் வரிசையில் வரச் சொல்லிவிட்டு தனித்தனியாக அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பற்றி விசாரித்து அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். ப10பாலனுக்கு அடுத்து சங்கர் வந்துகொண்டிருந்தான். ப10பாலனின் விபரங்களைக் கேட்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். சங்கர் அடுத்து காத்திருந்தான்.
திடீரென ப10பாலன் விம்மியழுது அங்கு இருப்பவர்களை கலவரத்தில் ஆழ்த்தினான்.
அட்டென்சன் பொசிசனில் விறைப்பாக நின்று கொண்டு வழிந்தோடும் கண்ணீரை தடுக்கவும் முடியாமல் அவன் பரிதாபமாக அழுதபோது எல்லோரும் என்னமோ ஏதோவென்று கலங்கி நின்றார்கள். பின்புதான் அவன் அழுகைக்கான காரணம் தெரிந்தது.
மூன்று தங்கைகளின் பெயரையும் ப10பாலனிடம் கேட்டபோது அவன் ஏனோ அவர்களை நினைத்து அழுகை தாங்காமல் இப்படி விம்மிப் பொருமியிருக்கிறான். அன்றிலிருந்து சங்கருக்கு ப10பாலன் மேல் இனம்புரியாத கழிவிரக்கம் பிறக்கும்.
ஆனால் அவன் யாருடைய இரக்கத்தையும், அனுதாபத்தையும் விரும்புபவன் அல்ல என்பதை பின்பு அவனது போக்கிலிருந்து கண்டுகொண்டான்.
இன்று அவன் மென் உணர்வுகள் வெளிப்படும் அளவிற்கு சங்கர் அவன் இதயத்தை ஆட்கொண்டதை நினைக்க சங்கருக்கு பெருமையாக இருந்தது.
எப்பொழுதும் சங்கரில் ஆழ்ந்த அன்பை அவன் புலப்படுத்துவான்.
இரண்டாம் பிளட்டூன் சார்ஜன்டாக சங்கர் நியமனம் பெற்ற பின்பு ப10ரிப்புடன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினான்,
~~இங்குள்ள பிளட்டூன் சார்ஜன்டுகளில் பந்தம் பிடிக்காமல், திறமையால் இந்த இடத்தைப் பெற்றது நீ மாத்திரம்தான். இனிமேல்தான் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனிமேல் உன்னைக் கவிழ்த்து விடுவதில் இங்குள்ளவர்கள் எல்லாம் குறியாக இருப்பார்கள்.||
சங்கருக்கு அவன் பிளட்டூனின் கீழுள்ள சகலரும் ஒன்றாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். காலையில் கண்விழிக்கப் பிந்துபவர்களுக்கும், ஒழுங்காக படுக்கை மடித்து வைக்காதவர்களுக்கும் தண்டனைகள் வழங்குவதில் கண்டிப்பாக இருப்பான். அந்தத் தண்டனைகளால் அவர்கள் மனம் புண்படாமல் இருக்கும் வகையில் ஓய்வுவேளையில் அவர்களுடன் நெருங்கிப்பழகி பொழுதைக் கழிப்பான்.
அவன் பிளட்டூனில் சச்சரவு எதுவும் அவனைத் தாண்டி வெளியே செல்வது அப10ர்வம். அவன் தீர்ப்பிலேயே இருபகுதியும் திருப்திகாண்பார்கள். அவன் பிளட்டூன் சார்ஜன்ட் பொறுப்பெடுத்த பின்னால் அவர்களுக்கிடையிலான கைகலப்புக் கூட குறைந்தே வந்தது.
மாலைநேரப் பயிற்சி முடிந்து குளிக்க துவாயுடன் செல்லும்போது முகாம் பொறுப்பாளர் அவனை அழைப்பதாக தகவல் வந்தது. அவசர அவசரமாக அங்கு சென்றபோது அனைத்து முகாம்களின் பொறுப்பாளரும் உடனிருந்தார். இராணுவ சல்ய10ட்டைச் செய்து அவருக்கு மரியாதை தெரிவித்த பின்பு அட்டென்சன் பொசிசனில் விறைப்பாக நின்றான். அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் அவனை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டார்,
~~உமது அப்பா தமிழரசுக் கட்சியில் போராட்ட வீரராக இருந்தவரா? ||
~~இல்லை. அவர் கொம்ய10னிஸ்ட் கட்சியில்தான் இருந்தவர்.||
அவர் முகம் ஆச்சரியத்தால் கறுத்துச் சுருண்டது. ~~கொம்ய10னிஸ்டுகளுக்கெல்லாம் இப்பொழுதுதான் தமிழுணர்வு வந்திருக்கிறது.|| அவர் அருகில் இருந்த முகாம் பொறுப்பாளரிடம் கிண்டலாகக் கூறிவிட்டு இவனிடம் சொன்னார்,
~~உமது அப்பாவிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்தக் கடிதம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட வேண்டியிருப்பதால் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்தாரும் கடிதத்தின் போட்டோஸ்டட் பிரதி.||
அவன் அதே விறைப்போடு அவர் தந்த கவரைப் பெற்றுக்கொண்டான்.
~~நீர் போகலாம்||
திரும்பவும் அவருக்கு சல்ய10ட் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். பரபரப்போடு கவரைக் கிழித்து கடிதத்தைப் பிரித்தான். அப்பாவின் கூரான சரிந்த எழுத்துக்கள் அவனைப் பரவசப்படுத்தி தடுமாறச் செய்தது.
அமைதியான ஒரு இடத்தைத் தேடி அமர்ந்து கொண்டு தனிமையில் அதைப் படித்தான்.
அந்தக் கடிதம் பத்திரிகையில் வேறு வரப்போகிறது என்ற ப10ரிப்பும் அவனுக்கு தேனாய் இனித்தது.
அன்பு மகனே!
நீ இங்கிருந்து போன பின்புதான் உன் அம்மாவிற்கு அது எவ்வளவு புத்திசாலித் தனமான முடிவு என்று தெரிந்திருக்கிறது.
இங்கு இராணுவத்தின் வெறியாட்டம் அளவுகடந்து போய்விட்டது. வீதிக்குப் போனவர்கள் திரும்பிவரும் வரையில் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட பாதுகாப்பென்பது கிடையாது. இராணுவம் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்யும். தெருவில் நாய்களைச் சுடுவதுபோல இங்கு மனிதர்களைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். உன் வயது இளைஞர்கள் அறிமுக அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும் உடனே கைதுசெய்து விசாரணையென்று கொண்டுபோய் விடுகிறார்கள். அப்படிக் கொண்டுபோன இளைஞர்கள் எல்லோரும் விசாரணையின் பின் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தாலும் நரம்புத் தளர்ச்சிக்கு உள்ளாகும் ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டதால் நோய்வாய்ப்பட்டவர்களாக மாறிவிடுகின்றனர்.
ஒரு கிராமத்தைச் சுற்றி இராணுவம் தேடுதல் நடத்துகிறதென்றால் அந்தப் பிராந்தியமே நிலைகுலைந்து போய்விடுகிறது. தேடுதல் என்ற பெயரில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையிடப் படுகின்றன. ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்களிடம் இவர்கள் செய்யும் சேஷ்டைகளை எழுத கை கூசுகிறது.
தமிழர்கள் என்றால் அதுவும் ஒரு மனித இனம் என்ற உணர்வே மரத்துப்போன மிருக வெறியர்களாக இவர்கள் மாறிவிடுகின்றனர். தமிழர்களைக் கொடுமைப் படுத்துவது பற்றி இவர்களுக்கு மானுட உணர்வு உறுத்தலைக் கொடுப்பதே இல்லை. கடந்த காலத்தில் இந்தச் சிங்கள இனவாத கொடூரத்தைப் புரிந்துகொள்ளாமல் ஐக்கியப்பட்ட புரட்சிக்கு உழைத்த கம்ய10னிஸ்டுகளை நினைக்க இப்பொழுது பரிதாபமாக இருக்கிறது.
நான் எழுதுவதிலிருந்து எங்கள் வீட்டில் எனக்கோ அம்மாவுக்கோ அல்லது உன் தம்பி தங்கைக்கோ ஆபத்து ஏதும் வந்துவிட்டதோ என்று கலங்காதே. அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் நாட்டில் நடக்கும் ஒவ்வொன்றும் நம் வீட்டிலும் நடக் கின்றது என்ற உணர்வு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் அல்லவா.
என் அன்பு மகனே! இதை மாத்திரம் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்.
மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது. ஒரு மனிதன் தன் அனுபவத் திரட்சியை ஆற்றலை இந்தச் சமூகத்துக்கு கையளிக்கிறானே அதுதான் மனித வாழ்விலேயே உயர்வானது. வேறு எந்த ஜீவனுக்கும் மனிதன் போல தான் வாழும் சமூகத்திற்காக எதையும் கொடுக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த அறிவையும், அனுபவத் திரட்சியையும் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம் எமக்கு ஈடுபாடு இல்லை என்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது. நாம் நிச்சயம் எமது சமூகத்திற்கு எம் ஆற்றலையும் அறிவையும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
வீட்டில் உன் தம்பி தங்கைகளுக்கு நீ இப்பொழுது என்ன செய்கிறாய், எங்கிருக்கிறாய் என்பது ஓரளவிற்குத் தெரியும். அவர்கள் இன்னும் நாட்டு நிலைமைகள் புரியாத குழந்தைகள் இல்லை. அவர்கள் உன்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இரகசியங்களை வெளிவிடாமல் காக்கும் அளவிற்கு அவர்களும் பக்குவப்பட்டு வருகிறார்கள். அவர்களை நினைத்து நீ கலங்காதே. எங்களது ஆசையெல்லாம் நீ மேற்கொண்ட இலட்சியத்தை ஒழுங்காக நிறைவுசெய்து நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்பதே. உங்கள் கழகம் பற்றி இங்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. வீடுவீடாக பிரச்சாரம் செய்கிறார்கள். தங்களது உணவுத் தேவைக்கு மக்களிடமே தங்கி நிற்கின்றார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று உணவுப் பார்சல்களைச் சேகரித்து அவர்கள் கொண்டு செல்லும் காட்சி உண்மையில் பெருமைப்படக் கூடியதாகத்தான் இருக்கிறது. சாதி வித்தியாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.
உன் அம்மாகூட இப்பொழுது அரசியல் நடவடிக்கையென்று வீதிக்கு வந்து விட்டாள் தெரியுமா. நான்கூட இவ்வளவு நாளும் அவளை என் மனைவியாகப் பார்த்தேனேயல்லாமல் சமூகப் பொறுப்புள்ள பெண்ணாக காணத் தவறிவிட்டேன். ஒரு வாரத்திற்கு முன்னால் இந்த அதிசயம் நடந்தது.
காலையில் சந்தைக்குப் போன உன் அம்மா மாலைவரை வீடு திரும்பவில்லை. வேலை முடிந்து நான் வந்தபோது உன் தம்பி பயத்துடன் இதைக் கூறினான். எங்கு போய்த் தேடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நின்றேன். இறுதியில் மாலை ஆறு மணிக்குப் பின்னர்தான் அவள் வந்தாள். எங்கே போயிருந்தாள் தெரியுமா. இடம்பெயர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் ஒன்று அவள் கடைவீதியால் போய்க் கொண்டிருந்ததாம். ஊர்வலத்தில் போன இளைஞன் ஒருவன் 'அம்மா நீங்களும் வந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்" என்று கேட்டானாம். அந்த ஊர்வலத்தில் மாணவர்கள்தான் அதிகமாம். பெண்கள் மிகக் குறைவு. ஆனாலும் அவளுக்கு மனம் கேட்கவில்லை. வந்த வேலையை விட்டுப் போட்டு அப்படியே அந்த மாணவர்களுடன் ஊர்வலத்தில் சென்றிருக்கிறாள். ஊர்வலம் நடந்த பின் நடைபெற்ற கூட்டமும் முடியும்வரை இருந்துவிட்டு வந்திருக்கிறாள்.
மகனே! நீ உன் அம்மாவை நினைத்துப் பெருமைப்படு. தமிழீழத்தில் ஒவ்வொரு தாயும் இப்படி மாறிக்கொண்டிருக்கிறாள் என்ற செய்தியை உன் நண்பர்களுக்குச் சொல்.
எம் அனைவரின் அன்பு முத்தங்களுடன் முடிக்கிறேன். உன் இலட்சியம் வெல்க என்று வாழ்த்;துகிறேன்.
என்றும் பாசமுடன்,
உன் அப்பா.
சங்கர் அப்படியே அந்தக் கடிதத்தில் லயித்து நின்றான். உடலெங்கும் ஓர் புத்துணர்ச்சி வேகமாகப் பரவி ஓடியது.

----------------------------------------------

06

காலை ஒன்பது மணிக்கு கூட்டம் ஆரம்பிக்கப்படும் என கூறியிருந்தாலும், பத்து மணியாகியும் பாதிப் பேர் கூட இன்னும் வந்துசேராமல் இருந்தார்கள். ஒவ்வொருவரும் முதல்நாள் கூறியபடி தமக்கென்று
குறிக்கப்பட்ட இடத்திற்கு வரும்வரை காத்திருந்து எல்லோரும் வந்தபின்பு அவர்களை பத்திரமாகக் கூட்டிவருவதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.
மாவட்டக் கமிட்டி கூட்டம் அது!
சுமார் இருபது பேர்வரை வழமையாக அதில் கலந்து கொள்வார்கள். ஆனால் இன்று இப்படி மோசமாக வரவு குறைந்ததற்கு காரணம் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள்.
வடமாகாண அமைப்பாளர் கோபாலன் வெளியே எழுந்து வந்து விசாரித்தார்.
~~வழியில எங்கேயும் ஆமி நிக்கிறமாதிரி போக்கு இருக்கோ||
~~அப்படி ஒன்றும் இல்லை||
நாதன் அந்த ஓய்வு வேளையைப் பயன்படுத்தி நிர்மலாவின் பிரச்சினையை எழுப்புவோமா விடுவோமா என்று குழம்பியிருந்தான். கூட்டத்தின் முடிவில் இதுபற்றிப் பேசலாம் என்றுதான் காலையில் வரும்போது முடிவு செய்திருந்தான். ஆனால் கோபாலன் இப்பொழுது ஓய்வாக இருப்பது இதற்கு உகந்த நேரம் என்று அவனுக்குப் பட்டது.
இரண்டு நாட்களாக நிர்மலா இவனிடம் சிணுங்கிக் கொண்டு முறையிடத் தொடங்கினாள்.
வீட்டில் அம்மாவும் அப்பாவும் இவள் சங்கரை காதலிப்பது தெரிந்து கொண்டு மோசமாகத் திட்டி வதை செய்கிறார்களாம். சாதி, அந்தஸ்து வேறுபாட்டோடு சங்கர் கழகத்தில் சேர்ந்திருப்பதும், பயிற்சி பெறுவதும் அவர்களுக்கு கட்டோடு பிடிக்கவில்லை.
அரசாங்க சேவையை முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டிக் கூத்தாடும் அவளது அப்பா நாடு ப10ராக எல்லா மாகாணங்களிலும் சேவை செய்திருக்கிறார். மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருதடவை இடமாற்றம் பெற்றுச் செல்லும் காலங்களில் குடும்பத்தையும் மறக்காமல் கூடவே அழைத்துச் செல்லும் அவர் இப்பொழுது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களது கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் அடிக்கடி வரும் இனக் கலவரங்களை உத்தேசித்தும் குடும்பத்தை விட்டு தான் மாத்திரம் கொழும்பில் தங்கிக் கொண்டார். ஆனாலும் மாதத்தில் இருமுறையாவது யாழ்ப்பாணம் வந்து வீட்டு நிர்வாகத்தை கண்காணித்துச் செல்வார். அவரது கண்டிப்பான கண்காணிப்பால் மகன் பல்கலைக் கழகத்திலும், மகள் பல்கலைக் கழகம் செல்லக்கூடிய நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை தனக்குள்ளேயே மெச்சிக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்வார்.
நிர்மலாவின் அந்த விபரீத போக்குக்கு தனது கவலையீனமே காரணம் என்ற குற்ற உணர்வில் அவள் அம்மா மிக மோசமாக அவளுடன் சீறிப் பாய்ந்து கத்துவாள். அவளைக் கண்காணித்ததில்தான் ஏதோ தவறு விட்டுவிட்டேன் என்று குழம்பிக் கொண்டு அவளில் ஆக்ரோசமாக தன் கோபத்தையும் கொடூரத்தையும் காட்டுவதால் அவள் போக்கை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை யில் தன் முழுச் சாதுரியத்தையும் வெளிப்படுத்துவாள். அவளை வெளியே போகவிடாமல் ஒவ்வொரு அடியையும் கண்காணித்து வந்தாள். அப்படியே வெளியே போய் வந்தாலும் கேள்விமேல் கேள்வி கேட்டு அவளை துளைத் தெடுப்பாள்.
வீட்டில் அமைதியின்றித் தவிக்கும் அவளுக்கு கழகம் அபயம் கொடுக்குமா என்று கேட்டு நாதனை நச்சரித்துக் கொண்டாள் நிர்மலா. அந்தக் கரைச்சல் தாங்காமல் இதுபற்றி அன்று மாலை கோபாலனுடன் பேசுவது என்று முடிவெடுத் திருந்தான் நாதன்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு தாமதமானதால் உள்ள அந்த அமைதியைப் பயன்படுத்து வது அவரது அவசிய வேலைகளைக் குழப்பிவிடுமோ என்ற தயக்கத்தோடு மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
அவன் கூறி முடிக்கும் வரைக்கும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் கூறினார்,
~~தோழர்! எமது கழகம் காதலுக்கு ஒருபொழுதும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. நாம் அதை வரவேற்கிறோம். அதுவும் பயிற்சியில் இருக்கும் ஒரு தோழனின் காதல் விவகாரம் என்றால் நாம் அதில் கூடிய அக்கறை காட்ட வேண்டும். ஆனால் அந்தப் பெண் ஏன் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். இன்னும் கொஞ்சம் போராடிப் பார்க்கலாமே.|| என்று இலேசாக இழுத்தவர் பின் தொடர்ந்தார்,
~~விடுதலை உணர்வு கொண்ட புரட்சிகரப் பெண்கள் பலர் இன்னும் கழகத்தில் சேர்ந்து வேலை செய்வதற்காக வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெண்களைக் கூட உடனடியாக நாம் வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வதில்லை. கூடுமானவரை வீட்டிலுள்ளவர்களுடன் போராடி அவர்களையும் வெற்றி கொள்ளச் சொல்கிறோம். முடியாத பட்சத்தில் மாத்திரமே வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டு நாம் பொறுப்பெடுக்கிறோம். விடுதலையுணர்வுள்ள பெண்களுக்கே நாம் இப்படி கடுமையாக நிற்கும்போது காதலுக்காகப் போராடும் பெண்களை இன்னும் கொஞ்சக் காலம் வீட்டில் போராடச் சொல்லலாம்.||
அவர் பேசி முடிந்தபின்பு நாதன் நிர்மலாவின் வீட்டு நிலைமையை விபரித்தான்.
~~அவர்கள் மோசமான திமிர் பிடித்தவர்கள். அவளை அடித்துச் சித்திரவதை செய்கிறார்கள்.||
அவர் அதை கேட்டுவிட்டு வெண்பற்கள் பக்கென்று வெளியே தெரியச் சிரித்தார். பின் மூக்கை பிடித்து இழுத்துவிட்டு அவன் உணர்வுகளை எடைபோடுவது போல ஒரு விநாடி தாமதித்துவிட்டுச் சொன்னார்,
~~அவர்கள் நன்றாகச் சித்திரவதை செய்யட்டும். எப்படி சிறீலங்கா இராணுவத்தின் சித்திரவதைகள் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப் பியதோ, அதேபோல அவள் பெற்றோரின் சித்திரவதை அவள் உண்மைக் காதல் உணர்வைத் தட்டியெழுப்பி வீறுகொண்டு போராடச் செய்யட்டும்.||
அவர் சிறிது கிண்டலாகக் கூறியது, அந்தப் பிரச்சினையை அவரால் சரிவர புரிந்து கொள்ள முடியவி;ல்லையோ என்ற சந்தேகத்தை அவனுக்கு எழுப்பியது. அதைப் புரிந்து கொண்ட அவர் அவசர அவசரமாகக் கூறினார்,
~~தோழர்! நான் இந்த விசயத்தில் கைகழுவுவதாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு நிலைமை விளங்குகிறது. காதல், திருமணம் எல்லாமே பெரும்பாலும் அகநிலை உணர்வு சம்பந்தமானது. அதுவும் ஒரு விடுதலைப் போராளிக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவானதொன்றாக இது அமைந்துவிடக் கூடாது. இயல்பான புரிந்துணர்தலுக் கூடான மனம் ஒத்த தன்மையாக இருக்க வேண்டும். அவர்களுக்கிடையிலான அகநிலை நெருக்கம் உறுதிப்படுத்தப்பட முன்னமே நாம் அவசரப்பட்டு அவர்களை இணைத்து விடுவது கூட பிற்காலத்தில் அவர்கள் இதற்காக வருந்தும் நிலையைக் கொடுக்கும். நீங்கள் இதில் அவசரப்பட வேண்டாம்.அவர்கள் உண்மையில் ஒருவரையொருவர் மனதார விரும்புகிறார்களோ என்பதை தெளிவாக பார்த்துக் கொள்ளுங்கள். இதில் ஊகங்களோ அல்லது உங்கள் விருப்பங்களோ தேவையில்லாத ஒன்று. அந்தப் பெண் இப்பொழுதுதானே பெற்றோரின் எதிர்ப்பை முகங்கொடுக்க ஆரம்பித்திருக்கிறாள். இன்னும் கொஞ்சக் காலத்திற்கு விட்டுப் பாருங்களேன் - அவளால் அவனுக்காக அவர்களுடன் போராடி தாக்குப் பிடிக்க முடிகின்றதா என்று. அதற்கே முடியாமல் தோற்றுப் போகும் அவள் உங்கள் நண்பனுக்கு வாழ்க்கைப்பட்டுத்தான் எந்த வெற்றிக்கு துணை நிற்கப் போகின்றாள்.||
அவர் வட்ட முகத்தின் கூரான மூக்கு இப்பொழுது ஒருவித எடுப்பாக அவனுக்கு தோற்றம் கொடுத்தது. தான் அவசரப்பட்டு அவரை தவறாகப் புரிந்துகொண்ட நாணம் மேலிட கூசி நின்றான். கால் பெருவிரலால் நிலத்தைக் கிண்டிக் கொண்டு பேசாமல் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
~~தோழர்! காதல் விவகாரங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது ஒரு நல்ல மனசுக்கு அறிகுறி. அந்த வகையில் நான் உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன். அதேவேளை எமது செயற்பாடுகள் தீர்க்கமானதாகவும் நாளை யாரும் குறைசொல்ல இயலாததாகவும் இருக்க வேண்டும் இல்லையா. எனக்குத் தெரிய பலர் தம் காதலுக்கு ஒரு பக்கபலம் தேடவும் கழகத்திற்குள் நுழைந்திருக் கிறார்கள். இவர்கள் காதலுக்கு நாம் உதவி, திருமணத்தையும் ஒருவாறு சமாதானப்படுத்தி முடித்துவிட்ட பின்பு கழகமும் வேண்டாம், கொள்கையும் வேண்டாம் என்று போய்விடுவார்கள். இந்த அளவிற்கு நாம் கழக நடவடிக்கை களின் தரத்தை குறைத்துவிடக் கூடாது அல்லவா||
நாதன் அதை ஆமோதித்து தலையாட்டினான். இப்பொழுது அவன் முகம் தெளிவடைந்து முன்பிலும் பிரகாசமாக இருந்தது.
அவர் மேலும் தொடர முன்பு உள்ளேயிருந்து ஒருவர் வந்து எல்லோரும் வந்து விட்டதாகவும் இனி கூட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றும் கூறினார்.
இருவரும் அவசர அவசரமாக உள்ளே சென்றார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் அமைப்பாளர்களும் வந்திருந்தார்கள். தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புப் பொறுப்பாளர்கள், மாணவ அமைப்புப் பொறுப்பாளர்கள், இராணுவப் பொறுப்பாளர்கள் ஆகியோர் வந்திருந்தார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து பேர் அங்கு குழுமியிருந்தார்கள்.
கூட்டம் மிக ஆரோக்கியமான உணர்வுடன் நடைபெற்றது. தம் சொந்த வசதிகள், சலுகைகள் பற்றி கேள்விகள் எழுப்பாமல் கழகத்தின் கொள்கை நடைமுறை முரண்பாடுகள் பற்றி ஆர்வமுடன் ஆராய்ந்தார்கள். பெரும்பாலான கேள்விகள் கழகத்தின் இராணுவ நடவடிக்கைகளின் கட்டுப்பாடின்மை பற்றியும் கழக அங்கத் தவர்களது ஒழுக்கக் குறைவு பற்றியுமே இருந்தது.
~~வாகனங்களை ஆயுத முனையில் கடத்தக் கூடாது என்று தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் எனது பகுதிக்குள் இம் மாதத்திற்குள் மாத்திரம் இரண்டு டெலிக்கா வாகனங்களும் ஒரு ஹொண்டா மோட்டார் சைக்கிளும் கடத்தப் பட்டிருக்கிறது. இது ஏன் நடந்தது||
~~சமூக விரோதிகள் என்று சுடப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் பல ஒழுங்கீனங் கள் நிகழ்ந்துள்ளன. சிறு களவுகளில் ஈடுபட்டவர்கள் கூட சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்||
~~அப்பாவிகள், பைத்தியக்காரர்கள் கூட சரியான விசாரணை இல்லாமல் காட்டிக் கொடுப்பவர்கள் என்று சுடப்பட்டிருக்கிறார்கள்||
~~பொதுமக்கள் குறைபாடுகளைத் தீர்க்கப் போகும்பொழுது ஒருபொழுதும் ஆயுத முனையில் மக்களை விரட்டக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எமது இராணுவம் இதை பல தடவை மீறி இருக்கிறது.||
~~விசாரணைகளின் போது மிக மோசமான சித்திரவதையை எமது இராணுவம் மேற்கொள்கிறது. பல அப்பாவிகள் கூட இந்தச் சித்திரவதையால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இப்படியே போனால் நாம் சிறிலங்கா அரசின் சித்திரவதை களையும், படுகொலைகளையும் கண்டிப்பதற்கு எங்களுக்கு எங்கே யோக்கியதை இருக்கப் போகிறது.
~~பல அரசியல் ஊழியர்கள் பகிரங்கமாகவே சிகரெட் புகைக்கிறார்கள் கழகம் சிகரெட் புகைப்பதையோ, மதுபானம் பாவிப்பதையோ தடைசெய்து விதி எதுவும் கொண்டு வரவில்லை. ஆனால் அதை எப்பொழுதும் கண்டித்து வந்திருக்கிறது. இது போதாது. நாம் இதைத் தடுக்க கட்டாய சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்.||
~~மகளிர் அமைப்பு எங்கள் பகுதியில் வேலை செய்வதே இல்லை. வாரத்திற்கு ஒரு தடவையாவது மகளிர் அமைப்பு ஊழியர்களை கட்டாயம் அனுப்ப வேண்டும்.||
~~எமது கழகம் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படுவர் என்ற கொள்கையை கொண்டுள்ளது. ஆனால் கழகத்தின் செலவுகள் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு -தேவையில்லாமல்- கூடுதலாக இருக்கிறது. சில தோழர்களின் சிகரெட் செலவிற்கு கழகப் பணமே செலவிடப்படுகின்றது. இது ஒரு பாரபட்சம் இல்லையா? ||
ஒவ்வொரு விடயத்தைப் பற்றியும் முற்றுப் பெறாத விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது.
இறுதியில் கோபாலன் பேசும்போது, ஆராயப்பட்ட சகல பிரச்சினைகளையும் அதன் முற்போக்கு பிற்போக்குத் தன்மைகளையும் கோடிட்டுக் காட்டி இறுதியில் கூறினார்,
~~தோழர்களே! நாம் மிக நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறோம். சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களை பூண்டோடு அழிப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்தி விட முடியும் என்ற துடிப்பில் தன்னாலான சகலவற்றையும் செய்து வருகின்றது. இக்கால கட்டத்தில் நாம் சோர்ந்துவிடக் கூடாது. தமிழ் மக்கள் சகலதையும் இழந்து இன்று எம்மையே நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியது தமிழீழ விடுதலைதான். ஆனால் நாமோ தமிழீழ விடுதலையை மாத்திரம் குறியாகக் கொண்டு இந்தப் போராட்டத்தில் குதிக்க வில்லை; இந்த அமைப்பை உருவாக்கவுமில்லை.
எமது இலட்சியம் ஒருபோதும் தமிழீழ விடுதலையுடன் முற்றுப் பெறப் போவதில்லை. இது எமது விடுதலையின் ஒரு கட்டமே. நாம் அதற்கு அப்பாலும் விரிவானதொரு பார்வையைக் கொண்டிருக்கிறோம். சாதி பேதமற்ற, பெண் அடிமைத்தனம் அற்ற, சமவுடைமை சமூகத்தை கட்டி எழுப்பும் எமது குறிக்கோளிலிருந்து நாம் ஒருபொழுதும் விலகிப் போய்விட முடியாது.
விடுதலை சிங்கள அரசிடமிருந்து மட்டும் காணும் விடுதலையாக முடியாது. அது இந்த முதலாளித்துவத்தின் சாபக்கேடுகளிலிருந்தும் கொடுமைகளிலிருந்தும் காணும் விடுதலையாக அமைய வேண்டும். அதனால்தான் எமது அமைப்பை உருவாக்கும் பொழுது தமிழீழ விடுதலையில் மாத்திரம் குறியாக இல்லாமல் தொடர்ச்சியாக ஒரு சமதர்ம சமூகத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திகளை இனங்கண்டு உறுதியான அமைப்பை உருவாக்க உங்கள் பங்களிப்பை செய்ய வேண்டுகிறேன். இதற்காக நாம் எத்தகைய தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். தமிழீழ விடுதலையை சரிவர முன்னெடுத்துச் செல்பவர்கள் நாங்களே. மிக நீண்ட கால நோக்கில் நாம் எம் கொள்கையை வடிமைத்திருக்கிறோம். எமது கடும் உழைப்பினால் இன்று இலங்கையில் நடைபெறும் மிகவும் முற்போக்கான ஜனநாயத்திற்கான போராட்டமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இப் போராட்டத்தை நாம் உலகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம்.
தோழர்களே!
~~நாம் பிறவிப் புரட்சியாளர்கள் அல்ல. எமது மக்களே எம்மைப் புரட்சியாளர்களாக மாற்றினார்கள் என்று நாம் அடிக்கடி கூறுவதை நீங்கள் தெளிவுற அறிந்து கொள்ள வேண்டும். நாம் முன்னம் பின்னம் ஒரு சமூகப் புரட்சியை நடத்திய அனுபவமோ வழிகாட்டலோ இல்லாதவர்கள். எமது அமைப்பு முற்றிலும் புரட்சிகர சக்திகளை இனங்கண்டு கட்டப்பட்ட அமைப்பல்ல. எமது அமைப்பில் புரட்சி கரமான மார்க்சியவாதிகள் இருக்கிறார்கள்; பிற்போக்கான தேசியவாதிகள் இருக் கிறார்கள்; சுத்த இராணுவக் கண்ணோட்டம் உடையவர்களும் இருக்கிறார்கள்.
நீங்கள் இன்று கழகம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது பல பிழையான அம்சங்களை சுட்டிக்காட்டினீர்கள். இவையெல்லாம் சுத்த இராணுவக் கண்ணோட்ட சக்திகளதும், ஊசலாட்டமான தேசியவாதிகளதும் செல்வாக்குத்தான். இவற்றை நாம் ஒரு பொழுதுக்குள் திருத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் திருத்த முடியும். பிழையான போக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியாக விழிப்பாக இருங்கள். பிழையான போக்குகளுடன் ஒருபொழுதும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நினைத்த மாத்திரத்திலேயே குறைகள் தீர்க்கப்படவில்லையே என்று சோர்ந்து போகாதீர்கள்.
எமது கழகத்தின் தலைமை மார்க்சிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் வழியில் தன்னை புடம் போட்டு வளர்த்து வருகின்றது. ஆகவே நம்பிக்கையோடு பிழையான அம்சங்களை சுட்டிக்; காட்டி போராடுங்கள். உங்கள் போராட்டத்திற்கு கழகத்தின் தலைமை என்றும் ஆதரவு வழங்கும்.
நாம் படிப்படியாக எமது குறைகளைத் திருத்தி எமது கழகத்தை ஒரு புரட்சிகர சக்தியாக மாற்றியமைப்போம்...||
நாதன் அந்த உரையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
கோபாலன் தன் நீண்ட மெலிந்த கைகளை அசைத்துக் கொண்டு ஒவ்வொரு வருக்கும் புரிகின்றதா என்ற சந்தேகத்தோடு அடிக்கடி அவர்களைக் குறிப்பாகப் பார்த்து அந்த உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரில் இன்னும் ஒரு அரசியல்வாதியின் மேடைப் பேச்சு அனுபவங்கள் படியவில்லை. இப்பொழுதும் அதே ஆசிரியர் பாணியில்தான் தோற்றம் கொடுத்தார்.
படிக்கின்ற காலத்தில் இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருந்த கோபாலனுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்த பின்பு அரசியலே வேண்டாம் என்பதுபோல ஓய்ந்திருந்ததற்கு அந்த இயக்கங்களில் ஏற்பட்ட மோசமான பிளவுகள் காரணமாக இருந்தன.
ஒரு வருடத்திற்கு முன்புதான் அவருக்கு கழகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அதற்கு முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டம் முதலாளித்துவ சக்திகளின் அபிலாசைகளை பிரதிபலிக்கின்றதெனவும், அது வல்லரசுகளின் போட்டா போட்டிக்கு களமாகும் சதி என்றும் கருதியிருந்தவருக்கு சென்னையில் ஒரு இரவு செயலதிபரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த பின்புதான் அவருக்கு இந்தப் போராட்டத்தின் முற்போக்கு அம்சங்கள் தெரியத் தொடங்கின.
இடதுசாரிகள் எவ்வளவு தூரத்திற்கு தமிழீழ விடுதலையை ஆரோக்கியமாகவும், ஒரு சோசலிச விடுதலையின் தூரதிருஷ்டியாகவும் மாற்ற கடுமையாக உழைக் கின்றார்கள் என்று தெரிய வந்ததும் அவர் ஆச்சரியத்தால் மலைத்துப் போனார். செயலதிபர் மிக ஆணித்தரமாக அந்தக் கருத்துக்களை வலியுறுத்தி விளக்கினார்.
கழகத்தின் சுத்த இராணுவக் கண்ணோட்ட நடவடிக்கைகளுக்காக பெரிதும் வருத்தம் தெரிவித்த செயலதிபர் மனம்விட்டு அதைக் கூறினார்.
~~நாங்கள் இங்கு ஒருசிலர் தான் கழகத்தில் மார்க்சியக் கொள்கைகளை வலியுறுத்தி அதன் நடைமுறை வேலைகளை சீர்ப்படுத்தப் போராடுகிறோம். பெரும்பாலான முற்போக்குச் சக்திகளை வெளியே பகிரங்கப்படுத்தாமல் மறைத்து வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால் எம்மையும் மீறி இந்தத் தவறுகள் நடந்து போகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது பொறுப்பான வேலைகளை கையளிக்க தகுதியான ஆட்கள் கிடைக்காத படியால் நாம் சில பிழையான ஆட்களையும் பாவிக்க வேண்டியிருக்கிறது.|| என்று வேதனையோடு கூறியபோது கோபாலன் தன் கடமையை சரிவரவே உணர்ந்தார்.
அவர்கள் தனியாக இந்த தமிழீழ விடுதலையை முன்னெடுத்துப்; போராடும்போது, தானும் பக்க பலமாக அவர்களுக்கு துணைநிற்க வேண்டும் என்ற முடிவை உடனடியாக செயற்படுத்தினார்.
யாழ்ப்பாணம் வந்த மறுவாரமே ஆசிரியர் தொழிலை அப்படியே விட்டு கழகத்தின் முழுநேர ஊழியனாக மாறினார். ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரை வேலை யிலிருந்து நீக்கியதாக கடிதம் வந்தபோது, அதை அப்படியே கசக்கி எறிந்தவரு க்கு மலரப்போகும் தமிழீழம் வழங்கப்போகும் சமத்துவமான வாழ்வே குறியாயிற்று.
அவரின் கடுமையான உழைப்பு விரைவில் அவரை வடமாகாண அமைப்பாளர் தரத்திற்கு உயர்த்தியது.
கூட்டம் முடிவுற்று வீடு செல்லும் போதும் அந்தக் கூட்ட நிகழ்ச்சிகளே நாதனை சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. கழக இராணுவத்திற்குப் பொறுப்பான வரதன் பற்றியே அன்று பலரும் குறைப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர் அதுபற்றி ஏதும் அலட்டிக் கொண்டதாக இல்லை.
ஒரு சமயம் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போது ~~இது தமிழகத்திலிருந்து பெரியய்யாவின் கட்டளை|| என்று கூறியபோது எல்லோரும் குழம்பிப் போய் தடுமாறி யார் அந்த ~பெரியய்யா| என்றார்கள். அவர் செயலதிபரைத் தான் இப்படி குறிப்பிடுகின்றார் என்றதும் எல்லோரும் மேலும் குழம்பியவர்களாக தமக்குள் கலவரப்பட்டு சிரித்துக் கொண்டார்கள்.
கோபாலன் பேசும்போது சகல குறைபாடுகளையும் தத்துவார்த்த hPதியில் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தின் பிற்போக்குத்தனம் என்று கூறியதன் மூலம் இராணுவப் பொறுப்பாளர் வரதனின் அசட்டையீனத்திற்கு நல்ல அடிகொடுத்தார். எல்லோருக்கும் அது புரிந்திருந்தாலும் வரதன் மாத்திரம் எதுவும் புரியாத அசடாட்டம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
நேரடியாக அவரை விமர்சியாமல் இப்படி சுற்றி வளைத்துப் பேசவேண்டிய நிலையில் கழகம் இருப்பதைக்கூட சிலர் குறைப்பட்டு விமர்சித்துக் கொண்டார்கள்.
நாதன் வீட்டிற்குப் போனபோது நிர்மலா காத்திருப்பதை தூரத்திலிருந்தே கண்டு கொண்டான். காலையில் கோபாலன் கூறியதை ஒரு தடவை நினைத்துக் கொண்டான்.
இவள் சங்கரை விரும்புகிறாள் என்பதும் நல்ல பெண் என்பதும் நிச்சயம் தான். ஆனால் இவர்கள் இணைவதற்கு இது மாத்திரம் போதுமா.
நாதனைக் கண்டதும் நிர்மலா சோகமான புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஆர்வத்துடன் எழுந்து வந்தாள். முகம் நன்றாக வெளுத்து உப்பியிருந்தது.
~~இன்று காலையிலிருந்தே வீட்டில் சண்டை. நானும் பொறுக்க முடியாமல் பதிலுக்கு ஏசினேன். அப்பா ஆத்திரம் கொண்டு தும்புத் தடியால் அடித்துவிட்டார்.|| அவள் அழாக்குறையாக அடிபட்டு வீங்கிப்போன கைகளைக் காட்டிக் கூறினாள்.
அவள் சிவந்த மேனியில் அந்தத் தழும்புகள் கன்றிக் கறுத்திருந்தது.
~~நிர்மலா! உன் கஸ்டம் எனக்குத் தெரியுது. ஆனால் எங்கட கழகத்தில் இப்போது பெண்களை வீட்டை விட்டு வரச்சொல்லிறது மிகக் குறைவு. அப்படி வருபவர்களை தற்காலிகமாக வெளியே வராமல் மறித்திருக்கிறோம். அவர்களை வீட்டில் இருந்து போராடும்படிதான் கூறுகிறோம்.||
அவன் சைக்கிள் பெல் மூடியைத் திருகிக்கொண்டே கூறினான். அவள் நம்பிக்கையை தளர விடாமல் மீண்டும் கேட்டாள்,
~~அண்ணாவிடம் கூட காலையில் இதைப் பற்றிக் கதைத்தேன். அவர் தங்கள் அமைப்பில் வேலைசெய்ய விருப்பமான பெண்கள் எவரையும் விரும்பினால் வீட்டைவிட்டு வந்தால் பொறுப்பெடுக்க அவர்கள் தாபனம் தயாராம். நீங்கள் மாத்திரம் இதில் ஏன் பெரிய கட்டுப்பாடு விதிக்கிறீர்கள். இந்த நாட்டில் வீடுகளிலிருந்து கொண்டு பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை நீங்கள் அறியவில்லையா||
அவள் குரல் முன்னிலும் கனமாக ஒலித்தது. அது அவனை சீண்டி விடுமாப் போல் இருந்தாலும் அமைதியாகவே கூறினான்,
~~பெண்களின் சமூக நிலைமையை நாங்கள் சரியாகவே அறிந்து வைத்திருக் கிறோம். அதற்காக அவர்களை போராடப் பண்ணாமலே வெறுமனே பாதுகாப்புக் கொடுத்து காப்பதனால் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது. அது அவர்கள் புரட்சிகர உணர்வுகளை மழுங்கடிக்கவே செய்யும் இல்லையா||
அவள் அதற்குப் பதில் கூறாமல் தன் கேள்வியிலேயே கருத்தாக இருந்தாள்.
~~நான் வீட்டிலிருக்கப் பிடிக்காமல், அண்ணாவின் அமைப்பில் சேர்ந்து பாதுகாப்புப் பெற்றால் அது உங்களுக்கும் உங்கள் அமைப்புக்கும் அவமானமாக இருக்கும் இல்லையா? ||
அது அவனையும் கழகத்தையும் மிரட்டுவது போல் இருந்தது.
~~அந்த அவமானம் சங்கருக்கும் சேர்த்துத்தான்.|| அவன் பட்டென்று கூறிவிட்டு அவள் விழிகளுக்குள் பார்த்துக் கொண்டு நிமிர்ந்து நின்றான்.
இப்போது அவன் தோற்றம் சடுதியாக வளர்ந்து விட்டது போன்ற பிரமிப்பு நிறைந்த அச்சத்திலும் தான் பிழையாக பேசிவிட்டோமோ என்ற கலவரத்திலும் தன் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத துயரமும் சேர அவள் பதில் பேசாமல் அவமானம் அடைந்தவள் போல் கோபப்பட்டு தன்பாட்டிற்கே முணுமுணுத்துக் கொண்டு கண்ணீருடன் வெளியேறினாள்.
நாதனுக்கு அது என்னவோ போல் இருந்தது.
இதுவரை காணாத ஒரு புதிய முகத்தை முதன்முதலில் அவளில் கண்டான்.
மானசீகமாக தனக்குள் சொல்லிக் கொண்டான்.
~~சங்கர்! எல்லாம் உன் நன்மைக்காகத்தான். இதற்காக என்னைக் கோபிக்க மாட்டியே.||

--------------------------------------------------------

07

சங்கர் மூன்று மாதங்களின் பின்பு முதல் தடவையாக தார்வீதியைக் கண்டான். ஒரு குழந்தையின் குதூகலத்தோடு அந்தப் பயணத்தை உற்சாகமாகக் கழிக்க முனைந்தாலும் ஏனோ மனம் பூரணமாக அதில்
லயிக்கவில்லை.
நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு இந்தியக் கரையில் முதன் முதல் கால்வைத்தவன், அன்றைய பொழுது புலருவதற்கு முன்னரே வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு முகாம் கந்தோருக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மறுநாள் காலையில் மற்றைய தோழர்களுடனும் சேர்ந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பயிற்சி முகாமை கால்நடையாகவே வந்து சேர்ந்த பின்னால் எக் காரணம் கொண்டும் அவன் வெளியில் செல்லவில்லை. அவன் போல பலர் அந்த முகாமில் இருந்தார்கள். சிலர் மாத்திரமே பொருள் கொள்வனவு, முகாம் பொறுப்பாளரின் வேலை, சுகயீனமாகி வைத்தியசாலைக்குச் செல்லுதல் என்ற பெயரில் இடையிடையே அருகிலுள்ள நகரத்திற்குச் சென்று திரும்பினார்கள்.
இன்று நீண்ட நாட்களுக்குப் பின் அவன் அந்த கிறவல் வீதியைக் கடந்து நகரத்திற்குச் செல்லும் பிரதான தார் வீதிக்கு வந்தபோது, விரைந்து செல்லும் பஸ்வண்டிகளும் பரபரப்பான சூழலும் ஒருவித இன்பக் கிளர்ச்சியை ஏற்படுத்தப் பார்த்தது.
அந்த வீதியையும் அதன் இருமருங்கிலும் செழித்து வளர்ந்திருக்கும் வயல் நிலங்களையும் பார்த்தபோது யாழ்ப்பாணத்தின் சில காட்சிகள் பட்டென்று அவன் இதயத்தை கௌவிப் பிடித்தது. வயல் நிலங்கள் யாழ்பாணத் தோட்டங்கள் போலன்றி விசாலமான பரப்பில் விரிந்து கிடந்தன. அந்த மண்வெட்டிகள், கிணறுகள் எல்லாம் வித்தியாசமானதாக தோற்றம் கொடுத்தாலும் அந்த நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களின் கறுத்த உடம்பும் விலா எலும்புத் தோற்றமும் முகத்தில் ஒரு சோகத்தைக் குழைத்துக்கொண்டு நம்பிக்கை யில்லாமல் நோக்கும் சந்தேகப் பார்வையும் எங்கும் ஒன்றாகவே இருந்தன.
வயல் நிலங்களின் சேட்டமான வளர்ச்சியும் இடையிடையே வாழைத் தோட்டங் களும் கமுகு மரங்களும் கலந்திருப்பது மனதிற்கு ரம்மியமாக இருந்தது.
பஸ்வண்டிகளில் கையில் விசிலுடன் பெரிய மனுசத் தோரணையில் கடமை புரியும் கண்டக்டர்களையும் சிறு குழந்தைகள் ஊதி விளையாடுமாப் போல ஒவ்வொரு தரிப்பிலும் அவர்கள் விசில் ஊதி சத்தமெழுப்புவதும் இவனுக்கு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. நகரத்தில் நுழையும் முன்னரே பெரியார், அண்ணா, காமராஜ் சிலைகள் பிரமாண்டமான அளவில் வீதியின் இடையிடையே தோற்றம் கொடுக்கத் தொடங்கின. சிலைகளின் தத்ரூபமான அமைப்பால் கவரப்பட்டு மீண்டும் அவற்றை குறுகுறுப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். சினிமாப் போஸ்டர்களும் அரசியல் கட்சிக் கூட்ட போஸ்டர்களும், அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டர்களும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு நகரத்தின் சுவர்கள் எல்லாவற்றையும் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தன. நின்று நிதானித்து வாசிக்க நேரமில்லாத வேகத்தில் ஓட்டமும் நடையுமாக அவன் சென்று கொண்டிருந்தான்.
சினிமாப் படம் ஒன்றின் விசாலமான போஸ்டர் விளம்பரமொன்று அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் நாற்சந்தியொன்றில் பிரமாண்டமாகக் காட்சி கொடுத்தது. நீச்சல் உடையில் ஒரு பெண். துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் கதாநாயகி. நடுவே கதாநாயகனின் அடி தாங்க முடியாமல் கீழே விழுந்து கொண்டிருக்கும் வில்லன் நடிகன். இடையிடையே சோகமான சில அம்மா, அப்பா முகங்கள். மூலையில் காமெடியனின் கோணங்கி முகம். எல்லோரும் தத்தம் கடமையை அப்படியே செய்து கொண்டிருக்க சித்தமானவர்கள் போல அந்த விளம்பரப் பலகையில் ஏறியிருந்தார்கள்.
நடைபாதை ஓரத்தில் இடையிடையே கழிக்கப்பட்ட மலத்தில் கால் வைத்து அசிங்கப்படக் கூடாதென்ற எச்சரிக்கையில் பாதையின் நடுவிலேயே சென்று கொண்டிருந்தான்.
அவனுக்கு முன்னால் அரசியல் செயலர் கலாதரன் தனது நண்பர் ஒருவருடன் காரசாரமாக விவாதித்தபடி போய்க் கொண்டிருந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னர்தான் அவன் சென்னை கந்தோரில் வேலை செய்வதற்கு பயிற்சி முகாமிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானமாயிற்று.
கலாதரன் அந்த முகாமிற்கு அரசியல் வகுப்பென்று வந்தபோது எல்லோரும் மருட்சியுடன் தான் அவரைப் பார்த்தார்கள். அதற்கு முந்திய ஒரு மாத கால சம்பவங்களை அவர்கள் சுலபத்தில் மறந்துவிட முடியாதவர்களாக இருந்தார்கள்.
அருள் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற விசயம் ஒரு வாரத்தின் பின் அந்த முகாம் முழுவதும் இரகசியமான வதந்தியாகப் பரவியிருந்தது.
அதன்பின் நான்கு நாட்களுக்குள் அடுத்தடுத்து நான்கு பேர் அந்த முகாமில் சித்த சுவாதீனத்திற்குள்ளானார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட சித்தசுவாதீனம் தெரியாமல் ஏற்பட்ட அமர்க்களமும், அல்லோலகல்லோலமும் அந்த முகாமை பெரிதும் குழப்பிவிட்டிருந்தது. அந்தக் குழப்பத்தின் மத்தியில்தான் அது நடந்தது.
குளிக்கப்போன ஆறு பேர் முகாமைவிட்டு இரவோடிரவாகத் தப்பியோடி விட்டார்கள்.
இரண்டு நாட்களாக சல்லடை போட்டுத் தேடி அவர்களில் இருவரை மாத்திரம் கைதுசெய்து மீண்டும் முகாமிற்குக் கொண்டு வந்தார்கள்.
ஒருவன் அப்பளம்.
மற்றவன் ஊதுபத்தி.
இருவரும் அயல் வீட்டுக்காரர்கள்.
அவர்களுக்கு இம்மாதிரி விடுதலை இராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும் என்றெல்லாம் பெரிதாக ஆவல் ஏதும் முன்பு இருக்கவில்லை.
ஒருநாள் வீட்டிற்கு அருகிலுள்ள சந்திக் கடையொன்றிற்கு இருவரும் ஏதோ பொருள் வாங்க வந்தபோது சனக் கூட்டம் அதிகமாக இருக்கின்றது என்றபடியால் கூட்டம் குறையும் வரை வெளியே பேசிக் கொண்டு நின்றார்கள். அப்போது எதேச்சையாக அங்கு வந்த இவர்களின் இன்னுமொரு நண்பன் தமிழகத்திற்கு அன்றிரவு பயிற்சிக்குப் போவதாக அறிவித்தபோது தான் அவர்களுக்கும் அந்த ஆர்வம் திடீரென்று ஏற்பட்டது. அப்படியே பின்னால் வந்து எப்படியோ அவன்கூட படகிலேறி இங்கு பயிற்சிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் அன்று கடையில் வாங்க வந்த பொருட்களே
அப்பளம்.
ஊதுபத்தி.
நடு மைதானத்தில் வைத்து அவர்கள் இருவருக்கும் பகிரங்கமாக குறுந்தடியினால் அடி போட்டார்கள். ஒவ்வொரு அடியிலும் சுருண்டு நெளியும் அவர்கள் பரிதாபமாக அலறிக் கத்தினார்கள்.
~~அம்மா, அப்பாவைப் பார்க்கும் ஆசையில் தான் வெளியேறினேன். வேறு ஒரு கெட்ட நோக்கமும் கிடையாது||. அப்பளம் காலைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
~~மூன்று மாதத்தில் பயிற்சி முடியும் என்றுதான் வந்தனான். நான் வீட்டை போகாட்டி அவங்களைக் கவனிக்கிறதுக்கும் வேற ஆட்கள் இல்லை||. -இது ஊதுபத்தி.
இருவரும் ஒவ்வொரு அடியிலும் துடிதுடித்து நெளிந்தார்கள்
~~தப்பி ஓடின உங்களால முகாம் இரகசியங்கள் வெளியே தெரிஞ்சிருந்தால், அது இங்கிருக்கும் அத்தனை பேருக்கும் எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா||
~~நீங்கள் எங்கள் முகாமை கண்டுபிடிச்சு, எங்கிருக்கிறது? யார் யார் இருக்கிறார்கள்? என்று அரசாங்கத்திற்கு அறிவிக்கத்தான் இங்கு வந்தீர்கள் என்ன. உண்மையைச் சொல்லுங்கள்||
அவர்கள் இருவரையும் கேள்வியால் துளைத்தெடுத்தார்கள்.
அந்த விசாரணையின் இறுதியில் தமக்கு தப்பியோட உதவியவர்களாக மேலும் நால்வரது பெயர்களையும் அவ்விருவரும் கூறியதோடு அதன் ஒரு கட்டம் முற்றுப்பெற்றது. அவர்கள் குறிப்பிட்ட நால்வரில் ப10பாலனும் ஒருவன்.
சங்கர் கதிகலங்கி விக்கித்து நின்றான்.
~~பொய்! இது சுத்த அபாண்டம்!||. ப10பாலன் இறுதிவரை இதையே கூறினான்.
அந்த மோசமான விசாரணையின் பின் ப10பாலன் தவிர மற்ற மூவரும் தவறை ஒத்துக் கொண்டார்கள்.
ப10பாலன் மாத்திரமே இறுதிவரை ஒத்துக் கொள்ளவில்லை. அதன் பின்புதான் அவன் பற்றி தகவல் கொடுத்த அப்பளம் பயத்தினால் ப10பாலனின் பெயரையும் சொன்னதாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தன் தவறைக் கூறினான்.
ப10பாலன் தவிர மிகுதி ஐந்து பேரும் தலை மொட்டையடிக்கப்பட்டு பயங்கரத் தோற்றங்களுடன் அந்த முகாமில் அசிங்கமாக விடப்பட்டார்கள்.
ப10பாலனுக்கு இரண்டு நாட்களுக்கு பயிற்சியிலிருந்து ஓய்வுகொடுக்கும்படி முகாம் பொறுப்பாளர் பரிந்துரை கூறினார். அவன் அநியாயமாக துன்புறுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்குமாப் போல அவன் தோள்களையும் தட்டிக் கொடுத்தார்.
இரவு சாப்பாட்டின் போது நடக்க முடியாமல் தடுமாறிய ப10பாலனைத் தேடி சங்கர் ஆதங்கத்தோடு வந்தான். கன்றிச் சிவந்து போன அவன் கன்னத்தை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தான். இவனைக் கண்டதும் யாருக்கும் தெரியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு சத்தம் போடாமல் ப10பாலன் அழுது தீர்த்தான். சங்கர் அவன் பிடரியை பரிவோடு தடவிக் கொடுத்துக் கொண்டு, மலைத்துப் போய் இருந்தான்.
ப10பாலன் அந்த விசாரணையின் போது நடந்த மோசமான சித்திரவதையின் எந்தவொரு கட்டத்திலும் கண்ணீர் சிந்தவில்லையாம்; அலறி ஒப்பாரி வைக்க வில்லையாம். வன்மமாக பல்லைக் கடித்துக் கொண்டு ஒரே பதிலைத்தான் திரும்பத் திரும்பக் கூறினானாம்.
இப்போது அந்தத் துயரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து கரைசேர்ப்பவன் போல இவன் முன்னால் பொலபொலவென்று அழுது தீர்த்தான்.
அவன் அழுது முடிக்கும் வரைக்கும் எதுவும் பேசாமல் இருந்தான் சங்கர். இவனை விசாரணையென்று கொண்டுசென்ற பின் பதறிப்போயிருந்தவனுக்கு அவன் சிக்கல் எதுவுமின்றி வந்து சேர்ந்ததே நிம்மதியாக இருந்தது.
ப10பாலன் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு கண்களைத் துடைத்துவிட்டான். அப்படி துடைக்கும்போது இவன் முகத்தை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டே சொன்னான்,
~~நான் அந்த மிருகங்களிடம் மண்டியிடுவதில்லை என்றும் அழுதுவிடுவதில்லை என்றும் பிடிவாதமாக இருந்தேன். எங்கள் கண்ணீரைப் பார்ப்பதற்கெல்லாம் இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு||
அந்தத் தர்க்க நியாயத்தில் மிளிர்ந்த ஆத்திரத்தையும் அவன் தன்னில் கொண்ட பாசத்தையும் கண்டு சங்கர் மெய்சிலிர்த்து நின்றான். அவனால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. அவனைக் கலவரப்படுத்தாமல் ஆறுதல்படுத்த வார்த்தைகள் இன்றி தடுமாறினான் சங்கர். பேசாமல் சாப்பிட்டு முடிந்தபின் எழும்பும் போது இவனுக்கு மட்டும் கேட்குமாப்போல இருபக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு கூறினான்,
~~தமிழீழப் போராட்டம் ஆரம்பிக்கட்டும். அது தமிழீழத்தில் தானே நடக்கும். அப்பொழுது பல மிஸ் பயரிங்குகள் இருக்கும்||
~~என்ன? || இவன் ஒன்றும் புரியாமல் கேட்டான்.
~~தமிழீழப் போராட்டம் நடக்கும்போது என் கையிலும் ஆயுதம் இருக்கும் இல்லையா. அப்பொழுது இவர்களில் சிலரை பழிவாங்கியே தீருவேன்||
இரவு நித்திரை வராமல் பாயில் புரண்டு நெளிந்தான் சங்கர். ப10பாலன் கடைசியாகக் கூறியதுதான் இறுதியில் அரங்கேறப் போகும் காட்சியா?
விடுதலை வேண்டி தம் படிப்பு, வேலை, சொந்த பந்தங்களை, தமக்கென்று ஒரு வாழ்க்கையைத் துறந்து தம்மையே அர்ப்பணிக்க வந்த இவர்களை இறுதியில் தம் சொந்தத் தோழர்களையே சுட்டுக் கொல்லப் போகும் மன விரக்தியாளர்களாக மாற்றியது யார்?
அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்டு இதமாக நடக்கத் தெரியாமல் எந்த ஆறுதலும் இல்லாமல் முகாமைவிட்டு ஓடச்செய்யும் சூழ்நிலையை உருவாக்கு வதும், அப்படி தப்பி ஒடியவர்களை மிருகத்தனமாக தண்டிப்பதும், அப்பாவிகள் கொடுமைப்படுத்தப் படுவதும்...
எமது கழகத்திற்கு இதையெல்லாம் கண்டு கொள்ள நேரம் இல்லையா.
இரண்டு நாட்களின் பின் ப10பாலன் மீண்டும் உடற்பயிற்சிக்கு வந்தான்.
அதேவேளை புதிய தகவல் ஒன்றும் முகாமில் பரவியது.
அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் மாற்றப்பட்டு புதிதாக ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளாராம்.
சங்கர் ப10பாலனை நம்பிக்கையுடன் பார்த்து சிரித்துக் கொண்டான்.
அனைத்து முகாம்களின் பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டவர் பெயர் ராமநாதன். இவர் கழகத்தின் நீண்டகால உறுப்பினராம். அரசியல் வேலைகளில் முன்நின்று உழைத்த அனுபவம் மிக்கவர். முகாமின் பல குறைபாடுகள் நீங்கும் என்று எல்லோரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார்கள்.
முகாம் பொறுப்பாளர்கள் சகலரும் அதன்பின் உடனடியாக மாற்றப்பட்டார்கள். புதிய நியமனங்கள் வேகமாக நடந்தன. புதிதாக முகாம் பொறுப்பாளர்களாக வந்தவர்களும் ஏற்கனவே தீர்மானித்து வைத்தவர்கள் போல் தம் கீழ் உள்ள அனைத்துப் பதவிகளிலும் மாற்றங்களைச் செய்தார்கள். பிளட்டூன் சார்ஜன்டுகளும் மாற்றப்பட்டார்கள். சங்கரும் காரணம் ஏதுமின்றி பதவியிறக்கப்பட்டான்.
அனைத்து முகாம் பொறுப்பாளர் ராமநாதன் முதன்முதல் அந்த முகாமிற்கு வந்தபோது எல்லோரும் ஆர்வத்துடனும், குறுகுறுப்புடனும் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள்.
சங்கருக்கு அவரை பட்டென்று அடையாளம் தெரிந்தது. கழகத்தில் சேர்ந்த பின்பு கழகம் வெளியிட்ட பத்திரிகைகள், துண்டறிக்கைகளை தவறவிடாமல் கேட்டுப் படித்தபோது, ஒரு மேதினக் கூட்டத்தில் இவர் வேறு பெயரில் பேசிக் கொண்டிருந்த படத்தை முன்பக்கத்தில் படித்த ஞாபகம் இவனுக்கு பளிச்சென்று தெரிந்தது.
நேரில் அவர் தோற்றம் படத்தில் இருந்ததைக் காட்டிலும் அழகாகவும், இளமை யாகவும் இருந்தது.
அன்று உடனடியாக நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு ~ரோல் கோல்| கூட்டப்பட்டது. எல்லோரையும் இருக்கச் சொன்ன பின்பு ராமநாதன் பேசினார்.
தன்னை முறையாக அறிமுகம் செய்வதிலேயே அவர் கருத்தாக இருந்தார்.
~~என் எட்டு வயது மகள்கூட இப்பொழுது பொலிஸ் பாதுகாப்பில் இருக்கின்றாள். நான் என் மகளைக் கண்டே இரண்டு வருடங்களாகின்றன...||
~~... விடுதலைப் போராளிகள் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று கூறுகின்றேன் மட்டக்களப்பு சிறைச் சாலை உடைப்பை நான் தலைமை தாங்கி நடத்தும்போது ஒரு சந்தர்ப்பத்தில்...||
நீங்கள் விடுதலைப் போராளிகள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் சகித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் சோசலிச இராணுவத்தில் பணி புரிகிறீர்கள். நாம் விதிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்தான்...||
கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் பார்த்து குறும்பாக சிரித்துக் கொண்டார்கள்.
ஆவேசமான தனது பேச்சை பட்டென்று நிறுத்திவிட்டு, ராமநாதன் ஆத்திரத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி ஆங்கிலத்தில் கத்தினார்,
~~சட்டப்!, உங்களுக்கு பேசாமல் இருக்கத் தெரியாதா||
அந்த அதட்டலோடு அந்த முகாம் அமைதியாக அடங்கியது. அதேவேளை சிலர் நம்பிக்கை தளர்ந்து அமைதியாக கண்ணீர் வடிக்கவும் செய்தார்கள்.
அதன்பின்பு தான் அந்த முகாமிற்கு அரசியல் வகுப்பெடுக்க கலாதரன் வந்தார். அவர்கள் நம்பிக்கையிழந்தே அவரையும் ஏனோதானோ என்று முகங்கொடுத் தார்கள்.
அவர்களை தைரியப்படுத்தி, நம்பிக்கைய10ட்டுவதே கலாதரனின் முக்கிய பிரச்சினை யாக இருந்தது. அவரது அரசியல் வகுப்பில் முதல் பாடமாக அதையே முன் வைத்துப் பேசினார்.
அரசியல் வகுப்பெடுத்த அந்த ஒரு வார காலத்தில் பலர் கலாதரனுடன் மனம்விட்டுப் பேசும் அளவிற்கு நெருங்கிப் பழகினார்கள். அவர்கள் கவலை களையும் குறைகளையும் அவர்முன் ஒப்புவித்துச் சொல்வதில் ஒரு நிறைவு கண்டார்கள். அந்த நம்பிக்கையிலேயே சங்கரும் இலேசாக அவருடன் பேச்சுக் கொடுத்தான். தனக்கென்று விசேசமான குறையென்று எதுவும் சொல்லாமல் அவன் கழகத்தின் கொள்கை - நடைமுறைகளில் உள்ள முரண்பாடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டிப் பேசியது கலாதரன் கவனத்தை ஈர்த்தது.
~~தோழர்! முகாமில் பலர் மனம் நொந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் புரட்சிகர உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. இராணுவம் என்ற பெயரில் முழு அராஜக வாதமும் இங்கேதான் நடக்கிறது|| என்று கூறும்போது தொண்டை கம்மி பேச முடியாமல் தத்தளித்தபோது, கலாதரன் அவனை விழித்து நோக்கினார். அவனது தெளிவான பார்வையும் நிதானமான பேச்சும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
மறுநாள் அவரே அவனை தேடிப்போய்க் கண்டு கேட்டார்,
~~சென்னையில் கந்தோரில் சில வேலைகள் இருக்கின்றன. அதைச் செய்வதற்கு உமக்கு விருப்பம் இருக்கிறதா? ||
அவன் பதில் பேசத் தயங்கியதை என்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டாரோ, அவரே பேசினார்,
~~நீங்கள் இராணுவப் பயிற்சி பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கிருந்து வந்திருக்கலாம். ஆனால் வெறும் இராணுவத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு என்ன பயன்! இன்று எமக்குள்ள பெரிய குறைபாடு அரசியல் வேலை செய்வதற்கு தெளிவானவர்கள் போதியளவு இல்லாததுதான். அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்க நீங்கள் ஏன் ஒத்துழைக்கக் கூடாது. இதற்காக நீர் இராணுவப் பயிற்சி பெறும் வாய்ப்பையே இழந்துவிட மாட்டீர். யுத்தம் என்று வந்துவிட்டால் எமது கழகத்தின் சகலருமே பயிற்சி பெற்று ஆயுதம் ஏந்திப் போராடத்தான் போகிறோம்||
அவர் பேசி முடிக்கு முன்னரே இவன் தலையாட்டிக் கூறினான்.
~~நான் அதற்குத் தயார்||
ஒரு வாரத்தின் பின்பு அவர் திரும்பவும் வந்து கூட்டிச் சென்றார்.
பஸ் நிலையத்தை அடைந்ததும் சென்னை செல்லும் பஸ் வரும் வரை காத்திருந்தார்கள்.
சங்கர் அந்த முகாம் தோழர்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். ஒருவித கலக்கம் இனம்புரியாமல் மனதை அலைக்கழித்தது.
தமிழீழத்தில் நிலைமை எப்படியோ தெரியாது. நாதனிடமிருந்தும், நிர்மலா விடமிருந்தும் கடிதம் ஏதும் வராதது வேறு மனதைப் பெரிதும் சோர்வாக்கியது. அங்கு நிலைமைகள் இவ்வளவு மோசமாக மாறாது என்ற நம்பிக்கையில் தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்.

