கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தரிசனங்கள்

Page 1

தரிசனங்கள்
(பல்கலைக்கழக எழுத்தாளர்தம் சிறுகதைகள்)
தொகுக்குநர் பொன். இரத்தினபாலன்
(கலையமிர்தன்)
வெளியீடு
ரதி பதிப்பகம்
- கொழும்பு -

Page 2

முதற் பதிப்பு: GD, 1973.
ge_flawn o: தொகுப்பாசிரியருக்கே
THARSANANGAL
(A Collection of Short Stories)
Pon, RATNABALAN
Publisher: Rat hy Pathippakam, Colombo.
First Edition: May, 1973.
Price: Rs. 2.50
syd S. Gl-rrri.
நேரு அச்சகம், கொழும்பு-13. விலை: ரூபா 2.50

Page 3
காணிக்கை
புதிய கோணங்களில்
எழில் இலக்கியங்களை
நோக்கத் துடிக்கும்,
இளம் எழுத்தாளர்
உள் ள ங் களுக்கு,
எம் அன்புக்
காணிக்கை.

இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார வளாக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்
கலாநிதி க. கைலாசபதி
அளித்த
மு ன்னுரை
இத் தொகுதியிலுள்ள கதைகளைப் படித்து முடித் ததும் 'தரிசனங்கள்" என்னும் தலைப்பு மிகவும் பொருத் தமானது என்ற எண்ணமே மனத்தில் மேலோங்கியது. பதினுெரு பேர்களின் சிறுகதைகள் தொகுக்கப்படும்பொழுது அது பல்வேறு வகையான படைப்புக்களின் திரட்டாகவே இருக்கும். தனியொருவரது கதைகள் பதினென்றைத் தொகுத்தாலே குறிப்பிடத்தக்க அளவு விகற்பம் வெளிப் படும். திட்டவட்டமான கருத்தொற்றுமையோ, இசை விணைவோ அற்ற பதினுெருவரது எழுத்திலே மிகப் பரந்த அளவிலே பல்வகைமை தோன்றுவது எதிர்பார்க்கக் கூடிய தொன்றேயாகும். பல் கலைக் கழகத் தொடர்புடையராக இவர்கள் அனைவரும் இருப்பினும் படிப்பு, பயிற்சி, அநு பவம், தொழில், வாழ்க்கை நிலை இவற்ருல் இவர்கள் பெரி தும் வேறுபட்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்திலே பொறி யியல், இயற்கை விஞ்ஞானம், தமிழ், மெய்யியல், அரசியல் தத்துவம், புவியியல், வரலாறு முதலிய துறைகளைத் தத்தம் பட்டத் தேர்வுக்குப் படித்தவர்கள் இக் கதைகளை எழுதி யுள்ளனர். இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும் இவர்களை ஒன்று சேர்த்துள்ளது எனலாம்.
வேறுபட்ட நோக்குகளைக் குறிப்பதற்குத் தரிசனங்கள்" என்னும் பதம் தகுந்ததேயாகும். தரிசனம் எனும் சொல் காட்சி, பார்வை, கண், தோற்றம், காண்கை, கண்ணுடி, மதக்கொள்கை எனப் பொருள்படும். அது ஐம்பொறிகளில் ஒன்ருன கண்ணையும் அப்பொறியால் வரும் புலனுணர்ச்சியை

Page 4
( ii )
யும், ஆராய்ந்து துணியும் அறிவின்பாற்படும் கொள்கை யையும் குறித்து நிற்பது கவனிக்கத்தக்கது. பழைய நூல் களில் இவ்வாறே வழங்கப்பட்டிருக்கிறது. மாணிக்கவாசக சுவாமிகள், 'திருவண்டப் பகுதி"யிலே "கண்முதற் புலனுற் காட்சி" என்றும் 'உள்ளத்துணர்ச்சி" என்றும் முறையே பொறியுணர்ச்சியையும் மனங்கொண்டுணரும் உணர்ச்சியை யும் விவரித்திருப்ப தக் காணலாம். ஜம்புல அறிவிலிருந்து கருத்தியலான கோட்பாடுவரை பலதரப்பட்ட அறிவுக்கூறு களை-அறிவின் படிநிலைகளை-தரிசனம் எனும் சொல் குறிக் கிறது. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்றும் தரிசனம்" என்று வழங்கப்படுவதுண்டு.
வடமொழியினின்றும் வந்து வழங்கும் தரிசனம் என் னும் சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல் "காட்சி" என்பது. இது புராண, தத்துவ, இலக்கிய நூல்களிற் பெருவழக்காய்ப் பயின்றுவரும். தரிசனம் என்பதற்குச் சரிமாற்றுச் சொல் லாகக் காட்சி என்பது அமைந்ததாயினும், பார்வை, தோற் றம், அறிவு முதலியவற்ருேடு அழகு, தன்மை, இயல்பு என்னும் பொருள்களும் அதற்குண்டு. அவ்வகையில் “காட்சி" என்னும் சொல் எம்மவர்க்கு ஏய்ந்த சொல்லாகும்.
தரிசனம், காட்சி ஆகிய சொற்கள் குறிக்கும் நுட்ப மான பொருள் வேறுபாடுகள் ஒருபுறமிருக்க, அவற்றிற் கிடையேயுள்ள அடிப்படையான பொருட்டொடர்பும் செறி வும் மனங்கொளத் தக்கன. சுருங்கக்கூறின், தரிசனம், காட்சி என்பன எமது மொழியிலே பொருள்வளம் நிறைந் தனவாய் அமைந்துள்ளன. இயற்கையையும் இயற்கைய தீதத்தையும் அதாவது, மூலப்பகுதியாகிய சடவுலகத்தை யும் கருத்தியலான இலட்சிய உலகையும் மனிதன் கண்டும் ஆராய்ந்தும் உள்ளுணர்ந்தும் பெற்ற அறிவுருவங்களை இவ் விரு சொற்கள் பலவாருக உணர்த்தி வந்திருக்கின்றன என்று கூறலாம்.
'தரிசனங்கள்" என்ற தலைப்புச் சொல் எழுப்பிய சித் தனைகள் இவை. இத் தொகுதியிலுள்ள கதைகளும் அவற்றை

( iii )
இயற்றிய எழுத்தாளர்களின் காட்சிதான்-தரிசனம்தான். ஒரு தரிசனம் உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது அறிவுபூர்வ மாகவோ இருக்கலாம்; அது காண்போனைப் பொறுத்த விஷயம். காண்போனது தகுதியும் தகைமையும் காட்சி யைப் பாதிக்கும் அல்லவா? ஒரு காட்சி எத்தகையதாயி னும் அது சொல்லிலே பெயர்க்கப்பட்டதும் தனக்கென ஒரு வாழ்வைப் பெற்றுவிடுகிறது. சில வேளைகளில் நிலைபேறும் பெற்றுவிகிறது. வேத ரிஷிகளின் காட்சி வேதவாக்காக நிலைத்துவிட்டது.
உலகிலே மனிதர் எத்தனையோ, காட்சிகளும்-தரி சனங்களும்-அத்தனை என்று கூடக் கூறிவிடலாம் ஆனல் நல்லகாலமாக அனைவரது காட்சிகளும் இலக்கிய வடிவம் பெறுவதில்லை. சொல்வது சுலபம்; செய்வது கடினம். அதுபோன்று, காண்பது எளிது; அதனைக் காட்டுதல் அருமை. அநுபவம் அனைவர்க்கும் பொதுவானது. அதனைச் சொற் களிற் சிறைப்பிடித்து, பிறர்க்கும் ஏற்ற விதத்தில் எடுத்து ரைப்பது சிறப்புடைய சிருஷ்டித்திறனுகும்.
− இத் தொகுதியிலுள்ள கதைகளிற் சில காட்சியள விலேயே-பார்வையளவிலேயே-நிற்கின்றன. சில கருத்தாக வும் மாற்றம் பெற்றுள்ளன. இரு நிலைகளுக்கும் இடைப் பட வீழ்ந்தனவும் உள. இவ்விடத்திலேயே எழுத்தாளனது தகுதியும், தகைமையும் முக்கியமாகின்றன, அநுபவம் பல விதம். பார்ப்போரது அறிவு டை மை மனப்பக்குவம், கொள்கை, குறிக்கோள் என்பனவற்றைப் பொறுத்து காட் சியின் தன்மையும் தாக்கமும் அமையும். அக் காட்சி மெய்ம்மையைக் காணும் நற்காட்சியாக இருந்தால், அதன் அடிப்படையில் ஆக்கப்படும் இலக்கியம் பயனுடையதாயிருக் கும். வேருெரு விதத்தில் வள்ளுவர் இதனைக் கூறியுள்ளார்.
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்
மருள்தீர்ந்த
மாசுஅறு காட்சி யவர்.

Page 5
( iv )
மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார் மறந்தும் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார் என்பது வள்ளுவர் கருத்து. அதாவது, தெளிந்த காட்சியுடையார் பயனுள்ள வற்றையே எப்பொழும் பேசுவர்-எழுதுவர்.
*மாசறு காட்சி" என்னும் சொற்ருெடர் மனங் கொள்ள வேண்டியது. கந்தபுராணத்தின் இறுதியிலே, தன்னை ஆட்கொண்ட அருள் வள்ளலாகிய சுப்பிரமணியக் கடவுளைத் துதித்துப் பாடுகையில்
புன்னெறி யதனிற் செல்லும்
போக்கினை விலக்கி மேலா
நன்னெறி யொழுகச் செய்து
நவையறு காட்சி நல்கி
என்கிருர் கச்சியப்பப் பெருமான். அங்கே நவையறு காட்சி", குற்ற மற்ற காட்சி விதந்துரைக்கப்படுகின்றது. இவ்வாறே, "மாசில் காட்சி", "துணியில் காட்சி’, ‘இகல் இல் காட்சி, 'இருள் தீர் காட்சி", "ஆசறு காட்சி" என்றெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில், உள்ளுணர்வு வாய்க்கப்பெற்ற. உயர்வுள்ளும்-உத்தமர்களின் மனக்காட்சி சிறப்பிக்கப்படு கின்றது. இங்கெல்லாம் பெரும்பாலும் சமய அடிப்படை யில்ேயே இத்தொடர்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், காட்சி அல்லது தரிசனம் அல்லது நோக்கு எத்துணைத் தூய் மையானதாயும், குற்றம் அற்றதாயும், பயன் தருவதாயும் இருத்தல் வேண்டும் என்பது மீண்டும் மீண்டும் வற்புறுத் தப்படுதல் அவதானிக்கத்தக்கதாகும்.
புறநானுாற்றிலே கணியன் பூங்குன்றன் பாடலிலே (192) உலகின் இயல்பினையும் உயிரின் தத்துவத்தையும் 'காட்சியிற் தெளிந்தனம்" என்று கூறப்படுகிறது. தெளிந்த காட்சியே நூலாகும் பெற்றி வாய்ந்தது. ஐயம், திரிபு என் பன அருகியே வரல் வேண்டும். இத் தொகுதியிலுள்ள சில கதைகள் தெளிவாகப் புலப்படாத பொருளையும் தெளிவா

( v )
கச் சொல்லப்படாத முடிவையும் உடையனவாய்க் காணப் படுகின்றன. தெளிவற்ற நிலை இலக்கியத்தின் சிறப்பு அம் சங்களில் ஒன்று என்னும் தவருண எண்ணம் சமீப காலத் தில் (குறிப்பாக நவீன மேனுட்டிலக்கியங்கள் சிலவற்றின் செல்வாக்கினல்) எமது எழுத்துலகத்தில் இடம் பெறத் தொடங்கியுள்ளது. காட்சி மயக்கமே இதற்கு மூலகார ணம். சிறுகதைகளில் மட்டுமன்றி ‘புதுக் கவிதை" என்ற பெயரில் வெளிவரும் புரியாத புதிர்களாக இருக்கும் சொற் டொறிகளிலும் இப்போக்கினைக் காண்கிருேம். பல்கலைக் கழகத்திலே பல்வகைப்பட்ட சிந் த ஃன ப் பயிற்சிகளுக்கும் இலக்கியப் பரீட்சார்த்தங்களுக்கும் இடமுண்டாயினும், தெளிவின்மை பின்பற்றத்தக்க அம்சமாகக் கொள்ளப்படு தல் கவலைக்குரியதர்கும். எனினும் இப்போக்கு நூலிற் சிறு பான்மையே காணப்படுகிறது. ஆங்காங்குக் காணப்படும் அச்சுப் பிழைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
பொதுவாகப் பேசுமிடத்து, இத் தொகுதியிலுள்ள கதை களை மூன்று பிரிவாக வகுக்கலாம் எனத் தோன்றுகின்றது: முதற் பிரிவில், சமுதாய உணர்வுடன் பாத்திரங்களின் இயக் கப்பாடு சித்திரிக்கப்படும் கதைகள் அடங்குகின்றன. "இதயங் கள் மோதுகின்றன","மூலஸ்தானம்","இருளைக்கடந்து" ஆகிய கதைகளை இப்பிரிவில் அடக்கலாம். இரண்டாம் பிரிவில், உள வியல் அடிப்படையில் பாத்திரங்களின் உணர்ச்சிகள் சித்தரிக் கப்படும் கதைகள் அடங்குகின்றன. "யந்திரபூமி", "நான் சந் தியில் நிற்கிறேன்", "சுயதரிசனம்" என்பவற்றை இப்பிரிவில் அடக்கலாம். மூன்ரும் பிரிவில், பேணுச்சித்திரம் அல்லது நடைச்சித்திரம் போன்று நையாண்டியாகப் பாத்திரங்களைச் சித்தரிக்கும் முயற்சிகளை அடக்கலாம்; "பரிதாபத்திற்குரிய" என்னும் முயற்சியைக் காட்டாகக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில், கதைகளின் தரமும் இந்த வரிசையிலே ழிேறங்குகிறது எனக் கருதுகிறேன். உளவியல் ரீதியான (பல்கலைக் கழகக் காதல் சம்பந்தமான) கதைகளில் "முதிரா இளமையின் பக்குவமின்மை ரஸ்க்குறைவை உண்டாக்கி விடுகின்றது. “பரிதாபத்திற்குரிய." என்ற கதையிலே

Page 6
( vi )
செயற்கைத் தன்மையும் அநாவசியமான அதிகப்பிரசங்கித் தனமும் எடுத்துக்கொண்ட பொருளுக்குக் குந்தகம் செய் கின்றன. இது பரிதாபத்திற்குரியதாகும். பொதுவாகத் தமிழில் சிறுகதை வளர்ந்திருக்கும் நிலையையும், குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை இன்றுள்ள நிலையையும் மனங் கொண்டு பார்க்கும்பொழுது முதற்பிரிவில் அடங்கும் கதை கள் குறிப்பிடத்தக்கனவாய் உள்ளன. நூலைப் படிப்போர் கதைகளுக்கிடையேயுள்ள தாரதம்மியத்தைக் கண்டுகொள் ளத் தவறமாட்டார்கள் என நம்புகிறேன்.
சில வருடங்களிற்குப் பின் பல்கலைக்கழகச் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருகிறது என்று நினைக்கிறேன். அறுபதுகளில் மூன்று தொகுதிகள் வெளிவந்தன. ஈழத்து இலக்கியப் பரப்பில் பல்கலைக்கழகத் தொடர்புடைய எழுத் தாளருக்குக் கணிசமான பங்குண்டு. அவர்களின் ஆக்கங் களைத் தனியே ஆராயும் காலமும் வரலாம். அவ் வேளை யில் தரிசனங்கள்" பல்கலைக்கழக எழுத்தாளரது பலத்தை யும் பலவீனங்களையும் விளக்கவல்ல நூலாக அமையும் என எண்ணுகிறேன். தொகுப்பாசிரியரது முயற்சி பாராட்டுக் குரியது.

என்னுரை
ஈழத்து இலக்கிய உலகின் வளர்ச்சியில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்குண்டு. இதன் உண்மை பலராலும் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வர் துள்ளது.
பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனல் சுறுசுறுப்பாக ஓடிஆடித் திரிந்த குழந்தை அயர்ந்து உறங்குவதைப் போன்ற ஒரு நிலை-ஒரு சில ஆண்டு களாகப் பல்கலைக்கழக எழுத்தாளர்களின் ஆக்கங்களில் மந்த மான போக்கு.
வேதனைப்பட வேண்டிய ஒன்று.
இருந்தும், குழந்தை மீளாத் துயிலில் ஆழ்ந்திடுமோ எனப் பிரலாபிக்க முயன்றவர்களுக்கு விழித்திட்ட கண்கள் தரிசனம்ாகின்றன.
ஆம் ! தரிசனங்கள்.
ஏற்கனவே, நான்கு பல்கலைக்கழகச் சிறுகதைத் தொகுதிகளைக் கண்ட ஈழத்து இலக்கியத் தடாகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலர்கின்ற சிறுகதைத் தொகுதி.
இளம் விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகிய இரு தரத்தினரதும் படைப்புக்கள் அடங்கியுள்ளன.
புதிய குரல்கள், புதிய கோணங்கள், பரிசோதனை முயற்சிகள் என்பன தரிசனங்களில் காணக் கிடக்கின்றன.

Page 7
இத் தொகுதிக்கு முன்னுரை வழங்கி உதவியவர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் - ஈழத்திலக்கியத்தின் வழிகாட்டி-என்றும் நன்றிக்குரியவர். நூலை வெளியிட்டத் துணை செய்தவர் ரதி பதிப்பகத்தினர். இடருற்றபோது கைகொடுத்து உதவிய திரு. சீவரத்தினம் அவர்களுக்கு இத யத்தில் நீங்காத இடமுண்டு; நன்றியுண்டு. மேலும், நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய நேரு அச்சகத்தினரும் என் நன்றிக்குரியவர்கள். .
ஈற்றில் நூலைத் தரிசிக்க வேண்டியவர்கள் நீங்கள்; உங்கள் ஆசியும், ஆதரவும் நிறையத் தேவை. எதிர்பார்ப் பதும் அதுவே.
இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம். --கலையமிர்தன்

பொருளடக்கம்
பொருள்
மூலஸ்தானம் · · ·
இதயங்கள் மோதுகின்றன .
யந்திரபூமி
நான் சந்தியில் நிற்கிறேன்
வீட்டிலும் வெளியிலும்
சுயதரிசனம்
ஒரு மாலை நேரத்துப் பாதசாரி d. A
இருளைக் கடந்து
நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது .
பரிதாபத்திற்குரிய ) 40 KM
உறவுக்கு அப்பால் 8 000
Lasio
17
35
43
69
77
87
97
I J3
127

Page 8

மூலஸ்தானம்
எஸ். பூநீதரன்
Dணிச்சத்தமே கந்தசாமிக் குருக்களின் வாழ்க்கை யின் நிரந்தர அம்சம் என்று சொல்ல முடியாது. * ஊரார்' என்று பலவாருகவும் குறிப்பிட்டுப் பேசப்படுகிற அந்த ம்னி தக் கூட்டம் இந்தக் குருக்களின் இந்த முரண்பாட்டைப் பற்றிச் சந்தி, மதகுஜாய்க்காலடியே உரத்து விவாதித்துத் திட்டித் தீர்த்தாலும் மார்க்கண்டு அவரிடம் வந்து போவ தும் ஒரம்சமாகிவிட்டது. அவன்தரும் கள்ளில்தான் அவரது வாழ்க்கையின் மெய்மை யாவும் அடங்கியிருப்பதான ஒரு உணர்வு, அவருக்குச் சிலவேளைகளில் எழுவதுண்டுஎன்னவா யிருந்தாலும் குருக்களுக்கும் மார்க்கண்டுவுக்குமே தங்களு டைய பரஸ்பரத் தொடர்பு இந்தக் கள்ளைத்தாண்டி நிற்கும் நிலை தெரியும். 19ார்க்கண்டுவுக்கும் அவன் த்ரும் கள்ளுக்கும் தொடர்பில்லாமல் மார்க்கண்டுவின் தொழிற் பேட்டை க்கு - ஒரு பனந்தோப்பிற்கு - நடுவில் அந்தப் பிள்ளையார் கோவில் நிற்கிறது. பெரிதாக வரமுயன்று தோற்றுப்போன முயற்சியில் கோபுரம், மதில் தங்கள் வழக்கமான நிலை யையும் இழந்து, தேய்ந்து குட்டிச் சுவராய் நிற்கிற நிலைமை நாலாந்திருவிழா நடக்கிறபோது சிலருக்குத் தெரிவதுண்டு. அப்பேர்துதான் நாலு அல்லது ஐந்து சிகரச் சோடினைகள் லைட் மெஷின்கள், பதினைந்து இருபது கூட்டம் பெரிய மேளம், நாலைந்து கூட்டஞ் சின்ன மேளம் என்று புடவைக் கடைக்காரச் சிவசம்பு ஆயிரமாயிரமாய் இறைக்கும்போது, அதில் கால்வாசி இதைத் திருத்தப் போதுமே என்று சில வயது போனதுகள் யோசிப்பதுண்டு. அதுகளும் பெரிய மேளச், சின்ன மேள ரசனையிலும் வரும் சனத்திலும் சிந்தை யை வைத்து, இந்த யோசனையைக் காற்றில் பறக்கவிட்டு இந்த ஒருநாள் மாயமினுக்குகள் மறையப் பின்னர் விவாதிட்

Page 9
2 மூலஸ்தானம்
பதுண்டு. திருவிழாக் காலத் தவிர போதக வடை ஆசைகள் கிளம்புகிற பொழுதும், அகஸ்மாத்தாகச் சுருட்டுக்காரர் பொன்னையர் கோவிலருகால் போகும் பொழுது கோவில் விளக்கெரியாததை அவர் காணும்போதுந்தான் பிள்ளையார் இருப்பது ஊருக்கே தெரியவரும் vn
முன்னதே ஐயரின் ஸ்திரத்துக்கும் ஜீவனத்துக்கும் ஆதாரம்பின்னது என்ருல் இந்தப் பிராமணியைத் திட்டித் தீர்த்து ஒழிக்க மூர்க்கமான முயற்சிகள் நடைபெறும். இவை களுக்கெல்லாம் புறம்பாகப் பேசாமல் மெளனியாக இருந்து எல்லாருந் திட்டித் தீர்த்தபின் மார்க்கண்டுவின் கள்ளில் கொஞ்சத்தை மிடறி அவனுடன் கதைத்த பின்னர் மெளன மாகத் தன் வீட்டினுள் நுழைந்து) செத்ததுபோல் கிடக்கும் வருஷத்துக் கொன்ருகத் தெய்வங் கொடுத்திருந்ததுகளைத் தாண்டி அடுத்ததையுந் தெய்வம் கொடுக்கப் பண்ணும் முயற் சியில் இந்த நாடகக் காரர்களின் கூச்சலை மறக்கடித்து விடு
6Afffs".
இந்தத் தாமசக்காற்றில் அப்போதுதான் ஒரு தீப் பொறி மெல்லப் பற்றியது. சில காரண காரிய ஆராய்ச்சிக் காரர்களின் தேடித் திரிந்து பொறுக்கப்பட்ட காரணம் மார்க்கண்டுவின் தமையன் மகன் கிருஷ்ணன் சிவப்புச் சட் டைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டான் என்பதாக இருந் தது. மார்க்கண்டுவாலோ/விதிக்கப்பட்ட/தவாளியில்-இயற் கையாக அவனுக்கே சரியாகப் புலப்படாமல், அடிமனதின் ஒரு மூலையில் வெள்ளாளன்களின் குடுமிகளின் சகல மயிர் களும் தன் கையில் இருக்கின்றன வென்பதாக உணர்ந்து சிலிர்த்தாலும்- அதையும் நடைமுறையில் நசுக்கி இயங்கி யங்கியே 'கோவிலுக்குள் போவதாமே" என்பதையும் அந்தரீதியிலேதான் விருப்பு வெறுப்பின்றி எடுக்க முடிந்தது.
அந்த வருடத் திருவிழாத் தொடங்கியது. தொடங்கு வதற்குச் சிறிது காலம் முன்னரே கசமுசவென்று இந்தக் கோவிலுக்குள் போகிற பிரச்சனை கிருஷ்ணனின் முயற்சியால் அவர்களுக்குள் எழுந்து பரவியது. தூரத்துச் சொந்தத்தில்

தரிசனங்கள் - 3.
பல அலைகளை எதிர்த்து நீந்தி, அடிக்கடி இடம் மாற்றுப்படு கிற ஆசிரியணுகிவிட்ட நடேசுவின் உதவியோடு கிழடுகட்டை களை ஒத்துக்கொள்ளப் பண்ணுவதே பெரிதாய்ப்போயிற்று. மார்க்கண்டுவுக்கும் நடேசுவைப் பார்த்துத்தான் நம் பிக்கை வந்தது. - கும்மிருட்டில் அந்தப் பனங்காட்டின் சலசலப்பு. வானத்து நட்சத்திரங்களின் மினுமினுப்பு இவை களின் பின்னணியில் மார்க்கண்டு இதைக் குருக்களிடம் சொன்னபோது--அரைப் போதையின் துரக்க நிலையை உத றிச் சிலிர்த்தது.
** @TL -- o$2&Fgtnt, இப்புவாடா, நான் கூட்டிக்கொண்டு போறன்’ என்று குருக்கள் சுருதியைக் கூட்டி விதிர்த்தார். வெறிப்பிடிவாதம் பிறகு சுருக்கென ஏறி 'வாடா' என்று கையைப் பிடித்துத் திரும்பவும் இழுத்தார். மார்க்கண்டு வுக்கு உதறல். கிருஷ்ணன் ஒருவரிடமும் சொல்லாதே என் றது ஞாபகத்துக்கு வந்தது. மெள்ள மெள்ள எல்லாவற் றையும் சொன்ன போது குருக்கள் வழக்கம்போல் அவரது மெளன உலகில் பிரவேசித்தார்.
'தர்மகர்த்தா தம்பி முத்துவின் பளபளப்புக் கண்ணு டிகளினுரடாக நெருப்புக் கதிர்கள் பறந்து மார்க்கண்டு வைத் தீக்கிரையாக்கி."
சிலிர்க்கின்ற ஓர் உணர்வில் மார்க்கண்டுவின் குறைந்த சுருதிக் கதையின் சாரமும் சேர்ந்து வெறியை ஊட்டி அவ ருக்கே பழகிப்போன இயல்பில் அடங்குகின்றன.
அப்போதுதான் அந்த வருஷத் திருவிழா தொடங்கி யது .
யாகசாலையின் புகையும், அந்த யாகசாலையின் மூலை யில் இருக்கும் போத்தலிலிருந்து பிரிந்து சென்ற திரவமுஞ் சேர்ந்து குருக்கள் கண்ணைச் சிவப்பாக்குகின்றன.
பத்ததி வாசிக்கிறவன் யாழ்தேவி குருக்கள் "ஸ்லோ ட்றெயின் வேக மாற்றம் அதிகமாகி அதிகமாகி இடமாற் றமாக மாறி குருக்கள் வடக்குக் கும்பத்தில் நிற்கும்போது பத்ததி.

Page 10
4. மூலஸ்தானம்
'ஓம் தெஷண கும்பாய நம' வில் நிற்கிறது, குருக் களின் மனதில் மனுஷியின் போன பிள்ளைப்பேற்றுக்கு தம்பி முத்துவிடமே வாங்கிய கடனை இந்தத் திருவிழாவுடன் அடைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றிய விசாலமான ஆய்வு. அதில் இந்த மார்க்கண்டுவின் கதை முள்ளாகக் குத்திக், கத்திக்காய மாகிப் பெருத்துக்கொண்டே வருகிறது,வெளியில் கோயில் நாயனத்தின் தேய்ந்த உருக்குலைந்த "கல்யாணி', அதற்கு இரண்டு பொருட்கள் ஒத்துப்போவதும் முரண்படு வதும் ஒரேயடியாக நடக்குமென்ற விசால தத்துவத்தை விளக்கு முயற்சியாக ஒரு மேளம், மனஞ் சூனியமாகி யாக சாலைக்கு வெளியே நிற்கிற கிழவிகள் கூட்டம், அங்குமிங்கு மாகத்திரியும் அலுவல்காரர்கள், லவுட்ஸ்பீக்கரைக் காணு மிடத்திலெல்லாங் காணப்படக்கூடிய ஒரு பெடியன்கள் கூட் டம்; வெளியில் கடலைக்காரர்கள் இவர்களின் பிரசன்னத் துடன் குருக்கள் மகன் பாலனுக்குந் திருவிழாத் தொடங்குகி றது. யாகசாலையின் புகையில் கண்ணைக் கசக்குகிறன். ஸ்கூ லால் கூட்டிச் சென்று காட்டப்பட்ட சீமெந்து பாக்டரியின் ஞாபகம் வருகிறது.
இங்கே என்ன தயாரிக்கிறர்கள்?
இந்த அப்பாவே மோசம். மூலையில் பார் ஓடியாடி அதையெடுத்து இதையெடுத்து-மடைப்பள்ளிக்குப் போகும் போது-அங்கே மடைப்பள்ளி ஐயர் நிற்கிருர். கோயில் மண்டபத்தின் மூலையில் அவன் தாய் குந்தியிருந்து கிழவி பொன்னம் மாவுடன் கதைத்துக் கொண்டிருக்கிருள். அவன் தம்பி தங்கைகள் மண்டபத்தில் ஓடிவிளையாடிக் கொண்டி ருக்கிருர்கள்.
இந்தச் சலசலப்புகளுக்கிடையில் கொடியேறுகிறது. ஒடியாடுபவர்களும் ஒருகணம் கும்பிட்டுக் கொள்கிருர்கள்.
பூசை முடிந்து சுவாமி புறப்பாட்டுக்கான ஆயத்தங் கள் நடக்கின்றன. பாலனுக்கும் வேலை கடுமைதான். எனி னும் சம்பாவன தந்த உத்வேகத்தால், அதைத் தகப்பன்

தரிசனங்கள்
விசாரிக்காததால் அவன் மனதில், கடலை ஐஸ்கிரீம் கனவுகள் நிரம்பி இந்தக் கடுமையை வெகுவாகக் குறைக்கின்றன: வசந்த மண்டபத்தில் "சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. வடிவாக இருக்கிறது.
வெளியே 'அரோகரா அரோகரா!?? என்ற சத் தம் கேட்கத் தொடங்கி வர வர வலுப்பெற்றுக்கொண்டே வர, அதில் இருந்த ஒரு வெறி நிரம்பிய கன்னித்தன்மை ஈர்க்க பாலன் வெளியே ஒடி வந்து பார்க்கிருன்.
நடேசுவின் தலைமையில் ஒரு கூட்டம் கூப்பிய கரங் களுடன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ் ணன் நடேசுவுக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தான். கையில் கற்பூரத்துடன் பெண்கள் அதில் இளயெசுகளே அதிகம். மார்க்கண்டுவின் கையில் ஒர் அருச்சனைத்தட்டு கோயிலை நெருங்க நெருங்க 'அரோகரா’ வின் வெறி நிரம் பிய லயம் அவர்களில் உருவைத் தோற்றுவித்து மற்றவை எல்லாவற்றையும் அவர்கள் மனதிலிருந்து ஒதுக்கி அழித்து அவர்களைப் புதியவர்களாக்கி இருந்தது.
பாலன் பார்க்கிருன்.
மார்க்கண்டுவின் மகன் சுந்தரமும் அக்கூட்டத்துடன் பரந்து வந்து கொண்டிருந்த சிறுவர்களுள் ஒருவனுக வரு வது தெரிந்தது. அவன் இடுப்பில் வெள்ளைத் துண்டு. அரோகராச் சத்தம் அந்தச் சிறுவர் மனதிலும் புகுந்து, அதன் சுருதியுடனும் லயத்துடனும் ஈடுபடுத்தி, அவர்களின் புதிய தைப் பார்க்கப் போகிற ஆவலையும் ஒதுக்கி விடுகின்றன.
அந்தக் குட்டிச் சைனியம் தனக்கே உரித்தானதொரு கம்பீரத்துடன் கோவிலை மிக நெருங்கி வந்து வெளிவாசலைத் தாண்டி உள்ளே புகக் காலடி எடுத்து வைக்காத மட்டும் பரம்பரை பரம்பரையாகக் கற்பனையில் கூட இது தோன் றியிருக்காதலால் இந்தச் சைனியத்தின் நோக்கம் மற்றவர் களுக்குப் புரியவில்லை. அவர்கள் எல்லோரும் வெளிவாசலைத் தாண்டி மண்டபத்தில் பிரவேசித்தபோதே என்ன நடக்கி றது என்பது பலர் மண்டையில் ஏறியது.

Page 11
6 மூலஸ்தானம்
டோய் கோவிலுக்கை உள்ளட்டுட்டாங்கள் என்று யாரோ கத்திக் கொண்டோடுவது கேட்டது. வேறு பல ரையுங் கூட்டி வரத்தான் திடுதிடுமெனக் குறுக்குந் நெறுக்கு மோடி சில கணங்களில் வேருேரணி திரண்டது.
மார்க்கண்டு அருச்சனைத் தட்டுடன் எல்லாரையும் விலக்கி முன்னேறி வருவதைப் பார்த்து அதை வாங்கினர். வாங்கும்போதே மண்டபத்தில் நின்ற கிழங்களின் மத்தியில் ஒரு கேவல் சத்தம் ஒடி வருபவர்களின் ஒசைக்கு ஒர் அவலச் சுருதியாய்ப் பெருகியது. முத்தாய்ப்பாக "உந்தப் பிராம னியைப் பார்' என்ற குழறல் கேட்டது.
“ஓம் அத்திய பூர்வோத்தேவங்குண" என்று எதி ரொளி மூலஸ்தானத்திலிருந்து கேட்கத் தொடங்கியது. அருச்சனை பாதி நடந்தேயிருக்காது, அதற்குள் ஒரு பட்டா ளம் திரண்டு தடி, மண்வெட்டிப் பிடிகளுடன் பிரவேசித்து **ஒடுங்கோடா வெளியாலை' என்று அங்கிருந்த வெகு தீர் மானத்துடன் வந்திருந்தவர்களே நெட்டித் தள்ள முயற் சித்தபோது, நடேசு பெருத்த குரலில் "இங்கை இருக்கிற யாரிலையெண்டாலும் கைவைத்தால் நடக்கிற சேதி பிறகு தெரியும். நாங்கள் சமாதானமாய் ஆரையுங் குழப்பாமல் அமைதியாய்ச் சாமி கும்பிட வந்த நாங்கள் இது ஆண்ட வன் சந்நதி நாங்கள். g
'டாய்! எங்களுக்குச் சொல்லுருய், " சுருட்டுக்காரப் பொன்னையர் மற்றவர்கள் வந்து சேர்ந்த துணிவில், நடேசு வின் தீர்மானமான குரல் ஏற்படுத்திய மெளனத்தையும் கலைய முழக்கினர்.
'அடியடா’ என்று வெகு தீர்மானமாக உத்தரவிட் டுக்கொண்டு முன்னுலொன்று பாய்ந்தது.
இதற்குள் பெண்கள் ஒடத் தொடங்கினர்கள். இத் தனை களேபரத்தினுள்ளும் அருச்சனை நிற்கவில்லை. அடிக் கிறவனை அடித்துத் தள்ளுறவனைத் தள்ளிச் சனத்தைக்

தரிசனங்கள் 7
கலைக்க முயற்சி மும்முரம், நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் விழுந்த அடியில் தள்ளாடித் தள்ளாடி இதைத் தடுக்க முயன்று கடைசியில் விழ, நிலத்தோடு தேய்த்து இழுத்துக் கொண்டு போய் வெளியே போட்டது. அத்தோடு மற்ற வர்களும் உற்சாகமிழந்து வெளியே போகத் தலைப்பட்ட போது, மார்க்கண்டுவையும் அடித்துத்தள்ளித் துரத்துகிற போது. சுந்தரம் பார்க்கிருன். 'ஐயோ அப்புவை அடிக் கினம். 9 p
தம்பிமுத்து ஆக்ரோஷமாக வந்து பின்னல் நிற்ப தைப் போல உணர்வு குருக்களுக்கு. அதுவுங்களைப்போல முறுக்கேற்றுகிறது. திரும்பியே பார்க்கா மில் அருச்சனையை முடித்து மூலஸ்தானத்திலிருந்து தட்டுடன் திரும்பி வந்த போது இந்தக் களேபரங்கள் உச்சநிலையில் இருந்தன. மெள் ளத் திரும்பி இதைப் பார்க்கச் சகிக்க வொண்ணுமல் மூலஸ் தானத்துக்கே போய்விட்டார்.
சத்தங்கள் அடங்குவது யாரோ ஒருவரின் வருகை காரணமாகத்தான். தம்பிமுத்துவின் கண்ணுடிகளினுரடாக நெருப்புப் பொறி பறப்பது நிதர்சனமாகத் தெரிந்தது. கறுப்புப் பின்னணியில் வெள்ளைச் சலவை வேட்டி பொட்டு, இடுப்புவரை தொங்குகிற சங்கிலி, இவற்றின் நேர்த்தியின் பின்னல் தெரிகிற அதிகாரம், செருக்கு இந்தக் கோபத்துக் குப் பின்னணி.
பொன்னையரின் வர்ணனையில் குருக்களின் செய்கைக ளின் விபரங்கள் ஒன்றுக்குப் பத்தாகிப் பஞ்சாய் எண்ணை யாய் அந்த நெருப்பில் விழ.
"ஒய் குருக்கள்" தர்மகர்த்தா போட்ட கூப்பாட் டில் கூட்டத்தில் ஒர் அமைதி யலைபாய்ந்து முன்னேறியது, வழக்கம்போலவே. அவருந் தலைகுனிந்து முன்னே வந்து நின்றர். வழக்கம்போலவே இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியப் போகிறதைப் போலத் தோன்றத் தொடங் கத் தம்பிமுத்துவுக்குக் கோபம் நெருப்புக் கொழுந்து விட் டுக் கனல்கக்கிப் பெருகத் தொடங்கியது.

