கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 2001.05

Page 1
200 GLI - GiGiulia- EG
 


Page 2
6lJT8F66ff6f6bÉG bil Jb|JUTĒ560 Slups)LDEUTbu āĒā sāguļLĪ uŪ ടT) ട്രഞLഖണിg Lീ | |ണ് கைகளை அடைகிறது. சக்தி பற்றிய
്ഥteങ്ങ6ണ് ബ്രാഞഖള്ള ഉ (ണ് c96UDEUTblJuifié56DETLDEJLDEUTLDITTEE5 நன்றிகள்.
GlGSTU LsjLO DI LIỀl6bT ്ഥffIടങ്ങണur LeണിLഞണu ടൂഖഇL് எதிர்பார்க்கிறோம்.
சக்தியுடன் தொடர்புகட்கு
360600Tu (p56) is http://WWW.geocities.com/pennSakthi
Sojugoi GF6) (psos SakthinorWay Conline. no
JBL JT6ò (pB6líf SAKTHI, BOKS 99 OPPSAL, 0619, OLSO, NORWAY
 
 

5. Ted
లాకే
eso DĪ9F eso Lito:
ஜெயமோகனின் பின்தொடரும் நிழவின் தரம்
LLLLLL LLLLLL LLTLLLLLLL LLLLLLLT LLLLTLL LLL LLLL LL LL0
தமிழக மற்றும் ஈழ இடதுசாரி
வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம்
மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.
கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின்
எனவும், ஜோர்ஜ் ஓவலின் "1984" என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மெளனத்தை சாதிப்பதன் மூலம் இதை பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில் இந்நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மெளனப் பகிஷ்கரிப்புகள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்
கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகள்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடை பெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்தல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம். என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.
இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடை

Page 3
2
யாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.
இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சங்கவாதி. அரு. ணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகிய இரு தளங்களையும் ! தொட்டு கதை பின்னப்பட் | டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத் திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத் திரமான அருணாசலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அனுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சித்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.
குடும்பம்:
அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவள். தனது இளமைக் காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தை தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு
<خلیجیے تحت சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற் சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்கு, மனஆறுதல் வழங்கு" வதற்குதற்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார். நல்மனைவி:
அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத் துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். போபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக,
 
 
 

3
அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக.
இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.
அருணாச்சலத்திற்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்கும் "நல்மனைவி" அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.
பாலியல்:
உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச். சலம், மனைவியின் (பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாக கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம்வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது. அதன் கீழ் வட்டவடிவிலான பெண்
r c2 இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக் கிடும் லிங் கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதுக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.
பெண்மை - தாய்மை:
ஆண்களின் உலகில் முரண்பாடுகள்
சகித்துக் கொள்ள முடியாது போகும் போது
அதற்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களை காட்டுகிறார்.
சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல் வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவ மயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம் மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.
எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப் பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதை பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டி

Page 4
4.
யெழுப்ப வேண்டும். அதுவும் "பெண்களுக்கேயுரித்தான” தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.
இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?
இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.
கதையின் பிரதான ஆண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம். அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை. அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.
பி.கு: தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீக த்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம் சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது. எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியாடுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணை போவது பற்றி
உரையாடிக் கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாகவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக்கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.
பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகை யில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறிகொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்ைைத அவமதிப்பது இயல்புக்கு மாறானதாக படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?
எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குருர சிந்தனையுடையவர் களாக இருக்கிறர் கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாக பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?
சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழுமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆணி கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
- ராஜினி

<خلیجیے مختص>
I ജൂp്
முதலாவது பெனர்கள் சந்திப்பு
5டந்த u 60o 6o LDT 5 LĎ 29, 30 Lò திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் , இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு தனது பத்தாவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்ளும் களமாக 1990இல் ஜேர்மனியில் உள்ள பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பெண்கள் சந்திப்பு ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இச்சந்திப்பு தனது எல்லைகளை விஸ்தரித்து ஐரோப்பாவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பெண்களும் கலந்து கொள்ளும் சந்திப்பாக வளர்ந்ததும் அல்லாமல் சுவிஸ் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இச்சந்திப்பில் பெண்ணிய சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், ஆண் மையவாத கதையாடல்கள் மீதான கட்டுடைப்புக்கள்,
அனுபவ பகிர்வுகள் என்பவற்றை நோக்கியும் பெண்விடுதலைக்கான போராட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கவும் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படடிருந்தன.
இந்நிகழ்ச்சிகள் பிரான்சைச்சேர்ந்த விஜி (இன்பவல்லி), ஜெபா ஆகியோரின் தலைமையில் இருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. முதலில் இப்பெண்கள் சந்திப்பின் -ஸ்தாபிகளில் ஒருவரான ஜேர்மனியை சேர்ந்த மல் லிகாவை சந்திப்பின் பத்தாவது ஆண்டையொட்டி சிறு உரை ஆற்றும் படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பெண்கள் சந்திப்பு ஆரம்பித்ததன் நோக்கம் பற்றியும் இப்பெண்கள் சந்திப்பை 1990களில் ஆரம்பித்த தேவிகா, கோசல்யா உமா ஆகியோருக்கு நன்றி கூறியதுடன் பெண்கள் சந்திப்புக்காகவே வருகை தந்திருந்த இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் தலித் பெண்ணியவாதியுமான சிவகாமியையும் இந்தியாவிலிருந்து வந்து பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனுபாமாவையும் வரவேற்றதுடன் புரிந்துணர்வுக்கான சுய அறிமுகமும் நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
முதல் நிகழ்ச்சியாக "பெண்களும் குறைந்த கூலியும்” என்ற தலையங்கத்தின்

Page 5
6
கீழ் தனது கருத்தை முன் வைத்து ஜேர்மனியைச் சேர்ந்த மல்லிகா பேசும் போது கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் பெண்கள் மிகவும் துாரத் திலுள்ள கிராம புறங்களிலிருந்து வந்தவர்கள் என்றும், இவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் என்றும் இவ்விளம் பெண்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே (700- 1000ரூபா) வழங்கப்படுகின்றன. ஆனால் விடுதிகளில் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான காற்றோட்டம், வெளிச்சம் மலசலகூடம் போன்ற அடிப்படைத்தேவைகள் கூட இல்லை.
போடிங்கவுஸ் ஒன்றில் 5 - 200 பேர் வரையிலான பெண்கள் அடக்கப்படுகின்றனர். வேலை நேரம் முடிந்த பின்பும் வேலை வாங்குவது, இடைவேளைகளின் போது வேலை செய்யுமாறு உத்தரவிடுவது, தொழிலாளர்களுக்கு உரித்தான லீவுகளை கொடுக்க மறுப்பது, தொழிலாளர்களை அடிப்பது பகிரங்க முறையில் மிகவும் கீழ்த்தரமான இழிவான செயல்களை பெண் மேற்பார்வையாளர்கள் செய்து வருவது, சுகயினம், மாதவிடாய், தாய்மை போன்ற நாட்களிலும் ஏனைய நாட்களைப்போலவே வேலைசெய்யும்படி வற்புறுத்துவது கட்டாயப்படுத்தப்படுவது போன்ற வன் செயல்களால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்றும் இரவு நேரங்களில் தொழில் புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதற்கே இடமில்லை அத்துடன் திருடர்களால் காடையர்களால் ஏன் ஆயுதப்படையினரால் பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் இன்னும் சிலர்கொல்லப்பட்டும் உள்ளார்கள். அங்கு வாழும் பெண்கள் பயபிதியுடன் வாழ்கிறார்கள்.
நாட்டின் மற்றைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் மோசமான வாழ்நிலை வசதிகள், ஜனநாயக உரிமைகள் சமூக அந்தஸ்து எல்லாமே சுதந்திர வர்த்தகவலயத்தின் அழுக்கடைந்த முகத்தைக் காட்டி நிற்கின்றன. அங்கு வேலைசெய்யும் பெண்கள் தங்கள் வாழ்வைக் கொன்று வளம் தேடும் வலயமாக எவ்வாறு துன்புறுத்தப்ப
<左至罗T டுகிறார்கள் என்றும் குறைந்த கூலி, கூடிய வேலைச்சுமை ஓய்வின்மை, வேலைநேரம், போன்றவைகளையும் எடுத்து விளக்கினார். இலங்கைக்கு கூடிய அன்னியசெலவாணியை ஈட்டிக் கொடுக்கும் இப் பெண்களின் பிரச்சினைகளை சிங்கள, ஆங்கிலம், தமிழ் ஆகிய பத்திரிகைகள் மூலம் வெளிவந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைத்தார்.
இதையடுத்து சுவிசைச் சேர்ந்த றஞ்சி "முற்போக்குப் பேசும் ஆண்களும் பெண்னியமும்” என்ற கருத்தின் கீழ் தனது கருத்தை வெளியிட்டார். இன்று தங்களை முற்போக்காக காட்டிக்கொள்ளும் பல ஆண்கள் பெண்களின் பிரச்சினைகளை தாங்களே கையில் எடுத்துக் கொண்டு பெண்ணியம் சம்பந்தமாக விமர்சிப்பதும் கருத்துச் சொல்வது கூட பரவாயில்லை ஆனால் பெண்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் மீண்டும் ஆணாதிக்க கருத்துக்களை திணிப்பதிலேயே உள்ளார்கள் என்றும் பெண்விடுதலை கதைக்கும் பெண்களை கொச்சையாக பார்ப்பதும் பெண்கள் சம்பந்தமாக இழிவான கருத்துக்களை பரப்புவதிலும், பெண்களின் உறுப்புக்களை பாவித்து துாசன வார்த்தைகளை ஆண்கள் கூசாமல் பாவிப்பது பற்றியும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கோணல்கள், விமர்சனங்கள் போன்றவற்றினுடாகவும், தங்களுடைய பாலியல் வக்கிரங்களையும் ஆணாதிக்க கருத்துக்களையும் படைப்புகளினுடாக புகுத்திவருகின்றனர்.
பெண்களாகிய நாம் இன்று முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக உள்ளன. அதுவும் சில ஆண்கள் பெண்களின் பிரச்சினைகளில் தலையிடுவதும், அராஜகம் என்று சொல்லிக்கொண்டு வக்காளத்து வரங்குவதும் பெண்களை தனித்துவமாக சிந்திக்க விடாமல் தடுப்பது போன்ற கருத்துக்களை சில உதாரணங்களுடன் கலந்துரையாடலுக்கு முன் வைத்தாா. இக்கலந்துரையாடல் மூலம் பல பெண்கள் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது மட்டுமல்லாமல் கலந்து

7
கொண்ட பெண்கள் அத்தனை பேரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கருத்து பரிமாறிக் கொண்டதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். கிட்டதட்ட 3மணி நேரம் நீடித்த இவ் விவாதம் பயனுள்ளதாக அமைந்தது என்பது இங்கு குறிப்படத்தக்கது. (இவ்விவாதத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் வருகை தந்த பெண்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருப்பதாலும் உணர்வு ரீதியாக கருத்துக்கள் பரிமாறிக்கொண்ட தினாலும் விவாதித்தில் இடம்பெற்ற பல கருத்துக்கள் இங்கு தொகுக்கப்படவில்லை)
அடுத்த நிகழ்வாக பிரான்சைச் சேர்ந்த ஜெபா ‘குடும்பம்' என்ற சீன நாவல் பற்றி ஓர் பார்வையை வைத்தார். அந் நாவல் 1927ம் ஆண்டு பாரிஸ் நகரத்தின் லத்தீன் மக்கள் வாழும் பகுதியிலிருந்து எழுதப்பட்டது என்றும் அதை சீன மொழியிலிருந்து நாமக்கல் சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நாவலின் கதையானது உயிரோட்டமுள்ள பாத்திரங்களாக படைக்கப் பட்டதுமல்லாமல் சீனக் குடும்ப அமைப்பு முறையினுள் இருக் கக் கூடிய முடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பெண், ஆண் இருபாலாருக்கும் உள்ள சமூகக் கட்டுப்பாடு கூட்டு குடும்ப அமைப்புமுறை, இக் கூட்டு குடும்ப அமைப்பு முறையினால் ஏற்படும் சிக்கல்கள் கஸ்டங்கள் அக்குடும்ப அங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக மிகவும் தத்ரூபமாக கதாசிரியர் விளக்கியுள்ளதையும் அதே நேரம் கதாசிரியர் பெண்களை எப்படி பார்க்கிறார் என்றும் அக்கதை சமூகத்திற்கு எதை சொல்ல வருகிறது என்றும் மிகவும் அழகாக கதை சொல்லலுடன் விபரித்தார். உண்மையிலேயே கதை வாசிக்காதவருக்கு கதை சொன்ன விதம் மிகவும் பிடித்தமானதாகவே இருந்தது.
இதையடுத்து ஜேர்மனியைச் சேர்ந்த நிருபா “மார்க்சியப் பார்வையில் பெண்னியம்” என்ற தலையங்கத்தின் கீழ் தனது கருத்துக்களை முன்வைத்தார். ஆண்களைப் போலவே பெண்களும் தொழிலாளிகளாக மாற வேண்டும், வீட்டு வேலைகள் அனைத்
లకెత్
தும் கூட்டுழைப்பாக மாறுவதுடன் பெண்கள் பொருளாதரத்தில் வளம் பெறுவது மட்டுமல்லாமல் தொழில்நுட்பம், சொத்துக்கள், மறுஉற்பத்தி, கட்டாய பாலியல் போன்ற அம்சங்களுடன் பெண்கள் மீதான ஆதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் ஆண்களுக்கிடையிலான உறவுகள் காலப்போக்கில் வடிவத்திலும் வீரியத்திலும் மாற்றம் அடைந்தே வருகின்றன. ஆண்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் படிநிலை அமைப்பையும், ஆணாதிக்க முறைமையின் ஆதாயங்களைப் பெறுவதில் ஆண்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளையும் முக்கியமாக ஆராய வேண்டும்.
வர்க்கம், இனம், தேசிய இனம், திருமணத் தகுதி.பாலுறவுத்தேர்வு போன்ற அம்சங்கள் செயலாற்றுகின்றன. பெண்களின் வர்க்கம், இனம், தேசிய இனம் திருமணத் தகுதி அல்லது பாலுறவுத்தேர்வு, ஆகியவற்றைப் பொறுத்து அவர்கள் மீது செலுத்தப்படும் ஆணாதிக்க அதிகாரத்தின் அளவும் வேறுபடும். வர்க்கம், இனம் தேசிய இனம் போன்ற வற்றை விளக்கியதுடன் தாய்வழிச் சமூகம் எப்படி தந்தைவழிச் சமூகமாக மாறியது பற்றியும் குடும்பத்தின் மூலம் கிடைக்கும் ஆணாதிக்க அதிகாரத்தின் போக்குகள் பற்றியும் பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு மூலதனமும் தனிச்சொத்தும் மட்டுமே காரணமாக இல்லை இதில் முதலாளித்துவம் மூலம் பெண்கள் எப்படி பிரிவினைப்படுத்தப்பட்டார்கள் என்றும் மார்க்சியர்கள் எப்படி பெண்ணியத்தை பார்க்கின்றார்கள். பெண்கள் பிரச்சினை குறித்து மார்க்சியர்களின் அணுகுமுறைகள் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் மார்க்சியமும் பெண்கள் பிரச்சினையும் போன்ற கருத்துக்களை விவாதத்திற்கு முன் வைத்தார்.
29 யூலை கடைசி நிகழ்ச்சியாக நோர்வேயிலிருந்து வெளிவரும் “சக்தி சஞ்சிகை இரண்டாவது தசாப்தத்தில் காலடி” வைத் துள்ளதுடன் இணையத்திலும் தடம் பதித்துள்ளது பற்றி ஜேர்மனியைச் சேர்ந்த தேவா ஓர் மீள் பார்வை செய்திருந்தார்.

