கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிய இனப்பிரச்சினை போர்க்காலத்தில் கல்வி

Page 1
தசிய இனப்பிர போர்க்காலத்தி: GLITâöTağğl
冒
를
 

Šřefleona) .
i is ல் சிறுவர்உளவியல்
ருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு
சுயநிர்ணய உரிமையை அங்கீகரி

Page 2

கரவை A.C. கந்தசாமி
நினைவுக் கருத்தரங்கு
(கட்டுரைத் தொகுப்பு)
கருத்துரைப்போர்:
வி.ரி.தமிழ்மாறன்
கொன்சன்ரைன்
சோ.சந்திரசேகரம்
பாரதி வெளியீட்டகம்

Page 3
கரவை ஏ.சி. கந்தசாமி
நினைவுதினக் கருத்தரங்கு
(கட்டுரைத் தொகுப்பு)
முதற்பதிப்பு:
முன்அட்டை அமைப்பு:
பதிப்பகம்:
வெளியீடு:
அன்பளிப்பு:
மார்கழி 1995
எம்.கே.எம்.ஷகீப்
'டெக்னோபிரின்ட், இல6, ஜெயவர்தன அவெனியூ தெகிவளை.
பாரதி வெளியீட்டகம்.
epunt 25/=
Karavi A. C. Kandasamy commemoration Lectures
(A collection)
First Published
Cover Layout By
Printed
Published
Donation
December 19s
Shakeeb
"Techno Print" No. 6, Jayawardene Avenue, Dehiwala.
Bharathy Publishers
25 Rupees

சமர்ப்பணம்
உலகில்
ஏழை - பணக்காரன்
என்ற வேறுபாடின்றி
உயர்ந்தவன்தாழ்ந்தவன்
என்ற பாகுபாடின்றி
சுரண்டலும்
அடக்குமுறையுமின்றி
மக்கள்
சரிநிகர் சமானமாய்
சமத்துவமாய்
வாழ
சமதர்ம சமத்துவ சமுதாயத்தைக்
கட்டியெழுப்ப
தம் உயிர்களை அர்ப்பணித்த
தோழர்,
தோழியருக்கு
இச்சிறுநூல்
சமர்ப்பணம்

Page 4
நமதுரை
சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டம் 20ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் - ஒரு பார்வை
- வி.ரி.தமிழ்மாறன்
யுத்தமும் சிறுவர் உளவியலும் - ஒரு சமூகவியல் பார்வை
கொன்சன்ரைன்.
வன்முறையும் கல்வியும்
- சோ. சந்திரசேகரம்
கரவை ஏ.சி. கந்தசாமி.
- அரசியலில் ஈடுபட்ட மாணவனாக - கம்யூனிஸ்டாக - தொழிற்சங்கவாதியாக - அரசியல்வாதியாக
நன்றியுரை

நமதுரை
இச் சிறு நூல், பாரதி வெளியீட்டகத்தின் இரண்டாவது பிறப்பாகும். இந் நூலில் கரவை கந்தசாமி அவர்களின் நினைவுக் கருத்தரங்கின் போது இடம்பெற்ற உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வுரைகளில் சமூக அரசியல் பிரச்சினைகள் பற்றியும் அதனால் ஏற்பட்ட விளைவுகளது பக்க விளைவுகள் பற்றியும் கருத்துக்கள் உரைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மட்டுமன்றி மூன்றாம் உலகநாடுகளிலும் பல ஐரோப்பியநாடுகளிலும் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்கள் முனைப்படைந்து வருகின்றன. இத் தேசிய இனங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது இன்றியமையாதது என்பதை வி.ரி.தமிழ்மாறன் அவர்கள் வரலாற்றாதாரங்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார். யுத்தம்இன்று பலநாடுகளில்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்தந்தநாடுகளில் ஏற்பட்ட சமூக, அரசியல் பிரச்சினைகளின் விளைவே யுத்தமாகும். இலங்கையிலும் குறிப்பாக தமிழ் மக்கள் பல யுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர். எதிர்கொள்கின்றனர். இத்தொகுப்பில் உள்ளஇரு உரைகள் அரசியல் பிரச்சினைகளின் விளைவினால் உருவான யுத்தம் தொடர்பானவையல்ல. மாறாக யுத்தம், எவ்வாறான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பாக உரைக்கப்பட்ட கருத்துக்களே அதில் அடங்கியுள்ளன. w
யுத்தத்தின் விளைவால் சிறுவர் உளவியல் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி கொன்சன்ரைன் அவர்கள் கருத்துரைத்துள்ளார். யுத்தத்தினால் கல்விஎவ்வகையில் பாதிப்படைந்துள்ளது என்பதையும் தமிழ் மாணவர்கள்அப் பிரச்சினையைனப்படி எதிர்கொள்கின்றனர் என்பதுபற்றியும் சோ சந்திரசேகரம் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.
கரவை ஏ.சி. கந்தசாமி அவர்கள் தமது வாழ்நாள்முழுவதும் அரசியலுடனேயே வாழ்ந்தவர். அவரது அரசியல் சரியா, பிழையா என்பதை வரலாறு தீர்மானிக்கும். ஆனால் சமூகத்தில் இருந்த இன, மத, சாதி அடக்கு முறைகளாலும் சரிநிகரற்ற தன்மையாலும் அநீதியாலும் உந்தப்பட்டு மாணவர் காலம் முதல் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர். அதில் ஒருவர் கரவை கந்தசாமி அவர்கள்.
சமூக அமைப்பை மாற்ற முற்போக்கான அரசியல் ஆயுதத்தினாலேயே Փգպծ. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவன் மூலம் சமூகப் பிரச்சினைகள் பலவற்றை இலகுவாக தீர்க்க முடியும். இத்தகையதொரு நம்பிக்கையிலேயே இவர் அரசியல் ஈடுபாடு கொண்ட துடிதுடிப்பான மாணவராக கம்யூனிஸ்டாக, தொழிற் சங்கவாதியாக, அரசியல்வாதியாக செயற்பட்டவர்.
இவரது செயற்பாடுகள் தொடர்பான மேலும் பல தகவல்களையும், விபரங்களையும் தேடுவதிலும் ஈடுபட்டுள்ளோம். ஆர்வமுள்ளவர்களும் அக்கறையுள்ளவர்களும் எமக்கனுப்பி உதவும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
ஒரு தனிமனிதனை படுகொலை செய்வதன் மூலம் அவரது பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்றலாம். ஆனால், சமூக, அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. சமூக, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை உள்ள ஒருவன் தனது எதிரியின் அல்லது தன்னுடன் முரண்பாடு கொண்டவரின் கருத்துக்களை விஞ்ஞான அடிப்படையில் தர்க்கித்து தோற்கடிப்பதன் மூலமே தனது இலட்சியத்தை அடைய முடியும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.
இவ்வுலகில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றிகரண்டலும் அடக்குமுறையும்இன்றிமக்கள் சரிநிகர் சமானமாய் சமத்துவமாக வாழ சமதர்ம சமத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்பதம் உயிரை அர்ப்பணித்த, தோழர், தோழியருக்குஇச்சிறுநூலை சமர்ப்பிக்கின்றோம்.
பாரதி வெளியிட்டகம்

Page 5
சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் 20ம்
நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் - ஒரு பார்வை
- வி.ரி.தமிழ்மாறன்
தோழர்கந்தசாமிஅவர்களைப் பற்றி, அவருடன் மிக நெருங்கிப்பழகியவன் அல்ல என்ற முறையில் அவரைப் பற்றி, அவருடைய அரசியல் வாழ்க்கையைப் பற்றி நிறையவே விமர்சிக்க எனக்கு அருகதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இந்த இயக்க அரசியலை தொடங்க முன் எந்த இடதுசாரி அணியில் தன்னை சங்கமித்துக் கொண்டு அதன் கொள்கைகளை முன்னெடுத்து தன்னுடைய அரசியல் பயணத்தை நடத்தினாரோ அந்த இடதுசாரிகொள்கைகளிலும் அதன்தலைவர்களுடனும் ஓரளவுக்கு தொடர்புடையவன் என்ற அளவில் தோழர் கந்தசாமி அவர்களுடைய கடந்தகால அரசியல் வாழ்க்கையை நான் நன்கு அறிவேன். இடதுசாரி இயக்கத்திலே தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துகருத்து வேறுபாடுகாரணமாக தன்னுடைய ஆரம்பக் கட்சியிலிருந்து பிரிந்து சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்ட நாளிலிருந்து நான் மிக உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன். குறிப்பாக அவருடைய எழுத்துக்கள், அவருடைய தொழிலாளி பத்திரிகையில் வந்த கருத்துக்கள் இவற்றின்மூலம் தோழர் கந்தசாமி அவர்களின் அரசியல் வாழ்க்கையை அறியக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. எனவே இன்றைய தினத்தில் எந்த அரசியல் கொள்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரோ எந்த அரசியல் கொள்கையை நம்பித் தனது வாழ்க்கையை ஆரம்பித்தாரோ அந்தக் கொள்கைகளுடன் பரிச்சயம் உள்ளவன் என்ற அளவில் அவருடைய நினைவாக உரையாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
தேசிய இனங்கள் இதனை மார்க்சியப் பார்வயிைலும் சரி அல்லது முதலாளித்துவவாதிகளின் ஜனநாயகச் சிந்தனை என்று கூறப்படுகின்ற கண்ணோட்டத்திலும் சரிதேசிய இனங்களை வரையறுக்கிற போது அதில் ஒரு பிரிவாக பெரும்பான்மைஇனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் கொடுக்கும் அல்லது ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரு தலைப்பாகத்தான் சிறுபான்மை இருக்கிறதே தவிர அது தேசிய இன அம்சங்களை அதனுடைய உள்ளடக்கங்களை மாற்றக்கூடியதன்மை கொண்டதல்ல என்பதை வலியுறுத்திக் கூறவிரும்புகிறேன். தேசிய இனங்கள் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள்ளேயே அதனை நாடு அல்லது அரசு என்றுபிற்காலத்தில் வரைவிலக்கணப்படுத்திக் கொண்டார்கள். அந்த எல்லைக்குள்ளேயே இருக்கின்றஇனங்கள்தங்களுடைய பல்வேறு தகுதிகள் காரணமாக தங்களை அடையாளப்படுத்தி தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்கிற வேட்கைய, அவாவை வெளிப்படுத்தும் போது அதனுடைய பரிணமிப்பாக அதனுடைய விளைவாகத்தான் ஆட்சிகள் தோன்றி இருக்கின்றன.
உற்றுப் பார்க்கையில் தேசிய இனங்களில் சிறுபான்மை இனங்கள் வெறுமனே எண்ணிக்கையில் குறைந்தது என்பதால் மட்டும் சிறுபான்மை என்ற தலைப்பை அங்குநாம்

ஒட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த எண்ணிக்கைக் குறைவு காரணத்தினாலேயே மட்டும் இந்த மக்ககள் தங்களைத்தாங்களே ஆள்கின்றநிலைமை ஏன் மறுக்கப்படவேண்டும் என்ற கேள்விஇங்கே பிறக்கிறது.
சற்றுப் பின்னோக்கிப் பார்ப்பதாக இருந்தால் தேசிய அரசுகள் அல்லது இன்னும் தெளிவாகக் குறிப்பதாகஇருந்தால் எல்லைக்குட்பட்ட அரசுகள் அல்லது ஆள்புல எல்லைக்கு உட்பட்ட அரசுகள் உருவாகிய காலத்திலே வெறுமனே எல்லைக் கோடுகளை மட்டும் முக்கியமாக்கி அதற்கு உள்ளே வருகின்ற எல்லா மக்களையும் குறிப்பிட்ட ஆட்சியுள்ளே கொண்டு வருவதற்காகத்தான் தேசிய அரசுகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இக் காரணத்தின் நிமித்தம் மக்களுடைய எண்ணிக்கை அங்கே முக்கியத்துவம் பெறவில்லை. மக்களுடைய இனம், மொழி, கலாச்சாரம், முக்கியத்துவம் பெறவில்லை. எல்லைகளை வரையறுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஆட்சியினுடைய அதிகார எல்லை எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்பதை கணிப்பிடுவதற்கு வெறுமனே பூகோள ரீதியில் அந்த எல்லையை வரையறுப்பதற்காகத்தான் தேசிய அரசுகளுடைய ஆரம்பம் இருந்திருக்கிறது.
அந்த வகையில் தான் தேசிய இனங்களுடைய போராட்டமும் முளைவிட ஆரம்பித்திருக்கிறது எனலாம். ஏனெனில் குறிப்பிட்ட இன, மத, மொழியைப் பேசுகிற மக்களுடைய விருப்பத்தை அறியாமல் அவர்களையும் இந்த எல்லைக்குள்ளே பலாத்காரமாக அல்லது அவர்களின் விருப்பத்தை புறக்கணித்து உள்ளடக்கி இருக்கிற போது மக்களுக்கு இயல்பாக இருக்கிற அல்லது தேசிய இனங்களுக்கு இயல்பாக இருக்கிறதங்களைத்தாங்களே ஆள வேண்டும் என்ற உணர்வு காரணமாக சில போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.
லெனினுடைய சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்துக்கள் பல்வேறு இடங்களிலே திரும்பத்திரும்ப கூறப்படுகிறது. சுயநிர்ணய உரிமையைப் பாவித்து பிரிந்து போக வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படாவிட்டாலும் தன்னுடைய ஆக்கங்களிலே மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். சுயநிர்ணய உரிமையைப் பாவித்து பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணம் தொழிலாளர் வர்க்கத்தின் சிந்தனையில் ஏற்படுமாக இருந்தால் அதைப் பற்றி நாங்கள் பாரதூரமாக அல்லது நிச்சயமாக சிந்திக்க வேண்டும் என்று லெனின் கூறிஇருக்கிறார். ஆகவே சுயநிர்ணய உரிமை பிரயோகம் என்பது கட்டாயமாக பிரிவினைதான் என்று அல்லாவிட்டாலும் பிரிவினை உணர்வு ஏற்படக் கூடிய அளவுக்கு தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய சிந்தனையிலே ஒரு விரக்தியைக் கொண்டிருக்கும் ஆகஇருந்தால் அந்த சிந்தனை கவனத்திற்குரியது என்பதை லெனின் ஏற்கத் தயங்கவில்லை. R
இதே காலகட்டப் பகுதியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் இந்நாடுகளிலே அமைதியை கொண்டு வருவதற்காக ஒரு உலக அமைப்பை தோற்றுவிக்க அயராது பாடுபட்டிருக்கிறார். அந்த முயற்சியின் போது ஐரோப்பாவிலே அமைதியை நிலைநாட்டுவதற்கு பூட்றோ வில்சன் திட்டவட்டமாக குறிப்பிட்ட ஒரே ஒரு கருத்து இந்த தேசிய இனங்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டும்தான். இதன் மூலம் மட்டுமே ஐரோப்பாவில் அமைதியை

