கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகாஜனாக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம்

Page 1
பழைமையை அத்திவாரமாகக் கொண்டு புது மையை எழுப்பவேண்டும். புதிய புதிய சிருஷ்டிகள்
எல்லாம் எங்கள் தமிழில் உண்டாக வேண்டும்.
- அ. செ. மு.
என் வாழ்வு சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். சுரண்டலும், அதிேயும், நிறைந்த சமுதா பத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்திைக் தோற்றுவிக்கவும் என்னுவான பணியை எழுத்துமூலம் செய்யவேண்டும்.
一-·西·亚·
நிகழ்காலச் செய்திகளேயும் பிரச்சினேகளேயும் கவிதை பில் ஆண்டு அதனே இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.
- மஹாகவி

மக்ா ஆசனத் )கீசஆா ரிJr می به نام به n ^
*** Gataka. கிy க்கியம்
பாரம்பரியம்
பாவலர் துரையப்பாபிள்ளே நினேவுப் பேருரை - 1 மகாஜனக் கல்லூரி தெல்லிப்பளே
1988- Ոti-34

Page 2

மகாஜனக் கல்லூரியின் 3);& Rulf I Tjitu fluit
நாகலிங்கம் சண்முகலிங்கன் சமூகவியல் விரிவுரையாளர் பொருளியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
பாவலர் துரையப்பாபிள்ளே நினைவுப் பேருரை - 7 மகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை.

Page 3
Nagalingam Shanmugaiingan Department of Economics (Sociology) University of Jaffna.
Literary Tradition of Mahajana. College Pavalar Thuraiappapillai Memorial Lecture - 7
Cover Design : Nagalingam Noolalayana
Nagula Giri, Myliddy South, Tellippalai, Jaffna.
Printed at: Sri Luxmi Press, Jaffna.

இலக்கிய வரலாற்று நுண்ணுய்வில் ஒரு திருப்புமுனை
55. 6.5r sys B. Com., M. A., Dip. Ed., அதிபர், மகாஜனக் கல்லூரி.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாமாண்டு மகா ஜனக் கல்லூரியை நிறுவிய பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளை முதல் இவ் வாண் டு கவிதைப் பரிசு பெறும் செல்வன் சி. புகலவன், சிறுகதைப் பரிசு பெறும் செல்வி நந்தினி குகதாசன் ஆகியோர்வரை மகாஜனுவின் இலக்கி யப் பாரம்பரியம் எழுபத்தெட்டு ஆண்டு வரலாறு கொண் டது. மகாஜனக் கல்லூரி தான் உருவாக்கிய இலக்கிய ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துகிறது. மகாஜன இலக்கிய கர்த்தாக்களும் ‘நாம் மகாஜனன்கள் என்று பெருமை கொள்கின்றனர். இந்தஇதரவிதரத் தொடர்பே ‘மகாஜனக் கல்லூரி இலக்கியப் பாரம்பரியம்’ என்ற கருத்துணர்வின் அடிப்படையாகும். மகாஜன மட்டுமே உணர்வு பூர்வமாக, திட்டமிட்டு, ஆய்வு நோக்கில் இக்கருத்துணர்வை வளர்த் துள்ளது
இத்தகைய நுண்ணுய்வு எண்ணக்கரு இலக்கிய வர லாற்று ஒட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது. பாவ லர் பற்றி 1972 இல் அவரது நூற்ருண்டு விழாக் காலத்

Page 4
V
தில் கல்லூரி ஆதரவில் நிகழ்த்தப்பட்ட அறிஞர் ஆய்வு கள், பாவலரை ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முன் னேடியாக நிறுவியதோடு பாரதியாருக்கு முன்னரே, ஈழத் தில் நவீனத்துவத்தின் விடிவெள்ளி தோன்றி விட்டதென் றும் நிறுவியுள்ளன.
நூற்ருண்டு விழா ஆய்வுகளின் மறுமதிப்பீடாக, 1982 இல் (கலாநிதி) நா. சுப்பிரமணியன் அவர்களின் பாவலரும் பாரதியும் என்ற நினைவுப் பேருரை இடம் பெற்றது.
இவ்வாண்டு மக்ாஜனப் படைப்பாளிகள் அனைவரை யும் தொகுத்து நோக்கும் மகாஜனக் கல்லூரியின் இலக் கியப் பாரம்பரியம் என்ற நினைவுப் பேருரையை அப்பாரtb பரியத்தின் சிறந்த அறுவடையான யாழ்ப்பாணப் பல் கலைக்கழகச் சமூகவியல் விரிவுரையாளர் திரு. நா. சண் முகலிங்கன் வழங்குகிருர். இப்பேருரை இலக்கிய வரலாற் றில் பெரிதும் வேண்டப்படும் நுண்ணுய்வில் ஒரு திருப்பு முனையாக அமையும். மிகுந்த பொறுமையோடும் பொறுப் புணர்வோடும் அவர் இப்பணியை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். பட்டமேற்படிப்பு ஆய்வுக்குப் பொருத்த மான தலைப்பு ஒன்றைச் சண்முகலிங்கன் இனங்காட்டியுள்
GTT,
எமது கல்லூரி இலக்கியப் பாரம்பரியத்தின் மற் ருேர் இலக்கியப் படைப்பாளியான திரு. நா. சபேசன் தலைப்பையும் கருத்துரைத்து நினைவுப் பேருரை வெளியீட் டுக்காக எண்ணுாற்றிருபத்தொரு ரூபாவையும் ( if IS ノ இலண்டனிலிருந்து அனுப்பினுர்,
நினைவுப் பேருரையை நிகழத்தும் நா. சண்முகலிங் கனுக்கும் வெளியீட்டுக்கு நிதி வழங்கி, ஒரு புதிய மரபைத் தோற்றுவித்த நா. சபேசனுக்கும் நாம் நன்றி கூறக் கட மைப்பட்டுள்ளோம்.

