கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயல் 1988.06

Page 1
கலே இலக்கிய சமூக அ
ஆண்டு :
[[}교 - 19ვ.
島 தை
கவிதை
கட்டுரை
O O
ஆற்றங்கரை பிள்ளையா
விஞ்ஞானக் காற்று சுயபற்று
முறையீடு
கறுத்த மாடுகளே
ܬܐܒܕ
தமிழும் விஞ்ஞானமும் புலவர்மணி ஏ. பெரிய
விமர்சனம்
O
நெஞ்சில் ஒரு மலர்
இலக்கியம் இல்லாச் ຫມູ
 

|றிவியற் காலாண்டிதழ்
B அறுவடை 01
4.
தம்பிப்பிள்ளே
இயக்கம் இல்லாச் சமூகம்

Page 2
čio మ్రి=క Ksశa器ā gok33-3-3ܝܵܗܘܿܗܵܐ ==
விவசாய இரசாயனங்கள், உரவகைகள் மற்றும் தோழித்தீன், விவசாய உபகரணங்களுக்கு நாடுங்கள்! 德
9IšGT GJ65T pŤ ENRE
s
பதுளை வீதி, செங்கலடி. W BADULLA ROAD, CHIENKALADY.
Lidščio (MACKWOODS) 6î hus Tuu இரசாயன பிரதான விற்பனையாளர்கள்
SSAALAqqLALA MLLLALA MLqSqL LMA LMqLALLSS MMLSLLML MLAqALL LMLAqL LLqLM MLqL LA MLqLSLMM MLqLML MLSLSA LM MLqLALA MALM LMLAALLLLLAM
பரவசமூட்டும் பல்வகை வண்ணங்களில் அழகிய கலை மணம் கமழும்
பட்டு, பருத்தி, றெடிமேட் ஆடைகள்
பண்டிகைக் காலங்களில் சகாய விலையில் விற்பனை செய்யும் ஒரே ஸ்தாபனம்
நியூ மர்ழியாஸ்
வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகள் இன்றே விஜயம் செய்யுங்கள்.
,பிரதான வீதி ,44 ܓܔܰ2 .
065-2900 மட்டக்களப்பு.
单婴至次姬> xFIS- LL qLLYLL L JYeeTTqeeseTeLYLe eTeYLq TLeYeTT eYJLLLLLTe
女

வயல் 4 - 1983
தொடர்பு முகவரி :
“nus” 30, பயணியர் வீதி,
மட்டக்களப்பு,
தொடரும் மனித அவதிகள்...!
கடந்த பல வருடங்களாக நிகழ்ந்த, மனித அவதிகள் இன்றும் தொடர்கின்றன. இவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட "முக்கோண முயற்சி இன்னும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலும், கலவர அலைகள் ஓய்ந்தபாடில்லை. மக்கள் பாதுகாக்கப்படவில்லை, அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை, அவர்களின் உடமைகள் உருக்குலைக்கப்படுகின்றன. அவர்கள் அகதிகளாக அலையும் படலம் தொடர்கின்றது. தன்னுமுனையில் -
களுவாஞ்சிக்குடியில் -
ஒட்டமாவடியுல் -
மட்டக்களப்பில் - எல்லாம், நடந்த சம்பவங்கள் மனித அவதிகளை மேலும் அதிகரித்துள்ளன.
இந்நிலை தொடர வேண்டுமா? இலங்கை, இந்திய அரசாங்கங்களும், தமிழ்ப் போராளிகளும் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தொடரும் மனித அவதிகளை நிறுத்த
மக்களைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான பணியில் இறங்கவேண்டும்.
- ஆசிரியர் குழு.

Page 3
தமிழும் விஞ்ஞானமும்
ஏறக்குறைய நலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண இலக்கிய வளம் செறிந்த மொழியாகத் தமிழ் விளங்கிற்று. இத்தகைய தொன்மை வாய்ந்த தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்ருசிரியர் களிஞன் வகுத்துச் சொல்லப்பட்டுள்ள சங்ககாலம் (கி. பி. முதல் மூன்று நூற்ருண்டுகள்); சங்கம் மருவிய காலம் (கி. பி. 3ம் நூற்றண்டிலிருந்து, கி. பி. 6ம் நூற்ருண்டின் பிற்பகுதிவரை); பல்லவர்காலம் (கி. பி. 6ம் நூற்ருண்டிலிருந்து 9ம் நூற்ருண்டின் பிற்பகுதிவரை) சோழர் காலம் (கி. பி. 9ம் நூற்றண்டிலிருந்து கி. பி. 14ம் நூற்ருண்டுவரை); நாயக்கர் காலம் (கி. பி. 14ம் நூற்ருண்டிலிருந்து கி. பி. 18ம் நூற் ருண்டு வரை) ஆகிய கால கட்டங்களில் பலவித வளர்ச்சிகளுக்குட் பட்டு கி. பி. 18ம் நூற்ருண்டில் ஆரம்பித்த ஐரோப்பியர் காலத்தில் பிறநாட்டோரும் நாட்டம் கொள்ளும் அளவுக்குப் புகழடைந்தது. தமிழ் நாட்டில் ஐரோப்பியர் ஆட்சி கால் வைக்கத் தொடங்கியதும் குறிப் பாக ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டதும், தமிழ் நாட்டு மக்களிடையே கிறிஸ்தவமதப் பிரசாரம் செய்ய வந்த ஐரோப்பியப் பாதிரிமாரும், கத் தோலிக்க மதகுருமாரும் தமிழைப் படித்து தமிழ் மொழி வாயிலாகத் தங்கள் சமயக்கொள்கைகளைப் பரப்பத் தமிழிலே நூல்களும் எழுதலா யினர். அதனுல் தமிழ்மொழி செய்யுள் நடையிலிருந்து உரை நடைக்கு வளர்ச்சியுற்றது.
கி. பி. 19ம் நூற்ருண்டில் தமிழ் மக்கள் ஆங்கில மொழியைப் படிக்கத் தொடங்கிய பின்னர் அம்மொழி வாயிலாக ஐரோப்பிய இலக கியங்களைத் தழுவி குறிப்பாக ஆங்கில மொழியைத் தழுவிய மொழி பெயர்ப்புத் தமிழ் நூல்களும், தமிழ் இலக்கிய நூல்களும் உரைநடையில் தோன்றினலும் விஞ்ஞான சாத்திர நூல்கள் தமிழில் வெளிவரவில்லை. காரணம் அக்காலத்தில் விளங்கிய கத்தோலிக்க மதகுருமார் தமிழிலும், ஐரோப்பிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தரெனினும் அவர் களுக்கு விஞ்ஞான அறிவில் தேர்ச்சியிருக்கவில்லை. அன்றியும் அவர்க்ளது நோக்கம் மதப்பிரச்சாரமே தவிர, விஞ்ஞானத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டுவருவதல்ல. இதேபோல் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த தமிழ் அறிஞர்கள் விஞ் ஞானத்தில் புலமையற்றிருந்த காரணத்தால் விஞ்ஞான நூல்களைத் தமிழில் தரவில்லை. அன்றியும் அக்காலகட்டத்தில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவம் தமிழ் மக்களிடையே உணரப்பட்டிருக்கவுமில்லை. அத் துடன் ஐரோப்பியர் தமிழ் நாட்டிற்கு வருகை தந்த கி. பி 18ம் நூம் முண்டின் முற்பகுதியில்தான் தமிழில் உரைநடை ஆரம்பித்தபோதும் 19ம் நூற்ருண்டிலேயே அது வளர்ச்சியுற்றது. இக்கால கட்டத்திலேயே தமிழ் நாட்டில் ஆங்கிலக் கல்வியும் வளர்ச்சியுற்றது. மொழியியலாளர் கள் கூற்றுப்படி பக்திக்குத் தமிழும் சட்டத்திற்கு இலத்தீன் மொழியும் பொருத்கமாக விளங்கியது போல் விஞ்ஞானத்திற்குரிய மொரியாக
O2

ஆங்கிலமே விளங்கிற்று. ஆங்கிலம் கற்ற தமிழ் அறிஞர்கள் ஆங்கில உரைநடை இலக்கியங்களைத் தழுவி அல்லது மொழி பெயர்த்துத் தமிழில் உரைநடை இலக்கியங்களை ஆக்க முற்பட்டபோது கூட நாவல்கள், கதைகள், கிறிஸ்தவமத சம்பந்தமான நூல்கள் முதலியவற்றில் நாட்டம் செலுத்தினரேயன்றி ஆங்கிலத்தில் விளங்கிய அறிவியல் சார்ந்த அக்கறை செலுத்தவில்லை.
பின்னர் கி. பி. 20ம் நூற்ருண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியும் ஐரோப்பியர் நாகரீகத் தொடர்பும் தமிழ் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து விஞ்ஞானக் கல்வியும், மேற் கத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் தமிழ் நாட்டிற்கு இறக்குமதி யாகி அவற்றின் பிரயோகங்கள் மக்களின் சமூக, பொருளாதார, கலை கலாச்சாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியதால் விஞ்ஞானக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டது. பெரும்பாலன விஞ்ஞான சாத்திர நூல்களெல்லாம் ஆங்கில மொழியி லேயே பெறவேண்டியிருந்தது. அதனல் குறிப்பிட்ட சிலரே அதாவது ஆங்கிலம் படித்தோர் மட்டுமே விஞ்ஞானக் கல்வியைப் பெற முடிந்தது. விஞ்ஞானமும், நவீன தொழில் நுட்பமும் வளர்ந்து மக்களின் வாழ்க் கையுடன் பின்னிப் பிணைந்து விட்ட நிலையிலும்கூட அத்துறைகள் சார்ந்த கல்வியை ஆங்கிலத்தில் மட்டுமே பெறக்கூடியதாயிற்று. அதறல் நகர்ப் புறங்களில் வாழ்தோரும், வசதியடைந்தோரும் தான் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வியைப் பெற முடிந்தது. கிராமப்புற மக்களையும் வசதி குறைந்தவர்களையும் அக்கல்வி போய் சேராதற்கு தமிழில் விஞ் ஞான நூல்கள் இல்லாததே முக்கிய காரணங்களில் ஒன்ருக விளங்கிற்று. வடமொழி மற்றும் ஐரோப்பிய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தின் வருகையால் தமிழின் மாண்பு கெடுகிறதென்று தனித்தமிழ் இயக்கங்களை நடாத்திய தமிழ் அறிஞர்கள்கூட விஞ்ஞானத்தைத் தமிழில் கொண்டு வருவதற்கு அக்கறை கொள்ளவில்லை. இதற்குக் காரணம் ஐரோப்பிய ரான ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து தமிழ் நாடு உட்பட்ட இந்தியா வும், இலங்கையும் அரசியல் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை நடாத்திக்கொண்டிருந்ததேயாகும். தமிழின் எந்த வளர்ச்சிப்படியும் இந்தியாவின் தமிழ் நாட்டில் அல்லது இலங்கையில்தான் தோன்ற வேண்டியிருந்தது. இந்த இருபகுதியிலும்தான் தமிழர்கள் குறிப்பிடும் படியான ஒரு தேசிய இனமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதே இதற்குக் காரணம். இந்த இரு பிரதேசங்களும் ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது விஞ்ஞானத் தைத் தமிழில் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டாமல் இருந்தது இயல்பானதேயாகும். இருந்தபோதிலும் கூட இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணியப் பாரதியார் அவர்கள் தேசீய கீதங்களை இயற்றி மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிக்கொண்டிருந்த காலத்திலும் கூட மேற்கத்திய நாடுகளில் வளர்ச்கியுற்றிருந்த விஞ்ஞானம் தமிழிலே வரவில்லையேயென்று ஏங்கி)ர். அவரது இந்த ஏக்கம் அன்ஞரின்,
03

Page 4
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை; மெல்லத் தமிழினிச்சாகும் . அந்த மேற்கு மொழிகள் புவிIசையோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! இந்தவசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேரிப்பீர்.
. என்ற பாடல் வரிகளிலும்.
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்: மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.”
என்ற பாடல் வரிகளிலும் வெளிப்பட்டது.
விஞ்ஞானத்தைத் தமிழில் கொண்டு வர வேண்டும் என்ற சிந் தனையை முதலில் தந்தவர் மகாகவி பாரதியாரேயாவார். அவரது அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க அவரால் முடியாமல் போனதற்குக் காரணம், அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தும், விஞ்ஞானத்தில் புலமையற்றிருந்ததும்; அன்னரின் பெரு நாட்டம் இந்திய கதந்திர விடுதலைப் போராட்டத்தில் பதிந்திருந் ததுமாகும். அக்காலத்தில் ஆங்கிலத்தில் விஞ்ஞானத்தைக் கற்ற தமிழர்கள் வசதிபடைத்த மேல் மட்டத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்த படியால் அத்தகையோரின் சமூகப் பார்வை விரிவடைந்திருக்கவில்லை. அன்றியும் இத்தகையோர் தமிழ்மொழி மீதும் தமிழினத்தின் மீதும் உணர்வு பூர்வமாகப் பற்றற்றுமிருந்தார்கள்.
20ம் நூற்ருண்டின் தொடக்கத்தில் தமிழர்கள் ஆங்கில மோகத் திலேயே மூழ்கிக் கிடந்தார்கள். விஞ்ஞானக் கல்வியை ஆங்கிலத்தி லேயே பயின்று இத்தகைய தமிழர்கள் தமிழைப் புறக்கணித்தனர். தமிழன் தமிழனுடன் தமிழில் பேசுவது கூட அவமானம் எனக் கருதிய எனக்குத் தமிழிலே பேச அவ்வளவுவராது என்று ஆணவத்துடன் கூறிய இந்த விஞ்ஞானக் கல்விமான்களால் தமிழிலே விஞ்ஞானத்தைத் தர முடியாது போயிற்று. ஆனல் இத்தகையோரின் போலித்தன்மையை உடைத்தெறிந்து பாரதியின் கனவை அதாவது தமிழில் அறிவியல் சார்ந்த எல்லாத் துறைகளையும் பயிற்ற வேண்டும் அதன்பொருட்டுச்
04

சிறந்த ஆங்கில நூல்களைத் தமிழாக்க வேண்டும்; அடுத்தபடியாக தமிழி லேயே முதன் நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்பதை நன வாக்க தமிழிலே விஞ்ஞானத்தைத் தரமுடியும்; எனத் துணிந்து கூறி அதற்கான செயற்பாட்டிலும் இறங்கியவர் மதுரைத்தமிழ்ச் சங்கப் பண்டிதராகவும், இலண்டன் பல்கலைக்கழக (B. Sc) விஞ்ஞானப் பட்ட தாரியாகவும் விளங்கிய ஈழத்தீவின் கிழக்கு மாகாணத்தின் தெற்கே காரைதீவு எனும் கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனம் எனும் இயற் பெயர்கொண்ட யாழ்நூல் தந்த சுவாமி விபுலானந்தராவர். தமிழின் விஞ்ஞானக் கல்வியைக் கொண்டு வருவதற்கு முன்னேடியாக விளங் கியவர் இவரே. இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் ஓர் விஞ்ஞானப் பட்டதாரியாகவும் விளங்கினர். மற்றது ஆங்கிலத்தில் கல்வி கற்று விஞ்ஞானப் பட்டதாரியாகிய போதும் தமிழ் மொழியின் மீதும். தமி ழினத்தின் மீதும் பற்றும், பாசமும் கொண்டிருந்தார். தமிழர்கள் ஆங்கில மோகத்தில் மூழ்கியும், விஞ்ஞானக் கலையில் போதிய திறமை கொண்ட தமிழர்களில்லாமலும் இருந்த காலகட்டத்தில் இலங்கையில் விஞ்ஞானத்தைத் தமிழிலே போதிக்கத் துணிந்து முன் வந்தவர் சுவாமி விபுலானந்தராவார்.
‘தமிழும் விஞ்ஞானமும்" என்ற இவ்வாய்வுக் கிட்டுரையை எழுதும் போது தமிழில் விஞ்ஞானக் கல்விக்கு முன்னேடியாக விளங்கிய சுவாமி, விபுலானந்தரின் அத்துறை சார்ந்த சேவையைக் கூறுவதும் அவசியமா கின்றது. விஞ்ஞான அறிவுடன் தமிழிலே பண்டிதராகவும், அதேவேளை ஆங்கிலத்தில் புலமை பெற்றும் விளங்கிய விபுலானந்த அடிகள் விஞ் ஞானக் கல்வியை தமிழிலே சொல்வதற்கு எவரும் முன்வராத நேரத்தில் இனிய செந்தமிழ் நடையில் விஞ்ஞானத்திற்கு விளக்கம் அளித்தார். அவரது இப்பணி 1920 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள மாணிப்பாய் இந்துக்கல்லூரியின் தலைமையாசிரியராக அவர் அமர்ந்த காலத்திலிருந்து ஆரம்பமாகியது. -
மயில்வாகனம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் துறவியாவ தற்காக இராமகிருஷ்ணமிசன் எனும் அமைப்பில் சேர்ந்து 1922 இல் சென்னைக்கு வத்தார். உலகத்தை ஒரு புதிய சகாப்தத்திற்கு இட்டுச் சென்ற விஞ்ஞானம் மக்களிடை ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி யிருந்த காலம் இது. ஆங்கில மொழியைக் கற்றவர்களே அதிகமாக விஞ்ஞானத்தைப்பற்றி அறிந்திருந்தார்கள். ஆங்கில மொழியிலே இருந்த விஞ்ஞானப் புதுமைகளை தமிழ்நடையில் படியாத மக்களுக்குக்கூட விளங் கத்தக்கவகையிலே சொல்ல வேண்டுமென்ற நன்நோக்குடன் அறிஞர்கள் பலர் முயன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழர் கல்விச் சங்கம் ஒன்றை நிறுவினர். இச்சங்கம் அடிக்கடி விஞ்ஞானப் பொருள் கள் பற்றி விளக்கங்களும், விரிவுரைகளும் நிகழ்த்திய போது அதில் அதிக விரிவுரைகளை அடிகள் தமிழில் ஆற்றியதுடன், விஞ்ஞானப்
A&