Page 12
8 மூலஸ்தானம்
''...... ஒய் குருக்கள் உமக்கு அறிவில்லையே கானும் உந்தப் பள்ளர் நளவரிடைத் தட்டைவாங்கி மூலத்தானத் துக்கை கொண்டு போவிட்டீர். ** "அவர்கள் உள்ளே வந்து விட்டதையும் அதை இத்தனைபேர் நின்றுந் தடுக்க முடி யாமல் போனதையும் மறுகி வெடித்தார்.
“... .அருச்சனையெண்டால் ஆராளெண்டுந் தெ யேல்லைப் போலக்கிடக்கு"
குருக்கள் தலையை நிமிர்த்திச் சிரித்தார்.
“ஏன்?" தம்பிமுத்துவுக்கு வெறியேறியது. 'நான் நினைச்சால் என்ன செய்வன் தெரியுமே ஆய். - a தெரியுமோ என்டு கேக்கிறன். ' குருக்களை நெருங் இஞர். "முதலாளி விடுங்கோ' பொன்னையர் மறித்தார். பாலன் பார்க்கிருன் , "உவன் நாசமாய்ப்போக!'
அவனது தாய் இடுப்பில் கைக்குழத்தையுடன் வருகி முள். அவள் முகத்தில் மரத்துப்போன பாவமே தெரிகி றது. தம்பிமுத்துவுக்கு சுருதி கூடுகிறது.
* இத்தனைகாலமும் பொறுத்தாச்சு. f
நெருப்பு எரியத் தொடங்கிக் கனல் கக்கிப் புகையை விட்டுக் கடைசியாகத் தணல் காட்டும் நிலைக்கு வந்தது.
**ம் போனது போகட்டும் ஒரு பிராயச்சித்தத்துக்கு ஒழுங்கு படுத்தும் ** என்னுல் முடியாது, நான் செய்ய மாட்டன்' குருக்களின் நிதானத்தில் உறுதி தெரிந்தது.
**என்னகானும் ' தனது கட்டளைகள் மீறப்படுவது, அதை இத்தனை சனங்களும் பார்ப்பது, அது வழக்கமில்லாத தொன்முய் இருப்பது இவை யெல்லாவற்றிற்கும் மேலாய் வேருெரு குருக்களையுங் கொண்டுவர முடியாத நிலையாய்க் கொடியும் ஏறி முடிந்தது, எல்லாம் சேர்ந்து தன்னை எரிப் பதைப்போல தம்பிமுத்துவுக்கு ஒரு உணர்வு இந்த உணர்வு அவர் கண்களினுாடாகப் பாய்ந்தது . .
**ம்ம் நான் கவனிச்சுக் கொள்ளுறன்."

தரிசனங்கள் 9.
திரும்பி விறு விறென்று நடப்பதில் தெரிந்தது அவர் கோபம் பொன்னையர் அவரின் கார் வரைக்கும் பின்னல் ஒடிஞர்.
கூட்டத்தின் கவனம் கோவிலுக்குள் போனவர்கள் மீது திரும்பியது. ஒடியவர்கள் போக நடேசு கிருஷ்ணன் இவர்களைக் கொண்ட ஒரு இளங்கூட்டம் கோவில் வாசலுக்கு வெளியே மிஞ்சியிருந்தது. நடேசுவுக்குங் கிருஷ்ணனுக்கும் அடியினல் அரை மயக்கம் , இம்முறை சட்டக் கழுதைக்கு எட்ட நிற்கும் யோசனையில், சாத்வீக ாேகவே இறுதிவரை பார்ப்பது என்பது தீர்க்கமான முடிவு. கூட்டம் இவர்களின் மீது பாய்ந்த
கணேசமூர்த்தி மாஸ்டர் - ஒரு முன்னைநாள் கொம் யூனிஸ்ட், இன்று முழுநேர அரசியல் வாதிகளுக்கும், வேலை தேடுபவர்கள் மாலை போடுபவர்கள் இவர்களுக்குமிடையில் நிற்கும் ஒரு அரைநேர மாஸ்டர் - தனது மனைவி பிள்ளை கள் சகிதம் அப்போதுதான், வந்து இந்தக் கலவரங்களேக் கண்டுங் காணுததுபோல் கோவிலுக்குள்ளே போய்ப் பெரிய கும்பிடு போட்டார். கும்பிடும்போது. இதற்குத் தலை0ை, அதோடு சம்பந்தப்பட்ட கட்சிக் சிக்கல்களின் பின்னணியில் தான் போய்த் தலையிடுவதன் விளைவுகளின் பிரதிபலன்களை மனம் ஆராய்ந்தது. காந்தி, மார்க்ஸ் ஏஞ்செல்ஸ், 1930ம் ஆண்டு நடந்த சமபந்தி போசனத்தில் தான் இளைஞன யிருக்கும் போது ஏற்ற பங்கு, இவைகளின் நினைவுகள் குழம் பாய்ப் பொங்கிச் சில கணங்களின் பின்னர்,
'நீ கும்பிடு நான் உதுக்கை போவிட்டு வாறன்."
'உதுக்கை நீங்களேன் போ றி ய ள்? இங்காலை வாங்கோ’ என்று அவர் பாரியார் வழக்கமான கனத்துட னும் கண்டிப்புடனும் இரைய.
ஐயர் வெளி வாசலுக்கு ஓடுவதைக்கண்டு மாஸ்டரும் பின் தொடர்ந்தார்.
த. (நே.அ.) 2

Page 13
10 மூலஸ்தானம்
'நிப்பாட்டுங்கோ." ஐயரின் சத்தம் எடுபட நேர மில்லை. "நிப்பாட்டுங்கோ' மாஸ்டர் புகுந்தார்.
நிற்பாட்டி ஒய்வதற்குள் சாத்தியாக்கிரகிகளில் சில இளவட்டங்கள் நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் அடிவிழு வதைப் பார் த் து ச் சகியாமல் முதலில் தடுக்க முயன்று பிறகு அவர்களை எதிர்க்க முயன்று உலைய நேரிட்டது. கடை சியாய்க் கூட்டங்கலையவும் பொலீஸ் ஜீப்பொன்று வரவும் சரியாயிருந்தது.'
அடுத்த நாள் காலை கோவில் வாசற் கதவு சாத்தப் பட்டிருந்தது. தம்பிமுத்துவின் உத்தரவுதான் . இந்தக் கல வரங்கள் நடந்து தன் கோவிலுக்கும் பொலிஸ் காவல் வந் தது அவரது மனதில் கிளு கிளுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த ஐயரின் விவகாரம் மட்டும் முள்ளாய்க் குத்தி 'என்ன செய்வது ?" என்ற நிலைக்கு அவரைத் தள்ளியிருந்தது.
குருக்கள் காலையில் பார்த்தபோது, வெளி வாசற்கதவு பூட்டியிருந்தது. திருவிழாக்காரர் மகன் தெற்கு வாசற் கதவால் வருவதைப் பார்த்து.
**கதவு ஏன் பூட்டியிருக்குது ?"
புரிந்தொடங்க, மெள்ளக் குறுக்கும் நெடுக்குந் நாலைந்துதரம் நடந்து கடைசியாக எல்லாமே வெறுமை யாகப் போகிற உணர்வுடன் வெளிவாசற் கதவை நோக்கி நடந்தார்.
ஒரு கணம் - தம்பிமுத்துவின் கண்ணுடிக்குள்ளிருந்து பொறிபறந்து தன்னைச் சுடுவதுபோல ஒரு ೭೫),
திங்கை எடுத்துவிட்டுக் கதவைத் திறந்தபோது,
'ஐயேர உது என்ன?" பொலீஸ்காரர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த பொன்னையர் குழறியிடி g; 9. வந்தார்.

தரிசனங்கள்
**உமக்கு விசரே ? முதலாளி கண்டால் என்ன நடக் குந்தெரியுமோ ???
குருக்கள் பேசாமற் திரும்பி உள்ளே போகப் பொன் னேயர் திகைத்துப் போய்க் கறுவியபடியே தம்பிமுத்துவின் வீட்டை நோக்கி ஓடினர்.
இன்ஸ்பெக்டருக்கு இது புதினம்
பாலன் இங்குமங்குமாக ஓடியபடி வேலைகள் செய்து கொண்டிருக்கிருன். யாகசாலையில் எல்லாம் எடுத்து வைத் தாயிற்று, திருவிழாக்காரர் வரவேண்டியதுதான்.
"என்ன நடக்கப்போகிறது ?"
வெளியே தம்பிமுத்து பரிவாரமொன்றுடன் வரு கிருர், சுருட்டுக்காரப் பொன்னையர் சொல்லிக்கொண்டு வருவது காதில் ஏறவில்லை. அவரின் ஒரு வெறித்த பார்வை கோபமென்பதே அகங்காரத்தின் ஒரு வெளியீடு என்பதை நிதர்சனமாக எடுத்துக்காட்டுகிறது.
"ஒய் குருக்கள்' பத்ததி ாசிக்கும் ராமநாதன் குருக்களிடம் சடுதியாக
ஒடிஞன். குருக்கள் கையைக் கட்டியபடியே வந்து நின்றர்.
"ஒய் இந்தக் கோவிலுக்கு நீரோ நானேகாணும் மனேஜ் மன்ற் ??? ஒருகண நேர மெளனத்தையுஞ் சகிக்க முடிய வில்லை.
"ஒய் சொல்லுங்காணும்." குருக்களை நெருங்கினர்.
அவருடைய வழக்கமான தாமசச் சேற்றில் ஒரு கணம் இறங்கிய குருக்கள் சுதாரித்துக் கொண்டு, சிலிர்த்துச் சிலிர்ப்பை மனதின் ஒரு மூலைக்குக் கொண்டு போய் அதை யும் பொறுக்காமல்.
**நீர்தான். A

Page 14
及2 மூலஸ்தானம்
எதிர்பார்த்த இந்த விடையைக் கொண்டு கொஞ்சங் கொஞ்ச உாய் அதைச் சுற்றித்தன் வாதங்களைப் பெரிதாக எழுப்பிக் குருக்களின் ஒழுங்கீனங்கள், அ ைத த்த ரா ன் "குடும்பகாரன்' ரீதியில் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்த, தோரணைகள் இன்னும் அத்துடன் வேறு தனது பெருமைகள் இவைகளுக்கு வார்த்தை ரூபங்கள் கொடுத்துக் கொஞ்சமாய்ச் சத்தங்.டி - - - - -
குருக்களை அழைப்பது பன்மையாக இருத்து ஒருமை யாகுத் நிலைக்கு வந்தது.
நெருப்பு, கண்ணுடிக் கண்களூடாக இந்த முறை குருக்களைச் சுட்டது. குருக்கன் பல்னைப் பார்த்து)
"கத்தியைக் கொண்டு வா"
பாலன் ஒடிப்போய் வந்தான்.
கத்தியால் தன் கங்கணத்தை அறுத்தார்.
'நீர் செய்யுறதைச் செய்யும் குருக்கள் போவதைக் கண்டு எல்லாரும் பார்த்துக் கொண்டு நின்றர்கள்.
"நான் பாத்துக் கொள்ளுறன்' பரிவாரம் திரும்பு கிறது.
குருக்கள் வீட்டில் அமைதி கனத்துக் கல்லாய் நிரம்பி யிருந்தது. பாலன் ஒரு மூலையிலிருந்து அம் 9ாவையும் அப் பாவையும் பார்த்துக் கொண்டிருக்கிருன். அப்பா ஒரு மூலையில், அம்மா ஒரு மூலையில் ஆளுக்கொருவராய்க் குந்தி
யிருக்கிறர்கள். அம்மாவின் முகஞ்சிவந்து வீங்கியிருக்கிறது. "அப்பா இனி என்ன செய்யப் போகிருர் ?"
போன வருஷத்துப் பிள்ளைப் பேற்றுக்கடன், இந்த வருஷத்து இப்போதைய கடன், நாளை நடக்கப் போகும்

தரிசனங்கள் 13
பாடு இவையெல்லாஞ் சேர்ந்து அவர் மனதில் கோயில் மேளம் மாதிரியே அபத்தமாய் ஊளையிட்டன.
பூபாலு வெகு உற்சாகமாக வந்து கொண்டிருந்தான். கடை நெருக்கடியிலிருந்து கிடைத்த கொஞ்ச நேர விடுதலை, அவனுக்குத் தரப்பட்டிருக்கிற "பவர்" இந்த மாத்திரைகள் நன்முக வேலை செய்தன. ஐயர் வீடு நெருங்க நெருங்க அவ னுக்குள்ளே ஒரு மிடுக்குக் கொஞ் சங் கொஞ்சமாய்ப் பெருத்து வியாபித்து.
அவன் பட்டு வேட்டி சால்வையுடன் நாபிக்கமலம் வரை தொங்குகிற சங் கி லி யு ட ன் நடந்து வருகிருன், கோவிலுக்குள் சனங்கள்-பெண்கள்-ஏராளம்.
**முதலாளி வாருர் விலத்துங்கோ. *" கடையில் அவனுடன் நிற்கிற வட்டு சுப்புறு-பெரிதாக வளர்ந்துசனங்களை விலத்துகிருன்.
"ஒய் ஐயரே " குரல் தம்பி முத்துவின் குரல் மாதிரியே சன்னமாயக் கம்பீரமாய் ஒலிக்கிறது. ஐயர் நடுங்கியபடி ஒடி வருகிருர். கோவிலைச் சுற்றி வந்து கொண்டு ஒவ்வொன் ருய் ஐயரில் பாணம் பின்னல் ஒரு பட்டாளம் பெண்கள் அவனைப் பார்க்கிருர்கள்.
உதென்னகா கிறேல்லியே?
s ਬ
றும் உந்த விளக்கு? همان به طمع بهاء
"ஏன் இவ்வளவு நேர ம் ? பூசையைத்துடக்குமன் காணும். " பெண்கள் பார்த்து ரசிக்கிருரர்கள் அதில் தம்பிமுத்துவின் மகளும் நிற்கிருள். அவள் இவனைப்பார்த்து ரசித்தபடியே அவனை நோக்கி வருகிருள். வந்து.
பூபாலு ஐயர் வீ ட் ைட நெருங்கி உள்ளே எட்டி "ஐயா" என்றதுந்தான் மெளனம் கலைந்தது.

Page 15
14 மூலஸ்தானம்
""முதலாளி உங்களை உடனே உந்தச் சங்கிலியைத் திருப்புறத்துக்கு ஆயத்த மா வரட்டாம் இல்லாட்டி நடக் கிறது தெரியுந்தானே?"
“சரி சரியோ தம்பி இந்தாவாறன்' அவனுக்கு அதில் இருந்த காரம் மணம் குண ம் இவையொன்றுந் தெரிய நியாயமில்லை. கட்ையோசனைகள் திரும்பவரப் போய் விட்
frøðr.
பத்ததி வாசிக்கும் ராமநாதன் நின்றல் மனுசியையும் பிள்ளைகளையும் அவள் தகப்பன் வீட்டிற்குத் தற்போதைக்கு அனுப்பலாமே என்று யோசித்தவராய்.
"'என்ன இந்த ராமநாதனைக் காணேஸ்கூ"
முணுமுணுப்பு மனுஷி காதில் விழுந்து இயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த எரிமலைகளின் கொதிப்பு வெடிப்பு களைப் பொருட்படுத்தாமல் வழக்கம் பேலேவே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அடக்கினுள்.
ஐயர் சால்வையை உதறிப் போட்டுக் கொண்டு தீர் மானித்துடன் எழுந்து, ஒன்றையுங் கவனியாமல் வேகமாய் நடந்தார்.
'ஆரிட்ட கேக்கப் போருர் ???
கால்கள் அவரையுமறியாமல் மார்க்கண்டுவின் கொட் டிலுக்கு இழுத்த போது பின்நேரம் இருந்தபோதும் வழக் கத்துக்கு மாருன ஒரு துணிவு.
'ஐயா நீங்கள் போங்கோ நான் கொண்டாறன்." 'மார்க்கண்டு நொண்டியபடி வெளியே வந்தான்.
"அது கிடக்கட்டும் இப்ப. A
இந்தச் சங்கி லி விவகாரத்தைச் சொல்லி முடித்த போது மார்க்கண்டு யோசித்தாய்த் தெரியவில்லை.

தரிசனங்கள்
**போங்கோ நான் எல்லாங் கொண்டு வாறன்?? ஐயர் திரும்பி விட்டார்.
மார்க்கண்டு இரண்டுடனுந்தான் வந்தான். மாலைச் சூரியன் மரங்களினுதவியுடன் கோடுகள் கீறும் நேரம் ما كالا ணத்துக் கோவில் ஒன்றில் ஆள் தேவையென்று கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்து விசாரித்த விபரத்தைக் குருக்கள் சொன்னர்,
‘மார்க்கண்டு ஒரு வருஷமாகுமடா"
“அதைப் பிறகு பார்ப்பம்
தம்பிமுத்துவின் கடையை அடைந்தபோது அவரே) இரண்டு பேராகிப்போன மாதிரியொரு ம ப் பு உ ஷா ர், கடையில் அவரில்லை. தம்பிமுத்துவின் வீட்டுக்கே போன் போது அங்கே.
ராமநாதன், அவன் த ைம ய ன் நடராஜனுடன் நிற்கிருன் "நடராஜனை உடனே இங்கே சேர்க்கக்கூட்டிக் கொண்டு வந்திட்டான் போல கிடக்கு."
ராமநாதனைக் குருக்கள் பார்க்க ராமநாதன் அப்பால் திருப்பிக் கொள்கிருன், நடராஜன் முழிக்கிருன்.
‘என்ன காணும் .? தம்பிமுத்துவுக்குத் திரும்பவும் ஆக்ரோஷம் வருவதற்கான அறிகுறி அதில் போரில் வெல் லப் போகிருேமென்ற பகையுணர்வு குருக்கள் காசை மடி யிலிருந்து அவிழ்த்து எடுக்க.
பிராமணிக்குக் காசு எங்கே கிடைச்சுது ?
‘மணியம்' பட் டா சு புஸ்வாணமாவது போலத் தம்பி முத்து வுக்குத் தெரிகிறது. மணியம் வந்து நோட்டை யெடுத்து வரவு எழுதுகிருன் தம்பிமுத்து உள்ளே போய் அறையில் இரும்புப் பொட்டியிலிருந்து சங்கிலியைக்கொண்டு வருகிருர் காசை வைக்கத் திரும்பப் போகிருர்,

Page 16
16 மூலஸ்தானம்
'தம்பி நடராஜா'
நடராஜ ஐயர் பார்க்கிருர்,
'தம்பி பிராயச்சித்த அபிஷேக மெல் லா ம் ஆயத்தமோ ?”*
“ஓம் ஓம்'
ராமநாதனின் இரண்டு உருவங்களுந் தெரிகின்றன.
*அதுக்கு முதலிலையடா அந்தா தெரியுமே.
அவர் காட்டுந் திசையில் தம்பிமுத்துவின் இரும்புப் பெட்டி-அதில் காசை வைத்துக் கொண் டி ருக் கி ரு ர் - தெரிகிறது.
''. . . . . . அதுக்கு உந்தப் பிராயச்சித்த அபிஷேகத்தைச் செய்யடா நான் வாறன்'
ஒரு ஏளனப் புன் ைக தெரிந்தாலும் குருக்களின் மனதில் ஒன்றுமில்லை. அவர் பேசாமல் போகிருர்,
 

கலையமிர்தன்
இதயங்கள்
மோதுகின்றன.
சமூகத்தைப் பிரித்து உலகமே "பட்டை நாமம்’ தீட்டிக்கொண்டது போலக் காணப்படுகின்றது அந்த வீதி.
வீதிக்கு வலப்பக்கமாக உயரமான பகுதியில் நீளத் திற்கு அடுக்கி விடப்பட்ட நெருப்புப் பொட்டிகளைப்போலக் கட்டப்பட்டுள்ள பல்கலைக்கழக "குவாட்டர்ஸ்கள்' அறிவின் சிகரமே போன்று உயர்ந்து நிற்கின்றன. பல்கலைக் கழக நிர்வாகம் மீவத்துறையிலுள்ள அப்பகுதியை தனது உடமை யாக்கிக் கொண்ட பின்பே அந்த வீதியும் போடப்பட்ட தாகக் கேள்வி.
வீதிக்கு இடப்பக்கமாக கீழ்நோக்கியதாகச் சிறிய சிறிய வீடுகள். வீதியின் கரையையொட்டி நின்று பார்த் தால் சிதறிக் கிடக்கும் அவ்வீடுகளில் அதிகம் தெரியக்கூடிய தாக இருக்கும்.
நீண்டு செல்லும் வீதி ஒரு பள்ளத்தில் இறங்கிப் பின் கிழக்கு நோக்கித் திரும்புகின்றது.
அந்த முடக்கில் உள்நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் சற் று த் தள்ளித்தான் அவ்வீடு அ ைஇந்திருக் கின்றது.
த. (நே.அ.) 3

Page 17
8 மூலஸ்தானம்
நடுவே மண்ணுல் சுவரொன்றை எழுப்பி கால் பகுதி யைப் போக்குவரத்திற்கு விட்டு இர ண் டு அறைகளாக்கி இரண்டாவது அறையில் சுவரோரமாக ய ன் ன ல் என்று பெயர் பெறும் வெற்றிடத்தால் வெளிச்சம் பெறும் பகுதி யில் சமையல் வேலைகளை நடாத்தி. அந்த இரண்டாவது அறையின் மிகுதிப் பகுதியைப் பிள்ளைகளின் ச ய ன இட மாக்கி.
வாசலுடன் ஒட்டிய திண்ணை போன்ற முதலாவது அறையில் அவர்கள் ஒரு சிறிய சாக்குத் துண்டில் தலையைச் சாய்த்து வாழ்வின் அர்த்தங்களை ஆராயும் இந்த வழக்க மான நிகழ்வுகள் இருண்ட அதே குடிசையின்தான் இறுக் கம் பெறுகின்றன. வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருவை வெறித் துப் பார்த்துக் கொண்டிருக்கிருள் மரியம்மா. அவள் முகத்தில் ஒளியின் ரேகைகள் மறைந்து வாழ்வில் எழுகின்ற கஷ்டங்களை மீட்டிக் கொள்வதான ஒரு வ ைக உணர்வு வெளித்தோன்றுகிறது.
அவள் மடியில் கிடந்த குழந்தை வரண்ட மார்பகங் களைச் சூப்பி நிராசையால் கேவிக் கேவி உ ரத் த குரலில் அழுகின்றது.
அவளுக்குப் பயம். கைக்குழந்தையின் அழுகுரலால் குடிசையினுள்ளே உறங்கும் குழ ந் ைத க ளு ம் உறக்கம் கலைந்து எங்கோ எழுந்து தன்னைத் தொ ந் த ர வு செய்ய ஆரம்பித்து விடுவார்களோ என்று.
குழந்தையை மெல்ல அணைத்தவாறு கழுத்தை நீட்டி உள்ளே பார்வையைச் செலுத்துகின்ருள்.
மகள் ருேசலின் பிறந்த கோலத்தில் துயின்று கொண் டிருக்கிருள்.
அந்தோணி கால்களை அங்கும் இங்கும் பரப்பியவாறு குப்புறப் படுத்துக்கிடக்கின்றன்.

இதயங்கள் மோதுகின்றன 9
அவள் கணவன் சர்னேலிஸ் இன்னும் வரவில்லை.
** இவர் எங்கை போய்க்கிடக்கிருரோ . இந்த ச் சனியனும் கத்தித் து லைக் கி றது. அதுகளும் எழும்
ul-IT...... '- அவளின் வாய் முணுமுணுக்கிறது.
கையில் நீர்த்துளிகள் பட்டுத்தெறிக்கும் ஓர் உணர் வில், வெளியே திரும்பிப் பார்க்கிருள். மழைத்தூற்றலுடன் குளிர்காற்றும் வீசுகின்றது.
* டேய். ஏண்டா மழையில் நனையிறீங்க. உள்ளுக்கு
வாங்கடா.
வெளியே தெருவோரமாகக் கிடந்த கல்லில் உட் கார்ந்து கொண்டு தேங்காய்ச் சொட்டுகளைத் தின்றுகொண் டிருந்த அரியம் உள்ளே ஓடிவர அவனை த் தொடர்ந்து அவனுக்கு இளையவளான வயலட் ஓடிவந்து அம்மாவுக்குப் பக்கத்தில் அமருகிருள்.
இரண்டாகப் பிளந்த இளந்தேங்காய் ஒன்றின் பாதி
கள் அவர்களுடைய கைகளில் இரு ந் த ன. அவற்றைத் தோண்டிச் சாப்பிட்டுக்கொ ன்டிருந்தார்கள்.
**அவங்களுக்கும் கொஞ்சம் வையுங்கோ. எழும்பி அழுவான்கள்."
"ஒமம்மா.. '- வாயில் தேங்கா ய் சொட்டுகளைப்
போட்டுக் கடித்துக்கொண்டு, கடைவாயில் தேங்காய்ப்பால் வழியக் கூறுகிருள் வயலட்.
இரவில் சாப்பாட்டிற்கு ஒன்றும் இல்லை என்று கூற முடியாத தவிப்பில் ருெட்டி சுட்டுக்கொடுப்பாள் மரியம் மா. அந்தப் பகுதியில் நிற்கும் தென்னை மரங்க ளி ல் இரண்டு இளந்தேங்காய்களைப் பிடுங்கித் தின்றுவிட்டுப் படுக்கைக்குப் போகும் பிள்ளைகளின் வழக்கமான செயலைத் தடுக்க முடி

Page 18
20 மூலஸ்தானம்
யாதவளாகிப் பெரும்பாலும் இராச்சாப்பாடு அது தான் என்ற நிலை உருவாகிவிட்டது. அரியம் ஏறிப்பிடுங்குவான். அவனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும்.
அண்ணன் தேங்காய் பிடுங்கப் போகிருர் என்றதும், கடைசிக் குழந்தையைத் தவிர அந் தோ னி, ருேசலின், வயலட் மூவரும் ஒடிவந்து, தெருவோரமாக வரிசையாக உட்கார்ந்து கொண்டு மரத்தை அண்ணுந்து பார்ப்பதும் வழக்கமாகி.
மரத்திலிருந்து தேங்காய்கள் விழுவதைப் பார்த்து, ஒடிசென்று எடுத்துக் கொண்டு வைத்திருக்க, அண் ண ன் மரத்திலிருந்து இறங்கி வந்து அவற்றை இர ண் டா க ப் பிளந்து கொடுப்பதும் வழக்கமாகி.
யாவும் வழக்கமான காட்சிகள்ாக. L1 m rf 5 3 & கொண்டிருக்கும் தாய்க்கு ஒன்றுமே இயலாத நிலை. 'டேய். ஏண்டா தே ங் கா யளை த் தின்னுறியள். எழும் பி வாங்கடா. * என்று சொல்ல வாயெடுத்தும் வார்த்தை கள் வெளி வர மா ட் டா த ஒரு நிலையில் அவை உள் ளேயே அடங்கிவிட, 'வீட்டில் கொடுப்பதற்கு ஏதும் இருந் தால்தானே அதைத் தடுப்பதற்கு.?" என்று எ ண் ண ம் அவற்றை மூடிமறைக்க.
பிள்ளைகள் பழக்கப்பட்டு விட்டன.
தாய்க்குப் பக்கத்தில் இருக்கும் வயலட் அண்ணனைப் பார்த்துக் கூறுகிருள். "நான் தேங்காய் சாப்பிடேக்கை வயித்துக்கை என்னவோ செய்யிற மா தி ரி இருக்கும். உனக்கும் ஒண்டும் செய்யிறதில்லையாண்னை.
"என்ன செய்யிறது. அம்மா அப்பாவுக்குக் கஸ்ட மெண்டாக்கிடைக்கிறதைச் சாப்பிடத்தானே வேணும்."- உணரக்கூடிய வயது அவனுக்கு மட்டும்தானு ?

இதயங்கள் மோதுகின்றன 2.
இதைக் கேட்ட தாய், கண்களில் கசியும் கண்ணிரை மறைக்க, மு க த் ைத த் திருப்பிக் கொள்ளும் செயலில், 'த்கு. குளிரேல்லையா உங்களுக்கு. *" என்ற வார்த் தையில், உடலைச் சிலிர்த்துக் கதையை மாற்றிச் சமாளிக்க முயலும் பிரயத்தனம் தெரிகிறது.
வானத்தில் மின்னல் கீற்றுக்கள் வெட்டி மறைகின் றன. மழை கூடுகிறது. "இதென்ன கோ தா ரி பிடிச்ச மழை - - - - - இந்த நேரத்திலை பிடிச்சுக் கொண்டுது. என்றவள், சற்று உள்ளே நகர்ந்து அ ம ர் ந் து கொண்டு, "அந்த ஒழுக்குகளுக்குத் தகரங்களைப் போய் எடுத்து வை."- என்று கூறி மகளை உள்ளே அனுப்புகிருள்.
மரங்களில் ஒளிபட்டுச் சிதறி ப் பரவ, வீதியால் காரொன்று வந்து மு டக் கி ல் திரும்புகின்றது. தலையை உயர்த்திப் பார்க்கிருள். வழக்கமாக அதால் செல்லும் அந் தப் பல்கலைக்கழக விரிவுரையாளரின் காரை அடையாளம் கண்டு கொண்டதும், வில்சன் என்ற அவரின் பெயர் நினை வுக்குழியுள் இடற, கிளப்"புக்குப் போ ய் வி ட் டு எட்டு, ஒன்பது மணிபோல் வழக்கமாக அந்தக்கார் திரும்பி வரு வதிலிருந்து நேரத்தை ஊசித்துக் கொள்ளும் முயற்சியில் மரியம்மாவின் உள்மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
மடியில் கிடக்கும் குழந்தை அயன்று விட்டது.
பாயில் கிடந்த ருேசலின் தனது காலை அந்தோனியின் மேல் தூக்கிப் போட்டதால் அவன் எழுப்பும் சிணுங்கல் ஒலி. και στις. is a w a n w அந்தச் சனியன்களை இழுத்துப் போட்டுவிட்டு, அந்தப் பச்சைச் சீலைத் துண்டை எடுத்து விரிச்சுவிடடி.'" தாயின் குரலைக் கேட்டு மழை ஒழுக்குகளுக்குத் தகரங்களை வைத்துக் கொண்டிருந்த வயலட் ஒடிச் சென்று அவைகளை விலத்திவிட்டுத் துணியை எடுத்து விரிக்க, குழந்தையைத் தூக்கியவாறு எழுந்து சென்று கிடத்துகிருள் மரியம்மா.

Page 19
22 மூலஸ்தானம்
நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது. 'பிள்ளை குட்டி யள் போதாதெண்டு அதுவும் ஒரு பக்கத்தாலை. '' - 6 Jrty லுக்கு வருகிருள்.
மழை சற்றுக் குறைந்திருக்கிறது. யாரோ தூரத்தில் வருவது போன்ற கரியதோர் உருவ அசைவு. இருட்டில் தெளிவாக இல்லை. வீதியின் விளக்கு வெளிச்சத்துக்கடியில் வந்தபொழுது கண்களைக் கூர்மையாக்குகிருள்.
சர்னேலிஸ்தான் வருகிருன்.
அவனுடைய கையை நோ ட் ட மி டு ம் செயலில் இறங்கி, மழைநீர் விரல்களினூடாக வடிந்து கொண்டிருக் கும் வெறுங்கையைக் கண்டதின் பிரதிபலிப்பாக, மு கம் சோம்பிச் சுருங்குகிறது.
உடைகள் எதுவுமே இல்லாது அவனது முழு உடம் பையும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவளால் பார்க்க முடிந்ததாயினும் ம ைழ யி ல் தெப்பமாக நனைந்திருக்கும் சேட்டினுாடாகத் தெரியும் உடம்புக்கும் முன்பு பார்த்ததற் கும் இடையே ஏதோ வித்தியாசம் தெரிவது போன்ற ஒரு பிரம்ை.
“இந்த அடை பழைக்கை இவ்வளவு நேரமா எங்கை போட்டு வாறிங். சன்னி பிடிக்கப் போகுது. '- மூல யில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கிய துணித்துண்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். s
எதுவுமே பேசாது, சேட்டுத் தெறிகளைக் கழற்றி உடலோடு ஒட்டிய ஒன்றை உரித்தெடுப்பது போன்றதோர் உண ர் வி ல், சேட்டைக் கைகளினூடாக இழுத்தெடுத்து, வாசல்புறம் கொண்டுவந்து அதைப் பிழிந்து நீரை அகற்றிக் கொண்டிருந்தான்.
‘இதென்ன கெதியாத் துடையுங்கோவன். „V P.