Page 6
சக்தி பல புதிய பெண் எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமல்லாமல் பெண்களின் ஆக்கங்களுக்கே முக்கிய இடம் அளித்து வருவதுடன் பல புதிய பெண் எழுத்தாளர்களை இலக்கிய உலகிற்கு
ల్కాకు
சக்தி பெண்கள் சஞ்சிகையாகவே வந்தால் என்ன? ஆக்கங்கள் இல்லை என்பதற்காக பக்கங்களை நிரப்புவதற்கு ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிக்கவேண்டுமா? அப்படி ஆக்கப் பற்றாக்குறை யென்றால் வருடத்
அறிமுகம் செய்ததுடன் அப் பெண்கள் இலக்கியத்துறையில் வளர சக்தி தளம் அமைத்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாதது. தரம் தரமற்றது என்பதை விடுத்து பெண்களின் ஆக்கங்களை பிரசுரிப்பதில் சக்தி இன்று வரை தனது பங்கையாற்றி வருகின்றது அத்துடன் புலம்பெயர் பெண்களின் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளது பற்றி கூறிய அவர்- சக்தி எல்லாவற்றுக்கையும் மூக்கை நுழைக்கும் ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும் விமர்சனங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து கருத்துச் சொன்ன பெண்கள் சக்தி தொடர்ச்சியாக வெளிவரும் பத்திரிகை என்றாலும் ஆண் களின் ஆக்கங்களை ஏன் பிரசுரிக்க வேண்டும்?
திற்கு இரண்டோ அல்லது மூன்றோ பத்திரிகைகளை வெளயிடலாமே? அல்லது பெண்களால் எழுதப்பட்ட ஆக்கங்களை தேடி மறு பிரசுரம் செய்யலாமே? என்று கேள்விகள் தொடுக்கப்பட்டன. ஆண்களின் ஆக்கங்களை பிரசுரிக்கத் தான் இன்று எத்தனையோ சஞ்சிகைகள் உள்ளன. ஆனால் இந்த எல்லாவற்றுக்கையும் மூக்கை நுழைக்கும் ஆண்களின் ஆக்கங்களை சக்தி பிரசுரிப்பது என்பது விமர்சனத்திற்குரியதே. இலக்கிய உலகமே ஆண்களுடையதாக இருக்கும் பொழுது சக்தியும் அதற்கு இடமளிக்க வேண்டுமா? இதற்கு சக்தி ஆசிரியர்கள் பல காரணங்களைச் சொல்லலாம். பலமுறை இவ் விமர்சனத்தை பெண்கள் வைத்த போதிலும் சக்தி ஆசிரியர்கள் இவ் விமர்சனத்தை பாராமுகமாக இருப்பது ஏன்? அப்படி என்றால் சக்தியின் நோக்கத்திற்கு இது முற்றிலும்
 

9
வேறுபட்டதாகவே உள்ளது. என்றும் சக்தியில் வெளிவந்த சுகனின் கவிதை, இளைய அப்துல்லாவின் கவிதை ஆகியவை உதாரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் சக்தி பலபேருக்கு கிடைப்பதில்லை சக்தியை பரவலாக்கும் முயற்சியில் வெளியீட்டாளர்கள் முயலவேண்டும் என்றும் சக்தி பெண்களின் ஆக்கங்களுடனேயே வரவேண்டும் என்று அங்கு குழுமியிருந்த பல பெண்களின் கருத்தாகவும் இருந்தது. இதை சக்தி ஆசிரியர்கள் கவனத்தில் எடுப்பது நல்லது என்றே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
30ம் திகதி யூலை காலையில் இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்ட தலித் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான சிவாகமி தலித் பெண்ணியம் சம்பந்தமாக 1983 லிருந்து எழுதிவருபவர். இவர் “தலித் பெண்ணியம்” என்ற தலையங்கத்தின் கீழ் தனது கருத்தை முன் வைத்த பொழுது அங்கு வந்திருந்த பல பெண்களின் வேண்டுகோளினால் தலித் என்பதற்கான விளக்கக்தை முதலில் தனது உரையாகத் தொட ங்கினார். இந்து சமுதாயக் கட்டமைப்பால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடி மக்கள் மற்றும் முதலாளியத்தால் பினதள்ளப்பட்ட உழைக்கும் மக்கள் பார்ப்பனர்களின் அதிகாரத்தின் கீழ் வெள்ளாளன், சக்கிலியன், பறையன், பள்ளன். என்று தங்க. ளுக்கு ஏற்ற வாறு சாதிகளை பிரித்துள்ளனர். இவை அனைத்தும் தெய்வக்கட்டளைகளாக வேதம், புராணம், இதிகாசம் என்பதுடன் தெய்வம் புனிதமாக்கப்பட்டு சாதி அந்தஸ்தும், பெண்களின் நிலையும் வரையறுக்கபட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டில் சாதி ரீதியாகவே வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருமணங்கள், கொடுக்கல் வாங்கல்கள் தொழில், கோயில், வாக்குரிமை கல்வி போன்றவைகள் சாதி ரீதியாகவே பிரிக்கப்பட்டுள்ளன. தொழில் ரீதியாக சாதியை முன்னிறுத்தியவர்கள் பார்ப்பனர்களே. இந்து மதமே சாதி என்ற சாயத்தை பூசி பிற்படுத்தப்பட்ட மக்களை பிரிவினைப்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு துரோகமும்
دخالگیت செய்துள்ளனர்.
எனவேதான் ஜோதி பாஸ் பூலே தலித்துகளுக்கு ஒரு தனிப்பட்ட அமைப்பு தேவையென்று வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து அம்பேத்காரும் தலித்துகளுக்கு தனிப்பட்ட அமைப்பு தேவையென்றும் குரல் கொடுத்தார் தலித்தியம் என்பது தீண்டாமை ஒழிப்பு மட்டுமில்லாமல் சாதி ஒழிப்பு அதாவது இந்துமத ஒழிப்பு என்றே கூறலாம். அதாவது தீண்டாமைக்குட்பட்ட மக்கள் இவர்கள் முக்கியமாக அடித்தள மக்கள் இனஉணர்ச்சிக்கும் நிகழ்கால துன்ப துயரங்கள் என்பதற்கும் இடையிலான போராட்டமாகவே தினம் சாதிக் கொடுமையை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண் எப்படி ஒடுக்கப்படுகிறாள் எனபதற்கு இன்று ஒரு அமைப்பு தேவையோ அதே போல் தான் தலித்துகளுக்கும் ஒரு அமைப்பு அவசியமானது என்றார்.
ஆனால் தலித் ஆண்கள் தலித் பெண்க ளைப்பற்றி யோசிப்பதில்லை காரணம் குடும். பம் என்ற அமைப்பில் தலித் பெண்ணும் ஒடுக்கப்படுகிறாள். தலித் பெண்கள் மேல் சாதிக்காரப் பெண்களாலும் ஆண்களாலும் தலித் ஆண்களாலும் ஒடுக்கப்படுகின்றாள். மேல் சாதிப் பெண்கள் கூடுதலாக இந்து மதத்தை பின்பற்றியவர்களாகவே உள்ளார்கள் இவர்கள் குடும்பம் என்ற அமைப்பின் கீழ் நல்ல தாயாக நல்ல மனைவியாக இருப்பவர்களே. பார்ப்பனியர்கள் தான் இன்று பெண்ணிய அமைப்புகளாக தோன்றி பெண்களுக்காக போராடுகின்றன. இந்து மதம் தான் இன்று சாதியமைப்பை கட்டிக் காத்துக் கொண்டு வருகிறது அப்படி யென்றால் இந்தப் பெண்களுக்காக போராடுகிறோம் என்று கூறுபவர்கள் இந்து மதத்தை முதலில் துாக்கியெறியனும். அதைக் கேள்வி கேட்காத வரை எந்தப் பெண்ணிய இயக்கங்களும் தலித் பெண்களுக்கு சார்பாக போராட முடியாது. ஏனென்றால் மதம் தான் குடும்பம் என்ற அமைப்பை கட்டிக் காக்கின்றது இவற்றினால் பெண்ணிய இயக்கங்களுக்கும் தலித் பெண்ணிய இயக்கங்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. எமது

Page 7
10
கலாச்சாரம், பண்பாடு, சாதி எம்முடன் இருக்கும் வரைக்கும் ஆண் பெண்ணை ஒடுக்குவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். எல்லாப் பக்கத்திலும் ஒடுக்கப்படும் தலித் பெண்ணுக்கு ஒரு அமைப்பு அவசியமாகின்றது. என சில உதாரணங்களுடன் விளக்கினார். பெண்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார் சிவகாமி. இது அங்கு வந்திருந்த பெண்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து சிவகாமி எழுதிய சிறுகதையான “குறுக்கு வெட்டு” என்ற நாவலை பிரான்சைச் சேர்ந்த விஜி (இன்பவல்லி) விமர்சனம் செய்திருந்தார். மிகவும் தத்ரூபமாக எழுதியுள்ள இக்கதையானது குடும்ப அமைப்பு முறை பற்றியும் குடும்ப வாழ்க்கை முறை, கூட்டு வாழ்க்கை முறை பற்றியும் பாலியல், ஒருதாரமணம், கற்பு, குடும்பத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகள், என்ற அடிப்படையில் சிறுகதை வடிவத்தில் வடிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய கதையை அவருக்கு முன் விமர்சிக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது என்பதாகும். அக்கதையை விஜி சரியாகவே விமாசித்துள்ளார் என சிவாகமி சுட்டிக் காட்டினார். இக்கதையை அங்கு கலந்து கொண்டிருந்த பெண்கள் வாசிக்காததினால் கருத்துக்கள் குறைவாகவே பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் விஜி சொன்ன கதையின் அடிப்படையில் ஒரிரு பெண்கள் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். இக்கதைக்கான விமர்சனம் இந்தியா டுடேயில் வந்துள்ளதாகவும் அங்கு கூறப்பட்டது.
அடுத்த நிகழ்ச்சியாக “மலேசியத் தமிழ் பெண்களின் பிரச்சினைகள்” என்ற தலையங்கத்தில் ஜேர்மனியைச் சேர்ந்த சுபா உரையாற்றினார். மலேசியாவில் வாழும் மலையக மக்கள் அதாவது இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறிய அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஏழை மக்களின் வாழ்நிலைபற்றியும் மலேசியத் தமிழ் பெண்கள் அவதியுறும் நிலையும் அவர்களது இக்கட்டான நிலை பற்றியும் தமிழ் பெண்கள் மிகவும் பின்தங்கிய
வாழ்க்கை முறையினால் அவதியுறுகிறார்கள் என்பதையும் விளக்கத்துடன் எடுத்துரைத்தார். அத்துடன் சம்சுன் என்ற குடிவகைக்கு கீழ்தட்ட மக்கள் அடிமையாவதால் குடும்பங்கள் சிதைந்து போவதையும் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் பத்திரிகைகளின் ஆதாரங்களுடனும் அங்கு செயற்படும் பெண்கள் ஆண்கள் சேர்ந்த அமைப்புக்கள் எப்படி இவர்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கின்றன போன்ற கருத்துக்களை பத்திரிகைகள் மூலமும் தனது அனுபவங்கள் மூலமும் விளக்கினார்.
கடைசி நிகழ்ச்சியாக சிவகாமியினால் எடுக்கப்பட்ட துறு (THROUGH) விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.
ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கும் பெண்கள் மனம் திறந்து தங்களது
அனுபவங்களையும், சொந்த வாழ்க்கையில் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்டவைகள் இன்றைய காலகட்டத்தில் அந்தரங்கமானவை. அவற்றையெல்லாம் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ எழுதுவது என்பது இனித் தொடரும் சந்திப்புக்களில் கலந்து கொள்ளும் பெண்கள் மீண்டும் தங்களது அனுபவங்களை பகிர்வதைப் பாதிக்கும் என்பதினாலும் மேலும் பல பெண்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைப்பையும் வேண்டியும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட பெண்கள் மனம் திறந்து பேசப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் பெண்கள் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒரளவுக்கேனும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், சக்தி வாசகர்களுக்காகவும் நிகழ்வுகள் சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது.
(அடுத்த பெண்கள் சந்திப்பு 2001 ம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள பேர்லின் நகரில் நடைபெறவுள்ளது.)
தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

1 లాక్రS
ஒரு புரட்சிகர சக்தியாகும் கறுப்பிளப் sluguiassifal
SHEETTIGUÉGEITETT SITT FLUITLIČJUTUh .
- lay Arul Ueatlets - தற்காலமூக அமைப்புக்கள்கருத்துகள் எல்லாமே ஆண்ஆதிக்கருத்தியல்களின்கட்டமைப்புக்களாகவே இருக்கின்றன. அனைத்துசமூகத்திகளின்போராட்டமுன்னெடுப்புகளின்முஸ்தீாள்ளல்லாமே ஆண்டிதிக்கத்திகளின்நவன்சர் வே ன்ெறன. :::::::::::::::::::::::: NIN ಘ§ಘ್ರ 搬
¢& தின்அரைக்கப்படாத தண்டவாளத்திலேயே சமூகம் இன்னும் டினெண்டிருகிறது. பெண்களாயினும் அது தலித் பெண்களாக இருப்பினும்சு.அதே தடத்தில்தான் இழுவுண்டுசெல்ல நேருகிறது
இதை எப்படி மற்றுவது என்பது எல்லோர் மத்தியிலும் இடையறாது கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் கேள்விதான் கேள்விக்கான தேவை இருக்கும்வரையும் பிரச்சனை இருந்துகொண்டிருப்பது என்பது இன்னும்மிசமுக்கியமாகக்கவனத்திற்
இந்த நிலையில் எல்லாருக்குமாகவும் பேசும்புத்திஜீவிகளிடம் சகலரும் தங்கள் விடுதலையை துர்ப்பாக்கியத்திற்குள் இருந்து மீளுவது எப்படி என்பதும்முக்கியமானது. ஒவ்வொருவரும்தாம் நேரடியாக எதிர்கொள்ளும் அடிமைத்துவத்தில் இருந்து விடுதலை பெறாமல் அனைத்து விடுதலைக்கும் என்றோ. அன்றில் முன்னோக்கி இழுத்து ஏப்பமிடும் அவைக்கப்பட்டு முக்கியத்துவப்படுத்தப்படும் விடுதலைக்காகவோ போராடுதல் என்பது சாதியற்ற ஒன்
எல்லாவற்றையும் கட்டுடைக்க முனையும் சக்திகள் இவற்றை கவனத்தில் எடுத்தாலும் கட்டுடைப்பதில்கூட குறிப்பாக ஆணாதிக்க முன்முனைப்புடன்தான் செயற்படுகின்றன.கட்டுடைப்பது என்பதும் அதன்மீதான கவனமும் எந்த மக்களதும் டுே நோக்கியநேத்துடன் இருப்பதில்லை.அவைமுன்னோக்கிய ஆண்ஆதிக்கவர்க்கசக்தியின் கருத்தியல் சிறையில் இருந்து மட்டும் மீட்டுவிட்டு கைகட்டிக்கொள்கின்றன.மாறாக, ஒரே விதமான ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சக்திகளின் ஒருமைப்பாடும் தொடர்ச்சியான போராட்டமும்முக்கியம் என்பதை அவை கவனத்தில் எடுப்பதில்லை. இந்த விடயத்திலும் இக்கட்டுரை கவனம்கொள்கிறது. : : தாம் நெருக்கமாக நேரடியாக எதிர்கொள்ளும் அடிமைத்தனங்களுடன் கணக்கை கறாராகத் தீர்த்துக்கொண்டே மற்ற சக்திகளுடனும் அனைத்தப்பொராட்டத்துடனும் ஐக்கியப்பட்டு போராடமுடியும்போராடவும் வேண்டும் இக்கட்டுரை இன்றைய தமிழ்குழலில் நிலவும் கருத்தியல் அமைப்பியல்சூழலுக்கு உதவும் என எதிர்பார்க்கிறேன்.
A. - a
எவரும் உங்களிற்காகப் போராட முழுச் சக்தியையும் கறுப்பின ஆண்களை "விடுதலையாக்குவது" என்பதில் தர்க்கம் செய்து செலவழிக்கிறார்கள். (நீங்கள் உங்களளவில் சுதந்திரமாக இல்லை எனில் எப்படி நீங்கள் இன்னொருவரை "விடுதலை செய்ய" முடியும்?) அதன் காரணமாக, இயக்கம் நடைமுறையில் ஒரு ஸ்தம்பித நிலையை வந்தடைந்திருக்கிறது. எப்படியாகிலும், வீணடிக்கப்பட்ட சக்திகளுக்காக இயக்கத்திற்குள் நான் தொடர்புகொள்ள முழுமையாக இல்லாவிடினும், ஆனால், புரட்நேர்ந்த கறுப்பினப் பெண்கள், தங்களுடைய சிகரக் கொள்கைகளுடன் இணைத்துக்
முடியாது உங்களிற்காக நீங்களேதான் போராட வேண்டும்" கறுப்பினப்பெண்களின் விடுதலையைப் பிரகடனம் செய்வதற்கு, இந்த முகவுரையானது நிச்சயமாக மிகக் குறைந்த அளவில் அர்த்தபுஷ்டியுள்ளதாக இருப்பினும், இதுதான் தற்போதைக்கு பாவிக்கப்படும் சுலோகமாக இருக்கும்.