மகாஜனக் கல்லூரியின் 96ůŠulů u Dufulů
பண்பாட்டு விழிப்புணர்வின் அவசியம் பெரிதும் உண ரப்படுகின்ற வேளை இது. இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையும் இதன் வழியானதே. இந்தவகையில், ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கென ஒர் இடத்தை வகிப்பதாய்க் கருதப்படும் மகாஜன இலக்கியப் பாரம்பரி யத்தின் பொருண்மையைக் காண்பதாய் இந்த நினைவுப் பேருரை அமைகின்றது.
மகாஜனவின் இலக்கியப் பாரம்பரியம் என்ற எண் ணக்கரு, ஈழத்து இலக்கிய உலகில் ஏற்கெனவே சிந்தனை அலைகளைத் தோற்றுவித்துள்ளது, இலக்கிய ஆய்வாளர்கள், இலக்கிய ஆசிரியர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆய்வுக் கட்டுரைகள், நூல் அறிமுகக் குறிப்புகள், வானெலிச் சித் திரங்கள், பத்திரிகை சஞ்சிகைக் குறிப்புக்களின் வழியாக இவை பதியப்பட்டுமுள்ளன. இந்தப் பதிவுகளும் இவற்றுக் குப் புறம்பாக இதுவரையில் வெளியாகியுள்ள மகாஜனப் புலத்துப் படைப்பாளிகளின் நூல்களும் இந்த உரைக்கான ஆதாரங்களாகும். -
மகாஜனப் புலத்துப் படைப்பாளிகள் என்ற பதம் மகாஜனக் கல்லூரியுடன் ஆசிரிய அல்லது மாணவத் தொடர்பினைக் கொண்டிருந்தவர்களையே குறித்து நிற்

Page 5
-- ? അ
கிறது. இந்த வகையில் மகாஜனக் கலைப்புலத்து விளைந்த ஒருவன் என்ற வகையில் அநுபவதரிசனமாகவும் ஆய்வுப் பொருளைக் காணும் வாய்ப்பு எனக்குண்டு. இதுவே புற் வயமான நோக்குதலுக்குத் தடையாதலாகாது என்ற எச் சரிக்கை உணர்வும் கூடவே உண்டு.
குடியேற்ற நாட்டாதிக்க காலத்துச் சுய பண்பாட்டு விழிப்புணர்வின் மையங்களாய் யாழ்ப்பாணத்துத் தோன் றிய கல்வி நிறுவனங்களுள் தெல்லிப்பழை மகாஜனக் கல் லூரியும் ஒன்ருகும். எழுபத்தெட்டு ஆண்டு கால வரலாற் றினக் கொண்டது இக்கல்லூரி. இந்த நீண்ட கல்வி வர லாற்றில் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தின் செல்நெறி களுடன் அது கொண்டிருந்த உறவின் தரிசனத்திலேதான் மகாஜன இலக்கியப் பாரம்பரியம் என்ற எண்ணக் கரு வின் பொருண்மையை நாம் காண முடியும்.
இந்த நூற்ருண்டின் ஆரம்பகால யாழ்ப்பாணத்தின் கல்வி, இலக்கிய வரலாறுகளிற் காணப்படும் சில செல் நெறிகளை விளக்குவதாயும் அந்நெறிகளுக்கான எடுத்துக் காட்டாகவும் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளையின் வாழ்க்கை ஆய்வாளரினுற் கணிக்கப்படுவது (சிவத்தம்பி, 1972). காலம், கையாண்ட வடிவம், சமூக நோக்கு என்ற பார்வையினடியாகப் பாரதியாருடன் பாவலரை ஒப்பிட்டு ஆராய்தல் பயனுன முயற்சியாய் அமையும் என்ற கருத் தும் முன்வைக்கப்படுவது (கைலாசபதி, 1982). w
பழகு தமிழைக் கையாண்டமை, சமகால சமூக, அர சியற் பிரச்சினைகளைக் கவிப்பொருளாய்க் கொண்டமை, பதம், கீர்த்தனை, கும்மி முதலிய இசைப் பாவடிவங்களை எடுத்தாண்டமை, அந்நிய கலாசாரத் தாக்கத்தின் ஆபத்துக் களே வலியுறுத்தியமையெனப் பாவலரின் பங்களிப்புக்கள் கவனத்தைப் பெறுவன. ஒட்டுமொத்தமாகக் காண்கையில்,
உயர்திரு. தெ. அ. துரை யப்பா பிள்ளையவர்கள் நாவலர் அவர்களுக்குப்பின் நாவலர் அவர்களைப்

ടെ ? അ
போலவே நமது நிலையையும் நமது தேசத்தின் நிலை யையும் நன்கு சிந்தித்திருக்கிருர்கள். நாவலர் அவர் கள் வசனமூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டிருக் கிருர். பிள்ளையவர்கள் கவிதை மூலம் தமது சிந்தனை களை வெளியிட்டிருக்கிருர்கள் (பண்டிதமணி, 1980).
சொல்லோடு மட்டும் நின்றுவிடாது செயல் வடி வம் பெற்ற பாவலரின் சித்தனைகளில் முக்கியமானது மகாஜனக் கல்லூரி. அவர் நிறுவிய மகாஜனக் கல்லூரி யின் வழியாக அவரது சிந்தனையும் செயலும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வது. இந்த வகையில் இங்கே நாம் நோக்கும் மகாஜன இலக்கியப் பாரம்பரியத்தின் தொடக்கப் புள்ளியாகவும் பாவலர் துரையப்பாபிள்ளை யைக் காண்கிருேம்.
தமிழில் சுய படைப்புக்களின் இன்றியமையாமையை அடிக்கடி வலியுறுத்தி நின்றவர் பாவலர்.
சேக்ஸ்பியர், மில்ரன், ஜோன்சனுடன் நின்றுபோகா கவிதை, உரைநடை வடிவில் ஆங்கில மனங்கள் படைப்புக்களைத் தொடர்ந்து தரமுடியுமென்ருல், எங் களால் ஏன் இயலாது? A எனக் கேட்ட பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் (1960) தாமே பல படைப்புக்களை முன்னேடியாகத் தந்தவர்.
துரையப்பா பிள்ளையைத் தொடர்ந்து மகாஜனவைப் பொறுப்பேற்ற அதிபர் திரு. கா. சின்னப்பா அவர்களும் கவிஞராகவே அறியப்படுபவர், ஆனந்த போதினி, ஈழகேசரி, இந்துசாதனம் முதலிய வெளியீடுகளில் இவரது கவிதை கள், கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மகாஜன இலக் கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி இவராற் பேணப்பட்ட தென்று நாம் கருதமுடியும். இவரது இலக்கியப் பங்களிப் பினைக் கணிப்பிடுமாறு ஆக்கங்கள் தொகுத்து வெளியிடப் படுவது இன்றியமையாதது.
ஈழத்து இலக்கியத்தில் ஆக்க நிலைப்பட்ட தேசியப் பரிமாணம் நன்கு புலனுகிய, நிலைநிறுத்தப்பட்ட காலமாக

