கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனச்சுமைகள்

Page 1


Page 2
'மணிமொழி GLOSTGOTU)''
மெளலானு மெளல வி
ஹாபிழ் அல்ஹாஜ் W
மர்ஹஅம் அவர்களின் M. J. கலீலுர் ரஹ்மான் இஃாயகுமாரர்
கொழும்பு , மூன்றும் குறுக்குத் தெரு, M. J. K.
மேமன் பள்ளிவாசல்
முன்னுள் கதீப். கல்குழ்ஜமான்
MP7 A 7 A II A W AA
Departmental Stores No. E-147-A, Second Avenue, Besant Nagar MADFAS-600 O90.
 

5' gli . 672 z 4
Ir - r
EՊեI "Պ ,
ናሀ$ FI ' .. ' ' )
f * TT
"re5 7++
"nடு முழு
LO " 、
ዕዙ 院 6). # "gr Ls, 1"=g
لس----------------------------------------ا
r1 Tr T f
5ibLor g. La

Page 3
MANACHUMAKLA
(Short Stories) by SULAlMA A. SAMEE
author of : VAKARA POOKKA
All rights reserved.
First published in May, 1988.
Thirty nineth publication of : . THAMIL MANRAM, Galhin na, Kandy,
சென்னையில் இந்நரல் கிடைக்குமிடம்: பஷாரத் பப்ளிசர்ஸ் ?ெ, அரண்மனைகாரத் தெரு,
சென்னை-600 001.
Goura 251 43 - 25028
இந்தியாவில் விலை : ரூ. 10-00
Printed at : EM KAY PRINTS 2. First Lane, Angappa Naicken St. , Madras-600 00l .
Phone; 517830

சென்ன, புதுக்கல்லூரித் தமிழ் பேராசிரியர் ாக்ட்ரீ*ரோடு தமிழன்பன் அவிர்க்ள்'வ்ழங்கிய
முற்றத்து
முற்றா இளம் பிறைக்கு
9 b LDIT
கதை சொல்வது உறக்க ஊஞ்சலில் காத்திருக்கும் க்னவுகளிடம் - அதன் கையைப் பிடித்துத் தருவதற்காகத்தான் !
ஆனால் எழுத்தாளன் கதை சொல்வது தூங்கும் சமுதாயத்தை எழுப்புவதற்காக அல்லவா?
எனவே
அக்கறையுள்ள எழுதுகோல் நீலாம்பரிக்குச்
சாமரம் வீசாது .
புலரும் பூபாள விழியோரம் புதுமை தீட்டும்!
சகோதரி ஏ. சமி படைத்துள்ள கதைகள் பார்த்து மகிழத்தக்க பளிங்குச் சிலைகள் அல்ல.
சமுதாயத்தைச் சரியாய்ப் பார்க்க உதவும் கலைக் கண்ணாடிகள்

Page 4
அக்கிரமங்கள் மீது ஆத்திரம் கொள்ளும் போது இவருடைய மலர்வனம் முழுக்கக் கலவரம்.
எழுத்துக்களின் கண்களில் அருவி கொட்டுவது ஒரு நேரம் அனல் தகிப்பது மற்றொரு நேரம்.
கனியும் மனித நேயம் கதைகளை இயக்குகிறது தருணம் வரும்போது தீர்வுகாண - அது போர்க்குணம் தரிக்கலாம்!
"போலிகளில் ' இவர் தோலுரித்துக் காட்டும் பேர்வழிகள்-நமது ஊர்களில் சிலர் முகத்தை ஞாபகப்படுத்துவர் "வாக்குறுதிகள் வலிமை இழக்கும் போது"
பதினாக்களின்"
ஏமாற்றங்கள்
நியாயங்களின் உதடுகளில் சிறாய்ப்புகளைச் செதுக்கிவிடும். பூங்காக்களைப் போல
எந்தச் சித்தரிப்புக்கும் உள்ளாகி - இச் சிறுகதைகள் செயற்கைப்படவில்லை.
சின்னப் பசும்புற்கள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு நகரும் தென்றலுக்கு நங்கையாள் முறையாகி - நமது ஊரோரம் ஒடும் ஓடையைப் போல இவை
இதயத்தில் அலைவிரிக்கும் - வெகு இயல்பாய், எளிமையாய் !

முன்னுரை
கடந்து சென்ற காலத்தைப் பின்னுேக்கிப் பார்க்கிறேன். ஒ.இலக்கிய மண்டலத்தில் முதன் முதலாகக் கால்பதித்த அந்த நல்ல நாளை எண்ணிப் பார்க்கும்போது பூரிப்புப் பூக்களால் எனது எண்ணத்தடாகம் நிறைந்திருக்கிறது. சந்தோஷப்படுகிறேன்.
எனது முதல் நூலான "வைகறைப் பூக்கள்" சிறுகதைத் தொகுதி வெளிவந்து ஒருசில மாதங்களிலேயே "மனச்சுமை கள்? உங்கள் கரங்களில் தவழ்கிறதென்ருல், அதற்குக் காரணம், இறையருளும், அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்களின் உதவியும், எனது முதல் தொகுதிக்கு வாசகர் களாகிய நீங்கள் தந்த வரவேற்பும், நல்லாதரவுமேயாகும் என்பதனை மனநிறைவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நான் வளரத்தான் எனது எழுத்தும் வளர்ந்தது என் பதைவிட, எனது எழுத்து வளர்ந்தபின்தான் நான் வளர்ந் தேன் என்று இங்கே குறிப்பிட்டு இலக்கியத்தின்பால் எனக் குள்ளிருக்கும் மானசீக உறவின் உச்ச நிலையை வாசகர்களா கிய உங்களின் சிந்தனை எனும் உரைகல்லுக்கு இட்டு வைப் பதை மேலான பணியாகக் கருதுகிறேன்."
சமுதாய அவலங்களுக்கு முகங் கொடுப்பவனே இலக்கி யவாதியாக இருக்க முடியும் எனும் சத்துள்ள கருத்தை என்றும் ஜீரணித்துக் கொள்ளப் பழகிக் கொண்ட நான், சமுதாயத்தில் தடியெடுத்துத் தாண்டவமாடி நின்ற கசப் பான உண்மைகளுக்காகவே எனது எழுது கோலைத் தூக்கி னேன். நான் கண்டதையும், கேட்டதையும், எனது அனுப வத்தையும், மனச் சுமைகளையும் இலக்கிய வடிவங்களாக்கி அதன் மூலம் ஓர் உயர்ந்த சமுதாய மேம்பாட்டின் விடிவுக் காகவே இதுவரை எனது இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகின்றேன்.
சமுதாயத்தைப் பார்த்துச் சலித்துக் கொண்டபோது, அங்கே சமதர்மம் ஏற்படவேண்டுமென்றும், அறியாமை எனும் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய சக்தி எழுது

Page 5
கோலுக்குத்தான் உண்டு என்ற நம்பிக்கையும் தான் இன் றும் என்னை இலக்கியப் பயணத்தில் வழிநடத்திச் செல் கிறது.
எழுதுகோலை ஏந்தியதற்காக எதையும் எழுதி எழுத்துத் துறையை அழுக்குத் தொட்டிலாக்க நான் விரும்பவில்லை. எனது எழுதுகோல் என்றைக்குமே தன்னம்பிக்கைக்கும், தர் மத்திற்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றே விரும்புகின் றேன்.எழுதுவதெல்லாம் இலக்கியங்கள் என்று கச்சைகட்டிக் கொள்ள விரும்பவில்லை. இலக்கியங்கள்தான் எழுதப்பட வேண்டுமென்ற இலட்சியங்களை, இதுகாலவரை பாதுகாத்து நிற்பதில் பெருமைப்படுகின்றேன்.
**இலக்கியங்கள் என்று கூறும்போது எழுத்துக்களால் உருவாகிவிடும் சொல் அலங்காரங்களை நான் குறிப்பிட வில்லை. சமுதாய மேம்பாட்டிற்காக பாடு(படு)கின்ற ஓர் எழுத்தாளனின் நல்ல சிந்தனையைத்தான் குறிப்பிடுகிறேன்" என்ற கவிஞர் கலைநதியின் கூற்றுக்கிணங்க எனது சிந்தனை வடிவங்களைத்தான் இலக்கியங்களாக்குகின்றேன்.
உருவாகும் சமுதாயத்தில் உயர்வும், உண்மையும் விடியுமானுல் இலக்கியப் பாதையில் நான் கீறிக் கொண்ட பற்றுக்கோட்டுக்கு பரிசு கிடைத்து விட்டதென்றே கருது வேன்.
இருட்டுக்குள் விடியலைத் தேடும் பறவைகளைப் போல், எனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் விடிவைத் தேடு கிறேன். காரணம் அந்தளவுக்கு இலக்கிய மணத்தை நேசிப் பதாலும், யாசிப்பதாலுமேதான்.
விடைபெறு முன்.
இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களைப் பிர சுரித்து, ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையில் சாதனை படைத்திருக்கும் தமிழ் மன்றம் என்னுடைய இரண்டாவது நூலான “மனச்சுமைகள்" எனும் இத்தொகுதியையும் பிர சவித்துள்ளது. தாமாக முன்வந்து இப்பணியை மேற் கொண்ட தமிழ் மன்ற நிர்வாகச் செயலாளர் அல்ஹாஜ்

எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டவள்.
இந்நூலை அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த எம். கே. பிரிண்ட்ஸ், சென்னை, அதன் ஊழியர்கள், எப்போதும் என் இலக்கிய முயற்சிகளுக்கு ஆர்வமும், ஆரோக்கியமான ஆலோசனைகளும் தந்துதவும் இலக்கிய உலகின் உடன் பிறப்புக்களான கவிஞர் பதியதளாவ பாறுாக் (கலைநதி) அவர் கள், பிரபல நாவலாசிரியர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்கள், என்னுடைய படைப்புக்களுக்குக் களம் தந்துதவும் தின கரன், சிந்தாமணி பத்திரிகைகள்,இலங்கை வானுெலி,எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஆதரவு தருகின்ற என் அன்புக் குரிய வாசகர்கள்-வானெலி நேயர்கள் -ஆகிய அனைவருக் கும் எனது ஆழ்ந்த நன்றிகளைச் சமர்ப்பிப்பதில் இதயம் இனிக்கின்றேன்.
இறுதியாக.
அர்த்தமுள்ள இலக்கியக் குழந்தைகளை அறிவுள்ளவை களாகவும், ஆற்றல் உள்ளவைகளாகவும் ஆக்கி, சமுதாயப் பரப்பில் நடமாட விடும்போது அக்குழந்தைகளின் வழி காட்டலைக் கண்டு ஆனந்தப்படுகின்ற ஒரு தாயாக இருப்ப தைத்தான் நான் அதிகம் விரும்புகின்றேன்.
இதன் வழி, எனது இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் சமுதாயத் தெருவுக்கு வெளிச்சம் காட்டியிருக்குமானுல் அந்த வெற்றியை மானசீகமாகவும், மனப்பூர்வமாகவும் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் நம்பிக்கையான ஒரு படைப்பிலக்கியத்தின் பங்காளியாக இருப்பேன் எனக் கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். நன்றி. w
"அன்பகம்?" 125, மீரிபென்ன வீதி, தர்கா நகர், 82a)LDT. G. Fis இலங்கை 25-4-1988

Page 6
-
உடல் வளம் நிறைந்திருந்தும் மனக் குருடுகளாய், ஊனங்களாய், 彎 வாழும் பலவீனப்பட்ட உள்ளங்கள் மத்தியில் தவறு செய்யாமலே தண்டனை அனுபவிக்கும் ஆயுட்காலக் கைதிகள் இவர்கள்.
அங்கங்கள் இழந்து O அவதிப்பட்டாலும், எம் சமூகத்தின் அங்கங்கள் இவர்கள்.
அனுதாபத்திற்குரிய
இந்த அங்கவீனர்களுக்கே
"மனச்சுமைகள்" சமர்ப்பணம்

வல்லவனுக்கு வல்லவன்
அது அளுத்கமை பிரதான பஸ்நிலையம். அந்தக் காலை வேளையிலும் அங்கே சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. அப் போது தர்கா நகரிலிருந்து வந்து நின்ற பஸ்வண்டி யிலிருந்து இறங்கிய இர்ஷாத், பிரதான வீதியைக் கடந்து ஓர் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டிகளின் அருகே போய் காலி" என்ற பெயர் குறிக் கப்பட்டிருந்த பஸ்வண்டியின் வசதியான ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டான். அவன் மடியில் கையோடு கொண்டு வந்திருந்த வியாபாரத்திற்கான "பேக்" இருந்தது.
"இன்டைக்கு அம்பலாங்கொடைக்குத்தான் போக வேணும்." என மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டவன் டிக்கட்டும் பெற்றுக் கொண்டான்.
O O 0. oo - OO
இர்ஷாத் ஒரு தங்க-வெள்ளி வியாபாரி. வீடு வீடாகச் சென்று பழைய தங்க-வெள்ளி சாமான்களைக் குறைந்த விலை யில் வாங்கி, அதை உருக்கி, கூடிய விலைக்கு விற்கும் வியா பாரம் அவனுடையது.
இந்தத் தொழிலில் அவனுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனுல், தொழில் செய்ய ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை இதே தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றன்.
இர்ஷாத்திடம் ஒரு கெட்ட குணம். அதுதான் தொழி லில் அவனிடம் நேர்மை, நாணயம் கிடையாது. முடிந்த வரையில் எவரையாவது ஏமாற்றியே வியாபாரத்தை முடித் துக் கொள்வான். அதுமட்டுமில்லை. தங்கத்தை வெள்ளி யாகவும் வெள்ளியைப் பித்தளையாகவும் கூறி நம்பச் செய்து மோசம் பண்ணிவிடுவான். அத்தோடு தனது திருவிளை யாடல்களை நிறுத்தி விடுகிறன என்றல், அதுதான் இல்லை.

Page 7
10
தொழிலிற்குச் செல்லுமிடங்களில், வீட்டாரின் கண் களில் மண்ணை தூவிவிட்டு, அவர்கள் காட்டும் பொருளில் ஒரு சிறு பகுதியையாவது மெதுவாகப் பதுக்கிக் கொள் வான். சில நேரங்களில் அவனின் பார்வைக்கு வரும் பொருட்களை எடுத்த எடுப்பிலேயே மீண்டும் உபயோகிக்க முடியாதபடி வளைத்து உடைத்து விடுவான். அவன் இப்ப டிச் செய்வதின் முக்கிய நோக்கம், இனிமேல் பாவிக்க முடி யாமல் ஆகி (ஆக்கி) விட்ட அந்தப் பொருட்களை அவர்கள் எப்படியும் தனக்கே விற்றுவிட வேண்டுமென்ற சுயநலம் தான். இது அவன் வியாபாரத்தில் கையாளும் மிகப் பெரிய தந்திரமாகும்.
(ஒரு வருடத்திற்கு முன், ஒரு வீட்டில் அவன் இப்படி நடந்துகொண்ட போது, அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட வீட்டுக்காரப் பெண் அவனைத் தும்புத்தடியால் அர்ச்சனை செய்தனுப்பிய அருமையான கதை அவனுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்)
அம்பலாங்கொடையில் பஸ்ஸை விட்டிறங்கிய இர்ஷாத் நகரிலுள்ள ஒரு ஓட்டலில் காலையுணவை முடித்துக் கொண்டு ஊருக்குள் நடந்து சென்றன். ஆறேழு வீடு களுக்கு ஏறியிறங்கியும் எதுவும் கைகூடவில்லை.
அவன் அலுப்புடன் சென்று கொண்டிருக்கும்போது ஒரு வீட்டில் அவனை அழைத்தார்கள். அங்கே போன அவன்,
*வெள்ளி, தங்க சாமான் இருந்தாக் கொடுங்க நல்ல விலை போடுறன்." என்ருன். V
உள்ளே சென்ற வீட்டுக்காரப் பெண் ஒரு காப்பையும், அறுந்த மாலையொன்றையும் கொண்டு வந்து காட்டினுள். அவற்றைக் கண்ட இர்ஷாத்தின் உள்ளம் குளிர்ந்தது. இரண்டுமே அசல் தங்கம். விடுவானு அவன்.
“ஒரே தாகமாயிருக்கு குடிக்க.கொஞ்சம் தண்ணி தர்நீங்களா..?’-இர்ஷாத்தின் தந்திரத்தின் முதல் கட்ட மிது. அந்தப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே

1i
சென்றதும், அந்த மாலையிலிருந்து மூன்றங்குலத் துண் டொன்றை அறுத்தெடுத்து தனது சட்டைப் பைக்குள் பதுக் கிக் கொண்டான் அவன். ܚ
அவள் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரில் சிறிது குடித்த இர்ஷாத் தான் கையோடு கொண்டு வந்திருந்த பேக்கைத் திறந்து அதிலிருந்த உரைகல்லில் அவற்றை உரைத்துப் பார்த்தான். பின்னர், சிறு போத்தல்களில் இருந்த நெருப்புத் தண்ணிரை"யும், உப்புத் தண்ணிரையும் அதன்மீது வைத்துப் பார்த்தான். பின்னர் உதட்டைப் பிதுக்கியபடி,
**செயின் தங்கம்தான். ஆணுல் காப்பு தங்கமல்ல. மேலால மட்டும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கு' என்ருன்.
pó அவன் கூறியதை நம்பிய அந்த அப்பாவிப் பெண் பத
-{tיLש
“ஐயையோ. அந்த ஜாவலரியில் காப்பு வாங்குற நேரம் அசல் தங்கமென்றுதான் சொன்னுங்க. நான் ஏமாந் துட்டேன். அவனுகள் நாசமாகித்தான் போகணும்" என்று திட்டித் தீர்த்தவளாக, அவற்றை எப்படியும் விற்று விட ணும் என்ற நோக்கத்தில்,
"அப்படியானுல் ரெண்டு சாமானுக்கு என்ன விலை போடுவீங்க..?" என்று கேட்டாள்.
“மாலைக்கு ஐநூறு ரூபாவும், காப்புக்கு நூற்றைம்பது ரூபாவுமாக அறுநூற்றைம்பது ரூபா போடுவேன்...!" என் ருன் இர்ஷாத்,
"என்ன முதலாளி நீங்க...? கொஞ்சம் கூட்டித்தான் போடுங்களே!" என்ருள் அவள்.
*சரி...சரி. அறுநூற்றி எழுபத்தைந்து ரூபா போடு
றன். இந்தாம்மா.பி.டி.!" என்று கூறியவாறு பணத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு எழுந்து நின்ருன் இர்ஷாத்,

Page 8
2
வியாபாரத்தை முடித்துக் கொண்ட அவன், அவசர மாக டவுனுக்கு வந்து விட்டான். அவனது அவசரத்தைப் புரிந்து கொண்டது போல் அளுத்கமை போகும் தனியார் வாகனம் ஒன்று எதிரே வந்து நின்றது.
**காப்புல ஒரு பவுன் தங்கமும், மாலையில முக்கால் பவுன் தங்கமும் இருக்கும்-ரெண்டையும் உருக்கினுல் மூவா யிரம் ரூபாவுக்கு மேல் லாபம் கிடைக்கும்." என மனதிற் குள் கணக்குப் பார்த்தபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் இர்ஷாத்,
நிமிடங்கள் பலதை விழுங்கி ஏப்பமிட்டபடி பஸ் ஓடிக் கொண்டிருந்தது. இயற்கை அழகு நிறைந்த கட லோரச் சூழலில் மனதைப் பறிகொடுத்தபடி உட்கார்ந் திருந்த அவன், கடற்காற்றின் இதமான தாலாட்டிலே தன்னை மறந்து கண்ணயரத் தொடங்கி விட்டான்.
நிமிடங்கள் பல கடந்திருக்கும். பஸ்ஸின் குலுக்கலிலே திடீரென்று விழித்துக் கொண்டவன், நிமிர்ந்து உட்கார்ந் தான். பின், தன் மடியிலிருந்த பேக்கைப் பார்த்தான்.காண வில்லை, அவனுக்கு ஒரே அதிர்ச்சி. பக்கத்தில் உட்கார்ந் திருந்தவனைத் தேடினன். அங்கு அவனில்லை. அந்த இடத் தில் வேருெரு வயதான மனிதர் உட்கார்ந்திருந்தார். அவ னுக்கு எல்லாமே புரிந்து விட்டது.
"அந்த அப்பாவிப் பெண்ண ஏமாத்தி, குறைந்த விலைல சாமான்களக் கொண்டு வந்தேன். இப்போது என்னை எவனே ஒருவன் ஏமாத்திட்டான். ஏமாளி ஜனங்கள ஏமாற் றிப் பிழைக்கிற என்னப்போல நாணயமில்லாதவங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். வல்லவனுக்கு வல்ல வன் இந்த வையகத்துல இல்லாமலா போவான்.?" என்று மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் ஏதோ நினைத்தவனுய் தன் சட்டைப் பையில் கையைவிட்டுப் பார்த்தான். அங்கே, அவன் திருட்டுத்தனமாக அறுத்துப் போட்ட ‘மாலைத் துண்டு அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி கிடந்தது.
தினகரன் வாரமஞ்சரி’ 2-9-1984

படிப்பினை
*அல்லாஹ" அக்பர். அல்லாஹ" அக்பர்."
சற்றுத் தொலைவிலுள்ள பள்ளிவாசலில் இருந்து ஒலி பெருக்கியில் ஒலிக்கும் சுபஹா’ நேரத்திற்கான "அதான்" உறங்கிக் கொண்டிருந்த இக்பாலின் செவியறைகளில் புகுந்து, இதயமெல்லாம் இறை நினைப்பும், பக்திப் பரவச மும் படர, அதற்கு மேலும் தூங்கிக் கொண்டிருக்க விரும் ப்ாத அவன் பள்ளிவாசலுக்குப் போகும் எண்ணத்துடன் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து கொள்கிருன்.
சேட்டை மாட்டிக்கொண்டு முன்பக்கம் வந்தவன் வீட்டின் முன்கதவு திறந்திருப்பது கண்டு வியப்புடன் அப் பால் இருந்த கட்டிலை நோக்குகிருன். அவனுக்கு ஒரே அதிர்ச்சி. படுக்கை வெறுமையாகக் காட்சி தருகிறது.
'மனுஷன் எங்கதான். போயிருப்பார் ?" என்ற சிந்தனையுடன் சிலையாக நின்றிருந்த இக்பாலை,
மகன். இக்பால் இப்ப.நேரம் என்ன புள்ள?" என்ற உம்மும்மாவின் குரல் அவனை உலுக்க, நேரத்தை அறியும் நோக்குடன் முன்பக்கச் சுவரைப் பார்க்கிருன். அவ னுக்கு மேலும் அதிர்ச்சி. சுவர்க்கடிகாரம் இருந்த இடம் வெறுமையாகக் காட்சியளிக்கிறது. அவனின் பார்வை மேசைமீது பாய்கிறது. அங்கேயிருந்த கெஸட் ரேடியோ" வையும் காணவில்லை.
அவனுக்கு ஒரு கணத்தில் எல்லாமே புரிந்து விட்டது.
"ஆளப்பத்திச் சரியாகத் தெரியாம தங்க இடம் கொடுத் தது என் தவறுதான். எனக்கு இது நல்ல படிப் பினைதான். "" என்று எண்ணியவனின் நினைவெல்லாம் நேற்றைய சம்பவத்தை அசைபோடுகிறது.
s o
o c

Page 9
14
இக்பாலுக்கு என்னவோ இருபத்தைந்து வயது தான் இருக்கும். நல்லொழுக்கத்தாலும், நற்பண்புகளாலும், நல்ல குணநலன்களாலும் எல்லோராலும் ஏகமனதாக நல்லவன்’ என்ற நற்சான்றிதழைப் பெற்றவன்தான் இக்பால். எல் லோர் மீதும் பரிவும், பாசமும் காட்டும் இக்பால் இளகிய மனமும், இரக்க சிந்தையும் கொண்டவன். பிறருக்கு உதவு தல்,கஷ்டப்படுவர்களுக்குக் கை கொடுத்தல் என்பன அவனு டன் ஒட்டிப்பிறந்த நல்ல பழக்கங்கள்.
யாரும் இக்பாலிடம் உதவி கேட்கத் தேவையில்லை. உதவி கேட்குமுன்பே நிலைமையைப் புரிந்து உதவும்பக்குவம் நிறைந்தவன் இக்பால்.
அன்றும் அப்படித்தான் ஊருக்குப் புதிய வியாபாரி யொருவர் தனது வீட்டுப்பக்கம் வந்தபோது, அவருடன் சிறிது நேரம் உரையாடிய அவன், அந்தப் புதியவரைத் தனது வீட்டில் பகல் சாப்பாட்டிற்கு அழைத்தான். புதிய வரும் அவன் வேண்டுகோளுக்கு இணங்கி அன்று பக லுணவை அவன் வீட்டிலேயே முடித்துக் கொண்டு,
"தம்பி. இன்றைக்கு இரவு உங்க ஊருல தங்கிட்டு காலைலதான் ஊருக்குப் போகணும். அதனுல தங்கிட்டுப் போக பக்கத்துல பள்ளிவாசல் இருக்கா..?" என்று கேட்ட போது,
'பள்ளிவாசல் கொஞ்சம் தூரத்துலதான் இருக்கு. நீங்க எங்க வீட்டுலேயே தங்கிட்டுப் போங்களே' என்று பெருந் தன்மையுடன் கூறினுன் இக்பால்.அதற்குச் சம்மதித்த புதிய வரும், பூரண திருப்தியுடன் அன்று இரவும் இக்பாலின் வீட்டில் இராப் போசனத்தை முடித்துக் கொண்டு அங் கேயே நித்திரை செய்தார்.
“ம். மனுஷன் இப்பிடிச் செஞ்சிட்டுப் போவாரென்று நான் கனவுல கூட நெனைக்கல்லயே." என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தவனின் சிந்தனையை,
"மகன்.இக்பால்.என்னப்பா யோசிச்சிக்கிட்டே நிக் கிறே. நேரம் என்னன்டு எத்தன தடவைதான் கேக்

15
குறது.?" என்ற தாயின் குரல் அவனின் சிந்தனையை அறுக்க,
"அதுதான். உம்மா. சுவர்க் கடிகாரத்தையும் காணல்ல. ரேடியோவையும் காணல்ல. நேத்திரவு இங்க படுத்துத் தூங்கின ஆளையும்தான் காணல்ல." என்ருன் வெகு சிரமத்தோடு,
இதுகேட்டு அதிர்ச்சியடைந்த அவனின் தாயார்,
**இதுக்குத்தான் யாரையும் நம்பிடாதே என்று நான் அடிக்கடி புத்தி சொல்றன். நீ கேட்டாத்தானே! முன்பின் தெரியாத மனுஷனுக்கு தங்க இடம் கொடுத்தாய் ம். இப்ப வீட்டுல இருந்ததயெல்லாம் சுருட்டிக்கிட்டுப் போயிட் டான். ம். இப்ப என்ன செய்றது? இதாவது ஒனக்குப் படிப்பினையாக இருக்கட்டும் . 1" என்ருர்.
'உம்மா,. ஏதோ நடந்து நடந்து போச்சு. எங்க கண் மணி நாயகம் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஒரு தடவ ஒரு வழி போக்கனுக்குச் சாப்பிடச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்தாங்களாம், காலைல விழிச் செழும்பிப்பாத்தப்போ படுக்கையில ஆளே இல்லயாம். படுக்க முழுக்கவும் மலம் தானும் இருந்திச்சு. உடனே எங்க நாயகம் ஸல்லல்லாஹ" அலைஹிவஸல்லம் அவங்க,தங்கட பொன்னுன கைகளால் அந்த வழிப்போக்கன் அசுத்தப்படுத் யிருந்த படுக்கை எல்லாம் சுத்தப்படுத்தினுங்களாம். தன்ட ஏதோ ஒரு பொருள அங்கு தவற வச்சிட்டுப்போன அவன் திரும்ப அவ்விடம் வந்தப்போ. தனது அசுத்தத்த தன்ட மலர்க் கரத்தால மாநபியவர்கள் துப்பரவு செய்றதக் கண்டு, பெருமானுர்ட பெருந்தன்மையால கவரப்பட்ட அவன்ஒடனே கலிமாச் சொல்லி இஸ்லாத்தைத் தழுவினுணும். உம்மா. இந்தச் சம்பவத்தோட எங்களுக்கு நடந்தத வச்சுப் பார்த்தா எங்க கதை ரொம்பச் சின்னதுதாம்மா..!" எனத் தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டுப் பள்ளிவாசல் நோக்கிப் புறப்பட்டான் இக்பால்.

Page 10
16
நாட்கள் சில நகர்ந்தன. ஏதோ முக்கிய வேலைக்காகக் கொழும்பு சென்ற இக்பால், அங்குள்ள, தனது சகோதரி வீட்டில் இரண்டு தினங்களைக் கழிக்க நேர்ந்துவிட்டது. அப் போது ஒருநாள் வீட்டு வாசலிலே,
**இந்த ஏழை மிஸ்கீனுக்கு ஏதாச்சும் கொடுங்க சீதேவி.." என்ற குரல் கேட்டவன்.
எங்கேயோ இதற்கு முன் கேட்ட குரலாக இருக்கே..." என்ற சிந்தனையுடன் முன்பக்கம் தாவினுன். அங்கே. வாசலிலே நின்ற உருவத்தைக் கண்டதும் அதிர்ந்து போனன். அந்த மனிதரின் முழங்கையளவில் வெட்டப்பட்டு "பென்டேஜ்" போடப்பட்டிருக்கும் கோலத் தைக் கண்டதும் பேரதிர்ச்சியடைந்தான் இக்பால். இக்பாலை இனங்கண்டு கொண்ட அம்மனிதர், 'தம்பி. என்ன ஒங்களுக்கு ஞாபகமிருக்கா..?" என்ருர் நாத்தழுதழுக்க.
"ஆமாமா. நன்ருக ஞாபகமிருக்கே. அவ்வளவு லேசில மறந்திடுவேன.?" என்ருன் இக்பால்.
'தம்பி.என்ன மன்னிச்சிடுங்க. அன்றைக்கு ரெண்டு நேரமும் வயிறு நிறைய சாப்பாடு தந்து மனுஷத்தன்மை யோட இரவு தங்க இடமும் தந்தீங்க. ஆணுல், இந்தப்பாவி வலியவந்து உதவி செஞ்ச ஒங்களுக்குத் துரோகம் பண்ணிட் டான். ஒங்க வீட்டுல இருந்த சுவர்க்கடிகாரம், ரேடியோ, உடுப்புகள் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துட்டேன். நான் செஞ்ச துரோகத்த அல்லாவே பொறுக்கல்ல. அன்றைக்கு ஒங்க வீட்டுல இருந்து 'பிரைவெட்பஸ்ஸாலதான் வந்தன். நான் ஜன்னல் ஓரமாக உக்காந்து என் வலது கைய ஜன்னலிலே வச்சிக்கொண்டு வந்தன். எங்க பஸ்ஸ-ஸ்ட ஒர மாக வேகத்தோட வந்த வேருெரு பஸ் என் கைய மோதிட் டுப் போயிட்டுது. கையே முறிஞ்சுபோச்சு தம்பி. பஸ்ஸால இருந்தவங்க ஒடனே என்னக் கொண்டுபோய் ஆஸ்பத்திரி யில சேர்த்தாங்க. அங்க என் கையையே வெட்டிட்டாங்க, ?? என்று கண்ணீரோடு பேசிய அவர் மீண்டும் தொடர்ந்தார்.