இதயங்கள் மோதுகின்றன 23
குழந்தை எழும்பி அழத்தொடங்கிவிட்டது.
*"அதுக்கிடேலை எழும்பிவிட்டுது. . அதுவும் என்ன
செய்யும். பசியிக்கை. *’- போய்க் குழ ந் ைத ையக் கையில் தூக்கி எடுத்துக்கொண்டு கணவனருகாக வருகிருள். “ ‘அ. . . . . s2, . . . . . . ! I ff . . . . . . **- குழந்தை கன்னங்களில் குழிவு
விழச் சிரிக்கிறது.
"அவரிட்டைப் போனனிங்களே.
“ஊம். '- எ ன் று கொண்ட பக்கத்தில் கிடந்த பலகைக் குத்தியொன்றில் அமர்கிருன்.
*" என்ன சொன்னவர்.. ??"
"இப்ப அவசரமாக எங்கோ போருராம். ஆறுதலா வரட்டாம். • 9
'மனமில்லாட்டி அப்பிடித்தான் சொல்லுவாங்க...??- என்று சற்று வெறுப்பாக வார் த் ைத களை உமிழ்ந்து கொண்ட மரியம்மா பாயில் கிடந்த குழந்தைகளைப் பார்த் தாள். கால்களை உதறியவாறு அ ைசந்து திரும்பிப்படுத் தான் அந்தோனி.
நினைவுச் சரங்களில் கால்கள் சிக்கி அசையமுடியாத
தோர் நிலை. ஐந்து குழந்தைகளுடன் எ ல் லா மா க ஏழு ஜீவன்கள்.
முன்பு கொஞ்சம் பறவாயில்லாமல் இருந்த து. சாமான்களின் விலைகளும் ஏறியபிறகு ஒன்றுக்குமே வழியில் லாத நிலைதான்.
ஏழு கூப்பன்களுக்கும் கொடுக்கும் காசில்லாத அரிசி யும் இல்லாவிட்டால். ? அது இருப்பதால்தானே ஒரு வேளையென்ருலும் சம்பலுடனுவது விழுங் கித் தொலைக்க

Page 20
24 மூலஸ்தானம்
முடிகின்றது. காலையில் சீனியைத் தொட்டவாறு வெறுந் தேநீரைக் குடிப்பதும் அவ்வளவு கஷ்டமில்லை.
கஷ்டமாக நினைத்தால் எதுவும் கஷ்டம்தான்.
இரவில் ருெட்டியையாவது சுடலாம் என்ற எண்ணம் மேலிடும் பொழுதெல்லாம், இப்பொழுது சில நாட்களாக மாவுக்கும் வழியில்லை என்ற நினைவு மனதை அழுத் தி ப் பிழிய. அதற்காகத்தான் புருஷனை அவரிட்டை அனுப்பி ஞள். காசு ஏதும் கிடைத்தால் மாவைக் கீவை அ ல் ல து பாணை வாங்கி வருவார் என்பது அவளுக்குத் தெரியும்.
ஆணுல் அதுவும் அப்படியாகப் போய்விட்டது.
வாழ்வை எதிர்த்துச் ச மா விரிக் க, உள்ளத்தின் ஒரு கோடியில் எழும் மோதுதல்கள் தடையாகத்தான் இருந்தன என்பது அவருக்குப் புரியாமலில்லை.
சர்னேலிஸ் "யூனிவசிட்டி" "கிறவுண் போய்’ ஆக இருந்தபொழுது ஏதோ சொற் ப வருமானமென்ருலும் கிடைத்தது.
பல்கலைக்கழக விலையாட்டு மைதானத்தைச் சுத்தப் படுத்துவது. புல் வெட் டி அப்புறப்படுத்துவது போன்ற வேலைகள்.
பிறபகுதிகளில் இருந்து பல்கலைக்கழகத்துடன் விளை யாடுவதற்காக வேறு கோஷ்டிகள் வரும்பொழுது அவனுக் குக் குஷிதான். அவர்களுடைய தொட்டாட்டு வேலைகளை யும் செய்து கொடுத்து, சேர். ", "துரை. " போன்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பல்வரிசை சஞடன் வெளிக் காட்டி, அவர்கள் திருப்பிப் போகும்பொழுது ஏ தா வது கிடைக்கும் ஒருவித நிலையை உருவாக்கி வைத்திருப்பான் .
ஆஞல் அதெல்லாம் ஒரு காலம்,

இதயங்கள் மோதுகின்றன 25
விளையாட்டுகளுக்குப் பொறுப்பான “ ைப. ர க் டர்" உடன் ஏதோ தகராறு. வேலையிலிருந்து விலக்கப்பட்டு விட்டான். எதற்கும் "ஆமா' போட்டு, பெரியவ்ர்களுடன் அணைந்து செல்லும் கலையை எல்லோராலும் பயில முடிந் திருந்தால் . . . .
அன்றிலிருந்து வீட்டோடுதான்.
லீவை முடித்துக்கொண்டு, ‘சரசவி உயன றெயில்வே ஸ்டேசனில் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து இறங்கும் றெயினை, மீன் பார்த்து வாடியிருக்ரும் கொக்காகி அங்கு சென்று ஒரு வருடத்துக்கு மூன்றுமுறை நடக்கும் இந்தப் போட்டர் வேலையினுலும் ஏதோ சொற்ப வருமானம்.
குறுக்கு வழியால் விஜயவர்த்தணு விடுதியில் பின்பக்க மாகச் சூட்கேசுகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் மாணவர்கள், அதற்கேன் ஓர் ஐம்பது சதத்தை இழக்க வேண்டும் என்ற தொனியில். இருந்தாலும் சில மாணவி களிடமிருந்து கிடைக்கும் ஏதாவது சி ல் ல ைற யி ன ல் மனதைத் திருப்திக்குள்ளாக்கி வீடுதிரும்புவான்.
சர்னேலிஸின் நிலை மனைவிக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. "அவன்தான் என்ன செய்வான்’ என்ற எண்ணம் அவளுக்கு.
குழந்தை அழுகிறது. நேரம் ஊர்ந்து கொண்டிருக் கிறது.
as a ro 'என்னப்பா உட்கார்ந்திருக்கிறியள். . இப்
படியே இருந்தால் இப்ப என்ன செயிறது" - என்று கூறிக் கொண்டே கணவனைப் பார்த்தாள்,
அவன் குத்துக்காலில் இருந்து கொண்டு இரண்டு
த. (நே.அ.) 4

Page 21
26 தரிசனங்கள்
கைகளாலும் கால்களைக் கட்டிப் பிடித்தவாறு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.
மழைவிட்டிருந்தாலும் "கும்" மென்ற இருட்டைக் கிழிப்பதைப் போல் இடைக்கிடையே மின்னலுடன் இடி முழக்கம் அதிர்கிறது.
தானென்று நிமிர்ந்து கிடக்கும் மலைகளில் அமைந் திருக்கும் பாதையைத் தேடிப்பிடித்துக் கொண்டோடிவரும் புகையிரதத்தின் ஓசை துல்லியமாகக் கேட்கிறது.
நேரம் ஒன்பதே கால் என்பதை எடுத்துக் கூறுவது போல் பதுளைக்குச் செல்லும் அந்தப் புகையிரதம் வாழ்க் கையின் சுமையே போன்று இணைந்து தொடரும் பெட்டி களைக் கடகடவென இழுத்துக் கொண்டு இருளில் ஓடி ஒடி மறைந்து விட்டது.
இவை ஒன்றையுமே பொருட்படுத்தாமல் அந்த மீவத்துறைப் பகுதி உறங்குவதாக அவனுக்குத் தோன்று
கடைசிக் குழந்தை இன்னமும் தேங்காயைத் தின்று பழகுவதற்குப் பக்குவப்படவில்லை.
'இரண்டு துண்டு பாண் ஆவது இருந்தால் வெறுந் தேநீரிலாவது தொட்டுக் கொடுக்கலாம் . '- அதுதான் வழக்கமுங் கூட.
"இது சரிப்போறதாய் இல்லை. நான் வில்சன் அம் மாட்டை ஒருக்காப் போயிட்டுவாறன் என்ன..???- என்ற வாறு சர்னேலிசைப் பார்த்தாள் மரியம்மா. அவன் சம் மதத்தை வாயால் தெரிவிக்காது அ வளி ட ம் ஒட்டிக்

இதயங்கள் மோதுகின்றன ‚ይ7
கொண்டிருந்த குழந்தையை வாங்கக் கை க ளே முன்னே நீட்டுகின்ருன்.
"அதையும் கொண்டுபோறன். உங்க ளி ட் ைட இருந்தா அழுதுகொண்டே இருக்கும்".
சேலையைச் சரிசெய்து கொண்டு வெளியே இறங்கி நடந்தாள். திண்ணையில் கிடந்த நாய் வாலை ஆட்டியவாறு பின்னல் சென்றது. "கு. போய்க்கிட' என்று இடக்கை யைத் தூக்கி விசிறி அதைக் கலைக்க அது பின்னகி வந்து பழைய இடத்திலேயே சுருண்டு படுத்துக்கொண்டது.
வீட்டையும் தெருவையும் தொடுக்கும் அந்த ஒற்றை யடிப்பாதையால் வந்து தெருவில் ஏறுகிருள்.
மழைநீர் தெருவின் கரையோரமாகப் பள்ளத்தை நோக்கி வழிந்தோடிக் கொண்டிருக்கின்றது. குளிர்காற்றில் உடல் சிலிர்த்துக் கொள்ளச் சேலைத் தலைப்பை எடுத்துக் குழந்தையின் தலையைச் சுற் றி ப் போட்டுக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு அந்த ஸ்பரிசம் த ந் த களிப்பில் கால்களை வேகமாக முன் வைத்தாள்.
"குவாட்டர்ஸ்"களில் பச் ைச. நீலம் ஆகிய நிறங் களில் மறைப்பைக் கொண்ட ஜன்னல்களின் ஊடாக ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டு இருக்கின்றது.
அவர்கள் இன்னும் படுக்கைக்கு போகவில்ல. அவர் களுக்கு என்னென்ன வேலையோ.. P
இரண்டிரண்டு வீடுகளை ஒன்ருகச் சேர்த்து ஒவ்வொரு "புளொக்"களாகக் கட்டியிருக்கிறர்கள். மூன்ருவது புளொக் கில் முதலாவதாக உள்ள குவாட்டர்ஸ்ஸில் உள்ள வில்சன் அம்மாவைத்தான் சந்திக்கப்போகிறன். ஞாயிற்றுக்கிழமை

Page 22
28 தரிசனங்கள்
களில் சேர்ச்சிலும். மற்றும் அந்தத் தெருவால் போய் வரும்போது அம்மாவைப் பார் த் து வலியச் சிரித்து. அந்தச் சிரிப்பிலேயே அம்மாவின் சக ல மேன்மைகளையும் அங்கீகரித்து. அம்மாவைப் பழக்கம் பிடித்து வைத்திருந் தாள.
முதலாவது "புளொக்"கைத் தாண்டி நடந்து கொண் டிருந்த போது அவள் நினைத் து க் கொண்டான். 'இருந் தாலும் சரியில்லைத்தானே. அவவிட்டை ரெண்டு மூண்டு முறை வாங்கிப்போட்டாள். இன்யும் போறதெண்டா திரும்பிப் போய்விடுவோமா..? இடுப்பிலிருந்த குழந்தை மார்பகத்தைத் துளாவியது. அவள் சேலைத் தலைப்பை விலத் திக்கொடுத்தாள்.
அன்று சேர்ச்சில் பூசை நடந்தபோது வில்சன் அம்மா மரியம்மாவிற்கு மிக அருகிலேயே அமர்ந்திருந்தாள். அப் போது சுவாமி சொன்னர் "கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' 'சடக் கென்று தலையை உயர்த் திப் பார்த்தாள் மரியம்மா இடப்பக்கத்தில் அமர்ந்திருந்த வில்சன் அம்மாவே அவள் பார்வையில் விழுந்தார்.
*"துயரப்படுபவர்கள் பார்க்கியவான்கள். அவர்கள் ஆறுதல் அடைவார்கள். * சுவாமி கூறியதை மீண்டும் இரைமீட்டுக்கொண்டு அவள் தொடர்ந்து நடந்தாள்.
இரண்டாது புளொக்கில் அரைவாசித் தூரத்தைக் கடந்து கொண்டிருந்த பொழுது குறுக் கா க ஒரு நாயை இன்னென்று துரத்திக் கொண்டு ஓடியது. அவையும் தன் னைப்போல் வாழ்க்கையில் ஒரு தேவைக்காகத்தான் ஓடுகின் றனவா ? புளொக்கின் ஊடாக ஒன்று சென்று விட்டது. துரத்திச் சென்ற நாய்தான் திரும் பிச் செல்கிறதாக்கும், நினைத்ததைப் பெற முடியாத ஏ க் கம் அதற்கும் இருக்கத் தானே செய்யும் ?

இதயங்கள் மோதுகின்றன 29。
அந்தப் பகுதியில் கட்டாக்காலி நாய்கள் அதிகம். நாய்கள் இல்லாத வீட்டில்கூட் "கடிநாய் கவனம்’ ‘நாய் கடிக்கும் வராதீர் . " போன்ற தந்திரோபாய விளம்பரப் பலகைகள் தொங்கும். அது ஒரு பா ஷ னும் கூட. சில வேளை யாராவது சின்னஞ் சிறுசுகள் வந்துவிட்டால் நாயா கப் பாய்ந்து விழுவதும் கூட, உண்டு.
*கோ லிங் பெல்லை? நாடி மரியம் மா வின் கை போகின்றது.
படிகளில் எவரோ இறங்கி வருவது கேட் கி றது. கண்ணுடி ஜன்னலொன்றைச் சற்று திறந்து பார்க்கிருள் வில்சன் அம்மா.
“gjub i Dr...... ஒரு *" கூற நினைத்ததைக் கூறிமுடிக்கு முன்பாக வில்சன் அம்மா குறுக்கிடுகிருள்.
'இப்ப படுக்கப்போறன். காலையிலை வா ஏதும் பார்த்துத் தாறன் . . * பதில் தேவையில்லை, ஜன் ன ல் கதவு சாத்தப்படுகின்றது.
பாடற் பூசையில் பின்னர் சுவாமியானவர் கூறிய வார்த்தைகள் மரியம்மாவின் நெ ஞ் சி ல் ஒலமிடுகின்றன "கேளுங்கள் கொடுக்கப்படும் த ட் டு ங் கள் திறக்கப்படும் துயரப்படுபவர்கள் பாக் கி ய வ ரா ன் கள் பர லோக
ராச்சியம் .
பொங்கும் கண்ணிரைத் துடைத்துக் கொண் டு தெருவில் இறங்கி நடந்து விட்டாள்.
வில்சன் அம்மா ஏதோ கூறிக்கொண்டே படிகளில் ஏறிச் செல்வது கேட்கிறது.

Page 23
30 தரிசனங்கள்
*“综...... இதுகளாலை ஒரே நியூசன்சாக இருக்குது. நடுச் சாமத்திலை வந்து கொண்டு. y
'என்ன என்ன புறுபுறுக்கிறே. ஆரு வந்தது."- கட்டிலில் சாய்ந்திருந்த வில்சன் ஐயாவின் குரல்
'அவள்தான். அந் த முடக்கிலை இருக்கிறவள். பிள்ளையையும் தூக்கிக்கொண்டு வந்திட்டாள். 9
** என்னவாம்....?"
"'என்ன தெரியாதா?. எதுக்கு வருவாள்.. ?" *" என்ன அவசரமோ..!? ஒரு ஐம் பது சதத்தைக் குடுத்து விட்டிருக்கலாமே"
இப்பொழுதுதான் அவள் மனத்தின் எ ங் கோ ஒர் மூலையில் முள் ஒன்று குத்தியது போ ன் ற உணர்வு ஏற் ، ازای ساسالا
'ஐம்பது சதத்திலைதான் கே ரா ட் ைட கட்ட ப் போறியே. குழந்தையைக் கண்டும் உ ன க் கு இரக்கம் வரேல்லை. " வில்சன் ஐயா ம னிதர் களைக் கொஞ்சம் புரிந்து கொண்டவர்.
கட்டிலைப் பார்த்தாள். அவளு ைட ய பிள்ளைகள் பிஜாமாவும் சுவெற்றரும் போட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தன.
ஓடிவந்து ஜன்னலைத் திறந்து தலையை வெளியே போட்டுப்பார்த்தாள்.
மரியம்மா இரண்டாவது புளொக்கைக் கடந்து செல் வது தெருவிளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. கைதட்டிக்

இதயங்கள் மோதுகின்றன 3
கூட்பிடலாமா என்று நினைத்தவள் ஏனுே அப்படிச் செய் யாது இருந்து விட்டாள்.
நினைப்பும் செயலும் வேறு பட்ட ைவ. அ ைவ இணைந்து செயல்படத்தான் வேண்டுமா ?
ஜன்னலைச் சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்த வில்சன் அம்மாவுக்குத் தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது. தேவனின் வாக்கே 19ரியம்மாவாக உருவெடுத்து நெஞ்சை உரைகல்லாக, மனதை விமர்சிப்பது பேன்றிருந்தது.
கிழக்கு வெளுக்கு மு ன்ன ரே, மீவத்துறைப் பகுதி விழித்துக் கொள்கிறது.
இரைக்க இரைக்க ஓடிவந்த ஒரு டீசல் புகைவண்டி பேராதனைச் சந்தி நிலையத்தில் ஒரு நீண்ட நெடு மூச்சை இழுத்துவிட்டு மேற்கு நோக்கி ஓடிவிட்டது,
தார் ருேட்டில் கார்களினது சவாரியும் சில மாணவர் களின் நடமாட்டமும் அதிகரித்து விட்டன.
லெக்சரர்களின் கார் களும் விருட்டென ஓடி மறைகின்றன.
பனிப்படலங்கள் அடித்த பஞ்சைப் போன்று நீந்திக் கரைந்து கொண்டிருக்கின்றன.
மரியம்மா ஒற்றையடிப் பாதையால் வந்து வில்சன் அம்மா இருக்கும் கு வாட் டர் ைஸ நோக்கி நடையை விட்டாள்.
அவள் நடையில் சோர்வு காணப்பட்டது. கங்காருக் குட்டியாகத் தொத்திக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தை யும் (அசாதாரணமாக) இன்று காணப்படவில்லை.

Page 24
32 தரிசனங்கள்
வீட்டின் முன்னல் டிரசிங்கவுனுடன் வில்சன் அம்மா நிற்பது தெரிகிறது.
வில்சன் ஐயா லெக் ச ரு க் கு ப் போய் இருக்க வேண்டும்.
உதய காலச்சூரியன் உடம்பில் படநிற்பது வில்சன் அம்மாவிற்கு எப்பொழுதுமே பி டி க்கு ம். அம்மாவிற்குச் சற்றுத்தள்ளி மேற்புறமாக நான்கு நாய்கள் நிற்கின்றன.
இரண்டு நாய்கள் புகைவண்டித் தொடர் நிலையில் . கூட இருந்த ஏனைய இரண்டு நாய்களும் முன்னங்கால்களால் வெகு ஆக்ரோசமாகப் புல்லோடு கூடிய தரையை வரண்டி வீசிக் கொண்டு நெடுமூச்சுடன் நிற்கின்றன.
"ச்சீ. சனியன்." . என்று முனங்கிக் கொண்ட அம்மா கீழே குனிந்து கல்லை எடுத்து எறிந்து அவற்றைக் கலைத்து விட்டுத் திரும்புகையில் மரியம்மா படியேறி வருவது தெரிகின்றது.
.இது. இன்று நல்ல முழிவியழம். P . . . . . . تمjk g » * என்று கூறிக் கொண்டு உள்ளே சென்று இரண்டு ரூபாய்த் தாளுடன் திரும்பினள்.
தூக்கம் வழி ந் த கண்களோடும், பரட்டைத் தலை யோடும், கந்தல் புடவையோடும் நின்றிருந்த மரியம்மாவைக் கண்டபோது அம்மாவிற்கே இரக்கம் வந்துவிட்டது.
'நேற்று ராத்திரில்லை வந்தபடியினல்தான். • V என்று சமாதானம் கூறும் பாவனையில் இரண்டு ரூ பாய் தாளை நீட்டுகிருள்.
'அம்மா நான் காசுக்கு வரேல்லை. இதற்குள்ளை கொஞ்சம் தேங்காண்ணை தாங்கம்மா. நேற்று ராத்திரி

இதயங்கள் மோதுகின்றன 33
தேங்காய். பிடுங்கிறதுக்கு மரத்திலை ஏறிவிழுந்து என்ரை 'pத்தது. ஆ. மோசம் போய்விட்டது. தலைமாட்டிலை விளக்குப் பத் த ைவ க் க கொஞ்சம் எ ன் னை தந்தால், போதும். * வார்த்தைகள் திக்கித் திக்கி வெளிவந்தன. கண்களில் நீர் பொல பொல வென கொட்டியது. அவள் சேலைத் தலைப்பால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
அதை முகம் கொடுத்துப் பார்க்க முடியாமல் போத் கலை வாங்கிக் கொண்டு உள்ளே சென்ற வில்சன் அம்மா வின் அந்தராத்மா இனம் புரியாத ஒரு கலக்கத்தில் துடித் தது. இதயத்தில் ஏதோ மோதிச் சிதறுவது போல் இருந்
点@·
தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்த வில்சன் அம்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் பாவனை யில் தலையைச் சற்றே தாழ்த்தி, அதை வாங்கிக் கொண்டு விறு விறென்று நடக்கிருள் மரியம்மா.
‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் ம்ே r ட் ச இராட்சியம் அவர்களுடையது யேசு வின் பொன்மொழி வில்சன் அம் மாவின் நெஞ்சில் நிழலாடுகிறது.
"நேற்றிரவு நான் காசு கொடித்திருந்தால் ஒருவேளை அந்தப் பையனுக்கு இது நடவாமலிருக்கலாம். " வில்சன் அம்மாவிற்குச் சிறுவைப்பாரத்தை விட அதிகமான பாரம் நெஞ்சை அமிழ்த்துகின்றது.
மரியம்மா தேங்காய் எண்ணெய் உடன் நுழைந்த போது பிணம் மாத்திரம் சாக்குத் துண்டில் விறைத்தபடி கிடந்தது.
சர்னேலிஸ் கி ராம சேவையாளரிடம் போயிருக்க வேண்டும்.
த. (நே.அ.) 5

Page 25
34 தரிசனங்கள்
அந்தோனி, ருேசலின், வயலட் ஆகியோர் குடிசைக் குப் பக்கத்திலுள்ள தென்னை மரத்தோடு சேர்ந்த கல்லுத் திண்டில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிருர்கள்.
மரியம்மா வி ள க் கி ற்கு திரி ஏற்றுவதற்காக பழம் புடவையைத் தேடினுள்.
"நான் இன்னைக்கு அண்ணுகிட்ட சொல்லி ரெண்டு குரும்பை குடிப்பேன். ** இது அந்தோனி.
*ம். ம்ம். நானும் ரெண்டு கேப்பேன். ஒருத்தருக் கும் பாதி கொடுக்கவே மாட்டேன்." என்றவாறே வயலட் தென்னை மரத்தை ஏறிட்டுப் பார்த்தாள். காய்ந்து தொங் கிய ஒலையொன்று கீழே விழ மனமில்லாது தொங் கி க் கொண்டே காற்றில் இங்குமங்கும் அசைந்தவாறே சரசரக் கின்றது.
ருேசலின் இருவரையும் பார்த்துக் கொண்டே இருந் தாள். ஒன்றுமே கூறவில்லை, இமைகளில் நீர் வரம்புகட்டி இருந்தது.
c2, . . . . . . ஐயோ.. என்று இதய வேதனையை வெளிப் படுத்தி இதய மோதல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு எண்ணெயை ஊற்றி விளக்கைப் பற்ற ைவத் துத் தலை மாட்டில் வைத்தாள்.
அச்சுடர் ஒரு கணம் காற்றிற்கு அசைந்து கொடுத்து விட்டு மேலெழுந்து எரியத்தொடங்கியது.
(யா வும் கற் பனை )

யந்திர பூமி
s
பா. சிவகடாட்சம் நேரம்
நண்பகல் 12.30
தினது உணவுத் த ட் டி ல் படைக்கப் பட்டிருக்கும் உணவு வகையருக்களை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந் தான் ராமலிங்கம். புழுங்கலரிசிச் சோறு, கத்தரிக்காய்க் கறி, முருங்கைக்காய் கூட்டு, மீன் குழம்பு, மீன் பொரியல். gruogólä6th GLC5 ep...... ச் . . . . . சு விட்டான்.
நாளை மத்தியானம் இந்நேரம் . நாகேசுவரி ஹோட்டலில், "மூணுவது மேசை மீன் குழம்பு’ என்ற செவிப் பறையை ஊடுருவும் அலறல்களுக் கிடையே, தன்முன்னே போட்டுக் கிடக்கும் வாழைச் சருகில் டொக்: டொக்: என்று விழப் போகும் பண்டங்களுக்கும் இதே பெயர்கள்தான் வைக்கப்பட்டிருக்கும். அதிசயம்தான் - இயந்திர மனிதர் களால் ஆக்கப்பட்டு, இயந்திர மனிதர்களுக்குத் திணிக்கப் படும்பொழுது உணவுப் பொருள்கள் கூடத் தம் தனித்தன் மையை, சுவையை இழ ந் து வெறும் எரிபொருள்களாக ஆகிவிடுகின்றனவே.
ராமலிங்கம் ஆயிரம் நினைவுகளோடு யாழ்ப்பாணத் துக்கு ரயில் ஏறினன். ரயிலில் அவனுக்கு இடம் கிடைக்க வில்லை. அதைப் பற்றி அவன் அப்பொழுது கவலைப்படவே இல்லை. தான் இருந்து வந்தான அல்லது நின்றுகொண்டே வ ந் தா ன என்பதுகூட அவனுக்கு இப்போது ஞாபகம் இல்லை அறிவுள்ள பி ர யா னி எப்பொழுதும் கற்பனை யிலேயே பிரயாணம் செய்துவிடுகிருஞம்: எண்ணக் கடலில்

Page 26
3 6 தரிசனங்கள்
மிதந்து ராமலிங்கம் வீடு வரும்பொழுது அப்படி ஒர் அறி வுள்ள பிரயாணியாகத்தான் இருந்தான்.
நாலு நாட்கள் எப்படிப் பறந்து விட்டன. இன்று மாலை மெயில் ரெயிலில் கொழும்பு திரும்பியாக வேண்டும். இப்போதெல்லாம் கொழும்பு யாழ்ப்பாணம் ரெயில் வண்டி களில் சனத்துக்குக் குறைவே இராது. ஏன்தான் இப் படி ஒடித் திரிகிருர்களோ தெரியாது. ரயிலுக்குள்ளே செள கரியமாக நின்றுபோகக் கூட முடி வ தி ல் லை. காங்கேசன் துறைக்குப் போய் ரயில் ஏ ஹி ன ல் தா ன் இருக்க இடம் கிடைக்கும்.
"'என்ன சாப்பிடாமல் யோசிச்சண்டு இருக்கிறியள். சாப்பிடுங்களன்" மனைவியின் குரல் கேட்டுச் சியநினைவுக்கு வருகிருன் ராமலிங்கம்.
"இனி எண்டைக்கு இப்படிச் சாப்பிடப் போறேனுே?
"ஏன் இப்படியெல்லாம் பேசிறியள். ' திலகம் பதற் றத்தோடு அவனைக் கண்டிக்கிருள். தன்னை அறிய T 1 ல் ஏதோ உளறிவிட்டதை அவன் உணருகிருன் .
'ஒன்றுமில்லை தி ல கம். லீவு முடிச்சுட்டுது. ஏதோ இந்தக் கிழமை சனியும் திங்களும் விடுதலை வரப்போய் லீவு எடுக்காமலே இஞ்ச வரமுடிஞ்சுது. இனி எப்ப வரக்கிடைக் குதோ எண்டுதான் சொன்னஞன்",
சாப்பிட்டு முடித்துவிட்டு வெளிவராந்தாவில் வந்து உட்கார்ந்த ராமலிங்கம், எதிரே ருேட்டுக்கு மறுபக்கத்திற் பரந்து கிடந்த தோட்டங்களின் பசுமையில் லயித்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். தோட்டத்தில் புகையிலைச் செடி களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும் அந்த மனிதர்

யந்திர பூமி 37
களின் வாழ்க்கை தனக்குக் கிடைக்கவில்லையே என்பதற்காக இப்போது அவன் ஏங்கினுன்
விடியற்காலை ஆறு மணிக்கு எழும்பினுல் தான் எட்ட ரைக்கு முன்னர் ஒஃபிசுக்குப் போக முடியும் என்ற கட்டா யம், ஏதோ அந்தத் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்குக் இல்லை. விரும்பிய நேரம் அவர்கள் எழும்பிக் கொள்ளலாம் மூன்ரைக் கலன் தண்ணிரில் காலைக் கடன்கள் முழுவதையும் செய்து முடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லே. ஒரு முழுக்கிணற்றுத் தண்ணிரையும் இறைத்து அவர்கள். நீராடிக்கொள்ளலாம்.
காலை உணவுக்காக-மூன்று இடியப்பத்துக்கும் இரண்டு வடைக்கும் - கணேஷ விலாஸில் முப்பது நிமிடங்கள் காத்தி ருக்க வேண்டிய தலைவிதி அவர்களுக்கு இல்லை. மத்தியானம் பன்னிரண்டரை மணி க்கு நாகேசுவரி ஹோட்டலில் மூணுவது மேசை மீன் குழம்பு, என்ற செவிப்பறையை ஊடுருவும் அலறல்களுக்கிடையே எரிபொருளப் போட்டுக் கொண்டு, காலை, முத னு ஸ், அதற்குமுதனுள் அதற்கு முதனளுக்கு முதனுள் செய்த வேலையே திரும்பவும் செய்து முடித்துவிட்டு.
நினைக்க நினைக்க ராமலிங்கத்துக்குத் தன்னைப்பெற்ற வர்கள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘இவன் படிக் கிருனில்லை. இவன் தோட்டஞ் செய்யத்தான் லாயக்கு” என்று திட்டிக் கொண்டே எ ன் ஃன ப் பற்றி வருவோர் போவோர் எல்லோரிடமும் முறையிட்டு என்னை இரவும் பகலும் படிக்க வைத்தாயே அப்பா, நீ போகும் கோயிலுக் கெல்லாம் என்னையும் இழுத்துக் கொண்டு போய், பெயர் ராம்லிங்கம், நட்சத்திரம் திருவோணம் என்று பெருமை யுடன் ஐயரிடம் சொல்லி அருச்சனை செய்துவித்து, கவுண் மேந்து வேலை "எனக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காகக் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து வந்தாயே அம்மா! உங்கள்

Page 27
38 தரிசனங்கள்
விருப்பத்தின் படி இன்று நான் கவுண்மேந்து உத்தியோகத் தன். அதேநேரம் வருடத்துக்குப் பத்து நாளேனும் உங் களோடு சேர்ந்திருந்து உணர்வும் பாசமும் உள்ள மனித ணுக வாழ முடியாமல் தவிக்கும் யந்திரமும் கூட. எ ன் னை இப்படி ஆக்குவதற்குத்தான் அப்படி துடியாத் துடித்தீர் களா?"
‘இன்றைக்கு என்ன பிடுத்து விட்டது உங்களுக்கு ? ஏதோ எலெச்சனில் தோத்தவன் மாதிரி யோசிச்சண்டு. திலகம் அவனைப் பிடுத்து உலுக்குகிருள்'
நேரம் பிற்பகல் 5.30
ஒரு பெருமூச்சுடன் கதிரையை விட்டு எழும்புகிருன் ராமலிங்கம். ரெயிலுக்கு இன்னமும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு. 'திலகம், என்ர உடுப்புகளை எடுத்து சூட் கேசுக்குள்ள அடுக்கு" என்று மனைவியிடம் உத்தரவிடுகிறன். வழக்கம் போல், ""நாளைக்கு ஒரு நாள் லீவு போட்டு நில்லுங் க்ளேன்' என்று திலகம் இ ன் றும் கெஞ்சுவாள் என்று எதிர்பார்க்கிருன் ராமலிங்கம்.
அவளோ
அவனுடைய உடுப்புகளை எ டு த் து ஒவ்வொன்ருகச் சூட்கேசுக்குள் அடுக்கத் தொடங்குகிருள் விரக்தியுடன், வர்ளியைத் தூக்கிக்கொண்டு கிணற்றடிக்குச் செல்லுகிருன் ராமலிங்கம். திலகம் மறித்து தான் இருப்பாள். லீவு இல்லை பெண்டதும் பயந்துவிட்டாள் போல் இருக்குது. பா வம் திலகம். அவளை யும் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போகலாம்தான். என்ன செய்வது? கலியாணம் முடித்த புதிதில் அவளோடு ஒரு ஆறுமாதம் கொழும்பில இருந்து பார்த்துவிட்டுத் தானே கட்டுப்படியாகாமல் ஊ ரு க் கே கொண்டு வந்துவிட வேண்டியதாயிற்று. எ ண் ணங்க ள் எங்கேங்கோ தாவுகின்றன.

யந்திர பூமி 3g
முதனட்காலை, ஊர்காவற்றுறைக்குப் போவதற்காகச் சரவணைச் சந்தியில் பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்து நின்ருன்' ராம லிங்கம். அவனேடு கூட இ ன் னு ம் இரண்டொருவர் நின்றிருந்தார்கள். ஒரு கிழவி, எழுபது வயது இருக்கும்-தன் புரு ஷ னை யும் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு பஸ் தரிப்பு நிலையத்துக்கு வருகிருள். குணுகுணுத்த மூ க்கு ம் குறுகுறுத்த கண் ணும் முணுமுணுத்தவாயுமாக வரும் கிழவியின் தோளில் ஒரு கையும் மறுகையில் தடிக்கம்புமாகத் தலையும் நடுக்கித் தள்ளாடி வரும் அந்தக் கி ழ வ னு க்கு எண்பது வயதுக்குக் குறையாமல் மதிப்பிடலாம்
கிழவிக்கு அறிமுகமான ஒருவர் கேட்கிருர்,
"என்ன செல்லம்மாக்கா, இந்த வயதில கிழவனையும் இழத்துக்கொண்டு எங்க வெளிக்கிட்டுட்டாய்?"
'கிழவனுக்கு வர வரப் பிடிவாதம் கூடிக் கொண்டு வருகுது. குழந்தைப்பிள்ளை மாதிரி ஒரு நிமிஷம் எ ன் னை விட்டுட்டு இருக்க மாட்டுதாம். என்ர கடைக்குட்டிபிள்ளைப் பெத்துக் கிடக்கிருள். அவளுக்கு உ த வி யாய் ரெண்டு மூண்டு நாள் இருந்துட்டு வருவம் எண்டு வெளிகிட்ட்ால் தானும் வாறனென்டு வெளிக்கிட்டுது', கிழவி தன் புரு ஷனைப் பற்றி முறைப்பாடு வைக்கிருள். அந்த முறைப் பா ட் டி ல், அத் தம்பதிகளின் கள்ளங்கபடமற்ற அன்பு, பாசம், அந்தப் பாசத்தின் அடிப்படையில் எழுந்த பெருமி தம் அனைத்தையும் உணர்து கொண்டான் ராமலிங்கம். வாழ்நாளில் என்றுமே பிரியாது வாழ்ந்துவரும் தம்பதிகள் அவர்கள். அவனும் திலகமும்
கிணற்றடியில் இருந்து திரும்பிவரும் பொழுது ராம
லிங்கம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இன்னும் ஒரு நாளைக்கு இங்கு நின்றுவிட்டுச் சாப்பாட்டையும் Qiu Sover

Page 28
40 தரிசனங்கள்
சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். சம்பளத்தில் வெட்டினுல் வெட்டட்டும். மனுசன் நிம் ம தி யா நாலு நாளைக்கு வீட்டில இருக்கக் கூடாதா? இன்று தங்கி நாளே பயணம் செய்யும் தனது முடிவை மனைவியிடம் ைந சா சு வெளியிடுகிருன் ரா ம லிங் கம். ஆம் பல் மலருகின்றது. அவள் அவனைப் பார்த்துக் குரும்பாகச் சிரிக்கிருள்.
**எட தம்பி, நாளைக்கு அட்டமி நவமியடா, போற தெண்டால் இண்டைக்குப்போ, இல்லாட்டி நிண்டு, வாற புதன்கிழமை போ", பெற்றவளின் உ த் த ர வு கேட்டுப் பேதவித்து நின்ருன் ராமலிங்கம், ஆம்பல் மறுபடி கூம்பு கின்றது. அந்த நேரம் பார்த்துத்தான அடுத்த வீட் டு ச் சிவசம்பர் அங்கு வரவேண்டும்,
'வாருங்கோ என்ன விஷயம்"
'ஒன்றுமில்லைத் தம்பி. கொழும்பில, தன்ர புருஷனுக்
ருக் குடுக்கிறதுக்காக ஒரு பார்சல் தந்து விட்டிருக்கிருள்
என்ர மகள். உங்களுக்குக் கரைச்சல் இல்லாடி.." சிவசம்பு இழுக்கிருர்,
ரயமலிங்கத்துக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வரு கிறது. ஒருவாறு அதை அடக்கிக் கொள்கிறன்.
**நான் பாருங்கோ, இ ன் னு ம் ரெண்டு மூன்று நாளைக்கு லீவு போட்டுட்டு நிக்கிறதா யோசித்திருக்கிறன். இஞ்ச கொஞ்சம் வேலை இருக்கு."
“அதுக்கென்ன பரவாயில்லை, இவன் சிற்றம்பலமும் இண்டைக்குப் போறதெண்டவன். அவனிட்டக் குடுத் து

யந்திர பூமி 4,
விடுவம். உங்களுக்கென்ன தம்பி, க தி ைர யி ல இருந்து கொண்டு காசு சம்பாதிப்பியள். நினைச்ச நேரம் லீவு எடுப் பியள். நாங்கள் மா டு மாதிரி உழைத்தாலும் ஒரு நூறு ரூபாவை முழுசாகப் பார்க்க முடியாது. ஏதோ புண்ணிய வாங்கள் இப்பவாவது வெங்காயத்தை அங்கால கொண்டு போக விடுருங்கள். சரி, அப்ப நான் வாறன்’’. சிவசம்பு விடைபெற்றுக் கொள்கிருர்,
ராமலிங்கம் விரக்தியுடன் சிரித்தான். “காசு சம்பா திப்பதுதான் வாழ்க்கையா? மரங்கள், மாடுகள், யந்திரங் கள் - இவை கூடக் காசு சம்பாதிக்குமே.
ராம லிங்கம் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.
“என்ன லீவு இல்லையெண்டு சொன்னியள். இப்ப மூண்டு நாளைக்கு நிக்கிறதெண்டு. "" திலகம் கேட்கிருள்
'வீவாவது, மண்ணுங்கட்டியாவது, யாருக்கு வேண் டும் அந்த. திலகம் நான் ஒரு முடிக்கு வந்து விட்டன்'
6T6irgOT airlib'
*"நான் பென்ஷன் எடுத்துக்கொண்டு வீ ட் டே (ா ட இருக்கப் போறன். எங்களுக்குத்தானே புகையிலைத் தோட் டம் இருக்கு. வெங்காயம், மிளகாய் என்று பயிர் செய்யக் காணியும் கிடக்கு, அதுகளை நான் பார்த்துக் கொள்ளுறன். அந்த வருமானம் எங்களுக்குப் போதும்' ரா ம லிங் கம் சொல்லி முடிக்கவில்லை; திலகம் துள்ளி விழுகிருள்
**நல்ல கதை க ைத க் கிறிய ள். காசு இருந்தால் போதுமா? ஊர்ச்சனம் பிறகு மதிக்குமா எங்களை'
த.(நே.அ.) 6

Page 29
42 தரிசனங்க
நேரம்=
நள்ளிரவு 12.30
யாழ்ப்பாணம் - கொழும்பு மெயில் ரெயினில் நின்று கொண்டே நித்திரை கொள்ள முயற்சிக்கிருன் ராமலிங்கம். தன்னேடு கூட வரும் தூற்றுக்கணக்கான ராமலிங்கங்களைப் பார்க்க அவனுக்கு ஏனே பரிதாபமாக விருக்கிறது.
ரெயின் இப்ப அனுராதபுரத்துக்குக் கிட்டப் போயி ருக்குமோ? -
தூக்கம் வராமல் புரண்டு படுக்கிருள் திலகம்.
நேற்றிரவு இந்நேரம். எ ண் ண ங் களு க் குத் தளைகள் கிடையாதே.
(யாவும் கற்பனை )
 

(Ք. கோவிந்தராஜன்
நான
சந்தியில் நிற்கிறேன்
விழுந்தையில் இருந்து மாக் சிம் கார் க் கி யி ன் "அன்னையை வாசித்துக் கொண்டு, மக்க ள் புரட்சிக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு முதிய தாயின் வீரக்காவியத்துள் மூழ்கி இருந்த என்னைப், பாடலை திறக் கும் கிறீச்" என்ற ஒலி நிகழ்காலத்தினுள் இரு க் கி றது. நிமிர்ந்து பார்க்கிருரன்.
குட்டியன் வருகிருன் - பெயர்தான் குட்டியனே தவிர ஆள் குட்டையல்ல. நல்ல கரிய, நெடிய உ ரு வம். ஒளி பொருந்திய கண்கள். நெற்றியிலும் உடலிலும் திருநீற்றுப் பட்டை, வலக்கரத்தின் தோளுக்குக் கீழ் உள்ள பகுதியில் அச்சடித்தாற்போல் ‘நீதவான்" என்று சோக்கால் எழுதி இருக்கின்றது.
நீதிதேவனே வந்தாற் போல் ஒவ்வொரு அடியையும் கம்பீரமாய் எடுத்து வைத்த வண்ணம் வருகிருன் , என்னை

Page 30
44 தரிசனங்கள்
அறியாமலே நான் எழுத்து நிற்கிருன். அவன் முற்றத்தில் வந்து நிற்கின்ருன்.
'வா, குட்டியன்'
'தம்பி எப்ப வந்தனிங்க?"
"காலையில்தான் உள்ளுக்கு வாவன்"
அவன் சிரிக்கிருன். அது ஒருவகைப் புன் சிரி ப் பு. எனது அழைப்பிற்கு அந்தச் சிரிப்புத்தான் பதில். எனக்கு மீண்டும் அ ைழ க்க வேண்டும்போல் இருக் கி ன் றது. அவனின் கண்களை உற்றுப் பார்க்கிருன். அதில் ஒரு மகத் தான ஒளி என்னை மயக்குகிறது. எ ன க் கு வார்த்தைகள் வர மாட்டேன் என்கின்றன. "தான் தாழ்ந்த குலத்தவன் என்ரு இவன் உள்ளே வராமல் முற்றத்திலேயே நிற்கின் முன் - இருக்காது.
இந்த வீட்டுக்குள் நுழைவதற்கு இவனுக்குத் தகுதி இல்லாமல் இல்லை. இவன் நுழைவதற்கு இந்த வீடுகளுக்குத் தகுதி உண்டா ? எனது உள்மனம் என்னைக் குடைகிறது.
மீண்டும் படலை திறக்கும் "கிறீச்" என்ற ஒலி. நான் படலையைப் பார்க்கிறேன். அன்னம் மாமி வருகின்ரு. சுமார் அறுபது வயது இருக்கும். வாழ்க்கையை நன்ரு ய் அனுப வித்த திருப்தியோ, அன்றேல் "போதும்" என்ற நிறைவோ இல்லை நடையில் ஏதோ ஒரு அவசரம். வரும்போதே ‘தம்பி, எப்ப வந்தனிங்க அவர் கேட்ட அவசரம் என்னையும் தொற் றிக் கொள்ள "காலையில்தான்" என்கிறேன்.
நடையின் கதியில் எந்தக் குறைவும் இன்றி அதே அவசரத்தில் உள்ளே நுழைகின்ரு. நு ைழ யு ம் போதே ‘தங்கச்சி, குட்டியன் வந்து நிக் கி ரு ன்' என்று கூறிக் கொண்டே செல்கின்ரு.