Page 6
பேணமுடியும். உலகநாடுகளுக்கிடையே அமைதியை பேணமுடியும். இதன்மூலம் மட்டுமே உலக சமாதானத்தை நாங்கள் நிலைநிறுத்தலாம். இல்லையேல் இன்னொரு உலக யுத்தம் தவிர்க்க முடியாததாய் விடும் என்று பூட்ரோவில்சன் ஆணித்தரமாகக் கூறிஇருக்கிறார்.
தன்னுடைய எழுத்துக்கள் அல்லது நாடுகள் அவை என்ற சர்வதேச அமைப்பு ஒன்றை அவர் ஏற்படுத்திய போது அதற்குரிய காரணங்களாக அவர் குறிப்பிட்டவற்றில் தேசிய சுயநிர்ணய உரிமை அதாவது இனங்களுடைய சுயநிர்ணய உரிமை திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவேஇந்தஇனங்களுடையதங்களைத்தாங்களே ஆளவேண்டும் என்ற இந்த உணர்வை அதை மாக்சிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி, அல்லது மேற்குலகினுடைய ஜனநாயகச் சிந்தனையில் பார்த்தாலும் சரி இந்த உணர்வு அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் புரியாதவர்களாக அல்லது அத்தகைய ஒரு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று கருதுபவர்களாக யாருமே இருக்க முடியாது. ஆனால் அப்படி நடிப்பவர்களாக பலபேர் இருக்கலாம். இந்த இரண்டு பக்கச் சிந்தனைகள் மூலம் இனங்களுடைய தேசியத்தை அதன் அடையாளத்தை வெறுமனே எண்ணிக்கையில் குறைந்ததற்காக மட்டும் அந்த இனத்திற்குச் சுயநிர்ணய உரிமை இல்லை என்று கூறுகிற கருத்தை இன்றைக்கு மறுக்கின்ற ஒருநிலைமை ஏற்பட்டுள்ளது.
அதையிட்டுத்தான் என்னுடைய தலைப்பில் 20ம் நூற்றாண்டின் இறுதித் தசாட்தம் என்று குறிப்பிட்டுள்ளேன். பூட்றோ வில்சனின் காலத்திற்குப் பின்னர் ஜேர்மனியிலே இன்றைக்கு நாங்கள் வலியுறுத்துகின்ற இதே காரணத்துக்காகத்தான் எல்லைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லைக்குள் இருக்கிற மக்கள், அவர்களுடைய உணர்வுகள், அவர்களின் தனிப்பட்ட, அவர்களுடைய பின்னணிகள் என்பவற்றைப் புறக்கணித்து வெறுமனே அரசாங்கத்தினுடைய அல்லது அதிகார வர்க்கத்தினுடைய ஆட்சி என்ற அந்த மந்திரக் கோலின் கீழ் மக்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கண்மூடித்தனமான நிலைமையின் விளைவாக இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இது எந்தக் காரணத்தை முன்வைத்து, எதை அடிப்படையாக வைத்து அன்று பூட்றோ வில்சன் குறிப்பிட்டாரோ அதே காரணம் இந்த இனங்களின் சுயநிர்ணய உரிமை அல்லது அவர்களின் எழுச்சிகள் அவர்களின் உணர்ச்சிகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் 2ம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. அதனை நாங்கள் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் அல்லது அவரது அதிகார ஆசையில் ஏற்பட்டது என்று சொன்னாலும் கூட உண்மையில் பூட்றோ வில்சன் குறிப்பிட்ட அந்த நிலைப்பாட்டை ஐரோப்பா எடுத்திருந்தால் இத்தகைய பிரச்சினை தவிர்த்திருக்க முடிந்திருக்கும். இன்னொரு காரணம், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் எந்த ஒரு அமைப்புக்காக பூட்றோ வில்சன் பாடுபட்டாரோ இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற ஒரு நிலைமையை ஐரோப்பா எடுக்க வேண்டும் என்று பூட்றோ வில்சன் வலியுறுத்தினாலும் கூட அமெரிக்க அரசியல் அமைப்பின் காரணமாக, புதிய சர்வதேச அமைப்பு (நாடுகள் அவை) ஏற்பட்ட பொழுது அமெரிக்கா அந்த அமைப்பிலே ஓர் உறுப்பினராகச் சேரமுடியாமல் போய்விட்டது. அந்த அமைப்பை உருவாக்கப்பாடுபட்டவர் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் அதில் உறுப்பினராக வர அமெரிக்காவினால் முடியவில்லைகாரணம் அமெரிக்க அரசியல் அமைப்பு.
4

அதிலே சட்டவாக்கச் சபையின் சம்மதம் (காங்கிரஸ்) 2/3 பெற்றிருக்க வேண்டிய ஆதரவு கிடைக்காதபடியால் தானே எழுதிய ஒரு வரைவிலே அமைக்கப்பட்ட அமைப்பில் பூட்றோ வில்சன் தன்னுடைய நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இது ஒரு காரணமாக இன்றைக்கு வலியுறுத்தப்படுகிறது. ஏன் என்றால் ஒரு வேளை பூட்றோ வில்சன் இந்த League of Nations என்கின்ற சர்வதேச அமைப்பிலிருந்து அமெரிக்காவின் கருத்தை வலியுறுத்திஐரோப்பிய நாடுகளிடையே தேசிய இனங்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்திருந்தால் சிலவேளை ஹிட்லர் உருவாகியிருக்கமுடியாது என்று இன்றைக்கு யோசிக்கிறார்கள். இதைத் தற்பொழுதும் 1989ம் ஆண்டின் பின் உலக அரங்கில் 2 கோஷ்டிகளாகப் பிரிந்து நின்ற நாடுகள் அந்த மோதலைத் தவிர்த்து ஒன்றுபட்டுள்ள இன்றைய காலத்திலே திரும்பவும் நாங்கள் பூட்றோவில்சன் சிந்தித்த அதேநிலைப்பாட்டை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறோம். ஏனென்றால் எந்த ஒரு உலக யுத்தத்தை தவிர்ப்பதற்காக இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அவசியம் என்று நாடுகளின் அவையின் காலத்தில் கருதப்பட்டதோ அதே கருத்தை மீறியதினால் 2ம் உலக யுத்தம் ஏற்பட்டது. 1945 - 1989 வரை இந்த நாடுகள் பிளவுபட்டிருந்ததன் காரணமாக இந்த குழுக்களின் உரிமைகள் இன, மொழி கலாச்சார ரீதியாக மதரீதியாக இருக்கின்ற குழுக்களின் உரிமைகளை முக்கியத்துவம் கொடுக்காமல் அந்த உரிமைகளை வெறுமனே ஒரு தனிப்பட்ட நாட்டின், அரசின் ஒரு குழுவாக அமைப்பைப் பார்த்து ஒவ்வோர் நாட்டில் வாழுகின்ற தனிநபரைப் பார்த்து அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கின்றதா. அவர்கள் பூரணமாக அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றதா என்பதில்தான் இந்த 2 நாடுகள் அணியும் மோதிக் கொண்டன. கிட்டத்தட்ட 50 வருட கால வரலாறு இன்றைக்கு இந்த மோதலை மட்டும் சித்தரிப்பதாக இருக்கின்றது. ஆனால் இந்த மோதலின் முடிவிலே நிலைநாட்டப்பட்டிருப்பது என்னவென்றால் வெறுமனே சமத்துவம் என்று பேசுதல் வெறுமனே தனிமனிதனுடைய ஒடுக்கப்பட்ட உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுதல், ஒவ்வொரு நாடும் தனது அரசியல் அமைப்பை காட்டி அல்லது தனது நாட்டிலிருக்கின்ற ஏனைய சட்டங்களைக் காட்டி இங்கே இன, மத, மொழி ரீதியாக எந்தவித வேறுபாடும் இல்லை எல்லோரும் சமத்துவமாக நடத்தப்படுகிறார்கள் என்று காட்டுவதன் மூலம் இனங்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற போலியான போக்கு 1989இன் பின்னால் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இன்றைக்கு நான் குறிப்பிடுகிறேன் எந்த காரணத்துக்காக பூட்றோ வில்சன் இனங்களின், சுயநிர்ணய கோரிக்கையை அன்றைக்கு வலியுறுத்தினாரோ அதே காரணத்துக்காக அக் கோரிக்கை உரிமை இன்றைக்கு முன்னணிக்கு வந்துள்ளது. அது தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்துள்ளது என்றும் சொல்ல வேண்டும். ஏனென்று சொன்னால் தனிமனித உரிமைகளைத் தவிர்த்து குழு உரிமைகள் இன, மொழி ரீதியாக மக்கள் தங்களை ஒன்றித்து, அதன் மூலம் தங்களை ஒரு குழுவாக அடையாளம் காண்கின்ற அந்த வேட்கையை இனிமேலும் தொடர்ந்து தவிர்க்க முடியாது என்று இன்றைய காலகட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் தெரியும் இந்த கெடுபிடி யுத்தம்முடிவடைந்ததன்பின்னர் 1981இலிந்து பல்வேறு புதிய போராட்டங்கள் தோன்றியுள்ளன.இவற்றின் பின்னணி என்ன?
தங்களுடைய அடையாளத்தை வலியுறுத்துவற்காக தங்களுடைய இருப்பை

Page 7
புலப்படுத்துவதற்காக போராடுகின்றவர்களாக இருப்பதைக் காண்கின்றோம். இது தவிர்க்க முடியாதது. ஏனென்று சொன்னால் கெடுபிடியுத்தக் காலத்திலே வெறுமனே ஒரு போர்வையிலே தனிமனிதனுடைய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டால் போதும் என்ற ஒரு போலிப் போர்வையிலே 50 வருட காலத்தை நாடுகள் கழித்துள்ளன. அதன் பின்னர்தான் இன்றைக்கு உணர்ந்திருக்கிறார்கள். தனிமனிதனுடைய உரிமைகளை மட்டும் வலியுறுத்தி பிரயோசனமில்லை. அவர்களைக் குழுக்களாக அடையாளம்காணுவதற்கும்நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது இதனை இன்னுமொரு விதத்தில் குறிப்பிடுவதாக இருந்தால் குழு உரிமைக்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தைக் கலாசாரத்தை ஒரு குழுவாகச்சேர்ந்து அனுபவிக்க முடியாவிட்டால் ஒரு குழுவாகச் சேர்ந்து தங்களுடைய தனித்துவத்தைப் பேண முடியாவிட்டால் ஒரு குழுவாகச் சேர்ந்து தங்களுடைய முன்னேற்றத்தைக் காண முடியாவிட்டால் தனிநபர் ரீதியாக தனிப்பட்ட முறையிலே ஏனையவர்களுக்கு இருக்கின்ற அதே உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்று சொல்வது ஒரு ஏமாற்று வேலையாக இருக்க வேண்டும்.
இதை இன்றைக்கு ஐரோப்பாவிலும் சரி முன்னாள் சோசலிச நாடுகளிலும் சரி அல்லது வளர்முக நாடுகளிலும் சரி இன்றைக்கு தலைவர்கள் ஒப்புக் கொண்டுதான் வருகிறார்கள். தமது குழு உரிமையை அங்கீகரிக்காமல் தனிநபர் உரிமை அல்லது சமத்துவம் இருக்கிறதென்று பேசுதல் ஒரு ஏமாற்று வேலை. அது ஒரு போலி வேலை என இன்றைக்கு அரசாங்கங்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுயநிர்ணய உரிமைப் போராட்டம் என்பது இனங்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் அல்லது குறிப்பிட்ட குழுமக்கள் தங்களைத்தாங்களே ஆள வேண்டும் என்ற சிந்தனைக்குமுனைப்புக் கொடுத்து அதை முன்னிறுத்தி போராடுகிற ஒரு காலகட்டம் 1989ம் ஆண்டிற்கு பின்னர் புத்துயிர் பெற்றிருக்கிறது. ஆகவே இந்த நூற்றாண்டின் இறுதி தசாப்தமான இந்த காலகட்டத்திலே இந்தப் போராட்டம் குழுக்களுக்கான போராட்டம் அல்லது குழு உரிமைகளுக்கான போராட்டம் ஒயமாட்டாது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.
ஆகவே இதனுடைய விளைவு எப்படி இருக்கலாம். குழு உரிமையை வலியுறுத்தி ஒவ்வொரு நாட்டின் எல்லைகளுக்குள்ளும் இருக்கின்ற மக்கள் தங்களை ஒவ்வொரு குழுக்களாக அடையாளப்படுத்திஇப்படியே போராடிக்கொண்டுபோனால்இது எங்கே போய் முடியும் அல்லது இந்தக் குழுக்களுடைய உரிமைகளை அங்கீகரிப்பதாக இருந்தால் எத்தனை குழுக்களை இறுதியிலே தோற்றுவிப்பதா இருக்கும் என்கிற கேள்வி எழுவதும் இயல்பே. இதற்காகத்தான் இன்றைய அரசியலமைப்பு சட்டவல்லுனர்கள் புதிய வழியை/ அணுகுமுறையை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் ஜனநாயகம் என்பது எந்த அடிப்படையிலே அமைகின்றது? இதை நாங்கள் சட்டரீதியாக சொல்வதாக இருந்தால் மக்களுடைய விருப்பத்தின் மீது அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அரசாங்கத்தினுடைய இருப்பு அல்லது அரசாங்கத்தைநியாயப்படுத்தல் என்பது மக்களுடைய விருப்பு. மக்கள்தான் அரசியல் அமைப்பை ஆக்குகின்றார்கள். அரசியல் அமைப்பேச அல்லது வேறு எந்தச் சட்டமோ மக்களை ஆக்குவதல்ல. அரசாங்கத்தை அவர்களாக கொண்டு வர முடியாது. மக்கள்தான் அரசாங்கத்தை ஆக்குகிறார்கள். ஆட்சியில் அரசாங்கத்தில் மக்களுடைய
6