“பாருங்க தம்பி அன்றைக்கு என் கைகால்ல நல்ல உறுதி இருந்தப்போ. உழைக்காம குறுக்கு வழியிலபோய் சம்பாதிச்சன். இன்றைக்கு அறிவு வந்து உழைக்க விரும் புறன். ஆணுல் . கை உதவ மறுக்குதே 1 அதனுல தான் இப்பிடி வீடு வீடாகக் கைநீட்டி திரியிறன் தம்பி நீங்க எனக்குச் செஞ்ச உதவிய மறந்து எந்தக் கையால் நான் உங்க வீட்டுச் சாமான்கள திருடிட்டு வந்தேனுே, அந்தக் கைக்கே இப்ப தண்டனை கிடைச்சிருக்கு. இந்தக் கையக் காணுற நேரமெல்லாம் என் மனச்சாட்சி என்னக் கொல்லுது தம்பி, இந்தக் கை எனக்கு மட்டுமில்ல. என்னப் போல உள்ள ஆயிரமாயிரம் துரோகிகளுக்கும் படிப்பினையாகவே யிருக்கும். "
தன் தவற்றையெல்லாம் உணர்ந்து திருந்திய மன தோடு பேசிய அந்த மனிதரின் சோகநிலை கண்டு இக்பாலின் இமைகளும் கசிந்தன.
**இந்தாங்க . இந்தக் காச முதலா வச்சி ஏதாவது சிறுதொழில் செய்யுங்க." என்றவாறு நூறு ரூபா நோட் டொன்றை நீட்டிய இக்பாலின் பெருந்தன்மையை நினைத்து கண்கள் கலங்க, கைகள் நடுங்க, நன்றிப் பெருக்கோடு அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனிடமிருந்து விடை பெறுகிருர் அந்த மனிதர்.
"தினகரன்' வாரமஞ்சரி 26-1-1986

Page 11
போலிகள்
அன்றும் வழமைபோல அந்நகரம் ஜனவெள்ளத்தால் நிறைந்திருந்தது. கடைவீதி ஓரமாக நாகூர் காக்கா தள்ளா டித் தள்ளாடி நடந்தார். வெயிலின் கொடூரமும், பசிக் களைப்பும் அவர் நடையிலே பிரதிபலித்தன. அடியெடுத்து நடக்கக்கூட முடியாத நிலையில் சிரமத்தோடு நடக்கும் அவ ரைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை.
நாகூர் காக்காவுக்கு எழுபது வயதிருக்கும். திருமணம் முடித்த போதும் அவருக்குப் பிள்ளைகள் கிடையாது. அன்பு மனைவியும் ஆறேழு வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். இப்போது, உறவு என்று உரிமை கொண்டாட அவருக்கு யாருமேயில்லை. உறவு என்று கூறி ஒட்டிக்கொள்ள அவரி டம் பணமும்தான் இல்லையே!
முன்பெல்லாம் அவர் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் தமது ஜீவனுேபாயத்தை நடத்தி வந்தார். ஆணுல், முன்பு போல் இப்போது அவரால் இந்தத் தள்ளாத வயதில் உழைக்க முடியவில்லை. எனவே யாரும் தமக்குத் தருவதை யுண்டு, கடையோரமோ,திண்ணையோ-கிடைக்கும் இடத்தில் தூங்கி எழுவார். இதுதான் அவரின் அன்ருட வாழ்க்கை.
இன்று காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்க வேண் டும் போலிருந்தது அவருக்கு. இருப்பினும் கையில் பண மில்லை. பக்கத்துக் கடை பஷிரிடம் ஏதாவது கேட்டு வாங் கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அந்தக் கடையை நெருங் கினர் காக்கா. கடையின் முன்பக்கம் நின்றவனே பஷர் தான். அவனை நெருங்கி மிக்க ஆவலோடு
*தம்பி.1 தேத்தண்ணி குடிக்க ஒரு ரூபா தாங்க சீதேவி. அல்லாஹ"ாத்த ஆலா உங்களுக்குக் கிருப செய் வான்'-காக்கா கூறிமுடிக்கவில்லை. அவன் ‘சுள்" என்று அவர் முகத்திலே பாய்ந்தான்.
*சீ. விடிஞ்சும் விடியாம வந்துட்டீங்க...இந்தப் பிச்சக் காரரால பெரிய தொல்லயாப் போச்சு, தரித்திரம் பிடிச்ச

9.
மூதேவிகள். இங்க.காசுமில்ல. தூசுமில்ல. ம்.போங்கி போங்க..இந்தப் பக்கம் வராதீங்க..!" என்று நாயைப் போல் தன்மீது பாய்ந்து, கழுத்தைப் பிடித்து வெளியே தள் ளாத குறையாக எச்சரித்து விரட்டியனுப்பிய பவிரின் வார்த்தைகள் இப்போதும் அவருக்கு வேதனையைத் தந்து கொண்டேயிருந்தன.
அவ்விடத்தை விட்டு அகன்ற அவர்,
"தேத்தண்ணி குடிக்காட்டியும் பரவாயில்ல.பச்சத் தண்ணியையாவது குடிப்போம்!'" என நினைத்தவராக இன்ஹாமின் ஹோட்டலுக்குப் போய் தண்ணிர் கேட்டார் அந்த இதயமுள்ள ஏழை இன்ஹாம்,
*காக்கா ! காலையிலேயே வந்து தண்ணி கேக்குறீங் களே.இந்தாங்க டீ. குடிச்சிட்டுப் போங்க.." என்று பால்
தேநீர் ஒன்றை அவருக்கு நீட்டினன். நன்றிப் பெருக்கோடு வாங்கிக் குடித்த காக்கா,
'ஏழைகள்ட மனசு தங்கம்தான். இந்த ஏழைகள்இதயத்துல தான் ஈரமும், இரக்க உணர்ச்சியும் இருக்கு." என நினைத்துக் கொண்டார்.
அன்று பகல் ஒரு மணியாகி விட்டது. தன்னிடம் இருக் கும் சில்லறைகள் சாப்பாட்டுக்குப் போதாமல் இருக்கவே,
*நம்ம இரும்புக்கடை இஸ்மாயிலிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். "" என்று நினைத்தவராக இரும்புக்கடையை நோக்கி மெதுவாக நடந்தார் நாகூர் காக்கா. அப்போது உணவருந்தத் தயாராகிக் கொண்டிருந்த இஸ்மாயிலிடம்
*ரெண்டு ரூபா கொடுங்க தொர, சாப்பாட்டுக்கு வழி யில்ல...' என்ருர் ஆவல் ததும்ப,
"சீ ஒங்கட தொல்ல பொறுக்கேலாது. இனிமேல் இந் தப் பக்கம் வந்தா நடக்குற கத வேறதான். பொலிசுல *ரிப்போர்ட்" பண்ணிடுவேன். இந்த நாய்களுக்கு காலம் நேரம் தெரியாது. இங்கு நான் சாப்பிடுறத வாயப் பார்த்

Page 12
()
துக் கொண்டு நிக்காம போங்க...ம். போகச் சொன்னுப் போய்த் தொலைங்களேன்...!" என விரட்டினுன் இஸ்மாயில்
*ம். இவன்ட மனசே இரும்புதான். ஒரு நாளாவது ஒரு சதம் தரமாட்டானே!" என வருத்தத்தோடு படியிறங் கினர் காக்கா. அன்று பல கடைகளுக்கும் படியேறி இறங்கிய நாகூர் காக்கா வெறும் வயிற்றுடன் இருந்து விட்டார்.
அன்று மாலை மங்கியது. கையிலிருந்த சில்லறைப் பணத்தை எடுத்துக் கொண்டு இன்ஹாமின் ஹோட்டலுக் குப் போனுர் காக்கா. அவரின் தலையைக் கண்டதுமே,
**காக்காவா 1 வாங்க. வாங்க என்ன வேணும்?" என்று வரவேற்ற இன்ஹாம், அவர் கேட்ட இரண்டு பணிஸ் களை அவருக்குக் கொடுத்துவிட்டு, பணத்தையும் வாங்க மறுத்து விட்டார்.
இரவாகியது தான் வழமையாக தூங்கும் இடத்திற்குப் போனுர் காக்கா. அவ்விடத்தில் புதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
"பாவம். இவரும் என்னப் போல ஒருவர் தானே! தூங்கட்டும்.’’ என்று அவர் வந்து விட்டார்.
இன்று தூங்குவதற்காக அந்தப் பிடவைக் கடைத் திண்ணை வசதியாகவே பட்டது காக்காவுக்கு சீமெந் துத் தரையிலே அவர் சாய்ந்து கொண்டார். தூங்கியும் விட் LTř.
பத்து நிமிடங்கள் கழிந்திருக்காது. முன் கதவைத் திறந்த கடை முதலாளி புஹாரி, காக்கா படுத்திருப்பதைக் கண்டு தனது நண்பனிடம்,
"கிழவன் தூங்குருரு. வா மச்சான். ஒரு ஜோக் செய் வம். சீக்கிரமா ஒரு வாளித் தண்ணி அள்ளிக் கொண்டு வா' என்ருன். தண்ணீர் வாளியுடன் வந்து நின்ருன் நண்பன். தண்ணீர் வாளியைத் தன் கைக்கு வாங்கிக் கொண்ட புஹாரி, மெதுவாக ஒசையின்றிப் போய்க் காக்கா

2.
வின் தலையிலிருந்து கால் வரை தண்ணிரை ஊற்றி விட்
6. as
இந்தத் திடீர்த் தாக்குதலினல் திடுக்கிட்டெழுந்த காக்கா குளிரிலே வெட வெடத்தார். நண்பர்கள் வாய்விட் டுச் சிரித்தார்கள்.
"தூங்குறதுக்கு இடமில்லாத நான், நாய் கூட தூங்கி எழும்புற இந்தப் படியில தூங்கிய்துக்காக் இந்த அநியாயத் தச் செய்திட்டீங்களே வாப்பா. இது. நியாயமா..? அல் லா(ஹ்) கேப்பான் தொர." என்று கூறிவிட்டு, அந்தக் குளிரிலே நடுங்கியவராக தள்ளாட்டத்துடன் இன்ஹாமின் ஹோட்டலுக்கே வந்தார். ஹோட்டல் மூடியிருந்தது. அந்த ஹோட்டல் திண்ணையிலே வேதனையோடு சாய்ந்து கொண் டார் காக்கா,
s s ed 9če Od
பொழுது விடிந்தது. அதிகாலையிலேயே கடைக் 5ز வைத் திறந்த இன் ஹாம் முன் பக்கம் சுருண்டு படுத்துக் கிடக்கும் நாகூர் காக்காவை அனுதாபத்தோடு பார்த்தான்.
"கடைய மூடுறதுக்கு முன்னுல வந்திருந்தா உள் பக் கம் இடம் கொடுத்திருப்பேனே! பாவம். தூங்கி எழும்பட் டும்" என இருந்து விட்டான்.
காலை ஆறரை மணியாகியும் காக்கா எழுந்திருக்க வில்லை.
"வழமையா எழும்பி சுபுஹ" தொழப் பள்ளிக்குப் போவாரே..!" என்று யோசித்தவாறு காக்காவைத் தட்டி யெழுப்பினுன் இன்ஹாம். அவரின் உடல் குளிர்ந்து சில்லிட் டிருந்தது. அவர் அசையவில்லை. இன்ஹாம் டாக்டரிடம் ඉtg-Gör.
கிழவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் வேதனை պւ-6նr, -

Page 13
22
"ஆள் மெளத்தாயிட்டாரு. தலையெல்லாம் நனைஞ்சு, அளவுக்கு மிஞ்சிய குளிரால ஜூரம் ஏற்பட்டு-அதனுலதான் 'மெளத்து நடந்திருக்கு. பாவம். அணுதை ஜனுஸா, எல் லோருமாச் சேர்ந்து கடமையைச் செய்யுங்க.." என்று கூறி விட்டுச் சென்ருர் டாக்டர்.
"அட ரெண்டு நாளா மழையே இல்லையே! எப்பிடித் தான் தலைல தண்ணி விழும் ?" என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டவனுக்குக் கடைசி வரை விடையே கிடைக்கவில்லை.
காக்காவின் மரணச் செய்தி கேட்டு அந்த நகரமே அவ் விடத்தில் கூடிவிட்டது. காக்கா ஒரு அணுதை என்பதால் அவரின் இறுதிக் கடமைகளைத் தானே முன்நின்று நடத்தத் துணிந்த இன்ஹாமைத் தடுத்த இரும்புக்கடை இஸ்மாயில்,
**இது ஒரு நன்மையான காரியம். எல்லாருமாகச் சேர்ந்து செய்வோமே! இந்தாங்க. என் கணக்குல இது." என்று கூறியவாறு எல்லோரும் காணும் விதம் இரண்டு நூறு ரூபா நோட்டுக்களை நீட்டினன்.
அப்போதுதான் அங்கே ஓடிவந்த பிடவைக் கடை புஹாரி பின் நிற்கவில்லை.
“கவணுக்குத் தேவையான பிடவைகள் நான் தாறன்" என்ருன்.
கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னுல் வந்த பக்கத் துக்கடை பஷிர்
*இந்தாங்க என்பேருல இருநூற்று ஐம்பது ரூபா. கொப்பியில குறிச்சிக் கொள்ளுங்க.." என்று பணத்தை நீட் டினுர். இஸ்மாயிலைவிட கூடுதலாகக் கொடுத்துத் தன்னைப் பெரிய தாராளவாதியென ஜனங்களுக்குக் காட்டிக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவருக்குப் பரம சந்தோஷம்.
இம்மூன்று பேரினதும் நல்ல உள்ளங்களையும், பரந்த மனப்பான்மையையும் அந்த ஜனவெள்ளம் வானளாவப் புகழ்ந்து கொண்டது.

அப்போது அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த நாகூர் காக்காவின் உயிரற்ற சடலம் தனக்குள்ளேயே,
*"நேத்து தேத்தண்ணிக்கு ஒரு ரூபா தராதவன் இன் டைக்குப் பேருக்கும் புகழுக்குமாக நூற்றுக் கணக்குல தூக்கி வீசுருன். பசிக் களைப்புல சாப்பாட்டுக்கு வழி கேட்ட நேரம் என்ன ஓட ஓடத் துரத்தினவன் இன்டைக்குப் புகழுக்காக நூற்றுக் கணக்குல வாரி வீசுருன். நான் ராத்திரி தூங்கப் போன நேரம் அந்த புஹாரி தலையில தண்ணிய வாரி ஊத்தி என்னத் தூங்க விடாம விரட்டியடிச்சான். இன் டைக்கு என் ஜனுஸாவுக்கு கவண் போடப் போருளும். நான் உயிரோட இருக்கிற நேரம் என் பசிக்கு உதவாம, தாகத் துக்கு உதவாம, எனக்குத் தூங்க இடம் தராம என்ன துரத் தியடிச்சவங்க என் உயிரே போனப்புறம் அந்தச் சீதேவி இன்ஹாமத் தடுத்திட்டு ஆளுக்கு ஆள் பெரிய மனுஷர் களாகி, பேருக்கும் புகழுக்கும் ஏன்ட ஜனுஸாவ எடுக்க போருங்க. நல்ல மனுஷர்களாக வேஷம் போட்டு சனங் களயும், சமுதாயத்தையும் ஏமாத்தலாம். ஆணுல் எங்களப் படைத்து பரிபாலிக்கிற அல்லாஹ்வ ஏமாத்த ஏலாது என் கிற விஷயம் இந்தப் போலிகளுக்குப் புரிஞ்சாத்தானே. 1" என வேதனையுடன் நினைத்தவாறு அமைதியாகக் கிடந்தது.
தினகரன்" வார மஞ்சரி 12-10-1986

Page 14
வாக்குறுதிகள் வலிமையிழந்தபோது.
மாலை மங்கி இருள் கவியும் நேரம். இன்னும் வேலைக் குப் போன மகன் வாரிஸ் வீடுவந்து சேரவில்லை. மகனின் வரவையே ஆவலோடு எதிர்பார்த்து வீட்டு வாசற்படியி லேயே கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த தாய் பதீனு வின் இதயத்திலிருந்து வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக நீண்டதோர் பெருமூச்சு வெளிக்கிளம்பியது.
*ம்ஹ"ாம். இந்தப் பதினேழு வயசிலேயே படிப்ப நிறுத்திட்டு உழைத்து இந்தக் குடும்பத்தக் காப்பாத்த வேண்டிய தலையெழுத்து என் மகனுக்கு. நாளொன்றுக்கு நாப்பது ரூபா உழைக்கிறதுக்கு என்புள்ள கடைல என்ன பாடெல்லாம் படுருனே ? உலகத்தப் புரிஞ்சி கொள்ளாத இந்தப் பிஞ்சு வயசுல . பெத்த தாய்ட அணைப்பையே மறக் காத இந்தச் சின்ன வயசுல. யா அல்லாஹ்! அவனுக்கு ஏன் தான் இந்த நசீபக் கொடுத்தாயோ? ஏன்தான் எங்க குடும்பத்த இப்பிடி சோதிக்கிருயோ..? அவரு மட்டும் இந்த நேரம் இருந்தா என்புள்ள இப்படிக் கஷ்டப்படவேண்டி வந்திருக்குமா. ?" என ஏதேதோ சிந்தித்துக் கண்கலங்கிய வளின் கடந்த காலம் அவள் முன்னே விரிகிறது.
O O O 80 g
பதீன ஸப்வானுக்கு மனைவியாகி இப்போது பதினெட்டு வருடங்கள் கடந்திருக்கும். ஸப்வான் பதீனு தம்பதியினரின் இல்லற வாழ்வின் இனிய நினைவாக அவர்களுக்கு நான்கு பிள்ளைச் செல்வங்கள் கிடைத்தன. மூத்தவன் மகன். அடுத் தது இரண்டும் பெண் மக்கள். நான்காவது ஒரு மகன்.
கணவன் ஸப்வான் தன் மனைவி மீதும் அன்புச் செல் வங்கள் மீதும் உயிரையே வைத்திருந்தார். தம் மனைவி மக் களுக்கு எந்தக் குறையும் வைக்காது அவர்கள் திருப்தியுே தன் திருப்தியென வாழ்ந்தார் ஸப்வான்.

2岛
அவர் தனது மனைவிமக்களோடு மட்டுமன்றி தனது குடும்பத்தினரோடும், மனைவியின் குடும்பத்தினரோடும் மிக வும் அன்பாகவும், ஆதரவாகவுமே வாழ்ந்து வந்தார்.
பதீனுவை மணமுடிக்கும் போது அவளின் தம்பி தங் கைகள் பெரியவர்களாக இருக்கவில்லை. எனவே தந்தையை இழந்திருந்த அவர்களின் முன் ஸப்வான் ஒரு தந்தையின் நிலையில் நின்றே, அவர்களைப் படிப்பித்து பராமரித்து வந் தார்.
பதீனுவின் தங்கைகள் திருமண வயதை அடைந்த போது ஒரு தந்தை அல்லது சகோதரர்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்பான கடமையைத் தானே முன் நின்று நடத்திமுடித்தார். அந்தளவுக்குத் தாராள மனமும், இரக்க சிந்தையும் அவரிடம் இயல்பாகவே அமைந் திருந்தன.
அப்போது அவர்களது மூத்த மகன் வாரிஸ் பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தான். எப்படியாவது அவனைப் படிப்பித்து ஒரு டாக்டராகக் காணவேண்டுமென் பது ஸப்வானின் ஒரே லட்சியமாக இருந்தது.
அத்தக் குடும்பத்தில் எத்தத் துன்ப துயரங்களும் இடம் பெருது அவர்கள் வாழ்வு சீராக இயங்கிக் கொண்டிருந்தது. இதை இறைவனே விரும்பவில்லையே..என்னவோ,ஒரு நாள் நெஞ்சு வலி" என்று கட்டிலில் சாய்ந்த ஸப்வான் நிரந்தர மாகவே கண்களை மூடிக் கொண்டார். இந்த எதிர்பாராத பேரிடியினுல் தாக்கப்பட்ட பதீனு தன்நினைவிழந்து மூர்ச்சை யானுள்.
அந்தக் குடும்பத் தலைவனின் திடீர் பிரிவைப் பதீனு வினுலும், குழந்தைகளாலும் தாங்க முடியவில்லை. தலைவனை யிழந்து அந்தக் குடும்பம் தள்ளாடியபோது, குடும்பத்தினர் என்றும், உறவினர்கள் என்றும் எல்லோரும்தான் ஆறுதல் கூறினுர்கள்.
"தாத்தா. அழாதீங்க தாத்தா. இந்தக் குடும்பத் துக்கு ஒரு குறையும் வராம பார்க்கிறது தான் இனி என்

Page 15
26
வேலை." என்று பொறுப்புணர்ச்சியோடு கூறினன் பதீன வின் மூத்த தம்பி.
பேரன்புத் தந்தையின் பேரிழப்பால் தேம்பியழும்செல்வ மகளை அரவணைத்து அவள் தலையை ஆதரவோடு தடவிய படியே,
* மகள் அழாதீங்கம்மா . இனிமேல் நான்தான் உங் களுக்கெல்லாம் வாப்பா. என்ன வாப்பாவாகவே நெனச்சி உங்க தேவைகளையெல்லாம் என்கிட்டக் கேளுங்க. உங்கள யெல்லாம் கண்கலங்க விடாம என் புள்ளைகள் போலப் பாப் பேன்." இப்படி அந்த சமுத்திரத்தின் முன் அளந்து கொட்டியவர் பதீனுவின் தங்கையின் கணவர் பாறுாக்.
'நீங்க அழாதீங்க தாத்தா. அழறதால மெளத்தான வரு வரவா போருரு.? மெளத்து எல்லாருக்குமே வரக் கூடியதுதானே! அதனுல கண்ணத் துடைச்சிட்டு மனச தைரியமா வச்சுக் கொள்ளுங்க. இந்தக் குழந்தைகளுக்கா கவே நான் வாழப் போறேன். நான் கல்யாணமே கட்ட மாட்டேன்." என எல்லோரையும் விட ஒருபடி மேலே போனுன் பதினுவின் இளைய தம்பி.
நாட்கள் நகர்ந்தன ஸப்வான் காலமாகி இப்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை காலமும் பதினவின் குடும்ப வண்டி அவளின் தாய்வீட்டினரினதும், உறவினர் களினதும் உதவிக் கரங்களால் மெதுவாக ஊர்ந்து சென்றது.
ஆரம்பத்தில் விருப்புடன் உதவியவர்கள் காலம் செல்லச் செல்ல வெறுப்புடன் நடந்து கொண்டார்கள். தருவதை முணுமுணுத்தபடியே தந்தார்கள். நாட்செல்லச் செல்ல அவர்கள் தங்களது சுயரூபங்களைக் காட்டவே செய்தனர்.
நாட்கள் நகர்ந்த வேகத்தில் "இனிமேல் கல்யாணமே கட்டமாட்டேன்" என்ற தம்பியும் திருமணம் முடிப்பதற்கு ஆயத்தமாகி விட்டான். இப்போது அவளின் தாய்வீட்டினர் நிறைந்த செல்வச் செழிப்போடும், ஆடம்பரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள்.

2?
வீட்டினர் இணைந்து தரும் நாற்பது ரூபாவில் தாயின தும், நான்கு பிள்ளைகளினதும் வயிறும், மனமுமா நிறையப் போகிறது ? அந்த நாற்பது ரூபாயில் எத்தனை சாமான்கள் தான் வாங்குவது. ? எத்தனை வேலைகள் தான் செய்வது ? எப்படியோ அரைப்பட்டினியோடு பதீனுவின் குடும்ப வண்டி மெதுவாக நகர்ந்தது.
ஒருநாள், வீட்டினர் தரும் பணத்தைப் பெறுவதற்காகத் தாய் வீட்டிற்குச் சென்ருள் பதீனு. முகத்தில் வெறுப்புக் குறி கள் வெளியாக நாற்பது ரூபாவை அவள் கையில் கொடுத்த இளைய தம்பி,
"தாத்தா. உன் குடும்பத்தை இத்தன நாளும் நாங்க பார்த்ததே பெரிய வேலை. முந்தி மாதிரி இப்ப தொழிலும் சரியில்ல. இப்பிடியே உன் குடும்பத்தக் கவனிச்சிக்கிட் டிருந்தா எனக்குக் கல்யாணமில்லயா. வாழ்க்கயில்லயா ? தயவு செஞ்சி இனிமேல் எங்களக் கஷ்டப்படுத்த இங்க வராத ..!" என்று அவன் கூறக்கூறத் துடித்துப் போனுள் பதீன.
"அவரு மெளத்தான நேரம் நீங்களெல்லாரும் எப்படி யெல்லாம் வாக்குறுதி தந்தீங்க..! இப்ப நீங்களா இப்பிடிப் பேசுறது ? கூடப் பொறந்த உடன்பிறப்பும், குழந்தைகளும் பட்டினியோட இருக்க, நேத்து ஊரயெல்லாம் கூட்டி பல ஆயிரங்களச் செலவு செஞ்சி, பேருக்கும் புகழுக்குமாக பெரி சாக் கந்தூரி கொடுத்தீங்களே..! எனக்கில்லாத காசு அதுக் கெல்லாம் இருக்கோ..?' என மனத்திற்குள்ளேயே அழுது தீர்த்த பதீனு கலங்கும் கண்களோடு பக்கத்தில் நின்ற தங் கையை நிமிர்ந்து பார்த்தாள். அவளாவது தனக்காகப் பேசு வாளென எதிர்பார்த்தாள் பதீனு.
"நாஞ சொல்றதும் சரிதானே! அவரும் வாழனும் இல்லையா..? அதனுல எப்படியாவது வாழ்க்கையில் போராடி வெல்லப்பாரு...!" என்ற தங்கையின் அறிவுரைக் குக் காது கொடுக்கவிரும்பாத பதீனு, பக்கத்தில் நின்றிருந்த தாயை நிமிர்ந்து நோக்கினுள்.

Page 16
28
'பாரு...! அவங்க ரெண்டு பேருமே சொல்றது சரி தானே! இந்தக் காலத்துல தாயையும், நாலு புள்ளைகளையும் பாரமெடுத்துப் பாக்குறதென்ருல் லேசான காரியமா..? அதனுல நீயாக யோசிச்சுப்பாரு. இப்பதான் எல்லாப் பொம் பிளைகளும் டுபாய் போருங்களே! நீயும் போனுல்தான் என்ன ?" என்ற தாயின் போதனை பதீனுவின் கண்களி லிருந்து தாரைதாரையாகக் கண்ணிரை வெளிவரச் செய் தது. பாவம் அவள்மீது மனிதாபிமான ரீதியில் இரக்கப்பட ஒரு இதயமுமே அங்கிருக்கவில்லை.
*யா அல்லாஹ் இதென்ன அநியாயம் ? அவரு இருந்தா நாலுபேருக்கு முன்னுல அவமானப்படவோ, கண்ணிர் வடிக்கவோ நேர்த்திருக்குமா.. ? சே . என்ன உலகமிது ? ஒரு தந்தைட இடத்துல நின்று அவரு இந்தக் குடும்பத்துக்குச் செய்த சேவைகளுக்கு ஒரு நன்றியுணர்வு கிடையாதா..? அவரு மெளத்தான நேரம் நாலு பேருக்கு முன்னுல வாக்குறுதிகளத் தந்து, எப்படியெல்லாம் தங்களப் பெரிய மனுஷர்களாக இனங் காட்டிக் கொண்டாங்க. பெத்த உம்மாவே டுபாய் போய் பிள்ளைகளக் காப்பாத்து என்ற சொல்ற நிலைக்கு வந்துட்டேனே." என மனதிற்குள் நினைத்து அழுதவளை,
“என்ன பதினு யோசிக்கிறே 1 யோசிக்க என்ன யிருக்கு ? உலகத்துல நடக்காததையா நான் சொல்றேன்? நீ வெளிநாடு போனுத்தான் எல்லாக் கஷ்டங்களுமே தீரும்” என்ற தாயின் தீர்ப்பு பதீனுவைத் திடுக்கிட வைத்தது.
**உம்மா. நீங்க எது வேணுமென்ருலும் சொல்லுங்க. ஆனல், டுபாய் போக மட்டும் சொல்லாதீங்க . அவரு உசி ரோட இருக்கிற நேரமே பொம்புளைங்க வெளிநாடு போறது அவருக்குப் பிடிக்காது. அவருக்குப் பிடிக்காதத நான் செய்யணுமா ? ஒருபோதும் மாட்டேம்மா..!" என்று மறுத்தவளிடம்,
* உன் புள்ளைகள்ட நன்மைக்காகத் தான் சொன்னேன்.
நீ கேக்குறதாயில்ல. அதனுல இங்கு வந்து தொல்லை தராம எப்பிடியாவது வாழ்ப்பாரு 1 தாயின் வார்த்தைகளை ஜீர

29
ணிக்க முடியாது, அவ்விடத்திலிருந்து கண்ணிரோடு வீடு வந்து சேர்ந்தாள் பதீன.
இந்த உலகத்தையும், அதில் நடமாடும், மனிதர்களின் விசித்திரமான போக்கையும் நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை அதிகரித்தது. அதுவும் தன்னைப்பெற்ற தாயினுலும் உடன்பிறப்புக்களாலும் தான் நோவினை செய்யப்பட்டதை நினைக்க நினைக்க அவள் இதயம் நீண்ட துன்பத்தை அனு வித்தது s
வீடு வந்த பதீனு, தாய் வீட்டில் நடந்த விஷயத்தையும், இனியும் அவர்கள் பணம் தர விரும்பவில்லை என்பதையும் தன் செல்வங்களின் முன் விபரித்தபோது, அந்தப் பிஞ்சு நெஞ்சங்களும் கலங்கிப்போயின.
"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ஆமா. இனி என் புள்ளைகள நானே உழைச்சுச் காப்பத்தப் போறேன். நாளைல யிருந்து நான் இடியப்பம் அவிக்கப் போறேன். "" என்று ஆவேஷத்தோடு கூறிய அன்புத்தாயின் வாயைத் தன் பிஞ் சுக்கரங்களால் பொத்திய மூத்தவன் வாரிஸ்,
'உம்மா நீண்ட நேரத்துக்கு அடுப்படியில நெருப் போட கஷ்டப்படுறது உங்க உடம்புக்கும், உயிருக்கும் கெடுதியென்று டொக்டர் சொன்னத மறந்துட்டீங்களா..? வேணும் உம்மா. நான் இருக்கிறவரைக்கும் என் உம்மா கஷ்டப்பட அனுமதிக்கமாட்டேம்மா . 1 நானெரு முடிவுக்கு வந்துட்டேன். நான் படிக்கிறத நிறுத்திட்டு ஒரு கடையில சேர முடிவெடுத்திட்டேன்,' என்று அவன் கூறியபோது பதறிப்போனுள் பதீனு.
"என்ன மகன். படிப்பையா விடப் போறே? ஒன்னப் படிப்பிச்சு பெரிய டாக்டராக்கணும் என்று உங்க வாப்பா எவ்வளவு ஆசப்பட்டாருடா. "" என அவள் கூற வந்ததைக் கூறி முடிக்க முன்பே, கண்களிலிருந்து மகாவலியாய் நிரம்பி வழியும் அன்னையின்கண்ணிரைத் துடைத்துவிட்ட வாரிஸ்,
'உம்மா அழாதீங்கும்மா..? ஏழைக்கு என்னம்மா பெரிய்ய படிப்பு .? ஒரு நேரச் சோத்துக்கே கஷ்டப்படுற

Page 17
30
எங்களுக்கெல்லாம் எதுக்கும்மா படிப்பு ? அவங்க தார பிச் சைக்காசில அரைப்பட்டினி கிடந்து சாகிறதவிட படிப்ப விட்டுட்டு, எங்காவது கடையில சேர்ந்து கஞ்சி குடிக்கிறது மேலும்மா. சொன்னுக்கேளுங்க உம்மா. நான் நாளைக்கே டவுனிலுள்ள கடையொன்றுல சேரப் போறேன் என்னத் தடுத்திடாதீங்க உம்மா." உணர்ச்சியோடு பேசிய அன்பு மகனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்ட பதீனு.
13 மகன். உன் முடிவுக்கு குறுக்கால நான் வரல்லப்பா . நீ விரும்புற மாதிரி கடைல சேர்ந்து இந்த நாலு உசிரை யும் காப்பாத்தப்பா..!" என்று கூறி விட்டாள்.
'உம்மா கவலப்படாதீங்க . நான் தொடர்ந்து படிக் காட்டியும் என் தம்பி, தங்கச்சிமார நான் படிக்க வச்சி முன் னுக்குக் கொண்டு வருவேம்மா.தம்பியக் கொண்டு வாப் பாட ஆசையை நிறைவேத்து வேம்மா..!" என்று திடமா கக் கூறிய வாரிஸை வாரி அணைத்துக் கொண்டாள் அந்த அன்புத்தாய்.
இப்போது பதீனுவின் வீட்டினர் அவளுக்குப் பணம் தரு வதுமில்லை. அதைப்பெற அவள் தயாராகவுமில்லை. மக னின் உழைப்பில் எப்படியோ நிம்மதியான வாழ்வு அவள் குடும்பத்திற்குக் கிடைத்து விட்டது.
காலையில் கடைக்குச் செல்லும் வாரிஸ் கடையில் நாள் கூலியாகக் கிடைக்கும் நாற்பது ரூபா பணத்தில் வீடு திரும் பும் போது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் எடுத்து வருவான்.
இவ்வளவு நேரமும் மகனின் வரவையே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பதீனு, சாமான் பையுடன் தூரத் தில் வரும் தன் மகனை அடையாளம் கண்டு கொண்டபோது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
வாக்குறுதிகள் வலிமையிழந்த போது ஒரு பிஞ்சு மனம் சுமைதாங்கியாகியது.
இலங்கை வானெலி முஸ்லிம் சேவை.

