கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆதி பகவன்

Page 1


Page 2

ஆதி பகவன்
முருகையன்
அறிவழகுப் பதிப்பகம்

Page 3
முதற் பதிப்பு 1978
ஊடு போய் எதையும் உள் புகுந்தேறி ஒடி ஒடி அலசும் நுனி கொண்ட ம்ோடி யான வடி வேலது வாங்கி மூசி வீசுபவர் பாவலர் ஆவார்.
A ATHI : * B HA GAWAN
A poem by R. Murugaiyan
Published by ARIVAZHAKU PATHPPAKAM
Periya Arasady, Chavakachcheri.
விலை ரூபா. 3.00 உரிம்ை ஆசிரியருடையது
அச்சுப்பதிவு: திருக்கணித அச்சகம் மட்டுவில் - சாவகச்சேரி.

பதிப்புரை
ஈழத்தில் தமிழ் இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ளனவா? இன்று இலக்கிய உலகில் பலமாக - பரவலாக அடிபடும் கேள்வி இது. ஒவ்வொருவரும் தத்தமக்கு எட்டிய மட்டில், கவிதையா? வளரவில்லை; நாடகம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உள்ளது, சிறுகதையா? அது செத்துவிட்டது, இல்லை தேக்க நிலையிலேயே உளளது; என்று தம்மளவிற் கண்டவற்றைக் கொண்டே முடிவு கட்டிவிடுகின்ருர்கள். ஆனல் ஈழத்து இலக்கியம் இதுவரை சகல துறைகளிலும் எந்த அளவு வளம் பெற்றுள்ளதென்று யாரும் இலகுவில் வரையறுத்துக் கூறிவிடமுடியாது. ஏனெனில் எத்த னேயோ சிறந்த படைப்புகள் பலவிதப்பட்ட நெருக்கடி நிலைமை களால் நூலுருப்பெற முடியாமல் வாசகன் க்ண்களுக்குப் படா மல் - நல்ல திறனய்வாளன் கைகளுக்குட் சிக்காமல் - இருக்கின் றன. ஆகவே இலக்கியம்பற்றி முடிந்த முடிபான கருத்துக்களாக எதனையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்ற தென்பது புலனுகின்றது.
மேலும், இலக்கிய ஆக்கங்களை வெளியிடும் பதிப்பகங்கள், வெளியீட்டகங்கள் போன்றனவும் யதார்த்தத்தில் தம்மைப்பற் றிக் கூறிக்கொள்ளும் அளவிற்குச் சரியாக இயங்குவதும் இல்லை. அன்றியும் அவை குறிப்பிட்ட ஒருதுறை நூல்களுக்கே முக்கியத் துவமளித்துப் பிரசுரிக்கின்றன. இதனுல் ஏனைய துறைகளை இலக் கியச் சுவைஞன் படித்துச் சுவைப்பதற்குரிய வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையில் உள்ளான். உதாரணமாக நல்ல கவிதைத் தொகுதி ஒன்றையோ, காவியம் ஒன்றையோ இன்று பரவலாக நூல்களை வெளியிடும் நிறுவனங்கள் வெளிக்கொணர முன்வர வில்லை.
இத்தகைய - இன்றைய - சூழ்நிலையில் நாம் எம்மால் இயன் றளவு முயன்று ஆண்டுதோறும் குறிப்பிட்டளவு இலக்கியத்தரம் வாய்ந்த எழுத்துக்களை நூலாக்கி வெளியிட முன்வந்துள்ளோம். எங்கள் ஆவல் இனிது நிறைவு பெறுவதும், எண்ணம் ஈடேறு -வதும் சுவைஞர்களுடைய கைகளிலேதான் தங்கியுள்ளன.

Page 4
எங்கள் உணர்வுகள் முதற்படியாக கவிஞர் முருகையன் அவர் சுளின் “ஆதி பகவன்’ என்ற இந்நெடுங்கவிதை மூலமாக வெளிக் கொணரப்படுகின்றன. முருகையன் அவர்கள் தனித்துவம் வாய்ந்த கவிஞர் திறனுய்வாளர்; நாடக ஆசிரியர். கவிதைத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள இருட்டடிப்புக்களுக்கு ஒரு சவா ல்ாக விளங்குபவர். இன்றைய நிலையில் இக் கவிதைநூல் வெளி வருவது - வரவேண்டியது மிகவும் பொருத்தமானது - அவசிய ம்ானது
மிகக்குறுகிய காலத்தில் இந்நூல் வெளிவர ஒத்துழைப்பு நல்கிய இலக்கிய ஆர்வலர்களுக்கும், அழகாக அச்சிட்டுதவிய மட்டுவில் திருக்கணித அச்சகத்தினருக்கும், தமது நூலை வெளியிட இசைந்த திரு. முருகையன் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம். இந்நூலை வாங்கி ஆத ரிக்கும் அன்பர்க்ளுக்கும் எங்கள் அன்பைத் தெரிவிக்கின்ருேம்.
பெரிய அரசடி, அறிவழகுப் பதிப்பகத்தினர்
சாவகச்சேரி.

நூலாசிரியர் உரை
g ஆண்டுகளின் முன், ஆணல்டு வெஸ்க்ர் என்னும் நாடகா சிரியரின் கட்டுரை நூலொன்றில், ஒர் உருவகக் கதையைப் படிக்க நேர்ந்தது. ஆதாம் ஏவாள் பற்றிய கதையொன்றைப் புனைந்து கூறி, பிரித்தானிய மக்களின் வாழ்நிலையை உணர்த்தி யுள்ளார் வெஸ்கர். இரண்டு பக்கங்களுள் அடங்கும் அவ்வுருவகக் கதையே 'ஆதி பகவன்" என்னும் இந்நெடுங் கவிதையின் வித்து. ஆயினும் இது முற்றிலும் வேருனதொரு வகையிலே வளர்ந்து சென்றுள்ளது எனலாம்.
“ஆதி பகவன் முதற்றே உலகு" என்ருர் வள்ளுவர். இக் கவிதையில் வரும் ஆதி பகவன் வள்ளுவர் சுட்டிய ஆதிபகவன் அல்லன். பிற்காலக் கதைகளில் வள்ளுவரின் தாயும் தந்தையும் என்று பேசப்படும் ஆதியும் பகவனும்கூட இங்கு கருதப்பட வில்லை. ஆதியும் பகவனும், என் கவிதைத் தேவைகளின் பொருட்டு நான் படைத்துக்கொண்ட தாயும் தந்தையும். ஆதி பகவனின் கதை உலகின் கதை; உலக மனிதனின் கதை. ஆதி பகவனின் குடும்பம், மனித சமுதாயம். எனவேதான் ‘ஆதி பகவன்’ தனிம்னித குடும்பச் சித்திரம் போன்று தொடங்கினலும், சமுதாயத்தின் வரலாருக விரிந்து பரந்து சென்று கொண்டிருக் கிறது.
வசன இலக்கியங்களுக்கு இல்லாத வசதிகள் சில, கவிதை இலக்கியத்துக்கு உண்டு. ஒரே சமயத்திலே பலவேறு தளங்களி லும் சென்று பொருள் பயக்கும் பண்பும் அவ்வசதிகளுள் ஒன்று. கவிதைக்குள்ள அந்த வசதியை 'ஆதி பகவனில்" நான் நன்கு பயன்படுத்த எண்ணினேன். கால - இடச் சிறப்பியல்பு களின் தத்ரூபச் சித்திரம் இங்கு இல்லை; ஆயினும் மனிதகுல வளர்ச்சிப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டமே என் கவிதைப் பொருள். அந்த வகையில் நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய தொடர்புடையதாக "ஆதி பகவன் அமைந்துள்ளது என நம்புகிறேன்.
பல தடங்கல்களால் வாசகர் கைகளுக்கு எட்டாமல் இருந்த இக்கவிதை நூலை வெளியிட முன்வந்த "அறிவழகுப் பதிப்பகத் தார்" என் நன்றிக்கு உரியவர்கள். அவர்களது பணி தொடர்க என வாழ்த்துகிறேன்.
கல்வயல், இ. முருகையன் சாவகச்சேரி,

