கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1979.11.17

Page 1
கார்த்திகை -
■
シ
!
ஆஆஆஆஆஆஆஆஆடி ஆழ்து 'ே
O
±√∞):
「어Tr:;;;;;;;;;;;;;;;:;;;;;;;;:;***********************器弩No弩****
LT-----------------------■
C|No}}
■■■■■■■
**
 
 
 
 
 
 

該議該諺 CCCシ
●邻
* క్ట+=++===
********************************。
^
D5EEII6716 մ/:
-
. . . . . . . . iiiiiiiiii:
L S 0S 0S0 0 0 0 SLS S L SLS S S L S L SY LSYY SK SSi
■*
፳፻N፳፳፻N፳፻N(N

Page 2
ஆத்மஜோதி
ஓர் ஆத்மீக மாதவெளியீடு
எல்லா உலகிற்கும் இறைவன் ஒருவன் எல்லா உடலும் இறைவன் ஆலயமே -சுத்தானந்தர்
ஆசிரியர்: நா. முத்தையா ஜோதி; 32 -சித்தார்த்தி வடு கார்த்திகை மீ" 1உ - (17-11-79) சுடர் 1
பொருளடக்கம் * . . .". " ... ، ۰ - : ۔
காலைப் பிரார்த்தனை вымыканиль awan) 1. நாவலருக்கு அஞ்சலி 2 நாவலர் நூற் றண்டில் நாம் சாதித்தது என்ன? ΤΑΝ 3. நாவலர் பெருமானின் நல்ல கதைகள் Obek 8 அருள் a--- கேள் மனமே கேள்! 12 அன்னம் பாலிப்புக்கு ஒரு மன்னவன்-சுவாமி சர்வாதித்தானந்தா 17 யூரீமத் சுவாமி சர்வாதித்தானந்தாஜி மஹராஜ் நினைவு a- 21 மரீ சுவாமி சிவானந்தரின் நன்னெறிக் கதை «− 24 கலியுக தர்மம், 25 ۔۔۔۔۔ع ஐயம் தெளிதல் 29 சுவாமி ராமதாஸ் அருளுரைகள்-38 --- 31 மனிதரின் உணவு மாமிசமா மரக்கறியா? 34 சைவத் தமிழுலகை உய்வித்தவை நாவலரது. 38 ܫܝ இந்துமத விணுவிடை 39 ஆத்ம சிந்தனே - 41 அருணகிரியாரும் வாதவூரடிகளும் ംn ‘46
O O A. ()
சந்தா நேயர்களுக்கு (y
------- ()
அன்புடையீர்,
அன்பு வணக்கம் (
தங்கள் கைகளில் கிடைக்கும் இந்தச் சுடர் 32ஆவது ஆண்டு முதலாவது சுடராகும். கடந்த 31 ஆண் டு களாக ச்
சோதிக்குக் கிடைத்த அன்பர்களின் ஆதரவு எதிர்காலத்திலும் 8 கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு அன்பர் இல்லத் & திலும் ஜோதி சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பதே & எமது தலையாய குறிக்கோள். ஒவ்வொரு சந்தா நேயரும் தத்தம் 8 புதிய ஆண்டுச் சந்தா 15 ரூபாவை அனுப்பிவைப்பதோடு ஒவ் Q & வொரு புதிய அங்கத்தவரை அறிமுகம் செய்துவைத்தால் ஜோதி & () () Ο Q @
S யின் வளர்ச்சிக்கு மகத்தான தொண்டுபுரிந்தவர்களாவீர்கள்.
8 ஆத்மஜோதி நிலையம், நா. முத்தையா
S நாவலப்பிட்டி. (இலங்கை) O Co<><><><><><><><>042494>.4e4420420242424042 Co<>
 
 

*---ބީ---ބީބބعބިބބ--ބީބބބ-; காலைப் பிரார்த்தனை ആ <-— —
பெருங்கருணைக் கடவுளே! சென்ற இராத்திரியிலே தேவரீர் அடியேனைக் காத்து அருளினதின் நிமித்தம், தேவரீரை அடி யேன் துதிக்கிறேன். இந்தப் பகலிலும் அடியேனைக் காத்து அருளும். அடியேன் பாவங்களைச் செய்யாவண்ணம், அடியே 2னத் தடுத்து ஆட்கொண்டு அருளும். அடியேன் முன்படித்த பாடங்களும், இனிப்படிக்கும் பர்டங்களும், அடியேன் மனதிலே எந்தநாளும் தங்கும்படி அருள் செய்யும்.
மாலைப் பிரார்த்தனை
மகாதேவரே! அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்து அருளும்; இந்த இராத்திரியிலே அடியேனக் காத்து அருளும். அடியேன் தேவரீரை அறிந்து, தேவரீருக்குப் பயந்து, தேவரீர்மேல் அன்பு வைத்துத் தேவரீரைத் துதித்து வணங்கும்படி செய்தருளும். அடியேன் இறக்கும்பொழுது தேவரீரை மறவாத தியானத்துடனே, தேவரீருடைய பாதத்
திலே சேரும்படி அருள்செய்யும்.
-யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர்
காலே மாலைப் பிரார்த்தனை
அருட்பெருஞ் சோதி! தனிப்பரம் பொருளே!
அடியருக்கருளும் ஆனந்த தேவே! உன் அடிமலர் இணைகட்கு அடைக்கலம் அடைக்கலம்.
உனதண்டப்படைப்பில் அடிமையின் நிலைமை அணுவிலும் அணு வென அறைதலும் அதிகமே; ஆயினும் எமை நீ அன்னையைப் போல அன்புடன் பேணி அருள்புரிகின்றன; இன்னமும் எங்கள் தம் இருவினை நீக்கி இன்னருள் புரிந்து நன்னயம்பெருகும் நலம்பல தருவாய். முத்தியளித்திடும் முதல்வா! எம் தம் சித்தம் திருத்திச் சீர்பெறச் செய்வாய்! தீய செயல்கள் சிறிதளவும் யாம் செய்யாதிருக்கத் திருவருள் பரிவாய்! பிறப்பெனும் பெருநோய் பிடித்திடாதெமக்குச் சிறப்புடன் முத்தி சீருடன் அருளே. -இந்தியா-கே. ஆறுமுகநாவலர்

Page 3
2 ஆத்மஜோதி
LLLLSLLLLLSLLLL LLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLSLSSS AAAASLSLSLLLLLSLLSLLASLSLLLLLSLLLLLL
O
镜 o Ο நாவலருக்கு அஞ்சலி ! 9 papa appapoap apopodpap too appaparapapoappa ap O
கார்த்திகைமாதத்துமகங் காசினிக்குச் சைவநிலை சேர்திப் பரமயஞ் சேதித்துச் - சீர்த்திமிக மேவுதமிழ் தந்தகந்த வேணல்லூ ராறுமுக நாவலர்வீ டுற்றதிரு நாள்.
- திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை தேவரசு மெய்ந்நூற் றிறம்பலவு மாருயிருக் காவலினுற் போதித்த வாறு முக - நாவலஞர் சீர்முகத்தைக் கண்டவர்க டெண்டிரைப் பூ மண்டலத்தில் யார்முகத்தைக் காண்ப திணி. -
- திரு. அ. சிவசம்புப் புலவர் ஆறுமுக நாவலனை ஆருமுன ராப் பொருளைத் தேறுமுகங் கொண்டு த்ெளிந்தானை - ஆறுமுகம் என்றிருக்க ஒர்முகமும் எங்களுக்குத் தோற்றமற் சென்றெளித்தா னந்தோ சிவா.
- திரு. பூ. முருகேசபிள்ளை நையலிரோ வையகத்தீர் நாவலன்றன் போயினனென் றையனவன் முத்தி யடைந்தனணுல் - மெய்யே நலமடைந்தா னென்றே நணி மகிழ்க யாரும் பல புலம்பி யென்ணுே பயன்.
- திரு. சிவசங்கர பண்டிதர் தேறுமுது சர்வகலை தேர்ந்த யூரீலழனி ஆறுமுக சாமியே யப்பனே - கூறுமுதற் சற்குருவே சீனியே சர்க்கரையே கற்கண்டே
க்குவல யம்விடுத்த தேன், இக்கு தத தே - திரு. க. நமச்சிவாயபிள்ளை வன்றெண்டன் நாவலர்கோன் வாழ்வா வதுமாயம் என்றுரைத்த தேவாரத் தின் பொருளை-நன்றியுடன் சிந்தை செய்தேன் நாவலனே சேர்ந்தாய் நீ என்பதணுற்
/ புந்திநொந் க்கமிக்க போது
புந்திநொந்து து - திரு. சி. செந்திநாதையர்

ஆத்மஜோதி − " . 3.
LLMMLMLLLLLLLLALMLLMLMLMLMLLMLMLLLLLMLLLLLLL
s O O O ; நாவலர் நூற்றண்டில: நாம் சாதித்தது என்ன?
Ww WW, WAWAAw*WAMWWMW ஆசிரியர் MVuvu'WrVv VV AYVA-VvVV
நாவலர் என்றதும் தமிழ் நாட்டில் திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இரா. நெடுஞ்செழியன் அவர்களை நோக்கி ஓடுகின்றது இன்றைய இளைஞரின் உள்ளம். அந்த அளவுக்கு நாவலர் பெருமானை நாமும் உணர்ந்து கொள்ளவில்லை; எமது இளையசந்ததியினருக்கு அறிமுகமும் செய்துவைக்க வில்லை. கலைக்களஞ்சியத்தைப் பார்த்து ஆறுமுக நாவலரை அறிந்துகொள்ளும் அளவுக்கு நமது இளைஞருடைய தமிழ்ப் பக்தியும் சமய உணர்வும் முன்னேறியுள்ளது.
நாவலர் பெருமானை ஐந்தாங்குரவர் என்று அழகாக நூலிலே அச்சிட்டுள்ளார்கள். ஆணுல் கிழக்கு மாகாணத் தில் உள்ள தமிழர்களிலும் மலையகத்திலுள்ள தமிழர்களி லும் எத்தனை பேர் நாவலர் பெருமானை அறிந்துள்ளார் கள்! எத்தனை சங்கங்கள் நாவலர் பெருமானின் குரு பூஜையைக் கொண்டாடுகின்றனர். சுவாமி விபுலானந்த ருடைய தினத்தை வடமாகாணத்தில் எத்தனை சங்கங்கள் நினைவுகூர்ந்துள்ளன? இந்த அளவுக்கு எமது பிரதேச உணர் வுகள் தலைதுாக்கி உள்ளன.
நாவலர் பெருமான் பாடசாலைப் பிள்ளைகளுக்கென்று பாலபாடங்கள் எழுதியதன் பின்பு, எத்தனையோ வாசிப்புப் புத்தகங்கள் தோன்றி, இருந்த இடமும் தெரியாதுமறைந்து விட்டன. நாவலர் எழுதிய இரண்டாம் பாலபாடத்தி லுள்ள நீதிவாக்கியங்களும் நீதிக்கதைகளுமே மனித வாழ்க்கைக்கு வழிகாட்டப் போதியனவாகும். இரண் டாம் வகுப்பு மாணவன் நல்ல விடயங்களே மனதில் பதித் துக்கொள்வதற்கும், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்

Page 4
4 aw ஆத்மஜோதி
உள்ள இரண்டாம் வருட மாணவர்கள் நல்லனவற்றை உணர்ந்து கொள்வதற்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நல்லாசிரியணுய் வாழ்ந்து காட்டுவதற்கும், பல்கலைக்கழ கப் பேராசிரியர்களில் இரண்டாந்தரத்தினர் தம்மை முதலாந்தரத்தினர்ஆக்கிக் கொள்வதற்கும் நாவலர் பெரு மானின் பாலபாடம் இர ண் டா ம் புத்தகம் ஒன்றே போதியது.
இடைக்காலத்திலே தமிழ்க் குழந்தைகளின் தமிழ் அறிவும் சமய உணர்வும் மேலே உள்ளவர்களை நோக்கிச் செல்லாமல் தடுக்கப்பட்டு, கீழே இருப்பவர்களை நோக்கிச் செல்லுங்கள் என வாசினைப்புத்தகங்கள் மூலம்வழிநடத்தப் பெற்றுவிட்டார்கள். நாவலர் பெருமான் தம்முடைய வாழ் நாளில் தனித்து ஒருவராக நின்று கொண்டே மொழிக்கும் சமயத்திற்கும் ஒரு திருப்பு மையத்தை உண்டாக்கினர்.
இந்த நூருண்டு காலத்திலே நாவலர் பெருமானுக்குப் பின் பு மேல்நோக்கிய திருப்புமையம் ஏற்பட்டுள்ளதா? என்ருல், இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஆனல் கீழ் நோக்கிய திருப்பு மையங்கள் பல ஏற்பட்டுள்ளன. உலர்பெருமான் மறைந்து நூருண்டுகளாக செய்யப் த ஒன்றை இன்றுள்ள நாவலர் பக்தர்களும் , - ழை வளர்க்கும் சங்கங்களும் சமயத்தை வளர்க்கும் சங்கங்களும் செய்தே ஆகவேண்டும்.
ஈழம் முழுவதிலும் பரந்திருக்கும் தமிழர்களுக்கே நாவலர்பெருமானைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. தமிழகத்திலும் இன்று மேடைப் பேச் சில் வல்லவர்களாகக் கருதப்படுபவர்களில் ஒரு சிலரே ஈழநாட்டுக்கு வரும் கா ல ங் க ளி ல் நா வல ர் பெருமானை நினைவுகூருகின்றர்கள் என்ருல், அதில் எவ்வித பொய்யும் இல்லை என்றே கூறவேண்டும். நாவலர் நூற் முண்டு விழாச்சபையினருக்கு இதில் பெரும் பொறுப்பு உள்ளது. உலகு எங்ங்ணும் உள்ள தமிழர்கள் நாவலர் பெருமானை அறிந்துக்ொள்ள வாய்ப்பு ஏற்படுத்துவதோடு

ஆத்மஜோதி 5
உலகப் பெரியார் வரிசையில் நா வல ர் பெ ரு மானை அறிமுகம் செய்துவைக்கவேண்டிய பெரும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் கல்வி மந்திரியாக இருப்ப வர்கள் சமய உணர்வோடு சமரச மனுேபாவமும் உடைய வர்கள். நாவலர்பெருமானின் பாலபாடங்களேப் படிப்ப தால் எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாய மாற்றம் ஏற்படும் என்பதனை விளங்கவைத்து அப்பாலபாடங்களை உப பாடப்புத்தகங்களாகவாவது வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவேண்டும்.
அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழா ராய்ச்சி மகாநாட்டிலே நாவல ர் பெ ரும 1ா னு  ைட ய படைப்புகளைக் கொண்ட ஒரு கண்காட்சியும் ஈழத்துப் படைப்புகளைக் கொண்ட ஒரு கண்காட்சியும் இடம்பெறச் செய்ய வேண்டும். ஈழத்திலுள்ள புலவர்களால் எழுதப் பட்ட பல நூல்கள் அச்சுவாகனம் ஏழுமலே இருக்கின் றன. அக்கையெழுத்துப் பிரதிகளையோ, ஏட்டுப்பிரதி களையோ கண்காட்சியில் இடம்பெறச் செய்யத் தக்கதாக நாம் முயற்சிக்கவேண்டும்.
நாவலர் பெருமானைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்று தமி ழாராய்ச்சி மகாநாட்டில் வெளியீடு செய்தால் எதிர்காலத் தமிழருக்கும் அது மிகப்பயனுள்ளதாக இருக்கும். நாவலர் பெருமானுடைய பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு மலையகம் ஏற்ற இடமாக அமைந்துள்ளது. நாவலர் பெரு மான் இன்று பிறக்க நேர்ந்தால் மலையக மக்கள் மத்தி யிலே தான் பிறந்து தொண்டு-செய்யவிரும்புவார்.
கல்வியறிவிலும் சமய அறிவிலும் பின் தங்கி இருக் கும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலே கல்வி விருப்பை யூம் சமய உணர்வையுந் தூண்ட வேண்டிய கடமை ஒவ் வொரு தமிழ் மகனையுஞ் சார்ந்ததாகும். நாவலர் பெரு மானை நினைவு கூருமுகமாக மலையகத்திலே தோட்டத்