------------------------------------------------

08

அது ஒரு பழங்கால வீடு.
வீட்டின் முன் சுவர் பல இடங்களில் ப10ச்சு விழுந்து சுண்ணாம்புக் கல்
தெரிய விகாரமாக நின்றது. நில மட்டத்திலிருந்து மிக உயரமான வீட்டுத் திண்ணைக்கு தாண்டிச் செல்ல இருந்த நான்கு படிக்கற்களும்கூட இடைக்கிடையே ஆட்டம் கண்டன. உருளையான தூண்களும், சுவர்களும், பல காலமாக வெள்ளையடிக்கப்படாமல் மழை நீர் ஊறி பாசி படர்ந்து பல்வேறு வண்ணக் கலவையாக காட்சி கொடுத்தது. நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டு சீமெந்து ப10சப்பட்ட இடங்கள் கண்ணுக்குத் தென்படாத வகையில் மரக் கட்டில்களையும், அலுமாரி களையும் வைத்து சாதுரியமாக மறைத்ததினால் அந்த வீட்டின் கதிரைகள் எல்லாம் ஓர் ஒழுங்கின்றி இங்கொன்றும் அங்கொன்றுமாக தாறுமாறாக இருந்தன. வீட்டுக் கூரையில் ஒழுக்கு விழும் இடங்களில் மெல்லிய தகரங்கள் செருகப்பட்டு சமாளிக்கப்பட்டிருந்தன.
வீட்டுச் சுவரில் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதுதவிர இருபத்திரண்டு வருடங்களுக்கு முந்திய திருமண வாழ்த்து மடல்கள் இரண்டும் பிறேம் போட்டு மாட்டப்பட்டிருந்தன.
வீட்டோடு இருந்த சமையலறையில் சங்கரின் அம்மா இவனுக்காக தேநீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
சங்கர் இருக்கும் நாட்களில் நாதன் அந்த வீட்டிற்கு வந்தால் அடுத்தாற் போல் இருக்கும் கீற்றுக் கொட்டகைக்கே நேரே சென்று விடுவான். பழங்கால கீற்றுக் கொட்டகையானாலும் அது அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
நான்கு புறமும் வசதியாக உட்காரும்படியான தடித்த சீமெந்துக் குந்தும், எதிரெதிராக இரண்டு வாசல் கதவேதும் இல்லாமல் அந்தக் கொட்டகைக்கான நடைபாதை போல குறுக்கலாக அமைந்திருந்தது. நிலம் சீமெந்து ப10சப்பட்டு எப்பொழுதும் கூட்டிப் பெருக்கி துப்பரவாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் வழமைக்கு மாறாக மேலே கூரைக்கு வைக்கோல் போடப்பட்டிருந்தது. சங்கரின் அப்பா ஒவ்வொரு முறையும் தனித்தே தான் அந்த வைக்கோல் கூரையை வேய்வதாக பெருமையுடன் கூறிக் கொள்வார். சுற்றிவர ஆறு தட்டிகள் கூரையோடு சேர்த்து குந்துவரை இறக்கிக் கட்டப்பட்டிருந்தன.
அந்தத் தட்டிகள் இளம் தென்னை ஓலையினால் நெருக்கி நீக்கல் ஏதுமின்றி கச்சிதமாகப் பின்னப்பட்டிருந்தது.
உறுதியான நீண்ட கமுகுச் சிலாகைகள் அந்தத் தட்டிகளின் இருபக்கமும் குறி போட்டதுபோல முன்று இடங்களில் இறுக்கிப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது. பனிக் காலத்தில் கதகதப்பாகவும், கோடையில் இதமான குளிராகவும் அந்தக் கொட்டகை அவர்களுக்கு உல்லாச பவனமாகவும் விளங்கிற்று.
நாதன் முன்பெல்லாம் அந்தக் கொட்டகையில் மணிக்கணக்கில் சங்கருடன் பேசிக் கொண்டிருப்பான். சில வேளைகளில் இரவு அங்கேயே தங்கிவிடுவான்.
கொழும்பில் பெற்றோர்களையும் எல்லா உறவுகளையும் ஒரு நாளிலேயே உதறி விட்டு, இங்கு மனம்போன போக்கில் அணைப்பார் இல்லங்களில் படுத்துறங்கும் நாதனில் எல்லோரும் மிகக் கனிவுடன் நடந்து கொள்வார்கள்.
ஆரம்ப நாட்களில் அவனில் காணப்பட்ட கொழும்பு மத்தியதர வர்க்க ஆடம்பர பழக்க வழக்கங்களின் எச்சசொச்சங்கள் யாவும் யாழ்ப்பாணத்தின் குழைவான அன்பில் கரைந்து மறைந்தன. குடும்ப உறவுகள் மிக நெருக்கமாகவும் அக்கறையோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த சூழலில்தான் இழந்துவிட்ட ஒரு வாழ்வை தவறவிடாமல் பெறவேண்டும் என்ற அங்கலாய்ப்பில் ஏக்கத்துடன் அதைத் தேடி அலைந்து அந்த வாழ்வில் ஒன்று கலந்தான்.
கொழும்பில் அவன் விட்டு வந்த சொந்தங்களும், உறவுகளும் நண்பர்களும் என்ன ஆனார்களோ என்ற கவலையேயின்றி தன் முன்னால் குவிந்து நிற்கும் சுமைகளைத் தூக்குவதே கடமை என்பதுபோல அந்த வாழ்க்கைக்கு தன்னை வேகமாகத் தயார்படுத்தி வந்தான்.
மகளிர் அமைப்பு தோழிகள் இவனை ~அண்ணா| என்றும் ~தோழர்| என்றும் பெயர் சொல்லாமல் அன்புடன் அழைத்து அருகில் வரும் வேளைகளிலும், அவர்களை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு செல்லும்போதும் விரசமின்றி வளரும் அந்த உறவில், பெண்களால் இப்படியும் ஒரு ஆத்ம சுகத்தைத் தரமுடியும் என்று அவன் எண்ணும் வேளையில், கொழும்பு இரவு விடுதிகளில் தன் வாலிப முறுக்கில் பெண்களின் சதை நெரிசலில் பெற்ற இன்பத்தை எண்ணி மனதிற்குள் புழுங்கிச் சபித்துக் கொட்டுவான்.
இந்த ஆன்மீக முதிர்ச்சியை ஏற்படுத்த, தனக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்து பக்குவமாக வளர்த்த சங்கருக்கு மானசீகமாக நன்றி கூறிக்கொள்வான்.
சங்கர் அங்கிருந்து போன ஒரு வாரத்தின் பின் நாதன் அந்த வீட்டிற்கு வந்து சென்றான். சங்கரின் அப்பா எந்தக் கலக்கத்தையும், சோர்வையும் வெளிக்காட்டாத வராக வழமைபோல உற்சாகமாகப் பேசினார். சங்கர் இல்லாமல் ஏற்படும் வேலைப்பளுவையும், குறைபாடுகளையும் எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்று தன் திட்டங்களை விபரித்ததில் திருப்தியுற்றான் நாதன்.
நேற்று மாலையில்தான் சங்கரின் எயார் மெயில் அவன் கைகளுக்குக் கிட்டியது. அதில் பெரிதாக எதுவும் எழுதப்படவில்லை. தான் இப்போது முகாமை விட்டு, சென்னையில் கந்தோரில் இருப்பதாகவும், புதிய விலாசத்திற்கு கடிதம் எழுதும் படியும் மாத்திரம் சுருக்கமாக எழுதியிருந்தான். கூடவே ஸ்ரெப்பிள் செய்யப்பட்ட இரண்டு கடிதங்களில் ஒன்று அவன் அப்பாவுக்கும் மற்றது நிர்மலாவிற்கும்.
நிர்மலாவின் கடிதத்தை ஒரு தோழர் மூலம் கொடுத்தனுப்பினான்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு தானாகச் சென்று அவளை சந்திப்பதைத் தவிர்க்கவே விரும்பினான்.
அவனுக்கு அவளில் இப்பொழுதும் ஆத்திரமாகவே இருந்தது. நிர்மலா ஒரு வாரம் ப10ராக பெரும் மனஉளைச்சலோடு தன் பெற்றோருடன் மோதிக்கொண்டிருந் தாள். அவர்கள் அவளை கொழும்பிற்கு படிக்க அனுப்பப் போவதாகவும் கொழும்பில் எஞ்சினியராக பணிபுரியும் அவள் மைத்துனனுக்கு கட்டிவைக்க பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதாகவும் கூறிக் கொண்டார்கள். அந்த மாப்பிள்ளை கூட ஒரு தடவை வீட்டிற்கு வந்து போன பின்பு ஆரம்பித்த கடிதப் போக்குவரவில் அவள் சுகத்தையும் படிப்பையும் விசாரித்து அவள் பெற்றோருக்கு கடிதம் எழுதத் தொடங்கி, இறுதியில் நேரடியாகவே அவளுக்கு கடிதம் எழுதும் தயார்நிலைக்கு வந்துகொண்டிருக்கும்போது தான் அது நடந்தது.
அவள் பெற்றோர் கலவரத்துடன் மிரளமிரள விழித்துக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய தபாலில் வந்த அந்தக் கடிதம் அவர்களை தாங்க முடியாமல் கிலிகொள்ளச் செய்தது. கழகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்பில் அது எழுதப்பட்டிருந்தது.
~~நிர்மலா-சங்கர் காதலுக்குக் குறுக்கே நிற்போர்கள் அனைவரும் கொல்லப் படுவார்கள். எக் காரணம் கொண்டும் அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.||
கழகத்தின் சார்பில் ஒரு கையெழுத்தும் கீழே கிறுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் காலையில் இருந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நிர்மலா ஏதும் அறியாதவள் போல பேசாமல் இருந்தாள். அவள் மீதான கெடுபிடி பட்டென்று நின்றது.
அந்தப் பெற்றோர்கள் தமக்குள்ளேயே பொருமிப் பொருமி அழுதுகொண்டிருந் தார்கள்.
~~இந்த ஊரில் இனிமேல் இருக்க வேண்டாம். எங்கட மானத்தையும், உயிரையும் பாதுகாக்க வேணும். எல்லோருமா லண்டனோ, வெஸ்ட் ஜேர்மனியோ போவோம்||
அவள் அம்மா சிணுங்கிக் கொண்டே கணவனை நச்சரித்தாள்.
ஒரு வாரத்தின் பின்புதான் நாதனுக்கு இந்தச் செய்தி வதந்தியாக வந்துவிழுந்தது. உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நிர்மலாவை எதேச்சையாகத் தான் கூப்பிட்டுக் கேட்டான். அவள் வேடிக்கையாக சிரித்துக் கொண்டு ஒத்துக் கொண்டாள்.
அந்த விளையாட்டைச் செய்ததுதானே என்றும், அதன்பின் தனக்கு பெரும் விமோசனம் கிடைத்ததென்றும் கூறியபோது அவன் ஆத்திரம் மேலிட பற்களை நெரித்தான்.
~~அந்த லெட்டர் பாட் உனக்கு எப்படிக் கிடைத்தது? ||
அவன் கோபம் கொண்ட அந்தச் சிவந்த விழிகள் அவளை நடுநடுங்கச் செய்தன. அவன் நல்ல மனதை துயரப்படுத்திவிட்டோமே என்ற கவலை அவளை மோசமாக விரட்டி அடித்தது.
~~அது சங்கருடையது. ஒருநாள் அவசரத்தில் என்னிடம் பத்திரமாக வைக்கச் சொல்லித் தந்தவர். பிறகு யாரும் கேட்கவில்லை||
அவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் வரவில்லை. குதிக்கால்களை நிலத்தில் அழுத்தி வட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
~~கழகத்தின் பெயரை இப்படி அனுமதியில்லாமல் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா. உங்களுடைய இந்த அற்ப பிரச்சினைகளை தீர்ப்ப தற்குத்தான் இந்த விடுதலை தாபனம் இருக்கின்றது என்ற நினைப்போ||
அவள் பதிலேதும் பேசவில்லை. அவனும் அவளிடம் பதிலேதும் எதிர்பாராத வன் போல் விருட்டென்று வெளியேறினான். அங்கிருந்து நேரே நிர்மலாவின் வீட்டிற்கே சென்றான். அவள் அம்மா வாசலிலேயே நின்றாள்.
இவன் தன்னை அறிமுகப்படுத்தியதும் அவர்கள் மேலும் கலவரப்பட்டு குழம்பி நின்றார்கள்.
இவன் நடந்ததை அமைதியாக விளக்கினான்.
அவர்களுக்கு ஏற்பட்ட கலக்கத்திற்கு கழகத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்டான். அந்தக் கடிதம் போலிக் கடிதம் என்று மட்டுமே கூறினான். யார் எழுதினார்கள் என்று எதுவும் கூறவில்லை.
அவர்களுக்கு அது பெரும் ஆறுதல் வழங்கியது. அத்தோடு அவனில் ஒரு மதிப்பும் பிறந்தது. அந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்டு திரும்புமுன் அவர்களிடம் இதமாகக் கூறினான், ~~உங்கள் மகளுடைய திருமணத்தில் முடிவெடுப்பதற்கு உங்களுக்கு உரிமையிருக்கு. ஆனால் அதேசமயம் உங்கள் மகளுடைய மனதையும் சிறிது யோசித்துப் பாருங்கள். நாம் உங்களை மிரட்டி எந்த முடிவிற்கும் சம்மதம் கேட்கப் போவதில்லை. ஆனால் இன்று தமிழ் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கும் மோசமான துயரத்தின் மத்தியில் உங்கள் வரட்டுக் கௌரவங்கள் தேவைதானா என்று சிந்திக்கும்படிதான் வேண்டுகிறேன்||
அவர்களுக்கு அதுமாதிரி பேசக் கேட்பது அதுவே முதல் தடவை. பதிலேதும் பேசாமல் அவன் மெலிந்த உடம்பையும், செருப்பில்லாமல் அழுக்கேறிப்போன கால்களையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவன் படிப்பறிவு உள்ளவனா அல்லது பாடசாலைக்கே செல்லாதவனா என்பதே அவர்களது அப்போதைய சந்தேகமாக இருந்தது.
உள் அறையில் இருந்துகொண்டு இரகசியமாக எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்த வசீகரன் இப்பொழுது வெளியே வந்தான். அவன்தான் நிர்மலாவின் ஒரே அண்ணா. நாதனை முழுமையாக எடைபோடுவது போல கூர்மையாக அவதானித்துக்கொண்டு வந்த வசீகரன் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்தினான்.
அம்மாவிற்கு அதன் பின்புதான் நாதன் படித்த பிள்ளை என்ற உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டவள் போல் தேநீர் கொண்டுவர உள்ளே போனாள். அப்பாவிற்கோ எல்லாமே ஆச்சரியமும், அச்சம் கொடுப்பதாகவுமே இருந்தது.
ஏற்கனவே வசீகரனைப் பற்றி நிர்மலா கூறியிருந்ததால், சக இயக்கத் தோழன் என்ற மரியாதை கலந்த எச்சரிக்கையோடு பேசத் தொடங்கினான்.
வசீகரன் தனக்கு எந்த இயக்கத்தோடும் தொடர்பு இல்லை என்பதைச் சாதிப்பதில் மிக அழுத்தமாகவே இருந்தான்.
அந்த சம்பவத்திற்குப் பின்பு நிர்மலாவை அவன் சந்திக்கவில்லை. அப்படி தானாகப் போய் சந்திப்பது அவள் குற்றத்தை குறைத்து மதிப்பிட வாய்ப்பாகிவிடும் என்று அதை தவிர்த்தே வந்தான்.
சங்கரின் அம்மா தேநீரோடு வந்தாள்.
இப்பொழுது அவள் அதிகம் முதுமையடைந்துவிட்டவள் போல் நாதனுக்குப் பட்டது. எப்பொழுதும் தயங்கித் தயங்கி வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவள் இப்பொழுதெல்லாம் மிகச் சுதந்திரமாக அந்த வீட்டிற்குள்ளேயே அச்சமின்றி நடமாடுவதுபோல இருந்தது. அவள் சேலைகூட முதுமையின் அலட்சியத்தோடு ஏனோ தானோவென்று அவள் உடம்பிலிருந்து அடிக்கடி விலகிக் கொண்டிருந்தது. அண்மையில் தான் போய்வந்த அந்த ஊர்வலத்தைப் பற்றியும், தன் மனஉணர்வு களையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு நாதனுக்கு கூறிக்கொண்டாள். அவள் முகத்தில் புதிதாக ஒரு அனுபவ முத்திரை சுடர்விட்டுப் பிரகாசித்தது.
மிக நீண்ட காலமாக அவளுக்கு உடனிருந்து உபாதை கொடுத்துக் கொண்டு வரும் அந்தத் தீராத வியாதியைக்கூட இப்போது பழக்கப்படுத்திக் கொண்டவ ளாட்டம் புதிதாக ஒரு வெற்றிப் புன்னகை அவள் இதழோரம் குடிவந்திருந்தது.
அவள் நரையேறிப் போகும் கேசத்தில் இன்னும் அந்த சுருள்முடி விட்டுக்கொடாமல் அழகாகப் படிந்திருந்தது.
முகத்தில் இலேசாக சுருக்கம் ஏதும் விழவில்லையாயினும் தாடையில் மாத்திரம் சதைகள் கீழே தொங்க ஆரம்பித்துவிட்டது. வெற்றிலைக் காவியையும் மீறி இப்போதும் அவள் பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும் வசீகரம் அவள் இளமை யில் மிக அழகாகவே இருந்திருப்பாள் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தது.
~~இப்போது உங்களுடைய கழக வேலைகள் எப்படியிருக்குது தம்பி. எப்போதுதான் இந்தப் போராட்டம் ஆரம்பிக்குமாம்!||
தேநீர்க் குவளையை கையில் வாங்கியபின் ஒரு கிரிக்கெட் பந்தைப் பிடிப்பது போல இரு கைகளுக்கும் இடையில் அதை இடுக்கிக் கொண்டு சொன்னான்,
~~பல வேலைகள் நாங்கள் செய்து முடிக்க வேண்டும் அம்மா. மக்கள் ஏதோ பெடியள் செய்வாங்கள், தாங்;கள் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்ற நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள். அத்தோடு போராட்டம் என்றால் இராணுவத்திற்கு அடித்துப் போட்டு ஓடி ஒழிவது போன்ற சில்லறைத் தாக்குதல்களால் பிரயோசனம் இல்லை. அதனால் மக்களுக்குத்தான் அழிவு அதிகம். நிரந்தரமான விமோசனம் காணும் உறுதியான போராட்டத்தையே நாம் செய்ய வேண்டும்.||
அவள் தலையைச் சொறிந்து கொண்டே, அவன் கூறுவதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது கேள்விகள் அவனுக்கு சிரமத்தைக் கொடுக் குமோ என்ற சந்தேகத்தோடு ஒரு கணம் அமைதியாக இருந்தாள். ஒரு முடக்கு தேநீரை குடிக்கும்வரை பொறுமையாக இருந்துவிட்டு மீண்டும் கேட்டாள்,
~~இந்த இயக்கங்கள் எல்லாம் ஒன்றுசேரும் வாய்ப்பு இல்லையா தம்பி. சேர்ந்து போராடாமல் தனியா யாரும் போராடி இதை வெல்ல முடியுமா||
வழமையாக கருத்தரங்கென்று சென்றால் பொதுமக்கள் எப்பொழுதும் கேட்கும் அதே கேள்வியைத்தான் அவளும் கேட்டாள்.
~~ஐக்கியத்திற்கு நாங்கள் பின் நிற்கவில்லை அம்மா! அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விரைவில் ஐக்கியம் ஏற்படும்|| என்று தொடர்ந்து பேச ஆரம்பித்தவன் வெளியே படலை திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான்.
அப்பாதான் வந்துகொண்டிருந்தார்.
தூரத்தில் வரும்போதே நாதன் உள்ளே இருப்பதைக் கண்டுகொண்டு புன்னகை யோடு உள்ளே வந்தார். அவருக்கு நாதனைக் கண்டால் எப்பொழுதும் குதூகலம் தான். இளைஞர்களை இளைஞர்களாக மாத்திரம் பார்க்காமல் ஒரு புது தலைமுறையாகப் பார்க்கும் அவருக்கு அவனை வெகுவாகப் பிடிக்கும். சங்கரின் நெருங்கிய நண்பன் என்ற உறவோடு கூடவே புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அந்த ஆர்வமும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
கதிரையொன்றை இழுத்துப் போட்டு அவன் பக்கத்தில் அமர்ந்தார். தான் சங்கருக்கு எழுதிய கடிதத்தின் பெயர் விலாசங்களை அழித்துவிட்டு கழகப் பத்திரிக்கையில் பிரசுரமாயிருந்ததை நினைவுபடுத்தி வெட்கத்தோடு பெருமைப்பட்டு சிரித்துக் கொண்டார்.
நாதனும் சங்கரிடமிருந்து வந்த கடிதத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு அவர்களு க்கும் கொஞ்சம் தெரியட்டும் என்று பேச்சுவாக்கில் அதைத் தெரிவித்தான்.
~~நேற்றுத்தான் எனக்கு இந்தக் கடிதம் வந்தது. அதில் உங்களுக்கும் நிர்மலா விற்கும் கொடுக்கும்படி இரு கடிதங்களை சேர்த்து அனுப்பியிருந்தான். உங்களுக்கு நேரடியாக கடிதம் அனுப்பினால் உடைபட்டிடுமோ என்று அவனுக்கு பயம்||
கடிதத்தை படித்துக் கொண்டிருந்தவருக்கு ~~யார் அந்த நிர்மலா|| என்று கேட்க வேண்டுமாப் போல் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது.
ஆனாலும் அந்த உணர்வை அப்படியே சாதுரியமாக மறைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தையே படித்துக் கொண்டிருந்தார். அம்மா மாத்திரம் வாசலிலே நின்றபடி அந்தக் கேள்வியை பார்வையாலேயே எழுப்பிக் கொண்;டிருந்தாள்.
கடிதத்தை படித்தபின் அதை அவளிடம் நீட்டியவர், பின் இவன் பக்கம் திரும்பிக் கூறினார்,
~~எல்லாம் நல்லபடியாய் நடந்தால் சரி||
அவர் அரசியல் அர்த்தத்தில் நாட்டு நடப்பை கூறுகிறாரா அல்லது நிர்மலா சங்கர் உறவு குறித்து கூறுகின்றாரா என்று இப்பொழுது இவன் குழம்ப ஆரம்பித்தான். அதையெல்லாம் கண்டுகொள்ளாதவராக அவர் தன் தோளில் இருந்த துண்டால் வியர்வை வழியும் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டே கேட்டார்,
~~நாதன்! ஒரு முக்கியமான கேள்வி|| என்ற பீடிகையோடு அவர் ஆரம்பித்தபோது இவன் உஷாராக நிமிர்ந்து உட்கார்ந்தான்.
~~தமிழீழ விடுதலை காண்பது அவசியம். அதுவும் ஒரு சோசலிச சமூகத்திற்கான பின்னணியில் அது அமையவேண்டும் என்பதுவும் முக்கியமானது. ஆனால் இப்பொழுது கழகம் உட்பட எல்லா இயக்கங்களும் போகிற போக்கைப் பார்த்தால், அவையெல்லாம் இந்தியாவின் மேலாதிக்கத்தை தமிழீழத்தில் ஏற்படுத்தும் வகையிலேயே உங்கள் போராட்டங்கள் எல்லாம் முன்னெடுக்கப்படுமாப் போல இருக்கிறது. நீங்கள் இந்தியாவின் இராணுவத் தலையீட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா||
நாதன் குவளையின் அடியில் கிடந்த தேநீரையும் உறிஞ்சிக் குடித்துவிட்டு சொன்னான்,
~~இந்தியத் தலையீட்டை நாம் ஆதரிக்கவில்லை. இந்தியா மாத்திரமல்ல வேறு எந்த நாட்டின் தலையீட்டையும் கூட நாம் விரும்பவில்லை. ஏனென்றால் அது சிங்கள அரசிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை இன்னொரு வல்லரசிற்கு அல்லது மேலாதிக்க சக்திக்கு வழங்கியதாகவே இருக்கும். எமது விடுதலை எமது சொந்த மக்களின் போராட்டத்தினூடாகவே மலர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்கிறோம். விடுதலையை, புரட்சியை யாரும் எங்கிருந்தும் இறக்குமதி செய்து பெற்றுக் கொடுத்துவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்||
அவன் பேசி முடிக்கும்வரை கண்களை மூடி கேட்டுக் கொண்டிருந்தவர், மூக்கை ஒரு கணம் உறிஞ்சிக் கொண்டு கூறினார்,
~~நீ சொல்லுகிற விசயம் சரி. இது கொள்கையளவில் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக் கலாம். ஆனால் நடைமுறையில் உங்கள் கழகம் உட்பட எல்லா அமைப்புகளுமே இந்திய, தமிழக அரசுகளோடு கொண்டுள்ள உறவுகளைப் பார்க்கும்போது, உங்களால் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராக போகமுடியாத நிலைமையையே தோற்றுவிக்கிறீர்கள். கொள்கை மாத்திரம் உயர்வாக இருந்தால் மட்டும் போதுமா. நடைமுறை வேலைகளும் கொள்கைக்கு முரணாகாதபடி இருக்கவேண்டும் இல்லையா||
~~உண்மைதான். ஆனால் நாம் தவிர்க்க முடியாமல் இந்தியாவை எமது பின்தள மாகக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இந்திய அரசோடு வெளிப்படையாக முரண்படுவது தந்திரோபாய hPதியில் பிழையாகும் இல்லையா. அதனால்தான் நாம் சில விட்டுக்கொடுப்புகளுக்குள்ளாக வேண்டியிருக்கிறது|| அவன் கால்களால் நிலத்தைத் தேய்த்துக் கொண்டு கூறினான்.
அம்மா வந்தாள். தேநீரை அவருக்குக் கொடுத்துவிட்டு, நாதன் குடித்து முடித்த குவளையை வாங்கிக் கொண்டு போனாள்.
~~இந்தப் பதில் எனக்கு திருப்தியாக இல்லை. பின்தளமாக இருந்தால் அந்த நாட்டு அரசுடன் ஏன் ஒத்துப்போக வேண்டும். அந்த நாட்டு புரட்சிகர சக்திகளுடன் ஒத்துப்போகலாமே|| என்று இழுத்தவர் மேலும் தொடர்ந்தார்.
~~நான் ஏன் இவ்வளவு கண்டிப்பாகக் கூறுகிறேன் என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க சி.ஐ.ஏ உளவாளிகளான தம்பதிகளை பணயமாகக் கடத்தி னார்களே. அவர்கள் இவ்வளவு வெளிப்படையாக இந்திய, தமிழக அரசை அந்தப் பணய கடத்தல் வெற்றிபெற அழைத்தது சாதாரண விசயம் இல்லை. அத்தோடு இந்திய அரசின் தலையீடுகூட அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்ததையெல்லாம் சும்மா தட்டிக்கழிக்க முடியாது. இதுமாதிரித்தான் இந்த விடுதலை அமைப்புக்கள் எதுவுமே இந்திய அரசின் அபாயத்தை உணர்ந்து செயற்படுவதாக எனக்குத் தெரியவில்லை.||
அவர் பேசி முடித்ததற்கு அடையாளமாக கால்கள் இரண்டையும் கதிரைப் பின்னலுக்குள் போட்டு உடம்பை ஒரு புறமாகச் சரித்தார். அவர் பரந்த நெற்றியை கைகளால் தடவிக்கொண்டே அதை தாங்கிப் பிடித்தார். இடையிடையே அசதியில் கொட்டாவி விட்டுக் கொண்டார். இனி அப்படியே கதிரையில் அவர் உறங்கிப் போய்விடுவார்.
நாதன் அங்கிருந்து செல்லும்போது, அவர் எழுப்பிய கேள்விக்கு ப10ரண விளக்க த்தை கோபாலனை சந்தித்துக் கேட்கலாம் என்ற தீர்மானத்தோடு அவருடைய தலைமறைவு இடத்திற்கு பைசிக்கிளைத் திருப்பினான்.
சங்கரின் அப்பா எப்பொழுதும் இப்படித்தான். இவன் ஆரம்ப காலத்தில் சங்கரோடு சேர்ந்து திரிந்த காலத்தில் நாதனைக் கண்டால் விடமாட்டார். சுற்றிச் சுற்றி ஏதாவது கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் அவருடைய பெரும்பாலான கேள்விகளோ, நியாயங்களோ அவனுக்குப் புரிவதில்லை. மிக அக்கறையுடன் தன்னை ஒரு பொருட்டாக நினைத்து பேசுகின்றாரே என்ற திருப்தியில் மாத்திரம் இவன் அவர் கேள்விகளைப் பற்றி கடுமையாகச் சிந்திப்பான். இப்பொழுது அவரோடு விவாதிக்கும் அளவிற்கு தான் வளர்ந்து வருவதில் அவனுக்கு ஒரு திருப்தி. அவர் எழுப்பும் கேள்விகளை உடனுக்குடன் தாபனத் திடம் எழுப்புவான். அதேசமயம் மார்க்சிசம், சர்வதேசப் பிரச்சினைகள் போன்று ஏதும் குழப்பமான விடயங்கள் இருந்தால், எப்பொழுதும் அவரிடம் போய் கேட் டுத் தெரிந்துகொள்வான். அப்பொழுதெல்லாம் அவர் அடிக்கடி கூறுவது இதுதான்.
~~மார்க்சிசம் ஒரு விஞ்ஞானம், அதை ஒரு மதமாக மாற்றும் பாணியில், உலகப் பிரச்சினைகள் சகலவற்றிற்குமான பதில்களை எழுதித் தொகுத்து வைத்திருக்கும் ஒன்றாக அதை பார்க்கக் கூடாது.||
கோபாலனின் இடத்திற்குப் போய் அவரை தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் அதிகம் இருக்கவில்லை. இப்பொழுதுதான் ஏதோ ஒரு அடிதடிப் பிரச்சினையை தீர்த்து வைக்க இரு பகுதியையும் கூட்டிக்கொண்டு போவதாக வாசிகசாலையில் கூறினார் கள். இவனும் பைசிக்கிளை உருட்டிக்கொண்டு அந்தப் பாடசாலைக்குச் சென்றான்.
கோபாலனைச் சுற்றி எட்டுப் பத்துப் பேர் குழுமி நின்றார்கள். ஓரமாக ஒரு பெண்ணும் கூடவே நின்றாள். அவள் கீதா. எல்லோருமே கழக அங்கத்தவர்கள் தான் என்ற அலட்சியத்தில் அமைதியாக ஒரு பக்கம் நின்று நடந்ததை விசாரித்தான். பிரச்சினையொன்றும் ஊர்ப் பிரச்சினையில்லை. கழகத்திற்கும் வேறொரு இயக்கத்திற்குமான மோதல்தான். ஆனாலும் அது சாதாரண விசயம் இல்லை. நல்லவேளையாக அடிதடிக்குப் போகும் அளவிற்கு பிரச்சினை முற்றும் முன்னரே கோபாலன் அந்த இடத்திற்குப் போய்விட்டார்.
நடந்தது இதுதான்!
கழக கருத்தரங்கொன்றிற்கு கீதா அந்தக் கிராமத்திற்கு வந்திருக்கிறாள். பல்கலைக்கழக மாணவியான அவள் முழு நேரமாக கழகத்திற்கு வேலைசெய்து வருகிறாள். கருத்தரங்கை முடித்துக் கொண்டு அவள் போகும் சமயம் .... இயக்கத்தைச் சேர்ந்த இரு நண்பர்களை சந்தித்திருக்கிறாள். அவர்களும் இவளோடு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள். அந்த அறிமுகத்தில் அவர்களோடு நின்று கதைத்திருக்கிறாள். கதையெல்லாம் சாதாரண விசயங்கள் தான். ஆனால் இவர்களோடு கருத்தரங்கிற்கு வந்த சிலருக்கு இரு இளைஞர்களை யும், அவர்கள் எந்த இயக்கம் என்பதெல்லாம் தெரியும். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரை சந்தித்தாலும் அவர்களோடு கொழுவுப்பட்டு, புடுங்குப் படுவதே வழக்கம். அதே பழக்கம் இங்கு தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பெண் அதை விரும்பாமல் கழகத் தோழர்களிடம் நயமாகப் பேசி அதைத் தடுக்க முயன்றிருக்கிறாள். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. ... இயக்கத் திற்காக அவள் பரிந்து பேசுவதாக ஆத்திரப்பட்டு குற்றம் சாட்டினார்கள். இவளை நேரடியாகவே ~கழகத்தின் துரோகி| என்று வசைபாடியிருக்கிறார்கள். அவளும் விடவில்லை. ~கழகத்தின் கற்றுக்குட்டிகள்| என்று திருப்பி திட்டியிருக் கிறாள். .... இயக்கத்தவர்களும் வாய் போட்டிருக்கிறார்கள். காரசாரமான வாதம் முற்றி அடிதடிக்குப் போகுமுன்னர் கோபாலன் அங்கு வந்து சேர்ந்தார்.
வந்தவுடன் பிரச்சினையைப் புரிந்து கொண்டு ... இயக்கத்தவர்களோடு இதமாகப் பேசி அவர்களை அனுப்பிவிட்டு, மீதியாக குழுமி நின்றவர்களை தெருவில் நிற்கவிடாமல் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.
கீதா வெப்புசாரத்தோடு நின்றாள்.
நாதன் அவளைக் கூர்ந்து கவனித்தான்.
தனக்குச் சரியென்று பட்டதை தைரியமாகச் செய்யும் துணிச்சல் அவள் முகத்தில் எப்போதும் போல அப்படியே சுடர்விட்டது.
அவள் கழகத்தில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் இருந்தே அந்தத் துணிச்சல் பற்றி பரவலாகப் பேசப்பட்டது.
அவள் காதலன் கமலனுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவுக்கும் காரணமான சிறியதொரு மோதல் பற்றியே அப்பொழுது பரபரப்பாகப் பேசப்பட்டது.
கீதா அவனைக் காதலிக்கத் தொடங்கி ஆரம்பகாலத்தில் பல்கலைக் கழகத்திற்கு சாறியுடன்தான் வந்து போனாளாம். ஆனால் ஒரு வருடத்திற்குப் பின்பு லண்டனி லிருந்து அவள் சித்தப்பா அனுப்பிய பெல்ஸ் ஆடையை அவள் விரும்பி அணிந்துகொண்டு போனபோதுதான் பிரச்சினையே எழுந்தது.
கமலன் நாசூக்காகத்தான் தன் கவலையை வெளிப்படுத்திப் பொருமினான். ~~கீதா தமிழ்ப் பெண்களுக்கு எப்போதும் சாறிதான் அழகு. இந்த பெல்ஸ் ஏனோ அவர்கள் அழகை அசிங்கப்படுத்துவதாகத்தான் இருக்கிறது|| என்ற தன் அபிப்பிராயத்தை மதித்து அவள் அந்த ஆடையைக் கைவிடுவாள் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் அவளோ ~~எனக்கென்னவோ இந்த உடுப்புத்தான் ~கொம்பட்டபிளா| இருக்கு. வேண்டியபோது சைக்கிளில் கூட செல்ல முடிகிறது||. அவள் அதை விஞ்ஞான ப10ர்வமாகப் பார்த்து கூறிய பதிலோடு அந்தப் பிரச்சினை அப்போதே முடிந்துவிட்டதாக நினைத்து தொடர்ந்தும் பெல்சுடன் வந்து போனாள்.
ஒரு மாதத்தின் பின் இருவருமாக சினிமாவுக்குப் புறப்பட்டபோதுதான் அவன் குமுறிக் கொண்டு ஆத்திரத்தோடு கத்தினான். அப்பொழுது கீதா அழகிய நீல நிற பெல்சுடன் அவன் முன்னே நின்று கொண்டிருந்தாள்.
~~இந்தா பார்! இம் மாதிரி பெல்ஸ் அணிவதே எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு நான் வேணுமென்றால் இந்த உடுப்பை இன்றோடு விட்டுப்போடு. இல்லாட்டி என்னை விட்டுவிட்டு இந்த உடுப்போடு திரி||
அவள் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கே இயல்பான காதலனை கைப்பிடிக்க வேண்டும் என்ற துடிப்பு, தியாகம், அர்ப்பணிப்பில் கொண்ட நம்பிக்கையில் அவன் வீறாப்பாய் கேட்டான்.
அவள் மலைத்துப்போய் அப்படியே அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தாள். ஒரு காதலுக்கு வேண்டிய பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, நம்பிக்கை, கௌரவம் எல்லாம் இழந்த வேதனையில் தீர்க்கமாகக் கூறினாள்,
~~எனக்கு நீங்கள் வேண்டியதில்லை. இந்த ஆடைகள் தரும் நிறைவைக் கூட உங்கள் ஆக்கிரமிப்பு மனம் எனக்குத் தந்துவிடாது||
அவன் விக்கித்து நின்றான்.
ஆண்கள் எல்லோரும் அசந்து நின்றார்கள்.
பெண்கள் மாத்திரம் பொறாமையால் அவளைப் பார்த்து மனதுக்குள் கரித்தார்கள்.
அவள் தன்னைப் புரிந்து கொள்பவர் இல்லையா என்று ஏக்கத்தோடு நின்றாள்.
நாதன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
கீதா பொருமிக் கொண்டு கூறினாள்,
~~கழகம் ஐக்கியத்தைப் பற்றி கதைக்கிறது. ஆனால் சக விடுதலை அமைப்பு களோடு பேசுவதுகூட இங்கு பொறாமையாக பார்க்கப்படுகிறது. இதுதான் நீங்கள் ஐக்கியத்தைப் பற்றி புரிந்துகொண்ட லட்சணமா||
அவள் ஒரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு அவர்களை அதட்டுமாப் போல சற்று பலமாகவே கேட்டாள். அந்த சம்பவம் அவளுக்கு மோசமான ஆத்திரத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்திவிட்ட வெப்புசாரம் அந்தப் பேச்சில் அப்படியே தெறித்தது.
~~தாபன விசுவாசம் என்றால் மாற்று இயக்கங்களோடு சண்டை போட்டு மோதிக் கொண்டிருப்பதில்லை; கழக கொள்கைகளை உளமார ஏற்று பின்பற்றுவதுதான்||
அவள் ஆத்திரத்திலும் நிதானம் தவறாமல் பேசிக் கொண்டிருந்தாள். கண்கள் மாத்திரம் கோபத்தால் சிவந்து எல்லோரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந் தன. அவள் ஆவேசத்தை மேலும் தொடர விடாமல் கோபாலன் அவளை சாந்தப்படுத்தி ஆறுதல் படுத்தினார். அவளோடு முரண்பட்டு மோதிக் கொண்டிருந்த வர்களோ தாங்கள் அவளுக்கு மண்டியிடப் போவதில்லை என்ற வன்மத்தில் போலியான கம்பீரத்துடன் ஆர்ப்பாட்டமாக நின்றார்கள்.
தாபனக் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி செயல்படும் அவர்கள் தாம் பெருமைப் பட்டு பிரகடனப்படுத்தும் அந்த வார்த்தைகளை ஏனோ அன்று வெளிப்படுத்த வில்லை.
வழமையாக இம்மாதிரி மோதல்கள் வந்துவிட்டால் அவர்கள் இப்படித்தான் கறுவுவார்கள்.
~~...அளவெட்டியில் இதயன், உதயனுக்கு நடந்தது தெரியும்தானே. அது நாங்கள் தான் செய்தது. நாம் என்றும் தாபனத்திடம் எதையும் கேட்டுச் செய்யிறதில்லை. நாம் எது செய்த பிறகும் பெரியய்யா எப்படியும் எமக்கு பொறுப்பெடுப்பார். நான் பெரியய்யாவின் ஆள் தெரியுமா||
இரண்டரை வருடங்களுக்கு முன்பு அளவெட்டியில் நடைபெற்ற அந்த இரு கோரக் கொலைகளும் தாபன வளர்ச்சியை பல்வேறு கேள்விக் கணைகளால் தடுத்து நிறுத்தியிருந்தது. என்றும் ஒரு களங்கமாய்ப் போன அந்தச் சம்பவத்தால் அவமானப்பட்டு குமுறிய நாதன் வேண்டா வெறுப்பாக அவர்களைப் பார்த்து தலையை திருப்பிக் கொண்டான்.
அவர்கள் ஆணவத்தோடு அவள்மீது சீறிப் பாய்ந்தார்கள்.
~~இவள் கழகத்திற்கு எதிரான இயக்கங்களோடு தொடர்பு வைத்திருக்கிறாள். எங்கட இடங்களை காட்டிக் கொடுக்கிறதுக்கு இவள்தான் அவங்களை இங்கு வரச் சொல்லியிருகிறாள்|| என்று அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை கீதா வீறாப்புடன் முகங்கொடுத்தாள்.
~~வேண்டுமானால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். உங்கள் அபாண்டங்களுக்குப் பயந்து நாங்கள் தலைகுனிந்த காலம் மலையேறிவிட்டது|| என்று பேசியபோது பிறந்த சத்திய ஆவேசத்தின் கிளர்ச்சியில் கோபாலன் ஒரு கணம் கண்கள் பனிக்க தன்னை மறந்தார். நாதன் போதையேறிய உற்சாகத்தில் கைகளைத் தட்டி ஒலியெழுப்பி அதை வரவேற்றபோது அவர்கள் ஆத்திரத்தில் பல்லை நறுமிக் கொண்டு அவளையே வெறித்துப் பார்த்தார்கள்.

