கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அந்தக்காலக் கதைகள்

Page 1


Page 2

அந்தக் காலக் கதைகள் (நடைச் சித்திரம்)
ኳያ Mלל ש بر “தில்லைச் சிவன்
VS4M 凹NMmö凹U闵心
வெளியீடு:
மல்லிகைப் பந்தல் 234-B, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 3
முதற்பதிப்பு: 1997 உரிமை ஆசிரியருக்கு
விலை: ரூபா. 40/-
TITLE : Anthak kalak Kathaikal
SUBJECT : Narrative Sketches of Past Events
AUTHOR : Thillai Sivan
T. Sivasamy
No. of Pages : 136
Price : Rs.40/-
Publishers : Mallikai Panthal
234-B, K.K.S.Road Jaffna
ALSO AVAILABLE IN INDIA:
KUMARAN PUBLISHERS 79, 1st STREET, VADAPALAN
CHENNAI - 600026.
Laser Type-setting:
Suvita Computers, Chennai.
Printed at

உள்ளுறை
பதிப்புரை பீடிகை வேலணைத் தீவுச் சைவ இளைஞர் சபை
ஊரிமண் காடு
அன்பு வியாபாரி தூக்கணாங் குருவி புளிச்சாதம்
எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்
பாட்டனார் சொன்ன தோம்புக் கதை பண்ட மாற்று மாற்றம் வரும்போது
வண்டியின் பின்னால் வந்த பேய் திருமணங்கள் இரண்டு
ஐயனார் கோவில் திருவிழா உமிரிக் கீரை
மீசை முளைத்தது அராலிச் சந்தித் தண்ணிர்ப் பந்தல் வலம்புரிச்சங்கு சித்திரை வெள்ளம் தேர்தல் வந்தது கவிதை பிறந்த கதை
விசாலாட்சி விசுவநாதர் திருமணம்
பாஞ்சாலி
பாட்டனாரின் கதை
பக்கம்
12
22
28
31
34
38
43
50
54
60
67
76
82
86
90
95
100
106
110
15
123
127

Page 4
o பதிப்புரை 1950 - களின் ஆரம்ப வருஷங்கள்
நான் தொழில் புரிந்து வந்த கைத்தொழில் ஸ்தாபனம் யாழ்ப்பாண நகரின் முக்கிய கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருந்தது. பஸ் நிலையம் சமீபத்தில், போக்குவரத்துக்கு ரொம்பவும் வசதியான நகரத்தின் முக்கிய வீதியொன்றில் அமைந்திருந்த எனது தொழில் நிலையத்தைத் தேடி வரும் கலைஞர்கள் பல வந்து வந்து போவார்கள். அதனால் செம்மா தெரு என முன்னாலும் அதன் பிறகு கஸ்தூரியார் வீதி என அழைக்கப்பட்ட அத்தெருவிலுள்ள அந்த நிறுவனத்தின் பெயர் இளங்கலைஞர்கள் மத்தியில் அந்தக் காலத்திலேயே பிரசித்தம். நானும் வளரும் எழுத்தாளனல்லவா? பலருக்கு இது சாதகமான சூழ்நிலையாக அமைந்திருந்தது. தினசரி பலர் வந்து போவார்கள். வந்து போகின்றவர்களுக்கு நானொரு தொடர்பு சாதனமாக இயங்கி வந்தேன். இத்தொடர்பால் நட்புக் கொண்டவர்களும் அநேகர்.
அந்தக் காலத்தில் கொழும்பிலிருந்து விடுமுறைக்கு ஊர் வந்து போகின்றவர்கள் இளம் இலக்கிய நண்பர்கள் - தமது சக தோழர்களுக்குக் கடிதம் எழுதும்போது: 'வருகிற சனிக்கிழமை 4 மணிக்கு ஜிவா கடையில் சந்திப்போம்!” என முன் கூட்டியே தமது சந்திப்பை உறுதிப்படுத்தும் நிலையமாகவும் எனது தொழில் நிறுவனம் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இயங்கி வந்தது.
அச்சுவேலியில் இருந்து வீரகேசரி நிருபர் வருவார் - இவர் தனது எழுத்து வேலைகளை ஆரம்ப காலத்தில் இங்கிருந்தே செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ரசிகமணி வந்து போவார். இவர் அப்பொழுது கணகசெந்திநாதன் மாத்திரம் தான். அடுத்த அடுத்த சந்தியில்தான் எஸ்.பொ.வின் வீடு. இடையிடையே வருவார். உரும்பராயிலிருந்து கணேசலிங்கன் சைக்கிளில் வருவார். சில்லையூர் பஸ்ஸில் வந்து போவார். என்னை எழுத்தில் நெறிப்படுத்திய ராஜகோபாலன் மாஸ்டர் வந்து கதைத்துக் கொண்டிருப்பார். மதுரகவி, இ. நாகராஜன் ரசிகமணியைத் தேடி வருவார். லிவில் வந்துள்ள

5 தில்லைச் சிவன்
அ.ந. கந்தசாமி வந்திருந்து என்னுடன் இலக்கிய சம்வாதம் புரிவார். டானியல் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போவார். ரகுநாதனும் இடையிடையே வருவார். அப்படியே நாவேந்தனும், இப்படிப் பலர் பலர் எனது தொழிலகத்தைத் தொடர்புநிலையமாகப் பாவித்தனர்.
தொழில் செய்து நாலு காசு சம்பாதிப்பதை மறந்துவிட்டு இவர்களில் ஒருவனாகவே நான் மாறி, என்னைக் கட்டம் கட்டமாக வளர்த்தெடுத்துக் கொண்டு வந்தேன்.
பிற்காலத்தில் மல்லிகை மாளிகை தோன்றுவதற்கான
அடித்தளத்தை என்னை அறியாமலே அந்த நிறுவனத்தில் நிறுவிக் கொண்டு வந்தேன் என்பது இப்போது புரிகின்றது.
இந்தக் கூட்டத்தில் ஒருவராக - இளங்கவிஞராக - எனக்கு முதன் முதலில் அறிமுகமானவர்தான் நண்பர் தில்லைச் சிவன் அவர்கள். அப்பொழுது அவர் ஆசிரிய கலாசாலை மாணவன். எங்களது இறுகிய உறவிலும் நட்பிலும் ஓர் உறுதியான அடித்தளம் இருந்தது. அவர் சரவணைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது மூதாதையர்கள் சரவணைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் கிராமப் பற்றுக் காரணமாக ‘எங்க ஊரவன்’ என உரிமை கொண்டாடி அன்பு செலுத்துவார். மற்றவர்கள் அனைவரையும் விட, இவருடன் ஒன்றுதான் நான் அதிகமாகத் தேநீர் அருந்தியிருக்கின்றேன் என இப்போது நினைக்கும்போது சொல்லத் தோன்றுகின்றது. அத்தனை அன்பானவர். என்னை மனமார நேசித்தவர். இருவரும் அத்தனை நெருக்கம்.
புலம் பெயராமல் யாழ்ப்பாணத்தில் நான் இருந்த சமயம் கடைசியாக இவரது ‘நான்’ என்ற கவிதைச் சுயசரிதை நூலைத்தான் மல்லிகைப் பந்தல் மூலம் வெளியிட்டு வைத்திருந்தேன். கவிதைத்துறையில் புதிய முயற்சி, அது.
மல்லிகையின் 1993ம் ஆண்டு இதழ்களில் இவரது 'அந்தக் காலக் கதைகள்’ பகுதி பகுதியாக வெளி வந்தது. அந்தக் கதைகள் படைப்பு இலக்கியங்களல்ல. ஆனால் அதே சமயம் இலக்கியப் பகுதியின் ஒரு கிளைப்பகுதியாகவும் எனக்கு அக்கதைகள்

Page 5
அந்தக் காலக் கதைகள் 6
தென்பட்டன. தமிழில் ஒரு புது முயற்சி. அப்பொழுது தொடராக "வரதரின் தீ வாத்தியார்’ என்றொரு தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. அக் கட்டுரைத் தொடரைப் பலரும் வியந்து பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தனர். அதே போன்று தில்லைச் சிவனின் இந்தத் தொடர் பலராலும் பாராட்டப் பெற்றது. தொடர்ந்து எழுதும்படி அவரை, உற்சாகப்படுத்தினேன். அவர் எழுதியதை வெளியிட்டு வந்தேன்.
இன்று யாழ்ப்பாணத்தைத் துறந்து புலம் பெயர்ந்து கொழும்பில் ஒரு மூலையில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு, மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை வெளியிட்டு வருகின்றேன்.
என்னைப் போலவே நண்பர் தில்லைச் சிவனும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்து கொழும்பில் இன்று வசித்து வருகின்றார்.
ஒர் இலக்கியர் கூட்டத்து முடிவில் இருவரும் சந்தித்த சமயத்தில்தான் இந்த யோசனை என்னில் முகிழ்ந்தது. திருமதி. தேவகெளரியின் 80-களில் மல்லிகை விமர்சனங்கள், என்ற நூல் வெளியீடுமல்லிகைப் பந்தலின் புதிய முயற்சி. அதுபோல, ஈழத்து இலக்கியப் பரப்பில் இதுவும் ஒரு புதிய பார்வை என்ற கணக்கில் ‘அந்தக் காலக் கதைகள்’ என்ற இந்த நூலை வெளியிட முடிவு செய்தேன்.
இப்படியாகப் புதிய புதிய துறைகளில் எல்லாம் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம். சுவைஞர்கள் இந்த முயற்சியை எந்தளவிற்கு ஆதரிக்க முன் வருகின்றனரோ அந்தளவிற்குப் புதிய புதிய நூல்கள் மல்லிகைப் பந்தலில் பூத்து மணக்கும் என்பதை இந்தக் கட்டத்தில் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
6-3-97 - டொமினிக் ஜீவா

7 தில்லைச் சிவன்
பீடிகை
கதைகளைக் கேட்பதும், சொல்வதும் ஒரு ருசியான விடயம். கதைகள் சொல்லுங் களங்களாகச் சூடு மிதிக்த்ம் களத்துமேடு, சுருட்டுக் கொட்டில், கம்மாலை, சவரக்கடை போன்ற வேலைத் தளங்களும், நிலவுப் பயணங்களும், நடை சாலைகளுமெனப் பலவுள. இங்கே சிறு செய்திகள் பெருங்கதைகளாகவும், பெருங்கதைகள் சிறு செய்திகளாகவும் பரிணாம மாற்றம் பெறும். இது கதை சொல்லும் ரசனையையும் கேட்போரின் பொறுமையையும் பொறுத்தது.
அந்தக் காலத்தில், அதாவது 1930-1940 ஆண்டு வாக்கில், எமது களத்து மேட்டில், சூடு மிதிக்க எருது வளைக்கும் சிறுவர்களில், நானுமொருவன். எருது வளைத்து ஒய்ந்தபோது, களைப்பாயின் ஒருமூலையில் போய்க் கிடப்பேன். அங்கே வேறுஞ் சிலர் கிடப்பார்கள். அங்கே ஒருவரின் வேண்டுதலுக்கு இன்னொருவர் கதை சொல்ல, அடுத்தவர் ஒன்று சொல்ல இப்படியே கதைவளம் வளர்ந்து செல்லும். இராசாராணிக் கதைகள், பேய் பிசாசுக் கதைகள், மந்திரவாதிகளின் கதைகள், வேதாளக் கதைகள், பாரதக் கதைகள் எனப் பல.
இடையிடையே ஊர்க் கதைகளும் வரும், புதிய செய்திகளைப் பழைய கதைகள் போலச் சோடித்துச் சொல்வர். “ஊரைக் கேட்டாலும் பேரைக் கேட்காதே’ என்ற பீடிகையுடன் சொல்லுங் கதைகளில், சமகாலக் கனவுக் காதல்கள், காட்டிக் கொடுப்புகள், மோதல்கள் மோதலிப்புகள் எனப்பலவரும்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த முதியவர்களுக்கும்; விறு விறுப்பேறி, பொறுக்க முடியாது கிளர்ந்தெழுவர். தங்கள், இளமைக்கால விளையாட்டுகளையும் வீரதீரச் செயல்களையும் கதைகளாக வடிப்பர்.

Page 6
அந்தக் காலக் கதைகள் 8
இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நூறாண்டுக் கதைகள், இவற்றினோடு பிந்திய எனது ஐம்ப தாண்டு அனுபவங்களையுஞ்சேர்த்து, நினைவில் வைத்துக் கொள்ளுஞ் சுமையை, நீக்க முயன்ற மறதியால் அழிந்தன போக, மிகச் சில, பட்டுக்கொண்டு போகும் மரத்தின் அடியில் தளிர் விடும் கிளைகள் போல அரும்பக் காண்கிறேன். -
அவற்றை மீட்பதன் மூலம் மனதுக்கு ஒரு சுகம். தற்போதைய அவலங்களை மறப்பதற்கும் ஒரு வழி. முதியவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் புதியவர்களும், தாங்களும் எங்கிருந்து எப்படி வந்தோம் என்பதைத் திரும்பிப் பார்க்கக் கூடும் என்ற விருப்பத்தின் வழி வெளி வருவதே இச்சிறுநூல்.
இந்தப் புத்தகத்தை, 05, ஜனவரி 1988 ஆம் திகதி, எனது அறுபதாம் ஆண்டு நிறைவின் போது வெளியிட்டுவைக்க முயன்றேன். நூல், தாரணி அச்சக அதிபரும், எழுத்தாளரும், சரவணை ஊரவருமான மணிசேகரன் அவர்களால் அச்சிடுவிக்கப் பெற்று, யாழ் ஒவியர் “நிலா’ வின்முகப்போவியம் ஒற்றுரு அமைக்கப் பெற்றுள்ள வேளையில், அச்சுக் கூடத்தில் இருந்த தாள்கள் அனைத்தும், “செல்லடியால் சிதைந்து விட்டதான” செய்தி கிடைத்தது.
எனது நினைவையும் செயல்களையும் காலஞ் சிதைத்தமையைக் கண் முன்னாலேயே கண்டேன். இப்படி எத்தனையோ பலபேர்களின், கனவுகள், நினைவுகள், செயல்களை எல்லாம் காலஞ் சிதைத்தமை பழையகதை. சங்கத் தமிழ் ஏடுகள் பல காலக் கடலுள் கரைந்தனவே! இன்றும், பல ஏடுகளிலும் இதயங் களிலும் பதிவாகியவை, காலத்தால் சிதைந்து அழிந்து மறந்து போயின என்று பலர் சொல்லி வருந்தக் கேட்டிருக்கிறேன். நானே கடந்த ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட, கனவுக்கன்னி, தாய், பாலர்பாட்டு என்ற நூல்களின் பிரதி ஒன்று கூட என் கையில் இல்லை. மல்லிகையில் எனது இந்தக் கதைகள் வெளிவந்த பிரதிகளைத் தேடிப்பிடிக்கக் கடும் முயற்சி செய்ய வேண்டி வந்தது. காலத்தின் வலிமையை என்னென்பேன். காலத்தை எதிர்த்துத் தாக்குப் பிடிப்பது

9. தில்லைச் சிவன்
கஷடமான காரியம். காலந்தான் கடவுள் என்ற ஞானோதயத்தால், அந்தக் காலக் கதைகள் - நூல் என்ற நினைவுகளைக் காலத்துக்கு அர்ப்பணித்துவிட்டிருந்தேன்.
காலம் விடவில்லை, எனது இளமைக்கால நண்பன் டொமினிக் ஜீவாவின் வடிவத்தில், வழியிற் சந்தித்தது. ‘எழுது எழுது, மல்லிகையின் நாலுபக்கங்களுக்குத் தொடர்ந்து எழுது” என்று தூண்டப் பெற்ற எனது உணர்ச்சிகள் மீண்டும் தளிர்த்தன.
புத்துணர்வால் தூண்டப் பெற்றுப் புதுமலர்ச்சியுடன் மீண்டும் எழுதினேன். நான் முதலில் எழுதிப் பதிப்பித்துச் சிதைந்து போன “அந்தக் காலக்கதைகளுக்கும்” இவைக்கும் கரு ஒன்றே எனினும் உருவம் வேறுபட்டு விட்டது. உருவமாறுபாட்டுக் காரணிகளில், வரதரின் "மலரும் நினைவுகளின்’ தாக்கமும் ஒன்றாக இருந்தது.
ஒன்று, இரண்டு, மூன்று என ஒன்பது மல்லிகை இதழ்களில், தொடராக எனது கதைகள் வந்துகொண்டிருக்க, காலம் மாதந்தோறும் மலரும் மல்லிகையை நிறுத்தி விட்டது. மீண்டும் கால அர்ப்பணிப்புவெறுமை-வெளியேற்றம்-இடப்பெயர்வு.
இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்த நான், நண்பர் வேலணை; வீர சிங்கத்தின் தாபனத்தில் இருந்த போது, நண்பர் டொமினிக் ஜீவாவைக் கண்டேன். கண்டதும் “என்னடாப்பா உனது கதைகளைப் புத்தகமாகப் போடுவமா?’ என்றார். யோசிப்போம் என்றது தான், “நிறைய எழுது, புத்தகத்துக்கு இன்னும் கணக்க வேண்டும்” என்றவர். எனது கதைகள் வெளிவந்த மல்லிகைப் பிரதிகளை, எங்கெல்லாமோ ஒடித் தேடித் தந்தார். அவற்றுடன் நான் புதிதாக எழுதியவைகளையுஞ் சேர்த்து இந்த நூல் வெளிவருகிறது.
நான் ஒரு கதாசிரியன் அல்ல. ஐம்பதுகளில் ஏதோ சில உந்துதல்களினால் மூன்று. நான்கு கதைகளை எழுதியிருக்கிறேன். தினகரனில் கறுப்பனின் தியாகம், நிழல், பவானி என்ற கதைகளையும்: ‘பழக்கம்’ என்ற ஒற்றையங்க நாடகத்தை மறுமலர்ச்சியிலும், இன்னொரு கதை பாப்பாமலரிலும் வந்ததாக நினைவு.

Page 7
அந்தக் காலக் கதைகள்
இக்கதைகளையோ பலநூறு கவிதைகளையோநான் எழுதிய போதிலும், இதனால் மக்கள் அடையப்போகும் உன்னதங்களைப்பற்றி நான் கிஞ்சித்தும் சிந்தித்ததில்லை. எனது உணர்ச்சிகளின் காட்டாற்றுப் பிரவாகத்தினை, முழுங்காக்கிப் பாயவிட்ட சிறு வடிகால்களே இவை. முற்று முழுதாக எனது சொந்த விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடான படைப்புகளே. எவ்வழியேனும் மற்றவர்களால் எனது படைப்புகள் விரும்பப்படும்போது நானடையும் மகிழ்ச்சி, எனது நாணத்துள் சங்கமமாகி விடும்.
நான் எனது படைப்புகளைப் பிரசுரங்களுக்கு அனுப்பும்போது, “நல்லதெனில் பிரசுரிக்க வேண்டுகிறேன்’ எனத் தெளிவாகக் குறிப்பிடுவேன், ஆசிரியர்களின் மனதுக்குப்பிடித்தால் பிரசுரமாகும். அல்லது குப்பைக் கூடைக்குள் போகும் என்றது, என் நினைவு.
பிரசுரமானால், ஒருவருக்குப்பிடித்து விட்டது என்ற திருப்தி. மேலும் மேலும் எழுதத் தூண்டும். இவ்வகையான எனது ஆக்கங்களை, விரும்பி ஏற்றுப்பிரசுரித்தவர்கள், “மறுமலர்ச்சி"வரதர், “சுதந்திரன்’ எஸ்.ரி. சிவநாயகம், “ஈழகேசரி’ இராஜ அரியரத்தினம் ‘ஈழநாடு” சபாரத்தினம், 'தினகரன்’ நாதன், “மல்லிகை” ஜீவா, இவர்களெல்லாருக்கும் பிடித்து விட்டன. ஆதலால் நானும் ஒரு எழுத்தாளன் தான் என்பது, சித்தாந்தம்.
எனவே நான் எனது அந்தக் காலக் கதைகளுக்கென எழுதும் பீடிகையில் முதலாவதாக, என்னையுமோர் எழுத்தாளனாகக் கவிஞராக இனங்கண்டு கொண்டவர்களை வணங்குகிறேன்.
எனது ஆக்கங்களைப் பற்றி எனக்கு ஒரு சுயவிமர்சனப் பார்வையுண்டு. அறிவு நிலையில் தத்துவங்களையோ ஒழுக்க நெறிகளையோ கற்பிப்பவை அல்ல. அந்தத் தகுதியும் எனக்கு வராது. எல்லா உயிர்களுக்கும் இயல்பானதோர் இன்பத்தை அளிக்கவல்ல நேயம், கோபம், நட்பு பகை, அன்பு, காதலாம் உணர்ச்சி ஊற்றுகளின் கழிவுநீரோடை என்றே கூறத்தகும்.
இந்த நூலில் வரும் கதைகள் அனைத்தும் 1950க்கு முன் உள்ள காலப்பகுதிக்கானவை. அக்காலமக்கள் தமது வாழ்க்கைத் தேவைகட்குப் பெரும்பாலும் அரசை நம்பி இருக்கவில்லை.

11 தில்லைச் சிவன்
உழைப்பினால் கிடைத்ததை உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம், ஒரு சிறிய அளவில் எஜமான் அடிமை நிலை இருந்தது. ஆயினும் ஒரு சமசரச நிலை பரவி ஒருவருக்கு ஒருவர் உதவி என்ற கருத்தே ஓங்கி நின்றமையால், ஊர் இரண்டுபட்டிருக்கவில்லை. தேவைகள் மிகக் குறைந்தளவினவே. ஆதலின் வாழ்வில் சிக்கல்கள் இல்லை. சீதனக் கொடுமைகள் இன்றித் திருமணங்கள் சிக்கனமாக நடந்தன. அந்திம காலச் செலவுகட்கு ஊரே கடமைப்பட்டு உழைத்தது, இத்தகைய எமது பரம்பரை வழக்கங்களை எமது இளஞ்சந்ததி அறிந்து கொள்ள வேண்டும். அதனை இந்நூலில் கதைகளாகச் சொல்லி உள்ளேன்.
எனது வாழ்க்கை வரலாற்றின் பெரும் பகுதி, தற்செயல்களால் நிறைவதை அனுபவிக்கிறேன். இக்கதை நூலின் வெளியீடும் அத்தகைய ஒன்றே. நண்பர் எம்.ரி. பத்மநாதன் (கணக்காய்வாளர்) நண்பர் வேலைணை வீரசிங்கம் இவர்களின் உந்துதல் தொடர, இனிய நண்பன் டொமினிக் ஜீவா கைகொடுத்து, மல்லிகைப் பந்தலிற் பொலியும் பூக்களில் ஒன்று ஆக்கியமை கண்டு மகிழ்கிறேன்.
‘தில்லைச் சிவன்’
315, பலாலி வீதி யாழ்ப்பாணம் 1-3-97

Page 8
அந்தக் காலக் கதைகள் 2
1. வேலணைத் தீவுச் சைவ இளைஞர் சபை
1930 - 40 ஆண்டுகள், வேலணையில் சைவசமயமும் தமிழ் மொழியும் புதிய எழுச்சி பெற்ற காலம் போலும், கிராமங்களில் கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரிகள், பாடசாலைகளை அமைத்து நடத்துவதன் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றுவது சுலபமெனக் கண்டனர்.இந்த நோக்கிற்கு அனுசரணையான ஆங்கில அரசு இருந்ததும், ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட மிசனறியினர்க்கு வாய்ப்பாகப் போயிற்று.
சாதிப்பிரிவுகளாலும், ஏழ்மையினாலும் துன்புற்ற மக்கள் மத்தியில், பாதிரிகளின் இதோபதேசம் பயன் தரத் தொடங்கவே, ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்களும், அதனோடு ஒட்டியதாகச் சேர்ச்சுகளும் தோன்றின. இவற்றின் தோற்றத்தினால் மக்களிடத்தில் எழுத்தறிவு மலரத் தொடங்கிய அளவு, கிறித்தவ மதச்சார்பு காணப்படவில்லை. ஆசிரியராவதன் பொருட்டும்,வேறு சில வசதிகளுக்காகவும் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே மதம் மாறினர். படிக்க வேண்டும் என்றதற்காக மதம் மாறியவர்கள் இல்லை.
இக்காலப்பகுதியில் யாழ்நகரில் நாவலர் உருவில் தோன்றிய சைவ சண்டமாருதச் சுழல் காற்று, வேலணையில் மெல்லிய தென்றலாகவே வீசியது. ஆங்காங்கே சில சைவப் பெரியார்கள் தோன்றித் தமது அயரா முயற்சியினால், சில பாடசாலைகளைத் தொடங்கினர்.இவ்வாறு தொடங்கப் பெற்ற பாடசாலைகளில் கந்தப்பு உபாத்தியாரின் “சைவப்பிரகாசவித்தியா சாலை, வேலணைப்பெரியார் விசயரத்தினம் அவர்களின் சரஸ்வதி வித்தியாசாலை. நொத்தாரிசு கா. விநாசித்தம்பி அவர்களின் சரவணை நாகேஸ்வரிவித்தியாசாலை, வேலணை மேற்கு இராசா, உபாத்தியார் தொடங்கிய நடராசா வித்தியாசாலை என்பன முக்கியமானவை. நான்கு திசைகளிலும்

13 தில்லைச் சிவன்
திசைக்கொன்றாகத் தோன்றிய இப்பாடசாலைகளின் உத்வேக வளர்ச்சி. தமக்கு அயலிலே தோன்றி இருந்த கிறித்தவப் பாடசாலைகளைச் செயல் இழக்கச் செய்தமையால், அவை ஒவ்வொன்றும் மறைந்து போயின என்று எனது பாட்டனார் கூறக் கேட்டேன். இவற்றிற்குரிய காலம் அண்ணளவாக ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுக்கு முன்பே எனலாம்.
முப்பது முதல் நாற்பது வரையுள்ள காலப்பகுதியே நான் முதலிலே கூறியது போல வேலணையில் சைவமும் தமிழும் எழுச்சிபெறத் தொடங்கியது.
இக்காலப்பகுதியிற்றான், எம்மூர் மக்கள் இடத்திலே, தேசிய உணர்ச்சியும் சுதந்திர தாகமும் ஏற்பட்டது எனலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, எம் தீவுக்கு லைடன் தீவென ஒல்லாந்தரால் இடப் பெற்ற பெயரை நீக்கி, வேலணைத் தீவென்றே பெயர் சூட்ட வேண்டும் என்ற கருத்து வலுத்தது. இது சம்பந்தமான கருத்துப் போர் மூண்ட பொழுது, ஆதரித்தும் எதிர்த்தும் எழுதுவோரின் கருத்துகளுக்கு முதன்மை கொடுத்து, ‘ஈழகேசரி’ ‘இந்துசாதனம்’ ஆகிய பத்திரிகைகள் பிரசுரஞ்செய்ததால், இப்பிரச்சினை நாடளாவியதாக வளர்க்கப்படலாயிற்று. மக்களிடத்தில் சுதேசியம், விதேசியம் என்ற கருத்துக்கள் மலர்ந்ததால் தமிழ் நமது மொழி, சைவம் நமது மதம், இரண்டும் ஒன்றினுக்கொன்று உறுதுணையானவை என்றும், இதற்கும் மேலாகத் தமிழன் என்றால் 'சைவன்' என்பதும் கருத்தாயிற்று. இந்த வேலணைத் தீவு விவாதம் முற்றுப் பெறாத போதும், இன்றைய இலங்கைப் படங்கள் பலவற்றிலும் எம் தீவு வேலணைத் தீவென்று பொறிக்கப்பட்டமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அடுத்து இந்திய தேசியப் போரினால் ஈர்க்கப் பெற்ற எம்மூர்க் கல்விமான்களான ஆசிரியர்கள் மத்தியில் காந்தியத்தின் மதிப்பு உயர்ந்து காணப் பெற்றது. இக்காலத்தில் தான் காந்தி, நேரு, கமலாநேரு போன்ற இந்திய தேசியத் தலைவர்கள், ஊர்காவற்றுறைக்கு வருகை தந்தனர். காந்திஜியின் வருகையின் நினைவாக, ஊர்காவற்றுறை வைத்திய சாலைக்கு முன் உள்ள

Page 9
அந்தக் காலக் கதைகள் 14
திடலில், அவரால் ஒரு அரசமரக்கன்று நடப்பெற்றது. பின்னர் அவ்விடத்திலேயே நடந்த பொதுக் கூட்டத்தில் பல ஆயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து மகாத்மாவுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர்.
இந்த நிகவுகளைத் தொடர்ந்து பல படித்தவர்கள், கதராடை, அணிந்து, காந்தித் தொப்பிகளுடன் பவனிவரலாயினர். ஊரெங்கும் இந்தியப் போராட்ட நிகழ்வுகளையும், இந்தியத் தலைவர்களையும் பற்றிய பேச்சாக இருந்தது.
வேலணையில் உருவாகி வந்த நாடு, மொழி, மதம் என்ற சிந்தனைகளை, ஒருமுகப்படுத்தி இயங்க வேண்டிய நிர்ப்பந்தம், இங்குள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்டது. வேலணைத் தீவின் மேற்குப் பகுதியிலிருந்து, பரவி வந்த கத்தோலிக்க மத, கலாசார நெருக்குதல்களிலிருந்து, நம்மைப் பாதுகாக்க, வேலணைச் சைவத்தமிழர்களுக்கு ஒரு ஸ்தாபனம் இயக்கம்) தேவைப்பட்டது. இத்தேவையை நிறைவேற்ற உருவாக்கப் பெற்ற இயக்கந்தான் “வேலணைத்தீவுச் சைவ இளைஞர் சபை.”
“மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெல்லாம்” என்னும் குறிக்கோள், வாசகத்தோடு தொடங்கப் பெற்ற இச்சங்கத்தின் பிதா பண்டிதர் இ. மருதையனார் என்னும் பெரியார் ஆவர். மருதையனார் அவர்களின் மதிநுட்பமும், பேச்சாற்றலும் அக்காலத்தில் வேலணைத் தீவடங்களிலுமுள்ள எல்லாரிடத்திலும் பெருஞ் செல்வாக்கைச் சம்பாதித்திருந்தது. இக்காரணத்தினால் சைவ இளைஞர் சபை பலசாதனைகளைப் புரிந்தது.
ஏழ்மையும் விரிந்த கல்வி அறிவுமற்று, தாமும் தம் தொழிலும் என்று இருந்த சமூகத்தைத் தட்டி எழுப்பிப் பெரும் பொருட் செலவில் மாபெரும் சைவத்தமிழ் எழுச்சி மாநாடுகளை நடத்தியதன் மூலம் எம் தீவின் புகழ், தமிழ் கூறும் உலகெல்லாம் பரவும் வகை செய்யப்பட்டது. அதனுடன் அமையாது கிராமத்தின் ஒவ்வொரு கோவிலிலும் புராணபடனம் செய்யவும் குரு பூசை, மகேசுவரபூசை, சமயதீட்சை என்பன நடைபெறவும் ஏற்ற ஒழுங்குகள் சங்கத்தினால் செய்து கொடுக்கப்பெற்றது.

5 தில்லைச் சிவன்
வேலணையில் இருந்த பாடசாலைகளின் தலைமை ஆசிரியர்கள் முதல் உதவி ஆசிரியர்கள் அனைவரும் சைவ இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள். நினைவில் உள்ளபடி திருவாளர்கள் அ. வைரமுத்து, அ. செல்லையா, பண்டிதர் அ. பொன்னுத்துரை த. திருஞானசம்பந்தன், சி. இராசரத்தினம், எஸ். சரவணமுத்து, நா. நடராசா, வி. சேதுகாவலர், நா. கந்தப்பு என்பவர்களுடன் பண்டிதவித்துவான் இ. பொன்னையா, சு. வேந்தனரும், சு. வைத்தியலிங்கம், சு. சிவசம்பு பண்டிதர் சோ. தியாகராசா, நா. கந்தையா கந்த ஞானி ஆகியோருடன், வலக்கையாற் கொடுப்பதை இடக்கை அறியாவண்ணம் ஈயும் வள்ளல்கள் பலரும் இச்சங்கத்தின் வளர்ச்சியில் முன்னின்றனர்.
மருதையனாரைத் தலைவராகக் கொண்டு, ஆசிரியர்களான திரு. நா.நடராசர், திரு. எஸ். சரவணமுத்து இணைச் செயலாளராக இருந்து நடாத்திய வேலணைத்தீவுச் சைவஇளைஞர் சபையின் மாநாடு பற்றிய நினைவு இன்றும் என் மனதில் பசுமையாயுள்ளது. சரவணை நாகேசுவரி வித்தியாசாலை, உள்ளும் புறமும் மகரதோரணங்களாலும், பூம்ாலைகளாலும் சோடிக்கப் பெற்றிருக்க, மண்டபத்தின் உள் அரங்கில், சிற்சபை எனத் தோற்றம் பெற்றுள்ள பீடத்தில், திருநடனம் புரியும் நடராசரின் தூக்கிய திருவடியின் கீழ், தமிழ் நாட்டறிஞர்களான, சிவக் கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார், இராமச்சந்திரன் செட்டியார் என்பவர்களோடு தமிழ் ஈழத்தவர்களான மகாலிங்கசிவம், சிவபால சுந்தரனார் என்போரும் சேர்ந்து, கனகமாமழை எனப் பொழிந்த சைவத்தமிழ் வெள்ளத்தில் நனைந்து, மாசகன்றோர் நம்மில் பலராவர்.
இம்மாநாட்டு நிகழ்வினைப் பாராட்டி ஆனந்த விகடனில் கல்கி எழுதிய கட்டுரையில் “தமிழர்களின், விருந்தாளும் பண்பினையும், சைவப் பண்பினையும், தமிழர், சால்பினையும் காணவேண்டும் என்றால், எங்கேயும் செல்லாது நேரே யாழ்ப்பாணம் பேங்கள், அங்கேயும் அதன் தென்மேற்கே வேலணைக்குச் சென்றால் காண்பீர்கள்’ என்று எழுதியதைப் பார்த்துப் பெருமை கொண்டோம்.

Page 10
அந்தக் காலக் கதைகள் 16
இச்சங்கத்தின் வளர்ச்சியும், பணியும் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தாறாம் ஆண்டு வேலணை மத்திய மகாவித்தியாலயத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆயது, என்பது மிகப் பொருத்தம். வல்லமையும், செல்வாக்கும் மிக்க ஒரு பகுதியினரின் எதிர்ப்பின் மத்தியில், இக்கல்லூரி ஸ்தாபிக்கப் பெற்றது சங்கத்தின் ஒருமைப்பாட்டுக்குச் சான்றாகும். இன்னொன்று, இதுவரையில் ஆங்கிலத்தில் வாலணை (VALANA) ஆக இருந்த எம் ஊரின் பெயர் வேலணை (VELANA) ஆகியதற்கு மத்திய கல்லூரியின் வருகையே காரணமாகும்.
நாற்பதுகளில் உலகயுத்தமும் இந்தியச் சுதந்திரப் போரும் இளைஞர்களிடத்திலே பத்திரிகைகளையும் நூல்களையும் தேடி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. கிட்லரின் நாசிப்படையின் முன்னேற்றங்களையும் நேசப்படைகளின் வெற்றிகரமான பின்வாங்குதல்களையும் அறியும் ஆவலில் பத்திரிகைகளைப் பார்க்க ஒடி ஒடித்திரிந்தோம்.
எமது ஊரில் இருந்து காரைநகருக்குச் சுருட்டுத் தொழிலுக்குப் போய் வருபவர்களின் மூலந்தான், நாங்கள் உboகச் செய்திகளை அறிவதுடன், அவர்களிற் சிலர் கொண்டுவரும் நாளிதழ்களையும் படிப்போம். வானொலிகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ பாவனையில் இல்லாத காலமது. செய்திச் சேவை ஊடகங்களை, பத்திரிகைகளையே நம்பி இருந்தோம்.
இந்த நிலையில் எங்களிற் சிலரால் வாசிகசாலையின் தேவை உ ணரப் பெற்றது. நானும் எனது பாடசாலை நண்பர்களுமான, வை. தியாகராசா, செ.சுப்பிரமணியம், மா. இலிங்கப்பிள்ளை, பொ. நாகராசா, வி. காசிப்பிள்ளை, வி. பொன்னுத்துரை என்பவர்களுமாகச் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்தோம். அதன் பெயர் “சரவணைச் சைவமாணவர் சங்கம்”,
எமது சங்கத்தின் காப்பாளராக, வித்துவான் சு.இ. பொன்னையா அவர்கள் இருக்க ஒப்புக் கொண்டமை எமது வேலைகட்கு ஒரு உந்து சக்தி ஆகிவிட்டது. இந்த இடத்தில்

17 தில்லைச் சிவன்
வித்துவான் சு.இ. பொன்னையா அவர்களைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். சைவ ஒழுக்க சீலரான அவர், ஒரு காந்தீயவாதி, தேசாபிமானி. கதர்வேட்டியும், கதர்ச்சேட்டும், அதே சால்வையும் அவர்தம் தேசிய உடை. அகன்ற நெற்றியில் உட்துளனமாகப் பொலியும் நீற்றொளி பிறங்க, நிமிர்ந்த நடையோடு கூடிய அவரது தோற்றப் பொலிவும், கருணைப் பார்வையும், காண்போர், கமக்கட்டுக்குள் சால்லையை வைத்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதை நியாயப்படுத்தும். தமிழ் இலக்கண வித்துவானும், பண்டிதரும், பாடசாலை அதிபருமான இவர், தன்னிடம் பாடங்கேட்கும் மாணவர்களில் மிகுந்த அக்கறையும் அனுதாபமும் உடையவர். தன் செலவிலேயே விளக்குவைத்துக் தேனிருங் கொடுத்துப் பாடஞ் சொல்வதோடு, சில வேளைகளில் மாணவர்களை அவரவர் வீடுகளுக்குக் கூட்டிக் கொண்டு போயும் விடுவார்.
இத்தகைய பெரியார்,நாம் தொடங்கிய சைவமாணவர் சங்க வாசிக சாலைக்குப் பல பத்திரிகைகளையும் நூல்களையும் உபகரித்தார். சரவணை மத்தியில் உள்ள ஒரு கிட்டங்கிக் கட்டிடத்தின் பொருத்தமான அறையொன்று பட்டயக் கணக்காளர் எம்.ரி. பத்மநாதனின் தந்தை யாரான துரைப்பா அவர்களால் எமக்குத் தரப்பெற்றது. அதில் தொடங்கி நடத்தப் பெற்று வந்த எமது வாசிகசாலைக்கு, ஊர்மக்கள் வருகை நாள்தோறும் அதிகரித்தது. புதினத்தாள்களைப் பார்ப்போர் உள்ளும், வாசிப்பித்துக் கேட்போர் புறமுமாகப்பெருங் கூட்டஞ்சேரும்.முதன் முதலாகக் காரைநகருக்குச் சுருட்டு வேலைக்குப் போய் வரும், கந்தர் ஆறுமுகம் என்பவரே ‘வீரகேசரிப்புதினத்தாளை உதவினார். நன்கொடைகளும் பெருகியது. இதனால் நாம், அன்று வெளிவந்துகொண்டிருந்த நாளிதழ், வாரஇதழ். திங்கள் சஞ்சிகைகளென்ற பலவற்றின் சந்தாதாரர்களானோம்.
வீரகேசரி, தினகரன் ஆகிய நாளிதழ்கள் இரண்டினையும் கொழும்பில் வர்த்தர்களாக இருந்த, எமது ஊரவர்கள் இ.கந்தையா, இ. செல்லப்பா சகோதரர்கள், ஒழுங்காகத் தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இவை தவிர ஈழகேசரி, இந்து சாதனம் இரண்டிற்கும் சந்தாதாரர் ஆகினோம். கலைமகள், ஆனந்த போதினி, ஆனந்த
2

Page 11
அந்தக் காலக் கதைகள் 18
விகடன், பிரசண்ட விகடன், அனுமான், சுதேசமித்திரன், கிராம ஊழியன், பொன்னி, வசந்தம், அணிகலன், பாப்பா மலர், பேசும்படம், கரிசன் முதல் உள்ள ஏடுகளனைத்தும் எமது வாசிக சாலை மேசைகளில் வரப்பெற்றிருக்கும். அவ்வக்காலங்களுக்குரியவற்றை மக்கள் உபகரித்திருப்பார்கள், அல்லது மக்களின் நன்கொடை மூலம் யாழ்நகரில் வாங்கியவையாக இருக்கும். இப்பத்திரிகை, சஞ்சிகைகளைப் பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைப்பதில் நண்பர்கள் சுப்பிரமணியமும், தியாராசாவும் பெரும் பணியாற்றினர். பத்திரிகைகளையோ நூல்களையோ சேர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர்களின் அக்கறையும் தொண்டும் மறக்கக் கூடியதல்ல.
வாசிகசாலையை நடத்தி வருவதைப் போன்றே எமது சங்கம் மாதாந்த வருடாந்தக் கூட்டங்களையும் நடத்தி வந்தது. அவ்வப்போது பெருவிழாக்களையும் எடுத்துள்ளோம். பாரதி விழா.நாவலர் தினவிழா, முத்தமிழ்விழாவென்று எத்தனையோ விழாக்களை எடுத்தோம். எமது விழாக்கள் பற்றிய விளம்பர அறிவித்தல்களைக் கையால் எழுதிநமது வாசிகசாலையிலும் புளியங் கூடற்சந்தியில் இருந்த செல்லையர் கடையிலும்,நாகமணியர் கடை வடக்கே மாரிமுத்தர் கடையிலும் ஒட்டி விடுவதுடன் பிரசித்தமும் செய்விப்போம். இவை போதும். இரண்டு மூன்று பெற்றோமாக்ஸ் விளக்குகளுடன் நாகேஸ்வரி வித்தியசாலை மண்டபத்தில் விழா தொடங்கும். கிராமத்து ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக ஒருநூறு பேர்களுக்கு மேற்பட்ட சனங்களின் மத்தியிலே பேச்சுக்களும் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறும். வழமையான கடலைக்கடைகளும் ஒன்றிரண்டு வந்திருக்கும். பேச்சாளர்கள் பெரும்பாலும் எம்உார் ஆசிரியர்களே. அவர்களில் வயதிற் கூடியவர்களைத் தலைவர்களாக இருத்துவதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வோம்.
பெரும்பாலும் எமது விழாப் பேச்சாளர்களாக, ஆசிரியர்களான திருவாளர்கள் க.சோமசுந்தரம், சு. வைத்தியலிங்கம், நா. கந்தப்பு, நா. கந்தையா, சு. ஏரம்பு வித்துவான் சு.இ.பொன்னையா என்பவர்களுடன், சரவணையூரின் பெரிய பரியோரியும், சித்தாந்த பண்டிதருமான திரு.வே. சோமசுந்தரமும் ஒருவராவர்.

19 தில்லைச் சிவன்
சிறப்புப் பேச்சாளராக, வித்துவான் திரு.க. வேந்தனாரையும் அழைப்போம். அக்காலத்தில் அவரின் சொற்பொழிவினைக் கேட்க அயற்கிராமங்களில் இருந்தும் பல இளைஞர்கள் வந்து கூடுவர். இதனால் எமக்குப் பெருமை. அவரை வரவேற்று உபசரிப்பதில் அதீத அக்கறை காட்டுவோம். இவ்வாறான எமது விழாவொன்றில் வித்துவான் வேந்தனார் அவர்கள் “தமிழன் வாழ்வில் மறுமலர்ச்சி” என்று பலரால் பாராட்டப் பெற்ற சொற்பொழிவொன்றினை நிகழ்த்தினார்.
அச் சொற்பொழிவினை அதே பெயரோடு நூல் உருவில் வெளியிட்டு ஒரு புதுமை செய்தோம். இதற்கு முன் ஈழத்தில் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. பின்னர் வேந்தனார் பெயரில் வெளி வந்த பல நூல்கட்கும் முன்னோடியாக அமைந்ததும் இதுவேயாகும். e
எமது சங்கத்தின் இன்னொரு பணியாகக் கற்றாரைப் போற்றிக் கெளரவித்தல் என்ற நிலையை மேலெடுத்தோம். எமது ஊரவர் ஒருவர் முதன் முதலாக வர்த்த இளமாணி (B.Com)ப்பட்டத்தை பெற்றமையைப் பாராட்டி நாம் எடுத்த விழா பலரைச் சிந்திக்கத் தூண்டியது. ஊரில் ஒருவன் படித்து உயர்வது அவரது குடும்பத்துக்கே பெருமை என்ற கருத்துளார் பலரை எமது விழா பாராட்டி இருக்க வேண்டும். ஒருவனின் உயர்ச்சி அவன்றன் குடும்பத்தோடல்ல ஊருக்கே ஏற்பட்ட உயர்ச்சி என்ற கருத்தை மேலோங்கச் செய்ததின் மூலம், நாம் திரு.து. பத்மநாதன் B.com தற்போதுபட்டயக்கணக்காளர் அவர்களைக் கெளரவித்து எடுத்த விழா பின்னால் நடைபெற்ற பலபாராட்டுநிகழ்வுகளுக்கும் முன்னோடியாக இருந்தது.
இதேகாலப்பகுதியிற்றான் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும், கோவிலாவதேதடா குளங்களாவதேதடா என்று நாஸ்திகம் பேசும் ஈ.வெ. ராவின் திராவிடர் கழக எழுச்சியும் ஆக ஒன்றுக்கொன்று மாறுபாடான கொள்கை நிலையில் எமது இளைஞர்கள் தத்தளித்தனர். சைவ மாணவர் சங்கம் கூட இந்நிலையில் விதிவிலக்கல்ல.

