கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

Page 1
காகைலாசநாத்
 


Page 2

இந்துப் பண்பாடு
சில சிந்தனைகள்
கா. கைலாசநாதக் குருக்கள்
பேராசிரியர், இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
தமிழியல்

Page 3
inthup Panpadu Sila Sinthanaihal
O O An essay by K. Kailasanathak Kurukkal
(C) Author V : O First edition: September 1986
o Published by : Thamizhiyal, Madras.
Printed at : Jeevan PreSS,
63 Big Street, Triplicane, Madras - 600 005. O Cover printed at : Sudarsan Graphics,
Madras - 600 017.
O Cover : Parvathi Bronze, Tanjore Art Gallery. O Photo by : Vasantha Kumar
Price : Rs. 8-OO
புத்தகம் கிடைக்குமிடம் : க்ரியா, 268 ராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்னை. 600 014. வயல், 5 கச்சேரி சத்து, மயிலாப்பூர், சென்னை-600 004. சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், 38 பர்க்கிட் சாலை, சென்னை - 600 017.

கா. கைலாசநாதக் குருக்கள்
அறுபத்தைந்து வயதை நெருங்கிக்கொண்டிருக் கும் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள், பிரமயூரீ ந. வே. கார்த்திகேய குருக்களின் மூத்த புதல்வர். இவர் தந்தையார், சேர். பொன்னம்பலம் இராம நாதன் அவர்களின் சமய குருவாகத் திகழ்ந்தவர்; நல்லூர் சிவன் கோயிலை நிறுவியவர்; வேதாகம விற்பன்னர்; சோதிட நிபுணர்.
பேராசிரியரின் கல்வி, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலையில் ஆரம்பித்தது. சிறு பிராயத்தி லேயே இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட, வைக்கம் பிரமயூரீ சிதம்பர சாஸ்திரிகளிடம் வேத மோதும் விசேட பயிற்சி பெற்ரூர். பரமேசுவராக கல்லூரியில் பெற்ற ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்து, இவர் பல்கலைக்கழகத்தினுள் புகுந் தார். வியாகரண சிரோமணி பிரமயூரீ தி.கி. சீதாராம சாஸ்திரிகளிடம் பெற்ற உயர்தர சம்ஸ் கிருதக் கல்வி இவரது எதிர்காலக் கல்விக்கு உறுதியான அடித்தளமாக அமைந்தது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் Betty Heimann அவர்களின் தலைமையில் பெற்ற சம்ஸ்கிருதக் கல்வி, இவருக்கு B.A., M. A. ஆகிய இரு பட்டங்களையுமீட்டித் தந்தது. இந்தியா வில், பூணு பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் R. N. தண்டேகார் அவர்களது தலைமையில், இதிகாச புராணங்களில் காணப்படும் சைவம்பற்றியும, தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள்பற்றியும் நிகழ்த்திய ஆய்வின் விளைவாக Ph.D. பட்டம் பெற்ருர், சம்ஸ்கிருதம்

Page 4
ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி ஆகிய மொழி களில் ஆழமாயும், பிரஞ்சு, ஜேர்மனியம் ஆகிய மொழிகளில் ஆராய்ச்சிக்கு வேண்டிய அளவிலும் பயிலும் வாய்ப்பைப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு வழங்கின, V
கொழும்பிலும், பேராதனையிலும் சம்ஸ்கிருதத் துறையில் விரிவுரையாளராகவும், இறுதிக் கட்டங் களில் துறைப் பொறுப்பாளராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத் துறையின் முதற் பேராசிரியராகவும், தலைவராக வும் நியமனம் பெற்றர். பத்தாண்டுக் காலத்தில் B. A. முதல் Ph.D. வரை உயர்கல்விப் பட்டம் வழங்க வல்ல நிலைக்கு இத்துறை உயர்வு பெற்றது. இத்துறையே, யாழ் பல்கலைக்கழகத்தில் முதல் B. A. பட்டதாரியையும், முதல் Ph.D. பட்டதாரி யையும் உருவாக்கிற்று.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் LD6i5 பண்பியல், கலை ஆகிய பீடங்களுக்கு அதிபதியாக வும் நுண்கலைத்துறைத் தலைவராகவும் அவ்வப் போது கடமையாற்றிய பேராசிரியர்,இப்பொழுது இந்து நாகரிகத்துறைத் தலைவராகத் திகழ் கின்ருர், or < •
காஞ்சி முனிவரெனப் போற்றப்படும் காமகோடி பீடாதிபதிகளால் பொன்னடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டதையே தம் வாழ்க்கையின் உயர் பேருகக் கருதும் பேராசிரியர், சென்னையில் 1976இல் நிகழ்ந்த அனைத்துலக இந்து மகாநாட் டிலும்,1977இல் பேராசிரியர் T.M.P. மகாதேவன் தலைமையில் மலேஷியாவில் நடந்த உலக இந்து மகாநாட்டிலும் ஆய்வுரை நிகழ்த்தியும், பல

அரங்குகளுக்குத் தலைமை தாங்கியும் கெளரவம் பெற்ருர். மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கோ. சுந்தரமூர்த்தியின் தலைமையில் மலேஷியாவில் நடந்த பல அரங்குகளில் உரை யாற்றிஞர்.
ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழி களில் பல நூல்களை யாழ் பல்கலைக்கழக நூல் நிலையத்திற்கு வழங்கினர். ஒரு வருடகால விடுமுறையின்போது, பாரதநாட்டிற்கும், இலண் டன் நகருக்கும் சென்று, சிறப்புறக் கிரியைகளை நிகழ்த்தியும், சமயப் பண்பாடுபற்றி விரிவுரை களாற்றியும் இந்துப் பண்பாட்டைப் பரப்பும் வாய்ப்பு இவருக்கு சமீபத்திலேற்பட்டது. சேம்ஸ்கிருத இலகுபோதம்" சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற வேடமொழி இலக்கிய வரலாறு" *சைவத் திருக்கோயிற் கிரியைநெறி" ஆகிய நூல் கள் இவருக்கு இலங்கையிலும் பாரதநாட்டிலும் புகழீட்டித் தந்தன. பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத் துறையில் M. A. Ph.D. உட்பட பல உயர்கல்வி நெறிகளுக்கு வழிகாட்டி வரும் பேராசிரியரின் பல்கலைக்கழகப் பணி கடந்த முப்பத்தெட்டாண்டுகளை அணிசெய்து நிற் கின்றது.

Page 5

i.
2·
3.
8.
9.
0.
1.
2.
3.
24.
15.
6. 7.
8.
J. 9.
&G。
鲁丑。
பெயரற்ற மதம்
தோற்றம் முடிவில்லாத மதம்
பாரதமெங்கணும் அதற்கப்பாலும் பரந்து பரவிய மதம்
பரந்தகாலப் பரப்பினதான மதம்
ஒருமைப்பாடு கொண்ட மதம் பரந்த நோக்கினதான மதம் விரிந்த இலக்கியமுடைய
மதம் : வேதம், ஆகமம்
99 ! 9. : இதிகாசபுராணங்கள்
99 தோத்திர சாத்திரங்கள்
: ( இலக்கியம்
மதமும் வாழ்க்கையும் கிரியை ஆத்மார்த்த பரார்த்தங்கள் கிரியை என்னுங் கலை சமயம் கலைகளைத் தோற்றுவித்தமை es frugasai gurrCafrtly afrtprlb
குரு . சமயமும் தத்துவமும் புருடார்த்தங்கள் மதபரிபாலனம் தனி ஒருவர் பெயரிணையாமை இந்து என்ருல் சைவமே

Page 6
பேரற்றதாய், தோற்றமும் முடிவும் பொருங்தப் பெருததாய், பாரதம் முழு வதும் படர்ந்து பயின்று வரும் இந்து மதம், பலவகைப்பட்ட தெய்வங்களைக் கூறுவதெனினும், உண்மையில், ஒரு தெய்வக் கோட்பாடுடையதாய், பரந்த கோக்கும் ஈடிணையற்ற ஒருமைப்பாடுங் கொண்டதாய், பாரதாநாட்டு மொழிகள் யாவற்றிலும் விரிந்த இலக்கியங்களில் விரித்துரைக்கப்பட்ட மதமாய், வாழ்க்கை யோடு பின்னிப்பிணைந்த சிறப்பினதாய், கிரியைகள் பல்கிப் பெருகிய வழிபாட்டு முறைகளும் கலைகளும் பொலிந்த கோவில்களில் இராசோபசாரங்களாலும் தெய்வ வழிபாடு நிகழத் தருவதாய், குருவுக்குத் தனியிடங் தந்து தெய்வ மெனப் போற்றுஞ் சிறப்பினதாய், தன்னைச் சார்ந்தவர்க்கு இம்மை மறுமை இரண்டையும் கொளிக்கவைக்க வல்ல புருடார்த்தங்களே உறுதிப்படுத்து வதாய், தன்னைப் பேணிப் பாதுகாக்க வல்ல புரவலனுே நிறுவனமோ இல்லாத இடத்தும், என்றும் நிலைநின்று வரும் இயல்பினதாய், ஒருவருடனுங் தனிப் பட்டு இணையாது, தனியொருவராலும் எவ்வகையாலும் ஆக்கப்படாததாய், இது சைவமே என்று ஆராய்ச்சியாள ரிடத்துத் துணிபு பிறப்பிப்பதாய் விளங்குஞ் சிறப்புடையது.

இந்து மதம் உலகில் வழங்கும் மதங்களில் முக்கியமானது. இது உலகப் பிரசித்தி பெற்ற மதம். இன்று உலக மக்களுள் பெருமளவினர் கிறித்தவர்களாக இருக் கின்றன்ர். இவ்வகையில் கிறித்தவத்திற்கு முதலிடம் உரியது. உலக நாடுகளில் பெரும் எண்ணிக்கையினரைக் கொண்ட நாடு சீனு, அங்கு நிலவும் கன்பூசிய மதம் இவ்வாறு நோக்குமிடத்து இரண்டாவது நிலையினது. இதையடுத்து மூன்ருவது நிலை நிற்பது இந்துமதம்.1
இந்துமதம் இவ்வாறு உலகில் பெருமளவில் கடைப் பிடிக்கப்படும் மதமாக மட்டுமல்லாமல், உலகெங்கணும் பரந்து வாழும் பேரறிஞர்களின் சிந்தனையைக் கவரவல்ல உயரிய அமிசங்கள் வாய்ந்ததாயும் விளங்குகின்றது இம்மதத்தைச் சாராதவர்களான மேனட்டவர்களும் இம்மதப் பண்பாட்டுச் சிறப்பமிசங்களால் கவரப் பட்டவர்களாய்த் தாமும் இந்துக்களாக வாழ விழைந்து பாரத நாட்டிற்குப் பல்லாயிரக்கணக்கில் படையெடுத் ததை இவ்விருபதாம் நூற்ருண்டின் இறுதியில் நேரே 4s6derGL, nruh.
வெறும் வெளியமைப்பினல் முதலில் கவரப்பட்டவர்கள் நாளடைவில், இம்மதச் சிந்தனை வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியதும் தங்கள் கவலைகளை மறந்து தாம் நாடி நிற்கும் ஆறுதல் பெற்றதுடன் மனநிறைவைத் தரவல்ல பெருஞ் சாந்தியையும் பெறத் தலைப்பட்டனர். மன அமைதியைப் பெரிதும் தரவல்ல மதமே தலைசிறந்த மதமெனப் போற்றற்குரியது. இன்று, வாழ்க்கையில் மனிதனுக்குப் பல தேவைகள் ஏற்படுகின்றன. இவை இன்றைய சூழ்நிலையில் பலவாகப் பெருகிக் கிடக்கின்றன.
9 29 68

Page 7
மனிதன், தன் தேவைகளின் எண்ணிக்கை நாள்தோறும் வளர்ந்துகொண்டு போகக் காண்கின்றன். தனக்கு வேண்டும் பொருள்கள் கிடைக்கும் வரை இவன் ஒய்வதில்லை. இவன் வேண்டி நிற்பன யாவும் இன்னும் பலவாகப் பெருகியும், கிடைப்பதற்கு அரியனவாகியும் இவனை ஒருபுறம் வாட்டி நிற்பன. இவனை மறுபுறம் வருத்துவது, அவ்வப்போது மனதில் எழும் பயம், தேவையும் பயமுமே மனிதனை, வாழ்க்கை முழுவதும் எல்லையில்லாதவாறு மாறி மாறி வாட்டி நிற்பன. மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகளனைத்தும் இவை இரண்டினுள் அடங்கும். இதனைக் கருத்திற்கொண்டு நோக்குமிடத்து, வாழ்க்கையில் பிறப்பு முதல் தொடர்ச்சி s நிகழும் தேவைகள்பற்றியும், இறப்புவரை, இறப்புட்படப் பல காரணங்களால் அவ்வப்போது விளையும் பலவகைப் பீதிகள்பற்றியும் எழும் சிக்கல் களுக்குத் தீர்வு காணுவதிலேயே மனிதன் வாழ்நாள் கழிந்துவிடுகின்றது. இச்சிக்கல்களால் ஏற்படும் சுமை யைக் குறைப்பதற்குக் குறிப்பிடத்தக்க வகையில் உதவு வது இந்துமதம். :
மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகள் தேவை, பயம் ஆகிய இரண்டுமே என்ற உண்மையை நன்கு உணர்ந்ததாக இந்துமதம் காணப்படுவது போன்று, உலகில் வேறு எந்த மதமும் காணப்படுவதில்லையென உறுதியாகக் கூறலாம். இவ்விரு வகை இன்னல்களையும் களையும் நோக்குடனேயே மக்கள் இறைவனை நாடுவர். இவ்வேண்டுதல்களை நிறை வேற்றும் வகையிலேயே இந்த மதம் அமைந்திருப்பது இதன் சிறப்பு. தேவைகளை வழங்குவதும், பயத்தை நீக்குவதும் தெய்வங்களின் இயல்புகள். இவ்வியல்புகளை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்துத் தெய்வங்களின் வரலாறுகள் கூறப்படுவன. மேலும், இவ்வரலாறுகளின் வெளிப்பாடாகி, வடிவந்தாங்கி வழிபாட்டிற்காக இந்து ஆலயங்களில் நிறுவப்படும் தெய்வங்கள், பயப்பட
1 Ο

வேண்டாம்" என உணர்த்தி நிற்கும் அபய கரத்தையும்? *தேவைகளைத் தருகிறேன்" எனச் சுட்டி நிற்கும் வரத கரத்தையும் காட்டி நிற்கின்றன. இவ்வாறு உணர்த்தும் கையமைதி இந்துத் தெய்வங்களுக்கே உரிய தனிச்சிறப்பு.
இந்துமதம் சிறப்புறுவது இதனல் மட்டுமன்று. இந்து நெறி நிற்போர் தெய்வத்தைச் சிந்தனையிலிருத்தித் தியானிக்கும் முறையே தனிப்பட்டது. இறைவன் எங்கும் என்றும் நிலைத்து நிற்பதனுல் சத் எனப்படுவன். இமைப் பொழுதும் நெஞ்சில் நின்றும் நீங்காதானப் மனதில் அறிவு சிந்தனை ஆகியவற்றைப் பெருக்கவல்ல ஞான வடிவினன் ஆதலால், சித் எனப்படுவன். எப்பொழுதும் இன்பமயமானவனய் உள்ளத்தில் பேரின்பம் பெருக்கும் பெரும் இயல்பு படைத்தவன் ஆனதஞல், ஆனந்தம் *எனவும் சுட்டப்படுபவன். இந்து சமய சாத்திர நூல்கள் மட்டுமே இறைவனைச் சச்சிதானந்த சொரூபிக் யாக வருணிப்பன. இத்தகைய உயர்வு தந்து இறைவனைப் பரிபூரண நிலையில் உள்ளத்திலிருத்தித் தியானிக்கும் வாய்ப்பு இந்து நெறி நிற்பவருக்கே உரியது. இந்நிலையில் இறைவன் இந்து ஒருவனின் உள்ளத்தில் வைத்துப் போற்றப்படும் வரை, சச்சிதானந்தப் பெரு வாழ்வாகிய உயர் இலட்சியம் அவனுள்ளத்தில் நின்று அவனை வளப்படுத்தும் வரை, அவன் குறைவெதுவுமின்றி நிறைவுற்று வாழ்வான். இப்பெரு நிறைவினைத் தர வல்லது இந்து சமயமே. இந்நிறைவினை வித்தாகக் கொண்டு முகிழ்ந்த இந்துப் பண்பாடு, பன்முகப்பட்ட சிறப்புக்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. இச்சிறப்புக்கள் பற்றிய சிந்தனைகளுள் சிலவற்றை நிலைக்களஞகக் கொண்டு இந்நினைவுரை ஆரம்பிக்கின்றது.
பெயரற்ற மதம்
இந்துமதம் தொடக்கத்தில் பெயரெதுவுமே இல்லா திருந்தது5 இந்து என இம்மதத்திற்கு வழங்கும் பெயர்
11.

