கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1989.07-08

Page 1

:
1ளியிட்டக வெளியீ

Page 2
இந்திரா ஸ்டோர்ஸ் ඉන්ද්‍රා ස්ටෝර්ස් சகல விதமான சில்லறைச் சாமான்களும்,
உணவு தானியங்களும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள |
நாட வேண்டிய இடம்
எஸ்டேட் சப்ளையர்ஸ்
இல. 106, மேட்டுக்கடை வீதி,
பூண்டுலோயா, தொலைபேசி : 8 9 3
உரிமையாளர் K. V. G. இந்திரசேன
எண்ணங்களைக் கவரும்
எழில் கொஞ்சும்
வண்ண ஆபரணங்களுக்கு
வசந்த மகால்
JEWELS
144 - B11, FIRST FLOOR. CoLo MiB l.
(Uppositie vijf People's Bank)

வெள்ளம் போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்று பதவி கொள்வார்
--பாரதி
ஆசிரியர் இதழ் ஐந்து அந்தனி ஜீவா
KOZHUNDU 57, மகிந்த பிளேஸ், கொழும்பு - 6.
ஜுலை - ஆகஸ்ட் 1989
மலையகக் கல்வி
அன்புள்ளங் கொண்டவர்களே, பெருந்தோட்டத்துறையில் வாழ்பவர்களின் கல்வியைப் பற்றி சிந்திக்க வேண்டும் இவர்களின் கல்வி நிலை மிகவும் பின் தங்கியுள்ளது மலையக தமிழ்ப் பாடசாலை அனைத்திலும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன ஆசிரியர் பற்ருக்குறையைப் பற்றி பழைய பல்லவியை பாடாமல்
இதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மலையக கல்வி வளர்ச்சிக்கு பல செயல் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் தோட்டத்துறை பாடசாலைகளின் தேவைகளை அறிந்து ஆசிரியர் நியமனங்களே உடனடியாக வழங்குவது அவசியம். மலையக கல்வி வளர்ச்சியில் மறு மலர்ச்சி ஏற்பட்டால்தான் மலையக சமூகத்திற்கு விடிவு வரும்
- ! r

Page 3
மெளனத்துக்கு வயது 160
- சு. முரளிதரன்- W
மூச்சடக்கி இருந்திட்ட - உன் மெளனத்துக்கு வயது 160 எழு - விழு - அழு என்பதே தொடரும் தாரகமாய் உன் மெளனத்துக்கு வயது 160
நான்கிற்கும் அதிகமான தலைமுறைகள்
உன் மெளனம் சம்மதமே தான் என சாதித்துக்கொண்டு நாற்காலிகளை ஆக்கிரமித்து வாயுள்ள சில வயிறுகள் உன் மெளனத்தை ஒலிப்பெருக்கின! உலகமெல்லாம் மொழிபெயர்த்தன! இப்போ, நிரப்பியது போதுமென மெளனிக்கத் தொடங்கி விட்டன! எவரெவரோ சாட்டை எடுத்து சவடால் செய்திருக்க பகலை ஜாமமாக்கி மறைவிடங்கூட நாடாமல் காமம் கழித்திருக்க அகலமாய் உன் மெளனம் துணைபோகின்றது - அங்கு உன் ‘சாராய சப்தம் - உன் மெளனத்தை ஆழமாக்குகின்றது. யுகாயுகமாய் உயிர்த்திருக்கும் இந்த மெளனத்தை கொல்லும் ஒசைச்சூட்சுமங்கள்வடக்கு தெற்கு பார்த்து மயான அமைதியை மனங்கொண்டு குறட்டை யொலிக்காமலே குப்புறப்படுத்துறங்கும். ஒருநாள் - உன் மெளனபாரம் பொறுக்காது மலைக்காற்று பூப்பெய்தும்! - அன்று மரங்கள் வீழும்; மதகுகள் உடையும்; மலைகளும் தகர்ந்துபோம்; என எண்ணும் என் மனமும் யுகாந்தரமாய் நீடித்த இந்த மெளனத்துக்கு அர்த்தம் அம்மட்டோ? - எனக் கேட்டு மெளனமளிக்கும்.

இந்திய to ஆ வம்சாவளியினரைப் பற்றி
ஆங்கிலத்தில்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் இலங்கையில் ஆரம்பமான இந்திய வம்சாவளியினரின் குடியேற்றம் அதற்கு முன் னர் இடம்பெற்ற அரசியல், கலாசார குடியேற்றங்களிலிருந்து வேறுபட்ட குடியேற்றமாகும்.
நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார குடியேற்றமாகக் கரு தப்படும் இது 1928ல் பதின் நான்கு குடும்பத்தினரின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த இலங்கை, இந்திய அரசாங்கங்களிரண்டினதும் அங்கீகாரத்தோடு 1929ல் இந்திய அரசாங்கத்தால் சட்டபூர்வமாகத் தடை செய்யப் படும் வரையிலும் இந்த மனித குடியேற்றம் தொடர்ந்து இடம் பெற்றது.
இவ்விதம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாட்டில் குடியேற வும், குடும்பம் நடத்தவும், தொழில் செய்யவும் தொடர்ந்து அனு மதிக்கப்பட்ட ஒரு சந்ததியினர் இயல்பாகவே குடியேறிய நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கலை நிகழ்ச்சிகளால் பாதிக்கப் படுவதும் - பாதிப்பு ஏற்படுத்துவதும் உண்டு.
தமது வாழ்க்கையில் வளம் தேடவேண்டுமென்ற நினைப்பில் ஏங்கி நின்ற ஏழை இந்திய படிப்பறிவற்ற கிராமத்துத் தமிழ் மக்கள்-ஏமாற்றப்பட்டும், ஆசைகாட்டப்பட்டும் இங்கு இலட்சக்கணக் கில் குடியேற்றப்பட்டனர்.
அவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் நிறையவே எழுதப்பட்டிருக் கின்றன. ஆய்வு நூல்களும் நினைவுக் குறிப்புக்களுமாக மாத்திர மல்ல படைப்பிலக்கியமாகவும் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
அவ்விதம் அமைந்த இரண்டு படைப்புக்கள் 'கள்ளத்தோணி? ‘சரணம்" என்ற இரு நாவல்களுமாகும்.
ہے۔ 3 -.........۔

Page 4
"கள்ளத்தோணி" என்ற நாவல் ராஜா புரக்டரால் எழுதப் பட்டது. 1977ல் இலங்கையில் நூலாக வெளிவந்தது. “சரணம் என்ற நாவல் கோபால் காந்தியால் எழுதப்பட்டது. 1987ல் இந் தியாவில் நூலாக வெளிவந்துள்ளது.
ஆங்கிலத்தில் தனது படைப்புக்களை எழுதி புகழ்பெற்ற இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களுள் ராஜா புரக்டரும் ஒருவர். ‘ஒரு குழந்தையென்ருல் அழவேண்டும்’ ‘நித்திய வாழ்வு' என்ற சிறுகதைத் தொகுதிகளையும் ‘ஒரு செம்படவனின் மகள்" என்ற நாவலையும் கூடவே இவர் வெளியிட்டிருக்கிருர், அந்த நாவல் உறங்கேரி மொழி பில் நூல் உருவில் வெளிவந்த பெருமையுடையது, இலங்கை கடற் படையில் ஒரு காலத்தில் கமாண்டராக பணியாற்றியவர் ராஜா புரக்டர். தென்னிந்தியாவில் தன் வறுமை வாழ்விலும், களற்ற இல்லற வாழ்க்கையிலும் வெறுப்புற்று கள்ளத்தன் மாக இலங்கையில் குடியேறிய ஒருவனது சோகமும், ஏமாற்றமும் மிகுந்த வாழ்க்கையைக் குறிப்பிட்டெழுதியிருக்கின்ருர் கள்ளத்தோணி என்ற தனது நாவலில்.
கோபால் காந்தி இலங்கையில் நான்கு ஆண்டுகள் (1978-1982) வாழ்ந்தவர். கண்டி இந்திப ஹைகமிஷனில் செயலாளராகப் பணி யாற்றியவர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலி ருந்து தாயகம் திரும்புபவர்களோடு தொடர்புடைய பணிகளைச் செய்து பெற்ற அனுபவங்களை வைத்து அழகுற சரணம்' என்ற நாவலை எழுதியிருக்கிருர், சோகமும், ஏமாற்றமும் நிறைந்த ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு நகரும் கதையைக் கொண்டது இந்த நாவல்.
கள்ளத்தோணி
கடும் வறட்சியால் பஞ்சம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. மீண் டும் மீண்டும் இப்படி ஏற்படுகிறது. வீடுகள் அடகில் போயின. நிலங்கள் விற்கப்பட்டன; பலரும் பசியால் இறக்கின்றர்கள். இன் னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பதென்ற தடுமாற்றம் பலருக்கும் ஏற்படுகின்றது. ஜெகதீசனுக்கும் அதே நிலைமை. போதா குறைக்கு அவனது உமாவால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.பலரும் அவனது ஆண்மையைச் சந்தேகிக்கின் spectrf.
வாழ்வில் என்ன பிடிப்பு இருக்கின்றது என்ற வெதும்பலோடு தென்னிந்திய கிராமம் ஒன்றிலிருந்து அவன் புதிய வாழ்வு தேடி இலங்கை நோக்கி கள்ளத்தனமாக படகில் பயணம் மேற்கொள் கிருன்,