நான் சந்தியில் நிற்கிறேன் 会5
நான் குட்டியனைப் பார்க்கிறன் ஏதாவது க ைத க்க வேண்டும் போல் இருக்கிறது.
"குட்டியன் ஒரு தேவாரம் பாடன்'" நான் கதையை ஆரம்பிக்கிறன்.
*தம்பி, நான் இன்னும் குளிக்கவில்லை"
“குளிக்காமல் நீ தேவாரம் பாடுறதில்லையா ?”
'இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நியதி இருக் கிறது"
'எனக்குத் தேவாரத்தில் பற்றில்லை உன் குரலில்தான் பற்று சரி ஏதாவது பாட்டுப் பாடன்”
அவன் என்னைக் கூர்ந்து பார்க் கிறன். அந்தப் பார்வை என்னைக் குத்துகின்றது.
**நீ என்ன நாஸ்த்திகளு?' அவன்தான் கேட்கிருன்.
ததகளு r- O
‘நான் நாஸ்த்திகனல்ல ஆனல் ஆஸ்த்திகனுமல்ல'
அவன் பெரிதாகச் சிரிக்கிருன்.
* தம்பி, நீ நீயே அல்ல, ஆனல் தம்பி, நாஸ்த்திக ஞயிருந்தால் நீ உன்னை மட்டு ம் த ரா ன் நம்பி இருக்க வேண்டும். ஆஸ்த்திகளுயிருந்தால் கடவுளையும் நம்பலாம் அதாவது ஒரு ஊன்று கோல்கூட அவ்வளவுதான்'
நான் திகைத்துப் போய் விடுகிறன். ஊரார் பைத்தி யம் என்று வர்ணிக்கும் குட்டியனின் வாயில் இருந்து பைபிள் வாசகங்கள். ‘தங்கச்சி சீட்டுக்காசைக் கெதியாய்த்தாம்மா" மாமியின் குரல் பின்னே கேட்கிறது. அக்கா வாழை இலை பில் பிட்டும் கறியும் கொண்டு வருகின்ரு பின்னல் மாமி யும் வருகின்ரு.

Page 31
玺G தரிசனங்கள்
வாழை இலை மிகவும் துப்பரவாய்க் கழுவி இருக்கி றது. பிட்டு கை மாறுகிறது. குட்டியனுக்கு எல்லாமே துப் பரவாய் இருக்க வேண்டும். சாப்பாடு கொடுப்பதாஞலும் வாழை இலையில்தான் கொடுக்க வேண்டும். அவன் வாய் திறந்து யாரிடமும் எதையும் கேட்டதை நானறியேன். எப்போதாவது இப்படி வந்து நிற்பான். அப்போது ஏதா வது வாழை இலையில் கொடுத்தால் வேண்டி ம் டி த் து க் கொண்டு போவான். அவன் எவருடைய வீட்டிலுல் இருந்து சாப்பிட்டதையும் நான் கண்டதில்லை.
'தங்கச்சி, மாட்டுக்குத் தண்ணி வைக்க வேண்டும் கெதியாய்த்தாம்மா' மாமிதான் அக்காவிடம் கேட்கின்ரு இருவரும் உள்ளே போகின்றர்கள்.
நான் குட்டியனைப் பார்க்கிறேன்.
'பார் தம்பி, மாமியின் அவதியை, இந்த வயதிலும் அவசரம். இந்த வயதில்கூட ஆட்டிலும் மாட்டிலும் பற்று' அவன் கூறிக்கோண்டே திரும்பிப் போகிருன்.
நான் அவனையே வெறித்துப் பார்க்கிறன். அவ ன் படலையைத் திறந்து தெருவில் இற ங் கி என்பார்வையில் இருந்து மறைகிருன்.
''. . . . . . இந்த வயதில்கூட ஆட் டி லும் மாட்டிலும் பற்று" அவன் கூறிச் சென்ற வார்த்தையை நான் முணு முணுக்கிறன். என் நெஞ்சு அவனையே நினைக்கிறது.
நான் சிறுவனய் இருந்தபோது, ச ந் தி யி ல் நின்று கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு, ஏ தே தோ கூறிக்கொண்டு நிற்பான். சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து கல்லால் அடிப்போம். அவன் எ ங் களை த் துரத்துவான். நாங்கள் ஒ டு வோ ம், ெகா ஞ் ச த் தூரம் துரத் திய பின் அவன் நி ன் று விடு வான். எங்களைப் பிடித்து

நான் சந்தியில் நிற்கிறேன் 47
அடிக்க வேண்டும் என்ருல் அவனுல் முடியும். அவன் அப் படிச் செய்யவில்லை.
ஒருநாள் நான் கடைக்குப் போய் விட்டுத் தெருவால் வந்து கொண்டு இருந்தேன். அவன் எதிரே வந்து கொண்டி ருந்தான் “குட்டியன் கூட." நான் கூவினேன்.
“என்னடா, என் வயதென்ன, உன் வயதென்ன நீ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடவா"- அகங்காரத்துடன் என்னை முழிந்து பார் த் தா ன். நான் பயந்து போய் விட்டேன். சுமார் பத்து வருடங்கட்கு முன்பு நடந்தது.
அதன் பின்பு அவனை நான் காணவில்லை. இப்போது இரண்டு வருடங்களாய் மீண் டு ம் வந்திருக்கிருன் எங்கு போனன், என்ன செய் தா ன், எப்படி வந்தான் என்று எவருக்கும் தெரியாது. மீண்டும் வந்திருக்கிருன்,
முன்பு மனைவி குடும்பம் என்றெல்லாம் வாழ்ந்தவனும் வீடும் எங்கள் தெருவின் முடி வில் தா ன் இருந்ததாம். இப்போ ஒன்றுமே இல்லை.
ஒவ்வொரு நாள் மாலையிலும் தெருவில் நடந்தபடியே தேவாரம் பாடுவான், அவனின் குரல் மிக வும் இனிமை யானது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக் கும் அன்ருெரு நாள், நானும் அத்தாரும் எங்கள் படலைக்கு முன்னுல் தெருவில் நின்ருேம். அவ ன் பாடிக்கொண்டே வந்தான். அவனை நிற்கும்படி அத்தார் கையால் காட்டினர். அவன் நின்றன் ஆணுல் அவன் பா டி க் கொண்டு வந்த புராணம் நிற்கவில்லை.
*.புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருஷ்சமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய். நிறுத்தி விட்டு ாங்களை உற்றுப் பார்த்தான்.

Page 32
全& தரிசனங்கள்
எங்களுள் மனிதர்களைத் தேடிஞனே ?
மீண்டும் பாடத் தொடங்கி விட்டான். புரா ன ம் முடிய சிறிது நேரத்திற்குப்பின்.
"என்ன தம்பி, சுகமாய் இருக்கிறியளே ??
"குட்டியன், இவ்வளவு அழகாய்ப் பாடுருேய, உன்னை இந்த ஊரெல்லாம் பயித்தியம் எண்டுதே அத்தார் தான் கேட்டர்.
"ஒட்டிக் கொண்டு இருப்பவர்கட்கு உதறி விட்டவன் பயித்தியம். உதறி விட்டவனுக்கு ஒட்டிக் கொண்டு இருப் பவர்கள் பயித்தியம்' அவன் கூறிவிட்டுப் பெரிதா ய் ச் சிரித்தான்.
நானும் சிரித்தன். நான் ஏன் சிரித்தன் என்று எனக் குத் தெரியவில்லை அத்தார் சிரிக்கவில்லை ஆளுல் மீண்டும் கதையைத் தொடக்கினர். வேண்டும் என்றே வம் புக் கு இழுப்பற் போல்;
"ஏன் குட்டியன், நீ என்ன பெரிய நீதவானே ?"
* தம்பி யார் நீ த வான் என்பது பிரச்சனையல்ல. எனக்குத் தெரியும்; கடவுள் ஒருத்தன்தான் எல்லாம். அவன் ஒருத்தன்தான் எல்லோருக்கும் நீதவான்; ஆன ல் இங்கு இருக்கிற பகற் கொள்ளைக்காரங்களுக் கெல்லாம் நான்தான் நீதவான். இந்த ஊரில எத்தனை கொள்ளைக்காறர் இருக் கீனம் தெரியு மா? மணியத்தார், கந்தையர், செல்லர், எல் லோரும் வியாபாரம் என்ற பெயரில பகற் கொள்ளைதானே அடிக்கீனம். அவையஞக்கெல்லாம் நான்தான் நீதவான்" அவன் கூறிவிட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். நானும் வேண் டும் என்றே சிரித்தேன். அத்தாருக்கு சிரிப்பே வரவில்லை.
அவரும் ஒரு வியாபாரி.

நான் சந்தியில் நிற்கிறேன் 49
அவன் போய் விட்டான்.
சென்ற முறை ஊருக்கு வந்தபோது யாரோ ஒரு
உறவுக்காரரின் இழவு வீட்டுக்குப் போனேன். அங்கு குட்டி யன்தான் முன்னுக்கு நின்றன். எல்லா இழவு வீடுகளிலும் அவனைக் காணலாம். இழவு வீடுகளில் மட்டுமல்லாது சுடலை வரை சென்று அந்த உடல் எரிந்து முடியும் வரை தேவாரம் பாடிக் கொண்டு இருப்பான் எ ன் று ம் கேள்விப்பட்டிருக் கிறன். அவனுக்கு உயிர்களில் பேதம் கிடையாது. எல்லா உயிருக்காகவும் அவன் பிரார்த்திப்பான் நான் அவனுடன் கதையைத் தொடக்கினேன்.
"என்ன குட்டியன் நீ இல்லாமல் ஒரு இழவு வீடும் ஒப்பேருதுபோல'
'தம்பி, இந்தா இறந்து கிடக்கின்ற செல்லத்துரை யரை உ ன க் குத் தெரியும்தானே. அவர் இன்டையோட இந்த உலகத்தில பாவம் விதைக்கிறதை நிற் பா ட் டி க் கொண்டு இந்த உலகத்தை விட்டே போ கி ரு ர். பாவம் விதைப்பது நிறுத்தப்பட்டதுக்கு ஒரு கொண்டாட்டம்தான் இந்த இழவு வீடு. ஆனல் அங்க பார் அந்தப் பெண்டுகளை சுற்றி இருந்து ஒப்பாரி வைக்கீனம், ஒரு த் தன் பாவம் விதைப்பது நிறுத்தியது எ த் த னை பாவியளுக்கு வருத்தம் பாத்தியா. இந்த ஊரில பாவ நிறுத்தக் கொண்டாட்டம் ஒவ்வொன் டிலும் எனக்குக் கலந்து கொள்ள வேனும் போல இருக்கு' அவன் கூறி நிறுத்தினன்.
'பயித்தியம் நல்லாப் பேசுது' பக்கத்தில் நின்ற என் நண்பன் சுந்தர் தான் கூறினன்.
'பயித்தியம் பேசுறது சில பயித் திய ங் களுக்கு நல்லாய் இருப்பது போலவும் தெரியுது" குட்டியன் கூறி
க.(நே.அ.) 7

Page 33
50 தரிசனங்கள்
விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். நான் இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தேன்.
இந்த முறை வீட்டுக்கு வந்தவுடனேயே அவனைச் சந் திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துவிட்டது அவன் கடைசி யாகக் கூறிவிட்டுச் சென்ற வார்த்தையை மீண்டும் மனம் நினைக்கிறது.
1.இந்த வயதில்கூட ஆட்டிலும் மாட்டிலும் பற்று" என்னை அறியாமைலே படலையைத் திறந்து கொண்டு தெரு வில் இறங்கி, முன்னே இருக்கும் சந்திவரை வந்துவிட்டேன் சந்தியில் இருக்கும் கடையின் விருந்தையில் குட்டியன் நிற் கிருன் அன்னம் மாமியின் மூத்த மகள், பெரிய மச்சாள், கடையில் ஏதோ வேண்டிக் கொண்டு நிற்கின்ரு.
வடக்குத் தெருவால் மாமி வந்து கொண்டு இருக் கின்ரு, அது ஒட்டமா அல்லது நடையா என்று என்னல் நிதானிக்க முடியவில்லை. பறந்து வந்து கொண்டிருக்கின்ரு என்றுதான் சொல்லவேண்டும்.
"இந்த ம னி சி ஏன்தான் இந்த வயதிலும் இப்படி ஒடித்திரிகின்றதோ தெரியவில்லை” இவனுக்கு என்ன குறை சும்மா வீட்டில் இருந்து காலை நீட்டிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே!- எனது உள்மனம் சொல்லிக் கொள் கிறது.
அவர் ஒரு இடத்தில் நிம்மதியாய் நின்றதையே நான் பார்த்ததில்லை. எப்போதும் அவளும் எ ைத எதையோ சாதித்து விட வேண்டும் எ ன் ற தவிப்பு. என் பிள்ளை, என் பேரன், என் மருமகன், எல்லாம் ஒரு என்னுடன் தான் மாமியின் வாயில் இருந்து வரும் எனக்குச் சில வேளை களில் சிரிப்பு வருவதுண்டு.
நான் குட்டியனுக்குப் பக்கத்தில் போய் நிற்கிறன்.

நான் சந்தியில் நிற்கிறேன் 5 I
"என்னடி பிள்ளை இப்பதான் கடைக்கு வந்தனியே! பிள்ளையஸ் பள்ளிக்கூடத்தால வ ர ப் போகுதுகள். இனித் தான் போய் உலை வைக்கப் போறியோ!" மாமி மச்சாளி டம் கூறிக்கொண்டு நிற்கின்ரு. மச்சாள் திரும்பிப் பார்க் கிரு. ‘நான் கனகத்தட்டைப் போய் சீட்டுக்காசு வேண்டிக் கொண்டு வாறன் தெதியா வீட்டபோ' மாமி சொல்லிக் கொண்டே திரும்பவும் வடக்குத் தெருவால் அதே பழைய வேகத்துடன் போகின்ரு. அவரால் தெற்கால் போக முடி யாதோ ? .
மச்சாள் சாமான்களை கையில் எடுத்துக் கொண்டு, ** எப்படி மச்சான், என்ன நல்லாய் வயக்கெட்டுப் போன. பிள் ளை ய ள் பள்ளிக்கூடத்தால வரப்போகுதுகள் நான் வரட்டே' கூறிக்கொண்டே, எனது பதிலுக்குக்கூடக் காத் திராமல் தெருவில் இறங்கி, வடக்குத் தெருவால், மாமிக் குப் பின்னல் மாமியின் வேகத்துடன் நடக்கின்ரு.
குட்டியனும் தெருவில் இறங்குகிறன். நானும் இறங் கிச் சந்திக்கு வருகிறன்.
'தம்பி, பாத்தியே மாமிக்குப்பிள்ளை, பேரப்பிள்ளை ஆடு, மாடு எல்லாவற்றிலும் ஆசை. மச்சாளுக்குப் பிள்ளை களில் ஆசை மச்சாளும் மாமியைப் போல் வரேக்க ஆட்டி லும் மாட்டிலும்கூட ஆசை வரும் பற்று பரம்பரை பரம் பரைய் வருகுது நான் இப்படிப் போறன்' அவன் கூறிக் கொண்டு தெற்கே போகிருன்,
நான் சந்தியில் நின்று வடக்கே பார்க்கிறன். மாமி யும் மச்சாளும் தூரத்தே போய் விட்டார்கள். இருந்தாற் போல் அவர்கள் இரண்டு போரும் எ ன் னு ள் சிறுத்துப் போகின்ருர்கள். s

Page 34
52 தரிசனங்கள்
இரண்டு சிறிய கரிய புள்ளிகள்.
நான் தெற்கே திரும்புகிறன். என்றும் இ ல் லா ம ல் தெற்கே பென்னம் பெரிய வெளி என்னுள் விரிகிறது. ஒரே வெளி. அதன் நடுவே அந்த நெடிய உருவம் மிகவும் நிதான மாசுக் கம்பீரத்துடன் மெது வாக அசைகின்றது. ஏதோ ஒன்று என்னைத் தாக்குகிறது. என் உடல் எல்லாம் நடுங்குகிறது. வாயைத் திறந்து கத்தவேண்டும் போல் ஒரு உந்தல். வார்த்தைகள் வெளிவர மறுக் கி ன் ற ன. நான் சுற்றுமுற்றும் பார்க்கிறன் .
நான் தட்ட நடுச்சந்தியில் ஒரு மயக்கத்தில் நிற்கிறன். வடக்கே போக எனக்கு ம ன மி ல் லை. தெற்காகப் போக வேண்டும் போல் இருக்கிறது. கால்களை எடுத் து வைக்க முடியவில்லை. நான் அசையாது சந்தியில் நிற்கிறேன்.

சிறுகதை
வீட்டிலும் வெளியிலும்
----
துரை மனுேகரன்
'மாமி Lorruf)!......
விடியற் காலையிலேயே அழைப்பு. வந்து பார்த்தேன்; பத்மினி,
எங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வீடுகள் தள்ளி யிருக்கும் தனலட்சுமியின் மூத்த மகள்.
காலையின் தேநீர் வேளை வேலை.
அவள் குரல் குசினிக்குள் வந்தது. நான் வெளியே வந்தேன்
“என்ன, பத்மினி ?"
மி, of Dissol oÂ585F} அ ம் if 6ы актр மாய் வந்திட்டுப் (if all-nrib'
*ஏன், என்னத்துக்காம்?"

Page 35
54 தரிசனங்கள்
“என்னத்துக்கெண்டு தெரியாது; அம்மா வந்திட்டுப் போகச் சொன்னவை.
மனத்தில் வெறுப்பின் ஊற்றெடுப்பு. அதை மறைக் கும் எனது முக முயற்சிகள்.
*சரி; மாமாட்டைச் சொல்லுறன்”
பத்மினி போய்விட்டாள்.
அவர் உடம்பை நீரில் நனைக்கும் வேலையில், குசினிக்
குள் மீண்டும் எனது காலடிகள் கூப்பனுக்குக் கொடுக்கும்
மண் சீனி கொஞ்சங் குறைவாகத் தேநீருள் நனைக்கப்படு கிறது. கரண்டியால் மொதுவான கலக்கல்.
மூத்தவள்
கண்ணைக் கசக்கிக் கொண்டு வ ரு கி ரு ள். எட்டாம் வகுப்பு; 'பெரிய பிள்ளை ஆகுகிற வயது.
"ராதா, இவ்வளவு நேர மாய் என்ன நித் தி ைர ? இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை எண்டாப்போலை மூசி மூசி நித்திரை கொள்ளுறதே ? . எங்கை மற்றதுகள்?. அதுகளையும் எழுப்பிவிடன்”
அவள் திரும்புகிருள். மற்றவர்களை நித்திரையால் எழுப்புவதற்குச் செய்யும் முயற்சிகள் ங் கே யும் கேட் கின்றன. .
நான் தேநீரை ஆற்றிவிட்டேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும் பி உபயோகிக்கும் பேணிகளில் ஊற்று கிறேன்.
'அம்மா, அக்கா அடிக்கிருள், அம்மா”
-ஒப்பாரி.

வீட்டிலும் வெளியிலும் 55
நித்திரை வெறியில் வந்து கொண் டி ரு ந் தான், கண்ணன். ராதாவுக்கு அடுத்தவன்; ஆரும் வகுப்புப் படிக் கிருன்.
*இல்லையம்மா, நான் நிந்திரையாலை எழும்படா!" எண்டு கட்டி எழுப்ப, அடிச்சுப் போட்டன் எண்டு வந்து பொய் சொல்லுருன்” - என் மூத்தவள்.
* உங்கடை விலக்குத் தீக்க என்னுலை ஏலாது. போய் முகத்தைக் கழுவிப்போட்டு வந்து, தே த் தண் ணியைக் குடியுங்கோ’ - நான்.
இருவர் கைகளிலும் உமிக்கரி. அதிலும் போட்டி.
“ராதா வசந்தனையும் வாசுகியையும் எழுப்பிவிடன் தண்ணி ஆற இல்லே போகுது ??
*"நான் எழுப்பிப் பாத்தன் அதுகள் ரண்டும் எழும் புதுகள் இல்லையம்மா' இது பல்லைத் துலக்கியபடி ராதா,
"அவ என்னையெண்டா எழுப்பிப் போ டு வ மற்ற வையை மட்டும் எழுப்பமாட்டா'
கண்ணனின் கோபம் தொடர்ந்து அடிபிடி, அதைத் தொடர்ந்து ராதாவின் சிணுக்கம். இருவருக்கும் பத்தியில் எனது சமரச முயற்சிகள்.
வசந்தனையும், வாசுகியையும் அறைக்குள் சென்று எழுப்புகிறேன். வசந்தன் கண்ணனுக்கு அடுத்த வன்; நாலாம் வகுப்புப் படிக்கிருன் வாசுகி இரண்டாம் வகுப்பு.
எனது சிறிது நேரப் பகீரதப் பிரயத்தனத்துக்குப் பின், வசந்தனின் விழிப்பு நிலை. வாசுகி எழவேயில்லை. அவளைத் தொட்டுப் பார்த்தேன். உடம்பு, நான் தேநீர் ஊற்றி வைத்து விட்டு வந்த பேணிகளை நினைவூட்டியது. நான் திடுக்கிட்டுவிட்டேன்.

Page 36
56 தரிசனங்கள்
"ஐயோ! என்ரை பிள்ளைக்குக் கா ச் ச லா க் கி ப் போட்டுது!"
எனது நினைவுகள் நேற்றைய சாப்பாட்டு விஷயத்துக் குச் செல்கின்றன. ஒன்றும் “வித்தியாசமானதாகக் கொடுத் ததாக ஞாபகம் இல்லை.
'பிள்ளைக்கு வெய்யில் பட்டுட்டுதோ ?. கனநேரம் குளிச்சுக் கொண்டிருந்திட்டாளோ?. நான் ம ைட ச் சி அவளுக்கு நான் அள்ளி வாத்திருக்க வேணும், வாளி யை நிறைச்சு விட்டுட்டு வந்திட்டனே !
'பிள்ளைக்கு என்ன ஆச்சி செய்யுது ?" என் கேள்வி. மெதுவாக எழுப்ப மு ய ன் றே ன். அனுங்கிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்தாள். என் தாய்மை தவித்தது.
சுவாமியறையில் ஏ தோ அடிபிடி சண்டை. காது கொடுத்தேன் மூத்தவளும் கண்ணனும், விபூதி பூசுவதில் போட்டி.
அவரும் குளித்துவிட்டு வந்திருக்கவேண்டும். 'உங்கை என்ன ரண்டுபேரும் சண்டை பிடிக்கிறியள் ??? அ வ ர து குரல்
ஒரு நீதவானிடம் இரண்டு வழக்காளிகள் சமாளிக்கும் முயற்சியில் அவரது பங்கு காதினுள் புகுகின்றது.
இங்கேயிருந்தபடியே எனது குரல்: "இஞ்சேருங்கோ வாசுகியை ஒருக்கால் வந்து பாருங்கோ'
"ஏன் என்ன?" அவர் வந்தார். விஷத்தைச் சொன் னேன் அவளைத் தொட்டுப் பார்த்தார். "அ. அது சுக
மாய்ப் போய்விடும். சும்மா மேல் கணகணக்குது'
'இல்லை; பிள்ளை நேத்து நல்லா ஓடி ஆடித் திரிஞ்
சவள்- ""

வீட்டிலும் வெளியிலும் 57
'அது ஒண்டும் செய்யாது. நீர் சும்மா இதைப் பெரிசு படுத்தாதையும்"
அவர் அறையை விட்டு மீண்டும் சுவாமியறைக்குள் போய்விட்டார். எனக்கோ வாசுகியைப் பார்த் து மனம்
ه ای تلقی - الL.Lلا
அவளை நன்ற கப் போர்த்துவிட்டு, அறையை விட்டு எனது வெளிநடப்பு. சுவாமி கும்பிட்டு முடிந்து நெற்றியில் திருநீற்றுடன் அவரது புறப்பாடு.
பத்மினி வந்து சொல்லிவிட்டுப் போனது இப்போது ஞாபகம் வந்தது.
"இஞ்சேருங்கோ, உவள் பத்மினி கொஞ்சம் முந்தி வந்திட்டுப் போனவள்-'
“ஏன், என்னவாம்?"
'உங்களை ஒருக்கால் தாய் வந் தி ட் டு ப் போக ச் சொன்னதாம் -"
'ஏதும் அவசரமாமோ ?"
வாசுகியில் காட்டாத பரபரப்பு. இவ்விஷயத்தில் அவருக்கு ஆத்திரத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டேன்; மெதுவாகச் சொன்னேன்;
'அவசரமெண்டுதான் சொல்லிவிட்டதாம். எண்டா லும் ஆறுதலாய்ப் போய் எ ன் னெ ண் டு விசாரிச்சுக் கொண்டு வாங்கோ. இப்ப என்ன தலைமுழுகிற காரியமே?"
g61..., ... ஒரு மனுசர் அவசரமாய் வரச்சொன்ன, அதை என்னெண்டு கேக்க வேண்டாமே"
க.(நே.அ.) 8

Page 37
58 தரிசனங்கள்
"சின்னதுகள்" படுத்துகிற ஆக்கினை வா சு கி யி ன் காய்ச்சல் இரண்டுடன் அவரது அவசரம் - மூன்றும் ஆத் திரத்தைத்தான் எனக்கு ஏற்படுத்தின
"என்ன கண்டறியாத. இஞ்சை பிள்ளைக் கு க் காச்சல்; மற்றதுகள் என்னைப் போட்டுப் பிச்சுத் தின்னுது கள். நீங்கள் மட்டும் ஒண்டுமில்லாத ச ந் நி யா சி மாதிரி ஊர்த்தொண்டுக்குப் போங்கோ'
என் சொற்களின் ஊசிகள் அவரைக் துளைத்திருக்க வேண்டும்.
“என்ன விசயம் எனக்குத் தெரியும்; நீ வாயை மூடு'
அறைக்குள் சென்று ஷேர்ட் ஒன்றையெடுத்து உடம் பில் கொளுவத் தொடங்கிஞர். அவரது உடம்பின் ஆத்தி ரச் சூடு, "நீர்" ஆக இருந்த என்னை, அவர் வாயில் "நீ" யாக்கி விட்டது. அவருக்குக் கோபம் வரும்போதெல்லாம் இப்படித்தான்.
“தேத்தண்ணி கிடந்து ஆறு து அதைக் குடிச்சிட்டு ஆறுதலாய்க் கொஞ்ச நேரம் வீட்டிலை இருந்திட்டுப் போவ மெண்டில்லை. ஏதோ, தான்தான் ஊரைத் தாங்கிற மாதிரி, எல்லாத்துக்கும் விழுந்தடிச்சுக் கொண்டு ஒடுறது" அவருக் குக் கேட்கக்கூடியதாக என் முணுமுணுப்பு.
'உன்ரை தேத்தண்ணியை வச்சு நீயே குடி' அவர் வெளியே புறப்பட்டார்.
மூன்று "சின்னதுக்களின் பார் ைவ களும் அவர் போக்கை அளக்கின்றன.
'கொப்பாவுக்கு இஞ்சை வீட்டைப்பற்றி ஒரு கவனமு மில்லை. ...நீங்கள் வந்து தேத்தண்ணியைக் குடியுங்கோ"

வீட்டிலும் வெளியிலும் 葛9
வாசுகியின் உடல்நிலையைப் பற்றிய யோசனை குசினிக் குள் சென்றேன்.
அம்மா, வசந்தன் இன்னும் முகம் கழுவேல்லே?" ராதாவின் குரல் காதில் விழுந்து கொண்டிருந்தது.
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இப்போது முன்னைய கோபத்தின் சுவடு அவரிடம் இல்லை.
"நேத்து ராத்திரியும் இப்பிடித்தான்" எனது நினைவு கள் நேற்றைய கட் டி'லி ன் மெத்தைமேல் செல்கின்றன. நேற்று இரவுச் சாப்பாட்டின் போது, காலையில் நடந்தது போன்றுதான் அவருக்கு என்மீது கோபம் அந்த மெத்தை சற்று நேரத்தின்பின் அதை அழித்துவிட்டது.
எனக்குச் சிரிப்பு வருகிறது. அவரது முதுகுப்புறத்தில் என் மெல்லிய சிரிப்பை அவிழ்த்து விடுகிறேன். அவருக்கு இது தெரியாது.
அவர் சாப்பிடச் சாப்பிட பிட்டுக் கட்டிகள், நேற் றைய மீன் குழம்பு, மாஸ் சம்பல் கரண்டிகளாற் பரிமாறப் படுகின்றன.
அவரது கண்கள் எனது கழுத்துக்கும், இடுப்புக்கும் இடைப்பட்ட ட் ரெ ஸி ங் கவுண் பகுதியை நோட்டமிடு கின்றன.
எனது நினைவுகள் மீண்டும் மெத்தைக்குச் சென் று திரும்புகின்றன.
-இப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. காலை யில் எழுந்ததற்கு, இன்னும் ட்ரெஸிங் கவுணைச் சரிபார்க்க

Page 38
60 தரிசனங்கள்
வில்லை. நேற்று இரவு கழற்றிய ஊசிகளையும் இனித்தான் தேடிப்பார்க்க வேண்டும்.
-காலையில். ی{ • • . . . . பத்மினிதானே வந் தா ள் ? "ஆம்பிளேயஸ் ஒரு த் த ரு ம் வரேல்லைத்தானே ஒரு மன நிறைவு.
அ வரி ன் கண்கள். பரவாயில்லே; அவர்தானே. என்ருலும், என் கண்கள் மேலெழுந்தவாரியாக ஒருமுறை ட்ரெஸிங் கவுணைச் சரிபார்க்கின்றன.
மெதுவாகத் தாம் போய்வந்த சமாசாரத்தைச் சொல் லத் தொடங்கினர்:
"பத்மினியின் ரை தாய்க்குப் புருசன் ரண்டு மூண்டு மாசமாய்க் காசு அனுப்பேலையாம். என்னை ஒரு க் கா ல் அந்தாளுக்குக் காயிதம் ஒண்டு எழுதிப்போட்டு விடட்டாம்"
**பின்னை, நீங்கள் என்ன சொன்னியள் ?”
*பத்மினியின்ரை தாய்க்காரியைப் பாக்கப் பெரிய பாவமாக் கிடந்தது; நானும் ச ரி யெ ன் டு சொல்லிப் போட்டன்”
**உங்களுக்கேன் இந் த வே லை ? அவரவர் குடும் பத்தையே அவரவர் பாக்க ஏலாமைக் கிடக்கேக்கை, மற் றவையின்ரை பிரச்சினையனையும் தலையிலை தூக்கிப் போடுற
"இப்ப அதிலை என்ன வந்திட்டுது ?" அவரது பார் வையில் கேள்விக்குறி.
"நான் சொல்லிப் போட்டன். சும்மா உந்தத் தொன வாரங்களுக்கெல்லாம் போய் வீணுய்க் கரைச்சல் படாதை யுங்கோ'

வீட்டிலும் வெளியிலும் 61
பேச்சில்லை. மெதுவாகச் சாப்பிட்டுவிட்டு எழுந் து விட்டார்.
"ராதா கண்ணன், வசந்தன் எல்லாரும் சாப்பிட் டிட்டியள் தானே ? கொஞ்ச நேரம் அ ப் பா வி ட் ைட ப் போய்ப் பாடங்கேட்டுப் படியுங்கோ'
என் சொற்கள் ஆறு காதுகளில் ஒன் ைற க் கூட த் துளைக்கவில்லை. ஈஸிச்செயரில் அவர்.
"இஞ்சேருங்கோ, அதுகளின்ரை பாடங்களை ஒருக் காய் கூப்பிட்டுச் சொல் லி க்கு டு ங் கோ இண்டைக்கு லீவெண்டுட்டு அதுகள் வெய்யிலுக்கை திரியப்போகுதுகள்'
“இ ண் ைடக் கு ஞாயிற்றுக்கிழமைதானே? அதுக் கென்ன, அதுகள் நிண்டு விளையாடட்டன்" விருந்தையிலி ருந்த ஈஸிச்செயரிலிருந்து பதில்.
"எல்லாத்தையும் நானெருத்தி என்னெண்டு சுமக்கி றது? மனத்துக்குள் எனது கேள்வி. வாசுகியைக் கவனிக் கச் சென்று கொண்டிருந்தேன்.
மீன், மரக்கறி ஏதாவது வாங்கவென்று அவர் போய் நேரமாகிவிட்டது. அவர் வந்த பிறகுதான் கறிகள் வைக்க வேண்டும்
'இவ்வளவு நேரமா என்ன செய்து கொண்டிருக்கிருர்? மத்தியானம் சாப்பிடுற நேரமும் ஆகுது"
சோற்றுப் பானையிலிருந்து கஞ்சியை வ டி த்தே ன்
கஞ்சிப் பாத்திரத்தை என் கைகள் ஒரு பக்கத்தில் வைத்தன. சோற்றை அகப்பை கிளறியது.