Page 5
பொருள்கள் பற்றிய கட்டுரைகளைத் தமிழிலே மக்களுக்கு அளித்ததுடன் அமையாது ஆங்கிலத்திலிருந்த விஞ்ஞானச் சொற்களுக்கேற்ற தமிழ்ச் சொற்களையும் ஆக்கிக் கஜலச் சொற்களாக வெளியிட்ட்ார்.
1931ம் ஆண்டு ஆடித்திங்கள் தமிழ் நாட்டில் சிதம்பரத்திலெழுந்த அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பதவியை அடி களார் ஏற்றுக் கொண்டிருந்தார். அக்காலம் தமிழில் விஞ்ஞானத்தைப் பயிற்ற முடியுமென தமிழ் அறிஞர்களிடையே கூட நம்பிக்கையற்றிருந்த *fலம், தமிழில் கலைச்சொற்முெகுதியில்லாக் காலமது. போதிய விஞ் தே" நூல்களும் தமிழில் அப்போது வெளிவந்திருக்கவில்&ல.
அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் பெளதீக வகுப் பொன்று நடந்து கொண்டிருக்கும் போது அவ்வழியே சுவாமி அவர்கள் சென்றுகொண்டிருந்தார். வகுப்பில் எடுத்துக்கொண்ட விடயம் சிக்க ானது போதனுமொழி ஆங்கிலமே. விரிவுரையாளரும், மாணவர் களும் இடர்ப்படுவதை புரிந்து கொண்ட அடிகளார் விரிவுரையாளரின் உத்தரவுடன் வகுப்பறையுட் சென்று யாதொரு முன்னேற்பாடுமின்றி HT-த்தை தமிழிலே அரைமணி நேரம் போதித்தார். விரிவுரையாளர் உட்பட மாணவர்கள் எல்லோரும் தெளிவுற்றனர்.
1934ம் ஆண்டு சென்னைத் தமிழரின் முதலாவது மகாநாடு சென் னையிலே நடைபெற்றது. விஞ்ஞானக்கல்வியைத் தமிழிலே போதிக்கப் போதிய ஆங்கிலப் பதங்களுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் இல்லாததால் பலரும் பலவாறன தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி வந்தனர். తొడిగిత్త சொற்கள் ஒரு மணிப்பிரவாளமாக இருந்து வந்த குறைபாட்டைப் போக்க இம்மகாநாட்டில் கலைச் சொற்களை உருவாக்கி நூலாக வெளியிட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து. இத் தீர்மானத்தின் படி சென்னையிலே சொல்லாக்கக்கழகம் என்ற நிலையம் ஏற்படுத்தப் பட்டது. 1936 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சொல்லாக்கக் கழகம் உருவாக்கிய கலைச் சொற்களை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்ச் சொல்லாக்க மாநாடு நடைபெற்றது. விபுலானந்த அடிகளாரின் தலே மையில் கலைச் சொற்கள் தேர்வுக்கு விடப்பட்டு இதன் பயனை சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் கலைச் சொற்கள் என்ற நூலைத் தமிழுக் களித்தது.
அதன் பின்னர் 1942ம் ஆண்டு ஆவணித் திங்கள் மதுரை ஐரில்,முத்தமிழ் மாநாடு நடந்தது மோநாட்டுத் தை தாங்கி விரிவுரை நிகழ்த்திய அடிகளார், இலண்டன் மாநகரின் விஞ்ஞான அறிவுக்குழுவினுல் பாராட்டுப் பெற்ற தமிழ் நாட்டு கணித, விஞ்ஞான மேதைகளான திரு. இராமானுஜம், திரு. இராமன், திரு. கிருட்டி என்போரை நினைவுபடுத்தி விஞ்ஞான அறிவுச் செல்வத்தை சுமிழ் பெறு வதற்க ஆவன செய்கலே சிறந்த கமிழ்க் கொண்டு என முழங்கினர். அக்காலக் து அண்ணுமலைப் ல் க%லச்கழகத்தாரின் முயற்சியில்ை தமிழ் இமாழியில் பெளதீகவில் PHYSICSதிரீ'7MTSTRY அளவையியல் (LOGIC) என்பன "வெளியிடப்பட்டும் இருந்தன: பின்னர் ராஜாஜியின் தூண்டுதலின் பேரில் சென்னைத் தமிழ் வளர்ச்சிச் சங்கமும், சென்னைக் கல்வியமைச்சராக விளங்கிய திரு. பக்கவத்சலம் அவர்களால் நியமிக்கப்பட்ட குழு ஒன்றும் க%லச்சொற்களை ஆக்கி வெளியிட்டதைத் தொடர்ந்து பாரதத்தில் தமிழில் விஞ்ஞானப் போத னைகள் இடம் பெறலாயின. 1943 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பதவியேற்று இலங்கை திரும்பிய அடிகளார் தமிழில் விஞ்ஞானக் கல்விக்கு மீண்டும் இலங்கையில் உர. மூட்டினர்.
O6

1960ம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து தமிழில் அறிவியலை கற்பிக்க முடியுமென்ற எண்ணம் வலுவடைந்தது. ஆங்கிலத்தில் அறி வியல் சார்ந்த துறைகளைக் கற்று நிபுணத்துவம் பெற்ற தமிழறிஞர் களின் மொழிபெயர்ப்புக்கள் மூலமும், நேரடியாக தமிழிலே கற்பிக்கப் பட்டும், வளர்ச்சியடைந்து இன்று பாரதத்திலும், ஈழத்திலும் ஆரம்ப நிலைக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரை விஞ்ஞானம் தமிழில் கற்பிக்கப்படுகின்றது. விஞ்ஞான நூல்களும் தமிழில் ஏராளம் வந்து விட்டன. ஈழமும், பாரதமும் ஒன்றுபட்டுக் கலைச் சொல்லாக்கம் செய்து அறிவியல் நூல்களைத் தமிழிலே மொழிபெயர்ப்பதற்கு 1968 இல் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வித்திட்ட பின்னர் கலைச்சொல்லாக்கத் தொகுதிகளும், விஞ்ஞான நூல் களும் தமிழில் இன்னும் ஏராளமாக வந்துவிட்டன. தாய்மொழிக் கல்வியின் அவசியம் உணரப்பட்டதும் இதற்கொரு உந்து சக்தியாக விளங்கிற்று. தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த கலைக்கதிர், அணுக்கதிர் ஆகிய அறிவியல் சஞ்சிகைகளும்; ஈழநாட்டிலிருந்து வெளிவந்த கமத் தொழில் விளக்கம் (இலங்கை விவசாயத் திணைக்கள வெளியீடு) வீர கேசரி நிறுவன வெளியீடான நவீன விஞ்ஞானி, இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஊற்று, இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனை சாகிராக் கல்லூரி வெளியிட்ட அம்பு ஆகிய சஞ்சிகைகளும் தமிழில் விஞ்ஞானத்தை சாதாரண மக்களிடம் பரப்புவதற்கு ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. அறிவியல் சார்ந்த சஞ்சிகைகளும், பத்தி ரிகைகளும் தமிழில் வெளிவரும் அளவிற்கு இன்று தமிழில் விஞ்ஞானக் கல்வி வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ் மொழியில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் இதற்கோர் காரணம்.
எனினும் வளர்ந்துவரும் விஞ்ஞானத்தை வளர்ந்தவரும் தமிழும் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். விஞ்ஞானத்தை மக்களுக்கு இலகுவாக வழங்கும் மொழியே மக்கள் மொழியாக பதிக்கப்படும் நிலை எதிர் காலத்தில் உருவாகலாம். ஆதலினல் இதுவரை ஆக்கப் பெற்ற கலைச் சொற்களும், தமிழில் வெளிவந்துள்ள அறிவியல்சார் ஏடுகளும் போதா மானவையல்ல. புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டு பிடிப்புக்கள் காரணமாக ஆங்கிலத்தில் ஏற்படும் புதிய சொற்களுக்குப் பொருத்தமான புதுக்க%லச் சொற்க%ளத் தமிழில் ஆக்கும் தேவை மேலும், மேலும் வந்து கொண்டிருக்கும் கலைச் சொல்லாக்கப் பணிகள் தற்போது பாரகத்திலும், ஈழத்கிலும் நடைபெற்று வருகின்றதெனிலும் அவை ஒருமுகப்படுத் சப் படவில்லை. இப்பணிகளை ஒன்றிணைத்து த ரிசமாக வளர்ந்துவரும் நவீன விஞ்ஞான தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழில் கொண்டு வருவகற்கு ஏதுவாக உலகளாவிய ரீகியில் புதிய கலச் சொல்லாக்கத் தொகுதியொன்றை வெளியிடுவதற்கு மலேசியத் தலைநகரான கோலா
லம்பூரில் நடைபெறவள்ள ஆரு?வது உலகத்தமிழாராட்சி மாநாடு நட
வடிக்கை எடுக்க வேண்டும்.
ஆராய்ச்சியென்பது கெரிந்தவற்றைக் கொண்டு தெரியாததை பெறுவதே. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடு கொடுத்த ஒரு மொழி வளர வேண்டுமாயின், மொழியின் தன்மை உணர்ச்சி நிலையிலிருந்து அறிவு மிக்க நிலைக்கு வளர்வதவசியம். குறுகிய, ஒலிப்பதற்கு இலகுவான சொற் களே நவீன விஞ்ஞான தொழில்நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியன. இப்படியான சாதாரண மக்களுக்கும் விளங்கக்கூடிய புதிய கலைச் சொற்களே எதிர்காலத் தேவையாகும். தேவையும், பயனும் கருதி ஆங்கில மொழியிலிருந்து கலைச் சொற்கள் தமிழுக்கு கடன் வாங்கப்படலாம் சொற்களின் பிறப்பு வரலாறு முக்கியமல்ல. சொற்கள்
07

Page 6
உணர்த்தும் பொருள்தான் முக்கியம். "அணைக்கட்டு" என்ற தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் ANICUT என்ருகி விட்டதால் ஆங்கிலத்துக்கு அல்லது தமிழுக்கு எந்தக் குறைவும் ஏற்பட்டு விடவில்லை. தமிழில் வந்து கலந்துவிட்ட "யன்னல்" "அலுமாரி" போன்ற போர்த்துக்கேயச் சொற்களும்; சுமார்; சிப்பந்தி போன்ற பாரசீகச் சொற்களும்; மாகாணம், தபால் போன்ற இந்துஸ்தானி சொற்களும், சைக்கிள், றேடியோ போன்ற ஆங்கிலச் சொற்களும் தமிழின் வளர்ச்சியைத் தடுத்துவிடவில்லையே? ஒரு மொழியில் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக் கொள்வதோ, விடுவதோ அந்த மொழியைப் பேசுவோரின் முடிவை யொட்டியது. அந்தச் சமூகம் அதை ஏற்றுக் கொண்டால் அது மொழியில் இடம் பெற முடியும்.
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தட்டச்சு, அச்சியந்திரம் போன்ற கருவிகள் ஏற்பட்டதால் குறைந்த எழுத்துக்களையுடைய ஆங் கிலம் தட்டச்சுக்கும் அச்சுக்கோர்க்கவும் இலகுவாய் இருத்தளவு த்மிழ் மொழி இருக்கவில்லை. அண்மைக்காலத்திலேற்பட்ட ‘எழுத்துச் சீர் திருத்தம்’ ஒரளவு இதற்கு வழிவகுத்தபோதும் அது உலகளாவிய ரீதியில் இன்னும் அமுலாக்கம் பெறவில்லை. பிறமொழி பேசுவோர் தமிழ்மொழி யைக் கற்றுக்கொள்வதற்கும், நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவ்வெழுத்துக்களுக்கு உளகளாவிய அங்கீகாரத்தை ஆருவது உலகத்தமிழாராய்ச்சி மன்றம் வழங்கி இவ் வெழுத்துக்களையே தமிழெழுத்துக்களாக தமிழ் கூறு நல்லுசம் ஏற்றுக் கொள்ளும்படி அறைகூவல் விடுக்கவும் வேண்டும் ஒரு மொழியைப் பேசுவோர் தொகை கூடினல் அம்மொழி மேலும் வளர்ச்சியுறுமென்ப தால் சீர்திருத்த எழுத்துக்களை தமிழ்மொழி ஏற்றுக் கொள்ளுதல் காலத்திற்கேற்ற ஒரு முற்போக்கு நடவடிக்கையாகும்.
வட்டெழுத்து எனப்படும் பண்டைத் தமிழெழுத்துக்கள் பதின லாம் நூற்ருண்டில் வடமொழி எழுத்துக்களின் செல்வாக்குக்குட்பட்டுத் தான் இன்றைய தமிழ் எழுத்துக்கள் தோன்றினவென தமிழ்மொழி வரலாறு கூறுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எகர ஒகர குறில்கள் புள்ளிபெற் றிருந்தன. நெடில்கள் முறையே எ என்றும் ஒ என்றும் எழுதப்பட்டன. பின்னர் வீரமாமுனிவர் செய்த மாற்றத்தால் குறில்கள் புள்ளியில்லாமல் எ, ஒ எனவும் நெடில்கள் முறையே ஏ, ஓ என்றும் (காலும், சுழியும் பெற்றன) என்றும் வந்தன; அதேபோல் க என எழுதப்பட்டது இன்று கா என எழுதப்படுகின்றது. 14ம் நூற்ருண்டிலெழுந்த நன்நூல் என்னும் இலக்கண நூலில் உயிர் மெய்யெழுத்துக்கள் முதலில் மெய்யும், பின்னர் உயிரும் ஒலிக்கும் வண்ணம் எழுதப்படல் வேண்டுமெனக் கூறு கிறது. இதன்படி வரிவடிவில் க்+ஆ= கா எனவும்; க+ இ = கி எனவும் எழுதப்படுதல்போல க்+ஐ என்பது கை என எழுதப்படல் வேண்டும். ஆனல் அவ்வாறில்லாமல் கை என்று எழுதப்படுகின்றது.
மேற்கூறப்பட்டவை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டவை களாகும். இவற்றை தமிழ்மொழி ஏற்றுக்கொள்ள முடியுமாயின் இந்த நூற்முண்டில் ஏற்பட்டுள்ள சீர்திருத்த எழுத்துக்களையும்; விஞ்ஞானத் தேவைக்கேற்ப தமிழெழுத்துக்களில் மேலும் மாற்றங்கள் செய்தும் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நாகரிகம் வளர, வளர மொழியில் சில நுண்ணிய மாறுதல்கள் உண்டாவது இயல்பே. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்று தோட்டம் முதல் தொழிற் சாலைவரை கம்பியூட்டர் மயமான யுகத்தை தோற்றுவித்துள்ளது.
08

கம்பியூட்டர் சகாப்தத்தில் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கம்பியூட்டர் ஒருவர் வாயால் இடும் கட்டளைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை செய்கிறது. இதற்கு 160 கட்டளைகளைப் பிறப்பிக்க முடியுமென்றும்; நாம் பேசும் 600 வார்த்தைகளை இதனுல் புரிந்து கொள்ள முடியுமென்றும் அறியக்கிடக்கின்றது.
கம்பியூட்டர் யுகத்தில் "ஃபோட்டோ டைப் செட்டிங்" என்ற அச்சுக் கோர்க்கும் முறை தற்போதுள்ள அச்சியந்திர அச்சுக் கோர்க்கம் முறையையே மாற்றிவிடக்கூடியது. ஒருவர் மலேசியாவிலிருந்து செய்திக் கட்டுரையொன்றை கொம்பியூட்டர் டெர்மினலில் உட்கார்ந்து டைப் செய்தால் அது அதே வினடியில் சென்னையில் அச்சுக் கோர்க்கப்பட்டு விடும் இதனை விஞ்ஞானபுகம் செயற்கைக்கோள் உதவியுடன் சாத்திய மாக்கியுள்ளது.
இத்தகைய கொம்பியூட்டர்களுக்குக் கூட தமிழில் கட்டளையிடக் கூடிய முறையிலே தற்போகைய தமி லெழுத்துக்களில் பொருத்கமான "Pறங்களேயும், புதிய குறியீடுகளையும் குறுகிய ஒலிப்பதற்கு இலகுவான பல புதிய தமிழ்ச் சுொற்களையும் தேவையேற்படுமிடத்த ஆங்கிலமொழி யிலிருந்து கடன்வாங்கி விஞ்ஞான கேவைக்கேற்ப தமிழ்க் கலைச்சொல் லாக்கம் செய்வதற்குத் தமிழில் புதிய இலக்கண விதிகளையும் தமிழ் அறிஞர்கள் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சிக்குச் சமாந்தரமாகத் தமிழ்மொழியும் எழுத்தக் களிலும் இலக்கண விதிகளிலும் மாற்றம் பெற்று வளர்வதவசியம். அதற்கான சில புதிய சிந்தனைகள் கீழே தரப்பட்டுள்ளன. * நாட்டுக்கு நாடு நூலுக்கு நூல் வேறுபட்டு பயில்வோருக்க மயக் கத் ைகக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக விஞ்ஞானத்திலுள்ள ஆங்கிலப் பதத்திற்கு ஒரேயொரு தமிழ்க் கலைச் சொல்லே அமைய வேண்டும். கலைச்சொற்களைப் பொறுத்தவரை தமிழில் "ஒரே பொருள் - பல சொல் தவிர்க்க்ப் படவேண்டும். ஆங்கிலத்திலிருந்த கடன்வாங்கி தமிழ்க்கலைச் சொல்லாக்கம் செய்வதற்கு தமிழ் உச் சரிப்புக்கேற்ப அச்சொல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குப் புதிய இலக்கண விதிகள் அவசியம். அப்போதுதான் அத்தகைய ஒரு சொல்லுக்கு ஒரேவகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்படும். கடன் வாங்கிய சொற்களை இனம் கண்டு கொள்வதற்காக அவற்றை" ." என்ற குறியீட்டுக்குள் எழுத வேண்டுமென்பதைக் கூட புதிய இலக்கணவிதியாக இடம்பெறச் செய்யலாம். * தேவையற்ற சொற்களை நீக்கி நீண்ட வாக்கியங்கள் குறிக்கும் அதே பொருளைக் குறிக்க குறுகிய வாக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும். (உ+ம்) காலால்தானே உதைப்பது. எனவே "காலால் உ ைதத்தான்” என்பதில் "காலால்" என்பது மேலதிகமான சொல். உதைத்தான் என்பதும் அதே பொருளையே குறிக்கும். * 'மழை பெய்தது” என்பதை மழைந்தது" என்றும்; "கல்லாணம் செய்கான்’ என்பதை "கல்லாணித்தான்” என்றும் புதிய சொற்கள் தமிழிலே தோன்றும் வண்ணம் புதிய இலக்கணவிதிகள் வழிவகுக்க வேண்டும். * "லஞ்சம்” என்பதற்குக் கையூட்டு" என்றும் தமிழ்ச் சொல் உண்டு. ஆனல் இது மக்களின் பேச்சுமொழியில்லை. பேச்சு மொழியின் வயிலாக தமிழில் கிம்பளம் என்ற சொல் தோன்றியுள்ளது. மக்களுக்கப் பரிச்சயமான இவ்வாறன சொற்களை புதிதாக தமிழ் அகராதியில் சேர்த்துக்கொண்டால் என்ன?
09