Page 12
அந்தக் காலக் கதைகள 2)
தனித்தமிழ் இயக்கத்தின் தமிழ்ப்பற்றையும், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு வாதத்தையும் முன்னெடுத்துக் கொண்ட இளைஞர்கள் சிலர், முதலில் தமது பெயர்களை மாற்றத் தலைப்பட்டனர். அவ்வண்ணமே, நாகேந்திரம் பிள்ளை என்ற வடமொழிப் பெயரைப் ‘பணிவேந்தன்' என்றாக்கி, அது பணிவேந்தன்’ என ஆகக்கேட்டுத், தனியாக “வேந்தனார்’ எனச் சூடியும்,இராசரத்தினம் - “இறைமணி ஆகியும் நடராசா"ஆடலிறை" என்றும், இரண்டு சுந்தரங்களில் ஒருவர். “அழகன்’ என்றும் மற்றவர் “பேரழகன்’ என்றும் மாற்றிக் கொண்டதுடன் தமது தனித்தமிழ் அவாவைப் பூர்த்தி செய்தனர். இன்னும் இக்கால வழக்கில் இருந்த பதவிப் பெயர்களில் அக்கிராசனர் - தலைவர் ஆனார், காரிய தரிசிசெயலர் ஆனார். பொக்கிசதாரர் அல்லது தனாதிகாரி பொருளாளர் ஆகவும் நிர்வாக சபை செயற்குழு ஆகவும் மாற்றம் பெற்றதுடன் கல்யாணம், முகூர்த்தம் என்பன, திருமண நாள் என்றும் இவைபோல்வனவான பல வடமொழிச் சொற்கள் தமிழாக்கம் பெற்று உலாவந்தன.
இது போழ்து நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை எம் ஊரவர் சிலர் இன்றுஞ் சொல்லி மகிழ்வர். திராவிடக் கொள்கையினருக்குக் கோயில் குளம் சாமி இவற்றில் எப்படி நம்பிக்கை இல்லையோ அப்படியே பேய், பிசாசுகளிலும் நம்பிக்கை இல்லை. இவை எல்லாம் பொய் என்பர். ஒருநாள் எமது திராவிட நண்பர் ஒருவரும் வேறு சிலரும் எமது கிராமத்தின் மயானத்துக்குச் சற்றுத் தூரத்தில் இருந்தவிதி மதகு ஒன்றின் மேல் கதைத்துக் கொண்டிருந்தனர். நேரம் இரவு பத்து மணிக்கு மேலிருக்கும். அப்போது பேய்பிசாசுக்கதை வந்தது. பேயாவது பிசாவது என்று வீறாப்புப் பேசினார் பகுத்தறிவு வாதியான திராவிட நண்பர்.
பேய் இல்லை யென்றால் அந்தச் சுடுகாட்டுக்குப் போய்வாரும் பார்ப்போம் எனச்சவால் விட்டார் மற்றவர். “சரி நான் போய்விட்டு வருகிறேன் பார்” என்று புறப்பட்டுச் சென்றவரிடம், குழை வெட்டிக் கழித்துக் கிடந்த ஒருமுழக்கட் ைகொடுக்கப்பட்டது. “இந்தக்

2 தில்லைச் சிவன்
கட்டையை நீ சுடுகாட்டுக்குப் போனதன் அடையாளமாக அங்கேயே ஒர் இடத்தில் அறைந்துவிட்டு வரவேண்டும்" என்ற நிபந்தனையுங் கூட.
நிபந்தனையை நிறைவேற்றக் கட்டையைச் சுடுகாட்டில் அறைந்து விட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய போது, திராவிடவாதி உடலை மூடிப் போர்த்திருந்த சால்வையைப் பேய் பிடித்திருக்கவே, சால்வையை விட்டு விட்டு இரைக்க இரைக்க ஓடி வந்தார். மறுநாட்காலையில், கட்டைக்குள் சால்வை ஒன்று அறைந்திருப்பதைக் கண்டு வியந்த சிலர், முன்பாக நிற்க, தனது சால்வையை எடுத்துக் கொண்டு நண்பர்களைச் சந்தித்தார். அந்தப் பகுத்தறிவுவாதியின் கதையைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Page 13
அந்தக் காலக் கதைகள் 22
- ெே(லணைத் தீவின் கிழக்கே அதன் தலைபோன்றிருப்பது மண்டைதீவு. தெற்கும் கிழக்கும் பெருசமுத்திரங்களையும் வடக்கே யாழ்பண்ணைக் கடலையும், மேற்கே அல்லைப்பிட்டிக் குடாக் கடலையும் எல்லைகளாகக் கொண்ட் சிறு தீவு இது நான்கு கரைகளிலும் கண்ணாப்பற்றைகளும், புன்னைக் காடுகளும், நொச்சி, தாழை, ஈச்சைப் புதர்களுஞ் சூழ நடுவே பூவரசந்தடிகளால் அடைக்கப் பெற்ற வேலிகளுள், சில பனந்தோப்புகளும், தென்னைகளும் வேம்புகளுமாகச் சூழல் வெகுரம்மியமானது.
நிழல்களின் ஊடே தெறிக்கும் அளவான சூரிய ஒளியால் உண்டாகும் வெப்பத்தை கடற்காற்று, ஈரப்பசுமையால், தணிப்பதும் எல்லா வசதிகளும் பொருந்திய யாழ்நகர் அணித்தாக இருப்பதும், காரணமாக, அக்காலத்தில் பலசெல்வந்தர்களின் சுகவாசஸ்தலமாக மண்டைத் தீவு விளங்கியது. பறங்கிக் காடு, குளோசர் பங்களா வளைவு என்பனவும் வேறு சிலவும் சுகவாழ்விடங்களாக விளங்கின. மண்டைத் தீவின் தெற்குக் கரையோரக் கலங்கரை விளக்கு, பன்னெடுங்காலமாகவே கலங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதும், பலதடவைகளில் பெரிய பெரிய கப்பல்கள் யாழ்நகருக்குப் பொருட்களை ஏற்றி வந்து அங்கு நின்றே இறக்கியும் ஏற்றியும் செல்வதாலும் அது ஒருதுறைமுகமாகவும் உள்ளது.
கிழக்கில் ஒரு மீன்பிடித்துறை; மிக அண்மையிற்றான் அபிவிருத்தி செய்யப் பெற்றது. அங்கிருந்து அநேக கட்டுமரங்களும் வள்ளங்களும் கிழக்கே உள்ள பாலைத்தீவுக்கு அப்பால், பெருஞ்சமுத்திரங்களில் சென்று மீன்பிடிப்பதும், கருவாடு போடுவதும் நித்தமும் காணும் நிகழ்வுகள். வாடை வீசுங்காலங்களில் கீழ்க்கடல் மீனவர் பலரின் மீன்பிடித்தளமாக மண்டைதீவு விளங்கும்.

43 தில்லைச் சிவன்
5. . இத்தகைய எழிலார்ந்த மண்டைதீவுக்கும் எனது கிராமமான சரவணைக்கும், இன்று நேற்றல்ல பண்டைய உறவு. திருமணக் கொடுக்கல் உறவினால் நிலத்தொடர்புகளும் அதிகம். சரவணையின் நரைமண்ணும் மண்ட்ை தீவின் ஊரிமணலும் நெல்விளைவிற் பேர் பெற்றவை. டச்சுக்காரரால், முதன்முதலாக மண்டைதீவில் அறிமுகம் செய்யப்பெற்ற புகையிலைச் செடி, சரவணையில் வளர்ந்து புகழ் பெற்றது. இன்றும் சிங்களப்பகுதியில் விற்பனையாகும் தீவுப்புகையிலை அனைத்துக்கும், சரவணைப்புகையிலை என்mே பெயர்:
தீவுப்பகுதியில் மண்டைதீவுக்குத் தனிச் சிறப்புண்டு முற்று முழுதாக விவசாயத்தையும், கடலையும், பனையையும் நம்பி வாழும் மக்களே அதிகம். உள்ளொன்று வைத்துபுறம் பொன்று சொல்லாத வெள்ளை உள்ளத்தினர். அநீதிகளைக் கண்டால், பொங்கிக் குமுறும் குணம் அவர்களுடையது. இதனால் சண்டை சச்சரவுகளும் நிகழ்வதுண்டு. அந்தக் காலத்தில் மண்டை தீவில் இருந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு வருவோர் அதிகம். பெரும்பாலும் கால்நட்ைய்ாகவும் வண்டிகளிலுமே அவர்களின் பிரயாணம்.மண்டை தீவு மக்களுடன் நெருக்கமாக, மற்றை யோருக்குக் கொஞ்சம் பயமுங்கூட
இப்பயத்துக்கு மேலும் ஒரு காரணத்தையுஞ்சொல்வர். அந்தக்காலத்து மலையாள, மட்டக்கிளப்பு மாந்திரீகத் தொழில் மண்டைதீவிலும் இருந்தது. பேய்களைப் பிடித்தட்க்கி ஏவல் வேலை செய்வித்தவர்களும் இங்கிருந்தார்களாம். பெரிய மந்திரவாதிகளின் தலைக்கு மேலாகப் பேய்கள் மேலாக்குப் பிடித்து வருமாம். வசிய மந்திரங்களின் மகிமையால், விருப்பற்ற பெண்களை விரும்பவைத்து மணஞ் செய்து வைத்த மந்திரவாதிகளும் உண்டாம். இத்தகைய மந்திரவாதிகளின் குடில்களில் பல இளைஞர்கள் தவங்கிடந்ததாகக் கேள்வி. அவர்கள் தம் இஷ்ட சித்திகளைப் பெற்றுய்ய மந்திர வாதிகளின் கிருபா கட்ாட்சம், தேவையன்றோ. இத்தகைய சூழ்நிலையில் உள்ள அன்றைய மண்ட்ை தீவுக்கு பகுத்தறிவு வாதியான கோவூர் அடிக்கடி போய் வந்ததாக, ஒரு நூலிலும்

Page 14
அந்தக் காலக் கதைகள் 24
வாசித்தேன். அவருடைய பகுத்தறிவு நிரூபணங்களை மண்டைதீவு மக்கள் ஏற்றுக் கொண்டதாக இல்லை. மேலும் மேலும் செய்வினை, பெல்லி சூனியங்களால் மக்கள் அவதிப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஐம்பது அறுபதுகளிற் கூட சிலர் வீடுகளில் பேய் பிசாசுகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல், இடம்பெயர்ந்து திரிந்தமையைக் கண்டேன்.
தீவுப்பகுதியிலேயே வாரக்குடிகள் அதிகமாக வாழ்ந்த இடம் மண்டைதீவு. எனது தந்தையாரும் ஒரு வாரக்குடிமகனே. அவர் விவசாயத்தைத் துறந்து சுருட்டுக் கைத்தொழிலை மேற்கொண்டதால் பலநிலைகளிலும் ஒரு முற்போக்குவாதியாகத் திகழ்ந்தார். மண்டைதீவுச் சூழல் அவரை ஆட்கொள்ளவில்லை அன்றென்ன? இன்றுந்தான் மண்டைதீவு விளைநிலங்களில் பெரும்பகுதி, மூன்று நான்கு கோவில்களுக்கும், அதன் எஜமானர்கட்கும் சொந்தம். அந்நிலங்களில் பயிரிடுவோர் விளைவின் மூன்றிலொரு பகுதியை நிலப்பங்காகக் கொடுத்து விடவேண்டும். மேலும் பயிர்த்தொழிலுக்கு முதலிடுவதற்காக எஜமானனிடம் பெற்ற கடன் இறுத்தற் பொருட்டு, வட்டியும் முதலுமாக எஞ்சியவற்றையும் கொடுத்து வெறுங் கையை வீசிக் கொண்டு வருபவர் பலர். இவ்வாறு என்றும் எஜமானனின் கடனாளியாக வாழும் நிலையில், தமக்கென உள்ள சில நில புலங்களைக்கடனுக்காக எஜமானனுக்கே எழுதிக் கொடுத்துவிட்டு, அந்நிலங்களிலேயே வாரக் குடிகளாய் வாழ்ந்தோரும் உண்டு.
ஒரு காலத்தில் இத்தீவின் ஒரு பகுதி அரசினருக்கு உடமையான வெறும் நிலம். கடற்கரைச்சிப்பிகளை மூடிய மணற்காடு. ஊரிக் காடென்றும் சொல்லுவர். ஒரு காலத்தில் யாரோ ஒருவர் இந்நிலத்தின் சிறு பகுதியொன்றைத் திருத்தி விவசாயம் செய்தார். ஒருவரைப்பார்த்து ஒருவராகப் பல பொதுமக்கள் அந்நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்யத் தொடங்கினர். இவற்றைக் கண்டு மனங்கொதித்த சில செல்வந்தர்களின் வேண்டுதல்களால், இந்நிலங்களைப் பகிரங்க ஏலத்தில் விற்க இருப்பதாக யாழ்ப்பாணக் கச்சேரியில் அறிவித்தல் ஒட்டப்பெற்றுவிட்டது.

25 தில்லைச் சிவன்
குறிப்பிட்ட திகதியில் காணியை ஏலத்தில் வாங்க ஆயத்தப்பட்டார்கள் ஊர்ப்பொதுமக்கள் பலர். என்னவிலை கொடுத்தும் ஏலங்கேட்க முன்வந்தனர், காணிகளைச் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள். இவர்களுக்கு ஆதரவு போலப் பாசாங்கு செய்து, என்ன விலையானாலும் விடாது கேள் என்று உற்சாக மூட்டிய செல்வந்தர்கள், ஈடுபாட்டுக்கு காசு தரவுஞ் செய்தார்கள். இத்தகையதான விவசாயிகளின் அக்கறையை அதிகாரச் செல்வாக்கும் பணபலமும் மிக்கோராய், மேற்படி நிலங்களைக் குறைந்த விலைக்கே அபகரிக்க நினைத்த சிலரால் பொறுக்க முடியவில்லை.
இக்காணிகளைப் பொதுமக்கள் பெற்றுவிட்டால், தமது காணிகளைச் செய்து பங்குதர ஆட்கள் முன்வரார் என்ற கவலை வேறு இப்படியானவர்களும், காணியை முழுமையாக வாங்கிச் சிறு சிறு துண்டுகளாக விற்றுப்பணம் சம்பாதிக்க நினைத்தவர்களும் கூட்டாகச் சதி செய்தனர்.
இச்சதி பற்றிய அறிதலின்றி, ஒவ்வொரு நாளும் ஊரிமண்ணை அழைந்து, அறுகு, கோரைக் கிழங்குகளை அகற்றிக் கற்களை நீக்கி, மண்ணைப் போற்றி வாழ்ந்த மக்கள், அம்மண்ணுக்கு உரிமம் பெறும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். நெஞ்சம் பூரித்தது. தாம் வெயர்வை சிந்தி, நனைந்த ஊரிமண் தமக்கே உரிமை ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லையென்ற எக்களிப்பு. கள்ளங்கபடமற்ற விவசாயிகள் பலர் தமது உடமையை வெளிப்படுத்தி ஏலத்தில் எவ்வளவு உயர்ந்தாலும் விடமாட்டோம், நாம் செய்யும் நிலம் நமக்கே உடமை என்று ஆர்ப்பரித்தார்கள், ஆனால்.?
ஏலத்தினத்தன்று, காணி செய்த விவசாயிகள் அனைவரும் பண்ணைத்துறையில் நிற்கிறார்கள். எப்போது விடியும், எப்போது கச்சேரிக்குப்போவோம் என்ற ஏக்கம் அவர்களுக்கு கோட்டை மறியற்சாலையில் மணிடியக்கும் சத்தத்துடன், மண்டைதீவில் ஒய்வெடுத்த காகங்கள் பண்ணைத்துறையை நோக்கிப் பறக்கின்றன. நகரில் எரிந்த தெரு விளக்குகளின் ஒளியும் கண்களுக்குத் தெரியாது

Page 15
அந்தக் காலக் கதைகள் 26
புல் புல் என்று விடிந்து, ஏழு. எட்டு ஒன்பதென்று நேரமும் போய்க்கொண்டிருந்தது. பண்ணைத்துறையில் இருந்து ஒரு தோணியும் புறப்படவில்லை. வேலணைப்பகுதியில் இருந்து வந்த சிலரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். எல்லோரின் கருத்தும், ஆயக்குத்தகைக்கும் தண்டயல்களுக்குமிடையே ஏதோ தகராறு என்பதாகவே இருந்தது. ஆனால் ஆயக்கொட்டிலில் இராப்" பொழுதைக்கழித்த சிலர் கச்சேரிவாயிலை அடைந்து விட்டனர். அங்கே நேரம் ஒன்பது முப்பது. அதிகாரிகளின் ஒத்துழைப்போடு குறைந்த விலைக்கே நிலத்தைப் பெற்றுக்கொண்ட பண முதலைகள் தண்ணீர் அடிக்கின்றனர். இங்கே கடற்கரையில் நேரம் போவதை அவதானித்துக் கொண்டே ஏழை விவசாயிகள் கண்ணிர் வடிக்கின்றனர்.
பத்துப் பதினைந்துக்கு முதற்றோணி பண்ணையில் இருந்து புறப்பட்டது. அது மண்டை தீவுக்கரையை வந்தடைந்தது பதினொன்றரை. அதில் வந்த ஒருவர் ஏலங் கூறிமுடிந்தது என்று சொல்லக்கேட்ட விவசாயிகள் பதறிப்போய் விட்டனர். கடற்கரை மணலை அள்ளித் தூற்றிக் “காணி போச்சே! என் காணி போச்சே!” என்று கதறினர் சிலர். ஆவேசம் கொண்ட சிலர் மடியில் கட்டியிருந்த பணப் பொதியை அவிழ்த்தெறிந்துவிட்டுப் பயித்தம் பிடித்தவர் போற் பிதற்றினர்.
கவலையோடு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த சிலர் ஊரி வயலைக் கண்டதும் கோவெனக் கதறினர். ஒடிச்சென்று ஊரி மண்ணைக் கைகளில் அள்ளிக் கண்களில் ஒற்றினர். கால்களை மண்ணுள் புதைத்துக் கண்ணிர் விட்டனர்.
ஆயக்குத்தகைகாரனோடு சேர்ந்து செய்த சதியை ஏழை விவசாய மக்கள் அறியவில்லை. அடுத்துச் செய்ய வேண்டியதை தெரிந்து கொள்ள முடியாத தற்குறிகளான மக்கள் நிலை கண்ட ஊரிமண் சிரித்தது. இக்கதையைக் கூறிய பெரியார் ஒருவர் இக்காணிகளிற் பல இன்று முன்னர் செய்தவர்கள் பேரிலேயே எழுதப்பெற்று விட்டன என்று ஆறுதலடைந்தார்.

27 தில்லைச் சிவன்
ஒரு சிறிய தீவில் பல தேவாலயங்கள், கோவிலை ஆதரித்துத் தொண்டு செய்பவர் பலர். திருநீற்றுப் பூச்சும் சந்தன திலகமும் மக்களின் அடையாளம். அந்த நாட்களில் பண்ணைத் தாம்போதியில், சந்தனப் பொட்டோடு செல்பவர்களைக் கண்டால், அவர்கள் நால்வரில் மூன்று பேர் மண்டைதீவு மக்களாக இருப்பர்.
மக்களிடம் சமயப்பற்று மிக்கிருந்தவாறே தமிழ்ப்பற்றும் ஓங்கி நின்றது. மூன்று உயர்தர பாடசாலைகளும் அநேக ஆசிரியர்களும், தமிழ் விளக்கஞ் செய்தார்கள். தரமான தமிழ் மாத சஞ்சிகை ஒன்றினை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தொன்றிலே தொடக்கி நடத்திய பெருமை இம்மண்ணுக்குண்டு. அதன் ஆசிரியரான பொன். குமாரவேற்பிள்ளை ஒரு கோவிலின் எஜமானராவார். இன்னொரு கோவில் எஜமானரான க. கைலாச பிள்ளை பல ஆண்டு காலமாக, வடமாநிலத்து உபதபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும். கிராமச்சங்கத் தலைவர்கள் சங்கத் தலைவராகவுமிருந்து அளப்பருஞ்சேவை செய்தற்கு இம்மண் பேருபகாரியாக இருந்தது.
ஞானிகளின் மகுடம் அன்ன கடையிற்சாமியார் பன்நாள் நடத்தலால், புனிதமடைந்ததும் இந்த ஊரி மண்ணே. அவர் காலத்திலும் பின்னும் பல ஞானிகளின் ஆதாரபூமியான மண்டை தீவில், முகப்புக் கந்தசாமிக்கு அருகில் இருந்த, கடையிற் சாமியின் குடிலைத்தரிசித்தமை எனது பேறு என்றே கருதுகின்றேன்.

Page 16
அந்தக் காலக் கதைகள் 28
3. அன்பு வியாபாரி
அறுேபது ஆண்டுகளின் முன் ஒருநாள் மாலை நாலரை ஐந்து மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் நின்றேன். எனது முகத்துக்கு நேரே மேற்குத் திசையில் பனைகளுக்கு மேலாகச் சூரியன் தளதளவென்று ஒளிவிட்டுப்பிரகாசித்துக் கொண்டிருந்தான். மேலே வானத்தில் கருமுகில் கூட்டம். நீலச் சேலைக்குச் சரிகைக் கரை வைத்தது போலச் சூரியக் கதிர் புட்டுக் கொண்டு வரப் பளபளத்தது. அவற்றைப்பார்த்துக்கொண்டே சற்று விலத்திநடந்தேன். அங்கேயும், சூரியன் பனைமரங்களை விலத்திக்கொண்டு எனக்கு நேராக வந்தான். முகில்களும் அவ்வாறே என்னைத் தொடர்ந்து எனக்கு நேரே வந்தன. இன்னும் கொஞ்சம் நடந்து பார்த்தேன், அங்கேயும் அவை எனக்கு நேரே தொடர்ந்து மேலே செல்லாமல் பக்கத்தில் இருந்த ஒரு பூவரச மரத்தில் ஏறி நின்று பார்த்தேன். எனக்குப் பக்கத்தில் நின்ற சூரியனும் முகிலும் இப்போது சற்று உயரத்தே கிளம்பிவிட்டன போலும். பூவரசின் மேலே நான் ஏற ஏற சூரியனும் மேலே மேலே எனக்கு நேரேதான் போய்க்கொண்டிருந்தான்.
பூவரச மரத்தில் இருந்தபடி நான்கு பக்கமும் சுற்றிப்பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வானம் கவிழ்ந்து மூடியிருந்தது. அதனுள்ளே பனைகளும் வேம்புகளும் வேலிகள் போல வரிசையாகத் தோன்றின. வடக்குப் பக்கமாகத் தெரிந்தது கடற்கரை. பல பாய் மரத்தோணிகள் வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாகக் கிழக்குநோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஊர்காவற்றுறைத் துறை முகத்தில் நிற்கும் பெரும் கப்பல்களில் இருந்து இறக்கப் பெற்ற பொருட்கள் வத்தைகளில் ஏற்றப்பட்டு அராலிக் கடலினுடாக அலுப்பாந்தி(யாழ்ப்பாணம்)க்குக்கொண்டுசெல்லப்படுவது, அப்போது எனக்குத் தெரியாது. அதன் வரிசை ஒழுங்கும் அழகும் என் மனதைக் கவர்ந்த அதே வேளையில் கடலில் இருந்து உழவார வியூகத்தில்

29 தில்லைச் சிவன்
எனது தலைக்கு மேலால் பறந்து சென்று கொண்டிருந்தன. வெள்ளைக்கொக்கினம். இவற்றிற்கும் கடலில் வரிசையில் பாய்விரித்தோடும் வத்தைகட்கும் பேதம் காண அப்போது என்னால் முடியவில்லை. வத்தைகளைக் கொக்கென நினைத்த காலமது.
முதலில் நான், என்னைச் சுற்றி வர நாலைந்து வீடுகள். 6.பீடுகளைச் சுற்றி வயல்வெளி, பனந்தோட்டம். அவற்றின் அப்பால் மாடுகள் புல்மேயும் தரவை. அதற்கப்பால் கடல், கடலைக் கவிந்து மேகம் மூடியுள்ளது. இவ்வளவுதான் உலகம் என்பது அன்றைய என்நினைவு. ஒரு ஏணி இருந்தால் வானத்தில் ஏறிப்பார்க்கலாம் என்ற கற்பனையில் வானையும் வீசுங்காற்றையும் தகதகக்கும் பரிதியையும் கடலையும் நிலத்தையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த வேளையில், நான் ஏறி இருந்த மரத்தின் பதிவான, சுமைதாங்கி போல் இருந்த இருகிளைகளுக்கிடைப்பட்ட கிளைச்சந்தியில், ஒருகடகம் இறக்கி வைக்கப்பட்டதையும், அக்கடகத்தைச் சுமந்து வந்தபெண், மரத்தடியில் அமர்ந்திருந்து, வெற்றிலை போட்டுக் கொண்டு இளைப்பாறவுங் கண்டேன்.
அப்பெண் எனக்குப் பழக்கமானவள்தான். அடிக்கடி வியாபாரநோக்கமாக எமது வீட்டுக்கு வரும் தெய்வானைப் பாட்டி அவள். வயது ஐம்பதைத் தாண்டியவள். அவளுடைய கடகங்களுள் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கடகங்கள் இருக்கும். அடிக்கடகத்தில் விற்கும் பண்டங்களுக்கு மாற்றிடாகக் கிடைக்கும் நெல் ஒடியல் என்பனவும், அதன்மேல் உள்ள கடகத்தில் விற்கும் பயறு, உழுந்து போன்ற தானியங்களும் வேறு நசிவற்ற பொருட்களும் இருக்கும்.
அதிமேற்கடகத்தினுள் வெற்றிலை, தேயிலைப் போத்தில், பனங்கட்டிக்குட்டான், வடை, வாய்ப்பன் அவித்த மரவள்ளிக் கிழங்கு முறி, இத்தியாதி பல பொருட்கள் இருந்தன.
உயர்ந்த மரக்கொம்பில் இருந்து கடகத்தைப் பார்த்தேன். அதில் இருந்த பொருட்களின் மேல் எனது கவனம் சென்றது. அரவப்படாமல் கீழே வந்து, இரண்டு மரவள்ளிக் கிழங்கு முறிகளை

Page 17
அந்தக் காலக் கதைகள் - 30
எடுத்துக்கொண்டு மேலே சென்று அவற்றை அவசரமாக விழுங்கிவிட்டுத் திரும்பவும் கீழே வந்தேன். கடகத்துள் இருந்த சிறிய பனங்கட்டிக் குட்டான்களில் ஒருகை அள்ளிக்கொண்டு மேலேறும் போது இரண்டு மூன்று குட்டான்கள் தவறிக் கீழே விழுந்து விட்டன. தெய்வானைப்பாட்டி மேலே பார்த்தாள். எனது கைகால்கள் படபடக்கத்தொடங்கிவிட்டன. விழுந்து விடுவேன் போல் இருந்தது. பயத்தினால் நடுங்கிக் கொண்டு நின்ற என்னைப் பரிவோடு பார்த்த அவள் பயப்படாமல் இறங்கி வா என அன்போடு அழைத்தாள். நான் பயத்துடனும் வெட்கத்துடனும் இறங்கிக் கீழே வந்ததும் கையில் இருந்த பனங்கட்டிக் குட்டான்களை அவளிடம் நீட்டினேன். அவள் “வேண்டாமடா குஞ்சு நீயே இவற்றைத் தின்’ என்று இதமாக என் முகத்தில் முத்திட்டு முதுகைத்தடவி அணைத்துக்கொண்டு சென்றாளே! அதை இப்பவுந்தான் நினைக்கிறேன். என் இதயம் இனிக்கிறது. என்னை அறியாமலே கண்கள் பனிக்கின்றன.
நான் எனது வீட்டுக்குள் சென்றதும் ஒடிப்போய் ஒரு மூலையுள் ஒளிந்துக்கொண்டேன். அவள் எனது அம்மாவுடன் சிரித்துச் சிரித்துக் கதைத்ததை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எனது அம்மா ஒரு பெட்டி நிறைந்த சீவலை அள்ளி அவளின் அடிக்கடகத்துள் போட்டு விட்டாள். அவளின் அன்பிற்கு இது விலையாகுமா?

31 தில்லைச் சிவன்
4. தூக்கணாங்குருவி
)(ழைய தமிழரசர்களின் கோட்டைகளைச் சூழ அகழிகளும் அகவைகளை முந்திக்கொண்டு காடும் அரண்களாக இருக்குமாம். காட்டு அரணுக்குத் தெரிவு செய்பட்ட மரங்களில் முதன்மையானது இலந்தை. அடர்ந்து வரிசைக் காடுகளாய் இருக்கும் இலந்தை மரங்களின் கொம்புகளை வெட்டிவிடுவதன் மூலம் கோட்டையைச் கற்றிப் பாதுகாப்பு வேலி போடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் முள்ளுக் கம்பிகளை வளைத்து விட்டு அரண் செய்வது போல. ஆண்டுதோறும் தழைத்துக் கிளைவிடும் இலந்தை முட்களை வெட்டி விடுவதனால் கோட்டை நெருங்க முடியாத முள்வேலி சூழ்ந்ததாக இருப்பதை நினைத்துப் பார்த்தால், அதன் முதன்மை விளங்கும். அஃதன்றியும் இலந்தையின் இனிய பழம் நாம் அனைவரும் பெறக்கூடிய ஒன்றாக இருந்தது. இன்று எமது கிராமத்தில் காணாமற் போன சிலவற்றுள் இலந்தையும் ஒன்று.
அன்று எங்கள் வளவுக்கு முன் பல இலந்தைகள் வரிசையாக நின்றன. பக்கங்களில் வேம்பு, அரசு, இலுப்பை இப்படியாகப் பலவகை மரங்கள் நெருங்கி நின்ற இலந்தை மரக்கொப்புகளில் அநேக தூக்கணாங் குருவிக்கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. பார்க்க மனோரம்மியமான எழில் கொண்டவை.
பன்னாடைத்தும்புகள், தென்னோலைக்கீற்றுகள், இவைகளைக் கொண்டு அடிமுடி அறிய முடியாதவாறு அழகாக அமைக்கப்பெற்ற கூடுகளவை. அக்கூடுகளும் இரண்டு வகையானவை. ஒன்று நீண்டதாயும் கங்காருவின் வயிறு போன்ற நடுப்பகுதியும், குளாய் வடிவமாய் கீழே இருந்து உள்ளே வரவும் போகவும் உரிய வழியும் உடையது, மற்றது, பிட்டு மூடி போல அமைந்து நடுவாக இரண்டு பக்கங்களையும் நேராக இணைத்துள்ள ஒரு கயிறும்

Page 18
அந்தக் காலக் கதைகள் 32
உடையது. இவ்விருவகைக்கூடுகளும் கொப்புகளின் நுனியில் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக அமைந்திருக்கும்.
பெண் குருவி தன் நீண்ட பெரிய கூட்டின் வயிற்றறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பொழுதெல்லாம், ஆண் குருவி தனது சிறிய கூட்டின் நடுவே கயிற்றாசனத்தில் அமர்ந்திருந்து காவல் காக்கும். ஏதும் அரவம் கேட்டால் அல்லது மரங்களின் கீழே நாய் பூனை போன்ற மிருகங்கள் காணப்பட்டால் ஆண் குருவி தன் பெண்ணின் கூட்டைச் சுற்றிச்சுற்றிப் பறந்து கத்தித்திரியும். அம்மரத்தில் காகம் போன்ற வேற்றினப்பறவைகள் வந்தாலோ நிலமை வேறு. ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து அவற்றைக் குட்டிக்கலைக்கும். இந்த வேளைகளில் இவைகட்கு உதவியாக எங்கிருந்தோ பறந்து வரும் ஒருகரிக்குருவி இவைகளுடன் சேர்ந்து பகைப்பறவைகளைக் குட்டுவதைப்பார்த்து வியந்துள்ளேன்.
இந்தக் கரிக்குருவி ஒரு கிளுவையிவோ, மரத்திலோ இலைகள் குறைவாக உள்ள பட்ட கொம்பின் நுனியில் தனிமையாகவே இருக்கும். சதாகாலமும் “ச், சு, ச், சு” என்று சத்தம் இட்டுக் கொண்டிருக்கும்.இக்கருக்குருவி சாகாவரம் பெற்றதென்றும், எப்பொழுதும் “மிருத்துயுஞ்சய' மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது என்றும் எனது பாட்டனார் சொல்லுவார்.
இந்தத் தூக்கணங்குருவிகள் இரண்டும், காலை மாலை வேளைகளில் ஒன்றாக ஒரே கூட்டின் ஆசனத்தில் இருந்து கொண்டு கதைப்பதும் ஒன்றையொன்று தமது அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டுக் களிப்பதுமாக இருக்கும். அடிக்கடி வெளியே பறந்து சென்று இரைதேடிக் கொண்டு வந்து கூட்டுள் இருக்கும் குஞ்சுகளுக்கு இரண்டு குருவிகளும் மாறிமாறி உளட்டும். எப்பொழுதும் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதில் ஆனே முன்நிற்கும். ஆண் குருவியின் தலை தட்டையாகவும் சற்றுக் கறுத்தும் இருக்கும். பெண்குருவியின் தலை சிறிதாய் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
வீட்டுத்திண்ணையில் கிடந்து கொண்டே இக்குருவிகளின் ஆடல்பாடல்களை அனுபவிக்காத நாளில்லை. மாலை வேளைகளில்

33 தில்லைச் சிவன்
இறகுகளை விரித்து அகலுவதும் ஒன்றை ஒன்று துரத்துவதும், கால்களைப் பற்றிக்கொண்டு ஒன்றை ஒன்று தலையில் அலகால் உரசுவதுமான ஆனந்தக்காட்சிகளை இன்று காண முடியவில்லை. என் பிஞ்சுப் பருவத்தில் இக்குருவிகளுடன் இரண்டறக்கலந்து, அவற்றின் ஆடலிலும் பாடலிலும் மகிழ்ந்து வாழ்ந்த என்நெஞ்சம் இன்று அவற்றின் கூடுகளைத் தானும் காணவில்லையே என்று கவலைப்படுவதை யாரறிவார்?
எமது சின்னஞ்சிறிய கிராமத்தில் பல்கிப் பெருகிக்கிடந்த தூக்கணாங்குருவிக் கூடுகளில் ஒன்றைத்தானும் இப்பொழுது காண முடியவில்லை. அவை பாதுகாப்பாகக்கூடுகள் அமைத்து வாழ்ந்த இலந்தை மரங்களும் இல்லை. இக்குருவிகட்கு ஆபத்து வேளையில் உதவி வந்த வால் நீண்ட கரிக்குருவிகளையும் காணவில்லை. இவைகட்கு என்ன நேர்ந்ததோ யாரறிவார்?
இவ்வகையாகவே எமது கிராமக் காடுகளிலும் வளவுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த பட்சிஜாலங்களுள் செம்பகம் கொண்டைக் குருவி என்பவை அருகிக்கொண்டு வருவதும், நரிகளும் காட்டு முயல்களும் முற்றாக அழிக்கப்பட்டுப்போனதையும் காணலாம்.

Page 19
அந்தக் காலக் கதைகள் 34
5. புளிச்சாதம்
})லு முழ வேட்டி, அதன் மேல் முக்கோணப்பட மடித்து பட்டிபோல் அரையைச் சுற்றிக்கட்டிய ஈரிழைத்துண்டு. தலையில் ஒரு துண்டுத் தலைப்பா, தோளிற்சால்வை இத்தகைய சீருடைகளுடன் கால்களில் தோற்செருப்பும், செவிகள் இரண்டிலும் கடுக்கண் களாடவும் சொருக்கவிழ்ந்த பின் குடும்பியைச் சொடுக்கி முடிந்து கொண்டு அக்காலக்கிறவல் வீதிகளாலும் மணற் கோடு கிழித்த ஒற்றையடிப்பாதைகளாலும் செல்வார்களெனில் அவர்கள் பட்டணம் போகிறார்கள் என்பதுதான் அர்த்தம்.
அப்படிப் பயணம் செல்பவர்களில் சிலர் முதல்நாளே தமது உறவினர்களிடம் பயணம் சொல்லுவதும் உறவினர்களின் தேவையை அறிந்து பட்டோலை பெற்றுச் செல்வதும் உண்டு. பயணம் செல்பவர்களைப் பின்னாற் கூப்பிடக்கூடாது என்பதற்காக ஒடி ஒடிப் பின்சென்று சில ரூபாக்களை அவர்களின் கைகளில் திணித்து தமக்குத் தேவைப்பட்ட சில பொருட்களை வாங்கி வரக்கேட்டுக் கொள்பவர்களும் உண்டு. இவ்வகை இடைஞ்சல்களைத் தவிர்க்கும்பொருட்டும் பணிக்கதகதப்போடு பல மைற்கல் தாண்டி விடலாம் என்ற பயண சுகத்துக்காகவும் விடிவெள்ளி காலிக்கும் முன்பே பயணம் புறப்பட்டுச் செல்வோர்பலர். பயணத்துக்கு உதவாத சகுணப்பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கும் இந்த அகாலவேளை சாலச்சிறந்தது போலும். தும்மினால் பல்லி சொன்னால் வழியில் வெறுங்குடத்தைப்பார்த்தால், பூனை குறுக்கால் போனால் “முழுவியளம் சரியில்லை” என்று பயணத்தை நிறுத்தியும் விடுவார்கள்.
இவ்வகைப் பயணிகள், வண்ண ஓலைகளால் இழைக்கப் பெற்ற உமல்கள், பட்டணத்தில் சாப்பிடுவதற்கான புளிச்சாதப் பொட்டணங்கள். தண்ணிர் அள்ளுவதற்கேற்ற செம்பு, நூற்கயிறு.

35 தில்லைச் சிவன்
தண்ணிர் வாங்கிக் குடிக்கக் குவளை, ஒரு பெரிய வல்லுவம் என்பவற்றைக் கொண்டு செல்வர்.
வல்லுவத்தின் ஒரு அறையில் நாணயக் குற்றிகள், அடுத்துள்ளஅறையுள் ரூபாத்தாள்கள், மற்ற அறை சற்றும் பெரிது, அதனுள் வெற்றிலை பாக்கு கண்ணாம்புக் கரண்டகம் காசுக்கட்டி களிப்பாக்கு மணப்பாக்கு என்பவற்றோடு பித்தளையாற் செய்த வெற்றிலைச் செல்லம் என்ற வெற்றிலைபாக்கு இடிக்கும் கருவியும் குடுமிவாங்கி முள்ளெடுக்கும் ஊசி என்பனவுமிருக்கும்.
இத்தகைய உபகரணங்களுடன் ஐம்பது வயதுக்கு முன்பின்னாக வாலிபமும் வயோதிபமும் அற்ற ஒருவர் நான் நின்ற, கல்லுண்டாய் வைரவர் கோவிற் பக்கமாக உள்ள கடைக்கு வந்தார். உச்சி வெயில் கொளுத்தும் வேளை, “அப்பாடா” என்று ஆயாசத்துடன் கடைச்சுவரில் சாய்ந்து கொண்ட அவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அராலித்துறையால் கால்நடையாக வருவதாகவும் கூறினார்.
அப்போதெல்லாம் தீவுப்பகுதி மக்களின் பிரயாண வசதி மிகக்குறைவு. மாட்டுவண்டி தவிர்ந்த வேறோர் வாகன வசதியுமற்ற காலம். பிரயாணங்கள் பெரும்பாலும் கால்நடையாகவே இருந்தது. பிரயாணமும் பெரும்பாலும் பட்டணப் பிரவேசத்திற்கானதே. ஏனைய வழி, எல்லாப் பொருட்களையும் வாங்கவும் விற்கவும் கூடியதாக ஊர்காவற்றுறை இருந்தது. ஊறாத்துறை, ஊர்காவற்றுறை ஆகியது மிக அண்மையிற்றான். காரைதீவு காரைநகர் ஆனதனைப்போல.
ஊர்காவற்றுறை சிறந்திருந்த போதிலும் அன்று முதல் தீவுப்பகுதி மக்கள் பெரும்பாலோரது கலாசாரத்தலைநகராக யாழ்ப்பாணப்பட்டினமே சிறந்திருந்த காரணத்தினால், மக்களில் அநேகர் யாழ்ப்பாணத்தையே நாடினர். யாழ் செல்ல உள்ள மூன்று கடல் வழிகளுள் எம்மூர் மக்கள் வேலணை அராலி ஆயப் பாதையையே பெரிதும் விரும்பினர். காரணம் இவர்களுக்கு இது சுருக்கப்பாதை. அன்று அராலி ஆயக்கூலி இரண்டு சதம். வேலணை அராலிக் கிராம சபைகள் சேர்ந்து ஆயப் போக்குவரவை நடாத்திக் கொண்டிருந்தனர்.