Page 5
6 w ஆத்மஜோதி
தோறும் நாவலர் பெருமானுடைய பெயராலேயே வாசிக சாலைகளே ஏற்படுத்தி நாவலர் பெ ரு மா னு டைய நூல்களை இடம் பெறச் செய்தால் பெரிய தொண்டாகும். பல பாடசாலைகளில் உள்ள நூல் நிலையங்களில் நாவலர் பெருமானுடைய நூல்களைக் காணுதல் குதிரைக் கொம் பாக இருக்கிறது. நாவலர் பெருமானுடைய பிரதிமைப் படங்கள் வாசிக சாலை தோறும்பாடசாலைகள்தோறும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
நாவலர் பெருமானுடைய பெயரால் கல்விநிதி ஒன்று ஏற்படுத்தி அதனை நிரந்தர வைப்புப் பணமாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஒவ்வொரு மாகா ணத்திலிருந்து ஒவ்வொரு குழந்தைக்காவது புலமைப் பரிசில் வழங்கலாம். இந்நூற்ருண்டை முன்னேடியாக வைத்துக்கொண்டு தமிழும் சமயமும் வளர நாம் ஆவன செய்தல் வேண்டும். நாங்கள் சமயத்தின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிருேமே தவிர, மக்களைச் சமய வாழ்க் கை நடத்துமாறு தூண்டத் தவறி விட்டோம். சமயம் உதட்டளவிலேதான் உண்டு, உள்ளத்திலே சமய வாழ்க் கை செல்லவில்லை.
கடவுளைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிருேமே தவிர, க. ைெள அநுபவிக்கத் தவறி விட்டோம். கடவுள் அறிவுப் பொருள் அல்ல, அவர் அநுபவப் பொருள் மனித வாழ்க் கைtiலிருந்து சமயம் பிரிந்து வெகுதூரம் சென்று விட் டது. வாழ்க்கையே, சமயம். சம யமே; வாழ்க்கை என் பதை என்றைக்கு மக்கள் உணருகிருர்களோ அன்றைக் குத்தான் மனித சமுதாயத்தில் நாம் மனிதப் பண்பாட் டைக் காண முடியும். ஆண்டில் ஒருமுறை ஒரு நாளைக்கு நாவலரை ஐந்தாங்குரவராக வைத்துக் குருபூஜை செய்து விட்டு அடுத்த ஆண்டுக் குருபூஜை வரும் வரை க் கும் மறந்து விடுகின் ருேம்.
நாவலர் பெருமானுடைய படத்திற்குத் தீபாராதனை செய்து அவரைத் தெய்வமாக்கிவிட்டு அவர் சமூகத்திற்குச் செய்த சேவைகளை நினைவுகூரத்தவறி விடுகின்ருேம் . அவர்செய்த சேவையில் ஆயிரத்தில் ஒன்றையாவது நாம்

ஆத்மஜோதி 7. செய்யமுடியாதா? நாவலர் தனி ஒரு மனிதரல்ல; அவர் ஒரு ஸ்தாபனம். அவர் தனி ஒருவராக இருந்து செய்த
சேவையில் நூற்றில் ஒரு பாகத்தைதானும் இன்றைய ஸ்தாபனங்களால் சாதிக்க முடியவில்லையே!
நாவலர் பெருமானின் பின்வரும் உபதேசங்கள் நமது வாழ்வைச் செம்மைப்படுத்துவதாக!
** நேற்றைக்கு உளன் எனப்பட்டான் இன்றைக்கு இலன் எனப்படுதல் கண்டும், உன் உயிர்க்குப் பயன் படு வனவற்றைச் செய்யாது, வீண் நாட்கழிப்பது, ஐயையோ எவ்வளவு அறியாமை! நாவை அடக்கி விக்கல் எழும் போது, ஒன்றைசெய்தலே அன்றிச் சொல்லலுங் கூடா மையாலும், அது இன்ன காலத்தில் வரும் என்று அறி த ல் இயலாமையாலும் மோட்சத்திற்கு ஏதுவாகிய புண் ணியத்தை விரைந்து செய். நாம் சிற்றறிவு சிறு தொழில் உடையோம். ஆதலால்,முற்றறிவுமுற்றுத்தொழில் உடைய கடவுளை வணங்கி அவருடைய திருவருள் வசமாய் நிற் பின் அன்றி, பாவபுண்ணியங்களை உள்ளபடி அறிதலும், பாவங்களை ஒழித்துப் புண்ணியங்களைச் செய்தலும், நம் மால் இயலாவாம். ' A
警°aasa°器 ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டிம் திருவாசக மடம் - திருக்கேதீச்சரம்.
திருக்கூட்டத்தினர் வருடா வருடம் எடுக்கும் திருவாசக விழா வழமைபோல் நடைபெறத்திருவருள்பாலித்துள்ளது. விழா இம்முறை 24-12-79 ஆரம்பமாகி 2-1-80இல் நிறைவுறும். விசேட மகாநாடு 30-12-79 சிவபூசை மகாநாட்டுடன் ஆரம்ப மாகி 1-1-80இல் முடிவடையும். இதில் இலங்கையின் பேரறிஞர் கள் பங்குபற்றுவார்கள். அனைவரையும் அன்புடன் அழைக் கின்ருேம்,
零零零零零零零零零零零零零零零零零黎零零零零零零
磁

Page 6
ஆத்மஜோதி
LLLLLL LLTLLLLLLL LLLLLL
நாவலர் பெருமானின் ! நலல கதைகள்
எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்நியாசி ஒரு ஏரிக்கரைமேலே போனர். போகும்போது ஒரு செம்பட வன் அந்த ஏரியிலே மீன் பிடித்தான். சந்நியாசி செம் படவனைப் பார்த்து 'ஐயா நீ எப்போது கரைஏறுவாய்?" என்ருர், 'ஐயா, என் பறி நிரம்பினல் கரை ஏறுவேன்”* என்ருன்.
禄 率 攀 இரண்டு மல்லக செட்டிகள் ஒருவரோடு ஒருவர் மல் யுத்தம் பண்ணினர்கள். ஒருவன் மற்றவனைக் குப்புறத் தள்ளி, புரட்டிப் புரட்டி உதைத்தான். உ  ைத யு ன் ட வீரன் எழுந்து நின்று, ஜனங்களைப் பார்த்து, 'ஆனல் என்ன ! என் மீசையிலே மண் பட வி ல் லை" என்று .முறுக்கினன் נL860) dP 60) u
樂 米 ஒரு மனிதன் ஒரு மகாராசனைப் பார்த் து, ‘நீர் எனக்கு ஆறுமாசம் நல்ல போசனம் தருவீராகில் பின் ஒரு மலையை எடுப்பேன்’ என்ருன். அவன் இவனுக்கு அப்படியே நல்ல ஆகாரம் கொடுத்தான். பின் மலைக்குச் சமீபத்திலே அழைத்துக் கொண்டுபோய் 'இதை எடு”* -என்ருன். அவன் ‘நீங்கள் எல்லோரும் எடுத்து என் தலை
மேலே வைத்தால் எடுக்கிறேன்" என்று சொன்னன்.
”将 来源
செலவுகாரணுகிய ஒரு உத்தியோகத்தன் ஒரு செல்வ னைக் கடன் கேட்டான். 'திரும்ப நீ எப்படிக் கடன் தீர்ப்பாய்' என்ருன். 'என் சம்பளத்திலே மாதந்தோ றும் சேர்த்துத் தருவேன்' என்றன். இதற்கு முன்னே தானே நீ இப்படிச் சேர்த்துக்கொள்ளலாகாதா என் முன், ‘தெரியாமலே இருந்துவிட்டேன்’ எ ன் ரு ன்.

ஆத்மஜோதி 9
'ஆனல் நான் தெரிவிக்கிறேன்; எப்படியெனில் கடன் தரமாட்டேன்; போ' என்ற ன். பின் பணஞ் சேர்க்கத் தொடங்கினன். ۔۔۔۔۔
攀
ஒரு குரு தம்முடைய சீடனுக்கு ஞானங்கள் உபதே சித்தார். உபதேசிக்கும்போது, சீடன், தன் வளையிலே நுழையப்போகும் எலியைப் பார்த்து அதன் மே லே நினைப்பாக இருந்தான். குரு உபதேசித்தவுடனே 'சீவுா, எல்லாம் நுழைந்ததா?’ என்றர். சீஷன், "எல்லாம் நுழைந்தது, வால் மாத்திரம்தான் நுழையவில்லை' என் முன். மூடர்களுக்குச் சொல்லும் புத் தி இப் படி யே இருக்கும்.
岑· 拳 率 ஒராசிரியர் சீடன் வீட்டுக்குப் போய், சில வார்த்தை கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, ‘‘சீடா, உன் பிள்ளைகள் நால்வருள் யோக்கியன் யாவன்' எ ன் ரு ர் **சுவாமி, இங்கே கூரை வீட்டின்மேல் ஏறிக்கொண்டு கொள்ளிக்கட்டை சுழற்று கிருனே! இவன்தான் இருக்கிற
வர்களுக்குள்ளே பரம யோக்கியன்’ எ ன் ரு ன். குரு **மற்றை மூவர்கள் எப்படிப்பட்டவர்களோ' என்று, மூக்கின் மேலே விரல்வைத்து, பெரு மூ ச் சு வி ட் டு, **அப்படியா ** என்று விசனப்பட்டார். م
奉
ஒரு செல்வன் தன் பிதாவுக்கு ஒட்டிலே கஞ்சிவார்த் துக் கொண்டு வந்தான். அவன் பிள்ளை அதைப்பார்த்து, அந்த ஒட்டை எடுத்து ஒளித்துப் போட்டான். பின் அந்தச் செல்வன் தன் பிதாவைப் பார்த்து ‘* ஒடு எங்கே’’ என்று கேட்டு அடித்தான். அப்பொழுது அந்தப்பிள்ளை 'அப்பா என் பாட்டன அடியாதே நானே அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்தேன்; ஏன் என்ருல், நான் பெரியவன் ஆன பின் உனக்கு வேறே ஒடு சம்பாதிக்க மாட்டேன்' என்ருன் அதைக் கேட்டு, செல்வன் வெட்கப்பட்டு அன்று முதல் தன் பிதாவை மிகுந்த செளக்கியமாக வைத்திருந்தான்.
务 崇
崇

Page 7
20 ஆத்மஜோதி
ஒரு பாடகன் தெருத்திண்ணையிலே இருந்துதலையசைத் துக் கொண்டு சங்கீதம் பாடினன். வெகுசனங்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வழியிலே போகிறஒரு ஆட்டிடையன் அங்கே நின்று சற்று நேரம் பார்த்துத் தேம் பித் தேம்பி ஓயாமல் அழுதான். இருந்தவர்கள் ஆனந்தத் தாலே அழுகிருன் என்று எண்ணி 'ஏன் அழுகிருய் அழா தே" என்ருர்கள். இடையன் ஐயோ! 'என் மந்தையிலே ஒரு ஆடு இந்த வலயே வரப்பெற்று, கோணக்கோண இழு த்து, யாதெர்ன்றினலும் பிழையாமல் இறந்து போயிற்று: அது இந்தப் பிள்ளைக்கும் வந்ததே என்று அழுகிறேன்; ஆனல் இவனுக்கு உடனே சூடு போட்டால் ஒரு Ĝaj&T 97&arT ப்பான்' என்ருன்.அவர்கள் அவனுடைய அறியாமையைக் கண்டு நகைத்து, அவனைத்திட்டித் துரத்தினர்கள்.
ஒருவன் பதினுயிரம் வராகன் வைத்திருந்தான். அவன் தனக்கு மரண காலம் சமீபித்ததை அறிந்து, தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து ஒவ்வொருவனுக்கு ஐவைந்து பணம் கொடுத்து, இதனல்ே வீட்டை நிறை யப்பண்ணுகிறவனுக்கு என் பொருளைக் கொடுப்பேன் ' என்றன். அவர்களுள் மூத்தவன் ஐந்து பணத்துக்கும் மலிந்த பண்டமாகிய கருப்பஞ் செத்தை வாங்கி வந்துவீடு நிறையக்கொட்டிப் பரப்பிவைத்தான். இளையவன் மெழுகு வர்த்தி வாங்கி வந்து ஏற்றி எங்கும் பிரகாசிக்க வைத் தான். பிதா அவ்விரண்டையும் பார்த்து, தீபம் ஏற்றி னவனுக்கே பொருளை ஒப்பித்தான் - புத்தி உள்ளவனே பெரியவன். 谢 拳
ஒருவன் கடைவீதியிலே இராமாயணப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு இடைச்சி மூடனகிய தன் கணவனுக்குப் புத்தி வரும் என்று எண் அவனைப்பார்த்து, ‘ நீர் இராமாயணங் கேட்டுவாரும்' என்று அனுப்பினுள் . அவன் அப்படியேவந்து மோவாயிலே கோலை ஊன்றி, குனிந்து கொண்டு நின்றன். அங்கே இருந்தவர்களில் ஒரு துட்டன் அவன் முதுகின்மேல் ஏறிக் கொண்டான். அந்த இடையன் பிரசங்கம் முடியும் அள வும் அப்படியே சுமந்துகொண்டு நின்று, பின் வீட்டுக்குப் போனன். ' அவன் மனைவி அவனைப்பார்த்து 'இராமா யணம் எப்படி இருந்தது' என்ருன். ' அது இலகு அன்று; ஒரு ஆட்சுமை இருந்தது ' என்றன். அவள் அதை ஆராய்ந்து அறிந்து, அவன் மடமைக்கு விசனப்பட்டாள்.

