கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழம் தந்த கேசரி

Page 1
இந்நூல்.
"ஈழம் தந்த கேசரி" என்ற நூலேத் தந்த இரசிகமணி கனக செந்திநாதன், தம்மை இன் றைய கிலேயிற் பிரகாசிக்கச் செய்த ஈழகேசரி பாகிய திரு நா. பொன்னேயா அவர்களுக்குத் தமது நன்றிக் கடனே இந்நூல் வழியாகச் செவ் வனே செய்திருக்கின்ருர் அவர் எழுதிய நூல் களில் இது தலையாயது. இந்நூலே எழுத்தெழுத் தாகப் படித்தபின்பே இதனேக் கூறுகின்றேன்.
முதல் அத்தியாயம் சி வை117 இவ் வளவு காரியத்தையும் ஒரு மனிதர் எவ்வாறு செய்தார்' என்பதைப் புதிய முறையில் எடுத் துக் காட்டுகின்றது அது இறுதியத்தியாயம் "மனேமாட்சியில்' நிறைவுறுவது மகிழ்ச்சிக் குரியது.
இப்புத்தகம் கிராமம் ஒவ்வொன்றுக்கும் நல்ல வழிகாட்டி இதற்குக் கிராமசேவகன் என்று மற்ருெரு பெயரும் வழங்கத்தக்கது. ஒவ் வொரு கிராமத்துப் பொது கிலேயத்திலும் இப் புத்தகம் இருக்கவேண்டியது அவசியம். குரும்ப சிட்டியையும் அதனே வளர்த்த ஈழகேசரி நா. பொன்னேயாவையும் பார்த்துப் பார்த்து வாலிபு ருலகம் தத்தம் கிராமத்துக்குத் தாம் தாம் செய்யத்தக்க சேவையைச் செய்ய இந்நூல் துண்டும்.
ஈழ்கேசரி நா. பொன்னேயா அவர்கள் குரும்பசிட்டிக்கன்றி உலகப் பொதுவானவர். அவ்வாறே இந்நூலாகிய ஈழம் தந்த கேசரியும் கிராமங்களுக்கெல்லாம் பொதுவாய் வாலிய
ருலகைத் தூண்டிப் பயன்செய்யுமென்ப துறுதி
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே
 
 

கனக, விசந்திநாதன்

Page 2
சிவம
ஈழம் தந்
இரசிக கனக. செ
வெளி ஈழகேசரிப் பொன்னயா நி
19

ulb
த கேசரி
ந்திநாதன்
SG: னவு வெளியீட்டு மன்றம்
6 8

Page 3
முதற் பதிப்பு - 1968
நூல் பெற்றுக்கொள்ளும் இடங்கள் :
தனலக்குமி புத்தகசாலை, சுன்னுகம் சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, தெல்லிப்பழை
விலை ரூ. 3-00
ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றத்தினருக்காக, கன்னகம், திருமகள் அழுத்தகத்தில், குரும்பசிட்டி , திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

6)
பதிப் புரை
ܚ-ܡ0ܡܗܝܗ ܚܙܝܗܝ
* ஈழம் தந்த கேசரி’ என்னும் இந்நூலைப் பதிப்பித்து வெளியீடு செய்வதில் யாம் மிக்க பெருமையடைகிருேம். ஈழம் தந்த கேசரியான ஈழகேசரிப் பொன்னையா அவர்களின் நினைவாக நிறுவப்பட்ட இந் நிறுவனத்தார் இத்தகைய தொரு நூலையே தமது முதல் வெளியீடாகக் கொணரவேண்டுவது, அன்னர்க்குச் செய்யும் அஞ்சலியாகவும், சாலச்சிறந்த கருமமாகவும் அமையுமாயினும், தம்மைப் புகழ்தலை ஒரு சிறிதும் விரும்பாத பொன்னைய வள்ளலார்க்குத் தம்மைப்பற்றியதொரு நூல் வெளிவருதலினும் ஆன்ற தமிழறிஞர்களின் பெருநூல்கள் வெளி வருதலே ஆன்மதிருத்தி பயக்குமென்னுங் கருத் தால் கடந்த பதினேழு ஆண்டு காலத்தில் சில சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளிக்கொணர்ந் தனர். காலங்கடந்த செயலாயினும் அதற்கு ஆழ்ந்த கருத்துண்டென்பதைக் கூற விழை கின்ருேம்.
இனியேனும், ஈழகேசரிப் பொன்னையா அவர் களின் வாழ்க்கை வரலாறு, அவர் சாதனைகள், தொண்டுகள் என்பன குறித்து ஒரு நூல் எழுதல் நன்று : எதிர்கால சமுதாயத்துக்கு அது மிக்க பயன் விளைக்கும் ; இளம் உள்ளங்களுக்கு அஃது ஊக்கமும் உறுதியும் அளிக்கும் என எமது நிறுவனத்தார் ஒருமுகமாகக் கருதியதன் விளைவாக இந்நூல் எழுகிறது.

Page 4
ץ1
இந்நூலை யாத்துதவியவர் இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள். அவர் நாடு புகழும் எழுத்தாளர்; ஈழகேசரியோடு சின்னஞ்சிறுவயது தொடக்கம் நெருங்கிய தொடர்புகொண்டவர் ; பொன்னைய வள்ளலென்னும் பண்புள்ள கற்பக தருவின் நீழலிலே வளர்ந்தவர் ; ஈழகேசரிப் பொன்னையாவை இன்றும் " பொன்னையாக் கமக்காரன் ' என்று பத்தியோடும் அளவற்ற ஆராமையோடும் நெஞ்சினிக்க அழைக்கும் வழக்கமுடையவர்; ஈழகேசரிப் பொன்னையாவின் ஒவ்வொரு செயலையும் அறிந்து உணர்ந்து அனுபவித்து வாழ்ந்தவர். எனவே, இரசிகமணி கனக. செந்திநாதனைத் தவிர வேருெருவர் இத் தகையதொரு நூலே யாத்தல் முடியாது. அவர் பலநாள் முயன்றுழைத்து இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். இந்நூலிலுள்ள ஒவ்வொரு அத்தி யாயமும் ஈழகேசரிப் பொன்னையா அவர்களைக் கண்முன் நிறுத்திக் காட்டுகிறது என்பதை வாசகர்கள் நிச்சயமாக உணர்வர். இப் பெருந் தொண்டாற்றி, எமக்குப் பெருமையளித்த இரசிகமணி கனக. செந்திநாதனுக்கு எமது மனப் பூர்வமான நன்றி.
இந்நூலைத் தமிழ்கூறு நல்லுலகம் உவந் தேற்பதாக,
ஈழகேசரிப் பொன்னை யா 20-3-68 நினைவு வெளியீட்டு மன்றத்தார்

அணிந்துரை
*ー**ー
கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னுள் அதிபர் மானிப்பாய், ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள்
திரு. கனக. செந்திநாதன் ஈழநாட்டெழுத்தாளருள் தலைசிறந்த ஒருவர். அவர் எழுதிய நூலுக்கு அணிந்துரை தேவையோ என்பது ஒரு கேள்வி. நண்பன் பொன்னை யாவைப்பற்றியே இந்நூல் கூறுகிறது. அவ ரைக் குறித்து யானறிந்த யாவற்றையும் எழுதவேண்டு மாயின் இந்நூலினும் பெரிதான ஒன்றை எழுதிவிடலாம். இது இன்னெரு வில்லங்கம். என்ன வில்லங்கமிருந்த போதும் எழுதாதுவிட முடியாது. திரு. பொன்னையா சுன்னுகத்தில் புத்தக வியாபாரம் தொடங்கிய காலந் தொட்டு அவர் இறைவனடி சேர்ந்த நாள்வரை அவருக் கும் எனக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. சிறிது சிறிதாய்த் தொடங்கிய இவ்வுறவு நாளுக்குநாள் வளர்ந்து ஈற்றில் ஒருவரை ஒருவர் தழுவாது எச்செயலிலும் இறங்குதல் அரிதாய் விட்டது. இந் நட்பின் முதிர்ச்சியினற்போலும் அவர் ஆவி உடலைவிட்டு நீங்கியபோதும் அருகிருக்கும் பேறும் பொறுப்பும் எனக்குக் கிட்டியது. மானிப்பாய் வைத்தியசாலையில்தான் அவர் காலகதியடைந்தார். வழக்கம்போல அன்றும் அவரைப் போய்ப் பார்த்து விட்டு வீடு திரும்பி அரைமணித்தியாலத்துக்குள் பசுபதி (அச்சக ஊழியர்) அவசரமவசரமாக ஓடிவந்து ‘மனேச் சருக்கு ஒரு மாதிரி இருக்கு, அவ உங்களை ஒருக்கா வரட் டாம் ' என்று சொன்னர். இதற்கு ஏறக்குறைய இரண்டு கிழமைக்கு முன் நான் அவரைப் பார்த்தபோது தன் இனுடைய பூவுலக வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது என்று அவருக்கு நன்ருய்த் தெரிந்துவிட்டதென்று எனக்குத் தோன்றிற்று. ஆனல் அவர் சிறிதும் தயங்க வில்லை. பலரும் "பிறப்புப்போல் இறப்பும் இயற்கையே’

Page 5
vi
என்று வாய்வேதாந்தம் பேசுவர். ஆனல் திரு.பொன்னையா வுக்கோ இது வாய்வேதாந்தமாய் இருக்கவில்லை; என்றும் இருந்த அஞ்சா நெஞ்சம் அன்றும் இருந்தது.
புத்தக வியாபாரம் தொடங்கியபோதோ ‘ஈழ கேசரி’யை வெளியிட ஆரம்பித்தபோதோ அல்லது அச்ச கத்தை நிறுவியபோதோ திரு. பொன்னை யா செல்வன் அல்லர் ; முதல் வைத்துக்கொண்டு அவர் எம்முயற்சியி லும் இறங்கியதில்லை. ' உலையை அடுப்பேற்றிய பின்பு தான் அரிசி தேடப்போவது என்னுடைய முறை" என்று திரு. பொன்னையா எனக்குப் பலமுறை சொல்லியிருக் கிருர். ஏதோ ஒன்றைச் செய்யவேண்டுமென்று தீர்மானித் தால் வேண்டிய முதல் இருக்கிறதென்ருே அல்லது என் னென்ன தடைகள் ஏற்படுமென்ருே சிந்திப்பது அவர் இயல்பல்ல.
* கேசரி ' என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட அவர் கையாண்ட முறையை நினைக்கும்போதெல்லாம் எனக்குத் திகைப்பு ஏற்படுகிறது. அப்போது நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியனுக இருந்தேன். ஒருநாள் பின்னேரம் அவரும் சிவபாதசுந்தரமும் துரைராசசிங்கமும் என் வீட்டுக்கு வந்து "கேசரி' என்னும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையை, திரு. பொன்னையா அவர்கள் நிறுவிவிட்டதாகவும் அடுத்த கிழமை அதன் முதல் இதழ் வெளிவரும் என்றும் நானே இப் புதுப்படைப்பின் ஆசிரியன் என்றும் சொன்னர்கள். துரைராசசிங்கம் துணை ஆசிரியர். இவர் எங்கு பத்திரிகைத் தொழிலிற் பயிற்சி பெற்ருரோ தெரியாது. ஆனல் எங்ங்னமோ இத்தொழிலுக்குரிய எல்லாத்துறைகளிலும் நிறைந்த அறிவு அவருக்கு இருந்தது. "கேசரி ஒரு வார வெளியீடு. ஒவ்வொரு இதழும் வெளிவருமுன் எந்தப் பக்கத்தில் என்ன என்ன விடயங்கள் வரவேண்டுமென்று அவர் திட்டம்போட்டு ஒரு “போலி இதழ் (Dummy ) செய்து எனக்கு அனுப்பிவைப்பார். பத்திரிகை வெளியீட்டுக்கு வேண்டிய பல நுட்பங்கள் அவருக்கு வாலாயம்.

vii
பக்கங்களின் அமைவு, பந்தி வகுத்தல், கலம் (Column) வகுத்தல் போன்ற அம்சங்களைப்பற்றி அவருக்கு நுண்ணறிவிருந்தது. "கேசரி’யின் மூலமோ 'ஈழகேசரி? யின் மூலமோ திரு. பொன்னையா பொருளிட்டவில்லை. இரண்டு பத்திரிகையாலும் அவருக்கு நட்டமே ஏற்பட் டது. சிறந்த நோக்கங்கொண்டே இவை தோன்றின; அந் நோக்கத்தையும் அவை நிறைவேற்றின. இரண்டு பத்திரிகைகளிலும் எனக்கு ஆர்வமுந் தொடர்பு மிருந்
தன.
‘ஈழகேசரி'யில் இடையிடையே எழுதி இருக்கிறேன். ஆறு ஆண்டுகளாக சித்திரை வருடப்பிறப்போடு ஈழகேசரி ஆண்டு மலர்கள் வெளிவந்தன. ஒவ் வொன்றிலும் நானும் ஏதோ எழுதியிருக்கிறேன். * கேசரி 'யில் கிழமைதோறும் ஆசிரிய உரை ( Editorial) எழுதினேன். இடையிடையே ஒரு இதழின் பக்கங்களை நிரப்பமுடியாத நிலைமை உண்டாகி, ஏதோ, எழுதிச் சமாளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படும். ஏதேனும் முக்கிய நிகழ்ச்சி நடந்துவிட்டால் சிறப்புக் கட்டுரை வரையவேண்டி இருக்கும். தாகூர் இறந்த செய்தி கிடைத்ததும் துரைராசசிங்கம் திரு. பொன்னையாவுடன் காரில் ஏறி வட்டுக்கோட்டையில் வந்து இறங்கிவிட்டார். தாகூருடைய கவிதை, நாடகம், சித்திரம் போன்ற வற்றைப்பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அடுத்தநாட் காலை தனக்கு அனுப்பவேண்டுமென்று பழி கிடந்தார். அவர் வந்தது பின்னேரம்- ஏழு மணியளவில். அதற்குப் பின் யாழ்ப்பாணக் கல்லூரி நூல் நிலையத்துக்குப் போய் வேண்டிய நூல்களை எடுத்துவந்து கட்டுரை எழுதினேன். இது போன்ற எதிர்பாராத பல நெருக்கடி களைத் துரைராசசிங்கமும் நானும் எப்படியோ சமாளித்து விட்டோம்.
"கேசரியை 'ப் பலர் புகழ்ந்தார்கள். யோகர்சுவாமி அவர்கள் இடையிடையே பத்துச்சதம் கொடுத்து அதை வாங்கிப் படித்ததுண்டு. கொழும்பு நகரில் வாழ்ந்த வள்ளல், வைத்தியர் இ. வி. இரத்தினம் (Dr. E. W. Ratnam)

Page 6
viii
அவர்கள், சமசமாசக் கட்சிப் பிரமுகர் கொல்வின் ஆர். டி. சில்வா போன்ற பலர் பாராட்டுக் கடிதங்கள் எழுதினர். ஆனல், பாராட்டு வந்தபோதும் பண வருவாய் திருப்தியாயில்லை. "கேசரி மறைந்தது. திரு. பொன்னையா மறைந்து சில ஆண்டுகளில் ‘ஈழகேசரி’யும் மறைந்தது. இவையிரண்டும் பெரும்பாலும் வாலிபர் மகாநாட்டின் கொள்கைகளையே பரப்பின. நாட்டின் விடுதலை, நாட்டு மக்களின் ஒற்றுமை, தாய்மொழி மூலம் கல்வி, தீண்டாமை அகற்றல் போன்ற குறிக்கோள் களையே இவ்விதழ்கள் கடைப்பிடித்தன. “ ஈழகேசரி ? இத்துடன் இளம் எழுத்தாளர்க்குத் தம் திறமையைச் சாதிக்க வாய்ப்பளித்தது. இளம் எழுத்தாளரின் சிறு கதைகள், தொடர்கதைகள், பாடல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவை ஈழகேசரி 'யில் வெளிவந்து இவ்வெழுத்தாளருக்கு உளப்பூரிப்பை உண்டாக்கியதுடன் நாட்டின் அபிமானத்தையும் தேடிக்கொடுத்தன.
"கேசரி நடந்துகொண்டு இருந்தபோதுதான் திருமகள் அழுத்தகம் இன்னும் ஒரு சிறந்த சாதனையைச் சாதித்தது. அப்போதுதான் "ஐம்பதுக்கு ஐம்பது என்னும் அரசியல் சுலோகம் நாட்டிலே நடமாடியது. இதைப் பீடிகை யாகக் கொண்டு திரு. க. கா. (G. G. பொன்னம்பலம் அவர்கள் சட்ட சபையில் பத்து மணித்தியாலத்துக்கு மேல் உரைநிகழ்த்தினர். பின் இவ்வுரை ஒரு புத்தக மாய் வெளிவந்தது. இவ்வுரையை அலசி ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளையும் போலிகளையும் குதர்க்கங் களையும் பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டவேண்டும் என்று வாலிபர் மகாநாடு முடிவு செய்தது. என்னுடைய சகலனும், பின்னர் சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் உயிர்நாடியாயிருந்தவருமான நியாயவாதி திரு. வ. சிற்றம்பலம் பொறுப்பை ஏற்று திரு. பொன்னம்பலத் தின் சட்டசபைப் பேச்சை நுணுகி ஆராய்ந்து திரு. பொன்னம்பலத்திற்கு மறுமொழியாகவும் மறுப்பாகவும் ஒன்றை எழுதினர். அழகான ஒரு பிரசுரமாய் இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதைப் படித்தவர்கள்

ix
நூலின் உள்ளீட்டைப் போற்றியதுடன் அதன் அமைப்பு, கட்டுக்கோப்பு முதலியவற்றையும் பாராட்டினர். திருமகள் அழுத்தகம் வெளியிட்ட முதல் ஆங்கி ல நூல் இதுவென்றே நம்புகிறேன். இதன் பெயர் * வகுப்புவாதமோ தேசீயமோ ? - Communalism or Nationalism ?. திருமகள் அழுத்தகம் முதன்முதலாய்க் கையேற்ற தமிழ் வெளியீடும் வாலிபர் மகாநாட்டுடனும் என்னுடனும் தொடர்புடைய ஒன்றே. காங்கேசன்துறை யில் மகாநாட்டு ஆண்டுவிழா நடத்துவதற்குத் திட்டம் போடப்பட்டிருந்தது. தலைவர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார்.
இம் மகாநாட்டுப் பந்தலில் சமபோசனம் நடத்துவ தென்று மகாநாடு முடிவு செய்திருந்தது. நாட்டிற் பெரும் பரபரப்பு. பந்தல் அரைகுறையாய்ப் போட்டு ஆயிற்று. பந்தல் போட்ட இடம் பலருக்குச் சொந்தம். மகாநாட்டின் போக்கை எதிர்த்தவர்கள் சொந்தக்காரரில் ஒருவரைக்கொண்டு அந்த நிலத்திற் பந்தல் அமைப்பதைத் தடுப்பதற்கு முயற்சி எடுத்தனர். மகாநாட்டுக்குப் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புத் தலைதூக்கியது. இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு நானும் ஒடியாடித் திரிய வேண்டியிருந்தது. அத்துடன் வரவேற்புரையும் எழுதிப் படிக்கவேண்டி யிருந்தது. வரவேற்புரை மகாநாடு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்குமுன்தான் எழுதி முடிந்தது. அச்சகம் ஒன்றும் அந்தக் குறுகிய காலத்தில் இவ்வுரையை அச்சிடும் பொறுப்பை ஏற்கவில்லை. கடை சியில் திரு. பொன்னையாவிடம் போனுேம், இரண்டொரு நாட்சஞக்குமுன்தான் அவர் அச்சியந்திரத்தை வாங்கி யிருந்தார். நாளுக்கு வேலை செய்யவில்லை. அத்துடன் அன்று அட்டமி. ஆனலும் திரு. பொன்னையா தயங்க வில்லை. எப்படியோ இரவாய்ப் பகலாய் வேலைசெய்து உரிய நேரத்துக்கு வரவேற்புரையை அச்சடித்துத் தந்துவிட் -ார். அச்சுக்கோப்பு முதலிய வேலைகளை அவருஞ் செய்த படியாலேதான் இச் சாதனையைச் சாதிக்க முடிந்தது.

Page 7
ΣK
நண்பன் பொன்னையாவைப் பற்றி எதை எழுதுவது, எதை விடுவது என்று முடிவுசெய்வது எளிதல்ல. வாலிபர் மகாநாடு, கலா நிலையம் போன்ற நிறுவனங்களில் உழைத்த கலைப்புலவர் க. நவரத்தினம், வழக்கறிஞர் தி. நெ. சுப்பையா, திரு. சி. சுப்பிரமணியம் (ஸ்கந்த வரோதயக் கல்லூரி முன்னைநாள் அதிபர் ), திரு. ஏ. இ. தம்பர் (மத்திய கல்லூரி முன்னைநாள் அதிபர்), நான் ஆகிய யாவரும் அக்காலத்தில் ஒட்டாண்டிகள். எங்கள் உழைப்பு வாழ்க்கை நடத்துவதற்கே போதியதா யிருந்தது. பொதுத் தொண்டில் ஈடுபட்டு நாங்கள் யாவருங் கடனளிகளாயிருந்தோம். எங்களுக்கு வேண்டிய அச்சுவேலை - விளம்பரங்கள், வெளியீடுகள், தலைமை உரைகள், வேறும் சமயோசித அலுவல்கள் - பெரும் பாலும் திருமகள் அழுத்தகத்திலேதான் செய்யப்பட்டன. இவை யாவும் கடனிலேதான். இந்தக் கடனை இறுக்க வேண்டிய கடன் என்று நாங்கள் கருதவில்லை. அரை குறையாய் இக்கடனை இறுத்தது நினைப்பிலுண்டு. ஒரு முறை திரு. பொன்னையா தனக்கேற்பட்ட நெருக்கடியால் என்னை நெருக்கியபோது, ' இப்ப என்னிடம் காசில்லை : நீர் கோட்டுக்குப்போய் அறவிடும் ' என்று அவருக்குச் சொன்னது இன்றும் என் நினைவிலிருக்கிறது. இந்தத் தலையிடியைத் தீர்ப்பதற்குக் கடைசியில் நாங்கள் ஒர் உபாயத்தைக் கையாண்டோம். வாலிபர் மகாநாட்டுக்கு திரு. பொன்னையா அவர்களைத் தனதிகாரியாக்கிவிட் டோம். அவரையே கடன் கொடுக்கவேண்டியவராயும் இறுக்கவேண்டியவராயும் ஆக்கிவிட்டோம். திரு. பொன்னையாவினுடைய பொருளாதார நிலை சிறிது வளர்ச்சியடைந்தபோது, பொது அலுவல்களில் நாங்கள் ஈடுபட்டபோது, வேறு வழியில்லாது போனல் திரு. பொன்னையாவிடம் போவோம் என்ற தென்பு எங்களுக் கிருந்தது. அவருடைய மறைவுநாளில் நான் இதைக் கூறியபோது நண்பன் க. நவரத்தினத்தின் கண்களி லிருந்து பொலபொல வென்று கண்ணிர் வழிந்தது. தான் ஈட்டிய பொருளை திரு. பொன்னையா அவர்கள்

Χi
தனக்கே உரியதென்று எண்ணவில்லை. நல்ல நோக்கங் களில் அதைச் செலவிடுவதே தன் பொறுப்பு என்று அவர் எண்ணினர். சைவ வித்தியாவிருத்திச் சங்கம், வாலிபர் மகாநாடு, கலா நிலையம், குரும்பசிட்டி சன்மார்க்கசபை போன்ற பல நிறுவனங்கள் அவரீட்டிய பொருளை அனு பவித்தன. இதைவிட, பள்ளிச் சம்பளம் கொடுக்க முடி யாத பிள்ளைகள் பலருக்குத் தாராளமாய் அவர் பண உதவி செய்தார். இப்படி அவர் வாரி வழங்குவதைக் கண்ட அவரின் நண்பர் சிலர் அவர் சிறிது சிக்கனமாய் வாழ வேண்டும் என வற்புறுத்தியதுண்டு. அவர்களுக்கு அவர் எப்போதும் கூறிய மறுமொழி, ' பணம் என்று மிராது. இருக்கும்போதே நல்ல காரியங்களுக்கு அதைச் செலவிட வேண்டும். இருக்கிறபோது கொடாது போனல் பிறகு எப்போது கொடுக்கலாம் ?’’
திரு. கனக. செந்திநாதன் குரும்பசிட்டியைத் தாயக மாய்க் கொண்டவர்; திரு. பொன்னையாவுக்கு உறவினர் ; அவருடைய அயலில் வாழ்ந்தவர்; அவருடைய அன்ருட வாழ்க்கையை நேரிற் கண்டவர்; தான் கண்டதையும் கேட்டதையும் கூட்டியோ குறைத்தோ காட்டாது அப் படியே படம் பிடித்து இந் நூலிற் காட்டுகிருர், திரு. பொன்னையாவை அறிந்தவர்கள் யாவரும் 'சி. வை. 117 ஐயும் அறிந்திருந்தனர். அதில் ஏறியும் இறங்கியும் உள்ளனர். அது அவருக்கு ஒரு முத்திரைபோலிருந்தது. இந்நூலின் முதலாம் அத்தியாயத்திற்கு "சி. வை. 117 என்று பெயர் கொடுத்தது மிகவும் பொருத்தம். தோற் றம், பள்ளிக்கு வைத்தல், அரங்கேறல், திருமணம், உத்தியோகம், குனதிசயங்கள், மறைவு என்ற பாரம்பரிய முறையில் இந்நூல் அமையவில்லை. ஆக்கியோனுடைய தமிழ் நடையைப்பற்றி மதிப்பீடு கூறுவதற்கு எனக்கு அருகதை உண்டென்று நான் எண்ணவில்லை. பேசுவதும் எழுதுவதும், ஒருவர் கருத்தை உலகம் எளிதில் அறிந்து கொள்வதற்கே, அலங்காரமும் அணியும் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதுடன் இன்பமும் அளிப்பதற்கே கையாளப் படவேண்டும். பொருளை விளங்குவதுடன் பொருளைச்

Page 8
xii
சுவைப்பதற்கும் இவை உதவுகின்றன. திரு. செந்திநாதன் எழுதியதை விளங்கிக்கொள்வதற்கு அகராதியைப் புரட் டத் தேவையில்லை. தான் கண்ணுற் கண்டதையும் காதாற் கேட்டதையும் உள்ளத்தில் உணர்ந்ததையும் இந்நூலைப் படிப்போரும் உணர்ந்து சுவைக்கவேண்டும் என்ற நோக்கத் துடன்தான் திரு. செந்திநாதன் இந்நூலை எழுதியுள்ளார். இந்நோக்கம் முற்ருய் நிறைவேறும் என்பதற்கு ஐயம் சிறிதுமில்லை. திரு. பொன்னையாவின் வாழ்க்கை வரலாற் றுடன் அவர் பால் ஆக்கியோனுக்கிருக்கும் அன்பும் ஆர்வ மும் இந்நூலின்கண் காணக்கிடக்கின்றன.
பேரின்பநாயகம்

6.
முகவுரை
--
ஈழம் தந்த கேசரி ' என்னும் இந்நூல் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வண்டமிழ்த் தொண்டை, பிற பொதுச்சேவைகளை, வரையாது கொடுத்த வள்ளல் தன்மையைக் கூறும் நூலாகும். நல்லனவற்றையே சிந்தித்து, துணிவே துணை என வாழ்ந்து, பெருமைமிகு காரியங்களைச் சாதித்த அவரது வாழ்க்கை நூலை வாசகப் பெருமக்களுக்கு மிகப் பணிவுடன் அளிப்பதில் என் மனம் பூரிப்படைகிறது.
சாதாரணமான ஒரு கிராமமாகிய குரும்பசிட்டியில் பிறந்த அவர், அவ்வூருக்கு வேண்டிய தொண்டைச் செய்யச், சன்மார்க்க சபையை ஸ்தாபித்தார். அச்சபை மூலம் சமயம், இலக்கியம், கலை, கிராமசேவை ஆகிய துறைகளிற் பணியாற்றி அவ்வூரைப் பிரகாசிக்கச் செய்தார். அவர் தொடாத துறைகளுமில்லை ; அத் துறைகள் ஒளிதராமல் விட்டதுமில்லை.
அவர் மறைவுக்குப்பின் அவரது ஞாபகார்த்த விழாவைச் சன்மார்க்கசபை சென்ற பதினேழு வருடங்க ளாகக் கொண்டாடி வருகின்றது. சென்ற ஏழு வருடங்க ளாக அகில இலங்கை ரீதியில் பேச்சுப்போட்டியை நடாத்தித் தங்கப் பதக்கங்களையும் வெள்ளிப் பதக்கங் களையும் புத்தகப் பரிசில்களையும் அளித்துவருகின்றது. சென்ற மூன்று வருடங்களாக நாடகப் போட்டியையும்
நடாத்திப் பரிசில்களை அளித்துவருகின்றது.
பேச்சுப்போட்டியிலும் நாடகப்போட்டியிலும் பங்கு பற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் (19, 20 வயது) திரு. பொன்னையா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வினவி அவரைப்பற்றி ஏதாவது நூல் உண்டா என வினவினர். குரும்பசிட்டியில் உள்ள மாணவர்களும்

Page 9
xiv
அவரைப்பற்றி அறிய அவாவினர், எனவே, இப்படியான ஒரு வாழ்க்கைநூல். எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது.
என்னிலும் பார்க்க எழுத்தாற்றல் மிக்க யாராவது இத்தொண்டைச் செய்திருந்தால்-திரு. பொன்னையா அவர்களோடு அரசியலில், தமிழ்த்தொண்டில், சமூக சேவையில் நெருங்கிய தொடர்புடையவர் இப்படியான ஒரு நூலை எழுதியிருந்தால்-என்மனம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருக்கும். எனினும் என்பணியை இயன்ற வரை செப்பமாகவே செய்திருக்கிறேன்.
என் பணிக்கு எல்லாவகையிலும் ஆதரவுதந்த, சுன்னகம்: தனலக்குமி புத்தகசாலை, திருமகள் அழுத்தகம், வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் என்னும் ஸ்தா பனங்களின் அதிபர் திரு. மு. சபாரத்தினம் அவர் களுக்கும், ஒவியர் திரு. கே. கே. வி. செல்லையா அவர் களுக்கும் எனது நன்றி.
இந்நூலுக்கு அணிந்துரை நல்கிய ஈழத்து நல்லறிஞர் திரு. எஸ். ஏச். பேரின்பநாயகமவர்களை அறியாதார் இலர். திரு. பொன்னையா அவர்களது அரசியல் குருவும், காந்தீயவாதியும், உண்மையான தேசத்தொண்டரும், ஈழத்தின் சுதந்திரத்துக்காகப் போராடியவரும் ஆகிய அன்னர் இந்நூலுக்குச் சிறந்த அணிந்துரை அளித்ததை என் பெரும் பேருகக் கருதுகின்றேன்.
தமிழ்த்தொண்டே மூச்சாகக் கருதிய “ ஈழம் தந்த கேசரி" (மதுரைப் பல்கலைக்கழக உபவேந்தராகிய தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர் அப்படித்தான் குறிப்பிட்டிருக் கிருர்) திரு. பொன்னையா அவர்களது வாழ்க்கைநூல்
தமிழ்போல நின்று நிலவும் என்பதுறுதி.
கனக. செந்திநாதன்
குரும்பசிட்டி 20-3-68

பொருளடக்கம்
an-de-rm
1. பதிப்புரை to i. அணிந்துரை O i. முகவுரை
சி. வை. 117
விளையும் பயிர்
சகடக்கால்
இரண்டு கண்கள்
பயன் மரம்
உத்தர வராகம்
மூன்ருங் கண்
சன்மார்க்க சபை us என் கடன் பணிசெய்து கிடப்பதே நல்ல கமக்காரன் "நீர் நிறைந்த ஊருணி” அணைந்த தீபம் r 48 கன்றுங் கணியுதவும்
அனுபந்தம்
பக்கம்
iii
xiii
13
24
33
43
59
69
91
I 02
Il 4
123
129
I 39

Page 10


Page 11
6
சி வை.
1945ஆம் ஆண்டு கார்த் திகதி கார்த்திகை மாதத்து சைவ நிலை போதித்து வ ஆறுமுகநாவலர் தினம்.
குரும்பசிட்டியிலுள்ள, சாதி பரமற்ற-ஒரு கல்வீட்டிலே உரத்த சத்தத்தில் யாரோ கேட்கிறது.
* கல்லைநகர் ஆறுமுக நாள் சொல்லு தமிழ் எங்கே?
இந்த வரிகளை அவர் வாய் பாடுகிறது. உணர்ச்சியுடன்

117
திகை மாதம் 28ஆந் து மகம், காசினிக்குச்
ாழிகாட்டிய பூரீலழறீ
நாரணமான - ஆடம் விடிய எட்டு மணிக்கு ஒருவர் பாடுங் குரல்
பலர் பிறந்திலரேல்
Jy
திரும்பத் திரும்பப் ா பாடுகிறது.

Page 12
2 ஈழம் தந்த கேசரி
சிறிதுநேரம் மெளனம் ; பேரமைதி.
மறுபடியும் அவர் வாய் அசைகிறது.
இப்போது அவர் உரத்துப் பாடுகிறர் பாட்டில் வெறிகொண்டவர் போலப் பாடுகிருர்,
*ஜெயமுண்டு பயமில்லை மனமே - இந்தச்
ஜென்மத்திலே விடுதலை யுண்டு நிலையுண்டு ஜெயமுண்டு பயமில்லை மனமே, '
பாரதியாரின் இந்தப் பாடல் அவர் வாயிலிருந்து வரும்போதுதான் அர்த்தபுஷ்டி உடையதாக இருக்கிறது.
அந்தமனிதர் தூய வெள்ளைக் கதர்வேட்டியை, பாடியபடியே உடுக்கிருர் ; கருநீல மேகவர்ண முடைய கதர்ச் சட்டையைப் போடுகிருர்,
சி வை. 117 என்ற இலக்கமுடைய அவரது மோட்டார்க்காரை முத்துக்குமாரு கொண்டு வந்து வாசலில் நிறுத்துகிருர்,
"ஒய், சின்னத்தம்பியரே, ஏறுங்காணும் காரிலே’ என்று பிரபல கமக்காரரும் தம்மோடு ஒட்டி உறவாடும் நண்பருமாகிய ஒருவரைப் பார்த்துத் தோழமையோடு கூறுகிருர், அந்தக் கமக்கார ருக்கு மலையாளப் புகையிலைச் சங்கத்திலே பணம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
கார் புறப்பட ஆயத்தமாகிறது.

சி வை. 117
பைசிக்கிலில் ஒரு தமிழாசிரியர் வந்து இறங்கு கிருர்,
*நான் சைவவித்தியாவிருத்திச் சங்க (ஹிந்து போட்) மனேஜரை (இராசரத்தினத்தை) நேற்றுக் கண்டனன். உம்முடைய கஷ்டங்களை எல்லாம் சொன்னனன். கட்டாயம் தை மாதம் மாற்றி விடுகிறேன் என்று சொன்னவர். இன்றைக்கும் அந்தப்பக்கம் போகப்போகிறேன். கட்டாயம் மனேஜரைச் சந்திக்கிறேன். பயப்படாமல் பள்ளிக்கூடம் போம் ‘’. ஆசிரியருடைய முகம் மலருகிறது.
முத்துக்குமாரு காரின் பின்பக்கத்தை (டிக்கி யை)த் திறந்து ஒரு பெட்டி நிறைய இருக்கும் வெற்றுச் சோடாப் போத்தல்களை வைத்து மூடுகிருர்,
பக்கத்து வீட்டிலிருக்கும் ஏழைக்கிழவி கேத்தல், பேணி இவற்றுடன் வந்து அவைகளை இணுவில் ஆஸ்பத்திரியில் இருக்கும் தன் பேத்தியிடம் கொடுக்கும்படி கேட்கிருள்.
‘ என்ன பிள்ளை ? ஆண் பிளைப் பிள்ளையா ? நல்லது. கொடுக்கிறேனணை நீ போ *. கிழவி தன் பொக்கைவாயாற் சிரிக்கிருள். கார் புறப் படுகிறது.
சின்னத்தம்பிக் கமக்காரன் பின்சீற்றிலே உட்கார அவர் முன் சீற்றில் உட்கார்ந்து ஊர்விடயங்களைப் பற்றிப் பேசியபடியே தமது காரியாலயத்துக்குச் செல்கிருர்,

Page 13
4 ஈழம் தந்த கேசரி
அவரது சி வை. 117ஆம் நம்பர் மோட்டாரை நாமும் பின்தொடர்வோம்.
அது சுன்னகத்தில், தனலக்குமி புத்தகசாலைதிருமகள் அழுத்தகம் என்னும் " போட் பலகை தொங்கும் இடத்திற் போய் நிற்கிறது.
அவர் மெதுவாக இறங்கிப்போய்த் தனது கதிரையில் உட்காருகிருர்,
வந்த கடிதங்களை ஒவ்வொன்ருகப் பார்வையிட்ட படியே எழுதவேண்டிய பதில்களைப் பக்கத்தில் இருக்கும் சபா'விடம் கூறுகிருர்.
அதற்கிடையில் சி வை. 117 இணுவில் ஆஸ் பத்திரிக்குப் போய்த் திரும்புகிறது.
சின்னத்தம்பிக் கமக்காரன் சுன்னகம் சந்தைக்குப் போய் வாழைக்குலை, கத்தரிக்காய், முருங்கைக் காய் என்ன விலை விற்கிறது என நோட்டம் போட்டுவிட்டு வந்துகொண்டிருக்கிருர்,
கடிதங்களுக்குப் பதிலெழுதுமாறு கூறியபின் பக்கத்தில் உள்ள அறைக்கு அவர் வருகிருர், அங்கு பத்திரிகை வேலை நடக்கிறது. அரியம் ஒரு கட்டுரையைக் காண்பிக்கிருர், " சரி, போடலாம் போடு ' என்று கூறியபடியே உள்ளே போய்க் கதவு நிலையடியில் நின்றபடியே, 'ஒரு மனேஜர் பார்வை பார்க்கிருர், மெஷின்களின் " கடாபுடா ஓசை; அச்சுக் கோப்பவர்களின் துரிதமான வேலை; பைன்டர்" களின் (புத்தகங் கட்டுவோரின்) சுறுசுறுப்பான கை அசைவு.

சி வை. 117 5
அவருடைய முகத்தில் திருப்தியின் தெளிவு.
பத்துமணியாகிறது.
சிவை. 117 கடையின் முகப்பில் வந்து நிற்கிறது. பின் "டிக்கி திறக்கப்படுகிறது. சோடாப் போத்தல்கள் கொண்ட பெட்டி இறக்கப்பட, யாழ்ப்பாணத்திலுள்ள புத்தகக் கடைகளுக்குக் கொடுக்கவேண்டிய பாடபுத்தகங்கள் ஏற்றப் படுகின்றன.
அவர் புறப்பட ஆயத்தமாகிருர்,
அப்போது மகாவித்துவான் கணேசையரவர்கள் வருவது தெரிகிறது.
மிகப் பயபக்தியோடு எழுந்துநின்று கதிரையில் இருக்கச்செய்து சுகசேமம் விசாரித்து அவருக்கு என்ன தேவை என்பதைப் பெளவியமாக விசாரிக்
கிருர்,
அப்பாக்குட்டியவர்களைக் கூப்பிட்டு ஐயா அவர் களின் தேவையைப் பூர்த்தியாக்கச் சொல்லி விட்டுத் தமது அவசர வேலைகளைக் கவனிக்க, ஐயா அவர்களிடம் மன்னிப்புக்கோரி புறப்படு கிருர்,
சிவை, 117 யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறது.
மலையாளப் புகையிலை ஐக்கியவியாபாரச் சங்கத் தின் நிர்வாகசபையில் அவர் ஒரு முக்கிய உறுப்

Page 14
6 ஈழம் தந்த கேசரி
பினர். அவர் அக் கட்டடத்தினுள் நுழைந்ததும் பல முகங்கள் அன்பால் விரிகின்றன. அவர் தமது புன்சிரிப்பால் மறுமொழி கூறியபடியே சின்னத் தம்பிக் கமக்காரனின் விடயத்தை உரியவரிடம் கூறிப் பணத்துக்காக வேண்டிய ஒழுங்குகளைச் செய்துவிட்டு, ' பணத்தை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஊருக்குப் போம் ' என அவருக்குச் சொல்லிவிட்டு, சைவவித்தியாவிருத்திச் சங்கக் கந்தோரை நோக்கி விரைகிருர்,
அங்கே மனேஜர் இல்லை.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையை நோக்கி சிவை, 117 ° பறக்கிறது’.
முத்துத் தம்பி வித்தியாசாலையில் படிக்கும் அநாதைக் குழந்தைகள் - சின்னஞ்சிறுசுகள் - நாற்பது அடி ஆழமான கிணற்றில் துலாவால் தண்ணிரள்ளிக் குளிக்க, குடிக்க படும் அவஸ் தையை எப்படி நீக்குவது என "மனேஜர்' இராச ரத்தினம் மண்டையைப்போட்டு உடைக்கும் தருணம் சி வை. 117 உள்ளே நுழைகிறது.
மனேஜர் தனது தேவையை நாசூக்காக அவருக்கு எடுத்துச் சொல்கிருர்,
அவர் சிறிதுநேரம் யோசித்துவிட்டுத் தாம் அந்தத் தேவையைப் பூர்த்தியாக்குவதாக வாக் களிக்கிருர்,
பின்பு " கஷ்டப்படும் அந்த ஆசிரியர் ' பிரச் சினையைக் கூறி 'நல்ல முடிவுடன் ' விடை பெறு

சி வை. 117 7
கிருர், சிவை, 117 மறுபடியும் யாழ்ப்பாணம் விரைகிறது. கஸ்தூரியார் இல்லத்தில் பரிகாரியார் கதிரவேற்பிள்ளையுடன் சிறிதுநேரம் சம்பாஷித்து விட்டு அங்குவந்த யோகர் சுவாமிகளை வணங்கி பூரீலங்கா புத்தகசாலைக்கு வருகிருர்,
பூரீலங்கா புத்தகசாலையிற் பாடபுத்தகங்கள் இறக்கப்படுகின்றன. அவரும் பூரீலங்கா புத்தக சாலை உரிமையாளர் தெய்வேந்திரமும் அரட்டை அடிக்கிருர்கள். மனம்விட்டுப் பணப்பிரச்சினை, பாடபுத்தகப் பிரச்சினை, அச்சுக்கூடப் பிரச்சினை எல்லாவற்றையும் பேசுகிருர்கள். கொழும்புச் சோடா - கச்சல்சோடா ஒன்றை வாங்கி முழு வதும் குடித்துவிட்டுத் தமது வருங்கால - கமத் தொழில் கைத்தொழில் பாடசாலைபற்றிய - திட்டங்களை அவர் விவரிக்கிருர்,
அதற்கிடையில் சி வை. 117 பல புத்தகசாலை களுக்கும் பாடபுத்தகங்களை விநியோகித்துவிட்டு வந்து காத்துநிற்கிறது.
தமது தனலக்குமி புத்தகசாலைக்கு வேண்டிய புத்தகங்களை ஏற்றிக்கொண்டு அவர் சுன்னகம் திரும்புகிறர்.
அப்போது மணி ஒன்றடித்து ஒய்கிறது. புத்தகக்
கடையிற் புத்தகங்களை முத்துக்குமாரு இறக்கி வைக்கிருர்,
அரைமணித்தியாலத் தாமதத்துக்குப் பின் அவர் குரும்பசிட்டிக்கு வருகிருர்,

Page 15
8 ஈழம் தந்த கேசரி
இன்னும் அவர் வேலை ஒயவில்லை.
முத்துக்குமாருவை வீட்டுக்குப்போய்ச் சாப்பிட்டு விட்டு மூன்றுமணிக்கு வரும்படி சொல்கிருர்,
சலரோக நோய் கொண்ட அவர் அதற்கு ஏற்றபடி சமைக்கப்பட்ட சாப்பாட்டை உண்டு சிறிது
ஒய்வெடுக்கிருர்,
ஆளுக்குத் தோதில்லாத சிறிய பைசிக்கிள் ஒன்றிலே ஏறி, தாம் வாங்கியுள்ள பன்னிரண்டு ஏக்கர் காணியிலே நடைபெறும் கமத்தொழிலைப் பார்க்கச் செல்லுகிருர், மத்தியான வெய்யில் தான்; என்ருலும் அவருக்கு அந்தத்தோட்டத்தில் நடைபெறும் வேலையைப் பார்த்தால்தான் நித்திரைவரும். ஆள் ஒரு நல்ல கமக்காரன் “.
நெல்லு வளர்ந்திருக்கும் அழகிலே சொக்கி, விளைவிக்கமுடியாது என்று பலர் சொல்லிய சீரகமும் உள்ளியும் விளைந்திருக்கின்ற காட்சியிலே நெஞ்சு பூரித்து, வாழை குலைதள்ளியிருக்கும் மாட்சியிலே மனமகிழ்ந்து வேலைசெய்யும் ஆட்களை உற்சாகப்படுத்தி வீடு திரும்புகிருர்,
அப்பாடா ! வெய்யிலென்ன வெய்யில், கொண்டு வந்த பத்திரிகைகளை "ஈசிசேரில் படுத்தபடியே மேலோட்டமாகப் படித்து முடிக்கிருர்,
பின்னேரம் 3 மணி.
சிவை. 117 மயிலிட்டிக் கிராமசங்கக் கட்டடம்
நோக்கி விரைகிறது. அதற்குள் அவர் நுழைகிருர்,

சி வை. 117 9
பார்த்துக் கையெழுத்திடவேண்டிய காகிதங் களைப் பார்வையிடுகிருர், அடுத்த கூட்டத்துக்கு வேண்டிய ஒழுங்குகளைக் கவனிக்கிருர், ஆம். அவர் மயிலிட்டிக்கிராமசங்கத்தின் தலைவர் தான். ஒரு மணிநேரம் கழிகிறது.
அடுத்து, தெல்லிப்பழையில் ஒரு கூட்டம்; முக்கிய மான கூட்டம்; வலி, வடக்குப் பண்டகசாலை களின் சமாசக் கூட்டம். அந்தச் சமாசத்தில் அவர் ஒரு நிர்வாக உறுப்பினர்.
பெரிய பெருச்சாளிகள் இருந்து நடைபெறும் கூட்டம். பிச்சல், பிடுங்கல், தலைவலி மிகுந்த கூட்டம். ஆறுதலாக அமைதியாகத் தகுந்த ஆலோசனைகள் கூறுகிருர், ஒருவழியாகக் கூட்டம் முடிகிறது. அவசரம் அவசரமாக ஊர் திரும்பு கிருர்,
அவர் சிறப்பாக நடத்தும் குரும்பசிட்டி சன் மார்க்க சபையில் நாவலர் நினைவுதினக் கூட்டம்.
தலைமைதாங்கி, நாவலர் தமிழுக்கும் சைவத் துக்குஞ் செய்த பெருந் தொண்டுகளை விபரிக் கிருர். பேச்சாளர்களை அறிமுகப்படுத்திக் கூட் டத்தை நடாத்துகிருர்,
எட்டரைமணிக்குக் கூட்டம் முடிகிறது.
வாசலில் வந்து நிற்கிருர், குரும்பசிட்டி, “ சங்கக்
கடை ‘ மனேஜர் பாலசந்திரன் எதிர்ப்படுகிறர். கிடை ஒழுங்குகளை விசாரித்து, கடன்களை

Page 16
1 0 ஈழம் தந்த கேசரி
அறவாக்க வேண்டுமென்று கூறிவிட்டு வீட்டுக்குப் போகிருர். அங்கே, அவர் நிலத்தில் வேலைசெய்யும் ஒருவனின் இளம்பெண் தன் கணவன் தனக்குச் செய்யுங் கொடுமைகளைக் கூறிப் பரிகாரம் கேட் கிருள். அவர் அவளின் குறையைத் தீர்ப்பதாக வாக்களிக்கிருரர். பிறகு வானெலியைத் திருப்பு கிருர் , வானெலியில் யாரோ அருமையாகப் பாடுகிறர். ஆஹா, என்று கேட்டு இரசிக்கிருர்,
சிவை. 117 என்னும் மோட்டார் இரவு 9 மணிக்கு கொட்டகைக்குள் பூட்டப்படுகிறது. இந்த மோட்டார் பிரசித்தமானது. இதை அறிந்தவர் பலர்.
இதன் சொந்தக்காரர் யார்?
அதில் ஏறி இவ்வளவு வேலைகளையும் தினசரி
கடமையாகச் செய்தவர் யார்?
அலுப்புச் சலிப்பில்லாமல் உழைப்பு, முயற்சி, உற்சாகமானவேலை எனப் பாடுபட்டு உயர்ந் தவர் யார் ?
* வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் என்ற தேவாரத்தையே தமது இலட்சிய முத்திரை யாக்கித் துணிவே துணை ’ என வாழ்ந்தவர் untri ?
அவர்தாம் ஈழகேசரி பொன்னையா அவர்கள்.
அவர் தனலக்குமி புத்தகசாலை மனேஜர்; திருமகள் அழுத்தக அதிபர் ; ஈழகேசரி என்னும்

சி வை. 117 1 1
தேசீய வார வெளியீட்டின் பத்திராதிபர்; யாழ்ப் பாணம்-மலையாளப் புகையிலை ஐக்கிய வியா பாரச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ; சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் முக்கிய உறுப் பினர்களில் (டைரக்டர்களில்) ஒருவர் ; மயிலிட் டிக் கிராமசங்கத் தலைவர்; வலி-வடக்குப் பண்ட சாலைச் சமாசத்தில் நிருவாக அங்கத்தவர்; குரும்ப சிட்டிச் சன்மார்க்கசபைத் தலைவர் ; குரும்ப சிட்டி ஐக்கியநாணய சங்கம், பண்டசாலைச் சங்கம் இவற்றின் தலைவர். இந்தப் பத்துத் தாப னங்கள் மாத்திரமன்று, இன்னும் எத்தனையோ சங்கங்களில் அங்கம் வகித்துத் திறம்படச் செய லாற்றியவர் அவர்.
* பேருக்காக உறுப்பினர், புகழுக்காகத் தலைவர் என்று இருந்தவர்அல்லர் அவர்.
பொன்னையா வெளியிட்ட புத்தகமா? அதன் அழகே தனி.
திருமகள் அழுத்தகம் வெளியிட்ட ஒரு சிறு துண்டுப்பிரசுரங்கூடக் கண்ணையும், மனத்தையும் கவரும்.
ஈழகேசரிப் பத்திரிகையா? அது தரத்தில் உயர்ந்து முத்துமுத்தான எழுத்துடன், பிழை என்பதே ஒன்றுகூட இல்லாமல் வெளிவந்தது.
பொதுச்சங்கங்களா? அவர் இருந்த காலத்தில் உயிரூட்டம் பெற்று, ஒழுங்காக, சேவை என் பதையே குறிக்கோளாகக் கொண்டு விளங்கின

Page 17
12 ஈழம் தந்த கேசரி
* கூலிக்கு மாரடிக் காத முயற்சி
குணம்பல கொண்டு மலர்ந்த அரும்பு போலிச் சரக்கல்ல ஆண்மையில் வாழ்ந்த பொன்னைய வள்ளல் அளித்து மறைந்தான் ’ எனக் கவிஞர் சோ. தியாகராசன், பொன்னையா அவர்களைப்பற்றிப் பாடியுள்ளது எழுத்துக் கெழுத்து உண்மை.
“ஆண்மையில் வாழ்ந்த பொன்னைய வள்ளல் பற்றிய முழு வரலாறு பின்னல் தொடர்கிறது.
அவர் வாழ்ந்த ஊர், அவரின் இளமைப் பருவம், பிற நாடுகளில் அவர் பெற்ற அனுபவம், சொந்த முயற்சி, உழைப்பின் உயர்வு, தொண்டின் பெருமை, வரையாது கொடுத்த வள்ளன்மை ஒவ்வொன்றும் வருங்காலச் சந்ததிகள் அறிந்து பின்பற்றவேண்டிய விடயங்கள் ; நிகழ்ச்சிகள்.
அந்நிகழ்ச்சிகளைக் காணத் தயாராகிவிட்டீர்களா?
இதோ சிவை, 117 மறைகிறது ; அவர் வாழ்க்கை தனித்தனி விரிகிறது.
 

