கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1983.12

Page 1
எவர் 9 lulju 19 jilgIEO) lill-ġaskili se |Ella 200 | $8. &
驚 Tamil Martine
警
* Eswari Vi :ரடி Fင်္ဂါဂြိုဂျိုး ("")}၈၅ D] बर
F
# :non:lգաS) 'iýé PTB1557 35UUTTITUL-||455:MT: R. Pathmana yêT
* emri2, KANG STFFF" |
MATALE
崇 எவர்றெஸ் 6n) IF52 95 IT (32) தேயிலே
■ *■ * 707 எவர்றெஸ்ட் கோப்பி
| hel uninitialgoriզ 153 Uգոion) ։ உற்சாகத்தைத் தருவது:ஆத்துடன் அரச பரிசோதனேயில் * 壹 சுத்தடி, சுகாதாரம் என் நிருபிக்கப்பட்டது. புதr: புதியத்ேர் நீங்கள் முன்.
曹 (.. --) L॥ பரும்ப ਡਲLa (T). L.
6 TGA får - றெள்
டிஸ்ரிபியூட்டர்ஸ் AAA கரே. நல்லூர்தி 고도 குல்ம்ெப 고 யாழ்ப்பாணம்
அச்சுப்பதிவு பற்ஸ்பிறின்ரோஸ் யாழ்ப்பாணம்.
 
 
 

இனி மரணத்துள் வாழ்வோம்

Page 2
புதுசு ஆற்றிவரும் இலக்கியப் பணிக்கு | எமது வாழ்த்துக்கள்
o--Obo
கல் கி சன்
147, ஸ்ரான்லி யாழ்ப்பா
eneral bas
தொலைபேசி: 23*11
தந்தி: யூரீராம்

:
புதுசு 8
Dmis 1983
நாம் எ ல் லா வ ற்றையும் மறந்து விடுவோம். மன்னித்தும் விடலாம். ஆம் நாம் முன்னர் தொட்டு அதனை யே செய்து கொண்டிருந்தோம். நாம் குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருந் தோம். இறுதியில் இறந்து போனுேம், எங்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம். ஆக, இறு தியில் தேடிய போது மயானம் கூட எங்களிடம் இல்லாமல்
போனது.
உங்களிடம் இவை கூறும் செய்திதான் என்ன?
புதுசு

Page 3
ஊர்வசியின்
ஒரு கவிதை
எதற்காக இந்தக் காத்திருப்பு?
வயல் தழுவிய பணியும் மலை மூடிய முகிலும்
56ooprtug5fbesirenseunr ?
இல்லையேல் காலைச் செம்பொன் பரிதி வான் முகட்டை அடைவதற்காகவா?
அதுவரையிலும் என்னுல் காத்திருக்க முடியாது. என் அன்பே, எத்தனை பொழுதுகள் இவ்விதம் கழிந்தன?
கிரதல் பொங்கும் கண்களை மதியச் சூரியன் பொசுக்கி விடுகிமுன் கடலலைகள் அழகு பெறுவதும் தென்னுேலையில் காற்று தேம் இசைப்பதும்
காலையில், அல்லது மாலையில் மட்டுழே !
ஆளுல், எமது பூமி, எமது பொழுதுகள் எதுவுமே எமக்கு இல்லையென் முன்பின்
ಶ್: ஒரு ப்ொழுது டைக்காமலும் போகலாம் . தொடரும் இரவின் இருளில் எதுவும்
நடக்கலாம்.
ஆதலால் அன்பே, இந்த அதிகாலையின் ஆழ்ந்த அமைதியில் தாம் இணைவோம் .
துேக 2

ஆண்டவருடைய சித்தம்
நந்தினி சேவியர்
s தென்னமர ஒலைகள் சரசரக்க
காற்றுச் சற்றுப் பலமாகவே ag யது. அறை வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த அந்த வாங் குக்கு மேல் அவன் சலனமற்று உட்கார்ந்திருந்தான்.
அவனைத் தனியே விட்டுவிட்டு சிஸ்ரர் படத்துக் கேற்றைத் திறந்துகொண்டு அவனது தமை யன் சுவாமியாரைப்பற்றி விசா ரிக்கப் போய்ப் பத்து நிமிடங் களுக்கு மேல்.
இன்று சுவாமியாரைக் காண வேண்டுமென்று அவனே, அவ னது தமையனே நினைத்திருக்க வில்லை. அதற்குரிய சூழ்நிலைகூட காலைவரை இருக்கவில்லை. சடுதி யாக அது நிகழ்ந்தது.
"சுவாமியார் உன்னைப் பார்க்க வேணுமாம். உன்னேடை கதை க்க வேணுமாம். சிஸ்ரர்மாரும் அதைத்தான் விரும்புகினம்."
மூன்று நாட்களுக்கு முன் ஒரு மாலை நேரம். மில்லில் இருந்து லீவில் வந்து மேல் கழுவிக் கொண்டு கிணத்தடியில் நிற்கும் போது அவனது தமையன் இந்த விபரத்தைக் கூறியபோது அதில்
தனச்கு அவ்வளவு அக்கறை இல் லாத மாதிரியேதான் இவன் காட் டிக்கொண்டான்
தங்களின்ரை ஆதரவில் இருக் கிற ஒரு பிள்ளையை. , உனக்குக் கலியாணம் செய்து தாறதெண் டால் . உன்னைப்பற்றி விசாரிக் கத்தானே விரும்புவினம்."
சுவாமி யாரின் விருப்பத்திற் குரிய காரணத்தை நியாயப் படுத்த முனையும் பாவனையில் தமையன் கதைப்பதை உணர்ந்த இவனுக்குச் சிரிப்பு வந்தது.
அவைேடு தமையன் நேரடியாக இவ்வளவு வார்த்தைகளைத் தன் னும் உச்சரிக்கக்கூடிய ஒரு நில மை ஏற்பட்டதைப்பற்றி அவ னுக்கு சந்தோஷமாகக்கூட இருந்
தது.
இந்த முப்பத்திமூன்று வருட வாழ்க்கையில் அவனும் தமை
யனும் பேசிக்கொண்ட சந்தர்ப்
பங்கள் மிகமிகக் குறைவு .அப் படி ஏற்படுகின்ற போதுகளில். வார்த்தைகள் தடிதது . முக முறிவுகளுடன் . அவை முடிவு பெற்ற நிலைமைகளே அநேகம் -
மரியாதை . பயம் . எனப தோடு . வேண்டத்தகாத சில
புதுசு 3

Page 4
அதிருப்திகளும் . பேச்சை அடி யோடு கட்டுப்படுத்தியிருந்தன.
அவனது தாய் இறந்து.தகப்ப
னிறந்து . படிப்புகள் . அரை குறையாகி. கூலி வேலை கூட கிடைக்காத . கொடிய நிலைமை கள் . ஏற்பட்ட அந்தக் காலங் களில் கூட . வாய் திறந்து எதையும் கேட்காத வைராக்கி யத்தில் இவனது நாட்கள் கழிந் திருக்கின்றன.
கறேச்சில் . வேலை செய்த . காலத்திலும் . கஸ்தூரியார் வீதியிலுள்ள . ஒரு கடையில் வேலை செய்த போதும் . அச்சகத் தில் பேப்பரடுக்கி முனைந்து முகம் முறிந்து போனதுண்டு.
பொறுப்பற்று. ஊதாரியாக. அவன் திரியக்கூடாது என்கின்ற விருப்புக்கு அவர் ஆட்பட்டு அவனை ஒரு கலியாணப் பந்தத்
தில் . த ஸ் ஸ்ரி விட முனை வு கொண்டு . எட்டு வருடங்களின் பின்தான் . இந்த ஒரு சந்தர்ப்ப
மும் . இவனின் சம்மதமும் . கிட்டியது.
யாரையோ மனதில் வைத்து. இவனின் சம்மதத்தை அறியத் தமையன் அனுப்பியிருந்த நண்ப னிடம் தனது விருப்பத்தை மிக நிதானமாக இவன் வெளியிட் 1-frsăr.
*" என்னைப் பொறுத்த வரை . எனக்குக் கலியாணம் இப்ப அவ சரமில்லை . அப்பிடிச் செய்யிற தெண்டாலும் ஒரு அனதை
புதுசு 4
மடத்தில் இருக்கிற பிள்ளையைத் தான் செய்ய விரும்புகிறன். சிஸ் ரர் மடத்தில் இருக்கிற எங்கடை சொந்தக்காரப் பிள்ளையைக் கேக் கச் சொல்லும் ."
‘மாலி கேக் ஸ்பொட்டி"ன் இஞ் சித் தேநீரை உறிஞ்சியபடி இவன் பேசியபோது வந்த நண்பனே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தெரி வித்தான்.
ஒரு காலத்தில் அவனது உற வினர்கள் அவனை ப் பற்றி பொறுப்பற்றவன் . வருத்தக் காரன் . கையாலாகாதவன் . என்று ஒதுக்கித் தள்ளியமையின் மீது கொண்ட வெறுப்பை எட்டி உதைப்பதான பாவனையில் அந் தச் செய்தியை இவன் வெளியிட்
LsTGÖT.
சங்கானை மின்தறி ஆலையின் முகப்பிலே நின்று . அவனைப் பற்றிக் காரசாரமாக அவனது தமையனரிடம் ஏசிய உறவுக்கார நூலகரின் வார்த்தைகளை ஓங்கி அடிப்பதுபோல்.அந்தவார்த்தை களைக் கூறினன் . அவன்.
காற்று . மீண்டும் தென்னேலை களைச் சரசரக்க வைத்தது அணி லொன்று . வீறுடன் கத்தியபடி அறைவிட்டின் முகட்டில் பாய்ந் ததை இவன் கவனித்தான் . அறை வீட்டினுள்ளே மணிக்கூட் டில் பத்து மணி அடித்தது. கைக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த் தான் . பத்து . ஏழு . எந்த மணி சரி ? அவனுக்கு . ஏனே எரிச்சலாக இருந்தது.

இந்நேரம் மில்லில் என்ன நடக்
(5th -es
"ஒரு அவியல் முடிந்திருக்கும் . கெங்காதான் அடுப்புப் பார்ப் பான் . சின்னத்துரையும் . தயா பரனும் . நேசலிங்கமும் காலடிப் பார்கள். சில வேளை . ஊடு வெட்டியிருப்பார்கள் . தரு மண்ணை . அந்த மஞ்சள் வர்ண ஸ்கூட்டரில் மஞ்சள் "கெல்மெட்" டோடு . பாங்குக்குப் போயிருப் பார். பெரியவரின் . செக்குக்குக் காசு போட வேண்டும் வெள்ளை யப்புவின் வண்டில் பத்து மூடை அரிசியுடன் மில்லைக் கடந்து சந் திக்குச் சென்றிருக்கும் குழாய்க் கிணறு குத்துகிறவர்கள் இண் டைக்குத்தானே வருவதாகக் கூறினர்கள் .
சிஸ்ரர் மடத்தின்.கதவு திறக்க . அவனது தமையனும் . ஒரு கண்ணுடி அணிந்த மெலிந்த கறுத்த சிஸ்ரரும்.கதைத்தபடி.
இவனுக்குச் சலிப்பாக இருந் தது. எவ்வளவோ வேலைகள் மில்லில். அவனை அவர்கள் எதிர் பார்த்திருப்பார்கள் .
ருேட்டில் வாகனங்களின் இரைச்சல் .கடற்காற்றின் தென் னேலைச் சரசரப்பு. அரை மணித் தியாலம் வீணகி விட்டதான அவஸ்தை .
ஒரு காலத்தில் வேலையற்று . வேலை தேடி அலைந்து திரிந்த அந்த நாட்களில். இத்தகு நேரப் பிரச்சினை- இருக்கவில்லை.
புதுக 3
வாசிகசாலை. முகப்பு. கபாடி விளையாடும் மணற்பரப்பு. கிட் டியடிக்கும் மைதானம் . மார்க்சி யம் பற்றிய வகுப்புகள் . கூட் டங்கள் இலக்கியச் சர்ச்சை இன்றும் அவை பற்றிய விருப்புகள் இல்லாமல் போக வில்லை. பொறுப்புகள் சுமைக ளாகி. நேரமே தொழிலாகிவிட் مأسسة
கள்.
சிஸ்ரரும் தமையனும் படியேறி வந்த போது இவன் எழுந்து நின்று கொண்டிருந்தான்.
"உங்கடை அண்ணு. உங்க ளைப்பற்றி நிறையச் சொன்ன வர் . நாங்களும் உங்களைப் பார்க்க விரும்பின்னங்கள்."
சிநேகயூர்வமான புன்முறுவலு டன் அந்தக் கண்ணுடிச் சிஸ்ரர் இவனேடு பேசியபோது அவன் மெளனமாகச் சிரித்தான்.
"ஃபாதர் எப்ப வருவார். ??? இவன் கேட்டான்.
“வந்திருவார். வாற நேரந் தான்."
இவர்கள் பேசுவதைக் கேட்
டுக் கொண்டு விலகி நின்றிருந்த
தமையன இவன் ஏறிட்டான்.
"உங்கடை விருப்பம் என்ன எண்ணிறதை அறியத் தான். நாங்கள் உங்களைச் சந்திக்க. விரும்பினம். நீங்கள். இங்கை இண் டை க்கு வந்திருக்காவிட் டால். உங்கடை மில்லுக்கு நாங்க ள் வாறதுக்குத்தான்.

