கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பு 1974 (1.7)

Page 1


Page 2

- அம்பு -
அறிவியல் திங்கள் ஏடு
தரணி: 1 பாணம் 7
() (πέθίίλι (ή: *ஃகுதிகழஜீ
8ો o,
*敬 L称
இந்த இதழில். . . . . .
காட்டுக்கு நாயகன் கம்மூர்த் 2ぐ தலைமகன்.
தி மின்சித்தனின் மினிக் கட்டுரை
கள்.
‘சடபுட டிம் அற் மருதனுமடம்'.
உலகம் சுற்றிய வாலிபன் போக முனி!
தி வேகர் அருளிய சந்திர பயணக்
கவிதை.
$ அலகடலினடியினிலே அற்புத
மாயோருலகம்!
இன்னும் பல.

Page 3
எண்ணம்
மனித குலத்தின் பெரும் பகுதியினர், மனித வாழ்க் கைக்கு அவசியமான, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, இயலாதவர்களாகவே இருக்கின்றனர். அவர் களின் வருவாய் குறைவாயிருப்பதே இதற்குக் காரண மாகும். ஆசிய, ஆபிரிக்க மக்களிற் பெரும் பான்மையி னரின் நிலை இதுதான். இவர்கள் எவ்வளவு கடும் உழைப்பை மேற் கொண்டாலும், வருமானம் கூடுவதாக இல்லை. சத் துணவு போதியளவு கிடையாமல் இம்மக்கள் வருந்துகின் றனர்; போதிய கலோரிப் பெறுமானமுள்ள உணவோ, புர தம் நிறைந்த உணவோ, கிடைப்பதில்லை. இவர்கள் சரி யான உடை உடுப்பதில்லை; வசதியுள்ள வீடுகளில் வசிப்பது மில்லை. இம்மக்களிடையே சனப்பெருக்கத் தொகை கூடுத லாக உள்ளது. ஆகவே, இவர்களது பிரச்சினைகள் மேலும் சிக்கலாகின்றன.
இப்பிராந்தியத்திலுள்ள அரசாங்கங்களும், மக்களும் தீவிர பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டி, விவசாயம்" கைத்தொழில் ஆகிய துறைகளில் உற்பத்திப் பெருக்கம் காண்பதற்கு உழைக்கிருர்கள். ஆனல், குறிப்பிடத்தக்க மாற் றம் ஏதும் நிகழவில்லை.
இது ஏன்?
அபரிமிதமான குடிசனப் பெருக்கத்திற்கு இந்நாடு கள் உட்பட்டிருக்கின்றன. தீவிரக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இந்நாடுகளில் மேற் கொள்ளப்படல் வேண்டும். திட்டமிடல், பொருளாதார நிபுணர்களின் கையில் மாத் திரம் பொறுப்பை விடாமல், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள், சமூகவியல் நிபுணர்கள், ஆகியவர்களின் ஒருங்கிணைந்த திட்டமிடும் குழுக்களை அமைத் துப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும். இது பல முகப் பிரச்சினைகளை அலசித் தீர்ப்பதற்கு உதவும்.

3
இந்நிலையில், இப் பிராந்தியத்திலுள்ள டாக்டர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் ஆகியோர் செல்வம் கொழிக்கும் நாடுகளை நோக்கி மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்பி விடுகின்றனர். இம் ' மூளை சாலிகள் ' ஏழை மக் களின் பணத்திற் படித்துவிட்டு, வாழ்க்கைத் தரம் உயர வில்லை யென்பதைக் கண்டு, அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டுத் தங்கள் சுய நலத்துக்காக வெளியேறிக் கொண்டி ருப்பது கவலைக் குரிய விஷயமாகும். வறிய நாடுகள், செல்வ நாடுகட்குச் சேவை செய்வதற்காக, " " மூளைசாலி ' களைப் பயிற்றுவித்து அனுப்பி வைப்பது துரதிஷ்டமானதாகும் இதைத் தடுக்க இப்பிராந்திய அரசுகள் ஆவன செய்தல் அவசியம்.
- பதிப்பாசிரியர்
சிகாகோவில் இந்திய விஞ்ஞானி
‘சென்னையில் படித்துவிட்டு, இங்கிலாந்தில் டாக் டர் பட்டம் பெற்றவுடன், அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் வேலை அழைப்புகள் நிறைய வந்தன. ஆனல் நம் நாட்டில் தான் பணியாற்ற வேண்டும் என்ற முடிவுடன் இந்தியாவுக்குத் திரும் பினேன். அதன் பலன் என்ன தெரியுமா? ஒரு "ரீடர்' பதவி கூட எனக்குக் கிடைக்கவில்லை. அந்தச் சமயத் தில் தான் இந்த சிகாகோ சர்வகலாசாலை எனக்கு உதவிப் பேராசிரியர் வேலையை அளித்தது.”*
- இதயம் பேசுகிறது' நூலிலிருந்து
அமெரிக்காவில் வேலை செய்கின்ற பிரபல விஞ்ஞானி (இந்தியர்) Dr. சந்திரசேகர் 'ஆனந்தவிகடன்' மணி யனுக்கு அளித்த பேட்டியில் ஒரு பகுதி.

