கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவை சிவகாமியம்மை தமிழ்

Page 1
Tā s、 சிதம்பரத்திவிருத* لیے ++HITELل பதவிழைக்கப்பட்ட சிவகாமிதிருவுருவத்தை செப்து lar - L இணுவையூரின் அமெக்கப்பட்டது. பழமையும் அற்புதமும் வாய்ந்த glリ。Gcm வழிபாட்டில் ஈடுபட்ட சின்னத்தம்பிப் KTKKKY KK YS TTL T TLLLLL தமிழ் என்ற இந்
தொகுப்புப் LITT LI JA SITT
தமிழவேள் அவர்கள் பதிப்பாசிரியராக அமர்ந்து இந்நூலை அழகுற உரை விளந்து வெளியிடு கிறார். இரு இ. ந. கந்தசாமி அவர்கள் உண்மையை எழுதுவதிலும் பேசுவதிலும் மேதி வாழ்நாளைத் தமிழ் மொழிப் பனிக்கு அர்ப்பணித்து வாழ்பவர் இவருடைய உரை விளக்கம் யாவும் ஒரு ஆய்வுரை போன்று Ri
கண்ணோட்டத்தோடும் பாராட்டுக்குரியது
ஆசிரியர் பிறந்த இணுவைப் பதிக்கும்
வழிபட்ட சிவகாமித் தலத்துக்கும் தான் வர்க்கும் தமிழ் மொழிக்கும் எழுச்சியூட்டும் வகையில் இந்நூ ை வெளியிடுகிறார் - சிவத்தமிழ்ச் செல்
தங்கம்மா அப்பாக்குட்டி
தமிழவேள் தம்முடைய நூலை ஆய்வுநாள் அை பில் ஆக்கியுள்ளார் பதிப்பாசிரியராக விளங்கு அவ ரது பதிப்புரை உரைக் குறிப்புகள் அரும்பத விளக் கம் முதலிய கூறுகளால் நூலின் பெரும்ை உயர்கிறது.
இணுவிலின் றப்பு சின்னத்தம்பிப் பெருமை. என்பனவற்றை உணர்த்த விரும்பும் தமிழவேள் கொழும்புத் தமிழ்ச் சங்கக் கெளரவ GLIG இருந்து நல்ல LIF} L 33-F55T ஆற்றுபவர் இந்த நூல் மூலம் அவர் சிறந்த பதிப்பாசிரியர் அறிமுகமாகிறார். — LTFILM
 
 

Sq S J S S S S S S
* ○○○』○f
兰、 gA, Dol35MTLfôuLiDaDLID
தமிழ் اس لیے ہے
புதிப்பாசிரியர்
උණIBJDරිතjරjt

Page 2
இணுவைச் சின்னத்
அருளி
இணுவைச் சிவகா
1. சிறை நீக்கிய பதி 2. சிவகாமியம்மை
3. சிவகாமியம்மை து
4. சிவகாமியம்மை தீ
பதிப்பாசி
தமிழவே
தமிழவேள்

தம்பிப் புலவர்
மியம்மை தமிழ்
கம்
பிள்ளைத் தமிழ்
தி
ருவூஞ்சல்
furi
வெளியீடு

Page 3
இணுவைச் சிவகாமியம்மை தமிழ்
முதற் பதிப்பு ஏப்ரல் 1991
பதிப்புரிமை பெற்றது
விலை ரூ. 40/-
Publishers :
K U M A R A N B O O KSHOP 201, Dam Street, COLOMBO-12.
Printed at
THE KUMARAN PRESS 201, Dam Street, COLOMBO - 12.
Tel 1 4 2 1 388

வாழ்த்துரை
செந்தமிழும் சிவநெறியும் ஏற்றமுற்று விளங்குவதற்கு உறு துணையாக விளங்கிய பலரைத் தன்னகத்தே கொண்டது இணுவை ஊர். இவ்வூரில் காட்சிதரும் அருள்மிகு திருக்கோயில்களில் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக விளங்குவது சிலுக்ாமி Jsbur6ir seju Dr கும். யாழ்ப்பாண அரசர் காலத்தில் சிதம்பரத்திலிருந்து வரவழைக் கப்பட்ட சிவகாமி திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து இக் கோயில் அமைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. பழமையும் அற்புத மும் வாய்ந்த இத் திருக்கோயில் வழிபாட்டில் மிகவும் ஈடுபட்டவர் சின்னத்தம்பிப் புலவர். இத்தகைய ஈடுபாட்டின் மூலம் எழுந்ததே 'சிவகாமியம்மை தமிழ்’ என்ற தொகுப்புப் பாடல்களாகும். இவை சிறைநீங்கிய பதிகம், சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ், சிவகாமி அம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் என நான்கு பகுதிகளாக அமைகிறது.
அம்பிகையின் அருளைப் பெறுவதற்கு இப்பாடல்கள் பக்தி வழியில் நெறிப்படுத்துவன. இக் காலச் சூழ்நிலையில் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவதற்குரியன. இக்கருத்தை முன்னிட்டே தமிழவேள் அவர்கள் பதிப்பாசிரியராக அமர்ந்து இதனை அழகுற உரை விளக்கத்துடன் வெளியிடுகிறார். நூலாசிரியர் வரலாறு, தல வரலாறு ஆகியவை சிறந்த முறையில் உண்மை வர லா ற்றோடு இணைத்துக் காட்டப்பட்டமை வரவேற்கத்தக்கது. ஏனென்றால் தல புராணங்கள் பெரும்பாலானவை கற்பனையில் வைத்துப் புனைந்து எழுதப்படுபவை என்பதைக் காணமுடிகிறது. ஆனால் பதிப்பாசிரி uit திரு. க. இ. க. கந்தசாமி அவர்கள் இத்தகைய போக்குக்குப் புற நடையாக் விளங்குபவர். உண்மையை எழுதுவதிலும் பேசுவதிலும்
- iii -

Page 4
தனது வாழ்நாளைத் தமிழ் மொழிப் பணிக்கு அர்ப்பணித்து வாழ் பவர். இவருடைய உரை விளக்கம் யாவும் ஒரு ஆய்வுரை போன்று இலக்கியக் கண்ணோட்டத்தோடும் சரித்திரக் கண்ணோட்டத்தோடும் எழுதப்பட்டுள்ளமை மிகவும் பாராட்டுக்குரியது. தான் பிறந்த இணு வைப் பதிக்கும் வழிபட்ட சிவகாமித் தலத்துக்கும் தான் வளர்க்கும் தமிழ் மொழிக்கும் எழுச்சியூட்டும் வகையில் இந்நூலை வெளியிடு கிறார் ஆசிரியர்.
எனவே பதிப்பாசிரியர் தமிழவேள் அவர்களின் தூய பணிகளை வாழ்த்தி மேலும் இத்தகைய பயனுள்ள பக்தி இலக்கிய ஆய்வுகளை வெளியிட ஆசிரியர் முன்வரவேண்டுமென்று வேண்டி அமைகின்றேன்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
- iv -

காணிக்கை
இணுவைச் சிவகாமியம்மை திருத்தலத்தை அமைத்த இணுவை அரசர்க்கும் இத் தலத்தைப் பாதுகாத்து வளர்த்த அவர் தம் மர பினர்க்கும் இத் திருத்தலம் சிறப்புறத் திருப்பணிகள் செய்த திரு வுடை அருளாளர்க்கும் இத் திருத்தலம் சிறப்புறத் திருத்தொண்டுகள் பல செய்த தொண்டர்க்கும் சிவகாமி அம்மையின் அடியவர்க்கும் சிவகாமி அம்மையின் பேரருட்கும் இத்திருத் தமிழ் நூல் சிறு காணிக்கையாகும்.

Page 5
.
器。
3.
4.
பொருளடக்கம்
வாழ்த்துரை r
பதிப்புரை
முன்னுரை
வாழ்த்துரை
நூலாசிரியர் வரலாறு இணுவில் amit வரலாறு
இணுவைச் சிவகாமி அம்மை
திருத்தல வரலாறு
நூற்பகுதிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்
5 - 1. சிவகாமியம்மை தமிழ்:
சிறைநீக்கிய பதிகம்
5 - 2. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
5 - 3. சிவகாமியம்மை துதி
5 - 4. திருவூஞ்சல் * .
உரைக் குறிப்புகள்
இந்நூலால் அறியப்பெறுவன
அரும்பதங்களும் பொருளும்
பாக்களின் முதற் குறிப்புகள்
பிற குறிப்புகள்
நூலாக்கத்திற்கு உதவிய நூல்கள்
திருத்தலப் படங்கள் 影曾涂
பக்கம்
iii
vii
Χi
17
9
2.
22
25
39
44
7
7
49

பதிப்புரை
இலங்கை வளநாட்டில் யாழ் குடாநாட்டின் நடுவண் உள்ள இணுவை ஊர் யாழ் அரசர் கால வரலாற்றுத் தொடர்பு உள்ளது: தமிழுக்கும் சைவத்திற்கும். நிலைக்களனாக உள்ளது எனப் போற் றப்பெறும் பெருமை உள்ளது. இவ்வூரில் உள்ள சிவகாமியம்மை திருத்தலம் பழமையும் அருளாற்றலும் உள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வும் பண்பாடும் இத் திருத்தலத்தை நிலைக்களனாக உடையன.
இத் திருக்கோவிலின் பக்கலில் எமது வீடு இருந்ததனால் இளமை . முதல் நாள்தோறும் இத் திருக்கோயிற் திருத்தொண்டுகளிலும் வழி பாடுகளிலும் விழாக்களிலும் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. எமது சிந்தனைகளும் வாழ்வும் இத்திருத்தலத்தினால் உருவாயின எனலாம்.
கோண்டாவிற் சைவவித்தியாலயத்திற் கல்வி கற்றபோது தொடக்கநிலை, உயர்நிலை மாணவர் சங்கங்களுக்குச் செயலாள ராகும் வாய்ப்பும் ஆசிரியர்களதும் மாணவர்களதும் பாராட்டுகளும் கிடைத்தன. அங்கு பெற்ற அனுபவமும் பாராட்டுகளும் பொதுப் பணிகளிற் பங்குபற்ற ஊக்குவித்தன.
அதே காலத்தில் இளைஞர் பலர் சேர்ந்து சிவகாமியம்மை திருக் கோவிலில் இளைஞர் சங்கம் ஒன்றை அமைத்துச் செயலாளர் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்தனர். திருக்கோயிற் தொண்டுகளிற் பங்குபற்றுவதும் சமயச் சொற்பொழிவுகள் இத்தலத்தில் நிகழச் செய்வதும் இச் சங்கத்தின் பிரதான பணிகளாக இருந்தன. சிவகாமி அம்மையின் அடியவர்கள் பேராதரவு தந்தனர். எம் ஊரவர்களான பண்டிதர் க. சபா ஆனந்தர், அருட்திரு. க. வடிவேற்சுவாமி ஆகிய வர்கள் சங்கத்தை நெறிப்படுத்தி உதவினர். பேரறிஞர் பலரின் சொற்பொழிவுகள் பல இச் சங்க ஆதரவில் இத்தலத்தில் நிகழ்ந்தன;
வெள்ளிக்கிழமைதோறும் திருக்கோவிலில் இச் சங்கத்தின் கூட் படங்கள் நிகழ்ந்தன. இளைஞர்களும் பெரியவர்களும் சமயத்தொடர் பான உரைகளை நிகழ்த்தினர். இச் சொற்பொழிவுகளின் போது தொண்டர் சு. பரமர், பெரியார் வ. கா. சிவக்கொழுந்து ஆகிய வர்கள் இவ்வூர்ச் சின்னத்தம்பிப் புலவரின் பாடல்களைப்பாடி அவ ரின் பெருமைகளையும் வரலாறுகளையும் அடிக்கடி சொல்லி வந்த சிை. அதனாற் இப் புலவரைப் பற்றிப் பலரும் அறியும் வாய்ப்புக்
இ.
- vii

Page 6
இந் நிலையிற் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரி யப் பயிற்சி பெற்று எமது ஊர்ச் சைவ மகாசன வித்தியாசாலை யில் ஆசிரியராகிப் பல்வேறு பொது அமைப்புகளிற் செயலாளராக வும் செயற்சபை உறுப்பினராகவும் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றேன். அனைவரதும் பெருமதிப்பும் பாராட்டும் கிடைத்தன. இந் நிலையில் இணுவைச் சின்னத்தம்பிப்புலவரின் பாடல்களை நூலாக வெளியிடும் படி சிவகாமியம்மை திருக்கோவிற் பரிபாலகராயிருந்த மு. க. முதலித்தம்பி அவர்களும் சிவகாமியம்மையின் அடியவர்களும் பல முறை வற்புறுத்தி வந்தனர். அவரின் பின் இத்திருக்கோவிற் பரி பாலகராக வந்த அவரின் மகன் மு. சிவலிங்கம் அவர்கள் சிறை நீக்கிய பதிகம், திருவூஞ்சற் பதிகம் ஆகியவற்றின் பிரதிகளைத் தந்து நூலாக வெளியிடும்படி கேட்டுக்கொண்டார். இலங்கை அரசு வெளி யீடான பூரீலங்கா இதழிலும் (1953, திசெம்பர்), வீரகேசரி இதழி லும் (9-1-1955) எம் ஊர் பற்றி எழுதிய கட்டுரைகளைப் பலர் பாராட்டி ஊக்கம் தந்தனர்.
தலைநகரில் ஆசிரியராகக் கடமையாற்றச் சென்றபோது கொழும் புத் தமிழ்ச்சங்கச் செயற்குழு உறுப்பினராகி அச்சங்கப்பணிகளில் பங்குபற்றியபோது அங்கு தமிழறிஞர் பலரின் தொடர்பு கிடைத்தது. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ப் பகுதி அதிபரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும் ஆகிய கலாநிதி க. செ. நடராசா அவர்கள் இராமநாதன் கல்லூரி அதிபராக இருந்த திருமதி. அருணாசலம் அவர்களிடம் பெற்ற இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் பாடிய நூல்களின் பிரதிகளைத் தந்தார். அப்பிரதிகளுள் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், துதிப்பாடல்கள் என்பன இருத்தன. இவற்றின் இலக்கிய வளமும் அருள் வளமும் அருட்புலமையும் உள்ளத்தைக் கவர்ந்தன.
இப்பாடல்களில் உள்ள சில சொற்களும், சொற்றொடர்களும், பிள்ளைத் தமிழ் என்னும் பெயருக்கும் அதன் பாடல்களுக்கும் உள்ள தொடர்பும் விளங்குவதற்கு அரியனவாக இருந்தன. ஆங்கிலமும் தமிழும் கற்றுத்துறை போகிக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் கலைச்சொல் ஆக்கத்துறைப் பணிப்பாளராக இருந்த எம் ஊரவ ரான இ. இரத்தினம் அவர்களின் உதவியினால் பெரும்புலவர் சிவங் கருணாலய பாண்டியனார் அவர்கள் இப்பாடல்களுக்குப் பொரு ளும் விளக்கமும் தந்து இந் நூற் புலவரின் பெரும் புலமையைப் பாராட்டினார். எமக்கு இருந்த பல்வேறு பணிகளினாலும் எதிர் பாராவகை நிகழ்ந்த இடையூறுகளினாலும் இந்நூலை வெளியிடும்
- viii -

முயற்சி நிறைவுறாமல் நீடித்தது. எனினும் இந்நூலை வெளியிடும் படி சிவகாமியம்மையின் அடியவர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர். இப்பணி சிவகாமியம்மை அருளால் எமக்கு உரியது ஆயிற்று.
இந்நூற் பாடல்களைத் தனித்து வெளியிடல் நிறைபயன் தராது எனவும் இந்நூல் நிறைநூலாக அமைதல் வேண்டும் எனவும் உணர்ந்து நூலாசிரியர் வரலாறு, திருத்தலஊர், சிவகாமியம்மை திருத்தலம், நூற் பதிகங்களின் அமைப்பு, பாடல்களின் பொருளை எளிதாக உணர்தற்கான உரைக்குறிப்புகள், ஆய்வு முயற்சிக்கு உதவும் குறிப்பு ஆகியன இந்நூலோடு சேர்க்கப்பெற்றுக்ளளன. இந்நூற் பகுதிகள் சிவகாமியம்மைக்கு உரியன; ஆதலின் இந்நூல் சிவகாமியம்மை தமிழ் எனப் பெயர் பெற்றுள்ளது.
இத்திருத்தலத்திற்கும் இத் திருத்தல உரிமையாளர்க்கும் எமது முன்னோருக்கும் தொடர்பு உண்டு. எமது குல முதல்வரான கந்தர் என்பார் இத்திருத்தல வடக்கு வீதி நிலத்தில் வாழ்ந்தவர்; நவக்கிரகக் கோயில் வசந்த மண்டபம் பூந்தோட்டம் ஆகியன உள்ள உள் வீதி வெளிவீதி நிலம் இவருக்கு உரியது ஆகும்.
குமரன் அச்சக அதிபர் செ. கணேசலிங்கன் அவர்கள் இந்நூற் பதிப்புக்குப் பெரும் உதவி புரிந்தவர் ஆவர்.
இந்நூல் வெளிவருவதற்கு அனைத்துத் துறையிலும் பேருதவி கள் புரிந்த அனைவர்க்கும் சிவகாமியம்மையின் அடியவர்களின் பேரன் பும் சிவகாமி அம்மையின் பேரருளும் என்றும் உரியனவாகும்,
இந்நூல் உலகிற்கு உறுதுணையாகும் சிவகாமியம்மை திருவருள் வாழ்க, வளர்க புலவர் புகழ் பரவுக.
தமிழவேள்: (ஆசிரியர் க இ. க. கந்தசுவாமி)
பதிப்பாசிரியர் 2.4.1991
- ix -

Page 7
ஈழநாட்டுக்குப் புகழ் தேடித் தரும் புலவர்களுள் இருவர் சின்னத்தம்பிப் புலவர் என்னும் பெயர் தாங்கியவராய், ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந் துள்ளனர். நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரின் பெருமையைப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை தெளிவாக எடுத்துக்காட்டி புள்ளார். எமது நண்பர் தமிழவேள் கந்தசுவாமி அவர்கள் இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் நான்கு பதிகங்களைத் தொகுத்து இத் நூலை வெளியிடுகிறார்.
தமிழவேளின் நோக்கம் இணுவைச் சிவகாமியம்மையின் பெரு மையை வெளிக்கொண்டு வருவதாகவும் காணப்படுகிறது. நூலோ, இணுவைச் சிவகாமியம்மை தமிழ் என்று பெயர் பெறுகிறது. நூலிலே இடம்பெறும் நான்கு பிரபந்தங்களுக்கும் பொதுத் தன்மை யாக, சிவகாமியம்மை தமிழ் என்பது நூலாசிரியராலே நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் தனிச் சிறப்புகளுள் ஒன்று பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ள சிவகாமியம்மை பிள்ளைத் தமிழிலும் அமைந்து காணப்படுகிறது. பஞ்சவன்னத்தூது தாதுப் பிரபந்தங்களுள்ளே தனித்தன்மை பெற்று விளங்குவதுபோலச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழும் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங் களுள்ளே தனித் தன்மை பெற்று விளங்குகிறது. இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் தன்னம்பிக்கையும் தனிவழி போகும் திற னும் பஞ்சவன்னத் தூதிலும் சிவகாமியம்மைப் பிள்ளைத் தமிழிலும் விளங்கித் தோன்றுகின்றன.
சைவ சமயத்தவர்களால் கோயில் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் ஆடவல்லானின் சக்தி சிவகாமியாவாள். ஈழநாட்டிலே, சிவகாமிக்குத் தனிக் கோவில் நீண்ட காலமாக இருந்து வருவது இணுவிலுக்கு ஒரு சிறப்பு.
தமிழவேள் தம்முடைய நூலை ஆய்வு நூல் அமைப்பில் ஆக்கி யுள்ளார். பதிப்பாசிரியராக விளங்கும் அவரது பதிப்புரைநூலாசிரியர் வரலாறு, திருத்தல வரலாறு, நூற்பகுதிகள் பற்றிய விளக்கங்கள், உரைக் குறிப்புகள், இந்நூலால் அறியப்பெறுபவை. அரும்பத விளக் கம் முதலிய கூறுகளால், நூலின் பெருமை உயர்கிறது. அரிய பல தகவல்கள் தெரியவருகின்றன.
ணுவிலின் சிறப்பு, சின்னத்தம்பிப் புலவரின் பெருமை, சிவகாமியம்மை வழிபாடு என்பனவற்றை உணர்த்த விரும்பும் தமிழவேள் கொழும்புத் தமிழ்ச் சங்கக் கெளரவ செயலாளராக இருந்து நல்ல பல 'பணிகள் ஆற்றுபவர். இந்நூல் மூலம், அவர் சிறந்த பதிப்பாசிரியர் ஒருவராக அறிமுகமாகிறார்.
ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவரும் யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழகம்,
are