Page 6
ܚܚܚܿ 4 ܚ----
மறுமலர்ச்சிக் காலம் கருதப்படுவது. இதனல் இக்காலத்து இலக்கியப் படைப்பாளிகள் ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறப்பான கவனத்தைப் பெறுபவர்கள். இந்த மறுமலர்ச்சிக் கால மும்மணிகளாகக் கருதப்படுகின்ற அ. செ. முருகா னந்தன், அ. ந. கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் மகா ஜனக் கல்லூரி, ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்துக்கு ஈன்று புறந்தந்தவர்களாக அறிமுகம் செய்யப்படுவதனை இங்கு நாம் குறித்துக் கொள்ளலாம் (செந்திநாதன், 1973; நுஃமான், 1981). . . ."
தமிழின் கட்டுக்கிடையாய்க் கிடந்த தேக்க நிலை யையும் எம் மக்களின் அடிமை நிலையையும் அறிந்த மறுமலர்ச்சி வேட்கையும் விடுதலை விருப்புங் கொண்ட இவ்வெழுத்தாளர் தாம் பிறந்து வளர்ந்த மண்ணினைத் தனித்துவம் சிதையாது சீர்ப்படுத்துவதோடு அதற்கு மேற்கிலே தோற்றிய சிந்தனை ஊற்றுக்களினின்றும் நீர் கொணர்ந்து பாய்ச்சி வளம்படுத்தவும் விழைந்த னர் எனலாம் (தில்லைநாதன், 1973).
மறுமலர்ச்சிக் காலத்தின் இந்த முக்கியமான பணி யில் முன்னின்ற இந்த மகாஜன “மும்மணி” களும் தமது படைப்புத் திறத்தாலே நட்சத்திரங்களாயினர். இதன் வழி ஈழத்து இலக்கியத்தின் புதிய செல்நெறிகளுக்கு வழிகாட் டுபவர் ஆயினர். -
பழைமையை அத்திவாரமாகக் கொண்டு . HՖl மையை எழுப்பவேண்டும். புதிய புதிய சிருஷ்டிகள் எல்லாம் எங்கள் தமிழில் உண்டாக வேண்டும். பழை மையை மட்டும், புதுப்பித்துக் கொண்டிருப்புதில் பிர யோசனமில்லை. புத்துயிரும் புத்தழகும் கொண்ட புதுப்புது முறைகளில் தமிழிலக்கியம் விரியவேண்டும் (அ. செ. முருகானந்தன், 1986).
என்ற இலட்சியப் பிரகடனத்துடன் புறப்பட்ட அ. செ.
மு இன் சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிப்பன. 1986 ஆம் ஆண்டு வெளியான

ー5ー
10ணிதமாடு சிறுகதைத் தொகுதியுடன் இது இலக்கிய உல கில் எளிதாய் நிறுவப்பட்டுள்ளது. அ. செ. மு. இன் இலக் கிய ஆளுமையை மேலும் தரிசிக்க அவரது படைப்புக்கள் அனைத்தும் நூலுருப்பெறல் அவசியமாகும். ' ' ' ' ',
தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலைமை முதலியவற்றை உணர்ச்சியூட்டக் கூடிய முறையிற் சித்திரிக்கும் இலட்சியக் கதைகள் பெருக வேண்டும். என்று ‘தமிழில் கதை இலக்கியம்’ என்ற கட்டுரையிலே குறிப்பிடுவார் அ. செ. மு. (1942). . .
என்வாழ்வு சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமு தாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத் தைத் தோற்றுவிக்கவும் என்னுலான பணியை எழுத்து மூலம் செய்யவுேண்டும்.
என்று சொல்லும் (அ. செ.மு. இன் மறுமலர்ச்சிக்கால சகாவான) அ. ந. கந்தசாமி (1981) தமது இந்த இலட் சியத்துக்கான இலக்கிய இயக்கத்தின் இன்றியமையா மையை உணர்ந்த போது, சோசலிச யதார்த்தத்தை ஏற்று நிறுவன மயப்பட்டுச் செயற்படத் தொடங்கினர். இதன் வழி முற்போக்கு இலக்கியத்தின் மூத்த பிள்ளை' களுள் ஒருவராகக் கணிக்கப்பட்டார். சிறுகதையில் மட்டு மன்றிக் கவிதை, நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்க்ளிலும் அ. ந. கந்தசாமி சிறப்பான ஈடுபாடு கொண்டிருந்தார். இவரைப் பற்றிய முழுமையான மதிப்பீட்டுக்கும் கூட இவரது ஆக்கங்கள் நூலுருப் பெருமை ஒரு தடையே.
மக்கள் பக்கம் நின்று மக்களுக்காகவே எழுதுபவனை ஒருபோதும் மக்கள் மறக்கமாட்டார்கள். மக்களின் குரலாக நின்று படைப்பதிற்றன் எழுத்தாளன் தன் தேசத்தின் சிருஷ்டிக் களத்தில் நிலைகொள்ள முடியும். எனக் கூறிய அ. ந. கந்தசாமியின் (1981) நிலைபேறு நிச்
சயமானதே. ஆயினும், அவரது படைப்புக்கள் இனியேனும் நூல் வடிவம் பெற்வேண்டும். م .* * - .