Page 5
இருந்தனங்கள். ஆண்ட வரு டைய சித்தம். நீங்களே. வந்
திட்டியள்."
சிஸ்ரர் . சந்தோ சமாக கதைத்தபோது . அவனுக்கு. சற்றுக் கூச்சமாகக் கூட இருந் ඊශ්‍රීl •
உங்களைப் போல். ஆக்களி ருந்திட்டால். த ரே சா வை ப் போல எத்தனையோ பிள்ளைகள். நிம்மதியடைய முடியும்."
சிஸ்டர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தா.
"இந்த . மாசமே. விசயங் களை முடிக்க வேண்டும். பெரிய சிஸ்ரரும் மாறி மட்டக்களப்புக்கு போகிரு. அதற்குள். இது நடக் கிறது தான் நல்லது. இண் டைககே. பிள்களயை நீங்கள் பார்த்து . உங்கடை விருப் பத்தை எங்களுக்குச் சொல்லிறது நல்லது. அவளின்ரை அபிப்பிரா யத்தையும் நாங்கள் கேக்கத் தானே . வேணும்."
தூரநிற்கும் தமையனரையும் இவனையும் மாறிமாறிப் பார்த்த படி சிஸ்ரர் . கதைத்தபோது. இவன் இடைமறித்தான்.
"மன்னிக்க வேணும் சிஸ்ரர். இந்த விசயத்தி% . கொஞ்சம் பிந்திற ைதத்தான் நான் விரும்பி றன். எனக்குச் சில வசதிகளை செய்யவேணும். நான் என்ன சொல்ல வா ற னெண்டால். எனக்கெண்டு நான் சில ஒழுங் குகளைச் செய்ய வேண்டியிருக்கும்.
புதுசு 6
அவன் பேசிய தோரணையில் ஒரு அழுத்தம் இருந்தது மேலும் ஏதோ கூற அவன் முற்பட்ட G3 Lu mt g// ... 695 61 m L6) Lu m" ifi Gör கொண்டா? மணிக்கூட்டடியால் திரும்பி அறை வீட்டில் ஏறியது.
தனது மனதில் உள்ள சருத்துக் களை முழு  ைம யாக பகிர்நது கொள்ள அவன் விரும்பினன்.
"கன நேரம் காக்க வைச்சிட் டேன் பேலை." என்று மன்னிப் புக் கேட்கும் பாவனையில் முகத் தை வைத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்தார் சுவாமியார்
அந்தச் சுவாமியாரை அவன் அடிக்கடி கண்டிருக்கிருன். இரு பாலைச் சந்தியிலும் நல்லூர் மாக்கற்றிலும்.முத்திரை சநதை யிலும் . சிவ ப் பு நிற அந்த "கொண்டா" மோட்டார்ச் சைக் கிளையும் சுவாமியாரையும் பல தடவைகளில் எதிர்ப்பட்டிருக்கி முன்.
அந்தச் சுவாமியார் இவனை விட ஓரிரு வயதுகள் குறைந்தவ ராகக் கூட இருக்கலாம் என்று கூட யோசித்திருக்கிருன்.
ஒரு காலத்தில் தான் கூட சுவா மியாராக வரவேண்டுமென்று ஆசைப்பட்ட அந்த நிகழ்வுகள் இப்போது அவனுக்கு நினைவு வந் தன.
அன்று செமினறிக்கு அவன்
போயிருந்தால். இன்று எங்கோ ஒரு கோவிலில் . பங்குக் குரு

8 . . . திருப்பலிப் பூசையில். அப்பத்தையும் இரசத்தையும்.
எடுத்து . அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"சிஸ்ரர் எல்லாம் கதைச்சவ தானே . பிள்ளையை பார்த்
siréatrip'"
சுவாமியார் அவனைப் பார்த் தார்.
"அவர் ஆறுதலாகத்தான் எது வும் செய்ய முடியும் எண்டு சொல்லுகிருர் ஃபாதர்.
சிஸ்ரரின் வார்த் தை களைக் கேட்ட சுவாமியார் கேள்விக்குறி யுடன் அவனது தமையனரைத் திரும்பிப் பார்த்தார்.
* தம்பி. சொல்லுறது என் னெண்டால். தனக்கு சில பொருளாகாாக் க ஸ் டங்கள் இருக்கிறதெண்டும். அதை சரிப் படுத்த. கொஞ்ச நாள் தேவை எண்டும். அதுதான். யோசிக்கி ფf...””
"அதுவும் நியாயந்தான். பெரிய சிஸ்ரரும் மாறிப்போரு. எதுக்கும் நல்ல முடிவாய், கூடிய இந்திரம் எடுக்கிறது நல்ல."
தமையனரோடு சுவாமியார் ஏதோ ஒரு உறுதிப்பாட்டோடு. கதைத்தார். W
எந்த மட்டிலை . என்ருல் உமக்கு வசதிப்படும். திரேசா. நல்ல பிள்ளை உமக்கு ஒரு நல்ல ம ன வியா க இருப்பா . அது பற்றி. நீர் யோசிக்கத் தேவை யில்லை. ஆண்டவருடைய சித் தம் உங்கள் இரண்டு பேரையும் இணைக்கப் போகுது."
"அதுக்காக நான் யோசிக்க வில்லை ஃபாதர். நான் மில்லில் வேலை செய்யிறன். இருபத்தி நாலு மணித் தி யா லமும் அங்கே தான் இருக்கிறன். நெல் லெ டு க் க ம ன் ஞர், மட்டக்களப்பு எண்டு. அடிக்கடி பயணம். எனக்கெண்டு நான் சிலதைத் தேட வேண்டும் . இன் னும் ஒரு வருசம் பொறுத்து அடுத்த கிறிஸ்மஸ்சோடு எண் irri)...'"
மிகவும் அட்சர சுத் த மாக இவன் பேசுவதை சுவாமியாரும் சிஸ்ரரும் கேட்டுக் கொண்டிருந் தனர்.
மடத்திலிருந்து ரீயும். பிஸ் கற்றும் வந்தன. சங்கோசத் தோடு ரீயை வாங்கிக் கொண்ட
இவன். சற்று நேர மெளனத் தில். சிந்தனை வயப்பட்டுப் போனன்.
எவ்வளவோ விசயங்களை மன தில் போட்டுக் கொண்டு அவன் குழம்பிப் போயிருந்தான். இந்த இடத்திற்கு. இன்று வந்திருக் காமல் ஆறுதலாக ஒரு நாள் வந் தி ருக்க லா ம் என்று கூட யோசித்தான்.
மில்லில் தேடுலார்கள் . காலை யில் வருவதாகக் கூறி. இரண்டு நாள். லீவில். வெளிக்கிட்ட வன். இன்னமும் திரும்பவில்லை என்ருல் அங்கே அனைத்தும் ஸ்தம்பிக்கும்.
தமையன் செருமி. இவனை நினைவுக்கு கொண்டுவர. இவன் சியை மெல்லக் குடித்தான்.
புதுசு 7

Page 6
"அப்படி என்ருல். திரே சாவை இண்டைக்கே பார்த்தி டுமன் , '
சுவாமி அவனை ஏறிட்டார்.
"நாள் இருக்குதுதானே ஆறு தலாக . இன்னெரு நாள் ?? இவன் அவரின் வார்த்தைகளை உடனடியாக மறுதலித்தான்.
"சரி. உம்மடை இஸ்டம். ஆண்டவருடைய சித்தம். அப் L9ty ..."
எ முந்து நின்ற அவனை ப் பார்த்தபடி சுவாமி யாரும். எழுந்து கொண்டார்.
**எதுக்கும் உங்கடை முக வரிக்கு நான் கடிதம் எழுதுகி றேன். இது பற்றி யோசிப்பம் ."
அவரின் முகவரியை நின்ற
நிலையில் குறித்துககொண்டான்
அவன் .
வண. பிதா . அர்ச். செபஸ்தியார் ஆலயம், ஊரணி, "பஸ் கோல்ற்" வரை அவனும் தமையனும் மெளனித்தே நடந்து வந்தனர். நெடு நேரததின் பின் அவர் கூறிஞர் . " நலல பதிலா கச் சுவாமிககு எழுது . "
மில்லுக்கு அவன் வரும்போது பன்னிரண்டு மணிக்கு மேலகி விட்டது. பஸ்சில் யோசித்துக் கொண்டு வந்த விசயங்களை எல் லாம் கோர்வையாக்கி ஒரு கடிதம் எழுத அவன் முடிவு செய்து கொண்டான்.
இரவு பணி கொட்டும் நிலவில் வெள்ளை யப்பு விடம் போய்த் திரும்பி வந்து குளிருக்காக
. இரவு
இரண்டு சேட்டுக்களை அணிந்து கொண்டு அறை மேசையில் அவன் கடிதம் எழுத உட்கார்ந்தான்.
அன்புடையீர் என ஆரம்பித்து, தனது நிலைப்பாட்டை அவன் எழுதினன் . நான் கொம்யூனிச சித்தாந்தத்தை நம்புபவன் புரட்சி ஒன்றே பிரச்சனைகளைத் தீர்க்குமென்ற உறுதிப்பாடுடைய வன். அதற்காக உழைப்ப்தையே விருப்புடவன் . எனக்கு வரப் போகும் மனைவி என்னைப்பற்றி அறிந்திருப்பது நல்லதென நினைத்தே இதைத் தெரியப் படுத் கதிறேன் என்பது போன்ற வி ரங்களை அவன் எழுகினன் தனது தமையனர் தன்னைப்பற் றிக் கூறியிருப்டார் என நம்புவ தாகவும் எழுதின்ை.
கடிதத்தை எழுதிமுடித்தபோது . அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட் -gil. w
ஏதோ நெஞ்சில் கனத்த சுமையை இறக்கி வைத்து விட்ட த ன உணர்வுடன் அந்தக் கடி தத்தை அவன் போஸ்ற் பண்ணி ஞன். −
மில்வேலையில் கவனம்கொண்டு கணக்கு வழக்குகளைப் பொறுப் பேற்று . அந்தச் சந்தடியில் ச4 ல வற்றையும் மறந்துவிட்ட . ஒரு பணி விலகாத கலையில் அவனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
" உமது கொள்கையுடன் ஒத் துப்போக அந்தப் டெண் தயா ராக இல்லை இந்தக் கல்யாணத் தில் அந்தப் பெண்ணுக்கும் . சிஸ்ரர்மாருக்கம் இஷ்டமில்லை. என்பதைத் தெரிவிக்கச் சொன். ஞர்கள்."
நன்றி. இப்படிக்கு,
Glömt... ... • • • • • • • • • "
புதுசு 8

மைத்ரேயியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஐந்து
1. அவர் எங்கே வசிக்கிறர் என்று எனக்குத் தெரியாது. எங்களால் ஒன்ருக வாழ முடியாது போனதால் நாம் பிரிந்து வாழ்வதற்கு ஒத்துக்கொண்டோம். பிள்ளைகள் என்னுடன் இருந்தார்கள். எப்போதாவது அவர் எனக் குக் கடிதம் போடுவார் அதில் அவரது முகவரி இருக் காது. இவ்வளவும் மட்டுமே என்ல்ை கூற முடியும்,
என்னைப் பொறுத்தவரை உங்களைக் காண வேண்டுமெனில் உங்களைப் பற்றிய நினைவுகளுடனே - நான் உறங்கப் போக வேண்டும்.
சில வேளைநான் அதிர்ஷ்டம் செய்திருப்பின் நீங்கள் நேரங் கழித்து வருவீர்கள். பொதுவாக,
என் கனவில் தான் !
இரகசியப் பொலிசைப் பொறுத்தவரை - 3. அவர்கள் என்னைக் கனவுகளுடன் தேடுவதில்லை. இதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம்.
ஒரு நிச்சயமற்ற இரவில் அவர்கள் என்னைக் கண்டால்,
"பிறேக்குகளின் கிறிச்சிடல்கள், நகரும் வாகனங்களிலிருந்து குதிக்கும் மனித அரவங்கள் நெருங்கி வரும் காலடியோசைகள், என்ன எழுப்பும். -
உங்களுக்குத் தெரியாது. என்னைப் பாதுகாக்க, என்னைத் தேட நீங்கள் இங்கிருக்க மாட்டீர்கள்.
புதுசு 9

Page 7
-பின்பு ஒருநாள் அவர்கள் உங்களுக்குச் சொல்வர்தாம் என்னைக் கைது செய்யவில்லையென்று.
2. மெல்லிய சாட்சி
அவன் இறந்திருப்பின் - அது எனக்குத் தெரிந்திருக்கும். எப்படி என்று கேட்க வேண்டாம் ; எனக்குத் தெரிந்திருக்கும்.
என்னிடம் ஆதாரமில்லை, தடயங்களில்லை, விடையில்லை அதை நிரூபிக்கவோ நிரூபிக்காமல் விடவோ ஒன்றுமே யில்லை.
வானம் இருக்கிறது அதே நீலத்துடன்.
ஆனல், இது ஒரு ஆதாரமாகாது. "கொடுமை"கள் தொடருகின்றன, வானம் ஒருபோதும் மாறுவதில்லை .
பிள்ளைகள் விளையாடி முடித்து விட்டனர்.
இப்போது, காட்டுக் குதிரைக் கூட்டம்போல் நீரருந்தத் தொடங்குவர். இன்றிரவு, தலையணையில் முகம் பட்டதும் உறங்கி விடுவர்.
ஆணுல், அவர்களது தந்தை இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக யார் இதை ஏற்பர்? "விசர்’ தொடர்கிறது. பிள்ளைகள் எப்போதும் பிள்ளைகளாயே உளர்.
புதுசு 10