Page 8
12
கொள்வதிலும் பார்க்க அடிப்படையில் பிழையான கருத்தியல்களுடன் இணைத்துக் கொள்வது என்பது- போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் இது புரட்சிகரமானதாக இல்லாவிட்டால் இது பிழை என்று நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
"பெண்களின் விடுதலை" என்பது மிகவும் உணர்வுபூர்வமானதும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணும் ஒரு சமாச்சாரம் என்றும் நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். கறுப்பின ஆண்கள் இன்னும் ஆண் மேலாதிக்கத்தைப்பற்றி தங்கள் எஜமான அதிகாரத் தைப்பற்றி, கிளிப்பிள்ளைகள் போலத் திருப்பித் திருப்பிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களை இபபொழுது ஒரு மிக முக்கியான கேள்வி முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது: எங்களுடைய ஆபிரிக்க பரம்பரைச் சொத்து - கலாச்சாரவாழ்முறைகள் இவற்றை மீளப்பெறுவதுபற்றி, தாய்வழி, தந்தைவழி தவறு என்பதை மட்டுமல்ல, எங்களுக்குத் தெரிந்த அளவிலான முழுக்குடும்ப அமைப்பைக்கூட, எப்படி நாங்கள் அலட்சியப்படுத்தப்பட முடியாதபடி விவாதிக்கலாம்? ஆபிரிக்க இனக்குழுக்கள் கூட்டாக வாழ்பவர்கள். அங்கு குடும்ப அமைப்பானது ஒரு தலைமையின்கீழ் இருக்கக்கூடியதுபோல் குடும்பம் அமைக்கப்படவில்லை.
கறுப்பினப்பெண்கள் கறுப்பின ஆண்க= ளிற்குரிய ஆண்மையைக் கொடுப்பது
அல்லது அதைப் பெறுவதற்கு அவர்களை
அனுமதிப்பது என்பது பற்றிப் பேசுவதென்பது உண்மையிலேயே அருவருப்பானது. இது ஏனைய கறுப்பினப் பெண்களுக்கு அவமதிப்பிற்குரியது. கறுப்பின ஆண்கள் இதனால் மிக மோசமாக அவமானமடையவேண்டும். ஒருவருடைய வயதுவந்த தன்மை மாதிரி சொந்த விஷயமாக இருக்கும் ஒன்றை எப்படி இன்னொருவர் "கொடுக்க" முடியும்? இது திட்டவட்டமாக உங்களுடைய சுதந்திரத்திற்கு ஒரு மிருகத்திடம் கேட்பது போல. நாங்களும் எங்களுடைய ஆண்களிற்குப் பின்னால் நின்று கொண்டிருப்பதுபற்றி அதிருப்தியோடு முணுமுணுத்துக் கொண்டிருக்கிறோம். இது என்னைப் பின்வரும் கேள்
లాక్5 விக்குத் தள்ளுகிறது: நாங்கள் பெண்களா அல்லது முட்டுக்கால்களும் அவர்கள் சாய்வதற்கான தூண்களுமா? அவனுக்குப் பின்னால் இருந்து நாங்கள் வெளியே வந்தால் அவன் கீழே விழுந்துவிடுவான் என்று ஏதோ நாங்கள் ஒவ்வொருவரும் சொல்கிறோம் என்கிறமாதிரி இது பொருள்படுகிறது. எனக்கு இவை தெளிவாக தாய்மையுடன் தொடர்புபடுத்தும் வாக்கியங்கள். அத்துடன் இவை வெகு நுணுக்கமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது.
பெண்களின் விடுதலை என்பது ஆண்கள், பெண்கள், சிறார்களைக் கொண்டுள்ள ஒரு புரட்சிகர இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு தந்திரோபாயமாகக் கணிக்கப்பட வேண்டும். நாங்கள் இப்பொழுது உண்மையான (ஆயுதம் தாங்கிய) புரட்சியைப்பற்றி பேசுகிறோம். இந்த உண்மையை நீங்கள் உள்ளபடி பிரச்சனைகளில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தால் உங்களுடைய பிரதிவெளிப்பாடுகளை அண்மித்துப் பரிசீலிக்கவேண்டும். நாங்கள் வெல்வதற்காக போராடுகிறோம், அதைப் போலவே அவர்களும். வியட்நாம் என்பது காலத்துடனும் பூகோளவியலுடனும் சம்பந்தப்பட்ட சிக்கலில்லாத ஒரு விடயம்(?) விவாதிக்கப்படவேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால், மிகவும் பிணிபிடித்த அடிமைக் கலாச்சாரத்தில் இருக்கும் குழந்தைகளின் விடுதலை, நாங்கள் அதைக் காண விரும்பாவிடினும் நாங்கள் அந்த அடிமைக்கலாச்சாரத்தின் பரப்பில் இருந்து தான் இன்னும் செயற்படுகிறோம். கறுப்பினப் பெண்கள் குழ் தைகளைத் தங்களின் சொந்தத் தேவைகளிற்கு பாவிக்கிறார்கள். நாங்கள் மிகவும் ஒடுக்குமுறைக்குள்ளான எங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு முயல்கிறோம். அந்தச் சுமையை எங்களுடைய சிறார்களிற்கூடாகத் தாங்குவதற்கு முயல்வதன் காரணமாக அதன் தொடர்ந்த போராட்டத்தில் அவர்களை அழிக்கிறோம். கறுப்பினத்தாயினால் மிகவும் ஆரவாரமும் மகிழ்ச்சியும் கொட்டிக் காட்டப்படும் அன்பு என்பது வெளிப்படையாக சில முரண்பா

13
டுகளைக் கொண்டது. எங்களை நாங்கள் உண்மையில் இருந்து விலகிச் செல்ல அனுமதிப்போமேயானால் சுயஅழிப்பினால் நாங்கள் இன்னும் 400 வருடங்களை இழப்பதற்கு அபாயத்திற்கேதுவான எத்தனங்களை எடுக்கிறோம். இந்த முரட்டுமிருகம் எங்களை அவ்வளவு காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்று நாங்கள் அனுமானித்தாலும் அது அப்படி நடக்காது என்று எங்களிற்குத் தெரியும்.
பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து போரிட்டிருக்கிறோம் ஒவ்வொரு புரட்சியிலும், நாங்
கள் ஆண்களுடன் சேர்ந்து மரணித்திருக்
கிறோம் அநேகமான சந்தர்ப்பங்களில். கியூபா, அல்ஜீரியா, சீனா என்று. இப்போது வியட்நாம். நீங்கள் அவதானித்தீர்கள் 616á gir 6Ó, LITs) 6súl6ó NLF (National Liberation front) (35 fluef (6566) முன்னணி சார்பில் "சமாதான பேச்சுவார். த்தை"க்கு ஒரு பெண் தலைமை தாங்குகிறார். கறுப்பினப் பெண்களிற்கு என்ன நடந்” தது? நாங்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என்பது வெளிப்படையானது. ஏன் நாங்கள் உலகத்தில் எங்களுக்குரிய இடத்தை நியாயமாகக் கோரமுடியாது?
என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்பதை முழுமையாக உணர்ந்துகொள்ளும்பொழுது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். எல்லா இடங்களிலும் இருந்து, குறிப்பாக ஏனைய பெண் களிடமும் கறுப்பின ஆண்களிடமிருந்தும், விடுதலைக்கான எதிர்ப்புகள் கிளம்பும்.
கறுப்பினப் பெண்களின் தாய்வழி/ தாய்மை என்பது குறித்த அபத்தங்களைக் கூறி இன்னும் உங்களைக் கட்டாயப்படுத்துவதையோ/பயங்காட்டிச் சம்மதிக்க வைப்பதையோ அனுமதிக் காதர்கள். கறுப்பினப் பெண்கள் தாய்த்தலைமை கொண்ட குடும்ப அமைப்பைச் சேர்நதவர்களல்ல. ஆனால் நாங்கள் தியாகம் செய்வதற்கு/ எங்களை அர்ப்பணிப்பதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் உபயோகிக்கப்படுகிறோம் அத்துடன் (தவறாக)
లాక్5 பாவிக்கவும் படுகிறோம். தாய்த்தலைமைச் சமூகம் என்ற கட்டுக்கதைகளை நிறுத்த வேண்டும். இதனைப் பாவித்து நாங்கள் பலத்த தாக்குதலுக்கு ஆளாவதை நாங்கள் தொடர்ந்து அனுமதிக்கக்கூடாது - நாங்கள் இந்த மாற்றம்பற்றி, இந்த துன்மார்க்கமான, அந்நிய கலாச்சாரத்தில் இருந்து ஓடிப்போதல் அல்லது விடுபடுதல் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருப்பீர்களானால் கறுப்பினப் பெண்களின் விடுதலை என்பது 'ஆண் எதிர்ப்பு அல்ல என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கவேண்டும். இப்படியான ஏதாவது ஒரு உணர்வு/மனோபாவம் அல்லது அர்த்தப்படுத்துதல் என்பதைச் சகித்துக்கொள்ள. முடியாது. இது எதற்காக என்பது தெளிவாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும். - மானுட இனத்தின் அனைத்து மக்களுக்கும் ஆதரவானது என்பது.
இப்படியான ஒரு இயக்கத்திற்கான சாத்தியப்பாடு எல்லைகளற்றது. கடந்தகாலத் தில் ஒரு குறிப்பிட்ட கறுப்பின மக்கள் மட்டும் இயக்கத்தை நோக்கி கவரப்பட்டார்கள்: அதாவது, இளைஞர்கள், தீவிரவாதிகள், போர்க்குணாம்சம் உள்ளவர்கள் என்று. மிகவும் வறியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், வயோதிபர்கள், பெண்கள் என்பவர்கள் இது குறித்துத் தெரிந்திருக்கவில்லை; உணர்ந்திருக்கும் நிலைக்கு வந்திருக்கவில்லை அல்லது அவர்களுடைய உணர்வை/அறிதலை இயக்கமாக மாற்றுவதற்கு முடிந்திருக்கவில்லை. பெண்களின் விடுதலை, இப்படியான சக்திகளுக்கு ஒரு வடிகாலாக பாதையை வகுக்கின்றது.
மத்தியதர வர்க்கக் கறுப்பினப் பெண்கள், கறுப்பின வறிய மக்களினளவு மிகக் கொடுமையான மனிதாபிமானமற்ற நசுக்குதலுக்கு உட்பட்டிருக்கமாட்டார்கள் என்றாலும், ஆண் மேலாதிக்க நிலைப்படுத்தப்பட்ட சமூகத்தின் கொடுமைப்படுத்தல்களை மிகவும் நிச்சயமாக அவர்கள் பெண்கள் என்ற நிலையில் இருந்து உணர்ந்திருப்பார்கள். இவர்கள், ஏனைய சகோதரிகளின் நிலைமைகளில் சிலவற்றை- இந்த சமூகத்தினதும் பெண்களினதும் துரதிர்ஷ்டங்களை இழிவுகளை

Page 9
14
கெடுதிகளை எடுத்துக்கூறுவதன்மூலம், கூட்டு அமைப்புகளை நிறுவுவதற்கு உதவுவதன் மூலம்-நிவர்த்தி செய்வதில் உதவுவதற்கு (கற்பிப்பதற்கும், எடுத்துச் சொல்வதற்கும், பிரக்ஞையை எழுப்புவதற்கும்) தாராள மனசுடையவர்களாக இருப்பார்கள்.
வயோதிபப் பெண்கள் எங்களிற்குத் தருவதற்கு தகவல்களையும் அனுபவத்தை" யும் கொள்ளையாகக் கொண்டிருக்கிறார்கள். இது சந்ததிகளிற்கிடையிலான தொடர்பு இடைவெளியை நிரவுவதற்கு ஒரு கருவியாகவும் இருக்கும். கறுப்பினமாக இருப்பதும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களைத் தவிர்க்கும் இந்த வேஷமிடலைச் சகிப்பதும் பைத்தியக் காரத்தனமாகும்.
வறுமையில் உள்ள பெண்கள் எங்கள் அனைவருக்கும் கற்றுத் தருவதற்குரிய அறிவைக் கொண்டுள்ளார்கள். வேறு யார் இந்த சமூகத்தில் அதிகமாகக் காண்கிறார்கள்; அதிக யதார்த்தமாக இருக்கிறார்கள்? -எங்களைப் பற்றியும் இந்த சமூகத்தைப்பற்றியும் எங்களுடைய மக்களுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் பிளவுகளைப்பற்றியும் கண்டுகொள்வதற்கு? இந்தச் சகோதரிகள் இணைந்து ஒரு சமூகமாக உருவாகினால் இவர்களைவிட வேறு யார் இதிலிருந்து இலாபமும் நன்மையும் அடைவார்கள்.
நாங்கள் திறமையுள்ளவர்கள் என்றும் எங்களிற் சிலர் அவர்களை ஏற்கனவே விரும்புகிறோம் என்றும் எங்களுடைய சகோதரிகளுக்கு நாங்கள் தெரிவிக்கவேண்டும். பெண்களாகிய நாங்கள் ஒருவருக்கொருவர்மீது அன்பு என்னும் சொல்லைப் பயப்படாமல் பாவிப்பதற்கு பழக (பாவிப்பதற்கு பயப்படாமல் பழக) ஆரம்பிக்க வேண்டும். கறுப்பினப் பெண்களாகிய நாங்கள் இந்த ஆணோ அல்லது இன்னொருவனுக்கு மேலோ. சண்டையிடுதல்பற்றிய சில்லறைப் பொறாமைகளையும் வன்முறைகளையும் நிற்பாட்ட வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்திருக்கிறோம். (கறுப்பின ஆண்கள் இவ்வகையான அழிவை நோக்கி நகர்த்தும் நடத்தையை ஊக்குவிப்பதில் ஒரு நல்ல எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும்)
நாங்கள் எங்களையும் எங்கள் ஒவ்வொருவரையும் பலத்திற்காகவும் ஆறுதலுக்காகவும் திரும்பப் பார்க்கவேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய சொந்த 24 மணித்தியாலங்கள் கொண்ட ஒரு நாள் கூட்டுவாழ்க்கை நிலையங்களில் எங்களுடைய சிறார்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் தொடர்ந்து அன்பைப் பெறுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் எதைப்போல் இருக்கும் என்று ஒரு கணம் மட்டும் சிந்தியுங்கள். ஆகையால் ஒவ்வொருவருக்கும் விசேஷமாக சிறார்களின் தன்னுந்துதலுக்கு என்ன செய்யும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த சமூகத்தில் நிலவும் தாய்மைமீதான கருத்தமைவினால் பெண்கள், அவர்களுடைய குழந்தைகளினூடாக, அடிமைப்படுத்தப்படக்கூடாது. அதனால் தாயினுடைய மனக்கசப்பை, குழந்தைகள் வசைகள், தண்டனைகள், இறுக்கமான கட்டுப்பாடுகள் என்பவற்றின் ஊடாக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
எங்களிற்காக யாராவது இதைச் செய்வார்கள் என்று நாங்கள் எங்களின் பின்புறங்களில் குந்திக்கொண்டு காத்திருக்க முடியாது. நாங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.
நாங்கள் எங்களை எவருடையதோ பாலியல் பண்டங்களாக, தாதிகளாக, குழந்தை பராமரிப்பவள்களாக, வேலைக்காரிகளாக, ஒரு ஆணின் கவனத்தை ஈர்ப்பதற்கான விருப்பம் என்பவற்றிற்கானதாக பார்க்கக்கூடாது. எங்களிற்காக வெளியில் சென்று உழைத்துக் கொண்டு வரும் சேவைக்கும் சேர்த்து ஆண்கள் அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள் அவ்வளவும்தான். இது அடிமைத் தனம். பிரதியாக நாங்கள் அவனைச் சித்திரவதை செய்கிறோம்; அவனுடைய ஆண்மைக்கான பாதுகாப்பின்மைகளினால் அவனை நிரவுகிறோம்; எங்களுடைய வார்த்தைப் பிரயோகங்களினால் வெளியில் அங்கிங்கென்று திரிந்து பிரச்சினைகளிற்குள் சிக்கி மாட்டுப்படவைக்கிறோம். மனிதத் தன்மையுள்ள மக்கள் வாழும்வகை இது வல்ல. அவன் எவ்வளவு மிகுந்த தேர்ச்சியு