Page 7
* தமிழில் 'ஒள' என்ற எழுத்தும், அதனலுண்டான உயர்மெய் யெழுத்துக்களும், ஆய்த எழுத்தான 'ஃ' உம் வரும் தமிழ்ச் சொற் கள் மிகமிகக் குறைவு. இவைகளை தமிழ்மொழியிலிருந்தும், தமிழ் அகராதியிலிருந்தும் நீக்கி விட்டால் என்ன? தமிழில் எழுத்துக்கள் குறைவது கூட விஞ்ஞானத்தின் தேவையே. * பிறமொழி பேசுவோர் தமிழை இலகுவாகக் கற்றுக் கொள்ளும் வண்ணம் தற்போதுள்ள கடினமான இலக்கண விதிகளில் மாற்றம் செய்து தமிழில் புதிய இலகுவான இலக்கண விதிகள் உருவாக வேண்டும். எதனையும் இலகுவாக்குவதும் விஞ்ஞானத்தின் தேவையே உரைநடை வளர்ச்சி பெற்ற தற்கால நவீன தமிழ் நாவல், சிறுகதை, கவிதை இலக்கியங்களுக்கு இலக்கண விதிகள் புதிதாகத் தமிழில் சேர்க்கப்படல் வேண்டும். உதாரணமாக தமிழுக்குப் புதிய வடிவ மான 'குறும்பா”வுக்கும், தற்காலப் புதுக்கவிதை"ப் போக்கிற்கும் இலக்கண விதிகள் உருவாக வேண்டும். ஆதலால், இதுவரை தமிலெழுத்துக்களில், சொற்களில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களையும்; விஞ்ஞான வளர்ச்சிக்குச் சமாந்தரமாக இனிமேல் ஏற்பட வேண்டுமெனக் கருதப்படும் மாற்றங்களையும் உள்ளடக்கி - தொல்காப்பியத்தையும், நன்நூலையும் வழிகாட்டிய்ாகக் கொண்டு புதிய இலக்கண நூல்ொன்று தமிழில் இந்த நூற்ருண்டில் தோன்ற வேண்டும். அந்த நூலுக்கு 'உலகத்தமிழ்” எனப் பெயரிடலாம். * இதுவரை தமிழில் கோன்றியுள்ள புதிய சொற்களையும் (கலைச் சொற்கள் உட்ப்ட) எதிர்கால கம்பியூட்டர் விஞ்ஞான யுகத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய புதிய கலைச் சொற்களையும் உள்ளடக்கி - இதுவரை தமிழில் வெளிவந்துள்ள கலைச்சொற் தொகுதிகளை வழி காட்டியாகவும் கொண்டு தனித்தனியே புதிய 'உலகத்தமிழ் அகராதி"யும், "உலகத் தமிழ் கலைச்சொல்தொகுதி" உம் தோன்ற வேண்டும். * மேற்படி பணிகளை உலகத்தமிழாராய்ச்சி மன்றமே பொறுப்பேற்று அதற்கான தீர்மானத்தை ஆருவது உலகத்தமிழாராய்ச்சி மன்ற மாநாடு எடுக்க வேண்டும். * மேற்படி தீர்மானத்தைச் செயற்படுத்த உலகளாவிய ரீதியில் அறி வியல் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தமிழறிஞர்களையும், தமிழிலக்கண விற்பனர், மொழியியலாளர்களையும் அடங்கிய குழு வொன்றை உலகத் தமிழாராய்ச்சி மன்றமே தேர்ந்தெடுத்து அப் பணிக்கான சகல வளங்களையும், வசதிகளையும் வழங்கவேண்டும்.
மேற்கூறப்பட்ட "உலகத்தமிழ்’ என்ற இலக்கண நூலுக்கும் “உலகத்தமிழ் அகராதி"க்கும் "உலகத்கமிழ் கலைச்சொல் தொகுதி’க்கும் உலகளாவிய அங்கீகாரத்தை உலக தமிழாராய்ச்சி மன்றம் வழங்கி அவற்றையே தமிழ் கூறு நல்லுலகம் ஏற்றுக்கொள்ளும் படி பிரகடனப் படுத்தவும் வேண்டும். வரப்போகும் வார்ச்சியுற்ற விஞ்ஞான 21ம் நூற்முண்டின் தமிழுக்கான தேவையும், சேவையும் இதுவேயாகும். என்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் முடிபு. -முற்றும்.- உசாத்துணை நூல்கள்: "தமிழ் இலக்கிய வரலாறு - திரு. வி. செல்வநாயகம் எம். ஏ. ‘விபுலானந்த அடிகள்' - திரு. பி. ரி. செல்வநாயகம் “மொழி வரலாறு - டாக்டர் மு. வரதராசன்
瓮
10

விஞ்ஞானக் காற்று
இது - விஞ்ஞானக் காற்று வீசும் காலம்!
女
மனிதாபிமானம் மெளனமாயிருக்க "கொம்பியூட்டர்’ கூக்குரலிடுகிறது மனித - மூளையை தான் முந்திவிட்ட தாக!
女 அறிவின் கண்கள் அகல விரிந்தாலும் மனிதத் தன்மையின் இதயத் துடிப்பு எல்லாம் நின்றுவிட்டது
女 ஆயுத விளைச்சலை அதிகரிக்கப் போவதாக வல்லரசுகள் - வாக்குமூலம் தருகின்றன. இது ~ யுத்தத்தின் ஆயுள் நிலைக்கும் என்பதற்கான நிச்சயச் செய்தி !
大
எல்லாவற்றையும் விரிவாய்ப் பார்க்கிறது
விஞ்ஞானம், ஆணுல் - சரிந்துபோகும் சமாதான கோபுரத்தை நிமிர்த்துவதற்கான முயற்சிகள் இன்னும் மும்முரமாகவில்லை!
女
இது - விஞ்ஞானக் காற்று வீசும் காலம் !
)ே எம். எல். எம். அன்ஸ்ார்
令幾醬領錄令怨咎兮醬 醬鴿領怨歌嶺怨領怨率
JULIU) DI
நேற்று நாங்கள் சந்தைக்கு சென்று சாரன் விற்ற ஒருவனைக் கண்டோம்.
"எங்கள் கையால்
நெசவு செய்தோம்: எங்கள் இரத்தம் சிந்தி உழைத்தோம்"
என்றவன் கூறி விற்றிடும் போது அவன் - இடுப்பினில் தெரிந்ததோ இந்தியச் சாரம்.
O தேவ. கெளதமன்
令晏簧醬醬領矮瓷器醬 醬醬餐醬餐醬然

Page 8
முறையிடு)
- அண்ணுதாசன் -
விண்ணி லிருந்தே அழுதிட நீயெனை
விடுவையோ என் இறைவா - இந்த மண்ணில் நடப்பவை தம்மை யுன்னேடு நான்
மனம் விட்டுப் பேசிடவா? - அட கண்ணிற் தெரிபவை எத்தனை கோடிக்
கயமை இவற்றை யெல்லாம் - இந்தப் புண்ணிய பூமிக்கு விட்டவர் யாரென்று
புரிந்திட வில்லை ஐயா!
சட்ட மமைத்த மனித னதற்குள்ளே
சங்கதி வேறு வைத்தான் - அந்தத் திட்டந் தனைத்தெரி யாதவன் வந்ததிற் சிக்கி யழிந்து கெட்டான் - அட பட்டப் பகலினிற் பக்கிரி யாட்டங்கள்
பற்பல தோன்று தையா! - அதை முட்டி யுடைக்க முடியவில்லை அதன் x --
முனைப்பும் முடியவில்லை.
ஏழைக்குச் சோறிடச் செய்ததிட் டங்களால்
எத்தரே வாழ்வு பெற்ருர் - இதை
மூளைக்குள் இட்டவர் என்னசெய் வோமென்று
மூலைக்குள் முணுமுணுத் தார் - ஒரு
நாளைக்குள்ளே யு டர் வெய்திட லாமென்று
நாதியற் றேர் நினைத் தார் - அட
கோளுக்குக் குறைவில்லை, கொள்கைக்கு உயர்வில்லை
குற்றங்களா, குணங்கள்?
வீர முரைத்த வரோபடை வீரரின்
வீழ்ச்சியி னலுயர்ந் தார் - மன ஈர முரைத்த மதியினர் மக்களி
லேறி யுயர்வு பெற்ருர் - அதி கார மமைந்தவ ரோஅதை ஆயுத
மாக வரிந்து கொண்டார் - புதி ராக அமைந்த இவை புரி யாதவர்
புல்லென வேநெரிந் தார்!
12

ஆற்றங்கரை பிள்ளையார்
- புதுமைப் பித்தன்
O போலி வரையறைகளையும், பொய்மைச் சம்பிரதாயங்களையும்
வாழ்வு எனக் காட்ட முனைந்த கும்மிருட்டாளர்களுக்கு மத்தி யில் 'இதோ வாழ்க்கை" எனக் காட்டி நின்ற துணிவாளன்! இலக்கிய ஒளி வெள்ளம்! தமிழ்ச் சிறுகதையின் பிரமன்! - புதுமைப் பித்தன் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) அவர்களுடைய (1934 இல் எழுதப்பட்ட) கதையே இது. இக்கதை புதுமைப் பித்தனின் எந்தச் சிறுகதைத் தொகுதி களிலும் இடம்பெருதது. இதைப்பெற உதவிய "கொல்லிப் பாவை" ஏப்ரல் 1986 - தமிழ்நாட்டு மும்மாத இதழுக்கு
எமது நன்றி.
- 'வயல்" ஆசிரியர் குழு.
ஊழி காலத்திற்கு சூன்.
கி. முக்கள் (கிருஸ்து பிறப்ப தற்கு முன்) என்ற அளவு கோல் களுக்கும் எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.
அப்பொழுது, நாகரீகம் என்ற நதி காட்டாருக ஒடிக்கொண்டிருக் கிறது.
கரையில் ஒரு பிள்ளையார்.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுவதால் கற்பாறைகளும், மணற் குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.
ஒரு கிழவர் வந்தார்.
பிள்ளையாரின் கதியைக் கண்டு மனம் வருந்திஞர், பிள்ளையாரைக் காப்பாற்ற அவருக்கு ஒரு வழி தோன்றிற்று.
"சமூகம்" என்ற மேடையைக்
கட்டி, அதன் மேல் பிள்ளையாரைக் குடியேற்றினர். அவருக்கு நிழலுக் காகவும், அவரைப் பேய் பிடியா திருக்கவும், "சமயதர்மம்" எ ன் ற அரச மரத்தையும், "ராஜ தர்மம்" என்ற வேப்ப மரத்தையும் நட்டு வைத்தார்.
வெ ள் ளத் தி ன் அ மோக வண்டல்களினுல், இரண்டு மரங்க ளும் செழித்தோங்கி வளர்ந்தன.
i பிள்ளையாருக்கு இன்பம் என்
பது என்னவென்று தெரிந்தது.
தனக்கு உதவிசெய்த பெரியா ரின் ஞாபகார்த்தமாக "மனித ன்" என்ற பெயரை தனக்குச் சூடிக் Gassmranü L-mtrir.
இரண்டு மரங்களும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு மிக வும் செழிப்பாக நெருங்கி வளர்ந்து, பிள்ளையாருக்கு சூரிய வெளிச்சமே படமுடியாமல் கவிந்து கொண்டன. மழைக் காலத்தில் எப்பொழுதும்
13

Page 9
மரங்களிலிருத்து ஈரம் சொட்டிக் கொண்டே இருந்ததினுல் பிள்ளையா ருக்கு நடுக்கு வாதம் ஏற்பட்டுவிடும் போலிருக்கிறது. மேலும் கிளைகளில் ப சுழி க ள் கூடு கட்டிக்கொண்டு, பிள்ளையாரின் மேல் எல்லாம் அசுத் தப்படுத்தின.
பிள்ளையாரைப் பார்க்க, வெகு பயங்க ர மாக இருந்தது. அப் பொழுது இருகிழவர்கள் வந்தனர்.
கோர உருவத்துடன் விளங்கும் பிள்ளையாரைக் கண்டதும், இருவ ரும் ஆற்றுக்கு ஓடி ஜலம் எடுத்து வந்து முதலில் அவரைக் குளிப் பாட்டினர்கள்.
ஒரு கிழவருக்கு ஒரு யோசனை தோன்ற, கை யி ல் மண்வெட்டி யுடன், வெகுவேகமாக ஒரு பக்கமா கச் சென்று மறைந்தார்.
மேலிருந்த அசுத்தங்கள் போன தினுல் உண்டான ஒரு சந்தோஷத்தி னல், பிள்ளையார் எதிரிலிருந்த கிழவ "ருடன் பேசலானர்; ' என்னை முன் பின் அறியாத நீங்கள் செய்த உத விக்கு, உங்கள் இருவருக்கும் என தன்பை தவிர வேறு நான் என்ன கொடுக்க முடியும்? உங்கள் பெயர் என்ன, உங்கள் நண்பர் பெயர் என்ன என்ருர்,
அதற்கு அந்தக் கிழவர் பதில் சொல்லுகிருர், ' பிள்ளையாரே ! கஷ்டத்திலிருப்பவருக்கு உதவி செய் பவருக்கு பிரதியுபகாரம்வேண்டுமா? அ  ைத நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. எனது பெயர் ‘புத்தன்’ என் னுடன் வந்தவர் என் நண்பரல்ல; அவரை வழியில் நான் சந்தித்தேன். அவர் பெயர் "ஜினன்' என்ருர்.
கிழவருக்கு பளிச் சென்று ஒரு
யோசனை உதித்தது. ஒரே பாய்ச்ச லில்மரத்தின் மேல் ஏறி, பகதிகள் கூடுகட்டுவதற்கு வசதியாய் இருந்த கிளைகளை எல்லாம் வெட்டவாரம் பித்தார்.
இத்தனை நாட்களாக இருளி லும் நிழலிலும் இருந்துவந்த பிள்ளை யாருக்கு, திடீரென்று பட்ட சூரிய கிரணங்களைத் தாங்க முடியவில்லை. மேலெல்லாம் சுட்டுக் கொப்புளிக்க ஆரம்பித்தது கண்களைத் திறக் க முடியாமல் கூசுகிறது 'நல்லவேலை செய்கிறீர்! போதும் உமது உதவி” என்று கோபித்து, "இந்தக் கிளைகளி ஞல்தான் உமக்கு. ’ என்று கிழ வர் பதில் சொல்லுமுன், தனது தும்பிக்கையிஞல் அவரைத் துரக்கி வீசினர் கிழவர், மேடைக்கு, வட கிழக்கில், வெகுதூரத்தில் போய் விழுந்தார்.
சற்று நேரத்தில் மண்வெட்டியு டன் சென்ற கிழவர், பிள்ளையாரை அணுகி நான் புதிதாக மேடை ஒன்று கட்டயிருக்கிறேன். அ தி ல் அந்தக் கஷ்டம் ஒன்றும் இல்லை’ என்று சொல்லி அவரைத் தூக்கிக் கொண்டு போய், தான் தயாரித்த இடத்தில் உட்கார வைத்து, "இதோ" பாரும்! இதில் மரங்களோ இல்லை; உமக்கு அங்கிருக்க கஷ்டம். ..." என்று சொல்லி முடிக்குமுன் அவ் விடத்தில் இருந்த உஷ்ணத்தைத் தாங் க முடியாத பிள்ளையார் கண்ணை முடிக்கொண்டு ஒரே ஒட்ட மாக தனது பழைய மேடையில் வந்து உட்கார்ந்து கொண்டு "உங் கள் இருவருக்கும் உதவி செய்வது என்ருல் பிறரைத் துன்பப்படுத்து வது என்று நினைப்பா? சற்று முன்பு தான், உமது நண்பன், உம்முடன் வந்தவன் எனது அருமையான மரங் களை வெட்டி உடம்பெலாம் கொதிக் கும்படி செய்துவிட்டான். கண்ணை
4.

மூடிக்கொண்டு சிவனே என்றிருந்த என்னை, நீர் வெகு புத்திசாலித்தன மாக கட்டிவிட்ட உமது மொட்டை மேடையில் போட்டுப் பொசுக்கி விட்டீரே. போதும் உமது உதவி நீர் சும்மா இருந்தால் போதும்’ என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கண்
களை மூடிக்கொண்டு உட்கார்ந்தார்.
பிள்ளையாரின் மன நிலையைக் கண்ட கிழவர் பெரிதும் ஏமாற்ற மடைந்து, தானே அந்த மேடையில் உட்கார்ந்து த ன து உயிரைவிட் ll-nrif.
வெட்டி விட்டதனுல் கிளைகள் முன்னைவிட பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. தாழ்ந்தும் கவிழ்ந்தும் வளர்ந்த அரசமரத்தின் இ ர ண் டு கிளைகளுக்கிடையில் பிள்ளையாரின் தலையகப்பட்டுக்கொண்டது. வேப்ப மரத்தின் வேர் ஒன்று பிள்ளையாரின் வயிற்றைச்சுற்றி வளர்ந்தது. பிள்ளை யாரின் கால்களில் அரச மரத்தின் இரண்டு வேர்கள் இறுக்கி பின்னிக்
கொண்டன.
பிள்ளையார் இரண்டு மரங்களுக் குள் சிறைப்பட்டார்.
காற்றடிக்கும் பொழுதெல்லாம் பிள்ளையாருக்கு தலை போய்விடும் போல் இருந்தது. வயிற்றைச்சுற்றிய வேரோ அதன் வேதனை சகிக்கமுடிய வில்லை. கால்களும் சிறைபட்டதினுல் ஒடவோ முடியாது.
பிள்ளையாருக்கு நரகம் எப்படி யிருக்கும் என்று சற்று தெரிந்தது.
பலகாலம் சென்றது a 6. மேற்கு கணவாய்களில் பெய்த அமோகமான மழையினல் நதியின் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத்
தோட்டம் போட்டு வசித்து வந்த கைலிகட்டிய ஒரு தாடிக்கிழவனையும் குடிசை - தோட்டத்துடன் அடித்து வந்தது.
வெள்ளத்தின் வேகத்தினுல் அரசமரம் சாய்ந்தது. வேப்பமரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்ததினல் தண் ணி ரில் மித ந் து ஆடிக் கொண்டிருந்தது. பிள்ளையாருக்கு ஒடவும் முடியவில்லை ஒடவும் பயம்.
பிள்ளையாரின் துன்பத்திற்கு ஓர் எல்லையில்லை; நீக்க ஓர் வழியுமில்லை.
வெள்ளத்தில் உருண்டு வந்த தாடிக்கிழவன் லேப்பமரத்தின் கிளை களை எட்டிப்பிடித்து மேடையில் தொத்திக்கொண்டான்.
வெள்ளம் வற்றியது, தா டி க் கிழவன் வேப்பமரத்து நிழலுக்கு ஆசைப்பட்டு அதைத் தூக்கி நிறுத்தி னன். வெள்ளத்தில் ஒதுங்கிய ஒரு செத்த பசுமாட்டின் தோலையுரித்து, அதன் மாமிசத்தை வேப்பமரத் திற்கு உரமாக இட்டான். தன்னு டன் வெள்ளத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு ரோஜாச்செடியை எடுத்து மீதி யி ரு ந் த மாமிச எருவையிட்டு, வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற் கும் இடையில் நட்டுவைத்தான். மாட்டின் தோலை வைத்து வேப்ப மரத்தடியில் ஒரு குடிசை க ட் டி க் கொண்டு தன்இடையில் சொருகி இருந்த உடைவாளை வேப்பமரத்தில் மாட்டிவிட்டு சந்தோஷமாக இருக்க வாரம்பித்தான்.
ரோஜாச்செடி, உ ரத் தி ன் மகிமையால் ந ன் ரு க செழித்து வளர்ந்தது. நல்ல வாசனையுள்ள புஷ் பங்களுடன் நீண் ட முட்களுட் நிறைந்திருந்தன.
15