ஆத்மஜோதி I
SLLLLLLLLL LLL LLLLLL
அருள்
MWWWW 5 T6au 6n) i'r MWAWAW
அருளாவது இவை தொடர்புடையவை என்றும் , இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லா உயிர்கண் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்தும். உலக இன்பத்துக்குக் காரணம் பொருளே யாதல் போலத் தருமத்துக் குக் காரணம் அருளேயாம். *
அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடித்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய் மையாகிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு, தவமா கிய நெய்யை நிறையப்பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றி ணுல், அஞ்ஞானமாகிய பேரிருள் ஒட்டெடுப்ப, பதியாகிய மெய்ப் பொருள் வெளிப்படும். மரண பரியந்தம் தன்னுயிரை வருந் திப் பாது காத்தல் போலப் பிற உயிர்களையும் வருந்திப் பாது காப்பவன் யாவன். அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ் செய் பவணுகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.
உயிர்கள் எல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ் வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன் புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாலிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களே யாவார்கள். உயிர் களிடத்து அன்பில்லாதைொழுது கடவுளிடத்து அன்புடையவர் போல் ஒழுகுதல் நாடக மாத்திரையே யன்றி உண்மையன் றென்பது தெள்ளிதிற்றுணியப்படும் பிறவுயிர்களிடத்து இரக்க மில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத் தும் இரக்கமில்லாதவரேயாவர். அவர் தமக்குத் தாமே வஞ்
母品I了。

Page 8
12 x ஆத்மஜோதி
LLLLLL LLLLLLLLS AWWWWWWWWWWWWWWWW
* கேள் மனமே கேள்!
புலவர் விசூர்மாணிக்கம்
WWWWW DTobU5-55jp5r6. Mw
ஏ மனமே! நானும் உன் விருப்பப்படியெல்லாம் உன்னை விட்டுப்பார்க்கிறேன். நீயோ கொஞ்சமும் திருந்து வதாக இல்லை. ம். உன் புத்தி தெரிந்துதான் இராம லிங்க அடிகளார் உன்னை மனமெனுமோர் பேய்க்குரங்கு மடப்பயலே என்றழைத்தார் போலும். பாழும்மனமே! இனியும் உன் விருப்பப்படி நான் நடப்பேனேயானல் அவ்வளவுதான் என் கதி ... ம்! போனது போகட்டும். இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. இனி யாவது என் சொல்லைக் கேள். நீ மாண்புற வாழ்வாய் மனமே!
வாழ்க்கையில் பொய் பேசாதே, என்கிறேன் நான். ஆனல் நீயோ வள்ளுவரே பொய் பேசலாம் என்று கூறி இருக்கிருரே என்கிருய். ம்... நீ என்னவோ ஆயிரத் து முந்நூற்று முப்பது குறளையும் கரைத்துக் குடித்தவன் போல பேசுகிருய். சரி. அப்படியே இருக்கட்டும். உன் இஷ்டம் போலவே வைத்துக்கொள்வோம். வள்ளுவர் எங்கே-எந்தக் குறளில் உன்னைப் பொய் பேசச் சொல் கிருர், ம்... சொல் பார்க்கலாம்.
மனமே! ஒ. அதுவா? அந்தக் குறள் எனக்கும் தெரி யும். உனக்கு மட்டும்தான் தெரியும் என்று எண்ணுதே! ம். அரைகுறையாகப் படித்துவிட்டுப் பொருள் புரியா மல் வீணே புழுங்கிக் கொண்டு வள்ளுவரும் பொய்பேச லாம் என்று சொல்லி இருக்கிருர் என்கிருயே. ம்...
அட முண்டமே! அவர் எங்கே சொல்லி இருக்கிருர்? காட்டு பார்க்கலாம். அட பாளும் மனமே!இவ்வளவுதான

ஆத்மஜோதி 13
நீ கற்றது? ம்- வள்ளுவர் என்ன சொல்லுகிருர், அக்கு றஃள நீ நன்ருகக்கற்ருயா? அது உனக்குப் புரியவில்லை யானுல் யாரையாவது கேட்டுத் தொலைக்கக்கூடாதா? ம். சொல்கிறேன் கேள். குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானல் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம். இ தோ அந் தக் குறட்பாவையே சொல்கிறேன் கேள்.
"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்"
மனமே! இக்குறளை நன்முகப்படி இதில் பொய் பேசச் சொல்லி உனக்கு எங்கே லைசென்ஸ் வழங்குகிருர் வள்ளு வர். ம். காட்டு பார்க்கலாம்.
மனமே! ஏன் விழிக்கிருப்?) சரி-இது போகட்டும். இனிமேலாவது இதுபோல் பேசி மாட்டிக்கொள்ளாதே! அடுத்துச் சில அறிவுரைகளை உனக்குச் சொல்லனும் என்று எண்ணுகிறேன். ம்.சொல்லட்டுமா? மனமே! நீ தினமும் வீணுகப் பொழுதைக் களிக்கிருய். அவ்வாறு செய்வதுநல்ல தல்ல-ம். மனிதன் திரும்பப் பெறமுடியாதது காலம் ஒன்று தான். எனவே, காலத்தை வீணுக்காமல் பயனுள்ள வகை யில்வாழ்ந்து வா. அவ்வாறுவாழ்ந்தால் உனக்கும் பெருமை. எனக்கும் பெருமை , ம் . புரியுதா? மனமே மேலும்! ஒன்றைக் கூற விரும்புகிறேன். உயிர்வதை செய்யாதே! மாமிசத்தையும் உண்ணுதே. அப்படியானல் நீ சொல் வாய்! நான் எந்த உயிரையும் கொல்வதில்லை. யாரோ கொன்றபின் விலை கொடுத்துத்தான் மாமிசம் வாங்கி உண்கிறேன். இது கூடவா பாவம் என்ருய் .ம்..மனமே!
நீ தின்பதால் தானே அவன் கொல்கிருன் நீ தின் பதை விட்டு விட்டால் அவன் ஏன் கொல்லப் போகிருன். மேலும், அந்த ஊனைத்தின்று உன்னுடைய ஊனை வளர்ப் பதில் என்ன லாபம்?ம். எவ்வுயிரும் இறைவன் வாழும்

Page 9
l 4 ஆத்மஜோதி
சந்நிதி ஆகும். "எவ்வுயிரும் என்னுயிர் போல்எண்ணி இரங் கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே” என்றர் தாயுமானர். எனவே உயிர்க் கொலை புரியாமல் புலால் உண்ணுமல் வாழக் கற்றுக்கொள். இதுபற்றித் தனியாக-விரிவாக-வேறு ஒரு நாளைக்குச் சொல்கிறேன். மனமே! எப்போதுமே,
ஆன்றேர்கள் அறிவுரைப்படி நாம் வாழ்வதுதான் நம க்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. அதுசரி. உனக்கு ஒரு கதை தெரியுமா? ம் தெரியாதா? அதுதெரிந்தால் நீயேன் இப்படிக் கிடக்கப் போகிருய். அதாவது கைவிளக்கை ஏற் றிக்கொண்டு போய் கிணற்றில் விழுவார்களாம் சிலர். அதுபோல நீ படித்திருந்தும் படுகுழியில் விழுந்து அவதிப் படுகிருய். எனவேதான் 'கல்லாத பேர்களே நல்லவர்கள். நல்லவர்கள், கற்றும் அறிவில்லா என் கன்மத்தை என் சொல்வேன்' என்ருர் தாயுமானுர்,
மனமே!இப்போது உனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது! என்கிருய், இந்த இளமை எவ்வளவு காலம் நீடிக்கும் என் பதை எண்ணிப் பார்க்கிரு யா? . . ம்! அதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் அடிவயிற்றை முறுக்கும் என்கிருர் வள்ளலார். அதனுல்தான் நீ எண்ணிப்பார்க்க அஞ்சு கிருய் போலும், ம்..! இதோ அவர் பாடலையே கேள்.
'பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலகொலைகள் புரிகின்றீர் கலகலவென்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற
களியரெனக் களிக்கின்றீர் கருத்திருந்துங் கருதீர்.
ஐவிளக்கு மூப்புமரணுதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்!
என்று கடுமையாகச் சாடுகின்ருரே அவர். ஏன் தெரியுமா ம்., அட பாழும் மனமே! அது உன் போன்ற ஆட்களுக் காகத்தான். ‘அருட்பா வென்ருல் என்னவென்முவது உனக்குத் தெரியுமா? ம் தேவாரம், திருவாசகம், திருப் புகழ் இந்தப் பெயர்களேயாவது நீ கேள்விப்பட்டிருக் கிருயா? ஏ மனமே!

ஆத்மஜோதி 15
இதற்கெல்லாம் உனக்கு எங்கே நேரம்? ஏ தோ கண்டதே காட்சிகொண்டதே கோலம். என்று வாழ்ந்து கொண்டு இருக்கிருய். மனமே! நீ எடுத்திருக்கிற பிறவி யின் பெருமையை அறிந்திருக்கிருயா? ம்..அறிந்திருந்தால் நீ ஏன் அவதிப்படுகிருய் - சுகமாக இருப்பாயே!
மனமே! நமக்கு வாய் படைத்தது எ த ர் கா க த் தெரியுமா?ம். வெந்ததைத் தின்றுவந்ததைப் பிதற்றவா? இல்லவே இல்லை. இறைவனை வாழ்த்த நெஞ்சம் எதற் காகத் தெரியுமா? ம் . எ ண் ணு த எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி ஏங்கவா? அதுதான் இல்லை. இறை வனை நினைந்து போற்ற, நமக்குத் தலை கிடைத்தது எதற் காகத் தெரியுமா? சுமைகளைத் தாங்கவா? அ ல் ல வே அல்ல. இறைவனுடைய தாளில் வீழ்ந்து வணங்க,
மனமே! இவைகளையெல்லாம் நீ எங்கே எண்ணிப் பார்க்கிருய். அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் கவலைப்பட்டுச் சாகின்ருய். அவ்வாறு நீ வாழ்ந் தால் அது உன் தலைவிதிதான். அதை மாற்ற யாரால் ஆகும். மன்மே!
‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே,
என்று கடந்த காலத்தை எண்ணிக் கதறுகின்ருர் அப்பர் பெருமான். மேலும், கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்கிருர் வள்ளுவர். ம ன மே! உடம்பின் பயன்பற்றி நீ ஒரு போதும் அறிந்து நடந்தாய் இல்லை. நான் என்ன செய்வது? சொன்னலும் ஏற்க மறுக்கிருய். உன்னை எப் படித் திருத்துவது என்றே புரியாமல் திகைத்துக் கொண் டிருக்கிறேன்.

Page 10
6 ஆத்மஜோதி
மனமே! இறைவனை நினைந்து போற்ருத உடல் உறுப் புக்களால் ஏதும் பயன் இல்லை. இறை வ னை நினைந்து போற்ருத உடல் உறுப்புக்களை இராமலிங்கர் எவ்வாறு இழித்துப் பேசுகிருர் என்பதை நீயே கேள். பாடலைப் படிக்கட்டுமா?ம்..! −
எந்தை நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏ க்கற் றிருக்கும் வெறுவாய் எங்கள் பெருமான்நினை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும் தலை கந்தமிகு நின்மேனி காணுத கயவர்கண் கலநீர் செறிந்த அழுகண் கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர் செவி
கைத்திழுவு கேட்கும் செவி பந்தமற நினைஎணுப் பாவிகள் தம் நெஞ்சம்
பகீரென நடுங்கும் நெஞ்சம் பரமநின் றிருமுன்னர் குவியாத வஞ்சர்  ைக
பலியேற்க நீள்கொடுங்கை கந்தமிகு சென்னையிற் கந்த கோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே! தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமரிை சண்முகத் தெய்வ மணியே!
ஏமனமே! பாடல் முழுவதையும் பலமுறைபடி, பல முறைபடித்தாலும் உனக்குப் புத்தி வருமா? என்பது சந் தேகமே. என்ன செய்வது?ம். சொல்வதைச் சொன்னேன். கேட்டால் கேள். கேட்காவிட்டால் போ. பின்னல் வருந் திப் பயன் இல்லை. "வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு (வைக்கோல் போர்) போலக் கெடும்" என்பது வள்ளுவன் வாக்கு, மனமே! “ எதிரதாக் காக்கும் அறிவினுேர்க் கில்லை அதிர வருவதோர் நோய்" என்பதும் அவன் வாக்கே, எனவே, வாழ்நாளைப் பாழ் நாளாக்காமல் பயனுள்ள வகையில் வாழ்ந்து சிறக்க நான் சொல்வதைக் கேள் மனமே. கேள்.
நேரிசை வெண்பா வாழும் வகையற்று வையத்தே வாழ்கின்ற பாழும் மனமே! பகரக்கேள் - சூழவரும் தீங்கும் பொடியாகும்; தித்திக்கும் என்பேச்சை வாங்கி நீ என்வழியே வா.

ஆத்மஜோதி 17
அன்னம் பாலிப்புக்கு ஒரு மன்னவன்
சுவாமி 鑿 சர்வாதித்தானந்தா ဖွား as as Tugslisir at B. A. F. R. G. S. i சிவானந்த வித்தியாலய s
முன்னுள் அதிபர்
சுவாமி சர்வாதித்தானந்தரது வாழ்க்கையும், அவரது சமூக சேவையும், அவர் மக்கள் பால் கொண்டிருந்த அன் பும், அவரது சேவையின் திறனும் அளந்தறியக்கூடியன வல்ல. மெளன சாது அவர். மெளன சேவை அவரது சேவை; மறைந்து நின்று தொண்டாற்றும் மாண்பினது அவரது களங்கமில்லாத தூய மனப்பாங்கு, எத்துணைத் தூரத்திற்கு, எத்துணைப் பரப்பிற்கு மனிதனய்ப் பிறந்த ஒருவனின் சேவை நீடித்து, பரந்து அன்புமயமாய் இருக் கக் கூடுமோ அத்துணை அளவிற்கு அவரது சேவையின் மகத்துவம் வியாபித்திருந்துள்ளது. . . .
மக்களே ஏற்றத் தாழ்வின்றி ஒரே அன்பு வீச்சில்கண்டு அவர்கட்காய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாவனையுடன் வந்துள்ள மகான் அவர். பளிங்கு போன்ற களங்கமற்ற நெஞ்சம், ஈரமுள்ள மனFடுபாடு, இரக்கமுள்ள கண் ணுேட்டம், என்றும் வற்ரு ஊற்ருகிய உளவிரிவு என நாம் எத்துணைப்பக்கம் வி ரி த் து க் கொண்டு போ ஞ லு ம் அவரது சீலமும், அன்பும் அவ்விரிப்பில் அடங்குவன வல்ல. அவை பெருகிக்கொண்டேயிருக்கும். கான்யாறுபோல் அங்கும், இங்கும் வளைந்து வளைந்து, நெளிந்து மடங்கி,

Page 11
18
ஆத்மஜோதி
பின் நீளப்பாய்ந்து பல பக்கமும் வியாபித்துச் செல்லும்
இயல்பினது அன்னரது ஈரமனப்போக்கு.
வாத நோயால் பீடிக்கப்பட்ட தம் இரு கால்களில் நின்று சளையாது இருபது நீண்ட ஆண்டுகளுக்கு; "பசிக் குது; தாகமாயிருக்கிறது; அன்னம் வழங்குங்கள், குடிநீர் ஊற்றுங்கள்’ என்று வந்த யாத்திரிகர்கட்கெல்லாம் மனங்கோணது, முகம் சுழிக்காது, போதும் போதும் எனச் சொல்லுமளவிற்கு அன்னம் வழங்கி வந்த சாது வள்ளல் ஒருவர் (இவ்விலங்காபுரியில்) உளராகில் அவர் தான் சாது சர்வாதிதானந்தர். இட்லி வேண்டுமா?கொடு, தோசைபிரியமா? பெற்றுக்கொள்: சாதம் வேண்டுமா? போடு; புளிச்சாதம் என்ன! குடிபானம் என்ன! சாம்பார் என்ன ! சட்ணி என்ன! இடியப்பம் என்ன! வேண்டிய く வேண்டியவர்கட்கெல்லாம், வேண்டிய வேண்டிய அளவில் உண்டிகளைப் பகிர்ந்து, பங்கிட்டு,புன்முறுவலுடன் வழங்கி வந்த அன்னபூர்ண அம்பாளின் உன்னத உருவம் சுவாமி கைலாசம்- (அவரது மறு பெயர்)
எவரிடமும் அவர் கடும் சொல் பேசியதில்லை, கதிர் காம வேலனின் இராமகிருஷ்ண மடத்தில் தினமும் ஆயி ரக்கணக்கான மக்களுக்கு சாதி, மத, இன வேற்றுமை எதுவும் காட்டாது உணவு வசதி, விடுதி வசதி அளித்து அரியபெரிய தொண்டாற்றியவர் இம்மகான். ம னி த சேவையானது தெய்வ சேவையைப் பிரதிபலித்தது இந் நிலையில்தான் : இம்மகானது சேவையில்தான் ம னி த உளம் ஆத்மீக நலத்தின் பிறப்பிடம் என நாம் வேதங் களில் கற்றிருக்கலாம், ஆன ல் சாதாரண நாளாந்த நடைமுறையில்தான் நாம் அந்த இணக்கத்தினை இம் மகா னிடம் தான் கண்டுகொண்டோம். நற்சேவையே சிவம்! செம்மையே சிவம்! அன் பே சிவ ம்! சினங்காப்பதே சிவம்! சீவ சேவையே சிவம் - என்பதை நாம் நம் கண் முன்னே கதிர்காமத்தில் இருபது வருடங்களாகக் கண் ணுற்று வந்துள்ளோம். ஏட்டில் கண்ட வேதத்தினையும்,