Page 20
அந்தக் காலக் கதைகள் 36
அராலித் துறையால் கல்லுண்டாய் வந்தடைந்தவரின் வயதும்’தோற்றமுமோ! அல்லது நானுந்தனவான்என்ற உணர்வோ! என்னுள்ளம் அவர்மேல் இரக்கங்காட்டியது. அவர் “தண்ணிர் எடுக்கலாமா? என்று கேட்டார், நான் கடையில் ஒரு செம்பில் நீர் எடுத்துக்கொண்டுபோய் இந்தாருங்கள் என்று பரிவோடு நீட்டினேன். “வேண்டாம் வேண்டாம், எனக்குக் கிணற்றைக்காட்டினாற் போதும்’ என்றதுடன் தான் கொண்டு வந்திருந்த செம்பை எடுத்து, நூற் கயிற்றை முடிந்து கொண்டு புறப்பாட்டார். .
கிணற்றைக் காட்டியதும், தண்ணிரை அள்ளிக் கை கால் முகங்களைக்கழுவி நீரையும் தாகந்தீரக் குடித்த கையோடு வைரவ கோவிற்றிருநீற்றினை அள்ளி நெற்றி நெஞ்சு கைகள் முகம் என்ற உறுப்புகள் எல்லாம் நிறையப் பூசியும் சந்தனத்தை அரைத்துப் பொட்டும் இட்டுப்பூசிக் கொண்டு வந்து, மிகப்புனிதராய் , பழைய சுவருடன் சாய்ந்திருந்துகொண்டு, ‘சிவ சிவா, இப்போதுதான் உடம்புக்குத் தெம்பு வந்தது” என்றார்.
“சரி சரி நேரம் போய்விட்டது ஏதும் சாப்பிடலாந்தானே” என்று கேட்டேன்.
“ஒமோம், சாப்பிடத்தான் வேண்டும் இப்படிக் கடைகளிற் சாப்பிடுவது எனது வழக்கம் இல்லை, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சாப்பிட மாட்டேன் அதற்காகத்தான் புளிச்சாதம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்” என்ற தொனியில் ஏளனமும் அகங்காரமும் ஒலிக்க்க் கேட்டு அதிர்ந்து விட்டேன். அதனால் என்ன? இப்பொழுது நேரம் போய்விட்டது, புளிச்சாதத்தை எடுத்துச் சாப்பிடலாந்தானே என்ற என் கேள்விக்குப்பதிலாக "ஒமோம்” என்று சொல்லிக் கொண்டே வெற்றிலைச் செல்லத்தில் வெற்றிலை பாக்கைப்போட்டு இடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில், கால்கள், கைகள், மார்பு என்ற இன்னோரன்ன உறுப்புகளில் எல்லாம் தோலாபரணங்களைப் புனைந்து கொண்டு தலையில் தலைப்பாகையை இறுக்கிய தளநாருடன் அரையிற் பட்டி இறுக்க இரண்டு முட்டிகளைக் கைகளில்

37 தில்லைச் சிவன்
தூக்கியபடி ஒருவர் செல்வதைக் கண்டேன். அவரைக்கண்டாரோ இல்லையோ கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ஒரு மூலையிற்குவித்துவிட்டு, “இவைகளை இங்கே கிடக்கட்டும் பார்த்துக்கோ தம்பி” என்று கூறிய மனிதர் முன்னே சென்றவரைப் பின்தொடர்ந்து ஒடிஓடிச் சென்றார்.
சென்றவர் சென்றவர் தான். மணி நான்காகியும் சென்றவர் வரவில்லை. கடையில் வைக்கப் பெற்றிருந்த பலகாரங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தேனீர் அடுப்பும் அவிந்த நிலையில். இனிக் கடையை மூடிக் கொண்டு கடைக்காரர் தனது வீட்டுக்குப் போக வேண்டும். நான் பயணியின் பொருட்குவியலையும் கடைக்காரரின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தேன் அவர் என்னைப்பார்த்து இலேசாகச் சிரித்தார். "ஆசாரங்கள் எல்லாம் வெளியில் தான் மற்றவர்களுக்காக உன் மனசின் சுயத்தையாரறிவார் என்றவர் இன்னுங் கொஞ்சநேரம் பார்ப்போமே” என்றார்.
நான் அவர்போன திசையில் சிறு தூரம் போய் பார்த்துவரலாம் எனப் புறப்பட்டேன். கோவில் வீதியில் கண்ட ஒருவர் யாரோ ஒருவர் பனை வளவில் விழுந்து கிடப்பதாகச் சொல்லிச் சென்றார். என்மனம் 'திக் கென்றது. நான் ஒரு செம்பில் தண்ணிர்கொடுக்க வேண்டாம் என்று மறுத்த ஆசாரசீலர் இப்போது.? அவர் விட்டுச் சென்ற பொருட்களை என்ன செய்வது என்ற நினைவோடு கடையடிக்குச் சென்றேன். அவர் கொண்டு வந்திருந்த புளிச்சாதப் பொட்டணத்தை ஒரு பெட்டை நாய் இழுத்து வைத்துத் திண்டுகொண்டிருந்தது. ச்சா 6த்தனை ஆசைகளுடன் சமைத்துக் கட்டி வைத்த உணவது.

Page 21
அந்தக் காலக் கதைகள்
8. எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்
ரவணையூரின் கிழக்கே, ஊர்க்காவற்றுறை பண்ணை நெடும்பாதைக்குத் தெற்காகப் பரந்துக்கிடக்கும் பற்றைக்காடும் புல்வெளியுமாயுள்ள நிலப்பரப்பின், நடுவனாக அமைந்திருந்தது, எனது பாட்டானாரின் ஆச்சிரமம் போன்ற சிறு குடில். வடக்கே நீண்டகன்ற நாய்க்குட்டி வாய்க்கால் கடலும், கடலின் நடுவே ஒரு பிட்டியில், பூவரசு, கள்ளி, காண்டைச்செறிவில் இருக்கும் புன்னன் கண்டிச் சுடலையும், சுடலையில் அடிக்கடி எரியும் ஈம ஒளியும் புகையும், நாய்களின் சண்டையும் நரிகளின் ஊழை இடுதலுஞ்சேர ஒரு பயங்கரத்தைத்தோற்றுவிக்கும் இடமது. X
தெருவின் இருகரைகளிலும் நிழல் பரப்பி நிற்கும் பூவரசுகளும், தாழம்புதர்களும், ஆங்காங்கே காணப்படும் மொட்டை ஆலமரங்களும், அவற்றின் கீழ், கழிப்புச் செய்து மேலே பேய்களை ஏற்றி ஆணிகளால் அறைந்து முடிமயிர்களால் கட்டி விட்டிருக்கும் காட்சியும், அவ்வழியால் போக்கு வரவு செய்வோர்க்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. இரவு வேளைகளில் அசாதாரண துணிவுள்ளவர்கள் தவிர, மற்றைவர்கள் நுழைய அஞ்சுவர். அத்தகைய சூழலில் அமைந்திருந்தது எனது பாட்டானாரின் குடில்.
அக்குடிலைச் சுற்றி உள்ள ஒருபத்துப்பரப்பு நிலம், பனை வடலிகளும், தென்னைகளும் நிறைந்து நிற்க, சுற்றிவரப்பூவரசுகளும் வேம்புகளும் கிளுவைகளும் வேலிகளாக அரண் செய்யப்
பெற்றிருந்தது.
அவ்வளவின் தெற்கெல்லையில் ஒரு கிணறும், சதுரக் கள்ளிகளால் சுற்றி அடைக்கப்பெற்ற ஒரு தோட்டமும் இருந்தது.

39 தில்லைச் சிவன்.
மாரிகாலத்தில் கத்தரி வெண்டை மிளகாய் போன்ற செடிவகைகளையும், வெள்ளரி, வத்தகை, பாகல், புடோல், பூசினி போன்ற கொடி வகைகளையும் பயிர் செய்த எனது பாட்டனார்? தனக்கொரு பங்காளியையும் வைத்திருந்தார். தோட்ட வேலைகளில் உதவும் பங்காளிக்கு, விளை பொருட்களில் ஒரு பங்கு, ஒவ்வொரு அறுவடையின்போதும் கொடுப்பார். தோட்ட வேலிகளில் தன்னிச்சையாகப் படர்ந்து காய்க்கும் பாகல், பீர்க்கு, கோழி அவரை என்பவற்றை ஊரவர்கள் கேட்டுப் பெற்றுச் செல்வர்.
கோடையில் ஆட்டுப்பட்டி அடைத்துப் பசளை செறிந்து, மண் செழித்துள்ளதால் காய் பிஞ்சுச் செடிகள் மிகுந்த பலனைத் தந்தன.
மாரிகாலத்தில் வளவில் உள்ள தொளுவங்களுள்ளும் கோடையில் தோட்டங்களிலும் வயல்களிலும், பட்டிகளில் அடைக்கப்பெற்றிருக்கும், நூற்றுக்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை, நாய் நரி போன்ற மிருகங்களிடமிருந்து பாதுகாத்தற் பொருட்டும், பல்லுக்குக் கடிக்க, வேண்டும்பொழுது பறவைகளையும் முயல்களையும் வேட்டையாடவும், எனது பாட்டனார் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
அது ஒரு சன்னத்துப்பாக்கி நினைத்தவுடன் தோட்டாவைப் போட்டுச் சுடக்கூடியதல்ல. மருந்து, சன்னம், பொச்சு என்பவற்றை முறைப்படி துப்பாக்கிக் குழாயிலிட்டு, ஒரு கம்பியால் குத்தி கிறுக்கிக் கெற்பும்மாட்டி, எந்நேரமும் தயாரான நிலையில், தனது கட்டிலின் பக்கத்துச் சுவர்களின் மூலையில், சாத்திவைத்திருப்பார்.
எப்போதாவது நாய்கள் குரைக்க, நரிகள் ஊழையிடபட்டியில் ஆடுகள் பதற்றப்படின், பாட்டனார் உச்ாராகிவிடுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டு, அவர் முற்றத்துக்கு வரவும், நானும் தூக்கங்கலைந்து எழுந்து அம்மணக்குண்டியனாய், என்னவோ ஏதோ வென்ற அங்கலாய்ப்புடன் அவரின் பின்னால் நிற்பேன். சில வேளைகள் இருட்டாகவும், சில வேளைகள் நிலவுமாக இருக்கும். எவ்வேளையாயினும் ஆட்டுப்பட்டிகளையும் தொளுவங்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்து, ஒன்றையுங் காணாத போதும் வெளியே

Page 22
அந்தக் காலக் கதைகள் 4()
சத்தமிட்டும், சிறிதுநேரம் காவல் இருந்த பின் மீண்டும் வந்து தூங்குவோம். அயலில் துர்நாற்றம் வீசுமானால் “கள்ளநரி எங்கோ ஒளித்துக் கொண்டிருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே நெடுநேரம் விழித்துமிருப்பார்.
எங்களிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதைப் பற்றிய எனது பெருமை சொல்லக்கூடியதல்ல. அதன் தோற்றம்,செயற்பாடு, வலிமை, பெருமை பற்றி எல்லாம் எனது வகுப்புத்தோழர்களுக்கு அறிமுகஞ்செய்வேன். அவர்களை எங்கள் குடிலுக்கே கூட்டிக் கொண்டு வந்து , சுவரில் சாத்தியிருக்கும் துப்பாக்கிக்குக்கிட்டச் செல்லாமல் எட்ட் நின்று காட்டியும், அதன் செயல் முறை பற்றி விளக்கியும், அதனால் சுட்டு வீழ்த்தப்படும் மிருகங்கள் பறவைகள் பற்றியும், குறிவைத்துச் சுடுவதில் எனது பாட்டனாருக்குள்ள திறமை, பறவைகளைப் பறக்க வைத்துச் சுடுவதில் எனது பாட்டானாருக்குள்ள ஆவலும் ஆற்றலும், பற்றி எல்லாம் சொல்லித் தோழர்களை வியப்பில் ஆழ்த்துவேன். இருந்தும் ஒரு தோட்டாத்துப்பாக்கி இல்லையே என்ற, என் மனக் குறையை ஒளித்து, எனது பெரிய மாமா ஒரு தோட்டாத்துப்பாக்கி வைத்திருக்கிறார் என்பதையும் சொல்லத் தவறுவதில்லை.இவ்வகையான மெய்யும் பொய்யும் கலந்த புளுகினால் காலம் போய்க்கொண்டிருந்தது.
எனது பாட்டனார், துப்பாக்கியைண்டுத்துக் கொண்டு போவதும் நான் பின்னால் ஒடுவதுமாகப் பலநாட்கள் நடந்தும், ஒருநாளாவது ஒருநாயையோ,நரியையோ நான் காணவில்லை, அவர் வெடி வைத்ததாகவும் இல்லை. ஆனால் நானே என்னை ஒரு பெரிய வேட்டைக்காரனாகக் கற்பித்துக்கொண்டு எனது பாட்டானார் இல்லாத ஒரு வேளையில் நரி ஒன்று வருவதாகவும் அதனை நானே சுட்டு விழுத்துவதுமான கனவோடு எனது பாட்டனாரின் கைக்குள் அடங்கித்துயில்வேன்.
கண் விழித்துக் காவல் காத்தபோதும், எங்கள் பட்டியில் அவ்வப்போது ஆடுகள் காணமற் போனதுண்டு. சிலவேளைகளில் இவை திருடர்களின் முறிப்பு வேலையாகவும், சில வேளைகளில் எங்களை ஏமாற்றிவிட்டுநாய், நரிகள் செய்த திருவிளையாட்டாகவும்

41 தில்லைச் சிவன்
இருக்கும். ஏதானாலும் “இனி வரட்டும்” என்ற பாட்டனார் காவல் இருக்க நான் அவரின் பக்கத்தில் நடக்கப்போகும் விபரீதங்களைக் கற்பனை செய்தபடி காத்திருப்பேன்.
ஒருநாள், நாங்கள் கவலைகள் ஏதுமின்றித் தூங்கிக் கொண்டிருந்த ஒர் இரவில், பால்போல நிலவு எறித்துக் கொண்டிருந்த வேளையில், எமது ஆட்டுப்பட்டிக்குள் ஒரே அல்லோலகல்லோலம் நாய்கள் குரைப்பதும், ஆடுகள் துள்ளுவதும், பாய்வதும், கத்துவதுமாக அமர்க்களப்பட்டன.
பாட்டனார் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு முன்னே சென்றார். குரைத்துக் கொண்டு நின்ற எமது நாய்கள் எங்களைக் கண்டதும், உத்வேகமாக முன்னேறிச் சென்றன. அவற்றின் எதிரில் கண்களில் தீயெரிய ஒரு கூட்டம் நரிகள். நாலைந்து இருக்கும். எங்களின் இருநாய்களும் எனது பாட்டானாரும் நரிகளுக்கெதிரான போராட்டத்தில் களத்தில் இறங்கிவிட்டனர். நரிகளோ ஆட்டுப் பட்டியை விட்டு இவர்களையே மூர்க்கமாக எதிர்க்கின்றன. என்நெஞ்சில் பயம் குடி கொண்டு விட்டது. வேலியோரப்பூவரச மரத்தருகில் நின்று கொண்டு நிலைமைகளை அவதானித்தேன். நரிகள் என்பக்கமாக வந்தால் பூவரசில் ஏறும் நினைவு. இந்த வேளையிலும் பாட்டனாரின் துப்பாக்கி பேசவில்லை. மெளனமாக இருப்பதேன்? ஒரு வெடி தீர்ந்தால் மறுவெடி வைக்க மருந்து சன்னம் பொச்சு இவற்றை வைத்திடித்துக்கெற்பு மாட்ட நேர அவகாசம் வேண்டும். இவற்றை யோசித்துத்தானோ என்னவோ, ஒருவெடியும் தீராமல் தற்பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டு, நாய்களுடன் சேர்ந்து வாய் வெருட்டில் போராடிக் கொண்டிருந்தார். இவர்களின் புலுடா நரிகளை விரட்டவில்லை. நரிகளோ மூர்க்க வெறியோடு முன்னோக்கி வந்து கொண்டிருந்தன. இப்பொழுது நரிகள் எனது பாட்டனாரைச் சூழ்ந்து முற்றுக்கை இடக்கூடிய தருணம். இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகும் என்ற சமயத்தில், பாட்டனாரின் துப்பாக்கிக் குதிரை பாய்ந்தது. "டச்” திரும்பவும் "டக், டக், டக்” துப்பாக்கி வெடிக்கவே இல்லை. திகைத்துப்போன பாட்டனார். தன்னைச் சுதாகரித்துக்கொண்டு, துப்பாக்கிக் குழலைக்

Page 23
அந்தக் காலக் கதைகள் 42
கையிற் பிடித்தார். முன்னே வந்த நரிகளைத்துப்பாக்கிச்சோங்கினால் அடித்தார். கம்பு வீசுவது போல, நரிக்கூட்டத்தின் நடுவில் நின்று சுழன்று சுழன்று அடித்தார். நாய்களும் தங்கள் வலிமையைக் காட்டி நரிகளின் பிட்டத்தில் கடித்தன.
இந்த அமளி கேட்டு அயலவர்களும், தடிகளுடன் ஓடிவரவும் தலையில் அடிப்பட்ட நரியொன்று குற்றுயிராய் விழவும் நேரம் சரியாக இருந்தது.
ஆட்களைக் கண்டதும் நரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக ஒடிப்போயின. ஒடிய நரிகளைக் துரத்திக் கொண்டு போன நாய்களும் மீண்டு வந்தன. பிரிந்து ஒடிச் சென்ற நரிகள், ஒன்றையொன்று அழைத்து ஊழை இட்ட சத்தம் ஊரையும் ஊர் நாய்களையும் எழுப்பி விட்டு ஓய்ந்தது.
எனது பாட்டனார் வைத்திருந்த சன்னத்துப்பாக்கி நிரந்தரமாகவே மெளனித்து விட்டது. அதன் சோங்கும் குழலும் ஒரு நினைவுச்சின்னம்போலக் குடிலின் இறப்பில் சொருகப்பெற்றிருந்தன.

43 தில்லைச் சிவன்
7. பாட்டனார் சொன்ன தோம்புக் கதை
இன்று ஒன்று இரண்டு, ஐந்து, பத்துச்சதக் குற்றிகள் மதிப்பிழந்து புளக்கத்தில் இல்லையென்றே சொல்லலாம். கால் ரூபா, அரை ரூபாத்தரத்தில் உள்ள இருப்பத்தைந்து ஐம்பது சத நாணயங்களையே பிச்சைக்காரர்கூட ஏற்காத நிலை வந்துள்ளபோது சதக்குற்றிகளுக்காகக் கவலைப்படுவதென்ன?
சில முதலாளிகள் காசுக்கட்டுகளை எண்ணும்பொழுது ஒன்றினை லாபம் என்றே ஒதுக்கிவிடுகிறார்கள். பத்து ரூபாக்கட்டில், முதற் பத்தும் நூறு ரூபாவானால் முதல் நூறும் ஆயிரங்களில் முதலாயிரமும் லாபங்கள். அவரவர் தரத்துக்கேற்பப் புளக்கத்தில் இல்லாமல் முடக்கப்படுகின்றனவா என நினைத்ததுண்டு.
ஒரு நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன் செம்புலோகத்தினாலான, தடித்த ஒரு சதம், அரைச் சதம், காற் சதக்குற்றிகளும் அதன்மேல் வெண்பொன்னாலான ஐந்து, பத்து, இருபத்தைந்து ஐம்பது சத நாணயங்களும், முழு ஒரு ரூபாக்குற்றி களும் புளக்கத்தில் இருந்தன. ஒரு வல்லுவம் நிறையச் சில சில்லறைகள் போதும். அக்கால வழக்கில் எனது பாட்டனார் ஒன்றரைச் சதங்களை'ஒரு துட்டு என்றும், ஆறு சதங்களை'ஒரு பணம் என்றும் ஐம்பது சதக்குற்றியை 'சிலிங்கென்றும் பத்து ரூபாவை ஒரு பவுண்’ என்றும் கூறுவார். உண்மையில் அன்று ஒரு தங்கப்பவுண் பத்து ரூபா பெறுமதியானதென்றும் அறிந்திருந்தேன்.
எங்களுக்கிருக்கும் ஒரு காணியை இரண்டு இளசாலுக்குத் தனது முன்னோர் வாங்கியதாக எனது பாட்டனார் கூறினார். அந்த இறசாலின் பெறுமதியை இன்றைய ரூபாவில் சொல்ல, அவர் அறிந்திருக்கவில்லை. உலாந்தாக்காரர் என்ற ஒல்லாந்தர்கள்,

Page 24
அந்தக் காலக் கதைகள் 44
நிலங்களை அளந்து விற்று, இறசால் கணக்கில் பணத்தினைப் பெற்றுக் கொண்டு, நொத்தாரிசு மூலம் உறுதி முடித்துக் கொடுத்துள்ளார்கள்.இவ்வுறுதிகளைத் தோம்பு என்று கூறுகிறார்கள். இவ்வாறே பழைய கதைகளைச் சொல்லும்போது தோம்புக்கதைகள் என்றும் சொல்வர். இவை டச்சுக் காலக் கதைகளாக இருக்குமோ என்னவோ, எனது பாட்டனார் சொன்ன, ஒரு புத்தியுள்ள கிழவனின் அந்திம காலம் பற்றிய கதை இது.
வயோதிபம் மிகக் கொடுமையானது, “இந்தக் கிழடுகளைக் கட்டிக்கொண்டழ யாரால் முடியும், நேரகாலத்துக்குப் போகாமல் கி.க்குதுகளே”என்று வருத்தப்பட்டுக் கொள்வாரும் உண்டு.
பாட்டனுக்குக் கஞ்சி கொடுக்கும் சிரட்டையைக் காணாது தேடியபோது, “உங்களுக்குக் கஞ்சிதர எனக்குத் தேவைப்படும், அதனால் அச்சிரட்டையை,நான் பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்’ என மகன் சொன்னதை நினைப்பவர்களுமுண்டு.
பிள்ளைகளின் நினைப்பையும் நிலையையும் உணர்ந்து “கண் கெட்ட கடவுள் என்னைக் கொண்டு போறார் இல்லையே’ என உறவோடிரங்கும் வயோதிபர்கள் பலர்.
இளமையோடு இருக்கும் பொழுதே இறந்துவிட்டால் “ஐயோ நாம் என்ன செய்வோம்’ என்றே அழும் மனைவி மக்கள் தாமும், வயது சென்று கிழடானபின், “ஏன் இன்னமும் கிடக்குது” என்று அலுத்துக் கொள்வார்கள்.
கைப்பொருள், சம்பாத்தியம் வைத்திருக்கும் வயோதிபப் பெற்றோரைப் பராமரிக்க, “நான்முந்தி நான்முந்தி’ என்று முந்திக் கொண்டு சேவை செய்யப் பிள்ளைகள் வருவர். இன்றும் அன்றும் எமது சமுதாயநிலை இது. ஒன்று இரண்டு புறநடை இருக்கலாம்.
'அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞ்சல்’ என்ற புதுமொழி பகடியாகக் கூறப்பட்டாலும், சிந்தனைக்குரியதே. நாலைந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்த தந்தை தாயாரைப் பார்ப்பது யார்? என்ற தகராறு குடும்ப உறவுகளையே பிரித்துப் போட்ட சமாச்சாரங்கள்

45 தில்லைச் சிவன்
பல. இவற்றினைத் தெரிந்து கொண்ட அனுபவஸ்தர்களான சிலர், எய்ப்பினில் வைப்பாகப் பணச் சேமிப்புகளைத் தமது கையிலேயே வைத்திருப்பர். அப்படி இல்லாத ஏழைக் கிழவர்கள் தமது அடிப்படைத் தேவைகட்கே அல்லற்படுவது உலக அனுபவம். இத்தகையவர்கள் தமது இறுதிக் காலத்தில் அனுபவித்த சோகங்களை அறிந்த எனது பாட்டனார் சொன்ன கதை வருகிறது.
ஒரு கிழவன் தனது ஐந்து பிள்ளைகளில், ஒருவரோடும் இன்றித் தானும் தன்பாடுமாய் ஒரு குடிலில் இருந்தார். உழைத்து வாழக்கூடிய தெம்பு இருக்கும்போது மற்றவர்கட்கு இடைஞ்சல் தரக் கூடாது என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.
பனாட்டுப் பிணைதல், கடகம் பெட்டி இழைத்தல், ஈர் வாணிக்கொடி, உறிஎன்பன பின்னுதல், குத்துக் கண்ணி, கந்துவான், பாதக்கண்ணி நாற்கயிறு திரித்தல் போன்றன அவரின் தொழில்கள். இத்தொழில்களில் இவர் நிபுணருங்கூட. இத்தொழில்களாற் கிடைக்கும் பண்ட மாற்றுத் தானியங்களையும் சொற்பகட்டுக் களையும் கொண்டு தன் வாழ்க்கையை ஒட்டி வந்தார்.
இல்லாத பொல்லாத காலத்தில் காடும் கடலுங்கை கொடுக்க வாழ்க்கை சுகமாக நடந்தது.
சிறிது காலத்தில் அவர் நோய்வாய்ப்பட்டுப் போனார். வயோதிய நோய். தொழில்செய்ய முடியவில்லை. வெளியில் சென்று வரவும் முடியாது. ந்து பிள்ளைகள் குடும்பங்களுடன் ஒரே வளாகத்தில் பக்கம் பகிகமாக இருந்தும், கிழவரைக் கவனிப்பதில்லை. ஏனோ தானோ என்று அலுத்துப் போன நிலையில் எப்போதாவது வருவார்கள், போவார்கள்.
ஒரு நாள் மூத்தமகன் வந்து எட்டிப் பார்த்தார். அவரைக் கண்டதும், மெல்லவே தனது படுக்கையில் கிடந்து எழுந்திருந்த கிழவர், தலையணைபோல் ஒலையால் இழைக்கப் பெற்றிருந்த ஒன்றைத் தலையின் கீழ் இருந்தெடுத்து மடியில் வைத்துக் கொண்டார். 'கைகள் மெல்லவே தலையணையில் தாளம் போட மகனைப் பார்த்துச் சொன்னார்.

Page 25
அந்தக் காலக் கதைகள் 46
“எனது நிலைமை சரியில்லை, இன்றோ நாளையோ, சில நாட்களோ, வாரங்களோ தெரியாது மகனே! எனது சாவீட்டை எளிய முறையில் நடத்திவிடுங்கள். பெற்று வளர்த்தது என் கடமை என்று அதை ஏதோ என் வசதிக்கேற்பச் செய்தேன்.உங்கள் ஐந்து பேரையும் வளர்த்தெடுக்க நான்பட்ட பாட்டை உங்கள் ஆத்தாள் இருந்தாள் சொல்வாள். அந்த இலட்சுமி இந்தப் பாடுகளைக் காணாமலே கண்மூடிவிட்டாள், புண்ணியவதி.!” சிறிது மெளனத்தின் பின் கண்களின் நீரைத் துடைத்துக் கொண்டே ‘இனி உங்கள் கடமை, ஊரார் நகைக்காமல், எல்லோரும் ஒற்றுமையாக நின்று சிக்கனமாக நடத்திவிடுங்கள்” என்று கூறினார்.
மகன் மெளனமாகவே இருந்தார். தகப்பனின் நிலை கவலை கொடுத்தது. அவர் மடிமீதிருந்த தலையணையிலும் கருத்துச் சென்றது. கிழவன் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த சில்லறைகளாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்பினார். ஆனால் வாய் திறந்து அதைப்பற்றி விசாரிக்காதே வெளியே சென்றார்.
சிறிது நேரஞ்செல்ல, மூத்தவனின் மனைவி உணவுப் பெட்டியுடன் கிழவனாரின் கொட்டிலுள்நுழைந்தாள்.இப்போது போல அக்காலத்தில் கடுதாசிப்பைகள் கிடையாது. உணவுப் பெட்டியைக் கிழவனிடம் கொடுத்து விட்டுத் திரும்பியவள், தலையணை உமலையும் கடைக்கண்ணாற் கண்டு கொண்டே சென்றாள்.
இவர்கள் இப்படியாகத் தொடர்புகள் வைத்துக் கொண்டிருப்பதைக்கண்டு, ஏனைய மக்கள் மருமக்கள் தாமும் ஏதோ விசேடம் அறிவார் போலப் போக வரத் தொடங்கினர். குசலம் விசாரித்தார்கள். எல்லாருக்கும் தனது அந்திம காலத்தை வெளிப் படுத்திக் கொண்ட கிழவனார், மடியிலிருக்கும் தலையணையில் தாளம் போட மறக்கவில்லை. கேள்விகளுக்குக் கூறும் பதிலோடு பதிலாக, தலையணையில், தாளம் போட்டபடி, அதனுள் இருந்து ‘கல் கல்’ என்று ஒலிஎழ, அதற்கு ஒத்திசைவாகக் கேட்டுக்க பொக்கணம், கேட்டுக் பொக்கணம்! சோறும் வந்தது கேட்டுக்க பொக்கணம்.

47 தில்லைச் சிவன்
கறியும் வந்தது கேட்டுக்க பொக்கணம், மீனும் வேணும் கேட்டுக்க பொக்கணம், மேலும் வேணும் கேட்டுக்க பொக்கணம்”
என்ற பாட்டும் வரும். மக்கள் மருமக்கள், கிழவர் எங்களை வாயாற்கேளாது, பொக்கணத்திடம் அன்றோடு கேட்கிறார். பொக்கணத்துள் ஏதோ பெருஞ் சங்கதி இருக்குது போல என்று நினைத்து கொண்டார்கள். கிழவர் பொக்கணத்திடம் கேட்பதனைப் பிள்ளைகள் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பொக்கணத்தையும் ஒரு கண்பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். இவற்றை அவதானித்த கிழவருக்கு உள்ளுர மகிழ்ச்சி. பொக்கணத்தைப் பற்றிய நம்பிக்கை வலுத்த வேளையில் அதன் பாதுகாப்புப் பற்றிய கவலையும் வலுத்தது. அது களவு போக முடியவே முடியாது. ஐயிரண்டு பத்துப் பேர் ஒருவர் அறியாமல் ஒருவர் அதற்குக் காவல். இவர்களை மிஞ்சி எவன் வரப் போறான்? என்ற நினைவுடனே இருந்த கிழவர், ஒரு நாள் திடிரென மண்டையைப் போட்டுவிட்டார்.
ஏதோ ஒரு அரவங்கேட்டு ஒருவர் பின் ஒருவராக ஓடிவந்த பிள்ளைகள், நிலைமையைப் புரிந்து கொண்டு முதலிற் பார்த்தது தலையணையைத்தான். ஒருவரும் அதனைத் தட்டிப் பார்க்காது விடவில்லை. அதன் திண்மையும் ‘கல் லென்ற ஒலியும் எல்லாருளத்திலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. முதல் வேலையாகத் தலையணையை ஒரு பாயாற் சுற்றி மறைத்துக்கட்டி, வீட்டு முகட்டுக் கூரையில் தொங்கவிட்டார்கள். இதன் பின்னரே இறந்து போன கிழவனைத் துடைத்து ஒரு பாயில் வளர்த்தி, ஊர் உறவிற்கு அறிவிக்கவும் செலவைப் பற்றிச் சிந்திக்கவும் தொடங்கினார்கள்.
சாவீட்டு நிகழ்வுகளை முதன் மகன் ஒழுங்குபடுத்தினார். தந்தையார் தனக்குச் சொன்ன புத்திமதிகளை இம்மியும் பிசகாது அவர் சொற்படி நிறைவேற்றுவேன் என்று விடாப்பிடியாய் நின்றதால் சாவீட்டுச்செலவு ஒரு நூறினைத் தாண்டவில்லை.
இந்தச் செலவினைக் கேட்கும்போது இன்றைய சாவீட்டை ஒப்பிட்டால் மண்ணாங்கட்டிக்கும் மலைக்குமுள்ள உயரம்.இரண்டும்

Page 26
அந்தக் காலக் கதைகள் 48
சாவீடுகள்தான். இறந்த உயிர்கள் திரும்பப் பிறக்காமல் விடப்போவதில்லை. தமது பெற்றோரை உயர் பதவிகளில் பணத்தினால் இருத்தலாம் என நினைக்கிறார்களோ இல்லையோ, தமது பெருமையைக் காட்டச் செய்யும் செலவினையும், குறைத்துக் கொண்டால் வசதியற்றோர்க்கு உதவாவிடினும் வழிகாட்டுதலாக அமையுமே என்ற ஆதங்கத்தோடு தொடர்ந்து கதையைக் கேட்டேன்.
ஒரு சாப்பறையும், தம்பட்டமும் முழங்க ஆட்பேர்கள் சேர்ந்து விட்டார்கள். தடி வெட்டுபவன் தடி வெட்ட, பாடைகட்டுபவன் பாடைகட்ட, கட்டாடி பாடையைச்சுற்றிச் சேலை கட்டிமுடிஞ்சுது. நாவிதன் பன்னாங்கு பின்னியாச்சு, நாலு மூலைக்கு நாலு வாழைக் குட்டிகளைக் கட்ட வேண்டியதுதான். பாடை தயாராச்சு. . . . . .
அடுத்தென்ன? கட்டைதறிச்சு வண்டியில் சுடுகாடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வீட்டில் பிரதேத்தை அரப்பெண்ணெய் வைத்து முழுக்காட்டிப், புத்தாடை புனைந்து, திருநீறு பூசிச் சந்தனம் குங்கும திலகமிட்டு, ஒரு மரக்கட்டிலில் தெற்கே தலை வைத்து வளர்த்தியாச்சு. நாலு தேவாரம் தெரிந்தோர் தேவாரம் பாடக் கற்பூர தீபப்புகையில் சாம்பிராணிப்புகையும் சந்தன வாசமும் பரிமளிக்க வாய்க்கரிசியிட்டு வழியனுப்புவோர் கட்டி ஒப்பாரிவைக்கப் பிரேதம் பவனியாகச் சுடுகாடு சென்றடையும்.
பிரேதத்தைக் கட்டையில் வைத்து, எழும்பி நிமிராதவாறு பாரமான நெஞ்சாங்கட்டையைப் பொருத்தி, குடம் உடைத்துக் கொள்ளி வைத்தவர் திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேரவேண்டியதுதான். சாவிடுமுடிந்தது.
அடுத்த மூன்றாம் நாள் காடாத்து. நாவிதர் பிரதான பாத்திரம் வகிக்க மூன்று நான்கு பேரோடு காரியம் சரி. அடுத்துள்ள எட்டுச் சிலவு. ஏழுக்கும் ஆறுக்கும் ஐந்துக்குங்கூட நடத்தலாம். நடத்தும் தினத்தைக் குறிப்பிட்டு உற்றார் உறவினருக்குத் தெரிவித்துவிட்டு வந்து பந்தலுள் இரண்டு மூன்று கடகங்களை வைப்பர். வீடுகளால், அரிசி, காய்பிஞ்சு, தேங்காய், வெற்றிலை, பாக்கு என்பனவும் குறைந்தது ஆளுக்கு ஒரு பணம் (ஆறு சதம்) வீதம் காசும் வந்து சேரும்.

49 தில்லைச் சிவன்
Ètáibañtñdi: 4,
அரிசி தந்த ஒவ்வொரு வீட்டினருக்கும் அன்று சாப்பாடு. இறந்தவர் விரும்பி உண்ட உணவுகளனைத்தும் படையல் இட்டுக் குடிப்பறையன் குடிமை வண்ணான் குடிமை நாவிதன் என்பவர்கட்குக் கொடுப்பதுடன் அன்றுதான் சாவிட்டு வரவு செலவுகளைப் பார்த்து முடிப்பது வழமை. , -
இவ்வாறே எல்லாவற்றையும் நிறைவேற்றியபின், சகோதரர் அனைவரும் சேர்ந்திருந்த சபையில், முகட்டில் தொங்கிய தலையணை அவிழ்க்கப் பெற்றது. எல்லா விழிகளும் ப்ொட்டணத்தை உற்றுப்பார்த்துக் கொண்டு நிற்கப் பொட்டணம் ஒரு சத்தகத்தால் கீறிக் கொட்டப் பெற்றது. எல்லோர் மனதிலும் தோன்றி எழுந்த ஆவலின் பிரதிபலிப்பாகக் கலகலவென்று கொட்டிய சிப்பி சோக்கிக் குவியலைக் கண்டு “அட அண்ண வெறுஞ் சிப்பியடா’ என்று எல்லாரும் அலுத்துக் கொண்ட போதிலும், கிழவரின் தந்திரத்தை எண்ணித் தம்முள்வெட்கமுங் கொண்டனர்” என்றார்.
இந்தக் கதையைக் கேட்டதும், “பாட்டா நீங்கள் ஏமாற்ற மாட்டீர்கள் அல்லவா’ என்று கேட்டுச் சிரித்தபோது, எனது தாயார் அவர்தான் ஒவ்வொரு காணியாய் விற்றுக் கொண்டு வாராறே” என்றார். எப்படிக் கவலை என்று பாருங்களேன்.

Page 27
அந்தக் காலக் கதைகள் 5()
8. பண்டமாற்று
)för வாங்கக் கடற்கரைக்குப் போய்ப் பாருங்களேன்! எல்லாம் ஆனை விலை, குதிரை விலை. இப்படியும் விலைக்குவாங்கித் தின்னத்தான் வேண்டுமோ என்று நினைப்பவர் பலர். ஆனால் வாங்கத்தான் செய்கிறார்கள். பல மரக்கறிகளை வாங்குவதை விடக் காக்கிலோமீன் வாங்கினாற் சரி, மூன்று கறியாச்சு, வாய்க்குருசியாக ஒரு பிடி சோறு சாப்பிடலாம் என்பார் பலராவதால், இப்போது கிடைத்தற்கரிய அரும் பொருள் மீன்.
பெண்கள் பலர் விலக்கு நாட்களைக் கணக்குப் பார்க்கச் க்வர்களில் கரிச் கோட்டிட்டுச் செல்லும் அந்த நாட்களில் ஒரு முக்காலிப் பனங்காய்க்கு ஒரு சட்டி நிறைந்த மீன் வாங்கி இருக்கிறேன். இது என்ன முக்காலி என்று கேட்கிறீர்களா? மூன்று கொட்டைகளை உடைய பணம் பழம், முக்காலி, இரண்டு கொட்டைகளை உடையது இருக்காலி. அப்படி என்றால் ஒரு கொட்டையை உடையதை ஒருக்காலி என்பதின்றி அதைக் குடவன் பனங்காய் என்றே சொல்வார்கள்.
எனது ஊரின் வடக்கு எல்லையாக உள்ளது அராலிக் கடல். இதற்குத் தெற்கில் காலத்துக்குக் காலம் பெருக்கெடுத்து ஒடும் நாய்க்குட்டி வாய்கால், உப்புக்கழி என்ற இரு ஏரிகளும் உண்டு. இவையெல்லாம் சேற்றுப் பாங்கானவைகளாய் இருப்பதுடன் அதிக ஆழமும் அற்றவை. ஒரே சமச்சீரான நீர்மட்டம். ஆற்று வாய்க்கால் என்றும் வத்தை வாய்க்கால் என்றும் சொல்லும் ஒரு இடத்தைத் தவிர மற்ற இடங்கள் எங்ங்னும் ஆளுக்கு அரைக்கு மேற்பட்ட தண்ணிர் வராது. இக்கடலில் மீன் பிடிக்கக் காரை நகர்க் கரையோரத்தில் இருந்து அநேக பெண்களும் சிறுவர்களும் வருவார்கள். இவர்களிடம் மீன் வாங்குவதற்காக எம்மூர்ப் பெண்கள் வயோதிபர் சிறுவர் என்ற

51 தில்லைச் சிவன்
பல பிரிவினரும் கடலுள் செல்வோம். எமது கைகளில் தெரிந்தெடுத்த இனிப்புள்ள முக்காலிப் பனங்காய்கள், பனாட்டுத் தட்டுகள், புழுக் கொடிகள் தேங்காய்ச் சொட்டுகள் அவித்த ஒடியற்பிட்டு பனங்கிழங்கு இத்தியாதி பல பொருட்கள். இவற்றைக் கொடுத்தால் எமது பொருட்களின் தகுதிக்கேற்ப அவர்கள் மீன், நண்டு, இறால் என்பவற்றை அள்ளித் தருவார்கள். சொல்வானேன், வளவிற்கிடைத்த பனங்காய் மீனாகிவிட்டது என்ற உள்ளக் கிளர்ச்சியோடு வீட்டுக்கு வருவேன்.
இப்படி அடிக்கடி போய் வந்ததால் எனக்கொரு நண்பன் கிடைத்து விட்டான். அவன் பெயர் பொன்னன். அவனுடைய தாய் சடைச்சி. இருவரும் பிடிக்கும் மீன்களில் கணிசமான தொகை எனக்கு. அதற்காக இப்பொழுது பெட்டியளவில் பெரிய உமல்தான் கொண்டு போவேன். மீனுக்குப் பதிலாக அவர்கள் கேட்கும் பொருள்களை நான் கொண்டுசெல்வேன். சீவல், உழுந்து, வரகென்று என்னைக் கேட்டுப் பெறுவார்கள். இவ்வாறே நானும் பொன்னனும் நெருக்கமானதால் அவனுடைய தொழிலில் நானுங்கூடச் செல்வதுண்டு.
ஒருநாள்; நானும் அவனும் கடலுட்சென்ற பொழுதுமுருகைக் கற்கள் செறிந்துள்ள ஒரு இடத்தில் இரண்டோ மூன்றோ புற்றுகள் இருந்தன. புற்றின் வாய்களில் இருந்த நீர் கலங்கிக் கொண்டிருந்தது. நிலத்தில் புற்றெடுத்து எலிகள் வாழ்வதுபோலக் கடலில் வளைகளுக்குள்ளே கலவாய்மீன் வாழ்கிறது என்று பொன்னன் சொல்லக் கேட்டு அதிசயித்தேன். மேலும் மேலும் கலங்கல் நீர் வர புற்றுக்குள் பெரிய கலவாய்கள் இருக்கின்றன என்ற முடிவோடு புற்றுக்களை அவதானித்தான். புற்றிருந்த முருகைக் கற்பார் இயற்கையானதல்ல.கலவாய் மீன்களைப் பிடிப்பதற்காக முன்பு யாரோ செய்து வைத்த பொறி என்று கண்டதும், வாயில்களை மூடிவிட்டு ஒன்றன் மேல் ஒன்றாக இருந்த கற்களை அப்புறப்படுத்தினோம். கையில் இருந்த கம்பியால் இடையிடையே குத்திப் பார்த்தபோது ஓரிடத்தில் கை உதறவே, பெலன் கொண்ட மட்டும் கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, மேலுள்ள கற்களை அகற்றும்போது ஒரு மீன்

Page 28
அந்தக் காலக் கதைகள் 52
ஒடிச்சென்று அடுத்தபுற்றில் விழ, குத்துப்பட அதன் சோடி மீன் கம்பியுடன் மண்ணுள் அழுந்திக் கிடந்தது. அந்தப் பெரிய கலவாய் மீன் எடுத்து எனது உமலுக்குள் போட்டு என்னை வழியினுப்பிவைத்தான் பொன்னன். இது ஒரு கதை. பண்டமாற்றைப் பற்றி இன்னுஞ் சொல்வதானால் ஒரு கொத்து நெல்லுக்கு ஒரு சோடி அப்பம். துட்டுப் பெறுமதியான முட்டை இரண்டைக் கொடுத்தால் இரு சோடி தோசை, ஒரு முட்டை ஒன்றரைச் சதம். ஒன்றறைச் சதத்துக்கு அதாவது ஒரு மூட்டைக்கு வாங்கக்கூடிய பொருட்கள் பல. உப்பு, மிளகாய், புளி இவையெல்லாம் முட்டை விலைக்கு வாங்கக் கூடிய பண்டங் களாயிருந்தன.
அக்காலத்தில் எமது கிராமத்தில் வேலைகட்குக் கூலியாகப் பணமல்ல தானியங்களே வழங்கப் பெற்றன. மயிர் களைவினைஞர், சீலைவெளுப்போர், கலப்பை நுகஞ்செய்வோர், கொளுவடிப்போர் அனைவருக்கும் அவரவர்களின் வேலைகளுக்கேற்ப, ஆண்டுக் கொருமுறை கூலியாகத் தானியங்களே வழங்கப்பெற்றன என்பதைக் கேட்க அதிசயமாக இல்லையா?
அருவி வெட்ட நாள் கூலி மூன்று கொத்து நெல்லு, புல்லுப் பிடுங்கவும் இதேதான் கூலி, சட்டி பானை பெட்டி சுழகு முதல் சகல பண்டங்களுக்கும் பண்ட மாற்றுத் தானியங்கள் வழங்கப் பெற்றனவேயன்றிப் பணம் கொடுத்தல் குறைவு. பணவரவை அதிகரித்தற்கேற்ற வர்த்தக விளை பொருளான புகையிலைச் செய்கை மிகக் குறைந்திருந்ததும். அத்தொழில் செய்தோர் ஊதியம் மிகக் குறைந்ததால், அதனை செய்வதில் நாட்டம் குறைந்ததும், உத்தியோகம் பிறநாட்டு வாணிபம் என்பன அருமையாக இருந்ததுமே பணப் புழக்கம் குறைவிற்குக் காரணங்களெனலாம். அறுவைப் பொட்டணி வியாபாரிகள் கூடத் தானியங்களுக்குப் பதிலாகப் பிடவைகளைக் கொடுக்கக் கண்டிருக்கிறேன்.
காற்சதம் அரைச்சதம் ஒரு சதம் ஐந்து சதம் பத்து இருபத்தைந்து ஐம்பது சதக் குற்றிகளும், முழு ஒரு ரூபாவுடன் ஒரு ரூபா ஐந்து ரூபா பத்து ஐம்பது நூறு ரூபாத்தாள்களும் புழக்கத்தில்

53 தில்லைச் சிலுன்
இருந்தன. அன்று ஒரு நூறுரூபாவை வைத்திருப்பவன் இன்றைய லட்சாதிபதிக்குச் சமனான வலிமையுள்ளவனாக இருந்தான்.
ஒரு நாள், எனது தாயார் கோவிலுக்கென்று நேர்ந்து கட்டி வைத்திருந்த ஒரு பணத்தை (ஆறு சதம்) கோவிலுக்குக் கொடுக்கும்படி ஒரு சந்நியாசியிடம் கொடுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது பாட்டனாருக்கு மனசு பொறுக்கவில்லை. அம்முடிச்சை அப்படியே வாங்கிக் கொண்டு மூன்று கொத்து நெல்லை அளந்து கொடுக்கும்படி கூறிவிட்டார். இப்படியாகப் பதின்மூன்று ரூபாக்களைச் சேர்த்து விட்டால் ஒரு தங்கப் பவுண் வாங்கலாம் என்பது அவரின் கருத்து.

