கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஹாகவியின் குறும்பா

Page 1


Page 2

அரசு வெளியீடு,
231, ஆதிருப்பள்ளித் தெரு கொழும்பு-13, (இலங்கை).

Page 3
அரசு வெளியீடு: 12
முதற் பதிப்பு: 17 பெப்ரவரி , 1966
பரிசுப் பதிப்பு
62a: eit. O-35
KURUMBĀ
(The First Lim cricks vin Tamil)
Author: “MAHA KAVI”
Strater: “ S OU”
Publisher: ARASU PUBLICATIONS,
231, Wolfendhal Street, Colombo-l3, (Ceylon).
First Edition: 17th February 966 library Edition: A-35
ரெயின்போ பிரிண்டர்ஸ், கொழும்பு-13,

காசு கொடுத்து இக்
கவித்தொகையை வாங்கினுேர் .
ஆசைக்கு நன்றி.
அவர்க்கே இது -
படைப்பு

Page 4
குறும் பக்களை மக்களின் கையிலே வைத்த ரஹ்மானுக்கும், கருத்திலே சேர்த்த பொன்னுத்துரைக்கும், கண்ணிலே பதித்த 'செள'வுக்கும் -
* மஹாகவி'யின் நன்றிகள்.

/
பதிப்புரை
.நாள் நன்ருக ஞாபகமிருக்கின்றது قوت9Hک 30-1-65 சனிக்கிழமை காலை, நீர் கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தால் நடாத்தப்பட்ட தமிழ் விழாவின் கவியரங்கம். கவியரங்கத்திற்கு, ஒரு
மூத்த கவிஞர் தலைமை தாங்குதலே மரபு. .
மேடையைப் பார்த்ததும் மஹாகவி அவர்களே தலைமை தாங்குவாரென நினைத்தேன். என் நினைவு தவருகியது. ‘வசன நடை கை வந்த வல்லாளர் எஸ். பொன்னுத் துரை அவர்கள் தலைமை தாங்கினர். ". என்னை ஒரு கவிஞன் என்று நினைத்துவிடாதீர்கள் ; நான் ஒரு சுவைஞன். மேடையிலுள்ள கவிஞர்சளுக்கும், சபையிலுள்ள உங்களுக்குமிடையில் நான் பாலமாக அமைதல் வேண்டுமென கவிஞரெல்லோரும் ஒரு முகமாகச் கேட்டுக் கொண்டதாலும், மூத்த கவிஞரான மஹாகவி வற்புறுத்தியதாலும், இந்தத் ‘தலைமைச் சுமை'யைத் தாங்க முன்வந்தேன். மஹாகவி பக்கத்தில் இருப்பது ஒரு தெம்பு, அவர் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் குறும் பாக்களுட் சில கிடைத் தமை மறு தெம்பு. "தலைவரும் சில கவிதைகள் சொல்லுவார்’ என்னும் மரபினைக் காக்க எனக்குக் குறுப் பாக்களே உதவுகின்றன. உத்தேசம் வயது பதினேழாம்.” என்று தலை ை) உரையைத் தொடங்கி, இக்கோவையில் முதலாவது செய்யுளாக * இடம்பெறுங் குறும் பாவைப் பாடி, நகைச் சுவை ததும்ப நயமும் கூறி முடித்தார். கவியரங்கம் *களை'ப் பொலிவில் நிறைந்தது. என் மனம் குறும் பாக்கள் பற்றிய நினைவில் ஒன்றியது.
6
வேர்ச்சிப்படம், கேள்வி-பதில், சினிமா ச் செய்திகள் ஆகிய பகுதிகளே அதிக பிரதிகள் விற்பனையாவதற்கு உறுதுணையாக இருக்கின்றன என்று ஏனைய பத் திரா திபர்கள் தி ரி க ர ன சு த்தியாகவே நம்பிக் கொண்டிருக்கையில், நான் நிர்வாக ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ள

Page 5
இளம்பிறை மாசிகையை, அத்தகைய பகுதிகள் அறவே இன்றி, தரமான இலக்கிய விடயங்களையும், நவமான பகுதிகளையுஞ் சேர்த்து வெளியிடல் வேண்டுமென்று சபதம் இயற்றியிருந்தேன். - குறும் பாக்களைப் புதிய பகுதியாக "இளம் பிறை'யிற் பிரசுரித்தல் வேண்டுமென அக்கணமே தீர்மானித்தேன்.
10ஹாகவி அவர்களைச் சந்தித்து, அவர் இயற்றியுள்ள குறும் பாக்கள் அடங்கிய கவிக்கோவையை நூல் வடிவிற் பிரசுரிக்க முதற் பதிப்புரிமையை அரசு வெளியீடு நிறுவனத்திற்கும், அதற்கு முன்னராகச் சில குறும் பாக்களைத் தொடர்ந்து பிரசுரிக்க "இளம் பிறைக்கும் அனுமதி தரும் படி கேட்டுக் கொண்டேன். 'தரமான நூல்களை அழகிய முறையில் அச்சிட்டு, ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்குக் குறிப்பாகவும், நூற் பிரசுரத் துறைக்குப் பொதுவாகவும் அளப்பரிய தொண்டியற்றும் உங்கள் அரசு வெளியீட்டின் நூலாக என் குறும் பாக் கவிக்கோவை வெளிவந்தால் அதைவிட மகிழ்ச்சியான காரியம் உண்டோ?" என்று மனநிறைவுடன் கேட்டு, குறும் பாக்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை என்னிடம் கையளித்தார்.
Pஹாகவி அவர்கள் நாடறிந்த மூத்த கவிஞராவர். தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் புதிய உரமிட்டு வரும் இவர், தமது பதிஞரும் வயதில் ‘மின்னல்" என்ற கவிதையை ஈழகேசரியிற் பிரசுரித்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கவிதைகள் புனைந்து வருகின்றர். இவரையே ஆதர்ச கவிஞராகக் கொண்டு, புதிய கவிஞர் பரம்பரையொன்று ஈழத்தில் தோன்றியுள்ளமை, இவருடைய கவிதா ஆற்றல் புதிய கவிதை வளத்தை ஆற்றுப்படுத்த எத்துணை தூரம் உதவியுள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றது. இவர் இயற்றிய வள்ளி என்னுங் *

கவிதைத் தொகுதி 1955 - ஆம் ஆண்டில் நூலுரு வம் பெற்றது. இவருடைய புலமைக் குச் சான்ரு கவுள்ள கல்லழகி, சடங்கு, கந்தப்ப சபதம், ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் முதலிய காவியங்களும், திருவிழா, கோடை, முற்றிற்று முதலிய பா நாடகங்களும் இன்னமும் /நூலுருவந் தாங்கவில்லை. அவையும் நூலுருவம் / பெறின் கவிதைத் துறையில் தமிழ் இன்னும்
ஒரு படி உயர வழி சமைக்கும்.
குறும்பாக்கள் சிலவற்றிற்கேனும் சித்திரங்கள் சேர்ப்பது அவசியமெனத் தோன்றிற்று. நூலின் கவர்ச்சியான அமைப்பிற்கு மட்டுமல்ல, குறுப்பாக்கள் சிலவற்றிலே தொக்கி நிற்கும் எதிர் மறைக் கருத்துக் களையும், குறும் புகளையும் இலகுவாகவும் தெளிவாகவும் வாசகன் மனதிற் பதிக்க, கூடார்த்த சித்திரஞ் சார்ந்த படங்கள் உதவுமென கவிஞரும் நானும் ஒருமித்த கருத்துக் கொண்டோம். இவற்றிற்கு ஏற்ற சித்திரங்கள் வரைய வல்லவர் யார்? -என்ற தேடல் ஆரம்பமாகியது குறும் பாக்கள் சிலவற்றைப் பல பிரபல சைத் திரிகர்களிடங் கொடுத்து, ஏற்ற படங்கள் வரைந்து தரும்படி கேட்டேன். அவர்கள் வரைந்த சித்திரங்கள் நமது நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. இவ்வேளையில், நண்பர் "செள’ (எஸ் கே. செளந் தர ராஜா) வேறு அலுவலாகக் கொழும் புக்கு வந்து என்னுடன் தங்கினர். அவர் பி. எஸ். ஸி. பட்ட தாரி; விஞ்ஞான ஆசிரியர் . ஒய்வு நேரங்களிற் சித் திரங்கள் வரை பவர். ஏற்கனவே, "இளம் பிறை"க்குச் சில சித்திரங்கள் • வரைந்து உதவியவர். அவரையும் சில சித்திரங்கள் வரைந்து தரும் படி கேட்டேன். மறுதினமே. இக்கோவையில் 25, 35, 38, 40, 48 ஆம் பக்கங்களில் இடம் பெறும் சித்திரங்களை வரைந்து தந்தார். சித்திரங்களைப் பார்த்த மஹாகவி. 'சிந்தை இழப்பான் தண்டபாணி" என்ற அடியின்

Page 6
முழுக் கருத்துப் பொலிவையும் "செள’வின் சித்திரம் மிக அழகாகப் புலப்படுத்துகின்றது." என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அப்பொழுதே குறும்ப வுக்கான சித்திரங்களைச் செள’ வரைதல் வேண்டுமெனத் தீர்மானமாயிற்று. அவர் குறும் பாக்களை விளங்கிக் கொண்ட சிறப்பிற்கும், அவர் தம் கை வண்ணத்திற்கும் சான்ற கவுள்ள ஐம்பது சித்திரங்கள் இக்கோவையில் இடம் பெற்றுள்ளன.
并
நிம் நாட்டில் நடைபெறும் கவிதை முயற்சிகளின் வண்ணத்தையும், வகையையும் வெளிப்படுத்தத் தக் கனவாகவே அரசு வெளியீட்டின் கவிதை நூல்கள் அமைந்துள்ளமை நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. என்றும் அழியாத கீதை உபதேசங்களை வெண்பா உருவில் அமைத்த பகவத்கீதை வெண்பா நமது முதலாவது கவிதை நூலாக வெளிவந்தது, காதற் சுவைமிக்க தனிப்பாடல் தொகுதியான அண்ணல் கவிதைகள் நமது இரண்டாவது கவிதை நூலாக அமைந்தது. இலக்கிய மரபு பற்றி, கவிதையிலேயே அறிவு விசாரணை நடத்தும் இலக்கிய உலகம் நமது மூன் ருவது கவிதை நூலாக வெளிவந்தது. நமது பன்னிரண்டாவது வெளியீடாகவும், நான்காவது கவிதை நூலாகவும் மஹாகவியின் குறும்பா என்னும் இக் கவிக்கோவையை வெளியிடுகின் ருேம், தமிழுக்குப் புதிய யாப்பும், புதுப் பொருள் மரபும் அமைத்து, தமிழ்க் கவிதையை வளப்படுத்தும் இக் கவிக்கோவையைத் தமிழ்த் தாயின் பாதங்களிற் சமர்ப்பிப்பதிற் பெரு மகிழ்ச்சி கொள்ளுகின் ருேம்,
வணக்கம்.
எம். ஏ. ரஹ்மான், அரசு வெளியீடு.