Page 7
حسن 6 مسسب
நல்ல வேளைவாக மஹாகவியின் படைப்புக்களிற் பெரும்பாலானவை சற்றுக் காலந் தாழ்த்தியேனும் வெளி யிடப்பட்டதால் நமது மரபில் மஹாகவியின் இடத்தை உரிய முறையில் நிலைநாட்ட முடிந்திருக்கிறது. ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பல பிரதான பண்புகளைத் தோற்று வித்து வளர்த்தெடுத்தவர் என்ற பெருமையைப்பெறும் மஹாகவி,
ஈழத்தில் மட்டுமன்றி. தமிழகம் உட்பட நவீன தமிழ்க் கவிதை வரலாற்றிலேயே தானே ஒரு சகாப் தம் ஆகின்ருர் (நுஃமான், 1981).
அன்ருட நிகழ்ச்சிகளையும் அநுபவங்களையும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். மஹாகவி ஒரு புதிய சந்த தியை விருத்தியாக்கும் ஒரு காலகட்டமாகிருர் . நாம் இன்னமும் பாரதி யுகத்தில் இருக்கின்ருேம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறுதித் தளிர் கள் பழுத்துக்கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனல், அந்த யுகசந்தி பிரிந்துவிட் டது. அதன் ஒரு கிளையே பிச்சமூர்த்தி என்ருல் அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்ருல் அத் தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத் துக்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி (சண்முகம் சிவலிங்கம், 1970) எனக் கணிக்கப்படுகின்றர்.
நிகழ்காலச் செய்திகளையும் கவிதையில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசியமாகும் என்பார் மஹாகவி (1973), கவிதை ஊடகம், வெளிப் பாட்டு முறை என்பவற்றிலும் புதிய தன்மைகளைச் சேர்த்து இன்றைய நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதையில் ஆண்டு இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதை யின் செல்நெறியைச் சிறப்பாகப் பிரதிபலித்து நிற்பவர் சேரன். சேரன் மஹா க வி யின் வாரிசு; பரம்பரை.

ബ് 7 -
அப்பனே. மகளுகி. உயிர் ஒம்பும் நியதியின் சிறப்பான வெளிப்பாடு
இலக்கிய வடிவங்களில் ஒன்றன கவிதையில் சகாப் தங்களாகிவிட்ட இந்த மஹாகவியும் சேரனும் மகாஜனக் கலைப்புலத்து விளைந்தவர்கள்.
இந்த நட்சத்திர மதிப்பீடுகளுக்குப் புறம்பாகவும் மகாஜனப் படைப்பாளிகள் பலரை ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடன் காணமுடியும்.
"பண்டைய இலக்கியங்களில் தோய்ந்து, இலக்கிய இலக்கண ஆராய்ச்சி, இலக்கிய நாடகங்கள் எனப் பல நூல்களை ஈந்தவர் புலவர் நா. சிவபாதசுந்தரன். தம் ஆசிரியப் பணியின் முழுமைக் காலமும் மகாஜனவிலேயே பணிபுரிந்தவர்; மகாஜனவின் இலக்கியச் செயற்பாடுகளை நெறிப்படுத்தி நின்றவர். 'கல்விக் கலைஞன் துரையப்பா புகழ் துதிப்போம்” என்றும் வெல்லுக மாஜன மாதா” என்றும் சிறப்பான கல்லூரிக் கீதத்தையும் தந்து கல்லூ ரியின் இலக்கிய வரலாற்றுடன் சங்கமமாகியுள்ளார். இவ ரது முயற்சியில் கல்லூரி வெளியீடுகளாகக் காத்திரமான இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளி
யாகியுள்ளன.
கல்லூரியின் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட பல ஆசிரியர்களைக் குறிப்பிட முடியும். விரிவஞ்சி எடுத்துக் காட்டுகளாய்த்தான் சிலர் இங்கே குறிப்பிடப் படுகிறர்கள்.
மறுமலர்ச்சிக் காலக் கவிஞருள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படும் கதிரேசன் எனப்படுகின்ற செ. கதிரேசர்பிளை ஆசிரியர் அவர்கள் மகாஜனக் கலை இலக்கியப் பாரம்பரியத்துக்கு நாடக இலக்கியத்தின் வழி தந்த பரிசுகள், மகாஜனுவின் வரலாற்று நிகழ்வுகளாய்க் கணிக்கப்படுவன. இலங்கைக் கலைக்கழக நாடகப் போட் டிக்கென இவரால் எழுதப்பட்டுத் தொடர்ந்து முதற் பரி சில்களையும் பெற்று க் கொண்ட ஐந்து நாடகங்களும்

Page 8
m 8 -
பாரதம் தந்த பரிசு என்ற பெயரில் மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர்களிஞலேயே நூலாக்கம் செய்யப்பட்டுள் ளன. கதிரேசன் கவிதைகள் நூலாக்கம் பெறுவதன் அவ சியத்தை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன்.
மகாஜனுவின் மற்ருெரு இலக்கிய ஆசிரியராக நம் கவனத்தைப் பெறுபவர் த. சண்முகசுந்தரம் ஆசிரியர். ஈழத்துக் கலை, இலக்கிய மரபு மூலங்களின் தேடலில், நாட்டாரியல் முன்னேடியாக ஈழத்துக் கல்வி வரலாற்றில் நிலை பெற்றுள்ளவர். பேராதனைப் பல்கலைக் கழக மாண வர் சஞ்சிகையின் முதல் ஆசிரியர் என்ற பெருமையைப் பெறுபவர். பல சிறுகதைகள், நாடகங்க ள், இன்னும் நடைச் சித்திரங்கள் என இவரது படைப்புகள் பல நூல் வடிவிலும் வெளிவந்துள்ளன.
பேராசிரியர் கண:திப்பிள்ளை அவர்களின் சங்கிலி மன் நாடக மரபில் ஈழத்து அரசியல் வரலாற்று நிகழ் வுகளை நாடகமாக்கித் தந்தமையும் திரு. சண்முகசுந்தரம் அவர்களது முக்கிய பணியாகக் கருதப்படும். செழுமை யான, செட்டான இவரது மொழிநடை என்னை மிக வும் கவர்ந்த, பாதித்த விடயமாகும். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, திரு. சண்முகசுந்தரம் ஆகியோரின் மொழிநடை வளர்ச்சி நிலைகள் தனித்து ஆராயப்பட வேண்டியன. கல்லூரி மாணவர் மன்றங்கள், கையெழுத் துச் சஞ்சிகைகளை வழிப்படுத்தியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. மகாஜன மாணவரின் முதற் சிறுகதைத் தொகுப்பான இளம் முல்லேக்குப் பின்னுல் சண்முகசுந்த ரம் அவர்களின் உழைப்பு நிறைய இருந்தது. இதனை அடி யொற்றியே இவர்கள் என்ற மாணவர் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. ஆசிரியர் திரு. செ. இராஜகுலேந் திரன் இதன் பின்னணியிலிருந்தார். இவரது பணிகள் இன்றும் 'தொடர்வன.
மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரும் சில ஆண்டுகள் ஆசிரியராய் விளங்கியவருமான மயிலங்கடலூர்