Page 29
அந்தக் காலக் கதைகள் 54
9. மாற்றம் வரும்போது
)ண்டைக்காலத்து யாழ்ப்பான அரசர்களின் பிரதானிகளில் ஒருவர் எமது ஊரில் இருந்தாராம். எமது பகுதியின் இராச காரியங்களைக் கவனிக்கும் அதிகாரி அவர். அந்தக் கால மன்னர்களின் போர்களுக்குத் துணையாக, எம்மூரிலிருந்து படையொன்றைத் திரட்டிக் கொண்டு தலைமை வகித்துச் செல்பவர் அவராம். அவரின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஒருவர் எம் ஊரில் இருந்தார். வீரகத்தி என்பது அவர் பெயர்.
எனது எட்டு ஒன்பது வயதுப் பராயத்தில் எமது வீட்டுப் பக்கமாக அவரை அடிக்கடி காணுவேன். எனது பாட்டனாரின் ஆட்டுப்பட்டியில் இருந்து பல செம்மறிக்கடாக்களை அவர் கொள்வனவு செய்திருக்கிறார். அவரின் பெயரே எனக்குப் பிடிக்கவில்லை. வீரமும் கத்தியும் சேர்ந்த பெயர். கத்திகள் போன்ற பெரிய மீசையும் சிலுப்பாத்தலையும், அகன்ற வாயும், தடித்த உதடும், பருத்த தொந்தி விழுந்த உடலும் கண்டால் யார் தான் பயப்படமாட்டார்கள்?
கரகரத்த குரலில் கதைப்பதை கேட்கவே நடுக்கமாக இருக்கும். அத்துடன் அவர் பல களங்கண்ட சண்டியனுங்கூட. இருந்தும் அவர் எனது பாட்டனாருடன் மிகுந்த பெளசியமாகவே கதைப்பார். ‘குஞ்சியப்பு' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வதுடன், தனது வீரப்பிரதாபங்களை எல்லாம் அவிழ்த்துக் கொட்டுவார். “அந்தச் சாதிக்காரனை அது செய்தேன்,இந்தச் சாதிக்காரனை இது செய்தேன் அவனை அடித்தேன், இவனை மிதித்தேன், அந்தப் பெட்டையைப் பிடித்துக் கலியாணஞ் செய்து கொடுத்தேன். இந்தப் பெடியனுக்கு இராத்திரி சோறு கொடுப்பித்தேன், அந்தக் கலியாணத்தைக் குழப்பினேன்” என்று தனது வீரப் பிரதாபங்களை விளம்பியதுடன்

55. தில்லைச் சிவன்
குஞ்சப்பு எங்கட சத்திரியப்புலம் மஞ்சட்கேணிக் காணிகளை
விலைக்குக் கேட்கினம். அவையெங்கள் பரம்பரைக் காணி, யாரும்
வேற சாதிக்காரருக்குக் கொடுக்கக் கூடாது. எங்கட ராசாக்கள்
வாழ்ந்த காணியல்லவா சத்திரியப்புலம். மரகதவல்லி நாச்சியார் நீராடிய கேணியல்லவா மஞ்சட்கேணி எல்லாருந்தான் இப்ப முதலியார் பரம்பரையாச்சே. இந்தக் காலத்தில் இந்தக் காணிகளாவது
எங்களோடு இருக்க வேண்டும்” என்பது அவரது வாதம்.
என்பாட்டனார் ஆமாப்போடுவதுபோல தலையை ஆட்டவும் அவரின் கதை தொடரும். அந்தக் காலத்தில் இதுகளெல்லாம் எங்கிருந்தவை. “பண்டார மேளமும் உண்டான வரிசையும் சோழ குண்டானுக்குங்காலமல்லவா, இப்ப பாரேன் எல்லாப் பெண்டுகளும் ரவிக்கைச் சட்டையல்லவா போடுகினம். மார்பை மறைத்துக் கட்டிய சீலைபோய் மூடுதாவணிக் கொய்யக மெல்லே வைக்கினம். காலிற் செருப்புமாச்சு. அத்தோடு செத்தவீட்டுக்கு மேளமும்,கல்யாணத்துக்கு நாயனமுமல்லே பிடிக்கத் திரியினம். இது இந்த வீரகத்தி இருக்கும் வரை நடக்காது. ஆனால் இன்னொன்று கேட்டியளே குஞ்சப்பு, மற்றவங்க சவங்காவ மாட்டினமாம். இப்படியே போனால் இவையெல்லாம் எங்கேபோய் முடியுமோ?” என்று அவர் அங்கலாய்த்த வேளையில் எனது பாட்டனார் கதையைத் தொடங்கினார்.
சரியடா மகனே, இந்தச் சவங்காவுற விடயமிருக்கே இது நமக்குத்தான் நல்லாயிருக்கா, எவ்வளவு செலவு? காவுபவர்கட்கு வேட்டி, சால்வை அத்தோடு முடிந்ததா? எட்டுச் செலவு வரையாவது அவர்களின் குடும்பச் செலவுக்கும் இட்டு நிரப்ப வேண்டியுள்ளதே. இத்தனைக்கும் ஓர் ஏழைக்கமக்காரனால் எப்படிச் சமாளிக்க முடியும். அவன் ஒரு பிரபு, இந்த எடுப்புக்களையெல்லாம் செய்தான், என்பதற்காக நாமுஞ் செய்து குடிமுழுக வேண்டுமா ? இதை நிறுத்திவிட வேண்டும். நமக்கும் நல்லது. அவர்கட்கும் நல்லது. நான் தான் மெல்லமாக அவர்களிடம் சொல்லி இதை விட்டுவிடுங்கோ என்றேன். மேற்குப் பக்கத்தாரும் எப்பவோ விட்டிட்டினம்.இதற்குமேல் இதை வற்புறுத்தக் கூடாது, என்னவும் ‘குஞ்சப்புவின் வேலையா! அப்பவே நினைச்சேன் எங்கட ஆட்களின்ர உதவியில்லாமல்

Page 30
அந்தக் காலக் கதைகள் 56
நடக்காதென்று” சொல்லிக் கொண்டெழுந்த வீரகத்தி வெளியேறிவிட்டார். போகும் போக்கில் அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. எனது பாட்டனார் முகத்தில் இளநகையோடப்பெடியன் வேகமாகப் போறான்” என்று தம்பாட்டில் கூறிக்கொண்டார்.
மூன்றாம் நாட்காலையில் வீரகத்திவேறொருவருடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். எங்கள் பட்டியில் ஒரு காளை எருதுநின்றது.உழவு பழகியது. வண்டியிலும் இரண்டொரு நாள் பூட்டிவிருப்போம். மாவெள்ளை நிறம், எலிக்கண் போன்று மேலெழுந்த சிவந்த கண், குறுகிய வால், நுனியில் சிறிய வெள்ளை பார்ப்பவர்கள் ஆசைப்படவேண்டிய அழகும், மிடுக்கும் உடைய நாம்பன். எனது சின்னமாமா அன்போடு வளர்த்த இந்த நாம்பனைத் தரும்படி அடம்பிடித்தார் வீரகத்தி எனது பாட்டனாருக்கு அதைக் கைகழுவி விட விருப்பமில்லை. இருந்தும் நாட்டாண்மைக்காரனான வீரகத்தி கேட்கிறான். கொடுக்காவிட்டால் வெளியே மாடுகளை மேயவிடும் போது பிடித்துக் கட்டிப் பயிர்களை அழித்துவிட்டதென, மணியகாரன் வீட்டுக்கு முறைப்பாடு கொடுத்து அடாவடி பண்ணுவான். அவனுக்கு மாறாகச் சாட்சி சொல்லக்கூட எவரும் வரமாட்டார்கள். இந்த நிலை பரத்தில் சோலியைத் தவிர்த்துக் கொள்வதற்காக மாட்டைக் கொடுத்துவிடுவது நல்லதென்று பட்டதால், "ஐம்பது ரூபா தந்து மாட்டை அவிழ்த்துக் கொண்டு போ” என்று கூறிவிட்டார்.
“அது தானே கேட்டேன், குஞ்சப்பு எனக்கு இல்லை என்று சொல்வாரோ என்று, குஞ்சப்பு நாற்பது ரூபா தாரேன், வேற கதை வேண்டாம்.” என்று சொல்லிக்கொண்டு சென்றான். “எப்ப காக்” என்று இழுத்தார் பாட்டனார். “இப்ப என்ன அவசரம் குஞ்சப்புக்கு மூன்று, நான்கு வரும்படிகளிருக்கு, ஊரில் எல்லாம் அவரது நடப்புத்தானே, எனக்கேன் வம்பை,இரண்டு மூன்று நாட்களில் காசு உங்கள் கைக்கு வரும்” என்று சொல்லிக்கொண்டே மாட்டுடன் சென்றுவிட்டார்கள் அவர்கள்.
எனது பாட்டனாருக்கு ஒரே யோசனை. "நல்ல மாடு,நின்றால் நூறு ரூபாவுக்காகுதல் விற்கலாம், அறுந்திடுவான் கண்பட்ட பின் .

57 தில்லைச் சிவன்
சீ.வைத்திருக்கக் கூடாதுதான், எப்படியோ போய்த்தொலையட்டும்” என்று சொல்லிக்கொண்டே போய் ஈசீசயரில் கிடந்தார்.
மூன்று நாட்கள் கழிந்தன. காசு வரவில்லை. மேலும் மூன்று நாட்கள் சென்றன, காசு வரவில்லை. எனது பாட்டனார் காசு கேட்டு வீரகத்தி வீட்டுக்குப் போனார். வீரகத்தி கல்யாணம் செய்யாத சம்சாரி. வீட்டில் வயதுபோன தாய் மட்டுந்தானிருந்தாள்.
“ஆர் மகனே சின்னத்தம்பியே! அவன் எங்கேயோ போய் விட்டான். என் மகனே வந்தனி மாட்டுக் காசோ! அவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். உனக்கும் அவனுக்கும் கொளுவல் தான் வரும்போல இருக்கு. தகப்பனுக்கும், மகனுக்கும் கொளுவல், நல்ல வேடிக்கையாக இருக்கப்போகுது. மகனே நான் சொல்லி அவன் எதையோ கேட்கப் போறானே. தகப்பனாச்சு, மகனாச்சு, பட்ட பாடு” என்று சொன்னாள் வீட்டுச் சாரைக் கூட்டிக் கொண்டிருந்த கிழவி. கேட்டுக்கொண்டே வந்த பாட்டா சாய்மனையில் சாய்ந்து விட்டார். என்ன யோசனையோ..?
அந்த வேளையில் பட்டணத்தில் தனது தமையனார் வீட்டில் நின்று படித்துக்கொண்டிருந்த எனது சின்னமாமா வீட்டுக்கு வந்தார். அவரிடம் நாம்பன் விற்ற கதையை நான் கூறியதும் அவருக்கு கோவம் வந்துவிட்டது. “நான் ஆசையாக வளர்த்த நாம்பனை ஏன் கொடுப்பான்’ என்று கொதித்தவர் உடனே புறப்பட்டார். போன போக்கில் வீரகத்தியின் வளவில் கட்டியிருந்த நாம்பனை அவிழ்த்துக் கலைத்துக்கொண்டு வந்து எமது வீட்டு வளவிற்கட்டிவிட்டார்.
தூரத்திலே பேரிரைச்சல் கேட்டது. “டே நீ மாடுகட்டி வளர்க்கப் போறியே, பாப்பம். இன்றிரவுக்குள்ளே நீயுமில்லே மாடுமில்லை” என்ற அறைகூவற் சத்தம் அது.
சிறிது பின்னாக, வெளியே சென்ற எனது பாட்டனார் சிலமணி நேரங்கழித்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் எனது தாயாரும் சிறிய தாய்மாரும் மாமாவும் குசுகுசுவென்று கதைத்தார்கள். இரவு எமது வீட்டில் பெருங்களேபரம் நடைபெறலாம். மாட்டை

Page 31
அந்தக் காலக் கதைகள் 58
அவிழ்த்துக்கொண்டு போக வீரகத்தியும் ஆட்களும் வருவார்களாம். நாங்கள் தடுத்தால் குழப்பம், அடிபிடி; வெட்டுக் கொத்து யார் ய்ாருக்கோ! எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் எங்கள் எல்லோரது மனங்களிலும் திகிலும் பரபரப்பும் கூடியுள்ளது. இதே வேளையில் ஒருவர் பின் ஒருவராக எங்கள் அயலவர்கள் நாலுபேர் எமது தலைவாசலுள்நுழைந்தனர். அங்கிருந்த எனது பாட்டனாருடன் ஏதோ இரகசியமாக கதைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
பொழுதுஞ் சாய்ந்து கொண்டிருந்தது. நான் ஏதோ ஒரு பெரும் திகிற்காட்சியை அனுபவிக்க என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு ஆவலாயிருந்தேன். விளக்கும் ஏற்றியாகி விட்டது. விளக்கொளி படலைவரை தெரியத்தக்கதாக ஒரு முக்காலியில் வைக்கப்பட்டது. நான் படலையைப் பார்த்துக் கொண்டு நடைசாரில் இருக்கிறேன். நாம்பன் எங்கள் வீட்டின் தெற்கு கோடிப்புறப் பூவரசமரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எனது மாமா வீட்டுக்கு வருவதும் எனது பாட்டனாருடன் மெதுவாக ஏதோ பேகவதும் வெளியே போவதுமாக இருந்தார்.இப்படியாக இருக்கும் வேளையில், எனது அம்மா என்னைச் சாப்பாட்டுக்கு குசினிக்கு அழைத்தார்.
போய் இருந்து சாப்பிடும்போது, எனது அம்மா கேட்டாள். “நீ பயப்படுகிறாயா? பயப்படாதே. அவன் வீரகத்தி இனி இந்தப் படலைக்கே வரமாட்டான். வந்தால் அடித்துமுறித்துப் போடுவார்கள்” என்றாள். எனக்கு வியப்பாக இருந்தது. யார் அடித்து முறிப்பது இந்தக் கிழட்டுத் தாத்தா சாய்மனையிற்படுத்தபடி கிடக்கின்றார். பதினைந்து வயதுள்ள சின்னமாமா அங்குமிங்குமாக ஒடித்திரிகிறார். வீரகத்தியை அடித்து முறிக்க ஆர் இருக்கிறார்கள். அந்தச் சண்டியனை வெல்ல முடியுமோ? என்ற ஆதங்கத்தோடு என் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். தம்பி அப்போது வந்தார்களே நாலு பேர். எமது அயலவர்கள் அவர்களும் இன்னும் சிலருமாக எங்கள் வீட்டைச் சுற்றிக் காவல் நின்று பாதுகாக்கினம். சிலர்.வீரகத்தியின் வீடு தேடிப் போயிருக்கிறார்களாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் செய்தி தெரியும். நீ போய்ப் படு” என்று அம்மா சொல்லவும் நான் ‘அம்மா அந்த அயலவர்கள் எமக்காக ஏன் வந்தார்கள். வீரகத்தி எமது

59 தில்லைச் சிவன்
சொந்தக்காரனாச்சே, சொந்தமில்லாத இவர்கள் எங்களுக்காக வீரகத்தியை ஏன் அடிக்க வேண்டும்?” என்றேன்.
தம்பி நீ கேட்பது சரிதான். வீரகத்தி எமது சொந்தக்காரன் ஆனால் கூடாதவன். கெட்டவன். எமது அயலவர்களோ மிக நல்லவர்கள்.இவர்கள் ஏழைகளாயிருப்பதால் இவர்களைக்கொண்டு அடிமை குடிமைத் தொண்டு செய்விக்க வேண்டும் என்ற விருப்பம் எம்மவர்கட்கு. இந்த வீடு ஒன்றுதான் இந்தக் கொள்கைக்கு மாறாக நிற்கின்றது. நாம், அவர்கள் எமக்கு அடிமை, குடிமைத் தொண்டு செய்ய வேண்டாம் என்கிறோம். இதனாற் கோபமுற்ற வீரகத்தி மாடு வாங்கியதும், காசுதராமல் விட்டதும், எம்மோடு கொழுவிச் சண்டைபிடித்து எம்மை அடக்கிவைத்தால் அயலவர்களும் அடங்கிவிடுவார்கள் என்று நினைத்துச் செய்தான். இனித்தான் தெரியும் அடங்குவது யார்? ஆளுவது யார்? என்று கூறி முடிக்கவும் நிம்மதிப்பெருமூச்சுடன் நித்திரை வரப்போய்த் தூங்கிவிட்டேன்.

Page 32
அந்தக் காலக் கதைகள் 60
10. வண்டியின் பின்னால் வந்த பேய்
அ(ப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்த இரண்டு வடக்கன் மாட்டுக் காளைகள். ஊர்காவற்றுறையில் உள்ள மாட்டுக்காலைக்கு இந்தியாவில் இருந்து கப்பலில் வந்து இறங்கி நின்றவை அவை. அண்ணாமலை மாடுகள். வெள்ளை வெளேரென்ற நிறம். நன்கு கொழுத்ததும் தளதளவென்ற மினுமினுப்பும் கொண்டவை. ஈ இருந்தால் வழுக்கி விழுந்து விடக்கூடிய வழுவழுப்புள்ள காளைகளின் கொம்புகளோ, நீண்டுயர்ந்து கூடு போன்றவை. உயர்ந்த ஏரிக்கட்டோடு கூடியதோற்றமும், பீடுநடையின் மிடுக்கும் கண்டுதானோ ஒளவையாரும் “ஏறு போற் பீடு நடை” என்றார். அவ்வளவுக்கு எடுப்பான நடையும் அழகும் மிக்கிருந்தன.
அந்தக் காலத்தில் ஒரு ஆயிரம் ரூபாவுக்கு முன் பின்னாக விலை கொடுத்து எனது பாட்டனார் வாங்கிக் கொண்டு வந்தார். கழுத்துகளில் வெண்டயங்களும் சதங்கைப்பட்டியும் ஜல் ஜல் என்று சப்திக்க, வெள்ளி டைமன் சங்கிலிகளும் கறுப்பு நூல்மாலைகளும் கொம்புகளையும் கழுத்துகளையும் அலங்கரிக்க, கொம்புகளில் சீவி அணியப்பெற்றுள்ள பித்தளைக்கிரீடங்கள் ஜொலிக்கக் காளைகளைப் பிடிகயிற்றில் நடப்பிக்கும் போதுண்டான மகிழ்ச்சிப் பெருமிதத்தோடு, அவற்றின் பின்னால் ஒடிச் செல்வதினால் உண்டாகும் ஆனந்தம் தனிரகம். இதனைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்துக் காணவேண்டியதே.
அந்தக் காளைகளின் நெடிதுயர்ந்த மேனிகளைத் தடவிப் பார்ப்பதிலும், அடிக்கடி உணவு வைப்பதிலும் எனது நேரத்திற் பெரும் பொழுதைப் போக்குவேன். காளைகள் கட்டப் பெற்றுள்ள தொட்டிலுக்கு அருகாமையிலேயே எனது விளையாட்டுக்களையும் வைத்துக் கொள்வதுடன் எனது நண்பர்கட்கும் அக்காளைகளைக்

(51 ତଥ୍ଯ தில்லைச் ¢፩வன்
காட்டி, அவற்றின் உறுப்புகளின் குணநலங்களையும் எனது பாட்டனார் வருணித்தவாறே நானும் வர்ணித்துச் சொல்லி மகிழ்வதில் எனக்கு அலாதிப் பிரியம். எனது பாட்டனார் மாடுகளின் வாக்குப் போக்கினை அவதானித்து மதிப்பிடுவதில் நகுலனை மிஞ்சிவிடுவார் என்று நினைக்கிறேன். பஞ்சபாண்டவரில் ஒருவரான நகுலன் குதிரைகளை மதிப்பிடுவதில்தான் வல்லவர் என்று கேள்வி.
அடுத்த நாட்காலையில் எங்களுடைய பதினொரு சுற்றுப் பெரிய வண்டியில் மாடுகளை முதன்முதலாகப் பூட்டிப் பிள்ளையார் கோவிலுக்கும் பின் பூவரசங்குழைக் கட்டுக்களை ஏற்றிக் கொண்டு பண்ணைத் துறைக்கும் போகப் போவதாக, எனது பாட்டனாரும் வண்டிற்சாரதி ஆறு முகத்தாரும் கதைத்ததைக் கேட்டேன். அது முதல் எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. எப்படிம் இவர்களுடன் இந்த வண்டிச் சவாரியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நின்றேன். எனது பாட்டனாரை வளைத்துப்பிடிப்பது வலுசுகம், கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாற் போதும்; சுழன்று விடுவார். அதன்மேல் என்னை ஆயத்தப்படுத்திக் கூட்டிக்கொண்டு போவது அவருடைய வேலை. இந்த வித்தைகளைத் தெரிந்து வைத்திருந்த நான் எனது பாட்டனாரைக் காக்கா பிடித்து அவரது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டேன்.
பொழுது விடிந்தது. காலை ஏழு மணிப் பூசைக்குக் கோவிலுக்குப் போக வேண்டும் என்பதால், வண்டிற் சாரதியான ஆறு முகத்தார் வண்டிமாலில் இருந்து வண்டியை வெளியே இழுத்து, வண்டியின் அச்சுக் குடத்துக்குக் கொழுப்புப் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் ஒடிச் சென்று, கிணற்றடியில் இரண்டு மூன்று வாளி தண்ணிரை அள்ளி மேலிற் குளித்து, உடுத்திருந்த சிறு துண்டை கிணற்றடியில் விட்டு விட்டு, வீட்டுக்குள் வந்து, வேறோரு தோய்த்துலர்ந்த துணியை உடுத்துக் கொண்டு, திருநீறு பூசித் தலை இழுத்துப் பொட்டிட்டுக் கொண்டு ஓடி வந்து வண்டியில் ஏறத் தயாரானேன்.
அந்த நேரத்தில் அயலில் உள்ள சில பெரியவர்களும் எனது தோழர்களிருவரும் தாமும் கோவிலுக்கு வருவதாகச் சொல்லி

Page 33
அந்தக் காலக் கதைகள் 62
வந்தார்கள். எல்லோருமாகப் பத்துப் பேர்வரை சேர்ந்து விட்டோம். காளைகள் அவிழ்த்து வரப்பட்டுக் கிழக்கு முகம் நோக்கி நின்ற வண்டியில் பூட்டப் பெற்றன. ஒன்றை ஆறுமுகத்தாரும் மற்றதை எனது பாட்டனாரும் பிடித்து நுகக் கிட்டிகளுக்குள் கழுத்தை அடக்க, வேறோருவர் இரண்டினதும் பூட்டாங்கயிறுகளை இறுக்கி நுகத் தடியில் முடிந்து விட்டார். ஆறுமுகத்தார் வண்டியின் ஆசனத் தட்டில் ஏறி இருந்து, இரண்டு காளைகளிலும் பிடிகயிறுகளை இழுத்துப் பிடித்துக்கொண்டு, எங்களை உள்ளே ஏறச் சொன்னார். நான் தொத்திப்பாய்ந்தேறி ஆசனத்தட்டுடன் சேர்ந்துசாரதிக்குப்பக்கத்தில் இருந்தேன். மற்றவர்களும் உள்ளே ஏறி வந்தார்கள். ஆனால் எனது பாட்டனாரும் மற்றொருவரும் ஆளுக்கொரு மாடுகளின் கடைக்கிட்டியைப் பிடித்துக் கொண்டார்கள்.
மூக்குப்பிடிகயிறுகளைத் தளர்த்தி, மாடுகளைச் சாரதி உரப்பி விட்டதும் அவை நிமிந்து நடக்கத்தொடங்கின. கடைக்கிட்டி பிடிப்போருக்கு, மாடுகள் நிமிர்ந்ததும் நுகத்தடி எட்டவில்லை, அவர்கள் நாலாபம் என்கிற மூக்குக் கயிறுகளைப் பிடித்துக்கொண்டு நடந்தனர். சிறு தூரம் இப்படியே நடந்தபோது, மாடுகள் நன்கு பழக்கப்பட்டவை என்பதையும் குழப்படி பண்ணாமல் பாதை வழியே செல்லும் என்பதையும் அவதானித்துக் கொண்டு, அவர்களும் வண்டியுள் ஏறினர். மாடுகள் நிமிர்ந்து ராச நடை போட்டுக் கொண்டு வீதிவழியே கம்பீரமாகச் சென்றன. கெச்சைகளின் 'ஜல்ஜல்’ என்ற ஒலியும் சதங்கைகளின் “கலீர் கலீர் என்ற நாதமும் மாடுகளின் ஒரே கால அளவினதான தாளலயத்தோடு கூடிய குளம்புகளின் அடியோசையோடு, ஒத்திசைத்தால், ஒரு லயவாத்தியக் கச்சேரியைக் கேட்பது போலவும் ஏதோ ஒரு நல்ல ஊர்வலத்தில் செல்வது போன்ற உணர்ச்சியுடன் சில நிமிடங்களிற் கோயிலைச் சென்றடைந்தோம்.
கோவிலடியில் எமது வண்டியைக்கண்டதும் சிறுவர்களும் பெரியவர்களுமாக ஒரு கூட்டம் கூடி விட்டது. இக்காலத்தில் பெரிய பெரிய கார் வண்டிகளைப் பார்வையிடுபவர்கள் போல, எல்லார் பார்வையும் எருதுகளின் மேற்றான். அவற்றின் நடையையும் அழகையும் விலையையும் எமது வண்டியில் வந்தவர்களும் பிறருமாக

h3 தில்லைச் சிவன்
விமர்சித்துக்கொண்டிருந்த வேளையில், கோவிலில் பூசை மணி கேட்க நாமெல்லாரும் கோவிலுக்குள் சென்றோம்.
எனது பாட்டனார் அர்ச்சனை செய்துகொண்டு வந்தார். திருநீற்றினை மாடுகளுக்குப்பூசிச் சந்தனம் குங்குமம் என்பவற்றை அவற்றின் நெற்றியில், உச்சித்தலையில் இட்டும்,கொம்புகளிற் பூசியும் வாழைப்பழங்களை அவற்றின் வாய்களுள் நுழைத்துத் தின்னவுங் கொடுத்தார். பின் சிறுபொழுது ஆறி நின்று அங்கு வந்து நின்றவர்களுடன் உரையாடிச் சிரித்து மகிழ்ந்த பின் வண்டிலைப்பூட்டி கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
இதன் மேல் பூவரசங்குழை ஏற்றிக் கொண்டு போய் பண்ணைத் துறையில் பறிக்க வேண்டும்; இன்றைய பொழுதிலேயே இரண்டு ஏற்றுக்கள் ஏற்ற வேண்டும் என்ற ஏற்பாடு முதல் ஏற்று எங்கோ தூரஇடத்தில் ஏற்ற வேண்டியதனால் என்னைக் கூட்டிக் கிொண்டு போகவில்லை. அடுத்த ஏற்று ஏற்றும் பொழுது, மாலை ஐந்துமணிக்கு மேலாகிப் பொழுது சரிந்துவிட்டது. இதைக் கொண்டு போய் பண்ணைத்துறையில் பறித்துத் திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகிவிடும். எனவே என்னை வரவேண்டாம் என்று தடுத்தும்,நான் பிடிவாதமாக நின்றதால், வேண்டா வெறுப்போடு தான் கூட்டிக் கொண்டு போனார்கள். நான் சாரதியுடன் ஆசனத் தட்டி முன், ஏணியில் போட்டிருந்த வைக்கோற் சாக்கின் மேல் இருந்தேன். இன்னொருவர் குழைக்கட்டுகளின் மேல் இருந்தார். வண்டி புறப்பட்டது. பத்து மைல் தூரத்தில் உள்ள பண்ணையில் குழைக்கட்டுகளைப் பறித்துத் திரும்ப வேண்டும். மாடுகளும் முதல் ஒருமுறை போய் வந்ததால் களைத்திருந்தன. நடையும் ஒய்ந்து விட்டன. சிறிதுாரம் சென்றதும் எங்களின் முன்னால், வேறு இருவண்டிகளில் குழை ஏற்றிப் போக் கண்டோம். சாரதி எமது மாடுகளைத் தூண்டினார். வேகம் போதவில்லை. மேலும் தூண்டுவதற்குச் சாரதி முயற்சிக்கவில்லை. லொறி என்றால் அச்சிலற்றரை அமத்திப் பார்கலாம். இவை மாடுகள், உயிருள்ள வாயில்லாச் சீவன்கள். அதனோடு ஊருக்கும் பாதைக்கும் புதியவை. களைத்துப் போய் விழுந்து படுத்து விட்டால், வேதனையைவிட

Page 34
அந்தக் காலக் கதைகள் 64
அவமானங்கூட, அசைபாட்டிலேயே போகட்டும் என்று விட்டு விட்டோம். மாடுகள் அசைந்தாடிச் செல்ல, வண்டிற்சக்கரங்களின் கடபுடாச் சத்தம் இருளிற் கரைந்துகொண்டிருந்தது. s
'குப்’ என்ற பேரிருட்டு, வண்டியின் கீழ் உள்ள வரம்பைக் கொளுத்தினோம். மரக்காலின் கீழ்வைத்த விளக்கது. ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் அக்காலத்திலும் விளக்கில்லாமல் இரவில் வண்டில் செல்வது குற்றம். அக்குற்றத்தை தவிர்க்கப் பயன்பட்டது உண்மை.
தெருவின் இருபக்கங்களிலும் வளர்ந்துள்ள மரங்களும் பற்றைகளும் பெருமலைகள் போலவும், அவற்றின் ஊடே ஒரு குகை வழி தெரிவது போன்ற பாதையினுாடாக எமது வண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலே வானத்தைப் பார்த்தால் ஆங்காங்கே இரண்டு மூன்று நட்சத்திரங்கள் கண்ணை விழித்தும் மூடியும் விளையாடின. எமது வண்டிற் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட ஆட்காட்டிக்குருவிகள் வண்டியின் முன்னும் பின்னும் பக்கங்களிலும் பறந்து சத்தம் இட்டு அச்சமூட்டின. நரிகள் ஒன்றோ இரண்டு வண்டியின் முன்னாலே வீதியை கடந்து கடின தூரம்போக, மலைக்குன்றுகளும் பெரிய யானைகளும், சிறிய மாடுகளும் போலப் பற்றைகள் இருளில் மறைந்து தோன்றின. அதற்கு மேலே பார்த்த பொழுது கிழக்குப் பக்கமாக யாழ்ப்பாணச் சவுக்க மரச் சந்தியில் எரிந்த “காஸ்’ விளக்கு மின்னிமின்னித் தெரிந்தது.
வடக்குக்கடற்கரைப்பக்கத்தில் இருந்து ஒருநாற்றம் காற்றிற் கரைந்து வந்து மூக்கைத் துளைத்தது. பாம்புகள் கொட்டாவி விடுவதால் உண்டான மணமோ? குரக்கன் பிட்டு மணமாக அல்லது புல்லாந்திச் செடியின் நாற்றமாக இருந்தால் பாம்புகள் உலாவுவதாக நினைக்கலாம். இது கடற்சாதாளையின் நாற்றம் என்று ஆறுமுகத்தார் சொன்னார் சரிதான். அடிக்கடி போய் வருபவருக்குத் தெரியாமலோ சொல்கிறார். இந்த ஆராய்ச்சியை விடுத்து மேலே பார்த்தேன். கடற்கரையில் திடீர் என்று வெளிச்சங்கள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன.”அங்கே பார்த்தாயா கொள்ளிவாய்ப்பேய்கள் வெளிச்சம் கொளுத்துகின்றன” என எனக்குக் காட்டி அச்ச

65 தில்லைச் சிவன்
மூட்டினார். ஆறுமுகத்தார். "அண்ணே!அங்கே பாருங்கள் நாலைந்து பந்த வெளிச்சங்கள் நடந்து திரிவதுபோல் பார்க்கிறமே அவையும் கொள்ளிவாய்ப்பேய்களோ” என்றேன். அதற்கு ஆறுமுகத்தார் "அவை மீன்பிடிக்கும் ஆட்களின் சூள் வெளிச்சம். கொள்ளி வாய்ப்பேய்கள் கடலின் சதுப்புக்கரைகளிற்றான் நிற்கும் வாயைத் திறந்தால் நெருப்பெரியும், அவை தெருக்களுக்கோ ஊர்களுக்கோ வராது” என்றார்.
அப்படி ஆனால் எங்கள் நொத்தாருக்கு தெருவில் நின்று பேய்தானே அடித்து, அவர் சொத்தியாகிப் போனாராம். அவருக்கு அடித்தபேய் எப்படித் தெருவுக்கு வந்தது என்பது எனது கேள்வி. அதற்குப் பதிலாக ஆறுமுகத்தார், “தம்பி அது எனக்குத் தெரியாது, ஆனால் அவரும் ஒருநாள் மண்டை தீவில் இருந்து இந்த வழியாவேதான் வந்திருக்கிறார். வில்லு வண்டில், உசாரான நாம்பன் மாடுகள், தட்டிவிட்டுக் கொண்டு வருகிறார் சாரதி. வண்டியின் பின்பக்கமாகக் கால்களைக் கீழே விட்டபடி ஒய்யாரமாக இருக்கிறார் நொத்தார். பனிக்காலம், குளிர் கடுமையாக இருந்தது. அடிக்கடி சுருட்டுப்பற்றும் நொத்தார், பனிக்குளிருக்குச் சும்மாவா இருப்பார்? ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துத் தீக்குச்சிகளைத் தட்டிப் பற்ற வைத்திருக்கிறார்”, பல குச்சிகளை எடுத்துத் தட்டி எப்படியோ சுருட்டைப்பற்ற வைத்த வெளிச்சத்தை கண்டுபோல, எங்கிருந்தோ “ஒன்று வண்டியின் பின் வந்துவிட்டது. அது ஒரு ஆட்டுக்கிடாய் போல, வண்டியின் பின்னாலும் சில வேளைமுன்னாலும் துள்ளுவதும் பாய்வதும் குதிப்பதுமாக வர மாடுகளும் வெருண்டு அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டபோதும், சாரதி ஐயம் பிள்ளை தன் கெட்டித்தனத்தினால் மாடுகளை அடக்கி, வண்டிலை விட்டுக் கொண்டு போகிறார். ஆனால் ஆட்டுக்கிடா வண்டியின் பின்னால் தொடர்ந்து கனதுTரம் வந்துவிட்டது. நொத்தார் இருந்த வாகிலே உரப்பிப்பார்த்தார். சாரதியின் கோலை வாங்கிப் பின்னால் வந்த க.ாவுக்கு எட்டி அடித்துப் பார்த்தார். அது சற்றுப்பின்வாங்கி, முன்னே பாய்ந்தது. அடி பிடிக்கவே இல்லை. கிடாயும் தொடர்ந்து வந்து Glej{160|19(5igg). 2・., 。
5

Page 35
அந்தக் காலக் கதைகள் 66
இந்த நிலையில் நொத்தாரின் மனதில் ஒரு பேய் புகுந்து விட்டது. அது பொல்லாத ஆசைப்பேயாயும் இருக்கலாம். மெள்ளமாக இறங்கி ஆட்டுக்கடாவைப் பிடித்துக்கட்டி வண்டிலுக்குள் போட்டுக் கொண்டு போனால், நாளைக்கு முழுக்கோடுநல்ல “பிறாசவ்’ என்று எண்ணினார் போலும், “டேய் ஐயம்பிள்ளை வண்டியைக் கொஞ்சம் பிடியடா’ என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக்கடாவின் காலைப் பிடித்தாரோ இல்லையோ! ஒரே இடறலாய் இடறி அவரை விழுத்திய ஆட்டுக்கிடாய் எங்கேயென்று தெரியாது. ஒடி மறைந்து விட்டது.
இடறுண்டு விழுந்த அதிர்ச்சியோ! பனிக்குளிரோ அல்லது பேய்தான் ஆட்டுக்கிடா வடிவில்வந்து அடித்ததோ எழும்ப முடியாமல் நடுங்கிக்கொண்ட நொத்தாரை, ஒருமாதிரிச் சாமாளித்து, வண்டியில் தூக்கிவைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சாரதி சொன்ன கதையைக் கேட்டு ஊரே அதிர்ச்சி அடைந்து விட்டது.
அதுவரையில் பேயாவது பிசாசாவது என்று பகிடி பண்ணும் எம் ஊரவர் சிலர் “கப்சிப்” என்று வாய் மூடிவிட்டனர். அன்று விழுந்தவர் விழுந்தவர்தான். எத்தனையோ பெரிய பெரிய வைத்தியர் பார்த்தும், மந்திரவாதிகள் தமது மந்திர வலிமையை உபயோகித்தும், அவரை எழும்பி நடக்கச் செய்ய முடியவில்லை. ஒரு சாய்மனைக் கதிரையில் கிடந்தபடியே தனது உத்தியோகத்தைப் பார்க்கும் நொத்தாரிஸ் தான் சரவணை நாகேசுவரின் ஸ்தாபகர். சொத்தியாகாவிட்டால் மனிதனைப்பிடிக்க முடியாது’ என்றுகதையை முடித்தார்.
எனது மனம் பேய்களையும் நடமாட்டங்களையும் அவதானிக்குமாப்போல, அகன்ற காட்டில் இருளின் மத்தியில் தோன்றும் பனைகளையும், பற்றைகளையும் பார்ப்பதும், கடற்கரையிலே கூவும் கோட்டான்களுக்கும், “குவாகுவாத்” தாராக்களுக்கு அஞ்சுவதும் ஆட்டுக்கடாக்களைத் தேடி விழிப்பதும் மாகப் பக்கத்தில் இழிந்த ஆறுமுகத்தாரின் உடலோடு ஒட்டியபடி இருந்து கொண்டேன். வண்டில் ஒருவாறு தென் பண்ணைத் துறையைப் போய்ச்சேர்ந்தது.

(7 தில்லைச் சிவன்
11.திருமணங்கள் இரண்டு
ெே(ளாண்மை ஒய்வெடுக்கும் காலம். இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தது. இலுப்பைப் பூக்கள் சொரிந்து அதன் மணம் எங்கும் பரிமளித்துக் கொண்டிருந்தது. அந்தக்காலத்தில், இலுப்பைப்பூவை உலரவைத்து இடித்து உண்ணுதல் வழக்கம். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது பழமொழி.
அதிகாலைநேரம், இலுப்பைப்பூசேகரிப்பதற்காக இலுப்பைப் தோப்புக்குச் சென்று கொண்டிருந்தோம். வானத்தில் காட்டு வெளவால் கத்திக் கொண்டும், இலுப்பைப்பூச்சக்கைகளைத் துப்பிக் கொண்டும் பறந்தன. பார்க்கப் பயமாகவும், திகிலாகவும் இருந்தது. நாங்கள் சிறுவர்களும் பெரியவர்களுமாக நாலைந்து பேர் சென்றதால் அச்சம் தூரப் போய்விட்டது. எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வோர் ஒலைப்பெட்டி, அவற்றுள் இலுப்பைப் பூக்களைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டு வருவோம்.
இலுப்பைப் பூக்களைப் பொறுக்கிச் சேர்க்கும் ஆவலில் ஒவ்வொருவரும் நான் முந்திநீமுந்தி என்று ஒடிச் சென்று இலுப்பைத் தோப்பை அடைந்தோம். அங்கே இருவர் எங்களுக்கு முன்பே போய் இலுப்பைப் பூக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் யார்? ஒருத்தி அடுத்தவீட்டுச் சரஸ் அக்கா, மற்றவர் எனது சின்னமாமா.
“உங்களுக்கு நேரகாலந் தெரியாதா? இளம்பிள்ளைகள், பேய் பிசாசு திரிகிற சாமத்திலேயே, இலுவைப்பூப் பொறுக்க வந்திட்டினமாம்” என்று புறுபுறுத்தாள் ஆச்சி. மாமா ஒன்றுமே பேசவில்லை. சரஸக்காதான் சொன்னாள், “சேவல் கூவியது, அக்கம் பக்கத்து நாய்கள் குலைத்துக் கேட்டது. நீங்கள் வந்து விட்டீர்கள் என்று வந்தால், இவர்தான் பொறுக்கிக் கொண்டிருக்கிறார். நானுஞ்சேர்ந்து பொறுக்கிறேன்,இந்தச் சேவல்களுக்கு இப்ப சரியான

Page 36
அந்தக் காலக் கதைகள் 68
நேரந்தெரிவதில்லை போல’ எனவே "ஒமோம் சேவல்களுக்கு நேர காலம் தெரியாது தான்’ என்று கருகலாகக் கூறிக் கொண்டே பெட்டியை நிலத்தில் வைத்து இரு கைகளாலும் பூக்களைப் பொறுக்கினாள் ஆச்சி. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து இரண்டு கைகளாலும் பூக்களைப் பொறுக்கிப் பெட்டிகளை நிரப்பினோம்.
உதிர்ந்த சருகுகளின்றிக் கூட்டித் துப்புரவு செய்திருந்த இலுப்பைத் தோப்பில் வெள்ளைக் கம்பளம் விரித்தாற் போல பூக்கள் சொரிந்து கிடந்தன. அவற்றைப் பொறுக்கிப் பெட்டிகளை நிரப்பவும் பொழுது விடியவும் நேரம் சரியாக இருந்தது. ஒவ்வொருவரும் பெட்டிகளுடன் வீட்டுக்கும் புறப்பட்டோம். எனது மாமா பூப்பெட்டியை ஆச்சியிடம் கொடுத்துவிட்டு வயலிற் போடப்பட்டிருந்த செம்மமறியாட்டுப் பட்டியைப் பார்க்கச் சென்று விட்டார். நாம் சென்ற வழியில் சரசக்கா வீட்டுப்பனந்தோட்டம் இருந்தது. அதனுள்ளால் நாம் அனைவரும் வந்து கொண்டிருந்தோம். அப்போது இரண்டொரு பனங்காய்கள் இருந்தன. மேலும் இரண்டு பனங்காய்கள் முன்னரே விழுந்தனவயும் கிடந்தன. அவற்றின் மணத்தை நுகர்ந்து கொண்டு எங்கிருந்தோ சில மாடுகள் ஒடி வந்தன. அம்மாடுகளைத் துரத்திய சரசக்கா “இனியொரு பெரிய வேலைவந்திட்டுது, பனந்தோட்டக் காவல் இருப்பு கொட்டில் அடைப்பு” என்று அலுத்துக் கொண்டாள். எனது ஆச்சி என்னைப் பார்த்து “அடே தம்பி ஓடிப்போய் எங்கள் பனந்தோட்டத்தைப் பார்த்து வா, பனம் பழம் விழுந்து கிடந்தால், அவற்றை எடுத்துப் பனையில் கட்டி இருக்கும் பட்டைக்குள் போட்டு விடு’ என்று என்னை ஏவினார். நான் எங்கள் பனந்தோட்டத்தை நோக்கி ஒடினேன்.
ஆடி பிறந்து விட்டது. சூறைக்காற்று, வயல்வெளி மண்ணை வாரித்தூற்றிக் கொண்டுசென்றது. எங்கும் புழுதிப்படலம், மரஞ்செடி இலைதளை எல்லாம் மண்படிந்து கிடந்தன. குளங்குட்டைகளில் தேங்கி நின்ற தண்ணீர் வற்றிச் சேறும் சுரியுமாகக் காட்சி தந்தது. ஊரின் வடக்குப் புறத்தில் உள்ள பெரிய வெளியில் மேயச் சென்ற மாடுகள் நீர் நிலைகளைத் தேடி ஊருக்குள் படை எடுத்தன.