வாழ்த்துரை
வண்ணமர கதவீழ மணிப்பொன் நாட்டின்
வடபாலில் வளமலியும் இணுவை யூரிற் தண்ணிதழி முடித்தாமர் இடப்பா கத்தும்
சந்ததமும் துதிபாடி மாலை குடி உண்ணெகிழ்ந்து போற்றுமன்பர் அகத்தும் மேவும்
உலகுடைய சிவகாமி யம்மை மீது
பண்ணுறுசெந் தமிழ்மாலை படைத்த ளித்தான்
பார்புகழ்சின் னத்தம்பிப் புலவ ரேறே.
கருணை வடி வானசிவ காமி யம்மை
காட்டுவிழிக் கடைக்கலத்தே பொதியில் வாழும் ஒருமுனியாம் சுரபியொழி தமிழ்த்தீம் பாலை
உய்த்ததிலே பக்திவெல்லப் பாகு சேர்த்து மருவுகவி வனப்பென்னும் மணமிக் கோங்க
மாதுமையம் மாள்மீது பதிகம் ஊஞ்சல் பொருவில்பிள்ளைத் தமிழ்த்துதியென் றின்ன பாங்கில் பொங்கு சுவைக் கவியமுதம் புனைந்து தந்தான்.
அரசினர்பொல் லாப்பிலிட்ட சிறையில் வாடி
அம்மைசிவ காமிதன தருளை நாடி உருகுகனி மொழியாலே அவரைப் பாடி
உய்திபெற்ற திறமுமன்னை கிருபை கூடி திருமலர்வாய் அமுதளித்தூழ் வினையைச் சாடிச்
செய்யபத மலரளிக்கத் தலையிற் சூடிக் கருவறையிற் புகுநாதன் னிலைகைக் கூடிக்
கவிஞர்சிறப் புற்றதுமிக் கவிகள் காட்டும்.
சொன்னயமும் பொருள்வளமும் தொடைவ னப்பும்
துறுமுபக்திச் சுவைப்பிரசத் துளிர்ப்பு மாய்விற் பன்னமள விலசெறிய இணுவை வாழும்
பராபரையின் அருட்பிரவா கத்தைத் தேக்கி வன்னமுறக் கவிவேந்தர் சின்னத் தம்பி
புனைந்தசெய்யுள் முழுவதையும் தொகுத்தோர் நூலாப்
மன்னுவகை பதிப்பித்து வழங்கி னானால்
வண்தமிழ வேள்நாமம் வயங்க நின்றோன்.
- xi l

Page 8
5. தலைநகரில் வேத்தியற்கல் லூரி தன்னில்
தண்தமிழா சானாக நெடிது காலம்
கலைமிளிர மொழிவளர நன்மா னாக்கர்
கருத்திலறி வொளிகெழுவிக் கொழும்பு மேவும்
இலகுபுகழ்த் தமிழ்ச்சங்கச் செயலராகி
எண்ணரிய பணிதலைக்கொண் டெந்தா ளும்தன்
னலமருவா வகைதொண்டு புரியுஞ் சீலன்
நாமகளுக்கேயடிமை செய்து வாழ்வோன்.
6. இன்னவகை மன்னிவளர் கந்த சுவாமி
இயற்பெயரோன் இணுவைச்சிவ காமி யம்மை
தன்னிடத்தும் சதுரகவி யான சின்னத்
தம்பியிடத் தும்சந்தத் தமிழின் பாலும்
துன்னுபெருங் காதலினால் புலவர் பாக்கள்
தொகுத்தளித்தான் ஆர்வலர்கற் றுவக்க வென்றே
அன்னவன்செய் தமிழ்ப்பணிகள் மேன்மே லோங்க
அம்மையப்பர் செம்மலர்த்தாள் அகத்துள் வைப்பாம்:
"பிள்ளைக்கவி திரு. வ. சிவராசசிங்கம் அவர்கள், இலங்கை அரச கரும மொழித் திணைக்களத் தமிழ்த்துறைப் பிரதி ஆணையாளர்.
女
புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் முன்னுரையிலிருந்து :-
கொழும்பு விஜயலட்சுமி புத்தகசாலையினர் திருத்தொண்டர் புராணத்திற்கு அறிஞர் க. கந்தசுவாமி அவர்களைக் கொண்டு நல்
லுரை எழுதுவித்துப் பதிப்பித்து வெளியீடு செய்துள்ளனர்.
இவ்வுரையில் வரும் இலக்கணக் குறிப்புகளும் நயங்களும் பாட் டின் பொருளையும் கருத்துகளையும் நன்கு விளங்கி நெஞ்சிற் பதிய வைத்தற்கும் இலக்கியப் பயிற்சியில் ஆர்வமும் ஊக்கமும் கொள்ளு
தற்குத் துணையாக இருக்கும்.
ஆங்காங்கு வேண்டிய பிற செய்திச் சுருக்கமும் ஆராய்ச்சிக் குறிப்புகள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. அவையும் பயன்படுவன.
- xii -
 

1. நூலாசிரியர் வரலாறு
"சிவகாமியம்மை தமிழ்" என்னும் இந் நூலின் ஆசிரியர் இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் ஆவர். இவர் ஈழத்திருநாட்டிலே இணுவில் என்னும் ஊரிலே வாழ்ந்தவர். இவர் நல்லூர்ச் சின்னத்தம் பிப் புலவரின் வேறானவர். -
புலவரின் தந்தையார் பெயர் சிதம்பரநாதன். புலவருக்குப் பெற்றார் இட்ட பெயர் கதிர்காம சேகர மானா முதலியார் என் பதாகும். சின்னத்தம்பி என்பது இவருக்கு ஊரில் வழங்கிய பெய print (5th
இளமையிலே, தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்லவரா யினார். கவிபாடும் ஆற்றல் இயல்பாக அவரிடம் அமைந்திருந் தது. இவ்வாற்றல் இவரின் குலதெய்வமான சிவகாமியன்னை அரு ளாற் கிடைத்தது என்பர்.
அக் காலத்து ஒல்லாந்த அரசினரிடம் கோயிற் சட்டம்பியாகப் பணியாற்றினார். ஒருமுறை யாரோ தவறுதலாக இவர்மீது குற்றம் சாட்ட அரசினர் இவரைச் சிறையில் இட்டனர். இதனால் மனமிக நொந்து தம்குலதெய்வமான சிவகாமியம்மையை நினைத்து எந்தையே எந்நாளும் இறைஞ்சுஎன்னும் முதலையுடைய பதிகத்தைப் பாடினார், இப்பதிகத்தில் வரும் "துப்பூட்டும்" என்னும் பாடலைப் பாடியபோது சிறைக் கதவு திறந்தது. புலவரின் அருளாற்றலைக் காவலாளரால் அறிந்த அதிகாரிகள் இவரைச் சிறைவிடுத்து இவரைச் சிறையிடுதற் குக் காரணமாக இருந்தவரைச் சிறையில் இட்டனர். இதனைச் சிறைநீக்கிய பதிகத்தின் 9ஆம் பாடல் தெரிவிக்கின்றது.
ஒருமுறை இவரின் மகளான அங்கயற்கண்ணி அம்மை பிரசவ வேதனையால் வருந்தியபோது எள்ளுக்குள் எண்ணெய் போல என்னும் பாடலை இவர் பாடினார். இதனால் இவரின் மகள் வேதனை நீங்கிச் சுகமாக ஆண் குழந்தையைப் பெற்றார் என்பர். இன்னொரு முறை இரவு வேளையில் அயலில் நடந்த கம்பங்கூத் தைப் பார்க்கச் செல்லும் விரைவு காரணமாகத் தற்செயலாக அரி வாளினாற் காலில் வெட்டுண்டார். அப்போது ஆரை நோவேனோ
அரிவாளை நோவேனோ காலை நோவேனோ கம்பத்தை நோவேனோ
எனப் பாடினார் என்பர். ר
பஞ்சவன்னத்தூது நூலிலே பாட்டுடைத் தவைன்ாகிய காலிங்கராயன் கைலாயநாதனை நாவலர் புகழும் நம் மரபு உதித்
- I -

Page 9
தோன் என இவர் கூறுதலின் இவர் காலிங்கராயன் மரபினர் என் பது தெளிவு. இத்தூதுப் பாட்டிலே வாலசிங்கன், பரராசசேகரன் ஆகிய அரசர்களின் சிறப்புக்களைக் கூறுவதனாலும் கவிங்கராயன் கைலாய நாதன் சிறப்புகளைக் கூறும் வகையாலும் ஈழத் தமிழரசரிடம் இவர் பெரும் பற்றுள்ளவர் என்பது தெளிவு.
இவரின் முத்தமிழ்ப் புலமையும், சிவநெறி வாழ்வும், ஈழநாட்டுப் பற்றும் இவரின் நூல்கள் மூலம் புலனாகுகின்றன. இவர்தம் பாடல் கள் சிறந்த கருத்து வளமும், சொல் வளமும் உள்ளன.
இவர் வாழ்ந்த காலம் ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட கால மாகும் என்பதை இவ்வூர்ச் செவ்வழிச் செய்திகள் தெரிவிக்கின் றன. சிறைக்கோட்டத்திலிருந்து இவர் பாடிய பதிகத்திலே 'சீலைப் பேன்’ என்னும் செய்யுளிலே பார் சேய்ன் சற்றும் இரங்கான்" என் னும் தொடரிலே "பார் சேயன்' என்பது ஒல்லாந்த அதிகாரியைக் குறிப்பதாகும். இவர் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியாம் பதி னெட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்தனர் என இவர் வரலாற்றை எழுதிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாவித்துவான் சி. கணேசையர், பேரறிஞர் ந. சி. கந்தையா பிள்ளை, முதலியார் செ. இராசநாயகம், பண்டிதர் ஆ. சி. நாகலிங்கம்பிள்ளை, தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, இலங் கைச் சாகித்திய மண்டலத்துத் தமிழ் ஆய்வுக் குழுவினர். நாலாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினர், கலாநிதி க. செ. நடராசா ஆகியோர் முறையே ஈழத்தின் தமிழ்ப் புலவர் சரித்திரம், தமிழ்ப் புலவர் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம், செந்தமிழ்ப் பூம்பொய்கை (பகுதி 2), ஈழத்துத் தமிழ்க் கவிதைத் தொகுதி, நாலாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர், ஈழத் துத் தமிழிலக்கிய வளர்ச்சி ஆகியவைகளிலே இப் புலவரைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளனர்.
"யாழ்ப்பாணத்திலே தமிழ் வளர்ச்சி குன்றியிருந்தாலும், தமி ழில் உயர்தரக் கல்வியை விருத்தி செய்வார் இல்லாதிருப்பினும் ஆங் காங்கு இலைமறை காய்போலத் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பண்டி தரும் உதித்து வந்தனர். சுன்னாகம் வரதபண்டிதர், மாத#ல் மயில்வாகனப் புலவர், சிற்றம்பலப் புலவர், தெல்லிப்பழை அருளப்ப நாவலர், வட்டுக்கோட்டைக் கணபதி ஐயர், அச்சுவேலி நமச்சி வாயப் புலவர், மன்னார்பவுரியேல் பச்சேக்கு, வண்ணார்பண்ணைக் கூழங்கைத் தம்பிரான், இருபாலைச் சேனாதிராய முதலியார், இணுவில் கதிர்காமசேகர சின்னத்தம்பிப் புலவர், சண்டிலிப்பாய்
1 ? --

வில்வராய முதலியார் சின்னத்தம்பிப் புலவர், முதலியோர் ஒல்லாந் தர் காலத்திற் பெரும் புகழ் படைத்த பாவல்லோரும், நாவல் லோரும் ஆவர் என வரலாற்றறிஞர் முதலியார் செ. இராசநாயகம் கூறியிருத்தல் (யாழ்ப்பாண வரலாறு பக். 230) இப் புலவரின் பெருமைய்ை உணர்த்தும்.
இப் புலவர் எழுதிய நூல்கள் பஞ்சவனத்தூது, சிவகாமியம்மை பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், திருவூஞ்சல், நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனிருத்தநாடகம் என்பனவாம். இவரது நாடக நூல்களை மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றம் வெளியிட்டுள்ளது.
இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வூரில் வாழ்ந்து யாழ்ப் பாண அரங்குகளில் இடம்பெற்ற நாடகங்க்ள் பலவற்றை எழுதி நாடகத்துறை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் சின்னத்தம்பிச் சட் டம்பியார். இவர் இப் புலவரின் :ரைபினர் ஆவர். பேரறிஞர் கள் இவரை நாடக ஆசிரியர் எனப் பாராட்டியுள்ளனர்.
*சாற்றலொணாத் தோற்றமுடன் வந்தே நின் திருவாயில் வைத் திருந்த பேரமிர்தம் தந்தாய்" எனத் தம்து சிறைக் கோட்டத்துப் பதிகத்திலே கூறியிருத்தலின் இவர் சிவகாமியம்மையின் அருள் பெற்றவர் என்பது புலனாகிறது.
இவர், நூல்கள் சிறியவை எனினும் மிகச் சிறந்த சொன்னய மும் பொருணயமும் அருள்வளமும் உள்ளன. இப் புலவர் முத்தமிழ்ப் புலமையும் நுண்மான் நுழைபுலமும் மதிநுட்பமும் உள்ளவர். ஆன்ற விடத்தடங்கிய கொள்கைச்சான்றோர்.இவர் ஈழநாட்டிற்குப் பெருமை தேடித்தந்தவர் ஆவர். −

Page 10
2. இணுவில் ஊர் வரலாறு
இணுவில் ஊர் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பெரு வீதியில் நான் காவது கல் தொலைவில் உள்ளது.
இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு உள்ளது. யாழ்ப்பாண அரசு த் தொடக்க காலத்தில் அதன் ஆட்சிப் பிரிவுகளுள் இவ்வூர்ப் பிரிவும் ஒன்று எனவும் இப் பிரிவுக்கு ஆட்சித் தலைவர் ஒருவர் இருந்தார் எனவும் அக்காலத்தில் இவ்வூர் பல்வளமும் நிறைந்து பரந்த நிலப் பரப்பினதாக விளங்கியது எனவும் இணையிலி என்னும் பெயரோடு விளங்கியது எனவும் யாழ்ப்பாண வரலாற்று மூலகங்கள் தெரிவிக் கின்றன.
கோட்டு மேழித் துவசன் கோவற்பதி வாசன் ’ சூட்டுமலர்க் காவிற் றொடை வாசன்-நாட்டமுறு
ஆதிக்க வேளாளன் ஆயுங்கலை அனைத்தும் சாதித்த ரூபா செளந் தரியன்-ஆதித்தன் ஆறாயிரங் கதிரோடொத்த மேனிப் பிரகாசன் பேராயிர வனெனும் பேரரசைச்-சீராரும் கன்னல் செறிவாழை கமுகுபுடைசூழக் கழனி துன்னும் இலுவிலிற் துளங்க்வைத்து'
(கைலாயமாலை அடி 170-175) *சிகோவலூர் வேளாளனும் ாேழிக்கொடியனும் குவளை மாலையும் பெரும் பராக்கிரமமும் கல்வியும் கட்டழகும் உடையவனும் ஆகிய பேராயிரவனைக் கரும்பும் கமுகும் வாழையும் நெல்லும் செழித்து ஓங்கும் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலியிற்
குடியிருத்தினான்" (யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை)
இதே செய்திகளை யாழ்ப்பாண வைபவமாலை, முதலியார் செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் முதலிய நூல் களும் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரில் இருந்து அரசு செய்தான் எனப் பஞ்சவன்னத் தூது நூலில் உள்ள அகவல் தெரிவிக்கின்றது.
"அட்ட லட்சுமியுறைத் தருளும் யாழ்ப்பாணப்
பட்டினந் தன்னிற் பரராச சேகரனெனும் ஆரிய குலத்திறை அரசுவீற் றிருந்த தென்னினு வையெனுந் திருநகர்"
(அகவல் அடி 17-20)
象
இவ்வூரில் உள்ள பரராசசேகர விநாயகர் கோவிலை இவ்வரசன் அமைத்தான் என இவ்வூர்ச் செவிவழிச் செய்தி தெரிவிக்கின்றது:
- 4 -

முதலாம் குலோத்துங்க சோழனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கை வந்தபோது இவ்வூரிற் காரைக்காற் பகுதி யிற் தங்கியிருந்தான் என திரு. செ. இராசநாயக முதலியார் தமது யாழ்ப்பாணச் சரித்திர நூலில் எழுதியுள்ளார். (பக்கம் 38-39)
இவ்வூர்த் தொடக்க ஆட்சியாளன் பேராயிரவன் திருக்கோவ லூரினன். இவனின் பின் இவ்வூர் ஆட்சித் தலைவனாக இருந்தவன் காலிங்கராயன். இவன் காரைக்கால் ஊரினன் என்பதைப் பஞ்சவன்னத் தாதுநூல் "பேராயிரவன் குடிப் பேரதிகாரி", "காரைநாடன்","காரைப் திவாசன்"எனக் கூறுதலால் அறியலாம். "தொண்டை நாட்டு ஊர்ப் பெயர்களோடு கூடிய குடியேற்றங்கள் காரைக்கால்-காரைக்காடு இணுவில்)" எனத் திரு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை தமது யாழ்ப்
பாணக் குடியேற்றம் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
(பக்கம் 4-1982)
காலிங்கராயனும் இவன் மகன் கைலாயநாதனும் இவ்வூர்க்குப் பெரும் புகழ் தேடித்தந்துள்ளனர். திருக்கோவலூரும் காரைக்காலும் தொண்டை நாட்டில் உள்ளன. இங்கு குடியேறியவர்கள் தொண்டை நாட்டினர் என்பது தெளிவு. "தொண்டை நாட்டிற்குரிய பெருங் குணம் அந்திய அரசும் அந்நிய சமயமும் வந்து தாக்கித் தேய்த்தும் முற்றாகத் தேய்ந்துபோகாது இன்றும் விளக்கமாக இருப்பது பிரத் தியட்சம். தாம் வறியவராய் இருப்பினும் தம்மிடத்து வரும் அகதி, பரதேசிகளுக்கு இயன்றதைக் கொடுத்துண்ணும் குணம் யாழ்ப்பாணத் தாருக்கு இயல்பாயிருப்பது அவர்தம் பழைய பெருங்குடி இயல் பன்றோ. ஆதியில் குடியேறிய குடிகள் எல்லாம் கல்வியும் செல்வ மும் ஈகையும் ஆண்மையும் மெய்யுரையும் உடையவர்கள். பறங்கிக் காரரும் ஒல்லாந்தரும் மற்றச் சமய ஆலயங்களையும் சமய நூல் களையும் எரியூட்டி அழித்தார்கள். அழித்தும் தம் முன்னோர்கள் சைவத்திலும் சமய நூல்களிலும் வைத்த அசையாப் பேரன்பினாலே அவற்றைப் பாதுகாத்து வந்தனர்" எனத் திரு. ஆ. முத்துத்தம்பி அவர் கிள் யாழ்ப்பாணத்தைப் பற்றித் தம் "யாழ்ப்பாண வரலாறு" என்னும் நூலில் எழுதியிருப்பன இவ்வூருக்கும் மிகப் பொருந்துவன ஆகும்,
தமிழிலும் சமயத்திலும் பற்றுமிக்க இவ்வூர் யாழ் அரசர் ஆட் சிக்காலத்திலும் ஐரோப்பியர் ஆட்சிக் காலங்களிலும் இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளும் சமயமும் வளர்தற்கு உறுதுணை யாக இருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தவரான சின்னத்தம்பிப் புலவர் முத்தமிழிலும் புலமையுள்ளவராக விளங்கினார். முத்தமிழ்த் துறைகளும் அமைந்த பஞ்சவன்னத் தூது நூலை ஆக்கியதோடு கோவ லன் நாடகம், நொண்டி நாடகம், அனிருத்தன் நாடகம் என்னும் மூன்று நாடக நூல்களையும் ஆக்கினார். இந் நாடக நூல்கள் மட்டக் களப்புப் பிரதேசக் கலாமன்றத்தினால் வெளியிடப் பெற்றுள்ளன.
-س- 5 س