பி. நடராசன் இன்னெரு குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை. கல்லூரியிலும் வெளியேயும் சமூக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல படைப்புக்கள் நூல் வடிவம் பெறக் காரணராக இருப்பவர் இவர். சேரன், சபேசன் முதலியோருக்குப் பின்னல் நடராசனின் வழிப்படுத்தல் நிறைய இருந்திருக்கிறது. ‘தன்னுடைய கருத்தெதனையும் திணிக்காமல் சுயமான வளர்ச்சிக்கு மிகவும் உற்சாகப் படுத்தியவ்ர் இவர் என்கிறர் சபேசன் (1986). எழுபதுக் ளின் ஆர்ம்டங்களில் மகாஜனவிலே கவிதைப் போட்டி களை நடத்திப் பரிசு வழங்க நான் விரும்பியவேளை அதனை நடைமுறைப்படுத்த இவர் உழைத்ததும் அந்தப் ப்ோட்டி களில் சேரன், ஆதவன். புராந்தகன், விஜயேந்திரன், சபே சன் முதலியோர் தேறியதும் இந்த வேளையில் என் நினை வுகளில் எழும். Xn
நடராசனுடன் இணைந்தும் தனித்தும் மகாஜன இலக்கியப் பாரம்பரியம் என்ற எண்ணக் கரு அறிஞர் மட் டத்திலும் மக்கள் மத்தியிலும் நிலைநாட்டப்படவும் ஏற் றுக்கொள்ளப்படவும் பல்வேறு வழிகளில் உழைத்தவர்க ளில் திரு. ஆ. சிவநேசச்செல்வன் குறிப்பிடத்தக்கவர். கல் அலுTரியில் பாவலர் நூற்ருண்டு விழா மலர், நிறுவியவர் நினைவுப் பேருரைத் தொடர் என இவர் சிந்தனையில் மலர்ந்தவை பல. தமிழிலக்கியம், தொல்லியல், தமிழில் தொடர்புச் சாதனங்கள் என்பனபற்றிச் சிறந்த கட்டுரை களேயும் இவர் தந்துள்ளார். மகாஜனப் பாரம்பரியத்தில் பாவலரிலிருந்து தொடருகின்ற பத்திரிகைத்துறை மரபில் இவர் இன்று வீரகேசரி இதழின் பிரதம ஆசிரியராக இருக் கின்ருர், ? ۔ ... ‘‘
மகாஜன இலக்கியப் பரம்பரையினருள் அதிக நூல் களை வெளியிட்டவர் தெல்லியூர் நடராசன். இந்த ஆய்வு தொடர்பான தேடலின்போதே இவர் பற்றிய தகவல்களை, நூல்களை அறிய முடிந்தது. அ. செ. மு. அ ந க., மஹா கவி காலத்து மகாஜனனன இவருக்கும் அ. செ. மு. அ. ந க், ஆகியோரைப் போல நிறையப் பத்திரிகைத்

Page 9
- 10 -
தொடர்புகள் இருந்திருக்கின்றன. இவரது நூல்கள் உள் ளடக்கப் பகுப்பாய்வுக்குள்ளாக்கப்பட்டு, காலப் பின்னணி யில் மதிப்பீடு செய்யப்படுதல் இன்றியமையாதது என்று கருதுகிறேன்.
பழந் தமிழிலக்கிய மரபில் மனிதநேய உணர்வு மிக்க நல்ல பல கவிதை நூல்களைத் தந்துள்ள மகாஜனன் புலவர் ம. பார்வதிநாதசிவம். அ. செ. மு. ஐப் போல எழுத் தையே தொழிலாகக் கொண்டு பொருளாதாரரீதியிற் பாதிக்கப்பட்டவர் இவர்,
மகாஜனன் என்ற பிரகடனத்துடன் நல்ல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர் வேல் அமுதன். இவரது சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
இன்று மிகவும் அறியப்பட்ட எழுத்தாளராக, “இன் றைய பெண் எழுத்தாளர்" என்ற பெருமையுடன் நல்ல சிறுகதைகளையும் நாவல்களையும் தந்துள்ளார் கோகிலா மகேந்திரன். மிகக் குறுகிய காலத்துள் நிறைய எழுதித் தமக்கென ஓரிடத்தை நிறுவிக்கொண்ட மகாஜனன் இவர்.
அண்மையில் ஆகுதி என்ற சிறுகதைத் தொகுதி யைத் தந்துள்ள சோமகாந்தன் ஒரு மகாஜனன் என்ற தக வல் மிக அண்மையிலேயே எனக்குத் தெரியவந்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற நிறுவனத் தின் நிலைபேற்றிலும் நாவலர் சபையின் இலக்கிய முயற்சி களிலும் இவரது பங்கு நிறைய உள்ளது.
பெளராணிக வித்தகர் எனப்படுகின்ற திரு. குக சர்மா அவர்களின் இலக்கியத் தொகுதி. குரும்பசிட்டி கே. எஸ். சிவகுமாரனின் சிறுகதைத் தொகுப்பு, ஆதவன், சபேசனின் கவிதைத் தொகுதிகள் என மகாஜனப் பட்டி ய்ல் நீளும்.
இந்த மகாஜனன்களின் நூல்வரிசையில் மிக அண் மையில் இரண்டு நூல்களை என்னலும் தர முடிந்திருக் கிறது. இவற்றைவிட, இலங்கை வானெலியின் “கம்கை