முன்னீடு
There was a young lady of Niger, Who smiled as she rode on a tiger
They returned from the ride With the lady inside - And the smile on the face of the tiger
என் பள்ளிப்பருவத்திலே, எப்பொழுதோ மன னஞ் செய்த மேற்படி பாடலை, சில ஆண்டுகளுக்கு முன்னர், லிமரிக்ஸ்" (Limericks) அடங்கிய ஆங்கி லக் கவிதைத் தொகுதி ஒன்றிலே பார்த்தேன். பார்த்ததும், இதன் தமிழாக்கம் ஒன்றைப் பெறும் ஆவலும் பிறந்தது. ஆவலைப் பூர்த்தி செய்யும் பணி யிற் பின்வரும் தமிழாக்கங் கிடைத்தது:
புன் சிரிப்புப் பூத்தபடி வீரி போகின்றள் புலிமிசை ச வாரி,
பெண் அதனின் பேழ் வயிற்றுட் புக்கிருந்தாள் மீள்கையில்; அப் புன் சிரிப்போ புலி முகத்தில் ஏறி. . . தமிழாக்கத்திலே, ஆங்கிலக் கவிதையின் கருத்
தைக் கொண்டுவர முடிந்ததே தவிர, கருத்து வீறினை யும், சொல் வீச்சினையும் கொண்டுவர முடியவில்லை.
A C-2

Page 7
19
இதற்குக் காரணமுண்டு. கவிதை மெல்லுணர்ச்சி களின் வெளிப்பாடு, ஒரு கவிதை எந்த மொழி யில் எழுகின்றதோ, அஃது அந்த மொழியின் தனி இயல்புகளையும், அந்த மொழியைப் பேசும் நாட் டினதும் மக்களினதும் நாகரிக-கலாசார -பண்பாடு களையும் பிரதிபலிப்பதாகவும் அமைகின்றது. எனவே, ஒரு கவிதையின் உயிர், மொழிபெயர்ப்பின் பொழுது வடி சீலையிலேயே தங்கிவிடுதல் சாத்தியம். மேற்குகிழக்கு என்கிற கலாசார எதிர்த் துருவ இயல்பு களே மொழி பெயர்ப்பில் அசலின் மூல தரிசனம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன என்று கருதுவதும் பொருந்தாது. ஆங்கிலத்திலெழுந்த * விமரிக்’ என்னுங் கவிதைகளுட் சிலவற்றை ஜெர் ᎿᏝ Ꮆ5Ꭲ மொழியிற் பெயர் க்கும் பெரு முயற்சி எடுக்கப்பட்டது. அவற்றின் நேரடிக் கவிதை மொழி பெயர்ப்பு இயலாததாகிவிட்டது. ஈற்றில், ஜெர்மா னிய வசனநடையில் அமைந்த உரை விளக்கங்களு டன் அவை ஆங்கிலத்திலேயே பிரசுரிக்கப்பட்டன.
மொழிபெயர்ப்புப் பற்றிய இந்தக் குறிப் பினையே ஆரம்பத்திற் கூறப் புகுந்தமைக்கு ஏது வுமுண்டு. ஆற்றலிலக்கிய எழுத்தில் ஏற்பட்ட நபுஞ் சகத்தனத்தினலேயே “இலக்கிய விமர்சகர்கள்’ எனத் தம்மைக் கருதுவோர் நம் நாட்டில் அநேகர் உளர். சோம்பலை ஓம்பி, நுனிப் புல் மேய்ச்சலிடும் சுபாவமுள்ள அவர்கள், "குறும் பாக்கள் விமரிக்" கின் மொழிபெயர்ப்பே' என்று ஏக வசனத்திற் கூறிவிடுவார்கள். இது பிரமை அன்று. இக் குறும் பாக்களுட் சில இளம் பிறை' மாசிகையிற் பிரசுர மான காலத்தில், தாழ்வுச் சிக்க லிஞலும், விரக்தி யினுலும் சாம்பிக் கொண்டிருக்குஞ் சில 'இலக்கிய காரர்’ இத்தகைய அபிப்பிராயம் ஒன்றைப் பரப் பியதை நான் அறிவேன்.
குறும் பாக்களிலே சுயம்புவான கருத்து வீறும், மொழி வீச்சும், கற்பனை வளமும் இருக்கின்றன. இத் தன்மைகளே குறும்பா புதிய தமிழ்க் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்குப் போதுமானவை. ஆனல், இத்தகைய கவிதை முயற்சியைத் தமிழில் அறிமுகப்

•l H
படுத்துதல் வேண்டும் என்ற எழுச்சி, லிமரிக்” கவிதைகளிலிருந்த திளைப்பு ஊட்டிய அருட்டுணர் விலேதான் (1nspiration) மஹாகவிக்கு ஏற்பட்டிருக் கிறது என்பதும் மறுப் பதிற்கில்லை. அதை அவர் எனக்குக் கூறியுமிருக்கிரு ர். எனவே , "லிமரிக்’ கவிதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நிலைக் களனில் ::::: என்னும் புதுக் கவிதை முயற்சியின் ப யயும், பரப்பையும் மதிப் பிடுதல் முறையான கருமமாகும்.
ஆங்கிலத்தில் ஐந்து வரிகளிலே, ஒரு குறிப்பிட்ட யாப்பு முறையில் அமையும் கவிதையை ‘லிமரிக்” என்றழைப்பர் . ஏன் அத்தகைய கவிதை "6buמ ரிக்’ என அழைக்கப்படலாயிற்று என்பதையோ, ஏன் அத்தகைய யாப்பு முறையிற் கவிதை புனை யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதையோ நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை ஆரம் பத்திற் டாலர் பாடல்களே ‘லிமரிக் முறையில் அமைந்தன. "விமரிக்’கிலுள்ள கருத்து விந்தையும், கவிதை அமைப்பின் விந்தையும் எட்வட் லியர் என்ற ஒவியைக் கவர்ந்தது. ஒரு பிரபுவின் பிள்ளை சளை மகிழ்விப்பதற்காக, அவர் ஒய்வு நேரங்களிலே சில ‘லிமரிக்" கவிதைகளை இயற்றினர். சந்தேகத் திற்கிட மின்றி லியரே "லிமரிக் சவிதைகளின் பிதா மகரெனக் கொண்டாடப்படுகின் ருர். இருப்பினும், அவர் கூட அவற்றிற்கு ‘லிமரிக்" என்ற பெயரை ச் சூட்டவில்லை. லியர் இயற்றிய லிமரிக்'குகளில், பெரும்பாலும் முதலாவது அடியே ஐந்தாவது அடி யாகவும் அமைந்தது. தற்கால விமரிக்'குகளின் அழ குப் பொலிவின் பெரும்பகுதி, துரித இறக்க கதியில் அமையும் எதிர்பாராத திருப்பத்தைக் கொண்ட திடீர் முடிவினை உள்ளடக்கியுள்ள கடைசி வரியிலே தான் தங்கியிருக்கின்றது என்பது கவனிக்கத் தக்கது. லியருக்குப் பின்னர், "லிமரிக்’ கவிமுறை கற்பனையை மீறிய பெரு வளர்ச்சி அடைந்தது. ஒவ்வொரு பொரு ளையும், எல்லையையும், உளப்பாங்கை யும் அவை கழு வின. மிகப் புனிதமானவை என் ருே, சொல்லுந் தரமற்றவை என் ருே எதையும் அவை ஒதுக்கி வைக்கவில்லை. ஆபாசச் சடங்குகள், அபத்த விபரீ

Page 8
தங்கள், கர்ண பரம்பரைக் கதைகள், 'பள்" பகிடி கள், பக்தியுள்ள சிந்தனைகள், தாட்சணிய மற்ற அசிங் கங்கள் - எல்லாமே ‘லிமரிக்'குகளுக் கேற்ற பொருளாக மாறின. இவ்வாறு வளர்ச்சியுற்ற லிம ரிக்’கு சளுக்குப் புதிய வீறும், விமர்சன அர்த்த மும் பாய்ச்சிய பெருமை அமெரிச்கப் பெருங் கவிஞர் களான ஓ. நாஸ், எம். பிஷப் ஆகியோரைச் சாரும். பிற்காலததில், சிறந்த உருவத்தின் திறனை நாடும் கவிதா பக்தர்களான ஆர். எல். ஸ்டீ வசன் சன், நோர்மன் டக்லஸ், ஆர்னேல்ட் பெனற், ஜோன் கல்ஸ்வேர்த்தி, றடியட் கிப்ளிங், ரி. எஸ். எலியட் ஆகியோர் கூட ‘லிமரிக்’ கவிதை உருவத்தைக் கையாண்டிருக்கிரு ர்கள். இருப்பினும், மிகச் சிறந்த *லிமரிக்’ கவிதைகள் அச்சிடத் தகாத ன வாகவும், பாற் பொருளுக்கு முக்கியத் துவங் கொடுத்தவையாகவும் அமைந்துள்ளன என்பது மே ஞட்டார் கருத்து, இதுவே நிலைக்களன். .
இனி, குறும்பாவின் தரிசன இலக்கு.
ஈரடியில் நிறைவுறுவது குறள் வெண்பா. குறுமை சான்ற பாடல் அமைப்பு முறை குறள். குறும் பாவும் அமைப்பிற் குறுமையானது. மூன்று அடிகளில் முடிவடையும் புதிய தனிப்பாடல் அமைப்பு முறையைக் குறும் பா நேர்த்தியாகக் கையாளுகின் DS). (6g5 g/60) uD + Litt - GA) i fr. ST607 Ga), 15 (TLD கரணமும் இயல்பாக அமைகின்றது.) இந்நாட்களில் அரை குறை இலக்கண அறிவு பெற்றவர்களே, இலக்
கனத்தைப் பற்றி அதிகமாகப் பேசுகிருர் கள்: 'குறும் பாவின் இலக்கணம் என்ன? யாப்பு முறை என்ன? தமிழ் மரபு சான்றதா?" என்றெல்லாங்
கேட்கக்கூடிய இலக்கணப் பண்டிதர்களும் இருக் கின்றர்கள். -
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் ருகில் எண்ணெயும் இன்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பதுபோல . இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்
என்ற அகத்தியக் கருத்துடன் நமக்கு உடன்பாடு. எனவே, மஹாகவி குறும்பாவில் அறி