15
டன் பொறுப்பின்மையாக நடந்து கொள்கிறானோ அப்படியே நாங்களும் இருக்கிறோம்.
நாங்கள் ஒரு நல்ல உலகத்தை உருவாக்கப் போகிறோம் என்றால் எங்களிடம் இருந்து ஆரம்பிப்பதைவிடச் சிறந்தது வேறில்லை. மீதி உலகத்தைப்பற்றிப் பேசத் தொடங்க இயலுவதற்கு முன் எங்களுடைய சொந்தக் கஷ்டங்களை எல்லாம் விட்டு நீங்கவேண்டும். நாங்கள் முழு உலகத்தையும் கருத்திற் கொள்கிறோம்; அதைவிடக் குறைந்த எதுவும் இல்லை. (நாங்களே எங்களைப் பராமரிக்க இடம் தரவேண்டாம்) நாங்கள் விரைவில் எங்களைப் போல விடுதலைக்காகப் போராடும் ஏனைய ஒடுக்கப் பட்ட மக்களுடன் கைகோர்க்கும் நிலையில் நாம் இருப்போம். எப்போதும் செயற்பாட்டுக்குத் தயாராக இருப்பது நல்லது.
சகல பெண்களும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கிறோம்; வெள்ளை இனப் பெண்களாக இருந்தால்கூட, குறிப்பாக வறிய வெள்ளை இனப் பெண்கள், விசேஷமாக இந்திய, மெக்சிகோ, பியூல்டோ ரிக்கா, கீழைத் தேய, அமெரிக்க கறுப்பினப் பெண்கள் (இவர்களின் ஒடுக்குமுறை மேற்குறிப்பிட்டுள்ள அனைத் துப் பெண் களினதும் ஒடுக் குமுறையை விட மூன்று மடங்கு அதிகமானது) இப்படி. ஆனால் நாங்கள் அனைவரும் பொதுவாக பெண் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், நாங்கள் ஏனைய பெண்களுடன் இந்தப் பொதுக்காரணியில் இருந்து கதைக் கலாம். அவர்களுடன் இணைப்புகளை தொடர்புகளை ஏற்படுத்தலாம். அதனூடாக அதன்மூலம் புரட்சிகர சக்தியைக் கட்டி எழுப்பி மாற்றலாம். நாங்கள் இப்போது திரட்டத் தொடங்கி இருக்கும் பெருந்தொகையை, இதைத்தான் DR. King செய்து கொண்டிருந்தார். நாங்கள் இன்னும் எங்களை இனவெறியின் போர்வையினால் ஏமாற்றப்படுவதற்கு அனுமதிக்கலாகாது. எந்த நேரத்திலும் வெள்ளை இன ஆண் எதற்காவது அனுமதித்தால், உங்களுக்குத் தெரியும் அவன் வேறு ஏதோ ஒன்றை மறைப் பதற்கு
<ఆక్షేత్ | முயலுகிறான் என்று. இந்த முழு உலகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிறுதொகையான மக்களினால் நாங்கள் எல்லோருமே சுரண்டப்படுகிறோம்/ சுரண்டலுக்குள்ளாகிறோம். வெள்ளை இன நடுத்தர வர்க்கத்தினர்கூட, உண்மையான விஷயத்தை மறைப்பதற்காக எங்களை இந்த இனவெறியின் ராட்சசப் பிடியில் ஒவ்வொருவருடைய தொண்டைக்குழியிலும் பிடித்து வைத்திருக்கிறார்கள். வெள்ளை இனத்தவர் மிகவும் இனவெறியர்களாக நிச்சயம் இருந்தபோதிலும் அவர்களும் இப்படியாகச் சிந்திப்பதற்கு திட்டமிட்டுப் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்களுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக, அவர்கள் எங்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பார்களாயின், அவர்களுக்கு யுத்தத்தின் கொள்கைகள் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கு நேரம் கிடையாது. இந்த அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல்கள் இப்படி மோசமாகப் போனதில் இருந்து அவர்களும் மீந்திருக்கும் எங்களைப்போல் பலமில்லாதவர்கள்தான் என்று. இதைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவேண்டாம்? இந்த மனிதன் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மரண விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். எங்கள்மீது விருப்பமில்லாமல் இருப்பதனால் அல்ல. இந்த மடையனுக்குத் தெரியும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று. ஏதோ ஒன்றில் (இதில் அல்லது அதில்) குறைவாகக் கரிசனம் கொள்ளலாம்.
ஆனால் ஒரு கணம் சிந்தியுங்கள். நாங்கள் எல்லோருமே ஒருமித்து நடந்தால், ஒருமித்து இயங்கினால், யார் அவனுடைய போரில் சண்டையிடுவார்கள்? யார் அவனுடைய நாட்டை ஆளுவார் கள் ? யார் 9| ഖ ഇ| ഞL L தொழிற்சாலைகளை இயக்குவார்கள்? யார் அவனுடைய உற்பத்திப் பொருட்களை வாங்குவார்கள்?
பெண் களாகிய நாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும்.
(pg56f(p5656) NO MORE FUN AND GAMES: A JOURNAL OF FEMALE LIBERATION (Feb. 1969) என்னும்சஞ்சிகையில் வெளிவந்தது)

Page 10
16
தலித் பெண்களுக்கு தனியே ஒரு அமைப்பு அவசியம் என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடுள்ளதா? அப்படியானால் பெண்கள் என்ற ரீதியில் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படுவது என்பது பொதுமையான அம்சமாக இருக்கும்போது மற்றைய பெண்ணிய அமைப்புகளும் தலித் பெண்ணிய அமைப்புகளும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய களங்கள் பற்றிய கருத்தியல் அடிப்படையில் பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் பிரிவாகவும் பெண்கள் அமைப்புகள் உள்ளன. இந்த எல்லா அமைப்புகளும் பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரச்சனைகளை முன்வைக்கின்றன என்று கூறமுடியாது. பெண் விடுதலை எந்த அளவு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் அமைப்புக்கு அமைப்பு வேறுபடுகின்றது. பெண்கள் அமைப்பு ஒரே வகையானது என்றும், தலித் பெண்கள் அமைப்பு, அமைப்புகள் மேற்கண்ட பெருவாரியான பெண்கள் அமைப்


Page 11
18
சென்றிருந்தேன். இயல்பாகவே கிராமத்திலுள்ள மகளிர் மன்றம் பற்றி விசாரிக்க நேர்ந்தது. ஊறுகாய், அப்பளம் செய்ய பிறருக்கு கற்றுத் தந்ததாகவும் கூடை பின்னுதல், பூவேலை செய்தல் இவற்றில் பயிற்சி பெற்றதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மான்யம் பெற்று பெண்கள் சுற்றுலா சென்று
சேரிக்குப் போகச் சொல்கிறீர்களா, அங்கே ரவுடிப் பசங்கள் கூட்டம் ஏற்கனவே மகளிர் மன்றத்தை எங்கள் வீட்டு ஆண்களின் எதிர்ப்பை மீறி நடத்தி வருகிறோம். இன்னும் சேரிக்குப் போய் கூட்டத்தில் கலந்து கொள்வதென்றால் எங்கள் ஆண்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.” என்று கூறி
தலித் பென்னியம் என்பது வர்க்க் சாதிபால் ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவரின் வாயிலாக உலகை நோக்கிசகலநிறுவனங்களையும் கேள்விக்குள்ளக்குவதே. ஒடுக்கப்பட்டவர்கள் என்று பார்க்கும் போது சகல விதத்திலும் போராட்டத்திற்கான தார்மீக அடிப்படையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்ே மையப்புள்ளிகள்தலித் பெண்களே இன்று அத்த× ・ , * கைய அடிப்படையைக் கொண்டிருக்கிறார்கள். தலித் பெண்கள்
எல்லோரும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றாலும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளக்குவதை நோக்கமாகக் கொண்ட உணர்வுற்ற தலித் பெண்களே மையப்புள்ளிகள் எல்லோரும் தங்களிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தைக் களைந்து கொள்ள ஏதுவாயிருக்கும். அதிகாரமற்ற வெற்றிடமே உணர்வுற்ற தலித் பெண்கள்தலித் பென்னியமும் அதுவே.
நிறுத்திக் கொண்டார்கள்.
வந்ததாகவும் அவ்வீட்டுப் பெண்கள்
தெரிவித்தனர்.
அக் குடும் பத்தலைவர் அந்த ஊர் பள்ளியின் தலைமையாசிரியர். அவரின் மைத்துனர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விவசாயத்துறை அலுவலர். இல் லத் தலைவி மகளிர் மன்றத் தலைவர். மகளிர் மன்றச் செயற்பாட்டுக்கு பரிற பெண்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். தலித் பெண்கள் முன்பு இந்தக் கூட்டங்களுக்கு வந்து கொண்டிருந்ததாகவும் எப்பொழுதும் கூட்டம், வேறு பொது இடம் கிடைக்காததால் அவர்கள் இல் லத்தில் நடந்ததாகவும் இப்போது தலித் பெண்கள் தனியாக மன்றம் வைத்துவிட்டார்கள் என்றும் வாயூறிப் போனார்கள். உண்மையில் மன்றச் செயல்பாடுகளில் அக்கறை இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கலாமே என்று கேட்டதும் 'பாம்பை மிதித்தது போல் கலவரப்பட்டுப் போனார்கள்”, “எங்களைச்
நகரப் பெண்கள் அமைப்புகள் நடத்திய பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவமும் உண்டு. அங்கு தலித் பெண்கள் வாய் திறக்க முடியாதவர்களா. கவும், அந்த அமைப்புகளின் பெருந்தன்மைக்கு (தலித் பெண்களை தமது அமைப்புகளில் சேர்த்துக் கொள்ளும்) உதாரணங்களாக மட்டுமே உபயோகிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளின் பெண்கள் பிரிவு நடாத்தும் பயாஸ் பிகாப்பு பற்றி கேட்கவே வேண்டாம். தலித் பெண்கள் வெறும் கொடி துாக்கும், கோஷம் போடும் இயந்திரங்களாகத் தாழ்த்தப்பட்டிருந்தனர்.
குடும்பம் என்பது ஆணாதிக்கம் செயற்படும் நிறுவனம் என்ற வகையில் குடும்ப அமைப்பு முறையை அல்லது ஒருதார மணத்தை எப்படி பெண்கள் எதிர் கொள்ளலாம் என்று கூறமுடியுமா? குடும்பம் என்பது தொடர்ச்சியாக நான்கு வடிவங்களைக் கடந்து வந்திருக்கிறது. இப்பொழுது உள்ளது ஐந்தாவது வடிவம் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

<خلیجیۓ تحت>
19
இந்த வடிவம் நிரந்தரமா என்ற கேள்வி எழுகிறது. ைெண், ஆண் சமத்துவம்
முழுமையாக சாதிக்க்கப்படுகிறவரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக் கொள்ளலாம். நெடுந்துார எதிர்காலத்தில் ஒருதாரமணக் குடும்பத்தினால் சமுதாயத்தில் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாமற் போனால் அதற்குப்பினானல்
வரப்போகின்றவற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது எனும் மார்கினின் கூற்றை இங்கே நினைவு கூர்கிறேன்.
காதல், கற்பு, தாய்மை, குடும்பம் ஆகிய எல்லாமே அதிதமான புனைவுகளால் நிரப்பப் பட்டுள்ளன. வர்க்க சாதி அரசியல் இந்தப் பதங்களின் மீது ஏற்றி வைத்திருக்கும் சுமைகளைக் குறைத்தாலே போதும் நாம் இலகுவாகிவிடுவோம். ஒருதார மணம் ஒழுக்கவிதியாக நிர்ணயிக்கப்பட்ட சமுதாயத்தில் பெண்கள் எந்தவிதக் கருணையையும் எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள கருத்தாக்கங்களின் சிதைப்பில் மீறல்கள் நடந்தேறும். "தேசியம்' போன்ற கற்பிதங்களும் தகர்க்கப்படும் ஒருதாரமணம் வன்முறையை உள்ளடக்கிய சமுதாயம் ஒப்பந்தம் என்றும் அது மானுடவிடுதலைக்கு எதிரானது என்று புரிந்து கொண்டால் போதுமானது. குடும்பத்தின் மீதான விசுவாசம் கொஞ்ச. மாவது குறையும். 'குடும்பம் இன்னும் அதை யொட்டிய எல்லா நிறுவனங்களையும் தனிமனித சுதந்திரம், சகமனிதனுடனான சமூக உறவு என்பவற்றின் அடிப்படையில்
கேள்விக்குள்ளாக்குவது தான் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் செய்யக் கூடியது.
சாதியும் பாலியலும் சந்திக்கும் புள்ளியில் பெண் ஒடுக்குமுறையை அடையாளம் காண்பது எந்தளவில் சரியானது என்று உங்களல் விளக்கமுடியுமா? எல்லா சாதிகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது சாதிகள் தொடர்ந்து நீடிப்பதற்கான நியாயத்தை வழங்கிவிடுமா? சாதி ஒடுக்கு முறையாளர்கள், தாங்கள் பெண் என்பதால் ஒடுக்கப்படுகிறோம் என்கிறார்களே அது எந்த தர்க்க நியாயத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது? ஒரே சமயத்தில் வேடனாகவும் வேட்டைப் பொருளாகவும் இருப்பது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது? தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவன் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சனையை இனங்காணுவது எப்படி சாத்தியம்? சாதி ஒடுக்குமுறைக்கான போராட்டத்தைக் கையில் எடுக்காதவரை பெண் ஒடுக்கு முறையை அடையாளம் காண்பது கூட சாத்தியமில்லை.
இன்று சில பெண்ணியம் பேகம் ஆண்கள் குடும்பக் கலைப்பை முன் வைக்கின்றார்கள். ஆனால் சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான மதிப்பீடுகள் மாற்றத்திற்குட்படாத நிலையில் குடும்பக்கலைப்பை முன்வைப்பது என்பது பென்களை இன்னமும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிடுமல்லவா? ஆண்கள் பெண் ணியம் பேசட்டும், ஆதிக்கத்தின் இன்னொரு அவதாரமாக மாறாத வகையில். குடும்பம் என்பது சொரணையுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சிறையே என்பார் பெரியார். பெண்களைப்பற்றிய கருத்தாக்கங்கள் மாறும்போது குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற வாதம் ஆபத்தானது. வளர்ந்து வருகின்ற மேலை நாடுகளில் திருமணமின்றி தனித்து வாழ்கின்ற பெண்கள்