- 11 -
யாளே. ' இசைத்தட்டிலும் ஏனைய வானெலி இசைத் தட்டுகளிலும் எனது தன்னுணர்ச்சிப் பாடல்கள் (Lyrics) சில பதிவாகியுள்ளன.
இந்த வகையில் *கங்கையாளே'யில் இடம்பிடித்த மற்ருெரு மகாஜனன் மாவை நித்தியானந்தன். நல்ல கவி தைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ள நித்தியானந்த னின் படைப்புக்களும் நூலுருப் பெறவேண்டியது இன்றி யமையாதது.
மகாஜனவின் ‘புதுசுகளில் குறிப்பிடத்தக்க இள வாலை விஜயேந்திரன் அ. ரவி, பாலசூரியன் முதலியோரின் பண்டப்புக்கள் நூல்வடிவம் பெறும்போது இவர்களைப்பற் றிய மதிப்பீடும் நிலைபேறும் அதிகமாகும் என்று கருது கிறேன்.
பல கவிஞர்களுடன் தொகுதிகளில் இடம்பிடித் துள்ள ஊர்வசி, ஒளவை முதலியோரின் தனியான தொகு திகளின் அவசியத்தையும் இங்குக் குறிப்பிடவேண்டும்.
சிங்கள - தமிழ் இலக்கியப் பரிவர்த்தனை என்ற மிக இன்றியமையாத இலக்கியப் பணியில் இரண்டு நூல்களைத் தந்ததுடன் வானெலி போன்ற தொடர்பூடகங்களின் வழி இன்றும் இதனைச் செய்துவரும் மயிலங்கூடலூர் த.கனகரத்தி னம் அவர்களும் இங்குக் கவனத்துக்குரியவர்.
இலக்கியத் திறனுய்வுத் துறையிலும் இன்றைய சமூக அறிவியற் போக்குகளை நன்கு அறிந்து அவற்றினைத் தமிழிலக்கிய மரபில் பிரயோகித்து, சிறப்பான திற ஞய்வை மேற்கொள்பவர் திரு. க. சண்முகலிங்கம்.
மகாஜனுவுக்கெனச் சிறப்பான கையெழுத்துச் சஞ் சிகை மரபு இருக்கின்றது. மகாஜனப் படைப்பாளிகளின் பயிற்சிக் களங்களாக இவற்றைக் குறிப்பிடலாம். இன்று வெளிவருகின்ற அரங்கம் வரையில் பல சஞ்சிகைகள் இப் பாரம்பரியத்திற்குரியன. எழுபதுகளில் வானெலி விமர்ச
னங்கள் வரை இவை எட்டப்பட்டுள்ளன.

Page 10
- 12 =
மாணவர் ஆக்கங்களையும் உள்ளடக்கி ஆண்டு தோறும் வெளிவந்த கல்லூரி இதழான மகாஜனனுக்குப் புறம்பாக எழுபதுகளில் க. நாகேஸ்வரன், சு. சரவணபவன், பொ. இரகுபதி முதலியோர் சம்பந்தப்பட்டிருந்த சங்கமம் மகாஜனன்களின் அச்சுவாகனமேறிய முதற் சஞ்சிகை um GuD
பின்னுலே எண்பதுகளில் மகாஜன மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு. அவர்கள் பழைய மாணவராகிவிட்ட நிலையிலு:ம் தொடரும் புதுசு சஞ்சிகை ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் தன் இடத்தை நிறுவிக் கொள்வது. ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தின் ஆரோக்கியமான செல் நெறியை அது காட்டி நிற்பதாக மதிப்பிடப்படுகிறது (நா. சுப்பிரமணியன் 1985).
மகாஜனக் கல்லூரியின் எழுபத்தெட்டு ஆண்டுகால வரலாற்றில் ஒரு பெரும் மாணவ பரம்பரை. இவர்கள் அனை வருமே தங்களை மகாஜனன்கள் என்று பிரகடனம் செய்து கொண்டு எழுதியதாகக் கூறமுடியாது. இந்த முன்னேடி முயற்சியில் எனது கண்களுக்குள் அகப்படாத பிற படைப் பாளிகளும் படைப்புக்களும் நிறைய இருக்கலாம். அவற் றையும் இனங்கண்டு மதிப்பிட இவ்வுரை வழிகாட்டியாக அமையும் என்று கருதுகிறேன்.
இவ்வாருக, மகாஜன இலக்கியப் பாரம்பரியம் அளவு ரீதியாகவும் (Quantitative) தன்மை ரீதியாகவும் (Qualitative) ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்திற்குக் கணிசமாகப் பங்களித்துள்ளது. இதன்வழி மகாஜன இலக்கியப் பாரம் பரியம் என்ற எண்ணக் கருவும் பொருண்மை பெறுவதா கக் கொள்ளப்படலாம். எனினும் இதனை, மேலும் உறுதிப் படுத்தும் முயற்சியாய் மகாஜனப் படைப்பாளிகள் அல்லது மகாஜனப் புலத்து விளைந்த படைப்பாளிகள் என இது வரை கூறப்பட்ட எண்ணக் கருவின் பொருண்மையையும் சற்று ஆழ்ந்து காண்பது நல்லது என்று கருதுகிறேன். மகாஜனப் படைப்புப் புலத்தின் ஆக்கக் கூறுகளை இனங் காணும் முயற்சியாயும் இது அமையும்.