-------------------------------------------------------

09

சென்னை நகரத்தின் சூழல் முற்றிலும் முரணான தொன்றாகவே இருந்தது.
தமிழீழத்தில் இராணுவத்திற்கும் அதிரடிப் பொலிசுக்கும் அஞ்சி, சாப்பாடு
தண்ணீர் இல்லாமல் பரக்கப் பரக்க வேலைசெய்த துடிப்போ அல்லது முகாம் களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் அராஜகங்களுக்கும் உட்பட்டு, எந்த அநீதிகளுக்கும் எதிராக வாயைத் திறக்க முடியாத பரிதாபமோ இல்லாமல் அந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டதொரு உலகமாக சென்னை வாழ்வு விளங்கிற்று.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களை எல்லாம் சாதாரணமாகவே போய்ச் சந்திக்கக் கூடியதாக இருப்பதும், அற்ப விடயங்களைக்கூட இவர்கள் விடுதலைப் போராளி கள் என்ற கௌரவத்தோடு அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு செய்து கொடுப்ப தெல்லாம் மிகச் சுலபமான அரசியல் வாழ்க்கையாகவே அவனுக்குப் பட்டது.
சென்னை நகரத்தின் சித்திரை மாத வெய்யில் அவனை நன்றாகவே சுட்டெரித்தது. பெரிய சினிமா விளம்பரங்களும், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும், கூச்சமின்றி பாதையில் மலம் கழிக்கும் சிறுவர்களும், இரண்டு ரூபாய் லஞ்சம் கேட்டு பல் இளிக்கும் பொலிசாரும், பாதையின் குறுக்காக கண்மண் தெரியாமல் கடக்கும் பாதசாரிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களின் காதைப் பிளக்கும் ~பாங் பாங்| சத்தமும், உச்சரிப்புப் பிசகான ஆங்கிலத்தை கூடவே கலந்து பேசும் வேகமான தமிழும், பெண்களுக்கு தனி ஆசனம் ஒதுக்கப்பட்ட பஸ் வண்டிகளும் இவனை புதினத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.
சினிமாவிலும், நாவலிலும் இலகுவில் தரிசனம் கொடுக்கத் தவறும் சென்னை நகரத்தின் இன்னுமொரு உலகம் பாதை ஓரத்திலும் குப்பை மேட்டிலும் புதைந்து கிடந்தது. பழம் கிடுகுகள், கிழிந்த பனர்கள், காட்போட்கள், கோணிகள், தகரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகள் அந்த நகரம் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த சகல இடங்களிலும் தம் இஷ்டத்திற்கு முளைவிட்டு வளர்ந்தன. கூவம் நதி ஓடும் பகுதியெல்லாம் அந்தக் குடிசைகள் சல்வேனியாக் கொடிகள் படரும் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு புதிது புதிதாக பிறந்து கொண்டிருந்தன. அதற்குமே வழியில்லாத குடும்பங்கள் பல தெரு ஓரங்களில் வானத்தை கூரையாக்கிக் கொண்டு அப்படியே கிடந்தார்கள். அவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாக இல்லை. அவர்களுக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லை.
தமது கௌரவத்தை நிலைநாட்ட அந்தக் குடிசைகள் கூட அரசியல் கட்சிகளின் கொடிகளையும், சினிமா நடிகர்களின் போஸ்டர்களையும் கொண்டு அலங்கரிப்பதில் போட்டிபோட்டார்கள். அப்படியொரு கொடியை தமது வீட்டுக் கூரையில் பறக்க விடுவதற்கு தமக்கென்று ஒரு குடிசை இல்லாமல் போய்விட்டதே என்று அங்க லாய்ப்பவர்கள் தம் விதியை நொந்து கொண்டு தெருச் சந்திகளில் பறக்கும் கட்சிக் கொடிகளை தங்களுடையதாம் என்று இரகசிய உரிமை பாராட்டிக் கொள்வார்கள்.
சங்கர் விநோதமும் வேதனையும் நிறைந்த அந்தக் காட்சிகளை அடிக்கடி அசைபோட்டுப் பார்ப்பான்.
அங்கு வந்ததிலிருந்து அவனுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் கலாதரன் கரிசனையாக இருந்தார். இவன் நடவடிக்கைகளை தூர நின்றே தன் மூக்குக் கண்ணாடிக்கூடாக அடிக்கடி கண்காணித்துக் கொள்வார்.
மிகவும் கண்டிப்பு நிறைந்தவர் என்பதும், காசுக் கணக்குகளில் கறாரானவர் என்பதும் அவருடன் பயணம் செய்த அந்த எட்டு மணி நேரங்களுக்குள்ளேயே அவனுக்குத் தெரிந்தது.
அப்படிப்பட்டவர்களுடன் வேலைசெய்வது சுலபமானதும் மகிழ்ச்சியானதும் என்று அப்பா அடிக்கடி கூறியிருக்கிறார்.
~~மகன்! எங்கள் கட்சியில் எவ்வளவு திறமைசாலிகள் இருந்தார்கள் தெரியுமா. மார்க்சிய ஞானத்தில் தென் கிழக்காசியாவிலே சிறந்த மேதைகள் எல்லாம் எங்கள் கட்சியில் இருந்தார்கள். ஆனாலும் என்ன பயன். இறுதியில் நாம் படுதோல்வியைத் தான் தழுவினோம். கட்சி அமைப்பு இருந்தது. ஆனால் கட்சிக்குள் சுயநலத்தைத் தடுக்க யாருமே முயற்சி எடுத்தார்களில்லை. கட்சியின் தலைமையிலிருந்து அடிமட்டம் வரை அதுதான். சுயநலம், பொய், களவு, பாலியல் பலவீனம், மோசமான மதுபான நாட்டம் எல்லாம் சேர்ந்து எங்கள் கட்சியைச் சீரழித்தது. சொந்த குடும்ப உறவுகள்கூட மோசமாக நசுங்கிச் செத்துவிட்டது. கட்சியென்றிருந்தால் அதில் எப்பவும் கண்டிப்பும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் மேலோங்கியிருக்க வேண்டும். காசு விடயங்களில் எல்லாம் அலட்சிய மாக இருக்கக் கூடாது...||
பஸ் பயணத்தின் போது தமிழ்நாட்டு அரசியலின் மோசமான சீரழிவுகளையும், அதில் நாம் மாட்டிக் கொள்ளாமல் ஏன் விலகி நிற்கவேண்டும் என்பதையும் கலாதரன் விளக்கமாகக் கூறிக்கொண்டு வந்தார்.
முகாம் பிரச்சினைகளை அப்பொழுதே அவருக்குக் கூறிவிடுவோமா அல்லது பொறுத்திருப்போமா என்ற கேள்வியில் சங்கர் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான்.
ப10பாலன் ப10ரண நம்பிக்கையோடு அதை இவனுக்குச் சொன்னான்.
சங்கர் சென்னைக்கு செல்வதென்று தீர்மானித்த பின்பு, அதை ப10பாலனிடம் கூறியபோது உடனடியாக அவன் பெரும் குழப்பத்தில் மூழ்கிப்போனான்.
அந்த முகாமில் தன்னோடு ஒன்றித்திருந்த நல்ல துணையான சங்கர் அங்கிருந்து செல்வது அவனுக்கு என்னவோ போலிருந்தது. ஆனாலும் முகாமில் இருந்த அனைவரும் விரைவில் வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட இருந்தார் கள் என்பதால், அதில்கூட சங்கரை பிரிந்திருக்க வேண்டியேற்படும் என்பதனாலும் அவன் அதை பெரிதுபடுத்தாமல் விட்டான்.
~~ஒருவகையில் நீ இங்கிருந்து வெளியே போவது நல்லதுதான். இங்கிருந்து நீ எதைத்தான் சாதிக்கப் போகிறாய். இப்பொழுது இங்கே திறமைக்கு மதிப்பில்லை. எல்லாம் தம்மை காக்காய் பிடிப்பவர்களுக்குத்தான் பதவிகளும், கௌரவமும். இது சுத்த மோசம். இது கழகத்தை எங்கு கொண்டுபோய் விடுமோ தெரியாது. இங்கிருந்து ஒருவன் மகிழ்ச்சியாக திருப்தியாக வாழவேண்டும் என்றால் நன்றாகப் பொய் பேசவும், வஞ்சகனாக மாறவும் வேண்டும். அப்படியெல்லாம் மனச்சாட்சிக்குத் துரோகம் செய்ய எங்களுக் கெல்லாம் சரிப்பட்டு வராது|| என்று தன்பாட்டிற்கு வானத்தை நிமிர்ந்து பார்த்து புறுபுறுத்துக் கொண்டிருந்தவன், தன் தடித்த உதடுகளைக் கடித்துவிட்டு கேட்டான்,
~~இப்பொழுது பார்! இந்த முகாமில் ஒவ்வொருவரும் தம் ஆத்மாவை இழந்தவர் களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு இருந்த விடுதலை உணர்விலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் விலகிவிட்டார்கள் தெரியுமா||
அவன் பேசி முடிந்ததும் தன் அகன்ற விழிகளால் இவனை பரிதாபமாகப் பார்த்தான். அவன் தளர்ச்சியும், அவநம்பிக்கையும் சங்கரை மெதுவாக வாட்டியது. ப10பாலனின் தோள்மீது கைகளைப் போட்டபடி கூறினான்,
~~நீ மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள். கண்டமாதிரிப் பேசி மீண்டும் பிரச்சினை யில் மாட்டிவிடாதை||
அவன் தோள்மேல் தெரியும் மலையுச்சி இப்பொழுது ஒரு மேகத்தின் நிழல் பட்டு கருமையாக மாறியது.
ஒரு வாரத்தின் பின்பு சங்கர் அந்த முகாமிலிருந்து விடைபெற்றபோது பலர் அவனைக் கட்டிப்பிடித்து அழுதார்கள்.
ப10பாலன் அவனை இறுக்கி அணைத்து, கலங்கும் கண்களோடு நெற்றியில் முத்தமிட்டு, ஒரு வினாடி அவனை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் இருந்தான்.
வாசல்வரை அவனோடு சேர்ந்து போனவன், அங்கேயே நின்றுகொண்டு அவன் முரட்டுக் கைகளை பிடித்;துக் கொண்டு சொன்னான்,
~~சங்கர்! இந்த முகாம் பிரச்சினைகள் உனக்கு நல்லாகத் தெரியும். நீ கழகத்தின் முக்கியமானவர்களை யெல்லாம் இனிமேல் சந்தித்துப் பழகலாம். அவர்களுக்கு இங்கு நடந்தவைகள் ஒன்றும் விடாமல் சொல்லு. இந்தக் குறைபாடுகள் தீர்க்கப்படுவது எங்கள் விமோசனத்திற்கு மாத்திரமல்ல, தமிழீழ விடுதலைக்குமே அவசியம்.||
சங்கர் அதை என்றும் மறக்காமல் பத்திரமாக மனதில் பொத்திவைத்து காப்பாற்றினான். சமயம் வரும்போது இந்தப் பிரச்சினைகளை இவர்களிடம் புட்டுக் காட்ட வேண்டும் என்று வாய்ப்பான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
சங்கர் தங்கியிருந்த இடம் கந்தோரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரம்தான் இருக்கும். காலையிலேயே கந்தோருக்கு கால்நடையாக வந்துவிடுவான்.
கந்தோர் ஒரு தனி வீட்டின் முன் அனெக்ஸ் மாத்திரமே. ஒரு அறையும் முன் ஹோலும் மாத்திரமே கந்தோராகப் பாவிக்கப்பட்டது. மற்ற இரு அறைகளிலும் இரு பெண்களும் ஒரு முதியவரும் தங்கியிருந்தார்கள். அவர்களும் கழகத்தவர்கள் தான். கந்தோர் வேலையில்தான் அவர்களும் ஈடுபட்டார்கள். தனி அறை செயலதிபரை சந்திப்பதற்கான இடமாக ஒதுக்கப் பட்டிருந்தது. அதற்குள் யாரும் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கண்டபடி உட்செல்ல வேண்டாம் என்று வந்த முதல்நாளே சங்கருக்குக் கூறப்பட்டது.
செயலதிபர் இல்லாத வேளைகளில் வேறு ஆட்களும் அந்த அறையை இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு பயன்படுத்துவார்கள். டெலிபோனும் அந்த அறையிலேயே இருந்தது.
செயலதிபர் வெளிய10ர் சென்றிருந்தபடியால், இவனுக்கான கடமை ஒழுங்குகளை இன்னும் தீர்மானிக்காமல் விட்டிருந்தார்கள். அதுவரை செய்திப் பத்திரிக்கையின் முக்கிய நறுக்குகளை தரம்பிரித்து கோவையிலிடும் வேலையை கலாதரன் இவனுக்குக் கையளித்தார்.
அந்த ஒரு வாரத்திற்குள் கலாதரனுடன் ஏற்பட்ட நெருக்கத்தில் கொண்ட நம்பிக்கையில் தன் காதல் விவகாரத்தைக் கூறினான்.
வீட்டிற்கும் நிர்மலாவிற்கும் கடிதம் எழுதவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது, அவர் பதில் கடிதம் வந்து சேரக்கூடிய விலாசம் ஒன்று கொடுத்தார்.
கடிதங்கள் யாவும் செயலதிபர் அல்லது தனது பார்வைக் கூடாக அனுப்பப்பட வேண்டும் என்ற வழமையையும் வலியுறுத்திக் கூறினார். அடுத்த நாளே வீட்டிற்கும், நிர்மலாவிற்கும், நாதனுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி அவை யாவற்றையும் நாதனின் விலாசத்திற்கே சேர்ப்பித்தான்.
மாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் திடுதிப்பென்று ராமநாதன் வந்தார். சங்கர் தன் இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்து நின்றான். அவர் நேரே இவனிடம் வந்து ~~நீர்தான் கந்தோர் வேலைக்கு வந்த புது ஆளா! உமது பெயர் என்ன? || என்றார்.
நீல டெனிம் ட்ரவுசரும், மஞ்சள் டீ சேட்டும் அவர் தோற்றத்தை மிக எடுப்பாகக் காட்டியது. கையில் சிறியதொரு தோல் பையை நெஞ்சோடு சேர்த்து அணைத் திருந்தார். இவன் பெயரைச் சொன்னதும், ~~ம்! கவனமாக இருந்து வேலையைச் செய்யும். உமக்கு இங்கு என்னென்ன வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறன? ||
பேசிக் கொண்டே இவன் தோளை தட்டிக் கொடுத்தார்.
~~இன்னும் ஒன்றும் தரவில்லை. இப்போதைக்கு பேப்பர் கட்டிங்ஸ்தான் செய்கிறேன்||. சங்கர் கூறிவிட்டு கதிரையில் அமர்ந்து கொண்டான்.
அடுத்த அறையிலிருந்து ரூபியும், பத்மாவும் வந்தார்கள். ரூபி தமிழிலும், ஆங்கிலத்திலும் தட்டச்சு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். பத்மா கணக்குகளுக்குப் பொறுப்பாக இருந்தாள். இருவரும் மிக நீண்ட காலத்திற்கு முன்பு ஒன்றாகவே தமிழீழத்தில் மகளிர் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டு, பின் இராணுவத்தின் தேடுதலைத் தொடர்ந்து, இங்கு வந்து கந்தோர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் ராமநாதன் ~~பெரியவர் எப்போ வருவார் தெரியுமா? முக்கியமான விசயங்களை அவரிடம் பேசி முடிக்க வேண்டும்|| என்று மிக அவசரமாகவும், அக்கறையோடும் போலியான பதைபதை ப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னார்.
~~பெரியவரென்று கழகத்தில் யாரும் இல்லையே. செயலதிபர் என்று ஒருவர்தான் இங்கு இருக்கிறார்||. ரூபி பின்னால் நின்று கொண்டு கூறினாள். அவள் அகன்ற முகத்தின் வட்டக் கண்கள் குறும்பான நளினத்தின் அழகு காட்டிச் சிரித்தன. உதடுகளை எச்சில்படுத்திக் கொண்டு அவர் ஏதும் பதிலளிக்கிறாரா என்று காதுகளை கூர்மையாக்கிக் கொண்டு நின்றாள்.
பத்மா அவளைத் தாண்டி முன்னே வந்து ஒரு கதிரையை இழுத்துப் போட்டு பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு கேட்டாள்,
~~ராமு, அப்படி என்ன முக்கியமான விசயங்கள். எங்களுக்கும் சொல்லுங்கள் கேட்பம்||
சிறு குழந்தையொன்றிடம் கதைகேட்பது போல அவள் தன்னையறியாமலே கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாள்.
~~முக்கியமான சேதிகள் அநேகம் இருக்கு|| என்று இழுத்தவர், அவர்கள் கிண்டலையும் குறும்புத்தனத்தையும் தெரிந்து கொள்ளாதவராக மெதுவாகக் கூறினார்,
~~இன்னும் கொஞ்ச நாளில் முக்கூட்டு இணைப்பு உடையப் போகுது. அவர்களுக்க pடையில் மோதல் ஏற்பட்டிட்டுது. அதற்குப் பிறகு பாருங்களேன். இந்திய அரசு எங்களோடதான் நிற்கப் போகுது||
அவர் மிக முக்கியமான இரகசியம் போன்ற பாவனையில் கூறினார். அந்த பெண்கள் அந்தக் கிண்டலிலிருந்து விலக முடியாதவர்களாக அதே சிரிப்புடன் கூறினார்கள்,
~~நல்லது! உங்கள் தீர்க்க தரிசனம் ஒருபொழுதும் பொய்யானதில்லை|| என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்கள்.
ராமநாதனை முதன்முதலில் முகாமில் சந்தித்த போது சங்கருக்கு ஏற்பட்ட சலிப்பு மேன்மேலும் அதிகரித்துச் சென்றது. அந்தப் பெண்கள் அவரை சும்மா கிண்டல் பண்ணும் அளவுக்கு இவர் மிகவும் இளக்கமானவரா என்ற கேள்வியோடு தன் வேலைகளில் கருத்தானான்.
ராமநாதன் வெளியே போனவர், வாசல் வரை போனதும் அங்கேயே நின்று சொன்னார்,
~~இங்கே கொஞ்சம் வாரும். ஒரு சின்ன அலுவல். மோட்டார் சைக்கிளில் போய் வரலாம்||
சங்கர் மேசையில் தாறுமாறாகக் கிடந்த காகிதங்களை அடுக்கி வைத்துவிட்டு அவர் பின்னால் ராஜ்தூத் மோட்டார் சைக்கிளில் ஏறினான்.
பத்மாவும், ரூபியும் இப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் குறும்புச் சிரிப்பு இன்னமும் மறையவில்லை.
சென்னை வீதிகளின் மோசமான வாகனப் போக்குவரவுள்ள பகுதிகளால் அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். ஓட்டோ றிக்ஷாக்கள் கண்டபடி குறுக்காகப் பாய்ந்தபோது வெறுப்போடு சபித்துக் கொண்டு அவர் வேகமாக ஓட்டினார். கொழும்பு நகரம் மாதிரி இல்லாமல் உயரமான கட்டிடங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் சன நெரிசல் மிக அதிகம். அந்த மோசமான பாதைகளில் சுற்றிவளைத்து சென்றுகொண்டிருக்கும்போது தான் ராமநாதன் போகுமிடத்தைக் கூறினார்.
~~என் மகளுக்கு அடுத்த வாரம் பேர்த் டே. சிம்பிளா கொண்டாட வேண்டும். அதுதான் கொஞ்சம் உடுபிடவை வாங்கிவர வேண்டும்||
சங்கர் மனதில் ஏற்பட்ட வெறுப்பை அவர் கண்டுகொள்ளாதபடி சைட் மிரரில் தெரிந்த தன் முகத்தை மறைக்க தலையை திருப்பிக் கொண்டான்.
அண்ணா சாலையில் குளிரூட்டப்பட்ட பிடவை மாளிகை இரண்டில் ஏறி இறங்கி னார்கள். சங்கர் அந்த உடைகளைப் பற்றியோ, அதன் விலைகளைப் பற்றியோ எதுவித அக்கறையுமில்லாமல், சென்னை நகரத்தின் வனப்பை சினிமாக்களில் காட்டும் அந்த ஆடம்பர உலகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டு பெரிய பார்சல்களை தூக்கிக் கொண்டு சங்கர் ராஜ்தூத்தில் ஏறினான். பின்னால் அமர்ந்து அந்தப் பார்சல்களை கவனமாகப் பிடித்துக் கொண்டபின் வாகனம் பறந்தது.
பத்து நிமிட நேரத்தில் ஒரு ட்றைவ் இன் கொட்டேலுக்குச் சென்று சுவீட்சும் காப்பியும் சாப்பிட்டு திரும்பினார்கள். சங்கருக்கு பல புதிய காட்சிகளும் அனுபவங் களும் கிடைத்தாலும், அந்த ஆடம்பரமான ஊதாரிச் செலவீனம் நெஞ்சை உறுத்தியது. எதுவும் பேசத் தோன்றாமல் அப்படியே அந்தப் பார்சல்களை பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் சிறியதொரு பாதையால் சென்று ஒரு மாடிக் கட்டடத்தின் முன் நின்றார்கள்.
மேல்மாடியிலுள்ள அந்த அறைக்குள் ராமநாதன் முன்னே நுழைந்தார். பின்னால் இவன் பார்சல்களைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
அந்த அறையினுள்ளே இருவருடன் விவாதித்துக் கொண்டிருந்த கலாதரன், இவர்களைக் கண்டதும் ஆச்சரியமடைந்தவர் போல விழிகளை உயர்த்திப் பார்த்தார். கண்மணிகளை அசைக்காமல் ஒரே திசையைப் பார்த்தபடி இருந்தார்.
ராமநாதன் அவரை அங்கு எதிர்பாராதவர்போல சிறிது துணுக்குற்றார். இவன் கைகளிலிருந்த பாசல்களில் ஒன்றை தான் வாங்கி கீழே இறக்கி வைத்தார்.
கலாதரன் அந்தப் பேச்சை ஒருகணம் நிறுத்திவிட்டு ராமநாதனிடம் கேட்டார்,
~~என்ன பார்சல்? ||
~~அது அண்ணை! எங்கட முகாமிற்கு உதவி செய்கிற அறிவழகனுக்கு. சில உடுபிடவைகள் வாங்கி அனுப்பச் சொன்னவர். அதுதான்...||. தலையைச் சொறியாத குறையாக குழைந்துகொண்டு கூறினார் ராமநாதன்.
சங்கருக்கு அது மேலும் குழப்பத்தைக் கொடுத்தது.
கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தனது மகளுடைய பிறந்தநாளுக்கு என்றது பொய்யா! அல்லது இப்போது கூறுவதுதான் பொய்யா!
இவர் என்ன விசித்திரமான பேர்வழி.
கழகத்தில் இவர் எல்லாம் முக்கியமானவரா!
கலாதரன் இவன் குழப்பங்கள் எதையும் அறியாதவர்போல இவனிடம் கேட்டார்.
~~நீர் பைல் பண்ணச் சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்திட்டீரா? ||
~~இல்லை, இன்னும் கொஞ்சம் இருக்கிறது||
அந்தக் கேள்வியும், பதிலும் ராமநாதனை சங்கடத்தில் ஆழ்த்தியதைக் கண்டுகொண்ட திருப்தியில் கலாதரன் கேட்டார்,
~~நீர் இப்பொழுது இங்கு நிற்கலாம்தானே||
சங்கர் ~~ஆம்|| என்று தலையசைத்தான்.
ராமநாதன் அந்தப் பார்சல்களை முகாமிற்கு அனுப்பும்படி அங்கிருந்தவர் களிடம் கூறிவிட்டு உடன் புறப்பட்டுச் சென்றார்.
அவர் போனபின்பு கலாதரன் அந்த இருவருடன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். அவர்களை குழப்பக் கூடாதென்று வெளிவிறாந்தையில் நிற்போம் என்று போன சங்கரை அழைத்து,
~~நீரும் இதில் இருந்து கவனியும்|| என்று அங்கேயே இருக்கச் சொன்னார். கண்ணாடியைக் கழற்றி கையில் எடுத்துவிட்டு, வலது கையை மாத்திரம் ஆட்டி அசைத்துக் கொண்டு கலாதரன் இரகசியம் பேசும் பாவனையில் அவர்கள் இருவரையும் குறுகுறுப்பாக பார்த்துக் கொண்டு கூறினார்,
~~கழகத்தைப் பொறுத்தவரை நாம் இந்தியா மாத்திரமல்ல வேறு எந்த மேலாதிக்க சக்தியையும் தமிழீழ இறைமையை குந்தகப்படுத்த இடமளிக்க முடியாது. எமது விடுதலையின் நோக்கம் சிங்கள இனவாத அரசிற்குப் பதிலாக இன்னுமொரு மேலாதிக்க சக்தியை நிலைநிறுத்துவதில்லை. எமது பின்தளமாக இந்தியா அமைந்த காரணத்தினால் இதை நாம் இப்போதைக்கு பகிரங்கப் படுத்துவது தந்திரோபாயமாகாது.
எம்மைப் பொறுத்தவரை சகல விடுதலை தாபனங்களையும் ஐக்கியப் படுத்துவதன் மூலமே நாம் எமது இலட்சியத்தை அடைய முடியும். இந்தியா மட்டுமல்ல, வேறு எந்த சக்தியின் தலையீட்டைத் தடுப்பதற்கும் இந்த ஐக்கியம் அவசியமாகப் படுகிறது. ஆகையினால்தான் இந்த இணைவு முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை யும் வழங்கும்படி கேட்கிறோம்.
விடுதலை இயக்கங்கள் இந்திய நட்பிற்கும், ஆதரவிற்கும் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதை விடுத்து தமக்குள் ஐக்கியப்படுவதுதான் இன்றைய காலகட்டத் தேவை. தயவுசெய்து இந்தக் கருத்துக்களை உங்கள் தாபனத்தின் முன் வையுங்கள்||
அவர்கள் இருவரும் மிகச் சுவாரசியமாக பாடம் கேட்கும் மாணவர்கள்போல குறுக்கே எதுவும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
விடைபெறும்போது எல்லோரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
சங்கரையும் கலாதரன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர்கள் வெளியே போனபின்பு இவனிடம் கேட்டார்,
~~இப்போது போனவர்களைத் தெரியுமா. இவர்கள் ... இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்||
இவன் ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தான்.
~~சரி நாம் போவோமா|| என்று கேட்டுக்கொண்டு கதிரையிலிருந்து எழுந்தார்.
அந்த அறைதான் வெளியாட்கள் தொடர்பு கொள்வதற்கான பகிரங்க கந்தோர் என்று ஊகித்துக் கொண்டான். கழகத்தின் கலண்டர்கள், சுவரொட்டிகள் எல்லாம் அங்கு தாறுமாறாகக் குவிந்திருந்தன.
போகும் வழியில் கேட்டார், ~~ராமநாதனுடன் எங்கெங்கு போனீர்? ||
இவன் விபரமாகக் கூறினான்.
~~அப்படியென்றால் இந்தப் பயணம் உமக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்லும்|| அவர் குறும்பாகக் கேட்டார்.
இவன் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்ததும் இவனுக்கு ஆறுதல் கூறுமாப்போல சலிப்போடு கூறினார்,
~~விடுதலைக்கென்று வந்தபின்பு, அந்த வேலைகளுக்கே நேரம் போதவில்லை. அதற்குள் இந்த வேலைகளெல்லாம் நாம் செய்ய வேண்டுமா||
அந்த உடுபிடவை எல்லாம் மகளுடைய பிறந்தநாளுக்கு என்று சொன்ன தகவலை இவருக்குக் கூறுவோமா என்று சங்கர் ஒருகணம் யோசித்தான்.
பின்பு அதனால் ஏற்படப்போகும் அனர்த்தங்கள் எந்தளவிற்குப் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பேசாமல் இருந்தான்.
~~இனிமேல் ராமநாதன் இம்மாதிரி எடுபிடி வேலைகளுக்குக் கூப்பிட்டால் வேறு வேலை இருக்கிறது என்று கூறி மறுத்துவிடும். நீர் இங்கு வந்தது இம்மாதிரி வேலைகளுக்காக இல்லை என்று நேரிலேயே கூறிவிடும்|| என்று கண்டிப்போடு கூறினார்.
இவன் ~~ஆம்|| என்று தலையாட்டினான்.
நாளை செயலதிபர் வருகிறாராம். அதன்பின் சங்கருக்கென்று நிரந்தரமான கடமைகள் முடிவு செய்யப்பட்டுவிடும்.
அந்தச் செய்தியையும் கலாதரனே கூறினார்.

---------------------------------------------------

10


அந்தக் கடிதம் அவளை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது.
எட்டு மாதங்களின் பின் சங்கரிடமிருந்து வந்த அது அவனை நேரிலேயே
பார்த்து மகிழ்ந்த ப10ரிப்பைக் கொடுத்தது.
கடிதம் ரத்தினச் சுருக்கமாக இருந்தது. தணிக்கை செய்யப்பட்டு வரும் கடிதம் என்பதனால் அவன் தன் உள்ளக்கிடக்கையை அப்படியே அதில் கொட்டியிருக்க முடியாது என்று சமாதானம் கூறிக்கொண்டு முத்து முத்தான எழுத்துக்களில் நிர்மலா தன்னை மறந்தாள்.
அந்தக் கடிதம் வழங்கிய ஆத்ம பலத்தின் பின்பு, அவள் சகஜ நிலைக்கு வந்தவள் போலானாள். தான் இவ்வளவு அவசரப்பட்டு முட்டாள்தனமாக நாதனை கோபப்படுத்தியிருக்க வேண்டாம் என்ற கழிவிரக்கம் இப்போது ஏற்பட்டது.
நாதன் அன்று கோபப்பட்டுப் பேசியபின்பு வீட்டிற்கும் வந்துபோய் இருக்கிறான் என்பதை அண்ணா வந்தவுடன் கூறினார். அவள் கழகத்தின் கடிதத் தலைப்பில் வீட்டிற்கு எழுதிய அந்தப் போலி மிரட்டல் கடிதம் பற்றி அடுத்தநாளே அண்ணா விற்குக் கூறியிருந்தாள். அது எவ்வளவு பாரதூரமானதென வசீகரனுக்குக்கூட அப்போது படவில்லை.
நாதன் வந்து வீட்டில் பேசிப் போன பின்புதான், அவனுக்கே அந்தத் தவறு தெரிந்தது. அத்துடன் கழகத்தின் நல்ல பெயரைக் காப்பதற்காக அவன் கரிசனை யோடு வீட்டிற்கு வந்து பெற்றோர்களை சமாதானப்படுத்திப் போனதும் அவனில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது.
~~உங்கள் கழகத்தில் தேவர்களும் இருக்கிறார்கள், அசுரர்களும் இருக்கிறார் கள். இரண்டு பேருமே தம் இயல்பிற்கேற்ப வௌ;வேறு வகைகளில் பலமான வர்கள். ஆனால் இறுதி வெற்றியை யார் பெறப்போகின்றார்களோ தெரியாது|| என்று வசீகரன் நிர்மலாவிடம் கூறிச் சிரித்தான்.
அவனுக்கு நிர்மலாவை நினைக்க இப்பொழுதெல்லாம் பெரும் பரிதாபமாகவே இருக்கும். சின்ன வயதிலிருந்தே அவனோடு போட்டி போட்டு வளர்ந்தவள். நினைத்த காரியம் ஒப்பேறாவிட்டால் அவள் போடும் மோசமான கூப்பாட்டை யும், பிடிவாதத்தையும் தாங்கமாட்டாமல் வசீகரன் அந்தச் சின்ன வயதிலேயே அவளோடு போட்டி போடுவதை நிறுத்தியிருந்தான்.
துணிவும் தன்நம்பிக்கையும் கொண்டு தனக்கொரு தங்கையாக மாத்திர மல்லாமல் ஒரு நல்ல நண்பனாகவும் வளர்ந்து வந்தவள்.
பருவமடையும் வரை அவனோடு சேர்ந்து புட்போல், கிரிக்கட் தான் விளையாடி மகிழ்வாள். பெண்களின் வழமையான அம்மா, அப்பா விளையாட்டெல்லாம் அவளுக்கு ஈடுபாடில்லாதது. இன்று அவள் சங்கர் மேல் கொண்ட காதல் எவ்வளவு ஆழமானதென்பதையும் அவன் அறிவான். அவள் உணர்வுகளை நெருங்கி புரிந்துகொண்ட அவனுக்கு அவள் ஒரு மனஉடைவுக்கு உட்படுவது எவ்வளவு சகிக்க முடியாத கொடுமை என்பதை எண்ணி வருந்துவான்.
அவள் பெற்றோரின் இருபகுதி சொத்துக்களையும் திரட்டி அவளுக்கென்று சேமித்த சீதனத்தால்கூட ஒரு லண்டன் மாப்பிளையை பெற முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு. இன்னும் எப்படி சொத்துக்களை சேகரிக்கலாம் என்ற கவலையில் மூழ்கியிருக்கும் பெற்றோரை வென்று அவள் எப்படி தன் காதலை நிறைவேற்றப் போகிறாளோ என்று ஒவ்வொரு சமயமும் அவளை எண்ணிக் கலங்குவான்.
பாவம் அவள்!
நாதன் அந்தக் கடிதத்தை நேரில் கொடாமல், இன்னுமொருவர் மூலம் கொடுத்து விட்டதும் அவன் கோபம் இன்னும் தணியவில்லை என்று பயந்தாள்.
அந்தத் தவறு அவளை பெரிதும் உறுத்திக் கொண்டிருந்தது. இந்த விவகாரங்கள் சங்கருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்றே அவள் விரும்பினாள். தனிமையில் இருக்கும் அவனுக்கு இந்தக் கலக்கங்களைக் கொடுத்து அவனை குழப்பக் கூடாது என்பதாலும், நாதனிடம் இதுவிடயமாக நேரிலேயே மன்னிப்புக் கேட்க வேண்டியும் அன்று மாலை அவனை சந்திப்பதாகத் தீர்மானித்தாள்.
அன்று மாலை திட்டமிட்டபடி அவளால் வெளியே செல்ல முடியவில்லை.
அவள் மாத்திரமன்றி யாருக்குமே வெளியே செல்லத் தைரியம் வரவில்லை.
இராணுவமும் அதிரடிப் பொலிசும் வெறித்தனமாக நகரத்தின் தெருக்கள் எங்கும் சல்லடைபோட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். பருத்தித்துறையில் நான்கு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டார்களாம். காயப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத் திரிக்குக் கொண்டு வந்தார்கள். அப்படி வரும்போதே வழியில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கண்டபடி சுட்டுத் தள்ளினார்கள். காவல் படையின் அந்த மிருக வெறியாட்டம் நகரமெங்கும் பயங்கர வேகத்தில் பரவியது.
துப்பாக்கி வேட்டுக்கள் எல்லா மூலை முடுக்குகளிலும் முழங்கிக் கொண்டிருந்தன. வீடுகளில் உள்ளோர் வீதிக்குப் போக முடியவில்லை. வீதியில் போவோர் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை. கடைகள் பல தீக்கிரையாகி ஒரு இரவுக்குள் சாம்பலாகின. பாடசாலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
ஒரே களேபரம்!
மறுநாள் செய்தி வந்தது.
பொதுமக்களில் நாற்பது பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களாம். அவர்களில் பெண்களும், முதியவர்களும், சிறுவர்களும் இருந்தார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட வர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று இலங்கை வானொலி அறிவித்தது.
நகரம் நாள்ப10ராக வெறிச்சோடிக் கிடந்து சோககீதம் இசைத்தது.
சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறிய மக்கள் பாடசாலைகளிலும், தேவாலய ங்களிலும் முண்டியடித்தார்கள்.
நாதன் தோழர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தான். இறந்தவர் இல்லங்களிலும், காயப்பட்டவர்களை வைத்தியசாலைகளிலும், அகதியானவர்களை பாடசாலை களிலும் தேவாலயங்களிலும் இரகசியமாகச் சந்தித்து, விபரங்களைச் சேகரிக்க ஒவ்வொரு பகுதியாக அவர்களை பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தான். இடையிடையே தானும் போய் அந்தத் துயர நிகழ்ச்சியில் அவர்களுக்கேற்பட்ட விபாPத அனுபவங்களைக் கேட்டறிந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.
கழகத் தோழர்களுக்கும் ஏதும் நடந்ததா என்றும் அடிக்கடி விசாரித்துக் கொண்டான். புகைப்படம் எடுப்பதற்கும் மூன்று பேரை தனித்தனியாக அனுப்பி வைத்தான்.
அகதிகள் முகாமைப் பரிபாலிப்பதற்கு உடனடியாக பாதிப்புறாத பகுதிகளில் நிதி, பொருள் சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டான்.
இந்தப் பரபரப்பில் அவன் ஆழ்ந்திருக்கும் வேளையில்தான் அந்தக் குரல் அவனை அழைத்தது.
கழக இராணுவப் பொறுப்பாளர்கள் இருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இவனை அழைத்தார்கள்.
அவர்கள் இருவரும் முன்பு கீதாவோடு சண்டை போட்டுக் கொண்டவர்கள்தான்.
அந்த சுசுக்கி மோட்டார் சைக்கிள் யாரிடமோ கடத்தப்பட்டதாக இருக்க வேண்டும். கழகக் கட்டுப்பாடுகளை மீறி இம்மாதிரி வாகனங்களைக் கடத்தி அவனை சந்திக்க வரவேண்டிய அவசியம் என்னவோ என்ற எரிச்சலை மனதுக்குள் விழுங்கிக் கொண்டு நின்றான் நாதன்.
~~நாதன்! இன்று எங்கட இடத்துக்குள்ள ... இயக்கம் வரப் பாக்குது. நாங்கள் ஆம்ஸ் வைச்சு எடுக்கிற வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களும் நேற்று இரவு ஏதோ சாமான்கள் கொண்டு வந்து பறிச்சிருக்கிறாங்கள். அவங்கட இடங்கள் அகப்பட்ட உடனே இங்கு வந்திருக்கிறாங்கள்.
அவங்களுக்கு ஆதரவு கொடுத்த வீடு உனக்குத் தெரிஞ்ச இடம்தான். அவர் எங்களுக்கும் உதவி இருக்கிறார். நீ போய்ச் சொல்லி அவங்களை உடனடியாக எழுப்பி விடு. இல்லாட்டி நாங்கள் இங்கு திரிய ஏலாமப் போகும். நாளைக்கு அவங்கள் முழு இடத்தையும் பிடிச்சிடுவாங்கள்||
அவர்கள் இவன் பதிலுக்குக் காத்திராமல் மாறிமாறி கூறிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பதகளிப்பான வேளையில் இவர்களுக்கு இதுதான் முக்கிய பிரச்சினை யாகப் பட்டது வேறு அவன் ஆத்திரத்தைக் கூட்டியிருந்தது.
அவர்கள் பேசும்போது ஒரு தெய்வம் வரம் கொடுக்கும் பாவனையில் கண்களை மூடி, கைகளை தோள் மட்டத்திற்கு மட்டும் உயர்த்தி பிடிவாதமாக பொரிந்து தள்ளினார்கள். தாம் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் போன்ற போலிக் கம்பீரத்தை வரவழைக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்தார்கள்.
நாதன் தன் உணர்ச்சிகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இவர்களோடு விவாதிப்பது எதுவித பிரயோசனமும் தராது என்று தெரியும்; அதைவிட பிரச்சி னையை சுமுகமாக சமாளிக்க எண்ணி பேசாமல் அவர்களை அனுப்பி வைத்தான்.
~~இதை கட்டாயம் கவனி|| என்று அவர்கள் சுசுக்கியை ஸ்டார்ட் பண்ணும்போது சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் அப்படி பேசிச் செல்லும்போது நாதன்மீதுள்ள காழ்ப்புணர்வை நாசுக்காக வெளிப்படுத்துவதில் பெரும் நிறைவு கண்டார்கள்.
அன்றைய சம்பவத்திற்குப் பின்பு அவர்களுக்கு நாதன் மீது இனம்புரியாத வெறுப்பும், கரிப்பும் பரவியிருந்தது.
கோபாலன் அன்று எல்லோரையும் சமாதானப்படுத்தி அனுப்பினாலும் கீதா இவர்களோடு சவால்விட்டு மோதியபோது, நாதன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது இவர்கள் மான உணர்வை பெரிதும் சீண்டி விட்டிருந்தது. தமக்குள் கறுவிக் கொண்டு போலியாகச் சிரித்துக் கொண்டுதான் அன்று வெளியேறினார்கள்.
கீதா அன்று மிக அழகாகக் கூறினாள்,
~~தாபன விசுவாசம் என்றால் மாற்று இயக்கங்களோடு சண்டை போட்டு மோதிக் கொண்டிருப்பதில்லை||
சிங்கள இராணுவத்தின் அட்டகாசம் பற்றியோ, பொதுமக்களின் கண்ணீர் பற்றியோ இவர்களுக்குக் கிஞ்சித்தும் அக்கறையில்லை.
என்றோ நடந்து முடிந்த கொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் இப்பொழுதும் சக விடுதலை இயக்கங்களை பழிவாங்கத் துடிப்பதுதான் இவர்கள் காண்பிக்கும் தாபன விசுவாசம்.
அவன் மனதுக்குள் சபித்துக் கொட்டினான்!
~~நாம் ஐக்கியத்தைப் பற்றி கதைக்கிறோம்;. ஐக்கியம் இரு தலைவர்களும் பேசினால் மாத்திரம் ஏற்பட்டிடுமா. தாபன அங்கத்தவர்களிடம் அந்தப் புரிந்துணர்வு ஏற்படுவது அவசியமில்லையா||
அன்று அவன் கைதட்டி ஆரவாரித்த தெம்பிலோ என்னவோ அவள் படபடவென்று பொரிந்து தள்ளினாள்.
அவளோடு வாதிட்டுக் கொண்டிருந்தவர்களை கோபாலன் சமாளித்து அனுப்பிய போது அவர்களில் ஏன் இந்த வம்பில் மாட்டுப்பட்டோம் என்று குழம்பியவர்களும் உண்டு. ஆனால் இவர்கள் இருவர் மாத்திரம் தோல்வியே காணாத வீரக் காளைகளாட்டம் உடம்பை சிலிர்த்துக் கொண்டு சென்றார்கள்.
அதன்பின்பு நாதனும், கீதாவும் மட்டும் கோபாலனுடன் இருந்தார்கள். கீதா இப்பொழுது வேகம் தணிந்தவளாக அமைதியாக நின்றாள். சற்றுமுன் நின்ற உணர்ச்சிப் பிரவாகம் அடங்கியபோது ஏனோ அவளையும் மீறி வந்த இரு கண்ணீர் துளிகளையும் துடைத்துவிட்டுக் கூறினாள்,
~~பல்கலைக் கழகத்தில் எல்லா இயக்கத்தவர்களும் இருக்கிறார்கள். நாம் நட்பாகப் பேசும்போது இயக்க விடயங்களை தவிர்த்து வருகிறோம்|| என்று தன் நிலையை விளக்குவதுபோல கூறியவள் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு சொன்னாள்,
~~எனது நல்ல நண்பர்கள் எல்லாம் வேறு இயக்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் கழக விசயமாக நான் எதுவும் கதைப்பதில்லை. அதேபோல அவர்களும் எங்கள் கழக விடயங்களில் தலையிடுவதில்லை. அந்தப் புரிந்துணர்வு எங்களுக்குள் இருக்கிறது. ஆனால் இதை பல கழகத் தோழர்கள் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். எனது நடத்தையில் அவர்களுக்கு சந்தேகம். நான் அவர்களுடைய உளவாளி என்று வதந்தி வேறு. நீங்கள் இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்||
அவள் பெண்மையின் தவிப்போடு அந்தக் கேள்வியை முன்னே வைத்தாள். கோபாலன் தன் நீண்ட மூக்கை கைவிரல்களால் தடவி விட்டுக்கொண்டு கூறினார். நாதன் அவர் முகத்தையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
~~இது ஒரு பிரச்சினையே இல்லை. உண்மையை சொல்லப் போனால் கழகத் தோழர்கள் எல்லோருமே இதுபோல சக இயக்கங்களோடு பழக வேண்டும். அந்த அளவிற்கு ஆரோக்கியமான கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றேன்||. அவர் மெதுவாக ஆனால் உறுதியாகக் கூறினார்.
நாதன் அவருடன் இந்தியத் தலையீடு பற்றி கதைக்க வந்த விடயத்தை இப்பொழுது ஆரம்பிப்பது உசிதமில்லையென்று கண்டு அந்தப் போக்கிற்கே விட்டான்.
~~கழகத்தில் இராணுவத்தைச் சேர்ந்த பழைய உறுப்பினர்களுக்கு இந்தக் குரோத உணர்வு அதிகமாக இருக்கிறது. என்றோ நடந்து முடிந்த அடிதடி கொலைகளுக்கு இப்பொழுதும் பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவர்கள் யதார்த்தத்தை காணத் தவறுகிறார்கள். கழகத்தின் கொள்கை இலட்சியம் புரியாத படு முட்டாள்களாக இருக்கிறார்கள்|| என்று நாதன் தன் கொதிப்பைக் கொட்டினான்.
கோபாலன் கைகளை உயர்த்தி அவனை அடக்கினார்.
~~தோழர்! அப்படி அவசரப்பட்டுப் பேசாதீர்கள். கழகத்தில் இரு வேறு முரண்பட்ட தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன. இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் வேலை செய்பவர்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் தெரியுமா? இவர்கள் கோழைகள். யுத்தத்திற்குப் பயந்தவர்கள். அதனால்தான் பிரச்சாரம் போன்ற அற்ப வேலைகளை இவர்கள் செய்கின்றார்கள் என்று கருதுகின்றார்கள். அதேசமயம் அரசியல் வேலை செய்பவர்களும் இராணுவத் தோழர்கள் குறித்து இவர்கள் முட்டாள்கள், படிப்பறிவில்லாதவர்கள், பொதுமக்களோடு கதைக்கப் பேசத் தெரியாத முரடர்கள், அதனால்தான் ஆயுதம் ஏந்திப் போராட இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்று கருதுகின்றார்கள். இது இரண்டுமே தவறான போக்குகள். இதை தாபனத்திற்குள் வளரவிடாமல் சீர்செய்ய வேண்டும்|| என்று தன் மெல்லிய விரல்களை நாதனின் முகத்திற்கு நேராக காட்டிப் பேசியவர், ~~இப்பொழுது எமக்கு இருக்கும் முக்கிய பணி இதுதான். யுத்தம் என்றால் அது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்றால் அது இரத்தம் சிந்தாத யுத்தம். இந்த உண்மையை கழகத்திற்குள் எல்லா மட்டத்திலும் எடுத்துச் செல்ல வேண்டும்||
நாதன் இப்பொழுது கீதாவைப் பார்த்தான். அவள் தன் பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வு இல்லை என்று சோகமாகச் சிந்திப்பவள் போல தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள்.
கோபாலன் போனபின்பு நாதன் கீதாவோடு சிறிது தூரம் ஒன்றாகச் சென்றான். அவளது சோகமான பார்வை, அந்த சம்பவங்களில் அவள் எவ்வளவு தூரம் புண்பட்டுப் போனாள் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது. இருவரும் பைசிக்கிளை உருட்டிக் கொண்டே சென்றார்கள். அவர்கள் பிரியும் பாதை வந்தபோது அவள் கூறினாள்,
~~நாதன்! என்னோடு வாக்குவாதப் பட்டவர்களை உங்களுக்கு தெரியும்தானே. இவர்களின் தன்னிச்சையான அராஜகப் போக்கினால் வீணாக எத்தனையோ மனித உயிர்கள் கொல்லப் பட்டிருக்கின்றன. இதயன், உதயன் கொலைகள் எல்லாம் எவ்வளவு மோசமான விடயங்கள். இவர்கள் கழகத்தவர்கள் என்பதற்காக நாம் விட்டுக்கொடுத்துக் கொண்டு போனால் இந்த அராஜகம் எம்மையே அழிக்கும் அளவிற்கு வளரும். இந்த அராஜகப் போக்கிற்கு எதிராகப் போராடுவது அவசியம் என்று கருதியபடியால்தான் நான் அப்படி ஆக்ரோசமாக நடுவீதியில் நின்று இவர்களோடு சண்டைபிடிக்க வேண்டி வந்தது|| என்று எதற்காகவோ வருந்துபவள் போல் தலையைக் குனிந்து கொண்டு கூறியவள், இவன்; முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னாள்,
~~போராட்ட வாழ்க்கை எதை வேண்டுமானாலும் பறிக்கட்டும். ஆனால் உயிரோட்ட மான மனித உறவுகளையும் அது சிதைக்குமானால் இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுத்தான் என்ன பயன்||
அந்த வார்த்தைகளை நாதன் மூளையில் வைத்துப் பாதுகாத்தான்.
துப்பாக்கிப் பிரயோகம் நடந்த இடத்தில் இப்பொழுது இராணுவம் இல்லை என்ற தகவல் நிச்சயமான பின்பு நாதன் பைசிக்கிளை அங்கு திருப்பினான். அகதிகளாக வந்து பாடசாலையொன்றில் தஞ்சமடைந்தவர்களுக்கு சாப்பாடு ஒழுங்கு ஏதும் இல்லாமல் இருக்கின்றார்களாம். நேரில் போய் அதை முடிப்போம் என்ற வேகத்தில் பைசிக்கிளை மிதித்துச் செலுத்தினான். அதன்பின்பு அவர்கள் கூறிய ... இயக்கத்தின் பிரச்சினையை போய் கவனிக்க வேண்டும்.
பிரதான வீதியைத் தாண்டி பத்து மீற்றர் தூரம் வரை சென்றால் ஒழுங்கைக்குள் திரும்பி விடலாம். இருபுறமும் பார்த்துக் கொண்டு பைசிக்கிளை பிரதான வீதியை நோக்கிச் செலுத்தினான். சந்தியில் ஒரு கூட்டம் இரு வாகனங்களில் வந்து இறங்கியது. புது வேட்டி, கூறைச் சேலைகள், திருமண வீட்டு களைகுன்றாத முகங்களுடன் அலங்கரிக்கப்பட்ட திருமண வீட்டை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
விசமத்தனமான பார்வையை வெறுப்போடு அவர்கள் மேல் படரவிட்டுக் கொண்டு அவர்களை தாண்டிச் சென்றான்.
அவர்களுக்கு என்ன!
தங்கள் காரியங்கள் ஒழுங்காக நடந்தால் சரி.
பாடசாலையில் இவன் செல்லும் முன்னரே இவன் தோழர்கள் அவர்கள் தேவைகளை முகங்கொடுக்கத் தொடங்கினார்கள்.
அழுது தேம்பிய கண்களோடு அந்தப் பாடசாலையில் ஐம்பது குடும்பங்கள்வரை நிறைந்திருந்தார்கள். ஆண்கள் தலையைக் கவிழ்ந்தபடி அந்தத் துர்ப்பாக்கிய நிலையை எண்ணி மனதுக்குள் புழுங்கிக் கொண்டார்கள். பெண்கள் தங்கள் பிள்ளைகளை அழாமல் வைத்திருக்க வேண்டி, தங்கள் கண்ணீரை தடைபோட்டு வைத்திருந்தார்கள். சடலங்களைக் கூட பெற முடியாமல் போன இரு குடும்பங்கள் உயிரிழந்த அந்த உறவுகளில் கொண்ட பாசத்தையும், அந்த துயரச் சம்பவத்தையும் ஒப்பாரியாகச் சொல்லி அழுது கொண்டிருந்தார்கள்.
~~உன்ர முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே|| என்று அந்தத் தாய் கீச்சிட்டுக் கதறி அழுதது அந்த முகாமிலுள்ள அனைவரதும் ஈரல் கருகுவது போன்ற வேதனையைக் கொடுத்தது.
அங்கே சூழ்ந்திருந்த உறவினர்கள் தமது கவலையை மீறி அவளைத் தேற்று வதற்கு பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாதன் அந்தத் தோழர்களை சந்தித்து செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளை விரிவாகக் கேட்டறிந்தான். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து நடந்தவற் றைக் கேட்டான். அவர்கள் துயரத்துடன் தங்கள் கதையைக் கூறிவிட்டு இறுதியில் சொன்னார்கள்,
~~தம்பி! இந்தத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதென்றால், ஒரேயடி யாக செய்து முடியுங்கள். ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை. இப்படி மாதத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களைப் பலியிட ஏலாது||. அவன் தலையை குனிந்துகொண்டு அவர்கள் பேசிமுடிக்கும்வரை மௌனமாக இருந்தான்.
மாலையில் மறக்காமல் நாதன் அந்த வீட்டிற்குப் போனான்.
அந்த நண்பன் வாசலில் நின்று கொண்டிருந்தான். இவன் பைசிக்கிளை விட்டு இறங்கும் முன்னரே அவன் கூறினான்,
~~நீ வருவாய் என்று தெரியும்||
நாதன் அவிழ்ந்து விழும் சாரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு பார்வையாலேயே கேட்டான், ~~ஏன், எப்படி!||
~~உன் தோழர்கள் காலையில் மோட்டார் சைக்கிளில் வந்து இங்கு மிரட்டினார்கள்|| அவன் முறையிடுமாப் போல இளகிய குரலில் கூறினான்.
~~யார் அது|| நாதன் குழம்பிப்போய்க் கேட்டான்.
~~பெயர் தெரியாது. ஒருவர் மெல்லிய உயரம், கறுப்பு சுருள் தலை. மற்றவர் மொத்தம், சிவப்பு, பல்லு முன்னுக்கு தள்ளியபடி. சிவப்பு சுசுக்கி எயிற்றியில் சிகரட்டோடு வந்தவங்கள்||
காலையில் இவன் சந்தித்த கழக இராணுவப் பொறுப்பாளர்கள்தான் என்று உடன் அனுமானித்துக் கொண்டு சங்கடத்துடன் கேட்டான்.
~~என்ன சொன்னவங்கள்|| காலைக் கோணலாக மடித்து வளைந்து கொண்டு கேட்டான்.
அந்த நண்பன் இவன் உயர்ந்த தோற்றத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு சொன்னான்,
~~நான் உங்களுக்கு மாத்திரம்தான் உதவ வேண்டுமாம். வேறு ஆட்களுக்கு உதவுவதென்றால் தங்களைப் பகைக்க வேண்டி வருமாம்||
நாதன் எதுவும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்போடு அப்படியே நின்றான்.
~~நீயே யோசித்துப் பார் நாதன்! என்னைப் பொறுத்தவரை எல்லோருமே விடுதலைப் போராளிகள்தான். அவங்கள் எவ்வளவோ பெறுமதியான ஆயுதங்களைக் காப்பாற்ற இடம் கேட்கக்குள்ள எப்படி மாட்டன் என்றிரது. இந்த ஆயுதங்கள் நாளைக்கு எங்கள் எதிரிகளுக்கு எதிராக பாவிக்கப் போறதுதானே. ஏன் உங்களுக்குள்ள இப்படி பொறாமை வரவேண்டும்||
நாதன் அந்த அசட்டுச் சிரிப்பு மாறாமல், அவன் தோள்களைத் தட்டிவிட்டு வளைந்து நின்று கூறினான்,
~~நீ இதைப் பற்றி யோசியாதை. அவங்கள் விபரம் தெரியாத ஆக்கள். இப்படித்தான் கதைப்பாங்கள். இதையெல்லாம் பெரிசுபடுத்தாதை. நான் போய் பேசிக் கொள்ளு றன்|| என்றபோது அந்த நண்பன் அங்கலாய்ப்போடு இவனை போகவிடாமல் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினான்,
~~இந்தா பார்! உன்னைப்போல ஆக்களோட கதைக்கிறதென்றால் யாரும் பயப்படத் தேவையில்லை. ஆனால் அவர்களும் உங்கள் கழகம்தானே. அவர்கள் மாத்திரம் ஏன் இப்படி முரட்டுத்தனமாக நடக்கவேண்டும்|| அவன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். அதற்குப் பதில் ஏதும் கூறாமல் இருந்துவிட்டு நாதன் கேட்டான்,
~~இங்கு என்ன ஆம்ஸ் கொண்டு வந்து வைச்சிருக்கிறாங்கள்||
~~தெரியாது! உரச்சாக்குகளுக்க கட்டித்தான் கொண்டுவந்தவை. அதுவும் உன்ர ஆக்கள் இப்படிப் பேசியது தெரிஞ்சதும், அதையும் வேறு இடத்திற்கு கொண்டு போயிட்டாங்கள். இப்ப காயப்பட்ட ஒருவனை மட்டும் விட்டிட்டு போயிருக்கிறாங்கள், டாக்டரை கூட்டிக் கொண்டு வர|| அவன் அவர்களுக்கேற்பட்ட துர்ப்பாக்கிய நிலைக்கு இரங்குபவன் போல பேசினான்.
நாதன் கேட்டான்,
~~நான் அவரைப் பார்க்கலாமா||
இருவரும் உள்ளே சென்றார்கள்.
பாயில் படுத்திருந்த அந்த நீண்ட பருத்த உருவம் சிறிது அசைந்து கொடுத்தது. குப்புறப் படுத்திருந்ததால் முகம் தெரியவில்லை. முழங்காலுக்கு மேல் கட்டுப் போட்டிருந்தது. அந்தத் துணியையும் மீறி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வேதனையில் மெல்ல முனகும் சத்தம் மாத்திரம் இடையிடையே கேட்டது. கைகளிலும் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன.

~~உன்ர முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே|| என்று அந்தத் தாய் கீச்சிட்டுக் கதறி அழுதது அந்த முகாமிலுள்ள அனைவரதும் ஈரல் கருகுவது போன்ற வேதனையைக் கொடுத்தது.
அங்கே சூழ்ந்திருந்த உறவினர்கள் தமது கவலையை மீறி அவளைத் தேற்று வதற்கு பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாதன் அந்தத் தோழர்களை சந்தித்து செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளை விரிவாகக் கேட்டறிந்தான். பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து நடந்தவற் றைக் கேட்டான். அவர்கள் துயரத்துடன் தங்கள் கதையைக் கூறிவிட்டு இறுதியில் சொன்னார்கள்,
~~தம்பி! இந்தத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதென்றால், ஒரேயடி யாக செய்து முடியுங்கள். ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை. இப்படி மாதத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களைப் பலியிட ஏலாது||. அவன் தலையை குனிந்துகொண்டு அவர்கள் பேசிமுடிக்கும்வரை மௌனமாக இருந்தான்.
மாலையில் மறக்காமல் நாதன் அந்த வீட்டிற்குப் போனான்.
அந்த நண்பன் வாசலில் நின்று கொண்டிருந்தான். இவன் பைசிக்கிளை விட்டு இறங்கும் முன்னரே அவன் கூறினான்,
~~நீ வருவாய் என்று தெரியும்||
நாதன் அவிழ்ந்து விழும் சாரத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு பார்வையாலேயே கேட்டான், ~~ஏன், எப்படி!||
~~உன் தோழர்கள் காலையில் மோட்டார் சைக்கிளில் வந்து இங்கு மிரட்டினார்கள்|| அவன் முறையிடுமாப் போல இளகிய குரலில் கூறினான்.
~~யார் அது|| நாதன் குழம்பிப்போய்க் கேட்டான்.
~~பெயர் தெரியாது. ஒருவர் மெல்லிய உயரம், கறுப்பு சுருள் தலை. மற்றவர் மொத்தம், சிவப்பு, பல்லு முன்னுக்கு தள்ளியபடி. சிவப்பு சுசுக்கி எயிற்றியில் சிகரட்டோடு வந்தவங்கள்||
காலையில் இவன் சந்தித்த கழக இராணுவப் பொறுப்பாளர்கள்தான் என்று உடன் அனுமானித்துக் கொண்டு சங்கடத்துடன் கேட்டான்.
~~என்ன சொன்னவங்கள்|| காலைக் கோணலாக மடித்து வளைந்து கொண்டு கேட்டான்.
அந்த நண்பன் இவன் உயர்ந்த தோற்றத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு சொன்னான்,
~~நான் உங்களுக்கு மாத்திரம்தான் உதவ வேண்டுமாம். வேறு ஆட்களுக்கு உதவுவதென்றால் தங்களைப் பகைக்க வேண்டி வருமாம்||
நாதன் எதுவும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்போடு அப்படியே நின்றான்.
~~நீயே யோசித்துப் பார் நாதன்! என்னைப் பொறுத்தவரை எல்லோருமே விடுதலைப் போராளிகள்தான். அவங்கள் எவ்வளவோ பெறுமதியான ஆயுதங்களைக் காப்பாற்ற இடம் கேட்கக்குள்ள எப்படி மாட்டன் என்றிரது. இந்த ஆயுதங்கள் நாளைக்கு எங்கள் எதிரிகளுக்கு எதிராக பாவிக்கப் போறதுதானே. ஏன் உங்களுக்குள்ள இப்படி பொறாமை வரவேண்டும்||
நாதன் அந்த அசட்டுச் சிரிப்பு மாறாமல், அவன் தோள்களைத் தட்டிவிட்டு வளைந்து நின்று கூறினான்,
~~நீ இதைப் பற்றி யோசியாதை. அவங்கள் விபரம் தெரியாத ஆக்கள். இப்படித்தான் கதைப்பாங்கள். இதையெல்லாம் பெரிசுபடுத்தாதை. நான் போய் பேசிக் கொள்ளு றன்|| என்றபோது அந்த நண்பன் அங்கலாய்ப்போடு இவனை போகவிடாமல் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினான்,
~~இந்தா பார்! உன்னைப்போல ஆக்களோட கதைக்கிறதென்றால் யாரும் பயப்படத் தேவையில்லை. ஆனால் அவர்களும் உங்கள் கழகம்தானே. அவர்கள் மாத்திரம் ஏன் இப்படி முரட்டுத்தனமாக நடக்கவேண்டும்|| அவன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். அதற்குப் பதில் ஏதும் கூறாமல் இருந்துவிட்டு நாதன் கேட்டான்,
~~இங்கு என்ன ஆம்ஸ் கொண்டு வந்து வைச்சிருக்கிறாங்கள்||
~~தெரியாது! உரச்சாக்குகளுக்க கட்டித்தான் கொண்டுவந்தவை. அதுவும் உன்ர ஆக்கள் இப்படிப் பேசியது தெரிஞ்சதும், அதையும் வேறு இடத்திற்கு கொண்டு போயிட்டாங்கள். இப்ப காயப்பட்ட ஒருவனை மட்டும் விட்டிட்டு போயிருக்கிறாங்கள், டாக்டரை கூட்டிக் கொண்டு வர|| அவன் அவர்களுக்கேற்பட்ட துர்ப்பாக்கிய நிலைக்கு இரங்குபவன் போல பேசினான்.
நாதன் கேட்டான்,
~~நான் அவரைப் பார்க்கலாமா||
இருவரும் உள்ளே சென்றார்கள்.
பாயில் படுத்திருந்த அந்த நீண்ட பருத்த உருவம் சிறிது அசைந்து கொடுத்தது. குப்புறப் படுத்திருந்ததால் முகம் தெரியவில்லை. முழங்காலுக்கு மேல் கட்டுப் போட்டிருந்தது. அந்தத் துணியையும் மீறி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வேதனையில் மெல்ல முனகும் சத்தம் மாத்திரம் இடையிடையே கேட்டது. கைகளிலும் சிராய்ப்புக் காயங்கள் இருந்தன.
~~இவர் ஜெயில்ல இருந்து தப்பிவந்தவர். நேவிதான் சுட்டது. அப்பாவிப் பொதுசனம் என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண பயப்படுகிறார்கள்||
நாதன் அந்தத் தோழரின் பிடரியை ஆதரவோடு தடவிவிட்டு வெளியே வந்தான். ... இயக்கத்தைச் சேர்ந்த இருவர் களைத்துப்போய் யமகா மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்திறங்கினார்கள்.
அந்த இருவருக்கும் நாதனை அவர் அறிமுகப்படுத்திவைத்தார். அவர்கள் சிறிது மிரண்டு போய் விழித்தார்கள்.
~~இவர் நல்ல நண்பர். இவரைப் பற்றி கவலைப்படாதீர்கள்|| என்று அவர்களுக்கு நம்பிக்கைய10ட்டினார்.
~~டாக்டர் வீட்டில் இல்லை|| அவர்கள் சோர்ந்து இளைத்தவர்களாக ஆயாசத்துடன் கூறினார்கள். அவர்கள் இருவரது பாவமும் ஒரேமாதிரியாக இருந்தது. அந்த மாதிரியான வேலைகளைக் கவனிக்க வேண்டியவர்கள் எங்கேயோ தொலைந்து போனது மாதிரியும், அதேவேளையில் அந்த காயம்பட்ட தோழரை தாம் எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு நிறைந்தவர்களாகவும் அவர்கள் இருவரும் தமக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் கலவரத்தையும் பதட்டத்தையும் பார்த்துவிட்டு நாதன் கேட்டான்,
~~நான் இவரை எனக்கு தெரிந்த இடத்திற்குக் கொண்டுபோய் மருந்து கட்டவா||
அவர்கள் ஆச்சரிய மிகுதியில் கண்கள் அகல விரிய ஆர்வத்துடன் கேட்டார்கள்,
~~உங்களால் முடியுமா. இவர் காலில் குண்டு உள்ளே இருக்கிறது. ஒப்பிறேசன் செய்து எடுக்கவேண்டும்||. இவன் முகத்தையே அவர்கள் ஆவலுடன் பார்த்தார்கள்.
~~கொஞ்சம் இருங்கள்! நான் போய்ப் பார்த்துவிட்டு பத்து நிமிசத்தில் வருகிறேன்|| என்று அவர்கள் தோளில் தட்டிக் கூறிவிட்டு, அவர்கள் பதிலுக்கும் காத்திராமல் பைசிக்கிளை வளைத்துத் திருப்பினான்.
அவர்கள் மூவரும் அவன் வேகமான பைசிக்கிள் ஓட்டத்தை நம்பிக்கையுடன் பார்த்துக்கொண்டு அப்படியே இருந்தார்கள்.
அரை மணி நேரத்தின் பின் கையேஸ் வான் ஒன்றில் வேகமாக வந்த நாதன் அந்த காயம்பட்டவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
அன்று இரவு!
காலில் பாய்ந்த குண்டை ஒப்பரேசன் செய்து எடுத்தபின்பு காயத்திற்கு மருந்து கட்டிக்கொண்டு அந்த டிஸ்பென்சரியிலிருந்து திரும்பவும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
அவர்கள் இருவரும் நாதனின் கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றிப் பெருக்கால் திக்குமுக்காடினார்கள்.
~~நாளைக்கு நாங்கள் புறப்படுகிறோம். உங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டோம்||
இரண்டு நாட்களின் பின்பு அந்த இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கோபாலனை சந்தித்து, நாதன் செய்த உதவிக்கு கழகத்திற்கு நன்றி தெரிவித்துச் சென்றபோது கோபாலன் ப10ரித்து நின்றார்.
~~கழகத்தின் இலட்சிய புருஷர்கள் ஒருபொழுதும் மானுடத்தை கைவிடமாட்டார்கள்||
அதேசமயம் மாற்று இயக்கத்திற்கு எங்கள் இருப்பிடத்தைக் கொடுத்து, வாகன த்தை கொடுத்து, வாகனத்தை அடையாளம் காட்டியது, டாக்டர்களையும் டிஸ்பென் சரியையும் அடையாளம் காட்டியது என்று பல தோழர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கழகத்திற்குள் ஏனைய தாபனத்தின் சதிகாரர்களும் இருக்கிறார்கள் என்று தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்றும் அவசரஅவசரமாக தமிழகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதுபற்றி கோபாலனோ, நாதனோ எதுவும் அறியவில்லை.
பாவம் அவர்கள்!