Page 39
62 தரிசனங்கள்
குசினிக்குள்ளேயே இரு ந் த தா ல் ஒரே வியர்வை. கொஞ்சம் முன்னதாக ட்ரெஸிங் கவு னி ல் இடம்பெற்ற ஊசிகளுள் ஒன்றைக் கழற்றினேன். அந் த ஊசி எ ன து க வு னி ன் இன்னுெரு புறத்தில் கடமையின்றி இப்போது கிடக்கிறது. காற்றின் மிகச்சிறிய பகுதி நெஞ்சுக்குள் புகுகின் றது. ஒரு சின்னச் சுகம்
‘மாமி, மிளகாய்த் தூள் இருந்தால் ஒரு மூடி அம்மா வாங்கிக்கொண்டு வரச்சொன்னவை" எங்கள் கிணற்றடியை அடுத்திருக்கும் சின்னத்தங்கத்தின் கடைசிப் பெட்டை'யின் குரல்
‘இடிச்சு வைச்ச மிளகாய்த் துரளெல்லாம் முடிஞ்சு போச்சு. கறிக்கு அளவாய்த்தான் இருக்கெண்டு சொல்லு"
அவள் போய்விட்டாள். 'இப்ப மிளகாய் விக் கிற விலையிலே. இருக்கிற தூளைக் குடுத்துப்போட்டு நான் என்ன செய்யுறது ?"
வாசுகியைப் பார்த்துவரக் கால்களில் ஒரு வே கம். கொஞ்சம் முன்னர் கொடுத் த டிஸ்பிறினுக்குச் சிறிது வியர்வை. உடம்புச் சூட்டில் ஒன்ருே, இரண்டோ டி கி ரி குறைச்சல். சமையலை முடித்துக்கொண்டு "மல்லித் தண்ணி? தயாரித்துக் கொடுத்துப் பார்க்க வேண்டும் தீர் மா ன ம் வெளியே வந்தேன்.
சந்தையிலிருந்து அவர் வியர்வையும், பையுமாக வந், தார். பையை எனது கை வாங்கிக் குசினியின் ஒரு புறத்தில் வைத்தது. ? இவ்வளவு நேரமும், என்ன மீன் பிடிச்சனிங் களே ?’ வாய் கேட்டது.
சந்தியிலை கனகசபாபதியர்ரை பெண்சாதியைக் கண் டன். அந் தா ளு க்கு வ யித் தி லை ஒப்பறேற் பண்ணிப் பெரியாஸ்பத்திரியிலை இருக்கு த ரா ம் மனுசி பத்தியத்துக் கெண்டு மீன் வாங்க வந்தது. அதோடை க ைத ச் சு க்

வீட்டிலும் வெளியிலும் 63,
கெண்டு நிண்டாப்போலை நேரம் போட்டுது. நல்லதம்பி பரும் மீன் வாங்கவெண்டு வந்தவர்"
'நீங்கள் போன நேரத்துக்கு, இம்மட்டைக்குச் சமை யல் முடிச்சிருக்கலாம்'
'இண்டைக்குப் பின்னேரம்போலை, அந்தாளை ஒருக் கால் ஆஸ்பத்திரியிலை போய்ப் பாக்க வேணும்'
அவரது சொற்களால் என் ஆத்திரத்தில் ‘கிளைமாக்ஸ்’ "அவர்ரை பிள்ளை இ ஞ் ைச காச்சலிலை கி டக் கி ரு ள். அதைப்பற்றி அப்பனும் அக்கறையில்லை. ஊராரை வருத்தம் பாக்கப்பேருராம்!" U
'அது சும்மா காச்சல்தானே? அதுக்கேன் உப்பிடிச் சத்தம் போடுறீர்?. சு ம் மா வீட்டோடை கிடந்தால் போதுமே ? எ ன் ைர மதிப்பையும் நான் பாக்கத்தானே வேணும்?"
'உங்கடை ம தி ப் ைப நீங்கள் பார்த்துக்கொண்டு இருங்கோ வீடு கிடந்து நாறட்டும்’
பேசாமற் போய்விட்டார். அவருக்குக் கேட்கும்படி எனது முணுமுணுப்பு.
"நான் இல்லாட்டி, வீட்டிலை நாயும் குசுவாது”
பிற்பகல் தேநீர்ச் சடங்கின் முடிவு. அந்தக் கனக சபாபதியை வருத்தம் பார்க்கவென்று கிளம்பத் தொடங் கிஞர், அவர் அடிப்பின் நெரு ப் புக் கு. என் ஆத்திரம் சற்றும் குறைந்ததாக இல்லை.

Page 40
给4 தரிசனங்கள்
இந்த மனுசனுக்கு எத் தி னை த ரம் சொன்ஞலும் மனத்திலை ஏருது !”
வாசலில் இறங்குவதற்காகப் படி க ளி ல் அவரது
கால்கள். யாரோ அவருக்குத் தெரிந்த ஒருவரின் வருகை சம்பிரதாய வரவேற்பு.
யன்னலினூடாக என் கண்களின் ஊடுருவல். ஆளைப் புரியவில்லை. அவருடைய வயதுதான் இருக்கும். வேட்டியும், ஷேர்ட்டும்; தலையில் சின்ன வழுக்கை.
ஏதேதோ பேச்சுக்கள் எனக்கு, வந்தவருக்குத் தேநீர் தயாரிக்கும் வேலை.
"சும்மா கண்டவை நிண்டவை எல்லாரும் வருவினம்; அவைக்கெல்லாம் இந் த ச் சீனித் தட்டுப்பாட்டுக் காலத் திலை. J
பேச்சு முழுவதும் என் காதில் விழவில்லை. அவர்கள் பேச்சில் எனக்கு அக்கறையும் இல்லை. சில உரையாடல்கள் மட்டும், ஏனே என் காதுகளில் இடங்கேட்கத் தொடங்கின.
**ஒம் பாரும், நீர் சொல்றது சரிதான். அப்பிடி ஒரு சங்கம் வேணும்தான்" அவரின் குரல்
'இதைச் செய்தமெண்டா, இந்தச் சங்க த் ைத த் துவக்கினனங்கள் எண்ட பேரும் எங்களுக்கிருக்கும்" வந்தி ருந்தவரின் குரல்
வந்திருந்தவர் அவருக்கு "ஐஸ்" வைத்துக்கொண்டிருந் தார், எனக்குப் புரிந்தது.
இந்த ம னு சன் வீணுய் உதுகளுக்கிள்ளை போய் மாட்டுப்படப் போகுதோ?’ எ ன து ம ன ம் அங்கலாய்க்
கிறது.

வீட்டிலும் வெளியிலும் 65
“நீர் சொல்றபடியே செய்வம். நானும் நீ ரு ம் நீர் சொன்ன அந்தச் செல்லத்துரையுமாய்ச் சேந்து, இப்பிடி யொரு சங்கமொண்டை ஃபோம் பண்ணுவம். எ ன் ன பேர் வைப்பம் ? நல்லதாய் ஒண்டு சொல்லுமன்”
அவரின் வேண்டுகோள் பல பெயர்கள் இரு வ ரின் உதடுகளிலும் 'குளம்-கரை" பாய்கின்றன. ஒரு பெயர். இருவருக்கும் பிடிபடுகிறது. ஏ தோ சமூக சேவையோடு தொடர்புபட்ட பெயராக எனக்குப்பட்டது.
அவரின் முழக்கம்; ' எங்கடை சங்கத்தின் ரை முதல் நடவடிக்கையா, சிரமதானம் மூலம் எங்கடை பக்கத்துச் சுடலையைத் திருத்துவம். எங்க ைட சுடலையின் ரை ஒரு பக்கம் ஒரே பத்தையும், முள்ளுமாய்க் கிடக்கு"
ஒரு வாளி தண்ணி அள்ளித் தந்து எனக்கு உதவி செய்யேலாது; சி ர ம தா என ம் செய்யப்போருராம், சிரம தானம்!”
-எனக்குள்ளே நான் நினைத்துக் கொண்டேன்.
அவரின் கருத்துக்கு வந்தவரின் பக்கபலம், வார்த்தை கள் புரிய வைக்கின்றன எதிர்காலத் திட்டங்கள். இருவரி னதும் அக்கறை கலந்த பேச்சுவார்த்தைகள்.
- சமூகத்துக்குத் தொண்டு செய்யப் போகினமாம்!" வந்தவருக்குத் தேநீர் கொடுக்க வேண்டும். மு ன் பின் பழக்கமில்லாத மனுஷன் நான் ஏன் போகவேண்டும்?. ராதாவைக் கூப்பிட்டேன்.
ராதாவின் வருகை,
"தேத் தண்ணியைக் கொண்டுபோய் வந்திருக்கிற மாமாவுக்குக் குடுத்திட்டு, கொப்பாவை இஞ்சையொருக்கா வரச்சொல்லு" நான் ட்ரேயுடன் கொடுக்கிறேன்; அவ ள் போகிருள்.
த. (நே.அ.) 9

Page 41
66 தரிசனங்கள்
அவர் வத்தார்.
"இஞ்சேருங்கோ, உங்களுக்கிந்தத் தொந்தரவுகள் எல்லாம் வேண்டாமெண்டு எத்தினை தரம் வழி க்கு வழி சொல்லியிருக்கிறன் ? என்ன கண்டறியாத சங்கம் துவங்கப் போறியள்?. உங்களுக்கு வீட்டிலை பெண்சாதி, பிள்ளையன் இல்லையே???
வந்திருந்த மனு ஷ னுக்குக் கேட்கக்கூடாது. மெது வாகத்தான் சொன்னேன்.
“நீர் சும்மாயிரும்; உமக்கு இது க ள் விளங்காது" வேகமாக விருந்தைக்குத் திரும்பிவிட்டார்.
போவதற்காக இருவரின் கால்களும் க தி ைரக ளை விட்டெழுந்து குத்திட்டு நின்றன. -
* தான் ஆஸ்பத்திரிக்குப் போட்டுத்தான் வருவன் எண்டு அம்மாட்டைச் சொல்லு' ராதாவிடம் அவர் கூறு கிருஜர்; என் காதுகளில் விழுகின்றது. நான் கு கால் கள் விருந்தையைக் கடக்கின்றன.
"வாசுகி என்ன பாடோ ? அவள் படுத் தி ருக்கு ம் அறைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.
‘என்ரை அப்பனே! என்ரை குஞ்சுவுக்குச் சுகமாக்கி விடனை'
O O O
வாசுகியின் அறைக்குள் ஹரிக்கேன் லாம்பு. எரிந்து
கொண்டிருக்கின்றது.
என் மனத்தில் வேதனைகளின் எரிவு.

வீட்டிலும் வெளியிலும் 67
டி ஸ் பிறி ன், 'மல்லித்தண்ணி", அது இது என்று கொடுத்துங்கூட. காய்ச்சல் அடிக்கொருதரம் ஏறுவதும், இறங்குவதுமாக கிறீஸ் பூசப்பட்ட கம்பத்தில் ஏறும் விளை யாட்டு வீரனைப்போல.
வாசுகி ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்கிருள்.
வீட்டு ஹோலிலிருந்த படி க்கு ம் மேசையிலிருந்து ராதா, கண்ணன், வசந்தன் - மூவரினதும் போர்ப் பீரங்கி கள்.
ஆத்திரத்தின் "கிளைமாக்ஸ்" நடையில் ஒரு வேகம். ராதா, கண்ணன், வசந்தன்-மூவருக்கும் முதுகில் பொத்துப் பொத்தென்று நாலைந்து பிற கு தா ன் என் ஆத்திரம் தணிவதுபோல் இருந்தது. மூவரின் அழுகையும் ஏறத்தாழ ஒரே சுருதி.
வாசுகி காய்ச்சல் வேதனையினயோ, எ ன் ன வோ, அழுது கொண்டிருக்கிற சத்தம்.
மீண்டும் அவளது அறைக்குப் போக எனது எத்தனம். அவர் வந்துவிட்டார்.
"என்ன வீட்டிலே சத்தம் ???
"சத்தமோ?. உங்களுக்கு ஊரார்ரை தொளவாரம் ஒரு நாளும் முடியாது, இஞ்சை நான் படுகிற பாடு அந்த அப்பனுக்குத்தான் தெரியும்'
*சும்மா கத்தாதையும். அது களும் செய்யத்தான் வேணும்'
"செய்யத்தான் வேணு மெ ண் டா, இஞ்சை வீடு வாசல், பெண்சாதி பிள்ளையளைக் கவனிக்காமலோ?. வாசுகிக்குக் காச்சல் காச்சலெண்டு கால ைம் துவங்கிக்

Page 42
68 தரிசனங்கள்
கத்துறன். அது காதிலை ஏறேலை ஊர்ரார்ரை தொளவாரங் கள்தான் உங்களுக்கு முக்கியமாய்ப் போச்சு!"
அவர் வாய் பேசவில்லை. ஷேர்ட்டைக் கைகள் கழற்று கின்றன. கால்கள் அறைக்குள் செல்கின்றன.
என் உள்ளமும், உ த டு களு ம் ஒய்வதாக இல் லே. "கட்டிலுக்கு வரட்டும்; பாத்துக்கொள்ளுறன்" என் உள்ளம் கறுவியது.
"வாசுகிக்குக் கா ச் ச ல் ஏறுறதும் இறங்குறதுமாய் இருக்குது. நாளைக்கு ஒருநாள் லீவெடுத்துக் கொண்டு நில் லுங்கோ; பிள் ளை ையப் பெரியாஸ்பத்திரியிலை கொண்டு போய்க் காட்டவேணும்"
அறைக்குள் இரு ந் து அவர் குரல். என் காதுகளை நாடி வந்தது:
"நான் உ து க் கெல் லா ம் லீவெடுக்கேலாது. நீர் கொண்டு போய்ப் பிள்ளையை ஆஸ்பத்திரியிலை காட் டி க் கொண்டு வாரும். நாளைக்குத் தெரிஞ்ச ஒராள் செக் ஒண்டு மாத்தித் தரச்சொல்லி எங்கடை பாங்குக்கு வாறனெண்டது. நான் அங்கை நிக்கவேணும்"
 

சுய தரிசனம்
« sk-eses
சோ. கிருஷ்ணராசா
ஏப்பிரல் 71 சனி
நினைவுகள் என்னை மீட்டுகின்றன
அவை நிலவுகள்.
குளத்தில் விட்டெறிந்த கல்
வட்டம் வட்டமாய்.
பரபரத்த உள்ளத்திற்கு , வட்டங்கள் சதுரங்களாக
சதுரங்கள் வட்டங்களாக... & 0 9 s :
உள்ளமும் செயலும் ஒன்ருளுல் ஆசைகனவுகளும் அதன்
அலாதியான நினைவுகளும்
பொய்த்துப் போய் விடும்.
அடைபட்ட கதவுகள் திறந்துகொள்கின்றன. நான் மட்டும் உலகமல்ல
உலகமே நானஞல்.
நீங்கள் என்ன Gogueirissir ?
LL 0S LLL 0LL 0LL S G LLLL LL LLL LLL LLL LLL 00 0 Y SS S S LLL வேண்டாம்.
இதில் மட்டும் நான்
சுயநலக்காரனல்ல.

Page 43
70 தரிசனங்கள்
ஏப்பிரல் 71 ஞாயிறு
அவள் பெண்ணு. @ ? "மானிட உருவில் தேவதைகள் உலாவுதல் கூடும்'. இது பாட்டி எனக்கு சொன்னது, பாட்டி. ....... தெய்வங்கள் மனிதராஞல். மனிதர்கள்
GT sir Sar
செய்வார்கள்,
பாவங்கள் பிசுபிசுத்த எண்ணங்கள் நெஞ்சில் சறுக்கி
விழுகின்றன.
மண்ணுணிப் புழுவின் நெளியலில் ஊர்ந்து செல்லும் நினைவுகள். எப்படியோ எல்லாம் மறுத்தாள் கேட்டேன..? சீசனில் பூக்கும் மஞ்சள் பூமரங்கள் அவற்றின் நிறமே அற்புதமானது. மொட்டுகள் பருவத்தே மலர்கின்றன ஒருமுறை ஆசைகளும் ஒருமுறைதான். எத்தனை வாக்குறுதிகள். இவை காப்பாற்றப்படலாமா?

சுய தரிசனம் 7 1 -
ஏப்பிரல் 71 திங்கள்
இன்று என் மனம் அமைதியுடன் இயங்குகிறது. உச்சி வெய்யிலில் மயக்கம் போட்டு
விழுந்தேனும், உன்மையில் அது வெய்யில் வேளையா! வானக்கருக்கலில் மெல்லிய ஒளிக் கீற்றுகள் என் கண்களில் மின்னலிடுகின்றன. மஞ்சள் நீலம், சிவப்பு, கறுப்பு, அவற்றின்
கலப்புக்கள் அவை நல்ல நிறங்கள். நான் நல்ல வன். எத்தனை பேருக்கு ஆலோசனைகள் வேண்டிக்
கிடக்கின்றன. ''அட்வைசர்’ அவள் என்னை இப்படித்தான் அழைப்பாள்.
நேற்று அவளும் இப்படித்தான் நினைத்தாள்
போலும்
அதை அவள் எதிர்பார்க்கவில்லை தான். ஏன் நானும் தான் என்ன செய்ய. அட்வைசர்கள் அவர்கள் சொன்னபடி நடப்பதில்லை. இதற்கு
நான்
விலக்கல்ல.

Page 44
72 தரிசனங்கள்
ஏப்பிரல் 71 செவ்வாய்
நேற்றைய நான் இன்றில்லை. நாளைய நான் வேறு. கணத்திற்குக் கணம் நான் மாறிக்கொண்டே
இருக்கிறேன் ஆமாம் என் நெஞ்சே என்னைக் கரித்துக் கொட்டுகிறது. மனிதன் தான உடல் இரு வெறும் உருவெளித்தோற்றம். உள்ளுக்குள் நாறிவழியும் சீழ், புரையேறிப்
போனவன். இந்த இரவின் கரிய திரையை புட்டுக் காட்டும் தெரு விளக்குகள். LisT UT மரத்தை ஏற்றிச் செல்லும் லொறிகளின் கறிச்சிட்ட அழுகுரல் சப்த ஒலிகளாகி பாரத்தை மனதில் ஏற்றிக் கொண்ட என் உள்ளத்தில் வடிகின்றன. நான் அந்த லொறிகளுக்காக இரங்குகிறேன் பனி வாடை லொறிகளுக்காகாது.
நித்திரை வருகிறது நான் படுக்கப் போகிறேன்.

சுய தரிசனம் 73
ஏப்பிரல் 71 புதன்
ᎥᏂᎱᎨᎶ8Ꭲ 'கடமையும், கண்ணியமும் நிறைந்த குணசாலியாம்” சான்னில் மேலதிகாரிக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை, இல்லாவிட்டால் இப்படிப் பாராட்டுவாரா? "நாளை" தெரியாது அவருக்கு,
ஏன் எனக்கே தெரியாது என்னைப்பற்றி. ஆபிசில் பெண்களுடன் கண்ணியமாக நடந்து கொள்கிறேன் என்ருல் ஆசையைத் தூண்டி விடுபவர்கள் அங்கில்லை என்பதல்ல. வலையில் விழமறுத்த புருக்கள். அதனல் a வாழவைக்கும் எண்ணமும் எனக்கில்லை
அந்த அவள் சிலநாட்களாக என்னே ஒரு மாதிரியாக
- பார்க்கிருள் அவள் பார்வை கவர்ச்சியானது. . இல்லை கடுகடுப்பானது. இல்லையில்லை எச்சில் இலையை
-பார்த்து இரங்கும் நாயின் முகம் சில சமயம் எனக்கு நினைவு வருவதுண்டு. அவள் பார்வையில் அது இரக்கமா கடுகடுப்பா ?
ஆனல்
ஒன்று எனக்கு நிட்சயமாக தெரிகிறது பைத்தியம்.
த.(நே.அ.) 10

Page 45
74 தரிசனங்கள்
ஏப்பிரல் 7 வியாழன்
நினைவுக் குழியில் சேறும் சகதியுமாய் பிசைபடுகின்றன. மிதப்பவை கெட்டவை அவை காற்றுகள்
மழைகள் யுகாந்தரம் யுகாந்தரமாய் நான் அதில்
நனை கிறேன். அதன் ஒவ்வொரு கணமும் எனக்கு நல்ல ஞாபகம் கசப்பான அனுபவங்கள் கரிக்கட்டிகள் எரியும் சமயத்தில் அவை வைரங்கள் மெல்லிய திரையில் வீசியெறிந்த வர்ணங்களில் எத்தனை வடிவங்கள் நான் புரிந்தவையும் புரியாதவைகளுமாக வழி
நடக்கிறேன் சாரி சாரியாக வரும் எறும்புக் கூட்டங்களை நசித்து விடுவதில் இன்பம் காண்கிறேன் அகிம்சையை போற்றும் பாபுஜியின்
கோட்பாடுகளில் எனக்கு உடன்பாடுதான். ஆனல் என்னுல் இந்த எறும்புகளை கொல்வதை தவிர்க்க முடிவதில்லை.

சுய தரிசனம் 75
ஏப்பிரல் 71 வெள்ளி
இந்தக் கடற்கரை எவ்வளவு நீளமானது. தூரத்தே மலைகள் தெரியும் தொடுவானம் இறுதியாக பரந்த ஆகாய
வெளியின்
வர்ணங்கள் மனதில் உற்சாகத்தை மீட்டுகின்றது நேரம்
СBшта,
போக மெல்லிய கரிய திரை
மெல்ல
மெல்ல கவிகிறது. அரக்க உருவங்க்ள் வாளுடன் என் தலையின் பின்னல் நிற்கின்றன அவைகள் மேகக் கூட்டங்கள் என்று தெரிகிறன் து என்ருலும் இந்த நினைப்பு தவிர்க்கமுடியாது என் னில் முளைவிடுகின்றது கற்பிழந்தவள் தன் ஆவேசத்தை என் முன்
காட்டுகிருள் கரிய முகிலின் அசைவுகள் மனத்திரையில்
ஒருவித நடுக்கத்தை தருகிறன மனம் அடித்துக்
கொள்கிறது.
இன்னும் சில நிமிட நேரங்களே என்னுல்

Page 46
76 தரிசனங்கள்
ஏப்பிரல் 71。 வெள்ளி
உயிர் வாழ முடியும். அந்த மெல்லிய இழை அறுவதன் முன்னே ஓடமுடியுமா பாற்கின்றேன். முடியவில்லை. அசைக்க
முடியாதபடி வேர் கொண்ட மரம் போல நெஞ்சின் வேர்கள் நிலத்தில் படிந்து விட்டன. அவற்றை களைதல் அரிது. எனக்கு நம்பிக்கையில்லை. நானே என்னைக் கைவிட அந்த மலையின் பாரிய கருங்கல் ஒன்று என்னைக் கொல்ல வருகிறது நான். சாகப். போகிறேன். 600תןTLחו ......
 

அ. சிவராசா
ஒரு மாலை நேரத்துப் பாதசாரி
இயற்கை அழகு நிரம்பிய கண்டி மாநகரத்திற்கு செயற்கையழகு ஊட்டும் வகையில் அமைந்திருக்கின்றன, அந்த மணிக்கூண்டுக் கோபுரமும், எதிர்ச் சந்தியில் வரிசை பாக அமைந்திருக்கும் கட்டிடங்களும்.
முஸ்லிம் ஹோட்டலையும் 'போட்டோ ஆர்ட்ஸ்” கட்டிடத்தையும் ஊடறுத்து ஹோட்டலின் இடது கரை யோரமாகச் செல்லும் ஒரு குறுகிய பாதை-தலதா வீதியைக் கொழும்பு வீதியுடன் இணைக்கிறது.
அந்தப் பாதை --
நாளாந்தம் அந்தப் பாதையிலே செல்கின்ற பாதசாரி களின் நடமாட்டம் . அவர்களின் கண்கள் திரும்ப. காதுகள் கூர்மையாக..

Page 47
78 தரிசனங்கள்
அம்மண உடலுடன் ஒடியாடித் திரிக்கின்ற சிறிசு கள். அவற்றின் அழுகுரல்கள். நேரகாலம் இல்லாது கண்ட நின்ற இடங்களில் உட்கார்ந்து ம லங் கழிக் கும் காட்சிகள்.
"ங். it. . . . . . <器......... உம்மா அடிச்சுப்போட்டா. நோவுது. <岛”
ʻG3L— uÉü........ வாப்பா வாருருடா. gpigti int-f. . . . . .
seth...... அங்கே ஒரு தனி உலகம் அமைந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயந்தான்.
வீதியின் இடது பக்கமாகச் சற்று உட்தள்ளி நீளத் துக்குக் கட்டப்பட்டுக் கிடக்கும் சிறு குடிசைகள் - தோட்டப் பகுதிகளில் உள்ள லயங்களை நினைவு படுத்த
சுகாதார வசதிகள். கல்வி வசதிகள் என்பவற்றின் அர்த்தமே புரியாக அந்த சேரியில் வாழ்கின்ற குடும்பங்கள் அன்ருடங் காய்ச்சிகளாகி, வாழ் வின் விருப்பு வெறுப்பு களை ஒதுக்கி வைத்தும் பகிர்ந்தும். 38. . . . . . அவர்களும் வாழ்கிருரர்கள்.
6...... சனியனே. கண்ணை முழிச்சுப் பாத்து வரத் தெரியாதா?- அந்த வீதியின் குறுக்காக ஓடிவந்து தனது காலில் இடறி விழுந்து அழுது கொண்டு நடக்கும் அந்தச் சிறுவனைப் பார்த்தவாறு திட்டிஞன் பாலன். சற்று நேரத் தில் அவனது கோபம் அடங்கிவிட்டது.
அழுது கொண்டே சென்ற அந்தப் பையனின் வலது காலில் இரத்தம் கசிந்து வடிவதைக் கண்டு பாலனின் மனம் இளகி விட்டது.
"என்னடா.. ஏன் அழுறே?"- என்றவாறு அந்தப்
பாதையோரமாக இருந்த நாலாவது குடிசையில் இருந்து வெளியில் வந்தாள் ஒருத்தி.

ஒரு மாலை நேரத்துப் பாதசாரி 79
அவளின் கண்கள் அழுது கொண் டு வரும் தனது தம்பியையும், தெருவோரத்தில் நின்று கொண்டிருக்கும் பாலனின் வருத்தம் தோய்ந்த முகத்தையும் மாறி மாறிப் பார்த்தன.
"அந்த ஆளு காலால அடிச்கப் புட்டாரு. c2, . . . oo o வலிக்குது அழுது கொண்டே பாலனைச் சுட்டிக் கையைக் காட்டிஞன் அந்தப் பையன்.
"சரி. சரி. வூட்டுக்கெ போ. ருேட்டிலே என்ன விளேயாட்டு.?-
தம்பி உள்ளே போய் வி ட் டான், அவள் நின்று கொண்டு பாலனையே பார்க்கிருள். "இதற்காக வருந்த வேண்டாம். போய் வாருங்கள்' என்று பாலனுக்குக் கூறு வதுபோல் அவளது இதழ்க் கோடியில் ஒரு புன் ன கை அரும்பி மறைய..
பாலன் நடக்கத் தொடங்கி விட்டான்.
அவன் அதிகம் படிக்காதவன் என்ருலும் கடுமையாக உழைக்கும் ஒரு இளைஞன். தனது கரங்களையே நம்பி வாழ் பவன், கண்டி நகரச் சந் ைத யில் காய் கறி விற் று கைநிறையச் சம்பாதிக்கும் அவனுக்குக் குடும் பம் பற்றுக் கொடு என்று சொந்தம் கொண்டாட ஒருவரும் கிடையாது.
அவனது கு டு ம் பத் தி ல் எஞ்சியிருந்த தாயாரும் இறந்ததுடன் ஆதரிப்பார் ஒருவரும் இல்லாது, சொந்த மண்ணுன யாழ்ப்பாணத்தை உதறிவிட்டுக் கண் டி யி ல் காலடி எடுத்து வைத்தான்.

Page 48
80 தரிசனங்கள்
எட்டு வருடங்கள். உள்ளத்தை வெதும்ப வைக்கும் நிகழ்வுக் கோலங்கள்.
பல கடைகளில் உதவியாளர் வேலை. முதலாளிகளின் ஏச்சுப் பேச்சுக்கள். அடி உதைகள். யாயும் ஆரம்பத் தில் அவனுக்குப் பழக்கப்பட்டு விட்டன.
கடைசியாகச் சொந் த த் தி ல் இந்தத் தொழில், அவனது வசிப்பிடமே அந்தச் சந்தைக் கட்டிடம்தான்.
ஆரம்பத்தில் தன் சொந்தச் செலவு போக மிகுதியைச் சேமித்து வைத்தான். கால வோட்டத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி . அவக்குக் குடிக்கா விட்டால் அ ன் ைற ய நாளே கழியாதது போன்றதோர் பிரமை .
கால்கள் அந்தப் பாதையில் சென்று பழக்கப்பட்டு விட்டன. பழக்கம்தான் அவனை மாலை நேரத்தில் அந்தப் பாதையில் இழுக்கின்றதோ, அ ல் ல து குடியின்மேல் ஏற் பட்ட மோகத்தின் விளைவான சுவாவின் உந்துதலோ தெரி யாது. ஆனல் அவன்.
ஒரு பழக்கப்பட்ட மாலை நேரத்துப் பாதசாரியாகி விட்டான்.
நடந்து கொண்டிருந்த பாலனுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் தேன்றியது. “பாசம் எ ன் ற உணர்வைத் தன் மேல் காட்டும் ஒரு ஜீவஞவது இந்த உலகில் இல்லையா?" விளக்கம் காண முடியாத இச் சந்தேகத்தின் உ ன் ைம க் கோலம் வெளிப்பட '..தாயை இழந்தபின் நான் பாசம் கொள்ளவும் என்மேல் பாசம் வைக்கவும் இந்த உலகத்தில் எவருமே இல்லை" - என்ற முடிவின் மத்தியிலும்.
நாலாவது குடிசையில் உள்ள அந்தப் டெண்ணின் மூலம் புகார் போன்று நினைவில் படிகிறது. “சீ..' இருக்காது! அவன் உள்ளத்தை அலட்டிக் கொண்டு நடக்கிருன்.

ஒரு மாலை நேரத்துப் பாதசாரி 8.
அது ஒரு முஸ் பிம் குடும்பம் என்பதும், அந்தப் பெண் னின் தந்தை - இஸ்மாயில் - கொழும்பு வீதி யி ல் உள்ள வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் சிப்பந்தி வே லை செய்கிருர் என்பதும் அவனுக்குத் தெரியும்; அந்த குடிசையில் அவளை விட இன்னும் இரண்டு மூன்று பெண்களும், தனது காலில் இடறி விழுந்தவனை விட வேறு ஒரு பையனும் இருப்பதையும் மாலை வேளைகளில் அவன் காணத் தவறமாட்டான்.
இன்று எப்படியும் அவனுல் விட்டுக் கழிக்க முடிய வில்லை. அடிமனதில் ஒரு நம்பிக்கை ஒளி . ஒரு கெசூடல். அவளின் இதழ்க் கோடியில் எழுந்த புன்னகை. அவ ன து நினைவில் இடறிவிழ சாராயத் தவறணக்குள் நுழைகிருன்.
பரீதா வழக்கமாகக் காணும் காட்சிதான்.
ஒவ்வொரு நாழும் மாலை நேரத்தில் அந்தப் பாதை யினுல் போகும் போது மதாளித்துச் செழித்த புடலங்காய் போலப் போ ன வ ன் திரும்பும் போது வாடிச் சுருண்ட முருங்கெக்காய் ஆகி. இரண்டு மூன்று பாலன்களாக உரு வெடுத்து. அந்த நடையே ஒரு அலாதியானதுதான்.
பரீதா அவன் திரும்பிச் செல்லும் வேளைகளில் ஆரம் பத்தில் அவனையிட்டுப் பரிதாபப் பட்டவள் - காலகதியில் அந்தப் பரிதாப உணர்ச்சியே ஒருவித பாச உணர்ச்சிக்கு இழுத்துச் செல்வதையும் அவள் உணராமலில்லை
தன் வீட்டுக்கு முன்பாக எதேச் செயாக அவனைக் கண்டுவந்து. பின்னர் அவன் தன்னை ஒருமுறை திரும்பிப் பார்க்க 3ாட்டாஞ என்ற ஏக்கத்தின் தவிப்பில் அமிழ்ந்திக் கொண்டிருக்கும் பொழுது.
1 1 { . انیم : شب)) 6

Page 49
93 தரிசனங்கள்
இன்று தன்னை நேருக்கு நேர் சில விநாடிகள் பார்த்து விட்டார் என்ற பெருமிதத்தின் எ க் க ளி ப் பில் அவளது மனம் அவள் தம்பியை வாழ்த்துகிறது.
அந்தக் கண்களினுள்தான் எத்தனை கருத்துச் சிதறல் கள்.
இருந்தாலும் பரீதாவின் அடிமனதில் ஒரு ஏ க்க ம் திரைபோட்டு மறைக்கின்றது.
இன வேறுபாடுகளை மறந்து இ ல் ல ற வாழ் வி ல் இணைந்த இலட்சியத் தம்பிகளைப் பற்றிச் சில நாவல்களில் படித்தவற்றை இரை மீட்டுப் பார்க்க முயலும் பிரயத்தனம்.
'நாவல்கள் யாவும் உண்மையாகி விட்டால் - மனதில் பீறிடும் நெஞ்சத் தவிப்பைக் கிளறுகின்ற எண்ணக் கருக்கள்.
தனது நிலையை ஒருகணம் உறுதிப்படுத்திக் கொள் கிருள் ஏழ்மை. சேரி வாழ்க்கை. திருமணமாகாத இரு அக்காமார்கள்.
என்ருலும் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே
தன்னை ஒரு நிலைப் படுத்தி இரு கால்களிலும் நிறுத்த முடியாதவாறு பாலன் சாராயத் தவறணயிலிருந்து தெரு
வில் இறங்குகிருன்.
தடந்து வந்து, வழக்கமான அந்தச் சிறிய பாதையில் நுழைந்து தடக்கத் தொடங்குகிறன்.
அந்தப் பாதையினுல் நடந்து வருவதில் வழக்கமாக அனுபவிக்கும் சுகத்தைவிட அன்று மே ல தி க சுகத்தைக் கண்டவன் போன்று சிரித்தவாறு நடக்கிருன்

ஒரு மாலை நேரத்துப் பாதசாரி 83
அந்தக் குடிசைக்கு அண்மையாகச் செல்லும் பொழுது பின்னலிருந்து எதுவோ தாக்கியதைப் போன்ற பிரம்ை. - ஒன்றுமே தெரியவில்லை தலை சுழல்வது போ லி ரு ந் த து விழுந்து விட்டான்.
விழித்தபோது தான் ஒரு பாயில் தலையணை வைத்துப் படுத்தவாறு இருப்பதைக் கண் டா ன். தன்னைச் சுற்றி இஸ்மாயில். அன்று தனது காலில் தடுக்கி விழந்த அந்தப்
Sinu u Gör. . . . . . அவர்களுக்குப் பின்னுல் கையில் குவளையுடன். அவளே தான்.
* தம்பி. எழும்பாதீங்க. படுத்திருங்க. * இஸ்
மாயிலின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தலை காயத் தூக்கியவாறு எழுந்த அவனை மீண்டும் படுக்கையில் கிடத்தியது.
நடந்தவற்றைக் கேட்டு அறிந்து கொண்டான்.
வந்து கொண்டிருக்கும் பொழுது வழி யில் சில ர் கன்னைத் தாக்கி மயக்கமுறச் செய்து விட்டு தன் னி டம் இருந்த பணத்தையும் கைக்கடிகாரத்தையும் எ டு த் துக் கொண்டு சென்று விட்டனர் என்ற உண்மை அவனை அவ் வளவு தூரம் பாதிக்கவில்லை.
"ஏன் தம்பி இவ்வளவு குடிக்கிருப். * இஸ்மாயில் (3), Liri.
தான் ஒர் அநாதை என்பதையும் சமூகத்தால் ஒதுக் கப்பட்ட தனிக்கட்டை என்பதையும் அவரிடம் கூறித் தனது கவலைகளை ஏன் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும் ான்ற எண்ணத்தில் பேசாதிருந்து கவலையின் ரேகைகளை முகத்தில் படரவிட.
* தம்பி. இனிமேல் குடிக்கக் கூடாது. அதற்கும் பதிலில்லை.

Page 50
岛会 தரிசனங்கள்
'பரீதா' தம்பிக்குத் தேத்தண்ணி வெச்சுக் குடு. நான் கடப்பக்கம் போட்டு வாறன்!- இஸ்மாயில் வெளிக் கிளம்புகிருர்,
பாலனின் நெஞ்சம் ஒருகணம் படபடத்து விம்மியது. கொதிக்கும் எண்ணெயில் அறுத்துப் போட்ட க த் த ரி க் காய்த் துண்டுகள் போல.
தேநீருடன் திரும்பவும் உள்ளே வந்த பரீதாவை ஏறிட்டு நோக்கிஞன்.
"இனிமேல் குடிக்கக்குடாது என்று வாப்பா சொன் ஞரே. கேட்டுதா..?" இது துடுக்குத்தனமான பரீதா வின் கேள்வி.
பாலன் மெளனமாகச் சிரித்தான்.
"ஏன் பேசுங்களேன். எங்கை ச் தீ தி யம் ணுங்கோ. உங்க மீது ஆசையாக் கேக்கிறன். எங்கே கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்த அந்தக் குறும்புக்கா, யின் கவர்ச்சிகரமான முகம் நாணத்தால் சிவந்திருப்பதைப் பாலன் பார்த்தான்.
இவை யாவற்றையும் ஒரு வினுேதப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு அவளது தம்பி நின்று கொண்டிருந் தான்.
"முதலிலே கொஞ்சத் தண் ணி தர மட்டீங்களா ?
பாலன் கேட்டான்.
'assuth...... இந்த நாளுவுக்குத் தண்ணியாம் ஓடிப் போய் எடுத்துண்டாடா!... அக்காவின் சொல்லைக் கேட்டு
விட்டு அவன் அடுப்படிப்பக்கமாக ஏனைய அக்காமார்களை நோக்கி ஓடி விட்டான்.
ஒரு கணந்தான்.