Page 8
இந்திய மொழிகளில் சமயம்பற்றி உருவான மூல நூல்களெதிலும் காணப்படுவதில்லை. ஹிந்து" என மேனுட்டவர் வழங்கிய பெயர் மருவி இந்து என வழங்கத் தொடங்கியது. இந்து மதத்தின் தொன்மையைக் கருத்திற்கொண்டு பார்க்கும்பொழுது, சமீப காலத். திலேயே இதற்கு இப்பெயர் வழங்கத் தொடங்கியது என்பதை உணருகிருேம்.
வெளி நாட்டவர்கள், பொதுப் பண்புகள் வாய்ந்தவை: யாய்ப் பாரத நாட்டில் பரவுண்டு நிலவிய மதப்பரவல் களைக் கண்ணுற்றதும், அவற்றை முன்னிலைப்படுத்தியும் ஒருமைப்படுத்தியும் நோக்கியபோது, இப்பரவல்களில் அவர்கள் கண்ட பொதுவியல்பு, அவர்களை அவற்றிற்கு ஒரு பெயர் வழங்கி அப்பெயராற் சுட்டி அழைக்கும்படி தூண்டியது. இதன் விளைவே, இன்று இதற்கு வழங்கும் இந்துமதம் என்னும் பெயர்.
தோற்றம் முடிவில்லாத மதம்
இம்மதம் போற்றும் இறைவன் தொடக்கமும் முடிவும் அற்றவன். எனவே, இத்தகைய இறைவனைப் போற்றும் மதமும் ஆதியும் அந்தமும் அற்றது. இக்கூற்று முற்றிலும் பொருத்தமானதே. இவ்வாறு ஆதியும் அந்தமும் இல்லாத தைச் சகாதகம் என்பர். இம்மதத்தைச் சுட்ட நேரிடும் வேளைகளில் புராதன நூல்கள் சநாதக தர்மம், சகாதந. மதம் எனக் குறிப்பிடுகின்றன.
இந்தியா என்னும் பெயர் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட அதே அடிப்படையிலேயே பாரத நாட்டில் நிலவி வரும். மதத்திற்கு இந்துமதம் என்னும் பெயரும் வழங்கப் பட்டது." ஏனைய உலகமதங்கள்பற்றிப் பேசும்பொழுது, இந்தியாவில் நிலவிவரும் மதம் பற்றிப் பேச்செழின், அதைச் சுட்டி,உணர்த்தவேண்டிய அவசியத்தை அடுத்தே, இவ்வாறு பெயர் சூட்டவேண்டிய தேவை மேனுட்ட.
12

அவருக்கு ஏற்பட்டது. மேனட்டவரே இவ்வாறு பெயர்
வழங்கியவர்.
தொடக்கமே இல்லாதது என்று சொல்லுமளவிற்குத் தொன்மை வாய்ந்த இந்துமதம், மேனுட்டவர் இவ்வாறு பெயர் சூட்டுவதற்கு முன் பெயர் எதுவும் பெருத காரணம், இந்து சமயத்திற்குரிய இத்துணைத் தொன்மைக் காலத்தில் உலகில் வேறு மதம் எதுவும் இல்லாது, இது மட்டுமே தனி மதமாக இருந்ததேயாகும். தனியொரு மதமாயிருந்த நிலையில் இதற்குப் பெயர் சூட்டிப் பிரித்துச் சுட்டும் தேவை எழவில்லை. **வேறு மதம் ஏதாவது இருந் திருந்தாலல்லவா, அதனின்றும் இதனை வேறுபடுத்து வதற்காக இதற்குப் பெயர் வழங்கவேண்டிய பெருந் தேவை நேரிட்டிருக்கும்?" என்ற கருத்து பொருட் செறிவு மிக்கது.8
பாரதமெங்கணும் அதற்கப்பாலும் பரந்து பரவிய மதம்
தொன்று தொட்டுப் பாரத நாடு எங்கணும் பரந்து நிலவிய இம்மதம், உள்ளமைப்பில் அவ்வப் பிரதேசச் சூழல்களுக்கேற்பத் தெய்வங்களும் வழிபடுமுறைகளும் வேறுபடும் வண்ணம் பல்வகை அமைப்புப் பொருந்தி நிலவி வந்தது. பரந்த இடப்பரப்பையுடைய பாரதத்தில் இவ்வாறு அவ்வப் பிரதேசத்திற்கு ஏற்றவாறு பல்வகை வேறுபாடுகளை இம்மதம் கொண்டு அமைந்ததில் ஆச்சரி யத்திற்கு இடம் இல்லை. தமிழ்நாட்டிலேயே நில அமைப்பை அடிப்படையாகக் கொண்டு சமயம், வழி பாட்டிற்குரிய தெய்வங்கள், வழிபடுமுறைகள் ஆகியன தமக்குள் வேறுபட்டு அமைந்திருந்தன என்பதற்குத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் சான்று பகருவன."
இவ்வாறே, பாரதம் எங்கணும் பரவலாக நிலவிய வழி பாட்டமைப்புக்களில், விநாயகர், முருகன், சூரியன்,
13

Page 9
சிவன், விட்டுணு, சக்தி ஆகிய தெய்வங்களையும், ஆங்காங்கு கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வழி படப்பட்டு வந்த தெய்வங்களையும் காண முடிகின்றது.10
இத்தெய்வங்களின் வழிபாட்டினை நிலைக்களஞகக் கொண்டு: சிந்தனைச் சிறப்புக்கள் காலத்துக்குக் காலம் தோன்றின.
அச்சிந்தனைகள் நிலைத்து நின்று மக்கள் தேவையாகிய மனநிறைவினைத் தோற்றுவித்தன. சிறப்பமிசங்களுடன்
சிந்தனை வளமும் பொதுவாயமையும் வேளை அவற்றை வழங்கிய வழிபடுமுறைகளும் ஒன்ருேடொன்று இணையும் நிலையும் உருவாவது இயல்பு. இதன் விளைவாகப் பலவாகி இருந்துவந்த வழிபாட்டு நெறிகள், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணபத்யம் என ஆறு நெறிகளாக ஒடுங்கி, அவை தாமும், சைவம் வைணவம் என இரண்டாகக் குறுகி அமைந்து, ஈற்றில், நெறிகள் யாவுமே சைவத்துள் அடங்கும் நிலை உருவாகியது.
கிரேக்க இலக்கியம் காட்டும் சமயமும் அதை அடிப்படை யாகக் கொண்ட நாகரிகமும் புராதனமானவை. சில: அமைப்புக்களில் இவை வேதங்களும் இதிகாசங்களும் காட்டும் சமயப் பண்பாட்டமைப்பை உடையவை. எனினும், அவற்றின் உள்ளமைப்பும் நோக்கும் முற்றிலும் வேறுபடுவன. உட்பொருள் பொதிந்து பல தத்துவங் களும் உயர் தத்துவச் சிந்தனைகளும் ஊடுருவி நிற்கப் பெற்று வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் சிறப்பு, வேதங்களுக்கும் இதிகாசபுராணங்களுக்கும் உரியது.இதனல், இவை புராதன கிரேக்க ரோமானிய இலக்கியங்களைப் போலல்லாது, புத்துயிருடன் அன்றுபோல் இன்றும் விளங்கி, இந்துப் பண்பாட்டுக்கு என்றும் மங்காது மிளிரும். அழகு தந்து மக்கள் வாழ வழிகாட்டி நிற்பன.
ஒருமைப்பாடு கொண்ட மதம்
காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை பரந்திருக்கும் பாரதநாடு முழுவதற்கும், உயிர் நாடியாகத் தொன்றும்
14

தொட்டு விளங்கி வருவன. தெய்வ சிந்தனையும் அதை யொட்டி விரிந்த வழிபாட்டு முறைகளுமேயாகும். பாரதத்தின் ஆயிரக்கணக்கான பிரதேசங்களில் சமய நெறிகள் தத்தமக்குள்ளே சில பல வேறுபாடுகளைக் கொண்டு இடத்துக்கிடம் வேறுபட்டு நிலவி வந்தன. இவ்வாருயினும், அவை யாவும் ஒன்றிணைந்து பிணிப்புண்டு ஒரு நிலைப்படுமியல்பின. இதனலேயே, பரந்து விளங்கிய சமய நெறிகளை ஒருமுகப்படுத்தவும், முழுவதையும் ஒருமையில் தொகுத்துச் சுட்டவும், அதற்கு இந்து மதம் என்னும் பெயர் வழங்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இது எவ்வாறு ஏற்பட்டதென்பதுபற்றிச் சற்று சிந்திப்போம்.
வேதப் பண்பாடு பாரதம் முழுவதும் பரந்து சுவறிப் பல்லாயிரக்கணக்கான பகுதிகளில் நிலவிய பண்பாட்ட மிசங்களில் தன் சாயலைப் பதித்தது. பரந்து \ நிலவிய வழிபாட்டு முறைகளில் வேதங்களின் சாயல் இவ்வாறு பொருந்தியதே அவை ஒன்ருேடொன்று பிணிப்புறக் காரணமானது. சிதறுண்டு கிடக்கும் முத்துக்களினூடே நூல் ஊடுருவி நிற்கும்பொழுது, முத்துக்கள் யாவும் ஒன்றிணைந்து, ஒருருப்பெற்று, ஒரு முத்துமாலையாகி, அழகு பொலிந்து நிற்பது போன்று, பாரதம் முழுவதும் பரந்து தனித்தனி உதிரிகளாகக் கிடந்த சமய அமைப்புக்கள், வேதம் உள்ளே ஊடுருவிச் சென்றதன் விளைவாகப் பிணிப்புண்டு, ஒன்றிணைந்து, ஒருருப்பெற்று, இந்துமதம் என்ற பெயருக்குப் பாத்திரமாகி விளங்கி வருகின்றன. முத்துக்களை ஊடுருவி நிற்கும் நூல் தன்னை வெளிக்காட்டாது உட்கரந்திருப்பதுபோல், இச்சமய விெகிகளும் வேதமும் உள்ளே புகுந்து மறைந்து இருப்பதை உணருகிருேம். :
பரந்தகாலப் பரப்பினதான மதம்
இந்து மதத்துக்குள்ள பல்வகைச் சிறப்புக்களுள், அதன் அகன்ற , கர் லப் பரப்பு முக்கியமானதொன்ருகும்.
15

Page 10
வைதிகப் பின்னணியில் இது அமைந்து இருப்பதனல் வேதங்கள் போன்றே, இதுவும் தொன்மைமிக்க பெருமைக்குப் பாத்திரமாகின்றது. இவ்வகையில் காலப் பரப்பு முன்நோக்கியும் பின்நோக்கியும் அகன்று அமைவதே, இதற்குச் சநாதாநம் என்ற பெயரை ஈட்டித் தந்துள்ளது.19 சகா என்பது முதுமைப் பொருளையும், தாக என்பது புதுமைப் பொருளையும் உணர்த்துவதனல் இது சகாதந மதமாகி முதுமையும் புதுமையும் ஒருங் கிணைந்ததான, வேறெங்குங் காண்டற்கும் கற்பனையிலும் நினைத்தற்கும் அரியதானதொரு நிலையைக் குறிப்பிட்டு நிற்கும். தொடக்கமற்றவாறு தொன்மை வாய்ந்த தாயும், முடிவற்றவாறு எல்லையற்ற எதிர்காலம் வரையும் நிலவவல்லதாயும் குறிப்பிடப்படும் சமயம் சநாதனமான இந்து மதமொன்றே. சமயாதுழதிமான்கள் இறைவனை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாக எங்களுக்குக் காட்டியுள்ளார்கள். சமய நூல்களும் தத்துவ நூல்களும் இதையே அறைந்து கூறுகின்றன. இறைவன் பற்றிய இவ்வுண்மைநிலை, இறைவனையே மத்தியநாடியாகக் கொண்டு விளங்கும் சமயத்துக்கும் பொருந்தியே ஆகவேண்டும். தெய்வம் அநாதி, தெய்வம் பற்றிய சமய உண்மைகளை எடுத்தியம்பும் வேதம் அநாதி. தெய்வ வழிபாட்டு முறையும் அநாதி. எனவே இந்துசமயமும் அநாதி" என்ற கருத்துக்கள் ஒன்ருே டொன்று நெருங்கி இணைந்து, இந்துமதம் அநாதி என்ற கருத்தையும், இதே போன்று இந்துமதம் அநந்த மானது, முடிவற்றது என்ற கருத்தையும் தெளிவாகச் சுட்டி நிற்கின்றன.
முன்னேக்கியும் பின்னேக்கியும் எல்லைகளற்ற அகன்ற காலப் பரப்பு இந்துமதத்திற்கு இருப்பினும், இது எத்தகைய விளைவை ஈட்டித் தருகின்றது என்ற கேள்வி எழுதல் இயல்பு. காலப் பரப்பிற்கு ஏற்பவே அனுபவப் பெருக்கம் ஏற்படும். எங்கள் பண்பாடு இன்று சிறப்புடன்
6

விளங்குவது, எம் ஆன்ருேர் வழிவழியாகத் தம் முன்னேரதும் தமதுமான அநுபவப் பெருக்கங்கள் மறைந்துவிடாது அவற்றைப் பேணிப் பாதுகாத்து எமக்கு வழங்கி வந்த காரணத்தினலேயாகும். இதுவரை கழிந்த, மிகப் பரந்த காலப் பரப்பில் எழுந்த அநுபவங் பெருக்கு வேதங்களாகவும், அவற்றின் விரிவுரைகளாக எழுந்த விளக்கங்களாகவும், ஆகமங்களாகவும், சாத்திரங் களாகவும், தோத்திரங்களாகவும், தத்துவ விரிவுகளாகவும் பல அருளாளர்களின் மொழிகளாகவும், சொல்லுருவில் வடிக்கப்பட்டு விரிந்து விளங்கும் பெரும் இலக்கிய சமுத்திர மாகத் திகழ்கின்றது. இத்துடன் நின்றுவிடாது, பாரம் பரியமாக வந்த இவ்வநுபவ வளர்ச்சி காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அகன்று விரிந்த இடப் பரப்பில் ஆங்காங்கு நிலவி வரும் மொழிகளில், சிந்தனைச் சிறப்புப் பொலிந்தும், அனுபவப் பெருக்குச் சுவறியும் உருவான சமய இலக்கிய வடிவம் பெற்று நிற்கின்றது.13 எல்லையற்ற எதிர்காலம் நீண்டு விளங்கும் இயல்பு இம்மதத்திற்கு உரியதாகையால், இவ்வாய்ப்பு, இம்மதத்திற்கு வற்ருத இளமையையும் தளர்ச்சியுருத வலிமையையும் உரியதாக்கி விட்டது.
lysisg5 நோக்கினத ான மதம்
இந்துமதத்திற்குப் பெரும் புகழீட்டித் தருவது, அதன் பரந்த நோக்கு. உலகில் ஏனைய மதங்களில் இது இயல் பாகக் குறைந்தே காணப்படுவது. இந்துமதத் தொடர் பினல் இப்பண்பு பிற மதங்களில் இப்பொழுது சிறிது சிறி தாகப் பெருகி வருவதைக் காணலாம். இந்துமதத்தில், இது இயல்பாகப் பொருந்தியிருப்பதற்குக் காரணம், அதன் உள்ளமைப்பே. அதைச் சற்று ஆராயலாம். இந்துமதம் பரவிய இடப்பரப்பு முன்னர் கூறியவாறு பரந்த அமைப் பினது. இப்பரப்பிற்கேற்ப மத உள்ளமைப்புக்களும் பல்வேறுபட்டனவென்பதும் ஏற்கனவே தெளிவாக்கப்
17

Page 11
பட்டது. இவ்வாறு வேறுபாடுகள் நிலவும் இடத்தும், ஒன்றிணைதல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், வேறுபாடு களைக் களைந்து, ஒற்றுமைப்பட்டு ஒன்ருகும் நிர்ப்பந்தம் உருவாகும் காரணத்தால், தம்மிடம் தொடர்ந்து வேறுபாடுகள் நிலவினும், அவற்றைச் சகித்துக்கொள்ளும் அவசியமும், இணைந்துபோகும் மனப்பான்மையும் தோன்ற லாயின. இவ்வாருகப் பெரும் அமைப்பைக் கொண்டுரு வான இந்துமதம், பல்வகையான உள்ளுறுப்புக்களைத் தன்னுள் “இயைவுறும்படி இணைத்தும், பல்வகை வேறு பாடுகளில் ஒற்றுமையைத் தோற்றுவித்தும், ஒன்றுடன் ஒன்றை அரவணைத்தும் பிணிப்பதில் ஈடிணையற்றும் விளங் கிற்று. இவ்வாறு பல்வகை வேற்றுமைகளிலும் ஒற்றுமை காணும் உயர் பண்பு, வேதங்களிலேயே வித்திடப்பட்டு15 நெடுங்காலமாக வளர்ந்து வரக் காண்கின்ருேம். இந்து மத நூல்களில் வாழ்க்கைக்கு வழிகாட்டி, முறைப்படி நெறிப்படுத்தும் நூல்களான தர்மசாத்திரம், அர்த்த, சாத்திரம், 17 காமசாத்திரம், 18 வீடுபேற்றுக்கு வழி புகட்டும் நோக்குடைய பல்வகைத் தரிசன சாத்திரங்களும், சமய அடிப்படையில் இறுக்கமான கட்டுப்பாட்டுடன் உருவான பொழுதும், இலெளகிக சம்பந்தமான வாழ்க்கையின் ஒவ்வோரமிசத்திலும் தனித்தனியே நெறிப்படுத்தும் சாத்திரங்கள் உருவெடுத்து அவ்வவ்வமிசங்கள் பற்றிய விதிமுறைகளை அழுத்தி வற்புறுத்திச் சட்ட திட்டங்களை வலியுறுத்தி வரும் நிலையிலும், இந்து நெறி நிற்பவர் தத்தம் தகுதிக்கேற்ப விதிகளைத் தளர்த்திக் கடைப் பிடித்தற்குரிய ஒருவகை உரிமையினைத் தோற்றுவித்து, அவரவர், தத்தம் மதாநூட்டானங்களின் அமைப்பினைத் தமக்கு இயைபுறும் வண்ணம் தெரிந்தெடுக்கும் ஒருவகைச் சுதந்திரத்தினை வழங்கி, இந்துக்களாக வாழ்வது எளிது" என உணரத்தருவது இந்துமதம்.
இந்து சமயத்தைச் சார்ந்தோருக்குப் பலவகை சுதந்திரங் கள் இருப்பதை அவதானிக்கின்ருேம். இந்து மதத்தினர்
18

ஒவ்வொருவரும் தான் கடைப்பிடிக்க இருக்கும் சமய துள்ளமைப்புகளைத் தானே தெரிந்தெடுக்கவும், தன் இஷ்ட தேய்வத்தைத் தான் விரும்பியபடி தெரியவும், இந்து பந்த்திற்குரிய பல்வகை வழிபாட்டு முறைகளுள் தனக்
குகந்ததெனத் தென்படும் முறையைத் தெரிந்து கடைப் சிடிக்கவும், சுருங்கக் கூறின், பல்வகையான இந்துமத
அமைப்புக்களுள் தனக்கேற்ப வேண்டியவற்றை எல்லாம்
தெரிந்து தன் சமய வாழ்க்கையைத் தனக்கு உரியவாறு
அமைத்துக்கொள்ளவும் ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை
உண்டு. மேலும், இந்துமதத்தில் காணப்படும் இன்னெரு
சிறப்பு, அதற்குப் புறம்பான அமைப்புக்களிலிருந்தும் நல்ல
பண்புகளைத் தெரிந்து தனதாக்கிக் கொள்ளுதலாகும்.
இந்து மதத்தில், "யாதொரு தெய்வங் கண்டீரத் தெய்வ மாகி" என்ற பாடல் 19 கூறுவது போன்று, எத்தெய் வத்தை வழிபடினும், அத்தெய்வமாகி ஆங்கே அருள் சுரப் பவர் மாதொருபாகன் என்ற கருத்தும், எத்தெய் வத்தை வழிபடினும் வழிபடுபவன் என்னையே வழிபடு கிருன். ஆனல் அவன் உரிய வழிபாடுமுறையினின்றும் விலகிநின்று வழிபடுகிருன் வழிபாடு ஈற்றில் என்னையே சாரும்" எனப் பொருள் பொதிந்த பகவத்கீதை 20 சுலோகம் தரும் கருத்தும் இந்து மதத்தில் சிறப்பாக, அமைந்துள்ள பரந்த கண்ணேட்டத்தைப் புலனுக்கு, கின்றன.
விரிந்த இலக்கியமுடைய மதம்: வேதம் ஆகமம்
வேதம்
வேதம் அறிவுக் கருவூலம். இது பற்றியே இதற்கு இப் பெயர் உண்டாயிற்று. இது அபெளருஷேயம்? எனப்படும். புருஷர்களால் ஆக்கப்படாதது என்பது இதன் பொருள். வேதங்கள் காலங்கடந்தவை, சநாதநமானவை எனப்
9.