ஆத்மஜோதி 19
பேர்தனையில் கண்ட ஆகமத்தினையும் நாம் இம்மகானது
வாழ்க்கைநெறியில், சாதனையில் கண்டுள்ளோம்.
இத்தனை விரிவும் தெய்வீகச் சித்தத்தில் இருந்துள்ள தென்பதற்குப் போதிய சான்றினை இம் மெளன சாதுவின் செயல் ஒவ்வொன்றிலும் கணித்துக்கொண்டோம். தாம் ஒரு சாது என்பதை உற்றேரும், உறவினரும், மற்றே ரும் அறிந்துகொள்ள இயலாத முறைப்படி நடந்து கொண்டவர் இச்சாது. அவருக்கு மதிப்பும் வேண்டிய தில்லை; சாதுவென்ற மரியாதையும் வேண்டியதில்லை. இவற்றிற்கு அஞ்சி, ஒஞ்சி மறைந்து நின்றவர் அவர். உல கப் போக்கின் சிக்கலான பிரச்சினைகளில் அவர் சிக் கி க் கொண்டதுபோல் எவருக்கும் தெரிந்திலது. அவர் பற் றற்ற சாது. பொருள் எத் துணை வந்து களஞ்சிய அறை யினை நிறைத்துவிட்டாலும் சரி களஞ்சியம் வெற்ருன நிலை யினை அடைந்துவிட்டாலும்சரி சுவாமி கைலாசம் அவர் கள் மனந்தளம்பாத நிலையில் இருந்துகொண்டே வந்தார். அவரது களஞ்சியத்தில் எப்பொழுதும் நிறைவேயொழிய குறைபாடில்லை. இல்லையென்று முணுமுணுத்துக்கொள் ளாதபடி இரவென்றும், பகலென்றும், நடுநிசியென்றும், நண்பகலென்றும் பாராது அள்ளி அள்ளி அன்னம் பாலித் வர் இம்மகரசாது. * R
இவரைப் போல் ஒருவரை இனி நாம் காண்டலரிது. இது மிகையான கூற்று அன்று. மனித உளம் எத்துணை கனிவினையுள்ளதாயிருக்கக் கூடுமோ அத்துணைப்பண்பினை எய்தியுள்ளது தம்பலகாமக் கிராமத்தினைத் தம் பிறப்பிட மாகக் கொண்டுள்ள இம்மகானது உளம். பழுத்த உள் ளம்; பண்பு மேம்பட்ட தெளிவான புத்தி, எவரிடமும் இறங்கிச் செல்லும் ஈரநெஞ்சம், 'செம்புலப்பெய் நீர் போல’க் கசிந்து செல்லும் கண்ணுேபுடம்; தெய்வீகத் தோற்றம், கலங்காத புத்தி; இத்தனை மனிதப் பண்பு களும் தெய்வீகநிலையினை எய்தியுள்ளனவென்ருல் அந்நிலை யினை நாம் இம்மகான் வாழ்க்கைச் சித்திரத்தில்தான் காணமுடிந்தது.

Page 12
29 V s த்மஜோ தி
இம்மகானுடன் பழகுவதற்குப் பாக்கியம்கொண் டுள்ள எவரும் அவரது சிந்தையில் ஈடுபட்டுவிடாநிலை யில் இருந்திருக்க முடியாது. கோலத்தில் குறுகிய தவ முனி குழந்தை மனம்; அன்பு கனிந்த பார்வை கட்டி ட லோத்துக் காக்கும் நடமாட்டம்; இத்திறனைத்தும் அதா வது மன்னுயிருக்காகத் தன் உயிரையும் ஈயவல்ல இயைபு கள் மனிதன் மாட்டும் உதித்தல் கூடும் என்பதற்கு இலக் காக நின்று சான்று பகர்கின்றன. சுவாமிகளது நடத்தைப் படிவங்கள்.
மக்கட் சமுதாயம் எத்துணை முன்னேற்றத்தினை எத் துறையில் எய்திடினும், அஃது ஆத்மீகத் துறையில் முன் னேறவிடத்து, அதன் முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமாகா. மனிதன் தேவனுனதை நாம் கண்டுள் ளோம். சமூகமும் ஏன் சமுதாயமும்கூட கூட்டான ஒரு தெய்வீக நிலையை அடைவதற்கு போதிய இடமுளது என் பதனை இம்மெளனசாதுவினது வாழ்க்கை சுட்டிக்காட்டி நிற்கிறது.
மனித உளம் குழம்பிய இந்நாட்களில் நம் தெய்வம், எம் தெய்வம் என்று வீண் வாதமிடும் மக்களுக்கு இவ ரது வாழ்க்கைச் சரித்திரம் என்றென்றும் மங்காப் படிப் பினையாக விளங்கும்.
அவர் நோய்வாய்ப் பட்டிருந்த நாட்கள் பல. ^ +ய்வு, வாதநோய் போன்ற அசெளக்ரியங்கள் அவ குக் காலத்துக்குக் காலம் ஏற்பட்டுக்கொண்டேயி த போதிலும் அவரது அந்திய காலத்தில்கூட அவர் வாய்மீறி, நாதவறியாவது தமது உடற்குறைபா டு க ளே எடுத்தியம்பினரில்லை. ஆயினும் அவர் இறக்கும் தறுவா யில் இருக்கும் பொழுது அவரைக் கண்காணித்துவந்த ஒரு தாதி அவரிடம் ‘என்ன வேண்டும் சுவாமி’ என வின விய பொழுது, அதற்கு அவர்; “எனக்கு வேறு என்ன வேண்டும் சோறுதானே! எனக் குழந்தை உளப்போங்கில் அத்தாதிக்கு விடையளித்தனர். இதைக் கேள் வி யு ற் ற அவர் கீழ்க் கதிர்காமத்தில் சமயற்ருெ?ழில் புரிந்த ஒரு சமயற்காரர்; லட்சக்கணக்கான மக்களுக்கு அ ன் ன தானம் வழங்கிய வள்ளல் ஒரு பிடிசோரு கேட்டார்? என பிரலாபித்து அழுதார். மக்கள் வாழ்வில் தெய்வ மும், குழந்தையும் மாறி மாறி வியாபகம் செய்வது இம் மகான் போன்ற மேதைகள் மாட்டுளது.
AVo

ஆத்மஜோதி 2.
LLLSLALSLSALLLSASL LASLSLMLSLLLLLLSLLLSLLSLLASLSLLLSLSLAMLMLMS SMLLS LALLSLLLLSLLLLLSLLLLLSLLLLS S S
பூணீரீமத் சுவாமி R சர்வாதித்தானந்தஜீமஹராஜ் நினைவு
LLLMLM LSLALLLLL S TTS lttTTTT STTLTTTT TTTT qLMLMMLLLLL
வெண்பா (சமாதி நாள்) *
சித்தார்த்தி ஐப்பசியிற் சேர்நாள் பதினென்றில் ' நித்யார்த்த நிலைநாடிச் சர்வா - தித்தானந் தர்சாந்தி சைதன்யக் கைலாயப் பிள்ளைமுழு நிர்வாண முத்தராஞர்.
விருத்தம் (ஆற்றுப் படுதல்)
தம்பலகா மத்துதித்த கைலாயப் பிள்ளை
திருமலையில் விபுலானந் தக்குருவை நாடி ஐம்புலஞய்ந் தறிவிக்கு மறிவாறு பெற்றங்
கமையிந்துக் கல்லூரி கலைபயிலு நாளில் அம்புவியை அசைத்துவிடு மாட்டமா மொன்றும்
அமைவான சமூகத்தை ஆக்கிவிட லொன்றும் தம் பணியாய்க் கொண்டவிவே கானந்தர் தந்த
தரும நெறி ஆற்றுப்பா டடைநாளு மாக.
கல்லடியுப் போடையிரா மக்கிருஷ்ண வில்லம்
கழறுபுகழ்க் குணமுடைய கணிசமா ணவனுய்
* நல்லுலகு குடிசையில் என்றுணரு மட்டும்;
நானறியச் சொல்லுவீர் கண்டீரேல் தேவன்
எல்லீருங் கேண்மினெ'ன எதிர் வினவி நின்றேன்
எழின் மேதை தாகூர்நின் வையோகி கண்கள்
நல்லவனே!' என்றுரைத்த நரேந்திரனின் ஞானம்
நணிபயின்ருன் கைலாய நற் பிள்ளை யாண்டான்.

Page 13
22 ஆத்மஜோதி
ஆண்டு பல தமிழ் முனிவற் கடியோணுய்க் கற்றேன்
அருள்வி ஞா னந்தருடன் அனைத்திலங்கை சென்று யாண்டுமவர்க் கின்னடிசி லாக்கியளித் தொன்றும் "யாமறிவோம் வேதவுரை நாலு வகை கூறும் வேண்டும (ம்) மை உன திறைவன் அப்பனுமே அற்ரும் விரிசமுகம் உனதிறைவன் ஏழைகளும் அற்றே ஈண்டுபணி புரிமற்கு மன்’ ‘னென வுரைத்த
இருஞ்ஞானி போதனையும் நனிநாளும் கற்ருன்
நாலுவகை யோகமுமோர் நடுபுணையப் பெற்றேன்
‘நவிலறனென் றென்றேபல் மறைகூறும் நாமம் சாலு மொரு முழுமையே தெய்வமம் முழுமையைச்
சரிநிகர் தெய்வீக ஊற்ருக மக்கள் காலுபவர் ஆகுநரே ஆதலினல் ஆன்மா
கவின்பெறுதெய் வீகத்தன் மைத்ததாம்' என்னும் பாலு கருண் மைசொல்லு ஞானரிஷி மரபில் vn பயிலு நனய்க் கைலாயன் பணிபுரிய லானன்.
(வேறு மஹராஜாதல்)
நரடா சங்கள் நலிதரவே நமதுகைலா யப்பிள்ளை விரஜா னந்தர் குருவாக வினைகள் நீக்கும் வழிகோலிச் சிரசா வன்னர் அடிதாழ்ந்து சீர்சால் சாந்தி சைதன்ய மரபா னமம் பெற்ருராய் மஹராஜாகும் வழி நின்றர்
இராமக் கிருஷ்ண சபைநிறுவி இருந்த கால நூற்றண்டைக் கிராமம் நகரம் எங்கணுமே கிளர்தல் செய்த காலத்தில் பராவி சேவை செய்தவராம் பாகர் சாந்தி சைதன்யர் விராக வாழ்வு முகிழ்த்தக்கால் முப்பா னண்டும் முதிர்ந்ததுவே
ஆண்டா யிரத்து தொளாயிரத்து நாற்பா ஆனந்தில்நந்து கடன் காண்பார் சாந்தி சைதன்யர் கருதி விரஜானந்தகுரு மாண்டாள் தலைகொள் சர்வாதி தானந்தப் பேர்ப்பட்டமிடப் பூண்டார் குருஜி மஹராஜர் குலமும் பற்றும் குமைத்தனரே

ஆத்மஜோதி 23
கட்டளைக் கலித்துறை (சேவை)
ஆண்டுக ளெட்டு மறைவுறச் சங்கத் தலை மையகம் மாண்புறு சேவை மலிவுறச் செய்த மலைவிலவர் ஆண்டுக ளேழிமூன் றறுமுகன் ஆடும் கதிரையினில் வாண்முறை யன்னம் வழங்கிய தெப்போ மறப்பதுவே
வெண்பா (கதிரையில் அன்னமிடல்)
மின்வலுவிற் செல்லும் விசைப்பொறியோ மற்றென்னே இன்சுவைகொள் சோற்றுக்கறிவாளி-மின்னுெளிபோல் மீளும் விரையும் மிகஇலையில் சேரு மொரு நாளும் புனிதம் அரு
இம் மென்ருல் இங்கன்னம் 'அம் மென்ருல் அங்கன்னம் 'உம்' மென்ருல் உப்புப் புளியளவாம்-அம்மம்ம; என்னென்று சொல்வேன் இருபானே ராண்டு அன்னம் அளித்த கதை
ஆசிரியப்பா - (நிறைவுகாலம்)
பூணூரீமத் சர்வா தீதா நந்தர் கதிர்க மத்துச் சாமியே என்பர் ஆண்டுகள் ஐந்து அப்பணி நீங்க மீண்டும் தலைமை அகத்திற் கேகி நீத்த உடம்பு நிலைதளர் வுற்ருங்(கு) கல்லடி உப்போ டைக்கே கினரால் பிள்ளைகள் இல்லப் பெரும்பே ரறத்தைப் பிறழ்விலா தாற்றும் பெருமக ராஜர் அம்மை அப்பர் அருட்திரு மகர்க்கா நந்த ஜீவனம் நயக்கும் மகரிஷி சுவாமி ஜீவ ஞ நந்தர் அணைப்பில் சிறிதுரஉ காலம் செல்ல இருக்கையில் நீரிற் குமிழி நிறைந்தது மீண்டுமோர் நீரிற் குமிழி தோன்றலும் நியதியா மென்ம நிறைஞான வாரியே.

Page 14
24 ஆத்மஜோதி
LLLLSSSLALLSS SMALLLLSLMLSSLLLLSLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLASLLASLLASLSLLMLLLSLLMLLLLL
பூணீர் சுவாமி சிவானந்தரின் Ο Ο Ο நன்னெறிக் கதை Oee aparao ado a 44,414 var ordo-4-draolas-asa apapapas
ஒரு பல்பு-அவ்வளவுதான்
ஒவ்வொரு ஆன்மாவும் மின்சார பல்பு போன்றது, பல்பு கள் நமக்குத்தேவையான ஒலியை மின் நிலையத்திலிருந்து பெறுகின்றன
உயிர்கள் தமக்கு வேண்டிய சக்தியை பிரபஞ்சத்தின் எல்லே யிலா சக்திக்கேந்திரமாக விளங்கும் பிரமத்திடமிருந்து பெறு கின்றன. நான் சுதந்திரமானவன்' என பல்பு நினைக்கிறது. அது தனது ஒளி மற்றும் சக்திகுறித்து வீணுகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.
அதனுடைய மூலாதாரம் பற்றிய எண்ணமே அதற்கு இல்லை. மின்சாரம் தடைப்பட்டுவிட்டால் அது வெட்கத்தால் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்கிறது; வருந்துகிறது; அழுகிறது.
இதுபோல உயிர்களும் அகந்தையால் தற்பெருமை பேசுகின் றன. எனக்கு எல்லாம் தெரியும் என்னுல் எதையும் செய்ய முடியும்" என்று பேசுகின்றன. 'அது எனது மாளிகை; அவள் என் மனைவி; கடவுள் என்று ஒருவர் இல்லை என்றெல்லாம் அவை பேசுகின்றன.
மனிதனுக்கு மூலாதாரமான பிரமத்தைப்பற்றிய எண்ணம் இல்லை. மனிதன் உண்ணுகிறன் : குடிக்கிறன்; உறங்குகிறன். மனிதன் துன்பமயமான அசுர வாழ்க்கையினை வாழ்கிறன். மனிதன் தனது முதுமைக்காலத்தில் வருந்துகிறன்; அழுகிறன். ஏ முட்டாளே! மந்தபுத்தி உடைய மனிதா! மூலாதா ரத்தை அறிந்துகொள்; தூய்மை, பக்தி, தவம், தியானம் இவற்றின் மூலமாக இந்த மூலாதாரத்தை அறிந்து கொள்; அதன்மூலம் உன்னதமான அமைதியையும் நிலையான பேரா னந்தத்தையும் அடைந்து இன்பமாக இரு.
நீதி. அகந்தையை அகற்று. மூலாதாரத்தை அறிந்து
கொள். அப்போது நீ உன்னதமான அமைதியை அடைவாய்.

