கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  பால பாடம் 3  
 

 

 

1. நண்மாணாக்கள்

நல்ல மாணாக்கன் அதிகாலையில் நித்திரைவிட்டெழும்புவான். அவன் கல்வியில் விருப்பமும், ஊக்கமும் உடையவனாயிருப்பான். வித்தியாசாலைக்கு ஒழுங்காகப் போவான். உபாத்தியாயரிடத்து அன்பும் பணிவும் உடையவனாய், அவருடைய சொல்லுக்கு அடங்கி நடப்பான். அவர் சொல்லும் பாடங்களை வேறு சிந்தனையின்றிக் கேட்டு, கேட்ட பாடங்களைப் பலதரஞ் சிந்தித்துத் தனக்குச் சந்தேகமான பொருள்களைத் தன் வகுப்பு மாணாக்கர்களை வினாவியறிவான் அவர்கள் சந்தேக முற்று வினாவியவைகளுக்குத்தான் உத்தரஞ் சொல்லுவான். அவர்களிடத்து அன்புஞ் சினேகமும் உடையவனாயிருப்பான்.

அவன், தான் நோயாயிருக்குங் காலமும் தன் பிதாமாதா முதலிய பெரியோர்கள் முக்கிய கருமங்களுக்காகத் தடைசெய்த காலமும் அல்லாத மற்றை எப்பொழுதாவது, பள்ளிக்கூடத்துக்குப் போகாமலிருக்க மாட்டான். போகாத பொழுதும், தான் வித்தியாசாலைக்கு வரமுடியாமைக்குக் காரணத்தைத் தன் உபாத்தியாருக்குத் தெரிவித்து அவர் அனுமதி பெற்றுக் கொள்வான். வராத நாளிற் பாடத்தைத் தவறாமல் படித்து அதன் பொருளைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். தன் பாடத்தைக் கவனித்தலை விட்டுக் கெட்ட பிள்ளைகளுடைய வீண் பேச்சுக்களுக்கு ஒரு போதுஞ்செவி கொடுக்கமாட்டான் ; அவர்களோடு கூட வீண் விளையாட்டுகளுக்குப் போக மாட்டான் ; ஒருவேளை தான் செய்யுங் குற்த்துக்காக உபாத்தியாய் தன்னைத் தண்டித்தாராயினும், அவர் தன்மேல் வைத்த நேசத்தினால் அது செய்தார் என்று நினைத்து, தான் அவர்மேல் வைத்த அன்பை ஒருபோதும் மறக்கமாட்டான். ஒவ்வொரு வேளையில், தான் வாசிக்கும் பாடங்கள் கடினமாயிருந்தாலும், அதற்காகப் பயந்து அவைகளைப் படிக்காமல் விட்டுவிட மாட்டான் ; அவைகளை நாளுக்குநாட் படித்துப் பொருள் தெரிந்துகொள்ளுவான். பழம் பாடங்களை நாடோறும் சிறிது சிறிதாகப் படித்துப் போற்றிக் கொள்வான். இன்னும், கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக்குப் பயன் அறிந்தபடி நடந்தலுமே எனத்தெளிந்து, தான் படித்த பாடங்களிற் சொல்லியபடி நடக்கப் பழகிக் கொள்வான்.

இப்படி வித்தையை விரும்பிக் கற்பதும் நற்பழக்கமும் அவனை அகலாமல் இருக்கும்பொழுது அந்த நன்மாணாக்கனுக்கு வித்தியாசாலைக்குப் போகாமற் கழிக்கிற ஒரு நாள் ஒருயுகம் போலக் கவலைக்கிடமாய்க் கழியும். இந்த நன்மாணாக்கன், கல்வியையும் அதன் பயனாகிய அறிவையும் அவ்வறிவின் பயனாகிய ஒழுக்கத்தையும் உடையவனாய், அறிவுடையோர்களால் நன்கு மதிக்கப்பட்;டுப், பொருளையும் புகழையும் இன்பத்தையும் அடைகிறான்.

கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்கள் இந்த நல்ல மாணாக்கனைப் போலப் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போய், உபாத்தியாயருடைய சொல்லுக்கு அடங்கி, நடந்து, பாலிய வயசிலே கல்வியை அவமதியாது கற்றுக்கொள்ளக்கடவர்கள். இப்பொழுது புதுப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினமையால், சிறிது கஷ்டமாகவும் இருக்கும். அதைப்பற்றி அதைரியப்பட்டு விட்டுவிடாமல், முயற்சியோடு படித்தால், முன் வாசித்தறிந்த முதலாம் இரண்டாம் பாலபாட புத்தகங்களை போல இதையும் இலேசாகப் படித்து அறிந்து கொள்ளலாம். “ சிறுமையிற் கல்வி சிலையிலெழுத்து’’ ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே’’ ‘கேடில் விழுச் செல்வங்கல்வி’ ‘அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்’ என்னும் பெரியோர் வாக்குகளை மாணாக்கர்கள் எப்பொழுதும் சிந்தித்தல் வேண்டும்.

2. நித்திரை

நம்முடைய மனமும் உடம்பும் நாடோறுஞ் சற்று நேரம் இளைப்பாறிச் சௌக்கியமாயிருக்கும்படி கடவுள் நித்திரை நமக்கு ஒரு இயற்கையாகிய குணமாகத் தந்திருக்கிறார். நாம் செய்யும் எவ்வித தொழில் முயற்சிகளினாலும் நம்முடைய மனத்துக்கும் உடம்புக்கும் உண்டாகுந் துர்ப் பலத்தை நீக்கி, நித்திரை நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது. இதனால், நித்திரை எல்லாருக்கும் இன்றியமையாதது. அஃது அளவிற் கூடினாலும் குறைந்தாலும், மனசுக்குச் சோம்பலையும், உடம்புக்கு நோயையுஞ் செய்யும். நித்திரை செய்வதற்குரிய காலம் பகற் காலமன்று இராக் காலமேயாம். பகற் காலத்திலே நித்திரை செய்தால் வியாதிவரும் ; வியாதி வரும் ; மூதேவி குடிகொள்வள் ; செய்யவேண்டிய தொழில்கள் செய்யாமையாற் கெடும். இவைகளன்றி, இராநித்திரை குழம்பி, துர்சொர்ப்பணங்கள் காணுவதற்கு ஏதுவாய், இன்னும் அனேக கெடுதிகளை உண்டாக்கும் ஆதலால் ; பகற் காலத்திலே ஒரு போதும் நித்திரை செய்யலாகாது.

இரவிலும் ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கு மேலே நித்திரை பண்ணலாகாது. பகற் கால நித்திரையும், அளவிற் கூடியன நித்திரையும், சிறு குழந்தைகளுக்கு மாத்திரம் தேக வளர்;ச்சியையும், சுகத்தையும் கொடுக்கும். இரவிலே எட்டு ஒன்பது மணியளவில் நித்திரைக்குப் போதல் வேண்டும். யோசனஞ் செய்தபின் படுக்கைக்குப் போதல் வேண்டும். கை கால்களிலுள்ள ஈரத்துடன் சயனிக்கலாகாது. சீரணமாகாத கடின பதார்த்தங்களை இரவிலே புசிக்கலாகாது.

படுக்குமிடம் நல்ல காற்று உலாவத் தக்கதும் பலர் நெருக்கமாகப் படுத்திருந்தல் சஞ்சரித்தல் இல்லாததுமாய் இருத்தல் வேண்டும். தரை மட்டத்துக்கு உயர்வாகக் கட்டில் முதலியவைகளிலே நித்திரை செய்வது உத்தமம். தலையணையிலே தலை வைத்துக் கொண்டு சயனித்தல் வேண்டும். வடக்குத் திக்கிலே தலை வைத்துச் சயனித்தலாகாது. அப்படிச் செய்யின் ஆயுசு குறையுமென்று பெரியோர்கள் சொல்வார்கள். பெரும் பாலும் வலப்பக்கம் மேலே இருக்கும் படி சயனித்தல் வேண்டும். விடியற்காலத்திலே விழித்த பின்பு மீண்டும் நித்திரை பண்ணலாகாது.

உரியகாலத்திலே நித்திரை வாராததொழிந்தால் பாடம் படித்தல் கடவுளைத் தியானித்தல் தோத்திரஞ்செய்தல் முதலாகிய நல்ல விடியங்களிலே மனசைச் செலுத்திக் கொண்டிருந்து, நித்திரை வரும்போது சயனித்தல் வேண்டும். நித்திரையைப் பங்கஞ் செய்யதக்க விஷயங்களில் மனசைச் செலுத்தலாகாது.

3. நித்தியகருமம்

சூரியன் உதிக்க இரண்டு மணிநேரத்துக்கு முன்னே நித்திரைவிட்டெழுந்து கைகால் முதலியன கழுவி இயன்ற வரையிற் சுத்தனாய், கடவுளைத் தியானித்துத் தோத்திரம் பண்ணி, அதன்பின், பாடங்களைப் படித்துமனனஞ் செய்தல் வேண்டும். சிறுபிராயத்திலே கற்கின்ற கல்வி மனசிலே நன்றாகப் பதிதல் போல, யாவருக்கும் விடியற்காலத்திலே படிக்கும் வித்தை மனசிலே நன்றாகப் பதியும் ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்களை விடியற் காலத்திலே படிப்பது உத்தமம்.

விடியற் காலத்திலே பாடங்களைப் படித்து வரப் பண்ணிக்கொண்ட பின்பு, விதிப்படி மலமோசனாதிகள் செய்து இயல்பாகிய துவருள்ள பற்கொம்பினாலே சுத்திசெய்து, வாய் கொப்பளித்து முகத்தையும் கைகளையும் கால்களையும் கழுவி, ஸ்நானஞ் செய்தல் வேண்டும்.

ஸ்நானஞ் செய்யுமுன் உடுத்த வஸ்திர முதலியவற்றைத் தோய்ந்து அலம்பி அரையிலே தரித்துக்கொண்டு, உடம்பை நன்றாகத் தேய்ந்து ஸ்நானஞ் செய்தல் வேண்டும். சலத்திலே நெடுநேரம் ஈரம் ஊறும்படி நிற்கலாகாது. ஸ்நானஞ் செய்த உடனே உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டி, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துக்கொண்டு, அநுட்டானஞ் செய்தல் வேண்டும். ஸ்நானஞ் செய்வதற்கு மத்தியான காலத்திலும் பிராதாக்காலம் உத்தமம். ஆற்றிலே ஸ்நானஞ் செய்வது விசேஷம் அது சமீபத்தில் இல்லையாயின், குளம் கிணறு முதலியவைகளில் ஸ்நானஞ் செய்யலாம்.

உடம்பு வேர்த்துக் களைக்க வேலை செய்தவுடனே ஸ்நானஞ் செய்யலாகாது ; சிறிது நேரம் இருந்து வேர்வையாறின பின் ஸ்நானஞ் செய்தல் வேண்;டும் காலையில் உண்ட போசனம் சீரணமாகு முன்னும், சீதளமான இரவிலும் ஸ்நானஞ் செய்யலாகாது.

4. பெரியோரை வழிபடல்

பிதா, மாதா, குரு, உபாத்தியாயர், தமையன் தமக்கை, மாமன், மாமி, பெரிய தகப்பன், சிறிய தகப்பன் முதலாகிய இவர்கள் பெரியோர்கள் என்று சொல்லப்படுவார்கள். நம்மைப் பெற்று வளர்த்தல், அன்னவஸ்மிரந் தந்துதவுதல், கல்வி கற்பித்தல், நல்லறிவைப் போதித்தல், நமக்கு நோய் முதலியன வந்தகாலத்தில் மனம் பரிதபித்து உதவிசெய்தல் என்றும் இவைகளைச் செய்து, நம்மைக் காப்பாற்றும் இப்பெரியோர்களையும், இவர்கள் செய்த நன்றிகளையும், ஒருபோதும் மறந்துவிடலாகாது. எப்போழுதும் இவர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, இவர்களை வழிபட்டுக்கொண்டு வருதல் வேண்டும்.

ஒருவேளை அப்பெரியோர்கள் நம்மைக் கோபித்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு, அவர்கள் சொல்லுக்கு அமைந்து நடத்தல் வேண்டும். அவர்களுக்கு முன்னே வெடுவெடுத்த சொல்லும் கடுகடுத்த முகமும் காட்டலாகாது. பெரியோர்களுக்கு அடங்கி நடத்தலாவது, அவர்கள் சொற்படி நடத்தலாம். கல்வியையும் நல்லொழுக்கத்தையும் கெடுக்கும்படி அவர்கள் சொல்லும் சொற்களைக் கேட்கக் கூடாதகாலத்தும், அதை அவர்களுக்குத் தக்க மரியாதையோடு தெரிவித்து, அவர்கள் மனசைத் திருப்தி செய்து ஒழுகல் வேண்டும்.

பெரியோர்கள் வீட்டுக்கு வந்தால் சீக்கிரம் எழுந்து எதிர்கொண்டு அழைத்து வந்து, ஆசனத்திலிருத்தி வழிபாடு செய்து, உபசரித்தல் வேண்;டும். அவர்கள் இருக்கச் சொல்லுமுன் அவர்களெதிரே இருத்தலாகாது. அவர்கள் பேசுஞ் சொற்களைக் கவனமாகக் கேட்டு, அவைகளின் சாரங்களைத் தெரிந்;து கொள்ளல் வேண்டும். அவர்கள் யாதாயினுங் கேட்டால், நன்றாக யோசித்து மறுமொழி சொல்லல் வேண்டும். அவர்களோடு பேசும்போது, தன்னைத் தாழ்த்தியும் அவர்களை உயர்த்தியும் பேசல்வேண்டும். அவர்களிடத்தில் இரண்டு கைகளினாலும் கொடுத்தல் வாங்குதல் செய்தல் வேண்டும் இப்படி நடக்கும் பிள்ளைகளுக்குப் பெரியோர்களுடைய ஆசீர்வாதமும், கடவுளுடைய அநுக்கிரகமும், ஆயுளும், கல்வியும், நல்லொழுக்கமும் அபிவிருத்தியாகும்.

5. சற்புத்திரர்களே ஆபரணம்

ஓர் ஊரிலே ஒரு பெரிய செல்வன் இருந்தான். அவன் மனைவி, விலையேறப் பெற்றவைகளும் அழகுள்ளவைகளுமாகிய அநேக இரத்தினாபரணங்களையும் பொன்னாபரணங்களையும், வஸ்திரங்களையும் வைத்திருந்தாள். அவள் தான் அணியும் ஆபரணங்களையும் விசித்திர வஸ்திரங்களையும் எல்லாரும் பார்த்துப் புகழ்ந்து பேசுவதைக் கேட்பதில் மிகுந்த ஆசையுள்ளவன்.

அவள் ஒரு நாள் வேறு ஊரிலிருக்கிற ஒரு பிரபுவின் வீட்டுக்கு விருந்தாக அழைக்கப்பட்டுப் போயிருந்தாள். அங்கே, தான் அணிந்திருக்கிற வஸ்திராபரணங்களைப் பற்றி அடிக்கடி அந்தப் பிரபுவினுடைய வஸ்திராபரணங்களைப் பற்றி அடிக்கடி அந்தப் பிரபுவினுடைய மனைவிக்கு எடுத்துப் புகழந்து பாராட்டுச் சொன்னான். பிரபுவின் மனைவி, இவளுடைய ஆபரணாதிகளைப் பற்றிச் சிறிதும் கவனம் செலுத்தாதவளாகி, தன் வீட்டு வேலைகளிலும் வந்தவர்களை உபசரித்தலிலுமே கவனமுள்ளவர்களாயிருந்தாள். அதைக் கண்ட இவள், தன்னிடத்துள்ளவைகளைக் காட்டிலும் விலையேறப் பெற்ற இரத்தினாபரணங்கள் அவளிடத்தில் இருக்கக்கூடும் என்று நினைத்து “உன்னிடத்துள்ள ஆபரணங்களை நான் பார்க்க விரும்புகிறேன் காட்டு’ என்றாள். அதைக் கேட்ட புத்தி சாதுரியமுள்ள பிரபுவின் மனைவி, “இப்போது என்னுடைய ஆபரணங்கள் வீட்டிலில்லை, வெளியிலே போயிருக்கின்றன. சற்று நேரத்தில் வந்துவிடும். வந்த பின் காட்டுவேன்’ என்றாள்.

சிறிது நேரத்துள், அவளுடைய புத்திரர்களாகிய சிறுவர்கள் வித்தியாசாலையினின்றும் வந்தார்கள். அவர்களைக் காட்டி, “இவர்களே என்னுடைய விலையேறப் பெற்ற ஆபரணங்கள்’ என்று சொன்னான். அதைக் கேட்;டுச் சற்று நேரம் அந்தப் பிள்ளைகளுடைய சகோதர ஒற்றுமையையும் மற்றை நற்குணங்களையும் நல்ல பழக்கங்களையும் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்த செல்வன் மனைவியானவள், பிரபுவின் மனைவியினுடைய புத்தியை வியந்து, இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளே விலைமதிக்க முடியாத ஆபரணம் என்று மனதில் உறுதி செய்து கொண்டாள்.

6. சகோதர சகோதரிகள்

ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஆண்பிள்ளைகளுக்குச் சகோதரர் என்றும், பெண்பிள்ளைகளுக்குச் சகோதரிகள் என்றும் பெயர். சகோதர ஒற்றுமையுள்ள குடும்பம் ஆண்மை. செல்வம் முதலிய எல்லாவற்றாலும் வளர்ந்தோங்கும். சிறு பிராயத்திலே சகோதர அன்புடையர்களாயிருக்கிற பிள்ளைகள், அந்த அன்பு மேன்மேலும் வளர, தங்கள் சகோதரர்களோடு ஒற்றுமையுடையவர்களாயிருந்தது. பல தொழில் முயற்சிகள் செய்து பொருள் சம்பாதித்து, சுகமாய் வாழுகின்றார்கள். அவர்களுக்குப் பகைவர்களும் பயப்படுகிறார்கள். சகோதர ஐக்கியமாக வாழ்ந்தால், செய்து முடிக்கக் கூடாத அருமையான காரியங்களையும் இலோகச் செய்து முடிக்கலாம்.

ஒரு பையன் ஒரு விளையாட்டு; சாமானை ஒரு காசு கொடுத்து வாங்குகின்றான். அதே விளையாட்டுச் சாமானை நாலு பிள்ளைகள் நாலுகாசு ஒருமிக்கச் சேர்த்துக் கொடுத்து வாங்குவார்களேயானால், ஆறு அல்லது ஐந்துக்குக் குறையாமல் வாங்குகிறார்கள். ஒரு காசுக்கு ஒன்றாக வாங்கின அதே சாமான், நாலு காசுக்கு ஐந்து ஆறு வாங்கும்படி கிடைத்தது. எதனால் என்றதைப் பிள்ளைகள் யோசித்துப் பார்த்தால், சகோதர ஒற்றுமையாலுண்டாகும் பிரயோசனத்தை அவர்கள் இலேசில் அறிந்து கொள்வார்கள்.

பிள்ளைகள் சிறு பிராயத்திற்றானே சகோதர பஷத்தை மறந்துவிடாமல், ஒற்றுமையாக அநுசரித்தல் வேண்டும். சகோதர சகோதரிகள் குற்றஞ் செய்தாலும், அதை நினையாமலும் அவர்கள் மேல் அன்பு பாராட்டி நடத்தல் வேண்டும். தாங்கள் வைத்திருக்கிற விளையாட்டுச் சாமான்களையும் போச பதார்த்தங்களையும் தங்கள் சகோதரர்களுக்குங் கொடுத்தல் வேண்டும். அவர்களோடு எப்பொழுதும் இனிமையாகப் பேசல் வேண்டும். சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் முறை சொல்லியழைப்பது பஷம் வளர்வதற்கு ஏதுவாகும்.

சகோதரர்களுள்ளே மூப்பு இளமைக்குத் தக்க மரியாதை இருத்தல் வேண்டும். இக் காலத்திலே, நம்மவர்களுடைய பிள்ளைகளுள் அனேகர், சகோதர மரியாதையின்றி ஒருவரையொருவர் சமத்துவமாகப் பெய் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பழக்கமே அவர்களுடைய முதிர்ந்த பருவத்திலும் அவர்களைத் தொடர்கின்றது. இதைப் பெற்றோர்களும் உபாத்தியார்களும் கவனித்து, அவர்களைத் திருத்துதல் வேண்டும்.

7. துர்வார்த்தை

கேட்பவர்களுக்கு மன வருத்தத்தையும், வெறுப்பையும், கோபத்தையும் தரும் அசப்பியச் சொற்களும், வைவுகளும் முதலான கெட்ட சொற்கள் துர்வார்த்தைகள் எனப்படும். சிறுவர்கள் வாயிலே இத் துர்வார்த்தைகள் உண்டாவது எப்பொழுதுஞ் சகவாச தோஷத்தினாலேயாம். ஒரு வித்தியாசாலையிற் சிநேகர்களாய்ப் படித்துக் கொண்டு வருஞ் சில பிள்ளைகளே சில வேளைகளில் இத் துர்வார்த்தை அத்துர்வார்த்தைகளும் அவர்கள் வாயில் வளர்த்து கொண்டு வருகின்றன. இதனால், அப்பிள்ளைகள் அறிவுடையோர்களால் இகழப்பட்டுக் கெட்டவர்களாகின்றகர். அது மாத்திரமா? விளையாட்டுக்காகப் பேசும் துர்வார்த்தைகளால் அப் பிள்ளைகள் ஒருவரோடொருவர் கோபம் மூண்டு சண்டையிட்டு, முன்னுள்ள சிநேதத்தையும் மறந்து, தீராப் பகைவர்களாகின்றார்கள். சிநேகத்துக்காகப் பேசும் இனிய வார்த்தைகளிருக்கவும், அவர்கள் துர்வார்த்தைகளைப் பேசி, கேட்போர்களுக்கு அருவருப்பையும் தமக்குக்கேட்டையும், விளைவித்தற்குக் காரணம் திருத்துவாரில்லாத குறையேயன்றி, வேறன்று.

இத் தேசத்திலே சிலர், தங்கீழுள்ள வேலைக்காரர் முதலாயினோரை அடிக்கடி துர்வார்த்தைகளைச் சொல்லி வைவது வழக்கமாயிருக்கின்றது. வேலைக்காரர் முதலாயினோர் குற்றஞ் செய்யின், அவர்களை இலேசாக திட்டிக் கண்டித்தும், புத்தி சொல்லியும் திருத்துதலே முறைமையும் இலேசுமாயிருக்க பக்கத்திலுள்ள மனைவி மக்கள் முதலாயினோரும் அருவருத்து விலகும்படி இழிந்த அசப்பிய வார்த்தைகளால் அவர்களை வைது தங்கள் மரியாதையை இழப்பது என்ன அறியாமையோ அறியோம். இவர்களைக் கண்ட பிள்ளைகளும் இவர்களுடைய இத்துர்ப்பழக்கத்தையே பழகிக் கெட்டுப் போகின்றார்களே!

துர்க்கந்தம் வீசும் பெருவியாதி முதலிய கொடு நோயுடையவரை அணுகினும் துர்வார்த்தை பேசுவோரை அறிவுடையோர் எப்பொழுதும் அணுகுவதற்கு அஞ்சி அருவருத்து அகலுவர். கள்ளுண்டு தம் சுயவறிவிழந்துகளிக்கும் இழி தொழிலாளர்களுக்குரிய இத்துர்வார்த்தையை, அஃதில்லாத மேன்மக்கள் தம் வாயாற் பேசி அறிவுடையோரால் இகழப்படுதல் என்ன பேதைமை!