Page 12
"போற்றப்படுவன. உலகில் இன்று கிடைக்கும் இலக்கியங் களுள், வேதம், தொன்மை காரணமாக முதலிடம் பெறு வது. இவ்வகைத் தொன்மைபற்றி ஆராய்ச்சியாளரிடை அபிப்பிராய வேறுபாடு எதுவுமே கிடையாது. வேதம் வாய்மொழி மூலம் சந்ததியாக அதன் உண்மையுருவம் சிறிதும் வேறுபடாதவாறு இன்றுவரை வழங்கி வந்து கொண்டிருக்கின்றது. வேதம் ஒதுவதற்கேயுரியது. இதை
எழுதிப்படிக்கும் மரபு இல்லை.
வேதம் சிந்தனைப் பொக்கிஷம். இது பாரதப் பண் பாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உதவிநிற்கும். அறிவுத் தேக்கம், இந்துப்பண்பாடு வேதத்தாலேயே பன் முகப்பட்டு ஓங்கி வளரலாயிற்று. சமய வளர்ச்சி, இப் பண்பாட்டுச் சிறப்புக்களிஞேரமிசம், சமயக் கருத்துக்கள் வேதங்களாலேயே வளப்படுத்தப்பட்டு நன்கு வேரூன்றி வளர்ந்ததன் விளைவாக இந்து சமயம், தலைசிறந்த சமய மாகத் திகழ்ந்து வருகின்றது. பலவகைச் சிந்தனைகள் "வேறெங்குங் காணமுடியாத சிறப்பின வாய்ச் சமயத்துடன் இணைந்தவாறே வளர்ந்து இந்திய தத்துவ பாரம்பரி யத்தைத் தோற்றுவித்தன. இந்து தத்துவ வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் வேதமே நிலைக்களன்.22 பல கலைச் சிறப்புக் களால் பண்பட்டது இந்துப் பண்பாடு இந்துக்கள் பேணிப் பாதுகாத்துவரும் பல நுண்கலைகள் வேதங்களைத் தோற்றுவாயாகக் கொண்டவை. இந்துப் பண்பாட்டு வளர்ச்சிக்கு வற்ருத ஊற்ருக இருந்துவரும் வேதம், பெரும் பழமையையும், வளர்ந்துகொண்டே இருக்கும் புதுமை யையும், ஒருங்கமையப் பெற்றதனுல் இந்துப் பண்பாடு என்றும் நிலைதிரியாச் சிறப்பு வாய்ந்த பண்பாடாகத் திகழ்ந்துகொண்டே இருக்கின்றது.
வேதம், தமிழில் மறை 29 எனச் சுட்டப்பெறும். இவ்வாறு சுட்டப்படும் மரபு, வடமொழியுட்பட வேறெந்த மொழி யிலும் காணப்படாதது. இது பொருட்செறிவு மிக்கது. வேதம் கூறும் பொருள் புலனுகாது மறைந்து நிற்பதஞ 20

லேயே, இது மறை எனப்படலாயிற்று. வேதங் கூறுந் தெய்வங்களும் மறைந்து நிற்பவையே.24 வேதம் மறைந்து நின்று இந்துப் பண்பாட்டுக்கு ஊட்டமளித்து நிற்பது கூர்ந்து அவதானித்தற்பாலது. இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்கள், தோத்திரங்கள், அருளாளர் கிளின் அருள் மொழிகள், சமயாதுபவப் பெருக்கை விவரிக் கும் நூல்கள், கலைகள் பற்றிய அடிப்படை நூல்கள் முதலி யன வேதம் கொண்டு விளங்கும் அறிவுத் தேக்கத்தின் பரிணுமங்களாகும்.25 வேதங்கள் மறைந்து மறையாகஇருப் பதும் அதைத் தொடர்ந்து ஏனைய நூற்ருெகுதிகள் அறிவுச் செல்வத்தையும் அநுபவப் பொருளையும் வெளிப்படை யாக, எல்லோருக்கும் பயனுறும் வண்ணம் அவரவர்க்கு ஏற்றவாறு வாரி வழங்கும் வகையையும் உற்று நோக்கு மிடத்து, வேதங்களை மண்ணுள் புதையுண்டு மறைந்து கிடக்கும் வேராகவும், இதிகாச புராணங்களை நிலத்தின் வெளியே முகிழ்ந்தெழுந்து வானளாவ வளர்ந்த மரமாக வும், தோத்திரங்கள் சாத்திரங்கள் முதலிய அருள் நூல்களை மரத்தில் பழுத்துக் குலுங்கும் பழங்களாகவும் காண முடிகின்றது.
ஆகமம்
வேதங்கள் மறைபொருளாக அமைந்து சமயக் கருவூல மாக் விளங்கிக் கருத்துக்களைச் சுருக்கமாகவும் மறைமுக மாகவும் பொதுவாகவும் கூறுகின்றன. வேதங்கள் பொது நூல்களெனவும் கூறப்படுவன. ஆகமங்கள் விரிவாகவும், விளக்கமாகவும் தெளிவாகவும் கருத்துக்களைச் சிறப்புறக் கூறுவதனல், சிறப்பு நூல்களெனச் சிறப்பிக்கப் பட்டுள்ளன.26 மறையாகி மறைந்து நிற்கும் வேதங்கள், எங்களுக்கு எட்டக்கூடிய அளவிற்குச் சமீபத்திலிருப்பினும் அவை மறை என்னும் நிலையில் எமக்கு மறைந்து நிற்பவை யாதலால், அவை தொலைவிலிருப்பவையே. ஆகமங்களோ வெனின், தெளிவாகவும், விளக்கமாகவும் விரிவாகவும்,
21.

Page 13
மறைவின்றி வெளிப்படையாகவும் கருத்துக்களை வழங்கு வதனல் அவை தொலைவிலிருப்பினும் எங்களை அண்மித்து இருப்பவையே.
இறைவனே எங்களை அணுகத் திருவுள்ளம் கொள்ளும் பொழுது ஆகமம் ஆகி நின்று அண்மிக்கின்றன். 'ஆகம மாகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க"27 என்பது அருள் வாக்கு. வேதங்கள் எங்களுக்கு இறைவனை வெளிப் படுத்திய நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஆகமங்கள், அவ்விறைவனை அருவம், அருவுருவம் உருவம் ஆகிய அமைப்புக்களில் படிப்படியாகத் தெரியவைத்து28 எல்லையற்றுப் பரந்த பரப்பில் வியாபித்ததாக வேதங் காட்டும் இறைவனை, எல்லைவரம்பு கோலியமைக்கப்படும் கோயில்களில், பலவகைத் திருவுருவங்களில் சாந்நித்திய முறச் செய்தும், இவ்வடிவங்களில் வெளிப்பட்டு நிற்கும் இறைவனுடன் நெருங்கித் தரிசனம் வழிபாடு முதலியன நிறைவேற்றுமுகமாக அண்மித்து நிற்கவைத்தும் வழி காட்டுவன.29
ஆகம நெறி நின்று அமைக்கப்பெற்ற கோயில்களில், இறைவனும் வழிபடுவோரும் நெருக்கமுறும் வண்ணம் பூசனை வழிபாடுகள் நிகழ்கின்றன. இவ்வழிபாடு, கற்ருங்கு எரியோம்பி, அவ்வெரியில் ஆகுதிகளை நேரே காணுதவாறு மறைந்து நிற்கும் தேவர்களுக்காகச் சொரிந்து, அக்கினிமூலம் அவர்களுக்குச் சேர்ப்பிக்கும் வைதிக முறையிலிருந்து அறவே வேறுபடுவது நோக்கற் பாலது. திருக்கோயில் வழிபாட்டில், இறைவனும் அவ்வப்போது திருவுலாவும் கொண்டு, மக்கள் நடுவில் பவனிவந்து, மேலும் நெருக்கமாக அண்மித்து நின்று அருள்பாலிக்கின்றன். ஆகமங்கள் விதித்துக் கறும் பிரதிட்டை முதலிய நைமித்திகக் கிரியைகளாலும்,80 அபிடேகம், அலங்காரம், கிவேதனம் ஆராதனை முதலிய நித்தியக் கிரிபைகளாலும் வழிபடப்படும் இறைவன்,
22

கோயில்களில், திருவுருவங்களில் கும்பாபிஷேகம் ஆகிய கிரியையால் பிரதிட்டை செய்யப்பட்ட காலம் முதல் அவற்றை விட்டுக் கணமேனும் நீங்காது என்றும் சாந்நித்தியமாக இருப்பவன்99 என்பதும் தெளிவா கின்றது. இவ்வாறு என்றும் எழுந்தருளியிருக்கும் இறைவனை, நித்தலும் வழிபடுவதற்கு நான்கு உபாயங்களே ஆகமங்கள் விவரிக்கின்றன. சில ஆகமங்கள் தாம் கூறும் கருத் துக்களனைத்தையுமே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு தலையங்கங்களின் கீழே விவரிக்கின்றன,83 இந்நான்கு உபாயங்களுமே, ஆகமத்தின் அடிப்படை நோக்கத்திற்கமைய இறைவனை அண்மித்து நெருங்கு வதற்குரிய வழிகளாக அமைந்துள்ளன. ஆகமம் காட்டும் வழியே தனிவழி. ஆகம முறைப்படி அமைந்த திருக் கோயில்களில் நிகழும் வழிபாட்டு முறையே தனிச் சிறப்பு வாய்ந்தது. திருக்கோயில், அங்கு வழிபடுபவர் யாவரும் தத்தமக்கேற்றவாறு பல்வேறு நிலைகளில் நின்று கடமை :யாற்றுவதற்குரிய பெரியதொரு நிறுவனம். ஒவ்வொரு வரும் தனக்காகத் தானே நிகழ்த்த வேண்டியது, ஆத்மார்த்த பூசை. இவ்வாத்மார்த்த பூசையே. தன்னமைப்பை விரித்துக் கோயில்களில் நிகழும் பரார்த்த பூசையாகப் பரிணமித்துப் பிரமாண்டமாக வளர்ந்து, ஆன்மிக ஈடேற்றத்திற்கும், உள்ளத்தின் பூரிப்புக்கும், பேரானந்தப் பெருக்குக்கும், மன நிறைவுக்கும் வழி வகுத்து நிற்கின்றது. இற்றைச் சூழ்நிலையில், ஆத்மார்த்த பூசை படிப்படியாக வீடுகளில் நிகழ்த்தப்படாது மறைந்து கோயிலில் நிகழும் பரார்த்த பூசையில் ஒன்றி மறைந்து விட்டது. விரிந்த இலக்கியமுடைய மதம்: இதிகாச புராணங்கள் இராமாயணம், பாரதம் ஆகிய இருபெரும் நூல்களும் சரித்திர நூல்களாகவே அமையும் நோக்குடன் ' உரு
23

Page 14
வானவை.4 இதிகாசங்கள் என்று இவற்றிற்கு வரும் பெயரே இதை உணர்த்தி நிற்கும். இவை வருணிக்கும் நிகழ்ச்சிகள், இரு பெரும் போர்கள். ஒன்று, இராம னுக்கும் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போரையும், மற்றையது, பாண்டவருக்கும் கெளரவருக்கும் இடையே நடந்த யுத்தத்தையும் வருணிப்பதை நோக்காகக் கொண்டன. இதன் விளைவாக, இந்துக்களிடையே இரு பெரும் இதிகாசங்கள் எழுந்தன. இவை, பாரதநாட்டுப் பிரதேச மொழிகளிலும் ஆக்கப்பட்டுச் சிறந்த இலக்கியங் களாக அமைந்து, பண்பாட்டுச் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. இவை இரண்டுமே, அரச பரம்பரையில் வந்த வீரர்களின் பெருமை கூறுவதைத் தனி நோக்காகக் கொண்டு உருவான வீர காவியங்கள்.
ஐந்து உறுப்புக்களைக்கே கொண்டமைய வேண்டிய புராணங் களும் சரித்திர நூல்களாகவே அமையும் நோக்குடன் உருவாகத் தொடங்கின. உலகத்தின் தோற்றம், அழிவு, அரச பரம்பரை, இப்பரம்பரையின் வரலாறு, மநுக்களின் கால வரலாறு ஆகிய பொருள்களைக் கூறுதற்குரிய புராணங்களும், இதிகாசங்கள் போன்று, அரச பரம்பரை யில் வந்த வீரர்களின் பெருமை கூறவந்த நூல்களே புராணங்கள் பதினெட்டும்,36 முழுமையான சரித்திர நூல்களாக உருவாகியிருந்திருக்க வேண்டியவை. ஆனல், அவை அப்படி அமையவில்லை.
இவ்வாருக, அக்காலச் சூழ்நிலை, இவ்விருவகை இலக்கியங் களின் நோக்கத்தையும் அவற்றின் அமைப்பையும் வேறு பட்டு விலகவைத்துவிட்டன. இதிகாச புராணங்களாகிய இருவகை இலக்கியங்களே, சமயக் கருத்துக்களை வழங்கும் சமய நூல்களாக அமைந்துவிட்டன. இவ்வாறமையக் காரணமில்லாமலில்லை. சரித்திர நூல்களில் முக்கிய இடம், அரசருக்கே உரியது. அவர்கள்பற்றி அங்கு விவரித்தற்குரிய பொருள்கள், அவர்களின் திறமையும்
24

பெருமையும் வீரமும்ே. சமய நூல்களில் முக்கிய இடம் பெறுபவன் இறைவன். இறை என்பதே அரசனைக் குறிக்கும் சொல், சமய நூல்கள் முழுவதும் இறைவன் பெருமையும், கருணையும், அவன் அருளும், பெற்றியுமே பேசற்குரியன. இதிகாச புராண காலத்தில் மக்கள். மத்தியில் உயரிடம் வகித்த அரசர்கள் கண்கண்ட தெய்வங்களாகப் போற்றப்பட்டார்கள். இந்நிலையில் அரசன் வேறு, தெய்வம் வேறு என்ற பாகுபாடு சற்று மின்றி அரசனே தெய்வமாகும் நிலை தோன்றலாயிற்று. 4
இச்சூழ்நிலையிலும் இன்னெரு திருப்பம் நிகழ்ந்து' நிலைமையை மாற்றியமைத்துச் சமய அமைப்பைப் புதிய தொரு நிலையில் ஆழமாக வேரூன்ற வைத்துவிட்டது. அரசன் தெய்வமாகப் போற்றப்பட்ட நிலையைக் காட்டி அலும் தெய்வம் அரசனுகி அரசனுக்குரிய பெருமை சிறப்புக் 45G6T66wntub பொருத்தப் பெற்று, மக்கள் மனதில் உந்நத நிலை ஒன்றினை எய்தும் புதியதொரு போக்குத் தவிர்க்க முடியாதவாறு தோன்றலாயிற்று. இதன் விளைவாக, இதிகாச புராணங்களாகிய இருவகை இலக்கியங்களுமே, அரசன் பெருமை *துவதை விடுத்துத் தெய்வம் போற்று வதையே பொருளாகக் கொண்டு அமையத் தலைப் பட்டன. புராணங்கள் தெய்வம்பற்றியும், தெய்வீக மான, சமயத் தொடர்பு கொண்ட பொருள்கள் பல பற்றியும் விரித்துக் கூறலாயின. ஆகவே, புராணங்கள் அரசனேயும், அரசன் வீரத்தையும் விதந்து கூறுவதை விடுத்து அவனுக்கு உரிய இடத்தில் தெய்வத்தை நிறுத்தித் தெய்வத்தையும் தெய்வத்தின் வீரச்செயல்களையும் விவரிக்கலாயின. இவ்வாறு விரியும்போதே, சரித்திர நூல்கள் சமய நூல்களாகப் பரிணமிக்கக் காண்கிருேம். to foisorrst பரிணமித்ததும் இவ்விருவகை இலக் கியங்களும், தெய்வத்தின் வீரம்பற்றியும், பிராபவம் முதலியனபற்றியும் கூறுவதோடமையாது, தெய்வம் தொடர்புறும் சமயம் பற்றிய பல்வகை விவரங்களையும்
25
கூம் முன்வந்தன.87
2968-2

Page 15
சரித்திர நூல்கள் சமய நூல்களாக மாறியதன் ஆரம்ப நிலையை இதிகாசங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அரசகுலத்தில் தோன்றியவர்களான இராமன் வரலாறும் பாண்டவர் வரலாறும் கூறவந்த இதிகாசங்கள், நாராயணனின் அவதாரங்களான இராமனதும் கிருஷ்ண னினதும் பெருமை பெருக்குவதாயமைந்தன. இவ்வாறு கூறப்படும் பெருமையில் தெய்விகம் பொலிந்து விளங்கக் காணலாம். பாரதம் எல்லையற்றவாறு விரிந்து, சமயம் பற்றிப் பல்வகைப் பொருள்களைத் தொகுத்துக் கூறும் கலைக்களஞ்சியமென விமரிசகர்களால் வருணிக்கப் பட்டுள்ளது. இதனலேயே, இது பேருருப் பெற்று உலகிலேயே பெரிய இதிகாசமாகத் திகழ்கின்றது. இவ்விருவகை இலக்கியங்களிலும் வேள்வி தவம், விரதம் தீர்த்தம் தியானம் தோத்திரம் ஜபம், பூசை ஆகிய பல வழிபாட்டு முறைகள், தெய்வங்களுடனே தனித்தனியே தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றன.88 விரதங்களைப் பற்றி நிறைவான விவரங்கள் தரும் பிரமாண நூல்களாக விளங்குவன புராணங்கள். இவ்வாறு, இதிகாச புராணங்கள், வேதங்கள் மறைமுகமாகக் கூறும் விபரங்களை எங்கள் தேவைக்கேற்ப விரித்தும், ஆகமங்கள் தரும் விவரங்களுக்கு மேலதிக விளக்கங்களாக அமைந்தும் சமய நெறி நிற்போருக்கு வழிகாட்டி நிற்பன.
விரிந்த இலக்கியமுடைய மதம் : தோத்திர சாத்திரங்கள்
வேதங்களிலே பாடல்கள் பல இருக்கின்றன. இவை பல இணைந்து சூக்தங்கள் ஆகின்றன. சூக்தங்கள் தெய் வத்தை ஏத்திப் பாடுவன. பாடல்களில் தெய்வத்தின் தோற்றப் பொலிவின் வருணனை காணப்படும். இத்துடன் வேண்டுகோள்களும் பாடல்களில் இடம் பெறுவன. தெய்வத்தை வருணிக்கப் பிரயோகம் பெறும் அடைகள் தத்துவப் பொருள் சுவறியன. இவ்வாறு தோன்றும்
26