Page 10
| 16irðarust flaör கவனிக்க யாருமில்லை.
கிஷ்டத்தைக்
அப்பொழுது மூவர் ஒருவர்பின் ஒருவராய் வந்தனர். அவர்களுக்கு சங்கரன், ராமானுஜன், மத்வன் என்று பெயர்.
முதலில் வந்தவர் பிள்ளையார் தலையை விடுவிக்க முயன்ருர். வெகு கஷ்டப்பட்டு சிறிது விலக்க முடிந் தது. வயிற்றைச்சுற்றிய வேரை சிறி தும் அசைக்க முடியாது என்றுகண்டு தலையை விடுவித்த சந்தோஷத்தில் போய்விட்டார். அவர் பின் வந்த இரு கிழவர்களும், அரச மரத்தை மு த லில் இருந்தமாதிரி தூக்கி நிறுத்த எத்தனித்தார்கள். முடிய வில்லை. பெரிய மரத்தைத் தூக்கி இருவரால் முடியுமா? அதிலும் கிழ வர்கள். அரசமரம் கே ரா னி க் கொண்டுதான் நின்றது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்குமென்று நினைத்து சந்தோ ஷ ப் பட் டு க் கொண்டு சென்றுவிட்டார்கள்.
விலகி இருந்த அரச மரத்தின் கிளைகள் மறுபடியும் கவிந்து பிள்ளை யாரின் கழுத்தை இறுக்கவாரம்பித் தன. அருமைத் தொந்தியைச் சுற் றிய, மாமிச உரம்பெற்ற வேப்ப மரத்தின் வேர்களோ, பிள்ளையாரை அசைய விடாமல் நெருக்கின.
ரோ ஜா புஷ் பங்களின் வாசனையை தன்முக அனுபவித்தா லும் முட்களை எப்படி விலக்குவது. குத்திக்குத்தி அந்தப்பக்கம் பூராவா கவும் சீழ்வந்தது.
போதாதற்கு கைலிக்கிழவன், தனக்கு பொழுது போகாத நேரங் களில் தனது உடைவாளை எடுத்து பிள்ளையாரின் ஒற்றைக் கொம்பில் தீட்டவாரம்பித்துவிடுவான்.
மேடையின் மீது அரசங்கின்று களும் வேப்பங் கன்றுகளும், வேறு புல்பூண்டுகளும் முளைக்க ஆரம்பித்து விட்டன.
சிலகாலம் சென்றது.
ஒரு நாள் இரவு, மேற்கு சமுத் தி ரத் தி ன் அடிப்பாகத்தில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டதினல் கடல் ஜலம் நதிக்குள் எதிர்த்துப் பாய்ந்தது. பிள்ளையார் இரு ந் த மேடையின் பக்கம் புயற்காற்றும், மழையும் சண்டமாருதமாக அடித் ததிஞல், ஆறும் பெருக்கெடுத்து கடல் ஜலத்தை எதிர்த்தது.
பேய்போல ஆடிக் கொண் டிருந்த மரங்களும் மறுபடி விழுந்து விட்டன. அரசமரம் பிள்ளையார் முதுகின் மேல் சாய்ந்துவிட்டது. வலுவல்ல வேப்பமரம் முன்போல், பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றி யிருந்த வேரின் உதவியால் மேடை யில் இருந்துகொண்டு தண்ணிரில் ஆடிக்கொண்டிருந்தது.
கைலிக்கிழவனை குடிசையுடன் அடித்துக் கொண்டுபோய் வி ட் ட தால், காற்றுக்கு வளைந்துகொடுத்து மறுபடியும் தலைநிமிர்ந்த ரோஜா ச் செடியைத் தவிர அவனுடைய ஞாப கர்த்தமாக வேறு ஒன்றுமில்லை.
பிள்ளையாருக்கு நரக வேதனை பொறுக்க முடியவில்லை.
இந்த மூன்று பிணிகளும் பாசக் கயிறுபோல் அவரைத் துன்புறுத் தின.
சமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த ஒரு வனை கடல் நீர் படகுடன் ஆற்றுக் குள் அடித்துக்கொண்டு வந்ததினுல்
6

அந்தப்படகும் இந்தப்பீள்ளையாரின் மேடையை அணுகிற்று படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலப் பிடித்துக் கொண்டு மே டை யி ல் தொத்திக்கொண்டான். பிறகு பட கையும் மேடையில் இழு த் துப் போட்டுக்கொண்டான்.
வந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் த லை ம யிர் உருக்கி வார்த்த தங்கக்கம்பிகள் மாதிரிபொன்னிறமாகவும் பிரகாசித் தது. அவனது நீண்டதாடி பொன் னிறமான ஆபரணம்போல் அவன் மார் பை அலங்கரித்தது. அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும்தோல் பாதரட்சையும் அணிந் திருந்தான். அவனது வலதுகையில் கறுப்புத்தோல் அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும், ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன.
இவனுக்கும் வேப்ப மரத்தின் மகிமை நன்ருகத் தெரியுமாகையால் உடனே அதைத் தூ க் கி நிறுத்தி, அதன் அடியில் தனது படகைக் கவிழ்த்துப் போட்டு அதனடியில் படுத்துறங்கினன்.
அ வ ன் தனக்கு உணவுக்காக வைத்திருந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளை யார் முன்வைத்துவிட்டு உறங்கியதனுல், பசியின் கொடுமை மிகுந்த அவர், அவைகளை எடுத்து காலிசெய்ய ஆரம்பித்தார். கொழுக் கட்டை தின்று பழகிய பிள்ளையா ருக்கு இது தேவாமிருதமாக இருந் தது. பசி நீங்கிய பிள்ளையார் வலி யின் கொடுமையைத் தாங்கமுடியா மல் அப்படியே உறங்கிவிட்டார்
மறுநாள் விடிந்தது.
பிள்ளையார் இருந்த மேடைப் பக்கம் அதிக உஷ்ணமான பூமியா
கையால், புதிதாக வந்தவ்ன் தனது நீண்ட அங்கியினல் தனது புத்தகத் தையும் சிலுவையையும் கட்டி வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்க விட்டுவிட்டு ஒரு சிறிய சல்லடத்தை மாத்திரம் அணிந்து கொண்டு, கவிழ்ந்து கிடந்த படகின் மேல் உட் கார்ந்து, வேப்பங் காற்றை அனுப வித்துக்கொண்டு இரு ந் தான். பொழுதுபோக்காக கையில் இருந்த உடைவாளை சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்
அப்பொழுது பல கிழவர்கள் வந்தார்கள்.
மேடையையும் பிள்ளையாரை யும் அரச மரத்தையும் கண்டவுடன் பீதியடித்துப்போய் விட்டார்கள்.
சிலர் அரசமரத்தை தூ க் கி நிறுத்த முயன்ருர்கள்.
சிலர் பிள்ளையாரின் வயிற்றை விடுவிக்க முயன்ருர்கள்.
சிலர் மேடையை சீர்படுத்தி ஞர்கள்.
ஒவ்வொருவர் செய்வதும் மற்ற வர்களுக்கு தடையாக இருந்தது.
பிள்ளையாரின் வயிற்றை சுற்றிய வேப்பமர வேரையறுக்கப் போனல் புதிதாக வந்தவன் வாளை ஓங்கினன்
அரசமரத்தின் கிளைகளை வெட் டப்போனல் பிள்ளையாரின் உதவி யால் மரம் நிற் கிற து. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்து விடும். இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம். சற்றுப்பொறுத் துச் செய்யுங்கள் என்ருர்கள்.
சிலர் மரங்களையே எடுத்து விட்
7

Page 11
டால் நல்லது என்று நெருங்கினர் és Gir.
இரைச்சல் அதிகமாகிறது.
ம ரத் தி ற்கு பிள்ளையாரா பிள்ளையாருக்கு மரமாளன்று பெரிய தர்க்கம்,
ஆத்திரமுள்ளவர்கள் அரசமரத் தையும் வேப்பமரத்தையும் அழித்து விட பதைத்து நெருங்கிஞர்கள்.
உறங்கிக் கொண்டிருந்த பிள்ளை
யார் ஒரு அற்புதமான கனவு காண் கின்ருர். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது.
விச்வரூபமா?
பிள் ளை யா ர் விடுவிக்கப்படு Snurrrrr ?
அல்லது அவர் கனவு நனவாகி விடுவித்துக் கொள்ளுவாரா?
अ%"
அறிவியல்
'வயல்" - இன் அடுத்த இதழிலிருந்து இப்பகுதி இடம்
அரங்கம்
பெறும். தோட்டம் முதல் தொழிற்சாலைவரை கொம்பியூட்டர் (கணணி) மயமான இன்றைய நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப யுகத்தில், அறிவியல் கண்டு பிடிப்புக்களும் அவற்றின் பிரயோகங்களும் மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து கலை, இலக்கிய, ஆத்மீக, அரசியல் ஈடுபாடு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு எத்துணை அவசியமோ அதுபோல் அறிவியல் சார் துறைகளின் ஈடுபாடும் இன்றியமையாததே. இதனை உணர்ந்தே "அறிவியல் அரங்கம் அறிமுகமாகின்றது. அதற்கேற்ற ஆக்கங்களை அறிவியல்சார் துறை அறிஞர்களிட மிருந்தும் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்ருேம் சாலை மாணவர்களும் கூட பங்களிப்புச் செய்யலாம்.
விட்டன.
LITT
-'வயல்" ஆசிரியர் குழு
LLLLLL LLLL LL LLLAALLLLLAALLLAALLLLLAALLLLLLL LqLALALAJ AA LA A LA A LA MALALA LALLLL LLLLLL
18

கிழக்கு மண்ணின் இலக்கியக் களத்தில். கல்முனையில் ஓர் இலக்கியக் கூட்டம்.
நீண்ட கால இடைவெளிக்குப்பின் 87 டிசம்பர் இறுதியில் கல் முனையில் ஓர் இலக்கியக் கூட்டம் நடைபெற்றது. கல்முனைப் பிரதே சத்தில் தரமான இலக்கிய கர்த்தாக்கள் வாழ்கிறர்கள். அவர்கள் அவ் வப்போது காத்திரமான உன்னத சிருஷ்டிகளை ஆக்கியும் உள்ளனர். ஆனல் அவையெல்லாம் பத்திரிகை நறுக்குகளாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் பெட்டிகளிலே துரங்கிக் கொண்டிருக்கின்றன. அவை யெல்லாம் நூலுருவாகி மக்கள் மத்தியில் பரவினல் தான் அதன் பெறு மதி யாவருக்கும் தெளிவாக விளங்கும். இதற்கு நம்மவர்கள் அமைப்பு ரீதியாக முயல வேண்டும். அத்தோடு இலக்கியத்தைச் சிலர், விபரீத மாகப் புரிந்து வைத்திருக்கிருர்கள். எதிலும் இருவிதமான தன்மை இருப்பது போல இலக்கியத்திலும் உள்ளன. ஒன்று - சீரியஸாக - கலைப் பெறுமானம் மிக்கதாக - உண்மைத் தன்மை - வாய்ந்ததாக - வாழ்க் கையை நேருக்குநேர் தரிசிக்கக் கூடியதாக - மனித நேயத்துக்காக அழ கான மொழிநடையில் - உருவாக்குகின்ற நவீன சிருஷ்டிகள். மற்றையது இவற்றுக்கெல்லாம் எதிர்மாருனதாக - பிரச்சார மோகத்தோடு ஆக்கப் படுகின்ற போலியான படைப்புக்கள். இதனை ரசிகர்களுக்கு இனம் காட்ட வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு கலைத்துறைகளிலும் நவீன போக்குகளையும் - வெற்றிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காகவுமே கல்முனை "வியூகம்’ இலக்கியக் குழு அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
வியூகத்தின் முதலாவது முயற்சியாக 'நமக்குள்ளே - சமகால இலக்கியப் பிரச்சினைகள்’ என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றுள்ளது.
இக்கூட்டத்திற்கு சுமார் எழுபத்தைந்துபேர் சமூகமளித்திருந்தனர். கவிஞர்களும், எழுத்தாளர்களும், இலக்கிய ரசிகர்களுமாகவே அனை வரும் இருந்தது ஓர் சிறப்பம்சமாகும்.
இக்கருத்தரங்கை சிறந்த சிறுகதை எழுத்தாளரும் வியூகத்தின் பொதுச் செயலாளருமான உமா - வரதராசன் ஆரம்பித்து வைத்தார். அவர் இரத்தினச் சுருக்கமாக - 'இன்றைய எழுத்தாளர்கள் சிலர் கும்பலாகக் கூடி உண்மையைப் பொய் என்றும், பொய்யை மெய் என்றும் எழுதிக் கொண்டிருக்கிருர்கள். நாங்கள் இங்கு கூடியிருப்பது
19

Page 12
உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் சொல் வதற்காகவே. வித்தியாசமான போக்குள்ள நாங்கள் "வியூகத்தை" அமைத்துள்ளோம். எங்களை நீங்களும் உங்களை நாங்களும் புரிந்து கொள்வதும் ஒருமித்து இயங்குவதும் இப்பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு மேலும் வளம் சேர்க்குமென்று நினைத்தே ‘நமக்குள்ளே - சமகால இலக் கியப் பிரச்சினைகள் என்னும் தலைப்பில் இக்கருத்தரங்கை நாங்கள் ஏற் பாடு செய்தோம். இதனை இப்பகுதியின் சிரேஷ்ட எழுத்தாளருள் ஒரு வரான கவிஞர் மு. சடாட்சரம் தலைமைதாங்கி நடாத்துவார். பலர் உரையாற்றுவார்கள். இறுதியில் உங்களின் எழுத்து மூலமான வினக் களுக்கு விடை இறுக்கப்படும். இறுதிவரை ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து தலைமை தாங்கிய மு. சடாட்சரம் "நமக்குள்ளே சமகால இலக்கியப் பிரச்சினைகள் பல உள்ளன. குறிப் பாக - எதை எழுதுவது? எப்படி எழுதுவது என்பது ஓர் பிரச்சினை. அதனை நூலுருவாக்கி மக்கள் மத்தியில் பரப்புவது மற்றேர் பிரச்சினை. ஒரு காலத்தில் அதாவது எழுபதுகளில், இப்பகுதியிலே ஒரு கோஷம் முன்வைக்கப்பட்டது. 'நிலவையோ, மயிலையோ, அழகையோ பாடாதே வறுமையைப் பாடு வர்க்கப் போராட்டத்தைப் பாடு என்று வலியுறுத் தப்பட்டது. மனித உணர்வுகளை அழகாகப் படம் பிடித்த தரமான படைப்புக்களை, வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தவில்லை, சமூக மாற்றத்துக்கு உந்து விசை கொடுக்கவில்லை’ என்று எள்ளி நகையாடப் பட்டது. இதனல் இப்பகுதியிலே கலைப்பெறுமானம் மிக்க உன்னத சிருஷ்டிகள் அதிகமாக உருவாக்கப்படவில்லை. புதுமைப்பித்தன் கூட நான் சமூகமாற்றத்துக்கு எழுதவில்லை. வாழ்க்கை எனக்கு உணர்த்தி யதை திருப்பி மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி யுள்ளார். சுந்தர ராமசாமி, ஜானகிராமன், கு. ப. ரா. அசோக மித்திரன் போன்றவர்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் நின்று கொள் ளாமல், சுதந்திரமாக நின்று மனித நேயத்துக்காக எழுதித் தங்களை நிலைநாட்டி வெற்றியும் கண்டுள்ளார்கள். நாமும் அவ்வழியில் செல் வதே நல்லது. நாம் உண்மையை நேசித்து நமது அனுபவங்களையே எழுத்தில் சிறைப்பிடிக்க வேண்டும். சமகாலப் பிரச்சினையை எழுது பவர்கள் கொஞ்சமேனும் அதில் அனுபவப்படாமல் தூர இருந்து கொண்டு எழுதுவது போலியாகவே முடியும். இதனை உணர்ந்து கொள்வதே நல்லது’ என்ருர்.
அதை அடுத்து வி. ஆனந்தன் உரையாற்றும் போது - "முதலில் நமக்குள்ளே ஒரு பரஸ்பரம் வளர வேண்டும். எங்களுக்குள்ளே கூட்டுறவு வளரவேண்டும். அப்போதுதான் எதனையும் சாதிக்க முடியும். இலக் கியத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது சிரமசாத்தியமானது. அதற்கு புரட்சியே ஒரேஒரு வழியாகும். இலக்கியத்தால் எங்குமே சமூக மாற்றம் வந்ததுமில்லை. வரப்போவதுமில்லே. இன்று நாம் எழுதும் இலக்கிய சிருஷ்டிகள் முதலில் இலக்கியமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வதே மிக நல்லது” என்ருர்,
20