கள்ளத்தனமாக கடலில் படகேறி வருபவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், கொடுக்க வேண்டிய லஞ்சங்கள், படவேண்டிய இடர் பாடுகள் நன்ருக விளக்கப்பட்டிருக்கின்றன. கடலில் ரோந்து வரும் அதிகாரிகள் லஞ்சத்துக்கும், பெண்கள் விஷயத்துக்கும் பலியாகி அந்தக் கள்ளக் குடியேற்றக்காரர்களை இலங்கைக்குள் தப்பவிடுவது ஆசிரியரால் நன்கு அவதானிக்கப்பட்டு எழுத்தில் வடிக்கப்பட்டி ருக்கின்றது. இலங்கையில் பணமும், பெண்ணும் இருந்தால் எதை யும் சாதிக்கலாம் என்பதை ஜெகதீசன் பலமுறை வாய்விட்டே கூறுகின்றன்.
இலங்கைக் கடற்கரையில் மீன்பிடித் தொழிலில் கள்ளக் குடி யேற்றக்காரர்கள் பயன்படுத்தப்படுகிறாகள். உள்ளூர் சிறுவர்சளும் கடத்தப்பட்டு மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகிறர்கள். நிலத்தில் உழைத்துப் பழகிய ஜெகதீசனுக்கு நீரில் தொழில் செய்ய விருப்பம் வரவில்லை. அங்கிருந்து தப்பி சிலாபம் பகுதியில் ஒரு தென்னந் தோட்டத்துக்கு வந்து சேர்கிருன். அது. யாழ்ப்பாணத்து வக்கீல் ஒருவருக்குச் சொந்தமான தோட்டம். ஜெகதீசனின் எரு தோட்டும் திறமை அவரைக் கவருகிறது. தனது தோட்டத்தில் வேலைக்கமர்த்திக் கொள்கிருர், தனது ஊரிலிருந்து பொலிஸ் கெடு பிடியில் சிக்க வைக்காமலிருப்பதற்காக அவனை அழைத்து வந்த தாக அங்குள்ளவர்களிடம் கூறி வைக்கிருர். அங்கு பொறுப்பாக இருந்து கடினமாக உழைத்து பணம் தேடி தன்னை உயர்த்திக் கொள் கிருன் . சரளமாக சிங்களம் பேசத் தெரிந்து கொண்டு தனது பெயரை யும் ஜெகனீஸ் என்று மாற்றிக் கொள்கிருன். அப்பகுதியிலுள்ள டபுன் சிங்கோ என்றவருடன் விறகு வியாபாரம் செய்யும்போது அவருடைய மகள் லீலாவதியைக் காண்கின்றன். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். எனினும் திரும்பவும் தனது ஊருக்குச் சென்று உமாவுடன் வாழ்க்கை நடாத்த வேண்டும் என்ற நினைப் பில் ஜெகனீஸ் தயங்குகிருன். அவர்களின் திருமணம் நடைபெறு வதை ஆதரித்து நின்ற பபுன் சிங்கோ " இடக்கை செய்வதை வலக்கை அறியக் கூடாது. வாழும் வழி அதுவே" என்று கூறுவ தோடு மட்டுமல்ல, தானும் இந்தியாவிலிருந்து வந்தவன்தான். தனது பெயர் பாலசிங்கம் என்று கூறுகிருன். தென்னிந்தியாவில் கீழ்க்கரை யில் தனக்கு லெட்சுமி என்ற மனைவியும் பிள்ளைகளும் இருப்பதை வெளிப்படுத்துகிருன். முப்பது வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து தான் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் போது கண்டிய சிங்களப் பெண் ஒருத்தியை மணந்ததன் மூலம் தன்னைச் சிங்களவனுக நிலைப்படுத்திக கொண்டாலும் தான் இந்தியாவுக்குப் போய் வருவதாகவும் ஆனல் அதை பகிரங்கப்படுத்திக் கொள்ளாத தையும் கூறுகிருன் ஒரு ஏக்கர் நிலத்தையும் செங்கல் வீடொன்றை யும் சீதனமாகக் கொடுத்து அவனை மருமகனுக்கிக் கொள்கிருன்.
ஆஞல் இலங்கையில் வகுப்புக் கலவரம் தலைதூக்குகிறது. தமி ழர்களைத் தேடி சிங்களவர்கள் அழித்து வருகிருர்கள். ஜெகனீஸும் கள்ளக் குடியேற்றக்காரன் என்று கண்டு கொள்ளப்பட்டாலும் தாக்குதலிலிருந்து தப்புவிக்கப்பட்டு பொலிசாரின் தடை முகாமுக் குக் கொண்டு செல்லப்படுகிறன். தனது சிங்களத் தொடர்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தனது மாமன் உதவுவான் என்று கருது
- 5 -

Page 5
கிருன். அவனது மாமனே, தன்னுடைய ரகசியம் வெளிப்பட்டு விடக் கூடாதென பதற்காக ஜெகனீஸைக் கள்ளக் குடியேற்றக்காரன் என்று காட்டிக் கொடுக்கிருன். ஜெகதீசன் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுகிருன்.
இந்த நாவலில் சரையோரத்தில் குடியேறிய தமிழர்களும், மலை நாட்டில் குடியேறிய ஆரம்பகால சிங்களவர்களும் பெற்றிருக்கும் இந்தியத் தொடர்பு நன்கு சித்தரிக்கப்படுகின்றது. மதம், இனம், மொழி எனற பேதங்கள் மனிதனின் சுயநலத் தேவைக்குப் பயன் படுததுகின்ற பேதமையும் நன்கு வலியுறுத்தப்படுகின்றது சம்பவக் கோர்வைகள் அதற்கேற்ற விதத்தில் பின்னப்பட்டிருக்கின்றன. வாச கன் நாவலை வாசித்து முடித்ததும் சமுதாயத்தை எள்ளி நகையாட வைக்கின் ருர்,
தனது கணவனும், தனது வருங்கால மருமகனும் இந்தியத் தமிழர்கள் என்பதை அறிந்து கொள்ளாத பபுன் சிங்கோவின் மனைவி தோட்டப் பகுதிகளிலும், இந்து கோவில்களிலும் சம்பாஷிக்கும் வேளையில் வெளிப்படுததுகிற வார்த்தைகளும், அதை அவர்களிருவ ரும் அர்த்த புஷ்டியுடன் விளங்கிக் கொள்வதும் ஆசிரியரால் அழ குற எழுதப்பட்டிருக்கிறது.
மனிதன் ஒவ்வொருவனும் ஒரு கதையின் கதாபாத்திரமே. ஏதோ ஒரு கட்டத்தில் உண்மை சொல்லியாக வேண்டும் என்று கூறுகின்ற பபுன் சிங்கோவின் மூலம் இந்தியாவில் ஒரு குடும்பமும் இலங்கையில் ஒரு குடும்பமுமாக வாழ்ந்த இந்தியத் தமிழர்களின் பொருளில்லா வாழ்க்கையையும் எடுத்துக் கூறி இராமன் சீதையை திரும்பவும் இந்தியா +ொண்டு செல்லாப லிருந்தால் ஒரு போரே இடம்பெற்றிருக்காது. வாழ்க்கையில் அவ்விதம் வளைந்து கொடுக் கத தெரிய வேண்டும் என்று கூறவைப்பதன் மூலம் வாசகனை மனம் நொந்து, எள்ளிநகையாட வைக்கிருர், எட்டு அத்தியாயங் களில் 160 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கின்றது இந்த நூல். Bj603To V
பலாங்கொடைப் பகுதியில் கிறை +லன் தோட்டத்தில் நடக்கி றது இந்தக் கதை. தேயிலைத் தோட்டத்து தொழிலாளியான வள்ளி யம்மை; அவளது மன திடrற்ற கந்தன் என்ற தந்தை. வள்ளி யம்மை தோட்டத்துக்கு அடிக்கடி வரும் சோமா என்ற சிங்கள மீன் வியாபாரியோடு நட்பு கொள்கிருள். இடையில் ஜயசேன என்ற இன்னெரு சிங்கள கணக்கப்பிள்ளை அவள்மீது பலாத்கா ரத தைப் பிரயோகிக்க சோமா அவனைக் கொன்றுவிட்டு சிறை செல் கிருன். பாதுகாப்பு எதுவுமற்ற வள்ளி ஏற்கனவே மனைவியை இழந் திருந்த சன்ஞசி என்ற உறவுக்காரனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க் கைப்பட்டு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் சரண் அடைகிருள்.
கூடவே துரைமார்கள், சமூகப் பணிபுரியும் கிறிஸ்தவ பாதிரி மார்கள், அவர்கள் தாண்டி வரவேண்டிய அரசியல் தொழிற்சங்க சிக்கல்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அவை கதைக்கு உயிரூட்டுவதாகவே அமைகின்றன.
- 6 -

ஜவஹர்லால் நேரு, மாக்ஸ் முல்லர், அநகாரிக தர்மபால, ஏ. குணசிங்கா, கோ. நடேசையர் என்பவர்களைப் பற்றிய குறிப்புக்க9 கதையோடு தொடர்புபடுத்தப்படும் விதம் கதாசிரியன் மலைநாட் மக்களைப்பற்றிய ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.
* வெற்றிலை போடுவது சு சாதாரத்துக்கு கேடு விளைவிப்பதாக இருக்கலாம். ஆனல், போதிய சாப்பாடின்றி தொடர்ந்து கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளி ஒருவனுக்கு நாம் நிறைந்த அள வுக்கு உணவு கொடுக்காதவரை அவனை அயர்வின்றி உழைக்கப் பண்ணுவதற்கு வெற்றிலையும் புகையிலையும் தேவை' என்று நிமால் என்ற கதாபாத்திரங்களின் மூலம் கூறுவதும், நந்தசேன பெட்டிசன் எழுதும்போது தவறுதலான உச்சரிப்போடு இடது கையில் எழுது வதும், தொழிலாளிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது துரைமார்களின் துண்டு பெறவேண்டிய நிர்ப்பந்தத்தைப் பயன்ப டுத்தி சபாபதி என்ற இந்தியத் தமிழரான ஆஸ்பத்திரி ஊழியர் லஞ்சம் பெறுவதும் தோட்டங்களைப் பற்றிய ஆசிரியரின் அவதானி ப்பை வெளிப்படுத்துகின்றன.
வள்ளி சோமா கள்ளத் தொடர்பை ஜயசேன கண்டுவிடும் இடம நாசூக்காக விளக்கப்படுகிறது. தையல்நாயகியும் சிறிஸ்கந்த நாதரும் வேலு என்ற ஏழைத் தோட்டத் தொழிலாளியின் பரிசு பெற்ற சுவீப் டிக் கட்டை எடுத்துக்கொண்டு வேருெரு வெற்று டிக் கட்டை வைத்து விடுவதைச் சித்தரிக்கும் போது "முதன் முதலாக திருட்டுத்தனமாக புதைத்துப் பார்க்கையில் பள்ளி மாணவர்கள் பெறுகின்ற திருப்தியை அடைந்தனர்' என்று எழுதுகிருர்.
கதை என்றும் டார்க்கும் போது இதில் அதிகம் ஒன்றில்லா விட் டாலும் கதாநாயக பாத்திரத்தைக் குறிப் பி ட் டு ஒருவருக்குக் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த நூல் வாசித்து முடிந்ததும் ஒரு மன நிறைவைத் தருகிறது. வாழ்க்கையைப் பற்றிய இந்த நூலைப் படிப்பது ஒர் அரிய அனுபவம் என்று இந்த நூலுக்கு முன்னுரை நல்கிய பூரீமதி கமலாதேவி சட்டோ பாத்தியாயா கூறுகிருர்.
சரணம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அகதி, குடியிருப்பு என்று அர்த்தம். பயணத்தின் முடிவு என்ற பொருளுமுண்டு. அறிவைத் தேடியும், சமாதானத்தைத் தேடியும் வாழ்வில் ஒரு நிம்மதியைத் தேடியும் உலாவும் கதாபாத்திரங்களே இதில் நிறைந்து இருக்கின்றன
ஆக இந்த இரண்டு நாவல்களும் இந் நாட்டில் குடியேறிய இந் திய வம்சாவளியினரைப் பற்றியவை.
இரண்டு நூல்களிலுமே இந்திய வம்சாவளியினரின் துயரங்கள் தெரிகின்றன.
குடியேறிய நாட்டில் அமைதியான வாழ்க்கையை அடையாது திரும்புற சோகம் தெரிகிறது.
ஒரு நாவல் 1956 ல் நடைபெற்ற கலவரத்துக்குப் பின்னர் எழுந்த தென்ருல் மற்றைய நாவல் 1983 ல் நடைபெற்ற கலவரத்துக்குப் பின் னர் எழுந்திருக்கிறது. −
அவலமும், துயரமும் நிறைந்த மக்களின் வரலாறு இந்த விதத் திலேயே தொடருமா என்றதொரு ஏக்க உணர்வை இந்த இரண்டு நாவல்களுமே ஏற்படுத்துகின்றன.
- 7 -