ஆத்மஜோதி - 25 照溢磁盘选多总念金路兹金兹激岛金盗金始盗岛器
கலி O C கலயுகதாமம 器零零零零零零零零 零努够零零零零零澄
கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணுச்சிரம ஆசார நட வடிக்கைகள் இரா. அவையில்லாமையால் இருக்கு, யஜூர் சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இரா. கலிகாலத்தில் தர்மமான திருமணங் கள் நடைபெரு. குரு மாணவமுறையும் இராது. தம்பதி கள் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத் த க் க வே த வேள்வி முறைகளும் இல்லை.
எந்த க்குலத்தவனுயினும் பலசால எவனே, அவனே எல்லோருக்கும் அரசனுவான். எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே கன்னிகா தானம் செய்யத் தகுதி உடையவனுவானேயன்றி, க ல் வி, ஒழுக்கங்கள் உடைய வன் அத்தகுதி உடையவனகமாட்டான். பிரா ம ண ன் எந்த வழியினலும் தீகரிதனவானே தவிர சாஸ்திர விதிப் படியாவதில்லை. கலியில், விதிக்கப்பட்டதே பிராயச் சித் தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்பட்டுவிடும்கு எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எ து வு மே தெய்வமாகக் கொண்டாடப்படும். w
இன்னுருக்கு இன்ன ஆச்சிரமம் என்பதிராது. எவனும் எந்த ஆச்சிரமத்திலும் பிரவேசிப்பான். ஒருவன் தான் விரும்புவதுபோலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும், தவஞ்செய்வதும், சாஸ்திர ரீதியான தருமமாகக் கருதப்ப டும். அந்தப்பொருள் இருந்தாலும்,தான்தனவான், என்ற செல்வச் செருக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோ லவே பெண்களுக்குக் கூந்தல் செவ்வையாக இருந்தாலே

Page 15
26 ஆத்மஜோதி
அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும் போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர் கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனயினும் பொரு ளுடையவனக இருந்தால், அவனையே புருஷனுகத் தேடிக் கொள்வார்கள். எவன் அதிகமாகப் பொருள் கொடுப் பானே, அவனையே ஜனங்கள் சுவாமி என்று கொள்வார் களே அன்றி, நற்குலம், நற் பிற வி முதலியவற்றைச் சுவாமி என்பதற்கு ஏதுவாகக் கொள்ளமாட்டார்கள்.
கலியுகத்திலே புத்திக்குப் பயன் பொருள் சம்பாதிப் பதே அன்றி, ஆன்ம ஞானம் பயணுகக் கொள்ளப்பட மாட்டாது. அந்தப் பொருளும் வீடுகட்டப் பயன் படுமே அல்லாது, யாகாதிகாரியங்களுக்குப் பயன்படாது. அந்த வீடும் தனது போகத்துக்கே பயன்படுமே யன்றி அதிதிக ளுக்கு எவ்வளவும் பயன்படாது. மங்கையர்சளுக்களுக இருப்பவனிடத்தில் காதல் கொண்டு உடலாலோ மன தாலோ விபசாரிகளாக இருப்பார்கள். ஆடவரோ அநி யாயத்தாலாவது பணஞ் சம்பாதிப்பவரிடத்திலேயே மனம் வைத்திருப்பார்கள். எவர்களும் நண்பர்கள் வேண்டிக் கொண்டாலும் மனம் இரங்காமல், தங்கள் காரியத்தையே பெரிதாக நினைத்து அரைக்கால் பணத்திலும் ஆசைவைத் திருப்பார்கள். ነ
சூத்திராதிகள், பிராமணரைத் தம்மைப் போ ன் ற சா தா ர ண மனிதர்களாக நினைப்பார்களேயல்லாமல், சிறப்புடையவராக நினைக்கமாட்டார்கள். பசுமாடுகளி லும் சனங்களுக்குப் பால் கொடுப்பதுபற்றியே உயர்வான தாகக் கருதப்படுமேயன்றி அதன் ஜாதியைப் பற்றிப் பெருமைபெருது. இக்கொடிய காலத்தில் ஜ ன ங் க ள் யாவரும் மழை இல்லாமையைப்பற்றிய அச்சமுண்டயவர் களாய்ப் பசிக்குப் பயந்தும், சோர்ந்தும் வானத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மனிதர்கள்"

ஆத்மஜோதி 27
தவமுனிவர்களைப் போலக் காப் கிழங்குகளைப் புசித்துக் கொண்டு மழையில்லாமை முதலியவற்ருல் வருந்தித் தம்மைத் தாமே கொலை செய்துகொள்வார்கள்.
கலிகாலத்தார், சுகம், உல்லாசம் அற்றவராய், திரவி யம் கூrணித்தவராய், எப்போதும் பஞ்சத்திலும், துன் பத்திலுமே தவிப்பார்கள். கலி வளர வளர, எ வ ரு ம் அக்கினி பூஜை, தேவ பூஜை, அதிதிபூஜை, பிண்டோ தக தானரூபமான பிதுரு பூ  ைஜ முதலியவற்றைச் செய்யா மல், குளிக்காமலுங்கூட உணவருந்திக் காலங்கழிப்பார் கள். ஸ்திரீகள் அதிக ஆசையும் குறுகிய உடலும் கொண்டு பேருண்டி அருந்தி, பல பிள்ளைகளைப் பெற்று, செ ல் வ" மின்றி வருந்துவார்கள்; மேலும் இரண்டு கைகளாலும் தலையைச் சொறிந்து கொண்டே, கணவன், மாமனர், மாமியார் முதலியோரின் கட்டளையை மிகவும் அலட் சியமாய், அவமதித்து வருவார்கள். தேகசுத்தமில்லாமல் தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈ ன மா ன எண்ணத்துடன், கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்க: ளாக இருப்பார்கள். குலமங்கையர் தாங்கள் தீயஒழுக்க முடையவராகையால், அத்தகையோரிடம் நட்பு க் கொண்டு தங்கள் புருஷனுக்குப் பலவகையான தீமைக. ளைச் செய்து வருவார்கள்.
பிரமசாரிகள், விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனம் செய்வார்கள். இல்லறத்தானே. சிறிதும் ஒமஞ் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் ஈயார் கள். வானப்பிரஸ்தர், ஊரில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலனஞ் செய்வதை முக்கியமாக எண்ணுமல், அந்தவரி, இந்தவரி என்று எதையாவது சாக்கிட்டு குடிமக்களின் பொருள் களைப் பறிப்பார்கள். எவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிருணுே அவனவனே அரசனுவான். பலமற்றவன் சேவகனவான். வைசியர்கள் பயிர் செய் தல், வாணிபம் செய்தல், முதலிய தமது தொழிலைவிட்டு சூத்திரரது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து
ழைபபாாகள.

Page 16
乏8 . ஆத்மஜோதி
சூத்திரரோ, சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, தீபிகூைடிவாங்கி உண்டு அநேகர் தங்களைப் பூசிக்கும்படி யான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். மக்கள் பஞ் சத்திலும், வரி இறுத்தலாலும் துன்பம் அடைந்து கோ துமை, யவம் விளையும் நீசத் தேசங்களுக்குப்போய் விடு வார்கள். இவ்விதமாக வர்ணுச்சிரம தர்மங்கள் கெட்டுப் போய் வேதமார்க்கமே மறைந்து போவதால், மக்கள் பாஷாண்டமதங்களைப் பின்பற்றி விடுவார்கள். இதனுல் அதர்மம் விருத்தியாகும். அதனல் மக்கள் அதர்மமாக நடக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனல் அதர்மம் வள் ர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாகிவிடும். ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான, வீணுன தவங்களைச் செய்வார்கள். ஆகையால் இளமை யிலேயே மரணம் உண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வய துக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்துவயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறமை யுடையவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள் ளாகவே நரை, திரை, முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இரு பது வயதுக்குமேல் பிழைத்திருப்பதில்லை. கலியுகத்தில் மக்கள் அற்பஞான முடையவர்களாகவும் வீணுன தவ வேடங்களைப் பூண்டு கெட்டநினைப்புக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனல் விரைவில் நசித்துப் போவார்கள். -
- விஷ்ணு புராணம் (தொடரும்)
m இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது. நாம் கடவுளே வணங்கி
முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.
இன்ன காலத்திலே இந்தச் சரீரம் நீங்கும் என்பது நமக்கு விளங்காமையால், நாம் எக்காலத்திலும் கடவுளை வழிபடல் வேண்டும்.
கடவுளயும், அவரை வழிபடும் நெறியையும், அதனுல் எய்தும் பயனையும் உனக்கு போதிக்கும் அருள்வடிவாகிய ஆசாரியர் ஒருவரே உன் உயிர்த்துணை; ஆதலால், அவரை ஒரு கால மும் மறவாதே. -ஆறுமுக நாவலர்

ஆத்மஜோதி 2 护*芯端"拉 e ளி 6) is ஐயம தெளதல : 路盗经洽兹兹洛兹总溢 零零リ器
மோட்சம் என்பது என்ன ? அதில் பல தரங்களுண்டா?
மோட்சம் என்னும் சொல்லிற்கு விடுதலை என்று பொருள். விடுதலை என்ருல் நம்மைக் கட்டுப்படுத்தி நம் முடைய சுதந்திரத்தைத் தடுக்கிற ஏதோ ஒருவித பந்தத் திலிருந்து விடுதலை படுதல் எனப் பொருள்படும். நாம் எத்தனையோ பந்தங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிருேம். அவை ஒவ்வொன்றிலுமிருந்து கடைத்தேறுவது ஒருவித மோட்சந்தான். மனித முன்னேற்றம் என்று சொல்வது இத்தகைய கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலைபடுவதுதான். நாகரிகம் உள்ள ஒரு மனிதன் தன்சீவியத்தில் ஒவ்வொரு வினுடியும் ஏதாவது ஒரு பந்தத்திலிருந்து மோ ட் சம் அடைந்து கொண்டே இருக்கிருன். தன்னிடத்திலுள்ள ஒரு தோஷத்தை உணர்ந்து அதைக் கடக்கும் போது அந்தப் பந்தத்திலிருந்து விமோசனம் அடைகிருன். ஆனல் நாம் சாதாரணமாக மோட்சம் என்று கூறுவது கடைசி பந்தத்தைக் கடந்து சர்வ சுதந்திரனவதைக் குறிக்கும்.
அந்தக் கடிைசிப் பந்தம் என்ன?
ஞானமார்க்கத்தில் அது அவித்யை (அஞ்ஞானமாகிய இருள்), பக்திமார்க்கத்தில் வேற்றுமை (ஒற்றுமையை மறைப்பது), கர்ம மார்க்கத்தில் சோம்பல், இந்தக்கடைசி மோட்சந்தான் உத்தம மோட்சம்; மற்ற மோட்சங்கள் அதற்குச் செல்லும் வழியிலுள்ள பலபடிகள்.
சாதாரணமாக முத்தியைக் குறித்துப் பேசும்போது ஜனன-மரண சக்கரத்திலிருந்து விடுபடுவதுதான்மோட்சம்

Page 17
30 ஆத்மஜோதி
என்று பலர் எண்ணுவதுண்டு; கூறுவதுமுண்டு. யோசித்துப் பார்த்தால் இந்த முத்தி உண் மை யா ன மோட்சமாகாது. ஜனன மரண சக்கரத்தில் நம்மை ஈடு படுத்துவது நமது கர்ம பந்தம். இந்தப் பந்தத்தை இல்லா மல் செய்தால் நம்மை திரிலோகவாசம் செய்யக் கட்டா யப் படுத்த காரணமில்லாமல் போகிறது. ஜனன மரண சக்கரமாகிய திரிலோக சஞ்சாரம் அவசியமில்லை. இது ஒருவித மோட்சந்தான். ஆனல் இது சாஸ்வதமல்ல. கொஞ்சக்காலம்-ஒருமன்வந்திர காலம்கூட-இந்தநிலையில் ஜனன மரணத்திற்குட்படாமல் சுவர்க்கத்திலேயே வாசம் செய்யலாம். பிறகு அந்தச் சக்கரத்திலும் படவேண்டி வரும். உண்மையான சாஸ்வத மோட்சம் அவித்யை (அஞ்ஞானம்), வேற்றுமை என்பதிலிருந்து விடுபடுவது தான். வேற்றுமை பாவம் அஞ்ஞானத்தால் ஏற்படுகிறது. * ‘நான் வேறு நீ வேறு என்று நினைக்கும் வேற்றுமை பாவம் தான் கடைசி அஞ்ஞானம். இந்த இருள் நீங்கினல் பூரண ஞானம் ஜொலிக்கும். உலகம் முழுதும் ஒரே உயிர், உல கில் ஒரே சக்திதான் பிரவிர்த்திக்கிறது என்கிற அனுபவம் ஏற்படும் 'எனக்கு மறுபடி ஜனனமுண்டா?" என்கிற கேள்விக்கே இடமில்லை. சகல ஜீவராசிகளோடு ஐக்கி யத்தை அனுபவிக்கும் ஞானிக்கு ‘தான் தன்னுடைய முக்தி” என்கிற ம னே பா வ மே தும் உலகத் தின் நலத்தையே நாடுபவன், சோ க ச ங் கி ரக த் திற்காக இந்தப் புவியில் ஜன்மம் எடுக்கவேண்டி யிருந்தால் சந்தோஷமாக ஜன்மம் எடுப்பான். அப்படி எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்குக் கிடையாது; ஆனல் தானகவே பிரபஞ்சத்தின் நலத்திற்காக பிறவிப் பிணியை மேற்கொள்வான். இதுதான் உத்தம மோட்சம்.
* “தர்மஜோதி”*
ஈசுவரபத்தியும், நல்லொழுக்கமும் உள்ள பிதா மாதாக் களை உடைமையே பெரும் பாக்கியம்.
தீவிரமாயேனும் மந்தமாயேனும், நல்வினை இன்பத்தை யும் , தீவின துன்பத்தையும் வருவிக்கும். - ஆறுமுகநாவலர்