விளையும் பயிர்
திரைமருவு கடலிலங்கைக் கொருசிரமாம்
யாழ்ப்பாண தேயக் தன்னில் மரைமலரின் மகள்வாழுங் தென்மயிலை
நகர்சிறப்ப வந்த தோன்றல் உரைபெறுவேள் நாகமுத்தென் ருேதுபெய
ருத்தமனுக் குகந்த செல்வன் வரையதுபோற் கலங்காத நிலையதனு
லூழினையு மாற்றி நின்றேன்.
- மகாவித்துவான் சி. கணேசையர்
** நீர்வள நிலவளங்களாற் சிறந்ததும், தேவாலய மடாலயங்களாற் பொலிந்ததும், அரச கேசரி, ஆறுமுகநாவலர், சபாபதிநாவலர், குமார சுவாமிப்புலவர் முதலிய புலவர் பெருமக்களின் உறைவிடமாயதுமான யாழ்ப்பாணத்தின் வட

Page 18
14 ஈழம் தந்த கேசரி
பாங்கர், திருவுங்கல்வியு முருமெனத் திகழ்தரூஉம் செந்தமிழ் வாணரும், பைந்தமிழ்க் கழகமும், பன்மரக்காவும் தண்மலர்ச் சோலையும் பாங்குட னமைந்து, பார்ப்போர் மனது பரவசங் கொள்ளும் பரமனுலயமுதற் பல்லாலயங்களும் சீர்பெற வமைந்து திகழ்வதூஉம், சீரானமைந்த ஏராளு வோரும், சிற்பர், ஒவியர், கைவினையாளர், கவின் பெறு வணிகர், அற்பகநிறைந்த அருந் தனவான்கள் பொற்புறவமைந்த நற்பெரும் பதியெனத் திகழ்வது உம் தென்மயிலைப்பதி
யென்க. '
ஈழகேசரி பொன்னையா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்கும்போது, ' திரைமருவு கட லிலங்கைக் கொருசிரமாம் யாழ்ப்பாண தேயந் தன்னில், மரை மலரின் மகள்வாழும் தென் மயிலை ’’ என மகாவித்துவான் பிரம்மபூரீ சி. கணேசையர் அவர்கள் அடியெடுத்துக் கொடுப்பது போலப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. அடுத்துத் தான் பிறந்த ஊரைப்பற்றி பூரீமான் பொன்னையா அவர்கள் வர்ணித்த வர்ணனையே மேலே காட்டியிருப்பது. ஆம், பொன்னையா அவர்கள் 1931ஆம் ஆண்டு, குரும்பசிட்டியின் உயர்வுக்காக உழைத்த ஒரு பெருமகனரைப் பற்றி எழுதிய கட்டுரையின் முதற்பந்திதான் அது.
பாட்டிலும், வசனத்திலும் தென் மயிலை என்று குறிப்பிடப்பட்டிருப்பது மயிலிட்டிதெற்கு என்னும் இடமாகும். மயிலிட்டிதெற்கு: கட்டுவன் என்னும் ஊரின் ஒரு பகுதியையும் குரும்பசிட்டி

விளையும் பயிர் 15
என்னும் ஊரையும் அடக்கியது. பூரீமான் பொன்னையா அவர்கள் மயிலிட்டிதெற்கில் குரும்பசிட்டி என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவராவர்.
இப்போதைய குரும்பசிட்டி சிறுநகரம்போல, ஏராளமான கல்வீடுகளையும், சிறந்த மாளிகை களையுங் கொண்டதாய், பாடசாலை, வாசிக சாலைகள், தார்போட்ட நெடுவீதிகள், ஊரை அலங்கரிக்கும் மின்சார விளக்குகள், பொதுசன சபைகள், தந்தி வசதியுடன் கூடிய உப தபால் நிலையம், வைத்தியசாலை, நெசவுசாலை முதலி யவை அமைந்ததாய், மிகப் பிரபலமாக விளங்கும் ஆலயங்கள் நிரம்பியதாய், பஸ் வசதி கொண்ட தாய்ச் சீருஞ் சிறப்புமுடன் விளங்குகிறது. பெரிய டக்டர்கள், பொறியியல் வல்லுநர்கள், பட்ட தாரிகள், ஏராளமான தமிழ் ஆசிரியர்கள், அரச சேவை உத்தியோகத்தர்கள், குறிப்பிடத்தகுந்த வியாபாரிகள், மதிப்புமிக்க சுருட்டுத் தொழிற் சாலை ‘முதலாளி மார்கள், உழைப்பையே மதிப் பாகக் கருதும் கமக்காரர்கள் வாழும் இடமாக அது துலங்குகின்றது. வெளியூரவர்கள் யார் வந்து பார்த்தாலும் பிரமிக்கக்கூடியதாக அது வளர்ந்திருக்கிறது.
ஆனல் இந்த ஊர் எழுபத்தைந்து வருடங் களுக்கு முன் அதாவது பொன்னையா அவர்கள் பிறந்தபோது எப்படி இருந்தது?
இந்தத் தலைமுறையில் உள்ள சிறுவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் கல்வீட்டிலே பிறந்து,

Page 19
6 ஈழம் தந்த கேசரி
தார்போட்ட தெருவில் பைசிக்கில் ஓடி, மின்சார விளக்கடியிற் கதைபேசி, வானெலியிற் சினிமா * சங்கீதம் கேட்டு வளர்ந்தவர்கள். அவர்கள், முன்தலைமுறையிலுள்ளோர் பட்ட கஷ்டங்களை அறியமாட்டார்கள்; இந்த ஊரை முன்னேற்ற இவ்வூர்ப் பெரியவர்கள் பட்ட துன்பத்தை உணர மாட்டார்கள். எனவே அக்காலக் குரும்பசிட்டியை ஒரளவு விபரமாகக் கூறினுற்றன், இப்படிப் பட்ட சர்வ சாதாரணமான கிராமத்தில் இருந்து கொண்டே பொன்னையா அவர்கள் சாதித்த சாதனைகளின் மேன்மைகள் விளக்கமாகும்.
* நாற்சாரும் வீடும்’ என்ற சொல் கிராமங் களில் அக்காலத்தில் * அடிபடும் சொல்லாகும். சாதாரண குடிசைகளிலும் பார்க்க வசதி பொருந்திய கமக்காரர்கள் கட்டுகிற வீடு நாற் சாரும் வீடுமாகும். அந்த வீட்டிலே முப்பது பறை சாமை, இருபத்தைந்து பறை குரக்கன், தேவையான அளவு பயறு, ஒரு வருடத்துக்குச் சாப்பிடக்கூடியளவு வரகு என்பவை கட்டப்பட்டு *கோக்காலி’ என்ற (மரக்குற்றிகளில் சட்டமிடப் பட்டுப் பிணைக்கப்பட்டவை) பீடத்தின்மீது வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். ஐஞ்ஞாறு கண்டு மரவள்ளி, இராசவள்ளி, சிறுகொடி என்பவை தோட்டத்திற் காணப்படும். நான்கு ஐந்து தொட்டில்களில் மூன்று சோடி எருதுகள் (உழுவதற்கு, சந்தைக்குப் போவதற்கு, சவாரி விடுவதற்கு), ஐந்தாறு பசுக்கள் கட்டப்பட் டிருக்கும். நூறு வெள்ளாடுகள் பட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும். பாலுக்கும் மோருக்கும்

விளையும் பயிர் 17
பஞ்சமேயில்லை. குரக்கன் பிட்டும், வரகு சோறும், மரவள்ளிக்கிழங்குக் கறியும், மோரும் சாப்பிட் டான் கமக்காரன். தனியாகக் கதவைப்பூட்டி விட்டன்று. ஒருதாய் பெற்ற நான்கைந்து குடும்பங்கள் குடும்பத்தைப் பிரியாமல் "நாற் சாரும் வீட்டிலும் வாழ்ந்து இல்லாதவர்க்குக் கொடுத்து இருப்பவரிடம் வாங்கி " பெரிசு - சிறிசு பாராமல் வாழ்ந்தார்கள். கிணறுகள் குறைவானபடியால் கிணற்றையே மத்திய தான மாகக் கொண்டு இந்தக் கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்தன. இப்படி முப்பது முப்பத்தைந்து கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்த ஊர்தான் குரும்ப சிட்டி. அதில், இப்போதைய அம்பாள் ஆலயத் திற்குத் தெற்கே ஒரு கிணற்றடியில் ஒரு கூட்டுக் குடும்பம் " நாற்சாரும் வீடும் கட்டி வாழ்ந்தது. அதைச் " சுட்டியானெல்லை’க் குடும்பம் என்றே ஊரவர் அழைத்தனர்.
இந்தக் கூட்டுக் குடும்பத்தில் நாகமுத்தர், கதிரிப்பிள்ளை, தம்பர் என்ற மூன்று ஆண்களும், சிவகாமி, சின்னப்பிள்ளை என்ற இரண்டு பெண்களும் இருந்தனர். இவர்களில் நாகமுத்தர் தெய்வானைப்பிள்ளை என்னும் மாதை மணந்து, பரமானந்தர், பொன்னையா என்னும் இரு ஆண்களையும், நாகமுத்து, வள்ளிப்பிள்ளை என்னும் இரு பெண்களையும் பெற்றெடுத்தார்.
இந்தக் குடும்பம் கமத்தொழிலையே வாழ்க்கை யாகக் கொண்ட குடும்பம். அதனலென்ன : அரிசிச் சாப்பாட்டை அக்கறையாகச் சாப்பிட்ட
2

Page 20
18 ஈழம் தந்த கேசரி
காலம் அல்ல; மாதம் இரண்டு மூன்று நாட்களில் (முழுகும் நாட்களில்) மட்டும் உண்ட குடும்பம். வறுமையா ? இல்லவேயில்லை. திருப்தியற்ற வாழ்க்கையா? மகா திருப்தி. அக்காலத்தில் கிராமம் முழுவதும் (ஓரிரு வீடுகளைத் தவிர) இதே வாழ்க்கைதான்.
அப்போது உணவுக்குக் குறைவில்லை. உடைகளுஞ் சுருக்கந்தான். பட்டணத்துக்கு, பரிகாரி வீடுகளுக்குப் போக வெளுத்த ஓரிரு நல்ல வேட்டியும் சால்வையும் பெட்டகத்திலே இருக்கும். இதைவிட இரண்டு மூன்று வேட்டிகள் ஆண்களுக்குப் போதும். பெண்களும் கூறைச் சேலையோடு இரண்டு மூன்று வைத்திருப்பார்கள்.
புகையிரதம் யாழ்ப்பாணத்தை எட்டிப் பார்க்கவில்லை. மோட்டார், பஸ் என்ற மூச்சே கிடையாது. ‘பைசிக்கில் பார்க்காத பண்டம். இவைகள் மாத்திரமல்ல, மண்ணெண்ணெயும், அமெரிக்கன் லாந்தரும், தேநீரும் காப்பியுங் கூட, அக்காலத்தில் இல்லை. பதநீரும், பனங் கட்டியும், வேப்பெண்ணெயும், இலுப்பெண் ணெயும் தாமே காய்ச்சித் தேவைக்கேற்றளவு உபயோகித்த காலம் அது.
கல்லுப்போட்ட பெரிய தெரு (P. W. D.) ஒன்றேயொன்று, அக்காலத்தில் உத்தியோகப் பெருமையோடு பிரசித்தமாய் வாழ்ந்த நல்லையா குடும்பத்தவர்களின் புண்ணியத்தினுல், குரும்ப சிட்டியைத் (அவர்கள் வீடுவரைக்கும்) தொட் டுக்கொண்டிருந்தது. மற்றவை எல்லாம்

விளையும் பயிர் 19
ஒழுங்கைகள் மழைபெய்து வெள்ளம்வந்தால் முழங்காலளவு வெள்ளம் நிற்கும். எட்டுப் பத்து முழ அகலமுள்ளவை அவை. குழைஏற்றிய வண்டி ஒன்று வந்தாற் போதும். பிற வண்டிகளோ மனிதரோ விலத்திப் போகவே முடியாது.
கோவில்கள்கூடச் சிறியவை. ஆனல் எல் லோரும் சைவசமயத்தவர்களாயிருந்தபடியால் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. இப்போதுள்ளது போன்ற அலங்காரத் தேரோ, அல்லது சகடைத் தேர்களோ இல்லை. பாரவண்டி யொன்றிலே தேர்போலக் கட்டிச் சுவாமியை வீதிவலங் கொண்டு வருவார்கள்.
ஊரில் மிஷனரிமாருக்குச் சொந்தமான சிறிய பாடசாலை; ‘மேரி பள்ளிக்கூடம் என்று பெயர். இப்போதுள்ள அருமையான சைவப் பள்ளிக் கூடம் - மகாதேவ வித்தியாசாலை - 1900ஆம் ஆண்டில் பரமானந்த உபாத்தியாயராற் கட்டப் பட்டது. ஆங்கிலம் படிக்கவேண்டு மென்ருல், பணவசதி உள்ளவர்கள் தூர இடங்களுக்கு நடந்து போதல் வேண்டும். பணமா ? அது கிராமத்தில் அருமையிலும் அருமை ; புகையிலை விற்ருல்தானுண்டு. அதுவும் ஆயிரங் கன்று புகையிலையை எழுபத்தைந்து ரூபாவுக்கு விற்று விட்டால் அதைப் பார்க்க ஆயிரம்பேர் கூடு வார்கள். அவ்வளவு புதுமை ! !
இப்படிப்பட்ட கிராமத்தில் ஒரு நல்ல கமக் சாரக் குடும்பத்தில் திரு. பொன்னையா அவர்கள்

Page 21
20 ஈழம் தந்த கேசரி
பிறந்தார்கள்; நாகமுத்தர்-தெய்வானைப்பிள்ளை என்னும் இருவருக்குங் கடைசிப்பிள்ளையாக அவர் பிறந்தார். அவர் பிறந்த காலம் நந்தன வருடம் ஆனி மாதம் 22ஆம் தேதியாகும்.
அவருடைய தகப்பனரது தகப்பனர் பரம நாதர் திண்ணைப்பள்ளிக்கூடத்துச் சட்டம்பியார். கிராமங்களில் அக்காலத்தில் அமெரிக்கமிஷன், கத்தோலிக்க மிஷன் பாடசாலைகள் அரசாங்க நன்கொடை பெற்றுச்-செல்லப்பிள்ளைகளாகவிளங்கிவர, சைவசமயத்தைச் சேர்ந்த சிலர் சமயாபிமானம் காரணமாக நடாத்திய திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஈடாடும் நிலையில் இருந்தன.
குரும்பசிட்டியின் அக்காலநிலையும் அதுதான். ஊரில் அரசாங்க நன்கொடைபெற்ற பாடசாலை ஒன்று இருந்தது. அது அமெரிக்க மிஷனரிமா ருக்குச் சொந்தமானது. அதுதான் மேரி பள்ளிக் கூடம் , ஏழாலையைச் சேர்ந்த தேவராசன்-மேரி என்பவர்கள் அதை நடாத்தி வந்தார்கள். அந்தப் பாடசாலையிலேதான் திரு. பொன்னையா அவர்கள் நான்காம் வகுப்புவரை கற்ருர்கள்.
1900ஆம் ஆண்டிலே பரமானந்த ஆசிரியர் எங்கள் ஊரில் மகாதேவ வித்தியாசாலையைக் கட்டி அரசினரின் நன்கொடை பெற்று நடாத்தத் தொடங்கினர். அங்கே ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது. ஐந்தாம் வகுப்பை திரு. பொன்னையா அவர்கள் அப்பாடசாலையிலே படித்து முடித்தார்கள்.

விளையும் பயிர் 21
அக்காலத்தில் ஐந்தாம் வகுப்புப் படிப்பதே பெரிய படிப்பு. ஏட்டில் நன்ருக எழுதிப் பழகிக் கொள்ளுவார்கள். ஆத்திசூடி தொடக்கம் நீதி நூற் கொத்து அத்தனையையும் மனனபாடஞ் செய்து வைத்திருப்பார்கள். நிகண்டில் ஒருபகுதி ஐந்தாம் வகுப்பிற் படிப்பிப்பார்கள். கணிதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அளவு போதிப் பார்கள், உத்தியோகம் பார்க்க இந்தப்படிப்புப் போதியதாய் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு உதவப் போதியது.
அப்பால் ஆங்கிலம் படிக்க ஓரளவு பண வசதி வேண்டியிருந்தது.
திரு. பொன்னையா அவர்கள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தகப்பனரோடு கமத்தொழிலில் ஈடுபட்டார். எனினும் அவரது சுறுசுறுப்பான மனநிலை கமத்தொழிலை விரும்ப வில்லை. இரவு சாமம் கழிய எழுந்து தோட்டத் துக்குப் போய் விடிய ஏழுமணிவரை "துலா உழக்கி பழையதை உண்டுவிட்டுப் பட்டியில் ஆடுகளைப் பகல்முழுவதும் மேய்த்துப் படாத பாடுபட்டும் சிலவருடங்களில் பலன் ஒன்றுமின்றி இருக்குங் கமக்காரர் சிலரை அவர் கண்டார். ஏன்? தங்களது கூட்டுக்குடும்பங்களிலும் அந்தநிலை இருப்பதை உணர்ந்தார். எனவே, ஏதாவது ஒரு புதிய தொழிலைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்குவந்தார். அப்போது பிரபலமாய் விளங் யவர் வயாவிளான், கல்லடி வேலுப்பிள்ளை அவர்களாவர். ஆசுகவி பாடுவதிலும் * அங்கதக்

Page 22
22 ஈழம் தந்த கேசரி
கவிதை எழுதுவதிலும் பெயர் பெற்றவர். "" யாழ்ப்பாண வைபவ கெளமுதி ' என்னும் பெரியநூலை எழுதியவர். ‘அச்சமென்பதிருப்பி னும் நான் இலாமை சொல்லேன்; அதிக நிதி வழங்கினும் நாணிலாமை சொல்லேன், பகூடித்துக் காயினும் நாணிலாமை சொல்லேன்; பரிகசிப்பவ ரைத் துணிந்து பரிகசிப்பேன் ' என்று தம்மைத் தாமே உண்மையாகப் பாடியவர். அவர் சுதேச காட்டியம் என்ற பத்திரிகையை நடாத்திக் கொண்டிருந்தார். அவரது அச்சுக்கூடத்திலே திரு. பொன்னையா அவர்கள் அச்சுக்கோப்பவ ராகவும் புத்தகங் கட்டுபவராகவும் பயிற்சி பெற்ருர், இயற்கையாகவே கூர்ந்த மதியும் சுறு சுறுப்புமுள்ளவராகிய பொன்னையா அவர்கள் அந்த வயதிலேயே பத்திரிகை படிப்பவராயும் விடயங்களை நுணுக்கமாகக் கிரகிப்பவராயும் இருந்தார். அதற்கு, ' சுதேசநாட்டிய 'ப் பத்தி ரிகைக் காரியாலயம் நன்கு வாய்ப்பாயிருந்தது.
பின்னர் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணத்தில் தேசாபிமானி என்னும் பத்திரிகையை நடாத்தியவருமாகிய திரு. நல்லையா அவர்களின், ' நல்லையா அன்ட் சன்ஸ் தாபனத்திற் சேர்ந்து அவர்களது அச்சுக் கூடத்திலே பணியாற்றினர்.
கிராமத்திலே பிறந்து கிராம சூழ்நிலையிலே வாழ்ந்த திரு, பொன்னையா அவர்கள் யாழ்ப்பா ணப் பட்டினத்திற்குப் போய் வந்துகொண்டிருக் கும்போது அவர் மனம் எண்ணிய கற்பனைகள்

விளையும் பயிர் 23
கண்ட கனவுகள் - பத்திரிகை, அச்சுக்கூடம், புத்தகசாலை என்பவையே. அவரது யாழ்ப்பாண வாழ்க்கையில், "தேசாபிமானிப் பத்திரிகை வாழ்க்கையில் அவர் அறிவு மேலும் விரிந்தது. தமிழறிவு மேலும் உயர்ந்தது.
தம் கனவுகள் நனவாகுமா? தங்கள் குடும்பப் பொருளாதார நிலை அதற்கு இடந் தருமா? என, பதினேழு வயது நிரம்பிய இளைஞரான திரு. பொன்னையா அவர்கள் எண்ணிக்கொண்டிருக் கும் வேளையில் மூத்த சகோதரிகளின் விவாகம், தகப்பனர் இறந்த கஷ்டம் இவையெல்லாம் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்தன.
குடும்பத்தின் கஷ்டநிலை அப்போதுதான் அவருக்குப் புலப்பட்டது.
துணிவு மிகக்கொண்ட திரு. பொன்னையா"வானந்துளங்கிலென் மண்கம்பமாகிலென்’ என் பதை அடிக்கடி உச்சரிக்கும் திரு. பொன்னையாதமது அச்சுக்கூட வாழ்க்கையை விட்டுவிட்டு, தமது கனவுகளையெல்லாம் உதறிவிட்டு, தம் ஊரையே விட்டுவிட்டு வெளியே போகத் தீர் மானித்தார்; அத் தீர்மானப்படி அவர் ஒருநாள் வெளியேறியே விட்டார்.

Page 23
சகடக்கால்
**தன்முயற்சி யாலோருவன் தனையாக்கிக் கொள்க,புவித்
தலமேல் நாளும்
தன்முயற்சி யாலொருவன் தனையிழிவுக் காளாக்கல்
தகாதென் றேர்ந்து
தன்முயற்சி யாலாகி யவ்வாக்கம் தாய்நாட்டின்
பணிக்கே தந்து
தன்முயற்சி யாலுயர விழைவார்க்கோ ருதாரணமாக்
தகைமை சான்றேன்.”
- புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
ஊரைவிட்டு வெளியேறிய திரு. பொன்னையா அவர்கள் கொழும்பில் பொலிஸ் உத்தியோகம் பார்க்கும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து கொழும்புக்குப் போய், அங்கிருந்து கழுத்துறை என்னும் சிறு நகரத்துக்கு வந்து சேர்ந்தார்.

ழரீமதி பொ. மீனுட்சியம்மாள்

Page 24
திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் (பக்கம் - 142)
 

சகடக்கால் 25
1910ஆம் ஆண்டு, கல்வியங்காட்டைச் சேர்ந்த திரு. அரியகுட்டி அவர்களது வியாபார ஸ்தலத் திற் சேர்ந்து சிங்கள மொழியில் வல்லுநராகி வேலையில் முன்னேறி அந்த ஸ்தாபனத்தின் மனேஜராகக் கடமையாற்றினர். நான்கு வருட காலம் அந்த வியாபார நிலையத்தில் உழைத்த திரு. பொன்னையா அவர்கள் முதலாவது மகாயுத் தம் தொடங்கியதுங் காலத்தைச் சரியாக மதிப் பிட்டுத் தாமே ஒரு கடையை ஸ்தாபித்தார்.
அவர் தொடங்கிய கடை மூன்று நான்கு வரு டங்கள் பெரிய செழிப்பான வியாபாரம் இல் லாது விட்டாலும் சுமாராக, வாழ்க்கைச் செல வைச் சரிக்கட்டக்கூடியதாக நடந்துகொண்டிருந் தது. வாலிப வயதினரான திரு. பொன்னையா அவர்கள் அக்கால மனநிலைக்கேற்பச் சிறிது முஸ்பாத்தி ' பண்ணவும் ஆரம்பித்துவிட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் அவர் விவாகம் செய்துகொள்ளவும் எண்ணினர்.
திரு. நா. பொன்னையா அவர்கள் 1918ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தமது சொந்த மாமன ராகிய திரு. கதிரிப்பிள்ளை அவர்களின் கனிஷ்ட புத்திரியாகிய மீனுட்சியம்மாளை அதிக ஆடம்பர மின்றி மணஞ் செய்துகொண்டார். திரு. பொன் னையா அவர்களின் வாழ்விலும் தாழ்விலும், வறுமையிலும் செல்வத்திலுஞ் சமபங்குகொண்டு, யாதொரு முணுமுணுப்போ, படாடோபமோ காட்டாமல் அமைதியே உருவமாக வாழ்ந்தவர்வாழ்கின்றவர் - மீனுட்சியம்மாள் அவர்கள்.

Page 25
26 ஈழம் தந்த கேசரி
அவர் வீட்டில் இருந்து செய்தபணி - உண்மை யான தவம் - தாழ்ந்துபோயிருந்த அவர்கள் குடும்பத்தை உயர்த்தியது.
* மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’
என்னுந் தேவர்குறளுக்கு இலக்கணம் போல இருந்தவர் மீனுட்சியம்மாள். நவகுமார் என்ற ஒரு புத்திரனையும், தனலட்சுமி, திலகவதி, புனிதவதி ஆகிய மூன்று புத்திரிகளையும் அவர் பெற்றெடுத்தாலும் இளமையிலேயே மூன்று மக்களையும் இழந்துவிட்டார். செளபாக்கியவதி புனிதவதியாரே இவரது செல்வப்புத்திரியாராக இன்று விளங்குகின்ருர்,
விவாகஞ் செய்துகொண்ட திரு. பொன்னையா அவர்கள் தமது வியாபார நிலையத்தில் தமது உறவினரான இரு பையன்களை இருத்தி வியா பாரத்தைக் கவனிக்கும்படி விட்டுவிட்டு ஊரிலே சுருட்டுத்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்துச் சுருட்டுச் சுற்றுவித்து அனுப்பிக்கொண்டிருந் தார். ஒரு வருடம் செல்ல நவகுமார் என்ற ஆண்குழந்தைக்குத் தந்தையானர். விவாகம், குழந்தையின் பிறப்பு, சுருட்டுவேலைக்கு முதலீடு இவற்றிற்காக, இருந்த சொற்ப பணத்தை யெல் லாஞ் செலவிட்டுக் கடனளியாக நேர்ந்த அவர் கழுத்துறைக்குப்போய்க் கடையைப் பார்த்தார். தகுந்த மேற்பார்வை யில்லாததனுலும், இருந்த பையன்களின் அஜாக்கிரதையினலும் கடையை மூடவேண்டிய நிலைமையே இருந்தது. அவருக்கு

சகடக்கால் 27
என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் எண்ணியிருந்த கற்பனைக்கோட்டைகள் சரிந்து * பொலபொல "வென்று விழுவதையே கண்டார். இருந்தும் மனந் தளரவிடாது, " திரைகடலோடி யுந் திரவியந் தேடு ' என்ற முதுமொழியைத் தாரகமந்திரமாய்க் கொண்டு பர்மாவுக்குப் போகும் ஒருவரோடு சேர்ந்து அத்தேசம் போய்விட்டார்.
பர்மா, மலாயா முதலிய இடங்களை யெல் லாம் சுற்றிப்பார்த்த திரு. பொன்னையா அவர்கள் இறங்கூன் பட்டினத்திலேயே தங்குவதெனத் தீர் மானித்தார். சிறு வயதிலே பழகிய அச்சுக்கூடத் தொழில் அவருக்குக் கைகொடுத் துதவியது. 1920ஆம் ஆண்டு கிழக்குஇறங்கூன் 25ஆம் வீதியி லிருந்து வெளிவந்த * சுதேசமித்திரன் ' பத்திரி கையிற் சேர்ந்து உதவியாசிரியர் பதவி பெற்ருர், பத்திரிகையை எப்படி அமைப்பது, என்னென்ன விடயங்களை எப்படிக் கவர்ச்சியாக வெளியிடுவது, பத்திரிகைக்கு எப்படி எழுதுவது என்னும் விடயங்களில் அநுபவமும் ஆற்றலும் பெற்ருர்,
1920ஆம் ஆண்டளவில் காந்தீய சகாப்தம் இந்தியாவில் ஆரம்பமாகி முளைவிட்டுக் கொண் டிருந்தது. இந்திய தேசீயத்தலைவர்கள் தம் நாட்டுக்காகச் செய்யுந் தியாகங்களும் போராட் டங்களும் அவரை வசீகரித்தன. வாலிப வயது கொண்ட திரு. பொன்னையா அவர்கள் நேரிடை யாகவே இவற்றைப் பார்த்து அனுபவிப்பதற் காக, தேச விடுதலை இயக்கம் எப்படி நடை

Page 26
28 ஈழம் தந்த கேசரி
பெறுகிறதென்பதையும் அது மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் பரவியிருக்கிற தென்பதையுங் காண்பதற்காகச் சிலகாலம் சென்னை மாநகரத்தில் வந்து வசித்தார்.
சென்னை மாநகரத்தில் திரு. பொன்னையா அவர்களுக்கு ஒரு கல்விமான் அறிமுகமானர். (இவரை இறங்கூனிலேயே சந்தித்ததாகத் திரு. பொன்னையா அவர்கள் என்னிடஞ் சொன்ன ஞாபகமும் இருக்கிறது.) அவர் சைவவித்தியா விருத்திச் சங்கக் காரியதரிசி(இந்துபோட்)திரு. சு. இராசரத்தினமவர்களது தமையனர் திரு. கதிரேசபிள்ளை அவர்களாவர். (ஒருகாலத்தில் சினிமா நட்சத்திரமாக விளங்கிய தவமணிதேவி யின் தகப்பனர்.) திரு. கதிரேசபிள்ளை அவர்கள் உழைப்பதற்கு வேண்டிய புதுப்புதுத் துறைகளைக் காட்டுவதிலும் அதில் ஈடுபட்டால் எப்படி லாபம் பெறலாம் என யோசனை கூறுவதிலும் வல்லவர். அப்படி எத்தனையோ முயற்சிகளும் செய்து பார்த்தவர். அவருடைய விவேகமும், புதுப்புதுத் துறைகளில் உழைக்கும் எண்ணமும் திரு. பொன்னையா அவர்களை ஆட்கொண்டன. இந்த மனப்பதிவு திரு. பொன்னையா அவர்களின் இறுதிக்காலம் வரைக்கும் அப்படியே இருந்தது. திரு. கதிரேசபிள்ளை அவர்களுடன் சேர்ந்து தந்திச் சுருக்கெழுத்துத் திரட்டு" (Telegraphic Code) என்னும் வியாபார தந்திநூற் புத்தகத்தை ஆக்குவதில் திரு. பொன்னையா அவர்கள் முக்கிய பங்கெடுத்துக்கொண்டார். பின் அதை விற்பதற்குப் பெருமுயற்சியுஞ் செய்தார். திரு. பொன்னையா அவர்கள் இதனை அடிக்கடி கூறி,

சகடக்கால் 29
திரு. கதிரேசபிள்ளை அவர்கள் போன்று உற்சாக மூட்டக்கூடிய பெரியவர்களை இப்போது காண்ப தரிது என்றுஞ் சொல்லுவார்.
அவர் இறங்கூனில் இருக்கும்போது அவ ருடைய குழந்தையாகிய நவகுமார் இறந்தசெய்தி அவருக்கு அறிவிக்கப்பட்டது. அது மாத்திரமல் லாமல் கணவனைப் பிரிந்து கஷ்டப்படும் மீனுட்சி யம்மாளின் நிலையும் அவருக்கு விளங்கியது. பழையபடியும் ஊர் திரும்பி ஸ்திரமான ஒரு தொழிலைச் செய்யவேண்டும் என்ற அவாவும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, இறங்கூன் வாழ்க்கையைத் துறந்து 1925ஆம் ஆண்டு தம் ஊருக்கு வந்து சேர்ந்தார்.
முன் செய்துவந்த தொழில்களை யெல்லாம் விட்டுவிட்டு, எங்கு போனர், எங்கே வசிக்கிறர் என்று தெரியாமல் இருந்த திரு. பொன்னையா அவர்கள் மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தபொழுது அவரை ஊர் மக்கள் " ஒரு வகையாகவே பார்த் தனர். "அவர் கடனிலே மூழ்கிவிட்டார் ; இனி நிமிரவே மாட்டார் ' என்றே நம்பினர். சிலர் ஏளனமுஞ் செய்தனர். ஆனல், பொன்னையா அவர்களோ மனத்துணிவு மிகக் கொண்டவர். முயற்சி மெய்வருந்தக் கூலி தரும் ' என்ற வள்ளுவர் குறளைச் சிந்தித்துத் தெளிந்தவர். புதிய நாடுகளுக்குப் போய், பல மனிதர்களோடு பழகிப் பொறுப்புள்ள வேலைகளில் அமர்ந்து அனுபவச் செல்வத்தையே பெரும் பொக்கிஷ மாகக் கொண்டு வந்தவர். பல நல்ல குறிக்

Page 27
30 ஈழம் தந்த கேசரி
கோள்களை மனத்துள் அடக்கி அவற்றைச் செயல் படுத்தக் காலத்தை எதிர்நோக்கி இருந்தவர். இவை சாதாரண மனிதர்களுக்கு எங்கே விளங்கப் போகின்றன?
உடனே தொழில் செய்வதற்கு அவரிடம் பணவசதி ஒன்றுமில்லை. எனவே தெல்லிப்பழை யில் திரு. யேசுதாசன் அவர்களை அதிபராகக் கொண்டு நடைபெற்றுவந்த அமெரிக்கமிஷன் அச்சுயந்திரசாலையிற் சேர்ந்து தொழிலாற்றினர். அப்போது அங்குள்ள மிஷன் பாடசாலையில் (இப்போது யூனியன் கல்லூரி என வழ்ங்கப்படு கிறது) அச்சுக்கூட வேலை, புத்தகம் கட்டும் தொழில், பிற சிறு கைத்தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன. அத் தொழில்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர் கடமை ஆற்றி னர். அப்போதும் தமிழ்க் கல்வியை முறையாகப் படித்தல் வேண்டும் என்னும் அவாவும் அவரிடம் இருந்தது. எவ்வளவு தொண்டுகளுக் கிடையி லும், துன்பமான தொல்லைகளுக்கிடையிலும் படிக்கும் ஆர்வம் இறுதிவரை அவரை விடவே இல்லை. பிற்காலத்திற்கூட தமக்குத் தேவை யான ஆங்கில அறிவைப் பெற அவர் படித்துக் கொண்டிருந்தார் என்பது பலருக்குத் தெரியாத இரகசியம்.
தமிழ்படிக்க ஆசைகொண்ட திரு. பொன்னையா அவர்கள் புன்னலைக்கட்டுவன் வித்துவசிரோமணி பிரமயூரீ சி. கணேசையர் அவர்களிடமே பிரவேச பண்டிதர் பரீகூைடிக்குப் படித்தார். அவர் தம் மிடம் படித்த வரலாற்றைப் பிரம்மபூரீ கணே

சகடக்கால் 31
சையர் அவர்களே ஒரு கட்டுரையிற் பின்வருமாறு எழுதியுள்ளார் :
* பொன்னையா அவர்களது சனனவூராகிய குரும்பசிட்டியில் உள்ள தமிழ் (மகாதேவ) வித்தியாசாலையிலே, அதற்கு அக்காலத்தே தலைமையாசிரியராயிருந்த பூரீமாந். பொ. பரமா னந்தர் அவர்களது விருப்பப்படி சென்று மாண வர்கள் சிலருக்குப் பிரவேச பண்டித பரீகூைடிக் குரிய பாடங்களைக் கற்பித்து வந்தேன். அப் பொழுது பொன்னையா அவர்களும் வந்து அவர்க, ளுடன் சேர்ந்து என்னிடங் கற்று வந்தார்கள். அப்பொழுதுதான் நான் அவர்களை அறிந்துள் ளேன். **
திரு. பொன்னையா அவர்கள் வித்துவசிரோ மணி கணேசையரிடம் படித்து ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாரின் பிரவேச பண்டித பரீகூைடியிற் சித்தியெய்தினர்.
பிறர் ஒருவருக்குக்கீழ் கைகட்டி வேலை செய் வதைச் சுதந்திர மனப்பான்மையுள்ள திரு. பொன்னையா அவர்களாற் சகிக்க முடியவில்லை. எனவே எதுவரினும் வரட்டும் என்று துணிந்தார்.
*ஜெயமுண்டு பயமில்லை மனமே - இந்தச்
ஜென்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு? என்பதை உறுதியாக எண்ணிய அவர் தாமே ஒரு தொழிலைச் சுதந்திரமாக நடாத்த எண்ணினர். தெல்லிப்பழை அச்சுக்கூட வேலையை விட்டார். அப்போது, பல கிராமங்களிலுள்ள மக்கள் ஒரு சிறிய புத்தகத்தை வாங்குவதென்ருலும் பத்துப் பன்னிரண்டு மைல் நடந்து யாழ்ப்பாணப் பட்டி

Page 28
32 ஈழம் தந்த கேசரி
னத்துக்குச் செல்வதையும், அந்தப் புத்தகக் கடைகளிற்கூட அறிவைப் பெருக்கும் இலக்கிய நூல்கள் இல்லாமல் இருப்பதையுங் கண்ட அவர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கு நடுவணுய் அமைந்துள்ளதும், பிரபல சந்தையுள்ளதுமான சுன்னகத்தில் 1926ஆம் ஆண்டு ஆவணி மாதத் தில் தனலக்குமி புத்தகசாலையைத் தொடங்கினர். அதே ஆண்டில் ஆசிரிய பயிற்சிக்காகிய புகுமுக வகுப்பிற் தேறி, கோப்பாய் அரசினர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்ருர், சென்ற அன்றே அங்கு அதிபராயிருந்த திரு. அ. பொன்னையா அவர்கள் திரு. நா. பொன்னையா அவர்களைக் கூப்பிட்டு, அற்ப மாதச்சம்பளம் பெறும் ஆசிரிய வேலையை விட்டுவிட்டு, ஊக்கமும் உற்சாகமும் வியாபாரப் பயிற்சியும் உடைய நீர் புத்தகசாலை நடத்தி முன் னேறுவதே நல்லதென்றும், அதற்கு வேண்டிய ஒத்தாசையைத் தாம் செய்து தருவதாகவும் கூறி ஞர். திரு. பொன்னையா அவர்கள் அதிபர் கூறிய புத்திமதியின்படி ஆசிரியகலாசாலையில் இருந்து திரும்பி, புத்தகசாலையை நன்கு நடத்தத் திடங் கொண்டார். பத்தோடு பதினென்ருக வெறும் ஆசிரியணுகி வாழ்க்கையை நடத்தாமல் ஈழத்தின் தேசீயத்துக்கு- தமிழ் வளர்ச்சிக்கு - பத்திரிகை உலகுக்கு-சமூகத்தொண்டுக்குக்காலம் அவரைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. வாழ்க்கைசெல்வமும் வறுமையும்--சகடக்கால் போல வரும் என்பது பெரியோர் வாக்கு. அதற்கு நிதர்சன உதாரணம் திரு. பொன்னையா அவர்க ளது இளமை வாழ்க்கையாகும்.

இரண்டு கண்கள்
* திருவோங்கு தென்னிலங்கைச் சிரமாகும் யாழ்ப்பான தேசங் தன்னில் மருவோங்கு தண்டலைசூழ் சுன்னவளம்
பதிவாழ வந்த தோன்றல் உருவோங்கு சிறியவிதை தனிற்பெரிய
மரமோங்கி உதிப்ப தேபோற் கருவோங்கு சிறுமுயற்சி தனிற்பெரிதாய்ப்
பலர்மதிக்கக் கதித்த செல்வா.'
-நவாலியூர், க. சோமசுந்தரப்புலவர்
திரு. நா. பொன்னையா அவர்களது இரண்டு
கண்கள் தனலக்குமி புத்தகசாலையும், திருமகள்
அழுத்தகமுமாகும். ' உருவோங்கு சிறியவிதை
தனிற்பெரிய மரமோங்கி உதிப்ப தேபோல் '
எனத் தங்கத்தாத்தா நவாலியூர், சோமசுந்தரப்
3

Page 29
34 ஈழம் தந்த கேசரி
புலவர் சரியான கணிப்போடு அழகுபடக் கூறி யுள்ளமை வியக்கத்தக்கது. திரு. பொன்னையா அவர்கள் 1926ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்கிய தனலக்குமி புத்தகசாலை மிக மிகச் சிறியது ; அற்ப முதலோடு கூடியது. ஒரு நாளில் அவரும் அவரோடு துணையாயிருந்த இரண்டு சிறுவர்களும் ஒரு ரூபாவுக்கு வியாபாரம் செய்வதே சிரமமாயிருந்தது. வெறும் புத்தக சாலையோடு நில்லாமற் சில இனிப்புப் பண்டங் களைக்கூட வியாபாரஞ் செய்தனர். அப்படி யிருந்தும் திரு. பொன்னையா அவர்கள் மனச் சோர்வு அடையவில்லை.
தென்னிந்திய வாழ்க்கையில் திரு. பொன் னையா அவர்கள் சில அறிஞர்களோடுஞ் சில புத்தக வெளியீட்டாளர்களோடுந் தொடர்புகொண் டிருந்தார். எனவே அவர்களிடமிருந்து புத்தகங் களை வரவழைத்துச் சிறிய இலாபத்தோடு வியா பாரஞ் செய்யலானர். தாம் 1930ஆம் ஆண்டில் தொடங்கிய ஈழகேசரிப் பத்திரிகையின் முதலாம் இதழிலே தமது புத்தக வியாபாரம் பற்றிய விளம்பரத்தை அவர் வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு :
* தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடுகள் முழுவதும் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன. சாதாரண பைண்டுப் புத்தகங்கள் இந்தியா விலைக்கும், கலிக்கோ, ரெக்சின்பட்டு முதலிய பைண்டு வேலைசெய்த புத்தகங்கள் ரூபா வுக்கு ஒரு அணு கூட்டியும் விற்கப்படும்.'