------------------------------------------------------

11

சங்கர் கந்தோருக்கு வந்தபோது பத்மாவும் றூபியும் மாத்திரமே உள்ளே இருந்தார்கள்.
அவர்களும் அப்பொழுதுதான் வெளியே எங்கோ போய் வந்திருக்க வேண்டும். கந்தோரும் வீடும் ஒன்றாக இருப்பதால் வழமையாக அலங்காரம் ஏதுமின்றி சாதாரணமாகவே இருப்பார்கள். வெளியில் செல்லும்போது மாத்திரம் தமிழ் நாட்டுப் பெண்கள்போல பத்மா சாரியும், இளையவளான றூபி துண்டுத் தாவணியும் அணிந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் இருவரும் மறக்காமல் ஏதாவது ப10வும் வாங்கி தலைக்கு வைத்துக் கொள்வார்கள். அப்படியில்லாவிடின் அவர்களை இலங்கைப் பெண்கள் என்று அவதானித்துக் கொண்டு, போவோர் வருவோர் எல்லாம் அநாவசிய நோட்டம் விடுவதைத் தவிர்ப்பதற்காகவே அப்படிச் செய்வார்கள். அவர்கள் இருவருக்கும் அம்மாதிரி தலைக்கு ப10 வைத்துக் கொண்டு அலங்காரம் செய்யும் வேளைகளில் எல்லாம் என்னவோபோல் இருக்கும். அதில் என்ன அழகு இருக்கிறது என்று இந்த மக்கள் இப்படி ப10வும் தலையுமாக திரிகிறார்கள் என்று அலுத்துக் கொள்வார்கள்.
அந்த வார்த்தைகள் அவனுக்கு அவள் நினைவை அனாயாசமாக இழுத்து வரும்.
அந்த சுகமான நினைவுகள் அவன் இதயத்தை இதமாக தொட்டுச் செல்லும்போது அவன் தன்னை மறந்து பரவசமாவான்.
நிர்மலாவிற்கு அம்மாதிரி தலையில் ப10ச்சூடுவது ரொம்பவும் பிடிக்கும்.
இடைக்கிடை இம்மாதிரி தன்னை அலங்கரித்துக் கொள்வாள். அந்த அலங்காரத் தில் அவள் அழகாகத் தோன்றி அவன் மனதை கிளர்ச்சியுறச் செய்தாலும் அதையெல்லாம் நேரிலேயே கூறி அவளை மகிழ்ச்சிப்படுத்த மாட்டான். அது அவன் சுபாவம் என்று அவளுக்குத் தெரியும்.
அவள்தான் எவ்வளவு நம்பிக்கையாக இருக்கிறாள்.
ஆரம்பத்தில் அவனுக்கு அவள் எல்லா பெண்களையும்போல சாதாரணமாகவே பட்டாள்.
யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கே இயல்பான செருக்கும், இறுமாப்பும் கொஞ்சமும் குறைந்துவிடாத அவள் பார்வையின் நளினமும், எப்பொழுதும் மற்றவர்களை முந்திக்கொண்டு அள்ளிச் செல்ல வேண்டும் என்ற பரபரப்பு நிறைந்த வேகமும் அவனுக்கு அவளில் விசேசமான ஈடுபாடொன்றையும் காட்டாமலேயே விட்டது. ஆனால் அந்த இறுமாப்பும் செருக்கும் எவ்வளவு குழந்தைத் தனமானதென்றும், காரணமின்றி அன்பு செலுத்தி உறவைத் தேடும் விரிந்த உள்ளமும் அவளில் பொக்கிசமாக புதைந்து கிடக்கிறதென்பதைக் கண்டபோது அவள் காதலை நினைத்து தனக்குள் பெருமைப்பட்டான்.
பலன் கருதாமலே உதவிசெய்யும் அந்த பரந்த உள்ளம் அவனை வெகுவாகவே நெருங்கச் செய்தது.
தனக்கு சரியென்று பட்டதை பின்பற்றும் நேர்மையும், எடுத்த காரியத்தை வெல்லும் தன்னம்பிக்கையும் இப்பொழுது புதிதாகப் பெற்று வளர்ந்து வரும் தமிழ்ப் பெண்களின் விவேகத்திற்கு ஈடுகொடுத்து முன்னேறும் ஆளுமை அவளிடம் நிறையவே தேங்கிக் கிடப்பதை அவன் சரியாகவே இனங்கண்டான்.
~~எனக்கெல்லாம் வீட்டில் ஒரு குறையே இல்லை. எல்லா செல்வமும் வசதியும் இருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை ஏனோ எனக்குப் பிடிக்க வில்லை. ஒரே சலிப்பாக இருக்கிறது. ப10தம்போல அந்த வாழ்க்கை என்னை விரட்டுது||
அவள் பெற்றோர் என்னதான் அவளில் உயிரை வைத்திருந்தாலும் உயிரோட்ட மான வாழ்வை அவர்களால் கொடுக்க முடியவில்லை என்பதும் அவள் அதையே நாடித் தவிக்கிறாள் என்றும் கண்டுகொண்ட பின்புதான் அவனுக்கு அந்த நம்பிக்கையே பிறந்தது.
ஆனாலும் எத்தகைய நம்பிக்கையும் ஊட்டாமல் ஏனோதானோவென்று ஒரு சாமியாராட்டம் பிடிவாதமாக அவளிடம் நடந்து கொள்வான். கழக வேலைகளில் மாத்திரம் மதம்கொண்ட யானையாட்டம் அதீத ஈடுபாடு காட்டி அலைந்து திரிவான். ஒரு வேலை ஒழுங்காக முடியாவிட்டால் போதும் கெட்ட கோபம் வந்து தாறுமாறாக எரிந்து விழுவான்.
அன்று காலையும் அதே மாதிரித்தான்.
அச்சக மனேஜரோடு முரண்பட்டு மோதி நின்றான்.
காலையில் அச்சகத்திற்குப் போனபோது மனேஜர் வாசலிலேயே நின்று கொண்டு இராவணனுக்கு நாள் கொடுத்த இராமராட்டம் ~~நாளை வா|| என்றபோது இவனுக்கு சுள் என்றது.
ஒரு வாரத்திற்கு முன்பு கொடுத்த துண்டறிக்கையை இன்று நாளை என்று திகதியைப் பின்போடுவதிலேயே அந்த ஆள் கவனமாக இருந்தானேயன்றி வேலையை முடித்துக் கொடுப்பதில் நாட்டமில்லாமல் இருந்தது மோசமான கோபத்தைக் கிளறிவிட்டது. அதுவும் கழகத்தின் எல்லா அச்சக வேலைகளையும் அந்த அச்சகத்திலேயே செய்கின்ற அறிமுகம் பற்றியும் அக்கறையின்றி மனேஜர் இப்படி பொறுப்பற்ற விதமாக நடந்துகொண்டபோது அவனுக்கு ஆத்திரமாத்திரமாய் வந்தது.
அந்த ஆத்திரத்திலேயே அடுத்த தெருவில் இறங்கி இரண்டு அச்சகங்களில் அந்தத் துண்டறிக்கை எத்தனை நாளில் எவ்வளவு செலவில் அச்சடிக்க முடியும் என்று விசாரித்தபோது அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஏற்கனவே இவர்கள் அச்சகத்திற்கு செலவிடும் கூலியிலும் அரைப் பங்கிற்கும் குறைவாக இரண்டு நாளில் முடித்துக் கொடுக்கலாம் என்றபோது இவனால் நம்ப முடியவில்லை.
இவ்வளவு வசதியான அச்சகங்கள் சென்னையில் இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் கழகத்தின் பணத்தையும் நேரத்தையும் இப்படி மண்ணாக்க வேண்டும் என்று தவித்தவன், இந்த அச்சகத்தை ஏன் இதுநாள் வரை கட்டியழ வேண்டும் என்று புரியாமல் குழம்பினான்.
இதுபற்றி கலாதரனுடன் அல்லது செயலதிபருடன் பேசி உடன் இந்த அச்சகத்தை விட்டு நீங்க வேண்டும் என்ற கொதிப்போடுதான் அவசர அவசரமாக கந்தோருக்கு வந்தான்.
அவர்கள் இருவருமே வரவில்லை.
கதிரையில் அமர்ந்து பத்திரிகைகளுக்கான ஆக்கங்களை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கழகப் பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்களை அச்சகத்தில் அச்சிட்டு வெளியே கொண்டு வந்து எல்லா இடங்களுக்கும் அனுப்பி வைக்கும் பொறுப்பு அவனுடையது. அந்த வேலையை அவனுக்கு பொறுப்புக் கொடுத்த போது கலாதரன் வழமையான கண்டிப்புக் குரலில் கூறினார்,
~~இந்த வேலைகளை ஒரு கூலிக்காரன் பாணியில் செய்யாமல், எமது பணி என்ற பெருமையோடும், இந்த வேலைகளுக்கூடாக உம்மை வளர்த்துக் கொள்ளும் உத்வேகத்தோடும் செய்ய வேண்டும். பத்திரிகைகளுக்கான விடயங்களைப் பெற்ற பின்பு, கண்டிப்பாக வாசித்து விளங்கிக் கொண்டு, உமக்குப் புரிந்த பின்பே அச்சகத்திற்குக் கொண்டுபோக வேண்டும்||
பிரசுரங்களின் வடிவமைப்பு, புறூவ் றீடிங் எல்லாம் இவன் பொறுப்பு. அந்தப் பொறுப்புக்களை கையேற்கும் முன்னர் தயங்கிக் கொண்டு சொன்னான்,
~~எனக்கு முன்னம் இந்த வேலையில் அனுபவம் இல்லை. ஒருவேளை பிழை விட்டால் மன்னிக்க வேண்டும்||
அவர் சிரித்துக் கொண்டே கிண்டலாகச் சொன்னார்,
~~தோழர்! எம் அனைவருக்கும் அப்படித்தான். எங்களுக்கு முன்னம் பின்னம் ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய அனுபவமோ, கட்சி கட்டிய அனுபவமோ, இராணுவத்தை உருவாக்கிய அனுபவமோ இல்லாதவர்கள்தான். ஏதோ செய்ய வேண்டிய கடமை. பொறுப்பெடுத்திட்டம். செய்து பார்ப்பம். பிழைவந்தால் திருத்திக் கொள்ளுவம்.
உமக்கு வேணுமெண்டால் ஒரு ஐந்து வருசம் தரலாம். அதற்குள்ள எப்படியாவது இந்த வேலையில் அனுபவம் பெற்றிடுவீர் இல்லையா. ஐந்து வருசம் காணுமா அல்லது காணாதோ||. அவர் சாதாரணமாகவே கூறியபோது பத்மாவும் றூபியும் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
சங்கருக்கு அந்த வேலைகள் புதியதானாலும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மிக உற்சாகமாக அந்த வேலைகளைச் செய்தான். மிகக் கவனமாக தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பில் வேளைக்கே வந்து விடுவான். அதற்குமுன்பு ஒரு மணி நேரம் முகாமில் பயின்ற உடற்பயிற்சிகளை செய்து முடிப்பான்.
பத்திரிகைகளுக்கான விடயதானங்களை கலாதரனே கொண்டுவந்து தருவார்.
அவற்றையெல்லாம் யார் எழுதுகின்றார்கள் என்று கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல் அவ்வப்போது எழும். தானாகத் தெரிய வரும் என்று பேசாமல் இருந்து விடுவான். அந்த விடயதானங்களில் தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்கும் போது கலாதரன் இவனுக்கு மாத்திரமன்றி அப்போது இவனோடு வேறு யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கும் சேர்த்து விளக்கம் கூறுவார்.
செயலதிபர் பத்து மணியின் பின்பு வந்து சேர்ந்தார்.
அவர் அறைக்குள் போய் உட்கார்ந்ததும், இவனை அழைத்தார்.
~~உமக்கு நல்லா தமிழ் எழுதத் தெரியுமா|| ஒரு கையால் முகத்தை துடைத்துக் கொண்டு, மறுகையால் இவனை உட்காரச் சொல்லி கதிரையைக் காண்பித்தார்.
~~ஓரளவிற்கு தெரியும்|| இவன் இருந்து கொண்டே சொன்னான்.
இருபத்தைந்து லட்சம் மக்களின் விமோசனத்திற்கு உழைக்கும் அந்தத் தலைவரின் எதிரில் அமர்ந்திருக்கின்ற பெருமையால் ப10ரித்து செயலதிபரையே ஆர்வத்துடன் பார்த்தான் சங்கர்.
சுமாரான உயரம், சிவந்த இறுக்கமான உடல் வாகு. சுருண்ட தலை. எடுப்பான மீசை. தினசரி மழுங்கச் சவரம் செய்த தாடை. பிரகாசமான கண்கள். எப்பொழுதும் புன்னகை சிந்தும் வதனம்.
அவன் பெருமையால் தனக்குள் ப10ரித்துக் கொண்டிருந்தான்.
அவர் ஒரு கடிதத்தை இவனிடம் நீட்டியபடி சொன்னார்,
~~இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரும். இது மலேசியாவிலிருந்து வந்த கடிதம். இதில் எமது கழகம் பற்றி பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பதில் அனுப்ப முடியுமா என்று பாரும்||
அவன் பரபரப்போடு கடிதத்தைப் படித்தான். இவ்வளவு முக்கியமான பொறுப்பை தன்னால் எப்படியும் செய்து முடித்துக் காட்ட வேண்டும் என்ற துடிப்பும் கூடவே பிறந்தது.
~~கழகம் சோசலிசப் போக்குடையதென்று இங்கு ஒரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. அதனால் இங்குள்ள முதலாளிகள் கழகத்திற்கு உதவத் தயங்கு கிறார்கள். இந்தத் தப்பபிப்பிராயத்தை நிவர்த்தி செய்யுங்கள்|| என்ற வரிகள் மாத்திரம் இவனை தடுமாறச் செய்தது.
மற்ற விசயங்கள் எல்லாம் சாதாரணமாக அவனால் பதில் எழுதக்கூடியதுதான். இந்த விசயத்தைக் குறித்து மாத்திரம் அவரிடம் கேட்டுவிட்டு அவர் பதிலுக்காகக் காத்திருந்தான்.
அவர் கைகள் இரண்டையும் ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக்கொண்டு சொன்னார்,
~~சோசலிசக் கொள்கையுடையது என்று ஒத்துக் கொண்டால் அவர்கள் பணம் தர மாட்டார்கள். மற்ற இயக்கங்கள் எல்லாம் வெளிநாடுகளில், நாம் சோசலிசக் கொள்கையுடையவர்கள், கம்ய10னிஸ்ட்டுகள் என்று சொல்லிச் சொல்லியே தமக்கு நிதி சேர்க்கிறார்கள். இது எமக்கு எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் கேள்வியை விட்டிட்டு பதில் எழுதும்|| என்றதும், இவன் எழுந்தான். பின் மீண்டும் அப்படியே அமர்ந்து கொண்டு சொன்னான்,
~~நாங்கள் இப்பொழுது அச்சிடுகின்ற அச்சகம் சுத்த மோசம். கொடுக்கின்ற வேலை மிகவும் பிந்துகிறது. ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்து ஒரு வாரமாகிறது. இன்னும் முடியவில்லை|| என்று இழுத்தவன் பின் அழுத்தமாகக் கூறினான், ~~நான் வேறு அச்சகங்களிலும் விசாரித்தேன். இதைவிட மிக மலிவான கூலியில் அச்சடிக்கலாம். மிக விரைவாகவும் தருவார்கள். நாம் இந்த அச்சகத்தை மாற் றினால் என்ன||
அவர் முகத்தின் சலனங்கள் புலனாகாதபடி சிரித்துக் கொண்டு கூறினார்,
~~ஓ! மாற்றலாமே, அதில் ஒன்றும் பிரச்சினையில்லை|| என்றதும் இவன் எழுந்தான். வெளியே போகுமுன் மீண்டும் கூப்பிட்டுச் சொன்னார்,
~~நான் அச்சக முதலாளியுடன் இதுபற்றி பிறகு கதைக்கிறன். அவர் எனக்கு அறிமுகமானவர். அவரிடம் ஒருக்கால் சொல்லிப் போட்டுத்தான் மாற்ற வேண்டும்|| என்றவர் பின் ஏதோ யோசித்துவிட்டு, ~~அந்தக் கடித விசயமாக கலாதரனோடும் கதையும், அவரையும் கலந்தாலோசித்து கடிதத்தைத் தயாரியும்|| என்றார்.
அவர் மேசையில் முகத்தைப் புதைத்தார்.
செயலதிபர் இதற்குமுன்பு இவ்வளவு அதிகமாக இவனோடு பேசியதில்லை. எப்பொழுதும் கண்டால் உடன் புன்னகை மட்டும் புரிந்து கொள்வார்.
முதன்முதல் அவரைச் சந்தித்து என்னென்ன பொறுப்புக்களை இவனுக்குக் கையளிக்கலாம் என்றபோதும் அவர் எதுவும் பேசவில்லை. கலாதரனே அச்சக வேலைகளைப் பற்றி பிரஸ்தாபித்தபோது, அதற்கும் மறுபேச்சின்றி அப்படியே தலையாட்டி சம்மதித்தார்.
மதியத்தின் போது கலாதரனை சந்தித்து அச்சக பிரச்சினைகளைப் பற்றி முறையிட்டான். மறக்காமல் மலேசியா கடிதம் பற்றியும் கேட்டான்.
அவர் கடிதம் ப10ராக படித்து முடித்த பின்பு சோர்வுற்று அசதியில் கூறினார்,
~~கழகம் சோசலிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதுதான் உண்மை யென்றால், அதை நாம் எந்த இடத்திலும் சொல்லத் தயங்கக் கூடாது. அப்படி சொல்லத் தயங்கினால் அது சந்தர்ப்பவாதத்திற்கே இட்டுச் செல்லும். அதேவேளை யில் தந்திரோபாய hPதியென்று இக் கேள்விக்கு பதில் சொல்லாமல் விடுவதுகூட கோழைத்தனம்தான். என்னைப் பொறுத்தவரை எமது கொள்கைகளை அப்பட்டமாக முன்வைக்க வேண்டும். விரும்பியவர்கள் பணம் அனுப்பட்டும். நாம் பணத்திற்காக கொள்கையை எப்படி விற்க முடியும்||
அவர் கண்ணாடியை துடைத்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தார்.
செயலதிபரின் கருத்துக்கு இது முற்றிலும் முரணானது என்று கலாதரனும் புரிந்து கொண்டு பதில் சொன்னதுபோல் இருந்தது. அந்தக் கருத்தை இவன் முற்றிலும் ஆதரித்தாலும் எதுவும் பேசவில்லை.
பலத்த குழப்பத்தில் இருந்தவன் அந்தக் கடிதத்திற்கு பதிலை தயாரிக்கும் போது, கலாதரன் கூறியபடியே கழகக் கொள்கைகளை அப்படியே அப்பட்டமாக எழுதிவிட்டான்.
மாலையில் செயலதிபர் வந்தபோது அந்த பதிலைக் காண்பித்தான்.
அவனைக் கதிரையில் இருக்கச் சொல்லி, இவனது பதில் கடிதத்தை கவனமாக வாசித்தார்.
பின் சிரித்துக் கொண்டே கூறினார்,
~~அன்பின் தோழரே! புரட்சிகர வணக்கங்கள்! என்றெல்லாம் இம்மாதிரி ஆட்களுக்கு எழுத வேண்டாம். அவர்கள் விரும்ப மாட்டார்கள்||
அந்த வாசகங்களை பென்சிலால் கீறிவிட்டு அதன்மேல் ~அன்பு நண்பரே, வாழ்க தமிழீழம்| என்று திருத்தினார்.
~கழகம் சோசலிச கொள்கையுடையதா| என்ற கேள்விக்கான பதிலை படித்துவிட்டு இவனை நிமிர்ந்து பார்த்தார்.
~~கலாதரனிடம் கேட்டேன். அவர் உண்மையைத்தான் எழுத வேண்டும் என்றார். கழகம் சோசலிசக் கருத்துடையதென்றே எழுதவேண்டும் என்றபடியால் அப்படியே எழுதினேன்||
அவர் உதட்டை பிதுங்கிக் கொண்டு கைகளை தலைக்கு மேல் கொண்டுபோய் சோம்பல் முறித்துவிட்டு கூறினார்,
~~அப்படி எழுதலாம்தான். ஆனால் எமது நோக்கமே பிழையாகிவிடும். கொள்கை எமக்கு முக்கியம்தான். ஆனால் அது ஏட்டுச்சுரக்காய் மாதிரி போயிடக் கூடாது. எங்களுக்கு இப்பொழுது இருக்கும் முக்கிய பிரச்சினை பணமும், கருவிகளும்தான். அதைப் பெறுவதற்கு சில தந்திரோபாயங்களை நாம் கையாளவேண்டும்|| என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியை மெதுவாகக் கீறி வெட்டினார்.
சங்கர் எதுவும் பேசாமல் இருந்தான்.
கடிதத்தில் வேறு சில சொற்களும் திருத்தப்பட்டன.
கருவி, குமுகாயம், கமுக்கம் போன்ற சொற்கள் கடிதத்தில் புகுத்தப்பட்டன. அச் சொற்கள் ஒவ்வொன்றிற்கான அர்த்தங்களைக் கூறிய பின்புதான் சொன்னார்,
~~நாம் வருங்காலத்தில் தமிழீழ நிர்வாகத்தை நடத்தப் போகிறவர்கள். இப்போ திருந்தே வழக்கொழிந்து போன நல்ல பல தமிழ்ச் சொற்களை மீட்டெடுக்க வேண்டும். சுத்தமான தமிழில் எமக்கு எழுதத் தெரியவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மொழியின் அழகும், சிறப்பும் மறைந்து விடும்||
மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பா மும்மரமாக அரசியல் பேசும் காலங்களில் என்றோ ஒரு நாள் கீற்றுக் கொட்டகையில் முன்வைத்த வாதம் இப்பொழுதும் பசுமையாக அவன் மனதில் படர்ந்து கவிழ்ந்தது.
அப்பா தன் பரந்த நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு அப்பொழுது கூறினார்,
~~மொழி என்பது மனிதர்களுக்கிடையிலான கருத்துக்களை கொண்டுசெல்லும் வாகனம்தான். புதிய விஞ்ஞான சொற்களும், பாமர மக்களின் பதங்களும் தமிழ் மொழியில் உள் நுழைய இடமளிக்கப்பட வேண்டும். இவை இரண்டிற்கும் எதிரானவர்களே தூய தமிழ் என்ற பெயரில் அழிந்துபோகும் நிலப்பிரபுத்துவ சிந்தனையின் எச்சசொச்சங்களை நிமிர்த்திப் பிடிக்கப் பார்ப்பார்கள். இவர்கள் தங்கள் பிற்போக்குத்தனங்களை தமிழ்ப் பற்று என்ற போர்வையில் மறைத்துக் கொள்வார்கள்||
அப்பா இப்பொழுதெல்லாம் இம்மாதிரி அரசியல் சர்ச்சைகள் நடத்துவதற்கே ஆட்கள் இல்லாமல் அனாதையாகப் போய்விட்டார். ஆனாலும் கீற்றுக் கொட்டகை யில் இவன் தன் நண்பர்களோடு சூடான விவாதத்தில் ஈடுபடும் வேளைகளில் சில சமயம் தனக்கு அவசியமென்று பட்டால் மட்டும் வந்து, இடையிடையே இம்மாதிரி தனது கருத்துக்களை கூறிவிட்டுப் போவார்.
இவன் கடிதத்தை டைப் பண்ண றூபியிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.
செயலதிபர் மகிழ்ச்சி பொங்க அறையிலிருந்து வெளியே வந்தார்.
~~கலாதரன் வந்தவரா|| என்று கேட்டார். இவன் இல்லையென்றதும் திரும்பிப் போக முனைந்தவர், பின் திரும்பவும் இவனிடம் வந்தார். அடுத்த அறையிலிருந்து றூபியும், பத்மாவும் கூட அரவம் கேட்டு வெளியே வந்தார்கள்.
~~இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அச்சுவேலியில் இளைஞர்கள் அகதிகள் முகாம் நடத்துவதாக பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தது தெரியுமா|| என்றார்.
இவன் ~~ஆம்|| என்றான். றூபியும் அருகில் வந்து ~~ஒம் அண்ணை! நானும் படிச்சனான். இரண்டு பாடசாலையில் இளைஞர்கள் அகதிகள் முகாம் நடத்திறாங் கள் என்று செய்தி வந்தது|| என்றாள்.
~~அது வேறயாரும் இல்லை. எங்களுடைய கழகம்தான் அந்த அகதி முகாம்களைக் கவனிக்கிறது. இண்டைக்குத்தான் கடிதம் வந்தது. வெளி ஆக்களிட்ட காசும், பொருள் பண்டமும் சேகரித்து அந்த முகாமை வெற்றிகரமாக நடத்திறாங்களாம். இதில் மாணவர் அமைப்பும் ஈடுபட்டிருக்கு. வீடுகள் அழிந்துபோன ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறாங்கள். கம்பு தடிகளை இவர்களே வெட்டி இலவசமாக கிடுகுகளையும் பறிச்சு நூறு பேருக்குக் கிட்ட சிரமதானம் மூலம் இந்த வேலைகளைச் செய்து முடித்திருக் கிறாங்கள்|| என்று நேரில் பார்த்தவர் போல வர்ணித்துச் சொன்னார். எல்லோருக்கும் அந்தச் செய்தி மகிழ்ச்சியானதாக இருந்தது. செயலதிபரே தொடர்ந்து கூறினார்,
~~இதற்குப் பிறகு கழகத்திற்கு அந்தப் பகுதியில் நல்ல செல்வாக்காம். நாம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக்கூட கவனிக்கிறோம் என்று நல்ல ஆதரவு||. அவர் தன் சிறிய கண்களை சிமிட்டிக் கொண்டு மகிழ்ச்சியால் ப10ரித்த கன்னங்கள் மேலும் சிவப்பேற மெதுவான ஒரு தள்ளாட்ட நடையுடன் அறைக்குள் சென்றார்.
வெளியே மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தன் ராஜ்தூத் திலிருந்து கம்பீரமாக இறங்கி ராமநாதன் வந்தார்.
இவன் தோளை இலேசாகத் தட்டிவிட்டு செயலதிபரின் அறைக்குள் சென்றார்.
~~அண்ணை! எனக்கு தமிழீழத்திலிருந்து வந்த கடிதம் இது. படித்துப் பாருங்கள்|| என்று அவசர அவசரமாக ஒரு கவரை நீட்டினார்.
கடிதத்தை படித்து முடித்த பின்பு செயலதிபரின் முகம் கலவரத்தால் குழம்பியது. முன்னைய பரவசம் பட்டென்று மறைந்து முகம் கறுத்தது போலாயிற்று. நெற்றியை சுருக்கி ஆழமாக யோசித்தபின்பு, நகத்தை கடித்துத் துப்பிவிட்டு ~~இந்தக் கடிதம் என்னிடமே இருக்கட்டும்|| என்று கூறி அந்தக் கடிதத்தை தனது பைலில் வைத்தார்.
அதன்பின் வெளியே கேட்காத வகையில் இருவரும் ஒரு மணி நேரம் இரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
றூபி அந்த கடிதத்தை டைப் பண்ணி முடித்துவிட்டு இவனிடம் கொடுத்தாள். அதை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் டாக்சி ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
நல்ல உடல் கட்டான கறுத்த உயரமான ஒருவர் டாக்சியில் இருந்து இறங்கி கையில் சூட்கேசுடன் உள்ளே வந்தார். பின்னால் வந்த ஒருவர் அவருடைய மற்றொரு சூட்கேசை கொண்டுவந்தார். முன்னே வந்தவர் சங்கரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
அவருடைய தோற்றமும், அந்த சூட்கேசுகளும் அவர் ஜரோப்பிய நாட்டில் இருந்து வரும் ஒரு இலங்கையர் என்பதைத் தெளிவாகக் காட்டியது. உள்ளேயிருந்து செயலதிபரும், ராமநாதனும் வந்தார்கள். மகிழ்ச்சியாக அவரை கைகுலுக்கி வரவேற்று அவர் எதிரிலேயே அமர்ந்தார்கள்.
வந்தவர் பெயர் சிற்றம்பலம் என்றும் அவர் லண்டன் கிளையின் முக்கிய புள்ளி என்றும் அறிவதற்கு சங்கருக்கு அதிக நேரம் செல்லவில்லை.
லண்டனில் காரில் நுற்றுக்கணக்காண கிலோ மீற்றர் சென்று கழக வேலைகள் செய்வதிலுள்ள கஷ்டங்கள் பற்றியும், லண்டனில் ஏற்பாடுசெய்த கண்டன ஊர்வலங்கள் பற்றியும் சிலாகித்துக் கூறினார்.
சங்கர் மிக சுவாரசியமாக அந்தத் தகவல்களை கேட்டுக் கொண்டிருந்தான்.
இந்தப் பேச்சுவாக்கிலேயே அவர் கொண்டு வந்த சொக்கலேற், சுவிங்கம் பைகளை வெளியே எடுத்து வைத்தார்.
ராமநாதன் வேடிக்கையாகவும், களியாட்டமாகவும் அவற்றை அங்குள்ளவர்களுக்கு சுவாரசியமாக விநியோகித்துவிட்டு மிகுதியை பத்திரமாக தனது ராஜ்தூத் பின்பெட்டியில் வைத்தார்.
கலாதரன் அப்பொழுதுதான் அங்கு வந்தார். அவரும் சிற்றம்பலத்தை கைகொடுத்து வரவேற்று அவர் அருகில் அமர்ந்தார்.
பேச்சு எங்கெல்லாமோ சுற்றிப் பறந்து இறுதியில் கழகத்தின் நிதி சேகரிப்பில் வந்து நின்றது. லண்டனில் மாத்திரமன்றி கழகத்திற்கு கிளைகள் இல்லாத இடங்களிலும் போய் நிதி சேகரிக்கும் பணி சிற்றம்பலத்தினுடையது என்ற பொறுப்பில் அவர் கூறினார்,
~~நீங்கள் எமது பத்திரிகையில் நிய10யோர்க் மாநாட்டை கண்டித்து எழுதியிருக் கிறீர்கள். எமக்கு நிதி உதவி செய்து கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் தான் இம் மாநாட்டை நடத்தினவர்கள். நான் இம்முறை அவர்களிடம் நிதி சேகரிக்கச் சென்றபோது, அவர்கள் எமது பத்திரிகைச் செய்தியைக் காட்டி என்னோடு சண்டை போட்டார்கள்.
நாம் வெளிநாடுகளில் ஏனைய இயக்கங்களோடு போட்டி போட்டுத்தான் நிதி சேகரிப்பில் ஈடுபடுகிறோம். நீங்கள் அந்தக் கஷ்டங்களை அறியாமல், இப்படி எழுதினால் நாம் எப்படி வேலைசெய்வது|| சிற்றம்பலம் செயலதிபரைப் பார்த்து முறையிடுவது போலக் கூறினார்.
செயலதிபர் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டு கலாதரனைப் பார்த்தார்.
~~அப்படியென்றால் நிய10யோர்க் மாநாட்டை வரவேற்று எழுதியிருக்க வேண்டும் என்கிறீர்களா|| கலாதரன் கால்களை ஆட்டிக் கொண்டு உதட்டைக் கடித்தபடி கேட்டார்.
~~அதுகூட தேவையில்லை. சும்மா இருந்திருக்கலாம்||
~~சும்மா இருப்பது எங்களால் இயலுமென்றால் விடுதலை, போராட்டம், தமிழீழம் என்று எதுவும் வேண்டாம் என்றும் நாம் சும்மா இருந்திருக்கலாம் இல்லையா|| கலாதரன் கிண்டலாகவே கேட்டார்.
~~நீங்கள் குதர்க்கமாகப் பேசுகிறீர்கள். நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லை. சில டக்டிக்ஸ், ஒரு தந்திரமாக சில இடங்களில் நாம் நடக்காவிட்டால் இம்மாதிரி காரியங்களில் வெற்றிபெற முடியாது||
சிற்றம்பலம் ஆங்கிலப் பாணியில் கைகளை விரித்து, தோள்களை குலுக்கி, கண்களை சுழற்றியபடி கூறினார். அது அவருடைய உறுதியான முடிவு போன்ற பாங்கைக் காட்டியது.
~~எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் பத்திரிகை வெளியிடுவதன் நோக்கம் என்ன நிதி சேகரிப்பா! இல்லையே. எமது கொள்கையை, கருத்துக்களை மக்களுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதுதான். நிதி சேகரிப்பது பங்கப்படும் என்பதற்காக பிழையான கருத்துக்களை முன்வைப்பது முடியாத காரியம். நிய10யோர்க் மாநாடு தமிழீழத்தில் பற்றுதலே இல்லாதவர்களும், சிறீலங்கா, அமெரிக்க அரசுகளோடு நெருங்கிய தொடர்புடையவர்களால் வேண்டுமென்றே போராட்டத்தைத் திசைதிருப்ப நடத்தப்பட்டிருக்கிறது. இதை நாம் எப்படி கண்டிக்காமல் இருப்பது|| என்று கூறியவர் பின் நிமிர்ந்து உட்காந்து தனது மூக்குக் கண்ணாடிக் கூடாக அங்குள்ளவர்கள் ஒவ்வொருவரின் முகங்களையும் எடைபோட்டுக் கொண்டு ஆணித்தரமாகக் கூறினார்,
~~ஏனென்றால் எமது கழகம் ஒரு மக்கள் விடுதலை தாபனமேயன்றி, சில பண முதலாளிகளின் ஏகபோகம் அல்ல. நாம் எப்பொழுதும் எம்மை மக்களில் தங்கி நிற்கும் அமைப்பாக மாற்றுவதற்கு கருத்துக்களை கொண்டுபோக வேண்டுமேயல்லாமல், பண முதலாளிகளைத் திருப்திப் படுத்துவதற்காகவோ அவர்கள் எடுபிடிகளாக மாறுவதற்காகவோ நாம் கருத்துக்களைக் கொண்டுபோக முடியாது||
கலாதரன் உணர்ச்சிவசப்பட்டவர்போல இறுதியில் பேசி முடித்தது அங்கு நிலவிய ஆரவாரத்தைக் குழப்பி ஒரு நிசப்தத்தை ஏற்படுத்தியது.
சிற்றம்பலம் மீண்டும் தமது நியாயத்தை செயலதிபரிடம் முறையிடுவது போல், ~~எதற்கும் வெளிநாட்டில் இருப்பவர்களின் பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும்|| என்றபோதும் செயலதிபர் பதில் எதுவும் கூறாமல் வழமையான அந்தப் புன்ன கையை உதிர்த்தார்.
கலாதரன் கால்களை ஒரே வேகத்தில் ஆட்டியபடி, அங்கே நடக்கும் அத்தனை யையும் அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு விட்டதற்கு வெட்கப்படுபவர் போல இடையிடையே தலையைக் கவிழ்ந்து கொண்டார்.
ராமநாதன் அந்த நிசப்தமான நிலையிலேயே வெளியேறினார். அப்படிப் போகும்போது அங்கிருப்பவர்களிடம் மெதுவாக சொல்லிக் கொண்டார். யாரும் சட்டை பண்ணியதாகத் தெரியவில்லை. உடனே சங்கரைப் பார்த்து சிரித்து, தான் போவதாக கண்களால் ஜாடை காட்டினார்.
இவனும் பதிலுக்கு சிரித்துக் கொண்டான்.
செயலதிபர் தம் அறைக்குப் போக எழும்பியபோது, கலாதரனும் அவர் கூடவே சென்றார்.
மூக்குக் கண்ணாடியை கழற்றி கையில் பிடித்துக் கொண்டு கலாதரன் சொன்னார்,
~~எமது கழகத்தின் கொள்கை நடைமுறைகள் பற்றி கழக அங்கத்தவர்களுக்கே தவறான அபிப்பிராயம் இருக்கிறது. நாம் சர்வதேசப் பிரச்சினை, இந்திய தலையீடு, இணைவு நடவடிக்கை பற்றி தெளிவான கருத்துக்களை வரையறுத்துக் கூற வேண்டும். ஒவ்வொருவரும் வெளியில் வௌ;வேறு மாதிரி பேசுகிறார்கள்|| மிக அக்கறையோடு அதைக் கூறினார். செயலதிபர் அதைக் கேட்டு ஒரு விநாடி கைகளை ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக் கொண்டு சொன்னார்,
~~அவர்களைக் கூட பிழை சொல்ல முடியாது. ஏனென்றால் எமது திட்டங்கள் பல இரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. நாம் இன்னும் அவைகளை அவர்களுக்குச் சொல்லவில்லை. அதனால் எம்மைப் பற்றி அவர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்தபடியே இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. இந்த இரகசியங்களைப் பகிரங்கப்படுத்துவதும் இப்போதைக்கு நல்லதல்ல.||
~~இதுபற்றிப் பேசவேண்டும் என்றுதான் நானும் வந்தேன். நாம் ஓரளவிற்காவது எமது நம்பிக்கையான முக்கிய தோழர்களுக்கு எமது நிலையை தெளிவு படுத்தினால் என்ன - முழு அங்கத்தவர்களுக்கும் வேண்டாம், குறிப்பிட்ட சில பொறுப்பானவர்களுக்கு மாத்திரமாவது|| என்று இழுத்தார்.
சிறிது நேரம் மேசையில் பென்சிலால் தாளம் போட்டபடி இருந்து விட்டு செயலதிபர் கேட்டார்,
~~யார்யாருக்கு சொல்லலாம் என்று கருதுகிறீர்கள்||
~~அதை பிறகு யோசித்துச் செய்வோம். ஒரு கருத்தரங்கை அவர்களுக்கு மட்டும் ஒழுங்குசெய்து விளக்கம் கொடுப்போம்||
~~ம்! செய்யுங்கள்|| என்று கூறிவிட்டு செயலதிபர் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் போல நிமிர்ந்து பார்த்தார்.
பத்மா இருவருக்கும் தேநீர் கொண்டு வந்தாள். செயலதிபர் அவளிடம் ஐந்து நோட்டுக் கற்றைகளை கொடுத்துச் சொன்னார்,
~~ஐம்பது இருக்கிறது.||
அவள் அதை பத்திரமாகக் கொண்டுசென்ற பின்பு, செயலதிபர் அடங்கிய குரலில் கதைத்தார்,
~~ராமநாதனைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு வந்திருக்குது தெரியுமா||
~~அவனைப் பற்றித்தான் தினம் தினம் வருகிறதே. நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்||
முகத்தைச் சுழித்துக் கொண்டு கலாதரன் கூறவும், செயலதிபரும் சோர்ந்து சலித்துக் கொண்டு சொன்னார்,
~~அவன் வீட்டு மேல்மாடியில் இருக்கும் பெண்ணோடு பிரச்சினையாம்||
~~அது பழைய கதையல்லோ. அந்த அக்கவுண்டன் மனிசியும் சாதாரண ஆள் இல்லை. முன்பும் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்த சிதம்பரத்தோட உறவென்றுதானே அவனை முகாமிற்கு அனுப்பியது. ராமநாதனுக்கு அந்த மனுசியோட உறவென்ற விசயம் ராமநாதன் மனைவிக்குத் தெரியும். அந்த அக்கவுண்டனுக்கும் தெரியும். அவர்கள் யாருமே சூடு சொரணை இல்லாதவர்கள்.||
செயலதிபர் குறும்புச் சிரிப்போடு கூறினார்,
~~நீர் சொல்லிறது பழைய விசயம். நான் கேள்விப்பட்டது வேறு. இதுவும் அந்த மாடியில் புதிதாக குடிவந்த ஒரு தம்பதிகள் தான். அது ஒரு கண்ணியமான குடும்பமாக்கும். ராமநாதன் அந்தப் பெண்ணிடமும் சேட்டை விட்டிருக்கிறான். அவளோ விரட்டி கலைச்சிருக்கிறாள். இனிமேலும் சேட்டை விட்டால் தன் புருசனுக்கு சொல்லப்போவதாக எச்சரித்திருக்கிறாள்.||
~~இது யார் உங்களுக்குச் சொன்னது|| கலாதரன் இப்பொழுது ஆர்வமுடன் கேட்டார்.
~~சசிதரன் சொன்னவர். தன் மனைவியிடம் அந்தப் பெண் வந்து முறை யிட்டாளாம்|| என்றவர் பென்சிலால் மேசையில் இருந்த காகிதத்தில் எழுதிக் கொண்டு சொன்னார்,
~~இது மிகவும் மோசம். அக்கவுண்டன் மனைவி விருப்பத்தோடு சம்மதிக்குது, பரவாயில்லை. இதுவென்றால் பலாத்காரமில்லையா||
~~நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பலாத்காரம் செய்வதை மாத்திரம் வேண்டாம் என்பது போலவும், விரும்பிச் சம்மதித்தால் கள்ள உறவு வைக்கலாம் என்பது போலவும் அல்லவா இருக்கிறது|| கலாதரன் குறும்பாகக் கேட்டார்.
~~நீர் இதுபற்றி ஒருக்கால் ராமநாதனோடு கதையும். இந்த விசயம் வெளியே வந்தால் கழகத்திற்கு எவ்வளவு அவமானம் தெரியுமா||
~~நான் கதைக்கிறேன். ஆனால் ராமநாதன் பிரச்சினைகளையெல்லாம் எப்பொழுதும் நானே கதைக்கிறதால் ராமநாதன் என்னைத்தான் பகையாகப் பார்க்கிறான். நீங்களே தலையிடாதபோது, நான் மாத்திரம் ஏன் அவர் விசயத்தில் தலையிடுகி றேன் என்று யோசிக்கலாம்தானே|| என்று கூறிவிட்டு தேநீரை பருகத் தொடங்கினார்.
~~என்ன செய்வது. நான் பேசினால் அது இறுதி முடிவாகத்தான் எதையும் சொல்ல வேண்டியிருக்கும். அதனால்தான் நான் இதுபற்றி எதுவும் பேசுவதில்லை||
~~இருந்தாலும் நீங்கள் எப்பொழுதும் ராமநாதனுக்கு சலுகை காட்டுகிறீர்கள்|| அவர் சிறிய விழிகளுக்குள் பார்த்துக் கொண்டு சொன்னார்.
~~என்ன செய்வது! நான் எனக்காகவா செய்கிறேன். கழகத்தில் மட்டக்கிளப்பைச் சேர்ந்த வேறு முக்கியமானவர்கள் யார் இருக்கிறார்கள். நாம் இவன்மீது ஏதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதுவே வெளியே கழகத்திற்குள் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு பிரச்சினை போல் காட்டப்பட்டுவிடும்|| என்று கூறிவிட்டு, தேநீர்க் கோப்பையை கையில் எடுத்தார்.
~~ராமநாதன் மாதிரி ஆக்கள் எங்களோட இருக்கிறது தெரிந்த பிறகும் மட்டக்கிளப் பிலிருந்து வேறு நல்ல சக்திகள் யார்தான் எங்களோடு வரப் போகிறார்கள்|| என்று கலாதரன் வெடுக்கென்று கேட்டபோது, செயலதிபர் வழமையான அந்தப் புன்னகையையே பதிலாகக் கொடுத்தார்.
ராமநாதன் பற்றி மனம்விட்டுப் பேசும் செயலதிபர், கலாதரனிடம் ராமநாதன் பற்றிய புகார்களையே கூறினாரேயன்றி, மாலையில் ராமநாதன் கொடுத்த அந்தக் கடிதம் பற்றி எதுவும் பேசவில்லை.
செயலதிபரின் பைலில் பத்திரமாக இருக்கும் அந்தப் புகார் கடிதத்தில் கழகத்திற்கு எதிராக பலர் சதிசெய்கின்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளோர் எல்லோருமே கலாதரனுக்குப் பிரியமானவர்கள் என்பதாலேயே அவர் அந்த மௌனத்தை அப்போதைக்குச் சாதித்தார்.

-----------------------------------------------------

12

நிர்மலா என்றுமில்லாத தயக்கத்துடன் கூனிக் குறுகி நின்றாள். அவளைப் பார்க்க நாதனுக்கு சிரிப்பாக இருந்தது.
அவள் துடுக்கு, துணிச்சல் எல்லாம் மறைந்து அப்பாவி போல நாணிக் கொண்டிருந்தாள். அம்மா இருவரையும் அந்த விறாந்தையிலே உட்காரச் சொன்னபின் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.
அவளுக்குக்கூட இது புது அனுபவம்!
அப்பா கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். அவரே வந்து கதையை ஆரம்பிக்கட்டும் என்று அம்மா சமயலறைக்குள்ளேயே முடங்கி விட்டாள்.
அவளுக்குக்கூட மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.
நாதன் அந்தச் சூழலை மாற்றவேண்டி அவளை சீண்டினான்.
~~ஏன் நிர்மலா, வீடு பிடிச்சிருக்கா||
அவள் என்ன கூறப் போகிறாள் என்று அம்மா உள்ளேயிருந்தபடி காதைக் கூர்மையாக்கினாள்.
~~ஆம்|| என்று தலையாட்டத்துடன் புன்னகையால் பதில் கூறிவிட்டு, மீண்டும் அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சங்கரின் தங்கையை உள்ளே அழைத்தாள். அவள் உள்ளே வந்ததும், நிர்மலா அவள் கையைப் பிடித்து அருகில் அமர்த்தினாள்.
இவ்வளவு விரைவாக இது நடக்கும் என்று அவள் கற்பனை பண்ணவில்லை.
நான்கு நாட்களுக்கு முன்புதான் நிர்மலா வந்து நாதனை சந்தித்தாள். முன்பு ஏற்பட்ட மனத்தாங்கலுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு சாதாரணமாகவே இருந்தாள். சங்கரிடமிருந்து தனக்கு பிறிதொரு கடிதம் வந்ததாகவும் சொன்னாள். நடந்து முடிந்த படுகொலைகளையும், அழிவுகளையும் பற்றிய கதைகளை பரிமாறிக் கொண்ட பின்பு இவன்தான் கேட்டான்,
~~வீட்டில் இப்போது எப்படி? தொந்தரவு இல்லையா? ||
அவள் பட்டென்று ஒருகணம் விம்மியழுது அவனை உடனே கலவரத்தில் ஆழ்த்தி, பின் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு நிலத்தைப் பார்த்துக் கொண்டு வெப்புசாரத்துடன் கூறினாள்,
~~முன்புபோல இப்பொழுது தொந்தரவு இல்லை. ஆனால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எனக்குக் கல்யாண ஏற்பாடு நடக்குது.||
அவன் திடுக்கிட்டு கேட்டான், ~~உண்மையாகவா||
~~மாப்பிள்ளை வீட்டாரும் வந்திட்டுப் போயிட்டாங்கள். அடுத்த மாசத்தில் நாளும் வைச்சிட்டாங்கள்||. அவள் வழிந்தோடும் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டிரு ந்தாள்.
~~நீ என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்|| நாதன் மெதுவாகக் கேட்டான்.
~~இனிமேலும் உங்கள் கழகத்தை நம்பாமல் இருக்க வேண்டும் என்கிறேன்|| அவள் கொதிப்போடு கூறிவிட்டு, விழிகளால் அவனை போலித்தனமாக முறைத்துப் பார்த்தாள்.
~~சங்கருக்கு இங்குள்ள நிலைமைகளை விளக்கி எழுதினனான்||. அவரும் பதில் போட்டார். கழகத்தில் அவருக்கு மேல்மட்டத்தில் இருக்கிற செல்வாக்கைப் பயன்படுத்தி, என்னை அங்கு எடுக்கலாமாம். பலர் குடும்பங்களாக அங்கு இருக்கிறார்களாம். ஆனால் அவர் அப்படி தனக்கென்று தனிச் சலுகைகள் எதுவும் கேட்க மாட்டாராம்.||
அவள் உதட்டைக் கடித்து அசடு வழிய சிரித்துக் கொண்டாள்.
அவனை அறியாமலேயே வாய் இலேசாகத் திறந்து கொண்டது. சிவந்த முரசு வெண்பற்களுக்கு மேல் அழகாக இருந்தது. அவளே தொடர்ந்தாள்,
~~நான் சங்கரின் வீட்டை போய் இருக்கப்போறன், எனக்கு வேறு வழி தெரியுதில்லை. அவர்களிடம் விசயத்தைச் சொல்லி அங்கேயே தங்கப்போறன். நான் இப்பொழுது மேஜர். என் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்|| அவள் உறுதி யோடு கூறினாள்.
~~இதற்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா. அல்லது நீயே போய் அவர்களுடன் பேசிக்கொள்வியா||
அவள் இப்போது கோபமெல்லாம் பறக்க குபீரென்று சிரித்துக்கொண்டு சொன்னாள்,
~~இதற்கு நீதான் கட்டாயம் உதவிசெய்ய வேணும். எனக்கு அவர்களை முன்னம் அறிமுகமில்லை. நீதான் எப்படியும் கதைச்சு அவர்களை சம்மதிக்க வைக்க வேணும்.|| அவள் கண்களில் இப்பொழுது புதிதாக ஒரு நாணம் குடிவந்தது.
அந்த வேண்டுகோளை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்ற துடிப்பில் மறுநாள் அவசர அவசரமாக கோபாலனிடம் போனான்.
தென் இலங்கையைச் சேர்ந்த ஒரு புரட்சிகர அமைப்பின் சிங்களத் தோழருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். சிவந்த பருத்த ஆஜானுபாகுவான அந்தத் தோழர் சிங்களத்தில் கூறினார்,
~~இன்று இலங்கையிலே முதலாளித்துவ அரசிற்கெதிராக நடைபெறும் ஜனநாயகத் திற்கான போராட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டமே முற்போக்கானது. இந்தப் போராட்டத்தின் வெற்றியே சிங்கள பாட்டாளி விவசாயிகளின் விடிவிற்கு ஏதுவாகப் போகிறது. ஆனால் இந்தியாவினது அல்லது வேறெந்த மேலாதிக்க சக்திகளின் பிடியில் சிக்காமல் தமிழீழ விடுதலை வெற்றி கொள்ளப்படுவதை நாம் வரவேற்கிறோம். கழகம் இந்த விசயத்தில் மிகத் தெளிவான கொள்கையைக் கொண்டுள்ளதை நாம் அறிவோம்.||
கோபாலன் நாதனைக் கண்டதும், பேச்சை நிறுத்திவிட்டு இவனை அந்தத் தோழருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிங்களத்தில் கதைக்கும்போது தொண்டைக் கரப்பன்போல ஒரு தடங்கல் இலேசாக ஏற்பட்டது.
கொழும்புத் தொழிலாளர்களின் நாகாPக மோகம், தெருச்சண்டியன் போக்கு, குட்டி முதலாளித்துவ சிந்தனைகள் என்பன அவர்கள் புரட்சிகரத் தன்மைகளை எப்படி மழுங்கடிக்கிறதென்றும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் கள் அனுபவிக்கும் மோசமான சுரண்டல், அங்கு வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றியெல்லாம் அந்தத் தோழர் பேசியபோது நாதன் தனக்குப் பாPட்சயமான விடயங்களை புதிய பார்வையில் தரிசிக்கும் மனநிறைவைக் கண்டான். நாதனும் தனக்குத் தெரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டான்.
சரளமாக சிங்களம் பேசக்கூடிய தோழரைச் சந்தித்ததில் மகிழ்ச்சியுற்ற அவர் ~~இந்தமாதிரி சரளமாக தமிழ் பேசக்கூடிய சிங்கள இடதுசாரிகள் எழுபத் தொன்றுக்கு முன்னம் நிறைய இருந்தார்கள். இப்போது யாரையும் காணமுடிய வில்லை. எனக்குக்கூட இந்தளவிற்கு பேசவராது|| என்று குறைப்பட்டுக் கொண்டார்.
அந்தச் சிங்களத் தோழர் போனபின்பு கோபாலனிடம் நிர்மலா சம்பந்தமாக நடந்தவைகள் யாவற்றையும் கூறினான். அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கூறினார்,
~~சங்கர் அப்படிக் கூறியிருப்பது அவனளவில் நியாயம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எந்தப் போராளிக்குத்தான் தன் வாழ்வைப் பற்றி மாத்திரம் சிந்திக்க மனம் வரும். ஆனாலும் நாம் கழகம் என்ற வகையில் ஒவ்வொரு உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கும் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கடமை யையும் சும்மா தட்டிக்கழிக்க முடியாது|| என்றவர் தன் நீண்ட மெலிந்த கைகளால் கூரான மூக்கை நோண்டிவிட்டுக் கொண்டு கூறினார்,
~~சங்கரின் அப்பாவிடம் முதலில் நிர்மலா சார்பாகக் கேட்டுப்பார். அவர் அதற்கு சம்மதிக்க மறுத்தால் கழகம் எதிர்நோக்கும் பிரச்சினை இது; இதற்கு உதவ முடியுமா|| என்று எமது சார்பாகக் கேட்டுப்பார். அதுவும் சரிவராவிட்டால் நாம் அப் பெண்ணுக்கு அபயம் கொடுக்க வேறு வழிகளைத்தான் தேடவேண்டும்|| என்றார்.
மறுநாளே சங்கரின் அப்பாவைச் சந்தித்து, நிர்மலா-சங்கர் காதலின் முழு விபரத்தையும் இப்போது எதிர்நோக்கும் பிரச்சினையையும் அவர் முடிவையும் கேட்டு நின்றான்.
அவர் எல்லாம் தெளிவாக அறிந்த பின்பு மனைவியை அழைத்து விசயத்தைச் சொல்லி ~~உன் முடிவு என்ன|| என்று கேட்பது போல் அவளை விழித்துப் பார்த்தார். அவள் முகத்தில் ஏற்பட்ட கலவரத்தையும் மீறிய மலர்ச்சியை இனங்கண்ட பின்பு நாதனிடம் கூறினார்,
~~நான் முதலில் அந்தப் பிள்ளையை ஒருக்கால் சந்தித்துப் பேசவேண்டும்||
அவர் வேறு எதுவும் பேசாமல் இருந்தார்.
நிர்மலா லேஞ்சியை கசக்குவதும் முறுக்குவதுமாக அவர் முன்னால் தன் நடுக்கத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவளருகில் இருந்த சங்கரின் தங்கை மிக ஐக்கியமாக அவளுடன் ஒட்டி யிருந்தாள்.
அப்பா வெகுநேரமாக எதுவும் பேசாமல் இருந்தார்.
அவர் நிர்மலாவுடன் தனியாகப் பேச விரும்புகிறாரோ என்ற சந்தேகத்தில் இவன் வெளியே நிற்க ஆயத்தமானான்.
அவர் கையமர்த்திச் சொன்னார்,
~~நாதன்! நீயும் இரு. உனக்கு முன்னாலைதான் பேசவேண்டும்.||
அம்மா இப்பொழுது சமையலறையிலிருந்து வந்து எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தாள். அப்பா அவளையும் அங்கு உட்காரச் சொன்னார். அம்மா அப்படியே அங்கு நின்றாள்.
அவர் தொண்டையை சரிசெய்துவிட்டு நிர்மலா பக்கம் திரும்பிக் கூறினார்,
~~இந்தா பார் மகள்! என் மகனுக்கு ஒரு காதலி இருக்கிற விசயமே நேற்றுத்தான் எங்களுக்குத் தெரியும். அதற்கிடையில் நான் உனக்கு சுலபமாக ஒரு முடிவு சொல்லக் கூடியதாக இருக்கிறது. ஆனால் உன் நிலை அப்படியில்லை. உனது முடிவு ஆழமான யோசனையின் பின் உறுதியாக இருக்க வேண்டும். சாதக பாதகமான பல விசயங்களையும் நீ யோசித்து இந்த முடிவிற்கு வந்திருக்க வேண்டும், இல்லையா.||
அவள் பேசமுடியாமல் தடுமாறி ~ஆம்| என்று மட்டும் தலையாட்டினாள்.
~~நீ எங்களோடு இருப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் நீ இங்கு வந்த பின்னம் எங்களைப் போலத்தான் வாழப் போகிறாய் இல்லையா.|| அவள் இப்பொழுது நம்பிக்கை பெற்றவளாக தலையை நிமிர்த்தி அசைத்துவிட்டு மீண்டும் கவிழ்ந்து கொண்டாள்.
~~பெண்கள் காதலித்தவனை கைப்பிடிப்பதற்காக வீட்டைவிட்டு வாறது ஒன்றும் எனக்கு தவறான விசயங்களாகத் தெரியவில்லை. ஆனாலும் அப்படி வரும்போது அதிலும் ஒரு கம்பீரம் இருக்கவேண்டும்.||
எல்லோரும் ~என்ன| என்பதுபோல அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்கள். நிர்மலா மாத்திரம் தலையைக் குனிந்தபடி இருந்தாள்.
~~நீ வீட்டிலிருந்து வரும்போது ஒரு சின்ன நகைகூட இங்கு கொண்டுவரக் கூடாது. உடுத்த உடுப்புடன் மாத்திரமே வரவேண்டும். இங்கு வந்த பின்பும் அந்த நகை உடுபிடவைகளைக் கொண்டு வந்திருக்கலாமே என்று ஏங்கக் கூடாது. நீ என் மகள் மாதிரி. என் பிள்ளைகளைப் பார்க்கிற மாதிரி என்னால முடிஞ்ச வரைக்கும் உன்னையும் கவனிப்பன், சம்மதமா||
இப்பொழுது நிர்மலா தலைநிமிர்ந்து, கண்கள் பனிக்க மெதுவாக ~ஆம்| என்றாள். அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இப்பொழுது பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருப்பது போலவும், அவைகளை உடனடியாக தொட்டுப் பார்க்க வேண்டும் போலவும் ஒரு இன்பக் கிளுகிளுப்பு அவளுக்கு ஏற்பட்டது.
அம்மா அவளருகில் வந்து தலையை வருடிக் கொடுத்து நெற்றியில் பாசமுடன் முத்தமிட்டாள். பின் என்னவோ நினைத்துக் கொண்டவள் போல தன்பாட்டிற்கே கண்களை கசக்கிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுது அவரை விழித்துப் பார்த்தாள்.
மனதில் புதைந்து கிடந்த அதே சோகம் அவளை அப்படி தடுமாறச் செய்தது. சங்கர் பயிற்சிக்குப் போகும் விடயத்தைக் கூறியபோது அழுத அந்தக் கண்ணீர் தான் இப்பொழுது கொஞ்சம் நம்பிக்கையுடன் வெளியேறிக் கொண்டிருந்தது.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் புதுமணப் பெண்ணாக அந்த வீட்டிற்குக் காலடி எடுத்து வைத்த காலம் முதல் அவள் இப்போதுபோல ஒருபொழுதும் தன் ஆற்றாமையை வெளிக்காட்டி இருக்கவில்லை.
இப்பொழுதுதான் அவள் இம்மாதிரி அடிக்கடி கண்ணீர் சிந்தி அழுது ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதெல்லாம்.
ஆயுள்வேத வைத்தியரான தர்மலிங்கம் தனது நான்கு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டிவைத்துவிட்டு, இளையவளான இவளை மாத்திரம் பாடசாலை ஆசிரியரான இவருக்கு கட்டிவைக்கக் காரணமாக இருந்தது தூரத்து உறவு போய்விடக் கூடாது என்ற பற்று மாத்திரமன்றி, மூத்த நான்கு பெண்களின் மாப்பிள்ளைகள் போல் இல்லாமல் இவர் சீதன விடயத்தில் ஈடுபாடு காட்டாமல் இருந்தார் என்பதும்தான்.
குடும்ப விவகாரங்களிலும் ஈடுபாடு காட்டாமல் கட்சி, அரசியல், போராட்டம், ஊர்வலம் என்று ஓடித்திரிவதை யெல்லாம் வாலிப முறுக்கின் சேஷ்டைகள்தான் என்று தரகர் சிலாகித்துக் கூறியபோது அந்த அந்திம கால வறுமை நிலையையும் உத்தேசித்து தர்மலிங்கம் அந்தத் திருமணத்திற்கு உடன்பட்டார்.
கணவன் நல்லவரானாலும் அவர் பொறுப்பில்லாத்தனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பெரியவர்கள் தந்த பால பாடத்துடன் அந்தக் குடும்பத்திற்குள் வந்த அவள், அந்த வாழ்க்கையை உன்னிப்பாக உற்று நோக்கினாள்.
ஒரு ஞானிக்குள்ள பற்றின்மையோடு அவர் வெளியுலகிலேயே சுழன்று வந்தார்.
~~தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்துறாங்கள். இது ரஷ்யா விண்வெளிக்கு செயற்கைச் சந்திரனை அனுப்பிய அபார சாதனையாக்கும் தெரியுமா|| பெருமை பீறிட துள்ளிக் குதிப்பார்.
~~தேர்தலில் போட்டி போடுற மற்றக் கட்சிகளுக்கு முதலாளிமாற்ற அணைவு ஆதரவு இருக்கு. எங்களுக்கு அது வேண்டாம். உழைக்கும் மக்களின் ஆதரவு இருந்தால் போதும். எங்கட வீட்டுப் பணத்தைத்தான் கட்சிக்கு செலவிட வேண்டும் தெரியுமா||
கண்டிப்பும், வேண்டுகோளும் குழைந்து அவள் எதிரில் கம்பீரமாக நிற்பார்.
~~மேதினக் கூட்டம் இப்ப எல்லாக் கட்சிகளும் கொண்டாடினம். தொழிலாள விவசாயிகளை நசுக்கிக் கொண்டே, அரசாங்கம் மேதினக் களியாட்டம் போடுது. அதில பங்கு பற்றியவங்களுக்கு வெட்கமே கிடையாது. நாங்கள் இதயசுத்தியோடு புனிதமான எழுச்சியாகக் கொண்டாடிறம். அரசாங்கம் தடுத்தாலும் ஊர்வலம் நடத்திக் காட்டுவம்||
குமுறிக் கொதித்து ஆவேசமாய் வீராய்ப்புக் காட்டுவார்.
அந்த உயிர்த்துடிப்புள்ள வாழ்வின் மகத்துவத்திற்கு முன்னால் அவள் அற்ப கோரிக்கைகள் தவிடுபொடியாக அவள் சரணாகதியாகி அவர் மார்பில் தவழ்ந்தாள்.
அவருக்குத்தான் எவ்வளவு பெருமிதம்!
நகைகள் ஒவ்வொன்றாக அடைவு கடையில் அடைந்து கிடக்கும் நிலை பொறுக்க மாட்டாமல், நிரந்தரமாக விற்றுத் தீர்க்கும் குழப்பமற்ற முடிவினை தீர்க்கமாகச் செயற்படுத்தும் போதும், வறுமை நிரந்தரமாகிவிட்ட ஏளனத்தில் உறவினர்கள் ஒதுங்கி நின்றபோது அதையே அலட்சியமாக்கி பெருமை பேசும்போதும், அவர் கட்சி அரசியல் வாழ்வின் மகத்துவத்தை ஆதரிப்பது போல் அவர் தோழர்களை இன்முகத்துடன் வரவேற்கும் பாணியிலும் அவர் வெற்றிப் பெருமிதத்தில் அவளை நினைத்து உள்@ரக் களிப்புறுவார். கீற்றுக் கொட்டகையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கூடி இளைஞர் முதியவர் என்ற பேதம் இல்லாமல் காரசாரமாக நடத்தும் அரசியல் சர்ச்சைகள் அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ, அவர் களுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி வசதிகளை செய்துகொடுப்பது தனது கடமை என்ற உணர்வில் பரபரப்பாள். அவருக்கு அரசியல் வாழ்வு என்னதான் கசப்பான அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்தாலும் அவர் வாழ்க்கையை நினைத்து என்றும் சலித்துக் கொண்டதில்லை.
அவள்தான் கடந்த பத்து வருடங்களாக மாதம் ஒரு வாரமோ அல்லது வாரம் ஒரு நாளோ நோயென்று பாயில் படுத்துவிடும் சீக்காளியாக மாறிவிட்டபோதும் கூட வாழ்க்கையை நினைத்து அவளும் கலங்கியதில்லை. இப்பொழுதுதான் சங்கர் இல்லாத அந்தத் துயரம் இடையிடையே ப10தாகரமாக அவள் இதயத்தை கௌவ்;விப் பிடிக்கும். அப்பொழுதெல்லாம் இம்மாதிரி விம்மிப் பொருமி ஆறி அடங்குவாள்.
நாதன் அந்தக் காட்சிகளை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
~~சங்கர்! நான் அன்பு எப்படிப் பட்டதென்று குடும்பத்திற்கு வெளியேதான் பார்த்தேன். நீயோ அதை குடும்பத்திற்குள்ளேயே காண்கிறாய். இந்த உலகத்தையே அன்பால் ஆட்கொள்ளப் புறப்பட்ட எமக்கு அன்பு செய்ய ஆட்களுக்கா பஞ்சம்.||
காலை எட்டுமணிக்கு முன்னரே வெய்யில் சூடேறி சுள்ளென்று முகத்திலடித்தது. அந்தக் கிராமம் ஒரு திருவிழா போல அதைக் கூர்ந்து பார்த்தது.
ஒரு சிரமதானம்!
கழகம் இன்று அதை ஒழுங்கு செய்திருக்கிறது.
வளர்ந்து வரும் சமூகமும் உயர்சாதியினரும் அருகருகே வாழும் அந்தக் கிராமத்தை நாதன் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணமும் ஒன்று உண்டு.
அண்மையில் அந்தக் கிராமத்தில் வெடிக்க இருந்த சாதிக் கலவரத்தை அவர்கள் தடுத்துவிட்டாலும், அது உறங்கும் எரிமலையாக அங்கு புகைந்து கொண்டிருக் கிறதை அவர்கள் அறிவார்கள்.
அந்தச் சாதிக் கலவரம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடக்கவிருந்தது.
உயர்சாதிப் பெண்ணான வதனா, வளர்ந்துவரும் சமூகத்தைச் சேர்ந்த சிவலிங்கத் துடன் ஓடிவிட்டாள் என்ற சேதி பரபரப்பாகப் பேசப்பட்டது.
பெண்ணைப் பெற்றவர்கள் அவமானம் தாங்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள்.
சிவலிங்கத்திற்கு பெருமை பிடிபடவில்லை. அவன் மடியில் தவழ்ந்து நெளியும் வதனாவும் ப10ரிப்புடன் தன் காதல் கணவனை கடைக்கண்ணால் பார்த்துச ;சிரிப்பாள்.
இரண்டு மாதகால அவர்கள் தாம்பத்திய வாழ்வு அப்படி கொடூரமாக சிதைக்கப் படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் இரவு கத்தி பொல்லுடன் ஒரு காடையர் கூட்டத்தைக் கூட்டிவந்த வதனாவின் தமயன் அவளைக் கதறக் கதற இழுத்துச் சென்று காரில் ஏற்றிக்கொண்டு போனான்.
வேதனையோடும், வெப்புசாரத்தோடும் விம்மிப் பொருமும் சிவலிங்கத்தின் துயரம் தாங்காமல் அவன் சமூகத்தினர் ஒன்றாய்த் திரண்டனர்.
பெண்ணை மீட்டுவர புறப்படமுன்னர் செய்தி வந்தது. அவளை அந்தக் கிராமத்தை விட்டே கொண்டுபோய் விட்டார்களாம். அவர்கள் ஆத்திரத்தோடு கறுவிக் கொண்டார்கள். அந்த ஆத்திரம் அடங்க கலவரத்தை ஏற்படுத்த அவர்கள் துடிதுடித்தபோதே நாதன் அப் பிரச்சினையை அணுகினான்.
வதனா வீட்டிலும் சிவலிங்கம் வீட்டிலும் மாறிமாறி பல நாட்கள் அடுத்தடுத்து போய்க் கதைத்தபின்பு வெளிப்பட்ட அந்த உண்மை அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
~~வதனா இப்பொழுது சிவலிங்கத்தோடு வாழ விரும்பவில்லையாம்.||
நாதன் நேரில் அவளை சந்தித்துக் கேட்டபோதும், சிவலிங்கத்தை அழைத்துப் போய் அவள் முன்னே நிறுத்திய போதும் அவள் அதையே சொன்னாள்.
வதனா இப்பொழுது கனடாவுக்குப் போகும் தன் பயணம் பற்றியே வெகுவாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
விம்மிப் பொருமும் சிவலிங்கத்தை ஆதரவுடன் தேற்றினான் நாதன். அதன்பின் சிவலிங்கம் அப் பிரச்சினையை அப்படியே கைவிட்டான். தன் உறவினர்களையும் அப்படியே கைவிடச் சொன்னான். நாதனின் முயற்சிக்கும் மறக்காமல் நன்றி கூறிக் கொண்டான்.
மறுநாள் அவன் எக்கடெக்ஸ் மருந்தைக் குடித்து தோட்டத்திற்குள்ளேயே தற் கொலை செய்து கொண்டான்.
உக்கிப்போன சமூகத்தின் விழுக்காட்டை ஏற்படுத்த உதிரத்தோடு ஊறிப்போன உணர்வுகளை யெல்லாம் தாண்டிக்கொண்டு ஒரு சமூகப்; பாய்ச்சலுக்கு தயாராகிய வீறுகொண்ட தலைமுறையின் எழுச்சிமிகு போராட்டங்களில் களப்பலியாகிய சடலங்களைப் போல், அவனும் யாரிடமோ நியாயம் கேட்பது போல விழிகள் பிதுங்க, பற்களை கோரமாகக் கடித்துக்கொண்டு அலங்கோலமாகக் கிடந்ததை அந்த மக்கள் பரிதாபமாக பார்த்துச் சென்றார்கள்.
இந்தச் சம்பவத்தின் பின் முரண்பட்டு முறுகிக் கொண்டிருந்த இரு சமூகங்களையும் மீண்டும் இணையும் வகையில் அந்தச் சிரமதானம் அமைய வேண்டும் என்று நாதன் கண்டிப்பாகக் கூறியிருந்தான்.
அந்தக் கிராமத்திலுள்ள சகல சாதி சமயத்தவரையும் வித்தியாசமின்றி சிரமதானத் திற்கு அழைத்தான். கிராமத்திற்கு வெளியே இருந்தும் பல கழகத் தோழர்களை வரவழைத்தான்.
மழைக்காலத்தில் இரண்டடி தண்ணீருக்குள் புதையும் அந்தப் பாதையை சீர்செய்து உயர்த்த வேண்டும்.
வேலையை ஒவ்வொரு பகுதியினரிடமும் பிரித்துக் கொடுக்காமல் எல்லோரையும் கலந்து விட்டான். கழகம் ஒழுங்கு செய்யும் சிரமதானம் என்றபடியால் அவர்கள் எல்லோரும் அதை உற்சாகமாக செய்து முடித்தார்கள்.
பத்து மணியளவில் எல்லோரையும் உட்காரச் சொல்லி தேநீர் வழங்கப்பட்டது. வளர்ந்துவரும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் குறிப்பாக அதையே அவதான மாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருக்கும் ஒரே கிளாசில் தேநீர் கொடுக்கப்பட்டது.
அது அவர்களின் நீண்ட நாள் தாகத்தைத் தீர்த்தது.
மாலையில் சிரமதானம் முடிவுற்றபோது, அந்தப் பாதை உயர்ந்து கம்பீரமாகக் காட்சி கொடுத்ததுபோல, அங்கு தாழ்வுற்றுக் கிடந்த மனங்களும் உயர்ந்து பரந்து விரியும் என்று நம்பினான்.
வளர்ந்துவரும் சமூகத்தின் சனசமூக இயக்கத் தலைவரிடம் இவன் விடைபெறும் போது, அவர் இவன் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினார்,
~~தம்பி! நாங்கள் இருபது வருசமா சாதிக்கமுடியாமல் அவதிப்படுகிற விசயங்களை நீங்கள் ஒரு நாளில சாதிச்சிடுறீங்க. இந்த வெள்ளாளர் எங்களோட சேர்ந்து ஒரு கிளாசில் தேத்தண்;ணி குடிச்சது நான் அறிய இதுதான் முதல் தடவை. நீங்கள் அடிக்கடி இங்கு வந்துபோங்கள், தம்பி!||
முதல்நாள் செய்த சிரமதான வேலையினால் ஏற்பட்ட களைப்பில் உடல் அசதியாக அவன் சற்று அதிக நேரம் உறங்கிப் போனான். காலையில் அவனை தட்டி எழுப்பி அந்தச் செய்தியைச் சொன்னார்கள்,
~கோபாலன் இவனை அவசரமாக வரட்டுமாம்|. என்ன விசயம் என்று தெரியாமல் பரபரப்போடு புறப்பட்டுச் சென்றான்.
பைசிக்கிள் முன் காண்டில் ஆடுவது போலிருந்தபடியால் அவனால் வேகமாகச் செல்ல முடியவில்லை.
தூரத்திலேயே இவனைக் கண்டுவிட்டு ஒரு வயோதிபர் அப்படியே வழியை மறித்துக் கொண்டு நின்றார்.
அருகில் சென்றபோதுதான் இவனுக்கு அடையாளம் தெரிந்தது.
அவர்! எட்டு மாதங்களுக்கு முன்பு ஆமி துரத்தியபோது இவனுக்கு அபயம் கொடுத்த அந்த முதியவர்.
~~தம்பி! நல்லா இருக்கிறியளே||
இவன் மகிழ்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பைசிக்கிளை விட்டு இறங்கிக் கொண்டான்.
~~தூரத்தில உம்முடைய சுருள் தலையைப் பார்த்த உடனே மட்டுக்கட்டிற்றன் நீர்தான் என்று|| அவர் இவனை ஆதங்கத்தோடு நன்றாக விழித்து நோக்கிவிட்டுக் கேட்டார்,
~~தம்பிக்கு அவசர வேலை இருந்தால் போகட்டும். இல்லாட்டி ஒருக்கால் வீட்டிற்கு வாறியளோ. ஒரு சின்னப் பிரச்சினை இருக்கு.||
கோபாலனை சந்திப்பதும் அவசரமான வேலை. அதேவேளை இனியொரு நாள் தனக்கெங்கு நேரம் இருக்கப் போகிறதென்றபடியால், அவர் பின்னால் சிரித்துக் கொண்டு சென்றான். கொஞ்சத் தூரம் போனவுடன் அவரே கூறினார்,
~~தம்பி நீங்கள் முன்னுக்குப் போங்கள். வீடு தெரியும்தானே. ஆச்சி நிற்கிறாள், போங்கள்|| என்று இவனை முன்னுக்கு அனுப்பினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வருவதால், பாதையை தவறவிடக் கூடாதென்ற எச்சரிக்கையில் மிகக் கவனமாகச் சென்றவன், அந்த வாழைத் தோட்டத்தையும் கிணற்றையும் கண்ட பின்பு தைரியமாக முன்னேறினான்.
குடிசை வாசலில் நின்றபடி பொக்கை வாய் அசைய ஆச்சி சிரித்துக் கொண்டே வரவேற்றாள்.
~~நீங்கள் வருவீங்கள் என்று தெரியும் தம்பி. உங்களைக் கண்டால் கூட்டிவரச் சொல்லி நீங்கள் போன நாளிலை இருந்து உங்களைத் தேடுறம். அப்புதானே அனுப்பி வைச்சவர்|| என்றாள்.
இவன் ~~ஓம் ஆச்சி! சுகமாக இருக்கிறீங்களா|| என்று கேட்டுக்கொண்டே பைசிக் கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பாயில் அமர்ந்தான்.
அப்புவும் இவன் பின்னால் வந்து, ஆயாசத்துடன் இவன் முன்னே அமர்ந்தார்.
~~அங்கனக்கை ஆரும் நாம் ரெண்டுபேரும் ஒன்றா போறதைக் கண்டு யோசிப்பினம் எண்டுதான் உம்மை முன்னுக்குப் போகச் சொன்னனான்|| என்று விளக்கம் கொடுத்தார்.
~~தம்பி, நான் வரச் சொன்ன விசயம் இதுதான்|| என்றவர் ஆச்சியின் பக்கம் திரும்பி, ~~எங்கை அதை எடுத்து வா|| என்றார்.
ஆச்சி உள்ளே சென்று சிறியதொரு பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை பத்திரமாகக் கொண்டு வந்தாள்.
இவன் பிரித்துப் பார்த்தான்.
எம் 193 றவுண்ட்ஸ் இரண்டு அதற்குள் இருந்தது.
அவர்கள் பரபரப்போடு இவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
~~தம்பி இது துவக்குக்குப் போட்டு சுடுறது தானே||
அதைப் பரிசீலித்துக் கொண்டிருந்த இவன் கண்களை உயர்த்திச் சொன்னான்,
~~ஓம் அப்பு! இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது||
அவரே ஆச்சிக்கு முன்னர் ஆர்வத்துடன் கூறினார்,
~~நீங்கள் இங்க வந்து அடுத்த நாள் இவள் சாணி பொறுக்க றோட்டுக்கு காலையில் போனவள். ஏதோ தங்கம் போல மின்னுதெண்டு இது ரெண்டையும் கண்டெடுத்தவள். அவளுக்கு அதை தொடவும் பயம், வெடிச்சிடுமோ எண்டு. ஒரு மாதிரி துணிஞ்சு இங்க கொண்டு வந்திட்டாள். இதைக் கண்டதும் எங்களுக்கு உங்கட ஞாபகம்தான் வந்தது.||
அவர்கள் ஏதாவது காணிப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை தீர்த்து வைக்கச் சொல்லித்தான் அழைக்கிறார்கள் என்று வந்தவனுக்கு அது பெரும் மகிழ்ச்சியை யும், அவர்களில் மதிப்பையும் கொடுத்தது.
ஆச்சி பெருமையாக சிரித்துக் கொண்டு கேட்டாள்,
~~தம்பி இது பாவிக்காத புதுக் குண்டுதானே||
~~இது புதிசுதான். இதை இனி பாவிக்கலாம்|| நாதன் கூறிக் கொண்டே அவளைப் பார்த்தான்.
அவர்கள் அந்த ரவுண்ட்ஸை எடுத்த விதத்தையும், அவர்கள் மனதில் ஏற்பட்ட பயம், பக்குவமாய்க் கொண்டுவந்து சேர்த்த சாமர்த்தியம், தண்ணீர் பட்டு பழுதாப்போகும் என்ற எச்சரிக்கையில் அதைப் பாதுகாத்த விதம் எல்லாவற்றையும் விபரித்துக் கொண்டார்கள்.
அதற்கிடையில் ஆச்சி தேநீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவர்களுக்கு அந்த ரவுண்ட்ஸ் இரண்டையும் இவனிடம் சேர்ப்பித்த பெருமை பிடிபடாமல் ப10ரித்து நின்றார்கள். அந்தப் ப10ரிப்புக்கு மெருகூட்டுவதுபோல இவன் அந்த ரவுண்ட்ஸ் எவ்வாறு வெடித்ததும் போய்த் தாக்கும் என்பதை விளக்கிக் கூறினான்.
~~உங்களிட்ட இதைத் தந்தால், நீங்கள் ரெண்டு ஆமிக்காரரையாவது சுடுவியள். நாங்களும் நல்லா இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் இப்படி கஸ்டப்படுறியள். எனக்கு இதுக்கொண்டும் காசு தரவேண்டாம் தம்பி. இது என்ர அன்பளிப்பு|| என்றெல்லாம் கூறிமுடித்த பின்பு இவன் காரியமாகச் சிரித்துக் கொண்டு கேட்டான்,
~~அப்பு! இதுமாதிரி வேற சாமான்களை தந்தால் பத்திரமாக பாதுகாத்துத் தருவீங்களா||
அவர் தன் பொக்கை வாய் மலர, நிமிர்ந்து பார்த்தபடி சொன்னார்,
~~அது பெரிய வேலையே தம்பி. இங்கை ஆர் வரப் போறாங்கள். இங்கைதான் வேண்டிய இடம் இருக்கு. எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வாங்க. நான் இதுக்கெல்லாம் பயப்படன்.||
அவன் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டான்.
சுவரில் வட்டவடிவமாய் இருந்த குளவிக் கூடு இப்பொழுது மிகப் பெரியதாக வட்ட ரொட்டியின் அளவிற்கு பருத்திருந்தது. அதற்குள் முட்டையோ, குஞ்சோ இருக்க வேண்டும்.
அவன் அங்கிருந்து விடைபெறும் பொழுது ஆயுதங்களை வைத்துக் காப்பாற்ற புதிய இடம் ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் பைசிக்கிளில் துள்ளி ஏறினான்.
பைசிக்கிள் காண்டில் முன்பிலும் வேகமாக ஆடத் தொடங்கியது.
கோபாலனை அன்று வெளிமாவட்டத்திலிருந்து வந்த சிலர் கூட்டமாக சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடித்ததும் கோபாலன் இவனை அழைத்தார்.
இவன் முகத்தை பார்க்கக் கூசியவர் போல தலையை ஒருகணம் தொங்கப் போட்டுக்கொண்டு சொன்னார்,
~~தோழர்! ஒன்றறை மாதங்களுக்கு முன்பு நீங்கள் ... இயக்கத்திற்கு வைத்திய வசதி செய்துகொடுத்தீர்கள் அல்லவா|| என்று இழுத்தவர் கலவரத்தோடு இவன் முகத்தை ஒருகணம் பார்த்துவிட்டு, மீண்டும் தலையைக் குனிந்து கொண்டு சொன்னார், ~~அதுபற்றி ஒரு அறிக்கை எழுதித் தருவீர்களா||
இவன் பார்வையின் கூர்மையை அவரால் தாங்க முடியவில்லை.
~~ஏன் என்ன விசயம். இதுபற்றி உங்களுக்கு மறுநாள் நான் அறிவித்திருந்தேன் தானே. அதில் ஏதும் பிழை இருக்கிறதா||
~~இல்லை. என்னைப் பொறுத்தவரை அதில் ஏதும் பிழையில்லை. நான் அதைப் பெரிதும் வரவேற்கிறேன். ஆனால் இந்த விசயம் கழகத்தில் எல்லோருக்கும் பிடிக்கவில்லை.||
~~இது நல்ல வேடிக்கையாக இருக்கிறது|| அவன் இதழ் ஓரத்தில் மிளிர்ந்த ஏளனச் சிரிப்பு அவரை மோசமாகக் கஷ்டப்படுத்தியது.
அவன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உதடுகளைக் கடித்துக் கொண்டதை சகிக்க முடியாமல் சிறிது நேர அமைதியின் பின் கூறினார்,
~~தோழர்! உங்களிடம் மனம்விட்டு சில விடயங்களைக் கூறவேண்டும். அவசரப் படாதீர்கள். நீங்கள் ஒரு வளர்ச்சியடைந்த தோழர் என்ற நம்பிக்கையில் கூறுகின்றேன்|| என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அவரது தடுமாற்றத்தைக் காண இவனுக்குப் பரிதாபமாக இருந்தது.
கோபம் மறைந்து தோழமையுடன் அவரைப் பார்த்தான்.
அதேசமயம் வெயியே அரவம்கேட்டு இருவரும் ஒரே சமயம் எட்டிப் பார்த்தார்கள்.
எட்வேட் வந்து கொண்டிருந்தான். அவன் கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவப் பொறுப்பாளராக இருக்கிறான்.
கோபாலன் அவரிடமும் ஒரு விளக்கக் கடிதம் கேட்டு முதல்நாளே செய்தி அனுப்பியிருந்ததால் அது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை.
அவன் முகத்தில் விசமத்தனமான புன்னகையொன்றுடன் கண்கள் கம்பீரமாகச் சிரிக்க உள்ளே வந்தான்.
எட்வேட் கழக ஆரம்ப காலத்தில் கழகத்தின் இன்றைய முக்கிய தலைவர்கள் ~பயங்கரவாதிகள்| என்ற பெயரில் தேடப்பட்ட வேளைகளில் பாடசாலைப் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு கழகத்திற்குள் வந்தவன். அந்தத் தலைவர்களின் வழி காட்டலில் அவன் கற்றுக்கொண்டு அடிக்கடி கூறுவது இதுதான்,
~~எப்பொழுதும் கொள்கைக்கு விசுவாசமாக இருங்கள். அது ஒன்றுதான் எங்களது சரியான வழிகாட்டி||
தனிச் சிங்களச் சட்டத்திற்கெதிராக அறுபதாம் ஆண்டு காலத்திலேயே வேலையை துறந்து, விவசாயத்தில் இறங்கிய முதிர்ந்த போர்க்குணம் மிக்க அப்பா, இவன் தலைமறைவாக இருக்கும் காலத்தில் ஒருநாள் வழியில் கண்டு சொன்னார்,
~~ஒன்றில் ஒரு மனிதன் வீட்டிற்குப் பயன்பட வேண்டும் அல்லது நாட்டிற்குப் பயன்படவேண்டும். நீ ஒருபொழுதும் வீட்டிற்குப் பயன்படுவதில்லை என்று முடிவு எடுத்திட்டாய். நாட்டிற்காவது பயன்படு. அதிலும் தோல்வியைக் கண்டிடாதை. வெற்றி வரும்வரை போராடு.||
இராணுவம் அவனைத் தேடிவந்து, வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அடித்து உடைத்து அவரையும் நையப்புடைத்த பின்புதான் இவ்வாறு கூறினார் என்று அவன் பெருமையோடு நினைவு கூருவான்.
கோபாலனில் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் அவன், அவர் முகத்தில் படர்ந்த சோகத்தை கவனித்துவிட்டுக் கூறினான்,
~~தோழர்! நீங்கள் விளக்கம் கேட்டு எழுதிய கடிதம் உங்கள் சொந்த முடிவு இல்லை. உங்களை அப்படியெல்லாம் எழுதும்படி வற்புறுத்தியிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனது கவலையெல்லாம், கழகத்திற்கு பன்னாடை மாதிரி கழிவுகளைத்தான் சேர்க்க முடிகின்றது. நல்லவர்களும் நல்ல விசயங்களும்தான் அவர்களுக்கு எப்பொழுதும் அச்சத்தை தருவதாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் தோன்றுகிறது||
அவன் தன்பாட்டிற்கே பொருமிக் கொண்டான்.
அவன் பொருமலின் காரணமே இதுதான்.
கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு காட்டுப் பாதையால் இவன் சில ஆயுதங் களைக் கொண்டு உழவு இயந்திரத்தில் போயிருக்கின்றான். வழியில் இரண்டு தடவைகள் டயர் காற்றுப்போய் கழற்றிப் ப10ட்டியதனால் நன்றாக இருட்டியும் விட்டது. தூரத்தில் வாகனம் வருவது தெரியும் என்பதனால் விளக்கு இல்லாமல் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறான். வழியில் மதகு ஒன்று உடைந்து சேறும் சகதியுமாக இருந்த பாதையை தாண்டிப் போகும்போது, துரதிஷ்டவசமாக வாகனம் சகதிக்குள் சிக்கிவிட்டது. சனநடமாட்டம் இல்லாத அந்தப் பாதையில் இவர்கள் தவியாய்த் தவிக்கும் சேதி அண்டைக் கிராமத்திலிருந்து வந்த சிலர் மூலம் கதைபரவியிருக்கிறது. விசயம் அறிந்து ... இயக்கத்தவர்கள் வந்து பார்த்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த காட்டுப் பாதையில் முகாமிட்டிருந்தார்கள். இவர்கள் யாரையும் முன்பின் தெரியாது. ஆனால் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டபின்னர் தம்மாலான முழு முயற்சியையும் எடுத்து உழவு இயந்திர த்தை கரையேற்றப் பார்த்தார்கள்; முடியவில்லை. பின் அவர்களே அடுத்த கிராமத்திற்குச் சென்று உழவு இயந்திரம் ஒன்றைக் கொண்டுவந்து அந்த உழவு இயந்திரத்தை வெளியே எடுத்தார்கள். ஆறுமணி நேரத்தின் பின்பு நடுஇரவு வேளையில் அந்த உழவு இயந்திரம் மீட்கப்பட்டது.
அந்த ... இயக்கத் தோழர்கள் இவர்களுக்கு இரவு உணவு, தேநீர் எல்லாம் தங்கள் முகாமிலிருந்து கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்களின் உதவி என்றும் மறக்க முடியாதது என்று நன்றிப் பெருக்கால் எட்வேட் அவர்களிடம் மாத்திரம் கூறியதோடல்லாமல், வெளியிலும் சில கழகத் தோழர்களிடம் கதைத்திருக்கின்றான். கண்டபடி இயக்கங்களோடு முரண்பட்டு மோதக்கூடாது என்று அவன் கூறிய புத்திமதிதான் அவன் கழத்திற்கு எதிரான சதிகாரன் என்ற குற்றச்சாட்டாக விஸ்வரூபம் எடுத்து அவன் முன்னால் தலை கால் நடைகளுடன் வந்து இப்போது மிரட்டிக் கொண்டிருகிறது.
கோபாலன் அவர்கள் இயலாமையின் அவலம் நன்கு தெரிந்த கவலையில் சோகமாக இருந்தார்.
இருவரையும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு சொன்னார்,
~~தோழர்! உங்கள் கலக்கத்தையும், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தை யும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் இவ்வளவு திறமையாக நம்பிக்கையோடு வேலைசெய்த பின்பும் இப்படி ஒரு விசாரணைக்கு முகங்கொடுப்ப திலுள்ள சிக்கல்களை நான் அறிவேன். இதை நினைத்து அவமானமோ வருத்தமோ அடையாதீர்கள். நாம் எமது விடுதலைக்காக சகலதையும் இழந்து நிற்கின்றோம். இந்த அவமானம், வெட்கம், வருத்தம் எல்லாம் எமக்கு ஒரு தூசு. எமக்கு எதிரிடைகள் சிறீலங்கா அரசினால் மாத்திரம்தான் வரும் என்றில்லை. விடுதலைக்கு எதிரிகள் கழகத்திற்கு வெளியே மாத்திரம் அல்ல, உள்ளேயும் இருப்பார்கள். அதற்கும் நாம் முகங்கொடுக்கத் துணியவேண்டும். ஆகவே எதிர்ப்பு வந்திட்டுதே என்று சோர்வதும் சலிப்படைவதும் ஒரு போராளிக்கு அழகில்லை.
தலைமைக்கு ஒருவர் எத்தகைய குற்றச்சாட்டுகளையும் யாரைப் பற்றியும் சமர்ப்பிக்கலாம். தலைமை அதைத் தடுக்காது. ஆனால் விசாரிக்கும். எல்லாமே கழகத்தின் நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இதை விளங்கிக் கொள்ளுங்கள்|| என்று நீண்ட பிரசங்கம் செய்து அவர்களை அமைதிப் படுத்தினார்.
அவர்கள் அமைதியடைந்தார்களோ என்னவே அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