தில்லைச் சிவன் (ا)
அம்மாடுகளுக்குப் பனந்தோப்புகளில் வீழ்ந்து தெறிக்கும் பனம் பழங்களிற்கண். அவைகளை ஈர்த்துச் சூப்புவதற்காகப் பனந்தோப்புகளைச் சுற்றிச் சுற்றித் திரிந்தன. இம்மாடுகளிடமிருந்து பனம் பழங்களை முழுமையாகப் பிரித்தெடுப்பதற்காக, ஒவ்வொரு தோப்பிலும் காவற் தொட்டில்கள் போடப்பட்டிருக்கும். இவற்றில் இருந்தவாறே தோப்பில் விழும் பனம் பழங்களை எடுத்துப் பாதுகாப்பது, காவல் செய்வோரின் கடமை. ஒவ்வொரு பனந்தோட்டத்திற்கும் காவற்காரர் இருப்பார்கள். இவர்களுக்கு அவ்வப்போது வேண்டிய உணவும் நீரும் கொட்டிலுக்கே வரும். காவற்காரப் பெண்கள் சேர்ந்து தாயம் போடுதல், கண் பொத்தியாடுதல், கொக்கான் பிடித்தல் முதலிய விளையாட்டுக் களிலும் சில "சிறுவர்கள் அணிற் பிள்ள்ைகளுக்கு மட்டைப் பொறிவைப்பதிலும் கருத்தாகத் திரிவதுண்டு.
நாள் முழுவதும் பனந்தோட்டங்களில் காவல் இருந்து பெற்ற பழங்களைத் தெரிந்தெடுத்து, ஒவ்வொரு நாட்காலையிலும் கடகத்தில் இட்டுக் காடியோடு சேர்த்துப் பிணைந்து, பிழிந்து, பாய்களிற் பரவிக் காய்ந்தபின்,நீள்சதுரத் துண்டுகளாக வெட்டி, மடித்துக் கூடைகளில் அடுக்குவர். இதன் போது நடைபெறும் ஒரு சிறப்புக் கொண்டாட்டம் பாரோலைப் படையல். இப்படையலில் :பிட்டு, சோறு, கொழுக்கட்டையுடன் மச்சக் கறிவகைகளும் உண்டு. இவற்றை உற்றார் உறவினருடன் உண்டு களித்துக் கூடையில் அடுக்கிய பனாட்டினை, மாரிகாலத் தேவைக்காகப் புகைப் பரணில் ஏத்திவைப்பர். பெரும்பாலும் இந்த நிகழ்வுகளுடன் ஆடி மாதம் நிறைவுற, ஆவணி மழையை எதிர்பார்த்து புழுதி விதைப்புகளுடன், திருமண நாட்களும் தொடங்கிவிடும். திருமணங்களுக்கு ஏற்றதல்ல என விலக்கப்பெற்ற ஆடி முடிவு இளந்தம்பதிகளுக்கும் திருமணத்தை நினைத்துக் கொண்டிருக்கும் புதிசுகளுக்கும் உற்சாகத்தை ஊட்டலால், ஆவணி, திருமணப் பேச்சுக்களுக்கும் திருமணங் களுக்கும் எனத் தயாரானது.
இத்திங்களில் திருமணங்களுக்கு முகூர்த்தக்கால் நாட்டுவதில் ஊரெல்லாம் குதூகளித்தது. எனது உறவினர் ஒருவரின்

Page 37
அந்தக் காலக் கதைகள் 70
திருமணத்திற்காகப் பொன்னுருக்கல். கன்னிக்கால் நாட்டல், பந்தல் அமைத்தல் என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. திருமண நாளுக்குப்பத்து நாட்களிருக்கவே, மாவிடிக்கவும் பலகாரம் கடவும் எனப் பெண்கள் போய் வரத் தொடங்கினர். எனது ஆச்சியும் இவர்களில் ஒருவர். அவர் போய் வரும் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு புதுச் செய்தியைக் கொண்டு வருவார். ஒரு நாள் விசேட மேளம் வருகிறது என்றும் மறுவேளை மாப்பிளை பொம்பிளை ஊர்வலம் போகக் குதிரை வண்டில் வருகிறதென்றும் சொன்னவர், அடுத்த நாள் வந்து புதுக்கதை விட்டார். “பெண் வீட்டார் குதிரை வண்டி பிடிக்க விரும்பவில்லை, அவர்கள் அடிமை குடிமைச் சிறை உள்ளவர்கள் என்பதால், தண்டிகைப்பல்லக்கிலேயே ஊர்வலம் என்று சொல்லிவிட்டார்களாம். இனி, நிலபாவாடை, கொடி, குடை, ஆலவட்டம் முதலிய எட்டு வகை மங்களங்கள் சூழ ஊர்வலம் வரும், என்றார்.
இவ்வாறு, திருமண ஏற்பாடுகள் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு வரவும், எனக்கும் எப்போது இந்தத் திருமண நாள் வரப்போகுது, எப்போது பார்க்கப் போகிறேன், என்ற ஆவலும் கூடிக் கொண்டு போகத் திருமண நாளும் வந்தது.
எங்கள் சிற்றுாரைக் கலகலக்கப் பண்ணிய திருமணம், அதிகாலையிலேயே கொட்டு மேளத்துடன் ஆரம்பித்துவிட்டது. மேளகாரருக்காகவும் பல்லக்குக்காவுவோர், மற்றும் பணியாளருக் கான, ஆட்டுக் கறியோடுகூடிய உணவு வகைகள், எமது அடுத்த வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாகக் கிணற்றடிக்குச் சென்று குளித்துவிட்டுக் கலியாண வீட்டுக்கென எனது பாட்டனார் எடுத்துத் தந்த நீல நிறக் காற்சட்டையோடு கூடிய, வெள்ளைச் சேட்டையும் எடுத்துமாட்டிக் கொண்டேன். தலை இழுத்து. சாந்துப் பொட்டுச் சிரட்டையில் நீர் விட்டு உரைத்து, நெற்றியிற் பொட்டிட்டு, முகம் நிறையப் புசல்மாவைப்பூசி, கண்ணாடித் துண்டு ஒன்றில், முகத்தை அடிக்கடி பார்த்துத் திருத்திக் கொண்டேன். கண்ணாடிகள் கிடைக்காத போது எண்ணெய்க் குடுவைக்குள்ளும் தண்ணீர்ச் செம்பினுள்ளும் முகம் பார்த்துக் கொண்ட நாட்கள் இன்றும் நினைவில் வருவதைக் குறிப்பிடத்தான் வேண்டும். எனது

71 தில்லைச் சிவன்,
ஆச்சியும் எனது கூறைச் சேலையை எடுத்து உடுத்து அழகு பார்த்துக் கொண்டார். நாம் இருவரும் வீட்டில் இருந்து பாட்டா, மாமா, குஞ்சியம்; மாக்களுக்கு, “போய் வாரோம், போய் வாரோம்’ என்று திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லிக் கொண்டு, அவர்கள் எம்மைப் பார்த்துக் சிரிக்க, நாம் இருவரும் ஒருவரின் அழகை ஒருவர் மாறிமாறிப்பார்த்து ரசித்தபடி மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றோம்.
திருமண வீடுகளைகட்டியிருந்தது. பெரிய பந்தல், வெள்ளை கட்டிப் பூமாலைகள் தொங்கவிட்டுச் சோடிக்கப் பெற்றிருந்தது; ஆண்களும் பெண்களுமாகப் பலர், போவதும் வருவதுமாக இருந்தனர். வீட்டின் வெளிப்புறப்பந்தலில் பெரிய பெரிய கிடாரங்கள் வைத்துச் சமையல் நடந்துகொண்டிருந்தது. காய் பிஞ்சு நறுக்குவோர், தேங்காய் துருவுவோர். பால் பிழிவோர் எனப் பலர் பல வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். நான் எனது வயதொத்த சிறுவர்களுடன் சேர்ந்து ஆடுவதும் ஒடுவதும் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடிப்பதும், மேளவாத்தியக்காரரைச் சூழ்ந்து நிற்பதும், மேளகாரர் மூக்குப் பொடி போட்டு உறிஞ்சுவதையும், வெற்றிலைத்தலைப்பைக் கிள்ளிமுகத்தில் ஒட்டியபடி, வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவும் லாவண் யத்தையும், பல்லக்குச் சோடனைகளையும், அதைத் தூக்குவோர்தம் ஆடை அணிகளையும் பார்த்துக் கொண்டு திரிந்தோம்.
இப்படி எவ்வளவு நேரந்தான் திரிவது! திருமண மாப்பிள்ளை ஒரு ஆயத்தமும் இன்றித் திண்ணையில் இருக்கிறார். அவர் அன்று உண்ணா நோன்பு. தாலி கட்டிய பின்பே தண்ணிர் குடிப்பாராம்; இதுவரை பிரமச்சாரியம் காத்தவர், இன்று தான் விரதம் முறிக்கப் போகிறாராம். பிரமச்சாரி விரதத்தின் கடைசி வரி, இதனை முடிக்கத்தான் விரதம். சோம்பிப்போய் தூணுக்குத் தூண் மாறிச் சாய்கிறார். எள்ளேன்காயுது எண்ணெய்க்கு, எலிப்புழுக்கைகளைப் போல் நாமேன் காயவேண்டும்?
இன்னும் பெண் பகுதியாரைக் காணவில்லை. பெண் பகுதியார் வந்து தான் கடுக்கன் பூட்ட வேண்டும். கடுக்கன் பூட்டிய பின்தான் சாப்பாடு. மேளதாரர் எமது அடுத்த வீட்டில் நடந்த்

Page 38
அந்தக் காலக் கதைகள் 72.
ஆட்டுக்கறி விருந்தில் கலந்து விட்டு வந்து, பந்தலில் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வயிற்றைக் கிள்ளுகிறது, பசி ஒரு புறம், கலியாணக் கறிபுளிகளின் தாளிச மணம் மறுபுறம், வாயில் ஊற்றெடுத்த எச்சிலை விழுங்கிக் கொண்டு பந்தலில் ஒரு ஒரத்தில் கிடந்தேன்.
இன்னும் பொம்பிளை பகுதியாரைக் காணவில்லை. முகூர்த்த நேரமாச்சு, இனிக் கடுக்கன் பூட்டிச் சாப்பாடு முடிந்து அழைத்துப் போக, நேரம் என்னவாகும், நேரகாலந் தெரியாதவர்கள், என்ற புறுபுறுப்பைக் கேட்டார்களோ இல்லையோ,இரு மாட்டு வண்டிகளில் பெண்வீட்டார் வந்து இறங்கினர். தொடர்ந்து சில வண்டிகளிலும் கால்நடையாகவும் ஆட்கள் வந்து கொண்டிருக்க, வந்தவர்கட்கு வெற்றிலை கொடுத்து உபசரிப்பதும், மாப்பிள்ளைக்குப் பால் அறுகு வைத்துக் குளிப்பாட்டுவதுமான கருமங்கள் நடைபெற்றன.
ஆடையாபரண பூசிதராய், மணவறையில் வந்து இருந்த மாப்பிளைக்குச் செய்ய வேண்டிய தேங்காயுடைப்பு முதலிய ஆராதனைகளுடன் இருவர், இருகாதுகளிலும் கடுக்கன் பூண, ஒருவர் மலர் மாலை அணிவிக்க, இன்னொருவர் தலைப்பாகை வைக்க, ஆசீர்வதித்தலும் முடிந்து, மாப்பிளை வீட்டுக்குள் செல்லவும், தண்ணிர்ச் செம்புடன் பந்தல் வாசலில் நின்ற மாப்பிள்ளையின் தந்தையிடம், சிலர் ஏதோ சொல்லிவிட்டு வெளியே சென்றனர். பலர் செம்பை வாங்கி வாயைக் கொப்பளித்து விட்டு போய் பந்தியில். குந்தினர். நானும் ஒரு பந்தியில் இருந்தேன். நேரம் போய்க் கொண்டிருந்தது. பந்தியில் இருந்த சிலர், எழுந்த போது எனது ஆச்சி வந்து எனது கையைப் பிடித்தா, “வா வீட்டுக்குள் போவோம்’அவளின் பின்னாற் சென்றேன். கலியான வீட்டுக்குப் போகும் போதிருந்த, மகிழ்ச்சியை ஆச்சியிடம் இப்போதுகாணவில்லை. அவசர அவரசமாக என்னையும் இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ஆச்சி, அடுப்படிக்குள் போனார். அங்கிருந்த சோற்றினைச் சட்டிக்குள் போட்டுக் குழைத்து, எனக்குத் தந்து அவளுந்தின்றா. அதுவரையில் எனது வீட்டிலிருந்த எவரும் ஆச்சியிடம் எதையும் கேட்கவில்லை. சாப்பிட்டு முடிந்தபின் இதுவுமொரு கலியாணம், ஏன் போனேன் என்று

73 தில்லைச் சிவன்
ஆச்சி, பந்தியில் இருந்து சாப்பிட மாப்பிளைத் தோழன் (பெண்ணின் அண்ணன்) மறுத்து விட்டானாம். தான் பெரிய சாதியாம், சாப்பிடாவிட்டால், மாப்பிளையை விடப்போவதில்லை என்று சொல்கிறார் மாப்பிளையின் தந்தை. இந்த நிலையில் பந்தியில் இருப்பவர்களைக் கவனிப்பார் ஒருவருமில்லை. நான் பொடியனை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன். பாவம் பசியால் துவண்டு போனான் என்றாள் என் ஆச்சி.
இரவு ஒன்பது மணி இருக்கும். எமது வீட்டை நெருங்கிமேளச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. மங்கி எரிந்து கொண்டிருந்த வேப்பெண்ணெய் விளக்குத்திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டே எனது குஞ்சியம்மா எனது வீட்டில் உள்ள எல்லோரையும் எழுப்பினார். எமது வீட்டுக்கு முன்னாலுள்ள ஒழுங்கையால் ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. எமது வளைவுக்குள் நின்றே ஊர்வலத்தைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. நாலைந்து, காஸ்விளக்குகளைத் தலையிற் சுமந்து கொண்டு சென்றார்கள். மாப்பிள்ளை தண்டிகைப் பல்லக்கில் பவனி வருகிறார். பல்லக்கின் அழகு பார்ப்போர் கண்ணுக்குத் தெரியும்படி முன்னும் பின்னும் இரண்டு தீவட்டிகளைப் பிடித்திருந்தனர். கொடி, குடை ஆலவட்டங்கள் வேறு. பல்லக்கின் முன்னால் மேளவாத்தியம் முழங்க ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தில் செல்கிறார்கள். இடையிடையே கப்பல் வெடிகள் செவிடுபடுத்துகின்றன. அந்த நேரத்தில் எனது பாட்டனார், உடையை மாற்றிக் கட்டிக் கொண்டு, ‘தாலி கட்டுதலைப் பார்த்துக் கொண்டு வாறேன்” என்றபடி ஊர்வலத்தின் பின்னாலே சென்றார். நாங்கள்
திருப்பச் சென்று கிடந்து விட்டோம்.
விடிவதற்குச் சற்று முன்பாக, எனது பாட்டனார் வந்து ஆச்சியை எழுப்பினார். ‘அங்கே இன்னும் தாலி கட்டுப்படவில்லை. பெண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில், சீதனத்தில் ஒரு இருபது பவுண் இருநூறு ரூபா) குறையுதாம். அதைத்தந்தாற்தான், தாலி கட்டுவதென்று, மாப்பிளை பகுதியார் சாதிக்கினம். பெண்பிள்ளை பகுதியார் அங்கிங்கென்று ஒடி ஆட்களைப் பிடிக்கினம். ஏதும் நகை நட்டுக்களைக் கொடுத்த இப்போதைய காரியத்தை முடிப்போம் என்ற

Page 39
அந்தக் காலக் கதைகள் 74
நிலையில், பெண்ணின் தகப்பன் என்னையும் விசாரித்தாராம் என்றவாறே வீட்டுக்குள் சென்று கிடந்து விட்டார். அவர் கிடக்கவும் அயல் வீட்டுச் சுப்பிரமணியம் வந்து அவரைக் கூப்பிடவும் நேரம் சரியாக இருந்தது. அவர் ஒன்றும் பேசவில்லை, ஆச்சிதான் "அவர் கலியான வீட்டுப் பக்கம் போய் விட்டார். ஏன் கூப்பிடுகிறாய்” என்று கேட்டார்.
சுப்பிரமணியம் சொன்னார், “இன்று ஒரு விசேஷம், சரசுவுக்குச் சோறு கொடுப்பிக்கப் போறோம். திடீர் என்ற ஏற்பாடு இது. மாப்பிள்ளையும் வந்து விட்டார். உங்களுக்குச் சொல்லி விட்டு வரச் சொன்னார் மாப்பிள்ளை, அதுதான் வந்தேன்.
"அப்படியா? ஆரப்பா மாப்பிளை, நேற்று முந்த நாள் சொல்லியிருக்கக் கூடாதோ?” V
“அதெப்படி அம்மா முடியும். இன்று தானே கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்கள். உடனே சோற்றைச் கொடுத்து, மஞ்சள்க் கயிற்று முடிச்சைப் போடுவிப்பம் என்று தான் வந்திருக்கிறோம்.”
“நான் அவள் சரசை என்ர பெடியனுக்கல்லோ கட்டலாம் என்று காத்திருந்தேன். இது காத்திருந்தவன் பெண்ணை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாயிருக்கு. அது சரி, சரசுப் பெட்டை சம்மதிச்சாளோ?
“சம்மதிக்காமல் என்ன, கள்ள மாப்பிளையையும் அவளையும் கையும் மெய்யுமாயல்லோ பிடித்துப் போட்டோம். கலியான ஊர்வலம் பார்க்கப் போய், எங்கட பனந்தோட்டக் கொட்டிலுக்க கதைகேட்டதும் எட்டிப் பார்த்தோமா! சரசும் ராகவும் கட்டிப் புரண்டினம். உடனே வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறோம். இப்போ சோறு கொடுப்பிப்போம் என்றால், உங்களுக்குச் சொல்லிவிடச் சொன்னார். அது தான் வந்தனான்."
'அவசரப்பட வேண்டாம். போன மாதமே எனக்கு இவர்களுடைய நடப்புத் தெரியும். இதோ நாங்களும் வந்து விடுகிறோம்" என்று எழுந்த ஆச்சி, ஏங்கிப் போய்மூச்சுக் கொட்டாவி

75 * தில்லைச் சிவன்
விடாமல் இருந்த பாட்டனாரை எழுப்பி, வாரும் இனியென்ன? நாங்களும் கூடப் போய் நிற்பம் என்றது தான், நான் எல்லாருக்கும் முந்திச் சுப்பரின் வீட்டுக்குப் போய் விட்டேன்.
அங்கே, வீட்டுச் சாருக்குள் எரியும் குத்துவிளக்குக்குப் பின்னால், விவரிக்கப்பட்டிருந்த புதுப்பாயில் எனது மாமா இருக்கிறார். அவரின் இடப்பக்கமாகத் தலையைக் குனிந்து கொண்டு, கை நகங்களால், பாய் ஒட்டைச் சுரண்டிக் கொண்டு சரசக்கா இருக்கிறாள். நான்போன போக்கில் "மாமா சோறு தின்றிட்டியா” என்று ஆவலாய் கேட்டேன்.
“இல்லையடா ராசா. இப்பத்தான் பழஞ் சோற்றுக்குப் பச்சடி அரைக்கிறார்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.

Page 40
அந்தக் காலக் கதைகள் 76
12. ஐயனார் கோவில் திருவிழா
)ேற்றுவரை பாவிக்கப் பெற்ற கறிச்சட்டிகள் எல்லாம் கழுவிக் குசுனிப்பக்கத்துக் கோடிக்குள் கவிழ்க்கப் பெற்றன. இன்றிலிருந்துபதினைந்து நாட்களுக்கு இச்சட்டிகளுக்கு ஒய்வு மச்ச மாமிசம் புளக்கம் இல்லை. வீடு வளவுகள் பெருக்கிக் கூட்டிச் சுத்த செயயப் பெற்றன. சாணமும் மண்ணும் கொண்டு வீடு மெழுகப் பெற்று முற்றமும் நீர் தெளித்துப்புழுதி அடக்கப் பெற்றது. ஊரில் உள்ள எல்லா வீடுகளும் ஆசாரசீலமாய் விரதமிருந்துசாமி தரிசனம் செய்யும் ஆவல்.
ஒன்பது நாட்களுக்கு ஊரின் நடுவனாகக், கடற்கரை ஒரத்தில் அமைந்திருக்கும் ஐயனார் கோவிலில் திருவிழா. பொங்கல் வேள்வி,பூங்காவனம் எனப்பன்னிரண்டுநாட்கள் ஊரே அமளிப்படும்.
எமது கிராமத்திலிருந்து வெளிஇடங்களுக்குப் போகும் பயணங்கள் எல்லாம் இப்பதினைந்து நாட்களுக்கும் நடைபெறாது. இதற்கு எதிராக, இக்கிராம மக்கள் எங்கிருந்தாலும் இத்திருவிழாக்களைக் காண்பதற்காகத் தமது குடும்பத்தினருடன் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் வருகை தந்துள்ள புதியவர்களை - பழைய உறவினர்களை வரவேற்கும் தடபுடல் ஏற்பாடுகள்.
புழுங்கல் குத்தி அரிசி சேர்ப்பவர்கள், மாவிடித்து வறுத்து வைப்பவர்கள், பயறு, உழுந்து, எள்ளு முதலிய தானியங்களைப் பதப்படுத்திச் சிற்றுண்டிகளுக்கு ஏற்ற முறையில் சேமிப்பவர்கள், பருப்பு வகைகள், வேப்பம்பூ, வடகம், அப்பளம் என்பவைகளைச் செய்தும், சேமித்தும் வைப்பவர்கள், வாழைத்தடற் கட்டுகளை வாங்கிச் சேர்ப்பவர்கள், என்று இன்னோரன்ன பணிகளோடு கோவில் நேர்த்திக்காக விடப் பெற்ற, ஆடு, மாடு, கோழி இவற்றைத் தேடிப்பிடித்துக் கட்டிக் குளிப்பாட்டித் தீவனமிட்டுப் பராமரிப்பவர்கள்,

77 தில்லைச் சிவன்
கோவிற் பொங்கல்படையலுக்குத் தேவைப்படும் பலாப்பழம்,மாம்பழம், வாழைக்குலை என்பவற்றைப் பெற யார் யாரைச் சந்தைக்கனுப்புவது, யாருடைய வண்டில் மாட்டைப் பிடிப்பது என்பதை அறிவதும் அச்சாரம் கொடுப்பதுமாயுள்ளவர்கள், இம்முறை பொங்கல் பானையில் வேகும் அரிசியின் அளவு பற்றி ஆராய்பவர்களுமாக வீட்டுக்கு வீடு திருவிழாப்பற்றிய பேச்சாகவே இருக்கும்.
திருவிழா ஒவ்வொன்றையும் மூப்பராக நின்று பொறுப்பெடுத்தவர்கள் தமது திருவிழாப் பங்காளிகளிடம் ஆலோசனை பெறவும், பணம் பெறுவதற்குமென வந்து போவதும், இம்முறை எங்கள் திருவிழாவிற்கு நாடகம் போட வேண்டும், அதற்காக ஒவ்வொரு பங்காளியும் ரூபா பத்து மேலதிகமாகத் தரவேண்டும் என்று கேட்பதும், பொன்னாலைக் கிருஷ்ணர், இணுவில் அண்ணாவி ஏரம்பர், அல்லைப்பிட்டித் தில்லைநாதர் என்பவர்களின் நாடகங்களில் யாருடைய நாடகத்தைப் பிடிப்பதென்று ஆலோசிப்பவர்களும்,
“சின்ன மேளங்கள் இரண்டு திருவிழாக்களுக்கு வாடிக்கை, அவர்களுக்குறலி’ செற், வேணுகோபால் செற் என்று காசில்லாமலே ஆடிப்போட்டுப் போகக் கூடிய நட்புடையவர்கள். தொடர்ந்து அவை வரத்தான் செய்யும். இம்முறை எங்கள் திருவிழாவுக்கு மணிஜயரின் கதாகாலட்சேபத்தை கேட்டுப் போட்டு முத்துச் சப்பரத்தில் சாமியை எழுந்தருளச் செய்தால் நல்லது என்பதும் சிலரின் ஆலோசனை.
கரகம், காவடி, முத்துச் சப்பறம் என்பவற்றுக்காகச் சிலர் அளவெட்டிக்குப் போய் வந்தார்கள். வேலணை வாணக்காரச் செல்லையாவிடமும் சில ஒடர்கள் போயுள்ளன. தங்கள் தங்கள் திருவிழாக்களுக்கு அவுட்டு வாணம், மத்தாப்பு, நிலவிறிசுடன் எலிக் கோட்டைகளும் கேட்டிருந்தனர். ༣ சில திருவிழாக்காரர் சிலம்படி, அனுமான் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று யோசித்த போது அவை எல்லாம் வேட்டைத் திருவிழாவுக்கு ஒதுக்கப்பட்டு ஆண்டு தோறும் நடந்து வரும். இவற்றை நாம் பிடிக்கச் சிந்திக்கக் கூடாதென்றும் தவிர்க்கப் பெற்றது.

Page 41
அந்தக் காலக் கதைகள் 78
இவர்கள் இவ்வாறாகக் கோவிலின் முகப்பை மூடி, மறைத்து அகன்று பரந்து நிற்கும், ஆலமரங்களின் நிழலே மதிக்காது ஊர்த் தோட்டங்களில் இறைப்புக்காகப் போடப்பட்டிருந்த துலாமரங்களைத் தூண்களாக நட்டு, உயர்ந்த கொட்டகைப் பந்தல் போட்டு, வெள்ளைகட்டி, வாழைகள் நட்டு, தென்னை, கமுகு இவற்றின் பாளைகளுடன் மாவிலைத்தோரணங்களையும் ஈச்சங்குலைகளையும் நுங்குக் குலைகளையும் தூணுக்களுக்குக் கட்டியும், இவை போதாவென்று, பூச்சரங்களாலும், அழகிய வண்ணக் கடதாசிப் பூ மாலைகளில் சரிகை இழைபொலியத் தொங்க விட்டு அழகு கூட்டியும், இருந்தார்கள். இவற்றினாலும் கோவிலின் உள்ளும் புறமும் கட்டிய வெள்ளையினாலும், சட்ட விளக்குகளின் ஒளிப்பிரவாகத்தில் கோவில் எழிலும் அழகும் பெற்றுப் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது.
நூறு வருடங்களுக்கு மேலாகக் கோவிற்பூசகராகவும், ஊர்ப் புரோகிதராகவும் இருந்து ஊர்மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற செல்லையர் கணபதிக் குருக்கள் குடும்பத்தினரைக், குசலம் விசாரிக்கச் செல்லும் ஊரின் பழைய குடியினரான புதியவர்களை, இனங்கண்டு விசாரித்து முகமன் கூறி விபூதிப் பிரசாதம் வழங்கி, வாழ்த்துத் தெரிவிப்பது, குருக்களுக்குப் பெரும்பொழுது வேலையாகி விட்டது.
இந்தக் கணபதிக் குருக்கள், வளம்மிக்க தஞ்சாவூருக்குச் சென்று, தனக்கேற்ற துணையைக் தேடிக் கொண்டு வந்தவர். துணைவியாரின் திறமையான உபசரிப்பால், வந்தவர்களை வாழ்த்தி, அவர்கள் தந்த தானங்களையும் தட்சணைகளையும் ஏற்றலும், ஏற்று முகமன் கூறி வாழ்த்தி வழியனுப்பிவைத்தலும், திருவிழாவுக்கெனச் சிறப்பாக வசூலிக்கப் பெற்ற ஏனைய ஐயர், பரிசாரகர், சாத்துப்படிகாரர், நித்திய மேளகாரர், தீவட்டிப் பிடிப்போர், எண்ணெய் இடுவோர், என்று இன்னோரன்னோர்க்கெல்லாம் வேண்டிய பணிகளை விதிப்பதும், பூசைக்கேற்ற காரியங்களைக் கவனிப்பதுமாகச் சுழன்று சுற்றிச் செய்த அபிடேக ஆராதனைகளுடன் முதற்பகல் அலங்காரத் திருவிழாத் தொடங்கியது.

79 தில்லைச் சிவன்
காலை நேரம், ஊரில் உள்ள நீர்நிலைகளில் தோய்த்து, வேலிகளிலும் கொடிகளிலும் உலரப்போட்ட பலவண்ண ஆடைகள், காற்றில் அலைவீசிப் படபடத்துப் பறக்கச் சூரிய ஒளிநிலத்தில் விழாது அகன்றது. பலவண்ண நிறங்களைப் பார்த்தோர் ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளதென்ற உவகையில் மகிழ்ந்தனர். ஆண் பெண் சிறுவர் சிறுமியர் என்று பலரும் குளித்துத் தோய்ந்துலர்ந்த ஆடைகளைக் கட்டிக் கொண்டு கூட்டங் கூட்டமாகக் கோவிலுக்கு வந்தனர். திருவிழாச்சாட்டாக உறவினர்களின் உபசரிப்பையும், வேள்வி விருந்தினையும் நினைத்து வாயூற வந்த வெளியிடத்தவர்கள் தமது பழைய நட்பினையும் உறவினையும் புதுப்பித்துக் கொண்டு எமது ஆலடிப் பெருமான் ஐயனாரின் புதுமையால் நாமெல்லாம் ஆண்டுக்கொருமுறையேனும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தந்தை மகனைக் காணவும், தாய் மகனைக் கட்டி முத்தமிடவும், சகோதரர்கள் ஒருவரை ஒருவர் தழுவி மகிழவும், மாமன் மாமியர் மருமகன், இப்படி வளர்ந்து விட்டானே என்று வியக்கவும், உறவுகள் தொடரவும் ஆண்டுக்கொருமுறை நடக்கும் திருவிழாக்கள் உதவின என்பதை அறிந்தார் சிலரே.
இத்தகைய ஒரு திருவிழாவிற்குப் பட்டணத்தில் இருந்து வந்த எனது மாமா, மாமியுடன் மகளும் கூட வர நானும் அவர்களுடன் கோவிலைப் போய் சேர்ந்தோம். அப்போது எனது வயது எட்டாயிருக்கும். நாலாந்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சால்வைத்துண்டை வேட்டியாகக் கட்டி, அதன் மேல் ஒரு சிவப்புநிறச் சாமிப்பட்டைச் சால்வை போல், அரையிற் கட்டி இருந்தேன்.
நாங்கள் போகும் பொழுது, ஆலமரநிழலில் ஆங்காங்கே சில கடலைக் கடைகள். அங்கே சிலர், ஆலமர விழுதுகளை முடிந்து ஊஞ்சலாடினர் சிலர். சிலர் சுண்டல் சரைகளுடன் அங்கும் இங்கும் ஒடினர். எங்களைக் கண்டதும் சில பெரியவர்கள் எனது மாமனைச் சூழ்ந்து உரையாடிக் கொண்டு நின்றனர். என் வயதை ஒத்த சில இளவட்டங்கள், வாயில் விரலை வைத்துக் கொண்டும், கைகளைக்

Page 42
அந்தக் காலக் கதைகள் 80
கட்டிக் கொண்டும், குந்தியிருந்தும், முழந்தாளில் நின்றும், எனது மச்சாளின் எழிலை, உடையின் வண்ணத்தை, தலையின் மயிர் வெட்டினை, மயிரைப் பிணைத்திருந்த றிபனை, நகை அலங்காரங்களை எல்லாம் கண்ணால் துளைத்தெடுத்தனர். இது எனக்கு ஒருவகையில் பெருமையையும் மற்றொரு வகையில் நாணத்தையும் தந்தது.
அன்றைய பெண் பிள்ளைகளிற் பலர், சித்தாடைகளையும் சட்டைகளையும் போட்டுத் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக் கொண்டு நிற்க, இவள் மட்டும் வயதுக்கு மிஞ்சிய உடற்பருமனுடன், துடைவரை தெரியும் கெளவுணையும் போட்டுத் தலையையும் சிலுப்பாவாக வெட்டி, றிபன் கட்டி வந்து நிற்பது வேடிக்கையாக இருப்பதில் வியப்பென்ன?
சனநெருக்கம், எனது மாமா மாமியை பிள் தொடர மனம் வராமையால், அவர்களை விட்டுப் பிரிந்து, அங்கே நின்ற எனது கூட்டாளிகளான சிறுவர்களுடன், அபிடேகத்தில் எறிந்த இளநீர்க் கோம்பைகளைக் கொண்டோடித் துளைத்து, வழுக்கல் உண்ணும் ஆவலில் ஒடினேன். இதனைக் கண்ணுற்ற எனது மச்சாள், ஓடிவந்து எனது கையிற் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் தனது தாயாரின் பக்கத்தில் இருக்க வைத்தாள். “கூடாத பழக்கம் பழகக் கூடாது, பொடிகளுடன் சேரக்கூடாது" என எச்சரிக்கையும் செய்தாள்.
பகல் திருவிழா முடிந்து, நாங்கள் நால்வரும் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நல்ல வெயில். கோவிலுக்குச் செல்ல செருப்புகளைக் கழற்றி வீட்டில் வைத்து வந்ததால் ஒவ்வொரு மரநிழலிலும் நிற்பதும் வெயிலில் ஒடுவதுமாக நடந்து சென்ற எனது மச்சாள் தனது தாயாருடன் ஒரு மரநிழலில் நின்றாள். “பட்டிக் காடு, பட்டிக்காடு” என்று அவள் சொல்லக் கேட்டது. யாரைச் சொன்னாள்? ஏன் சொன்னாள் என்பதை நான் அறியவில்லை. ஒருவேளை, அவள் எழிலைப் பார்த்து வியந்த சிறுவர்களைக் கருதித்தான் அப்படிச் சொல்லியிருப்பாள் என்று இப்போது நினைக்கிறேன். அவள் பட்டிக்காடு என்று சொல்லும் போது எனது மாமி அவளின் காதைப்

81 தில்லைச் சிவன்
பிடித்துத் திருகியதையும் கண்டேன். பட்டிக் காட்டுப் பேச்சு எனது மாமாவின் காதுகளில் விழக்கூடாது என்பதே என் மாமியின் கவலையாக இருக்க வேண்டும்.
எனது மாமாவுக்குப் பட்டணத்து மண்வாசனை பிடிக்காது ஏதோ சந்தர்ப்பவசத்தால் போய்ச் சேர்ந்ததாக நினைப்பவர் ஆவரசங்காட்டு ஆண்பனைக்கள்ளுக்கும், கூழுக்கும் வெள்ளைக் கடற்கரை விளைமீன் குழம்புக்குமாகக் கிழமைக்கு இரண்டு தரம் அவர் ஊருக்கு வந்து போவதை மாமி அறிவார்.

Page 43
அந்தக் காலக் கதைகள் 82
13. உமிரிக்கிரை
2&ண்டு ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுக்கு முன் பின்னாக இரண்டொரு வருடங்கள். அப்பொழுதுதான் அரிசிக்கூப்பனும் அமெரிக்கன் மாவும் அறிமுகமான காலம். கோதுமைக் கொட்டையும் சோறாக்கியதுண்டு. வறுத்துத்திரித்துக் கூழாகவும் பலகாரங்களாகவும் உண்ணப் பழகினோம்.
அரிசி, நெல் என்பவற்றை ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. கொண்டு சென்றால் பொருளும் பறிமுதலாவதுடன், தண்டனையும் கிடைக்கும். இதற்கான சட்டங்களுமிருந்தன. அதன்படி சிறைக்கும் போக வேண்டி வரும். அரிசி நெல்லுக்கு மட்டுமல்ல, மிளகாய், உள்ளி முதலானவைகட்கும் சரக்கு வகைகட்கும் கட்டுப்பாடும், தட்டுப்பாடும் நிலவியது. மிளகாய்க்குப் பதிலாகத் தேங்காய் சம்பலுக்கு, மிளகு பாவிக்கப் பெற்றது. பிடவைத்துணிகளுக்கும் கூப்பன். கிராமங்களில் பிடவைக் கூப்பன்களை விற்று வாங்கும் வியாபாரிகளும் பலராயினர். பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. பணம் பெருகியது.
பத்துச் சதம் இருபத்தைந்து சதம் ஐம்பது சதம் ஒரு ரூபாக்களும், அதற்கு மேலும் கடதாசி நோட்டுக்கள் பெருக்கெடுத்தன. ஐந்து சதத்திற்குக் கூட நோட்டிருந்தது. அதன் ஒரு பகுதி மூன்று சதமாகவும் மறுபகுதி இரண்டு சதமாகவும் கிழித்தும் கொடுத்து வாங்கப் பெற்றது. அக்காலத்தில் கள்ள நோட்டுக்களும் உலாவின என்பர். இவ்வாறே கள்ள,வெள்ளை நோட்டுக்கள் பெருகிக் கொண்டிருக்கப் பொருட்கள் கண்காணாப் பொருட்களாகி விட்டன. எங்கும் பஞ்சமும் பட்டினியும். இந்த நிலைபரத்தில் எமது விதை நெல்லுக் கூடையும் வற்றிக் கொண்டே இருந்தது.

83 தில்லைச் சிவன்
ஒரு நாட்காலை, பழந்தண்ணிரும் பினாட்டும் தின்று விட்டு வீட்டுக்கு வெளியே வந்தேன். படலையில் நின்று பார்த்த போது, சிறுவர்களும் பெண்களுமான ஒரு கூட்டம் வடக்கு முகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். எமது ஊரின் வடக்கே, பெரியவெளி என்ற காடும் கடலும் இருப்பது தெரியும். காட்டுப்பகுதி நெடுக, யப்பான் விமானங்கள் இறங்கி விடும் என்ற பயத்தினால் வெட்டப் பெற்ற அகழி வேலை, முடிந்து பல நாட்களாகி விட்டன. இப்போது இவர்கள், ஏன் எங்கே போகிறார்கள் என்பது எனது மனதில் எழுந்த கேள்வி. கடலில் மட்டி எடுக்கவும், உமிரிக்கீரை பிடுங்கவுமே போகிறார்கள் என்ற விடை தெரிந்ததும், வீட்டுக்குள் நுழைந்து ஒரு உமலை எடுத்துக்கொண்டு அவர்கள் பின் ஒடினேன்.
என்னைக் கண்டதும் அவர்களின் வரவேற்புப் பலமாக இருந்தது. துள்ளிக்குதித்து ஓடிவந்த சில நண்பர்கள் என்னை அணைத்தார்கள், அந்த ஒடைக்குப் போவோம்.இந்தப்பிட்டியில்தான் மட்டிகளை எடுக்கலாம், என்று ஏதேதோ பல பெயர்களைக் கூறினார்கள். எனக்கொன்றுந்தெரியாது. நீங்கள் போகும் இடத்துக்கு நானும் வருகிறேன், என்று அவர்களோடு நடந்தேன். சிறிது நடந்தோம், சிறிது தூரம் ஒடினோம். பெண்கள் எங்களை முந்த விடாமல் எட்டி எட்டிப் போக்குக்காட்டி ஒடினோம். எங்களுக்கு மட்டிக்கடல் தெரியாது. பெண்களுடன் சேர்ந்தே போக வேண்டும் என்ற விருப்பில் அவர்களை முந்த விடாமல் பார்த்துக் கொண்டோம். பெண்கள் கரையில் நின்று உடுப்பைச் சரிபார்த்துக்கொண்டு வருவதற்கு முன் நாங்கள் கடலில் இறங்கிவிட்டோம்.
கரையில் இருந்து முழங்கால் முட்டும் தண்ணிர் வரை கால் விரல்களால் நிலத்தில் குறித்தவாறு, ஒவ்வோர் அடியாக நடந்தேன். அப்பொழுது கால்களுள் உணரப்படும் மட்டிகளைக் குனிந்தெடுத்து உமலுட்போட்டு நிரப்பினேன். நான் எடுப்பவற்றோடு,எனது நண்பர்கள் அவ்வப்போது எடுக்கும் சில வற்றையும் எனது உமலுக்குட் போடுவதால், நான் கொண்டு போன சிறிய உமல் நிரம்பிவிட்டது.8 இதன் மேல் கடலிற்குள் நிற்கவில்லை. எனது நண்பர்கள் சிலருடன் கரைக்கு வந்தேன்.

Page 44
அந்தக் காலக் கதைகள் 84
கரைநெடுக உமிரிக்கீரை, பச்சை, மஞ்சள், சிவப்புப்போன்ற பல பல வர்ணங்களில் கிடந்தன. உமிரிக்கீரையை அவித்துப் பிழிந்து, மட்டிச் சதையையும் சேர்த்து வறுத்துண்ண மிக நேர்தியாக இருக்கும். பசியையும் தாங்கும் என்பார்கள். மலநீக்கத்துக்கு மருந்துமான உமிரிக்கீரை எங்கும் படர்ந்து கிடந்தன. அவற்றின் மினுமினுப்போடு கூடிய வண்ண அழகு ஜாலங்களில் கருத்துான்றியவாறே, கொழுந்துமூரிகளைக் கிள்ளி எடுத்துச் சண்டிக்கட்டினுள் போட்டேன்.
கடலுள் நின்ற பெண்களும் வந்து உமிரிக்கீரை பிடுங்கினார்கள். நேரம் மதியத்தை அண்மிக் கொண்டிருக்க, வீட்டில் தேடுவார்களே என்ற நினைவும் வந்தது. உள்ளம் பரபரத்தது. உடனே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தலையெடுத்தது. காலையில் வரகுப்புழுங்கல் குத்திக் கொண்டிருந்த தாயார், சமையல் முடித்திருப்பார். சாப்பிட என்னைக்காணாததால் எங்கெங்கு தேடுகிறாளோ என்று ஏங்கினேன். நிச்சயமாக அவர்கள் கடற்கரைப் பக்கம் நினைக்கமாட்டார்கள். எனவே கிணறு கேணிகள் எல்லாம் தடவப் போகிறார்களே என்ற பயம். நண்பர்கட்குக் கூறினேன். அவர்களும் உடன்பட்டுவந்தார்கள். வரும் வழியில் ஈச்சம் பற்றைக்காடு. பச்சைநிறத்து ஈச்சங் காய்கள் செந்நிறத்தில் சிலிர்த்துப் போயிருந்தன. இடையிடையே கனிந்தும் கனியாத கரிய பழங்கள் குலைக்கு நாலைந்தாகக் கிடந்தன. இரண்டோரு குலைகளில் பழுத்திருந்தனவற்றைப் பிடுங்கி வாயினுள் போட்டேன். இன்னுந் தேடிப் பிடுங்க வேண்டும் போலிருந்தது. ஆனால் நேரம் போய்விட்ட பயம், எங்களுடன் வந்த பெண்கள் எம்மை முந்திக் கொண்டு செல்கிறார்கள். நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனது தாயாருக்குப் பரதவிப்பைத் தரும். எனவே இனி நிற்கக்கூடாது. இரண்டு செங்காய் ஈச்சங்குலைகளை முறித்துக்கொண்டேன். உப்புத் தண்ணிரில் நனைத்து வைத்தால் பழுக்குந்தானே என்ற நினைவுடன் தண்ணிர் விடாயுந்தோன்ற வீடு நோக்கி நடந்தேன். என் நண்பர்களும் உடன் வந்தார்கள்.
கடும் வெயில், எமக்குக் கிழக்குத் திசையில் நீர்போலக் கானல் ஒடுவது தெரிந்தது. கிழக்குத் திசையிற்றான் சுடலை. சுடலைப்

85 தில்லைச் சிவன்
பூவரச மரங்கள் இலைகளின்றிக் கரிந்து போய், கொப்பும் தடிகளும் கோரமாகத் தெரிந்தன. அங்கும் கானல், பேய்த்தேர் அலையலையாக வீசிக் கொண்டிருந்தது. அவற்றிடையே ஒரு ஆள் உருவம் எம்மை நோக்கி வருவது போன்றிருந்தது. ஒன்றோ ! இரண்டோ! சிலவேளைகளில் இரண்டாகவும் சில வேளை ஒன்றாகவும் தெரிந்தது. ஆள் போலவும் தெரிந்தது, நிழல் போலவும் தெரியவே எமக்குப் பயம் பிடித்து விட்டது. மதிய வேளைகளிலும் பேய்கள் உலாவருமாமே. அதிலும் சுடுகாட்டு வெளி. என் நண்பர்களும் நானும் இரைக்க இரைக்க ஒடுக்கிறோம். திரும்பிப் பார்க்காமலே ஒடுகிறோம். பேய் புற முதுகில் அடிக்காது என்று யாரோ சொன்ன நினைவு.
எவ்வளவு முயன்றாலும் ஒட முடியவில்லை. சண்டிக் கட்டுக்குள் உமிரி, ஒடஒடக் கால்களைத் தடுக்கிறது. கையொன்றில் ஈச்சங்குலைகள். அந்தக் கையாலேயே சண்டிக்கட்டையும் அவிழந்துவிடாமற்பிடித்த பிடி. மறுகை தோளில் இருக்கும் மட்டி உமலைப் பற்றியபடி எப்படி ஒடுவது? ஆற்றாது தோற்றே போனேன். நிச்சயம் பேய் பிடிக்கத்தான் போகிறது. பேய் எவ்வளவு தூரத்தில் வருகிறது? பக்கத்தில் வந்து விடுமே என்பதைக் தெரிவதற்காகச் சற்றுப்பின்னால் பார்த்தேனா! அப்பாடா!
என் பாட்டனார், தடியோடு வருகிறார். அடிக்கத்தான் வருகிறார் என்பது தெரியும். ஆனாலும் சமாளித்துவிடுவேன்.