அதனைத் தொடர்ந்து எச். எம். பாறூக் உரைநிகழ்த்துகையில் - "நமது எழுத்தாளர்கள் நவீன கலை இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் பகுதியை - எங்கள் வாழ்க்கையைத் தத்ரூப மாகப் படம் பிடிக்க வேண்டும். எதையும் படித்துவிட்டு அந்த அருட்டு ணர்வில் எழுதாமல், தனித்துவமாகச் சிந்தித்து நமது பங்களிப்பையும் - செய்வதே சிறப்பானதாகும்' என்ருர்,
அதற்கடுத்ததாக மன்சூர் ஏ. காதிர் பேசுகையில் - "எழுபதுகளில் சில இலக்கிய முன்னேடிகள் முன் வைத்த கருத்துக்கள் பிழையானவை என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம். அவை தேர்தல் பிரசாரம் போல பச்சையாக - அது இல்லை, இது இல்லை, சமூகம் மாறவேண்டும் - என்ற பாணியில் எழுதுவதே சிறந்தது என்று உணர்த்தப்பட்டது. ஆனல் நாங்கள் அதிலிருந்து விடுபட்டுக் கனகாலம் ஆகிறது. இப்போது மனித நேயத்துக்காக, அழகிய மொழிநடையில் அனுபவ வெளிப்பாடுகளை கலைத் துவமாக எழுதுவதே சிறப்பானதென வலியுறுத்த விரும்புகிறேன்" என்ருர்,
w
அடுத்ததாக சிறப்புரை நிகழ்த்திய பிரபல விமர்சகரும், கவிஞரும்
யாழ்வளாக விரிவுரையாளருமான எம். ஏ. நுஃமான் குறிப்பிட்டதாவது
"இன்று நம் பகுதியிலே சமகாலப் பிரச்சினைகளைப்பற்றி எழுதிய படைப்பிலக்கியங்கள் மிகமிக அருமையாகவே உள்ளன. ஏன் நமது எழுத் தாளர்கள் துணிகிருர்கள் இல்லை. ஒரு வரலாற்று நூல் செய்கின்ற வேலை யிலும் பார்க்க சமகால இலக்கியப் படைப்பு பெரும் தாக்கத்தையே கொண்டுவரும். இக்காலத்தில் மக்கள் படும் - அவஸ்தைகளை - அவர்களின் மனப் போராட்டங்களை - அவர்களின் அபிலாசைகளை எழுத்திலே கொண்டுவர முடியும். கொண்டுவர வேண்டும். அதனை நம் பகுதி எழுத் நாளர்கள் முழுமனதோடு செய்யவேண்டும். அப் படைப்புக்களே எதிர் காலத்தில் சிறந்த பொக்கிஷமாகக் கருதப்படும். அத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் ஆங்கில மொழியில் பரிச்சயம் உள்ளதால் மேலைத் தேய சமகால இலக்கியப் படைப்புக்களை உடனுக்குடன் படித்துத் தெரிந்து கொள்கிருர்கள். அதனல் உலகரீதியான நவீன இலக்கியப் போக்குகளைப் புரிந்து கொள்கிருர்கள். அதற்கத் தக்கதாகப் புதுமை செய்கிருர்கள். பிரபல்யம் பெறுகிருர்கள். இதனையும் நமது எழுத்தாளர் கள் கவனத்திற்கெடுத்துக்கொள்ள வேண்டும்!" என்று குறிப்பிட்டார்.
கவிஞர் சோலைக்கிளி நன்றியுரை வழங்கிஞர்,
உண்மையில் உள்ளம் நிறைவடைந்த, ஓர் இலக்கியக் கூட்டத்தை வருட இறுதியில் கண்டுகளிக்கக் கூடியதாய் இருந்தது. இதனை ஏற்பாடு செய்த "வியூகம்" தொடர்ந்து நல்ல முயற்சிகளை எடுக்கும் என்றே எல் லோரும் எதிர்பார்க்கிருர்கள்.
தொகுப்பு: வி. எம். குழந்தைவேல்.
2

Page 13
广了 புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ---
வட இலங்கையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை எப்படியோ அப்படியே கிழக்கிலங்கையில் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். இருவருமே தமிழ்ச் சுடர்கள். புலவர்மணி அவர்கள் 02-11-1978 இல் புகழுடம்பு எய்தினர். அவரின் நினைவாக இக் {6ణ இங்கு இடம் பெறுகிறது.
'வயல்’ ஆசிரியர்குழு -
பு ல வ ர் ம ணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களின்
த மி ழ் ப் பணி
செல்வன் க. பாலகிருஷ்ணன் கலைப்பீடம் 2ம் வருடம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ,
திமிழிலக்கிய வளர்ச்சி என்பது தமிழ்ச்சிந்தனையாளர்களின் பல் வேறுபட்ட முயற்சிகளிலேயே உரமேற்றப்பட்டது. இத்தகைய சிந்தனை யாளர்களின் முயற்சியினல் அவர்கள் தமிழ்ப்பணிக்குரிய பல விருது களால் அழைக்கப்பட்டனர். அவ்விருதுகள் மகாகவி, கவிமணி, பண்டிதமணி, இலக்கிய கலாநிதி, புலவர்மணி, வித்துவான்கள், பாவ லர்கள் என வழங்கப்பட்டன. இத்தகைய சிறப்புப்பெயர்கள் தமிழுலகில் அவர்கள் சேவையையும், ஆற்றலையும் போற்றும் முகமாக வழங்கப் படுவதால் அவர்கள் செய்த சிறப்புப்பணிகள் விமர்சனம் செய்யப்பட வேண்டியவையே. இந்த வகையில் தமிழுலகிலேயே வேருெருவருக்கும் கிடையாத 'புலவர்மணி' என்னும் பட்டத்தினைப் பெற்று தான் பிறந்த முத்தமிழ்வளம் நிரம்பிய மட்டக்களப்பு மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்தவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களே.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் ஈழத்தில் தமிழ் கலாச்சாரத்திற்கென மண்டூர் என்னும் கிராமத்தில் 1899ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தமிழ்ப்பணி அவர் ஆரம்பத்தில் பெற்ற தமிழுணர்வினலேயே உருவாகின்றது. அவ்வாறு நோக்கும் போது புலவர்மணி இளமையில் தமிழ்க்காவியங்களைப் படித்தமையும் புலோலி சந்திரசேகர ஆசிரியர், சுன்னகம் குமார சுவாமிப்புலவர் ஆகியோரி டத்தில் கல்வி கற்றமையும் இவரின் பணியை மேலும் ஊக்குவித்தது. இதனை வெளிக் காட்ட அவர்கள் குருவணக்கம் என்னும் தம் கவிதையில்
22

** எனனைத் தமிழ்த்தாய் இணையடியில் மன்றுவித்த சந்திரசேகஞர்' என்று தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் அதுமட்டுமன்றி வித்தகர் விபுலாநந்தரது உறவும், கற்பித்தல் தொழிலும் தனது இறுதி மூச்சுவரை மாணவன்போல் இலக்கியம் கற்பதில் ஈடுபட்டமையும் இவர் சிந்தனை, பேச்சு, எழுத்து யாவற்றிலும் தமிழை வெளிப்படச் செய்ய தூண்டுதலாக இருந்தது.
ஒரு அறிஞரின் தமிழ்ப்பணியை அவரது சிந்தனை, பேச்சு, நடை, நூலாக்கம் கவிதை, கட்டுரை வடிவங்கள், பொதுசனத்தொடர்புச் சாதனப்பங்கேற்பு என்பனவற்றில் எத்தகைய ஈடுபாடு கொண்டிருந் தார் என்பதைக் கொண்டு அறியலாம். அதுமட்டுமன்றி சமகாலத்தில் வாழ்ந்த ஏனையோரை விட அவருக்குத்தமிழில் இருந்த ஈடுபாட்டினை அவதானிக்கும் போதிலும் தனித்துவம் பெறவேண்டும். மேற் கூறிய நிலையில் புலவர்மணி அவர்கள் எல்லா அம்சங்களிலும் மிகுந்த ஈடு பாடு கொண்டிருந்தார் என்பது தெட்டத்தெளிவாகிறது. இவர் பாரதியைப் போல் எளிய நடை எளியபதம் என்பவற்றைக்கையாண்டு உரைநடை செய்யுளாக்கம் செய்தமையினல் ஈழத்துத்தமிழுலகில் இவர் முன்னணியில் திகழ்கின்ருர். இதனை 'உள்ளதும் நல்லதும்" என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிருர்,
'நல்லதையே எழுதுகிறேன்; நல்லநோக்கத்துடன் எழுதுகின் றேன்; நல்ல பாணியில் எழுதுகின்றேன்; நிதானமாக எழுதுகின்றேன்' என்பதிலிருந்து இவரது எழுத்துக்களெல்லாம் தமிழ் மொழி யினேடு மிகுந்த தொடர்பானவையாகும். முன்னர் மொழிக்கலப்பினல் இருந்த சிக்கலான உரைநடையை விட்டு பிறருக்கு விளங்கும் நல்ல பாணியில் சிறிய சொல் சிறிய வசனம் என்பனவற்றில் பெரியதத்துவக் கருத்தில் எமக்குத்தந்துள்ளார். இதனை 'வகுப்பை நடத்துவது உங்கள் பொறுப்பு: எங்களுக்கு இதில் பொறுப்பில்லை. இதுதான் நிபந்தனை அவர்களுடைய எண்ணம் அதிகம் பேர் வகுப்பில் சேரமாட்டார்கள் பணம் அதிகம் வராது. தமது கையைக் கடிக்கும் என்பது தான்' என்பதிலிருந்து இவருடைய இலகு தமிழ்ச் சொல்லாட்சி மிளிர்வதைக்காணலாம். எனவே ஈழத்து உரைநடை வளர்ச்சியில் இவர் தனித்துவம் பெறுகின்றர் என்பதில் ஐயமில்லை.
தமிழ்ப்பணி என்பது மதப்பணியுடனும் தொடர்புடையது. இந்திய இலங்கைத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை சைவமும் தமிழும் இரட்டைக் குழந்தைகள். தமிழைப்பாடும் போது அதனுள்ளே சைவம் தானகவே நுழைந்துவிடும். இதற்கு ஒப்பு புலவர்மணியின் எழுத்துக் களில் தத்துவத்தமிழ் வெளிப்படுவது அவரது தமிழ்ப்பணியின் ஒரு சிறப்பிற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். அவரது தனி நூல்களை அவ தானிக்கையில் பகவற்கீதை வெண்பாவிலிருந்து, இந்துமத அடிப் படைத் தத்துவங்களைத்தந்தமையினல் ''வெண்பாவிற்கோர் புலவர் மணி' என்றும் ஞானபானு என்றும் சிறப்புப் பெற்றர். புலவர்மணி
23

Page 14
வெண்பா வடிவில் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பெரும் பணியாற்றிய தோடு நில்லாது பதிக வடிவிலும் தனது தனித்துவத்தைக் காட்டத் தவறவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அவர் பாடிய மண்டூர்ப்பதிகம் , கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றிஈசுவரர் பதிகம் , சித்தாண்டிப் பதிகம், மாமாங்கேசுவரர் பதிகம் என்பவற்றைக் கூறலாம். எனவே இவர் இருபதாம் நூற்ருண்டில் ஈழத்து தமிழ் பக்தி உணர்வையும், தலபுராண இலக்கிய வடிவங்களையும் உருவாக்கக் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. புலவர்மணி ஒரு சமத்துவமான இலக்கியவாதி. ஏனெனில் எந்தவொரு இலக்கியவாதிக்கும் உரிய உயர் பண்பு யாவற்றையும் சமத்துவான முறையில் அணுகுவதேயாகும். இதற்கிணங்க புலவர்மணி அவர்கள் சர்வசமய சமரசப்பதிகமும் உரு வாக்கப்பட்டது. தமிழ் மக்களிடையே காணப்பட்ட வேறுபாட்டினை நீக்கவும் பதிகம் பாடினர் என அறிகிருேம்.
புலவர்மணி அவர்கள் தமிழ் ஆசிரியராக இருந்ததஞலேயே குழந்தைகட்குரிய இலக்கியங்களையும் உருவாக்கி தமிழில் தனிஇடம் பெற்ருர், அதிலும் கவிதை நடையுடன் நாடகவடிவினைக் கையாண் டது இவர் பணியினை மேலும் வலிமையாக்கியது. இது புலவர்மணி எழுதிய 'சீவகசிந்தாமணி பாலசரிதை நாடகம்' எனும் நூலில் வெளிப் படுகின்றது. நாடகவடிவமான நூலினை தமிழிலக்கியமாக்கியமை கொண்டு இவரின் மற்றுமோர் பணி வெளிப்படுகின்றது.
பாரதி, பாரதிதாசன் போன்றேர் குயிற்பாடல்களைப்பாடும் போது குயிலின் ஒசையைக் கேட்கும் நயம் தொனித்தது. ஆனல் புலவர்மணியோ 'விபுலாநந்த மீட்சிப்பத்தில்' விபுலாநந்தரின் புகழி ணைப்பாடுமாறு குயிலிடம் தூதுவிடும் பாடல்களாக அமைந்திருக்கிறது.
இதுபோன்ற இவருடைய ஆக்க இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறை, கற்பகவிநாயகர் ஊஞ்சல் ஆகியன எமது மட்டக்களப்புப் பிரதேசத்திற்குரிய இலக்கியங்களாக இருப்பது உணரப்படுகிறது. இத் தகைய பாடல்கள் தமிழிலக்கிய உலகிலேயே சிற்றிலக்கிய வகையினைச் சேர்ந்ததாக இருப்பதை நமக்குக் காட்டும். இதிலும் புலவர்மணி சிறப்பிடம் பெறுகிருர், அத்துடன் சிலேடை வெண்பாக்களைப்பாடு கையில் "சட்டம் என்பதுவே சரி' எனக்கூறி சட்டம் என்பது சரி யானது என்னும் கருத்தையும் அதேவேளை சட்டம் என்பது ஒரு கழுதை என்பதையும் வெளிப்படுத்தினர். எனவே பதிகம் வெண்பா போன்ற பாவகைகளிலும் தூது ஊஞ்சல் முதலிய சிற்றிலக்கியங்களிலும் புலவர்மணி மேம்பட்டு இருக்கிறர்.
இலக்கிய உணர்வில் ஈடுபடும் அறிஞர்கள் பத்திரிகை, வானெலி, மேடைப்பேச்சு போன்ற பொதுசனத் தொடர்பு சாதனங்களிலும் தம்பணியைத் தொடர்புபடுத்துவர். இதனல் தனது மொழி தனது
24

இனம், தனது நாடு எனும் தேசிய உணர்வு அவர்களிடையே ஊற் றெடுத்துப்பாயும். இந்த வகையிலும் புலவர்மணி சோடைபோனவர் அல்ல. மட்டக்களப்பில் தோன்றிய கிழக்குத்தபால் என்னும் பத்திரி கைக்கு ஆசிரியராக இருந்தமை அவரைச் சமூகத் தொடர்பில் தமிழ்ப் பணி செய்யத்தூண்டியது.
"இலங்கை மணித்திருநாடெங்கள் நாடே' என்ற பாடல் மூல மாகவும் தேசிய திருப்பொங்கல் பாடல் மூலமாகவும் அன்னர் ஒரு தேசிய கவியாக விளங்குகிருர், மேலும் அவர் தமிழ்த் தேசிய உணர்வு மேலிடவும் தற்காலப் பிரச்சனைக்குத் தீர்வு கூறவும் முனைந்து தீர்க்க தரிசனத்தோடு,
"சிங்களமும் செந்தமிழும் சமநிலையில் அரசுசெய்க'
"சிங்களமும் செந்தமிழும் சேர்ந்தே சமவிலங்கை
எங்கும் அரசமொழி என்னவே' எனும் பாடல் மூலமாய் தமிழர்க்கு சரியான சம அந்தஸ்து தேவை என அறை கூவுகிறர். இதற் கெனத் தமிழ்மக்களை ஒன்று சேர்க்கும் முகமாக
"காப்போம் எழுந்திடுவீர் - நம்
தாய்மொழியைக் காப்போம் எழுந்திடுவீர்' எனக் கூவி அழைத்தார். ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழியோடு தொடர் பான சங்கங்களின் பணியும் சிறப்பானதே. இவ்வகையில் இலங்கை கலக்கழகம், ஆரிய பாஷாபிவிருத்திச் சங்கம் போன்ற சமுதாய நிறு வனங்களுடன் புலவர்மணி தொடர்புபட்டுப் பணிசெய்ததோடு தமிழரின் பாரம்பரியப் பண்பாடாகிய கன்னக்கொண்டை, விருந்தோம்பல், உத் கரியம்தரித்தல் ஆகியவற்றையும் தமது தமிழ்ச்சிந்தனையில் வெளிக் கீாட்டினர். கல்வி வளர்ச்சியிலும் பாரம்பரிய தமிழ்க்கல்வியைப் பரப் பினர். இதனலேயே இவருடைய பாடல்கள் சில இலங்கைத்தமிழ் பாட நூற்பதிப்புகளில் வெளிவந்துள்ளன. புலவர்மணியின் பகவற்கீதை வெண்பா ஒரு பெருங் காவிய உணர்வினை தமிழிலக்கியத் துறையில் ஏற்படுத்தியது. இது அன்னரின் ஆக்கங்களில் மகுடம் போன்றது எனலாம். இதேபோன்றே ஈழத்து தமிழ் விமர்சனத்துறையில் இவருக் கும் ஓர் தனி இடம் உண்டு என்பதைப் பிரதிபலிப்பதாகவே "உள்ள தும் நல்லதும் கட்டுரை நூல் அமைந்திருக்கிறது.
இத்தகைய சிறப்பான பணிகளோடு ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருபதாம் நூற்ருண்டு தமிழுக்கு பணிசெய்தவர்களில் தனி இடத்தைப் பெற்றுக் கொண்டவர் புலவர் மணி என்பதில் ஐயமில்லை. இவர் பூவுலகை விட்டு மறைந்தாலும் இவரது தமிழ்ப்பணி.பினை முன்னெடுத்துச் சென்று வளர்ப்போர் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பர். இதனலே புலவர்மணி அவர்களின் தமிழ்ப்பணி இன்னும் தொடர்கிறது.
-(முற்றும்)-
25

Page 15
கறுதத மாடுகளே!. -மு. சடாட்சரம்கண்கள் குளமாகி s
நெஞ்சு கனலாகி,
கசாப்புக் கடைக்காக; வெட்டி உரித்து விலைகூறும் கல்லறைக்கே, ஓடியோடிப் போகும் கறுத்தஇளம் மாடுகளே: காளைகளே;
உங்கள் கழுத்திலுள நீள்கயிற்றை முண்டி இழுத்தும், ஒர்மூச்சுப் பிடித்தும், அறுக்கும் திராணியுமக் கற்றுவிட்ட தேனே? விதிவிதி என்றேரீர் வெந்து குமையாதீர்! காலை மிதியம், கருக்கல் இரவென்றே, எண்ணுமல் அந்த இருட்டு மனப் புச்சன் கரத்தில் பெரியதொரு கம்பெடுத்துப் பின்னல் அடித்துத் துரத்துகிருன்! ஆக்கினைகள் செய்கிருன்! அந்தப் புலையனை ஆரென் றறியீரோ? ஆத்திரம் கொண்டு, அவன் கோத்திரத்தை எல்லாம், குத்தித் துரத்திக் குழிகளிலே வீழ்த்தாமல், வீணே அடங்கி விதியென்று மாய்வதுமேன்? தீனேடு நீரும் தெரிந்தவன் ஊட்டுவதும், உன்னிலே நல்ல உரிமைகொண் டாடுவதும், உன்னுடைய ஈரல் உருசி அறியத்தான்! மரத்துப்போய்ச் சற்றும் மனவெழுச்சி கொள்ளாமல் மானம் மிக இழந்த மாடே உமைவெட்டி நாளை பெரும் சந்தையிலே நாறும் வரை விற்பான் ! காலை மதியம் கருக்கல் இரவென்றே, எண்ணுமல் கொல்வான் இருட்டு மனப் புச்சன்! கண்கள் குளமாகி
நெஞ்சு கனலாகி,
கசாப்புக் கடைக்காக,
ஒடியோடிப் போகும் கறுத்தஇளம் மாடுகளே,
காளைகளே,
உங்கள் கழுத்திலுள நீள்கயிற்றை மூச்சுப் பிடித்து
முழுதாய் அறுத்திடுவீர்! மூர்க்கம் அடைந்தவனை மோதியுடன் வீழ்த்திடுவீர்!
26