Page 12
20
பாதுகாப்பற்றவர்களாக உணர்வதில்லை என்பதும், பாதுகாப்பு குடும்பத்தை அடிப்படை யாகக் கொள்ளாமல் வேறு பலவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதைத் தானே விளக்குகிறது. மேலும் புராதன சமுதாயம் குழுமண முறையிலிருந்து குடும்பம் என்ற சிறு அலகுக்கு நகர்ந்தது
பெண்களின் பாதுகாப்பைக் கருதியா?
குழந்தை பெறுவது என்பது ஒரு பெண்னின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடைபெறுவதுஇல்லை இனவிருத்திக்கான வெறும் இயல்பூக்கமாகவே தொன்று தொட்டு வருகின்றது இதைப்பேனும் வகையில் கருச்சிதைப்பை ஒரு சிகக் கொலையாக உருவகிப்பதில் மரபுரீதியான மதவழிப்பட்ட சிந்தனையும் துணை போகிறது என்று கூறப்படுவது பற்றி? குழந்தை பெறுவது என்பது ஒரு பெண்ணின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடைபெறுவது இல்லை இனவிருத்திக்கான வெறும் இயல்பூக்கம் என்பது உண்மை தான், எனினும் இனவிருத்தி என்பது வெறும் இயல்பூக்கமானதாக இருந்தால் மிருகங்களைப் போல மனிதர்களும் மிக அரிதாகவே பாலுறவில் ஈடுபடுவர். இயல்பூக்கத்தோடு அறிவும் சம்பந்தப்பட்டிருப்பது தான் நமது பிரச்சனை. (மனிதக்குரங்கு போன்ற விலங்கினங்கள் பாலுறவை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதை சமீபத்தில் டி.வியில் பார்த்தேன்) எப்போது அறிவு இனவிருத்தியோடு கொண்டதோ அப்போதே அது கேளிக்கைகளாகவும் வன்முறையாகவும் உருக்கொண்டது. நமது சூழல் இன்று அத்தகைய கேளிக்கைகளாலும், வன்முறையாலும் நிரம்பிப் போயிருக்கிறது. குழந்தை பெறுவது அல்லது பெற்றுக்கொள்ளாமலிருப்பது அல்லது கருச்சிதைவு என்பது இன்று உடல்நலம் மற்றும் தேவையின் அடிப்படையில் தான் பார்க்கப் படுகிறதேயன்றி சிசுக்கொலை' என்று வர்ணிக்கும் மதபோதகத்தை மறந்தாயிற்று என்று நினைக்கிறேன். இயற்கையான இயல்பூக்கங்கள், கேளிக்கை - வன்முறைத் துாண்டல்கள், இனவிருத்தி என்பவை
<ಿತ್ತು இன்னும் ஆழமாக விவாதிக்க கூடிய பொருள்கள் என்று நினைக்கிறேன்.
குடும்ப அமைப்பு முறையினுள் பாலியல் உந்துதல்கள் மீது மிகக் கடுமையான ஒழுக்கவிதிகள் கடைப்பிடிக்கப்ட்டுவரும் வேளையில் ஆண்மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துகளுக்குச் சவாலாக ஓரிணப்புணர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுவது பற்றியும், பாலியல் ஒழுக்கவிதிகள் அப்படியே நிலவ லெஸ்பியன் உறவு ஆணாதிக்கத்தால் கேலிக்குரிய செயற்பாடாக உருவகிக்கப்படும் சாத்தியம் பற்றியும் என்ன கூறுகிறீர்கள்??
ஓரினப்புணர்ச்சியாளர்கள் ஆண் மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துக்களுக்குச் சவாலாக செயல்பட்டு வருகின்றனர் என்பதன் அடிப்படையில் பெண்ணியம் பற்றி பேசும் ஒவ்வொருவரும் இதன் மீது கருத்துத் தெரிவிக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சூழலையொட்டியும் இக்கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது. ஓரினப்புணர்ச்சியிலும் ஒருவர் தன்னை ஆணாகவும் மற்றொருவர் தன்னைப் பென்ணாகவும் வரித்துக் கொள்கிறார்கள் என்றும் ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்று பாலியல்விதி கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவம் கேள்விப்பட நேர்ந்தது. பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் ஒருதாரமணத்தை வன்முறையென வரையறுக்கும்போது ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்பதை ஆணாதிக்க கருத்துக்கு எதிரான செயல்பாடாக எப்படிக் கொள்வது? அவர்களும் தேவாலயங்களில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கென குழந்தை" களை தத்து எடுத்துக் கொண்டு சொத்து சேர்த்துக்கொண்டு. இதுசவாலா அல்லது அவர்கள் தங்களது தனிவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள சங்கடங்களா? ஓரினப்புணர்ச்சி இப்போதைய பாலியல் ஒழுக்க விதிகளின் மீறல் என்றளவில்தான் புரிந்து கொள்ள முடிகிறது. ஓரினபுணர்ச்சியாளர்க

2
ளின் நடவடிக்கையின் விபரங்கள் முழுவதுமாகத் தெரியாத நிலையில், அதை நீங்கள் வசிக்குமிடங்களில் உள்ளவர்கள் தொகுத்
தால் நன்றாயிருக்கும்.
தலித் பெண்ணியம் சம்பந்தமாக சிறு விளக்கம் ஒன்றை எமது சக்தி வாசகர்களுக்காக தர முடியுமா? பெண் ஆண் உடல் ரீதியான வேறுபாடுக ளும் அது சம்பந்தமான அவர்களது உளவியலும் இருவருக்குமான ஒத்திசைவிற்காக இயற்கையின் படைப்பு என்ற புரிதல் பெண் ஆண் குணாம்சங்கள் பற்றிய பல்வேறு புனைவுகளை அகற்றுகிறது என்பது ஒருபுறமிருக்க, தலித்பெண்ணியம் என்பது ஆணாதிக்க மனித குலத்தின் சரிபாதியை ஒடுக்கி வைத்ததால் ஏற்பட்ட சீரழிவை இருவரின் நலன் கருதி இருவரின் சுதந்திர வாழ்வுக்குமானதாக வளர்த்தெடுப்பதே ஆகும். தலித் பெண்ணியம் என்பது வர்க்க, சாதி, பால் ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவரின் வாயிலாக உலகை நோக்கி சகல நிறுவனங்களையும் கேள்விக் குள்ளாக்குவதே. ஒடுக்கப்பட்டவர்கள் என்று பார்க்கும் போது சகல விதத்திலும் போராட்டத் திற்கான தார்மீக அடிப்படையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்களே, மையப் புள்ளிகள் தலித் பெண்களே இன்று அத்தகைய அடிப்படையைக் கொண்டிருக்கிறார்கள். தலித் பெண்கள் எல்லோரும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றாலும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்ட உணர்வுற்ற தலித் பெண்களே மையப்புள்ளிகள். எல்லோரும் தங்களிடம் குவிந்திருக்கும் அதிகாரத்தைக் களைந்து கொள்ள ஏதுவாயிருக்கும். அதிகாரமற்ற வெற்றிடமே உணர்வுற்ற தலித் பெண்கள் தலித் பெண்ணியமும் அதுவே. பெண் ஒடுக்குமுறைக்கெதிரான சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை நடத்திச் செல்லவேண்டியவர்கள் அவர்களே. இது தகுதி அடிப்படையினாலல்ல. ஆதிக்க மனோபாவத்தையும் அதன் புறக்காரணிகளையும் வென்றெடுக்கும் விதமாகத்தான்
లాక్5 ஏனைய அமைப்புக்கள் இவர்களுடன் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
கடந்த 29 30 யூலை மாதங்களில் பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டீர்கள் இச்சந்திப்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததா? சந்திப்பு பற்றி சிலவார்த்தைகள் சொல்ல முடியுமா? பிரான்சில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு தலித்பெண்ணியத்தை மையப்படுத்தி அமைந்தது வியப்பளித்தது. பின்நவீனத்துவம், தலித்தியம் பற்றி விவாதங்களை அ.மார்க்ஸ் அங்கே தொடக்கிவைத்தது ஒரு காரணம். மேலும் பல்வேறு புலம்பெயர்ந்த தமிழர்களின் பத்திரிகைகள் இதைக் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு வருவதும் காரணமாயிருக்கலாம். பெண்கள் திறந்த மனதுடன் தங்கள் கருத்துக்களை அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டது தமிழ்ச் சூழலுக்கு வித்தியாசமானது. தமிழகத்துப் பெண்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பனெண்கள் பெண்விடுதலைப் பற்றி அக்கறையும் புரிந்துணர்வும் கொண்டவர்கள் என்பதைக் குறித்துக் கொண்டேன். மிகவும் எளிமையாக, ஆடம்பரமின்றி ஜனநாயக முறையில் நடந்தது கூட்டம். அமைப்பாளர்க" ளுக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வட்டங்கள் வரைபவர்களுக்கு சொல்லப்பட்டது படுகின்றது கேட்கவிலஇலை கேட்கமாட்டேன் அடிக்கப்பட்டது படுகின்றது தடுக்கப்பட்டது படுகின்றது சுற்றிச் சுவர்கள் உடைக்கப்பட்டது படுகின்றது நடக்க மறுக்கப்பட்டது படுகின்றது ஒடப்பட்டது படுகின்றது தர்மினி ஜேர்மன்(ஸ்டுட்கார்ட்)

Page 13
22


Page 14
24 ల్కాకేు
பெனர்களும் உலகமும்
புள்ளிவிபரங்கள்
பெண்களும் படுகிறது தொழில்நுட்பமும் மொரோக்கோவில் இளைய
எப்போதும் இல்லாதமாதிரி அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொடர்பு DGTILabib Q60D600Tuulub (Internet).
1998இல் உலகில் 27% மான இணையப் பாவனையா ளர்கள் பெண்கள்.
2001ம் ஆண்டில், 700 மில்லியன் பெண்கள் இணையத்தைப் பாவிப்பவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாமாக முன்னைவிட 150 மில்லியன்பேர் அதிகமாக இணையத்தைப் பாவிப்பார்கள் என்றும் அதில் 50% பேர் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணையப் பாவனையாளர்களில் 70% மானவர்கள் ஐரோப் பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் உள்ள பாவனையாளர்களில் அமெரிக்காவில் மட்டும் 1/3 பங்கினர் இருக்கிறார்கள். (300 மில்லியன் பாவனையாளர்களில் 110 மில்லியன் பேர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டிருக்கிறார்கள். 2 மில்லியன் பேர் மத்தியகிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள்)
அரபுநாடுகளில் உள்ள இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. 2003ம் ஆண்டில் 12 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரபு உலகத்தின் இணையப் பாவனைச் சமூகம் ஆண்களினால்தான் பிரதிநிதித்துவப்படுத்தப்
நன்கு கல்வியுட்டப்பட்ட ஆண்களில் 32000க்கும் மேற்பட்டவர்கள் இணையப் பாவனையாளர்களாக இருக்கிறார்கள்.
லெபனானின் இணையத் தொடர்பு 1999இல் 60மூக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெண்கள் ஆண் களைவிட மிகக்குறைவான நேரத்தைத் தான் இணையத்தில் செலவழிக்கிறார்கள்.
இணையத்தளங்களில் 80% மானவை ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால் உலக சனத்தொகையில் 10% க்கும் குறைவானவர்களே ஆங்கிலமொழி பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.
அரபுநாடுகளில் உள்ள இணையப் பாவனையாளர்களில் 6% மானவர்கள் மட்டுமே பெண்களாவர். சீனாவில் 7% மானவர்களும் தென் ஆபிரிக்காவில் 17% மானவர்களும் யப்பானில் 17% மானவர்களும் அமெரிக
'காவில் 38% மானவர்களும் பெண்களாவர்.
பெண்களும் அரசியல் தலைமையும்
உலகத்தில் உள்ள 180க்கு மேற்பட்ட
நாடுகளில் 9 நாடுகளில் மட்டுமே பெண்கள்
தலைவர்களாக இருக்கிறார்கள்.
ஹெலன் கிளார்க் - நியூசிலாந்தின் பிரதம மந்திரி தார்ஜா ஹலோனெல் - பின்லாந்தின் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க - றிலங்காவின் ஜனாதிபதி மேரி மக்கலிஸ் - அயர்லாந்தின் ஜனாதிபதி மிரேயா மொஸ்கொஸோ - பனாமாவின் ஜனாதிபதி சுசி ரோமர் - யுவெடைடநள இன் பிரதமமந்திரி
 
 
 
 
 
 
 
 

25
ஜெனிபர் ஸ்மித் - பெர்முாவின் பிரதம மந்திரி வைராவைக்பிரைபேக்கா - லத்வியாவின் ஜனாதிபதி ஷேக் ஹசினா வாஜெட் - பங்களாதேஷின் பிரதம மந்திரி
மிகவும் அடிப்படையான மனித உரிமைகளில் முடிவுகள் எடுப்பதற்கு பெண்களின் குரல்களோ அன்றி அதிகாரமோ மறுக்கப்பட்டுள்ளது. அதாவது எப்பொழுது கருத்தரிப்பது, கல்வி பெறுவது, அல்லது வேலைக்குப் போவது. இப்படியான விஷயங்களில்.
வளர்முக நாடுகளான ஆர்ஜன்டீனாவில் 27.6%, வியட்நாமில் 26% நமீபியாவில் 22.2முமான பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். மறுபுறம் பார்த்தால் பொருளாதாரரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பானில் முறையே 13.3% 10.9%, 4.6%மான பெண்கள் பாராளுமன்றத்தில் அங்கத்தினராக உள்ளனர்.
உலகம்முழுவதிலும் உள்ள பாராளுமன்றங்களில் 13மூமானவர் மட்டுமே பெண்கள். இரண்டாவது உலகயுத்தத்திற்கு முன்பு, ஒஸ்திரியா மட்டுமே பாராளுமன்றத்தின் சட்டசபைக்கு ஒரு பெண்ணைத் தெரிவு செய்த ஒரே ஒரு நாடாகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் 178 பாராளுமன்றங்களில் (அதில் 66 இரு சட்டசபையுள்ள) 23 இற்கு பெண்கள் தலைமை தாங்கி இருக்கிறார்கள்.
சுவீடன் நாட்டில்மட்டும்தான் ஆண்களுடன் அண்ணளவாகச் சமனான அளவில் பெண்கள் (43%) மந்திரிப் பதவிகளில் இருக்கிறார்கள்.
ஐக்கியநாடுகள் சபையின் பின்லாந்து, கினியா, ஜமேக்கா, கலாக்ஸ் தான், கிரிகிஸ்தான், லிபேரியா, வீக்டென்ஸ்ரைன், சோமாலியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மட்டும் பெண்கள் வெளிநாட்டுத் தூதுவர்களாக இருக்கிறார்கள். மந்திரிகளாகப் பெண்கள் பதவி வகிக்கும் துறைகள் , ஏனைய துறைகளுடன்
cas ஒப்பிடும்போது, அநேகமாக சமூகசேவை சம்பந்தமானதாகத்தான் இருக்கின்றன.
சமூகசேவை (14%) சட்டத்துறை (9.4%) பொருளாதாரத்துறை (4.1%) அரசியல் விவகாரங்கள் executive 3.9%
(3.4%)
உலகத்திலுள்ள சட்டசபை மந்திரிகளில் 7மூமானவர்கள் பெண்கள்.
1893ம் ஆண்டில் நியூசிலாந்து பெண்களுக்கு வாக்களிப்பதற்கான முழு உரிமையையும் கொடுத்த முதல் நாடாகின்றது.
நீண்ட காலத்திற்கு முன்பே பெண்களிற்கு வாக்குரிமை அளித்த வளர்முகநாடுகள்:
பின்லாந்து (1906), அல்பானியா (1920), LDIE (335m suum (1924), Ecuador (1929), துருக்கி (1930), றீலங்கா (1931).
மிக அண்மையில் வாக்குரிமை கொடுத்த
நாடுகள்: சுவிற்சர்லாந்து (1971), ஈராக் (1980), நமீபியா (1989), கலாக்ஸ்தான் (1994).
21ம் நூற்றாண்டில் சில நாடுகள் இன்னும் சர்வதேசரீதியான வாக்குரிமை இல்லாதிருக்கின்றன. அவற்றில் சில: புரூனே தாருசலாம், குவைத், ஓமான், சவூதி அராபியா, ஐக்கிய அரபுக் குடியரசு.
பெண்களுக்கெதிரான சகலவிதமான வித்தியாசப்படுத்தல்களின் ஒழிப்புக்கான Qi Juyb5lb (Convention of the elimination of All Forms of Discrimination Against Women - CEDAW) 66njoypas BIT(656fai) CEDAW இல்லாத நாடுகள் - பாஹற்ரெயின், பலஸ்தீனம், கட்டார், சவூதி அரோபியா, ஒமான், சிரிய அரபுக் குடியரசு, ஐக்கிய அரபுக் குடியரசு, தொழில்மயப்படுத்தப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மட்டும் தான் CEDAWவைப் பிரயோகிக்காத ஒரேயொரு நாடு.
பெண்களும் சட்டமும் தாங்களாக இயங்குவதற்கு, அவர்க