13
முகப்படுத் துஞ் செய்யுளுக்கான யாப்பு முறையை விளக்குதலும் என் கடன் மை யாகின்றது. அத் துடன், மஹாகவி வகுத்துள்ள இந்த முறையைப் பின் பற்றப் போகின்ற கவிஞர்களுக்கு யாப்புப் பற்றிய விளக்கம் பயனுடையதாகவும் அமையும்.
குறும்பா ஒரே எதுகையுடைய மூன்று அடிகளைக் கொண்டது. முதலாம் அடியின் மூன்ரு ம் ஆரும் சீர்களும், மூன்ரும் அடியின் கடைசிச் சீரும் ஒரே இயைபு உடையவை. ஒசை ஊறுபடாது "கா"யின் இடத்தில் 'விளம்’ வருதலும், வெண்சீர் வெண் டளை பினிடத்து இயற்சீர் வெண் டளை வருதலும் ஆகும். இந்த மூன்று அடிகளையும் ஐந்து வரிகளில் அமைத்து விடுவதால் அமைப்பிற்கு அழகு சேர்கின்றது; "லிம ரிக்’கிற்கு ஒத்த அமைப்பினைப் பெறுகின்றது. முதல் அடியின் முதற் சீரும் நான் காம் சீரும், மூன்ரும் அடியும் இடப் பக்கம் ஒரே நேரான இடத்தில் ஆரம்பமாகி, முறையே முதலாம், இரண்டாம், ஐந்தாம் வரிகளாக அமையும், இரண்டாம் அடி மூன் ரும் நான்காம் வரிகளாக இடப்பக்கம் சற்றே உள்ளிடிந்து அமையும். எனவே, குறும்பா பின் வரும் வாய்பாட்டைக் கொண்டு அமைகின்றதென Ghort it b:
காய் - காய் - தேமா - காய் - காய் - தேமா -
காய் - காய் -
காய் - காய் - காய் - காய் - தேமா.
இவ்வுருவம் பல ஓசை வேறுபாடுகளுக்கும் இடம் அளிப்பது. மேலும், ஈரடி இறுக்கத்திற்கு மாறு படும் இந்த மூவடிச் செய்யுள் முறை பொரு ளுக்கேற்ற இலகுத் தன்மையையும் எளிமையை யுஞ் சேர்க்க உதவுகின்றது. முதலாம் அடி அடி கோலுவதாகவும், இரண்டாம் அடி கட்டி எழுப் புவதாகவும், மூன்ரும் அடி முத் தாய்ப்பிடுவதாகவும் குறும் பா அமைதலே சிறப்புடைத் து.

Page 9
14
குறும்பா ஒவ்வொன்றுந் தனிப் பாடலாகவே அமைவுறும். தனிப்பாடல் மரபே சங்க காலத திற் செழிப்புற்றது. தனிப்பாடல்களுக்கு இற்றை வரை தமிழிற் சிறப்பிடம் இரு த்தே வந்திருக்கில றது. நாட்டார் பாடல்களுந் தனிப் பாடல்களாகவே அமை கின்றன. குறும்பா புெம் தனிப்பாடல் மரபு வழிதான் எழுந்துள்ளது. குறும் பா கதையமைப்புக் கொண்ட தாகவோ, ஒரே காட்சி அமைப்புக் கொண்டதா கவோ, ஒரு சிறு துணுக்காகவோ கூட அ ைம ய ராம். அது திணிவு மிக் கது. எனவே, கதையையோ, காட்சியையோ, துணுக் கையோ நீட்டும் பொழுது வட்டத்தின் முழுமை பூரணமாகப் புலப்படும். பொருள் வட்டமாக விரிந்து அழகு காட்டும். குறும் பா வின் பொருள் எதுவாகவும் இருக்கலாம் என்பதை இக் கோவையில் இடம் பெறும் நூறு பாடல்கள் மூலம் மஹாகவி +ாட்டி யுள்ளார். ‘லிமரிக்" என்ற ஆங்கிலக் கவிதைகளிற் கேலிச் சிரிப்பிற்கே முதலிடம் கொடுக்கப்பட்டத, ஆஞல், குறும் பாவின் உயிரோ சிந்தனையைத் தூண்டும் சிரிப்பாகும்! சிந்தனை  ையத் தூண்டிச் சிரிப்பைக் கக்க வைக்கும் இடத் திலே 'இதுதான் குறும்பா ? (குறும்பு + ஆ) என மகிழ்கின் ருேம். (உருவங் குறித்து மட்டும் அன்றி, உயிர்ப் பொருள் குறித்தும் குறும் டா என்னும் நாம கரணம் இப் புதுக் கவிதை முயற்சிக்கு வெகு இயல் பாகப் பொருந்துகின்றது.) சிந்தனையைத் துரண்டும் சிரிப்பே உயர்ந்த நகைச் சுவையின் பாற்படும். எனவே, குறும்பாவால் தமிழ்க்கவிதையில் நகைச் சுவை, ஆழமும் அகலமும், இறுக்கமும் இலகுவும் பெற்று, ஒரு புதிய உச்சத்தை அடைய வழி பிறக் கின்றது. பாலைப் பொருளாகக் கொண்டு இயற்றப் பட்டுள்ள சில "லிமரிக்'குகள் அச்சிடத் தக்கன வல்ல. பாலைப்பொருளாசக் கொள்ளும் பொழுது கூட விர சமான பாலெழுச்சி அல்ல, நகையே மிளிருதல் வேண்டும் என்பது குறும் பா வகுக்கும் மரபாகும். சிலேடைச் சொற்கள், சிலேடைக் கருத்துக்கள் குறும் பாவுக்கு மெருகூட்ட வல்லன. சிரிப்பிற்கும், அதே சமயம் சிந்தனைக்கும்; கருத்திற்கும், அதே சமயம் கற்பனைக்கும் பெருவிருந்தாக அமைய வல்லன குறும்பாக்கள்.

15
குறும்பாவுக்கான இத்தனை தன்மைகளையும், இயல்புகளை யும் இக்கோவையிலே மஹாகவி அறி முகப்படுத்தும் நூறு குறும்பாக்களிலுமிருந்து நேர்த் தியாகக் கற்பிக்கக்கூடியதாக இருக்கின்றது. மஹா கவி அறிமுகப்படுத்தும் புதுக் கவிதையாம் குறும்பா மூலந் தமிழ்க் கவிதையின் பார்வையும்,பரப்பும், பணி யும் அகலிக்கின்றன. காதலையும், நிலவையும், தென் றலையும், தமிழுணர்ச்சியையும் விட்டால், கவிதைக் கான பொருள் கிடையாது என்று நம் கவிஞர் பலர் செத்த பாம்பையே திரும்பத் திரும்ப அடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கும் இவ்வேளையிலே, எந்தப் பொருளும் கவிதைக்கு அந்நியமாக மாட்டாது என்பதை மஹாகவி தம் குறும் பாக்கள் மூலம் நிரூ பித்துவிட்டார். அத்துடன் , குறும் பாவால் தமிழ்க் கவி வாழ்வின் எம்மூலைக்குள்ளும் புகுகிறது. இதன் மூலங் கவிஞர் தொகை மட்டுமல்ல. கவிதை யைச் சுவைப்போர் தொகை பெருகலும் ஆகும். குறும் பாக்கள் இலகுவில் மனனமாகிவிடுவன. நண்பர்கள் கூடும் இடங்களில், சொல்லி மகிழத் தக்கன; நட்புச் சூழ்நிலையை உருவாக்கப் பயன் படுவன.
நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலைசிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர் கள் குறும்பா என்னும் புதிய செய் புள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத் தக்க தாக நூறு குறும் பாக்கள் கொண்ட இக்கவித்தொகையைத் தந்ததின் மூலம், தமிழ்க் கவி வளத்தைச் செழுமைப்படுத்து கிருர், மெல்லிசைக் குள் சிக்கித் திணறி ஊற்ற டைத்து நிற்கும் தமிழ் நாட்டுக் கவிதைக்குக் கண்கள் திறந்து புதிய இரத்த மும் பாய்ச்சுகிருர், மஹாகவி மஹாகவியேதான் என்பதை நிலைநாட்டப் போகின்ற நூல்களுள் இக்குறும்பாக் கவித்தொகையும் ஒன்ரு கும்.
சம காலத்தவர்களினதும், சொந்த நாட்டவர்
களினதும் புலமையையும் திறனை யுந் மதிக்கவும் கெளரவிக்கவுங் கூடாது என்ற ஒருவித மரபினைத்