நல்லது, அதோ ஒரு பறவை. - பறப்பின் இடையில் காற்றில் சிறகுகளை அப்படியே நிறுத்தி அது ஒவ்வொரு நாளும் வருகிறது. முன்பு போல ஒரே நேரத்தில்
ஒரே பூவிற்கு.
இதுகூட எதையும் நிரூபிக்காது.
அவர்கள் அவனைக்
கொண்டு போன நாளில் இருந்ததைப் போலவே . ஒவ்வொன்றும் அப்படியே இருக்கிறது. எதுவுமே நடவாததைப் போல. அவர் வேலை முடிந்து வீடு வருவதை எதிர்நோக்கி, நாங்களும் சும்மா காத்திருக்கிருேம். அறிகுறியில்லை, தடயங்களில்லை, அதை நிரூபிக்கவோ,
நிரூபிக்காமல் விடவோ
ஒன்றுமே யில்லை.
ஆனல், அவர் இறந்திருப்பின் - அதை நான் அறிந்திருப்பேன். அது மிக எளிமையானது, எப்படி என்று கேட்க வேண்டாம் ; நீங்கள் உயிருடன் இல்லாவிட்டால் அது எனக்குத் தெரிந்திருக்கும்.
3. இப்போது அவள் தனது பாற் பற்களை
இழந்து கொண்டிருக்கிறள்.
tunt prl blont gigi) P யாரது மாமாவுடன் நிற்பது?
அது கண்ணே, உனது அப்பா.
gtiLuft ஏன் ஒருபோதும் என்னேப் பார்க்க வருவதில்லை ?
ஏனென்ருல், அவரால் முடியாது.
புதுசு 11

Page 8
அப்பா செத்துப் போனுரா? அதுதான் அவர் ஒருபோதும் வீட்டிற்கு வருவதில்லையா?
தந்தை உயிருடன் இருப்பதாக நான் கூறினல்
அது பொய். உயிருடன் இல்லை என்ருல் அதுவும் பொய்.
என்னுல் அவளுக்குக் கூற முடிந்த, பொய்யற்ற வசனம் இது ஒன்று தான் :
அப்பா ஒருபோதும் வீடு வருவதில்லை ஏனென்ருல், அவரால் முடியாது.
4. இரண்டு தரம் இரண்டு
நண்பனே சிறைக் கூண்டி லிருந்து அந்த அறைக்குச் செல்லும் படிகளின் எண்ணிக்கை எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அது இருபது ஆயின் அவர்கள் உன்னைக் குளிய லறைக்கு அழைத்துச் செல்லவில்லை. அது நாற்பத்தியைந்து எனின், உடற்பயிற்சிக் காகவும் அழைத்துச் செல்லவில்லை.
என்பதையும் தாண்டியபின் ஒரு மாடிப் படிக்கட்டில்
கண் தெரியாமல், தடுக்கி, விழப்பார்த்தாயானல் ஓ ! நீ எண்பதைத் தாண்டிவிட்டாயெனில், அவர்கள் உன்னை கூட்டிச் செல்ல
புதுசு 12

ஒரே ஒரு இடம் மட்டுமே உண்டு. ஒரே ஒரு இடம் மட்டுமே ஒரே ஒரு இடம் ! அவர்கள் உன்னை அழைத்துச் செல்வதற்கு, ஒரே ஒரு இடமே மீந்துள்ளது.
5. அடையாளம்
நீங்கள் என்ன கூறினீர்கள் அவர்கள் " இன்னென்?றைக் கண்டுபிடித்துள்ளனரா? நீங்கள் சொல்வது கேட்கவில்லை.
இன்று காலை
இன்னென்று" ஆற்றில் மிதந்ததா? உரத்துக் கதையுங்கள் - ஒருவரும் "அவனை” அடையாளம் காணவில்லையா ? பொலிசார் கூறினர் அவனது தாய்கூட,
அவனைப் பெற்ற தாய்க்குக்கூட அடையாளம் காண முடியவில்லை என்று.
அவர்கள் கூறினரா ? மற்றப் பெண்கள் பார்த்து விட்டனரா ? நீங்கள் கூறுவது விளங்கவில்லை-- அவனைப் புரட்டி, முகத்தை - கைகளைப் பார்த்தனர், அவர்கள் அமைதியாக, துயரத்துடன் ஆற்றங்கரையில் காத்திருந்தனர், அவனைத் தண்ணீரிலிருந்து எடுத்தாகி விட்டது. அவன் நிர்வாணமாக,
பிறந்த நாளிற் போல கிடந்தான். அங்கு ஒரு பொலிஸ் அதிகாரியும் கூட. நான் வரும் வரை அவர்கள் போகமாட்டார்களா ?
அவன் ஒருவருக்கும் சொந்தமில்லை
என்ரு கூறினீர்கள்?
அவர்களிடம் சொல்லுங்கள்;
இதோ நான் உடை அணிகிறேன் புறப்படுகிறேன் என்று. அதிகாரி போனமுறை இருந்தவனுயின், அவனுக்குத் தெரியும்
- 13

Page 9
என்ன நடக்குமென்று. அந்தச் சடலம் எனது பெயரைக் கொண்டிருக்கும். எனது மகனது, கணவனது, தந்தையாரது பெயரைக் கொண்டிருக்கும்.
நான் தாள்களில் ஒப்பமிடுவேன்
அவர்களிடம் கூறுங்கள் அவர்களிடம் கூறுங்கள் நான் வந்துகொண் டிருப்பதாக,
எனக்காகக் காத்திருக்கும்படி.
அந்த அதிகாரி "அவரைத் தொட விடவேண்டாம் அவனே நோக்கி ஒரு அடிகூட எடுத்துவைக்க அந்த அதிகாரியை விடவேண்டாம்
எனது சடலத்தை நானே புதைப்பேன், அவர்களைக் கவலைப்பட வேண்டாமென்று கூறுங்கள்.
மூலம் - ஸ்பானிய மொழியில்: ஏரியல் டோர்வ்மன்
لد
யாழ்ப்பாணத்தில் சிறந்த ஜவுளி வகைகளைப் பெற்றுக் கொள்ளச்
சிறந்த இடிம்
96. நாகமுத்து அன் சன்
48-50, பெரிய கடை யாழ்ப்பாணம்
புதுசு 14

& tLl adě
сапрus оффlш
கதை
1. ஒரு கிழமை
ஆங்கில வகுப்புடன்தான் ஆரம்பமானது. ஆணுல், ஆங்கில வகுப்பென்பதிற் விட ragging period என்பது (கூடு த லா கப் பொருந்தும்.
முதனுள் வந்த போதே, "கை வீசம்மா கை வீசு கம்பசுக்குப் போகலாம் கைவீசு.** இடமே சரியாகத் தெரியாமல் r.b. என் (opói) ramanathan block 67 Girapy அறிந்து , அது எங்கே என்று தெரிந்து ** கை வீ சம்மா கைவிசு.
"வாழ்த்துக்கள்" "எண் வந்த ஆங்கிலப் பேராசிரியர் நினைவில் தங்கினர். கண்ணுடியும் சிறிது தாடியும், கொஞ்சம் வழுக்கை மண்டையாகி, pipe உடன் வந்த வர். அப்பொழுதில் seniors நின்ற இடம் தெரியாமல் மாறினர்கள். அப்பொழுதும் கூட பக்கத்திலி ருந்தவள் கண்ணிர் சிந்திக் கொண் டிருந்தாள். சேலைத் தலைப்பால் துடைத்தபோது எனக்கு ஆதர offs முதுகைப்பற்ற வேண்டும் போல் இருந்தது, "இதைப்
பெரிசுபடுத்தாதீங்கோ இதைப் போல இன்னும் எவ்வளவு நடக் கப் போகுது. இதுக்கே இப்பிடி யெண்டால்..? அவள் side ஆக என்னைப் பார்த்துவிட்டு வெறு மனே இருக்க முயன்ருள். பிறகு என்னைப் பார்த்தபோது 'உங்கள் அனுசரணை தேவை" என்னுமாப் போல.
6Tissoir group snpril -th seniors பெயரைக் கேட்பதனல், எங்களுக்
கும் பெயர் பாடமாகப் போனது.
அழுதவள் - பிரேமலதா.
வெள்ளை, சுருட்டைத் தலைம யிர் - ஆனந்தி.
பெரிய ஜிப்சி போட்டு, ராஜ குமாரியின் உடம்புடன், பச்சைச் சேலை அடி க்க டி கட்டுபவள் - வனஜா.
நாசூக்காகச்
Oe).
சிரிப்பவள் - நிர்
இன்னும், ஹரிகரன், மகாதே வன், அற்கீம், தனு, யோகேஸ் வரி, இவர்கள் அருகிருந்தவர்கள்.
புதுசு 15

Page 10
முகம் கறுத்திருண்டவர்கள்தான்
இதில் அதிகம்.
பிறகெல்லாம் பிரேமலதா scniors Fo... LGär ĤrF4i54E, L n {{coroŭ Lior பழகி விட்டாள். வருபவன்களும் இளிச்சவாயன்கள்தானே.
G 1555, L'Aryab GT5 Tiñ tca brakc time தான். அதுவரை lecture ாம. தர்மராஜ் உடன் கலகலக்க லாம். பிறகு 'உம்' மென்று போகும் வரும் SCi TS ஐ கண்கள் வெளிறப் பார்த்துக்கொண்டு.
எனக்கு நடந்த ragging பொது வாக public உடன்தான் பரிச்ச நாச்சிமார்கோயிலில் திரி புண்டரக் குறியுடன், அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, பின் விசரன் கோலத்தில் (சேட்டின் ஒரு கை மடித்து, மறுகைவிட்டு தஃபயைக் குழப்பி, லோங்ளின் ஒரு கால் நடித்து, சேட்டின் ஒரு பகுதியை லோங்ஸ் இற்குள் விட்டு செருப்பு இரண்டினேயும் கையில் தூக்கி. இத்யாதி கோலத்துடன்) கதாப் பிரசங்கம் செய்ததும், பே " l
மினி பள்களுக்கு கை காட்டியதும்
பாம்.
வாற பஸ்
மற்றவர்களின் Tagging அவர வர் அமைப்பைப் பொறுத்தது"
காலே lecture mா. தர்மராஜ் எடுத்தபோது மா *3:üh lCctLuTÖt mrs, அமுதநாயகத்தால் எடுக்கப் பட்டது.
mrs.அமுதநாயகம் பற்றி இங்கு சொல்லுதல் வேண்டும். தனக்
கேயுரிய தனி ஆளுமையுடன், எங்
புதுசு 16
ளும்.
கள் கூட்டத்தை அஃணத்துக் கொண்டது அவர்நெஞ்சு. அனே கமாக வரும் senior ஐத் துரத்தி விடுவதும், - நாய்களா? - வந்தீவு டன் எங்களைத் தண்ணிர் குடிக்க அழைத்துச் செல்வதும் = மந்தைக் கூட்டமோ? - மிகவும் பாதுகாப் பாக - கண், இமை எனும் L45rá கள் இங்கு அதிகமாமோ? - அவர் வந்தாலே குதூகலம் தான். அது ms, அமுதநாயகத்தின் ஆளுமை தான்.
இடையில் ஒரு நாள் ஒரு ஒடுங் கிப் போன கிழவி அந்த வழியால் சென்ற போது ஹரியைத் தட்டி உம்முடைய அம்மா போரு" என்றேன், ஹரியின் முகம் கறுத்
திதி 4 "இப்பிடித்தான் எங் சுன்னர அம்மாவும்" <if(tyଞt. என்
நெருக்கென்றது. • "sоггy" " gir. '"very sorry" என்றேன். அதுன் கையே ஆதரவாகப் டிடித்தபடி "மன்னிச்சுக் கொள் என க் குத் தெரியாமப் ச்ேசு. என்ன சொல்றதெண்டு தெரியேல்லே. மன்னிச்சுக் கொள் ளும்" என்றேன். - ir-ri:ir . " " LI IJT வாயில்லை" என்ருன். அதன் பிறகு, அவனுடன் உறவு நெருக் சுமாETதி.
campusஇற்கு வந்த முதனுள் உதயனே சந்தித்த பிறகு இன்ன மும் தான் சந்திக்கவில்லை. ாங் வளவு ஆசையாக இருக்கிறது. ஒன்ருகப் படித்தவன், ஒன்ருகத் திரிந்தவன். அவன் வேறு group GTGärusrt syih, ragging period என்பதாலும் எங்கள் சந்திப்பு அறுந்து போனது. அதிலும் முத