Page 5

1.
குடியிருப்பு
ஆதி என்ருெருத்தி வரம்பிலே நடந்தாள். அவள் ஒரு நடைமுறைச் சிற்பம்; காதலின் இலக்காய் அடைந்திடத் தக்க கன்னிமை இளநலச் சிப்பம்; ஊதி உள் நிறைந்து பூரணமான உருத்திரள் தசைகளின் செழிப்பு. தோதுடை ஒருவன் தழுவிடற்குரிய
துரு துரு-கொழுமையின் பொழிப்பு இளஞ்சிவப்பான தாவணியொன்றை எடுத்து மேல் விசுக்கிய கோலம் -
வளஞ்சிறப்பான வயல்நிலப் பசுமை வாய்ப்பினைக் கண்வழிப் பருகும் உளம் படைத்தவளாய் உலா வருகின்ருள் ஒயிலுடன் அச்சிறு குமரி.
களஞ்சியம் அவளே கவர்ச்சிகட்கெல்லாம் - கவலை இல்லாதவள் சிறுமி.
-1-

Page 6
நெற்பயிர் குலுங்கும் கதிர்களைச் சும்ந்த நீர்நிறை வயலிலே நடந்தாள். கற்பனை கடந்து விரிந்த வான் கிண்ணிக் கவிழ்ப்பின்கீழ் இளங்கிளி நடந்தாள். பொற்பெனுஞ் சுடரும், புதும்ணம் ஒன்றின் பூரண நறுமலர்க் கமழ்வும் முற்படத் தோன்றி மோக்னம் இசைக்க மொய்குழல் வரம்பிலே நடந்தாள்.
ஆதியின் நடையில், கனட்டியுள் நின்ற ஆடவன் கண்களைப் பதித்தான். பாதியில் தனது வேலையை நிறுத்தப் பார்க்கிருன் -
அவன் பெயர் பகவன்.
- சேதி ஒன்று
என்ருன்.
- என்னவ்ாம்?
என்ருள் சேயிழை.
பகவனே சொன்னன்: - தேதியொன்று எனக்கு நீ தரவேண்டும். எதற்கெனில், சேர்வதன் பொருட்டு.
- சேர்வதன் பொருட்டா? நிச்சயம் தரலாம். இன்றைய தேதியே தரலாம். ஊர்மனைப் புறத்து மருதநீழலிலே உள்ளது வெண்மணற் பரப்பு. வாரி உண்டிடவும் மணந்து கொண்டிடவும் வல்லமை உண்டெனில், வரலாம். ஆருமே பார்க்கார்.
இன்று அமாவாசை, அதாவது, கடுமிருள் அடர்ப்பு.
-2-

I
ஆதியின் பதிலைக் கேட்டவன் பகவன் ஆண்மையால் முடுக்கிடப்பட்டான். மோதி உள் மீறும் உணர்ச்சியின் வழியிற் கருமத்தை முடித்திட நினைத்தான்.
வீதிகள் கடந்தார் இருவரும்.
அந்த வெண்மணல் ம்ேட்டினை அடைந்தார். சோதி வானவனும் சூரியன் மறையத் தொடர்ந்தது கடுமிருள் இரவு
கட்டினர்,
கட்டித் தழுவினர்.
தமது காம்த்தின் வேகத்திற் களித்தார். முட்டினர்.
முட்டி, ம்ோதினர்
ம்ோதி
மோகத்துள் முழுகிடலானர். விட்டுவிட்டு அணைத்தார். விரல்களாற் குழைத்தார். விரியிதழ் அடிக்கடி பொருத்தி ஒட்டினர். உறிஞ்சி ஒத்தடம் கொடுத்தார். உறுப்புகள் உறுத்திட நெரித்தார். பல் கடந்தூரும் நாவினல் உசாவிப் பகவனும் ஆதியுட் புகுந்தான். சில்லறை நினைப்பு யாதுமே இன்றிச் செய்தொழில் நிகழ்ச்சியில் திளைத்தார். புல்லிய அந்த நெருக்கடி இறுக்கம் புகட்டிய சுகத்திலே திளைத்தார். *மெல்லிய உணர்வு விழிப்பதன் பலனுய் விளைநலன் இதோ?’ என வியந்தார்.
-3-

Page 7
பகவனும் ஆதி எனப்படும் அந்தப் பாவையாள் தானும் ஒன்முகிப் புகுவழிப் புகுந்தும் நெரிவழி நெருங்கிப் புல்லியும் சுரந்த இன்பத்தின் தகுதியும் பண்பும் புனிதமும் பொறுப்பும் தன்மையும் சரிவர உணர்ந்தார்.
சகலரும் அறிய ஒரு சிறு குடிலில் தங்கினர்,
இல்லறம் நடத்த - அவன் அந்தக் குடிலைக் கட்டினன். அதற்குள் ஆதியும் போய்க் குடி அமர்ந்தாள். அவன் சில மூடை நெல் கொண்டுவந்தான். அவள் அதை அரிசியாய்ப் புடைத்தாள். அவன் சில கிழங்கும் கத்தரிக்காயும் அவரையும் மீன்களும் தந்தான். அவள் அவை எல்லாம் கறி, குழம்பாக்கி ஆக்கினுள் சோற்றையும்;
அளித்தாள்.
மாதங்கள் ஓடி மறைந்தன.
பின் ஓர் மகன் வந்து பிறந்திடலானன். வேதங்கள் ஒதி, விழாக்களுஞ் செய்து மிக மிக ம்கிழ்ந்தனர் பெற்ருே?ர். "யாது எங்கள் இன்ப விளைவினைப் போல இகத்திலே உண்டு?’ என வியந்தார். "தீதெங்கும் இல்லை;
எதுவுமே இல்லை; சிறந்தது வையகம்' என்றர்.
வயலிலே முழுநாள் உழைப்பவன் பகவன். மங்கையும் உதவுவாள் விரும்பி. புயலிலே, மழையில் பணி எனும் புகாரின் போர்ப்புள குளிர்க் கொடும்பொழுதில், வெயிலிலே, வெதுப்பும் வெப்பிலே - எல்லாம் விருப்புடன் உதவுவாள் மிகவும். செயலினுல் அவர்கள் பயன்பல க்ண்டார் தீங்கிலா வாழ்நிலை கொண்டார்.
- -

2
புகழ் விழா
இப்படியாக, ஆதியும் பக்வன் எனப்படும் ஆண்பிள்ளை தானும் செப்பம்ாய் வாழ்ந்து வருகையில். ஒரு நாள் -
செல்லையர் என்பவர் வந்தார். கப்பருகினிலே க்னகர் என்பவரும் காலடி வைத்தனர் -
சிரித்தார்.
- எப்படிச் சுக்ங்கள்?
இப்படி இருங்கள்
என உபசரிக்கிருன் பகவன்.
திண்ணைக் குந்தருகிற் பாய்த்தடுக்கு இட்டான்.
செல்லையர் அதற்குமேல் அமர்ந்தார்.
-5.