--------------------------------------------

13

ங்கர் அந்தக் கருத்தரங்கிற்கு இறுதி நேரத்திலேயே அழைக்கப்பட்டான். அவனும் அதில் பங்குபற்ற வேண்டும் என்று செயலதிபரிடம் கலாதரன் கண்டிப்பாக வலியுறுத்தியிருந்தார்.
கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்போரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது பேர் வரை அந்தக் கருத்தரங்கத்திற்கு அழைக்கப்பட்டார்கள்.
கருத்தரங்கம் ஒரு பெரிய வீட்டில் முன் ஹோலில் நடந்தது. அந்த வீடு மிகப் பெரியதாக இருந்தாலும் தளவாடங்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டு அண்மையில்தான் இந்த வீட்டுக்காரர் கொழும்பி லிருந்து அங்கு வந்து குடியேறினாராம். எல்லோருக்கும் கதிரை வசதிகள் இல்லாதபடியால், தடித்த சிவப்பு சமுக்காளத்தின் மேல் அவர்கள் வட்டமாக சுற்றி இருந்தார்கள். செயலதிபரும், கலாதரனும் வந்திருந்தாலும் கருத்தரங்கம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இன்னும் சிலர் வரும்வரை அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
பத்மாவும் றூபியும் வந்ததும் இவன் அருகிலேயே பவ்வியமாக அமர்ந்துகொண்டார் கள். அவர்கள் தலையை அலங்கரித்த மல்லிகைப் ப10ச்சரம் வழுகி விழுந்து போவதை எரிச்சலுற்றவர்கள் போல அக்கறையேதுமின்றி அலட்சியமாக விட்டிருந் தார்கள். தங்கள் இருவரின் தனிமைக் கூச்சத்தைப் போக்கவேண்டியோ என்னவோ அடிக்கடி இவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை ஆண்களுக்கே உரித்தான சிறுபிள்ளைப் பொறாமையுடன் தம் அலைபாயும் கண்களால் குறு குறுப்பாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்த சிலர் வேறு ஏதும் அர்த்தம் இவர்கள் பார்வையில் தொனிக்கின்றதா என்று கள்ளத்தனமாகத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
பத்மாவும் றூபியும் இவனோடு சரளமாக உரையாடும் அளவிற்கு இவனில் பாசமும் மதிப்பும் வைத்திருந்தார்கள். முன்புபோல இல்லாமல் மதிய உணவிற்கு வெளியே போகாமல் தங்களுடனே வைத்துக் கொள்ளும் அளவிற்கு அந்த நெருக்கம் வளர்ந்திருந்தது. நிர்மலாவிடமிருந்து வரும் கடிதத்தைப் பறித்து வாசிக்கும் அளவிற்கு அவர்களிடையே நம்பிக்கை வேருன்றியது. வேலை இல்லாத நேரங்களில் இவனுக்கும் நிர்மாலாவிற்கும் உள்ள பழக்கத்தை ஊடுருவி விசாரிப்பதிலும், கேலி பேசித் தீண்டுவதிலும் அவர்களுக்கு ஒரு அலாதி இன்பம்.
இவர்களுக்கு நேர் எதிரே தேவன் இருந்தான். அவனின் சிறிய கண்கள் அசிங்க மாக இவன் அருகில் இருக்கும் றூபியில் அடிக்கடி மேய்ந்து திரிவதை இவன் இனங்கண்டு மனதுக்குள் கறுவினான்.
தேவன் இரு வாரங்களுக்கு முன்புதான் பம்பாயில் ஒரு லட்சம் ரூபா பணத்தைப் பறிகொடுத்துவிட்டு வந்து நின்றான். அந்தப் பணம் ஆயுதக் கொள்வனவிற்காகக் கொண்டுபோகப்பட்டது.
கழகம் ஒழுங்குசெய்த வியாபாரிதான் தன்னை ஏமாற்றி அப் பணத்தை திருடி விட்டதாக எல்லோரிடமும் அப்பொழுது கூறித் திரிந்தான். அந்த வியாபாரி மிக நம்பிக்கையானவன், இப்படியெல்லாம் செய்யமாட்டானே என்று செயலதிபரும் ஆச்சரியப்பட்டார். இரண்டு நாட்களின்பின், அந்த வியாபாரியே நேரில்வந்து நட ந்ததை சொன்னபோதுதான் தேவன் கலவரப்பட்டு தலையைக் குனிந்துகொண்டான்.
தேவனை அந்த வியாபாரி தங்கவிட்ட இடத்தில், இவன் தன்னைப் பற்றியும் தான் கொண்டுவந்திருக்கும் பணத்தின் பெறுமதி பற்றியும் அந்த வீட்டுகாரரின் மனைவியிடம் கூறியிருக்கின்றான். மறுநிமிடமே அவளுடன் இவன் சல்லாபிக்கவும் ஆரம்பித்திருக்கின்றான். இரண்டு நாட்கள் வரை இது போயிருக்கின்றது. மூன்றாம் நாள் அந்தத் தம்பதிகளே வீட்டைவிட்டு இவனுடைய சூட்கேசுடன் மாறிவிட்டார்கள். விபரமாக எல்லாம் கூறிவிட்டு அந்த நேர்மையான வியாபாரி செயலதிபரிடம் நேரிலேயே சொன்னான்,
~~சார்! இதெல்லாம் எவ்வளவு முக்கியமான வேலை என்று உங்களுக்குத் தெரியும்தானே. எவ்வளவு பெரிய ~ஆர்கனைசேசனை| வைத்திருக்கிறீங்க. எவ்வளவு ஆட்கள் உங்களிடம் இருக்காங்க. இந்த வேலைக்குப் போய் இவனை அனுப்பி னீங்களே.||
தேவன் கழகத்தில் நீண்டகாலமாக இயங்குகிறான். ஆறு வருடங்களுக்கு முன்பு சிறீலங்கா அரசு சுவரொட்டி மூலம் தேடப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டபோது, செயலதிபருக்கு அடுத்ததாக தேவனின் பெயர் இருந்த ஞாபகம் இவனுக்கு. அதனால் தேவனை முதன்முதல் அறிமுகமானபோது பெரும் மதிப்பும் மரியாதையுமே இவனுக்கு ஏற்பட்டது. ஆனால் பின்புதான் தெரிந்தது, கழகத்தில் யாருமே இவனை கணக்கில் எடுப்பதில்லையென்று.
இரகசிய வேலைகளை திறமையாக செய்யக் கூடியவனானாலும், மோசமான பாலியல் பலவீனம் உடையவன். அந்தப் பலவீனம் கழகத்தைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று இவன் மனைவியை தமிழீழத்திலிருந்து இங்கு வரவழை த்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவனில் எவ்வித மாற்றமுமில்லை என்று எல்லோரும் வருந்திக் கொண்டார்கள்.
இதுபற்றியெல்லாம் அவன் கவலைப்படாதவன் போல் அம்மைத் தழும்பேறிய முகத்தை எப்பொழுதும் கடுகடுப்பாக வைத்திருப்பான். வேண்டியபோது விகாரமாக வும் சிரித்துக் கொள்வான்.
தேவனை கருத்தரங்கில் பார்த்ததும் றூபியும், பத்மாவும் தங்களுக்குள் குறும்பாக சிரித்துக்கொண்டு இவனையும் பார்த்தார்கள்.
~~பொறுக்கி எடுக்கப்பட்ட ஆட்களையும் பார்த்தீர்களா, தேவனும் இருக்கின்றான்|| என்று அந்தப் பார்வை கூறியது.
தேவனுக்கு அருகில்; சிற்றம்பலம் அமர்ந்திருந்தார்.
கால்களை சப்பாணை கட்டிக்கொண்டு இருக்கமுடியாமல் திண்டாடும் அவர் அடிக்கடி கால்களை மாற்றிப்போட்டுப் பார்த்து வசதியான கோணத்தில் உடம்பை நிலைப்படுத்த திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் ராமநாதன் நீட்டி நிமிர்ந்து இருந்தார். ராமநாதன் இப்பொழுது அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரச்சாரச் செயலாளராக மாற்றப்பட்டிருந்தார். பிரச்சாரச் செயலர் பொறுப்புக் கிடைத்ததும் அவர் ~தமிழன் பலம்| என்ற பெயரில் இன்னுமொரு பத்திரிகையையும் கழகத்தால் வெளியிடு வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ஆனால் ~தமிழன் பலம்| கழகத்தின் பலவீனமான அம்சங்களை வெளிப்படுத்துவதாக இருந்ததால், அந்த பத்திரிகையை கழகத்தின் பத்திரிகை என்று வெளியில் சொல்லாமலே ஒரு மஞ்சள் பத்திரிகை போன்று இரகசியமாக விற்கவேண்டியிருந்தது. அந்தப் பத்திரிகையின் தரம் மிகக் கேவலமானதாக இருந்ததை பல தோழர்கள் எடுத்துக்காட்டிய பின்பும் ராமநாதன் பிடிவாதமாக அந்தப் பத்திரிகையை மோசமான தரத்திலேயே வெளிக் கொணர்ந்தார்.
~~பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். கடின மான விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள். அவர்களுக்கு வசதியாக, இத்தகைய பத்திரிகை அவசியம்|| என்றார். கழகப் பத்திரிகையில் வரும் தத்துவார்த்தக் கட்டுரைகள் புரிந்துகொள்ள முடியாததால் கீழ்ப்பட்ட தோழர் களையும், பாமர மக்களையும் கவரும் வண்ணம் புதிய பத்திரிகை எளிய தமிழில், சாதாரண விடயங்களை பலவித வர்ணங்களுடனும் கவர்ச்சியான புகைப்படங்களுடனும் வெளிவர ராமநாதனே முன்னின்று உழைத்தார்.
அவரைப் பார்த்ததும் சங்கருக்கு ~தமிழன் பலம்| பத்திரிகையின் அவலட்சணங்கள் நினைவுக்கு வர, ஒரு கரப்பத்தான் ப10ச்சி முகத்தில் ஊரும் அருவருப்பில் கால்களை ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக் கொண்டான்.
ராமநாதன் குறிப்பு எடுப்பதற்கு வசதியாக நோட் புத்தகமும் பேனாவுமாக தயாராக இருந்தார்.
கருத்தரங்கத்திற்கு வந்த பலரை சங்கருக்கு தெரியாது. இவனை முதன் முதலில் பார்த்த சிலர் ~யார் இவன்| என்ற கேள்வியை அங்கிருந்தவர்களிடம் போட்டு வைத்தார்கள்.
எல்லோரும் வந்த பின்பு கருத்தரங்கு ஆரம்பமாயிற்று.
கருத்தரங்கை ஆரம்பித்து செயலதிபர் பேசும்பொழுது, இங்கு பேசப்படும் சில தரவுகளையும் உண்மைகளையும் யாரும் வெளியிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை யுடன், சில முக்கியமான விளக்கங்களை தோழர்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகக் குறிப்பிட்டார். கருத்தரங்கு ~எமது சர்வதேச நிலைப்பாடும், இணைவு நடவடிக்கைகளும்| என்ற தலைப்பில் நடைபெற்றது.
நாம் எம் விடுதலைப் போராட்டத்தின் போது சோசலிச நாடுகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, சிற்றம்பலம் நிலத்தில் இருக்க முடியாமல் திண்டாடியவர், முழங்காலில் நின்று ஒரு கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டு ஒரு குட்டியானை தள்ளாடுவது போல ஆடிக்கொண்டு கூறினார்,
~~சோசலிச நாடுகளை நாம் ஏன் சாரவேண்டும். சோசலிச நாடுகள் எல்லாம் இப்பொழுது பாதை மாறி போய்க் கொண்டிருக்கின்றன. நாம் எம் விடுதலையை வென்றெடுப்பதற்கு நடுநிலைமையில் இருப்பதுதான் நல்லது. அப்பொழுதுதான் நாம் பல நாடுகளின் ஆதரவையும் பெறமுடியும். நாம் ஏன் அமெரிக்காவை மட்டும் பகைக்கவேணும். அப்படியென்றால் சீனாவிற்கு எதிராகவும் நாம் இருக்க வேண்டும்.||
அந்த விவாதம் பல மணி நேரம் இழுபட்டு இறுதியில் கலாதரன் அதற்குப் பதிலாக சுருக்கமாக தொகுத்துக் கூறினார்,
~~நாம் மார்க்சிய சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருகின்றோம். தமிழீழத்தை சோசலிச தமிழீழமாகக் காண முனைகிறோம். எமது விடுதலை உலகப் புரட்சியின் ஓர் அம்சமாக விளங்குவதால், நாம் சோசலிச நாடுகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நடுநிலைமை என்பது எப்படியும் முதலாளித்துவ நாடுகளோடு சார்ந்திருப்பதற்கான அடித்தளம்தான்.||
செயலதிபரும் இதே கருத்தினை வலியுறுத்தி ~~சிறீலங்கா அரசு அமெரிக்காவின் உதவியையும் ஆதரவையும் பெற்றுள்ளதால், நாம் சிறீலங்கா அரசிற்கு உதவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவே வேண்டும்|| என்றார்.
இந்தியத் தலையீடு பற்றிய சர்ச்சை எழுந்தபோது சிலர் இந்தியாவின் இராணுவத் தலையீடு இல்லாமல் தமிழீழ விடுதலை சாத்தியமில்லாத ஒன்று என்றார்கள். ~~ஏனைய இயக்கங்கள் இந்திய ஆதரவைப் பெறுவதில் பகிரங்கமாக முன்நிற்கின் றன. நாமும் அவர்களைப் போல வெளிப்படையாக இந்திய ஆதரவுடன் தமிழீழ விடுதலையை வெற்றிகாண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்|| என்றார்கள். இந்திய அரசிற்கு எதிராக நாம் ~வங்கம் தந்த பாடம்| போன்ற புத்தகங்களை வெளியிட்டது மோசமான தவறு என்றும் கண்டித்தார்கள். வேறு சிலர் நாம் எக்காலத்திலும் தனித்துப் போராடி வெற்றிபெற இயலாது என்பதால், இந்தியத் தலையீடு எப்படியும் நிகழ்ந்தே தீரும் என்பதாலும் இந்தியத் தலையீட்டை தவிர்க்க ஏலாது. ஆகவே அதற்கு ஏற்றாற்போல எமது நடவடிக்கை இருக்க வேண்டும் என்ற முன்னைய கருத்தையே வலியுறுத்தினார்கள்.
இதற்கு செயலதிபர் பதிலளிக்கும்போது ~~இந்தியத் தலையீட்டால் தமிழீழ விடுதலையோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ எமது பிரச்சினைகள் தீர்க்கப்படு மானாலும் அது எமது விடுதலையாக அமையாது. அது இந்திய முதலாளித்துவ அரசின் நலன் சார்ந்ததாகவே இருக்குமேயல்லாமல், எமது மக்களின் விமோசனம் கருதி இராது. நாம் சிங்கள அரசின் அடக்குமுறைக்குப் பதிலாக இந்திய அரசின் அடக்குமுறைகளை அங்கீகரிப்பதாகவே அமையும்.
தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசின் ஒடுக்குமுறையால் படும் இன்னல்களையும் இங்கு நடைபெறும் பாட்டாளி வர்க்கத்தின் மீதான கொடூர அடக்குமுறைகளையும் நீங்கள் அறிவீர்கள். நாம் இந்திய அரசின் படையெடுப்பால் தமிழீழத்தைப் பெற்றால், எமது மக்களுக்கு இந்தப் பேரழிவுகளைத்தான் வழங்க வழிசெய்தவர் களாவோம்.
ஆகையால் நாம் எக் காரணம் கொண்டும் இந்தியப் படையெடுப்பை ஆதரிக்க முடியாது. ~வங்கம் தந்த பாடம்| உண்மையில் எமக்கு அது பெரும் பாடம். நாம் எமது மக்களை பிழையாக நடத்த முடியாது. உண்மையைக் கூறவேண்டும். ஆகையால்தான் நாம் இந்திய அரசை தேவையான இடங்களில் எமது மக்களுக்கு அம்பலப்படுத்தவும் வேண்டியிருக்கிறது.
இரு முக்கிய சந்தர்ப்பங்களில் இந்தியத் தலையீடு குறித்து இந்திய மத்திய அரசால் எனது அபிப்பிராயம் கேட்கப்பட்டது.
அப்பொழுது நாம் இந்தியப் படையெடுப்பை விரும்பவில்லை என்று அவர்களுக்கு நேரிலேயே சொன்னேன். நாம் இந்திய அரசை அண்டையிலுள்ள ஒரு நட்பு நாடாக மட்டுமே கருதுகின்றோம். இந்திய அரசிடம் இருந்து எவ்வித நிபந்தனை யுமின்றி யுத்தத்திற்கான கருவிகளைத்தான் தரும்படி கேட்கின்றோம் - அவர்களின் ஆக்கிரமிப்பை அல்ல.
எமது சுதந்திரத்தை நாமே போராடி வெல்ல வேண்டும். இந்தக் கொள்கையிலிருந்து நாம் ஒருபோதும் விலகமுடியாது|| என்று அந்தச் சொற்பொழிவின் இறுதியில் ஆணித்தரமாகக் கூறினார்.
இடையில் ஒரு கேள்வி வந்தது.
~~இந்தியாவின் உதவி இல்லாமல் தனித்து நாம் போராடி வெற்றிபெறும் சாத்தியக் கூறுகள், எமக்கு ஆயுத உதவி வழங்கக்கூடிய வேறு நாடுகள் உண்டா? ||
செயலதிபர் வழமையான அந்தப் புன்னகையால் அபிநயம் பிசகாமல் கலாதரனைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
~~இப்பொழுது அந்த நிலையில்லை. ஆனால் அதற்கான வேலைகளைத்தான் நாம் செய்து வருகின்றோம். அந்த வாய்ப்புகள் எமக்கு உடனடியாகக் கிடைக் கலாம், அல்லது சிறிது கால தாமதமாகலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இப்பொழுது உருவாகி வருகின்றன|| என்று செயலதிபர் இழுத்துக் கொண்டு கூறி முடிக்கவும், கலாதரன் எழுந்து ~~இதற்கு அப்பால் எதுவும் கேளாதீர்கள். இது இராணுவ ரகசியம்|| என்று புன்னகையோடு கூறியபோது, எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து தமக்குள் சிரித்துக் கொண்டார்கள்.
விடுதலை இயக்கங்களுடன் இணைவு பற்றி செயலதிபர் கூறும்பொழுது ~~நாம் தமிழீழ விடுதலையை கருவிப் போராட்டத்தில் வென்றெடுக்க திடம்கொண்ட அமைப்புகளை மாத்திரம்தான் விடுதலை அமைப்புகளாகக் கருதுகின்றோம். அவை எத்தகைய சிறிய அமைப்புகளாக இருந்தாலும் அவையும் ஒரு சக்தி என்பதையும், அவையும் விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்கின்றன என்பதையும் நாம் அங்கீகரிக்கின்றோம்.
தமிழர் விடுதலைக் கூட்டணியையோ, தமிழீழ விடுதலை முன்னணியையோ நாம் ஒரு விடுதலை அமைப்பாகக் கருதமுடியாது. அவை பாராளுமன்றப் பாதையில் ஜெயவர்த்தனா அரசுடன் சமரசம் செய்வதற்கு இப்பொழுதும் தயாராக இருக்கின்றன|| என்று கூறியபோது எல்லோரும் அந்தக் கருத்தை ஆதரித்துப் பேசினார்கள்.
~விடுதலை அமைப்புகளில் எவற்றுடன் இணைவு ஏற்படுத்த வேண்டும்| என்ற கேள்விக்கு பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்தன.
~~ஒரு இயக்கத்துடனும் இணையக்கூடாது. அப்படி இணைவதுபோல பாசாங்கு செய்துகொண்டு எம்மைப் பலப்படுத்துவதிலும், ஏனைய தாபனங்களை வீழ்த்துவ திலுமே கவனமாக இருக்கவேண்டும்|| என்று ராமநாதன் அபிப்பிராயம் தெரிவித்தார்.
செயலதிபர் இப் பிரச்சினைக்கு பதிலளிக்கும்போது ~~சகல விடுதலை இயக்கங் களுடனும் இணைவு ஏற்படுத்துவதே எமது கொள்கை. ஒரு இயக்கத்துடன் இணைவை ஏற்படுத்தும்போது அது எம் கொள்கை, நடைமுறைகளுக்கு இசைந்ததாக முற்போக்கானதாக இருக்கும்பொழுது அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சுத்த இராணுவக் கண்ணோட்டமுள்ள பிற்போக்கான தாபனங்களோடு நாம் இணைவை ஏற்படுத்தும்போது நாமும் அத்தகைய சகதிக்குள் வீழ்ந்துபோகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. மக்கள் மத்தியில் தமது காட்டிக்கொடுப்புகள் மூலம் அம்பலமான, சந்தர்ப்பவாத தாபனங்களோடு இணையும்பொழுது நாமும் அவ்வாறே மாறவேண்டியவர்களாகும் வாய்ப்பைக் கொடுக்கிறது. இந்தவகையில் பார்க்கும் போது முக்கூட்டாக இணைந்துள்ள அமைப்புகளுடனே நாம் இணையவேண்டும்|| என்றார்.
அவர் பேசிமுடிந்ததும் ஒரு கேள்வி எழுந்தது.
~~இந்த மூன்று அமைப்புகளில் எந்த அமைப்போடு இணைவது நல்லது என்று கருதுகிறீர்கள்? ||
~~இம் முக்கூட்டை நாம் இனியும் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. அது அவர்கள் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள இணைவைப் பாதிக்கும். நாம் முக்கூட்டுடன் பொதுவான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அவர்களுடன் இணைய வேண்டும். நாம் அவர்களுடன் இணைந்து ஏற்படுத்தும் ஐக்கியத்தின் மூலமே இந்தியாவின் தலையீட்டைக்கூடத் தடுக்க முடியும்|| என்று செயலதிபரே கூறினார்.
சங்கர் செயலதிபரின் கருத்துக்களால் மிக ஆழமாகக் கவரப்பட்டான்.
பிரச்சினையை யதார்த்தமாகப் பார்க்கும் தன்மையும், கற்பனைகளுக்கோ பிரமை களுக்கோ இடமளியாது நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கும் அவர் போக்கும் வெகுவாகப் பிடித்திருந்தன.
~~மகன் தத்துவங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. நடைமுறைகளை, யதார்த்த நிலைமைகளை, தந்திரோபாயங்களை சரிவரக் கணிக்கவும் தெரிந் திருக்க வேண்டும். எமது கட்சியிலிருந்த பலவீனம் இதுதான். பல முற்போக்கு தாபனங்களின் தோல்விக்கு இந்தப் பலவீனம்தான் காரணம்|| அப்பா கால்களை நீட்டி நிமிர்த்திக் கொண்டு கூறும் பொழுதெல்லாம் சங்கருக்கு ஏட்டுச் சுரைக்காயாக இருந்த விடயங்கள் இப்பொழுது கறியாகிக் கொண்டு வந்தன.
கருத்தரங்கு முடிந்து எல்லோரும் கலைந்த பின்பு சங்கர் கலாதரனை தேடிச் சென்றான்.
~~எப்படி கருத்தரங்கு பிரயோசனமாக இருந்ததா|| அவர் இவனைக் கண்டதும் அக்கறையாகக் கேட்டார்.
~~மிகவும் பிரயோசனமாக இருந்தது. இந்தக் கருத்துக்கள் சிலவற்றை நீங்கள் தமிழீழத்திற்கு அனுப்பினால் என்ன! அவர்களும் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே||
இவன் கூறியதை ஏற்றுக்கொண்டு அவர் கேட்டார்,
~~நீர் இங்கு நடந்தவைகளை ஒரு அறிக்கையாக எழுதித் தர இயலுமா? ||
இவன் குறிப்பெதுவும் எடுக்காவிட்டாலும் ஏதோ நம்பிக்கையுடன் சம்மதித்து விட்டு கேட்டான்,
~~உங்களுடன் சில விடயங்கள் ஆறுதலாகப் பேசவேண்டும்.||
இவன் கண்களை மூக்குக் கண்ணாடிக்கூடாக ஊடுருவிப் பார்த்து விட்டு சொன்னார்,
~~மாலையில் கந்தோரில் பேசலாமே.||
மாலை ஐந்து மணியிலிருந்து சங்கர் அவருக்காகக் காத்திருந்தான். ப10பாலன் அனுப்பிய கடிதங்களிலுள்ள விடயங்களை எப்படியும் அவரிடம் கூறவேண்டும் என்று உள்ளம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அவருக்கு கடிதத்தைக் காட்டாமல், அவர் புரிந்து கொள்ளும் வகையில் விடயத்தை எப்படித் தெளிவாக்கலாம் என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.
சென்னையிலிருந்து முகாம்களுக்கு பணம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு திரும்பிய தருமன் இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்தக் கடிதத்தை சங்கரிடம் கொடுத்தான்.
தருமனும் ப10பாலனும் ஒரே ஊர்க்காரர்கள். எதேச்சையாக முகாமில் சந்தித்துக் கொண்டார்கள்.
ப10பாலன் சங்கரை விசாரித்திருக்கிறான். நன்றாகத் தெரியும் என்றதும் பத்திரமாகக் கொடுக்கும்படி அந்தக் கடிதத்தை கையளித்திருக்கிறான். கடிதத்தை சங்கரிடம் கொடுக்குமுன் தருமன் கூறினான்,
~~சங்கர்! எனக்கு ப10பாலன் உன்னைப் பற்றி கூறிய நம்பிக்கையில்தான் இந்த வேலையைச் செய்கிறேன். நான் இப்படி உனக்கு முகாமிலிருந்து கடிதம் கொண்டு வந்தது தெரிந்தால் எனக்குத்தான் ஆபத்து. ஒருபொழுதும் இதை வெளியிடமாட்டேன் என்றால் மட்டும் கடிதத்தை வாங்கு. அப்படியில்லாவிட்டால் சொல்; கடிதத்தை இப்போது நானே கிழித்து விடுகிறேன்.||
சங்கர் அவனுக்கு தைரியமும், நம்பிக்கையும் ஊட்டி அந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்டான்.
கடிதத்தின் ஒவ்வொரு வரிகளையும் தாண்டிச் செல்லும்போது, உள்ளம் கனலாய் எரிந்து தகித்து கொப்பளித்தது.
என் அன்பு தோழனே!
இந்தக் கடிதம் உன் கையில் எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன். நீ இங்கிருந்து போகமுன் உள்ள நிலைமைகள் உனக்குத் தெரியும். அவை எந்தவகையிலும் மறையவில்லை, குறையவில்லை, மாறாக மிகப் பயங்கர மாக வளர்ந்து கொண்டு வருகின்றது.
நாம் விடுதலைப் போராளிகளா அல்லது பழங்கால ஆபிரிக்க அடிமைகளா என்று சந்தேகிக்கும் வகையில் இங்கு கொடுமைகள் நடைபெறுகின்றன. முகாமில் அரசியல் கதைக்கவே கூடாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். அப்படி அரசியல் கதைப்பவர்கள் கழகத்திற்கு எதிரான சதிகாரர்களாம். யாரையும் ~தோழர்| என்று அழைக்கக் கூடாதாம். வயதிற்கு மூத்தவர்களை அண்ணை என்றும் இளையவர்களை தம்பி என்றும்தான் அழைக்க வேண்டுமாம். தோழர் என்ற பதமே இவர்களை கிலிகொள்ளச் செய்கிறது. ஒருமுறை நான் முகாம் பொறுப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் அவரை தோழர் என்று விளித்துவிட்டேன். அவர் கூப்பிட்டு என்னைக் கண்டித்தார். நான்கு மணி நேரம் தண்டனையும் வழங்கினார்.
அன்புத் தோழனே!
உன்னை இப்படி அழைக்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா. தோழன் என்ற சொல்லின் அர்த்தமே நீ கூறித்தான் எனக்குத் தெரியும். சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் அந்த உன்னதமான உறவு இங்கு எப்படி கேவலப்படுத்தப் படுகிறது பார்த்தாயா.
நீ இங்கு இருக்கும்போதே முகாமிற்குள் சி.ஐ.டி போட்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள்தான் முகாம்களின் குட்டி ராஜாக்கள். அவர்கள் கூறுவதையெல்லாம் மேலே உள்ளவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அவர்கள் கூறுவதற்கெல்லாம் மற்றவர்கள் ஆட்டம் போட வேண்டும். அவர்களில் யாராவது ஒருவரைப் பற்றி குற்றசாட்டு வைத்துவிட்டால் போதும், அவரில் சந்தேகம் என்று விசாரணைக்குக் கொண்டு போவார்கள். அவர் திரும்பி நெஞ்சு நோவோடு அல்லது கால்களை நிலத்தில் வைத்து நடக்க முடியாத வேதனையோடுதான் வருவார். சித்திரவதைக் கொடுமைகளைப் பற்றி இரகசியமாக அவர் கூறுவதைக் கேட்டால் இரத்தம் உறைகிறது. இப்படி விசாரணைக்குப் போனவர்களில் எங்கள் முகாமிலிருந்து மாத்திரம் நான்கு பேர் திரும்பி வரவில்லை. என்ன ஆனார்களோ தெரியாது. அவர்கள் முகாமிலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறுகின்றார்கள். கொலை செய்துவிட்டு இப்படிக் கூறுகின்றார்கள் என்றும் ஒரு வதந்தி இரகசியமாக முகாமில் உண்டு.
நாம் இங்கு மரணபயத்தில் நாளும் பொழுதும் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். இந்த முகாம் சி.ஐ.டி களின் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தம் மானம் மரியாதை எல்லாவற்றையும் இழந்து கோழைகளாக வும், பேடிகளாகவும் மாறிக்கொண்டு வருகின்றார்கள். இந்த சி.ஐ.டி களின் எல்லா காமக் கேளிக்கைகளுக்கும் நாம் உடன்பட வேண்டும். உனக்குத் தெரியும்தானே, முபாறக் திருகோணமலையைச் சேர்ந்தவன் உனது பிளட்டூனில் இருந்தவன். இவனை இந்த சி.ஐ.டி களில் ஒருவன் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியிருக்கிறான். இவன் அதற்கு உடன்பட மறுத்துவிட்டதோடு, வேறு சில தோழர்களுக்கும் இது பற்றிக் கூறினான்.
ஆனால் நடந்தது தெரியுமா! மறுநாள் முபாறக்கை கைதுசெய்து விசாரணைக்குக் கொண்டு போனார்கள். இவன் வேறொரு இயக்கத்தின் ஊடுருவல் என்று சந்தேகமாம். அந்த சி.ஐ.டி இப்படி ஒரு றிப்போர்ட் கொடுத்திருக்கின்றான். ஒருவாரத்தின் பின் முபாறக்கை கொண்டுவந்து இங்கு போட்டிருக்கிறார்கள். சித்திரவதையின் பின் இப்பொழுது அவன் பைத்தியமாக இருக்கின்றான். காண்பவர் காலில் எல்லாம் விழுந்து அழுது புரள்கின்றான். இவன்போல வேறு சிலரும் இந்த முகாமில் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ரவி என்னும் ஒரு தோழன். இவன் ஒரு பல்கலைக் கழக மாணவன். படிப்பை இடையில் விட்டுவிட்டு பயிற்சிக்கு வந்திருக்கின்றான். இவன் இங்கு வருமுன் இராணுவத்தால் கைதாகி ஒரு மாதம்வரை வவுனியா இராணுவ முகாமில் சித்திர வதைக்குள்ளாகி பின்பு விடுவிக்கப்பட்டவன். இவனையும் அரசாங்கத்தின் ஊடுருவல் என்று சந்தேகித்து ஒருவாரம் சித்திரவதை செய்தார்கள். இப்பொழுது அந்த ஒருவார சித்திரவதையில் அனுபவித்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடிக்கிறான். இவனையும் இன்னொருவனையும் நிர்வாணமாக்கிவிட்டு தங்கள் காம மனவிகாரங்களை இவர்களைக் கொண்டு நிறைவு செய்திருக்கிறார்கள். அந்தளவிற்கு மோசமான பாலியல் மனவிகாரம் நிறைந்தவர்கள் எல்லாம் இந்த முகாமின் அச்சாணிகளாக இருக்கின்றார்கள். சிறீலங்கா இராணுவத்தின் சித்திர வதைகளைக் காட்டிலும் இது மோசம் என்பதே சித்திரவதைக்கு உள்ளானோர் அனைவரினதும் கருத்து.
நான் உன்னை நினைக்கும் பொழுதெல்லாம், நீ இங்கு இல்லாதது என்னவோ நல்லது என்றே நினைப்பேன். எமது கழகத்தின் தலைமைப் பீடத்திற்கு தெரியாம லேயே இக் கொடுமைகள் எல்லாம் நிகழ்கின்றன என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம். ஏனென்றால் இங்கு கழகப் பத்திரிகையில் வரும் கட்டுரைகளை படிக்கும்போது எவ்வளவு முற்போக்கான சிந்தனையாளர்கள், நல்ல போராட்ட வீரர்கள் எல்லாம் எமது கழகத்தில் இருக்கின்றார்கள் என்று நிச்சயமாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது இந்த முகாம் குறைபாடுகளை அவர்கள் ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை யிலேயே நாம் இருக்கின்றோம்.
நீ கழகத்தின் தலைமையில் இருப்பவர்களிடம் இக் குறைபாடுகளைப் பற்றி பேசி அவற்றை நிவர்த்திக்க உன்னாலான உதவிகளைச் செய். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல, இங்குள்ள அனைத்துத் தோழர்களின் வேண்டுகோளு மாகும்.
நான் உனக்கு இக் கடிதம் எழுதியதைப் பற்றி யாருக்கும் தெரியத் தேவையில்லை. நீ முகாமில் இருந்த காலத்தில் நடைபெற்றவைகளை மாத்திரம் கூறினால் போதும்.
இந்தக் கடிதம் உனக்குத் தரும் தோழர் எனக்கு மிக நம்பிக்கையானவர். என்னுடன் ஒரே பாடசாலையில் படித்தவர். அவருக்கும் முகாம் நிலைமைகள் தெரியும். நீ அவரை நம்பலாம். ஏதும் சேதி இருப்பின் அவர்மூலம் அனுப்பவும்.
நாம் மீண்டும் சந்திக்கும் காலம் வரும்.
புரட்சிகர வணக்கங்களுடன் முடிக்கிறேன்.
என்றும் உனது தோழன்
ப10பாலன்.
அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு தடவை படித்து முடித்துவிட்டு கலாதரனுக்காக அங்கேயே காத்திருந்தான் சங்கர். கந்தோரில் வேறு யாரும் இல்லாததும் நல்ல சூழலாகவே அமைந்திருந்தது.
ஆறுமணிக்குப் பின்பே கலாதரன் வந்தார்.
இவன் அருகில் அமர்ந்து விசயத்தைக் கேட்டார். இவனது தனிப்பட்ட தேவை ஏதாவது இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தார். ஆனால் அவன் தனக்காக அல்லாமல் முகாம் சம்பந்தப்பட்ட கழக விடயங்களை தன்னிடம் முன்வைப்பதைப் பார்த்ததும், பொறுமையாக அவன் கூறுவது அனைத்தையும் கிரகித்துக் கொண்டிருந்தார். அவன் ஒவ்வொரு சம்பவமாக விளக்கி முகாமில் பயிற்சி வீரர்கள் எப்படி மனம் புண்படுகிறார்கள் என்று உயிரோட்டமாக கூறிக் கொண்டிருந்தான்.
சிறீலங்கா அரசிற்கு அஞ்சாமல் தம் உயிரை பணயம் வைத்து போராடப் புறப்பட்ட அந்த இளைஞர்கள் இன்று இப்படி அஞ்சி ஒடுங்கிக் கொண்டிருப்பது, தமது உயிர் ஆபத்திற்காக அல்ல. தம் இலட்சிய வாழ்வு வீணாகப் பலியிடப்படப் போகிறதே என்ற ஏமாற்றத்தில்தான் வெதும்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவருக்கு தெளிவாகப் புரிய வைத்தான்.
அவன் பேசி முடிந்த பின்பு அவர் கூறினார்,
~~நானும் சில விசயங்கள் கேள்விப்பட்டேன்தான். ஆனால் இந்தளவிற்கு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை|| என்றுமட்டும் கூறிவிட்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அரசியல் செயலரான அவர் அரசியல் hPதியான விடயங்களில் கழகத்தை வழிநடத்தும் அளவிற்கு இராணுவத்தில் தலையிடமுடியாத வகையில் நிலைமை இருப்பதை வேதனை யோடு மனம் கூர்ந்தார்.
நீண்ட மௌனத்தின் பின் சொன்னார்,
~~நாம் எமது இராணுவப் பயிற்சி வீரர்களுக்கு இப்பொழுது வெகுவாக அரசியல் அறிவை ஊட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதற்காக தமிழீழத்திலி ருந்து ஒருவரை வரவழைத்திருக்கிறோம். அவர் இப்பொழுது பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்பு எடுக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். அதன்பின்பு இந்தக் குறைபாடு நீங்கும் என்று எதிர்பார்க்கிறோம். பெரும்பாலும் அரசியல் அறிவின்மைதான் இந்தக் குறைபாடுகளுக்குக் காரணம்||
அவர் கூறி முடிக்கும் முன்னரே இவன் பட்டென்று ஓங்கிய குரலில் கூறினான்,
~~அரசியல் வகுப்பு நடைபெறுவது அவசியம்தான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை அது இல்லை. மனிதத் தன்மையில்லாத மிக மோசமான முட்டாள் முரடர்கள் எல்லாம்தான் இப்பொழுது முகாமை நடத்துகிறார்கள். அவர்களால்தான் இவ்வளவு பிரச்சினையும் வருகிறது. அவர்கள் அரசியல் வகுப்புக்களால் மாறப்போவதில்லை||.
அவன் சிறிது கடுமையாகவே கூறினான்.
கலாதரன் அதற்கும் சிறிதுநேரம் மௌனமாக இருந்துவிட்டு மூக்குக் கண்ணாடியை கழற்றி துடைத்துக் கொண்டு கூறினார்,
~~நீர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. இது இன்று நேற்று உள்ள பிரச்சினை இல்லை. கழகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இப் பிரச்சினை இருக்கிறது. நாமும் அவற்றை இல்லாமல் செய்ய போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவர்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறார்கள்|| என்று தனக்குள் சலித்துக் கொண்டவர் போல கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார்,
~~இப்பொழுது இராணுவப் பயிற்சி வீரர்களில் திறமானவர்களை தெரிந்து அவர் களுக்கு அரசியல் தெளிவ10ட்டி, அவர்களை தளத்தில் வேலைசெய்ய அனுப்பப் போகிறோம். முதலில் கழகத்தை கொள்கைப் பற்றும் தாபனக் கட்டுப்பாடும் உள்ள பலமான அமைப்பாக மாற்றவேண்டும். அதன்பின்பே இராணுவத்திலும், மற்ற இடங்களிலும் இருக்கும் பிழையான சக்திகளை திருத்த வேண்டும். இவைகளை இப்படி படிமுறையாகச் செய்வதே கழகத்தின் ஜனநாயக hPதியான வளர்ச்சிக்கு உதவும்.
இப்பொழுது தமிழீழத்தில் அரசியல் வேலை செய்வதற்கு முகாம்களில் இருந்து ஆட்களைத் தெரிந்தெடுக்கிறோம். இதில் மிக நல்ல சக்திகள் வரவேண்டும். உமக்கு தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் கூறும். அவர்களை வெளியே எடுத்து தளத்தில் அரசியல் வேலை செய்ய அனுப்புவோம். அதுதான் இப்போதைக்கு என்னால் செய்யக்கூடிய முதல் கட்ட வேலை.
அது அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ப10பாலனையும் மற்றும் தோழர் களையுமாவது இப்போதைக்குக் காப்பாற்றிவிடலாம். அந்தக் கற்பனை அவனுக்கு இதமாக இருந்தது.
அவன் முகமலர்ச்சியை கவனித்துப் பார்த்துவிட்டு கலாதரன் காலை ஆட்டிக் கொண்டு கூறினார்,
~~தோழர்! தாபனத்தில் குறைகளைக் கண்டால் ஒருபொழுதும் கலங்கிவிடாதீர்கள். குறைகளேயில்லாமல் எப்பொழுதும் தாபனம் புனிதமாக இருக்குமானால் எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வேலை இருக்கப்போகிறது. நோய் இருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை. நீர் கழகத்தில் குறைபாடுகளைக் கண்டால் அதன் தோற்றத்திற்கான காரணங்களை, அடிப்படைகளை ஆராய வேண்டும். அதன்மூலமே பிரச்சினைகளை தீர்க்கலாம். வெறுமனே கலங்குவதாலும், குழம்புவதாலும் எந்த லாபமும் ஏற்படப் போவதில்லை.||
அவன் எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டிருந்தான். அவர் கண்ணாடியை மாட்டிக் கொண்டு சொன்னார்,
~~எமது கழகம் எத்தனை போராளிகளின் அர்ப்பணிப்பிலும், தியாகத்திலும் கட்டப் பட்டது தெரியுமா. அதனை நாம் கவலையீனமாக உணர்ச்சிவசப்பட்டு சிதைத்து விட இடமளிக்கக் கூடாது. தமிழ் மக்கள் இன்று எவ்வளவோ நம்பிக்கையோடு எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா. தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் மீட்சியை நாம்தான் வழங்குவோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை நாம் வீணாக்கக்கூடாது. விடுதலை இயக்கங் களுக்குள் இதுவரை எமது கழகம் மாத்திரமே எவ்வித பிரிவும் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது. நாம் கழகத்திற்குள் உள்ள குறைபாடுகள் பலவீனங்களை பிளவு ஏற்படாமலேயே திருத்தவேண்டும். இதற்கு மிகுந்த பொறுமையும் நிதானமும் தேவை.||
அவர் பேசிமுடிக்கவும் டெலிபோன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. கலாதரன் எழுந்து போய் றிசீவரை கையில் எடுத்தார்.
மறுமுனையிலிருந்து புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முகாம்களின் பொறுப் பாளர் பேசினார். அவர் கொடுத்த தகவல் கலாதரனை அப்படியே அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
~~முகாமில் இராணுவப் பயிற்சி வீரர்களில் ஒரு கோஷ்டி ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறதாம். இதற்கு அரசியல் வகுப்பு எடுக்கும் நடராசா மாஸ்டரின் தூண்டுதலே காரணமாம்.||