தத்துவப் பொருள், தத்துவக் கோட்பாடுகள் வளரு வதற்கு வித்தாக அமைவது. வேதங்களிலே இன்னும் சில பகுதிகள் விதிமுறைகளைக் கூறலாயின. செய்ய வேண்டி யவை எவை, தவிர்க்க வேண்டியவை எவை என விதித்தும் விலக்கியும் கூறும் இவை சாத்திர நூல்களுக்குத் தோற்று வாயாயமைந்தன. சம்ஸ்கிருதத்தில் இவ்வாறு நாளடை வில் தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் தோன்றிய வாறே, பாரதநாட்டின் பல பல பகுதிகளில், அங்கங்கே பயிலும் மொழிகளிலும் தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் தோன்றலாயின.9 இவ்வகை நூல்களில், தமிழில், திருமுறைகளெனப் போற்றப்படும் தோத்திர நூல்களும் சித்தாந்த மூல நூல்களாகிய சாத்திர நூல்களும் பிரசித்தி பெற்றவை. இவை சமய வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டிகளாக அமைபவை. வடமொழியில் தோத்திர நூல்களுளவெனினும், திருமுறைகளாகவும் திருவாய்மொழி முதலிய நூல்களாகவும் தமிழில் பெருகிய அளவிற்குப் பெருகவில்லை. இவற்றில், பக்திப் பெருக்கை விளைவிக்கும் தனிச் சிறப்பைத் தெளிவாகக் காணலாம்.
வடமொழியில் சமய நூல்களாய் அமைந்தவற்றுள் கிரியை இயற்றும் முறை விரிக்கும் நூல்கள் உருவானவாறு வேறு எந்த மொழியிலும் விரியவில்லை எனலாம்-40 அவ்வாறே, பிரதேச மொழிகளில், குறிப்பாகத் தமிழில், ஊனினை உருக்கவும், உள்ளொளி பெருக்கவும் வல்ல பக்திப் பாடல்கள் பெருகிய அளவிற்குச் சம்ஸ்கிருதத்தில் காணப் படுவதில்லை என்பது மறுக்க முடியாதது.
வேத வேள்விகள்பற்றி விளக்கங்களும் விபரங்களும் தரும் வேதப் பகுதிகள், பிராமணங்கள்.4 யாகத்திற்கு வேண்டிய தான வேதியின் கட்டட அமைப்பு முறைபற்றி விளக்கப் படும் பகுதிகளில் கட்டடக் கலையின் அமிசங்களும் சாமவேதம் இசைக்கும் முறையிலிருந்து இசைக் கலையும் கிரியைகள் தொடர்பான அத்தியாவசியத் தேவையை
27

Page 16
யொட்டி ஒலியியல், யாப்பு, வானவியல் போன்ற கலைத் துறைகளும் தோன்றி வளருவதற்கு ஆதாரமா யிருந்தமையால், வேதங்களைப் பல்வகைக் கலைகளின் பிறப் பிடமாகக் காண்கின்ருேம். விதிமுறைகள் கூறி, எடுத்துக் கொண்ட துறைபற்றி விளக்கமான உரைகளால் அறிவு புகட்டும் நூல், சாத்திரம் எனப் பெயர் பெறும் 43 பிர மாண நூல்களாயமைவதால், சொல்ல வேண்டியவற்றை எவ்வகையான ஆட்சேபத்திற்கும் இடந் தராதவாறு வற்புறுத்தி விவரங்களைத் தருவது சாத்திரத்தினியல்பு. இந்துப் பண்பாட்டைச் சிறப்பிக்கும் கலைகள் பற்றிய விவரங்களையெல்லாம் அவ்வக் கலைபற்றி உருவான சாத், திரங்கள் விவரிக்கக் காண்கின்ருேம். இவ்வாறு, வரைந்து விதிமுறைகளை வற்புறுத்துவதால், சாத் திரங்கள், அவ்வத் துறைகளின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பன என்ற குற்றச்சாட்டுப் பொருத்தமானதே. எனினும், இவ்வாறு வரைவு கோலாதவிடத்து கட்டுப் பாடு குலைவதனல் ஒழுங்கு சீர்குலைந்து, அவ்வத் துறைகள் தனிப்பட்டவர்களால் பல வகைகளாகக் கையாளப் பெற்றும் பல அமைப்புக்களைப் பெற நேரிடும். இதன் விளைவாகப் பெருங் குழப்பம் தோன்றும். உதாரணமாக, இலக்கண விதிகள் கூறும் சாத்திர நூல்கள், வரைவு கண்டு எல்லை கோலாது விடுப்பின், ஒவ்வொருவரும் தாம் தாம் வகுத்துக்கொண்ட அமைப்பில், மொழியைக் கையாளும் நிலையில், ஒருவர் மொழி மற்றவருக்கு விளங் காத நிலையே ஏற்பட வாய்ப்புண்டு. இலக்கணத்தில் பொருத்திக் காட்டப்பட்ட இந்நிலை, எல்லாத் துறை களுக்கும் பொருந்தும். வரையறைவு கூறும் சாத்திரங்கள் அவ்வப்போது வழங்கி வரும் சுதந்திரங்கள் பயன் தருபவை யாக அமைந்து, வளர்ச்சிக்கு வழி வகுப்பன என்பது அவதானத்திற்குரியது.44 முற்றிலும் இலௌகிகமான இல்லற இன்ப அநுபவ வேறுபாடுகளையும் அவை பற்றியம் நுண்ணிய விபரங்களையும் தரும் நூல்கூட வடமொழியில் சாத்திரம்ாக உருவாகியுள்ளது. இது, காமசூத்திரமெனப்
58

பிரசித்தி பெற்றது. உயரிய தத்துவ சம்பந்தமான, இலக்கண இலக்கிய சம்பந்தமான, முழுமை பெற்ற சாத்திர அறிவு வழங்குவது மட்டுமன்றிக் காம சம்பந்த மான சாத்திர நூலையும்49 உருவாக்கி, இத்துறையில் இவ்வளவிற்கு வளர்ச்சி பெற்ற நூல், உலகில் எம் மொழியிலும் இன்று வெளிவந்ததில்லை என்று போற்றிப் பேசும் பெருமை இந்துப் பண்பாட்டிற்கு உரியதல்லவா?
விரிந்த இலக்கியமுடைய மதம் :
கலை இலக்கியம்
இந்துக்களிடையே வளர்ந்த கலைகள் அறுபத்திநான்கு என்பர்.46 இக்கலைகள் யாவும் தெய்விகமானவை. இது பற்றியே இந்துக்களின் பெருந்தெய்வங்களுள் ஒன்ருகிய அம்பிகையின் ஆயிரம் நாமங்களிலொன்று கலாவதி என்றும், இன்னென்று அறுபத்தினன்கு கலைகள் மயமானவள்47 என்றும் கூறும். இக்கலைகள் வளர்வதற்குக் கோவில்களே நிலைக்களஞக இருந்து வந்தன. இக்கலைகள் பற்றிய விவரங்களை முறையாகவும், விவரமாகவும் கூறவேண்டிய தேவை தோன்றியதனுல் இவைபற்றிச் சாத் திரங்களுருவாயின. கோயில்களுடன் தொடர்பு பெறும் ஆகமங்களில் கலைகள் பற்றிய விவரங்களை விரிவாகத் தருவதற்காக, நூல்கள் சாத்திர வடிவில் விரியலாயின. ஆகமம் கூறும் தனிப்பெருங் கலையான கிரியைபற்றிப் பத்ததிகளும்48 திருவுருவமமைக்கும் கலைபற்றிச் சில்பரத்ாகம், தத்வநிதி முதலிய சிற்ப நூல்களும், கட்டடக் கலைபற்றி, 'lons smyúb (pS6) frø"r நூல்களும், இசைக் ඊඊඛ) பற்றிச்
சங்கீதரத்நாகாரம் முதலிய நூல்களும் தோன்றலாயின.
மதமும் வாழ்க்கையும்
வாழ்க்கையில் இன்றியமையா நிகழ்ச்சிகள் "உண்ணுதல் உறங்கல், உடுத்தல் முதலியன. இந்நிகழ்ச்சிகள் சீராயும் 29

Page 17
அழகாயும் நிகழும்பொழுது, அதாவது மனிதன் உண்ணும் பாங்கு உறங்கும் முறை, உடுக்கும் அழகு ஆகியன சிறப்பாக அமையும்பொழுது, பண்பாட்டுச் சிறப்பு பற்றிய பேச்சு எழுகின்றது. சுருங்கக் கூறின் மனிதனின் வாழ்க் கையில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாமே மனதைக் கவரும் வகையில் அமைந்தால், அந்நிகழ்ச்சிகளில் பண்பாட்டுச் சிறப்பைக் காணுகின்ருேம். இந்துக்களைப் பொறுத்த அளவில், வாழ்க்கையின் அமிசங்கள் யாவுமே, ஏனைய மதங்கள் இலௌகிகமாகக் கருதுபவை யாவுமுட்படச் சமயப் பின்னணியைக் கொண்டவை. இதனுல், இந்துக் களின் வாழ்க்கை முழுவதுமே சமயம் சுவறியிருக்கக் காண்கின்ருேம். காலை துயிலெழுதல் முதல், இரவு தித்திரை போகும்வரை எல்லா நிகழ்ச்சிகளிலும் சமயம் கலந்துள்ளது. சைவ வினவிடை போன்ற சமய அரிச்சுவடி நூல்கள் அன்றன்ருட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ்தற்குரியன என்பதை விதித்துக் கூறுவதை, அவதானிக்கும்பொழுது, வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகத் தெரிகின்றது. சமயக் கலப்பே இல்லாதவாறு முற்றிலும் உலகியல் நிகழ்ச்சிகளிலீடுபட்டிருக்கும் வேளைகளிலும், அடிக்கடி, இறைவனை நினைவுகூரும் பழக்கம் இந்துக்களுக்கு உண்டு. சிறுவர் சிறுமியர்க்குத் தெய்வங்களின் பெயர் சூட்டும் இந்துக்களின் வழக்க்ம், அவர்களை அடிக்கடி இறைவன் பெயரைச் சொல்ல வைக்கின்றது. இந்துக்கள் தெய்வ வழிபாட்டிலும் தெய்வசிந்தனையிலும் செலவிடும் பொழுது பெருமளவினது. வாழ்க்கையில் அடிக்கடி விரதங்களைக் கடைப்பிடிப்பதனுல் பகற்பொழுது முழுவதும், சில வேளைகளில், பகலும் இரவும் இணைந்த முழுநாளுமே, தெய்வசிந்தனைக்கு உரியதாகிவிடுகின்றது. ஒவ்வொரு வனும் தான் செய்து முடிக்கும் செயல் முழுவதையுமே இறைவனுக்கே அர்ப்பணிக்கும் பழக்கம்49 இம்மை மறுமை இரண்டுக்கும் பெரும் பயன் தருவது. வாழ்க்கையில் முற்றிலும் இலௌகிகமாகக் கருதப்படும் விவாகம்
30

முதலியனசுடத் தெய்விகம் சுவறியனவாக அமைந்து விடுகின்றன. வாழ்க்கையில் நிகழும் சடங்குகள் யாவற் றிலுமே தெய்வ சிந்தனை வளரக்கூடிய தெய்விகச் சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. ஏனைய மதங்களைக் கடைப்பிடிப் படத்து இவ்வமைப்பை இதே அளவில் காணுதல் s9igJ.
இந்துவாகப் பிறந்து இந்துவாக இறப்பவனின் வாழ்க் கையை நுணுகி ஆராயின், வாழ்க்கையும் சமயமும் எவ்வாறு பின்னிப் பிணைப்புண்டு நிற்கின்றன என்பதை உணர முடியும். இவ்வாறு பிணிப்பிற்று இருப்பதனலேயே இந்துமதம் என்றும் வாழும் மதமாகத் திகழ்கின்றது. மதத்தை வளர்த்தல் வேண்டும் என முனைந்து ஒருவரும் செயற்படாதே, இந்துக்கள் வாழும் வரை மதமும் வாழ்ந்து வரும்,
கிரியை ஆத்மார்த்த பரார்த்தங்கள் ஆத்மார்த்த பூசை -
ஆத்மார்த்த பூசை என்பது ஒவ்வொருவரும் தானே தனக் காகச் செய்யும் பூசை. கடவுள் இந்தச் சரீரத்தை நமக்குக் கொடுத்தது அவரை வழிபட்டு முத்தி இன்பம் பெறும் பொருட்டே" என்ற நாவலர் வாக்கு சகல சாத்திரங்களின் சாரமாகும். சரீரம் முழுவதுமே இறை வழிபாட்டில் ஈடுபடுதற்குரியது என்பது இதிலிருந்து பெறப் படும். திருவங்கமாலை0 தேவாரப் பதிகத்தில் இக்கருத்து விவரிக்கப்பட்டிருக்கக் காண்கிருேம். சிவானந்த லஹரி? என்னும் தோத்திரத் தொகுதியிலுள்ள ஒரு பாடலில் சங்கரரும் இதே கருத்தை விவரிக்கின்ருர். அத்துதிப் பாடல் பின்வருமாறு அமைகின்றது: இறைவனே என்னுடைய மனம் உன்னுடைய பாதத் தாமரைகளில் பதிவதாக; எனது வார்த்தைகள் உன் புகழ் பாடட்டும்.
31

Page 18
என் இரு கைகளும் உன்னை அர்ச்சிக்கட்டும்; இரு செவி 'களும் உன் பராக்கிரமங்களை மடுக்கட்டும் என்னுடைய புத்தி உனது தியானத்திலும், எனது கண்ணிணைகள் உன்னுடைய அருட்கோலப் பொலிவைக் கண்டின்புறு வதிலும் திளைக்கட்டும்; இவ்வாறு சரீரம் முழுவதுமே உன்னிடம் ஈடுபடும் நிலையில், நூல்களால் அதி"சி சாத்திரங்களால், எனவே தத்துவ விசாரணையினல், பயன் யாதுதான் உளது? எதுவுமே இலது" என்பது இப்பாடல் உடல் உறுப்புக்கள் அனைத்தையும் இவ்வாறு ஈடுபடுத்தி இறைவனை, வழிபடும் முறையின் விரிவு, வேதங்களிலும் ஆகமங்களிலும், அவை வழிவந்த திரியை நூல்களிலும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. நல்வினை தீவினை ஆசி! இருவினைப் பயனையும் நுகர்வதற்கும், ஒவ்வொருவனும் தானே உரியவனகின்றன். இவ்வடிப்படையில் ஒருவன் செய்யும் பூசையின் பயன் அவனையே சாரும். எனவே இந்து ஒவ்வொருவனும் தானே பூசை முதலிய வழிபாடு களைச் செய்யும் கட்ப்பாடுடையவன் ஆகின்றன். இதன் பிரகாரம், ஒருவர் செய்யும் பூசையின் பெறுபேறு இன்னெருவரைச் சாருவதற்கு இடமே இல்லை என்பது தெளிவாகின்றது.
தீட்சை முதலியவற்ருல் ஆத்மார்த்த பூசை செய்வதற் குரிய அதிகாரத்தை முறைப்படி பெற்றவர், பூசைக்காகத் தன் வீட்டில் நிரந்தரமாக ஒதுக்கப்பட்ட இடத்தில், இறைவனைத் திருவுருவத்தில், உபசாரங்களால் தானே உபசரித்துப் பூசிக்கும்பொழுது, சற்றுமுன் கூறியபடி மனம், வாக்கு, காயமுட்படச் சரீரம் முழுவதுமே ஆத்மார்த்த பூசையிலீடுபடும் ஆத்மார்த்த பூசை நித்தலும் வீட்டில் நிகழற்கரியது.58 ஆத்மார்த்த பூசை, நித்திய மானதெனினும் அது நைமித்திகமாகி அவ்வப்போது அனுட்டிக்கப்படுதற்குரிய நைமித்திகங்களாகவும் விரியும். இவையே விரதங்கள் முதலிய விசேட நிகழ்ச்சிகளாம்.
32

பரார்த்த பூசை
கோயில் பூசையை அது நிகழ்த்துதற்குரிய அதிகாரம் பெற்ற ஒருவரே நிகழ்த்துவதும், ஏனையோர் இப்பூசையை அவ்வப்போது குழுமித் தரிசித்தலும், ஆகம மரபில் ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம். எனவே, இறைவன் வெளிப்பாடு விசேடமாக நிகழும் இடத்தில், இறைவனது சாந்நித்தியத்தினுலீர்ப்புண்டு பெருமளவினர் குழுமியிருக்கும் சூழ்நிலையில், யாவரும் தரிசிக்கும் அமைப்பில், ஒருவர் நிகழ்த்தும் பூசை பரார்த்த பூசை5 எனப்படலாயிற்று. பரார்த்த பூசை நிகழ்த்துபவர், ஆத்மார்த்த பூசையைத் தமக்காக நிகழ்த்திய பின்னரே, பரார்த்த பூசை நிகழ்த்தற்குரியவ ராவர். பரார்த்த பூசை நிகழும் இடமாகிய கோயிலில், இறைவன் வெளிப்பாடு முனைப்பாக இருப்பதனல் அதே அளவிற்குச் சாந்நித்தியம் பொருந்தும் சாத்தியத்தை எதிர்பாராத ஆத்மார்த்த பூசையின் பின்னர், பரார்த்த பூசையில் ஒவ்வொருவரும் ஈடுபடுவது அத்தியாவசிய ionrs26örpg.
கிரியை என்னுங் கலை
சமயம் வளர்த்த கலைகளுட் பெருஞ்சிறப்பு வாய்ந்தது கிரியை என்னும் கலை. கிரியை நிகழ்த்துவதில் திறமை ஒரு கைதேர்ந்த கலைஞனுக்கே உரியது. கல்லாலோ செம்பாலோ உருவாகிய சிலை இறைவனுகத் தெரிவதற்கு இவன் திறமையே காரணம்.5' இவன் கிரியையாற்றும் கலையின் வண்ணமே சிலைக்கு உயிர் ஊட்டுகின்றது. கிரியையைத் திறம்பட நிகழ்த்துபவருக்குப் பரத நாட்டி யத்தில் கைதேர்ந்த கலைஞருக்குரிய ஆற்றல் இருத்தல் அவசியம். பரதநாட்டியக் கலைஞரோ, நாடக பாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகரோ தம் அபிநயத்தால், ரசாநுபவங்
33