Page 8
க்ண்ணுக்குள் விழுந்த தூசியைத் துடைத்துக் கனகரும் தடுக்கிலே இருந்தார். - உண்ம்ைக்குப் பகவன், உற்பத்திப் போரில் உங்களின் தொண்டினை ம்ெச்சிக் கிண்ணத்தைத் தர நாம் மிக விரும்புகிருேம்.
கேட்டவள் தனக்குள்ளே சிரித்தாள்
- நீங்கள் ஆர்?
என்ருள், முத்தொளிப் பல்லின்
நிரை சற்றே நிலவொளி எறிக்க,
- நாங்களா? நாங்கள் நலச்சனக் கட்சி
நடத்திடும் தொண்டர்கள்.
இவர் தான்
தேங்கும் எம் நாட்டின் பொருளியல் திருத்தும்
செயற்குழு இயக்குநர்.
நானே
காங்கையர் புதல்வன்; கனகர் என்பது பேர்.
கணக்கியற் சான்றிதழ் பெற்றேன். இப்படி உரைத்தார் கனகரும்.
இனிய
எழிலுடை ஆதியோ சிரித்தாள். - அப்படி நீங்கள் கிண்ணத்தைத் தந்தால் அதனை நாம் ஏற்றிட வருவோம்:
- திங்கள் பின்னேரம் உங்களை மெச்சும்
திருவிழா நடைபெறும்;
GIC55;
எங்குமே உங்கள் புகழ் பெருகிடுக,
என்றனர்
கனகரும் போளுர்,
செல்லையர் என்பார் கனகரைத் தொடர்ந்து
செல்கிருர்,
-6-

அவர்கள் போய் மறைய, பல்வரி சிறிதே புலப்படும் பகவன் பாவையை அருகிலே அழைத்தான். --செல்வராய் நாங்கள் இல்லையே எனினும் சீர்த்திகள் உடையராய் உள்ளோம். அல்லல்கள் அறியோம் அனைத்தும் எம் உழைப்பின் ஆற்றலால் நேர்ந்துள்ள அழகு!
இவைகளைச் சொல்லி எழும்பினுன் பகவன் எடுத்தனன் பஃனமட்டை.
உரித்தான். அவைகளை வாட்டி நார்களை முறுக்கி ஆக்கினன், வலியதோர் கயிற்றை, கவர் வைத்த முருக்கம் ஆடுகால் கொஞ்சம் காட்டிய ஆட்டத்தை நிறுத்தும் நினைவொடும் போனன், கிணற்றடி நோக்கி. நேரத்தை வீண்செய ஒப்பான்.
துலாச் சரிப்படுத்திக் கட்டிய பின்பு, தோட்டத்தின் எல்லையில் நின்ற பலாப்பழ மரத்தில் ஏறினன்.
ஏறிப் பழமொன்றை இறக்கினன், பகவன்.
நிலாப் பொழிகின்ற அந்த நாள் இரவில் நெகிழ்ந்த அப்பழச்சுளை அருந்தி, விலாப் புடைத்திடவே, நித்திரை கொண்டார், மேற்படி குடும்பத்தார், மூவர்.
உற்பத்திப் போரின் வெற்றி கொண்டாடும் உலகியற் கட்சியார் சொன்ன சொற்படி
-7-

Page 9
அடுத்த திங்கள் மாலையிலே தோப்படித் திடலுக்குப் போனர்.
பற்பலர் கூடி ஒருமித்து மொய்த்த பரந்த அத் திடலிலே -
மேடை ஒப்புயர்வின்றிப் பகட்டுடன் விளங்க "ஓ! இது அற்புதம்‘ என்ருர்.
பக்வனும் ஆதி எனப்படும் அந்தப் பாவையும் திடலினை நெருங்க வெகு பணிவாகக் கனகனுர் வந்து விநயம்ாய் நோக்கினர் அவரை. - புகழ் மிகப் படைத்த பகவரே! நடந்தா, புதுவிழாத் திடலுக்கு வந்தீர்? கடவுளே, நாங்கள் கால் மணிப் பொழுதிற் காரொன்றை அனுப்பவே இருந்தோம். மன்னிக்க வேண்டும், முன்னரே நிகழ்ச்சி வரிசையை அறிவித்து, விரிவாய்ச் சொல்லிடாப் பிழையை - விழாச் செயலாளர் சோம்பலால் நேர்ந்தது இக்குற்றம்.
எல்லை இல்லாம்ல் வழவழா என்றே இவைகளைக் கூறினர், கனகர். - தொல்லையே இல்லை, துயர்ப்படல் வேண்டாம் -
சுருக்கமாய்ப் பேசினள் ஆதி.
- வயித்திய நாதன் கோயிலில் தொடங்கி ம்ங்கல வாத்தியம் முழங்க உயர்த்திய கொடிகள் காற்றிலே அசைய ஊர்வலம் நடத்திடல் வேண்டும். தியக்கம் ஏன்? வேண்டாம். வாருங்கள்,
எனறு செல்லையர் என்பவர் சொன்னர்.
-8-

i
உகப்புடன் இசைந்தார், பகவன் ஆதியர்கள் ஒவென எழுந்தனர் ம்க்க்ள். சாரி சாரிகளாய்த் தோரணம் தொங்கும் சலசலப்புடைய வீதிகளில் "ஸாறி ஸாறிகளாய் உடுத்த மங்கையரும் சார்ந்தனர். பிள்ளைகள் சேர்ந்தார். ஊரிலே அன்று விடுமுறை - அந்த ஓய்வுநாட் சகலரும் கூடி நேரிலாக் கும்பல் -
டவர், கிழவர்,
சிறுமியர் நெருக்கம்ாய்க் குவிந்தார்.
நாலு சோடிகளாய் நாயனக்க்ாரர் நல்லிசைப் பண்களைப் பொழிந்தார்.
சோலைபோற் பசிய தழை, ம்லர் கொண்டு சோடித்த தெரு இரு மருங்கும் மூலைதோறெல்லாம் சந்தனம் மணக்க முத்தமிழ்க் கீதங்கள் ஒலிக்க, வாலிபர், மகளிர், கிழவர்கள், சிறுவர் - வந்தவர் அனேவரும் சூழ்ந்தார். ஊர்வலம் மெல்ல நகரலாகியதாம்
ளைரவர் நடுவிலே பக்வன் - ஆதியின் கையைப் பற்றியே நடந்தான்.
அனைவரின் கண்களும் அவர்மேல்!
கார் பல முன்னும் பின்னரும் ஊரக் கடைசியில், விழாத்திடல் அடைந்தார். மோகலாயிற்ரும் வாழ்த்தொலி, வானை - முழக்கமாய் வெடித்தெழுந்தோங்கி
سے 9 -