- 13 -
மகாஜனப் படைப்பாளிகள் என்ற எமது வரை யறை மகாஜனவுடன் ஆசிரிய, மாணவ உறவுகொண்ட படைப்பாளிகளையே குறித்து நின்றமை முன்னர் சுட்டப் பட்டது. உண்மையில், மகாஜனுவுடனுன இவர்களின் மாணவ, ஆசிரிய உறவுக்கும் இவர்களின் படைப்பாற்ற லுக்கும் படைப்புகளுக்கும் உள்ள உறவு நிர்ணயத்தில் தான் மகாஜனப் படைப்பாளிகள் என்ற பிரயோகம் அர்த் தம்பெறும். இல்லையெனில் வெறும் பரம்பரைப் பெருமை பேசுதலில் பெருமைக்குரியவர்களைத் தம்மவராய் அல்லது தம்மை அவர்களின்பால் சேர்த்துக்காணும் காட்டும் சரா சரிச் சமூக நடைமுறையாய் நமது முயற்சியும் போய்விடும் ஆபத்து உண்டு. இந்த விடயத்தில் மகாஜனப் படைப் பாளிகளின் வாக்குமூலங்களிற் சில எமக்குத் துணையாகும்.
தமது தமிழார்வத்தைத் தூண்டியும் தாம் எழுதும் கட்டுரைகளை வியந்தும் தமது தமிழ்ப்பாட ஆசிரியர், தம் பிற்காலத் திறமைக்குப் பேராதரவாக இருந்தமைபற்றி அ. செ. மு. நன்றியுடன் நினைவுகூர்வதாகக் கதிரேசர்பிள்ளை ஆசிரியர் ( 1973) குறிப்பிடுவார். திரு. கதிரேசர்பிள்ளை முதலாய் நீளும் ஆசிரியர் பரம்பரையும் அதற்கு நன்றி சொல்லும் மாணவர் பரம்பரையும் மகாஜன பாரம்பரியத் தில் நிறைந்து விளங்குவதற்கு நானும் ஒரு சாட்சியாக 6)ITLD . s
மிகப் புதுசான சாட்சியாய்ச் சபேசனையும் இங்கு அழைக்கலாம். ‘மாணவரின் முயற்சிகளைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவது மகாஜனப் பாரம்பரி யம்' என்று தன் அநுபவத்தின் அடியாகச் சபேசன் தெரி விக்கும் கருத்து நம் கவனத்துக்குரியது (சபேசன், 1986). ஐந்தாவது வகுப்பிலேயே தன் முதற் கவிதையை எழுதக் காரணமான தமிழாசிரியர், பின்னலே கையெழுத்துச் சஞ் சிகை ஆசிரியராகத் தம்மை வளர்த்த ஆசிரியர் திரு.ச. விநா யகரத்தினம், இந்த முயற்சியை வகுப்பறைக்கு வந்தே உற் சாகப்படுத்திய அதிபர் திரு. பொ. கனகசபாபதி எனச் சபேசனின் மனப்பதிவு நீளும். சபேசனின் கூற்றினடியா

Page 11
கச் சில பொதுவான அவதானிப்புகளையும் இந்த இடத்தில் நாம் கருத்திற் கொள்ளலாம்.
படைப்புத்திறன் விரு த் தி க்கு அடிப்படையான மொழியாளுமையின் வளர்ச்சிக்குக் காலாகும் மகாஜனவின் தமிழாசிரியர் பரம்பரையினர். இந்தக் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கெல்லாம் பொறுப்பாயிருந்து உழைக்கும் ஆசிரியர்கள். அதுபோலவே கலை இலக்கிய முயற்சிகளுக்கு மகாஜனக் கலைத்திட்டத்தில் இடத்தந்து வேண்டி# ஊக்க மெல்லாம் தந்துநிற்கும் மகாஜனவின் அதிபர்கள். இந்த முயற்சிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அநுமதிக்கும் பெற் ருேர், கல்லூரியின் கலை, இலக்கிய முயற்சிகளையெல்லாம் அங்கீகரித்து ஊக்கும் பண்பாட்டுப் புலம் என இங்கே குறிப்பிடப்பட்ட அனைத்தினதும் இடைவினைகளுக் கூடாகத் தான் மகாஜன ஆற்றல்கள் தோன்ற முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தின் கலை, இலக்கிய மரபுகளின் ஊற்றுக் கண்கள் பலவற்றினை அம்பனைச் சூழல் கொண்டிருப்பது. கிராமியக்கலை வடிவங்களிலிருந்து தொல்சீர்க் கலை வடிவங் கள்வரை இங்கே உச்சநிலையிற் பயிலப்படுவன (வித்தியா னந்தன், 1985). இசையும் ஒவியமும் நடனமும் நாடகமும் இலக்கிய-புராண படனங்களும் இயல்பாய்ப் பயிலப்படும் இல்லங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வருகின்ற இளைய உள்ளங்களின் ஆர்வங்களை இனங்கண்டு அவை வளர்தற்கேற்ற சூழ்நிலையைத் தருகின்றபோது அவை சக்திவாய்ந்த ஆற்றல்களாய் மிளிர்வதில் வியப்பில்லை. 19காஜனப் படைப்பாளிகளின் படைப்புத்திறன் பின்னணி யாக இந்தப் பண்பாட்டுப் புலத்தினையே சிறப்பாகக் காண் பது பொருத்தமானதென்று கருதுகிறேன்.
என் குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோரும் கலை யார்வம் கொண்டவர்கள். இதனுல் நான் இளமை யைக் கழித்த அந்த மனை எந்த வேளையிலும் கலகலப் பாக இருக்கும். இசையும் ஓவியமும் அக்குடும்பத்தின் பரம்பரைச் சொத்து.