படைப்பு: செ. குணரத்தினம்
LL LCLLSLeLLLLASqJLLLLJLLLLLSJLLLLLLLLLMqYLLLLLYLLTLLJYLLLLLJYLSS ཕཡང་།
AA
6565f Q.5 LCQi
'-கஉை22-(கவிதைத் தொகுதி)=
So Sorod
பார்வை (2) லக்ஸ்மன்’
''... . . . எவ்வாறு சிறுகதை, நாவல், கவிதை என்பன தமக்குத் தமக்கென தனித்த இயல்புகளைக்கொண்டு திகழ்கின்றனவோ அவ்வாறே விமர்சனமும் தனித்துவமான இயல்புகளைக் கொண்ட ஒரு கலேவடிவ மென மதிப்பிடப்படுகின்றது.” (க. யோகநாதன் - வயல்-3, பக்கம் 23)
ஆயின் விமர்சனம் என்பது எந்தவொரு படைப்பினதும் நிறைவு களையும் குறைகளையும் உள்ளபடி ஆராய்ந்து வெளிப்படுத்தலின் மூலம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதாகவும் அவர்களது எதிர்காலப் படைப் புகள் மேலும் சிறப்புறச் செய்யப்படுவதற்கு வழி சமைப்பதாகவும் அமையவேண்டுமேயன்றி, ஒரு படைப்பாளியைக் கண்டனம் செய்வதா கவோ அன்றிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதாகவோ; அன்றிக் கோபுரத்தில் ஏற்றிப் புகழ்வதாகவோ இருக்கக்கூடாது. ஒரு விமர்சகரும் சாய்தல் உவத்தலின்றி நடுநிலையாளராகச் செயற்பட்டே விமர்சனம் செய்யப் புகவேண்டும். "சமன் செய்து சீர்தூக்கும் கோல்’ போல் விமர் சகர் விளங்கவேண்டும்.
படைப்பும் பார்வையும்
ஆளுல் "வயல் - 3ல் செ. குணரத்தினத்தின் 'நெஞ்சில் ஒருமலர்' (கவிதைத் தொகுதி) - படைப்பின் மீது க. யோகநாதன் வீசியுள்ள விமர்சனப் பார்வை நடுநிலையானதாயில்லாமல் எதிர்நிலையில் நின்று நோக்கியதொன் முகவே தெரிகின்றது. கவிதைத் தொகுதியில் சுட்டப் பட்ட குறைகளும் தூற்றியெடுத்த நெற்குவியலில் துருவித் தேடியெடுத்த பதர்களாகவே தென்படுகின்றன. குறைகளைச் சுட்டியதும் விமர்சன வரம்பிற் சேருமெனினும் குறைகளை மட்டுமே கூறுவது முழு விமர்சன மாகா. விமர்சனத்தின் ஒரு பாதியே இதுவாகும். எனவேதான் 'வயல்"-3 இல் விதைக்கப்பெற்ற "படைப்பும் பார்வையும்’ என்ற பகுதியின் மறு பாதியாக "நெஞ்சில் ஒரு மலர்" இன் நிறைவுகளையும் எடுத்துக்காட்டவே இதை எழுதத் துணிகின்றேன்.
"நெஞ்சில் ஒருமலர்' கவிதைத் தொகுதியில் பார்வை செலுத்திய திரு. க. யோகநாதன் அவர்கள், "இந்த நூலின் கவிதைகளை வாசித்
27

Page 16
துப்பெற்ற அனுபவத்தைக் கொண்டு கூறும்பொழுது பெரும்பாலான கவிதைகள் திருப்தியைத் தருவதாக இல்லை. வெறும் ஓசை அமைதியைப் பேணுவதில் நூலாசிரியர் காட்டியிருக்கும் அக்கறை கவிதையின் பிற விடயங்களில் காட்டவில்லை" (வயல் - 3, பக்கம் 25)
"...கவிதைகள் பலது கருப்பொருள், கற்பனை, சொல்லாட்சி போன்ற விடயங்களில் போதிய வெற்றியைப் பெறவில்லை". (வயல் - 3 பக்கம் 25) என்றெல்லாம் கூறுகிருர்,
இக்கருத்துக்களையும் கவனத்திலிருத்தி நெ. ஒ. மலரை மீண்டும் மீண்டும் முகர்ந்து பார்த்தேன். தேன். தேன். , பல இடங்களில் சுவைத்தேன்; மணந்தேன், ரசித்தேன்; மகிழ்ந்தேன். ஆயின் ஏன் க. யோ. விற்கு இச்சுவை பிடிபடவில்லை. எனது ரசனையும் க. யோ வின் ரசனை யும் இணையாத தண்டவாளங்களா? செ. கு வும் நானும் ஒரே தண்ட வாளத்தில் பயணம் செய்பவர்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு மத்தி யிற்ருன் நெ. ஒ. ம இலிருந்து சில தேன் சிந்தும் இதழ்களைப் பிரித்துக் காட்ட விழைகின்றேன்.
மலரின் முதல் இதழிலிருந்தே ஆரம்பிக்கலாம். "இறை" என்ற தலைப்பில் பரந்தாமனுக்கு ஒரு பாசமடல்" (நெ. ஒ. மலர் பக்கம் 15) இக்கவிதையின் ஆரம்ப அடிகளிலேயே கவிஞர் 'காயாம் பூ மேனியனே, கமலக்கண்ணு" என்கிருர். கண்ணனை நீலநிறக்கண்ணு, கார்மேகவண்ணு கருமைநிறக் கண்ணு. என்றெல்லாம் கவிஞர்களும் புலவர்களும் பாடக் கேட்டோம். இங்கு செ. கு. காயாம்பூ மேனியைக் காண்கிருர், மட் டக்களப்பின் கிராமிய சுற்ருடலில் பற்றைக்காட்டுப் பகுதியில் காணக் கூடிய இந்தக் காட்டுப் பூவை செ. கு. வைத் தவிர வேறுயார் கவிதை யில் கையாண்டார்கள். இக்கவிதையில் 'காயாம் பூ மேனி கவிஞரின் சொல்லாட்சிச் சிறப்பே.
க. யோ. வின் பிறிதொரு குறை "நெஞ்சில் ஒரு மலர்" தொகு தியின் காதல், கடவுள், கவிதைகள் அனுபவ உலகிற்கு அப்பாற்பட்டு விடுகின்றன என்பது.
கடவுள்கூட மனிதன் உருவகப்படுத்திய கற்பனையே. அக்கடவுளைப் பாடும்போது கற்பனை எல்லைமீறுவது இயல்பே. சங்ககாலப் புலவர்கள் முதல் தற்காலக் கவிஞர்கள் வரை கடவுளையும், காதலையும் பாடும்போது கற்பனை கரைகடந்தே விடுகின்றது. தேவார, திருவாசகங்களில் காணப் படும் அனுபவவயப்பட்ட தன்மையையும் க. யோ. ஒப்பிடுகிருர். அப்பரும், சம்பந்தரும், மணிவாசகரும் முழுநேர கடவுள் தொண்டர்கள். அவர் கள் பாடும் பக்தியுணர்வு அனுபவவயப்பட்டதாயிருக்கலாம். ஆனல்வாழ்க் கையின் பொருளாதார நலிவுகளினூடேயும் வேறுபல பிரச்சினைகளுக் கிடையேயும் எதிர்நீச்சல் போடும் சாதாரண குடிமகன் (செ. கு. வும் சேர்த்தி) இறையைப் பாடும்போது தேவார, திருவாசகங்களில் பெறப் படும் பக்தியுணர்வை எதிர்பார்க்க முடியாது. அப்படித்தான் என்ருலும் க. யோ. கூறுவதுபோல செ. குவின் காதல், கடவுள் கவிதைகள் எல் லாமே கற்பனை கரை கடந்ததாயில்லை. அவற்றில் பல யதார்த்தமான
28

கவிதைகளும் உண்டு. உதாரணமாக "காதல்" தலைப்பின் கீழ்வரும் "பொங்கலுக்கு நான் வருவேன்’ (நெ. ஒ. ம. பக்கம் 35) 'கல்லான இதயமா உனக்கு நெ. ஒ. ம. பக். 37) ஆகிய கவிதைகளைக் கூறலாம்.
தேய்ந்துபோன படிமங்களை கவிஞர் கையாள்கிருர் என்பது விமர் சகரின் வேருெரு குறை. குறையைக் கூறுவதுதான் க. யோ. வின் நோக்கமாகக் கொள்ளப்பட்டதா? என்ற ஐயப்பாடு இங்கே எழுகின்றது. காரணம் அவரால் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதை யில்,
"சந்தியில் போட்ட கல்லாக - என்
சம்பளம் உயரவேயில்லை! வெந்தபுண் மீதிலே ஈட்டி - வந்து
விழுதல் போல் விலைகளின் ஏற்றம்"
(நெ. ஒ. ம. பக் - 53) என வருகின்றது. கூர் மழுங்கிப்போன படிமமென குறைகூறப்பட்டுள்ள கவிதையின் ஈற்றடி இரண்டையுமே விமர்சகர் முதலில் கண்ணுற்றரா? நல்ல தாக்கமான கூர்முனைப்பு மிக்க படிமமாக "சந்தியில் போட்ட கல்" ஐக் காட்டியவர் அதை முதலில் கூருது ஈற்றிரண்டிலுள்ள “வெந்த புண் மீதிலே . ." என்ற கூர்மழுங்கிப்போன படிமத்தையே முதலில் தேடிப் பிடித்து குறை கூறுவதையே விமர்சன நோக்காக்கினரா ? என்ற ஐயப் பாடு இயல்பாகவே எழுகின்றது. இத்தகைய ஐயப்பாடு க. யோ, வின் விமர்சனம் முழுவதிலுமே பரவிக் காணப்படுகின்றது. அவ்வவ்விடங்களில் பின்னல் அவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
மேலும் "வெந்தபுண் மீதிலே ஈட்டி. ’ என்ற படிமத்திற்கு மீண் டும் வருகையில் குறித்த பாடலில் இப்படிமம் இடம்பெற்றிருப்பது கவி தையின் கனதியைக் குறைபபதாயில் அல. "சந்தியில் போட்ட கல்’ என்ற படிமத்துடன் பொருந்துவதாக இக்கவிதையில் இது அமைக்கப்பட்டிருப் பதே இதற்குக் காரணமாகும்.
கன்னித் தமிழில் எந்தவொரு படிமத்தையோ அன்றிச் சொற் களேயோ முதுமையெய்தி கூர் மழுங்கியதென்று கூறலாமோ? பொருத்த மானவிடத்து எந்தச் சொல்லும் எப்படிமமும் கன்னித்தன்மையானதா கவே பரிணமிக்கும். என்பதாற்ருனே "கன்னித்தமிழ்’ எனப்பட்டது. இங்குதான் இவ்விரு படிமங்களையும் விமர்சிக்கையில் க யோ. விடம் தடுமாற்றம் காணப்படுகின்றது. "என்று வரும் இன்பம்" என்ற கவிதை யில் (நெ ஒ. ம. பக்-24) செ. கு. அவர்கள் மலருக்குள் ஒரு மங்கையை மறைத்து வைத்துப் பாடுவது, இக்கவிதையே முழுக்க முழுக்க "படிமம்’ தானே. இச் சிறப்பின்மீது ஏன் விமர்சகரின் பார்வை படவில்லை? /
'வாவிமகள் முகம் சிவத்தாள்’ (நெ. ஒ. ம. பக்-22) என்ற பாடலை முழுதாக நோக்க:-
29

Page 17
சலசலத்து ஓடிவரும் வாவி நீரில்
சடசடத்து இறக்கைகளை விரித்துநீந்தி
பலபலத்து விடிவதற்குள் மீன்பிடித்துப்
பசியாறும் நீர்க்காகக் கூட்டமெல்லாம்
வெலவெலத்துப் போய்நடுங்க, பாயும் ருலும் விண்கூவி ஏறுகின்ற பாரை மீனும்
சலசலப்பை ஊருக்குள் ஏற்படுத்த
கதிரவனும் மெதுவாக எட்டிப்பார்த்தார்!
என்று வாவிக்கரையோரக் கிராமமொன்றின் விடிகாலைப் பொழுதை ாளிதான நடையில் வடித்திருப்பதுவும், சங்ககாலப் புலவர்கள் நாட்டு வளப்பம் பாடும் சாயலிலே ஆனல் புதிய பாணியிலே கவிநயம் பொருந் தவமைத்திருப்பதும் கவிஞரின் திறமைக்குச் சான்றில்லையா?
கவிஞர் காசி ஆனந்தனின் "தமிழன் கனவு’ கவிதை நூலில் வரும்
"வேரோடு பலாக்கனி தொங்கும்! - அங்கு
வெள்ளாடு பழத்தின் மேல் முதுகு தேய்க்கும்." "கயல்தாவி விளையாடப் பாய்ந்த தண்ணிர்
கடலோரம் குளமாகி உப்பாய்க்காயும் வயலோரம் கரும்பாலே வேலி நிற்கும்."
என்ற தமிழர் பிரதேச வளப்பம் கூறும் கவிதை வரிகள் எத்துணைச் சிறப்பு மிக்கனவோ அத்துணைச் சிறப்பு மிக்கதாய் செ. கு. வின் மேற் கூறப்பட்ட கவிதை அமைந்திருப்பது கவிவளம் அன்றே. இதுபோன்ற வளம் மிக்கி கவிதைகள் பல நெ. ஒ. மலரில் மலர்ந்துள்ளன.
"சொட்டுகின்ற மழைத்துளிகள்" (நெ. ஒ. மலர் பக்-23) என்ற மலரிதழில்
". . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 20
பட்டமரம் தன்பாட்டில் பதைத்து விம்மிக் "கட்டையப்பா நானென்னை, நரைக்க வேண்டாம்" - என்று
கொட்டுகின்ற மழைக்கது சொல்லி நிற்க
என்ற அடிகளை நோக்குகையில், எத்தனையேr கவிஞர்கள் மழையைக் கவியாக்குகையில் மரஞ்செடிகளை, மலர்க் கொடிகளை, வயல்வெளிகளை இப்படி அசையும் உயிரினங்களை நினைப்பதாகவே பாடியுள்ளனர். செ. கு. வின் பார்வை சற்று பரந்துபட்ட மரத்திலும் பட்டுத் தெறித்திருப் பது அவரின் கற்பனைவளம் செழுமை மிக்கது என்பதற்குச் சான்ருகாதா?
30

'நெஞ்சு வலிக்க நடக்கின்றேன்” என்ற கவிதையில் (நெ. ஒ. ம. பக்-75)
"ஆறுமாதம் சிசு வயிற்றில்
அவளுக்குச் சூலாசை வேறெவரை அவள் கேட்பாள் வேதனையில் நானெழுந்து ஆறு சத வட்டிக்கு
அன்னம்மாக் கிழவியிடம் நூறுரூபா வாங்க நெஞ்சம்
நோக நடக்கின்றேன்!
என்ற வரிகளில் செ. கு. ஒரு ஏழ்மைக் குடும்பத்து கர்ப்பம் தரித்த மனேவிக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாத ஒரு கணவனின் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சி வெளிப்பாடுகள்; "வேறெவரை அவள் கேட்பாள்." - கணவனுக்கு அவ்ஸ்மேல் உள்ள பாசம் அவளின் சிறு ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத வறுமை நில் அந்த வேதனை வட்டிக்கு வாங்கியாவது அதை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானம் - இத்தனையையும் கவிஞர் சில வரிகளுக்குள் சிறப்பாகவே பாடியுள்ளார்.
"கண்ணிர்தான் கடலானதோ? (நெ. ஒ. ம. பக்-64) என்ற கவி தையில் மீனவக் குடும்பமொன்றின் வாழ்க்கை நிலையை
“படகுகரை வரும் வரையும்
பதறிமனம் ஏங்கும் - பசி குடல்களுடன் போராடி
கோபமுடன் நீங்கும்
ான்ற வரிகளில் சித்தரித்துள்ளார். இதுபோன்ற இன்னும் பல கவிதை எளில் செ. கு. நிமிர்ந்து நிற்கின்றர். இவைகளையெல்லாம் விமர்சிக்கக் கூடாதென்ரு க. யோ, குறைகளை மட்டுமே தேடிப்பிடித்தார்.
க. ய்ோ. வின் இன்னுமொரு குற்றச்சாட்டு வேறு கவிஞர்களிடம் கற்பனையைக் கடன் வாங்கியிருந்தாலும் பரவாயில்லை, சினிமாப் பாடல் களின் கற்பனையை செ. கு. கடன் வாங்கியுள்ள ரே என்பது. சினிமாக் கவிஞர்களல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்கியிருந்தால் அது கெளர வப் பிச்சையென்றும் கருதுகிருர், செ. கு அவர்கள் கடன் வாங்கிஞரா? பிச்சையெடுத்தாரா? என்பது ஒரு புறமிருக்க, சினிமாக் கவிஞர்கள் என்ற வர்க்கமொன்றை உருவாக்கி அவர்களை மட்டரகமாகக் குறிப்பிட் டது அவரின் ஆரோக்கியமற்ற கலையுணர்வையே காட்டுகின்றது. அவ ரால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் (வயல் - 3 பக். 31) உதாரணமாகக் காட்டப்பட்டுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படப் பாட லாசிரியர்தானே. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உருவாக்கிய திரைப்
3.