Page 10
6
தமிழர் மறைமுகமாக நிலைநாட்டி விட்டார்கள், இந்த " மரபினை மீறி, நம் நாட்ட வரும், என் சம காலத்த வருமான மஹாகவி அவர்கள் தமிழ்க் கவிதை உலகிற்குச் செய்து வரும் அளப்பரிய சேவையை மனமார மதித்து, உளமாரப் பாராட்டு வதில் மகிழ்கின்றேன்.
இனி, சுவைஞர்களின் சுவை!
இக்கோவையில் இடம்பெறும் குறும் பாக்களுட் சில இளம் பிறை' மாசிகையில் வெளிவந்தன. அப் பொழுது இளம் பிறை நிர்வாகிகள் குறும்பா நயங் களை வாசகரிடமிருந்து வரவழைத்து, தரமான வற்றைத் தமது பத்திரிகையிற் பிரசுரித்தும், சிறந்த வற்றிற்குப் பரிசில்கள் வழங்கியும் வந்தார்கள் பிர சுரமான நயங்களுள் இரண்டினை இங்கு தருதல் மிகவும் பொருத்தமானது என்று நினைக்கின்றேன். குறும் பாக்கள் மிகச் சாதாரண வாசகனைக் கூட எவ் வாறு கவர்ந்துள்ளன; குறும் பாக்களிலே பொதித் துள்ள நகைச்சுவை எவ்வாறு சிந்தனையைத் தூண்டு கின்றது என்பவற்றிற்கு இக் குறும்பா நயங்கள் சான் ருக அமைந்துள்ளன. முதலாவது நயம் வருமாறு:
உத்தேசம் வயது பதினேழாம். உடல் இளைக்க ஆடல் பயின் ருளாம்.
எத்தேசத் தெவ்வரங்கும் ஏருளாம்! ஆசிரியர் ஒத்தாசை யால், பயிற்சி பாழாம்.
(பக். 25)
இக்குறும் பாவில், தமிழரின் சொத்தான ஓர் அரிய கலை, நமது கண் முன்னலேயே பாழாக்கப்படு வதை மஹாகவி படம் பிடித்துக் காட்டுகின்றர். இந்த அவலத்தை, ஆபாச மற்ற வார்த்தைகளில், ஆனல், உயிர்த்துடிப்புக் குலைந்து போகாது மஹா கவியைப் போன்ற ஒருவரால் மட்டுமே சித்திரிக்க முடியுமென்று தோன்றுகின்றது. பதினறு வயது இள வயது மங்கை என்று சொல்வது மரபு. குறும்பாக் கோனின் மங்கை பதினேழு வயதினள்; இல்லை, உத்

A.
7
தேசம் பதினேழு வயதினள். பதினருகவும் இருக்க லாம். அந்த இளம் உடல் கயிருக இளைக்க (கலைநோக் கிற்காக அன்று) அவள் ஆடல் பயின் ருள். அவ்வாறு பயின்றவள் அரங்கேற்றத்திற்கும் தயாராக இருக் கின் ருள். முதல் இரண்டு வரிகளிலே, அழகிய நடு வர்க்கப் பெண்ணையும், நடனக் கலையில் அவளடைந்த தேர்ச்சியையும் நாம் அறிந்து ஆனந்தப்படுகின் ருேம். மூன்ரும் நான்காம் வரிகளிலே குறும் புத் தனமான புதிர் போடப்படுகின்றது. உடல் இளை கப் பயின்றவள் இப்பொழுது எத்தேசத் தெவ் வரங்கும் ஏருளாம்! இந்த வரிகளிலே நம்மைத் தரிக்கச் செய்து, குறும்புத்தனமாக மஹாகவி நமது கற்பனையை வேறு திசையிற் சரித்துவிடுவது அற்பு மாக இருக்கின்றது. ஆசிரியர் ஒத்தாசையால், அவள் கற்பு-வயிறு ஆகியவற்ருேடு ஆடற்கலையுங் களங் கப்படுகின்றன! உடல் இளைப்பு நோக்கமும், உடல் பருப்பதில் முடிகிறது! "ஒத்தாசை” என்ற சொல்லே இத்தப் பாடலின் இரத்தினக் கல். வயதைச் சொல் லிப் பெண் மடந்தைப் பருவத்தினள் (teenager) என் பதை முதலடியிற் கவிஞர் காட்டிவிட்டார். அந்த வயதில் மேயும் மனதிற்கு ஒத்தாசை'யாக ஆசிரியர் இருந்தார். சமூகத்தில் நடக்கும் விரசத்தை "ஒத் தாசை’ என்ற மலினமான சொல் லாற் சித்திரிக்குந் திறமை நயக்கத்தக்கது. பயிற்சி (கலை அப்பியாசம் என்ற அர்த்தத்தில்) பாழ். அதை அரங்கேற்ற முடியாது. பயிற்சி (வழக்கம் என்ற அர்த்தத்தில், வழங்கி வரும் கற்பு) பாழாகி விட்ட தினுலும் பாழ்! ஆடும் அந்த அழகு உடலினள் வயிறு பெருத்து விட்ட விடயம் சிரிப்பை முகிழ்த்துகிறது. அதே சம யம், கலையின் பெயரால் கற்பில் ஏற்படுத்தப்பட்ட கறை சிந்தையைக் கிளறுகின்றது
இரண்டாவது நயம் வருமாறு:
முத்தெடுக்க மூழ்குகின்றன் சீலன். முன்னலே வந்து நின்றன் காலன்.
சத்த மின்றி, வந்தவனின் கைத் தலத்திற் பத்து முத்தைப் பொத்தி வைத்தான். போனுன் முச் சூலன்
(பக். 53)

Page 11
18
மஹாகவி தமது குறும்பாக்கள் மூலம் எவ்வாறு நமது சமுதாயத்திற் புரையோடிக் கிடக்கும் ஊழல் களை நையாண்டி செய்கின்ருர் என்பதற்கு இக் குறும்பா மிக அச்சாவாக அமைத்துள்ளது. ‘தம் பிக்கு இவ்வளவு சம்பளம், கிம்பளமாக அதிலும் இரு மடங்கு கிடைக்கும்" என்று பெருமையாகப் பேசு பவர்களையுங் காண்கின் ருேம். அந்த அளவிற் 'கை லஞ்சம்' வாங்குவது 'உரிமையானது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கும் நோய் காரி யாலயச் சிறு பணியாள் தொடக்கம், மிக உயர்ந்த நிர்வாக பீடத்தில் அமர்ந் திருப்பவர்கள் வரை யிலும் பரவியுள்ளது. இந்த நோய் இங்கிருந்து, எமலோகம் வரை சென்று விட்டது என்று மஹா கவி செய்யுங் குறும்பு தயக்கத் தக்கது. "சத்த மின்றி", * கைத்தலத்தில்'," பொத்தி வைத்தான்" என்ற மூன்று சொற்ருெடர்களினல், கை லஞ்சம் எவ்வளவு இர கசியமாகவும், பத்திரமாகவும் நடைபெறுகின்றது என்பதை மஹாகவி குறும்பாகப் போட்டுடைப்ப தும் மிக நன்ரு கவுள்ளது. "பணம் என்ருல் பிண மும் வாய் திறக்கும்’ என்பது பழமொழியாகும். 'கைலஞ் சம் என்ருல் முச்சூலனும் கை திறப்பான்" என்ற புதுமொழியை இக் குறும் பாவிற் கூரு மற் கூறும் மஹாகவி உண்மையிற் குறும்பர் கோனேதான்.
சாதாரண வாசகர் இரசனையே இவ்வாறு அமைந் திருப்பின், இக்கோவையிலுள்ள நூறு குறும்பாக்கள் பற்றி கற்றுணர்ந்த உரையெழுதுவதாயின் தனித் தனி அத்தியாயங்களை எழுத முடியும் . இக் குறும் பாக்களை ஒவ்வொரு தடவையும் வாசிக்கும்பொழுது, அவை ஒவ்வொரு கோணத்திற் புதிய பொலிவு காட்டுகின்றன. சிறந்த கவிதையின் இயல்பே அது தான். வாசகனின் தளத்திற்கேற்ப குறும்பாவின் அர்த்தம் விரிவுபடுகின்றது. எனவே, இக் குறும்பாக் களுக்கு நானே நயம் எழுதி, என் பார்வையினுாடா க க கான் நீங்கள் பார்த்தல் வேண்டுமென்று எல்லைப் படுத்துதல் முறையன்று. அது கவிஞனின் மூச்சைத் திருகுஞ் செயலுமாகும். ஆனல், சில விஷயங்களைத் தொட்டுக் கோடி காட்டுதல் கவிதையை உரிய முறையிலே தரிசிக்க உதவுமென்று நம்புகின்றேன்.

9
"விமரிக்’கிலும் பார்க்க, குறும் பாவின் பார்வை அகலமானது, ஆழமானது என்று ஏலவே குறித்தேன். அதனை நிறுவதல் நன்று.
There was an old man of Cape Hon
Who wished he had never been born;
So he Sat om a chair Till be died of despair
That dolorous man of Cape Horn.
*கேப் ஹோனில் ஒரு கிழவன் இருந்தான் தான் எப்பொழுதுமே பிறந்திருக்கக் கூடாது என விரும் பிஞன். எனவே, அவன் நம்பிக்கையின் மை யாற் சாகும் வரை கதிரையில் அமர்த் தான் . கேப் ஹோனின் அந்த வருத்தந் தோய்ந்த மனிதன்!” * லிமரிக்கின் பிதாமகரெனக் கொண்டாடப்படும் சாட்சாத் லியர் இயற்றிய லிமரிக்’கின் தமிழ் உரை இது. இதிலே கேலிச் சிரிப்பு மண்டிக்கிடக்கி றது; சிந்தனையைத் தூண்டும் கூர்மை இல்லை. அந்த 'லிமரிக்'குடன் குறும் பாவின் பிதாமகரான மஹா கவியின் குறும் பா ஒன்றினை ஒப்பிட்டுப் பார்த்த ல், பின்னவர் சிரிப்பைச் சிந்தனையைத் தூண்டும் ஆயுத மாக எவ்வாறு கையாளுகின் ருர் என்பது புலப் படும்.
பெஞ்சனிலே வந்தழகக் கோஞர் பெருங்கதிரை மீதமர லானுர்,
அஞ்சாறு காள் இருந்தார். அடுத்த திங்கள் பின்னேரம். . பஞ்சியின லே இறந்து போனுர்,
(பக். 47)
நடுத்தர வர்க்கத்தின் அரசாங்க ஊழியர்கள் உத்தியோகம் பார்க்கும் இயந்திரமாகவே வாழ்கி ரூர்கள். கலை-இலக்கிய இரசனையோ, வேறு பொழுது போக்குகளில் ஈடுபாடோ இன்றி ஒவர் டைமாக உழைக்கும் இயந்திரங்களாகப் பொருள் தேடு கிருர்கள். அவர்கள் பெஞ்சனில் இளைப்பாறியதும், செய்வதற்கு ஒரு வேலையுமின்றி ஒருவித 'வெறுமை’