Page 11
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தவரான நடராசையர் நாவலரிடம் கல்வி கற்றவர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவர் தமிழ் நாடு சென்று அறிஞர் பலருக்கு ஆசிரியராக விளங்கிச் சிவஞான சித்தி யாருக்கு உரை எழுதியுள்ளார். அம்பிகைபாகர்ப் புலவர் நாவலரிடம் கல்வி கற்றவர். நாவலர் வழியில் இவ்வூரிற் சைவப் பாடசாலையை நிறுவியவர். தணிகைப் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பெரிய சந்நியாசியார் பெருஞ்சித்தர் ஆவர். இவர் இவ்வூருக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தவர். இலங்கையில் சிற்பச் சிறப்புக்கள் உள்ள இணுவ்ை மஞ் சத்தை உருவாக்கியவர். புகழ் பெற்ற காரைக்காற் சிவன்கோவிலை உருவாக்கியவர். இணுவிற் கந்தசுவாமி கோவிலில் இருந்து காரைக் காற் சிவன்கோவில் வரை மிக அகலமான தேரோடும் வீதியை அமைத்தவர். இவ் வீதி இப்போது முன்னைய வீதியில் அரைப்பங்கு அகலமஆகிவிட்டது. யாழ். கச்சேரி உயர் உத்தியோகத்தர் பலர் இவ ரின் அடியவர்களாக இருந்தனர். பெரும் அருட் செயல்களை நிகழ் வித்தவர். இவரது அடக்கத் திருத்தலம் மஞ்சத்தடி என்னும் பகுதி யில் இருக்கிறது, மஞ்சம் செய்வித்த இடமாதலின் இப் பெயர் பெற்றது. − -
கடந்த நூற்றாண்டின் ஈற்றிலும். இந் நூற்றாண்டின் தொடக் கத்திலும் இசைத்துறையிலும் நாடகத்துறையிலும் வல்ல பலர் இவ் வூரில் இருந்தனர். இவர்கள் இசை நாடகக் கலைகளை யாழ்ப்பாணத் திலும் இலங்கையிலும் வளர்த்தவர் ஆவர். இங்கு சிறந்த நாடக அரங்கு இருந்தது. நாகலிங்கம் சிறந்த நடிகராகவும், ஏரம்பு, சுப் பையா ஆகியவர்கள் சிறந்த அண்ணாவிமார்களாகவும் சின்னத்தம்பிச் சட்டம்பியார் சிறந்த நாடக ஆசிரியராகவும் விளங்கினர். அறிஞர் கள் பலர் இவர்களைப் பெரிதும் பாராட்டியுள்ளனர். இவ்வூர் நாட கங்களிற் பங்கு கொண்டு சிறந்த நடிகர்களாக விளங்கியவர்களுக்கு அனுமார், நாரதர், வஞ்சிப்பத்தன், நம்பிராசன், சீதை. மாலியவான் என அந்நாட்க பாத்திரங்களின் பெயர்களே பெயர்கள் ஆயின. பெரிய பழனி என்பவர் பெரும் இசை மேதையாக விளங்கினார்.
இவ்வூர் சிறந்த நிலவளமும் நீர்வளமும் உள்ளது. உழவுத் தொழிலே இவ்வூரில் உயிர்நாடி. பயிர் விளை நிலங்கள் பல உள் ளன. குடியிருப்புப் பகுதிகளும் அக்காலத்திற் பயிர் விளை நிலங் களாகவே இருந்தன; நிலப் பெயர்கள் பல தோட்டம் என்னும் பெயராக உள்ளன. அன்று இருந்த நெல்விளை நிலமும் குளமும் இன்று மாற்றம் அடைந்துள்ளன.
இவ்வூர் மக்கள் சிறந்த உழைப்பாளிகள். மொழி - சமயகலாசாரப் பற்றும் பண்பாடும் சமய வாழ்வும் உள்ளவர்கள். ஐரோப்பிய ஆட்சியாளர் வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்தாது ஒருவர் தாமும் சமயம் மாறாமல் வாழ்ந்தனர்; பண்டைய கல்வி முறை நிலைபெற்றிருந்தது. இந் நூற்றாண்டில் இருந்து கல்வித் துறைகளும் தொழிற்துறைகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன.
- 6 -

பல சைவக்கோயில்களும் கல்வி நிலையங்களும் திருமடங்களும் உள்ளன. புராணபடனம், திருமுறை, சைவப் பிரசங்கம் என்பன நிலைபெற்றுள. அருள்மிகு வடிவேல் அடிகளார் அண்மைக்கால வளர்ச்சிகளுக்கு வழிவகுத்தவர் ஆவர். இவ்வூர் இளந்தாரி கோவில் முன்னைய அரசர் ஒருவர்க்காக நடுகல் வழிபாட்டு முறையில் அமைந் துள்ளது. அரசர் ‘ஒருவர்க்காக அமைந்த நடுகல் வழிபாட்டுக் கோயில் இது ஒன்றே எனலாம். சேர். பொன். இராமநாதன் மகளிர் கல்லூரியும், யாழ். பல்கலைக் கழக இசை நுண்கலைப் பகுதியும் இவ்வூரில் உள்ளன. கிறித்தவ மிசன் சபை நிறுவிய மக ளிர்க்கான சிறந்த மருத்துவநிலையமும் இங்கு உண்டு. தொடருந்து நிலையமும் உண்டு. ஞானிகளும் யோகிகளும் சமயப் பெரியார்களும் இவ்வூருக்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர். சமய - சமூக அமைப்பு கள் அமைந்து இவ்வூர் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந் நாட்டின் இன்றைய எழுச்சிக்கு இவ்வூர் பெரும்பணி செய்துள்ளது.
* 'இணையிலியில் ஆதியிற் குடிகொண்ட வேளாளர் சந்ததியின்ர் தமது விளை நிலத்திற்குச் சமீபமாக வசிக்கும் நோக்கமாகச் சென் றிருந்த கிராமம் உயர்வுப்புலம் எனப்பட்டு இப்போது உயரப்புலம் எனக் குறிக்கிறது. ஆனைக்கோட்டைக்குப் பூர்வநாமம் இது."
(ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, யாழ்ப்பாணச் சரித்திரம் பக்.147)
"இந்தியாவில் கருநாடக இசைக்கு இருப்பிடம். ஈழத்தில் இணுவையம்பதியாகும் (ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி, நான் காவது உலகத் தமிழாராய்ச்சி ம்காநாட்டு மலர்). .
இணுவில் கிராமத்திலே கலைஞர் பெருமக்களும் கலாரசனை உள்ளவர்களும் நிறைய இருக்கிறார்கள். நாட்டிற்குப் 'பெருமை தேடித்தந்தி, தருகிற இசைக் கலைஞர்களைக் குறிப்பாக இசைக் கலைஞர்கள் பலரை நமக்குத் தந்தது இணுவையூர்."
(சிரித்திரன் இதழ் 1972 மார்ச்: 1973 திசெம்பர்)
"தாங்கள் எவ்வளவுதான் துன்பங்களை அனுபவித்தாலும் தங் கள் மொழியும் சமயமும் சிறந்து விளங்கவேண்டும் என்பதிலும் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தேனும் தங்களைத் தாங்களே ஆளும் உரிமைபெற வேண்டும் என்பதிலும் பெரும்பாலும் விவசாயி களாக உள்ள இவ்வூர் மக்கள் நீண்ட காலமாக உறுதியான கொள் கையும் நம்பிக்கையும் உள்ளவர்களாக உள்ளனர்"
(முன்னாள் இலங்கைப்பிரதமர் டட்லி சேனநாயக்கா அவர்களுக்கு
இவ்வூரில் நிசழ்ந்த வரவேற்பில் இத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்நிகழ்த்திய உரை). ج؟
سے۔ 7 سسہ

Page 12
3. இணுவைச் சிவகாமி அம்மன் திருத்தல வரலாறு
இலங்கையைச் சிவபூமி எனத் திருமூலநாயனார் அருளிய திருமந் திரம் கூறுகிறது. இத்துணைச் சிறப்புள்ள இலங்கையிற் திருத்தலங்கள் பல உள்ளள. அவற்றுட் சில புராதன காலத்தன; சில இடைக் காலத்தன; சில பிற்காலத்தன; சில சிவத் திருத்தலங்கள்; சில சத் தித் திருத்தலங்கள் சில விநாயகர் திருத்தலங்கள்; சில கந்தவேள் திருத்தலங்கள்; சில வீரபத்திரர்-வைரவர் திருத்தலங்கள்: சில சிறு தெய்வத் திருத்தலங்கள்.
இணுவைச் சிவகாமி அம்மன் கோவில் யாழ்ப்பாண அரசர் காலத் துச் சத்தித் திருத்தலம். யாழ்ப்பாண அரசர் தமது நாட்டைப் பல ஆட்சிப் பிரிவுகளாக வகுத்து ஒவ்வொரு ஆட்சிப் பிரிவுக்கும் ஒவ் வொரு ஆட்சித் தலைவர்களை நியமித்தனர். இணுவையூர் ஆட்சிப் பிரிவுக்குத் தமிழகத்து நடுநாட்டுத் திருக்கோவலூர்ப் பேராயிரவன் தலைவன் ஆனான். இவன் சிதம்பரத்தில் இருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத் தான் வாழ்ந்த இடத்தில் இச் சிவ காமியம்மை வழிபாட்டை அமைத்தான் எனவும் அவ்விடத்திற்குச் சிதம்பர வளவு எனப் பெயரிட்டான் எனவும் செவிவழிச் செய்தி தெரிவிக்கின்றது.
பேராயிரவனின் பின் இப்பகுதி ஆட்சித் தலைவனாக இருந்த காலிங்கராயன் நாள்தோறும் சிவகாமியம்மையை வழிபட்டு அதன் பின் ஆட்சிக் கடமைகளை மேற்கொண்டான் எனவும் இவன் மகன் கைலாயநாதனின் உலாவின்போது, அவ்வுலாவின் முன்பாகச் சிவகாமி யம்மை திருவுரு தேரிற் சென்றது எனவும் பஞ்சவன்னத் துரது நூல் கூறுகின்றது. ... x
போர்த்துக்கேய ஆட்சியாளர் இக்கோவிலை இடித்து அழித்த னர். ஒல்லாந்தர் ஆட்சியில் இக்கோவில் வழிபாடு மீண்டும் தொடங் கியது. ஒல்லாந்தர் ஆட்சியிற் தோம்பு எழுதும் உத்தியோகத்தராய் இருந்த இவ்வூர்ச் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமியம்மையை நாளும் வழிபாடு செய்தவர். இவரை ஒல்லாந்த ஆட்சியாளர் சிறையில் இட்ட போது இவர் சிவகாமியம்மை அருளினாற் சிறைக்கதவு திறந்து வெளி வந்த நிகழ்ச்சி இத் திருத்தலத்தின் பெருமையைப் பலரும் அறியச் செய்தது. இப் புலவர் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ், சிறைநீக்கு பதிகம், சிவகாமியம்மை துதி, திருவூஞ்சல் ஆகியவற்றைப் பாடியுள் crmfiro.

ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சிக் காலங்களில் சிறந்த நாடக அரங்கு இக் கோவிலுக்குப் பக்கலில் இருந்தது. இத்தலத்து வழிபாட்டொடு நாடகங்கள் நடைபெற்றன எனக் கூறுவர். யாழ்-காங்கேசன் புகை வண்டி வீதியை அமைக்கவந்த ஆங்கிலேய அதிகாரிகள் இத் திருத் தலத்தை அவமதிக்கும் வகையில் உட்புகுந்தனர் எனவும் அதனால் அவர்கள் இடர்பல அனுபவித்தனர் எனவும், பின்பு அவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றனர் எனவும் கூறுவர். இத் திருத்தலத்து அருளாற்றலைப் பற்றிய பல செய்திகள் உள்ளன. இன்றும் இவ் வகைச் செயல்கள் நிகழ்ந்துவருகின்றன. சிவகாமி அம்மையின் அரு ளாற்றல் நாற்றிசையும் பரவிப் பயன் செய்வதாக மகான்கள் கூறி யுள்ளனர். h−
இத் திருத்தலம் சிறந்த தெய்வச் சூழலில் அமைந்துள்ளது. இவ் ஆர்ப் பண்டைய ஆட்சியாளர் தம் வீரத்திற்காக வழிபட்ட வைரவர்பத்திரகாளி கோவில் இத் திருத்தலத்தின் மேற்கு வீதியில் இருக்கிறது. இக் கோயில் இன்றும் அருளாற்றலொடு விளங்குகிறது. இத் திருத் தலத்திற்குக் கிழக்கிற் சோழர்காலத் தொடர்புள்ள அருள்மிகு காரைக் காற் சிவன்கோவில் இருக்கிறது. மேற்கில் பெருஞ் சித்தராக விளங் கிய பெரிய சந்நியாசியாரின் அடக்கத் திருத்தலம் உள்ளது. வடமேற் கில் இப்பகுதியின் பண்டைய அரசர் ஒருவர்க்கு அமைந்த இளந்தாரி கோவில் உள்ளது.
இந் நூற்றாண்டில் இக் கோயிற் கட்டடங்கள் திருத்தியமைக்கப் பெற்றன. திருத்தொண்டுகள் செய்வதிற் பலர் ஈடுபட்டனர். புதிய அமைப்புகள் உருவாகின. பணிகள் பல நடைபெற்றன. சிறந்த பூந் தோட்டம் ஒன்று உள்ளது. வேம்பு, அரசு, வில்வை, மகிழ் முதலிய பல புனித மரங்கள் வீதிகளில் உள்ளன. அழகிய இராசகோபுரம் காட்சி தருகிறது. சிற்ப வேலைகள் அமைந்த அழகிய திருத்தேர் அண்மை யில் அமைக்கப்பெற்றுள்ளது. அழகிய சிற்ப அமைவுகள் உள்ள ஊர் திகள் உள்ளன. உள் வீதியில் எல்லாக் கடவுளர்க்கும் கோயில்கள் உள்ளன. வெளி வீதியிற் திருமடமும் சின்னத்தம்பிப் புலவர் அரங் கும் உள்ளன.
நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடை பெற்று வருகின்றன. எல்லாச் சிறப்புத் தினங்களும்விழாக்களும் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன. ஆண்டுத் திருவிழா, ஆடிப் பூரம், நவ ராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச் சிறப்பானவை. ஆண்டுத் திரு விழா பங்குனி மாதத்தில் பன்னிருநாள் நிகழும். உத்தரநாள் தீர்த் தத் திருவிழாவும் அதற்கு முதல்நாள் தேர்த்திருவிழாவும் நடை
- 9 -

Page 13
பெறும். மகேசுவர பூசையும் நடைபெறும். ஆடிப்பூரக் கற்பூரத் திரு விழா மிகச் சிறப்பானது. பகல் சங்காபிடேகம் நடைபெறும்.
நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் மகிடாசுர சம்கார விழா வும் பத்தாம்நாள் மானம்பு விழாவும் இத் திருத்தலத்திற்குச் சிறப்புத் தருவன. மகிடாசுர விழாவில் இடம்பெறும மகிடாசுரனும் சிங்க ஊர் தியும் சிறந்த சிற்ப அமைப்புகளை உடையன. வேறு எங்கும் இவ் வமைப்புகள் இல்லை எனலாம், மானம் பூத்திருநாள் சிவகாமியம்மை அதி சிறந்த அமைப்பு உள்ள குதிரை ஊர்தியில் எழுந்தருளுவார். வீதிகள் தோறும் வழிபாடுகள் நிகழும் புகழ் பெற்ற இணுவைக் கந்த சுவாமி கோவிலில் அம்பு போடுதல், வன்னிமர வாழை வெட்டல் நிகழ்ச்சி நிகழும். அங்கு சிறப்பு வழிபாடு நிகழும். திருவெம்பாவை வழிபாடு நாள தோறும் அதிகாலை மூன்று மணிமுதல் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசத்திச் சிறப்பு வழிபாடும்
பூரணை நாள் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன
வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு விழா நாட்களிலும் நீண்டகால மாகப் பக்திக்கு உரிய சிறந்த பசனை நிகழ்ந்து வருதல் இத் திருத்தலத் திற்கு ஒரு சிறப்பாகும். நாளாந்த வழிபாடுகளிலும் சிறப்பு நாள் விழாக்களிலும் வழிபடுபவர் அதிகம். வெளியூர்களில் இருந்தும் பலர் இங்கு வருவர். சிறப்பு நாட்களில் சமயச் சொற்பொழிவுகள் நிகழும். முன்னைய பரம்பரை உரிமைய்ாளர்'இத் திருத்தலத்தைப் பரிபாலித்து வருகின்றனர். பண்டைய மடை வைத்தல் முறையும் பொங்கலும் இத் திருத்தல மேற்கு வீதியில் உள்ள புராதன வைரவர் பத்திரகாளி கோவிலில் வாரந்தோறும் நிகழ்ந்து வருகின்றன. தெய்வ அருளாற்ற லாற் கட்டுச் சொல்லுதல் என்னும் நிகழ்ச்சி இக் கோவிலில் நீண்ட காலமாக நிகழ்ந்து வருகின்றது. •
இத் திருத்தலத்துத் திருப்பணிகள் செய்தவர்பலர். இத் திருத் தலப் பூசைகளும் விழாக்களும் பத்தி உணர்வு தருவன. சிவகாமி அம் மையின் அருளாற்றலே இதற்குக் காரணமாம். சின்னத்தம்பிப் புல வரின் பாடல்கள் சிவகாமி அம்மையின் அருள் பெறுதற்காக அமைந் துள்ளன. ஈழத்துச் சிவகாமியம்மை திருத்தலம் இதுவாகும். சிவகாமி அம்மையைத் துதித்துப் பயன்பெறுவோம்.
"இணுவில் என்னும் ஊரில் சிவகாமியம்மைக்கு ஆருத்திரா தரி சனத்தன்று திருவிழா உண்டு."
(நூல்: கோயில். எழுதியவர்: சோமலெ. ஆண்டு 1979, பக்கம் 462. பகுதி: , ஈழத்துச் சிதம்பரம்)
سے 10 -۔

ܟ݂ ܢ
4. நூற்பகுதிகள் பற்றிய விளக்கங்கள் 1. சிறை நீக்கிய பதிகம் s
இப் புலவரிடம் பொறாமையுற்ற ஒருவரின் தவறான தகவலி னால் ஒல்லாந்த அதிகாரி இப்புலவரைச் சிறையில் வைத்தனர். தமக்கு உற்ற அவமதிப்பும் சிறைக்கூடத் துன்பமும் காரணமாகத் தாம் வழிபடு தெய்வம் ஆகிய சிவகாமி அம்மையின் அருள் வேண்டி இப் பதிகத்தை இப் புலவர் பாடினார். சிவகாமியம்மை தமக்கு அருள்புரிய வேண்டிய இன்றியமையாமையை 3ஆம், 4ஆம், 5ஆம் பாடல்களிலும், சிறைக்கூடத் துன்பத்தை 6ஆம் பாடலிலும் நன்கு இவர் தெரிவித்துள்ளார். 7ஆம் பாடல் பாடிய்தும் சிறைக் கூடக் கதவுகள் திறந்தன. புலவர் வெளியே வந்தார். இச் செய் தியை அறிந்த ஒல்லாந்த அதிகாரி இவரின் அருளாற்றலையும் குற்ற மற்ற தன்ம்ையையும் உணர்ந்து இவரைப் பணிந்து விடுதலை செய் தான். இப்புலவருக்கும் அதிகாரியான தனக்கும் அவமானம் உண் டாகும் வகையிற் தவறான தகவல் தெரிவித்த இவரது பகைவனை ஒல்லாந்த அதிகாரி சிறையில் இட்டான். இதனை 9ஆம் பாடலில் இப் புலவர் தெரிவித்துள்ளார். சிவகாமி அம்மை தமக்கு நேரில் வந்து அருள் புரிந்தமையைப் புலவர் 8ஆம், 10ஆம் பாடல்களிற் தெரிவித்துள்ளார். 9ஆம், 10ஆம் பாடல்கள் சிறை நீக்கிய பின் பாடப் பெற்றன ஆகும்.
இப் பதிகமும் இதனால் நிகழ்ந்த அற்புதமும் சமயக்குரவர்கள் அருளிய திருப்பதிகங்களையும் அவற்றால் நிகழ்ந்த அற்புதங்களை யும் நினைவூட்டுகின்றன. இப்பதிகப் பாடலினாற் சிறைக் கதவு திறந்தமை திருநாவுக்கரசு நாயனார் "பண்ணினேர் மொழி யாளுமை பங்கரோ" என்னும் பதிகம் பாடித் திருமறைக்காட்டுத் திருக்கோயிற் கதவு திறந்தமையை நினைவூட்டுகிறது. ஒல்லாந்த அதிகாரி இப் புலவரைச் சிறையிலிருந்து விடுவித்து இவரது பகைவனைச் சிறையி லிட்டமை சமணரின் தூண்டுதலினால் திருநாவுக்கரசு நாயனாரைக் கொல்லும்படி ஏவிய யானை அவரை வலம் வந்து வணங்கிச் சமண ரைத் துன்புறுத்தியமையை நினைவூட்டுகிறது.
இப் பதிகத்தை ஒதுபவர்கள் பகை, துன்பம், நோய் முதலியன நீக்கிச் சிவகாமி அம்மையின் பேரருள் பெற்றுப் பேரின்பப் பெரு
வாழ்வு எய்துவர்.
சிறை நீங்கிய பதிகம் வரலாற்றுச் சிறப்பு உள்ளது. ஐரோப் பாக் கண்டத்திலிருந்து வந்த ஒல்லாந்த இனத்தவர் வட இலங்கையை
- 11 -