ஊனமான உள்ளங்கள்
நீண்ட நேரமாகப் பத்திரிகையைக் கையில் பிடித்தபடி படிப்பதுபோன்று பாசாங்கு செய்து கொண்டிருந்த ஹஸன் ஹாஜியார் சற்று நிமிர்ந்து மூக்குக் கண்ணுடியினூடே கலங்கும் கண்களால் மனைவியை நோக்கினுர். அவர் மனைவி ஹஸினு இன்னும் அழுது கொண்டிருந்தாள். அவளை எப் படி சமாளிப்பதென்று அவருக்குப் புரியவில்லை.
நேற்று அந்தக் கடிதம் தாங்கி வந்த பேரிடி தாங்கக் கூடியதா? அந்தக் கடிதம் கிடைத்த நேரம் தொட்டு அவர் கள் இருவரும் உயிரும், உணர்வுகளுமற்ற நடைப்பிணங்கள் போன்று மாறிவிட்டார்கள்.
அந்தக் கடிதம் அவர் நினைவில் மீண்டும் மீண்டும் தோன்றி அவரைப் பயம் காட்டியது.
அன்பின் ஹஸன் ஹாஜியார் அவர்களுக்கு
இக்கடிதத்தை ஜித்தாவிலிருந்து மிகவும் துயரத்தோடு வரைகிறேன்.
சில தினங்களுக்கு முன் உங்கள் மகன் இங்கு விபத் தொன்றில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிருர், இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில் அவரது வலது காலை முழங்காலளவில் வெட்ட வேண்டியேற் பட்டுவிட்டது. இப்போது வெட்டப்பட்ட காலுடன் சிகிச்சை பெறுகிருர். அடுத்த மாத முற்பகுதியில் எமது கம்பனி அவரை தாயகம் அனுப்பவுள்ளது. கவலைப்படாதீர்கள். இப்பெரிய விபத்தில் உங்கள் மகனின் உயிராவது தப்பி, மீண்டும் அவரை உயிருடன் காணக் கிடைப்பதற்கு அல் லாஹ்வைப் புகழுங்கள். அதிகமில்லை முடிக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் மகனின் நண்பன் இர்பான்

Page 18
33
இக்கடிதம் அந்தத்தம்பதியினரை வெகுவாகப் பாதித்து
விட்டது. தன்னுடைய ஒரே மகனுக்கு நடந்துவிட்ட இந்தக்
நினைத்து ஹஸின இன்னும் அழுது கொண்டிருக் ருள.
பத்திரிகையை மடித்துவிட்டு எழுந்து வந்த ஹாஜியார் தம் மனைவியை ஆதரவோடு நெருங்கி,
"ஹஸினு அழாதம்மா. எல்லாமே அல்லாட செயல். அதனுல நாங்க பொறுமையாயிருப்போம்" என ஆறுதல் கூறினுர்,
எப்போதும் மகனையே நினைத்து அழுது கொள்ளும் ஹஸினுவின் உள்ளத்தில் மகனின் கடந்த கால வாழ்க்கை அடுக்கடுக்காக வந்து போகும்.
o () O OO 09 O
ஹளபீனுவுக்கும் அவள் கணவர் ஹஸனுக்கும் ஒரே பிள்ளை தான் ரஸின். அவர்களது குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் கீழ் மட்டத்தை உடையது ஆம். அந்தக் குடும்பத்திற்கும், வறுமைக்கும் அதிகத் தொலைவில்லை. வறுமை என்ற சொல்லுக்கு அர்த்தத்தை அந்தக் குடும்பத் தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ரஸினின் தந்தை ஒரு மிட்டாய் வியாபாரி. மிட்டாய்ப் பொட்டியுடன் ஊர் ஊராகத் திரிந்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் அவர்கள் கால் வயிருே அரை வயிருே நிறைந்தது.
ர வலி ரிை ன் தந்தையின் தங்கை ஜாரியாவும் அதே ஊரில் தான் வாழ்ந்து வருகிருள். அவனின் தாய் ஹஸினவின் சகோதரர் மக்கீனும் அதே ஊரில் தான் உள் ளார், ரஸினின் மாமி குடும்பமும், மாமா குடும்பமும் வசதி யான குடும்பங்கள். ஊரில் விரல்விட்டு எண்ணக் கூடிய செழிப்பான குடும்பங்களில் அந்த இரண்டு குடும்பங்களும் அடங்கும்.

33
மாமி ஜாரியாவினதும் மாமா மக்கீனினது குடும்பங்கள் premeofeir குடும்பத்தோடு உறவில் நெருங்கியதாக இருந்தாலும் உரிமையில்..? உதவிகளில்...? அந்த உறவு கள் தூரமாகவே இருந்தன. இதற்குக் காரணமே ரஸினின் குடும்பத்தின் ஏழ்மைதான்.
வசதிகளும், வாய்ப்புக்களும் இருக்கும் போது தான் உறவுகள் ஒட்டியிருந்து உறவாடுமே! எதுவுமே இல்லை யென்ருகும்போது. அந்த உறவுகள் எட்டிப் போகத்தானே செய்கின்றன. இதற்கு அந்த இரு குடும்பங்களும் விதி விலக்காகி விடத்தான் முடியுமா..?
ரஸினுக்குப் பதினைந்து வயதாகும்போது தொடர்ந்து அவனைப் படிப்பிக்கும் வசதி தந்தை ஹஸனிடம் இருக்க வில்லை. படப்பில் கெட்டிக்காரஞன மகனைப் பாடசாலையால் நீக்கிவிடுவதும் கொடுமையாகப்பட்டது அவருக்கு. நேரே தங்கை ஜாரியாவிடம் போன அவர்,
“தங்கச்சி. ரஸினப் படிப்பிக்கிற வசதி என்கிட்ட இல்ல. அடுத்த வருஷம் அவன் சோதினை எழுதுவான். அது வரைக்கும் அவனுக்குத் தேவையானத வாங்கிக் கொடுப் பியா..?" என்று நம்பிக்கையோடு கேட்டபோது,
*வசதியில்லாட்டி அவன ஏன் படிப்பிக்க ஆசப்பட வேணும்.? பேசாம ஹஸினு மதினிட நானுட கடைல அவனச் சேருங்க. தொழிலையாவது பழகுவானே. "என்று உதவி கேட்டுச் சென்றவருக்கு உபதேசம் புரிந்து வெறுங்கை யோடு அனுப்பினுள் ஜாரியா.
விஷயத்தை விளங்கிக் கொண்ட அன்னை ஹஸீனு,
"அதுவும் நல்ல யோசின தானே! எதுக்கும் எங்க நானுக்கிட்ட கேட்டுட்டு வாறன் !" என்று நாணுவின் வீட்டுக்குப் புறப்பட்டாள். தங்கையின் தலையைக் கண்ட துமே.
"என்ன தான் உதவிகேட்டு வாராளோ..? அவ என்னக் காணும இருந்திருந்தா, உள்ள போய் நின்று

Page 19
Sl
கொண்டு வீட்டுல நான் இல்லையென்று சொல்லி, அவளத் திருப்பி அனுப்பியிருக்கலாம். 1" எனச் சிந்தித்தவாறே முகத்தைச் சுளித்துக் கொண்டார் மக்கீன்.
"நாணு 1 மகன் ரஸின ஸ்கூலால நிறுத்தப் போருேம். அவன உங்க கடைல சேர்த்துக் கொள் நீங்களா..?" என ஹஸினு கேட்டபோது,
அவன் இன்னும் சின்னப் பொடியன் தானே! அவ ஞல பெரிசாக என்ன வேலை தான் செய்ய ஏலும். ? சும்மா மடத்தனத்த உட்டுப் போட்டு, அவன ஸ்கூலுக்கே அனுப்பு !' என முகத்தில் அறைந்தாற் போல் கூறிவிட்டு அவளின் பதிலுக்குக் காது கொடுக்காமலேயே உள்ளே நழுவி விட்டார் அவர். அதற்கு மேல் அந்த இடத்தில் நின்றிருக்க விரும்பாத ஹஸினு, ஏமாற்றத்தோடும், வேதனை யோடும் படியிறங்கி வீடு திரும்பினுள்.
தமது உடன் பிறப்புக்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்டபோது ஹஸினுவும் ஹஸனும் மனவேதனையால் வெந்தார்கள்.
ஒன்பதாம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முடிவு கட்டிய ரஸின், தந்தைக்கு உதவியாக மிட்டாய் வியாபாரத்தில் ஈடு படலானுன்.
ஆண்டுகள் பல மாண்டு மடிந்தன. ரஸின் இப்போது சிறுவன் அல்ல. இருபது வயது வாலிபன் அவன். சில வருடங்களாகக் கூலி வேலை செய்து உழைத்த அவனின் நல்ல குண நலன்களைக் கண்ட நகரிலுள்ள பிடவைக் கடை யொன்றின் உரிமையாளர் அவனைச் தனது கடையில் சேர்த் துக் கொண்டார்.
அந்தக் கடை உரிமையாளரான இக்பால் முதலாளி மிகவும் நல்ல மனிதர். பணம் படைத்தவராக அவர் இருந்த போதும் பண்புகள் நிறைந்த மனிதராகவே அவரைக் கண் டான் ரஸின். தன்னுடைய மகன் ஒருவனைப் போல் அவர் அவனை நடத்தினுர்,

35
வெளிநாட்டு வேலை மோகத்தினுல் கவரப்பட்ட ரஸின் ஒருநாள்,
*முதலாளி. ! எனக்கென்ருல் வெளிநாட்டுக்குப்போய் உழைக்க நல்ல விருப்பம் 1 இருந்தாலும் பணத்துக்கு என்ன பண்றது என்று தான் யோசிக்கிறேன். 1" என தனது உள்ளத்து ஆசையை அவரிடம் வெளியிட்டபோது
**நல்லது. 1 பணத்தப் பத்திக் கவலப்படவேணும் மகன். முதல்ல பாஸ்போட்ட எடுங்க. 1" எனக் கூறிய வராக அவனின் கையில் ஐநூறு ரூபாயைக் கொடுத்தார் இக்பால். எதிர்பாராத உதவியால் உள்ளம் பூரித்த அவனது கண்கள் நன்றிப் பெருக்கால் கலங்கி விட்டன.
இரண்டு வாரங்களில் பாஸ்போர்ட் கிடைத்து விட் டது. வெளி நாட்டு வேலை வாய்ப்பு ஒன்றின் நேர்முகப் பரீட்சைக்கும் போய்வந்தான் ரஸின் அந்த ஏஜன்ஸி"க்கு பத்தாயிரம் கட்டவேண்டியிருந்தது. அந்தப் பணத்தைத் தானே கட்டி, அவனை மத்திய கிழக்குக்கு அனுப்பி வைத் தார் இக்பால்.
வெளிநாடு போன ரஸினுக்குப் போதுமான சம்பளத்து டன் நல்ல வேலையொன்றும் கிடைத்துவிட்டது. ரஸின் தனது முதலாளி இக்பாலுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வாள்.
"எனக்கு இப்போது பணம் அனுப்ப வேண்டாம். அதைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்து முன்னேறுங்கள்" என அறிவுரை எழுதுவார் இக்பால், அவரின் இமயத்தை யொத்த இதயத்தை நினைத்து உருகிப் போவான் ரஸின். இக்பாலின் உயர்ந்த குணப் பண்புகளுக்கு முன் தமது உற வினர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுக்கு அருவருப் பாக இருக்கும்.
நாட்கள் ஒன்றை ஒன்று துரத்த வருடமிரண்டு ஓடியது. ரஸினின் கடுமையான உழைப்பின் பயனுக அவர்களது

Page 20
88
குடிசை வீடு அழகிய கல்வீடாக உருமாறியது. நாளடை வில் ரஸினின் தந்தை சில்லறைக் கடை ஒன்றையும் அமைத் துக் கொண்டார். இப்போது அவர்களது கையில் பணப் புழக்கம் அதிகரித்தபோது, புதுத் பழக்கங்கள் தொற்றிக் கொண்டன. முன்பு அவர்களைப் புறக்கணித்த ஜாரியாவும், மக்கீனும் அவர்களோடு தானுக வந்து ஒட்டிக் கொண்டார் கள். மரத்தில் கனியிருக்கும் போது பறவைகள் வந்து உறவு கொண்டாடுவது இயற்கை தானே!
நாட் செல்லச் செல்ல ஹஸினுவும், ஹஸனும் தமது கடந்த கால வாழ்க்கையை எல்லாம் மறந்து, ஆடம்பர மாகவே வாழத் தலைப்பட்டு விட்டார்கள்.
இப்போது ரஸின் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டதால் மாமி ஜாரியாவும், மாமா மக்கீனும் அவனைத் தத்தமது வீட்டு மாப்பிள்ளையாக எடுப்பதற்குத் திட்டம் தீட்டினர்கள். அவர்களது எண்ணத்தை ஹஸினுவும், ஹஸனும் புரிந்து கொண்ட போது தம்பதியருக்குள் பிரச்சினை தொடர்ந்தது.
*ரஸினுக்கு என் தங்கச்சிட மகளத்தான் எடுக்க வேணும்...!" எனக் கூறுவார் ஹஸன். உடனே ஹஸீன கோபமாக, அதற்கு எதிர்ப்பைக் கிளப்புவாள்.
மகனின் திருமண விஷயத்தில் இப்படியாக அடிக்கடி பிரச்சினைப் பட்டுக் கொள்ளும் அவர்கள் ஒற்றுமையாக ஒரு முடிவுக்கு வரவேயில்லை. ஹஸினு தனது நானுவிடம் மகனை அவரின் மகளுக்கே தருவதாகவும், ஹஸன் தனது தங்கை ஜாரியாவிடம் மகனை அவளின் மகளுக்கே தருவதாகவும் கூறிவிட்டார்கள்.
மாதங்கள் சில மலர்ந்து மடிந்தன. திடீரென்று ஒரு நாள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பினுன் ரஸின். அவன் வரும்போது பணமும், நிறையச் சாமான்களும், தனக்கு உதவிய பெருந்தகை இக்பால் முதலாளிக்கென்று பிரத்தி யேகமான பார்சல் ஒன்றும் கொண்டு வந்திருந்தான்.
அவன் தாய்நாடு திரும்பிய உடனேயே இக்பால் முத லாளியின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள அவனுல்

g7.
முடிந்தது. தொழிலில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாகி கடையையும் இழந்து படிப்படியாக குடியிருந்த வீட்டையும் இழந்து களிமண்வீடு ஒன்றில் அவர் வசிப்பதாகவும், கூலி வேலை செய்து பிழைப்பதாகவும் அறிந்த போது அவனது வேதனைக்கு அளவேயில்லை. உடனே அவரைப் போய் பார்த்து உதவவும், ஆறுதல் கூறவும் விரும்பிய அவன் புறப் படத் தயாரான போது, அவன் தந்தை குறுக்கிட்டு,
"ரஸின். ! உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு.? வந்ததும் வராததுமாக அந்தப் பக்கீர்ட வீட்டுக்குப் போகப் போறியே. 1 நாம இருக்கிற நிலைல அங்க போறது எங் களுக்குத்தான் அவமானம். பிறகு ஊருல யார் எங்கள மதிக்கப் போருங்க ?" எனத் தடுத்தபோது துடித்துப் போய்விட்டான் அவன்.
*வாப்பா. இப்ப எங்களுக்கிட்ட இருக்கிற பணத்திமிர்ல நீங்க பேசுறிங்க. அவரையா பக்கீர்" என்று சொன் னிங்க. ? அந்தப் பக்கீர் செய்த உதவியால தான் நாங்க இந்தளவுக்கு உயர்ந்திருக்கோம் ! என்றைக்குமே நன்றி மறக்கக் கூடாது வாப்பா. 1 நன்றி இல்லாத மனிதனவிட இந்த உ ல கத் துல மோசமான வஸ்து கிடையாது வாப்பா. 1" உணர்ச்சி வசப்பட்டுப் பேசினுன் ரஸ்பீன்.
நீ அங்கயெல்லாம் போக வேண்டியதில்லை. அவருக் கிட்ட எடுத்த காச திருப்பிக் கொடுத்திட்டாச் சரிதானே ! அந்தக் காச என்க்கிட்டேயே கொடு 1 டவுனுக்குப் போற வழியில நானே ஆளக் கண்டு கொடுத்திடுறேன்..!" என மீண்டும் தனது குணத்தைக் காட்டியபோது.
**வாப்பா. அவரு காசு தந்தது உங்களுக்கில்ல, எனக் குத்தான். அதனுல அவருட வீடு போய் நான் கொடுக்கிறது தான் முறை. 1 ரொம்பக் கஷ்டத்தோட அவரு வாழற இந்த நேரத்துல அவருக்கு உதவி செய்றது என் கடம. இப்பவே போய் நான் அவரக் காணனும், ! பேசணும்." என்று முடிவாகக் கூறிய ரஸின் கையில் பணத்தோடு, தான் அவர் வீட்டிற்கென்றே கொண்டு வந்த பார்சலையும் கையில் ஸ்டுத்

Page 21
88
துக்கொண்டு புறப்படத் தயாராணுன். இதைக் கவனித்து விட்ட அவனுடைய தாய் ஹஸினு.
'உனக்கு மூளை இருக்காடா..? இந்தப் பெரிய பார்சல அந்தப் பிச்சக்காரர்களுக்குக் கொடுக்கப் போறியே ! எங் களுக்கு இந்த உடுப்புக்கள உடுக்க உறவுக்காரர்களா இல்ல. !’ என்று பாய்ந்து வந்து அவன் கையில் இருந்த பார்சலைப் பிடுங்கிக் கொண்டபோது அவன்,
“உம்மா.உங்க செயலக் கண்டு வெக்கப்படுறேம்மா.
அவங்களப் பிச்சக்காரங்கள் என்ரு சொன்னிங்க..? ஏன் உம்மா இப்படி வாய் கூசாமப் பேசுறிங்க..? நான் அவருக் கிட்ட வேலை பார்க்கிற நேரம் என் மானத்த மறைக்க அவரு எனக்கு உடுப்பும், ஒவ்வொரு பெருநாளைக்கும் உங்களுக்கும், வாப்பாக்குமாக உடு துணிகளும் தருவாரே. அத இவ் வளவு கெதியில மறந்துட்டீங்களே. இந்த உடுப்பயெல் லாம் உடுக்க உறவுக்காரர்க இருக்கென்று சொல்றீங்களே ! ஒரு காலத்துல உடுத்த உடுப்பக் கூட மாத்தி வேற உடுப்ப உடுக்க வழியில்லாம நாங்க கஷ்டப்பட்ட நேரம் இந்த உறவுக்காரர்க எல்லாரும் எங்க போய் இருந்தாங்க.1 ச்ரி தான். இந்த உடுப்புக்கள நீங்களே வச்சிக் கொள் ளுங்க..!?" எனக் கண் கலங்கக் கூறிய ரஸின் "விர்" என வீட்டை விட்டு வெறியேறிஞன்.
நேராக நகருக்குப்போன அவன் ஒரு பிடவைக் கடைக் குள் நுழைந்து, இக்பால் முதலாளியின் குடும்பத்தினருக்குத் தேவையான துணி வகைகளையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டு வழியில் விசாரித்துக் கொண்டே போய் ஒருவாறு அவரின் வீட்டைக் கண்டு பிடித்தான். அதை வீடு என்று சொல்வதைவிட குடிசை என்றே கூறி விடலாம். அந்தக் குடிசையைக் கண்ட அவன் விழிகளில் இருந்து கண்ணிர் பெருக்கெடுத்தது.
*மாளிகை போல வீடு, கடை என்று எப்படி வசதியாக வாழ்ந்த குடும்பம் . இன்டைக்கு இந்த நிலைக்கு ஆளாகிட் டாங்களே..!" எனக் கவலைப்பட்டுக் கொண்டே வீட்டை நெருங்கியவனின் காதுகளில் அந்த உரையாடல் நுழை கிறது.

S9
* "ஏங்க முந்தி நம்மட கடைல நின்ற ரஸின் வெளி நாட்டுல இருந்து வந்துட்டானமே.1 நாங்க எத்துன நேரம் தான் பட்டினி கிடக்கறது.? நீங்க ஒரு தடவ போய் ரஸினப் பாத்துட்டு ஏதாவது வாங்கிக் கொண்டு வாங்க..!" இது இக்பாலின் மனைவியின் குரல்.
"நானும் தான் கேள்விப்பட்டன். இருந்தாலும். அங்க போய் அவனுக்கிட்ட உதவி கேக்க மனசே வரல்ல. ! அது தங்கமான புள்ள..! இன்டைக்கோ. நாளைக்கோ கட்டாயம் வீட்டத் தேடிக்கிட்டு ஓடி வரத்தான் போருன். 1" இது அவரின் குரல்
"எப்படி கம்பீரமாக இருந்த குரல். இப்படி மாறிட் டாரே! வறுமைதான் மனிதன எப்பிடியெல்லாம் மாற் றிடுது. 1" என தனக்குள்ளேயே பேசிக் கொண்ட ரஸின்,
"ஆமாம! நான் இன்டைக்கே வந்துட்டன்..!"என்று கூறியவாறு உள்ளே நுழைந்தான் அவனின் திடீர் வரவால், அதிர்ந்து போன இக்பால் "ஆ. மகன் நீங்களா. வாங்க வாங்க..!" என வரவேற்ருர்.
"இக்பால் முதலாளியா இது. ? நம்பவே முடியல் லயே..! எப்படித் திடகாத்திரமாக இருந்தவரு.இப்போ. ஒரு நோயாளி போல இருக்காரே !' என நினைத்துக் கொண்ட ரஸின் பெருமூச்சுவிட்டான்.
அவரின் கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்ட ரஸினின் கண்களிலிருந்து கண்ணீர் ஆருக ஓடியது.
“முதலாளி. நேருல பார்த்த பிறகு தான் உங்கட நிலையே தெரியுது. 1 இப்படிக் கஷ்டப்படுறிங்களே. ஒரு நாளாவது இதயெல்லாம் எழுதியிருக்கப் படாதா. ?" என அவரை அன்புடன் கடிந்து கொண்டவன், தான் கொண்டு வந்த பொருட்களை அவரின் கரங்களில் கொடுத்தான். ஆனந்தக் கண்ணீரோடு அவற்றைப்பெற்றுக் கொண்டார் அவா.

Page 22
链0
அவனின் கண்கள் அந்தக் குடிசையை நோட்டம் விட்டன. ஒலைக் கூரை களிமண் சுவர். ஒரு பக்கமாக ஒரு கயிற்றுக் கட்டில். இரண்டு பழைய நாற்காலிகள். இவையே அவனது பார்வைக்கு உட்பட்டிருந்த இடத்தில் காணப் பட்டன, குடிசையை இரண்டாகப் பிரித்து நடுவில் ஒரு சீலை திரையிடப்பட்டிருந்தது.
"பங்களா போல வீட்டுல எவ்வளவு வசதியாக வாழ்ந்த வங்க 1" இப்படி நினைத்தபோதே அவனுக்குக் கவலை அதி கரித்தது.
“முதலாளி ! நீங்க கவலப்படாதீங்க . இந்தாங்க. இதில இருபத்தையாயிரம் ரூபா இருக்கு, ! ஏதாவது "பிஸ் னஸ்” பண்ணுங்க ! தேவப்படுற நேரம் வெக்கப்படாம பணம் கேளுங்க !' என்று கூறிய ரஸின் அவரிடம் பணக் கட்டை நீட்டினுன், உளப்பூரிப்போடு அதைப் பெற்றுக் கொண்ட அவர்,
"மக்ன். என்ன முதலாளி முதலாளி என்று கூப்பிடா தீங்க..! அந்தச் சொல்லே என்னக் கொல்லுது 1 எனக்கு எந்தக் கவலையுமே இல்லை. எனக்கிருக்கிற மூணு குமர்ப் பிள்ளைகளையும் எப்பிடித்தான் கரை சேர்ப்பேனுே என்று தான் பயமாயிருக்கு..!" எனக் கூறியபோது,
'ஒன்றுக்கும் கவலப்படாதீங்க.. ! எல்லாத்துக்கும் அல்லா போதுமானவன்..!" என ஆறுதல் கூறிய அவன், அவர் மனைவி கொண்டு வந்து நீட்டிய தேனீரைக் கையிலே வாங்கிக் கொண்டு பருகத்தொடங்கினுன்.அவன் அங்கிருந்து விடைபெறும்போது,
'எங்கட வீட்டுப்பக்கம் நாளைக்கு வாங்க. பகல் சாப் பாடு எங்க வீட்டுலதான் !" என அன்பாகக் கூறிவிட்டு வெளியேறிஞன்.
அடுத்த நாள் காலை பத்துமணியிருக்கும். அது ரஸின் காலை உணவு உட்கொள்ளும் நேரம் அப்போது முன் பக்கம்,

41
வீட்டுல உங்க மகன் இருக்காரர.?'இது இக்பால் முத லாளியின் குரல்.
"அவனு காலேயிலேயே கொழும்புக்குப் போயிட்டான்!” இது அவனது தந்தை ஹஸனின் குரல்
தந்தையின் பொய்யான வாாத்தைகளைக் கேட்டதும் தனயனின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரியத் தொடங் கியது. சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்தான் அவன்.
* இப்போ நான் முன்பக்கம் போனுல் வாப்பா பொய் காரன் என்கிறத அவரு கண்டு கொள்வாரு 1 அதனுல எனக்கும் தான் அவமானம் வாப்பா - ஏன் இப்படி நடக் குருரு ? வீட்டுக்குள் என்ன வச்சிக் கொண்டே அந்த ம்னு ஷன திருப்பி அனுப்பிட்டாரே ! கையில காசில்லாத காலம் உம்மாவும் வாப்பாவும் எவ்வளவு நல்லவங்களாக இருந் தாங்க ? இந்தப் பொல்லாத பணம் கையில வந்ததும்
நல்ல மனங்களும் கூட நாசமாகிப்போகுதே ! பணம் உள்ள வங்கிட்ட மனம் இல்லையென்று சொல்லுறதும் ஒரு வகையில் உண்மைதான் . எனத் தனக்குள்ளேயே பேசிக்
கொண்டான் ரஸின்.
ஒருமாத விடுமுறையில் நாடு திரும்பிய அவன் மீண்டும் மத்திய கிழக்கிற்குப் பயணமாக ஒரு வாரமே இருந்தது. அன்று தன்னறையில் கட்டிலில் சாய்ந்திருந்த அவனது செவிகளில் பெற்றேரின் வாக்கு வாதம் வந்து விழுகிறது.
"இங்க ! அவன்’ போறதுக்கு ஒரு கிழமதானே இருக்கு ! அதுக்கு முன்னுல இவனுக்கும் நானுட மகளுக் கும் கல்யாணத்தத்தீர்ப்பாக்கிட்டா என்ன..?' இது உம்மா வின் குரல்.
** என்ன மக்கீன் மச்சான்ட மகளுக்கா..? போடி மக்கு ! அதுதான் ஏன்ட தங்கச்சிட மகளுக்கு நான் முடி வாக்கிட்டேனே" இது அவனது வாப்பா,

Page 23
42
பெற்றேரின் உரையாடலை அவனுல் ஜீரணிக்கமுடிய வில்லை. "இத்தனையும் போதாதென்று என் வாழ்க்கையை யும்நாசமாக்கவா போருங்க ..!’ எனச் சிந்தித்தவாறே கட்டிலை விட்டுக்குதித் தெழுந்தான் ரஸின்.
உம்மா..! வாப்பா. நீங்க ரெண்டு பேரும் பேசிக் கிட்டு இருந்ததக் கேட்டன். உங்க ரெண்டு பேருட எண்ண மும் நடக்காது. இந்த தேவையில்லாத பேச்ச இப்பவே நிறுத்திடுங்க. ' எனக் கோபத்தோடு அவன் கூறிய போது,
“எதுடா தேவையில்லாத பேச்சு. கல்யாணம் தேவை யான சுன்னத்தான விஷயம் தானே..! ஏன்ட தங்கச்சிட மகளுக்கு என்னடா குறை? எனத் தந்தை குதிக்க,
"குறையா. ஒன்றுமில்ல, உங்கட எண்ணத்துலதான் குறையே இருக்கு . வாப்பா ! நாங்க கஷ்டப்படுற நேரம் யாரு உதவினுங்களோ, நாங்க நல்லாயிருக்கிற நேரத்துல அவங்கள அடியோட மறந்திடக்கூடாது. இக்பால் முத லாளிட உதவியால தான் நாங்க இந்த நிலைக்கு வரமுடிஞ் சிது. ஆணு இன்டைக்கு அவரு மூணு குமர்ப் பிள்ளைக ளோட ரொம்பக் கஷ்டப்படுருரு ..! அதலை அவருட மகள் கள்ள ஒன்ற நானே கல்யாணம் கட்டுறது தான் அவருக் குச் செய்யக் கூடிய நன்றிக்கடன். வேற எந்தப் பெண்ணை யும் கட்டுற எண்ணம் எனக்கில்ல . 1" என அவன் உறுதி யாகக் கூறியபோது,
"ம். அதையும் தான் பார்க்கிறேன். இந்த ஹஸன் உசிரோட இருக்கிற வரைக்கு அது நடக்காது. என்னை யும் மீறி நீ அப்பிடி அவளையே முடிச்சா ஏன்ட உசிரு இந்த உடம்புல ஒட்டியிருக்காது..!" எனப் பிடிவாதமாகவே கூறி நின்ருர் ஹஸன்.
அடுத்த வாரம் வந்தது கனத்த இதயத்தோடு விமா னத்தில் பறந்தான் ரஸின். நாட்கள் விரைவாக ஓடின. இம் முறை தாய்க்கும், தந்தைக்கும் "டிக்கட்" அனுப்பி அவர்கள் ஹஜ் கடமையைச் செய்ய ஏற்பாடு செய்தான் ரஸ்பீன்,

48
மாதங்கள் கடந்தன. அவர்கள் ஹாஜிகளாக பிறந்த மண் ணுக்கு மீண்டார்கள்.
அதன்பிறகு கடந்த இரு மாதங்களாகவே ரஸினிட மிருந்து கடிதமே வரவில்லை. தபாற்காரனை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவர்கள் பதறிப்போஞர்கள். இப்படி இருக்கும்போது தான் அந்தப் பேரிடியைத் தாங்கிய கடிதம் வந்து சேர்ந்தது.
d 0. O9 00 do
அன்று ஹஸன் ஹாஜியார் வீட்டில் இருக்கவில்லை. தனிமையும் மகனின் சிந்தனையும் அன்னை ஹஸினுவை வாட் டியது. ஒரு மனமாறுதலுக்காக தனது சகோதரனின் வீட்டுக் குப்புறப்பட்டாள் அவள். அங்கு விசேஷமான பலகாரங்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. விசேஷம் என்னவாக இருக்கும் என நினைத்தவள் அருகில் வந்த மக்கீனிடம்,
"நாணு ' என்ன ஒரே விசேஷமாயிருக்கு ?" எனச் சாதாரணமாகக் கேட்டபோது,
"ஒ. உனக்கு விஷயமே தெரியாதுபோல . நாளைக்கு ஏன்ட மகளப் பெண் பார்த்துட்டு அடையாளம் வைக்க வாருங்க. மாப்பிள்ள ஒரு டொக்டர். 1" என்று அவர் கூறிய போது அவளுக்குத் தலை சுற்றியது.
என்ன உங்க மகளுக்குக் கல்யாணமா ! அப்போ ஏன்ட மகன் ?" அதற்கு மேல் வாயிலிருற்து வார்த்தைகள் வராது தடுமாறினுள் ஹஸினு.
“உன்ட மகன ? பாரு ஹஸின . இப்ப அவன் ஒரு நொண்டி, காலில்லாதவன் கால்ல ஊனம் உள்ளவனுக்கு யாரு பொண்ணு கொடுக்கப் போருங்க. அவனுக்கு வேற இடத்துல பொண்ணு பாரு பொண்ணு கிடைக்காட்டி சும்மா இருந்துட்டுப் போகட்டுமே...!" என ஏளனத்தோடு தன் சகோதரன் கூறியபோது அதிர்ந்து போனுள் ஹஸீன. மேற்கொண்டு எதுவும் பேச அவளால் முடியவில்லை. மன

Page 24
44
மாற்றத்தை நாடி அங்கு சென்றவள் மனக்குழப்பத்தோடு வீடு திரும்பினுள்.
9 0. 09 O)
அது ஒரு வெள்ளிக்கிழமை. ஜ7ம்ஆத் தொழுகைக்குச் சென்று வந்த ஹாஜியார் பகலுணவை உண்டுவிட்டு பத்திரி கையோடு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். அப் போதுதான் உள்ளே நுழைந்த அவரது தங்கை ஜாரியா,
"நாணு .நாளைக்கு மகளுக்குக் கல்யாணம் தீர்ப்பாக்கு ருேம். கட்டாயம் நேரகாலத்தோட வந்திடுங்க ..!" எனக் கூறியபோது அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவர்,
"என்ன .உன் மகளுக்கா? என் மகனுக்குத்தான் உன் மகள் என்று நாம ரெண்டு பேரும் எப்பவோ தீர்ப்பாக்கி வச் சிட்டோமே ..!" பதறியபடி கேட்டார்.
*அதச் சொல்லுறீங்களா..? அந்த நேரம் சொன்ன மாதிரி இப்ப ஏலுமா? .இப்ப உங்க மகன் காலில்லாதவன். கிளியப்போல புள்ளைய வளர்த்து முடவன் கையில கொடுக்க ஏலுமா..? உங்களுக்கு ஒரு மகளிருந்தா நீங்கதான் கொடுப் பீங்களா..?" என்று கூறிவிட்டு பதிலுக்கும் காத்திராமல் வெளியேறிவிட்டாள் ஜாரியா.
மகனின் விடயமாக இரண்டு வீட்டினரும் கையை விரித்தபோது அவர்கள் போசனையில் ஆழ்ந்தார்கள். மகனின் எதிர்காலம் கும் மிருட்டாய் அந்தத் தம்பதியைப் பயமுறுத்தி
யது.
'சரி . அதவிடுங்க . அவங்கட குணம் அவங்களோட. நம்ம மகன் அந்த ஏழை மனுஷன் ட மகளத்தான் கட்டிக்க வேணும் என்று பிடிவாதம் பிடிச்சானே! இப்ப அவரும் ஒரு மாதிரியாக "பிஸ்னஸ் செய்ருரு இப்ப ரஸின் இருக்கிற நிலை .ஸ் அவனுக்கு ஒரு வாழ்க்க கிடைக்கிறமாதிரியில்லை. அதனுல அந்த விஷபத்தையே முயற்சி பண்ணிப் பார்த் தால் என்ன?" என ஹஸினு ஒரு யோசனையை முன்வைத்த

45
போது ஹாஜியாரின் மூளையும் வேலை செய்தது. உடனே அங்கு புறப்பட்டார் அவர்.
எப்போதும் இல்லாதது போல் ரஸினின் தந்தை வீடுதேடி வந்திருப்பது இக்பாலுக்கு அதிர்ச்சியைத் தரத் தான் செய்தது.
* வாங்க . வாங்க .இப்படி இருங்க.உங்க மகன் ரஸின்ட விஷயம் கேள்விப்பட்டேன். மனசுல ஒரே கவல. அந்த சீதேவிக்கு இந்தக் கதி வந்திருக்கக் கூடாது." அவர் கூறி முடித்த போது கண்கலங்கிப்போன ஹாஜியார்.
*இப்போ மகன்ட விஷயமாகத்தான் வந்திருக்கேன். அதாவது என் மகனுக்கு உங்க மகளப் பெண் கேட்டு வந்தி ருக்கேன். நீங்களும் எங்க உறவுக்காரர்களப் போல கைய விரிச்சிடாதீங்க..!" என கண்ணிரோடு கெஞ்சி நின்ற போது,
அவ்வளவு தானே! இதுக்கேன் அழுறிங்க ? கண்ணத் துடைங்க. அந்தத் தங்கமான புள்ளய மருமகனு எடுக்கிற தப்பத்தி நான் ரொம்பப் பெருமப்படுறன். அவனுக்குக் கால் தான் ஊனம். பரவாயில்ல. ஆணுல் உள்ளமே ஊனமாகிப் போனவங்க சமூகத்துல நெறையப் பேர் இருக்காங்களே . நீங்க கவலப்படாதீங்க. மகன் வந்தவுடனே கல்யாணத்த எடுப்போம்..!" என்ற இக்பாலின் வார்த்தைகள் ஹாஜியா ரைக் குளிரச் செய்தன. அங்கிருந்து நிம்மதியாக நிமிர்ந்து நடந்தார் அவர்.
ஒருவாரம் கழிந்திருக்கும் ஒரு நாள் வீட்டின் முன் திடீ ரென ஒரு கார் வந்து நின்றது. சத்தம் கேட்டு ஹாஜி யாரும், மனைவியும் வெளியே தலையை நீட்டிப்பார்த்தார்கள். கார்க் கதவு திறந்து கொண்டது. திறக்கப்பட்ட கதவினூ டாக இரண்டு ஊன்று கோல்கள் வெளியே தாவின. இதயம் அடித்துக்கொள்ள அவ்விடம் ஓடிவந்த அவர்கள் இருவரும் தம் அன்பு மகனை ஆரத்தழுவி அரவணைத்தபடி உள்ளே, அழைத்துச் சென்ருர்கள்.