Page 12
20
சூழ்ந்து கொள்ளுகின்றது. அந்த "பஞ்சி”யே எமனுக மாறிவிடுகின்றது. இளைப்பாறிய ஊழியர் பலர் 'பெஞ்சன்’ பணத்தை அனுபவிப்பதற்கு முன்னரே சிவபதமடைந்த சோகக் கதைகள் பலவற்றைக் கேள்விப்பட்டிருக்கின்ருேம். இக் குறும்பாவை வாசித் ததும் சிரிப்பு வருகின்றது. சிரிப்பு அடங்க முன் னரே சிந்தனையிலே ஒரு பெரிய சோக நாடகம் விரிகின்றது. ஐந்து வரிகளிலே இத்தகைய பெரிய தொரு துன்பியல் நாடகம் எழுதப்பட்டுள்ளதா என்ற மலைப்பு மேலோங்குகின்றது.
இக்கோவையில் இடம் பெறும் நூறு குறும்பாக் களும் நூறு வகையின. சுவைஞர்களின் இரசனைத் தளத்திற்கேற்ப அர்த்த விரிவும், அழகுப் பொலி வுங் காட்டுவன. இந்தக் குறும்பாக்களிலே நாம் பல்வகைப்பட்ட பாத்திரங்களைச் சந்திக்கின்ருேம். சில்லாலைப் பகுதியில் நாயிடம் அவஸ்தைப்படும் * எந்நாட்டவர்க்கும் இறைவனுன’ சிவன், சீதையின் கற்பை எடைபோடும் இராம பிரான், துகிலுரி படலத்தில் “ஏஞ்சாமி” என்று அலறும் பாஞ்சாலி, பச்சை நிறப் பெண் தேடும் அர்ச்சுனன், சஞ்சீவி மலையைத் தூக்கிய அநுமார் ஆகியோர் விண்ண கத்துப் புத ைமகளை அல்ல, மண்ணகத்து உண்மை கள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் பாத்திரங் களாகவே இக் குறும்பாக்களிலே இடம்பெறுகிருர் கள். ஒரு நாவலிலே, எத்தனையோ, பாத்திரங்கள் வருகின்றன. அந்தப் பாத்திரங்களுள் றிப்வான் விங் கிளைப் போலவோ, துப்பறியும் சாம்பு வைப் போலவோ மனதிலே நிற்கக் கூடிய எத்தனை இலக் கியப் பாத்திரங்கள் நாவலிலக்கியத்தினல் தமிழுக் குக் கிடைத்திருக்கின்றன? ஒற்றைக் கைவிரலில் எண்ணி விடலாம். ஆனல், இக் குறும்பாக் கோவை யில் சாகாமல் வாழப்போகும் எண்ணிறைந்த இலக் கியப் பாத்திரங்கள் தமிழுக்குக் கிடைக்கின்றன. அல் ஆலயிலே வாழும் முல்லை, கண்டியில் ஒர் பேரி ளம் பெண் ஆத்தாள், சிந்தை இழக்கும் தண்ட பாணி, பெஞ்ச னிலே வந்த அழகக்கோர்ை, முந் தலிலே வாழ்கின்ற தேவர். தந்தி மரத்திற்கு அத் தர் ஊற்றிய பாரி, பூமாதைக் காண வந்த சாமா

2委
ான இந்தப் பட்டியல் நீண்டது. . . தமிழிற் புதி நாமகரணங்களும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அல்லது, இடுக்கண் மேவிடுங்கால் நகும் சேவலை யும், ‘என் மண்டை ஒடப்பா’ என்று அலறும் நரி கயையும் நம்மால் மறக்க முடிகின்றதா? கலைப்போர் வையில் நடைபெறும் ஆபாசம், சமையற் புத்தகம் பார்த்துச் சமைக்கும் நாகரிகம், சுங்கக் கடத்தல், கஞ்சாக் கடத்தல் சீதனக் கொடுமை, சினிமாக் கொட்டைகளிலே நடைபெறும் அங்க சேஷ்டைகள், பிற மொழி மோகம், புகழுக்கும் விளம்பரத்திற்கு மாக நன்கொடை வழங்கும் நடிகர்களுடைய மனப் பான்மை, ‘விடுப்பு'ப் பார்க்கும் இயல்பு, காதல் பற்றிய மனேரதியக் கற்பிதங்கள், ‘இலக்கியகாரரின் போ லிப் புலமை, கை லஞ்சப் பெருக்கம், பண்டி கரின் “பண்டிதம்', செருப்பைத் தேய்க்காத அள விற்குக் கஞ்சத்தனம், விஞ்ஞானப் புதுமைகள் ஆகிய எதுவுமே மஹாகவியின் கூரிய பார்வைக்குத் தப் பாது, குறும்பாவுக்கு இசைவான பொருள் களாக நெகிழ்ந்து கொடுத் திருக்கின்றன. தமிழர் பாலுணர்ச்சிகளை மறைப்பதற்குக் கட்டி வைத் துள்ள வேலிகளினூடே, எவ்வாறு உளநூலார் நிறு விய உண்மைகள் கழுவி அவை விளைகின்றன என்று இசை திரும்பிச் சிந்திக்கத் தூண்டுங் குறும்பாக் களும் உள. நம் தமிழர் பலவீனங்களையும், சிறுமை க3ளயுந் தொட்டுக் காட்டுங் குறும் பாக்களை வாசித் ததும் முதலிற் சிரிப்பு வருகின்றது; பின்னர் சிந்தனை யுடன் சோகமும் புரையோடி மெய் சிலிர்க்கின்றது.
மஹாகவியின் கவித் திறன் நாடறிந்த பெருமை. அவருடைய ஆழ்ந்த கவிப் புலமையைச் சில வரிகள் மின்னலெனச் சொடுக்கிப் புலப்படுத்துதல் அரிய கலை விருந்தாகும். "தென்றலிலே மன்றல் வருஞ் சோலை” (பக். 50) போன்ற வரிகளிலே பழந் தமிழின் நறுஞ் செழுமையை நுகர்கின்ருேம், 'மெத்தத் தித் கித்த துத் திக்கு (பக் 33) போன்ற வரிகளிலே சந்தத் திருப் புகழின் ஒசை நயம் பருகுகின்ருேம்; “மேடையிலே விற் றிருந்தாள் பேடு" போன்ற பாக்களிலே தமிழின் எளிமையைக் கண்டு களிக்கின்ருேம். மஹாகவி தேர்ந்த கலைத்துவத்துடனும், பொறுப்புணர்ச்சியுட

Page 13
22,
னும், நிதானத்துடனும் சொற்களை அளந்து நிறுத் துப் போடுகின் ருர் . " ஒத்தாசை"செமியாத போன்ற சாதாரணச் சொற்களைக் கூட இலக்கியச் சொற் களின் நிலைக்கு உயர்த்துகின்றர். ஒரு குறும்பாவில் 'இல்லை’ என்ற ஒரே சொல்லை நான்கு இடங்களில் லளிதமாகக் கையாளுகின்ருர். " கூடு’, ‘பூதவுடல்" என வரும் சிலேடைச்சொற்களுக்கு புதிய அர்த்த வீறு பாய்ச்சியு மிருக்கின் ருர், மொத்தத்தில், பொருள் குறித்தும், யாப்புக் குறித்தும், சொல் குறித்தும் இக்குறும்பாக் கோவையை முழுமைப் படுத்தியுள்ளார் மஹாகவி.
ஈற்றில், சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். கையிலே எடுத்ததும் கீழே வைக்காது, நூறு குறும் பாக்களையும் வாசித்து முடித்துவிட்டால், இவற்றின் தரிசன பயனை முழுமையாக அடைய முடியாது. புத் துணர்ச்சி ஊட்ட வல்ல, சுவை மிகு போஷிப்புக் கலவை நிகர்த்தவை குறும் பாக்கள். தேவையான நேரத்தில், தேவைப்படும் சிறு அளவுகளில் இவற்றை உட்கொண்டால், சுவையும் பலனும் அதிகமாகக் கிடைக்கும்.
எஸ். பொன்னுத்துரை
231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-18, 9-2.66.

சுவைஞரே
கவிதை உலகளவு பரந்து பல்வேறுபட்டது.
கடவுளையும் காதலியையும் போற்றுவது மட்டும் அன்று அதன் பணி.
கட்டித்த சிந்தனை உடைய பண்டிதர்களும், கோட்பாடுகளை விழுங்கி விட்டுச் செமித்துக் கொள்ள முடியாதவர்களும், மோப்பதற்கும், மோந்து முணு முணுப்பதற்குமாக எழுதப் படுவதன்று கவிதை.
அது சாதாரண மனிதனின் பழுது படா உள்ளத்திற் பாயப் பிறப்பது.
ய்ேவு கடமையின் ஒரு கூறே ஆகும்.
எனது குறும்பாக்கள் முற்றும் ஓய்வுக் குரியனவும் அன்று.
'மஹாகவி
'நீழல்", அளவெட்டி. 17.2 66

Page 14
உள்ளே
சிரிப்புக்கும் சிந்தனைக்கும்
கருத்துக்கும் கற்பனைக்கும் பெரு விருந்தாம்
OO
குறும்பாக்கள்

25
உத்தேசம் வயது பதினேழாம்.
உடல் இளைக்க ஆடல் பயின் ருளாம்.
எத்தேசத் தெவ்வரங்கும் ஏறளாம்! ஆசிரியர்
ஒத்தாசை யால், பயிற்சி பாழாம்.
AC-4

Page 15
26 மஹாகவியின்
கந்தனுக்கும் சுந்தரிக்கும் காதல்.
கற்பனை உயர்ந்த ஒரு கோதல்.
*சந்ததி வளர்க!" எனத் தக்கவர்கள் சேர்த்து வைத்தார். . .
அந்தோ! மென் கற்பனை என்னுதல்?
கற்பகத்தின் வெண் கழுத்திற் தாலி
கட்டுதற்கு முன்னின்றன் வாலி.
அற்புதமாய் வாழ்ந்தார்கள். ஆறுபிள்ளைப் பெற்றர்கள். . .
இப்பொழுதோ வேறு பல சோலி.

குறும் பா 27
கூடொன்றைக் காட்டுகிருள் பாட்டு,
"கூறுங்கள் என்ன?” எனக் கேட்டு! *கூடு” என்றன். கூடி, "இது கூறுவதற் கெத்தனை காட்
பாடு!" என்ருள், கன்னத்திற் போட்டு.

Page 16
28 - மஹாகவியின்
பாஞ்சாலி ஆடையை உரிக்தார்.
பாண்டவரோ கல்லாய்ச் ச மைந்தார். “ஏஞ்சாமி?!’ என்றழுதாள். இவள் களிக்கக் கண்ணபிரான்,
ஆம், சேலை ஆயிரமாய்த் தந்தார்.
 