Page 10
மேடையில் ஏற்றி அவர்களைப் போற்றி விரிவுரை பலப்பலர் செய்தார். - தேடுதற்கரிய செல்வமாய் வாய்த்தார்; தேசத்தின் மாட்சியாய்ப் பூத்தார். சோடியாய் வந்து நாம் செய்யும் விழாவின் சோபையை மிகுவித்த பகவன் - ஆதியாள் என்னும் இரண்டு பேருக்கும் ஆயிரம் வணக்கங்கள் உரைத்தோம். இந்த நாட்டினுக்கே முதுகெலும்பாகும் இவர்களால் அல்லவோ,
வயலிற் செந்தளிர்ப்பு என்ற சிறப்பைநாம் அடைந்தோம் தேசமே இவர்களால் வாழும். இந்த மாநிலத்தார் பசியினைப் போக்கும் இவர்களின் உழைப்பினை மெச்சி வந்தனை செய்தல் தகும் தகும்,
என்று
வாழ்த்தினர், செல்லையர் என்பார்.
- உழைப்பெனும் தவத்தால் உயிர்க்ளைக் காக்கும் உங்களைப் புகழ்ந்து பாராட்டும் எழுச்சியின் சின்னம் இவ்விழா. நீங்கள் எங்களின் உறுதுணை, இன்று தொழத்தகும் உங்கள் செயற்றிறம்,
என்று சொல்லினர் கனகர். மின் எறித்துப் பளிச்சிடும் வெள்ளிக் கிண்ணமொன்று எடுத்துப் பகவனின் கைகளில் அளித்தார்.
IV
ஆதியும் பக்வன் ஆகிய துணையும் அளவிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்,
- 10 -

காதலின் சுவையை முன்புணர்ந்தவர்கள் கரும்த்தின் பயன் சுவை தெளிந்தார்.
பாதகமான நிலைமைகள் பின்னர் பலப்பல தோன்றிய படியால் நீதியே சரிந்து விழுந்ததாம்.
அப்பால் நேர்ந்தவை இனி விரித்து உரைப்பாம்.
-11

Page 11
3 முதலாண்மை
புகழ் விழா நடந்தும் இரண்டு மாதங்கள் போயின.
பின் ஒரு காலை. தலையிடி என்று படுத்திருக்கின்ற தலைவனைப் பணிவுடன் நோக்கி நெகிழ்வுடன் சுடுநீர்ப் பானமும் அளித்தாள், நேரிழை -
அந்த வேளையிலே.
பட பட என்று கதவொலி கிளம்ப பகவனும் - um fi?
என்று கேட்டான்.
கனகர் தான் வந்திருந்தார். கையிலோர் கணக்குக் கட்டு! உசாவினுர் சுகங்கள்.
- 12

பின்னர் ஒரு பெருந்திட்டந் தன்னைப் பகவனின் முன்னுல் வைத்தார். - பல தொழில் விருத்தி மூலம் சுகநிலை தோற்றுவித்தல் சுலபமாய் இயலும்,
என்ருர், - கமத்தொழிலாலே வரும்படி மிகவும் காண்கிறீர். அவைகளைச் சும்மா நினைத்தவாறெல்லாம் செலவழிக்கின்றீர். நிலைமையைச் சீர் செய்ய நினையிர், அமைப்பம் ஓர் திட்டம். அதன் பயனுக ஆலைகள், சாலைகள் நிறுவி, கலைத்தொழில் நுணுக்க உத்திகளாலே காசுகள் சேர்க்கலாம் நாங்கள். வேருென்றும் நீங்கள் செய்திடவேண்டாம். விடுங்கள் என் பொறுப்பிலே எல்லாம். நான் இந்தப் பரந்த பாரிய திட்டம் நடத்தியே முடித்திட உழைப்பேன். வழமைபோல் நீங்கள் வயலிலே உழைக்கும் வரும்படி முழுதிலோர் பங்கைக் கிழமைதோறும் எனது களஞ்சிய அறைக்குக் கிடைத்திட ஒப்புதல் தருக. மண்ணினல் அமைத்துச் சாணியால் மெழுகி வைத்த இவ்வறியதோர் வீட்டுத் திண்ணையை உடைப்போம். விவந்த சீம்ெந்தாற் "செய்தபின், மினுக்கலாம், வடிவாய். "ஒண்ணுளே" ஒலை "மேய்ச்சலின் வழியில் ஒன்பது வாயில்கள் தெரியும். எண்மையை ஒழித்துப் பளிச்சிடும் விதானம் இயற்றுவோம், வித்திரம் நிரப்பி. சுவர்களில் எல்லாம் ஒவியம் வரைவோம்,
-13

Page 12
சுகந்தங்கள் முறைப்படி நிரம்பும் வசதிக்ள் புரிவோம். மணிவெயில் எறிக்கும் வளைப்புகள் எண்ணில வனைவோம். சகலமும் நிரம்புஞ் சுகநிலை பெறுவோம்.` சாதனை இவையிவை புரிவோம். உவகையே புவியாய் ஓங்கிய சீர்மை உச்சியை அணைந்திடத் துணிவோம். சம்மதந் தானே?
என்கிருர் கனகர்.
தலையினை ஆட்டினன் பகவன்.
- அம்மவோ!
என்று வியப்பிலே ஆதி அழகிதழ் மூடவும் மறந்தாள்.
- செம்மலே, உங்க்ள் சிறிய சேமிப்பாற் செய்யலாம் விந்தைகள்,
உணர்க. இம்மையிற் சுவர்க்க இனிமையை அடைதல் இயலும்ே!
என்கிருர் கனகர்.
ஆசை வார்த்தைகளை நம்பினுன் பக்வன்.
என ஒப்பினுன்,
பின்னர் காசு சேர்த்திடவும் கிழமைகள் தோறும் கனகனர் பிரசன்னம் ஆனர்.
-14

*வேலை செய்து ஈட்டும் உபரியைக் கொண்டு மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தல் சாலும்’ என்றுணர்ந்த ஆதியும் பகவன் கானுமே நெஞ்சகம் குளிர்ந்தார். ஏலுமாறெல்லாம் கனவுகள் க்ண்டார். எண்ணத்திற் போற்றினர் அவற்றை. காலமொன்று உதிக்கும் என எதிர்பார்த்துக் காப்புணர்வுடன் அவர் வாழ்ந்தார்.
இவ்விதம் கொண்ட துணிவினல், பகவன் இராப்பகல் ஒய்வின்றி உழைத்தான். செவ்விய துணைவி ஆதியும் இணைந்து செயல்களில் உதவியாய் அனைத்தாள். கைகளை அசைத்தார். மண்ணினைப் புரட்டிக் கலப்பையின் கொழுவினை நுழைத்தே நொய்ய அந்நிலத்தை நோப்படக் கிளறி நுக்த்தடி முழுப்பலன் எடுத்தார். புதுவகை உரங்கள் ரசாயன அறிஞர் போதனைப்படி எங்கும் தூவி அதிவிரைவான வளர்ச்சியை ஈட்டி ஆயிரக் கணக்கிலே உழைத்தார். மெதுமெதுவாக மீந்த தம் காசின் மிகையினைக் கனகரின் வசத்தில் உதவுதலானுர்.
கனகரும் பிறரும் ஓடினர், ஆடினர், உலைந்தார்.
புகை கக்கும் ஆலைக்கூட்டம் புதியதாய் முளைத்துத் தோன்றிப்
கவனின் விட்டுக்கப்பாற் பரந்ததாய் எழலாயிற்று. தொகை தொகையாக மக்கள்
தொழிற்களம் நோக்கிப் போனர்.
-15