Page 15
26
ளுடைய குழந்தைகளின் விருப்புகளை
நிறைவேற்றுவதற்கு பெண்களுக்கு அறிவு,
வாய்ப்புகள், சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டுள்ளன.
உலகில் உள்ள பெண்களில் பெரும்பான்மையானவர்கள், ஆண்களிற்குச் சமனான அடிப்படையில் ஒரு உடைமையை அல்லது சொத்தை சொந்தமாக்கவோ, பரம்பரைச் சொத்தாக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. 1990களில் தேசிய சட்டங்களை ஆக்குபவர்களில் 13% மானவர்கள் மட்டுமே பெண்கள். இதன் அளவு 1970களில் 11மூமாக இருந்தது.
பிலிப்பைனில் பாலியல் பலாத்காரம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு 9 வருடங்கள் எடுத்தன.
பெண்களும் கல்வியும் 855 000 000 பேர் உலகத்தில் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இதில் 70%மானவர்கள் பெண்கள். உலகத்தில் உள்ள பிள்ளைகளில் மூன்றில் இரண்டு பங்கு பெண் பிள்ளைகள் 4 வருடங்களிற்கும் குறைவான கல்வியைப் பெறுகிறார்கள். பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளில் கிட்டத்தட்ட 60மூமானவர்கள் பெண்பிள்ளைகள்.
உலகம் முழுவதிலும் 15வயதிற்கு மேற்பட்ட பெண்களில் அரைவாசிப்பேருக்கு மேல் வாசிக்கவோ எழுதவோ தெரியாது.
ஒவ்வொரு வருடமும் 4ம் வகுப்பிற்கு மேல் ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும்போது,
குடும் பத்தின் அளவு 20%த்தால் குறைகின்றது.
குழந்தை குறைகின்றது.
வருமானம் 20%த்தால் கூடுகின்றது.
மரணம் 10%த்தால்
அப்படி இருந்தும் கல்விக்கான சர்வதேச உதவி குறைந்து கொண்டு வருகின்றது.
లాg5 பெண்களும் உடல்நலமும் குடும்பமும் உலகளாவியரீதியில் ஆண்களைவிட அதிகளவான பெண்கள் உணவுக்குறைவால் சாப்பாடின்மையால் துன்புறுகிறார்கள்.
600 000 பெண்கள் - நிமிடத்திற்கு ஒரு பெண் - ஒவ்வொரு வருடமும் கருத்தரிப்பு சம்பந்தப்பட்ட காரணத்தினால் மரணிக்கிறார்கள். இந்த மரணங்களில் அநேகமானவை தடுக்கப்படக்கூடியவை.
பிள்ளைகளில், பெண் பிள்ளைகள் குறைவாக (கீழாக) மதிக்கப்படுவதனால் குறைவான உணவைப் பெறுகின்றார்கள். போதுமான அளவு உணவோ அல்லது உடல்நலப் பாதுகாப்போ இல்லாமல் இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள பெற்றார். கருவில் குழந்தை இருக்கும்போதே என்ன குழந்தை (ஆணா/ பெண்ணா) எனத் தீர்மானிக்கும் பரிசோதனையைச் செய்கிறார்கள். பம்பாயில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கரு அழிப்புச் செய்யப்பட்ட 8000த்தில் 7999 கருக்கள் பெண்குழந்தைகள். ஆபிரிக்காவில், HIVஆல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் ஒரு ஆண்பிள்ளைக்கு 6 பெண்பிள்ளைகள் வீதம். பெண்கள் சம்பிரதாய பூர்வமாக, குடும்பத்தில் உள்ள அனைவரையும் விடவும் கடைசியாகவும் குறைவாகவும் சாப்பிடுகின்றார்கள். அவர்கள் கருத்தரித்திருக்கும் நேரத்திலோ அல்லது பாலூட்டும் வேளையி லோகூட சாப்பிடுவதற்கு அதிகம் கிடைப்ப தில்லை.
HIV/AIDS பாதிப்புக்கு உள்ளாகி
இருப்பவர் களில் அரைவாசிப் பேர் பெண்களும், பெண்பிள்ளைகளுமாவர்.
1999ம் ஆண்டில் 15 வயதிற்கும்
குறைவான 5100 000 குழந்தைகள் HIV/ AIDS இனால் இறந்தனர். இன்று அண்ணளவாக 15 வயதுக்குக் குறைவான 1.2 மில்லியன் பிள்ளைகள் HIV/AIDS உடன் வாழ்கிறார்கள்.

27
சில நாடுகளில் 15-19வயது வரையிலான பிள்ளைகளில் ஆண்பிள்ளைகளைவிட 36மடங்குவரையிலான பெண்பிள்ளைகள் ஒவ்வொருநாளும் 7000 இளைஞர்கள் HIV/ AIDSஇனால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்களும் வேலையும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் பெண்ணின் ஊதியம் ஆண்களின் ஊதியத்திற்குச் சமமானதாக இல்லை. இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பெண்கள் ஆண்களின் சம்பளத்தில் 75% த்தையே பெறுகிறார்கள். அதேநேரத்தில் வியட்நாம், ரீலங்கா, தன்சானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெண் கள் ஆணி களின் ஊதியத்தின் 90மூத்தைப் பெறுகிறார்கள்.
பெண்கள் குடும்பத்திற்கு உணவளிக்கிறார்கள். தண்ணிர் சுமக்கிறார்கள். எரிபொருள் சேகரிக்கிறார்கள் இவைகள் எதுவும் வேலையாகக் கணக்கெடுக்கப்படுவதில்லை. 90மூமான கிராமிய பெண் தொழிலாள சக்தி வீட்டுத்தலைவி(?) (housewife) என்று அழைக்கப்படுகின்றது. பொருளாதார செயற்பாட்டின் சம்பிரதாய வரைவிலக்கணத்தில் இருந்து தவிர்க்கப்படுகின்றது.
பொருளாதாரரீதியான வளர்முக நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வாரம் ஒன்றுக்கு பெண்கள் 35 மணித்தியாலம் ஆண்களைவிட அதிகமாக உழைக்கின்றார்கள்.
உலகத்தில் உணவின் 80%த்தைப் பெண்கள் உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் 10%த்திற்கும் குறைவான விவசாய உதவிகள் தான் அவர் களுக்குக் கிடைக்கின்றது.
வியாபாரநிறுவனத்தின் உயர் பதவி நிலைகளில் 2%மான பெண்களே இன்னும் இருக்கின்றார்கள்.
பெண்களும் பணமும் உலகத்தின் ஆஸ்திகளில் 1%மட்டுமே பெண்களின் பெயரில் உள்ளது.
లక్షేత్ | வறுமைக் கோட்டுக்குக் கீழே (ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கும் குறைவாக கிடைப்பவர்களில்) இருப்பவர்களில் 70%மானவர்கள் பெண்கள்.
உலகம் முழுவதிலும், உயர் நிலைகளிலும் உயர் ஊதியத்தைப் பெறும் தொழிற்துறைகளிலும் மிகக்குறைவான பெண்களே பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தான் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்னேறிய நாடுகளை எடுத்தால் பிரான்ஸ் (9%), நெதர்லாந்து (20%) மான பெண்கள்தான் நிர்வாகிகளாகவோ இயக்குநர்களாகவோ இருக்கிறார்கள்.
அமெரிக்காவில், பெண்ணின் தலைமையிலான குடும்பங்களில் 1/3 பங்குக்கும் கூடியவை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கின்றன.
சிலிக்கன் பள்ளத்தாக்கில் 100ஆணுக்கு ஒரு பெண் உடைமையாளராக இருக்கின்றார். பெண்களும் பாலியல் வன்முறையும்
உலகளாவியரீதியில் பெண்களில் உடற் காயங்களிற்கும்/மரணத்திற்கும் முன்னணிக் காரணியாக இருப்பது குடும்பத்திற்குள் நிகழும் வன்முறைதான்.
குடும்பத்தில் சக ஆணினால் அனுபவிக் கும் கொடுமைகளை 100இற்கு ஒரு பெண் தான் அமெரிக் காவில் முறைப் பாடு செய்கிறார். ஒவ்வொரு 9 செக்கன்களுக்கு ஒரு பெண் தனது சக ஆணினால் சித்திரவதைப் படுத்தப்படுகின்றார்.
ஒவ்வொரு நாளும் 6000 பெண்பிள்ளைகள் பாலுறுப் புச் சிதைவிற்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5000 மணப்பெண்கள் சீதனப்பற்றாக்குறையை காரணம்காட்டி கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலைசெய்து கொள்கிறார்கள். ரஷ்யாவில் கொலைசெய்யப்பட்ட பெண்களில் அரைவாசிப்பேர் அவர்களுடன் வசித்து வரும் சக ஆணினால் கொலை செய்யப்பட்டவர்களே.
தென்னாபிரிக்காவில் 80 செக்கன்களிற்கு

Page 16
28
లాక్5
ஒரு தடவை ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள்.
அமெரிக்காவில் ஒரு பெண்ணினுடைய வாழ்நாளில் ஐந்து செக்கன்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத் தப்படுகிறாள். ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள்.
மணிலாவில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்காக முறையீடு செய்கிறாள். பிள்ளைப்பருவத்தில் இருக்கும் பெண்களில் 1/3 பகுதியினர் டியசடியனழள, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் பாலியல்ரீதியான பலவந்தங்களிற்கு உள்ளாகிறார்கள்.
59%மான ஜப்பானியப் பெண்கள் குடும்ப வன்முறைக்கள்ளாகிறார்கள். கெள்யாவில் 43%மான பெண்களும் பாகிஸ்தானில் 80%மான பெண்களும் வீட்டினுள்ளேயே வன்முறைக்குட்படுகின்றார்கள்.
பெண்களும் மனிதப்பாதுகாப்பும்
போரின் நாசங்களை அனுபவிப்பவர்களில் முக்கால வாசிப் பேர் பெண் களும் சிறார்களுமாவர்.
சண்டையின்போது அல்லது முரண்பாடுகளின்போது அந்தக் காலங்களில் பெண். களும் சிறார்களும்தான் பலவந்தப்படுத்தப்பட்ட கட்டாய சேவகத்திற்கும் அடிமைத்த னத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
உலகத்தின் 75%மான அகதிகளும், உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களும் , தங் களது குடும் பங்களையும் இருப்பிடங்களையும் இழந்தவர்கள் பெண்களே.
முன்னாள் யுகோஸ்லாவியாவில் 20 000 பெண்களும் பெண்பிள்ளைகளும் போரின் ஆரம்பகாலங்களில் பலவந்தப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
5566): Women's Learning Partnership 27/09/2000)
காலை மடித்து ஐயோ என்று கதறுமுன் வலுவிழந்துகுடல் சுருங்கி உடல் முறிந்து பயத்தால் இறக்கப் போகும்
அந்த கணம் வெட்கி தலைகுனிந்து தோல்வியை உன் கையில் ஏந்தி தீயினால் உன் உணர்வை 搬 எரிக்கும்
அர்த்தமிழந்து போய் நீயே உன் ஆத்மாவை
எவரால் நீ தோற்கடிக்கப்பட்டாய்? எதற்காக தோற்கடிப்பட்டாய்
கயவர்களினதும் சுயநலக்காரர்களின் நலன் பாதுகாப்பதற்காக?
இதயமற்ற இவர்களின் நியாயங்கள் ஜெயிப்பதற்கா?
இல்லை போலியான
இவர்களை பலப்படுத்துவதற்கா?
வாழ்வும் போராட்டமும் உனது
யாயம்அற்ற தோல்விகளால்
நற
தோற்றுவிடக்கூடாது நீ தோற்றுப்போகக்கூடாது.
பாமதி - 12.01.0
 
 
 
 
 
 
 

29
கடிதம் :
159 AV. Henri Barbusse 93700 Drancy FRANCE
16.02.2001
அன்புடன் சக்திக்கு,
இரண்டாவது தசாப்தத்தில் காலடி வைக்கும் சக்திக்கு என் வாழ்த்துக்கள்.
சக்தி பெண்ணிய சுதந்திரத்துக்காகவும் பெண்களின் உரிமைகளிற்காகவும் குரல் கொடுக்கும் ஒரு சஞ்சிகை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நான் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
சமீப காலங்களில், புகலிட இலக்கியக் கூட்டங்களில் (பாரீஸ்) கலந்து கொள்ளும் ஆண்களிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றும்போது பெண்களைப் பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் பாலியல் நிந்தனைச் சொற்களை அவர்கள் பயன்படுத்தும் போக்குக் காணப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது
உதாரணமாக, கடந்த 04.02.2001 அன்று பாரீஸில் நடைபெற்ற "சனதருமபோதினி" என்ற புத்தக வெளியீட்டுவிழாவிற்குச் சென்றிருந்தேன். இப் புத்தகத்தை தேவா ஹெரால்ட் வெளியிட்டு வைக்கிறார் என்பதும் நான் அங்கு விரும்பிச் சென்றதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். அங்கு சென்றபோது நிலவிய சூழல் எனக்கு மிகவும் அந்நியப்பட்டதாக இருந்தது. நான் சாதாரண பெண். எனினும் பெண்ணிய சிந்தனைகளிலும் ஆர்வமும் தேடலும் உள்ளவள். இக்கூட்டம் எனது தேடலுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதினேன். ஆனால் அங்கு நடந்த சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியையும் மனவேதனையையுமே தந்தது. அங்கு கருத்துப் பரிமாற்றத்தின்போது பெண்களை இழிவுபடுத்தும் பாலியல் நிந்தனைச் சொற்கள் சரளமாகப் பாவிக்கப்பட்டது
లాక్5 எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் மனவேதனையையுமே தந்தது. எவரும் இதுபற்றி எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. நான் இதுபற்றிக் கதைக்க விரும்பியும் அங்கிருந்த சூழல் பயனற்றதென்பதால் நான் மெளனமாக இருந்து விட்டேன். என் மனநிலைதான் மற்றவர்களுக்கும் இருந்திருக்கமுடியும் என்று நினைக்கிறேன்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட "சனதருமபோதினி" சஞ்சிகை சிறப்பான படைப்புகள் பலவற்றைக் கொண்டிருந்த போதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாருநிவேதிதா எழுதியிருந்த "உன்னதசங்கீதம்" என்னும் சிறுகதை பெண்களை பாலியல்ரீதியாக மிகவும் கொச்சைப்படுத்தும் கதையாக இருந்தது கவலை தருகின்றது. அத்தோடு இப்புத்தகத்தை வெளியிட்டு வைத்த தேவா ஹெரால்ட்டும் இக்கதை தொடர்பாக எந்தவித விமர்சனங்களுமின்றி வெளியிட்டு வைத்தது இன்னும் கவலை தந்தது.
இப்போதெல்லாம் பெண்ணியம் பேசிக் கொண்டு பெண்களைப் பாலியல்ரீதியில் இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதுபற்றி சக்தி கவனம் கொள்வது அவசியம்.
இக்கூட்டம் மனதைக் கவலைகொள்ள வைத்தாலும், அங்கு நிறைவேற்றப்பட்ட சாதிசொல்லி வெளியிடும் திருமண விளம்பரங்களை நிராகரிக்கக் கோரி பத்திரிகைகளுக்கு அனுப்ப எடுக்கப்பட்ட தீர்மானம் எனக்கு சற்று மனஆறுதலைத் தந்தது. இவ் வாறான நல் ல நடவடிக்கைகள் கூட மதுபோதைகொண்ட செயல்களினால் மதிப்பிழந்து வருவதை புகலிட இலக்கிய ஆர்வலர்கள் கவனத்திற் கொள்வது அவசியம். இது தொடர்பாக புகலிட சிறு சஞ்சிகைகள் தங்களின் கருத்துக்களை பகிரங்கமாக முன்வைப்பதும் அவசியமும்கூட.
பிரியதர்ஷினி
பிரான்ஸ்