Page 25
46
அன்று மாலை நேரம் தம் அருமை மகனுடன் அந்தப் பெற்றேர் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரஸின்,
"என்ன . ஜாரியா மாமி. மக்கீன் மாமா யாரையுமே இன்னும் காணல்லியே..! எல்லாரும் சுகமாக இருக்கிருங் களா..?" என விசாரித்துப் பார்த்தான்.
அவங்களா. அத ஏன் கேக்குறே , உன் எக்ஸிடனுக் குப் பிறகு அவங்க எல்லாரும் மாறிட்டாங்க அவங்க பொண்ணுகளுக்கும் வேற கல்யாணம் தீர்ப்பாக்கிட்டாங்க. இனிமேல் அவங்க ஏன் வரப்போருங்க ? உனக்கு அந்த இக்பால் நானுட மகளையே பேசி தீர்ப்பாக்கிட்டோம்." என்று தாய் கூறியபோது,
'உம்மா. இன்பத்துல எங்களோடு இணைஞ்சி சொந் தம் கொண்டாடிட்டு, துன்பம் வந்த நேரம் சொல்லிக் கொள்ளாமலேயே எங்கள விட்டு நழுவுவாங்களே அவங்க தான் உலகத்துல பொல்லாதவங்க. நம்ம இக்பால் முதலா ளியப் போல துன்பத்துல துணையாகி கைகொடுக்கிறவங்க ரொம்ப அரிதாகத்தான் இருப்பாங்க. எனக்குத்தான கால்ல ஊனம். ஆனல் இந்த ஜாரியா மாமி, மக்கீன் மாமா இவங் களுக்கெல்லாம் மனசே ஊனம் தான். உங்க ரெண்டுபேருட மனசிலயும் இருந்த ஊனம் இப்பவாவது நீங்கியிருக்கே..! அதுவே போதும். அல்ஹம்துலில்லாஹ்!” என்று கூறிய யவனுக ஊன்றுகோல்களுடன் எழுந்து நின்ருன் ரஸின்.
命

தண்டிக்கப்பட்ட துரோகங்கள்.
அன்று பரீதுக்கு வழமை போலல்லாது மனதில் ஒரே சோர்வாக இருந்தது. ஊருக்குப் போய் வரவேண்டும் என மனம் பரபரத்தது.
*சரிதான் .1 வீட்டுக்குப் போயிட்டு ரெண்டு நாளையில வரவேண்டியது தான். ! ஒரு கிழம பிந்தி வாரதென்று தான் அவ ஸ்ரீனுக்கிட்டச் சொல்லிட்டு வந்தன். இன் டைக்கு திடீரென்று போய் அவள திகைக்க வைக் கோணும் .!" என மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்ட வன், கடைப்பொறுப்புக்களை நம்பிக்கைகுரிய,சிப்பந்திகளிடம் ஒப்படைத்துவிட்டு புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மனைவிக்குப் பிடித்தமான இனிப்புக்களை வாங்கி உறையொன்றில் போட்டுக்கொண்ட அவன் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த அந்த இடத்தை வந்து சேர்ந்தான் அன்று மழை பெய்திருந்ததால் அந்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. சில நிமிட நேரத்தில் வந்து சேர்ந்த அளுத்கமை என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ள அந்தத் தனியார் வாகனத்தில் அவன் ஏறிக் கொண்டான். வாகனம் நிறைந்ததும், நிறைமாதக் கர்ப்பிணியின் நிலையில் அது நகர்ந்தது பின் விரைந்தது.
பரீதுக்கு வயது முப்பத்தைந்து தான் இருக்கும். திரு மணமாகியும் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. இதுவரை குழந்தைகள் கிடையாது. அவனது மனைவி ஸ்ரீனு பக்கத்து ஊரைச் சேர்ந்தவள். திருமணம் முடித்த நாளில் இருந்து அவள் கணவன் வீட்டில் தான் வாழ்கிருள்.
பரீத் நான்கு வருடங்களாக மத்திய கிழக்கில் உழைத்து விட்டு, சில மாதங்களுக்கு முன் தான் நாடு திரும்பியிருந் தான் அவனின் கடுமையான உழைப்பின் காரணமாக இன்று அவன் கொழும்பில் ஒரு கடைக்குச் சொந்தக்காா ணுகி விட்டான்.

Page 26
48
அவன் பயணம் செய்யும் அந்தத் தனியார் வாகனம் பல ஊர்களையும் கடந்து பேருவளையை வந்தடைந்து விட்டது. கடல் காற்றின் இதமான தாலாட்டோடு அந்த பஸ் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
**கிறனுடா ஹோலுக்குப் போய் ஒரு படத்தப் பார்த்துட் டுப் போனு என்ன 1" என நினைத்துக் கொண்ட அவன் அந்தத் தியேட்டருக்கு முன்பாகவே உள்ள பஸ் தரிப்பிடத் தில் இறங்கிக் கொண்டான். அந்த மாலை வேளையில் பேரு வளை நகரம் அழகாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நேரம் ஆறு மணியையும் தாண்டி விட்டிருந்தது.
தியேட்டருக்குப் போன அவன் டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழையவும், "லைட்" அணையவும் சரியாக இருந்தது. படம் ஓடியது. ஏனே அந்தப் படம் அவனது மனதைத் தொடவில்லை.
என்னதுக்குத்தான் இந்த ஆபாசமான படத்தைப் பாக்க, வேணும்.? இதுகளப் பாக்குறது கூட ஒரு பாவ மான காரியம் தான். “இன்டர்வல்" ஆன உடனே . எழும் பிப் போயிட வேணும் . ! என நினைத்துக் கொண்டவன் அந்த நேரத்திற்காகக் காத்திருந்தான். சில நிமிடங்கள் கழிந்தன. "லைட்” எரிந்தது. அப்போது.!
அவனது பார்வை தனக்கு முன்னுல் உள்ள வரிசைக்கு போய் நிலை குத் தியபோது, அவன் அதிர்ந்து போனன். அவனுல் நம்பவே முடியவில்லை. கண்களை மூடித்திறந்து விட்டு மீண்டும் பார்த்தான். அவனது உடம்பும் உள்ளமும் நடுங்கியது. உதிரம் அப்படியே உரைந்து போய்விட்டது. கண்கள் ரத்தமாய் சிவந்து விட்டன. அவனில் கொலை வெறி தாண்டவமாடியது. அப்படியே கழுத்தைப் பாய்ந்து பிடித்து நெரித்துக் கொல்ல வேண்டும் போல் ஒரு வெறி உடலெங் கும் பரவியது.
"துரோகி ! நீயா..? நம்பவே முடியல்லயே ! உன்ன நம்பி நான் இத்தன நாளும் ஏமாந்து போயிட்டனே...!"என அவனது உள்ளம் அழுதது. அவனது அழுகைக்கும் ஆத்தி

ரத்திற்கும் காரணம் அந்த ஆசனங்களில் ஒரு மாற்ருனின் அரவணைப்புக்குள் அவனது ஆசை மனைவி இருந்தது தான்..!
"இந்த நாடகம் எல்லாம் எத்தன நாளாக நடக் குதோ..!சீ. இவளும் ஒரு பொம்பளையா.. ? இதுக்கு இன் டைக்கே ஒரு முடிவு கட்ட வேணும்...! இனி அந்தத் துரோ கியோட நான் வாழவே மாட்டேன்..!” என உறுதியாக நினைத்துக் கொண்டவன் பொங்கி வந்த ஆத்திரத்தையும் கோப்த்தையும் அடக்கியவனுக இருக்கையை விட்டெழுந்து வெளியே நடந்தான்,
வீட்டை அடைந்த பரீத் எதிரே வந்த தங்கையிடம்,
1ளிலில்மியா...! மதினி எங்க..! காணலயே ?” எனக் கேட்டபோது,
அவவா. நீங்க கடைக்குப் போன பிறகு அவட உம்மா வீட்டுக்குப் போயிட்டா. ரெண்டு நாள் அங்க தங் கிட்டுத்தான் வாரன்னு சொன்ன .!" என ஸில்மியா முடிக்குமுன்பே
"ஆமா. மகன். நாளைக்கு வந்திடுவா..! நானே கூட்டிப்போய் விடவா என்டு கேட்டன். அவவே தனியாப் போறதாச் சொல்லிட்டு போயிட்டா. என் பேச்ச அவ கேக் கவா போரு...?’ என அலுத்துக் கொண்டாள் பரீதின் அன்னை.
"நான் வீட்டுல இல்லாத நேரமெல்லாம் இங்க இது தான் நடக்குது, ! இந்த முறை சரியாகவே மாட்டிட்டாள். இத்தன நாளா என்கிட்ட எப்பிடியெல்லாம் உத்தமி வேஷம் போட்டா. நான் ஒரு வடிகட்டிய மடையன்..! நம் பிட்டனே...!" எனத் தன்னைத் தானே நொந்து கொண்ட பரீத், தனது அறைக்குப் போய் கதவைத் தாழிட்டுக் கொண் டான். அவனுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது, வாழ்க்கையில் எல்லா ஏமாற்றங்களையும் தாங்கி விடலாம். ஆனல் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும்

Page 27
50
ஏமாற்றித் துரோகம் புரிவதை எந்த உள்ளத்தால் தான் தாங்கிக் கொள்ள முடியும்?
ஒரு முடிவுக்கு வந்த பரீத் பேணுவையும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினுன். அவனது மன மும், மூளையும் குழப்பிப் போயிருக்கும் போது ஒழுங்காக எழுதவா முடியும். ? ஏதேதோ கிறக்கிவிட்டு. பல பேப்பர் களைக் கசக்கி எறிந்தவனின் வாயில் சிகரட்டுகள் உயிரிழந்து சாம்பலாயின. எப்படியோ இரண்டு மணித்தியாலங்கள் அந்தக் கடிதத்துடனேயே கழிந்து விட்டது. கடைசியாக எழுதி முடிச்ச அந்தக் கடிதத்தைத் கவரிலிட்டுத் தங்கை யிடம் கொடுத்த அவன்,
"ஸில்மியா..! இத ஸரீனுக்கிட்ட கொடு. அவ வந்தா உடனே அவங்க e-lbuDir வீட்டுக்குப் போயிடச் சொல்...!" எனக் கூறியபோது ஸில்மியாவுக்குத் திகைப் பாய்த் தான் இருந்தது, என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்று இரவெல்லாம் பரீதுக்கு உறக்கமே வரவில்லை. மனமே அழுது கொண்டிருக்கும் போது உறக்கம் வரவா போகிறது.? அவன் எத்தனை மணிக்கு நித்திரையானுன் என்பது அவனுக்கே தெரியாது.
பொழுது விடிந்தது. காலையிலே எழுந்து கொண்ட அவன், ஸ்ரீனு வரும்போது தான் வீட்டில் இருந்தால் பொறுமை இழந்து ஒரு கொலைகாரணுக மாறி விடுவேனே எனப் பயந்தவனுய்க் கடைக்குப் புறப்பட்டான்.
அன்று பகல் நேரம் விடு வந்து சேர்ந்தாள், ஸரீன. அவள் வந்ததும் வராததுமாக அந்தக் கடிதத்தை அவளி டம் கொடுத்த ஸில்மியா நாணு சொன்ன வார்த்தைகளை அவளிடம் ஒப்புவித்தபோது ஸரீனுவின் குற்றமுள்ள மனம் குறுகுறுக்கவே செய்தது. பயத்தோடு அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் அவள்.

5.
"அன்புள்ள மனைவிக்கு" என்று உன்னை விழித்தெழுத நான் விரும்பவில்லை, ஏனென்ருல் இன்றிலிருந்தே எமது கணவன், மனைவி பந்தம் அறுந்தே விட்டது. அதோடு எனக்குப் பண்புள்ள, நன்றியுள்ள நம்பிக்கையுள்ள மனைவி யாக அல்ல ஒரு துரோகியாகவே வாழ்ந்து விட்டாய். அத ஞல் மொட்டையாகவே வரைகிறேன்.
நேற்றுத் திடீரென்று கடையிலிருந்து புறப்பட்ட நான் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்குள் நுழைந்தேன் அங்கே... இன்ஞெருவனின் அணைப்பில் உன்னை என் கண் களின் முன்னுலேயே கண்டபோது என் இரத்தம் கொதித் தது. உன்னை நல்ல மனைவியாகவும், பத்தினியாகவும் நினைத்து நான் ஏமாந்து விட்டேன். என் கண்களாலேயே அந்தக் காட்சியைக் கண்டபின் தான் உன்னைப் புரிந்து கொள்ள என்னுல் முடிந்தது.
நான் வெளிநாட்டில் இருக்கும்போதே உனது நடத் தைகளில் சந்தேகப்பட்டு என் வீட்டினரும் நண்பர்களும் உன்னைப் பற்றி எழுதியபோது உன் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையினுல் அவற்றை நான் ஒரு துளியும் நம்பவில்லை. அவை அனைத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன்.
இனியும் உன்னுடன் வாழ நான் தயாரில்லை. நடத்தை கெட்ட உன்னுடன் வாழ்வதைவிட இப்படியே தனியனுக இருந்து விட்டுப் போவது மேல். உனக்கு விவாகவிடுதலை தந்து விட்டு வேருெரு பெண்ணை மணமுடிக்க நான் முடி வெடுத்து விட்டேன். இந்த முடிவை மாற்ற முடியாது. நீ அவனுடனே வாழ்! இக்கடிதம் கண்டவுடன் உன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நீ எங்கள் வீட்டை விட்டே போய்விடு.
இப்படிக்கு பரீத்
கடிதத்தைப் படித்து முடித்த அவளுக்கு என்ன செய் வதென்றே புரியவில்லை. இனியும் தன்னை நல்லவளாக நம்ப வைக்க முடியாது என்பதை அவள் அறிவாள்,

Page 28
52
"இனி. இந்த இடத்துல நிக்க முடியாதே . ஏன்ட நடத்தையால நானே என் வாழ்க்கைய நாசமாக்கிக்கிட் டேனே...!" எனத் தன்னைத் தானே மனதிற்குள் நொந்து கொண்டவளாக மூட்டை முடிச்சுகளுடன் தனது தாய் வீட் டுக்குப் புறப்பட்டாள் ஸ்ரீன.
"அடுத்த வீட்டு ஷகீலாக்கு நான் அநியாயமாக கெடுதல் நெனச்சி, அந்தக் குமர்ப் பிள்ளட எதிர் காலத் தையே நாசமாக்கிட்டேனே 1 எந்தப் பாவமும் அறியாத அந்தப் பிள்ளையப் பத்தி மோசமான கதைகள பரப்பி, அதுக்கொரு வாழ்க்க கெடைக்காமலேயே செய்திட் டேனே!. என்கிட்டேயே பெரிய குறையெல்லாம் வச்சிக் கொண்டு அவளப் பத்திக் கத கட்டினேனே..! இத்தன நாளும் வெளிச்சத்துக்கு வராம இருந்த ஏன்ட கத இன் டைக்கு அவருட கண்ணுக்கே கண்டுட்டுது...! கையும் மெய் யுமாகவே பிடிபட்டுட்டேன். அந்தக் குமர்ப் பிள்ளைட பெரு மூச்சு எனக்குத் தாவா மலா இருக்கப் போகுது..?" என நினைத்துக் கொண்டவளின் சிந்தனையில் கடந்த கால நினை வலைகள் அடுக்கடுக்காய் வந்து போயின.
O O O go o OC)
திருமணம் முடித்த சில தினங்களில் ஸ்ரீனு கணவனின் வீட்டுக்கே குடிவந்துவிட்டாள்.அவர்களின் அடுத்தவீடு தான் ஷகீலாவுடையது.இருபத்தைந்து வயதுடைய கன்னிப்பெண் அவள். சகீலாவின் குடும்பம் மத்திய தரக் குடும்பத்தைவிட கீழ் மட்டத்தையுடையது. அவளையும், தாயையும், தம்பியை யும் கொண்டதே அந்தக் குடும்பம். அவள் சிறுமியாய் இருக் கும் போதே தந்தை காலமாகிவிட்டார்.
ஷகீலா நல்ல அழகி. அது மட்டுமின்றி அவளிடம் பல வகையான திறமைகளும் இயல்பாகவே அமைந்திருந்தன. அழகழகாகத் தைப்பாள். நன்ருகச் சமைப்பாள் வானெலிக் கென்றும், பத்திரிகைகளுக்கென்றும் நல்ல படைப்புக்களாக நிறைய எழுதுவாள்.
ஷகீலாவின் அழகும், திறமைகளும் ஸ்ரீவுைக்குப் பொருமையைத் தரும். இருப்பினும் அவளுடன் நெருங்கிப் பழகி, அன்புள்ளவளாகவே நடிப்பாள். தன்னிடமில்லாத

53
திறமைகள் எல்லாம் ஷகீலாவிடம் மலையாகக் குவிந்திருப் பது கண்டு ஸ்ரீனுவின் இதயம் ஆற்ருமையால் அவதிப்படும். இதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாது அபாரமா கவே நடிப்பாள் அவள். ஷகீலாவும் அவளது கபடத் தனத் தையும், வஞ்சகப் புத்தியையும் அறியாதவளாகவே இருந்து வந்தாள்.
இப்படி இருக்கும்போது தான் ஷகீலாவுக்குத் திரு மணம் பேசும் படலம் ஆரம்பமாகியது. அவளைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் அங்கு வரும் போதெல் லாம் ஷகீலாவின் வீட்டில் ஸ்ரீனு தான் முதலாமாளாக நிற் பாள். இதற்குக் காரணம் அவள் ஷகீலாவுடன் நெருங்கிப் பழகும் அடுத்த வீட்டுக்காரி என்பதால் மட்டுமல்ல பெண்ணை அலங்கரிக்கும் அலங்கார வகைகளை எல்லாம் அவள் அறிந்து வைத்திருந்ததும் இதற்குக் காரணமாகும். ஷகீலாவை யாராவது பெண் பார்க்க வருவதானுல் முதல் தினமே ஸ்ரீனுவுக்கு அந்த விடயம் தெரிந்துவிடும். அந்தள வுக்கு ஷகீலாவும், அவள் தாயும் தமது விடயங்களை அவளி டம் மறைக்காமல் கூறி வந்தார்கள்.
*மகள். ஷகீலாவ இன்டைக்கு பெண் பார்க்க வாருங்க. நேரத்தோட வந்து அவள நல்லா அலங்காரம் செயதிடுங்க..!" என ஷகீலாவின் தாய் ஸ்ரீனுவிடம் கூறும்போது,
"கட்டாயம் அழகாகச் செய்யத்தான் வேணும். அவ ளுக்குப் பொருத்தமில்லாத அலங்காரத்தத்தான் செய்ய வேணும். நான் செய்ற அலங்காரம் அவள்ட அழகக் கூட்டிக்காட்டக் கூடாது...!" என்ற குரூர எண்ணத்துடன் தான் அவள் அலங்காரத்தை அலங்கோலமாகவே செய்து முடிப்பாள். இருந்தாலும் இயற்கை தந்த அழகை அவளால் அழிக்கவா முடியும்.? ஷகீலாவைப் பார்த்த உடனேயே அந்த அமைதியான அடக்கமான அழகில் மனதைப் பறி கொடுத்து, அந்த இடத்திலேயே கல்யாணத்தை முடித்து விடவேண்டும்போல் வந்தவர்களுக்குத் தோன்றும்.

Page 29
54
பெண் பார்க்க வந்தவர்கள் அந்த இடத்தைக் காலி செய்யும் வரை ஸரீனுவும் அங்கேயே சுற்றுச் சுற்றி வரு வாள். போலியான புன்னகையுடன் புதியவர்களை விழுந்து விழுந்து உபசரிப்பாள். அவர்கள் போக முற்படும் போது,
"எங்க வீடு அடுத்த வீடு தானே !! வந்துட்டுப் போங் களே...!" என்பாள். அவளின் அன்பான அழைப்பைத் தட்ட முடியாதவர்களாய் அவர்களும் அவள் பின்னே வரு வார்கள் ஸரீனுவின் மீதுள்ள நம்பிக்கையினுல் ஷகீலாவும், அவள் தாயும் அவளைப் பற்றித் தவருகவே நினைக்க மாட் டார்கள்.
வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களை நன்ருகவே உப சரிக்கும் ஸ்ரீனு,
"இத்தப் பெண் கிடைக்க நீங்க பாக்கியம் செஞ்சிருக்க வேணும்.! தங்கமான புள்ள, ! நல்ல குணம். இருந் தாலும் ஒரு குறை அதுக்கு கொஞ்ச காலமாகவே காச நோய் இருக்கு. அது தான் அந்தப் புள்ள ஒல்வியாக இருக்கு 1" என ஒரு வெடிகுண்டை அவர்களின் இதயத் திலே தூக்கிப் போட்டு வைப்பாள் ஸ்ரீனு, பெண்ணைப் பிடித் துப்போன அவர்களின் இதயங்கள் இந்த வார்த்தைகளால் ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.
**நல்ல நேரம் நீங்க உண்மைய சொல்லிட்டீங்க. இல்லையென்றல். எங்க புள்ளைட வாழ்க்கதான் நாசமாக இருந்திச்சி. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதென்றே விளங்கல்ல...!" என வந்தவர்கள் கூறும்போது,
'பெரிசாக அது ஒன்றுமே வேணும், ! உங்கட புள்ளைட வாழ்க்க அநியாயமாகக் கூடாது என்று தான் சொன்னன். நான் சொன்னதாக மட்டும் வெளியில விடாதீங்க...!" என்று கூறி வெற்றிப் புன்னகையோடு அவர்களை வழி யனுப்பி வைப்பாள் லரீனு. மாதங்கள் பல கடந்தாலும் பெண் பார்க்க வந்தவர்களிடமிருந்து எந்தப் பதிலுமே வந்து சேராது.

55
இப்படிச சில நேரங்களில் பெண் பார்க்க வந்தவர்களை வீட்டுக்கு அழைத்துப் போகும் ஸ்ரீனு,
"பொண்ணென்ருல் எல்லா வேலைகள்ளயும் நல்ல திருத்தம். அழகுக்கும் குறைச்சவில்ல. இருந்தாலும் நடத் தைகள்ள கொஞ்சம் ஒரு மாதிரி.புதுசாகக் கூட ஒரு பொடிய னுேட ஒடப் பாத்தா. அதனுல தான் கல்யாணத்த அவசர மாக எடுக்கப் போருங்க..! இன்னென்று- அந்தப் புள்ள கொஞ்ச நாளைக்கு ஒரு தடவ வலிப்பு வந்தும் விழுவா உங் கட நன்மைக்காகத் தான் உண்மைய சொல்றன். இத வெளியில விடாதீங்க..!" என அவர்களின் இதயங்களில் விஷத்தைக் கலப்பாள் ஸரீனு, வந்தவர்கள் வதனம் வாடிப் போய், திரும்புவார்கள்.
இப்படியாக ஷகீலாவைப் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து பெண் பார்க்க வந்திருப்பார்கள். இருப் பினும் பலன் தான் பூஜ்யமாக இருந்தது. ஷகீலாவும், தாயும் சோகத்தில் சோர்ந்து போவார்கள். பெண்பார்க்க வந்தவர்கள் ஏன் கல்யாணத்துக்கு விரும்பவில்லை என்ற உண்மையான காரணம் அவர்களுக்கு இறுதிவரை தெரி யவே இல்லை. அதற்குள் ஊருக்குள்ளே ஷகீலாவைப் பற் றிய பொய்யான வதந்திகளையும் பரப்பிவிட ஸ்ரீனு தவற வில்லை ஊராரின் வாய்களில் அகப்பட்ட ஷகீலா அந்த வாய் களுக்கு இலவசமாகக் கிடைத்த "அவல்’ ஆனுள். அவளைப் பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.
இவற்றையெல்லாம் அறிந்து அழுது தீர்ப்பாள் ஷகீலா திருமணத்தின் மீது அவளுக்கு வெறுப்பே ஏற்பட்டு விட் இனிமேல் எனக்கு கல்யாணம் பேசாதீங்க" و القرنسا உம்மா..!" என்றே கூறிவிட்டாள் அவள்.
கல்யாணம் எதுவும் சரிவராததுடன், ஊராரும் வீணு கத் தூற்றுவது கண்டு துவண்டு போன அவர்கள் தமது மன வேதனைகளை ஸ்ரீனுவிடமே வெளிப்படுத்தும்போது,
“ஊரா- அது அப்பிடித்தான் பேசும். அதப்பத்திக் கவலப்பட்டால் காரியம் நடக்குமா..? ஷகீலாவுக்கும்"

Page 30
56.
அல்லா எங்காவது ஒரு மாப்பிள்ளையப் படச்சி வச்சிருப் பானே...!" எனப் போலியான கவலையை வரவழைத்துக் கொண்டு ஆறுதல் கூறுவாள் ஸ்ரீன.
இப்படியாக ஷகீலாவுக்கு வயதும் ஏறியது. இருப் பினும் எந்த இடத்திலும் அவளுக்குக் கல்யாணம் தான் சரிப்பட்டு வரவில்லை.
ஏதேதோ சிந்தனைகளில் போய்க் கொண்டிருந்த ஸ்ரீனு தன் பின்னுல் பைசிக்கிள் மணியோசை கேட்டுத்தான் சுய நினைவுக்கு வந்தாள்.
அவ ஷகீலா பாவம்..! என்னுல தானே இன்று வரைக்கும் அதுக்கு ஒரு கல்யாணமே நடக்கல்ல. 1 நான் அநியாயமாக ஷகீலாவப் பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் வச்சி கத கட்டி அவட வாழ்க்கைய கெடுத்திட் டேனே. ஒரு நாளைக்கு அவளிட்டப்போய் மன்னிப்புக் கேக்கத் தான் வேணும் ! என நினைத்துக் கொண்டாள். ஸ்ரீனு,
மாதங்கள் சில கடந்து விட்டன. பரீத் முடிவெடுத்தபடி ஸ்ரீனுவுக்கு விவாக விடுதலை வழங்கிவிட்டான். இப்போது அவனுக்கு மறுமணம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒருநாள் கொழும்பிலிருந்து வீடுவந்த பரீத் முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்குப் போஞன், அவனது வீட்டுக் கும் ஷகிலாவின் வீட்டுக்கும் இடையில் தான் அந்த கிணறு அமைந்திருந்தது. ஷகிலாவின் வீட்டில் பேசும் குரல்கள் கூட கிணற்றடிக்குத் தெளிவாகக் கேட்கும்.
கிணற்றடிக்குச் சென்ற பரீதுக்கு அங்கே பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. ஷகிலாவின் வீட்டுக்குள் இருந்து ஸரினுவின் அழுகையுடன் கூடிய குரல் வெளியாகி பரீதின் செவியறைகளில் முட்டிமோதியது.

57
"ஷகிலா என்ன மன்னிச்சிடம்மா..! உனக்கு எத் தனையோ கல்யாணம் பேசி பொண் பார்க்க வந்தும், அத் தனையும் என்னுல தான் நடக்காம இருந்திச்சி. உங்க வீட் டுக்கு வந்தவங்கள, எங்க வீட்டுக்குக் கூட்டிப் போய் நானே உன்னப் பத்தி இல்லாதத எல்லாம் உண்டுபண்ணிச் சொல்லி அவங்கட மனசயெல்லாம் மாத்தி அனுப்பினேன். அதோட மட்டும் நிக்காம உன்னப் பத்தி த வருன அபிப்பிராயங்கள ஊ ரு க் குள் ள பரப்பினவளே நான் தான். இதனுல எந்தப் பாவமும் செய்யாத உனக் குத்தான் ஒரு வாழ்க்க அமையாமல் போயிட்டுது. என்கிட்ட இல்லாத திறமை எல்லாம் உன்கிட்ட இருக்கிறத என் மனசு பொறுக்கல்ல. இந்தப் பொருமையால தான் அறிவில் லாத் தனமாக உன்ட வாழ்க்கைய வதந்திகளால் நாசமாக் கிட்டேன்.இன்டைக்கு என் வாழ்க்கையே போயிட்டுது...! என் கணவரே என்னத் தலாக் பண்ணிட்டாரு...!"* ஸரிஞ கூறக் கூற அவனை மின்னல் தாக்கியது போல் இருந்தது.
"ஸரினு ! நீ. இப்பிடிப்பட்ட கொடுமைக் காரியும் கூடவா..? வீணுன கதைகளைக் கட்டி ஒரு குமர் பிள்ளைட வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே..! பாவி. இத்தன நாளும் ஷகிலாவுக்கு ஒரு கல்யாணமும் நடக்காததுக்கு நீ தானே காரணம்.1 ஐயோ. பாவம் ஷகிலாவுக்கு வய தாகிக் கொண்டே போகுதே.!" என மனதிற்குள்ளால் ஸரினுவைத் திட்டித் தீர்த்த பரீத் ஒரு முடிவோடு கிணற்ற டியை விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். சேட்டை எடுத்து மாட்டிக்கொண்டவன் நேரே ஷகிலாவின் வீட்டுக்குப் புறப் பட்டான். அங்கே, ஷகிலாவும், தாயும் இடிந்து போய் நிற்க, ஸரினு கண்ணிரோடு நின்றிருந்தாள். பரீதின் திடீர் வருகையால் திகைத்துப் போன ஸரினு, அவனது பார்வை யைச் சந்திக்கச் சக்தியற்றவளாய் அப்பால் நகர்ந்து கொண்டாள்.
ஷகிலாவையும், அவள் தாயையும் அழைத்த அவன்,
"இப்ப இங்க நடந்த பேச்சை எல்லாம் நான் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தன், ஷகிலாவுக்கு ஒரு வாழ்க்க கிடைக்

Page 31
58
க்ர்ததுக்கு காரணமானவ யார் என்கிறதையும் புரிஞ்சிகிட் டேன். நான் அவள தலாக் செய்தது உங்களுக்கெல்லாம் தெரியும் இப்போ நான் வேருெரு கல்யாணம் கட்டுற முடி வுக்கு வந்திருக்கேன்! இந்த நிலைல, என் மனைவியாக இருக் கிற நேரம் அவ செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக வருஷக்கணக்காகவே வாழ்க்கை இல்லாம வாடுற ஷகிலா வுக்கு வாழ்வு கொடுக்க நான் தீர்மானிச்சிட்டேன். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க..?" என ஷகிலா வையும் தாயையும் கேட்டபோது, அதிர்ச்சி அவர்களை மட்டு மல்ல, அடுத்த அறையில் நின்றிருந்த ஸரினுவையும் தாக் கத்தான் செய்தது.
"நாங்க பெரிசா என்னத்தச் சொல்றது.! நீங்களும் பொண்சாதிய 'தலாக்' பண்ணிட்டு தனியணுக வாழ் நீங்க..! உங்க தங்கமான குணங்களப் பத்தி எங்களுக்குத் தெரியாதா..? நாங்க சம்மதம் தான்..!" என இருவரது முடிவையும் ஷகிலாவின் தாயே முன்வைத்தபோது, அந்தக் கட்டிடமே தன் தலையில் வீழ்ந்து தாக்கியது போல் இருந் தது ஸரினவுக்கு.
*அன்டைக்கு வடிகிலாக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைக் கக் கூடாதென்று நானே சதி செய்தேன். இன்டைக்கு. நான் செய்த பாவத்தால என் மாப்பிள்ளைய என்கிட்ட இருந்து பிரிச்சி ஷகிலாக்கு மாப்பிள்ளையாக அல்லா ஆக்கிட் டான். எல்லாமே என்னுல, என் நடத்தையால வந் தது தான்..!" என மனதிற்குள்ளேயே அழுதவளாக அவ் விடத்தைவிட்டு எழுந்து நடந்தாள் ஸ்ரினு.