Page 19
கன்யும், பாவங்களையும் தோற்றுவிப்பவர். கிரியைகளில் கைதேர்ந்தவனும், தன் திறமையினல் பக்தி, சாந்தம் முதலிய ரசாநுபவங்களையும், இறைவன் சிலையில் ஆவிர்ப் பாவமாகும் பாவாதிகளையும் தோற்றுவிப்பான். கிரியை நிகழ்த்துபவன், பாவனையை வெளிப்படுத்துவதில் திறமை பெறுதல் அத்தியாவசியம். சாகித்தியத்திற்கேற்ப தாட்டிய நடனதிகளை நிகழ்த்தும் கலைஞன், சாகித்தி பத்தை அனுசரித்து 'சாகித்தியத்தில் வரும் பல நிகழ்ச்சி களையும் பல பாத்திரங்களையும் பாவனையினல், கற்பனை யினல் தன்னுடனிணைத்துக்கொண்டு தன்னுடன் உண்மை யாகவே அவ்வப் பாத்திரம் இருத்துவிக்கப்படும் கற்பனைச் சூழ்நிலையில், தாக்கங்களை, பாவங்களைத் தன் முகபாவங் களால் தத்ரூபமாக வெளிப்படுத்தும் வேளை, ரசிகர்கள் உள்ளம் நெகிழ்ந்து, அந்நிகழ்ச்சியில், நெருக்கமாக ஒன்றி விடுவர். தனியொரு கலைஞரே பல பாத்திரங்கள் இணைந்து நிகழ்த்த வேண்டிய நிகழ்ச்சியில், ஏனைய பாத்திரங்களைக் கற்பனையில் தன்னுடன் இணைத்துக் கொண்டு, அவ்வாறு இணைந்த நிலையில், கற்பனையாகவே நிகழ்பவற்றிற்கேற்பத் தன் முகபாவங்களால் விளைவுகளை ஏற்படுத்தும் திறமை, நாட்டிய நாடகங்களில் இன்றி யமையாது வேண்டப்படும். இவ்வாறே கிரியை நிகழ்த்து பவனும் பாவனை 5ே மூலம் தெய்வத்தின்சாக்கித்தியத்தை வரவழைத்துத் தகுந்த சூழ்நிலையையும் பாவனையாலுரு வாக்கி, இறைவன் வழிபாட்டிற்குரிய திருவுருவத்தில், சாந்நித்தியம் கொண்டு எழுந்தருருளும் நிலையை வருவிக்கும் திறமை வாய்ந்த கலைஞன்" என்னும் பாராட்டுக்கு உரியவனுகின்றன். நாட்டிய நிகழ்ச்சி நிகழ்த்தும் கலைஞன் ரசங்களையும், பாவங்களையும் மாறி மாறித் தோற்று விக்கும் முறையை அபிநயம் என்பர். கிரியை நிகழ்த்து பவரும் பக்தி என்னும் ரசத்தை வழிபடுவதற்காகக் குழுமி யுள்ளோரிடம் தோற்றுவிப்பதும் ஒருவகை அபிநயமே. நாட்டிய நிகழ்ச்சியில் இன்றியமையாப் பின்னணியாக அமைந்து, நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பொருட்
34

செறிவு மிக்கதாக நிகழ உதவுவது சாகித்தியமே. இதே. போன்று, கிரியை நிகழ்ச்சியில், அவ்வாறே பின்னணியாக, அமைந்து அவற்றைத் தொடர்ச்சியாக நிகழச் செய்வன அவ்வப்போது பிரயோகம் பெறும் தியான சுலோகங்கள்.
கலைஞன், முகபாவங்களால் வரவழைக்கும் பாவனைகளை, மேலும் நிறைவு செய்ய, அவனுக்கு அநுசரணையாக இருப்பன முத்திரைகள். கண் அசைவுகளை அடிப்படை. யாகக் கொண்ட முகபாவங்களுடன் இணைந்து, ரசாது பவங்களை வருவிப்பதற்கு, முத்திரைகள் பெரிதும் துணை நிற்பன. முத்திரையின் பின்னணியைச் சற்று அவதானித். தால், முத்திரையின் பயன் என்ன என்பது தெளிவாகும். மிகவும் அதிகமான தேவை ஏற்படும்பொழுது, ஒருவனே எத்தனையழுத்தமாக வாவெனக் கூவியழைத்த பின்னரும், கூவியழைப்பவன் திருப்தியுரு நிலையில், இரு கைகளையும் பலமாக அசைத்து, கூவுதலுடன் இவ்வழுத்தம் பெற்ற சைகையையும் காட்டும் நிகழ்ச்சியிலே, வா என்ற ஒலி தரும் வருதற் பொருளை உணர்த்துவதற்குக் கை அசைவு என்னும் முத்திரையும் துணை நிற்கும் வேளை, வருதற் குரியவன் மனதில் விளக்கம், தெளிவாகவும் உறுதி யாகவும் எழுந்து, வருதல் என்னும் நிகழ்ச்சி விரைவு படல் வேண்டும்" என்ற எண்ணத்தைத் தோற்றுவிக் கின்றது. சாதாரணமாக, வாழ்க்கையில் பேசும்பொழுது பேச்சுடன் சைகைகளாகிய முத்திரைகளும் இணையக் காண் கின்ருேம். மனதில் பாவனையால் பெருகும் உணர்ச்சிப் பெருக்கு, முகபாவங்களாக வெளிப்படுவதுடன் அமை, யாது, மெய்ப்பாட்டின் ஒரமிசமான கை அமைதிகளால்முத்திரைகளால்-வெளிப்படுவதே முத்திரையின் சுருக்க. மான வரலாருகும்.
இம்மெய்ப்பாடு, உடம்பில் பலவாருக வெளிப்படக்கூடிய தெனினும், கையின் அசைவுகளே வெளிப்பாட்டில், பெரும் பகுதியாய் அமைந்துவிடுகின்றன. கருத்துக்களுக்கு,
35

Page 20
வடிவந் தரும் கையமைதி, ஒரு கலையாக நெறிப் படுத்தப்பட்டு, இன்ன கருத்து இன்ன வகையில் அமையும் கையமைப்பால் உணர்த்துதற்குரியது எனச் சரித்திர ரீதியாக வரையறுக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட முத்திரை, கிரியைகளில் பெரிதும் பயிலும் அமிசமாக விளங்கக் காண்கின்ருேம்,
பரதநாட்டியத்திற் பயின்று வரும் பல முத்திரைகள் இரியைகளிலும் அதே பெயர்களைக் கொண்டு அதே கையமைதிகளில் பிரயோகம் பெறுவது சிந்திக்கற்பாலது. இதுவரை கூறப்பட்ட கலை பரார்த்த பூசை நிகழ்த்துபவ ரிடையே வளருதற்குரிய கலையாகும், ஆத்மார்த்த பூசை யுடன் மிகச் சிறு அளவில் இது தொடர்பு பெறுவதுண் டெனினும், பரார்த்த பூசையிலேயே இதன் தேவையும் அதையொட்டி இதன் வளர்ச்சியும் பெருகுகின்றன.
ஆத்மார்த்த பூசையின் பின்னரே, பரார்த்த பூசை நிகழ்வது முறையானதாலும் பரார்த்த பூசையில் வெளி யில் நிகழ்த்தப்படுவது போன்றே, உள்ளத்தில் இறைவனை இருத்திப் பூசைகள் மானசிகமாக நிகழ்த்தி57 அந்தர்யஜனம் எனப்படும் இம்மானசீக பூசையினிறுதியில் இறைவன் அநுமதியுடன் பரார்த்த பூசை நிகழ்வதாலும், இப் பூசை வெறும் அபிநயமே, நடிப்பே என்ற பேச்சுக்கே இடமில்லை.
சமயம் கலைகளைத் தோற்றுவித்தமை
வாழ்க்கையோடு நெருங்கி இணைந்த சமயம், மக்களிடை என்றும் பயிலும் வாய்ப்பினதாய் பன்னெடுங்காலம் நிலவி வருவதெனினும், கலைகள் பொலியும் சிறப்புடன். ஓங்கி வளரும் வாய்ப்பு, சமயம் பெரிதும் பயிலும் கோயில் களிலேயே தோன்றிப் பண்பாட்டைச் சிறக்க வைத்தது.
36

இறைவனின் விசேடமான வெளிப்பாட்டை உணரத் தரும் ஆலயங்களில், இவ்வெளிப்பாட்டின் காரணமாக, வழிபடும் நோக்குடன் திரண்டு வரும் பல்லாயிரக் கணக்கினரின் மனதில் இறை உணர்வு பதித்து, பக்தி பெருக்கும் சூழ்நிலை அமைய வேண்டிய தேவையை நோக்காகக் கொண்டு, ஆலயங்கள் இயங்க வேண்டிய விதி முறைகளாக ஆகமங்கள் வகுத்து, விதித்த வழிகளுக் கமையக் கிரியை மரபு உருவாகிக் கலைகளைத் தோற்று வித்தது.
ஆலயங்களில் நிகழும் முக்கிய நிகழ்ச்சி, வழிபாடு. இதே ஒரு கலை என்று விதந்து போற்றும் சிறப்பு வாய்ந்தது. வழிபாட்டிற்கு இன்றியமையாதது இறைவன் திருவுருவம். இதனல், திருவுருவம் அமைக்கும் விக்கிரகக் கலை தோன்றலாயிற்று. திருவுருவங்களைக் கல்லிற் சமைக்கவும், மரத்தில் செதுக்கவும், உலோகத்தில் வடிக்கவும், சுதையில் உருவாக்கவும் ஆற்றல் படைத்த சிற்பிகள் பரம்பரை யாகத் தங்கள் கலையைப் பரப்பி வந்தார்கள். இறைவன் தியானமும், தூய சிந்தனைகளும் இவர்கள் உள்ளத்தில் நிறைந்திருந்ததஞல், இவர்கள் ஆக்கிய உருவங்களும் தெய்வாமிசம் பொருந்தி விளங்கின. பல்லாயிரக்கணக் கான அமைப்புக்களில் இறைவனைக் கோலம் செய்து உருவாக்கும் விக்கிரகக்கலையின் பொலிவு, இந்து மதத்திற். போல் வேறெந்த மதத்திலும் சிறப்புற அமையவில்லை.
வழிபாட்டிற்காக உருவாக்கப்படும் விக்கிரகங்களை நிறுவு வதற்கு ஆலயம் தேவைப்பட்டது. இதையொட்டி வளர்ந்தது கட்டடக் கலை. 59 இக்கலை வல்லுநரான ஸ்தபதி களால் நிர்மாணிக்கப்பட்ட பெருங்கோயில்களும், தூண் களும், விமானங்களும், வானளாவிய கோபுரங்களும், மதிற் சுவர்களும், புராதன கோயில்களை அணி செய்து இக் கலையிற் கைதேர்ந்தவர்களின் ஆற்றலைப் பறைசாற்று வதுடன் மேனட்டவர்களின் பெரு வியப்புக்குப் பாத்திர மாயும் நிற்கின்றன.
37

Page 21
கோயில், விமானங்களிலும், கோபுரங்களிலும், தூண் களிலும், தெய்வத் திருக்கோலங்கள் சிற்பநூல்கள் கூறும் முறைக்கமையப் பல வகைக் கோலங்களில் தோற்றம் பெற்றுள்ளன.60 இறைவன், இவர்ந்து பவனி வருவதற் காக, வகை வகையாக வாகனங்களமைக்கும் கலையும் வளர்ந்தது. இவற்றையெல்லாம் வனப்புற அழகுறுத்த ஓவியக் கலையும் இதையொட்டி வளரலாயிற்று. கோயிற் சுவர்களில், வீதியை வலம் வரும் அடியவர் மனதிற் படியக்கூடியவாறு, இறைவன் பெருமையைச் சித்திரிக்கும் சித்திரங்களைத் தீட்டியும், ஆலயங்களில், ஓவியக் கலைஞர் தம் கலையை வளர்த்தனர்.
இந்துக்களின் இசைக் கலை வளரக் கோயில்களே நிலைக் களனக விளங்கி வந்தன. இசைப் பாடல்கள், புகழ் பாடுதலையே பொருளாகக் கொண்டவை. புகழ்ந்து பாடுவதற்குத் தகுதி வாய்ந்தவன் இறைவனுெருவனே. மனிதனைப்பற்றிச் சிறிது போற்றிக் கூறும்பொழுதே அது பொருத்தம் அறவே அற்றவாறு அளவு மீறிவிடுகின்றது. தெய்வத்தைப்பற்றி எவ்வளவு அதிகமாகக் கூறின பின்பும் இன்னும் கூறினலும் மிகையாகாது எனத் தோன்றுகிறது. ஏத்திப் புகழ்ந்து பாடுவதற்குரிய ஒருவனன இறைவன்மீது பாடும் மரபும், கோயிலை அநுசரித்தே உருவாகி, இசைக் கலையில் புதுப்புது வளர்ச்சி நிலைகளைத் தோற்றுவித்தது. பண்ணிசை, கோயில்களைக் காரணமாகக் கொண்டு வளர்ந்ததே தனி வரலாறு. இசைக் கருவிகளும்6 கோயிலில் இசைக்கலையைப் பெரிதும் வளர்த்தன. இசைக் கலையைக் கோயில் வளர்த்த முறையே தனி ஆய்வுக்குரிய விடயம். தெய்வங்களே இசைக் கருவிகளைக் கையிலேந்திய கோலத்தில் அமைவது, இசைக் கலைக்கு அதியுன்னதமான தெய்விகப் பின்னணி `யைத் தருகின்றது.
கோயில்களே வளர்த்த கலைகளுள் முன்னணியில் நின்றதும் அங்கு பரம்பரையாக நெடுங்காலம் பேணிப் பாதுகாக்கப்
38

கட்டு வந்ததுமான கலை, நாட்டியக் கலையே. 4ே சூழ்நிலை காரணமாக இக்கலை கோயில்களினின்றும் இன்று மறைந்து விட்டது. இந்துப் பெரும் தெய்வங்களே ஆடற்கலை பயிலும் அமைப்பில் சித்திரிக்கப்பட்டிருக்கக் თmeõr&მGფzub. இறைவனுக்கு நித்திய நைமித்திக வழிபாடுகளில் கிருத்ய உபசாரம் நிரந்தரமான இடம் பெற்றிருந்தது.
கோயிலில் இராசோபசாரம்
பிராசாதம் 86 என்ற சம்ஸ்கிருதச் சொல், கோயில் என்ற தமிழ்ச் சொல்லை முற்றிலும் நிகர்க்கும். இரண்டு சொற் களுமே, தனித்தனி, அரசன் வசிக்குமிடமென்றும் தெய்வங்களினுறைவிடம் என்றும் இரு பொருள்களையுங் கொண்டவை. அரசன் இறைவன் ஆகிய இருவரும் ஒரே நிலையில் வைத்துப் போற்றற்குரியவர் என்பதை இது காட்டுகின்றது. அரசனின் தனிப்பெருங் கடமை குடி மக்களைக் காத்தல் வேண்டியவற்றைப் பெறச் செய் வதும், பயத்திலிருந்து பாதுகாத்தலும் அரசன் தெய்வம் ஆகியோருக்கு உரிய பொதுப் பண்புகள். அரசன் கண் கண்ட தெய்வமெனச் சாத்திரங்களே போற்றுவன.
ஆலயம், பல்லாயிரக்கணக்கான அடியவர் குழுமி வழி படுதற்குரியவாறு பரார்த்த பூசை நிகழ்தற்குரிய இடமாக அமைய வேண்டுவதனுல், இது, பெரிய நிறுவனமாக உருவாயிற்று என்பது முன்னர் கூறப்பட்டது. நாளடை வில் ஆலயமே அகழிகளாற் குழப்பட்டு அரண்மனையின் அமைப்பைப் பெற்றது. அரசனின் மாளிகையைச் சுற்றி எழவேண்டிய உயர்ந்த மதிற்கவர்களும் கோயிலைச் சுற்றி எழுந்தன. அரச மாளிகையின் கேந்திரங்களாக அமையும் நான்கு வாயில்கள் போன்று கோயிலில் நான்கு திசை களில் நான்கு வாயில்களும், அவ்வாயில்களை அழகு செய்யும் வானளாவிய கோபுரங்களும் எழலாயின. அரச
39.