பங்குபற்றல் இருக்க வேண்டும்.
ஜனநாயகத்திலே பங்குபற்றல் என்பது மிக அவசியம். பங்குபற்றல்இல்லாவிட்டால் அது ஜனநாயகம் அல்ல என்பது இன்றைக்கு நிலை நிறுத்தப்பட்ட கருத்தாகும். இந்த பங்குபற்றல் என்பது எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அதாவது எந்தக்குழுவில் அதிக எண்ணிக்கை அங்கத்துவம் வகிக்கிறதோ அந்தக் குழுவை சேர்ந்தவர் மட்டும் பங்குபற்றுவதுஜனநாயகம் என்று கூறமுடியுமாஇதைத்தான்நாங்கள் பங்குபற்றல் ஜனநாயகம் என்று குறிப்பிடுகிறோமா?
அண்மையிலே காலஞ்சென்ற இலங்கையின் தலைவர்களுள் ஒருவரான பண்டாரநாயக்க அவர்களின் நினைவுதின விழாவிலை கலாநிதிநிகால் ஜயவிக்ரம அவர்கள் உரையாற்றிய போது இவ்விடயத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். பல்வேறுபட்ட கருத்துக்களை கொண்ட பல சிங்கள பிரமுகர்கள் இருந்த அந்த அவையிலே அவர் மிகத் தெளிவாக, மிகத் துணிச்சலாக குறிப்பிட்டார். பங்குபற்றல் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இன மக்கள் மட்டும் பங்குபற்றுகிற ஜனநாயகம் அல்ல. மக்களின் விருப்பின் மீது அமைக்கப்படுகிற அரசாங்கம் என்பது பெரும்பான்மைஇனமக்களுடைய விருப்பின்மீது மட்டும் அமைக்கப்படுகிற அரசாங்கம் என்பதல்ல. அத்தகைய ஒரு விருப்பின் மூலம் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அத்தகைய ஒரு விருப்பின் மூலம் அரசியல் அமைப்பு ஆக்கப்பட்டால் அந்த அரசியல் அமைப்பினுடைய கட்டுப்படுத்துகிற தன்மை அதனுடைய கனதி குறைவடையும் அல்லது குறைபாடு அடையும். அதிலே இருக்கிற ஒரு திணிக்கின்ற தன்மை, கட்டுப்படுத்துகின்றதன்மை குறைபாடு அடையும். பங்குபற்றல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களின் பங்குபற்றலுடன் சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஆகவே அரசியல் அமைப்பை ஆக்குகிறவர்கள் அல்லது இத்தகைய பிரச்சினைக்குதீர்வுகாணமுயற்சிப்பவர்கள் சிறுபான்மை மக்களுடைய பங்குபற்றல் எத்தகையதாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிற விதத்தில் இன்றைய காலகட்டத்தில் செயற்படவேண்டியுள்ளது.
இதனை எங்களுடைய நாட்டிலும் சரி எங்களுடைய நாட்டைப் போன்ற ஒத்த பிரச்சினைகள் இருக்கின்ற நாட்டிலும் சரி இந்தக் கருத்தை கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஏனெனில் குழுக்களுடைய போராட்டம் இந்த தசாப்தத்தில் மிக முன்னணிக்கு வந்திருக்கிற காரணத்தினால் பங்குபற்றல் ஜனநாயகம் என்பதிலே சிறுபான்மைக் குழுக்கள் நிச்சயம் பங்குபற்றி இருக்க வேண்டும். இதை நோக்கித்தான் இன்று உலகம் சென்று கொண்டிருக்கிறது.
இதையே நாம் ஜனநாயகத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட உலகம் என்கிறோம். இன்றைய உலகத்திலே குழுக்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதிலே மேற்கு நாடுகள் எந்தவிதமான சந்தேகத்தையும் வைக்கவில்லை. ஆனால் இதற்காக இந்த சுயநிர்ணய உரிமை என்ற கருத்தைப் பாவித்து இதற்காகப் பிரிந்து போக வேண்டுமா என்கிற கருத்து எழும்போது நாடுகளுக்கு இது ஒரு சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் எந்த நாடுகளுக்கும் சரி அவர்கள் தங்களுடைய எல்லைகளை முக்கியமாக வைத்துத்தான் தங்களுடைய அடையாளத்தைக் காட்டுகிறார்கள். தங்களுடைய இருப்பை

Page 8
வெளிப்படுத்துகிறார்கள். எல்லைகள் உள்ள உலகம் , ஆகவே பிரிவினை என்று வருகின்றபோது எல்லை என்கிற பிரச்சனை அங்கே முதன்மைக்கு வருகிறது.அல்லது சிக்கலை ஏற்படுத்துகின்றது. ஆகவே நிச்சயமாக பிரிந்து போக வேண்டுமா குழுக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்கின்ற போது, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் போது நிச்சயமாக பிரிந்துபோக வேண்டுமா இந்தக் கருத்துக்கு இத்தாலிய அரசியலமைப்பு சட்ட அறிஞர்திட்டவட்டமாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு கருத்தை சொல்கிறார். நாங்கள் சொல்கிறோம் பங்குபற்றல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை மக்களும் பங்குபற்றுகிற ஜனநாயகம். சுயநிர்ணய உரிமை பிரயோகத்தில் பிரிந்து போக வேண்டும் என்ற கட்டம் எப்பொழுது வரும் என்று சொன்னால்இந்த பங்குபற்றல் ஜனநாயகம் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படும் போது அதே சுயநிர்ணய உரிமையை பாவித்து அவர்கள் பிரிந்து போவதை ஆட்சேபிக்க முடியாது என்று அவர் கூறுகிறார். ஆகவே ஜனநாயகம் நூற்றுக்கு நூறுவீதம் திருப்திகரமாக இருக்கும் என்றால் அந்த ஜனநாயகத்திலே சிறுபான்மை மக்களுடைய உண்மையான பங்குபற்றல் இருக்கும் என்றால் அங்கே பிரிவினை என்ற பேச்சுக்கு இடமிருக்காது.
அது குழுக்களுடைய உரிமையை அவர்களுடைய சுயநிர்ணய உரிமையை எண்ணிக்கை குறைவானது என்ற காரணத்துக்காக அல்லாமல் எல்லாத் தேசிய இனங்களினதும் உரிமையை அங்கீகரிக்கின்ற ஜனநாயக அமைப்பாக ஏற்படுகிற போது சிறுபான்மை மக்களுடைய பங்குபற்றலுக்கு உத்தரவாதப்படுகிறபோது அங்கே பிரிவினை என்ற பேச்சுக்கு இடமிருக்காது. உண்மையான பங்குபற்றல் மறுக்கப்பட்டால் பிரிவினை என்ற கோஷம் எழும் என்பதே அந்த இத்தாலிய பேராசிரியரின் கருத்து.
இன்று ஒருமுகமாக எல்லா நாடுகளும் பங்குபற்றல் ஜனநாயகம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. பங்குபற்றல் ஜனநாயகம் என்று சொன்னால் எவ்வகையில் குறைந்த சிறுபான்மை மக்களும் கூடநியாயமான அளவு பங்குபற்றுகிறஜனநாயகம் ஆகவே அத்தகைய ஜனநாயக அமைப்பு இல்லாத நாட்டிலே அத்தகைய ஜனநாயகச் சிருஷ்டிப்பை கொண்டு வர தயங்குகிற ஒரு இடத்திலே பிரிவினை கோஷங்கள் எழுவதற்கு நியாயம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக இருந்தால் குழுக்களுடைய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு சமத்துவமான அவர்கள் குழுக்கள் என்ற ரீதியில் சமமாகப் பங்குபற்றும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறிவிடை பெற விரும்புகிறேன்.
வணக்கம்.

யுத்த நெருக்கடியும் சிறுவர் உளவியலும் - ஒரு சமூக உளவியல் நோக்கு
- கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்
உளவியல் மனித நடத்தை பற்றி ஆராயும் ஒரு அறிவியற்துறை பலவகையான உளவியற் கோட்பாட்டை பலரும் பல்வேறு நோக்குநிலைகளினூடாக முன்வைத்துள்ளனர்.
இவற்றுள் நாமறிந்த பிரபலமான ஒரு கோட்பாட்டாளர் சிக்மன்ட பிராய்ட் ( Sigmund Fread) ஆவார். இவர் மனிதனது உளவளர்ச்சிப்படிகளை பாலியல் உள வளர்ச்சி சார்பாக (Psychosexual development) அணுகும் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். பியாஜே மனித உள வளர்ச்சியினை அறிவியல் வளர்ச்சியின் சார்பாக ( Lognitive development) அணுகும் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்.
மனித உளவளர்ச்சி சமூகம் சார்ந்த ஒரு செயற்பாடு. ஆகவே, மனித உளவளர்ச்சி சமூகத்துடனான ஊடாட்டத்துடன் சார்ந்தே நோக்கபட வேண்டும் என்று கருதி மனித உள வளர்ச்சியினை சமூக உளவியல் வளர்ச்சி (Sociopsychological development) என்ற கோட்ப்ாட்டினடியாக நோக்கியவர் எரிக் எரிக்சன் (Erick Erickson) ஆவார்.
யுத்த சூழலில் மனிதனுக்கு ஏற்படும் உள நெருக்கடிகளை ஆராய்வதற்கு எரிக்சன் முன்மொழிந்த சமூக உளவியல் கோட்பாட்டையே அடிப்படையாக கொள்ளல் வேண்டும்.
அரசியலின் தொடர்ச்சியே யுத்தமாகப் பரிணமிக்கிறது. அரசியல் அடிப்படையில் சமூகத்தையும் அதை நிறுவகிக்கும் அரச இயந்திரத்திற்குமான உறவுமுறை பற்றிய ஒரு துறையே யுத்தமானது. ஒரு சமூகத்தின் சமநிலையையும் அதன் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும் குலைக்க வல்லது. ஆக, யுத்தத்தின் தொடக்கமும் அதன் விளைவுகளும் சமூகத்தை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது.
பொருளிழப்பு, உயிரிழப்பு, காயப்படுதல் போன்ற பாதிப்புக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம், அவற்றில் யுத்தமும் ஒரு காரணி ஆனால் அடிப்படையான குடும்ப வாழ்வினதும் சமூக வாழ்வினதும் சீர்குலைவானது யுத்தத்தால் ஏற்படும் ஒரு தனித்துவமான விளைவாகும்.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் நோக்குகையில் யுத்தத்தால் ஏற்படும் உளவியல் தாக்கங்களை ஆராய்வதற்கு சமூக உளவியல் வளர்ச்சிக் கோட்பாடே அடிப்படை மாதிரியுருவாக கொள்ளப்படல் வேண்டும்.
யுத்தம் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் தொடர்பான கருத்துக்களும் ஆராச்சிகளும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பின்னர்தான் பரவலாக மேற்கிளம்பியது. இதனைத் தொடர்ந்து வியட்நாம் யுத்தமும் சில சிறிய யுத்தங்களும் இத்தகைய தாக்கங்களின் பால் அறிவியற் கண்ணோட்டத்தை திருப்ப உதவின.
இருப்பினும் சிறுவர்களில் யுத்தமேற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே மேற் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் அவை