Page 13
வெகு கடும் உழைப்பை விற்று வேதனம் பெற்றுக் கொண்டார். உடலுடன் உயிரை ஒட்டி ஒருமிக்க வைக்கத் தக்க அதி சிறு தொகையே கூலி! அதை அவர் வாங்கிக் கொண்டார். புதுவித நுகர்வுப் பாங்கிற் பொருள் வகை பெருகிப்போக அவை பெறும் ஆசையாலே அவர் பெருங் கடன்கள் பெற்றர்.
லாபங்கள் அளவில்லாமல் எடுக்கிருர் க்னகர்,
பின்னர் மேலும் பல்வக்ையில் எல்லாம் மிகப்புதுத் தொழிற்களங்கள் ஆலைகள், நிறுவனங்கள், அமைப்புகள், நிர்வாகங்கள், ஒலைகள், பட்டியல்கள், ஒதுக்கல்கள் பெருக்கலானர். பலபடிக் கூலியாளர் பலபடி மேலாளர்கள் பலபடி முகாம்ையாளர் பலபடி ஆணையாளர் பலபடிக் கணக்காளர்கள் பலபடிக் கவனர்மார்கள் பலபடி உத்தியோகப் பதவிகள் வகுத்துக் கொண்டார். இத்தனை பேர்க்குமாக எடுப்புடன் தகுதிக்கேற்ப மெத்தென்ற சொகுசு மிக்க வீடுகள் அமைத்துக் கொண்டார். சத்துள்ள உணவு, பானம், சங்கீதம், விநோதக் காட்சி எத்தனை உலகில் உண்டோ யாவையும் ஈட்டிக் கொண்டார்.
-16

தழைப்புறும் செல்வர் கூடித் தனித்ததோர் வளைப்பில் வாழ்ந்தார். உழைப்பினர் வறுமை எய்தி ஒடுகள் ஆகிப்போனர். முழுப்பயன் பெரும்பாகத்தை முற்பட்டுச் சுருட்டிக் கொண்டு செழிப்பியல் இன்பந் துய்த்தார். சிறப்புடை இனத்து' மாந்தர்.
இருப்பினும், ஆதி வீடோ இன்னும் ஓர் குடில்தான். அங்கு திருப்தியோ சிறிதும் இல்லை ! திருத்தமும் நிகழவில்லை. வருத்தங்கள் மேலும் மேலும் வளர்ந்தன.
காலப்போக்கில், பெருத்தது வாழ்க்கைச் சிக்கல். பெருகின துயர்கள் யாவும்.
I
ஆண்டுகள் ஓடி மறைந்தன.
ஆதி
ஆறிரு குழந்தைகள் பெற்ருள். பூண்டு வாழ்ந்திருந்த பொறுமையின் பலத்தாற் புவியினில் உயிர்விடாது அமைந்தாள். வாண்டுகள் வளர்ந்து வாலிபர் ஆனர். வாழ்க்கையின் அநுபவம் பொருந்தி நீண்டு சீர்சிறந்த இலட்சிய வேட்கை நிரம்பிய நெஞ்சகம் வாய்ந்தார்.
米
a 17

Page 14
4.
சந்திப்பு
மைந்தர்கள் பக்வன் வீட்டிலே நிரம்பி வாய்ந்தனர் பன்னிரு பேரும். தந்தையோடு உழன்றும் தொழிற்களத்து உழைத்தும் தம் வரும்படிகளைப் பெருக்கி, முந்திய தொகைபோற் பல ம்டங்கு ஆக்கும் முயற்சியில் வெற்றியும் அடைந்தார்.
அந்தகோ!
எனினும், அந்த வீட்டினிலோ அரைப்பசி, இப்பொழுதெல்லாம்.
க்ளைத்து மீண்டிருக்கும் கிணவனின் பொருட்டாய்க் கருத்துடன் "சுடுகுடி கொடுக்கும் உளத்தினுள் ஆதி
போத்தலைப் பார்த்தாள். ஒரு சற்றும் சீனி அங்கு இல்லை. வெளுத்த ஆடைகளும் கிழியலாய்ப் போக வேறுடை வாங்கலாம் எனிலோ . கிளைத்து மேல் எழுந்து வானம் ஏறினவாம்;
-8-

கிளர்ந்துயர் விலைத்தொகை அனைத்தும். மூன்று நால் மடங்காய் விலைகள் ஏறினவாம்; முட்டுப்பட்டு உழன்றனர் மைந்தர்.
ஈன்றபோது இருந்த உவப்பினை
ஆதி இழந்துபோய் மிக் மிக நொந்தாள்.
சான்றவன் என்று சகலரும் போற்றும் சயந்தனும் ஒரு மகன் ஒரு நாள் ஊன்றி யோசித்தான். உணர்ச்சி வாய்ப்பட்டான். உலகத்தைத் திருத்தவும் நினைத்தான்.
பகிவனின் ம்ைந்தன் சயந்தனும் தம்பிப் பயல்களும் சகாக்களும் கூடி வெகுவெகு நேரம் சிந்தனை செய்தார், வீட்டியல் நிலைமைகள் பற்றி. பகல்இரவு என்று பார்த்திடாது உழைத்தும் பழுதுகள் தீர்ந்திடாக் கதிக்கு முதல்நிலை ஏது யாதென ஆய்ந்து முடிவென எதையுமே காணுர், முதுமையை அணுகும் தந்தையைக் கேட்டார்.
பகவனே கனகரின் திட்டம் ாதுவென விரித்தே உரைத்திடலானன். - இது பயன் தரத் தொடங்கியதும் கொதிநிலை குளிரும் அமைதிகள் விடியும்" குதுகலம் இல்லத்தில் மலியும். அதுவரை பொறுப்பீர்,
என்ற தோரணையில் அறிவுரை கூறினன் பகவன்.
س 19 =

Page 15
சயந்தனும் அன்னன் தம்பிமார் பிறரும் சகிப்பினது எல்லையை அடைந்தார். ட தியங்கி நாம் நில்லோம். செல்லையன் என்ற சிதடனை, கனகனை மடக்கிப் பயந்துபோம்படியாய் அவர் செயும் சூழ்ச்சிப் பழிச்செயல் முறியடித்திடுவோம் உயர்ந்து நாம் மீண்டும் உய்ந்திட வேண்டும்; உறுதி !
என்று உரைத்தனர். உணர்ந்தார்.
உணர்ந்த மைந்தர்கள் கனகரின் வீட்டை உடன் சென்றே அடைந்தனர்.
கனகர்
மணந்த தம் ம்னைவி, மற்றைய ஏழு வைப்புகள், பிற பலர் சூழ அணிந்திடும் ஆடை அகற்றியே ஆடும் ஆனந்தக் கூத்திசை அருந்திப் பிணைந்தவாறு இருந்தார், வெறிமயக்கோடும் பெரியதோர் சுகானந்தப் பேறு !
*بر
சயந்தனும் பிறரும் வந்தம்ை கண்டு சடாரென எழுந்தவர் வந்தார். - வசந்த வேளையிலே வந்தெமைக் குழப்பும் மடையரே, 习 நீங்க்ள் ஆர்?
என்ருர்.
கசந்த வாழ்வினராய் நீதிக்ள் கோரும் கருத்துடைப் பகவனின் மைந்தர் - இசைந்த உம் வாழ்வின் ஏதுவாய் அமைந்த
- 20