Page 6
வளரும் மரங்கள்
மல்லிகை சி . குமார்
“உங்க அப்பா இருக்காரா?"
“இல்லையே. அது டவுனுக்குப் பொயிரிச்சி."
"அவருட்டு மம்பட்டிய கொஞ்சம் எடுத்து தாவே..."
"சொந்தமா மம்பட்டி இல்ல. தொரக்கணக்கு மம்பட்டிதான் இருக்கு.” ۔۔۔۔
ஸ்தோப்பின் ஒரு ஒரத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து சிவத்திடம் கொடுத்தேன்.
அதை வாங்கி தோளில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்ற வனின் உருவம் ஒரு கம்பீரமாகத் தோன்றியது.
“ஆமா. ஒங்களுக்குத்தான் மரக்கறித் தோட்டமில்லையே. அப்ப எதுக்கு மம்பட்டி..?"
qALALALLALALALALLMLMLMALMALALALMLMLMLMLMALSLLL LSLLLLL LSLLMLMLMLL S S
தோட்டத்திலே பிறந்து தோட்டத் தையே பகைப்புலமாகக் கொண்ட மல் லிகை சி. குமார் அந்த மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற 66 யிலேயே அவரது எழுத்துக்கள் உயி ரோவியம் பெறுகின்றன. இவரது எழுத்துக்களில் தோட்டத்து மக்களின் உண்மையான வாழ்க்கை நிலையும் அவர்களது பிரச்சினைகளும் பரிணமித்து காணப்படுகின்றன. இவர் சிறுகதை, கவிதை மாத்திரமல்லாது ஓவியம் வரைவதிலும் கைவண்ணத்தை காட்டி யுள்ளார் மலையகத்தில் சிறந்த சிறு கதைப் படைப்பாளிகளில் இவரும் ஒருவர்!
x^^47
an 8 -
 

-நான் கேட்டதும் அவன் மெதுவாக சிரித்துவிட்டு,
*நீ இங்க கொஞ்சம் வாவே..” என்று லயத்து ஓரத்திற்கு
அழைத்துப் போனவன்.
*அங்கப் பாரே. அந்த எடத்தத்தான் துப்பரவாக்கி தோட் டம் போடப் போருேம்.’’ என்று லயத்திலிருந்து சிறிது பள்ளத்தில் தெரியும் இடத்தை சுற்றிக் காண்பித்தான். அகண்ட இலைகளை யுடைய "சேமன்” செடிகள் தோப்பாக அங்கு மண்டிக் கிடந்தன.
** அட அந்த எடமா. அங்கேயா தோட்டம் போடப் போறிங்க? எதுக்குப்பா வீண் முயற்சி” என்றேன் நான் .
*அட ஒனக்கென்னத் தெரியும். அந்த செடி, கொடிகளை எல் லாம் வெட்டி எடுத்திட்டா அங்க எவ்வளவுப் பெரிய தோட்டம் விழும் தெரியுமா? எல்லாம் நம்ம முயற்சியிலத்தான் இருக்கு.?”
-அவனின் வார்த்தைகள் உறுதியாக இருந்தது. அதே நேரத் தில் சில இளைஞர்களும் அந்த இடத்தை நோக்கி மண்வெட்டியோடு இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
*அங்க கொஞ்சப்பேரு எறங்கிப் போருங்களே அவுங்களும் அங் கத்தான் வேலை செய்யப் போருங்களா?”
-நான் கேட்டேன்.
*ஆமா. ஒரு கூட்டு முயற்சியில் அங்க விவசாயம் செய்யப் போ ருேம். அதுல்ல கிடைக்கிறப் பணத்த நாம ஆரம்பித்திருக்கும் நூல் நிலையத்துக்கு செலவு செய்வதா முடிவு செய்திருக்கோம்’ என்ருன் சிவம்.
“ஒ . அப்படியா ரொம்ப நல்லம். ஆன. அந்த இடத்தில் விவசாயம் செய்ய தோட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்திருச்சா..?”
‘நேத்து “லேபர் டே தானே நாங்கப் போயி துரைக்கிட்டக் கேட்டோம். முடிஞ்சா அந்த இடத்தை துப்பரவாக்கி விவசாயம் பண்ணுங்கன்னு துரை முடிவுக் கொடுத்தப் பிறகுதான் இப்ப செய லில் இறங்கி இருக்கோம்." என்றவன், பள்ளத்திலுள்ள இளைஞர் களை நோக்க ‘ஏய்ய்ய் ." என்று கூப்பிட்டுவிட்டு 'இரு நானும் வர்றேன்” என்பதை கைசாடையால் சொல்லி விட்டு. என்னைப் பார்த்து சிரித்தான்.

Page 7
அந்த சிரிப்பில் ஒரு வெற்றியின் பெருமிதம். “வேலை எல்லாம் முடிஞ்சப் பொறவுதான் ஒங்கப்பாவுக்கு மம் பட்டிக் கெடைக்குமின்னு சொல்லிடு." என்றப்படியே லயத்திலிருந்து குறுக்கு வழியாக அந்த பள்ளத்து சமநிலத்தை நோக்கி இறங்கி ஒடிஞன்.
நானும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த பிற் பகலில் - ஒரு குறிக்கோளை வைத்து செயல்பட முனைந்திருக்கும் அந்த இளைஞர்களின் வேலை அங்கு - அந்த பள்ளத்து நிலத்தில் உதயமாகிக் கொண்டிருந்தது.
நான் - அவர்களில் ஒருவனன அந்த சிவத்தை நினைத்துப் பார்த் தேன். அவன் என்னிடம் தாராளமாகவே கதைப்பான்.
சில நேரங்களில் அவன் தன் பேச்சை ஆரம்பிக்கும்போது.
"நாங்க கந்தப்பாலையில இருந்தப்ப" என்று ஆரம்பித்தான் என்ருல். அடுக்கடுக்காக சில நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போவான்.
*" கந்தப்பாலையில் ஒரு மொதலாளியோட நிலத்தில நாங்க வேல செஞ்சிக்கிட்டிருந்தோம். அப்பத்தான் வன்செயல் அங்கெல்லாம் வந்திச்சி.
காடையனுங்க தமிழாள் கடைக்கெல்லாம் நெருப்பு வச்சிட் டானுங்க.
நாங்க இருந்த எடங்களுக்கும் நெருப்பு வச்சி.”
-கடந்தக் காலத்தில் ஆருத்தழுப்பாக மனதில் நிலைத்துவிட்ட அந்த நிகழ்ச்சிகளை சொல்லும்போது அவனின் கண்கள் கலங்கிவிடும்.
*சிவம் ஓங்கை எல்லாம் நெருப்புக்காயம்பட்ட தழும்பு இருக்கே..?’ என்று நான் கேட்டபோது,
**இதுவா..?’ சிறிது நேரம் மெளனியாக இருந்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
*அதான் அந்த வன்செயல் டைம்ல."
கந்தப்பால டவுனையே எரிச்சவனுங்க நாங்க குடியிருந்த எடத்தை யும் நெருப்பு வைக்க வரப்போருனுங்கன்னு தெரிஞ்சி. பக்கத்தில்
- 10 -

உள்ள காட்டுக்கு ஓடினேம். ஏன்ன நாங்க இருந்த எடத்தில நாலஞ்சி குடும்பம் இருந்தோம். அந்தக் குடும்பத்தில வயசுக்கு வந்த கொமரிகளும் இருந்திச்சி.
எங்க உயிருப் போன பரவாயில்லன்னு அவுனுங்கள எதிர்த்து நிக்க முடியும். ஆன. கொமரிப்புள்ளைங்களை இழுத்து. ஏதாவது
மான பங்கங்கள் 'செஞ்சிட்டா.
-இல்ல. அந்த பாவிங்க அப்படியே செஞ்சிப்புட்டா. அத ஞ லத்தான் அதுகளை காப்பாத்தனுமின்னு ஓடினுேம்.
திடீரெள்னு எனக்கொரு சந்தேகம்,
திரும்பிப் பார்க்கிறேன். எங்கப் பாட்டியை காணுேம். திரும்பி.
*அப்பா ! பாட்டி முன்னுக்குப் போகுதா”
முன்னலப் போகும் அப்பாவை கூப்பிட்டு கேட்கிறேன்.
*ஆய7 வைக் காணுேமே..?’ - பதட்டத்தோடு அப்பா திரும்பி என்னை நோக்கி ஓடி வருது.
*அப்போ. நீ வராதா ஆளுங்களோட ஒடிடு. நாப் போயிப் பார்த்திட்டு வர்றேன்.'
“வேணுண்டா. நீ வந்திரு, நாப் போறேண்டா.
நாப் போயி ஆயாவைப் பார்த்து கூட்டிக்கிட்டு வர்றேன்"
"வேணு. தங்கச்சி முன்னுக்கு ஓடுது அதப் பாத்துக்க."
கத்திவிட்டு. நான் பாட்டியைத் தேடி திரும்பி ஓடுகின்றேன். அதற்குள் காடயர்கள் எங்களின் குடியிருப்புகளுக்கு தீ வைத்து விட்டு ஓடுகிருர்கள்.
*பாட்டி என்ன ஆணுளோ..?”
பதை பதைக்க ஒடிப் பார்க்கின்றேன்.
தீ வைத்த வீட்டிற்குள் எங்க பாட்டியின் அலறல்.
பாட்டியைக் காப்பாத்த வேணுமே.
துணிச்சலோடு வீட்டிற்குள் புகுந்து பாட்டியை வெளியில் இழுத்து வருவதே பெரும்பாடாகி விட்டது.
س 2 1 ديسس

Page 8
பாட்டியின் கால்களிலும் என் கைகளிலும் நெருப்புக் காயங் கிள். எப்படியோ பாட்டியை இழுத்துக்கொண்டு ஓடினேன். தூரத் தில் உள்ள முதலாளி வீட்டிலிருந்து மரண ஒலங்கள். அந்த வீட்டை காடையர்கள் சூறையாகிக் கொண்டிருந்தார்கள்.
ஓடி வாப்பாட்டி.
•ه
அட. வேகமா வாவே !
வயது சென்ற அந்த கிழவியால் என்னுடன் ஓடி வர முடிய வில்லை. அவளுக்கு மூச்சு வாங்கியது. கொஞ்சதூரம் வந்தவள் நின்றுவிட்டாள்.
"அடே. செவம் நானும் ஓங்கக்கூட ஓடிவரத்தாண்டா நெனச் சேன். ஆன இத வூட்டுல விட்டுவிட்டுவர மனசுக் கேக்கல்ல. இத தேடி எடுக்கிறதுக்குள்ள. அந்தப் பாவிங்க வந்து.'
கிழவிக்கு பேச முடியாமல் மூச்சு வாங்கியது. அவள் தன் கையில் இறுக்கிப் பிடித்திருக்கும் சிறு பொலித்தீன கூடு, அதற்குள் இருக்கும் அந்த கடுதாசி?
-எனக்கு கிழவி மீது கோபமானக் கோபம்.
"சனியனே..! இந்த எழவுத்தான் இப்ப முக்கியமாக்கும்." - அதை பிடுங்கி எறிய முயன்றேன். ஆனல் கிழவி இறுக்கமாக பிடித் துக் கொண்டாள்.
"போடா. எத்தனை வருஷமா இதக் காப்பாத்திக்கிட்டு வர் றேன். இந்த சிட்ஷன் கார்ட்டு இல்லன்ன நாம இங்க இருக்குற துக்கே அத்தாட்சி. இல்லாமப் பொயிருண்டா , இந்த சிட்ஷன் எடுக்க நானும் உங்க தாத்தாவும் எங்கெங்க அலை ஞ்சிருக்கோந் தெரியுமா." - அவள் மூச்சுவாங்க மூச்சுவாங்கப் பேசினுள்.
*அந்த எழவை எல்லாம் பேசிக்கிட்டு இருக்க இப்ப நேரமில்லை.
நீ ஓடி வா...' - கிழவியின் கையைப் பிடித்து இழுத்தேன். தீக் காயம் பட்ட என் கைகள் காந்தல் எடுத்தது.
அடோ. தூரத்தில் சிலர் எங்களை நோக்கி சத்தமிட்டனர். இன்னும் கொஞ்சம் சுணங்கினல் அவர்கள் ஓடிவந்து எங்களை தாக் கினலும் தாக்கலாம். எனவே - கரடு முரடான அந்தப் பாதையில் கிழவியை இழுத்துக்கொண்டு ஒடினேன்.
- 2 -