ஞள் அவன் சொன்ன கதை பற் றியும் கேட்கவேண்டும். அது முக் கியம் தானே.
முதனுள் raggingஇற்கு ஒழிந்து, 5eniன8இற்கு ஒதுங்கி, தண்ட வாளத்தடியில் உதயனேக் கண்ட போது, தண்டவாளத்தில் நெடு நீள நடந்து, வானம் மந்தார மாக இருந்து, தண்டவாள அரு கில் புற்கள் பச்சையாய், உயர மாய் வளர்ந்து, எதிரே தெரிந்த ஸ்ரேசன் வாங்கில் அமர்ந்து - சொன்னுன், "ஒரு சிங்கி அம் பிட்டாள். சந்தோஷ மாக இருக்கிருள். போகப்போக பெயரைக் மிக்க்க வேணும்" பெயரைக் கேட்டாணுே தெரி யாது. புனோசாமிாகச் சந்திக்க
வேணும்.
கீ ைநீக்க
Faggingஇலும் எவ்வளவு நல்ல விஷயங்கள் கிடைக்கிறது. ஆல் லாவிடில், யோகு - யோகேஸ்வரி யின் சுருக்கம் - இவ்வளவு நன்ரு கப் பஈடுவாள் என்று எப்படி அறிய முடியும்? "தோகை இள
மயில் ." எவ்வளவு நன்ருக இருந்தது. 'ஒரு ராக்ம் பாட Garris, "" radioisi பிறகு கேட்க எவ்வளவு இனிமையாக இருந்தது. அப்பாட்டின் ஒள்
வொரு அசைவும் நினேவில் நின் றது. பிறகு பிறகு, எங்கெங்கு, எந்த எந்த Irctயா 00mகளிலும் சன்னமாக யோ குவின் குரல் கேட் கும். என்வாறு பாட்டினே நின்று கேட்காமல் கால டி எடுத் து வைக் க முடி / ம்? "மேகமே, மேகமே பாவ்நிலா தோதே." எனும்போது அது : வ்வளவு
இனிமையுடைத்து? "எ னக் கு ஒரு மலர்மாலே நீ வாங்க வேண் fடும்." குரவின் அசைவில் கண் னில் நீர் துளிர்த்தது. அந்த ஹம்மிங் வாணி ஜெயராமா, யோகுவா? "அமுதே, தமிழே, அழகிய இசையே எனதுயிரே" நானும் ஒருக்கால் அவளிடம் "மானஸஸஞ்சரரே. " கேட்க GariT) h. ragging period (ply. பட்டும்.
gேging periodஇலும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு அன்பு செலுத்த முடிகிறது. அதிலும், தி இணு வின் - வண்ணதாசனின் "தனுமை" கதாநாயகி அல்ல - அன்பு பிரத்தியேகமானது. "நான் உங்களின் சகோதரி போல" என் கிற மாதிரி, ragging என்ருல் அவர்கள் சொல்வதை செய்யச்
சொல்வாள். "சொன்னதைச் செய்திட்டால் பிறகு பிரச்சினே இல்லே" என்பாள். -ଞଈ/ଧ୍l_fft
நிறையக் கதைப்பின் பின், எனது தூரத்து உனர் நண்பனின் தங்கை என அறிந்தது மகிழ்ச்சியைத் தந்த ஒன்று.
HP அடியில் இது நடந்தது. 80nin girls சின்ர் எந்தனர். என் னேப் பார்த்த பார்வை Tigging இன் ஆ ர ம் பம், ""g gir at பெயர்?" சொன்னேன். "அப் பன் இல்ஃயோ?" "இருக்கிருர்" அவர் பெயரும் சொன்னேன். "சரக்கு போட்டிருக்கிறியோ?" "இன்ஃப்" "ஏன்" மெளனம். மெளனத்திலும் என் பார்வை &cஇற்குள் தொங்கவில் இருந்த
புதுசு 17

Page 11
வளிடம் சென்றது. அழகாக இருந்தாள். ஒல்லியாக இருந் தாள். நீட்டுக்கு தலைமயிர் இருந் தது. சிவந்தவள் மிடி போட்டி ருந்தாள். என் கவனத்தை மிக வும் கவர்ந்தாள்.
** என்ன அவளைப் பார்க்கி முய்?" என்ருள் ஒருத்தி.
*"ஒண்டுமில்லை" எண்டன்.
“அவளுக்கு எவ்வளவு மார்க்ஸ் போடுமுய்?" என்ருள்.
படக்கென்றது. முக த் தி ல் அறையவேணும் போலை.
"பத்தொம்பது" என்றேன். திருப்தி வந்தது. அழகில்லா ஒருத் திக்கு நான் அறுபது மார்க்ஸ் கொடுத்திருப்பேன். நல்ல காலம் நான் முன்னர் கேள்விப்பட்டது மாதிரி பத்தொன்பது தோப்புக் கரணம் போட என்னை விட
room ragging ListS GTGil 6 introl சொல்லுதல் இயலும்? உடை களைந்து, மனம் கூட நிர்வாண மாகி, கூச்சப்பட்டு, அது அசிங் கம். பிரேமலதா அடிக்கடி raggersஐ, ‘நாய்கள் நாய்கள்" என்று முணுமுணுப்பது room taggingஇல் சரியாகவே தெரிந் தது. ஆணுல் "கம்பஸ் காப்பு" கொஞ்சம் கவித்துவமாக இருந் தது. மணிவாசகரின் திருவாசகம் படிப்பது போல. அதனை இயற் றியவன் பாராட்டப்பட வேண் டியவன் தான்.
புதுசு 18
தொப்பூளில் சின் னி விர லை வைத்து, குனிந்தபடி வாயில் பெருவிரலை வைத்தபடி, மூன்று தரம் சுத்தும் போது. அது 'கம் பஸ் கள்ளு" தான்.
“எப்பொழுதடா Social நடக் கும். எப்பொழுதெல்லாம் இதிலி ருந்து விடுதலை கிடைக்கும்" என் கிற மாதிரியான உணர்வு அடிக் Φιφ
ஆத்மாவைக் கொல்லுகிற விஷ யம் இந்த ragging என்று ஒரு கட் டத்தில் கருதப்பட்ட போதும் இது தனி ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, தனி ஆள் அல்ல; தனி ஆளுமை யை பிரகடனப் படுத்தும் செயல் அல்ல; நாங்க ளும் கூட்டத்தில் ஒருவன் எங் கள் முகங்களும் சேர்ந்ததே இவ் வமைப்பு எனும் உணர்வு பிறகு நெஞ்சில் உறுதியாகி.
பிறகு, பிறகெல்லாம், seniors இல்லா நேரங்களில் எங்கள் groupஇல் குதூகலம் அளவுக்கதி கம். இந்தக் Campus எங்கன்ரை என்னுமாப் போலை,
நான் அதற்குப் பிறகு canteen இற்குப் போவதை நிறுத்திக் கொண் டது ந ல் லதா க ப் போயிற்று. மேசையின் மேல் நின்று first year ஒருவன் fanஐச் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் first year என்று கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய சிரமமில்லை. முகத்தில் தாடி, மீசை இல்லா Logi clean shave egufleir first year.

சிறிது பயத்தைக் கொடுத்தது இவைகளே. உடம்பு கூடிய அந் தப் பெண்ணிடம் போய் “நீங்
கள் எத்தினை ருத்தல்?’ எள்முல் எப்படி இருக்கும். நல்ல காலம் அவள் சிரித்துக் கொண்டாள்.
அந்தக் கண்ணுடிக்கார girl இடம் கண் ணு டி வாங் கி uyaohigi GlassroorG library block முழுக்க சுற்றிக் கொண்டிருந்
2. மறு கிழமை
குடையப் பிடித்து நாங்கள் நடந்தோம். இருந்தும் கூட இது சாத்தியமாகிறது.அந்தருேட்டில், அவள் முகம் தெரியக்கூடும். இது இருவருக்கும் பொதுவானது.
சாப்பிடப்போன இடம் கூட அப்போதைய மனநிலையிலிருந்து வித்யாசமாகப்பட்டது. "நான் நாளைக்கு தான் சாப்பிட வருவன். இப்ப அவனேடை சும்மா.. 9 என்றபோது சாப்பாட்டு அன்ரி, மெலிதாகப் புன்னகைத்து கொஞ் சம் பொறுத்து, பால்கோப்பி தந்
தது நிறைய நேரம் இனித்தது.
அடிக்கடி இவன், “வித்தியாச மான வீடு. அங்கையிருக்கிற பெட் டைகள் நல்லாப் பழகுங்கள் - விகற்பம் இல்லாமல் .' என்று சொன்னது, அவ்வளவாக காதில் ஏருமல் போனது. அதற்கு அந்த அவளின்" என்பால் பற்றிய ஈர்ப்
போதும்,
ததை சிரிக்காமல் சொல்ல முடிய வில்லை.
இன்னும் சொல்வதற்கு எவ்வ ளவு விஷயங்கள் இருந்தன. ஆனல் பிறகு,
social வந்தன்று தான் கொஞ் சம் சோகமாக இருந்தது. Social இரவுதான் எல்லாம் முடிந்த தாக. இப்படி ragging இன்னும் வராதா எனும் தாபம், ஏக்கம்.
பும், முகமும் மனசு நிறைந்து போனது காரணமாகும்.
சாப்பாட்டு வீ ட் டி ல் முகம் கொடுத்து கதைக்க வெட்கமாகிப் போனதால், கதைப் புத்தகத்தில் கண்ணைப் புதைக்க, அன்ரியின் முதலாமவள், " எ ப் படி யும் கதைப்புத்தகம் முடிக்கிறதெண்டு தான் இருக் கிறியள் ' என்ற போது அசடு வழிவது அவசிய மாகியது. பிறகு இவன் சாப்பிட் டுக் கொண்டே, அவன் நெடுகக் கதைப்புத்தகத்தோடை" என அவனைப் பார்த்து கொஞ்சம் சிரிக் கலாம் போல் தோன்றியது. பிற கும் அவள் " " என்னட்டைப் புத் தகத்தை தாறதுக்கோ இவ்வளவு வாசிக்கிறியள்? எனும் זח"ענ6h"חj_ן முகத்தை நிமிர்த்தி சிரிக்கலாம். பிறகும் ஒரு எண்ணம் வந்தது, அவளின் கதையை நிப் பாட்ட வாயிலை ஒரு முத்தம் கொடுத்தால் எ ன் ன என்கிற மாதிரி.
புதுசு 19

Page 12
இரண்டாமவள் இவ்வீட்டில் வித்யாசமாகி, இந்தக் குடும்பத் தில் நான் பிறக்கவில்லை என்னு மாப்போல, ரேடியோவில் பாட் டுடன் சேர்ந்து தானும் "ஹம்" பண்ணியதும், தமக்கை கூப்பிட்ட போது’* What?” என்றதும் கூட அவள் அப்படித்தான் இருக்கக் கூடியவள் என எண்ண வைத்தது. அதன் பிறகும் முதலாமவளின் க  ைத ப்பு கூட - பூங்கண்டின் மண்ணை கிண்டிக் கொண்டு - சந் தோஷமாக நெஞ்சைத் தொட்
-gil.
பிறகு மழை பெய்து, குடை பிடித்து நீண்ட ருேட்டால் நடக் கும் போது இவன் சொல்லிக் கொண்டிருந்தான். ** அந்த ச் "சிங்கின்ரை பே  ைர க் கேக்க மறந்து போனன்." என்றபோது எனக்கு சேலைகட்டி, ஒற்றைப் பின்னலை முன் விட்டு, சந்தோஷ மாக சிரிக்கிற முகத்தில் லயிப்பு ஏற்பட்டது. நான் இவனுக்குச் சொல்லலாம் என்றிருந்த வசனம் இதுதான். "அவள் இண்டைக்கு இரட்டைப் பின்னலோடை, மிடி யும் போட்டு, நெற்றியில் கறுப் புப் பொ ட் டு வைத்து, குட் மோர்ணிங் என்ற போது சந் தோஷமாக சிரித்து, குட்மோர் ணிங் என்ருள்' என்பது கடை சியாக room இற்கு வந்தபோது சொல்லி முடித்தேன். ஆனல் அவன் இதைக் கூட அசட்டை செய்து, பாசி நிறைந்து வழுக் கும் வாசற்படி ஏறி roomஐத் திறந்தான்.
புதுசு 20
அது பிடிக்காமற் போனதின் அர்த்தம் விளங்காமல் 'அந்தச் * சிங்கீன் ரை பேரைக் கேட்டிருக் கலாம்" என்றும் பிறகும் பிறகும் சொன்னன். உடனே நான்
சொன்னது "எனக்குத் தெரியும் என்ரை
* சிங்கீ?ன்ரை பெயரை - வதணி’ என்றது அவனுக்கு கறுக்க வைத்தது. அதுவும் கூட நான் ஒரு படி மேல் என்பது தான் அவன் கறுப்பின் அடை யாளம்,
அன்றும் கூட - முதனுள் ராகிங் குக்கு ஒழிந்து - தண்டவாளத்தில் நெடுநீள நடந்து, வானம் மந்தா ரமாக இருந்து, தண்டவாள அரு கில் புற்கள் பச்சையாய் உயர மாய் வளர்ந்து, எதிரே தெரிந்த ஸ்ரேசன் வாங்கில் அமர்ந்து - அன் றும் கூட பிரஸ்தாபித்தான்." “ஒருசிங்கி அம்பிட்டாள்.கதைக்க சந்தோஷமாக இரு க் கி ரு ள் . போகப்போக பெயரைக் கேக்க வேணும்" அது இன்னும் இல்லா மல் போனது.
கடையில் ஒருபிளேன்ரீகுடித்து, வீதியால் சென்றபோது குடை விரிக்க வேண்டிய அவசியம் இல் லாமல் போனது.
அப்பொழுது அவனது "சிங்கி" ஒற்றைப் பின்னல் மு ன் ஞ ல் விட்டு எ தி ரி ல் வந்து சிரித்த போது, இவனைத் திரும்பி பார்க்க மனசு வரவில்லை. காரணமும் உண்டு. இவன் மிகவும் குன்றிப் போன சிரிப்பு கொண்டிருந்தான். எனக்கு வதணியைக் கண்டவுடன்