(W) Aiy ib Lu fT 29
தோசை சுட்டுச் சுட்டு வைத்தாள் பேதை,
தொடர்ந்து கதைத் துண்டிருந்தான் மேதை.
ஆசை உரையாடலிலே! ஆயினும், பின் னர் கிடந்தோர்
மாசம் உழன் ருன்... வயிற்று வாதை.

Page 17
30 மஹாகவியின்
மாடியிலே நள்ளிரவில் மீனுள்
மைத்துனரை ஏற்ற வழி காணுள் வாடி நின்று கண்ணிரை வார்த்திடவும , நீந்தி அதன்
ஊடு சென்ற னு-மகிழ்ந்து போனுள்.
ஏணியிலே ஏறினனும் முத்தன்.
இவன் எதையும் கவனிக்காப் பித்தன்.
ஏணி நுனிக் கப்பாலும் ஏறிக்கெண் டே இருந்தான்
காணும். அவன் இன்றே வானத்தன்!

குறும்பா 3.
தொலைபேசி யிற் பேசிப் பேசித்
தொந்தரவுக் குள்ளானன் காசி.
மலரை மணக் தான்! எனினும் வாழ்கின்றன்- மீண்டும் அதே
தொலை பேசி யிற் பேசிப் பேசி.

Page 18
32 மஹாகவியின்
காதலரின் ஓவியம் வரைந்தான். கண்ணியம் உள் ளார் என நி னைந்தான்.
மாதம் உருண் டோட, மறு கண்காட்சி வந்தது. ஃஆ, தீது புரிந்தார் என உணர்ந்தான்.
 

(ማ ፀሀ!th tሓff 33
அத்திக்குத் தூது சென்றள் உத்தி.
முத்து இவளைக் கைப்பற்றி முத்தி
முத்தி மகிழ்ந் தான்! மெத்தத் தித்தித்த துத்திக்கு. அவ்
அத்தி செத் தாள், கத்திக் கத்தி,
AC.

Page 19
34 மஹாகவியின்
பூண்டுகளைக் காயவைத்தார் பூதர்.
புல்லிய நோய் தீர்க்க வந்தார் காதர்.
ஆண்டு, அவைகண்டு உண்டமாடு மாண்டு போகக், காதர் சொல்வார் :
‘'வேண்டாம், ஓய்! கீர் உமக்கே தாதர்!’
படங்களிலே தோன்றுபவர் சந்தர்.
பத்திரிகை யாளன் சுதந்தர்
அடைந்தனன் போய் அவர் மந்திர், "ஐயா, ஓர் பேட்டி!' என.
உடன் மொழிந்தார்: “உள்ளுக்கு வந்தர்!”

குறும்பா 35
மேதர் என்ற பாதிரியார் வந்தார்.
மேன்மை மிகு கற்பனை கொணர்ந்தார்.
ஆதர் இது காதுற்றும், அவர் மனைவி மார்பில் இரு
போதிருந்த மாதிரி வி யந்தாா.

Page 20
36 மஹாகவியின்
பண்டிதர் பண் பாடென்று நிற்பார்.
பழைய தொரு புணரியலே கற்பார் மண்டை உடை பட்டதனுல் மருத்துவர் பாற் சென்றவர் அப்
புண் தையல் போடுவதற் கொப்பார்.

குறும்பா 37
செந்திரு இரட்டையரை ஈன்ருள்.
சிந்தையிலே பேருவகை சான்ருள். வந்து கண்ட ஐயப்பர் வாய்கடித்தே, "என்னுடையது
எந்த மகவு?’ என்ன, எதும் தோன்றள்.

Page 21
፰ 8 மஹாகவியின்
அல்லையிலே வாழ்பவளாம் முல்லை.
அவள் அழகால் ஆடவர்க்குத் தொல்லை. ‘இல்லை’ எனும் தன் இடையை இல்லை என தீந்ததனுல்,
'இல்லை" என்பார் இப்பொழுதோ, இல்லை
 

39
நல்லையர் கெக்குருகி நைந்தார். கம்பெருமான், ‘வா” என்று வந்தார்.
*நில்லயா? என்றடியார் -நேரேபோய்த் தம் மனைவி செல்லம்மாள் சேலையுள் மறைந்தார்.

Page 22
4 மஹாகவியின்
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி
சோக்கான வீடு, வயல், கேணி.
இந்தளவும் கொண்டுவரின், இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்ட பாணி.
 

S 詹]
ދަރިރަރ SA భక్ష2
·一感盔警
ቆማ
氹 مینی تھی
ā '&
தென்னை மரம் ஏறுகிறன் சித்தன்.
பூனை கண்டான் அவ்வழகுப் பித்தன்:
தன்னுடையை மாற்றுகிருள் கிணற்றடியிற் தங்கம்மாள
இறுைம் இறங் காணும் ஆவ்வெத்தன்.
A Cas
41

Page 23
42 மஹாகவியின்
கோதை என்பாள் ஓர் குறும்புக் காரி.
கொட்டகை வந் தாள். உடுப்போ சாரி,
மாது தலை மீது நின்ருள் மக்கள் கண்டு செப்புகின்றர்:
“ஏதும் ஐயம் இல்லை; உவள் காரி*
ஆவரங்கால் ஊடு செல்லும் வீதி.
அவ்விடத்து வண்டியில் காய் மோதி. . .
சேவல் ஒன்று கண்டு கின்று சிரிக்கிறது காண், இடுக்கண்
மேவிடுங்கால் தான் ங்கும் என் ருேதி,

Up bunt
கண்டியில் ஓர் பேரிளம் பெண் ஆத்தாள்.
கற்பை அவள் அற்புதமாய்க் காத்தாள்.
உண்டு செமி யாத வயிறு ஊத ஒரு காள், கயிற்றைத்
தொண்டையிலே மாட்டி உயிர் நீத்தாள்.
43

Page 24
44 மஹாகவியின்
காகையிலே வாழ்கின்ற தோகை
கன்னுதலில் துன்பத்தின் ரேகை.
ஆக அவள் கண்டது: பேர் ஆழியிலே தன் கொழுநர்
போகையில் அணிந்த தலைப் பாகை,
அப்புவினைக் கேட்டனள் சிவப்பி;
அவள் படத்திற் சேர்கிற விருப்பி, ஒப்பவில்லைத் தாய், ஓடிக் காலி செய்தாள் ஓர் நஞ்சுக்
குப்பியினை மாண்டவள்- தாய் சுப்பி.

Ouy but 45
'ான்றி சொல்வேன் என் எதிரிற் தோன்று, M&ா இரவு! " என்றனன். உட்சான்று
'நன்றிதல்ல," என்றிடினும், சென்று பிழை கண்டு கொண்டாள்| . I 二 3

Page 25
46 மஹாகவியின்
ஏழ்வேலிப் பக்கத்தாள் நங்கை,
என் நெஞ்சம் தொட்டதவள் கொங்கை.
கீழ்வேலிப் பொட்டெடுத்துக் கிட்ட இருந் தேன். . . ஊரார்
பாழாக-இன்றவள் என் தங்கை
காதலிலே தோல்வியுற்ருன் கா8ள.
காளி மணந்தாள் வேற்றேர் ஆ2ள.
"சாதல் கடன்!" என்று கடல் சார்ந்தவனே மற்றவனின்
பூத உடல் கண்டான் அவ் வேளை,

wypy bunt 47
பெஞ்சனிலே வந்தழகக் கோனர்
பெருங்கதிரை மீதமர லாஞர்.
அஞ்சாறு நாள் இருந்தார். அடுத்த திங்கள் பின்னேரம் . . .
பஞ்சியினு லே இறந்து போனர்.

Page 26
48 மஹாகவியின்
சீதையை இராமபிரான் மீட்டார்.
சிற்றிடையின் கற்பை எடை போட்டார். ஏதும் அவர்க் கையம் இல்லை! என்ருலும் காட்டவர் வாய்
தீது, இலையேல் செய்வாரா?. . . . மாட்டார்!
 

குறும்பா
சுலோத்துங்கன் வாகையொடு மீண்டான். n.ாலயமே கடுங்க அரசாண்டான்.
'உலாத் தங்கள் பேரில், இதோ!"
-ஒரு புலவர் குரலெடுத்து "கிலாந் திங்கள். , , , ," எனத்தொடங்க,
A c.
to so too sle
49
மாண்டான்.

Page 27
மஹாகவியின்
தென்றலிலே மன்றல் வருஞ் சோலை. தேனை அளி, தேடும். இளங் காலை.
அன்றில் ஒன்று தன்பேடோடு - அணையும். ஒரு மூலையிலே
சென்றன்-கள் அலக் கடனுே வேலை?
w
 
 
 
 

G35gh unr 5独
முந்தலிலே வாழ்கின்ற தேவர்
முழுத் தொழிற்கும் முதலாளி ஆவர்.
"இந்த விலை விற்கிறதே! என்செருப்பைத் தேய்ப்பான்!”என்று
அந்தரத்திற் தான் நடந்து போவர்.

Page 28
52 மஹாகவியின்
சோறு பரிமாறுகிருள் பாறு.
சொர்க்கம் அது வே என்ற வாறு, நூறு தரம் இட்டுண்டான். ஆதலினுல் நுண்ணிடைக் கோர்
வேறு வித கோவு பெறுபேறு.
கள் கிடந்த புன் நகையைக் கண்டான்.
கனகி பசக் துள்ளது கண் ணுண்டான்.
"வெள்குவது சாலும் அயல் வீடு புகல்" என்பதனைக்
கொள்கை அளவோ டொப்புக் கொண்டான்.

(50 i b't unr
முத்தெடுக்க மூழ்குகின்றன் சீலன். \
முன்னலே வந்து நின்றன் காலன். , ,
சத்த மின்றி, வந்தவனின் கைத் தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான். போனுன் முச் சூலன்

Page 29
மஹாகவியின்
போடி பெற்ற செல்லமகள்: சேடி,
பொன்னன் இடம்: மீன் பிடிப்போர் வாடி!
ஓடிவரப் பெண் மறுத்தாள்ட ஓம், அதனுல் இன்றவனின்
நாடியிலே நீண்ட தொரு தாடி.
 