8. உயிர்களுக்கு இதஞ் செய்தல்

பிறவுயிர்கள் துன்பப்படுதலைக் கண்டால், அத்துன்பம் தமக்கு வந்ததுபோல எண்ணி, அதனை நீக்க முயலுதல் வேண்டும். தம்முயிரை வருத்திப் பாதுகாத்தல் போலப் பிற உயிர்களையும் காப்பாற்றாத விடத்து, மனிதர்களுக்கு அறிவினால் ஒரு பயனும் காப்பாற்றாத விடத்து, மனிதர்களுக்கு அறிவினால் ஒருபயனும் இல்லை. உலகெங்கும் வியாபித்திருக்;கும் கடவுளுக்கு உயிர்களெல்லாம் திருமேனிகளாதலால், அவ்வுயிர்களுக்குத் துன்பம் வராமல் இதஞ்செய்து பாதுகாத்தல் புண்ணியமாயிற்று.

பிற உயிர்களுக்கு இதஞ் செய்யாத விடத்து மற்றை எவ்வகைத் தருமங்களாலும் பிரயோசனமில்லை. பிறவுயிர்களுக்கு ஒரு தீங்கையும் செய்யாமை மாத்திரையால் ஒருவன் நல்லவனாகமாட்;டான். தன்னால் இயன்ற இதங்களைப் பிறவுயிர்களுக்குச் செய்பவனே தனக்கும் மற்றை உயிர்கள் எல்லாவற்றிற்கும் நல்லவனாகின்றான். உயிர்களுக்கு இதஞ் செய்பவன் தன்பொருட்;டு மாத்திரமன்றிப் பிறர்பொருட்டும் பிரயாசப்படுவான். தன்பொருட்டுப் பிரயாசப்படுபவன், அதனால் வரம் அற்ப இன்பத்தை மாத்திரம் அடைகின்றான். பிறர்பொருட்டுப் பிரயாசப்படுபவனுக்கு உலகம் அவன் வசத்ததாய்விடும். ஆகவே, அவன் அதனால் எவ்வகைப்பட்ட இன்பங்களையும் அடைகிறான்.

உயிர்களுக்கு இதஞ் செய்வதற்குக் காரணம் அவைகளிடத்துள்ள இரக்கமேயாதலால், எவனிடத்தில் இரக்கம் என்னும் குணம் இருக்குமோ, அவனிடத்திலே இதஞ் செய்தலாகிய அறமும் காணப்படும். அவ்வறம் மனிதர்களிடத்து மாத்திரமன்றி, விலங்கு பறவை ஊர்வன முதலிய பிராணிகளிடத்தும் செயற்பாலதாம். ஆதலினால், அவைகளைக் கல்லினால் எறிதல், தடி கொண்டடித்தல் முதலிய தீமைகளைச் செய்யாது கர்த்தலும், நடத்தல் விளையாடுதல் முதலியவைகளினாலே ஊர்வனவற்றிற்குக் கேடுவராவண்ணம் சாவதானமாக ஒழுகுதலும், சிறுவர்களுக்குக் கடமையாகும்.

சிலர், பிறவுயிர்களுக்கு அகிதத்தையே செய்து கொண்டு, அன்னதான முதலிய தருமங்களை; செய்கின்றார்கள். அவைகள் இடம்ப நிமித்தமாகும் அன்றி, ஒரு போதும் புண்ணியமாகமாட்டாவாம்.

9. பெற்றாரைப் பேணல்

நம்மைப் பெற்றவர்கள் நம்முடைய தாயும் தந்தையும் நாங்கள் பிறந்தநாள்முதல், கல்வி கற்று அறிஞர்களாய்ப் பொருள் சம்பாதித்துச் சீவனஞ்செய்யும் பருவத்தை அடையும் வரையும், நமக்கு வேண்டிய அன்னவஸ்திரங்களைத் தந்தும், நமக்கு வியாதி வந்தகாலத்திலே அதற்காக மனம் பதைபதைத்து வைத்தியஞ் செய்பவித்துச் சௌக்கியப்படுத்தியுங், கல்வி கற்பித்தும், நல்ல பழக்கங்களைப் பழக்கியும், எப்பொழுதும் நமக்காகப் பாடுபடுபவர்கள் நம்முடைய பிதாமாதாக்களே. நம்மைக் கருவில் வகித்த நாள்முதல், நாம் பிறந்து வளர்ந்து பாலாவத்தையை அடையுமளவும், மாதாவானவள் நமக்காகப்பட்ட பிரயாசைகளையும், கவலைகளையும், நம்மால் அளவிடுதல் முடியாது.

பிதாமாதாக்கள் நம்மைக்குறித்துச் செய்யும் உபகாரங்களுக்கோ நம்மாற் பிரதியுபகாரஞ் செய்ய முடியாது. ஆயினும் அவர்கள் செய்த நன்றிகளை உள்ளத்தில் வைத்து, அவர்கள் முட்டுப்படாவண்ணம் அன்னவஸ்திரங் கொடுத்துக் காப்பாற்றுதலும், அவர்கள் ஏவுவதற்கு முன் குறிப்பறிந்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தலும், அவர்களுக்குக் கீழப்படிந்து நடத்தலும், அவர்களுக்கு நோய் வந்த காலத்திலே சிறந்த வைத்தியரைக் கொண்டு வைத்தியஞ் செய்திருத்தலும், அவர்கள் இறக்கும்பொழுது அவர்களைப் பிரியாது உடனிருந்தலும், அவர்கள் கடவுளிடத்தே செல்லும்படி பெரியோர்களைக் கொண்டு நல்லறிவைப் போதிப்பித்தலும், இறந்த பின் அவர்களுக்குச் செய்யும் உத்தரகிரியைகளைச் சிரத்தையோடு செய்தலும், அவர்களுடைய நன்மைகளை எடுத்துப் பராட்டுதலும் ஆகிய இவைகளை நாம் பிதாமாதாக்களுக்குச் செய்யுங் கடமைகளாகக் கொண்டொழுகுதல் வேண்டும். நாம் இப்படிப் பிதாமாதாக்களை உபசரித்து, அவர்கள் செய்த நன்றியை மறவாதொழுகுமோனால், அது கண்ட நம்முடைய பிள்ளைகளும் நம்மை உபசரிக்கும்.

நாம் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று அறிவதற்கு முன் கண்ணாற்கண்ட தெய்வம் தாய் தந்தையர்களே ஆதலாலும், என்றும் நம்முடைய நலத்தை விரும்பி அதற்காகப் பிரயாசப்படுவார்கள் அவர்களே ஆதலாலும். அவர்களை ஒரு பொழுதும் மறவாது, நம்முடைய தெய்வங்களைக் கொண்டு வழிபடுதல் வேண்;டும். இக் கருத்துப் பற்றியே ஒளவையாரும் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ என்று சொல்லியருளினார்.

10. கடவுளுதவி

கடவுளுதவியாவது, கடவுளால் ஆன்மாக்களாகிய எங்களுக்குச் செய்யப்படும் உதவி. கடவுள் தம்முடைய அனுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவர், ஆதலால், அவருக்கு நாம் செய்யும் உதவி ஒன்றுமில்லை. ஒருவர் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்வது, அதனைப் பெற்றுக் கொண்டவர் ஓர் உதவியைச் செய்வது, அதனைப் பெற்றுக் கொண்டவர் அதனாற் சுகம் உறுதற்கே. துக்க நீக்கத்தின் பொருட்டுச் செய்யும் உதவியும் சுகத்தின் பாற்படும். அச்சுகம் சரீரசுகம் ஆன்மசுகம் என இருவகைப்படும். இவ்விரண்டனுள், நிலையில்லாத சரீர சுகத்தின் பொருட்டுச் செய்யும் உதவியே சிறந்தது. அதினும் சரீரசுகம் ஆன்ம சுகம் என்னும் இரண்டன் பொருட்டுச் செய்யும் உதவி மிகச் சிறந்தது. இந்த இரண்டு சுகங்களையும் நமக்குத் தந்நதருளுபவர் கடவுளே.

கடவுள் நம்மேற்கொண்ட இரக்கத்தினால் நாம் இருத்தற்குப் ப+மியையும், உலாவுதற்கு ஆகாயத்தையும், உண்ணுதற்குச் சலமுதலியவற்றையும், உணவுகளைப் பாகம் பண்ணுவதற்கு அக்கினியையும், சுவாசித்தற்கு வாயுவையும் உதவினார். இன்னும் வேலை செய்யுங் காலமாகிய பகற் காலத்தில் ஒளியைக் கொடுத்தற்பொருட்டுப் பேரொளியாகிய சூரியனையும், இளைப்பாறுங் காலமாகிய இரவில் ஒளியைக் கொடுத்தற்பொருட்டுச் சந்திரனையும், கிரங்களையும், நஷத்திரங்களையும் உதவினார்.

இவைகளை மாத்திரமா! உயிர்களாகிய நாம் வசித்தற்கு ஒன்பது வாசல்களையுடையதும், எழும்புதல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என்னும் ஐவகைத் தொழில்களைச் செய்வதும், ஆகிய ஒரு நடை வீட்டையும் உதவினார். இவற்றையெல்லாம் கொடுத்து இவைகளை அறிந்து அனுபவிக்கும்படி, அறிவையும், அவ்வறிவினாலே ஆன்மீகத்தை அடைவதற்குக் காரணமாகிய ஞானத்தைப் பெறும்படி வேதாகமங்களையும் உதவினார். அது மாத்திரமா! உயிர்க்குயிராய் நின்று உணர்ந்து தலையும் செய்கின்றார்.

இவ்வியல்புடைய கடவுளுக்கு நாமும் இவ்வுலகமும் அடிமைப்பொருள்களும் உடைமைப் பொருள்களுமாம். ஆதலால், அவர் நமக்கு ஆபத்துக் காலத்திற் செய்வனவும், கைம்மாறு கருதாது செய்வனவும், செய்யாமற் செய்வனவும் ஆகிய இப்பேருதவிகளைக் குறித்து நாம் அவருக்குக் கைம்மாறாகச் செய்யும் உதவி ஒன்றுமில்லை. ஆயினும், அக் கடவுளையும் அவர் செய்யும் நன்றிகளையும் இடைவிடாது சிந்தித்து, அவரை எவரினும் மேலானவராக மதித்து, வழிபட்;டுக் கொண்டு வருதல் ஆன்மாக்களாகிய நமக்குக் கடமையாகும்.

11. யுத்தியுள்ள தீர்ப்பு

நான்கு பேர் கூடிக்கொண்டு ஓர் ஊருக்குப் போகும்போது, வழியில் ஒரு பண முடிச்சைக் கண்டு எடுத்து, அதைப் பங்கீட்;டுக் கொள்வதில் நெடுநேரம் வழக்குப் பேசியும் தீராமையால், அந்த ஊரிற் கடை வைத்திருக்கும் ஒரு வர்த்தகனிடத்தில் அம் முடிச்சைக் கொடுத்து, “நாங்கள் நால்வரும் வந்து கேட்கும்போது இதைக் கொடும் ; ஸ்நானம் செய்து போசனம் பண்ணி வருகின்றோம் என்று சொல்லிப் போனார்கள்.

போன நால்வரும் அந்தக் கடைக்குச் சமீபத்திலுள்ள ஒரு குளத்திலே ஸ்நானஞ் செய்து, கட்டுச் சோற்றையுண்டு, தங்களுள் ஒருவனைப் பார்த்து, “வர்த்தகனிடத்திலே போய் எங்கள் பண முடிச்சில் ஒரு அணா எடுத்து அதற்கு வெற்றிலை பாக்கு வாங்கி வா’ என்று சொல்லி அனுப்பினார்கள். அவன் போய்ப் பண முடிச்சைக் கேட்டான். வர்த்தகன் ‘மற்றை மூவரும் சொன்னாலொழிய உன்னிடம் கொடுக்கமாட்டேன்’ என்றான். அவன் “மற்றவர்களைக் கொண்டு சொல்லுவிக்கிறேன். செட்டியாரே பாரும்’ என்று சொல்லி, அங்கே நின்றபடி அவர்களைக் கூப்பிட்டு “செட்டியர் தரமாட்டேன் என்கிறார்’ என்றான். அவர்கள் “கொடுத்தனுப்பும்’’ என்றார்கள். வர்த்தகன் பணமுடிச்சை எடுத்துக் கொடுத்தான். அவன் அதை வாங்கிக் கொண்டு அடுத்த கடையில் வெற்றிலை பாக்கு வாங்குகிறவன் போல ஒளிந்தோடிப் போய்விட்டான்.

மற்றை மூவரும் அவனைச் சிறிது நேரம் பார்த்துக் காணாமையினால் வர்த்தகனிடத்தில் வந்து கேட்டார்கள். வர்த்தகன், “அவன் பணமுடிச்சை வாங்கிக்கொண்டு முன்னமே உங்களிடம் வந்துவிட்டான்’’ என்றான் மூவரும் வருத்தப்பட்டு, “நாங்கள் நால்வரும் வந்து கேட்கும்போது தர வேண்டும் என்று பொதுக்கட்டிவைத்த பண முடிச்சை நீர் ஒருவனிடம் கொடுக்கலாமா என்று கோபித்து, பண முடிச்சைத் தரும்படி வர்த்தகன் மேலே வழக்குத் தொடுத்தார்கள். நியாயாதிபதி நடந்த சங்கதிகளை விசாரித்து “நீங்கள் சொல்லியபடி நால்வரும் வந்து கேட்டால் வர்த்தகன் உங்களுக்குப் பண முடிச்சைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புச் சொன்னார்.

12 கல்வி

மானுடரின் அறிவை விருத்தி செய்வதற்கு முக்கிய கருவியாயுள்ளது கல்வி. அக்கல்வி, உயிர்க்கு உறுதிப் பொருள்களையுணர்த்தும் அறநூல் முதலியனவும், அவற்றிற்குக் கருவியாகிய இலக்கணநூல் முதலியனவுமாம்.

கல்வியினாலன்றி, மற்றொன்றினாலும் அறிவு விருத்தியாகமாட்டாது. அது மாத்திரமா? கல்வியில்லாவிடின் செல்வம், கீர்த்தி, சரீரசுகம் ஆன்மசுகம் முதலியவற்றையும் ஒருவரும் அடையமாட்டார். கல்வியில்லாத சிலர் முற்பிறப்பிற் செய்த நல்வினையினாலே நம்முடைய தந்தை முதலியோராற் சம்பாதிக்கப்பட்ட செல்வங்களைப் பெற்றாராயினும், அவற்றைத் தருமவழியிற் செலவுசெய்து அவற்றாலாகும் பயனைத் தாம் அடையாது, வீண் செலவு செய்து, சீக்கிரத்தில் இழந்துவிடுவர்.

பங்காளிகள் கள்வர் வலியர் முதலியோராற் கவரப்படாமையாலும், அக்கினி சலம் முதலியவற்றால் அழிவு படாமையாலும், பிறர்க்குக் கொடுக்குந்தோறும் வளர்ந்து கொண்டே வருதலாலும், செல்வத்தைக் கொடுத்தற்கும் அவற்றைப் பாதுகாத்தற்கும் நல்வழியில் உபயோகப்படுத்தற்குக் காரணமாயிருந்தலாலும், தன்னை உடையானுக்குச் சென்ற தேசங்களிளெல்லாம் சிறப்பைச் செய்தலாலும் கல்வியே சிறப்புடைத்து.

இன்னும் கல்வி ஒருவனுக்கு நன்மை தீமைகளை உணர்த்துதலாற் கண்ணையும், இன்பத்தையும் கொடுத்தலால் மனைவியையும் ஒக்கும். கற்றவர் உருவத்தினால் மனிதரேயாயினும், அறிவினாலே தேவரை ஒப்பர். கல்லாதவர் உருவத்தினால் மனிதரேயாயினும், அறிவினால் விலங்கினை ஒப்பர்.

கல்லாதவர்க்கு அறிவை வளர்த்தலும், திரவியத்தை ஈட்டலும், நல்வினையைச் செய்தலும், புகழைப் பெறுதலும், இம்மை மறுமை இன்பங்களை அடைதலும் எக்காலத்தும் உளவாகாவாம். ஆதலால் எல்லாரம் கல்வியைச் சிறிதும் அவமதியாது, ஊக்கத்தோடும் இளமையிற்றானே கற்றல் வேண்டும்.


13. செல்வம்

அறத்திற்கும் இன்பத்துக்கும் காரணமாயுள்ளது செல்வம். அது இரத்தினம் பொன் வெள்ளி நெல் முதலியன. அழியாப் பொருளாகிய கல்வியைக் கற்றற்கும், அக்கல்வித் தேர்ச்சிக்குக் கருவியாகிய புத்தகங்களை வாங்குவதற்கும், பசி முதலியவற்றால் வருத்தமுறாது கவலையற்றிருந்து கற்றற்பொருட்டு அன்ன வஸ்திர முதலியவற்றைப் பெறுதற்கும் முக்கிய காரணம் செல்வமே.

இன்னும், அச்செல்வம் சுற்றத்தார் பசியை நீக்கும் ; பகைவர் செருக்கை அறுக்கும் ; நட்பை உண்டாக்கும் ; ப+மியைக் காக்கச் செய்யும் ; அரசரும் மதிக்கச்செய்யும் ; தேவருலகிற் செலுத்தும் ; புகழை உண்டாக்கும் ; வித்துவான்களும் பணிந்து நிற்கச் செய்யும் ; இன்பத்தைக் கொடுக்கும் ; மேலும் நினைத்த காரியமெல்லாம் கைகூடச் செய்யும்.

இவ்வியல்புடைய செல்வத்தைச் சம்பாதிதற்குரிய தருமநெறிகள் பலவுள. அவை வேளாண்மை, வாணிகம், இராசசேவை, வித்தை கற்பித்தல் முதலாயின. களவு, பொய்ச்சான்றுரைத்தல், பொய் வழக்குப்பேசல், பொய்ப்பத்திரம் பிறப்பித்தல், நம்பிக்கைத் துரோகம் முதலிய பாவ நெறிகளாற் செல்வத்தை ஈட்டலாகாது. ஈட்டின், அச்செல்வம் முன்செய்த அறத்தைக்கெடுக்;கும் ; தீராத வசையைக் கொடுக்கும் ; சந்ததியை நாசம் பண்ணும் ; இராச தண்டத்தை உண்டு பண்ணும் ; நரகத்திற் செலுத்தும். ஆதலினாற் பாவ வழியினாலே பொருள் சம்பாதித்தலாகாது.

செல்வமில்லாதவர் வறுமையினாலும், அதனை நீக்குதல் காரணமாகப் பொருளுடையாரை நோக்கிச் செல்லுதலாலும், அவரைக் காணும் வரையும் அவர் வாயிலில் வரவை எதிர்பார்த்து நிற்றலாலும், கண்டவிடத்து மானத்தைவிட்டுப் பல்லைக்காட்டி இரப்புரை சொல்லுதலாலும், அப்பொழுது அவர் மறுத்தலாலும், மறவாது கொடுத்துவிடத்தும் இருகரங்களையும் விரித்து நீட்டி வாங்குதலாலும், வாங்கியவிடத்தும் அதனால் உணவிற்கு வேண்டுமவைகளைத் தேடுதலாலும் அவர் அடையுந் துன்பங்கள் இவ்வளவின என்று சொல்லுதல் முடியாது. அவருக்குத் தாயும் மனைவியும் புத்திரரும் சுற்றத்தாரம் மற்றையோரும் பகையாவர். அவர் வாய்ச் சொல்லை ஒருவரும் பொருளாக மதியார். ஆதலால், யாவரும் இடையறா முயற்சியோடு திரை கடலோடியுந் திரவியந் தேடல் வேண்டும்.

14. கேள்வி

கேள்வியாவது நூற்பொருளைக் கற்றறிந்தார் சொல்லக் கல்வியினாலாகிய அறிவை மேன்மேலும் வலியுறுத்தலாலும், கல்லாதவர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குதலாலும், கற்றவர் கல்லாதவர்களாகிய எல்லாரும் கற்றறிந்தார் சொல்லும் நூற்பொருளைக் கேட்டல் அறிவின் வளர்ச்சிக்கு ஏதுவாம்.

இருமை இன்பங்கட்கும் ஏதுவாகிய கல்வியும், பொருளும், செல்வங்கள் என்று சொல்லப்படுதல் போல, கேள்வியும் அவ்வின்பங்கட்குக் காரணமாதல் பற்றி, கேள்வி;ச் செல்வம் என்று சொல்லப்படும். இதனாலன்றோ, திருவள்ளுவ நாயனாரும், “செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம்’ என்றருளிச் செய்தார். பொருட்செல்வம் போலச் சம்பாதித்தல் காப்பாற்றல் முதலியவைகளினாலே துன்பங்களைத் தராது எப்பொழுதும் இன்பத்தையே தருதலின், இஃது அப்பொருட்செல்வத்தினுஞ் சிறந்ததேயாம்.

கற்றறிந்தார் சொல்லும் உறுதிச் சொற்களும், அவற்றின் பொருள்களும், கேட்குந்தோறும் நினைக்குந் தோறும் இன்பத்தையே தந்துகொண்டிருத்தலிற் பசி முதலிய துன்பங்கள் தோன்றப் பெறாமையால், கேள்வி தன்னையுடையாரை அத்துன்பங்களில்லாத தேவரோடொப்பாகச் செய்தலினாலும், வறுமையினாலாகாது அறிவின்மையினாலாவது துன்பங்கள் உண்டாகிய விடத்துக் கேள்வினாலாகிய அறிவு அத்துன்பங்களை நீக்கி ஊன்று கோல் போல் உதவுதலாலும், மெய்ந்நூற் பொருளை அறிந்தார் சொல்லக் கேளாதார் அறிவின்மையாற்றம்மை வியந்து கூறுதலல்லது பணிந்த சொற்களையுடையராக மாட்டாமையாலும், கற்றறிந்தார் சொல்லும் நூற்பொருள் சிறிதாயிருந்தாலும், அதனை அற்பமென்றிகழாது, சிரத்தையோடு யாவரும் கேட்டல் வேண்டும். அக் கேள்விகள் ‘ பலதுளி பெருவெள்ளம்’ என்றபடி திரண்டு, பலவித அறிவுகளையும் வளரச்செய்து, மிகுந்த பெருமையைக் கொடுக்கும். கல்வியறிவு மாத்திரமுடையராய் நல்லொழுக்கம் சிறிதுமில்லாதார் அறிவிலாராதலால், அவர் வாய்ச் சொற்கள் கேட்கத் தக்கனவல்ல.

15 முயற்சி

முயற்சியாவது, செய்யவேண்டுங் கருமங்களில் மனமும் சரீரமும் சோப்புதலில்லாமை. எனவே முயற்சி மனமுயற்சியும் சரீர முயற்சியுமென இரண்டாகப் பிரிக்கப்படும். மனமுயற்சியோடு கூடியபொழுது மாத்திரமே சரீர முயற்சி பயன்படுத்தலால், சரீரமுயற்சியினும் மனமுயற்சியே சிறந்தது. மனமுயற்சியினாலே கல்வி ஞானம் கடவுட்டியானம் முதலியவைகளையும், சரீர முயற்சியினாலே பொருள் புகழ் புண்ணிய முதலியவைகளையும் பெறலாம். ஆகவே, நாம் இம்மை மறுமை இன்பங்களை அடைவதற்குச் சிறந்த கருவியாயுள்ளன இருவகை முயற்சி களுமேயாம்.