எம்மையா ஆர் எனக் கேட்டீர் ? நாங்கள்தான் ஐயா, பகவனின் மைந்தர். நமக்கு நீர் நீதியைத் தாரும்.
- போங்கள், நீர் சிறுவர். நாளை நான் வந்து போதிய சான்றுகள் காட்டி நீங்கள் சார்ந்திருக்கும் நிலைமைக்குக் காலாம் நியாயங்கள் நாட்டுவேன், நிசம்ாப் தீங்கு செய்வேனே?
நான் ஒரு கனவான்.
செய்திடேன் தவறுகள் சிறிதும்.
IV
இவ்வுரை கேட்ட சயந்தனும் பிறரும் ஏகினர் தம் குடில் நோக்கி, உய்வழி நாங்கள் காணுவம் என்னும் உயிர்ப்பியல் வேட்கையர் ஆனர். "நைவுகள் அகற்றி நலத்தினை இயற்றல் நமக்கது கடன்" என நினைந்தார். வவ்விடும் பகைவர் வஞ்சனை ஒழித்து வாழ்வதே வழியெனத் தெளிந்தார்.
தெள்ளிய போதத் திளைப்பினல் உறக்கம் தீண்டிட, அமைதியாய்த் தூங்கி வெள்ளென விடியற் பொழுதிலே விழித்தார்.
விழித்ததும் கனகரும் வந்தார்.
- என்ன உம் தொல்லை?
தன் பொருட்டாக இரவிலே என்னிடம் வந்தீர்? சொல்லுக்,
என்று கனக்னர் கேட்க,
-21

Page 16
துடிப்புடன் சொல்லுவான் சயந்தன்:- - தோட்டத்தில், வயலில், தொழிற்களந்தோறும் தொழில் புரிகின்றவர் நாங்கள். தேட்டமோ எல்லாம் எங்களின் சொந்தம், சேமிப்பு முழுதையும் திரட்டி நீட்டு மாளிகைகள் நிறுவி நீர் உள்ளீர். நிரைபடு பல தொழிற்சாலைக் கூட்டுகள், பொறிகள், எந்திரத் தொகுதிக் குழுமங்கள் மிகப்பல அமைத்தீர். இன்னவற்ருலே எய்திடும் நயங்கள் இன்னும் ஏன் எங்களின் கைக்கு நண்ணிடவில்லை?
நாங்கள் ஏன் கொடிய நரகிலே உழல்கிருேம், நலிந்து? சொன்ன சொற்படி ஏன் எங்களின் குடிலைச் சொர்க்கமாய் மாற்றிடவில்லை? பண்ணிய சூழ்ச்சிச் சதிகளை உடனே பறைகுவீர் வெளிவெளியாக,
இவைகளைக் கேட்ட கனகனுர்
முகத்தில்
இளநகை ஒன்றினை அணிந்தார். ட் அவசரப்பட்டு ஏன் குதிக்கிறிர் தம்பி? ஆறுதலாய் இரும் கொஞ்சம். செயல்படத் தொடங்கும் கட்டத்திற் சற்றே செலவுகள் அதிகமாய் இருக்கும். முயல்வுகள் முதிர இலாபங்கள் கிடைக்கும். முதல்களின் பெறுபயன் பெருக்கும். ஆளணி முகாமை, அருஞ்செயல் முகாமை, ஆபத்துத் தடைநிலை முகாமை, காவல்கள் முகாமை, கணக்கிடும் முகாமை, காசுடைக் களஞ்சிய முகாமை, தாள், இதழ், பென்சில், பேனை, ம்ை, மெழுகு, சயிக்கிள் ஒடலிக்குள செலவு. யாவையும் கூட்டிக் கழித்திடும்போதில் எவ்வகை மிகுதியும் இல்லை. நட்டமே பேசும், பாரும்; ஆரம்பம் ! நாம் அதைக் கண்டுளம் சோர்ந்து
-22

விட்டமே ஆயின் யாவும்ே நிக்ழா, விருத்திகள் எவையும்ே நடவா. தொட்டதைத் தொடர்ந்து நடத்திட விடுவீர். தொல்லைகள் விரைவிலே தீரும். கெட்ட காலங்கள் நெடுகவா நீளும்? கெதியிலே கெடுதிகள் மாளும்.
என்ற தோரணையிற் கனகனர் பேச - இவரது பேச்சுகள் மெய்யாய் வந்துசேர்ந்திடுமோ பார்ப்பமே கொஞ்சம், மைந்தனே,
என்றனன் பகவன்.
தந்தையர் மொழிக்கு மதிப்பினை அளித்த சயந்தனும் - சம்மதம்,
என்ருன்.
நின்ற யாவரும்ே தமதிடம் அடைந்தார், நேர்வன காணுவம் என்றே.
-23g

Page 17
5
சச்சரவு
பின்னும் ஐந்தாண்டு சென்றன. பழைய பிசகுகள் திருந்தவே இல்லை. சொன்னவாறு இலாபம் கிடைக்கவுமில்லை. சுகநலம் மிகுக்கவுமில்லை. செல்லையருடனே க்னகரும் சேர்ந்து தீட்டிய திட்டங்கள் அனைத்தும் நல்லசீர் வெற்றி எய்தின எனினும் நன்மையோ இம்மியும் இல்லை. நயங்களை எல்லாம் இடையிலே புகுந்த நாய்க்குணம் மிக்கவர் நக்கி உயர்ந்திடலானர்.
உழைப்பவர்
நலிந்த
ஒடுக்ளாகியே உலர்ந்தார்.
சயந்தனும் பிறரும் வெகுண்டெழுந்தார்கள். தணிவிலாச் சீற்றமும் கொண்டார்.
24s

- நசிந்துபோய்க் கிடக்கும் நீதியை நிமிர்த்தி நாட்டுவோம் விடுதலை,
என்ருர்,
கனக்ரும் பிறரும் அடுக்கு மாளிகையிற் காவலர் பலர் புடை சூழ்ந்தே அணைந்திட வாழ்ந்தார்.
ஆலைகள், கந்தோர், அணிமனை அனைத்தையும் சார்ந்தே இணைந்திடு முகாமையாளர்கள், ஏவல் ஏற்றிடும் அலுவலர் என்போர் வளர்ந்த நல்வாய்ப்பும் வசதியும் நிறைந்தே வாழ்கிருர், கொழுத்த சம்பளத்தில்
கொழுத்த சம்பளத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் குடும்பமும் பகவனும் குடிலில் அழுத்திய வறுமைத் துயரினல் நசிந்தார். ஆயிரம் ஒட்டைகள் -
ஒழுக்கு w மழைக் குளிருக்குப் போர்வையும் இல்லை! வருந்தினர் நுளம்புகள் கடிக்க. கழுத்து நொந்திடவே இரவினிற் புரண்டார், கற்களே தலையணையாக,
மாரியும் பொய்க்க வறண்டது பூமி: வலிவுடைப் பாறைபோல் இறுகிக் கூரிய கொழுவும் நுழைத்திடா வகையிற் கொடியதோர் திண்மமாய் வெடி க்கும்.
மாருலகு எங்கும் பஞ்சமோ பஞ்சம்
ஒருமித்த பட்டினிச் சாவு ,ፃ'trfr@ዞh , பகவன் - ஆதி தம் மைந்தர் ஈயந்தணுதியர்களும் தவித்தார்.
= 25س