Page 14
ஆண்டதையும் ஒல்லாந்தர் காலத்துச் சிறைத்தண்டனை முறைை யும் இப்பதிகம், உணர்த்துகிறது.
இப் பதிகம் சிவகாமி அம்மையின் பேரருட் செயலை உலகறியச் செய்கின்றது.
2. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணுாற்றாறு சிறு பிரபந்த வகைகளுள் ஒன்று. கடவுளரையேனும் மக்கட் தலை வரையேனும் பேரன்பு மிகுதியினாற் பிள்ளையாக வைத்துப் பாடப் பெற்ற பாடல்கள் உள்ள நூல் பிள்ளைத் தமிழ் எனப் பெயர் பெற்றது. அந்நூல் காப்புப் பருவம் முதற் பத்துப் பருவங்களை யும் பருவத்திற்குப் பத்துப் பாடல்களாக நூறு பாடல்களையும் உடையது. பருவத்திற் ஐந்து பாடல்கள் உள்ள பிள்ளைத் தமிழ் களும் பருவத்திற்கு ஒரு பாடல் உள்ள பிள்ளைத்தமிழ்களும்
s
இப்பிள்ளைத் தமிழ் மேற்கூறிய அமைப்பு உள்ளது அன்று. சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைப் பிள்ளையாகவும் வைத்து இப்புலவர் இப்பிள்ளைத் தமிழைப் பாடியுள்ளார். பிள்ளை யாக வைத்துப் பாடிய பாடல்கள் உள்ள நூல் ஆதலின் பிள்ளைத் தமிழ் எனப் பெயர் பெற்றது எனப் பெரும் புலவர் சிவங் கருணா லய பாண்டியனார் தெரிவித்தார். இதிற் பத்துப் பாடல்கள் உள்ளன. சிவகாமித்தாயே எனப் பாடல்களில் விளிக்கப்பெறுவதாலும் தம் மைப் பிள்ளையாக வைத்துத் தாய்க்கு முறையிடுவதாகப் பாடல்கள் அமைந்திருத்தலாலும் இக்கருத்து ஏற்றதாக உள்ளது.
சிவகாமி அம்மையின் பெருஞ் சிறப்புகளும் பேரருட் செயல் களும் பேரருட் தத்துவங்களும்திருப்பெயர்களும் தம்மைப் பிள்ளை யாக வைத்து முறையிடுவதும் அருள்புரிந்து காப்பாற்றும்படி வேண்டு வதும் இப் பாடல்களிற் சிறப்பாக அமைந்துள்ளன. இணுவை ஊர்ச் சிறப்பு இப் பாடல்களிற் தெரிவிக்கப்பெற்றுள்ளது
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் சிவபிரானைத் தந்தையாக வும் தம்மைப் பிள்ளையாகவும் வைத்துப் பர்டிய பாடல்கள் அவரது திருமுறைப் பாடல்களில் உள்ளன. மகாக்வி பாரதியார் தம்மைப் பிள்ளையாகவும் கண்ணனைத் தந்தையாகவும் தாயாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் அவரது கண்ணன் பாட்டு என்னும் பகுதியில் உள்ளன. கடவுளைத் தந்தையாகவும் தாயாகவும் தம்மைப் பிள்ளை
一12一

யாகவும் வைத்து வழிபாடு செய்தல் சைவத்திரு நெறிகள் நான் னுெள் சற்புத்திர நெறி ஆக உள்ளது.
இப் பிள்ளைத் தமிழ் பாடப்பெற்ற காலம் இலங்கையில் ஒல் லாந்தர் ஆட்சிக் காலம். அது தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலம் ஆகும். நாயக்கர் காலம் வடமொழிப் பயிற்சியும் வட மொழிச் சொற் பிரயோகங்களும் மிக்கிருந்த காலம். அதனால் இப் பிள்ளைத் தமிழிலும் வட சொற்களும் சொற்றொடர்களும் பல உள்ளன. இப் பாடல்கள் சந்த இசையமைப்பு உள்ளன. 1961ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் வெளிவந்த இலங்கை வித்தியா போதினி யில் "ஈழமும் பிரபந்தங்களும்" என்னும் கட்டுரையில் இப் பிள்ளைத் தமிழை அக் கட்டுரை ஆசிரியர் வித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா அவர்கள்குறிப்பிட்டுள்ளார். ན་
3. சிவகாமியம்மை துதிப்பாடல்கள்
இத் துதிப் பாடல்கள் தனிப் பாடல்களாக உள்ளன. வெவ்வேறு காலங்களிற் பாடப்பெற்றன.
முதற் பாடலில் இப் புலவர் சங்கந் தழைக்க அருள் செய்யும் தலைவி எனச் சிவகாமி அம்மையைத் துதித்துள்ளனர். சங்கம் என் பது பண்டைக் காலத்திற் தென் மதுரை, கபாடபுரம், மதுரை ஆகிய இடங்களில் இருந்து தமிழ் வளர்த்த சங்கங்களைக் குறிக்கும். இறைவன் முதற் சங்கத்திற் புலவராய் இருந்தார். கடைச் சங்கத் திற் தருமி என்னும் தன் அன்பனுக்காகப் புலவராக வந்து நக்கீரப் புலவரொடு வாதிட்டார். சிவ வழிபாட்டினரான பாண்டிய மன்னர் மூன்று சங்கங்கண்ளயும் காத்து வளர்த்தனர். சங்க காலத்தின் பின் வந்த நாயன்மார்களும் பெரும் புலவர்களும் சங்கத்தைச் சிறப்பித்துப் போற்றினர். இச் சங்கங்களைத் தொடர்ந்து இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் சங்கங்கள் அமைந்து தமிழ் வளர்த்தன. இவை களைத் தொடர்ந்து இக்காலத்திலும் சங்கங்கள் பல அமைந்து தமிழ் வளர்த்து வருகின்றன. பெரும் சிறப்பினதாகிய சங்கத்தை இப் புலவரும் போற்றிப் பாராட்டியுள்ளார். சிவமும் சக்தியும் ஒன்றே ஆதலின் சங்கம் வளர்த்த சிவனின் அருட்செயலைச் சிவசத்தியின் அருட் செயலாகக் குறிப்பிட்டார்.
2ஆம் 3ஆம் பாடல்களில் சிவசக்தியின் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 4ஆம் பாடலில் இணுவைச் சிவகாமி அம்மை திருத்தலத்தொடு யாழ் அரசர் காலம் முதல் வரலாற்றுத் தொடர் புள்ளனவும் இதற்கு அண்மையில் உள்ளனவுமான திருத்தலங்தனின்
--سے 13 سست۔

Page 15
உள்ள கடவுளர்களை இப்புலவர் துதித்துள்ளார். கருணாகர விநாயகர் திருக்கோவில் இலங்கை வந்த கருணாகரத் தொண்டமான் நிறுவியது கிழக்குத் திசையிற் சிறிது தூரத்தில் உள்ளது. செவ்வேள் திருக்கோயில் மேற்குத் திசையிற் சிறிது தூரத்தில் உள்ளது. கைலாயன் இளந்தாரி கோவில் வடமேற்கில் உள்ளது. கைலாயன் இளந்தாரி யாழ் அரசர் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த பேரர்சரும் பெரும் அருளாற்றல் உள்ளவரும் ஆதலின் மக்கள் கோவில் அன்மத்து வழிபட்டு வருகின்றனர். இப் பாடலைச் சிவகாமியம்மை திருக் கோயிலின் பக்கலில் நிகழ்ந்த நாடகங்களின் தொடக்கத்திற் காப்புப் பாடலாகப் படிக்கப்பெற்றது. இக்காலத்திலும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்திற் காப்புப் பாடலாக இப்பாடல் படிக்கப்பெறுகிறது.
5ஆம் பாடலில் இப்புலவர் தம்மைப் பற்றிச் சில குறிப்புகள் குறிப்பிட்டதொடு தாம் சிவகாமியம்மையை நாள்தோறும் வழிபட்டு வந்ததையும் பிறவாப் பேரின்பப் பேறு தமக்கு வழங்கும்படி சிவகாமி யம்மையை வேண்டுவதையும் தெரிவித்துள்ளார்.
* இத் துதிப்பாடல்கள் பாடப்பெற்ற காலம் 18ஆம் நூற்றாண்டு. அப்போது இக் கோவிலிற் சிங்க ஊர்தி இருக்கவில்லை. இருநூறு ஆண்டுகளின் பின் சிவகாமி அன்னையின் அடியவர்களின் முயற்சினால் இலங்கையிலே அதி சிறத்த அமைப்புகள் உள்ள மிக அழகிய சிங்க ஊர்தி கிடைத்துள்ளது. ஆண்டு தோறும் இத் திருத்தலத்தில் அதிசிறப் பாக நிகழும் மகிடாசுர விழாவில் சிவகாமி அன்னை இச் சிங்க ஊர்தி யில் அதிசிறப்பாக எழுந்தருளி அருள் செய்கிறார். இப் பாடலிற் "சிங்கமிசையே வரும் இணுவைச் சிவகாமி சுந்தரியே" எனப்பாடி இருப்பது இப்புலவரின் தீர்க்கதரிசனச் சிந்தனையாற்றலை உணர்த்து
4. சிவகாமியம்மை திருவூஞ்சல்
ஊஞ்சல் என்பது பண்டைக்காலம் முதல் ஆண்பெண் ஆகிய இரு பாலார்க்கும் பொழுதுபேர்க்குக்கு உரிய ஆடல்களுள் ஒன்றாக் உள் ளது. ஆடலொடு பாடல்களும் இடம்பெறும். இவ் வாடலின்போது பாடப்படும் பாடல்களுக்கு ஊஞ்சற் பாட்டு எனப் பெயர் பெறும் பத்துப் பாடல்கள் உள்ளன. ஆதலின் ஊஞ்சற் பதிகம் என்ப் பெயர் பெற்றது. ஊஞ்சற் பதிகம் தமிழில் உள்ள தொண்ணுற்றாறு சிறு பிரபந்தங்களுள் ஒன்பது. இவ்வூஞ்சற்பதிகம் கடவுளுக்கு உரியது. ஆதலின் திரு என்னும் அடையொடு திருவூஞ்சல் எனப் பெயர் பெற் AD. . −
- 14 -

ஊஞ்சல் என்னும் ஆடல் மரநிழலிலும் மண்டப உட்புறத்திலும் நிகழும். மரக்கிளைகளிலும் மண்டப உட்புற மரத்திலும் நீளக் கயிறு களைக் கட்டிக் கீழே பலகை வைத்து ஊஞ்சல் அமைத்து ஒருவரே னும் இருவரேனும் இருந்து ஆடுவர். ஆடும்போது பலர் சேர்ந்து பாடு வர். குழந்தைகளுக்கும் இளம் வயதினர்களுக்கும் ஊஞ்சல் ஆடல் மிக விருப்பமான்து. திருவாசகத்தில் உள்ள திருப்பொன்னூஞ்சல் என்னும் பதிகம் முதல் ஊஞ்சற் பதிகம் ஆகும்.
தொடக்கத்தில் மக்களுக்கு உரியதாக இருந்த ஆடல் நாளன்ட விற் கடவுளருக்கும் உரியது ஆயிற்று. மக்கள் தாம் வழிபடு கடவுளி டம் உள்ள பேரன்பினால் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் அமைத்து தாம் வழிபடு கடவுட் திருவுருவை அதில் எழுந்தருளச் செய்து ஊஞ் சல் ஆடச் செய்து பாடல்களைப் பாடிப் பரவிப் பெருமகிழ்வு எய்தி னர். ஆண்டு தோறும் திருக்கோயில்களில் நிகழும் தேர்த்திருவிழா வின் பிரதான வழிபாடாகத் திருவூஞ்சல் வழிபாடு உள்ளது. ஆண்டு தோறும் ஆண்டுத் திருவிழாக்களும் தேர்த் திருவிழாவும் பெருஞ் சிறப் பாக நிகழ்வன. ஆண்டுதோறும் பெருஞ் சிறப்பினதான தேர்த் திரு விழாவிற் திருவூஞ்சற் பதிகம் படிக்கப்பெறுவதாற் திருவெம்பாவைத் திருப்பதிகம் போல மக்கள் அனைவரும் அறிந்த பெருஞ்சிறப்பு உள் ளது. இத் திருவூஞ்சற் பதிகமும் இக் கோவிற் தேர்த்திருவிழா நாளிற் பாடப்பெறுகிறது. மக்கள் பக்தியொடு கேட்டுப் பயன்பெறுவர்,
திருக்கோயிற் கிரியை வழிபாட்டிற் திருவூஞ்சற் பதிகம் பெருஞ் சிறப்பினதாக உள்ளதாதலின் பல திருத்தலங்களுக்குத் திருவூஞ்சற் பதிகங்கள் உள்ளன. இவைகளைப் பெரும் புலவர்கள். ஆக்கியுள்ள னர். இலங்கைத் திருத்தலத் திருவூஞ்சற் பதிகங்களுள் இவ்வூஞ்சற் பதிகம் இரண்டாவ காகப் பாடப்பெற்றது ஆகும். முதற் பாடப் பெற்ற ஊஞ்சற் பதிகம் அராலிப் பத்திரகாளி அம்மன் ஊஞ்சற் பதி கம் ஆகும். 家
திருவூஞ்சற் பதிகங்கள் ஒரே அமைப்பின ஆகவும் எளிய, இனிய தமிழ் நடையில் அமைந்தன ஆகவும் உள்ளன. திருவூஞ்சற் பதிகக் திற் சம*க் கோட்பாடுகளும் கடவுட் பேரருட் தத்துவங்களும் வழி படு கடவுளின் பெருஞ் சிறப்புகளும் உணர்த்தப் பெறுகின்றன. திரு ஆஞ்சற் பாக்களைப் படித்தலால் உள்ளத்திற்குப் பேரமைதியும் பேரானந்தமும் உண்டாகின்றன. அதனாற் கடவுட் பெரும் பேற்றைப் பெற வழி ஏற்படுகின்றது.
இத் திருவூஞ்சற் பதிகத்தை அன்பொடு படிப்பவர்களும் கேட்ப
வர்களும் சிவகாமி அம்மையின் அருளுக்கு உரியவராய் இகபர நன்மை களைப் பெறுவர். A *
- 15 -

Page 16
இப்புலவர் சிவகாமியம்மை திருவூஞ்சற் பதிகம் பாடியுள்ளார் என இலங்கைச் சாகித்திய மண்டலம் வெளியிட்டுள்ள ஈழத்துக் கவி தைக் களஞ்சியம் என்னும் நூல் குறிப்பிட்டுள்ளது. கிடைத்த சிவகாமியம்மை திருவூஞ்சற் பதிகப் பிரதி ஒன்றில் இவ்வூஞ்சற் பதி கத்தைத் தும்பளை பிரம்மபூரீ ம. முத்துக்குமாரசாமிக் குருக்கள் அவர் கள் பாடியதாக எழுதப்பெற்றுள்ளது.
நூற் சிறப்பும் நூற் பயனும்
இந் நூற் பாடல்கள் இலக்கிய வளம் உள்ளன. சிறந்த சொன்ன யமும் பொருணயமும் உள்ளன. ஒசை நயமும் சுவையுணர்வும் உள் ளன. உவமை உருவகம் முதலிய அணிகளும் உள்ளன. இப்பாடல் கள் இலக்கிய ஆய்வுக்கும் வரலாற்று ஆய்வுக்கும் பயன் உள்ளன. இவற்றினும் மேலாக இப் பாடல்கள் அருளாற்றல் உள்ளன. சிவகாமி யம்மையை நாள்தோறும் வழிபடற்கு உரிய சிறந்த துதிப்பாடல் களாக் உள்ளன. சிவகாமியம்மைக்குக் குறைகளை முறையிடுவதற் கும் சிவகாமியம்மையிடம் அருள் வேண்டற்கும் உரியன. இப் பாடல் களை.ஓதிப் பலர் பயன் பெற்றுள்ளனர்.
இப் ப்ாடல்களை நாள்தோறும் ஒதுபவர்களும் கேட்பவர்களும் வறுமையும் நோய்களும் பகைமையும் இல்லாத்வர் ஆவர். இம்மைச் செல்வம் அனைத்தும் பெறுவர். உயர்ந்த சிறந்த நல்வாழ்வு வாழ்ந்து பெருஞ் சிறப்புப் பெறுவ்ர். சிவகாமி அன்னையின் அருளுக்கு உரிய வர் ஆவர். மறுமைப் பயன்களும் பிறவாப் பெரும் பேறும் பெறு வர். ஊரும் நாடும் உலகும், சிறந்த வளமும் உயர் ந்த அறமும் நிறைந்த அருளும் பெற்று விளங்கும்,
سے 16 مماس۔

4.
இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் அருளிய சிவகாமியம்மை தமிழ்
1. சிறை நீக்கிய பதிகம்
கருணாகர விநாயகரை வேண்டல் எந்தையே யெந்நாளு மிறைஞ்சன்ப ரகத்துறையுந் தந்தையே யடியேனைத் தாபரித்தாண் டருள்புரிவாய் சுந்தரஞ்சே ருரும்பைவளர் சோதியே யாறுமுகக் சுந்தனுக்கு முன்னவனே கருணாகரப் பிள்ளையே.
சிவகாம அன்னையை வேண்டல்
ஆத்தாளே யெங்க ளனைவரையும் பூத்தவண்ணம் காத்தாளே மன்னுமிரு களபமுலை சுமந்தகிலம் பூத்தாளே செங்கமலப் பூத்தாளே யென்னிதயஞ் சேர்த்தாளே சீரினுவைச் சிவகாம சுந்தரியே.
தன்னிலையைத் தெரிவித்தல்
பாரிடத்தும் மற்றிடத்தும் பாவியேற் குற்றகுறை யாரிடத்தே யான்சொல்வே னனுசரிப்பார் யாருமில்லை சேரிடத்தே நின்றவிந்தச் சிறியேன்றன் வினைதீர்க்கச் சீரிடத்தே மல்கினுவைச் சிவகாம சுந்தரியே.
அன்பர்க்கு அருள்புரிய வேண்டல் எப்பிழைதான் செய்தாலு மிரங்கியில்லுர் மானிடர்க்கு வெப்புவினை நீக்கியே மிகுசுகந்தந் தாளுமம்மா அப்பணியுந் பொற்சடிலத் தாதையொரு பாற்கண்ணே செப்பினுவை வாழுமெங்கள் சிவகாம சுந்தரியே.
மூன் அருள் செய்தமை கூறல் பெற்றவணி யானுனது பிள்ளையுல கோரறிய அற்றமிலாச் செல்வந்தந் தருளிவளர்த் தன்புசெய்தாய்
இற்றைவரை யுந்தனியே யான்வருந்த வெங்கொளித்தாய் சிற்றிடைமின் னன்னையே சிவகாம சுந்தரியே,
- 17 -