Page 4
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
தலைமை" என்ற சொல் மந் திரக் கோல் போன்று அழகான கற்பனைகளை உசுப்பி விடுகிறது. மாலை, மரியாதை அதிகாரங்கள் தரும் சலுகைகள் ( சலுகைகளில் தான் எத்தனை வகை! ) எனப் பல ரம்மியமான காட்சிகள் விரிகின் றன. இந்தத், தலைமை பிம்பத்தினுல் உந்தப்பட்டு பலர் த லே வ ரா க முயற்சி செய்கின்றனர். சிலர் தலை வராகின்றனர். ஆற்றல் மிக்க இளை ஞர்களில் சிலர், சமுதாயச் சீரழிவு களைக் கண்டு பொறுக்க முடியாமல், இயக்கங்களைத் தோற்றுவித்து அதன் மூலம் வாழ்வை வளமாக்க மு ய ற சிப் பதும் உண்டு. ருலும் இவர்களும் நாளடைவில் தலைமைப் பிம்பத்தில் மதர்த்துச் செழிப்புறுகின்றனர் என்பதும் கண் கூடு. மந்த க தி யில் இ யங் கும் நாளாந்த வாழ்க்கையை முடுக்கி இயக்கங்களின் பர பர ப் ைப நாடுவதும் துடிப்புள்ள இளைஞர்களின் இயல்பு.
என்
வேகமூட்டும்
வாழ் வி ல் எல்லாத்துறைகளி லும் தலைவர்கள்" உண்டு. அரசியல், கலே விஞ்ஞானம்
எ ைத
&ቻtዕu !ዚb, 27&of எடுத்துக் கொண்டாலும் அத்துறைகளில் பல பெருஞ்சாளி கள் ( எலிகளில் ஒரு வகை ) தலை மைப் பீடங்களுக்கு ஒட்டப்பந்த யம் ( rat race ) நடத்துகின்றன. அதுவும் பொருளாதார நெருக் கடிகள், சமூக முரண்பாடுகள் முற்
நிய இக்கால கட்டத்தில் எப்படி யாயினும் இந்த எலி ஒட்டப் பந் தயத்தில் சேர வேண்டும், அல்லா விடில் நாம் மட்டும் பின் தங்கி விடுவோம் என்ற பயம் இளைஞர் களுக்கு இருப்பது இயல்பு. ஒடுப வர்களில் சிலர் பெருந்தலைவர்களா வேறு பல ர் சில்லறைத் தலைவர்களாகி, முத்திக் கொண்டு மேலெழும்பியவர்களுடன் பொரு மையை உள் ளு ற வளர்த்துக் கொண்டு மீண்டும் ஒடுவதற்கு சண் டிக்கட்டை இறுக்குகிருர்கள்!
கலாம்,
இப்பந்தயங்கள் ஆற்றல்களை விஞக்குகின்றன. மணி தாபிமானத்தைக் கருவழிக்கின்றன. இருபத்தி நா ன் கு மணிநேரமும் தன்னை மையமாகக் கொண்டு சித் திக்கும் படி யா ன மனுேநிலைகளை உருவாக்குகின்றன. எனவே ஒட் பந்தயத்தில் சேர்ந்தவர்களு டைய ஈடுபாட்டின் தன்மையைப் பொறுத்து மன ஆற்றல்கள் மன உளைச்சலாகவும், மணமுறிவாகவும் விணுவதுண்டு. இப்படியான மனவி ரயத்திஞல் செய்ய வேண்டிய முக் கிய பணிகளுக்கு முழுக் கவனமும் கிட்டுவதில்லை. எனவே சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்படாமல் முற்றுகின்றன. பிரச் சனைகள் சரிவரத் தீர்புடாவிட்டால் போட்டியும் டிக்கிரமாகும். போட்டி உ க் கி ர மா ஞ ல் மன உளைச்சல் மிகும். இப் படி பே முடிவில்லா
I fectly suit -tu
டப்