மனக்குருடுகள்
லுஹர் தொழுதுவிட்டு பள்ளிவாசலை விட்டுப் படியிறங் கிய பாறுாக் நானு வீதியில் இறங்கி நடந்தார். அவர் நடை யில் அவசரம் காணப்பட்டது.
'மனுஷன் ரெண்டு தடவ சொல்லிட்டாரு. போகாட்டி சரியில்ல. இந்த நேரம் சாப்பாட்டுக்கு எல்லாரும் வந்தி ருப்பாங்க. அதனுல கொஞ்சம் கெதியாப் போகணும்." என்று நினைத்தவாறு அவசரமாக நடந்து கொண்டிருந்தார் பாறுக் நானு,
பாறூக் நாளுவுக்கு ஐம்பது வயதிருக்கும். அவரின் உரு வத்தில் முதுமையின் முத்திரை பளிச்சிடுகிறது. தனது முப் பத்தைந்தாவது வயதில் புனித இஸ்லாத்தைத் தழுவிய அவர், தன் தந்தை செய்து வந்த முடிவெட்டும் தொழி லுக்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. இன்றும் அதே தொழி லைச் செய்து வருகிருர், அவரின் அயராத உழைப்பு நகரில் ஒரு "சலூன" நடத்துமளவுக்கு அவரை உயர்த்திவிட்டது.
பாறுக் நானுவின் குடும்பம் மிகச் சிறியது. மனைவி கால மாகி விட்டார். மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இரு பெண் மக்களுடன், இளைய மகன் ஒருவனும் அவருக்கு உள்ளார் கள்.
ஊரில் அநேக வீடுகளில் நடக்கும் கல்யாண கந்தூரி வைபவங்களுக்கு அவர் அழைக்கப்பட மாட்டார்.
"நான் இஸ்லாத்துக்கு வந்தவன் என்கிறதாலயம் தலைமுடி வெட்டுறவன் என்கிறதாலயும் தான் என்ன இந்த ஜனங்கள் ஒரு மாதிரியா நெனைக்கிருங்க. ம்...நான் யாருக்' கும் எந்த அநியாயமும் செய்யல்லயே!" என்று கவலை யுடன் நினைத்துக் கொள்வார் பாறுக் நானு.
‘என்ன இருந்தாலும் இந்த உலகத்துல நல்லவங் களும் இருக்கத்தான் செய்ருங்க. இப்பிடியானவங்க, எல் லாரையும் ஒரே மாதிரி மதிச்சு, ஒரேமாதிரி பாப்பாங்க

Page 32
60
அவங்களெல்லாம் யாரையும் வேறு படுத்தி ஒதுக்கமாட்
டாங்க. ஆணுல், சில பேரு அப்பாவிகள்ட மனசே இடியிற
மாதிரி நடப்பாங்க...ம்.எல்லாத்துக்கும் அல்லா (ஹ்)தான்
போதுமானவன்." என நினைத்தவாறு நடந்து கொண்டி ருந்த அவர் கந்தூரி வீட்டை அடைந்து விட்டார்.
பாறுக் நாணு உள்ளே நுழையவும், விருந்தினர்கள் சாப் பாட்டிற்குத் தயாராகிக் கொண்டிருக்கவும் சரியாக இருந் தது உள்ளேபோன பாறுாக் நாணு காலியான ஓரிடத்தில் உட் கார்ந்து கொண்டார். அவர் இருந்த இடத்தில் அமர்ந் திருந்த அடுத்தவர்கள் கொஞ்சம் பெரிய புள்ளிகள். அவர் அந்த இடத்தில் உட்கார்ந்ததும் அவர்களின் முகங்கள் காற்றுப்போன பலூன்கள் போன்று சுருங்கிவிட்டன.
பீங்கான்கள் எதுவுமின்றி ஒரே 'சஹனில்" கைபோட்டு உண்ணத் தயாராகிக் கொண்டிருந்த அவர்கள் பாறுாக் நானு வின் வரவால் தடுமாறிப் போனுர்கள். ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது அவர் களிலே ஒருவர் வீட்டுக்காரரை நோக்கி,
"ஹாஜியார். இந்தப் பாறுக் நாளுவுக்கு ஒரு பீங் கர்ன் கொடுங்க...!" என்ருர், அதுகேட்ட பாறுக் நானுவின் உள்ளத்தில் முள் தைத்தது போன்றிருந்தது.
"சே-மனுஷன் முகத்துல அடிச்சமாதிரி நடந்துகிட் டாரே. ரொம்ப அவமானமாப் போச்சு. ஏன்தான் இந்தச் சாப்பாட்டுக்கு வந்தோமோ..?" எனக் கண்கள் கலங்க சிந் தித்த பாறுரக்நாணுவின் கால்கள் மெதுவாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டன.
அப்போது சடுதியாக பாறுக் நானுவின் தலையைக் கண்ட ஹமீத் ஹாஜியாரின் மனைவி பல்கீஸாக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கணவனைத் தன்னருகே அழைத்த அவள்
"ஒங்களுக்கு மூள இருக்கா...?" என்ருள். *ஏன்.? அந்தச் சந்தேகம் ஒங்களுக்கே வரலாமா..?" என்று

ői
வேடிக்கையாகப் பேசிய கணவன்மீது சீறிப் பாய்ந்த பல்கீஸ்,
"மூள இருந்தா அந்த மெளலா பாறுக் நாணுவக் கூப் பிடுவீங்களா..?" என்ருள்.
'பல்கீஸ்.கோபப்படாதீங்க ..! அஞ்சு நேரமும் பள்ளி வாசல்ல காணுற மனுஷன் நம்மட தலைமுடிய வழமையா வெட்டுற மனுஷன் .அதுதான் அவர ஒதுக்கமுடியல்ல-1" என்று அவர் குலைந்தபோது,
"அப்பிடிக் கூப்பிட்டுட்டா இப்பிடியா நாலு பெரிய மனுஷருக்கு முன்னுல உக்கார்றது.? சே . அசிங்கமா யிருக்கு!" என்று அன்னை பல்கீஸ் அலுத்துக் கொள்வது, அங்கே வந்த அவர்களின் ஒரே மகன் அன்சாரியின் காது களில் விழந்தபோது அவன் அப்படியே நின்றுவிட்டான்.
'உம்மா.ஏம்மா இப்பிடிப் பேசுறிங்க..? ஏன் அந்த மனுஷன் அங்க உக்கார்ந்து சாப்பிடப்படாதா..? இது பாவ மில்லையா? அவருட மனசு ரொம்ப நொந்திருக்குமே! அவங் கள கூப்பிட்டுட்டு இப்பிடி அவமானப்படுத்துறதவிட கூப் பிடாமலே இருந்திருக்கலாமே .." என அவன் கூறிய போது,
"சும்மா.ஒலருமப் போடா. அதுவெல்லாம் எங்களுக் குத் தெரியும்." என்று கோபத்தோடு கூறினுள் பல்கீஸ்,
'உம்மா. அவரும் எல்லாரையும் போல ஒரு மனுஷன் தானே! இனியாவது மனுஷன மனுஷனு மதிக்கப் பழகிக் கொள்ளுங்க.." என்று ஆத்திரத்தோடு கூறிய அன்சாரி அவ்விடம் விட்டகன்ருன்.
அன்சாரி பெற்ருேருக்கு ஒரே பிள்ளையாக, பெரிய இடத்துப் பிள்ளையாக இருந்தாலும் அவனிடம் நல்ல குணங் களும், உயர்ந்த பண்புகளும் ஒட்டியிருந்தன. உயர்ந்த லட்சியங்களும், சமூகத்திற்குச் சேவை செய்யும் மனப்போக் கும் கொண்ட அவனிடம் சமூகம் அடிமைப்பட்டிருக்கும் அ ர் த் த மற்ற கொள்கைகளிலிருந்து சமூகத்தைக்

Page 33
62
க்ாக்க வேண்டுமென்ற ஏக்கம் நிறைந்திருந்தது. அந்த இலட்சிய இளைஞனின் லட்சியங்கள் நிறைவேறுமா..?
8 O 0. O) 09
மாதங்கள் சில மடிந்து வருடங்கள் உருண்டன. அன் சாரிக்குத் திருமண வயதான போது, பல பெரிய இடத்து சம்பந்தங்கள் எல்லாம் அவனை நாடி, தேடி வந்தன.
வழமைபோல் அன்றும் பகல் உணவுக்காகக் கடை யிலிருந்து வீடு வந்திருந்தான் அன்சாரி. உணவு வேளை முடிந்ததும் அவனை நெருங்கிய அன்னை பல்கீஸ்,
"மகன்.இன்டைக்கு காலைல நம்ம வீட்டுக்கு புரோக் கர்சத்தார் நானு வந்துட்டுப் போளூரு" என்று கூறிய அன்னையை நிமிர்ந்து நோக்கிய அன்சாரி,
"அதுக்கென்ன. அவரு எதுக்காக வந்தாராம்.?" எனக் கேள்விக்கணை தொடுத்தான்.
"மகன்.நீ சரியான ஆள்தான் போ.புரோக்கர் என் னத்துக்கு வருவாரு..? ஒனக்கு நல்லதொரு கல்யாணம் பேசிகிட்டு வந்தாரப்பா. சாதிசனத்துல நல்ல குடும்பம். நல்ல சொத்துபத்தெல்லாம் கிடைக்குது.ஒன் விருப்பத்தச் சொல்லு மகன்.'" என்று தாய் கூறியதைக் கேட்ட அவன்,
'உம்மா...இப்ப எதுக்கும்மா அவசரம்...? ஆறுதலாப் பார்ப்போம்.!" என்று சமாளிக்க முயன்றன். பதில் கேட் டுப் பதறிய தாய்,
"என்ன மகன் இது.? ஒனக்கும் வயதாகிட்டுது. அது தான் என் மெளத்துக்கு முன்னுல ஒன்னக் கல்யாணக் கோலத்துல பார்க்க ஆசப்படுறேம்பா..சரியென்று ஒரு வார்த்த சொல்லு மகன்..!" என்று தாய் மன்ருடிய போதும் அதனைத் தட்டிக் கழித்தாள் அன்சாரி.

63
*மகன். இப்பிடி சமாளிச்சு காலத்தக் கடத்தாம உன் மனசில இருக்கிறதச் சொல்லுப்பா. யாரையாவது நீ. மனசுல வச்சிருக்கிறீயா." என்று அன்னை கேட்டபோது
"அப்படியொன்றுமில்லும்மா. அது வந்து . வந்து டவுன்ல "சலூன்" வச்சிருக்கிற பாறுாக் நாணுவத் தெரியு மில்ல.அவருட மகளத்தான் நான் கட்டிக்கிறதாக." அவன் முடிக்கவில்லை.
"டேய்.பொத்த டா வாய. என்னடா சொன்ன..? அந்த மெளலா இஸ்லாம் பாறுாக் நானுட மகளயா..? நல்லா இருக்குடா ஒன் கத. எங்க குடும்பம் என்ன. கோத்திரம் என்ன..? ஒன்தலைல களிமண்ணு இருக்கு.??? எனக் கோபத்தில் வெடித்த தாயை வேதனையோடு பார்த்த அன்சாரி,
*போதும்.நிறுத்துங்க. நீங்களும் உங்க குடும்பப் பெருமையும். கேக்கவே சகிக்கல்ல. உம்மா.இஸ்லாத் துல பிறப்பால உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல்ஜாதி, கீழ் ஜாதி, என்றெல்லாம் பிரிவுகள் இல்லும்மா., எல்லாருமே முஸ்லிம்கள். குடும்பத்தையும், செய்ற தொழிலையும் வச்சி உயர்வு தாழ்வக் கணிக்கிறது சுத்தமடத்தனம், யாருக்கிட்ட குர்ஆனுடையதும், நாயகம் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல் லம் அவங்கட வாழ்க்கையும் இருக்கோ அவங்கதான் மேலானவங்க. இதுக்குப் புறம்பான வங்க யாராக இருந் தாலும் அவங்கதான் தாழ்வான வங்க. 1" உணர்ச்சி வசப் பட்டு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்துவிட்டான். அவனைக் கோபத்தோட பார்த்த அன்னை பல்கீஸ்,
"சும்மா ஒலருதடா.உலகத்துல இல்லாததையா நான் சொல்றன்...? நீ சொல்றதப் பார்த்தா குடும்பப் பெருமைகளையும் சம்பிரதாயங்களையும் சாகடிச்சி குழிதோண் டிப் புதைக்க வேண்டியது தான். நாலு ஜனங்களும் ஒதுக்கி வச்சிருக்கிற வீட்டுல இருந்து மருமகள் எடுக்கிறதுக்கு நான் ஒனறும் மட்டமானவள் அல்லடா..!" என ஆத்திரத்தோடு கூறிவிட்டுப் போக முயன்ற தாயைத் தடுத்து நிறுத்திய அன்சாரி,

Page 34
64
'உம்மா . கோபிக்காதீங்க என்ன up660 டுங்க நீங்க மட்டுமில்ல. இந்த உலகமே எதிர்த்தாலும் இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகுது. ஏன்னு. அந் தப் பொண்ணத்தான் கட்டிக்கிறதாக நான் வாக்குறுதி கொடுத்திட்டேம்மா." எனக் கூறியதும்.
**வாக்குறுதியும் மண்ணுங் கட்டியும் அப்பிடி என்ன தான் பெரிய வாக்குறுதி ? அதயெல்லாம் விட்டுப் போட்டு நான் சொல்றபடிதான் நீ நடக்கணும்...!" எனக் கூறினுள் அன்னை பல்கிஸ்.
'உம்மா கொடுத்த வாக்கக் காக்குறதுதான் உண்மை யான முஸ்லிமுக்கு அடையாளம். கொடுத்த வாக்க மீறி அல்லாஹாத்த ஆலாட கோபத்துக்கு ஆளாக நான் விரும் பல்ல. அதனுல இந்த விஷயத்துல என்ன வற்புறுத்தா தீங்க." என முடிவாகக் கூறிவிட்டு பாதையில் இறங்கி நடந்தான் அன்சாரி. அப்போது அவன் பாறுக் நாணுவைக் கடைசியாகக் சந்தித்த அந்த நிகழ்வுகள் அவன் நினைவலை களில் நிழலாடின.
e O 9 0. OO
பாறுக் நானு சுகயினமாயிருப்பதையறிந்து அவரைப் பார்த்துவிட்டு வரப் புறப்பட்டான் அன்சாரி. வீட்டை அடைந்த அவன் ‘ஸலாம்" கூறியவாறு உள்ளே நுழைந் தான்.
"பாறுக்நாணு இப்போ எப்பிடி. சுகம் தானு.?" அன் போடு கேட்டான் அன்சாரி.
கொஞ்சநாளாவே இப்பிடித்தான் மகன். ரெண்டு நடவ "ஹாட் எட்டாக்" பிடிச்சிட்டுது. மூணுவது தடவையும் வந்தா நான் போயிட வேண்டியதுதான். என் புள்ளைகள நெனச்சா என்னுல தாங்க முடியல்ல மகன்." என அவர் வருத்தப்பட்டுக் கொண்டார்.

SS
"அப்படிச் சொல்லாதீங்க. நீங்க இன்னும் ரொம்ப நாளைக்கு ஹயாத்தோட வாழப் போறிங்க. அல்லாட கிருபையால உங்க நோய் சீக்கிரமே குணமாகும். அதுசரி, உங்க பிள்ளைகள் நல்லாத்தானே இருக்கிருங்க..? கவலய விடுங்க. 1" ஆறுதல் கூறிஞன் அன்சாரி.
"என்ன செய்ய மகன்.? கவலையும், யோசனையுமே எங்க வாழ்க்கையாயிட்டுதே! புள்ளைகள்ட வாப்பா நானுெரு மெளலா வாம். பரம்பரை முஸ்லிம் அல்லயாம். அதோட நான் செய்ற தொழில் ரொம்ப தாழ்வானதாம். இதனுல என் புள்ளைகளுக்கு மாப்பிள்ளை தர எல்லாருமே பின் வாங்கு ருங்க..!" கண்ணிருக்கிடையே தன் இதய வேதனைகளை அவர் அன்சாரியின் முன் அவிழ்த்து விட்டபோது அவனுக் குக் கண்கள் கலங்கி விட்டன. கேடு கெட்ட சமூகத்தை நினைத்து நொந்து கொண்ட அவன் மனம் அவருக்காகப் பெரிதும் பரிதாபப்பட்டது.
"பாவம் இஸ்லாத்தைப் பத்தி நல்லாப் புரிஞ்சி இஸ் லாத்தத் தழுவி, இன்று வரைக்கும் இஸ்லாத்துட புனித மான கொள்கைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் அடங்கி நடக்கிற இந்த மனுஷனயா இந்தக் கண்ணில்லாத சமுதா யம் தாழ்வாப் பாக்குது...!" என்று சிந்தித்த போது இந் தச் சமூகத்தின்மீது தீராத கோபமும், அருவருப்பும் ஏற்பட் டது அவனுக்கு.
இப்படி இஸ்லாத்தை நம்பி வந்து தூய்மையாக வாழும் புண்ணியவான்களுக்கு ஆதரவு கொடுத்து, அவர் களை அரவணைத்து அவர்களுடன் கைகோர்த்து தோள் சேர்த்து வாழவேண்டிய நம்மவர்கள் அந்தப் பரிதாபத்திற் குரிய ஜீவன்களை ஒதுக்கி அருவருப்பாகப் பார்க்கும் பேத மையை என்ன வென்பது?
சில விஞடிகள் அங்கே நிலவிய மெளனத்தை பாறுக் நானுவே கலைத்தார்.
'தம்பி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எங்க புள்ளை களுக்கு வாழ்க்கையே இல்லையா..? அப்படியானுல் எங்க

Page 35
66
புள்ளைகள கோபிர்"களுக்கா கட்டி வைக்கிறது ?"உணர்ச்சி களின் மொத்த வடிவமாய் அவர் விணுத்தொடுத்தபோது அந்தக் கேள்விகளில் நிறைய நியாயமிருப்பதை உணர்ந்த அவனுல் எதுவும் பேச முடியவில்லை.
"மகன் நான் செய்ற தொழில் இழிவானதாம் களவு, பொய், சூது, ரேஸ், வட்டி, லஞ்சம் இதுகள்ள எதுவும் இல் லாம ஹலாலான முறைல நான் கஷ்டப்பட்டு உழைக்கிற வன். கத்திரி பிடிச்சே இந்தக் கை கரடு முரடாய் போச்சு தம்பி 1 நாங்க மேலான வங்க என்று லேபல்" குத்திக் கொண்டவங்கட தலைமுடிய வெட்டுறதும், அவங்களக் 'கத்னு" செஞ்சி இஸ்லாத்துக்கு எடுக்குறதும் எங்க கூட் டந்தான் ! நாங்க நேர்மையாச் செய்ற தொழிலத் தாழ்வா நெனச்சி ஹராமான முறைல எல்லாம் சம்பாதிச்சு அநியாயம் பண்ணுற நம்மட பெரிய மனுஷர்கள்ட கதையக் கேட்டீங்களா மகன் ?" அவர் தொடர்ந்து பேசியபோது எப்படி ஆறுதல் கூறுவதென்று புரியாமல் தடுமாறிப் போன அன்சாரி,
'பாறுக் நானு கொஞ்சம் அமைதியாயிருங்க ! உங்க வியாதிக்கு நீங்க இப்படி உணர்ச்சிவசப்படுறது கூடாது என்ன செய்றது எங்கட சமூகத்துல இருக்கிற கண்மூடித்தன மானகொள்கைகள மண்மூடச்செய்யாதவரைக்கும் உங்களப் போல உள்ளவங்களுக்கு விமோசனமே இல்லதான். கவலப் படாதீங்க. எல்லாத்துக்கும் அல்லாஹ்தான் போதுமான வன்" சமாதானப்படுத்தினன்.
"மகன் உங்களப்போல உள்ளவங்க எல்லாராலயும் இப்பிடி வெறுமனே சமாதானம் மட்டும்தான் சொல்ல முடி யும்." அவர் எய்த வார்த்தை அம்புகள் அன்சாரியின் உள் ளத்தில் தைத்து நின்றன.
அவரின் வார்த்தைகள் தனது இயலாமையைச் சுட்டிக் காட்டுவதை அவன் உணர்ந்து கொண்டபோது, அவனது மனச்சாட்சி,
"நீயும் ஒரு ஆம்புளதானே! சொல்வீரர்களாக வாழாம செயல்வீரர்களாக வாழறவங்க தான் உண்மையான லட்சிய

87
வாதிகள்." என அவனுக்கு உணர்வூட்டியது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டான்.
"கவலப்படாதீங்க. உங்க மகள நானே காட்டிக்கிற தாக தீர்மானிச்சிட்டேன்." அவன் உறுதியாகக் கூறிய போது, அதிர்ந்தே போனுர் பாறுக் நாணு அவனுக்கு எப் படி நன்றி செலுத்துவதென்று புரியாமல தடுமாறிய அவர்,
"மகன்.இந்தப் பொல்லாத உலகத்துல இப்பிடியும் ஒரு நல்ல ஜீவனு.? நம்பவே முடியல்ல...!" அதற்குமேல் பேச்சுவராது தடுமாறியவருக்கு தன் மகளின் திருமணமே நடந்து விட்டதுபோல் மகிழ்ச்சியாக இருந்தது.
கடந்தகால நினைவுகளை அசை போட்டபடி நடந்து கொண்டிருந்த அன்சாரியின் சிந்தனை கடையை அடைந்த போது கலைந்துவிட்டது.
e
●●
மாதங்கள் சில மடிந்தன தனது திருமண விடயத்தில் எவ்வளவு உறுதியாக அன்சாரி இருந்தானுே அதேபோன்று அவனது தாய் தனது கொள்கையில் விடாப்பிடியாக நின்று விட்டாள் இது அவனுக்குப் பலத்த தலையிடியைக் கொடுத்து விட்டது.
"இப்ப இதுக்கு ஒரு மருந்துதான் இருக்கு ரெண்டு வருஷத்துக்கு வெளிநாட்டுக்குப்போய் இருந்தால் சரி. பிறகு அடுத்த விஷயத்தப் பார்ப்போம்" என்று தீர்மானித்துக் கொண்டான் அவன்.
சந்திக்கப்போகும் பிரிவை நினைத்து அவன் கவலை கொண்டாலும், கட்டாயம் காலம் தன் தாயின் மனதை மாற்றத்தான் செய்யும் எனத் திடமாக நம்பினுன்.
சில நாட்கள் கழிந்தபோது அவனது வெளிநாட்டுப் பயணத்திற்கான நாள் வந்தது. தனக்காகக் கண்ணின் வடிக்

Page 36
68
கும் பெற்ருேரைச் சமாதானப்படுத்திவிட்டுப் பயணமானுன் அவன்.
அன்சாரி வெளிநாடுபோய் ஒன்றரை வருடம் கழிந்து விட்டது. மகனைப் பிரிந்து வாழும் பெற்ருேருக்கு அவனது ஒவ்வொரு கடிதமும் ஆறுதலாக இருக்கும். அவன் வெளி நாட்டுக்குப் போன பின் பாறுக் நாணுவின் மகளைத் திரு மணம் முடிக்கம் எண்ணத்தை மறந்து போயிருப்பான் என அவனின் பெற்றேர் எதிர்பார்த்தார்கள்.
மாதங்கள் சில மறைந்தன. அன்று நீண்ட நாட்களுக் குப்பின் அவனின் கடிதம் வீட்டுக்கு வந்திருந்தது. கடித உறையை மேலோட்டமாக மேய்ந்த அவன் தந்தைக்கு சந் தேகமாக இருந்தது.
'இது மகன்ட கையெழுத்தல்லவே. 1" என நினைத்த வாறு புரொம்"மைக் கவனித்தார்.
"..ஒ மகன்ட கூட்டாளிதான் அனுப்பியிருக்காரு. 1" எனப்புரிந்து கொண்ட வர் மனக்குழப்பத்தோடு கடித உறையை உடைக்கும் பொறுபையின்றி, அதனைக் கிழித்துக் கடிதத்தை உருவியெடுத்தார். ஆவலோடு படித்தார். அவ ரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. கை உதறல் எடுக்க, கடிதம் கீழே தாவியது நெஞ்சு லேசாக வலித்தது. நிலை தடுமாறி விழப்போன அவர்,
"பல்கீஸ் இங். க வாங்கோ." என அவலக் குரல் எழுப்பியவராக அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.
அன்புக் கணவரின் அவலக்குரல் கேட்டுப் பரப்பரப் போடு பதறியபடி ஓடிவந்த பல்கிஸ் அதிர்ந்து போஞள். வெளிநாட்டுக் கடிதம் நிலத்திலே கிடக்க, சாய்வு நாற்காலி யில் சரிந்திருந்த கணவனின் கோலம் அவளுக்கு அச்சத்தை யும், ஆயிரம் சிந்தனைகளையும் தர, அவரை அதிர்ச்சியோடு

69
நெருங்கினுள். அவரால் பேசமுடியவில்லை. அதற்குப் பதி லாகக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. எதுவும் புரியாத அவள் நடுங்கும் கரங்களால் அந்தக் கடிதத்தைக் குனிந் தெடுத்தாள். வாசிக்கத் தொடங்கினுள் ஆணுலும் அவளால் கூட தொடர்ந்து படிக்க முடியவில்லை.
"மகன்." எனக் கதறியவளாக மயங்கிக் கீழே சரிந் தாள் அவள்.
o O)
அந்தத் துயரம் நிறைந்த கடிதம் கண்ட தினத்தி லிருந்து அந்தத் தம்பதியினர் நடைப் பிணங்களாகி விட் டார்கள். சோகம் அவர்களுக்குச் சொந்தமாகியது. உணவை, உறக்கத்தை, ஏன் இந்த உலகத்தையே அவர்கள் மறந்து விட்டார்கள்.
எங்க பேரு சொல்ல மருந்துமரம் மாதிரி இருக்கிற ஒரே உயிர் மகன்தானே! அவனுக்கா அல்லாஹ் இந்த நசீப" வச்சான். எங்க புள்ளைட எதிர்காலமே இருளாயிட்டு தே. " பெற்ற பாசத்தால் பல்கீஸ் கண்ணிர் வடிக்கும் போது, தன் மனமும், கண்களும் கசிவதைக் காட்டிக் கொள் ளாத ஹாஜியார், "அப்பிடிச் சொல்லாதீங்க. நாங்க பொறு மையா இருப்போம். அல்லாட கிருப இருந்தா எங்க புள்ளைட கண்கள சுகமாக்க முடியும். நாங்க அவன நம்பி அவனுக் கிட்டேயே துஆக் கேட்போம்." சமாதானம் கூறுவார் ஹாஜியார்.
நாட்கள் சில நகர்ந்தன. அன்சாரி இலங்கை வரு வதற்கு இன்னும் சில தினங்களே இருந்தன. சீதனம், சீர் வரிசை எதுவுமின்றி அவனுக்கு ஒரு பெண்ணைப் பேசிவரும் படி புரோக்கரிடம் கூறியிருந்தார் ஹாஜியார். இதை அறிந்த அவர் மனைவி,
"என்ன. சீதனம் எதுவுமில்லாமலா.அதோட நாங் களே எல்லாம் கொடுக்கவா ? ஒங்களுக்குப் பைத்தியமா??? அவள் சீறிப் பாய்ந்தாள்.

Page 37
70
"அந்தப் பாழாப்போன பண ஆச மட்டும் இன்னுமே ஒங்களவிட்டுப்போகல்லயே ! எங்க புள்ளை. கண்ணே போன பிறகு பணம் எதுக்கு ? அந்தப் பாழாப் போன பணம் யாருக்கு வேணும். ?' அவர் உணர்ச்சி வசப்பட்டு சத்தமாகப் பேசியபோது பல்கீஸ் அடங்கித்தான் போனுள்.
கல்யாணத் தரகர் ஹாஜியாரின் மகனுக்கு பெண்தேடி அந்த ஊரையும், அயலூர்களையும் சல்லடை.போட்டுப் பார்த்துவிட்டார். பயன்தான் கிடைக்கவில்லை.
எந்தச் செலவுகளுமின்றி ஒரு வாழ்க்கை கிடைப்பதா யிருந்தாலும், கண்பார்வையில்லாத அன்சாரிக்கு வாழ்வு கொடுக்க யாருமே முன்வரவில்லை.
தமது மகன் நல்ல நிலையில் இருந்தபோது அவனுக் காகப் போட்டி போட்டுக் கொண்டு வந்த பெரிய மனிதர் களின் வீடுகளில், ஏன் ஒரு பரம ஏழையின் வீட்டில் கூட அவனுக்கு ஒரு பெண் கிடைப்பது முயற்கொம்பாகியபோது அந்தப் பெற்ருேர் துன்பத்தால் துவண்டு போனுர்கள். என்ன செய்வதென்று தடுமாறிய அன்னை பல்கீஸின் இத யத்தில் பளிச்சென அந்த யோசனை உதயமாகியது.
"மகன் சொன்ன அந்தப் பாறுக் நானு மகளையே பெண் கேட்டுப் போனுல் என்னங்க அவங்களும் எங்களப் போல முஸ்லிம்கள் தானே!" கீழே இறங்கி வந் தாள் அவள்.
"அதத்தவிர இப்ப வேற வழியில்ல 1 இருந்தாலும் அவரும் மத்தவங்களப் போல் கைய விரிச்சிட்டாரென் டால். ? சந்தேகத்தோடு கேட்டார் ஹாஜியார்.
கையக் காலப் பிடிச்சு கெஞ்சிக் கேளுங்க இப்பவே
போங்க..!” வழியனுப்பினுள் பல்கீஸ். புறப்பட்டார் ஹாஜி unti.
அங்கு சென்ற அவர் விஷயத்திற்கு வந்தார்,

பாறூக் நானு, ! நான் மகன்ட விஷயமாகத்தான் வந்திருக்கேன். ஆமா. அவனுக்கு உங்க மகளப் பெண் கேட்டு வந்திருக்கேன். தயவு செஞ்சி நீங்களும் மத்தவங்க மாதிரி கைய விரிச்சிடாதீங்க. என் புள்ளைக்கு நீங்கதான் வாழ்வு கொடுக்கணும்..!" கண்ணிர்வடித்தபடி பாறுாக் நானுவின் கரங்களைப் பற்றிப் பிடித்து உருகி நின்றர் ஹாஜி யார். அவர் தன்னிடம் கண்ணிர் வடித்தபடி யாசித்து நிற் கும் கோலம் பாறுக் நானுவின் கண்களைக் கசியச்செய்து விட்டது. I
"அழாதீங்க. உங்க மகனப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அந்தப் புள்ளைக்குக் கண்தானே குருடு , ! இதவிட மனமே குருடாகிப் போனவங்க நிறையப் பேர் சமூகத்துல வாழ்ருங்களே! நீங்க கவலப்படாம போய்வாங்க" என்று பாறுக் நாணு ஆதரவாகக் கூறிஞர்.
"இத்தன நாளும் சாதி சனம், பணம் என்று உசிரவிட் டோம். அல்லாஹ"ாத் தஆலா ஒருத்தரவிட இன்னுெருத்தர ஏதோ ஒரு வகையில மேலாக வச்சிருக்கிறது அவங்களத் தாழ்வ நெனைக்க அல்ல என்கிறதையும், உங்களப் போல உள்ளத்தால உயர்ந்தவங்க தான் மேலான வங்க என்கிறதையும் புரிச்சிட்டேன்" எனக் கூறிவிட்டு விடை பெற்ருர் ஹாஜியார்.
e e
ve
அன்சாரியும், அவன் நண்பனும் வெளிநாட்டிலிருந்து வரும் நாள் வந்தது. ஹாஜியார் தம்பதிகளும், பாறுக் நாளு வும் நேரகாலத்தோடேயே விமான நிலையம் போய் ஆவ லோடு காத்திருந்தார்கள். நேரம் நெருங்க நெருங்க பெற்ற மனம் பதறத் தொடங்கியது.
**அல்லா. என் புள்ளைய இந்தக் கோலத்துல நான் எப்படிப் பார்ப்பேன். ?' அழத் தொடங்கிவிட்டாள் பல்கீஸ்,
அப்போது ஒரு விமானம் கீழ்நோக்கி வந்து தரையிலே தங்கியது. பயணிகள் ஒருவர்பின் ஒருவராகப்படியிறங்கிஞர்

Page 38
Wቋ
கள். அப்போது கண்களில் கறுப்புக் கண்ணுடியணிந்த ஒரு வர் இன்னுெருவரின் உதவியோடு நிதானமாகப் படியிறங் கிக் கொண்டிருந்தார்.
அப்படி இன்ஞெருவரின் உதவியோடு இறங்குவது அன்சாரி தான் என்பதை அறிந்தபோது பல்கீஸ் வாய்விட்டு அழத் தொடங்கிவிட்டாள். மனைவியைக் கலங்கி வடியும் கண்களோடு நோக்கிய ஹாஜியார் தானும் கேவத் தொடங்கிவிட்டார்.
"நீங்க ரெண்டு பேருமே அழுதா எப்பிடி? அழாதீங்க . அவங்க ரெண்டு பேருமே இங்கதான் வாருங்க..!" தன் கண்களைத் துடைத்தபடியே கூறினுர் பாறுக் நாஞ.
அன்சாரி பெற்ருேரின் அருகே வந்தபோது அவனைப் பாய்ந்து சென்று கட்டி முத்தமிட்ட அன்னை,
மகன். என் ராசா. நான் உம்மா வந்திருக் கேம்பா. கண்ணத் தொறந்து பாருமகன். இந்தக் கோலத்துல உன்னப் பார்க்கவா நான் இன்னும் உசிரோட. இருக்கிறன். ?" ஒப்பாரி வைத்தாள்.
உம்மா அழாதீங்க என்ன செய்றது.? படச்சவன்ட தீர்ப்பு இது, ! அதுச்ரி யார் யாரெல்லாம் வந்திருக்கீங்க . ? என்று அவன் கேட்டபோது,
"வாப்பாவும் ஒன்ட மாமா பாறுாக் நானுவும் தான் வந்திருக்காங்க. பக்கத்துலதான் இருக்கிருங்க...!" விபரம் கூறினுள் பல்கீஸ்.
"எப்பிடி . எல்லாரும் சுகம்தானு.? வாப்பா உங்க கைய இப்பிடித்தாங்க. மாமா நீங்களும் கையத் தாங்க.." என்று கூறிய அன்சாரி, அவர்களின் கரங்களைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டான். இந்தக்காட்சி அங்கிருந் தோர் அனைவரையும் கண்கலங்கச் செய்துவிட்டது.