இரண்டு கண்கள் 35
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளே அன்றி, சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளாரது நூல்கள், சாமி நாதையரது பதிப்புக்கள், ஆறுமுகநாவலரது பதிப்புக்கள், நாடகநூல்கள், மூவர் தேவாரம் முழுவதும், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், சேக்கிழார் இவர்களது சரித்திரங்கள் எனப் பலதுறைப்பட்ட புத்தகங்களையும் வரு வித்து விற்பனை செய்தார். یی
1930க்குப் பின்னர், முக்கியமாக உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் அரும்பிய பாரதி பாடல்களின் உணர்ச்சி, 1938க்குப் பிறகு வ. ரா, பாரதிதாசன் என்போரது கட்டுரை, கவிதைகளாற் பரிமளிக்கத் தொடங்கியது. 1929, 30ஆம் ஆண்டுகளில் பாரதியைப் பற்றித் தமிழ் நாட்டில் அறிந்தவர்களே சொற்பம். அப்படி யிருக்கும்போது ஈழத்தில் பாரதிபற்றிய மூச்சே இருக்கமுடியாது என்பதுண்மை. திரு. பொன் னையா அவர்கள் 1930ஆம் ஆண்டளவிலேயே பாரதி பாடல்களின் பெருமையை உணர்ந்து, அப்பாடல்கள் முழுவதையும் வரவழைத்து விற்பனை செய்தார். அதற்காகிய விளம்பரத்தைத் தமது பத்திரிகையில் வெளியிடுகையில்,
* முந்துங்கள்! முந்துங்கள்!! புதிய பதிப்பு ! மலிந்தவிலை !! பாரதி நூல்கள் ' என்று குறிப்பிட்டுவிட்டு, தேசீய கீதங்கள்,
தோத்திரப் பாக்கள், வேதாந்தப் பாடல்கள் எனப் பதினைந்து நூல்களின் விலையைக் குறித்துள்

Page 30
36 ஈழம் தந்த கேசரி
ளார். புத்தகக்கடை வைத்து வியாபாரம் செய்வது ஒரு புதுமையன்று. நல்ல நூல்களை, மக்கள் அறிவுவளர்ச்சிக்காகிய நூல்களைத் தேர்ந் தெடுத்து மக்கள் மத்தியில் உலவ விடுவதே தொண்டின்பாற்படும். இதனுலேதான் தனலக் குமிபுத்தகசாலை அக்காலத்திற் பெருமையுற்றது; திரு. பொன்னையா அவர்களும் புகழப்பட்டார். தனலக்குமி புத்தகசாலையின் அக்காலச் சேவை பற்றி, புத்தக வாசிப்பிலே தாகங்கொண்ட வைத்தீஸ்வர வித்தியாலய அதிபர் திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள் குறிப்பிடும்பொழுது:
* பொன்னையா அவர்கள் (1928ஆம் ஆண்டளவில்) சுன்னகத்தில் சிறுமுறையில் புத்தக வியாபாரத்தைத் தொடங்கினர். சில அடக்கவிலைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்கப் பட்ட தனலக்குமி புத்தகசாலை சிறிது காலத்துள் யாழ்ப்பாணத்திற் சிறந்த புத்தக சாலையாகிவிட்டது. ஒரு காலத்தில் சாமி நாதையர் பதிப்பித்த நூல்களோ, கழகத் தார் நூல்களோ, அல்லது திரு. வி. க. நூல் களோ வேண்டுமானுல் தனலக்குமி புத்தக சாலைக்குத்தான் போகவேண்டியிருந்தது. இப்படிச் சிறந்த நூல்களைத் தருவித்து, விற்பனை செய்து தமிழுக்கு அருங் தொண் டாற்றினர்.”
என எழுதியுள்ளார்.
புத்தக வியாபாரம் படிப்படியாக முன் னேறுவதற்கு, கோப்பாய் அரசினர் ஆசிரிய

இரண்டு கண்கள் 37
கலாசாலை அதிபர் திரு. அ. பொன்னையா அவர்கள் திரு. நா. பொன்னையா அவர்களுக்குச் செய்த பேருதவியைக் குறிப்பிட்டேயாகவேண் டும். ஆசிரியகலாசாலைக்குப் படிக்கவந்த திரு. பொன்னையா அவர்களை வியாபாரத்தில் ஸ்திரமா யிருக்கும்படியும் தாம் உதவி செய்வதாயும் கூறிய அதிபர், தம் வாக்குறுதிப்படி ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் மாதா மாதம் உதவியாகக் கொடுக்கும் இருபது ரூபாவில் விடுதிச் செலவு போக மிகுதிக்கு நல்ல புத்த கங்களாகக் கொடுக்க ஏற்பாடுசெய்தார். நல்ல புத்தகங்களாகத் தெரிந்தெடுத்துத் திரு. பொன் னையா அவர்கள் ஆசிரிய கலாசாலைக்கு விற்பனை செய்து வந்தார். சிறிதுகாலம் செல்ல ஆசிரிய கலாசாலையின் ஒரு அறையிலே ஒரு அலுமாரியை வைத்து நல்லநூல்களைக் கொண்டுபோய்ப் பூட்டி வைப்பதும் மாதம் ஒருமுறை திறந்து வியாபாரம் செய்வதுமாய்க் காலங்கழித்தார். இந்த ஏற்பாடு நல்ல பலனை அளித்தது. சிறிய முதலுடன் தொடங்கிய புத்தக விற்பனை நின்று நிலைக்க உதவியது. " காலத்தினுற் செய்த உதவி"யை திரு. நா. பொன்னையா அவர்கள் மறக்கவில்லை. 1936ஆம் ஆண்டு அதிபர் திரு. அ. பொன்னையா அவர்கள் தேசீயவாதிகள் பக்கம் சார்ந்து, தமிழறி ஞர் திரு. சு. நடேசபிள்ளை அவர்களை எதிர்த்து அர சாங்கசபைப் பிரதிநிதியாகக் காங்கேசந்துறைத் தொகுதியிற் போட்டியிட்டபோது ஈழகேசரி மூலம், அதிபர் திரு. அ. பொன்னையா அவர்களை ஆதரித்து, திரு. நா. பொன்னையா அவர்கள் குழு வளிப் பிரசாரஞ்செய்து பக்கபலமாய் நின்றர்.

Page 31
38 ஈழம் தந்த கேசரி
புத்தகங்களைத் தருவித்து விற்பனைசெய்து அற்ப இலாபஞ் சம்பாதித்துக்கொண்டிந்த திரு. பொன்னையா அவர்களைத் தீராத ஆசை ஒன்று பிடித்துக்கொண்டிருந்தது. அதுதான் அச்சுக் கூடம் ஒன்றைத் தொடங்கவேண்டுமென்னும் ஆசையாகும்.
அச்சுக்கூட ஆசை தோன்றியவுடனே தென் னிந்தியாவுக்குச் சென்று 500 ரூபா பெறக்கூடிய ஒரு சிறிய அச்சியந்திரத்திற்கு ஏற்பாடு செய்து விட்டு ஊர் திரும்பினர். அது சுன்னகம் வந்து சேர்ந்தது. அதைப் புகையிரத ஸ்தானத்திலிருந்து பணங் கட்டி எடுக்க அவர் மிகக் கஷ்டப்பட் டார். எப்படியோ ஒருவழியாக அதை எடுத்த திரு. பொன்னையா அவர்கள் 1929ஆம் ஆண்டுபுத்தகசாலை தொடங்கி மூன்று வருடத்தின் பின்-திருமகள் அழுத்தகம் என்னும் பெயருடன் அச்சுக்கூடத்தைத் தொடங்கினர்.
தன்னுடைய தமக்கையார் ஒருவரது புத் திரரை (திரு. ஐயம்பிள்ளை) எழுத்துக்களைக் கோக்க வும் கலைக்கவும் பழக்கிவிட்டுத் தாமே மற்ற எல்லா வேலைகளையுஞ் செய்து அச்சிடும் பணியில் இறங்கினர். இரவுபகலாக அவர் உழைத்தார். இப்போதைய நவீன வசதிகள் கொண்ட அச்சி யந்திரம் போன்றதல்ல அது. கையாலே ஒருவர் சுழற்ற வேண்டும். ஒரு பக்கத்தைச் சுத்தமாக அச்சிடவேண்டுமானல் பல மணி நேரம் வேலை செய்யவேண்டும். அச்சுக்கலையிலே ஏற்கனவே கைதேர்ந்த திரு. பொன்னையா அவர்கள்-எதை யும் சுத்தமாகவும், அழகாகவும், பிழையின்றியும் செய்யவேண்டும் என்ற எண்ணங்கொண்ட திரு.

இரண்டு கண்கள் 39
பொன்னையா அவர்கள் - அந்தக் காலத்தில் உழைத்த உழைப்பு சாமானியமானதன்று. அவரே " புறுாவ் பார்ப்பார்; அவரே அச்சுக் கோப்பார்; அவரே " போம் ஆக்குவார்; அவரே அழகாகப் பைண்டிங் செய்து புத்தகமாக்கு வார். அவருக்கு அச்சுக்கலையிலும் புத்தகம் கட்டும் வேலையிலுந் தெரியாத துறைகளில்லை. அவரே இரண்டு துறையையும் பிற்காலத்திற் பலருக்குப் பழக்கினர். அவரிடம் பயின்றவர்கள், பயின்றவர்களிடம் வேலை கற்றேர் யாவரிடத் திலும் சுத்தம், அழகு, பிழையின்மை என்ற மூன்றையுங் காணலாம்.
இவ்வாண்டு (1967) தை மாதத்திலே பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்களது * கந்தபுராணம் - தக்ஷகாண்ட உரை நூல் ", பேராதனைச் சர்வகலாசாலை மண்டபத்திற் கோலாகலமாக அரங்கேற்றப்பெற்றபோது அதை அச்சிட்ட திருமகள் அழுத்தகத்துக்கு - அதன் அதிபர் திரு. சபாரத்தினத்துக்கு - புத்தகத்தின் அமைப்பைப் பாராட்டி வெள்ளித்தட்டம் ஒன் றைப் பேராசிரியர் ஏ. டபிள்யு. மயில்வாகனம் அவர்கள் வழங்கினர்கள். அதற்குப் பதிலளித்த அழுத்தக அதிபர், இந்தப் பெருமை திரு. நா. பொன்னையா அவர்களுக்கும், அவரிடம் வேலை பழகி இன்றளவும் (30 வருடங்களுக்கு மேலாக) அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குஞ் சேரவேண்டியது என்ருர், உண்மையான வார்த் தைகள். திரு.பொன்னையா அவர்களின் கண்கள் இன்றும் பிரகாசித்துக்கொண்டேயிருக்கின்றன.

Page 32
40 ஈழம் தந்த கேசரி
அழுத்தகத்தைத் தொடங்கிய திரு. பொன் னையா அவர்கள் ஊர்களிலிருந்து வரும் சிறு வேலைகளை நம்பியிராமல 'ஆத்திசூடி"யிலிருந்து அச்சடிக்கத் தொடங்கினர். ஏழாலை திரு. ஐ. பொன்னையா அவர்கள் வெளியிட்ட வைத்திய நூல்களான பரராசசேகரம் போன்ற நூல்களிற் சிலவற்றை அச்சிட்டுக் கொடுத்தார். 1930ஆம் ஆண்டு-அழுத்தகம் தொடங்கி ஒரு வருடத்தின் பின் - ஈழகேசரிப் பத்திரிகையை ஆரம்பித்து வாராவாரம் வெளியிட்டார். எனவே, அழுத்தக வேலை தூங்கிவழியாமல் உற்சாகத்தோடு நடைபெறலாயிற்று.
1929ஆம் ஆண்டு சிறியதாய்த் தொடங்கப் பட்ட அழுத்தகம், புத்தகவேலை, பத்திரிகை வேலை என்பனவற்றினல் 1935ஆம் ஆண்டளவிற் பெரிதாகியது. மல்லாகம், வழக்கறிஞர் திரு. அ. அப்பாத்துரை அவர்கள் தாம் யாழ்ப்பாணத்தில் வைத்து நடாத்திய “ தமிழன்' அச்சுக்கூடத்தை விற்க முன்வந்தபோது முக்கியமான அச்சியந்தி ரத்தை திரு. பொன்னையா அவர்கள் விலைக்கு வாங்கினர்கள். தொழிலாளர்களும் முப்பத் தைந்து பேருக்கு மேலாகிவிட்டார்கள். சம்பளத் தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் தங்கள் சொந்த முயற்சியைப் போல, ஈழகேசரி நிலையம், திருமகள் அழுத்தகம், தனலக்குமி புத்தகசாலை மூன்றின் தொழிலாளர்களும் மேற்பார்வை யாளர்களும் ' குடும்ப உணர்ச்சி ‘யோடு பத்து வருடம் (1930 - 1940) செய்த முயற்சி இருக் கிறதே அது சொல்லில் அடங்காதது ; சுவை மிக்கது.

இரண்டு கண்கள் 4 I
இந்தக் குடும்ப உணர்ச்சியை வளர்க்கத் திரு. பொன்னையா அவர்கள் செய்த ஒரு மகத் தான வேலை இன்றும் நினைவுகூர்தற்குரியது. 1933ஆம் ஆண்டு தொடங்கி, சுன்னுகத்திலேயே ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துச் சமையற் காரரை அமர்த்தி விடுதிச்சாலை (போர்டிங்) ஒன்றை நடாத்தி எல்லோரும் அங்கேயே உணவருந்தி - மேலதிகவேலை, அதற் காகிய சம்பளம் என எதிர்பார்க்காமல் இரவு பக லாக - அங்கேயே தங்கி இருக்க ஒழுங்கு செய் தார்கள். அவரும் பலநாள் அவர்களோடு தங்கி உற்சாகமூட்டி வந்தார்கள். 1940ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அதை நிறுத்தினர்கள். இந்தக் குடும்ப உணர்ச்சியை ஈழகேசரி முதலாவது ஆண்டுமடலின் (1935) முகவுரையிலே திரு. பொன்னையா அவர்கள் நன்றிப் பெருக்குடன் குறிப்பிட்டுத் தொழிலாளரின் மகத்தான சேவையை வாழ்த்தியுள்ளார். வெறும் வாய் வார்த்தையோடுநில்லாமல் தமது செல்வநிலைமை உயர்ந்தபோது காலமறிந்து தொழிலாளரின் குடும்ப இன்ப, துன்ப நிகழ்ச்சிகளிலே தாமும் கலந்து வேண்டிய பணவுதவி புரிந்துள்ளார். இதனுலேதான் அந்நிலையங்களில் கால் நூற்ருண் டிற்கும் மேலாக-அவர் அமரத்துவம் அடைந்த பிற்பாடும்கூட - பல தொழிலாளர் முணு முணுப்புச் சிறிதுமின்றிக் கடமை புரிகிறர்கள். கடமை புரிகிருர்கள் என்ற சொல் அர்த்த புஷ்டியுடன்தான் எழுதப்படுகிறது. அந் நிலையங் களில் இப்போதுங்கூட வேலை - கூலி " என்ற நிலைமை இல்லை. ' எங்கள் அச்சுக்கூடம் திறமை

Page 33
42 ஈழம் தந்த கேசரி
யாக வேலை செய்யவேண்டும் ' என்ற உணர்ச்சி தான் பரவியுள்ளது. அதனலேதான், "திருமகள் அழுத்தக வெளியீடா ? அதன் ரகமே தனி ' என ஈழம் முழுவதும் இல்லை, தமிழகமே புகழக்கூடிய நிலைமை உள்ளது.
சுன்னகத்தில் தனலக்குமி புத்தகசாலை, திரு மகள் அழுத்தகம் என்பவற்றை நிறுவிய திரு. பொன்னையா அவர்கள் அவை ஸ்திரமாக நிலை பெற்றபின் 1934ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்காங்கேசந்துறை வீதியில் கதிரேசன் கோவிலுக் கருகாமையில் ஒரு கிளை ஸ்தாபனத்தையும் (புத்தகசாலை) தொடங்கினர். ஒரு வருடம் தாம் நடாத்தியபின் பக்கத்திலே பேப்பர் வியா பாரஞ் செய்துகொண்டிருந்த திரு. நா. தெய்வேந் திரம் அவர்களிடம் அதை ஒப்படைத்தார்கள். அந்தக் கடைதான் இப்போது பிரபலமுற்று விளங்கும் யாழ்ப்பாணம் பூரீலங்கா புத்தகசாலை யாகும். திரு. பொன்னையா அவர்களது வெளி யீடுகள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணத்தில் அபரிமிதமாக விற்பதற்கு உதவியாயிருந்தவர் திரு. தெய்வேந்திரம் அவர்களே. திரு. தெய்வேந் திரம் அவர்கள் திரு. பொன்னையா அவர்க ளுக்கு உற்றவிடத்து உதவி, குடும்ப நண்பராகி அவரது வாழ்விற் பெரும்பங்கு கொண்டார்கள். * பொன்னையா-தெய்வேந்திரம் நட்பு உள்ளத் தால் நேசித்து உயர்ந்த நட்பு. அந்த நட்பு இன்றும் இரு ஸ்தாபனங்களுக்கிடையிலும் நிலவி வருவது பெருமைதரக்கூடியது.

பயன்மரம்
முன்னு முயற்சி திருவினை யாக்கும் முயற்சியின்மை இன்மை பகுத்திடு மென்பதன் உண்மை இயல்பனைத்தும் நன்மை விரும்புநர் கண்டு நயந்திட நாட்டினைநீ வென்றன யல்லை விதியினை! மேலினை விண்டலமே.
- மா. பீதாம்பரன்
1926இல் புத்தகசாலையையும் 1929இல் அழுத்தகத்தையும் 1930இல் பத்திரிகையையும் தொடங்கிய திரு. பொன்னையா அவர்கள், ! உரு வோங்கு சிறிய விதைதனிற் பெரிய மரமாகி " (சோமசுந்தரப் புலவர்)-பயன்மரமாகி-பூத்துக் காய்த்துப் பழங்களைத் தரத் தொடங்கிவிட்டார்.
ஆம், அவர் 'ஆத்திசூடி"யில் தொடங்கி " தொல்காப்பியம் - எழுத்து, சொல், பொருள் (கணேசையர்) உரைக்குறிப்புக்கள் வரை, பாட புத்தகங்களாக, சமயநூல்களாக, அறிவுப்

Page 34
4 4 ஈழம் தந்த கேசரி
பொக்கிஷங்களாக, 1930 - 1950 வருடங்க ளாகிய 20 வருடங்களுக்கிடையில் நூறு புத்தகங் களுக்கு மேலாக வெளியிட்டுப் பணிபுரிந்தார்.
* பாடபுத்தகம் வெளியிடுவது ஒரு தமிழ்ப் பணியா? அது கொள்ளைலாபம் சம்பாதிக்கும் வியாபாரமல்லவா ?’ என்று பலர் கேட்பார்கள். உண்மை. 1955ஆம் ஆண்டுக்குப்பின் எல்லாம் தமிழிற் படிக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்ட பின் அது இலாபகரமான தொழிலாய் விட்டது. ஆனல் 1930ஆம் ஆண்டுக்குமுன் அப்படியன்று.
ஆரும் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புக்களில் படித்த இலக்கிய நூல்கள் ஒன்ருவது ஈழத்திலே பதிப்பிக்கப்பட்ட நூல்கள் அன்று. கீழ் வகுப்புக் களிற் கூட நமது ‘பாலபாடத்தோடு, ‘நித்தில வாசகம்’, ‘தேசீய வாசகம்’, ‘செந்தமிழ் வாசகம்", ‘இயற்கை விளக்க வாசகம்’ என்ற தமிழ்நாட்டு வாசிப்பு நூல்கள் போட்டிபோட்டு அமுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு சமயத் தாரும் தத்தமக்கென ஒவ்வொரு வாசிப்பு நூல் களை வெளியிட்டார்களே யொழியப் பொதுவான வாசிப்பு நூல்கள் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து வந்த நூல்களின் வசனபாடங்கள் நம்நாட்டு மாணவர்க்கு எட்டுணையும் பொருந்தாதவை. தாஜ்மகாலும், மேட்டூர்அணையும், குற்ருல நீர் வீழ்ச்சியும், ராஜாராம் மோகனராயும் பாடங் களா யிருந்தனவேயொழிய சிவனெளிபாதமும், சேர் பொன். இராமநாதனும், சிகிரியாக் குகை யும், கீரிமலை நீரூற்றுக்களும் அவர்களுக்குத்

பயன்மரம் 45
தெரியாத விடயங்களாயிருந்தன. நாட்டுச் சீவன சாஸ்திர, சுகாதார நூல்களைப்பற்றியோ சொல்லத்தேவையில்லை. இந்த அவலநிலையை முறியடித்து இந்தநாட்டு மாணவர்களுக்கேற்ற நூல்கள் இங்கேயுள்ள புலவர் பெருமக்களால் எழுதப்பட்டு வெளியிடப்படல் வேண்டும் என் பதை உணர்ந்து, செயல்புரிந்து, அதில் சுய தேவைப் பூர்த்தியை உண்டாக்கி, பின்வரவிருக் கும் பதிப்பாளருக்கும் வழிகாட்டியவர் திரு. நா. பொன்னையா அவர்கள். அதனுல்தான் அவரது பாடபுத்தக வேலைகூடத் தமிழ்ப்பணியாகக் கருதப்பட்டது; கருதப்படுகிறது. " ஆத்திசூடி", * கொன்றைவேந்தன் ' என்ற நீதிநூல் வரிசை யிலே எட்டு நூல்களை வெளியிட்ட திரு. பொன்னையா அவர்கள் 30ஆம், 31ஆம் ஆண்டு களிலே உயர்தர வகுப்பு (S. S. L. C, J. S. C.) மாணவர்களுக்காகிய நூல்களிலே கவனம் செலுத்தினர். "குசேலர் சரிதம் (கணேசையர்), * இரகுவம்ச சரிதாமிர்தம் ', ' இராமோதந்தம் " ( குமாரசுவாமிப்புலவர்), “ தமிழ் இலக்கியத் திரட்டு ' என்பவற்றை வெளியிட்டார். அதை அடுத்து அடுத்த ஆண்டுகளிலே "கிராதார்ச் சுனியம் (வை. இராமசாமிசர்மா ), "திருமா வளவன் ' (சாம்பசிவசர்மா) என்ற நூல்களையும், மகாபாரதத்தில் சில சருக்கங்கள் , * நளவெண் பாச் சுருக்கம் ', ' நளவெண்பா-சுயம்வர காண் டம், கலிதொடர் காண்டம்’, ‘குசேலோபாக்கி யானச்சுருக்கம்', 'தமிழ் மஞ்சரி 1, 2, 3', என்பவற் றையும் வெளியிட்டார். வெளியிட்டதோடு நில் லாமல் அரசாங்கத்தில் உயர்தர வகுப்புக்காகிய

Page 35
46 ஈழம் தந்த கேசரி
நூல்களாகப் பதிவுசெய்து பாடபுத்தகங்களாக வும் வைக்க ஏற்பாடு செய்தார். 1939ஆம் ஆண்டு திரு. பொன்னையா அவர்களது வெளியீடுகள் பாட புத்தகங்களாக J. S. C. S.S. C. என்னும் உயர்வகுப் புக்களிற் படிப்பிக்கப்பட்டன. இதனுல் ஓரளவு வருவாய் அவருக்கு வந்துகொண்டிருந்தது. இதைக் கண்டு பொருமையுற்ற ஒரு சில அறிஞர் கள் (தென்னிந்திய நூல்கள் பாடபுத்தகங்களாக இருக்கையில் மூச்சுக்கூட விடாத இவர்கள்) அரசாங்கத்துக்கு மனுச்செய்து கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். ஏற்கனவே வியாபார தந் திரத்தில் அநுபவத்திற் கைதேர்ந்த திரு. பொன் னையா அவர்கள் தமது வெளியீடுகளை ஒரே ஸ்தாபனத்தின் பெயரில் வெளியிடாமல் தன லட்சுமி புத்தகசாலை, தமிழ் இலக்கிய நூலகம், நா. பொன்னையா பதிப்பு, வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம் எனப் பல பெயரில் வெளியிட்டிருந்தமை அவருக்கு வாய்ப்பளித்தது. சுன்னகம், மயிலனிச் சைவவித்தியாசாலை ஆசிரி யர்களாகிய திருவாளர்கள் பொ. பொன்னம் பலம், அ. வெற்றிவேலு, க. நாகலிங்கம் என் போர் திரு. பொன்னை யாஅவர்களின் பாடபுத்தக முயற்சிகளில் அக்காலத்திற் பேருதவி புரிந்தவர் கள். திரு. அ. வெற்றிவேலு ஆசிரியர் அவர்கள், பொருமை கொண்ட அறிஞர்களுக்கு 1939இல் ஈழகேசரி மூலம் " சுடச்சுடப் பதிலளித்து வாயை அடக்கினர்.
இந்தக் காலகட்டத்தில் திரு. பொன்னையா அவர்கள் சமய சம்பந்தமான வெளியீடுகளையும்

பயன்மரம் 47
வெளியிட்டார். "சைவவினவிடை’, ‘தோத்திரத் திரட்டு" (பாலர் வகுப்பு முதல் மூன்ரும் வகுப்புவரை), நித்தியகருமவிதி, சீகாளத்திப் புராணம்’ (இரண்டு சருக்கம்), திருவாதவூரடிகள் புராணம் ', ' தோத்திர மஞ்சரி ' என்பவை அவரால் வெளியிடப்பட்டன.
1934ஆம் ஆண்டில் திரு. பொன்னையா அவர்கள் செய்த ஒரு மாபெரும் புரட்சியை இங்கு குறிப்பிட்டே யாகவேண்டும். 1960ஆம் ஆண்டுக்கு அண்மைக் காலத்திலே தமிழ்நாட்டிற் சில வெளியீட்டகங்கள் மலிவுப் பதிப்பு என்ற போர்வையிலே தமிழிலுள்ள பழைய நூல்கள், கதைகள் எல்லாவற்றையும் பதித்து 'தமிழ்ச் சேவை' என்ற முத்திரை குத்தத் தலைப்பட்டன. ஆனல், 1934ஆம் ஆண்டளவிலேயே திரு. நா. பொன்னையா அவர்கள் சிறந்ததொரு மலிவுப் பதிப்பு நூலைப் பதித்துள்ளார். "ஈழமண்டலத் திருத்தல தேவாரமும் திருப்புகழும் ' என்ற அந்த நூல் நாற்பது பக்கங்களைக் கொண்டது; உயர்ந்த காகிதத்தில் அழகுற அச்சிடப்பட்டது. விலை என்ன தெரியுமா ? ஐந்து சதம். மூக்கின்மேல் விரலை வைத்து ஆச்சரியப்படுகிறீர்களா? ஐயா யிரம் புத்தகங்களை அந்தக் காலத்தில் - ஈழத் தில்-அச்சிட்டு வெளியிட்டாரென்பது இன்னும் ஆச்சரியமானது.
இந் நூல்மூலம் திரு. பொன்னையா அவர்க கிாது இன்னெரு பெருந் தன்மையையுங் காண் கிருேம். இப்படியான மலிவுப் பதிப்பாளர்களிற்

Page 36
48 ஈழம் தந்த கேசரி
சிலர் அந் நூலை முன்னர் பதிப்பித்தவர்களைப் பற்றி யாதொரு வார்த்தையும் சொல்லாது தாமே ஏதோ 'அரிதில் முயன்றுதேடி'ப் பதித்த தைப்போல எழுதிவிடுகிறர்கள். பழைய ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்தவர்களை மக்கள் முன்காட்டாது மறைக்கிருர்கள். திரு. பொன்னையா அவர்கள் இந்நூலை முன்னர் வெளியிட்ட தமிழ்த் தொண்டர் திரு. த. கனக சுந்தரம்பிள்ளை அவர்களை நினைவுகூரச் செய்திருக் கிருர், இது எவ்வளவு பெருந்தன்மை. அவர் எழுதியிருப்பது இது :
* தேவாரங்களையும் திருப்புகழையும் கொண்ட இந்நூல் திருக்கோணுமலை பூரீமத். த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களாற் சாதா ரண வருடத்தில் அச்சிட்டு வெளியிடப் பட்டது. இதனை முன்னரே வெளியிட்டு உலகிற்குப் பயன்படுத்த வேண்டுமென் றெண்ணிய பிள்ளையவர்களின் எண்ணமும் ஒருவாறு பூர்த்தியடையுமென்னும் நோக்கத் தாலும் அடக்கவிலைப் பதிப்பாக இப்போது வெளியிடலானேம்.'
இரண்டாவது மகாயுத்தம் ஆரம்பமான வுடனே (காகிதத்தட்டுப்பாடு காரணமாக)தமிழ் நாட்டிலிருந்து கீழ்வகுப்புக்கான வாசிப்புப் புத்த கங்கள் வருவது முற்ருகத் தடைப்படும் என்று எண்ணிக்கொண்ட திரு. பொன்னையா அவர்கள் தம் மனத்திருந்த ஆசைகளோடு கீழ்வகுப்புக்கான வாசிப்பு நூல்களை வெளியிடத் துணிந்தார். திரு. பொன்னையா அவர்கள் மனதிலே இப்படி

பயன்மரம் 49
யான எண்ணங்கள் தோன்றிவிட்டால் துரித மாகக் கருமமாற்றுவார். 1938ஆம் ஆண்டில் ஆசிரியகலாசாலையிலிருந்து ஆசிரியணுய் வெளி யேறி உத்தியோகத்திற்குப் போக இடந் தேடிக் கொண்டிருந்த இந்நூலாசிரியரை இரண்டாம், மூன்ரும் வகுப்புக்களுக்குரிய வாசிப்பு நூல்களை எழுதும்படி பணித்தார். இருபத்திரண்டு வய துடைய இந்நூலாசிரியரை - படிப்பித்தலிலே அநுபவம் பெருத அன்னரை - அப்போதுதான் ஈழகேசரியிற் சில கட்டுரை எழுதிக்கொண்டிருந்த அவரை-இந்தப் பெரியவேலையைச் செய்யும்படி துணிந்து கூறினர்.
இந் நூலாசிரியர் இரண்டு வகுப்புக்களுக்கு முரிய வாசிப்புப் பாடத்திட்டங்களைத் தயாரிப் பதில் ஈடுபட்டார். எங்கள் நாட்டுக்கு ஏற்றதாய், சமய சம்பந்தமில்லாததாய், நல்ல பாடல்கள், கதைகள் அதிகம் இருப்பதாய்த் தயாரித்துக் கொடுத்தார். அநேக பாடங்கள் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையிற் பயிற்சிபெற்ற ஆசிரிய மாணவர்கள் அங்கே மாதிரிகைப் பாடங்களாய்ப் படிப்பித்துக் காட்டப்பட்டவை. அட்டவணைகள் தயாரித்து முடிந்தவுடன், மாணவர்களுக்குத் தெரிந்த சொற்கள், நம்நாட்டில் வழங்கும் சொற்கள் இவற்றை ஆதாரமாகக் கொண்டு பாடங்களை ஒரிரு மாதங்களுக்கிடையில் எழுதி முடித்தார்.
இந்தக் காலத்திலேதான் திரு. பொன்னையா அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு
4.

Page 37
50 ஈழம் தந்த கேசரி
இந் நூலாசிரியருக்குக் கிடைத்தது. பலர் திரு. பொன்னையா அவர்களைச் சாதாரண படிப்பாளி என்றே கருதினர் ; இன்றும் கருது கின்றனர். உண்மை அப்படியன்று. அவர் சில நூல்களை ஆழமாகப் படித்தவர். ஏறக்குறையப் பாரதிபாடல்கள் முழுவதும் அவருக்கு மனன பாடம், திருவாசகத்திலே நல்ல பயிற்சி உண்டு. திருவாதவூரடிகள் புராணத்துக்கு உரைசொல்லக் கூடிய திறமை அவரிடம் இருந்தது. ஈழத்துப் படைப்புக்களிலே நல்ல ஈடுபாடு உள்ளவர் அவர்.
இவற்றேடு மாணவர்களுக்கு எப்படியாகப் பாடங்கள் எழுதப்படல் வேண்டும் என்பதை அனுபவமூலம் அவர் தெரிந்து வைத்திருந்தார். எனவே, ஒவ்வொரு பாடத்தையும் அவர் நுணுக்க மாகப் பரிசீலனை செய்தார். திருப்தியற்ற பாடங் களை மீண்டும் எழுதச் செய்தார். அவரைப் பாட புத்தக விடயங்களில் யாரும் ஏமாற்றிவிட (ԼՔւգ Ամո Ց1.
அவர், கீழ்வகுப்புக்கான பாடநூல்களை இரண் டாம் வகுப்பிலிருந்தே வெளியிடத் தொடங் கினர். இதிற்கூட அவருடைய அனுபவமும் நுண் னிய விவேகமும் பளிச்சிட்டன. பாலர் கீழ்ப் பிரிவு, மேற்பிரிவுக்காய நூல்களுக்கு அநேக படங்கள் தேவை; "புளொக்' செய்ய அதிக பணச் செலவு. எனவே அவற்றை ஆறுதலாக வெளியிட லாம் என ஒதுக்கிவிட்டு, ஈழகேசரி சிறுவர் பகுதி யிலும் ஆண்டு மடல்களிலும் வெளியிட்ட சில படங்களை வைத்துக்கொண்டு, சித்திரம் தீட்டுவ

பயன்மரம்
தில் வல்லவரான ‘ சான ‘வின் (தற்போது வானெலிக் கூட்டுத்தாபனத்தில் உயர்பதவியிற் கடமையாற்றும் திரு. செ. சண்முகநாதன்) படங்களோடு மிக விரைவாக "பாலபோதினி இரண்டாம், மூன்ரும் புத்தகங்களை வெளி யிட்டார். இரண்டாம், மூன்ரும் வகுப்பு நூல்கள் தயாரிப்பிலிருக்கும்போதே நான்காம், ஐந்தாம் வகுப்பு நூல்களையும் பிற பாடசாலை ஆசிரியர் களைக் கொண்டு எழுதுவித்து அடுத்து வெளிக் கொணர்ந்தார்.
வாசிப்பு நூல்களோடு உபபாட நூல்களும் (கதை நூல்கள்) தேவை என்பதை உணர்ந்த திரு. நா. பொன்னையா அவர்கள் இரண்டாம் வகுப்புக்கு பரதன் (கனக. செந்திநாதன்) என்னும் நூலையும், மூன்ரும் வகுப்புக்கு 'இராஜா தேசிங்கு (திரு. நா. பொன்னையா) என்னும் நூலையும், நான்காம் வகுப்புக்கு தமயந்தி" (திரு. சோ. சிவபாதசுந்தரம்) என்னும் நூலையும், ஐந்தாம் வகுப்புக்கு " இராமாயணச் சுருக்கம்’ (பண்டிதை இராஜேஸ்வரி தம்பு) என்னும் நூலையும் வெளியிட்டார்.
பாட நூல்களுக்காவது உபபாட நூல்களுக் காவது எழுதியவர்களின் பெயர்களை அவர் போடவில்லை. எழுதியவர்களும் தம் பெயர் வருவதை விரும்பவில்லை.
இந்தப் பாடநூல்களுக்கு முன்னக, கீழ் வகுப்புக்களிற் சரித்திரம்,பூமிசாஸ்திரம் என்பவை படிப்பிக்கப்படல்வேண்டும் என்னும் அரசினரது

Page 38
52 ஈழம் தந்த கேசரி
பாடத்திட்டத்துக்கமைவாகச் சரித்திர கதா வாசகம்’ (திரு. இ. தர்மலிங்கம்) என்ற தொடரில் மூன்று புத்தகங்களையும்,பூமிசாஸ்திரக் கதைகள் ' என்ற வரிசையில் இரண்டு புத்தகங் களையும்,பூகோளத்தொடர் பூமிசாஸ்திரம்’என்ற வரிசையில் நான்காம், ஐந்தாம் வகுப்புக்களுக் காய இரண்டு நூல்களையும் வெளியிட்டிருந்தார். நாட்டுச்சீவனசாஸ்திரம்', மேல்வகுப்பு இலக்கிய நூல்களுக்கு உரைக்குறிப்பு என்பவற்றையும் அச்சிட்டார். வாராவாரம் வெளிவந்த ஈழகேசரிப் பத்திரிகையோடு வாசிப்பு நூல்கள், உபபாட நூல்கள், மேல்வகுப்பு இலக்கிய நூல்கள், சரித்திர பூமிசாஸ்திர பாட நூல்கள், சமயசம்பந்த நூல்கள் என்பவற்றை வெளியிட்ட திரு. பொன் னையா அவர்கள், அந்த வேலைப் பளுவோடு தமிழ்த்தொண்டாகிய தொல்காப்பியப் (கணே சையர்) பதிப்பை 1937இல் ஆரம்பித்திருந் தமை போற்றற்குரியது; நினைந்து வாழ்த்தக் d5ñ.t9. ULug5I.
இப்போதைய பாடநூல் வெளியீட்டாளர் களைப் போல வெறும் பணவாசை கொண்டவ ரல்லர் திரு. பொன்னையா அவர்கள். பத்தாயிரம் தொடக்கம் இருபத்தையாயிரம்வரை அவரது போலபோதினி” வாசிப்புப்புத்தகங்கள் விற்பனை யாகிக் கொண்டிருந்தன. ஈழகேசரிப் பத்திரிகை அந்த இலாபத்தில் ஒருபகுதியை விழுங்கிக்கொண் டிருந்தது. அவரது அரசியல் ஈடுபாட்டால் ஒரு பகுதிப் பணம் செலவழிந்தது. அப்படியிருக்கும் போதும் தரமான ஈழகேசரி ஆண்டு மடல்கள்

பயன்மரம் 53
(ஆறு) அவரால் வெளியிடப்பட்டன. இன்றும் வைத்துப் போற்றிப் பாதுகாக்கக்கூடிய "நாவலர் நினைவு மலரையும் (பண்டிதர் கா. பொ. இரத் தினம் தொகுத்தது) சிந்தனையாளர்களும், பாலர் பகுதி எழுத்தாளர்களும் எழுதிய கட்டுரைகளைத் தாங்கிய கல்வி மலர் ஒன்றையும் வெளியிட் டார். இவ் வெளியீடுகளின் மூலம் திரு. பொன் னையா அவர்கள் தம் புகழை உயர்த்தினர்.
இந்த வெளியீடுகளேயன்றிப் பொதுமக்களுக்கு நன்கு பயன்தரக்கூடிய ‘சுத்தபோசன பாக சாத் திரம் ', " வைத்தியக் கைமுறைகள் ' (முதலியார் சு. திருச்சிற்றம்பலவர்) என்ற இரு நூல்களையும், *சிவசம்புப் புலவர் பிரபந்தத்திரட்டு’ (பண்டிதர் செவ்வந்திநாததேசிகர்) என்ற நூலையும், வித்துவ சிரோமணி பிரமயூரீ சி. கணேசையர் அவர்களது ‘ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரத்தையும் வெளியிட்டுப் பெருந்தொண்டாற்றினர். இந்தக் காலத்திலே இப்படியான துறைகளிலே பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதுண்மை. ஆனல் திரு. பொன்னையா அவர்கள் இந்நூல்களை வெளியிட்ட காலத்தில் இப்படியான நூல்கள் தமிழிற் கிடையா. இந்த அருமையான வெளி யீடுகளைப்பற்றி, சிறந்த பத்திரிகையாக அக் காலத்தில் விளங்கிய " சக்திப் பத்திரிகையில் தமிழறிஞர் திரு. மு. அருணசலம் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார் :
* தமிழ்ப் புத்தகம் என்றவுடனே நம் எண்ணம் இந்தியாவின் தென் எல்லையோடு

Page 39
54 ஈழம் தந்த கேசரி
நின்றுவிடுகிறது. ஆனல் அதற்கப்பாலும் - இலங்கையிலும் தமிழர் இருக்கிருரர்கள். நல்ல முறையிலே தமிழை அவர்கள் வளர்க்கவும் செய்கிருரர்கள். அங்காட்டுத் தனலக்குமி புத்தகசாலையார் வெளியிட்டுள்ள ஏழு புத்த கங்களில் மூன்றை இங்குக் குறிப்பிடலாம். முதலாவது சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு' ஆங்காங்கே அவ்வப்போது வாழ்ந்து வந்த புலவர்களின் பாடல்களைத் தொகுத்து வெளியிடுவது ஒரு நல்ல தமிழ்த்தொண்டு. * ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் ' என் பது மற்ருெரு நூல். தமிழிலக்கிய சரிதத்தில் ஈழநாட்டுப்புலவர்களுக்கும் இடமுண்டு. அவர் கள் வரலாற்றைக் கூறும் இந்நூல் பெரிதும் பாராட்டற்குரியதாகும். இவ்வாறே தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறு நிலப் பிரிவு சம்பந்தமாகவும் புலவர் சரிதங்கள் வெளி வருமானல் தமிழிலக்கிய சரிதம் அமைக்கும் வேலை எவ்வளவோ எளிதாய்விடும்.
* இவர்களுடைய மூன்ருவது நூல் மிக்க சுவையுடையது. இது ' சுத்தபோசன பாக சாத்திரம்' என்பது, போசனச் சுவையை விரும்பாதவர் யார்? பயனுள்ள தமிழ் நூல் கள் பலதுறையிலும் வெளிவருதல் வேண்டும். உண்டி சமைத்தல் என்பது இதற்கு விலக் கன்று. எனவே இத்துறையில் நூல் வெளி யிட்ட புத்தகசாலையாரை நாம் பாராட்டு கின்ருேரம் ’.
-தமிழ்ப் புத்தகங்கள் - 1943

பயன்மரம் 55
இவைமாத்திரமன்றி, பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்’, ‘அருணுேதயம் அல்லது சிம்மக் கொடி’ என்ற நாவல்களையும் (வரணியூர் இரா சையா ஈழகேசரியில் எழுதியது), ‘சத்தியேஸ்வரி என்ற நாடகத்தையும் (கவிஞர் கல்லடி வேலுப் பிள்ளை அவர்களின் மகன் சாரங்கபாணி ஈழகேசரி யில் எழுதியது) தமது பொறுப்பில் வெளி
யிட்டார்.
இதன் பிறகு, "பாலபோதினி அரிவரிப் புத்தகம், மேற்பிரிவுப் புத்தகம் இரண்டையும் (குரும்பசிட்டியிற் பிறந்தவரும், அக்காலத்தில் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிற் படிப்பித்தவரும், ஆசிரியத்தொழிலுக்கு எடுத்துக் காட்டாய் விளங்குபவருமான திரு. சீ. தம்பிப் பிள்ளை அவர்கள் எழுதியவை) பெரும் பொருட் செலவில் அருமையான படங்களுடன் வெளி வரச்செய்தார்.
திரு. நா. பொன்னையா அவர்கள் ஆட்களை எடைபோட்டு அவர்களிடம் எத்தகைய திறமை இருக்கிறது என்பதை உற்றுணர்ந்து அத் திறமையை எவ்வகையிற் பயன்படுத்தலாம் என்று எண்ணிச் செயலாற்றுவதில் வெகு சமர்த்தர். இதை அவரது ஒவ்வொரு செயலிலுங் காண லாம். வாசிப்புப் புத்தகங்கள், உப வாசிப்புப் புத்தகங்கள், சரித்திர பூமிசாஸ்திர பாடநூல்கள் ஒவ்வொன்றையுந் தகுந்த ஆட்களைக் கண்டு பிடித்து வெளியிட்டதைப்போல பாஷை சம்பந்த மான நூல்களை வெளியிடும்போதும் மிகத் திறமையான அறிஞர்களைக்கொண்டு அவற்றை எழுதுவித்தார்.

Page 40
56 ஈழம் தந்த கேசரி
சிறுவர்க்காகிய நல்லபாடல்களை இயற்றியவ ரும், “ ஈழவாசகம் ' என்ற வாசிப்பு நூல்களை எழுதியவருமாகிய முதுதமிழ்ப் புலவர் திரு. மு. நல்லதம்பி அவர்களது பரந்த அறிவையும் ஆற் றலையும் அறிந்த திரு. பொன்னையா அவர்கள், அவர்களைக்கொண்டு மொழிப்பயிற்சி 1, 2, 3, 4ஆம் புத்தகங்களை எழுதுவித்தார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தை ஸ்தா பித்து, பிராசீன பாடசாலையை நடாத்தி, பெருந் தொண்டாற்றியவரும் ஈழத்திற் பிரபல வித்தியா தரிசி என்று பெயர்பெற்றவருமாகிய பிரமயூரீதி. சதாசிவஐயர் அவர்கள் தமிழ்மொழிப் பயிற்சி யுந் தேர்ச்சியும் ' என்ற நூலை எழுதி உதவினர் கள். இப்போது வடமாநில வித்தியாதிபதியாக இருக்கும் பூரீமதி நவரத்தினம் அம்மையார் அவர்கள் அக்காலத்தில் பயிற்சிமூலம் பாஷைத் தேர்ச்சி' என்னும் நூலை எழுதிக் கொடுத்தார்கள். இந்த மொழிப்பயிற்சிநூல்கள் திரு. பொன்னையா அவர்களது சிறந்த பாட நூல்களாகும். கீழ்வகுப் புக்களுக்கும் இலக்கியம் கற்பிக்கப்பட வேண்டு மென்று அரசாங்க பாடத்திட்டத்தில் வெளி யானபோது பண்டிதர் வ. நடராஜனும் இந் நூலாசிரியரும் சேர்ந்தெழுதிய ‘இலக்கியமஞ்சரி’ நூல்களை (3, 4, 5ஆம் வகுப்புக்களுக்கு) வெளி யிட்டார். இந்நூல்கள் 'அதுகாறும் வெளியிடப் பட்ட இலக்கிய நூற்ருெகுதிகளின் பாதையை விட்டு மற்ருெரு புதிய பாதையிற் செல்கின் றன’’. 1947ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்கள் இவை. இருபது வருடங்கள் சென்றபின்பும் அப்படியான இலக்கிய நூல்கள் ஈழத்தில் வெளி யிடப்படவில்லை.