Page 18
தவித்தவர், கனகர், செல்லையர் வாழும் தனிப்பெரும் வளைப்பினை அடைந்தார். செவித்துளை கடுக்க் முழக்கங்கள் செய்தார்.
செல்வர்கள் அரமியம் வழியே, சுவைத்த தம் கிண்ணம் கைகளில் ஏந்தும் சுந்தர வடிவுடன் தோன்றி உவத்தலைச் சிறிதே நிறுத்தியபின்னர் உறுக்கியே துரத்திட முனைந்தார்.
உறுக்கிய உறுக்கல் கேட்டிடுமுன்னர் உழைப்பவர் மிகப்பலர் கூடி விறுக்க்ெனப் பொங்கி மேலிடத்தவரை மிதிக்கவும் உழக்கவும் துணிந்தார்.
கறுத்தெழு முகில்க்ள் கக்கிடும் புதிய படைக்கலம் விடுத்தனர், கயவர். அறுக்கவும், துளைத்தே அரியவும், பிழிந்தே
அழிக்கவும் வல்லவை அவைகள்,
பிணக்கு நாள்தோறும் பெருகிட,
காற்றிற் பிணநெடி பரவியே நாறும் ,
தணற்பிழம்புகளும் பிணக்கிருமிகளும் தசைத் துணுக்குகளும்ாய் உலகம் கணிப்பிட இயலாத் தொல்லையில் முழுகிக் கலக்கமும் ம்யக்கமும் அடையும். உணர்ச்சிகள் உலர்ந்து நெகிழ்ச்சியை மறந்த உன்மத்தர் ஆயினுர் ம்ாந்தர்.
-26

ஆதியும் தனது மைந்தரின் க்தியை அன்புடன் மதித்தவள், அழுதாள். "தீதுகள்" நிகழ்ந்த செயல்முறை கண்டு திகைப்பொடு மிரட்சியும் கொண்டாள். வாதுகள், கலக்ப், சண்டை, சச்சரவு மாபெரும் போர்களும் மூண்ட சேதியால் அலுத்த சயந்தனும் பிறரும் திட்டங்கள் தீட்டிட முனைந்தார்.
முனைப்பினை அடக்கும் முயற்சிகள் பெருக, முன்னிலா வகையிலே Lu5G) lair
தனிச் சிறு குடிலை, சீருடை தரித்த காவலர் முற்றுக்கையிட்டார்.
ம்ணைப்புறம் சுற்றி அடிக்கடி உலாவி வந்தனர்.
சயந்தனைக் கீாணுேம்.
- எனப் பயமுறுத்த இவர்கள் ஆர்? உலுத்தர்!
என நினைத்திடுகிருன், பகவன். - என் உழைப்பாலும் புதல்வர்களாலும் இரை பெறும் ஏவலர் இவரை இன்னல்கள் பரப்பி எங்களை அடக்க ஏவினன், கனகனும் ஈனன். பின் விளைவுகளை முன்னர் நான் உணரவில்லையே!
என மிக இரங்கி மென்மனங் குழைந்தான், பகவன் என்றுரைக்கும் விழுமிய மானுடன், அந்நாள்.
- 27

Page 19
6
தாக்குதல்
பகவன் போய் நின்றன் கனகரின் முன்னல். - பதகனே, நம்பிக்கை கொன்முய். வெகுசன விரோத விருப்பனப் ம்ாறி வேதனை மிகமிகப் புரிந்தாய். தொகை தொகையாக முதல்களை உனக்குத் தொடர்ந்து நான் உதவினேன் அன்ருே? "நக நக" என்று புகையும் என் நெஞ்சம், நஞ்சனே !
என அவன் சினந்தான்.
- அட, படு கிழவா! அறிவிலி, கெடுவாய் !
அறநெறி உணர்ந்திலை போலும் .
பொருளியல் அறிவும் படைத்திலை;
பண்பு
போற்றிடும் பக்குவம் அறியாய்.
கெட உனைத் துளைத்துக் கிடத்துவேன்,
என்று
கேவல வசவுகள் பேசி
வெடி சுட நினைந்து, படைக்கலம் நீட்டி
வென்றிட எண்ணினர், கனகர்.
-28s

கையிலே இருந்த பொல்லினுற் பகவன் கனகரின் கையினை விலக்கி நையவோர் வீச்சில் நசுக்கென வெளுத்தான்.
நாய் பல குரைத்தன, ஒருங்கே.
- தெய்வமே !
என்று சரிகிருர் க்னகர்.
சீருடை தரித்த காவலர்கள் கைது செய்தார்க்ள் பகவன. ஜீப்பிற்
அடுகியே ஏற்றினர்; விரைந்தார்.
سے 29ے

Page 20
7
தீர்ப்பு
நீதி மன்றத்தில் நிற்கிருன் பகவன். நீதவான் வருகிருர், அமர்ந்தார்.
வாதிகள், பிரதிவாதிகள், சாட்சி, வழக்கறிவுடைய பேரறிஞர், சாதகமாயும் பாதகமாயும் சான்றுகள், தவணைகள், சட்ட மோதல்கள் என்று பலப்பல நடந்து முடிந்தன. நெடுநெடும் பகல்க்ள்
ஈற்றிலே ஒரு நாள் - எட்டு மாதத்தின் இறுதியில் . நீதவான், தீர்ப்பை நூற்றிரண்டு உயர்ந்த வெள்ளைத்தாள் நிறைய நுட்பமாய் எழுதி வந்து உரைத்தார்.
-30

காற்றிலே அவர்தம் குரல் மிகக் கழுராய்க் கடும்ையாய், விவரமாய் ஒலிக்கும். போற்றியே அதனைக் கேட்ட யாவரும்
தம புண்ணியப் பேற்றினை வியந்தார்.
பொறும்ையின் பெருமை நீதவான் சொன்னர், - புவிடமிசை எச்செயல் தானும் உறுபயன் அளிக்க நாள் சில எடுக்கும். உதுவரை பொறுத்திடல் தருமம், வெறி மிகுஞ் செயல்கள் மிகமிகத் தீய; வெறுத்திடத் தக்கன. அதனல், அறிவினுல் எதையும் ஆய்ந்திடல் வேண்டும். அறநெறி அது, •
என அறைந்தார்.
கனகரின் உயர்ந்த மூளையைப்பற்றிக் கழறிஞர் புகழுரை.
பின்னர், தனபதிப் பந்தி தவ வலிவுள்ள தகுதிசால் வருக்கம் என்று உரைத்தார். குணம்சங்களாக வருக்கங்கள் கொள்ளும் கொள்கைகள் பற்றியும் கூறி, அநாமதேயங்கள் ஆட்சியைக் குலைத்தல் அநீதியாம் என்பதும் தெரித்தார். இம்சை செய்யாத வாழ்வையே சட்டம் ஏற்கிறது என்பதும் கூறி, சிம்சன் என்பானும் சீனி என்பானும் தீங்கியற் குற்றங்கள் குறித்த அம்சங்கள் ஐந்தை ஆய்ந்து கூறியவை அழகிய சான்றென அறைந்து வம்ச மேன்மையினை வகுத்துரைக்கின்ருர் - கனகரின் மாண்புறு சாதி ! சாதியால் உயர்ந்த தருமவாஞன தனபதி செல்லையருடனே ஆதி நாள்தொட்டுத் தொடர்பு கொண்டுள்ள அப்பெருந் தகைமையை உரைத்தார்.
-31