நெஞ்சை நிமிர்த்தி சிரிக்கக்கூடிய
அளவிற்கு இவன் குன்றிப் போவ
தன் அர்த்தமிழக்கப்பட்டது.
LD60p. Glutiigi getti is campus
புல்வெளியின் பச்சை விரிப்பில் இரு க் கும் மழைத்துளிகளைப் பார்த்தவாறு, கல்வாங்குகளில்
அமர்ந்தவாறு இருந்தோம்.
இனி, lecture இருக்கிறது என் பது அந்தக் கணத்தில் மறக்க வேண்டும் போல் இருந்தது. அனேகமாக அவன் மறந்த நிலை. science faculty Ludisib Ggiluyth வ ண் ண வ ண் ண உடுப்புகள், libraryஇல் இருந்து இறங்கும் சிறு கும்பல், தூரத்தில் தெரியும் ஆனந்த குமாரசாமி விடுதி, பால சிங்கம் விடுதி இப்படியாது.
இவன் பிறகு, நீண்ட நேரத் தின் பி ன் ன ர் தா ன் இதைச் சொல்ல வெளிக்கிட்டபோது, அவசரமாக நான் சொன்னது "காதல் என்பதும் கூட ரசனைக் குரிய விஷயம் தான்" என்பது. ஆனல் அவன் சொன்ன வசனத் தைக் கே ட் ட பின் ன ர் நான் இதைச் சொல்லாமல் விட்டிருக் கலாம் போல் தோன்றியது. இதுதான் 'ஒரு பிளேன்ரீ குடிக் கக் காசில்லாமல் இருக்கேக்கை காதல் என்னத்துக்கு? நாங்கள்
சிரிக்க மட்டும் செய்வம்."
இது நெஞ்சில் உறுதியாகப் போயிற்று.
3. இன்னுெரு கிழமை
இதனே நான் உங்களுக்குச் சொல்லுதல் வேண்டும். எப்படி? கோஷம் இடுவேனே? தெரியாது. "நவபாசிசவாதி" என அவர்கள் அன்றைக்கு எனக்கு இருந்த மன நிலையில் நான் அழுதிருக்கலாம். கொடும் பா வி யை எரிக்கும் போது என்னல் எப்படி உணர்ச் சியைக் கட்டுப்படுத்த முடிந்தது? சொண் டு களை க் கடித் துக் கொண்டு நான் என்ன மாதிரி மரம் போல் நின்றேன். சாப்பி டாமல் நாலு நாளாச்சுது. இருந் தும் நான் கத்தலாம் - எங்கள் சக்தி மக்கள் சக்தி. மாணவர் சக்தி மாபெரும் சக்தி. அப்பொ ழுது அவர்கள் முகத்தில் எவ்வ
ளவு பிரகாசம் பொங்கியது. அன்றைக்கு பூரீலங்காவின் "சுதந் திர நாள்" என்பது ஏன் எங்களை இவ்வளவு வஞ்சித்தது? அந்தப் பிரகாச முகங்களின் சேர்க்கை யில் தீப்பொறி எவ்வளவு கிளம் பியது. இது எரிக்கப் போதாதா? இன்னும் ஆயிரமாயிரம் வேண் டுமா? இது மாத்திரமில்லை - இதுக்கு முன்னமும் நடந்தது. உங்களுக்குச் சொல்லுதல் வேண் டும்.
கேளும்.
செவ்வாய்க்கிழமை காலையில் தான் தொடங்கியது. நான் இன் னும் என்னுடன் எழுபத்தைந்து பேர் வரையில். இராமநாதன் மண்டபத்து முன்னல் போட்டி
புதுசு 21

Page 13
ருந்த கொட்டிலில்தான் உண்ணு விரதம். நாலு நாள் இருக்க
வேண்டும். சாப்பிடாமல் வெறும்,
பச்சைத் தண்ணியுடன்.
மதியம் ஒரு மணிக்கு பசியெ
டுத்தது. பல்லைக் கடித்தோம். மூன்று மணிக்கு பசிக்களை. அவ ரவர் இருந்த இருந்த இடத்தி லேயே படுக்கை, குஞளன் சொன்னது அந்த நேரத்திலும் சிரிப்பைத் தந்தது. இப்ப ஜேயார் நல்லா வெட்டிப்போட்டு, 'மணி" நித் தி ரை யடிப்பா ன்’ அந்த உண்மை மனசைச் சுட்டது.
மனே கதைப்பதற்கு நல்ல துணையாக இருந்தாள். "ஜெய காந்தன், இந்திரா பார்த்தசாரதி பிடிக்கும்" என்ருள். " "ஆற்ரை எழுத்துப் பிடிக்கும்?" என்று நான் கேட்ட போதே இதனைச் சொன்னுள். அவளுக்கு மகத் தான நாவலாக மக்ஸிம் கோர்க் கியின் "தாய்’ நாவல் தான் தெரிந்தது. அந்நாவலைப் பற்றி, வரிவரியாக ஒன்றிப் போய் அவ ளுடன் கதைக்க முடிந்தது.
பின்னேரத்தில் தேனீர்ப் பசி. ஒரு வடையும் சாப்பிட்டு - அல் லது போண்டா - வெறுமனே நாக் குக்கு சப்புக் கொடுக்கிற பிளேன் ரீயும் குடித்து அது நேற்று நடந் தது. முந்தநாள் நடந்தது. அதுக்கு முன்னமும் நடந்தது. அது ஏலாது. இண்டைக்கு ஏலாது. நாக்குகளில் உணர்வு துளிர்த்தது. வாயைச் சப்புக் கொட்ட வேணும். இண் டைக்கு கட்டாயம் பிளேன் ரீ
புதுசு 22
எதிர்பார்க்கும் உணர்வு. வேண் டாம். மரத்துப்போ.
உப்புக்கரைத்த தண்ணி. சாப் பாடு இல்லாட்டி உடம்பில் அமி லம் ஊறுமாம். அதை வெட்டிச் சமப்படுத்த வேண்டுமாம். உப்பு காரமாம் கரைச்சுக் குடிச்சால் உடம்புக்கு நல்லதாம். physical Science படிக்கிற கேதீசுக்கு 2- L'JL) கரைக்கிறதெண்டால் வலு சந் தோஷம். எனக்கு அவன்ரை மூஞ்சிலை உப்பாலை எறிஞ்சால் என்ன எண்ட மாதிரி இருக்கும். குடிக்கிறதே பச்சைத் தண்ணி. அதுக்கை உப்பையும் கரைச்சுக்
குடிக்கிறதெண்டால்?
வெள்ளை வெளேரென்ற library building உம், மஞ்சளாகிப்போன வெயிலும், இடையிடை காய்ந் தும், பச்சையாக இருக்கிற புல் வெளியும் படுத்திருக்கும்போது அழகுதான் என எண்ண வைக்கி றது. மஞ்சள் வெயில் மாலை , பிறகு சிவப்பாகிறது.
guralistdar. chess board g protar நாயகம் கொண்டு வந்தான் cheSS விளையாடினுல் நேரம் போவது தெரியாது. நேரம் போனது. ஒன் பது மணியானது. சிலர் நித்திரை சிலர் "சள்’ சிலர் "கொண்" வெறும் படங்குகளில் தலைக்கு அணையாக கைகள் கொண்டு, பணியின் உக்கிரமான பெய்தலி லும் உடம்பில் போர்வை அற்று, நுளம்புகளைத் துரத்தி கைகள் ஓய்ந்து, பசிக்களை நல்ல நித்திரை தர, ‘மானஸ்ஸஞ்சரரே" பாட்டு இதமாக இருந்தது.

காலை இப்படி விடிந்தது. bench இல் படுத் தி ரு ந் து
மரங்களையும்,
பெரும் நீலமான வானத்தையும் பார்க்க அழகாக இருந்தது. சத்தமூட்டிக் கொண்டிருந்தன. இராமநாதன் மண்டபம் வெறு
மரங்களில் புட்கள்
மனே 'உம்' மென்றிருந்தது. கல
கலப்பற்று. பணியின் ஒட்டுதல்
கொண்ட வா டைக் காற்று
சிலிர்ப்பூட்டியது. சிலிர்ப்பில்
யூகலிப்டஸ்' மரங்களும் சிலிர்த் தன.
ஐயர் வருவதும் பூக்கள் கொய் வதும் படுத்திருந்தபடி தெரிந் 娜夕· அருகில் காகம் ஒன்று எச் சமிட்டது. எழுந்தேன். நிற்க முடியவில்லை. தலை சுற்றியது. சிறிது நேரம் அமர்ந்தவாறு இருந்தேன். தன்னை வருத்தி பர வாயில்லை. பசிக் களை கொஞ்சம் அமைதி கண்டது. எழுந்துபோய் மண்ணை சிறிது எடுத்து பல்லை விளக்கினேன். குழாயடியில் ரஞ் சித், உதயன், தர்மா, வாசு நின்
றனர். 'தலையைச் சுத்துது' என்றேன். 'பேசாமல் அந்தத் திண்ணையில் இரு' எண்டான்
உதயன். நான் வேண்டாமென்று முகத்தைக் கழுவினேன். வயிறு புகைந்தது. காலையில் முகம் கழுவியவுடன் ஒரு சொட் டு தேனீர் எதிர்பார்க்கும் புகைச் சல், தன்னை வருத்தி. பேசாது வந்து கொட்டிலுக்குள் இருந் தேன். இன்றைக்கு பசிக்களை கொஞ்சம் கரைச்சல் கொடுக்கப் போகுது.
திடீரென கேசவன் வாந்தி எடுக்கிருன் எனும் சேதி வந்தது. பாவம் - டொக்ரர் வந்தார். கேச வ்னின் உண்ணுவிரதம் அத்து டன் முடிந்தது, என நினைக்கி றேன். அவனைப் பிறகு காண வில்லை. m ፶ኦ
two-in-one go is gis J. L. 156) லதாகப்பட்டது. நல்ல பாடல் கள். நல்ல இசை, நல்ல கவிதை, அருமையான சூழல். பாரதியார் பாடல் க ள், வேறு மொழி பெயர்க்கப்பட்ட பா ட ல் க ள் இவைகளெல்லாம் பாடல்களா? உயிர்த் துடிப்புகள்.
ப சிக் களை யும் , கொட்டிலி னுள்ளே கிடக்க வேண்டிய அவ சியமும், பாரதியின் பாடல்களை வரிவரியாக அனுபவித்து சுவைக்க வைத்தது.
இன்றைக்கு முழுக்க கொட்டி லுக்குள்ளேயே படுக் கையுடன் சீவியம் போனது. இன்றைக்குப் பசி மரணவேதனையாக இருந்தது. ரஞ்சித்துக்குப் படுத்து படுத்தே முகம் உப்பிப் போனது. படுத்த படி, எதிரில் தெரிந்த சுவரொட்டி வாசகம் இவை. "அடிமைச் சங் கிலி அறுப்போம், நாங்கள் அதி லொரு வாள் செய்வோம்."
இரவு மனேவுடன் பெண் விடு தலை பற்றி பற்றி கொஞ்சம் கதைக்க முடிந்தது. அவர்களிடம் வர்க்க விடுதலையையும், இனவிடு தலையையும், பெண் விடுதலையை யும் பிரித்துப் பிரித்துப் பார்க்கும் போக்கே இருக்கிறது ஒரு ஆண்
புதுசு 23

Page 14
மாத்திரம் நினைத்தால் பெண் ணுக்கு விடுதலை கிடைக்கும் எனும் அசட்டு நம்பிக்கை வேறு. தங் கள் பங்கென்பது வரையறைக்குட் பட்டது என்று கருதுகிருர்கள். இப்பொழுது இவர்களுடன் முட்டிமோதிக்கொள்வதால் பய னில்லை. இறுதியாக இதனைத்தான் சொன்னேன். 'தமிழர்களின் விடு தலைக்கு தமிழர்கள் தான் போரா டவேண்டும். சிங்களவர்களிடமி ருந்து எங்களது விடுதலையை எப் படி எதிர்பார்க்க முடியாதோ அதேபோலத்தான் பெண்விடுதலை այւն ...''
'அடிமைச்சங்கிலி அறுப்போம் நாம் அதிலொரு வாள் செய் GourTubo o இவ்வாசகம் நான் கத்து வது கனவில் தெரிந்தது. இன்று காலை ஏனே தெரியாது எழும் பப் பிந்தியது. எழும்பியதும் கூட இவர்கள் இதனைச் சொன்னதனல் தான். மிகுந்த சத்த மிட்டுக் கொண்டு எல்லோரும் எழும்பி இதனைப் பார்த்தார்கள். தூரத் தில் கறுப்புப்புகை மே முந் து சென்று கொண்டிருந்தது. அந்த வாகை மரத்தின் உச்சிக்கப்பா லும், தென்னை மரங்களின் தலை யைத் தடவியவாறும் கறுப்புப் புகை மேலெழுந்து சென்று கொண்டிருந்தது. இப் படி க் கதைத்துக் கொண்டிருந்தார்கள். 'கந்தர்மடம் சந்தியிலை பஸ்சை எரிச்சுப் போட்டார்களாம் . நாளைக்கு சுதந்திரநாள் எண்ட படியாலை . " அடர்த்தி மிக்கதா கவும், மிகுந்த கருமை கொண்ட தாகவும் இந்தப் புகை இவ்வாறு
புதுசு 24
மேலெழுவதாயின், 1977 ஒகஸ்ரி லும், 1981 ஜ"னிலும் யாழ்நகர் எரியுண்டபோது எழும்பிய புகை பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். அது புகையல்லவோ - வேறு ஏதும் குளிர்ந்த காற்றே? குளிர்ந்த காற் ருயின் நெஞ்சினைத் தடவியபடியே சென்றிருக்கும். ஆனல் இது அப் படியல்ல; எங்கன்ரை நெஞ்சிலை இரு க் கிற து தணல். அடிக் கடி யோசிக்க யோசிக்க உடம்பை உலுக்கியபடி பீறிட்டெழும் ஆத் திரம் - அது தணல்தான். அந்தப் புகை எங்கன்ரை நெஞ்சுகளிலை அடங்கிக் கொண்டது. அதுதான் அடிக்கடி இப்படிக் கொடுமைகளை சுமக்க வைக்கிறது.
வாசலுக்கு தடதடத்தபடி வந் தது truck தான். அதிலிருந்து குதித்ததும் army தான். பஸ்சை எரித்தவர்கள் campus இற்குள் தான் ஓடி வந்தார்கள். இந்தா நாங்கள் பிடிக்கிறம் எண்டமாதிரி இருந்தது அவர்கள் செய்கை. உள்ளுக்குள் வரவில்லை. நின்ருர் 956sir machine gun gg 5fT U "Lq (609ri கள். ஏறிப்போனர்கள். எங்களில் ஒருவர் முகத்திலும் அச்சம் குடி கொள்ளவில்லை. அப்பொழுது two-in-oneஇல் படித்தது “அச்ச மில்லை அச்சமில்லை '"
பிறகு அரை மணித்தியாலத் துக்கொருக்கால் truck அல்லது ஜீப் campus ஐச் சுற்றிச் சென்று கொண்டிருந்தது.
இன்றைக்கு அவ்வளவாக பசிக் களை தெரியவில்லை. தாகம்தான் அதிகம். கேதீசுக்கு இண்டைக் காவது மூஞ்சையைப் பொத்திக்