73
"மகன். இனி நாம் போவோம். இன்னும் ரெண்டு கிழமைல உனக்கும், பாறூக் நானுட மகளுக்கும் கல்யாணம் நடக்க இருக்கு.மகன்’ தந்தை கூறியபோது,
**ஆமா. மகன். நாங்க முன்பு கடை பிடிச்ச கொள்கை கள் எல்லாம் மடத்தனமானது உன் எக்ஸிடனுக்குப் பிறகு தான் புரிஞ்சிகிட்டோம். முஸ்லிம்கள் எல்லாரும் முஸ்லிம்கள் தான் இதுல இனி சந்தேகமில்ல." தாய் முடித்தபோது தனயன் தொடர்ந்தான்.
'உம்மா. கவனமாக் கேளுங்க. கண்பார்வய இழந்த வங்க மட்டும் தான் குருடர்கள் இல்லே. இப்ப சமூகத்துட கண்மூடித்தனமான போக்குகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ற வங்க, மனுஷன மதிக்கத் தெரியாதவங்க.இவங்க 6T6ს6ს)[r ரும் தான் குருடர்கள் ஆமா. இவங்கதான் மனக்குருடுகள்" என்று கூறியவன் சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான்.
எங்க நாயகம் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம் அவங்கட ஒரு ஹதீஸ் இருக்கு அதாவது எல்லா முஸ்லிம் களும் ஒரே கட்டுக்கோப்புப்போல இருக்கிருங்க. அதுல ஒரு மைல்கல் மற்ருெரு கல்ல தாங்கிக்கிட்டிருக்கு. அதேபோல முஸ்லிம்களும் ஒருத்தர ஒருத்தர் தாங்கி நிற்க வேணும் என்று சொல்லியிருக்கிருங்க. இந்த ஹதீஸ் மனிதனப் பாகுபடுத்தி ஒதுக்கி வாழ்ற நம்மவங்களுக்கு எவ்வளவு தூரம் படிப்பினையை, புத்தியைப் புகட்டுது பார்த்தீங் களா..?" என்று கூறியவாறு தான் அணிந்திருந்த கறுப் புக் கண்ணுடியைக் கழற்றுவதற்காக முயன்ற மகனைத் தடுத்து நிறுத்திய அன்னை,
ஏன் மகன். கண்ணுடியக் கிழற்றப்போறிங்க..? கழற்ருதீங்க மகன்.பார்வையில்லாத உங்க கண்கள என்னுல பார்க்கமுடியாது மகன். தயவு செஞ்சி கண்ணுடியக் கழற்ற திங்க.." மன்ருடினுள்.
'உம்மா இப்ப பாருங்க. என் கண்கள நல்லா
பாருங்க..” என்று கூறியவாறு கண்ணுடியைக் கையி லெடுத்தான் அன்சாரி.

Page 39
ሽ4
"என்ன மகன் இது. கொதரத்து இது.? ஆச்சரி யத்தால் வாயைப் பிளந்தாள் பல்கீஸ். எல்லோரும் அதிர்ச்சி யால் தாக்கப்பட்டார்கள்.
'உம்மா. இதுல கொதரத்து ஒன்றுமில்லும்மா. நான் குருடனில்ல..உங்க மங்ணக்குருடுகளப் போக்கத் தான் குருடனு நடிச்சேன்,” என்று கூறியவனின் கண்களில் அற்பு தமான ஒளி வீசியது. அவனின் கண்களை நேருக்குநேர் சந் திக்கச் சக்தியற்ற பல்கீஸாம் ஹாஜியாரும், வாயடைத்துப் போய் நிலம் நோக்கினர்கள். அன்சாரியும் அவன் நண்ப னும் அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டார்கள்.
" அல்ஹம்துலில்லாஹ்!" பாறுக் நானுவின் நாவு படைத்தவனுக்கு நன்றி கூறியது. அன்சாரியின் பெற் ருேரின் நாவுகளும் அதே சொல்லை உச்சரித்து ஓய்ந்தன.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கலம் 1987-ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில நடத்திய மீலாத் சிறுகதைப் போட்டியில் நான்காம் இடத்திற்கான விசேட பரிசு பெற்ற சிறுகதை.

ஒரு சாபம் பலிக்கிறது
இன்பமயமான பொன்மாலைப் பொழுது,"ஆணுல், அந்த இன்பமான மாலைப் பொழுது மங்கை அவளுக்கு எந்தவித மகிழ்ச்சியையும் தரவில்லை. கொஞ்ச நாட்களாகவே அவள் மனதில் நிம்மதியில்லை. நிறைவில்லை. எதிலும் பற்றில் லாத வெறுமை நிலை, வாழ்க்கை வெறும் சூன்யமாகத் தோன்றியது அவளுக்கு. இவ்வளவு காலமும் அவள் கன விலும் எதிர்பார்த்திராத ஏமாற்றம் அவள் வாழ்வில் நடந்து முடிந்தபோது, அவள் அனலில் இட்ட மெழுகாக உருகினுள். துடித்தாள், கண்ணிர் வடித்தாள். "அவரா இப்படி நடந்து கொண்டார்.?' என்று நினைத்தபோது அவள் கண்கள் சமுத்திரங்களாகின. அந்தக் கண்ணிரினுாடே அவளின் கடந்த காலம் மங்கிய நிழற்படமாக அவள் முன்னே விரியத் தொடங்கின.
'உம்தாஜ்" இதுதான் அவள் பெயர், பெயருக்கேற்ற பேரழகியாக அவள் இல்லா விட்டாலும், சாதாரண அழகி யாக, கவர்ச்சியுடையவளாக விளங்கினுள்.
அப்போது அவள் ஜி. ஸி. ஈ. (உயர்தரம்) படித்துக் கொண்டிருந்தாள். நிறைந்த கற்பணு சக்தியும், ஆழ்ந்த அறிவும் உடைய அவள் கதை, கவிதை, கட்டுரை புனைவ தில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவள். அவள் எழுதிய முதற் கவிதை வானுெலியில் ஒலிபரப்பான போது அவள் பெயருக் குப் பலதரப்பட்ட விமர்சனங்கள் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. அவற்றில் முத்தான எழுத்துக்களையும் சத்தான கருத்துக்களையும் கொண்ட ஒரு கடிதம் அவள் இத யத்தைக் கவர, கன்னியவள். அந்த ஒரே கடிதத்திற்குப் பதிலையும் பறககவிட்டாள். நாட்கள் நகர, உண்மை நட் புக்கு இலக்கணமாக அவர்கள் நட்புத் தொடர்ந்தது.
*தில்ஹாஜ்’-இது அவன் பெயர். கொழும்பில் ஒரு பிரபல பத்திரிகையின் நிருபராகக் கடமையாற்றுகிருன்.நாட் கள் செல்லச் செல்ல தில்ஹாஜ்-உம்தாஜ் இவர்கள் நட்பு

Page 40
76
வளர்பிறையாய் வளர்ந்தது. அவர்கள் இருவரும் ஒளிவு மறைவின்றித் தம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவருக் கொருவர் உள்ளன்போடு பகிர்ந்து கொண்டபோது, அவர் கள் கருத்தொருமித்தவர்களாய் அன்புக் காதலர்களாய் மாறினுள்கள். ஆணுல், இத்தனைக்கும் அவர்கள் ஒருவரை யொருவர் நேரில் கண்டு கொண்டதேயில்லை.
தில்ஹாஜ் ஆசைகளையும் கனவுகளையும் கொட்டிக் காவி யமாகவே கடிதங்களை வரைவான். அவன் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரையாவிட்டால் அவள் தலையே வெடித்துவிடும் போல் இருக்கும். இவ்விடயத்தில் அவனும் அவளுக்குச் சளைத்தவனல்லன். ஒரு வாரத்திற்கு ஒரு கடித மாவது அவளுக்கு எழுதாவிட்டால் அன்றைய பொழுதே அவனுக்குப் போகாது. பைத்தியம் பிடித்தவன்போல் உட் கார்ந்து விடுவான். அவனுடைய கடிதம் சற்றுத் தாமதமா ஞல், தான் தினமும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தபால் பியோனையே மனதிற்குள் திட்டித் தீர்ப்பாள். பாவம், அவன் தான் என்னசெய்வான்? சில சமயங்களில் அவன் கடிதத்தை எதிர்பார்த்த கண்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும்போது அக் கண்கள் கலங்கி வடியும். அவன் கடிதம் கிடைக்கும் வரை அவளுக்கு நிம்மதியே இருக்காது. அந்த அளவுக்கு அவன் மீது அவள் மெய்யான நிறைந்த அன்பு கொண்டிருந் தாள.
உம்தாஜ், உன்னை நேரில் காணவேண்டுமென்ற ஆசை என் இதயத்தில் நிறைந்துள்ளது. என் ஆசையை நிறைவேற்ற மாட்டாயா?" என்று ஒருமுறை உருக்கமாக அவன் வரைந்த போது, அவளால் அவன் ஆசைக்கு அணை போட முடியவில்லை. ஏன் அவனை நேரில் கண்டு கதைக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கும் இல்லையா என்ன? எனவே அவனை சந்திப்பதற்காகத் தன் தோழியோடு கொழும்பு வருவதாக எழுதிவிட்டாள்.
அந்த நாளும் வந்தது, உம்தாஜ் தன் தோழியோடு அவன் வேலை பார்க்கும் பத்திரிகைக் காரியாலயத்திற்கே சென்ருள் அவளைக் கண்ட அவன் கண்கள் ஆச்சரியத்தால்

የፃ
விரிந்தன. அவன் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாத அவள் நிலம் நோக்கினுள். அவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. கடிதத்தில் காணப்படும் அவனுடைய துடிப் பையும் கலகலப்பையும் அவனிடத்தில் நேரில் காண முடிய வில்லை. ஏதோ அவளுடன் முகங்கொடுத்துப் பேசுவதற்கே விருப்பமில்லாதவன் போன்று சில வார்த்தைகள் கதைத் தான். அதில் உயிர்த்துடிப்பில்லை. ஏதோ கதைக்க வேண் டுமே என்பதற்காகக் கதைக்கப்பட்ட வார்த்தைகளாகவே அவை அவளுக்குப்பட்டன. அவனுடைய இத்திடீர் மாற் றம் அவள் மனதைத் தாக்கவே செய்தது. எதுவும் புரியாத வளாக அவனிடமிருந்து விடைபெற்றுக் கனத்த இதயத் தோடு வீடு திரும்பினுள்.
வீடு திரும்பிய அவளுக்கு அவனுடைய செயல்கள் பெரும் குழப்பத்தையும், தலையிடியையுமே கொடுத்தன. பல விதமாகச் சிந்தித்த போதும், அவள் குழப்பம் அதிகரித் ததே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஒரு மாதமும் ஓடி மறைந்தது. அவனிடமிருந்து எந்தவிதமான கடிதத்தை யும் காணமுடியவில்லை. அவனின் கடிதத்திற்காகக் காத்தி ருந்த அவள் கண்களுக்கும் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்து நான்கைந்து கடிதங்கள் அவள் எழுதியும், எதற்குமே அவனிடமிருந்து பதில் வரவில்லை. இந்த ஏமாற் றத்தை அவளால் தாங்க முடியவில்லை. பெரும் துன்பத்தால் துவண்டு போனுள் அவன். -
ஒருநாள் அவள் சற்றும் எதிர்பாராத வேளை அவளுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கைகள் படபடக்க, இதயம் துடிதுடிக்க, அதை ஆவலோடு பிரித்துப் படித்தாள்.
அன்புள்ள உம்தாஜ்
இந்தக் கடிதத்தை மிகவும் மனவேதனையோடு வரை கிறேன். தயவு செய்து இனிமேல் என்னை மறந்து விடு. மன் னித்துவிடு. உன்னை நேரில் காணுமுன் உன்னைப் பற்றி எவ் வளவோ ஆசைகள் வைத்திருந்தேன். ஆனல், உன்னை நேரில் கண்டபோது, நீ நொண்டி நொண்டி நடந்ததைக்

Page 41
78
கண்டபோது உன்னைப் பற்றிய என்னுடைய ஆசைகளும் மண்ணுயின. போயும் போயும் ஒரு நொண்டிப் பெண்ணை மணப்பதற்கு நான் விரும்பவில்லை. இதனை என் குடும்பத்தி னரும் விரும்பமாட்டார்கள். உன்னிடமுள்ள இக்குறையை நீயாக முன்பே எழுதியிருந்தால், அப்போதே என் மனதை மாற்றியிருப்பேன்.
இருந்தாலும், இப்போது கூட ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லையே. உன்னை நான் காதலித்தாலும் கூட உன்ன்ைக் கரம்பற்றுவதாக நான் எச்சந்தர்ப்பத்திலும் வாக் குறுதி தரவுமில்லை. இதுவரை உன்னைத் தொட்டதுமில்லை. எனவே கடந்த காலத்தை ஒரு கனவென மறந்து, உனக்குத் தகுதியான ஒருவனை மணந்து சந்தோஷமாக வாழ, உனக் காக என் பிரார்த்தனைகள்.
இப்படிக்கு, தில்ஹாஜ்.
கடிதத்தைப் படித்து முடித்த உம்தாஜ் அப்படியே சிலையாகிப் போனுள். அவள் கண்களிலிருந்து அணை யுடைந்து பாயும் வெள்ளமென மடை திறந்து பாய்ந்தது கண்ணிர். ஒரு கணம் அப்படியே சிலையாகி நின்றவள். அடுத்த கணம் ஓடிப்போய் கட்டிலில் விழுந்து, தலையணை யில் முகம் புதைத்து விக்கி விக்கி அழத் தொடங்கி விட்
6.
பிறர் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருக்கிருச்கள் என்பதை உணர்வது எவ்வளவு சுகமாக இருக்கிறதோ, அவ்வளவு வேதனையும் ஏமாற்றமும் அந்த அன்பு பொய் என்று புரிந்து கொள்ளும்போது வாழ்வில் ஏற் படுகின்றன. அதே ஏமாற்றம். அதே வேதனை உம்தாஜின் வாழ்விலும் ஏற்பட்டு விட்டது.
தில்ஹாஜைச் சந்தித்த போது அவன் நடந்துகொண்ட முறைக்கு இப்போதுதான் அவளுக்கு அர்த்தம் புரிந்தது, அத்தோடு அவன் இவ்வளவு காலமும் தன்மேல் வைத்த

贸9
தெல்லாம் போலியன்பு என்பதையும் இப்போதுதான் புரிந்து கொண்டாள். எனவே தன் மனதிலுள்ள ஆத்திரத்தையெல் லாம் வாக்கிய வேல்களாகக் கருதி, அவனுக்குக் கடைசி யாக ஒரு கடிதம் வரைந்தாள்.
வஞ்சகம் நிறைந்த நெஞ்சத்திற்கு.
உங்கள் கடிதம் கிடைத்தது. உங்கள் முடிவையும் அறிந்தேன். காதலைக் கடைச் சரக்காகக் கருதும் கயவர் களில் நீங்களும் ஒருவர் என்பதைப் புரிந்துகொண்டேன். அடிக்கடி நிறத்தை மாற்றுகின்ற உங்களைப் போன்ற பச் சோந்திகளால் ஆண்கள் வர்க்கத்திற்கே அவமானம். உங்க ளைப் பற்றி இவ்வளவு விரைவில் எனக்குப் புரியவைத்த எல் லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், ፩
இத்தனை நாளும் உங்களை மனிதப் புனிதராகப் பெரிய இலட்சியவாதியாக, உத்தமராக நினைத்திருந்தேன். இப் போது தான் நீங்கள் புருஷ தர்மமே இல்லாத பூஜ்ஜியம் என்பதை அறிகிறேன். நீங்கள் எனக்குத் துரோகம் செய் வீர்கள் என்று நான் நினைத்திருக்கவேயில்லை. உங்களுக்கு உள்ளத்தின் அழகைவிட உடல் அழகு தான் முக்கியம். நீங் கள்எனக்குத் தந்த ஏமாற்றத்திற்கும், உங்களால் இன்று நான்வடிக்கும் ஒவ்வொரு துளிக் கண்ணிருக்கும் என்றைக் காவது ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லித்தான் தீர வேண் டும். இன்று நான் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் சாதாரண மானதல்ல. அவை உங்கள் வாழ்வைக் கருகவைக்கும் எரி மூச்சுக்கள் இந்த ஏழைக்கு மனமறிய,நீங்கள் செய்த துரோக் கத்திற்கெல்லாம் எதிர் காலத்தில் நிச்சயம் நீங்கள் அனுப விக்கத்தான் போகிறீர்கள். அநியாயக்காரர்கள் நிச்சயமாக ஆண்டவனின் தண்டனைக்கு உட்பட்டே தீருவார்கள்.
என்னை நொண்டி என்கிறீர்களே, நான் இயற்கை நொண்டியில்லை. அது எனக்குப் பெரிய குறையாகவும் தெரியவில்லை. நான் சிறுமியாக இருந்த காலம் விபத்தொன் றில் சிக்கிய போதே என் காலில் முறிவு ஏற்பட்டது. அதன் விளைவாகவே நான் இன்று நொண்டி நொண்டி நடக்

Page 42
SÖ
கிறேன். இதை விட மோசமாக இறைவன் உங்களைச் சோதித்து விட்டால் என்ன செய்வீர்கள்.
கால்களை இழந்தவர்களையே தியாக உணர்வோடு மண முடித்து சாதனைபுரியும் தியாகிகளின் முன் என் காலின் சிறு குறையைப் பெரிதாகக் கூறி கையை விரித்துவிட்ட நீங்கள் வெறும் தூசுக்குத் தான் சமமானவர்.
என்னை மறந்து உங்களால் வாழ முடியுமென்ருல் ஏன் என்னுல் மட்டும் முடியாது? நிச்சயமாக உங்கள் கண்களின் முன் நானும் வாழத்தான் போகிறேன். வாழ்ந்து காட்டத் தான் போகிறேன். பொறுத்திருந்து பாருங்கள். என் நல்ல உள்ளத்திற்கு எனக்கொரு நல்ல கணவர் நிச்சயம் கிடைப் பார் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறு கிறேன்.
இப்படிக்கு, உம்தாஜ்
இதுவே அவனுக்கு அவள் வரைந்த கடைசிக்கடித மாகும். அதன்பிறகு அவர்களுக்குள் எந்தத் தொடர்புமே இருக்கவில்லை. பாதை மாறிய பருவங்களாய், திசைமாறிய பறவைகளாய் அவர்கள் ஆஞர்கள்.
தன்நிலை மறந்து கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவளை "உம்தாஜ். என்னம்மா ஒரு மாதிரி இருக்கிற உடம்புக்கு ஏதாவது .' என்ற தாயின் குரல் சுய நினைவுக்குக் கொண்டுவந்தது.
O 90 e
காலம் எப்படியோ மூன்று வருடங்களை விழுங்கிவிட்டது. இப்போது உம்தாஜ் தன் மாமனின் மகன் மின்ஹாஜை மண முடித்து, மனநிறைவோடு மகிழ்வான மணவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிருள். அவளுக்குத் திருமண வாழ் வில் எந்தக் குறையுமேயில்லை. அவள் விவகாரம் தெரிந்தும்,

அவளைத் துணிவோடு கரம் பற்றி அவள்மீது உயிரையே வைத்திருக்கும் அன்புக்கணவன் கண்மணிகளான இரண்டு அழகிய குழந்தைகள். மனம் போல நிம்மதியான வாழ்க்கை இதைத் தவிர அவளுக்கு வேறென்ன வேண்டும்?
ஒரு நாள் கரலை ஒன்பது மணியிருக்கும். தனது வீட்டின் முன்பாக "ரிங் ரிங்" என்ற சைக்கிள் மணியோசை கேட்டு முன்பக்கம் போனவள், தபால் சேவகன் கொடுத்து விட்டுச் சென்ற அந்தக் கடிதத்தைப் பெறுகிருள். கடித உறையில் முகவரியிட்டிருக்கும் எழுத்தைக் கண்டதும், அதே எழுத்தை இதற்கு முன்னும் கண்டிருக்கும் ஞாபகம் நினைவில் நிழலா டியது. ஒரு கணத்தில் அது யாருடைய எழுத்தென்று அவ ளுக்கு விளங்கிவிட்டது. மறுகணம் பழைய நினைவுகள் நெஞ் சில் அலைமோத, கையிலுள்ள கடிதத்தை ஆவலோடு பிரித் தாள.
அன்புள்ள உம்தாஜ்,
இன்று இக்கடிதம் உனக்கு அதிர்ச்சியைத் தரலாம். என் இன்றைய நிலையை நீயறிந்தால் இதைவிடப் பேர திர்ச்சியடைவாய்.
ஆம், கள்ளம் கபடமற்ற உன் பிஞ்சு உள்ளத்தில் ஆசை களையும், சலனத்தையும் ஏற்படுத்தி, ஒரு சிறு குறைக்காக உன்னை வஞ்சித்த எனக்குத் தண்டனையாக இறைவன் என் னையே வஞ்சித்து விட்டான். அப்போது நீ என்மீது காட்டிய அளவற்ற அன்பினைப் புரிந்தும் கூட உன்னை நொண்டி என்றுகூறி உன் மென்மனதை நோகவைத்துஉன்னை ஏமாற் றிய என்னை இறைவனே ஏமாற்றிவிட்டான். ஆம் அவன் எனக்குத் தகுந்த தண்டனையைத் தந்துவிட்டான்.
"இந்த ஏழைக்கு மனமறிய நீங்கள் செய்த துரோகத் திற்கெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நீங்கள் அனுபவிக் கத்தான் போகிறீர்கள் அநியாயக் காரர்கள் நிச்சயம் ஆண் டவனின் தண்டனைக்கு உட்பட்டே தீருவார்கள் என்று
கடைசியாக நீ கண்ணீரோடு எழுதிய வரிகளை படித்தபோது

Page 43
நான் வாய்விட்டுச் சிரித்தேன். 'போடி நீ எனக்குச் சாப மாடி விடுகிருய் நீயாவது உன் சாபம் நிறைவேறுவதாவது என்று மனத்திற்குள் நகைத்தேன் இன்று அந்த அகங்காரச் சிரிப்பிற்கெல்லாம் தண்டனையாக உன் சாபம் பலித்து விட்டது.
இதோ, உனக்குப் புரியும்படியாகவே வரைகிறேன். உன் காலில் கண்ட மிகச் சிறிய குறைக்காக உன்னை ‘நொண்டி" என்று ஒதுக்கித் தள்ளிய நானே இன்று நிரந்தர நொண்டி யாகிவிட்டேன். ஆம், இன்று நான் ஒரு காலை இழந்து ஊன்று கோலின் உதவியோடு நடமாடும் ஒரு நொண்டி.
சில மாதங்களுக்கு முன் கண்டி நகரில் மாபெரும் தேர் தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. எங்கள் பத்தி ரிக்கையின் சார்பில் என்னையும், இன்னுெருவரையும் அங்கு எமது பத்திரிகைக் காரியாலயம் அனுப்பியது. அன்று தான் அந்த எதிர்பாரா விபத்து நடந்தது. ஆம், நாம் சென்ற வாகனம் ஒரு குறுகிய பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வேளை ஆழமான பள்ளம் ஒன் றில் பாய்ந்து உருண்டது. என்னுடன் சென்றவர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பி விட்டனர் ஆணுல், ஆண்டவனின் தண்டனையோ, என்னவோ. அவ்விபத்து என் கால்களில் ஒன்றையே பலிவாங்கிவிட்டது.
அன்று உன் காலில் கண்ட சிறு குறைக்காக உன் அன்பை உதாசீனப்படுத்தி, உன்னை, ஒதுக்கித் தள்ளினேன். இன்று நான் காலை இழந்து, என் மனச்சாட்சியின் முன் தலை குனித்து நிற்கிறேன். உன்னில் கண்ட குறையைப் பொருட் படுத்தாது, தியாக உள்ளத்தோடு முன் வந்து உனக்கு நல் வாழ்வு கொடுத்தான் ஓர் உத்தமன், ஆணுல், இந்த இதய மில்லாத நொண்டிக்கு வாழ்வு கொடுக்க எந்தப் பைத்திய காரி தான் முன் வரப்போகிருள்? நான் உனக்குச் செய்த துரோகத்திற்காக உயிருள்ளவரை என் மனச்சாட்சி என்னை விடப் போவதில்லை.
இறுதியாக ஒன்று, நான் உனக்குச் செய்த துரோகத் திற்கு, தயவு செய்து என்னை மனப்பூர்வமாக மன்னித்து

88
விடு. மானசீகமாக உன் பாதங்களில் விழுந்து கேட்கிறேன். உன்னுடைய இந்த மன்னிப்பு ஒன்றுதான் இனிமேல் எனக்கு ஆறுதலைத் தரமுடியும். எங்கிருந்தாலும் நீ சந் தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும். உன் நல் வாழ்வுக்காக என் உயிர் உள்ளவரை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்.
இப்படிக்கு தில்ஹாஜ்
கடிதத்தை வாசித்து முடித்தபோது அவள் இதயத்தில் இருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது. கூடவே அவனுக்காக அவள் உள்ளத்தில் இருந்து ஆழ்ந்த அனுதா பங்களும் சுரக்கத்தான் செய்தன. அவனுக்குக் கிடைத்த ஆண்டவனின் தண்டனையை நினைத்தபோது அவள் கண்கள் கலங்கின. உள்ளம் இரத்தக் கண்ணீர் வடித்தது. தன் நிலை மறந்தவளாய் கடிதத்தோடு நின்ற அவளை 'உம்தாஜ் இங்கவாம்மா." என்ற தன் கணவனின் குரல் சுயநினைவுக் குக் கொண்டு வந்தது. கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு கணவனை நோக்கி நடக்கிருள் உம்தாஜ்.
'தினகரன்" வாரமஞ்சரி-3-5-1987

Page 44
யார் காரணம்.?
ரிப்னு அவசரம் அவசரமாக நடந்து கொண்டிருந்தாள். அவள் கையிலுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய பை கனத்திருந்தது. அதனுல் கை வலிக்கவே, அந்தப் பையை மற்ற கைக்கு மாற்றிக் கொண்டாள். அந்தப் பையின் கனத்தைவிட, அவள் இதயம் சோகச் சுமைகளால் கனத் திருந்தது.
யாரையோ நீண்ட நாட்களுக்குப் பின் காணப் போகும் ஆவல் அவள் முகத்தில் நிறைந்திருந்தாலும், அந்த முகத் தில் இனந்தெரியாததோர் சோகம் முக்காடிட்டிருந்தது.
சுட்டெரிக்கும் வெயிலிலே கால்களில் செருப்புக் கூட இன்றி நடந்து கொண்டிருந்தவளின் பாதங்களை தார் ரோட் டின் கொதிக்கும் வெப்பம் பதம் பார்த்த போதிலும், அவள் உள்ளம் வேதனைத் தீயால் பற்றி எரியும் நிலையை விட அது அவ்வளவாக அவளைத் தாக்கவில்லை.
விரைவாக நடந்து கொண்டிருந்தவள் அந்தப் பிரதான வீதியைத் தாண்டி அடுத்த பக்கம் வந்து நிமிர்ந்து பார்த் தாள். எதிரே அந்தச் சிறைச்சாலை கம்பீரமாகக் காட்சியளித் தது. மனம் வேகமாக அடித்துக் கொள்ள முன் பக்கம் காவ லில் நின்ற சிறைச்சாலைக் காவலர்களிடம் அனுமதி பெற்று உள்ளே நடந்தாள் ரிப்னு, தன் கணவன் கைதியாய் வைக் கப்பட்டுள்ள குற்றவாளிக் கூண்டின் அருகே வந்தவள் கையி லிருந்த கையை நிலத்திலே வைத்துவிட்டு வியர்வையால் நனைந்திருந்த தன் முகத்தை அந்தக் கசங்கிய சேலைத் தலைப் பால் அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு, சிறைக் கூண் டின் கம்பிகளுக்கிடையே பார்வையை உள்ளே ஓட விட்டாள். அங்கே அந்த வெறும் சீமெந்துத் தரையில் தன் கைகளைத் தலைக்குத் தலையணையாய் வைத்தபடி சாய்ந்திருந்த அவள் கணவன் கூரை முகட்டையே வெறித்துப் பார்த்தவாறு கிடந்தான். அந்தக் கோலத்தைக் கண்டு அவள் நெஞ்சம் பதறியது. விழிகள் குளமாயின. தன்னைக் சுற்றியுள்ள சூழலை மறந்தவளாய் லேசாக விசும்பத் தொடங்கிவிட்டாள் ரிப்னு,

SS
திடீரெனக் கேட்ட அழுகையுொலி அவள் கணவன் சிராஜின் சிந்தனையைக் கலைக்க, திடுக்கிட்டுத் திரும்பியவன் துள்ளியெழுந்து கம்பிகளுக்கருகே வந்து அவளின் கரங்களை ஆதரவோடு பற்றிக் கொண்டான். இருவருக்கும் பேச்சே வரவில்லை. தன் அன்பு மனைவியின் விழிகளில் கண்ணிரைக் கண்ட சிராஜின் கண்களும் தாரை தாரையாகக் கண்ணிரை வடித்தன. தன் மனைவியைக் கண் கலங்கவிடாது அவள் தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி வைத்தவனல் லவா அவன்...? சில நிமிடங்கள் மெளனத்திலேயே கழிந் தன. அங்கே இருவருக்கிடையிலும் இருந்த அந்த மெளனத் திரையை விலக்க விரும்பிய சிராஜே பேச்சைத் தொடங் கினுன்.
"ஏம்மா ரிப்னு அழறே..? அழாதேம்மா..! இன்னும் நாலு மாதத்துல வீட்டுக்கு வந்திடுவேன்ம்மா. நான் செஞ்ச குற்றத்துக்கு நான் அனுபவிக்கிறேன். அதுக்காக நீ ஏன் அழனும்.?" அவளின் தலையை ஆதரவோடு வரு டியபடி ஆறுதல் கூறினன் சிராஜ்.
"இல்ல. என்னுல தான் நீங்க இந்த எடத்துக்கே வந் தீங்க. 1 நான் ஒரு நல்ல மனைவியா, உள்ளதக்கொண்டு வாழக் கூடியவளா இருந்திருந்தா இந்தக் கதி ஒங்களுக்கு வந்திருக்காதே!" எனக் கூறியவாறு ஒ. என்று அழத் தொடங்கிவிட்டாள் ரிப்னு,
"அதப்பத்தி இப்ப பேசி என்ன பயனிருக்கு? அதனுல இனி நடக்கப் போறதப் பத்தி யோசிப்போம்" இப்படிக் கூறி அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்த சிராஜ், தொடர்ந்தும்,
"அது சரி. நம்ம புள்ளைக எல்லாரும் எப்பிடி..? சொக மாக இருக்கா...? நானும் வீட்டுல இல்லாத நிலைல நீ எப் பிடி அவங்களக் கவனிக்கிறே..? சமாளிக்கிற்ே.?" கேட்டு வைத்தான் சிராஜ், y