ஆத்மஜோதி 3I
LLLL0S00S00L00000LL0LL LLSL0000L0 0L00L0L0LA000LL0L0L0000S0000S000000L0L0L0L 000S0000S0S O
: சுவாமி ராமதாஸ் அருளுரைகள் (38) i
Brtt LDT T A.
இருப்பது சுகமானதன்று O49%44 தமிழ் வடிவம்:- ம. சி. சிதம்பரப்பிள்ளை +++ - O
நாடோடியாக அலையும் சாது ஒருவர், ஒரு முறை ஒரு கிராமத்தை அடைந்து அங்குள்ள ஆலயத்தில் ஒருசில நாட்கள் தங்கி விட்டார். ஆலயத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் அமைதியாக அமர்ந்தார். வெளியே போவது கிடையாது. எப்போதும் அதே இடம்தான். ஆலயத்தில் உள்ள பூசாரியார், இந்தச் சாதுவின் சாந்தத்தையும் அமைதியான நடவடிக்கையையும் கவனித்து, ஆண்டவ லுக்கு நிவேதிக்கும் நைவேத்தியத்தில், பூசைக்குப் பின்பு, ஒரு பகுதியை, சாதுவின் மதிய போசனமாக இருக்கட் டும் என எண்ணிக் கொண்டு, கொடுத்து வந்தார். இவ் வாறு ஒருநாள் ஒரு உணவு என உண்டு இருப்பார். இவ் வாருக நாட்கள் பல உருண்டன. வழக்கமாகச் சோதனை செய்யும் ஆலய பரிபாலன நிர்வாகஸ்தர் அன்ருெருநாள் ஆலயத்துக்கு வந்தார். பூசாரியார் அங்கமர்ந்திருந்த சாமியாருக்கு நைவேத்தியத்தில் ஒரு பகுதியைக் கொடுப் பதைப் பார்த்து விட்டார். மனேச்சராகிய நிர்வாக ஸ் தருக்கு பூசாரியாரின் செய்கை மனதுக்குப் பிடிக்க வில்லை. பூசாரியாரை நோக்கி ' இந்தச் சோம்பித்திரியும் மனித னுக்கு எதற்காக ஊட்டுகின்றீர். மந்தம் மூடியவனுக, ஒன்றும் செய்யாதவனுக அசையாமல் ஆடாமல் இருக்கி ருனே! ஏன் உணவு? இவ்விதமானவர்களுக்கு இலவசமாக உணவு இடுவது பாவச் செயலாகும். இனிமேல் இவனுக்கு இவ்வாறு செய்யவேண்டாம் ' என்று உத்தரவு பிறப்பித் தTன.
பூசாரி கீழ்ப்படிந்தார். சாது இதனைப் பற்றி அதிக சிரத்தை எடுக்கவில்லை. மதியவேளைகளில் இரண்டொரு

Page 18
32 ஆத்மஜோதி
வீடுகளுக்குச் சென்று தனது பசியைப் போக்கி விட்டு அரைமணி நேரத்தில் ஆலயத்துக்கு வந்து அதே இடத்தில் ஆற அமர இருந்துவிடுவார். மறு நா ள் வரை அந்த மாதிரியே இருந்து கொள்வார். இவ்வாறு ஆலயத்துள் இருந்துவரலானர்.
ஒரு கிழமை கழிந்தன. கோவில் மனேஜர் ஆலயத் துக்கு வந்தார். சாது முன்பு இருந்த இடத்திலேயே இன்பகரமான வதனத்துடன் பேசாது அமர்ந்திருந்தார். கோவிலிலிருந்து ஒருவிதமான உணவும் பெறுவதில்லை யென்றும் கிராமத்துள் சென்று பிச்சையேற்றுண்டு பசி போக்குகின் ருர் எ ன் றும் பூசாரி பகரக் கேட்டறிந்து கொண்டார் மனேஜர்.
இந்தச் சாதுவின் மீது மனேஜருக்கு கவனம் ஈர்க்க ஆரம்பித்துவிட்டது. இவர் எதற்காக ஒரே இடத்தில், நாள் முற்றும், ஒரு வேலையும் செய்யாது இருக்கின்றர். இதனைச் சாதுவிடம் கேட்டுவிடவேண்டுமென எண்ணி அவரண்டை சென்று 'சாதுஜி! ஒரு இடமும் செல்லாது இவ்வாறு இருப்பதின் இரகசியம் பாதோ?’ கூறுக என் ருர், م
சாது கூறினர். ‘நான் உமது வினவுக்கு ஐந்து நிமிடத் துள் விடைபகர்வேன். அதுவரை பொறுத்துக்கொள்ள வும்' என்ருர். மனேஜர் அவ்வாறு இருந்தார். ஐந்து நிமி டம் சென்று விட்டது. சாதுவிடமிருந்து பதில் இல்லை. மனேஜர் ஞாபகப்படுத்தினர். சாது மீண்டும் கூறினர். *சகோதர! இன்னுமொரு ஐந்து நிமிடம் இருப்பீரா பதில் தர'எனக் கேட்டார். சிறிது அமைதி இழந்தவராக, * சரிவேண்டுமாகில் ஒரு ஐந்து நிமிடம் தாமதிக்கின்றேன்.
அதற்குமேல் இல்லை’ என்ருர்.
பின்பும் ஐந்து நிமிடம் பறந்தன. மீண்டும் சா து அமைதியில் ஆழ்ந்தார். மனேஜர் சாதுவைக்கடுமையாகப்

ஆத்மஜோதி 33
பார்த்து, 'இது என்ன சாதுஜி பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டன. பதிலைக்காணுேமே?' என்ருர். சா து மீண்டும்மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் "சகோ தர! இன்னுமொரு ஐந்து நிமிடம் தாமதித்தீரானல் பதில் கூறிவிடுவேன்' என்ருர், மனேஜர் பொறுமையி ழந்து பரபரப்படையலானர். மணிக்கூட்டைக் கையில் எடுத்துக்கொண்டு சாதுவைப் பார்த்து முடிவாகக் கூறி ஞர். 'சாதுஜி! இங்கே பாரும் எனது வேலைகள் யாவும் தாமதமாகின்றன. உம்மைப் போன்று காலத்தை வீணுக்க இயலாது. உமது பதிலுக்கு கடைசியாக ஐந்து நிமிடம் தருகின்றேன். எனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யாது விடின் இந்த இடத்தில் நிற்கமாட்டேன்’ எ ன் ரு ர்.
மனேஜர் ஐந்து நிமிடம் நின்ருர். பதில் வரவில்லை. சிறிது கோபமாக மனத்தில் முணுமுணுத்தவண்ணம் ஆலயத்தைவிட்டுச் சென்றுவிட்டார். ஒருசில யார் தூரம் சென்று யோசிக்கலானர். ‘என்னல் ஒரு பதினைந்து நிமி டம் சும்மா இருக்க இயலவில்லை. இந்தச் சா து வோ இதே இடத்தில் தொடர்ந்து இருபத்துநான்கு மணி நேர மாக - ஒருசிறு இடைவேளை தவிர - இருப்பது எ ன் ட து அதிசயமே! ஒரு பிரமாண்டமான சக்தி-மனதை அடக்க இவரிடம் இருக்கின்றது' என்று எண்ணியவாறு, சாது விடம் அவருக்கு ஒரு அபூர்வமான பயபக்தி வளர்ந்து விட்டது. ஆலயத்துக்கு மீண்டும் வந்து, பூ சா ரி  ைய அழைத்து, "இந்தச் சா து இவ்வாலயத்தில் தங்கும் வரை, நீர் அவருக்குமுன் தந்த மாதிரி நைவேத்தியம் கொடுத்துவாரும்’ எனக்கட்டளையிட்டார். சாதுவைப் பார்த்து மிகவும் தாழ்ந்து சிரம் காட்டி வ ண ங் கி ய பின்பு சென்றுவிட்டார்.
உண்மையில், ஒரே இடத்தில் திடமாக இருப்பது ஒரு வேடிக்கையான விடயமன்று. ஆண்டவன்மீது ம ன தை ஆளப்பதித்த அபூர்வ ஆன்மாக்களுக்கன்றி, இது கைவரும் சாதனையன்று. v r r

Page 19
34 ஆத்மஜோதி electro------------------e. மனிதரின் உணவு
மாமிசமா மரக்கறியா?
Dg S0L0LLL0LLLLLLL LLLLL LL0 LLLLLLLTTTTT SSSA AMTTTLTLLLLLLL L000L00000L0L0L00L000LA0 LL
சென்ற இதழ்த் தொடர்ச்சி
பெரும் பாடு மாமிசத்தை அதிகமாகப் புசிக்கும் பெண்களுக்கு இவ் வியாதி அதிகம் வருகிறது என வைத்தியர்கள் கூறுகின்ற னர். ஆஸ்திரேலியாக் கண்டத்தில் உழைப்பாளிகளான பக்குவமடைந்த இளம் பெண்கள் மாமிசங்களை முக்கிய மாகத் தின் பதினல் அவர்களெல்லோருக்கும் பெரும்பாடு என்னும் உதிரப்பெருக்கு நோய் உண்டாயிருப்பதாக டாக் டர் பெர்க்ஸ் என்னும் அமெரிக்கவைத்தியர் கூறியுள்ளார்.
இருதய ரோகம் மாமிச உண்வு தேவைக்குமேல் இரத்தத்தில் பிப்ரின் (Fibrin) என்ற தசையை வளர்த்து வருகின்றதனுல் உடம் பில் அளவுக்குமீறிச் சூடுண்டாகிறது. சூடேறுவதால் தனித்தன்மையான சுறுசுறுப்பும் அலைப்பும் உண்டாகிறது. இதன் முடிவோ நரம்புத் தளர்ச்சியினல் துன்புறும்படி செய்து விடுகிறது.
அதனேடு, மாமிசத்தை ஓயாமல் உண்பதால் இரத் தாசயமாகிய இருதயத்தின் தொழில் அதிகப்படுகிறது. அதனுல் உயிர் வலிமையெல்லாம் குன்றிவிடுகிறது. இதுவே இருதய ரோகத்திற்கும் காரணமாகிறது. இதனை ஆசிரி யர் சிட்னிபோர்டு நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார். -
மாரடிைப்பு
இந்நோய் ஏற்படுவது ஏன் என்பதைப் பற்றியும், முதிய பருவத்தில் இது அடிக்கடி ஏற்படுவானேன் என்

ஆத்மஜோதி 35
பதைப் பற்றியும் கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச் சிக் குழுவினர் சில ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து முடிவு கண்டுபிடித்துள்ளனர். இந்த மாரடைப்புக்குக் காரணம் ‘கோலோ ஸ்ட்ரால்’’ என்றும், இது மாமிசம், முட்டை, வெண்ணெய் இவைகளில் இருக்கிறதென்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. V
இந்த கோலோஸ்ட்ராலில் பிசுபிசுப்பான ஒரு பொருள் உற்பத்தியாகிறதென்றும், அதுதான் மாரடைப்பிற்குக் காரணமென்றும் ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது. இந்த பிசுபிசுப்புப் பொருள் பெண்களைவிட ஆண்களுக்குத் தான் அதிகமாக இரத்தத்தில் உண்டாகிறது என்றும், அதனுல் மாரடைப்பில் (Heart failur) இறப்பவர்கள் ஆண் களே என்றும் அவர்கள் கூறுகின்ருர்கள்.
எலும்புருக்கி நோய் இந்த நோய் மீன் இறைச்சியிலிருந்தும், செம்மறி ஆட் டின் இறைச்சியிலிருந்தும் உண்டாகின்றதென்று புரபசர் பேப்ஸ் என்பார் நோயாளிகளே நேரில் ஆராய்ந்து கண்ட உண்மைகளைக் கொண்டு உறுதியாகக் கூறியுள்ளார்
இவ்விதமாக, மாமிச உணவே ஒவ்வொரு வகையான நோய்க்கும் முதன்மையான காரணமாயிருக்கிறதென் பதை மேற் கூறப்பட்ட பற்பல புகழ்வாய்ந்த வைத்தியக் கலை நிபுணர்களின் ஆராய்ச்சி அநுபவங்களினல் தெளி வாய் அறிந்து கொள்ளலாம். இன்னும் கேளும் மாமிச உணவுக்கார ரே:
மாமிச உணவு ஆயுளைக் குறைக்கிறது
முற்கூறப்பட்டபடி மாமிச உணவு பலவித நோய்களை உண்டுபண்ணுவதணுல், அதனைப் புசிக்கும் மனிதனின் உடல் மிகவிரைவில் தளர்ச்சியடைந்து ஆயுசும் குறை கிறது. மாமிசம் உண்பவனுடைய இருதயம் அதை உண் ணுதவனுடைய இருதயத்தைவிட, நாளொன்றுக்கு

Page 20
36 - ஆத்மஜோதி
20 ஆயிரந்தடவை அதிகமாக அடிப்பதாய் டாக்டர் ஜே. ஹைரன் என்பார் கூறியுள்ளதையும் காண்க.
மாமிசம் உண்பவர்களுக்கு ஆயுள் குறை வ தோ டு அவர்களுக்கு வரும் நோயையும் குணப்படுத்துவது கடினம் என்பதாய்ப் பல வைத்தியர்கள் கூறியுள்ளனர். அவ் வைத்தியர்களே, மரக்கறி பதார்த்தங்களை உண்பவர்க ளுக்கு வரும் நோயை எளிதாகச் சுகப்படுத்திவிடலாம் என்றும் கூறியுள்ளார்கள். அதனேடு சைவச்சாப்பாட்டுக் காரர்களுக்கு உக்கிரமும் குறைவென்றும் அவர்கள் கூறி யுள்ளனர்.
டாக்டர் ஜோர்ஸெயா ஒல்டுபீல்டு என்ற புகழ்பெற்ற வைத்தியாசிரியர் - மாமிசமானது கொடிய நோய்களான பிளவை, சுரம், கசம், குஷ்டம், வாதம், பாரிசவாயு, குடல் புழுக்கள் மு த லி ய வ ற் றி ற் கு காரணமா யிருக்கிறதென்றும், 100-க்கு 99 பேர்களைக் கொல்லு கின்ற நோய்களுக்கு முக்கிய காரணங்களில் மாமிசமும் ஒன்றென்பதில் சிறிதும் சந்தேகமில்லை எ ன் று ம், அறு வைச் சிகிச்சைப் பரிசீலனையில் மாமிசம் உண்பவர்களுக் *ப் புண்களின் உக்கிரம் அதிகமென்றும் புண்கள் விரை பல் ஆறமாட்டாவென்றும், ஆணுல் மரக்கறி உண்பவர் க்கு அறுவை வைத்தியச் சிகிச்சையில் மே ற் கூற ப் பட்ட துன்பங்களெல்லாம் குறைவென்றும் சொல் லு கின்ருர், −
இதனுல்தான் நல்ல வைத்தியர்கள் நோயாளிகளுக் குப் பத்தியம் நியமிக்கும்போது ம |ா மிச ம் மு த லிய கெட்ட பதார்த்தங்களை உண்ணக் கூடாதெனக் கட்டளை யிடுகிறர்கள்.
இதனை அறியாமல் நம் வைத்தியர்களிற் சிலர் எந்த வியாதி வந்தாலும் கோழிக்குஞ்சை அவித்து (சூப்) குடிக் கும்படி சொல்லுகிருர்கள். இவர்களுக்கு இதை ய ன் றி வேறெவ்விதமான பரிகாரமும் தெரியாதுபோலும்!