Page 17
10.
சிறைத் துன்பநிலை தெரிவித்தல்
சீலைப்பேன் நுளம்பெறும்பு தெள்நுள்ளான் மூட்டைகடி சாலப்பார் சேயனவன் மனமிரங்கான் சற்றுமினி மாலைப்பான் மேவமுன்னம் வந்துசிறை நீக்கியருள் சேலொப்பாம் உண்கண்ணெம் சிவகாம சுந்தரியே,
சிறைக் கதவு திறத்தல்
துப்பூட்டு மென்றனது துன்னார்தாம் சிறைப்படுத்தும் அப்பூட்டுந் தீயவர்தம் அரியசிறை வீட்டிருக்கும் இப்பூட்டும் நிர்ப்பூட்டா யென்சிறையை நீக்கியருள் செப்பூட்டுந் திருப்பொற்றாட் சிவகாம சுந்தரியே.
சிவகாமி அன்னை நேரில் வந்து அருள் புரிந்தமையைத்
சந்திரோத யமுகத்துச் சாற்றவொண்ணாத் தோற்றமொடு வந்தேநின் திருவாயில் வைத்திருந்த பேரமிர்தம் தந்தாயன் றேயுனது தாண்மலர்த்தாள் மேவவருள் சிந்தாமணி யேயினுவைச் சிவகாம சுந்தரியே.
பகைவரைச் சிறையில் இட்டமை கூறுதல்
என்னைச்சி றைவைத்துப் பின்புவந்த என்பகைவன் தன்னைச்சி ஈறைவைத்துத் தாரணியெல் லாம் புகழச் சென்னியின்மேற் சுடர்ச்சுடரே சிவக்கொழுந்தே யன்னையே
துன்னிச்சி றைதீர்த் தாய் சிவகாம சந்தரியே.
பேரருட்பேறு பெற்றது தெரிவித்தல்
வந்தாயோர் அருமருந்து வாழ்வெனக்குண் டாகவென்று தந்தாயென் மட்டோவெம் தலைமுறைமூ வேழுமினி யுய்ந்ததுவே யுய்ந்ததுவே நாங்களோர் குறையுமில்லேம்
செந்தாம ரைமலர்த்தாட் சிவகாம சுந்தரியே.
--سس 18 سس۔

l
2, சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் (பன்னிருசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்)
சீரணி முக்கோ ணத்து விருக்குந் தேவிசட் கோணத்துட்
சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கெளமாரி நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந் தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே"
2. தானா மோங்கா ரத்துட் பொருளே சமையா சமயத்தி
சட்கோ ணத்து விருக்குங் குமரி சத்தன் பரிசத்தி மானா ரரசி சர்ப்பா பரணி மாதங்கி கெளரி
மாலுக் கிளையாள் பத்மா பதத்தி மதுரஞ் சேர்வசனி நானா மணிபொலி சோதிக் கண்டல நளிர் பொற் குழையழகி
நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே தேனார் நறுமல ரளகக் குயிலே திக்கெட் டும்புகழும்
திருவள ரினுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே.
சந்தம் நெருங்கிய நறுமலர் கொண்டு கமலத் துணையடியைக் காதலொ டுநாளுந் துதிசெய்பவர்க்குக் கன செல்வமுண்டாம் அந்திய காலத் தந்தக னுமேவந் தணுகா னல்லாமலும்
அடையா வீட்டின தின்பம் பெற்றிங் கருளுட னின்புறுவர் உந்த னுடைச்சீர்ப் பெருமை யாயிர நாவுடை வாளரவும்
உரைத்தற் காகா வென்றரு மறைக ளுரைத் தன வாலடியேன் சிந்தை யுயாவுதல் கொண்டொரு நாவாற் செப்பத் தகுவனவோ
திருவள ரினுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே
எள்ளுக் குள்ளே யெண்ணெய் தாமென எங்கும் நிறைந்தாயே
என்பா லிலையோ யாவு மறிந்தா யென்துய ரறியாயோ உள்ளுக் குள்ளே உன்னை யல்லால் வேறொரு தெய்வத்தை
உள்ளே லுன்னை யல்லா திவ்வுயிர்க் குறுதுணை யுண்டாமோ புள்ளிப் புலியின் றோலைப் புனையும் புனிதன் பைங்கிளியே
பொங்குஞ் சுடரே யடியேற் சருளைப் பூரித் திடுவாயே தில்லம் பழனந் திசையெங் சணுமடு தென்னினு வைப்பதிவாழ்
தெய்வக் குயிலே சைவச் சுடரே சிவகாமித் தாயே.
. முத்தா னத்தைங் கரனைக் கந்தனை முன்னா விடுமான்ே
மூவா முதலே தேவா னவளே முருகு விரிக்கின்ற கொத்தா ரிதழிச் சடையாய் விடையாய் தொண்டைக் கணியுதரக்
கோதாய் தோகாய் பாகாய் ஞானச் சுடரே யடியேனுக்
- 19 -

Page 18
8.
கெத்தா சுவுமுற் புருடா சுவுமென் றெண்ணும் பேரறிவும்
ஏற்றமு மேதகு திருவும் பெறவே யிரங்கிக் கருணைசெய்
சத்தாய் ஞான சித்தா யெங்குஞ் செறிவா யுறைபவளே
திருவள ரினுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே
. அரியய னிந்திரன் முதலா மற்றுள வமரரு முறைமுறையே
அஞ்சலி செய்து மணஞ்சலி யாநிற்ப ஆளிப் பிடரேறித் தரியல ராயம ராடிய மகிடன் தலையை யறுத்தவளே
சதுர்வே தத்துட் பொருளே அருளே தழையுங் காரணியே துரியம தாகிய வெளியாய் அளியாய் சோதிப் பூரணியே
தொண்ட ரறியறி வுக்கள வாகிய சிவையே யபிராமி திரிபுர தகனி பரிபுர பதத்தி தேவி ஆனந்தி
திருவள ரினுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே.
பருவத ராசன் தருபுத் திரியே பங்கய யுபசரணி
பன்னக பூரணி கன்னலஞ் சாபரி பஞ்சாட் சரருபி கருவங் கொள்துட்டர் முடித்தலை தத்தக் கதிர்வாள்
கொடுவீகம் கன்னிகை சரபஞ் சரியே காட்சரி கருதிய காற்சரியென் இருதய மீது குடிகொண் டென்று மிருக்குங் காரணியே
எள்ளள வாகுதலுன்செய லென்னை யிரட்கித் திடவருளாய் சிறுபிறை லாணுத லாளே யழகிய திரிலோ சனவல்லி
திருவள ரினுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே.
எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத்
தில்லையோ எல்லா மறிந்தநி யென்றனில் லாமையும் பிணியுந்
தெரிந்திடாயோ உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத்தாலுமுண்டோ உலகத் துழுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
பிள்ளைப் பெறாமுழு மலடியோ வுலகெலாம் பெற்றதும்
YA பொய்தானோ பேய்ப்பிளை யாகிலும் பெற்றதாயிகழ்வளோ பிழைபொறுத் ሥ துண்கருணை
அள்ளித் தராதெனைத் தள்ளிவிடல் நீதியோ யினுவைப்
பதியிருக்கும் அரிவையே மலையரசன் அருமை மகளே சிவகாமித் தாயே.
سس۔ 20 مس۔

9.
0.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
நின்னடைக் கலமல்லா லொருவர் துணையில்லை
உதவி வேறு செய்வாரு மில்லை உன்னடி மையா னெனவந் திருக்கமற்
றொருவர் பின்னே இனியான் செல்வதோ பின்னொரு வரைக்கெஞ் சுவதாலுனக் கென்ன பெருமை யோவது பெருமை யில்லை. என்னை நின் பிள்ளை யெனப்புரப் பதுன்கடன்
இசைவள ரிணுவைச் சிவகாமித் தாயே,
கன்னலஞ் சொல்லியே அபிராம வல்லியே
கருதருஞ் சிவையே மெல்லியளே கச்சியில் மன்னுகா மாட்சியே மதுரைமீ னாட்சியே
காசிவிசா லாட்சியே கருணைசெய் வாயே அன்னநற் கன்னியே மருவுபசுங் கிள்ளையே அரியய னுற்பன மூலமே அகிலமுந் துன்னியே பரவும் துர மறைப் பொருளே
தொல்லிணு வைப்பதிச் சிவகாமித் தாயே.
3 சிவகாமியம்மை துதி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
சங்கந் தழைக்க அருள்செய்யுந்
தலைவி எனைப்போ லித்தலத்திற்
பங்கப் படுமா னிடர்க்கருள் செய்
பரையே யுன்னை நிதம்பாடிப்
பொங்கிச் சிந்தை மிகக்கலங்கிக் கவலும் அடியா ரிடர்நீங்கச்
சிங்க மிசையே வருமினுவைச்
சிவகாம வல்லியுணக் கடைக்கலமே.
. மங்கை மனோன்மணி அபிராமி
திருமாலுக் கிளையாள் சிவகாமி சங்கரி ஐயை பார்பதி
கெளரி துர்க்கை மகேசுவரி பங்கய வதனி நீலிசூலி
பராபரை திரிபுர தகனி அங்கயற் கண்ணி சதுர்வேதத்தி
சித்திகள் அனைத்தும் அருள்கவே.
me All -

Page 19
(எண் சீர் ஆசிரிய விருத்தம்)
மருப்பொன்று கயமுகக் கருணாகரக் கடவுள்துணை
மயிலூருஞ் செங்கை வடிவேற் செவ்வேள்துணை வருஞாளியூர் மாணிக்க வைரவ சுவாமிதுணை
மாசத்தி பத்திர காளியாந் தாய்துணை கருணையுள கைலாயன் இளந்தாரி துணையாம்
காப்பதுன் கடனெனத் திருவடி தொழுதோம் திருமருவு இணுவை நகர்ச் சிவகாமித் தாயே
செய்பிழை பொறுத்துச் செயமெமக் கருள்கவே.
பத்தியொடு பரவுவோர்க்கப் பரகதி யருளும்
பரமே சுவரியே சிவகாமித் தாயே
எத்துக்கிவ் வீணனை யிங்குநீ படைத்தாய்
இருவினைப் பவக்கடல் தன்னில் மூழ்கவோ
சித்திமிகு சிதம்பர நாதன் சேயாம்
செந்தமிழ் வித்தகன் சின்னத்தம்பி நாவலன்
நித்தநின் மலரடி பரவுகின்றேன் முத்தியது
தந்தருள் இணுவைநகர்ச் சிவகாமி யுமையே.
4. சிவகாமியம்மை திருவூஞ்சல் (எண்சீர் ஆசிரிய விருத்தம்)
திருமார்ப னயன்முனிவர் தேவர் நாதன்
சித்தர்வித் தியாதரரா திபத்தர் போற்ற மருமாலை யிதழிபுனை பரமர் பாதம் ܀-
பரவுசிவ காமிதன்மே லூசல் பாட நரராசர் புகழினுவை நகரில் வாழும்
நம்பனடி யவர்நினைந்த வரங்க ணல்கப் பரராச சேகரபூ சிதனாம் முன்னோன்
பதுமமல ரடியிணைகள் பரவு வோமே.
கொண்டல்வரை கனகவரை விட்ட மாகக்
குலவுகுலா சலங்கள்மணிக் கால்க ளாகப் பண்டைமறை யொருநான்குங் கயிற தாகப் பலபுவன கோடிகள் பொற் பலகை யாக அண்டநடு மன்னுவிராட் புருடன் நல்ல
வரிகொள்ந வரத்தனமணிப் பீட மாக மண்டலமெல் லாம்புகழு மினுவை வாழும்
மாதுசிவ காமவல்லி ஆடீ
ー 22 ー

5S
விண்ணுலவு மிருசுடர்கள் தீப மாக
விளங்குபல தாரகைகள் விதான மாகத்
தண்ணுலவு சந்தனமா முதல வைந்துந்
தருtலர்கள் நறுமலர்ப்பூம் பந்த ராக
எண்ணுலவு மிளந்தென்றல் கவுரி யாக
இலங்குபகி ரண்டம்மணி மஞ்ச மாக
அண்ணல்வளந் திகழினுவை தன்னில் வாழும் அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்.
செய்யவெண்டா மரைமலரிந் திரைசீ ராணி
செகமுழுது நிழற்றுவெள்ளைக் கவிகை கொள்ளத் துய்யபகி ரதிதவளக் கவுரி வீசத்
தோகையபி ராணிசெம்பொற் படிக மேந்த ஐயைபை ரவிமுதலோ ரடப்யை யஞ்சொல்
அஞ்சுகமஞ் சக்குயில்கொண் டருகு நிற்பப் பெய்யுமுகில் வளர்சோலை யிணுவை வாழும் பெண்ணரசி சிவகாமி யாடீ ரூஞ்சல்,
. தகரமணங் கமழ்மணிப்பொன் மவுலி மின்ன
சசிக்கலைகள் மானுநெற்றி யணிகள் துன்ன மகரவணி குண்டலத்தோ டிகல நீல
வரிக்கயல்கள் பாயமணி யாம்பல் மேவ நிகரிலாமைந் தர் சொரிநீ லப்பூ வார
நிரைவடமுத் தரியமிசை நிழல்கள் வீச அகவளமும் பெருகிவள ரினுவை வாழும் அம்மைசிவ காமவல்லி ஆடீ ரூஞ்சல்,
தும்புருநr ரதர்முதலோர் கீதம் பாட
துய்யவுருப் பசிமுதலோர் நடன மாட அம்பரமே லவர்பாரி சாத மேவு
மலர்மழைபொன் மழைபோல அள்ளி வீசச் செம்பதுமக் கன்னியொடு நாவின் மாதும்
திகழ்மாத ரிருகையினால் வடந்தொட் டாட்ட அம்புவியில் வளஞ்சேர்நல் இணுவை வாழும்
அம்மைசிவ காமவல்லி யாடீ ரூஞ்சல்.
மந்திரமே முதலான ஆதி தேவர்
மன்றினிடை பரவு மன்பர் வாசர்
சிந்தைவந் திணிதிருக்கும் வானு லாவும்
திங்கள் வகி ரெனத்திகழ்கிம் புரிசே ரொற்றைத்

Page 20
10.
11.
தந்தனொடு கந்தன்மடி மிசையே மேவச்
சகலவுயிர் களும்வானத் தவரு முய்யச்
செந்திருவா ழினுவைநகர் தன்னில் வாழும் சிவகாம சுந்தரியே யாடீ ரூஞ்சல்,
. கதிராரு மணியணிகுண் டலங்க ளாட
கனகமணி யணிவளைகொள் கவின்க ளாட புதிதான கொண்டையணி குச்சு மாட
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தே யாட மதிபோலும் நுதலிலனிச் சுட்டி யாட
வனசமல ரடியினைகள் சிலம்பு மாட அதிகவளம் பெருகிவள ரினுவை வாழும்
அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்,
. பவர் முதலா முருத்திரர்பண் ணவர்கள் மூன்று
பத்துடனே முக்கோடி பதுமன் மாலோன் இவர்களுட னிந்திரன்கா லன்தீப் பேரோன்
இனியகூர்மாண் டன்வாயு வொடள கேசன் தவர்களாக மங்கள்சதுர் வேத மோதத்
தசகோடி சத்திகளும் பாங்கின் மேவ அவனிபுக Nணுவைநகர் தன்னில் வாழும் அபிராமி சிவகாமி யாடீ ரூஞ்சல்.
உரகபதி நகரெட்டுங் கால்க ளாக
ஓங்குபுலி யதளிருப்பா வும்பர் மேலா
விரவுமொரு விதானமா யுடுக்கள் பூவா
விதுவுடனே கதிர்களொளி யாடி யாகப் பொருவிலகி லாண்டம்நிறை மன்ற மாகப்
பொருந்தியுயிர் புரந்தருளு மன்னர் மன்னன் வரையரச னருள்குமரி யினுவை வாழும்
மாதுசிவ காமவல்லி யாடீ ரூஞ்சல்,
தத்துபரி யுதயாத் தமனங் காட்டித்
தருமருண இருவரையாந் தம்பம் நாட்டிச் சுத்ததம னியவரையாம் விட்டம் பூட்டித்
துருவமெனு மிருவடங்கள் தொட்டே யாட்ட வைத்தசெக மண்டலமாம் ரத்ன பீடம்
மலரினுவைச் சிதம்பரமாம் வளவில் மேவும் சித்தமகிழ் நித்யநட ராச ரோடு
சிவகாமி சுந்தரியே யாடீ ரூஞ்சல்,
- 24 -

12.
l
2.
ஐயையே யம்மையே யாடீ ரூஞ்சல்
அருளுதவும் ஆரமுதே யாடீ ரூஞ்சல் துய்யவுப நிடதப்பொருளே யாடீ ரூஞ்சல்
சோதியேயெம் ஆதியே யாடீ ரூஞ்சல் வையகத்தைப் பெற்றவரே யாடீ ரூஞ்சல்
வானோர்கட் கரியவரே யாடீ ரூஞ்சல் செய்யசிவகா மப்பொருளே யாடீ ரூஞ்சல்
தேவர்தொழு சிவகாமி யாடீ ரூஞ்சல்:
6. சிவகாமியம்மை தமிழ் - உரைக் குறிப்புகள்
சிறை நீக்கிய பதிகம்
(பொழிப்புரை) எந்நாளும் துதிசெய் அன்பரின் உள்ளத்து உறை யும் தந்தையே! ஆறுமுகக் கந்தனுக்கு மூத்தவனே உரும்பராய் நகரில் எழுந்தருளியுள்ள கருணாகரக் கடவுளே! அடியேனை ஆதரித்து அருள்புரிவீராக.
(அரும்பதவுரை) தாபரித்தல் - பாதுகாத்தல், உரும்பை -
உரும்பராய். (விளக்கவுரை) அன்பருகத்துறையும் = அன்பர் + அகத்து +
Ք-6օքսյւծ.
உரும்பை - இணுவை ஊருக்குக் கிழக்கு எல்லையில் உள்ள் ஊர். சைவ ஆலயங்கள் நிறைந்த ஊர். கல்வி வளமும் பொருள் வள மும் தமிழ் வளமும் உள்ள ஊர். கருணாகரக் கடவுள்-கருணா கர விநாயகர், இக்கோயில் கருணாகரத் தொண்டமானால் நிறுவப்பெற்றது. இக் கோவிலிற் சோழர் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கருணாகர விநாயகர் முதலிற் துதிக்கப்பெறும் பெருமைக்குரியர். வேண்டுவன வழங்கும் அருளாற்றல் மிக்கவர். புலவரின் குல தெய்வம். ஆதலின் அவரைப் புலவர் முதலிற் துதித்தார்.
(பொ - ரை) எங்கள் அனைவரையும் பெற்றவளே உலகங் களைத் தோற்றுவித்தவளே! அனைவரையும் காப்பவளே செந் தாமரைமலர்போலும் திருவடிகளை என் உள்ளத்தில் வைத்த வளே! சிவகாமி அன்னையே! w
(அ - ரை) ஆத்தாள் - தாய். பூத்தாள் - தோற்றுவித்த வள்: "ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம் பூத் தாளை" (அபிராமி அந்தாதி - செய்யுள் 101). அகிலம் - உலகம், பூத்தாள் = பூ + தாள், பூவைப்போலும் திருவடி.
on 25 -

Page 21
(வி - ரை) உலகங்களையும் உயிர்களையும் படைத்துக் காக்கும் சிவகாமித்தாய், சிறையில் உள்ளதன்னையும் காப்பார் என்பது புலவரின் உள்ளக் குறிப்பு.
. (பொ - ரை) உலகிலும் வேறிடங்களிலும் எனக்கு உற்ற குறையை
பாரிடம் சொல்வேன்? என்னை ஆதரிப்பவர் உன்னைவிட வேறு எவரும்இலர். மிக்க கருணையுள்ள சிவகாமித்தாயே" சிறையில் இருக்கும் சிறியேனது குறையை நீக்குக.
(அ - ரை) அனுசரித்தல் - ஆதரித்தல், சீர் - சிறப்பு, சேரிடம் - சிறைக்கூடம்.
(வி - ரை) இடம் (1) ஏழாம் வேற்றுமை உருபு (2) இடம் - பெயர்ச்சொல். சீர்க்க -வியங்கோள் வினைமுற்றுவேண்டற்பொரு ளில் வந்தது.
(வி-ரை) யாரிடத்தே சொல்வேன், அனுசரிப்பார் யாருமில்லை தன்னைச் சிவகாமி அன்னை காக்குதல் வேண்டும் என்பதை
வலியுறுத்துவன.
(பொ-ரை) கங்கையை அணிந்த சடையினையுடைய சிவபிரா னது பாதியைக் கொண்டவளே! இணுவை வாழும் சிவகாமி அன்னையே! என்ன பிழையைச் செய்தாலும் இவ்வூர் மக்களின் கொடிய வினைகளை நீக்கி மேலான நன்மைகளைத் தருவா
f
(அ-ரை) வெப்பு-கொடுமை, அப்பு-நீர்,சடிலம்-சடை, தாதை -தந்தை; சிவபிரான், "அப்பணி செஞ்சடை ஆதிபுராதனன்" (திருமந்திரம் 343), அப்பணியும்= அப்பு + அணியும். அப்பு-நீர், கங்கை நதி,
(வி-ரை) இவ்வூரவர்களைக் காக்கவேண்டும் என்பதனால் தன் னையும் காக்கவேண்டும் என்பதனை உணர்த்தினார்.
(பொ-ரை) சிறிய மின்னை நிகர்த்த இடையினை உள்ள தாயே! சிவகாம அன்னையே! நீ என் தாய்; யான் உன் மகன். குறை வில்லாத செல்வத்தை எனக்குத் தந்து என்னை வளர்த்தாய் யான் இடருற இதுவரை எங்கே மறைந்திருக்கிறாய்.
(அ-ரை) அற்றம்-குற்றம். மின்-மின்னல், சிற்றி  ைப. 9 சிறு -- $(604چ« (வி-ரை) தமக்கும் கிவகாமி அன்னைக்கும் உள்ள மிக்க உரி
மைத் தொடர்பினையும் தான் அடைந்த துன்பத்தையும் கல் லும் உருகும் வகையிற் புலவர் கூறியுள்ளார்.
ܗܩ 36 ܚ