Page 45
'ஏதோ இடியப்பம் அவிச்சி கிடைக்கிறதக்கொண்டு அதுகள பட்டினி போடாமசமாளிக்கிறேன்" எனக் கூறினுள் ரிப்னு, உள்ளதைக் கொண்டு சமாளிக்கும் எளிய தன்மை யும், தன்னம்பிக்கையும் அவளிடம் அப்போதே இருந்திருந் தால் அந்தக் குடும்பம் இன்று இப்படி சீரழிய நேர்ந்திருக் குமா என்ன?
தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலங்களை அவனுக்குக் கொடுத்து விட்டு, அவனை விட்டுப் பிரியமன மின்றி பல நாட்களாக சீவப்படாத பரட்டைத் தலையுடனும், தாடிமீசையுடனும் நின்றிருந்த தன் கணவனின் கலையிழந்த முகத்தை மீண்டுமொரு தடவை கலங்கும் கண்களால் நோக்கிவிட்டு விடைபெற்ருள் ரிப்ளு. அவனும் ஈரமான விழி களுடன் கையசைத்து விடை கொடுத்தான். தன் இதய வாகனத்திலே சோக மூட்டைகளைச் சுமந்தவாறு அங்கிருந்து வெளியே வந்தாள் ரிப்னு,
"ஒரு பெண்ணுல நல்லவன நாசமாக்கவும் முடியும். கெட்டவன நல்லவனுக்கவும் முடியும்-இது என் விசயத்துல உண்மையாப் போச்சு. அவரு எவ்வளவு நல்லவரா இருந் தாரு ஆணு அவரு இந்த நிலைக்கு வரக் காரணமே நான் தானே..?" எனக் கண்ணிருக்கிடையே தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு, அவள் கண்ணிர் பாதையை மறைத்தது. அங்கே அவளின் கடந்தகாலம் முன்னே பட
மாக விரிந்தது.
மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் ரிப்ஞ. வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் கேட்பதை எல்லாம் வாங் கிக் கொடுத்து செல்லமாக வளர்க்கப்பட்டாள் அவள்.
உரிய வயது வந்ததும் அவளுக்குத் திருமணமும் நடந் தேறியது. அவள் கணவன் சிராஜ் மிகவும் நல்லவன். மனை வியை மிகவும் ஆழமாகவே நேசித்தான். அவள் கண்களில் கண்ணீரைக் கண்டாலே துடித்துப்போய் விடுவான். அவ

87
ளின் மனம் கோணுது அவளைக் கண்கலங்கவிடாது அவள் தேவைகளை நிறைவேற்றி வைத்தான் சிராஜ்.
காலம் வருடங்களை வருடிச் சென்றன. இப்போது சிராஜ் ரிப்னு தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைச் செல்வங்களும் P-67 G.
இயற்கையிலேயே ஆடம்பரப் போக்கும், நாலு பேரை யும் போல் வாழ வேண்டும் என்ற போலி கெளரவமும் உடையவள் தான் ரிப்னு, தன் கண்களில் கண்ணீரைக் கண் டாலே துடித்துப்போகும் கணவனை வைத்து நினைத்ததை யெல்லாம் சாதிக்கப் பழகிக் கொண்டாள் அவள். அவனும் அவள் எதைக் கேட்டாலும் மறுக்காமலே வாங்கிக் கொடுப் பான். அப்படி வாங்கிக் கொடுக்க முடியாத பட்சத்தில் அதனையொரு அவமானமாக, தன் இயலாமையாக நினைத் துக் கவலைப்படுவான் சிராஜ். எனவே எந்தச் சிரமப்பட்டா வது அவளைத் திருப்திப்படுத்தி வைப்பான் அவன்.
இந்தப் பழக்கம் அவனை நாளடைவில் ஒரு கடன்காரணு கவே மாற்றிவிட்டது. இருப்பினும் இதைப் பற்றியெல்லாம் ரிப்னு கவலைப்படவில்லை. தன் கணவனின் வருவாயைவிட அதிகமாகவே செலவு செய்யும் அவள் தன்னுடைய தேவை களை நிறைவேற்றிக் கொள்வதில் குறியாக இருப்பாளே தவிர, தன் கணவனின் நிலையை-வசதியைச் சற்றும் சிந்தித் துப் பார்க்க மாடடாள்.
நாட்கள் விரைவாக ஓடின.தமது மூத்த மகன் இபாஸின் கத்ணுவை ஊரைக் கூட்டி விமர்சையாகச் செய்ய வேண்டு மென ஆசைப்பட்டாள் அவள். இது ஒரு அணுவசியச் செலவு என்பதனை சிராஜ் உணர்ந்திருந்தாலும் அதனை மனைவியிடம் கூறித் தடுக்கும் மனம் அவனுக்கு இருக்கவில்லை.
'சரி . அவளும் ஆசப்படுரு. கடன்பட்டாவது செய் வோம். பிறகு கடன அடைச்சிட வேண்டியதுதான்." என முடிவெடுத்துக் கொண்டவன் கடன் வாங்கி மகனின் கத் ணுவை விமர்சையாகவே செய்து முடித்தான்.

Page 46
38
சில நாட்கள் ஓடியாடித் திரிந்ததாலும் தூக்கம் விழித் ததாலும் களைத்துப்போயிருந்த சிராஜ் அன்று மாலை சிறிது தூங்கி எழலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலில் சாயும்போது அவ்விடம் வந்த ரிப்னு,
"என்ன. தூங்கப் போறிங்களா..? இன்டைக்கு ஒரு நல்ல நாள். அதனுல கூலிக்கு டி. வியும் டெக்கும் எடுத்து இரவு முழுக்க ரெண்டு படம் போட இருக்கிறதா என் பிரன்ஸ்ஸ"உக்கிட்டவெல்லாம் சொல்லிட்டேன். புள்ளைகளும் ஆசப்படுருங்க. அந்த வீடியோ சென்டருக்குப் போய் அது கள வாங்கி வாங்களே..!" என்ருள். தன் கணவனின் வச தியைப் பற்றிக் கவலைப்படாது இப்படி ஒரு அணுவசியத் தேவையை உற்பத்தி செய்து தன்னை உருக்குலைக்கும் மனைவி மீது அவனுக்கு அளவு கடந்த ஆத்திரம் ஏற்பட்டா லும் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டான் சிராஜ்.
‘எல்லாம் நான் கொடுத்த இடந்தான் அப்போதே நான் கண்டிப்போட நடந்திருக்கணும். இத்தன வருஷமா என்னுேட குடும்பம் நடத்துறவ என் வசதிப் பற்றித் தெரி யாதல மாதிரி நடந்து கொள்ளுலே...!" எனக் கவலைப்பட்ட சிராஜ்,
"சரி. பொறுமையா இருப்போம் நான் வாயத் தொறந்தா பிரச்சினையாகிவிடும். வீட்டுல வெளியாட்கள் வேற இருக்கிருங்க. சரி கடனுக்காவது வாங்கி வந்து காட் டிட்டு கடன் அடைக்க வேண்டியது தான்" என நினைத்துக் கொண்டவன் வீடியோ சென்டரை நோக்கி வேதனையோடு நடந்தான்.
மாதங்கள் சில மடிந்தன. தான் பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடினுன் சிராஜ். உழைக்கும் பணம் குடும்பச் செலவுகளுக்கே போதுமாயி ருக்கும் போது கடனை அடைக்க அவன் என்ன செய் வான் ? கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து சப்த மிட்டபோது அவமானத்தால் குறுகிப் போனுன் சிராஜ்.

89
ஒருநாள் கடன் கொடுத்தவர்களில் ஒருவர், இன் டைக்கு எனக்கு ரெண்டுல ஒரு முடிவுவேணும். எப்பிடியும் இன்டைக்கு மாலைக்குள்ள பணம் வந்து சேரணும். இதுக்கு மேல ஒரு நிமிஷமும் டைம் தரமுடியாது." எனக் கண் டிப்புடன் கூறிவிட்டார். இன்று மாலேக்குள் பணம் கொடுக் காவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயந்து கொண் டிருந்தவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் போய்க் கேட்பது?" என்று சிந்தித் தவனின் நினைவில் அவன் பள்ளித் தோழன் பாறுரக் பவனி வந்தான் உடனே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நண்பன் வசிக்கும் ஊருக்கு பஸ் ஏறி விட்டான் சிராஜ். V
அந்த பஸ் வண்டி பயணிகளால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு வாசல் பக்கத்திலே இடம் பிடித்துக் கொண்ட சிராஜ் சனநெரிசலுக்கிடையே இரும்புக் கம்பியைப் பிடித்த படி நின்றிருந்தான் சிராஜ். அப்போதுதான் அந்த நெரி சலிலே இடிபட்டுப் போய் தன் முன்னுல் நின்று கொண்டி ருந்த அந்தப் பெண்ணை அவன் அவதானித்தான். அவள் கழுத்தில் ஒன்னரை பவுண் எடையுள்ள ஒரு தங்க மாலை மினுமினுத்தது. அந்த மாலையையே வைத்த கண் வாங்கா மல் பார்த்துக் கொண்டிருந்த சிராஜின் மூளை குறுக்கு வழி யில் வேலை செய்யத் தொடங்கியது.
"இந்த மாலை எப்பிடியும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதி யிருக்கும். நான் நம்பிப் போற பாறுக்கும் கைய விரிச்சிட் டான் என்ருல் இன்டைக்கு என் முடிவு என்னவாகுமோ..? இப்போ அங்க போகப்படாது. இந்த மாலைக்கு "கேமக்" கொடுக்கனும்...!" என மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண் டவன், பாறுக்கிடம் போகும் பயணத்தை தூக்கி எறிந்து விட்டு-புதுத தொழிலில் ஈடுபடுவதற்காக மனதை தைரியப் படுத்திக் கொண்டான்.
அவன் மனம் "திக் திக்" என அடித்துக்கொள்ள, கை நடுங்கியது. தான்.செய்யப் பிோவது மிகவும் இழிவானபாவமான காரியம் என்பதை அவன் உள்ளுணர்வு கூறிஞ லும், அவனது தற்போதைய நிலை அந்த உணர்வுகளைத் தட்டிக் கழிக்க வைத்து விட்டது.

Page 47
90
தன்னைச் சுற்றி ஒரு தரம் பார்த்துக் கொண்ட சிராஜ், பலரும் நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மெதுவாகக் கையைத் தூக்கி அவளின் கழுத்தை நோக்கி நீட்டினன்.
"வாகனத்துட வாசல்லே நிக்கிறது நல்லதாப் போச்சு. மாலை கைக்கு வந்தவுடனே கீழே தாவிடலாம்...!" என நினைத்துக் கொண்டவனின் கை மாலையைத் தொட்டுவிட் டது. மாலைக்குரியவளும் தூங்கி வழிந்தபடியிருந்தாள் அவனுக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. சிறு முயற்சி ஒன் றுடனே அந்த மாலை அவன் கைக்கு வந்து விட்டது. அடுத்த கணம் அவனின் பின் பக்க சேட் கொலரை ஒரு கரம் பிடித்துக் கொண்டது. மறுகணம் பஸ் பரபரப் படைந்தது. சிராஜைப் பிடித்துக் கொண்ட பயணிகள் தம் முடைய கைவரிசையை அவன் தேகமெங்கும் காட்ட, வேதனையால் துடித்துப் போனுன் அவன்.
பஸ்வண்டி நேராக போலீஸ் நிலையம் நோக்கிச் சென் றது. அவனைப் பிடித்து நிலையத்தில் ஒப்படைத்த பயணி களில் ஒருவர்,
"சேர்.ரொம்ப நேரமா நான் இவன கவனிச்சிக் கிட்டே இருந்தேன். இவன் ஒரு திருடன் என்கிறதப் புரிஞ்சி கிட்டேன். அதனுல இவனக் கையோட பிடிக்கணும் என் கிறதுக்காக தூக்கம் போல நடிச்சேன். நான் எதிர்பார்த் தது சரியாப் போச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் பொண் ணுட கழுத்திலிருந்த மாலைய அடிச்சிட்டான். உடனே ஆளக் கையோட பிடிச்சிட்டேன்." என ஒருவர் விபரம் கூறிய போது போலீஸாரும் அவனுக்கு விருந்து கொடுக்கத் தவறவில்லை.
சிராஜ் செய்த குற்றத்திற்கு ஆறு மாத சிறைத் தண் டனை விதிக்கப்பட்டு இப்போது அவன் சிறையிலே வாடு கிருன்.
"என்னம்மா.ரோட்டப் பாத்துப் போகப் படாதா.. ?
என்று தன் பின்னூல் ஒருவனின் சப்தம் கேட்டு @geuser

òi
தான் வீதியின் குறுக்கால் போய்க் கொண்டிருப்பதை அப் போது தான் உணர்ந்த ரிப்ஞ தன் கடந்த கால நினைவுகளி லிருந்து விடுபட்டு வீதியைப் பார்த்து நேராக நடக்கத் தொடங்கினுன்
"இனிமே நான் என் வாழ்க்கைப் பாதையிலும் நேரா கத்தான் நடப்பேன். நான் நேரான வழியை மறந்து வாழ்ந்த தால தானே ஒரு பாவமும் அறியாத என் புருஷன் தண்டனையை அனுபவிக்கிருரு. ஒரு குடும்பத் தலைவி என்கிறவள், எப்பிடி வாழனும் என்கிறத நான் இப்போ நல்லாவே படிச்சிட்டேன். ஒரு நல்ல மனிதர் கடன்கார ஞக, கள்வனுக, குற்றவாளியாக தடம்புரள்வதற்குக் நானே காரணமாயிட்டேனே..! இனி இப்படியெல்லாம் நிச்சயமாக நடக்காது..!" என உறுதி பூண்டவள் தன் வீட்டை நோக்கி அமைதியாக நடந்தாள்.
oue 0Ꮬ0 3 ano

Page 48
தலைக்கணம் தண்டிக்கப்படுகிறது.
இரவின் மடியில் உலகமே உறங்கிக் கொண்டிருந்தது உறக்கமின்றிக் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் கரீம். இன்று நேற்றல்ல, கடந்த நான்கு வருடங்களாகவே அவ னின் நிலை இதுதான் வெளி உலகத்திற்கு அவனும் சாதா ரன மனிதனுக உலா வந்தாலும், மனதளவில் அவன் செத் துக் கொண்டேயிருக்கிருன்.
கரீமின் மனம் வேதனைச் சுமைகளால் கனத்திருந்தது. தூக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தவன் எழுந்து சென்று மேசை மீதிருந்த டைரியோடு கட்டிலுக்கே மீளுகின்ருன். பக் கங்களைப் புரட்டியவனின் பார்வை, அந்தப் பக்கத்தில் நிலை குத்தி நிற்கிறது. அங்கே ஒரு புகைப்படம். அதில் அழகே உருவான ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தன் பொக்கை வாய் திறந்து சிரித்தபடி இருந்தது. படத் தையே பார்த்துக் கொண்டிருந்த கரீமின் கண்கள் கலங்கி வடிய, அவன் உதடுகள் மெதுவாக அசைகின்றன.
'மகளே ஒன்னப் பிரிஞ்சி வந்து இப்போ நாலு வரு ஷங்களாயிட்டுதம்மா! இந்த நாலு வருஷங்களும் ஒன்னக் காணும நான் படுற வேதன படச்சவனுக்குத்தான் தெரி யும். நீ இப்போ வளர்ந்திருப்பாயே ஒன்னக் காணனு முண்டு எவ்வளவோ முயற்சி பண்ணியும் என் கண்ணுல படாம உன் உம்மா உன்ன மறைச்சிட்டாங்களே! உன்னக் காணும எனக்கு நிம்மதியேயில்ல. நான் உன்ன பிரிஞ்சி வாற நேரம் குழந்தையாயிருந்த உன்னுல இப்போ என்ன அடையாளம் காண முடியாட்டாலும், உன்ன நான் கண்டு பிடிச்சிடுவேம்மா. எல்லாக் குழந்தைகளுமே தங்கட தகப்பன் மாற அறிஞ்சி, அவங்களோட குதூகலமா வாழ் ருங்க. ஆணு, அந்தக் குதூகலம் உனக்குக் கிடைக்கல்லே யேம்மா. நான் கூட நீ பொறந்த நேரம் உன்னப்பத்தி எப்பிடியெல்லாமோ ஆசக் கனவு களக் கண்டேம்மா. எல் லாத்தையும் உன் உம்மா நாசமாக்கிட்டாங்களே! வாப்பாட பாசத்துக்காக நீயும், மகள் ட பாசத்துக்காக நானும் ஏங்கித் தவிக்கிற தவிப்ப டிச்சரான உன் உம்மாவால புரிஞ்சி சொர்ள முடியாம இருக்கிறது அதிசயம்தாம்மா. “சத்திய

93
மாகச் சொல்றேம்மா .நான் எந்தத் தவறையுமே செய் யல்ல. டீச்சரான உன் உம்மாவுக்கு, சாதாரண தொழி லாளியான என்னுேட வாழப் பிடிக்கல்ல. அதனுல என்ன விட்டே விலகிட்டாங்க...இந்த உண்மைகள் எதுவுமே உனக் குத் தெரியாது தாம்மா நீ வளர்ந்தாலும் இந்த உண்மை கள் உனக்குத் தெரியாமலாக்கிடுவாங்க" எனப் பேசியவாறே கரீம் கண்ணயர்ந்து போனுன்.
பொழுது விடிந்தது. ‘என் மகள ஸ்கூல்ல சேர்த்திருக் கிறதா நண்பன் நஸிர் சொன்னுனே இன்டைக்கு எப்பிடி யாவது அந்த ஸ்கூலுக்குப்போய் என் உயிரக் கண்டு பேசிட் டுத் தான் வரவேணும்" என்ற எண்ணத்தோடேயே படுக்கை யிலிருந்து எழுந்தான் கரீம். தன் மகளை நான்கு வருடங் களுக்குப் பின் காணப் போகிருேமே என்ற மகிழ்ச்சி அவ னுக்கு.
காலை பத்து மணியாகிவிட்டது. ஆயிரமாயிரம் பாச நினைவுகளைச்சுமந்து கொண்டு மகள் படிக்கும்பாடசாலைக்குப் புறப்பட்டான் கரீம். இடையில் அவளுக்காக "பிஸ்கட்" பெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தவன், பாடசாலையை நெருங்கி, மகளின் வரவுக் காக கேட்டடியில் காத்திருந்தான்.
சில நிமிடங்கள் கரைந்தன. இடை வேளைக்கான மணி ஒலித்தது. கேட்டடியில் நின்ற வியாபாரிகளை நோக்கி வெண்புருக்களாய், பிள்ளைகள் வரத் தொடங்கினர்கள். அந் தக் குழந்தைகள் கூட்டத்திலே, தன் மகளைக் கரீமின் கண் கள் தேடின. மனதில் சோர்வோடு நின்றிருந்தான் கரீம். அப் போதுதான் நான்கைந்து சிறுமிகள் அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களில் தன் மகளும் இருப்பதை இனங் கண்டு கொண்ட கரீமின் இதயம் பாசத்தால் நெகிழ்ந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத பாச உணர்வுகளுடன் அந்தச் சிறுமியை ஆவலோடு பார்த்தான் அவன். சடுதியாக அந்தச் சிறுமியும் அவனை நோக்கியபோது, கரீம் தன் கரங் களால் அவளை அழைத்தான். தாடி மீசையுடன் முன்பொரு போதும் கண்டறியாத புது மனிதன் ஒருவன் தன்னைக்

Page 49
94
கைகாட்டி அழைப்பதைக் கண்டு பயத்துடன் விழித்த சிறுமி, மறுகணம், "ஐயோ. புள்ள புடிக்கிறவன்." எனக் கூக்கு ரலிட்டவாறே வந்த பக்கம் ஓடத் தொடங்கினுள். அவளு டன் வந்த சிறுமிகளும் கத்திக் கொண்டே ஒடிஞர்கள்.
அப்போது. கையில் இருந்த "பிஸ்கட் பக்கட்" கையை விட்டு நழுவ, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆதிர்ச்சி யோடு நின்ருன் கரீம். அவன் நினைத்துக் கொண்டு வந்த ஆசைக் கனவுகளும் மண்ணிலே சரிய, பக்கத்தில் நின் றிருந்த வியாபாரிகள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, கூனிக் குறுகிக் கொண்டு வேதனையோடு திரும்பி நடந் தான் அவன். அவன் நினைவுகளும் கடந்த காலத்தை நோக்கி மெதுவாகத் திரும்பின.
OO OO OSO
பெற்ருேருக்குத் தலைமகனுய்ப் பிறந்தவன்தான் கரீம் அவனுக்கு ஒரு தங்கையும், மூன்று தம்பிகளும் உள்ளார்கள். சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்துவிட்ட அவன் மிகவும் நல்லவன். நேர்மையான உள்ளமும் இரக்க சுபாவமும் அவ னுக்கே இயல்பானவைதான். தன் தந்தை நோய்வாய்ப் பட்டபோது குடும்பப் பொறுப்புக்கள் யாவும் தன்மீது கடமை யாக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவன், பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உழைக்கத் தொடங்கினுன்.
வருடங்கள் சில கழிந்தன இப்போது அவன் சிறுவன் அல்லன். இருபத்தைந்து வயதைத் தாண்டிய இளைஞன் அவன் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. தம்பிகளும் வய துக்கு வந்து விட்டார்கள். அவனுக்கும் திருமணம் பேசப் பட்டது.
கரீமின் மாமிமுறையான உறவுக்காரப் பெண்ணெருத் தியும் தனது பிள்ளைகளுடன் பக்கத்து ஊரில்தான் வசித்து வருகின்ருள். அந்தக் குடும்பத்தை வறுமை வாட்டி வதைத் தது. திருமண வயதுக்கு வந்த மூன்று பெண்மக்களையும், சிறுவனுன இளைய மகனையும், நோயாளியான கணவனையும்

95
வைத்துக் கொண்டு, வாழ்க்கையோடு போராடினுள் அந்தத் தாய்.
தனது உறவினர் வீடு என்பதால் அங்கு இடைக்கிடை தரிசனம் கொடுக்கும் கரீம், அந்தக் குடும்பத்தின் வறுமை நிலையையும், தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக அந்தத் தாய் படும் கஷ்டங்களையும், கவலைகளையும் நன்கறிந்து, நெகிழ்ந்து யோவான். தன்னுல் இந்தக் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உதவ முடியுமா? என்று அடிக்கடி சிந்திக்கும் அவன்,
"பாவம் இவட மூத்த மகள் பர்ஸாணுவ நானே கல் யாணம் கட்டிக்கிட்டா இந்தக் குடும்பத்துட முக்கியமான சுமையும் குறையும். அதோட ஒரு ஏழைக்கு வாழ்வு கொடுத்ததுக்காக அல்லாஹ்வும் சந்தோசப்படுவானே!" என நினைத்துக் கொள்வான்.
ஒருநாள் கரீம் தன்னுடைய இவ் எண்ணத்தை நண் பன் நளிர் மூலம் அந்தக் குடும்பத்திற்குத் தெரியப்படுத்திய போது, அவர்களுக்கும் பூரண திருப்தி உண்டாயிற்று. நல் லொழுக்கமும், நற்பண்களும் கூரிய அறிவும் கொண்ட உழைப்பாளியான கரீம், கிடைப்பதற்கு அந்தக் குழம்பத் தினர் பாக்கியம் தான் செய்திருக்க வேண்டும். அந்தப் பெண்ணையே மணமுடிப்பதாக உறுதி கூறிவிட்டான் அவன்,
இவ்விடயத்தை அவன் தனது வீட்டினரின் காதில் போட்டுவைத்தபோது அவனின் தாயார் கொதித்து எழுந் தார்.
"நாங்க இருக்கிற நேரம் உனக்கென்னடா அவசரம்? உன்ன பெத்து வளக்கத் தெரிஞ்ச எங்களால, உ ைக்கு நல்ல தொரு வாழ்க்கைய தேடித் தர ஏலாதா?" என்று கோபத் துடன் வெடித்த தாயிடம்,
'உம்மா அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க உம்மா. பாவம் ரொம்ப வறுமைப்பட்ட குடும்பமம்மா அது அந்தக்

Page 50
9.
குடும்பத்துல இருந்து ஒரு பெண்ண வாழ வச்சா. எனக்குக் கிடைக்கிற நன்மைல என்ன பெத்த தாய்க்கும் கட்டாயம் பங்கிருக்கும்மா." என்று சாந்தமாகக் கூறிச் சமாளிக்க முயன்ருன் கரீம்.
'நன்மையும், தீமையும். சும்மா போடா. ஒனக்குத் தான் நல்ல சீதனத்தோடயும், சொத்து சுகத்தோடயும் நல்ல இடங்கள்ள இருந்தெல்லாம் மாப்பிள்ளை கேட்டு வாருங்களே! அந்தத் தரித்திரம் புடிச்ச குடும்பத்துல பெண் எடுக்க. உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" எனக் கோபத்தோடு கூறிய தாயை இடைமறித்த கரீம்.
"என்னப் பெத்து வளர்த்த உங்கள எதிர்த்துப் பேசு றதா நினைக்காதீங்க. நீங்க பேசுற எதுவுமே எனக்கு சரி யாப்படல்ல. ஏன்ட லட்சியமே சீதனம், சீர்வரிசை எதுவு மில்லாமல் மஹர் கொடுத்து ஒரு ஏழைப் பெண்ண நிக் காஹ்' செய்றதுதாம்மா. நான் அந்தப் பெண்ணத் தான் கட்டிக்கிறதாக வாக்குறுதி வேற கொடுத் திட்டேம் மா. அதனுல இந்த விஷயத்துல உங்க பக்கம் நிக்க முடியாத துக்கு என்ன மன்னிச்சிடுங்க உம்மா." என்று கூறிய போது
"வாக்காம் வாக்கு . என்னடா கண்டறியாத பெரிய வாக்கு ?" என்ற தாயை நோக்கிய கரீம்,
'உம்மா. கொடுத்த வாக்கக் காக்குறது தாம்மா உண்
மையான விசுவாசிக்கு அடையாளம் அதனுல அந்த வாக்குறு
திய மீறி அல்லாட கோபத்துக்கு ஆளாக நான் தயாராக இல்லம்மா..!" என்று உறுதியாகக் கூறிய போது,
'அப்பிடியென்ருல், இந்தக் கல்யாணத்துக்கு உன்னப் பெத்த உம்மா இல்ல என்கிறத வச்சிக்க .." என்று விடாப் பிடியாகவே நின்று விட்டாள் அவனன்னை.
நாட்கள் நகர்ந்தன. இந்தத் திருமணத்திற்கு தனது தாயை இணங்கச் செய்வதற்காக எவ்வளவோ முயன்றும்,

ፀሃ
கடைசி வரை அம்முயற்சியில் தோற்றுப் போனுன் கரீம். தாயின் பாசத்திற்கும், கொடுத்த வாக்குறுதிக்கும் இடையில் தடுமாறிய கரீம் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
தாயின் விருப்பமின்றி, ஆசீர்வாதமின்றி எளிமையான முறையில் அவனது திருமணம் நடந்தேறியது.
"கல்யாணம் என்கிறது பெத்தவங்க ஆசியோட நடக்க வேண்டிய நல்ல கருமம். உம்மாட ஆசி எனக்குக் கிடைக் காதது துரதிஷ்டம் தான்" என மனதிற்குள்ளேயே வேத னைப்பட்டுக் கொள்ளும் கரீம்,
'உம்மா தான் என்னுேட எந்த விதமான கோபமும் இல்லையே. வழமையான பாசத்தைத் தானே இப்போதும் வச்சிருக்காங்க. உம்மா என்ருல் உம்மாதானே! உம்மாவ மாத்திடலாம்" எனத் தனக்குத் தானே சமாதானமும் கூறிக் கொள்வான்.
கரீமின் வருகை அவன் மனைவி வீட்டினருக்குப் பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துவிட்டது. அவன் அந்தக் குடும்பத்துடன் அன்பாக நடந்து கொண்டான்.
காலையில் அயலூர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய் தனது பிடவை வியாபாரத்தைச் செய்வது-12ாலையில் வீடு திரும்புவது இப்படியாக அவனது வாழ்க்கை வண்டி நிம்மதியாக ஓடியது.
கரீமின் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந் திருக்கும். திடீரென ஒருநாள் அவன் மனைவி பர்ஸாணுவுக்கு ஆசிரிய‘நியமனத்துக்கான கடிதம் வந்திருந்தது. இத்தனை நாளும் படித்து, பரீட்சைகளில் சித்தியடைந்துவிட்டு வீட் டோடு இருந்த அவளுக்கு இந்நியமனம் மிகுந்த மன மகிழ்ச் சியைக் கொடுத்தது. கணவன் வீடு வந்தபோது அவள் அக் கடிதத்தைக் காட்டினுள். அவன் சந்தோஷப்படவில்லை.
"பர்ஸான. எனக்கென்ருல் நீங்க தொழில் செய்றதுல விருப்பமேயில்லை. உங்கள எந்தக் குறையுமில்லாம கவனிக்

Page 51
கிறது என் கடமை. என்று கரீம் தனது எண்ணத்தை மனம் திறந்து கூறியபோது, அவளது வதனம் வாடி விட்டது. பதறிப்போன கரீம்,
“பர்ஸாஞ. நீங்க தொழில் செய்யப்படாது என்று நான் சொல்லல்ல. ஆனூல். நீங்க தொழிலுக்குப் போகாம குடும்பத்த நிர்வகிச்சி நடத்தி, குடும்பப் பெண்ணுக வாழ்றத தாம்மா நான் விரும்புறன். நீங்கயோசிச்சு முடிவு எடுங்க என் முடிவ நான் சொல்லிட்டன்." என்ருன்.
என்னங்க சொல்றீங்க. ஒரு குடும்பத்துல கணவன் மனைவி ரெண்டு பேருமே உழைத்தால்தான் குடும்பச் செல வுகள சமாளிக்கலாம். அதோட உழைக்கிற பெண்ணுல, குடும்பப் பெண்ணா வாழ முடியாதா? அதனுல தயவு செஞ்சி என்னத் தடுத்திடாதீங்க" என பர்ஸானு கெஞ்சி நின்றபோது கரீம் மெளனமாகிப் போனுன்.
பர்ஸானவுக்குப் பக்கத்து ஊர்ப் பாடசாலையிலேயே பதவி கிடைத்துவிட்டது. அவள் தினமும் பாடசாலைக்குப் Gll air tir வருவாள் இப்படியாக மாதங்கள் சில மறைந்தன. ஒருநாள்- பாடசாலையில் ஓய்வாக இருந்த நேரம், ஓய் வெடுக்கும் அறைக்குள் நுழைந்தாள் பர்ஸாணு. அங்கே நான்கைந்து ஆசிரியைகள் அரட்டையடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த அரட்ட்ையில் பர்ஸானுவும் பங்கேற் சிக் கொள்ளத்தவறவில்லை. அவர்களின் பேச்சுள்ங்கெங்கே சுற்றிச் சுற்றி வந்து, யார் யார் விவகாரங்களை எல்லாமோ அலசிவிட்டு வந்து, கடைசியில் அவர்களின் துணைவர்களில் வந்து நின்றது, பர்ஸாணு பாடசாலைக்குப் புது ஆள் என்ப தால் அவர்களில் ஒருத்தி,
"இவ முர்ஷிதாட ஹஸ்பன்ட் ஒரு"டீச்சர்".அவ ஹினு பாட "ஹஸ்பன்ட்" பேங்க் மெனேஜர்'. இவ ஷபீக்காட "ஹஸ்பன்ட்" ஒரு "டொக்டர்". அவ நிரோஷாட "ஹஸ் பன்ட் ஜாவலரி போட்டிருக்காரு. என் "ஹஸ்பன்ட்” பிடவைக் கடை வச்சிருக்காரு...!" என்று ஒவ்வொருவரின
தும் தொழில் துறைகளை அறிமுகப்படுத்தியபோது, பெரும்