Page 18
படத்துறை (சினிமா) ஒரு சிறந்த கலை ஊடகமல்லவா? ஈழத்திலும் தமிழகத்தைப் போல் தமிழ்ச் சினிமா வளர்ச்சியுற்றிருத்தால் அவரால் சிறந்த கவிஞர்களாகக் கொள்ளப்பட்ட ஈழத்துக் கவிஞர்களான மகா கவியும், நிலாவணனும் (வயல் - 3 பக் 31) கூட சினிமாக் கவிஞர் களாகியிருப்பார்கள் என்பது சாத்தியம். ஒரே வகையான கற்பனைகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கவிஞர்களிடத்தே ஏற்படலாம். அவ் வாருன சந்தர்ப்பங்களில் அவற்றைக் கடன்வாங்கல் எனக் கருதமுடியாது. விரிவஞ்சி இதனை மேலும் விளக்காமல் விடுகின்றேன்.
‘சாக்கடை நீரில் அழுகிய குப்பை கூழங்களைக் காண்பதும் அழ கான வானத்தின் பிம்பத்தினைக் காண்பதும் அவரவர் மனநிலைக்கேற்ற வாறு தான்" இது ஒர் அறிஞனின் கூற்று இதை ஏன் கூறவேண்டியுள்ள தென்ருல் செ. கு. அவர்கள் "நாடு’ என்ற தலைப்பில் (நெ. ஒ. மலர் பக், 95) எழுதிய மூன்று கவிதைகளில் இரண்டை ஒப்புநோக்கிய க. யோ. அவர்கள் இவ்விரண்டு கவிதைகளிலும் ஒரே விடயமே பாடப்பட் டுள்ளது என்கிருர் . உண்மைதான். அதேவேளை அக்கவிதைகளில் ஒன்றன "மயக்கி விழி வீசும் எழில் கன்னி" (நெ. ஒ. மலர் பக் 95) கவிதையில் 6QuCuy Lfb
'திரும்புகின்ற பக்க மெல்லாம் தேன், பாலும், தயிர், பழமும் விரும்பியுண்ணும் மட்டு ருலும் வளங்குமெங்கள் மட்டுநாடு,
என்ற வரிகளை தற்போதைய மட்டக்களப்பு பொருளாதார நிலை யுடன் ஒப்பிட்டுக் கேள்வி தொடுத்துள்ளார். இத் தொகுதியில் இடம் பெற்ற கவிதைகள் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டவையாக இருக்கலாம். மட்டக்களப்பு ஒரு காலத்தில் செ-கு வின் பாடலில் உள்ளவாறு தான் இருந்தது. இயற்கை அழிவுகளும் வன்முறைகளும் ஏற்பட்ட பின்னரே மட்டக்களப்பின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது மேலும் கவிதை வடிக்கின்ற ஒரு கவிஞன் ஒருவரை பொருளாதார நிபுணராகக் கணித்தலும் பொருத்தமாகாது. சூரு வளிக்குப்பின் மட்டக் களப்பின் நிலையை எண்ணி மனம் வெதும்பிப் பாடும் "தென்றலே வீசாதே (நெ ஒமலர்: பக்கம் 97) என்ற கவிதையில்
"பூவில்லை எம் நாட்டில் பாட்டிசைக்க
பொன் வண்டுக் கூட்டங்கள் எதுவுமில்லை! பாலிலை, தயிரில்லை பசுமை கொஞ்சும்
பயிரில்லை எதுவுமே இல்லையிங்கே பாவில்லை; பலாவில்லை; தென்னையில்லை!
மழைகூட இனிப்பெய்ய நியாயமில்லை! பாப்பாடக் கவிஞர்கள் இருந்து மென்ன
பசுமைநிறை காட்சிகளோ ஒன்றுமில்லை.
32

என்ற வரிகளில் மட்டக்களப்பின் இன்றைய நிலை மிக நன்முக எடுத்துக் காட்டப்பட்டிருந்ததும் கூட விமர்சகர் இந் த ப் ப ா ட லை க் கண்ணுருமல் கவிஞரை வேண்டுமென்றே வடம் பிடித்திழுக்கின் ருரா? என்ற ஐயப்பாடே தோன்றுகின்றது. "நகைச்சுவை” என்ற தலைப்பின் கீழ் வரும் கவிதைகள் நன்ருகவே உள்ளன என்ற கயோ அதனைக்கூட ஏனேதானே என்று 'கவிஞர் இதனைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்தார் என்பதற்கில்லை, என்கிருர், நல்லவைகள் பார்வையில் பட்டபோது கூட அவற்றை நழுவவிடுகின்ற மனப் போக்கு ஒரு நடு நிலை விமர்சகனுக்கு நல்லதல்ல என்பதை நண்பர் க.யோ அவர்களுக்குச் சொல்லிவைப்பது என் கடமையாகின்றது.
க.யோ வினல் மற்ருெரு குறையாகச் சொல்லப்படுவது செ.கு வின் கவிதைகளில் வழக்கொழிந்த சொற் பிரயோகம் என்பது, உதாரண மாக செந்தேனி தள், கொடியிடை, மாங்கணி, புள்ளிமான் ஒடடம் என்ற சொற்களைக் கோடிடுகின்றர். இது முன்பே விளக்கியபடி கன்னித் தமிழினிலே உள்ள அத்தனை சொற்களும், பதங்களும், படிமங்களும் கன்னித் தன்மையுடையவை தான். தமிழ் முதுமையெய் தவில்லை தமிழ் மொழியின் எந்தவுரு உறுப்பும் முதுமையடைவதில்லை. இனிமை குறை வதுமில்லை. சில சொற்முெடர் கன்னிகள் புதி காகப் பிறந்த சில காளையர்களின் கண்களில் படாமையினல் அவர்களின் பெருமையுணரப் படாது மணமின்றிக் கிடக்கின்றர்கள். கவிஞர் செ.கு சுமார் இருபத் தைந்து ஆண்டுகளாக தமிழ்ச் சொற் கன்னிகளைத் தழுவிப் புணர்ந்த வரா கையால் அவற்றின் பெருமை பிறரும் அறியும் பொருட்டு அந்த சொற்கன்னிகளைத் தன் கவிதை மூலம் புதிய சவிக்களையருக்கு அறி முகம் செய்து வைக்கிருர் என்பதே எனது கூற்று. தமிழறிந்தி இலக்கிய உழவரின் கடனும் இதுவே.
மேலும் செ.கு அவாகள் பெண்களைப் போதைப் பொருளாக பர்ணனை செய்து பாடி நிலமானிய சமூகத்தில் பரிசுபெறுவதற்காகவோ, Fங்ககாலங்கள் போன்று மன்னர்களிடம் ”பொற்கிழி பெறுவதற்கோ ாடுங்கவிஞரல்ல. ஒரு சாதாரண குடிமகனக நினறு தனது வாழ் 1ாளில் தான்வாழும் சுற்ருடலில், தான் காணும் பிரதிபலிப்புக்களைத் தத்துவங்களாகவும் நகைச்சுவையாகவும் எளிய நடையில் கிராமியச் செற்களையும் இணைத்துப் பாடுபவர். இது செ. கு. வின் பல கவிதை ளைப் படித்தவர் உணர்ந்து க்ொள்ளலாம். நெ. ஒ. மலரின் பல கவி தைகளில் மட்டக்களப்புக் கிராமமக்கள் மத்தியில் நிலவும் சாதாரண சொற்களே கையாளப் பட்டிருககின்றன. உதாரணத்திற்கு, வாவிமுகன் குலந்தாள்’ என்ற கவிதையில் (நெ.ஓ. மலர் பக்கம் 22)
'பலபலத்து விடிவதற்குள் மீன்பிடித்துப்
பசியாறும் நீர்க்காகக் கூட்டமெல்லாம்' 'பழக்கமுள்ள நண்பனைப்போல் தென்றல் காற்று
பச்கத்தில் போயிருந்து கீச்ச முட்ட என்னவோ செய்வார் தோழி’ என்ற காதல்’ கவிதையில்
(நெ.ஓ. மலர் பக்கம் - 45)
33

Page 19
'எனக்கென்றே பிறந்த அத்தான்
எல்லோரும் அறியத்தாலி சுணங்காமல் கட்டி என்னைச்
சுந்தரத் தமிழில் பாட்டு
'நெஞ்சு வலிக்க நான் நடக்கின்றேன்!, என்ற கவிதையில்
(நெ.ஓ. மலர் பக்கம்-74) 'பெரிய தொரு மீன்வாங்கி
பொருபொருக்கக் கறியாக்கி
என்ற வரிகளில் வருகின்ற கிராமியச் சொற்சள் செ.கு வின் சொல் லாட்சிக்குச் சான்று பகர்வன. சொல்லாட்சிச் சிறப்புக்கு மேலும் ஒரு சிறந்த உதாரணத்தையும் காட்டலாம்.
நானுெரு பித்தன்' என்ற கவிதையின் (நெ.ஓ. மலர் பக்கம்-63) வரிகள் ଜମିଜ) இதோ. -
'மாடி வீடு கட்டி கோடி பொருள் தேடி கூடுவிட்டுக் கூடு பாயும் எண்ணம்-நெஞ்சில் குடி வாழ்ந்தால் ஏது கவி உள்ளம்" உயிரானது உடலை விட்டுப் பிரிந்து உயிரற்ற இன்னேர் உடலில் புகுகின்ற கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை விச கிரம தித்தன் கதை யிலேதான் விளம்பப் படுகிறது. ஒன்றிலிருந்து ஒ:றிற்குத் தாவும் எண்ணத்தை கூடு விட்டுக் கூடு பாயும்" எண்ணம் எனக் கவிஞர் கூறியது சிறந்த சொல்லாட்சியே.
பெண் விடுதலைக் கருவை மனதிற் கொண்டு செ. கு. வடித்துள்ள கவிதை வரிகளைப் பல இடங்க்ளில் நெ. ஒ. மலர் தாங்கியுள்ளது. அவற்றையும் நோக்கினல் க. யோ கூறியுள்ளது போல் செ. கு. பெண்ணைப் போதைப் பொருளாக்கிப் பாடுகின் ருரா? என்பது விளங்கும். 'இப்படிப் பாடுவோமா' என்ற கவிதையில் (நெ.ஓ.மலர் பக்கம்-57)
'அச்சம் நாணம் அழகிருந்தும் ஆதனங்கள் சீதனங்கள் இல்லார் பெண்ணை துச்சமென மதித்தொதுக்குப துரியர் நெஞ்சில் தூங்குமிருள் தொலைந் தோடப் பாடுவோமா! என்றும் "போடு பிள்ளை நீ சாபம" என்ற கவிதையில் (நெ.ஓ.மலர் பக்கம்-67)
‘'வேளையிது என்மகளே விடிவு வரும் சிரித்திடம்மா! மாரியம்மன் சிலை போல மகளே நீ பிறந்திருந்து
காணி பூமி காசு கேட்டுச் சீதனத்தைக் கூட்டுகின்ற போலிகளின் தலை வெடிக்கப் போடு பிள்ளை நீ சாபம்' என்றும் கவிஞரின் இதயத்துடிப்பு வெளிப்படுகின்றது. படையொன்று எழும் (நெ.ஓ. மலர் பக்கம்-61) கவிதையில்
34

"வாழும் வறியவர் பசி போக்கி வாழா மனிதர் இவருக்கு பாடம் புகட்ட ஊர் மக்கள்
படையொன்றெழும்பும் நாளைக்கு" என்று கவிஞரின் சமூகப் பிரக்ஞை வெளிப்படும் வரிசளையும் குறிப்பிடலாம்.
க.யோ அவர்கள் தனது விமர்சனத்தில் "வாழ்க்கையில் நம்பிக்கை இன்மை, வாழ்வு நிலையற்ற ஒன்று, வாழ்வை அலுத்துக் கெள்ளல், பொய்மைக் கற்பனைகள் போன்ற வகையருக்களாகவே 'நெஞ்சில் ஒரு மலர்’ கவிதைகள் காணப்படுகின்றன” (வயல்-3 பக்க்ம்-32) *ன்கிருர். 'தத்துவம்” என்ற தலைப்பின் கீழ் வரும் செ. கு. வின் கவிதை களில் (நெ. ஒ. மலர் பக்கம் 26 - 29) யோகநாதன் கூறிய தன்மைகள் தலே காட்டியிருக்கலாம். தத்துவங்கள் எப்போதும் வாழ்வின் நிலையற்ற தன்மையையே காட்டுவன என்ற பொது இயல்பு மனம் கொள்ளத்தக் கது. ஆனல் "காதல்" என்ற தலைப்பிலும் (நெ. ஒ. மலர் பக்கம் 31 - 46) 'குழந்தை' என்ற தலைப்பிலும் (நெ. ஒ. மலர் பக்கம் 48 - 51) தரப்பட் டுள்ள கவிதைகளில் வாழ்க்கை இலயிப்பு தெரிகின்றதே "வாழ்க்கை" என்ற தலைப்பின்கீழ் வரும் கவிதைகளில் ‘விடிவு'; (நெ. ஒ. மலர் பக்கம் 53) 'ஏன்படைத்தாய்" (பக்கம் 65) "பம்பரம் எங்கள் வாழ்வு" (பக்கம் 76); "மடியவரம் வேண்டும்" (பக்கம் 77) என்ற சவிதைகளைத் தவிர மற்றைய வெல்லாம் வாழ்வின் விமர்சனமாக, இலயிப்பாகத்தான் இருக்கின்றன.
"வசந்தநாள் என்றுவரும்" (பக்கம் 56) என்ற கவிதையில் ஏழை மகனெருவனின் ஏக்கம் வெளிப்படுகின்றது. அதில் இயற்கையுடன் தன் நிலையை ஒப்பிட்டு வெளிப்படுத்தியது கூட வாழ்க்கை இலயிப்பே. ஏழை தன் குறைகளைக் கூறுவது வாழ்வை அலுத்துக் கொள்ளல் ஆகுமா? வாழ்வை வளம்படுத்துவதற்கான ஒரு "தேடல் முயற்சியே அது.
"சிரிக்கின்றேன் அழவில்லை" என்ற கவிதையின் (நெ. ஒ. மலர் பக் கம் 55) இறுதியடியான "எல்லோரும் சிரிக்க நான் ஏற்றம் காண்பேன்’ - என்பதிலும் ‘கூடுகட்டப் போகின்ற குயில்கள்’ என்ற கவிதையின் (நெ. ஒ. மலர் பக்கம் 59)
'நாடுபோற்றக் கூடுகட்டி - நாமும்
நல்லபடி வாழ்வோமண்ணே!' - என்ற வரிகளிலும் நாளைய நம்பிக்கைகள் தானே வெளிப்படுத்தப் படுகின்றன.
இப்படிப்பாடுவோமா! (நெ. ஒ. மலர் பக்கம் 57) "சுமைதாங்கி" (நெ. ஒ. மலர் பக்கம் 71) ஆகிய கவிதைகளில் வாழ்க்கை விமர்சனம் வெளிப்படவில்லையா? வேறென்ன எனக்கிங்கே ஆசை" (நெ. ஒ. மலர் பக்கம் 69 என்ற கவிதையிலே வாழ்க்கையில் நல்லவனுக வாழ்ந்து மடிய வேண்டும் என்ற தனது ஆசையைக் கவிஞர் கூறுவது வாழ்க்கை விமர் சனம் இல்லையா?
செ. கு. வின் சில கவிதைகளில் உலகின் நிகழ்வுகள் ஓர் சக்தியின்
35

Page 20
நடப்பிப்பு என்ற கண்ணுேக்கு காணப்படுகின்றன என க. யோ கூறுவது உண்மைதான். செ. கு. ஒரு கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகரே. எனவே கோட்பாட்டு ரீதியாக அவரின் கவிதைகளை நோக்குவது பொருத் தமல்ல.
முடிவுரை:
க. யோ அவர்களின் விமர்சனம் ஆழமான முன்னுரையுடனும், விளக்கங்களுடனும் அணுகப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதே. 'நெஞ்சில் ஒரு மலர்" - கவிதைத் தொகுதியின் குறைகள் அழுத்திக் கூறப்பட்ட அளவிற்கு நிறைவுகள் வெளிக்கொணரப் படவில்லை. சில இடங்களில் நண்பர் க. யோ தான் கூறிய கருத்திற்கு தானே முரண்பட்டு நின்று படைப்பை விட்டு படைப்பாளியின் மீது கணைகள் தொடுத்திருப்பது உதாரணமாக,
"செ. கு. அவர்கள் உலகின் சிறந்த கவிஞர்களிடமோ அல்லது தமிழின் பிரபல்யமான கவிஞர்களிடமோ கற்பனையைக் கடன் வாங்கி யிருப்பின் அதனை ஒர் கெளரவமான பிச்சையெடுப்பாகக் கருதலாம். ஆயின். ’ (வயல் - 3 பக்கம் 28)
'ஒரேவிடயம் இரண்டு கவிதையில் ஒரே விதமாக ஏன் பாடப் பட்டது? இக் கேள்விக்கு கவிஞரின் கற்பனை வரட்சி என்ற விடையைத் தவிர வேறு என்ன பதில் இருக்கமுடியும்" (வயல் - 3 பக்கம் 30)
"இக்கவிஞர்களினதும் (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , மகா கவி, நீலாவணன்) இவர்கள் போன்ற கவிஞர்களினதும் ஆக்கங்களை வாசித்தறிதல் செ. கு. போன்ருேருக்குப் பயன் தரக்கூடிய செயலாய் இருக்கும்’ (வயல் - 3 பக்கம் 31)
அவரின் விமர்சனம் "சத்தியம் நிறைந்ததா என்ற சந்தேகத்திற்கு இடம் வைக்கின்றது என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்.
அன்புமணி அவர்கள் நெஞ்சில் ஒரு மலருக்கு அளித்துள்ள அணிந் துரையில் "..., துரதிஸ்டவசமாக இக்காலத்தில் பண்டித வர்க்கத் தினரும் "கோட்பாடு" வர்க்கத்தினரும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப கவிதைகளை அளத்து கொள்வதால் நல்ல கவிதைகள் பல ஒதுக்கித் தள் ளப்பட்டு விடுகின்றன. ரசிகமணி டி. கே. சி. யின் காலத்தில் பண்டித வர்க்கத்தினர் மட்டுமே நல்ல கவிதைகளுக்கு நந்தியாக அமைந்தனர். ஆனல் இக்காலத்தில் "கோட்பாடு" வர்க்கத்தினர் அவர்களையும் விடப் பெரிய தடைக்கல்லாக அமைந்துள்ளனர். இந்தக் காரணத்தினல் நூற் றுக் கணக்கான கவிதைகளை வடித்துள்ள கவிஞர் செ. குணரத்தினம் விமர்சன உலகைப் பொறுத்தவரை குடத்தில் இட்ட விளக்காக இருக் கின்றர்.’
- எனக் கூறியுள்ளமை சிந்திக்கத் தக்கது. அத்துடன் "வயல்' இலக்கிய ஆக்கத்திற்கு தனது வரப்புக்களை உயர்த்திக் கொள்ள வேண் டுமேயொழிய அழிவுக்கும், தரமிறக்கலுக்கும் வழிவிடக் கூடாது என வேண்டுகிறேன்.
36