*காலு எரியிதிடா.” - அவளின் முனங்கல். ஒடி வரவே அவ ளுக்கு ஜீவனில்லை. கிழவியின் நிலை எனக்கு பரிதாபமாக இருந்தது.
'இன்னும் கொஞ்ச தூரம், கொஞ்ச தூரம்தான்.” அவ ளுக்கு தைரிய மூட்டி கொண்டே. தொங்கு. தொங்கின்னு வரும் அவளை இழுத்து கொண்டு.
'அய்யோ. - அவள் அலறிஞள். குத்தாக நின்ற கல்லில் அவளின் கால் இடிபட்டு என் பிடியிலிருந்து நழுவி அவள் விழுந்தாள்.
9
* "பாட்டி ..!
அவள் கீழே . கீழே. உருண்டுப் போய்க்கொண்டிருந்தாள்.
*அடோ..!! கூச்சலிட்டவாறு அந்த காடையர்கள் என்னை
நோக்கி ஏறி ஒடி வரவும். கிழவியை அனதையாக விட்டு விட்டு நான் காட்டை நோக்கி ஓடினேன். எங்கே உயிருக்கும் ஆபத்து வருமோ .. ? மூச்சு விடக்கூடப் பயந்தப்படி. அந்த காட்டில் அட்டைக் கடியோடு. அன்னந் தண்ணி ஆகாரமில்லாமல் ரெண்டு நாட்கள் கிடந்திட்டு. மெதுவாக இறங்கி வந்தோம். எனது கையின் தீக் காயத்தில் அட்டை கடித்து மேலும் வேதனையைக் கொடுத்தது. அதை பொறுத்துக் கொண்டேன். பாட்டி விழுந்த இடத்திக்கு வந் தோம். வீச்சம் எடுத்தது. காக்காய்கள் பறந்துகொண்டிருந்தன.
'அந்தா..! அந்தா..!! அங்க...!"
கிழவி ஒரு பாறை மீது குப்புற விழுந்துக்கிடந்தாள். கிட்டத்தில் போய் நானும் அப்பாவும் பார்த்தோம். அவள் கையில் அந்த சிட் டிஷன் கார்டு அப்படியே இறுக்கிப் பிடித்தவாறே இருந்தது.
பாவம். "இந்த நாட்டு பிரஜைகள்” ன்னு எங்க குடும்பத்து வழக்கப்பட்ட அந்த பத்திரத்தை காப்பாத்திய கிழவியை எங்களால் காப்பாத்த முடியல்ல. 'நாசமாப் போன இந்த கடுதா சியாலத்
தானே எங்க ஆய செத்திச்சி.", ஆத்திரத்தோடு அவள் பிடியி லிருந்த சிட்டிஷன் கார்டை உருவி கிழித்தெறியப் போனர் அப்பா.
*வேண்டாங்கப். பாட்டி கடைசிவரைக்கும் இது மேலத்தான் உயிரையே வச்சிருந்தா..."
- நான் தடுத்துவிட்டேன்.
அந்த பயங்கர சம்பவத்துக்குப் பிறகு நாங்க அந்த பகுதியிலேயே இருக்கல்ல. அங்க, இங்க அகதிகளாக இருந்து - கடைசியில இந்த
- 13 -

Page 9
தோட்டத்துக்கு வந்து சேர்ந்திட்டோம் என்ற சிவம் தன் இரண்டு கைகளையும் நீட்டிப் பார்த்துவிட்டு.
இந்த கைகள்ல மட்டுமா தழும்பு இருக்கு? மனகலேயும் அது ஆழமா பதிஞ்சுக் கிடக்கே..!" என்றப் போது. அதில் ஒரு வைராக் கியத் தன்மையும் வெளிப்பட்டது.
அவன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் சொல்லும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கும். அவன் சொல்லும் ஒவ் வொரு நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு சிறு கதையாக.
அவன் சொன்னவைகளை எல்லாம் நினைத்து பார்க்கும் போது. ஒரு நல்ல சிறுகதை தொகுப்பை வாசித்த உணர்வே எனக்கு ஏற்படும்.
சிவம். இந்த தோட்டத்தில் நிரந்தரமாக்கப்பட்ட ஒரு தொழி லாளியல்ல. அகதிகள் என்ற காரணத்தால் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு "கெளிவல்" தொழிலாளி. இங்கு வந்து இரண்டு வருடமாகிறது இன்னும் அதே நிலைதான். இருந்தாலும் இங்குள்ள சில இளைஞர்களுடன் சேர்ந்து சமூக அபிவிருததி வேலை சளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இளைஞர்கள் மத்தியில் இவனுக்கொரு மதிப்பு. அந்த இளைஞர்களில் மத்தியில் ஒருவன் தான் சிவத்தின் தங் கையையும் பதிவுத் திருமணம் செய்துகொண்டான்.
நான் மீண்டும் அந்த பள்ளத்து சம நிலத்தை நோக்கினேன்அவர்கள் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் அந்த உழைப்பு இங்கு ஒரு நூல் நிலையத்திற்கு பயன்படப் போகிறது எனப் பெருமைப்பட்டேன்.
ஒரு வாரம். , எனக்கே வியப்பாக இருந்தது. சிவம் சொன் னது போல செடி, கொடிகளை எல்லாம் அழித்து அந்த பள்ளத்து சமநிலத்தில் ஒரு பெரிய தோட்டத்திற்கான இடத்தை அவர்கள் அமைத்திருந்தார்கள்.
"இப்ப என்ன சொல்லுற. எங்கு முயற்சி எப்படி? நீயுந்தான் பரீட்ஷை எழுதிட்டு வீட்டில இருக்க ஒன்ன முடியுமா?
மண் வெட்டியை திருப்பிக் கொடுக்க வந்த சிவம் என்னிடம் சவால் விட்டான்.
**ஆமா சிவம் நான் கூட நினைச்சிப் பார்க்கல்ல, என்னமோ சேமன் செடி நெறைஞ்ச தோப்புத்தானேன்னு நினைச்சேன், ஆஞ அப்ப. அது ஒரு நல்ல விவசாய பூமி.’’ என்ற நான்.

**ஆமா சிவம். நீங்க அங்க விவசாயம் செய்ய தொடங்கின பிறகு பன்றிகள் யேதும் வந்து தோட்டத்த அநியாயம் பண்ணின.
சந்தேகத்தோடு கேட்டேன். *பண்டியா அதெல்லாம் அங்க வர முடியாது. அ ப் படி அதுங்க வந்தா. குத்திக் கொல்றதுக்கு எப்படி எப்படி ஈட்டி செஞ்சி வச்சிருக்கோம் தெரியுமா?" - அவனின் வார்த்தைகள் வீராவே மாக ஒலித்தது.
"ஆமா முதல்ல என்னப் போடப் போரீங்க’
‘ராபு. அதன் பிறகு தான் கோவா, எப்படியும் நாலாயிரம் கோவா கன்னு வைக்கலாம்' பெருமையாக சொன்னவன்,
நாளைக்கி நாங்க ராபு. அதான் முள்ளங்கி விதைப் போடப் போருேம் என்று சொல்லிவிட்டு, என் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி புரட்டிப்பார்த்தான் பின்.
‘ஏங்கிட்ட மேதின வரலாறு புத்தவம் இருக்கு நாளைக்கி கொண்டு வாரேன்.’’ என்று சொல்லி விட்டு ஓடினன்.
ஆளுல் மறுநாள் காலையில்
*ரவ்வு வந்து பிடிச்சிக்கிட்டுப் பொயிட்டாங்களாம் பீலிக் கரைக் குப் போய் வந்த அம்மா ரகசியமாக அப்பாவிடம் சொன்னுள். அது எனக்கும் கேட்டது.
*யாரம்மா. பிடிச்சிக்கிட்டுப் பொயிட்டாங்க.." நானும் மெது வாகவே கேட்டேன். w
*அதான். அந்த செவத்த. போலீஸ் ஜீப் வந்து ஏத்திக்கிட் டுப் பொயிருச்சாம். பாவம் அந்த பொடியன்.” அம்மா அனு தாபப்பட்டாள். எனக்கோ இருப்புக் கொள்ளவில்லை.
'இரும்மா வர்றேன்." என்று சொல்லிவிட்டு தாலைந்து லயங் களுக்கு அப்பால் உள்ள சிவத்தின் வீட்டிற்கு ஓடினேன்.
வீட்டு வாசலில் துக்கம் விசாரிப்பது போல சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
'ஏம் மவன என்ன செய்யப் போருங்களோ..? சிவத் தி ன் தந்தை வாய்விட்டு அழுதுக் கொண்டிருந்தார்.

Page 10
"அப்படி ஒண்ணும் செஞ்சிட மாட்டாங்க ஒம் மகே. தோட் டத்து பொடியன்களை வளைச்சி என்னென்னமோ நடத்த தயாரா இருக்கான்னு பொலீசுக்கு பெட்டிஷன் பொயிருக்கு அதான் வந்து சந்தேகத்தில கொண்டுப் பொயிருக்க. நீ ஒண்ணும் அழுவாத.”
தோட்டத் தலைவர் அவருக்கு ஆறுதல் சொல்லுருர்.
“என்னத் தலைவரே ரவ்வுத்தான் நான் பார்த்துக்கிட்டு இருந் தேனே. பொலீசுத்தான் இந்த வீட்ட சோதிச்சி. பண்டிக்குத்துற சட்டிய எல்லாம் பயங்கர ஆயுதமின்னு. ஜீப்பில் தூக்கிப் போட் டிச்சி அப்புறம் கொஞ்சம் பொஸ்தவம்."
ஒரு சாட்சியாளைப் போல பக்கத்து வீட்டுக்காரன் சொன்னன்,
**ஆமாசாமி. அதெல்லாம் ரம்மவன் பன்டிக்குத்த பைப்ல்ல அடிச்ச ஈட்டித்தான். பயங்கர ஆயுதமில்ல" அவர் அழுகையோடு சொன்னர்.
“சரி. சரி. அழுவாத நீ மொகத்த கழுவிட்டு ஓம் மவனுேட அடையாள அட்ட. பொறந்த சட்டிப்பிக்கேட். எல்லாம் எடுத் துக்கிட்டு என்னேட நம்ம யூனியன் ஆபிசுக்கு வா. அங்க வச்சி பேசுவோம்." என்ருர் தலைவர்.
*அதுக்கெல்லாம் நா. எங்கசாமி போவேன். அதெல்லாந்தான் அந்த கந்தப்பாலையில எரிஞ்சி சாம்பளாப் பொயிருச்சே. இப்ப. எங்க ஆயா காப்பாத்திவச்ச சிட்டிஷன் கார்டு மட் டு ந் தா ன் இருக்கு. மத்ததெல்லாம்." அவர்கையை விரித்துக் கொண்டு அழு வதைப் பார்க்க எனக்கும் அழுகை வருவதாக இருக்கிறது.
அன்று யாருமே தோட்டத்தில் வேலைக்குப் போகவில்லை. அன்று முழுவதும் தோட்டத்தில் ஒரு சாவு நிகழ்ந்தது போன்ற நிலைமை.
"நாளைக்கி எல்லாரும் வழமைப் போல வேலைக்குப் போங்க. இந்த சிவம் விஷயமா நான் போன் பண்ணி மத்தியக் கமிட்டியோ டப் பேசினேன். அவுங்க பாதுகாப்பு மந்திரியோட நேரிடையாப் பேசுருங்களாம். அதுனல தோட்டத்தில எந்தக்கரச்சலும் செய்யாம வேலையைச் செய்யுங்க.." இவ்வாறு மாவட்டப்பிரதிநிதி தோட்டத் தலைவரிடம் சொன்னதை அந்த தலைவர். அப்படியே. அன்று மாலை தோட்ட மக்களிடம் வந்து ஒப்புவித்தார்.
மறுநாள்.
வழமையைப் போல தோட்டத்தில் வேலை நடந்தது.
ہیم 16 -سبسے۔ ;