நாம் எல்லாப் பெருமைகளையும் அடைதற்கேதுவாகிய கல்வியைக் கற்றற்கும், பொருளை ஈட்டுவதற்கும், முயற்சியே சிறந்த கருவி, முயற்சியில்லாதவர் பொருளுடையவரேயாயினும் இல்லாதவரோடொப்பர் ; முயற்சியுடையவர் பொருளில்லாதவரேயாயினும் உள்ளவரோடொப்பர் ; உள்ள பொருளை இழந்தாராயினும் அதனால் வருத்தமடையார். முயற்சியில்லாதவரிடத்தே புகழ் புண்ணியங்களுக்கேதுவாகிய கொடை ஒரு போதும் உண்டாகாது. முயற்சியுடைய வரை எவ்வகைப்பட்ட செல்வங்களுந் தாமே சென்றடையும். நீர்ப்ப+க்கள் நீருக்குத் தக்கபடி உயர்தல்போல், மனிதர்கள் முயற்சிக்;குத் தக்கபடி உயர்தல்போல, மனிதர்கள் முயற்சிக்குத் தக்கபடி பெருமையை அடைகின்றார்கள்.

முயற்சியுடையவர் அதனால் விளையும் இன்பத்தை நோக்காது, நாம் முயன்ற தொழிலின் முடிபையே விரும்புவர். அதனால், அவர் எடுத்த கருமங்கள் இனிது முடியப்பெற்று எவ்வகைப்பட்ட இன்பங்களையும் அடைவர். இன்னும், அவர் தமது பெருமையை நிலைநிறுத்துவர். முயற்சியில்லையானால், கல்வி செல்வ முதலியவற்றாற் பெருமை அடைபவர் ஒருவருமிலர். முயற்சியில்லாதவா தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால், மரத்தினுங் கடையாய், எல்லோராலும் இகழப்படுவர்.

“நமக்கு முயற்சிக்குத் தக்க தரும் விதியில்லை’ என்று நாம் சும்மா இருந்துவிடில், உலகத்தார் பழிப்பர் ; விதி இல்லையாயினும் முயற்சி தனக்கிடமாகிய உடம்பு வருந்திய வருத்தத்தின் அளவு பயனைத்தரும் என்பது நிச்சயம். ஆதலின், அஃது எப்பொழுதும் வீண் போகாமையால், ஒருவரும் அதனைக்கைவிடலாகாது. “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்;னும் மேலோர் வாக்கினாலும் அதன் பெருமை இனிது விளங்கும்.
முயற்சிக்கு மறுதலையாயுள்ளது சோம்பல், அது மாடி என்று சொல்லப்படும். சோம்பலுடையவனிடத்தில் தரித்திரம் குடிபுகும். அதனால், சோம்பலுடையவனிடத்தில் தரித்திரம் குடிபுகும். அதனால், சோம்பலுடையவன் தன் குடும்பத்தோடு கெடுவன். சோம்பலை, கேடடைவதற்குரியார் விரும்பி ஏறும் மரக்கலம் என்பர் அறிவுரையோர்.

16. பெண் கல்வி

உயிர்கள் எவ்வகைப்பட்ட சுகங்களையும் தேடி அனுபவித்தற்குக் காரணமாய் முன்னிற்பது அறிவே யாதலாலும், அந்த மனிதர்களுக்குக் கல்வியினாலன்றி வோறொன்றினாலும் உண்டாகாமையாலும், அவ்வறிவுக்குக் காரணமாகிய கல்வியை ஆடவர்களேயன்றிப் பெண்களும் கற்க வேண்டியது அவசியமேயாம்.

பெண்கள் தங்களுக்குரிய நாணம் மடம் முதலாகிய குணங்களின் இலக்கணங்களையும், விவாகஞ் செய்யுமுன் தந்தைதாயர் குரு முதலாகிய பெரியோர்களிடத்திலும் விவாகஞ் செய்தபின் கணவனிடத்திலும் நடக்கவேண்டிய கற்பொழுக்கங்களையும், எப்பொழுதும் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள். இதற்கு அவர்களுக்கு இன்றியமையாதது கல்வி. சிறு பி;ராயத்திலே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களைப் பழக்குவதற்குத் தாய்மாருக்கு உதவியாயிருப்பது கல்வி. தங்கள் நாயகர்கள் ஒரு வேளை தீச்செயல்களிற் பிரவேசித்தார்களாயினும், தக்க உபாய நெறிகளால் அவர்களைத் திருத்தி, நன்னெறியிற் செலுத்துவதற்குப் பெண்களுக்குத் துணையாயிருப்பது கல்வி வீட்டிலே வேலையில்லாமலிருக்குங் காலங்களில் வீண்பொழுது போக்காமலும், மற்றவர்களோடு வீண் பேச்சுக்கள் பேசிச் சண்டையிட்டுக் கொள்ளாமலும், நல்ல கதைகளையும் நீதி நூல்களையும் வாசிக்கச் செய்து, பெண்களுக்கு நல்லறிவையும் நீதியையும் உண்டாக்குவது கல்வி, அன்றியும் வீட்டுக்குரிய வரவு செலவு கணக்குகளை எழுதிக் கணக்குப் பார்ப்பதற்கும், தங்கள் நாயகர்களுடைய வரவுக்குத் தக்க செலவு செய்வதற்கும், சமையல் முறைகளை அறிதற்கும், நாயகர்களை உபசரித்து அவர்களோடு ஒற்றுமையுடையராய் வாழ்வதற்கும், அவர்கள் தூரதேசத்திலிருந்து எழுதுங் கடிதங்களை வாசித்தறிதற்கும், பெண்களுக்குத் துணையாயிருப்பது கல்வி.

சிறு பிள்ளைகள் தந்தையர்களினும் பார்க்கத் தாயார்களிடத்திலே அதிக பீரிதி வைத்து நடப்பது இயற்கையாதலால், அச் சிறுவர்களை அவர்கள் மனம்போனபடி விளையாடிக் கெட்டுப்போக விடாமல் நல்ல பழக்கம் பழக்கவும், நாயகர்கள் இறந்தால் அப்பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கவும், அவர்களுக்குரிய பொருள்களை வைத்துப் பாதுகாத்துக் கொடுக்கவும், கடமை ப+ண்டவர்கள் தாயர்களே. அத்தாயகர்கள் கல்வியறிவு இல்லாதவர்களானால், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தற் பொருட்டுப் பிறருடைய சகாயத்தை விரும்பி, அதனாற் பலவித கஷ்டங்களை அடையவேண்டிவரும். இந்தக் காரணத்தினாலும் பெண்களுக்குக் கல்வி வேண்;டும் என்பதே நிச்சயம்.

கல்வியறிவு இல்லாத அநேக மூடப்பெண்கள், நாயகர்கள் இருக்கும் பொழுதே, தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்கவிடாது, அவர்களுக்கு வீண் வேலைகளைக் கற்பித்துக் கொடுக்கின்றார்கள். நாயகர்கள் இறந்தால், அந்தப் பிள்ளைகள் கதியாதாய் முடியும் என்பதையும் இவர்கள் என்ன காரணத்தினால் அப்பிள்ளைகளைக் கற்கவிடாது கெடுக்கின்றார்கள் என்பதையும் ஆலோசித்தால், பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வர்.

இன்னும், உலகத்தில் அநேக தருமங்கள் இல்லறத்தினாற்றானே நடைபெறவேண்டியிருந்தாலும். அத்தருமங்களை நாயகர்கள் நடத்தும் பொழுது அதற்குத் துணையாயிருந்தது. சிறப்பிக்க வேண்டியவர்கள் பெண்களே ஆதலாலும் அப்பெண்களிடத்துள்ள கல்வி இம்மை மறுமை இன்பங்கள் இரண்டற்கும் காரணமாகும். இப்படி எல்லா விதத்தாலும் கல்வி பெண்களுக்கு ஆபரணம் போலச் சிறந்திருத்தலின், அதனைச் சிறு பிராயத்திற்றானே அவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும். பெண்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி, தையல் வேலை வீட்டு வேலைகளையும் கற்பிப்பது அவசியம்.

ஒரு மகாராசாவின் ஆளுகைக்குட்பட்ட மனிதர்கள் எவ்வளவு புத்தி சாதுரியமுடையவர்களாயிருந்தாலும், அந்த இராசாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து அடங்கி நடத்தல்போல, சுய அதகிhரம் என்பது எப்பொழுதும் இல்லாத பெண் பாலர்கள் எவ்வளவு படித்தவர்களாயும் புத்தியுள்ளவர் களாயுமிருந்தாலும், தாங்கள் நாயகர்களுக்கு மற்றை ஆண் பாலகர்களும் கீழ்ப்படிந்து அடங்கி ஒழுகுற் குணமுடையவர்களாயிருத்தல் வேண்டும்.

17. காலம்

காலம் என்பது உலகம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாயுள்ளது. காலத்தை நம்மவர்கள் மிகக் குறைந்த பிரமாணமுள்ள நிமிஷம் முதலாக மேன்மேற் கடின பிரமாணம் உள்ளவைகளாகப் பகுத்து வரையறை செய்து, அவைகளுக்கு ஒவ்வொரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். அவைகளின் பெயர்கள் நிமிஷம், காஷ்டை, கலை, நாழிகை, முகூர்த்தம் என்னும் இவை முதலாயினவாம். ஆங்கிலேயர்கள், இந்தக் காலத்தை செக்கண்டு, மினிட்டு மணி என்பவனவாக வௌ;வேறு வகைப்பட அளவுசெய்து, பெயர்கொடுத்து வழங்குகின்றார்கள். நமக்கு இரண்டரை நாழிகை நேரம் ஆங்கிலேயர்களுக்கு ஒரு மணி எனப்படும். இப்படிக் கணக்கிடும்பொழுது, ஆங்கிலேயர்களுடைய இருபத்து நான்கு மணிநேரம் அறுபது நாழிகை ஆகிறது. இந்த அறுபது நாழிகையில், “சூரியோதயம் முதலாக முன் முப்பது நாழிகையும் பகல் என்றும், சூரியாஸ்தமயனம் முதலாக பின் முப்பது நாழிகையும் இரவு என்றும், இந்த இரண்டும் சேர்ந்து ஒருநாள் என்றும், வழங்கப்படும். நாள், வாரம், மாதம், வருஷம் என்னும் இவைகளைப் பெரும்பான்மையும் இந்தியர்களைப் போலவே ஆங்கிலேயரும் கொள்வர்.

இப்படிக் காலத்தைப் பகுத்துக்கொண்டது. நாம் செய்யுந் தொழில்களெல்லாம் அது அது முற்றுப்பெற வேண்டிய அளவில் முற்றுப்பெறுதற் பொருட்டாம். காலத்தைப்பற்றிச் சிந்தியாவிட்டால், ஒருவரும் ஒரு தொழின் முயற்சியும் செய்யாது கெடுவர். காலம் அருவமாயிருப்பினும், அது நமக்கு மிகவும் உபயோகியாயிருக்கிறது. அதனுடைய கழிவையும், கழித்த அது நமக்குப்பின்னே கிடைக்கப்பெறாமையும், நாம் எப்பொழுதும் நினைத்தல் வேண்டும். எப்படியெனில், ஒரு வித்தியாசாலையிற் காலை எட்டு மணிக்கு வந்து கல்வி கற்க வேண்டிய ஒரு மாணாக்கன் ஒன்பது மணிக்கு வருவானேயானால் முதல் மணியிற் கற்பித்த பாடங்களை இழந்து அந்த இழந்த காலத்துக்காகக் கவலைப்படுகின்றான் ; இழந்த ஒரு மணி நேரமும் பின் அவனுக்கு கிடைப்பதேயில்லை.

இப்படிக் காலத்தைக் குறித்து நாம் நினைக்கிறதினாலே எங்களுடைய மனமொழிமெய்கள் தத்தம் தொழில்களைச் சோம்பலின்றிச் செய்து நல்வழிப்பட, அதனால் இம்மை மறுமை இன்பங்களைத் தப்பாது அடையலாம். அளவிறந்த பரமானுக்கள் ஒருங்கு திரண்டு மலைகளாதல் போல, அநேக நிமிஷங்கள் ஒருங்கு சேர்ந்து வருஷங்களாகின்றன. அவைகள் கழியக் கழிய நம்முடைய ஆயுசும் கழிகின்றது.

காலத்தை வரையறைசெய்து கொள்வதற்காகக் கடவுளாற் கொடுக்கப்பட்ட கருவிகள் சூரியன் முதலாகிய கிரங்கள் அவைகளை ஆதாரமாகக் கொண்டு மனிதர் காலவரையறை செய்து கொள்ளுங் கருவிகள் கடிகாரங்கள், கடிகாரம் வைத்திருப்பது தொழின் முயற்சிக்கும் சுறுசுறுப்புக்கும் ஏதுவாயிருக்கும்.

18. உண்மையின் பயன்

ஓர் ஊரிலே ஒருவன் பல பாகங்களையும் அஞ்சாது செய்து கொண்டுவந்தான். அவனுடைய குரு ‘இப்படிப் பாவங்களைச் செய்து ஏன் கெட்டுப் போகிறாய் ; இனி அப்படிச் செய்யாதே’ என்று பல புத்திகளை அடிக்கடி அவனுக்குச் சொல்லிக் கொண்டு வந்தார். அவன், எல்லாப் பாவங்களையும் என்னால் விட முடியாது ; உம்முடைய சொல்லுக்காக நீர் விடச் சொல்லுகிற பாவம் ஒன்றை மாத்திரம் விட்டுவிடுகின்றேன் என்றான். குரு “பொய் சொல்லலாகிய பாவம் ஒன்றையாயினும் ஒழித்து நட’ என்று கட்டளை செய்தார்.

அதற்கு உடன்பாட்டை சீடன், ஒருநாள் இரவு அந்த ஊரில் அரசனுடைய அரண்மனையில் திருடும்படி போய், சமயம் பார்த்துப் பதுங்கி நின்றான். அப்பொழுது, மாறுவேடம் ப+ண்டு நகர சோதனைக்காகப் புறப்பட்ட அரசன் அவனைக் கண்டு, இவன் திருடன் என்றறிந்து, “நீ எங்கே வந்தாய் உண்மை சொல்’ என்று கேட்டான். அவன் “இராசாவுடைய அரண்மனையிலே திருடும்படி வந்தேன்’ என்றான். அரசன் ஆச்சரியம் அடைந்து அவன் செய்கை முழுவதையும் பார்க்க நினைத்து, “நானும் இங்கே திருடும்படி வந்தேன் எனக்கும் பாதி கொடு’ என்றான்.

திருடன் அதற்கு உடன்பட்டு, அரசனைக் காவல் வைத்து, அரண்மனைச் சுவரிலே கன்னம் வைத்து, உட்புகுந்து ஒரு பெட்டியிலிருந்த விலையேறப் பெற்ற மூன்று இரத்தினங்களுள் இரண்டை எடுத்துக்கொண்டு, மற்றை ஓர் இரத்தினத்தைப் பாகம்பண்ண முடியாமையினாலே பெட்டியில் வைத்து வெளியே புறப்பட்டு வந்து, அரசனுக்கு ஒன்றைக் கொடுத்து, மற்றொன்றைத் தான் கொண்;டு போயினான். மாறுவேடம் ப+ண்டு வந்த அரசன் அவன் பெயர் ஊர்களைக் கேட்டு அறிந்து கொண்டான்.

பின்பு, அரசன் அரண்மனையினுள்ளே போய்ப் பெட்டியைப் பார்த்தபொழுது, ஓர் இரத்தினம் இருக்கக் கண்டு சந்தோஷித்து, மற்றைநாட்காலையில் தன் மந்திரியை அழைப்பித்து, “நம்முடைய அரண்மனையினுள்ளே கள்வர் வந்து புகுந்ததாகத் தெரிகிறது. பெட்டியைத் திறந்து பார்’ என்றான் மாதிரி திறந்து பார்த்துப் பெட்டியிலிருந்த ஓர் இரத்தினத்தையும் தான் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு, “விளையேறப்பெற்ற மூன்று இரத்தினங்களையும் காணவில்லை’’ என்றான். அரசன் அவனை உத்தியோகத்தினின்றும் நீக்கி, சத்தியத்திற் சிறந்த அந்தத் திருடனை அழைப்பித்து உபசரித்து, அவனைத் தனக்கு மாதிரியாக்கிக் கொண்டான்.

19. பரிகாசம்

பிறருடைய நடை உடை தோற்றம் முதலியவைகளிலே காணப்படுங் குறைகளை எடுத்துப் பேசி அவர்களைப் பழித்தலாகாது. குருடர், முடவர், செவிடர், உறுப்புக் குறைந்தவர், தரித்திரத், தீரா வியாதியாளர் முதலாயினோரைக் கண்டால், அவர்களுடைய துரதிஷ்டத்தைக் குறித்து இரங்கி அவர்களுக்குத் தங்களால் ஆன சகாயஞ் செய்வதே அன்றி, அவர்களை ஒரு போதும் பழித்தலாகாது. ஆன்மாக்களை செய்யும் நல்வினை தீவினைகளின் பயனாக முறையே சுக துக்கங்கள் வருதல் நிச்சயமென்பதையும், தன்னிலும் அழகு செல்வம் முதலியவைகளினாலே பெரியராயிருப்பாரையும் ஒருவர் நினைப்பானாயின் அவனுக்குத் தன்னோடொத்தாரையாவது தன்னிற்றாழ்ந்தாரையாவது பரிகாசம் பண்ணுங் குணம் உண்டாகமாட்;டாது.

பிறறைப் பரிகாசம் பண்ணித்திரிபவன், தன் காலத்தையும் கருத்தையும்; வாக்கையும் வீணாகப்போக்கிப், பலராலும் பகைக்கப்பட்டுப் பொல்லாதவனாகின்றான். ஒருவனுக்கு மற்றைப் பகைகளெல்லாம் தன் பிரயோசனத்தை அல்லது பிறர் பிரயோசனத்தைக் குறித்த தொழின்முயற்சி முதலியவைகளிலே வரும். பிறரைப் பரிகாசம் பண்ணுபவனுக்கோ, அவை இரண்டுமின்றி, வீணாக அப்பகை தானே வந்தடையும்.

பரிகாச வார்த்தையை வாக்கினால் வருங் குற்றங்களுள் ஒன்றாக வைத்து அறிவுடையோர் இழித்துச் சொல்லுவர். மிக இழிவுள்ள பொய்யும் ஒருவேளை மனிதர்களுக்குச் சில நன்மைகளைப் பயக்கும். பரிகாசமானது முன்னுள்ள நன்மைகளையுங் கெடுத்துத் தீமைகளையே பயந்துவிடும். சில பிள்ளைகள், பொழுதுபோக்கும் விளையாட்டாக ஒருவரையொருவர் பரிகாசம் பண்ணி வீண்காலம் போக்குகின்றார்கள். அவர்கள், அதனால் வரும் பயன் என்ன என்பதைச் சிறிதே உற்று நோக்குவார்களாயின், அதனால் விளைவது பகையும் பழியுமே என்று நன்கு தெரிந்து கொள்வார்கள்.

தமக்கென வேறொரு தொழின்முயற்சியும் இல்லாத சோம்பேறிகளே பரிகாசத்தைத் தங்கள் சினேகம் போலக் கொண்டவர். ஒரு பயனுமின்றிப் பிறர்க்குக் குற்றஞ் சொல்லி நகைப்பவர்களைக் கண்டால், கொலை செய்வோரைக் கண்டு அஞ்சி நீக்குதலைப் போல அஞ்சி அகலப் போதலே அறிவுடைமைக்கு அழகு.

பகையின்று பல்லார் பழியெடுத் தோதி
நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக்
கொள்வான்போற்

கைவிதிர்த் தஞ்சம் படும்.

20. இந்தியா

இந்தியா ஆசியாக்கண்டத்தின் தென்பாகத்திலுள்ள ஒரு பெரியதேசம். அதன் நீளமும் அகலமும் தனித்தனி ஆயிரத்துத்தொளாயிரம் மைல். அதன் நிலப் பரப்பு பதினேழேமுக்காலிலஷம் சதுரமைல்.

தென்னிந்தியாவிலே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய சில பாஷைகளும், அதற்கு வடக்கேயுள்ள மற்றைப் பாகங்களில் இந்தி, இந்துஸ்தான், வங்காளி, கூர்ச்சரம், மகராஷ்ரம் முதலாகிய பல பாஷைகளும் பேசப்படுகின்றன சமஸ்கிருதம் இந்தியாவில் எங்கும் படிக்கப்பட்டு வந்தாலும், அதனைப் பேசுவோர் அரியர், இங்கிலீஷ் பாஷை ஏறக்குறைய இந்தியா முழுவதும் வழங்குகின்றது.

இந்தியாவில் ஆதியில் உள்ள சனங்களுக்கு ஆரியர் என்று பெயர். அவர்கள் முதல் இந்தியாவின் வடபாகத்திலிருந்து, பின்பு மற்றைப் பாகங்களிலும் குடியேறினார்கள் ஆரியர் என்பதற்குப் ப+ச்சியர் என்பது பொருள், பிற்காலத்திலே பல தேசங்களிலுமிருந்து பலரும் வந்து குடியேறியிருக்கிறார்கள். இந்தியாவின் சனத்தொகை பல கோடியாம்.

பல சிவாலயங்களையும், விஷ்ணுவாலயங்களையும், கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களையும் உடைமையாலும் வேதாகமாதி சமஸ்த சாஸ்திர பண்டிதர்கள் வசிக்கப் பெறுதலினாலும், இந்தியா தேசம் புண்ணிய தேசம் என்று புகழ்ந்து பாராட்டப்படுகின்றது. இந்தியாவுக்குப் பரதகண்டம் என்றும் பெயர்.
இதில் தென்னிந்தியா, வடகிழக்குக் கோடி முதல் தென்மேற்குக் கோடிவரை நீளம் தொளாயிரத்தைம்பது மைலும், அகலம் அதிகமான பாகத்தில் கிழக்குமேற்கு நானூற்றைம்பது மைலும், உள்ளது. தென்னிந்தியாவின் பிரதான நகரம் தென்பட்டணம், இத்தென்னிந்தியாவின் தென்பாகத்தில், முற்காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று அரசர்கள் வழிவழியாக நெடுங்காலம் இருந்து அரசாண்டார்கள். அவர்களால் ஆளப்பட்ட தென்னிந்தியாவின் பாகங்கள் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்று இன்றும் அவர்கள் பெயரால் வழங்குகின்றன. இவர்களுடைய குலங்கள் முறையே அக்கினி சூரியன் சந்திரன் என்னும் முச்சுடர்களையும் முதலாகவுடைமையால், இவர்கள் அக்கினி வம்சத்தரசர், சூரியவம்சத்தரசர், சந்திரவம்சத்தரசர் என முறையே சொல்லப்படுவர். இந்த மூவகை அரசர்களும் தென்னிந்தியாவிலுள்ள ஆலயத் திருப்பணிகளை மிக நன்கு பெறச் செய்வித்து, அவைகளிற் ப+சை உற்சவங்களையும் ஒழுங்காக நடத்துவித்து வந்தார்கள். அவ்வாலயங்கள் இத்தேசத்துக்கு மிகுந்த சிறப்பைத் தரும் அணிகலங்களாகியும், வழிபடுவோர்க்குப் பத்தி வைமராக்கிய ஞானங்களைப் பயக்குந் தானங்களாகியும் இருக்கின்றன. பாண்டியராசர்களினாலே தமிழ் வளர்க்கப்பட்டது. இம்மூவகை அரசர்களுடைய சரித்திரங்களையும், இதிகாசபுராணங்களினாலும், சங்கத்து வித்துவான்கள் செய்த நூல்களினாலும் அறியலாம்.