65 p h unr
பஞ்சவிங்கம் பார்க்கின்றன் பார்வை.
பவளம்மாள் ெ முகத்தில் வேர்வை.
கொஞ்சம் அவள் தன்னுடலிற் கொண்டுவந்த சாமானுக்கு
அஞ்சுலட்ச மாம் ஐயா தீர்வை

Page 30
莎●
மஹாகவியின்
கும்பிட்டுக் கொண்டிருந்தார் சாது
கூத்தாடிக் கொண்டிருந்தாள் மாது.
தம்பட்டம் மட்டும் இடை மூட அவள் ஆட, அவர்
அம்பொத்த கண் அவள் பால் மீது.
 

குறும் பா 57
அன்றடித்த பேய்ப் புயலிற். தோணி
ஆழ, இரு வர் பிழைத்தார். காணி
நின்று தனித் தீவினிடை கெஞ்சலைந்தார், அண்ணனெடும்
ஒன்று விட்ட தங்கை கலி யாணி,
A C-8

Page 31
58 மஹாகவியின்
முதலாளி பெற்ற மகள் தத்தை.
முனியாண்டி யோ தொழிற் சங்கத்தைப்
பதமாய் நடத்துகிறன், பார் சிறக்க ஓர் வழிதான்:
அதனல், அவள் தாய் இன் றத்தை
கண்மணியாள் கேட்கின்ருள் கம்மல். காரிகையின் கேள்வியொடு விம்மல்
"விண் மீன்கள் கோத்தளிப்பேன். வேண்டாம் இச் சிற்றசை, அம்மணி!" என் ருன் அந்தச் செம்மல்.

குறும்பா 59
‘தற்கொலைக்கும் கான் தயங்கேன்!” என்ருன் ,
*சம்மதத்தைத் தா!'என்று நின்றன். நிற்க, ஒரு குள்ளன் இடை பற்றி அந்தப் பாவையினைக்
கற்க, இதழ் கள் திறந்தான், வென்றன்.

Page 32
60 மஹாகவியின்
படம் பார்க்கச் சென்றமர்ந்தான் சாலி.
பக்கத்தில் வீற்றிருந்தாள் நீலி.
உடம்பெடுத்த (bற்பயணுய் உள்ளங்கள் மாறிப் புக்கு
இடம்பிடித்தார்-பாய்கின்றர் வேலி,
 

(5 g) th unr 6
வள்ளியைப் பெண் தூக்கிய வழக்கு;
வந்துள தூர் முற்றவும் இதற்கு.
*தள்ளுபடி!' என்றனராம் தக்கபடி நீதியர். . . பெண்
பிள்ளைகள் உயர் நிறைக் கி ழுக்கு
ب

Page 33
62 மஹாகவியின்
கொண்டையிலே பூக்கொண்டு நின்ருள். கோதமனர் கடலையினை மென்ருர்,
அண்டையிலே சென்றமர்ந்தாள். அறிஞர் உற்றுப் பார்த்து, 'ஒவ்வோர் கொண்டையிலும் கடலை உளது!’ என்றர்.
 

குறும்பா 6。
பந்தாடிக் கொண்டிருந்தார் பெண்கள்.
பார்க்க இரண் டாயிரமாம் கண்கள். எய்க்தோடிப் போன இவை ஏறிடவும், ஆட்டம் இடை
நின்றது அவர் மேலெல்லாம் புண்கள்.

Page 34
64 மஹாகவியின்
தாகூர் நூற் ருண்டு விழா ஆச்சு.
தமிழ் கடிகர்க் கிது வாய்ப்பாய்ப் போச்சு
கோகாது தந்தாராம் நூறயி ரம். “கடிப்புக்கு,
ஆகா, இவர்” என்றுார்ப் பேச்சு.
மாடத்தி என்ற மட மாது
மைத்துனரைக் கேட்பாள் ஓர் போது:
*கூடத்தில் என் மடியை நாடியதேன்? தூங்குதற்கு
மாடத்து மெத்தை யன்ருே தோது”

குறும் பா 65
காம் அதனை கம்புவது பஞ்சி;
கறுங் கனியை ஏன் ஈந்தான் கெஞ்சி? -பாமகள் ஒள வைக் கிழவி பாடத் தான் வாழ்கிறதற்கு,
ஆம் அதிக மான் கெடுமான் அஞ்சி.
*பாடப்பா!' -ஒப்பியது காகம்:
பசித்த கரிக் கோ வடையில் மோகம்.
போடப்பட் டக்த வடை *பொட் டென்ன, “என் மண்டை
ஒடப்பா" -ஆம், முடிவு சோகம்.
A C-9

Page 35
66 மஹாகவியின்
முற்றத்தே முன் நின்ருள் மொட்டு.
மூடியது மேனியை மென் பட்டு.
சுற்றி வந்து நான் தேடிச் சோர்கின்றேன்- இல்லை யப்பா,
சற்றவளைக் காண ஒரு பொட்டு
 

குறும்பா m 67
h என்ற பாரிய ப ணத்தர்חזחנ_ו
பண்புடைய மெல்லிய உ ளத்தர். ஊரில் ஒரு தந்தி மரத்து ஓர் தளிரும் காஞராய்,
வேரினிலே வார்ப்பித்தார் அத்தர்.

Page 36
68 மஹாகவியின்
Sரயில் வரவேண்டியநேரம்
திங்கள்
இரயில்வந்த நேரமோ
"ട
محمي جح للالة لل63 سم
محمیہ
ஆத்திரம் இல்லாதவன் தான் காத்தான். 5-58 இரயில் பார்த்தான்.
காத்து நின்று நின்று இறந்தான் காண் இரயில் வந்ததுவோ ஈற்றில் 5-57 போற்தான்.

குறும்பா
69
வல்லி மிக நன்றவ் வளர்ந்தாள்.
வயது வரக் கொம்பினிற் படர்ந்தாள்
எல்லையிலாத் துன்பம் உழன்று இவளுடைய பெற்றேர், பேர்
அல்லி என மாற்றினர், ம கிழ்ந்தார்.

Page 37
70 மஹாகவியின்
“எத்தன் இவன்!" என்றிசைத்தார் வாதி.
எழுந்து சொத்திக் காய்ப் பிரதி வாதி
கற்ற வித்தை காட்டி, அவன் கள்ளாமை எண்பித்தார்!
சொத்தி சொல்வான்: ‘அப்படியா சேதி?
 

(35 gub ur 71
காண்டீபன் தேரினில் விரைந்தான்.
கண்ணகியை வீதியில் எ திர்ந்தான்.
*வேண்டாமே கண்ணு, இவ் வேடிக்கை வேகம்! இனி
மீண்டு விடு கம் யுகம்..” இரைந்தான்.

Page 38
72 மஹாகவியின்
பூமாதைக் காணவந்தார் சாமா,
"ஆமா?" என் ருள் அவள் அம் மா. மா
பூமாது மூஞ்சியிலே பூசி. . நின்று. மெ. ல், ல, வ. ர.
சாமாவை காம் நம்ப லாமா?
 

குறும்பா
ஆற்றங் கரைதனில் ஓர் மேடை.
அமர்ந்தான். ஆள் பாவலர் போற் சாடை!
"ஏற்றிடுக பா!' என்று வந்த கவிக் கன்னி, இதோ
ஓட்டம் எடுத் தாள் அவன் ஓர் காடை.
73
A C-10

Page 39
74 மஹாகவியின்
மேடையிலே வீற்றிருந்தாள் பேடு.
மேற்குரலிலே பாவத் தோடு
பாடுகிருள். மெய்ம்மறந்தான் பார்த்தான்! பார்த் தான் இடையின்
ஆடை-இடை-மேனி-வெளிப்-பாடு.
பூங்குழலி யாள் தலையில் வண்டு
போய் இருந்து பாடுகிற துண்டு.
தாங்கள் அகல் வீர்கள்!” எனத் தம்பூராக் காரரிடம்
ஆங்கு மொழிவாள் அந்தப் பெண்டு.

குறும்பா
75

Page 40
76 மஹாகவியின்
ஆடுகின்றள் அன்னை பரா சத்தி,
அண்டங்கள் உண்டுபண்ணல் கத்தி.
கூட கின்ருர், கூறுகிருர் கூத்தர்: "உயிர் தோற்றமுற,
ஏடி அம்மா, ஈதல்ல உத்தி!'
வண்டு வடைக்குள்ளிருந்து மேலே
வந்தது, கான் பிய்த்தபடி யாலே! கண்டொரு சொல் பேசாமல் காற்றில் அது போயினது,
கன்றி சொல்லா தெம்மவரைப் போலே.

குறும் பா 77
அர்ச்சுனரால் கண்ணனுக்குத் தொல்லை. அவர் கலங்கிச் சொல்வார் இச் சொல்லை:
'இச்சகத்தில் வாழேன் கான் இனி எங்கே தேடினும் ஓர் பச்சை நிறப் பெண் கண்டேன் இல்லை’.
'மூலி இலை யே!' என்று கொந்தார்.
மூசி அனு மாரோ எழுந்தார்.
காலுபுறம் தேடியும் காண்பு ஏலாது போயினதால்,
வாலர் ஒரு மாமலை கொணர்ந்தார்.

Page 41
78 மஹாகவியின்
வீணையினைத் தொட்டெடுத்தான் காளை.
விரல் கொடுத்து மீட்டுகிருன் கீழே.
ஆண் ஒருத்தன் அந்த விதம் அதை எடுத்துக் கையாளல்
காண. . . அது வோ நிகர் பெண் ணுளை,
மாணிக்கப் பாவலர் எம் நாடார்.
மாதர் தமையன்றி அவர் பாடார்! "ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் காடார்.

குறும் பா 79
எத்தனையைச் சொன்னுலும் கேளான்.
இந்துவின் பால் இட்ட கெஞ்சு மீளான்.
சத்தம் ஒன்று பட்டதுதை சந்திரனைச் சுற்றுகிறன்!
இத்தரையில் இன்றுவரை வீழான்.

Page 42
80 மஹாகவியின்
சென்னையிலே வாழ்வாள் ஒர் மாது.
சேயிழைக்கென் பார்வை விடு தூது.
புன்னகையே தந்தவள், “வா, இன்ன பொழுது!" என்றனளா. . .
பின் அயலார் பேசியதோ "தூது’.
ஸிங்ஹபுரம் (ஷென்னை) நியூஸ் பார்த்தி,
ஷெந்தமிழின் வீர்த்தி bஅஹ"த் ஷிர்த்தி:-
*"ஸங்gஈத்தும், ஸம்ப்பூர்ணஷ் ஷாப்பாடும், ஷாம்பாறும்
ஷங்க்கருக்குஷ் ஷஷ்ட்டியப்த்தப் பூர்த்தி!”