அதற்கு அடுத்த நாள்.
நான் லயத் ஒரத்தில் நின்றவாறு . அந்த இளைஞர்கள் தோட் டம் போடுவதற்காக சுத்தம் செய்திருக்கும் அநத பள்ளத்து சம நிலத்தை நோக்கினேன்.
அங்கே. அடுத்த டிவிஷனில் இருந்து டெக்டர் மூலம் கொண்டுவரப் பட்ட மரக்கன்றுகளை சில தொழிலாளர்கள் நாட்டிக் சொண்டிருந்தார்கள்.
'ஏது. இந்த பயிலுக விவசாயம் பண்ணுறதுக்கு துப்பரவாக் கிய நெலத்தில மரம் நாட்டுருங்க போல இருக்கே"
"ஆமா. மரந்தான் நாட்டுருங்க. அந்த மாதிரி எடத்திலயாரும் வெவசாயம் பண்ணக் கூடாதாம். அங்கயெல்லாம் மரங்களைத்தான் வளர்க் சணுமின்னு கவுருமெண்டே உத்தரவுப் போட்டிருக்காம்."
'ஒ. அப்புடியோ..?”
"ஆமா இந்த பயிலுங்க யாரும். அங்க மரக்கன்னு நாட்டக் கூடாதின்னு சவுடால் பேச முடியாது. அப்புடி பேசின . அந்த செவம்பயலுக்கு நேர்ந்த கதிதானம். நம்மத் தொரையும் இப்பக் கண்டிப்பா உத்தரவுப் போட்டிருக்காரு.
“என்னுன்னு «ه
“முன்னமாதிரி பொடியனுங்க தோட்டத்திலக் கூட்டம் போடக் கூடாது. நூல் நிலையம் வேணும், அது வேணும், இது வேணுமின்னு தொரையை கரச்சல் பண்ணக்கூடாதாம். ஏன்ன. ஏதோ ஒரு பயங் கரவாதி கச்சிக்கும் - இந்த பொடியன்களுக்கும் தொடர்பு இருக்கு மோன்னு தொரை சந்தேகப்படுருரு."
லயத்துக் கோடியில் நின்று இரு கிழடுகள் பேசிக்கொள்வது என் செவிகளில் தெளிவாக விழுகின்றது.
ஒ. அப்படி என்ருல் இங்கு இந்த இளைஞர்கள் அடக்கப்பட்டு விட்டார்களா? இந்த இளைஞர்களின் முயற்சிகள் எல்லாம் தளர்ந்து விட்டனவா..? எனக்கு கவலையாக இருக்கிறது. அங்கே. அந்த பள்ளத்தில் மரங்கள் நாட்டப்படுகின்றன. நாளை அவைகள் செழித்து வளரும்.
ஆனல் இந்த இளைஞர் சமுதாயம். .?
W - l? -

Page 11
மாணவ மணிகளுக்கான கட்டுரைப் போட்டி
பரிசு: ரூபா 500
கொழுந்து சஞ்சிகை மலையக மாணவ மணிகளின் கட்டுரை இலக்கிய
அறிவை ஊக்குவிப்பதற்கான போட்டி,
தலைப்புகள்:
1.
சீர் பெற வேண்டின் சிக்கனம் வேண்டும். மலையக தொழிலா ளர் வாழ்வியலை அவதானித்து அவர்கள் ஆடம் பரம் தவிர்த்து போசாக்கான வாழ்க்கையை பெற வழிமுறைகள் தருவதாக அமைவது விரும்பத்தக்கது.
. விழிப்புற வேண்டும் - அதற்கு நல்ல இலக்கியம் வேண்டும்.
இதுவரை மலையகத்தில் வெளிவந்த மலையக இலக்கியங் களைப் பற்றி ஆராய்ந்து வரவேண்டிய இலக்கியங்கள் 67ւնւսւգஇருக்க வேண்டும் என்று கூறுவதாக அமைவது விரும்பத் தக்கது.
மலையகம் தலை நிமிர தேவை - தலைமைகளா? தகைமைகளா சீர் கல்வி பெறுவதாலா அல்லது திறல் மிகு தலைவர்களாலா
மலையக மக்கள் மாண்புற முடியும் என்பதை ஒப்பு நோக்கி ஆய்வதாக அமைவது விரும்பத்தக்கது.
தோட்டப் புறங்களில் விஞ்ஞான கல்வியின் அவசியம்
உலக சமாதானத்திற்கு உன் பணியாதோ! மனிதா
ল- 1 & -শল্প

விதிகள்:
20.10.89 திகதிக்கு முன்னர்
மாணவ மணிகள் எல்லாத் தலைப்புகளிலும் எத்தனை ஈட்டுரை வேண்டுமானலும் எழுதலாம். அவை தனித்தனியே பிர வேசப் பத்திரத்துடன் அனுப்பப்பட வேண்டும். புல்ஸ்செப் தாளில் நான்கு பக்கங்களுக்கு மேற்படாமல் கட்டுரை அமையவேண்டும். கட்ரையை அதிபர், அல்லது வகுபட ஆசிரியர் உறுதிப்படுத் தப்பட வேண்டும். முதல், இரண்டு, மூன்ரும் இடம் பெறும் கட்டுரை தலா ரூபா 250. 1501-, 100/- வழங்கப்படும், மாவட்ட ரீதி யாக சிறந்த கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு இலக்கிய
நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
கட்டுரைகள் அனுப்பிவைக்கப்பட
வேண்டும்.
பிரவேசப் பத்திரம் கொழுந்து கட்டுரைப் போட்டி
(olu uuri:- .................................. ... ... - - " " ' " "''' '''''''''''''
விலாசம் :- ... ........................................................
பாடசாலை- .
வகுப்பு:- so . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பங்குபற்றுபவரின் ஒப்பம் அதிபர்ஆசிரியர் 8 8 w a
- 19 -

Page 12
இரு வேறு எஃகுப் பூக்கள்
எம். பாலகிஷ்ணனின் மேலது கவிதை நூல் பார்வைக்கெட் டியது. ‘எதியோப்பிய தரை.பாலஸ்தீன பாசறை.” என உலக ளாவிய நோக்கும் "உருக்கும் நெருப்பில் கருகும் மலர்களே."என வர்த்தக வலயத்தில் வாடும் வனிதையரை பார்க்கும் பார்வையும் இவன் நல்லதோர் கவிஞனென கட்டியங்கூற மேலும் சில பக்கங் களை புரட்டும்போது, ஐயகோ என் சொல்வது, எரியும் பிரச்சினை சூழ்ந்திருக்கையில், யாரை சாடுவதற்கு கொழும்புப் புதுக்கவி களுக்கே புரியும் குறியீட்டுப் பாஷையில் உயர் நோக்கத்துக்காக பாவித்து, தொழிலாளர் துயர்துடைக்க வேண்டிய காகிதத் தாள் களில் வக்கிரத்துக்காக கவிதைகளை எழுதியிருப்பது இவன் தகுதியை குறைத்து எடைபோடச் செய்கின்றது.
போலிகளை அம்பலமாக்குதல் என நினைத்து இதை எ தலாம். ஆனல் யுகயகாந்திரங்களுக்கு நிலைத்திருந்து தொழிலாளர் நிலை கவி தைகளை பதிக்கவேண்டிய கவிதைத் தொகுப்பு கேவலம் குறுகிய கால சில மனத்தாக்கங்களை நிரந்தரப் பதிவாக்குவது, கவிஞன் தன்னைத்தானே கொச்சைப்படுத்துவது போலாகும். இவைகளை டயறிகளில் எழுதிவைத்துக் கொள்ளலாம். ஆனல் இதே தொழி லாகி விடக்கூடாது.
கவிஞன் யாரென கவிஞர்கள் கூடித் தீர்மானிக்கத் தேவை யில்லை. அதனை செய்வதற்கு காலத்தோடினைந்த மக்கள் காத்திருக் கின்ருர்கள். இன்று இலங்கையில் எந்தக் குடிமகனும் நிசப்தமாய் உறங்கிக்கொண்டு வசந்தகால கனவு காண்பதில்லை. சாவகாசமாய் கொழும்பில் இருந்துகொண்டு கவி படைப்பவர்கள் வடக்கே, கிழக்கே, தெற்கே, மத்தியைப்பார்க்க வேண்டும். அங்கும் படைப் புகள் செல்கின்றன. கல்லறைகளே பூப்பது கண்டு கவலையுற்ற முற் போக்கு நெஞ்சங்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இலக் கியங்களை நாடும்போது, அங்கே இத்தகைய சில்லறைத் தனமான வைதல்களை கண்டால் வயிற்றெரிச்சல் தானும் வாராதோ!
 

எனவே நல்ல கவிதைகள் தர தகுதிகொண்ட பாலகிருஷ்ணன் கூடி சாடுவதை விடுத்து, நல்லது பாடி சாதிக்கவேண்டும். உங் களைப் போன்றேர் இப்படித்தான் பாடுவோமென முரண்டு பிடிப் பார்களே. ஆனல், தயவு செய்து முற்போக்கு, கலை, இலக்கியம் மக்கள் என பேரிகைக் கொட்டி "மானுடம் பாடுவதாக பிரகட னம் செய்யக் கூடாது. அப்படியான பட்சத்தில் அண்னத்துரைக் கும் நீங்கள் பாமாலை பாடுவதில் தவறில்லை.
*சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்"
புதிய பூமி வெளியீடாக "சாதியமும் அதற்கெதிரான போராட் டங்களும்’ என்ற நூல் வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணச் சாதியமும் அதனல் ஏற்பட்ட வரலாற்று நிகழ் வுகளும் இதில் இடதுசாரி நோக்கோடு விரிவாக ஆராயப்பட்டுள் ளன. இதில் சாதியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி சிறப்பான அத்தியாயமும் காணப்படுகின்றது. சாதியத்தோடு பிணைந்த அர சியல், இலக்கியங்கள் பற்றியும் இதில் ஆராயப்பட்டுள்ளன. என்ரு லும் மலையகமும் சாதியமும் பற்றி தனியொரு அத்தியாயம் இருந் திருக்குமாயின் நூலானது பூரணத்துவம் அடைந்திருக்கும்.
மலையகம் பற்றி ஒரிரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே சாதியடிப்படையில் தொழிற்சங்கங்கள் தோன்றியது மலை யகத்தில் சாதிப்பிளவுகள் தோன்றி வளர காரணமானது என்ற உண்மை குறிப்பிடப்பட்டுள்ளதை பாராட்ட வேண்டும். அது மட்டு மல்ல இந்த அம்சம் விரிவாக ஆராயப்படக்கூடியதென்பதும் தெளி வாகின்றது. * メ
அனைவரும் வாசித்திருக்க வேண்டிய இந்நூலின் ஆசிரியர்கள் இராவணு, வெகுஜனன் என புனைபெயரில் புதைந்திருப்பதுதான் மனதை உறுத்துகின்றது.
தூங்குகின்ற மலையகத் தோழா
தொழிலாளர் விவசாயவிடுதலைமுன்னணியின் வெளியீடாக வி.எல். பெரைரா எழுதியுள்ள "தூங்குகின்ற மலையகத் தோழா - தூங்கு. தூங்கு." என்ற சிறு பிரசுரம் வெளிவந்துள்ளது. மலையக மக்க ளின் முன்னேற்றத்திற்காக பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள் ளன. ஒரு காலகட்டத்தில் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தேசபக்தன் கோ. நடேசய்யர் இதுபோன்ற பிரசுரங் களை அச்சிட்டு மக்களிடையே பரப்பி விழிப்புணர்வுக்கு வித்திட் டார். பிரசுரங்கள் அச்சில் வெளிவருவது முக்கியமல்ல, அது அந்த மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எமது அவாரு
سے 41 ۔