21. மிருகம்

நாலு கால்களையுடையவைகளும் கருப்பையிலே பிறப்பவைகளுமாகிய விலங்குச் சாதிகள் மிருகங்கள் எனப்படும். இவைகள் நாட்டு மிருகம், காட்டு மிருகம் என இரண்டு வகைப்படும். இவைகளுட் சில தாவர உணர்வினாலும், சிலமாமிச உணவினாலும் சீவிக்கும். மாமிச பஷிணிகளாகிய மிருகங்களுட் பல கொடுந் தன்மையுள்ளவைகள். அவைகளுக்குப் பற்கள், தாவர உணர்வுகளைத் தின்னும் மிருகங்களுக்குப் போலாகாது, மாமிச உணர்வுகளைத் தின்னுதற்குத் தகுந்தவைகளாயிருக்கும். நாட்;டு மிருகங்கள் மனிதர்களுக்கு அடங்கி, அவர்களுடன் பழகி, அவர்கள் வசப்பட்டு நடக்கின்றன. காட்டு மிருகங்கள் அடங்காமல், தங்கள் இஷ்டப்படி காடுகளிற் சஞ்சிக்கின்றன. காட்டு மிருகங்களுட் சில, மனிதர்களுக்குத் தீங்கைச் செய்யும், சில மனிதர்களால் அடக்கப்பட்டு, அவர்கள் கற்பித்தபடி அமைந்து நடக்கும்.

ஆடு, மாடு, எருமை, நாய், ப+னை முதலியவைகள் நாட்டு மிருகங்கள், சிங்கம், புலி, கரடி, யானை, ஒட்டகம் முதலியவைகள் காட்டு மிருகங்கள், அணி முயல் முதலிய சில விலங்குகள் நாட்டிலும் காட்டிலும் சஞ்சரிக்கும். குதிரைகள் பெரும்பாலும் காடுகளில் பிறந்து வளர்ந்தாலும், அவைகளை மனிதர்கள் தங்கள் உபயோக்தின் பொருட்டுக் கொண்டுவந்து வளர்த்தலால், நாட்டு மிருகமாக எண்ணப்படும்.

இன்னும், மிருகங்கள் தின்ற உணவுகளை மீட்டும் வாயில் வருவித்துத் தின்பவைகளும், பிளவுபட்ட குளம்புள்ளவைகளும், பிளப்பில்லாத குளம்புள்ளவைகளும், கொம்புள்ளவைகளும், கொம்பில்லாதவைகளும், விரலுள்ள கால்களையுடையவைகளும், ஒரு சாதி முழுதும் ஒரே நிறம் உடையவைகளும், ஒரு சாதியிற் பலநிறம் உடையவர்களும் எனப் பல பகுப்புள்ளவைகளாயிருக்கின்றன.

22. புறங்கூறல்

புறங்கூறலாகாது, காணாதவிடத்திலே பிறரை இகழ்ந்து பேசுதல், பிறருடைய கல்வி செல்வ முதலியவைகளைக் காணும் பொழுது உண்டாகும் பொறாமையே புறங்கூறுதலுக்கு முக்கிய காரணம். ஆதலினால், புறங்கூறுதலாகிய மொழிக்குற்றத்தை ஒழிக்கவேண்டுமாயின், அதற்குக் காரணமாயுள்ள பொறாமையாகிய மனக்குற்றத்தை அகற்றவேண்டும். புறங்கூறுவோர் ஒரு தொழிலுமில்லாத வீணர் என்றும், பிறர் ஆக்கம் பெறாத மனத்தையுடைய புல்லியர் என்றும், அறிஞரால் இகழப்படுவர். அவர் தாம் எல்லாரோடும் பகையாதலே யன்றித், தம்மை அடுத்த பிறரையும் எல்லாரோடும் பகையாக்குவர். அவர் பிறருடைய குற்றங்களை ஆராய்ந்து சொல்லுதலையே குணமாகவுடையவர். ஆதலால் கற்றத்தார் நண்பினர் அயலார் ஆகிய எல்லாரும் அவரை வெறுப்பர். அதனால், அவர் இம்மை மறுமை இன்பங்களை இழந்தவரே யாவர்.

நாம் ஒருவனுடைய சிறு பழி ஒன்றை அவனைக் காணாதவிடத்தே அஞ்சி நின்று சொல்லுவோமாயின், அவன் நம்முடைய பெரும் பழிகள் பலவற்றை நமக்கெதிரில் அஞ்சாது நின்று நாம் மிக வருந்தும்படி சொல்லுவான். ஆதலால், உறவினர் நண்பினர் முதலாயினோரிடத்தே குற்றங் காணப்படுமாயின், அவரைத் தனித்தவிடத்திலே கண்டு புத்தி சொல்லித் திருத்துதலேயன்றிக், காணாத விடத்திலே இகழ்ந்து பேசலாகாது. “புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் - அறங்கூறு மாக்கந்தரும்’ என்றார் திருவள்ளுவ நாயனார்.

காணாத இடத்தில் பிறரை இகழ்ந்து பேசியும், கண்ட இடத்திலே அவருக்கு இனியவர் போல முகமலர்ச்சி காட்டி இனிய வார்த்தை பேசியும், உயிர் வாழ்தலிலும் இறந்து விடுவது நல்லது புறங்கூறுதற்காகப் பிறருடைய குற்றங்களை ஆராய்வோர்,புறங்கூறலாகிய தங்கள் குற்றங்களைச் சிந்திப்பாராயின், புறங்கூறிப் பழிபாவங்களை அடையமாட்டார்.

23. வித்தியாசாலை

வித்தியாசாலையாவது, மாணாக்கர் பலர் கூடி உபாத்தியாயர்களிடத்திலே கல்வி கற்றற்குரிய இடமாம் அது பெரும்பான்மையும் கற்பிக்கப்படும் பாஷை நூல் மதம் என்றும் இவைகளினாலே வேறு வேறு பெயர் பெறும். ஆயினும் வித்தியாப்பியாசஞ் செய்வதற்குத் தானமாதலால், அவைகளெல்லாம் வித்தியாசாலை என்று கூறத் தக்கனவேயாம். வித்தியாசாலை, கல்வி பயில களம், கல்லூரி, பாடசாலை என்பன ஒரு பொருட் சொற்கள்.

மனிதர்களாலே தேடற்பாலனவாகிய கல்விப் பொருள் செல்வப்பொருள் என்னும் இரண்டனுள், செல்வப் பொருளைச் சம்பாதித்தற்கும் காப்பாற்றுவதற்கும், அதனால் அடைய வேண்டிய சுகங்களை உள்ளபடி அறிந்து அனுபவித்தற்கும், கடவுளையும் அவரை வழிபடும் நெறியையும் அறிந்து வழிபட்டு முத்தியின் பெறுதற்கும், காரணமாய்ச் சிறந்து முன்னிற்பது கல்வியே ஆதலால், அதனைப் பயிலுதற்குத் தானமாகிய வித்தியா சாலைகளைத் தாபித்தலும், அவைகளுக்கு உதவி செய்தலும், முதற்பொருள் வைத்து அவைகளை ஒழுங்குபெற நடத்தி வருதலும், பெரும் புண்ணியங்களாம்.

உண்டபொழுது மாத்திரம் பசியை ஒழித்துச் சிறிது இன்பத்தைக் கொடுத்துப் பின்பு பசியையும் அதனாலே துன்பத்தையும் கொடுக்கும் அன்னம் போலாகாது. வித்தை, படிக்குந்தோறும் பின் சிந்திக்குந்தோறும் எப்போதும் அறியாமையைக் கெடுத்துப் பெரிய இன்பத்தை தருகின்றது. இச் சிறப்புடைமையலன்றோ, நம்மை ஆளும் அரசினர் பெருந்தொகைப் பொருளை இவ்வித்தியா தருமத்தின் பொருட்டு வருஷந்தோறும் நமக்கு உபகரித்துக் கல்வியை விருத்தி செய்துகொண்டு வருகின்றார்கள்.

எச்சமயத்தார்க்கும் ஆலயத்திற்சென்று விதிப்படி கடவுளைச் சேமித்து வருதல் தெய்வபக்தி தழைத்தோங்குவதற்குக் கருவியாயிருத்தல்போல, வித்தையை விரும்பிக் கற்கும் மாணாக்கர்களுக்கு ஒழுங்காக வித்தியாசாலைக்குப் போய் உபாத்தியாருடைய சொல்லுக்கு அடங்கிக் கற்றுவருதல் கல்வி விருத்தியாதற்கு ஏதுவாம். தெய்வபக்தி வளர்தற்கு ஏதுவாகிய ஆலயமில்லாத ஊர்கள் ஊர்களாகாதவாறு போலக், கல்வி வளர்தற்கு ஏதுவாகிய வித்தியாசாலைகளில்லாத ஊர்கள் ஊர்களாகாவாம். ஆதலினாலே ஊர்கடோறும் வித்தியாசாலைகளைத் தாபித்து நடத்தி வருதல் பெரும் புண்ணியம். வித்தியாசாலைகளிலே கருவிநூல் சமயநூல் முதலியவைகளேயன்றிக் கைத்தொழில்களையும் கற்பிப்பது விசேடம்.

24. புத்தகம்

கல்வியை விரும்பிக் கற்கும் மாணாக்கர்களும், கல்வியிலே தேர்ச்சியடைந்த வித்துவான்களும், இனிக் கற்க முயல்பவர்களுமாகிய புத்தகங்கள் இன்றியமை யாதனவாம். புத்தகங்களின்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர் போல்வர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமை யாததுபோல, கல்விகற்கும் மாணாக்கர்களுக்கு அதனைக் கற்றற்குரிய புத்தகம் இன்றியமையாததேயாம். ஆதலால், வித்தையை விரும்பிக் கற்கும் சிறுவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவைகளைக் கிழியாமலும் அழுக்குப் படியாமலும் கெட்டுப் போகாமலும் சாவதானமாகப் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும். வேறு மாணாக்கர்களுக்காவது பிறருக்காவது புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால், அவற்றை எழுதி வைத்திருந்து, மீள வாங்கிவைத்துக்கொள்ளல், வேண்டும். புத்தகங்களைப் பாதுகாத்துத் தருங் குணமில்லாதவர்களுக்கு அவைகளைக் கொடுக்கலாகாது.

புத்தகங்கள் ஏட்டுப்புத்தகம், கையாலெழுதப்பட்ட காகிதப் புத்தகம், அச்சிட்ட காகிதப் புத்தகம் என மூன்று வகையாக உள்ளன. தற்காலத்தில் அச்சுப் புத்தகங்களே மிகுதி. ஏட்டுப் பிரதிகள் வரவரக் குறைந்துவிட்டன. ஏடுகளைப் பார்த்து எழுதின காதிதப் புத்தகங்கள் மிகச் சொற்பம். முற்காலத்தில் ஐம்பது ரூவா செலவழித்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழும்முக்களின் பேதந் தெரியாமல் எழுதுவித்து வாங்கவேண்டிய ஒருநூலைத் தற்காலத்தில் ஐந்து ரூபா விலையில் நல்ல அச்சுப் புத்தகமாக வாங்கலாம்.

கல்வியில் விருப்பம் உடையவர்களாகிய வறிய பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தல் பெரும் புண்ணியம். அதிலும் ஞான சாஸ்திரங்களை விரும்பிக் கற்போர்க்கு அவைகளைச் சம்பாதித்துக் கொடுத்தல் ஞானதானம் எனப்படும் உத்தமோத்தம் புண்ணியமாம். ஆதலால், நமது தேசத்து அரசர்களும், மடாதிபதிகளும், பிரபுகளும், கருவி நூல்களையும் ஞான நூல்களையும் சம்பாதித்து வைத்து, ஊர்கடோறும் புத்தகசாலைகளைத் தருமத்தின் பொருட்டுத் தாபித்து, கல்வியில் விருப்பமுடைய யாவரும் எளிதில் வாசித்து ஈடேறும்படி அவைகளை நடத்தி வருதல் உயர் வொப்பில்லாத பெரும் புண்ணியமாம்.

25. வேளாண்மை

மனிதர்கள் பலவகை இன்பங்களையும் பெற்று அநுபவித்தற்கு ஏதுவாகிய பொருளைச் சம்பாதித்தற்குரிய நெறிகள் அநேகம் இருக்கின்றன. அவை வேளாண்மை, வியாபாரம், இராசசேவை, சிற்பம் முதலியவைகள், பிறதொழில்களினாலே சம்பாதிக்கும் பொருளைக்கொண்டு முதலில் நாம் தேடிக்கொள்வன நெல் முதலாகிய உணவுப் பொருள்களே ஆதலாலும், அவைகள் வேளாண்மையிலன்றி வேறொன்றினாலும் வருதல் கூடாமையினாலும், வேளாண்மை செய்வோர் தாம் பிறரிடத்துச் சென்று இரவாதும் தம்மிடத்து வந்து இரந்தவர்களுக்கு இல்லை என்னாதுங் கொடுக்கும் பெருந் தன்மையினாலும், பொய்முதலிய பாவக் கலப்பில்லாமையினாலும், உயிர்ப் பாதுகாப்புக்கு இன்றியமையாத வேளாண்மை மற்றை எத்தொழில்களினுஞ் சிறந்தது.

இப்படியிருக்க இக்காலத்துப் பாலியர்களிற் சிலர், உத்தியோகத்தை நினைத்துச் சிறிது கல்வியை மாத்திரம் கற்று, அவ்வுத்தியோகங் கிடையாதபொழுது, தம் முன்னோர்கள் செய்துவந்த பயிர்த்தொழிலைச் செய்து வயிறு வளர்க்கக் கூசிச் சீவனத்துக்கு முட்டுப்பட்டு, வீணர்களாய் அலைந்து திரிகின்றார்கள். பயிர்த் தொழிலுக்கும் கல்வி இன்றியமையாதது என்பதையும், தாம் இளமையிற் படித்த “தொழுதூண் சுவையிணுழுதூ ணினிது’’ என்னும் மேலோர் வாக்கையும் நினையாமை அவர்களுடைய பேதைமையே யன்றி வேறல்ல, கூலியாட்களை வைத்துப் பயிர் செய்விக்கும் செல்வர்களும், மண்வெட்டி கொண்டு கொத்துதல் முதலிய தொழில்களைத் திறமைக்குத் தக்கபடி செய்து வருவது, சரீர சௌக்கியத்துக்கு ஏதுவாயிருக்கும். இதனாலேதான் நமது அரசினர் வித்தியாசாலைகளில் பயிர்த் தொழிலையும் கற்பித்தல் வேண்டும் என்று உத்தரவு செய்திருக்கின்றார்கள்.

பயிரிடுவோர்கள், அவைகள் உண்டாதற்குரிய நிலங்களையும், காலங்களையும் அவைகளுக்கு ஏற்ற எருச் செய்கைகளையும், பயிரிடும் விதங்களையும் கிருஷிசாஸ்திரத்தினாலும் அனுபவத்தினாலும் முன்பு தெரிந்து கொள்ளல் வேண்டும். இவைகளைத் தெரிந்து தவறாமற் பயிரிடும்போது, காலத்துக்கும் குறைவில்லையானால், அவைகள் பயன்படாமற் போகமாட்டா.

பயிரிடுவோர்கள் மாடுகளையும், கலப்பை மண்வெட்டி முதலிய ஆயுதங்களையும், சொந்தத்தில் வைத்திருத்தல் நல்லது. பொருள் செலவிடக்கூடிய திறமைக்கும், ஆடு மாடு முதலிய அணிகளுக்குந் தக்கபடி, தாம் செய்கை பண்ணத்தக்க நிலத்தைக் கோலி, அதிற் பயிரிடுதல் வேண்டும். மிகுதியாக நிலமிருந்தால் அதைக் குத்தகைக்கு அல்லது வாரத்துக்கு விடுதல் வேண்டும். திறமையில்லாதவர்கள் அதிக நிலத்தைச் செய்கைபண்ணினால், மிகுந்த சிரமத்தை அடைதல் மாத்திரமன்றி, வரவு குறையச் செலவு கூடுதலாற் பயிர்த்தொழிலால் வரும் ஊதியத்தையும் இழப்பர். பின்வரும் பயி;ர்த்தொழில் வரும்படியை ஈடுவைத்து வட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழில் செய்வர். அத்தொழிலே தலையெடுப்பது அரிது.

பயிர் செய்யுமிடத்து, உணவுக்கு இன்றியமையாத நெல் முதலியவைகளையன்றி, வாழை, கரும்பு, தென்னை, காப்பி, தேயிலை, புகையிலை, பருத்தி, அவுரி முதலியவைகளையும் அது விருத்தியாகும். நிலங்களையறிந்து வைத்து உண்டாக்குதல் உத்தமம். இவைகள் மிகுந்த பொருள் வரும்படியைத் தரத்தக்கவைகள். இன்னும் மா, பலா, புளி, இருப்பை, பனை முதலிய மரங்களையும் வைத்துண்டாக்குதல் நல்லது. இந்தியாவிலும் இலங்கையிலும் சில இடங்களில் ஐரோப்பியர்கள் வந்திருந்து, விஸ்தாரமான நிலங்களை வாங்கி, தென்னை காப்பி தேயிலை முதலியவைகளை வைத்து உண்டாக்கி, அவைகளினாலே பெரும் பொருள் சம்பாதித்தார்கள்.

இந்தியாவிலே சில இடங்களிலும், யாழ்ப்பாணத்திலும், ஆழமுள்ள கிணறுகளிலிருந்து கஷ்டப்பட்டுத் தண்ணீர் இறைத்துப் பயிர் செய்கின்றார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள கிணறுகளிற் சில மழையில்லாத காலத்திலும், எவ்வளவு நேரம் இறைத்தாலும் சலம் வற்றுகிறதில்லை. அவைகளை, மாடுகட்டி இறைக்கிற கவலையேற்றத்தினாலாவது, வேறு சலம் இறைக்கும் யந்திரங்களினாலாவது, இறைத்துத் தண்ணீர் பாய்ச்சினால் அதிக நிலத்துக்குப் பாயும் ; இறைப்பவர்களுக்கும் அதிக கஷ்டமி;ல்லை. இறைத்துப் பயிரிடுந்தொழிலில் யாழ்ப்பாணத்தவர்கள் சிறந்தவர்கள்.

26. நாணகம் (நாணம்)

பொன், வெள்ளி, செம்பு என்னும் உலோகங்களினாற் செய்யப்படும் சவரன்களும், ரூபாக்களும், காசுகளும் நாணங்கள் என்று சொல்லப்படும். இவைகள் மனிதர்களால் உபயோகப்படுத்தப்படுவன. ஒவ்வொரு தேசத்தார்களுக்கும் அவ்வத்தேசங்;களை ஆளும் அரசினர்களாலே பலவித அடையாளங்களும் பெயர்களும் உள்ளவைகளாகச் செய்து வெளிப்படுத்தப்படுகின்றன. இவைகள் உணவுப் பொருள்கள் முதலாகிய வஸ்துகள் ஒன்றும் இல்லாத இடங்களிலே சிறிதும் பயன்படாவாம். ஆயினும், நெல் புடவைகளையும் வாங்குவதற்குக் கருவியாயிலுத்தலால், செல்வம் என்று சொல்லப்படும் நம்முடைய அநுபவத்துக்கு வேண்டும் பொருள்களை விலைக்கு வாங்கிக்கொள்வதே இதனால் நாம் அடையும் பிரயோசனம் நாணம் இல்லையானால் உலகம் நடைபெறாது.

நம்மை ஆளும் அரசினர், இந்தியாவிலே ரூபா, அணா, பை என்னும் பெயருடனும், இலங்கையில் ரூபா சதம் என்னும் பெயருடனும், வழங்கும்படி, வெள்ளியினாலும், செம்பினாலும், வேறொரு கலப்பு லோகத்தினாலும் நாணங்களையுண்டாக்கிப் பரவச் செய்திருக்கின்றார்கள். இந்த நாணங்களும் இந்தியாவையடுத்த வேறு சில தீவுகளுக்குரிய நாணங்களும், யந்திரங்களினாற் செய்யப்படுகின்றன. கைகளினால் செய்தால், ஒருவன் ஒரு நாளையில் ஒரு நாணகத்தைத் தானும் சரியாய்ச் செய்து முடிக்க மாட்டான். யந்திரங்களின் உதவியினால் ஒருவன் ஒரு நாளையில் இருபதினாயிரம் நாணகங்களைச் செய்து முடிப்பான். நாணங்களை அரசினரல்லாத வேறு எவர்களும் செய்யக்கூடாது.

பொற்காசாகிய சரவன் முன் இத் தேசங்களுக்குரிய நாணகமன்று ; இங்கிலாந்து முதலிய தேசங்களில் மாத்திரம் வழங்கிவந்த நாணகம். அதைக் காசு மாலை முதலியவைகள் செய்வதற்காக இத்தேசத்தார்கள் விலைக்கு வாங்கி வந்தார்கள். பொன் வெள்ளி நாணங்களை உருக்கிச் சிலர் ஆபரண முதலியன செய்வதுமுண்டு. நாணகம் என்னும் பதம் நாணயம் என வழங்கப்பட்டு வருகின்றது.

27. சிநேகம்

ஒருவன் தீச்செயல்களிற் செல்லும்பொழுது செல்லாமல் தடுத்தலும், நல்வழிகளிற் செலுத்துதலும், அவனுக்கு யாதாயினும் கேடுவந்த காலத்தில் அதனால் வருந் துன்பத்தை அவனோடுகூடத் தானும் அனுபவித்தலும், எக்காலத்தும் வேறுபடாமையும் ஆகிய இவை முதலிய நற்குணங்களை உடையவனே சிநேகன் ஆவான். மன ஒற்றுமையுடைமையே சிநேக விருத்திக்குச் சிறந்த காரணம். பெரியவர்களுடைய சிநேகம் பிறைபோல நாளொருவண்ணமாக வள்ந்து கொண்டு வரும். கரும்பு நுனியிலிருந்து தின்பனுக்கு மேலே தின்னத் தின்னச் சுவையை மிகக் கொடுத்துக் கொண்;ட வருதல்போல, நல்லோருடைய சிநேகமும் பழகப்பழக உறுதியையும் மன மகிழ்ச்சியையும் மிகவுங் கொடுத்துக் கொண்டே வரும். இவ்வியல்புடைய சிநேகத்தைக் பெறுதல் மிகுந்த அருமையாம்.

ஒருவரோடொருவர் சிநேகஞ் செய்தல், தகாத செயல்கள் காணப்படுமிடத்;து இடித்துப் பேசி நல்வழிப்படுத்துதற்கன்றி;த் தம்முட் சிரித்து விளையபடுதற்கன்று, கண்டவிடத்து முக மாத்திரம் மலரும்படி சிநேகிப்பது சிநேகமன்று. மனமும் மலரும்படி சிநேகிப்பதே சிநேகமாம்.