ஒரு மாலை நேரத்துப் பாதசாரி 85
பரீதாவின் கரங்களை அன்புடன் பற்றி, "நான் இனி மேல் குடிக்கமட்டன் பரீதா'. இது சத்தியம் - என்று கூறிவிட்டு அவளை இழுத்து அணைத்து . அவளது இதழ் களின் அருகே தனது முகத்தைக் கொண்டு சென்றபோது.
காலடிச் சத்தம் கேட்கவே, "வாப்பா வாருர். விடுங்கோ. "" என்று கூறியவாறு அவனது அணைப்பிலி ருந்து விடுபட்டுக் கொண்டு உள்ளே ஒடிவிட்டாள்.
**தம்பி இதையும் சாப்பிட்டுத் தேத்தண்ணியையும் குடிச்சிட்டுப் போகலாம். இப்பிடி இருங்க.." இஸ்மாயில் ஒரு பார்சலை அவன் கையில் கொடுத்துக் கொண்டே கூறினர்.
"ஏன் இப்படி யெல்லாம் உபசரிக்க வேண்டும்? என்ற நினைவிற்குப் பலவிதமான அர்த்தங்களைக் கற்பித்தவாறு அந்தப் பார்சலைப் பிரித்தான் பாலன்.
இரண்டு கிழமையாக பாலன் குடிப்பதையே விட்டு விட்டான். இரு ந் தாலும் அவன் மனதுக்குள்ளே ஒரே போராட்டம்.
அதற்கு எப்படியும் முடிவு கட்டிவிட வேண்டும் என்ற நோக்கம் அவனை உந்தித்தள்ள இஸ்மாயில் வீடு நோ க் கி தடக்கத் தொடங்கி விட்டான்.
அங்கே இஸ்மாயில் அவனை வரவேற்ருர்,
வியாபர விடயங்களில் உரையாடல் சு ழ ன் றது,
பாலன் விடயத்தை ஆரம்பிப்பதற்குச் சற்றுத் தயங்கினன். பரீதா தேநீர் பரிமாறிஞள்.

Page 51
86 தரிசனங்கள்
அவன் இஸ்மாயிலின் முகத்தைச் சற் று த் தயக்கத் துடன் நோக்கிவிட்டு "ஐயா. நான். பரீதாவை. அவவும் என்னை விரும்புறபோலை கிடக்கு. ** எவ்வாறு தான் வார்த்தைகள் வெளிவந்தனவோ, கூறிவிட்டான்.
இஸ்மாயில் சிறிது நேர ம் மெளனம் சாதித்தார். அந்தச் சில நிமிட நேரத்தில் பாலனின் உள்ளத்தில் எண் ணப் புயல்களின் போராட்ட உணர்வுகள்.
* தம்பி.!"
* 'தம்பி. நாங்கள் முஸ்லிம், எனக்குப் பரீதாவைத் தவிர இன்னும் ரெண்டு பெண்கள். இப்படி ஒரு த் தி இனம்மாறி நிக்காஹ் செய்து கொண்டா. மற்றப் பெண் களை எவரும் சேர்த்துக் கொள்ள மாட்டாங்க தம்பி. ) V
'தயவு செய்து பரீதாவை நீங்கள் மறந்திடுங்க"
தலை குனிந்து மெளனமாக நின்றிருந்த பாலன் கலங் கிய கண்களுடன் நிமிர் ந் தா ன். இஸ்மாயில் கூறியது அவனுக்கு நியாயமாகவே பட்டன.
எழுந்து நின்று 'உங்கள் மனது புண்பட்டிருக்கும்.
உள்ளே கேட்ட விசும்பலொலியையும் பொருப்படுத் தாது மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்தப் பாதையில் இறங்கி நடந்தான், சாராயத்தவறனை நோக்கி.
இன, மத, சமுதாயக் கோட்பாடுகளைச் ச பித் துக் கொண்டது அவன் மனம்.

இரா. சிவசந்திரன் <--
> இருளைக் கடந்து.
சேலையைக் குதப்புகிருள். சவர்க்கார நுரை கறுப் பாகி. அதைப் பிழிகிருள். கறுப்பான அழுக்கு சேலையி லிருந்து வெளியேறுகிறது. சேலை தூய்மையாகி-வெண்மை யாகிறது. அவள் வாழ்வு அழுக்கேறிய சேலைதான ? அதைத் தூய்மையாக்க - வெண்மையாக்க முடியாதா ?
கிணற்றடியிற் குளித்துவிட்டு ஈர உ ைட யு டனே நின்று தன் சேலேயைத் துவைத்துக் கொண் டி ரு க்கு ம் அன்னம்மாவின் உடல் குளிர்கிறது ஆணுல் உள்ளம். . p இருண்ட வாழ்வை அவள் மனம் அசை போடுகிறது. பெரு மூச்சுக்கள் அடிக்கடி வெளிவருகின்றன. அது பெருமூச்சுத் தானு ? கொதிக்கும் உள்ளத்தின் ஆவியா ?
ஆலயமணியின் ஓசை இனி ைம யாக - இன்பமாக குழந்தையின் மழலையாகிக் காற்றலைகளில் தவழ்ந்து வந்து அவள் காதுகளில் ஒலிக்கிறது.
...கொடியில் சேலையைக் காயப் போட்டுக் கொண் டிருந்தவள். திரும்பி. அத்திக்கை நோக்கிக் கை குவித்து வணங்குகிருள்.
"அம்மா தாயே, இனியாவது எனக்குச் சந்தோஷமாை வாழ்வைத் தாம்மா"- அ வ ள் மனம் ம ன் ரு டு கிற து.

Page 52
88 தரிசனங்கள்
தொடர்ந்து மணியோசை ஒலிக்கிறது. அவள் முகம் நல் வாழ்வு கிடைத்து விட்டதுபோல் மகிழ்கிறது.
மணியோசையின் மகிமையா? எல்லாம் மனம்தானே மணியோசை நல்ல ஒசையென மனத்தில் பதிந்துவிட்டது. அவ்வோசையைக் கேட்டதும் மனம் மகிழ்கிறது. காரணம் பாரம் பரியமாகவே ஏற்பட்டு வந்த நம்பிக்கைதான். எல் லாமே நம் பிக் கை யி ன் அடிப்படையில்தான் பெறுகின் றனவா ? நமது இந்த வாழ்க்கைகூட ? அன்னம்மாவிற்குத் தான் எதிர்காலம் ஒளி வீ ச ப் போகிறதென அந்த மணி யோசை சொல்வது போல் ஒரு பிரமை. அன்னம்மாவின் மனம் மகிழ்கிறது. ங் - ங். என மணியோசை குறைந்து. மெலிந்து அற்றுப் போகிறது.
குடிசைக்குள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட் கிறது. இன்பமும் துன்பமும் அடுத்தடுத்தா ? அன்னம்மா விற்கு சுயவுணர்வு தி ரு ம் ப, அவசரமாகக் குடிசைக்குள் நுழைகிருள்.
தாய்மையுணர்வைத் தன்னுள் கற்பித்து அக்குழந்தை யைத் தூக்க முயல்கிருள்.
'ஈரக்கையால் தொடாதே; காச்சல் காரப்பிள்ளை'. அவள் தங்கை கமலத்தின் குரல் அவளைத் தடுத்து நிறுத்து கிறது. கமலமே வந்து குழந்தையை எடுத்துக்கொள்கிருள்.
'ஈரக்கையால் தொடாதே". "ஈ ரக் கையால் தொடாதே காச்சல் காரப்பிள்ளை' - அ ன் ன ம் மா வின் மனக்குகையில் திரும்பத்திரும்ப எதிரொலித்தன இவ் வார்த்தைகள்.
'ஆமாம், இவள் என்னை மலடி எண்டு குத்தாமல் குத்துகிருள். ஈரக்கையால் தொடக்கூடாதெண்டு எனக்குத் தெரியாதா ? ஏதோ ஒரு அவசரத்தில். எனக்கு அனுபவ மில்லை. எனக்குப் பாசமில்லையா ? ஐயோ, குழந்தை எனக்

இருளைக் கடந்து 89
குக் கிடையாதா? நான் தாயாக மாட்டேஞ? ஏன் ? நான் தாயானவள் தானே ? ஆஞல். ஆனல் .ஐயோ கொடுமை நான் பாவி, கொலைகாரி ஒன்ரு இரண்டா ? ஐயோ! அம் மாளாச்சி தாயே என்னை மன்னித்துவிடு". அன்னம்மாவின் உள்ளம் வேகிறது. பெருமூச்சு ஆவியாகி வெளியேறுகிறது.
அந்த குடிசை வீடு. கடை இரண்டும் தான் நடுவில் தொங்கும் சாக்குத் தட்டியை விலக்கிச் சென்ருல் க ைட சிறிய தேனீர் கடைதான். சிறு ஒழுங்கையைத் தொட்டு இருக்கும் அந்தக் க ைட க் கு எல்லோருமே முதலாளியும் தொழிலாளியுமாக நடந்து கொள்வார்கள் சில சமயங்களில் தேனீர் அருந்த வருவோரே தங்கள் கைகளால் தே னிர் தயாரித்து அருந்திவிட்டுச் செல்வதுமுண்டு.
'பிள்ளை ஒரு பிளேன் ரீதா' என்று குரல் கேட்டால் சாக்குத் தட்டிக்கப்பால் இருந்து யாராவது ஒரு ஆள்வரும் சாக்குத் தட்டியை விலக்க உள்ளே சென்ருல் வீடு, நல்ல நீளம் அகலம் தான் குறைவு. வெளியே முற்றத்தில் கிணறு, அதைச் சுற்றி ஐந்தாறு வா ைழ க ள். அடுத்து மூன்று தென்னை மரங்கள். அப்பால் பதினைந்துக்கு மே ற் பட் ட பனை மரங்கள். அடுத்து மட்டை வேலி, வேலிக்கு அப்பால் கடல் பார்த்தால் தூரத்திலே மணற் திட்டுகள் தெரியும்.
.சாக்குத் தட்டியை விலக்கிக்கொண்டு கடைக்குள் துழைகிருள் அன்னம்மா. அங்கே தொங்கும் அந்த படம். புத்தபகவான். அதன் முகத்தில்தான் என்ன அமைதி எவ், வளவு சாந்தம் எ வ் வள வு கருணை உலகப் பற்றைத் துறந்த மகான்.
“மழித்தலும் நீட்டலும்
வேண்டா உலகம்
பழித்த(து) ஒழித்துவிடின்"
உலகப்பற்றை உண் ை)யாகவே துறப்பவர்களுக்கு வெளிவேஷம் எதற்கு? அவர்போல் மொட்டையடித்து -
5. (Gps.sy.) 12

Page 53
90 தரிசனங்கள்
மஞ்சள் அங்கியனிந்து. சீ! வெறும் வெளிவேஷம் உலகப் பற்று.? அதனுல் என் வாழ்வு . ? எல்லாரும் புத்த மகான்களாக முடியுமா? மனிதர்களாகக் ாணவில்லையாம்
மகான்களாவதென்ருல்.?
தூரத்திலே பனை, தென் னை மரங்களினூடாகத் தெரியும் அந்தப் புத்தவிகாரை. அதன் நுனிக் கூர்மை பரந்து-விரிந்து-கூர்மையாகி உயர்ந்து.
அன்னம்மா புத்த விகாரையைப் பார் க் கி ரு ள். பரிதாப உணர்வு அவள் முகத்தில் பிரதிபலிக்க.
அவர்
துறவியா? வெறும் வெளிவேஷம். புத்தபிரானின் புனிதக் கொள்கைகள். அன்பு அஹிம்சை, கருணை இவற் றைப் பரப்ப இவரால் முடியுமா? துற வி யா ல் முடியும் தான். ஆணுல் இவர் துறவியா? உள்ளே வெறும் உடலுணர் வுப் பற்றுகள் கொடியாகிப் படர்ந்து. பற்றையாகிப் பாம்பு பூசக் கள் வாழும் இடமாகி. ஐயோ உயிர்ப்பலி!!
“என் அப்பா குடிகாரர். குடிகாரர் என்ருல் மனித னில்லையா? இல்லை மனிதரல்ல அவர். எந்த நேரமும் மதி மயங்கக் குடித்து- வெறித்துத்திரியும் அவர் . மனிதனு? ஒருகண நேரமாவது மனிதனுகச் சுயவுணர்வுடன் இருந்த துண்டா? இல்லையே அவர் ஒரு வர்க்கம் குடிகாரவர்க்கம். பற்று - பாசம், மானம் எல்லாம் துறந்த வெறித் துறவி அவர் என் தங்கையும் நானும் வீ ட் டி ல் தனியே இருக் கிருேமென்ற எண்ண மாவது மனிதனுக்குண்டா. * நாங் களும் வாழ வேண்டுமென்று சிந்தித்ததுண்டா? மனிதனுக இரு ந் தா ல் சிந்தித்திருப்பார் ஆனல். GT Gör gylio onir புண்ணியவதி பதினேந்து வருடத்திற்கு முன்பே இவ்வுலகை நீத்துச் சென்றுவிட்டாள். தாயின் இடத்தில் த -க்கையாக இருந்தேன். எப்படியாவது - என்னை விற்ருவது என் தங் கைக்கு வாழ்வளித்து விட்டேன். அவள் கணவன் யாழ்ப்

இருளைக் கடந்து 91
பணத்தில் ஏதே ஒரு சாப்பாட்டுக் கடையில் சம்பளத்துக்கு நிற்கிருன். அது போதும் அவளுக்கு 1 என் வாழ்வு. 经! இது வாழ்வா?
-அன்னம்மாவின் நினைவுக் கடலில் அலைகள் எழுந்து மடிகின்றன. நினைவுக் கடலிலே தன் வாழ்வு அலையைப் Lunti(5th Goumrap g ...... அதில் மி த ப் பது நாற்றமடிக்கும் இறந்த குஞ்சு மீன்களா? "ஐயோ! சீ!!"
"ஏதாவது கிடக்கே. ஒரு பிளேன் ரீ தா-"
குரல் வந்த திக்கை அவள் நோக்குகிருள். இளிச்சுக் கொண்டு நிற்கும் அவன் இராசையா! அவசரமாக பிளேன் ரீ போட்டுக் கொடுக்கிருள் அன்னம்மா. வாங்கும் பொழுது அவன் அவள் கையை பேணியுடன் சேர்த்து வேண்டுமன்றே தொடுகிருன். அன்னம்மாவிற்கு இது சர்வசாதாரணம். இதைப்போல் சேட்டை செய்யும் சாத் த னை பேருக்குத் தேநீர் கொடுத்திருப்பாள்.
இராசையா போகும் பொழுது ஒரு சிரிப்பு. 'அந்த சிரிப்பு: சிரித்துக்கொண்டே, அவளைப் பார்க்கிருன் போய் விட்டான்.
அன்னம்மாவிற்குப் பழக்கப்பட்ட சிரிப்பும் பார்வை யும் தானென்ருலும் இன்று என்னமோ-சுடுதேநீர் நெஞ்சை அவிப்பது போன்ற வேதனை
உலகத்திற்குத் தெரிந்த ரகசியம்தான். அவள், அந்த மொட்டைத் தலையும்,- ம ஞ் ச ள் அங்கியுமனிந்து புத்த விகாரையில் இருக்கும் ஒரு இளம் துறவியின் ஆசைநாயகி என்ற விஷயம் அதனுலென்ன அவமானம் -பழிப்புக்கிடம் அவள் அவளைத் தவிர வேறு எவரையுமே இதுவரை. geof...... p k,

Page 54
92 தரிசனங்கள்
குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. சாக்கை நீக்கி உள்ளே தோட்டம் விடுகிருள். தாய் தன் குழந்தையைக் கொஞ்சி. தலையைத் தடவிக் கொண்டு பாலமுதுாட்டிக் கொண்டிருக்கிருள் - தாய்மையுணர்வில் இன்பம் பெற்றுக் கொண்டிருக்கிருள் - எவ்வளவு அழகு! எவ்வளவு மகிழ்ச்சி அந்தக் குழந்தையின் சுருக்கம் விழுந்த மேனி மொழு மொழு வென்று. சுருண்ட கேசம், அதன் கண்க ள், மூக்கு, வாய், எவ்வளவு அழகு! அது காலை ஆட்டி. உதைத்து. அற்புத அழகு! இரைந்து புரி யா த மொழிபேசும் அந்த இனிய குரல். எல்லாம் தெய்வீகம் 1 இன்பம் - தாய்மை யின்பத்தைப் போல் தலைசிறந்த இ ன் ப ம் இவ் வுல கில் வேறுண்டா? பேரின் பம், தாய் குழந்தை. தாய், குழந்தை. தாய், குழந்தை.
-அன்னம்ம்ாவின் நெஞ்ச ம் நீரோடையாகிக் குளிர்ந்து அழகுபெற்று மகிழ்கிறது.
குழந்தை பாலருந்திக் கொண்டிருக்கும் பொழுதே நித்திரையாகிவிட்டது அதைக் கிடத்தி விட்டுக் கிணற்றடிக் குச் செல்கிருள் அவள் - கமலம்
அன்னம்மாவிற்குச் சுய உணர்வு திரும் புகிறது. தாய்மையின்பத்தைத் தானடையவில்லையென்பதை உணர் கிறன். இவ்வளவு நேரமும் வெறும் கற்பனையின்பம்.
"உண்மையாகவே நான் தாயாகவே மாட்டேன?. குழந்தையைக் கொஞ்சி-பாலூட்டி மகிழமாட்டேன?. அம்மாளாச்சி தாயே எனக்கொரு குழந்தையைத்தா தாயே! விடுதலை தா"- அவள் மனம் உருகுகிறது.
அந்தத் தட்டியில் தொங்கிக் கொண் டி ருக்கு ம் நாகபூஷணியம்மனின் படம். சிரிப்பது போன்ற பிரமை
so அன்னம்மா ஒருமுறையா, இரு முறையா தாயா ஞள்? மூன்று முறைகள் ! ஆனல். ஐயோ! பாழாய்ப்

இருளைக் கடந்து 93
போன அந்த மருந்துக் குளிகை. **அவர்” கொடுத்தால் குடிக்காமல் எப்படி இருப்பது ? அவர் துறவி, அ வ ரா ல் உடலின்பத்தைத்தான் துறக் க முடியவில்லை. அது போல் குழந்தையின்பத்தையும் விட்டுவிடாமல் இருந்தாராணுல்..? அவள் எப்பொழுதோ குழந்தை பெற்றிருப்பாள்-தாய்மை யுனர்வில் மகிழ்ந்திருப்பாள். ஆனல். :
& அன்று-அவள் “விஷயத்தைக் கூறுகிருள். ஏன் அவர் அப்படித் துடித்தார்? ஏதோ பெரும் தவறு செய்து விட்டவர் போன்று முகம் விகாரமடையக் கொன் னை த் தமிழில் அவர் கூறிய வார்த்தைகள். அ வ ள் அ ன் பு மரத்தை தாய் ைம மரத்தை வெட்டிச் சாய்க்க. வேதனை - அவள் அன்று பட்ட வேதணை
அடுத்த நாள் அவர் கட்டளைப்படி அந்தக் குளிகை மருந்தை அ ன் ன ம் மா குடிக்கிருள். வயிற்றைக் குமட்டு கிறது. வாந்தி வருவது போன்ற உணர்ச்சி-ஒரு கொலையா? ஒன்று மன்னிக்கலாம் இரண்டு. மூன்று - அன்னம்மா நினைத்து நினைத்துத் துடிக்கிருள் - சாகாமல் செத் து க் கொண்டிருக்கிருள். என்ன செய்வது? அவள் தங்கையை வாழ் வித்தது அவரால் தானே அவர் பணம் தராவிட்டால் அந்தக் கல்யாணத்தை அவளால் செய்திருக்க முடியுமா? நன்றிக்காகத் தன்னைக் கொடுத்தாலும். இன்னுமொரு உயிரை. கொலை ? எண்ணி எண்ணி சேற்றில் மீனுகச் சாகாமல் செத்துக் கொண்டு.
கிழக்குப் பக்கத்து வளை யி ல் மாட்டப்பட்டிருக்கும் பால முருகனின் படம் . எவ்வளவு அழகு! எ வ் வள வு இ ன் படம் ! அன்னம்மா அதையே பார்த்துக் கொண்டிருக் கிருள். "இப்படி ஒரு குழந்தை எனக்கிருந்தால் - இருந் திருக்கக் கூ டி ய மூன்று எங்கே? இனி. நான்கு, ஐந்து ஆறு. ஐயோ! இனி மா ட் டே ன் தாயே என் மூன்று பெரும் குற்றத்தையும் மன்னித்து விடு! இனி சத்தி யமாகத் தவறு செய்ய மாட்டேன் தாயே . ஒருநாளும்.

Page 55
94 தரிசனங்கள்
செய்ய மாட்டேன்-அன்னம்ம்ாவின் மனக்குளம் கலங்கித் தெளிகிறது. விடுதலையுணர்வு - உறுதி பிறக்கிறது. மனம் மகிழ்வடைய.
வெளியே பார்க்கிருள். பனை மரங்கள், கறுத்து உயர்ந்து பச்சை ஓலைபரப்பி வளர்ந்திருக்கும் அம் மரங்கள்.
நடராஜன் - அன்று வழக்கப்படி அவள் வீட்டு வள விற்குள் நிற்கும் பனையில் கள்ளுச் சீவ வருகிருன்
ஆள் கறுப்பு நல்ல உடற்கட்டு, சுருண்ட மயிர் கள் இறக்கிய முட்டியை அந்தப் பூவரசமரத்தில் தொங்கவிட்டு விட்டு முற்றத்திற்கு வருகிருன்.
'வீட்டுக்காரர் கொஞ்ச ம் தண்ணி தாருங்கோ அவன் குரல் கொடுக்க.
அன்னம்மா ஓடிவந்து கிணற்றில் தன் னி ர ள் வி வார்க்கிருள்.
தண்ணிரைக் குடி த் த பின் தலைநிமிர்ந்து நோக்கு கிருன். அந்தப் பார்வை. அன்புகலந்த - கருணை நிறைந்த பார்வையாக - பரிதாபவுணர்வு கலந்த பார்வையாகப் படு கிறது, அன்னம்மாவிற்கு
அவளும் பார்க்கிருள். முகம் புதைக்கிருள்.
அவனுக்கும் எல்லாம் தெரிந்திருக்கலாம். எனினும் ஒரு பரிதாபவுணர்வு அவனுக்கிருக்கிறது. அன்னம்மாவிற் குப் புரிகிறது.
தினமும் அவனைக் காணுவாள் அன்னம்மா. அவனுக் கும் குழந்தைகள் என்ருல் உயிர். கமலத்தின் குழந்தையை அவன் அடிக்கடி பார்த்துப் பார்வையால் அன்பைப் பொழி வது வழக்கம். இளைஞஞன அவன் முகத்தில் கூடக் குழந் தைத் தனம்

இருளைக் கடந்து 95፡
அன்னம்மாவிற்கு நடராஜன் மேல் ாைக தனி ததிப்பு அவனைக் கண்டால் ஏதோ "நிறைவு" நெஞ்சத்தில் குடி கொள்வதை உணர்கிருள்.
நடராஜனின் இரக்கவுணர்வும், அன் ன ம் மா வின் அன்புணர்வும் இருவரும் மனம் திறந்து பேச வாய்ப்பளித் தன. அன்னம்மாவின் மனப்போராட்டத்தை - வேதனை யைக் கேட்டு எத்தனையோ முறை கண்கலங்கியிருக்கிருன் நடராஜன்.
பரிவும் - அன்பும் பின்னிப் பிணைந்தன. ஒன்ருயின. பேரன்பு விடுதலையுணர்வு. இருளைக்கடந்து. ஒளியை fift. . . . . . . . . பரஸ்பரம் வேதனையைப் பேச்சால் பங்கிட்டுக் u 667 L-ITriassir.
-அன்னம்மாவின் மனம் பசுமையடைகிறது.
'அக்கா மீனு க்கு ப் போய்விட்டு வாறன் பிள்ளை. யைப் பார்த்துக்கோ". கமலம் கூறிவிட்டுக் கடற் க ைர நோக்கிச் செல்கிருள்.
அன்னம்மா சாக்கை விலத்தி வீட்டிற்குள் வருகிருள். குழந்தையைப் பார்க்கிருள். எடுத் து அணைக்கிருள்-கொஞ்சு கிருள் - மார்போடு அணைத்து இன்பம் பெறுகிருள்.
குழந்தை விழித்துக்கொண்டது. அழுகிறது அதுகூட ஒரு அழகாகத்தான் - இன்பமாகத் தான் படுகிறது அவளுக்கு.
மேல் சட்டைப் பின்னைக் கழற்றுகிருள் மார்பகத்தை இழுத்து. மலர்த்துகிருள். குழந்தை யின் வாயைப் புதைக்கிருள் - குழந்தை குதப்பு நிற 1. தாய்மையின் பசுகம் பேரின் சுகம் தலைமயிரைக் \ உாதுகிருள். கறுத்துப் பஞ்சு போல் மென்மையாக... இன்ப ப - பேரின்பம்.
குழந்தை, பால் சுரக்காததால் வாயை மலர்த்துகிறது. மறுபக்கம் திருப்புகிருள் அதே இன்பம் தன்னை மறந்த தாயின்பத்தில் முழ்கிருக்கிருள்.

Page 56
96 தரிசனங்கள்
ஆலயமணியின் ஒசை மீண்டும் ஒலிக்கிறது.
"வாழ்வு ஒரே ஒளிமயமாக. இனி நிச்சயம் தாய் மையின்பம் கிடைக்கும், உண்மையாகப் பால் நினைந்தூட்டு வேன் . குழந்தையின்பக் குழந்தை. தாயே எனக்கு விடுதலை. "- அன்னம்மாவின் நம் பிக் கை ஆணியாகி இறுக "அசைக்க முடியாது" எ ன் று சொல்வதுபோல். .டக். என்ற ஒலி கேட்கிறது .. . . . . ق -L • . . . . . غـــا
ஆம்ாம் நடராஜன் வருகிருன். அன்னம்மா சுயவுணர்வு பெற்று எழுந்து ஓடுகிருள்.
நடராஜன் முகம் மலர்கிறது, அன்னம்மாவின் முகம் மலர்கிறது.
அவன் ஏதோ இரகசியமாக அவள் காதிற்கருகில் கூறுகிருன் பின் பனைமரத்தை நோக்கிச் செல்கிருன் அன் னம்மா குழந்தையாகித் துள்ளி மகிழ்ந்து குடிசைக்குள் நுழைகிருள்.
இருள் - அதோ ஒரு ஒளி கடலலைகள் அமைதியாகத் தரைக் குழந்தையைத் தழுவுகின்றன.
இருள் நிறைந்து கிடக்கும் கரையிலிருந்து கி ழ க்கு நோக்கி - விடிவை நோக்கி இரு ளைக் கிழித்துக் கொண்டு செல்கிறது அந்த ஒளி.
அது ஒரு வெள்ளைச் சேலைப் பாய் விரித்த சிறு தோணி அதன் மேலே ஒளிப் பிளம்பான தீப் பந் த ம். அதைப் பிடித்துக்கொண்டிருக்கிருள் ஒரு பெண். அவள் மே ல் குழந்தை போல் சாய்ந்து கொண்டு துடுப்பைப் பிடித்துக் கொண்டிருக்கிருள் அவள்.
இருளேக் கடந்து ஒளியை நோக்கி - பேரின்பக் குடும்ப வாழ்வை நாடி ஒடும் ஜோடி வேறுயாருமில்லை - அன்னம் மாவும் நடராஜனும்தான். O

நினைவொன்று ஆதிக்கம் * ಕ್ಲೌಳ್ವಥೀ।
*MARAARM
YYAYNMTNM MYr
நிகழ்த்துகிறது
பெப்ரவரி இருபத்தேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம்.
இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனைக் கிளை யி ல் ஹில்டா பெயசேகரா ஹோலின் இருடத்தைந்தாம் நம் பர் அறை கலகலத்துக் கொண்டிருக்கிறது. அந்த அறைக்குரிய வர்களான ரகுநாதனும், கந்தசாமியும், பக்கத்து அறை நண்பர்களான தேவானந்தன், சந்திரதேவன் என்பவர் களோடு சேர்ந்து இந்தக் கதையை எழுதத் தொடங்கிய அந்த நேரம் வ ைர "கடுதாசி விளையாடிக் கொண்டிருக் கிருர்கள்.
அறையின் ஒரத்து மேசையின் மேல் "எக்கனமிக்ஸ் புத்தகம் ஒன்று கவிழ்ந்து கிடக் கிற து. கீழே கிடக்கும் "நோட்சின் ஒற்றைகள் காற்றிலே சலசலக்கா வண்ணம் புத்தகம் "பேப்பர் வெயிற் வேலை செய்து கொண்டிருக் கிறது. கந்தசாமி இடையிடையே புறுபுறுக்கிருன்.

Page 57
9d தரிசனங்கள்
'மச்சான் "காட்சிலை" பொழுது போகுதடாப்பா. நாளைக்குப் பத்து மணிக்கிடையில் ரியூட்ஸ் எழுதி முடிக்க வேணும் அதுக்கு இன்னம் புத்தகமே படிச்சு முடியேல்லை."
"என்னடாப்பா, இரவு இரண்டு மூண்டு மணி மட்டும் படிக்கிருய். பேந்து படிக்கேல்லைப் படிக்கேல்லையெண்டும் சொல்லுருய். உங்கை. தேவானந்தனும் உன்னுடைய ரியூட் குறுாப்தானே அவன் இருந்து விளையாடுருன் நீமட்டும் பெரிய "பாட்ஸ்" அடிக்கிருய். நாலு மணியாகட்டும். ரீக்கு மணியடிக்கு மட்டும் விளையாடுவம் இரு மச்சான்!"
ரகுநாதன் கந்தசாமியின் கதையினை ஊடறுக்கிருன் கந்தசாமியினுடைய றுாம் மேட் அவன்.
விளையாட்டுத் தொடர்கிறது.
அடித்தன் துரும்பு. துரும்பு மணல் இன்னும் வெளிப்படவில்லை.
அதற்குப் பயந்து "பொயின்ற்சு’ களெல்லாம் இடை யிடையே கொட்டுண்ணுகின்றன.
கலாவரை ஏழா ம் கண், தனித்தாள், பா ட் னர் டைமன் ஜாக்கைப் போட்டு உதவுவது துரும்பு மணலுக்குப் பிடிக்கவில்லை. வெளிப்படுகிறது, எதிர்த்தரப்பில் எ க் க ச் சக்கமான பொயின்ற்ஸ். டைமன் ஜாக்கை எட்டி வைத்தி ருந்த கந்தசாமிக்குப் பேச்சு விழுகிறது எதிர்த்தரப்பிலோ பரிகாசம் ஈற்றில் புத்திமதி.
பாவம் புதுப்பொடியன்
முகம் சிவக்கிறது.
கந்தசாமி எழுகிருன்.

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது 99
"விளையாட்டும் வேண்டாம் மண்ணும் வேண்டாம் நான் ரியூட்டோரியல் எழுதப்போறன்"
ஏதோ பெரிய படிப்புப் படிப்பெண்டு சாகிருன் பாவி.
"பிளிஸ். இரடாப்பா. இனிமேல் பகிடி பண்ண ai. s
கந்தசாமி எழுந்து விட்டான்.
"எட மச்சான் எப்பிடிப் படிச்சாலும் நூறுக்குள்ளை genreir ordiisiu CurGS660TLcmr b........
"மற்றது ஒவ்வொரு பேப்பரும் மூண்டு மணித்தியா லத்துக்கு மேலை எழுதவும் ஏலாது.
எழுகின்ற குரல்களின் நையாண்டி கந்தசாமிக்சப் புரிகிறது. என்ருலுந்தான் அவனென்ன செய்வது, எல்லா வற்றுக்கும் மேலாக வறுமைக்கடலில் சகோதரங்களையும் காவிக் கொண்டு கரைசேரத் துடிக்கின்ற ஒரு விதவைக் கிழவியின் முகம் நினைவிலே தோன்றித் தோன்றி வாலிபத் துள்ளத் துடிப்புகளை அடக்கி விடுகிறதே.
ஓ! அது அவன் தாய்.
கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு மேசைக்கு (மன் அமர்கிருன். எக்கனமிக்ஸ் புத் த கம் நிமிர்த்தப்படு கிறது.
அதே வேளை,
தேனீர் வேளைக்கான மணி கணகணக்கிறது.
சிவபூசையில் கரடி.
எல்லோரும் எழுகிறர்கள்.

Page 58
100 தரிசனங்கள்
"நீங்கள் போய் "ரீ"யைக் கு டி ச் சி ட் டு வாருங்கோ நான் ஒரு அரை மணித்தியாலமாதல் படி ச் சுப் போட்டு வாறன்"
"நல்ல கதை தா ன் இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை பாக்கிற்குப் போக வேணுமல்லே. ப கி டி சேட்டையை விட்டிட்டு கெதியாய் எழும்பி வா!'
'றுாம்மேட்" ரகுநாதன் இழுக்கிருன்.
"எக்கனமிக்ஸ்" புத்தகம் மூடப்படுகிறது.
புறப்படுகிற ஆரவாரங்கள்
அவசரக் குரல்கள்.
கடைசி நபரும் சப்பாத்துக் கயிற்றைக் கட்டிவிட்டு நிமிர்கிருள்.
அருகருகே அமைந்து கிடைக்கும் இருபத்தைந்தாம் இருபத்தாரும் நம்பர் அறைகள்-அறைகளின் க த வு க ள் படீர் படீரெனச் சாத்தப்படுகின்றன.
அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
அதற்குப் பின் வந்த ஒரு பத்து நிமிடங்களுள் தேனீர் குடிக்கும் சடங்கையும் முடித்துவிட்டு ஹில்டா ஹோ லின் முன் வாயிற்படிகளையும் கடந்து ருேட்டில் இறங்குகிருர்கள்.
எதிரே கல கா ருேட் நீள நெறிந்து வளைந்து கிடக் கிறது.
"மச்சான் தமிழ்ச் சரக்குகள் கொஞ்ச ம் வருகுது போலே கிடக்கு"
"ஓம் மச்சான் முழங்கால் மு ட் ட ப் பாவாடையும் சட்டையுமாய். தமிழ்ப் பெட்டையள்தான்!”

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது Ol
"டேய் ரகுநாதன் உன் ரை த ம ய த் தி யு ம் வாருள் போல் கிடக்கடா !”
யெஸ் தமயந்திதான் பக்கத் தி லே ஓ! மங்கையர்க் கரசியும் வாருள்.
"றைற், ரகுநாதன் ரை கதை முடிஞ்சிது இனில் பாக் கிற்கு வரமாட்டான்"
"இந்த ரகுநாதனப் பொறுத்தவரை உது நடக்காது கட்டாயம் வருவன் மச்சான்"
அந்தப் பெண்கள் கூட்டம் அண்மி விட்டார்கள்.
ரகுநாதன் மெல்லப் பின்வாங்குகிருன்.
தமயந்தியும் அப்படித்தான்.
"உங்களை எவ்வளவு நேரமாய் பாத்துக் கொண்டி ருந்தனுன் . ஏன் வராமல் ஏமாத்தினீங்கள்...?
‘இன்ரஸ்ற்ராக்" காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்ததில மறந்து போனன் தமயந்தி, நாளைக்குப் பின்னேரம் கட்டா யம் வாறன். படத்துக்குப் போவம், சரிதானே. p
இப்ப.
"பாக்கிற்குப் போறன் தமயந்தி. நாளைக்கு வாறன்"
உங்களுக்கு என்னைவிட பிறண்ட்ஸ் தான் பெரிசாப் போச்சினம். சிங்களிஸ் எல்லாம் என்ன மாதிரிச் சோடி யாய் பாக்கிற்குப் போகினம்.
முகத்தில் செல்லக் கோபம்,
இப்ப இவங்களோடை வெளிக்கிட்டுட்டன் தமயந்தி, இன்னுெரு நாளைக்குப் போவம். என்ன.

Page 59
Η Ο2 தரிசனங்கள்
a7 if? 6hu pru ‘-G3L ...... சீயூ.
போங்கோ உங்களோடை கோவம்.
ரகுநாதன் புன்னகை ததும்ப வ ரு கி ரு ன், மற்ற நண்பர்களின் உள்ளத்தில் சாகசச் செயல்கள் செய்பவனக்
கண்ட பிரதிபலிப்பு. ஓரளவு பொருமையுங்கூட, எனினும் வெளிக்காட்டவில்லை.
"பெட்டை பிடிப்பானேன் கஷ்டப் படுவானேன்".
"பாக்கிற்கிப் போகும் சன்யாசி. உன் காதல் என்னு கும் நீ யோசி. ρ
சகபாடிகளின் குரல்களில் நளினம் நெறிகிறது.
ரகுநாதனுக்கு அவை சகஜம்.
நண்பர்களுக்கும் இது வழம்ை.
ஆளுல் கந்தசாமிக்கு இவையொன்றும் பிடிக்கவில்லை. அவன் பெரும்பாலான வேளை களி ல் மற்றவர்களோடு ஒட்டுவதில்லை. ஒட்டிச் சிந்திக்கத் தக்கதாகச் சந்தர்ப்ப சூழ் நிலைகளும் அமைவதில்லை.
இப்பொழுதுங்கூட
ரகுநாதனினதும், தமயந்தியினுடையதும் நடவடிக் கைகளைக்கண்ட மனம், தமயந்திக்கு அருகில் நடத்துபோன மங்கையர்க்கரசியின் பார் ைவ யு ம், தயக்கமும் ஏதோ உணர்த்த முயல்வதை மீட்டியது.
-பல்கலைக்கழத்துச் சூழ்நிலையே அ ப் படி த் தா ன் பொறுப்பையும் க ஷ் டங்களை யும் உணர்ந்து படித்துக்

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது O
கொண்டிருக்கும் போதுகூட சில வேளைகளில் அகத்திணையின் மயக்கங்களுக்கு உட்படுத்திவிடும்.
நூல் நிலையத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது மங்கையர்க்கரசி அருகிலே வந்தமர்ந்து மெல்லிதாக உரை யாடுவதையும், ரியூட் டோரியல்களையும், "நோட்ஸ்"களையும் வாங்குவதோடு அ டி க்க டி குழந்தைப் பிள்ளைத்தனமான சந்தேகங்களைக்கூடக் கேட்பதையும், அது தவிர்ந்து சாதா ரணமான மற்ற விடங்களில் உரையாடல் நகரத்தொடர் கும் போது, இல்லாமையாலோ, பிடிக்காமையாலோ, பட்டென்று முகத்திலடித்தாற்போன்று தான் கத்தரித்துக் கொள்வதையும் கந்தசாமி நினைத்துப் பார்க்கிறன்.
தமயந்திக்கு அருகில் நின்றபோது மங்கையர்க்கரசி தன் பார்வையால் கந்தசாமியை ஊடுருவியதுதான் அவன் இப்படிச் சிந்திப்பதற்குக் காரணம்.
கந்தசாமியின் சிந்தனையை நண் பர் க ளின் குரல் ஊடறுக்கிறது.
* டேய், நாங்கள் எங்கடை பாட்டிலை ஏதோ அலம் புறம், கந்தசாமி தன்னுக்குள்ளே ஏ தோ கோட்டையைப் பிடிக்கிருன்ரா,
o 69 ..G Gununr 6&or Guurr ?"
f...... அப்போதை தமயந்தியும், மங்கையர்க்கரசி யையும் கண்ட பிறகு தா ன் மச் சா ன் மனத்தை விட்டுட்டார்"
"இருக்கும் இருக்கும் அப்போதை மங்கையர்க்கரசி இவனைப் பார்த்துச் சிரிச்சவள் இவன் மோடன் சிரிக்காமல் நிற்கிருன்.