Page 45
அந்தக் காலக் கதைகள் 86
14. food முளைத்தது
அ(ன்று நான், யா/சரவணை நாகேஸ்வரி வித்தியா சாலையின் ஏழாந்தர மாணவன். வயதோ பதின் ஒன்றைத் தாண்டிச் செல்கிறது. மீசை அரும்பாப் பருவம், ஆனாலும் வண்டிக் கொழுப்பினால் மீசை வைத்து அழுகு பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அக்காலத்தில் எனது வகுப்பில் நானும் ஒரு அரை நிர்வாணப் பக்கிரி, சிலர் மகாத்மா காந்தியின் வேடத்தில் ஒரு துண்டால் மேனியைப் போர்த்தியுமிருப்பர். வேறு சிலர் வேட்டிக்குமேல் மெய்ப்பையும் அணிந்து வருவதுண்டு. சிங்கப்பூர் பென்சன்காரரின் பிள்ளைகள், பாடசாலை முற்றும் பார்த்தால் ஒரு நாலு அல்லது ஐந்து பேராவது தேறும். அவர்களை அடையாளம் காண்பது சுலபம். ஆண்கள் அரைக் காற் சட்டையும் சேட்டும், பெண்கள் பளபளக்கும் கெளவுண்களும் அணிந்திருப்பர். வீட்டில் சித்தாடைகளுடன் நின்ற பெண்கள் பாடசாலைக்குக் கெளவுனோடு தான் வந்தார்கள். ஆனால் கெளவுண்களின் துணியும் வெட்டும் தையலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அக்காலத் தையல்கள், கூலியைப் பார்த்துத் தைப்பதில்லை. ஆட்களின் தகுதிகளைப் பார்த்துத்தான் தைப்பார்கள்.
நான் ஒரு சிறு வேட்டியை மட்டுமே உடுத்துச் செல்வது வழமை. நெற்றியில் நீறும் சந்தனத்திலகமும் இருக்கும். அது இலட்சினை. எனது. எமது பாடசாலையில் துரையப்பா வாத்தியார் என்ற ஒருவர் படிப்பித்தார். அவர் ஒவ்வொரு மாணவர்களதும் பிட்டத்தைத் தடவிப் பார்த்தே பாடசாலைக்குள் அனுமதிப்பார். கெளமீனம் என்ற கோவணம் கட்டாத குண்டியில் பிரம்பு பழுக்கும். அதற்குப் பயந்து கோவணம் கட்டியதால் இப்போது நான் பாடசாலைக்குள் தயங்காமற் செய்வேன். தேடிப்பிடித்துச் சோதிக்கும் வாத்தியாரை ஏமாற்ற வேண்டும் என்றும் ஆசை. அதனாற்றான் நான் அவசரமாக உள் நுழையவும், மாப்பிளை இங்கே வா என்று எனது

87 தில்லைச் சிவன்
பிட்டத்தைக் தடவி அவர் ஏமாந்து போனதும் உண்டு. அவரது இலே சான சிரிப்பு ஏமாற்றத்தின் அறிகுறி. காலஞ்சென்ற எனது தந்தையாரின் பழையவேட்டிகள் பல கிழிக்கப்படவும், எனது தாயார் திரிச்சீலைக்கு என்ன செய்வது என்று இறைப்பட்டுங்கூட கோவண்ங்கட்டுவதை நான் விடவில்லை.
இப்போது கோவணத்துண்டும் மடித்துக்கட்டிய வேட்டியுந்தான் எனது பாடசாலைச் சீருடை. எ து வீட்டுக்கும் பாடசாலைக்கும் கிட்டத்தட்ட ஒரு மைற்கல் இடைவெளி. ஏழாவது கல்லில் இருந்து எட்டாவது கல்லுக்குச்சற்றுக் குறைந்ததுாரம், போகும் வழி நெடுக இலந்தை, ஈச்சை, காரை, நாவல், புளிய மரங்கள். ஒவ்வொரு வேளையும் காலத்திற் பழுக்கும் கனிகளும் காய்களும் என் மடியில் இருக்கும். சில வேளைகளில் பாடசாலையில் மடிச்சோதனைகளும் நடைபெறும். நாவல், இலந்தை, காரை, ஈச்சம், பழவிதைகள், வகுப்பை அசுத்தப்படுத்திவிடுவதால் பாடசாலைக்குள் இப்பழங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைகளை உடைத்துக் கொண்டு தையல் பெட்களுக்குள் புகுந்து பழங்கள் பாடசாலைக்குள் வருவதுடன் விதைகளும் அவ்வண்ணமே வெளியேறியும் விடும். தடையை மீற நான் கண்ட வழி வேறொன்று. பழங்களை ஒரு சீலைத்துண்டில் பொதி பண்ணி அரைஞாண் கயிற்றோடு முடிந்து வேட்டிக்குள் தொங்க விட்டுக் கொண்டு போவதுதானது. இந்த வழிகளையே இப்போதும் பலர் கட்டுப்பாட்டுப் பொருட்களை கடத்துவதற்குக் கண்டுபிடித்ததையிட்டு எனக்கொரு பெருமை. இவ்வழிகளை முதலில் கண்டு பிடித்தது நானாவும் இருக்கலாம் அல்லவா? எமது வாரிசுகளின் அபார கண்டுபிடிப்புகளையும் கடத்தும் நெறிகளையும் கேள்விப்பட சீ!நான் ஒரு தூசு என்றாகிவிட்டது.
கடத்துவதைவிடக் கடத்திய பழங்களைப் பாதுகாப்பது பெருத்த கஷ்டம். ஒரு மாணவன் கண்டுவிட்டாற்போதும். என்னையும் பழமுடிச்சையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே வாத்தியாரையும் பார்ப்பான். வாத்தியார் வாத்தியார் என்று வாயெடுக்குமுன் அவனுடைய வாயைப் பொத்தி, சில பழங்களை அவன் கைக்குள்

Page 46
அந்தக் காலக் கதைகள் 88
திணித்துவிட வேண்டும். இவ்வாறே இடைவேளை வரை இலஞ்சங்கொடுக்கத் தவறினால், பழங்கள் எல்லாம் பறிமுதலாகி விடும். தண்டனை வேறு. இவ்வாறே இந்தப் பழக்கடத்தலால் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
இவ்வளவு சிரமத்தோடு பழங்களைப் பள்ளிக் கூடத்துக்குள் ஏன் கடத்திச் சென்றேன் என்று சொன்னால் சிரிப்புத்தான் வரும். அங்கேதான் இருக்குது விடயம்.
எனது பாடசாலை ஒரு கலவன் பாடசாலை. ஆண் பெண் இரு பாலாரும் படிக்கிறார்கள். வகுப்பு உயர உயரப் பெண்கள் தொகை குறைந்து, எனது ஏழாம் வகுப்பில் ஒரு பெண்ணும் இல்லை. ஆனால் மேல் வகுப்புகளில் ஆறோ ஏழோ பெண்கள் மட்டும் படித்தார்கள். அவர்கள் எல்லோருமே எனது உறவினர்கள். அவர்களுக்குத் தெரியும் எனது கடத்தல் விடயம். இடைவேளை மணியடித்ததும் வெளியே சென்றேனோ இல்லையோ, ஓடோடி வந்து மொய்த்து விடுவார்கள்: தம்பி! தம்பி! என்று கெஞ்சுவார்கள், இரப்பார்கள். நானும் ஒரு பெரிய மனிதன் போலாகி விடுவேன். எனது விருப்பின்படி, நீட்டும் கையொவ்வொன்றிலும் சில பழங்களை வைத்துப் பொத்திவிடுவேன். இவற்றினால் நான் அடைந்தது தற்பெருமை மிக்க ஒரு உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் மட்டுமே. எத்தனை இலந்தை முட்கள் எனதுடலைக் கிழித்தன. காரைமுட்கள் காலிற்குத்தின, ஈச்சைகள் கையைப் பதம் பார்த்தன, இத்தனை இடர்ப்பாடுகளுக்கும் இந்த உள்ள மகிழ்வு மட்டும் போதுமா? இருந்தாலும் தொடர்ந்து இவற்றைச் செய்தேன். நடந்தது..?
ஒரு ஆசிரியர் கேட்டார், “வயது வந்த பெண்களோடு உனக்கென்ன சேட்டை,” ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி "நீ அவளின் கையைப் பிடித்தாயே’ என்றார். நான் பயப்படவில்லை. நான் கையைப் பிடித்ததாகச் சொன்னாரே, அந்த பெண் எனது மச்சாள். கேட்ட ஆசிரியரும் எனது உறவினர்தான். இவரின் மனதைப் புரிந்து கொள்ள அன்று என்னால் முடியவில்லை. ஒரு பதிலும் சொல்லாமலே சென்று விட்டேன் (பின்னாளில் அவ்வாசிரியர் அப்பெண்ணிடம் என்னையே தூதுவிட்டார் என்றால் சொல்வானேன்).

89 M தில்லைச் சிவன்
இதே ஆண்டுதான், ஏழாம் வகுப்பில் நான் படிக்கும்போது, எனது பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர் இருவர் கேட்டார்கள். "நீ அவளைச் சுற்றுகிறாய், இவளைச் சுற்றுகிறாய் யாரைத்தான் பாக்கிறாய் என்று சொல்லு!உன்னோடு போட்டியில்லாமல் நாம் வேறு பாக்கிறோம்” என்றார்களே! நான் என்ன சொல்வது, வெட்கத்தோடு சிரித்து மழுப்பி விட்டுச் சென்றாலும் இது என் மனதுக்குப் பெருஞ்சுமையாக இருந்தது. உண்மையில் நான் ஒன்றுமறியாத சிறுவன் என்றே அப்பெண்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் சமூகம் அப்படி நினைக்கவில்லை. இதுதான் உண்மையும். அந்த வயதில் ஆண்பெண் உறவு பற்றி நான் நினையாதுமில்லை. கற்பனை செய்யாதுமில்லை. எனது வகுப்பின் உடன் மாணவர் ஒருவர், ஒரு பெண்ணின் படம் போல ஒன்றைக் கீறிப் பெயரும் பொறித்து வைத்து, “சோறு காச்சித்தா! கூழ்காச்சித்தா” என்று,தன்னைத்தானே வருத்தி மடலேறியதைக் கண்ட நான் ஒன்றுந்தெரியாத அப்பாவி என்பேனா?
அன்று விட்டேன் கொண்டலடி இன்று நான் ஒரு பெண்களுடனும் கதைப்பதில்லை. உடம்பைப் பராமரிப்பதிலும் சற்றுக்கவனம் கூடியது. பெண்கள் சிலர் என்னைப் பார்க்கும் விழிகளில் இரக்க உணர்ச்சியைக் காண்கிறேன். தங்களால் அவமானம் அடைந்து விட்டேன் என்று நினைக்கிறார்களோ என்னவோ.
நான் இப்போது மீசை முளைத்த ஆண்பிள்ளை.

Page 47
அந்தக் காலக் கதைகள் 90
O O O 15. அராலிச்சந்தித்
O O. O. O தண்ணிர்ப் பந்தல் திட்டுவன்வான் அருள்மிகு ஐயனார் திருக்கோவில் பொங்கற் பெருவிழா முடிந்த கையோடு நயினை நாகபூசணி அம்மனின் தேர் தீர்த்தம். எமது துறைமுகங்கள் தோறும் மக்கள் திரள் திரளாகக் கூடி நின்றனர். இப்படி ஒரு காட்சியை நான் முன் ஒரு போதும் கண்டதில்லை. ஆனால் எனது அறுபத்துமூன்றாவது வயசில், ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுாற்றொன்றில் தீவுப்பகுதி மக்களின் இடப்பெயர்வின்போது பார்த்த காட்சி வேறு. பதற்றமும் பதகழிப்பும், கணவனைப் பிரிந்து மனைவியும், பிள்ளைகளைப் பிரிந்து பெற்றோரும், பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளும் செய்வதறியாது; போகும் இடம் புரியாது, எப்படியும் உயிரைப் பாதுகாப்போம் என்ற துடிப்போடு, கிளறி ஒலமிட்டுக் கொண்டு துறைமுகங்களில், கிடைப்பவற்றைப் பற்றிக் கரைசேர நின்ற காட்சி இது. பல ஆயிரம் மக்களின் கூட்டம்.
அன்று, வலிகாமம் கிழக்கு மேற்குப் பகுதிகளில் இருந்தும் யாழ்நகரில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் அராலித்துறையில் வந்து கூடினர். அவர்களின் உள்ளங்களில் பக்திப்பிரவாகமும் விரைவிற் சென்று, அம்பாளைத் தரிசித்து, நேர்த்திகளை நிறைவேற்றி. வீடு திரும்ப வேண்டும் என்ற ஆவலும் நிறைந்திருந்தன.இவற்றிற்க" அவர்களைக் கொண்டு வந்து துறைமுகத்திற் சேர்த்த வண்டி வாகனங்கள் ஆங்காங்கே நின்ற மரங்களின் கீழும் பக்கத்துக் குடிமனைகட்குள்ளும் நிறுத்தப் பெற்றிருந்தன. இடப் பெயர்வின் போது நானும் எனது குடும்பத்தினரும் ஏறி அராலித்துறைக்கு வந்த வண்டியைக் கடற்கரையிலும், மாடுகளை அவிழ்த்துத்தரவையிலுமாக விட்டு வந்தேன் என்பதையும் நினைக்கிறேன். அது ஒரு துயரக் கதை.

9. தில்லைச் சிவன்
ஆண்டு ஆயிரத்து தொளாயிரத்து நாற்பது அல்லது நாற்பத்தொன்றாக இருக்க வேண்டும். எனது பன்னிராண்டுப்பருவம், அப்போது வேலணை அராலிக்கடல் வழி ஆயப் போக்குவரத்து இரண்டு கிராமச் சங்கங்களினாலுமே நடத்தப் பெற்றது. ஆயக்கூலி தலைக்கு இரண்டு சதம். சிறுவர்கள் அங்கவீனர்களுக்குக் கூலி தள்ளுபடி இவ்வாறே, தினமும் பிரயாணம் செய்பவர்களுக்காகச் சில தோணிகள் வழமையானவை. இது போன்ற விசேடங்களுக்காக மேலும் பல தோணிகள் சேவையில் விடப்படும். இவ்வகைத் தோணிகளில் அதிகம் பேர் ஒரே முறையில் செல்ல முடியாது. நடு வழியில் சில கவிழ்ந்து விடும். நனைந்து தோய்ந்து எழும்பி வருபவர் உண்டு. ஆனால் உயிராபத்து இல்லை. எவ்விடத்திலும் ஆழம்' ஆட்களை மூடி விடாது. இது இவ்வாறாக, நயினை நாகபூசணி அம்மன் கோயில் யாத்திரை செல்வோரை ஏற்றி இறக்கும் சேவையில் பல தோணிகள் ஈடுபட்டிருந்தன.
அராலித் துறையில் தோணி ஏறி வேலணைக் கரையில் இறக்கி விடப் பெற்ற நயினை யாத்திரீகர்கள், இனி வேலணையின் வயிற்றுப்பகுதியான எட்டு மைல் தூரத்தை நடந்தே செல்ல வேண்டும். இப்போது போல் வசு, கார், லொறி முதலான பிரயாண வசதி அற்ற காலமது. யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளை விடத் தீவுப் பகுதி, போக்குவரப் பாதை விடயத்தில் மிகப் பின்தங்கி இருந்ததற்குக் கடலாற் சூழப்பெற்றிருந்ததே காரணமாகும்.இந்த நிலையில் நாகதீவு யாத்திரீகர்கள் வேலணையில் எட்டு மைலையும் புங்குடு தீவில் கிட்டத்தட்ட பதின்மூன்று மைல் தூரத்தையும் நடந்தும் சில வேளைகளில் மாட்டு வண்டிகள் மூலமும் போக்குவரவு புரியக்கூடியதாக இருந்தது.
வேலணைக்கரையில், இறக்கிவிடப்பெற்ற இடத்தில் இருந்து வேலணையில் இருக்கும் அராலிச் சந்தி என்னும் நாற்சந்திவரையுள்ள நாலுகல் தொலைதூரமும் பற்றைக் காடுகளும் உவர் மணற் பிட்டிகளும் புல்வெளிகளுமாகும். கல்காணவியலாத அவ்வெளி, முட்களும் பற்றைகளும், பற்றைகளோடு சேர்ந்து சீந்தில் பீச்சுளாத்தி காண்டை, கொடிகள் போல் படர்ந்து கிடத்தலால் முட்களும்

Page 48
அந்தக் காலக் கதைகள் 92
கொடிகளும் பிரயாணிகளின் கால்களைக் கீறியும் ஆடைகளைக் கிழித்தும் துன்பம் செய்தன. காய்ந்துலர்ந்து கருக்கு வாள் போலிருக்கும் தாழஞ்சருகுகள் காற்றினால் அள்ளுண்டு எங்கும் பரவிக்கிடப்பதும் மெலிஞ்சி முட்களும் உறுத்த, காற்று உவர்மணலை அள்ளித் தூற்ற, வெயில் மணலை வறுத்துக் கால் முதல் உச்சி வரை சூடாக்க, விடாயினால் நா வறள வரும் யாத்திரீகர்களுக்கு ஆயாசந் தீர்க்கும் பொருட்டு அராவிச் சந்தியில் ஒரு தண்ணிர்ப்பந்தரையும் இளைப்பாறும் மண்டபத்தையும், தற்காலிகமாக அமைத்து, குளிர் பானங்களையும், முக்கியமான திருவிழாவிற்கான வேளைகளில் அன்னதானமும் செய்து உபசரித்தார்கள், வேலணை மேற்கு சூதர் முருகேசபிள்ளையின் பிள்ளைகள்.
இவர்களின் அன்பான உபசரிப்பினைப் பெற்றுக் களைப்பு நீங்கிப் பின் உள்ள தூரத்தை நடந்து செல்லும் நோக்கத்தோடு பயணிகள் புறப்பட்டுச் செல்வர்.
இப்படியான ஒரு நாளில், நானும் எனது நண்பர்கள் சிலருமாகச் சர்க்கரைத் தண்ணிர் குடிப்பதற்கும் நயினை யாத்திரீகர் கூட்டத்தைப் பார்ப்பதற்குமாக அராலிச்சந்திக்கு வந்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். இரண்டொரு வண்டிகளும் அராலித் துறைக்கும் வேலணைத் துறைக்குமாகச் சேவையில் ஈடுபட்டிருந்தன. இவற்றினைக் கண்டதும் எமது வண்டிலையும் பூட்டிச் சேவை நடத்தலாம் என்ற நினைவு முனைத்தது.
தகுந்த துணை கிடைத்து விட்டதால் நினைப்பைச் செயலாக்க அதிக நேரம் செல்லவில்லை. நானும் எனது பெரிய மச்சான் திருநாவுக்கரசுவுமாக எங்கள் வண்டியைப் பூட்டிக் கொண்டு அராலித் துறைக்குச் சென்றோம். எங்களுடன் இன்னொருவரும் வந்தார். அவர் யாரெனத் திடமாகக் கூற முடியாவிட்டாலும் எனது அண்ணர் படிகலிங்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அராலித்துறை (வேலணைக்கரை)யை அண்மியதும் கூடலாய் வளர்ந்து நெருங்கியுள்ள பூவரச மரநிழல்களில் பல குடும்பங்கள் தங்கி நிற்கவும், பிரயாணிகள் தங்குவதற்கென அமைக்கப் பெற்ற ஒரு

93 தில்லைச் சிவன்
மடத்தில், சிலர் சமையல் செய்வதையும் அவதானித்துக் கொண்டு சென்றோம். பயணத்தைப் பற்றியசிந்த னையோடு நின்ற குடும்பங்களைச் சேர்ந்த சிலர், எங்களைக் கண்டதும் ஆராமையுடன் நெருங்கி வந்து கூலிப் பேரம் பேசத் தொடங்கினர். இரண்டு ரூபாவிலிருந்து ஐந்து ரூபா வரை கூலி உயர்ந்தது. ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பத்தைக் கொண்டு போவதென்று ஐந்து ரூபா கூலியாக ஒப்புக் கொள்ளப் பெற்றதும் சரி. ஒரு வசதியான குடும்பம் ஐந்து ரூபா கூலிக்கு எமது வண்டிலை வாடகைக்கமர்த்தி ஏறிக் கொண்டது.
இப்போது பெரிய மச்சான் வண்டிச்சாரதி. நானும் மற்றைய வரும் நுகக்கிட்டிகளைப் பிடித்துக் கொண்டு மாடுகளுக்கும் பாதை காட்டிச் சென்று கொண்டிருந்தோம். மாடுகள் ஒடும்போது ஒடியும் நடக்கும்போது நடந்தும், துள்ளும் போது கழுத்தில் நுகத்தடியை அழுத்திப் பிடிப்பதும், படுக்க எத்தனிக்கும் போது நுகத் தடியைத் தூக்கிப் பிடிப்பதுமாக இரைத்திரைத்து ஒடிச் சென்றோம்.
மாடுகள் இளங்காளைகள் பாரவண்டில் இழுத்துப் பழகாத புதியவை. சில வேளைகளில் ஒன்று துள்ளும், மற்றது படுக்கும். பாதையை விட்டு விலகிப் பற்றைகளுக்குள் இழுக்கும், ஏரியைப் பிடித்துப் பக்கவாட்டுக்குத் தள்ளி வழிக்குக் கொண்டு வர வேண்டும், சில வேளைகளில் கழுத்தைக் குனியப் போட்டுக் கொண்டு நிற்கும். கழுத்தைத்தடவிக் கொடுத்து வாயின் நுரையை கழுத்தில் தடவியும், நாக்கை இழுத்து வெப்பத்தை அடக்கியும் மாடுகளை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பு கடைக்கிட்டி பிடிப்போருக்குண்டு. இத்தனை வேளைகளிலும் வண்டிப் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் வண்டியைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற வீறாப்பில் எமது கஷடங்களையும் துன்பங்களையும் சகித்துக்கொண்டு சென்றோம். எமது இந்த நிலைமைகளை அவதானித்தபடி வண்டியிலிருந்த பெரியவர் ஒருவர், ஒரு அநுதாப உந்துதலிற்போலும், “தம்பி! வண்டிலைக் கொஞ்சம் பிடி’ எனவும் என்னைச் சுட்டிக்காட்டி “இந்தத் தம்பிகளைச்சுப் போனார், சிறிது ஆறிப் போவோம்’ எனவும் சொன்னதும் எனக்கு ரோசம் வந்துவிட்டது. “இல்லை, பிடிக்க வேண்டாம். இன்னும் கொஞ்சத்தூரந்தான். சந்தி வந்திவிடும். அங்கே

Page 49
அந்தக் காலக் கதைகள் 94
வண்டியை நிறுத்தி எல்லோரும் இறங்கித் தண்ணிர் குடித்து ஆறலாம்” எனக் கூறிக் கொண்டே மாடுகளை வழிக்குக் கொண்டு வந்து, கொஞ்சம் உசாராக நடந்து சந்திக்கு வந்து விட்டோம். − சந்தியில் உள்ள பூவரசு மர நிழலில் மாடுகளை அவிழ்த்துக்கட்டி விட்டுத் தண்ணிர் குடித்து இளைப்பாறினோம்.
தண்ணிர்ப் பந்தல் உபயக்காரர்கள் மிகவும் நல்லவர்கள். என்னோடு மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். அவர்களில் ஒருவர் உனக்கேனிந்த வேலை என்று கடிந்து கொண்டு உள்ளே சென்றார். அவரைத் தொடர்ந்து உள்ளே சென்ற நான், ஒரு சருவச் சட்டியில் சோறும் கறிகளும் போட்டுப்பிரட்டிக் குழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். எனது பெரிய மச்சானும் மற்றவரும் மாட்டுக்குத் தண்ணிர் காட்டுவதற்காக மாடுகளை அவிழ்த்துக் கொண்டு சென்றார்கள். நான் குழைத்த சோற்றை வண்டியில் வந்த இரு சிறுவர்களுக்கும் கொடுத்து உண்டேன். மற்றவர்கள் “வேண்டாம் நீங்களே சாப்பிடுங்கள்” என்றதனால் எனது மனச் சங்கடமும் குறைந்தது. அவ்வேளையில் தண்ணிர் பந்தலுள் இருந்து ஒரு பெரிய பானையில் மோரும் சோறும் போட்டுக் கரைத்த நீராகாரம் சிரட்டைகளில் எமது பிரயாணிக்கு வழங்கப் பெற்றது கண்டேன். எனது பெரிய மச்சானும் உடன் வந்தவரும் அதில் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.
இப்பொழுது மதியஞ் சாய்ந்த வேளை. எமக்குமுன் நீண்டு கிடந்தது கிறவல் வீதி. இரண்டு பக்கமும் குடிமனைகள். வீதிகளில் மர நிழல். பிரயாணம் முன் போலில்லை. மாடுகள் வீதியினைப் பார்த்துச் செல்லும். இருந்தும் நாமிருவரும் கடைக்கிட்டி பிடித்துக் கொண்டே சென்றோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரயாணிகட்குத் துன்பம் வரக்கூடாது என்பதே கருத்து. பிரயாண இடத்தை பிற்பகல் ஒன்றரை மணிக்குச் சென்றடைந்தோம்.
ஐந்து ரூபாவை என் கையில் வைத்த பெரியவர், முதுகை வருடி விட்டதுமல்லாமல், முகத்தில் முத்தந் தந்து போய்வா என்று வாழ்த்தியும் விட்டார். அவரதும் அவர் குடும்பத்தினரதும் உருவங்கள் இன்றும் என் உள்ளத்தில் நிழலாடுகின்றது. -ܓ

()5 தில்லைச் சிவன்
18. வலம்புரிச் சங்கு
)ெ((ெர்ணமி அமாவாசை இரவு வேளைகளில், தீவுப் பகுதியைச் சூழ்ந்துள்ள பெருஞ்சமுத்திரங்களில் இருந்து, “ஒ ஊம்” எனப் பேரொலி எழுந்து ஒலிப்பதைச் சிலர் கேட்டிருப்பர். பலர், இவ்வொலி, கடல் அலை வீசும்போது உண்டாகும் அலையோசையென, அவதானிக்காதுமிருப்பர்.ஒங்காரத் துவத்ததொனியில் கேட்கும் ஒலி சமுத்திரங்களின் மத்தியில் வாழும் சங்குகளின் தலைவனான பாஞ்சசன்நியத்தின் முழக்கம், என எனது பாட்டனார் கூறுவார். சமுத்திரத்தின் மையத்தில் தோன்றி, வரவரக் கரைந்து, கரையோர மக்களின் செவியில், வண்டின் ஒலிபோல, மெலிதாக இசைத்துக் கொண்டிருப்பதை, அவதானிப்போரால் கேட்க (Uply u4th.
ஊரி, ஊட்டி, சிப்பி, சங்கு முதலானவை ஒரே இன உயிரிகள். எமது நாய் வெட்டி வாய்க்கால் கரைகளில் ஊரிகள் பாடுவதை, சில வேளைகளில் அவதானிக்கலாம். இரவிலோ பகலிலோ அமைதியான ஒரு இடத்தில், ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கேட்டால் ஒரு மெல்லிய நாதம் கேட்பதை உணர முடியும். இதனைச் சிலர் கவர்க்கோழியின் ஒசையெனவும், வேறு சிலர் பூமிதன் அச்சில் சுழல்தலால் உண்டாகும் ஒசை எனவும் கூறுவர். இவ்வோசைகளையும் பாஞ்சசன்நியத்தின் ஒங்காரத் தொனியையும் பிரித்து, இதோ பாஞ்சசன்நியம் ஊதுகிறது என்று என் பாட்டனார் சொல்லுவார். ஆயின் அதை என்னால் கேட்க முடிவதில்லை.
ஆயிரம் சிப்பிகள் சூழ, ஒரு இடம் புரிச்சங்கும், ஆயிரம் இடம்புரி சூழ, ஒரு வலம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புரி சூழ, ஒரு சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலஞ்சூழ, ஒரு பாஞ்சசன்நியமும் ஒரே கூட்டமாக வாழும் என்றும் பாஞ்சசன்நியம் ஊதும் போது, மற்றெல்லாச் சங்குகளும் சேர்ந்தொலிப்பதால், கடலுள் பேரொலி எழுமென்றும், அப்பேரொலிச் செறிவில் பாஞ்சசன்நியத்தின் ஒலி கெம்பீரமாய்

Page 50
அந்தக் காலக் கதைகள் 96
கேட்கும் என்றும், எனது பாட்டா கூறுவார். அவரது அவதானிப்பு இருந்தவாறது. இப்படியான ஒரு பாஞ்சசந்நிய சங்கின்ையே பரமாத்மாவாகிய கண்ணபிரான் கையில் வைத்துள்ளார் என்று கூறுவர்.
இவ்வகையான சங்குகள் மலிந்துள்ள எமது சமுத்திரங்களில், சங்கு குளிக்கும் பொருட்டுக் கீழைக்கரைச் சோனகர் பலர், காலத்துக்குக் காலம் தீவுப்பகுதி மண்ணில் ஜாகை அடித்துத் தொழில் செய்து, திரும்பும் வழமை, தொன்று தொட்டே இருந்தது. இப்படித் தொழில் நிமித்தம் வந்த கீழைக் கரையாரிற் சிலர்,நிரந்தரமாகவே இப்பகுதியில் தங்கி விட்டார்கள். இன்று நயினா தீவில் வாழும் முசுலிம்கள், புலம் பெயர்ந்து வந்து, தொழில் காரணமாகத் தரித்துள்ளவர்களின் சந்ததியினர் என்பர்.
நாலைந்து பாகத் தண்ணில் முக்குளித்துச், சுழியோடிச் சங்கெடுத்து விற்றுப் பிழைக்கும் தொழில் அவர்களுடையது. நாலைந்து பாகம் ஆழமான கடலிற் சுழியோடும். சுழியோடி, அரையிற் கட்டிய கயிற்றின் தலைப்பைக், குல்லாவில் நிற்பவரிடம் கொடுத்துப் போவார் என்றும், கயிற்றைச் சுண்டும் அசைவு கண்டவுடன், மேலுள்ளவர் இழுக்கத்தவறின், ஆள் 'மெளத்தாகக் கூடும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எம்மூரில் மச்சான் முறையுள்ளவரை “மண்டைகயிறு" என்று சொல்வதுண்டு சுழியோடியின் கயிறு அவரது மனைவியின் சகோதரனிடம் கொடுக்கும் வழக்கத்தினால், மைத்துனனை மண்டைக்கயிறென்று அழைத்தனர் போலும். சமுத்திரத்தில் சங்கு குளிப்பவர்களின் நிலை இவ்வாறாக, எமதுார் சரவணையிலும், ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டுகளின் முன், பலர் சங்கெடுத்தார்கள், சமுத்திரங்களில் சுழியோடி அல்ல, நிலத்தில் குழித்தோண்டி,
எனது உus0வடக்கே கடலோடு சேர்ந்த பெரியதொரு வெளி உண்டு. துலைலாக்காடு, வெள்ளை என்றெல்லாம் இதற்கும் பெயர்களுண்டு. மாரிகாலத்தில் நந்தி, உமிரி ஆகிய பூடுசுகளும் சிறிய அளவில் கண்ணாப் பற்றைகளும் கிடக்கும். கடற் பெருக்கினால் வந்து சேர்ந்த உவர்நீரும் மழைநீரும் சேர்ந்த சதுப்புநிலம், மணல் ஊரிசிப்பி

97 தில்லைச் சிவன்
என்பன சேர்ந்து, இறுகிக் கடினமாயுள்ளதால் கால்களைப் புதைக்காது. இந்நிலத்தின் பரப்பு, நாலு தர நாலு மைல் இருக்கும். இந்நிலத்திலும் கடற்கரை ஓரங்களிலுமாக ஆழக் கிடங்குகளைத் தோண்டிச் சங்கெடுத்தார்கள். கடலிலே கிடக்கும் சங்குகள் தரையில் மூன்று முழ ஆழத்தில் காணப்படும் மர்மம் தெரியவில்லை. ஏதோ ஒரு காலத்தில் ஆழக்கடலாக இருந்த பகுதி, கடற்கோள்களினால் நிலமாகிவிட்டது என்றும் கொள்ளலாம்.
அந்தக் காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தின் முன் எம்மூரவர் சிலர் சங்கெடுப்பதற்காக அதிகாலையிலேயே பெரிய லுெளியை நோக்கிப் புறப்படுவர். அவர்களின் தோளில் அரைஇஞ்சிப் பருமனும் ஆறு. ஆறறை அடி நீளமும், அடிப்பக்கத்தில் இருகைகளாலும் அமத்திக் குத்தக்கூடியதாக மரப்பிடியும் போட்ட ஒரு கம்பியும், யானைப்பாகன் வைத்திருப்பது போன்று நீண்ட ஒரு இறகும், பறி ஒன்றோ இரண்டும் இருக்கும். மதிய உணவுக்கான சோறோ, கஞ்சியோ ஒரு முட்டியிலும், தண்ணிர் ஒரு செம்பிலும் கொண்டு செல்வது வழக்கம்.
முதலில் சங்கெடுப்பதற்குரிய இடப்பரப்பைத் தெரிந்து கொண்டு, கொண்டு சென்ற பொருட்களை ஒரு இடத்தில் வைத்தபின், நீண்ட கம்பியால் நிலத்தின் வயிற்றினுள் குத்திப்பார்ப்பதன் மூலம் சங்கினைக் கண்டு பிடித்து விடுவான். கம்பியை நிலத்துள் மேல் கீழாய் குத்தி அசைப்பதனால் உள்ளே இருக்கும் சங்கின் பருமன் தன்மை என்பவற்றையே அனுபவம் உள்ள தொழிலாளியால் கூறிவிட முடியும். அதன்பின் ஒரு அடிச் சுற்றளவுள்ள ஒரு கிடங்கை ஒரு இரண்டடி ஆழத்துக்குக் கிண்டினாற் போதும். அதன் கீழ் ஊரியும் நீருமாகக், குறட்டினால் குடைந்து சங்கினை எடுப்பார்கள். ஒரு கிடங்கில் மூன்று நான்கு சங்குகளும் கிடைக்கக் கூடும். சிலவேளை ஒன்றுங் கிடைக்காமலும் போகும். எல்லாம் அவரவர் விழித்த விழி விசேடத்தின் பலன் என்று நம்புவோர் அதிகம். இத்தருணங்களில் சிலருக்கு யோகம் அடிப்பதுண்டு. கரையானுக்குக் கருங்கண்ணி படுவதுபோலச் சங்கு குத்திக்கு வலம்புரி ஐஞ்ஞாறு ஆயிரம் என விலை போகும்.
7

Page 51
அந்தக் காலக் கதைகள் 98
சங்கெடுக்கக் சென்றவர்கள் மாலையில் வீடுநோக்கி வருவார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துச் சங்குவியாபாரிகள் சிலர், வடக்குத் தெருவின் கரையோர மரங்களின் கீழ் சாக்குப் பைகளுடன் இருப்பர். சங்கு எடுப்போருக்கு தம்மிடம் வாடிக்கையாய் சங்கு வாங்கும் வியாபாரிகள் எந்தெந்த மரங்களின் கீழ் இருப்பார்கள் என்பது தெரியும். அவர்கள் அந்தந்த மரங்களை நாடிச் சென்று, சங்குகளை எடுத்துக் காட்டி அவற்றின் அளவிற்கும், தரத்திற்கும் ஏற்ற விலையைப் பெற்றுச் செல்வர்.
ஒவ்வொரு உள்ளூர்ச் சங்குவியாபாரியும், தாம் சேர்த்த சங்குகளைத் தரம் பிரித்து ஊர்காவற்றுறையில் உள்ள சங்குமாலுக்குக் கொண்டுசெல்வார்கள். அங்கே வந்து,நிற்கும் பெரிய வியாபாரிகள் இவர்களிடமிருந்து சங்குகளை வாங்கிக் கப்பல்களில், வங்காளம், பர்மா, மலேசியா போன்ற நாடுகட்கு அனுப்பிவைப்பர்.
ஒருநாள் எனது அயலவரான ஆறுமுகத்தாருக்கு யோகம் பேசியது. வழமைபோல் சங்கெடுத்த போது அன்று ஒரு வலம்புரிச் சங்கு கிடைத்து விட்டது என்று ஊரெல்லாம் பேச்சு.
“இவன் இதை என்ன செய்யப் போகிறான்? ஒரு ஆயிரம் இரண்டாயிரம் போகுமோ? பெரிதோ சிறிதோ? இடம் புரியைத்தான் வலம்புரியென்று மயங்குகிறானோ? எதற்கும் அதையொருக்கால் பார்க்கக்கூடக் காட்டமாட்டனாம்," என்று அங்கலாய்ப்பவர் சிலர்.
"நீயுந்தான் ஒவ்வொரு நாளும் கம்பியைச் சுமந்து கொண்டு போகிறாய், இத்தனை வயசுக்கு ஒரு வலம்புரியைப் பார்த்திருப்பியே” என்னவும், “உன்ர மூஞ்சியில முளித்துப் போனால் வலம்புரியல்ல அதுக்குமேலே சலஞ்சலம் தான் கிடைக்கும்” என்றார் கந்தர்.
“இப்பபார், இவள் நாகி என்ன என்று கேட்கக் கூடக் கேளாதது போல் திமிராகப் போகிறாள்,” என்று சொன்ன மனைவியைப் பார்த்துச் சுப்பிரமணியம், “அவன் வலம்புரி எடுத்தானோ என்னவோ அவனால் அதை அனுபவிக்க முடியாது, புதையல் எடுத்தவன் அதை அரசிடம் சேர்க்க வேண்டும் என்பது சட்டம், இப்ப பார்! இன்னுங் கொஞ்சத்தில் விதானையார் வரப்போகிறார். அவருக்கு இவன் எடுத்த சங்கைக் காட்ட வேண்டும்.

99 தில்லைச் சிவன்
அது வலம்புரியானால் விதானை யார் கொண்டு போய் விடுவார். அதற்கு முன் அந்த வலம்புரியைக் கோவில் குளத்துக்குத் தானம் பண்ணினாற் சரி, அந்தப் புண்ணியமாவது லாபம்” இவர்களின் சம்பாசணைக் கிடையாக ஆறுமுகம் வீட்டில் நின்று சுப்பிரமணியம் வீட்டின் முன்பாக மூன்று பேர் போனார்கள். அவர்களிடம் ஒடிப்போன சுப்பிரமணியம் அவன் என்னவாம் என்று ஆவலாகக் கேட்டார்.
“நாங்கள் அந்தச் சங்கைக் கோவிலுக்குக் கொடு. சங்காபிடேகத்துக்கு வேண்டும் என்று ஐயர் கேட்கிறார். வேண்டுமானால் ஐயரிடம் பத்துப் பவுண் நூறு ரூபா) வாங்கிக் கொள்” என்றோம். எதற்கும் அவன் மசிகிறான் இல்லை. இதெல்லாம் யாரோ கட்டிவிட்ட பொய்க்கதை என்றும் தான் ஒரு வலம்புரியை எடுத்ததுமில்லைக் கண்டதுமில்லை என்று அடம் பிடிக்கிறான் என்றார்கள்.
விதானையாரும் தனது ஆளணிகளுடன் வந்து விசாரித்தார். அவர் கைக்கு ஒரு சங்கு சென்றது." இது தானையா நான் எடுத்த சங்கு, வலம்புரி’ என்றார் ஆறுமுகம். விதானையார் கையில் வைத்திருந்த சங்கைச் சுற்றிச் சுற்றிப்பார்த்தார். வலமாக நிமிர்த்தியும் கவிழ்த்தும் பார்த்தார். தன்னுடன் வந்தவர்களுக்கும் காட்டினார். முடிவாக ஆறுமுகத்தைக் கோடிக்கு பின் தனிமையில் வைத்து ஏதோ கேட்டார். கையில் இருந்த சங்கை முற்றத்தில் எறிந்து விட்டுப் பரிவாரங்களுடன் சென்று விட்டார்.
சிலவாரங்களின் பின், கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்து, ஒருநாள் அதிகாலை கிழக்கு வெளிக்கும் முன்னதாக ஆறுமுகத்தாரும் அவருடைய மகனும் எமது வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடைய கைகளிற் சில உமல்கள் இருந்தன. பட்டணம் போகப் புறப்பட்டு வந்துள்ளனர் என்பது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது தான். எமது பெட்டகத்துள் இருந்தெடுத்த ஒரு சீலைப்பை அவர்களிடம் கொடுக்கப் பெற்றது. அதனுள் இருந்து ஒரு சாண் சுற்றளவுள்ள ஒரு வலம்புரிச் சங்கு மனதில் ஓங்காரநாதம் இசைத்துக் கொண்டே சென்றதை உணர்ந்தேன்.