Page 9
பெருமளவில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலேயே வெளிவந்துள்ளன.
எரிக்சனின் கோட்பாடு சுட்டிநிற்கும் சாதாரண வளர்ச்சிநெறி யுத்த காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைப் பற்றிய ஒரு கருத்துருவ அணுகுமுறையினை வகுப்பதே இக்கட்டுரையில் எமது நோக்காயமைகிறது. இதில் எவ்வித ஆய்வுரீதியான மேற்கோள்களும் கையாளப்படவில்லை.
மனித உளச்சமநிலையை விளங்கிக் கொள்வதற்கு மனித மனம் பற்றிய ஒரு கருத்தாக்கத்தை முன்வைப்பது அவசியமாகிறது. மனிதனது உளப்பரிமானத்தை நாம் ஒரு மேசை மீதிருக்கும் கிண்ணத்திற்கு ஒப்பிடலாம். அக்கிண்ணத்தில் நீரை ஊற்றுவோமாகில் ஊற்றும் வேகம் அதிகரிக்கையில் அக்கிண்ணத்தின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இந்த நீர் ஊற்றும் வேகத்தினைநாம் உளநிலைக்கு புறதாக்கங்களால் ஏற்படும் அதிர்ச்சிக்கு ஒப்பிடலாம். (உதாரணமாக குண்டுவீச்சுதாக்குதலால் ஏற்படும் உளஅதிர்ச்சி) அதிர்ச்சிதாங்கமுடியாத ஒரு எல்லையை தாண்டும் பொழுது உளசமநிலை பாதிக்கப்படுகிறது. இந்தவித பாரியதாக்கங்கள் ஒருவித மனநோயைக் கூட ஏற்படுத்தலாம். (இதனை (PostTraumatic stress disorder(PTSI) என அழைப்பர்) அல்லது மனநோய் ஏற்பட்டு குணமாகி இருப்பவருக்கு, அல்லது மனநோயேற்படக்கூடிய உள அமைப்பினை உடையவர்களுக்கு இத்தகைய தாக்கங்கள் உளநோயினை ஏற்படுத்தலாம்.
கிண்ணத்தை தாங்கிநிற்கும் மேசையை நாம் சமூகத்திற்கு ஒப்பிடலாம். சமூகம் தளம்பலடையும் பொழுது உளச்சமநிலையும் பாதிப்படைகிறது. சமூகத்தின் சிதைவுயுத்தத்தின் ஒரு முக்கிய விளைவும் நோக்கமுமாக அமைந்துள்ளது. (படம் 1) உளச்சமநிலை பற்றிய கருத்தாக்கம்
ஆக, மனிதனது உளச்சமநிலை யுத்தத்தினால் இரண்டு தளங்களில் பாதிக்கப்படுகிறது.
1. சமூகம் வளங்கும் ஸ்திரப்பாட்டில் குலைவு ஏற்படுத்தும் தாக்கம். 2. யுத்தம் ஏற்படுத்தும் நேரடியான அதிர்ச்சி. சிறுவர்களில் யுத்தம் எத்தகையதாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வதற்கு அடிப்படையில் நாம் சிறுவரது சமூக உளவியல் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.
எரிக்சனின் கோட்பாட்டின்படி சிறுவர்களது உள வளர்ச்சி நான்கு படிகளில் நோக்கப்படலாம். இவை குழந்தைப் பருவம் முதல் பிள்ளைப் பருவம் வரை வியாபிக்கிறது. (Infancy to Childhood) (படம் 2)சிறுவரின் உளவளர்ச்சிப்படிகள்
வாழ்வின் முதலாவது படி முதலாவது வருடத்தை அடக்கிநிற்கிறது. இந்த வயதில் குழந்தையின் முக்கிய தொடர்புகள் தாயுடனேயே ஏற்படுகிறது.
முதலாவது வயதில் செயற்பாடுகள் பெருமளவில் இயல்பூக்க நிலையிலேயே (insteictual) தொழிற்படுகின்றன. இந்த இயல்பூக்க நிலைகள் அடிப்படை உணர்வுகளான பசி, கோபம், அசெளகரியம் போன்வற்றை உள்ளடக்கிநிற்கிறது.
அத்துடன் இந்த உணர்வுகள் ஆரம்பத்தில் எந்தவித அகபுற கட்டுப்பாடுகளும்
10

இன்றி வெளிப்படுகிறது. அதாவது ஒரு குழந்தைபசிஉணர்வுஏற்படுகையில் எந்தவித புறஅக காரணிகளையும் கருத்திலெடுக்காது, அதை அழுகை மூலம் வெளிப்படுத்துகிறது. உணவு தயாரிப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம் அல்லது வேறு காரணிகளால் தாமதம் ஏற்படலாம் என்ற எந்தவித சாத்தியப்பாடுகளையும் கருத்திலெடுக்காது தனது உணர்வை வெளிப்படுத்துகிறது.
இதேபோல் சூழ்நிலையை கருத்திலெடுக்காது. தனது கழிவுச் செயற்பாட்டை (Excretoryfunction) செய்கிறது. இதன்முக்கிய காரணம் சில அகக்காரணிகளை முக்கியமாக கழிவுச் செயற்பாட்டைகட்டுப்படுத்தும் தசைகளின் வளர்ச்சியும் அதை பற்றிய உணர்வுகளின் விளங்கிக் கொள்ளலின் வளர்ச்சியின்மையுமே. அதேவேளைஇச்செயற்பாட்டால் விளையும் அசெளகரியத்தை வெளிப்படுத்தவும் அழுகிறது.
இந்த இயல்பூக்க செயற்பாடுகளுக்கு தக்க விதத்தில் பரிகாரம் செய்யப்படாதவிடத்து, அதாவது பசியினால் அழும் குழந்தைக்கு உணவூட்டப்படாத பொழுது அதன் மனதில் ஒரு ஆழமான வடு ஏற்படுகிறது. *
ஒரு குழந்தை இப்படியான பரிகாரங்களுக்காக பிறரில் முற்றுமுழுதாக தங்கிநிற்கிறது. குழந்தையின் இயல்பூக்க செயற்பாடுகளுக்கு தக்க பரிகாரம் செய்யப்படுமிடத்து அக்குழந்தைக்கு பிறர் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. அதாவது, தனது தேவைகளை செவ்வனே செய்வதற்கு பிறர் இருப்பதை அது அனுபவபூர்வமாக அறிந்து கொள்கிறது.
இந்தநம்புதல்-நம்பிக்கையின்மை என்றஇருநிலைகளுக்கிடையில் ஒன்றை தெரிவு செய்வதில் குழந்தைக்கு ஒரு சவால் ஏற்படுகிறது இந்த சவாலை அல்லது நெருக்கடியை தீர்ப்பதற்கு தாய் மிகவும் முக்கிய காரணியாகத் திகழ்கிறாள்.
ஒரு குழந்தைக்கு தாய்தான் நேரடியான சமூகமாக திகழ்கிறாள். அவள் வாயிலாகவே குழந்தை சமூகத்தை பற்றிய முதலாவது அனுபவத்தையும் பெறுகிறது.
இந்த வளர்ச்சிப்படியில் பிறர்மீதும் சமூகம் மீதும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியாத குழந்தை நாளடைவில் தன்னை மையப்படுத்திய செயற்பாடுகளிலேயே அதிகம் ஈடுபடத்தொடங்குகிறது. எதிர்காலத்தையும் சமூகத்தையும் நம்பமுடியாதநிலையில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள மிகுந்த பிராயத்தனம் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கை உருவாக்கிக் கொள்கிறது.
இதன் விளைவு போட்டி மனப்பான்மையும் சுயநல செயற்பாடுகளாகவும் பரிண மிக்கிறது. இப்படியான உள வளர்ச்சிநிலை முதலாளித்துவத்திற்கான அடிப்படை உளவியல் வரைவு என்று கூடக் கூறலாம்.
யுத்த சூழல் இந்த வளர்ச்சிப்படியில் ஏற்படுத்தும் தாக்கம் ஏனைய சிறுபராய வளர்ச்சிப்படி தாக்கங்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைவு. இருந்தாலும் தாயையும் உடனடிக் குடும்ப உறுப்பினரையும் இழக்கும் குழந்தைக்கு அதன் இயல்பூக்க செயற்பாடுகளுக்கான பரிகாரம் தக்கவிதத்தில் வழங்கப்படாது போகலாம்.
அத்துடன் இந்த பரிகாரங்களை தக்க நேரங்களில் வழங்க முடியாது போகலாம். உதாரணமாக, அகதிமுகாமில் வாழும் குழந்தைக்கு உணவு தக்க நேரத்தில் வழங்குவதில்
1

Page 10
சிக்கல்கள் இருக்கும் அல்லது அசெளகரியங்களை நிவர்த்தி செய்ய முடியாதிருக்கலாம். இப்படியான பாதிப்புகளெல்லாம் உளவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த வல்லன.
யுத்த சூழலில் அகதிமுகாமில் இருந்தாலென்ன பெற்றோர் அற்ற சிறு குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் இருந்தாலென்ன குழந்தையின் அடிப்படையான தேவைகளை சரிவர நிவர்த்தி செய்யப்பட்டால் யுத்தத்தின் தாக்கத்தை இந்த வளர்ச்சிப்படியில் வெகுவாக குறைக்கலாம். VK.
இந்த முதலாவது வளர்ச்சிப்படியினை அடுத்துவரும் வளர்ச்சிப்படி குழந்தையின் வளர்ச்சியின் இரண்டாவது வருடத்தை உள்ளடக்கிநிற்கிறது.
இரண்டாவது சமூக உளவியல் வளர்ச்சிப்படியில் ஒரு குழந்தை தன்னை ஒரு தனி உயிரியாகதனித்துவமானதாக விளங்கிக் கொள்கிறது. தனது செயற்பாடுகள் அவற்றின் மீதான கட்டுப்பாடுகள் தன்னைப் பற்றிய அறிவு எல்லாம் இந்தப்படியில் தான் அரும்பத் தொடங்குகின்றன.
இந்த வளர்ச்சிப்படியில் "குழந் தை தனது குடும்பத்தின் வாயிலாகவும் நெருக்கமானவர்கள் வாயிலாகவும் சில சமூகநியமங்களையும் சமூக எதிர்பார்ப்புக்களையும் பற்றி அறிந்து கொள்கிறது.
எந்த எந்த செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எவை எவை எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதனை இந்த வளர்ச்சிப் படியிலேயே குழந்தை அறியத் தொடங்குகிறது. கட்டுப்பாடுகளும் நெறிப்படுத்தல்களும் இந்த நிலையில் தான் உள்வாங்கப்படத் தொடங்குகின்றன.
தனது செயற்பாடுகளில் எவை எவை வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட வேண்டும். எவை வெளிப்படுகையில் அவை தன்னை வெட்கப்பட வைக்கும் என்பது பற்றிய மதிப்பீடு இந்த நிலையில் ஒரு முக்கிய வளர்ச்சி. இந்த வளர்ச்சி பெருமளவில் சமூகத்தின் கலாசாரத்தில் தங்கியுள்ளது.
என்னால் என்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் என்னை சந்தேகப்பட வைக்கிறது. என்னுள் என்னால் அறிந்து கொள்ள முடியாத உணர்ந்து கொள்ள முடியாத பகுதிநான் பிறருடன் தொடர்புகொள்கையில் அவர்களது வெளிப்பாடுகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த அறிந்து கொள்ள முடியாத பகுதி எனக்குபலம் தரக்கூடிய ஒரு பகுதியாக நன்மைபயக்கும் பகுதியாக இருக்கையில் அது தன்நம்பிக்கைக்கும் சுய வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இப்படியான பிறருடன் தொடர்பு கொள்ளுதல் மூலம் அவர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தின் வாயிலாக தன்னில் இருக்கும் மறைவான பகுதியை அறிந்து கொள்ளத் தொடங்கும் பருவம் இந்த இரண்டாவது சமூக உளவியல் வளர்ச்சி பருவம்,
இந்த வளர்ச்சிநிலையில் தன்நம்பிக்கையும் தனது விசேட அம்சங்களைப் பற்றிய ஏற்றுக் கொள்ளலும் (அதாவது தனது பால், தனது நிறம், தனது உருவம் போன்ற) வளர்ச்சியடைகிறது. இந்த நிலையில் பாதிப்பேற்படும் பொழுது தன்னைப்பற்றிய
12

தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கையின்மையும் ஏற்படுகிறது.
இந்த வளர்ச்சிப்படிக்கு சமூக காரணிகள் ஒரு கண்ணாடி போல தொழிற்படுகிறது. குழந்தையின் விம்பத்தை அது காண்பிக்கிறது.
இந்த வளர்ச்சிகள் செவ்வனே நடைபெற ஓரளவு சமநிலையான பண்பாட்டு குழல் அவசியம். உதாரணமாக ஒரு மிகவும் பின்னடைவான சமூகச் சூழலில் இருந்த ஒரு குழந்தை யுத்தத்தின் காரணமாக ஒரு நடுத்தர வர்க்க அகதிமுகாமில் வாழ வேண்டி ஏற்படுகையில் அதற்கு தன்னைப் பற்றிய ஒரு அதீத தாழ்வுமனப்பான்மை உருவாக இடமேற்படுகிறது.
இருப்பினும் யுத்த சூழலில் பெரும்பாலும் குடும்பங்கள் அவற்றின் சுற்றத்துடன் பாதிக்கப்பட்டு அதே பண்பாட்டுச் சூழலில் அகதிகளாகும் பொழுது இந்த வளர்ச்சிப்படியில் ஏற்படும் தாக்கம் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்த இடமில்லை.
சமூக உளவியல் வளர்ச்சிப்படிகளில் முதல் இரு நிலைகளும் தாயையும் குடும்பத்தையும் மையப்படுத்தியே முக்கியமாக நிகழ்கிறது. இந்த நிலைகளில் முழு சமூகத்தின் பிரதிபலிப்பையும் ஒரு குழந்தை தாயிடமிருந்தும் குடும்பத்திடமிருந்துமே பெறுகிறது.
இதனை அடுத்துவரும் இரு வளர்ச்சிப்படிகளும் மிகவும் முக்கியமானவை. இந்த நிலைகளிலேயே ஒரு குழந்தையானது தனது குடும்பத்தை தாண்டி ஏனைய சமூகத்தை எதிர்கொள்ளத் தொடங்குகிறது. இந்த இரு நிலை வளர்ச்சியிலேயே யுத்தமும் அதன் விளைவுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு சிறுவனின் மூன்றாவது சமூக உளவியல் வளர்ச்சிப்படியானது மூன்றாவது நான்காவது வயதுகளை உள்ளடக்கிநிற்கிறது. இந்த வளர்ச்சிப்படியில் சிறுபிள்ளையானது மிகுந்த தசை இயக்க செயற்பாடுகளை வெளிக்காட்டுகிறது.
இந்த வளர்ச்சிப்படியில் சிறுபிள்ளைகள் மிகுந்த துடியாட்டம் மிக்கவர்களாக ஓடித்திரிவதிலும் உலகை ஆராய்வதிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு உலகம் ஒரு புதிய தரிசனப்பரப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
தம்இஷ்டப்படியே பல செயற்பாடுகளை இவர்கள் செய்கிறார்கள். அதேவேளை சில வகையான தமது நடவடிக்கைகள் பிடிபட்டுவிடுமோ என்ற அச்சமும் இவர்களிடத்தில் காணப்படுகிறது.
இப்படியான ஒரு செயற்பாடாகவே தம் கற்பனையில் தமது ஒரு பெற்றோரை காதலிப்பது கருதப்படுகிறது. அதாவது ஒரு ஆண் குழந்தை தன் தாயை காதலிப்பதாகவும், பெண் குழந்தை தந்தையை காதலிப்பதாகவும் கற்பனை செய்வதும் இதன் வாயிலாக மகன் தந்தையை தனது போட்டியாளனர்க கருதுவதும் அடங்குகிறது. இந்த பயம் அதாவது இந்த கற்பனை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் ஒரு வித குற்ற உணர்விற்கு இட்டுச் செல்கிறது.
விளையாட்டும் கற்பனையும் இக்கட்டத்தின் முக்கிய செயற்பாடுகள். இவைதான் இவர்களுக்கு தமது இருப்பின் அர்த்தத்தையும் தமது தொழிற்படும் திறனையும் உணர்ந்து கொள்ள உதவுகிறது.
இந்த வளர்ச்சிப்படியில் சிறுபிள்ளைகள் தம்குடும்பச் சூழலை தாண்டி அயலவர்களுடன்நட்பை வளர்க்கத் தொடங்குகிறது. அத்துடன் அக்கம்பக்கத்து சிறுவருடன்
13

Page 11
சேர்ந்து விளையாட்டு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது.
இப்படிப்பட்ட சுயமான நட்புகளின் உருவாக்கத்திற்கும் அவர்களது நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் ஸ்திரமான சூழல் மிக அவசியமானது. அத்துடன் உருவாக்கப்பட்டநட்புகளின் பேணுகையும் விளையாட்டு நேரமுறைமைகளின் சீறும் குழலின் ஸ்திரப்பாட்டை உணர்ந்து கொள்ள உதவும் மிக முக்கிய காரணிகளாகும்.
யுத்தத்தின் தாக்கத்தினால் இந்த ஸ்திரப்பாடு நிர்மூலமாக்கப்படுகிறது. அத்துடன் உருவாக்கப்பட்ட நட்புகளும் சிதைவடைகிறது. இதனால் உலகம் ஸ்திரமற்றது என்ற ஒரு எண்ணம் ஆழப்பதிகிறது. அத்துடன் சுய வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகளும் தடைப்படுகிறது.
அகதிமுகாம் போன்ற புதிய சூழல்கரில் உருவாகும் புதிய தரிசனங்களும் பழக்கப்படாத முகங்களும் அனுபவங்களும் சமூகம் ஒரு எதிர்வுகூறமுடியாத பயங்கரமான இடம் என்ற மனப்பதிவையும் ஏற்படுத்துகிறது.
இதனால் தாயுடனும் தன் குடும்பத்துடனும் சுருங்கி முந்தைய வளர்ச்சி நிலைகளிலேயே தனது சமூக உறவைப் பேணுவது சாலச்சிறந்தது என்றே ஒரு பின்னடைவான நிலையிலேயே தேக்கமடைகிறது.
சிறுவர்களின் நான்காவது சமூக உளவியல் வளர்ச்சிப்படி ஐந்து முதல் பத்து வயது வரையுள்ள ஆரம்ப பாடசாலை வருடங்களைக் குறித்துநிற்கிறது.
வாழ்வின் செயல் ஊக்கமும் தேடலின் ஆர்வமும் அறிவின் வளர்ச்சியும் இந்த வளர்ச்சிநிலையில் தான் தோன்றுகிறது. இந்த படி செயலூக்கநிலை - செயலூக்கமற்ற நிலை ஆகிய இருநிலைகளுள் ஒன்றை தெரிவு செய்ய உதவுகிறது.
பாடசாலைக்கு சென்று புதியதான் உருவாக்கிதனக்கென வீட்டிலிருந்து தனிப்பட்டு ஒரு கற்பனை உலகைக் கண்டு சுயமுனைப்பினால் சிலவற்றைவென்று புதிய விடயங்களை அறிந்துதான் செய்பவையும், அறிந்து கொள்பவைகளும் மிகப்பெரிய விடயங்களென கருதி அவற்றை தொடர்ந்து மேற்கொள்வதற்கான ஊக்கம்தான் செயலூக்கம்.
இந்தநிலையில் தான் சிறுவர் தாம் பாடசாலையில் செய்தவைகளையும் கற்றவற்றையும் பெரிய விடயங்களாக கருதி தன் பெற்றோரிடம் அதைப்பற்றி செப்புவர்.
இந்த வளர்ச்சிப்படி அவர்களது வாழ்க்கையின் செயற்பாடுகளுக்கும் சுயமுனைப்பிற்கும் அத்திவாரமிடுகிறது. இந்த அத்திவாரத்தின் ஸ்திரப்பாடு சூழலின் தன்மையில் தங்கிநிற்கிறது. இதற்கு ஒரு நிச்சயமான ஸ்திரமான சூழல் எதிர்பார்ப்புக்கள் தக்கவிதத்தில் நிறைவேறும் சூழலும் அவசியம்.
காலை எழுந்ததும் பாடசாலை மாலை வீடு வந்ததும் தேனீர்இரவுவந்ததும் படுக்கை இவற்றின் சிரமமானநிகழ்வு சூழலின் ஸ்திரப்பாட்டை உணர்ந்து கொள்ள உதவுகிறது.
யுத்த சூழலில் இவையெல்லாம் பாதிக்கப்பட்டு ஸ்திரப்பாடு குலைகிறது. இது சிறுவரை செயலூக்கமற்ற மந்தநிலைக்கு இட்டுச் செல்ல வல்லது.
இந்த குடும்பமும் பாடசாலையும் தரும் பாதுகாப்பையும் ஸ்திரப்பாடையும் தான் மு.பொவின் நான் அரசன் என்ற சிறுவர் பாட்டில் வரும்
14

அம்மாஅப்பாஎன்கோட்டை
பள்ளித் தோழர் என்படைகள்
என்ற வரிகள் குறித்துநிற்கின்றன. பெற்றோரை பெரிய அரண்களாக காண்பது சிறுவர் உள்ளம். அவர்களைத்தாண்டி
எந்த சக்தியும் வரமுடியாது என்பது அவர்களது எண்ணத்துணிவு. ஆனால் யுத்த சூழலில் பெற்றோரே கதிகலங்கிநிற்பதனை கண்டதும் அவர்களது பலமான கோட்டையே தகர்கிறது. இதனால் பாதுகாப்பின்மை அவர்களை ஆட்கொள்கிறது.
பள்ளித்தோழரது தொடர்புகளும் கூடி விளையாடுதலும் பாதிக்கப்படுகையில் அவர்களின் வாழ்வின் நோக்கம் அந்த தளத்தில் தகர்கிறது. அவர்களது உலகம் சிதைகிறது. இதனால் நட்புகளை வளர்த்துக் கொள்ள விரும்பாத தன்னுள்ளேயே ஒடுங்கி வாழும் ஒரு இயல்பை இவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இதுவரை கருதிய தாக்கங்கள் முக்கியமாக சமூக அமைப்பும் சூழலும் பாதிக்கப்படுவதால் ஏற்படுபவை. இவற்றை விட போரானது நேரடியான உளத்தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த நேரடியானதாக்கம் அவர்கள் தாமாக உணர்ந்து கொள்வதாகவோ அல்லது பெற்றோர்கள் உற்றோர்களில் ஏற்படும் பயம் போன்ற உணர்வுகளை அவர்களுக்கூடாக பெறுவதாகவோ இருக்கலாம்.
இந்த நேரடித் தாக்கம் அர்த்தமற்ற பயங்கரங்களுக்கு வழிகோலுகிறது. அத்துடன் எந்த சிறு மாற்றமும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற அங்கலாய்ப்புடனான ஒரு கலக்கமும் இவர்களது வாழ்வை ஆட்கொள்ளுகிறது.
இத்தாக்கங்கள் மனதில் ஆழப்பதிந்து கனவிலும் நாளாந்த வாழ்விலும் மீண்டும் மீண்டும் வருவதனால் சாதாரண வாழ்கை திரும்பிய பின்னரும் இவை பெரும் இடைஞ்சலாக அமைகிறது.
யுத்தத்தின்தாக்கம் பல்வேறு வழிகளிலும் சிறுவர்களின் கற்றல், ஞாபகசக்திபோன்ற அறிவியல் வளர்ச்சியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லது.
சாதாரண சிறுவர்களில் ஏற்படும் இந்த தாக்கங்கள் ஒரு புறமிருக்க போரில் நேரடியாக ஈடுபடும் சிறுவரில் ஏற்படும் தாக்கமோ முற்றிலும் வேறானது. இந்த போராளிச் சிறுவர்களின் உளவளர்ச்சியும் அதன் பாதிப்புகளும் பன்முகப்பட்டது. அவற்றை பற்றிய ஆய்விற்கு காலமும் களமும் உசிதமானதாக அமைகையில் அது பற்றிய தீர்க்கமான ஆய்வுகளும் நிவர்த்திநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதும் அவசியம்.
யுத்தத்தினால் சமூகத்தில் எல்லோருமே பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் சிறுவர்களில் அவை ஏற்படுத்தும் தாக்கம் அவர்களது வாழ்வையே முழுதாகப் பாதிக்கக்கூடியது. ஆகவே இந்த பாதிப்புக்கள் பற்றிய ஆய்வுகளும் அவற்றிற்கான நிவர்த்தி நடவடிக்கைகள் பற்றி அடிப்படை முயற்சிகளும் தொடங்கப்படுவது இக்காலகட்டத்தின் ஒரு முக்கிய தேவையாகும். காரணம்.
இன்றைய சிறுவர்கள்தான்நாளைய தலைவர்கள்
15

Page 12
புறக்காரணிகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி
Տ , : 'i
مي ماه ۹۰ . SB- மனம்
R --சமூகத்தளம்
எச்சமநிலை பற்றிய கருத்தாக்கம் (படம் 1)
1வது சமூக உளவியல் வளர்ச்சிப்படி
தாய் 1 வயது
y வேது சமூக உளவியல் வளர்ச்சிப்படி
குடும்பம் 2 வயது
3வது சமூக உளவியல் வளர்ச்சிப்படி
சுற்றத்தார்
3-4 வயது
y 4வது சமூக உளவியல் வளர்ச்சிப்படி
TIL FITC3)6)
5-10 வயது
v
சிறுவரின் உளவளர்ச்சிப் படிகள் (படம் 11)
16

வன்முறையும் கல்வியும்
- சோ.சந்திரசேகரம்
வன்முறையும் கல்வியும் என்பதை வெவ்வேறு பரிமாணங்களில் நோக்க முடியும். ஒரு பரிமாணம் என்னவென்றால் கல்வியினூடாக எவ்வாறு வன்முறை பரவலாம் என்பதை நோக்கல்.
கல்வியினூடாக எவ்வாறு வன்முறை பரவலாம் ? படிக்கின்றார்கள், வேலை இல்லாமல் போகிறது. வேலை கேட்கின்றார்கள். வேலை தரவில்லை. எனவே வன்முறையில் இறங்குகிறார்கள். ஆனால் நான் அதைப் பற்றி இங்கு பேச வரவில்லை. இன்னுமொரு வடிவிலும் நோக்கலாம். வன்முறையை தவிர்த்துக் கொள்வதற்கு எவ்வாறு கல்வியைப் பயன்படுத்தலாம்?
இலங்கையிலே இன்று பல அறிஞர்கள் கல்விமான்கள் கலந்துரையாடுகின்றனர். எவ்வாறு நாட்டில் கல்வியிலே திருத்தங்களை கொண்டு வந்து இந்த நாட்டிலே ஒரு இன ஒற்றுமையை ஏற்படுத்தலாம்? வன்முறையை எவ்வாறு குறைக்கலாம்? தற்போதை நடைமுறையுத்த என்னவெனில் நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. பிரச்சினையை ஆராய்கிறார்கள். ஆராய்ந்து ஆராய்ந்து பின்முடிவிலே கூறுகின்றனர். இதற்கு காரணம் எங்களுடைய நாட்டின் கல்விமுறை தான் என்று. ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கல்வித்துறையை சார்ந்தவன். எனவே கல்வியின் மீது குற்றம் சுமத்தும்போது எனக்கு கோபம் வருவது நியாயம்தான். எடுத்துக்காட்டாக கூறுவதாக இருப்பின் இந்த நாட்டிலே சூழல் மாசுபடுகிறது என்றால் Ads நோய் பரவுகிறது என்றால் சனத்தொகை அதிகரிப்பது என்றால் அதைப் பற்றி/பேசுகின்றார்கள். எங்களுடைய கல்வி முறையினூடாக நாங்கள் மக்கள் தொகை அதிகரிப்பை தவிர்க்க வேண்டும். அதற்கு சனத்தொகைக் கல்வி என்ற ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். Aidsநோயைதவிர்க்கAidsகல்வி, சூழல் மாசடைதலை தவிர்க்க சுற்றாடல் கல்வி என்று கல்விக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். எங்களுடைய பாடசாலைகளில் பயிலுகின்ற சுமார் 40லட்சம் மாணவர்களிடையே இவ்வாறான கருத்துக்களை சுமத்தி எதிர்காலத்திலே மக்கள் தொகைப் பெருக்கத்தை தவிர்க்கப் பார்க்கின்றார்கள்.
இந்த நாட்டிலே இன ஒற்றுமை குலைந்து விட்டது. இனங்களுக்கிடையே பிரச்சினை தோன்றிவிட்டது. ஏன் அவ்வாறு என்றால் அதற்கு காரணம் இந்த கல்விமுறைதான். கல்விமுறையிலேநாங்கள் சிறந்த அறிவை, இனஐக்கியத்திற்கு சாதகமான உணர்வுகளை, சிறந்த மனப்பான்மையை எங்களுடைய கல்வியினூடாக நாங்கள் ஊட்டவில்லை எனவேதான் இனவேறுபாடுகள் தோன்றுகின்றன. வன்முறை பிறக்கின்றது என்ற ஒரு கருத்தையும் பலர் முன்வைக்கின்றார்கள் இந்தச் சந்தர்ப்பத்திலே நான் அதைப் பற்றியும் கூற விரும்புகிறேன்.
சில புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வன்முறையைத் தூண்டும் சந்தர்ப்பங்களும் உண்டு. இலங்கையில் 1970இன் பின் பல்கலைக்கழக அனுமதியில் புள்ளிகளைத்
17