---- 15. ۔سست۔
இத்தகு சூழலிலேதான் நான் வளர்ந்தேன். இத ஞல் என்னிடத்தே கதைகளைக் கற்பனையில் எழுத வேண்டுமென்ற ஆவல் முளைகொண்டுவிட்டது.
எனக்கூறும் அ. செ. மு. இன் கூற்றில் (1973) அவர் ஆற்றலிலே குடும்ப, பண்பாட்டுப் புலத்தின் இடம் புலப் படும். பாவலரிலிருந்து இன்று உருவாகிவரும் மகாஜனப் படைப்பாளிவரை கிடைக்கும் குடும்பச் சூழல், நண்பர் குழாம், பிரதிமைக் குழுக்கள் (Reference groups) என அமையும் சமூக மயமாக்கற் கூறுகள் அனைத்தையும் நுணுகி நோக்குகையில், மகாஜனப் பண்பாட்டுப் புல்த்தின் செழுமை மேலும் தெளிவாகும். மகாஜனப் பாரம்பரியத்தின் சிறப் பும் ஒளிவிடும்.
புதிய மாற்றங்கள், நவம்ான மணி மண்டபங்கள், ஆயி னும் நமது சிறு பராயம் முதலாக நாம் உட்கொண்ட அதே வயற்காற்று, எமது முந்தையர் ஆயிரம் கனவுகள் கண்டு ஏர் பிடித்துச் சுழன்று வந்த அதே நிலப்பரப்பு இன்னமும் அப்படியே விரிந்து கிடக்கிறது (அ. செ. மு., 1973).
சமூக மாற்றங்களிடையும் பண்பாட்டின் செழுமையான கூறுகளைக் கைவிடாத இந்தப் புலத்தின் சிறப்பினைக் கண்டு தான் படைப்புச் சக்தியாய்ப் பண்பாடு கண்ட கலைத்தெய்வ மான வாணியும் தன்வீடாக மகாஜனுவைத் தேர்ந்தெடுத்து, தென்தமிழ் யாழ் மீட்டிச் சிரித்தபடி வீற்றிருக்கிருள்.
வாணி, உன் விடும் வளவும் அறிவேன்.அக் காணி முழுதும் கலகலப்பே அல்லவோ?
என்று மஹாகவி சும்மாவா சொன்னன்.

Page 12
سس-16
துணை நூல்கள், சஞ்சிகைகள்
கணபதிப்பிள்ளை, சி.- மதிப்புரை, சிந்தனைச் சோலை,
1960 மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை
கதிரேசர்பிள்ளை, செ- அ. செ. முருகானந்தன் - வாழ்
1973 வும் பணியும் மறுமலர்ச்சிக் காலம்
இலக்கியச் சிறப்பிதழ், கலைப்பெருமன் றம், அம்பன, தெல்லிப்பழை.
கந்தசாமி, அ. ந.- ‘நான் ஏன் எழுதுகிறேன்?" (மறு பிர
1981 சுரம்), நுட்பம், தமிழ்ச் சங்கம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், மொரட்டுவை. கைலாசபதி, க.-- *ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதி 982 யின் தாக்கம்-சில குறிப்புகள்", ஞான
பண்டிதம்-வைரவிழா மலர், பூரீஞான பண்டித வித்தியாசாலை,கொக்குவில்,
சண்முகம் சிவலிங்கம்- மஹாகவியின் கோடை, வாசகர்
1970 சங்கம், நூறி மன்சில்", கல்முனை. சபேசன், நா.-- இனிவரும்காலம்,பொதிகை, சென்னை,
1986 ሎ சுப்பிரமணியம், நா - ‘ஈழத்துத் தமிழிலக்கியச் சஞ்சிகை
1985 வரலாற்றில் ‘புதுசு' வின் பண்பும்
பணியும்" ஈழநாடு வாரமலர், யாழ்ப் LurraSorb. வேத்தம்பி, கா.-- * பாவலர் துரையப்பாபிள்ளையின் 1972 சகல குண சம்பன்னன் பற்றிய ஒர்
ஆய்வு’, பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றண்டு விழா மலர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை. செந்திநாதன், கனக - "மறுமலர்ச்சிக் குழுவில் மணம் வீசும் 1973 மலர் - அ. செ. முருகானந்தன், மறு மலர்ச்சிக் காலம் இலக்கியச் சிறப்பிதழ்,

தில்லைநாதன், சி.-
1973
நுஃமான் எம். ஏ.-
سے 17 سسست
கலைப்பெரு மன்றம், அம்பனை, தெல் லிப்பழை, "மறுமலர்ச்சி எழுத்தாளர்", மறு மலர்ச்சிக் காலம் - இலக்கியச் சிறப்பி தழ், கலைப்பெரு மன்றம், அம்பனை, தெல்லிப்பழை.
‘இவர்கள் - ஒரு அறிமுகம்", இவர்கள்
1981 படைப்பிலக்கிய மன்றம், மகாஜனக்
கல்லூரி, தெல்லிப்பளை மஹாகவி - சிறுகவிதை", மஹாகவியின் விடும்
1973 வெளியும், வாசகர் சங்கம் நூறிமன்
சில்", கல்முனை. முருகானந்தன் அ செ- ‘தமிழில் கதை இலக்கியம்",
1942 ஈழநாடு, யாழ்ப்பாணம். 17-05-1942
1973 - "இலக்கியக் களத்துமேடு-சில் நினைவு
1986 一
கள்" மறுமலர்ச்சிக் காலம் -இலக்கியச் சிறப்பிதழ் கலைப்பெரு மன்றம், அம் பனை, தெல்லிப்பழை * மறுமலர்ச்சித் , தமிழ்", மனிதமாடு (பின்னிணைப்பு), இலக்கியக் குழு, யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம்.
வித்தியானந்தன் சு.-- *காங்கேசன்துறைக் கல்வி வட்டா
1985 ரக் கல்வளம்", காங்கேசன் கல்வி
மலர், அதிபர்கள் சங்கம், காங்கேசன் துறைக் கல்வி வட்டாரம். Thuraiappapillai T. A.- : “Jaffna Present and Past'
1960 (Ceylon National Review - January
1907), MAHAJANA COLLEGE JUBILEE SOUVENIR, Mahajana College, Tellippalai.

Page 13
མཆང་། བག་ཆགས་ ,
UMIIGOf துரையப்பரபிள்ளைநிலவுப் பேருரைகள்
1.
நமது கல்விமரபு -: அ.பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா, 1975
நமது மொழியின் இயல்புகள்
கல்ாநிதி"அச்ன்முகதாஸ், 1976
ஈழவரலாற்று மரபில் யாழ்ப்பாண வைபவமாலை
:-கrநிதி சி.பத்மநாதன், 1977
பாவலரும் பாரதியும்
--நா. சுப்பிரமணியம் எம். ஏ., 1982
பெருங்கற்கால யாழ்ப்பாணம்
-பொ. இரகுப்தி"ள்ம். ஏ, 1983
பாவலர் துரையப்பாபிள்ளையின் "யாழ்ப்பாணம் அன்றும் இன்றும் - மீள்பார்வை
-பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, 1986