Page 22
மாளிகையில், அரசனுடைய தேவைக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ப, ஆங்காங்கு பரிசனங்கள் புடைசூழ இருப்பதற்காகப் பலவிதமான அமைப்புக்கள் இருப்பதை நிகர்த்துப் பரிவார தெய்வங்களைச் சுற்றிலும் நிறுவுவதற்காகக் கருவறையைச் சுற்றிலும் பல சிற்றலயங்கள் அமைவன. அரசன் கொலுவீற்றிருக்கும் ஆஸ்தான மண்டபம் பெரு, மளவிற் குழுமும் பொதுமக்கள் கூடி அரசனைத் தரிசிப்ப தற்கு ஏற்றவாறு விஸ்தீரணமாகவும் கலையழகு GLunro யவும் அரண்மனையில் அமைந்திருப்பது போன்று, பக்தர் கள் பெருமளவிற் கூடி இறைவனைத் தரிசிப்பதற்கேற்ற அமைப்பைக் கொண்டு, வசந்த மண்டபம் விளங்கும். அரசன் உறைவிடத்தில் வாயில்களில் காவலர் காத்து நிற்பது போன்று, கோயில்களிலும் வாயில்களில், துவார பாலகர் உயர்த்தி நீட்டிய சுட்டுவிரல் காட்டி எச்சரித்து நிற்கும் அமைப்பில் காணப்படுவர். அரண்மனையைச் சுற்றிக் குடிமக்களும் அங்கங்கே அங்காடிகளும் அமை வதை நிகர்த்துக் கோயிலைச் சுற்றிலும் பட்டணமே உருவாகக் காண்கின்ருேம். மதுரைக் கோயில் இவ்வமைப் புக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. அரசர்களுக் குரியது கொடி இறைவனுக்கும், உரிய gairarth. பொறிக்கப்பட்ட கொடி உண்டு. கொடிமரம், கொடி யேற்று வைபவம், தேர் ஆகியவை அரசனுக்கும் உண்டு; இறைவனுக்கும் உண்டு. அரசர் அவ்வப்போது வீதிகளில் பவனி வருவதை நிகர்ப்பது, கோயிலில் இறைவன் கொண் டருளும் திருவுலா. அரசனுடைய பவனியில் அவனுக்கே உரியதான ஆடம்பரங்களான கொடி, குடை ஆலவட்டம், சாமரை, தீவட்டி கட்டியம் ஆகியன கோயிலில் இறைவ னுலாவிலும் இடம் பெறுவன. வசதி படைத்த பெருங் கோவிலில் யானை, குதிரை, ஒட்டகம் முதலியனவும் அணி வகுத்து முன்னே செல்வன. பேரிகையும் ஊர்வலத்தின் முன் முழங்கிச் செல்லும், வாத்தியங்களிலிருந்து எழும் இன்னிசையும் முழங்கும். கலை நிகழ்ச்சிகளும் அரசன் பவனியிற் போன்று இறைவன் திருவுலாவில் காண்கிருேம்.
40

பவனிவரும் வேளையில் மட்டுமல்லாமல், அருளுமுகமா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையிலும் தெய்வத் திற்குமேல் கவிந்திருக்கும் குடையும், இருமெங்கிலும் இரட்டப்படும் சாமரங்களும், அரசன் இதே போன்ற உபசாரங்கள் பொலியக் கொலுமண்டபத்தில் சிங்காதனத் தில் குடைகீழ் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கண்முன் கொணர்ந்து நிறுத்தும். இறைவன் பவனிவரும் வேளையில், கட்டியங் கூறுபவர், கட்டியத்துக்குரிய செங்கோலை ஏந்திநின்று இறைவன் பவனி வந்துகொண் டிருப்பதைக் கூறி எச்சரிக்கும் நிகழ்ச்சி, அரசன் பவனி வரும் நிகழ்ச்சியை முழுவதாக நிகர்க்கும். அரசன் பவனி வரும் பொழுது கெற்பொரியையும் நறுமணங்கமழும் மலர்களையும் தூவி வாழ்த்திக் கெளரவிப்பது போன்று இறைவன் திருவுலாவிலும் நிகழ்வது மரபு. இறைவன் திருவுலாக் கொள்ளும் வேளை, அரசனை முற்றிலும் நிகர்த்துப் பட்டாடைகளாலும் விலையுயர்ந்த மணிகள் பதித்த பொன்னணிகளாலும், முக்கியமாக அரசருக்கே உரிய கிரீடத்தாலும் வகைவகையான மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுப் பவனி வருவது அவதானத்திற்கு உரியது.
அரச மாளிகையிற் போன்று, ஆலயங்களிலும், பரம்பரை யாகப் பலவகைப் பணியாளர்கள் தத்தம் கடமைகளை ஆற்றுவதற்காகச் சர்வ மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசனவையை அணிசெய்யும் ஆஸ்தான கவிஞர் போன்று, கோயிலிலும், கலைஞர்கள் கலைப்பணி புரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 87 சுருங்கக் கூறின், அரசனுறை விடமாகிய மாளிகையிலுள்ள ஒவ்வோரமிசத்திற்கும் நேரிதான அமைப்பைக் கோயிலும் கொண்டமைவது எனலாம். கோயிலின் பிரமாண்ட அமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் ஏற்ப இவ்வமிசங்கள் மிகுந்தும் குறைந்தும் இடம் பெறுவன. அரசனைத் தரிசித்துத் தம் பெரு மதிப்பைக் காட்டும் முகமாகக் குறுநில மன்னர்கள்
41. 2965一3

Page 23
கீர்ணிக்கை செலுத்துவதை நிகர்த்துக் கோயில்களிலும், அடியவர்கள் இறைவனுக்குப் பொன்னையும், மணியையும், உண்டியலில் காசையும் காணிக்கையாகச் செலுத்துவதைக் காண்கின்ருேம்.
அரசர்களுக்குப் பெருமை ஈட்டித் தருவது, வீரம் என்னும் säavuntuu பண்பு. வீரத்தை வெளிப்படுத்துவன, அவர்கள் போர்க்களத்தில் ஈட்டும் வெற்றிகளும், அவர் களின் வீரதீர பராக்கிரமச் செயல்களுமாம். அரச மாளிகையின் அமைப்பைப் பெற்ற ஆலயத்தில், அரசனுக் குரிய உபசாரங்களுக்குப் பாத்திரமாகி எழுந்தருளி யிருக்கும் இறைவன் இயற்றியதாகக் கூறப்படும் வீரச் செயல்கள் பலப்பல. அட்ட வீரட்டத் தலங்கள் 68 என்று கூறப்படும் எட்டுத் திருத்தலங்களிலேயே இப்பெரும் வீரச் செயல்கள் எட்டு நிகழ்ந்ததாக ஐதிகம் பேசுகின்றது. இவ்வீரச் செயல்களுடன் தொடர்புபடும்படி, மண்டை யோட்டு மாலை, யானைத்தோல், புலித்தோல் முதலியன வெற்றி சின்னங்களாக அணியப்படுவதையும், தெய்வங் களின் கரங்களில் யுத்த சந்நத்தரான வீரர்களின் கைகளிலிருப்பன போன்று வில், அம்பு கேடயம், ஈட்டி, வேல் போன்ற பல்வகைப் படைக்கலங்கள் விளங்கு வதையும் அவதானிக்கும்பொழுது, அரசனுக்கும் தெய்வத் துக்கும் இடையே நிலவும் நெருங்கிய ஒற்றுமையைக் காணலாம். கோவிலில் நிகழும் இறைவழிபாட்டில் இறை எனப்படும் அரசனுக்கு உரிய உபசாரங்கள் நிகழ்த்துவது விரிவான ஆய்வுக்குரியது.
C35(15
இந்துப் பண்பாட்டிற்குப் பெருமை தருபவர் குரு. அறியாமையை அகற்றி அறிவைப் பெருக்குவதில் இவர்
திறமை வாய்ந்தவர். அறியாமையை இருளுக்கும், அறிவை ஒளிக்கும் ஒப்பிடுவது வழக்கம் அறியாமை
42

என்ற இருளினுல் ஒளி மழுங்கிய கண்களை, ஞானம் என்ற துலக்குமாற்றல் வாய்ந்த கருவியால் திறக்க வல்ல திறமை யாளன் எனத் தோத்திரமொன்று குருவை விதந்து கூறு கின்றது.69 எல்லாத் தெய்வங்களும் குருவுள் அடக்கம். 70 எல்லோரும் பின்பற்றி ஒழுகுவதற்குத் தன் ஒழுக்கச் சிறப்பினுல் வழிகாட்டியாகத் திகழ்வதணுல் இவர் ஆசாரியர் எனப்படுவர். அறிவையே கருவியாகக் கொண்டு ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டுவதனல் தேசிகர் எனப் படுவர். ஆசார்ய தேவோ பவ" என்ற சுருதி வாக்கியம் குருவைத் தெய்வத்தின் நிலையில் வைத்துப் போற்று கின்றது. இலெளகிக நிலையில், முற்றிலும் உலகியல் தொடர்புள்ள அறிவு வகைகளுக்கு விளக்கந் தந்து, அவ்வத் துறையில் அறிவுப் பெருக்கத்துக்குக் காரணமாயிருக்கும் ஆசிரியர்களும் குரு எனப் போற்றப்படுவதற்குச் சமயப் பின்னணியே காரணம் இவ்வாறு, இலௌகிக நிலையிலே, அறிவு விளங்கக் கல்வி புகட்டும் ஆசிரியர், எழுத்தறிவித்தவன் இறைவனுவான்" எனக் கெளரவம் பெறுகின்றனர். இது இவ்வாருயின், ஆன்மிக நெறி காட்டும் குருவின் பெருமைபற்றிப் பேசியும் அமையாது. குரு வழங்கும் அறிவைப் பெறுவது மட்டுமன்றிக் குருவுடன் வாழ்ந்து பயிலவேண்டிய வாழ்க்கை முறை சிறந்ததென்பதாலே, குருகுலவாசம்? இந்துக்களின் பாரம் u rifluu வழக்கமாக இருந்து வந்தது. குருகுலவாசம் செய்பவன் குருவின் மனநிற்ைவையும், பிரீதியையும், அன்பையும் பெறும் நோக்குடன் பணிவிடை செய்து தன்னைப் பெரியதொரு பயிற்சிக்குப் பாத்திரமாக்கிக் கொள்ளுகிருன்.
குருவுக்கு இழைக்கும் துரோகம் மிகவும் பாரதூரமானது; பரிகரிக்க முடியாதது" என்ற கருத்து, குருமீது பெருமவ தானத்துடன் செலுத்தவேண்டிய பயபக்தியைச் சுட்டு கின்றது. இறைவன்பால் அபராதம் நிகழ்ந்தால் குருவை நாடி, அவரிடமிருந்து அதை ஈடுசெய்ய வழிவகைகளைப்
43

Page 24
பெறலாம். குருவிற்கு அபராதம் செய்யில், புகலிடம் யாதுதான் உளது? என்ற பொருள் பொதிந்த சுலோகம், குருவின் பெருமையை மேலும் உயர்த்துகின்றது.
குருவருள்? பற்றிச் சித்தாந்த நூல்கள் விரித்துக் கூறு கின்றன. குருவினல் வழங்கப்பட்ட தீட்சை முதலிய சம்ஸ் காரங்களால் தகுதி பெற்றுச் சிவாசாரியராகி, ஆலயங்களில் நித்திய நைமித்தியங்கள் இயற்றுபவரை ஆகமங்கள் குரு எனப் போற்றும்.74 இந்து மதத்தில் குருவுக்கு உந்நதமான இடமுண்டு என்பதைத் தெய்வங்களே குருவடிவில் எழுந் தருளி உணர்த்தி நிற்கின்றன.75 −
சமயமும் தத்துவமும்
சமயமும் தத்துவமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வன. இவையிரண்டும் இயைந்து இணையும் சிறப்பு இந்துப் பண்பாட்டுக்கே உரியது. சமயம், நம்பிக்கையை அடிப்படை யாகக் கொண்டது. இவ்வடிப்படை, உலகச் சமயங் களெல்லாவற்றுக்குமே பொதுவானது. தெய்வத்தை ஊனக் கண்ணுல் காணமுடியாத நிலையில்78, தெய்வம் உண்டென்ற நம்பிக்கை, தெய்வத்தின் பேராற்றலில் நம்பிக்கை, தெய்வத் திருவருளாலேயே எல்லாம் நிகழ் கின்றன; தெய்வத்தாலேயே எமக்கு எல்லா விதமான உய்வும் உண்டு" என்ற நம்பிக்கை, தெய்வத்தைவிட வேறு புகலிடமில்லை என்பதில் உறுதிப்பாடு, ஆகியன சமயங்களெல்லாவற்றுக்கும் வேண்டப்படும் பொது அமிசங்கள்.
இந்நிலையில், இந்து சமயம், இறைவனை அணுகவும் அவன் திருவருளைப் பெறவும் வல்ல உபாயங்களை வழங்கித் தன் எல்லைக்குள் நின்று உரியவாறு வழிகாட்டும். தெய்வம் பற்றிய பல விவரங்களை எங்கள் நிலைக்கேற்ப, இந்திரியங் களால் கிரகிக்கக்கூடிய வகையிலும், அகக் கண்ணுல் காணு மாற்றலற்றவர்க்குப் புறக் கண்ணுல் கண்டனுபவிக்கக்
44

கூடிய திருவுருவங்களாகவோ, ஓவியங்களாகவோ வடிவம் தந்து, கண்ணுல் நேரே பார்க்கவும், வழிபடவும் கூடிய வகையிலும் வாய்ப்புக்களை இந்து சமயம் அமைத்துள்ளது. தெய்வங்களின் குணுதிசயங்களையும் குணுதிசயங்களுடன் தொடர்பு கொண்ட செயல்களையும் விவரித்துத் தெய்வங் களை நெருங்கி உணரும் வகையில் தெய்விக நிகழ்ச்சிகளே வருணிக்கும் திறமை இந்து சமயத்துக்கே உண்டு. இத் திறமை இதிகாச புராணங்களில் விளங்கக் காணலாம். சமயம், அநுட்டானத்திலேயே வெளிப்படுவது. இவ்வனுட் டானங்களை முன்னேர் கையாண்ட வழியில் நின்று கடைப் பிடித்தல் எளிது.
சமயங்காட்டும் இறைவன் பற்றிய விவரங்கள், படிப்படி யாகக் கிரகிக்க முடியாத நிலையை அடைவதையும் சமய நூல்களில் உணர முடிகின்றது. இந்நிலையே தத்துவ சிந்தனை பிறப்பதற்கு வழிகோலுவது எனலாம். சமயநிலை நின்று அநுபவம் வளர்த்துக் கொண்டவர்களுக்குத் தத்துவ விளக்கங்களும் உட்பொருள்களும் படிப்படியாகத் தானே தெளிவாகும். ஆழ்ந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நுண்ணறிவும், சிந்தனைகளை ஒடவிடுவதன் மூலம் கூறப்படும் பொருளைப் பல கோணங்களிலிருந்து நோக்கிச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படும். தத்துவ சிந்தனையின் எல்லைக்குள் நுழையும்பொழுது தத்துவ விசாரணை ஆரம்பக் கட்டத்தில் காலெடுத்து வைக்க நேரிடும். விசாரணைத் தொடக்கத்தின் அறிகுறி சந்தேகம். சந்தேகத்தின் விளைவு கேள்விகள். சந்தேகம் இல்லையெனில் கேள்விக்கே இடமில்லை. சமயநிலை நிற்கும்பொழுது, நம்பிக்கை அடித் தளத்தில் பரந்து படர்ந்து விளங்குவதனல், சந்தேகத் திற்கும், எனவே, கேள்விகளுக்கும் இடமே இல்லை. இறைவனுளன் என்பது உண்மை நிலையாயினும் அந்த உண்மை நன்கு தெரிந்ததொன்ருயினும், அவ்வுண்மை நிலையினை உறுதிப்படுத்தும் முகமாக, அவ்வுண்மைபற்றிப் பல சந்தேகங்களைப் பிறப்பித்துப் படிப்படியாக அவற்றைக்
46

Page 25
களையும்பொழுது, உண்மை, அநுபவத்தின்பாற்படும். இவ்வாறு உண்மையை அநுபவத்திற்குக் s கொண்டு: வருவதே இந்து தத்துவ விசாரணையின் நோக்கம்.
சமய குரவர்களருளிய தேவார திருவாசகங்களிலும் இறைவனது தடத்த இலக்கணமும் விரவி வரக் காணலாம். அங்கு சமயம் பேசும் நிலையில் தத்துவமும், தத்துவம் பேசும் நிலையில் சமயமும் மாறி மாறி இணைந்து வருவதனல், ஒன்றை ஒன்று வளப்படுத்தி நிற்பதைக் காண்கின்ருேம்.
மேல்நாட்டிலோவெனின், தத்துவமும் சமயமும் இரு துருவங்களாகி, ஒன்ருேடொன்று முரண்பட்டு நிற்கக் காண்கிருேம். மேல்நாட்டிலும், பெரும்பாலான சமயங் களில் தத்துவஞானி, தெய்வநிந்தகளுக, சமய விரோதி யாகக் கருதப்படுவன்.
தருக்க ரீதியாக உண்மைபற்றி விசாரணை செய்வனவே இந்து தரிசனங்கள்." இவை, சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை எனப் பெயர் பெறுவன. இவற்றுள் பூர்வமீமாம்சையும் உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்தமும் நன்கு வாதிட்டுத்தருக்க ரீதியாக முடிவு நிறுவும் நிலையிலும் சுருதிப்பிராமணத் திற்கே உயரிய இடமளித்து, 'ஆப்தவசனம், “சப்தம்,' என்ற பிரமாணங்களையே பலம் மிக்க சான்றுகளாகக் கருதுவன. தத்துவ விசாரணை அமைப்பிலும் சமய பாரம் பரியம் சுவறி, சமயமும் தத்துவமும் இயைந்து இணையும், அபூர்வ நிலை, இந்துக்களின் தத்துவ விசாரணை முறையை வேறுபடுத்தி அதற்கு ஒரு தனித்துவத்தை உரியதாக்கு கின்றது. இந்துக்களின் பாரம்பரியத்தில், சமயமும் தத்துவமும் பிரிக்கவொண்ணுது இணைந்து நிற்பதைத் தொன்றுதொட்டு இன்றுவரை அவதானிக்க முடி கின்றது.
46

புருடார்த்தங்கள்
இந்து மதத்துக்குத் தனிச்சிறப்புத் தருபவை, புருடார்த் தங்கள். இந்துமத நெறி நிற்பவன் ஒவ்வொருவனும் புருடனே, அர்த்தம் என்பது இலட்சியம் எனப் பொருள் பெறும். எனவே, புருடார்த்தங்கள் என்பது இந்து நெறி நிற்போருக்கு உரிய இலட்சியங்கள் எனப் பொருள் தருகின்றது. சமய அடிப்படையில் கூறப்படும் இலட்சி யங்கள் வாழ்க்கையைச் சிறப்பானதாகவும், பயனுள்ள தாகவும் அமைக்க வழிவகுக்கும். ஏனைய சமயங்கள் பரவலாக வாழ்க்கையமைய வேண்டிய முறையைக் கூறினும், இந்து மதமே திட்டமிட்டு வாழ்க்கையின் குறிக்கோள்கள் அமையவேண்டிய முறையைச் செவ்வி தாகக் கூறுகின்றது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதே இவ்விலட்சியங்களாகும். இவை, இந்துக்களின் இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் மறுவுலக வாழ்க்கையையும் சிறக்க வைப்பன.
அறமெனினும் தர்மமெனினும் ஒன்றே. நாம் மேற்கொள் வதற்குரியதே தர்மம் எனப்படும். இவை எவை என்பதைச் சாத்திரங்கள் விவரிப்பன. சாத்திரங்கள் முறைப்படுத்தித் தருவது, வேதம் கூறுவதையே. வேதம், தர்மத்தை மூலமாகக் கொண்டது என்பது ஆன்ருேர் வாக்கு. இவ்வறநெறி நிற்பதன் மூலம் வாழ்க்கையைச் செவ்விதாக அமைத்துக்கொண்டு பயனுற வாழலாம். அறநெறி நிற்பதற்கும், இன்பம் துய்ப்பதற்கும், பொருள் அத்தியா வசியமாக வேண்டப்படுவதனல், அறம் இன்பம் ஆகிய இரண்டின் நடுவே பொருள் இடம்பெறுமாறு வைத்துப் பேசப்படுகின்றது. இம்மையில் வாழ்க்கை சிறப்புற, இம் மூன்று இலட்சியங்களும் கைகூட வேண்டும். இவை அமைய வேண்டுமாற்றை வலியுறுத்தி விவரிக்கும் இந்து சமய நூல்கள் இம்மூன்றைவிட உயர்ந்ததான, மறுமை யாகிய வீடுபேறுபற்றி விவரித்து அதையே அதியுன்னத
47