Page 17
30
లక్షేత్ |
ஆலகாலவிசங்கள்
கிழவி மீண்டும் ரெலிபோன் கார்ட்டுக்களை
எண்ணிப் பார்த்தாள். போன கிழமையும் இப்படித்தான் பத்துக் கார்ட் குறைந்தது. ஏத்தனை கார்ட்டுகள் விற்க்ப்பட்டுள்ளன எத்தன இருப்பரில் உள்ளன என்று எழுதியிருக்கும் கணக்குப் பத்தகத்தை தேடி எடுத்தாள். அதில் எழுதியவைகளில் காசு தரப்பட்டவை, கடனில் நிற்பவை என்று எல்லாவற் றறையும் கூட் டிக் கழித்துப்பார்த்தால் சரியாக பத்துக் கார்ட் குறைந்ததிருந்தன. இரவில் அவள் தலையணைக்கு அடியில் வழமையாக அவைகளை வைத்துக் கொண்டு படுப்பாள். காலையில் எழும்பியவுடன் மறக்காமல் அவைகளை இடுப்பில் சொருகிக் கொண்டு விடுவாள். யாரும் வீடு தேடிவந்து கார்ட் அவளிடம் வாங்க வந்தால் மெதுவாகப் படுக்கையறைக்குப் போய் யாருக்கும் தெரியாதபடி இடுப்பிலுருக்கும் சாறியை அவிழ்த்து காட்டை எடுத்துவிட்டு மீண்டும் முந்தானையை செருகிக் கொண்டு மிகக் கஸ்டப்பட்டு ஏதோ பெரிய வேலை செய்த மாதிரி பெருமூச்சு விட்டுக் கொண்டும் நடக்கமுடியாதமாதிரியும் பாவனை பண்ணிக் கொண்டே வசிப்பறைக்கு வருவாள். தற்செயலாக அவள் காட்டை எடுத்துக் கொண்டிருக்கும் போது மகனோ மருமகளோ அங்கு வந்துவிட்டால் பெரும் சத்தம் இட்டுக் கத்தி அவர்களைத் துரத்தி நான் சாறி கட்டிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதோ கதவைத் தட்டி விட்டு வந்தால் என்ன என்று பெரிதாகக் கத்துவாள். இப்படி பலமுறை செய்த பின்பு தான் அவள் ரெலிபோன் கார்ட்டுகளை பகல் பொழுதில் தன் இடுப்பில் வைத்துக் கொண்டிருப்பது மகனுக்கோ மகளுக்கோ தெரியாது என்ற நம்பிக்கை கொணி டிருந்தாள். பகல துT க்கம் போடுகையில் அவள் சரியாக நித்திரை
கொள்வதில்லை. புரண்டு புரண்டு படுப்பாள் . அவள் நினைவெல்லாம் மகன் கெதியில் சுகமாக வேண்டும் எனவும் ஓரளவு சுகமான பின் அவனைக் கனடா கூட்டிச் செல்வதற்குரிய அவளின் திட்டத்திற்குரிய முன்னேற்றபாடுகள் பல புதிது புதிதாக அவளின் மத்தியான நித் திரையில் முளைத்துக் கொண்டிருக்கும். தன்னையும் மகனையும் இக் கரையரிலிருந்து அக்கைைரக்குச் சேர்க்கும் ஏஜென்ட் எனப்படும் செப்படு வித்தைக்காரனின் பயண ஏற்பாடுகள் சரியான காலகட்டத்தை அடையும் வரையில் அவளும் மகனும் யேர்மனியில் தங்கியிருக்க அவகாசம் தேவை. இப்பயணம் நாளையும் சரிவரலாம் நாற்பது மாதங்களின் பின்னரும் கூட சரிவராமல் போகலாம். ஆனால் சுகமில்லாத மகனை அங்கு கொண்டு போய் சேர்த்து விட்டால், தான் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விட்டாலும் அவனைக் கவனிக்க கனடாவில் சொந்த பந்தங்கள் கனடாவில் இருக்கும் என்று அவள் தாய் மனசில் ஒரு கணிப்பிருந்தது.
மகனும் தாயும் அரசியல் அகதி நிலையத்தில் தங்கியிருந்த காலத்தின் போது முளைவிட்ட மகனின் காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதை அவள் முற்றாக வெறுத்தாள். ஆனால் மகனின் நோய் இன்னனும் சரியாக குணமாகவில்லை என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம், நோயாளி முகம் உன்றும் அவனுக்கில்லை. சுாதரணமாகவே காணப்பட்டான். ஆனால் இன்னொரு தடவை மகள் நோயுற்றால் அகுமிகப் பாதிப்புக்குள்ளாகலாம் என்ற மருத்துவரின் எச்சரிக்கை பயமுறுத்தியது. அரைகுறை வருத்ததோடு அவனை யேர்மனியில் கொண்டு வந்து சேர்த்ததே பெரும்பாடு. இந்த கலாச்சாரமில்லாத சீரழிந்த தேசத்தில் மீண்டும் மகன் நோயில் விழுந்தால்

31
ஒரிலாவது காசுக்கு ஆள் பிடித்து வேலை வாங்கவாம். இங்கு நிலைமை தலைகீழ். ஆவளுடைய மகனின் எதிர்கால நலனை நோக்கிய பார்வையில் அக்காதலை ஏற்றுக் கொள்வது சரியெனப்பபட்டது. சேர்ந்த நாட்டுப் பொண்ணை அனுசரித்துப் போவதால் இப்போதைக்குப் பலன் கிடைக்கலாம். சிலவேளை எதிர்காலத்தில் மகனைப் பராமரிக்க ஒருத்தி அவனுக்கு
தேவைப்பட்டால். ஒரு இடைக்கால சமரசம். பேருந்தன்மையோடு நடந்து கொள்வது மாதிரி அவர்களைத் தாலி கட்டிக் கொள்ள, காரணத்தோடு சம்மதித்தாள். பெண்ணும் தானாக அவள் மடியில் விழுந்தாள் வரும் வாய்ப்பை ஏன்விடுவான். கலியாணம் முடிந்து நான்கு கிழமைகளில் மருமகளுக்கு நிரந்தர தாதி வேலை சுலபமாகவும் கிடைத்துவிட்டது. அதுவே தலைவிதியாகவும் அவள் தலையில் இறங்கியது. மருமகள் கறுப்பாயிருந்ததைக் கூட்டிச் சேர்த்து, அவள் இவளை விட குறைந்த சாதியில் பிறந்தவள் என்ற ரிசி மூலத்தை உலகம் எல்லாம் சிதறிக் கிடக்கும் தமிழ் சாற்றலைற்று மூலம் அறிந்து கொண்டாள் மாமி. அவளுக்குத் தேவைப்படுவது மருமகள் என்று உலகத்திற்கு நாமம் சூட்டப்பட்டிருக்கும் ஒரு தொழிலாளியின் உழைப்பே. சமூகநல உதவிப்பணம் எடுப்பதற்காக
లాక్5 மருமகளின் உதவியோடு அந்த அலுவலகத் திறகுப் போவாள் அவள். அவள் வயது போனவள் மகன் மிக உடல் நலமில்லாதவன் என்ற அனுதாபங்கள் அந்த ஊரில் வாழும் தமிழர் மத்தியில் குவித்திருந்தது. தவிரவும் இவள் அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.” என்னமாதிரியான செல்வமான குடும்பத்தில் பிறந்தேன். வேளாள சாதியில் பிறந்தநான் இந்த நாட்டில இப்பிடி கீழ்சாதியரோட பழகவேண்டிக் இருக்கிறது இப்படி இவள் மாதிரி சாதித்தடிப்புள்ளவர்களிடம் சொல்லி அங்கலாய்ப்பாள். இந்த சாதி அனுதாபம் கொண்ட சிலரும் இதனால 966) 6 தங்கள் கார்களில் அவள் செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு போய் வருவர் கூட்டி வருவர் அத்தோடு தனக்கு உத" விகள் பெறவேண்டியவர்களிடம் அவர்கள் குறைந்த சாதிக்காரர்களாக இருந்து தான் பொகவேண்டிய கட்டாயம் இருந்தால் வழி முழுக்க புலம்பிக் கொண்டே போவாள் தனக்கு இப்படி ஒரு கதி வந்ததே என்று. ரேலfபோன் கார்ட் டுக்கு பரிஸ் னஸ் நடத்தவேண்டி வேறு உள்ளதால் யாரோடு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன் நிலை. இங்கு போனபின் தனது நோயைப் பற்றியும் டாக்டர்களை வைத்து கொண்டிருப்பாள். இதனால் ஏதாவது சாப்பிடவேண்டிய குடிக்க வேண்டிய நிர்ப் பந்தங்களிலிருந்து தப்பிவிடுவாள். மகனையும் சாப்பிடவிடாமல் செய்வதற்கு அவன் குடிக்கும் மருந்துகளைப் பற்றி சொல்லி சில தடைகள் போட்டுப் பார்ப்பாள். ஆனால் மருமகளின் தட்டில் இருந்து மகள் கைபோட்ட சாப்பிடுவதைப் பார்த்தால் அவளுக்கு பற்றி எரியும். தொண்டைக்குழிக்குள் ராகினி தூசணங்களால் குதறப்படுவாள். இவளை இங்கு ஒழித்துக் கட்டிவிட்டு கனடா போயவிட இருக்கும்

Page 18
32
திட்டம் மீண்டும் நெஞ்சை ஆக்கிரமிக்கும் கனடா நினைவு மேலே மிதக் கத் தொடங்கியதும் சேலை இடுப்பில் செருகிக் கொண்டுவந்த ரெலிபோன் கார்ட்டுகள் ஞாபகத் திற்கு வரும் பக்கத்தில் இருப்ப வளிடம் ஊர் ஏதும் கேள்விப்பட்டனியோ? எப்படியோ அதை ரெலிபோன் காட்டில் தொடுத்துவிடுவாள். ஊர் விபரங்கள் ஒன்றும் அவளுக்கு அவசியமானதல்ல. அவள் பிள்ளைகள் எல் லாம் எப்போதோ வெளிநாடு போய்விட்டார்கள். நாம்முண்டு நம்பாடுண்டு நமக்கேன் ஊர் பற்றிய கவலை. இந்த ரகத்தில் அவள் சேர்ந்திருந்ததால் அவளின் தற்போதைய அவசியம் சிறுகச் சேர்த்தல். பயணத்துக்கான ஓரளவு பணம் சேகரிப்பு. இந்த அறுபத்தியிரண்டு வயதான மனசியின் தற்போைைதய இலட்சியம் . பணவிடயமாக கனடாவிலிருக்கும் மற்ற மகனோடு தொடர்பு கொண்டு அவள் ராகினி வீட்டில் இல்லாத வேளைகளில் கதைப்பாள். இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் இன்றைவரைக்கும் மருமகள் காதுக்கு எட்டக் கூடாது என்பதில் மிகமிகக் கவனமாக இருந் தாள் . கனடாவிலிருந்து பண உதவி செய்வான். ஆயினும் தற்செயலாகத் தேவைப்பட்டால். தன் பங்குக்கு நாலு காசு சேர்க்கும் கெட் டித்தனம் அவளின் சிறுமரிக் காலத்திலலேயே அவளுக்கு ஊட்டப்பட்ட சங்கதியாயிற்றே. இந்த நிலையில் தான் அவளுக்கு ரெலிபோன் கார்ட்டுகள் கள்வு போவது பெரும் எரிச்சலைக் கிளப்பியது. ஊரில கோழி களவு போறமாதிரியெல்லோ கிடக்கு கோழியாவது படலையைத்தாண்டிப் போகும் என்ர இடுப்பில இருந்து எப்பிடி கார்ட்டுகளுக்கு கால் முளைக்கும்.? சந்தேகம் மருமகள் ராகினியின் மேல் விழுந்தது. அவள் கணக்குப்படி அவள் தான் சாமான் வாங்கப் போவாள் வெளியில். வேளி வேலைகள் வீட்டு வேலைகள் செய்பவள் வெளித் தொடர்பு ராகினிக்கு நிறைய உண்டு.
లాgు
இவள் தான் கார்ட் டுக் களைக் களவெடுத்திருக்க வேண்டும். இனிமேல் உசாராய் இருக்க வேண்டும். நித்திரை கொள்வே கூடாது. ராகினிக்கு இன்னமும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இவள் மனதில் சில திட்ட்டங்கள் உருவாகின. ராகினியைத் தேடிக் கூப்பிட்டாள். வீடு முழுக்க சுத்தி வந்து அலுத்தாள். அவள் வீட்டில் இல்லை என்பது புரிந்தது. வசிப்பறையிலிருந்த மகனிடம் கேட்டாள். ரெலிவிசன் பார்த்துக் கொண்டிருந்த அவன் எரிந்து விழுநதான். போ போ என்று அவன் ஊமைப் பாசையில் திட்டி அவளை அங்கிருந்து வெளியே தள்ளினான். ஒரு கணம் மகனைப் பார்த்து கலங்கினாள். சேலை முந்தானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். ஏவளவு பெரிய ஆம்பிளை பிள்ளை என்னைப் பார்க்க வேண்டிய இவன். இவன நான் கவனிக்கவேண்டி கிடக்கு. பெருமூச்சு விட்டுக் கொண்டே அறைய விட் டு வெளியே வந்தவள் யோசித்தாள். இவள் எங்கு போயிருக்க வேண்டும்.? எங்கு போனாலென்ன அவன் இங்குதானே திரும்பி வரவேண்டும். அவளுக்கு ராகினி தங்களிலே தங்கியிருக்கிறாள் என்பதில் அளவில்லாத திருப்பதி. ராகிணியின் அரசியல் தஞ்ச அகதி விண்ணப்பம் எப்போதோ மறுக்கப்பட்டு விட்டது. அவளுக்குத் தற்போது வெளிநாட்ட அலுவலகத்தால். ஒரு மனிதாபினமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சமூகநல உதவி இலாகாவின் பொருளாதார நன்மைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. தாயும் மகனும் இங்கு இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் காலம் வரை ராகினிக்கும் யெர்மனியில் 22 பிச்சை போடப்படுகிறது. அதற்கு ஒரு பின்னணிக் காரணமும் உண்டு. தாய் மகனின் அரசியல் தஞ்ச விண்ணப்பங்களும் கூட எப்போதோ நிராகரிக்கப்பட்டுவிட்டன.
-தேவா

33
விட்டுவேலைப்
లాక్5 பகிர்விலுள்ள
Nel af D as gos a b
வீட்டுவேலைப்பகிர்விலுள்ள அசமத்துவமானது ஆண்-பெண்/பெண்-ஆண் சமத்துவத்திற்கு எதிரான இறுக்கமான முடிச்சாக இருக்கின்றது.
வீட்டுவேலையின் 70%த்தையும் பெற்றோருக்குரிய வேலையின் 60% த்தையும் தங்கள் கடமையாகப் பெண்கள் கொள்கிறார்கள். இந்தக் கணிப்பீடானது (பிரான்ஸ் நாட்டின் தொழில் அமைச்சின்
புள்ளிவிபரம்) எண்பதுகளில் இருந்து இன்னும் மாறாமலே இருக்கின்றது. இந்த அசமத்துவமானது அவர்களுடைய அரசியல் வாழ்க்கைக்கோ அல்லது தொழில்ரீதியான வாழ்க்கைக்கோ பங்களிப்பைச் செலுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது.
பெண்கள் எழுபதுகளில் கருத்தடைக்
காகவும் கரு அழிப்பிற்காகவும் உரிமை கோரிப் போராடினார்கள். அதன் பின்பு எண்பதுகளில் தொழில்ரீதியான சமத்துவத்திற்காகப் போராடினார்கள். இந்த அசமத்துவத்தை “பால்ரீதியிலான பாகுபாட்டுக் கட்டமைப்பில் இருந்து” விலக்கவேண்டும் என்று பெண்நிலைவாதிகள் இப்போது குரல் எழுப்புகிறார்கள்.
1986 இல் எவ்வளவு நேரத்தைப்
பெண் கள் வீட்டுவேலைகளிற்காகச்
செலவழித்தார்களோ அதே அளவு நேரத்தைத் தான் பெண்கள் 2000ம் ஆண்டிலும் செலவழித்திருக்கிறார்கள்.
வீட்டிற்கு வெளியில் வேலைக்குப் போகும் ஒரு பெண் வீட்டுவேலைக்கு ஒரு நாளைக் குச் செலவளிக்கும் நேரம் 3மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும்

Page 19
34
ஆகும். இப்போது பதின்மூன்று வருடங்களின் பின்பு அது 4 நிமிடங்களால் குறைந்துள்ளது. அதேநேரம் ஆண்கள் வீட்டுவேலைக்காகச் செலவளிக்கும் நேரம் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களில் இருந்து 6 நிமிடங்களால் கூடியுள்ளது.
குடும்பத்தினுள் ஒரு குழந்தையின் வரவானது வீட்டுவேலைப் பகிர்தலின் பாலியல் ரீதியான பிரிப்பை இன்னும் அசமத்துவமாக அதிகரிக்கின்றது. குழந்தைகளற்ற ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது ஆண் 2மணித்தியாலங்கள் 9 நிமிடங்களை வீட்டுவேலைக்காகச் செலவழிக்கிறான். அதே சமயம் இரண்டு குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆண் ஒரு நாளைக்கு வீட்டுவேலைக்காக ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்களே செலவழிக்கிறான். இன்னும் வீட்டில் உள்ள வேலைகளில் பெண்கள் செய்யும் வேலைகள் என்று பார்த்தால் (கழுவுதல், ஸ்திரி போடுதல், உடுப்புகளை ஒழுங்காக மடித்து வைத்தல், மலசலகூடம் கழுவுதல் போன்றன) அவை அன்றாடம் செய்யப்படவேண்டிய வேலைகளாக உள்ளன.
இந்த வேலைப்பகிர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது சிலருக்கு மிகச் சாதாரணமானது. இன்னும் சிலருக்கு மிகக் கடினமானது. ஆண்களுக்கும் பெண்களிற்கும் இடையில் வீட்டுவேலைப் பகிர்வு என்பது உணி மையாகவே பிரான் சில ஒரு விவாதத்திற்கான ஒரு விடயமாக இவ்வளவு காலமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
"வீடு/குடும்பம் என்பது ஆண் மையப்படுத்தப்பட்ட ஒரு வெளி" இது குறித்து சமூகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "வீட்டு வேலைப் பகிர் வின் சமத்துவம் குறித்த விவாதத்தை நோக்கிச் செல்வதற்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கும்" என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். “ஏனெனில் வீட்டுவேலைகளின் பாலியல் ரீதியான பகிர்வு என்பதுதான் ஆண்கள் பெண்களின் இடையேயான அசமத்துவங்
<左委罗T களின் மையமாக இருக்கின்றது. அது தாய்மையடைதலுடன் இணையும்பொழுது அதன் சுமை பெண்கள் பக்கம் இன்னும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிப்பானது தொழில்ரீதியில் ஆண்களுக்குச் சமனான நிலையை வகிப்பதில் மிகப் பெரிய தடையாக உள்ளது."
"பெண்கள் எப்போதும் ஆண்களைவிடக் கூடுதலான நேரம் வேலைசெய்கிறார்கள். இந்த முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தில் பெண்களிற்கு உதவி செய்வதற்காக, அவரவர்களுடைய கடமைகள் என்று பாலியல் ரீதியாக விசேஷமாக்கப்படும் பிரிப்பை இல்லாமலாக்க வேண்டும். அதாவது, ஆண் களும் பெண் களும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் பெற்றாருடைய கடமைகள், குழந்தைகளின் உடல்நலப் பராமரிப்பு, வீட்டுவேலைகள் என்பன இருபாலாருக்கும் சமனாகப் பிரிக்கப்படவேண்டும். எங்களுடைய சமூக அமைப்பு முழுவதையும் மீளமைக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்யவில்லை. அதனால் இந்தப் பாகுபாடு எல்லா இடங்களிலும் வெடிக்கின்றது. இந்த வெடிப்புகளை மீள மீளப் பொருத்த முயற்சிப்பதை விட்டுவிட்டு இன்னொரு படிநிலைக்குப் போகவேண்டும். இது இன்னும் ஒரு பிரெஞ்சுச் சமூகவியலாளரின் கணிப்பு.
அதேநேரம் இங்கு உள்ள பெண்களின் உரிமைகளுக்கான கூட்டு, 15 அரசியல், தொழிற்சங்க, பெண்நிலைவாத அமைப்புகளுடன் ஒன்றிணைந்து "சமூகத்தளத்திலும் பொருளாதாரத்தளத்திலும் உண்மையான ஒரு சமத்துவம் வரும்வரையும் குடும்த்தினுள் பெண்களினுடைய இடத்தில்/நிலையில் ஒரு மாற்றம் வராமலும் அரசியலில் பெண்களுக்குச் சமனான இடத்தைச் சாத்தியப்படுத்துவது முடியாத காரியம்" இவ்வாறு அவர்களுடைய அறிக்கையில் சொல்கிறார்கள்.
06/06/2000இல் அரசியலில் பெண்க. ளுக்குச் சரிசமமான இடஒதுக்கீடு என்னும்