ஆத்மஜோதி
இவர்களின் சொல்லைக் கே ட் டு சில நோயாளிகள் நூற்றுக்கணக்கில் கோழிக் குஞ்சுகளை 'சூப்' வைப்பதற் காகக் கொன்றுதள்ளுகிருர்கள்! கோழிக்குஞ்சாகிய மாமி சம் வியாதியை அதிகப்படுத்துமேயல்லாமல் கு  ைற க் க மாட்டாது என்பது பெரிய பெரிய வைத்தியர்களின் கருத்தாயிருக்க, கொஞ்சம் கற்ற சில சிறு வைத்தியர் களின் கருத்தே கோழிக் குஞ்சு சூப்பு, ஆட்டெலும்புச் சூப்பு இல்லாவிடில் வியாதி குணப்படாது என்பதாயிருக் கிறது! இம்மூட அபிப்பிராயம் மாமிசம் உண்ணு ம் பழக்கமுடைய சில வைத்தியர்களிடையே மிகவும் பலமா யிருக்கிறது.
மேல்நாட்டு வைத்தியம் கற்றவர்கள் அனைவருமே இவ்வித முறைகளையே கைக்கொண்டுள்ளார்கள். மேல் நாட்டவர் பெரும்பாலும் சாதாரணமாய் மாமிச மும் ரொட்டியுமே புசிப்பதை நித்திய வழக்கமாகக் கொண்ட வர்களாதலால், அந்நாட்டில் அவர்களின் வழக்கத்திற் கேற்றபடியே மருந்துமுறையும் பத்தியபாகமும் நியமித் துள்ளார்கள்.
நம்நாடுகளின் உணவுமுறைக்கும் மேல் நாட்டவரின் உணவு முறைக்கும் மிக்க வித்தியாசம் உள்ளது. நம் நாட்டவரைப்போல் மேல்நாட்டவர் சோறு குழம்புகளை நித்திய உணவாகக் கொண்டிருக்கவில்லை. அவர்களை நம் நாட்டு உணவுப் போக்குக்கேற்றபடி மருந்தையும் பத் திய முறைகளையும் ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினுல் அவர்கள் சம்மதித்துச் சாப்பிடுவார்களா? சாப் பி ட த் தான் முடியுமா? சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்ளுமா? அதுபோலத்தான் நம் நாட்டவர்களுக்கேற்றபடி வைத் திய முறைகளில் உணவு நியமனம் நமக்கேற்றதாயிருக்க வேண்டுமென்பது.
இதனுல்தான் நம்நாட்டுப் பழைய வைத்திய முறை களிலும் சாகபதார்த்தங்களே-தாவரங்களே நியமிக்கப் பட்டுள்ளது. இக்கால ஆங்கில முறைகளைக் கற்றவர்கள் இவற்றைக் கவனிப்பதற்கில்லை. அதனலேதான் அவர்கள் தாம் கற்ற மேல்நாட்டு முறைகளையே வற்புறுத்தவேண் டியதாயிருக்கிறது. அந்தந்த நாட்டில் எளிதாயும் சாதா ரணமாயும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளுக்கு ஏற்ற படி அவ்வந்நாட்டில் பத்திய உணவுகளைக் கை க் கொள் ளச் செய்யவேண்டுவதுதான் நன்மையைத் தரும்.
(தொடரும்)
37

Page 21
38 ஆத்மஜோதி
. V - : :
சைவத் தமிழுலகை உய்வித்தவ்ை S. S
S வசனநடை நூல்களே S. 0 حسب صحسبصص حصحص حسب حصصفحص حسب . , sصحتسب سے حصہ حصہ صحمستحصحصہ "حصص محصب
சித்தாந்த சாகரஞ் செந்தமிழ்ப் பேழை திகழ் மதுரப் பத்தோடு மேலெண் புரfணக் களஞ்சியம் பாங்குசிவ வித்தான திட்ட விளைநில மென்று விளம்புகின்ற முத்தான வாறுமுக நாவல ரெம்முடி மணியே.
அறிவுறுத்தப்படவேண்டிய பொருளி னை விக்க தாக்கமின்றிச் செவ்விதின் உணர்த்தும் பொருட்டு ஒசையள வினையும் பொருளேற்றத்தினையும் ஒருசேரப்பெற்ற வடமொ ழிச் சொற்களை மாத்திரமே இடுமிடங்கண்டு பொறித்துச் செல் லும் செலப்பாட்டை நாவலரவர்களது நூல்கள் தாமே பெற்று நிற்கின்றன. -சி. சரவணுர் செய்யுணடை வாய்ந்த நக்கீர் உரைநடையும், விளங்கக்
ஈறைந்த இளம்பூரணமும், கட்டுரைச் சுவை செறிந்த சேணு
வரை பரது இலக்கணநடிையும் பொருட்செறிவுடைய பேராசிரியர் உ ை நடையும், தங்கோணிறுத்தும் நச்சிஞர்க்கினியர் சொன் டையும், நாவலரவர்களின் வசனநடைகளிலேயே வந்து முடிகின்றன. -சபாபதி நாவலர்
ஐந்தாஞ் சமய குரவராகவும், அண்மைக்காலத் துரையா"
சிரியராகவும், தோன்றிய நாவலர் பெருமானின் வசனநடை நூல்களே சைவத் தமிழுலகை உய்வித்தவை.
- அம்பலவாண நாவலர்
‘வசனநடை கைவந்த வல்லாளர்"
-வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி
தூர மொழிகளில் சிறந்து கிடந்த குறியீட்டிலக்கணத்தை
யும், அதன் மாத்திரைக் கணக்கினையும் நியமித்துதவிய நாவலரவர்கள் தமிழுரைநடைகளின் தாதையார்.
-மணி திருநாவுக்கரசு முதலியார்
S

ஆத்மஜோதி 39
LLSL0M MSMM MLML0S0LSL0SL0LLL LL0L LL0L LMLLLLLL LSLSLL LLSLL zYSLLLL L0LLLLLLL LLAALLLLLLL L0L LLSL MLLLLSL0L0L
இந்துமத விணுவிடை
0******** நாகர் கோயில் கே. ஆறுமுகநாவலர் t-so-so-o-o-o-ots
முன் தொடர்ச்சி
83. மகேசன் யார்? −
ஆண்டவனது உருவத்திரு மேனிகளான மகேசன், உருத்திரன், மால் அயன் என்ற நான்கினுள்ளும் முதலா வதும், தலை சிறந்ததுமான உருவத்தினைக் கொண்டவரே இவர். இவர் பரமேஸ்வரன் என்றும் அழைக்கப்படுவார்.
84. இந்தத் திருஉருவத்தின் அமைப்பு யாது?
பிறையினையும் கங்கையையும் சடாமுடியினிடத்தே தரித்து, பாம்பினை மாலையாகவுடையவராய்த் திருநீறு அணிந்து சக்தியை ஒருபாகத்தில் அமர்த்தி ரிஷபவாஹன ஆரூடராயிருப்பதாம். -
85. இவரது வாகனம் நந்தி யென்ற வெள்ளைமாடு என்
பது ஏன்?
நந்தி தர்ம சொரூபம், இது சமம், விசாரம் சந் தோஷம், சாது சங்கமாகிய நான்கு குணங்களையும் நான்கு கால்களாகக் கொண்டிருக்கிறது நந்தியின் மீது பரமேஸ்வரன் ஆரோகணிப்பது. இந்நான்கு வகை ஆத்ம குணங்களையுங் கொண்ட உயிர்களிடத்து மாத்திரமே இறைவன் எழுந்தருளி வீற்றிருந்து அருள் செய்வன் என் னும் தத்துவத்தை விளக்குவதாகும்.
86. இவர் வெண்ணிறனிந்திருப்பதேன்?
நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்கி எல்லா வுயிர்கட்கும் நற்பயனளிக்க இவர் வெண்ணிறணிந்திருக் கின்றர். நாமும் இவரைப்போல் வெண்ணீறணிய வேண் டும் என்பதையும் இது காட்டும்.

Page 22
40 ஆத்மஜோதி
87. இவர் அரவம் அணிந்திருப்பது எதை உணர்த்துகிறது. அரவம் அணிவதால் உலகத்தினை இயக்கும் தனது சக்தியை உணர்த்துகிருர்.
88. இவர் மறை ஒதுவது எதற்கு?
நமக்கு அறிவினைத் தருதற்பொருட்டும் நாமும் அது போல் ஒதுதற் பொருட்டும் இவர் இங்ங்ணம் செய்கின்ருர்,
89. சடையில் கங்கை தரித்திருப்பதேன்?
பகீரதன் தன் மூதாதையரையெழுப்ப தேவகங்கா நதியைத் தவவலிமையால் பூவுலகுக்குக் கொணர்ந்தான், அது உலகத்தை அழித்துவிடக் கூடுமாதலால் அதனை இறைவன் தன் சடையில் வாங்கிச் சிறிது உலகத்திற்குத் தந்தன ன் என்பது வரலாறு. இதனை உற்று நோக்குவார் இறைவன் இரண்டாவது மனைவியாகக் கங்கையை வைத் துள்ளார் என்று கூருர், இறைவனைத் தரிசிக்காதவிடத்து உயிர் பரிசுத்தம் பெருது என்பது இதன் தத்துவார்த்த LDfTLD. .
90. இவர் மூன்ரும் பிறைச் சந்திரன் அணிந்திருப்பது
எதைக் குறிக்கும்?
தக்கனல் அடைந்த பெருஞ்சாபத்தினை நீக்கச் சந் திரன் இறைவனை அடைக்கலம்புக, அவன் அதை நீக்கி இரட்சித்துச் சடைமுடியில் தரித்துக்கொண்டான் என்பது வரலாறு. இஃது இறைவன் தன்னை அன்புடன் அடைந்த வரைக் காத்து இரட்சிப்பான் என்பதை உணர்த்துகின் ይወò]•
91. இவர்தம் சக்தி யார்?
மகேசை அல்லது பார்வதி.
92. பார்வதிக்குப் பாதி உடல் கொடுத்தார் என்பதன்
கருத்தென்ன? . ܫ
இவர் வேறு இவரது சக்தி வேறு அல்ல என்பதை இது குறிக்கின்றது.

ஆத்மஜோதி 41
LLLLS0L LLLSL LLSL0LLS MLSL L0SL MLL0S MSLS 0LSLL 0LL0 LL0S0 0SL0L LLLSLLL LL0LSLL 0LS0L 0L0 0S0 0LS00LS0 L LSLLL LL0LLLS0L 0LS000L LLLLLLLLSL
O O ; ஆத்ம சிந்தனை : نمومہ۔۔۔۔ ஜீகங்காதரன் - அரவிந்தாச்சிரமம் - புதுவை ق.م.م.م.م.هٔ சென்ற இதழ் தொடர்ச்சி மரணத்துக்குப் பின்
ஜீவ ஜகத் பரம், இம் மூன்றும் அநாதியானவை. இவை ஒரு காலத்திலிருந்து மற்ருெரு காலத்தில் இல்லா மற் போவது என்பதின்றி முக் காலங்களிலும் இருக்கக் கூடியவை. இவற்றின் சேர்க்கையினலேயே இப்பிரபஞ்சத் தோசங்கள் தோன்றி இயங்குகின்றன. தோற்றங்கள் அழி யினும் அவை தோன்றுவதற்குக் காரணமாயிருந்த மூல தத்துவங்கள் அழிவதில்லை. பரம்பொருள் இல்லாவிட் டால் ஜீவ ஜகத்தில்லை. ஜீவஜகத் இல்லாவிட்டால் பரம் பொருள் இருந்தும் இல்லாததேயாகும். சிருஷ்டியின் மூல மாகவே பரமன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிருன்.
மரணத்தின் மூலம் அழிவது மனப்பிராண ஸ்தூல: தேகங்களேயன்றி ஜீவனன்று; மரணத்திற்குப்பின் மனம் விஸ்வ மனத்திலும் பிராணன் விஸ்வப் பிராணனிலும் தேகம் விஸ்வப் பிரகிருதியிலும் கலந்து ஒன்றிவிடுகின் றன. ஆணுல் ஜீவன் அழிவதில்லை. முற்பிறவிகளிலும் இப் இப்பிறவியிலும் பெற்ற அனுபவங்களுடனும் சூட்சும சரீ ரத்துடனும் சூட்சும உலகங்களில் உணர்வு நிலைகளில் தந் நிலைக்கும் பரிபக்குவத்திற்கும் தகுந்தாற் போல தங்கி ஒய்வு பெற்ற பின் மீண்டும் புதிய அனுபவங்களைப் பெறு வதன் பொருட்டு புதிய மனப் பிராண ஸ்தூல தேகங்களை யும் சூழ்நிலைகளையும் ஏற்று இவ்வுலகில் பிறந்து விட்ட இடத்தினின்றும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக் கின்றது.
ஜீவயாத்திரையின் இறுதி லட்சியத்தை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டும் இறந்து

Page 23
42 ஆத்மஜோதி கொண்டுமிருக்கும் ஓரறிவுடைய உயிரினங்கள் மறு பிறவி
யில் மனிதனுகவும் மனிதன் ஒரறிவுடைய உயிரினங்களா கவும் மாறிப் பிறப்பதில்லை.
உணர்வின் பரிணமத்திற்குத் தகுந்தாற் போலவே யாவும் நிகழ்கின்றன. உள்ளுணர்வின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பரிபக்குவத்திற்கும் தகுந்தாற் போலவே உடலும் உருவமும் பெற்ருேரும் சூழ்நிலைகளும் அமைகின் றன.
நாம் செய்யும் கருமத்திற்குத் தகுந்தாற் போலவே உள்ளுணர்வு வளர்ச்சியடைகின்றது. உள்ளுணர்வின் வளர் ச்சிக்குத் தகுந்தாற்போலவே மறு பிறவியும் சூழ் நிலைக களும் அமைகின்றன. இப்பிறவியுள்ளதே முற்பிறவிகளும் மறுபிறவிகளும் உள்ளதற்குப் போதிய சான்ருகும்-முற் பிறவி இப் பிறவி இனிவரும் பிறவியாகிய மூன்றும் சங்கி லித் தொடர்போல் இணைபிரியாதபடி பிணைக்கப்பட்டுள் ளன. முற்பிறவிகளில் பெற்ற அனுபங்களின் அஸ்திவார த்தின் மீதே இப்பிறவி தோன்றியுள்ளது. இப்பிறவியில் நாம் பெறும் உள்ளுணர்வின் வளர்ச்சிக்குத் தகுந்தாற் போலவே இனிவரும் பிறவி அமையப் போகின்றது.
கடலில் தோன்றிய அலைகளெல்லாம் மீண்டும் கடலில் ஒன்றிக் கலந்து விடுவதே போன்று தோற்றங்கள் அழியும் போது ஜீவர்களெல்லாம் எவ்வித வேறுபாடு மின்றி பரம் பொருளில் ஒன்றிக் கலந்து விடுவது உண்மையாயின் இவ் வாழ்வில் காணப்படும் சமன்செய்ய முடியாத வேறுபாடு களுக்கு மூலகாரணம் யாது-மனதிற்குக் கீழுள்ள உணர்வு நிலைகளில் வதியும் உயிரினங்களுக்கும் மனிதனுக்கும் எவ் வளவோ வேறுபாடுகள் உள்ளன - மேலும் மனிதர்கள் எல்லோரும் ஒரேவிதமான உணர்வுநிலையில் வதியவில்லை. அதிக வேறுபாடுகள் உள்ளன; மரணத்திற்குப்பின் ஜீவர் கள் இறைஉணர்வில் கலந்து ஒன்றுவது உண்மையாயின் நாம் இயல்பாக அடையும் ஒரு பெருநிலையை நாம் அடை வதற்காக கடும் சாதனைகள் செய்வானேன்.