Page 13
அட்டை சொல்லும் கதை LSLSLS
ம ஒனுடப பாடு
வானம் பாடி
மலையக இந்திய வம்சாவளி மக்களினதும் இதய உணர்வில் தேங்கிக் கிடக்கும், சுதந்திர சமத்துவ வாழ்வின் ஏக்க உணர்வுகளை, இதயக் குமுறல்களை, கொந்தளிப்புகளை, எதிர்கால சுபீட்சத்தை, வலிமையை, தமிழ்மொழி கலை கலாசார பண்பாடுகளை ஊக்குவித் திடவும், பொதுவாகவே தமிழ் இனத்தில் ஊடுருவியுள்ள மூடப் பழக்க வழக்கங்களை அகலவும், ஒளி பெற்று புதுவாழ்வு காணவும் எழுச்சி மிக்க தனது கவிதைகளால் கலைகளினலும் பேச்சாற்றலின லும் சமூ த்தை விழிப்புறச் செய்த மானுடம் பாடும் வானம்பாடி தான் சக்தீ பால ஐயா.
இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 - 44 - ம் ஆண்டு களில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற கவிஞர், ஆங்கிலக் கலை ஆசிரிய ராகவும், விரிவுரையாளராகவும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அர சாங்க கலைக் கல்லூரியில் 1951 வரை பணிபுரிந்துள்ளார்.
கவிஞர் சக்தீயி ஒவியங்கள் இலங்கை கலாபவனத்தில் 1948 முதல் காட்சிக்காக வைக்கப்பட்டு பாராட்டுகளையும், சான்றிதழ் களையும் பெற்றுத் தந்துள்ளன. இவரிடம் பயிற்சி பெற்ற தமிழ் சிங்கள கலை ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் கலை ஆசிரியர்களாக வும், சுதந்திர கலைஞர்களாகவும் புகழுடன் வாழ்கின்றனர். ‘மலை நாடு தந்த தலை சிறந்த ஓவியக் கலைஞர்” என்று அன்றைய பிரபல கலா விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
1949 - ம் ஆண்டு முதல் சக்தீயின் கவிதைகள், கட்டுரைகள், தினகரன், வீரகேசரி, சுதந்திரன் பின்னர் ஈழநாடு, தினபதி, சிந்தா மணி ஆகிய பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. ஒவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரை களையும், ஒவியங்கள் கூறும் தத்துவங் கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி யின் ஆசிரியராக வும் பணியாற்றியுள்ளார். இவரது கட்டுரைகளை தமிழகத்தில் அறி
- 22 -
 

ஞர் அண்ணுத்துரையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'திரா விட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது.
மலையக மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் arqggu 'In Ceylon's Tea Garden GT6i p 569605 dita), G5m l டத் தொழிலாளர்களின் துன்ப துயரங்களை, அவர்களின் சோகப் பெருமூச்சுகளை சி. வி. யின் இதய நாதத்தை சிதைக்கா வண்ணம் தேயிலைத் தோட்டத்திலே’ என்ற பெயரில் தமிழ் வடிவம் தந் துள்ளார்.
கவிஞர் சக்தீ 1952 - ம் ஆண்டு ‘மனே தத்துவமும் கல்வியும், போதன முறையும்’ சுய ஆய்வுகளினல் ஆரம்ப ஆசிரியர்களுக்காக எழுதி வெளியிட்டார். அப்பொழுது கல்விப்பணிப்பாளராக இருந்த யாழ்ப்பாணத்தவரான அருள்நந்தி என்பவர், சக்தீ ஒரு மலையகத் தவன் என்ற காரணத்தினல் கல்விச் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுத்தர மறுத்து விட்டார் என சக்தீ பல தடவைகள் என்னி டம் கூறி வேதனைப்பட்டுள்ளார். 1956-இல் 'சொந்த நாட்டினிலே" என்ற தலைப்பில் முதன் முதலில் இலங்கையின் தேசிய பாடல் களைப் பாடி சுதந்திரன் அச்சகத்தில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல்களில் வீராவேசமான சுதந்திர உணர்வுகள் பிரதிபலிக் கின்றன. மகாகவி பாரதியினதும் கவியரசர் தாகூரின் மானசீக மானவரல்லவா!
கவிஞரின் சக்தி "தனிவழிக்கவிராயர்" என்ற பெயரில் பரபரப் பூட்டும் வசனக் கவிதைகளை வடித்துள்ளார். புதுமைப்பித்தன், சிதம்பரரகுநாதன் ஆகியோரின் கவிதைகளில் காணப்படும் நடை வழியை தனிவழிக்கவிராயரின் வசனக் கவிதைகளில் காணப்படி னும், அவரது குமுறல்களும், சமுதாய புதுமை ஏக்கங்களும் இடித் துரைக்கும் நேர்மையை கொண்டிருந்தன. இலங்கை வானெலியில் இவரது கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், உரைகள் தொடாச்சி யாக ஒலிபரப்பாகியுள்ளன. கவியரங்குகள் பலவற்றிற்கு தலைமை வகித்து சிறப்பித்துள்ளார். ‘மலையக இலக்கிய கர்த்தாக்கள் எவ ருக்கும் சளைத்தவரல்ல" என நிரூபித்தவர் சக்தீ.
ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமைமிக்க கவிஞர் சக்தீ தாகூரின் கீதாஞ்சலிக்கு தமிழ் வடிவம் தந்துள்ளார். உலக தத்துவ பெரும் ஞானிகளில் போற்றப்படும் கிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் 1969-இல் பாராட்டும் ஆசியும் பெற்றுள்ளார். வள்ளலார் இராமலிங்க அடிகளாரிடத்தில் சக்தீக்கு பெரும் பற்றுண்டு. "வள்ளலாரின் சாதி சமய பேதமில்லாத கொள்கைகள் மலையகமெங்கும் பரவ வேண்டும்" என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தனி மனித சுதந்திரத்தை விரும்பும் சக்தீ, சுதந்திர மனிதராக கொழும்பில் ஒவியத்தை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகை
مسست 28 مسسيس

Page 14
யில் 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பஸ் ஒன்றினல் மோதிதள்ளப் பட்டு கால்கள் இரண்டின் மீது ஏறி ஓடிய சக்கரங்களிஞல் கால் எலும்புகள் நொறுங்கிப் போனதால், இரு கால்களுமே வெட்டி எடுக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தியபோது அதனை பிடி வாதமாக மறுத்து மரணத்துடன் பெரும் போராட்டம் நடத்தி, கவிஞர் தனது துணிவான நம்பிக்கையாலும் சிறிது காலம் ஊன்று கோல் துணையுடன் நடந்து திரிந்து அதனையும் தூக்கி எறிந்துவிட்டு திடங்கொண்ட தனி மனிதனுக மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துள் ளார் என்றே கூறவேண்டும்.
கவிஞர் சக்தீ தான் வரைந்து வைத்திருந்த விலை மதித்த ஓவியங் களை, நூலகளை தனது கவிதா படைப்புகளை, ஆய்வு குறிப்புகளை, ஆராய்சசிக்கட்டுரைகளை,உடைமைகள் அனைத்தையும1983-ஆம்ஆண்டு ஆடிக் கலவரத்தின் இன சங்காரத்தின போது "அக்கினி திருவிளை யாடலில் மசந்த நாக குகளுக்கு இரையாக்கிவிட்டது.
இயற்கையாகவே கவித்துவமிக்க இவரைப் பற்றி பிரபல பத்திரி கையாளரான திரு. எஸ். டி. சிவநயகம் குறிப்பிடும் பொழுது கவிஞரின் வீர உணாச்சிமிக்க கவிதைகள சீறிப பாயும தீப்பொறிக் கற்றை போன்றது என கிருர். மேலும் அவா விளக்கும் \போது ‘கவி ஞர் பால ஐயாவுககு முனனல் இருக்கும் சொல் வெறும் "சகதி" அல்ல அது 'சக்த அடை எழுத்து "த" என்ருல இதன் பொருள் எனன? ஆங்கிலத்தில் இரண்டு மசாற்கள உண்டு. ஒன்று பவர் (Power) மற்றது ஃபயர் (Frie) பவர் என்ருல் சகதி, ஃபயர் என ருல் (தீ) பவரையும் பயரையும சேர்த்து ஒரு சொல்லாககியிருக்கிருர். இந்த கவிஞர். அது தான் சகதீ என்ற கவிஞர் சக்தீ பால - ஐயா என கிருர்,
"மனிதன் எத்தகைய அற்புதமானவன்!’ என்று ருஷ்ய இலக்கிய மேதை மெகஸிம் கோர்ககி குறிப்பிட்டார். அந்த அற்புதமான மணி தகளில் ஒருவராக மலைநாடு தந்த தலே சிறந்த கவிஞராக, மானு டம் பாடும் வானம்பாடியாக கவிஞா சக்தீ பால - ஐயா தலை நிமிர்ந்து
நிற்கிருர்,
தார்மீகம் குத்துவாளைக் கையிலேந்தி
— கொலை வெறிகாட்டும்
மிருகத்துக்குக் கூட கொடிமரம் நாட்டி கும்பிடு போடும் மரியாதை எவ்வளவு தார்மீகம் பார்த்தீரோ? எங்கள் நாட்டில்! ா சண் =
- 24 -

குட்டிக்கதை
தோல்வி மலையாளம் மூலம்: எம். சரளகுமாரன் தமிழாக்கம் : கு. இராமச்சந்திரன்
wrvr
MAMM NMNMMMMMNMAMAN
1க்கத்து வீட்டுக்காரர் ஃப்ரிஜ் வாங்கியதுதான் தாமதம் அவ ளுக்கே இருப்பே கொள்ளவில்லை. உடனே அவளுக்கும் ஒன்று தேவைப்பட்டது. தன் மனைவியின் சுபாவத்தை வெகுவாகவே புரிந்து வைத்திருந்த அவன் மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டான்.
ஒரு மாதம் கழிந்தது. பக்கத்து வீட்டுக்காரர் டி. வி. வாங்கினர். அவரும் அவருடைய மனைவியும் ராமாயணம் பார்ப்பதும், மற்றவர் களுக்குக் காட்டுவதுமாக இருப்பதைக் கண்ட அவள், சொன்னுள்: * உடனே டி. வி. வாங்கியாகணும். அவங்க முன்னுல் நாம தாழ்ந்து போய்விடக் கூடாதுங்க."
இந்த வார்த்தையைக் கேட்டதும் சரியென்பதற்கு அறிகுறி யாகத் தலையாட்டிவிட்டான். டி. வி. வாங்கிக்கொடுத்தவன் ஞாயிற் றுக்கிழமைப் பத்திரிகைகளை வாசிப்பதற்கு சமையற்கட்டைத் தேர்ந் தெடுத்துக் கொண்டான்.
இதோடு அவளுடைய ஆசையை ஒருவிதமாக நிறைவேற்றித் தீர்த்துவிட்டோம் என்று நினைத்த நேரம் பார்த்து, பக்கத்து வீட் டுப் போர்ட்டிகோ வில் அம்பாஸிடர் கார் ஒன்று வந்து நின்றது. பக்கத்து வீட்டுக்காரரும், அவருடைய மனைவியும் சினிமா பார்க்க காரில் போவதும், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு ஃப்ரீ லிஃப்ட் கொடுப்பதும் கண்டு மனம் புழுங்கினுள்.
"உடனே நமக்கு ஒரு கார் பார்த்தாகணும்'
இந்தத் தடவை அவன் எடுத்த எடுப்பில் சம்மதம் தெரிவிக்க வில்லை. அவள் சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தட்டிக் கழித்தான். அவள் மசிந்ததாகத் தெரியவில்லை. அவளுடைய நச்சரிப்புத் தாங்காமல் வாங்கிக் கொடுத்துவிட்டான். ஒரு அம்பா டர் கார் அவர்களுடைய வாசலில் வந்து நின்றது. அவளோ தலைகால் புரியாத சந்தோஷத்தில் மூழ்கிப்போஞள்.
நாட்கள் கழிந்தன.
- 25 -