சுழற்சி வட்டத் தில் (looping) கட்டா, மாலை பாட வேண்டும். எலிகளின் ஒட்டப் பந்தயத்திற்கு நாகரீகமான" பெயர் வாழ்வில் முன்னேறுதலாகும்
இன்றைய சூழ் நிலையில் தலை வர்கள் அவசியம் த ரா ஞ என்ற கேள்வி எழுகின்றது.
சில முயற்சிகளில் பலருடைய ஆற்றல்கள் இணைத்து செயற்பட வேண்டியுள்ளது. உதாரணமாக *தை பந்தாட்டத்தில் ஒரு கோஷ் 46ல் நடாத்திச் செல்ல காப்டன் நியமிக்கப்படுகிருர், கூத்தில் அண் இணுவியார் தலைவராகப் பல ைர நெறிப்படுத்துகிருர், இப்படியாக முயற்சிகளை இணைக்கும் ஆ நீர் ற ல் பெற்றவர்களுடைய பணி சமூகத் தில் பல கட்டங்களிலும் தேவைப் படுகிறது.
ஆணுல் கூத்திற்குப் பிறகு அண் குவியாரும், விளையாட்டிற்குப் பின்பு காப்டனும் தமது தலைவர் பதவிகளை வில்லங்கமின்றி களைந்து விடுகின்றனர். இப்படி ஒரு குறிப் பிட்ட துறையில் ஒரு எல்லை வரை தமது தலைமைப் பதவியையும், வீச் சையும் கட்டுப்படுத்தினுல் ந ல் ல பலன் உண்டாகும். வாழ்க்கையின் சகல துறைகளும் தமது ஆணையுள் அடங்க வேண்டும் என்ற அவா ஆபத்தானது.
இயக்கங்களின் அடிமட்டத்தில் செயல்படும் பொழுதுள்ள உற்சா கம். ஈ டு பாடு, சே ைவ மனப்
5)
பான்மை என்ற உணர்வுத் தொகு தியம் (matrix ) தலைவரானவுடன் *நான் தலைவ்ன் *என்ற (போலி) அடக்கம்", தலைமை பறிப்ோகுமோ என்ற அச் சம் என்ற உண்ர்வுத் தொகுதிகளுக்கு பரிணுமம் பெறு கிறது. இத ஞ ல் தலை வ் னு கி க் கொண்டு வரும் பொழுதே ம்னத் @៨ e påbuSaid தனிமையுணர்வும் நிழல் போல் தொடருகிறது. இப் படியான மனுேவிகாரங்கள் மனத் தில் நெளிந்து, பிரண்டு கொண்டி ருப்பதால் அ ழ குன ர் வு, பச்சா தாபம் போன்ற நுண் உணர்வுகள் தவிர்க்க முடியாதபடி பலியிடப் படுகின்றன. இப்பொழுது ,எங்க ளுக்குத் தெரி ந் த பெருச்சாளிச் சமூக அமைப்புகளை விட வேறு மாற்றுக் (மூளையை பிற நாட்டிக்கு அடைவு வைக்காமல்) தேட வேண்டிய கட் டம் நெருங்கி விட்டது.
கிடைக்காதா என்று
பெருச்சாளிகள் ஒடிக் களைக் கட்டும், ஒடும் பொழுது அவர்கள் சொல்வது செய்வது தான் சரி, ஆனுல் நாளைய செல்வங்கள் பெருச் சாளிகளாக தெளி ய வேண்டாம் “அவர் தலைவராம் - பாவம்” என்று ஒரு பார்க்கும் கருணையுடன் தலைமையை நோக் உலகம் முழு வதையும் நேசிக்கும் இதயமும், 'கர ங்கள் இரு ப் ப து கண்ணிரைத் துடைக்க” என்ற உணர்வும் எல்லா வள ரு ம் பயிர்களுக்கும் உண்டு. இந்தப் புனிதத்தைக் கற்பழிக்கா மல் விட்டால் உலகம் உய்யலாம்.
நோயாளியைப்
கும் காலம் வரும்.

Page 5
எல்லாரும் இளைஞர்களுக்குப் புத் திமதி சொல்ல முனைகிருர்கள் (நியூ வேவ் சஞ்சிகைகள் உட்பட). இங்கு சொல்லப்பட்டது க ட் டா யம் சொல்லித் தீரவேண்டிய உண்மை. எனவே இதைப் புத்திமதி என்று கொள்ளத் தேவையில்லை. விளங் கிய வரையில் நன்று,
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறை கொட்ட நரட்டுக்கு தம்பி நடக்கின்ற வாறே.
st', 'f60ീ ufar (' ' )4 67 بہ طو/a6644 رح
தயங்கும் தலைவன்
செல்லப்பா சாமியைக் கும்பிட வேண்டும் என் னும் அவாவை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் சாமிக்கும் கும்பிடுதல் பிடிக்கவே பிடிக்காது. இதல்ை பக்தர் ஒரு நாள் சாமியை மரத்துடன் கட்டி விட்டு கற்பூரம் கொழுத்தி வணங்கிய பின்பு அவிழ்த்து 6ýIL LITrif.
• • t • S SSqSAqASqqSqSqSqSSSqSSSSSLLLLSLSLqS SLSAS SqSS ܫܝ
qSSAS SSASJSLLSSS SSLYSqqqqqS SLLLSSSAAAS qLSALSqS SSASLSLSLSLSLSASSqSSLSJSLSSSqS AASSL SSASLSLSALSLSASAAJSqSqSASLSLSqSLSLSLALSLSLSLSqASqSqSqSq
 