Page 13
தரப்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய விஞ்ஞானப் பயிற்சி நெறிகளில் தமிழ் மாணவர்களின் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது. உயர் கல்வி வாய்ப்புகளைக் கணிசமாக இழந்தமையால் தமிழ் இளைஞர்கள் அடைந்த விரக்திநிலையும் தமிழர் அரசியல் வன்முறைப்படுத்தப்பட்டமைக்கு ஒரு முக்கிய காரணம் எனக் கருதுவோர் உளர்; பல்கலைக் கழக வாய்ப்புகள் போதிய அளவுக்கு, தேவைக்கு ஏற்ப விரிவு செய்யப்படாமை தென்னிலங்கையில் வன்முறை அரசியலில் இளைஞர் ஈடுபடத் தூண்டிய ஒரு காரணியென இளைஞர் அமைதியின்மையை ஆராய்ந்த சனாதிபதி ஆணைக்குழு கூறியிருந்தது. இந்தியாவில் பின்தங்கிய வகுப்பினருடைய மேம்பாடு கருதி அவர்களுக்கு மேலதிக உயர்கல்வி வாய்ப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் தோன்றின.
நான் பேசவிருப்பது என்னவென்றால் இந்த வன்முறைகள், பலாத்கார நடவடிக்கைகள் எவ்வாறு கல்வி வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதுதான். என்னுடைய தலைப்பின் உட்பொருளாக அமையும். கல்வியை பற்றிக் கூறுவதாக இருப்பின் யாவருக்கும் கல்வி என்ற கோட்பாடு இன்றைய காலகட்டத்தில் தான் முன்வைக்கப்பட்டிருக்கிறது. யாவருக்கும் கல்வி யாவருக்கும் விஞ்ஞான கல்வி என்ற கருத்து 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலே முன்வைக்கப்படவில்லை உண்மையில் 1990களில் தான் முன் வைக்கப்பட்டது. காலங் காலமாக கல்விமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நாம் ஆராய்ந்தால் இருந்தால் கல்விமுறைகள் வசதிமிக்கவர்களுக்குரியதாக/ செல்வாக்குமிக்கவர்களுக்குரியதாக ஒரு பொழுது போக்குச் சாதனமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நவீன கால கட்டத்திலே கல்வியின் ஒரு முக்கிய பணி என்ன வென்றால் கல்வி மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதாகும். இக் கருத்து 1950, 1960களில் தான் எழுந்தது எனலாம்.
உலகளாவிய ரீதியில் குடும்பங்க, சமூகங்கள் எவ்வாறு தமது தனிமனித அந்தஸ்தை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்திக் கொண்டார்கள் என்று ஆராய்ந்தவர்கள் கண்டது என்னவெனில் இவ்வாறான சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு காரணம் கல்வி என்ற ஒரு வலுவான பலமிக்க, சக்திமிக்க காரணி என்பதுதான் எனஅறிந்திருந்தனர்.
கல்வி கீழைநாடுகள், மேலைநாடுகள் என்பவற்றில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் கூட இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவியாக வளர்ந்ந்து வருகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களை பொறுத்த வகையில்கல்வி அவர்களுடைய மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய கருவி என்று அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக வடபகுதி மக்கள் ங்களுடைய மேம்பாட்டிற்கு கல்வியே ஒரு முக்கிய சாதனம் என்ற அடிப்படையில் காலங் காலமாக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்கள்.
ஆனால் இந்த கல்வி வளர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது? கல்வி வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலைகள் எவை என்பது பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
18

கல்வி வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணியாக அமைதியான, சமாதானமான ஒரு அரசியல் சூழல், ஸ்திரமான ஒரு அரசியல் நிலைமை தேவை. இது இல்லாவிடில் கல்வி நிச்சயமாக வளர்ச்சி பெற முடியாது. அரசியலையும் கல்வியையும் இணைத்து ஆராய்ந்தவர்கள் கூறுவது என்னவென்றால் உலகநாடுகளிலே எங்கெங்கு எல்லாம் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை காணப்பட்டதோ அங்கெல்லாம் கல்வி வளர்ச்சி நிச்சயமாக பின்தங்கித்தான் காணப்பட்டது என்னபதாகும்.
வியட்நாமிலே அமெரிக்கா தலையிட்டு அங்கு அமைதி இன்மை காணப்பட்ட போது அங்கு கல்வி வளர்ச்சி எதுவுமே காணப்படவில்லை. 1970ல் பங்களாதேஷில் பெரிய போர் மூண்டபோது அங்கும் கல்வி வளர்ச்சி தடைப்பட்டது. இன்றும் கூட காஷ்மீர் மாநிலத்திலே உள்ள போர் குழலிலே ஆசிரியரும் மாணவர்களும் அமர்ந்து கல்வி கற்றுக் கொண்டிருப்பர் என்றும் நிச்சயமாகக் கூறுவதற்கில்லை.
எனவே கல்வி வளர்சிக்கு அமைதியான, சமாதானமான குழல், அரசியல் ஸ்திரமானதன்மை என்பன நிச்சயமாகத் தேவை.
ஆனால் இந்தக் கல்விமுறையிலே சம்பந்தப்படுகிறவர்கள் யாரென்று பார்ப்போம். இந்தக் கல்வி முறையிலே சம்பந்தப்படுகிறவர்கள் முதலாவது குழுவினர் நிச்சயமாக மாணவர்கள். ஆனால் இன்றைய கோட்பாட்டிலே கல்வி கற்கின்ற பிள்ளைகள் மட்டும்தான் மாணவர்கள் என்ற கருத்தை ஏற்பதற்கில்லை.
ஏனென்றால் மனிதன் பிறப்பு தொடக்கம் இறப்புவரை நிச்சியமாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி கற்றுக் கொண்ட இருந்தால்தான் 20ம் நூற்றாண்டின் புதிய சூழ்நிலையையும் புதிய சவால்களையும் புதிய தேவைகளையும் அவனால் சமாளிக்க முடியும். எனவே ஒவ்வொரு மனிதனும் கல்வி பயில வேண்டும் என்ற கருத்தை அறிஞர்களும் கல்விமான்களும் எடுத்துக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் இன்றைய பிள்ளைகள் எங்களுடைய கல்விமுறை செயற்பாட்டிலே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் கல்வி செயற்பாட்டிலேபிள்ளைகள் மட்டும் இருந்தால் போதாது. இன்னொரு குழுவினர் ஆசிரியர்கள். இலங்கையை பொழுறுத்தவரையில் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
இலங்கை மட்டுமல்ல உலகளாவிய எந்த நாட்டிலும் கல்விச் செயற்பாட்டின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள் தான் அதேவேளை இன்றைய ஆய்வாளர்களின் கருத்துப்படி பிள்ளைகள் சிறப்பாகக் கற்பதற்கு ஆசிரியர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களும் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். பெற்றோர்கள் சிறந்த மனப்பாங்குடன் தங்களுடைய பிள்ளைகளில் கல்வியை கவனிக்கும் போது தான் அந்தப் பிள்ளைகளின் கல்வியும் வெற்றி பெறுகிறது. ஆசிரியர்களின் பங்குமட்டும் பிள்ளைகளின் கல்வி வெற்றிக்குப் போதாது. பெற்றோரும் பங்கு பற்றல் வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாடசாலையில் ஒப்படைப்பதன் மூலம் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அடிகோலி விட்டதாக எண்ண முடியாது.
அடுத்ததாக இன்னுமொரு குழுவினர் உண்டு. இந்தப் பாடசாலைகளை அப்படியே
19

Page 14
விட்டுவிட்டால் கல்வி வளர்ச்சி நடைபெறும் என்று கூற முடியாது பாடசாலையிலே என்ன நடக்கிறது? கல்விச் செயற்பாடு எவ்வாறு இயங்குகிறது? என்பதைத் திட்டவட்டமாக கண்காணிப்பதற்கு இன்னொரு குழுவினர் தேவைப்படுகின்றனர். அவர்கள் தான் கல்வித்துறை அதிகாரிகள். இவ்வாறான குழுவினரை நாங்கள் கல்வி வளர்ச்சியை பொறுத்தவரை இனங் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இவ்வாறான குழுவினரை மட்டும் வைத்துக் கொண்டு எங்களுடைய கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. கல்வி வளர்ச்சிக்கு தேவையான வேறு சில சாதனங்கள் இருக்கின்றன. ஒன்று மனித வளம். ஆசிரியர்களைநாங்கள் மனிதவளம் என்று கூறினால் இதை மட்டும் வைத்துக் கொண்டுகல்வி வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியாது. இன்னொரு வளமான பெளதீகவளம் எமக்குத் தேவை. சரியான பௌதிகவளம் இல்லாவிட்டாலும் கல்வி பின்தங்க நேரிடும்.
பெளதிக வளங்கள் என்று கூறும் போது கட்டிடங்கள்/தளபாடங்கள் மட்டுமல்ல நவீன கல்விமுறையை பொறுத்தவரையிலே இன்று தொழில்நுட்பம் என்று கூறப்படுகின்றதன் அடிப்படையிலேயே கல்விச் செயற்பாட்டை மாணவர்க்ளின் கல்வி தேர்ச்சியை வளர்க்க கூடிய ஒரு காலகட்டத்தில் இன்று நாம் வாழ்கின்றோம். இதனை கல்வித் தொழில்நுட்பம் என்றும் கூறுவர்.கல்வித் தொழில் நுட்பம் எனும்போது கல்வி வளர்ச்சியின் விளைவாக விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டது. கல்வி வளர வளர விஞ்ஞானம் வளருகிறது.
விஞ்ஞான வளர்ச்சிகளின் விளைவாக உருவாக்கிய கருவிகளை, சாதனங்களை நாங்கள் பயன்படுத்தி கல்வி வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் இக்கால கல்விச் சித்தார்ந்தம். அதாவது நாங்கள் வகுப்பறையிலே மாணவர்களுக்கு ஆசிரியர் மட்டும்தான் கற்பிக்கின்றார்கள் என்றால் அவர் கற்பிப்பது மட்டும் போதாது. நாங்கள் தொலைக் காட்சி, வானொலி, நூல்களினூடாக கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எனவே மனிதவளமும் பெளதிக வளமும்இணைந்துதான் கல்வித்துறை மேம்பாட்டை, கல்வி வளர்ச்சியை நிச்சயமாக ஏற்படுத்த முடியும் என்றால் இந்த இடத்திலேதான் வன்முறை வருகிறது.
வன்முறை என்றால் என்ன? ஒரு மனிதனுடைய உயிர், உடமை, அவனுடைய பொருட்கள் இவை எல்லாமே பாதிக்கப்படக்கூடிய ஒரு நடத்தையை நாங்கள் வன்முறை என்று கூறலாம். இது ஒரு அகராதியில் கண்ட ஒரு விளக்கமல்ல. சிந்தித்துப் பார்த்தால் வருவதுதான்.
ஒரு தனிமனிதனை பாதிக்கின்ற முறையில் நடப்பவற்றை நாங்கள் வன்செயல்கள் என்று கூறுவோம். இந்த வன்செயல் போராக அல்லது கலவரமாக இருக்கலாம். இவ்வாறு வன்முறை நடக்கும் போது நிச்சயமாக இந்தக் கல்விச் செயற்பாடு / பாதிக்கப்படும். மிக இலகுவாக உங்களுக்கு விளங்கும் ஒரு கல்விச் சூழ்நிலை சிறப்பாக அமைந்தால்தான் வகுப்பறை, பாடசாலை சூழ்நிலை மிக சிறப்பாக, சாதகமாக அமைந்தால்தான் பிள்ளைகள் கற்பார்கள். வகுப்பறையிலேஇருக்கும் மாணவர்கள் கற்கும் போது பக்கத்திலே ஒரு வாகனம் போனால் அந்த இடத்திலே ஒரு இடையூறு ஏற்படுகிறது. மாணவர்களின் கவனம் சிதைக்கப்படுகிறது. சாதாரண ஒரு வாகனம் போகும் போதே மாணவர்களின் கவனம்
20