Page 15
புதியதாக அவள் எதையாவது கேட்காத காரணத்தால் அவளை நோக்கிக் கேட்டான்:
“பக்கத்து வீட்டிலிருந்து ஏதாவது புதிய தகவல் எட்டியதா ? அவள் கம்மிய குரலில் ரகசியம் பேசும் தோரணையில் சொன்னுள்.
இனிமேல் அவரால் ஒன்னும் வாங்க முடியாதாக்கும்’
“ஏன்' - அவனுக்கு அவள் சொன்னது புரியவில்லை.
*அவரை சஸ்பென்ஸ் செய்திருக்காங்களாம்'
அதைக்கேட்ட அவன் சொன்னன்:
“இருந்தாலும் அவர் நம்மகிட்ட தோத்துப்போக மாட்டார்?"
அவளின் புருவங்கள் சுளித்தன.
அவன் சொன்னன்:
“என்னையும் சஸ்பென்ஸ் செய்திருக்காங்க"
குடிசனத்தொகை விகிதாசாரம்
1911 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டுவரை மலையகத் தமிழரே சிங்களவருக்கு அடுத்த பெரும்பான்மை சமூகத்தவராக - இலங்கைத் தமிழரையும்விட, அதிக எண்ணிக்கையில் இருந்து வந்தனர். 1981 இல் இது குறைந்து இன்று நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள னர். இதற்குக் காரணம் பூரீமா , சாஸ்திரி ஒப்பந்தத்தால் தாயகம் திரும்பியதும், பெருமளவில் குடும்பக்கட்டுப்பாட்டுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டதுமாகும்.
1981 குடிசன மதிப்பின் பிரகாரம்:-
இலங்கைத் தமிழர் 29,71,885 78-27% மலையகத் தமிழர் 8,25,233 21-73% மொத்த எண்ணிக்கை 37,97,118 100-00%
இலங்கைத் தமிழரில் 75 சத வீதத்தினர் வட, கிழக்கில் வாழு கின்றனர்.
மலையக தமிழரில் 65 சதவீதத்தினர் மத்திய ஊவா மாகாணங் களில் வாழுகின்றனர்.
- 26 -

O “ஊவா தொழிலாளர் உதவி நிலையம்" என்ற சமூக இயக்கம் பதினைந்து தேசபக்தன் நடே சய்யர்' பிரதிகள் வாங்கி தனது
அங்கத்தவர்சளுக்கு 6915Gunt
கித்திருக்கின்றது. இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் ஒரு இலட்சம் ரூபாவுக்கு தமிழ்ப் புத் தகங்களை வாங்கி தனது அங்கத் தவர்களுக்கு விநியோகித்திருக் கின்றது. இதில் இலங்கையில் வெளியான தமிழ் நூல் ஒன்று கூட இல்லை. இந்த வித்தியாசத் துக்கு காரணம் ‘புத்தக கொள் வனவுக் கொமிஷன்" என்கிறர் கள் விஷயம் தெரிந்தவர்கள்.
O சமீபத்தில் பஸ் போக்கு வரத்து வேலை நிறுத்தத்தின் போது ‘செல்லச்சாமியின் ஆட் டம் தோட்டத்துக்குள் தான்" என்று ‘ஐலண்ட்” என்ற ஆங் கிலப்பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் பிரஸ்தாபிக் கப்பட்டுள்ளது.
0 மலைநாட்டு மாதர்கள் பாலி யல் சுரண்டலுக்குப் பலியாவதை
asta e de de exod
பலரும் அறிந்து வைத்திருக்கின் றனர். மாதர் சங்கங்களில் பணி யாற்றும் பெண்களும் இதே பலி யிடலுக்கு இரையாக்கப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வரு கின்றது. மாதர் அணியின் சிறப் புப் பேச்சாளியான அந் த ப் பெண்மணிக்கு விரைவில் திரு மணம் நடக்க இருக்கின்றது. அவருக்கு கணவனுக வ ர ச் சம் மதிக்க வைப்பதற்கு ஒருவருக்கு வெளிநாட்டுப் பயணம் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் சரஸ்வதி கடாட்சம் தான்.
O தூய திருத்துவக் கல்லூரி யின் பழைய மாணவர்கள் சிலர் நுவரெலியா மா ந க ர சபை யில் அதிகாரத்தோடு அமர்ந் திருக்கிருர்கள். ஆனல், அந்தக் கல்லூரியின் தற்போதைய அதி பர் கடந்த ஐந்து ஆண்டு கால மாக தற்காலிக அதிபராகத் தான் சுட மை யா ற் று கி ரு ர் போததற்கு, அதிபருக்கு இது காலம் வரை உரித்தாயிருந்த வாசஸ்தலமும் இப்போது பறி போய்விட்டது. அதிகாரிகளின் அதிகார துர்ப்பிரயோகத்துக்கு இதோர் உதாரணம் என்று மேலி
ry 27 -

Page 16
டத்துக்கு எடுத்துரைக்கப்பட்ட தாம். அந்த ‘முத்துமாரி” தான் கண் திறந்து பார்க்க வேண்
டும்.
O தொழிற்சங்க நடவடிக்கை களில் பிரார்த்தனை முறையை புகுத்திய அமைச்சர் தொண்ட மானல் பிரார்த்தனை மூலம் நலிந்து போயிருக்கும் தேயிலைத் தொழிலை நிமிர்த்த முடியுமா? என்று கேட்டிருக்கிறது"ஐலண்ட்” பத்திரிகை தனது ஆசிரியத் தலை யங்கத்தில்,
O தோட்ட மக்க ளின் வறு மையை வெளி உலகுக்கு வெளிச் சம் போட்டு காட்டி பணம் சம் பாதித்து தம்  ைம வளர்த்துக் கொண்டவர்களின் தொகை 50 க்கும் மேலாக பெருகிவிட் டது. இவர்கள் அத்தனை பேரும் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள். தோட்ட மக்கள் என்றும் போல இன்றும் பிட்சாதிபதிகள் தான்!
O நுவரெலியா மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் பாராட் டப்பட வேண்டியவர்கள் .பல்லா யிரக்கணக்கான விலை மதிப்புள்ள தமிழ் நூல்கள் வாசிகசாலையில் இப்போது புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன. மலைநாட்டிலிருந்து வெளிவருகின்ற புத்தகங்களும், சஞ்சிகைகளும் இதில் அடங்கி யிருப்பது குறிபபிடத்தக்கது. இந்த முன்மாதிரியை 'பஜ்ரோ வந்ததும் பத்தும் மறந்துபோன' அட்டன் வாழ் மாகாணசபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்
u Trigorr?
பைபிளின் மகத்துவம்
1815 - ம் ஆண்டு கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றிய வேளை கட்டுகாஸ் தோட்டைக் கருகில் சிங்கள உடையிலிருந்த மாநிற மேனியன் ஒருவன் ஆங்கிலத்தில் பேசுவதை ஆங்கில இராணு வத்தில் மருத்துவராக பணி யாற்றிய ஹென்றி மார்சல் கவ னிக்கின்ருர், விசாரித்ததில் 1803 ம் ஆண்டு வந்த இரா ணுவத்தோடு இலங்கைக்கு வந்து இங்கு அகப்பட்டுக் கொண்ட தையும், ஆங்கிலத்தில் பேசுவ தற்கு யாருமே இல்லாத வேளை யிலும் தன்னிடமிருந்த ஆங்கில பைபிளை தினந்தோறும் வாசித்து தன் மொழி ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டதாகக் கூறு கின்ருர், தோமஸ்தியோன் என் பது அவரது பெயர். இதே நிலை மையில் தான் தோட்ட த் தொழி லா ள ர் களும் இற ந் த ன ர். தோ ட்ட த் தி ன் மாட்டுத் தொழு வத் து க் குப் பின்னுல் உரத்த சத்தம் கேட்டுப் போ ய் பார் த் த பொழுது தொழிலாளர்கள் பலரி ஒன்ருக கூடி தமிழில் பைபிள் வாசித்துக் கொண்டிருந்ததை தோட்டத்துரை காண்கிருர், அதற்குப் பிறகே கிறிஸ் த வ ரான அந்த வெள்ளைக்காரத் துரை அங்கு ஒரு பாடசாலை ஆரம்பிக்கிருர்,
தகவல் செல்வி ஜீவகுமாரி pssib2su ur.
- 28 -

மல்யருத்தோடத்திதறிலாலர் ட குஆறிபூத?
சோழப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்துவரும் காலகட்டங்களில் நிலைமைகள் மெல்ல மெல்லத் தலைகீழாக மாறத் தொடங்கின. சோழப் பேரரசர் காலப்பகுதியில் உன்னத சிறப்புடன் விளங்கிய கிராம சமூக அமைப்பு முறை சிதிதமடையத் தொடங்கிற்று. நாட்டில் அமைதியின்மையும் கொந்தளிப்பும் அதிகரிக்கலாயின. நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடையலாயிற்று. இத்தகைய நிலைமைகள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்த "அன்ருடம் காய்ச்சிகளான உழைக்கும் வர்க்கத்தினரையே படுபயங் கரமாகப் பாதிக்கலாயின. அவர்கள் அதல பாதாளத்திற்குத் தள் ள்ப்பட்டனர். அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள் கூட சமூகத்தின் மேல்மட்டத்தினரைப் பாதித்ததில்லை; சமூகத்தின் அடிமட்டத்து, மக்களையே வெகுவாகப் பாதித்து அவர்களது உயிர்களைக் குடித்து ஏப்பம் விட்டன.
மிகப் பாரதூரமான முறையிலே சமூக, பொருளாதார ஏற் றத் தாழ்வுகளும் சுரண்டல் முறைகளும் அதிகரித்தன. கொடுமை களும் அக்கிரமங்களும் கொள்ளையடிப்புகளும் சுரண்டலும் எல்லை யற்று இடம்பெற்றன.
சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சிலகாலம் இரண் டாம் பாண்டியப் பேரரசு சிறப்புடன் விளங்கிற்று. ஆயின் அத னைத் தொடர்ந்து குறிப்பாக கி. பி. பதின்னன்காம் நூற்ருண் டின் ஆரம்பத்திலே தமிழகத்தை உள்ளடக்கிய தென் இந்தியா முழுவதிலும் பெருங் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் அந்நியரின் படையெடுப்புகள், கொள்ளையடிப்புகள் முதலியனவும் தொடர்ச்சி யாக இடம் பெற்றமையால் நாடு அமைதி இழந்து தவித்தது. மக் கள் சொல்லொணுத் துயரங்களுக்குள்ளாகினர். நாட்டின் அரசியல் சமூக, பொருளாதார நிலைமைகள் சீர்கேடுற்றன.
இந்திய வரலாற்ருசிரியர்களிடையே வேறு வேறு விடயங்களிற் கருத்து முரண்பாடுகள் நிலவினலும் மேற்கண்ட உண்மைகளை ஒரே குரலில் ஏகமனதாகவே தெரிவித்துள்ளனர். தென்னிந்திய வரலாற்