Page 26
லட்சியமாகக் குறிப்பிடுகின்றன. இம்மையை வெறுத்து ஒதுக்காது, இம்மைக்கும் மறுமைக்கும் தனியிடமளித்து, இவற்றை உயர் லட்சியங்களாக, புருடார்த்தங்களாகக் கொண்டு வாழ்க்கையமையத் திட்டம் வகுத்து, வாழ்க் கையை நெறிப்படுத்தும் தனிச்சிறப்பினது இந்துமதம்.
மதபரிபாலனம்
இந்துமதம் பரந்த அமைப்பினலும், பரந்த காலப் பரப்பினுலும் எல்லைமீறிப் பிரமாண்டமாக வளர்ந்த இடத்தும், இன்றுவரை பேணிப் பாதுகாக்கவோ வளர்க் கவோ பரம்பரையாக மன்னர்களினதோ நிறுவனங் களினதோ புரவலர்களெவரினதோ ஆதரவு எதுவுமின்றி நெடுங்காலமாக தலைமுறை தலைமுறையாக வலிமை மிக்க மதமாக, பலரைக் கவரும் மதமாக விளங்கிவருவது "ஆச்சரியத்துக்கும் பெருமைக்கும் உரியதே.
இந்துமதத்தின் உள்ளீடாக அமைந்திருக்கும் ஒவ்வொரு உள்ளுறுப்பும், அதன் பண்பாட்டைப் பிரகடனப்படுத்த வல்ல ஒவ்வொரு அமிசமும் பொருள் பொதிந்ததாகவும், ஆன்மிகம் சுவறியதாகவும், நிரந்தரமான பெறுமதி வாய்ந்ததாகவும் ஆகி இருப்பதனல் இம்மதத்திடம் இயல்பாகப் பொருந்திய இச்சிறப்புக்களே ஒருவகை ஆதரவும் வேண்டப்படாதவாறே, தன்னியல்புகொண்டே, எல்லையற்றவாறு நிலவவல்ல மதமாக, என்றும் தன் காவில் தானே நிலைநிற்க வல்ல இயல்பை வழங்கியுள்ளன. இது இந்துமதச் சிறப்பின் உச்சநிலை.8
தனி ஒருவர் பெயரிணையாமை
பல்லாயிரக்கணக்கான இருடிகள், தத்துவஞானிகள், அருளாளர்களாயிஞேர் காலத்துக்குக் காலம் தோன்றி,
48

சமய நூல்களும் தத்துவ நூல்களும் முன்னமேயிருந்த வேதக் கருப்பொருளுக்கு விளக்க நூல்களாக உருவா வதற்குக் கருவிகளாக இருந்தார்களேயன்றி, அவர்கள் தாம் வழங்கியவற்றிற்கு மூலகர்த்தாக்களாக ஒருபொழுதும் உரிமை கோரியதில்லை. சுருங்கக் கூறின், தனியொரு வரின் பெயர் இந்து மதத்தின் எவ்வகையான அமிசத் துடனுவது இணைக்கப்பட்டு அவ்வமிசத்தை அவரே தோற்றுவித்தார் என்று பேசப்படும் மரபு கிடையாது.9 மூலமாகிய வேதங்களில் வேரூன்றிப் பலவாகப் பெருகிய சார்பு நூல்களும், அவற்றிற்கு விளக்கங் கூறும் வகையில் எழுந்த சமயக் கருத்துக்களினதும் தத்துவக் கருத்துக் களினதும் பெருக்கங்களான நூல்கள் பலவும் தோன்றிப் பெருகி வருவதையே மீண்டும் மீண்டும் காண்கின்ருேம்.
இந்து என்ருல் சைவமே
தென்னுட்டுச் சைவ மதத்தின் அமைப்புபற்றி இப்பொழுது தொடர்ந்து வழங்கப்படும் கருத்து, இந்நினைவுரைக்குச் சூட்டப்படும் முடியாக அமைந்து, இவ்வுரையை நிறைவு செய்யும். அதைச் சற்று அவதானிப்போம்.
பாரத நாடெங்கணும் பரந்த சைவம், காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அநுட்டிக்கப்பட்டு வருவதெனினும், தென்பாரதத்தில், இது தனக்கெனவுரிய பெருஞ் சிறப் புடன் விளங்கி வருகின்றது. தென்னுடுடைய சைவத்தின் அமைப்பு, பல வகைகளிலும் அகன்று விரிந்து விளங்குவது. இச்சைவ வழிபாட்டு முறையில் காணபத்யம், கெள மாரம், செளரம், சாக்தம் ஆகிய மதங்களும், அவற்றின் வழிபடுமுறைகளும், பாரம்பரியமும் உள்ளடங்கக் காண் கின்ருேம். தென்னுட்டில் மட்டுமே, சைவ வழிபாட்டு நிலையங்களாக விளங்கும் முழுமை பெற்ற சிவாலயங் களில் பரிவாரங்களாக நிறுவப்பட்ட சூரியன், கணபதி,
49.

Page 27
முருகன், சக்தி, விட்டுணு ஆகிய தெய்வங்களுக்குத் தனித் தனி ஆலயங்கள் இருப்பன. இவ்வாறிருப்பது சைவம இப்பிரிவுகளெல்லாவற்றையும் தன்னுள்ளடக்கித் தனிப் பெருஞ்சமயமாக விளங்குவதைக் காட்டுகின்றது.
தென்னுட்டில் பெரிதும் பயிலும் சைவசித்தாந்தத்தில்80 கை வந்தவன், பாரத நாடெங்கணும் பயின்று வரும் எல்லாத் தத்துவ தரிசனங்களிலும் பயிற்சியுடையவனுகிருன். ஏனெனில், சைவ சித்தாந்த உண்மைகள், எடுத்துக் கூறப் படும்பொழுது, அவ்வுண்மைகள் நன்கு கிரகிக்கப்பட்டு ஏற்றுக்கொள்வதற்குரியன என்பதைத் தெளிவாக்கும் முறையில், ஏனைய தரிசனங்கள் தரும் கருத்துக்களையும், கொண்ட முடிபுகளையும் முறையாகவும் தெளிவாகவும் விளக்கி, அவற்றைச் சித்தாந்த நோக்கில் தருக்க அடிப் படையில் படிப்படியாக மறுத்துப் பரமத கண்டனஞ் செய்து, சைவசித்தாந்தக் கோட்பாட்டினை நிறுவும் பொழுதெல்லாம், சைவசித்தாந்தம், ஏனைய தரிசனங் களின் சிந்தனை முறைகளைத் தெளிவாக எடுத்துப் பேசும் சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை. ஆகையால், சைவசித்தாந்தம் இந்து தத்துவ சிந்தனைகளின் விளக்க விரிவுரைகளை உள்ளடக்கிய பெருந் தத்துவமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சைவசித்தாந்தம் முறையே கற்பவர், தாமாகவே எல்லா இந்து தத்துவ முறைகளையும் கற்பவராகிவிடுவர்.
மேலும், சைவத் திருக்கோயில்களை நிலைக்களஞகக் கொண்டு அங்கு வளர்ந்து வரும் கலைகளின் தொகுதியில் எல்லாக் கலையமிசங்களின் நுணுக்கங்களையும், அவற்றின் பல்வகைச் சிறப்புக்களையும் ஒருங்கு காண முடிகின்றது. சுருங்கக் கூறின், சைவவழிபாட்டு நிலையங்கள், கலைகள் யாவற்றையுமுள்ளடக்கிய கலைக்கூடமாகத் திகழ்கின்றன.
எந்தத் தெய்வத்தை வழிபடுவோர்க்கும் அருள் சுரப்பவர் மாதொருபாகரே என்ற பரந்த நோக்குடைய சைவ
50

தத்துவம், சைவத்துள் ஏனைய தத்துவங்கள் ஒன்றிணைய, பெரும் அநுசரணையாக இருந்து வருகின்றது எனலாம்.
பாரதம் முழுவதும் பயிலும் இந்து மதத்தின் அமைப்பினைச் சமயரீதியாகவும், தத்துவரீதியாகவும்: கலையமிசம் மிகுந்த பண்பாட்டு ரீதியாகவும் நோக்குமிடத்து அது எல்லா மதங்களையும் தன்னுட் பிரிவுகளாக உள்ளடக்கி யும், எல்லாத் தத்துவ சிந்தனைகள் பற்றிய சர்ச்சை நிகழ்ந்த பேரரங்காக விளங்கியும், எல்லாக் கலையமிசங் களேயும் பண்பாட்டமிசங்களையும் பேணியும், பெருஞ் சிறப்புப் பெற்று விளங்கும் தென்னுட்டுச் சைவத்தின் மறு வடிவமாகத் தெரிகின்றது. இதிலிருந்து, இந்து என்ருல் சைவம் என்பதும், சைவம் என்ருல் இந்து என்பதும் தெளி வாகப் புலணுகின்றது. சைவம் என்ற பெயரைக் காட்டிலும் இந்து என்ற பெயரே சர்வதேச ரீதியில் வழங்குவதால், சைவத்தை, இந்து" என்று வழங்குவது தவிர்க்க முடியாதவாறு உலகப் பிரசித்தி பெற்று. விடுகின்றது.
51

Page 28
ls.
52
அடிக்குறிப்புகள்
Encyclopaedia of Religion and Ethics, Vol. V p. 686ff. கைச்சுட்டு விரல் முதல் சிறு விரல் வரை உள்ள நான்கு விரல்களையும் ஒன்ருே டொன்று ஒட்டியமைத்து, கைத் தலத்திற்குச் சமமட்டத்தில் செங்குத்தாக மேல் நோக்கி நிறுத்திப் பெரு விரலைச் சுட்டு விரலோடு சேர்த்து மேல் நோக்கி அமைத்துப் பிடிக்கும் கைஅமைதிக்கு அபயஹஸ்தம் என்று பெயர். நாட்டிய வழக்கில் இது பதாகம் எனப்படும். பயம் இல்லை என்பதை இக்கையமைதி காட்டிநிற்கும். அபய ஹஸ்தத்தைத் தலைகீழாகப் பிடிப்பின் அது வரதஹஸ்தமாகும் இது வரம் கொடுக்கும் கை யெனப் பொருள் தரும். Indian Philosophy i. p. 724 gll Gas. A su பிரகாசம், பாடல் 13.
தெய்வத்தின் குரல் 1, ப. 125. 'The indigenous names by which Hinduism is known
are Sanatana-dharma and Vaidika-dharma.' Outlines of Hinduism, p. 12. Outlines of Hinduism, p. 12. **பல்வேறு மதங்கள் இருக்கிறபோதுதான் ஒன்றி லிருந்து இன்னென்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதம்தான் இருந்த தென்றல் பெயர் எதற்கு?" தெய்வத்தின் குரல் 1, Lu. I 27.

9. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல்,
சூத்திரம் 5. 10. இவ்வழிபாட்டு நெறிகள் பற்றி முதன்முதல் விரிவாக வெளிவந்த நூல். பண்டர்க்கர் என்பவரியற்றியது. Vide: Collected works of Sir R. G. Bhandarkar, Vol IV, pp. 1 - 224.
11. 'At the outset it should be noted that the Hindus are agreed in their allegiance to the Vedas.' Outlines of Hinduism, p. 22.
12. 'Hinduism, which is the oldest of the world religions had its origin in India.' 'The indigenous names by which Hinduism is known as Sanatana dharma and Vaidika dharma. Sanatana dharma means eternal religion.' Outlines of Hinduism, p,卫2·
'They accepted it as some thing which had always been, what it was, and will be for evermore. They regarded their religion as an integral part of a 'complete way of life and interwoven with it. This way of life, they called, the Sanatana, Dharma-the established, permanent, and eternal way of life." Hinduism, p. 28. 13. இவை பற்றிய விரிவான கருத்துக்களைப் பற்றிப் Luntridias, Outlines of Hinduism, p. 28, 39. 14. ''The richness, beauty and greatness of Hinduism lie, no doubt, in its spirit of accommodation.'
Outlines of Hinduism, P. PI·
also i W
'Hinduism realises the truth and allows the widest. freedom in matters of faith and worship." ibid. p. 16.
53.

Page 29
5.
6.
7.
8.
9.
。20。
2.
22.
23.
“与4
ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி. இருக்குவேதம் 1; 164, 46 மேலும் பார்க்க : இருக்கு வேதம் X. 90, X. 121.
தர்ம சாஸ்திரம் முழுவதையும் அலசி ஆராய்ந்து, பல்வேறு தலைப்புக்களின் கீழ் பல புத்தகங்களாக, தர்மசாஸ்திர வரலாறு என்னும் நூல் ஆங்கிலத்தில் p. V. Kane என்பவர் வெளியிட்டுள்ளார். இது தனியொருவரின் அரும் பெரும் முயற்சி.
Arthasa Stras
குத்திரங்களாக அமைவதணுல் காமசூத்திரம் எனப்படும் நூல் இல்லற இன்ப நுணுக்கங்களை முறையாயமையும் சாஸ்திர வடிவில் ஆராய்வது. Lurrri išs: Kama sutra of Vatsyayana.
சிவஞான சித்தியார், சுபக்கம், பாடல் 115.
பகவத்கீதை X. 23. “ஏனைய தெய்வங்களிடம் பக்தி செலுத்துபவர்கள் அத்தெய்வங்களைச் சிரத்தையுடன் வழிபடும் பொழுது விதிப்படி வழிபடாவிடினும், என்னையே வழிபடுகிருர்கள்."
அபெளருஷேயம் பற்றிய மேலதிக விவரங்களைக் காண்க. தெய்வத்தின் குரல் 1, ப. 214. மேலும்
un idiš45 : Outlines of Hinduism, p. 29. ( . The Vedas are eternal (nitya) and impersonal (apauruseya).”*
A Constructive Survey of the Upanisadic Philosophy, pp. 178-233.
தெய்வத்தின் குரல் 11, பக்கங்கள் 396 - 398.

24.
.25。
26
27。
28。
29。
- 30.
31.
、32。
.53.
-34,
பரோக்ஷ ப்ரியா இவ ஹி தேவா என்பது சுருதி
The Religion and Philosophy of the Veda and Upanisads, HOS, vol. 32, p. 482íf
Outlines of Hinduism, p. 39, last 3 lines.
திருமந்திரம் (எட்டாம் மந்திரம்) பாடல் 2397.
"வேதமோடாகமமெய்யா இறைவனுர லோதுஞ் சிறப்பும் பொதுவுமென்றுள்ளன." மேலும் பார்க்க : சிவஞான சித்தியார், பாடல் 267.
திருவாசகம், சிவபுராணம், வரி 4, சைவத் திருக்கோயிற் கிரியை நெறி, ப. 117 காரணுகமம் 1, 74வது படலம் முதல் 101வது t. I t-aw th o! 6opir காரணுகமம் 11, 53வது படலம் முதல் 99வது Lu Lavih an Gogur இவை, திருவுள்ளங்களின் அமைப்பு, பின்னணி ஆகிய விவரங்களையும் அவற்றைப் பிரதிட்டிக்கும் முறையை யும் கூறுவன. சைவத் திருக்கோயிற் கிரியை நெறி, பக்கங்கள் 204-248
மேற்குறித்த நூல், பக்கங்கள் 193-203. ஸ்வாமின் சர்வ ஜகந்நாத யாவதாசந்த்ர தாரகம் தாவத் த்வம் பிரீதி பாவேன பிம்பே ஸ்மின் சந்நிதிம் குரு" என்று கும்பாபிஷேகத்தினிறுதியில் விடும் வேண்டுகோள் குறிப்பிடத்தக்கது. சுப்ரபேதாகமம். இவ்வமைப்பைப் பெற்றிருப்பதை ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டலாம்.
இதி இவ்வாறு ஹ (வற்புறுத்தும் ஓர் அசை) ஆஸ இருந்தது என்ற பொருள் தரும் இதிஹாஸ என்னும்
55

Page 30
3.
36.
87 .
8
56
சொல் (உண்மையாக) நிகழ்ந்ததொன்றைக் கூறும் சரித்திரம், வரலாறு எனப் பொருள் தருவது நோக்கற்பாலது. இதிஹாஸ; புராவ்ருத்தம்" இதிகாசம் முன்நிகழ்ந்தது என்ற நிகண்டு வாக்கியம் இதை வலியுறுத்தும். அமரகோசம், சுலோகம் 161. சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மந்வந்தரம், வம்சாநுசரிதம் என்பன புராணங்களின் ஐந்து உறுப்புக்கள். இவைபற்றி மேலதிகமான விவரங்களைக் காண்க: ஈழத்துச் சிதம்பர புராணம், அணிந்துரை, பக்கங்கள் vi முதல் ix வரை.
அக்நிபுராணம், பாகவதபுராணம், பவிஷ்யபுராணம், பிரமபுராணம், பிரமாண்டபுராணம், பிரமவை வர்த்த புராணம் (தேவிபாகவத புராணம்), கருட புராணம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், மார்க்கண்டேயபுராணம், மத்ஸ்யபுராணம், பத்ம புராணம், சிவபுராணம், கந்தபுராணம், வாமன புராணம், வராஹபுராணம், வாயுபுராணம், விஷ்ணு புராணம் என்பன பதினெண் புராணங்கள். இதே எண்ணிக்கையினதான உபபுராணங்களும் உள. இப்புராணங்களினமைப்பைப் பின்பற்றி காவியப் பண்புகளுடன் உருவானவற்றுள் தலைசிறந்தவை, பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்னும் தமிழ்ப்புராணங்கள். தமிழிலக்கி
யத்தில் புராணங்கள் அமைந்தவாறு வேறு எந்த
இந்திய மொழியிலும் புராண இலக்கியங்கள் விரி வடையவில்லை.
ஈழத்துச் சிதம்பர புராணம், அணிந்துரை, பக்கங்கள் vi முதல் ix வரை
சைவத் திருக்கோயிற் கிரியை நெறி பக்கங்கள் 47-64. .