பயன்மரம் 57
தாம் பாடநூல்களையும் பிற நூல்களையும் பதித்ததோடல்லாமல் தம்மை நாடிவந்தோர்க்கு ஆதரவுதந்து பிறரது நூல்களை அவர் வெளி யிட்டார். அவற்றில் அக்காலத்தில் வட பெரும் பாக வித்தியாதரிசியாயிருந்த திரு. க. ச. அருணந்தி அவர்களது பெருமுயற்சியால் (வடஇலங்கைத் தமிழ்ஆசிரியர்சங்க வெளியீடு) வெளி வந்த " பிள்ளைப்பாட்டு’, கிழக்குமாகாணத்திலே கடமையாற்றுகையில் பிரம்மபூரீ தி. சதாசிவ ஐயர் அவர்கள் பெருமுயற்சி செய்து வெளியிட்ட * மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு ' என்ற இரண்டு நூல்களையுங் குறிப்பிடலாம்.
இவையன்றி, தம்மோடு நெடுங்காலத் தொடர்பு கொண்டிருந்தவரும், ஈழகேசரிக்குக் கட்டுரைகளாலும் பிறவற்ருலுந் தொண்டு புரிந் தவருமாகிய முதலியார் குல. சபாநாதன் அவர்க ளது கதிர்காமம்' என்ற நூலைத் திரு. பொன் னையா அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட அழகைப் பார்த்து ஒரு பத்திரிகை விமரிசகர், ‘ ஆகா, இது ஒரு சக்தி வெளியீடா ? என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சபாஷ்! திருமகள் அழுத்தகம்’ என்று எழுதினர். உண்மை திரு. பொன்னையா அவர்கள் பணத்தைப் பாராமல் நூலின் தரத் தைப் பார்த்து அழகாக வெளியிடும் பண் LIGOLLI6)JIT.
திரு. பொன்னையா அவர்களுக்கும் கலைப் புலவர் க. நவரத்தினம் அவர்களுக்கும் இருந்த தொடர்பும் நேசமும் சொல்லில் அடங்காதவை. "இணைபிரியாத இரட்டையர்' என்று அவர்களைக்

Page 41
58 ஈழம் தந்த கேசரி
கூறலாம். எந்த விஷயத்தை திரு. பொன்னையா அவர்கள் செய்தாலும் கலைப்புலவரது ஆலோசனை யின்றிச் செய்யமாட்டார். தமது ஒரேமகள் புனித வதியை திரு. நவரத்தினம் அவர்களது வீட்டி லேயே இருக்கச்செய்து படிக்கவைத்தவர். அப் படிப்பட்ட கலைப்புலவரது ‘தென்னிந்திய சிற்ப வடிவங்கள் ' என்ற கலைப் பெரும் நூலைத் திரு. பொன்னையா அவர்கள் வெளியிட்டிருக்கும் அழகு, படங்களை அச்சிட்டிருக்கும் மாதிரி, ஈழத்தின் தமிழ்ப் புத்தகப் பதிப்பிற்கு எடுத்துக்காட்டா கும். அதைப்போல, பன்மொழி வித்தகர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களது ? சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி வேலையையும் பெரும் சிரமத்துடன் அழகாக அச்சிட்டுக் கொடுத்தார்.
1930-1951 என்ற இருபத்தொரு வருடங்க ளுக்கிடையில் பாட நூல்களாக, இலக்கிய − இலக்கண நூல்களாக, நாவல் நாடக பொது நூல்களாக 100 நூல்களை வெளியிட்டு அருமை யான ஆண்டுமடல்களையும், பிற முயற்சிகளையும் திரு. பொன்னையா அவர்கள் செய்து முடித் தார்கள்.) நூல் விபரம் அநுபந்தத்திலே பார்க்க.) இந்த முயற்சிகளுக்கெல்லாஞ் சிகரமாக, மலையின் கண் ஒளியாக அவரது தொல்காப்பியப் பதிப்பு வேலை பிரகாசிக்கின்றது. அந்தப் பிர காசத்தைத் தரிசிக்க அடுத்த அத்தியாயத்துட் செல்வோம்.

6 உத்தர வராகம்
* மகான் மகாலிங்கையர் அவர்கள் எழுத்ததி காரம் நச்சினர்க்கினியம் பதிப்பித்து இருபது ஆண்டுகள் கழிந்தும் ஏனைய அதிகாரங்கள் தமிழுக்கு இன்றியமையாதனவும் தலைசிறந்தனவுமாம் என் பதை அறிந்துவைத்தும் தமிழ்நாட்டுப் புலவர்கள் அவற்றைப் பதிப்பிக்க முன்வரவில்லை. தொல்காப் பியம் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியம் தொலையக்கூடாது என்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணமென்று கருதப்படுகின்றது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வர வர அருகித் தமிழ் நாடு முழுவதிலும் விரல்விட்டெண்ணத்தக்க அள விற் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம்பிள்ளை கண்டார் ; கண்ணிர் வடித்தார். தமக்கு வரும் அவ மானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது தமிழ் அன் னைக்குப் பிராணவாயுப் பிரயோகஞ்செய்ய முன்வந் தார். தொல்காப்பியக் கடலில் இறங்கினர். தமிழ்

Page 42
60 ஈழம் தந்த கேசரி
வித்துவ சூடாமணிகள் சிலர், தாமோதரம்பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணங் கொண்டு போகப்போகிருர் என்று சிரித்தார்கள்.
** 1868ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் முதன் முதல் தமிழ்மன்னன் தாமோதரம்பிள்ளை தமிழ் நாடு உய்யும் பொருட்டுத் "தொல்காப்பியம்-சொல் லதிகாரத் தைத் தலைசிறந்த உரையாகிய சேன வரையர் உரையோடு நாவலர் அவர்களைக்கொண்டு பரிசோதிப்பித்து அச்சிற் பதிப்பித்தார். பலர் வாழ்த்தினர்கள் : பூரீலபூரீ சுப்பிரமணிய தேசிகர் முதலிய மடாதிபதிகள் திருநோக்கஞ் செய்தார்கள்.
** எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே ! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்று ஒருகுரல் கடைச் சங்க காலத்துப் பாண்டிய அரசனெருவன் வாயிலிருந்து கேட்கின்றது. கடைச் சங்கத்துத் தலைமைப் புலவராகிய நக்கீரரே அக் குரலைப் பெருக்குகின்ருர். அக்குரலிலிருந்து தொல் காப்பியத்தின் உயிர்நிலையம் எந்த அதிகாரம் என் பதை எவருந் தொட்டுக் காட்டலாம்.
'அந்த உயிர் நிலையமாகிய பொருளதிகாரம் 1868ஆம் ஆண்டு கழிந்து, 1878ஆம் ஆண்டும் போய், 1884ஆம் ஆண்டும் நீங்கி இன்னும் அச்சில் வெளி வரவில்லை. தமிழ்நாடு முழுவதிலும் பொருளதிகார ஏடு ஒரு சிலவாய், அவையும் நெரிந்தும் முரிந்தும் சிதல்வாய்ப்பட்டும் சிதைந்து இறுதி மூச்சுவிடுவதைத் தமிழ்மகன் ஒரேஒரு தாமோதரன்தான் கண்ணுற் முன்; கண்ணீர் சொரிந்தான். 1885ஆம் ஆண்டு பொருளதிகாரம். அச்சுவாகனம் இவர்ந்து திரு. தாமோதரம்பிள்ளை பதிப்புத் தமிழ்நாட்டிற் பவனி வந்தது. தமிழ் அன்னை புன்னகைபூத்தாள்.

உத்தர வராகம் 61
** தொல்காப்பியம் சிதைந்து மறையுங் காலத்தில் அதனைத் தேடி எடுத்து ஏந்திப் பரோபகாரஞ் செய்த திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் ஆதி வராகம் ஆயினர்கள். பிறகு திரு. தாமோதரம்பிள்ளை அவர்கள் எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமயத்திலே அதனை நன்றி மறவாமல் எடுத்துத் தாங்கிப் பயன்படுமுறையில் உபகரித்த திரு. நா. பொன்னையா அவர்கள் உத்தர வராகம் ஆயினர்கள். ' வராகம் வாழ்க. வழங்குக. ’’
-பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளை
ஈழகேசரி 17-9-50ஆம் திகதி இதழில் வெளி வந்த தொல்காப்பியப் பதிப்பு என்ற நீண்ட கட்டுரையின் (பண்டிதமணி சி. க. அவர்கள் எழு தியது) ஒரு பகுதி இது. பண்டிதமணி யவர்கள், தொல் - சொல்லதிகாரத்தைச் சி. வை. தாமோ தரம்பிள்ளை அவர்களுக்கு முன்னும் யாரோ ஒருவர் பதிப்பித்திருப்பதாக யாரோ ஒருவர் எழுதிய ஒரு குறிப்பை மறுத்து எழுதிய 'நெஞ்சக் கொதிப்பு’க் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் தமிழ்ப் பரோபகாரி திரு. சி. வை. தா. அவர்கள் தொல்காப்பியத்தைப் பதிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆண் டாண்டாய்ப் போற்றிக் காப்பாற்ற வேண்டிய கட்டுரை இது. இக் கட்டுரையில் பண்டிதமணி சி. க. அவர்கள், தொல்காப்பியத்தை வெளி யிட்ட பெருந்தன்மைக்காகத் தமிழ்த்தொண்டர் திரு. பொன்னையா அவர்களுக்கு உத்தர வராகம்’ என்ற பட்டத்தையும் வழங்கி, ‘வாழ்க, வழங்குக எனப் போற்றியுள்ளார்கள்.

Page 43
62 ஈழம் தந்த கேசரி
எதையுஞ் சரியாக மதிப்பிட்டு, அளவானசரியான-வார்த்தைகளாற் கூறும் பண்டிதமணி யவர்கள் " " தாமோதரம்பிள்ளை எடுத்து ஏந்திய தொல்காப்பியம் மறைகிற சமயத்திலே நன்றி மறவாமல் அதனை எடுத்துத் தாங்கிப் பயன்படு முறையில் உபகரித்தவர் திரு. பொன்னையா அவர்கள்’’ என்று மனமகிழ்ச்சியோடு-குதூகலத் தோடு கூறும் வார்த்தைகள்தாம் திரு. பொன் னையா அவர்களின் தமிழ்ச்சேவைக்குக் கொடுக்கப் பட்ட நற்சான்றிதழாகும்.
இந்த வசனத்தொடரிலே வரும் 'நன்றி மற வாமல் ' என்ற சொல் அர்த்த புஷ்டி உடையது. திரு. பொன்னையா அவர்கள் பிரமயூரீ சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களை திரு. தாமோதரம்பிள்ளை அவர்களை ஞாபகஞ் செய்து அச்சடித்திருக்கத் தேவையில்லை. ஏற்கனவே ஒரு சிறிய மலிவுப் பதிப்புக்கே திரு. தி. த. கனக சுந்தரம்பிள்ளை அவர்களை ஞாபகஞ் செய்வித்த திரு. பொன்னையா அவர்கள், இந்தப் பாரிய வேலை யைச் செய்த திரு. தாமோதரனுரை விட்டுவிடு வாரா? நன்றிமறவாமல் முன்னேர் பணியை வாழ்த்துவதில் முன்னின்றவர் திரு. பொன்னையா அவர்கள். அவர் முதலில் வெளியிட்ட (1937இல்) தொல் - எழுத்ததிகார முகப்பில் திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களது உருவப் படத் தைப் பதித்து, அவரது வாழ்க்கை வரலாற்றையும் எழுதுவித்துள்ளார். அதன் பதிப்புரையில் திரு. பொன்னையா அவர்கள் எழுதியிருப்பது இது :

உத்தர வராகம் 63
** தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், தொகை நூல்களில் ஒன்ருகிய கலித்தொகையையும், சூளா மணி, தணிகைப் புராணம் முதலியவற்றையும் முதலில் அச்சிட்டு வெளிப்படுத்தியவர்கள் பிள்ளை யவர்களே. இவைகள் இக்காலத்துப் பிறரால் அச் சிட்டு வெளிப்படுத்தப்படுதலின் பிள்ளையவர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்த அரும் பெருந் தொண்டு எவர்களாலும் மறக்கக்கூடிய நிலைமையை உடைய தாயிற்று. ஆதலால் அந்நிலையை ஒழித்துப் பிள்ளை யவர்கள் தமிழ் உலகுக்குச் செய்த நன்றியையும் அவர்களை யும் ஞாபகப்படுத்தும் பொருட்டே இத் தொல் - எழுத்ததிகாரம் நச்சினுர்க்கினியர் உரையை முன்னர் வெளிப்படுத்தினுேம்.'
என்ன பெருந்தன்மை! எப்படிப்பட்ட நன்றி மறவாமை !!
அடுத்து, பயன்படு முறையில் உபகரித்தவர்' எனப் பண்டிதமணி சி. க. எழுதியுள்ளதும் உற்று நோக்கத்தக்கது :
*" தொல்காப்பியம் என்பது பெருங்கடல். அதில் நீந்திக் கரைசேர்வது மிகக் கடினம். அதற்கு ஆழ்ந்தகன்ற படிப்பு வேண்டும். முறையாக, ஆசிரியரை அடுத்து நுணுக்கமாகப் பயிலல்வேண்டும். அப்படி வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பல பிள்ளை அவர்களிடமும், குமாரசுவாமிப்புலவர் அவர் களிடமும் படித்த மகாவித்துவான் பிரமழீ கணே சையரவர்கள் இருந்தார்கள். அவரைப் பயன்படுத்த திரு. நா. பொன்னையா அவர்கள் உளங்கொண்டார்.
' கணேசையர்-பொன்னை யா இருவர்களது சேர்க்கை அபூர்வமான சேர்க்கையாகும். கங்கையும் யமுனையும் சேர்ந்ததுபோலாகும். இந்தச் சேர்க்கை

Page 44
64 ஈழம் தந்த கேசரி
இருவருக்குமே நல்லதாயிற்று. கணேசையரது உரைவிளக்கக் குறிப்பு வெளிவந்து அவரது புகழை உச்சநிலையில் வைத்தது. திரு. பொன்னையா அவர் களும் அருமையான தமிழ்த் தொண்டு செய்து நிலை பெற்ற புகழை எய்தினுர், ’’
திரு. நா. பொன்னையா அவர்கள் வித்துவ சிரோமணி கணேசையர் அவர்களிடம் சிலகாலம் படித்தவர். அவரது “ குசேலர் சரிதத்தை 1931ஆம் ஆண்டில் பதித்து வெளியிட்டவர். " தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்பு’க்களை வெளியிட்டுத் தமிழுலகுக்கு உபகரித்தவர். கணே சையர் அவர்களது “ ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திர ’த்தை (1939இல்) அச்சிட்டவர். இவை எல்லாவற்றையும் விட ஐயரவர்களது அறுபதாம் ஆண்டுப் பூர்த்திவிழாவை (சஷ்டியப்த பூர்த்தி விழா) ஈழம் முன்னெப்போதும் கண்டிராத வகை யில் நடாத்தி முடித்த பெருமை இருக்கிறதே, அது திரு. பொன்னையா அவர்களது தனிப்பெருஞ் சாதனையாகும். அதைப்போன்ற ஒரு விழா சமீ பத்தில் பண்டிதமணி சி. க. அவர்களுக்கு, அவரது கந்தபுராண - தக்ஷ காண்ட உரை ’ வெளியீட்டின்போது, பேராதனைப் பல்கலைக் கழ கத்திலேதான் நடந்தது.
திரு. பொன்னையா அவர்களது வாழ்க்கையில் கணேசையரது சஷ்டியப்த பூர்த்தி விழாவை முக்கியமாகக் குறிப்பிடாவிட்டால் அது முழுமை பெருது.
இந்தப் பொற்கிழி விழாவைப்பற்றி, 'கணே சையர் நினைவுமலரில் வித்துவான் க. கி.

மகாவித்துவான் பிரமயூரீ சி. கணேசையர் அவர்கள்
பொற்கிழிவிழா வைபவம்

Page 45
மகாவித்துவான் பிரமயூரீ சி. கணேசையர் அவர்கள்
பொற்கிழிவிழா வைபவம்
 

உத்தர வராகம் 65
நடராஜன் அவர்கள் ஐயர் அவர்களைப்பற்றி எழுதிய கட்டுரையிலே சுருக்கமாக - ஆளுல் அழகாக - எழுதியுள்ளார். அவர் எழுதி யிருப்பது :
*" வெகுதானிய ஆண்டு புரட்டாதித் திங்கள் 22ஆம் நாளன்று (8-10-38) யாழ்ப்பாணத்தில் முன் எஞ்ஞான்றும் நிகழாத வகையில் ஒரு சிறந்த பொற் கிழி விழா நிகழலாயிற்று. அன்று மகாவித்துவான் பிரம்மபூரீ கணேசையரது அறுபதாம் ஆண்டு விழாவு மாகும். அன்று காலை 8-30 மணிக்கு வண்ணை. வைத்தீசுவரன் கோயில் முன்றிலிலிருந்து பல்வகை மங்கல வாத்தியங்கள் ஒலிப்ப பன்னுாற்றுக்கணக் கான தமிழன்பர்கள் மத்தியில் அலங்கரிக்கப் பட்ட இரதத்தில் மகாவித்துவானவர்கள் பல வரிசைகளுடனும் விழா நிகழ்தற்கமைந்த வைத் தீசுவர வித்தியாலய மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அக்காலத்து அரசாங்க சபைத் தலைவராக இருந்த கெளரவ சேர் வை. துரைசுவாமி அவர்கள் தலைமையில் விழா மிகச் சிறப் பாக நடைபெற்றது. பல அறிஞர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன.
* உயர்திரு விபுலானந்த அடிகள், வண. சுவாமி ஞானப்பிரகாசர் அவ்ர்கள், திரு. சு. நடேசபிள்ளை அவர்கள், மறைத்திரு. வை. இராமசாமி சர்மா அவர்கள், பண்டிதர் திரு. ம. வே. மகாலிங்கசிவம் அவர்கள் ஆகியோரால் ஐயரவர்களுடைய கல்வித் திறனையும் ஆராய்ச்சி வன்மையையும் ஏனைய குண நலன்களையும் பற்றிச் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. மகாவித்துவானவர்களுக்கு ஏறக்
குறைய 2000 வெண்பொற் காசுகளைக் கொண்ட ஒரு பொற்கிழி தலைவரவர்களால் வழங்கப்பட்டது. இவ் விழா கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதனை
5

Page 46
66 ஈழம் தந்த கேசரி
இத்துணைச் சிறப்பாக நிகழ்த்துதற்குக் காரணரா யிருந்தவர்களுள் “ ஈழகேசரி’ப் பத்திராதிபர் திரு. நா. பொன்னையா அவர்கள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள், கலைப்புலவர் க. நவரத் தினம் அவர்கள், திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள் ஆகியவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்க Grrrori. ””
பண்டிதமணி சி. க. அவர்கள் கணேசையர் அவர்களது தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்பைப்பற்றிக் குறிப்பிடும்போது, ** ஐயர் அவர்கள் தொல்காப்பியத்துக்குத் தந்த விளக்கக் குறிப்பு அவர்களின் புகழ் உடம்பை விளக்கஞ் செய்வதாய் அமைந்திருக்கின்றது ' என ஒரு இடத்தில் எழுதியுள்ளார்கள்.
ஐயரவர்களது உரைவிளக்கக் குறிப்புக்களை திரு. பொன்னையா அவர்கள் நான்கு நூல்களாக வெளியிட்டார்கள். ஒவ்வொரு நூலிலும் மிகக் குறைந்த தொகைப் பிரதிகளே அச்சிடப் பட்டுள்ளன. தொல் - எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியர் உரைக்குறிப்பை 1937இலும், தொல்-சொல்லதிகாரம் சேனவரையர் உரைக் குறிப்பை 1938இலும், தொல்-பொருளதிகா ரத்தை இரண்டு பாகங்களாக்கி பின்னன்கியல் கள் - பேராசிரியத்தை 1943இலும், முன் ஐந்தியல்கள் - நச்சினர்க்கினியத்தை 1948இலும் வெளியிட்டார்கள். இந்த நான்கு பாகத்தையும் வெளியிட ஏறக்குறைய இருபதினயிரம் ரூபா வுக்கு மேலாக அவர் செலவிட்டார்.
தொல்காப்பியநூல் பாடநூல்களைப்போலச் * சுடச்சுட ' விற்பனையாவதன்று. பத்துப் பதி

உத்தர வராகம் 67
னைந்து வருடங்களில் ஐம்பதாய், நூருய் விற்றுத் தான் முதலை எடுக்கவேண்டும். அவற்றிலே செல விடும் பணம் கைக்கு உருப்படியாக வந்துசேரும் என எதிர்பார்ப்பதுமில்லை. அதிலும் திரு. பொன்னையா அவர்கள் அப்பணத்தை, தமிழ்த் தாய்க்குத் தாம் செய்த தொண்டின் ஒரு பகுதி யாகவே கருதினர். ஒருசிலர் திரு. பொன்னையா அவர்கள் இந்தத் தொல்காப்பியப் பதிப்பு மூலம் நிறையச் சம்பாதித்து கணேசையர் அவர்களை ஏமாற்றிக் கடைசியில் 'கைகழுவி விட்டார் என அவதூறு பேசினர்கள்; இப்போதும் பேசு கிருர்கள். இதைவிட மகாபாதகம் வேறென்று மில்லை.
தொல்காப்பியம்-எழுத்ததிகார இரண்டாம் பதிப்பு 1952இலும், சொல்லதிகார இரண்டாம் பதிப்பு 1955இலும் வெளிவந்துள்ளன. இத்தனை வருட இடைவெளிக்குப்பின் அவை வெளிவந்ததி லிருந்தே அவற்றின் விற்பனையைப் பற்றி நாம் நன்கு ஊகிக்கலாம். பொருளதிகாரம் இரண் டாம் பதிப்பு இன்னும் வெளிவரவே இல்லை. இவற்றிலிருந்து திரு. பொன்னையா அவர்கள் பணத்துக்காக இவற்றை வெளியிட்டார் என் போரது வெளிற்றுரை விளங்கும். திரு. பொன் னையா அவர்களது தொல்காப்பியப் பதிப்புச் சேவையை நன்மனதுடையோர் பலர் வாழ்த்தி யுள்ளார்கள். திரு. குமாரசுவாமிப் புலவரது மகனும் திரு. பொன்னையா அவர்களை நன்கறிந் தவருமாகிய திரு. அம்பலவாணபிள்ளையவர்கள்

Page 47
68 ஈழம் தந்த கேசரி
* ஐயரும் புலவரும் ' என்ற கட்டுரையில் எழுதி யிருப்பதை நோக்கலாம் :
** தொல்காப்பியப் பதிப்புக்கள் சிறந்த முறை யில் நன்கு அச்சிடப்பெற்று வெளியாவதற்கு மிக்க உபகாரியாயிருந்தவர் ஈழகேசரியின் அதிபர் திரு. பொன்னையா அவர்களே. பெரும் பொருட் செல வுடன் இப்பதிப்புக்களைத் தமிழுலகத்துக்களித்த திரு. பொன்னையா அவர்களின் பெரும் பணியும் தமிழ் மக்களால் நன்றியுடன் பாராட்டப்படவேண்டியது. ’’
19ஆம் நூற்ருண்டில் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் அவர்கள், சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் என்போர் தமிழ் இலக்கண, இலக்கிய, சமய நூல்களைப் பிழையறப் பரிசோதித்து வெளி யிட்ட பெருமை தமிழுலகு அறிந்ததே. அவர் களின் பின்பும் சுன்னகம், அ. குமாரசுவாமிப் புலவர் போன்ருேர் இத்துறைகளிற் பெருந் தொண்டு செய்துள்ளனர். திரு. நா. பொன் னையா அவர்களும் 'வாழையடி வாழையாக தொல்காப்பியப் பதிப்பால் புகழ்க்கொடி கீழே வீழாமல் பாதுகாத்தார்.
தொல்காப்பியம் உள்ளவரை, தமிழ்ப் பரோபகாரி சி. வை தாமோதரம்பிள்ளை, வித்துவ சிரோமணி கணேசையர், தமிழ்த்தொண்டர் நா. பொன்னையா என்ற மூவர் பெயரும் வாழும்; வழங்கும்.

மூன்ருங் கண்
* பாலர்க்கு வேண்டும் பழமொழி பாட்டு
பக்குவ மான தமிழிற் கவிதை
சாலச் சிறந்தவர் கட்டுரைக் கோவை
தமிழில் மலர்ந்த சிறுகதைச் செல்வம்
கூலிக்கு மாரடிக் காத முயற்சி
குணம்பல கொண்டு மலர்ந்த அரும்பு
போலிச் சரக்கல்ல; ஆண்மையில் வாழ்ந்த
பொன்னைய வள்ளல் அளித்து மறைந்தான். '
- கவிஞர் சோ, தியாகராஜன்
"டொனமூர்த் திட்டம் நடைமுறைக்கு வருங் காலத்தில்(1930 இல்) இவர் ஈழகேசரியைத் தொடங் கியது இவரின் தீர்க்கதரிசனத்துக்கு ஒர் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. டொனமூர்த் திட்டத் தின் கீழ்த்தான் இலங்கைக்குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது. கீழைத் தேசங்களுள் முதன்முதல்

Page 48
70 ஈழம் தந்த கேசரி
இவ்வுரிமையைப் பெற்ற நாடு இலங்கையே. இந்த வாக்குரிமையை மக்கள் சரியாகப் பயன்படுத்துவ தற்கு அரசியலறிவு அவசியமாகும். இந்த அறிவைப் பத்திரிகை மூலமே பெறலாம். இருபது வருடங்க ளாக அரசியல் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஈழகேசரி தமிழ் மக்களுக்கு அருந்தொண்டாற்றி வருகின்றது. ஈழகேசரி ஈழநாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் பாலமாக அமைந்திருக்கின்றது. தமிழ் மரபுக்குப் பங்கமேற்படாத முறையில் புதுமையைத் தழுவுவது இப்பத்திரிகையின் சிறந்த அம்சமாகும்.'
வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் அதிபர் திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள் ஈழகேசரியின் தோற்றத்தைச் சரியாக மதிப்பிட்டுக் கூறிவிட்டு, அரசியல், பழைய தமிழ் மரபு இலக்கியம், புதிய ஆக்க இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் ஈழகேசரி சேவை செய்தமையைத் தொட்டுக் காட்டியுள்ளார்.
ஈழத்தின் பழம்பெரும் சிங்கமான சேர் பொன். இராமநாதன் அவர்கள் டொனமூர் அரசியல் திட்டத்தை நிராகரித்துக் கண்டனக் குரல் எழுப்பியகாலையில், யாழ்ப்பாண வாலிப மகாநாட்டார் அரசியல், சமூகப் பிரச்சினைகளிற் காலூன்றித் தேசத்தை விழிப்புறச் செய்த நிலைமையில் - மகாத்மாகாந்தி, நேருஜி, கமலா தேவி சட்டோபாத்தியாயா, திரு. வி. க. ஆதியோர் ஈழத்துக்கு விஜயஞ் செய்து பேச்சா லும் எழுத்தாலும் உணர்ச்சி எழுப்பிய காலத் தில் - அவற்றையெல்லாம் பிரதிபலிக்க ஒரு பத்திரிகை தேவை என எண்ணியவர் செயல் திறமை கொண்ட திரு. பொன்னையா அவர்களே.

மூன்ருங் கண் 71
அக்காலத்தில் சமயத்தை நோக்கமாகக் கொண்ட * உதயதாரகை ’, "சத்தியவேத பாதுகாவலன்', 'இந்துசாதனம்" என்ற பத்திரிகை கள் வெளிவந்துகொண்டிருந்தன. என்ருலும் தேசீய விழிப்புணர்ச்சியை ஊட்டவும், புதிய இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும் ஒரு பத்திரிகையின் தேவை ஏற்பட்டது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முன்வந்தவர் திரு. பொன்னையா அவர்கள்தாம்.
அவருடைய பொருளாதார பலம் மிகவும் அற்பமானது. புத்தகசாலை, அச்சுக்கூடம் என்ப வற்றைத் தொடங்கி ஆரம்ப நிலையிலேயே வைத் திருந்தார். சொந்தமாகப் பெரிய புத்தகங் களையோ பாடசாலை நூல்களையோ அச்சிடாத காலம்; புத்தகங்களை வாங்கி விற்பதாற் கிடைக் கும் சிறிய லாபம் : அச்சியந்திரத்தைக் கூட கையாற் சுழற்றி அச்சடிக்கும் நிலை , மின்சார வசதியோ அதற்கேற்ற அச்சுக்கூடமோ அவரிடம் இல்லை : சம்பளம்கூட ஒழுங்காகக் கொடுக்க முடியாத "இக்கட்டான நிலை. இந்த நிலையில் துணிவையே மூலதனமாகக் கொண்டு பத்திரிகையை-அதுவும் ஒரு தரமான வாரப் பத்திரிகையை-வெளிக்கொணர்ந்த திரு. பொன் னையா அவர்களினுடைய செயல் இமயமலையை ஏறிக்கடக்கும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
திரு. வி. க. வினுடைய கவசக்தி அப்போது மிக்க புகழுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

Page 49
72 ஈழம் தந்த கேசரி
அதை " மாதிரிகை 'ப் பத்திரிகையாக வைத்துக் கொண்டே திரு. பொன்னையா அவர்கள் ஈழ கேசரியின் அமைப்பை உருவாக்கினர் என்று ஊகிக்கவேண்டியுள்ளது. பர்மாவிலே பத்திரிகைத் துறையில் அவர் பெற்ற அனுபவங் கைகொடுத் துதவியது.
பிரமோதூத வருடம் ஆனிமாதம் 8ஆந் திகதி (22-6-30) அவர் முதலாவது இதழை வெளி யிட்டார்.
* கயனுெடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு ’ என்ற தேவர்குறளை நடுவில் அமைத்து இருபக்கங் களிலும் நன்மை கடைப்பிடி' , ' நாடொப்பன செய்" எனத் தம் குறிக்கோளைப் பொறித்துள் ளார். முதற் பக்கத்தில் " எமது பத்திரிகை என்ற தலைப்பில் ஈழகேசரியின் வருகைக்கான காரணத்தைப் பின்வருமாறு அவரே எழுதி யுள்ளார்:
"" நமது நாடு அடிமைப் படுகுழியி லாழ்ந்து, அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளங் குன்றி, சமயமிழந்து, சாதிப்பேய்க் கோட்பட்டுச் சன் மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய், உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண் டாடு மிக்காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன் றினும் மிகையாகாது .'
முதலாவது பத்திரிகையின் விடய அடக் கத்தைக் கொண்டே அதை அவர் எவ்வளவு உன்னதமாய் நடத்த எண்ணினர் என்பதை

மூன்ருங் கண் 73
நாம் ஊகிக்கலாம். முதலாவது பத்திரிகையின் விடய அட்டவணை இங்கு தொகுத்துத் தரப்பட் டிருக்கிறது:
(1) தமிழ்மொழி வளர்ச்சி (சி. கணேசையர்), (2) தற்காலக் கல்விநிலை, (3) செவ்வேளும் ஒளவை யாரும், (4) பெண்கள் பகுதி, (5) பாடசாலைக ளிற் சமாசனம் சம்பந்தமான கூட்டம், (6) இலங் கைச் சட்டநிரூபண சபை, (7) வர்த்தமானங் கள், (8) வினுேத உலகம், (9) இந்தியச் செய் திகள், (10) தேசத்தொண்டு (ஆசிரிய வசனம்), (11) நமது பத்திரிகை, (12) வேண்டுகோள்.
நமது நாட்டுக்கு ஒரு தேசீயகீதம் இல்லாத குறையைப் போக்குவது போலவும், ஒரு பத்திரிகை தேசீய கீதத்தோடு தொடங்குவது தான் முறை என்று எண்ணியவர் போலவும் முதலாம் இதழின் முன்பக்கத்திலேயே திரு. நா. பொன்னையா அவர்கள் தாமே தேசீய கீத மொன்றைப் பாடி அச்சிட்டுள்ளார்.
அந்தத் தேசீயகீதத்தின் ஒரு பகுதி இது :
* ஆறுமுக னெனும் நாவலனைத் தந்து
ஆக்கம் படைத்த திருநாடு-சைவம் மாறுப டாவகை மாணவ ரோடுயர் மன்றங்கள் கொண்ட திருநாடு.”
* சேர்ராம நாத னருணு சலமெனும்
செல்வர் பிறந்த திருநாடு-புகழ்ச் செந்தமி ழோடுயர் ஆங்கில மன்றங்கள் சேர்ந்து பொலிந்த திருகாடு.”*

Page 50
74 ஈழம் தந்த கேசரி
** சேர் இராமநாதன் அருணுசலமெனும் செல்வர் பிறந்த திருநாடு ' என்று வாயார நமது தேசத்தின் பெருமையைப் பாடிய திரு. பொன்னையா அவர்கள் வெறும் பாட்டோடு நின்றுவிடாமல் சேர் இராமநாதனின் நினைவுக் கறிகுறியாகவே ஈழகேசரி’ என்னும் பெயர் இட்டதை விளக்கி முதலாவது பத்திரிகையை அவருக்குச் சமர்ப்பித்துமுள்ளார் :
** எமது தேசநன்மையைக் கருதி தமது தள்ளாத கிழப்பருவத்திலும், தம்மாற் செல்லுதற்கியலாத நிலையிலும் மனைவி மக்களைத் துணைக்கொண்டு, சாகரங் கடந்து எங்களை ஆள்பவர்களிடம் எங்கள் குறைகளை நிவிர்த்திக்கவேண்டிச் சென்றிருக்கும் எங்கள் தாதாவும், தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளனும், தயாள வள்ளலும், அருட்கொடை அண்ணலும், அன்னை பணியில் அரிய சிங்கேறுமாகிய இலங்கைச் சிங்கம் (ஈழகேசரி) கெளரவ சேர் பொன் னம்பலம் இராமநாதனவர்கள் பாரிசமேதராய் இங்கி லாந்து சென்றிருப்பதற்கு அறிகுறியாகவே ஈழகேசரி என்னும் திருநாமம் புனைந்து இவ்வெளியீட்டை அன் ஞருக்கு அர்ப்பணஞ் செய்து வெளியிடலானேம்.'
இதும்ாத்திர மன்றி, சேர் இராமநாத னவர்கள் அமரநிலையெய்திய அன்று (26-11-30) ஈழகேசரி அனுபந்தமாக வெளியிடப்பட்ட சிறு பிரசுரத்தில் :
** இலங்கை அரசின்கீழ் வாழும் நாம் நமது குறைமுறைகளை எடுத்துச்சொல்லி ஆறுவதற்கு இடமாயிருந்த ஒரு பெரும் வள்ளல் ’’ என்றும்
* புத்தி தெரிந்த நாள்முதல் இதுவரையும் தனது காலத்தின் ஒவ்வொருமணி நேரத்தையும் பொது நலத்திலே உழைத்தலில் செலவிட்டுவந்த பெரியார்' என்றும் அஞ்சலி செய்துள்ளார்.

மூன்ருங் கண் 75
26-6-30 தொடக்கம் 30-3-51 வரையி லுள்ள 20 வருடம் 9 மாதங்களிலும் திரு. பொன்னையா அவர்கள் மேற்பார்வையிலும் பின் ஏழு வருடங்கள் 1-6-1958 வரை பிறர் மேற் பார்வையிலுமாக 28 வருடங்கள் ஈழகேசரி பெருமையோடு வாழ்ந்து ஈழகேசரிக் காலம் என்னும் பொற்காலத்தை நிறுவியுள்ளது. தனிப் பட்ட மனிதர் ஒருவர் ஈழத்திலே - தமிழில் - இத்தனை வருடகாலம் ஒரு தரமான பத்திரிகையை நடாத்துவதென்பது அன்றும், இன்றும், என்றும் நடக்கக்கூடியதன்று. அந்தச் சாதனையைத் திரு. பொன்னையா அவர்கள் சாதித்தார். அதனுலே தான் ஈழகேசரி பொன்னையா " என்று அவர் அழைக்கப்படுகிறர்.
ஈழகேசரியின் 28 வருட சாதனையை ஆராய் வது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் ஒரு பகுதியை ஆராய்வதற்குச் சமமாகும். எனவே அதைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது நல்லது.
நான்கு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம் :
முதலாவது - 1930 தொடக்கம் 1938 வரையுள்ள 8 வருடங்கள் ;
இரண்டாவது - 1939 தொடக்கம் 1942 வரையுள்ள 4 வருடங்கள் ;
மூன்ருவது - 1942 தொடக்கம் 1951 வரையுள்ள 9 வருடங்கள் ;
நான்காவது - 1951 தொடக்கம் 1958 வரையுள்ள 7 வருடங்கள்.

Page 51
76 ஈழம் தந்த கேசரி
முதலாவதாக உள்ள 8 வருடங்களிலும் திரு. பொன்னையா அவர்களே பத்திரிகைக்குப் பொறுப் பாக இருந்து நடாத்தினர்கள். அதற்கெனப் பத்திரிகை ஆசிரியர் யாரும் நியமிக்கப்படவில்லை. காங்கேசந்துறை, திரு. எஸ். எம். அருளம்பலம்
வருடங்களிலும், ஓரளவு பழைமையைத் தழு வியதும் ஆராய்ச்சித்தன்மை கொண்டதுமான சமய, இலக்கியக் கட்டுரைக்ளோடு அரசியலுக்கு (வாலிப மகாநாட்டினரின் பகிஷ்காரம், டொன மூர்த் திட்டத்தின் குறைகள், இடைத் தேர்தல் கள்-அரசாங்கசபைத் தெரிவு, பாரத நாட்டின் உப்புச் சத்தியாக்கிரகம், மகாத்மாகாந்தியின் உண்ணுவிரதம்) முக்கியமளித்து, யாழ்ப்பாணம்மலையாளப் புகையிலை ஐக்கிய வியாபாரச் சங்கம்,
கப்படும் விடயங்களை அலசி ஆராய்ந்து, "வேளா ளர் வருண ஆராய்ச்சி உரை", "ஆயிரத்தெண் ணுாறு வருடங்களுக்கு முன் தமிழர் நிலை' (கண்க சபைப்பிள்ளை) முதலிய பெரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வருடக்கணக்காகத் தொடர்ந்து பிர சுரித்து, பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்’, 'அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி’ போன்ற நாவல்களை வெளியிட்டுப் பத்திரிகையை நடாத்தி னர். யாழ்ப்பாணப் பகுதிக்கு ஈழகேசரியின் விசேட நிருபராக வண்ணை, எம். எஸ். முருகேசன் அவர்கள் ஆற்றிய பணியும் இங்கு குறிப்பிடப் படவேண்டியது.
வித்துவசிரோமணி கணேசையர், குமார சுவாமிக் குருக்கள், இளமுருகனுர், சோமசுந்தரப்
ராசன், குல. சபாநாதன், க. வே. சாரங்க் பாணி, முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, பொன். குமாரவேற்பிள்ளை, கா.பொ.இரத்தினம்,

மூன்ருங் கண் 77
வரணியூர் இராசையா, சி. தங்கசாமி ஐயர், சுயா, அநுசுயா (அல்வாயூர் செல்லையா) என்போர் இக் காலகட்டத்திலே எழுதிப் பத்திரிகையை வளர்த் தார்கள். தேசிக விநாயகம் பிள்ளையவர்களது * உமார்கய்யாம் ' மொழிபெயர்ப்புப் பாடல்கள் முழுவதும் அக்கால ஈழகேசரியில் வெளிவந்தன. பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் என்போரது சில பாடல்களும் வெளிவந்தன, யாழ்ப்பாணம் வாலிப மகாநாட்டு நடவடிக்கைகள் முழுவதை யும் ஈழகேசரி வெளியிட்டது, பண்டிதமணி சி. க. அவர்களது சில கட்டுரைகளையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களைக் கண்டித்து அவர் பாடிய (நூல்) பாடல் முழுவதையும் திரு. பொன்னையா அவர்கள் ஈழகேசரியில் வெளி யிட்டார்கள்.
1938ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், கொழும்பு நிருபராக இருந்த திரு. சோ. சிவபாதசுந்தர மவர்கள், ஈழகேசரியின் ஆசிரியராக வந்தமர்ந் தார். அவர் அந்தக் காலகட்டத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
"1938 முதல் 1942 வரையுமுள்ள நான்கு வருஷ காலம் என் வாழ்வில் மறக்கமுடியாத காலம். . .இன்று நான் பெற்றிருக்கும் பதவிக்கே ஈழகேசரி கொடுத்த அநுபவந்தான் காரணம். . என்னைப் போன்ற சில இளைஞர்கள் துணிந்து பத்திரிகைத் துறையில் இறங்கியதற்கும் இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கும் காரணம் ஈழகேசரி அதிபர் திரு. பொன்னையா அவர்களின் முன்மாதிரியும், அவரது ஊக்கமும் ஆதரவும் நட்புரிமையுந்தான். இன்று 'றேடியோ சிலோ'னில் தமிழ்ப் பகுதியிற் கடமை

Page 52
78 ஈழம் தந்த கேசரி
யாற்றுபவர்களில் மூன்றுபேர்(சோ. சி., சான, ச.நமசி வாயம்) ஈழகேசரி வளர்த்தெடுத்த எழுத்தாளர்க ளென்ருல் அதற்குரிய நன்றி யாவும் நண்பர் திரு. பொன்னையா அவர்களைத்தான் சாரும்.'
திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்களின் காலத் திலே திரு. சி. வைத்திலிங்கம், திரு. க. சம்பந்தன், இலங்கையர்கோன்’ முதலியோரது படைப்புக் கள் வெளிவந்தன. தலையாளி, திரு. வ கந்தையா, வெள்ளவத்தை, திரு. மு. இராமலிங்கம், சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி விபுலானந்தர், டொக் டர் க. கணபதிப்பிள்ளை, திரு. எம். எஸ். இரத் தினம், திரு. மா. பீதாம்பரனர் என்போரது கட்டுரைகளும் ஆராய்ச்சிகளும் மனதை ஈர்த் தன. கவிஞர் சச்சிதானந்தனது அன்ன பூரணி’யும் வேறு சில நாவல்களும் அழகூட்டின. "பாதையோரத்திலே என்ற பகுதியை சோ. சி. தொடங்கி இலக்கியம், கலை சம்பந்தமான குறிப் புக்களை அழகாகவும் குத்தல் கிண்டலாகவும் எழுதினர். பரவலாக இலக்கிய இரசனையை வளர்த்தார். அக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்து வந்த கல்கி ' ஆசிரியர் அவர்கள் யாழ்ப் பாணத்தின் இலக்கிய இரசனையைக் கண்டு வியந் தார் என்றல் அதற்கு அக்கால ஈழகேசரியும் சோ. சி. யும் ஒரு சிறு பங்காவது காரணம் எனலாம்.
அந்தக்கால ஈழகேசரியில் வெளிவந்த மற் ருெரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அது மற்றைய பத்திரிகைகள் அது வரையுஞ் செய்யாத தொண்டு எனலாம். ஈழகேசரி இளைஞர் சங்கம் என்ற அமைப்புத்தான் அது. அவர்களுக்காகவே கல்வி அனுபந்தம் (4 பக்கங் கள்) ஒன்றை வாராவாரம் வெளியிட்டு ஆரம்ப எழுத்தாளர்க்கு ஆலோசனைகூறி, ஊக்கப்படுத்தி,

மூன்ருங் கண் 79
வருட முடிவில் * கல்விமலர் " ஒன்றையும் வெளி யிட்டு பேச்சுப் போட்டியும் எழுத்துப் போட் டியும் நடாத்தி, வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் மகாநாடு நடாத்தி சோ. சி. பெருமையுற்ருர் ; ஈழகேசரி பெருமையுற்றது. அவரே அதைக் குறிப் பிட்டு ஒரு கட்டுரையில் எழுதியிருப்பது இது :
“நான் ஈழகேசரியில் கடமையாற்றிய காலத்தில் இளைஞர்களுக்கென ஒரு கல்வி அனுபந்தம் நடத்தி வந்தது வாசகர் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்த அனுபந்தத்தில் மாணவர்களாயிருந்து எழுதிய இளம் எழுத்தாளர்கள் சிலர் இன்று ஈழநாட்டின் சிறந்த எழுத்தாளராய் மிளிருகின்றனர். இவர்களும் அதிபர் திரு. பொன்னையா அவர்களின் கடமைக் குரியவர்கள்.'"
அன்பர் சோ. சி. அவர்களும் ஓவியக்கலைஞர் ‘சான அவர்களும் 'கல்கி'யும் ‘மாலி’யும் போல வாழ்ந்து இந்தக் காலத்தில் அருமையான ஆண்டு மடல்களையும் வெளியிட்டு ஈழகேசரியைத் தரமான அரசியல், இலக்கிய, கலைப்பத்திரிகை யாக உயர்த்தினர்கள்; இளம் எழுத்தாளரைத் தோற்றுவித்தார்கள்.
1942ஆம் ஆண்டு தொடங்கி 1957ஆம் ஆண்டு வரையுமுள்ள காலத்தின் முற் பகுதி(1951 வரை)யில் திரு. பொன்னையா அவர்கள் வாழ்ந்து மேற்பார்வை செய்தார்கள். இக்காலம் முழுவதும் திரு. இராஜ அரியரத்தினம் ஆசிரிய பீடத்தில் இருந்தாரெனினும் 1942 - 1944 வரை அவர் தமிழ்நாட்டிற் சுற்றுப் பிர யாணத்தில் இருந்ததால் திரு. அ. செ. முருகா னந்தன் அவர்களே பத்திரிகையை நடாத்தினர்.