Page 60
104 தரிசனங்கள்
(3 urrrr Guar...... நான் உதுகள் ஒண்டையும் நினைக் கையில்லை, ரியூட்டோரியல் எழுதுறதைப் பற்றித் தா ன் யோசிச்சனன்."
--கந்தசாமி ஒரு பொய்யைச் சொல் லி நிலைமை யைச் சாமளிக்கிருரன். உண்மையைச் சொன்னல் நிலைமை இன்னும் கனே பரமாகிவிடும் என்பது அவனுக்குத் தெரியும்.
இப்போது ஆட்ஸ் புளொக்கையையும் ர வுண் ட் ஏ பவுட்டையும் தாண்டி விஜயவர்த்தன ஹே ரா லு க்கு
அண்மையில் நடக்கிருரர்கள்.
சோடி சோடியாகவும் கும்பல் கும்பலாகவும் மாண வர் கூட்டங்கள் போய்க் கொண்டும், வந்து கொண் டு ம்
இருக்கிருர்கள்.
ரகுநாதனும் மற்றவர்களும் இடையிடையே நின்று தெரிந்தவர்களோடு ககைத்துக்கொண்டும் அட்டகாசமாகச் சிரித்து உரையாடிக் கொண்டும் நடக்கிருர்கள். கந்தசாமி மனம் ஒட்டியும் ஒட்டாமலுமாய் அவர்களோடு சேர்ந்து
நடக்கிறன்.
கலகா ருேட்டிலே தடந்து வந்தவர்கள் அதுதாண்டி , பேராதனை - கண்டி ருேட்டிலே நடந்து கொண்டிருக்கிருர் கள்.
அதே வேளையில்,
பல்கலைக்கழகத்திலிருந்து கண் டி நோக்கிப் போய்க் கொண்டிருந்த "கம்பஸ் பஸ்" பேராதனை கண்டி ருேட்டும், கலகா ருேட்டும் சங்கமிக்கின்ற வட்டமான திருப்பத்தில் வந்து திரும்பி ‘பொட்டணிக்கல் கார்டினுக்குப் பக்கத்தி லுள்ள ஹோல்டிங் பிளேசில்' நிற்கிறது.

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது 105
அதனுள்ளிருந்து இரண்டு பெண்கள் - தெரிந்த முகங் கள் - மங்கையர்க்கரசியும், தமயந்தியும் இறங்குகிருர்கள்.
ஓ!
ரகுநாதனுக்கு அதிர்ச்சி கலந்த தொரு மகிழ்ச்சி ae. GYOT třeny.
கந்தசாமியின் உள் ள த் தி லும் ஒரு மெல் லி ப தடுமாற்றம்.
தேவானந்தனும் சந்திரதேவனும் துள்ளிக்குதிக்கிருர் கள்.
"டேய் ரகுநாதன், நீ சரியான ஆளடா. தம்யந்தியை விட்டிட்டு வாறது மாதிரி இவ்வளவு நேர மும் எங்களை
நம்பச் செய்து போட்டாய்!"
“UDéřJFrešr...... தமயந்தியை பஸ்ஸிலை வரச்சொல்லிப் போட்டு இவன் எங்களோடை வந்திருக்கிருன்ரா"
-"இல்லை மச்சான். எனக்கொண்டும் தெரியாது. தமயந்தி தானுய்த்தான் வந்திருக்கிருள்"
ரகுநாதன் சொல்கிருன்.
*sffl...... போ மச்சான், இனியும் உங்களைக் குழப்பக் கூடாது. அங்கை தமயந்தி காவல் நிக்கிருள்"
நண்பர்கள் பிரிகிருர்கள். ரகுநாதன் தம்யந்தியை நோக்கிச் சென்றவன், த ம ய ந் தி யி ன் முகத் ைத ப் பார்த்ததுமே நின்று திரும்புகிருள்.
-தமயந்தி கண்காட்டினளா?
*கந்தசாமி."
த. (நே.அ.) 14

Page 61
06 தரிசனங்கள்
ரகுநாதன் கூப்பிடவே, க ந் த சா மி திரும்புகிருன். "நீயும் வா மச்சான், தனியாப்போறது அவ்வளவுவடிவாக் கிடவாது"
‘நான் கெதியாப்" றுரமுக்குப் போய் "ரியூட்டோரியல்" எழுத வேணும் மச்சான், நீ போட்டு வா!"
"அதெல்லாம் இரவைக்கு எழுதி முடிக்கலாம் இப்ப என்ளுேட வாடாப்பா. I'
கந்தசாமி திரும்பி சந்திரதேவனையும், தேவானந்தனை யும் பார்க்கிருன். அவர் க ள் ரகுநாதனுடன் போகுமாறு கையைக்காட்டி விட்டு முன்னுல் போய்க் கொண்டிருக்கிருர் assir. −
வேறு வழியில்லை. தமயந்திக்கு அருகில் மங்கையர்க்கரசி.
ரகுநாதனுடன் போகிருன்.
மங்கையர்க்கரசியும், த ம ய ந் தி யும் அவர்களோடு சேர்ந்து கொள்கிருர்கள்.
"பாக்கினுள்ளே நுழைந்து வலது பக்கமாகத் திரும்பி நடந்த அவர்கள் நீண்டு உயர்ந்து நெருக்கமாக வளர்ந் திருக்கும் மரக்கூட்டங்களைத் தாண்டி நடக்கிறர்கள்.
அப்போது,
ரகுநாதனும் தமயந்தியும். ஏதோ குசு கு சுத் துக் கொள்வது க ந் த சா மி க்கு மெல்லிதாகக் கேட்கிறது. மங்கையர்க்கரசி அவனைப் பார்த்து சிரிக்கிருள்.
ரகுநாதன், கந்தசாமியின் தோளில் கையை வைத்து
ஒரு அழுத்து அழுத்தியவன், "மச்சான் நீ மங்கையர்க்கரசி யோடு கதைத்துக் கொண்டிரு மச்சான், நானும் தமயந்தி

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது 07ג
யும் கொஞ்சத் தூரம் உலாத்திப் போட்டு வாறம்" என்று கூறிப் பிரிகிறன் அவனருகில் அவனேடு இணைந்து தமயந்தி யும் நடக்கிருள்.
எதிர்பாராத இந்த நிகழ்ச்சியினல் முகமெல்லாம் சிவந்து குழம்பிப்போன கந்தசாமி, சங்க ட மா ன கண் களோடு மங்கையர்க்கரசியை ஏறிட்டான்.
அவளைப் பொறுத்தவரை அது ஒரு எதிர் பாரா த நிகழ்ச்சி இல்லைப் போ லி ருக் கிற து சகஜமானதொரு பார்வையோடு அவனை எ தி ர் நோ க் கி ய வ ள் மெல்லிய தொரு புன்னகை உதடுகளில் த வ ழ "இப்படிக் கொஞ்ச நேரம் இருப்போமா ? என்ருள்.
*ஊம்". என்றதொரு மெல்லிய சம்மதம் கந்தசாமி யின் உதடுகளிலிருந்து பிறந்தது.
நீண்டு உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு பாரிய மரத்தின் அடியில் அவர்கள் அமர்ந்தார்கள்.
மங்கையர்க்கரசிதான் முதலில் கதையைத் தொடங் கிஞள்.
"நான் உங்களோடை இண்டைக்கு இப்பிடித் தனிய இருந்து கதைப்பனெண்டு கொஞ்சம் கூட நினைக்கயில்லை.
ஓ! பொய் சொல்கிருள்.
"ஏன் உங்களுக்கு இப்பிடி வேர்க்குது கந் த சா LÉ ? முகங்கூட நோம்லா இல்லை. P
கந்தசாமி சகஜமான நிலைக்கு தன்னைத்தானே உட் படுத்த வேண்டியவனுகிருன்.
"இல்லை . உம்மைப் போலை நானும் பஸ் ஸி லை வரயில்லேத்தானே. நடந்து வந்ததிலைதான் வேர்க்குது.

Page 62
108 தரிசனங்கள்
கந்தசாமி சமாளிக்கிருன். தான் சகஜமாகவே இருக் கிறேன் எ ன் ப ைத அவளுக்குக் காட்டிக்கொள்வதற்காக, மீண்டும் அவனே கதையைத் தொடர்கிருன்.
"நீர் அந்த ரியூட்டோரியலை எழுதி முடிச்சிட்டீரா? தான் இன்னமும் எழுதயில்லை. நாளைக்கு ரியூட் கிளாசைக் *கட்" பண்ணத்தான் வேணும் போலை கிடக்கு"
"நீங்கள் கம்பஸ்"க்குளை சந்திக்கிற நேரமெல்லாம் பாடங்களைப் பற்றித்தானே கதைக்கிறீங்கள். இப்பவாதல் கொஞ்ச நேரம் சும்மா வேறு ஏதாவது கதைப்போமே.
-மங்கையர்க்கரசி அவனுடைய பேச்சுக்குப் புதிய தொரு வாய்க்கால் அமைக்கிருள்.
"என்ன சொல்லுறீர் மங்கையர்க்கரசி ?”
நான் உங்களோடை எவ்வளவு காலமாப் பழகுறன். நீங்கள் மனந்திறந்து என்ஞேடை ஒருநாள் கூடக் கதைக்க பில்லையே. ஏன் கந்தசாமி, நான் உங்களோடை பழகு Agil. . . . . . பிடிக்கயில்லையே..??
இல்லை - மங்கையர்க்கரசி எ ன க்கு அதை எப்படிச் சொல்லுறதெண்டு தெரியேல்லை. நான் எல்லாரோடையும் இப்படித்தான் சின்ன வயசிலையிருந்து இப் படி யே பழகி
விட்டன்.
"எனக்கு உங்களோடை நிறையக் கதைக்கவேணு மெண்டு ஆசை ஆணு. நீங்கள்தான் ஒருநாளும் அப்பிடிக் கதைக்கிறதேயில்லை. f'
‘எப்படி நான் கதைக்க வேணும் மங்கையர்க்கரசி?. அவள் கைகள் தரையிலுள்ள புற்களைப் பி டு வ் கி க் கொண்டிருக்கின்றன. கண்களில் ஒருவித தவிப்பும், கூச்ச

நிண்வொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது 10)
மும் நிழலாட அவனை நோக்கி நிமிர்ந்தவள், இ ைம க ள் Ut-L-556. . . . . மீண்டும் தலையைக் குனிந்து கொண்டே சன்னமான குரலில்.
‘இன்னம்கூட உங்களுக்கு என்ரை மனதைப் புரிந்து கொள்ள முடியேல்லையா கந்தசாமி.?" என்ருள்.
கோர்வை சிதருமல், அவள் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்ததைச் சொல்லியே விட்டாள். முகத்தில் மெல்லிதாக வியர்வை அரும்புகள்.
கந்தசாமிக்கு ஏற்கனவே மனம் உணர்த்தியிருந்ததை இப்போது அவள, தனது பட பட த் த இமைகளாலும், தாணத்தின் செம்மை பரவிய முகத்தினுலும், து டி க்கு ம் அதரங்களாலும் நிதர்சனமாக உணர்த் தி க் கொண்டே யிருந்தாள்.
அந்தக் கணங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன போல இருக்கிறது.
இனம் புரியாத ஒரு உணர்ச்சி.
அப்படியே அவளே வாரி அணைத்துக்கொள்ள வேண் டும் போல் இருக்கிறது.
"மங்கையர்க்கரசி, நீ நினைக்கிறதைப்போலை உன்னை யும் உன்ரை விருப்பங்களையும் புரிந்து கொள்ளாத ஒரு அடிமுட்டாளாக நான் ஒருபோதும் இருக்கையில்லை, நானும் உன்னைக் காதலிக்கிறன் வாழ்க்கை முழுவதுமே உன்னை என் துணை யாக ஏற்றுக்கொள்ள வேணுமெண்டு நான் நாஞக இல்லாமல், என்னையே மறந்த வேளைகளிலெல்லாம் யோசிக்கிறனன்?
-என்று உள்ளம் திறந்து அ வ விட ம் சொல்ல வேண்டும். உணர்வுகள் சங்கமமான அந்த வேளையில் ஆத

Page 63
16 தரிசனங்கள்
ரத்தோடு அவளை அணைத்து, அவளது முதுகை வருடி க் கொடுக்க வேண்டும். என்பது போல இருந்தது அவனுக்கு.
-ஆஞல் வேறு ஏதோ ஒரு சக்தி ஒன் று அவ ன அப்பிடிச் செய்யவிடாது தடுத்தது.
மங்கையர்க்கரசியின் முகம் நிலத்தை நோ க் கி த் தாழ்ந்திருந்தது. கைகள் தரையில் வளர்ந்து நிறைந்திருந்த சிறிய புற்களை ஒவ்வொன்ருக இழுத்து ஒடித்துக்கொண்டி ருந்தன.
கந்தசாமியின் கண் கள் மங்கையர்க்கரசியின் மேல் படிந்தன. செல்வத்தின் வாளிப்பும், பருவத்தின் மினுமினுப் பும் கொழிக்கும் உடலை ஊடுருவி, புற்களைக் கொய்வதால் அசைந்து கொண்டிருக்கும் வலது கரத்தை நோக்கி அவன் பார்வை வழுக்கியது.
அழகிய சிவந்த விரல்கள் த ஸ்ரீ ர் களைக் கொய்து கொண்டிருந்தன.
fib456ir...... அதை ஒடித்தல்.
பிடுங்குதல்,
செருக்குதல்.
புல்லை அள்ளி மாடுகளுக்குப் போடுகின்ற இள ைம மிக்க பெண் கரங்கள்.
வயது வந்த சகோதரிகள்.
புல்லுக்குப் போகின்றன தாய்.

நினைவொன்று ஆதிக்கம் நிகழ்த்துகிறது III
அதுதான் அவனை மனந்திறந்து கதைக்க விட சா து தடுத்த உணர்வுகளின் முளைவிடமா ?
பொறிதட்டிஞற் போன்ற உணர்வு.
வறுமைக் கடலிற் சகோதரங்களையும் காவிக்கொண்டு கரைசேரத் துடிக்கின்ற விதவைக்கிழவி.
தாயின் மெலிந்த உருவம்.
கந்தசாமியை மங்கையர்க்கரசியோடு மனம் விட்டுப் பேசாமல், பழகாமல் தடுத்துக் கொண்டிருந்த அந்தக் காரணியின் தெளிவான உ ரு வம் அவன் மனமெல்லாம் நிறைகிறது:
ஓ! அவளுல் இது முடியாது.
மங்கையர்க்கரசி. என மெல் வி ய கு ர லில் அழைக்கிருரன். ஆனல் தயக்கமோ, சலன மே அற்ற உறுதியான குரல்.
அவள் நிமிர்கிருள்.
உம்முடைய மனத்தை நான் எ ப்ப வோ புரிஞ்சு கொண்டன். ஆனல். ஆளுல். நாங்கள் அப்பிடி ஒரு நாளும் பழகவேண்டாம் மங்கையர்க்கரசி.!
கந்தசாமி இப்படி சொல்வானென்று மங்கையர்க் கரசி கொஞ்சங்கூட எதிர்பார்க்க வில் லை. அது அவள் முகத்தில் தெரிகிறது.
கந்தசாமியோ மீண்டும் தொடர்கிருன்.
தூரத்தில் ரகுநாதன், தமயந்தியும், வருவது தெரி கிறது.

Page 64
12 தரிசனங்கள்
'வயல் மண் எ ன் முல் என்ன வென்றே தெரியாக உமக்கும், வயலைத்தவிர வேறிடம் தெரியா த என்ரை அம்மா, சகோத்ரங்களுக்கும் இ ைட யி லை உள்ள தூரம் இல்லாமல் போற ஒருநாள் வாற வரைக்கும், உம்மாலை. காத்திருக்க. (pl. UT3. • • • • • மங்கையர்க்கரசி!”
மங்கையர்க்கரசியின் கண்கள் கலங்கித் தவிக்கின்றன அழுது விடுவாள் போல இருக்கிறது.
கந்தசாமி எதிர்ப்புறமாகப் பார்த்துக் கொண்டே ாழுந்து விட்டான்.
மங்கையர்க்கரசியும் எழுகிருள்.
ரகுநாதனும், தமயந்தியும் கலகலத்த சிரிப்பொலி களோடு அண்மிக் கொண்டிருக்கிருர்கள்.

பரிதாபத்திற்குரிய,
w ---- *W"
- திலீபன்
நேற்று ஒரு அரசியல்வாதியைக் கண்டேன். அவர் ஒரு எம். பி.
பெயர் சின்னத்தம்பி. மக்கள் தொண்டு
சமூகசேவை
தனது வாழ்நாளில் பெரும்பாகத்தை மக்கள் தொண்டுக் காகவே செலவு செய்துள்ளாராம். அதற்காகத் தன் குடும்ப நலனையே தியாகம் செய்துள்ளாராம். மீண்டும் கன்னையே தேர்தலுக்கு நிற்கும்படி .தொகுதி மக்கள் வற்புறுத்தி அழைக்கிருர்களாம். மக்கள் விருப்பத்தை மறுக்க விருப்ப மின் று மறு படி யும் தொண்டில் இறங்குகிருராம்!
நகரத்தின் மத்தியில் உயர்ந்த நவீனபாணிவீடு.

Page 65
14 தரிசனங்கள்
புதிய மொடல் கார்கள் இரண்டு. ஆடம்பரங்கள். விழாமேடைகளில் மலர் மாலைகள். பத்திரிகை முகப்புக்களில் வாரதரிசனம். இவை தியாகத்தின் பரிசுகள்.
அவரது புதல்வி வெளிநாட்டில் உயர்கல்வி பயில்கிறர். காரணம் ? உள்நாட்டு மாணவர்களுடைய சந்தர்ப்பாய் களைத் தான் த ட் டி ப் பறிக்கக்கூடாது என்ற பெருந் தன்மையான எண்ணம்.
ஆகா! என்ன பெருத்தன்மை!! என்ன மான்பு!!! நாடு பொருளாதாரத்தில் மிகப்பின்தங்கியுள்ளது.
எனவே வெளிநாட்டுப் பிரயாணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கொள்கை பொதுமக்களுக்குத்தான்.
அவர் மூன்ருண்டுகளில் பதின்மூன்று தடவை உலக வலம் செய்துள்ளார், நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களின் ar nrriřídio.
உண்மைதான். நாட்டை அபிவிருத்தி செய்கிருர்கள்.
தியாகிகள், குடும்ப நலனைத் துறந்தவர்கள். ஆளப்பிறந்தவர்கள்
பாட்டாளி வர்க்கத்தின் காவலர்கள்.
ஆம். வியர்வை சித்தும் பாட்டாளி வர்க்கத்தின் பிரதி நிதிகள்தான் தேர்தல் மேடைகளில், விழாக்களில்.

பரிதாபத்திற்குரிய. 15
ஊர்வலங்களில்,
தனிப்பட்ட வாழ்க்கையில்.
"பரம்பரைப் பணமுதலைகள் பிச்சை வாங்கவேண்டும்". என்று யாரோ கூறுவது காதில் விழுகின்றதே. ஆ1 கூடாது. இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அவர்கள் தியாகிகள்.
சமூகத் தொண்டர்கள். பாட்டாளி வர்க்கத்தின் காவலர்கள்தான்.
இலட்சிய புருடர்கள்தான்.
இவர் ஒரு இலக்கிய கர்த்தா. புதிய சமுதாயத்தை உருவாக்கும் சிந்தனைச் சிற்பி.
நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் பல நாவல்களையும் கவிதைகளையும் எ மு தி க்கு வித் த வ ரி. இலக்கியத்தின் சமுதாயப் பணியில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.
சிறந்த விமரிசகரும் கூட. அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கிருரர்.
கலாச்சாரப் பேரவைகளின் ச மா சத் தி ற்கு கெளரவ தலைவருங் கூட,
ஏழைகள். உழைக்கும் மக்கள்.

Page 66
16 தரிசனங்கள்
பின்தங்கிய இனத்தினர்.
இவர்கள் யாவரையும் இரத்தமு. சதையும் மணக்கக் கூடியதாகத் த 10 து படைப்புக்களின் இனம் காட்டி
யுள்ளார்.
இவரது பெயரைச் சொன்னுலே இலக்கிய உ ல க ம் தலை வணங்குகின்றது.
இவருக்கு காதலில் நம்பிக்கையில்லை. பாட்டாளி வர்க்க நலன் கருதுபவரல்லவா. அதனுல் இவருக்கு காதலுணர்வு கள் ஆரம்பத்திலேயே கத்திரிக்கப்பட்டு விட்டன.
திருமணம் செய்த மனைவி ரூபா ஐந்து லட்சம் கொண்டு வந்ததாகப் பேசிக்கொள்கிருர்கள். சொத்துக்கள் மனைவி யின் பெயரில் இருப்பதால் இவர் உண்மையில் சாதாரண மனிதராகத்தான் - பணபலமில்லாதவராகத்தான் - ஏழை பங்காளராகத்தான் இருக்கிருராம். ஆமாம் மனைவிதானே பணக்காரி,
இவரல்லவே.
இவருக்குக் காதலுணர்வுகள் பாட்டாளிவர்க்க நலன் கருதிக் கத் தி ரி க் க ப் படு வ தற்கு முற்பட்ட கால சிறு மயக்கத்தில். ر
உறவுக்காரப் பெண்ணுெருத்தி பெற்ற ைப யன் ஊரில் பீடித்துண்டு பொறு க்கு வது பற்றி நாலுபேரி பட்டும் படாமலும் கதைப்பதில் உண்மை இருக்குமா?
ஆண்டவனுக்குத்தான் (?) வெளிச்சம்.

பசிதாபத்திற்குரிய. 17
அப்படி இருந்தாலும், அது அவர் தவறல்ல. அவளுடையதும்தான்.
மேலும்
தனி மனித நலன் கருதுபவரல்லவே அவர். சமூக ஏற்றத்தாழ்வுகளை இவர் எதிர்ப்பவர். எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிருர்,
அவர் தம்பி காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை எதிர்த்து உறவையே கைவிட்டவர்,
காதலி தாழ்ந்த இனத்தவள் என்பதற்காகவல்லவாம்.
காதலுணர்வுகள் த r ம் ந் த ைவ என்பதற்காக என்று கூறப்படுகின்றது.
இருக்கலாம்.
வீட்டு வேலைக்காரப் பெண்கள் அடிக்கடி மாற்றப்படுகிறர் கள் என்று கேள்வி.
எல்லோருக்கும் சமசந்தர்ப்பம் கொடுக்கும் பரந்த மனப் பான்மையாக விருக்கலாம். Jyä6g... ...
தேசிய இலக்கியப் பரிசுக்குப் போட்டியிட்ட பன்னிரண்டு படைப்புகளில் தரமானவற்றைத் தேர்ந்தெடுக்கும் பணி இவரை நாடிவந்தது.
பெருந்தன்மையுடன் செயலாற்றிஞர்.

Page 67
s தரிசனங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல் "பயிரும் களையும்' ஒரு சிறந்த படைப்பல்ல என நாலுபேர் இர க சி ய மாக ப் பேசிக்கொள்கிருர்கள். இருக்குமா?
ஒருவேளை இவர்கள் இலக்கியப் பயிற்சியில்லாதவர்களாக இருக்கலாம்.
இப்படி அதன் தரத்தைக் குறைகூறுபவர்கள் "சமுதாயப் பணியில் நம்பிக்கையற்றவர்கள்' 'பிற்போக்குவாதிகள்" என்று இவர் பத்திரிகையில் விளாசியிருந்தார்.
இருக்கலாம்.
ஆஞல் பத்திரினகயில் வெளிவராத செய்தி யொ ன் று அடி படுகிறது.
‘இவருடைய மருமகன் ஒருவருக்கு உயர் பதவி ஒன்று கிடைத்ததற்குக் கைமாருக சம்பந்தப்பட்ட அமைச்சரின் அடிவருடியான எழுத்தாளர் ஒருவருக்கு நன்றியறிதலத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருந்தார் என்று"
சீ.சீ. இப்படி ஒரு இலக்கியச் செல்வரின் பெருமையை இழிவுபடுத்தலாமா?
என்ன செய்வது. இலக்கியத்துறையிலும் பந் த வ்ே கள் எரியத் தொடங்கிவிட்டன என்பதை அவற்றின் ஒளியே காட்டும்போது நம்பாமல் இருக்க முடிகிறதா ?
இந்த இன்டலெக்சுவல் யுகத்தில்
எதுவும் நிகழலாம்.
O O e

பரிதாபத்திற்குரிய. 19
சிவராசா ஒரு சாதாரண ம்னிதன். பட்டதாரி.
சுமந்திருக்கும் பட்டம் அவனுக்குச் சுமையாக இருப்பதற் குக் காரணம் ?
6)jg2y 69pLD. தொழிலின்மை.
விளம்பரப்படுத்தப்படும் பதவி வெற்றி . ங் கள் ஏற் கெனவே திட்டமிட்டு இரகசியமாக நிரப்பப்பட்ட பின் சம்பிரதாயப்படி வருவன சான் னும் உண்மை உணர முடியாத அளவு தற்குறியல்ல எ ன் ரு லும் விண்ணப்பம் இன்டர்வியூ என்ற சடங்குகளை நிகழ்த்தாமல் விடுமளவு துறவியாகவில்லை.
அவன் இந்தச் சமூகத்தின் ஒரு பிரதிநிதி. சமுதாயத்தில் இரத்தமும் சதையுமுள்ள ஒருபிராணிதான். அவனை உருவாக்கியது.
இந்தச் சமூகம்தான்.
அவனுக்கும்
ஆசைகள்.
உணர்வுகள்.
ஏக்கங்கள்.
இன்ப நினைவுக்கிறக்கங்கள் உண்டுதான்.
பிச்சையெடுக்கத்தடையான பட்டத்தைச் சுமந்து நடந்து கொண்டிருக்கிருன்.
பட்டதாரிகள் தொழில் செய்யலாம்.

Page 68
] ቋፀ தரிசனங்கள்
விவசாயம் கெய்யலாம். சிறுகைத் தொழில்களில் ஈடுபடலாம்.
மாலை மரியாதை ம யக் கத் தி ன் மத்தியில் மேடையில் தகுந்த பதவி வகிப்போர் கூறும் வழி கள் உண்மையில் அவனுக்குப் பொருத்த மா ன - நிச்சயம் பலன் தரக் கூடியவைதாஞ ?
அப்படியாஞலும் அதற்கும் மூலதனம் ? அவனுக்குத் தொழிற்பயிற்சி ?
இவைகளைச் சிரமப்பட்டு பெற்று வாழ வழியை வகுத்துக் கெண்டாலும் சமூக அந்தஸ்து ?
எந்த அரசியல் வாதியும்
எந்தச் சமூகத் தொண்டரும் எந்தப் பத்திரிகை முகப்புப் பிரமுகரும்
எந்த உயர் பதவியாளரும்.
தமது குடும்ப உறவில் ஒரு விவசாயியை
ஒரு தொழிலாளியை
சேர்த்துக் கொண்டதற்கு வரலாறு உண்டா ?
இது ඖෂ புதிய தீண்டாமை.
கொதிக்கும் இதயம். வரண்ட நெடுமூச்சு.
இருட்டில் வழிதெரியாமல் தடுமாறும்போது தூ ரத் தில் ஒரு ஒளி தெரிவதான பிரமை.

பரிதாபத்திற்குரிய. 1 .
அது என்ன நெருங்க நெருங்க ஒளி பெரியதாகத் தெரிகிறது. ஒன்று. பத்து. நூறு. ஆயிரம். பந்தங்கள்.
பற்றியெரிகின்றன. அவற்றில்தான் எத்தனைவகை ? எத்தனை நிறம்! எத்தனை அழகிய தோற்றங்கள்! பிடிப்பவர்கள் ? அவனுக்குத் தெரிந்த முகங்க்ள்தான். எத்தனை டேர் ?
qumrሰት ህuጠrff ?
யார் யாரை இதுவரை காலமும் புத் தி பூ ர் வமா ன ஆரய்ச்சியால்
அப்பாவிகள்
இலட்சிய புருஷர்கள்.
பெரியவர்கள் என்று கருதி அனு தாபம் அன்பு வீர வணக்கம் என்பவற்றைத் தெரிவித்து வந்தாஞே.
அவர்கள் என்ன திருவிழாவா? ஒன்றுமாகத் தெரியவில்லையே. இவ்வளவு பந்தங்களும் யாருக்குப் பிடிக்கப்படுகின்றன.
ஒன்றும் புலனுகவில்லை. பந்தப் பிரயாணம் தொடருகிறது ஆணுல் நேரம் போகப் புலப்படுகிறது.
5. (Gips. py.) 16

Page 69
122 தரிசனங்கள்
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பிடித்துக் கொள்கிருர் கஜ் , ஒருவருக்குப் பலர் பிடிக்கிருர்கள். பலருக்கு ஒருவர் பிடிக்கிருர்,
கற்பக தருவையும் காமதேனுவையும் வி. சர்வ தேவைகளையும் நிறைவேற்றித் தரவல்லது பந்தம்.
Fiřady Gurnrs pflanum prstyfu iku FIA.. சிவராசாவும் தொடர்கிருன் பந்த ஒளியின் பின்னுல். ஏதோ தட்டுப்பட்டது காலில். அது புகைந்து கொண்டிருக்கும் ஒரு பந்தத்தடி.
யாரோ தம் தேவை முடிய எ ஹிந்து வி ட் டு ப் போய் விட்டார்கள் போலும்.
சிவராசா அதை எடுத்தான். புகைகிறது. எண்ணெய் இல்லை என்பதாலா ? ஆம். எண்ணெய் கிடைக்கும்வரை
பந்தம் புகையத்தான் செய்யும்.
பந்தங்கள் எப்பொழுதும் எரிவதில்லை.
நாகலிங்கம்.
நகரசபைக் குப்பைவண்டித் தொழிலாளி.

பரிதாபத்திற்குரிய. 123
வாழ்க்கையின் மிகக்குறுகிய தேவைகளைக் கூட மிகச் சிர மத்துடன் நிறைவேற்றிக் கொள்ள அவன் படும்பாடு.
சிந்தும் வியர்வை, செருப்பின்றித் தேயும் கால்கள். தொழிலாளிகள் வாழ்வு மலரும். பாட்டாளிகள் அரசு வரும். பாடுபடுபவனுக்கே இந்தப் பாரிடம் சொந்தம்.
இந்த அலங்கார வார்த்தைகள் எழுதிய கோடி அட்டை களைத் தாங்கிக்கொண்டு தொழிற்சங்க ஊர்வலங்களில் வரிசையாகச் செல்லும்போது தானும் நாலு பேர் கண் களுக்கு ஒரு மனிதனுகத் தெரிகிறேன் என்று ஒரு திருப்தி.
"பாட்டாளி வர்க்கத்தின் மலர்ச்சிக்காகப் பாடுபடுகிருேம் என்று கூறிக்கொண்டு தொழிற் சங்கத் தலைவர்கள் முதல் வரிசையினர் தமக்குள் பரஸ்பரம் மாலை மரியாதையுடன் அலங்கார வேடிக்கைகள் செய்து கொள்ளும்போது எதிர் காலத்தில் அப்படி ஒரு நிலை தனக்குண்டு என்ற கனவு.
தோழர் இஸ்குஷ்னெவ் தோழர். சோ - சே - துங் தோழர். தோழர் நாகலிங்கம். ஆகா! என்ன சமத்துவம்.
கை தட்டவும், பட்டினிகிடக்கவும், சுலோ க அட்டை தூக்கவும் தூண்டும் தலைவர்கள்.
தலைநகரத்தில் உயர் வர்க்க சுகபோ கங்களை அனுப விப்பவர்கள்.

Page 70
24 V தரிசனங்கள்
அடிக்கடி அயல்நாட்டுப் பயணங்களில் தம் பிறவிப்பயனை யும் செல்வச் செழிப்பையும் நாடுபவர்கள்.
தோழமை அல்லவா கொண்டாடுகிருர்கள். கண்ணுல் காணுத அந்தத் தியாகிகளை இந்தத் தலைவர்களில் (?) கண்டு ஒரு வீரவழிபாடு. ஆம் தோழமைக்குள் ஒரு வீரவழிபாடு. மேய்ப்பர்கள் மேய்க்கிருர்கள். மேயும் ஆடுகள் மேய்கின்றன.
நாகலிங்கம் குப்பைவண்டிதான் தள்ளுகிருன்.
தொழிற்சங்கத் தலைவர் இப்போ அ ர சாங் கத் தி ல் உயர்பதவியில்.
சின்னத்தம்பி மே ைட யி ல் அமர்ந்திருக்கிருர், இலக்கிய விமர்சகர் கலாச்சாரப் பேரவைகளின் தலைவர் ஒலிபெருக் கியின் முன் தமது அலங்கார நடையில் "எங்கள் நாடு எங்கள் சமூகம்!! கடந்த கலத்தின் தோல்விகள் எல்லா வற்றையும் மறந்து நாம் புதிய வெற்றியை நோக்கிப் போகவேண்டும் என்பது மனங் கொள்ளத்தக்கது. பெற்ற வெற்றிகள் ஒரு முகப்படுத்தப்படவேண்டும்.
படித்தவர்கள் கலைஞர்கள், விவசாயிகள் பாட்டாளிகள் எல்லோரையும் ஒரே திசையில் ஒரே நோக்கில் வழி p5-55,615l. . . . . .

பரிதாடத்திற்குரிய. 25
கட்சியே. அந்தக் கட்சிச் சார்ப்பில். தொகுதி மக்கள் அறிஞர் நண்பர் சின்னத்தம்பி அவர்களை ஆதரித்து புதிய சமூகம் உருவாக,
சமத்துவம் மலர,
வறுமையை வெல்ல,
ஓட்டளிக்க வேண்டும். என்று மு ழ ங் கி நிறுத்தித்
திரும்ப சிவராசா சோடா உடைத்துக் கிளாசில் ஊற்றிக்
கொடுக்கிருன்,
கைதட்டல் ஒலி வானைப் பிளந்தது.
நாகலிங்கமும் கைதட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறன்.
அடுத்து சின்னத்தம்பி பேச எழுகிருரர்.
மற்றவர்களை முந்திக்கொண்டு சிவராசா மாலே போடுவதில் .ெ நறி காண்கிருன்.
எண்ணெய் கிடைத்த பின்பும்
பந்தம் புகைந்து கொண்டிருக்கக்கூடாதல்லவா?
சதை முடிந்து விட்டதா ?
வரை மறந்து விட்டோம்
()க்கதையில் யாரைப் பற்றி எழுத வந்தோமோ அந்த அவர் யார் தெரியுமா? எங்கள் மதிப்பிற்குரிய பொதுசனம்
அவர் கேள்தான்.