ஒருவருடைய குணங்களை ஆராயாமற் சிநேகஞ் செய்தலாகாது. ஆபத்துக்காலத்திற் கைவிடுவோரையும், தமக்குப் பிரயோசனமுள்ள காலத்தில் வந்துகூடி அது இல்லாத காலத்தில் விட்டு நீங்குவோரையும், மூடரையும், சொல்லொன்று செயலொன்றாயிருப்போரையும் சிநேகஞ் செய்தலாகாது இதனாலன்றோ ஒளவையாரும் “நல்லிணக்கமல்ல தல்லற்படுத்தும்’’ என்;று அருளிச் செய்தார்.

மூடருடைய சிநேகம் எல்லாத் தீமைகளையும் உண்டாக்குதலாலும், அறிவிற் சிறந்த பெரியாருடைய சிநேகம் எல்லா நன்மைகளையும் உண்டாக்குதலாலும், சிறியாரோடு சிநேகஞ் செய்தலைக் கைவிட்டுப், பெரியோரோடு சிநேகஞ் செய்தல் வேண்டும். இச் சிநேகம் உடையானுக்கு எவ்வகைப்பட்ட இடர்களும் நீங்க, எல்லா நன்மைகளும் தாமே உண்டாகும்.

28. ஈகை

ஈகையாவது வறியவர்களாய் இரந்தவருக்கு இல்லையென்று மறுக்காது கொடுத்தல் வறியரல்லாதார்க்கு இம்மைப் பயன் கருதிக் கொடுப்பன எல்லாம் ஈகையாகமாட்டா. உயர்குடிப் பிறந்தார் தம்மிடத்து வறியவர் வந்து யாசிக்குமுன் குறிப்பறிந்து, அவர் மனம் உவக்கும்படி கொடுப்பர்.

கொடையாளர்க்குப் பலருடைய நட்பும், பெரியோர்களுடைய ஆசியும், புண்ணியமும், கடவுளுடைய அருளும், பிற நன்மைகளும் உண்டாகும், இம்மை மறுமை இரண்டிலும் நீங்காத இன்பத்தை அடைபவர் இவரே. இவர் உயிர்களைக் கர்த்தலால், தாயையும் அரசனையும் கடவுளையும்போல் விளங்குவர். பகைவரும்; சிநேகராவர். இவருடைய செல்வம் பிரயோசனத்தைத் தரும் விருஷம் ஊர்நடுவிற் பழுத்தாற்போல எல்லாருக்கும் பிரயோசனப்படும்.

வரைவின்றி யாவர்க்கும் கொடுத்தலால் முதல் வள்ளல் எனவும், இரப்போருக்குக் கொடுத்தலால் இடை வள்ளல் எனவும், புகழ்வோர்க்குக் கொடுத்தலால் கடை வள்ளல் எனவும், முற்காலத்திருந்த ஈகையாளரை மூவகைப் படுத்தி நூலோர் வகுத்திருக்கின்றனர். சிறு முயற்சி பெருமுயற்சிகளாற் பயன்படும் இயல்பு நோக்கி, கொடையாளரை மூவகையாக்கி, அவருக்குப் பனை தென்னை கழுகு என்னும் மூன்றனையும் உலமையாகவுங் கூறுவர்.

செல்வத்துட் செல்வமாகிய அருள் காரணமாக உண்டாவது ஆதலாலும், புகழுடம்பை நிலைபெறச் செய்தலால் இறந்தவரையும் இறவாதவராக்குதலாலும், தன்னையுடை யானை உலகரும் புலவரும் புகழும்படி செய்தலாலும், ஏனை அறங்களுட் சிறப்புடையது ஈகையே. இவ்வறம் எவ்வறங்களிலும் சிறந்தமையாலன்றோ, திருவள்ளுவ நாயனாரம் “மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று அருளிச் செய்தார். இரக்கமில்லார் குணம் ஆதலாலும் எல்லாராலும் இகழப்படுதலாலும், புகழைத் தாராமையால் உயிரோடிருப்பவரையும் இறந்தவராகச் செய்தலாலும், பாவங்களுள்ளே தலையாயது ஈயாமையே. ஈகையில்லாதாருடைய செல்வம், நடுவ+ரிற் பழுத்த நச்சு மரத்தின் பழம் ஒருவருக்கும் பிரயோசனப்படாமை போல, ஒருவருக்கும் பிரயோசனப்படமாட்டாது.

ஈகையில்லாதார் தமக்கும் பிறர்க்கும் பிரயோசனப்பட மாட்டார். ஆதலால் யாவரும் தமக்கும் பிறர்க்கும் பிரயோசனப்படுமாறு இயல்வதைக்கரவாது ஈக.

29 இலங்கை

இலங்கை இந்தியாவுக்குத் தெற்கேயுள்ள ஒரு தீவு. இது ஈழதேசம் எனவும் பெயர் பெறும். இராவணன் இருந்து அரசாண்டதும், அவன் சீதையைச் சிறைவைத்ததும் இராம சுவாமி சேதுபந்நனஞ் செய்து அதன் வழியாய் வானர சேனைகளோடு போய் அவ்விராவணனைச் சங்காராஞ் செய்ததும், முதலாக இராமாயணம் என்னும் இதிகாசத்தாற் சிறப்பித்துச் சொல்லப்படும் சரித்திரங்களையுடைய தேம் இவ்விலங்கையே.

இலங்கைத்தீவு மன்னார் இராமேச்சரம் என்னும் சிறு தீவுகளினால் இந்தியாவோடு இணைக்கப்பட்டிலுக்கின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தின் வடபாகத்திலுள்ள காங்கேசன் துறைக்கும் தென்னிந்தியாவில் வேதாரணியத்திற்குத் தெற்கேயுள்ள கோடிக்கரைக்கும், இடையிலுள்ள கடலின் தூரம், முப்பத்தேழுமைல், இந்த இரண்டு துறைகளிலும் நல்ல வளமான காற்று வீசுங்காலங்களிலே, நாலு அல்லது ஐந்துமணி நேரத்துள் தோணிகள் ஒரு துறையிலிருந்து மற்றையத் துறையை அடைகின்றன.

இலங்கை சென்னை பட்டணத்திலிருந்து இருநூற்றைம்பது மைல் தூரத்திலிருக்கின்றது. அதன் வடிவு ஏறக்குறைய மாங்காயின் வடிவுபோலும். அதன் நீளம் வடக்குத் தெற்கு இருநூற்றுமுப்பதேழு மைல். சுற்றளவு எழுநூற்றறுபது மைல். அதன் வடபாகம் அகலத்தால் மிகக் குறைந்தது.

இலங்கையை ஆதியில் தமிழரசர்களும், அதன் பின் போர்த்துக்கீசரும், அதன்பின் ஒல்லாந்தரும் ஆண்டார்கள். அதன்பின் 1976 – ஆம் வருஷ முதல் இங்கிலீஷ் அரசினர் ஆண்டு வந்தனர். அது ஆங்கிலேயர்கள் கைப்பட்ட பின்னும், கண்டி நகரில் ஸ்ரீ விக்கிரராசசிங்கன் என்;னும் ஓர் இந்து அரசன் இருந்து சில ஊர்களை ஆண்டான். அவனும் ஆங்கிலேயராற் பிடிக்கப்பட்டான். இப்போது சுயராச்சியத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஆங்கிலேயரின் மேற்பார்வை உண்டு.

இலங்கை இப்பெழுது பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மாகாணம் இந்தியாவிலுள்ள ஜில்லாவிற்குச் சமானம், இலங்கை முழுவதும் பிரதானபட்டணம் கொழும்பு.

இலங்கையிலுள்ள, காடுகளில் பாலை கருங்காலி முதிரை முதலிய பெரியமரங்கள் உண்டாகின்றன. அவைகளில் யானைகள் உண்டு. இலங்கையில் நெல் வரகு முதலிய தானியவகைகள் செய்கை பண்ணப்படுகின்றன. தென்னை பனை காப்பி தேயிலை புகையிலை ஏலம் என்னும் இவைகள் மிகுதியாய் உண்டுபண்ணப்படுகின்றன. மன்னாரைச் சார்ந்த சலாபத்துறையிலே குளிக்கப்படும் முத்து மிகச் சிறந்தது. இலங்கையில் மாணிக்கம் முதலிய வேறு இரத்தினங்களும் அகப்படுகின்றன.

இலங்கையில், திருகோணமலை, திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டு தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களும், திருப்புகழ் பெற்ற கதிர்காமம் முதலிய சுப்பிரமணிய ஸ்தலங்களும், தமிழரசர்களாலும் பிரபுக்களாலும் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் சுப்பிரமணியாலயம் முதலியவைகளும் இருக்கின்றன. அங்கே அநேக பழமையான பௌத்தாலங்களும் இருக்கின்றன. தமிழும் சிங்களமும் இலங்கையிற் பேசப்படும் பாஷைகள். வட மாகாணத்தின் தலைநகரமாகிய யாழ்ப்பாணம் தமிழரசர் கால முதலாகத் தமிழ் வித்துவான்களும் இருப்பிடமாயிருக்கின்றது. வடமாகாணம் ஒழிந்த மற்றை மாகாணங்களிலே, பல சீவநதிகளும், சிற்றாறுகளும் பாய்கின்றன. அநேக வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சத்தக்க ஏரிகள் பல உள்ளன.

30. பேராசை பெருந்துயர்

ஓர் ஊரிலே, மிகவும் தரித்திரனாகிய ஒருவன் விறகு வெட்டிச் சுமந்து விற்று, அதனாலே சீவனஞ் செய்து வந்தான். அவன் ஒருநாள், சமீபத்தில் விறகு வெட்டக் கிடையாமையினால், மிகுந்த தூரத்தில் ஓர் ஆற்றங்கரையில் உள்ள காட்டிற்குப் போய், கரையிலே, படகுச் சாய்ந்து நிற்கும் மரத்தைக் கண்டு, கோடாலி கொண்டு அதைத் தரித்தான். கோடாலி சுழன்று, ஆழமாய்ப் பெருகியோடும் ஆற்று வெள்ளத்துள் வீழ்ந்தது.

பசி தாகங்களினாலே மிகவும் களைப்படைந்த அவ்வேழையாளவன் “இனி என்ன செய்வேன்’ என்று மனவருத்தமடைந்து, அழுதுகொண்டு நின்றான். அப்பொழுது அக் காட்டிலிருக்கும் வன தெய்வமானது அவனுக்கு எதிரே வந்து “ஏன் அழுகிறாய்’ என்று கேட்டது. அவன் நடந்ததைச் சொன்னான். உடனே அத் தெய்வம் அவனுக்காக இரங்கி, அவ்வாற்று வெள்ளத்துள் இறங்கி மூழ்கித் தடவிப் பார்த்து, ஒரு வெள்ளிக் கோடாலியை எடுத்துக் கொண்டு வந்து காட்டி, இதுதானா உன் கோடாலி என்று கேட்டது. அவன் ‘அன்று’ என்றான். அத்தெய்வம் பின்னும் முழ்கித் தடவிப் பார்த்து, ஒரு பொற்கோடாலியை எடுத்துக் கொண்டு வந்து காட்டி, “இதுதானா’’ என்று கேட்டது. அவன் அதனையும் “அன்று’’ என்றான். அத்தெய்வம் பின்னும் ஒருமுறை மூழ்கித் தடவிப் பார்த்து, ஓர் இரும்புக் கோடாலியை எடுத்துக் கொண்டுவந்து காட்டி “இதுதானா’’ என்று கேட்டது. அம் மனிதன் அது தன் கோடாலியாயிருக்கக் கண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு இதுதான் என் கோடாலி’ என்று சொல்லி அதனை எடுத்த நன்றிக்காக அத் தெய்வத்தைத் துதித்தான்.

தெய்வம், அவனுடைய சத்தியத்தையும் உறுதியையும் புகழ்ந்து, தான் எடுத்த கோடாலிகள் மூன்றையும் இன்னும் அநேக திரவியங்களையும் பல வரங்களையும் கொடுத்து, அவனை ஆசீர்வதித்துப் போய், அத்தரித்திரன் அவைகளைப் பெற்றுப் பெருஞ் செல்வனாய்த் தம் குடும்பத்தாரோடு மகிழ்ந்து வாழ்ந்தான்.

இந்தச் சமாசாரங்களை விசாரித்தறிந்த வேறொரு விறகுகாரன், தானும் இவனைப் போலச் செல்வனாக வேண்டும் என்று எண்ணி, அந்தக் காட்டில் ஆற்றோரத்தில் விறகு வெட்டிக், கோடாலியை ஆற்றிலே நழுவ விட்டு நின்று அழுதான். அப்பொழுது அவ்வன தெய்வம் முன்போல் ஆற்று வெள்ளத்துள் மூழ்கி ஒரு வெள்ளிக்கோடாலியை எடுத்துக்காட்ட, அவன் மிகுந்த சந்தோஷத்தோடு “இதுதான் என் கோடாலி’ என்றான். தெய்வம் கோடாலியை ஆற்றினுள் எறிந்துவிட்டு, அவனைக் கோபித்து, நித்திய தரித்திரனாகும்படி சபித்தது. அவன் பேராசை காரணமாகச் சொல்லிய ஒரு பொய்யினால் முன்னையிலும் மிகுந்த தரித்திரனாய்ப் பெருந்துன்பத்தை அனுபவித்தான்.

31. வீடு

வீடாவது மனிதர்கள் பலவகை இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்து வாழ்வதற்குரியதானமாம். அது பெரும்பான்மையும் இல்லத்தாருக்குரியதானம். துறவிகள் இருத்தற்கும் வழிப்போக்கர்கள் வந்து தங்குதற்கும் உரிய இடங்கள், மடம் சத்திரம் என்று சொல்லப்படும். யாவரும் தாம் வசிக்கும் இடத்தினால் அடையுஞ் சுகத்தைத் தங்கள் விசேஷமாகிய சுகங்களுள் முதலாவதாக மதித்துக் கொள்ளுகிறார்கள். அதற்குக் காரணம் அது பெரும்பான்மையும் அவர்கள் தேக சௌக்கியத்துக்குக் காரணமாயிருந்தலேயாம். ஆதலினாலே, யாவரும் தங்கள் சரீர சௌபாக்கியத்துக்கு ஏற்ப வீடுகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

வீடு கட்டுவதற்குரிய தானம் தரைமட்டத்துக்குத் தாழ்வாயிருத்தல் கூடாது. அது தரை மட்டத்துக்கு உயர்வாயும், அருகிலே மழைச்சலம் நில்லாததாயும், குடிகள் அடர்ந்தல்லாத தாயும், நல்ல காற்று உலாவத்தக்கதாயும் இருத்தல் வேண்டும். வீடுகட்டும்பொழுது, வேண்டுமட்டும் காற்றுவந்து உலாவத்தக்க பலகணிகளும் வாயில்களும் அதிக வைப்பித்தல் வேண்டும். மழை ஈரந்தாக்காதபடி வேண்டுமளவும் வீட்டுத்தரையை உயர்த்திக் கொள்ளுவதேயன்றி, கூரையில் விழும் மழைச்சலம் சீக்கிரம் வடிந்தோடும்படி தாழ்வாரங்களைச் செய்வித்தலும் வேண்டும். ஈரமுள்ள வீட்டில் வாசஞ் செய்வதினால் சுரம் முதலிய பலவித நோய்கள் உண்டாகின்றன. வெய்யிற் காலத்திலே சலம்வற்றிச் சேறாகும் குளங்கள் ஆறுகளின் அருகிலே வீடு கட்டலாகாது.

வீட்டில் சமையலிடம், படுக்குமிடம், சாமான்கள் வைக்குமிடம் என்னும் இவைகள் வௌ;வேறாய் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். மாடு முதலிய கட்டுந் தானங்களை வீட்டுக்கு அதி சமீபத்திலே வைத்துக்கொள்ளலாகாது. வீட்டுச் சுவர்களுக்கு வருஷத்தில் இரண்டுமுறை வெள்ளயடித்தல் வேண்டும் ; அல்லது மண்ப+சல் வேண்டும். செங்கற்படுத்த நிலங்களையும் மண்படுத்த நிலங்களையும் பசுவின் சாணங் கொண்டு மெழுகுதல் வேண்டும்.
கிணற்றின் அருகே விருஷங்களை வைத்தலாகாது ; அவைகளிலிருந்து உதிரும் இலைகளும் அவைகளின் வேர்களும் கிணற்றுச் சலத்தைக் கெடுக்கும். மரஞ்செடிகளிலிருந்து உதிரும் இலைகளை அவ்வவ்பொழுது நீக்கி, வீட்டுக்குத் தூரமாயுள்ள குப்பைக் குழியிலே சேர்ப்பித்தல் வேண்டும். மலகூடத்தையும், எச்சிலிலைக்குழியையும், வீட்டுக்கும் கிணற்றுக்கும் தூரமாயுள்ள இடத்தில் அமைப்பித்து, அவைகளைக் காலத்துக்குக் காலம் சக்தி செய்வித்தல் வேண்டும்.

சில செல்வர்கள் சோம்பலினாலும் வறியவர்கள் முட்டுப்பாட்டினாலும், தங்கள் வீட்டையும் வீட்டைச் சேர்ந்த கொல்லையையும் பற்றிச் சிந்தியாதவர்களாய், அதனாற் சரீர சுகத்தை இழந்து, நோயுற்று வருந்துகின்றார்கள். சோம்பலினாலும் அற்ப பொருளேனும் செலவு செய்ய மனம் பொருந்தாமையினாலும் தமக்குப் பின் வரும் பெருங்கேட்டைச் சிந்திக்கின்றார்களில்லை. உணவு நித்திரை என்னும் இவைகளைப் போலக் காற்றும் உயிர்களுக்கு இன்றியமையாதது. ஆதலால், மனிதர்கள் வீடுகளையும், அவைகளைச் சேர்ந்த கொல்லைகளையும் நல்ல காற்று உலாவத்தக்கனவாகச் செய்து கொள்வது அவசியம்.

32. தாவரம்

ப+மியில் வளரும் விருஷங்களும், கொடிகளும், செடிகளும் புற்களும் தாவரங்கள் என்று சொல்லப்படும். இவைகளெல்லாம் பரிசத்தை மாத்திரம் அறியும் ஓரறிவுயிர்கள். இவைகள் உணவுக்குரிய காய் கனி கிழங்கு இலை முதலியவைகளையும் வாசனையுள்ள புஷ்பங்களையும், நிழலையும், நல்ல காற்றையும் தரும். அநேக தாவரங்கள் ஓளஷதங்களுக்கு உதவுகின்றன. அநேக விருஷங்கள் வீடுகட்;டுவதற்கும், மரக்கலம் வண்டி பெட்டி நாற்காலி முதலியன செய்வதற்கும் உதவுகின்றன. தாவரங்களின் பசுமையாகிய இலைகள் கண்களுக்குக் குளிர்;சியைக் கொடுக்கின்றன. நம்முடைய ஆகாரங்களைப் பாகம் பண்ணுதற்கு விறகு தருவன இத்தாவரங்களே. நாம் உடுக்கிற வஸ்திரங்கள் பெரும்பாலும் தாவரங்களுள் ஒன்றாகிய பருத்தியின் பஞ்சினால் உண்டாக்கப்படுகின்றன. தாவரங்கள் இல்லை யானால் உயிர்கள் பிழைத்திருத்தல் அருமை தாவரங்கள் அழகிய உருவங்களையும் நிறங்களையும் உடையவைகளாய், தாம் முளைத்த இடத்தில் அல்லது நாம் வைத்துண்டாக்கிய இடத்தில் நின்று வளர்ந்தழியும், இவைகள் சஞ்சரிக்கும் தன்மை இல்லாமையால் அசரம் எனவும் பெயர் பெறும் இவைகளுக்கு உணவு சலம், சலத்துடன் எருவுஞ் சேர்ந்தாற் செழித்து வளரும், சலத்தை வேரினாலே கிரகித்தலால் விருஷங்களுக்குப் பாதபம் என்றும் பெயர்.

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தோல் இருத்தல் போல, தாவரங்களுக்குப் பட்டை அல்லது தோல் உண்டு ; அவைகளை முழுதும் உரித்துவிட்டாற் பட்டுப்போம், மற்றைச் சீவர்களுக்குப் போலவே தாவரங்களுக்கும் காற்றும் வெளிச்சமும் அவசியம் வேண்டும். அவைகள் காற்று வெய்யில்கள் இல்லாத இடத்தில் வெளுத்துப் பலன் குறைந்து கெடும். தாவரங்களெல்லாம், ஒரே தன்மையான நிலத்திலும், ஒரே தன்மையான காலத்திலும் உண்டாகமாட்டா. பல தாவரங்கள் தத்தமக்குரிய காலங்களிலன்றிக் காய் கனி முதலிய பலன்களைத் தரமாட்டாவாம். தாவரங்கள் உண்டாக்கத்தக்க நிலங்களையும், காலங்களையும், எருக்களையும் அவைகளை உண்டாக்கும் விதங்களையும் பற்றி அறிவிக்கும் நூலுக்குக் கிரிஷிசாஸ்திரம் என்று பெயர்.

தாவரங்களுட் சில வித்துக்களையும், சில வேர்களையும், சில கிழங்குகளையும், சில கொம்புகளையும் மேற்பிளந்து தோன்றும், இதனால் அவைகளுக்கு உற்பிச்சம் என்று பெயர். தாவரங்களைப் பத்தொன்பது லஷம்யோனிபேதம் என்று மேலோர்கள் வகைசெய்திருக்கின்றார்கள்.

33. சிங்கம்

சிங்கம் மிருகங்களுள் அதிக பலமும், வீரமும், அஞ்சா நிலைமையும், இராசகுணமும், வேகமும், பெருவித நடையும் உள்ளது. அதைக் காண்கிறவைகளும் அதன் கெர்;சிப்பைக் கேட்கிறவைகளும் ஆகிய சகல மிருகங்களும் மிகவும் பயந்து ஒடுங்கும், மிருகங்களெல்லாவற்றிற்கும் தலைமையாயிருத்தலால், அதற்கு மிருகராசன் என்றும் மிருகேந்திரன் என்றும் பெயர். அதன் முகம் பரந்தும் இடை சிறுத்துமிருக்கும். பரந்த முகமுடைமையால், அதற்குப் பஞ்சானனம் என்றும் பெயர் (பஞ்சம் - விரிவு – ஆனனம் - முகம்)

மிகவும் பெரிய சிங்கம் ஐந்து அடி உயரமும் ஒன்பது அடி நீளமும் உள்ளதாயிருக்கும். அதன் காலங்களில் ஒன்றேகால் அங்குலம் வரையில் நீண்ட நகங்கள் உண்டு. அவைகளை வேண்டும்போது அது சுருக்கிக்கொள்ளும் ; அல்லது நீட்டிக் கொள்ளும். அதன் முன் பக்கத்தில் மயிர்கள் அடர்ந்து நீண்டிருக்கும் அதற்கு உணவு மாமிசம்.