6. (பொ-உரை) கயல் மீன்போலும் அழகிய கண்களை உள்ள சிவ காமி அன்னையே பேன்-நுளம்பு -தெள்ளு-துள்ளான்-மூட்டை முதலியவைகளின் தொல்லை பொறுக்கமுடியாமலுள்ளது. அந் நியரான பறங்கிய ஆட்சியாளர் சிறிதும் இரங்கார்; சூரியன் மேற்றிசையை மேவமுன் என்னைச் சிறையிலிருந்து விடுவிக்க.
(அ-ரை) சால-மிக உள்ள,சேயன்-பறங்கிய அதிபன், மாலைமாலைக்காலம், பால் - சூரியன், சேல்-கயல்மீன். உண்கண்
குறள் குறிப்பறிதல்).
(வி ரை) பான்மேவ = பால் + மேவ, "மெலிமேவின்னணவும்" என்றும் விதியின்படி லகரம் னகரமாயிற் று. சேலொத்த உண்கண் என்பது உவமையணி. சேயன்-சேய்மையில் உள்ளவன். அக் காலத்துச் சிற்ைச்சாலை நிலையினையும் சிறையில் அனுபவித்த அதி துன்பங்களையும் இச் செய்யுளாற் புலவர் உணர்த்தினார்.
7. (பொ - ரை) செம்பஞ்சுக் குழம்பு அணியும் அழகிய திருவடிகளை யுடைய சிவகாமி அன்னையே! வலிமையுள்ள பகைவர் என்னைச் சிறைப்படுத்திய கொடுமையும் இச் சிறைக் கூடத்தின் பூட்டும் தகரும்படி கொடிய சிறை யை நீக்கி அருள்க.
(அ - ரை) துப்பு - வலிமை, துன்னார் - பகைவர், நிர்பூட்டாக - பூட்டு இல்லாம லாகும்படி, செம்பு - செம்பஞ்சு.
(வி - ரை) அப் பூட்டு= அ + பூட்டு, அ - படர்க்கைச்சுட்டு. செப்பூட்டும் = செப்பு + ஊட்டும். "மென் றொடர்க்குற்றுகளுங் களுட் சில வன்றொடராகா மன்னே' என்னும் நன்னூல் இலக் கண விதியில் "மன்னே" என்னும் மிகையால் "செம்பு’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் "செப்பு" என வன் றொடர்க் குற்றுகரச் சொல் ஆயிற்று.
8. (பொ - ரை) சிந்தாமணி அனையவளே சிவகாமசுந்தரியே! சந்திரரை ஒத்த முகமும் உரைக்கமுடியா அழகுத் தோற்றமும் உள்ள திருவுருவுடன் வந்து யான் உமது திருவடிமலர்கள் அடை யும் படி அன்று உனது திருவடியில் இருந்த பேரமிர்தம் தந்து அருள் செய்தாய்.
(அ- ரை) சிந்தாமணி - தேவலோகத்தில் உள்ளது; வேண்டிய செல்வங்களைக் கொடுப்பது.
V
ー 27ー

Page 22
t
(வி-ரை) சிந்தாமணி, தாண்மலர் - என்பன உருவகங்கள், சந்தி ரோதய முகம் உவமையணி.
சிவகாமி அன்னை தனக்கு அருள்புரிந்த அருஞ்செயலைப் புலவர் தெரிவிக்கின்றார்.
. (பொ-ரை) தலையில் விளங்கும் ஒளியுள்ள மணியே! சிவகாமி
அன்னையே உலகம் புகழும்படி எனதுசிறை நீங்கவும், என்னைச் சிறைப்படுத்திய பகைவர் சிறைப்படவும் அருள் செய்தாய்.
(அ - ரை) தாரணி - உலகம். சுடர் - ஒளி, துன்னி - விரைந்து, சென்னி - தலை. (வி - ரை) புலவரின் சிறை நீங்கியது மன்றி அவர் சிறை செல் வதற்குக் காரணமாயிருந்த் அவரது பகைவர் சிறைக்கு ஆளாயி னர் என்பதைப் புலவர் இப்பாவினால் உணர்த்தினார்.
(பொ - ரை) செந்தாமரை போலும் திருவடிகளையுடைய சிவ
காமி சுந்தரியே! நல்வாழ்வு எனக்கு உண்டாகும்படி அருமருந் தாக வந்தவளே யாமேயன்றி எம் இருபத்தொரு தலைமுறை யினரும் உய்ந்தனர்; எங்களுக்கு இனி ஒருகுறையும் இல்லை. (அ + ரை) மட்டு- அளவு,
(வி - ரை) செந்தாமரைத்தாள் - உவமையணி.
சிவகாமியன்னையின் மகிமையையும் பயனையும் புலவர் வியந்து போற்றுகின்றார்.
5. சிவகாமியம்மை துதி
1. (பொ. ரை) சிங்கத்தை ஊர்தியாகக் கொண்ட சிவகாமி அன்
னையே தமிழ்ச் சங்கம் வளரும்படி அருள்செய்யும் உலகத் தலைவியே! என்னைப்போல் இவ் உலகிலே துன்புறும் மணி தருக்கு அருள் செய்யும் சக்தியே! உன்னை நாள்தோறும் உள் ளம் பாடி அருள் பெறாது வருந்தும் அடியவர்களின் துன்பந்தீர அருள்க.
(அ + ரை) பங்கப்படுதல் - துன்புறல், கவல்தல் - வருந்துதல் (வி - ரை) வல்லி - உவமையாகுபெயர்.
மிகப்புராதன காலத்திலேயே தமிழ் மொழியை வளர்க்கச் சங் கம் தோன்றியது; இதனாலே சங்கத்தமிழ் என்னும் Guurf
一 驾5 一

3,
4.
வந்தது "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி" என அப்பரும், "சங்கத்தமிழ் மூன்றும் தா" என ஒளவையாரும் அருளினர். அனைத்துச் செயலும் உமையின் செயலே ஆதலின் தமிழ் வளர்க்
கச் சங்கம் தோன்றியது உமையின் அருளே என்றார் புலவர்.
(பொ - ரை) மனோன்மணி! அபிராமி திருமாலின் சகோ தரியே! சிவகாமி சங்கரி ஐயை பார்வதி கெளரி துர்க்கை மகேசுவரி தாமரைமுகத்தினள் நீலி குலி பராபரை திரு புரதகனி அங்கயற்கண்ணி சதுர்வேதத்தி இகத்துக்கும் பரத்துக் கும் உரிய சித்திகளை அருள்க.
(அ- ரை) வதணி - வதனத்தையுடையவள். தகனி - தகனம் செய் தவள், வதனம் - முகம், தகனம் - எரிதல், சதுர்வேதம் - நான் மறை. இகம்-இம்மை, பரம்-மறுமை.
(வி-ரை) மங்கை முதலியன விளிப் பெயர்கள். உமையின் திருப் பெயர்களைச் சொல்லி அருள் வேண்டினார் புலவர். சிங்க மிசையே வரும் எனப் புலவர் முன்பாடியதற்கிணங்க இன்று அழ கிய சிங்க ஊர்தி ஒன்று இக் கோயிலில் இருக்கிறது. ஆண் டு தோறும் பெருஞ் சிறப்போடு நிகழும் மகிடாசுர விழாவில் சிவ காமி அம்மை இச் சிங்க ஊர்தியில் எழுந்தருளுகிறாள்.
(பொ-ரை) அழகிய தென்னை, வில்வம் ஆகிய மரங்களுடன் பூஞ்சோலைகள் சூழ்ந்ததும் திருமகள் விளங்குவதுமான இணுவை நகரில் சிதம்பர வளவு என்னும் இடத்தில் வீற்றிருந்து அருளும் சிவகாமி அன்னையே மலையரசன் மகளே! எங்களுக்கு அருள்க. (அ-ரை) சுந்தரம்-அழகு, செந்திரு-திருமகள், இந்து-சந்தி ரன், பருவதம்-மலை. (வி-ரை) வானத்திந்தனி = வானத்து+இந்து+அணி "சுந்தரச் செந்திருமேவு" என்பன இணுவையின் சிறப்பை உணர்த் து கின்றன.
(பொ-ரை) யானைமுகத்தையுள்ள கருணாகர விநாயகன் துணை செய்க. மயில் ஊர்தியும் வேலும் உள்ள கந்தப்பெருமான் துணை செய்க. மகாவல்லமையுள்ள பத்திரகாளி துணை செய்க. கருணை யுள்ள கைலாயனாகிய இளந்தாரிப் பெருமான் துணை செய்க. தெய்வத்தன்மை உள்ள இணுவை நகர் வீற்றிருக்கும் சிவகாமி அன்னையே! நாங்கள் உங்களைத் துதிக்கின்றோம். எங்கள் அனைவரையும் காத்தல் உங்கள் கடனாம், நாங்கள் செய்த பிழைகளைப் பொறுத்து அருள் செய்க.

Page 23
(அ-ரை மருப்பு-தந்தம், ஞாளி-நாய். (வி-ரை) இணுவை நகரில் எழுந்தருளியுள்ள கடவுளர் அனை வர்க்கும் துணையாக என வேண்டுகின்றார் புலவர். அவ்வாறு யாமும் வேண்டுவோம். இது அருள் வேட்டம்.
. (பொ-ரை) யானை முகத்து விநாயகரையும், கந்தனையும் தந்த வளே முதிராத முதற்பொருளே! தெய்வப் பொருளே! வாசனை வீசும் கொத்தாக உள்ள கொன்றைப் பூவினை அணிந்த சடையை உள்ள வளே இடபத்தை ஊர்தியாக உள்ளவளே! பாகு போன்றவளே. ஞான ஒளியே. அறிவாக எங்கும் உள்ளவளே. தெய்வ இணுவைப்பதி வீற்றிருக்கும் சிவகாமியே! எந்தக் குற்ற மும் முன்வினைப் பயன் என எண்ணும் பேரறிவும் உயர்ச்சியும் மேலான செல்வமும் பெறுவதற்கு அருள் செய்க.
(அ~ரை) ஆன னம்-முகம், இதழி-கொன்றை, தொண்டைக் கவி-கொவ்வைக்கணி, ஆசு-குற்றம்g
(இ-ரை) எத்தாசு = எந்த + ஆசு; எவ்வகை இடர்கள், புரு டாசு = புருட + ஆசு; ஆன்மாவின் கருமபலன்.
(வி-ரை) கன்மங்கள் கன்மமலம் பற்றிய இயல்புகளைப் பற்றிய சைவசித்தாந்தக் கோட்பாடுகளைப் புலவர் நன்கு அறிந்தவரா தலின் எத்தாசுவு முற்புருடாசு மென்றெண்ணு பேரறிவும் எனக் கூறினார்.
(பொ-ரை) திருமால்-பிரமா-இந்திரன் முதலிய தேவர்கள் துதி செய்ய அவர் துன்பம் நீங்க வலிமையுள்ள சிங்கத்தின் மீது இருந்து பகைவருடன் போர் செய்து மகிடாசுரனது தலையைத் துணித்தவளே! நால்வேத உட்பொருளே துரிய வெளியானவளே! ஒளியாகிய பூரணப் பொருளே! தொண்டர்கள் அறிவுக்கு அறி வானவளே! அபிராமியே! முப்புரங்களை எரித்தவளே! சிலம்பு அணிந்த பதத்தவளே! ஆனந்தப் பொருளே தெய்வ இணு வைப் பதியில் வீற்றிருக்கும் சிவகாமி அன்னையே!
அ-ரை ளி-சிங்கம், தரியலர்-பகைவர். கனி-தகனஞ் ( ) ஆ 芭 ஞ செய்தவள். பரிபுரம்-சிலம்பு.
(வி-ரை) மகிடனை அழித்த வரலாறும் சொரூப நிலையும் இச் செய்யுளில் கூறப்பெற்றுள. மகுடனைக் கொன்ற உமை வரலாறு தேவிபாகவதத்துள் விரிவாகக் காண்க.
"ஆளிக்கொடி ஏந்திய நங்கை' (நாட்டு. 60)
ܕܝ- 30 ܚ

7. (பொ-ரை) மலையரசன் மகளே! தாமரைத் திருவடியினளே! பாம்பை அணியாக உள்ளவளே! ஐந்தெழுத்து உருவினளே! செருக்குற்ற துட்டர்களின் தலை உருளும்படி ஒளிமிக்க வாளை வீசிய கன்னியே ஒரெழுத்தினளே! எனது உள்ளத்து என்றும் இருப்பவளே! பிறை அன்ன நெற்றியினளே! அழகிய முக்கண்
களை உள்ளவளே! தெய்வ இணுவைப் பதிவாழும் சிவகாமி ఆతrmw3ఖ! சிறிய எள்ளளவு அருள் தந்தாயினும் என்னைக் 莓了历<安。
(இ-ரை பருவதம்-மலை. பன்னகம்-பாம்பு. தந்த-ஆபத்தி னுற. உலோசனம் - கண். "தணலெனும் உலோசனம் போல்" (பிர போத சந்திரிகை 32-54)
.ாணுதல்=வாள்+நுதல்; அன்மொழித் தொகை נג6 (שתa-(9)
(வி-ரை) மலையரசன் மகள், பாம்பு அணியினள், தாமரை அடி யினள். ஒரெழுத்தினள்,"துட்டரை அழித்தவள், பிறை நுதலி னள், இணுவைப்பதி உறைபவள் என்பன சிவகாமி அன்னையின் இயல்பை உணர்த்துவன.
8. (பொ-ரை) எள்ளுக்குள்? எண்ணெய் மறைந்திருத்தல்போல உல கத்தில் மறைந்து இருப்பவளே! தெய்வ இணுவைப்பதி வாழ்ப வளே! யாவும் அறிந்த நீ எனது வறுமையும் நோயும் துன்பமும் அறியமாட்டாயா? உள்ளத்தில் பாபத்தை உள்ளவனாகிய எனது பாபங்கள் உன்னை அடைந்தால் நிலைநிற்குமா? உலகிலே 32 தருமங்களைச் செய்தும் உனக்கு என்மீது கருணை இல்லையோ? நீ பிள்ளை பெறாதவளோ? உலகம் முழுவதையும் பெற்றவள் என்பது பொய்யாகுமா? மூடப் பிள்ளையாயினும் தாய் தள்ளிவிடு வாளோ? பிழை பொறுத்து அருள்க.
(அ-ரை) மலடி-பிள்ளை பெறாதவள். (வி-ரை) சிவகாமியம்மை அருளாமையால் உள்ளம் தொந்த புலவர் தம் நிலையை இச் செய்யுளில் உளம்கொள வெளிப்படுத் துகிறார். என் இல்லாமையும் பிணியும் தெரிந்திடாயோ, என் பாசம் உனையடுத்தாலும் உண்டோ, உனக்குள் என் இரக் கம் இல்லையோ, பிள்ளைப் பெறாத மலடியோ, பெற்றதாய் இகழ்வளோ" என்பன உள்ளத்தைத் தொடுவன.
ഞ ! --

Page 24
9. (பொ-ரை) உனக்கு யான் அடைக்கலம், வேறொரு துணை
0
இல்லை. உதவி செய்வார் வேறு ஒருவர் இல்லை. யான் உன் அடிமை ஆக இருக்கிறேன். பின் ஒருவரைப் பின் செல்வதோ? யான் ஒருவரை இரந்து சென்றால் உனக்குப் பெருமையோ? அது உனக்குப் பெருமையாகாது. பிள்ளை என என்னைக் காத் தல் உனக்குப் பெருமை. இது உண்மை. (அ-ரை) புரத்தல் - காத்தல்.
(வி-ரை) பின் ஒருவரைக் கெஞ்சுதனால் "உனக்கு என்ன பெருமை” “பிள்ளையென்றிணி என்னை முற்றும் புரப்பதே பெருமை" என்பன புலவரின் உணர்வு நலத்தினை உணர்த்துவன.
(பொ-ரை) கரும்பு போலும் இனிய சொல்லினளே! சிவகாம வல்லியே கருதற்கரிய மேலான பொருளே காஞ்சி, மதுரை. காசி, ஆகிய தலங்களில் வீற்றிருப்பவளே! அன்னநடையினளே! அரி. அயன் ஆகியோர் தோற்றுதற்காம் மூலப் பொருளே! உலகு அனைத்தும் பரவும் துரியாதீதத் தெய்வமே! (அ-ரை) உற்பன்னம் - தோன்றுதல், நிமித்தம்
"உற்பன்ன வேதத் திருப்பொருளை" (இரகுவமிசம். அரசியல் - 4)
"இவ்வகை உற்பன்னம் காட்ட (விநாயகரகவல் 75 - 125) (வி-ரை) சிவகாமி அன்னையின் திருப்பெயர்களைப் புலவர் கூறிப் பரவுகின்றார்.
6, சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
(பொ-ரை) அழகிய முக்கோணத்துள் இருக்கும் தேவியே ஆறு
கோணத்துள் இருக்கும் கன்னியே! எண் கோணத்துள் இருப்ப வளே! நாராயணன் தங்கையே! மேகங்கள் படியும் சோலைக ளும் அழகிய மண்டபங்களும் தாமரையுள்ள குளங்களும், நீலோற்பம் - செங்கழுநீர் - முத்துக்கள் ஆகியவை பொருந்திய தேர்கள் செல்லும் வீதிகளும் நெருக்கமாகவுள்ளதும் செல்வம் வளர்கின்றதுமான அழகிய இணுவைப் பதியில் வீற்றிருக்கும் சிவகாமித்தாயே! நாள் தோறும் செம்மையான திருவடிகளைத் துதிக்கும் அன்பர்களுக்கு அருள் புரிக.
(அ-ரை) சட் - ஆறு, அட்ட - எட்டு, கார் - மேகம், கஞ்சம் - தாமரை, காவி - நீலோற்பம், கழுநீர் - செங்கழுநீர், நித்திலம் - முத்து. ஆய்-முன்னிலை ஒருமை வினை முற்றுவிகுதி. ஏ -ஈற்றசை,
- 32 -