(அகில இலங்கை
கவிதைப் போட்டி °,
இலங்கையின் தமிழ்க் கவிஞர்களுக்கிடையே ஓர் கவிதைப் போட்
டியை நடாத்த 'வயல் ஆசிரியர் குழு தீர்மானித்துள்ளது. போட்டி யில் 1ம் , 2ம், 3ம் இடங்களைப் பெறும் கவிஞர்களுக்குத் தகுந்த பரிசு கள் வழங்கப்படும்.
போட்டி விபரங்கள்
கவிதைத் தலைப்பு: “இந்தக் கங்கைகள் இன்னும்
வற்றிவிடவில்லை" கவிதையின் அளவு: "புல்ஸ்கப்" தாளில் ஒரு பக்கத்திற்கு
மேல் இருக்கக் கூடாது. போட்டி முடிவுத் திகதி: 8 1 • Ꭴ7 - 1988 கவிதை அனுப்பவேண்டிய முகவரி: 'வயல்"
30, பயணியர் வீதி, X- மட்டக்களப்பு. நிபந்தனைகள்:
1) எழுத்து தெளிவாக இருக்க வேண்டும். (தட்டச்சு செய்
யப்பட்டிருத்தல் விரும்பத்தக்கது)
2) போட்டிக்கு அனுப்பப்படும் கவிதைகள் இதுவரை எந்த
ஏடுகளிலும் வெளி வராதவைகளாயிருத்தல் வேண்டும்.
3) கவிதைகள் எழுதப்பட்ட தாளில் பெயர் பிறவிபரம் எது வும் இடம்பெறக் கூடாது. இயற்பெயர், புனைபெயர்: முக வரி என்பன வேருெரு தாளில் எழுதப்பட்டு கவிதையுடன் தனியாக இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
4) 'வயல் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த 'எவரும் இதில் பங்கு
பற்ற முடியாது.
5) 'வயல் ஆசிரியர் குழுவினல் தேர்ந்தெடுக்கப்படும் நடுவர்
களின் தீர்ப்பே இறுதியானது.
6) கழே கூட்டுக்குள் தரப்பட்டுள்ள பகுதி கத்தரிக்கப்பட்டு தபால் உறையின் இடதுபக்க மேல்மூலையில் ஒட்டப்பட்ட கவிதைகள் (தபால்கள்) மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .
'வயல் கவிதைப்போட்டி 'இந்தக் கங்கைகள் இன்னும் வற்றிவிடவில்லை’
37

Page 21
)ே அண்மையில் மலேசிய மண்ணில் நிகழ்ந்த ஆருவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு மட்டக்களப்பில் இருந்து சென்று "தமிழும் விஞ்ஞானமும்’ என்ற ஆய் வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து மீண்ட 'வயல் ஆசி ரியர் குழுவைச் சேர்ந்த திரு. த. கோபாலகிருஸ்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
கொம்பியூட்டர் நெறிப்படுத்தலில் கனடாவில் வெளி வரும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மாதசஞ்சிகையான 'நிழல்" இன் நிர்வாகப் பொறுப்பாளர் ஜோர்ஜ் இதய ராஜ் அவர்கள் ‘தமிழ் அச்சுக்கலையில் மின்கணணி எனும் தலைப்பிலும ; 'நிழல்" இன் வெளியீட்டு நிர்வாகி உவெஸ்லி இதய ஜீவகருணு அவர்கள் 'தமிழ் மொழி எழுத்தமைப்பில் மின்கணணி" என்னும் தலைப் பிலும் தமிழகத்தில் (சென்னை) 1988 தைமாதம் 6-9ந் திகதிகளில் நடைபெறவுள்ள இந்திய கொம்பியூட்டர் (கணணி) பேரவையின - இந்திய மொழியியல் பிரிவின் 23வது மாநாட்டில் ஆய்வுத்தாள்களை சமர்ப்பிக்கவிருக் கின்றனர். இவர்களிருவரும் இலங்கையின் மட்டக் களப்பு மாவட்டத்தில் தேற்ருதீவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் - இப்போது கனடாவில் வசிப்பவரு மான திரு. க. தா செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனுர்) தம்பதிகளின் புதல்வர்களாவர். தமிழ் மொழியை அறிவியல் சகாப்தத்திற்கு இட்டுச் செல் லும் இச்சகோதரர்களது அ ரிய பணியை 'வயல்" வாழ்த்தி வரவேற்கின்றது.
6)
O மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவையின் 1987ம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறும் பின்வரும் மண்ணின் மைந்தர்களை 'வயல் வாழ்த்துகின்றது.
C
(3
கவிமணி" பட்டம்பெறும் கவிஞர் மு. சோமசுந்தரம் பிள்ளை (இளைப்பாறிய அதிபர், மண்டூர்).
"கலைமணி பட்டம் பெறும் கவிஞர் "முனக்கான (திரு. மு . கணபதிப்பிள்ளை) 'ஜீவநிலையம்", ஆரையம் பதி, காத்தான்குடி.
fi!
O
O இலக்கியமணி பட்டம் பெறும் கவிஞர் செ. குணரத் தினம் 3ம் குறுக்குத்தெரு, அமிர்தகழி, மட்டக்களப்பு.
O கவிமணி பட்டம் பெறும் கவிஞர் புரட் சிக்கமால் (எம். எஸ். எம். சாலிஹ்) ஐயங் கேணி, ஏருவூர் - 4.
'வயல்" ஆசிரியர் குழு.
38
 

களவெட்டி
மு. சNாட்சரம் பெரிய நீலாவணை, கல்முனை.
'வயல் மூன்ருவது அறுவடையை அனுபவித்தேன். விளைவு அபார மாகத்தான் இருக்கிறது. இரண்டு கதைகள், நாலு கவிதைகள், ஒரு விமர்சனம், இரண்டு நல்ல கட்டுரைகள். 'வயல் பொலி பொலி என மேலும் மேலும் பொலிந்து கிழக்கின் (இலக்கிய, விளைச்சலை அதிகரிக் கச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.
குறிப்பாக "நெஞ்சில் ஒரு மலர்" படைப்பு ரகசியங்களையும் க. யோகநாதன் மிக நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார். அவரது நக்கீர விமர்சனத்துக்கு எனது பாராட்டுக்கள். இதைப்போல ‘காமம் செப் பாது கண்டது மொழியும் விமர்சனங்கள் போலிகளை இனங்காட்ட வேண்டும். நல்ல தரமான இலக்கிய ஆக்கங்களை ரசிகர்கள் வேறுபடுத்தி அறியவும் , சுவைத்து இன்புறவும், வாழ்வின் சகல கோணங்களையும், புரிந்துகொள்ளவும் 'வயல் வழி செய்யவேண்டும்.
-O-
அண்ணுதாசன் உப்போடை வீதி, வந்தாறுமூலை, செங்கலடி
யதார்த்தப் பார்வையினை அலட்சியப்படுத்தாமல் "கருணைக் கரங் கள்’ என்ற இவனது சிறுகதையை 3ம் வயலிற் பிரசுரித்திருந்தீர்கள். எங்கே உங்கள் நெஞ்சம் அஞ்சி விடுமோ என்ற ஐயம் எனக்கிருந்தது. ஆனல் எழுத்தாளர்களுக்கு வேண்டிய நக்கீரப் பார்வையுடன் தாங்கள் செயல்பட்டமை குறித்து இவனது நன்றியைத் தெரிவித்துக்கொள் கின்றேன்.
-O-
ந. றெபேட் பத்மநாதன்
'வயல் - 3இல் வெளியாகி இருந்த சமகால அரசியல் நிகழ்வுக ளோடு பொருத்தமான ' வடக்கு கிழக்கு இணைப்பு அல்ல; வடக்கு
39

Page 22
கிழக்கு பிரிக்கப்படக்கூடாது என்பதே தமிழர்தம் அரசியல் அபிலாசை' என்ற கட்டுரை வயலுக்கு அணி செய்தது. சாதாரண மக்களும் புரி யக்கூடிய விதத்தில் வரலாற்று அம்சங்களையும் கடந்தகால அரசியல் நிகழ்வுகளையும் ஆதாரம் காட்டி பிரிபடாத வடக்கு கிழக்கு மாநில அமைப்பே தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என நிறுவிய பாங்கு பாராட்டக்கூடியது. இதுபோன்ற பல சமகால பிரச்சினையோடு தொடர்புடைய ஆக்கங்களை வெளியிடுவதன் மூலம் 'வயல் மேலும் செழித்து ஓங்கி விளைய வேண்டுமென்று வாழ்த்து கின்றேன்.
-O-
எஸ். எல். எம். ஹனிபா மிருக வைத்திய உத்தியோகத்தர், ஹிஷ்ரு மாவத்தை, கதுருவெல,
வயலின் மூன்ருவது இதழைப் பார்த்ததும் மனதில் பல எண் ணங்கள் முகிழ்ந்தன. ஏற்கனவே வெளிவந்த இரண்டு இதழ்களிலும் இல்லாத ஒர் அம்சம் சிந்தனைச் சுவர்களில் ஒலி எழுப்பியது. செ. குணரெத்தினம் அவர்களின் 'நெஞ்சில் ஒரு மலர்' பற்றிய ஆய்வே அது வாகும். எனவே இங்கு எமக்கு அந்தப் புதிய அனுபவத்தை எத்தி வைப்பதற்குக் காலாக இருந்த நண்பர் செ. குவுக்கு அனைத்துப் பாராட் டுதல்களும் உரித்தாகின்றது. இதுவே சத்யம்.
'நெஞ்சில் ஒரு மலர்' பற்றிய க. யோகநாதன் அவர்களின் ஆய்வு கரிசனை மிக்கது. உரத்த சிந்தனையை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கிய் உலகின் ஆழ்ந்த ஞானமும் தெளிந்த பார்வையும் எல்லாவற்றுக்கும் மேலாகச் சுயத்தை எடுத்துச் சொல்லும் அவரது ஓர்மமும் என்னை வியப்பிலாழ்த்தியது.
விமர்சனம் என்பது தமக்கு வேண்டியவரை முதுகு சொறிதலும் வேண்டாதவரின் காலை வாரிவிடுவதும்தான் என்ற மனேநிலையில் நம் மிற் பலர் இடர்படும்போது யோகநாதனின் கருத்துக்கள் ஒரு புதிய கண்திறப்பாகும்.
எனினும் சில இடங்களில் படைப்பை விடுத்து ஆய்வாளரின் பார்வை எகிறி வேறுபுறம் சாய்வது ஒர் அபஸ்வரமே. உதாரணமாக "செ. கு. அவர்கள் சிறந்த கவிஞர்களிடமோ அல்லது தமிழின் பிரபல கவிஞர்களிடமோ கற்பனையைக் கடன் வாங்கி இருப்பின் அதனை ஓர் கெளரவமான பிச்சை எடுப்பாகக் கருதலாம். ஆயின் நண்பர் செ. கு. அவர்கள் சினிமாப் பாடல்களின் கற்பனையைக் கடன்வாங்கி நிற்பதைக் காணும்போது சற்று மனதுக்கு சங்கடமாகவே இருக்கிறது’
40

r. ஆய்வாளருடன சேர்ந்து வாசகாகளாகிய நாமும இவ்விடத்தில் "கடப்படுவதைத் தவிர்க்கு முடியவில்லை.
தமிழகத்தின் இன்றைய கவிஞர் ஆளில் ஒருவரான மு. மேத்தா அவர்கள் புதிதாக்ட் *ப்ாரிப்பவனும் புதிதாகச் சொல்பவனுந்தான் கவி ஞன் என்கிருர். அவரின் வார்த்தை குளுக்குக் கட்டுப்பட்ட கவிஞர் களைப் 'இதன்பது நமது, மண்ணில் அரிதாகவே உள்ளது. இவ்ற் றிற்கெல்லாம் ஒரே காரண* நமது பெரும்பாலான கவிஞர்களிடம் பரந்துபட்ட :வா சசுஞானமோ 'வாழ்கிவப்பற்றிய ஆழ்ந்த ஃஅனுபவ முதிர்ச்சியோ இன்மையே :இல7ழ் இஷ்றும் வார்த்தைகளைக் கவிதை யாக்குவதன் மூலம் அவ்ர்க்ள் மல்ர்ப் பஞ்சணையில் இலக்கியத் துயில் கொள்கிறர்கள். இவர்களை இந்த ஆழ்ந்த நிஸ்டையினின்றும் புரண்டு மறுபக்கம் சாய்வதற்கான ஒர் துயில் எழுப்பலாக நண்பர் க. யோச நஈதனின் எழுத்துக்கள் பயன்படும்ாயின் அதுவொன றே நமது பாக்கியம்.
கட்டுரை இலக்கியம் என்பது மிகவும் அரிதாகிவிட்ட இந்நாட் களில் திரு. சி. வசந்தராசபிள்ள்ை அவர்களது வடக்கு - கிழக்கு LDIF5 tr ணங்களின் இணைப்பும் - சர்வஜன வாக்கெடுப்பும் என்ற பார்வை மிக "அளது. அவற்றைப்படித்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரு. தி ஜா. ரா."எழுதி"தீபத்தில் வெளிவந்த ஜனநாயகத்தின் நாள் காவது தூண்’ என்ற கட்டுரையும், தமிழகத்தின் முன்னள் கல்வி யமைச்சர் இரா. நெடுஞ்செழியன் அவர் கிளி. "ஜனநாயகத்தில் பாராளு மனற நடவடிக்கைகள். என்ற கல்கியில் வெளிவந்த கட்டுரையும் என் மனதில் கோடி காட்டி மறைந்தன.
எஸ். வி. யின் எழுத்துக்களில் சத்தியம் நிறைந்து காணப்படு கிறது. உயர்வகுப்பில் கல்வி பயிலும் அர்சியல் மாணவர்களுக்கும் வடக்கு கிழக்கில் அல்லலுறும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் அக் கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கும் ஓர் சாளரமாகும்.
அவரின் இந்தச் சிந்தனையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எமது தேசிய செய்தித் தாள்களில் வெளிக்கொணர்ந்தால் அது பல *9' பயனுள்ளதாக் அமையும் என உறுதியாக'நலம்
வயலில் வெளிவந்த இரு கதைகளுமே மனநிறைவைத் தரவில்லை. இருந்தாலும் சங்கு சுப்ரமணியன் சொல்வதைப் போல "சிறுகதை என்பது நூறுமீற்றர் தூரத்தின் தலைதெறித்த ஒட்டம்' ர்ேன்ற வரை யறைக்குள் அவ்விரு கதைகளும் உருவத்தால் சிறந்து நிற்பதைப் பாராட் டாமல் இருக்கமுடியாது. வேறு ள்ந்தவகையிலுமே அவ்விரு கதைகளும் நமது இன்றைய வாழ்வின் பக்கம் சாயவேயில்லை. அதிலும் இரு தசாப் தங்களாக எழுத் துலகோடு தொடர்பும் ஆழ்ந்த பரிச்சயமும் கொண்ட நணபர் வை. அஹ்மத்தின் 'சிரிக்காத காரணத்தால்" என்ற கதையில் அவர் இன்றைய வாழ்வின் அவதிக்குள்ளாகி அல்லல்படும் மக்களுக்கு அல்லது அவ்வாழ்வைப் பார்த்து ரசிக்கும் ஏனையவர்களுக்கு என்ன சொல்கிருர் என்றே விளங்கவில்லை. நாமெல்லாம் வெறும் கற்பனை யாளர்கள்தானே? us
ஆனல் அண்மைக்காலங்களில் எழுத்துலகப் பிரவேசம் செய்துள்ள திரு அண்ணுதாசனின் எழுத்துக்கள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதிலும் கடெசிப் பந்திய எடுத்துவிட்டு 1.வினுக்குனிவு ஒன்று கலக் கிறது? என்ற இடத்தில் கதையை முடித்திருந்தால் இன்னும் தாக்க
பிாக விருக்கும்,
41.

Page 23
பெருமாள் - கணேஷன், உப தபாலதிபர்,
அக்கரையின் குளம், கிளிநொச்சி.
'. முன்னணி எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைத்த வயல் இதழை அவர் எனக்கு அறிமுகம் செய்தார். நல்ல முயற்சி. ஆனல் ஏற்கனவே கிழக்கில் பல சஞ்சிகைகள் முகிழ்ந்து வெகு விரைவில் கருகிவிட்டன. அந்த விபரங்களைத் தாங்கள் அனை வரும் நன்கு உணர்ந்திருப்பீர்கள். இதனல் வயலுக்கு அந் நில வரக் கூடாது எனச் செயல்படுவீர்கள் என நம்புகிறேன். ஆரம்பித்த உடனேயே ஒரு காத்திரமான இதழாக வயல் இருக்கிறது. பின்னே கனதி இருக்கும் என அது சொல்லா மல் சொல்கிறது."
கவிஞர்களே !
இன்னவைதான் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திரும்பிச்
சொல்லாதீர் ! சோலை, கடல் மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள் 1 மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள் !
-மஹாகவி
42
 

மாணவர்களின் தேவைகள் !
இலக்கிய ரசிகர்களின் தேவைகள் !
சினிமாப் பிரியர்களின் தேவைகள் !
அலுவலகங்களின் தேவைகள் !
இவை அனைத்திற்கும் ஒரே இடம்
O O O யாதவன்ஸ் புத்தக நிலையம்
இந்திய இலக்கிய சினிமாச் சஞ்சிகை, பிறந்த நாள் வாழ்த்து மடல் மற்றும் பல்வகையான அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களும் இங்கே கிடைக்கும்.
இல, 20, மத்திய வீதி - மட்டிக்களப்பு.
حصہ حصہ حصہ حصہ حصہ حصہ حصہ دحیہ حسیہہ حیہ حیہ حصہ حصہ حصہ حصہ
22 கரட் நம்பிக்கையான நகைகளைப் பெற
இன்றே நாடுங்கள்
உதயா நகை மாளிகை நாணயம், நேர்மை எங்கள் நாளாந்த சேவை
அழகிய கலை நுணுக்க ஆபரணங்களுக்கு v பிரசித்தி பெற்ற ஸ்தாபனம் 39, பிரதான வீதி - ம்ட்டக்களப்பு.
065 - 269,
8
8
i
&
S S qAqSqAS S SqqqS qSqS SLSLqq qSSSSqqq qqSLLLSqLqLA LqLA LSLASqTqSLSLSLMALALSLSLSLSLLLLLSLLLLLSLLLSAALLSLLLLSAALLSSLSL ح۔ ܚ ܫ

Page 24
普普兴普景懿景景景普袭景普普普普赏
மட்டக்களப்பில்.
வெளிவாரி பட்டப்பட தலைசிறந்த நிறுவன
சிறந்த ஆசிரியர்கள்.
மெச்சத்தக்க பெ
ஆண்டு 9லிருந்து . (பழைய-புதிய பாடத்தி G. C. E. A/L 88/89/9
G. A. (), 1989 ஏப் B. A. 1988 டிசம்பர்
ஆகிய வகுப்புக்கள் ந
சகல வகுப்புக் அச்சடித்த பாடக்குறிப்புக்
Gf GT வெளிவாரி பட்ட கல்லு
30, பயணியர் விதி -
警普率普率器景器酱景器兽器景事、 இப்பிரசுரம், மட்டக்களப்பு, புனித செ வயல் ஆசிரியர் குழுவால் 1-0-8
影

*隸
辜 羲 டிப்பிற்கு FD چین
சிரிய நிர்வாகம்.
றுபேறுகள் !
ஆண்டு 11 வரை திட்டத்திற்கமைய)
0 கலேவர்த்தகம்
பிரல்
டைபெறுகின்றன.
களுக்கும்
கள் வழங்கப்படும்.
iந்தா ப்படிப்புக்கள் Tíf
- மட்டக்களப்பு.
器器景器器善器器器器器器器晏率 பஸ்தியார் அச்சகத்தில் அச்சிட்டு 8ல் வெளியிடப்பட்டது.