சிங்கம் தான் கொல்ல நினைத்த மிருகத்தின் மேற்பாயும் பொழுது, அதிக வேகத்தினால் அந்த மிருகத்துக்கு அப்பாலும் போய்விடும். அது தன்னுடைய உணவுக்கு வேண்டிய அளவுக்கு மேலே மிருகங்களைக் கொல்லுகிறதில்லை. பசி தணிய உண்ட பின்பு சாந்தமும் அமைதியும் உள்ளதாயிருக்கும். அதற்குப் பகலிலும் பார்க்க இரவிற் கண்கள் நன்றாகத் தெரியும். அது இரை தேடும் பொருட்டு இரவிற் புறப்படும். மிகக்குறைந்த வலியுடைய மிருகங்களின் கோபத்தை அது கவனிக்கிறதில்லை. வேட்டைக்காரன் தன்னைக் கொல்லவந்து சமீபத்தபோதும், அஞ்சிப் புறங்காட்டமாட்;டாது. மனுஷரைக் கொல்லுங்குணம் அதற்கு இயற்கையாய் இல்லை. அது இராசகுணமுடையதாயிருந்தலால், தனக்கு அச்சமும் கீழ்ப்படிதலுமுள்ள எளிய மிருகங்களிடத்து மிகுந்த இரக்கமும், தனக்கும் பிறர் செய்த நன்றியை மறவாமைக் குணமும் உள்ளது. இவைகளிலே அது பெருந்தன்மைக் குணமுடையதென மதிக்கப்படுகின்றது. சிங்கள ஆபிரிக்காவிலும், அராபியாவிலும், பாரசீகத்திருலுமுள்ள காடுகளிற் சஞ்சரிக்கின்றன. இந்தியாவிலும் சில காடுகளில் உண்டு.

34. பொய்வேடம்

சில சோம்பறிகள், தத்தமக்குரிய தொழில்களைச் செய்து சீவனஞ் செய்வது கஷ்டம் என்று எண்ணிப் பொய் வேடம் ப+ண்டு. பிறரை வஞ்சிக்கப் புகுந்து, அவர்களால் அவமானத்தையும் பெருந்துன்பத்தையும் அடைகின்றார்கள். வேடத்துக்குத் தக்க செயல் உள்ளபடி இல்லாதபொழுது அவ்வேடம் பெருந்துன்பத்தையே தரும். அது பின்வரும் கதைகளினால் இனிது விளங்கும்.

ஒருநாள் ஒரு நரி தன்னிச்சைப்படி ஒரு நகரத்தின் சமீபத்தில் திரியும்பொழுது, இரவில் ஒரு நீலச்சாலினுள் விழுந்து மேலே எழும்புவதற்கு வலியில்லாமையால் தன்னை இறந்தது போலக் காட்டி அதனுட் கிடந்தது. அந்நீலச் சாலுடையவன் வந்து பார்த்து, இறந்ததென்றெண்ணி, அதைத் தூக்கித் தூரத்திலே கொண்டுபோய் எறிந்தான். பின்னர் நரி காட்டிற்போய், தான் நீலவர்ண முடையதாயிருத்தலைக் கண்டு, “நான் இப்பொழுது உத்தம வர்ணமுடையவனாயிருக்கின்றேன். ஆதலினால் நானே என்னை மேன்மையான நிலைக்குக் கொண்;டு வரவேண்டும் என்று நினைதது, நரிகளை வருவித்து, “நான் வனதேவதையுடைய கைகளிலே சகல ஒளஷதிகளினின்றும் எடுக்கப்பட்ட ரசத்தைக் கொண்டு காட்டு இராச்சிய பரிபாலனத்துக்காக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறேன் ; என்னுடைய நிறத்தைப் பாருங்கள். இன்று முதல் இந்தக் காட்டுராச்சிய விவகாரங்களெல்லாம் என்னுடைய ஆஞ்ஞைப்படியே நடத்தப்படவேண்டும் என்று சொல்லிற்று.

நரிகள் அதனுடைய விசேஷ வர்ணத்தைக் கண்டு, அது சொல்லியவைகளை மெய்யென்று நம்பி வணங்கி, ‘அப்படித் தாங்கள் கட்டளையிடுகிறபடியே ஆகக்கடவது என்று சொல்லின. இப்படியே படிப்படியாகப் பல காட்டு மிருகங்களிடத்தும் மேலான அதிகாரம் அந்நரிக்கு உண்டாயிற்று. பின்னர் அது, தனக்கு மேலான புலி முதலிய மிருகங்கள் தன்னை வந்து சேவிக்கக் கண்டு, நரிகளுடைய சகவாசத்தை அருவருத்து, அவைகளை வெறுத்துத் தூரத்தே நீக்கிற்று.

அப்பொழுது ஒரு கிழநரி, துக்கங்கொண்டிருக்கிற நரிகளைப் பார்த்து, பயப்படாதேயுங்கள் சுற்றத்தவர்களாகிய நாங்கள் அந்த நீதியற்றவனாலே அவமானம் பண்ணப்பட்டிருக்கின்றோம். அது எந்த உபாயத்தினால் அழியுமோ அந்த உபாயத்தை நானே சொல்லுகிறேன். புலி முதலியவைகள் இதனை நரி என்று அறியாமல் இதன் நிறத்தினாலே இராசா என்று எண்ணியிருக்கின்றன. அவைகள் உள்ளபடி அறிந்து கொள்ளத்தக்க உபாயம் எதுவோ அதனைச் செய்யுங்கள். எப்படியெனில், நீங்கள் எல்லோரும் மாலைக்காலத்தில் அதன் சமீபத்திற் போய் நின்று பெருஞ்சத்தமாக ஊளையிடுங்கள் என்றது. அப்படியே அவைகள் ஊளையிட்டன. நீலநரியும் தன்சாதி வழக்கப்படி ஊளையிட்டது. உடனே புலி முதலிய மிருகங்கள் அதை மிகவுந் துன்பப்படுத்திக் கொன்று விட்டன.

35. தென்னை

தென்னிந்தியாவிலே பல இடங்களிலும் இந்தியாவைச் சேர்ந்த சில தீவுகளிலும், தென்மரிக்காவிலும் தென்ன மரம் மிகுதி. அது மனிதர்களுக்கு மிகுந்த பிரயோசனத்தைக் கொடுப்பது. அதன் இளங்காய் குரும்பை என்றும், இளநீர் என்றும், முதிர்ந்த காய் தேங்காய் என்றும், சொல்லப்படும். இளநீர் தாகத்துக்குச் சாப்பிடவும், கடவுளுக்கு அபிஷேகஞ் செய்யவும் உதவும். தேங்காய் சுப கருமங்களுக்கு இன்றியமையாதது. தென்னம்பாளையிலிருந்து கள் இஙக்குகிறார்கள். தேங்காயெண்ணெய் பலவித யந்திரங்களையும் ஆயுதங்களையும் கறை படிய விடாமற காப்பாற்றும். இன்னும் விளக்கெரிக்கவும் மெழுகுவர்த்தி செய்யவும் உதவும். சில தேசங்களிலே தேங்காயெண்ணெயையும் தேங்காயையும் போசன பதார்த்தங்களிற் சேர்க்கிறார்கள்.

இங்கிலாந்து முதலிய தேசங்களிலே யந்திர வேலைகள் அதிகப்படுதலினால், அத் தேசங்களுக்குத் தேங்காயெண்ணெயும் காய்ந்த தேங்காயாகிய கொப்பறையும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேங்காய்களை உடைத்து வெய்யிலில் நன்றாக உலர்த்தி ஆலையிலிட்டு ஆட்டி எண்ணெயை எடுக்கிறார்கள். தென்னோலை வீடு வேயவும், வேலியடைக்கவும், தென்னந்தும்பு கயிறு திரிக்கவும், தென்னமரம் வீடு கட்டவும் உதவும்.

தென்னை நீர்வளமுள்ள செழிப்பான நிலங்களிலே முளைத்து ஐந்து வருஷத்திற் காய்க்கும், மூன்று வருஷத்திற் காய்க்கிற சில சாதித் தென்னைகளும் உண்டு. தேங்காயெண்ணெயேயன்றித் தென்னந்தும்பு கயிறும் மலையாளத்திலும் இலங்கையிலுமிருந்து பிறதேசங்களுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முதிர்ந்த தென்னமரத்தினால் நெடுநாளைக்குப் பயன் அடையவேண்டுமானால், நுனி மரத்தில் ஓலைகளுக்குக் கீழே களிமண்ணை நான்குபுறத்திலுஞ் சேர்ந்து வீழாமற் கட்டி வைத்து, அதிற் சலம் விட்டுக்கொண்டுவா, சில மாசங்களில் அம் மண்ணிலே வேர் இறங்கும். பின்பு அதை அறுத்து மண்ணுடன் இறக்கிக் குழியில் நட்பு உண்டாக்கினால், அது இளமரம்போல வளர்ந்து பயனைத் தரும். சிலர் அருமையாக இப்படிப் பிரயாசப்பட்டுந் தென்னமரத்தை வைத்துண்டாக்குகின்றார்கள்.

36. சரீரசௌக்கியம்

இருமையின்பங்களையும் பெறுதற்குக் கருவியாகக் கடவுளாற் கொடுக்கப்பட்;ட சரீரத்தை நோய் அணுகா வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது யாவர்க்கும் கடமையாம். ஆதலால் நாம் சரீரசௌக்கியத்தோடும் சீவித்தற்கு வேண்டும் வசதிகளை இயன்றவரையிற் செய்து கொள்ள வேண்டியது அவசியம். மனிதர்களுக்குச் சரீர அசௌக்கியமானது அறியாமையினாலும், அறிந்த வழியும் அசாக்கிரதையினாலும் உண்டாகிறது. நல்ல தேகசௌக்கியத்தை அடைய வேண்டுமானால் நல்ல காற்று, நல்ல ஆகாரம், சுசியுடைமை, தேகப் பயிற்சி என்னும் இவைகளை எந்நாளும் விசேஷமாகக் கவனித்து வருதல் வேண்டும்.


நாம் இருக்கும் வீடுகளுக்குப் பக்கங்களிலே நல்ல விருஷங்களையும் செடிகளையும் வைத்துண்டாக்கல் வேண்டும். வீடுகளிலே வேண்டியமட்டும் பலகணிகளை அமைப்பித்தல் வேண்டும். வீட்டுக்குச் சமீபமாயுள்ள இடங்களை குழிகளில் இலைகள் உதிர்ந்தழுகுதல் நீர் நின்று வற்றிச் சேறுபடுதல், முதலிய அசுசிகளில்லா வண்ணம் சுசியாயிருக்கும்படி வைத்திருத்தல் வேண்டும். படுக்கும் அறை சன நெருக்கம் இல்லாததாயிருத்தல் வேண்டும். இப்படியிருந்தால். அசுத்தவாயு அணுகாது.

அவ்வவ்காலத்துக்கும் தேசத்துக்கும் இயையாதனவும், நோய் செய்வனவும், சாரமில்லாதனவுமாகிய உணவுகளை உண்ணலாகாது. உண்ட உணவு சீரணமாகு முன் உண்ணலாகாது. அழுகின பழங்கள், பழங்கறிகள், ஊசின அன்னம் என்னும் இவைகள் நோயை உண்;டு பண்ணும், பழையது புசிக்கவேண்டின், மோருடன் அல்லது நீராகாரத்துடன் ஊறுகாய் சேர்த்துப் புசிப்பது நல்லது. பழங்கறிகளோடு பழையது புசித்தால், மந்தமும் சோம்பலும் உண்டாகும். தாகத்துக்கு உட்கொள்ளும் சலம் அழுக்கில்லாத தெளிந்த சலமாயிருத்தல் வேண்டும். கலங்கல் நீராயிருந்தால் அதை வெந்நீராக்கி ஆறவைத்து அல்லது வேறு விதமாகிய சுத்திகள் செய்தாவது தெளியச் செய்து, பானம் பண்ணல் வேண்டும் அடிக்கடி சலபானம் பண்ணலாகாது.

கை கால் முதலிய அவயங்களிலே அழுக்கு ஏறாதபடி உடம்பை நன்றாகத் தேய்த்துச் சுத்தமான சலத்திலே ஸ்நானம் பண்ணுதலும், அழுக்கில்லாததும் தோய்த்துலர்ந்ததுமாகிய வஸ்திரந்தரித்தலும், பற்களை நன்றாகத் தேய்ந்து நாக்கை வழித்து வாய் கொப்பளித்தலும், எச்சில் மல சல முதலியவைகளைத் தீண்டினாற் கைகால்களை நன்றாகச் சுத்திசெய்து கொள்ளுதலும், தீண்டத்தகாத ஈன சாதியாரையும் ஆசௌசமுடையவரையுந் தீண்டாமையும், அருவருக்கத்தக்க உணவுகளை உண்ணாவையும், வீடு படுக்கை உட்காருமிடம் ஆசனம் என்னும் இவைகளைச் சுத்தமுடையனவாக வைத்திருத்தலும் சுசியுடைமையாம். சரீரத்துக்கு ஆரோக்கியத்தையும், மனசுக்கு இதத்தையும், பார்ப்பவர்களுக்குப் பிரீதியையும் உண்டாக்குவது சுசியுடைமை, இதையே நம்மவர்கள் ஆசாரம் என்று சொல்லுவது.

நாடோறும் உடம்பு வேர்;த்துக் களைக்கும்படி வேலை செய்தலும், சுத்தவாயு உள்ள இடங்களிலே ஓடி விளையாடுதலும், குதிரையேற்றமாயினும் சிலம்பமாயினும் செய்து கொண்டு வருதலும், தேக சௌக்கியத்துக்கு ஏதுவாகும். தேசப்பயிற்சி ஒரு நாட் செய்து ஒரு நாள் விட்டுவிடாமல் ஒழுங்காகச் செய்துகொண்டுவருவதும் உத்தமம். பாவிக்கப்படாத ஆயுதங்களும் யந்திரங்களும் கரையேறிப் பழுதாதல்போல, அப்பியாசஞ் செய்யாத தேகம் இரத்தங் கெட்டுப் பழுதுபடும்.

இன்னும் உரிய காலங்களிலே எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதலும், ஷெளரஞ் செய்து கொள்ளுதலும் பேதிமருந்து வமனமருந்து உட்கொள்ளுதல்களும் சரீசசௌக்கியத்துக்கு ஏதுவாவனவாம்.

37. யாக்கை நிலையாமை

ஆன்மாக்களாகிய நமக்கு இந்த மனித சரீரம் எதன் பொருட்டுக் கடவுளாற் கொடுக்கப்பட்டது என்பதையும், இது எவ்வியல்பு உள்ளது என்பதையும் நாம் யோசித்தல் வேண்டும். நாம் கல்விகற்றுத் தரும நெறியினாலே பொருளைத் தேடி வறியவர்களுக்குக் கொடுத்து நாமும் மனைவி மக்கள் முதலிய கற்றத்தர்களோடு உண்டுடுத்து வாழ்தற்கும், புகழ் புண்ணியங்களைச் செய்வதற்கும், எவ்வுயிர்களிடத்தும் அன்புடையர்களைச் செய்தற்கும், எவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களாய் மனம் வாக்குக் காயங்களினாலே தம்மை வழிபட்டு நல்ல கதியை அடைவதற்கும், ஆகவே கடவுள் மனித சரீரத்தை நமக்குத் தந்தருளினார்.

கடவுளையும், புண்ணிய பாவங்ளையும், அவைகளின் பயன்களாகிய சுகதுக்கங்களையும் பகுத்தறியும் அறிவு மனிதர்களிடத்து இருந்தலால், அஃதில்லாத விலங்கு பறவை முதலிய பிறப்புகளிலும் மனிதப்பிறப்பு மிக உயர்ந்தது. நாம் கீழுள்ள பிறவிகளையெல்லாங் கடந்து இம் மனிதப் பிறப்பை அடைவது மிகுந்த அருமை. இந்த அருமையாகிய மனித சரீரமோ அழிவுள்ளது. ஆதலினால், இது உள்ள பொழுதே இதனாலே தேடற் பாலனவாகிய கல்வி செல்வங்களையும் புகழ் புண்ணியங்களையுந் தேடிக்கொள்ள வேண்டியது அத்தியாசியமாம்.

பலவித செல்வங்களையும் பெற்று அநுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே. மனிதர்களுக்கு மூப்பும் மரண வேதனையும் வருகின்றன. இவைகளோடு நோயும் வந்து சேர்ந்தால் இவர்கள் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா! அப்பொழுது பகுத்தறிவுள்ள மனிதர்கள் செய்வன இவை தவிர்வன இவை என்று அறியாது, பிறருடைய சகாயத்தை விரும்பி, மிகுந்த வருத்தப் படுகின்றார்களே! மனைவி மைந்தர் முதலாயினோர் செய்யுஞ் சகாயங்கள் தாமும் அத்துயரத்தைத் தாங்க வல்லனவா! இல்லை இல்லை இவ்வுடம்பின் நிலைமையை நினைக்கும்பொழுதே நமக்கு ஏக்கம் உண்டாகின்றது. “நேற்றைக்கு இருந்தான் இன்றைக்கு இறந்தான்’’ என்று கேட்டவுடன் மனம் நடுங்குகின்றது. நேற்று மணமகன் இன்று பிணமகன் ஆதலையும் எங்கள் கண்களே காண்கின்றன. எத்தனையோ பெரிய அரசர்களுடைய சரித்திரங்களைக் கேட்டிருக்கின்றோம். எத்தனையோ பெரிய வித்துவான்களுடைய நூல்களைப் படிக்கின்றோம். இவர்கள் எல்லாரும் இறந்தவர்களேயன்றி உயிரோடிருந்தவர் ஒருவர் இலர்.

இப்படி இந்த உடம்பு அநித்தியமும் துக்கமயமுமாயிருத்தலாலும், இதனாலன்றி வேறொன்றினாலும், நமக்:கு ஈடேற்றம் இல்லாமையினாலும் யாவரும் இவ்வுடம்பு உள்ள பொழுதே கல்வி செல்வங்களையும், அவற்றினாலே புகழ் புண்ணியங்களையும், சம்பாதித்தல் வேண்டும். கல்வி செல்வங்களைச் சம்பாதிக்கும்போது, இறப்பில்லாதவர்கள் போலவும், தருமத்தைச் செய்யும்போது யமன் கையில் அகப்பட்டுக் கொண்டவர்கள் போலவும், எண்ணுதல் வேண்டம். இந்த நினைவிருந்தால் வாழ்நாள் வீணாக மாட்டாது நிலையில்லாத மனித சரீரத்தாற் பயனை அடைந்தவரும் இவரேயாவர்.

38. சற்புத்திரர்

சிசிலி என்னும் தீவிலே எட்னா என்கின்ற பெயருள்ள ஓர் எரிமலை இருக்கிறது. சிலகாலங்களில் அதன் சிகரங்;களிலுஞ் சிந்துவது வழக்கம். ஒரு காலத்திலே, அந்த மலை மிகவும் அதிகமாக அக்கினியைக் கக்கிற்று. அப்போது, அம்மலையின் பக்கங்களிலுள்ள ஊர்களிலிருந்து சனங்கள் தங்கள் வீடுகளில் அந்த நெருப்புப்பற்றினபடியால், தங்கள் பொருள்களில் விலையேறப்பெற்ற சிற்சில பொருள்களை மாத்திரம் தங்களால் ஆனவரையில் எடுத்துக்கொண்டு, உயிர் தப்பி ஓடினார்கள். அவர்களுள், செல்வர்களாகிய இரண்டு பிள்ளைகள், தங்கள் திரவியங்களிற் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அவர்களுடைய பிதாவும் மாதாவும் முதிர்ந்த வயசினர் ஆதலால், தங்கள் பிள்ளைகளோடு ஓடித் தப்ப முடியாதவர்களாய், அவர்களுக்குப் பின்னே மெல்ல மெல்ல நடந்து போனார்கள். அதுகண்ட பிள்ளைகள் இருவரும் நம்மைப் பெற்று வளர்த்த பிதாமாதாக்களை காட்டிலும் இந்தத் திரவியங்கள் நமக்குப் பெரியனவா! நம்முடைய ஆஸ்திகளெல்லாம் போனாலும் போகட்டும் ; பிதாபிதாக்களை இரஷிப்பதே நமக்குக் கடமை என்று தங்களுள்ளே ஆலோசனை செய்து கொண்டு, கையிலெழுந்த பொருள்ளை எறிந்து விட்டு, தனித்தனி தாயையும் தகப்பனையும் தூக்கிக் கொண்டு, அந்த நெருப்புக்கு ஒருவாறு தப்பி ஓடிச் சென்று, ஒரு சௌக்கியமான இடத்தைச் சேர்ந்தார்கள்.

“தந்தை தாய் பேண்’’ என்னும் நீதிமொழியை அனுசரித்து இந்தப் பிள்ளைகள் பிதாமாதாக்களைச் சுமந்துகொண்டு போன வழியானது “சற்புத்திர மார்க்கம்’ என்று சொல்லப்பட்டுப் பிள்ளைகளுடைய நீதியாகிய அறிவொழுக்கங்களை இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

39. ஒட்டகம்

ஒட்டகம், புல்பூண்டு விருஷங்கள் ஒன்றுமில்லாத பாலை நிலங்களிலே பாரஞ் சுமந்து கொண்டு நெடுந்தூரம் பயணம் பண்ணக்கூடிய மிருகம். இதனால், அராபியர்கள் ஒட்டகத்தைப பாலைநிலக் கப்பல் என்பர். அது ஆயிரம் இறாத்தல் வரையிலுள்ள பாரத்தைச் சுமக்கும். ஒரு நாளுக்கு வேண்டிய உணவை ஒருமணி நேரத்திலே நின்று வைத்துக் கொள்ளும். அந்த இரை சீக்கிரம் சீரணிக்கிறதில்லை. அது தண்ணீர் கிடைக்கிற இடத்திலே வேண்டுமட்டும் குடித்து வைத்துக்கொண்டு, நெடுநாளைக்கு தண்ணீர் குடியாமல் வழி நடக்கும். கடினமாக நடந்தாலும், ஒரு நாளைக்குத் தொண்ணூறு மைல் தூரத்துக்கு மேலும் நடக்கும். அதன் கால்கள் வெப்பமான மணல் நிலங்களிலும் கல் நிலங்களிலும் நடப்பதற்கு ஏற்றவை ; தன் மூக்குத் துவாரத்தை மூடிக்கொள்ளும்.

ஒட்டகம் அவலஷணமாக மிருகம். பிடர்வரையில் ஆறடியுயரம் வளரும். அதன் தலை சிறுத்தும் கழுத்து நீண்டு வளைந்துமிருக்கும். சிலசாதி ஓட்டகங்களுக்கு இரண்டு திமிலும் உண்டு. ஒட்டகங்கள் தாவரவுணவாற் சீவிக்கும். முள்ளுள்ள ப+ண்டுகளையும் கசப்புள்ள வேப்பிலை முதலிய இலைகளையும் பிரீதியாகத் தின்னும் ; தித்திப்புள்ள இலைகளைத் தின்பதேயில்லை. அராபியாவில் ஒட்டங்கள் அதிகமாக உண்டு அத்தேசத்தார் அவைகளை அதிக பீரிதியாகக் காப்பாற்றி அவைகளினால் பலவித நன்மைகளையும் அடைகின்றார்கள். இந்தியாவிலும் சிற்சில இடங்களில் ஒட்டகங்கள் உண்டு.