Page 53
80 ஈழம் தந்த கேசரி
மறுமலர்ச்சிச் சங்கத்தோடு அ. செ. மு. தொடர்பு கொண்டிருந்தபடியால் அவ் வட்டார எழுத்தாளர் இடையீடின்றி எழுதிக் குவித் தார்கள். அ. செ. மு., அ. ந. கந்தசாமி, தி. ச. வரதராசன், "மகாகவி’, கவிஞர் சரவணமுத்து (சாரதா), பஞ்சாட்சரசர்மா, நாவற்குழியூர் நட ராஜன், பண்டிதர் வ. நடராஜன், சு. வே. கனக. செந்திநாதன் என்போர் இக்காலத்தில் எழுதி யோரில் முக்கியஸ்தராவர். யுத்தகால நெருக் கடியிற் பக்கங்கள் குறைவாயிருந்தாலும் சிறு கதையும் கட்டுரைகளும் கவிதைகளும் அபரி மிதமாக வெளிவந்தன. ஈழத்தின் ‘மண் வாசனை’ கூடுதலாகப் பிரதிபலித்த காலம் இது.
திரு. அரியரத்தினம் அவர்கள் 1944-1957 வரை பொறுப்பாசிரியராய் இருந்தார். அவரிடம் இருந்த தனித்திறமை தமிழ்நாட்டு எழுத்தாளர்க ளோடும் ஈழத்து எழுத்தாளர்களோடும் அடிக் கடி கடிதத்தொடர்பு வைத்து ஈழகேசரியை எழுத் தாளர் பத்திரிகை போன்று நடாத்தியதுதான். * அரியம் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றவுடன் பல பிற முயற்சிகளில் ஈடுபட்டிருந்த திரு. பொன் னையா அவர்கள் ஈழகேசரியின் அரசியற் கொள் கைகள், இலக்கிய நோக்கங்கள், அதனேடு பழைய தொடர்புடையவர்கள் ஆதியனபற்றி அவரிடம் கூறிவிட்டு யாதொரு குறுக்கீடுமின்றி, அரியத் தையே சுதந்திரமாக நடாத்த விட்டுவிட்டார். * அரிய மும் கொடுத்த கடமையைச் சரிவர நடாத்தி முடித்தார் என்றே கூறல்வேண்டும்.

மூன்றங் கண் 81
'அரிய'த்துக்கு உதவியாக திரு. ச. நமசி வாயம், பண்டிதர் நா. கந்தையா என்போர் முற் பகுதியிலும், பிரம்மபூரீ பொ. சுந்தரசர்மா, திரு. எல். பைக்கிரிசாமி, திரு. இ. நாகராஜன் என்போர் பிற்பகுதியிலும் உடனிருந்து வேலை செய்தார்கள். தியாகி ' கோ. இராஜகோபால் திரு. பொன்னையா அவர்களுடனே பலவருடம் வாழ்ந்து பத்திரிகைத் துறையிற் பணியாற்றினர். இக்காலகட்டத்தில் பழைய எழுத்தாளர்களோடு திருவாளர்கள். மா. பீதாம்பரம், சொக்கன், கசின், சோ. தி. , வ. அ. இராசரத்தினம், இராச நாயகன், அம்பி, முருகையன், தணிகாசலம், கோவைவாணன், சிவாஜி, நடமாடி, புதுமை லோலன், எஸ். பொன்னுத்துரை, டானியல், * இதம் , நீலாவணன், வி. சீ. கந்தையா என்போரும் வேறு பலரும் எழுதலாயினர். இக் காலத்தில் எழுதிய எழுத்தாளரது பெயர் முழுவதையுங் கூறல் சாத்தியமானதன்று.
*சோ. சி’யின் காலத்திலே அரும்பு கட்டிய புத்தக மதிப்புரைப் பகுதியை விரிவாக விமர் சனம் போல, அவ்வத் துறையிலே துறைபோன வர்களைக் கொண்டு எழுதுவித்தார் திரு. அரிய ரத்தினம். ஈழகேசரியின் புத்தக மதிப்புரையைத் தமிழ்நாட்டுப் பேரறிஞர்களுங் கூர்ந்து கவனித்
தனர்.
பேரறிஞராகிய திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் திரு. பொன்னையா அவர்களைப் பற்றி எழுதிய குறிப்பொன்றில் :
6

Page 54
82 ஈழம் தந்த க்ேசரி
*ஈழகேசரி என்ற பத்திரிகையைத் தமிழ்நாட்டில் பிரபலமாய் விளங்கும்படி செய்தவர்கள் இவர்களே யாவர். இப்பத்திரிகையில் வெளிவந்துள்ள பொருள் கள் பலவும் இவர்களால் நேரில் நன்கு கவனிக்கப் பட்டனவேயாகும். இதன்கண் நமது வாசிகசாலை " என்ற தலைப்பில் வெளிவரும் மதிப்புரைகளும் தமிழ் நாட்டில் தமிழாசிரியர் பலரும் எழுதிவந்துள்ள கட்டுரைகளும் பிற ஆராய்ச்சி உரைகளும் திரு. நா. பொன்னையா அவர்களது பெருமையையே விளக்கிவந்தன.'
என்று எழுதியுள்ளமை ஈழகேசரியின் அத்தொண்
டுக்கு நற்சான்ருகும்.
ஈழகேசரியின் மதிப்புரைப் பகுதிக்கு செந் தமிழ்மணி பொ. கிருஷ்ணபிள்ளை,திருவாளர்கள்: K.S. கிருஷ்ணன், ச. அம்பிகைபாகன், சி. வைத்தி லிங்கம், பண்டிதர் வ. நடராஜா, கசின், கனக. செந்திநாதன், சு. வே. என்போர் செய்த பணி சாலச் சிறந்ததாகும்.
திரு. பொன்னையா அவர்கள் அமரத்துவ மடைந்தபின் ஈழகேசரி தந்தையை இழந்த மகன் போன்று அல்லற்பட்டாலும், பின் மனேஜராக இருந்த திரு. கோ. அப்பாக்குட்டி அவர்களது துணிவினுல் ஏழுவருடம் நடைபெறலாயிற்று. ஈழகேசரி வெள்ளிவிழா மலரை அப்பாக்குட்டி
அச்சுக்கூட வேலை, புத்தக வெளியீட்டு வேலை, இவைகளோடு பத்திரிகையை நடாத்துஞ் சிரம மும், வகுப்புக்கலவர காலத்திலே பத்திரிகையில் எழுதும் ஒவ்வொரு எழுத்தையுந் தணிக்கைக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தமுஞ் சேர்ந்து

மூன்ருங் கண் 83
நிர்வாகஸ்தர்களுக்குப் பெருந் தலையிடியைக் கொடுத்தன. எனவே இருபத்தெட்டு வருடங் களின்பின் சகலரது மனவருத்தத்தோடும் பத்திரி கையை நிறுத்தவேண்டியதாயிற்று.
ஈழகேசரி சாதித்த சாதனைகள் அளவில்
கூட்டத்தின் ஒரு பகுதியை ஆக்கிய பெருமை அதனைச் சார்ந்ததே.
தரமான சிறுகதைகளாக நூறு கதைகளை யாவது ஈழகேசரிக் கதைகளென இப்போதும் வெளியிடலாம். ' தோணி ' (வ. அ. இராச ரத்தினம்), " நிறைநிலா (இ. நாகராஜன்), * வெள்ளிப் பாதசரம் ” (இலங்கையர்கோன்), "ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற கதைத் தொகுதி களில் உள்ள “ ஈழகேசரிக் கதைகள் இன்றும் பெருமையுடன் விளங்குகின்றன. * கொழு கொம்பு’ (வ. அ. இராசரத்தினம்), "கேட்டதும் நடந்ததும்’ (தேவன் - யாழ்ப்பாணம்) முதலிய புதுமை நாவல்களும், பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் ', " அருணுேதயம் அல்லது சிம்மக் கொடி முதலிய துப்பறியும் நாவல்களும் புத்த கங்களாக வெளிவந்துள்ளன. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் புத்திரர் திரு. சாரங்க பாணி அவர்கள் எழுதிய சத்தியேஸ்வரி ' என்ற நாடகமும், சாணு ' எழுதிய ‘பரியாரி பரமர்' முதலிய நடைச்சித்திரக்கட்டுரைகளும், “தேவன்' (யாழ்ப்பாணம்) எழுதிய வானவெளியிலே என்ற விஞ்ஞானக் கட்டுரைகளும், புதுமைலோலன் எழுதிய ஏமாற்றம் ' என்ற தொடர் கதை

Page 55
84 ஈழம் தந்த கேசரி
ஒன்றும் (கருகிய ருேசா) நூல்வடிவம் பெற்றுள் ளன. அல்வாயூர், கவிஞர் மு. செல்லையா அவர்க ளது வளர்பிறை ‘த் தொகுதிப் பாடலில் அநேகம் ஈழகேசரியில் வெளிவந்தவைகளே. இவை யன்றி மலர்ப் பலி * (சொக்கன்), ' இதய ஊற்று ’ (கசின்), “பாசம்’ (சம்பந்தன்), ‘அன்ன பூரணி’ (சச்சிதானந்தன்), 'தங்கப்பூச்சி" (அரியம் மொழிபெயர்ப்பு), " விதியின் கை (கனக. செந்திநாதன்), மாலை வேளையில் (சி. வை. மொழிபெயர்ப்பு) முதலிய பல நாவல்களும் நூல் வடிவம் பெறக்கூடியவையாக இருக்கின்றன. * சு. வே. ’யின் உருவகக்கதைகள், இலங்கையர் கோனின் விடியாத இரவு நாடகங்கள் ஏராள மான கவிதைகள், நாற்பது “ ஈழத்துப் பேணு மன்னர்கள் ', திரு. சோ. நடராசன், திரு. குல. சபாநாதன், பண்டிதர் வ. நடராஜன் என் போரது கட்டுரைகள் நூலாக வெளிவந்தால் ஈழகேசரியின் தொண்டு துலக்கமுறும்.
ஈழகேசரியின் மற்ருெரு சிறந்த தொண்டைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. இப்போதைய பத்திரிகைகளிற் சில, சில சர்ச்சைகளைத் தொடங்கி விடயத்தைக் கைநழுவ விட்டுவிட்டு எழுத்தாளரை நேரே தாக்குவதையும், அது ‘விடயச்சண்டையாய் இராது வெறும் ‘எழுத்துப் போராய் முடிவதையுங் காண்கிருேம். ஈழகேசரி தொடங்கிவைத்த சர்ச்சைகள் விடயஞானத்தை ஊட்டுவதாய்ப் பெருந்தன்மையுடன் மிளிர்ந் தன. பண்டிதமணி ' சி. க. 'வின் புலமை, இலக் கியம் என்ற குறிப்புக்களின் மீது வித்துவான் க.

மூன்ருங் கண் 85
வேந்தனரும் பிறரும் சிலப்பதிகாரத்தை ஆதரித்தெழுதிய பல தொடர் கட்டுரைகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரது திருவாசக விளக்கத்துக்கு எதிராக எழுந்த வாதப் பிரதி வாதங்கள், கலைப்புலவர் க. நவரத்தினம், ஏழாலை திரு. ஐ. பொன்னையா என்போர் நடாத்திய வேதாகம சைவசித்தாந்தமும் தனித்தமிழ்ச் சைவசித்தாந்தமும் என்ற போர் , திரு. த. கைலாசபிள்ளை அவர்களின் கண்டனத்தை அடுத்து ஆராய்ச்சி அறிஞர் நியாயதுரந்தரர் வ, குமாரசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய வேளாளர் வருண ஆராய்ச்சி', சுவாமி ஞானப் பிரகாசர் - பண்டிதர் கா. பொ. இரத்தினம் என்போர் நடாத்திய சொற்பிறப்பு ஆராய்ச்சி கள் மறுப்புக்கள், யாழ்ப்பாணக் குடியேற்றம் - அரசு என்பவை சம்பந்தமாகப் பலர் எழுதிய கட்டுரைகள், நயினுதீவுச் சிலாசாசனம் சம்பந்த மான சர்ச்சைகள் இதற்கு உதாரணங்களாகும்.
இந்தக் கட்டுரையை முடிக்குமுன் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்தல் அவசியம். ஒவ் வொரு காலகட்டத்திலும் ஈழகேசரிக்குப் பக்க பலமாயிருந்து எழுதிய முக்கிய எழுத்தாளரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். சுருங்கிய கட்டுரையில் எல்லோரையுங் குறிப்பிடுவது முடியாத காரியம். ஒரு காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர் மற்றைய காலகட்டத்தில் எழுத வில்லை என்பதும் இல்லை. சிலர் ஈழகேசரி தொடங்கிய காலத்திலிருந்து முடிவுவரை கூட எழுதியுள்ளார்கள். பெரும் புலவராயிருந்த சுன்

Page 56
86 ஈழம் தந்த கேசரி
ணுகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களது மக ஞகிய திரு. அம்பலவாணபிள்ளை அவர்கள் முதல் இதழ் தொடக்கம் 28 ஆண்டுகளாக ஈழகேசரியில் பல பல பக்கங்களை பல துறையில் நிரப்பியுள் ளார். ஒரு வாரமாவது எழுதாமல்விட்டது கிடையாது. பல வருடங்களாக அவர் ஆசிரியர் தலையங்கத்தையும் எழுதினர். அவர் ஈழகேசரியின் நற்பணிபற்றிக் குறிப்பிட்டுள்ளது மிக முக்கிய மானது. அவர் எழுதியிருப்பது இது :
“பிரிட்டிஷ் அரசினரின் எல்லையற்ற வன்மைக்கும்
காலம் ; பிறப்புரிமைகளைப் பெறவேண்டும் சுயாதீ னத்தையடைய வேண்டும் என்ற வேட்கை கிடை யாது, வாய்புதைத்துப் பணிந்துநின்று வெள்ளைய ரிடம் பதவிகள் பட்டங்கள் கெஞ்சிப் பெறுங் காலம். இத்தறுவாயில் ஒருவர் தனித்துநின்று சுதந்திர முழக்கஞ் செய்து உரிமைகளை வலிந்து கோருவ தென்ருல் அவரின் அஞ்சாமை எப்படியாகவேண்டும்? தேசீய முறையில் நடத்தப்பட்ட வேறு பத்திரிகைகள் கிடையா. கொழும்பில் இப்போது வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகள் அப்போது கிடையா. தேசீயத்தை இலக்காகக்கொண்டு அருந்தொண்டு புரிந்துவந்த ஒரேயொரு பத்திரிகை ஈழகேசரி யாகும்.'
திரு. கு. அம்பலவாணபிள்ளையின் பத்திரி கைத் தொண்டு மண்புழுவின் தொண்டுபோல மறைந்திருந்து பெரும்பயன் நல்கியதாகும். அப்படிப் பிற்காலப் பத்துவருடங்களில் தன்னை மறைத்துக்கொண்டு ஈழகேசரிக்கு அரசியல் துறையிலும், பிற புதுப்புது அம்சங்களிலும் பணியாற்றியவர் நிருபர் திரு. சி. செல்லத்துரை

மூன்ருங் கண் 87
யாகும். ' அரிய ‘த்தின் வலக்கரம்போல அவர் விளங்கினர். அவர்கண்டுபிடித்த எழுத்தாளர்கள், * கொண்டோடி ’ப் புதினங்கள், இளவரசு “ என்ற புனைபெயரில் அறிமுகப்படுத்திய இளம் எழுத்தாளர்கள், அரசியற் 'சிடுக்குகள் எத்தனை எத்தனையோ ?
40க்குப்பின், 47க்குப்பின், 56க்குப்பின் என் றெல்லாம் தாங்கள் எழுத்தாளர்களாக வந்த காலத்தை வைத்துக்கொண்டே இலக்கிய வளர்ச்சிக் கணக்குப்போடும் யாராயிருந்தாலும் ஈழகேசரியையும் அது செய்த பணியையும் இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. ஒரு காலத்திற் செய்யும் பத்திரிகைப்பணி, பொதுத் தொண்டு, கலை இலக்கியப்பணி ஆகியவை ஒரு தலைமுறைக்குப்பின் இலகுவாகத் தோற்றுவதும், சாதாரணமாக மதிக்கப்படுவதும், எள்ளி நகை யாடப்படுவதும் ஈழத்தில் வழக்கமாகிவிட்டது. இந்தப் போற்ருத தன்மை வளர்ந்தால் அது நம்மை அதல பாதாளத்திற் கொண்டுபோய் விட்டுவிடும். இந்தத் தலைமுறையினரும் இனி மேல் வரும் தலைமுறையினரும் இந்தப் பணி களில் தூயமனத்தோடு இறங்கமாட்டார்கள். அந்தக் காலத்திற் பெரும் இடையூறுகளுக்கிடை யில் இவ்வகைப் பணிகளைத் திரு. பொன்னையா அவர்கள் எங்ங்ணஞ் செய்தார் என்பதை எடுத்துக் காட்டி திரு. பொன்னையா அவர்களின் அத்தியந்த நண்பரும், அரசியல் வழிகாட்டியும், இந்த நாட்

Page 57
88 ஈழம் தந்த கேசரி
டிலே சுதந்திரம் தேசியம் என மூச்சுவிட்ட முன் னேடியும், அரசியல் அறிஞருமாகிய திரு. ஹண்டி
பேரின்பநாயகம் அவர்களும் பின்வருமாறு * பொன்னையாவின் பணி பற்றி எழுதியுள்ளமை நினைவுகூர்தற்குரியதாகும்.
* தீண்டாமையகற்றல், சிங்களருக்குந் தமிழ ருக்கும் ஒற்றுமையை வளர்த்தல், இலங்கை பூரண சுயராச்சியம் பெறுதற்காகப் போராடுதல் போன்ற இயக்கங்கள், அவற்றில் ஈடுபடுபவர் களு க்கு இன்று ஒரளவில் ஊதியத்தைக் கொடுக்கும் முயற்சி களாக இருக்கின்றன. அதுதான் கிடையாவிடத்தும் இவற்றை இன்று கடைப்பிடிப்பதால் ஓர் இடரும் வரப்போவதில்லை. சிங்களருந் தமிழரும் ஒற்றுமை யாக வாழவேண்டுமென்று இப்போது (இலங்கை சுயராச்சியம் பெற்ற பின்னர்) பிரசாரஞ் செய்பவர் களுக்குப் பதவி, பட்டம் போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனல் இருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் இந்த இலட்சியங்களைக் கடைப்பிடித்துப் பிரசாரஞ் செய்த தமிழருக்குக் கிடைத்த வெகுமதி கல்லெறியும் வசைமொழிகளுமே. அக்காலத்தில் எவ்வித பயனுங் கருதாது தமது உன்னத இலட்சி யத்தின் மாண்பினையே பெரிதென மதித்துத் திரு. பொன்னையா அவர்கள் எவர்க்குமஞ்சாது பணி யாற்றி வந்தார். தமது பொருளை, தமது அருமை யான நேரத்தை, தமது ஆர்வத்தை இவற்றிற்காக அர்ப்பணஞ் செய்தார்.'
திரு.நா.பொன்னையா அவர்கள் எத்தனையோ வகைகளில் நற்பணிகள் புரிந்துள்ளார். அவற்றில் தலைசிறந்த பணி ஈழகேசரிப் பத்திரிகைப் பணியே யாகும். எனவேதான் அவரை எல்லோரும் * ஈழகேசரி' பொன்னையா என அழைத்தார்கள். உண்மையில் அவருக்குப் பொருத்தமான பெயர்

மூன்றங் கண் 89
‘ஈழகேசரி பொன்னையா என்பதேயாகும். அவர் ஈழகேசரி என்ற தமிழ்ப் பத்திரிகையோடு நின்று விடாமற் சிறிதுகாலம் (7 வருடம்) கேசரி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் நடாத்தினர்.
தமிழர் தங்கள் அபிலாஷைகளைத் தமிழில் மாத்திரஞ் சொன்னுல் அது முற்ருகப் பயனளிக் காது. சிங்களர்க்கும் தமிழர்க்கும் பொதுவான ஆங்கிலத்திலே சொல்வதுதான் ஏற்றது என்பதை நோக்கமாகக் கொண்டு அவர் கேசரியைத் தொடங்கினர், அப்பத்திரிகைக்கு திரு. ஹண்டி பேரின்பநாயகம் அவர்களே ஆசிரியராக இருந் தார். இடதுசாரிக் கொள்கையிற் றிளைத்தவர்க ளாகிய நீர்வேலி திரு. எஸ்.கே. கந்தையா, பீ. ஏ. பிற்காலத்தில் உடுப்பிட்டிப் பாராளுமன்றப் பிரதி நிதியாக இருந்த திரு. பொன். கந்தையா, M. A., திரு. செ. துரைராசசிங்கம், கோப்பாய்ப் பிரதி நிதியாக இருந்த நியாயவாதி திரு. எம். பால சுந்தரம் என்போரது கட்டுரைகளைத் தாங்கி அது சிறந்தமுறையில் வெளிவந்தது. திரு, பால சுந்தரம் அவர்கள் " புன்னுலைக்கட்டுவன் பூதர் ’ என்ற பாத்திரத்தைப் படைத்து அதன்மூலம் அரசியற் பிரச்சினைகளை வறுத்தெடுத்தார் ’. கம்யூனிஸ் சித்தாந்தம் பற்றியும் அது இந்த நாட்டுக்கு உகந்ததா ? என்பதுபற்றியும் அவ் வறிஞர்கள் உபயோகமான சர்ச்சைகளை அப் பத்திரிகையில் நடாத்தினர்கள்.
கேசரி என்ற ஆங்கில வாரப்பத்திரிகை யைக் குறிப்பிட்டு, ஐக்கிய இயக்கத்தில் மிக

Page 58
90 ஈழம் தந்த கேசரி
ஈடுபாடு கொண்டவரும் வழக்கறிஞருமான திரு. அ. அருளம்பலம் அவர்கள் எழுதியிருப்பது இது :
‘ “ “ GBg5SFIT ? DIT Gof (The Ceylon Patriot)”, “ G35Fif?” ஆகிய ஆங்கில வெளியீடுகள் மூலம் திரு. நா. பொன்னையா அவர்கள் இலங்கையின் சுதந்திரத்துக் காக உழைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.”*
திரு. பொன்னையா அவர்களின் பிரிவுக்குப் பின் அவரது நினைவாகச் சன்மார்க்க சபை எடுக்கும் விழாக்கள் ஒவ்வொன்றிலும் பேசிய அறிஞர்கள் ஈழகேசரியை மீண்டுந் தொடங்கி நடாத்துதல் வேண்டும் என்று கூறுவது வழக்க மாகிவிட்டது. ஈழம், ஈழத்து நூல்கள், ஈழத்துப் பத்திரிகைகள், ஈழத்து எழுத்தாளர்கள் என்று எண்ணும் எண்ணம் விரிவடைந்துள்ளது. ஈழகேசரி மாதமொருமுறையாவது வெளிவரக் கூடாதா என்று அறிஞர்கள், இலக்கிய இரசி கர்கள் பலர் விரும்புகின்றனர்.

சன்மார்க்க சபை
* நின்னூராங் குரும்பசிட்டி வாழ்வோர் தம்மை நிலவொழுக்க சீலர்களாய்ச் சான்றே ராகப் பொன்னுருஞ் சன்மார்க்க சபையொன் முக்கிப்
புகழ்பெருக்கி வாழ்ந்தனையால் மேல்கீழ் நாட்டில் மன்னூரும் பெரியோராய் சான்றேர் கல்வி
மருவுபட்ட தாரிகளா யுள்ளோர் பல்லோர் அன்னுேராய் எண்ணறிவாற் சிறந்த தோன்றல்
அகன்றனையா ரினிமேற்போன் னைய வேளே.”
- கவிஞர் சி. இ. க.
ஈழகேசரி திரு. நா. பொன்னையா அவர் களின் பெருந்தொண்டுகளில் மூன்று தொண்டு கள் முக்கியமானவை. முதலாவது ஈழகேசரிப் பத்திரிகை; இரண்டாவது தொல்காப்பியப் பதிப்புப்

Page 59
92 ஈழம் தந்த கேசரி
போன்ற நல்ல தமிழ்நூல் வெளியீடுகள் ; மூன்ரு வது குரும்பசிட்டி சன்மார்க்க சபை.
தான் பிறந்த கிராமத்தை நேசித்துத் தொண்டு செய்யாது வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டுப் புகழ்பெற விரும்புவோர் ஒருசாரார். அவர்கள் தம் கிராமத்து மக்களிலும் பார்க்கத் தாம் ஒருவகையில் உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டு அவர்களோடு ஒட்டாமல், அவர்களது சாதாரண பிரச்சினைகளைக்கூடக் கவனியாமல் உலகப்பிரச்சினை, தேசப்பிரச்சினை எனச் சதா ஒடிக்கொண்டேயிருப்பர். இறுதியில் தேசமும் அவர்களைக் கைவிட்டு, ஊரிலுள்ள மக்களும் உதாசீனஞ் செய்ய அவர் இருந்த இடமுந் தெரியாது மறைந்தொழிவர்.
வேறுசிலர், ஆற்றல்மிகப் படைத்தோராய், தொண்டு செய்வதில் ஆர்வமுடையோராய் இருந்தும் தமது கடமைகளை, தொண்டை ஊரெல்லை வரைக்குமே சுருக்கிக்கொண்டு வாழ் தலினலே ' குடத்துள் விளக்கை ’ப் போல வாழ் கின்றனர். இவர்களின் சேவையை அடுத்த ஊரே அறியமாட்டாது.
இந்த இரண்டு நிலைகளும் இல்லாமல் தமிழுக்குப் பொதுவாகவும், ஈழத்துக்குச் சிறப் பாகவும் தாம் பிறந்த குரும்பசிட்டிக்கு மேன்மை யாகவும் தொண்டு செய்தமையினலே திரு. பொன்னையா அவர்கள் ஈழம் முழுவதும் பேசப் படுகிருர் , குரும்பசிட்டி சன்மார்க்க சபையால்

சன்மார்க்க சபை 93
போற்றப்படுகிருர் ; நினைவுநாள் வைத்து வாழ்த் தப்படுகிருர்,
** 1930ஆம் ஆண்டளவிலே பாரத நாட்டிலே மகாத்மா காந்தியடிகள் அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டு பகிஷ்காரம், சட்டமறுப்பு, சத்தியாக்கிரக இயக்கங்கள்மூலம் பாரதமக்களைச் சுதந்திர உணர்ச்சி யடையச் செய்தார். காந்திமகானது இலங்கை விஜயமும், அவர்களுடைய தொண்டர்களான நேருஜி, கமலாதேவி, சட்டோபாத்தியாய போன்ற அரசியல்மேதைகளின் இலங்கை வருகையும் இலங்கை மக்களிடையே அரசியற் சுதந்திர உணர்ச்சியை ஏற்படுத்தின. அதோடு வட-இலங்கையின் பேரறிஞர் களான திரு. எஸ். ஏச். பேரின்பநாயகம், திரு. ரி. சி. இராசரத்தினம் என்போர் தலைமையில் வாலிப மகாநாடு அரசியலிலே தீவிர பங்கெடுத்துத் தொண் டாற்றியது.
இதே காலத்தில் திருவண்ணுமலை ரமண மகரிஷி அவர்கள், புதுச்சேரியில் அரவிந்தயோகிகள், கவி அரசர் தாகூர் அவர்கள், இலங்கையில் யோக சுவாமிகள் அவர்கள் ஆகியோரின் ஞான ஒளியும் மக்களிடையே பரவியது. அன்றியும் சங்கான பூரீமத் நாகலிங்க அடிகள், பூரீமத் சங்கரசுப்பைய சச்சிதானந்த யோகிகள் ஆகியோரின் கதாப்பிரசங் கங்களும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் நவசக்திப்பத்திரிகையின் கருத்துமிக்க கட்டுரைகளும் மக்களின் உள்ளத்தைப் பண்படுத்தின. இங்ங்னமான சூழலிலே கல்லூரி மாணவர்கள் ஆத்மீகத்திலும் அரசியலிலும் உணர்வுமிக்கோராய் விளங்கினர்.'
சன்மார்க்க சபையின் முப்பதாவது ஆண்டு நிறைவுவிழா மலரில் சன்மார்க்க சபை தொடங் கிய காலகட்டம் - சூழல் பற்றி மேற்போந்த வாறு எழுதப்பட்டுள்ளது.

Page 60
94 ஈழம் தந்த கேசரி
திரு. நா. பொன்னையா அவர்கள் பிறந்து வளர்ந்த குரும்பசிட்டி, அவரது வளர்ச்சியைப் போலவே நாற்பது வருடத்துள் பலவகையிலும் முன்னேறத் துடித்துக்கொண்டிருந்தது. 1934ஆம் ஆண்டளவில், குரும்பசிட்டி மகாதேவ வித்தியா சாலை யாழ்ப்பாணத்திலே புகழ்பெற்ற சைவப் பாடசாலையாக எஸ். எஸ். எல். சி. வகுப்புவரை படிப்பிக்கும் இடமாகிவிட்டது. தமிழாசிரியர் பலர் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாய் வெளி வந்து பல இடங்களிலும் படிப்பித்துக்கொண் டிருந்தனர். தெல்லிப்பழை அமெரிக்கன்மிஷன் ஆங்கில பாடசாலை (இப்போதைய யூனியன் கல்லூரி), மஹாஜனக் கல்லூரி ஆகிய இவற்றில் ஆங்கிலம் படித்த பலர் அரசாங்க சேவையிற் சேர்ந்து உழைக்கத் தொடங்கிவிட்டனர். இலங்கையின் பல இடங்களுக்குஞ் சென்று பலர் வியாபாரநிலையங்களை ஆங்காங்கு அமைத்துக் கண்ணியமான வியாபாரிகளாய் மிளிர்ந்தனர். சுருட்டுத்தொழில் குரும்பசிட்டியில் வேரூன்றிய தொழிலாய் மாறி பலருக்கு வாழ்வளித்தது. மலையாளம் புகையிலை கணிசமான அளவுக்கு உயர்ந்து கமக்காரர் ' மூச்சுவிடக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டனர். அம்பாள் ஆலயமும் பிள்ளையார் கோவிலும் புதிதாகப் புனருத்தா ரணஞ் செய்யப்பட்டுக் கும்பாபிஷேகங்கள் நடந் தேறி விழாக்களும் பூசைகளும் ஒழுங்காக நடை பெறத் தொடங்கிவிட்டன. பொது இடங்களிலே * கொஞ்ச அரசியல் பேச்சும் அதிகமான திரு விழாப் பேச்சும் பேசப்பட்டன.

சன்மார்க்க சபை 95
ஊரிலே ஒரு துடிதுடிப்பு இருந்தது. மற்றக் கிராமங்களிலும் பார்க்க நாம் எல்லாவகையிலும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்தத் துடிப்பை, ஆர்வத்தை கைநாடி பிடித்து' அறிந்த திரு, பொன்னையா அவர்கள் தம் கிராமத்து சில இளைஞர்களினதும் வாலிபர்களி னதும் ஒத்துழைப்புடன் சன்மார்க்க சபையை 1934ஆம் ஆண்டு விஜயதசமித் தினத்தில் ஸ்தா பித்தார்.
** பூரீமத் சுவாமி விவேகானந்தர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததன் பேருக குரும்பசிட்டியிலும், முன்னேற்றமுள்ள வாலிபர் சிலரால் ஒரு வாலிபர் சங்கம் தொடங்கப்பட்டது. அது மயிலிட்டி தெற்கு இந்து வாலிபர் சங்கம் " என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று. சங்கங் களின் வரிசையில், 'மயிலிட்டி தெற்கு இந்துவாலிபர் சங்கம் முதன்மை பெற்றது. இச்சங்கம் 1920 ஆம் ஆண்டு வரையிலும் நிலைபெற்றது. சமயப் பணியி லேயே தொண்டாற்றியது. இச்சங்கத்தின் பின்னர்,
* சனுேபகார சபை " எனப் பல சங்கங்கள் அவ்வப் போது நடைபெறலாயின. சனுேபகாரசபை யே பவ ஆண்டு ஐப்பசித் திங்கள் விஜயதசமித் தினத் தன்று (17-10-34) மணிவாசக நூல்நிலைய மண்ட பத்தில் “ ஈழகேசரி திரு. பொன்னையா அவர்கள் தலைமையிலே சன்மார்க்க சபை என்னும் புதுப் பெய ரிடப்பட்டுத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றது." -சன்மார்க்க சபை 30 ஆண்டு நிறைவுமலர் காலவாய்ப்போடு திரு. பொன்னையா அவர் களின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து செய லாற்றக்கூடிய செயல்திறன்படைத்த வாலிபர் குழாம் சன்மார்க்க சபைக்குக் கிடைத்தமை

Page 61
96 ஈழம் தந்த கேசரி
பெரும் பேருகும். ஆசிரியர்களாகிய திருவாளர் கள் வ. இராமலிங்கம், கோ. நமசிவாயம். வ. பொன்னுக்குமாரு, க. நாகலிங்கம், சீ. தம்பிப் பிள்ளை, க. சுந்தரமூர்த்தி, தி. இராசிங்கர், சீ. கந்தையா, சி. கதிரவேலு என்போரும், சக்கிடுத்தார் S. R. முத்துக்குமாரு, திரு. கோ. அப்பாக்குட்டி முதலியோரும் பல துறைகளிலும் புகழ் பெற்றவர்கள். எழுத்தில், பேச்சில், நிர்வாகத் திறமையில், கூட்டங்களை அழகாக நடாத்தி முடிப்பதில், பணஞ் சேர்ப்பதில் அவர் கள் நிகரற்றவர்கள். எனவே சபைதொடங்கிய இரண்டொரு வருடங்களுக்கிடையே பொதுமக் களின் கவனத்தை ஈர்த்து அது வளரத் தொடங் கியது.
சன்மார்க்க சபை மணிவாசக நூல்நிலையம், வாசிகசாலை என்பவற்றையும் நடாத்தியது. ஈழகேசரிக்கு மாற்றுப் பத்திரிகைகளாக வந்த எல்லாப் பத்திரிகைகளையும் திரு. பொன்னையா அவர்கள் சன்மார்க்கசபை வாசிகசாலைக்குக் கொடுத்துதவினர்கள். அம்மட்டோடு நில்லாமல் மகாத்மா காந்தி தினம், நாவலர் குருபூசை, சமயகுரவர்கள் குருபூசைத் தினங்களை விமரிசை யாகக் கொண்டாட ஊக்குவித்தார்கள். அப்பர் புகழ்மாலை, திருவாசகம், (திருவெம்பாவை-திருப்பள்ளி யெழுச்சி) என்ற நூல்களைச் சன்மார்க்கசபை வெளி யீடாக இலவசமாக அச்சிட்டு வழங்கினர்கள்.
கிராமத்துக்கு வேண்டிய வைத்தியசாலை, தபாற்கந்தோர், பெரியதெருக்கள் என்பவற்

சன்மார்க்க சபை மண்டபம்
திரு. நா. பொன்னேயா ஞாபகார்த்த விழாப் பேச்சு - நாடகப் போட்டிகளில் அளிக்கப்பட்ட தங்க - வெள்ளிப் பதக்கங்கள்

Page 62

சன்மார்க்க சபை 97
றிலும், மலகூடம் அமைப்பித்தல், பொதுக்கிணறு தோண்டுதல், சிறிய ஒழுங்கைகளை அகல்வித்தல், புதிதாய் அமைத்தல், புயற் சேதத்திற்குப் பணங் கொடுத்தல் முதலியவற்றிலும் சன்மார்க்க சபை செய்ததொண்டு போற்றக்கூடியது. திரு பொன் னையா அவர்களின் தலைமை இவற்றில் உற்சாக மளிக்கக்கூடியதாயிருந்தது.
சன்மார்க்க சபை முதற் பன்னிரண்டு வருடத் திலும் (1946 வரை) வாடகைக் கட்டிடத்தில் (சிறிய கொட்டிலில்) இயங்கிக்கொண்டிருந்தது. சாதாரண பொதுக்கூட்டங்களையோ வருடா வருடம் நடாத்துஞ் சிறப்புக் கூட்டங்களையோ நடாத்த இடவசதி அற்றிருந்தது. இதை உணர்ந்த சபையார் ஊரின் மத்தியில் தெரு வோரமாக 3 பரப்புக் காணியை வாங்கினர் ; கட்டிடம் கட்டும் பொறுப்பைத் தலைவர்வசம் விட்டனர். தலைவர் திரு. நா. பொன்னையா அவர் கள் தமது பல பெரிய வேலைகளுக்கிடையில், அக்கால மதிப்பின்படி 18,000 ரூபா பெறுமதி கொள்ளக்கூடியதான அழகான மண்டபம் ஒன் றைத் தமது சொந்தச் செலவிலே கட்டிச் சபைக் குக் கையளித்தார். சபைக்கு-தம் ஊருக்குதிரு. பொன்னையா அவர்கள் செய்த இந்த அரும்பணி வாயார வாழ்த்தி மெச்சக்கூடியதென் பதில் ஐயமில்லை.
சன்மார்க்க சபை தனது 1946 ஆம் ஆண்டுத் தொகுப்பறிக்கையில்,
** நிருவாகசபையின் வேண்டுகோட் கிணங்கி, சங்கத்தலைவர் தமது சொந்தச் செலவிற் கட்டிடத் தைப் பூர்த்தியாக்கும் பொறுப்பை ஏற்று இவ்
7

Page 63
98 ஈழம் தந்த கேசரி
வாண்டிலேயே அதனைப் பூர்த்தி செய்தமை மிகவும் போற்றக்கூடிய அரியபணியாகும். இவ்வரும்பணியை முற்றுவித்த் தலைவருக்கு நிருவாகசபையினரின் நன்றி யறிதல் என்றும் உரியதாகுக. ’’
எனக் குறிப்பிட்டுள்ளது.
திரு. பொன்னையா அவர்கள் அழகிய கட்டிடத் தைக் கட்டியதோடல்லாமல் திறப்புவிழாவையும் விமரிசையாக நடாத்தினர். வியவருடம் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி (12-10-46) சனிக்கிழமை அக்கால அரசாங்கசபைத் தலைவர் சேர் வை. துரைசாமி அவர்களைக்கொண்டு திறப் பித்தார். அதுமாத்திரமல்ல, அரசியலில் மாறு பட்ட கொள்கையுடையவராயிருந்தும், நமது கிராமத்திற் பிறந்து வளர்ந்து நியாயதுரந்தர ராகத் தொழில் புரியும் நோக்கமாக யாழ்ப் பாணத்தில் வசித்து வந்தவரும் யாழ்ப்பாணம் நகரசபைத் தலைவராயமர்ந்து, இன்று அழகுதரும் மாநகரசபைக் கட்டிடத்தைக் கட்டுவித்தவரு மாகிய திரு. ஆர். ஆர். நல்லையா, J. P., U. P. M., M. B B, அவர்களைத் தலைமைதாங்கச் செய்து அன்னரையுங் கெளரவித்துத் தாமும் பெருமை தேடிக்கொண்டார். அக்கால அரசாங்கசபை அங்கத்தவர் திரு. சு. நடேசபிள்ளை, திரு. எஸ். ஏச். பேரின்பநாயகம், திரு. எஸ். ஆர். கனக நாயகம், திரு. எம். பாலசுந்தரம் என்போரை விரிவுரை நிகழ்த்தச் செய்தார்.
சன்மார்க்கசபை கிராமசேவை, சமயம்,கலை, இலக்கியம் ஆகிய நான்கு கால்களில் உன்னத மாக நின்று திரு. பொன்னையா அவர்கள் தலைமை யில் தொண்டாற்றி முதல் எட்டு வருடங்களி

சன்மார்க்க சபை 99
லும், தென்னிலங்கை மக்கள் மலேரியா நோயால் வருந்தியபோது பணமனுப்பியும், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரப்பிள்ளை குடும்ப நிதிக் குப் பணமுதவியும், காங்கேசன்துறைத் துறை முகத்தை அபிவிருத்தி செய்தல், மயிலிட்டிக்கு வைத்தியவசதி செய்தல், மயிலிட்டி தெற்குக்குக் கிராமவிதானையை நியமித்தல் ஆகியவற்றில் அரசினரோடு போராடியும், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பிரவேச பண்டித வகுப்பு, விவேகானந்தசபை சமயபாட வகுப்பு, ஆங்கில வகுப்பு ஆகிய வகுப்புக்களை நடாத்தி யும், ஆலயங்களில் தாசியர் நடன ஒழிப்பு, மிருக பலி ஒழிப்பு ஆகியவற்றில் முயற்சித்து வெற்றி கண்டும் முன்னேற்றப் பாதையிற் சென்றுகொண் டிருந்தது.
சன்மார்க்க சபை ஒரு ஐக்கிய நாணய சங்கத்தை நிறுவியும், யுத்தகாலத்தில் பொது மக்களின் தேவைக்காகப் பண்டசாலை அமைக்க உதவிபுரிந்தும் அருந்தொண்டாற்றியது. அந்த ಫ್ಲಿ: அமைப்புக்களிலும் தலைவராக திரு. பான்னையா அவர்களே இருந்தார்கள். இதற் கிடையில் சன்மார்க்க சபையின் ஆரம்ப கர்த் தாக்களிற் சிலர் (திரு. வ. பொன்னுக்குமாரு திரு. க. சுந்தரமூர்த்தி, திரு. தி. இராசிங்கர், திரு. சீ. கந்தையா என்போர்) இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். சிலர் வெவ்வேறு ஊர் களிற் கடமைபுரியப் போய்விட்டார்கள்.
1948ஆம் ஆண்டளவில் அரசாங்கம் கிராமங்கள் தோறும் சனசமூகநிலையம், கிராம

Page 64
100 ஈழம் தந்த கேசரி
முன்னேற்றச் சங்கம் என்ற அமைப்புக்களைத் தொடங்கியபோது சன்மார்க்க சபை அரசாங் கத்தின் ஊதுகுழலாக இருக்கமுடியாதென திரு. பொன்னையா அவர்கள் மறுத்துவிட்டார் கள். எனினும் உபசங்கங்களாக சன்மார்க்கசபை யின் தலைமையில் அவை இயங்க ஒருப்பட்டார் கள். இக்காலகட்டத்தில் சன்மார்க்க சபையில் உற்சாகமுள்ள வேறு பலர் தொண்டாற்றத் தொடங்கினர்கள். ஆசிரியர்கள் : பண்டிதர் வ. நடராஜன், கனக. செந்திநாதன், த. இராச ரத்தினம், நா. சிவசாமி, மா. சின்னப்பு என் போரும், திரு. பூ. சு. நடராசா, திரு. க. செல்லத் துரை என்போரும் பணிபுரிந்தார்கள்.
திரு. பொன்னையா அவர்கள் தாம் இறக்கும் வரை சன்மார்க்க சபையை சமயம், ஒழுக்கம், நீதி, கலை, கல்வி, கமத்தொழில், கைத்தொழில், சுகாதாரம், விளையாட்டு, கிராமப்பாதுகாப்பு, கிராம அபிவிருத்தி, விளம்பரம் ஆகிய உப சங்கங்களாக வகுத்து ஒவ்வொரு உபசபையும் தத்தம் பகுதி வேலைகளைக் கவனித்துச் செயற்பட வழிவகுத்தார்.
புதிய உற்சாகத்தோடு சபை வேலைசெய்தது. கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் ஆகிய மூன்று ஊர்களையும் ஊடறுக்கும் 23 மைலுள்ள கிராமசங்க (12 அடி) ஒழுங்கையை 21 அடிக்கும் மேலாக அகல்வித்து, கதியால் நட்டு, வேலி அடைத்து, கல் பரவி, D. R. 0. தெருவாக்க உப சபையார் செய்த பெருமுயற்சியை, சுகவீன முற்றிருந்த திரு. பொன்னையா அவர்கள், கண் குளிரக் கண்டு வாழ்த்தினர்கள். தம் கீழ் தொண்டு பழகிய வாலிபர்கள் இந்த ஊரை

சன்மார்க்க சபை 01
நிச்சயம் முன்னேற்றப்பாதையிற் கொண்டு செல் வார்கள் என அகமகிழ்ந்தார்கள். சபையைச் சேர்ந்த பண்டிதர் வ. நடராஜன், கனக. செந்தி நாதன் இலக்கிய மஞ்சரி (4ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு) நூல்களை எழுதிச் சபையின் பேரால் வெளியிட்டார்கள். பன்னவேலையும் தேவார வகுப்பும் ஊர்க்காவலும் ஒழுங்கான வாசிகசாலையும் நடைபெற உபசபையார் உதவி ஞர்கள்.
சன்மார்க்க சபையின் தலைவராக திரு. பொன்னையா அவர்கள் 16 வருடங்களாக அமர்ந்து குரும்பசிட்டிக்குச் செய்த தொண்டுகள் அளப்பில. அவர் செய்த தொண்டு ஒருபுற மிருக்க, தொண்டு செய்யக்கூடிய பலரை அவர் பழக்கி எடுத்துத் தமது ஊருக்கு அளித்த பெருமை பெரியது.
* பவளமல்லிகைப்பூ மலர்கின்றபோது தோட் டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் மலர்ந்து பிரகாசிக்கின்ற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகின்றவர்களைச் சுற்றி ஒருவகை ஞான மணமோ எனத் தக்க புனிதமான சூழ்நிலை நிலவும். இதுபோலுள்ள ஞான மணந்தான் திரு. பொன்னையா அவர்களைச் சுற்றி எழுந்தது. அந்த மணம் இன்றும் உங்கள் கிராமம் முழுவதும் பரந்து நிலவுகிறது. அவரின் நினைவும், அவரின் தலைமையில் நீங்கள் பெற்ற அனுபவமும், பழகிய பண்பும் உங்களை விட்டு இன்னும் விலகவில்லை. ’’
என மாவட்ட நீதிபதி திரு. செ. தனபாலசிங்கம் அவர்கள் தமது தலைமைப் பேருரையிற் குறிப் பிட்டமை மிகச் சரியானது.

Page 65
என் கடன் பணிசெய்து கிடப்பதே
* மன்னு யிர்க்கிதஞ் செய்தலே யறமென்
றதுவ ளர்த்தனள் அம்பிகை என்றும்
முன்னி யற்றுபுண் ணியந்தரு வெறுக்கை
முறையி னிதலே முழுப்பயன் என்றும்
இன்ன தேர்ந்துசெய் முதுக்குறைச் செல்வ !
* என்க டன்பணி என்பதே பிடித்தோய்
அன்ன பொன்னைய! அரசினர் ஜேப்பி
யாக்கி யேயுனை அடைந்தனர் புகழே.'
--முகாந்திரம் பிரமற தி, சதாசிவஐயர்
** பூரீமான் நா. பொன்னையா அவர்கள் கல்வித் துறையில் மாத்திரமல்ல, கிராமாபிவிருத்தி, சமூக சேவை, ஐக்கிய இயக்கம் ஆகிய பல துறைகளிலுந் தொண்டாற்றினர். பொதுவாகக் கூறின் அவர் தொடர்பு வைத்திராத சங்கங்கள், சபைகள், பொது ஸ்தாபனங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையென்றே கூறலாம் .