கெட்டு - ஆகுபெயர்.
தம் 16 - 65) . . . . . . :
(வி - ரை) முக்கோணம் சட்கோணம் அட்டதளம் என்பன உலி லுள்ள ஆறுதாரங்களுட் சில. சோலை நிலவளத்தையும், கார், கஞ்ச மலர்த்தடம் என்பன நீர் வளத்தையும், மணிமண்டபம் நித்திலம் - தேரணி விதி - திருவளர் என்பன செல்வ வளத் தையும் உணர்த்துவன. "சட்கோண நெடுந்தேர்மிசை" (மகாபரே
...
(பொ - ன்ர) ஓங்காரத்து உட்பொருளே அறுகோணத்தில் இருப்பவளே சிவனது பாகத்திருக்கும் சக்தியே: பாம்புகளை அணியாக உள்ளவளே! மாதங்கிப்ே திருமாலின் சகோதரியே! தரையிலே இருப்பவளே! இனிய வாக்கியங்களாக இருப்பவளே வண்டுகள் சூழும் மலர்களனிந்த கூந்தல்ையுள்ளவளே எட்டுத் திசையும் புகழும் அழகிய இணுவில் உறையும் சிவகாமிஅன்னையே! நாள்தோறும் அன்புடன் ஒலிக்கும் ஒளியே அழகிய பொன்னா' லான குழையை உள்ளவளே உலகின் கண் நின்னை வழிபடுப
வர்க்கு நல்லருள் புரிக.
(w - ரை) சர்ப்பம் - பாம்பு. பத்மம் தாமரை, மதுரம் -இனிமை, நளிர் - குளிர்மை, அளம் - கூந்தல், பேருக்கம்புவி = பேருக்கு + அம்புவி. தேனார் = தேன் + ஆர். குயில் - உருவகம், திக்
(வி-ரை) திக்கெட்டும் புகழ்தல் பல்வகைச் சிறப்புகளும் இருத் தலினால் என்க. இவ்விரு பாட்டிலும் அன்னையைப் பரவி அன்
மார் சடையினளே (தேவாரம் 2314)
பர்க்காக் அருள் வேண்டினார். ‘நளிளந் திங்கள் சூடும் கோல
A
(பொ-ரை) தெய்வ இயல்பு நிறைந்த இணுவைப் பதியில் வீற்.
றிருக்கும் சிவகாமி அன்னையே வாசனையுள்ள பூக்களினால் உனது திருவடிகளை அன்புடன் வணங்குபவர்களுக்குச் செல்வம் உண்டாகும். வாழ்நாளின் ஈற்றிலும் இயமனும் அவர்களிடம் வரான். அன்றியும் பெறுதற்குரிய வீடுப்ேற்றைப் பெற்றுச் சிவா னந்தத்தில் மகிழ்வர். உனது பெரும் மகிமையைத் தலை ஆயிரம்
நாவுள்ள ஆதிசேடனாலும் உரைத்தற்கு அரியதென வேதங்கள்
கூறும். ஆதலின் எனது சிந்தை கொண்டு சொல்லத்தக்கதன்று.
sa- ரை) கந்தம் டி வாசனை, துணை - இரண்டு, அந்தகன் -இய, மன், வாளரவு - ஆதிசேடன். கனம் - அதிகம், "கணமே சொல்
லினே. (நாலா. திவ்விய பிரபந்தம் திருவாய் மொழி-9.35) அத் .
தியகாலம் - இறக்குங்காலம்.
A.
-- 3933 مس۔

Page 25
4.
(câ - ரை) ஆகா - எதிர்மறைப்பன்மை வினைமுற்று. அன்னை யின் திருவடிகளை நாளும் துதிப்பவர் பெறும்பயங்களைக் கூறினார்.
(பொ - ரை) எள்ளுக்குள் எண்ணெய்போல் உலகெங்கும் அத்து விதமாக உள்ளவளே! தில்லம் பழம் மிக்க இணுவைப் பதியில்
வீற்றிருக்கும் அன்னையே! என்னிடத்தில் இருக்கவில்லையோ?
யாவும் அறிந்த நீ என்னையே அறிவாய். உள்ளத்தில் உன்னை யன்றி உயிர்க்கு ஏற்ற துணைப்பொருள் இல்லை. புலியின் தோலை அணிந்துள்ள சிவனின் சக்தியே மிக்க ஒளிப்பொருளே எனக்கு அருள் செய்க.
(அ- ரை) உறுதுணை - ஏற்ற உதவி. புனிதன். சிவன். ''ւյծ றில் வாளரவும் ஆமையும் பூண்ட புனிதனால்’’ (தேவா 136.6) "வேதம் விரித்துரைத்த புனிதன்" (பெரியதிரு மொழி 2.1.4)
(வி - ரை) எள்ளுக்குள் எண்ணெய்போல் - உவமையணி. எள் உலகிற்கும் எண்ணெய் சிவகாமி அன்னைக்கும் உவமைகள். வெளியே தோன்றாமல் உள்ளீட்டாக இருத்தல் - பொதுத் தன்மை. போல் - உவமை உருபு.
இறைவன் உலகின்கண் வெளிப்படாமல் உள்ளீடாக இருத் தலுக்கு உமாபதி சிவாசாரியார் ‘எரியுறுநீர்" என உவமை கூறி னார். இப்பாடலில் புலவர் தனக்காக அன்னையிடம் அருள் வேண்டுகிறார். "என் பாலிலையோ, என்துயர் அறியாயோ, உன்னையல்லால் இவ் உயிர்க்கு உறுதுணை உண்டோ" என்பன உள்ளத்தைத் தொடுவனவாக உள. 'உன்னையல்லாம் வேறொரு தெய்வத்தை உள்ளேன்." என்பது சிவகாமி அன்னையிடம் புல வர் கொண்டுள்ள உறுதிப்பாட்டை உணர்த்தும்.
உற்பன்னம் - தோன்றியமை, நிமித்தம்.
"உற்பன வேதத் திருப்பொருளை (இரகு வமிசம் அரசி. 4)
"இவ்வகை உற்பனம் காட்ட (விநாயகரவல் 75 - 125)
"எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
ள்ள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்."
(- வாலைக்கும்பி - 106 - கொங்கனநாயனார்.)
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே." (-திருவாசகம் - 46 ஆம் பா.)
- 84 -

5. (பொ-ரை) இணுவை நகரில் எழுந்தருளியுள்ள சிவகாமி அன் னையே! பக்தியுடன் துதிப்போர்க்கு வீடுபேற்றை அளிக்கும் சிவகாமி அன்னையே! இந்தப் பயனற்றவனை ஏன் படைத்தாய்! பிறவி தோறும் இரு வினைகளுள் அமிழ்ந்தித் துன்பத்தை அடை தற்காகவா? சிதம்பரநாதனது மகனாகிய சின்னத்தம்பிப் புதல்வ னாகிய யான் நின் திருவடிகளை நாள்தோறும் துதிக்கிறேன், எனக்கு நீ வீடுபேற்றைத் தந்தருள். 、...་ (அ-ரை) பரகதி-மேலான பேறு. எத்துக்கு-எதற்காக இரு வினை-நல்வினை, தீவினை. (வி-ரை) அன்னையின் அருள்பெறாமையின் வீணன் எனவும், இரு வினையும் பிறவிக்கு ஏதுவாதலின் இருவினைப் பவம் எனவும், பிறவி எல்லையற்று இருத்தலின் பிறவிக்கடல் எனவும், அருள் பெற விழைவார் என்றும் திருவருள் சக்தியைச் சிந்தித்தல்வேண்டு மாதலின் நித்தம் மலரடி பரவுகின்றேன் எனவும், பிறவி நீங்க முத்தி இன்றியமையாதலின் முத்தியது தந்தருள் எனவும் புல வர் கூறினார். v
7. திருவூஞ்சல்
! "
கடவுளை மகிழ்விப்பதற்காகச் சோடனை உப சாரங்கள் கோவில் கிரியையில் இடம்பெறுதல் போலத் திருவூஞ்சலும் இடம் பெறுகிறது. வழிபடுவகைகளுள் இதுவுமொன்றாக அமைகிறது. பரவுதல், புகழ்தல், துதித்தல் என்பன கோயில் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. உயரிய கடவுட் தத்துவங்கள் இதன் மூலம் வெளியாகின்றன. திருவுருவை ஊஞ்சலில் வைத்து அசையச் செய்து பரவுதல் மூலம் உள்ளத்தின் அமைதி, ஒருமைப்பாடு மகிழ்ச்சி சக்தி, ஆனந்தம், அருள் என்பன உண்டாகின்றன.
1. (பொ-ரை) திருமால், பிரமா, முனிவர், இந்திரன், சித்தர், வித் தியாதரர் ஆகிய பழைய அடியார் போற்றும் கொன்  ைற மாலையை அணிந்த சிவனார் இடப்பாகத்துச் சிவகாமி மீது திரு ஆஞ்சலைப் பாட, மக்களின் அரசர் புகழும் இணுவை நகரில் வீற்றிருந்து சிவனடியார்க்கு வரங்களை அருளும் பரராச சேக ரன் என்னும் பெயருள்ள விநாயகரது தாமரைப் பாதங்களைப் போற்றுவோம். ~~-- ''
(äy- ரை) திரு-இலக்குமி. பக்தர்-அடியவர், பதுமம்-தாமரை. (வி-ரை) இது காப்புச் செய்யுளாக அமைந்தது. ஆடீர்-முன் விலை வினை முற்று. .
- 85 -

Page 26
2.
&
வல்லியே மேகங்கள் தங்கும் பொன்மலை விட்டமாகவும், உய ரிய மலைகள் அழகிய கால்களாகவும், பண்டைய நால் வேதங் கயிறுகளாகவும், உலகங்கள் அழகிய பலகையாகவும், விராட்புருடன் அழகிய பீடமாகவும் கொண்டு ஊஞ்சலில் ஆடு வீராக
(அரை) கொண்டல் - மேகம், கனகவரை - பொன்மலை, மேரு. வரை - அசலம் - மலை. புவனம் - உலகம். வரை (1) - தங்கு (2) மலை.
(வி.ரை) குலாசலம் = குல + அசலம்: சிறப்பு மிக்க மலை. வல்வி - உவமை ஆகு பெயர், உலகிற்கு மூலகாரணமாகிய சிவசக்திக்கு உரிய ஊஞ்சல் ஆதலின் ஊஞ்சலின் விட்டம் சால்கள் கயிறு, பலகை, பீடம் என்பன முறையே மேருமலை, அட்டதிக்குமலை கள், நால் வேதம், உலகம், விராட்புருடன் ஆகியவையாகக் கூறப் பெற்றன; V
. (பொடரை) பெருமையான வளங்களுள்ள இணுவையில் வீற்றிருக்
கும் சிவகாமவல்லியே! வானவெளியிலுள்ள சூரியனும் சந்திர
னும் விளக்குகளாகவும், நட்சத்திரங்கள் மேற்திரையாகவும்,
சந்தனம் முதலிய மரங்கள் தரும் பூக்கள் பந்தராகவும், தென்
றல் சாமரையாகவும், விளங்குகின்ற அண்டம் இருக்கையாகவும், கொண்டு ஊஞ்சலில் ஆடுவீராக.
(அ-ரை) சுடர் - சூரிய, சந்திரர். தாரகை - நட்சத்திரம். எண்
ஒனுதல் - மதித்தல், அண்டம் - வெளி, மஞ்சம் - பீடம்; கால்கள்,
விதானம் முதலிய அமைந்த இருக்கை. அண்ணல் - பெருமை, விதானம் - மேற்கூரை.
(வி-ரை) ஊஞ்சல் ஆடும் இடத்திற்கு உரிய விளக்கு, விதானம், பந்தர், சாமரை, மஞ்சம் என்பவைகளாக முறையே இருசுடர், நட்சத்திரங்கள், பூக்கள், தென்றல், வெளி ஆகியவை கூறப்
பெற்றன.
(பொ-ரை) முகில்கள் சூழும் சோலை சூழ் இணுவை வீற் றிருக்கும் சிவகாமி அன்னையே! வெண்டாமரையிலுள்ள கலை
மகளும் திருமகளும் வெண்சாமரைகள் வீசவும், இந்திராணி படிகத்தைத் தாங்கவும், துர்க்கை ஆகியோர் அடப்பை ஆயுதம் முதலியவைகளைத் தாங்கிப் பக்கத்தில் நிற்கவும் ஊஞ்சலில் ஆடுவீராக. ؟ . ح
سسه 36 --س

(அ-ரை) இந்திரை - கலைமகள், சீவனி - திருமகள், பகீரதி. கங்கை, தவனம் - வெள்ளம். அயிராணி - இந்திராணி, படிகம்கலன், அடப்பை - வெற்றிலைப்பை, அஞ்சுகம் - கிளி. ". . .
(வி - ரை) சாமரை வீசுவோர், குடைபிடிப்பவர், அடைப்பை தாங்குவோர் ஆகியவர்களாகக் கலைமகள், திருமகள், கங்கை, துர்க்கை முதலியோர் கூறப்பெற்றுளர். கலைமகள் முதலியோரும் சிவசக்தியின் தோற்றங்களே எனினும் சிவசக்தியின் ஆணை வழி நின்று செயல் புரிபவரே ஆதலின் சிவசக்திக்கு ஏனைய சக்திகள் பணிபுரிபவராகக் கூறினார். ܕܠ ܐ
5. (Gount -ரை) மிக்கவளமுள்ள இணுவையில் வீற்றிருக்கும், சிவ காமி அன்னையே! சந்தனம் நறுமணம் வீசும் அழகிய பொன் முடி ஒளி செய்யவும், நெற்றியில் அணிந்த அணிகள் ஒளி செய்ய வும், அழகிய குண்டலங்களோடு அழகிய கயல்போலும் கண் கள் அசையவும், முத்துமாலைகள் ஒளி வீசவும் ஊஞ்சலில் ஆடு வீராக
(அ- ரை) தகரம் - சந்தனக்குழம்பு. சசி - சந்திரன், மானல் - ஒத்தல். மகரம் - மீன். இகல் - மாறுபடுதல்.
(இ - ரை) மகரகுண்டலம் - உவமைத்தொகை. நீல வரிக்கயல், ஆம்பல்-உருவக அணிகள்.
(வி-ரை) உமையம்மையாரது முடி, அணிகள், முதலியவைகளின் சிறப்பைக் கூறினார். “ላ
6. (பொ-ரை) இவ்வுலகில் நல்வளம் உள்ள இணுவையில் சிவகாமி அன்னையே தும்புரு நாரதர் முதலியோர் இசை பாடவும் உருப் பசி முதலிய தெய்வ மகளிர் நடனம் ஆடவும், வான்வெளியில் உள்ள தேவர்கள் தேவ உலகப் பாரிசாத மலர்களை மழைபோலச் சொரியவும், கலைமகளும் திருமகளும் வட்த்தைத் தொட்டு
ஆட்ட திருவூஞ்சலில் ஆடுவீராக. -- }
(அ-ரை) அம்பரம்-ஆகாயம். மலர்க்கன்னி-திருமகள். நாவின் மாது - கலைமகள். W میر
(வி - ரை) ஊஞ்சலின் போது இசைபாடுவோர், நடனம் ஆடு வோர், மலர்தூவுவோர், வடந்தொட்டு ஆட்டுவோர் ஆகியவர் களை இச்செய்யுள் குறிப்பிடுகிறது.
- 37 -

Page 27
7.
(பெ7 - ரை) திருமகள் வாழும் இணுவையில் வீற்றிருக்கும் சிவகாமி அம்மையே சிவபிரானது அன்பரின் உள்ளத்தில் இருப் பவரும் ஒற்றைத் தந்தத்தையுள்ளவருமாகிய விநாயகரும் கந்தப் பிரானும் மடியின் மீது வீற்றிருக்க ஊஞ்சலில் ஆடுவீராக.
(அ- ரை) மன்று - வெளி. கிம்புரி - யானையின் கொம்பின் நுனியில் அணியப்படுவது தந்தன் - விநாயகர்:
(வி. ரை) விநாய்கர், கந்தன் ஆகிய இருவரும் இடர்களை நீக்கி உலகப் பேறுகளைக் கொடுக்கவல்லவர்களாதலின் அவர் களும் சிவகாமி அன்னையுடன் வீற்றிருக்கும்படி புலவர் வேண்டி 6tritif.
(பொ-ரை) அதிக வளம்பொருந்திய இணுவிலில் வீற்றிருக்கும் சிவகாமி அன்னையே! ஒளி பொருந்திய காதணிகள் அசையவும், பொன்னால் இழைக்கப்பெற்ற வளையல்கள் அசையவும், கொண் டையின் அணிகலம் அசையவும், மலர்மாலை அசையவும், நெற் றிச் சுட்டி அசையவும், பாதத்தின் சிலம்புகள் அசையவும் ஊஞ் சலில் ஆடுவீராக.
(அ-ரை) குண்டலம்- காதணி.
(இ-ரை) ஆட ஆடீர் என இணைக்க. (வி-ரை) அன்னையின் அணிகலன்களின் சிறப்புகளைப் புலவர்
பாடலில் கூறினார்.
(பொ-ரை) உலகம் புகழும் இணுவை நகரில் வீற்றிருக்கும் சிவ காம அன்னையே உருத்திரன், முப்பத்து. முக்கோடி தேவர், பதுமன், திருமால், இந்திரன், இயமன், அக்கினி, முனிவர் முத லியோர் ஆகமங்களையும் வேதங்களையும் ஒதப் பத்துக்கோடி சக்திகளுடன் ஊஞ்சலில் ஆடுவீராக; , (அ-ரை) பவர்-வியாபகம் உள்ளவர். "பவர் சடை அந்தணர் (கம்பராமாயணம் - வேள்விப் பட 6b 47) "பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி" (திருவாய்மொழி 2.2.26) (அ-ரை) செய்ய=செம்மை+அ; செம்மையாக அமைந்த.
(வி-ரை) சிவசக்தியை மிக உயர்ந்த சொரூப நிலையிற் புலவர்
துதிக்கிறார்.
- ܘܗ 38 ܚ

7. இந்நூலால் அறியப்பெறுவன
(1) தொகைக் குறிப்புகள்
கடவுளரி:- இணுவைச் சிவகாமியம்மை, உரும்பராய்க் கரு ணாகர விநாயகர், பரராசசேகர விநாயகர், காஞ் சிக் காமாட்சி, காசி விசா லா ட்சி, மதுரை மீனாட்சி, செங்கை வடிவே ற் செவ் வேள், மாணிக்க வைரவக் கடவுள், மாசத்தி பத்திரகாளி, சிவன், கைலாசன் இளந்தாரி, கலைமகள், நாம
56.
தேவர்கள்:- திரும7 ல், அயன், இந்திரன், அக்கினி, இயமன், குபேரன், இந்திராணி, நாரதர், தும்புரு, உருப்பசி, முப்பத்து முக்கோடி தேவர், ஆதி சேடன், இரவி, திங்கள், சித்தர், வித்தியாதரர்
ஊர்கள்:- இணுவை உரும்பை.
ஆட்சியாளர்:- ஒல்லாந்தர்.
சிவகாமியம்மை:- உலகத்தைத் தோற்றுவிப்பவர், அனைவரையும் காப்பவள். தாயாக உள்ளவள். தன் திருவடியைத் தன் அன்பர்' உள்ளத்தில் பதிப்பவள், சிற்றிடையினள், பொற்றாளினள், சந்தி ரோதய முகத்தவள், சாற்றவொண்ணாத் தோற்றமுடையவள், சிந்தாமணி போல வேண்டியன கொடுப்பவள். செந்தாமரை மலர்த் தாளினள், முக்கோணத்துள் இருப்பவள், சட்கோணம் உருவினள், ஓங்காரத்துட் பொருளானவள், தானாகத் தோன்றி யவள், சர்ப்பங்களை அணிகளாக உள்ளவள், திருமாலுக்கு இளை யாள், சோதிக்குண்டலங்களை அணிந்தவள், எங்கும் நிறைந்தவள். ஆயிரம் நாவுள்ள ஆதிசேடனாலும் உரைக்க இயலாத பெருமை உள்ளவள், விநாயகருக்கும் கந்தக் கடவுளுக்கும் தாய், மூவா முத லானவள், கொன்றைஅணிந்த சடையுடையவள், எருஊர்தியுள்ள வள், மயிற் சாயல் உள்ளவள், சத்தும் சித்தும் ஆக விளங்குபவள், வேதத்துட்பொருளாக உள்ளவள், சிங்கவூர்தியினள், தேவர்க்காக மகிடன் எனும் அசுரனை அழித்தவள். தூயவெளியினள், சோதி யாக உள்ளவள். திரிபுரங்களை அழித்தவள், சிலம்பு ஒலிப்) நட மிடுபவள். பிறையன்ன நுதலினள், மூன்று கண்கள் உள்ளவள். உல கில் முப்பத்திரண்டு அறம் வளர்ப்பவள். அடியவர் பாசங்களை அழிப்பவள், மலையரசன் மகளாக வந்தவள். அரியும் அயனும் தோன்றற்கு மூலமானவள், கயல்போலும் கண்கள் உள்ளவள்
- 89 -