Page 17
நறிஞர் எனப் போற்றப்படும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி முதல் டி. வி. மகாலிங்கம், கிருஷ்ணசுவாமி, தி. நா. சுப் பிரமணியன், கோசாம்பி, முகர்ஜி முதலியோர் தெரிவித்துள்ள கருத்துகள் இவ்வகையிலே நோக்கத்தக்கவை.
சோழப் பேரரசின் வீழ்ச்சியையடுத்துத் தமிழ் நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படை அம்சங்களாக விளங்கிய நிலமானிய அமைப்பு முறையும் அதனுடன் பின்னிப் பிணைந்திருந்த சாதி அமைப்பு முறை, சாதி சமயாசாரங்கள் முத லியன மேலும்மேலும் இறுக்கம் பெறலாயின. சோழரின் பின் தமிழ கத்தில் ஆதிக்கம் செலுத்திய பாண்டியர், இஸ்லாமியர், விசயநகர நாயக்கர்,மராட்டியர்,பிரித்தானியர் தவிர்ந்த ஏனையஐரோப்பியர் ஆகி யோரது ஆட்சிக் காலப் பகுதிகளிற்கூட மேற்கண்ட அம்சங் சளிற் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. ஆயின் பிரித்தானியர் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறிப் பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படலாயின.
கி. பி. பதின்னன்காம் நூற்ருண்டின் முற்பகுதியளவில் விசய நகரப் பேரரசு தோற்றம் பெற்று வலிமையுறத் தொடங்கியதும் படிப்படியாக நாட்டின் சீர்கேடான நிலைமைகள் மாறத் தொடங் கின. ஆரம்பத்தில் விசயநகரப் பேரரசின் நேரடி ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த தமிழ்நாடு, காலப்போக்கில் விசயநகரப் பேரரசர் களின் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது.
விசயநகர நாயக்க மன்னர்கள் (கி. பி. பதின்னன்காம் நூற் முண்டு தொடக்கம் பதினேழாம் நூற்ருண்டு இறுதி வரை) சமயத் தின் காவலர்களாக மட்டுமன்றிச் சாதியின் காவலர்களாகவும் தம் மைப் பிரகடனப் படுத்திக்கொண்டு செயற்பட்டனர். அவர்களது ஆட்சிக் காலப் பகுதியில், முன்னர் எப்பொழுதும் இல்லாத அள விற்குச் சாதி அமைப்பு முறைகளும் சாதி - சமயாசாரங்களும் ஒன் றுடன் ஒன்று மிக இறுக்கமான முறையிற் பின்னிப் பிணைக்கப்பட் டன. அது காலவரை தமிழகத்தில் நிலவிய சாதிப்பிரிவினைகள் போதாவென மென்மேலும் புதிய புதிய சாதிகள் தமிழகத்திற்கு வடக்கேயிருந்து வந்து சேர்ந்தன. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல உப சாதிகள் தோற்றுவிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகப் பாஞ் சாலருள் எழுபத்து நான்கு பிரிவுகள் காணப்பட்டன. கம்மாளருள் கொல்லர், பொற்கொல்லர், தச்சர், விக்கிரகம் செய்வோர், பித் தளே வேலை செய்வோர் எனப் பல பிரிவினர் காணப்பட்டனர்.
தொம்பரர், கைக்கோளர், தோட்டியர், தனக்காரர், சிவியார், சேணியர், பாஞ்சாலர், சாயக்காரர், நூல் நூற்போர், செளராஷ்
- 30 -

டிரர், ரெட்டிகள், மயிர்வினைஞர், தோல்வேலை செய்வோர், வண் ஞர், இடங்கை - வலங்கையினர், நுளைஞர், பள்ளர், பறையர், குற வர், குசவர், சக்கிலியர், சண்டாளர், கம்மாளர் எனச் சாதிவகை களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.
இத்தகைய நிலைமைகள் இருபதாம் நூற்றண்டிலும் தொடர் வதைக் கண்ணுற்ற பாரதியார் மனப் பொருமலுடன், 'செஞ்சு பொறுக் லேயே -
நிலைெ ಜ್ಷಣ ವ್ಲಿ! நிகஃட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடி என்ருல் அது பெரிதாமோ? எனப் பாடியுள்ளதுடன் அமையாது “ஜாதிக்குழப்பம்” என்னும் கட்டுரையில், மிகுந்த கவலையுடன் பின்வருமாறு கூறியுள்ளார்:
இங்ங்னம் ஜாதிக் கொள்கை வேரூன்றிக் கிடக்கும் நாட்டில் மனுஷ்ய ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கைகளை நிலை நிறுத்துவதென்முல்அது சாதாரண வேலையா? கொஞ்ச ஜாதியா? அவற்றில் உட்பிரிவுகள் கொஞ்சமா? பறை
பதினெட்டாம் நுளை நூற்றெட்டாம்! அதாவது பறையர் களுக்குள்ளே 18 பகுதிகளும் நுளையர்களில் 108 பகுதிகளும் இருக்கின்றனவாம். மேலும் பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் வெவ்வேறு ஜாதிகள். ஒன்றுக்கொன்கு பந்திபோ8 னம் கிடையாது. பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது"
கேலி கேலி பெருங்கேலி இங்ங்னம் ஏற்கனவே மலிந்து கிடக்
கும் பிரிவுகள் போதாவென்று, புதிய புதிய பிரிவுகள் நாள்
தோறும் ஏற்பட்டு வருகின்றன.
(பாரதியார் கட்டுரைகள்: சமூகம், பக். 124.125)
ஒவ்வொரு பகுதியினரும் தத்தமக்கென ஒதுக்கப்பட்ட தொழில் முறைகள், ஆசார அனுஷ்டானங்கள் முதலியவற்றை எக்காரணம் கொண்டும் மீற முடியாது. மீறுவோர் கடுமையான தண்டனைக்குள் ளாக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கோ தமது பிள்ளை களுக்கோ நாமகரணஞ் சூட்டுதல், உடை - அணிவகைகள், வழிபடு தெய்வங்கள், குடியிருப்புசள் முதலியவற்றிலும்கூட அவர்களுக்சென விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக் களின் குடியிருப்புகள் ஊரின் ஒதுக்குப்புறத்தேயமைந்த சேரிப் புறங் களாக விளங்கின. முன்னைய காலப்பகுதிகளில் மட்டுமன்றி இருப தாம் நூற்றண்டின் முற்பகுதியிலும்கூட இவ்வாறு பல வகையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்பட்டிருந்தமையைப் புதுமைப்பித் தன் தமது "துன்பக் கேணி’ என்னும் சிறுகதையிலே திறம்படத் தத்ரூபமாகச் சித்திரித்துள்ளார். அக்கதையிலே அவர் காட்டும்
- 3 =ச

Page 18
வாசவன்பட்டிக் கிராமமும் அதன் சுற்றுப்புறங்களும் தாழ்த்தி ஒதுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளும் அவர்களது பெயர்களும் அவர்களுக்கும் எஜமானர்களுக்குமிடையிலான உறவுகளும் உன்னிப் பாக நோக்கத்தக்கவை.
புதுமைப்பித்தன் காலத்தில் மட்டுமல்ல, இங்கும்கூடத் தமிழ கத்திலும் ஈழத்தின் வடக்கே, கிழக்குப் பகுதிகளிலும் இத்தகைய நிலைமைகளிற் பெரும் மாற்றங்கள் எவையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஈழத்தின் வட பகுதியிற் கடந்த மூன்று, நான்கு தசாப்தங்களில் இடம்பெற்ற சாதிக்கொடுமைகளை மிகச் சிறந்த முறையில் டொமினிக் ஜீவா, டானியல், கணேசலிங்கன், கதிர்காம நாதன், ரகுநாதன், தெணியான் முதலியோர் தமது ஆக்கங்களில் வெளிப்படுத்தியுள்ளமை அவதானிக்கத்தக்கது.
மேற்கூறப்பட்ட நிலைமைகள் மலையகத் தோட்டத் தொழிலா ளர்களுக்கும் பொருந்தக் கூடியதே. தோட்டத் தொழிலாளர்களின் பெயர்கள், தோட்டத்து அதிகாரிகள் அவர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள், அடக்கு முறைகள், அலட்சிய மனுேபாவம், தொழி லாளர்களை நடாத்தும் பாங்கு, குடியிருப்புகள், தொழிலாளரின் வழிபடு தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், gupurr art g i 56ir, பழக்க வழக்சங்கள், நம்பிக்கைகள் முதலிய யாவும் மேற்கூறப்பட்ட வற்றுடன் பெருமளவு ஒத்திருப்பதை அவதானிக்கலாம். ஏலவே கூறியுள்ளது போல், நாம் மேலே கண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உடலுழைப்பாளிகள்-சூத்திரர் முதலியோரின் சந்ததியினரே. இன் றைய மலையகத் தோட்டத் தொழிலாளர், பர்மா, சிங்கப்பூர், மலே சியா, றியூனியன், மொரிஸியஸ், ரிறிணிடாட், அந்தமான், சுமத்ரா, சிசெல்ஸ், தென்ஞபிரிக்கா, கினிடா, நேவிஸ், டேமாரு,ஜமெய்க்கா, அன்ரீல்ஸ், சுரினம், பிரிட்டிஷ், கயான, பிரெஞ்சுக் கயான, பிஜி, நியூ கலிடோனியா, தாஹித்தி, குவாட்லோப், மாட்னிக், சென்ட் வின்சன்ற், யென்ட் கீற்ஸ், சென்ட் லூசியா முதலிய நாடுகளிலும் தீவுகளிலும் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் தமிழ்த் தொழி ளர்கள் (இவர்களுட் கணிசமான தொகையினர் இன்று தமிழர் களாக அல்லாமல் அவ்வந் நாட்டுச் சுதேசிகளுடன் கலப்புற்றுவிட் டனர் என்பதும் அவ்வாறு கலப்புற்றபின் - மதமாற்றம், Giuri மாற்றம், பண்பாட்டு மாற்றம் - அவர்களது வாழ்க்கைத்தரம் உயர் வடையத் தொடங்கியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. மேற் குறிப்பிடப்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்த - வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றிய ஆய்வு இதே கட்டுரையா சிரியரால் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது.) தமிழகத்தி லும் ஈழத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் வாழும் தாழ்த்தப் பட்டோர் முதலியோராவர். (தொடரும்)
- 32 -

இரும்புச் சாமான்கள், வீட்டுத்தளபாடங்கள்
பெற்றுக் கொள்ள வேண்டுமா?
பூண்டுலோயாவில் ஒரே இடிம்
KPA Kandasamy Nadar & Co. 113, மேட்டுக்கடை வீதி,
பூண்டுலோயா,
தொலைபேசி எண்: 29
எல்லாவித வானுெலி, தொலைக்காட்சி, மின்சார உபகரணங்களுக்கு பூண்டுலோயாவில் ஒரே இடம்
“சரவணுஸ்" 108, மேட்டுக்கடை வீதி, பூண்டுலோயா.
(இலகு தவணை முறை வசதியும் செய்து கொடுக்கப்படும்) விநியோகஸ்தர்கள்: வானெலி, தொலைக்காட்சி, பைசிக்கிள்.
1.- Այri - էգ Աbւն
தொலைபேசி இலக்கம் 97

Page 19