39.
40.
41.
42。
43.
44,
《5。
尘6。
47.
48。
全9。
0.
Outlines of Indian Religious Literature. பிராமணங்களில், விரித்துரைக்கப்பட்ட வைதிகக் கிரியை விவரங்கள், பூர்வ மீமாம்சையில் சீராய மையப் பெற்று சிரெளத சூத்திரங்களிலும் கிருஹ்ய சூத்திரங்களிலும் தேவைக்கேற்ப மேலும் விரிக்கப்பட்டு ஆகமறுால்களில் விதிக்கப்பட்ட கோயிற்கிரியைகள் பத்ததிகளாக விரிந்தமைந்ததைக் கருத்திலிருத்தி நோக்கின் கிரியை நூல்கள் விரிந்த வாற்றை நன்கு உணரலாம். வடமொழி இலக்கிய வரலாறு, பக்கங்கள் 1415 S மேற்குறித்த நூல், பக்கங்கள் 133-137,
ப்ேரவ்ருத்திர் வா நிவிருத்திர்வா நித்யேந
க்ருதகேனவா பும்ஸாம் யேந உபதிச்யந்தே தத் சாஸ்திரம் அபிதீயதே' என்ற வரைவிலக்கணம், சாஸ்
திரங்கள் விதித்தும் விலக்கியும் முறைகளை எடுத் துரைக்கும் இயல்பினைச் சுட்டும். சைவத் திருக்கோயிற் கிரியை நெறி பக்கம் 158.
Kamasutra of Vatsyayana. மேற்குறிப்பிட்ட நூல், பக்கங்கள் 74-77. சதுஷ் ஷஷ்டி கலாமயி. லலிதா சஹஸ்ரநாமம், பக்கம் 72 அகோர சிவாசாரியார் பத்ததி, பக்கங்கள் 9-10. பகவத்கீதை IX-27
செளந்தர்ய லஹரி, uru-do 27. திருநாவுக்கரசு நாயனர் தேவாரத் திருப்பதிகங்கள் நாலாந்திருமுறை பக்கங்கள் 77-93. ஒப்பிடுக: திருவாசகம், திருச்சதகம், பாடல் 26.
57
2968-4

Page 31
δ .
52。
53.
54.
む5.
56。
57。
58.
59.
60.
6
62.
58
சிவானந்த லஹரி, சுலோகம்-7 பக்கம் 31 முதல்.
மகுடாகமம், சிவார்ச்சநா விதிப்படலம், சிவபூஜா பிரசஸ்தி, பக்கம் 11 சுலோகங்கள் 2-3
மேற்குறித்த நூல், பக்கம் 11. சுலோகங்கள் 4-10. காரணுகமம 1, பக்கம் 207. சுலோகம் 2. அர்ச்சகஸ்ய பிரபாவேண சிவா பவதி சங்கர (அர்ச்சகருடைய பிரபாவத்தினுல் சிலை சங்கரனுக மாறுகின்றது.) மந்த்ர தந்த்ர க்ரியா முத்ரா பாவநா பாவ கர்பித : (மந்திரம், தந்திரம், கிரியை, முத்திரை, பாவனை ஆகியவற்றை உள்ளிடாகக் கொண்டவன்) என ஆசார்ய லட்சணம் காரணுகமத்தில் வற்புறுத்தப் பட்டுள்ளது.
பார்க்க: சிவாகமசேகரம் பிரதிஷ்டாவிதி. பக்கம் 21, மேலும் ஒப்பிடுக; சிவஞானசித்தியார், சுபக்கம், Un'L-6 298-th egy 56ör Ք 66»Մ պւb. காரணுகமம் 1, பக்கங்கள் 197.201. சுப்ரபேதாகமம், பக்கங்க்ள் 46.48, மிருகேந்த்ராகமம், (விளக்கப் படங்களுடன்) 45-52, சிவலிங்க பிரதிஷ்டாவிதி 11, பக்கங்கள் 96-97. ரீவித்தியா சபர்யா பத்ததி, பக்கம் 41-44,
Elements of Hindu conography, Vols. I-IV. The Development of Hindu iconography,
Hindu Architecture. சைவத் திருக்கோயிற் கிரியை நெறி, பக்கங்கள் 90.91. மேற்குறித்த நூல், பக்கங்கள் 88-89: 161.62.
Sangitaratnakaram. indian Musie.

-63,
64。
65.
66.
67.
S8,
69.
70。
71.
72.
73.
74.
75.
The Story of Indian Music and instruments.
NatVasastra.
சைவத் திருக்கோயிற் கிரியை நெறி, பக்கம் 203. மேற்குறித்த நூல், பக்கங்கள் 67-68. மேற்குறித்த நூல், பக்கம் 163. பூமன் சிரம் கண்டி அந்தகன் கோவல், புரம் அதிகை. மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மா வழுவூர், காமன் குறுக்கை, யமன் கடவூர், இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடித் தன் சேவகமே . சிவஸ்தல மஞ்சரி, பக்கம் 182.
அஞ்ஞான திமிராந்தஸ்ய ஞானஞ்சந சலாக யா சக்ஷ"ருன்மீலதம் ஞேயம் தஸ்மை பூg குரவே நம. குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ
மாஹேச்வர : ! குருஸ் ஸாகூடிாத் பரம் பிரம்ம தஸ்மை பூரு
குரவே நம ! பூரீவித்யா சபர்யா பத்ததி, பக்கம், 2.
தைத்திரீய உபநிடதம், சிஷாவல்லி, இறுதிப்பந்தி. தெய்வத்தின் குரல் 11, பக்கம் 51. திருவருட்பயன், அதிகாரம் 5, பாடல்கள் 41.50.
சிவாகம சேகரம் 1, பக்கம் 20. சைவத் திருக்கோயிற் கிரியை கெறி, பக்கம், 207
தட்சணுமூர்த்தி, முருகன், கண்ணன் ஆகிய தெய்வங்கள் குருவடிவில் பெற்ற திருக்கோலங்கள் வழிபடப்படுவது நோக்கற்பாலது. லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் குருமூர்த்தி" என்ற நாமம் அம்பிகையையும் குருவடிவில் காட்டி நிற்கின்றது.
59

Page 32
76.
y 7.
78.
79.
80.
60
Compare : 'He turns inwards (avritta-caksus) and beholds within himself the resplendent spirit of God, who is the seat of Supreme felicity and Bliss."
Outlines of Hinduism.
Indian Philosophy ll. Outlines of Indian Philosophy, An introduction to indian Philosophy.
The very fact that it has survived to this day inspite of the vicissitudes of history, and does not show any great sign of decay, proves that there is a Soul to it which holds together its different limps in an indissoluble unity.' Outlines of Hinduism, p. 21.
'Hinduism has no founder; the ancient seers served as but channels for the transmission of religious truths to humanity'. Outlines of Hinduism, p. 11. சிவஞான சித்தியார், பரபக்கம் முழுவதும் இது பற்றியே பேசுவது குறிப்பிடத்தக்கது.

நூற்பட்டியல்
சம்ஸ்கிருத நூல்கள் :
அகோர சிவாசார்ய பத்ததி, சிதம்பரம், 1927
இருக்கு வேதம், தாமோதரபட்டர், பூரீபாதசர்மா (பதி.)
1957
காரணுகமம், ஷண்முகசுந்தரமுதலியார், கோ. (பதி)
சிவஞானபோத யந்திரசாலை, சென்னை
சிவலிங்கப் பிரதிஷ்டா விதி, இரண்டாம் பாகம், பருத்தித்
துறை, 1953
சிவஸ்தல மஞ்சரி, சுப்பிரமணிய பிள்ளை, திருப்பதி, 1931. சிவதகம சேகரம் பிரதிஷ்டா விதி பருத்தித்துறை 1949. சிவானந்தலஹரி, கிரி பிரஸ், சென்னை.
சுப்பிரபேதாகமம், அழகப்ப முதலியார் (பதி.) சிவஞான
போத யந்திரசாலை, சென்னை
செளந்தர்ய லஹரி, அண்ணு (பதி.), பூரீராமகிருஷ்ண மடம்,
சென்னை, 1974.
தைத்திரிய உபநிஷத், சுவாமி சர்வானந்தா (பதி.)
பூரீராமகிருஷ்ண மடம், சென்னை, 1973,
மகுடாகமம், தென்னிந்திய அர்ச்சகர் சங்கம், சென்னை,
1977.
மிருகேந்திராகமம், பாண்டிச்சேரி, 1962.
61

Page 33
லலிதா சகஸ்ரநாமம் நிர்ணய சாகரப் பதிப்பு, பம்பாய்,
1919.
ழரீ வித்தியா சபர்யா பத்ததி, சுப்பிரமணிய ஐயர், சென்னை,
1938.
பூரீமத் பகவத்கீதை, சுவாமி சித்பவானந்தர் உரை,
தபோவனப் பிரசுராலயம், திருச்சி, 1966,
Artha Sastra, ed. with Trans. Shyamasastri, Mysore,
1961.
Kamasutra of Vatsyayana, Theraporawela 8 sons.
Bombay.
Natyasastra, Gaekward Oriental Series, Vol. Cxxxiv.
Baroda.
Sangitaratnakaram, Adyar publication, Madras.
தமிழ் நூல்கள் (மூலம்) சிவஞான சித்தியார், யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ் நூற்
பதிப்பு விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம், 1971. சிவப்பிரகாசம், (திருவிளங்கம். மு., உரை), யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ் நூற்பதிப்பு விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம். திருநாவுக்கரசு நாயனர் நாலாந்திருமுறை, தருமபுர ஆதீன
வெளியீடு, தருமபுரம். திருமந்திரம், உலகநாதமுதலியார். வி. (பதி.) விவேக போதினி காரியாலயம், சென்னை, 1924. -a திருவருட்பயன், சிவபாதசுந்தரம், சு., (உரை), சைவ
பரிபாலன சபை, யாழ்ப்பாணம், 1955. திருவாசகம் சுவாமி சித்பவானந்த உரை, பூரீராமகிருஷ்ண
தபோவனம், திருச்சி, 1975,
62

தமிழ் நூல்கள் - பொது
ஈழத்துச் சிதம்பர புராணம், இளமுருகனர், புலவர்மணி சோ. ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், காரை நகர், 1972.
சைவத் திருக்கோயிற் கிரியை நெறி, கைலாசநாதக் குருக்கள், கா., இந்து கலாபிவிருத்திச் சங்கம், கொழும்பு, 1963.
தெய்வத்தின் குரல், முதற்பகுதி, பூரீ காஞ்சி காமகோடி பூரீசங்கராச்சாரிய சந்திர சேகரேந்திர சுவாமிகள், வானதி பதிப்பகம், சென்னை, 1976,
தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி, பூறி காஞ்சி காமகோடி பூரீ சங்கராச்சாரிய சந்திர சேகரேந்திர சுவாமிகள், வானதி பதிப்பகம், சென்னை, 1978.
வடமொழி இலக்கிய வரலாறு கைலாசநாதக் குருக்கள்,
கா, கலாநிலையம், கொழும்பு, 1962.
ஆங்கில நூல்கள் - பொது
A History of Indian Literature, Winternitz, M.
University of Calcutta, 1963.
An Introduction to indian Philosophy, Datta and
Chatterji, Calcutta, 1950.
An Outline of the Religious Literature of India, Farquhar, J. N., Oxford University Press, London, 1920.
'Collected Works of R. G. Bhandarkar, Bhandarkar
Oriental Research Institute, Poona, 1929.
Constructive Survey of the Upanisadic
Philosophy, Ranade, R. D., Poona, 1926.
63

Page 34
Elements of Hindu iconography Gopinath Rao
T. A., Indological Book House, Delhi.
Encyclopaedia of Religion and Ethics.
Hinduism, Chaudhuri. N. C., New Delhi, 1970.
Hindu Architecture, Brown Perey., Bombay.
Indian Music, Gauri Kuppuswamy and Hari Haren:
M., Delhi, 1980.
Indian Philosophy, Vol. Il 8ř II. Radhakrihshnan, S.,
London, 1948.
Outlines of Hinduism, Mahadevan, T. M...P, Chetana.
Limited, Bombay, 1960.
Outlines of Indian Philosophy, Hiriyanna. M.,
London, 1964.
Religion and Philosophy of Vedas and Upanishads.
Keith, A, B., Vol. 32, Harvard Oriental Series.
The Development of Hindu iconography, Banerjee, J. N., Munshi Ram Manohar Lal Pub., Lt., Delhi, 1974.
The Story of indian Music and Instruments, Ethaf
Rosenthal., Delhi, 1970.
64

லீலாவதி இராமநாதன் பெருமாட்டி
சேர். பொன்னம்பலம் இராமநாதன் சிறந்த அரசியல்வாதியாகவும், கல்விமானுகவும், சமயப்பற்றுள்ளவராகவும், கலை கலாச் சாரத்தைப் பேணி வளர்ப்பவராகவும் விளங்குவதற்கு மனையறத்தின் வேரனைய ராக விளங்கியவர், பெருமாட்டி லீலாவதி இராமநாதன் ஆவர். அவருடைய உயர்ந்த இலட்சியங்களும், கொள்கைகளும் அவரு டைய துணைவியாரால் நிறைவுபெற்றன. ஒருவர் புகழுடனும் சகல சிறப்புகளுட னும் விளங்குவதற்கு மாண்புமிக்க இல்லாள் காரணம் என்ருல் மிகையில்லை. ஒரு நாட்டில் பிறந்து, வேறு ஒருநாட்டில் வளர்ந்து, இறுதியாக இலங்கை வாழ்
சைவ மக்களுடைய முன்னேற்றத்துக் காகப் பணியாற்றிய பெருமை அம்மை யாருக்குரியது.

Page 35
இங்கிலாந்தில் யோக்சயர் என்ற இடத்தைச் சேர்ந்த செல்வி R. L. ஹரிசனுடைய முன்னேர் 19ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் அவுஸ்தி ரேலியாவில் குடியேறி வாழ்ந்தனர். அவருடைய பெற்றேர் மிகவும் உயர்ந்த பண்பாடும் செல்வச் சிறப்பும் மிக்கவர்கள். செல்வி R. L. ஹரிசன் அவர்களுக்கு, பொருட் செல்வத்திலும் பார்க்க அருட்செல்வத்தில் அதிக நாட்டம் இருந்தது. சமயத்தை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து, உண்மையை அறியும் ஆர்வத்தால் ஞானிகளைத் தேடி கீழைத் தேசங்களுக்கு வந்த செல்வி R. L. ஹரிசன் அவர்கள் சேர். பொன். இராமநாதனைச் சந்தித்தார். சேர். பொன். இராமநாதனிடம் குரு சிஷ்ய முறையில் சமயத்தைக் கற்க ஆரம்பித்து, முதலிலே விவிலிய நூலை ஆராய்ந்து சில நூல்களை வெளியிட்டார். வழமையாக மேற்கு நாட்டவர் களைக் கவரும் இந்து தத்துவம், சமய இலக்கியம், வடமொழி என்பன இவரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. நமது இந்து சமயக் கோட்பாடுகளைப் பிறநாட்டவர் போற்றிக் கைக்கொள்ளும் வண்ணம் சமய இலக்கியங்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.
செல்வி R. L. ஹரிசனுடைய அறிவு ஆற்றல் காரணமாக, சேர். பொன். இராமநாதன், அம்மையாரைத் தனது அந்தரங்கக் காரியதரிசி யாக நியமித்தார். சேர். பொன். இராமநாதன் அவர்கள் சமயச் சொற்பொழிவாற்ற அமெரிக்கா சென்றபொழுது அவரும் உடன் சென்று செய லாளர் என்ற நிலையில் வெற்றியும் புகழும் ஏற்படப் பெரிதும் முயன்ருர், அமெரிக்காவி லிருந்து திரும்பியபின் சேர்.பொன்.இராமநாதன் செல்வி R. L. ஹரிஹசனத் திருமணம் செய்தார்.
66

இனத்தால், மதத்தால், மொழியால் வேறுபட்ட செல்வி R. L. ஹரிசன் அவர்கள் சைவப் பெண் மணியாக, எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கித் தனது கணவனுடைய கோட்பாடுகளை மிக நுணுக்கமாகப் பின்பற்றி வாழ்ந்தார். அன்பு, பணிவு, கடமை உணர்வு, பொறுப் புணர்ச்சி என்பன அவரிடம் காணப்பட்ட சிறப் பியல்புகளாகும். சேர். பொன். இராமநாதனின் பாரிய திட்டங்களைச் செயற்படுத்துவதிலும், கல்வி நிலையங்களை நிர்வகிப்பதிலும், விருந்தினரை உபசரிப்பதிலும், கலைகளை வளர்ப்பதிலும், மக்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்துவதிலும் நிகரற்று விளங்கினர்.
சேர். பொன், இராமநாதனுல் 1924ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற சைவ மங்கையர் சபையின் தலைவராக அவர் ஆற்றிய பணிகள் அளப்பில. சைவப்பெண்களுடைய உயர்ச்சிக்காக அமைக்கப் பட்ட இச்சபை இன்றுவரை நற்பணி ஆற்றி வருவது வரவேற்கத்தக்கது. லேடி இராமநாத
னுடைய பலதரப்பட்ட பணிகளைப் பாராட்டி
அவருக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. அன்னுருடைய பணிகளை நினைவுபடுத்துமுகமாக சைவ மங்கையர் சபையினர் இரு அறக்கட்டளைகளை நிறுவியுள்ள னர். இந்து நாகரிகத்தில் முதுகலைமணி, கலா நிதிப் பட்டங்கள் பெறுவதற்குத் திறமை அடிப் படையில் ஒரு புலமைப் பரிசில் வழங்கப்படு கின்றது. மேலும் வருடந்தோறும் இந்து நாகரிகம், சமய தத்துவம், கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளில் ஒரு நினைவுப் பேருரை நடை பெற நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நினைவுப்
67

Page 36
பேருரை 1981ஆம் ஆண்டில், பேராசிரியர் கலா நிதி பா. நடராஜன் அவர்களாலும், 1984ஆம் ஆண்டில் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது. பெருமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை நடை பெற சைவ மங்கையர் சபைத் தலைவர் திருமதி இரத்தின நவரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை, என்றும் பாராட்டவேண்டிய ஒன்ருகும்.
லீலாவதி இராமநாதன் பெருமாட்டி பற்றிய இக்குறிப்பு சைவ மங்கையர் சபைச் செயலாளரால் எழுதப்பட்டது.
லீலாவதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப் பேருரையில் கா. கைலாசநாதக் குருக்கள் நிகழ்த்திய உரையே இப் புத்தகம்.
58


Page 37