Page 21
- ஓதி நூல் பலவும் உணர்ந்தவர் கனகர். உத்தமர், சத்தியவாதி, நீதிமான்,
என்ருர் நீதவான்.
கோட்டில் நின்றவர் - உண்மையே !
στοότηγff. - உரிமை உண்டென்ருல், வழக்கு வைத்திடலாம். உத்தமச் சட்டத்தின் உயர்ந்த பெருமையை உணர்ந்தோர், வன்முறைச் செயலின் பெயரையும் மனத்தினுல் தீண்டார். உருகியே, அன்பின் உன்னத ஆன்ம் உயிர்ப்பினைக் கணந்தொறும் வியப்பார். கரவிலா இனிய உறவுகள் வளர்ப்பார். கைத்தடி உயர்த்தவே உயர்த்தார். - ஆகையாற் பகவன் தீங்கியற் சட்ட அறுபதாம் வாசகப்படியே நோகும்ாறு ஆற்றும் இம்சைகள் புரியும் நோக்குடன் செயல்பட்ட ஒருவன்; நாகநாட்டார்தம் ஆட்சியைக் குலைத்து நாசங்கள் புரிந்திட முனைந்தோன். வேகவைத்து இந்த ஊரையே பொசுக்க விரும்பிய பாதக வெறியன்.
- குற்றவாளி எனக் காணப்பட்டுள்ளான். கொடுஞ்சிறைத் தண்டனை பெறுக. மிச்ச வாழ்நாள்கள் முழுமையும் அன்னன் வெஞ்சிறை அடைப்பினில் வதிக. உற்ற இன்னனின் உதவியாய் நின்ற ஒவ்வொரு பதகரும் பத்துப்பத்து நீள்வருடம் கடூழியச் சிறையிற் பதைத்திடக் கடவர்கள் - துடித்து.
-32

வழக்கு மன்றத்தில் நீதவான் உரைத்த வார்த்தைகள் செவிப்பட,
ஈட்டி நுழைத்தமை போல நொந்துபோய் வீழ்ந்தாள், நுடங்கிய மேனிகொள் ஆதி. பழிச்செயல் அஞ்சாத்தனேசுரர் இழைத்த பாழ்வினைச் சதிகளை எண்ணி அழப்பலம் இலாளாய் அவள் சரிந்திட்டாள், ஆணிவேர் அறுந்ததோர் மரம்போல்!
பயந்து முன் புரந்த அன்னையோ மூர்ச்சை பட்டு நீள் நிலத்திலே புரண்டாள்.
திரண்ட வெம்புழுதி சிதற மூசியதாம் சிறையக வாகனச் சில்லு.
சயந்தனும் அன்னன் தம்பிமார் சிலரும் தந்தையும் சிறையிடைப் புகுந்தார்.
விளைந்தவை முழுதும் ஊரவர் அறிந்தார் மிகமிக ஆத்திரம் அடைந்தார்.
-33

Page 22
S
துளிர்ப்பு
பகவனின் குடிலில், சிறைமனைப் புகாத பாலகர் ஐந்துபேர் இருந்தார். அவர்களோ இன்னும் உலகறியாத அழகிளம் பருவத்துச் சிறுவர்.
பகிர்கிருள் ஆதி சிறிது கூழ் அவர்க்கு.
பாலகர் உறிஞ்சியே குடித்தார்.
அறிவையும் அவர்கள் சிறுசிறு மிடருய்
அருந்துவார். காலங்கள் போகும்.
எப்படிப்பட்ட வாழ்வுதான் அவர்தம் எதிரிலே உள்ளதோ?
தங்கள் அப்பனைப் போன்றே அவர்களும்
-34

வறிதே அரை உயிர் வாழ்வரோ?
அன்றி ம்ெய்ப்பொருள் உணர்ந்து தெளிந்துகொள்வாரோ? மிடிம்ையைத் தொலைத்திடுவாரோ? பற்பல அறிவுத்துறை நுணுக்கங்கள் Luudau Grnt?
எவர் இவை அறிவார்? வஞ்சனை, கபடம் மாண்டுபோம்படியாய் வழிகளை வகுப்பரோ?
அன்றி நஞ்சினை ஊட்ட நயந்து அது பருகி நாசத்தை அடைவரோ, பாவம் ! துஞ்சுதல் இன்றி உழைப்பதும்,
அதனுல் தொகுபயன் முழுவதும் உறலும். பிஞ்சுகள் முற்றிப் பதப்படும்போது பேறுகள் இவை பெறப்படுமோ? தனேசுரரான கனகர்கள் விடுக்கும் தாக்கத்தை வெல்வரோ?
அன்றி அநீதியின் பிடியில் அக்ப்பட்டு நைந்தே அழிந்திடக் க்டவரோ, இவர்கள் கணிரென ஒலிக்கும் நீதியின் குரலின் கவர்ச்சியுட் புகுவரோ?
அன்றிப் பணேசர்கள் விரிக்கும் வலைகளில் விழுந்து படுவரோ தந்தையைப் போன்று ?
கூழினை உறிஞ்சிக் குடிக்கிருர் சிறுவர். குடிலையும் பார்க்கிருர், நிமிர்ந்து. பாழ்மனையாகுப் பழுதுகள் மலிந்து பக்கத்துச் சுவர்களும் இடிந்து வாழ்வு அழிந்தவளின் வதிவிடமாகி மழைபுகும் ஒட்டையால் நனைந்தே. ஏழைமை பயிலும் அவ்விடம்.
அங்கே இளஞ்சிருர் வளர்கிருர் இருந்து
-35

Page 23
அன்னையும் உடனே வாழ்கிருள். பழைய அனுபவம் விடாது எடுத்துரைப்பாள், சொன்னவை கேட்டுத் தலையசைப்பார்க்ள் துடித்திடும் இளஞ்சிருர் தொடர்ந்தும் இன்னல்கள் நெடுக நேர்ந்திடா உலகம் இனிமையை நோக்கிய பயணம். பின்னரும் இரவும் பகல்களும் உருளும். மாரியும் கோடையும் பெயரும். h− பெயர்ச்சியின் வழியில் முயற்சிக்ள் அடுக்காய்ப் பின்னரும் பின்னரும் நிகழும். உயர்ச்சியை நோக்கிப் பல திசைப்பட்டும் ஒரு பெரும் இயக்கமே தொடரும், அயர்ச்சியால் எதுவும் நன்ம்ையே இல்லை. அதனையும் பயில்கிருர் சிறுவர்.
வியர்ப்பினற் புவியின் காரியம் சரியாய் விழுமிய நெறிவழிப் படரும்.
பாழ்மனையாகிப் பழுதுகள் மலிந்து பக்கத்துச் சுவர்களும் இடிந்து வாழ்வழிந்தவளின் வதிவிடமாகி ம்ழை புகும் ஓட்டையால் நனைந்தே ஏழைமை பயிலும் அவ்விடம் அங்கே இளஞ்சிருர் வளர்கிருர் இருந்து.
கூழையும் உறிஞ்சிக் குடிக்கிருர் சிறுவர், குடிலையும் பார்க்கிருர், நிமிர்ந்து.
-O-


Page 24