சிதைவடைகிறது என்றால் ஒரு போர், கலவரம் எந்தளவுக்கு சிதைவடையச் செய்யும் என்பதைப் பற்றி நீங்கள் மிக இலகுவாக சிந்தித்துக் கொள்ள முடியும். இவ்வாறே ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்படுகின்றன. அங்கே இருக்கும் பெளதிக வளங்களும் பாதிக்கப்படும் போது எவ்வாறு அந்த இடத்திலே கல்வி வளர்ச்சி ஏற்படும்?
எனவே கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்கும்போது நிச்சயமாக வன்செயல் இருக்கும் போது அங்கு கல்விவளர்ச்சி ஏற்படாது என்பதை கோட்பாட்டு ரீதியில் நிச்சயமாக கூறலாம்.
முதலாம் உலக யுத்த காலத்திலும் 2ம் யுத்த காலத்திலும் மேற்கு ஐரோப்பாவில் பல அழிவுகள் ஏற்பட்டன. யுத்தத்தினால் மக்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. இதற்கு நட்டஈடு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. எவ்வாறான நட்டஈடு அளிக்க வேண்டும்? யாவருக்கும் ஆரம்பக் கல்வி என்று கருத்து இதன்பின்புதான் இங்கிலாந்திலே முதன்முதலாக வைக்கப்பட்டது. அதன்பின்னர்தான் 2ம் உலகமகாயுத்த முடிவில் யாவருக்கும் இடைநிலைக் கல்வி என்ற கோட்பாடு 1950களில் இங்கிலாந்தில் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு நோக்குமிடத்து வன்முறைக்கும் கல்வி வளர்ச்சிக்கும் திட்டவட்டமான ஒரு தொடர்பு இருப்பதை நாங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வன்முறை என்பது கல்வியில் இன்னொரு வகையான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. கல்வி கற்றோர் இன்றி சிறந்த பயிற்சியுடைய ஆசிரியர்கள் இன்றி எந்தக் கல்விமுறையும் வெற்றி பெற முடியாது.
காந்தியடிகள் இந்தியாவிலே வார்தா கல்வித்திட்டத்தை ஆதார கல்வித்திட்டத்தை முன்வைத்தார். ஆனால் அவரது கல்வித் திட்டம் காலப் போக்கிலே பார்த்தால் சற்றுத் தோல்வியடைந்துவிட்டது. ஏன் தோல்வி அடைந்துவிட்டது என இந்திய கல்வித்துறையினர் ஆராய்ந்து பார்த்தார்கள். அவர்களின் ஆய்விலே அந்த நாட்டிலே இருந்த ஆசிரியர்கள் இந்தக் கல்வித் திட்டம் வாழ்க்கைக்கு ஆதாரமானது மனித வாழ்க்கை மேம்பாட்டுக்கு ஆதாரமானது என்று காந்தியடிகள் கொண்டிருந்த கோட்பாட்டை சரியாக கிரகிக்க தவறிவிட்டார்கள். எனவே ஆசிரியர்கள் வார்தா கல்வித் திட்டத்தில் சரியான முறையில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவில்லை என்பதால் அத் திட்டம் தோல்வி அடைந்து விட்டது எனும் முடிவைப் பெற்றனர். வன்செயல்களின் விளைவாக இந்த ஆசிரியர்குழாமிற்கு என்ன நடக்கின்றது? ஆசிரியர் குழாம் சிதைவடைய நேரிடுகிறது. இன்று தமிழ் மக்களை நாம் எடுத்துக் கொண்டால் இந்த வன்செயல்களின் விளைவாக நாட்டிலுள்ள சிறந்த தமிழ் அறிஞர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
நான் இந்த இடத்திலே தமிழ் மக்களுக்கு ஒரு செய்தியைக் கூற விரும்புகின்றேன். தமிழ் மக்களுக்கு என்று ஒரு வரலாறு, சமூகம், புவியியல் பிரதேசம் இருக்கின்றது. சமூகவியல், பொருளாதாரம், வரலாறு இலக்கியம் என்று தனித்தனியாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவற்றை ஆராய்வதற்கு எத்தனைபேர் எங்கள் மத்தியில்இருக்கின்றார்கள். எத்தனை புவியியல் அறிஞர்கள் எம்மத்தியில் இருக்கின்றார்கள்? எங்களுடைய கல்விப் பாரம்பரியம் என்ன? எங்களுடைய கல்வி மரபு என்ன? என்பதை ஆராய எம்மத்தியில்
21

Page 15
எத்தனை கல்வியாளர்கள் இருக்கின்றார்கள்?
வடகிழக்கு மாகாணங்களிலே ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் எத்தகைய கல்விப் பாரம்பரியம், எத்தகைய கல்வி மரபு, கல்விக் கோட்பாடு, கல்வி நிறுவனங்கள் எங்களுடைய பண்டைய தமிழகத்திலே காணப்பட்டன என ஆராய எம் மத்தியில் அறிஞர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றார்ள், எங்களுடைய வரலாற்றை ஒன்றிரண்டு அறிஞர்களை வைத்துக் கொண்டு ஆராய முடியாது.
நான்மலையக மக்களுடைய கல்வி பற்றி, யாழ்ப்பாணக் கல்வி பற்றிஒரளவு எழுதி இருக்கிறேன்/ ஆனால் நான் மட்டும் போதாது. அவ்வாறே வரலாற்றுக்கும், எங்களுடைய சமூகவியலை ஆராய்வதற்கும் ஒரு சிலர் மட்டும் போதாது.
தம்பையா மிகப் பெரும் அறிஞர். உலகிலேயே மிகச் சிறந்த மானிடவியலாளர். அவர்இந்தநாட்டில் இல்லை. ஏ.ஜே.வில்சன் மிகச்சிறந்த அரசியல் விஞ்ஞானகல்வித்துறை சார்ந்தவர். அவரும் இலங்கையில் இல்லை. எலியேசர் என்பவர் மிகச் சிறந்த ஒரு கணிதவியலாளர். அவரும் இந்த நாட்டிலே இல்லை. எனவே குறிப்பாகக் கூறுவதாயின் எங்களுடைய புவியியல், வரலாறு, சமூகம் என்பவற்றை ஆராய ஒருவருமில்லை. இவற்றை எல்லாம் ஆராய்வதன் மூலமே எங்களுடைய கடந்த கால சமூகம் வரலாறு, பொருளாதாரம் எப்படியிருந்தது என்பதை அறிந்து அதன் அடிப்படையில் தான் புதிய கொள்கைகளை வழிமுறைகளை கோட்பாடுகளை கையாண்டு எமது சமூக முன்னேற்றத்தில் உதவ முடியும், ஆனால் வன்செயல் காரணமாக இவ்வாறான அறிஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றால் அது எங்களுடைய கல்வித் துறைக்கு மட்டுமல்ல எங்களுடைய மக்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஒரு பாதிப்பு என்பதை இந்த இடத்திலே தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கூடாக கூறிவைக்க விரும்புகிறேன்.
வன்முறைத் தாக்குதல்களால் வடபகுதி மக்களை அவர்களுடைய உயிரையும் பெளதிக வளங்களையும் அழிக்க முடியுமேயன்றி அம் மக்கள் பல நூற்றாண்டுகளாக வளர்த்து வந்துள்ள கல்வி பாரம்பரியத்தை ஒழித்து விட முடியாது. பல இன்னல்களுக்கு மத்தியில் யாழ் மாவட்ட மாணவர்கள் அடைந்து வரும் உயர்கல்விச் சித்திகள் இதனையே காட்டுகின்றன.
22

ஒருவரின் வாழ்க்கையின் சிறப்புக்கு அவரின் பேச்சுத் திறன்கள் பக்கபலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பேச்சு, நடிப்பு, அரசியல் தகமைகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றவர் கந்தசாமி. இவர் கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள ஒரு சிறந்த மாணவராக விளங்கினார்.
கல்விக்கு முதலிடம் கொடுத்த இவர் வகுப்பில் எப்போதும் உற்சாகமுடன் இருப்பார். சகல பாடங்களிலும் திறமையுள்ள மாணவராக காணப்பட்டார். சக மாணவர்களைத் தோழர்களே என்றே அழைப்பார். வகுப்பு நேரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். சக மாணவர்களுக்கு விளங்காத விடயங்களை விளங்கப்படுத்தி உதவினார். ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் முன்நின்றார். சந்தர்ப்பத்தைப் பொறுத்து, அதற்குரிய விடயங்களைப் பேசுவதில் வல்லவர். இதனால் மாணவர்கள் பலர் இவரின் நட்பை விரும்பினர்.
இவரிடம் திறமையிருந்ததனால் இவரையே மாணவர் மன்றத்தின் தலைவராகத் தெரிவு செய்தனர்.
மாணவர் மன்றத்தில் அக்கறையின்றி இருந்த மாணவர்களை, ஊக்கமூட்டி மாணவர் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தார். வகுப்பு வகுப்பாகச் சென்று மாணவர்களைபங்குபற்றும்படி வற்புறுத்துவார். இவரின் கடுமையான உழைப்பால், மாணவர் மன்றம் பேச்சு, நாடகத்துறை ஆகியவற்றில் முன்னேறியது. இதனால்/ மாணவர்கள் பலர் பயிற்சி பெற்று முன்னேறினார்கள்.
கந்தசாமி அவர்கள் பாடசாலை நேரம் தவிர்ந்த, பிற நேரங்களில் அரசியலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டார். இளமைக்காலத்திலிருந்தே அரசியலில் அதிக ஆர்வம் காட்டினார். மாணவர்கள் மத்தியில் தனது கருத்துக்களை மிகவும் அழகாகவும், தெளிாகவும் எடுத்துக் கூறினார். அதனால் மாணவர்கள் அவரது பேச்சைஅக்கறையுடன் கேட்பார்கள். கந்தசாமி எல்லோருடனும் அன்பாய் பேசுவார். பழகுவார். மிகவும் சுறுசுறுப்பான மாணவராக இருந்தார்.
விளையாட்டுக்களை விட, நாடகத்துறையில் அதிகம் அக்கறை காட்டினார். மேடை நாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் பங்குபற்றினார்.
எளிமையான வாழ்க்கையை எப்பொழுதும் விரும்பினார். ஆடம்பரமான் வார்த்தைகளைப் பேசிக் கேட்டதில்லை. பிறருக்கு உதவும் தன்மையை அதிகம் கொண்டிருந்தார். எப்பொழுதும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையை அதிகம் விரும்புவார்.
இவர் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டதால், இவரை எல்லோரும் "கரவைகந்தசாமி” என்றழைப்பார்கள்.
லீலா முத்தையா
மாணவ கால நண்பர்
23

Page 16
1965 ஜீலை மாத முதல் கிழமையில் ஒருநாள் கொழும்பு - 07 தர்மபால ஒழுங்கையில் செங்கொடிச் சங்கக் கூட்டத்தில், மேடையின் மீது மெலிந்த தேகமுடைய ஓர் இளைஞன், வேகமாகக் கதைத்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அமர்ந்திருந்த சிங்கள - தமிழ் பிரஜைகள் அனைவரையும் அவன் தன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தான்.
அவன்முன்வைத்த கருத்துக்கு எதிரானவர்கள் கூட அவனது பேச்சுக்கு ஆட்பட்டுக் கிடந்தனர். அது பேச்சாக மட்டுமன்றி ஒரு விரிவுரையாகவும் இருந்தது. அதற்காக மட்டும் பார்வையாளர்கள் அவன்பால் கவனம் செலுத்தவில்லை. அவன் மூன்று மொழிகளிலும் சரளமாகக் கதைத்தான். முதன்மையான கருத்துக்களைத்தமிழில் கூறிவிட்டு சிங்களத்தில் அக் கருத்துக்களை விளங்கப்படுத்தினான்.இடையிடையே ஆங்கிலத்தின்மூலமும் அவனது பேச்சு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
செங்கொடிச்சங்க கூட்டம் ஜூலை 2இலிருந்து 5வரை நடந்தது. இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் 8வது கூட்டம் இது. சிவப்புக் கொடிகள், திரைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோசேதுங் ஆகியோரின் உருவப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு மத்தியில்நின்று மூன்றுமொழிகளிலும் பேசிய மெலிந்த இளைஞன் கரவை கந்தசாமி.
கட்சியின் அன்றைய தலைவராக இருந்த என். சண்முகதாசன் பேசியது ஆங்கிலத்தில் ஆகும். கதிரவேலு, சுபையர் இளங்கீரன், K.A.சுப்ரமணியம், வீ.ஏ. கந்தசாமி, குலவீரசிங்கம் ஆகிய முக்கியமான தோழர்கள் தமிழில் பேசினர். இவர்களை விட இளைஞரான கந்தசாமி மூன்று மொழிகளிலும் கதைத்து கூட்டத்தின் கவனத்தைப் பெற்றுக் கொண்டார்.
அவரின்இத்திறமை காரணமாக அவர் புளொட் அமைப்பின்தலைன்மப்பதவியைப் பெற்றிருந்ததன் மூலம் மூத்த அரசியல் தலைவர்களினதும் தனது எதிர் அரசியல் தலைவர்களினதும் கவனத்தைப் பெற்றுக் கொண்டார்.
1960களின் முற்பகுதியில் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பினுள்தலைமைப் பிரச்சினைகள் உருவெடுத்தன. அதன் பிரதிபலனாக உலகத்தில் கொம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கட்சி என்று இடதுசாரிக்கட்சிகள் இரண்டாக உடைந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதன்தாக்கம் பிரதிபலித்ததால் உடனடியாகக் கூட்டம் கூடிகலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனப் பலர் விரும்பினர்.
கட்சிதலைமை, அதனைஏற்றுக்கொள்ளாது பெரும்பான்மையோரின்விருப்பத்தை எதிர்த்ததால் கட்சியில் செயற்பட்ட, மாக்ஸ், லெனினிஸ்டுகள் 116பேர் ஒன்று சேர்ந்து கையொப்பமிட்டு 7வது கூட்டத்தை கூடுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்பொழுது கட்சியில் தொழிலாளர் அமைப்புத்துறையில் செயற்பாட்டாளரானகரவை கந்தசாமியும் 7வது தேசிய கூட்டத்தைக் கூட்டிய 116ல் ஒருவராகக் கையொப்பமிட்டார்.
1962 - டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற 7வது கருத்தரங்கின் பின் கட்சி பிளவுபட்டது. அத்தோடு புரட்சியாளர்களும்இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைப் பாவித்தனர். இதனால் அவ் அமைப்பு சீன பிரிவின் கொம்யூனிஸ்ட் கட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழிலாளர் சங்கத்தின் முதன்மையான அமைப்பாக இலங்கைத் தொழிலாளர்
24