35
சட்டம் பிரான்சில் கொண்டு வரப்பட்டது. இது சமூகத்தில் பெண்களின் இன்றைய நிலைக்கான காரணிகள் மீது கேள்வி எழுப்புவதற்குச் சாத்தியமாகியது. மேலும் பெண்கள் தொடர்பான சகலவிதமான ஒதுக்குதல்களுக்கும் சமூக, பொருளாதாரத் தளங்களில் நடைமுறைக் காரணங்களைக் காணுவதற்கான விவாதங்கள் தொடங்கின. அதிலிருந்து, நடைமுறையில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியல் அதிகாரத்தைப் புதுப்பிப்பதற்கு குடும்பத் தலைவிகளின்." குடும்பப் பெண்களின் வாழ்க்கைமுறையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்பதை உணரவைத்தது. வாரத்திற்கு 39 மணித்தியாலங்களாக இருந்த வேலைநேரத்தை 35 மணித்தியாலங்களாகக் குறைத்தது வீட்டுவேலைப் பகிர்விற்கு சாதகமானதுதான். ஆண்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்திருந்து பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளும் நேரம் அதிகரிக்கின்றது. ஆனால் பெண்கள் தொடர்ந்தும் இன்னும் கூடுதலாக வீட்டு வேலை செய்வதிலும் பிள்ளைகளுடன் கழிப் பதிலும் நேரத்தை செலவு செய்கின்றனர்.
ஆண்களைவிட அதிகப்படியாக வேலை செய்யக்கூடிய, உயர்கல்வி கற்ற பெண்களுடைய தொழில்ரீதியான வாழ்க்கை அவர்களுக்குச் சாதகமானதாக இல்லை. இதற்கு முக்கியமான மையப்புள்ளி குடும்பம்/வீடு என்பதாகின்றது.
இந்த அசமத்துவத்திற்கான மூலத்தைக் கண்டுபிடித்துக் கேள்வி எழுப்புவதற்கான காலம் மிக நீண்டதாகும். இதற்கான தீர்வுகளைக் கண்டுபிடித்துச் செயலாற்றுவதென்பது மிகவும் நுட்பமான நுண்ணிய செயற்பாடாகும். "சமகால கெட்டியான ஆண் மேலாதிக்க மையம், குறிப்பாக முதலில் கடினமானது".
"தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் போது, தனிமனித சுதந்திரத்தை முதன்மைப்படுத்துகின்றது. மற்றது ஆண் பால் , பெண்பால் என்று ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் பால்ரீதியான அடையா
లకెత్ ளத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிச்சயமாக, ஒரு உண்மையான கலாச்சாரப் புரட்சிக்கான தேவைக்கு அழைப்பு விடுக்கின்றது.” அத்துடன் "வேறு குடும்ப, அரசியல் அமைப்புகளை உருவாக்க வேண்டும். தனிநபர்களின் சமூகமயமாதலானது வேறு வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும். புதிய கற்பனைச் சமூகத்தை உருவாக்க வேண்டும். இப்படி.."
ஒட்டுமொத்தமாக ஏற்கனவே இருக்கும் குடும்ப அமைப்பு உடைந்து வேறு வடிவத்தைப் பெறவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றார்கள். அதேநேரம் பெண்களின் வேலைப்பகிர்வானது மிகவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் . பெண்களின் கல்வி, அவர்கள் வேலைக்குச் சென்று அதைத் தொடர்ந்து பேணுவதற்கான வாய்ப்புக்கள், பொதுவேலைகளில் அவர்களின் பங்களிப்பிற்கும் பொறுப்பிற்குமான வாய்ப்பு என்பன வழங்கப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் தொழில் நிறுவனங்க" ளும் கவனம் செலுத்தவேண்டும். உதாரணத்திற்கு பிள்ளைப்பேறு காலத்தின்போது பெண்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆண்களிற்கு மூன்று நாட்களுடன் சரி. இதே விடுமுறை சுவீடனில் ஆண்களுக்கு ஒன்றரை மாதங்களாகும். இப் படியான முன்னெடுப்புகள் தான் முன்னேற்றத்தை நோக்கிய சமூகத்திற்கும் பெண்களின் விடுதலைவேண்டி நிற்கும் சமூகத்திற்குமான முதற் படிகளாகும். பெண்கள் தங்கள் விடுதலையை வேண்டிப் போராடுவதற்குரிய நேரத்தைக் கண்டுபிடிப்பதற்கான நேரத்தைக்கூட ஒரு சமூக அமைப்பு வழங்கத் தவறும்போது பெண்க ளின் கோரிக்கைகள் எவ்வளவுதூரம் வெற்றியை நோக்கிச் கொண்டு செல்லும் என்பது கேள்விக்குறி. எனவே பெண்கள், சமூகமாற்றத்தைக் கோரிநிற்கும் அனைத்து ஒடுக்குமுறை வடிவங்களிற்கும் எதிரான போராட்டங்களில் பங்கு கொள்வதற்காகப் போராடுவதற்கான முனைப்பே இன்றைக்குத் தேவையானதாக இருக்கின்றது.

Page 20
36
Uees N9956i
ஆணாதிக்க சமூகத்தின் களப்பலியாக்கப்பட்டிருக்கும் அலிகள்: அதிகாரத்துவ வகைப்பட்ட பாலின அடையாளத்தின் குரூரம்
சித்திரை மாதத்தில் பூரண நிலவு ஆட்சி செய்யும் நாள் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியின், கொண்டாட்டத்தின் நாளாக இருந்து வந்துள்ளது. பின்னர் அது படிப்படியே தேய்ந்து இந்து தமிழ்த் தினமாக சுருங்கிப் போனது. சித்திரா பெளர்ணமியில்
தமிழகத்தின் பிரசித்தமான இந்து ஆலயங்கள் விழாக் கோலம் பூணுகின்றன. இதில் பெரிதும்
சமூக வகைப்பட்ட திருவிழாவாக காணப்படுவது தமிழகத் தரில் விழுப் புரம் மாவட்டத்திலுள்ள கூவாகம் எனும் பகுதியில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவாகும்.
சித்திரை பெளர்ணமியில் இந்தியாவெங்கும் வாழும் அரவாணிகள் என அடையாளப் பெயரிட்டு அழைக்கப்படும் அலிகள் இவ்வூரில் திரள்கின்றனர். அலிகளின் வாழ்வை மையமாகக் கொண்ட விரிவான சடங்கு முறைகளுடன் கூடிய பூசை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக 18 நாட்கள் இவ்வாலயத்தில் நடைபெறும். அலிகள் ஏன் அரவாணிகள் என அழைக்கப்படுகின்றனர், கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் சடங்குகளுக்கும் அலிகளின் வாழ்வுக்குமான சமூக வகைப்பட்ட தொடர்பு என்ன என்பதை தேடுவது, இந்திய மற்றும் தமிழக சூழலில் அலிகள் எனும் மனிதர் களது வாழ் நிலையை பாரம்பரிய வழிபட்டு அறிந்துகொள்ள உதவிடும்.
மகாபாரதக் கதையரின் "கதாநாயகர்களில்” ஒருவனான அர்ச்சுனனுக்கும் நாககன்னிகைக்கும் பிறந்தவர் அரவான். இவர் ஒரு அலி. பாரதப் போரில் பாண்டவர் வெற்றி பெறுவதற்காக களப்பலி கொடுக்க வேண்டும். அலியான அரவானை அதற்குத் தேர்ந்தெடுத்தனர். ஆணாதிக்க சமூகத்தில் ஆணாக இருந்து ஆணுக்குரிய கடமைகளையும், பெண்ணாக இருந்து பெண்ணுக்குரிய கடமைகளையும் நிறைவேற்ற முடியாத அலியான அரவானை இந்துத்வ ஆணாதிக்க சமூகம் எவ்வாறு தன்மத்தியில் வாழ அனுமதித்துக் கொண்டிருக்கும். ஆணாதிக்க சமூக நலன்களுக்கு பிரயோசனமற்றவரான அரவான் (அர்ச்சுனனின் மகனாக இருந்தும் கூட) களப்பலி கொடுக்கப்பட்டார். தான் பலி
 

37
கொடுக்கப்படுவதற்கு முன்னர் திருமணம் செய்துகொள்ள அரவான் விரும்பியதாகவும், களப் பலியாகப் போகிறவரை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வராததால் கிருஷ்ணன் மோகினி வேடமிட்டு வந்து அரவானை மணந்ததாகவும் கதை நீள்கிறது. இந்த அரவானின் பெயரே அலிகளின் சமூக அடையாளப் பெயராக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது.
அரவான் வாழ்வை நினைவுகூரும் விதமாக தேர்த்திருவிழாவின் முதல் நாள் அலிகள் தாலி கட்டிக்கொள்வர். தேர்சென்று அரவான் களப்பலியானதும் தாலி அறுத்து, கைவளையல்களை நொறுக்கி ஒப்பாரி வைப்பர், வெள்ளைசேலை அணிந்து நேர்த் திக்கடன் நிறைவேற்றுவர், பின்னர் அரவான் உயிர்த்தெழும் நிகழ்ச்சி. இவற்றைவிட அலிகளின் அழகுராணிப் போட்டிகள் போன்றனவும் நடைபெறும்.
ஆடல், பாடல், கேளிக்கை களியாட்டங்கள் போன்ற மானுட வாழ்வின் மகிழ்ச்சிகரமான பக்கங்களுடன் தொடர்புபட்டவர்களாக இத்திருவிழா மூலமாக உலகிற்கு அலிகள் அறிமுகமாகின்றனர். ஆனால் இந்திய மற்றும் தமிழ் சமூக அமைப்பில் அலfகளாக பரிறந்த மனிதர் கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் அத்தனை இலகுவானவையல்ல.
அலிகளாக பிறக்கும் பிள்ளைகள் வீடுகளில் இருந்து துரத்தியடிக்கப் படுகிறார்கள். அனேகமாக இவர்கள் மும்பாய், கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் திரள்கின்றனர். ஆடிப்பாடி பிச்சையெடுப்பது, பாலியல் தொழில் போன்றன மூலம் தமது வாழ்வை கொண்டு நடாத்த வேண்டிய சமூக நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள். தம் மை முழுமையான அலிகளாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக சத்திர சிகிச்சைக்கு பணவசதியற்ற நிலையில் வளர்ச்சிடையாதிருக்கும் ஆண்குறியை கல்லால் நசித்து சிதைத்து அப்புறப்படுத்திக் கொள்கிறார்கள். தமக்கான தனித்துவமான உடல் அசைவுகளையும் நடத்தை பாணிகளையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
లకెత్ தமது சமூகப் பாதுகாப்பிற்காக கூட்டங் கூட்டமாக வாழ்கிறார்கள். சில நகரங்களில் அலிகள் உரிமைக்கான சங்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களின் ஒரு பிரிவினரை பெண் அல்லது ஆண் குறிகளை கொண்டிருக்காததை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சமூகவாழ்விலிருந்தே அப்புறப்படுத்துவது எத்தனை குரூரமானது?
அரச தரப்பிலும் கூட அலிகளுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்படவில்லை. சமீபத்திலிருந்துதான் அலிகளும் குடிசன மதிப் பீட் டில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அலிகளை சமத்துவமான மனிதர்களாக மதிக்கவும் அலிகளும் பெண்களும் ஆண்களும் இரண்டறக் கலந்து சமூகத்தில் வாழ வேண்டியதன் அவசியம் சார்ந்தும் விழிப்புணர்வூட்டும் கருத்துகள் தமிழ் சமூகத்தில் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அவ்வாறு வெளிப்படும் கருத்துகளும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுப்பட்டு விடுகின்றன.
காதலிக்கவும் வாழ்வைப் பகிர்ந்து கொள்வதற்கும் (திருமணம்) தகுதியற்றவர்களாகவே அலிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆணாதிக்க அமைப்பினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இச் சூழ்ச்சி உடைக்கப்பட வேண்டும்.
பரந்துபட்ட தமிழக மக்களின் சிந்தனையில் தாக்கம் செலுத்தும் தமிழ் சினிமாவோ தனது பங்கிற்கு அலிகளை கொச்சைபடுத்தும் காரியத்தையே செய்கிறது. ஆணாதிக்க சமூக முறைமைகளினால் அடக்கப்படும் பெண்கள் தம்மிலும் மோசமான சமூக அடக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் அலிகளுடன் தமது நலன்களை இனங் காண வேணி டும் . அலி களது உரிமைகளுக்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெண்ணிய இயக்கங்கள் கூடுதல் கடப்பாட்டைக் கொண்டுள்ளன.
-്ടി

Page 21
38 

Page 22
40
లాక్5
நான் அவனைக்
நான் பார்த்தால் அவன் பார்த்தானா? இல்லை, அவன் பார்த்ததால் நான் பார்த்தேனா தெரியவில்லை - ஆனால் இரண்டு பேருமே தெரிந்து கொண்டோம்
வெற்றுத் துண்டுகளாக வாய்களினின்று விழுந்தனவாம் சாதாரணமாகவே கதைத்தோமாம்.
மெய்யாகத் தான் நமக்குள் சுவாசச் சொற்கள் கொடுக்கப்பட்டன வாங்கப்பட்டன அந்த இரு கண்களுக்குள் புகுந்து கொண்டேன் தெரியும்
தானாகச் சொல்லவில்லை அவன்.
நானே சொல்லத் தான் அவசரப்பட்டேன் ஆண்தான் முதலில் சொல்லவேண்டுமாம் I Love You நியென்ன வெட்கங் கெட்டவளா? கேட்டனர் சினேகிதிகள்
பிறகென்ன, அவனும் வெட்கப்பட்டான் போல
-தர்மினி
Eை


Page 23

E gJEITETET பிEதொடரும் நிழலின் தரப்
இயலாமையின் புகலிடம் தாய்பா
-m座町
2 DI DID LI GEJTLIET முதலாவது பெளர்கள் சட்ட
TE
ஒரு புரட்சிகர சக்தியாகும் கறுப்பிட் MTLMLMMM MTLLLL TLLLLLLL LzL TTLa D
- Mar Al Weather's
தவித SLEEரி EELETLr LLEi gs LETILITLEi.
亚匣正u庄町
臣記
Lधाbा"ElLJा|मग
ElETEFIEī
- BELIT
ருகலப்பகலிலுள்ள அசமத்துவம் 一口岛
|ELLਸੁLEਸEEE
l'EUT BILLITToï=#ET GEIHILI
IEEE