40. செய்ந்நன்றிகொன்றவர் கெடுவர்

ஒருநாள் ஒரு வனத்திலே நான்கு புறத்திலும் தீப்பற்றி எரிகின்ற ஒரு புதரினுள் அகப்பட்ட பாம்பு. அத்தீயினின்றுந் தப்ப வழியில்லாமல், மிக வருத்தப்பட்டுக் கொண்டு கிடந்தது. அப்போது ஒரு வர்த்தகன் அந்த வழியே போனான். பாம்பு அவளைப்பார்த்து, “ஐயா! என்னை இந்த ஆபத்தினின்றுங் காப்பாற்று. உனக்கு மிகுந்த புண்ணியம் உண்டாகும்’ என்றது அதற்கு அவன் “நீ விஷமுள்ள ஐந்து உனக்கு நான் நன்றி செய்தால் நீ எனக்குப் பின் தீமை செய்வாய்’ என்றான். பாம்பு “என்னுயிரைத் தப்புவிக்கின்ற உனக்குத் தீமை செய்வேனோ! பயப்படாதே என்னுயிரைக் காப்பாற்றிவை’ என்றது.

வர்த்தகன் அதற்சிரங்கித், தான் வைத்திருந்த பையில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை ஒரு கழியிலே மாட்டிப் புதரினுள் விட்டு, அதனுள் நுழைந்த பாம்பை எடுத்து, நெருப்பினின்றும் வெளியில்விட்டுக் காப்பாற்றினான்.

துட்டகுணமுள்ள பாம்பு, தன்னைப் பிழைப்பித்த நன்றியை மறந்து, அவனைக்கடிக்கப் போயிற்று. அவன் மிகுந்த அச்சமும் ஆச்சரியமும் அடைந்து, “நீ ஏன் இப்படி அநீதி செய்ய வருகிறாய்’ என்றான். பாம்பு “நீ எனக்கு என்ன உதவி செய்தாலும் சரி, உபகாரிகளைக் கொல்லுவது எங்கள் வழக்கம். மானுடர்கள் எங்களுக்குச் சத்துருக்கள், ஆதலால் நான் உன்னைக் கடிக்காமல் விடமாட்டேன்’ என்று சொல்லிற்று. அவன் பலவித உபாயங்கள் செய்தும், பாம்பு அவனை விட்டுப் போகவில்லை. அதனால் தனக்கு வந்த ஆபத்தை நினைத்துக் கூச்சலிட்டழுதான்.

அப்பொழுது, அந்த வழியாக வந்த ஒரு நரி அந்த வர்த்தகனைப் பார்த்து, “ஏன் அழுகிறாய்’’ என்றது. அவன் நடந்த சமாசாரத்தைச் சொல்லத் தொடங்கினான். அதன் முன் பாம்பு. “ என்னை இவன் நெருப்பினின்றும் எடுத்து விட்டது உண்மையே ; ஆனாலும் எனக்கென்ன! நான் என்சாதித்தொழிலை விடேன்’ என்று சொல்லி, அவனைக் கடிக்கும்படி நெருங்கிற்று அகப்பட்ட உன்னை இவன் எப்படிப் பிழைப்பித்தான் சொல்! என்று கேட்டது. பாம்பு இவன் தன் தோளிலிருக்கிற பையில் ஒரு கயிற்றைக் கட்டி அதை ஒரு கழியில் மாட்டிப் புதருக்குள் விட்டு, நான் நுழைந்து கொண்டபின் தூக்கி, வெளியில் விட்டான்’ என்றது. நரி சிரித்து ‘இந்தப்பை எவ்வளவு சிறிது ; உன்னுடைய உடல் எவ்வளவு பெரிது ; இதனுள் உன்னுடல் எப்படி அடங்கிற்று’ என்று கேட்டது. பாம்பு வர்த்தகனைப் பையை விரிவாகச் சொல்லி, அதனுள்ளே நுழைந்து தன்னுடைய உடலைச் சுருட்டிக் கொண்டது. நரி, உடனே பையின்வாயை நன்றாகக் கூட்டிக் கட்டும்படி வர்த்தகனுக்குக் குறிப்பாய்க் காட்டிப் பாம்பினுடைய தலைமை நசுக்குவித்தது.

41. கல்வியின் பயன்

ஒரு தேசத்திலே ஓர் அரசனுக்கு இரண்டு புத்திரர்கள் இருந்தார்கள். அரசன் தன் பிள்ளைகள் இருவரில், மூத்தவனுக்கு நாளுக்கு நாள் அவன் வேண்டியளவு திரவியங்களைக் கொடுத்துக் கொண்டும், இளையவனுக்கு ஓர் உபாத்தியாரை வைத்து ஒழுங்காகக் கல்வி கற்பித்துக் கொண்டும் வந்தான். இளையவன் கிரமமாகக் கற்றுக் கல்வியறிவொழுக்கங்களிற் சிறந்தவனாயினான். மூத்தவன் தான் வைத்திருந்த செல்வத்தினாலே மேன்மேலும் செருக்கும் அகங்காரமும் உள்ளவனாய் கல்வியையும் நல்லொழுக்கத்தையும் அவமதித்துத் துட்டனாயினான்.

இந்த இரண்டு புத்திரர்களும் பிதாவினாலே வேறுவேறு தேசங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். மூத்தவன் தன் பொருள்களையே துணையென்று அவைகளை எடுத்துக் கொண்டு குறித்த தேசத்துக்குப்போய்த், தன் மனம்போனவாறே பல வீண்செலவுகள் செய்து கொண்டுபோன பொருள் முழுவதையும் இழந்து, பழி பாவங்களைத் தேடித் தரித்திரனாகிப், பின் கடன்பட்டு அக்கடனை இறுக்க முடியாமையினாலே சிறைச்சாலையில் அடைப்பட்டுப், பெருங்கஷ்டத்தை அனுபவித்தான்.

இளையவன் கல்வியே துணையென்று உறுதிசெய்து, தான் படித்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு குறித்த தேசத்தை அடைந்து, கல்வியிற் சிறந்த அத்தேத்தரசனால் உபசரிக்கப்பட்டு, அவன் தன் மகளை விவாகஞ் செய்து கொடுக்கச் சிலகாலம் அங்கிருந்து, பின்பு தன் மனைவியோடும் அவன் கொடுத்த அளவிறந்த திரவியங்களோடும் தன் பட்டணத்தை அடைந்தான். பிதா அவனுடைய நல்வரவினால் மிகுந்த சந்தோஷமடைந்து, தன்னுடைய இராச்சியத்தை அவனுக்கே கொடுத்தான். பிதாவினுடைய அரசுக்குரிமையைப் பெற்ற இளையகுமாரன், தன் தமையன் அந்நியதேசத்திலே சிறைச்சாலையில் அகப்பட்டிருத்தலைக் கேள்வியுற்று, அவனைச் சிறையினின்றும் மீட்டு, நீதிகெடாது அரசாண்டு, பெரு மகிழ்ச்சியோடு வாழ்ந்தான். மூத்த குமாரனுக்குரிய அரசுரிமை இளைய குமாரனுக்குக் கிடைத்தற்குக் காரணங் கல்வியே.

42. காகிதம்

காகிதம் கந்தைத் துணிகளினாலும், வைக்கோலினாலும் சிலவகைப் புற்களினாலும், மரத்தின் சோத்தியினாலும் செய்யப்படுகின்றது. முதலில் வைக்கோலினாற் காகிதஞ் செய்யும் விதத்தைக் கண்டு பிடித்தார்கள். இப்பொழுது தடிப்பான காகிதங்களைச் சில மரப்பட்டைகளினாலும், மெல்லிய காகிதங்களைச் சில சருகுகளினாலும், கூந்தற் பனையோலையினாலும், ஒருவித வாழையினாலும் செய்யும் விதங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சீனதேசத்தர் மூற்கிலினால் மிகுந்த மென்மையும் உறுதியுமுள்ள காகிதங்களைச் செய்கிறார்கள்.

கிழிந்த வஸ்திரங்களை வெள்ளையாக்கினபின் சலத்தில் நன்றாக, ஊறப்போட்டு, பின்பு அநேக கத்திகள் பொருந்திய ஒரு பெட்டியிலிட்டு, அதனுளிருக்கிற கத்திகளுள்ள உருளையைச் சுற்றுவார்கள். அதனால் அக்கந்தைகள் சன்னமாகத் துணிக்கப்பட்டு, பின்னும் நைந்து சலத்தோடு சேர்ந்து குழம்பாகும். அக் குழப்பில் ஒருவித சுண்ணாம்பைக் கலந்து மிக வெண்மையுள்ளதாக்கி, ஒரு பெரிய பாத்திரத்திலூற்றிச் சுடச் செய்து, சுட்டியாகாமற் கலக்கிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது அக்குழம்பு பால் போலிருக்கும். இழைகள் போன்ற மெல்லிய கம்பிகளால் மரச்சட்டத்திற் பின்னியிருக்கும் ஓர் அச்சை அக் குழம்பிற்றோய்ந்து, நான்கு புறத்திலும் சமமாக நிறுத்தி மெல்ல அசைந்து எடுத்தால், சலமானது அச்சிறு கம்பிகளின் வழியாய் வழிய அக்குழம்பு நுண்ணிய தகடூபோலத் தங்கிவிடும். பின் மரச்சட்டத்தை எடுத்து விட்டு, சமமாக விரிந்திருக்கும் கம்பளி வஸ்திரங்களின் மேல் அதனை விரித்து அதன் மீது அதே அளவுள்ள வேறொரு வஸ்திரத்தை விரித்து, இப்படி ஒன்றின்மேலொன்றாகப் பலவற்றை அடுக்கி, பாரமான ஒரு யந்திரத்தில் வைத்து அழுத்தி அக்காகிதங்களிலுள்ள சலத்தைப் போக்கி, அதன்பின், வஸ்திரங்களை எடுத்துவிட்டுப் பின்னும் ஒருவித யந்திரத்தில் வைத்து அழுத்தி, நிழலில் உலரப் போடுவார்கள். மசி ஒற்றுங் காகிதங்களல்லாதவைகளை மசி ஊறாமலிருக்கும் படி ஒருவித பசையிற்றோய்த்து யந்திரங்களில் வைத்து நன்றாய் அழுவார்கள். இதுவே முன்னாளையிற் காகிதம் கையாற் செய்யும் விதம்.

இப்பொழுது காகிதங்களை மின்சாரயந்திரங்களினால் மிக இலேசாகவும் நன்றாகவும் சீக்கிரமாகவும் செய்கின்றார்கள். அவைகள் எழுதவும், அச்சிடவும், வேறு பலவித வேலைகளுக்கு உபயோகப்படவுந் தக்கனவாக, பலவித நிறங்களும் அளவும் குணங்களும் உள்ளவைகளாய்ச் செய்யப்படுகின்றன.

43. மழை

ப+மியிலே, கடல் நதி குளம் முதலியவற்வைகளிலுள்ள சலம் சூரிய கிரணங்களினால் வெப்பமடைந்து, கண்ணுக்குத் தோன்றாமல் மிகவும் நுட்பமான ஆவியாய் ஆகாயத்திற் சென்று மேகரூபமாகிப் பின்பு குளிர் உண்டாகும் போது சலமாய்ப், ப+மியில் விழுகின்றது. இது மழை என்று சொல்லப்படும். இந்த நீராவி சாதாரணமான வாயுவிலும் பார்க்க இலேசாயிருப்பதினால் மேலே எழும்புகின்றது.

ஒழுகாத ஒரு நல்ல பாத்திரத்திலே சலத்தை நிறைத்து வெய்யிலில் வைக்க, அந்தச் சலம் நாளுக்குநாட் சூரிய வெப்பத்தினாலே குறைந்து வரக் காணுதலால் சூரிய கிரணத்தினாற் ப+மியிலுள்ள சலம் நுட்பமான ஆவியாய் மாறுகின்றது என்பதை அறியலாம். ஒரு பாத்திரத்திலே சலத்தை மூடிவைத்து எரித்துச் சலம் கொதித்து ஆவி எழுந்த பின் மூடியைத் திறக்க அம் மூடியிற் குளிர்ந்த காற்றுப் பட்டவுடன் சலம் வடியக் காணுதலால், நிலத்திலிருந்து சூரிய வெப்பத்தால் நுட்பமான ஆவியாய் ஆகாயத்தில் எழுந்த சலமே குளிந்த போது மழையாய் வீழ்கின்றது என்பதை அறியலாம்.

இப்படிச் சூரிய வெப்பத்தினால் எழுகின்ற நீராவியின் திரட்சி சிறிது குளிர்ந்து, கண்ணுக்குப் புலனாகும் போது அதனை மேகம் என்றும், அது சூரிய வெப்பத்தினாலே கடலிருந்து அதிகமாக எழுந்து தடித்துக் கடலோடு சம்பந்தப்பட்டிருந்தால், அதனை மேகம் சமுத்திரத்தைக் குடிக்கிறதென்றும் சொல்லுவார்கள். மேகங்கள் காற்று வீசுகிற பக்கத்துக்கு ஓடும். அவைகள் ப+மியிலிருந்து பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று மைல் உயரத்திற் சஞ்சரிக்கும் சூரியனே மழைக்குக் காரணமாயிருந்தாலும், அச் சூரியனைச் சுற்றி ஒடுகிற வெள்ளி முதலிய மற்றைக் கிரகங்களுக்கும் சூரியனுக்குமிருக்கிற சம்பந்தத்தினால் அக்கிரகங்களும் மழைக்குக் காரணமாம்.

உயிர்களுக்கு வேண்டும் உணவுப்பொருள் முதலியவைகளை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாகி உயிர்களைக் காத்தலாலும், உலகத்திலே தானதருமங்கள் நடைபெற்று வருவதற்குத் தான் ஏதுவாயிருத்தலாலும், மழை உயிர்களுக்கு இன்றியமையாததாயிருக்கிறது. மழையில்லாமையினால், மலைகளிலிருந்து ஆறுகள் பெருகி வருவதும், கிணறுகளில் நீர் ஊறுவதும் குறைந்து போகும். மலைகளிற் பெய்யும் மழைச்சலம் அருவிகளாயும், அவைகளில் நின்று வற்றி ஊற்றுகளாயும், ஓடி ஒருங்கு சேர்ந்து, ஆறாய்ப் பெருகிறது.

மழைச் சலம் நிலத்தில் விழுமுன் ஒரே தன்மையாகிய நல்ல குணத்தையுடையதாயிருக்கும். நல்லோர்கள் தீயோர்களுடைய சகவாசத்தினாலே தங்கள் நற்குணம் வேறுபட்டுக் கெடுதல் போல, நல்ல மழைச் சலம் தான் சம்பந்தப்பட்ட நிலத்தின் கெடுதியினாலே சலமாகும்.

44. குதிரை

குதிரை மனிதர்களுக்கு உபயோகமாகிய விலங்குகளில் ஒன்று. அது வண்டியிழுக்கவும், ஏறிச்செல்லவும் உதவும். அரசர்களுக்குரிய நால்வகைச் சேனைகளுள் ஒன்று. அது அழகினாலும், யசமானனுடைய எண்ணத்தை அறியும் அறிவினாலும், வேகத்தினாலும் சிறந்தது. ஓட்டத்தினாலே சீக்கிரத்திற் களைப்படைய மாட்டாது. சில சாதிக் குதிரைகள் தமக்குமேல் இருக்கும் ஆளோடு இரண்டு நிமிஷத்தில் ஒரு மைல் தூரம் ஓடும்.

அகவநூலிற் சொல்லிய நல்ல இலஷணம் அமையப் பெற்ற குதிரைகள், தம்முடைய யசமானுக்குச் செல்வம் வெற்றி முதலிய பல நன்மைகளைக் கொடுக்கும் குதிரைகள் அதிக நித்திரை செய்வதில்லை. பெரும்பாலும் நின்ற நிலையிலே நித்திரைசெய்யும். அவைகள் நிலத்திற் புரண்டெழுந்து வதினாலே தங்கள் சிரமத்தைத் தீர்த்து கொள்ளும். பழகின குதிரைகள் சனக் கூட்டத்திலே சஞ்சரிப்பதிற் பிரீதியுள்ளவைகளாயிருக்கும்.

குதிரைச் சாதிகளில், பெருமையிலும் வேகத்திலுஞ் சிறந்தவைகள் ஆங்கிலேய தேசத்துக் குதிரைகளும், அராபி தேசத்துக் குதிரைகளும் ; இந்தியாவிற் குதிரைகள் அவ்வளவு சிறந்தவைகளல்ல, அநேகம் ஆங்கிலேய தேசத்துக் குதிரைகள் பந்தய ஓட்டத்துக்குப் பழக்கப்பட்டு, மிக விலைமதிக்கப்படுகின்றன. இந்தியாவிற் குதிரைகள் ஏறி சவாரி செய்வதற்கும் வண்டி இழுப்பதற்கும் உதவுகின்றன.

45. உலோகங்கள்

பொன்

பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என உலோகங்கள் ஐந்து, இந்த ஐந்தனுள்ளும் பொன் மிகச் சிறந்தது. அது மற்றை உலோகங்களைக் காட்டிலும் கனமும் உறுதியும் ஒளியுமுள்ளது. அதன் நிறம் மஞ்சள் நிறம். அது சில மலைப் பக்கங்களிலும் மலையருவி பாயுமிடங்களிலும், ஆற்றோரங்களிலும் அகப்படுகின்றது. அவ்விடங்களில், வெள்ளி, செம்பு முதலான மற்றை உலோகங்களோடு கலந்துமிருக்கும். கலந்திருந்தாலும், அவைகளினின்;றும் பொன்னை இலேசாக வேறு பிரித்தெடுக்கலாம். பொன் முதலிய உலோகங்களும் இரத்தினங்களும் இருந்து எடுக்கப்படும் இடங்களுக்கு ஆகரம் என்றும், கனி என்றும் பெயர்.
கலப்பில்லாத பொன் நெருப்பிற் சீக்கிரம் உருவாகாது. கலப்புள்ளது. சீக்கிரம் உருகும். கலப்புப் பொன்னைக் காய்ச்சக் காய்ச்ச நிறை குறைந்து மாற்று ஏறும். மாற்றுயர்ந்த சுத்தப் பொன்னுக்குத் தங்கம் என்று பெயர். தங்கத்தை எவ்வளவு காய்ச்சினாலும் நிறை குறையாது. ஒரு குன்றிமணி எடையுள்ள தங்கத்தை ஐம்பது சதுர அங்குல அளவினதாக அடித்துத் தகடாக்கலாம். உயர்ந்த மாற்றுப் பொன்னை தாழ்ந்த மாற்றாக்க வேண்டுமானால் வெள்ளியையும் செம்பையும் சேர்த்து உருவாக்குவார்கள்.

பொன்னில் மற்றை உலோகங்களிற் போலக் கறை ஏறாது. அது மிக அருமையுள்ளது. ஆதலினாலே அதற்கு விலையும் அதிகம். அது அமெரிக்கா, ஆஸ்திராலியா, ஆபிரிக்கா முதலிய இடங்களில் அதிகமாகவும், இந்தியாவிலே சில இடங்களில் சொற்பமாகவும் அகப்படுகிறது. பொன்னினாலே பெரும்பான்மையும் ஆபரணங்களும், நாணயங்களும் செய்யப்படுகின்றன.

வெள்ளி

பொன்னுக்கு அடுத்தபடியாக விலையுயர்ந்ததும், அருமையுள்ளதும் வெள்ளி, வெண்மை நிறத்தையுடைமையால் இதற்கு இப் பெயர் உண்டாயிற்று. இது வெண்பொன் என்றும் பெயர் பெறும். வெள்ளி கனிகளில் வெட்டியெடுக்கப்படும். எடுக்கும்போது, ஈயம் முதலானவைகளோடு சேர்ந்து உலையில் வைத்து உருக்கி, ரசத்தோடு சேர்த்து அரைத்துத் திரும்ப உருக்கினால், ரசம் புகைந்து போக, சுத்த வெள்ளி தேறும். சுத்த வெள்ளியிற் களிம்பு பிடியாது. பொன்னைப்போல வெள்ளி வெள்ளியிற் களிம்பு பிடியாது. பொன்னைப்போல வெள்ளியையும் மிக மெல்லிய தகடாகவும், கம்பியாகவும் செய்யலாம்.

வெள்ளியினாலே நாணயங்களும், சில ஆபரணங்களும், சில பாத்திரங்களும் செய்யப்படுகின்றன ; அதனாற் சரிகையும் செய்கிறார்கள். வெள்ளி அமெரிக்காக் கண்டத்திலே அதிகமாகவும் ஐரோப்பாக் கண்டத்திற் சொற்பமாகவும், அகப்படுகின்றது.

செம்பு

செம்பு சிவப்பு நிறமுள்ள உலோகம். அதிற் களிம்பு அதிகம். களிம்பு விஷத் தன்மையுள்ளது. அதற்குத் துருசு என்று பெயர். செம்புக்குத் தாமிரம் என்றும் பெயர். அது இங்கிலாந்து, ஆபிரிக்கா முதலிய தேசங்களில் ஆகரங்களிலிருந்து அதிகமாக வெட்டி யெடுக்கப்படுகிறது. பஞ்சலோகங்களுள்ளும் தாமிரம் மூன்றாவது ; மிகுந்த ஓசையுள்ளது. அதை உருக்கி வார்ப்பது கஷ்டம். ஆதலால், செம்புப் பாத்திரங்களைத் தகடுகளாற் இலேசாகவும், வெள்ளியைக் காட்டிலும் செம்பு அதிகமாகவும் இலேசாகவும் அகப்படுகிறபடியால், அதிலும் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது. ஒரு ரூபா நிறையுள்ள வெள்ளிக்கு அதிக நிறையுள்ள தாமிரம் வாங்கலாம்.

தாமிரத்தினாலே விசேஷமாகப் பாத்திரங்களும், பைசா அணா முதலிய நாணயங்களும் செய்யப்படுகின்றன. தாமிர பாத்திரம் நெருப்புக்குக் கெடாது, நெடுங்காலம் நிற்கும். செம்பினாலே தகடுகளும் கம்பிகளும் செய்யலாம். செம்புத்’ தகடு கப்பல்களின் அடிப் பக்கங்களுக்குத் தைக்க உதவும்.

ஈயம்

ஈயம் மங்கலான வெண்மை நிறமுய்ய உலோகம், அதை இலேசாக வெட்டலாம், வெட்டினவுடன் அதிக வெண்மையாயிருந்தாலும், காற்றுப்பட்டவுடன் அச்சிறம் குறைந்துபோம் ; அற்ப நெருப்புச் சூட்டினாற் சீக்கிரம் உருகும்.

ஈயம் கனிகளிலிருந்து வெட்டி யெடுக்கபடும்போது பெரும்பாலும் கந்தகத்தோடும் சிறுபான்மை சொற்ப வெள்ளியோடும் கலந்திருக்கும். அது ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய இடங்களில் அகப்படுகிறது. அதனால் தண்ணீர்க் குழாய், துப்பாக்கிக் குண்டு முதலியவற்றைச் செய்கிறார்கள். இது காரீயம் என்று சொல்லப்படும். இதிற் களிம்பு பிடிக்கும். அது விஷத்தன்மையுள்ளது.