என் கடன் பணிசெய்து கிடப்பதே 103
அவர் கிராமசங்கமூலம் கிராமமக்களுக்கு அருந் தொண்டுகள் செய்யலாம் என்பதை நன்குணர்ந்தார். மயிலிட்டிக் கோவிற்பற்றில் தம் கிராமத்தில் உள்ள ஸ்தானத்திற்குத் தமது நெருங்கிய உறவினர் ஒருவரோடு போட்டியிட்டு அங்கத்தவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். பின்னர் கிராம சங்கத் தலைவர் தேர்தலிலும் போட்டிபோட முன்வந்தார். ஆங்கில அறிவு படைத்தவர்கள்தான் இப்பதவிக்குத் தகுந் தவர் என்ற அடிமை உணர்ச்சியில் மக்கள் ஊறி யிருந்தமையால் இம்முயிற்சியில் தோல்வியுற்றர். பொறுமையோடு இருந்து மறுபடியும் போட்டியிட் டார். அதில் வெற்றியும் கண்டார். ஆங்கில அறிவு படைத்தவர்கள்தான் இவ்வித பதவிகளுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்ற மனப்பான்மையை மாற்றிக் கிராமமக்களுக்கு அவர்கள் மொழிமூலம் தாராள மாகப் பணியாற்ற முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினர். ஆறு வருடங்கள் வரை தலைவர் பதவியை வகித்தாரேனும் அதற்கு முக்திய இருபது வருடங் களிற் சாதித்தறியாத பல காரியங்களைச் சாதித்தார்.”
மயிலிட்டி தெற்கு - கட்டுவன் கிராமத்தின் பிரபல சமூகத் தொண்டரும், அவ்வூரைப் பல வழிகளிலும் மேம்படச் செய்தவருமாகிய திரு. க. பொன்னம்பலம் அவர்கள், திரு. நா. பொன்னையா அவர்களது நெடுநாளைய நண்பர்; பலகாலமாக மயிலிட்டிக் கிராம சங்கத்தில் அங்கத்தவராய் இருந்தவர்; ஊர்ப் பொதுநலப் பணிகளில் திரு. பொன்னையா அவர்களோடு மாறுபட்டுங் கருமமாற்றியவர். அப்படிப் பட்டவர் திரு. பொன்னையா அவர்களது கிராம சங்கப் பணிபற்றி எழுதியதே மேலே காட்டி யிருக்குங் குறிப்பாகும்.
திரு. க பொன்னம்பலம் அவர்கள் குறிப்பிட் டிருப்பது முழுவதும் உண்மை. அவர் கிராம

Page 66
104 ஈழம் தந்த கேசரி
சங்கத்தின் தலைவராய் இருந்து செய்ததொண்டில் முக்கியமானது "ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசினர் உதவியுடன் பல பொதுக் கிணறுகளைத் தோண்டுவித்துக் கொடுத்தமையாகும்.'
வாலிப மகாநாட்டின் ஆரம்பகாலந் தொடக்கம் சம ஆசனம், சம போசனம் முதலிய வற்றை ஆதரித்துக் கிளர்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் திரு. பொன்னையா அவர்கள். சிலர் உதட்டளவிற் பேசிவிட்டுக் காரியமாற்றும் போது மழுப்பிவிடுவர். திரு. நா. பொன்னையா அவர்கள் வீட்டிலுஞ்சரி பொதுவாழ்க்கையிலுஞ் சரி தாழ்த்தப்பட்டோர் - உயர்சாதி மக்கள் என்று பேதம் பாராட்டியது கிடையாது. அப்படி வாய்தவறிச் சொல்பவர்களைக்கூடக் கடுமை யாகக் கண்டிப்பார். இந்தக் காலத்திலே சிலர் தமது உயர்வுக்காக இந்தப்பிரச்சினைகளைப்பற்றிப் பேசுகிருர்கள். 1930ஆம்ஆண்டளவில் சமாசனம், சமபோசனம், தாழ்த்தப்பட்டோர் உரிமை என்று பேசுபவர்கள் கல்லெறி வாங்கித்தான் தீர்வார்கள்.
திரு. பொன்னையா அவர்களது தூய்மையான எண்ணம்பற்றி-ஒதுக்கப்பட்டவர்களிடம் அவர் கொண்டிருந்த அபிமானம்பற்றி -- அல்வாயூர், கவிஞர் மு. செல்லையா அவர்கள் எழுதியிருப்பது இது :
** அந்தக் காலத்திலே தீண்டாமை என்கிற சாதிபேதக் கொடூரம் கடுமையாகக் காணப் பட்டது. அதன் கோர நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தால் அதற்கு இணையாக மணிவாசகப்

என் கடன் பணிசெய்து கிடப்பதே 105
பெருமான் சமயநிகழ்ச்சிபற்றிப் போற்றித் திரு வகவலிற் கூறியருளிய ' மிண்டிய மாயா வாத மென்னுஞ், சண்ட மாருதஞ் சுழித்தடித் தார்த்து, உலகா யதமெனும் ஒண்திறற் பாம்பின், காலபே தத்த கடுவிட மெய்தி ' என்னுஞ் செய்யுட் பகுதிகள் ஞாபகத்திற்குரியனவாகும். மிண்டிய தீண்டாமை யென்னும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்துக் கொண்டிருந்தபோது சாதிச் சழக்கர்களுக்குச் சற்றும் அஞ்சாமலும், பழைமைப் பித்தர்களுக்குப் பயப் Il-stLD3)|th... . . . . . . பாடுபட்டவர் ஈழகேசரி அதிபர் ஆவர்.'
நல்லூர்க் கந்தசுவாமி கோவில், வண்ணைச் சிவன்கோவில் முதலிய பிரபல ஆலயங்கள் ஹரிசனமக்களுக்குத் திறந்துவிடப்பட்டபோது, சிலர் ஏதோ தங்கள் முயிற்சியினலேதான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என ஆரவாரித் தனர். அப்போதைய செனெற்றராயிருந்த திரு. பொ. நாகலிங்கம் அவர்கள் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்களை வரிசை செய்து எழுதிய அருமையான கட்டுரை ஒன்றிலே திரு. நா. பொன்னையா அவர்களது பணியை நன்முக எடுத்துக்காட்டியுள்ளார்.
திரு. பொன்னையா அவர்களின் இதயத்திலே ஆட்கொண்டிருந்த இந்த மனிதாபிமானம், அவர் மயிலிட்டிக் கிராமசங்கத் தலைவராய் வந்த போது செயல்படத் தொடங்கியது. தன் அதிகாரத்துட்பட்ட செயல்களிலே அவர் இறங்கி வேலைசெய்தார். ஒதுக்கப்பட்ட மக்கள் குடி தண்ணிர் அள்ளமுடியாது படும் அவஸ்தையை நீக்க, அவ்வக் கிராமங்களில் வசித்த நன்மனது

Page 67
106 ஈழம் தந்த கேசரி
படைத்தோரின் உதவியை நாடி, காணியை நன் கொடையர்கக் கிராமசங்கத்துக்கு எழுதுவித்து, பொதுக் கிணறுகளைத் தோண்டுவித்தார். மயிலிட்டிப் பகுதிதான் யாழ்ப்பாணத்திலே ஆழ முடைய கிணறுகளைக்கொண்ட பகுதி. ஒரு கிணறு தோண்ட 2500 ரூபா வரை செலவேற் படும். ஏழை மக்களால் இப் பெரும் பணச் செலவைத் தாங்கமுடியாது. எனவே கிராம சங்க மூலம் அதைச் செய்து முடித்து திரு. பொன்னையா அவர்கள் ஒதுக்கப்பட்ட மக்களின் அன்புக்குப் பாத்திரமானர். அவர் வெட்டுவித்த பல கிணறுகளில் ஒன்று அவர் பிறந்த ஊராகிய குரும்பசிட்டியில் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட மக்களுக்குச் சொந்தமான ஒரு சிறிய கோவி லுக்குப் பக்கத்திலே கோவிற் தேவைக்காகவும் மக்களின் தேவைக்காகவும் வெட்டப்பட்ட அந்தக் கிணற்றிலே தண்ணிர் அள்ளிக் குடிக்கும் ஒவ்வொருவரும் திரு பொன்னையா அவர்களை வாழ்த்திக்கொண்டே யிருக்கின்றர்கள். அவர் கிராம சங்கத்திலே 1935ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்கள் தொடர்பாக அங்கத்தவராகவும் பின் ஆறு வருடங்கள் தலைவராகவும் இருந்துள் ளார். இக்காலங்க்ளில் அவர் ஒதுக்கப்பட்ட மக்களின் பொதுவிஷயங்களில் அக்கறை காட்டி ஞர். முக்கியமாக, தான் அங்கத்தவராக இருந்த குரும்பசிட்டி 5ஆம்வட்டார ஹரிஜனங்களை அவர் எப்போதும் மறந்ததேயில்லை.
திரு. பொன்னையா அவர்களது அடுத்த பெரு முயற்சி மயிலிட்டிப் பகுதிக்கு ஒரு வைத்திய

என் கடன் பணிசெய்து கிடப்பதே 1 O7
சாலை அமைக்கவேண்டும் என்பதாகும். ஏழை மக்க்ள் பணம் செலவழித்துத் தூர இடங்களுக்குப் போய் வைத்தியஞ் செய்வித்துக்கொள்ளுங் கஷ்ட மான நிலையைப் போக்க அவர் 1934ஆம் ஆண்டிலே-தாம் சன்மார்க்க சபைத் தலைவராய் இருந்த காலத்திலேயே - உழைக்கத் தொடங்கி ஞர். 1936ஆம் ஆண்டில் குரும்பசிட்டியின் வடக்குப்பகுதிப் பெருந்தெருவில் மருந்துச்சாலை (டிஸ்பென்சரி)அமைத்துத்தரும்படி அவர் அரசாங் கத்துடன் வாதாடினர். 1939இல் கிழமைக்கு இரண்டு நாள் உபயோகத்தில் இருக்கும் all JLDC55gld Fita) (Visiting Dispensary)60) L பெருமுயற்சியின் பேரில் நிறுவினர். வைத்திய சாலை நிறுவும் விடயத்திலும், கிராமசங்கத் தலைவ ராவதற்கு எடுத்த முயற்சியிலும் வயாவிளான், திரு. கே. வி. சுப்பிரமணியம் அவர்கள் (கல்லடி வேலுப்பிள்ளை அவர்களின் மகன்) திரு. நா பொன்னையா அவர்களுக்கு உறுதுணையாய் இருந்தமை என்றென்றும் போற்றக்கூடியது.
1949ஆம் ஆண்டில் அவர் மயிலிட்டிக் கிராமசங்கத் தலைவராய் இருந்த சமயத்தில் பிரசவ வசதியோடு கூடிய வைத்தியசாலை ஒன்றைக் கட்ட முயற்சித்தார். அதற்காக அவர் கட்டுவன்-வயாவிளான் பகிரங்க வீதியில் சிறு சிறு துண்டுக்காணிகளாக இருந்த பத்துப் பரப்புக் காணியை, பொதுமக்களிடஞ் சென்று விடயத்தை நன்கு விளக்கி ஈன்கொடையாகப் பெற்றுக் கிராமசங்கத்துக்கு எழுதுவித்துக் கொடுத்தார். இதற்காக அவர் பட்ட சிரமம்

Page 68
108 ஈழம் தந்த கேசரி
கொஞ்சநஞ்ச மன்று. காணியைப் பெற்றுக் கொடுத்த திரு. பொன்னையா அவர்கள் குரும்ப சிட்டி பிரபலவர்த்தகர் திரு. பூ. சுப்பிரமணியம் அவர்களைக்கொண்டு அந்தக் காணிக்குள் கிணறு ஒன்றையும் வெட்டுவித்துக் கொடுத்தார்.
அதன்பின் அவர் எடுத்த முயற்சிபற்றி சன்மார்க்க சபையின் முப்பதாவது ஆண்டு நிறைவு மலரில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:
* சன்மார்க்க சபைத் தலைவர் “ ஈழகேசரி’ திரு. நா. பொன்னையா அவர்கள் கிராம சங்கத் தலைவ ராக இருந்த காலத்தில், கிராமசங்கமூலம் சிசு-மாதா பராபரிப்பு நிலையத்துக்குரிய கட்டிடம் அமைக்க அரசாங்க நன்கொடைப்பணம் ரூபா 7000 பெற்றுக் கட்டிடமும் அமைக்கப்பட்டது. அன்னராலேயே 2 - 1 - 50இல் அத்திவாரக்கல் நாட்டப்பட்டது. 1950ஆம் ஆண்டு மத்தியில் அப்போதைய சுகாதார உள்ளூர் ஆட்சிமன்ற அமைச்சர் கெளரவ S. W. R. D. பண்டாரநாயக்கா அவர்களால் இந் நிலையந் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொடக்கம் அது சிசுமாதா பராபரிப்பு நிலையமாக விளங்கி வருகின்றது. *
திரு. பொன்னையா அவர்கள் மறைவுக்குப் பின் பலர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் 13,000 ரூபாவை அரசாங்கம் நன்கொடையாக அந்நிலையத்துக்கு உதவியது. அந்நிலையம் வளர்ச்சி யுற்று 19-3-63 தொடக்கம் மத்திய வைத்திய சாலை, சிசு - மாதா பராபரிப்பு நிலையம் ஆகிய இரண்டு வகையான சேவையையுஞ் செய்கிறது. பொதுமக்கள் இதனுற் பெரும்பயன் எய்து கிருர்கள்.

என் கடன் பணிசெய்து கிடப்பதே 109
திரு. பொன்னையா அவர்கள் கிராமசங்க அங்கத்தவராய் இருந்த காலத்தில் தமது வட் டாரத்தில் கமச் செய்கை செய்யும் நிலங்களுக் கூடாக ஒரு மைலுக்குப் புதிய ஒழுங்கை ஒன்றைப் பொதுமக்களிடம் இருந்து நிலத்தை இலவசமாகப் பெற்றுத் திறந்தார்கள். கமக்காரர் களுக்கு இது மிகப் பயனளித்தது. தலைவராய்ச் சேவைசெய்த காலத்திலே எல்லாக் கிராமங் களுக்குஞ் சீரான ஒழுங்கைகள், வெள்ள வாய்க் கால்கள், மதகுகள் என்பவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, ஒவ்வொரு வேலையையுந் தாமே சென்று பார்வையிட்டுச் சுறுசுறுப்பாகப் பணி யாற்றினர்கள்.
கட்டுவன்-குரும்பசிட்டி-வயாவிளான் ஆகிய மூன்று ஊரையும் இணைக்கும் 23 மைல் நீளமான ஒழுங்கையை 8 அடி 12 அடியிலிருந்து இருபத்துநாலு அடிவரை அகல்வித்து நல்ல போக்குவரவு வசதி யுடையதாக-பெருந் தெரு வாக-ஆக்க்வேண்டும் என்பது அவரது அவா. மயிலிட்டிக் கிராமசங்கத்தினுல் இதற்கு உதவ முடியாது. "மக்கிறேட்டு அல்லது மண்பாதையா யிருக்கும் இந்த ஒழுங்கை நல்ல தெருவானுல்தான் குரும்பசிட்டிக்கு, தபாற்கந்தோர், மின்சார வசதி, பஸ்சேவை முதலியவற்றைப் பெறமுடியும் என்ற உண்மையை அவர் உணர்ந்தார். சிரம தான இயக்கமென்று இப்போது அரசாங்கம் பெருமளவிற் பிரசாரஞ் செய்கிறதே. அதைத் திரு. பொன்னையா அவர்கள் 1947ஆம் ஆண்டே தொடங்கிவிட்டார். தம் கீழ் சன்மார்க்க சபை

Page 69
1 1 0 ஈழம் தந்த கேசரி
கிராமமுன்னேற்றச் சங்கம் என்ற அமைப்புக்களில் வேலைசெய்யும் உற்சாகம் மிக்க தொண்டர்களை அவர் இப்பணியில் ஈடுபடுத்தினர். பல இலட் சங்கள் பெறக்கூடிய காணிகளை இணுமாகப் பொது மக்களிடம் இருந்து பெறுவதில் இருந்த கஷ்டங் களையெல்லாம் திரு. பொன்னையா அவர்கள் வெற்றிகரமாகச் சமாளித்தார். ஒழுங்கை பெருப் பித்துத் தார் போட்டுத் தெருவாக்கும் முயற்சி யின் முதற்படியை ஆரம்பித்த திரு. பொன்னையா அவர்கள் சுகவீனமாகப் படுத்தபடுக்கையானர். என்ருலும் தம் கீழ் சேவை மனப்பான்மையைப் பழகிக்கொண்ட இளம் ஆசிரியர்களை - தொண் டர்களை-உற்சாகப்படுத்தி 'இந்த வேலையைச் சரியாக நிறைவேற்றிக் காட்டுங்கள்; அப்போது தான் என்மனம் மகிழும் ‘’ என்று மனம் திறந்து
கூறினர்.
அவர் ஆரம்பித்து வைத்த இந்த ஈடு இணை யற்ற பெருமுயற்சி - பின்னதாக, காணிகளை இலவசமாக வாங்கி, வேலிகளை அகற்றி, புது வேலிகள் அமைத்துக்கொடுத்து அரசாங்கத்தின் கண்ணைத் திறப்பித்து, வீதியாகப் பதிவித்து, கல் பரவி, தார்போட்டு முடித்த அசுர முயற்சி யாகி-1958இல் நிறைவெய்தியது. அப்போது அவர் உயிருடன் இல்லை. எனினும் அவரது ஆன்மா நிச்சயம் சபையின் முயற்சியை வாழ்த்தி யிருக்கும்.
திரு. பொன்னையா அவர்களது பெருஞ் சேவையை மறவாத மயிலிட்டிக் கிராமசங்கத்

சிசு - மாதா பராமரிப்பு நிலையத் திறப்புவிழா
கெளரவ S. W. R. D. பண்டாரநாயக்கா அவர்களே திரு. நா. பொன்னேயா அவர்கள் வரவேற்கிறர்

Page 70
சுதந்திர ஈழத்தின் முதற் பிரதமராகிய கெளரவ டி. எஸ். செனநாயகா அவர்களை திரு. நா. பொன்னையா அவர்கள் மயிலிட்டிக் கோவிற்பற்று வாசிகள் சார்பாக வரவேற்கும் காட்சி
 

என் கடன் பணிசெய்து கிடப்பதே 111
தினர் அத்தெருவுக்கு “ ஈழகேசரிப் பொன்னையா வீதி' எனவே பெயர் சூட்டினர். நன்றி மறவாத செயல் இது.
திரு. பொன்னையா அவர்கள் பொதுச் சுடலைகள், அவற்றின் திருத்தம், எல்லைகள் இவற்றிலுங் கவனம் செலுத்தியுள்ளார். சுதந்திர இலங்கையின் முதற் பிரதமர் கெளரவ டி. எஸ். சேனநாயகா அவர்கள் மயிலிட்டிப் பகுதிக்கு விஜயஞ் செய்தபோது வயாவிளான் மத்திய கல்லூரியில் அவரை வரவேற்றுக் கமக்காரர்களின் தோட்டங்களை நீர்பாய்ச்சக்கூடிய விதமாக மின்சார விநியோகத்தை மயிலிட்டிப் பகுதி முழுவதற்கும் தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அவர் தமது கிராமத்துக்கும், மயிலிட்டிக் கோவிற்பற்றுக்கும் மாத்திரம் சேவை செய்த தோடு நின்றுவிடவில்லை, மலையாளம் புகையிலை உற்பத்தியாளரைச் சுரண்டிக் கொழுத்த தனிப் பட்ட வியாபாரிகளிடம் இருந்து அவர்களைக் காப்பாற்றித் தகுந்த இலாபத்தை வருடாவருடம் கொடுத்த யாழ்ப்பாணம்-மலையாளப் புகையிலை ஐக்கியவியாபாரச் சங்கத்தில் ஈடுபட்டுப் பெருந் தொண்டாற்றினர். கமக்காரர்களுக்கு அச் சங் கத்தினுல் ஏற்படக்கூடிய நன்மைகளைக் கிராமம் கிராமமாகப் பிரசாரஞ்செய்தார். பல பாடசாலை களை நிறுவி, அனதைகளை வளர்த்து, சைவாசிரிய கலாசாலையை நிறுவி, தமிழுக்கும் சைவத்துக்கும் ஈடு இணையற்ற தொண்டு செய்த சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் (இந்துபோட்) டைரக்ரர்

Page 71
I 12 ஈழம் தந்த கேசரி
களில் ஒருவராக விருந்தார். மனேஜர் ’ இராசரத்தினம் அவர்களுக்குப் பக்கபலமாக விளங்கினர். குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி ஐக்கியநாணயசங்கம், குரும்பசிட்டி ஐக்கியபண்டசாலைச் சங்கம் இவற்றின் தலைவராக விளங்கினர். தெல்லிப்பழை பண்டசாலைச் சமா சத்தின் நிர்வாகசபையில் இருந்து உழைத்தார். பத்திரிகையாளர் பொதுமக்களோடு உறவாடு வதும் பின்னிப் பிணை’ வதும் கூடாது என்ற ஒரு மனுேபாவத்தை உடைத்து மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்பதை நிலைநாட்டியவர் திரு. பொன்னையா அவர்கள்.
திரு. பொன்னையா அவர்கள் மயிலிட்டிக் கிராம சங்கத் தலைவராய் இருந்தபோது அர சாங்கம் அவருக்கு ஜே. பி. (சமாதான நீத வான்) பட்டத்தை அளித்து அவரைக் கெளர வித்தது. பட்டம் பதவி இவற்றைத் துச்சமாக மதிப்பவர் திரு. பொன்னையா அவர்கள். அவர் அந்தப் பட்டத்தைப்பெற யாதொரு முயற்சியும் எடுக்கவில்லை. சமாதான நீதவான் பட்டம் அவரைத் தேடிவந்தது. அந்தப்பட்டமே அவராற் சிறப்படைந்தது. அவர் அப்பட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாமா ? எனத் தயங்கிய வேளையில் பொதுமக்களும், பல நண்பர்களுஞ் சுதந்தர இலங்கையிற் பட்டம் பெறுவது அவ்வளவு கெளரவக் குறைவன்று எனக் கூறி வற்புறுத்தி ஞர்கள். திரு. பொன்னையா அவர்கள் பட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
அவர் சமாதான நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டிருப்பதையிட்டு அன்னுருக்கு

என் கடன் பணிசெய்து கிடப்பதே 113
மயிலிட்டிக் கோவிற்பற்று வாசிகளால் ஒரு பகிரங்க வரவேற்புபசரணை 20-8-50ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை, பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வித்துவசிரோமணி பிரம்மபூரீசி.கணேசையர் அவர்கள் பொருள்பொதிந்த கவிதைகளால் வாழ்த்தினர்கள்; பல சங்கங்கள் உபசாரப் பத்திரங்கள் அளித்தன.
நியாயதுரந்தரர் திரு. வ. இராசநாயகம் அவர்கள் வரவேற்புரை கூற, பலாலி அரசினர் ஆசிரியகலாசாலை அதிபர் திரு. பி. சவரிமுத்து, நியாயதுரந்தரர்கள் திருவாளர்கள் ரி. சி. இராச ரத்தினம், பி. நாகலிங்கம், சைவவித்தியா விருத்திச் சங்கக் காரியதரிசி திரு. எஸ். இராச ரத்தினம், கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் திரு. எஸ். ஏச். பேரின்பநாயகம், வலி-வடக்கு வைத்தியாதிகாரி கே. நாகலிங்கம் என்போர் திரு. பொன்னையா அவர்களது குணதிசயங் களைப்பற்றிப் புகழ்ந்து பேசினர். கட்டுவன் திரு. க. பொன்னம்பலம் அவர்கள் உபசரணைச் சபையார் சார்பில் நன்றி கூறினர்.
திரு. நா. பொன்னையா போன்றேர் பட்டம் பதவிகளை நோக்கித் தொண்டு செய்பவர்க ளல்லர். ' என்கடன் பணிசெய்து கிடப்பதே ‘ என்பது அவரின் மூச்சு. அந்த மூச்சு-எண்ணம்அவரின் இறுதி மூச்சுவரை நிலைத்து நின்று அவருக்கு மங்காப் புகழை அளித்தது.
8

Page 72
ல்ல கமக்காரன் b
* உலகிரண்டாம் போர்க்காலைப் பன்னி ரேக்கர் ஊருவயா விளானினிலம் வாங்கி யுண்டிப் பலபொருளும் பொறிகளினுற் புதிய பண்பின்
பாட்டாளி மக்களுக்குக் காட்டு மேரோய் அலகில்கலை பொலியநடு நிலைப்பள் விக்கே
அங்கிலம்பத் தாயிரம்வெண் பொற்கா சீந்தோய் புலம்பெருகத் தொழில்பெருகப் போதி நீதி
போயினையா ரினிமேற்பொன் னைய வேளே.??
- சி. இ. க.
** "சேவித்தும் சென்றிரந்தும் . நாழியரிசிக்கே நாம் ' என்று புலவரொருவர் ஒருண்மையைப்
பாட்டின் மூலம் வெளிப்படுத்தினர். கற்றவர் கல்லா தவர் எல்லாரும் அறிந்த பாடலில் இதுவுமொன் ருகும். உயர்ந்த கொள்கையுடன் வாழ்ந்த தம்மை யும் ஏனையோருடன் சேர்த்து, ' நாம் ' என்று கூறு கிருர், நூறு பேரில் தொண்ணுரற்றென்பது பேரோ, ஆயிரத்தில் ஒருவர் இருவரோ தவிர மிகுதிப்பேர் நாழியரிசிக்கோ அதனினும் குறைந்த அளவான

நல்ல கமக்காரன் 15
அரிசிக்கோ போடும் தாளத்தை என்னென்பது ! இந்த " நாம் ' என்ற பதத்துக்கு இலக்காகாத இலட் சிய புருஷனில் ஈழகேசரிப் பொன்னையாவும் ஒருவர். பஞ்சகாலத்தில் கல்லுக் கலட்டுத் தரையில் மண் கொட்டி நீரிறைத்து நல்ல நெல் விளைவித்து நம் மவர் பூமி திருத்தியுண்ண வழிகாட்டிய உத்தமர் உண்மையில் நாழியரிசிக்காக வாழ ஒருப்படுவாரா?
செந்தமிழ்மணி பொ. கிருஷ்ணபிள்ளை அவர் கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. திரு. பொன்னையா அவர்களின் கமத்தொழில் முயற் சியைக் கவிஞர் ஒருவரும், விமர்சகர் ஒருவரும் தொட்டுக்காட்டியிருப்பது போல அவருடைய அரசியல் எதிரி முதல்-பல அறிஞர்கள் -பொது மக்கள் வரை எல்லோரும் அக்காலத்திலே போற் றிப் புகழ்ந்தனர். அயல்நாட்டிலிருந்து வந்த பலர் அவரது அயரா முயற்சி கண்டு அதிசயித் தனர். திரு. பொன்னையா அவர்கள் மயிலிட்டிக் கிராமசங்கத்தில் (5ஆம் வட்டாரம்) அங்கத்தவ ராக இருக்கும்போதே தன் வட்டாரத்துக்கு அருமையான ஒரு ஒழுங்கையை ஒரு மைல் நீளத் துக்கு அமைத்து, அதை யாழ்ப்பாணம்-பலாலிப் பெருந்தெருவில் சந்திக்கச் செய்து போக்கு வர வுக்கு நல்ல ஏற்பாடாக்கினர். அப்போதே அவர் மனதில், அப்பெருந்தெருவும் ஒழுங்கையுஞ் சந்திக் கும் இடத்தில் இருந்த கட்டாந்தரை(250 பரப்பு வரை) பதியலாயிற்று. சிறு சிறு துண்டுகளாகப் பலருக்குச் சொந்தமாக வீணே கிடந்த அக் கலட்டுத்தரையை வாங்கி ஒன்ருக்கி ஏதா வது உபயோகமான காரியஞ் செய்யலாமே என்று எண்ணினர். இரண்டாவது மகாயுத்தம்

Page 73
1 16 ஈழம் தந்த கேசரி
தொடங்கி, புத்தக விற்பனையும் பெருகி, பல வழிகளாலும் பணப்புழக்கம் அவருக்கு ஏற்பட்ட போது தம் மனக் கிடக்கையைச் செயலாக்க விரும்பினர். 1941இல் காணிகளை வாங்கத் தொடங்கினர், பணத்தைச் சேர்த்துவைக்கத் தெரியாதவர் திரு. பொன்னையா. எவ்வளவு தான் பொருள் வந்தாலும் யாராவது உதவி கேட்டுவந்தாற் கொடுத்து விடுவார்; அல்லது எங்காவது சுற்றுப் பிரயாணத்துக்குக் கிளம்பி விடுவார். “நாளைக்கு என்னசெய்வது பணத்துக்கு" என்ற கவலையே இல்லாதவர். இப்படிப்பட்டவ ருக்குச் சிறு சிறு துண்டுக் காணிகளை - அதிக பணம் கொடுக்கத் தேவையில்லாத காணிகளை - வாங்குவதுதான் பணத்தைச் சேமிக்கச் சுலப மான வழியெனப் பட்டது. அப்படியே ஒவ்வொரு சிறு சிறு துண்டாகப் பலரிடமும் வாங்கினர். காணிச் சொந்தக்காரர்கள் வயாவிளான், வடக்குப் புன்னலைக்கட்டுவன் முதலிய அய லூரைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கண்டு விலைபேசித் தீர்த்து ஒரே காணியாக 250 பரப் பையுஞ் சேர்த்து முடிக்க திரு. பொன்னையா போன்ற அசகாய சூரத்தனமுள்ள ஒருவரால் தான் முடியும். வேறு யாருங் கனவுகூடக் காண (Լpւգ Այո՞Ց].
அதேகாலத்தில்தான் (1942-1946) யாழ்ப் பாணம் மணிக்கூட்டு வீதியில் ஒரு காணியும் வீடும் வாங்கி அங்கேயே அச்சுக்கூடத்தைக் கொண்டுபோ யமைக்கக்கூடியதாகப் பல அறை களையுங் கட்டினர். சொந்த ஊரிலே சில காணி களையும் வாங்கினர்.

நல்ல கமக்காரன் 11 7
இந்தக் காலந்தான் திரு. பொன்னையாஅவர்கள் பணத்திலும் செல்வாக்கிலும் உச்சநிலையில் இருந்த காலம். தான்பட்ட கஷ்டநிலையிலிருந்து உயர்ந்து பயனை அறுவடை செய்துகொண்டிருந்த காலம். அவர் தொட்டது எல்லாம் பலிதமாய், முயற்சி திருவினையாக்கிக்கொண்டிருந்த காலம். காலத்தை நுணுக்கமாக அவதானித்துக் காரிய மாற்றும் அவர் கைத்தொழிற் பாடசாலையும் ஆச்சிரமமுங் கட்டவேண்டும் என்ற எண்ணத் தோடுதான் வயாவிளான் - குரும்பசிட்டி எல்லை யில் அச்சிறு துண்டுக் காணிகளை வாங்கி ஒன் ருக்கினர்.
அக்காணிகளை வாங்கும்போது சிலர் சிரித் தார்கள்; சிலர், பொன்னையா அவர்கள் இம் முயற்சியில் தலை எடுக்கமாட்டார்; கவிழ்ந்து விடுவார்’ என்றே பேசினர்கள். ஏறக்குறைய 250 பரப்புள்ள அக்காணியில் அரைவாசிக்கு மேற்பட்ட பாகம் வெறுங் கல்லுத்தரை. கல்லை உடைத்துப் பெயர்த்தெடுத்தாலும் ஆழமான பள்ளம்; எங்கிருந்தாவது மண்கொண்டு வந்து போட்டு நிரப்ப வேண்டும். கிணறு ஒன்று கூடக் கிடையாது. அவ்வளவு தரைக்குந் தண்ணிர் பாய்ச்ச அகலங் கூடியதும் நல்ல ஆளமுள்ளது மான பெரிய கிணறு தோண்டுதல் வேண்டும்.
திட்டமிட்டு அவர் செயலாற்ற முனைந்தார். முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை அவர் அமர்த்தினர். கிணறுவெட்ட, கல்பெயர்க்க, வாய்க்கால்களைச் சீமெந்தாற் கட்ட, தண்ணீர் இறைப்பதற்காகப் பெரிய இயந்திரங்களைப்

Page 74
1 8 ஈழம் தந்த கேசரி
பூட்ட, வெளியேயிருந்து மண்கொண்டுவந்து கொட்ட எனப் பல வேலைகளைத் துரிதகதியில் அவர் செய்துமுடித்தார்.
இயந்திரத்தால் தண்ணிர் இறைப்பதற்காக வேருெரு கிணறுபோன்ற ஆழமான பள்ளத்தை அவர் தோண்டுவித்து, இயந்திரத்தின் நாடா வைக் கிணற்றின் அடிவரை கொண்டு சென்று பொருத்திய காட்சியைக் கண்டு பிரமிக்காதவர் களே இல்லை. கிணறு சாதாரண கிணறுகளிலும் பார்க்க இரண்டுமடங்கு விட்டம், 35 அடிக்கும் மேற்பட்ட ஆழம். அதிலிருந்து இறைக்கும் நீரைச் சேமித்துவைக்குந் தொட்டி கீரிமலைக் கேணியின் அரைவாசிப் பாகமளவு. பணத்தைப் பணமென்று பாராமல் மாடுகள், பல தினுசான வண்டிகள் எல்லாவற்றையும் வாங்கிச் செலவு செய்து இரண்டொரு வருடங்களுக்குள் கண் கவர் தோட்டமாக்கிக் களிகூர்ந்தார்.
வலிகாமம் வடக்கில் நெல் என்பதே விளை யாது. எங்காவது குளத்தை அடுத்த பகுதியில் ஒரு சிறிது விளையும். குரும்பசிட்டியில் நெல் விளைவிப்பதென்பது ஒன்பதாவது அதிசயம். செம்மண்பூமி நெல்லுக்கு உகந்ததல்ல. அப்படிப் பட்ட இடத்திலே திரு. பொன்னையா அவர்க்ள் குளமண்ணைக் கொண்டுவந்து கொட்டி அருமை யாக நெல் விளைவித்துக் காட்டினர்; பார்ப் போரை ஆச்சரியமுறச் செய்தார். அதுமாத்திர மல்லாமல் யுத்த காலத்திற் கிடைத்தற்கு அரிதாக விருந்த கொத்தமல்லி, உள்ளி, சீரகம் முதலிய வற்றையும் விளைவித்துக் காட்டினர். பணவருவா

நல்ல கமக்காரன் I 9
யைக் கருதாது புதிய புதிய பொருள்களைப் பரீட்சை செய்யும் பண்ணையாகத் திகழச் செய் தார். இதனல் திரு. பொன்னையா அவர்களின் புகழ் அகில இலங்கையிலும் பரவலாயிற்று. திரு. பொன்னையா அவர்களது கமத்தொழில் முயற்சிபற்றி எழுதிய எழுத்தாளநண்பரொருவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
"இரண்டாவது மகாயுத்தம் ஏற்பட்டு உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் (1941), வயாவிளானில் ஏறக்குறைய 12 ஏக்கர் விஸ்தீரண முள்ள காணியை விலைக்கு வாங்கி, இயந்திரசாதன உதவியுடன் பெருமளவில் உணவுப் பொருள் விருத்தி செய்து யாழ்ப்பாணத்தில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்தினர். அவ்விவசாயப் பண்ணை யாழ்ப்பான விவசாயிகளுக்கும் அரசாங்கப் பகுதிக்கும் பல புது அனுபவங்களை உண்டாக்கியது. *
திரு. பொன்னையா அவர்கள் விவசாயப் பண்ணையோடு கைத்தொழிற்பாடசாலை, வித்துவ சிரோமணி கணேசையர் போன்ற வித்துவான்கள் தங்கி இருக்க ஆச்சிரமம் என்ற பல திட்டங்க ளோடுதான் ஆரம்பித்தார். ' உலகம் சுற்றிய தமிழ'ரான ஏ. கே. செட்டியார் அவர்கள் அவ ருடன் தங்கியிருந்த இரண்டொரு நாட்களில் தம் முடைய திட்டத்தை விளக்கிக் கூறியதை நேரிற் கேட்குஞ் சந்தர்ப்பம் இந் நூலாசிரியர்க்குக் கிடைத்தது. புத்தகம் கட்டும் வேலை, அச்சுக்கூட வேலை இவற்றையெல்லாம் திருநெல்வேலி அநாதை மாணவரில்லத்திலிருந்து பதினெட்டு வயதுக்குப்பின் வெளியேறும் மாணவர்களுக்குப் பழக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவு

Page 75
120 ஈழம் தந்த கேசரி
நீக்க எண்ணியிருப்பதாக அவர் கூறினர். அப்படியே நெசவுவேலையைப் பெண்களுக்காக ஆரம்பிக்கப் போவதாகவுஞ் சொன்னர், எல்லாவற்றுக்கும் மேலாக வித்துவசிரோமணி க்ணேசையர், பண்டிதமணி சி. க. போன்றவர்களை நன்ருய்ப் பயன்படுத்தி காவியபாடசாலை, மாத மிருமுறை இலக்கியச் சொற்பொழிவுகள் இவற்றையெல்லாம் நடாத்தி கலாநிலையம் போன்ற அமைப்பை உருவாக்கவேண்டுமென்றும் திட்டமிட்டார். முக்கியமாகக் கமத்தொழில், கைத்தொழில் இவற்றை அடிப்படையாகக் கொண்ட வார்தா கல்வித்திட்டமே காந்தீய வாதியாகிய அவரின் உள்ளத்தில் நிறைந் திருந்தது.
ஆனல், அவரைப் பீடித்திருந்த நோய் இடை இடையே அவரைப் படுக்கையிற் கிடத்தியது. தம்முடைய திட்டங்கள் சரியாக நிறைவேறுமா? என்ற கேள்வி அவர்முன் எழுந்தது. அதே கால கட்டத்தில் இலவசக் கல்வித்திட்டம் அரசாங்கத் தாற் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு தொகுதி யிலும் மத்திய மகாவித்தியாலயங்களைக் கட்டுவ தெனத் தீர்மானமாயிற்று. மத்திய மகா வித்தியாலயங்களில் தொழில்முறைக் கல்வியே முக்கியமாகக் கவனிக்கப்படும் எனவும் பேச்செழ லாயிற்று. குரும்பசிட்டி, கட்டுவன், வயாவிளான், பலாலி என்ற கிராமங்களில் நல்ல ஆங்கிலக் கல் லூரிகள் இல்லை. எனவே பலர் அவரைச் சந்தித்து அவரது விவசாயப் பண்ணையிலேயே மத்திய மகாவித்தியாலயத்தைக் கட்டும்படி அரசாங்கத் திடம் கேளுங்கள் என்று தூண்டினர்கள்.

நல்ல கமக்காரன் 121
தாம் பாடுபட்டு உருவாக்கிய ஒரு சிறு தோட்டத்தைப் பிறருக்கு விற்பதை எந்தக் கிராமத்துக் கமக்காரனும் சகிக்கமாட்டான். அப்படியிருக்கும்போது திரு. பொன்னையா அவர்கள் தமது 12 ஏக்கர் நிலத்தை-பஞ்சுபடாப் பாடுபட்டு உருவாக்கிய நிலத்தை - பொது மக்களின்-குழந்தைகளின் - கல்வி நலனை முன் னிட்டு அரசாங்கத்துக்குக் கையளிக்க முன்வந்த தீரச்செயல் பொன்னெழுத்துக்களாற் பொறிக் கப்பட வேண்டிய செயலாகும்.
மத்திய மகாவித்தியாலயங் கட்டவேண்டு மென்ற எண்ணத்தை அவர் காரியத்திற் சாதிக்க முயன்ருர், தாம் தலைவராக இருந்த குரும்ப சிட்டி, சன்மார்க்க சபையின் நிருவாகசபையைக் கூட்டி ஆலோசனை செய்தார். மத்திய மகா வித்தியாலயம் நிறுவ ஒரு உபகுழுவை நியமித்து, அயற் கிராமவாசிகளுடன் சேர்ந்த பொதுச் சபையைக் கூட்டி, கல்விமந்திரியைப் பேட்டி கண்டு விடயத்தை விளக்கினர். தமது விவசாயப் பண்ணையிற் கல்லூரியை நிறுவினல் பத்தாயிரம் (10000) ரூபா நன்கொடை அளிப்பதாக வாக் குறுதியளித்தார். அப்போதைய கல்விமந்திரி அவர்கள் ஒருமாத அவகாசத்துள் அவர் வாக் குறுதியளித்த பத்தாயிரம் ரூபாவுக்குந் தற்காலிக கட்டிடங்களை அவர்போட்டு உதவினல் அங்கேயே கல்லூரியை அமைப்பதாகச் சொன்னர்.
திரு. பொன்னையா அவர்கள் விடா
முயற்சி செய்து ஒருமாத காலத்துள் அழகான தற்காலிகமான கட்டிடங்களை அமைத்துக்

Page 76
122 ஈழம் தந்த கேசரி
கொடுத்தார். வேண்டிய தளபாடங்களும் உதவினர், 1946ஆம் ஆண்டு மத்தியகல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.
இக்கல்லூரி வயாவிளான் அரசினர் மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்பட்ட போதி லும் பொதுமக்களால் பொன்னையா பள்ளிக் கூடம்’ எனவே இப்போதும் அழைக்கப்படுகிறது.
இக்கல்லூரி 1951இலும், 1955இலும் புதிய கட்டிடங்களால் நிரம்பித் தற்போது சிறந்த மத்திய மகா வித்தியாலயமாக விளங்குகின்றது. அநேக கிராமத்துப் பிள்ளைகள் இலவசக் கல்வியின் பேருய்-திரு.பொன்னையா அவர்களின் நன்மனத் தால் - எஞ்சினியர்களாக, டாக்டர்களாக, பட்டதாரிகளாக, வேறு உத்தியோகத்தர்களாக இம் மத்திய மகா வித்தியாலயத்திற் படித்த ஆரம்பப் படிப்பினல் முன்னேறியிருக்கிருரர்கள்; திரு. பொன்னையா அவர்களை வாழ்த்தியுள் ளார்கள்.
அவர் தாம் ஒரு கமக்காரன் என்று சொல் வதிற் பெருமைப்படுபவர். அதுமாத்திரமன்று, கமக்காரரின் நல்வாழ்வில் அதிக அக்கறை உள்ளவர். * உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியார் பாட்டின்படி வாழ்ந்துகாட்டியவர். அவர்வாழ்வு மற்றையோர் பின்பற்றக்கூடிய வாழ்வாகும்.

நீர் நிறைந்த ஊருணி”
* கல்விபயில் சாலைகட்குக் கணகமெலாங்
கைகலியா தள்ளி யீவோன்
பல்விதமா மேழைகட்கு மிகவுதலிக்
கல்விதனைப் பயிலச் செய்வோன்
கல்விதத்துப் புலவர்கட்குப் பரிசில்பல நயந்தளித்து நண்பு கொள்வோன்
செல்வமதைப் பெற்றபயன் ஈந்துவக்கு
மின்பமெனத் தெளிந்து நின்றேன்.”
-வித்துவசிரோமணி பிரமணு சி. கணேசையர்
திரு. பொன்னையா அவர்கள் ஜே. பி. பட்டம் பெற்றபொழுது வாழ்த்துப்பா பாடிய வித்துவசிரோமணி அவர்கள், திரு. பொன்னையா அவர்களின் வள்ளல் தன்மையைச் சுட்டிக்காட்டி வாழ்த்திய பாடல் இது. கல்விபயில் சாலை களுக்கும், பல்விதமாமேழைகளுக்கும், நல்விதத் துப் புலவர்களுக்கும் வள்ளல் திரு. பொன்னையா வரையாது ஈந்து, "படியதனிலூர் நடுவே நீர் நிறைந்த குளம்போலப் பலர்க்கு மென்றும்

Page 77
124 ஈழம் தந்த கேசரி
நெடிது பயன்படுகின்ருன் ' என வாழ்த்திய வாழ்த்து வெறும் முகமன் பாட்டன்று; போலிக் கவிதையன்று; உள்ளம் நிறைந்த நன்றிப் பெருக் கால் உருவான பாடல் அது.
இதற்குச் சாட்சி பகர்பவர்போலப் பலர் கண் முன்னிலையில் காட்சி தருகிருர்கள். அவர்களது எழுத்தை மாலையாக்கிக் (எல்லோரையும் அல்ல, ஆறுபேரை) காட்டி வள்ளல் திரு. பொன்னை யாவின் கொடைச் சிறப்பை இதன்மூலம் ஒரளவு அறிந்துகொள்ளலாம்.
முதன்முதலில் சைவ வித்தியா விருத்திச் சங்க (இந்துபோட்) *மனேஜர்' இராசரத்தினம்
அவர்கள் :
'சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் வளர்ச்சி யில் மிகுந்த அக்கறைபூண்டு உழைத்துவந்த “ ஈழ கேசரி திரு. பொன்னையா அவர்கள் எத்தனையோ பல சந்தர்ப்பங்களிற் சைவ வித்தியா விருத்திச் சங் கத்துக்கு வரையாது ஈந்துவந்தார். .சைவாசிரிய கலாசாலையில் ஆசிரிய மாணவர்களுக்கான ஒரு பேரிய விடுதிச்சாலையை நிறுவியபோது அதனை ஒட்டினுல் வேய்தற்குப் பணமில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் திரு. பொன்னையா அவர்கள் தாமே முன்வந்து அதற்கான பணத்தை வழங்கினர், சைவ வித்தியா விருத்திச் சங்கத்து மாணவரில் லத்திலுள்ள தண்ணிர் இறைக்கும் இயந் திரத்தையும் அவரே ஈந்தார்.’’
ஈழத்திலே பலரும் போற்றும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் :
**திரு. பொன்னையா அவர்களுடன் நட்புக்கோட்
பட்டோர், அவர்கள் முன்னிலையில் தெரிந்தோ தெரி யாமலோ ' தேவை என்று ஒரு சொல்லை உபயோ

நீர் நிறைந்த ஊருணி 125
கித்தால் அந்தத் தேவை அடுத்தநாளே தேவை யின்றித் தேவை பூர்த்தியாகிவிடும். சைவாசிரிய கலாசாலைப் புத்தக அலுமாரிகளிலே தொல்காப்பியம் முதல் சென்னை அகராதி பரியந்தம் தமிழ் நூல்கள் ஒரு காலத்திலே நிரம்பி நிறைந்து கிடந்தன. இந்த நிறைவு திரு. பொன்னையா அவர்களின் முன்னிலையில் * தேவை என்ற சொல்லை உச்சரித்ததன் பெறு பேறே. . யாழ்ப்பாணத்திலே தர்ம ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படுபவைகளுள்ளே மகான் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்கள், திரு. நா. பொன்னை யா ஜே. பி. அவர்கள் ஆகிய இருவர்களின் அனுதாபங்களைப் பெருதவைகள் இல்லையென்றே சொல்லலாம். திரு. பொன்னையா அவர்கள் ஈழத் தைக் கடந்து இந்தியாவிலேயும் பல தர்மங்களுக்கு ஆயிரக்கணக்கில் வழங்கியிருக்கிருர்கள்.'
பிரபலமான சைவ வித்தியா விருத்திச் சங்க மனேஜரும், தகுதியில்லாதாரைப் புகழாத பண்டிதமணி அவர்களும் கூறியவற்றைப் பார்த் தோம்.
யாழ்ப்பாணத்திலே, தெல்லிப்பழைப் பகுதி யிலே சிறந்த கல்லூரியாகத் திகழும் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. தெ. து. ஜெயரத்தினம்
அவர்கள் :
** நூற்பதிப்பு வாயிலாகத் தாம் ஈட்டிய பொரு ளைக் கல்விஸ்தாபனங்களுக்கும், உயர்தரக் கல்விக்குப் பணமில்லாமல் வருங் தி நின்ற மாணவர்களுக்கும் வரையாது கொடுத்துதவி பேருபகாரியாகவும் விளங் கினர். ஆணுல், அவரின் உபகாரத்தைப் பிற ரறியப் பகிரங்கப்படுத்துவதை விட அவருக்கு வேறுப்பான காரியம் பிறிதில்லை. இவ்வண்ணம் புகழையோ பதிலுபகாரத்தையோ நாடாது உப கரிக்கும் பெரியோர் எங்கள் நாட்டில் மிகச் சிலரினுஞ் சிலரே. ? ?