Page 71
6 தரிசனங்கள்
அவர் மிகவும் நேர்மையானவர்.
நிதான மானவர்.
ஆணுல் பாவம்
யாரையும் லேசில் நம்பிவிடுவார்.
உலகம் பெரியது.
அதுபோல தண் டர் பொது ச என த் தி ன் மனமும் பெரியதுதான்.
அவர் தான் ஏமாற்றமடைந்தாலும் யாரையும் ஏமாற்றுவதில்லை.
அதனல்
அவரைப் பற்றி அதிகம் கூறவேண்டியதில்லையல்லவா ?
یخW ঈঙ্গিীর্জ

gaagaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaag. 靈 O ஐ உறவுககு அபபால ஐ 蠍藏
YYYzLLLYzYYLLLYSLLELLLGzYYLkLLLAL0LLYLLLYYYLLLLLLT
yyyyyyyyyyyyyyyyy
- வSபெம்மே அமீன் -
'உன்னையும் உன் குழந்தைகளையும் Lurrrifikas GonsF யாக இருக்கிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் உன் அக்கா சரோஜாவும் லீவு எடுத்துக்கொண்டு வீ ட் டு க்கு வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிருள். தேவகியும் வந்து நான்கு நாட்களாகின்றன. அவர்களும் உன்னையும், குழந் தைகளையும் பார்க்க மிக வும் விருப்பமாக இருப்பதாகக் கூறினுர்கள். ஆகவே, நீ யும் குழந்தைகளுடன் கணவனை யும் அழைத்துக் கொண்டு கண்டிப்பாக வந்து விட வேண் டும்" என்று வசந்தியின் தாய் எழுதிய கடிதம் இன்று காலையில் தான் அவளுக்குக் கிடைத்தது.
கடிதத்தைக் கணவரிடம் காட்டினுள்.
"கட்டாயம் நீ போகத்தான் வேண்டுமா?" என்று Gastill-rrri.
'இன்னும் தீர் மானிக்கவேயில்லை"

Page 72
፤ 28 தரிசனங்கள்
"சரி, தீர்மானித்து விட்டுச் சொல், நான் ஆபீ ஸுக்குப் போகிறேன்" என்று சொல் லி விட்டு அவர் சென்று விட்டார்.
கடிதத்தை மீண்டும் ஒருமுறை எடுத்து வாசித்துப் பார்த்தாள். "நீ க ட் டா யம் போகத்தான் வேண்டுமா?" என்று கணவர் ஏன் கேட்டார் எ ன் று சிந்தித்தாள், ஒ! அவர் கேட்டதிலும் உண்மை இல்லாமலில்லை.
அவளின் இளமைக்கால ஆசாபங்கத்தின் நினைவு ச் சுவடுகள் புண்களாகப் பதிந்திருந்த இ த யத் தி ன் அடித் தளத்திலிருந்து கிளர்ந்தெழுந்தன.
என் கணவர் பெரிய உத்தியோகத்தராக இல்லாத தால் எங்களே யாருமே மதிப்பதில்லை. அம் மா மட்டும் பெற்ற பாவத்துக்காக நான் ைக ந் து தடவை எட்டிப் பார்த்துவிட்டுப் போயிருக்கிருள். சரோஜா..? என்னே அவள நினைத்தும் பார்த்திருப்பாளா? பெரிய டாக் டர் என்ற மமதை அவளுக்கு ஏ ைழ யா ஞ ல் எல்லாருக்கும் தாழ்ந்தவர்களாக இருக்க வேண் டு ெம ன் பது என்ன நியதியா ? அதனுல் தான் போலும் கணவர் அ ப் படி க் கேட்டார். அவருக்கும் சில விஷயங்கள் தெரியும். சில சொல்லாமலே புரியும்.
யோசிக்க யோசிக்க அவள் மனதுக்கு மிக வருத்த மாகவே இருந்தது. வெறிபிடித்தாற் போலத் திடீரெகக் கடிதத்தைக் கிழித்தெறிந்து வி ட் டு குமுறிக் குமுறி அழு தாள். அவள் மீதும், அவள் குடும்ப நிலை மீதும் ஏற்பட்ட கோபம் சுழன்று சுழன்று சென்று அம் மா வின் மீதும் அக்காவின் மீதுமே போய் முற்றுப்பெற்றன.
அவளின் அம்மா, அக்கா, தங்கை அனைவரும் எட் டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இரு ப் பதாக அவள்

உறவுக்கு அப்பால் 29
உணர்ந்தாள். தன்னைச் சிறப்பாக வாழவைக்காது கழுத்
தைப் பிடித்துக் கீழே தள்ளிக் கால்களால் மிதித்து விட்டு மேலே மேலே சென்ற அவர் கள் வெறும் காட்சிப்
பொருளாகத்தான் அவளுக்குத் தோற்றமளித்தனர்.
2
வசந்தியின் அப்பா ஒரு சுமாரான ஒரு வியாபாரி. பரம் பரைச் சொத்துக்கள் சிலவும் அவருக்கு உண்டு. அவரின் மூத்த பெண்தான் டாக்டர் சரோஜா. தங்கை தே வ கி பல்கலைக்கழகத்திற் படிக்கிருள். அவளுக்கு ஒரு தம்பியும் இருக்கிருன். அவன் இப்போது ஹைஸ்கூலில் படி த் து க் கொண்டிருக்கிருன்.
வசந்தியின் அக்கா சரோஜா படிப்பில் படு சு ட் டி ஆரம்பப்பள்ளிக் கூடத்திற் படித்துக் கொண்டிருந்தபோது அவள் தான் வகுப்பில் முதலாவதாகத் தேறுவாள். ஆளுல் வசந்தியோ அக்காவுக்கு நேர் மாறனவளாக இருந்தாள். பலமுறை பரீட்சைகளில் தோற்றுப் போயிருக்கிருள்.
சரோஜா முதற்பெண்ணுன படியால் பெற்ருேர்க்குச் செல்லப்பிள்ளையாகவே இருந்தாள். அவள் சொன்னதை யெல்லாம் மறுப்பின்றிச் செய்தார்கள். கேட்டதையெல் லாம் வாங்கிக்கொடுத்தார்கள். சமையலறையை எட்டியும் பார்க்க மாட்டாள். சரோஜா கெட்டிக்காரியாக இருந்த தால் சமையல் வேலையில் ஈடுபடாததையிட்டு பெற்ருேர் அவள் மனம் நோக எதுவுமே பேசமாட்டார்கள். இதனல் வசந்தியே எ ப் போது ம் சமையலில் ஈடுபடவேண்டிய தாயிற்று. அவள் படிக்க வேண்டுமெனப் பி டி வா த பம் செய்தாலும் கூட, அதையாரும் சட்டை செய்யமாட்டார் கள்: சமையலை முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க
த.(நே.அ.) 17

Page 73
130 தரிசனங்கள்
வேண்டுமென அம் மா கண்டிப்பாகச் சொல்லிவிடுவாள். அப்போதெல்லாம் வசந்திக்குச் சரோஜாவின் மீது கோபம் கோபமாக வரும் அம்மாவுக்குப் பயந்து எதையும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டாள்.
ஒருமுறை வசந்தி வேலை செய்து செய்து களைத்துப் போப் விராந்தாவில் உ ட் கார் ந் து கொண்டிருந்தாள். அப்போது சரோஜா வந்து, "கொஞ்சம் தேநீர் போடு! தாகமாயிருக்கிறது" என்ருள்.
உடலிற் களைப்பும் மனதில் அலும்பும் நிறைந்திருந்த சமயமாதலால் சரோஜா சொன் ன ைத க் கேட்டதும் வசந்திக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை.
**தாகமாக இருந்தால் ஊற்றிக்குடி! என்னுல் முடி யாது. நான் உனது வேலைக்காரியா? உ ன க் கு மட்டும் என்ன அவ்வளவு பெரிய வேலையிருக்கிறதா ? ம லே ையப் புரட்டப் பார்க்கிருயா ?"
'நான் படித்துக் கொண்டிருந்தது கண்ணில் பட Glavžavu umruo ?""
**நானும் தான் படிக்கிறேன். நீ மட்டும் விரோடி மாகப் படிக்கிருயா ? என்ன பெரிய டாக்டருக்குப் படிக் கிருய் என்ற நினைப்போ ?"
"ஆமாம்டீ. ஆமாம். நான் படிக்கப் பிறந்தவள். நீ சமைக்கப் பிறந்தவள். பார்ப்போம். நீ ட டி த் து க் கிழிக்கப் போருய், ஒ. எனக்குத் தெரியும். Jeylb 1 Drr சொல்லியிருக்கிருள்?" W−
தான் இட்ட கட்டளே செயற்படுத்தப்படாததால் அவளின் இதயத்தில் வேலைப் பாய் ச் சி விட்டுச் சென்று விட்டாள் சரோஜா.

உறவுக்கு அப்பால் 31
வசந்தியின் தலையில் விழுந்த முதலாவது இடி இது தான். அப்போது அவளுக்கு வயது பதினறு. சரோஜாவுக் குப் பதினெட்டு.
3
சரோஜா ஜீ. ஸி. ஈ சித் தி யடைந்த தும், மேற் கொண் டு படிப்பைத் தொடர்வதற்காகப் பட்டணத்தி லுள்ள உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று விட்டாள்.
அதற்கு மூன்று வருடங்களுப் பிறகு வசந்தி ஜி. ஸி.ஈ பரீட்சைக்குத் தோ ற் றி ஞ ள். மூ ன் று முறை பரீட்சை எடுத்தும் நான்காவது தடவைதான் ஒருவாறு சித்தியடைந் தாள். வசந்தியும் அக்காவைப் போன்று தன்னையும் படிப் பிக்க வேண்டுமெனப் பிடிவாதம் செய்தாள். அந்நிலையில் தான் அவளின் தம்பி செல்வரத்தினம் பிறந்தான். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலை யும் சற்று மோசமாக இருந்தது. இவற்றின் காரணமாக அவளின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
பட்டணத்திற் க டி த் துக் கொண்டிருந்த சரோஜா டாக்டர் படிப்பினை மேற்கொள்ள பல்கலைக்கழகத்துக்குச் சென்று விட்டாள். உயர் கல்விக்காக அரசாங்கத்தால் நிதி உதவி கிடைத்தமையால் தகப்பனுக்கு முன்போல் பணம் அனுப்ப வேண்டிய தேவை இருக்கவில்லை. மேலும், செல்வ ரத்தினமும் ஓரளவு வளர்ந்து விட்டான். அவனுக்கு ஓடி யாடித் திரியும் வயது. இவற்றையெல்லாம் கவனித் து, தன் தாயிடம் மீண்டும் தனது படிக்கும் ஆசையை வெளி யிட்டாள்.

Page 74
132 தரிசனங்கள்
* 'இனியென்ன படிப்பு வேண்டியிருக்கிறது ? கிழவி யாகும் வரை படிக்க வேண்டுமென்று நினைக்கிருயா ? என் னுல் மட்டும் வீட்டு வேலைகளேயெல்லாம் செய்ய முடியுமா? நீயாவது, படித்துப் பட்டதாரியாவதாவது! நீ படித்துப் பெயிலாகிற லட்சணத்துக்கு பட்டணப் படிப்பொன்றுதான் குறைவு” என்று எரிந்து விழுந்தாள்.
மீண்டும் சொன் ஞ ள். 'அம்மா! நீங்கள் வாய் திறந்து இப்படிச் சொல்லலாமா ? நானும் நாலுபேரைப் போல மானம் மரியாதையாக வாழ வேண்டுமானுல் கஷ் டப் பட்டாவது படிக்கத்தானே வேண்டும் ?*
"மூடுடி, வா ைய! இப்போதென்ன உன் மானம் போய் விட்டதா ?
அம்மாவிடம் சொல்லித் தன் ஆவலை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வசந்தி அப்பாவிடம் சென்று மெதுவாக விஷயத்தை எடுத்துரைத்தாள். அவர் மிக வும் மகிழ்ச்சி யடைந்தார். கூடிய விரைவில் அக்காவைப் போல மேல் படிப்புக்காகப் பட்டணத்திக்கு அனுப்பு தா க க் கூறி உற்சாகப்படுத்தினர்.
அடுத்த நாள் அவள் சமையலறையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது அம் மா திடீரெனப் பிரச்ன்னமாகி *" ஏன்டீ உன் பழைய பல்லவியை அப்பாவுக்கிட்டேயும் பாடிவிட்டாயா?" என்று கேட்டாள்.
அவள் தைரியத்தை வ ர வ ைழ த் துக் கொண்டு 'நானும் அக்காவைப் போல படிக்க வேண்டுமென்றுதான் சொன்னேன்” என்ருள்.
ငါ့ရှို့ဝံ့
வசந்தியின் அப்பா அம்மாவின் கருத்துக்கு மாருகவே இருந்தார். அவரின் பிடிவாதத்தால் அம்மாவும் கடைசியில்

உறவுக்கு அப்பால் I 33
அரை மனதுடன் இணங்கி வி ட் டா ள். பின்பு ஒரு நாள் வசந்தியை மேல் படிப்புக்காகப் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார். அம் மா வின் பழிச்சொற்களைப் பொய்யாக்க வேண்டுமென்ற ஆவலில் அவள் மிகவும் ஏகாக்கிர சிந்தை யாகப் படித்தாள்.
ஒரு வருடம் கழிந்தது.
ஒரு நாள் "அப்பாவுக்குச் சுகமில்லை; உடனே வா என்று தந்தி வந்தது. அன்றே வீடு திரும்பினுள்.
மாதங்கள் பல கடந்தும் தகப்பனின் நே ா ய் குண மடையும் அறிகுறியையே காணவில்லை. படிக்கும் ஆர்வத் தைக் கொஞ்ச காலத்துக்கு ஒதுக்கிற் தள்ளிவிட்டு அப்பா வுக்குப் பணிவிடை செய்வதில் அ வ ள் முழிமூச்சாக ஈடு பட்டாள். "என்னைப் பார்த்துக்கொள்ள உன் அம்மா இருக் கிருள்; தம்பி, தங்கையும் இருக்கிருர்கள். நீ ஒன்றுக்கும் கவலைப்படாமல், கவனமாகப் போய்படி" என்று அப்பா பன்முறை சொன்னபோதும், உங்களின் நோய் சுகப்படா மல் நான் இவ்விடத்தை விட்டு அசையவே மாட்டேன்" என்ருள் அவள்.
அவள் சொன் னது பொய்க்கவில்லை. அவள் மேல் படிப்புக்காகத் திரும்பவும் பட்டணம் போகவுமில்ல; தகப் பனின் நோய் சுகமாகவும் இல்லை. அவர் இறந்து போனர்.
崇
தகப்பனின் இறப்பின் பின் குடும்பப் பொறுப்பெல் லாம் அம்மாவின் தலையிலேயே விழுத் தன. அப்போது படிக்கப் போகவேண்டுமென்று வாயைத் திறக் க க் கூட அவளால் முடியவில்லை அவள் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விட்டாள்.

Page 75
134 தரிசனங்கள்
என் முலும், சிறிது காலம் செல்ல, நிலை ைம க ள் ஒரளவு சீரடையவே, தான் படிப்பைத் தொடர ஆசைப் படுவதாக அம்மாவிடம் கூறினுள்.
"உன் அப்பா எக்கவலையுமின்றி எல்லாப் பொறுப் புக்களையும் என் தலையிற் சுமத்திவிட்டுச் சென்றுவிட்டார். அந்தக் கவலை, அந்தச் சுமை இருக்க, நீ வேறு எ ன் னை ப் போட்டுத் தெரந்தரவு செய்கிருயா ? நான் என்ன ஆண் பிள்ளையா? உனக்காக மாதத்துக்கு முந் நூறு. நானூறு செலவிட நான் வியாபாரம் செய்கிறேஞ?" என்று எரிந்து விழுந்தாள் அம்மா.
“ “SPP. . . . . . அப்பா மட்டும் இருந்திருந்தால் நான் இப் படியிருக்க வேண்டுமா ??" எனக் கூறி கண்களை முன்முனை யால் துடைத்துக் கொண்டாள்.
அம்மா திடீரெனப் பத்திரகாளியாக மாறி ன ஸ். "நான் உனக்கு எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். நீ கொஞ்சமாவது யோசித்துப் பார்க்கிருயா ? நீ போகத் தான் வேண்டுமானல், என் கழுத்தை நெறித்துக் கொன்று போட்டு விட்டுப் போ!' என்ருள்.
உடனே வசந்தி "சரியம்மா! நான் இனி உ ங் கள் கருத்துக்கு மாருக இருக்கவே மாட்டேன்" என்ருள்.
இ இதுதான் வசந்தியின் தலையில் விழுந்த இரண்டாம் 9)ւգ l
4
அதன் பின் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துவிட் டன. டாக்டர் பட்டம் பெற்று வந்த ச ரோஜா வுக்கு

உறவுக்கு அப்பால் 135
வேலைக்காரி போல் சமைத்துப் போட வேண்டியதாயிற்று. அக்சாவுக்காக எவ்வளவுதான் பாடுபட்டாலும் அ வ ள் நன்றியுணர்ச்சியற்றவளாகத்தான் இருந்தாள். எப்போதுமே "அதைச் செய், இதைச் செய்” என்று அதிகாரம் செய் து கொண்டும் ஒரு வேலையைச் செய்தால் அதில் பத்துக் குறை களைக் கண்டு பிடித்துக் கொண்டும் இருப்பாள். அப்போ தெல்லாம் சிறுவயதில் அவளுக்கு அக்கா சொன்ன வார்த் தைகள் நினைவுக்கு வந்து மனதை அறுக்கும். மொத்த்த்தில் சரோஜாவின் உள்ளத்திற் சிறிது அன்பிருந்தாலும் அதை யும் மீறி அதிகாரமும் பெருமையுமே ஆதிக்கம் செலுத் தின.
கலியாணத்தின் பின் சரோஜா தனது கணவனுடன் புக் க கம் சென்றுவிட்டாள். அப்போதுதான் வசந்தியின் வேலைப்பாளு கொஞ்சம் குறைந்தது. இதையடுத்து மூன்று வருடங்களின் பின் வசந்தியின் திருமணமும் நடந்தது.
வசந்திக்கு மேற்படிப்பு படிக்க முடியாமற் போன தால் கைநிறையச் சம்பளம் வாங்கும் ஓர் உத்தியோகத் தரைக் கணவனுக அடைய அவள் கொடுத்து வைக்கவில்லை. எங்கோ ஒர் ஆபீஸி ல் நான்காம் தர எழுதுவினைஞராக இருக்கும் ஒருவரைத்தான் மணக்க நேர்ந்தது. அவர் மாதத் தில் அரைவாசி நர்ட்களைச் சம்பளத்திலும், மிகுதியைக் கடனிலும் ஒட்டுபவராகத்தான் இருந்தார்.
வசந்திக்குக் கணவராகப் போகிறவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே சரோஜா முகத்தை சுளித்துக் கொண் டாள். அம்மாவிடம் அவள் இதைப்பற்றிக் கூறியபோது அம்மா மிகவும் மனவருத்தத்துடன் “என் மேல்தரின் முழுப் பிழையும். எனக்கு உதவியாக நான் அவளை வீட்டில் நிறுத் திக் கொண்டிருந்தேன். அவளும் உன்னைப்போலப் படித் திருந்தாள் இந்நேரம் பெரிய உத்தியோகத்தில் இருப்பாtள்' என்று கூறினுள்.

Page 76
H 36 தரிசனங்கள்
உடனே சரோஜா "எல்லாம் விதி அம்மா வீணக மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம். அவளுக்கு ப் படிப்பே வராது. அவள் ஒரு மட்டி. அவளுடைய கடின மான மண்டையோட்டினுாடாக எதுவுமே மூளைக்கு இறங் காது" என்ருள். அவள் பேச்சில் அகங்காரமும், இகழ்ச்சி யும் ஒருங்கே தொனித்தன.
அம்மா ஒரு பதிலும் சொல்லாமல் கோபத்துடன் சென்றுவிட்டாள்.
தற்செயலாக இவ்வுரையாடலைக் கேட்டுக்கொண்டி ருந்த வசந்தியின் உடல் அவமானத்தால் குன்றிப் போய் விட்டது. "ஏன் அக்கா இப்படியிருக்கிருள்? - நொடிநேர உள்ளக் கொந்தளிப்புக்கள் உணர்ச்சிகளாக மாற எத்தனிக்க முன் வாயினுள் முன்ருணையைப் போட்டு அழுத்திக் கொண்
6.
蟒
திருமணம் முடிந்து ஓரிரு நாட்களின் பின்னர் வசந்தி கணவனுடன் புக்ககம் சென்றுவிட்டாள். இப்போது ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. அக்காவோ, தேவகியோ அவளின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தது கூட இல்லை. எனினும் இருவரும் இடைக்கிடை சேமம் விசர்ரித்துக் கடி தம் எழுதுவதன் மூலம் மட்டும் தம் தொடர்பை நிலைநாட் டிக் கொண்டிருந்தனர். அவளைப் பொறுத்த வரை அந்த உறவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
5
அவளின் தாயிடமிருந்து கடிதம் வந்த மறுநாளே சரோஜாவிடம் இருந்தும் ஒரு கடிதம் வந்தது. அவளோடு

உறவுக்கு அப்பால் I 37
ழுக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டியிருப்பதாகவும், அதற்காகக் கட்டாயம் பிறந்தகம் வரும்படியும் எழுதி யிருந்தாள்.
கடிதத்துக்கு மேல் கடிதம் வரவே போகாமல் இருப்பது சரியன்று என்று நினைத்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ழுள்.
அவள் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கு முன்பே அம்மாவும் அக்காவும் வந்து வரவேற்ருர்கள். சரோஜ்ா வசந்தியின் இளைய குழந் ைத ைய த் தூக்கிக் கெர்ண்டு கொஞ்சினுள். அக்குழந்தை பயந்து "கோ"வென்று அழுது விட்டது. வசந்தி குழந்தையை வாங்கி அதன் அதரங் களில் முத்தமிட்டுவிட்டு 'இதுதான் உன் பெரியம்மா அழாதேடா கண்ணு!" என்று தேற்றினுள். குழந்தை சரோஜாவை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
வசந்தியின் எளிமைத் தோற்றத்தையும் போஷாக் கின்றி மெமிந்துபோய்க் கிடக்கும் குழந்தைகளையும் பார்க்க சரோஜாவுக்கு மனவருத்தமாகவும், அதே நேரத்தில் அரு விருப்பாகவும் இருந்தது.
'ஏன் கணவர் வரவில்லை” என்று கேட் டா ள் சரோஜா.
"அவருக்கு லீவு இல்லை. ஆபீஸுக்குப் போயிருக்
கிருர்
"ஒருமுறை கணவரையும் அழைத்துக்கொண்டு கட்டாயம் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்”
(த. தே. அ.) 18

Page 77
138 தரிசனங்கள்
g). . . . . . அதற்கென்ன ?’
- ''(upës பையன் எத்தனையாம் வகுப்பிற்படிக்கிருன்?"
"இரண்டாம் வகுப்பில்"
அவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டே சென் றது. அடுக்களை விஷயம் தொட்டு அர சி ய ல் விஷயம் வரை அலசினர்கள். அவர்களின் உரையாடலில் தேவகி யும், செல்வரத்தினமும் கூடக் கலந்து கொண்டார்கள். மணிக்கணக்காகப் பேச்சு நீண்டுகொண்டே சென்றது.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அம் ம n வும் வந்து சேர்ந்தாள். சரோஜாவின் "கொழுகொழு வென்று கொழுத்த பையனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவனின் தலையைக் கோதியவாறு 'நான் எத்தனையோ கடிதம் போட்டிருந்தேன் ஒன்றுக்குக்காவது திருப்திகர மாகப் பதிலே அனுப்புவதில்லையே. அடிக்கடி வீட்டுக்குக் கூட வருவதில்லையே! கலியாணம் முடிந்ததும் எங்களையெல்லாம்
மறந்து போய் விட்டாயா?" என்று கேட்டாள்.
வசந்தியின் கண்கள் கண்ணிரில் மிதந்தன. “அதைத் தான் அம்மா நானும் கேட்க நினைத்தேன். அக்காவோ, தேவகியோ நான் இருக்கிறேன, செத்துப் போய்விட்டேன என்று எட்டிப் பார்க்கக்கூட வருவதில்லையே! நீங்களும்கூட அப்படித்தானே ! . ஒ. நான் எளிய இடத்தில் வாழ்க் கைப் பட்டுவிட்டேன் அதற்காக என்னை இப்படி அவமதிப் பது சரிதான ? நான் யா ைர யு ம் ஏன் குறைசொல்ல வேண்டும் ? என் தலை விதி அப்படி. " பாதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்களிலிருந்து கண்ணிர்த்துளி கள் பொல பொலவென உதிர்ந்தன. பொங்கி வந்த அழு

உறவுக்கு அப்பால் 39
கை; பிரவாகத்தையடக்க முடியாமல் வாய்விட்டு அழத் தொடங்கிஞள்:
சரோஜாவும் அம்மாவும் திக்பிரமை பிடித்தவர்கள் போலாகிவிட்டார்கள். அம் மா சொன்னுள் 'அழாதே வசந்தி! நீ அழுவது எனக்கு என்னவோ போல் இருக்கிறது. நீ எ ன் னை த் த வ ரு க நினைத்துக்கொண்டாயா ? பெற்ற தாயான நானே உனக்கு துரோகம் செய்வேன? நீயும் என் பிள்ளைதான், சரோஜாவும் என் பிள்ளைதான். இருவருமே எனக்கு ஒன்றுதான். உன் அப்பா இற ந் து போ ன து ம் பொறுப்பெல்லாம் என் தலையில் விழுந்தது. உ ன க் கு த் தெரியாதா?”
அப்போது தேவகி வந்து சாப்பாடு தயாராகிவிட் டது. எ ன க் கூறி அழைத்துச் சொன்ருள். சப்பாட்டை முடித்துக்கொண்டு மீண்டும் கூடத்தில் வந்து உட்கார்ந்தார் கள். சரோஜா உள்ளே சென்று ஒரு "பார்சலை"க்கொண்டு வந்து வசந்தியின் முன் வைத்து 'நீ தவழுக நினைத்துக் கொள்ளக் கூடாது நான் உனக்காகத்தான் இ வ ற் றை வாங்கி வந்தேன். நீ மறுக்காமல் எடுத்து கொள்ள வேண்
டும்' என்ருள்.
'நான் மிகவும் தூரத்தில் வேலை பார்க்கிறேன் அத ஞல் தான் உன்னைச் சந்திக்கக்கூட வர மு டி ய வி ல் லை. நீ குறை நினைக்கக்கூடாது தலைகொள்ளாத வேலை. காலைமுதல் மாலைவரை ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் போய் வரவே நேரம் சரியாக இருக்கிறது. நாங்கள் எ ல் லா ரும் ஒரு நாளைக்குக் கட்டாயம் உங்கள் வீட்டுக்கு வருவோம்"
வசந்திக்கு அக்காவின் மேலிருந்த பகைமை போன்ற ஓர் உணர்ச்சி அக்கணமே மறைந்தது. "பார்சலை மகிழ்ச்சி

Page 78
40 தரிசனங்கள்
யுடன் வாங்கிக்கொண்டாள். அதனுள் விலை உயர்ந்த இரு சாரிகளும், வேட்டிகளும் வேறும் சில து ரிை ம ணிக ஞ ம் இருந்தன.
மேலும் இரண்டு த ங் க மோதிரங்களை வசந்தியின் இரு குழந் ைத க ளின் கைகளிலும் போட்டு விட்டாள் ar Grrrrr;
அன்று முழு வ தும் அவ்வீடு குதூகலத்தில் ஆழ்ந் திருத்தது.
张
மறுநாள் காலை சுமார் பத்து மணி இருக்கும்.
வசந்தி ஊருக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந் தாள். அப்போது ஏதோ ஞாபகம் வந்தவள்போல சரோஜா விடம் சென்று 'என்னேடு ஏதோ முக்கியமான ஒரு விஷ யம் பேச வேண்டி இருப்பதாகக் கூறினீர்களே அது என்ன? என்று கேட்டாள்.
"ஒ. எனக்குச் சந்தடியில் மறந்தே போய்விட்டது” எனக்கூறிச் சொல்ல ஆரம்பித்தாள். 'என்ன அடுத் த வாரம் தொடக்கம் இவ்வூர் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்போகி ருரர்கள். என் கணவரும் அடுத்த வருடம் அ மெ ரிக் கா செல்லவிருக்கிருர், குடும் படம் என்ருென்று ஆகிவிட்டால் சொந்த வீடு ஒன்றும் அவசியந்தானே ? நாங்கள் எல்லா இடங்களிலும் வீடுதேடினுேம் ஒன்றுமே செளகரியமாகப் படவில்லை இந்த வீட்டை அம்மா தே வ கி க்கு எழுதிக் கொடுக்க வேண்டுமென்று சொல்கிருர். அதனுல் நான் ஒரு
யோசனை செய்திருக்கிறேன்.

உறவுக்கு அப்பால்
" . . . . . . (2) . . . . . .
'வீட்டுக்கு முன்புறத்திலுள்ள காணியை அப் டா உன் பெயரில் தான் எழுதி வைத்திருக்கிருர் என்று அம்மா சொன்னர். நானும் என் கணவரும் நீ கேட்கிற தொகை யைத் தந்துவிட்டு அதை எ டு த் து க் கொள்ள விரும்பு கிருேம். நீ என்ன நினைக்கிருய்?”
அவள் முகட்டை அண்ணுந்து ப ா ர் த் த ப டி யே யோசிக்கத் தொடங்கிளுள்.
“நாங்கள் தருகின்ற பணத்தைக்கொண்டு நீ உனது விருப்பப்படி விரும்பிய இடத்தில் தோட்டம் வாங் கி க் கொள்ளலாம், அல்லது பிற கு வாங்கிக் கொள்வதற்காக
வங்கியில் போட்டும் வைக்கலாம்.
"என் பெயருக்கு, என் குழந்தைகளுக்குக் கொடுப் பதற்காகவாது என்னிடமுள்ள ஒரேயொரு பிதுரார்ஜிதச் சொத்து இதுதான். இதையும் நான் இழந்து விட்டால்..? பணம் இன்றிருக்கும், நா ஃா போய்விடும்.
"அப்படியானல் நான் உனக்கு வேறு ஓர் இடத்தில் ஒரு காணி வாங்கித் தரட்டுமா ?”
es o s a e o se es 9 a 8 o a 8
திரும்பவும் சரோஜா ஆசைகாட்டினுள். 'இருபதி ணுயிரம் ரூபாய் தருகிறேன். இதில் யோசிப்பத்ற்கு எதுமே யில்லை. என்ன கணவனிடம் கேட்டுத்தான் சொல் ல வேண்டுமா?
“அதற்கு அவசியமேயில்லை’

Page 79
42 தரிசனங்கள்
* பிறகு ?"
'அக்கா நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது நான் ஏழை உங்களைப் போலப் படித்தவளுமல்ல என் பெயர் சொல்லி இருக்கக்கூடிய ஒரேயொரு காணி இது தா ன் இதை விற்றுவிட்டு, நாங்கள் இருக்கும் நிலையில், எங்காவது அணு ைத போ ல் சென்று வாழ முடியுமா? என்னைப் போலன்றி, என் பிள்ளைகளாவது சீரும் சிறப்பர்க வாழ வேண்டும், ஆகவே, நீங்கள் இன்னும் கொஞ்சம் முயன்று
பாருங்களேன் என்ருள்.
சரோஜாவின் கண்கள் சிவந்தன; உதடுகள் துடித் தன 'நாங்கள் நன்றக இருந்தால் உனக்கும் நல்லதுதானே?
உனக்கும்" பெருமைதானே?
'உண்மைதான். ஆனல் நான் இன்று இருக்கும் நிலை வில் இதை விற்று விடுவது புத்திசாலித்தனமல்ல. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் "அக் கா!'
'நன்ருக யோசித்துப் பார்த்து விட்டுத்தான் சொல் கிழுயா?’ என்று சூடாகக் கேட்டாள் சரோஜா.
“ஆமாம் என் கடைசி முடிவு அதுதான். தற்போதை க்கு என்னுல் முடியாது. நான் ரொம்பவும் வருத்தப்படு கின்றேன்’ எனக்கூறி குழந்தைகளின் கைகளில் இருந்த மோதிரங்களை விரைவாகக் களற்றத் தொடங்கினுள். “நீங் கள் ள்தை எதிர்பார்த்து இவற்றையெல்லாம் தந்தீர்களோ அதை என்னல் தர முடியாத நிலையில் நான் நீங்கள் தந்த பொருட்களை ஏற்கத் தகுதியற்றவள். என் மனச்சாட்சிக்கு விரோதமானது" எனக்கூறி விட்டு பார்சலையும், அவள் முன்னிலையில் வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்.

உறவுக்கு அப்பால் 43
சரோஜாவுக்குக் கோபம் சென்னிக்கு ஏறிற்று.
"நீ என்னையும் உன்னைப் போலக் கீழ்தரமாக நினைத் துக்கொண்டாயா ? என் மனது அவ்வளவு கெட்டுப் போய் விடவிவ்லை. திரும்பிக் கொண்டு போகத்தான நான் இவ்
வளவையும் உனக்காக வாங்கி வந்தேன் ?’
வசந்தி குழந்தைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே இறங்கி விட்டாள்.
சரோஜா ஆத்திரத்தில் அலறிஞள். 'நீ இப்படிச் செய்து விட்டுப் போனுல் இனி என்னை மறந்துவிட வேண் டி. யதுதான். நான் உனது அக்காவாகவும்-நீ எனது தங்கையாக வும் இருந்தால் நீ ஒரு போதும் இப் படி ச் செய்திருக்க மாட்டாய். அந்த உறவு செத்துவிட்டது'
"அது இன்றல்ல என்றே செத்துவிட்டது' என்ருள் வசந்தி.
சரோஜா பேயறைந்தது போலாகி விட்டாள். எனி னும் சமாளித்துக் கொண்டு "என்ன துணிச்சல் ? என்ன அகந்தை ? உன் மனதைப் போலத்தர்ன்டி உன் வாழ்க்கை யும் இனி என் முகத்தை ուգպմ பார்க்க வேண்டாம், தொலைந்து போ!'
இச்சந்தடியைக் கேட்டு அம்மாவும் தங்கையும் ஓடி வந்தார்கள். 'வசந்தி! வசந்தி! இங்கே வா!" என்று அம்மா அழைத்தாள்.
'முடியாது"
é é Rw -- அக்காவுக்காகவல்ல, எனக்காகவாவது வா!' என் ருள் அம்மா.

Page 80
疆《领 தரிசனங்கள்
"அக்காவைக் கோபித்துக் கொள் ள வேண்டாம். அக்காவின் ம ன து சந்தோசஷமடைவதற்காகவாவது இவற்றை எடுத்துப் போங்கள்” என்ருள் தேவகி.
"அதை எடுத்துக்கொண்டு போகுமளவுக்கு நா ன் இன்னும் பிச்சைக்காரியாகப் போய்விடவில்லை. என் கன வரும் இன்னும் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிருர்" என்று சொல்லிவிட்டு பிள்ளைகளின் கைகளைப் பிடித்தபடியே சென்று மறைந்தாள்.
வீட்டையடைந்ததும் கணவன் அவளை வரவேற்று விட்டு *என்ன விசேஷம் ?” என்று கேட்டார்.
"என்ருே செத்துப்போன எனது அக் கா வுக் கும் எனக்கும் உள்ள உறவைப் புதைத்துவிட்டு வந்தே ன்" எண்முள் அவள்.
(யாவும் கற்பனை)

அறிமுகம்
மறீதரன் (26) - பொறியியல் பட்டதாரி. படைப்பிலக்கியத் திலும் நாட்டமுடையவர். இது இவரது முதலாவது சிறுகதையாகும்.
பொன் இரத்தினபாலன் (24) - புனைப்பெயர் கலையமிர்தன். சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறை களில் ஈடுபட்டுள்ளார். இணைக்கலைமாணிப் பட்டதாரி.
இரா சிவசந்திரன் (28) - அறுபதுகளில் நன்கு எழுதிப் புகழீட் டியவர். 1963-ம் ஆண்டு 'ஈழநாடு’ பத்திரி கையில் வெளியாகிய இச் சிறுகதை நன்றி யுடன் இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. புவியியல் சிறப்புப் பட்டதாரி.
அ. சிவராசா (30) - அரசியல் விஞ்ஞான சிறப்புப் பட்டதாரி யான இவர், சிறுகதை, நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். இது இவரது முதலாவது சிறுகதையாகும்.
மு. கோவிந்தராஜன் (25) - பொறியியல் பட்டதாரி. புதுக்
கவிதையிலும் நாட்டமுடையவர்.
துரை மனுேகரன் (24) - பல சிறுகதைகள் எழுதியுள்ளார். 'பாவையின் பரிசு" என்ற நாவலின் ஆசிரி யர். தமிழ் சிறப்புக்கலை இறுதியாண்டு
Offset
சு. சண்முகரத்தினம் (24) - புனைப்பெயர் மலரவன். கடந்த சில ஆண்டுகளாகச் சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வருகிருர், இணைக்கலைமாணிப்
பட்டதாரி.

Page 81
சோ. கிருஷ்ணராஜா (26) - மெய்யியல் சிறப்புப் பட்டதாரி யான இவர் இலக்கிய உலகுக்குப் புதியவர். இது இவரது முதலாவது சிறுகதையாகும்.
நா. சுப்பிரமணிய ஐயர் (30) - புனைப்பெயர் திலீபன்". சிறு கதையைவிடக் கவிதைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர். முதுகலைமாணிப் பட் டதாரி.
வலீயெம்மே. அமீன் (24) -உருவகக் கதைகள் படைப்பதில் கைதேர்ந்தவர். ஹிந்தி - தமிழ் மொழி பெயர்ப்புக்களும் செய்து வருகிருர். இணைக் கலைமாணிப் பட்டதாரி.
பா. சிவகடாட்சம் (27) - தாவரவியல் சிறப்புப் பட்டதாரி. சிறுகதைகளை விட, விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடுடையவர்.
C6 ఇస్లాse 25oo>é 竺米雯