Page 52
அந்தக் காலக் கதைகள் OO
17. சித்திரை வெள்ளம்
(ெதயும் மாசியும் பெய்த பனியும், பங்குனி வெயிலும் மண்ணையும் மரஞ்செடிகளையும் வருந்திக் கொண்டிருந்தன. கிணற்று நீரும் கீழே போய்க் கொண்டிருந்தது. மரஞ்செடிகள் இலைகளை உதிர்த்திப் பொன் போன்ற வண்ணத்தில் புதுத் தளிர்களையும் மலர்க்கன்னிகளையும் ஈன்று கொண்டிருக்கக் குயில் கூவக் கிளிபாட, இளங்தென்றல், இது வரை இருந்த புளுக்கத்தை நீக்கி, மெல்ல வீசச் சித்திரை பிறந்தது.
அறுவடையின் பின் வயல்களில் விதைத்த எள்ளும் பயறும், வீடு வந்து விட்டன. இனி அடுத்த போக விதைப்புக்கு ஆயத்தமாக, ஆடு, மாட்டுப்பட்டிகள் வயல் வெளிகளில் அடைப்பதற்காகக் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக சித்திரை வெள்ளம் முடியட்டுமே என்று காத்திருந்த விவசாய மக்களை ஏமாற்றாமலே, வழமை போலக் குறித்த இருபத்தெட்டாம் திகதிக்கு முன்பின்னாகச் சித்திரை வெள்ளம்வேந்து விடும். அந்தக் காலம், எத்தனையோ சித்திரை வெள்ளம் வந்து போனபோதும் எனது நினைவில் நிற்கும் ஒரே ஒரு சித்திரை வெள்ளத்தின் மகத்துவம், என்னைப் பொறுத்தவரை பெரியது தான்.
- அவ்வாண்டின் சித்திரை வருடப்பிறப்பு எனக்குச் சந்தோசமாக அமையவில்லை. வருடம் பிறக்கும் அதே இரவு, எனக்குக் கொழுக்கட்டை ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தபோது, எனது தாயார் விழுந்து கையை முறித்துக் கொண்டார். விடிய வருடப் பிறப்பு, எனது தாயாரை வைத்தியஞ் செய்வதற்காக யாழ்ப்பாணம் கொண்டு போய் விட்டார்கள். வீட்டில் நானும் என்பாட்டனும் மட்டுந்தான்.
கலந்து வைத்த உள்ளுடன் சட்டியுள், பிசைந்த மாசுளகுள், கவனிப்பார் அற்ற நிலை. குகனிக்குள் போவதும் கலந்து வைத்த

(). " தில்லைச் சிவன்
உள்ளுடனில் ஒருகை அள்ளி வாயினுள் போடுவதும், வெளியில் வருவதுமான எனது நடமாட்டத்தை அவதானித்த, எனது பாட்டனார், என்னைக் கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போய் குளிக்க வைத்தார். எனது தாயார் எடுத்து வைத்திருந்த புது வேட்டியை உடுக்கத் தந்து, ஒரு நாடாப் போன்ற சீலைத் துண்டால் அரையில் இறுகக் கட்டிய பின், வீட்டின் அயலில் உள்ள கோவிலுக்கு அனுப்பினார். அங்கே பொங்கல் நடந்து கொண்டிருந்தது. எனது உறவினர் பலரும் என்னைக் கண்டு, எனது தாயாரைப் பற்றி விசாரித்துக் கொண்டனர். என்னொத்த பிள்ளைகள் பலர் போர்த் தேங்காயும் கையுமாக நின்றனர். சிலர் பாக்குக் கட்டினர். ஆங்காங்கே நின்ற மரநிழல்களின் கீழ் போர்த் தேங்காய் அடிப்போர் கூட்டங் கூட்டமாக நின்றனர். சிலர் வார் ஒடுவதும், சிலர் கெந்தியடிப்பதும் சிலர் காசு கட்டுவதுமாக வீதி நான்கிலும் ஒரே களியாட்டம்.
எனது மனம் ஒரு விளையாட்டிலும் ஈடுபட முனைக்கவில்லை. எனது சித்தப்பா மண்டை தீவில் இருந்து கொண்டு வந்து தந்த ஐந்து போர்த் தேங்காய்கள், வீட்டினுள் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வரும்படி எனது சில நண்பர்கள் ஊக்கப்படுத்தினர். தும்பு வார்ந்து எள்ளுக்கிளாய்ச்சாறு பூசிப் பத்திரப்படுத்திய காய்கள் அவை, பேர் போனகேற்றடியான, தென்னையில் இருந்து நிலத்தில் போடாமலே இறக்கிவரப் பெற்றவை. அவற்றை எடுத்து ஒரு கை பார்க்கலாம் என்ற எண்ணம் வரும். மறுகணம் “ஒரு இடமும் போகக் கூடாது, உன்பாட்டாவோடேயே இருக்க வேண்டும்' என்று அம்மா சொன்ன நினைவோடு கண்களில் நீர் வரும். அப்படியே வந்த கண்ணிரோடு கோவிலடியில் நிற்காமல் வீட்டுக்கு வந்தேன்.
எனது பாட்டனார் ஆவிபறக்க இறக்கி வைத்துக் கொண்டிருந்தார் கொழுக்கட்டை. நான் இரண்டு கொழுக் கட்டைகளைத் தின்று விட்டேன். அப்போது எனது ஆச்சி முத்துக் குஞ்சியம்மா உழுந்துக்களி கொண்டு வந்தா. அடுத்த வீட்டு நாகி அக்காவும் ஏதோ சிற்றுண்டிதான் கொண்டு வந்தா. ஒன்றையும் எனது பாட்டனார் ஏற்கவில்லை. இருவரையும் ஏசிப்போட்டு, மிகுதியாயிருந்த மாவைக் கொழுக்கட்டை அவிக்கும்படி கூறிவிட்டுக் கோவிலுக்கு

Page 53
அந்தக் காலக் கதைகள் 102
- புறப்பட்டார். நானும் இரண்டு கைகிளிலும் இரண்டு போர்த் தேங்காய்களை எடுத்துக் கொண்டு அவரின் பின்னே சென்றேன்.
என்னைச் சுற்றி ஒரு கூட்டம் கூடி விட்டது. எனது போர்த் தேங்காயின் மகிமை ஊர் அறிந்ததே. முன்னர் பல தடவை காலியில் இருந்து கொண்டு வரப்பெற்ற தேங்காய்களுடன் போட்டியாகக் கோதாவில் இறக்கப் பெற்ற கேற்றடியான காய். சாதாரணமாக ஊசி கிடைப்பன பத்துப்பதினைந்து சதம் விலை போன போதுகேற்றடியான ரூபா விலை. விடுகாய்க்குச் சொல்லி விடலாம். எந்தப்பாட்டிலும் அடிவாங்கக் கூடியது. நிறுத்தி முகப்புப் பாட்டுக்கு வைத்தால் பல அடிகளைத் தாங்கும். தடித்த சிரட்சை ஒடும் அடைப்பதும் இலேசில் விட்டுக் கொடுக்காது.
பலர் மாறி மாறி அடிக்க வரும்படி கேட்டனர். பலசாலிகளான அவர்களோடு, மாறி மாறிப் போரடிக்க நான் சம்மதிக்கவில்லை. நான் காயை விட்டுக் கொடுத்தால் ஒரு அடிக்குப்பதினைந்து சதம் பந்தயம். வைத்துக் கொடுத்தால் பந்தயம் பந்துச் சதம். உடைந்தால் எனக்கு இழப்பு. தேங்காய், உடையாது போனால் பந்தயப்பணம் லாபம். இப்படியே ஒரு தேங்காய் எனக்கு ஒன்றரை ரூபாய்களை உழைத்துத் தந்து, உடைந்து போனது.
இதன்மேல் எனது தேங்காய்களைப் பலர் விலைக்குக் கேட்கத் தொடங்கி விட்டனர். எனக்கும் போரடிப்பதற்கு உற்சாகமில்லை. சிலர் எனது பாட்டனாரிடம் கெஞ்சிக் கேட்டார்கள். ஊருக்கூர் நடக்கும் போட்டியில் போரிடுவதற்காக எனது தேங்காய்கள் புறப்பட்டு விட்டன.
நான் எனது பாட்டனாருடன் வீடுநோக்கிப் போனேன். வீட்டில் எனது சிறிய தாயாரும் நாகி அக்காவும் சமையல் முடித்து வைத்து விட்டு, அவரவர் வீட்டுக்குப் போகப் புறப்பட்டனர். குசுனி நிறையச் சாப்பாடுகள். பொங்கியவர்கள் எல்லாரும் கொண்டு வந்து கொடுத்திருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பாற்பொங்கல், சோறு, கறி என்று பலவகை. பாட்டனார் கட்டிலில் சரிந்து விட்டார். நான் நாகி அக்காவுடன் அவர்களின் வீட்டுக்குப் போனேன்.

103 தில்லைச் சிவன்
அவர்களின் வளவுகளில் ஏராளமான வேம்புகள், இலுப்பை, புளியமரங்கள், வளவுக்குள் சூரியக்கதிர் புகா நிழல். இளம் பெண்களும் பிள்ளைகளும் சித்தாடை கட்டிச் சிங்காரித்துக் கொண்டு அன்ன ஊஞ்சல் ஆடினர். வேறு சிலர் தாயம் போட்டனர். சில பெண்கள் கற்களின் கொக்கான் விளையாடினர். இவ்வாறே எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்க, மரங்களில் அணில்கள் ஒன்றின் வாலை ஒன்று பிடித்துப்பிடித்து ஓடி விளையாடின. குயில்கள் கூவிக் கொண்டும் நாகணவாய்புட்கள் கொம்புக்குக் கொம்பு தாவிக் கொண்டும் திரிந்தன.
என்னைக் கண்டதும் பாறுபதி அக்கா தன்னுடன் வைத்து அன்ன ஊஞ்சல் ஆடினாரு நடுவில் நான் நிற்க பாறுபதி அக்காவும் பூமணி அக்காவும் இருபக்கங்களிலும் நின்று வலித்து வலித்து ஆடினர். கொஞ்சநேரந்தான். அதன்மேல் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்க என்னால் முடியவில்லை. பலகையில் இருந்து விட்டேன். ஆட்டத்தை நிறுத்தி என்னை இறக்கிவிட்டார்கள். தலைசுற்றிக் களைப்பாக இருந்தது. சற்று ஆறிஇருந்த பின் வீட்டுக்கு வந்தேன். வரும் வழியில் எனது தாயாரை நினைக்க அழுகை அழுகையாக வந்தது. ஓவெனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது. கண்கள் கலங்க அழுதேவிட்டேன். யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்று வெட்கமும் வேறு. அழுத கண்ணிரைத் துடைத்துக் கொண்டு என் பாட்டனாரின் பக்கத்தில் போய்க் கிடந்தேன்.
இவ்வாறே எனது வலைகளோடு கரைந்து போன வருடப் பிறப்பு தினத்தினைத் தொடர்ந்து, மூன்று நான்கு நாட்களுக்குமப்பும் மந்தாரத்தோடும் கூடிய அடைமழை பொழிந்தது. நானும் எனது பாட்டனாரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். சாப்பாடு நேரத்துக்கு நேரம் எனது குஞ்சியம்மா கொண்டு வந்து தருவா. விசேட கூழ் அடுத்த வீட்டில் இருந்தும் சட்டிகளில் வரும்.
ஒருநாட்காலையில் தலைவாசலில் குந்தி இருந்து கொண்டு முற்றத்தைப் பார்த்தேன். இரவில் பெருங்காற்று வீசிய அறிகுறியாகப் பச்சை இலைதளைகளால் முற்றம் மூடிக்கிடந்தது. முற்றத்தில் வெள்ளம் வடிந்து கொண்டிருந்த போதும் சிறு தூற்றலுமிருந்தது.

Page 54
அந்தக் காலக் கதைகள் 104
அவ்வேளையில் பாட்டுக்கிடையில் தரையை உராய்ந்து கொண்டு ஏராளமாக பனை உரோஞ்சி மீன்கள் சென்றன. பாம்பின் வாலும் மீனின் தலையுமுடைய விலாங்குகளும் நழுவிச் சென்று கொண்டிருந்தன. காரானை கடலில் இருந்து அள்ளி வீசி இருக்க வேண்டும் என்று பாட்டனார் கூறினார். வீட்டுத்தாவரங்களில் செம்பகம், குயில் போன்ற பறவைகளும் கோழிகளும் குறாவிக் கொண்டு நின்றன. -
இந்த வேளையில், அடுத்த வீட்டுச் சின்னையா அண்ணை இரண்டு பெரிய சிறையா மீன்களோடு வந்தார். “உடைப்பு மதவு, தில்லை மேடை வாய்க்கால், வெள்ளை வாய்க்கால், தரவை எல்லாம் சனக்கூட்டம், பெருக்கெடுத்து ஒடும் வாய்க்கால்களால் குளத்து மீன்கள் எல்லாம் ஒடுகின்றன. கரப்புகளால் அடைப்போரும், கம்புகளால் அடிப்பாருமாகச் சனங்களுக்கு ஒரே வேட்டை. இதை வையுங்கள் நான் போயிட்டு வாறேன், என்று சொல்லி கொண்டே சென்று விட்டார் w
எனக்கும் வெளியில் போகவேண்டும் போல் இருந்தது. அதற்கு வாய்ப்பாக, “இந்த மீன்களை நாங்கள் என்ன செய்யிறது, குஞ்சியம்மாவிடம் சொல்லி விட்டு வா, “என்று சொல்லிக் கொண்டே சாக்கினால் செய்த சொக்குப்பாய் ஒன்றினை, மழைக்கவசமாகப் போட்டு விட்டார் எனது பாட்டனார்.
போகும்போது, குழை வெட்டிக் கழித்த பூவரசந்தடியொன்று முற்றத்தில் கிடந்தது. அதனைக் கையில் எடுத்துக்கொண்டு குஞ்சியம்மா வீடுநோக்கிச் சென்றேன். செல்லும் பாதை முற்றும் வெள்ளம் ஒடிக்கொண்டிருந்தது."காவோலைக்குடையும் கங்கு மட்டைச் செருப்பும் போட்டுக் கொண்ட சில சிறுவர்கள், காகித ஒடங்களையும், முருக்கஞ் செத்தல்களையும் மிதக்க விட்டுக் கொண்டிருந்தனர். இவர்களை கடந்து சென்ற என் முன்னால், ஒரு சிறிய வாய்க்கால் ஊடாக நீர் ஒடிக்கொண்டிருந்தது. அதனுள் அநேக கெளுத்தி மீன்கள் "கிளுகிளு’ என்று ஓடின. பெரிய மீன்களையும் துடுப்புகளையும் உடையன அவை. கொண்டு சென்ற தடியினால் தண்ணில் அடித்தேன். நான் எதிர்பார்க்காதவாறு ஒரு மீன் கரையில்

105 '* தில்லைச் சிவன்
விழுந்து மீண்டும் நீரில் புக எத்தனித்தது. குனிந்து பிடிப்பதற்குச் சொக்குப் பாய் தடையாய் இருந்ததால், காலால் கரைக்கு எற்றினேன். காலில் ஒரேமாட்டல் கெழுத்தி மீன்முள்ளு, விரல் இறை இடுக்குள் தைத்துவிட்டது. இழுத்துப்பார்த்தேன், மற்ற முள் கையில் குத்திக் கடுக்கியது. ஒன்றுஞ் செய்ய முடியவில்லை. காலில் மீனோடு கெந்திக் கெந்திப் போனேன். குஞ்சியம்மா பார்த்து விட்டா. ஒடோடி வந்து மீனை இழுத்துப்பார்த்தா. இழுக்க முடியவில்லை. என்னைத் தூக்கிக் கொண்டு போய், படுக்க வைத்தபின் எவ்வாறோ மீனையும் ஆளையும் வேறாக்கியபோது, கடுப்பு வலிப்பைத் தாங்க முடியவில்லை. எனது பாட்டனாருக்குச் செய்தி எட்டியது. விரைந்து வந்த அவர் என்னை வைத்தியநாதரிடம் கொண்டு போகப் புறப்பட்டார்.
வைத்திய நாதர் எமது ஊரின் மேற்கெல்லைக்காரன், நாரந்தனை அவரது ஊர். சிறந்த விடகாரி. கொடிய பாம்பின் விடத்தைக் கூடப் பார்வை ஒன்றால் நீக்கக்கூடியவர். தவத்தினாலும் செபத்தினாலும் கருடனை அழைத்துவிடத்தை நீக்குவாராம். கடித்த பாம்பினையே அழைத்து, தீண்டிய விடத்தை மீண்டெழுப்பிக்கும் ஆற்றல் உள்ளவர் என்றும் கேள்வி. தீவின் பல பாகங்களிலிருந்து பலர் வந்து விட வைத்தியம் செய்து செல்வர். விடந்தீண்டியவர் அப்போழுதே வைத்திய நாதரை நினைத்தாற்போதும், விடம் தலைக்கேறாது என்றுஞ் சொல்வார்கள். எமது ஊரைச்சுற்றி வேலணையிலும் பரிகாரி சிதம்பரப்பிள்ளை என்பவரும் ஒரு விடகாரிதான். வைத்தியநாதரிடம் செல்வது என்றதும், எனது கடுப்புச்சற்றுக் குறைந்தது போன்றிருந்தது. அவர் வேப்பிலையை மந்திரித்துக்குத்திய இடத்தில் தடவி, அடித்து எறிந்த பின், பச்சை எள்ளைச் சப்பத்தந்து, சப்பிய பின் சப்பிய எள்ளைக் குத்துவாயில் வைத்துக்கட்டுங்கோ எல்லாம் சுகமாய் விடும் என்று சொல்லி, அவ்வாறே கட்டியும் விட்டார்.
வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போதே, வழியில் அவிழ்த்து விடலாம் போல இருந்தது. இடுப்பு வலி எல்லாமே தீர்ந்து, பாட்டாவின் தோளில் இருந்து கீழிறங்கி நடந்தேன். பாதைகளில் புரண்டோடும் வெள்ளத்துள் கால்மிதிக்கக்கூடாதென்றதால் எனது பாட்டனார் என்னைத் தூக்கிக் கொண்டே நடந்தார்.

Page 55
அந்தக் காலக் கதைகள் 106
18. தேர்தல் வந்தது
}ச்சை மஞ்சள், சிவப்புப் பெட்டிகளுக்கு வாக்குச் சீட்டுப் போட்ட காலம். 1933 ஆம், ஆண்டென்ற நினைவு. சரவணை நாகேசுவரி வித்தியாசாலையில் மூன்றாந்தரம் படிக்கிறேன். என்னுடன் ஒத்த வயதினரும், மூப்பானவர்களும் சிறு குழந்தைகளுமான பலர், கூட்டங் கூட்டமாக பச்சை மஞ்சள் சிகப்புக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு, வீட்டுக்கு வீடாகப் போய் வருகிறார்கள். வீடுகள் தெருக்களில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பலவரகுமேடுகளில் இருந்தன.
பச்சைப்பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜெ! சிவப்புப்
பெட்டிக்கு ஜே! எங்கும் ஒரே ஜெ, கோசம் எல்லாரும் எல்லா
நிறங்களுக்கும் ஜே போட்டுக்கொண்டு, கொடிகளைத் தாங்கியபடி
வீடு வீடாய்ப் போய் வருகிறார்கள். வண்ணங்களில் வேறுபாடு
இருந்தாலும் வார்த்தைகளில் வேறுபாடில்லை. எல்லாருக்கும்
வெற்றிதான். “இன்னார் வாழ்க!, இன்னார் வாழ்க" என்று இல்லை. வீழ்க, ஒழிக கோசங்கள் அப்போது வழக்கத்துக்கு வரவில்லை. அண்ணனுக்கும் தம்பிக்கும், தகப்பனுக்கும் மகனுக்கும், மாமனுக்கும்
மச்சானுக்கும் இடையே போட்டி. யார் யாரை வீழ்த்துவது, ஒழிப்பது. வெறும் வேடிக்கைபோலத் தோன்றிய தேர்தற் களம் சூடுபிடிக்கத்
தொடங்கிய போதெல்லாம் பெரிய மனிதர்களால் சமாதானம்
செய்யப்பெற்றது.
“அடி பிடி வேண்டாம் பிச்சுப் பிடுங்கல் வேண்டாம், வெல்லப்போவது யாரானாலும், உறுப்பினராவது எம்மவர்தானே! நாடாண்டதும் கர்ணன், காடாண்டதும் கர்ணன் தானே” என்ற புண்ணியவான்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டது, சிவப்புப் பெட்டிக்கு ஜே! பச்சைப் பெட்டிக்கு ஜே! மஞ்சள் பெட்டிக்கு ஜே!

107 தில்லைச் சிவன்
சில அபேட்சகர்களின் வளவுகளில், கடலையும், தேனீரும் இதைக் கண்டு அடுத்த அபேட்சகர் வடையும் பாயசமும் இவ்வாறே அபேட்சகர் வீடுகள் எல்லாம் தண்ணிர் பந்தலானபோது வாக்காளப் பொதுமக்களுக்கு வேட்டைதானே. அங்கும் பல வர்ணக் கொடிகளுடன் எல்லா நிறங்களுக்கும் ஜே போடும் சிறுவர்களைத் தான் காண்கிறோம். யாரும் நிறங்களிற் பேதங்கண்டு புறந்தள்ளியதாக இல்லை. எல்லாப்பிள்ளைகள் பாடும், ஒரே வேட்டைத் திருவிழா தான்.
நான் ஒரு கைவண்டில் வைத்திருந்தேன். எனது அக்காவின் கைவண்ணத்தால், பச்சை சிவப்பு மஞ்சள் நிற ஒலைகளைக் கொண்டிழைக்கப்பெற்ற சில்லுகள். நாரினால் வளையம் போடப்பட்டது. பூவரசந்தடி அச்சுக்குத்தியோடு பனைமட்டைத்துலாப் பொருத்தி வண்ணப்பாய்த்தடுக்குப்பலகை அமைத்த அழகு வண்டில். அதன் துலாமட்டையில் மூன்றுநிறக் கொடிகளையும் கட்டிக்கொண்டு வீடு வீடாய்ப் போனேன். சிலர் இரும்பு வளையங்களை உருட்டிவந்தனர். சிலர் தகர மூடிகளை மட்டையில் ஆணியால் தைத்து 9 (5Lly 60TT.
என்னை ஒருவர் கேட்டார், “உனது பாட்டா எந்தப் பெட்டிக்குப் போடுவார்?" முதலில் பச்சைக்கென்று வாய்மூடா முன்னரே மஞ்சள் பெட்டிக்கு ஜேஎன்றேன். கேட்ட ஒருவர் சொன்னார் மகனுக்குத்தான் போடுவார் என்று, இடைமறித்த மற்றவர், இல்லை, மஞ்சள் பெட்டி மருமகனுக்கல்லவா, என்றார். எனக்கந்தக் கவலை இல்லை. சிவப்புப் பெட்டிக்கு ஜே! என்றவாறு அடுத்த வீட்டு வளவில் என் வண்டில் நுழைந்தது.
இது வேலணைக் கிராமச் சங்கத்துக்காக நடந்த பொதுத் தேர்தல். வயதுவந்து தலைவரிப்பணம் கட்டிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்கலாம். இதற்கு முன் எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை. படிப்பும் பணவசதியும் படைத்த சிலருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. இவர்கள் மணியகாரர் தலைமையில் கூடும் ஒரு கூட்டத்தில் தங்கள் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுவதன்

Page 56
அந்தக் காலக் கதைகள் 108
மூலம் தமது உறுப்பினர்களைத் தெரிவு செய்வர். இவ்வாறாகக் கரம்பனிலிருந்து அல்லைப்பிட்டி வரையுள்ள வேலணைக் கிராம. சபைக்கு, இருபது உறுப்பினர்கள் வரை தெரிவு பெற்றிருப்பர். இவர்களின் அக்கிராசனர் மணியகாரரே தான்.
அந்தக்காலத்தில் மணியகாரனின் வீடே தீவுப்பகுதியின் நிர்வாக மையம். பிறப்பு இறப்பு பதிவு, திருமணப்பதிவு, சுகாதார மருத்துவப் பிரிவு, கொடி கொட்டை வழங்கற்பகுதி, பயிர்ப்பாதுகாப்பு மராமத்து, நீதிநிர்வாகம் என்று இன்னோரன்ன அலுவல்களுடன், கிராமச் சபையின் தலைமையும் சேர, அவரின் பேச்சுக்கு மறு பேச்சில்லை. சட்டங்கள் செய்வதும் அமுல்படுத்துவதுமான அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை மாற்றக் கருதிய அரசாங்கம் கிராம சபைகளை நிறுவும் முகமாக நடைபெற்ற தேர்தல் இது.
தேர்தல் வந்ததும் வந்ததுதான் சமூகங்களிடையே அசூசையும் அவநம்பிக்கையும் ஒருவரை ஒருவர் நம்புந்தன்மையும் ஒழிந்தது. சந்தேகம் வலுத்தது. எந்தப்புற்றில் எந்தப் பாம்போ யார் கண்டார். அவ நம்பிக்கையால் ஒருவரை ஒருவர் பகைமை உணர்வோடேயே பார்த்தனர்.
பதவி மக்களுக்கு சேவை செய்வதற்கன்றித் தமது பணப்பெருமை, குலப்பெருமை என்பவற்றின் சிம்மாசனமானது.
உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்று பேசுவது சாணக்கியம். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைச் செய்வது ராசதந்திரம். எரியிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று பகையாளிகளிடம் சிண்டு முடிதலும் மித்திர பேதஞ் செய்தலும் தேர்தலோடு பிறந்த கலைகள். இவ்வண்ணமே நம்பிக்கை இன்மையில் கட்டி எழுப்பி வருகிறது வருகிறது என்ற வாக்களிப்பு நாளும் வந்தது.
எனது பாடசாயினுள்ளும், வெளிவீதிகளிலும் சனக்கூட்டம். வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் மட்டும் வளவுக்குள்ளே, வெளியிலே நின்ற ஒரு கூட்டத்தில் பரபரப்புக் காணப்பட்டது.

109 தில்லைச் சிவன்
அக்கூட்டத்தில் பல இளைஞர்கள். எனது பாட சாலையில் உயர்வகுப்பில் படித்தவர்களும் படித்து முடித்தவர்களும் இதில் அடக்கம். வயது வந்தும்,வாக்களிக்கும் தகுதியிருந்தும் வரிப்பணம் கட்டாதததினால் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களின் கொதிப்பு, எங்கும் கேட்டது. தமது சாதிக்காரரின் வெற்றியைத் தாமே தீர்மானிக்க உள்ளத் துடிப்போடு உசாவினர். விதானையாரின் அறிவிப்பு இதற்கொரு வழிகாட்டுவதுபோல அமைந்தது. வரிப்பணம் கட்டத் தவறியவர்கள், இப்பொழுதும் வரிப்பணம் கட்டினால் வாக்களிக்கும் தகுதி கிடைக்கும் என்றதுமே ஒரு பெரிய வரிசை சேர்ந்தது. வரிப்பணம் ஒரு ரூபா. அதனுடன் தண்டப் பணமும் சேர்த்துக் கட்ட வேண்டும். விதானையாரிடம் பல ரூபாக்கள் சேர்ந்தன. எல்லாம் அபேட்சகர் ஒருவரின் புதுச்சட்டைப்பையில் இருந்தே சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. வரிப்பணமும் குற்றப்பணமும் வசூலாக வாக்காளர் பட்டியல் நீண்டது. பலர் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
சிறுக சிறுக நேரமும் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது நேரம் நண்பகலுக்கு மேல். சனக்கூட்டம் வீதிகளிற் குறைவு. பாடசாலைக்கு உள்ளேயே வாங்குகளிலும் மேசைகளிலும் சுவர்களிலும் தரையிலுமாக நிற்கின்றனர். எல்லார் முகங்களிலும் படிபடப்பும் கோபமும் என்னவோ ஏதோவென்று நினைக்கின்ற வேளையில் களேபரம் மூண்டுவிட்டது. பேரிரைச்சலுக்குள் அடிபிடி. ஏன் எதற்கென்றுஅறிய அவகாசம் போதாது, வெளியே நின்றும் சிலநல்லாயுதங்கள் பாடசாலைக்குள் பறந்தன. சிலர் உள்ளே நின்றும் வெளியே வந்தனர். முகத்தில் பிரேதக்களை, தோல்வி என்று சொல்லாமற் சொல்லியது.
இவ்வேளையில் வேலிஓரத்தில் ஒதுங்கி நின்ற என்னை ஒரு கிழட்டுக் கரம் பற்றியது. வாடா என்ற கையோடு சென்றேன் “தேர்தல் சாதிச் சண்டையை மூட்டி விட்டது” என்றார் என் பாட்டனார்.

Page 57
அந்தக் காலக் கதைகள் 110
19. கவிதை பிறந்த கதை
1945 ஆம் ஆண்டு எஸ் எஸ் ஸி சோதனையில் தேறி ஆங்கிலம் படிக்க யாழ்நகர்சென்று, ஆங்கிலமும் இன்றித் தமிழுமின்றி இரண்டும் கெட்ட நிலையில் தட்டழிந்த காலம்.
மனித வாழ்வின் தேவைகளை மனங்கொண்டு, சாத்தியப்படாதவைகளில் எல்லாம் முயற்சித்ததுண்டு. இம்முயற்சிகளின் அதிதீவிரத்தை இலக்கியப் பயிற்சியும் என்னுள்ளே எனது எதிர்காலத்தைப் பற்றி இருந்த நம்பிக்கையும் தடுத்திருக்காது போனால், நான் எத்தனையோ சிறைக்கூடங்களைச் சந்தித்திருக்கக்கூடும்.
எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை எனது அடிமனதில்இருந்துகொண்டு எனது நண்பர்கள் காட்டிய பாதைகளின் அவலங்களைத் தவிர்த்து விடவே, பொழுது போக்காக எனது மனம் இலக்கியப் பயிற்சிகளை நாடியது.
இலக்கியப் பயிற்சி என்றபோது, பண்டிதக் கல்வியை அறியும் தொல்காப்பிய இலக்கணங்களையும், சங்கத் தமிழ் இலக்கியங்களையும், பார்த்துக்கூட இருக்கமாட்டேன். அக்காலப்பரப்பில் வெளிவந்து கொண்டிருந்த திராவிட ஏடுகள், நூல்கள், ஆனந்த விகடன், கல்கி,பொன்னி, கிராம ஊழியன் போன்ற சஞ்சிகைகளையும் இலங்கை ஏடுகளான வீரகேசரி, தினகரன் என்பவற்றோடு சுதந்திரன், ஈழகேசரி என்பனவும், வரதரின் "மறுமலர்ச்சியும் எனது இலக்கியப் பயிற்சிக்களங்களாகின. அக்காலப் பொழுதில் தோன்றி மறைந்த "புயல்”“உதயன்'சோதி”தமிழ்மணி” முதலிய சிறிய பெரிய ஏடுகளும் இந்து சாதனமும் ஒவ்வொருவேளை எனக்கு இடந்தந்தன.

111 தில்லைச் சிவன்
அடைய முடியாத எனது ஆசைகளும் கனவுகளும், அதனாற் பெற்ற தோல்விகளும், தோல்விகளால் பெற்ற விரக்தி வினையும் பிரதிபலிக்கக்கூடிய பல கவிதைகளையும் கதைகளையும் சஞ்சிகைகளிற் கண்டு, அவை எனக்காகவே எழுதப்பெற்றனவாக நினைத்ததும் உண்டு.
இவ்வாறாகவே எனது பசிக்கு இலக்கியம் தீனிபோட்டுக் கொண்டிருந்த காலவேளையில், எனது தோல்வி களுக்கும், ஏமாற்றங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வடிகாலாகச் சில கவிதைகளையும் கதைகளையும் எழுதத்தொடங்கினேன். அதன் முதற்சுற்று, அந்தாதியைப் பார்த்து அந்தாதியும் விருத்தத்தைப் பார்த்து விருத்தமும் வெவ்வேறு பொருள்களில் பாடிய போலிக்கவிதைகள். எனது சகமாணவத்தோழர்கட்குப் பாடிக்காட்டி மகிழ்ந்தவைகள். அவைகள் தாம் வகைகள் பல. நடராசா காதற்காவியம் இளநீர்ப் புராணம் என விரியும். இவை இவ்வாறாக அடுத்த சுற்றில் முதன் முதலாக மறுமலர்ச்சி திங்களேட்டில் அச்சுருப்பெற்றகவிதை, "பட்டணத்து மச்சினி'.
எனது ஆசைகளும் உணர்வுகளும் வெளிக்காட்ட முடியாத
அப்போதையநிலையில், முயற்சிகளின் உந்துதலினால், ஒரு சவாலாகவே சில கவிதைகளும் கதைகளும் உருவாகியதுண்மை.
அக்காலத்தில் நான் எழுதிய கவிதைகளும் கதைகளும் காதலையே தொனிப் பொருளாக கொண்டிருந்தன. அடைய முடியாதவைகளை அடைய முயன்று, தோல்வியைத் தழுவிய விரக்தியால் படைக்கப்பெற்றவை. இவ்வாறான கவிதைகளில் “பட்டணத்து மச்சினியும்', கதைகளில் “பவானியும் “ பலரால் பாராட்டப்பெற்று, இன்றும் அவற்றின் சிறப்பு மாறாது பேசப்படுகின்ற போதும், அன்று அவை சில எதிரிகளையும் தேடித்தந்தது. இவ்வெதிரிகளுக்குப் பயந்து, சில சந்திப்புக்களைத் தவிர்த்ததும் நினைவில் வருகிறது.
இலக்கியம் எதார்த்தமாக இருக்க வேண்டும், கற்பனைப் புழுகுகள் காலத்துக் கொவ்வாதன என்று சிலர் சொல்வர்.

Page 58
அந்தக் காலக் கதைகள் 112
உண்மையைச் சொன்னால் உடம்பு நோகும், என்பதை அறிந்து சொன்னார்களோ என்னவோ! ஐம்பதுகளில் சில இலக்கியவாதிகள் எழுத்துக்களில் எதார்த்தம் இருக்க வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நின்றார்கள். இப்போது உள்ள சிலர் இலக்கியத்தில் எதார்த்தமா? கூடவே கூடாது என்று கூறுகிறார்கள்.
ஒரு கதையையோ கவிதையையோ எழுதும்போது, முதலில் வருவது அதற்குரிய நிலம். நிலத்தின் மரங்கள் மிருகங்கள் பட்சிகள் மக்கள் சமூகம் என்பவும், அவைகள் ஒன்றினுக்கொன்றுள்ள தொடர்புகளும், வேர்களும் சூழல் அனுபவத்துக்குட்பட்டனவாகவே அமையும்; இன்று ஒரு கதாநாயகனின் நற்செயல்களை மட்டும் கூறினால் அது கதையாகாது. அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் அவற்றிற்கு காரணமானவர்களையும் அடையாளம் காட்டுவது எதார்த்தமாகத்தான் இருக்கும். படிப்போர், வேறு ஊரவர்களாக இருந்தால் நல்லகதை என்று புகழக்கூடும். ஆனால் கதை தோன்றிய இடத்தில் கதாசிரியன்பாடு.? நிர்க்கதி, நான் உண்மையைத்தான் எழுதினேன் என்று வாதிட்டு ஆவதென்ன? எதார்த்தவாதி வெகுசன விரோதி என்பது எதார்த்தம் வேண்டாம் என்பவர்களின் கூற்றாயினும் எனது பட்டறிவும் இக்கருத்துக்கு இயைபுடையதாகவே இருக்கிறது.
இவ்வாறானதொரு காலகட்டத்தில், படித்தவர்கள், பண்டிதர்கள், எழுத்தாளர்கள் என்ற மட்டத்தில், எனக்குத் தெரிந்த சிலரின் நட்பையும் உதவியையும் பெற விழைந்தேன். அவர்கள் என்னை விரைந்தேற்றுக்கொள்வார்கள் என்று நம்பினேன். ஆனால் அவர்கள் எனக்கு வெகு தூரத்தில் நின்றார்கள். அவர்களிடத்தில் பட்டக்கடதாசி இருந்தது. சமூக அந்தஸ்து இருந்தது. மனம் இருண்டு கிடந்தது. :
பாட்டென்றால் பண்டிதருக்கே உரிமை என்றிருந்த என்னூர்ப்பண்டிதர் சிலர், சாவீடு, (மரண வீடு) திருமண விழா போன்ற பொதுவைபவங்களில் எனது கவிதைகளைத் தமது மட்டத்தில் விமர்சிக்கவும் செய்தனர். அவர்களின் விமர்சனங்களில் முக்கியமாகக் கூறப்பட்டது இலக்கணத்தரம் குறைவென்றதே.

113 தில்லைச் சிவன்
கொஞ்சமாவது இலக்கணம் படித்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாக வெளிப்படுத்தினர். அவர்களது கூற்றை அப்படியே கெளவிக் கொண்டு வந்த சிலர், பண்டிதர்களின் கருத்துக்களை எனக்குக் கூறி வந்தனர். அவர்களின் கூற்றைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை.
கிழமைதோறுமில்லாவிட்டாலும், திங்களுக்குக் குறைந்தது . எனவே இரண்டு கவிதைகளாவது வெளிவந்த காலமது. இதனைச் சுட்டிக்காட்டி எங்கே உங்கள் பண்டிதர்களின் படைப்புக்களைக் காணவில்லையே? என்று கேட்டபோதுதான், பாட்டுப் பண்டிதர்களின் சொத்து என்று சொன்னவர்கள், அவர்களின் ஆக்கத்திறனை அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வகையினராகவே, பல எழுத்தாளர்களும் இருந்தார்கள். இரண்டொரு கதைகளை எழுதிய உடன் கடிதத்தலைப்புகளை அச்சிட்டு எழுத்தாளர், கவிஞர், என்று போட்டுக்கொண்டு திரிபவர்கள், சக எழுத்தாளர்களின் கதைகளையோ கவிதைகளையோ படிக்கப் பார்த்தேன் என்று கூடச் சொல்ல மாட்டார்கள். அவர்கள் சிலரிடமிருந்து பாராட்டைப் பெறமுடியாது போனது போலவே, வசையையும் பெற முடியாது போனது ஓரளவுக்கு ஆறுதலான விடயம்.
தனிப்பட்ட முறையில் இத்தகைய ஒருவரின் வாழ்க்கை முறை வேறாக இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பண்டிதரும் நானும் ஒரு மதவின் மேலிருந்து சம்பாசித்துக்கொண்டிருந்தோம். நேரம் இரவு எட்டு மணியிருக்கும். அப்போது எனது கதையில் வந்த பெண் கதாபாத்திரத்தைப் பற்றி பேச்செடுத்தார். நான் அதிர்ந்து போனேன். என் கதாபாத்திரத்தின், பாதாதிகேசவர்ணனையை அவர் செய்த அளவை நோக்கினால், எனது வர்ணணைநூற்றுக்குப் பத்துத் தானும் தேறாது. இவ்வாறே அவளின் கண்களின் தோற்றத்தை, முகச்சாயலை, முலையின் எடுப்பை வர்ணித்து முடிக்காமலே உனக்கும் அவளுக்கும் எப்படி உறவேற்பட்டது என்று கேட்டுக் கொண்டே எனக்குப் பக்கத்தில் நெருக்கமாக அரக்கி வந்தார்.

Page 59
அந்தக் காலக் கதைகள் 14
அவரது கை எனது முதுகை நீவிக்கொண்டிருந்தது. நான் கூச்சப்பட்டேன். அந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு ஒரு பேர் தேவைப்பட்டதால், அந்தப்பெயரைக் கையாண்டேனே தவிர, அந்த பேர்வழிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்போதைய நிலையில் உண்மையைச் சொல்லிப் பண்டிதரை நம்ப வைக்க முடியாது, என்று தெரிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே இது சும்மா வெறும் கற்பனைக்கதை என்று சொன்ன நேரத்தில் பண்டிதரின் கை எனது உணர்ச்சியைத்தொட்டு விட்டதுதான்,மதவில் இருந்து கீழே குதித்து விட்டேன். பண்டிதர் அருண்டு போனார். என்னடாப்பா! இவ்வளவு கூச்சமா, என்று அவர் எழ, நான் என் வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தேன்.

115 தில்லைச் சிவன்
20. விசாலாட்சி விசுவநாதர் திருமணம்
அந்ேதக்காலத்தில் கல்விமான்களுக்கு, அதாவது படித்தவர்களுக்குச் சமூகத்தில் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தக்காலத்து வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலார்கள், சட்டத்தரணிகள் என்ற தொழில் சார் படிப்பாளிக்கு உள்ள மதிப்பு வேறு, அந்தக்காலத்தில் தமிழும் நிகண்டும் புராண இதிகாசங்களும் படித்தவர்களுக்குள்ள மதிப்பு வேறு. இரண்டிற்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள பேதம் என்பதை விடக் குறுணிக்கல்லுக்கும் குன்றுக்கும் இடைப்பட்ட தூரம் என்பதே பொருந்தும். இந்தக்காலத்துத் தொழில் சார் படிப்பாளிகளுக்குரிய பெறுமதி, மரியாதை பழியஞ்சிச்சேர்க்காத பணத்தில் ஒரு பத்தோ இருபது; போகலாம். இதன் மேல் இவர்களின் சமூக அந்தஸ்து பங்கள காடு வீடு என்று பணம் பண்ணுவதோடமையும்.
அந்தக்காலத்தில் கல்விமான்கள், சமுதாயத்தின் வேர்களாக, இருந்தனர். சமுதாயம் எந்த வகையிலும் ஆட்டங்காணாத இருப்பு நிலைபற்றிய விளக்கமும் ஆளுமையும் கல்விமான்களிடமிருந்தது. அவர்கள் விலை கொடுத்துப் பெற முடியாத பண்டம். தட்சணையும், காணிக்கையுங் கொடுத்துப் போற்றப்படுபவர்கள். சமுதாயம், கட்டுக்கோப்பையும் பண்பாட்டையும் இழந்து விடாமற் பாதுகாப்பதே அவர்களின் தொழில். பழிசுமந்தெய்தும் ஆக்கங் கருதாமையால் பணமற்ற வறிஞரே எனினும் அருளோடு மிகும் செருக்குடையவர்கள்.
இவற்றின் தொழிற்பாடாகவே, கோவில்களையும் பள்ளிகளையும் தளமாகப் பற்றித் தம் கடமைகளை அக்காலக்கல்விமான்கள் செய்தனர். சொல்லிக் கொடுக்கும். கல்விக்குக் கைநீட்டிக் காசுவாங்குதல் பாவச் செயல் என

Page 60
அந்தக் காலக் கதைகள் 116
விலக்கியவர்கள். இவற்றின் ஊதியமாக இவர்கள் பெற்றது சமுதாயத்தின் அன்பையும் பணிவையுமே. அன்றைய சமூகம் குரு, ஆசிரியர், வைத்தியர், புராணிகர் என்ற பற்றுக்கோடுகளில் தங்கி வளர்ந்தது. * ۔
அந்தக்காலத்தில், அதாவது இன்றைக்கு அறுபதாண்டு களின் முன், எமது சிறிய கிராமத்தில் நான்கு ஆசிரியர்களும் இரண்டு நொத்தாரிசுமாரும் இரண்டு சித்த ஆயுர்வேதவைத்தியர்களும் இரண்டு புலவர்களும் புராணிகர்கள் சிலரும், சில ஏடு வாசிப்பவர்களும், சில அரச உத்தியோகத்தர்களும் படித்தவர்கள் என்ற சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தனர். இவர்களே வழிகாட்டி களாகவும் நீதிமான்களாகவும், நன்னடத்தை அதிகாரிகளாகவும் இருந்து ஒழுக்கம் பண்பாடு முதலியவற்றைக் காவல் புரிந்துள்ளனர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
இந்த அறிஞர்களும் சமூகப் பெரியார்களும் சந்தித்துக் கலந்துரையாடவும் வழிபடவும் கூடிய பொது இடங்களாகக் கோவில்களே இருந்தன.
நானிப்போ சொல்லப்போகும் கதைக்கு ஆதாரகளமாக இருந்தது. பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில். கோவில் என்றதும் என் நினைவுக்கு வரும் செய்தி ஒன்றுண்டு. பள்ளம்புலம் முருகமூர்த்தி கோவில் கந்தபுராணம் படிக்கும் மடமாகவே தோன்றி முருகமூர்த்தி கோவிலாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற ஒன்று. இவ்வாறாகக் தோற்றம் பெற்ற முருக மூர்த்தி கோவிலில் கந்தபுராணம் படிப்பு முடிந்ததும் குருபூசை அன்னதானம் என்பனவும் தொடர்ந்து பெரிய" புராணப்படிப்பு, நாயன்மார் குருபூசை என்ற நிகழ்ச்சிகளும் பல ஆண்டுகளாக நடந்து வந்தன. இவற்றினை நடத்திவைக்கச் சில புலவர்களும் புராணிகர்களும் பொது மக்களுக்குத் துணையாக இருந்தனர்.
இங்கே வழமையாகப் புராணங்கேட்பவர்களில் ஒருவர் விசுவநாதர். இளைஞரான போதும் எழுத்து வாசிப்பு இல்லாததற்குறி. ஆனால் கற்றலில் கேட்டல் நன்றென்ற மொழிக்கு இலக்கியமாகி,

117 தில்லைச் சிவன்
செவிச்செல்வத்தை மிகுதியாகப் பெற்றவர். கந்தபுராணப்பாடல்கள் பலவற்றையும் உரைகளையும் செவிவழியாகக் கேட்டு மனப்பாட மாக்கியவர்.
முன்னே மழித்த தலைக்குடுமியும், காதில் கடுக்கன் நெற்றியில் திரிபுண்டாம், கெளமீனத்தின் மேல் நாலுமுழ வேட்டியுடுத்து, ஒரு ஈரிழைத் துவாயினால் பார்த்துக்கொள்ளும் தோற்றப்பிரிவு இவரது.
இவருக்கு ஒரு காதல். ஒரு தலையாகவே வளர்ந்து கொண்டிருந்தது. எமது ஊரில் நிலபுல வசதியுள்ள ஒரு குடும்பத்தில் ஒரே பெண் நல்ல அழகி. தாழம்பூ வெள்ளை ரவிக்கை போட்டு, கச்சுப் புடைத்தெழும் தனங்கள் மேலும் கீழும் அசைய அரையில் சுற்றிய சிவப்புக் கொரநாட்டுக் காடுவெட்டிச் சீலையால் முகத்தில் வடியும் வெயர்வையைத் துடைத்துத் துடைத்து, உலக்கையை வலக்கைக்கும் இடக்கைக்கும் மாற்றி மாற்றி நெல்லுக்குத்தும் அழகினை வேலிக்கு மேலால் எட்டியெட்டிப்பாத்துக்கொண்டு போனாற்போதுமா?இவள்ை தன் மனைவி ஆக்க வேண்டும் என்று துணிந்தார். துணிந்ததற்குத் துயர் எது வழியொன்று தெளிவாகக் கண்டார்.
அந்தப்பெண்ணின் பெயர் விசாலாட்சி. விசுவநாதருக்கு விசாலாட்சி பெயர்ப்பொருத்தமும் கூட. புராணம் தெரிந்தவரல்லவா? அடிக்கடி தனிமையில் செல்லும் போதெல்லாம் விசுவநாதர் விசாலாட்சி என்று சொல்லுவதால் மனது இனிக்கும் போதும், விசாலாட்சி வீட்டுக்கு வடக்கு புறமாக உள்ளது குட்டியாச்சி வீடு. குட்டிஆச்சி விசுவநாதருக்கு நெருங்கிய உறவு. அதனாலும் விசாலாட்சி அம்மன் தரிசனத்தை வேண்டியும், விசுவநாதர் குட்டியாச்சி வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தார். குட்டி வீட்டுக்குப் போகும் ஒவ்வொருவேளையிலும் ஒரு பெரிய புத்தகத்தைக் கையிலோ கமக்கட்டுக்குள்ளோ வைத்துக் கொண்டு போவார். வேறொரு நோக்கத்தோடு, கைக்கலங்காரமாகப் புத்தகத்தைக் கொண்டு செல்லும் இவரை, எவரும் எழுத்து வாசனை அற்றவர் என்று அறிந்திருக்கவில்லை. அதனால் தம்பி நல்லபடிப்பாளி என்ற கருத்தும்
9

Page 61
அந்தக் காலக் கதைகள் 118
ஊரில் இருந்தது. கற்றாரைச் சேர்ந்தொழுகும் சிறப்பும் இவரிடம் இருந்தது. அந்தக்காலத்தில் தருமை ஆதினத்தில் சைவ சிந்தாந்தம் படித்த வைத்தியர் வே. சோமசுந்தரம் சரவணையூர்ப்புலவர் ஆ. தில்லைநாதர் என்போர் இவருடன் நெருக்கமானவர்கள் என்ற வகையில் அவர்களைப் போலவே தம்பியும் புராணப்படிப்பிலும் பயன் சொல்வதிலும் வல்லவர் என்ற கருத்தினால் குட்டி வீட்டார், தம்பி கையிற் கொண்ட புராணத்தைப் படிக்கும்படி வற்புறுத்துவர்.
அதற்காக வீடு பெருக்கிச் சுத்தஞ் செய்து, சாணித்தண்ணிர் தெளித்து சாம்பிராணித் தூபமிட்டுக் குத்து விளக்கும் ஏற்றி வைத்துத் தம்பியின் முகத்தை அங்காந்து பார்த்திருப்பர்.
விசுவநாதரை ஊரில் எல்லாரும் தம்பி என்றே அழைப்பதற்கு வேறொரு காரணமும் இருந்தது. அவ்வயலில் உள்ளவர் கட்டுக்குடிதண்ணிர் அள்ள ஒரே ஒரு கிணறு தான் இருந்தது. அக்கிணறு விசுவநாதரின் வளவினுள் இருந்ததால் எல்லாரும் கிணற்றடித்தம்பி என்றே சொல்வர்.
தம்பிக்குப் புராணப் புத்தகத்தைப் படிப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஒருபக்கத்தைத் திறப்பார், இன்னொரு பக்கத்தையும் பார்ப்பார். ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்ததைப் போல மேலும்கீழும் பார்த்து விட்டுத் தனக்குப் பாடமான பாடல்களைக் கரகரப்பிரியா இராக ஆலாபனையுடன் பாடுவார். பதம் பிரிப்பார், பொருள் சொல்லுவார், அருகில் இருப்பவர்கள் அநேகமாகப் பெண்களும் பிள்ளைகளும், வாயைப் பிளந்தபடி அங்காந்து கேட்டுக் கொண்டிருக்க, உற்சாகம் மேவிடும். மேலுஞ்சில பாடல்களைப் பாடி வியாக்கியானமுஞ்செய்வார். “இன்னஇடத்தில் கந்தன் கிழவனாக வந்த வள்ளியின் கையைத் தீண்டினார். வள்ளி கோபித்தாள். சுடுமொழிகளைக் கூறினாள். நல்ல வேளையாகப் பிள்ளையார் யானையாக வந்தாரோ இல்லையோ வள்ளி ஒடிப்போய் கந்தனைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். யானை வராவிட்டால் வள்ளி திருமணம் நடந்திருக்காது. கந்தசாமியும் ஆவடியிலோ அரசடியிலோ காவல் இருக்க வேண்டியதுதான். "இப்படியே அவர் வியாக்கியானம் போகும்.