Page 78
126 ஈழம் தந்த கேசரி
பெளத்தசமயப் பிக்குவான சுவாமி தர்மரத்ன அவர்கள் :
" நான் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் இருந்தபோது திரு. பொன்னையா அவர்கள் எனக்குப் புரிந்த பல உதவிகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு இலங்கைப் பல்கலைக் கழகத்துக்கு வந்தபோதும் வேண்டிய உதவிகளைக் கேட்கும்படி அவர் என்னை வேண்டினர். இப் பெரி யார் சாதிமத பேதமில்லாத ஒரு சிரேட்டர். யாழ்ப் பாணத்தில் எங்களுக்கிருந்த ஒர் அபய ஸ்தலம்ஒப்பற்ற துணை-எங்களுக்கு இல்லாமற் போனது எங்கள் பாவமேயாகும்.'
மகாவித்துவான் சி. கணேசையர் அவர்களது பொற்கிழி விழாச் சபைக்குக் காரியதரிசியாய் இருந்தவருள் ஒருவரும், திரு, பொன்னையா அவர்களின் வாழ்க்கையை நன்கு அறிந்தவரு மாகிய, வண்ணை வைத்தீஸ்வரக் கல்லூரி அதிபர் திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள் :
** இவருக்குத் திருமகள் கடாட்சம் ஏற்பட்ட காலந் தொடங்கி அநேக புலவர்களுக்கு உதவி செய் திருக்கிறார். தாம் உதவி செய்ததோடு மற்றவர்களை யும் ஊக்கப்படுத்தி உதவி செய்யும்படி செய்திருக் கிருர். வித்துவான் கணேசையர் அவர்களுக்கு இவர்களுடைய முயற்சியினலேயே பொற்கிழி வழங் கப்பட்டது . . வித்துவான் கணேசையருக்கும் திரு. நா. பொன்னையா அவர்களுக்கும் இடையி லிருந்த தொடர்பு குரு சிஷ்ய முறையைச் சேர்ந்த தாகும். தான் இறந்த பின்னும் வித்துவானவர்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்பாடுகள் செய்திருப்பதி லிருந்து இவருடைய குருபக்தி நன்கு விளங்கு கின்றது.

நீர் நிறைந்த ஊருணி 127
'நாமக்கல் கவிஞர் யாழ்ப்பாணத்துக்கு வந்த போது அவரை வரவேற்று உபசரிப்பதில் முன் னின்றவர் திரு. நா. பொன்னையா அவர்களே. இப் படி யாழ்ப்பாணத்துக்கு வரும் பெரியோர்களை வர வேற்று உபசரிப்பதற்கு இவர் எங்களுக்குப் பேருதவி புரிந்திருக்கிருர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இனி யாரிடம் போவோம்.
** இவர் பல கல்விஸ்தாபனங்கட்கும் மருத்துவ சாலைகட்கும் நன்கொடை அளித்துள்ளார். இவ ருடைய செல்வம் ஊருணி நீர் நிறைந்தாற்போல வும், பயன்மரம் உள்ளூர் பழுத்தாற்போலவும் பயன் பட்டிருக்கின்றது.'
ஈழகேசரியின் கொழும்பு நிருபராய் இருந்து நல்ல அரசியற் கட்டுரைகள் எழுதியவரும், பின்பு இலங்கை வானெலி நிலையத்திற் கடமை யாற்றியவரும், இப்போது 'தினகரன்’ தினசரிப் பத்திரிகையின் விளம்பரப்பகுதி அதிபராய் இருப் பவருமாகிய திரு. மு. சு. இரத்தினம் அவர்கள் :
"" திரு. சோ. சிவபாதசுந்தரத்துடன் தொடர் புற்ற காலத்தில் அவர் என்னை ஈழகேசரிக்கு எழுதும் படி தூண்டினர். ஈழகேசரியும் எனது அரசியற் கட்டுரைகளைப் பிரசுரித்தது. 1945இல் அரசாங்க உத்தியோகத்தினின்றும் விலகி வேலையில்லாமல் திகைத்துக்கொண்டிருந்த சமயத்தில் மனக் கலக்கத் தையும் பண நெருக்கடியையும் விரட்டி அடிக்க முன் வந்தார் ஈழகேசரி 'ஐயா . ஆங்கிலப் பத்திரிகை நடாத்தவேண்டும் என்ற ஆசைநிரம்ப உடையவர் ‘ஐயா. இத்துறையில் எனது சேவையை விரும்பினர். "நீங்கள் தயங்கவேண்டாம். எதுவந்தாலும் நான் கவனித்துக்கொள்கிறேன். ஆங்கிலப் பத்திரிகைக் காகப் பாடுபடுவோம். அதுவரையும் ஈழகேசரிக்கு

Page 79
128 ஈழம் தந்த கேசரி
எழுதிவாருங்கள்’’ என்று கூறியதோடு நின்று விடாமல் முதல் மாத முடிவில் நான் ஆங்கிலப் பத்திரிகைக்கென்று ஒருவிதமான வேலையுஞ் செய்யா திருந்த காலத்திற்கும் சம்பளமாகக் கொழும்புக்குப் பணமனுப்பியிருந்தார். ஒரு தகப்பனவிட மேலன் புடன் நடந்துகொண்ட தீரர் திரு. பொன்னையா அவர்களை ஐயா " என்றழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும். "ஐயா'வின் ஆதரவின் மூலம் ஒருவாறு சிறிய வழியிலாயினும் தமிழ்த்தொண்டு செய்ததாலேயே நான் உதறித்தள்ளிய பதவியை விட மேலான பதவியை ரேடியோ சிலோனிற் பெற வசதி கிடைத்தது.'
米 ck ck
பணம், பணம் என்று மக்கள் சதா ஒடிக் கொண்டிருக்கும் இக்காலத்திலேகூட, அதை இலட்சியம் செய்யாமல் ' ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது, ஊதிய மில்லை உயிர்க்கு' என்ற தேவர் குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்த திரு பொன்னையா அவர்கள் மக்கள் உள்ளத்தில்
வாழ்கிருர், மங்காத் தீபம்போல் ஒளிவிடுகிருர்,

அணைந்த தீபம்
சொல்லின் இனியன் மொழிக்கருங் தொண்டன்
சுந்தர மானதொல் காப்பியக் தந்தோன் நல்ல கருமங்கள் நாடினன் கல்லோர் நட்பு முடையன் நனிநாக ரீகன் செல்வத்து வாழ்வித தீதிது என்றே
செந்தமிழ் தீட்டிய வீரரைத் தேடிப் பல்லித் தகங்களும் பேசுதற் கென்றே ?
பதைப்ப நீங்கினன் எம்மினை விட்டே.
- சோதி
துணிவே துணை’ எனக்கொண்டு வாழ்ந்தவ
ரும், "வானந்துளங்கிலென் மண்கம்பமாகிலென்"
என்ற அப்பர் வாக்கைக் குறிக்கோளாகக்
கொண்டவரும், ஈழம் சுதந்திரமடைதல்வேண்
டும், வகுப்புவாத மென்னும் கொடிய பேய்
ஒடி ஒளிதல் வேண்டும், சாதிக்கொடுமை என்னும்
9

Page 80
130 ஈழம் தந்த கேசரி
நச்சர வம் சாக அடிக்கப்படுதல் வேண்டும் என்று சிங்கநாதஞ்செய்து அதற்காக ஈழகேசரி என்னும் பத்திரிகையைத் தனி ஒருவராய் நின்று நடாத்தியவரும், கேசரி என்ற ஆங்கில வார வெளியீட்டை வெளியிட்டவரும், தொல்காப் பியம் முதலிய பழைய நூல்களை அழகுற அச்சிட் டவரும், மாணவர்களுக்கேற்ற பல பாட நூல் களை வெளியிட்டுப் பல பதிப்பாளர்களுக்கு வழி காட்டியாய் அமைந்தவரும், புலவர்கள் பண்டி தர்கள் என்போரை அரவணைத்து அவரது ஆக்கங் களுக்கு ஊக்கமூட்டியவரும், பல புதிய எழுத் தாளர்களைத் தோற்றுவித்தவரும், பல பொதுச் சங்கங்களிலே அங்கம் வகித்து அவை திறம்படச் செயல்புரிய ஒத்தாசை நல்கியவரும், மயிலிட்டி கிராம சபைத் தலைவராய் அமர்ந்து நற்சேவை செய்தவரும், குரும்பசிட்டியில் சன்மார்க்க சபையை ஸ்தாபித்து நல்ல பல தொண்டுகள் ஆற்றியவரும், பிரபல கமக்காரன் எனப் பேர் எடுத்தவரும், பணத்தைத் தனக்கு-தன் குடும்பத் துக்கு- எனச் சேமியாது தகுதியறிந்து வழங்கி வள்ளல் என அழைக்கப்பட்டவருமாகிய “ ஈழம் தந்த கேசரி’ திரு. நா. பொன்னையா அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானர்.
பலபேர்க்கு நிழல் தந்து செழுங்கிளை பரப்பி நின்ற ஆலமரம் கொடிய புயலால் அடியோடு பெயர்ந்துவிட்டது. நறுமணம் பரப்பி விகசித்த முல்லைக்கொடி திடீரெனக் கருகி அழிந்து விட்டது. ஒளிதந்து பிரகாசித்த ஒப்பற்ற தீபம் அணைந்துவிட்டது.

அணைந்த தீபம் 131
ஐந்தாறு வருடங்களாக நோயினுற் கஷ்ட முற்ற திரு. பொன்னையா அவர்கள் தம் நோயைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் தனக்கு முன்னல் இருந்த மலைபோன்ற வேலைகளை யெல்லாந் துரிதகதியிற் செய்துகொண்டிருந்தார். இடை யிடையே சிறு புண் முதலியன ஏற்பட்டால் மானிப்பாய் வைத்தியசாலையிற் காட்டி வந்தார். அவரை அறியாமலே நோய் முற்றிவிட்டது. இருதயத்திலும் வயிற்றிலும் நோய் கண்டது. மானிப்பாய்க் கிறீன் வைத்தியசாலையிலும் கொழும்பிலுள்ள பிரபல ‘சென்றல் ஹோஸ்பிற் றலிலும் பல மாதங்கள் வைத்திய சிகிச்சை பெற்ருர்,
இக்காலத்தே அவருடைய அன்பர்கள் பலர் உதவி செய்தார்கள். முக்கியமாக, திரு. கே. சி. தங்கராசா அவர்களையும் திரு. வ. செல்லத்துரை அவர்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். * ரைம்ஸ்’ பத்திரிகை ஸ்தாபனத்திலே மனேச்ச ராக இருந்தவரும், இப்போது கிழக்கிலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராயிருப் பவருமாகிய திரு. தங்கராசா அவர்கள் திரு. பொன்னையா அவர்களது நெடுநாளைய நண்பர். எந்தப் புதுவேலை தொடங்கும்போதும் திரு. பொன்னையா அவர்கள் அவருடன் கலந்து ஆலோசிப்பார். திரு. தங்கராசாவின் விவேகத் தில், ஆலோசனையில் திரு. பொன்னையா அவர் களுக்கு அபரிமிதமான நம்பிக்கை. அவர் இறுதிக் காலத்திற் செய்த உதவி காலத்தினுற் செய்த உதவியாகும். உற்ற நண்பன் என்றதற்கு

Page 81
132 ஈழம் தந்த கேசரி
எடுத்துக்காட்டாக விளங்கினர். இவரது கவர்ச்சி மிகுந்த வாசஸ்தலமே திரு. பொன்னையா அவர் களின் சுகஸ்தலமாக விளங்கிற்றென்றே சொல்ல வேண்டும். அவ்வளவு செளகரியங்களை அங்கு ஏற்படுத்தியிருந்தார்.
திரு. வ. செல்லத்துரை இளமைதொட்டே அவரது மகன் போல வளர்ந்தவர். சிலகாலம் அவரது புத்தகசாலையிலும் வேலை செய்தவர். முக்கியமான விடயங்களில் திரு. பொன்னையா அவர்களின் குறிப்பறிந்து வேலைசெய்பவர். திரு. பொன்னையா அவர்கள் அமரத்துவம் அடைந்த பின்னரும் அவரது குடும்பத்துக்கு உதவியாக இருப்பவர், திரு. பொன்னையா அவர்களின் பின் மயிலிட்டி கிராமசங்கத்தில் (ஐந்தாம் வட்டாரம்) அங்கத்தவராகப் பன்னிரண்டு வருடம் தொண்டு செய்தவர். திரு. செல்லத்துரை மானிப்பாயிலும் கொழும்பு வைத்தியசாலையிலும் திரு. பொன் னையா அவர்களுடன் உடன் தங்கி வேண்டிய கடமைகள் செய்தமை போற்றக்கூடிய செய லாகும். திரு. பொன்னையா அவர்களுக்கு ஆண்மகவு ஒன்று இல்லையே என்ற எண்ணத்தை எழ விடாதபடி திரு. செல்லத்துரை போக்கடித்து விட்டார்.
பிரபல டக்டர்கள் வைத்தியஞ் செய்தும் தகுந்த ஆட்கள் நன்கு பராமரித்தும் விதி சதிசெய்துவிட்டது. திரு. நா. பொன்னையா அவர்கள் 30-3-51ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவ்வுலகைவிட்டு அமரரானர்.

அணைந்த இபம் 133
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்து அரசியற்றலைவர்களும், பிரமுகர்களும், எழுத் தாளர்களும், புத்தகசாலை அதிபர்களும், பொது மக்களும் அவர்களது இறுதிச்சடங்கிற் பங்கு புற்றித் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஈமக்கிரியைகள் சைவமுறைப்படி நிறை வேற்றப் பெற்றன. பின்னர் அக்கால Այոլիւն பாண நகரபிதா திரு. ஸி. பொன்னம்பலம் அவர்கள் :
** திரு. பொன்னையா அவர்கள் இலங்கையின் ஒற்றுமைக்காக உழைத்த தமிழ்ப் பெரியார். வகுப்பு வாதத்தை எதிர்த்து எத்தனையோ கஷ்டங்களுக் கிடையில் போராடியதுமன்றி தேசீயத்தை நாட்டிற் பரப்புதற்குத் தம்மாலான பணிகளைச் சோர்வின்றிச் செய்துவந்தார். ஈழகேசரியை ஆரம்பித்துச் சென்ற இருபத்தொரு வருடங்களாக நாட்டின் விடுதலைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றியுள்ளார். உன்னத இலட்சியங்களுக்காக உழைத்துவந்த வள் ளல் திரு. பொன்னையா அவர்கள் சகலரையும் சாதி மதம் பாராட்டாது கண்ணியமாக மதித்து வந்தார்.
“வித்தியாவிருத்தி போன்ற பல தர்ம கைங்கரியங் களுக்குத் தாராளமாகப் பணஉதவி புரிந்ததுமன்றிச் சமூக நலனையே குறிக்கோளாகக்கொண்டு உழைத தும் வந்தார். ஹரிசனங்களின் விமோசனத்திற்காகச் சலியாது தொண்டாற்றி அவர்களின் உரிமைகளுக் காகவும் போராடினர்.
** மயிலிட்டி கிராம சங்கத்தின் அங்கத்தவராகப் பல வருடகாலம் பணியாற்றியதுமன்றி அசசங்கத தின் தலைவராகவும் விளங்கி அப்பகுதியின் வளர்ச்சிக் கான காரியங்களையுஞ் செய்து முடித்தார்.

Page 82
l. 34 ஈழம் தந்த கேசரி
'தமது பத்திரிகை மூலமும் அரிய தமிழ் வெளி யீடுகள் மூலமும் தமிழ் மொழியை வளம்பெறச் செய்துவந்த திரு. பொன்னையா அவர்கள் யாழ்ப் பாணத்தில் தமிழ் விழா நடைபெறுங் காலத்தில் இல்லையே என்று நினைக்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது. திரு. பொன்னையா அவர்களின் பிரிவால் இலங்கை சிறந்த ஒரு தேசபக்தனையும் தமிழ்த் தலைவனையும் இழந்துவிட்டது. ’’ எனத் தனது அனுதாபப் பேச்சின்போது குறிப் பிட்டார்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மிக உருக்கமாகப் பேசினர்கள்:
** திரு. பொன்னையா அவர்களது ஈழகேசரிப் பத்திரிகை இலங்கையிலும் இந்தியாவிலும் புகழ் பெற்று விளங்கிவருகிறது. அன்னரின் தமிழ்ப்பணி ஈடு இணையற்றது. அவரின் பிரிவால் சைவவித்தியா விருத்திச் சங்கம் ஓர் அரிய நண்பனை இழந்துவிட்டது.”
அக்காலத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபராயிருந்த திரு. எஸ். ஏச். பேரின்பநாயகம் அவர்கள் திரு. பொன்னையா அவர்களின் பல வேறு பணிகளைப் பற்றியுங் குறிப்பிட்டுவிட்டு அன்னரின் மனைவிக்கும் புதல்விக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூறினர்கள்.
திரு. பொன்னையா அவர்கள் அமரரானர். செய்யவேண்டிய பணியைச் சரியாகச் செய்து ஈட்டவேண்டிய புகழை நன்ருகப் பெற்ருர், தொண்டைச் சரியாக்ச்செய்தால் புகழ் தானக்வே வந்து சேரும் என்பதற்கு திரு. பொன்னையா அவர்களின் வாழ்க்கை சான்ருகும்.

அணைந்த தீபம் 35
திரு. பொன்னையா அவர்கள் அமரராகி விட் டார், என்ற செய்தி கேட்டதும் ஈழத்துப் புலவர் பெருமக்கள் தங்களது பொருள் பொதிந்த கவிதை கள்ால் அஞ்சலி செலுத்தினர்கள். பண்டி தர்கள், பிரபல எழுத்தாளர்கள் தங்களது சீரிய கட்டுரைகளால் அவரது நல்ல குணங்கள் ஒவ் வொன்றையுந் தொட்டுக் காட்டினர்கள், தமிழ் நாட்டு அறிஞர்களும், எழுத்தாளர்களும், கலை ஞர்களும் அனுதாபச் செய்திகள் அனுப்பினர்கள். ஈழத்துப் பத்திரிகைகள் உபதலையங்கங்கள் எழுதிச் சிறப்பித்தன. தமிழ்நாட்டுச் சஞ்சிகைகள் அஞ்சலி செலுத்தின. உண்மையான தமிழ்த் தொண்டர் ஒருவருக்கு ஈழமும் தமிழ்நாடும் நன்றி மறவாமற் செலுத்திய அஞ்சலியானது நல்லோர் மனதை நெகிழ்விப்பதாய் இருந்தது. (இவற்றின் முக்கியமான பகுதிகள் மாலையாக்கி இந் நூலில் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.)
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தமிழ் விழாவிற்கு வருகைதந்த அறிஞர் கள், குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் திரு. பொன்னையா அவர்களது உருவப்படத்தைத் திறந்து வைத்தபொழுது, சபைக்கு வருகை தந்து தமது அஞ்சலியை நேரிலேயே செலுத்தி ஞர்கள்.
ஈழகேசரி திரு. நா. பொன்னையா அவர்களது உருவப்படத் திறப்பு விழா குரும்பசிட்டி சன்மார்க்க சபை மண்டபத்தில் 2-5-51 புதன் கிழமை நடைபெற்றது. திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் தலைமை வகித்தார்கள். சென்னைக்

Page 83
136 ஈழம் தந்த கேசரி
கல்வி மந்திரியாய் இருந்தவரும், சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழ்கத் தலைவருமான திரு. தி. சு. அவினசிலிங்கம் அவர்கள் திரு. பொன்னையா அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அரியதோர் விரிவுரை ஆற்றினர்கள்.
சென்னை வெலிங்டன் கல்லூரிப் பெளதிகப் பேராசிரியை திருமதி ஈ. த. இராஜேஸ்வரி அம்மையார், பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரனர், கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி, முதலியார் செ. சின்னத்தம்பி, கோ. இராஜ கோபால் ஆகியோர் திரு. பொன்னையா அவர் களின் வீரம் நிறைந்த இலட்சிய வாழ்க்கையைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினர். வார்தா கல்வித்திட்ட நிபுணர் திரு. ஈ. டபிள்யு. அரியநாயகம் அவர்களும் விழாவிற் பங்குபற்றி இருந்தார்கள்.
அணைந்தும் அணையாத தீபமாக இன்றும் ஈழத்தில் ஒளிவீசுகிருர் திரு. நா. பொன்னையா அவர்கள். அரசியல் தலைவர்களோ, பெரும் புலவர்களோ, பெரிய எழுத்தாளர்களோ அமர ராகும்போது, ஐயோ, அவர் போய்விட்டாரே' என்று அலறுவதும் அனுதாபத் தீர்மானம் நிறை வேற்றுவதும் அந்த வாரத்தோடு முடியும் சங்கதிகளாகிவிட்டன. ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு அவரைப்பற்றிய மூச்சேயிராது. பேசு வாரும் இல்லை. ஆனல் திரு. பொன்னையா அவர்களின் நினைவு அவர் மறைந்து பதினேழு வருடங்களாகியும் மறக்கப்படவில்லை என்பதில்
ஒரு ஆத்ம திருப்தி.

அணைந்த தீபம் 137
குரும்பசிட்டி சன்மார்க்க சபை அவரது நினைவுநாளைச் சென்ற பதினேழு வருடங்களாக வருடா வருடம் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றது. சென்ற ஆறு வருடங்களாக அகில இலங்கை ரீதியிலான பேச்சுப் போட்டியை நடாத்தி தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், புத்தகப் பரிசில்களை வழங்கி வருகின்றது. சென்ற இரு வருடங்களாக நாடகப் போட்டியையும் நடாத்திப் பரிசில்களை வழங்கி வருகின்றது.
பொதுச் சங்கங்களும் திரு. பொன்னையா அவர்களை மறந்து விடவில்லை. மயிலிட்டி கிராம சங்கம் அவரால் தொடங்கப்பட்ட பெருந்தெரு வுக்கு அவர் பெயரையே சூட்டி அன்னரின் பெயர் நீடு நிலைபெற வைத்துள்ளது. குரும்ப சிட்டி ஐக்கிய பண்டகசாலை, ‘பொன்னையா ஞாபகார்த்தப் பண்டகசாலை’ என நாமம் பொறித்துள்ளது. எல்லாவற்றையும் விட முக்கிய மாக எழுத்தாளர்களும், எழுத்தாளர் சங்கங் களும் திரு. பொன்னை யாஅவர்களின் தொண்டை மறந்துவிடவில்லை. பிரபல எழுத்தாளர் மூதூர் வ. அ. இராசரத்தினம் அவர்கள் 1962ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது சிறுகதைத் தொகுதியாகிய * தோணி யை “ ஈழத்தில் ஒர் இலக்கிய மரபை வளர்த்துச் சென்ற ஈழகேசரி திரு. நா. பொன்னையா அவர்களுக்குச் சமர்ப்பணஞ் செய் துள்ளார். இந் நூலாசிரியரும் 1967இல் வெளி யிட்ட ‘ வெண்சங்கு' என்ற சிறுகதைத் தொகுதி யைத் திரு. பொன்னையா அவர்களுக்கே சமர்ப்பித் துள்ளார். பிரபல எழுத்தாளர் சங்கங்கள் தாம்

Page 84
138 ஈழம் தந்த கேசரி
எடுத்த பெருவிழாக்களிலெல்லாம் ‘பொன்னையா அரங்கம் அமைத்துச் சிறப்பித்துள்ளன. பிரபல எழுத்தாளர் திரு.எஸ்.பொன்னுத்துரை அவர்கள் தாம் முன்னின்று நடாத்திய மட்டக்களப்புத் தமிழ் விழாவிலும், வந்தாறுமூலை காப்பியப் பெருவிழாவிலும் ஈழகேசரி பொன்னையா அவர் களுக்கு முக்கிய இடமளித்து அவர் பெயரால் அரங்கம் அமைத்து திரு. பொன்னையா அவர்க ளது பெயரை நிலைநாட்டிச் சிறப்பித்துள்ளார். திரு. பொன்னையா அவர்களின் தொண்டுக்கு நன்றி மறவாமல் ஈழத்து எழுத்தாளர் இன்னும் செயல்புரிவது மனமகிழ்ச்சிக்குரியதாகும்.
* நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது கன்று'
என்பது தேவர் குறள். திரு. பொன்னையா அவர்கள் புகழ் நின்று நிலைபெறுவதாக !

கன்றுங் கனியுதவும்
தன்னைநேர் மயிலைப் பொன்னைய வேளின்
சால்பினிற் பிறந்துமீ குட்சி அன்னையின் மடியில் இருந்துமுத் தாடி ஆகரத் தகழ்ந்தெடா வினிய பொன்னெனு மிலங்கை மாப்பெருங் கிழவன்
புதியதோர் வடிவுகொண் டன்ன கன்மகன் வளர்ந்தே யையைந்தாண் டினிய
நடையினி லுயர்ந்துபேர் பெற்றன்.
ஈழகேசரி வெள்ளிவிழா மலரில் ஈழகேசரியை வாழ்த்தி, புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் எழுதிய வாழ்த்துப்பாடல் இது. தன்ஜனநேர் மயிஜலப் பொன்னைய வேளின் சார்பினிற் பிறந்த கதைகளைக் கண்டோம். * மீனட்சி அன்னையின் மடியில் இருந்து முத் தாடும் ' கதைதான் இந்த அத்தியாயம் ;

Page 85
1 4 0 ஈழம் தந்த கேசரி
கேன்றுங் கனியுதவும் காட்சிதான் நீங்கள் காணப் போகுங் காட்சி. திரு. பொன்னையா அவர்களின் பின் தனலக்குமி புத்தகசாலை, திருமகள் அழுத் தகம், வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், ஈழகேசரி (ஏழு வருடம்), சன்மார்க்க சபை என்ற ஸ்தாபனங்கள் அன்னரின் குறிக்கோளை நழுவ விடாது சென்ற பதினேழு வருடங்களாக எவ் வகையில் நடைபெறுகின்றன என்பதன் சுருக்கம் இது. அன்னை மீனுட்சியின் அரவணைப்பில் அவை செய்யுந் தொண்டின் பெருமையை எழுதாது விடின் இந்நூல் முழுமைபெருது என்ற உணர்வில் எழுந்த அத்தியாயம் இந்த அத்தியாயம்.
அணையா விளக்கு அணைந்துவிட்டது. திரு. பொன்னையா அவர்களது ஸ்தாபனங்கள் நடுக் கடலிலே தத்தளிக்குங் கப்பல்போல செய்வ தென்ன என்றறியாது திகைத்தன. அவருடைய தலைமையைப் போன்ற தலைமையும் செயற் றிறனும் யாருக்கு உண்டு? இவ்வளவு ஸ்தாபனங் களையுந் தலைமைதாங்கி இயக்கிப் பழைமையைப் போல நடாத்த யாருக்குத் துணிவு வரும் ? சாதாரணம்ான பெண்ணைப்போல வாழ்ந்து, திரு. பொன்னையா அவர்களின் குறிப்பறிந்து நடந்து, வீட்டிலே ஒரு கர்மயோகியைப் போல இருந்தவர் பூரீமதி மீனுட்சியம்மாள். தன் ஒரே யொரு புத்திரியாகிய புனிதவதியை வளர்ப்பதி லுஞ் சுற்றந் தழுவி நடப்பதிலும் இன்பங் கண்ட வர். அவர் இவ்வளவு பொறுப்புக்களையுந் தாமே ஏற்று நடாத்த முன்வந்தமை ஒரு துணிகரமிக்க செயலாகும். வேறு எந்த, யாழ்ப்பாணத்துக்

கன்றுங் கனியுதவும் 141
கிராமத்துப் பெண்மணியாய் இருந்தாலும் * கண்ட காசு ’க்கு இவற்றையெல்லாம் விற்று விட்டு, தொழிலாளரை நடுத் தெருவில் தவிக்க விட்டு ' தானுண்டு தன்பாடுண்டு ' என்றே இருந்துவிடுவார். துணிவுமிக்க திரு. பொன்னை யா அவர்களுக்கு ஏற்ற பத்தினி தான் என்பதை அவர் நிரூபித்தார்.
திரு. பொன்னையா அவர்கள் தனி ஒரு மனிதனுக இருந்து இவ்வளவு காரியங்களையும் நடத்தின லும் அவரது பின்னணி பலமானது; பெருமைதரக்கூடியது. திரு. ஹண்டி பேரின்ப நாயகம், திரு. எம். பாலசுந்தரம், திரு. ரி. ரி. இராசரத்தினம், செனற்றர் கனகநாயகம் முதலிய அரசியல்வாதிகளும், மனேஜர் இராச ரத்தினம், திரு. கு, நேசையா, திரு. ஏ. ஈ. தம்பர், கலைப்புலவர் க. நவரத்தினம் முதலிய பொதுநலத் தொண்டர்களும், திருவாளர்கள்: ச. அம்பிகை பாகன் பொ. வைரமுத்து, த. சீனிவாசகம், பொ. பொன்னம்பலம், அ. வெற்றிவேற்பிள்ளை, க. நாகலிங்கம், இ. தருமலிங்கம் முதலிய ஆசிரியர் களும், பிரபலமான எழுத்தாளர்களும் பின்னணி யில் இருந்தனர். கொழும்பில் திருவாளர்கள்: குல. சபாநாதன், வெள்ளவத்தை மு. இராமலிங்கம், முதலியார் செ. இராசநாயகம், சோ. நடராசன், முது தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, க. ச. அருணந்தி, கே. சி. தங்கராசா, எம். எஸ். இரத்தினம் எனப் பலர் இருந்தனர். அவரது கிராமத்தில் சன்மார்க்க சபை அங்கத்தவர்களும், பிரபல கமக்காரர்களும் பக்கபலமாய் விளங்கினர்.

Page 86
142 ஈழம் தந்த கேசரி
எனவே அவர் யோசித்து, துணிந்து கருமமாற்றி யதில் வியப்பில்லை. பூணிமதி மீனுட்சியம்மாளுக்கு நான்கைந்து பேரைத்தவிர வேறு பக்கபலமில்லை. எனினும் துணிந்து செயலில் இறங்கினர்.
இந்த ஸ்தாபனங்களில் மாற்றம் ஒன்றும் செய்யாமல், திரு. பொன்னையா அவர்களின்கீழ் 21 வருடம் வேலைபார்த்தவரும், பணத்துக்குப் பொறுப்பாயிருந்தவருமாகிய திரு.கோ. அப்பாக் குட்டியவர்களையே மனேஜராய் நியமித்து அவர்களிடமே எல்லாப் பொறுப்புக்களையும் ஒப் படைத்தார். திரு. கோ. அப்பாக்குட்டி அவர் களின் திறமைபற்றி அவரை நன்கு அறிந்தவ ராகிய திரு. ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள் அப்பாக்குட்டி அவர்களது நினைவு மஞ்சரி'யில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
' * Gaffi Gilmorribl 9 Iúil GL -oil (Sir Humphrey Davy) விஞ்ஞானத்திற் பெரும்புகழ் ஈட்டிய மேதை. பல அபூர்வமான சாதனைகளைச் செய்தவர். இவரை யாரோ " உங்களுடைய சாதனைகளில் மிகச் சிறந்த தாக எதைக் கருதுகிறீர் ' என்று கேட்டபோது * மைக்கல் வரடேயை என் உதவியாளனுகப் பெற் றதே என் உன்னத சாதனை' என்று கூறினராம்.
** ஈழகேசரிப் பொன்னையா பல அருஞ்செயல் களைச் செய்து பொருளும் புகழும் ஈட்டினர். இவ் வருஞ் செயல்களைச் செய்து முடிப்பதற்கு உதவிய வர்களில் முதலிடம் திரு. கோ. அப்பாக்குட்டி அவர் களுக்கே உரியது. மனேச்சர் இருந்த காலத்திற் போலவே யாவற்றையும் திரு. அப்பாக்குட்டி செய்து வந்தார். கணக்குகள், திட்டங்கள், புதுமுயற்சிகள் யாவும் முன்போலவே திரு, அப்பாக்குட்டியின் ஆணையிலே நடைபெற்றன.'

கன்றுங் கனியுதவும் 1 4 3
சிறந்த அனுபவ ஞானமுடைய அவர் திரு. பொன்னையா அவர்கள் சென்ற பாதையிலே செல்ல முன்வந்ததுமன்றி, அந்த ஸ்தாபனத்தைச் சீர்செய்து ஒழுங்கான வியாபாரம், சட்டரீதி யான சம்பளம், அன்பும் அமைதியும் கட்டுப் பாடும் கொண்ட மேற்பார்வை என்பவற்றிலே கவனஞ் செலுத்தினர். வெகுவிரைவிலேயே தான் சிறந்ததொரு நிருவாகஸ்தர் என்பதை உலகறியச் செய்தார்.
ஈழகேசரி வார இதழை நிறுத்தவேண்டிய அரசியற் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதை ஏற்கெனவே அவர் உணர்ந்தார். அது நிறுத்தப் படுவதில் பூரீமதி மீனுட்சியம்மாள் அவர்களுக்கு இருந்த துக்கம் சொல்லில் அடங்காதது. ஏற் கெனவே இரு மக்களை இழந்த அவர் அதனிலும் பார்க்கப் பெருந் துன்பமுற்ருர், அதற்கு ஈடாக ஏதாவது உபயோகமான காரியஞ் செய்யவேண்டு மென ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறை வேற்றத் திரு. அப்பாக்குட்டியவர்கள் முன் வந்தார். ஈழகேசரி வெள்ளிவிழா மலரை வெளிக் கொணர்ந்து ஈழமுந் தமிழ்நாடும் போற்றும்படி செய்தார். அதனேடு மாத்திரம் நின்றுவிடாமல் திரு. பொன்னையா அவர்களின் அத்தியந்த நண்பர்களான திரு. ஹண்டி பேரின்பநாயகம், கலைப்புலவர் க. நவரத்தினம், திரு. ச. அம்பிகை பாகன் என்பவர்களோடு வேறு சிலரையுஞ் சேர்த்து “ ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் ' என்ற நிறுவனத்தை 27-3-1954இல் நிறுவினர்.

Page 87
144 ஈழம் தந்த கேசரி
"ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் பற்றி ஈழகேசரி வெள்ளிவிழா மலரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
* வாழையின் கீழ்க் கன்றும் கனியுதவுமன்றே. திரு. நா. பொன்னையா அவர்களின் பத்தினியும் புத்திரியும் நண்பர்களும் திரு. பொன்னையா அவர் களின் பிரிவால் ஈழத்தமிழகத்துக்கு ஏற்பட்ட முதுவேனிலை இளவேனிலாயாவது ஆக்கமுயன்று "பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம்" என்னும் பெயருடைய கழகம் ஒன்றினை ஆரம்பித்து அதன் மூலம் அப் பெரியாரின் தொண்டினைத் தம்மால் இயன்றளவு தொடர்ந்து நாடாத்த விரும்பினர்.'
இந்த ‘ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளி யீட்டு மன்றம்" கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் எழுதிய "இலங்கையிற் கலை வளர்ச்சி’ என்ற மிகப் பெரிய கலைநூலையும் (ரூபா 10-50), மட்டக்களப்பு வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் எழுதிய " மட்டக்களப்புத் தமிழகம் ' (சாகித்தியமண்டலப் பரிசுபெற்றது; விலை ரூபா 10-00) என்ற நூலையும், இப்போதைய கோப்பாய்ப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கதிர வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய மேல்நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்’ என்ற நூலையும் (விலை ரூபா 3-00) வெளியிட்டது. இவையே யன்றிக் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இந்துசமயநூல் (Studies in Hinduism) ஒன்றையும் வெளியிட்டது. ஈழத்தின் பிரபலஎழுத்தாளர் மூதூர்,வ. அ. இராசரத்தினம் அவர்கள் எழுதிய 'கொழுகொம்பு’ என்ற நாவல் வட - இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகத்தின்

திருமதி பொது மீனுட்சியம்மையார் தமது மகளின் குடும்பத்துடன் காணப்படுகிறர்

Page 88
நா. பொன்னையா அவர்களது ல்வியாகிய திரு பொன்னை புதல்வியாகி
திருமதி புனிதவதியார் குடும்பம்
 

கன்றுங் கனியுதவும் 】45
பேரால் வெளியிடப்பட்டது. இவ் வெழுத்தாளர் களுக்கெல்லாம் நூலுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்பட்டது. (இது ஈழத்தில் ஒரு புதுமை.) இந்த வெளியீடுகள் எல்லாம் திரு. பொன்னையா அவர்களின் குறிக்கோளை இன்றும் அவரது ஸ்தாபனம் கைவிடவில்லை என்பதை நிரூபிக் கின்றன. திரு. பொன்னையா அவர்களது ஆன்மா இவற்ருல் நிச்சயம் மகிழ்வுறும்.
இக்காலகட்டத்திலேதான் திரு. பொன்னையா அவர்களது புத்திரி புனிதவதியாருக்குத் திருமணம் நடந்தேறியது. யாழ்ப்பாணத்திலே ஆயுர்வேத வைத்தியத்துறையில் பிரபலமுற்ற *கஸ்தூரியார்’ குடும்பத்திலே, சிறந்த பொதுநலத் தொண்டரும் பிரபல டக்டருமாகிய திரு. வ. த. பசுபதி அவர்களின் இரண்டாவது மகன் திரு. சிவா. பசுபதி அவர்களை (அரசாங்க சட்ட நுண் ணறிஞர் திணைக்கள - முடிக்குரிய நியாயவாதி) புனிதவதியார் மணந்தார். கஸ்தூரியார் குடும் பத்தின் வாரிசாகத் திகழ்ந்த வைத்தியசிகாமணி திரு. மு. கதிரைவேற்பிள்ளை அவர்களையும் திரு. நா. பொன்னையா அவர்களையும் ஒட்டிப் பிற வாத இரட்டையர் என்றே பலரும் அழைத்தனர். நட்புக்கு இலக்கணமாக இருவரும் வாழ்ந்தனர். வைத்தியசிகாமணி திரு. மு. கதிரைவேற்பிள்ளை அவர்களது மறைவு குறித்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதியபோது திரு. பொன்னையா அவர்களையும் உடன்சேர்த்து இரண்டு பெரிய கைகள் என்றே ன்முதினர். வட மாகாண அரசாங்க அதிபதியாய் இருந்தவரும்,
10

Page 89
146 ஈழம் தந்த கேசரி
இப்போது காணி நீர்ப்பாசன அபிவிருத்திப் பகுதிக்கு நிரந்தரக் காரியதரிசியாக இருப்பவரு மாகிய திரு. ம. பூரீகாந்தா அவர்கள் திரு. நா. பொன்னையா அவர்களது நெடுநாளைய உற்ற நண்பராவர். கஸ்தூரியார் குடும்பத்தில் இவர் விவாகஞ் செய்தவர். திரு. பூgரீகாந்தா அவர்களது வாழ்க்கையில் திரு. பொன்னையா அவர்களும், திரு. பொன்னையா அவர்களது முன்னேற்றத்தில் திரு. பூரீகாந்தா அவர்களும் கொண்ட ஈடுபாடு பலர் அறிந்ததே. இப்படிப்பட்ட நட்புக்குரியவர் களின் குடும்பத்திலே புனிதவதியார் திருமணஞ் செய்ததைக் கண்டு பூஜீமதி மீனுட்சியம்மையார் உளங் குளிர்ந்தார். இந்தத் திருமண வைபவத் தைக் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் தமது சொந்த மகளின் திருமணம் போன்று விம ரிசையாக நடாத்தினர். திரு. கோ. அப்பாக் குட்டி அவர்கள் கலைப்புலவர் அவர்களுக்கு வலக் கரம்போல் நின்று உதவினர். இப்போது அக் குடும்பம் மூன்று குழந்தைகளோடு சீருஞ் சிறப்பு மாய் வாழ்கிறது. திரு. பொன்னையா அவர்க ளது ஸ்தாபனங்களுக்கு அடுத்த வாரிசாகத் திகழ்பவர்கள் இக்குடும்பத்தினர்.
தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகிய வற்றின் இரண்டாம் பதிப்புக்களை திரு. கோ. அப்பாக்குட்டி அவர்கள் வெளியிட்டார். வித்துவ சிரோமணி கணேசையர் அவர்களை, திரு. நா. பொன்னையா அவர்களைப் போலவே, நன்கு போற்றினர். கணேசையர் அவர்கள் மறைந்த போது ' கணேசையர் நினைவு மலர் " ஒன்றைப் பெரிய அளவில் வெளியிட்டு அந்த ஸ்தாபனங் களின் பெருமையைக் காப்பாற்றினர்.