குடுக்க வேணும். வரவர தண் னிக்குள்ளை உப்புத்தான் கூடுது. உதயனப்பார்க்க ஆகலும் பாவ மாக இருக்கிறது. நல்லா மெலிந்து போய் எலும்புக் கூடாகி. ரஞ் சித்துக்கு முகம் உப்புப்பெண்டு உப்பி பாக்க பயமாகி.
மத்தியானத்திற்கு சற்றுப் பின்
பாக பாலன் வந்தான். சும்மா கொஞ்ச நேரம் கதை. அவனு டன் கதைக்க நன்ருக. அவன்
வெளிச் சூழலை பற்றிச் சொன் ஞன். மக்கள் இன்று ஹர்த்தால் நடாத்துகிருர்கள். க  ைட க ள் தங்களைப் பூட்டிக் கொண்டன. பாடசாலைப்பக்கம் மாணவர்க ளைக் காணவில்லை. வீதி வெறிச் சோடி இருக்கிறது. அங்குமிங்கும் ஜீப்புகள் திரிகிறது, என்று சொன் ஞன். பிறகு இதனையும் இரகசி யமாகச் சொன்னன். ' ர ன் டு மூண்டு மினி பஸ்ஸிலை ஆIக்கா ருங்கள் திரியுருங்கன்" பிறகு இன் னும் மக்களின் ஆயத்தமின்மை பற்றியும் சொன்னன். வித்தியாச
மான குழ லி ன் செய்தியோடு
பொழுதுபட அவன் போனன்.
அ ன்  ைற க்கு வேளைக்கே வந்தது.
நித் தி  ைர
காலை எழுந்தபோது குருவிச் சத்தம் துல்லியமாகக் கேட்டது. இது மிகவும் அதிகாலை, காற்று மெலிதே வீசின. நிலத்தில் சிறிதே வெளிச்சம் தெரிந்த, வானத்தில் சிவப்புக் கலந்து நீலம் சொற்ப மாய் பட, ஆட்காட்டி குருவி குரல் எழுப்பி, மற்றவர்கள் அசிங்
கமாய் தூங்கும் இந்நேரம் என்னை
எழுப்பியது என்ன? -
எழும்பி நின்றபோது தெரிந் தது. கைகல் நடுங்கத் தொடங் கின. நே ஞ் சு படபடவென்று அடித்துக் கொண்டது. வேர்க்கத் தொடங்கியது. நா க்கு வறண் டது. என்னலை ஏலாது. வயிற் றுக்குள் "கொள கொள' என்று சத்தம். நான் மயங்கப் போறன்.
கொஞ்சமாய் உப்புக் கரித்த தண்
ணிர் குடித்தேன். சிறிது ஆயாசம். bench இல் படுத்துக் கெர் ன் டேன். நித்திரை இல்லை.
சிறிது நேரத்துக்குப்பிறகு ஒவ் வொருவராக எழும்புவது தெரிந் தது. இன்னும் சிறிது நேரத்திற் குப் பிறகுதான் சரோ மயங்கி விழுந்தாள். அது துரதிர்ஷ்டமான விஷயம். நேற்றுவரை மிகவும் உற்சாகமாக இருந்தவள். தைரிய மூட்டினவளின்னும்தான்ஏழெட்டு நாளுக்கு இருக்கத் தயார் என்ற வள். சாகும்வரை உண்ணுவிரதம் என்ருல் தனக்கு ஒரு வருஷம் பிடிக்குமென்று கலகலக்கச் சொன் னவள். மயங்கிப் போனள். அவ சரமாக campus ஜீப்பில் ஏற்றி d. Watson இடம் கொண்டு சென் றர்கள். இதனை ப் பார்த்துக் கொண்டு நின்ருே என்னவோ சுசியும் மயங்கி விழுந்தாள். நேற் றும் தலைக்குள் ஏதோ செய்தது என்று சொன்னவள்தான். தனது பிடிவாதத்தை தளர்த்த விரும்பா நின்றவள். அவளும் மயங்கி விட் டாள். இன்னெரு வானில் அவள் dr. watson guth Gol s nr 6ð7 G).
புதுசு 25

Page 15
போகப்பட்டாள். சிறிது நேரத் தில் வெள்ளை உடுப்புடன், தலை கண்ணுடி போட்ட, கருணை முகம் கொண்ட
வழு க் கை யா கி ,
தமிழ் கொஞ்சமே தெரிந்த dr. Watson வந்து ஆறுதல் சொன் ஞர். கடவுளைத் தியானித்தால் இக்கணத்தில் சுகம் சேர்ப்பிக்கப் படும் என்று சொன்னர். பிறகு போளுர், m
பிறகு எட்டு மணியளவில் வாச
லுக்கு track வந்து நின்றது . armies g) spriSG)is air. campus ஐச் சுற்றி பத்தடிக்கு ஒரு army g5 machine gun all-air liair றனர். ஆக்கிரமிக்கப் பட்ட பிர தேசமாகுமாப்போல. அந்நியம ணம் சூழ்ந்த அக்காற்றிலும் இப் பாடல்தான் பரவியது. “என்று தணியுமிந்த சுதந்திர தாகம்."
பத்து மணியளவில் ராணுவம் வெளியேறியது. அதற்குப் பிறகு வந்த சத்தியன் "கொக்குவிவில் நடக்கிற உண்ணுவிரதக்காறர் இஞ்சை வர வெளிக்கிட்டபோது army machine gun G69L- jtájás வர நின்டு மறிச்சுப் போட்டாங் கள். சனங்கள் அந்த இடத்தி லேயே இருந்திட்டார்கள்." என் முன். இந்த அவசரமான சூழலி லும் எனக்கு உடம்பு ப த ற த் தொடங்கியது. நாக்கு வரண்டு போய் காலை மாதிரி அந்த உப்
புதுசு 26
புக் கரித்த தண் ணி ர் தஞ்சம் ஆனல் இம்முறை அடங்குவதாய் காணவில்லை. மிகுந்த சிரமப்படும் நேரம் இது.
இந் த நேரத்தில்தான் அ து ந ட ந் த து . நான் சிரமப்பட்டு அதனைப் பார்த்தேன். என்னல் எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியும்? சொண்டுகளைக் கடித்துக் கொண்டு நான் எப்படி மரம் போல் நின்றேன்? அவர்கள் ராணுவத்தினரின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு எ ப் படி இதனைக் கத்திக் கொண்டு வர முடிந்தது? "எங்கள் சக்தி மக்கள் சக்தி. மாணவர் சக்தி மாபெரும் சக்தி"
அ வர் க ள்
"நவபாசிசவாதி" என கொடும்பாவியை எரித்தபோது எனக்கு என்னை அறி யாமல் அழுகை வந்தது. என்பது மிகவும் சத்தியமான வார்த்தை நான் மிகவும் அதனை அனுபவித்து உணர்ந்தேன். கட்டுப்படுத்த முடி யாமல் கண்களில் கண்ணிர் தளும் பிற்று.
இதனை இவ்விடத்தில் முடிக்க லாம். அல்லது உண்ணுவிரதம் முடிந்தபோது மிகவும் அவசரப் பட்டு பால், பழம், பாயாசம் சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லி யும் முடிக்கலாம்,

i Smiggi)
-தா. இராமலிங்கம்
குடா நாட்டில் இப்போது கொளுத்துகுது கோடைவெயில்!
ஆனையிறவு உப்பளத்தில் உப்புக் குவியல்கள் பளிங்குக் குன்றுகள்! சரித்திரம் காணுத சாவிளைச்சல்! சாவிளைச்சல்!!
அய்யோ வாடி வீடே
f5
வதை கூடம் ஆனயே
நகக் கண்கள் ஊடு நீட்டுசி மாட்டுகிருய் குண்டாந் தடியாலே குதிக்கால் பிளக்கின்ருய் விரலில் இழை இறுக்கி தலைகீழாய்த் தூக்குகிருய் மிளகாய்ப் புகையினிலே மூச்செடுக்க வைக்கின்ருய்.
அய்யோ வாடி விடே pë
வதை கூடம் ஆனயே!
குறியின் துவாரத்தில் சலாகை இறுக்குகிருய் கதறிக் களைப்புற்று விடாய் மிக்கு நீர் கேட்டால் வாந்தி எடுத்து வயிறு வாய் புண்ணுக கடல் நீர் பருக்குகிருய்
புதுசு 27

Page 16
விடுதியென இனி உன்னை யார் நம்பி வருவார்கள்?
கதறல் அலறல் எல்லாம் காற்றில் பதிந்து கடல்கடந்து கேட்கிறது! அடுக்குமுறை கொந்தளித்துப் பெருக்கெடுத்துப் பாய்கிறது!
வளைகுடா யுத்தத்தில் எண்ணைக் குதங்கள் எல்லாம் தீப்பற்றி எரிகிறது!
பாலஸ்தீனத்தை
இஸ்ரேல் விழுங்கிவிட்டு மூச்செடுக்க முடியாமல் முட்டுவைத்து முனசுது!
வெள்ளை இனத்து வெறியர் ஆட்சியிலே இருண்ட கண்டத்தில்
எழுகின்ற அவல ஒலி காற்றில் மிதந்து கடல் கடந்து கேட்கிறது!
அய்யோ வாடி வீடே
நீயும் கொலைகூடம் ஆனயே!
"புதுசுவிற்கும் அவரிற்கும் நெருங்கிய தொட்ர்பு இருந்து வந்தது. புதுசுவின் தீவிர வாசகர். மக்களுடன் இணைந்த வேலை களின் முன்னணிச் செயலர். அவருடன் பலதும் பற்றி விவா திக்க நேர்ந்ததும் கூட நேற்றுப் போல. அவர் இறந்ததும் நேற் றுப் போலத்தான். திரு. அ. வி ம லதா சன் எனும் பெயர் கொண்ட ஆம் "மனிதனின் இறப்பு அதிர்ச்சியானதே. அவ ரின் குடும்பத்தினர்க்கு புதுசுகளின் துயர் நிறை அஞ்சலி.
புதுசு 28

அளவெட்டி படைப்பாளிகள் வட்டத்தினரின்
'திருவிழா' -ஒரு வீதி நாடகமாக,
நான் அறிந்த வரையில் இலங்கையில் தமிழில் எழுந்த முதலாவது வீதி நாடகம் இது வாகத்தான் இருத்தல் வேண்டும்.
1983 மே 1ம் நாள் கிளிநொச்சி ருெ ட்றிகோ மைதானத்தில், தமிழ் மக்கள் ஜனநாயக முன்ன ணியினர் நடாத்திய மாபெரும் மே தின எழுச்சி விழாவில் 'திரு விழா" எனும் இந்நாடகம் விதி யில் தெருவிளக்கின் வெளிச்சத் தில் இடம் பெற்றது"
அன்று, பொலிஸ் படையினர் மே தின விழாவிற்கு அனுமதி தர மறுத்ததினல், மைதானத்திற்குள் கிளிநொச்சித் தொகுதி விவசாயி களின் சிறு ஊர்வலத்துடன் ஆரம் பமான விழாவில் சிலரின் சொற் பொழிவின் பின்னர், நகரத்தி லுள்ள பார்வையாளர்களின் பங் கேற்பின் உடன், நடிகர்கள் அணிந்திருந்த உடைகளின் மேல் நாடகப் பாத்திரங்களின் உடை களை அணிந்து, பார்வையாளர் கள் வட்டமாக
பாடும் குறித்து,
அமர்ந்திருக்க
இந் நாடகம் மேடையேறியது. இந்நாடகத்திற்கான பாடகர்கள் பார்வையாளர்களின் மத் தி யி லேயே இருந்து பாடல் களை இசைத்ததானது, நாடகத்தைப் பார்வையாளர்களிடம் தொற்ற வைத்ததை சுலபமாக வெற்றியில் கொணர்ந்தது.
சுமார் கால் நூற்ருண்டுக்கு மேலான தமிழ் அரசியற் கட்சிக ளின் வரலாற்றை கேலியுடனும், கிண்டலுடனும் சொல்லப்பட்டி ருந்த இந் நாடகமானது பார்வை யாளர்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை அவதானிக் கக் கூடியதாகவிருந்தது.
இனிவரும் சூழலில் வீதி நாட கத்தின் வெற்றியும் சாத்தியப் தொழிலாளர் தினத்தில், கிளிநொச்சி நகரத் தில், அளவெட்டி படைப்பாளி கள் வட்டத்தினரின் திருவிழா நாடகம் ஒரு எடுத்துக்காட்டா கிறது.
- ஊசி
காந்தீய அமைப்புச் செயலாளர் சோ. இராசசுந்தரம், தங்கத் துரை உள்ளிட்ட 54 போராளிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத் துகிருேம். பெறுமதிமிக்க, அரியதான 54 போராளிகளின் உயிர் சார்ந்த குடும்பத்தினர்க்கு எங்கள் அஞ்சலி,
புதுசு 29