குறும்பா
வஞ்சி எனும் அஞ்சும் இயல் புற்றள்
வாழ்கிற பழங் கவிதை கற்ருள்.
'வஞ்சம் என கஞ்சம் என வஞ்சமகள் கொஞ்ச வர,
எஞ்சிய தன் நூலையெலாம் விற்ருள்.
}
A Col

Page 43
82 மஹாகவியின்
*காலம் சென் ருர்,' என்று விண்டார்,
கல் வீட்டுக் காரர் மார்க் கண்டார்’ வேலர், ‘என்ன நேர்ந்தது?’ என வேடிக்கை பார்க்கப் போய்...
ஆள் செத்தார் என்றுண்மை கண்டார்.
வல்லுவெட்டி காட்டில் ஒரு சீமான்.
வள்ள வணிகர்க் கிடையே கோமான்.
கெல்லு வெட்டி எஞ்சுகிற வைக்கோலாய் வன்னிக்காட்டு
எல்லை விட்டுச் செல்லும் அவர் சாமான்.

குறும்பா 33
சிவபெருமான் இங்கிலத்தில் வந்தார்.
சில்லாலைப் பக்கம் கடந்தார்.
அவர் உடை கண் டால் விடுமா அவ்விடத்து நாய்? அப்பன்
அவசரமாய்த் தம்விடை இவர்ந்தார்.

Page 44
84 אי" மஹாகவியின்
மதில் மதுரை மாமகிபன் முன்பு
மாதொருத்தி வீசினள் சி லம்பு.
"அதில் இது!’ என்று காட்டி உருத்து ஆர்ப்பரித்தாள். ஆள் இறந்தான்!
இதில் நீதி: பெண்வாய்ச் சொல், அம்பு.
 

குறும்பா 85
ஆதவனர் செத்துப் போய் விட்டார்.
ஐம்பதின்மர் தம் தோளில் இட்டார்
பூத உடலைச் சுமந்து போதல் இயலாதவராய்ப்
பாதி வழி யில் வைத்துச் சுட்டார்.

Page 45
86 மஹாகவியின்
கள்ளிரவில் வீடு வந்தார் சாம்பு. நடுவழியிற் தீண்டியது பாம்பு.
பிள்ளை பெரும் பீதியுற்றுப் பிரக்கினை போய் மாண்டாராம்வெள்ளெனப் பார்த் தால் அது ஒர் தாம்பு.
மகன் களத்தில் மாண்டானும் சன்னம்
மறுபுறமாய்ப் பீறியதால், இன்னும்
"புகுந்ததுவோ? மார்பு வழிப் போந்ததுவோ?’ என்றறியாள்
அகம் துடித்து முலை பிசைந்தாள் அன்னம்.

குறும்பா 87
'ஏலுமட்டும் என் கவியை ஒதீர்!
இவைதரும் இன் சுவையில் இறும் பூதீர்”--
மேலும் அந்தப் பெண் புலவர் விளம்பரத்திற் சொல்வார்: "என்
போலிகளைக் கண்டேமா ருதீர்”

Page 46
88 மஹாகவியின்
சீட்டுப் பா வுக் கொரு பொற் பாக்கு.
சிறுக விதைக் கோர் ஆனைத் தூக்கு:
காட்டுரை ஆண்ட தமிழ்க் கள்ளேறி ஈந்தான்-ஆள்
பாட்டை மதிக் கின்ற தொரு போக்கு
வேகமின்றி மெள்ள மெள்ள நாடு.
மின்னலினைக் கூடல் பெரும் பாடு!
ஆகவிரை. . . நீ அருவம் ஆகிடுவாய்! இப்படித்தான்
ஓர் கிழவர் கண்ட சமன் பாடு.

குறும்பா 89
வலூன் விற்றுக் கொண்டிருந்தான் வாலு.
"மலிவு சதம் பத்துக்கு காலு!”
விலாவில் எழும் பசி மறந்து விற்பனையே கண்ணுக...
உலாச் செல்கின்றன் வானின் மேலு.
ACell2

Page 47
90 மஹாகவியின்
சிந்தித்திருந்தார் ‘தம் பட்டம்'.
சிறு நாவல் தீட்டல் அவர் திட்டம்.
குந்தியவர் தூங்க வெனக் குறுகுங்கால், தாள் மீதோ. . .
ஐக்து சதுரம். பத்து O.
காலத்தை வென்ற கவி செய்தான்.
காணப்ப டா அணிகள் பெய்தான். சீலத்தைச் செப்பி, நிலம் சீர் செய்யப் போன செலவு -
ஆளுக்குப் பென்சில், தாள், மை தான்.
கண்ட உடனே காதல் விண்டார்.
கச்சேரி போய் மணந்து கொண்டார். அண்டை அறை ஒன்றில் இரவு ஆறி விட்டுக், காலை உணவு
உண்டபின்னர் தான்-மணம் தள்ளுண்டார்.

Spith Lum. 9置
நாவலர் பல் கோடி கவி கற்றர்.
காமும் இசைப் போம் என முற்பட்டார்.
காவி வந்து கற்றதெலாம் கண்டத்தில் நிற்க, அவர்
பாவிமரிசம் புரிய லுற்றர்.
பந்தலிலே மாபெரிய கூட்டம்.
பயன் விளைக்கும் சொற்பொழிவுப் பாட்டம்
இந்த விதம் பிந்துவதேன்? எல்லாரும் மேடையிலே
குக்தியதாற் தானே இவ் வாட்டம்?

Page 48
9. மஹாகவியின்
கல்லறையில் வாழ்ந்தவர் தான் 2உ
கண்பருக்கு காணயத்திற் பற்உ
சில்லறையில் ஒன்றிரண்டைத் தின்ருரா. . . வாழ்கின்றர்
கல்லறையில் இது மலிவு சற்உ.
 

G5 g h i unr 93
பத்திரிகை நான் புரட்டிப் பார்த்தேன்.
பழம் விலைக்கு விற்பதற்காய்ச் சேர்த்தேன்.
உத்தரவில் லாமல் அதன் உட்புகுந்த சுண்டெலியின்
புத்திரரைப் பின் எண்ணித் தீர்த்தேன்.
மரத்தை அறுப் போர் எமது தச்சர்.
மச்சத்தை உண்பவரோ மச்சர்.
சிரத்தில் இடி என்ருலும் சிதை ஏற்றி வைத்து எங்கள்
வருத்தம் ஒழிப் பாரையா விச்சர்.

Page 49
94 மஹாகவியின்
பாடுகையில் வானெலியிற், கோனர்
பாட்டோடும் ஐக்கியமாய்ப் போனுர்!
ஊடு வந்து பெட்டி பிளந்து ஊத்தை உடல் வீழ்ந்திடச், "சீர்
கேடர்” என்று ரார் பகர லானுர்.
 

குறும்பா 9s
பஞ்சவடி மாமுனிவர் யூடு
பாய்கின்ருர் கூடுவிட்டுக் கூடு.
அஞ்சியதோர் அன்னப் பேடு அவர் உடலுட் பாய, அவர்க்கு
எஞ்சிய தே மாற்றம். . . கண் கூடு.
பார்த்திருக்கும் கண்ணிரண்டின் மீதும்
பழம் இருக்கும் இருதனங்கள் மோதும்
போர்த்திருக்கும் மென் மருங்கிற் புல்லிருக்கும் புல்லரிக்கும்
வேர்த்தீரோ என் சுவைஞர்? போதும்.

Page 50
96. மஹாகவியின்
சூரியனைச் சுற்றுகிற சூப்பர்
சுற்றியுள்ள மீற்றர் எண்ணி வேர்ப்பர். ஊரில் உள்ள தம் மனையின் உத்தமியைச் சுற்றிவர
யாரும் இல்லை என்றும் எதிர் பார்ப்பர்.
சந்திரனிற் போய் விழுந்த கூப்பர்
சாகாமல் மென்முறுவல் பூப்பர்.
வந்தடைந்த செய்தியினை வையகம் அனுப்பிவிடத்
தந்தியகம் தான் தேடிப் பார்ப்பர்.

குறும்பா 977
"ஆகா!” என் ருர் ஒரு ச மீந்தார்.
ஐந்து பவுண் சங்கிலியை ஈந்தார்.
"மோகன மென் ருல் எனக்கு மோகம்!’ என்ருர். பாடகரோ,
"சா. . . ஹா. . . ஞ. . .!?” என்றபடி சோர்ந்தார்.

Page 51
மஹாகவியின்
காடத்திக்கு ஆடலில் விருப்பாம்.
காடர் விதித் துள்ளது தடுப்பாம். ஆடு அறைக்குள் ஓடி வர, “ஆடடி!' என் றர். அவள்தன்
ஊடல் விட்டுச் செய்த தலா ரிப்பாம்.
தமிழ்ப் படத்தில் வந்தார் ரும் நாகேஷ்.
தம் குரலிற் பாடுகிரு ராம் தேஷ்,
அமிழ்தை ஒத்தது என்றிதற்குள் அமிழ்ந்து, சபை வெற்றிலை பாக்கு
உமிழ்ந்து விட்டுக் கூறியது: "பேஷ்! பேஷ்!"

குறும்பா 99
கம்பர் ஒரு காவியத்தைச் செய்தார்:
கண்டபடி ராவணனை வைதார்.
எம்போல்வார் இன் றெடுக்கும் இவர் விழவுக் கிங்கு வர
கம்பிக்கை யாக விசா எய்தார்.

Page 52
O0
வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியதோர் குண்டு.
கல்லபடி கம்மனிதர் கச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது கண்டு.


Page 53
-
ܐ ܢ . -
மேடையிலே வீற்றிருந்தாள்
மேற்குரலிலே பாவத் தோடு
பாடுகிருள். மெய்ம்மறந்: பார்த்தன்! பார்த்தா
ஆடை-இடை-மேனி-வெளிப்-ட
ARAS UN PUBLICATIONS
Fine at the Rainbow Prir LeT
1,
 
 

]]IIDLII
சிரிப்புக்கும் சிந்தனைக்கும்
கருத்துக்கும் கற்பனேக்கும் பெரு விருந்தாம்
1 OO
குறும்பாக்கள்
பேடு.
நான்
ன் இடையின்
Price: 135
* Wolfendhil Street, Colombin-13.