கன்றுங் கனியுதவும் 147
திரு. பொன்னையா அவர்களது காலத்தி லிருந்து வெளிவந்துகொண்டிருந்த பாடபுத்தகங் களோடு மாத்திரம் திருப்தியுருமல் தகுந்தவர் களைக் கொண்டு பல துறைகளிலும் பல பாட நூல்களை திரு. அப்பாக்குட்டி அவர்கள் எழுது வித்தார். (அவற்றின் விபரம் அனுபந்தத்தில் உண்டு.) சுத்தம், அழகு, பிழையின்மை என்னும் மூன்றும் அவரது மூச்சு. இவை மூன்றும் திரு. பொன்னையா அவர்கள் தந்த சொத்து.
10-7-63ஆந் திகதி திரு. கோ. அப்பாக்குட்டி யவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். மீண்டும் இந்த ஸ்தாபனங்களை நிர்வகித்து நடாத்துவது யார்? என்ற பிரச்சினை எழுந்தது. பூரீமதி மீனுகூழி யம்மையார் திரு. மு. சபாரத்தினம் அவர்கள் கையில் நிருவாகப் பொறுப்பை ஒப்படைத்தார். 1933ஆம் ஆண்டு தொடங்கியே ஈழகேசரிக் காரி யாலயத்தில் வேலை செய்ய ஆரம்பித்த திரு. மு. சபாரத்தினம் அவர்கள் அடியிலிருந்தே எல்லாப் பதவிகளையும் வகித்து அனுபவம் பெற்றவர்; திரு. நா. பொன்னையா அவர்களின் நெருங்கிய உறவினர். திரு. பொன்னையா அவர்கள் இவரைத் தமது மகன்போல வைத்து வளர்த்துக் காப்பாற் றியவர். ஆங்கிலக்கல்வி பயின்றிருந்தும்-வேறு உத்தியோகங்கள் பார்க்க வாய்ப்பிருந்தும் - அவற்றை நாடாமல் திரு. பொன்னையா அவர்க ளது ஸ்தாபனங்கள் வாழ்வதற்காக உழைத்தவர். பெரியோர்களுக்குப் பணிவும், திரு. பொன்னையா அவர்களின் நட்பாளர்களோடு தொடர்பும் உள்ளவர். எனவே தகுதியானவரின் கையிற்

Page 90
148 ஈழம் தந்த கேசரி
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
1966ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பாடபுத்தகங்களைத் தாமே பதிப்பித்து வெளி யிட்டு அவற்றையே பாடசாலைகளிற் படிப்பிக்க வேண்டுமெனக் கட்டளை பிறப்பித்தது. இதனல் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட ஸ்தாபனங்களு ளொன்று திரு. பொன்னையா அவர்களது வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகமாகும். நூறு புத்தகங்களுக்குமேல் (பாடபுத்தகங்கள்) வெளி யிட்ட அந்த ஸ்தாபனம் இந்த உத்தரவினுல் நிலை குலையவேண்டி ஏற்பட்டது. எனினும் திரு. மு. சபாரத்தினம் அவர்கள் தளரவில்லை. முன்பு வெளியேயிருந்து வரும் வேலைகளைத் திருமகள் அழுத்தகம் எடுப்பது குறைவு. இந்தக் கஷ்டமான சூழ்நிலையை வெளியே இருந்துவந்த பெரியபுத்தக வேலைகளைக்கொண்டும், யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய கல்லூரிகள் கொடுக்கும் வேலைகளைக் கொண்டும் அவர் ஒரளவு சமாளித்தார். பூரீலங்கா சாகித்தியமண்டலம் தொகுத்து வெளியிட்ட (620 பக்கங்கள்) “ ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’, பேராதனைப் பல்கலைக்கழக - இந்து மாணவர் சங்கம் வெளியிட்ட கந்தபுராணம் - தக்ஷகாண்ட உரை" (பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள்) ( 850 பக்கங்கள் ) என்னும் நூல்கள் இக்காலத்தே வெளிவந்து திருமகள் அழுத்தகத்தின் புகழை மேலும் ஒருபடி உயர்த் தின. வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் தொகுக்கும் கண்ணகி வழக்குரை

கன்றுங் கனியுதவும் 149
என்னும் நூலினை அடுத்த மாத முற்பகுதியில் வெளியிட அச்சுவேலை நடந்துகொண்டிருக்கிறது. பாட புத்தகங்கள் இல்லாதுவிட்டால் திரு. பொன்னையா அவர்களது புத்தகசாலையும் அச்சுக் கூடமும் மூடப்படவேண்டியவைதான் எனப் பலர் வெளிப்படையாகவே பேசினர். ஆனல், நல்லவர் நன்மனத்தோடு தொடங்கிய தொழில் ஸ்தாபனங்கள் எப்போதும் அழிவதில்லை என்பது 2d GT of D.
சன்மார்க்க சபையும் திரு. பொன்னையா அவர்களது ஸ்தாபனமே. அந்த ஸ்தாபனம் திரு. பொன்னையா அவர்களின் அரவணைப்பிலே வளர்ந்தது. அவரே சபையின் மூலவேர்; அவர் அமரரானதும் சன்மார்க்க சபை தலைவ னில்லாத குடும்பம் போலத் தத்தளித்தது. இச் சந்தர்ப்பத்தில், சிலர் சபையைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். சில காரணங்களால், சிலர் பகிரங்கமாகவே எதிர்த்தனர். எனினும் சன் மார்க்க சபை தன் குறிக்கோளில் வழுவாது பீடுநடை போட்டது. சபை பல உபசங்கங்களைக் கொண்டு இயங்கியது. வலி-வடக்கிலும் யாழ்ப் பாணப் பிரிவிலும் முதன்மையான கிராம முன்னேற்றச் சங்கம் என மதிக்கப்பட்டு, பரிசுக் கேடயங்களைப் பெற்றுக்கொண்டது. சபை சமயப் பணியில் ஊக்கங்காட்டிச் சித்தாந்த வகுப்புக்களை நடாத்தியும், மாணவர்களுக்கான சைவசமய போதினி 2, 3, 4, 5, 6ஆம் நூல்களை ஆக்கியும், பல சிறு சமயத் தோத்திர நூல்களை இலவசமாய் வெளியிட்டும் நற்பணிபுரிந்துள்ளது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின்

Page 91
150 ஈழம் தந்த கேசரி
"சைவநற்சிந்தனைகள்’ என்னும் சிறுநூலை அழகாக வெளியிட்டது. இவை மாத்திரமன்றி ஒவியக்கலை, சிறுவர் சித்திரம் (கலாகேசரி ஆ. தம்பித்துரை), மாவிட்டபுரத் திருத்தல வரலாறு (பிரம்மபூரீ து. ஷண்முகநாதக் குருக்கள்) என்னும் நல்ல நூல் களையும் வெளியிட்டது. இந்தப் பணிகளெல்லாம் சன்மார்க்க சபை, திரு. பொன்னையா அவர்களின் அடிச்சுவட்டிற் சென்றுகொண்டிருப்பதைப் புலப் படுத்துவதாகும்.
திருவாளர்கள் : சி. இரத்தினம், வ. செல்லத்துரை, ஆ. முத்தையா, ஏ. ரி. பொன்னுத்துரை, க. செல்லையா, பொ. இராச ரத்தினம், ம. சபாரத்தினம், தா. மகேந்திரம் என்போர் சபையின் நிர்வாகஸ்தர்களாகி ஒரே குடும்பத்தவர் போலச் சேர்ந்து ஒத்துழைத்துச் சபையை நிலைகுலையவிடாது ஸ்திரமாக்கினர். சபை தனது முப்பதாம் ஆண்டை மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடி அருமையான ஒரு மலரையும் வெளியிட்டது. திரு. பொன்னையா அவர்களின் புகழைக் குன்றவிடாமற் பாது காப்பதில் சபை எப்போதுங் கண்ணுங் கருத்து மாக இருந்துவருகின்றது.
'திரு. பொன்னையா அவர்கள் தமிழுக்குத் தாம் செய்தனவற்றைவிட மற்றும் பல புதிய பணிகளைச் செய்தல்வேண்டும் என்னும் எண்ணத்துடன் பல திட்டங்கள் போட்டிருந்தார். அவற்றையெல்லாம் தமது நண்பர்களுடன் கலந்து பலமுறைகளில் ஆலோசித்தும் வந்தார். நாமிருவரும் 1949ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலுள்ள கலைக்கழகங்களையும் திருக்கோயில்களையும் பிற நிலையங்களையும் பார்வை யிடும் நோக்கமாகச் சென்றிருந்தபொழுது அங்கு

கன்றுங் கனியுதவும் 151
கண்ட கலை ஆராய்ச்சி நிலையங்களைப் போன்ற ஒரு நிலையத்தை யாழ்ப்பாணத்திலும் அமைக்கவேண்டு மென்று கருதினர். அவ்வழியில் என்னைத் தூண்டியது மன்றி அத்தகைய ஒரு ஆராய்ச்சிக் கழகத்திற்கு மூலதனமாக ரூபாய் 10,000 தருவதாகவும் வாக் களித்தார்.
** இக்காலச் சூழ்நிலைக்கேற்ற விதத்தில் சைவ சமயம் வளர்ச்சிபெற்றுச் சிறக்கவேண்டு மென்னும் கருத்தோடு அதற்காவன செய்ய முயன்ருர் . இக் கால மாணவர்களுக்கேற்ற முறையில் தமிழிலும்
ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடுவதற்கு " இந்து சமய வெளியீட்டு நிலையம் " (Hindu Literature Society) ஒன்று நிறுவுதல் வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தார். இந்துமத பாலபோதினி என்னும் வரிசையில் நூல்கள் வெளியிட ஒழுங்குகள் செய் திருந்தார்.
* தமிழ்க்கலை வளர்ச்சிக்காக யாழ்ப்பாணத்துக் கலாநிலையத்தார் வெளியிட்ட ஞாயிறு போன்ற ஒரு மாத வெளியீட்டை வெளியிடவேண்டுமென்றும் தீர்மானித்திருந்தார்.'
கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் 1954ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் (சிறு நூலாகவும் வெளிவந்தது) திரு. பொன்னையா அவர்களது எதிர்காலத் திட்டங்கள் எவையா யிருந்தன என எழுதியிருப்பதே மேற்காட்டி யிருக்கும் பகுதியாகும். இப்படி வித்துவசிரோமணி பிரம்மபூரீ சி. கணேசையர் அவர்களும் முதலியார் குல. சபாநாதன் அவர்களும் தங்கள் கட்டுரை களில் திரு. பொன்னையா அவர்களின் எதிர்காலத் திட்டம் என வேறு சிலவற்றைக் குறிப்பிட்டுள் ளார்கள். திரு. பொன்னையா அவர்கள் மொழி,

Page 92
152 ஈழம் தந்த கேசரி
சமயம், பாடபுத்தகங்கள் சம்பந்தமாகப் பல கோணங்களில் நின்று சிந்திப்பவர் ; திட்டங்கள் தீட்டுபவர் என்பதுண்மை.
இத் திட்டங்களை அவர் இருந்திருந்தால் ஒரளவு செய்து முடித்திருப்பார். அவர் அமர ராகிப் பதினேழு வருடங்கள் கழிந்துவிட்டன. அவரது இலட்சியக் கனவுகளின் ஒரு பகுதியை அன்னை பூரீமதி மீனட்சியம்மையார் அவர்களின் அனுசரணையுடன் ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றமும், வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகமும், திருமகள் அழுத்தகமும், சன்மார்க்கசபையும் செய்துள்ளன என்பதில் அனைவரும் பெருமைப்படலாம்.
இனி, அவரது இலட்சியக் கனவுகளை வென் றெடுத்துப் பீடுநடை போடமுடியுமா ? இப்போ துள்ள சூழ்நிலையில் கனவுகள் நனவாகுமா ? இதுவே அவரது ஸ்தாபனங்களை நடாத்துவோ ரது முன் உள்ள கேள்வி.
காலந்தான் பதில் சொல்ல வேண்டும். " ஆற்றுப் பெருக்கற்று அடிசுடு மந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் " என்பது கல்வழியில் உள்ள பாடல். அந்த ஸ்தாபனங்கள் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டி திரு. பொன்னையா அவர்களது புகழை மங்காமல் காக்கும் என்பதுறுதி.
* நயனெடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு."
- குறள

அனுபந்தம்
திரு. நா. பொன்னையா அவர்கள் அமரத்துவமடைந்த செய்திகேட்டுப் புலவர்களும் எழுத்தாளர்களும் அரசியல் வாதிகளும் பெரியோர்களும் அவரது சேவை குறித்துக் கவிதைகளாக, கட்டுரைகளாக, அனுதாபச்செய்திகளாக ஏராளமானவற்றை எழுதி அனுப்பினர். பல பத்திரிகைகள் இந்நாட்டிலும் தமிழ் நாட்டிலும் ஆசிரியத் தலையங்கம் எழுதிச் சிறப்பித்தன. அவற்றையெல்லாங் திரட்டி முழுமையாக வெளியிடுவதென்றல் அதுவே தனிநூலாய்பெருநூலாய் - அமைந்துவிடும். எனவே கவிதைகளில் ஒவ்வொன்றும் பத்திரிகைகள் எழுதியவற்றில் முக்கிய பகுதியும் அனுதாபச் செய்திகளில் முக்கியமான சிறு பகுதியும் தெரியப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் திரு. பொன்னையா அவர்கள் பெற்றிருந்த புகழ் எத்தகையது என்பதை ஒருவாறு ஊகித்துக்கொள்ளலாம். ஈழநாட்டு எழுத்தாளர், அறிஞர்களது கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இந்நூலிலுள்ள அத்தியாயங்களில் மேற்கோள்களாக வந்திருப்பதால் அனுபந்தத்திற் சேர்க்கப் படவில்லை.

Page 93

1. கவிதைகளிலிருந்து
வைதாலும் வாழ்த்தாகக் கொண்டுபிற
ருடன்சற்றும் பகைமை வையா ஐயாவோ வரசினராற் சமாதான
நீதிக்கோ ரதிய ஞகிப் பொய்யாத புகழ்படைத்த புண்ணியனே
தமிழ்மொழிக்குப் பொற்பூ ஞக உய்வார்தொல் காப்பியநூல் கணேசையர் தரப்பதிப்பித் துதவுஞ் செம்மால்.
- நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்
அன்னையே போல அருந்தமிழை ஆதரித்த பொன்னையா விண்ணுலகம் போயினனே-மன்னுலகில் பாவலர் நாவலர் பத்திரிகை ஆசிரியர் யாவரும் தேடியழ இன்று.
-க விமணி தேசிகவிநாயகம்பிள்ளை
பாவும் பொருளுமெனப் பண்புடனே யாழ்ப்பாண நாவும் செயலுமென நன்றிசைத்தான் - சாவனே பொன்னன கேசரிக்குப் பொங்கும் புகழுடனே மின்னிரத்தி னம்மிருக்க வே.
- யோகி சுத்தானந்த பாரதியார்
திருந்துஞ் செல்வப் பேறமைந்து
சிறக்குஞ் சீர்சா லீழமிசைச் செம்மை மலிந்த தமிழணங்கு
திகழப் பயந்த புதல்வருள்ளே விருந்தின் பான்மை நனிதெரிந்த
மேன்மைத் தமிழன் நீயென்றே விழைந்து புதிய பாரதமும்
விளம்ப விளங்கி வாழ்ந்தனையே

Page 94
iV
கரிந்து புகைந்த யாழ்ப்பாணக்
கன்னி யழகின் முறுக்கேறிக் கவிஞர் தமிழின் அரசிருக்கை
காணு கென்று புலவர்பலர் தெரிந்து நன்ன ரிசைபேசச்
செய்த பெரியோய்! பொன்னையச் செம்மால் ! நினது பணியெண்ணிச்
சிந்தை தளர்ந்தேம் பிரிந்தனையே !
- முதுதமிழ்ப்புலவர் மு. நல்லதம்பி
ஒருவகுப்பார் ஒருவகுப்பை ஒருவகுப்பார்க்
கெளிதாக்கி யொன்ருய்த் தம்முள் இருவகுப்பார் வாழநினை குறுமனக்கோள்
இனிதாகா திதனுல் இங்கே வருவகுப்பார் மூவரும்போய் மடிவுறுவர்
மனங்கலந்தே மணித்தாய் நாட்டின் திருவகுப்பார் ஆவீர்நீர் மூவீரு
மொருவிரெனத் தெருட்டும் மேலோன்.
- புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
சீர்விகிர்தி பங்குனியிற் சேர்ந்தபத் தாறுகுரு ஆர்ந்ததிதி யட்டமியே ஆதியருள் - நேர்ந்ததது பொன்னையன் விட்டகன்ருன் பொற்பார் தமிழ்வீறு என்னுமோ இப்பாரி னிங்கு.
- தமிழ்ப்பண்டிதர் வ. மு. இரத்தினேஸ்வரையர்
உலகினிலே தோன்றியவர் எல்லா ருள்ளும்
ஒருசிலரே தம்பெயரை ஓங்க நாட்டி விலகிடுவார்; அவர் புரிந்த காரி யங்கள்
மிகுபலனை மானுடர்க்கு விளைத்து நிற்கும் வலதுகரம் ஒருகருமம் செய்யும் போது
மறுகரத்துக் கதுதெரியா வாறு வாழ்ந்திந் நிலவுலகை நீத்தார்நாப் பொன்னை யாவார்
நினைவலைக்குள் இவர் புகழும் நிலைத்தே நிற்கும்.
- Frys5r

V
தன்னிக ரில்லாத் தமிழினைப் புரந்த
தன்மையைப் போலவித் தரணி பன்னரும் புலவர் பண்டித ரோசர் பாங்குறு நல்லெழுத் தாளர் துன்னுபற் பலர்க்கும் ஆதர வளித்துத்
தோழமை யோடிவண் வாழ்ந்த பொன்னைய வென்னும் நன்னய மன்ன!
புகலிடங் காணவெங் குறுவேம் !
- கவிஞர் க. த. ஞானப்பிரகாசம்
தாமோ தரக்குரிசில் தந்ததமிழ்க் காப்பியத்தை நாமோத வைத்திட்ட நற்றமிழன் - பூமேல் புகழ்தனையே நாட்டிப் புரிந்தறத்தைப் போற்றிச் செகதலத்தை நீத்தான் சிறந்து.
- மா. பீதாம்பரன்
சீருறும் தமிழி னிழ
கேசரிக் கதிப ராகிப் பாருறுங் கொள்கை நாட்டிப்
பல்வகைத் தமிழ்நூ லச்சில் ஏருறும் வகையி னேற்றி
இனியன புரிந்த உன்னைக் காருறும் கொண்ட லன்னுய் !
காண்பமோ இனியும் நாமே.
Luciurus if its IT. as isosun
பொன்மலியு மிலங்கையனை யீன்ற சீர்த்திப்
புரையோரி லொருவனெனத் திகழ்ந்த தோன்றல்
தென்மலியு நம்மொழியின் வளர்ச்சிக் காகத்
திகழுமர சியனிதி தமிழர் மேவ
வின் மலியும் புகழ்ராம நாதன் பேரால்
மேவிழ கேசரியென் கிழமைத் தாளால்
புன்மலியும் பொய்கோள்க ளிரிபு பேரப்
புத்தறிவு தந்தருள் பொன் னைய வேளே.
- சி. இ. க.

Page 95
Vi
வாரம் ஒருமுறை வரும்வெளி கேசரி வளர்த்தநல் லதிபன் மாண்டானே வீரம் படைத்தபொன் னையா வோவென விம்முவ தில்லையோ இலங்காவே.
- க. ச. அருணந்தி
தரணிதரு மிகுபுகழோன் குரும்ப சிட்டித்
தன்பதியிற் சன்மார்க்க சபைதா பித்தோன் திருமகளச் சகத்துடனே சிறந்த ஈழ
கேசரியுந் தந்தளித்த செல்வச் சீமான் கருணையுடன் ஏழைகளைக் காக்கும் வள்ளல்
கலாபீடங் கட்குதவும் கண்ய சீலன் பெருமைபொறை யாண்மைதயை பிறங்கு செம்மல்
பெட்புமிகு பொன்னைய ஞமம் வாழி.
- பிரேமசுந்தரன்
அத்தியா வசிய மான
அனேகபுத் தகங்கள் கோத்தாய் வித்தியா விருத்திச் சங்கம்
விளங்கவே பொருள்க ளிந்தாய் நேர்த்தியாய் வயாவி ளானில்
நிறுவினுய் வித்யா பீடம் பூர்த்திசெய் தாயே பின்னும்
பல்கலைப் பணிக ளெல்லாம்.
u if u Deir
ஈழத்து வாழும் இலக்கிய மன்னர்
இந்திய நாட்டுள செந்தமிழ் வீரர் காளைப் பருவத்துக் கட்டுரை தாங்கிக்
கண்களும் நின்று களிப்புறும் வண்ணம் வாழப் பிறந்தவன் என்றுபல் லோரும்
வணங்க நின்று புகழொடும் வாழ்ந்தே மீளத் திரும்பா உலகம் புகுந்தான்
வேந்தன் பொன்னைய வேளென நின்றே.
- Garre

11. பத்திரிகைகளிலிருந்து
வீரகேசரி
திரு. நா. பொன்னையா அவர்கள் தன் சுயமுயற்சியினல் முன்னுக்கு வந்தவர். அச்சகம் ஆரம்பித்துப் படிப்படியாக வளர்ந்து ஈழகேசரியையும் தொடர்ந்து ஊக்கத்துடன் நடாத்தி வந்தார். தொல்காப்பியத்தை (கணேசையர் உரைவிளக்கக் குறிப்பு) அழகாகப் பதிப்பித்தும் தமிழ் அறிஞர்களுக்குப் பலவிதங்களில் ஊக்கமளித்தும் தமி ழன்னைக்குக் கடைசிவரை நல்ல தொண்டாற்றினர்.
அவர் கதர் அபிமானி. காந்தீயக் கொள்கைகளில் பற் றுள்ளவர். திரிபுரியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்தார். கிராமாபிவிருத்தி வேலைகளில் ஊக்கங் காட்டியதுடன் வயாவிளானில் ஒரு கைத்தொழிற் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நடாத்த இருந்தார். அந்த இடத்தில் இப்போது அரசாங்கம் சென்ரல் ஸ்கூல் (மத்திய கல்லூரி) வைத்து நடாத்தி வருகின்றது.
யாழ்ப்பாணத்திலே தமிழ்விழா நடக்கவிருக்கும் சமயத்தில் அவர் மறைந்தது பெரிய குறை.
தினகரன்
தொல்காப்பியப் பதிப்போடு சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களுடைய நூல்களையும், தமிழ்ச் சிறர்களுக் குப் பள்ளிக்கூடப் புத்தகங்களையும் அழகிய முறையிலே அச்சேற்றி உபகரித்துள்ளார் திரு. நா. பொன்னையா அவர்கள். ஈழநாட்டில் சித்திரை வருடப்பிறப்புத்தோறும் வர்ண ஒவியமும், பாட்டும் உரையும் தீட்டிய ஆண்டுமலர் களை 1935ஆம் ஆண்டு தொடக்கம் 1940ஆம் ஆண்டு வரை உயர்ந்த முறையில் உற்பவித்தவரும் இவரே.

Page 96
Viii
இந்துசாதனம்
தனலக்குமி புத்தகசாலை, திருமகள் அச்சியந்திரம், ஈழகேசரி என்னும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை முதலிய இவைகளை யெல்லாம் தாபித்து முட்டின்றி நடாத்தி வந்தவர் திரு. நா. பொன்னையா. தமிழ் மொழியில் யாழ்ப்பாணத்தில் நீடித்த காலமாக அச்சிடப்படா திருந்த தொல்காப்பியத்து முதல் மூன்று அதிகாரங் களையும் வித்துவான் சி. கணேசையரைக்கொண்டு திருத்து வித்துப் பெரும் பொருள் செலவிட்டுச் சிறந்த முறை யில் அச்சிட்டு வனப்புவாய்ப்பக் கட்டி வெளியிட்டுள் ளனர். கல்வி சம்பந்தமான விஷயத்தில் உழைத்த தோடல்லாமல் விவசாயம், கைத்தொழில் என்னுமிவை களிலும் ஆர்வமுடையவராய் அவற்றை விருத்திசெய்யும் படி உழைத்துவந்தார். பள்ளிக்கூடங்களுக்குரிய பாடப் புத்தகங்களை இயற்றுவித்து அச்சிட்டு மலிவாக விற்று வந்த மையால் இவர் மாணுக்கருலகிற்குப் பெரும் உதவி செய்து வந்தார். தாம் ஈட்டிய பொருளிற் பெரும் பாகத்தை வித்தியாதாபனம், பொதுத்தாபனம் முதலாம் சத் கருமங்களின் பொருட்டு வழங்கினர். அவர் மரண பரியந்தம் தமிழ் மொழிக்கும் நம் நாட்டிற்கும் ஆற்றி வந்த தொண்டுகளை அவருடைய பகைவர் யாராயினு மிருந் தால் அவர்களும் பாராட்டாமலிருக்க முடியாது.
சத்தியவேத பாதுகாவலன்
இவர் ஒரு பிறவிச் செல்வரல்ல, இளமையிலேயே வறுமையை நன்கு சுவைபார்த்தவர். ஆயினும் தமது அயரா முயற்சியாலே பெரும் பொருளீட்டிப் பெருமை யான காரியங்களைச் சாதித்துப் பெரும் புகழீட்டி யிருக் கிருர், தமிழ்ப் பேரறிஞருள் ஒருவராக விளங்கியவரும் எமது சுற்றத்தவருமான சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்களின் ஞாபகமாக அன்னுர் பதித்த தொல்காப்பியம் முழுவதையும் நாற்பெருங் கூறிட்டு அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்டார். இவர் மயிலிட்டிக் கிராமசங்கத்

ix
தலைவராயிருந்தும், மற்றும் பல சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி நமது அரசினர் இவருக்கு ஜே. பி. என்னும் சமாதான நீதிபதிப் பட்டம் வழங்கி இவரைச் சன்மானித்திருந்தனர்.
பூநீலங்கா
1929ஆம் ஆண்டு திருமகள் அழுத்தகம் என்னும் பெயர்வாய்ந்த ஒரு அச்சுக்கூடத்தை ஸ்தாபித்து1930ஆம் ஆண்டு யூன் மாதம் 21ஆம் திகதி சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தீரச் செயல் ஞாபகார்த்தமாக ஈழகேசரி வாரப்பதிப்பை ஆரம்பித்தார்.
தொல்காப்பியம், தென் இந்திய சிற்பவடிவங்கள், சுவாமி ஞானப்பிரகாசர் (ஓ. எம். ஐ.) அவர்களின் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி முதலிய உயர்தரத் தமிழ் நூல்களையும் பாடசாலைப் புத்தகங்களையும் சிறந்த அழகிய முறையில் பதிப்பித்து வெளியிட்டார்.
தமது கிராமமக்களின் சேவைக்காக 1936ஆம் ஆண்டு முதல் கிராமசங்க அங்கத்தவராய்க் கடமையாற்றி 1946ஆம் ஆண்டு தொடக்கம் இறக்கும் வரையும் மயி லிட்டிக் கிராமசபைத் தலைவராகவும் அருஞ்சேவை செய்தார்.
கல்கி
அரசியற் துறையிலும் சமூக வாழ்க்கையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு ஈழகேசரி தலைசிறந்த தொண்டு புரிந்து வருகிறது. ஈழநாட்டின் புதுமை எழுத்தாளர்கள் பலர் ஈழகேசரியின் மூலம் தமிழை வளர்த்து வருகிறர்கள். இத்தகைய ஒரு பத்திரிகையை நிறுவி வலிமை பொருந்திய ஸ்தாபனம் ஆக்கியவர் பூரீ பொன்னையா அவர்கள். அவருடைய அச்சகத்தின் மூலமாகத் தமிழ்மொழிக்கு அவர் செய்துவந்த திருப்பணி போற்றற்குரியது. பல பழந்தமிழ் இலக்கிய நூல்களை அவர் நல்லமுறையில்
1

Page 97
Χ
திருத்தமாக அச்சிட்டுப் பதிப்பித்து வந்தார். தாய் நாட்டிலிருந்து ஈழநாடு செல்லும் தமிழ் அன்பர்களும், தமிழ் அறிஞர்களும் ஈழகேசரிக் காரியாலயத்தைத் தேடிச் சென்று பூரீ பொன்னையாவைச் சந்தித்துவிட்டு வருவது வழக்கம். அத்தகையவர் காலமானபடியால் ஈழநாடு இன்று களை இழந்து இருக்கிறது. பூரீ பொன்னையாவின் ஸ்தாபனத்திலிருந்து தொண்டுபுரிய அவரைப்போல் யார் உளர் என்ற ஏக்கம் அவரை அறிந்தவர் எல்லாருடைய உள்ளத்திலும் உண்டாவது இயல்பு.
The Late
Mr. N. PONNIAH
The death of Mr. N. Ponniah, affectionately and appropriately called “Eelakesari Ponniah, has robbed the Tamil community of one of its trusted leaders and the country of an ardent nationalist and patriot. His contribution to the Tamils in particular and to the country in general has been in several fields, but his greatest contribution has been through the Tamil weekly Eelakesari. That is why we consider it very appropriate that his name is so closely and intimately connected with the paper. The Eelakesari has been for the last 21 years filling a Very large place in the cultural and political life of our people. Mr. N. Ponniah was responsible for the consistent maintaining of a high standard of journalism. It is to his great credit that he never allowed himself to be allured by new fads or to arouse the passions of the unthinking masses. His writings were always marked with dignity and restraint, sobriety and wisdom, strong convictions and unerring judgment. He was

Χi
always a progressive reformer. During the hectic days of the last Parliamentary elections in Jaffna and the Tamil Congress frenzy, he kept his head cool and warned his countrymen against their communal outlook. To him the path to wisdom for the Tamils lay in their active co-operation with the major community both for their own sake and for the welfare of the country as a whole. No narrow outlook or petty prejudice ever marred his public or private life. Among the public causes he espoused, we remember with gratitude se Veral causes of the Christian Crurch in this land. He never lost an opportunity. Hindu though he was, to remind his fellow countrymen of the deep and lasting debt of gratitude they owed to the Christian Missionaries for their incalculable contribution during one century and more for the advancement of Jaffna.
He was also of the greatest help and strength to the people of his village. Not only did he set for them the example of a practical agriculturist, but also worked as Chairman of his Village Committee for the improvement of the village and for the raising of their standard of living. The Local Government circles here have thus lost in him an inder fatigable worker and a true leader.
- The Morning Star

Page 98
The Late
Mr. N. PONNIAH
Founder & Editor of the EELAKESARI
The South Indian Journalist, the organ of the Southern India Journalists' Federation Madras, in its
issue of April 1951 observes :
We regret to record the death of Mr. N. Ponniah, founder and Editor of Jaffna's notionalist Tamil weekly Eelakesari, on March 30, 1951. He was 59.
Born in a humble middle class family in Jaffna, the late Mr. N. Ponniah started life as an agriculturist. Even in his early days he had a yearning to enter the journalistic field and he worked in Various printing establishments to gain first hand experience of the publication of journals. In 1918, Mr. Ponniah paid a Visit to Burma and Malaya. In Rangoon, he served as Assistant Editor of “Swadesamitran. On his return to his native place in 1925, he resumed his work in the printing line. It was in 1929 that he started his own printing press, the “Tirumakal Press '', and started publication of the weekly Eelakesari in 1930. Mr. Ponniah published

xiii
many valuable works like “An Etymological and Comparative Lexicon of the Tamil Language'. He was also associated with the publication of two
English weeklies, “ Ceylon Patriot and “Kesari', for some time.
Subsequently Mr. Ponniah took a prominent part in Various public activities. Through his journal Eelakesari, he raised contributions from the public for the Bihar Earthquake Relief Fund and the Bharathi Mandapa Nidhi. The late Mr. Ponniah eVinced keen interest in the struggle for freedom in India. He donated liberally for educational and charitable purposes. Mr. Ponniah gave all encouragement to scholars and writers. He leaves his wife Meenakshi Ammaiyar, and a daughter, Punithavathi.

Page 99
11. அனுதாபச் செய்திகளிலிருந்து
* யமன் யாரையும் விடமாட்டான். நம்முடைய முன்னேர்களுடைய உபதேசத்தில் நாம் தைரியமும்
சாந்தியும் காணவேண்டும்.”*
- இராசகோபாலாச்சாரி
'நமது அருமை நண்பர் திரு. பொன்னையா அவர்கள் நம்மைவிட்டுப் போய்விட்டார் என்ற செய்தி இடி விழுந்ததுபோற் கலக்கிவிட்டது. அவரைப்போன்ற விஸ்தார மனமுள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மிகவும் அருமை அவரை எப்படி வாழ்த்தினுலும் தகும்.’’
- ஆஸ்தான கவிஞர் . வெ. இராமலிங்கம்பிள்ளை
** கடந்த 21 ஆண்டுகளாக ஈழகேசரியைச் செம்மை யான முறையில் வெளியிட்டுப் பொன்றப் புகழ் பெற்றவர் திரு. பொன்னையா அவர்கள். இந்தியாவையும் ஈழத்தையும் இலக்கிய வாயிலாக இணைத்தபெருமை ஈழகேசரியைச் சார்ந்த தாகும். இவர் ஈழகேசரி வாயிலாக மக்களுக்குத் தேசீய உணர்ச்சியை ஊட்டினர். தொல்காப்பியம் முதலிய அரிய தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தொண் டாற்றினர்.'
ஆ. ஆலாலசுந்தரஞ் செட்டியார் தமிழ்ப்பேராசிரியர், சென்னைக் கிறித்தவக்கல்லூரி, தாம்பரம்
* ஈழகேசரி தனக்கென ஒரு தனிப் பண்புடன் வெளி வந்துகொண்டிருக்கும் பத்திரிகை என்பது என் அபிப்பி ராயம். பழைமையை மறந்த மறுமலர்ச்சிப் பாதையிலும் செல்லாமல், புதுமையை மறுக்கும் பண்டிதப் பாதை யிலும் செல்லாமல் பழைமையின் அஸ்திவாரத்திற்ருன் புதுமை இலக்கியம் உருவாகவேண்டும் என்ற அபிப்பிரா யத்தைச் சொல்லாமற் சொல்லிப் பணியாற்றி வருவது ஈழகேசரி.'
-ரகுநாதன், சக்தி காரியாலயம், சென்னை

XV
* திரு. பொன்னையா அவர்களுடைய வாழ்வு மிகவும் உயர்வானது; பின்பற்றக்கூடிய லட்சியம் நிறைந்தது. அவர்க ளுடைய பிரிவு தமிழ் வளர்க்கும் ஈழநாட்டுக்கு மாத்திர மல்ல, தமிழகத்துக்கும் நஷ்டந்தான். ஈழகேசரி சிறந்து நடைபெற்று அவர்கள் புகழை நீண்டகாலம் பரப்பிக்
கொண்டிருக்கும் என நம்புகிறேன்.'
- அகிலன், திருச்சி
"தமிழுக்குத் தனிநின்று பெருந்தொண்டு புரிந்த பெருஞ்சிங்கம் மறைந்தது. நம்பமுடியவில்லை. அவர் காட்டிய வழியே செல்வோமாக !'
- தெ. பொ. மீனுட்சிசுந்தரன், சென்னை
* சென்ற 11-3-51 மாலை திரு. பொன்னையா அவர்களைக் கடைசியாக மானிப்பாய் வைத்தியசாலையிற் பார்த்தேன். அப்போது அவர் இப்படித் திடீரென்று எம்மைவிட்டுப் பிரிந்துவிடுவார் என்று கனவிலும் நினைக்க வில்லை. அவரது சாந்தந்ததும்பும் முகமும் அன்பு கனியும் பார்வையும் என்கண்முன் எப்பொழுதும் நிற்கின்றன. அவர் என்பாற்கொண்டிருந்த அன்பு என்னைப் பரவச மடையச் செய்தது.என்னை அவர் ஒரு சகோதரனுகவே பாவித்து வந்தார்.'
- வி. வி. சடகோபன்
‘எங்கள் நண்பர் திரு. பொன்னையா அவர்களின் பிரிவை அறிந்து வருந்துகின்றேன். தமிழ் நாட்டுக்கு அவர் செய்துள்ள சேவையை ஒருவரும் மறக்கமுடியாது. இப் பெரியாரின் ஞாபகம் என்றும் நிலைத்திருப்பதற்கான ஒரு பணியை இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள தமிழ் மக்கள் செய்வார்கள் என்பது என் நம்பிக்கை.”
- ரஞ்சன் , ஆசிரியர், காட்டியம்
** திரு. பொன்னையா அவர்கள் மறைந்தாலும் ஈழகேசரி முன்போலவே வெளியாகி அதன் சிறந்த சேவையைச் செய்யுமென்று நம்புகின்றேன்.'
- பெ. தூரன், கலைக்களஞ்சியம்

Page 100
XVi
* திரு. பொன்னையா அவர்கள் தமது அபிப்பிரா யங்களை எல்லாத் துறைகளிலும் துணிவுடன் தமது பத்திரிகையில் வெளியிட்ட வீரத்தமிழன். யாவருந் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிடக்கூடிய முறையிலே தமது பத்திரிகையை நடத்திவந்த நடுவுநிலைமையான உத்தமத் தமிழறிஞன். அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய யாவையும் செந்தமிழில் தமது பத்திரிகையில் வெளியிட்ட பேராசிரியர். ? ?
வே. தம்பு, வைத்திய ஆராய்ச்சி கிலேயம்
குவா லா லம்பூர், மலேயா
** பத்திராதிபர் திரு. பொன்னையா அவர்கள்
இறைவன் திருவடியடைந்தது மிகவும் வருத்தத்துக்குரிய
செய்தி. தமிழ்விழாவுக்கு வரும் தமிழ்நாட்டார் பலர்
அவரைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பத்தோடு இருந் தார்கள்."
- கி. வா. ஜகந்நாதன்
ஆசிரியர், கலைமகள்

ஈழகேசரி நா. பொன்னையா அவர்கள்
வெளியிட்ட நூல்கள்
1. பழைய இலக்கியங்கள்-பகுதிகள் (உரை)
10.
ll.
2.
13.
LD5T LIT Digli வாரணுவதச் சருக்கம் குதுபோர்ச் சருக்கம் பழம்பொருந்து சருக்கம் நச்சுப்பொய்கைச் சருக்கம் நாடுகரந்துறை சருக்கம்
இராமாயணம் அகலிகைப்படலம்
நளவெண்பா நளவெண்பாச் சுருக்கம்
சுயம்வரகாண்டம்
s s
கலிதொடர்காண்டம் நளவெண்பா - சுயம்வரகாண்டம்
இரகுவம்சம்
அயனெழுச்சிப்படலம்
பிற இலக்கிய நூல்கள்
இராமோதந்தம் அரிச்சந்திரபுராணம் - மயானகாண்டம் குசேலோபாக்கியாநச் சுருக்கம்
i. இலக்கிய வசன நூல்கள்
l4.
15.
இரகுவம்ச சரிதாமிர்தம்
அ. கும்ாரசுவாமிப் புலவர் குசேலர் சரிதம்
மகாவித்துவான் சி. கணேசையர்

Page 101
6.
7.
8.
9.
20.
XViii
கண்ணகி கதை
-s. guorv sario Leaf கிராதார்ச்சுனியம்
மஹோபாத்தியாய வை. இராமசாமி சர்மா சாவித்திரி
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்
மகாவித்துவான் சி. கணேசையர்
சிசுபால சரிதம்
அ. குமாரசுவாமிப் புலவர்
i. இலக்கியத் தொகுப்பு நூல்கள்
iv.
W,
21.
22.
23.
24.
25. 26, 27.
28.
29.
தமிழ் மலர்மாலை தமிழ் இலக்கியச் சுடர் தமிழ் இலக்கியக் கோவை தமிழ் மஞ்சரி i தமிழ் மஞ்சரி i தமிழ் மஞ்சரி i உரைநடைச் சிலம்பு i உரைநடைச் சிலம்பு i தமிழ் இலக்கியத் திரட்டு
வாசிப்பு நூல்கள்
30. பாலபோதினி அரிவரிப் புத்தம் 3. முதற் s 32. இரண்டாம் , , 33. மூன்றம் , 34. es நான்காம் , , 35. ஐந்தாம் 36. s ஆரும் 器 窥 37. ஏழாம் s
உபபாட புத்தகங்கள்
38. பரதன் 39. இராஜா தேசிங்கு 40. தமயந்தி 41. திருமாவளவன்

vi.
vii.
viii.
xix
42. சந்திரமதி 43. இராமாயணச் சுருக்கம் 44. இதோபதேசம்
இலக்கிய மஞ்சரி நூல்கள்
45. இலக்கியமஞ்சரி 3ஆம் புத்தகம்
46. 4ஆம் 9 47. 9 p. 9 5ஆம் y
எழுதியவர்கள் : பண்டித வ. நடராஜன்
கனக. செந்திநாதன்
இலக்கண நூல்கள்
48. தொல், எழுத்ததிகாரம் 49. தொல். சொல்லதிகாரம் 50. தொல். பொருளதிகாரம் i 51. தொல். பொருளதிகாரம் i
(கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)
52. நன்னுரல் மூலம் 53. யாப்பிலக்கண வினவிடை 54. அணியிலக்கண வினவிடை
பாஷைப் பயிற்சி நூல்கள்
55. மொழிப்பயிற்சி i 56. மொழிப்பயிற்சி i 57. மொழிப்பயிற்சி i 58. மொழிப்பயிற்சி iv
முதுதமிழ்ப்புலவர் மு. நல்லதம்பி 59. தமிழ்மொழிப் பயிற்சியுந் தேர்ச்சியும்
தி. சதாசிவ ஐயர் 60. பயிற்சிமூலம் பாஷைத் தேர்ச்சி
இரத்தினம் செல்லையா
சரித்திரம்
61. சரித்திர கதாவாசகம் 2ஆம் வகுப்பு 62. y 3ஆம் , 63. 9 9 4ஆம் 64. 5ஆம் , ,
65. சரித்திர விஞவிடை
இ தருமலிங்கம்

Page 102
Xi.
Xii.
XX
66. பிரி. சக். சரித்திரச் சுருக்கம் 67. ைெடி ஆங்கிலம்
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை அதிபர்
சி. சுவாமிநாதன் பீ. ஏ.
பூமிசாஸ்திரம் 68. பூமிசாஸ்திரக் கதைகள் 2ஆம் வகுப்பு 69. 3ஆம் , 70. பூகோளத்தொடர் பூமிசாஸ்திரம் 4ஆம் வகு. 71. 9 p. 5ஆம் ,
சமயநூல்கள் 72. சைவவினவிடை 73. ஈழமண்டலத் திருத்தலத் தேவாரமும்
திருப்புகழும் (அடக்கவிலைப் பதிப்பு) 74. சைவத் தோத்திர மஞ்சரி 75. நித்தியகரும விதி 76. திருவாதவூரடிகள் புராண மூலம் 77. சீகாளத்திப் புராணம்
கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்கம் 78. தெய்வீக வாழ்வு 79. அடியார் கதைத் தொகுதி i 80. e. 9 9 ii 81. Ꮺ Ꮽ 9 iii 82. 9 9 iv
சிவானந்தவல்லி - கனகநாயகம் 83. திருமுருகாற்றுப்படை மூலம் 84. தோத்திரத்திரட்டு
நீதிநூல்கள்
85. ஆத்திசூடி 86. கொன்றைவேந்தன் 87. வாக்குண்டாம் 88. வெற்றிவேற்கை 89. உலகநீதி 90. நன்னெறி

xiii.
Xiv.
91.
92.
93.
xxi
நல்வழி நீதிவெண்பா உரை
திருக்குறள் மூலம்
பொது நூல்கள்
94. வைத்தியக் கைமுறைகள்
முதலியார் சு. திருச்சிற்றம்பலவர் 95. சுத்த போசன பாக சாத்திரம்
முதலியார் சு. திருச்சிற்றம்பலவர் 96. தென் இந்திய சிற்ப வடிவங்கள்
கலைப்புலவர் க, நவரத்தினம் 97. சிவசம்புப்புலவர் பிரபந்தத் திரட்டு 98. வாழ்க்கைநூல்
ரி, பி. மாசிலாமணிப்பிள்ளை 99. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு
வழக்கறிஞர் அ. அருளம்பலம் 100. கணக்குப் பதிவு நூல்
கலைப்புலவர் க, நவரத்தினம் 101. பிள்ளைப்பாட்டு
வடமாகாண ஆசிரியர் சங்கம்
பிறநூல்கள் 102. குடியியல் நூல் (ஆரும் வகுப்பு) 103 , , (ஏழாம் வகுப்பு)
சோ. சிவபாதசுந்தரம் 104. புத்திப் பரீட்சை
அ. சிவசம்பு 105. உயிரிளங்குமரன் நாடகம்
க. சோமசுந்தரப்புலவர் 106. பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம்
வரணியூர் க. இராசையா 107. அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி , , 108. அயனுந்த தேச நோய் நூல்
டக்டர் அ. சின்னத்தம்பி 109. First Steps in Reading Word Drill
Grace Thuraisingham 1 1 0. First Steps to English. १ ४
I 1 1.
Spoken English V. Thuraisingham

Page 103
iii.
திரு. நா. பொன்னையா அவர்களது
மறைவுக்குப்பின் வெளிவந்த நூல்கள்
இலக்கியம்
இலக்கியமஞ்சரி 1. 6ஆம் புத்தகம் - பண்டித வ. நடராஜன் 2 7ஆம் po 3. உரைநடை விருந்து 4. கும்பகருணன் வதைப்படலம் 5. தமிழ் இலக்கியக் கோவை 6. தமிழ் இலக்கிய வினவிடை - ஐயன்னு 7. இலக்கியச்சோலை - பண்டிதர் பொ. கிருஷ்ணபிள்ளை 8. உரைநடைமாலை 9. கவிநயக் கட்டுரைகள் s
- பண்டிதமணி சி. கணuதிப்பிள்ளை
g) ULI (TLD
10. குகன் - பண்டிதர் சு. வேலுப்பிள்ளை 11. மணிமேகலை - பண்டித வ. நடராஜன் 12. சகுந்தலை சரிதை 9 கணிதம்
சிறுவர் கணக்கு 13. 2ஆம் புத்தகம் --ச. சிதம்பரப்பிள்ளை பி. ஏ. l4. 3ஆம் , , Ꮺ Ꮽ Sy jo 1 5 4ஆம் 9 9 s) 9 6. 5ஆம் y 9 9 9 9 17. அட்சரகணிதம் y I 8. Sy y II 9 19. கேத்திரகணிதம் 1 9 Sy 9 20. II y 9
2I. எண்கணிதம் 9 9 9 9 22. உயர்தர கணக்குப் பதிவு நூல்
- கலைப்புலவர் க. நவரத்தினம் 23. இக்கால வாணிபமுறை , , 9 9 24. கணக்கியல் 1 - வை. சி. சிவஞானம்

iv.
vi.
vii.
xxiii
ағшошto
சைவசமய போதினி 25. 2ஆம் வகுப்பு-சன்மார்க்கசபை, குரும்பசிட்டி 26. 3ஆம் , , sy s 27. 4ஆம் is 9 3 28 5esgyllib 9 9 炒 》 29 6ஆம் y 9 s p
30. சைவசமயபாடத் தொகுப்பு 31 பாராயணத் தோத்திரத்திரட்டு 32. நவராத்திரிமாலை 33. இந்துசமய மாதிரி வினுவிடை - ஐயன்னு 34. கந்தபுராண போதனை
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை 35. சமயக் கட்டுரைகள் 9 9 9 36. தக்ஷகாண்டம் உரை 9 9 9 37. மாவிட்டபுரத் திருத்தல வரலாறு
பாஷை
38. மொழிப்பயிற்சி 6ஆம் புத்தகம்
பண்டித வ. நடராஜன் பண்டித சு. வேலுப்பிள்ளை 39. sy உயர்தர வகுப்பு , , 40. 5ஆம் வகுப்பு பாஷைப் பயிற்சி 41. 5th Standard Model Question Papers சூழல்
நாமும் நமது சூழலும் {á நவரத்தினம்
42. 2ஆம் வகுப்பு இ. தர்மலிங்கம் 43. 3ஆம் , sy 44. 4ஆம் , 9 9 45. 5ஆம் , , 9
46. இயற்கைப் பொருட்பாடமும்
தோட்ட வேலையும்
விஞ்ஞானம்
47. விஞ்ஞானபோதினி (7, 8)
பரமானந்தன் நா ச இரத்தினசிங்கம்
48. பொதுவிஞ்ஞான போதினி 6 9 is
49. $ 然 7
50. 8 9

Page 104
viii.
ix.
X.
xi.
xii.
சுகாதாரம்
5 Il .
சுகாதார போதி
52。 岑 象 53。 p 9 54. 9 6, 55. s ) 56. s G. OC 57. G. C 58. சுகாதார விஞவி
விவசாயம் 59. விவசாய போதி
புவியியல்
60. புவியியல் 8ஆம்
61. படவேலைப் பய 62. 63.
சரித்திரம்
64. சரித்திரம் 6ஆம் 65. இலங்கையிற் க
66. Development of 67. Arts and Craft 68. Tamil Element i 69. மட்டக்களப்புத்
70. மேல்நாட்டுத் த 71. ஈழகேசரி வெள் 72. கணேசையர் நி 73. கொழுகொம்பு 74. ஆட்சி இயல் - கட்டுரை மஞ்சர்
75.

kiw
ச. அ. தர்மலிங்கம் இ. தர்மலிங்கம்
4 9
5
7 s
s
E. 9 . E. I டை இ. தர்மலிங்கம்
}óðf 6
வை. உருத்திரன் பீ. எஸ்சி. இ. தர்மலிங்கம்
வகுப்பு
வி. கந்தவனம், பீ. ஏ.
பிற்சி 6
9 7
8
வகுப்பு - இ. தர்மலிங்கம்
லைவளர்ச்சி
கலைப்புலவர் க. நவரத்தினம் f Art in Ceylon , , s of Jaffna s in Ceylon Culture ,,
தமிழகம் - பண்டித வித்துவான் வி. சீ. கந்தையா தரிசனவரலாற்றின் சுருக்கம் ளிவிழா மலர் னைவுமலர்
- வ. அ. இராசரத்தினம் - ச. ஹண்டி பேரின்பநாயகம் - சு. வேலுப்பிள்ளை