Page 28
பத்தியொடு பரவுப்வர்க்கு வீடுபேறு அருள்பவள். உபநிடத பொருளானவள், பூரணப்பொருளாக உள்ளவள். சிவனின் இடப் பாகமாக உள்ளவள், கிளி போன்றவள், குயில்போன்றவள், ஐந் தெழுத்தாகவும் ஓரெழுத்தாகவும் உள்ளவள். கரும்பு நிறைந்த மொழியினள்.
சிவகாமியம்மையின் வேறு பெயர்கள்:- சிவகாம சுந்தரி, சிவகாம வல்லி, நாரணி, கெளமாரி, கெளரி, சத்தன் பரிசத்தி, மூவாமுதல், ஞானச் சுடர், தேவி, அபிராமி, திரிபுரதகனி, பரிபுர பதத்தி, ஆனந்தி, ஏகாட்சரி, திரிலோசனவல்லி, காமாட்சி, மீனாட்சி, * u விசாலாட்சி, மனோன்மணி, சங்கரி, ஐயை, பார்பதி, துர்க்கை,
மகேசுவரி, நீலி, சூலி. பராபரை, நாதாந்த நாயகி. w
சிவகாமியம்மை அருட்செயல்கள்:-
மலையரசன் மகளானமை, தேவர்க்காக மகிடனெனும் அசுரனை அழித்தமை, உலகத்தைப் படைத்தலும் காத்தலும், புலவனின் பாட லுக்காக அவரிருந்த சிறைக்கதவுகள் திறக்கச் செய்தமை, புலவருக்கு முன்னிலையில் வந்து தன் திருவாய் அமிர்தம் அவர் பருகக் கொடுத் தமை, தம் அடியவர் உள்ளத்து இருத்தல், சங்கந் தழைக்க அருளல்.
கருணாகர விநாயகர்:-
தம் அன்பரசுத்து எந்நாளும் உறைபவர். உரும்பை நகரில் விற் றிருப்பவர். கந்தக் கடவுளுக்கு மூத்தவர். ஒற்றைத் தந்தம் உள்ளவர்
பரராசசேகர விநாயகர்:-
முன்னோன், பரராச சேகர பூசிதன்3
வென்: புள்ளிப் புலியின் தோலைப் புன்னபவர் அப்பு அணியும் பொற்கடிலத்தவர், மருமாலை இதழ் புனைபவர். இவன் வேறு பெயர்கள்; சத்தன் பரமர். ....
சிவகாமியம்மையிடம் அருள் கேட்டலும் முறையீடும்
1. செய்யபதங்களை நாளும் துதிசெய் நம்பின பேருக்கு அம்புவி - மீதில் அருள் செய் எத்தாசுவும் முற்புருடாகவும் என்று எண்ணும்
பேரறிவும் ஏற்றமும் மேன்மைத் திருவும் பெற இரங்கி அருள் செய். எள்ளளவாதல் நின்செயல் என்னை இரட்சித்திட அருள்
ܒ== 40 ܚ

பிள்ளையென்று முற்றும் புரப்பது நின்கடன், சிறியேன் வினை தீர்க்க அருள் நல்கு, பிழை செய்தாலும் இவ்வூர் மானிடர்க்கு வுெப்புவினை வராமற் சுகந்தந்து ஆளும் அம்மா, ஒன்னார். சிறைப்படுத்தும் அப்பூட்டும் தீய சிறை இட்டிருக்கும் இப் பூட் டும் நிர்ப்பூட்டாய் என் சிறையை நீக்கியருள், இத்தலத்திற்
பங்கப்படு மானிடர்க்கு அருள் செய், உன்னைப்பாடி நிதம் சிற்தை மிகக் கவலும் அடியார் இடர்தீர். இபரசித்தி அருள்.
2. பேய்ப்பிள்ளை யாயினும் பெற்றதாய் இகழ்வளோ, என் இல்லாமையும் பிணியும் நீ அறிந்திடாயோ என்பாவம் உன்னையடுத்தாலும் உண்டாமோ,
சிவகாமி அம்மையை வழிபடலால் வரும் பயன்:-
கந்த நறுமலர் கொண்டு கமலத்துணையைக் காதலுடன் பூசிப்பவர்க்குக் கனசெல்வம் உண்டாம், காலன் அணுகான், வீட்டின்பம் பெற்று இன்புறுவர்.
1. திருவூஞ்சல் அமைப்பு:க
கொண்டல், வரையும் கணகவரையும் விட்டம், குல அசலங்கள் மணிக்கால்கள். மறைநான்கும் கயிறு, புவனகோடிகள் பொற்பலகை, அண்டம்நடுமரம், விராட்புருடன் நவரத்தின மலர்ப்பீடம், விண்ணு லவு இருசுடர் தீபம். தாரகைகள் விதானம் சந்தனம் முதலிய ஐந்து தருவும் தருமலர்கள் பூம்பந்தர், இளந்தென்றல் கவரி, பகிரண்டம் மஞ்சம், அகிலாண்டம் மன்றம். *
2. மலர்மகள் வெண்கவிகை கொள்வர்; பகீரதி கவரி வீசுவர், இந் திராணி படிகம் ஏந்துவர். பைரவி முதலியோர் அடப்பை ஏந் துவர்.
3. நறுமணம் கமழும் மணிப்பொன் மவுலி மின்னும், நெற்றி மணிகள் நெருங்கும். மகர மணிக்குண்டலம் மின்னும், பூக்கள் ஒளி வீசும், மக்கள் சொரி பூக்கள் முத்துவட உத்தரியமிசை
| sub. . . .
ノ
4. ஒளிதரு குண்டலங்கள் ஆடும், கைவளையல்கள் ஆடும். கொண் /டையணி குச்சு ஆடும், மலர்மாலை ஆடும், நுதற்சுட்டி ஆடும்.
அடியினைச் சிலம்பு ஆடும்.
མ-, 47 --

Page 29
3. பிரமன், உருத்திரர், முப்பத்து முக்கோடி தேவர், அயன், அரி
இந்திரன், அக்கினி, குபேரன், வாயு, கூர்மாண்டன், தவத்தினர்
ஆகியவர்கள் வேத ஆகமங்களை ஒதுவர். தசகோடி சக்திகள் அருகில் நிற்பர்.
ஆதிசேடன்:- உரக பதி, ஐயாயிரம் நாவுடையன். சுவையான பகுதிகள்:- r .
எத்துக்கிந்த வீணனைப் படைத்தாய் இருவினைப் பாசக் கடல் தன்னில் மூழ்கவோ (3-24) w உன்னடைக்கலமல்லாதொருவர் துண்ையிலை வேறுதவி
- செய்வாருமில்லை. உன்னடிமை யானென்று வந்திருக்க மற்றொருவரைப் பின்
Y . செல்வதோ பின்னொருவரைக் கெஞ்சுதலாலுணக்கென்ன பயன்
உலகத்து முப்பத்திரண்டறம் வளர்த்தாய்.
உனக்கென்ன இரக்கமில்லையோ பேய்ப்பிள்ளை யாகிலும் பெற்றதாய் இகழ்வளோ அள்ளித்தராதென்னைத் தள்ளிவிடல் நீதியோ (2 - 10)
இற்றைவரை யான் வருந்த எங்கொளித்தாய் (1 - 5) சீலைப்பேன் நுளம்பு தெள் நுள்ளான் மூட்டைக்கடி சால; பார்சேயன் சற்றும் இரங்கான். (1 - 6)
உலகவழக்குச் சொற்கள்:-
பேய்ப்பிள்ளை, ஒத்தாசுவும் புருடாசுவும் எள்ளளவாதல், எள்ளுக்குள் எண்ணெய் போல, பிள்ளைப் பெறாத மலடி, அள்ளித்தருதல், தள்ளிவிடல், கெஞ்சுதல், பங்கப் படுதல், எத்துக்கு, வீணன்.
இணுவை யூர்ச்சிறப்புக்கள்:-
செல்வந் தழைக்கின்ற திருவளர் இணுவை; காரணி சோலை யும் மணிமண்டபமும் கஞ்சமலர்த்தடமும் காவிச் செடியும் கழுநீர்த் தொகையும் தேரணிவீதிகளும்எங்கும்நெருங்கும். திக்கெட்டும்திருவளர் இணுவை பழனம் திசையெங்கணும் அடுத்த தென் இணுவை; துன்னி மிட்ம் பரவவரு இணுவை, அண்டம் எல்லாம் புகழும் இணுவை:
அண்ணல் வளந்திகழ் இணுவை: -
- 43 ar

பெய்யும் முகில் வளர்சோலை யினுவை; அதிக வளம் பெருகிவளர் இணுவை; அம்புவியில்நல்வளஞ்சேர் இணுவை; செந்திரு வாழ் இணுவை; அவனி புகழ் இணுவை; சொன் மண்டலமாம்; இரத்தினபீடம் மலரினுவை; சிவபுரம்; சிதம்பரம்.
உரும்பைச் சிறப்பு - சுந்தரம் சேர் உரும்பை.
ஆட்சியாளர் இயல்பு:- - ܚ
தாம் பெறும் தகவல்களை ஆராயாமல் மெய்யென எண்ணிக் குற்றம் இல்லாதவர்களைச் சிறையிடுதல் கொடுக்கப் பெற்ற தகவல் பொய்யாயின் அத்தகவல் கொடுத்தவருக்குத் தண்டனை வழங்கல்.
சிறைக்கூடங்களின் நிலை:-
பேன், நுளம்பு, தெள், நுள்ளான், மூட்டை என்பன அதிகமாக இருத்தல், அவை சிறைக்கூடத்தில் வைக்கப்படுபவர்களைக் கடித்துத் துன்புறுத்தல், சிறைக்கூட அதிபர்கள் இரக்கம் இல்லாதவர்.
பழ மொழி:
பிள்னைபெறாத முழு மலடியோ, பேய்ப்பிள்ளை யாயினும் பெற்றதாய் இகழ்வளோ,
266) is .
எள்ளுக்குள் எண்ணெய் போல கன்னலஞ்சொல், சந்திரோதயமுகம், சேலொப்பாம் உண்கண், செந்தாமரை மலர்த்தாள், பங்கய வதனம், பிறைநுதல்.
உருவகம்:
தோகாய், தேனார் நறுமலரளகக் குயிலே,
சிந்தாமணியே, பாகாய், ஞானச் சுடரே, பைங்கிளியே.
சமயக் கோட்பாடுகள் சில:
உன்தன் சீர்ப்பெருமை ஐயாயிரநாவுடை வாளரவும் உரைத்தற் காகா என்று அருமறைகள் உரைத்தல், எத்தாகவும் முற்புருடாகவும் என்றெண்ணும் பேரறிவு, சிவசக்தி இறைவன் இடப்பாகமாய் உள் ளது, உலகத்தைத் தோற்றுவிப்பவர். உலகங்களைக் காப்பவர் அனைவர்க்கும் அருள்புரிபவர், முப்பத்திரண்டறங்களைப் புரிபவர்
--43 سے

Page 30
சதகோடி சக்திகளாக உள்ளவர். சிவசக்தியை அடைபவரின் பாசம் அவரை விட்டு விலகும். அடியவர் வீட்டின்பம் பெறுவர். சத்தாயும் சித்தாயும் எங்கும் உள்ளவர். துரிய வெளியை உடையவர், தடத்த நிலையில் முக்கோணம், சட்கோணம் ஆகிய மந்திர வடிவங்கள் ஆகின்றனர். ஓங்காரம் - பஞ்சாட்சரம் - அருமறைகள் - உபநிடதங் கள் ஆகியவற்றின் உட்பொருள்களாக உள்ளனர். விநாயகர் கந்தன் இருவருக்கும் தாயானவர். மலையரசன் மகளாவர். துட்டரை அழிப்பவர் - ஆன்மாக்கள் சிவசக்தியின் பிள்ளைகள், புவ எங்கள் பல அரி அயன் ஆகியவர் தோற்றத்திற்குச் சிவசத்திபே மூலம். சதகோடி தேவர்களும் தேவர்தலைவர்களும் சத்திபேதங்களும் சிவசத்தியைப் போற்றுவர். இருசுடர்கள்களும் தாரகைள் பல. அண் டங்கள் பல. அசலங்கள் எட்டு. அண்டநடுவரை பொன்மலை. விராட்புருடன்3 w
சங்கம்:- பண்டு தமிழ் வளர்த்த சங்கம்
இணுவைச் சின்னத்தம்பிபுலவர்.
சிதம்பரநாதன் சேய், செந்தமிழ் வித்தகர், சின்னத்தம்பிநாவலர் சிவகாமியம்மை மலரடி நித்தம் பரவியவர், சிவகாமி அம்மையிடம் பேரமிழ்தம் பெற்றவர், பார் சேயனால் சிறையிலிடப் பெற்றவர், அம்மையின் அருளால் சிறை நீங்கியவர்.
8. சிவகாமியம்மை தமிழ்
அரும்பதங்களும் பொருளும்
1. தாபரித்தல் - ஆதரித்தல்
உரும்பை - உருப்பராய் 2: ஆத்தாள் - தாய் a a பூத்தல் - தோற்றுவித்தல் 8m Luluh - நறுமணப்பொருள் பூத்தாள் - பூவின் தாள் (ழ்+தாள்)
3. அனுசரித்தல் - பின்பற்றுதல்: மல்குதல் - நிறைதல்
4. வினை - செயல்
-9ւնւլ - நீர் சடிலம் Hur F 6) தாதை - தந்தை செப்புதல் - சொல்தலுல்
سنے 444 ــــــــــس

- 0
11.
2.
அற்றம் - குற்றம் Lásår - மின்னல்
- ở mề) - மிக்க
சேயன்' - தூரநாட்டவன் Ds)) - மாலைக் காலம் Lurraio - பக்கம் உண்கண். - மைதீட்டிய கண்
a gil - வலிமை
பூட்டு (1) - பொய்த் தகவல் (கோள்சொல்லுகை
(2) - கதவுப் பூட்டு
நீர்ப்பூட்டு ’ - பூட்டின்மை செப்பு - செப்புக் கலசம் 29rl-Léo - மிகுவித்தல் s சாற்றல் - சொல்லல் ஆற்றாமை - இயலாமை தாரணி - பூமி சென்னி - தலை துன்னுதல் - செறிதல்
இம்மட்டு - இவ் அளவு
ர்ே அணி - சிறந்த அழகு முக்கேர்னம் - முப்பக்க உருவம் சட்கோணம் - ஆறு கோணம் இட்டதளம் - விரும்பும் இடம் கார் " " خسنة L600 مpp5( نة காவி , - நீலோற்பல மலர் சமைதல் - ஆக்கல் சமயத்தி - சமயத்துக்கு அதிப சத்தன் - தலைவன் பரிசத்தி - மேலான திருவருட் சக்தி நளிர் - குளிர்மை குழை - காதணி
- 45

Page 31
13.
14.
15
6.
17.
18.
asanib அந்தகன் அரவு மறை உயாவுதல்
புனிதர் தில்லம் பழனம்
ponunrapto
முருகு கொத்து இதழி
பாகு
<鹦听
Og franë ,
அரி அயன்
தரியமலர்
காரணி துரியம்
தகனி பரிபுரம் பதத்தி
பருவதம்
Goals சாபரி தத்துதல்
சரபஞ்சரி
இரசித்தல் நுதல் 6 unir air -
திரி
அரிவை
- அரங்கு 一 இயமன் - untubu - வேதம் - தளர்தல்
тыы» தூயவர்
- வயல் - மூப்பு உறாமை
- இளமை
- தொகுதி - இதழையுடைய மலர்
- எருது - சர்க்கரை
- துன்பம்
- புருட வினை
- திருமால் - பிரமா - பகைவர்
- சிங்கம் - காரணமாயிருப்பவள் - உயர்வுகடந்த நிலை - பூரணநிலையினள் - தகனம் செய்பவள் - சிலம்பு - பதத்தையுடையவள்
(6 {06]] سنـــسسه - பாம்பு - வில்லையுடையள் - துள்ளல் - எண் காற்புள் ஆகியவள் - நயத்தல்
- நெற்றி
- ep6šrp
- பெண்
- 46 -

19. புரப்பது - காப்பது
20. உற்பன்னம் - தோன்றுதல் 21. பங்கம் - குற்றம்
கவலுதல் - துன்புறல் 22. இகபரம் இம்மை மறுமை 23. இந்து - சந்திரன் 4ே. மருப்பு - கொம்பு
ஞாளி - நாய்
GSFLub -- வெற்றி
14. பிற குறிப்புக்கள் '
l.
12. LI
1.
1:
கிடைக்கப்பெற்ற பிரதி ஒன்றில் சிவகாமியம்மை திருவூஞ் சல் தும்பளை பிரமயூரீ ம. முத்துக்குமாரசாமிக் குருக்கள் பாடினார் என எழுதப்பெற்றிருக்கிறது.
ஒரு பிரதியிற் சிறை நீக்கிய பதிகத்திற் பின்வரும் பாடல் இரண்டாம் பாடலாக உள்ளது.
"புந்தி நொந்து தேவர் புலம்புசிறை நீக்கவெண்ணி வந்தது போல எந்தன் மனக்கவலை மாற்றியருள் இந்திரன் மகளான தெய்வ யானை மணவாள செந்தூர்க் கந்த சிவமைந்த திருக்கல் யாண வேலவனே."
ாக்களின் முதற் குறிப்பு
சிறை நீக்கிய பதிகம்
எந்தையே. ஆத்தர்ளே.
யாரிடத்தும். எப்பிழை செய்தாலும். பெற்றவள் நீ. - சீலைப்பேன் நுளம்பு. துப்பூட்டும் என்றனது. சந்திரோதய. என்னைச் சிறையில். வந்தாயோர் அருமருந்து.
- 47 -

Page 32
2. சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்
2.
1.
3.
4.
10..
சீரணி முக்க்ோணத்துள் . தானா மோங்காரத்துட். கந்தம் நெருங்கிய. எள்ளுக்குள் எண்ணெய் தாம்.
முத்தானத் தைங்கரனை. . அரியயனிந்திரன் முதலா.
பருவதராசன் தரு. எள்ளுக்குள் எண்ணெய் போல். நின்னடைக்கல மல்லால். கன்னலஞ் சொல்லியே.
3. சிவகாமியம்மை துதி
1. சங்கந் தழைக்க. 2. மங்கை மனோன்மணி. 8. மருப்பொன்று கயமுக. 4. பத்தியொடு பரவுவோர்க்கு.
திருவூஞ்சல்
1. திருமார்பனயன் முனிவர். 2。 கொண்ட்ல்வரை கனகவரை. 3. விண்ணுலவு மிரு சுடர்கள். 4. செய்ய வெண்டாமரை மலரின்.
5. தகரமணங் கமழ். 6. தும்புரு நாரதர் 7. மந்திரமே முதலான. 8. கதிராரு மணியணி. 9. பவர் மூதலா முருத்திரர். 10. உரகபதி நகரெட்டும். 11. தத்துபரியுதயாத்த மனம் . 12. ஐயையே அம்மையே.
- 48 -

இந்நூலாக்கதிற்குத் துணையான நூல்கள்
1 யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன்
(5); 6) TIL DIT 6) யாழ்ப்பாணச் சரித்திரம் - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச் சரித்திரம் - செ. இராசநாயகமுதலியார்
s :யாழ்ப்பாணக் குடியேற்றம் - கு. முத்துக்குமாரசாமிப் பிள்ளை
ஈழத்து தமிழ்ப்புலவர் சரித்திரம்
- மகாவித்துவான் சி. கணேசையர் தமிழ்ப் புலவர் அகராதி - ந. சி. கந்தையாபிள்ளை : . * ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
t -இலங்கைச் சாகித்தியமண்டலத் தமிழ்ப் பகுதியினர் இ ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சி - கலாநிதி க. செ. நடராசா . 勤 பஞ்சவன்னத் தூது - இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் * நவநீதப் பாட்டியல் - கழகப் பதிப்பு 12 எமது ஊர் - பூரீலங்கா சஞ்சிகை, கல்வி அமைச்சு 13 கோவில், சோமலெ, தமிழ்நாடு
4 செந்தமிழ்ப் பூம்பொய்கை
W - பண்டிதர் ஆ. சி. நாகலிங்கம்பிள்ளை, சுதுமல்ை 15 "இசை மரபு" - உலக நான்காந் தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர் 16 சிரித்திரன் இதழ்கள் - 1972 மார்ச்சு, 1973 திசெம்பர் 17 தமிழ் லெக்சிகன் அகராதி - சென்னைப் பல்கலைக் கழகம் 18 கட்டுரை - கலாநிதி கா. இந்திரபாலா, உரும்பராய்க் கருணாகர s விநாயகர் கும்பாபிடேக மலர் 19 பன்னிரு திருமுறைகள் - சமயகுரவர்கள்
---49ཕ་ཕམ་

Page 33
ணுவைச் சிவகாமியம்மை திருத்தேர்த் திருநாள்
அருள்மிகு
 
 


Page 34
அருள்மிகு இணுவைச் சிவ
 

காமியம்மை மாநோன்புத் திருநாள்