Page 17
கடலும் கரையும்
அலையடிக்கும் கடல்; அதனருகே நீண்ட பெரு மணற் காடு.
குருக்ஷேத்திரத்துப் போர்க்காட்சி போல விம்மித் தணிந்த அலைகளோ
தரையை
ஓர் முறை தழுவி,
வெட்க முற்றுப் பின்னே வேகமாய்த் திரும்பின.
இந்தக் கரையின் மணற் பரப்பினிலே இலந்தை மரங்கள். இந்த மரங்களின்
உச்சியில் ஏறினல் இராமேஸ்வரத்தின் ஓர் முடி தெரியுமாம். அவ்வளவு நெருக்கம். இதுவும் அதுவும் ஒன்ருய் இருந்து இடையே கடலால் அரியுண்டு போனதாய் பூமிசாத்திர வல்லுனன் ஒருவன் போல் தாத்தா, அனுபவ முதிர்ச்சியில் சொல்லுவார்.
இந்தக் கடலின் நீண்ட பரப்பில் நீந்திப் பழகி இருல்கள் - மீன்கள் - கடல்படு திரவியம் சுதந்திரமாகப் பெற்ற ஓர் காலம் தாத்தாவோடு அற்றுப் போயிற்று!
காட்டுக் குதிரை கனைக்கும் வேளை வயிற்றுப் பிழைப்பை மனதிற் கொண்டு மனைவியைக் கரையே காவல் வைத்து,
புதுசு 30

கடலில் சென்ற காளைகள் எல்லை தாண்டிய புலிகளாய் மீண்டும் திரும்புதல் இல்லை.
ாத்தா, அவரது தாத்தா அதற்கு முன்பு இருந்த பரம்பரை நிமிர்ந்து கிடக்கும் இந்தக் கடலிற் தான் நம்பிக்கையுற்றுக் கிடந்தது.
இன்று, கொலம்பஸ் கண்ட "அத்திலாந்திக்"காய் ‘சமுத்திர விழுங்கிகள் நிறைந்து,
இப் போதெல்லாம் இலந்தை மரத்தின் உச்சியிலேறினல் இராமேஸ்வரத்தின் முடி தெரியாது; நீல நிறத்தில்
கடற்படைக் கப்பல்கள்.
மா. சித்திவினுயகம்பிள்ளை
நாங்கள் இழந்து போய் நிற்கிருேம். வீட்டை, வாசலை, உடைமைகளே. சொத்துக்களை இழந்தோம். அன்பை, ஆதரவை இழந்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக மகத்துவம் நிறைந்த பல உயிர்களை நாம் இழந்து போனுேம்:
பலவற்றை இழந்த தமிழ் மக்களின் துயரினில் புதுசுவும் பங்கு கொள்கிறது.
L53; 31

Page 18
ஆதரே.
ரன் மெனிக்கே., ! எனது குரலை நீ கேட்டல் கூடுமா? இதயத்தின் அடியிலிருந்து நான் கதறும் ஒலம் உன் செவிகளுக்கு எட்டுமா நண்பி?
நீ "ரைப்" அடிக்கும் மேசை எனக்கு முன்னுல் இருந்ததால் மட்டுமா நீ எனக்கு நண்பியானப்? ஒவ்வொரு காலையும் மாலையும் யந்திரமாய் ஒன்ருய் ஓடிக்களைத்து நெரிசலான பஸ்சினுள் பயணம் செய்வதாலா? அலுவலக நண்பர் குழாமுடன் "பிக்னிக்" போகையிலும் பூஞரீபாத மலையின் படிகளிலும் ஒன்ருய்க்குடித்த "கொக்கோக்கோலா"வா
எம்மை நண்பர்களாக்கியது?
மனித உறவுதான். மனிதம் படைத்த உன்னத உறவுதான் உனது காதலையும் எனது காதலையும் ஒளிர்வித்தது. *ஆதரே" என்ற உனது ஒவ்வொரு சொல்லிலும் மனிதம் மிளிர்ந்தது நண்பி.
அன்று -
எரிந்த என் உடமைகளுடன் உனது மணி மணியான கடிதங்களுந்தான் சாம்பராயிற்று. V ஒரே கரிக்குவியல் நண்பி.
நெருப்புச் சுவாலைகளுக்கம்
புதுசு 32

புகைமண்டலங்களுக்கும் நடுவே இறுதியாய் நான் பாதுகாத்து வைத்திருந்த எனது பிறந்தநாளுக்கு நீ தந்த "சேட்"டையும் இழந்து உள்ளங்கியுடன் மட்டும் ஒவ்வொரு காலையும் மாலையும் நீயும் நானும் யந்திரமாய் ஒடுகின்ற பம்பலபிட்டித்தெருவில் ஒடிய போது.
கண்ணிரும் வற்றிய நிலையில், மெனிக்கே மனிதம் - மனித உறவு - உறவுகளின் உன்னதம் காதல் - ஆதரே
ஒரு கணப்பொழுதில் மெனிக்கே கையில் அலரிப் பூக் கொத்துடன் - வெள்ளைச் சேலையுடன் - நீயும், வெள்ளை உடுப்புடன் - நானும், "பன்சலை” போனது நிண்வில் ஓடியது. சாந்தமான புத்த பகவானின் புனித முகமும் நீ வணங்கிய விதமும் . அந்த இனிய மாலை.
"மகே ஆதரே?
grar QuperfiáGas
என் நெஞ்சினுள் மனிதம் - மனித உறவு சந்தேகமானது என உணர்கிறேன். எனது குரலை நீ கேட்டல் கூடுமா? இதயத்தின் அடியிலிருந்து நான் கதறும் ஒலம் உனக்குக் கேட்கிறதா ரன் மெனிக்கே?
க. ஆதவன்
புதுசு 33

Page 19
'D
கத்தான அறுபதுகளின்’ சாதிப் பிரச்சினை பற்றி "நான் முந்தி, நீ முந்தி" என விவாதக் (?) கட்டுரை எழுதிக் குவித்தவர்
கள், முக்கியமானதொரு கட் டுரை பற்றி மெளனம் சாதித்த தன் அர்த்தம் சஞ்சயனுக்குப்
புரியவில்லை. மல்லிகை வாசகர்க ளின் "புரியும்" தன்மையும் பேரா சிரியர் கா. சிவத்தம்பி சொன் னல் "அப்பீல்' கிடையாது என்ற மனேபாவமாயுமிருக்கலாம். மல் லிகையின் பெப்-மார்ச் 83 இதழ் களில் "புதிய சவால்கள், புதிய பிரக்ஞைகள், புதிய எழுத்துக்கள்இலங்கைத் தமிழிலக்கியத்தின் செல்நெறித் திருப்பம் பற்றிய ஓர்
றது. ஆணுல், செ. கணேசலிங் கன் போலல்லாமல் (குமரன் 57) கொஞ்சம் விரிவாகவே இதனை ள் மு தி யிருக் கி ரு ர். சமகால ஈழத்து இலக்கியத்துடனன பரிச் சயமின்மை, வ ழ  ைம  ைய ப் போலவே பட்டியலிடும் மனே பாவம், விவாதத்திற்குரிய கருத் துக்கள் ஆகியவற்றை இக் கட் டுரை வெளிக்காட்டி நிற்கின்ற தெனலாம்.
இன்றைய சூழல் தற்செயலா னதல்ல. நீண்ட கால வரலாற் றைக் கொண்டது. அந்த வர லாற்றில் முற்போக் காளரின் பாத்திரம் க  ைற படி ந் த து. தோசைக் கடை ம சா ல் வடை
சஞ்சயன் பக்கங்கள்
உசாவல். (அதென்ன, செல் நெறித் திருப்பம்? என சஞ்சயன் புருவங்களை நெளிப்பது சிவத்தம் பிக்கு புரிகிறதா?) என்று நீண்ட தலைப்பிட்டு கார்த்திகேசு சிவத் தம்பி எழுதிய நீளமான கட்டுரை பற்றி இங்கு எழுதப்படுகிறது.
கட்டுரையை எழுதியிருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி உள் ளிட்ட முற்போக்கு (?) எழுத் தாளர் சங்கத்தினர் மீது வைக் கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக ளில் முக்கியமானதான தேசிய இ ன ஒடுக்கு முறை பற்றிய மெளனிப்பு என்பதற்கு எதுவித பதிலும் சொல்லாது 'சூழலின் உறுத்தலால் எழுதப்பட்ட கட்டு ரையாகவே எனக்குத் தோன்றுகி
புதுசு 34
ஊர்வலம், தரப்படுத்தலில் ஒத் துழைப்பு, தமிழா ராய் ச் சி மாநாட்டு படுகொலைகள் பற்றிய மெளன பம், என்பவற்றுாடாக இன்னும் விடுதலைப் போராட் டத்தை அங்கீகரிக்காதமை என் பன முக்கியமானவை. இவ்வா முன வரலாற்றுத் தவறுகளை ஒப் புக் கொள்ளும் வரை நீங்கள் சொல்லும் சிங்களப் புத்திஜீவிக ளுக்கு வழங்கும் நட்பைக்கூட தமிழ் மக்கள் உங்களுக்கு வழங்க மாட்டா ர் க ள் என்பதையும் சொல்லிக்கொண்டு, புதிய சவால் கள், புதிய பிரக்ஞைகள், புதிய எழுத்துக்கள் தோன்றும்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்றும் கேட்கத் தோன்றுகின்றது. கட்டுரையில்

சஞ்சயனின் இரண்ட்ாவது பக்கம்
இத்தகைய எழுத்துக்கள் இப் போதுதான் தோன்ற ஆரம்பித் துள்ளன என்ற தொனியில் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியி ருக்கிருர். உண்மை அதுவல்ல. இப்போது அது பரவலாக வடிவ முறுகிறது எனலாம். அப்படியா யின் தோற்றுவாய். எப்போது என்பது மிகமுக்கியமான விஞவே. த மி ழ ர சுக் கட்சி காலத்து காசி ஆனந்தன் வகையருக்களின் வரட்டு இலக்கியங்களையும், சம காலத்து செழுமையான இலக்கி யப் பாங்கையும் அவர் வேறுபடுத் தியிருப்பதில் சிவத்தம்பி சரியான இடத்தில் உள்ளார். எனினும் இத்தகைய செழு  ைம யா ன போ க் கி னை ப் பற்றிய அவரது கூற்று க்க ள் குறிப்பானதாக இல்லை. இவ்வாறு செழுமையான இலக்கியங்களுக்கு அலை சஞ்சிகை தான் முக்கியமான விளைநிலம் எனலாம். தேசிய இனப் பிரச்சி னையில் மு ற் போக் காள ரி ன் நிலையை அம்பலப்படுத்திய அதே வேளை அவ்வகை இலக்கியங்க ளுக்கு களமுமமைத்து கொடுத்தி ருக்கிறது. கொடுத்து வருகிறது.
பின்னர் புதுசு தனது இதழ்க ளில் அதிகமான பக்கங்களை இவ் வகை இலக்கியங்களுக்கு வழங்கி Ամֆ1. சேரன், ஜெயபாலன் போன்ருேரிற்கு களமமைத் து கொடுத்த அதே நேரத்தில், புதுசு மூலம் புதிய இலக்கியகர்த் தாக்கள் வெளித் தெரிய வந்தார் கள். ஹம்சத்வனி, ஊர்வசி,
பால சூரியன், விஜயேந்திரன், சபேசன், தர்மபாலசிங்கம், விக் கினேஸ்வரன், சித்திவினயகம் பிள்ளை போன்ருேர்கள் இங்கு கவனத்திலெடுக்கத் தக்கவர்கள். இவர்களின் படைப்புக்களில் இவ் வகை பிரக்ஞை கூர்மையுற்றது. நவீன தமிழிலக்கியத்தைப் பாதித்தது. ஆனல் சிவத்தம் பிக்கு சேரனதும், ஜெயபாலன தும், ஆதவனதும் கவிதைகளையே வா சி க் க க் கிடைத்திருக்கிறது. மற்றவர்களின் ஆ க்க ங் களை தேடிப் படிக்க வேண்டியது உங் கள் கடமை. அவை உங்களைத்
தேடி வரமாட்டாது. அ ப் படி
தேடி வாசிக்கும் வரைக்கும் இப் ւմւգաn 6ծT கட்டுரைகளைத்தான் எழுதிக் கொண்டிருக்க நேரிடும்.
"அக் காலத்தில் அரசியலில் தமிழுக்கு இடம் மறுக்கப்பட்டு வந்ததெனினும், கலை இலக்கியத் துறைகளிலே ஏற்பட்ட இவ் விழிப்பு அர சி ய லி ல் பேசப் படாத கோட்பாடுகள் இலக்கி யத்தில் பேசப்பட்ட புதுமை, இன்று பின்னுேக்காகப் பார்க் கும் பொழுது, தமிழ் பேசும் மக் களின் தேசிய இனத் தனித்துவத் திற்கு வழிகோலுவதாகவே இருந் தது. அக்கால அரசியலில் குழு மம், இனம் என்பன பேசப்பட் டனவேயன்றி தேசிய இனம் என் பது பற்றிப் பேசவில்லை.
இலங்கைத் தமிழரின் அரசியல் தனித்துவத்திற்கான போராட் டத்தை ஏற்றுக்கொள்ளாத
புதுசு 35