119 தில்லைச் சிவன்
ஊமையன் கூட்டத்தில் உளறு வாயன் பேச்சாளி ஆனவாறு விசுவநாதரின் சவடால் வியாக்கியானங்களை, வேலிப்புறத்தில் நின்று விசாலாட்சி அம்மையார் கேட்டுக்கொண்டிருப்பது ஒருத்தருக்கும் தெரியாது. விசுவநாதர் படிக்கத் தொடங்கும்போதே குட்டி வீட்டுக்குள் படிப்புக்கேட்கப் புகுந்த விசாலாட்சியின் தாயார்,வேலிக்கடப்பைக் கடந்து கொண்டு தனது வளவுக்குள் கால் வைத்தாள். வேலிக்குள் நின்ற விசாலாட்சி திடுக்கிட்டு விட்டாள். உடனே சமாளித்துக் கொண்டு, தம்பி நல்ல இராகமாகப் படிக்கிறார் என்று சொல்லிக்கொண்டே, தாயின் பதிலை எதிர்பார்த்தாள் "ஆமாடி நல்லாகப் படிக்கிறார். இந்தப்பெரிய புராணப்புத்தகத்தைத் திறப்பதும் பாடுவதும் பயன்சொல்வதும் அவருக்கு அத்துப்படியாகப்போச்சு. ஆனால் கோவிலில் இவருக்கு ஏடு கொடுக்கமாட்டார்களாம், இவர் கேட்பதுமில்லையாம். ஏனென்றால் இவர் மற்றப்படியான், மச்சம்மாமிசம்பாவிக்கிறதை எல்லாரும் தெரிந்திருந்ததால், இவருக்கு அந்த வாய்ப்பில்லையாம், என்று தம்பி சொல்லுது” என்று கூறியதாய், “தம்பி உன்மேல கண் வைத்திருக்கு என்று குட்டி ஆச்சி சொன்னா, எனக்கும் அது நல்லதாகத்தான் படுகுது”, என்று கொண்டே மகளின் முகத்தைப் பார்க்க, ‘சும்மா போ நீ அப்பு இதற்குச் சம்மதிக்க வேண்டுமே!’ என்று விடையை அப்புவிடமே விட்டு விட்டாள் விசாலி.
தாய்க்கும் மகளுக்குமிடையில் நடந்த உரையாடல் குட்டிக்கு எட்டவே, அது தம்பியின் கருத்துக்கு விடப்பெற்றது. தம்பிசிந்தித்தார். விசாலியின் தந்தை கந்தையர் ஒரு குடிகாரர். தினமும் வாடிக்கையாகக் கணபதியின் வீட்டிற்குள் கள்ளுக்குடி, குடிகாரனுக்கு ராங்கியும் அட்டகாசமும் கூட அத்தோடு ஊரின் செல்வமும் செல்வாக்கும் கோரத்திமிர் கூடியவர். நேரடியாகப் பெண் கேட்டுப்போனால் தூக்கி எறிந்துதான் பேசுவார். இதனால் வாக்குவாதம் கூடச் சம்மந்தம் விட மந்தமாகவும் கூடும். இப்படியாகச் சிந்திந்தபோது கள்ளுக்காரக் கணபதியின் நினைவு வந்தது. தம்பியின் கிணற்றடி வளவில் உள்ள இரண்டு பனைகளை நெடுங்காலமாகச் சீவிக்கொண்டு வாறவர் இந்தக் கணபதி. இதற்காக விசுவநாதர் ஒரு ரூபாதானும் பெற்றதில்லை. இதைச்

Page 62
அந்தக் காலக் கதைகள் 120
சாட்டாக வைத்துக் கணபதியுடன் கதைத்துக் கந்தையரின் நோட்டம் பார்க்க நினைத்தார் தம்பி விசுவநாதர்.
ஒருநாள் முட்டி, தளநார் கத்திக்கூட்டோடு தனது பனையில் ஏறப்போன கணபதியைத் தருணம் பார்த்துக் கூப்பிட்டார், விசுவநாதர். “என்ன கணபதியர் கவனிப்பில்லை” என்ற பீடிகையோடு, இவர் கணபதியை நோக்கிச் செல்ல, கணபதியும் “தம்பி பிறகால கூப்பிடுகுது” என்ற ஆதங்க உரையோடு, தம்பியை நோக்கி வர, நீர் எத்தனை வருடமாக இந்தப் பனைகளைச் சீவுகிறீர்! இதற்காக எமக்கு என்ன தருகிறீர்”என்று கேட்ட தம்பிக்குக் "கேட்டால் காலை மாலை ஒவ்வொன்று ஊற்றிவைப்பன் தானே. தம்பி குடிக்கமாட்டுது என்றால், நான் என்ன செய்யிறது. பணக்காரத்தம்பிக்குக் காசொரு ஐந்து பத்தைக் கொடுத்து பகிடி பண்ணுறதே,” என்று கொண்டு வேலிவரம்புக்கரையில், அமரப் பக்கத்து வரம்பில் தம்பியும் அமர்ந்து கொண்டார்.
“அது கிடக்கட்டும் கணபதியர், எங்கட கந்தையர் இருக்கிறாரே உன்ர வாடிக்கைகாரர், அவருக்கும் உனக்கும் எப்படி நல்லாப்போகுதே?”
“பறுவாயில்லை, உள்ளதெல்லாம் ஒழிக்காமல் மனம் விட்டுப் பேசுவார். இந்த முறை வயல் நல்ல விளைச்சலாம். எனக்கும் இரண்டு புசல் தந்தார். தோட்டமும் நல்ல பலிப்பு வளமான நல்ல காலம் போல இருக்கு. பெட்டைக்கும் ஒரு பெடியனைப் பார்த்துக் கட்டி வைக்க வேண்டும் என்றுஞ் சொன்னார். நானும் நல்ல காலம் வரயிருக்க எல்லாம் வரும் என்று வாயோரையாய் சொல்லி வைத்தன்”
'மாப்பிள்ளைமார் இன சனத்துக்க இல்லாமலே போச்சுது! பார்த்துச் செய்யலாந்தானே. பெட்டையும் மூக்கும் முளியுமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். தாயைத் தெருவில் கண்டால் மகளை வீட்டிலயா பார்க்க வேண்டும்’
பெட்டை படிச்ச மாப்பிளையாய் வேண்டுமாம், இங்க எங்க படிச்சமாப்பிள்ளை இருக்கு. ஒரு இராகம் பாடமாட்டார்கள். புராணம் படிக்க மாட்டுதுகள். ஒரு தேவாரம் பாடச் சொன்னால் இடத்தைக்

காலிபண்ணி ஒட்டம் பிடிக்குதுகள். இப்படி இருக்கயிக்க ஏன் தம்பி, உனக்கதில கருத்திருந்தால் சொல்லு உடனே செய்து வைக்கிறான்.”
“இல்லை அண்ண! அப்படி விரும்பினாலும் அதுக்கு ஆச்சி அப்பு சம்மதிக்க வேண்டுமே. தந்தையாரே ஒரு பேய்க் குடிகாரன். பேச்சு வார்த்தை நறுக்கோ என்னவோ எதுக்கும் ஒருக்கால் ஆச்சியோட கதைச்சுக் சொல்கிறேன். எனக்கென்னால் விருப்பந்தான். வாய்விட்டால் தோல்வி வரக்கூடாது. கணபதியர் உன்னை நம்பித்தான் சொல்கிறேன். விடயம் முடிகிற வரையில் வெளியில் கதை வரக்கூடாது. சீதனத்தைப் பற்றி நான் கேட்கவில்லை. உள்ளது பிள்ளைக்குத்தானே! அதுவும் ஒரே பிள்ளை , அதுகிடக்க நகைநட்டுகளும் ஆயத்தமாய் செய்திருக்கென்றும் கேள்வி.
நானும் முந்தாநாள் புகையிலை விற்றனான். ஆயிரத்து நானூறு தேறிச்சு. பத்துப்பவுணில தாலிக் கொடி செய்விக்க இருக்கிறன். இதில் பாப்பம் கணபதியற்ற கெட்டித்தனத்தை. ஒரு ஐஞ்நூறுரூபா செலவுக்கு வாங்கித்தரப்பார். அதுகுஞ்சரியென்றால் இன்று ஆவணி இரண்டோ மூன்றுதானே! இந்த மாதமே நல்ல நாளொன்றில் தாலியைக் கட்டினாற் சரி. செலவுசித் தாயம் அதிகம் இல்லாமல், ஒண்ணுக்கை ஒன்று எல்லாத்தையும் கதைச்சு நல்ல முடிவோட வா.
இந்தமாதம் தவறினால் அடுத்த மாதம் நான் பிறந்த மாதம், அது பொருத்தமாயிராது. இந்த மாதத்தில் இன்னும் இருபத்தாறு இருபத்தேழு நாட்களிருக்கு. இனி எல்லாமே உன்னைப் பொறுத்தது தான். கணபதியர் நாளைக் காலையிலா இல்லை இன்று இரவுக்கே முடிவைச் சொல்லு, உன்னை நம்பித்தான் எல்லாஞ் செய்யிறன்.
“சரி சரி இரவு சந்திப்பமே” என்று சொல்லிக் கொண்டெழுந்த கணபதியர் “என்னடா சிக்கலில் மாட்டிக் கொண்டேனா! சும்மா வாயைக் கொடுத்துப் பார்த்தன், பெடியன் எல்லாஞ் சரி தாலியைக் கட்டிவை என்று நிற்கிறான். சரிசரி கந்தையர் என்ன மிஞ்சி விடவா போகிறார். பெடியன்ர படிப் பென்ன பாட்டென்ன குட்டி வீட்டுப் பக்கம் குரல் கேட்கும் போதே நினைத்தனான், பெடியனுக்கும் கந்தையர்

Page 63
அந்தக் காலக் கதைகள் 122
மகளுக்கும் பொருத்தம் என்று. இப்ப அந்தக் காரியத்தைநானே கேட்க வேண்டி வந்திட்டுது. குழை அடிக்கிற அடியில கந்தையரைத் துவண்டு விழப் பண்ணா விட்டால் நான் காத்தான்ர கணபதியில்லை, இன்றைக்கு இதுதான் முதல்வேலை” என்று தனக்குள் தானே பேசிக் கொண்டு மரத்தில் ஏறினார் கணபதி. 's
சொல்லி வைத்தாற்போல அடுத்த சுபமுகூர்த்தத்தில் தடபுடலாக இல்லாவிட்டாலுஞ் சுற்றஞ்சூழ, விசுவநாதர் விசாலாட்சியம்மாள் திருமணம் இனிதே நிறைவேறியது. சீதன உறுதி முடித்தல் அவசியம் இல்லை என்ற விசுவநாதர் திருமணப் பதிவையும் தந்திரமாகத் தள்ளி வைத்துவிட்டார். நாலுபேருக்கு முன் தன்தற் குறித்தனத்தை ஏன் காட்டுவான் என்ற நினைவு.
படுக்கைத் தலை மாட்டில் அந்தப் பெரிய கந்தப்புராணப் புத்தகம். அதை எடுத்துத் திறந்து பார்த்த விசாலாட்சியார் அதுனுள் ஒரு கடதாசித் துண்டைக் கண்டெடுத்தார். அக்கடுதாசி நிறைய வரிசை வரிசையாகக் க. விசுவநாதர் எழுதப்பெற்ற கோணல் எழுத்துக்கள்.
“என்னண இது” என்று கேட்ட விசாலியைப் பார்த்து "இவைதான் இ னி நீ பாடமாக்க வேண்டிய மூலமந்திரம்” என்றாரே என்ன! V

123 * தில்லைச் சிவன்
21. பாஞ்சாலி
அந்தக் காலத்தில் எம் தீவினர் பலர் தபுதாரன்களே. பெண்ணியல் நோய்களாலும், பிள்ளைப் பேறுகளின் போதும் மரணித்த பெண்கள் பலர். இன்று போல் அன்று மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. ஒவ்வொரு பிள்ளைப் பேற்றின் போதும், தாய் மரண வாய்க்குப் போய் மீண்டுவருவது ஒரு அதிட்டமே. இவ்விதமே பெண்களின் மரண விகிதம் அதிகரித்ததால், பலர் தபுதாரன்களாவதும், மீண்டும் தார தாம்பத்யம் கொள்வதும் சதாரண நடைமுறை.
இவ்வண்ணம் இன்றிச் சில ராமர்களும், இருக்கத் தான் செய்தனர். பல தசரதர்களுக்கு மத்தியில், தசரசதர்களுடைய ராச்சிய பரிபாலனங்கட்கு ஒத்தாசையாகப் பல மனைவியர் தேவைப்பட்டனர். சம்பளம் கோராத, நம்பிக்கையுள்ள ஊழியர்கள் என்பதால் மனைவியர் பலர் இருப்பது வாழ்க்கைக்கு வசதி. சில மேட்டுக் குடியினர் வைப்பாட்டிகள் வைத்திருப்பதை கெளரவமாகவும் வைப்பாட்டி இல்லாதிருப்பது அகெளரவம், என்றும் கருதிய காலம் அது.
பொருளாதார நலன்களில் மனைவிகளும் பிள்ளைகளும் உதவி புரிந்ததால், வசதி வாய்ப்புடன் வாழ்ந்த குடும்பங்கள் ஆங்காங்கே இருக்கவுந்தான் செய்தன. அக்கால விவசாய சமுதாயத்தில் ஆடுமாடுகள் மேய்த்தல், பராமரித்தல், வயல்வேலைகள் செய்தல், கறிப்பாட்டுக்குக் கடலை போதல், குத்துதல், இடித்தல், சமைத்தல் என ஏகப்பட்ட வேலைகள். ஏழை எளியதுகளால் சம்பளம் கொடுத்து வேலை செய்விக்க முடியாது. முடிந்தாலும் முதலாளிகளுக்குக் குடிமை அடிமைகளாய் இருப்பவர்கள் சாதாரண மக்களுக்கு வேலை செய்ய முன்வரமாட்டார்கள். இந்த நிலைபரத்தில் ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் வேலை செய்தாற்றான் குடும்ப வண்டியைச் சீராக ஒட்ட முடியும், என்ற நிலையில் ஒருவன் பலபெண்களை முடிக்க வேண்டியது அவசியமாகவும் இருந்தது. பலபிள்ளைப் பெற்ற குடி பாழ் போகாது என்றுஞ் சொல்வர்.

Page 64
அந்தக் காலக் கதைகள் 124
மனைவி இறந்தபின் கணவன் மறுமணம் செய்வது போல கணவன் இறந்தபின் மனைவியும் மறுமணம் செய்து கொள்வதுண்டு. இதனை ஆட்சேபிப்பவர் இல்லை, அண்ணன் இறந்து போனால் அண்ணன் பெண்டில் தம்பியையும், தம்பி இறந்து போனால் தம்பி பெண்டில் அண்ணணையும் முடிப்பது, சாதாரண வழக்கம். இவ்வழக்கம் மேட்டுக் குடியினரை விடச் சாதாரண மக்களிடம் அதிகமாக இருந்தது. தந்தை இறந்தால் தாய் சிற்றன்னை என்று சொல்லாது “அன்னை இறந்தால் அப்பன் சித்தப்பன்’ என்கிறார்களே! ஏன் இப்படி ஒருபக்கச் சார்பாகப் பேசப்படுகிறது என்பது விளங்கவில்லை.
திருமணவிடயத்தில் பெற்றோரின் வற்புறுத்தல் மிகக்குறைவாகவே இருந்தது. நிலபுலம் மிகுந்த குடும்பத்தில் நிலத்தோடு நிலம் சேர்க்கும் ஆவலில் பெற்றோரின் வற்புறுத்தல் உண்டெனினும், சாதாரணமாக ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் சமூகங்களில் மனம் பொருந்திய திருமணங்களே அதிகமாக இருந்தன. திரு”ணவயதும் மிகக் குறைவே. இளம் வயதில், குடும்ப பாரத்தை ஏற்ற தம்பதியர் சிலர் காலா காலத்தில் பிரிந்து வேறு மணங்களைச் செய்வதும் உண்டு. எது எவ்வாறிருப்பினும் இந்த உறவுகளைத் தள்ளி வைத்து வாழப்பழகாத காலம் அது. சமூகம் உறவோடும் ஒற்றுமையோடும் வாழ்ந்தது.
ஒருத்தி ஒருவனுக்கு மனைவியாகவோ அல்லது. வைப்பாட்டியாக இருப்பதுண்டு. ஆனால் பரத்தமை பற்றிய உலகப் பொதுக்கருத்துக்கு அமைவான வரலாறு எம்மூரில் இருக்கவில்லை. ஒருத்தி ஒருவனுக்கு உரியவள். ஒருவன் சிலருக்கு உரியவன். இதுதான் நிலை. இதனாற்தான் பாஞ்சாலி பற்றிய கதை ஒன்று என் கவனத்திற்பட்டது.
எங்களது எருத்து மாடுகளுக்குக் கடுங்கோடை காலத்தில், பச்சுணவாக ஒலைவெட்டிக் கிழித்துப் போடுவது வழக்கம். ஒன்று விட்டு ஒரு நாளைக்குப் பனை ஓலை வெட்டித் தருவது ஒருவரின் வழக்கம். மாதமுடிவில் அவரது கூலியைப் பணமாகவோ

125 தில்லைச் சிவன்
தானியங்களாகவோ வழங்கிவிடுவோம். அன்று ஒருவனை ஏறி ஒலை வெட்டக் கூலி இரண்டு துட்டு, (ஒன்றுசதம்) இது அவர்களுக்கு நம்பிக்கையான ஒருவருமானம் இருந்தும் அந்தச் சோம்பேறிமனிதன் நாங்கள் போய் அழைக்காமல் வரார். நாம் போக, அவரது மனைவி கட்டளை இட, அதன்பின்னரே அவர் வருவது வழக்கம். இவ்வாறே அவரைக் கூட்டி வருவதற்காகச் சென்றேன். காலை ஏழுமணி இருக்கும்.
அவரது வளவில் வீடு, குசுனி என்று இரண்டு கொட்டில்கள், வீட்டுத் தாவாரத்தில் ஒரு சாக்குக் கட்டில் அதன் மேல் ஒருவர் இருந்தார். பார்த்தால் தூரப்பயணி போல் இருந்தது. அப்பொழுதுதான் வந்திருக்கிறார். அண்ணனின் மனைவி இரண்டு பிள்ளைகளைக் குளிப்பாட்டி, தானும் தலையில் தோய்ந்து குசுனிவாயிலின் முன்னின்று, தலையைக் கோதி, துணியொன்றை முடிந்து உலர்த்துகிறாள். அண்ணன் குசுனிக்குள் குந்தி இருக்கிறார்.
அண்ணியின் கைகளோ தலையை முடிந்த துணியால் துவட்டக் கண்களோ கட்டிலில் இருக்கும் தம்பியின் பக்கம் சுழல் நின்றது. தம்பியும் உதட்டுக்குள் சிரிப்பதும் கால்களால் தரையைச் சீப்பதுமாகத் தலையைத் தாழ்த்தியும் நிமிர்த்தியும் இருந்த இந்த நல்லோரையில், நானும் பெரியண்ணை இருக்கிறாரோ என்று கொண்டே உள்நுழைந்தேன்.
பெரியண்ணை குசுனிப்படலையால் எட்டித் தலையைக் காட்டி விட்டு இருந்து விட்டார். தம்பி மரியாதைக்காக இப்படி இருங்கள் என்று கட்டிலை விட்டு எழும்ப, இல்லை நீயே இரு என்று சொல்லிக் கொண்டு, முற்றத்தில் தறித்திருந்த ஒரு கொட்டுப் பனையில் குந்தி இருந்தேன்.
குளிப்பாட்டி வந்த இரண்டு பிள்ளைகளில் சின்னவன் தம்பியின் பிள்ளை. தம்பியின் மனைவி பிள்ளைப் பேற்றின் பின் காலமாகி விட்டாள். அண்ணன் பெண்சாதி தான் அப்பிள்ளையையும் வளர்த்து வருகிறாள். கடல் தாண்டிச் சென்று புங்குடு தீவில் பனைசீவும் தம்பி, கிழமைக்கொரு முறை வந்து தன் பிள்ளையைப் பார்த்துப் போகத் தவறுவதில்லை. வழக்கத்தில் இரவு வேளைகளில்

Page 65
அந்தக் காலக் கதைகள் 126
வந்து, விடிவெள்ளிகாலிக்கு முன்னரே எழுந்து செல்லுந் தம்பி, இன்று அதிகாலையில் வந்தது தான் அண்ணிக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும். பரக்கப் பரக்கத்தன் கருமங்களை முடித்துக் கொண்டவள், தனது கணவனை ஒலை வெட்ட அனுப்பவில்லையே! அவளது அனுமதிக்காகவே பெரியண்ணையும் நானும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
பிள்ளைகள் இருவருக்கும் தலையை வாரி நீண்ட மயிரைப் பின்னிக் கட்டினாள்.(அக்காலத்தில் ஆண்பிள்ளைகளும் தலைவாரிப் பின்னி விடுவது வழமை) கறுத்தப் பொட்டு உரைத்துப் போட்டாள். பெண்களின் பவுண் போன்ற இரண்டு அணில் வரிச் சட்டைகளைப் போட்டுப் பாடசாலைக்கு அனுப்ப ஆயத்தமான போதே, ஒரு பிள்ளை அம்மா சிலேட் இல்லை, தையலக்கா அடிப்பா என்று கேட்டது. பெரியண்ணை குந்தியபடி குந்தில்தான் இருக்கிறான்.இப்போதுதான் கருணை பிறந்திருக்க வேண்டும். தம்பியும் வந்து கன நேரம் ஆச்சு. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு போய் கடையில் ஒரு சிலேட்டு வாங்கிக் கொடுத்தகையோடேயே பாடசாலையில் கொண்டு போய் விட்டு விடு என்று தனது கணவனுக்குச் சொன்னவள், என்னைப் பார்த்து, ஒலையை வெட்டுவித்துக் கொண்டு இவரிடம் ஒருரூபாக் காசு கொடுத்து விடு என்றாள்.
ஏன் என்பார் போல, விழித்து பார்த்த கணவனைப் பார்த்து, இன்றைக்கென்றாலும் தம்பிக்கொரு கூழ்க் காச்சிக் கொடுக்க வேண்டும். கனநாளாய் போச்சு, தம்பிக்குக் கூழ்காச்சிக் கொடுத்து. தம்பி ஆறுதலாய் இருக்கட்டும். நீர் போய் வெள்ளைக் கடற்கரையில் பறிக் கூட்டு விளைமீனாய்ப் பார்த்து வாங்கிவாரும். பறிக் கூட்டுமீன் வர நேரஞ் செல்லும், நீ அவசரப்பட்டு நாறல் வலை மீன்களை வாங்காதேயும், என்றவள் மீண்டும் என்னைப் பார்த்துத் தம்பி ஒரு ரூபா அதற்கு மேலே கொடுத்திடாதே கூடக் கொடுத்தால் புளிச்சதுகளைக் குடித்துப் போட்டுக் கிடந்திடும், என்று சொன்ன வாய் மூடாமலே பாவந்தானே ஒரு இருபது சதம் கூடக் கொடுத்து விடு தம்பி என்றவளைப் பார்த்தேன். அவள், கட்டிலில் இருந்தவரைப் பார்த்து இளநகை புரிந்தாள்.

127 தில்லைச் சிவன்
2. பாட்டனாரின் கதை
}kவோடு நார் போல எனது கதைகளினூடு ஓடி ஒளித்து விளையாடுபவர் எனது பாட்டனார். பத்தொன்பது, இருபது என இரு நூற்றாண்டுகளைக் கண்டு, இரண்டு உலகப் பெரும் போர்களையும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதின்னான்காம் ஆண்டுப் பஞ்சத்தையும் நேரில் அனுபவித்தவர்.
பனைமரத்தின் சோத்திப் பகுதியை இடித்த மாவுப் பிட்டினையும், ஈச்சை மரத்தாணிச்சுவையினையும் சொல்லிச் சொல்லி மகிழ்வார். நாவலரின் கஞ்சித் தொட்டி பற்றியும், மகாவித்துவான் பொன்னையாபிள்ளை அவர்களின், இராமாயண உரைவளம் பற்றியும் கூறக்கேட்டின்புற்றநாட்கள் பல. அக்காலத்தில்தான் தனது தமையன் இளையதம்பியருடன் யாழ் ஒட்டு மடத்தில் வாழ்ந்த நிலைபற்றியும் புகழ்வதில் சோர்வடையார். . . . .
ஆயிரம் பிறைகண்ட இவரின் வாழ்வில், கடைசி இருபது வருடங்கள், எனது பிரதமபாதுகாவலராக இருந்த சிறப்பியல்புகளை, இந்த இருபத்தோராம் நூற்றாண்டு காலத்திலும் நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.
எனது மனத்திரையில், பல்விழுந்த, சிவந்தநிறத்து மொட்டைக் கிழவனின் தோற்றமே விழுந்து கொண்டிருக்கிறது. ஐந்தரை அடி உயரமும் அகன்ற நெற்றியும், அழகிய பால்வண்ணப் பற்களும் முழங்கால் வரை தாழ்ந்த கூந்தலும் பொன்மேனியும் பொருந்தி இருந்தார் எனில் யார்தான்நம்புவார்கள். (அவரது தலையின் இழிந்த மயிர் எனது தாயாருக்கு முடிமயிரானதுண்டாம்)
அவரிடம் தினமும் வந்து போகும் அனுக்கத் தோழர்களின் உரையாடல்களால், பல இளைஞர்களை வசீகரித்த அவரின் தோற்றப்

Page 66
அந்தக் காலக் கதைகள் 128
பொலிவினைக் கேட்டு மகிழ்ந்தேன். அவரது சிறிய மகனான புலவர் தில்லைநாதர், தான் எங்கு செல்கினும் குஞ்சியப்புவுடன் செல்ல விரும்புவேன்” என்றும் அவருடன் செல்வதால் தனக்கும் கெளரவம் உண்டென்றும் கூறினார்.
இத்தகைய அழகும், அறிவும், ஆண்மையும் மிக்க ஒருவர், எனக்கினியனாய், யான் இட்டவைகளைக் தான்செய்து, யான்போகும் இடம் எல்லாம் என் மெய்க்காப்பாளனாய் நின்று போற்றி எடுத்த தெண்ணிப் புளகாங்கிதம் அடைந்ததன் பேறே “எனது பாட்டனார்” என்ற இந்தக் கதை.
நான் அவருடன், அவரின் குடிலில் வாழ்ந்த காலம், எனது இளமையின் பொற்காலம். அக்காலத்தில் கல்வியில் அவர் கொண்டிருந்த கருத்தினை எனக்குப் புகட்டினார். இராமாயணப் பாரதக் கதைகளைச் சொன்னார். பல தனிப் பாடல்களையும் காவியப் பாடல்களையும் சொல்லித் தந்தார். எம் ஊரவர்களான கல்விமான்களைப் பற்றியும் விமர்சிப்பார். அவர் புலவர் தில்லை நாதரைப் பாராட்டுவார். புலவரும் அடிக்கடி அவரின் குடிலுக்கு வந்து, தனது ஆக்கங்களைப் பாடிக்காட்டி மகிழ்வார். தில்லை நாதரைப் போன்றே, வைத்தியர் சோமசுந்தரம் மருகர் தம்பையா நண்பர் கு. வைரமுத்துவும், எனது பெரியமாமாவும் நொத்தாரிசுவுமான சி. அருளம்பலம் என்பவரும் பாட்டனாரின் குடிலுக்கு அடிக்கடி வந்து போவார்கள். இவர்களின் பரிச்சயம் எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்தது.
யாருமற்றுத் தனிமையில் இருக்கும் போது, ஏதாவதொரு கைப் பணியைச் செய்வார். கடகம் பொத்துவார், கயிறு திரிப்பார், இந்த வேலைகளுக்கு அவர் நினைவு எங்கெல்லாமோ சென்று மீளும். அவ்வேளையில், ஏதோ ஒரு மனனழுச்சியால் உந்தப்பட்டு அவர் கூறுபவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவைகளில் சில எனது கதைகளில் இழையோடி இருப்பதைக் காண்பீர்கள். நிற்க,
காலந்தான் மாறிக் கொண்டு போகின்றதே தவிர, கருத்துக்க ளில் அதிக மாற்றம் இல்லை. இன்றுள்ள அதிகார வர்க்கம் தமக்கு

129. தில்லைச் சிவன்
வேண்டாதவர்கள் மேல் இல்லாததும் பொல்லாததுஞ் சொல்லி, வழக்குகளைச் சோடித்துக் குற்றவாளிக் கூட்டில் நிறுத்துவது போல, அக்காலத்திலும் இருந்தது. ஊரில் உள்ள எல்லா மக்களும் தமக்கு அடங்கியவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் கிராமத் தலைமைக்காரன் முதல் பிரதேச மணியகாரன் வரை உள்ளோரின் கருத்து. தமது பேச்சுக்கு எதிர் வாதம், இவர்கள் விரும்பாதது. ஏன் என்ற கேள்வி கேட்கக் கூடாதது.
ஊரில் தனிப்பட்ட ஒருவர், செல்வாக்குடன் இருப்பதும் குழுக்களாக இயங்குவதும் பயங்கர்வாதம். இது அதிகாரிகளுக்குப் பிடிப்பதில்லை. தனிநபர், செல்வாக்குள்ள ஒருவரை எப்படியும், வீழ்த்தித் தமது காலடிக்கீழ் கொண்டு வரப் பார்ப்பார். அல்லது வழக்குகளில் மாட்டிச் சீரழிவர்.
இந்த வகையாக, வழக்கிொன்று எனது பாட்டனரான குருநாதர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி என்ற முப்பத்தொருவயது இளைஞர் மேல் போடப்பட்டது.
ஒன்பது சகோதரர்களுக்குக் கடைக்குட்டித் தம்பியான சின்னத்தம்பி நல்ல அழகன். ஓரளவு கல்வியும் விவேகமும், உடையவராக இருந்ததால் தாய் தந்தை சகோதர சகோதரிகளின் செல்லப்பிள்ளை. இவர்தம் சகோதரர்களின் பிள்ளைகளோ பலர். இத்தகைய பரிவாரங்களுடன் ஊரிற் பல இளைஞர்களின் தோழமையும் தானாகவே வந்து சேர்ந்தது.
பிறப்பினாலும் தோழமையினாலும் கூடித் தொழில் செய்வதினாலும் ஏற்பட்ட உறவுகள் விளையாட்டுகள், பிரயாணங்கள், சண்டை சச்சரவுகள், சமாதானப் பேச்சுக்கள் என்று எல்லாத் துறைகளிலும் விரிந்தது.
இப்படியாக வளர்ந்த இந்த உறவுகள் ஒரு சாதிக் குழுமத்தைப் பாதுகாப்பதற்காக மட்டும் அமையவில்லை. எல்லாவகைத் தொழில்களையும் செய்யும் எல்லாச் சாதிகளும் இணைந்த, ஒரு தொழிலாள வர்க்கக் குழுமம் போன்றே இருந்தது. சுருக்கமாகச்

Page 67
அந்தக் காலக் கதைகள் 130
சொன்னால் சாதிபேதம் தொழிற்பேதங்களற்ற ஒரு கூட்டம். வெள்ளாளர், கோவியர், பள்ளர், நளவர், கம்மாளர், பறையர் என்ற பல சாதியினரும் சேர்ந்த ஒரு குழுமம். ஒன்று பட்டு ஒரு வேலையில் எல் லோரும் ஈடுபடுவது அதன் பயனை, எல்லோரும் அனுபவிப்பது, உழ விலாயினும், வண்டிற்சவாரி ஆயினும், வேட்டையிலாயினும், சூள் மீன் பிடித்தலிலாயினும், புல் செதுக்கப் போவதாயினும் கோவில், குளம் கூத்து. நாடகம் என்ற இடங்களிலாயினும் சரி இந்தக் கூட்டத்தைக் காணின் அங்கே சின்னத்தம்பியும் இருப்பார்.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளது போன்ற தீண்டாமைக் கொடுமைகள் ஊரில் இருக்கவில்லை. இதற்கு மக்கள் மனந்திருந்தி விட்டார்கள் என்பதில்லை. குறைந்த தொகையினரான தீண்டாத மக்கள் பரந்த தமது சொந்த நிலங்களில் சொந்தத் தொழில்களோடு வாழ்ந்ததே காரணம் எனலாம். இப்படி இருந்தும், காலக் கிரமத்தில் இந்தக் குழுமத்தின் செயல்கள் ஊரில் சாதிப் பெருமை பேசும் முதியவர் சிலருக்கு எரிச்சலைக் கொடுத்தது.
என்ன இவன் சின்னத் தம்பி எங்களுடையபிள்ளைகளையும் கெடுக்கிறானே! என்ற சாதி மான்கள், “எல்லாச் சாதியாரையும் வீடுகளுக்குள் கொண்டு வாரான்கள், கிணற்றில் தண்ணீர் எடுப்பிக்கிறான்கள், குளங்களில் ஒன்றாய்நீந்தி விளையாடுறான்கள், கேட்டால் அந்தக் கதையை விடணை, என்று அதட்டவும் செய்கிறான்களே,” என்று சுப்பிரமணியத்தாரிடம் முறையிட்டும் நடந்த தென்ன? சின்னத்தம்பியும் அதைக்கேட்கவில்லை.
மேலும் பல சாதிக்கட்டுகள் ஒழியவும் இவர்களின் குழுமம் காரணமாக இருந்ததென்றுஞ் சொல்வர். காற்செருப்பணிதல், பெண்கள் ரவிக்கை அணிதல் என இல்லாதவையும் நடைபெற்றது இக்காலத்தில் தானாம்.
இந்த வகையான விளைவுகளாலும் மேலும் இவர்களால் செய்யப் பெற்றதென நம்பும், இளநீர்க் களவு, கோழித்திருட்டு,
ஆட்டுக்களவு போன்ற தவறு, குறும்புகளாலும் வளர்ந்து வரும் எதிர்ப்பினை, எதையும் விளையாட்டெனவே கருதி வந்த

131. தில்லைச் சிவன்
குழுமத்தினால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. காட்டின் வெளிகளில் புல்லுச் செருக்குதல் எருப்பொறுக்குதல் விறகுதரித்தல் போன்ற செயல்களும், அரசு அதிகாரியான மணியகாரனின் கட்டுப்பாட்டினை மீறிச் செய்த சட்ட விரோதச் செயல்கள் என்பதை மனங்கொண்டதாலும், இவர்களை அடக்கிப் பணிய வைக்கத் தொடுத்ததே முதலிற் குறிப்பிட்ட வழக்கு.
தறுதலை வழக்கெனக்கூறப் பெற்ற வழக்கின் முதற் குற்றச்சாட்டு, முப்பது வயதுக்கு மேற்பட்டும் மணம் முடிக்காதிருத்தல், இரண்டாவது தொழில் துறையின்றி இருத்தல், மூன்றாவது நிலபுலம் சொத்துக்கள் இல்லாதிருத்தல். : ۔ ۔ ۔
இம்மூன்றும் இல்லையெனில் அக்காலத்தில் அவன் தறுதலை எனச் சிறைக்கே செல்ல வேண்டியநிலை. வேலையில்லை சொத்தில்லை, பெண் இல்லை என்றால் சிறையெனில் இப்போது எத்தனை சிறைக் கூடங்கள் நிறைந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லையா?
அக்காலச் சட்டப்படி அவர் தறுதலை. கோட்டாணை பிறப்பிக்கப் பெற்றுக் கட்டளை அதிகாரியும் வந்து செல்கிறார். ஆனால் கூடவே நிற்கும் சின்னத்தம்பியைக் காட்டிக் கொடுப்பாரில்லை.
தானாகவே முன்வந்து கட்டளையைப் பெற்ற சின்னத்தம்பி தந்தையாரிடம் செல்கிறார். சுப்பரிடம் கட்டளை காண்பிக்கப்படுகிறது. அடுத்த சில தினங்களில் சத்திரியப் புலத்தில் முப்பது பரப்பு சின்னத்தம்பிக்கு முதுசொம் உறுதி முடிக்கப் பெற்றது. காத்திருந்த மச்சாள் சின்னாச்சிகையால் சோறு வாங்கித் தின்ற சின்னத்தம்பி அவள் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு கட்டளைச் சட்டத்துக் கமமைந்ததே.
இதுவரை பிரமச்சாரியம் காத்த சின்னத்தம்பிக்கு ஒருகால் கட்டு. இதனால் கூட்டம் குலைந்து விடும் என்றுநம்பியவர்கள் ஏமாறக் கூடியதாக மக்கள் ஆதரவுடன் பல காரியங்களை ஆற்றியதாகக் கூறக் கேட்டேன்.

Page 68
அந்தக் காலக் கதைகள் 132
எனது பாட்டனாரிடம் பலர் வருவார்கள். திருமணப் பேச்சுக்கு ஆதரவு கேட்பவர்கள், மணவிலக்கைக் கோருபவர்கள், சேர்த்து வைக்க வேண்டுபவர்கள், எல்லைப் பிரச்சினை பங்குப்பிரச்சினை என்றின்னோரன்னவைகட்கெல்லாம் மத்தியட்சம் செய்து வைப்பதில் சமர்த்தர். அப்பொழுது சொல்லுவார் மத்தியட்சம் செய்பவர்நீதிமானாக இருந்தாற் போதாது. வல்லமை உள்ளவனாகவும் இருக்க வேண்டும். எங்கும் நீதியை நிலைநாட்ட வல்லமைதான் பயன்படுத்தப்படுகிறது. வலுவற்ற ஆட்சியால் நீதியை நிலை நிறுத்த முடியாது என்று கூறியவர் நான் இப்போ வலுவிழந்து விட்டேன். கேட்பவர் கேட்கட்டும் கேளாதவர் போகட்டும். ஆனால் ஒன்று ஒரு ஊருக்கு ஒரு சண்டியன் வேண்டும். சண்டியன் தான் சமாதானம் செய்து வைப்பான். நீதி வழங்குவான். முற்காலத்தில் குழுமங்களின் தலைவனாகச் சண்டியன் ஒருவனே இருந்தான். அவனே அரசன், கப்பம் வாங்கினான். காவல் காத்தான், அவர்களைத்தான் அழகிகளும் விரும்புவார்கள்’’ என்றாரே! அதை இப்போது நினைக்கிறேன், “வீரனுக்கே பேரழகி உரியவள்’ சங்கச் சான்றோர் வார்த்தை என் காதுகளில் ஒலிக்கிறது.
பிற்காலத்தில் என் ஊரில் சில சண்டியர்கள் இருந்தார்கள். இவர்களைப் பார்த்து கோமாளிகளைப் பார்ப்பது போல மிடாக்குடியர்கள், சண்டித்தனம் எல்லாம் கள்ளுக் கொட்டிலடியில் தான். அவர்கள் பொலிசாரைக் கண்டு உபசரிப்பதைப் பார்த்தால் பெரும் கண்றாவி. சண்டியன்கள் என்றால் இப்படித்தான் காக்கா பிடிக்க வேண்டுமா.
அந்தக் காலத்தில் மணியகாரருக்குத்தான் பொலிசதி காரங்களும் இருந்தன. இவர் இட்டதுதான் சட்டம். எதிர் பேச்சிருக்கக் கூடாது. சாதி ஒழுங்குக் கட்டுப்பாடும் அவர் கையில் தான். நீதி செய்வதிலும் சாதிப்பாகுபாடுகள். இவற்றினுக்கெல்லாம் சவாலாகத் தோன்றிய குழுமங்களின், ஒரு பிரதிநிதியாக எம் ஊரில் வாழ்ந்தவர். எனது பாட்டனார். அவர், அவரது மகளும் எனது தாயாருமான பொன்னம்மா, எனது தந்தையான, மண்டை தீவு ஆறுமுகம் தில்லையம்பலம், ஆகிய மூவர்களதும் திருவுளங்களுக்கு இந்த நூலைக் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்.


Page 69
யாழ்ப்பாணம் ச 1928 மேதினத்தில் பி எனும் தில்லையம் பணிபுரிந்து ஒய்வு ெ
கனவுக்கன்னி, த என்னும் கவிதை நு மேலும் நான் எனும் த தன் சுயசரிதை நூலை வேலணை தீவுப் புல்
நூலின் ஆசிரியர்
இந்நூல் அன்னா எழுத்தாற்றலையும் கூ
 

ார்ந்த சரவணையூரில் றந்த தில்லைச்சிவன்' பலம் ஆசிரியராகப்
பற்றவர்.
ாய், பாப்பா பாட்டு நூல்களின் ஆசிரியர். தலைப்பில் கவிதையாக எழுதி வெளியிட்டார்.
லவர் வரலாறு என்ற
ரின் கற்பனைகளையும்,
றிநிற்கும்