-------------------------------------------------------------

14

எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட திருப்தியில் நிர்மலா நித்திரைக்குப் போனாள்.
அவள் வீட்டைவிட்டு வெளியேறும்போது அப்பாவும் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளையே தேர்ந்தெடுத்தாள். அப்பொழுதுதான் அம்மாவின் அங்கலாய்ப்புக்கும், அலறலுக்கும் ஓரளவாவது ஆறுதல் கிடைக்கும்.
இல்லாவிட்டால் அம்மா ஊரையே கூட்டிவிடுவாள்.
போகுமுன் அண்ணாவிடமாவது சொல்லிவிட்டுப் போகலாம் என்றால் நான்கு நாட்களாக வசீகரனைக் காணோம். இப்பொழுதெல்லாம் அவன் அப்படித்தான். தொடர்ச்சியாக வீட்டிற்கு வராமல் தங்கிவிடுவான். கேட்டால் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக அப்படியே நின்றுவிட்டதாக பொய் சொல்லுவான். நிர்மலாவிடம் மாத்திரம்தான் அவன் உண்மை சொல்லுவது.
~~நிர்மலா நான் இப்பொழுது பல்கலைக் கழகம் போவதையே விட்டுட்டன். எங்கள் இயக்க வேலைகள் சிலவற்றின் முக்கிய பொறுப்புகளை நான் தீவிரமாக செய்து முடிக்க வேண்டியிருக்கிறது.||
அவள் சங்கரின் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பின்னால், வசீகரனிடமாவது கூறிவிட்டுச் செல்லவேண்டும் என்ற ஆவலில் இரவுவரை அவனை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் காத்திருந்தாள்.
அம்மா அப்பாவிற்கு எழுதவேண்டிய கடிதத்தை ரத்தினச் சுருக்கமாக எழுதி காலை பத்து மணிக்கு அவர்கள் கையில் கிடைக்கக் கூடியதாக அம்மாவின் மணிபர்சில் பத்திரமாக இப்பொழுதே வைத்துவிட்டாள். அம்மா காலையில் சந்தைக்குப் போகும்போது அதை எப்படியும் திறந்து பார்ப்பாள்.
கட்டிலில் இருந்தவாறே அந்த அறையை தலையைத் திருப்பித் திருப்பி ஒவ்வொரு பகுதியாக ஆர்வமுடன் பார்த்தாள். நெஞ்சில் ஒரு சோகம் மெதுவாக இதயத்தை கசக்கிப் பிழிந்தது.
அவள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் இப்பொழுதிருந்தே அறுபடப் போகும் உறவுக்காக கலங்குமாப் போல ஏங்கினாள். அம்மா அப்பா அண்ணாவோடு அவளும் சேர்ந்து எடுத்த வௌ;வேறு கால குடும்பப் படங்கள் நான்கையும், தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவரின் புகைப்படங்களையும் மறக்காமல் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.
அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்,
~~சங்கர்! நீ ஒருபோதும் எனக்கு நம்பிக்கையான வார்த்தைகள் சொல்லி என்னை உற்சாகப் படுத்தவில்லை||
~~என் அந்தஸ்து குறையாமல் காப்பேன் என்றெல்லாம் வாக்குறுதிகள் தரவில்லை||
~~களியாட்டங்களுக்கு அழைத்துச் சென்றோ அல்லது ஏதேனும் பரிசுப் பொருட்கள் தந்தோ என்னை மகிழ்ச்சிப் படுத்தவில்லை||
~~ஆனாலும் நீ என்னை வென்றுவிட்டாய்!||
~~உன் உண்மையான வாழ்வு அதை சாதித்துவிட்டது!||
~~உனக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்!||
அந்த நினைவுகளோடு கண்ணயர்ந்தவளுக்கு அந்த மோசமான கனவு வந்து இடைநடுவில் தூக்கத்தைக் குழப்பியது.
அப்படியே இருந்தபடி அந்தக் கனவை நினைத்து தனக்குள் நடுங்கிக் கொண்டாள்.
நிர்மலா ஒரு மோட்டார் விசைப்படகில் இருக்கிறாள். மோட்டார் எஞ்சினை வசீகரன் இயக்கிக் கொண்டிருக்கிறான். படகு கண்மண் தெரியாத வேகத்தில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இவளோ ~வேகம் காணாது! இன்னும் வேகமாகப் போங்கள் அண்ணா| என்று அவனை உசுப்பிக் கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்தில் இவர்களுக்கு எதிராக நீல ய10னிபோர்முடன் கடற்படை வீரர்கள் ஒரு ரோந்துப் படகில் வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் படகில் கொழும்பு பாராளுமன்றத்திற்கு முன் உள்ளது போன்ற பிரமாண்டமான பீரங்கி ஒன்று ப10ட்டப்பட்டிருந்தது. அவர்கள் இப்போது அந்தப் பீரங்கியினால் இவர்கள் படகை நோக்கி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தார்கள். இவளோ ~இன்னும் வேகமாக ஓட்டு| என்று திருப்பித் திருப்பி கூறுகிறாள். திடீரென்று பீரங்கிக் குண்டு இவர்கள் படகைத் தாக்கியபோது படகில் தீப்பற்றிக் கொள்கிறது. வசீகரன் இவளிடம் ~பெட்டியில் இருக்கும் நகைகளை எடுத்து கழுத்தில் போட்டால் நெருப்பு அணைந்துவிடும். உடனே செய்!| என்று அவசரப்படுத்துகிறான். இவள் படகில் நகைப் பெட்டியைத் தேடுகிறாள்.
அதைக் காணோம். அதைக் கொண்டுவர மறந்துவிட்டோம் என்று அவனிடம் கூறுவதற்குத் திரும்புகிறாள். வசீகரனைக் காணவில்லை. அவன் கடலில் அல்லது நெருப்பில் விழுந்திருக்கலாம் என்று கலங்கும்போது கடற்படைப் படகில் திடீரென்று சங்கர் தோன்றி இவளை அழைக்கிறான். ~நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்| என்று இவள் கேட்க, சங்கர் ~இது எங்கள் படகுதான். பயப்படாமல் இங்கே தாவி வா!| என்று கூப்பிடுகிறான். சங்கர் கடற்படை ய10னிபோர்முடன் இருக்கிறான். அவன் கையில் கழகப் பத்திரிகையொன்றும் இருக்கிறது. இவள் நெருப்பைத் தாண்டிவர முடியாமல் தடுமாறுகிறாள். அப்போது சங்கர் அந்தப் படகில் இருந்து ஒரே பாய்ச்சலில் தாவி இந்தப் படகிற்கு வருகிறான். பின் இவளையும் தூக்கிக் கொண்டு திரும்பவும் அந்தப் படகிற்குச் செல்கிறான். அங்கு இவளை இறக்கியபின் இவள் கழுத்தை தொட்டுக் கேட்கிறான் ~எங்கே உன் நகைகள்? |
படுக்கையில் இருந்தவாறே கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் இரண்டு பத்து. மனம் ஒரே குழப்பத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது. அந்த மோசமான கனவு நீண்ட நேரமாக அவள் நித்திரையை குழப்பிக் கொண்டிருந்தது. மீண்டும் நித்திரை வருவதற்கு அதிகாலையாயிற்று.
காலையில் படபடவென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். அப்பாவும் அடுத்த அறையிலிருந்து முன் ஹோலுக்கு ஓடிப் போனார். இவள் ஜன்னலால் எட்டிப் பார்த்தாள். நெஞ்சு பகீரென்றது.
வீட்டைச்சுற்றி இராணுவம் நான்கு வாகனங்களில் வந்திறங்கினார்கள். உடனடியாக திமுதிமுவென்று துப்பாக்கி சகிதம் அவர்கள் ஓடி வளைத்தார்கள். வீதிகளிலும் சிலர் ஆங்காங்கே அப்படியே நின்றார்கள்.
கையில் விலங்கிடப்பட்டவாறு சோர்ந்த முகத்தோடு நிற்கும் வசீகரனை இராணுவத் தினர் இருவர் தோள்களை பலமாகப் பற்றிப் பிடித்து வீட்டிற்குள் முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்னால் பத்துப் பதினைந்து இராணுவம் வீட்டு முன்வாசல் வரை வந்து நின்றார்கள்.
அம்மா வாசல்வரை ஓடிவந்து தலையிலடித்துக் கதறினாள்,
~~ஐயோ! என்ர பிள்ளைக்கு ஒண்டும் செய்து போடாதீங்க||
அவள் கதறல் ஒலி அக்கம் பக்கமிருந்த பெண்களின் தாய்மையின் கனிவை அப்படியே பிழிந்து சுரக்கவிட்டது.
அப்பா ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பதறிப்போய் அதிர்ச்சியால் நிலைகுலைந்து நின்றார்.
நிர்மலா எல்லோருக்கும் முன் வேகமாக பாய்ந்து ஓடி வந்தவள், அப்படியே அந்த ஆமிக்காரனின் கண்களில் தெரிந்த அகோரப் பசியை இனங்கண்டு கொண்ட அச்சத்தில், அதே வீச்சில் உள்ளே சென்று நைட் கவுனுக்கு மேலாக ஒரு சாரத்தை இழுத்துச் சுற்றினாள். திரும்பவும் முன்னேவந்து பரிதாபமாக வசீகரனைப் பார்த்து நிலைகுலைந்தவள், கதறி அழும் அம்மாவை பற்றிப் பிடித்துக் கொண்டாள்.
வீட்டையும் வீதியையும் சுற்றிநின்ற இராணுவத்தினர் துப்பாக்கியைத் தூக்கி ஏதோ ஒரு மூலையை குறி பார்த்தபடி நின்றார்கள். வீட்டின் முன்னால் வந்த இராணுவத்தினர் சாவதானமாக நின்றார்கள். வசீகரன் ஒவ்வொரு அடியையும் நிலத்தில் வைக்கும்போது ஏற்படும் வேதனையை முகத்தில் வெளிக்காட்டாத வகையில் கடுமையாக பிரயத்தனப்பட்டான். அவன் கால்கள் நிற்க முடியாமல் சோர்ந்துபோய் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனை பற்றிப் பிடித்திருந்த இருவரும் தம் பிடியை மேலும் பலமாக அழுத்திக் கொண்டிருந்தார்கள்.
முன்னால் வந்த அந்த இராணுவத் தளபதி கொச்சையான தமிழில் கேட்டான்,
~~இது ஒங்களுடைய மகனா? ||
~~ஆம் ஐயா|| அம்மா கைகளைக் கும்பிட்டபடி அழுதுகொண்டு சொன்னாள்.
அப்பா பின்னால் நின்றவர், முன்னால் வந்து சொன்னார்,
~~இவன் எங்களுடைய மகன். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறான். நான் கொழும்பில் அமைச்சர் இராசதுரையின் அமைச்சில் வேலை செய்கிறேன். நாங்கள் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாரும் பயங்கரவாதிகள் இல்லை. நீங்கள் என்னை நம்புங்கள்||
நாக்குளற, தடுமாறி ஒவ்வொரு சொற்களாக மெதுவாக ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்தன. அதற்கிடையில் அங்கு குழுமி நின்ற இராணுவத்தில் ஒரு பகுதி வீட்டினுள்ளே பாய்ந்தார்கள். அப்படி முண்டியடித்துக் கொண்டு போகும் போதே அவர்களில் ஒருவன் குறும்புத்தனமாக நிர்மலாவின் பிட்டத்தில் கையால் மிக அழுத்தமாக உரசிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றான். அவள் அச்சமும் அருவருப்பும் கொண்டு அந்த இடத்தைவிட்டு முன்னேறி அம்மாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்து நின்றாள். கதறி அழும் அம்மாவை அடிக்கடி ஆதரவோடு தேற்றிக் கொண்டாள்.
அப்பா வீட்டினுள்போன இராணுவத்தைப் பின்தொடர்ந்து போனார்.
வசீகரன் எவ்வித சலனத்தையும் முகத்தில் காட்டாமல் அப்படியே தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றான். தன் கவலையையோ சோர்வையோ வெளிக்காட்டி அம்மாவை மேலும் கலவரப்படுத்தக் கூடாதென்ற எச்சரிக்கையில் பேசாமல் இருந்தான்.
இராணுவத் தளபதி இடுப்புக்கு மேலாக வழியும் பலாப்பழத் தொந்தியை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு ஒரு உறுமலோடு கேட்டான்,
~~ஒங்களுடைய மகன் வீட்டிலே தங்கிறதில்லையா||
~~வீட்டில்தான் நிக்கிறவர். சிலநாட்களில் படிக்கிறதுக்கு ப்ரெண்ஸ் வீட்டில நிக்கிறவர்|| அம்மா பதில்பேச முன்னர் நிர்மலா முந்திக் கொண்டு சொன்னாள்.
இரவு ப10ராக கண்விழித்திருந்த அந்தத் தடியனுக்கு நிர்மலாவின் தோற்றம் ஒரு குளிர்மையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அவள் அணிந்திருந்த கையில்லாத, அகன்ற கழுத்துள்ள மெல்லிய நைட்கவுனைத் தாண்டி கண்களில் படுவதெல்லாம் லாபம் என்ற கணிப்பில் ஒரு ஓநாயின் வேட்கையோடு அவளை பார்வையாலேயே பருகிக் கொண்டே கேட்டான்,
~~ஒனக்கு புலியில சேர விறுப்பம் இல்லையா||
சுற்றியிருந்த ஏனைய இராணுவத்தினர் ஒரே குசியில் அந்தப் பகிடிக்கு மெதுவாகச் சிரித்தார்கள். அவள் அந்த அபாயத்தை உணர்ந்த பெண்மையின் எச்சரிக்கையில், அவன் விழிகளை பாராமலேயே ~இல்லை| என்று தலையாட்டினாள்.
~~அப்போ எங்களோட சேர விறுப்பமா|| அவன் இரட்டை அர்த்தம் தொனிக்கும் அந்த காமக் கிண்டல் மற்றவர்களை மேலும் உஷார்ப்படுத்தியது.
மௌனமாக இருந்த வசீகரன் இப்போது தோளைச் சிலிர்த்து, தலையை நிமிர்த்தி அந்த கரும் தடியனை சுட்டெரிப்பது போல முறைத்துப் பார்த்தான். வசீகரனை பற்றிப் பிடித்திருந்த ஒருவன் அவன் முகத்தில் அறையுமாப் போல கையை ஓங்கவும் மற்றவன் பட்டென்று அதைத் தடுத்து சிங்களத்தில் கூறினான், ~~இது வீடு. இப்போது வேண்டாம். முகாமில் கவனிப்போம்||. கையை ஓங்கியவன் ஆறி அடங்கி பற்களை நறுமிக் கொண்டு திரும்பவும் அவனை முரட்டுத்தனமாகப் பற்றிப் பிடித்தான்.
இந்த களேபரத்தைக் கண்டு அம்மா மீண்டும் வீரிட்டு கூச்சலிட்டாள்.
~~ஐயோ ராசா! என்ர பிள்ளையை ஒன்றும் செய்யாதீங்க||
அவள் தொடர்ந்தும் அரற்றிக் கொண்டிருந்தாள்;.
~~ராசா! நீ பொறுமையாய் இரு மகன். உன்னைக் கொன்றுடப் போறாங்க. பத்திரமாய் இரு மகன்||
அம்மாவின் கதறல் ஒலி கேட்டு வெளியே ஓடிவந்த அப்பா எதுவும் பேச முடியாமல் கதிகலங்கி பரிதாபமாக நின்றார். நிர்மலா மாத்திரம் மனதுக்குள் கண்ணீரோடு கூறிக் கலங்கினாள்,
~~அண்ணா! என்மீது தூசு பட்டாலும் நீ தாங்கமாட்டியே. உன்னை நான் நிரந்தரமாக பிரிந்து விடுவேனா||
உள்ளே வீட்டை சோதனையிடச் சென்றவர்கள் அலுமாரிகளைத் திறந்து பீரோவைக் கிண்டி புத்தகங்களை தாறுமாறாக வீசி எறிந்து செய்த ஆர்ப்பாட்டங் களின் பின் எதுவும் கிடைக்காமல் வெளியே வந்தார்கள். அவர்களில் முன்பு அவளை உரசிக் கொண்டு சென்ற அந்தக் கயவன் திரும்பி வரும்போது அப்படியொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காததற்கு வருந்துபவன் போலவும், அதேசமயம் தனது முன்னைய செய்கைக்காக பெருமைப்படுபவன் போலவும் அவளைப் பார்த்து அசிங்கமாகச் சிரித்துக் கொண்டு நின்றான்.
ஒரு மணி நேர அட்டகாசத்தின் பின் அவர்கள் வசீகரனைக் கொண்டுபோய் ஐPப்பில் ஏற்றிய பின்பு எல்லோரும் அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். முன்னால் றோசா மினிபஸ், அதன் பின்பு இரண்டு சலாதீன் கவசவாகனங்கள், இறுதியில் அந்த ஜீப் என வரிசையாகப் புறப்பட்டுச் சென்றன.
அம்மாவோ இன்னமும் தன் அழுகையை நிறுத்தாமல் கதறிக் கொண்டிருந்தாள். அப்பாவை அடிக்கடி அரற்றினாள்.
~~கொழும்புக்கு ட்ரங்கோல்; எடுங்கோ... மினிஸ்ட்டர்ர விசயத்தைச் சொல்லுங்கோ... என்ர பிள்ளையை விட்டுட்டு என்னால இருக்க முடியாது.||
ஆமி போனபின்பு அக்கம் பக்கம் இருந்து ஆட்கள் கும்பலாகக் கூடினார்கள். அந்தப் பெண்கள் துடித்துப் பதைத்து வந்து அம்மாவிற்கு ஆறுதல் சொல்லி அவள் அழுகையை நிறுத்தியது நிர்மலாவிற்கு பெரும் நிம்மதியாக இருந்தது.
அன்று யாரும் சாப்பிடவில்லை.
மதியத்திற்குப் பின்பு தாறுமாறாகக் கிடந்த பொருட்களை அடுக்கி வைத்தபோது அவள் அம்மாவின் மணிபர்சில் இருந்த கடிதத்தை மறக்காமல் எடுத்துக் கிழித்தெறிந்தாள்.
அப்பாவின் பேர்சில் இருந்து ஆயிரத்து நானூறு ரூபாயும், சீக்கோ கடிகாரம் ஒன்றும் வீட்டைச் சோதனையிட்ட ஆமிக்காரரால் திருடப்பட்டிருந்ததைக் கண்டு கொண்டாள்.
பிற்பகல் நாதன் அங்கு வந்தான்.
காலையிலேயே அவனுக்கு செய்தி தெரிந்திருந்தது.
அவனைக் கண்டதும் சிறு குழந்தை போல நிர்மலா தேம்பித் தேம்பி அழுதாள். அம்மாவும் அப்பாவும் அவனிடம் வந்து நடந்தவைகளை ஒன்றும் விடாமல் ஒப்புவித்துக் கொண்டார்கள்.
வசீகரனைப் பற்றியே திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.
நாதன் அவர்கள் அங்கலாய்ப்பை வளர்த்து விடாமல் நிதானமாகப் பதில் சொன்னான்,
~~வசீகரனை நேற்று இரவுதான் குருநகரில் வைச்சுப் பிடிச்சவங்கள்... இப்போ தெல்லாம் ஆமி பிடிச்சிட்டு போறவையின்ர விபரத்தை ரெண்டு நாளைக்குள்ள ஆமி ஜீ.ஏ க்கு அறிவிக்கும். அதுவரை ஆமி விசாரிக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு ஜீ.ஏட்ட போனால்தான் அவர் எந்த முகாமில் இருக்கிறார் என்ற விபரத்தைச் சொல்வார்கள். எதுக்கும் நாளை திங்கட்கிழமை கச்சேரியில் விசாரிச்சுப் பாருங்கள்.
நான் அறிஞ்ச மட்டில் வசீகரனை சந்தேகத்திலதான் பிடிச்சிருக்கிறாங்க. ஒரு ஆதாரமும் பிடிபடவில்லை. நீங்க பயப்பிடாதைங்க. சிலவேளை ஆமிக்கு காசை கட்டிட்டு எடுத்திடலாம்.||
அவர்கள் வேதனை தணிந்து ஒருவாறு ஆறி வந்தார்கள். நம்பிக்கை சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது. அவனை போகவிட மனமில்லாமல் அவனையே சுற்றிச்சுற்றி நின்றார்கள். அவர்கள் அங்கலாய்ப்பு அவனுக்கு பரிதாபமாக இருந்தது.
இறுதியில் அவன் அங்கிருந்து புறப்பட்டபோது அவர்கள் அடிக்கடி, முடிந்தால் நாளையும் வந்து போகும்படி பெரும் ஆதங்கத்தோடு கேட்டார்கள். வாசல்வரை வழியனுப்ப வந்த நிர்மலா இவனுக்கு மட்டும் இரகசியமாகக் கூறினாள்,
~~நாதன்! நான் ரெண்டு நாட்களுக்குப் பிறகு உன்னை வந்து பார்க்கிறேன். சங்கர் வீட்டிலயும் நடந்ததைச் சொல்லி விடு||
நாதன் சங்கரின் வீட்டிற்கு மெதுவாகச் சென்று கொண்டிருந்தான். இந்த விசயத்தை சங்கருக்கும் எழுதி அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தான். நீண்ட நாட்களாக அவன் கடிதத்திற்கு பதில் எழுதாமல் விட்டதும் மனதைச் சுட்டது.
பிற்பகல் பிரகாசத்தின் கருத்தரங்கிற்குப் போகவேண்டும்.
கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாசம் ஒரு வாரத்திற்கு முன்புதான் தமிழகத்திலிருந்து வந்திருந்தார். அவருடன் அப்படி மோசமாக முரண்பட்டிருக்க வேண்டாம் என்ற வருத்தம் இப்போது அவனுக்கு ஏற்பட்டது.
இதுபற்றியும் சங்கருக்கு எழுத வேண்டும்.
அவன் அப்படி ஆத்திரமாகப் பேசியதற்காக கோபாலனும் அவனைக் கண்டித்தார்.
கழகத்தின் வளர்ச்சியை மதிப்பிட தமிழகத்திலிருந்து வந்த படைத்துறைச் செயலர் பிரகாசம் பல கருத்தரங்குகளை நடத்தியதோடு சில விசாரணைகளையும் அவசர அவசரமாக மேற்கொண்டார். கழகக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுடன் மிக நட்பாக இருந்த அவர், கடுமையாக வேலை செய்தவர்களை மாத்திரம் கேள்விமேல் கேள்வி கேட்பது ஒரு இனம்புரியாத வெறுப்பையே ஏற்படுத்தியது. பிரகாசம் மிக அமைதியாக அந்தக் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
~~நீங்கள் ஏன் ... இயக்கத்திற்கு அந்த உதவிகளைச் செய்ய முடிவு எடுத்தீர்கள்||
~~உங்களுக்கும் ... இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதென்று கருதப்படுகிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்||
~~... இயக்கத்திற்கு உதவும்படி கோபாலன் உங்களுக்கு உற்சாகப் படுத்தியதாக சிலர் நம்புகிறார்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்||
என்றெல்லாம் ஆங்கிலப் பாணியில் மிக நாகாPகமாக அந்தக் கொச்சையான கேள்விகளை மெருகூட்டிக் கொண்டிருந்தார் பிரகாசம்.
அந்தக் கேள்விகள் திரும்பத் திரும்ப அவன் இதயத்தை நோண்டி வழிந்தோடும் ரணத்தை வேடிக்கை பார்க்கும் குரோத உணர்வை சகிக்க மாட்டாமல் அவன் ஆத்திர மேலீட்டில் பலமாகவே சத்தம்போட்டு கத்தினான்.
~~நான் ஏன் அப்படிச் செய்தேனா! கழகத்தின் கொள்கை இலட்சியத்தை சரிவர புரிந்து கொண்டபடியால்தான் அப்படிச் செய்தேன். விடுதலைப் போராட்ட உணர்வு இருக்கிறபடியால்தான் அப்படிச் செய்தேன். சிறீலங்கா அரசே எமது எதிரி என்று நினைப்பதனால் செய்தேன்|| என்று நீட்டி முழங்கினான்.
~~பிரகாசம் அத்தோடு அவன்மீது கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொண்டு கோபாலன் பக்கம் திரும்பினார்.
~~கோபாலன்! நீங்கள் எமது செயலதிபர் ஒரு மார்க்சியவாதி இல்லை என்றும் அவர் ஒரு தேசியவாதிதான் என்றும் கூறியதாகக் கருதப்படுகிறது|| என்று கூறி முடிக்க முன்னரே, கோபாலன் தலையாட்டி ~~இல்லை! நான் அப்படி யாரிடமும் சொல்லவில்லை|| என்று ஒரு வார்த்தையில் மறுத்தார்.
பிரகாசம் எல்லாவற்றையும் தன் நோட் புத்தகத்தில் பத்திரமாக பதிந்து கொண்டார். பின் அவர்களை பார்த்துக் கூறினார்,
~~எங்களுக்கு இந்தத் தகவல்களை தந்தவர் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த கல்விமான். அவர் தகவல்கள் பொய்யாக இராது என்பதனால்தான் நான் இவ்வளவு ஆழமாக விசாரித்தேன். இதனால் உங்கள் யாருக்காவது மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்|| என்று கூறியபோது இந்த அபாண்டமான தகவல்களைக் கொடுத்து கழகத்தை குட்டிச்சுவராக்க நினைக்கும் அந்தக் கண்ணியமான கல்விமானை யாரென்று இனங்கண்டு மனதிற்குள் பொருமினான் நாதன்.
ஆனால் கோபாலன் இதுபற்றியெல்லாம் கிஞ்சிதமும் சலனமில்லாமல் நாதனை தனியாகக் கூப்பிட்டு கண்டித்தார்.
~~பொது வேலை என்று வந்தபின்பு இப்படி உன் உணர்ச்சிகளுக்கு பெரிதாக இடம் கொடுக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையும் இல்லாத நீங்கள் எல்லாம் இவ்வளவு நாளும் கழகத்தில் வேலை செய்த இலட்சணம் இதுதானா|| என்று முகத்திற்கு நேராகக் கேட்டார். அவர் கண்டிப்பின் பேரில் பிரகாசத்திடம் போய் மன்னிப்புக் கேட்போம் என்றுகூட ஒரு கணம் யோசித்து திரும்பினாலும், அங்கே அவர் ஆர்ப்பாட்டமாக லெபனானில் பெற்ற பயிற்சி பற்றியும், டமாஸ்கஸ் ஸில் நடந்த பகிடிகளையும் ஆரவாரமாக கூறிக் கொண்டிருக்கும் சூழலை குழப்பாமல் அப்படியே விட்டுவிட்டான்.
இவன் போகும்போது அப்பா வீட்டிலேயே இருந்தார்.
நாதன் நிர்மலா வீட்டில் அவன் அண்ணன் கைது செய்யப்பட்ட செய்தியை விரிவாகக் கூறினான். அவர் அதற்காக கவலைப்பட்டு தன் வருத்தத்தை முகத்தில் தெரிவித்தார்.
நாதன் புறப்படப் போனபோது அவர் மறித்துக் கேட்டார்,
~~நாதன் உனக்கு அவசர வேலையில்லாட்டி சிறிது நேரம் பேசலாம்||
அவன் எழுந்த வேகத்தில் அப்படியே இருந்தான்.
அவர் தன் தடித்த உடம்பில் வழிந்தோடும் வியர்வையை துடைத்து விட்டுக் கொண்டு கேட்டார்,
~~நாதன்! உங்களுடைய கழக இரகசியங்களை நான் அறிய முனைவதாக நீ தவறாக நினைக்கக் கூடாது. சங்கரும் உங்கள் கழகத்தில் இருக்கிறான் என்ற படியால் நானும் சில விசயங்களை அறியலாம்தானே|| என்ற பீடிகையோடு ஆரம்பித்து சொன்னார்,
~~உங்கள் கழகத்திற்குள் ஏதும் முரண்பாடு உண்டா! வெளியில் பலமாக கதை அடிபடுகிறது. உங்கள் செயலதிபருக்கும் அரசியல் துறைச் செயலாள ருக்கும் இடையில் முரண்பாடாம், உண்மையா||
அவன் ஒரேயடியாக கூறினான்,
~~நானும் இதுமாதிரி வதந்திகளைக் கேட்டிருக்கிறேன். அவை எல்லாம் வெறும் வதந்திகள்தான்.||
~~நான் ஏன் கூறுகின்றேன் என்றால் தாபனங்களின் ஆரம்பகால வளர்ச்சியில் காணப்படாத மோதல்கள் தாபனத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியின் போது பல தாபனங்களில் வந்துபோன அனுபவத்தினால் கூறுகின்றேன். தமது பதவியை அந்தஸ்தை காக்கவேண்டும் என்ற பேராசையில் அவர்கள் கீழ்த்தரமான வகையில் மோதலை ஏற்படத்தி கட்சியை சீரழித்து விடுவார்கள். தமக்கென்று சில குழுக்களை உருவாக்கிக் கொண்டு, அவர்கள் நடத்தும் போராட்டம் எல்லாமே கேவலமானது.||
சிறிது நேர அமைதியின் பின் நாதன் கேட்டான்,
~~இம் மாதிரி மோதல்கள் எல்லா இயக்கங்களிலும் வரும் என்கிறீர்களா||
அந்தக் கேள்வியை ஏதோ காரணமாகத்தான் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு அப்பா கால்களை மடக்கி கதிரைக்குள் போட்டுக் கொண்டு கூறினார்,
~~தாபனம் ஒழுங்காக வடிவமைக்கப்படாத பட்சத்தில் இம் மாதிரி கோஷ்டி மோதல்கள் எல்லா அமைப்பிலுமே ஏற்படலாம். உங்கள் தாபனம் எந்தளவிற்கு ஒழுங்காக வடிவமைக்கப் பட்டிருக்கிறதோ தெரியாது. ஆனால் மோசமான தலைமை வழிபாடு இருப்பதால்தான் பயப்படுறன். இந்த கோஷ்டி மோதல்களைத் தடுப்பதற்கு மிக அவசியமான ஒரு வழி தலைமை வழிபாட்டைத் தகர்ப்பதுதான். கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் படிப்படியாக தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருப்பது இந்தத் தலைமை வழிபாடுதான். தலைமை வழிபாட்டின் ஆதாரமே அறியாமையும், தன்னம்பிக்கை யின்மையும்தான். தனி மனிதர்களால் வரலாறு உருவாக்கப் படுவதில்லை என்று மார்க்சியம் கற்பிப்பதை மறந்தவர்கள்தான், அவர்களின் இந்த அறியாமைதான், தாமே ஒரு காரியத்தைச் செய்து முடிக்க மாட்டோம் என்ற தன்னம்பிக்கை இல்லாத வர்கள்தான், இந்தத் தலைமை வழிபாட்டிற்கு உடந்தையாகிறார்கள்.
இந்த தலைமை வழிபாட்டை மிகச் சாதுரியமாக அவர்கள் நியாயப்படுத்துவார்கள். தாம் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்றும், தாபனக் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றுகிறவர்கள் என்றும் காட்டிக்கொண்டே தலைமை வழிபாட்டை தாபனத்திற்குள் ஏற்படுத்துவார்கள்.
தலைமைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முதல் ஒருவர் கொள்கைக்கு விசுவாச மாக இருக்க வேண்டும். அப்படி கொள்கைக்கு விசுவாசமாக இருப்பவர்களாலேயே தாபனத்திற்கு விசுவாசமாக இருக்க முடியும். கொள்கைக்கும், தாபனத்திற்கும் விசுவாசமாக இருப்பவர்களே தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியும். அப்படியில்லாமல் சும்மா தலைமைக்கு மாத்திரம் விசுவாசமாக இருக்கிறோம் என்றால் அது தலைமை வழிபாடுதான்.
இத்தகைய சக்திகள்தான் தமது சுயநலத்திற்காக பெரும் மோதல்களை தாபனத் திற்குள் ஏற்படுத்தி ஒன்றில் தாபனத்தை சீர்குலைப்பார்கள் அல்லது இரண்டாக்கு வார்கள். இதற்காகத்தான் தாபனத்திலுள்ளோரின் கொள்கைப் பற்றை அடிக்கடி நாடி பிடித்துப் பார்த்து அதை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்|| என்று நீண்ட பிரசங்கம் செய்துவிட்டு தோளில் இருந்த துண்டால் முகத்தைத் துடைத்து விட்டார் அவர்.
நாதன் சோர்வுடன் தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு இனம்புரியாத வேதனை நெஞ்சை கார்மேகம் போல அடைத்துக் கொண்டது.
கழகத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல், தன்னிச்சைப் போக்கில் அடாத்து வேலைகளை செய்வோரைப் பற்றி முறைப்பாடுகள் செய்தும் அதற்கு மேல் மட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல்போனதும், அவர்கள் செயலதிபரை நெருங்கிய உறவினன் போல உரிமை கலந்த பாசப் பிணைப்பில் ~பெரியய்யா|, ~பெரியவர்| என்று குழைந்து கொண்டு அழைப்பதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்தான்.
நீண்டதொரு பெருமூச்சோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
மாலையில் பிரகாசத்தின் கருத்தரங்கிற்குச் சென்றான். கீதாவும் வந்திருந்தாள்.
தாபனத்தின் கடந்தகால வரலாறு பற்றி விரிவாக விளக்கினார். கழகம் ஆரம்பமாகு முன், முக்கிய தலைவர்கள் முன்பு எந்த இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தார்களோ அந்த அமைப்பின் சுத்த இராணுவக் கண்ணோட்ட நடவடிக்கைகளை ஒரு மர்ம நாவல் போல அவர்கள் செய்த கொலை, குத்து வெட்டுக்களை விபரித்துக் கூறினார். இந்த விபரங்கள் எல்லாம் அந்த இயக்கம் பற்றி ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்காதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நாதன் கேள்வி நேரத்தின்போது யாரும் எதிர்பாராமல் வந்த அந்தக் கேள்வியால் எல்லோரையும்போல துணுக்குற்று விழித்தான்.
வழமையாக கமிட்டிக் கூட்டத்தில் தாபனத்தின் ஒழுங்கு விதிகள் பற்றி கரிசனை எடுக்கும் அதே தோழர்தான் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்தக் கேள்வியை பிரகாசத்திடம் நேரடியாகக் கேட்டார்,
~~தோழர்! இந்தக் கருத்தரங்கு நடக்கும்போதே உங்கள் மெய்க்காப்பாளர் பகிரங்க மாக சிகரட் புகைத்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் இங்கு வந்தபின் பகிரங்கமாக சிகரட் புகைப்பதை பலர் பார்த்திருக்கின்றார்கள்.
நீங்கள் இப்படி செய்வதைப் பார்த்தபின் எமது தோழர்கள் பலர் இப்போது பகிரங்கமாக புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். எமது கண்டிப்பால் ஏற்கனவே புகைப்பதை நிறுத்தியவர்கள் கூட இப்போது மீண்டும் புகைக்க ஆரம்பித்திருக் கிறார்கள். இதெல்லாம் இங்கு எங்களுக்கு எவ்வளவு மோசமான சிக்கலை ஏற்படுத்தும் தெரியுமா? நாம் மக்களின் பணத்திலேயே வாழ்பவர்கள். அவர்கள் பணத்தை நாம் இப்படி வீண்செலவு செய்வது பெரிய அநீதி. இதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்தால் எம்மையும் எமது தாபனத்தையும் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள். ஆகையால் தயவுசெய்து புகைப்பதை நிறுத்துங்கள். அது முடியாவிட்டால் குறைந்தபட்சம் பகிரங்கமாக புகைப்பதையாவது நிறுத் துங்கள்||
பிரகாசம் உண்மையில் வெலவெலத்துப் போனார். அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த உணர்வுகளை நாசூக்காக மறைத்துக்கொண்டு அந்தத் தோழரின் தாபனப் பற்றுதலை பாராட்டுவதாகவும் அவன் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும் கூறி சமாளித்தார்.
கருத்தரங்கின் இறுதியில் அவர் மெய்ப்பாதுகாவலன் வைத்திருந்த கலாஸ்னிக் கோவைக் கழற்றி, இயக்கிக் காண்பித்து அவர்களை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலில் அனுப்பி வைக்கும்போது, றோனியோ பண்ணப்பட்ட கடிதம் ஒன்றை எல்லோருக்கும் விநியோகித்தார்.
அதில்!
செயலதிபர் மார்க்சியவாதி இல்லை என்றும் அவர் ஒரு தேசியவாதியே என்றும் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் செயலதிபர் புத்தகங்கள் வாயிலாக மார்க்சியத்தை அறியாவிட்டாலும் நடைமுறைகளுக்கூடாக மார்க்சியத்தை அறிந்திருப்பதால் அவர் ஒரு மார்க்சியவாதியேதான் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
அந்தக் கொச்சையான அறிக்கையைப் படித்ததும் நாதனுக்கு பெரும் வெட்கமாக வும் அவமானமாகவும் இருந்தது. செயலதிபர் மார்க்சியவாதி இல்லையே என்று இங்கு யார் கவலைப்பட்டார்கள். ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக அவர் ஒரு மார்க்சியவாதிதான் என்று இவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று குழம்பிக் கொண்டு கருத்தரங்கிலிருந்து வெளியேறினான்.
போகும்வழியில் கீதா வந்து சந்தித்தாள். முகம் சோர்வுற்று வாட்டமாக இருந்தாள். அவளே நேரடியாக அதற்குக் காரணம் சொன்னாள்.
பிரகாசம் அவளையும் கூப்பிட்டு கழகத்திற்கு ஏதிரானவர் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினார் என்பதை வேதனையோடு கூறும்போது கண்ணீர் வந்துவிடும் போல கலங்கினாள்.
நாதன் கோபாலன் கூறிய அதே புத்திமதிகளையே அவளுக்குக் கூறினான்.
~~கீதா நாம் நல்லதைச் செய்தாலும், கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதையும் கண்டிக்க ஆட்கள் இருப்பார்கள். அதெற்கெல்லாம் நாம் அஞ்சக்கூடாது. தொடர்ந்தும் நாம் கழகத்திற்கு உள்ளும் வெளியும் போராடவேண்டும்|| என்றபோது அவள் சமாதானமடைந்தாளோ என்னவோ தன் அகன்ற விழிகளால் நிலத்தைப் பார்த்துக் கொண்டு தன்பாட்டிற்கே சொன்னாள்,
~~பெண்கள் பற்றி எப்பவும் சந்தேகம்தான் எங்கும் நிலவுகின்றது. அது சமூகத்தில் மாத்திரமல்ல கழகத்திலும் கூடத்தான். கழகம் ஆணாதிக்கம் நிறைந்ததாக இருப்பதால் பெண்கள்மீது மிகச் சுலபமாக பழியைப் போட்டு விசாரிக்க வந்து விடுவார்கள்||
நாதன் ஆச்சரியத்தால் வாயை சிறிது திறந்தபடி தலையைத் திருப்பி அவள் சுருண்ட கேசத்தை அப்படியே பார்த்துக் கொண்டு சொன்னான்,
~~கீதா! இந்த விசாரணை உங்களுக்கு மாத்திரம் இல்லை. அது பொதுவானது. நான்கூட விசாரிக்கப்பட்டேன். தோழர் கோபாலனும்தான். கழகம் ஆணாதிக்கம் நிறைந்ததென்று சொல்கிறீர்களே. நான் அப்படி நினைக்கவில்லை. ஆண்கள் கூடுதலாக கழகத்தில் அங்கம் வகித்தாலும் நாம் பெண்விடுதலையையும் எங்கள் போராட்டத்தில் முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கிறோம். கழகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே பெண்விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்கள் நாமே. தமிழ்ப் பகுதியில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெண் விடுதலை அமைப்பு எங்களுடையதே. இன்றும் நாம் கழகத்தின் மகளிர் அமைப்புகளுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுத்து அதை வளர்த்து வருகிறோம். அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படிச் சொல்வீர்கள் கழகம் ஆணாதிக்கம் நிறைந்ததென்று||
அவள் முகத்தில் இப்போது புதுச் சிரிப்பொன்று பிறந்தது. பேச்சு வேறு திசையில் போவதை கண்டுகொண்டு அதற்கேற்ப அவளும் உற்சாகமாக கலந்து கொண்டாள்.
~~கழகம் ஆணாதிக்கம் குறைந்ததென்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் இல்லாததென்று சொல்ல வேண்டாம். நீங்கள் எல்லோருமே பெண்விடுதலையைக் கூட ஆணாதிக்கத்திற்கூடாகத் தான் பார்க்கிறீர்கள்|| என்றவள் சற்று நிறுத்தி விளக்கமாக ~~நான் உங்களை மாத்திரம் தனிப்பட குறிப்பிட்டு குற்றம் சாட்ட வில்லை. எல்லா ஆண்களையுமே பொதுவாகக் குறிப்பிடுகிறேன். அவர்கள் இன்னமும் பெண்களை தமக்குச் சமமாக மதிக்கவோ, பெண்களின் திறமையை வளர்த்துப் போற்ற வேண்டும் என்றோ கருதுவதில்லை. அந்தளவிற்கு இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை. கழகத்தின் பெரும்பாலான பெண்கள் அப்படித்தான் நினைக்கிறோம். கழகத்தில் மகளிர் அமைப்பு ஒன்று இருப்பதே ஒரு கௌரவமாக பெருமையாக இருக்கவேண்டும் என்பதுபோல் கருதப்படுகின்றதேயல்லாமல் அது பெண்விடுதலைக்காகவே இருக்கிறது என்ற மனோபாவம் இன்னும் பல ஆண் களுக்கு ஏற்படவில்லை||
அவன் சிந்தனையோடு அவள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான். பைசிக்கிள் பெல்மூடியை கழற்றுவதும் ப10ட்டுவதுமாக இருந்தாலும் கவனமெல்லாம் அவள் பேச்சிலேயே இருந்தது.
~~சில கூட்டங்களுக்கு எம்மை அழைக்கின்றார்கள். நாம் ஒரு பேருக்கு அதில் கலந்துகொண்டால் போதும் என்ற மனோபாவத்திலேயே அழைக்கின்றார்கள். நாம் எமது கருத்துக்களை அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. அதேசமயம் சில இரகசியங்களை பெண்களுக்கு எட்டாமல் இருக்கவேண்டும் என்பதில் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு இரகசியங்களைக் கூறினால் அவர்கள் பட்டென்று அதனை பகிரங்கப்படுத்திவிடுவார்கள் என்ற பரம்பரை மூடக் கருத்துகளிலிருந்து இன்னமும் விடுதலை பெறவில்லை. அவர்களுக்கு பெண்கள் இரகசியங்களைக் காப்பார்கள் என்பதில் நம்பிக்கை பிறக்கவில்லை.
ஆனால் அதே ஆண்கள் மறைத்துக் காப்பாற்றும் இரகசியங்கள் எல்லாம் எப்படியும் எங்களுக்கு வந்துசேருகின்றன. அப்பொழுதுதான் எங்களுக்குப் புரிகிறது, ஆண்களைக் காட்டிலும் பெண்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியும் என்று|| சிரித்துக் கொண்டு கூறினாள் கீதா.
நாதனால் அதை மறுத்துப் பேச முடியவில்லை.
~~பெண்கள் விடுதலைப் போராட்டத்திற்கு வந்த பின்பு மற்றப் பெண்களை விட நாம் சுதந்திரமாக இருப்பதை உணர்கிறோம். நாமே சுதந்திரமாக சிந்தித்து எமக்கென்று முடிவுகள் எடுத்து சுதந்திரமாக செயற்பட வாய்ப்பு கிடைக்கின்றது. பெண்களின் பிரச்சினையை தமிழீழ விடுதலையால் தீர்த்துவிட முடியாது. அதற்கப்பால் ஒரு சோசலிச விடுதலையுடன்தான் அது தீரும் என்பதால், இந்த தமிழீழ விடுதலையைக் காட்டிலும் அதனூடாக பெறவிருக்கும் சோசலிச மாற்றத் திலேயே நாம் கவனமாக இருக்கிறோம்|| என்று நடைபெற்ற அந்தக் கருத்தரங்கம் குறித்து அதிக ஆர்வம் காட்டாதவள் போல கூறினாள்.
சங்கரின் அப்பா ஒருநாள் இவர்கள் பெண்விடுதலை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்க்டு கூறியதை நாதன் ஒருகணம் நினைத்துப் பார்த்தான்.
~~ஒருவன் மார்க்சிய உணர்வு பெற்றவன் என்பதை நாம் இந்த சமூக அமைப்பிலே எப்படி அடையாளம் காணமுடியும் தெரியுமா? அவன் எவ்வளவு மார்க்சிய புத்தகங்களை கரைத்துக் குடித்து தத்துவ விளக்கம் கொடுக்கிறான் என்பதைப் பொறுத்தோ, அல்லது எவ்வளவு மூர்க்கமாக கோஷம்போட்டு முதலாளித்துவத் திற்கு எதிராக ஊர்வலம் போகிறான் என்பதைக் கொண்டோ அல்லது உங்களைப் போல உயிருக்கு அஞ்சாமல் ஆயுதம் ஏந்திப் போராடுகிறான் என்பதனால் மாத்திரமோ அந்த உணர்வுப10ர்வமான அர்ப்பணிப்பை எடைபோட முடியாது.
பெண்கள் விடயத்தில் அவர்கள் சுதந்திர உணர்வுகளை எந்த அளவிற்கு மதிக்கிறான், அவர்கள் அடிமைத்தனத்தை விமோசனம் அடையச்செய்ய எந்தள விற்கு அக்கறையெடுக்கிறான் என்பதையும் பொறுத்தே அவன் மார்க்சியத்தில் கொண்ட ஆழமான பற்றுதலையும், விசுவாசத்தையும் கூறமுடியும்.
எங்கள் கட்சியில் மேடையில் இருந்து பெண்ணடிமைத்தனத்திற்கும், ஏகாதிபத்தியத் திற்கும் எதிராக போர்க்குரல் எழுப்பிய பலரை நான் அறிவேன். ஆனால் அப்படிப்பட்டவர்கள் தம் மனைவியை எவ்வளவு தூரம் நையப் புடைத்தார்கள் என்பதையும் அவளிடம் மாத்திரமே இவர்கள் கற்பை எதிர்பார்த்துக்கொண்டு இவர்கள் மட்டும் அவளுக்கு விசுவாசமில்லாமல் திரிந்ததெல்லாம் எனக்குத் தெரியும்.||
கீதா தன் பாதை வந்ததும் இவனிடம் விடைபெற்றுச் சென்றாள். மாதா கோவிலில் அமெரிக்கப் பாதிரிகள் தனியாக நிலத்தைப் பார்த்து நடந்து கொண்டு ஜெபம் பண்ணுவதைப் போல அவள் ஒரு ஆறுதலான கம்பீரமான நடையுடன் மெதுவாகச் சென்று கொண்டிருந்தாள்.
அவள் எழுப்பிவிட்ட பல கேள்விகளால் குழம்பி கலவரப்பட்ட நாதன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ~எங்கள் பெண் சமுதாயம் இவ்வளவு ஆழமாகச் சிந்திக்கின்றதே| என்ற ஆறுதல் உணர்வே இறுதியில் அவள் போன பின்பு அவனில் நிரந்தரமாகப் படிந்தது.
மறுநாள்!
செய்தி கேட்டு நாதன் அவசரமாகக் கரைக்கு ஓடினான்.
சேரன் வருத்தத்தோடு ஒரு கல்லில் குந்தியிருந்தான். இவனைக் கண்டதும் சோகமான ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டான். அவன் முகம் சோர்ந்து களைத்துப் போயிருந்தது.
முதல்நாள் கரையில் நின்ற படகை கடற்படை பறித்துச் சென்றதை சோகமாகச் சொல்லி தனக்குள்ளேயே வருந்திக்கொண்டு எழுந்தான்.
கரையில் தொழிலுக்குப் போகும் படகுகளோடு நின்ற இயக்கங்களின் படகுகள் ஆறை ஏற்றிச் சென்றபோது கழகத்தின் அந்தப் படகும் பறிபோய்விட்டதை தாங்கமுடியாத வருத்தத்தில் கூறிக்கொண்டிருந்தான்.
சிறு குழந்தையொன்று தனக்குப் பிரியமான நாய்க்குட்டி இறந்துவிட்டதற்கு கவலைப்படுவது போன்ற அவன் துயரத்தைப் புரிந்துகொள்ள ஆள் இல்லாமல் அவன் தவித்திருப்பதைப் புரிந்துகொண்டு நாதன் அவனுக்கு ஆறுதலாக அவன் சோகத்தோடு இணைந்து கலந்தான்.
~~அந்த நீலநிறப் படகு எவ்வளவு நேர்த்தியும் அதிஷ்டமானதும் தெரியுமா. எனக்கு அதில் ஏறினால் தாய் பிள்ளையைத் தூக்கின மாதிரித்தான். ஒரு கவலையும், பயமும் இராது. எல்லாம் மண்ணாகப் போச்சுது|| என்று வருந்திக் கூறியவன், ஒருகணம் மௌனமாக இருந்துவிட்டு ~~எங்கட இராணுவம் சும்மா ஊரெல்லாம் சண்டித்தனம் பண்ணித் திரியிறாங்கள். அதை விட்டுட்டு இந்த வண்டி இருக்கிற இடத்தில் கொஞ்சம் கண்காணிப்பா இருந்திருந்தா அதை எப்படியும் காப்பாத்தியிருக்கலாம். அவங்களுக்கு இதிலெல்லாம் எங்க அக்கறை இருக்கப்போகுது|| என்று சலித்துக் கொண்டவன் கைகளை நாதன் பரிவோடு பற்றிக் கொண்டான்.
கடற் பயணம் சில நாட்களுக்கு தடைப்படும் என்ற செய்தியைச் சொல்ல இருவரும் கோபாலனிடம் சென்றார்கள்.