Page 20
சஞ்சயனின் மூன்றவது பக்கம்
புத்திஜீவிகளும் அரசாங்கத்தின ரும் இலங்கைத் தமிழரின் பண் பாட்டுத் தனித்துவத்தை, இலக் கியத் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தக் கலை இலக் கிய இயக்கத்தின் மகத்தான சாதனை இதுவேயாகும்." என்று சிவத்தம்பி எழுதியிருப்பது விவா தத்திற்குரியதாக சஞ்சயன் கரு துகிருன்.
மகத்தான மு. போ. எ. சங்கம் (மொஸ்கோ கொம் யூனிஸ் ட் கட்சி பிரிவு + சீன கொ ம்யூ னிஸ்ட் கட்சி பிரிவு) இலங்கைத் தமிழர்களின் தேசிய இனத் தனித்துவத்துக்கு மகத்தான பங் களிப்பு வழங்கியிருக்கிறது என்று இன்றைய சூழலில் இவர்களால் குரல் கொடுக்க வேண்டியிருக்கி றது. கடந்த காலங்களில் சுய நிர்ணய உரிமையை எதிர்த்த வர்கள், இலங்கைத் தமிழர்கள் தனியான ஒரு தேசிய இனம் என் பதையே ஒப்புக்கொள்ள மறுத் தவர்கள் இன்று அந்தக் காலத்தி லேயே இவை எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டது மாதிரி எழு வது சரியல்ல.
மற்றும் சுய நிர்ணய உரி மையை இன்று எல்லா மார்க்சீய கட்சிகளும் ஏற்றுள்ளன என்கி முர். சுயநிர்ணய உரிமை என்று இவர்கள் கூறுவது எந்த அர்த் தத்தில்? சிறீ லங்கா இடதுசாரி கள் சொல்வது போல சுயநிர் ணய உரிமை உண்டு; ஆனல் பிரித்து செல்லவிட மாட்டோம்
பகசு 36
கக் கருதுகின்றேன்.
என்ற மாதிரியா? புரட்சிக் கம்யூ னிஸ்ட் கழகம், நவ சமசமாஜக் கட்சி ஆகியன தெளிவான கோரிக்கைகளை இவ்விடயத்தில் வெளிப்படுத்தியுள்ளன. ஏனை யவை இன்றும் கூட சந்தர்ப்ப வாத அரசியல் நிலைப்பாட்டி லேயே உள்ளன என்பதை ஏன் சிவத்தம்பி மறைக்கிருர்?
பேராசிரியர் கைலா ச பதி மீதும், பேராசிரியர் சிவத்தம்பி மீதும் கூறப்படும் குற்றச்சாட் டொன்று இங்கு நிரூபணமாகி யிருக்கிறது. பட்டியலொன்றை கட்டுரைகளில் ஒப்புவித்து விடு வதை அவர்களின் மனுேபாவம் என்பதா, அல்லது.? இக் கட்டு ரையில் இவரின் பட்டியலைப் பார்ப்போம். "தமது படைப்பில் முதிர்ச்சி பெற் ருே ர் களாக
சேரன், சட்டநாதன் (சிறுகதை)
புதுவை இரத்தினதுரை, ஆத வன், ஜெயபாலன் (கவிதை) ஆகி யோரைக் குறிப்பிடலாமெனக் கருதுகிறேன். 'முந்தின எழுத் தா ளர்களுள் இந்தப் புதிய உனர்நிலையை விளங்க முயல்ப வருள் தெணியானையும் ஒருவரா யோகநா தன், செங்கை ஆழியான் ஆகி யோரின் கன அகற்சி கவனிக்கப் பட வேண்டியது." தேசிய இனப் பிரச்சினை பற்றி இவர் களி ல் தெணியானும், செங்கை ஆழி யானும், சட்டநாதனும் என்ன எழுதினர்கள் என்று தெரிய வில்லை. தெனியா னு க்கும்

சஞ்சயனின் நான்காவது பக்கம்
செங்கை ஆழியானுக்கும், சட்ட நாதனுக்கும் கூட இது தெரியா
மல் இருக்கும். சிவத்தம்பிக்குத்
தான் வெளிச்சம். ஏனையவர்க ளில் சேரனும், ஜெயபாலனும், ஆதவனும் கவனிப்புக்குரியவர் களே. யோகநாதன், புதுவை இரத்தினதுரையை விடவும் நுஃ மான், யேசுராசா போன்ருேர் அதிகம் பாதித்திருக்கிருர்கள். இன்னும் ஊர்வசி, வில்வரத்தி னம், ஹம்சத்வனி போன்றேர் பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம். ஆணுல் என்ன உளத் துணிவோடு புதுவை இரத்தின துரையையும் யோகநாதனையும் இதில் சேர்த்தார் என்பது புரிய வில்லை. புதுவை இரத்தினதுரை பற்றி புதுசு-1இல் நுஃமான் எழு திய விமர்சனத்தைப் படித்திருந் தால் இப்படிப் பட்டியலிடத் தோன்ருது. யோகநாதன் பற்றி குறிப்பிடத் தோன்றுவது இரவல் தாய்நாடு குறுநாவலுக்காக. ஆனல் அது ஒரு வியாபாரத் தேவைக்காக எழுதப்பட்ட ஒரு அபத்தமாகவே எனக்குத் தோன் றுகின்றது. நாவல் சிறுகதைக ளில் குறிப் பி டும் படி யான வளர்ச்சி ஏற்படவில்லையாயினும் சாந்தன், ராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம் ஆகியோரினைக் குறிப் பிடலாம். ஒன்றுமே எழுதாதவர் களையெல்லாம் எழுதியுள்ளதாகப் பட்டியலிட்டு, உங்களை யும் குழப்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம் இனிமேலாவது எழு துபவர்களைத் தேடி வாசியுங்கள்
என்று சொல்லத் தோன்றுகி PS -
இவ்வளவு கருத்துக்களும் அக் கட்டுரையில் எனக்கு முரண்பா டானவை எனக் கூறிக்கொண்டு! நீங்கள் இந்தக் கட்டுரை எழுதிய பின்பும் முற்போக்கு எழுத்தா ளர் சங்கம் என்ன செய்கிறது? உண்மையான அக்கறையோடு யார் இதில் ஈடுபடுகிருர்கள் என் பதையாவது கண்டு கொண்டீர் és6rmr?
யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய ரியூட்டரி எது என்று ஒருமுறை கேட்கப் பட்டபோது "யாழ்ப்பா ணப் பல்கலைக் கழகம்” என்று பதில் வந்ததாகக் கூறுவார்கள். ஐந்தாறு வருடங்களாக ஒரே மாதிரியான பாடக்குறிப்புகளை கொடுத்து வருவதோ என்னவோ, கேள்வி கேட்கப்பட்டதும் பதில் வந்ததும் உண்மை.
இந்தப் பல்கலைக் கழகத்துக்கு ஒரு ஆளுனர் சபை உள்ளது. அர சாங்கத்திற்கு "ஆமாம் சாமி போடுகிற புள்ளிகள் சிலர், யாழ்ப் பாணத்துச் சைவ வேளாளத் தமிழ்ப் பாரம் பரியத்தைச் சரிய விடாது ‘காத்து வரும் சிவாகம ஞான பானுக்கள் (அல்லது பிர திஷ்டா பூஷணங்கள்) சில ர் , இப்படிக் கொஞ்சப் பேர்கள் இவ் வாளுனர் சபையில் உள்ளனர்.
புதுசு 37

Page 21
சஞ்சயனின் ஐந்தாவது-பக்கம்
ܝܺܣܝ̈ܬܶܫܡܶܧ܌ܕܬܙ" ܥܕ”
அண்மையில், தமிழ்ப் பேராசி ரியர் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தி, "இந்துப்பாரம்பரியத் தில் வராதவர்," "மார்க்ஸ்பிஸ் வாதி" என்கிற காரணங்களின் பேரில் ஒருவர் நிராகரிக்கப்பட் பட்டார். N
அவர் கலாநிதி. கா. சிவத்தம்பி கலாநிதி, கா. சிவத்தம்பியின் பல
«UEK 3FA Wal-Muw239ZFRUr:: - ...; ** *SaPROVINSKEGA
கருத்துக்களுடன் சஞ்சயன் முரண் பட்டாலும், தமிழிலக்கிய விமர் சனத் துறையில் அவருடைய பங்கு சாதாரணமானது அல்ல. நா. வானமாமலைக்கு கலாநிதிப் பட்டம் வழங்கினேமேஎன்றுபெரு மைப்படுகிற அதே பல்கலைக் கழ கத்தில்தான் இதுவும் நடந்திருக் Spg/. (unity of the opposites?)
குழந்தாய்
தமிழில்: க. முருகவேல்
elpath: langston hughes (155Guit)
ராசா,
ஏ, ராசா,
உந்தத் தெருவிலை நீ விளையாடாதை, மேனை.
சனி ட்ரக்குகள்
உதாலை போகுது பார்.
உனக்கு மேலாலை ஒரு ஒட்டம்
அதோடை நீ சரி.
ராசா, உந்தத் தெருவிலே நீ விளையாடிாதை மேனை
புதுசு 38

Jeyem's Institute
K. K. S. ROAD, CHUNNAKAM.
A / கலை, வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் O/1, 6-ம், 7-ம், 8-ம், 9-ம் வகுப்புக்களும்
O/L Day Classes, Short Hand Typing
Montessory. நடைபெறுகின்றன.
ECCONOMICS - Mr. வரதராஜன் COMMERİCE — Mr. Göyıdırg (36 dib ACCOUNTS - Mr தேவதாஸ்
OGC - Mr. வேல் சிவானந்தன்
GEOGRAPHY - Mr GdT
TAM HINDUCULTURE - Mr. List
BOTANY - Mr. சிவவிர சிங்கம்
- Mr. இளங்கோ ZOOLOGY - Mr. நாகநாதன் CHEMISTRY - Mr. மனுேகரன் PHYSICS - { Mr. வர்ணகுலசிங்கம்
Mr. கணேசன் PURE MATHS
APPLIED MATHS s - Mr. asidad lists

Page 22
மிதினுப்பூர் சிறைச்சாலையில் புரட்சிகரத் தோழர்கள்
பாடும் பாடல்
இரவுகள் உடையும்
காலியாயிருக்கிறது அரிசிப்பான ததும்புகிறது விழிக்குடம். இந்த இரவோ முடிவில்லாதது. அம்மா இனி நான் உன்னை
எப்படிக் காப்பாற்றுவேன்
மக்கள் படை அணிவகுப்பில் மலைகள் அதிர்வதை நான் காண்கிறேன்.
அம்மா, இனியும் என்னைத் தடுத்து நிறுத்தாதே. இரவுகளை உடைத்து சூரியனை எழச் செய்ய நான் போக வேண்டும்.

புதுசு விற்கு எமது வாழ்த்துக்கள்.
புதிய அமைப்புடனும்
புதிய வீச்சுகளுடனும் இயங்கி வரும் எமது ஸ்தாபனத்தில்,
தரமான, இலக்கிய அறிவியல் நூல்களை பெற்றுக் கொள்ளலாம்"
வகை மாதிரிகள் சில:
சிவப்பு ரிக்ஷா - தி. ஜானகிராமன். தீவனி — 6uort... arT. grr. வேட்டி - கி. ராஜநாராயணன். இரவுகள் உடையும் - சூரியதீபன். கல்லிற்கு கீழும் பூக்கள் - மாலன்.
காடு em அன்று பூட்டிய வண்டி -
தியானம் w -æva சூரியனைச்சுமப்பவர்கள் - எழுத்தும் பிரக்ஞையும் - வாழ்விலே ஒரு முறை -
பா. செயப்பிரகாசம். ந. முத்துச்சாமி. என். கே. மகாலிங்கம்.
இன்குலாப், அம்ஷன்குமார். அசோகமித்திரன்.
தொடர்பு கொள்ளுங்கள்:
ரகுநாதன் புத்தகசாலை 3, நவீன சந்தை
யாழ்ப்பாணம்.

Page 23
For Fashionable Tailoring and SHIRTINGS & SUf NGS
SMACS
12, Bazaar Lane,
Jaffna.
பூல்
Branch:
ASNAS
TEXT LE and TAILORING
48, Model Market, Jaffna.
S00L0J00JJJ0JJ0J0LLJ0L00LSL00LY00L0KL0LYYLALLLLLLLL0LLLYY0L000L0LALLL0L00L00L00LLLLYYYY0L0LLYY
காலம் பெறுமதியானது
காலத்தை வீணுக்காதீர்
நீலந் தோய்க்கும் வேலைச் சிரமம் வேண்டாம். பாவியுங்கள் நுரைவளம் மிகுந்த மில்க்வைற் நீலசோப், நொடிப்பொழுதில் சம்பூரண சலவையைத் தருகிறது.
மேலுறைகளைச் சேகரித்து பரிசில்களையும், புதுவருடக் கலண்டரையும் பெற்றுக்கொள்ளுங்கள். மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம் த. பெ. இல, 77, யாழ்ப்பாணம்.
தொலைபேசி : 6 3233
ஈஸ்வரி விலா, சிறுவிளான், இளவால்யைச் சேர்ந்த அ. ரவி என்பவரால் 601, கே. கே. எஸ். வீதியிலுள்ள பற்ஸ் பிறின்ரேர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பட்ட-அ.

COMTEC K
O)ith best (enpliments from
*i よ社
xts
v
Computer programming for f basic & cobal . . . .
I. A. A. l. A. B., J. C. M. A., B.Com.
மற்றும் க. பொ. த. (உ. த.) க. பொ.த. (சாதா) வர்த்தக வகுப்புகள்
Comteck Computer Institute 82, 3rd Cross Street JAFFNA
(பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகாமையில்)