சங்கம்இருந்தது. இது கட்சியின் பிரதான தொழிலாளர் சங்கமாகவும் இருந்ததோடு, இலங்கை இளைஞர் சங்கம், இளைஞர்களின் செயற்பாடுகளிற்கு தலைமையாகவே மாறியது.
கட்சியின் மூலம் கம்கருவோ' 'தொழிலாளி என்ற நாளாந்தப் பத்திரிகையும் நடாத்தப்பட்டு அரசியல் கல்வி தொடர்பான செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது.
கரவை கந்தசாமி கட்சியின் தொழிலாளர் அமைப்பிலும் ஏனையவற்றிலும் சிரமம் பாராது வேலை செய்ததோடு "தொழிலாளி' பத்திரிகையின் பிரதி ஆசிரியராகவும் செயற்பட்டார்.
கொழும்பிலும் தோட்டப்பகுதிகளிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்களிலும் கந்தசாமிசிறந்த பங்காற்றினார். 1963-1965 வரை கட்சியின்மூலம் கொழும்பில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் கந்தசாமி பிரபலமான ஒருவராக் காணப்பட்டார்.
யாழ் குடாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த குலத்தவர்களால் ஏற்படும் அல்லல்களை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக 1967 - 1968இல் கட்சி செயற்பட்டது. அதற்கு ஆதரவாக பலம் வாய்ந்த போராட்டச் செயல்கள், கோஷங்கள் யாழில் எழும்பின. உயர்குலத்தவரின் பக்கத்துக்கு ஆதரவான உப பொலிஸ் சுப்பிரின்டன்ட் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டார்.கட்சியின் மூலம் 16மைல் தூரம் வரை சாதி அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டது. இச்செயற்பாடுகளனைத்திலும் கரவைகந்தசாமிமுதன்மையானவராகத்திகழ்ந்தார். 1963இல் பிரபல இடதுசாரிக் கட்சியான இலங்கைக் கொம்யூனிஸ்ட் கடசியினுள் ஏற்பட்ட உள்ளார்ந்த பிரச்சினைகளைத் தலைமை தீர்க்கத் தவறியமையால மெதுமெதுவாக சரியத் தொடங்கியது. 1963தொடக்கம் ஏழு சந்தர்ப்பங்களில் கட்சியின்இளைஞர்கள் பிரிந்து வேறு இயக்கங்களில் சேர்ந்து கொண்டனர்.
கரவை கந்தசாமி கட்சித்தலைவர் சண்முகதாசனின் மனைவியானபரமேஸ்வரியின் நெருங்கிய உறவினர். சண்முகதாசனோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த கந்தசாமி எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரிந்து போன இயக்கங்களோடு ஒன்று சேரவில்லை. அதேவேளை அவர் அவ் இயக்கங்களோடு பிரிவினைகள், எதிர்ப்புகளை வளர்த்துக் கொள்ளாது சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். 1971 புரட்சியின் போது அரசாங்கத்தின் மூலம் வித்தியோதய சிறைச்சாலையில் கந்தசாமி சிறைவைக்கப்பட்டார். சிறைச்சாலையிலும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு, அத்துடன் சிங்கள மொழியையும் மேலதிகமாகக் கற்றுக் கொண்டார்.
கொம்யூனிஸ்ட்வாதியாகச் செயற்பட்ட அவர் கட்சியின் பலவீனம் காரணமாக அதை மீளமைக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டார். யாழில் செயற்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கச் சக்திகளுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் அவர் கொம்யூனிஸ்ட் கட்சியின் பழைய உறுப்பினர்களோடு சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டார். இனவாத அரசியலை எதிர்த்து, சமாதானத்துக்காகவும், தேச ஒற்றுமைக்கும், சமதர்மத்துக்கும் அவர் இறக்கும்வரை பாடுபட்டார்.
உயர் சட்டத்தரணி ஆனந்த குணதிலக இலங்கை சீனநட்புறவு சங்கத்தின் தலைவர்,
25

Page 17
'கரவை' என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட எமது மூத்த சகோதரரும் உற்ற தோழருமாய்த் திகழ்ந்த கரவை கந்தசாமி அவர்கள் மறைந்து ஆண்டொன்று ஆகிவிட்டது.
பல மனிதர்கள் வாழும்போதே நடைப்பிணங்களாக வாழ்கின்றார்கள். அல்லது வாழ்வதே தெரியாது மறைந்து போகிறார்கள். ஒருசிலர் மட்டுமே இறந்தும் வாழ்கிறார்கள் என்பர். எம்மைப் பொறுத்தவரையிலும் தோழர் கந்தசாமியும் இறந்தும் வாழ்பவராகிறார்.
தான் கொண்டிருந்த சித்தாந்தத்திற்காகவே இறுதி வரை வாழ வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொள்வார். சொல்லுக்கும் செயலுக்கும் பேதமில்லாதிருக்க முழுமையாக உழைத்தவர். தனது கருத்துக்களை வென்றெடுக்கவும்.அக் கருத்துக்களை நிதர்சனமாக்கவும் நீண்ட காலமாக தன்னை வருத்தி வாழ்ந்தவர்.
தனக்கு சரியெனப் பட்டதை மனந்திறந்து கூறும் பண்புள்ளவர். தன்னுடன் இருப்பவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தவறாதவர்.தனது கருத்துக்களை வென்றெடுக்க எந்த வகையிலும் விவாதங்களை நடாத்தவும் அரங்குகளை உருவாக்கவும் தயங்காதவர்.
எமது ஸ்தாபனத்தைப் பொறுத்தவரையிலும், கழகத்துடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் எமக்கு ஓர் உற்ற தோழராக அறிவுரைகளை வழங்கும் மூத்த சகோதரனாக, அரசியல் அரங்கின் தனது நீண்ட கால அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து எம்மை வழிநடாத்தும் உறுதிமிக்கதொரு சமூகப் போராளியாகவே இயங்கிவந்தார்.
"அங்கிள்" என்று எமது தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் கந்தசாமி ஓர் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை விடயங்களைத் தனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரை அனைத்துத் தோழர்கட்கும் கற்றுக் கொடுக்கத்தவறவில்லை. குறிப்பாக அரசால் கைது செய்யப்பட்டிருந்ததமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதில் அவர் கொண்டிருந்த அக்கறையும், ஈடுபாடும், செயல் முறைகளும் எம்மால் என்றென்றும் மறக்கமுடியாதவை.
அவர் ஓர் கழக உறுப்பினராக செயற்பட்ட போதிலும் சக தமிழ் அமைப்பு உறுப்பினர்களின் அன்புக்கும் தோழமைக்கும் உரியவராகவும் திகழ்ந்தார். தனது அரசியல் அனுபவங்களை சக அமைப்புத் தலைவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு தனது அறிவுரைகளை வழங்கவும் தயங்காதவர்.
உறுதியான சித்தாந்தப் பற்றுக் கொண்ட தோழர் கந்தசாமி ஐக்கிய இலங்கைக்குள் ஒருமுறையானதீர்வைதமிழ் மக்கள் பெற்றிட வேண்டும் என்பதில் முழு மூச்சாக செயற்பட்டு வந்தார்.
1989ல் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டின் கூட்டத் தொடரில் ஓர் காத்திரமான பங்கை கட்சி சார்பில் வகித்து தேசியப் பிரச்சினைகளிலும், இனப் பிரச்சினையிலும் தீர்வுகளைப் பெற்றிட அயராது உழைத்தார்.
முஸ்லீம் மக்களுக்காகவும் மலையக மக்களுக்காகவும் குரல் கொடுக்கத் தவறாத தோழர்கந்தசாமிஇந்நாட்டின் அனைத்துசிறுபான்மை மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
26

அமைப்புகளுடனும் தென்னிலங்கையில் உள்ளமுற்போக்கு அமைப்புகளுடனும் எமது கட்சி ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதில் மறைந்த எமது செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரனது அடியொற்றி தொடர்ந்து உழைத்து வந்தார்.
1990 யூன் மாதம் புலிகள் அமைப்பிற்கும் இலங்கை அரச படைகளிற்கும் யுத்தம் ஆரம்பித்த பின்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கு தொடர்ச்சியாக விஜயம் செய்து அகதி முகாம்களிலும், ஏனைய பகுதிகளிலும் அச்சத்திலும், பசி, பிணி போன்றவற்றிலும் உழன்று கொண்டிருந்த தமிழ் முஸ்லீம் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதில் தன்னால் இயன்றளவு போராடியிருந்தார்.
வெறும் பத்திரிகை அறிக்கைகளிலும் அதிகாரிகளின் கூட்டத்திலும் பொதுக் கூட்டங்களிலும் மட்டும் மக்கள் நலனுக்காக போராடாத, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மைஇனமக்கள் மத்தியில் நேரிடையாக சென்று அந்த மக்களின்இன்பதுன்பங்களில் பங்கு கொண்டு அவர்களின் சீரான வாழ்வுக்காக கடுமையாக உழைத்தவர் எமது தோழர் கரவை கந்தசாமி அவர்கள். குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவரது அயராத உழைப்பையும் அன்பான அரவணைப்பையும் அந்த மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
மும் மொழிகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த தோழர் கந்தசாமி அவர்களிடம் புறந்தள்ளிவிடக்கூடிய சில பலவீனமான அம்சங்கள் ஆரம்பகாலங்களில் காணப்பட்டாலும், இறுதி நாட்களில் ஓர் சமூகப் போராளிக்குரிய உதாரண புருஜராக மிளிர்ந்தார். எமது அமைப்புடன் இணைந்து இயங்கத் தொடங்கிய காலந் தொட்டு தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனது கடும் உழைப்பினதும் அர்ப்பணிப்பினதும் காரணமாக தலைமைத்துவ உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்த தோழர் கந்தசாமி அவர்கள் எமது அமைப்பின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய பங்கும் பணியும் எம்மைப் பொறுத்தவரையிலும் மறுக்கவோ, மறைக்கவோ அன்றி மறக்கவோ முடியாதவை.
இனங்களிடையேயான சமத்துவத்திற்கும் சிறுபான்மை மக்களினது உரிமைகளுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தினரது நலன்களுக்காகவும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்நிரந்தரமாக அடக்கிஅழிக்கப்பட்டுவிட்டது. அவரது நோக்கங்களையும் அதற்கான முறையான செயற்பாடுகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதே தோழர் கரவை கந்தசாமிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.
த.சித்தார்த்தன்(பா.உ)
27

Page 18
நன்றியுரை
தமது கருத்துரைகளை, நூலாக வெளியிட அனுமதி அளித்த திரு.வி.ரி.தமிழ் மாறன், திரு. கொன்சன்ரைன், திரு.சோ.சந்திரசேகரம் அவர்களுக்கு எமது நன்றிகள்.
இக் கருத்துரைகளை ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்த ஆனுக்கும் அதிலிருந்து பிரதி செய்த அவரது தங்கைகளுக்கும் மற்றும் பிரியா, ரேவதி ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
இந்த நூலை சிங்கள மொழியில் வெளியிட உதவி செய்தநிஷாந்த, ரங்கநாதன், செல்வி.ஹசினா அவர்களுக்கும் எமது நன்றிகள்
இந்நூலை சிறப்புற பதிப்பித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கைக்குப்பாத்திரமானதியாககேசவனுக்கும், டெக்னோ அழுத்தகத்தாருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்.
கரவை கந்தசாமியைப் பற்றிய சிறு குறிப்புகளை எழுதித் தந்த லீலா அக்கா, சட்டத்தரணி ஆனந்த குணத்திலக, திரு சித்தார்த்தன் (பா.உ) அவர்களுக்கும் எமது நன்றிகள்
முன் அட்டையை அழகுபடுத்த உதவிய ஷகீப் அவர்களுக்கும் சரிநிகர்நண்பர்களுக்கும் நன்றிகள்.
எமக்கு எல்லா வகையிலும் உதவி செய்த அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகும்
பாரதி வெளியீட்டகம்.
28


Page 19
昌"
- --
. . . .
----
-