----------------------------------------------------------------

15

செயலதிபர் இன்னும் வரவில்லை.
கலாதரன் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
சில விடயங்களை உடனுக்குடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற ஆக்ரோசத் தில் அவர் சிறிது கொதிப்போடு இருந்தார்.
கலாதரன் வழமையாக கழகத்தில் தலையெடுக்கும் நடைமுறைச் சிக்கல்களை நேருக்கு நேர் முகம்கொடுத்து விடுவார். முடியாமல் போனால்கூட ஏதோ தோற்றுப் போய்விட்டவர் போல அப்போதைக்குப் போசாமல் இருந்து விடுவார். மத்திய குழுக் கூட்டத்தில் மாத்திரமே அத்தகைய பிரச்சினைகளை அணுஅணுவாக ஆராய்ந்து காரசாரமாக அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டித்து விமர்சிப்பார்.
மிக அவசியம் என்று கருதினால் மாத்திரமே இம் மாதிரி உடனுக்குடன் செயலதிபரை சந்தித்துப் பேசி பிரச்சினைகளை தீர்த்துவைக்கப் பார்ப்பார்.
நேற்று மாலைதான் அந்த அதிர்ச்சித் தகவல் அவருக்குக் கிடைத்தது. பிரான்ஸ் கிளையில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்புதான் சிவபாதம் வந்திருந்தான். அவன் வரும் போதே வழமைபோல கைநிறைய சாமான்களை அள்ளிக் கொண்டு வந்தான். தமிழகத்தில் இருப்போர் சிலருக்கு அவன் வந்தால் போதும், பெரும் கொண்டாட்டம்தான். காமதேனு போல அவர்கள் கேட்பதையெல்லாம் சிவபாதம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருப்பான். கொட்றோய், டெனிம், hPசேட் எல்லாம் அதன்பின் மிக ஆடம்பரமாக கழகத்தவர்கள் சிலரை அலங்கரித்துக் கொண் டிருக்கும்.
சிறீலங்கா இராணுவத்திற்கு அஞ்சி தமிழகத்தில் கழகத்தின் தயவில் பாதுகாப்பாக வாழும் சில கழகத்தவர் குடும்பங்கள் எல்லாம் இதுவரை கட்டிக் காத்துவந்த கட்டுப்பாட்டுடனான சிக்கன வாழ்க்கையை உதறி எறிந்துவிட்டு கேளிக்கைப் பிரியர்களாக மாறிவிடுவார்கள். எல்லோருக்கும் தேவையான நிதி உதவிகளை சிவபாதம் அள்ளிக் கொடுப்பான். அவன் திரும்பிப் போகும் வரை கழகத்தவர் சிலர் புரட்சிகர விடுதலை உணர்வுகளை தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விடுவார்கள். தமிழீழத்தில் மக்கள் படும் துயர வாழ்வோ, தாம் ஏன் இந்த புரட்சிகர தாபனத்தில் சேர்ந்து பணிபுரிகிறோம் என்பதோ எல்லாம் அவர்களுக்கு மறந்து போய்விடும்.
இதுபற்றி ஏற்கனவே சில தோழர்கள் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டினார்கள். சிவபாதம் போன்று வெளிநாட்டுக் கிளைகளில் வேலை செய்வோர் தமிழகத்திற்கு வந்து இவ்வாறு தாறுமாறாக ஊதாரிச் செலவீனங்கள் செய்ய முடியுமா என்றும், தமிழகத்தில் இருக்கும் கழகத்தவர் குடும்பங்களுக்கு கழகம் நிதி வழங்கும்போது இவர்கள் அதைவிட வேறு வகைகளிலும் நிதி உதவி பெறுவது அவசியம்தானா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
செயலதிபர் இதுபற்றிக் கூறுகையில் வெளிநாட்டுக் கிளைகளில் இருப்பவர்கள் கழகத்திற்கு சேகரிக்கும் நிதியை நேரடியாகத் தமக்கு அனுப்புவதாயும் அதற்கு ஒழுங்கான கணக்கு இருப்பதாகவும், அதேவேளை வெளிநாட்டுக் கிளைகளில் உள்ள சிலர் தாம் வேலைசெய்து பெறும் ஊதியமும், அரசியல் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களுக்கு கிடைக்கும் உதவிப்பணமும் கழகத்தின் பணம் இல்லை; அது அவர்களின் தனிப்பட்ட பணம்; அதில் நாம் தலையிட முடியாதிருக்கிறது என்றபோது சர்ச்சை எழுந்தது. வெளிநாடுகளில் கழகத்திற்கு வேலை செய்பவர்கள் அரசியல் புகலிடம் பெறுவதற்கு கழகம் உதவியிருக்கிறது. அத்துடன் அவர்கள் கழகத்தவர்கள் என்றும் பகிரங்கமாகத் தெரிகிறது. கழகத்தின் கட்டுப்பாடு அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்; பாரபட்சமின்றி அனைவரையும் கட்டுப்படுத்த வேண்டும். ஆதலால் அவர்கள் சொந்தப் பணம் என்ற சாக்கில் ஊதாரிச் செலவுகளைச் செய்து கழகத்திற்குக் கெட்ட பெயர் வரவிடக் கூடாது; இது ஒரு விடுதலை தாபனம்; இதன் நடவடிக்கைகள் புரட்சிகரமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தப்பட்டது.
அதன் பின்பு கழகத்தவர் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அரசியல் புகலிடம் பெற்று அரசாங்க நிதி உதவி பெறுபவர்கள் அப் பணத்தை தமது இஷ்டத்திற்குச் செலவிட முடியாதென்றும், செலவிடப்படும் பணம் ஒவ்வொன்றிற்கும் கணக்குக் காட்டவேண்டும் என்று அவர்களை வற்புறுத் துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் கழகத்தின் பராமரிப்பில் உள்ள கழகத்தவர் குடும்பங்கள் வெளியார் மூலம் பணம் பெறுவதை அனுமதிக்க முடியுமா என்றபோது பலர் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கக் கூடாது என்றனர். மத்திய குழுவிலுள்ளோர் சிலரது குடும்பங்களும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் அவர்கள் ஆக்ரோசமாக தம் நலன்களைப் பாதுகாப்பதற்காக வாதிட்டார்கள். ~~எமது நண்பர்கள் வெளிநாடுகளிலிருந்து எமக்குப் பணம் அனுப்புகிறார்கள். அதை நாம் எப்படியும் செலவிட எமக்கு உரிமையிருக்கிறது. அது கழகத்தின் பணம் இல்லை|| என்ற அவர்களின் வாதத்திற்கு, பிரச்சினை பணம் யாருடையது என்பதல்ல; கழக அங்கத்தவர்களாகிய நீங்கள் எப்படி முன்மாதிரியாக ஊதாரிச் செலவீனங்களைத் தவிர்த்து வாழ்ந்து காட்டுகிறீர்கள் என்ற பதிலை அவர்கள் சரியாகப் புரிந்து கொண்டதாக இல்லை.
~~தமிழீழ விடுதலைக்காக தமிழ் மக்கள் பலவகை அர்ப்பணிப்புகளிலும் தியாகத் திலும் தம்மை ஒரு கடின வாழ்க்கைக்கு ஆட்படுத்தி வருகிறார்கள். அவர்களை வழிநடத்தும் நாம் இந்த ஆடம்பரங்களைக் கைவிடுவது அவசியம். இல்லாவிடின் தமிழீழத்தின் அதிகார பீடத்தில் ஒரு அதிகார வர்க்கம் பல சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் கயமை உருவாக நாமே காரணமாகி விடுவோம்|| என்று உருக்கமாக விடுத்த வேண்டுகோளும் கூட அங்கு உதாசீனப்படுத்தப்பட்டது.
~~எனது மனைவி சகோதரிகளுக்கு நண்பர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பினால் அதை நாம் எப்படி தடுக்க முடியும்|| என்று அவர்கள் பல விதண்டாவாதமான கேள்விகளை எழுப்பினார்கள். கழக உறுப்பினரின் மனைவி சகோதரிகளின் நடத்தைகளுக்கும் செலவுகளுக்கும் கூட சம்பந்தப்பட்ட அங்கத் தவரே பொறுப்பு என்று பதிலளிக்கப்பட்டபோது, அதைப் புரிந்து கொள்ள முடியாமல் விவாதத்தை - ஆரோக்கியமான ஒரு கருத்துத் தெளிவு ஏற்படுத்துவதற்குப் பதிலாக - தனிப்பட்ட தாக்குதல்களாக மாற்ற முனைந்தபோது, கலாதரன் சோர்வுற்று அதை அப்படியே கைவிட்டார். செயலதிபரும் இந்த மோசமான நிலைமையைச் சமாளிக்கவேண்டி அந்த முடிவில்லா விவாதத்தை இடையில் நிறுத்தினார். ஆனாலும் கழகத்தின் நன்மை கருதி அங்கத்தவர்கள் அனைவரும் வீண் ஆடம்பர செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்திக் கூறினார்.
அன்று கூட்டம் முடிவடைந்த பின்பு கலாதரனிடம் ஒரு மத்தியகுழு உறுப்பினர் கூறினார். ~~தோழர் உங்கள் வாதத்தில் பல உண்மைகள் இருக்கின்றன. நாம் தமிழீழத்தில் ஒரு மார்க்சிய அரசாங்கத்தை அமைப்போம் என்று அறிக்கை விட்டுக்கொண்டு, இங்கு ஒரு முதலாளித்துவக் கட்சி போல இயங்கி வருகிறோம். இது எங்கு போய் விடுமோ தெரியாது|| என்று அலுத்துக் கொண்டவர், மேலும் தொடர்ந்தார்.
~~இவர்களுக்கு உறவினர், நண்பர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பு கிறார்களே, அது இவர்கள் உறவுக்காகவோ, நட்புக்காகவோ அனுப்பப்பட்ட பணம் இல்லை. இவர்கள் பாவம், விடுதலைப் போராளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற உணர்வில்தான் அனுப்புகிறார்கள். அது தெரியாமல் இவர்கள் தம் சொந்தப் பணம் அது என்று உரிமை பாராட்டுகிறார்கள்|| என்று திட்டித் தீர்த்த போது, கலாதரன் அவர் தோளைத் தட்டி ~~இத்துடன் இந்தக் கதையை விடும், மத்திய குழு விடயங்களை நாம் வெளியில் பேசக்கூடாது|| என்றார்.
~~நான் வெளியில் வேறுயாருக்கும் பேசவில்லையே. மத்தியகுழு உறுப்பினரான உங்களுடன் தான் கருத்துக்களை வளர்க்கவும், சரிபார்க்கவும் பேசுகிறேன்|| என்று கூறிச் சென்றார்.
கழகத்தில் இந்த வெளிநாட்டுப் பிரமுகர்கள் நடத்தும் குழப்பங்கள் ஏற்கனவே தெரிந்ததால் கலாதரன் மிக எச்சரிக்கையாகவே இருந்தார்.
இம்முறை சிவபாதம் வந்த போது துணிமணிகள் மாத்திரமன்றி சிலருக்கு றேடியோ, டேப்றெக்கோடர், எலக்ரோனிக் கைக்கடிகாரங்கள் என்பனவும் வழங்கப் பட்டன. அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் ஹோட்டல்களில் வேண்டிய அளவிற்கு தின்று தீர்த்தது.
ஒருநாள் மாலை அப்படி ஒரு கூட்டத்துடன் சிவபாதம் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டு வந்து கொண்டிருந்தான். கலாதரனைக் கண்டதும் அவர்கள் ஒருவர் ஒருவராக அப்படியே அகன்று சென்றார்கள். சிவபாதம் மட்டும் நேராக நிமிர்ந்து வந்து அவர் கைகளைப் பிடித்தான். குப்பென்று வீசிய வாடையில் அவர்கள் எல்லோரும் மதுபான ஹோட்டலில் இருந்து திரும்புகிறார்கள் என்று கண்டு கொண்டு வேதனையில் கேட்டார்,
~~சிவா! இம்மாதிரி செலவீனங்கள் ஊதாரித்தனம் இல்லையா? கழகம் பல தேவைகளுக்கு நிதி இல்லாமல் அவதிப்படும்போது, தளத்தில் மக்கள் ஒரு ரூபா, ஐம்பது சதம் என்று சிறுகச் சிறுக கழகத்திற்கு சேகரித்துக் கொடுக்கும் போது நீங்கள் ஒருசிலர் ஏன் இப்படி ஊதாரித்தனமாக நடக்கிறீர்கள்||.
சிவபாதம் அதற்கு மிக அக்கறையோடு பதிலளிப்பவன் போன்ற பாவனையில் கூறினான்,
~~அண்ணை! நாங்கள் விடுதலைப் போராளிகள். நாளைக்கு போராட்டத்தில் நாம் எப்ப சாவோமோ தெரியாது. அதற்குள்ள எல்லாம் அனுபவிச்சிட்டு போவம். மக்கள் அப்படியில்லை. அதுகள் சாகப் பயந்ததுகள். நாங்கள் பெற்றுக் கொடுக் கிற தமிழீழத்தில் சந்தோசமா வாழப்போறதுகள். அதுகள் கொஞ்ச நாளைக்கு கஸ்டப்படட்டும்|| என்றபோது கலாதரன் பற்களை நறுமிக் கொண்டு கேட்டார்,
~~உமது செலவுகளுக்கெல்லாம் நீர் கணக்குக் கொடுக்கிறதில்லையோ||
~~நான் ஏன் கொடுக்க வேணும். கழகத்தில் சேர்ந்த காலத்திலிருந்து நான் ஆருக்கும் கணக்குக் கொடுக்கிறதில்லை|| அவன் வெடுக்கென்று கூறினான்.
~~பிரான்சில் இருக்கும் செலவுகளுக்கும் கணக்கு இல்லையா||
~~அது எல்லாம் என் சொந்தப் பணம். நான் கழகத்திலிருந்து எப்பவும் காசு வாங்கவில்லை. கழகத்திற்கு நான்தான் காசு கொடுத்து வருகிறேன். லட்சம் லட்சமாக கொடுத்திருக்கிறேன். கழகம்தான் எனக்கு கணக்குத் தர வேண்டும்.||
அவருக்கு தூக்கிவாரிப் போட்டது. இவன் தான் பிரான்ஸில் கழகத்திற்காக சேகரித்த நிதியைத்தான் குறிப்பிடுகிறானோ என்ற நினைப்பில் ~~அது நீர் கொடுத்த பணம் இல்லையே. விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் கொடுத்த பணம்|| என்றபோது, அவனோ எச்சிலைத் துப்பிவிட்டு வாயை ஒருபுறம் கோணி சிரித்துக் கொண்டு சொன்னான்,
~~அண்ணை! நான் அங்க ஆரிட்டப் போய் நிதி சேகரிக்கிறன். இது நான் உழைச்சு சம்பாதிச்சு கழகத்திற்குக் கொடுக்கிறது. இப்போது என் மலவாசல் எவ்வளவு கிராம் பௌடர் கொள்ளுமளவிற்கு பெரிசாயிற்றுதெண்டு உங்களுக்குத் தெரியுமோ|| என்றபோது கலாதரன் எதுவும் புரியாமல் குழம்பி நின்றார்.
அவனோ அதையெல்லாம் சட்டை பண்ணாமல், வெகு சுவாரசியமாக அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, கைகளை அசைத்துக் கொண்டு தன் சகாக்களைத் தேடிச் சென்றான்.
தடுமாறித் தத்தளித்த கலாதரன் அவன் என்ன கூறுகிறான் என்பதை அறிவதற்கே நான்கு பேரை சந்திக்க வேண்டியேற்பட்டது.
அதன் பின்பே தெரிந்தது. சிவபாதம் பிரான்ஸில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறானாம். சிவபாதம் மாத்திரமன்றி அவன் போன்று பலர் இந்த வகைகளில் நிதிசேகரித்து கழகத்திற்கு வழங்குகிறார்களாம்.
கலாதரன் ஆத்திரம் தாங்காமல் பதைபதைத்தார்.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு எவ்வித கொள்கையுமின்றி, மனம்போன போக்கில் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிதிசேகரிப்பது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவரால் கற்பனை பண்ணக்கூட முடியவில்லை. செயலதிபரை உடனடியாகச் சந்தித்து இதுபற்றி கேட்க வேண்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தார்.
மாலை நான்கு மணிக்கு கந்தோருக்கு வருவேன் என்றவர் இன்னும் வந்தபாடாக இல்லை.
சங்கர்தான் வந்தான்.
பைசிக்கிளை ஒருபுறம் நிறுத்திவிட்டு அலுப்போடு படியேறிவந்த அவன் சோர்வாக கதிரையில் அமர்ந்து தன்னை ஆயாசப்படுத்திக் கொண்டான்.
கலாதரன் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவன் அடர்ந்த தலைமுடி குழம்பிக் கலைந்துபோய் இருந்தது. அகன்ற புஜங்கள் கம்பீரமாக மேசையில் சாய்ந்து வீரியமாகத் திரண்டெழுந்து நின்றன. அந்த ஆண்மையின் அழகை மனதிற்குள் எண்ணிப் ப10ரித்தார்.
நேற்றுத்தான் அவன் தன் காதல் விவகாரங்களை விரிவாக அவருக்குக் கூறி யிருந்தான்.
நிர்மலா வீட்டில் பெற்றோரின் தொல்லை தாங்காமல், அவன் வீட்டில்போய் இருக்கப் போவதாகவும், அதற்கு அவன் பெற்றோர்கள் சம்மதித்து விட்டார்களாம் என்றும் விபரித்துக் கூறினான்.
வயதில் தன்னைக் காட்டிலும் எவ்வளவோ சிறியவனானாலும் ஒரு பக்குவத்தில் அடைந்த முதிர்ச்சியில் அவன் கூறினான்,
~~தோழர்! நான் அறிய முகாமில் இருக்கும் பல தோழர்கள் தம் மனைவி பெற்றோர் போன்ற பல பாசமுள்ள நெருங்கிய உறவுகளைப் பிரிந்தே இங்கு வந்திருக்கிறார்கள். இந்தத் தியாகங்களுக்கு அவர்கள் துணிவதற்கு பலமாக இருப்பது நாம் எம் விடுதலையை அடைவோம் என்ற நம்பிக்கைதானே. அவர்கள் குடும்ப உறவுகள் இந்தக் காலத்தில் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் அவர்கள் அறியாமலில்லை. அதேசமயம் இங்கு பல சலுகைகள் பெற்றவர்கள், தம் மனைவி மக்களோடு நடத்தும் உல்லாச வாழ்வு பற்றி கொஞ்சமும் இவர்கள் வெட்கப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை முகாமில் இருக்கும் அத்தனை தோழர்களுக்கும் நிவாரணம் கிடைக்காமல் எனது காதலைப் பாதுகாப்பதற்கு கழகத்திடம் எந்த உதவியும் கேட்க மாட்டேன்.||
அந்த உணர்ச்சிகளைக் கண்டு ப10ரித்துப்போன கலாதரன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பைசிக்கிளில் வந்த அசதியோ என்னவோ அவன் மேசையில் ஒருக்களித்து படுத்துக் கொண்டான்.
~~ஏன் சங்கர் சுகமில்லையா|| கலாதரன் அந்த நிசப்தத்தைக் கலைத்தார். அவன் தலையை நிமிர்த்தி கூறினான்.
~~அப்படியொன்றுமில்லை. இந்த அச்சகத்திற்குத்தான் போய்வருகிறேன். அவன் தொல்லை தாங்கமுடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏமாற்றிக் கொண்டே வருகிறான். கூலியும் எப்பொழுதும் போல அதிகமாகவே எடுக்கிறான். குறைப்பேன் என்று சொல்லியும் குறைக்கவில்லை. நான் எத்தனையோ தடவை சொல்லிற்றன். ஒருவரும் கவனிக்கிறதாயில்லை|| என்று அலுத்துக் கொண்டு தன்பாட்டிற்கே புலம்பிக் கொண்டிருந்தான்.
பாவம் சங்கர்!
அச்சகமும் கழகத்தின் மூலதனத்திலேயே இயங்குகிறது என்ற இரகசியம் இவனுக்குத் தெரியாது.
அது தெரிந்தாலோ இவ்வளவு மோசமான நிர்வாக சீர்கேட்டுக்காக இன்னும் அதிகமாக சத்தம் போட்டு வருந்தியிருப்பான்.
கலாதரன் தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டார்.
ஐந்து மணியின் பின்புதான் செயலதிபர் வந்தார்.
கலாதரன் எழுந்து அவரைப் பின்தொடர்ந்து அந்த அறையை நோக்கிச் சென்றார்.
கலாதரன் நடந்த சம்பவங்களையெல்லாம் ஒன்றும் விடாமல் கூறிக் கொண்டு மூக்குக் கண்ணாடியைத் துடைத்துவிட்டுச் சொன்னார்,
~~வெளிநாடுகளிலிருந்து நிதி சேகரிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை கட்டுப்பாடு இல்லாமல் சும்மா விட்டுவிட முடியாது. கழகத்தின் அங்கத்தினர்கள் எல்லோரும் ஒரே தாபனக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும்.||
செயலதிபர் எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது இயல்பான அந்த மலர்ச்சி அப்போ ஏனோ முகத்தில் இல்லை.
கலாதரனே தொடர்ந்தார்,
~~நாம் மத்திய குழுவில் தீர்மானித்தபடி எமது வெளிநாட்டுக் கிளைகளில் உள்ளவர்களின் நிதிச் செலவீனங்கள் இன்னும் ஒழுங்காக கட்டுப்படுத்தப்பட வில்லை.||
~~கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்கள் கவனிக்கவில்லைப் போலும்|| என்று கூறிக்கொண்டு தன் நோட் புத்தகத்தில் அதைக் குறித்துக் கொண்டார்.
~~கழகம் ஆரம்ப காலத்தில் இருந்தே நிதி விடயங்களில் கவனமாக இருந்துவரு கிறது. வங்கியில் எடுத்த பணத்தைக்கூட ஏதாவது வியாபாரத்தில் முதலிடாமல், அல்லது கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடாமல் எமது புனிதத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறோம். ஆனால் இப்பொழுது கேவலமாக கழக அங்கத்தினர்களே வெளிநாடுகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.
நாம் உலகப் புரட்சி பற்றிப் பேசுகிறோம். உலகெங்கும் புரட்சி நடைபெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். ஏகாதிபத்திய நாடுகளில் இளைஞர்கள் புரட்சிகர உணர்வுகளில் இருந்து மழுங்கடிக்கப்பட்டு போதைப் பொருள் பாவனையாளர்களாக மாறிவிடுவது உலகெங்குமுள்ள புரட்சிகர சக்திகளின் வேதனையான பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் நாம் அந்த நாடுகளின் புரட்சிகர சக்திகளை மழுங்கடிக்கும் வகையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தின் மூலம் எமது நாட்டில் விடுதலையைக் கொண்டுவர முயல்வது வெட்கக் கேடானது.
இந்த நிலை மேலும் தொடர்ந்தால் எமது நாட்டிலும் நாம் இளைஞர்களுக்கு போதைப் பொருள் பாவனைக்கு ஊக்கம் கொடுத்தவர்களாவோம். எமது இளைஞர் களை போதைப் பொருள் பாவனையாளர்களாக மாற்றிக்கொண்டு ஒரு சமூக மாற்றத்தைச் செய்வதற்கு அவர்களைத் தயார்படுத்துவதென்பது ஒருபொழுதும் முடியாத விசயம்||
செயலதிபருக்கு இது ஒரு தர்மசங்கடமான நிலையைக் கொடுத்தது.
வெளிநாடுகளில் கழகத்திற்கு போதைப் பொருள் கடத்தல் மூலம் பணம் சேகரிக்கப்படுவது அவர் அறியாததொன்றல்ல. அதன்மூலம் கழகத்தின் நிதித் தேவைகள் பெருமளவு ப10ர்த்தி செய்யப்படுவதால் அவர் அதுபற்றி யெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. இந்த வியாபாரம் வெளிநாட்டில் நடைபெறுவதால் இது ஒன்றும் அம்பலத்திற்கு வராது என்றே கவலையீனமாக இருந்தார். வெளிநாட்டில் கூட மிக நெருங்கிய சகாக்களுக்கு மாத்திரமே இது தெரியும். இப்பொழுது கலாதரனுக்கும் தெரியும் அளவிற்கு பகிரங்கமான பின்பு என்ன சொல்வது என்று தெரியாது குழப்பத்தில் இருந்தார். சிறிது அமைதியாக இருந்துவிட்டு கைகளை ஒன்றோடொன்று உராய்ந்து தேய்த்து விட்டுக்கொண்டு சொன்னார்,
~~கழகம் ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் இருந்த நடைமுறைகளை இப்பொழுது இவ்வளவு பெரிய அமைப்பாக வளர்ந்த பின்னமும் பின்பற்றவேண்டும் என்றில்லை.||
அவர் கூறிவிட்டு பென்சிலால் மேசையில் கிடந்த காகிதத்தில் குறுக்கு நெடுக்காக சில கோடுகளை வரைந்தார்.
~~அப்படியென்றால் இந்தப் போதைப் பொருள் கடத்தல் எல்லாம் உங்களுக்கும் தெரியத்தான் நடைபெறுகின்றதா? நீங்களே இதை செய்யும்படி சொன்னீர்களா?||
கலாதரன் உள்ளத்தின் கொதிப்பை குரலில் வரவிடாமல் சிரித்துக் கொண்டே கேட்டார்.
~~நான் யாருக்கும் இப்படி செய்யும்படி சொல்லவில்லை. இதெல்லாம் அவரவர் இஸ்டம். அந்த ரிஸ்க் அவர்களுடையது|| செயலதிபர் அவர் முகத்தைப் பாராமல் தொடர்ந்து அந்தக் காகிதத்தில் கீறிக் கொண்டே சொன்னார்.
கலாதரன் சற்று அதிர்ச்சியடைந்தவர்போல் குழம்பி நின்றார். அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
~~அந்தமாதிரிப் பணம் எங்கள் கழகத்திற்குள் வருவது பற்றி நாம் கவனமாக இருக்கவேண்டும். இந்தத் தொழில்களைச் செய்பவர்களை நாம் கழகத்தவர் என்று சேர்த்து வைத்திருக்க முடியாது.||
கலாதரன் குரல் இப்போது கொதிப்போடு இருந்தது. செயலதிபருக்கு அது பிடிக்காததுபோல அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே கூறினார்,
~~இதை நீர் மாத்திரம் எப்படித் தீர்மானிக்க முடியும். இப்படி பிடிவாதமாக தூய்மையைப் பேண நினைத்தால் கழகத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். யாருடைய உதவியும் கிடைக்காது.||
செயலதிபரும் சிறிது பரபரப்போடு கூறினார். அவர் கையிலிருந்த பென்சிலை இப்போது பொத்திப் பிடித்திருந்தார்.
~~அப்படியென்றால் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கும், விடுதலைப் போராளி களுக்கும் வித்தியாசம் இல்லை என்கிறீர்களா. பணம் வேண்டும் என்பதற்காக நாம் எந்தவகையிலும் சம்பாதிப்பதா. எமக்கென்று ஒரு கொள்கை கோட்பாடு வேண்டாமா.|| என்று ஆக்ரோசமாகக் கேட்கவும் செயலதிபரின் முகம் கடுகடுத்துச் சிவந்தது.
அதைச் சட்டை பண்ணாமல் கலாதரனே சத்தமிட்டார்.
~~நீங்கள் விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கவில்லை. போதைப் பொருள் கடத்தல் வேலைக்குத்தான் தலைமை தாங்குகிறீர்கள். போதைப் பொருள் கடத்தலைச் செய்யும் நாம் ஒரு விடுதலை இயக்கம் என்று சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது.||
சங்கர் துணுக்குற்றான்!
வெளியில் இருந்து அங்கு நடைபெற்ற ஆக்ரோசமான வாதங்களை சொல் புரியாமலேயே ஊகித்துக் கொண்டிருந்தவனை, கலாதரனின் அந்த வார்த்தைகள் உசுப்பிவிட்டன. அவைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு அங்கிருப்பது அவனுக்கு அந்தரமாக இருந்தது.
செயலதிபரும் இப்போது ஆத்திரமாகவே பேசினார்.
~~நான் மட்டும் இங்கு தனியாக இயக்கம் நடத்தவில்லை. உமக்குப் பிடிக்காத விசயங்களை என் தலையில் போட வேண்டாம்.||
~~இப்படி பேருக்குத்தான் சொல்கிறீர்கள். இந்த போதைப் பொருள் கடத்தல் விசயங்களை எல்லோரிடமும் கேட்டா செய்தீர்கள். உங்கள் இஸ்டத்திற்கே செய்தீர்கள். அதனால்தான் கழகத்திற்குள் வரும் மோசடிகள், ஊழல்களைத் தடுக்க உங்களுக்கு நெஞ்சுரம் இல்லாமலிருக்கிறது.||
செயலதிபர் பற்களை நறுமிக் கொண்டு கதிரையிலிருந்து எழுந்தார். பென்சிலைப் பிடித்திருந்த கையை அவர் முகத்திற்கு நேரே காட்டிச் சொன்னார்,
~~கதைப்பதை யோசித்துக் கதையும். இந்த விசயங்களைச் செய்யும்படி நான் யாரையும் கேட்கவில்லை. இதுபற்றி என்னிடம் எதுவும் நீர் பேசத் தேவையில்லை. உமக்கு தேவையானதை கொமிட்டியில் கதையும்.||
ஒரு பிரளயம் வந்துபோன அமைதி பட்டென்று கந்தோரைப் பற்றிக் கொண்டது. ஒருகணம் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் இருவரும் வௌ;வேறு திக்குகளில் பார்வையைச் செலுத்தினார்கள். முன் ஒருபொழுதும் இல்லாமல் இப்படி ஏற்பட்ட அந்த அமங்கல அனுபத்திற்காக இருவருமே தமக்குள் கலவரப்பட்டுக் கொண்டார்கள்.
நீண்ட அமைதியின் பின் கலாதரன் ~~சரி நான் கொமிட்டியிலேயே பேசிக் கொள்கிறேன். மத்திய குழுக் கூட்டத்திலேயே எல்லாவற்றையும் கேட்கிறேன். உங்களைப் பற்றிய குறைகளை மற்றவர்கள் தெரிந்து, உங்களைப் பற்றிய கற்பனையை அவர்கள் சிதைத்துவிடக் கூடாது என்று இதுநாள்வரை பார்த்திரு ந்தேன். இனி நேரடியாக நாம் பேசவேண்டியதில்லை. மத்திய குழுவிலேயே என் சந்தேகங்களைக் கேட்டுவிடுகிறேன்.|| என்று ஆறுதலாக மூக்கை உறிஞ்சி விட்டுக் கொண்டு கூறியவர் அந்த இடத்தை விட்டு எதுவும் நடவாததுபோல எழுந்து வெளியேறினார்.
வெளியே சங்கரைக் காணோம்.
~~நல்லவேளை இந்த அசம்பாவிதங்களைக் கேட்டு மனம் சலித்துப் போகாமல் அவன் இங்கு இல்லாமல் போனது|| என்று நினைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தார்.
செயலதிபர் அவர்போன திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அந்த அறையில் அப்படியே குழம்பிப்போய் இருந்தார். கலாதரனுடன் அவர் ஒருபொழுதும் இப்படி வாக்குவாதப் பட்டதில்லை.
தமிழீழத்தில் கழகத்திற்கு எதிராக பலர் சதி செய்கிறார்கள் என்று ராமநாதனுக்கு வந்த கடிதம் பற்றி கூறும்பொழுது அண்மையில் எழுந்த கருத்து மோதல்கூட இவ்வளவு மோசமாக இருக்கவில்லை.
~~தளத்தில் வேலை செய்பவர்கள் நல்ல கொள்கைத் தெளிவுடைய கடும் உழைப்பாளிகள். அவர்களை எனக்கு ஆரம்பம் முதலே தெரியும். அவர்களை சதிகாரர் என்று கூண்டில் நிறுத்துவதே பெரும் பிழை. அவர்கள் கண்டிப்பு பொறுக்க முடியாதவர்கள்தான் அவர்களுக்கு எதிராக இவ்வாறு அவதூறுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.|| என்று கலாதரன் கூறியபோது எழுந்த வாக்கு வாதத்தின் போதும், ~~தளத்தில் உங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த அனுபவங்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் தமிழகத்திலேயே அதிக காலம் தங்கிவிட்டீர்கள்|| என்ற கலாதரனின் பேச்சு செயலதிபரின் இதயத்தைச் சுட்டாலும் அந்த வாக்குவாதம் அவ்வளவு மோசமாக நீடிக்கவில்லை.
அந்த சதி பற்றிய விசாரணைக்காக பிரகாசத்தை அனுப்புவது என்ற தீர்மானத்தை இறுதியில் கலாதரனும் ஒத்துக்கொண்ட பின்பு அந்தப் பிரச்சினை அப்படியே தீர்ந்து போயிற்று.
ஆனால் இன்று நடந்த வாக்குவாதம் அவரால் தாங்கமுடியவில்லை. தனக்கேற்பட்ட மன உளைச்சலைக் காட்டிலும், கலாதரன் கொதிப்போடு கூறிச்சென்ற விடயங்கள் தான் அவரை மோசமாகக் கலவரப்படுத்தியது.
போதைப் பொருள் கடத்தலில் கழகம் தனித்து முதலிடவில்லை. பல இந்திய சர்வதேச கடத்தல் முதலாளிகளுடன் சேர்ந்தே அதைச் செய்கிறது. இதனால் கழகத்தின் நிதிப் பிரச்சினை வெகுவாகத் தீர்கிறது என்றாலும் கழக கொள்கைக்கு முரணாக இருப்பதோடு மத்திய குழுவிற்குத் தெரியாமலேயே இரகசியமாக இது நடைபெறுவது வேறு செயலதிபரை கலவரத்திலாழ்த்தியது.
கலாதரன் இதை இனி சும்மாவிடப் போவதில்லை. மத்திய குழுவில் தன்னை துருவித் துருவிக் கேள்வி கேட்பான். மத்திய குழுவில் நியாயத்தைப் பேசும் பலர் அவனோடு சேர்ந்துவிடுவார்கள்.
எல்லோரும் ஒருவர்மாறி ஒருவர் கேள்விகளால் அவரை துளைத்தெடுப்பார்கள்.
தனக்கு ஆதரவாக இருக்கக் கூடியவர்களை அவர் கற்பனை பண்ணிப் பார்த்தார்.
எண்ணி நான்கு பேர்!
அவர்களும் ஆதரவாகப் பேசும் துணிச்சல் இல்லாதவர்கள்.
முகம் குப்பென்று வியர்த்தது.
மத்திய குழுவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டுபோனால் எல்லாம் அம்பலத் திற்கு வரும்.
கலாதரனுடன் இனிமேல் சமாதானமாக கதைத்துப் பேசி இதை கைவிடச் சொல்லவும் முடியாது. கொள்கை இது என்று கூறிக்கொண்டு மறுத்துவிடுவார். கௌரவக் குறைவு வேறு.
தர்மசங்கடமான நிலை.
ஒரு மாதத்திற்கு முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் கலாதரனை கழகத்திலிருந்து வெளியேற்றினால், ஏனைய இயக்கங்கள் உங்க ளோடு இணைவதற்கு சம்மதிப்பார்கள் என்றபோது, அதைத் தட்டிக் கழித்ததற்கு காரணம் கலாதரனின் நட்பும், அவர் தன்னலமில்லாத உழைப்பிற்கு கொடுத்த மரியாதையும் மாத்திரமல்ல, கலாதரனோடு சேர்ந்து மத்திய குழுவில் பெரும்பான் மையாக இருக்கும் மார்க்சியவாதிகளின் பலத்தையும் எடைபோட்டுப் பார்த்தபின்பு அதை அப்படியே விட்டார்.
இப்பொழுது அதுவே அவரைச் சுற்றி ப10தாகரமாக விரட்டியது.
கலாதரன் எதுவும் நடவாததுபோலச் சென்றாலும் அவர் உள்ளத்தின் ஊமைக் கோபத்தின் கனலை சரியாகவே மதிப்பிட்டுக் குழம்பிப் போயிருந்தார்.
நெஞ்சம் சில்லிட்டு சிலிர்த்தது.
வழமையாக மத்தியகுழுவில் எழும் பிரச்சினைகளுக்கு கழகம் சார்பாக முகம் கொடுக்கும் கலாதரனே இனி சண்டமாருதமாக நிற்கப் போகிறார்.
அது பயங்கரமாக அவரை அச்சுறுத்தியது.
சிந்தனை ஒரு நிலையில் இல்லை. அடுத்த நிமிட வேலைகூட ஒழுங்காக செய்து முடிக்க இயலாதோ என்ற பயம் மனதை கௌவிப் பிடித்தது. சோர்வுடன் எழுந்து வெளியே செல்லும்போது சிதம்பரம் முகாமிலிருந்து வந்தான்.
சிதம்பரம் முன்பு சென்னையில் இருந்தபோது ராமநாதன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் அக்கவுண்டன் மனைவியுடன் உறவாக இருந்தவன். அந்தத் தொடர்பிலிருந்து துண்டிக்க வேண்டியே இவனை ஒரு முகாமிற்குப் பொறுப்பாக அனுப்பினார்கள்.
அவனைக் கண்டதும் செயலதிபர் வந்து மீண்டும் கதிரையில் அமர்ந்து ஒரு புன்னகையை வரவழைத்தார். அது வரண்டுபோய் அவர்முன்னே பரிதாபமாக விழுந்தது. அதுபற்றி ஏதும் அறியாமலேயே சிதம்பரம், தனது சிறிய பைக்குள் ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து இவரிடம் கொடுத்துக் கொண்டே கூறினார்,
~~இது பெரியையா! அந்த நடராசா மாஸ்டர்ர அறிக்கை||
அது முகாமில் குழப்பம் நடக்கக் காரணமாக இருந்த நடராசா மாஸ்டரின் அறிக்கை.
முகாம்களில் அரசியல் வகுப்பு எடுப்பதற்காக தமிழீழத்தில் தேடப்பட்ட நடராசா மாஸ்டரை இங்கு அனுப்பி வைத்தார்கள்.
இவர் அரசியல் வகுப்பு எடுத்து இரு வாரங்களுக்குள் முகாமில் ஒரு பகுதியினர் உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம், கோரிக்கைகள், விண்ணப்பம் என்று பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
பிரச்சினையை விசாரித்துப் பார்த்ததில் இது நடராசா மாஸ்டரின் அரசியல் வகுப்பின் வெளிப்பாடு என்று தெரியவந்தது.
உடனடியாக அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள்.
குழப்பம் விளைவித்தவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.
அந்த அறிக்கையை வேண்டாவெறுப்பாகப் படித்த செயலதிபரின் முகம் படிப்படி யாக பிரகாசமாக மின்னியது.
எந்தப் பிரச்சினையையும் அதிக காலம் இழுத்தடியாமல் சாதுரியமாக உடனுக் குடன் தீர்த்துவைக்கும் அவர் சாணக்கியம் அந்த வரிகளையே கூர்ந்து படித்தன.
~~நான் கழகத்திற்கு மூன்று வருடங்களாக கடுமையாக உழைத்தும் எவ்வித பயனும் பெறவில்லை. என்னை கழகத்தின் முக்கியமானவர்களெல்லாம் பயன்படுத் தினார்களேயல்லாமல், எனக்கு ஒரு கௌரவமான இடத்தைக் கொடுக்கவில்லை.||
~~என்னைவிட சித்தாந்தத் தெளிவு குறைந்தவர்கள் எல்லாம் மத்தியகுழு உறுப்பி னராக இருக்கும்பொழுது, எனக்கு மட்டும் அந்த அந்தஸ்து கிடைக்காமல்போனது என்னை மோசமான விரக்திக்குத் தள்ளியது||
~~கலாதரனிடம் முகாமில் நிலவும் குறைபாடுகளையும், ஊழல்களையும் கூறியபோது அவர் இது தனிமனிதனால் திருத்தப்பட முடியாது. எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்|| என்றார்.
எனது நடவடிக்கைகளை கலாதரன் வரவேற்பார் என்று நம்பியே நான் இவ்வாறு முகாம்களில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராகப் போராடும்படி பயிற்சி வீரர்களைத் தூண்டினேன்||
திரும்பத்திரும்ப அந்த வரிகளையே படித்தவர், தலையை நிமிர்த்தி சிதம்பரத்திடம் கேட்டார்,
~~இந்த வாக்குமூலம் நடராசாவை சித்திரவதைசெய்து பெறப்பட்டதா||
~~இல்லை பெரியய்யா! நீங்கள்தானே அவரை சித்திரவதை செய்யக்கூடாது என்று சொன்னீர்கள். அவர் அரசியல் பிரிவைச் சேர்ந்தபடியால் இராணுவக் கட்டுப்பாடுகளுக்கு உட்படமாட்டார் என்றீர்கள். அவர் தவிர மிச்ச ஆட்களுக்கு நல்ல அடி கொடுத்துத்தான் விளக்கம் எடுத்தோம்.||
சிறிதுநேர யோசனையின் பின் சிதம்பரத்திடம் மெதுவாகக் கூறினார்,
~~இந்த அறிக்கை என்னோடு இருக்கட்டும். நீ நடராசா மாஸ்டரை தொடர்ந்தும் விசாரி.||
எதுவும் புரியாமல் குழம்பி நிற்கும் அவனை அருகில் அழைத்து இரகசியமாக காதுக்குள் சொன்னார். அவன் தலையாட்டிக் கொண்டே புறப்பட எழுந்தான்.
~~வேண்டுமானால் நடராசாவை உளன்றியிலும் ஏற்றி விசாரி. எப்படியும் அந்த அறிக்கையை பிழைவிடாமல் எடுத்துக்கொண்டு வரவேண்டும்.|| அவர் கண்டிப்பாகக் கூறினார்.
~~ஓம் பெரியய்யா! நாளைக்கே செய்கிறேன்||
அவன் புதிய பொறுப்போடு வெளியே சென்றான்.
செயலதிபர் யாரும் இல்லாத அந்த இடத்தில் ஏகாந்தமாக எதையோ நினைத்து சிரித்துக் கொண்டார்.
அந்த வழமையான புன்னகை மீண்டும் அவர் முகத்தில் குடியேறியது.

--------------------------------------------------

16

நிர்மலா இப்பொழுது சர்வசாதாரணமாக அந்த வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கினாள்.
முன்பிருந்த அச்சம், வெட்கம் எல்லாம் அகன்று இப்பொழுது தன் சொந்த வீடு மாதிரி அவர்களுடன் பழக ஆரம்பித்தாள். அம்மாவுக்கு அவளை நன்றாகப் பிடித்திருந்தது.
அவளை முதலில் சந்தித்த அந்த மாலைப் பொழுதில் நெருங்கமுடியாத வகையில் முகத்தில் தெறித்த அந்த பெரிய இடத்துப் பெண் என்ற உணர்வை வெல்லும் அளவிற்கு அவளும்தான் இப்போது முதிர்ச்சியடைந்திருந்தாள்.
முன்புபோல விருந்தினர் மாதிரி ஒதுங்கி நின்ற கூச்சம் மாறி நிர்மலா இப்பொழுது நேரடியாகவே சமையலறைக்குள் வந்து மணிக்கணக்காக அம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பாள். வசீகரன் கைதான பின்பு, அவனை மீட்க அவர்கள் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் அக்கறையோடு அவள் கூறும்போது அம்மா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாள். கொழும்பில் இந்து கலாச்சார, தமிழ்மொழி விசேட மசோதா அமுலாக்கல் அமைச்சில் பிரதம லிகிதராக வேலைசெய்யும் அவள் அப்பாவுக்கு நீண்ட காலமாகவே அமைச்சர் இராசதுரையை பழக்கமாம். தனது அமைச்சில் எப்படியும் யாழ்ப்பாணத்தவர்களை விலக்கியே வைத்திருக்கும் அந்த அமைச்சருக்கு தவிர்க்கமுடியாத வகையில் இவரை சேர்க்க வேண்டி வந்ததற்கு இவரது ஆங்கில ஞானமும், வேலையில் ஒழுங்கும், நேர்மையும் ஒரு காரணம். ஆபத்தான வேளைகளில் காலைவாரிவிடும் அந்த அமைச்சரின் குணநலன் பற்றி அவர் அமைச்சில் முன்பு வேலைசெய்தவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல் அவர் அந்த அமைச்சிலே பணிபுரியப் போனமைக்கு இவருக்கு ஒரு தேவையாக இருந்தது, விரைவில் வர இருக்கும் எஸ்.ஏல்.ஏ.எஸ். ~புறோமோசனே|. அந்தப் பதவியுயர்வுக்கு உதவுவார் என்றே இவர் பலரின் எதிர்ப்பின் மத்தியில் அந்த அமைச்சில் பணிபுரிய முடிவெடுத்தார்.
வசீகரன் பிடிபட்ட நாளில் இருந்து வீட்டிற்கும், கந்தோருக்கும் மாறிமாறி ட்ரங்கோல் போட்டும் பயன் ஏதும் கிடைக்காததால் சலிப்புற்று அவர் நேரிலேயே போய்ச் சந்தித்து விசயத்தைச் சொன்னார். அமைச்சரோ ~~நான் யாழ்ப்பாண ஜீ.ஏ க்கு கடிதம் தருகிறேன். போய் கதைத்துப் பாரும்.|| என்றதோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணினார். யாழ்ப்பாண ஜீ.ஏ தனக்கு நல்ல நண்பர் என்றும் அவரால்கூட எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறதென்றும் இவர் கூறியபோது, அமைச்சர் ~~யாழ்ப்பாண ஜீ.ஏ க்குக்கூட முடியாட்டி அப்போ நான் என்ன செய்ய முடியும்|| என்று அப்பாவித்தனமாகக் கேட்டார்.
பொறுமையிழக்காமல் இவரும் நம்பிக்கையோடு ~~நீங்கள் பிரதமரோடு இதைப் பற்றி கதைத்து உதவுங்கள்.|| என்று கெஞ்சியபோது அமைச்சர் போலியாகப் பதறுவதுபோல பாவனை காட்டி ~~இம்மாதிரி உதவிகளுக்கு நான் அவர்களிடம் போனால், அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். என்னையே அவர்கள் சந்தேகிக்காமல் இருக்க வேண்டும் என்று நான் ஜாக்கிரதையாக இருக்கும்போது இம்மாதிரி செய்ய முடியுமா|| என்று கையை விரித்துவிட்டு, ~~உமது மகன் பிழைவிடாத ஆளாக இருந்தால் ஒருபொழுதும் தண்டிக்க மாட்டார்கள்; விசாரித்து விட்டு அனுப்பிவிடுவார்கள். இந்த அரசாங்கம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம்போல பிழையில்லாத ஆட்களையெல்லாம் பிடித்துத் தண்டிக்க மாட்டார்கள்.|| என்று அவர் கட்சிப் பிரச்சாரத்திற்கு வந்தபின் இவர் சோர்ந்துபோய் திரும்பியிருக்கிறார்.
அப்பொழுது அமைச்சர் அவசரமாகக் கூப்பிட்டுச் சொன்னாராம்,
~~நீர் அடிக்கடி இப்போது லீவு எடுக்கிறீர். அது இங்கு வேலைகளை அதிகம் பாதிக்கிறது. வீட்டை மாத்திரம் பார்த்தால் போதாது. நாம் நாட்டையும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுசனங்கள்தான் வீணாகத் துன்புறுவார்கள். நான்தான் பாராளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்.|| என்று அவர் நாட்டு மக்களில் கொண்ட அக்கறையை வெளிப்படுத்தி எச்சரிக்கை செய்தபோது இவருக்கு கண்ணீரே வந்துவிடுமாப்போல இருந்தது.
வீட்டிற்கு வந்து பொருமிக் கொண்டிருந்தார்.
~~நான் எத்தனை பேரை பகைச்சு, அந்த அமைச்சில் வேலைசெய்தேன், தெரியுமா. எல்லோரும் என்னை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். எனக்கு நல்ல பரிசு கிடைச்சிருக்கு|| என்று தலையிலடித்துக் கொண்டார்.
அம்மா பரிதாபமாக அந்தக் கதைகளைக் கேட்டுகொண்டே நிர்மலாவிற்கு தேநீர் தயாரிப்பாள்.
பெரிய இடத்தில் நடைபெறும் அந்தச் சம்பவங்களை இவ்வளவு நெருக்கமாக யாரும் சொல்லி அவள் கேட்டதில்லை. சிறு குழந்தையைப் போல அந்த வாழ்க்கையை சரிவர அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் கூறும் ஆங்கிலப் பதப்பிரயோகங்களுக்கு அர்த்தம் கேட்பாள்.
~~மினிஸ்டர் என்றால் என்ன பிள்ளை? ||
~~டொகுயுமென்ட் என்றால் என்ன? ||
அவள் கஸ்டத்தைப் புரிந்துகொண்டு ஆங்கிலப் பதங்களை கூடியளவு குறைத்துக் கொண்டே நிர்மலா பேசுவாள்.
இந்த உறவு இவ்வளவு வேகமாக வளர்ந்து அந்த பாரிய இடைவெளியை நிரப்பும் என்று அப்பா கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த வீட்டின் மாதவருமானம் முதல் மாதாந்தம் எவ்வளவு கடன் திருப்பிக் கொடுபடுகிறது, வட்டிக்காசு எந்தளவிற்கு ஏறிவருகிறது என்ற சகல விபரங்களை யும் அறியும் அளவிற்கு அந்த நெருக்கம் அதிகரித்தது.
அன்று அவள் மதிய சாப்பாட்டை அங்கு வைத்துக்கொண்ட வேளையில்தான் அவசரஅவசரமாக நாதன் வந்தான். நிர்மலாவும் அங்கேயே இருப்பதைக் கண்டதும், சந்தோசமாக சிரித்துக் கொண்டு உள்ளே வந்து இருந்தான். வழிந்தோடும் வியர்வையை துடைத்துவிட்டுக் கொண்டே கேட்டான்,
~~நாளைக்கு பெண்கள், தாய்மார் எல்லாம் ஒரு ஊர்வலம் போறாங்கள் ~அன்னையர் முன்னணி| என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஊர்வலம் மாநகர சபையில் ஆரம்பமாகி கச்சேரியில் போய் முடிவடைகிறது|| என்று படபடவென்று கூறினான்.
~~ஏன் இந்த ஊர்வலம் தம்பி|| அம்மா கதவோரம் நின்றபடி கேட்டாள்.
~~அநியாயமாக இளைஞர்களை இராணுவம் கைதுசெய்வதைக் கண்டித்து பெண்கள் தாய்மார்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தை நடத்துகிறார்கள்|| என்று கூறிக்கொண்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை நீட்டினான். அது அன்னையர் முன்னணி யின் ஊர்வலத்திற்கான அறிவித்தல்.
அதைப் படித்துவிட்டு நிர்மலா சந்தேகத்துடன் கேட்டாள்,
~~நீங்கள் இந்த ஊர்வலங்களை உண்ணாவிரதங்களை நம்பமாட்டீர்களே. கூட்டணி பாணியில் இப்பொழுது நீங்களும் இந்த ஊர்வலங்களுக்குப் போக முடிவெடுத் திட்டீங்களா||
கதிரையில் நிமிர்ந்து அமர்ந்த அவன் கால்களை முன்னே இழுத்துக்கொண்டு கூறினான். அம்மாவும் அவன் கூறுவதைக் கேட்க முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.
~~தமிழீழ விடுதலை ஆயுதப் போராட்டத்தினால்தான் நிறைவேற்றப்படும் என்பதும், பேச்சுவார்த்தை, அகிம்சைப் போராட்டங்கள் மூலம் அது சாத்தியமாகாது என்பதும் உண்மை. அதனால் நாம் ஒரு ஆயுதப் போராட்டத்திற்குத் தயாராகிறோம்.
அது ஒரு தலைமறைவான போராட்ட நடவடிக்கை. அதேவேளை அழிந்துபோய்க் கொண்டிருக்கிற அற்பசொற்ப ஜனநாயக உரிமைகைளையும் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசிற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் தார்மீகத் துணிச்சலுக்கும், நேர்மைக்கும் நாம் தலைவணங்க வேண்டும். போராட்டங்களால் என்ன பயன் விளையும் என்ற கேள்வியைவிட இந்தப் போராட்டங்கள் யாருக்கு எதிராக, யாரை அம்பலப்படுத்த நடைபெறுகின்ற தென்பதையே கருத்தில் எடுக்கவேண்டும். அந்த அடிப்படையில் இதற்கு நாம் ஆதரவு கொடுக்கிறோம்||. அவன் பேசிமுடித்த பின்பு அம்மாவை திரும்பிப் பார்த்துக் கேட்டான்,
~~ஏன் அம்மா! நீங்களும் நாளைக்கு இந்த ஊர்வலத்திற்குப் போகலாம்தானே|| அவள் சிரித்துக் கொண்டே சம்மதம் என்று தலையாட்டினாள்.
~~நிர்மலா நீயும் உன் அம்மாவை அனுப்பி வையன்||
~~என் அம்மாவா! அவ இதற்கெல்லாம் எங்கே சம்மதிக்கப் போறா|| அவள் கண்கள் படபடக்கக் கூறினாள்.
~~அப்படிச் சொல்லாதே எங்கள் விடுதலைப் போராட்டம் மூலைமுடுக்கெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தவர்களை என்னமாய் தட்டி எழுப்பிக்கொண்டு போகிறது தெரியுமா. உன்ர அம்மா மாத்திரம் எப்படி இதற்கு விதிவிலக்காகிவிட முடியும்|| அவன் கதிரையிலிருந்து எழுந்து கொண்டே கேட்டான்.
~~நான் முயற்சி செய்து பார்க்கிறேன்|| அவள் தயக்கத்தோடு கூறிக் கொண்டாள்.
~~முயற்சி செய்யாதே, செய்து முடி|| என்று கூறிக்கொண்டே அங்கிருந்து விடை பெற்றான். அவன் நீண்ட கால்களால் தாண்டிச் செல்லும் வேகத்தை பிரமிப்போடு பார்த்துக் கொண்டு அவர்கள் அப்படியே இருந்தார்கள்.
நிர்மலாவும் சிறிது நேரத்தின் பின்னால் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
இவள் பைசிக்களை உருட்டிக் கொண்டு உள்ளே செல்லும்போது அம்மா வாசலிலேயே சோகமாக உட்கார்ந்திருந்தாள். அவள் பருத்த உடம்பு வசீகரன் போன நாளிலிருந்து வெகுவாக இளைத்துக் களைத்திருப்பதையும், முகம் அழுது வடிந்து எப்போதும் உப்பிப் போயிருப்பதையும் வேதனையோடு பார்த்துக் கொண்டே இவள் உள்ளே சென்றாள்.
வசீகரனை கைதுசெய்து போனபின்பு வீட்டுச் சூழலே பெரிதும் மாறியிருந்தது. அவர்கள் வசீகரனை வெளியே எடுப்பது, இராணுவக் கொடுமைகள், அரசாங்க த்தின் அலட்சிய நடவடிக்கைகள் பற்றியே இப்பொழுது சுற்றிச்சுற்றிப் பேசினார்கள்.
ஜீ.ஏ யிடம் போய் விசாரித்தபோது, அவனை ஆனையிறவு முகாமில் வைத்திருப் பதாகக் கூறினார்கள். அங்கு போய்க் கேட்டாலோ அவனை கொழும்புக்கும் பூசாவிற்கும் அனுப்பிவிட்டதாக மாறிமாறி கூறினார்கள். அலுத்துக் களைத்து தன் விதியை நொந்து சோர்ந்து போயிருக்கும் அவர்களுக்கு தானும் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடாதென்றும் அவர்களின் அந்த இக்கட்டான நிலை யில் ஆதரவாக தான் அருகில் இருக்கவேண்டும் என்ற பெண்மையின் இயல்பான புரிந்துணர்வில் அவள் தன் வாழ்க்கையை அப்படியே மாற்றிக் கொண்டாள்.
இப்பொழுது நிர்மலாவின் திருமணப் பேச்சுப் பற்றி வீட்டில் கதையே எழுவதில்லை. அதற்கான சூழ்நிலை வீட்டில் இல்லாதது மாத்திரமல்ல வசீகரன் கைதுசெய்யப் பட்ட சேதி அறிந்த இரண்டு நாட்களின் பின் மாப்பிள்ளை வீட்டார் ஆறுதல் சொல்லுமாப்போல வந்து, கூடவே அந்தக் கல்யாணத்தை தாம் விரும்பவில்லை என்ற சேதியையும் நாசூக்காகப் போட்டு வைத்தார்கள்.
~~பயங்கரவாதிகள் இருக்கும் வீடுகளில் சம்பந்தம் செய்தால் பிறகு தங்கள் குடும்பங்களுக்கும் ஆபத்தாம். அவர்கள் வீடுகளிலும் தேடுதல் செய்து இராணுவம் அட்டகாசம் செய்யுமாம்||
அந்த வேதனைகளைப் பொருட்படுத்த முடியாத அளவிற்கு அவர்கள் வசீகரன் நினைவாகவே ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
நிர்மலா அந்தத் துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்துவிட்டு தன்னை சுதாகரித்துக் கொண்டு கூறினாள்,
~~அம்மா! நாளைக்கு பெண்கள் எல்லாம் ஊர்வலமாய்ப் போய் கச்சேரியில் ஜீ.ஏ யிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கப் போறாங்கள்|| என்று கூறியவள், அவள் முகத்தில் படரும் சலனத்தை எடைபோட்டுக் கொண்டே சொன்னாள்,
~~அநியாயமாக கைதுசெய்து விசாரணையில்லாமல் சிறைவைக்கப் பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யச் சொல்லித்தான் கோரிக்கை||
அம்மா ஒரு செய்தியாட்டம் அதைக் கேட்டாள். அந்த பிரசுரத்தைப் படித்துவிட்டு அப்பாவிடம் நீட்டினாள்.
நிர்மலா அவள் பெற்றோரை உற்றுப் பார்த்தாள். வசீகரனை கைதுசெய்து கொண்டுபோன ஆரம்ப காலத்தில், அவனை அநியாயமாக கைதுசெய்தே வைத்திருக்கிறார்கள் என்றே அவர்கள் நம்பியிருந்தார்கள். அவனுக்கும் இயக்கங் களுக்கும் தொடர்பே இல்லை என்ற எண்ணத்தில் இது ஒரு விபத்து மாதிரி என்றே கருதினார்கள். ஆனால் நிர்மலாதான் அவனுக்கு இயக்கத்தோடு இருந்த தொடர்பை உறுதிப்படுத்திக் கூறினாள். அவனை கைதுசெய்து கொண்டு போனது நியாயமோ இல்லையோ அவன் இம்மாதிரி இயக்கங்களோடு சேர்ந்து ஈடுபட்டு வந்தது நியாயம் என்று அவள் வலியுறுத்தினாள். அம்மா பேயறைந்தவள்போல அதை மூச்சுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளால் சிறையிலிருக்கும் மகனை ~ஏன் உனக்கு இந்த அடாத்து வேலை| என்று திட்டமுடியவில்லை. வாய்க்கு வந்தபடி அரசாங்கத்தையும் இராணுவத்தையும் சபித்துக் கொட்டுவதைக் கேட்டு நிர்மலா திருப்திப்பட்டுக் கொண்டாள்.
எந்தத் தாயினால் தன் பிள்ளைகளின் நடத்தைகளை நியாயப்படுத்தாமலிருக்க முடியும்.
நிர்மலாவே தொடர்ந்தாள், ~~அம்மா இன்றைக்கு இம்மாதிரி அண்ணாக்களை கைதுசெய்வது எங்கள் வீட்டில் மாத்திரம் நடக்கவில்லை. இராணுவம் ஒரு நாளைக்கு ஐந்நூறு ஆயிரம் என்று விசாரணைக்கு எல்லா வீடுகளிலிருந்தும் அண்ணாக்களை பிடிச்சுக் கொண்டு போறாங்கள். அவர்களுடைய பெற்றோர்களும் உங்களைப் போலத்தான் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருப் பார்கள். அவர்கள் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தம்மாலானதைச் செய்யும் போது நீங்கள் மாத்திரம் சும்மா வீட்டில அடைஞ்சு கிடக்கிறதில நியாயம் இல்லை அம்மா||
அவள் ஒரு பிரசங்கியைப் போல டெலிவிசன் மேசையில் ஒரு கையை ஊன்றிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.
அம்மா அவளை அப்படியே வெறித்துப் பார்த்தாள்.
ஒரே மகள் என்ற செல்லத்தில் எவ்வளவு செல்வாக்காக வளர்ந்தவள்.
சிறுவயதிலேயே எத்தனை பிடிவாதம்! எவ்வளவு சுயநலம்! அவளா இவள்!
தன்பொருட்களை யாரும் அந்த வயதில் தொட்டுவிட்டாலே போதும். சீறிப்பாய்ந்து மூர்க்கமாக அழுது விழுந்து ஒரு பிரளயத்தை ஏற்படுத்துவாள்.
எல்லோருக்கும் முதலில், எல்லோரிலும் சிறந்ததாக எப்பொழுதும் வேண்டும் என்று அவள் போடும் ரகளை.
அம்மம்மா! அந்த நிர்மலாவா இவள்!!
சிறையில் வாடும் அந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தன் சொந்த அண்ணாவாகப் பார்க்கிறாள்.
இது எல்லாம் இவளால் எப்படி முடிந்தது.
யார் இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள்.
பாவம் அம்மா!
ஒரு யுகப் புரட்சிபோல தமிழ்ப் பெண்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வெடித்துக் கிளம்பும் அந்த விடுதலை அலையின் வேகத்தை அவள் ஏனோ அறியவில்லை.
அம்மாவின் அந்த வெறித்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பிக் கொண்டே அவள் சொன்னாள்,
~~அம்மா! நாளை நீயும் அந்த ஊர்வலத்தில் போனால் என்ன. உன் பிள்ளைக்கும் சேர்த்துத்தானே அந்தப் போராட்டம் நடக்கிறது!||
அம்மா தலையை சரித்து அப்பாவை சோகமாகப் பார்த்தாள்.
அவரும் கண்களை விரித்து ~போய் வாவன்| என்பதுபோல தலையாட்டிவிட்டு அந்தப் பிரசுரத்தையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருந்தார்.
நிர்மலா குதூகலத்துடன் சிரித்துக் கொண்டாள்.
நாதன் அவசரஅவசரமாக அந்தக் கடிதத்தை பிரித்துப் படித்தான்.
அது சிறையில் இருந்து குழந்தைவேல் எழுதியது.
குழந்தைவேல் ஆறுமாதங்களுக்கு முன்பு இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர். மத்திய குழு அங்கத்தவரான அவர் பல முக்கிய பொறுப்புக்களைச் செய்துகொண் டிருந்த வேளையிலேயே பிடிபட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்பு எந்த உண்மைகளும், இடங்களும் வெளியே வராமல் இருந்ததால் எல்லோரும் அவரில் பெருமதிப்புக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைவேல் அந்த நீண்ட கடிதத்தை எப்படியோ நாதனுக்குக் கிடைக்ககூடிய வகையில் அனுப்பிவைத்திருந்தார்.
பரவசத்தோடு அதைப் படித்த நாதன் தன்னை மறந்து நின்றான்.
என் அன்புத் தோழர்களுக்கு!
இந்தக் கடிதம் உங்கள் கைகளுக்குக் கிடைக்கின்றதோ என்னவோ. நான் அப்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே எழுதுகின்றேன். நான் வெலிக்கடைச் சிறையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இருக்கிறேன். தோழர்கள் சாமியும் ஐயனும் கூட இங்கேதான் இருக்கின்றார்கள். நாம் இப்பொழுது இங்கு அனுபவி க்கும் வேதனை என்னவென்றால், நாம் எச்சரிக்கையாக இருக்கத் தவிறிவிட்டோம் என்ற வருத்தம்தான். இங்கு சிறையில் இருக்கும் எல்லாத் தோழர்களும் அதற்காக வருந்துகின்றார்கள். நாம் எம் மண்ணுக்கு உழைக்கும் வாய்ப்பை இழந்து இப்படி முடமாய்ப் போய் இருப்பதை நினைக்கத்தான் பெரும் வேதனையாக இருக்கின்றது.
இங்கு கைதாகி வரும் ஒவ்வொருவரும் விசாரணைகளின் போது அனுபவிக்கும் சித்திரவதை சொல்லிப் புரியமுடியாது. குட்டிமணி ஜெகனுக்கு கிடைத்த சித்திர வதைகள் எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர்ந்து நடக்கின்றன. அந்த சித்திர வதைகளின்போது நாம் இறுதிநேரம்வரை போராடி உண்மைகளைக் காப்பாற் றினோம் என்ற பெருமைதான் இன்னும் எங்களுக்கு மகிழ்சியூட்டும் ஒன்றாக இருக்கிறது.
ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் என் விசாரணைகள் முடிவுற்றன. அதுவரை விசாரணை என்றால் சித்திரவதைதான். என்னாலோ மற்றும் தோழர்களாலோ ஒரு குற்றச்சாட்டும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அவர்களால் சித்திரவதைகள் மூலம் எங்கள் கையொப்பங்களைப் பெறமுடியவில்லை. எங்கள் மீது வழக்கு ஏதும் இல்லை. ஆனால் நாம் விடுதலையாகி வெளியே வருவோமோ என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
வெளியில் கலவரங்கள் நிகழும் வேளைகளில் எல்லாம் எங்களுக்கு உறக்கமே வராது. ஜுலை, 83 சிறைச்சாலைப் படுகொலைகள் மீண்டும் தொடராமலா போய் விடும். நாம் அதற்கு அஞ்சவில்லை. குட்டிமணி, தங்கத்துரை, டாக்டர் ராஜசுந்தரம் இருந்த சிறைக்கூடங்களுக்குள் தான் நாங்களும் அடைத்து வைக்கப்பட்டிருக் கிறோம் என்பதை இங்கு சிறைச்சாலை அதிகாரிகள் எங்களைப் பயப்படுத்துவது போல கூறுவார்கள். ஆனால் அவர்கள் அப்படிக் கூறும் ஒவ்வொரு வேளையிலும் நாம் எத்தகைய பலம் பெறுகிறோம் தெரியுமா? அதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
இங்கு புதிது புதிதாக இளைஞர்கள் கைதாகி வந்து அனுபவிக்கும் சித்திர வதைகள் நாங்கள் அனுபவித்ததிலும் மோசமாக இருக்கிறது. அவர்கள் நடக்க இயலாமல் அடிபட்ட பாம்புபோல ஊர்ந்து திரியும் பொழுதெல்லாம் நீங்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்ற ஆத்திரமே வரும்.
அந்த இளைஞர்கள் கூறும் தகவல்களிலிருந்து நீங்கள் அங்கு செய்யும் வேலை களையும் , முன்னேற்றங்களையும் கூட எங்களால் அறிய முடிகிறது. உங்கள் கடின உழைப்பை மிக அவதானமாக வழங்குங்கள். எவரும் பிடிபட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.
இங்கு கைதாகி வரும் தோழர்கள் அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெகு சீக்கிரமாகவே ஐக்கியமாகி விடுகின்றார்கள். இந்த ஐக்கியத் தைப் பார்க்கும் எங்களுக்கு ஏன் இன்னும் உங்களால் ஐக்கியப்பட முடியாமல் இருக்கிறது என்ற கேள்வியே எழுகின்றது. வரட்டுக் கௌரவங்களையும் சுயநலங் களையும் விடுத்து தமிழ் மக்களின் விமோசனம் கருதி ஐக்கியப்பட்டுப் பணிபுரியும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துங்கள். யுத்தத்திற்காக மாத்திரம் தான் நாம் ஐக்கியப்படவேண்டும் என்றில்லை. எங்கள் ஒவ்வொரு தாபனத்தையும் உறுதியாக பலமாக வளர்ப்பதற்கும் இந்த ஐக்கியம் அவசியப்படுகிறது.
கடலில் நிறையவே மீன்கள் இருக்கின்றன. எவரும் மனம் வைத்தால் எவ்வளவு மீனும் பிடிக்கலாம். நாங்களோ அதற்குத் தயாரில்லை. மற்றவர் பிடித்த மீனிலேயே எங்கள் கவனம் இருக்கிறது. அவர்கள் பிடித்த மீனை நாம் எப்படி கைப்பற்றுவ தென்றே போட்டிபோடுகிறோம். சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டிருக்கிறோம். இதனால் எந்தப் பலனும் ஏற்படப்போவ தில்லை. சிறையில் இருக்கும் எமக்கு நீங்கள் வழங்ககக்கூடிய ஆறுதல் செய்தி 'நாம் அனைவரும் ஐக்கியப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்பதுதான்.
நான் வீட்டிற்கு கடிதம் எழுதி அநேக நாட்கள் ஆகிவிட்டது. அந்தக் கடிதங்கள் கிடைத்தனவோ தெரியாது. நேரம் இருப்பின் வீட்டிற்குப் போய்ச் சந்தியுங்கள். மற்ற தோழர்களின் வீடுகளுக்கும் தான். எல்லோரையும் இந்தப் போராட்டத்தில் இழுத்துவிடுங்கள்.
உங்களால் முடியுமென்றால் எம்மை சிறைமீட்கப் பாருங்கள். இதனால் அதிக இழப்பு ஏற்படுமென்றால் அதை விட்டுவிடுங்கள்.
நாம் உறுதியாக இருக்கின்றோம். எந்தத் துன்பத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொள்வோம். எங்களுக்கு இருக்கும் பலமே நீங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்கிறீர்கள் என்ற நம்பிக்கைதான்.
நாங்கள் போட்ட அத்திவாரத்தில் நீங்கள் பலமான அரணைக் கட்டி முடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்வீர்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
இப்படிக்கு,
தோழமையுடன்
குழந்தைவேல்.