ஆத்மஜோதி 43
நாம் உயிருள்ள போது அடையாத ஒரு ஆத்மீகப் பெருநிலையை இறந்த பிறகு சூட்சும உலகங்களில் உணர்வு நிலைகளில் அடைந்துவிடமுடியாது. இப்போதுள்ள நிலை யின் பிரதி பிம்பமும் தொடர்ச்சியுமே சூட்சும உலகங்க ளும் மறுபிறவியுமாகும். ஆகையினல் அதிதீவிர மெய்ப் பொருள் கேட்கள் உயிருள்ள போதே அதிதீவிர சாதனை கள் செய்து அரும்பெரும் ஆத்மீக நிலைகளேயடைய பெரு முயற்சி செய்யவேண்டும்.
பிரத்தியட்ச 'உலகம் உள்ளதே போன்று சூட்சும உலகங்களும் உணர்வுநிலைகளும் உள்ளன. இங்கு உள்ள தைப்போலவே அங்கும் நியதிகளும் தர்மங்களும் உள் ளன. எதுவும் தாறுமாறக நிகழ்வதில்லை.
நா ம் காணும் தோற்றங்கள் அனைத்திற்கும் பூமி ஆதாரமாக இருப்பதைப் போன்று மனத்தால் இ ன் ன தென்று ஊகிக்கவோ, உணரவோ, விளக்கவோ முடியாத அகண்ட பேருணர்வு எங்கும் நீக்கமற நிறைந்திருந்து அனைத்தையும் தாங்குகின்றது. அனைத்திற்கும் மூலமும் முடிவும் அதுவே. அதையே அநாதியான வேதங்கள் பரம் பொருளென்று அருளுகின்றன.
அருந்தவ வாழ்வின்மூலம் உள்ளாழ்ந்த நிச்சலன மோனத்தில் ஆத்மானு பூதியின் மூலம் அ  ைத உணர்ந் தோனே யோகசித்தன். பரம்பொருளின் ஸ்தூல வடிவமே ஜடமெனப்படுவது. சிவமும் சடமும் வெவ்வேருனவைக ளன்று. சிவத்தில் உள்ள தன்மைகளெல்லாம் சடத்தில் வித்தில் மரம் போன்று வெளிப்பாடடையாமல் உள்ள டங்கி ஒடுங்கிக் கிடக்கின்றன. சடத்தில் ஒடுங்கிக் கிடக் கும் சிவத்தை பூரணப் பொலிவுடன் தெய்வீக செளந்தர் யத்துடன் வெளிப்பாடடையச் செய்வதுவே வாழ்வின் குறிக்கோளாகும்.
யுகந்தோறும் இயற்கையன்னை புரியும் மாபெரும் வேள்வியால் மகத்தான தியாகத்தால் அரும் பெரும்

Page 24
ஆத்மஜோதி 44ھ۔
சாதனையினல் காலக்கிரமத்தில் சடத்தில் உள்ளடங்கி யுள்ள பேருணர்வானது மலர்ச்சியும் வளர்ச்சியுமுற்று உயிர் பிராணன் மனமாகப் பரிணமித்துமுடிவில் பரிபக்கு வமும் பரிபூரணத்துவமு முற்று தன் இ ய ல் நிலை யை யதார்த்த சொரூபமாகிய கரைகாணமுடியாமல் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் அகண்டாத்மனே என்பதை உணர்ந்து நிரந்தமும் பேரானந்தப் பெருங்களிப்பில் திளைக்கின்றது. இவ்வரும் பெரும் நிலையை அடைவதுவே மாணவ ஜீவனின் ஆதரிசமும் ஜீவயாத்திரையின் இறுதி லட்சியமுமாகும்.
8ܕ
நாம் முற்பிறவிகளில் செய்த பாவ கர்மங்களின் பலனை அனுபவிப்பதற்காகத் தோன்றிய கொடுந்துயர் சிறைக் கோட்டமன்று வாழ்க்கை-சிருஷ்டிக்கு உட்பட்டதன் மூலம் தன் யதார்த்த சொரூபத்தை மீண்டும் உணர்ந்து இன் புறுவதற்காகச் செய்யும் மகத்தான சாதன நிலையமே வாழ்க்கை. இப்பெருநிலை ஒரு பிறவியில் அடையக்கூடிய தன்று. பல்லாயிரம் பிறவிகளில் செய்யும் அரும் பெரும் சாதனைகளினலேயே இப்பெரும் பேறு சித்திக்கின்றது.
மனித குலம் சாதித்த சாதனைகள் அனைத்துள்ளும் மகத்தானதும் தன்னிகரில்லாத தனிப்பெரும் சிறப்பினை யுடையதும் பரம்பொருள் தரிசனமேயாகும்.
ஏனெனில் வாழ்க்கைக்குப் பின்புள்ள பேருண்மையை யும் வாழ்வின் உண்மையையும் மரணத்தின் ரகசியத்தை யும் முடிவின்றி யுகபுகமாக சாஸ்வதநியதிகளுக்கு உட் பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்ச இயக்கங்க ளின் மூலகாரணத்தையும் ஜீவயாத்திரையின் இறுதிலட்சி யத்தையும் உணரச்செய்து நித்தமும் பேரானந்தப் பெருங்களிப்பில் திளைக்கச் செய்வது பரம் பொருள் தரிச னமேயாகும்.

ஆத்மஜோதி 45
கடவுளைத்தேடி அலைகிருேம். நீண்ட யாத்திரை செய் கிருேம். காடுகளிலும் மலைக் குகைகளிலும் தங்கி ஊன் வாட உயிர் வாடக் கடுந் தவம் புரிந்து புலன்களையும் மனதையும் ஒடுக்குகிருேம். யோகமார்க்கங்களைப் பின்பற்றி தீவிர சாதனைகள் செய்கிருேம். முடிவில் பல்லாயிரம் பிற விகளில் செய்த நற்றவப் பயன்களினலும் இப்பிறவியில் செய்யும் அதிதீவிர ஆத்ம சாதனையினலும் இறையருளி ஞலும் மாயை இருட்திரை அகன்று அகந்தைத் தனி உணர்வு அழிந்து எண்ணங்களற்ற நிச்சலனமோனத்தில் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பதுவும் யாவுமாய் விரிந்து இயங்குவதுவுமான பரம் பொருளை ஆத்மானுபூதியின் மூலம் சாட் சாத்கரிக்கிருேம் - அப்போது தேடுவோன் தேடட்டும். தேடப்படும் பொருள் யாவும் ஒன்ருய் இருப் பதையும், நம்மிடமுள்ள ஒரு பொருளையே இது வரை புறத்தே தேடி அலைந்ததையும் நாம்காணும் இவ்விஸ்வப் பிரபஞ்சத் தோற்றுங்களாக விரிந்து இயங்குவது ஏகபரம் பொருளே என்பதையும் அப்பரம் பொருளே நாம் என் பதையும் நமக்கு அந்நியமாக எங்கும் ஒன்றும் இல்லை என்பதையும் உணர்ந்து பெரும் வியப்பினில் ஆழுகிருேம்,
LLLLeLLLLLLLSLLLMLLMLMLL LL LLLLLLLESLMLL LMLMLLLLLL LLLLLL தன்பொருட்டு மாத்திரம் பிரயாசப் படுபவன்; அற்ப இன்பத்தை மாத்திரமே அனுபவிப்பான்; அவ்: 3 வற்ப இன்பமோ மிக இழிந்தது. S
அறிவும் அதனல் ஆகிய நற்குண நற்செய்கைகளும் உள்ள சான்ருேர்களாலே நன்கு மதிக்கப்படுதற்கு : யோக்கியனய் இரு.
நீ பிறர்க்குச் செய்த உபகாரங்களை நீயே எடுத்துப் புகழ்தல் தக்கது அன்று. .
அடக்கம் உடமை பாலியர்களுக்குச் சிறந்த ஆபரணம்.
நாம் செல்வத்தையும் உபகரிக்கப்படுதலையும் நம் 3 முடைய பிரீதிக்கு மாருக இழத்தல் கூடும்: நல்லொஜ் ழுக்கத்தையோ அப்படி இழத்தல் கூடாது. -நாவலர்;
LLLLLL LLLL LLLLLMeLe LM MLL LMLMLMML MLCLC Y

Page 25
-46 ஆத்மஜோதி
鹽峰金幽益金*金金金金*金經 அருணகிரியாரும்
磁
爱 * வாதவூரடிகளும 5 * கா. கு. சண்முகம்-கோவை மாவட்டம் * 澄然够罗态莎切s *零零強
வாக்கிற்கு அருணகிரி என்பர், ஆன்ருேரர். அதுபோல் திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனவும் கூறினர். எனவே இருவரும் வாக்கு வன்மை உடையவர் என்பது தெளிவாகிறது. வாக்கு, வாசகம் இரண்டும் ஒன்றே. அருணகிரி பிற்காலத்தவர், வாதவூரர் முற்காலத்தவர். வாதவூரர் சிவபக்தர்; அருணகிரி முருக பக்தர். ஆயினும் சிவனைப்பற்றி பல நுட்பமான க ரு த் துக்களைப் பல இடங்களில் கூறியுள்ளார். ஆனல் மாணிக்க வாசகர் இரண்டு இடங்களில் மட்டுமே முருகனை,வேலன், குமரன் என்று குறிப்பிடுகிருர், W− −
வாதவூரர் பாடல்களில் வடசொற்கள் மிகக் குறைவு. ஆனல் அருணகிரியார் பாடல்களில் அது சற்று அதிக மாகவே காணப்படுகிறது. இருப்பினும் இருவர் பாடல் களும் கற்பார் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் தன் மையன. மிகப்பெரிய கருத்துக்களை மிக எளியமுறையில் கூறி உள்ளனர். வாதவூரர் இயற் றிய திருவாசகத்தில் 51 அதிகாரங்கள் உள்ளன. அதுபோல் அருணகிரியார் இயற்றிய கந்தர் அனுபூதியில் 51 பாடல்கள் உள் ள ன என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் உள்ள ஒற்றுமை யான கருத்துக்கள் சுருக்கமாக, பின்வரும் ஆறு தலைப்பு களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆசை ஆசை என்பது புலன்களின் வழியாக நமக்கு உலகப் பொருள்களின்மீது உண்டாகும் ஓர் உணர்வு. இது மக்க

ஆத்மஜோதி V 47
ளினத்துக்கு மட்டும் அல்லாது விலங்கினம் முதலியவற் றுக்கும் இருக்கக்கூடியது. ஒரு வித்தியாசம் என்னவென் முல், விலங்கினங்களுக்கு ஆசைகள் குறைவு. அதே சம யம் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியும் கு  ைற வு. ஆனல் மனிதசாதிக்கு ஆசை மிகுதி, ஆயினும் அதைக் கட்டுப்படுத்தும் சக்தி அதிகம். ஆசைகளைக் கட்டுப்படுத் தும் சக்தி அதிகரிக்குமளவு மனிதன் உயர்வடைகிறன். ஆசைக்கு அடிமையாகிறவன் கீழ்நிலைக்குப் போகிருன், ஆசைக்குக் காரணமாகிய புலன்களை வஞ்சனை செய்யும் புலன்கள் என்கிருர் மணிவாசகர். புலன்கள் வழியே நாம் செல்வது கூடாது. புத்தியின் வழியே புல ன் கள் செல்ல வேண்டும். **புகவே வேண்டாம் புலன்களில் நீர்?" என் ரூர் மணிவாசகர். சிறிது சிறிதாகப் புலன் நுகர்ச்சி யைக் கைவிட்டு, ஆசை அறப்பெற்றல் மேன்மை அடை வோம்; இறைவனையும் அடைவோம் எ ன் பதே இரு வரின் கருத்து.
"கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனமே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியொடு செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே?
- கந்தர் அனுபூதி, 'மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்புலன் ஐந்தின்
வழி அடைத்து அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ்சோதி"
-திருவாசகம் 2. பேராசை
ஆசை எல்லாரிடமும் காணப்பட்டாலும் பேராசை சிலரிடம்தான் காணப்படுகிறது. ஆசை நிறை வே ரு த இருந்து, அது பேராசையாக மாறுவதும் உண்டு. சில ருக்கு இயற்கையாகவே பொருள், பூமி முதலியவற்றின் மீது பேராசை உண்டு. அவர்களுக்கு எவ்வளவு கிடைத் தா லூம் திருப்தி ஏற்படாது. பேராசையை ஒரு பெரும்

Page 26
48 ஆத்மஜோதி
பிணி என்கிறர் அருணகிரியார். சிலரைப் பொறுத் த வரையில் அது தீராத வியாதி என்றே கூறலாம். அந்தத் தீராத வியாதியில் நானும் சிக்கிச் சீரழிவதா எனக் கேட்கிருர் அவர். அதையே மணிவாசகரும் கேட்கிருர்,
"பேராசை என்னும் பிணியில் பிணிபட்டு ஒராவினையேன் உழலத் தகுமோ”
M -அனுபூதி "பேராசையாம் இந்தப்பிண்டம் அறப் பெருந்துறையான் சீரார் திருவடி என் தலைமேல் வைத்தபிரான்
-பூவல்லி 3. பெண்ணுசை *வேல் போன்று கூர்மையான விழிகளையுடைய மங் கையர்களின் கொங்கைகளை விரும்பும் நான், இருள் நீங்கி அருள் சேர்வதென்பது இயலுமா?’ என ஐயம் கொள் கிருர் அருணகிரியார்.
'கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ?*
"சிங்கார மடந்தையர் தீ நெறிபோய் l
மங்காமல் எனக்கு வரம் தருவாய்." - அனுபூதி
சிங்கார மடந்தையரைக் கண்டு சிந்தை மயங்கினல், வாழ் வின் ஒளி மங்கும். எனவே அந்நெறி செல்லாதவாறு வரம் வேண்டுகிருர்.
மணிவாசகரும் இக்கருத்துக்களைத் திருவாககத்தில் கூறுகிருர்,
**தையலார் என்னும் சுழித்தலைப்பட்டு நான் தலைதடுமாறமே
பொய்யெலாம்விடத் திருவருள் தந்து' - அற்புதப்பத்து
**உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப் பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனே விடுதி கண்டாய்' - நீத்தல் விண்ணப்பம்
தொடரும்

LLL MLMLMLMLeMMLMLMLLLLLL LL LLLCLLCCLLMLMLMLMLLML MLMLMLMLLLLL
பிரதேச அபிவிருத்தி அமைச்சு இந்துசமய இந்து கலாச்சாரப் பிரிவு விசேட அறிவித்தல்
இலங்கையின் இந்து ஆலயங்கள் பற்றிய விபரங் களைத் திரட்டும் வேலைத்திட்டத்தில் முதற்படியாக எமது நாட்டிலுள்ள பிள்ளையார் கோவில்களைப்பற்றிய விபரங்களைச் சேகரிக்கும் வேலை டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி விநாயகர் விர த ம் ஆரம்பிக்கின்ற நாளன்று, இந்துசமய இந்துகலாச்சார திணைக்களத்
ல் தொடக்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே இத்திணைக்களம் வெளியிட்ட பத்திரி * கை விளம்பரத்திற்கிணங்க விண்ணப்பித்த கோவில்
களைப் பற்றிய விபரம் மாவட்ட ரீதியாக தொகுக்கப் பட்டு வருகின்றது. இம்மாதம் 23ஆம் திகதி கதிரே 3 சன் மண்டபத்தில் நடைபெற்ற அகில உலக இந்து * மகாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பல கோயில் பிரதிநிதிகள் விபரங்களைத் தந்துதவிஞர் கள். அவ்விபரங்களும் திணைக்க ளத்தால் சேர்க்கப்பட் டுள்ளது. ஏனைய விநாயகப் பெருமான் ஆலயங்கள் : தங்கள் விபரங்களை 'பிள்ளையார் கதை’ நாட்களா ? கிய 21 நாட்கள் முடியுமுன் தந்துதவுமாறு இந்து : சமய இந்துகலாச்சார பணிப்பாளர் வேண்டுகோள் : விடுத்துள்ளார்.
கோவிலின் தோற்றமும் வரலாறும், கோவிலுக் குரிய ஊஞ்சல்பாடல்கள், நித்தியநைமித்தியத்திருவிழா * பூசை விபரம், ஆலய அமைப்பு, சிற்பச் சிறப்பு, விநாய * கர் விரதம், அனுஷ்டிக்கின்ற முறை, அங்கு வழங்கும் 3 * அறக்கட்டளைகள், தானதருமங்கள், தேவஸ்தான :
s
s
வெளியீடுகள் போன்ற விபரங்கள் அனுப்பி வைக்கப் படுமாயின், **இலங்கையில் விநாயகர் வணக்கம்* பற்றிய வெளியீட்டில் சேர்த்துக்கொள்ளப்படும். s செலின்கோ மாளிகை, பணிப்பாளர் * 2வது மாடி, இந்து சமய இந்துகலாச்சாரப் பிரிவு 3
கொழும்பு-1
LLLLLL LL LL LMLMMLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLL LLLL EMLL LMLLMLALALMLLMLL LL LLLLLLL MMM LLL

Page 27