இன்னும், வெள்ளீயம் நாகம் முதலிய சில உலோகங்களும் உண்டு. பித்தளை செம்புப் பாத்திரங்களுக்குக் களிம்பேறாமற் ப+சுவது வெள்ளீயம். அது மிகவும் மிருதுவான உலோகம். ஆதலால் தனித்துப் பாத்திரங்கள் செய்கிறதில்லை. வெள்ளீயத்தோடு கொஞ்சங் காரீயத்தை அல்லது நாகத்தைச் சேர்த்துப் பாத்திரங்கள் செய்வார்கள். காரீயம் அதிகமாகச் சேர்த்துச் செய்த பாத்திரங்களிற் புளிப்புள்ள போசன பதார்த்தங்களை வைத்துப் பாவிக்கக்கூடாது.

சுத்தமாக வெள்ளீயத்தை உருக்கி, அதில் மெல்லிய இரும்புத் தகடுகளைத் தோய்த்தெடுப்பார்கள். இது தகரம் என்று சொல்லப்படும். அந்த ஈயம் தேய்த்துபோனால், அல்லது உதிர்ந்துபோனால், இரும்பு தெரியும்.

நாகம் வெண்மையும் கடினமும் களிம்பேறாத குணமுள்ள உலோகம் ; அடிக்க அடிக்க நீளும் ; ஓடியது.

பித்தளை, வெண்கலம்

இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு நாகமும் சேர்த்து உண்டாக்குவது பித்தளை ; அது தணித்த ஒரு உலோகமன்று ; அது மஞ்சள் நிறமுள்ளது. அதை இலேசாக உருக்கலாம். செம்பிற் போலப் பித்தளையில் அதிக களிம்பில்லை. அது கட்டிகளாகவும், தகடுகளாகவும், கம்பிகளாகவும் உருக்கி வார்க்கப்படுகிறது. பித்தளையினாற் பாத்திரங்களும் குத்து விளக்கு முதலியவைகளும் செய்யலாம்.

செம்பையும் வெள்ளீயத்தையும் கலந்து வெண்கலம் உண்டாக்கப்படுதலால் ; அதுவும் தனித்த ஒரு உலோகமன்று, இவ்விரண்டோடு சிறிது நாகமும் சேர்ப்பதுண்டு. வெண்கலத்திற் களிம்பு ஏறாது. அதனால் மணிகளும், சேகண்டிகளும், பாத்திரங்களும், சிற்சில உருவங்களும் செய்யப்படுகின்றன. வெண்கலம் கடின குணமுள்ளது. ஆதலால் அதை அடித்து வேலை செய்தால் உடையும். உருக்கிவார்த்துக் கடையலாம். செம்பு பித்தளைப் பாத்திரங்களைக் காட்டிலும் வெண்கலப் பாத்திரம் சமையலுக்குச் சிறந்தது. பித்தளைப் பாத்திரத்திற்கும் செம்புப் பாத்திரத்திற்கும் ஈயம் ப+சிச் சமையல் செய்தல் வேண்டும்.

இரும்பு

இரும்பு மற்றை எல்லா உலோகங்களிலும் பார்க்க, உறுதியும் உபயோகமும் உள்ளதும், மிகுதியாய் அகப்படக் கூடியதுமான உலோகம். அதற்கு ஒளியில்லை. பொன்னிலிருந்து நிறையில் மிகக் குறைந்தது. ஆயினும், நமக்கு உபயோகப்படுவதிற் பொன்னிலும் விசேஷத்ததாக எண்ணப்படுகிறது. இரும்புக்குக் கரும்பொன் என்றும் பெயர்.

இரும்பு காந்தத்தினால் இழுக்கப்படும். அது பெரும்பான்மையும் கணிகளிலிருந்தும் சிறுபான்மை மலையருவி பாயுமிடங்களிலிருந்தும், எடுக்கப்படுகிறது. கனிகளில், வேறு பொருள்களோடு சேர்ந்து கட்டிகளாகவும், அலுஷருவி பாயுமிடங்களில் மணலோடு சேர்த்துகளாகவும் இருக்கும். அவைகளை உருக்கிச் சவாகைகளாக்குவார்கள்.

இரும்போடு மிகச் சொற்பமான நிலக்கரி சேர்த்து உருக்கினால் அது உருக்காகும். இரும்போடு அதிக நிலக்கரி சேர்த்து உருக்கினால் அது தண்டவாளம் ஆகும். இரும்பு ப+மியில் அநேக இடங்களிலிருந்து அதிகமாக எடுக்கப்படுகிறது. இங்கிலாந்து தேசத்தில் மிக அதிகமாக அகப்படுகிறது.

இரும்பினாலே பலவித யந்திரங்களும், போர் வீரர்களுக்குரிய ஆயுதங்களும், மண்வெட்டி முதலிய கருவிகளும், ப+ட்டு சாவி ஆணிகளும், இன்னும் அநேகவிதமான ஆயுதங்களும், சில பாத்திரங்களும் செய்யப்படுகின்றன. தண்டவாளத்தினாலே உத்திரம், தூண் முதலிய வீட்டுச் சமான்களைச் செய்கின்றார்கள். இரும்பு, பொன் முதலிய சில உலோகங்களை முறைப்படி சித்தூரஞ் செய்து, அவகைளை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

மாணிக்கவாசக சுவாமிகள்

இவர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் என்னும் சைவ சமயாசாரியர் நால்வருள் ஒருவர். இவர் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் என்றும் அருட்பாக்கள், ஓதுபவர்களுக்குச் சிவபத்தி வைராக்கிய ஞானஙகளைக் கொடுத்தலில் உயர்வொப்பில்லாதன. இவர் செய்த அற்புதங்கள் சைவசமயத்தின் உண்மையை விளக்குவன. இவருக்குத் திருவாதவூரர் என்றும் பெயர்.

மாணிக்கவாசக சுவாமிகள் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவ+ரிலே, அமாத்தியப் பிராமண குலத்திலே, திருவதாரஞ்செய்து, சமஸ்த சாஸ்திரங்களையும் இளமையிலே கற்றுணர்ந்து, அரிமர்த்தன பாண்டியனுக்கு முதன் மந்திரியாயிருந்தார். இருக்குநாளிலே, பிரபஞ்ச வைராக்கியம் உண்டாகப்பெற்று, ஞானாசாரியரைத் தேடுவாராயினார். அப்பொழுது பாண்டியன் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்துக் குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான். மந்திரியார் திரவியங்களைக் கொண்டு திருப்பெருந்துறையை அடைந்து, அங்கே ஞானாசாரியரை எதிர்ப்பட்டு ஞானோபதேசம் பெற்றுத், திரவியங்கள் எல்லாவற்றையும் திருக்கோயிற்றிருப்பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவு செய்து, சிவவேடம் ப+ண்டு அத்தலத்தில் வசித்தார்.

இதனை அறிந்த பாண்டியன் குதிரைகளைக் கொண்டு வரும்படி, மாணிக்கவாக சுவாமிகளுக்கு ஓலை அனுப்பினான். அவர் அதனைத் தமது ஞானசாரியராகிய கடவுளுக்குக் காட்ட, அக்கடவுள் “ஆவணி மூல நஷம்த்தன்று குதிரைகளைப் பாண்டியனுக்குக் கொடுப்போம். நீ போய்க் கவலையன்றிப் பாண்டியனிடத்தில் இதனைத் தெரிவிப்பாய்’ என்று அருள் செய்தார். நாயனார் மதுரைக்குப் போய், அவ்வாறே சொல்ல, அரசன் மகிழ்ந்து, குதிரைகளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

இருக்குநாளில், மந்திரிகளில் ஒருவன் “உம்முடைய முதன் மந்திரியார் நீர் குதிரை வாங்கும்படி கொடுத்த திரவியங்களெல்லாவற்றையும் சிவனடியார்களுக்குச் செலவழித்துவிட்டுக் குதிரை வாங்காது உமக்குப் பொய் கூறினர்’ என்று அரசனுக்கு சொல்ல, அரசன் நாயனார் மீது கோபங்கொண்டு, தான் கொடுத்த பொருள்களெல்லாவற்றையும் அவரைத் தண்டஞ்செய்து வாங்கும்படி தண்டலாளருக்குக் கற்பித்தான்.

அவர்கள் அவரை வெய்யிலில் நிறுத்தித் தண்டனை செய்தார்கள். சிவபெருமானிடத்தே பதிந்த உறுதியாகிய மெய்யன்புடைய மாணிக்கவாசக சுவாமிகள், அத்தண்டனைகளாற் சிறிதும் வருத்தமுறாது பாண்டியனுக்குக் குதிரைகளைக் கொடுக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தார்.

பரமசிவன் நரிகளைக் குதிரைகளாகவும், தேவர்களைக் குதிரை வீரர்களாகவும் வரும்படி செய்து, தாம் குதிரை வீரர்களுக்குத் தலைவராகி, வேதமாகிய குதிரையின் மேலேறிக் கொண்டு, மதுரையை அடைந்தார். குதிரைகளின் வரவையறிந்த பாண்டியன் மகிழ்ந்து, மாணிக்கவாசக சுவாமிகள் அழைத்து வரிசைகள் செய்து மகிழ்வித்து, அவரோடு வீதியில் வந்து, குதிரை வீரர்களுக்குத் தலைவராய் வந்த கடவுளுடைய திருக்கோலத்தைத் தரித்துக், குதிரை ஏற்றத்தைப் பார்த்து, அவைகளைக் கயிறுமாறி வாங்கிப் பந்தியிற் சேர்ப்பித்து, குதிரை வீரருக்கும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் விடை கொடுத்தனுப்பித், தானும் மாளிகையை அடைந்தான். அன்றிரவு அக்குதிரைகளெல்லாம் நரிகளாகி, அரசனுக்கும் நகரத்துக்கும் மிகுந்த ஆகுலத்தைச் செய்தன. பாண்டியன் அதிக கோபங்கொண்டு, பின்னும் மாணிக்கவாசக சுவாமிகளைச் சிறையில் வைத்துத் துன்பங் செய்விக்க, அவர் சிவபெருமானை நினைத்து இரங்கினார்.

அருட்கடலாகிய சிவபெருமான், மாணிக்கவாசக சுவாமிகளுடைய கவலையை ஒழுக்கத் திருவுளங்கொண்டு, கங்கையை விடுப்ப, அது வைகை நதியாய், மதுரையை அழிப்பதுபோலப் பெருகிற்று. பாண்டியன் பலவாறு வழிபட்டும், அது மேன் மேலும் பெருகி வருவதலைக் கண்டு, மெய்யன்பராகிய மாணிக்கவாசக சுவாமிகளைத் தான் சிறை வைத்தமையால் இது பெருகி வந்தது என்று எண்ணி அவரைத் சிறையினின்று விடுவித்து, “நாங்கள் உம்மைத் தண்டித்தது தவறு’ என்று கூறி, அவர் உவப்பன செய்து, வைகைக் கரையை அடைப்பிக்கும்படி அவரை அனுப்பினான். பாண்டியன் அன்புரைகள் கூறியபோது விரும்பும் கோபித்த போது வெறுப்பும் இல்லாத மாணிக்கவாசக சுவாமிகள் அந்நதி மதுரையை அழியாதிருக்கும்படி சிவபெருமானை வேண்ட, அது சிறிது பெருக்கடங்குதலும், அவர் அதன் கரையை அடைக்கும் படி அந்தரத்தார்க்குக் கூறுசெய்துகொடுப்பித்தார். அவர்கள் அடைப்பாராயினார்கள்.

சிவபத்தியிற் சிறந்தவளும் வந்தியும் ஆகிய செம்மனச் செல்வி என்னும் ஒரு பிட்டு வாணிச்சியின் பங்கு மாத்திரம் அடைபடாமையினால், அரசனுடைய ஏவலாளர்கள் அவளை அடைக்கும்படி நெருக்க, அவள் தன் பிட்டைக் கூலியாகக் கொண்டு தன் பங்கை அடைப்பாரில்லாமையையும் தனக்கு ஒரு துணையுமில்லாமையையும் சோமசுந்தரக் கடவுளுடைய சந்நிதியிலே விண்ணப்பஞ் செய்து அழுதான். அடியார்க்கெளியராகிய கடவுள், தாமே அவளுக்குக் கூலியாளாக வந்து, அவள் கொடுத்த பிட்டை வாங்கித் திருவமுது செய்து, கரையை அடைப்பவர்போலக் காட்டி அதனை அடையாது. பல திருவிளையாடல்களைச் செய்தார். வந்தியின் கரை அடைபடாமையால் வேலையாளாகிய கடவுளை அரசன் பிரம்பினால் அடித்தான். கடவுள் உடனே மறைந்துவிட்டார். அவ்வடி பாண்டியன் மேலும், மாணிக்கவாசக சுவாமிகள் மேலும், மற்றைச் சரம் அசுரமாகிய ஆன்மாக்களை மேலும் பட்டது. “கடவுள் அடியேனை ஆட்கொள்ளும்படி கூலியாளாகவும் எழுந்தருளினரே! என்று அவருடைய அருட் செயல்களை எடுத்துச் சொல்லி மாணிக்கவாசக சுவாமிகள் பலவாறு இரங்கினார். பாண்டியன் இவைகளெல்லாம் சோம சுந்தரக் கடவுளுடைய திருவிளையாடல்கள் என அறிந்து, மாணிக்கவாசக சுவாமிகளை அடைந்து, “தேவரீரை அறியாது அடியேன் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்து இப்ப+மியைத் தேவரீரே ஆண்டு அடியேனுக்கு அருள் செய்தல் வேண்டு;ம்’ என்று பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அவர் “என்னைத் திருப்பெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே நீர் இவ்வுலக அரசாட்சியைத் தருதல் போலும்’ என்று அரசனுக்குச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு, தவவேடம் ப+ண்டு விரைந்து திருப்பெருந்துறையை அடைந்து, தமக்கு ஞானோபதேசஞ் செய்தருளிய கடவுளை வணங்கி, அங்குள்ள அடியார் கூட்டத்தோடிருந்தார்.

ஆசாரியராகிய கடவுள் “நாம் கைலாசத்துக்குப் போதல் வேண்டும் ; நீங்கள் நம்முடைய பாதங்களைப் ப+சித்துக்கொண்டு இருக்குநாளில் இத்தடாகத்திலே ஒரு சோதி தோன்றும். அதில் வீழ்ந்து நம்மிடத்துக்கு வாருங்கள்’ என்று அங்கே இருக்கின்ற தம்முடைய அடியார்களுக்குக் கட்டளையிட்டு நீக்கினார். மாணிக்கவாசசுவாமிகள் அவரைப் பிரிதலாற்றாதவராய்ப் பின்றொடர்ந்தார். கடவுள் அவரை நோக்கி, “அன்பனே! நீ தடாகத்திலே தோன்றும் சோதியில் வீழாமல், அவ்விடத்தை நீங்கி உத்தரகோசமங்கையை அடைந்து, நம்மை வணங்கி இஷ்டசித்திகளைப் பெற்று, திக்கழுக்கன்று முதலாகிய தலங்களுக்;குப் போய், அங்கங்கே நம்முடைய இந்த ஆசாரிய மூர்த்தத்தைத் தரிசித்துச், சிதம்பரத்தை அடைந்து, புத்தரை வாதில் வென்று, அத்தலத்திலே நம்முடைய திருவடியை அடைவாய்’ என்று அருளிச் செய்து, சிதம்பரத்தின் பெருமைகளையும் உபதேசித்து, மறைந்தருளினார்.

மாணிக்கவாசக சுவாமிகள், கடவுள் கற்பித்தருளிய வாறே, அவருடைய திருவடிகளை அடியார்களோடு குருந்த மரத்தினடியில் ப+சித்து “நமச்சிவய வாழ்க’’ என்பதை முதலாகவுடைய சிவபுராணம் முதலிய திருவாசகங்களைப் பாடி, அங்கே சிவயோகத்தில் இருந்தார். இருக்குநாளிலே, சிவபெருமான் அருளிச் செய்தபடி பொய்கையிலே சோதி தோன்றுதலும், அடியார்கள் எல்லோரும் அதில் வீழ்ந்து சிவபெருமானை அடைந்தார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் “அடியேனை எங்கே ஒளித்தீர்’ என்று அவருடைய பிரிவை நினைத்துப் புலம்பி, பொய்கைக் கரையை நீங்கி, குருந்தர நிழலிலே ஆசாரியருடைய திருவடிகளை வணங்கிச், சிவபெருமான் முன் அருளிச் செய்வதை நினைத்து, திருவுத்தரகோசமங்கை, திருவிடைமருதூர், திருவாரூர், சீர்காழி, திருமுதுகுன்று, அருணாசலம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்று முதலிய தலங்ளை வணங்கி, அத்தலங்கள்தோறும் திருவாசகம் பாடினார். அதன்பின் சிதம்பரத்தை அடைந்து,நடராசப் பெருமானைத் தெவிட்டாத பேரன்போடு தரிசித்து வணங்கிப் பல திருவாசகங்களைப் பாடி, ஆனந்தபரவசராய்ச் சந்நிதானத்தை அருமையாக நீங்கி, அத்தலத்தின் புறவெல்லையிலே வீற்றிருந்தார்.

இவர் சிதம்பரத்திலே வசிக்கும் நாளிலே, ஒரு சிவ பக்தர் கோழ தேசத்திலிருந்து ஈழ தேசத்துக்குப் போயினார். அவர் போய் உட்காருமிடந் தோறும் “பொன்னம்பலம் வாழ்க’ என்று சொல்லுவார். அதைக் கேள்வியுற்ற பௌத்த குரு கோபங் கொண்டவனாய் “நான் போய் அப்பொன்னம்பலத்தைப் பௌத்தாலயமாக்குவேன்’ என்று சொல்லிச் சிதம்பரத்துக்குப் புறப்பட்டு போனான். ஈழ தெசத்தரசனும் ஊமையாயிருந்த தன் மகளையும் அழைத்துக்கொண்டு, சிதம்பரத்துக்குப் போனான். குரு,சிதம்பரத்தை அடைந்து, தில்லை வாழந்தணர்களை வாதத்துக்கு அழைத்தான். அவர்கள் அதற்குடன்பட்டு, இந்தச் சமாசாரத்தை சோழ ராசாவுக்குந் தெரிவித்து, “யாரைக்கொண்டு இவர்களோடு வாதஞ் செய்து வெல்வோம்’ என்னும் எண்ணத்தோடிருந்தார்கள். அன்றிரவு நடராசப்பெருமான் அவர்களுக்குச் சொப்பனத்திலே தோன்றி, “இவ்வ+ரின் புறவெல்லையில் மாணிக்கவாசகனென்னும் நம்முடைய அன்பன் இருக்கின்றான். அவன் புத்தரை வாதில் வெல்வான். நீங்கள் அவனைக் கொண்டு புத்தரோடு வாது செய்வித்து வெல்லுங்;கள்’ என்று அருளிச் செய்தார். தில்லை வாழந்தணர்கள் தாம் கண்ட சொப்பனத்தை மாணிக்கவாசக சுவாமிகளுக்குத் தெரிவித்து, அவரைக் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். அந்த சமயத்தில், சோழராசனும் அங்கே வந்து, மாணிக்கவாசக சுவாமிகளை வணங்கி, “சுவாமி! புத்தர்களை வாதில் வென்று சிவமத ஸ்தாபனஞ் செய்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தான். நாயனார் அதற்குடன் பட்டுப், புத்தர்களோடு வாதஞ் செய்து, அவர்களை ஊமைகளாக்கினார். அதுகண்ட புத்த ராஜன் பிறவி தொடுத்து ஊமையாயிருந்த தன் மகளுடைய ஊமையைத் தீர்த்தருள வேண்டுமென்று பிரார்த்திக்க அவள்மேற் கிருபா நோக்கஞ் செய்து ஊமையை நீக்கிப், புத்தர்கள் முன் வினாவிய வினாக்களுக்கு அவளைக் கொண்டு விடை சொல்வித்து, அப்புத்தர்களுடைய வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஊமையை நீக்கி, எல்லாரையும் சைவர்களாக்கினார். அவர்களும் சோழ ராசனும் மாணிக்கவாசக சுவாமிகளையும் நடேச பெருமானையும் வணங்கித் தத்தம் உறைவிடங்களை அடைந்தார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் நடேசபெருமானையும் திருப்புலீச்சரமுடையாரையும் வணங்கித், திருப்புலீச் சரத்திலே வீற்றிருந்தார்.

இருக்குநாளிலே சிவபெருமான் தமிழ் நாட்டிலே திருவாசகத்தைப் பரவச்செய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினால், வேடங்கொண்டு மாணிக்கவாசக சுவாமிகளிடத்து எமுத்தருளிவந்து, “நீர் பரமசிவன் மேலே பாடிய திருவாசங்களைப் பாராயணஞ் செய்வதற்காக எழுதும்படி வந்தேன். அவைகளைச் சொல்லும், என்று கேட்க, அவர் அவைகளைச் சொல்லினார். வேடங்கொண்ட கடவுள் அவைகளை எழுதி, “பரமசிவன் மேலே கோவை பாடும்’ என்று சொல்லி, அவர் சொல்ல அதனையும் எழுதி, எழுதிய புத்தகத்தையுங் கொண்டு மறைந்தருளினார், நாயனார் அவர் சிவபெருமான் என்றறிந்து, மனமயர்ந்து ஆனந்தசாகரத்தில் மூழ்கினார்.

சிவபெருமான் அத்திருவாசகத்தையும் திருக்கோவை யாரையும் அரிபிரமேந்திராதி தேவர்களுக்குபதேசித்து, “வாதவ+ரன் சொல்லச் சிற்றம்பலமுடையவன் கையால் எழுதியது’ என்று ஈற்றில் எழுதிச், சிற்சபை வாயிலிலுள்ள பஞ்சாஷரப் படியிலே வைத்தார். அத்திரு வேட்டை அருச்சகரொருவர் கண்டு, மற்றையந்தணர்களுக்குச் சொல்ல, அவர்கள் வந்து பார்த்து, ஆச்சரியமுற்று, அதனைப் ப+சித்து வாசித்து, மனங்கசிந்துருகி, வீட்டுநெறிக்குரிய சைவநூல் வேறுண்டோ, என்று வியந்து அவைகளின் பொருளை அறிய விரும்பி, மாணிக்கவாசக சுவாமிகளிடத்துச் சென்று நிகழ்ந்ததைச் சொல்லி, “இவற்றின் பொருளை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார்கள். மாணிக்கவாசக சுவாமிகள் “நடேசபெருமானுடைய சந்நிதியிலே பொருள் சொல்லுகின்றோம்’ என்று அவர்களுடன் சென்று கனகசபை அடைந்து, “இப்பாடல்களின் பொருள் இந்தக் கடவுளே!’’ என்று சுட்டிக்காட்டி, அவர்கள் எல்லாங் காணும்படி சிற்சபையுட் புகுந்து, சிவத்தோடு இரண்டறக் கலந்தார். அதனைக் கண்ட சிதம்பரத்திலுள்ளவர்களும் மற்றையோர்களும் பேரானந்த மடைந்தார்கள். தேவர்கள் கற்பக் ப+மழை பொழிந்தார்கள்.

தேனூறும் வாசகங்களநூறுந்திருக்கோவை
நானூறுமமுதூறமொழிந்தருளுநாயகனை
வானூறுங்கங்கைநிகர்மாணிக்கவாசகனை
யானூறுபடாதவகையிருபோதுமிறைஞ்சிடுவேன்.

நமச்சிவாய வாழ்க!
நாதன்தாள் வாழ்க!