-----------------------------------------------------------

17


அந்தச் சூழல்தான் என்னமாய் மாறிவிட்டது.
சொந்த பந்தங்களைப் பிரிந்து தமக்கென்று ஒரு வாழ்வே வேண்டாமென்ற
அர்ப்பணிப்பில் இந்தப் போராட்டக் களத்தில் குதித்தவர்கள், வந்த இடத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவரில் ஒருவர் என்னமாய் அன்பைப் பொழிந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் இப்போது நாதியற்றுத் தவித்து நின்றார்கள்.
எங்கெங்கோ பிறந்தவர்கள் எல்லாம் அந்தக் கொஞ்சக் காலத்திற்குள் என்னமாய் இறுக்கமாக நெருக்கமாக ஒருவரில் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் தனித்தனியாக அந்தக் குட்டைக்குள்ளேயே மூழ்கிக் கிடந்தார்கள். தட்டிப் பறித்து உரிமையோடு ஒரே தட்டில் உண்டு மகிழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கொடுக்கவும் மனமின்றி வாங்கவும் பயந்து தத்தம் பாடாகத் தனிமையில் வெந்து கருகிக் கொண்டிருந்தார்கள்.
ஆத்மாவை இழந்துபோகும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கும் புரிந்து கொள்ள முடியாத முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்துகொண்டார்கள். அவர்கள் இதய ஒலியாக முழங்கிக் கொண்டிருந்த புரட்சி, விடுதலை, தமிழீழம், கழகம் எல்லாம் அவர்களை விட்டு அந்நியப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் வெறுத்தொதுக்கிய சினிமா, கேளிக்கை எல்லாம் இப்பொழுது அவர்கள் வெந்து கிடக்கும் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக மாறிக்கொண்டிருந்தது. யாருக்கும் புரியாத புதிய ஒலிகளை ஒவ்வொருவரும் தத்தம் பாணிகளில் மீட்டிக் கொண்டிருந் தார்கள்.
இரண்டு பேர் பேசும்போது மூன்றாமவர் வந்துவிட்டால் இவர்கள் தனக்கெதிராக என்ன சதி செய்கிறார்கள் என்று மூன்றாமவர் குழம்புவார். அவர்களைப் பிரிக்கா விட்டால் இவருக்கு தூக்கம் வராது.
அந்த நரக வேதனையை யாராலும் சகிக்க முடியவில்லை.
ஆனால் அவர்கள்தான் தங்கள் சந்தேகத்தாலும் பயத்தாலும், சுயநலத்தாலும் அந்த நரகத்தையே காப்பாற்றி வந்தார்கள்.
செயலதிபரும், கலாதரனும் தங்கள் தரத்திலும், மதிப்பிலும் இருந்து மிக மோசமாகவே விழுந்து போனார்கள். அதைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் தங்கள் கண்ணில் படும் ஆட்கள் ஒவ்வொருவரிடமும் மாறிமாறி பரஸ்பரம் குற்றஞ்சாட்டியதால் மேலும்மேலும் அந்த சகதிக்குள்ளேயே புரண்டு விழுந்தார்கள்.
இந்தச் சாக்கடை நாற்றம் வெளியிலும் பரவியது. எல்லோரும் இவர்களைக் கண்டால் விடமாட்டார்கள். அக்கறையோடு விசாரிப்பார்கள்.
~~செயலதிபருக்கும் கலாதரனுக்கும் பிரச்சினையாமே|| அந்தக் கேள்வியில் கவலை யுமிருக்கும், கிண்டலுமிருக்கும், சுவாரசியமும் இருக்கும்.
எல்லோருக்கும் இவர்கள் ஒரே பதிலைத்தான் கூறுவார்கள்.
~~இல்லை அப்படியொன்றுமில்லை. அது சும்மா வதந்தி||
கழகத்தில் இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தவர்களால் அதைத்தான் கூற முடிந்தது. அந்த நம்பிக்கையும் இல்லாமல் போனவர்கள் சோர்வோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் வந்துவிடுவார்கள்.
இவ்வளவு மோசமாக நிலைமை மாறும் என்று எவரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
செயலதிபர் இப்பொழுது முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டார். அவரை அப்படி மாற்றிக் கொண்டிருக்கும் உளவு ஸ்தாபனத்தவர்கள் அடிக்கடி கந்தோருக்கு வந்து ராஜதர்பார் நடத்திச் செல்வார்கள்.
அந்த உளவு ஸ்தாபனம் இப்படி செல்வாக்குப் பெற்று நிமிர்ந்து நின்று கழகத் தையே மிரட்டும் அளவுக்கு வளரும் என்று யாரும் கற்பனை பண்ணியிருக்க வில்லை.
அதைப் பற்றி யாரும் சந்தேகப்பட முடியாது!
அப்படி சந்தேகம் வந்தாலோ அவர்கள் அடுத்த நாளே காணாமல் போவார்கள். கழகத்தை உடைப்பதற்கு சதி செய்தவர்கள் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப் படுவார்கள். விசாரணை என்றால் சித்திரவதை. சித்திரவதை என்றால் மரணம்.
மரணமான பின்பு தப்பியோடிவிட்டான் என்ற செய்தி.
எல்லாமே விடுதலையின் பெயரால், தலைமை விசுவாசம் என்ற பெயரில் கச்சிதமாக நடந்து முடியும்.
யார்தான் இதை எதிர்பார்த்தார்கள்!
கழகத்தில் இதுநாள்வரை கட்டிக்காத்து வந்த கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் இவையெல்லாம் இப்பொழுது எங்கே போயிற்று.
இந்த மாயமெல்லாம் ஒரு நாள் பொழுதுக்குள் நடந்து முடியும் அளவுக்கு எப்படி சாத்தியமாகும்.
தனிமனித தலைமையா இப்படி இவ்வளவு சுலபமாக கோலோச்ச முடிந்தது.
இந்தத் தவறு இன்று நேற்று ஏற்பட்டதா!
கருவிலே உருவானதா!
சங்கர் சொல்லமுடியாத வேதனையில் அந்தச் சாக்கடையையே சுற்றிச் சுற்றி வருவான். கந்தோரில் இருக்கும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க இப்பொழுது நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டார்கள்.
பத்மா, றூபியைக் கண்காணிக்க விசேசமாக ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அனுப்பி வைத்தார்கள்.
எல்லோரும் சோகத்தோடும், கலக்கத்தோடும் அணுஅணுவாக தமது ஆத்மாவை இழந்துகொண்டிருந்தார்கள்.
இந்த வேதனைகளின் மத்தியில்தான் சங்கருக்கு அந்த அதிர்ச்சித் தகவல் கிட்டியது.
~~ப10பாலன் முகாமில் இருந்து தப்பிவிட்டானாம். அவனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உளவுப்படை பரபரத்துத் திரிகிறதாம்.||
தருமன் சொன்ன அந்த அதிர்ச்சிச் செய்தியைக் கேட்டு அவன் விக்கித்து நின்றான்.
அரசியல் வகுப்புக்கென்று வந்த நடராசா மாஸ்டர் தூண்டிவிட்டு கிளர்ச்சி செய்தவர்கள் நாற்பது பேராம். அவர்களை விசாரித்தவிட்டு இருபது பேர்களை மாத்திரம் திரும்பவும் முகாமில் கொண்டு வந்து விட்டார்கள். மீதி ஆட்களுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை.
திரும்பவும் முகாமிற்கு வந்தவர்களில் ஐந்து பேர் முழுப் பைத்தியங்களாகி அந்த முகாமில் அலைந்து திரிந்தார்களாம். அவர்களில் ப10பாலனும் ஒருவன். முன்னாள் விடுதலைத் தாகம் கொண்ட அந்தப் பைத்தியங்கள் இப்பொழுது பரிதாபமாக எல்லோர் காலிலும் விழுந்து அழுது புரண்ட காட்சி அந்த முகாமில் இருப்பவர்களை நடுநடுங்கச் செய்தது.
அவர்கள் ஐந்து பேரும் ஒரேமாதிரித்தான் நடந்து கொண்டார்கள்.
கொட் றோய், டெனிம் உடுப்புகளையோ, பெரிதாக தாடி விட்டவர்களையோ கண்டால் அவர்கள் கிலிகொண்டு அலறுவார்கள்.
மோட்டார் சைக்கிளின் இரைச்சலைக் கேட்டதுமே விரல்கள் கிடுகிடுத்து நடுங்க, உடம்பு வியர்வையால் நனைய, துடிதுடித்து நெளிவார்கள்.
அவர்களை பரிதாபமாகப் பார்த்து கலங்கிநிற்கும் மற்றவர்கள் தமக்கும் அதுமாதிரி ஆகிவிடக் கூடாது என்ற அச்சத்தில் மிக அவதானமாகவே தங்கள் ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைப்பார்கள்.
அந்தப் பைத்தியங்களின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் அவர்களை வைத்திய சாலைக்கு அனுப்பியபோதுதான் ப10பாலன் தப்பி ஓடினானாம்.
அதன் பின்புதான் அவர்களுக்கு அந்த சந்தேகம் வந்ததாம்.
~~ப10பாலனுக்கு உண்மையிலேயே பைத்தியமா அல்லது அப்படி நடித்தானா||
அதேசமயம் மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வந்தது.
~~ப10பாலன் உண்மையில் தப்பிவிட்டானா அல்லது கொல்லப்பட்ட பின்பு இப்படி கதைவிடுகிறார்களா||
தருமன் முழு விபரங்களையும் ஒப்புவித்துவிட்டுச் சொன்னான்,
~~ப10பாலன் உண்மையில் தப்பிவிட்டான் என்றுதான் நான் நம்புகிறேன். ஏனென்றால் அவனை உளவுப்படை இப்பொழுது கடுமையாக தேடிக் கொண்டிருக்கிறது.||
சங்கருக்கு ஒருபுறம் ஆறுதலாகவும், கலவரமாகவும் இருந்தது.
ப10பாலன் அந்த மிருகங்கள் கையில் சிக்காமல் தப்பிவிட வேண்டுமே என்ற கவலையே இப்பொழுது அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
பாவம் அவன்!
அவன்தான் என்ன செய்வான்!
இதைவிட வேறு என்ன நல்ல முடிவை அவன் எடுத்திருக்கக் கூடும்.
முதல்நாள் தங்கைகளின் பெயரைக் கேட்டதுமே கலங்கிக் கண்ணீர்விட்ட அந்த குழந்தை மனதால் இந்தக் கொடுமைகளை தன்னந்தனியனாக எதிர்த்து நின்று வெல்ல முடியுமா அல்லது வேரோடு சாய்வானா.
தருமன் விடைபெறும்போது மேலும் சொன்னான்,
~~நீ யாரையும் நம்பாதே. எச்சரிக்கையாக இரு||
கழகத்திற்கு எதிராகச் சதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கலாதரனை முதல் ஆளாக நிறுத்தியிருந்தார்கள்.
ஆரம்பத்தில் நடராசா மாஸ்டர் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, அவர் அந்தப் பிழைகளுக்கு தானே காரணம் என்று குற்றத்தை ஒத்துக் கொண்டார்.
பின்பு அவரை சித்திரவதை முகாமிற்குக் கொண்டுபோய் விசாரித்தபோது கலாதரன் தூண்டிவிட்டே இப்படியெல்லாம் தான் நடந்துகொண்டதாக கையெழுத்திட்டுக் கொடுத்தார். அந்த வாக்குமூலம் இப்பொழுது பகிரங்கமாக பலரிடம் காட்டப்பட்டு வந்தது.
கலாதரனை இன்னும் கைதுசெய்து விசாரிக்கவில்லை. அப்படிச் செய்தால் கழகத்திற்குள்ளும் வெளியிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் அந்த முயற்சியை அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் அவர் கழகத்தை உடைக்கச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை மாத்திரம் எல்லோரிடமும் கூறிவந்தார்கள்.
கலாதரனை கண்டித்தால் அல்லது கழகத்திலிருந்து வெளியேற்றினால் யார் யாரெல்லாம் சத்தம் போடுவார்களோ அவர்கள்மீது உளவுப்படையின் கவனம் திரும்பியிருந்தது. அவர்களும் கலாதரனோடு சேர்ந்து சதி செய்தார்கள் என்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பலர் கைதுசெய்யப்பட்டார்கள்.
அவர்கள் எல்லோரும் உடனடியாக ~கலாதரனின் ஆட்கள்| என்ற முத்திரை குத்தப்பட்டார்கள். தமக்கும் அப்படியொரு முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஒவ்வொருவரும் மிக அவதானமாக நடந்துகொண்டார்கள். சிலர் விருப்பமில்லாவிட்டாலும் அந்த ஆபத்திலிருந்து தப்புவதற்காக கலாதரனை திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். செயலதிபரை ~பெரியய்யா| என்று வாய்நிறைய அழைக்க சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டார்கள்.
சங்கர் அந்த வாழ்விலிருந்து தற்காலிகமாகவேனும் மீட்சி பெறவேண்டி சினிமா தியேட்டர்களைச் சுற்றிவருவான். அவன் கவனத்தை ஈர்க்க மறுத்த சினிமா சுவரொட்டிகள், விளம்பரங்கள் எல்லாம் இப்பொழுது பலமாகக் கவர்ந்தது. பத்திரிகையைப் பிரித்தால் புதிதாக ஏதும் திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறதா என்று தேடிப் பார்ப்பான்.
அந்த சோகமான வாழ்வில் அவள் சுகமான நினைவொன்றே அவனுக்கொரு பற்றுக் கோடாக இருக்கும்.
நிர்மலா!
இப்பொழுது அவள் துணை அவனுக்கு அதிகமாகவே தேவைப்பட்டது.
நாள்ப10ராக அவளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பது அவனுக்கு அவசியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. அந்த வேதனைகளை மறக்க அவன் இன்ப கரமான நினைவுகளில் சஞ்சரிப்பான்.
அவள் தனக்களித்த அந்த ஐம்பொன் வளையல் தொலைந்துபோனது இப்பொழுது தான் அவனுக்கு அதிக வேதனையைக் கொடுத்தது. தனது கவலையீனத்திற்காக ஒருபொழுதும் இல்லாத வகையில் மோசமாக வருந்துவான்.
அவளை தான் மோசமாக வருத்தியதாகக் கழிவிரக்கப்பட்டு தன்பாட்டிற்கு குழம்பித் தவிப்பான்.
அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாமல் முரட்டுத்தனத்துடன் தன் காதலை வெளிப்படுத்திவிட்டேன் என்ற குற்ற மனம் இடையிடையே பேதலிக்கும்.
அவளை ஏதாவது சினிமா, ~பார்க்| என்றெல்லாம் கூட்டிக் கொண்டுபோய் அவளை உற்சாகமூட்டி மகிழ்ச்சிப்படுத்தத் தவறிவிட்டேன் என்று மனம் வேதனையில் விம்மிப் பொருமும்.
நேற்றுத்தான் அவள் கடிதம் ஒன்று வந்தது!
வசீகரன் பிடிபட்ட பிறகு வீட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் அம்மா அப்பாவின் முன்னேற்றங்களையும், தான் சங்கரின் வீட்டிற்குப் போய்வருகிற புதினங்களையும் எழுதியிருந்தாள்.
கழகத்தின் வளர்ச்சி பற்றியும் விரைவில் தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் சுடர்விடுகிறதென்ற உண்மையை அவள் எழுதியபொழுது இவன் நீரில் மூழ்கித் தத்தளிப்பவன்போல திக்குமுக்காடி சங்கடத்துடன் ஜீரணித்துக் கொண்டான்.
நாதனிடமும், வீட்டில் இருந்தும் கடிதங்கள் ஏனோ இன்னும் வரவில்லை. அவன் அவர்களிடமிருந்து ஆவலோடு பல சேதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
தளத்திலிருந்து பிரகாசம் கொண்டுவந்த சேதிகள் எல்லாம் பெரும் குழப்பமாகவே இருந்தது.
பிரகாசம் தன் விசாரணை அறிக்கையைக் கம்பீரமாக சமர்ப்பித்துக் கூறினார்,
~~தளத்திலும் கழகத்தைச் சீரழிப்பதற்கு திட்டங்கள் நடக்கிறதாம். எல்லாம் கோபாலனின் அனுசரணையுடன் நடப்பதால் குற்றவாளிகளை இனங்காண்பதில் சிக்கலாக இருக்கிறதாம்.||
பிரகாசம் பற்றி சங்கருக்கு எப்பொழுதும் சந்தேகம்.
அவர் ஒருபொழுதும் உண்மையைத் தேடுபவர் இல்லை. உண்மைக்காக வாதாடு பவர் இல்லை. தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ என்ன சொல்ல வேண்டுமோ அதை மாத்திரம் தந்திரமாக கண்டுபிடித்துச் செயல்படுவார்.
தான் ஒரு மார்க்சியவாதியாகத் தம்பட்டமடிக்கும் அவர் ஒரு வெற்று டப்பாதான். டமாரம் மாதிரி யாருக்காகவாவது ஒலி எழுப்பப் பயன்படுவாரேயன்றி சுயமாக எதுவும் வராது.
தளத்தின் நிலைமைகள் பற்றிய அவரது மதிப்பீட்டினால் சங்கர் வெகுவாக குழம்பிப் போயிருந்தான்.
அந்தக் குழப்பத்தின் மத்தியில்தான் பிறேம் வந்தார்.
மத்தியகுழு உறுப்பினரான பிறேம் எட்டு மாதங்கள் லெபனானில் இராணுவப் பயிற்சிக்காகப் போயிருந்தார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு உற்சாகமாகத் திரும்பிய அவர் கழக நிலைமைகளைப் பார்த்து கதிகலங்கி நின்றார்.
அவர் உற்சாகம் எல்லாம் அப்படியே தளர்ந்து போயிற்று.
அவரால் எதையும் நம்ப முடியவில்லை.
கழகம் இவ்வளவு வேகமாக சீரழிந்து செல்லும் என்று அவர் ஒருபொழுதும் கற்பனை பண்ணியிருக்கவில்லை. அதைத் தடுத்து நிறுத்தி அதற்குப் புத்துயிர் ஊட்டவேண்டும் என்று துடிதுடித்த அவரிடம் அவர்கள் மோசமான அந்தத் தகவல்களையே கொட்டிக் குவித்தார்கள்.
உளவுப்படை ஆதாரமும், ஆய்வும் இன்றி தம்பாட்டிற்கே அந்த வசவுகளையும் பொழிந்து தள்ளினார்கள்.
~~கலாதரன் பதவி ஆசை பிடித்தவர். அதனால்தான் முகாமில் இப்படி குழப்பம் விளைவித்தவர்.||
~~கலாதரன் ஒரு வேலையும் செய்வதில்லை. சும்மா எல்லோருடனும் கதைத்துக் கொண்டுதான் இருப்பார். பெரியய்யாதான் இரவுபகலா வேலைசெய்யிறது.||
~~கலாதரனுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று கவலை. அதனால்தான் இவ்வளவு பொறாமை||
~~மத்தியகுழு அங்கத்தவர்களிடமே கழகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் கதைத் திருக்கிறார்.||
~~கழகத்திற்குள் தனக்கென்று ஒரு குழுவை வைத்துச் செயல்பட்டிருக்கிறார்.||
பிறேம் வேதனையோடு இவைகளை கேட்டுக் கொண்டு நிலைமைகளைச் சீர்செய்வ தற்கு ராமநாதன் ஒத்துழைப்பாரோ என்று அவரை அணுகினார்.
உளவுப்படை காட்டிய அந்த நிர்வாண கோலத்திற்கு ராமநாதன் ஆடை கொடுத்து நாகாPகமாக்கப் பார்த்தார். மேலதிகமாக ஒரு குற்றச்சாட்டையும் தன் பங்கிற்கு முன்வைத்தார்.
~~கலாதரன் என் தனிப்பட்ட நடத்தை பற்றி கண்டவர்களிடமெல்லாம் கதைகளைப் பரப்பியிருக்கிறார்.|| ஒரு அப்பாவிபோல முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ராமநாதன் கூறவும் பிறேமுக்கு சுள்ளென்றது.
அவரும் ஒன்றும் புரியாதவர்போலக் கேட்டார்,
~~கலாதரன் உம்மைப் பற்றி என்ன கதைத்தவர்.||
ராமநாதனுக்கு அது பெரும் தர்மசங்கடமாகிவிட்டது. ஊரறிந்த அந்த உண்மை களை தன் வாயாலேயே அவருக்குக் கூறவேண்டுமா.
அவர் குழம்பிப்போய் திருதிருவென்று விழித்தார்.
அந்த அக்கவுண்டன் மனைவியோடு இவ்வளவு நாளும் கள்ள உறவு வைத்துக் கொண்டிருந்த ராமநாதன் இப்பொழுது அவர் மகளுடனும் சல்லாபம் புரியத் தொடங்கிவிட்டார்.
கழகத்திற்குள் இதுபற்றி கசமுசாவென்று பேசுவது மாலைநேரச் சிற்றுண்டிக்குப் பின் வரும் சுவையான உரையாடலாகிவிட்டது.
பிறேம் செயலதிபரைச் சந்தித்தபோது இதுவரை அவருக்குக் கூறப்பட்ட விபரங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை செயலதிபர் பட்டென்று புரிந்து கொண்டார்.
கலாதரனையும் கூப்பிட்டு ஒரே மேசையில் எல்லாப் பிரச்சினைகளையும் கதைத்துப் பேசி முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று பிறேம் விடாப்பிடியாக நின்றார்.
செயலதிபர் நாகாPகமாக பிறேமை முகங்கொடுத்தார்.
~~இந்த நிலை ஏற்பட்டதை நினைக்க எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது. கலாதரன் ஏன் இப்படி மோசமாக நடந்துகொண்டாரோ தெரியாது. அவர்மீது மத்தியகுழு அங்கத்தவர்கள் எல்லாம் கோபமாக இருக்கிறார்கள். அவரை கழகத்திலிருந்து விலக்கவேண்டும் என்று ஆத்திரப்படுகிறார்கள். நான் அதை விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் கோபம் அடங்கும்வரை, நிலைமை சுமுகமாக வரும்வரை மத்தியகுழுவைக் கூட்டாமல் வைத்திருக்கிறேன்.||
பிறேம் செயலதிபரின் கபடத்தனத்தை இனங்கண்ட வேதனையில் தலைகுனிந்தார். மத்தியகுழுக் கூட்டத்தை ஒத்திப்போடும் அவர் கலாதரன் கழகத்தைப் பிளவுபடுத்த சதி செய்தார் என்ற குற்றச்சாட்டை மாத்திரம் பரவலாக எல்லா இடங்களுக்கும் கொண்டுபோனதும் பிறேமுக்குத் தெரியும்.
செயலதிபர் மிக மோசமாக முகத்தை வைத்துக்கொண்டு கலாதரன்மேல் குற்றச் சாட்டொன்றையும் மேலதிகமாக பிறேமிடம் கூறினார்,
~~நான் இந்த நெருக்கடிக் கட்டத்தில் என் திருமணத்தைப் பற்றியே யோசிக்க வில்லை. ஆனால் கலாதரன் வேண்டுமென்று தமிழீழத்தில் இருந்த என் காதலியை இங்கு வரவழைத்து எனக்குக் கட்டிவைத்தார். என் புகழை குறைக்கவேண்டும் என்று இப்படி திட்டமிட்டுச் செய்திருக்கிறார்||
பிறேம் வைத்த விழி மாறாமல் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
செயலதிபர் இவ்வளவு கேவலமாக தன்னைப் பாதுகாக்க சாக்கடையில் கூச்ச மின்றி முகாமிடும் வேதனையைத் தாங்கமாட்டாமல் தலையைக் குனிந்துகொண்டே எழுந்து சென்றார்.
அவர் எழுந்து வெளியேறியபோது அவரையும் கண்காணிக்கும்படி செயலதிபர் உளவுப்படைக்கு உடனடியாக அறிவித்தார்.
சங்கர் முதலில் அதை நம்பவில்லை.
ஆனாலும் நம்ப வேண்டியிருந்தது.
தருமன் கூறியது எதுவுமே இதுவரை பொய்யாகவில்லை. தருமனுக்கு அவனில் சந்தேகம் வராத ஒருவன் உளவுப்படையில் நண்பனாக இருப்பதால் பல செய்திகள் இடைக்கிடை வரும்.
~~கலாதரன் கந்தோருக்கு வரும் வழியில் வெடிகுண்டு எறிந்து கொலைசெய்யப் போகிறார்களாம். பழியை ... இயக்கத்தில் போடுவதாம்.||
இரகசியமாக அந்தத் தகவலை கலாதரனுக்குக் கூறி எச்சரித்தபோது வழமை போல காலை ஆட்டிக்கொண்டே கூறினார்,
~~நாம் இந்த விடுதலைப் போராட்டத்திற்கு வந்த நாளிலிருந்தே சாவை எதிர் நோக்கித்தான் வாழ்கிறோம். ஆனால் கழகம் இம்மாதிரி காரியங்களில் இறங்கும் என்று நான் நம்பவில்லை. ஏனென்றால் இந்த உண்மைகளை ஒருபொழுதும் மறைக்க முடியாதென்றும், அதன்பின் அரசியல் நடத்துவது என்பதே எவ்வளவு சிரமம் என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்.|| அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
இரண்டு நாட்களின் பின் கந்தோருக்கு அருகில் வெடித்த வெடிகுண்டு அந்த நம்பிக்கையைத் தகர்த்தது.
அதிகாலையில் அந்த வெடிகுண்டு வெடித்தபோது ஒரு பசுகூட இறந்து விட்டது. குப்பைத் தொட்டிக்கருகில் மேய்ந்து கொண்டிருந்த அந்தப் பசு அருகிலுள்ள பற்றைக்குள் வாயை வைத்தபோதுதான் அந்த வெடிகுண்டு வெடித்தது.
பசுவின் வாய் மூக்கு எல்லாம் சிதைவுற்ற நிலையில் அது கோரமாக முகத்தில் வழிந்தோடும் இரத்தத்தோடு அந்த அவலத்தை ஊரெங்கும் அலைந்த திரிந்து அறிவித்த பின்பே அது உயிரை விட்டது.
அஞ்சனக்காரனின் குறிசொல்லும் பாணியில் ராமநாதன் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தார். இறுதியில் ~~இது ... இயக்கத்தின் வேலையாகத்தான் இருக்கும். அவர்கள்தான் செயலதிபரைக் கொல்வதற்கு அந்த பம்சை ஒளித்துவைத்திருப்பார்கள்.||
பத்மாவுக்கு நடந்ததை ஊகிக்க முடிந்தாலும், கதைவிட்டுப் பார்த்தாள்.
~~அப்படியென்றால் அவர்கள் ஏன் அதை பற்றைக்குள் வைக்கவேண்டும். கையில் கொண்டு வரலாம்தானே. இது வேறுயாரும் ஊர்ச் சண்டியன்களுடைய வேலையாக இராதோ||. அவள் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டு காரியமாகக் கேட்டாள்.
~~இல்லை! இது ஊர்ச் சண்டியன்களின் வேலை இல்லை. நான் காலையில் போய் குண்டு வெடித்த இடத்தைப் பார்த்தேனே. இது இயக்கங்கள் தயாரித்த கிரனைட் தான் வெடித்தது. கந்தோரில் நாம் காவல் போடுவதால் அவர்கள் அதை அங்கேயே ஒளித்து வைத்து, திடீரென்று எடுத்துத் தாக்க வைத்திருப் பார்கள்.|| அவர் உறுதியாகக் கூறினார்.
~~இது செயலதிபரைக் கொல்ல வைக்கப்பட்டதில்லை|| என்று சொல்ல வாய் எடுத்தவள் பின் அந்தக் கதையை அப்படியே விட்டு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.
சங்கர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தனக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக அமைதியாக இருந்தான்.
பொலிஸ் வந்து செயலதிபரை வெடிகுண்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போனபோதும், இவன் சலனமேதுமின்றி அதை பார்த்துக் கொண்டிருந் தவன் அவசர அவசரமாக நாதனுக்கும், நிர்மலாவிற்கும் இரண்டு கடிதங்களை எழுதி தபாலில் சேர்ப்பித்த பின்பு ஓரளவு திருப்திப் பட்டுக் கொண்டான்.

------------------------------------------------------

18


நாதன் தலையை கவிழ்த்துக் கொண்டு மௌனமாக இருந்தான்.
அப்பா பற்களை நறுமி கண்கள் சிவக்க அவன் முகத்திற்கு நேராக
விரலை நீட்டிக்கொண்டு ஆவேசத்துடன் நின்றார். எதேச்சையாக அங்கு வந்த நிர்மலா அந்த மோசமான காட்சியைக் காண சகிக்கமாட்டாதவளாய் மலைத்துப் போய் தவித்து நின்றாள்.
அம்மா வாசலிலேயே நின்றபடி அந்தத் துர்ப்பாக்கிய சம்பவத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் குழம்பிப்போய் தடுமாறி நின்றாள்.
~~நீங்களெல்லாம் என்ன நினைத்துக்கொண்டு அரசியல் நடத்துறீங்கள். உங்களுக் கெல்லாம் கையில் ஒரு துப்பாக்கி கிடைச்சிற்றுதெண்டா அதிகாரம் பண்ணுற மமதை தானா வருகுது||
அப்பா முகம் கடுகடுக்க ஆக்ரோசமாகக் கத்தினார்.
அவன் அப்படியே சோகமாக இருந்தான்.
அவர் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் படபடவென்று அள்ளிக் கொட்டினார்.
~~நீங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தது மக்களைக் காப்பாற்றுவதற்கா? அல்லது மக்களைக் கொல்லுவதற்கா? ஒரு உயிரின் மதிப்பு என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியுமா? பொதுமக்களை ஆயுதம் காட்டி மிரட்டும் உங்க ளுக்கும் காடையர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது||
அவர் கோபத்தின் கனல் அவனை நிலைகுலையச் செய்து கொண்டிருந்தது.
அவன் பரிதாபமான கோலம் நிர்மலாவிற்கு மோசமான வருத்தத்தைக் கொடுத்தது.
அம்மா எதுவும் பேசாமல் கலவரத்தோடு விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நாதன் எதுவும் பேசவில்லை.
தனக்குள்ளேயே விம்மிப் பொருமிக் கொண்டிருந்தான்.
அப்பா அவனை ஏசும்போது அவன் குணநலன்களையோ சுபாவத்தையோ கண்டி த்து அந்த உணர்ச்சிகளைப் பங்கப்படுத்தாமலிருந்தாலும் அவன் தலைநிமிர்ந்து யாரையும் முகங்கொடுக்கும் தெம்பு இல்லாமலேயே இருந்தான். அவருடைய நியாயமான அந்தக் கோபத்திற்கு எந்த வார்த்தைகளால் பதிலளித்தாலும் அது அவரை ஏமாற்றுவதாகவே இருக்கும் என்று தன் மனச்சாட்சிக்கு துரோகம் இழைக்காமல் அவர் கேள்விக் கனல்களை அப்படியே தாங்கிக் கொண்டான். அவர் கோபம் தன்னிலாவது ஆறி அடங்கட்டும் என்ற பொறுமையில் அந்த சம்பவத்திற்காக அவனும் உள்ளூர வருந்திக்கொண்டு தனக்குள் அழுதான்.
காலையில் இளைய மகனை தோளில் தூக்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். நான்கு நாட்களில் அடித்த காய்ச்சலில் உலர்ந்துபோன அந்தப் பாலகனுக்கு கொடுத்த நாட்டு மருந்துகள் எந்த மாற்றத்தையும் கொண்டுவராததால் அவனை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார். நீண்ட நேரம் பஸ்வண்டிக் காகக் காத்திருந்தபின் வந்த ஒரு மினிபஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு ஏறி அமர்ந்தார். மினிபஸ் புறப்பட்ட வேகத்தில் உள்ளே பாய்ந்த குளிர்மையான காற்று வழிந்தோடும் வியர்வையை இதமாக ஆசுவாசப்படுத்திய சுகாபானுபவத்தில் அவர் சிறிது நேரம் தன்னை மறந்தார்.
பத்து நிமிட நேரத்திற்குள் வாகனம் திடீர் பிரேக்குடன் நின்றபோது திடுக்கிட்டு விழித்தார்.
வெளியே துப்பாக்கி இளைஞர்கள் நால்வர் வாகனத்தை மறித்து எல்லோரை யும் கீழே இறங்கச் சொன்னார்கள்.
நீண்ட நேரம் காத்திருந்த தம் அலுவல்கள் தடைப்படுகின்றதே என்ற எரிச்சலிலும் துப்பாக்கி சகிதம் இளைஞர்களைக் கண்ட பிரமிப்பிலும் வௌ;வேறு மனநிலைக்கு உள்ளானவர்களாக அவர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
ஒரு கிழவர் பழுப்பேறிய நாலு முழ வேட்டியை மடித்துக் கட்டியபடி கூன்விழுந்த உடம்பை நகர்த்தக் கஸ்டப்பட்டவராக ஒரு தள்ளாட்ட நடையுடன் இறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கையில் அரிசிப் பையை இறுகப் பற்றிக்கொண்டு மறு கையால் அகப்படும் ஏதாவதொன்றை தாவிப் பிடித்துக் கொண்டு ஆடிஅசைந்து மெதுவாக வந்தவர் கீழே இறங்கிய பின்னர் குழிவிழுந்த கண்களை இடுக்கிக் கொண்டு பொக்கை வாய்க்குள் மெதுவாக முணுமுணுத்தார்,
~~அரசாங்கத்தின் ஆக்கினை ஒருபுறம், பொடியள்ற ஆக்கினை மறுபுறம்.||
யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.
இளைஞர்களில் ஒருவன் சீறிப் பாய்ந்தான்.
~~அடே கிழவா! மரியாதையா இறங்கச் சொன்னால் நியாயமா கதைக்கிறாய்||
கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.
அந்தக் கிழவரை அவன் தள்ளிய வேகத்தைத் தாங்கமாட்டாமல் அவர் நிலை குலைந்துபோய் கீழே விழுந்து புரண்டார். அவர் கையில் இருந்த அரிசிப்பை நிலத்தில் கொட்டி மண்ணில் கலந்தது. மலங்க மலங்க விழித்த அவர் பரிதாபமான பார்வை கூடிநின்றவர்களை மிரளவைத்தது. அந்தக் காட்சியை யாராலும் சகிக்க முடியவில்லை.
சங்கரின் அப்பா தன்னை மறந்த ஆத்திரத்தில் கத்தினார்,
~~நீங்கள் விடுதலை இராணுவமா அல்லது காடையர் கூட்டமா? ||
அவர் எதற்கும் தயாராவனவர் போல் ஆக்ரோசமாகக் கேட்டார். குழுமி நின்றவர்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளானவர்களாக குழம்பி நின்றார்கள்.
அந்த சண்டமாருத கேள்வியை அந்த இளைஞர்கள் எதிர்பார்க்கவில்லை. துப்பாக்கியுடன் ஒருவன் பாய்ந்து முன்னே வந்தான். ரிவால்வரை அவர் நெஞ்சுக்கு முன்னால் பிடித்துக் கொண்டு கேட்டான்,
~~இப்போது நீர் ஏதும் கதைக்கப் போகிறீரோ||
அவர் இதை எதிர்பார்க்கவில்லை. திக்பிரமை அடைந்தவர் போல் ஒருகணம் தடுமாறித் திணறியவர் மறுகணம் தன்னை சுதாகரித்துக் கொண்டு அதே ஆவேசத்துடன் நெஞ்சை முன்னால் தள்ளிக் கொண்டு கத்தினார்,
~~இந்த துவக்குக்கெல்லாம் நான் பயப்படுகிறவன் இல்லை||
அந்த இளைஞனின் அடுத்த நடவடிக்கைக்கு முன்னால் சனக்கூட்டம் அவர்களை மொய்த்தது. அந்த இளைஞனின் தோளைத் தட்டி, ஆறுதல்படுத்தி இழுத்துப் போனார்கள். வேறு சிலர் இவர் கைகளைப் பிடித்து மறுபுறம் அழைத்துச் சென்றார்கள்.
பாதையோரத்தில் கேட்பாரற்று விழுந்து கிடந்த அந்தக் கிழவரோ தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்து, அந்த சம்பவங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற பாவனையில், கொட்டுண்ட அரிசியை கூட்டி அள்ளி பைக்குள் போட்டுக்கொண்டு தன்பாட்டிற்கே நடந்தார்.
அந்தக் களேபரம் அதிக நேரம் நீடிக்கவில்லை. துப்பாக்கி இளைஞர்கள் அந்த மினி பஸ்ஸை கடத்திக் கொண்டு வேகமாகச் சென்றதைத் தொடர்ந்து எல்லாம் அடங்கி ஒரு நிலைக்கு வந்தது. அதன்பின்பு சனக்கூட்டம் பீதியிலிருந்து விடுபட்டு வழமையான உணர்வுக்குத் திரும்பினார்கள்.
~~நீங்கள் நிலைமை தெரியாம பெடியளோட ஏன் வீணாக கொழுவுப்படுறியள்||
~~அவங்களட்ட இருக்கிற ஆயுதங்களைப் பார்க்கவே பயமா இருக்கு, அதுக்குள்ள அவங்களோட என்ன கதை வேண்டிக்கிடக்கு||
~~பொடியள்ள நல்லவையும் இருக்கு, மோசமானவையும் இருக்கு||
~~அவங்களும் அவசரத்தில் இப்படித்தான் கோபிப்பாங்கள். நாங்கள்தான் அனுசரி த்துப் போகவேணும்||
அவர்கள் ஆறுதலும் ஆலோசனையுமாகக் கூறிக்கொண்டு நின்றதை எரிச்சலோடு சகித்துக் கொண்டவர் அங்கிருக்கவே பிடிக்காமல் வந்த வேலையையும் விட்டுப் போட்டு தம்பியைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
பாதிவழியில் அட்டகாசம் செய்த அந்த இளைஞர்கள் கழக இராணுவத்தினர்தான் என்று தெரியவந்தபோது பதைபதைத்துத் துடித்தார். இதுநாள்வரை நம்பிக்கை யுடன் பெருமை பாராட்டிய கழகம் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ளும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சகிக்கமுடியாத சினத்தில் அப்படியே ஆவேசமாக அவன்மீது சீறிப்பாய்ந்தார்.
நாதன் தலையைக் கவிழ்த்தபடி அவர் ஆக்ரோசம் தணிவதற்கு வடிகாலாக அப்படியே குந்தியிருந்தான்.
~~என் மகனும் இம்மாதிரி மிலேச்சத்தனமான இராணுவத்தில் இருக்கிறான் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் விடுதலைப் போராளிகள் இல்லை. வெறிநாய்க் கூட்டங்கள். சங்கரை கழகத்தைவிட்டு விலகச் சொல்லிப் போட்டு உடனடியாக இங்கு வரச்சொல்ல வேண்டும்.||
அவர் அதே வேகம் குறையாமல் உறுமிக் கொண்டிருந்தார்.
ஒரு தந்தையின் கண்டிப்புக்குத் தலைவணங்கும் பாவனையில் அவன் தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தான். முகம் வேதனையாலும், வெட்கத்தாலும் கலங்கிப்போய் இருந்தது.
அவன் களையான முகத்தில் என்றுமே படராத சோகத்தை முதன்முதல் கண்டு கொண்ட துயரத்தை சகிக்கமாட்டாமல் நிர்மலா தலையை திருப்பிக் கொண்டாள்.
அம்மா தனக்குள் புழுங்கிக் கொண்டு அங்கேயே தன்னை மறந்து நின்றாள். அப்பா இப்படியெல்லாம் பேசுவது அவளுக்குமே ஆச்சரியமாக இருந்தது.
நீண்ட பிரளயத்தின் பின் அவர் அமைதியாக அடங்கிப்போய் வழமையாக உட்காரும் அதே நாற்காலியில் அமர்ந்து வழிந்தோடும் வியர்வையை துண்டால் துடைத்துவிட்டபோது அவன் எழுந்தான்.
தலையை மெதுவாக ஆட்டிக்கொண்டு எதுவும் பேசாமல் புறப்பட்ட அவனிடம் அப்பொழுதும் அதே கம்பீரத் தொனியில் அவர் ஆணித்தரமாகக் கூறினார்,
~~நாதன்! நான் உன்னைப் பற்றி எதுவும் கதைக்கவில்லை. உங்கள் அரசியல் போக்குப் பற்றித்தான் குறைப்பட்டேன். அது புரிந்துகொண்டால் சரி.||
அவன் அதையும் முகங்கொடுக்கும் தெம்பிழந்து பதில் பேசாமல் தலையை மாத்திரம் மீண்டும் ஒரு தடவை அசைத்துவிட்டு அங்கிருந்து சோர்வுடன் வெளியே றினான்.
வெளியில் சாத்தி வைக்கப்பட்ட பைசிக்கிள் சூடேறிப்போய் கைகளை சுள்ளென்று சுட்டது.
ஆழ்ந்த கவலையோடு அவன் கோபாலனை தேடிப் போய்ச் சந்தித்தான்.
கோபாலன் தன் மெல்லிய விரல்களால் உதடுகளை வருடிக்கொண்டே அவன் கதையை அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவன் சில சமயங்களில் பேசமுடியாமல் நா தழுதழுக்க தொண்டையை சரிசெய்யும்போது குழப்பமான பார்வையை அள்ளி வீசி அவன் துயரத்தில் பங்குகொண்டார். எல்லாம் கூறி முடிந்ததும் நாதன் கட்டுப்படுத்தமுடியாத துயரத்தில் குலுங்கக் குலுங்க அழுதான்.
அந்த கம்பீரமான இளைஞனின் பரிதாபமான கண்ணீர் அவரை திணறடித்தது. ஆதரவோடு அவன் தலைமுடியைத் தடவிக் கொடுத்தார். உதடுகளைக் கடித்துக் கொண்டு எதுவும் பேசத் தோன்றாமல் சிறிது நேரம் தன்னை மறந்து நின்றவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவன் கேட்டான்,
~~தோழர்! நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோமா. இந்தப் போராட்டத்தில் நாம் அந்த அராஜகவாதிகளிடம் தோல்வியைத்தான் காணப் போகிறோமா.||
அவன் பீறிட்டு வந்த அழுகையை அடக்கமுடியாமல் விம்மிக் கொண்டே கேட்டான்.
அந்தக் கேள்வி அவரையும் வெகுவாக உசுப்பிவிட்டது. அதே துயரம் அவர் மனதிலும் மெதுவாகப் படர்ந்து விரிந்தது.
சிறிது நேரம் மௌனமாக அவன் முகத்தையே பரிவோடு பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார்,
~~நாதன் அவசரப்படாதே. எனக்கும் நிலைமை விளங்குது. நாம் இனியும் விட்டு வைக்க ஏலாது. இரண்டில் ஒரு முடிவு காணவேண்டியிருக்கு. முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது எமது இராணுவத்திற்குள்ளே அட்டகாசம் மிகவும் மோசமா யிருப்பதை நானும் உணருகிறேன்.|| என்றவர் ஏதோ யோசனையின் பின்பு ~~தமிழகத்தில் பயிற்சிமுடிந்து புதிதாக வந்த இராணுவத்தினரிடம் இந்த அராஜகப் போக்கு அதிகமாகவே இருக்கிறது. தமிழகச் சூழல் எமது இராணுவத்தின் போராட்ட உணர்வை நன்றாகவே மோசம் செய்துவிடுகிறது.|| என்று தன்பாட்டிற்கே பேசிக் கொண்டார்.
இருவரும் ஆழ்ந்த யோசனையில் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தார்கள்.
கோபாலன் பின் அவனையும் அழைத்துக் கொண்டு இராணுவப் பொறுப்பாளர் வரதனை தேடிச் சென்றார்.
வரதனிடம் கழக இராணுவத்தின் அடாவடிப் போக்கு குறித்து வந்த முறைப்பாடு களை பலமுறை சொல்லி, அதைக் கட்டுப்படுத்தக் கேட்டபொழுதெல்லாம் அவர் அதைத் தட்டிக்கழித்தே வந்தார். கழக இராணுவத்தினர் இம்மாதிரி விசமத்தனங்களில் ஈடுபடுவதில்லை என்றும் கழக இராணுவத்திற்கு ஆதரவான சில தோழர்களால்தான் இம்மாதிரி அவப்பெயர் ஏற்படுகிறதென்று அவர் சமாளிக்க முனைந்தார். அந்த விசமிகளின் தொடர்புகளை உடனடியாக துண்டிக்கும்படி கோபாலன் கேட்டபோது அவர் முகம் சுழித்து நின்றார். அதன்பின் அவர் கோபாலனை முகங்கொடுப்பதையே தவிர்த்து வந்ததினால் நேரிலேயே போய்ச்; சந்திக்க வேண்டி புறப்பட்டுச் சென்றார்.
அந்த இடத்திற்குப் போனபோது வெளியே காவலுக்கு நின்ற ஒரு இளைஞன் வந்து இவர்களை அடையாளம் கண்ட பின்பு அறையைத் திறந்து உள்ளே இருக்கச் சொல்லிவிட்டு வரதனை அழைத்துவரச் சென்றான்.
அந்தச் சிறிய அறையில் இரண்டு கட்டில்கள் எதிரும் புதிருமாக போடப் பட்டிருந்தன. மூலையில் இறுக்கமாக கயிறு கட்டப்பட்டு உடுப்புகள் தாறுமாறாக தொங்கவிடப்பட்டிருந்தன. சினிமா சஞ்சிகைகளின் முன்பக்க நடுப்பக்க கவர்ச்சி நடிகைகளின் படங்கள் வௌ;வேறு கோலத்தில் சுவரெல்லாம் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. இரத்தக் கீறல்களுடனான புரூஸ்லீயின் கலண்டரும், மொகமட் அலியின் குத்துச்சண்டை புகைப்படமும் நடுவில் இருந்தன. வாசலுக்கு எதிர்ப்புற சுவரில் கழகத்தின் இலட்சினையும், அதன்கீழ் ~~சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்|| என்ற வாசகமும் பெரிதாக பென்சிலால் எழுதப்பட்டிருந்தது. நிலமெல்லாம் கொட்டிக் கிடந்த சிகரட் கட்டைகள் நீண்ட நாட்களாக அந்த அறை கூட்டிப் பெருக்காமல் விடப்பட்டதை அப்படியே சுட்டிக்காட்டியது. தூசியும் குப்பையும் கலந்து ஒரு துர்நாற்றம் சதா உள்ளே வீசிக்கொண்டிருந்தது. மேற்கூரையில் சுழன்று கொண்டிருந்த விசிறியின் வேகமான காற்றால்கூட அந்தப் புழுங்கி அவியும் பிணவாடை நாற்றத்தை விரட்டியடிக்க முடியாமல் இருந்தது.
அரைமணி நேரமாக அவர்கள் எதுவும் பேசாமல் அங்கேயே தவித்துக் கொண்டிருந்தார்கள்.
வரதன் உள்ளே வரும்போது இவர்களைப் பார்த்து அலட்சியச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, கைகளை பெரிய மனுச தோரணையில் அசைத்துக் கொண்டான். கதிரையை இழுத்துப் போட்டு கம்பீரமாக அமர்ந்தவன் ஒரு சிகரட்டை உருவி வாயில் செருகிக் கொண்டு பார்வையாலேயே இவர்களை குசலம் விசாரித்தான்.
கோபாலன் கால்களை இழுத்துக் கொண்டு காலையில் நடந்த அந்தச் சம்பவத்தை நேரிலேயே பார்த்தவர்போல விபரிக்கத் தொடங்கினார். நாதன் எதுவும் பேசாமல் அவர்கள் இருவரையுமே மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தான். சங்கரின் அப்பாவின் குமுறலையும் ஆவேசத்தையும் விளக்கி பொதுமக்கள் முகங்கொடுக்கும் இடர்ப் பாடுகளையும் தெளியவைத்து அவர் பேசி முடிக்கும்வரை முகத்தில் எதுவித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான் வரதன். அவர் பேசி முடிந்த பின்பு சிகரட் புகையை நன்றாக உள்ளுக்குள் இழுத்துவிட்டுக் கொண்டு கூறினான்,
~~தோழர்! உங்களுக்கு இராணுவ விசயங்கள் விளங்குவது கஸ்டமாக இருக்கிறது. சும்மா சொல்லிவிடுவீர்கள் வாகனங்களைக் கடத்த வேண்டாமென்று. ஆனால் நாங்கள் எவ்வளவு நெருக்கடியின் மத்தியில் இப்படி கஸ்டப்பட்டு வேலைசெய் கிறோம் தெரியுமா.|| அவன் முகத்தில் தெறித்த எரிச்சலை அப்படியே செருமித் துப்பிவிட்டுத் தொடர்ந்தான்.
~~நாங்கள் ஆயுதங்களை முருங்கைக்காய் மாதிரி சும்மா கையில் கொண்டுபோக ஏலுமா. ஆயதங்களை இடம்மாற்றி வைப்பதென்றால் அதற்கு வாகனம் தேவை. அதைக் கொண்டுபோவதிலுள்ள சிரமம் உங்களுக்குத் தெரியுமா. அந்த அவதியில் இப்படி தவறுதலாக யாரும் பொதுமக்களைத் தாக்கியிருக்கலாம். இதையெல்லாம் சமாளிச்சுப் போறதை விட்டிட்டு இதை ஒரு பிரச்சினையாக்கி வந்து நிக்கிறீங்களே.|| என்று அவன் ஏளனத்தோடு அவரைப் பார்த்து நகைத்தான்.
~~லலித் அத்துலத் முதலி பாதுகாப்புப் படையினரால் அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியது போலத்தான் நீங்களும் சொல் கிறீர்கள். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே அராஜகம்தான். இரண்டுமே பொதுமக்களுக்கு எதிரானதுதான். இரண்டுமே மனித உயிர்களையும் உணர்வுகளையும் மதியாத போக்குத்தான்.|| கோபாலனும் பட்டென்று பதில் சொல்லிவிட்டு கால்விரல்களை ஒன்றொடொன்று தேய்த்துவிட்டுக் கொண்டார்.
வரதன் பதில்பேச முடியாமல் ஒருகணம் தாமதித்தவன், வார்த்தைகளை நினைவு படுத்துபவன் போல மனதுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்துவிட்டு சொன்னான்,
~~நான் உங்களுடைய இந்தக் குதர்க்க நியாயத்திற்குப் பதில் சொல்ல வரவில்லை. வேறு ஏதாவது இருந்தால் கதையும்.||
அவர் அதை எதிர்பார்க்கவில்லை. இம்மாதிரி அவரிடம் யாரும் இதற்குமுன் பேசியதுமில்லை. அவனுக்கு விட்டுக்கொடுத்துச் சென்றாலும் பகைத்துச் சென்றா லும் மோசமான பாதிப்புக்களையே கொண்டுவரும் என்று குழம்பியவர் ஒரு முடிவும் எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தபோதுதான் அவர்கள் இருவரும் அங்கே வந்தார்கள்.
ஏற்கனவே நாதனுடனும் கீதாவுடனும் முரண்பட்டு மோதிக்கொண்ட அளவெட்டி கொலைகள் புகழ் ஜாம்பவான்கள் தான் அவர்கள்.
நாதனைக் கண்டதும் அவர்கள் கடுகடுத்த முகம் மேலும் முறுகிக் கறுத்தது. காலையில் நடந்த சம்பவத்திற்கு அவர்களே காரணம் என்பதை அந்தத் திமிர்ப் பேச்சும் படபடப்பான நடத்தையும் தெளிவாகக் காட்டி நின்றன.
அவர்கள் ஆணவத்தோடு உறுமினார்கள்,
~~நீங்கள் நாம் கூறும் பிரச்சினைகளைத் தீர்க்க வழிசெய்ய மாட்டீர்கள். ஊர்ப் பிரச்சினையென்றால் விழுந்தடித்துக் கொண்டு வந்துவிடுவீர்கள்.||
நாதன் ... இயக்கத்திற்கு அன்று செய்த உதவிகள் ஏற்படுத்திய கோபம் அடங்காமல் அவர்கள் குமுறினார்கள்.
~~எளிய சாதியள்ற பிரச்சினையென்றால் பெரிசா பேசவந்திடுவீங்கள். நாங்கள் ஆமிக்கும் அதிரடிப் பொலிசுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் தெரியாமல் வேலை செய்யிறதில் இருக்கிற கஸ்டம் உங்களுக்கு எங்க விளங்கப் போகுது.||
~~நீங்கள் கஸ்டப்படவேண்டி வந்தது ஆச்சரியமானதில்லை. ஏனென்றால் நாம் அதற்கென்றேதான் வந்திருக்கிறோம். அதற்காக பொதுமக்களை எந்தவகையிலும் கஸ்டப்படுத்த உங்களுக்கு உரிமையில்லை.|| என்று பட்டென்று கூறிய கோபாலன், அவர்கள் கண்களுக்குள் பார்த்துக் கொண்டு ~~நீங்கள் காலையில் நெஞ்சில் ரிவால்வரைக் காட்டி மிரட்டினீர்களே அவர்கூட கழக ஆதரவாளர்தான். அவருடைய மகனும் கழகத்தில்தான் வேலைசெய்கிறான்.|| என்றபோதும் அவர்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் திமிராகவே கூறினார்கள்,
~~எங்களுக்கும் அவனைத் தெரியும். சங்கர்தானே பெயர். அவன் கலாதரனின் ஆள்||
~~எங்களுக்கு அதைப் பற்றியும் கவலையில்லை. பெரியய்யா ஒருவர்தான் எங்க ளுக்குத் தெய்வம்.||
அவர்கள் வீர வசனங்களால் எரிச்சலுற்ற கோபாலன் நாதனை திரும்பிப் பார்த்தார். அவன் அங்கு இருக்கவே சகிக்க முடியாதவனாக எழுந்து செல்லத் தயாரானவன் போல தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
கோபாலன் வெளியேறுமுன் தீர்க்கமாகக் கூறினார்,
~~உங்கள் போக்கு எதுவுமே எமது கொள்கைக்கு ஏற்றதாக இல்லை. உங்கள் நடவடிக்கைகள் உடனடியாக மாறவேண்டும். இல்லாவிட்டால் விரைவிலேயே கழகம் மக்களால் தூக்கி எறியப்படும்.||
அவர்கள் கூக்குரல் எழுப்பி, ஆட்சேபனை தெரிவிக்காத குறையாக வன்மமான அட்டகாசச் சிரிப்போடு அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
சோர்ந்து தளர்ந்துபோய் பொறுக்க முடியாத அவமானம் நெஞ்சில் கனலாய் கனக்க அவர்கள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
இனந்தெரியாத பயங்கர பீதி ப10தாகாரமாக அவர்களை விரட்டிகொண்டே இருந்தது.
இருவரும் கோபாலனின் இருப்பிடத்திற்குப் போகும்வரை எதுவும் பேசவில்லை. அங்கு சேரன் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
சேரன் இவர்கள் கலவரத்தை அறியமாட்டாதவனாக இவர்களைக் கண்டதும் வழமைபோல முணுமுணுக்கத் தொடங்கினான்.
~~அண்ணை! இண்டைக்கும் வண்டி வாற நேரத்தில கரையில நிக்கிறவனுகள் தூங்கிப் போய் விட்டாங்கள். நான் என்ன கஸ்டப்பட்டேன் தெரியுமா? ||
அவன் முறையிடுமாப்போல சிணுங்கத் தொடங்கினான். அவர்கள் அந்த உணர்வி லிருந்து விடுபட்டவர்களாக சேரனை கூர்ந்து நோக்கினார்கள்.
இப்பொழுது பாதுகாவல்படையின் கெடுபிடிகளைத் தொடர்ந்து கரையில் படகு களைக் கட்டமுடியாமல் இருந்ததால் அக்கரையிலிருந்தே வண்டி வந்து அவசரமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு உடன் திரும்பிச் செல்லும் ஏற்பாடு புதிதாக இருந்தது. இதனால் சேரன் இப்பொழுதெல்லாம் தமிழகத்திலேயே தங்கியிருப்பான். அவன் இக்கரைக்கு வரும் இரவு வேளைகளில் கரையில் காவலாக இருப்பவர்கள் ஒழுங்காக தம் கடமையைச் செய்யாமல் உறங்கிப் போய்விடுவதால் பல தடவைகள் சேரன் தடுமாற வேண்டியிருப்பதாக கோபால னிடம் முறையிட்டிருந்தான். கோபாலனும் அவர்களை நேரில் அழைத்துக் கூறிய போதும் அவர்கள் திருந்தியதாக இல்லை.
சேரன் தனக்கே இயல்பான கீச்சுக்குரலில் ஒரே வேகத்தில் சிடுசிடுத்தான்,
~~கழகம் கழகம் என்று சொல்லிக்கொண்டு வந்திடுவாங்கள். ஆனால் கடமை யுணர்ச்சி கொஞ்சமும் இல்லாத சவங்கள்||
கோபாலன் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அருகில் அமர்ந்தார். அவனது சிடுசிடுப்பான பேச்சுக் கூட அவர் நொந்த மனதிற்கு ஆறுதலையே கொடுத்தது. அவன் தன் குமுறல் அடங்கிய பின்பு அதே உணர்ச்சிப் பிரவாகத்தில் மீண்டும் கேட்டான்,
~~இப்போதெல்லாம் கரையெல்லாம் ஆக்கள்றபாடு சரியான பஞ்சம் அண்ணை! நேவியின்ர அட்டகாசத்தில் தொழிலுக்கே போறதில்லை. ஆக்கள் சாப்பிடுவதற்கே வழியில்லாம கஸ்டப்படுறாங்கள்|| என்றவன் அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்துக் கொண்டே கேட்டான்,
~~நான் அக்கரையிலிருந்து வரும்போது உணவுப் பொருட்கள் கொண்டு வந்தால் அதை பிரிச்சுக் கொடுக்க ஏற்பாடு செய்வீர்களா||
அவர்கள் பரவசத்தோடு அந்த முகத்தைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.
ஏழ்மையையே என்றும் சொத்தாக்கிக் கொண்டு வளர்ந்த சேரன்