99
தர்மசங்கடத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளா ஞள் பர்ஸாணு.
"அவரும் ஒரு நல்ல "போஸ்ட்'ல, இல்லாட்டா நல்ல தொரு வர்த்தகத்துல இருந்திருந்தர எல்லாருக்கும் முன் ஞல நானும் அவரப் பத்தி பெருமையாக சொல்லியிருப் பேனே!. அவரு. சந்தைக்குச் சந்தை போய் யாவாரம் செய்றத நான் எப்பிடி இவங்ககிட்ட சொல்லுவேன்? பெருமையா சொல்றதுக்கு அவருக்கிட்ட என்னதான் இருக்கு? பணமிருக்கா. இல்ல. ஒரு நல்ல அரசாங்கத் தொழிலாவது இருக்கா? சே . என்ன வாழ்க்கையிது. எல் லாம் ஏன்ட நஸிபு." என சபித்துக் கொண்ட பர்ஸானு, எவளாவது தன் கணவனைப் பற்றிக் கேட்டுத் தொலைப் பாளோ என்ற பயத்தில் மெதுவாக அவ்விடத்தைவிட்டு நழுவினுள்.
சில மாதங்கள் கழிந்த பின், அப்பாடசாலையில் பெரு விழா ஒன்று நடை பெற்றது. அந்த விழாவுக்கு சகல ஆசிரி யைகளது துணைவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பர் ஸாஞ தன் கணவரைப்பற்றி சிந்தித்தாள்.
"ம். எல்லாரும் "ட்ரெளஸர்" உடுத்தி வடிவாக வரு வாங்க. நம் கணவர் நாட்டான் மாதிரி சாரம் உடுத்தி அங்க வந்தா. எனக்குத்தான் அவமானம் பின்னே. என்ன யார் தான் மதிபபாங்க... என்ற சிந்தனை வலைக்குள் சிக்கிய பர்ஸாணு, பாடசாலையில் தந்த அந்த அழைப்பித ழைத் தன் கணவனிடம் கொடுக்காது மறைத்து விட்டாள்.
நாட்கள் நகர, நகர தனது கணவனைப் பற்றிய ஒரு தாழ்வுணர்வு அவள் இதயத்தில் வளரத் தொடங்கியது. தான் ஒரு ஆசிரியை என்ற கர்வம் வேறு அவளைத் தலைக் கனம் கொள்ளச் செய்தது. நாளடைவில், கர்வத்தால் படிப் படியாக தனது குணநலன்களை காட்டத் தலைப்பட்டு விட் டாள் பர்ஸாணு. கொஞ்சம் கொஞ்சமாக கணவனை அவ மதிக்கத் தொடங்கிய அவள், படிப்படியாக அவன்மீது பாய்ந்து விழ ஏச தொடங்கினுள். அனைத்திற்கும் கரீம் பொறுமையின் பொக்கிஷமானுன்

Page 52
100
கரீம்-பர்ஸான கல்யாணம் நடைபெற்ற நாளில் இருந்து இரண்டு குடும்பங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமை இல்லாமலே இருந்தது. கரீம் மட்டும், தனது வீட் டுக்குப் போய் வருவான். இந்த வேற்றுமையை வளர விடக் கூடாது என நினைத்த கரீம் அனைவரையும் ஒற்றுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான். இதன் முதல் கட்டமாக தனது மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போக முயன்ற போது வெடுக்கென்று அவள்,
"உங்க வீட்டுக்கா. என்னுல முடியாது. நீங்க என் னக் கல்யாணம் கட்டியத விரும்பாதவங்க வீட்டுக்கு நான் எப்பிடி வருவேன்? என் உசிர் இருக்கிற வரைக்கும் அது நடக்காது." என்று மறுத்தே விட்டாள். இந்த முதல் ஏமாற்றத்தை எப்படியோ தாங்கிக் கொண்டான் கரீம்.
சில மாதங்களின் பின் அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
"இந்தக் குழந்தைய வச்சே குடும்பங்களுக்கும் இடை யில ஒற்றுமைய உண்டாக்கிடலாம்" என சந்தோசப்பட்ட கரீம் சில மாதங்சளின் பிறகு தன் அன்புக் குழந்தையைத் தனது தாய் வீட்டுக்கு எடுத்து வர முற்பட்டான். அதனை யும், விடாப் பிடியாகத் தடுத்து நிறுத்தி விட்டாள் பர்ஸாணு. அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் அவற் றைக் கேட்டால்தானே கூடவே இத்தகைய பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில், அவளின் தாயும் தலையிட்டு மசளின் பக் கமே நின்று பேசுவாள். இத்தகைய பிரச்சினைகளால் நொந்துபோன அவனுக்கு படிப்படியாக அந்தக் குடுயம்த்தி னரின் சுய ரூபமே புரிந்துவிட்டது.
தொழிலின் தலைக்கணமும், தாயின் தலையீடும், தூண்டு தலுமே அவளின் பொல்லாத போக்குக்கெல்லாம் காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கரீம், தனிக்குடித்தனம் நடக் தினுலாவது நிம்மதி கிடைக்கலாம் என்று எதிர்பார்த்து, அவளைத் தனிக்குடித்தனத்திற்கு அழைத்தான். வேண்டா வெறுப்போடு அதற்கு இணங்கிய அவளையும், குழந்தையை

101
யும் அழைத்துக் கொண்டு, அவள் கற்பிக்கும் ஊருக்கே குடி வந்தான் கரீம். வாடகை வீடு ஒன்றில் அவர் கள் குடியேறிஞர்கள்.
இப்போது முக்கிய பிரச்சினை ஒன்று அவனை வாட்டி யது. மனைவி பாடசாலைக்கும், அவன் தொழிலுக்கும் புறப் பட்டால் குழந்தையைக் கண்காணிப்பது யார்? எப்பிடியா வது நல்லதொரு பணிப்பெண் கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன், மனைவி பாடசாலை யில் இருந்து வரும் வரை, குழந்தையைக் கவனித்துக் கொண்டிருப்பான்.
நாட்கள் சில ஓடின. அது ஒரு சனிக்கிழமை அன்று பாடசாலை விடுமுறை தினம் என்பதால் வேலைக்குப் புறப்பட் டான் கரீம் அவன் மாலையில் வீடு திரும்பியபோது, வீடு பூட்டிக் கிடப்பது கண்டு, கதவருகில் திகைத்து நின்றன்.
'வீட்டப் பூட்டிட்டு எங்கதான் போயிப்பாங்க...? என அவன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அடுத்த வீட்டு மூதாட்டி அவ்விடம் வந்து,
"மகன் கரீம் . இந்தத் திறப்ப டீச்சர் உங்க கிட்டல் க்ொடுக்கச் சொல்லிட்டுப் போனு." என்று கூறியபடி கத வுத் திறப்பை அவனிடம் நீட்டினுர்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அவன், பேரதிர்ச்சிக்குள்ளானுன், வீடு காலி செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அவனது பாவனைப் பொருட்களைத் தவிர, வேறெது வும் இல்லை. வெறுமையான அந்த வீட்டையே வெறித்துப் பார்த்தபடி, சித்தப் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்த அவன் பார்வையில் அந்தக் கடிதம் தென்பட்டது. அவசர மாகப் பிரித்துப் படித்தான் கரீம்.

Page 53
02.
"உங்களுடன் தொடர்நீது வ்ாழும் எண்ணம் எனக் கில்லை. என் குழந்தையை எடுத்துக் கொண்டு நான் பிரிந்து செல்கிறேன். எங்களை மறந்துவிடுங்கள்." -"பர்ஸாணு"
கடிதத்தைப் படித்து முடித்தவனுக்கு மயக்கமே வந்து வட்டது. நிலை தடுமாறி நின்றவன், வீட்டைவிட்டு வெளியே வந்து, வீட்டுச் சாவியை உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டு, வேதனையோடு நடந்தான்.
*நான் என்ன தவறு செஞ்சேன். ? நான் எவ்வளவு அன்பாகவும், பண்பாகவும் ஆவலோடு நடந்தேன்? எங்கடி பிரிவுக்கே காரணம் இந்தத் தொழில் தானே..? வேற ஆம் பளையாயிருந்தா. ஆத்திரப்பட்டு வேற முடிவுகளுக்கே வரக்கூடிய சந்தர்ப்பங்கள்ள கூட, நான் எவ்வளவு பொறு மையாக விட்டுக் கொடுத்து நடந்தேன். யா அல்லா. எனக்கா இந்தக் கதி" எனக் கண் கலங்கிக் கொண்டவ னின் சிந்தனை வானில், தாயின் பாசம் நிறைந்த முகம் மின்னியது.
'உம்மா. நானுக தேடிக் கொண்டது தானே இது இப்ப நான் எந்த முகத்தோட உங்ககிட்ட திரும்பி வரு வேன்? உங்க மனச நோவின செஞ்சிட்டு, உங்க விருப்பமில் லாமலே நான் கல்யாணத்த முடிச்சேன். பெத்த உம்மாட மனசப் புண்படுத்தியதுக்குத் தான் அல்லா இந்தத் தண் டணைய எனக்குத் தந்தானே..?" என நெஞ்சம் உருகி நெகிழ்ந்தவனுக தாயுடன் மானசீகமாகக் கதைத்துக் கொண்ட கரீமுக்கு, தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல் இருந்தது.
நாட்கள் சில நகர்ந்தன. அந்தச் சில நாட்களும் தன் அன்பு மகளைப் பிரிந்திருப்பது பெரும் வேதனையைக் கொடுத் தது அவனுக்கு
மாதங்கம் சில மலர்ந்து மடிந்தன. அவனின் வாழ்க்கை இப்படி இருண்டு விட்டதால் மனம் நொந்த அவன் குடும்பத் தினரும் நண்பர்களும்,

i03
"அவளத் "தலாக்" சொல்லிட்டு வேருெரு கல்யாணத்த முடிச்சி வாழ்ந்து காட்டு..." என வற்புறுத்திய போதெல் லாம், அவன் அமைதியாக
"இங்க பாருங்க.. ஆகுமாக்கப்பட்ட காரியங்கள்ள அல்லாவுக்கு மிகவும் வெறுப்பான விஷயம் இந்தத் "தலாக்" தான். அதனுல படச்ச நாயனுக்கு வெறுப்பான, பிடிக்காத வேலைய நான் ஏன் செய்யனும்? அவங்களே ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் பொறுமையாக இருப்போம்..!" என்று கூறி விடுவான். அப்போதெல்லாம் அத்தனை இதயங்களி லும் இமயமாகிப் போவான் கரீம்.
மாதா மாதம் தன் மகளின் செலவுகளுக்காக ஏதாவது கொடுக்க வேண்டுமே என விரும்பிய அவன், முதலில் ஐநூறு ரூபாயை அனுப்பி வைத்த போது, அது அவனுக் குத் திரும்பிவிட்டது.
"ஒ.பெண்கள்ள இப்பிடியும் மனங்களா..?*எனச் சிந் தித்தவன் கவலைப்பட்டுக் கொண்டான்.
வருடம் இரண்டு ஓடியது. தன் கண்மணி மகளைப் பிரிந் திருப்பதுதான் அவனுக்கு சொல்லொணு வேதனையைத் தந்தது. கனவிலும் நினைவிலும் குழந்தையை எண்ணி, எண்ணி மனதுக்குள் அழுது தீர்ப்பான் கரீம். அவன் குழந் தையைக் காண எடுத்த முயற்சிகளும் வீணுயின. எங்கிருந் தாலும் தன் குழந்தை எந்தக் குறையுமின்றிச் சந்தோச மாக வாழவேண்டும் என ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்திப்பான் அவன்.
சில வருடங்களாகவே தனி மரமாய் வாழும் கரீமிடம், மறுமணம் செய்து கொள்ளும்படி கூறும் கூட்டமும் அதி கரித்துக் கொண்டே வந்தது. நாட் செல்லச் செல்ல இந்தப் பல்லவி ஒரு தொல்லையாகவே அவனுக்குப்பட்டது. தனக்குப் பிறந்த அன்புச் செல்வத்துக்காகத் தானே அவன் இந்த இளவயதிலும் மறுமணத்தை நினைக்காது தனியணுய் வாழ் ಜಿಲ್ಲ.ಈ

Page 54
104
எடுத்ததற்கெல்லாம் விவகாரத்துச் செய்து மனைவியை யும், குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு, புது மாப்பிள்ளை களாய் புதுவாழ்வு வாழும் (சில) கணவன்மார்களின் முன்னுல் கரீம் ஒரு மாணிக்கம் தான்.
"மகள். என்னுல் இப்ப கூட உங்க உம்மாவ "தலாக்" சொல்லிட்டு வேற கல்யாணம் முடிக்கலாம். அதேபோல உங்க உம்மாவும் ஒரு காலத்துல கல்யாணம் முடிப்பாங்க. அப்போ.. எனக்கு வர மனைவியும், உங்க உம்மாவுக்கு வாய்க்கிற கணவனும் உன்ன தங்கட பிள்ளையா பாசத் தோட பாப்பாங்க என்கிறதில எனக்கு நம்பிக்கையே இல் லம்மா அந்த நேரத்துல உனக்கு ஏற்படப்போற கவலைகளை யும் ஏக்கங்களையும் நினைச்சுப் பார்க்கிறதாலதாம்மா நான் மறுமணம் முடிக்காம உனக்காக இன்னும் தனியணுகவே வாழ்ந்துகிட்டு இருக்கேன் விபரமெல்லாம் தெரிஞ்சி ஒரு நாள் நீ என்கிட்ட வரத்தான் போறே.!" இப்படி அடிக் கடி மகளுடன் மானசீகமாகக் கதைத்துக் கொள்வான் கரீம்.
"என்னடா. உன் பாட்டுக்கு யோசிச்சுக்கிட்டு நடு ருேட்டுல போறே இது உங்க அப்பன் வீட்டுருேட்டு என்று நினைச்சியா..?" எனக்கேட்டவாறு நண்பன் நளீரின் கரம் தன்முதுகைத் தொட்டபோதுதான் சிந்தனைச் சிறையி லிருந்து விதடுலை பெற்ருன், கரீம்.
àܘ
ஒருநாள் கரீமின் தாய் திடீரென்று நிரந்தர நோயாளி யாய் படுக்கையில் விழுந்து விட்டார். அந்த நிலையில் கூட, கரீமின் கவலை தான் அந்தத் தாயுள்ளத்தை வாட்டியது, அப்போது தான் எப்போதோ படித்த, "தாயின் இதயம் குழந்தைகள் செய்யும் குற்றங்களை மன்னிக்கும் நீதி மன்றம் என்ற நாயகக் கூற்றை கரீமின் இதயம் நினைத்துப் பார்த் தது. தன் விஷயத்தில் அது எவ்வளவுபெரிய உண்மை என்பதை அவன் ஒப்புக் கொண்டுவிட்டான்.
ஒருநாள் கரீமைத் தன் பக்கத்தில் அழைத்த அந்த அன்புத் தாய்,

05:
"மகன்.இத்தன நாளும் உன் கல்யாணத்தப் பத்தித் தான் சொல்லிகிட்டே வாறன். நீயும் தட்டிக் கழிச்சிகிட்டே வாருய்! மகன் ஏன்ட நிலை உனக்குத் தெரியும். நான் இன் டைக்கோ. நாளைக்கோ கண்ண மூடிடுவேன். அதுக்கு முன்னுல நீ ஒரு கல்யாணத்த முடிக்கணும். அப்பதான் நான் நிம் ம தி யா க க் கண்ண மூட முடியும்...!" என்று கண்களிலிருந்து வடியும் கண்ணிரோடு அவனைக் கெஞ்சி நின்றபோது, கலங்கும் கண்களோடு அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான் கரீம். அவனின் இதயத்தில் சிந் தனத் தீ கொழுந்து விட்டெரிந்தது.
'மரணப் பிடியில் இருக்கிற உம்மாட கடைசி ஆசைய நிறைவேற்ரும இருக்க முடியுமா?. அன்டைக்கு உம்மாட விருப்பமில்லாம, அவட மனசப் புண்படுத்திட்டு கல்யாணத்த முடிச்சேன். நல்லா வாழ்ந்தேனு? அன்டைக்கு நான் செய்த பாவத்துக்கு இப்ப உம்மாட விருப்பத்துக்கு நடந்து தான் பிராயச்சித்தம்தேடணும்!" என நினைத்துக் கொண்ட கரீம்,
'உம்மா...அழாதீங்க... இன்டைக்கு மாலைல ஏன்ட முடிவச் சொல்லிடுறேன்...!" என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினுன்.
நேராக நண்பன் நஸ்ரீரிடம் வந்தவன் தன் தாயின் நிலையையும், அவரின் வேண்டுகோளையும் கூறிவிட்டு,
*நளீர். இப்போ நீ எனக்கு ஒரு உதவி செய்ய னும்டா. கடைசியாக பர்ஸாணுவுக்கு ஒரு 'சான்ஸ்" கொடுக் கப் போறேன். அதுவும் என் மகளுக்காகத் தான். நீ போய், நான் மறுமணம் முடிக்க வேண்டிய நிலயில இருக்கிறதாக வும், அவ விரும்பி வந்தா அவல ஏத்துக்கிறதாகவும் கூறிட்டு, அவட முடிவையும் கேட்டுகிட்டு வா. 1" என்று கரீமைக் கலங்கும் கண்களுடன் பார்த்த நஸிர்,
"உனக்கிருக்கிற இந்த பெருந்தன்மை உலகத்துல யாருக்குமே வராதுடா. நீ மனிதர்கள்ளேயே ஒரு தனி தான்டா..!"என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறிவிட்டுப் புறப் Lull-Tsir

Page 55
ìồồ
மாலையில் கரீமிடம் வந்த அவன்,
*அந்த கர்வம், தலைக்கணம் துளியாவது குறையல்லடா வேணுமானுல் உனக்குக் கல்யாணம் கட்டிக் கெள்ளாட் டாம் அவட எதிர்காலத்த அவ பார்த்துக் கொள்ளுவா லாம்...!" என்று கூறியபோது, அவளின் அறிவீனத்தை யும், ஆணவத்தையும் நினைத்து கவலைப்படத்தான் அவனுல் முடிந்தது.
அன்று வழமைக்கு மாற்றமாக பாடசாலையிலிருந்து சோர்வோடும், சோகத்தோடும் வீடு திரும்பினுள் பர்ஸான. கைப்பையைத் தூக்கி அப்பால் வீசிவிட்டு, ஆடைகளை மாற்றி அணியாமலும், சாப்பிடாமலும் கட்டிலில விழுந் தாள் அவள், அவளின் செய்கை தாயாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. திரைச்சிலையை விலக்கி உள்ளே தலையை நீட் டிய தாய், மகள் விம்மியழுவதைக் கண்டு.
"பர்ஸாணு. என்னத்துக்கம்மா அழறே...? உடம்புக்கு நல்லமில்லையா?" எனக் கேட்டவாறே பக்கத்தில் வந்தாள்.
'உம்மா . என்.தொழிலே.போயிட்டுது. ஸ்கூல்ல நடந்த பிரச்சினை ஒன்ருல என்னத் தொழில்ல இருந்து நிறுத்திட்டாங்க இன்டைக்கு. தினைக்களத் துல இருந்து கடிதம் வந்துது. எனக்கு இனிமேல் தொழிலே கிடைக்கா தாம்!" என்று விம்மலுக்கிடையே பர்ஸானு கூறியபோது, பேரதிர்ச்சியினுல் இந்த இடத்திலேயே உட்கார்ந்து விட் டாள் அவளன்னை.
நாட்கள் யாரின் வரவுக்காகவும் காத்திராமல் தன் பாட்டில் ஓடியது. தொழிலின் இழப்பு, திரும்பவும் குடும்பத் தில் வறுமையை வரவழைத்து வந்தது. இத்தனை காலமும் மூடியிருந்த அவளது அகக் கண்கள் திறக்க, கணவன் கரீ மைக் கலங்கிய கண்களோடு நினைத்துப் பார்த்தாள் பர் ஸ்ாணு

ior
"என்ன மன்னிச்சிடுங்க. ஒரு ஏழைக்கு வாழ்வு கொடுக்கணுமே என்ற பெருந்தன்மையால குடும்பத்தையும் பகைச்சிக் கொண்டு எனக்கு வாழ்வு கொடுத்தீங்க. நீங்க என்டைக்குமே என்னக் கஷ்டப்படுத்தல்ல. கண்கலங்க விடல்ல. எனக்கு தொழில் கிடைத்த நேரம் உங்களையும் மீறித் தொழிலுக்குப் போனேன். அப்ப ஏற்பட்ட தலைக் கனம் என் தலைவிதியையே மாத்திடுச்சி. நான் ஒரு டீச் சர். நீங்க ஒரு தொழிலாளி என்கிறதால மூளையில்லாம உங்கள இழிவாக நெனச்சேன். அல்லாஹ"த் தஆலா ஒருதி தரவிட ஒருத்தர மேலாக வச்சிருக்கிறது யாரையும் தாழ் வாக நினைக்க அல்ல என்கிறத நினைச்சுப் பார்க்கத் தவறிட் டேன். ஏன்ட மேல்ல உசிரையே வச்சிருந்த உங்கள, உ.தச சீனப்படுத்தினேன். அவமரியாதை செஞ்சேன். உங்க பேச்சுக்கு அடங்கி வாழாம, இஸ்லாமிய இலட்சிய மனைவிக் குள்ள பண்புகளையெல்லாம் மறந்து உங்கள இழிவாக நெனச்சி, உங்கள மதிக்காம மிதிச்சேன். அப்போ கூட நீங்க ஒரு நாள்ள எனக்கு ஏசல்ல கை நீட்டி அடிக்கல்ல. ரொம்பப் பொறுமையா இருந்தீங்க. ஒரு பெண் தன் கண வன்ட அனுமதி இல்லாம வீட்ட விட்டு வெளியில செல்லக் கூடாது என்று இஸ்லாம் சொல்லியிருக்கிற நேரம், நீங்க வீட்டுல இல்லாத நேர மா பார்த்து, வீட்டக் காலி பண்ணிக் கொண்டு என் உம்மா வீட்டுக்கு ஓடி வந்தேன். குழந் தைக்கு நீங்க பணம் அனுப்பின நேரம் அத உங்களுக்கே திருப்பி அனுப்பினேன். நீங்க பெருந்தன்பையோட என்ன மன்னிச்சி ஏற்றுக் கொள்ள முன் வந்த நேரம், கர்வத்தோட மறுத்திட்டேன். உங்களப்போல ஒரு தங்கமான கணவன் உலகத்துல யாருக்குமே கிடைக்காதுங்க ஏன்ட தலைக்கணத் தால நானே என் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். அல்லா வுக்காக என்ன மன்னிச்சிடுங்க. நீங்க என்ன மன்னிச்சாத் தான் அல்லா கூட என்ன பன்னிப்பான்..!" என கண்ணி ரோடு மானசீகமாக வேண்டிக் கொண்டாள் பர்ஸாணு.
இரண்டு மாதங்கள் மறைந்துவிட்டன. பர்ஸானுவின் குடும்பத்தை வறுமை வாட் டி வதைத்தபோது அவளின் தாயும் அவளை வார்த்தைகளால் வதைக்கத் தொடங்கினுள், தன் தொழில் பறிபோனவுடன் தனது தாய்

Page 56
08
கூட தன்னை நாயாக வெறுத்து ஒதுக்குவதைக் கண்ட பர் ஸானு, வேதனையடைந்தாள். அப்போது. கணவன் கரீ மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி புரியவில்லை. அவளுக்கு.
డి ه ته
அன்று கரீமின் வீட்டில் வழமையை விட ஆட்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து முன் பக்கம் வந்த கரீம், அங்கே சோகமே உரு வாக மகளுடன் வந்து நின்ற பர்ஸானுவைக் கண்டு அதிர்ச் சியடைந்தான். இந்த நிகழ்வை அவன் நினைத்துப் பார்த்தே இருக்கவில்லை.
** என்ன மன்னிச்சிடுங்க. உங்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கேன்." அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறி ணுள் பர்ஸ். ஞ. அனுத" பத்தோடு அவளை நோக்கிய அவன்,
"என்ன ம ன் னி ச் சி டு ங் க. உ ங் களு க் கு கடைசியாகக் கூட ஒரு சந்தர்ப்பம் தந்து பார்த்தேன். ஆணுல். நீங்க சந்தர்ப்பத்தத் தவற விட்டுட்டீங்க. அத ஞல நான் ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வாக்குறுதி கொடுத்திட்டேன். என்னுல அத மீற முடியாது நீங்க "லேட்"டா கிட்டிங்க... என்ன மன்னிச்சிடுங்க..!" என்று கரீம் கூறக் கூற உலகமே தலைகீழாகச் சுற்றியது பர்ஸாணுவுக்கு.
அப்போது திடீரென்று கரீமின் மகள் வாப்பா..!" என்று தாவிச்சென்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்ட போது, அந்த உள்ளத்தை உருக்கும் காட்சியால், அங்கிருந் தோர் அனைவரும் நயனங்களில் நீர்வடிய நின்ருர்கள்.
"நான். எங்க. வாப்பாவ உட்டுட்டு எங்கும் போக மாட்டேன். வாப்பாக்கிட்ட இருக்கத்தான் எனக்கு. விருப் பம். வாப்பா என்ன விரட்டிடாதீங்க..!" என அழுத வாறே அந்த அன்புச் செல்வம் மழலை மொழியில் மொழிந்த போது அருகிலிந்தோர் அனைவருமே உருகிப்போனுர்கள்.

09
அப்போது.
இதயம் துடிக்க மறக்க, சித்தப் பிரமை பிடித்தவள் போல் இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பர்ஸானு, விழி கலங்கி, மனம் கலங்கி, உணர்வுகள் கலங்கியவளாக, நடைப்பிணமாகப் பாதையில் இறங்கிநடந்தாள்.
- : *0ᏍᏋ0 ;-
1986-ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக் கனம் நடத்திய அகில இலங்கை மீலாத் சிறுகதைப் போட்டி யில் மூன்ரும் பரிசு பெற்ற சிறுகதை.

Page 57
தர்கா நகர், மீரிப்பென்னையைச் சேர்ந்த செல்வி சுலைமா ஏ. சமி அவர்கள் இன்று குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளர்களில் ஒருவர். இலக்கியத் துக்கோ, வாசகர்களுக்கோ இவர் ஒன்றும் புதியவருமல்லர். ஏற்கனவே "வைகறைப் பூக்கள்" என்ற அருமையான சிறு கதைத் தொகுதியொன்றை இச்செல்வி எமக்குத் தந்திருக் கின்ருர்,
1970-களின் பிற்பகுதியில் எழுத்துலகப் பிரவேசம் செய்த இவர் கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், விமர் சனம் என இலக்கியத்தின் பல்வேறு பக்கங்களையும் தேசியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானெலி என்பவற்றினூடே தொட்டுச் செல்வதோடு, வானுெலி முஸ்லிம் சேவையின் நெஞ்சோடு நெஞ்சம்-மாதர் மஜ்லிஸ்" நிகழ்ச்சியின் பிரதிய மைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து இலக்கியப் பணி புரிந்து வருகின்ருர், 1984-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியி லிருந்து, இன்றுவரை சுமார் நான்காண்டு காலமாக இந் நிகழ்ச்சியின் பிரதியமைப்பாளராக இருந்து வரும் இவர் தன்னுடைய நிகழ்ச்சிகள் மூலம் எண்ணற்ற நேயர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்.
தன்னுடைய ஆரம்ப கால எழுத்துலக வளர்ச்சிக்கு பாச நீரூற்றி, உற்சாக உரமிட்டு தன்னை ஒரு படைப்பாளியான
 

1.
உருவாக்கியவர் காலஞ் சென்ற தன்னுடைய அன்புத் தற் தையார் தான் என்பதைப் பெருமிதத்துடன் கூறிக் கொள் ளும் இவரின் முதல் ஆக்கம், 1977ம் ஆண்டு 'தினகரன்" பத்திரிகையில் பிரசுரமாகியது,
சோதரி சுலைமா, இலங்கையில் நாடளாவிய பிரதேச* ரீதியில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் தன் எழுத்துவன்மைக்காகப் பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ற வக்,
"சமுதாய விழி திறக்க, இலக்கிய ஒளியேற்ற வேண்டும்" என்ற நம்பிக்கை கொண்டெழுதும் சகோதரியின் எழுத்துக் களில் நீதி, நேர்மை, தர்மம் போன்ற பண்பஈட்டுச் சிறப்புர். கள் கண் போன்று நிற்பதைக் காணலாம்.
விழிப்புலனற்ருேருக்கான கல்விப் போதனையில் விசேட பயிற்சி பெற்றுள்ள இச்சகோதரி, ஒரு நடமாடும் அங்கவீனர். கல்விக் கூடமாகத் திகழ்ந்து, அங்கவீனர்களின் இருப்பி, டம் தேடிப்போய்க் கற்பித்து வருதல், அவரின் சமூக உணர் வையும் மானுடத்தை நேசிக்கும் மனப்போக்கையும் காட்டு கின்றன.
மணியான கருத்துக்களின் மூலம் தனக்கென ஒரு வாச கர் நேயர் கூட்டத்தை உருவாக்கியுள்ள இவர் பழகுவதற்கு இனிய, பண்பாடுமிக்க மங்கையுமாவார்.
“சமூகம் நல்லன பெற வேண்டும்" என்ற இலட்சியத் தோடு எழுதி, செயலிலும் காட்டும் சகோதரி சுலைமாவின் மற்றும் ஒரு முன்வைப்பே "மனச்சுமைகள்" என்னும் இச் சிறுகதைத் தொகுதி இவரைப் புதல்வியாகப் பெற்ற மர் ஹ"ம்ை ஏ. எல். அப்துல் சமி, ஜனுபா உம்மு தமீமா சமி ஆகியோர் மட்டுமல்ல, இலக்கியமும் பாக்கியம் செய்ததே.
சமுதாய நலத்துக்காகத் தன் எழுத்தை வளமாகப் பயன்படுத்தும் சகோதரிக்கு, உளமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க! வளர்க! வெல்க!
செல்வி எம். ஏ. ரஹீமா (சிறுகதை எழுத்தாளர்)

Page 58
வைகறைப் பூக்கள் பற்றி. கதை படிக்கக் கட்புலன் தேவையில்லை.
இலக்கிய கர்த்தாக்கள், நூல் வெளியீட்டாளர்கள் எவ் வாறு அங்கவீனர்களுக்கு உதவலாம் என்பதற்கு நல்ல தொரு முன்னுதாரணத்தைக் காட்டித் தந்துள்ளார் ‘வைக' றைப் பூக்கள் "தந்த சோதரி சுலைமா ஏ. சமி. இந்நூல் வெளி யீட்டு விழாவின்போது, அதில் அடங்கியுள்ள சிறுகதைகள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒரு "கெஸ்ட்டை திஹாரிய அங்கவீனர் நிலையத்திலுள்ள பார்வையிழந் தோருக்கென, சோதரி சுலைமா அளித்தமை உள்ளத்தைத் தொட்டதொரு சம்பவம்.
நூலில் அடங்கியுள்ள கதைகள் அனைத்தும் நூலாசிரி யையின் உள்ளத்து உணர்வுகளின் உண்மையான பிரதி பலிப்புக்களே என்பதற்குக் காணப்படும் எளிமையும், தூய் மையும் தக்க சான்று. எந்த ஒரு பாத்திரமும் அலட்டிக் கொள்வதாக இல்லை. வாசகர்களை மயக்குற வைக்கும் வார்த்தை ஜாலங்களும் இல்லை. தான் சிறிது காலம் பணி யாற்றிய திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் கட்புலன் இழந்த சகோதரர்களையும் மறந்துவிடாது "கெஸ்ட் "டொன் றினை உருவாக்கிக் கொடுத்தமை சகோதரி சுலைமாவின் எழுத்துக்களும், உணர்வுகளும் இணைபிரியாதன என்பதனைக் காட்டுகின்றது.
........................ཐོ་
一 நன்றி பர்மிஸ் மாசிகை 15-11-1987
3 raid

lith best сGирtiие пto
irom
CASIO
O Ver T 00 models
of calculators
available
priced Rs... 175/- upwards with guarantee
TAI-PAN TRADING Co., 2/1, Second Floor, 96, Prince Street, COLOMBO-11.
Te : 546072 Telex ; 22515 TA PAN CE

Page 59
Oith best сонир MOHAMAD II
HANDLOOM
Mārcturers
ரf
Handloom Cotton Lun Cotton Wests, Briefs, Head Office: No. 5, Armenian Street, Post Box No: 1833, MADRAS - 6 OOOO1. Branches. At : 84-East Welli Street, MADURA I - 625001 .
186, Ibrahim R Вhепdi Bazaar BI
inted at EMKAY PRINTs 2, 1 a
FՒ1ԼյIIE |
 

эliиеиto troи:
ORIS BROS.,
TEXTILES
and Suppers
gies, Handkerchiefs,
Panties & Towels Etc.,
PhOle : 2 1371 21372 2.1373
Main Road,
CUILON - 691 00:1 . ehmatula Road, OM BAY - 40 0003.
ng ang appa Naicken Stret. Midras-1. 5 1783