 

பிழையான தராசினுல்
சரியாக அளவிடுங்கள் காத்தான்குடி மஹ்றுப்
ஒரு பொருளின் திணிவைப்
பிழையான அளவினைக் காட்டும் கரா டிசைக் கொண்டும் அளவிட லாம் இதற்கு இரு வழிகளுள்ளன.
1. மாற்றுப் பொருள் நிறுத்
தல் முறை. − 2. மாருச் சுமை முறை.
மாற்றுப் பொருள் நிறுத்தல் முறை:
இம்முறையை “போர்டா” என் னும் விஞ்ஞானி கூறியமையால் ‘போர்டா முறை” என்றும் இதற்கு மறுபெயர் உண்டு
பிழையான அளவு காட்டும் பொதுத் தராசின் ஒரு தட்டில் திணிவு காணவேண்டிய பொருளை வைத்து, மறுதட்டில் மணலை அல் லது ஈயக்குண்டுகளை இட்டு தரா
சின் சமநிலையைப் பேணவேண்டும். பின்னர் திணிவு காண வேண்டிய பொருளை மட்டும் அகற்றி விட்டுப் பதிலாக நிறைப்படிகளை அத்தட் டில் இட்டுத் தராசின் சமநிலையைப் பேண வேண்டும். இப்பொழுது தேவைப்படும் நிறைப் படிகளின் திணிவே பொருளின் திணிவாகும்.
இம்முறையை ஒரே தட்டுள்ள விற்றராசிலும் பயன் படுத்தலாம். முதலில் திணிவு காண வேண்டிய பொருளை த் தட்டில் வைத்து சுட்டி காட்டும் மதிப் பைக் குறித்துக் கொள்ள வேண் டும். பின்னர் பொருளை எடுத்து விட்டுச் சுட்டி முன்னர் காட்டிய மதிப்பைக் காட்டும் வரை தட்டில் நிறைப்படிகளை இடவேண்டும். இங் கும் நிறைப் படிகளின் திணிவே பொருளின் திணிவாகும்.
எளிய
மாருச் சுமை முறை:
இம்முறை பிரபல சோவியத்
இரசாயன அறிஞர் ' டிமிட்ரிய் மெந்திலேயெவ் " என்பவர் கூறி யதாகும்.
பிழையான பொதுத் தராசின் ஒரு தட்டில் ஏதாவது ஒரு சுமையை வைக்க வேண்டும் இங்கு வைக் கும் சுமையின் திணிவு, திணிவு காணவேண்டிய பொருளிலும் அதி கமாக இருத்தல் அவசியம். பின் மறுகட்டில் நிறைப்படிகளை இட்டுச் சமநிஃலயைப் பேண வேண்டும் இப்பொழுது நிறைப்படிகள் இருக்
கும் தட்டில் திணிவு காண வேண் டிய பொருளை வைத்து சமநிலை பேணப்படும் வ ைர நிறைப்படி களை எடுக்க வேண்டும்.
இப்பொழுது எடுக்கப்பட்ட நிறைப்படிகளின் திணிவே பொரு ளின் தி எனி வா கும். இம்முறை தொடர்ச்சியாகப் பல பொருட் களின் திணிவைக் காணச் சிறந்தது. ஒரே சுமையை வைத்துக் கொண்டு பல பொருட்களின் தி னி ைவ க் காண முடியும்.

Page 6
6
ன்
ன பெயர் வைக்கலாம் 9
மயிலங் கூடலூர் பி. நடராசன்
வகுப்பில் உயிரினவியற் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. ‘எருக் 3; ab', ' வேலிப்பருத்தி ’ என்பவற் றைக் காட்டித் திரள் பழம் பற்றி விளக்கி முடித்துப் 'பட்டிக் கணியும் இதற்கு உதாரணமாகும்" என்று கூறுகின்றேன். “பட்டி என்பது எது? மாணவர்கள் ஒரே குரலிற் கேட்
கின்றனர். பதிய, இனப் பெருக்க உறுப்புக்களைக் கொண்ட நித்திய கல்யாணியின் (பட்டியின் மறு
பெயர்) படமொன்றை மாணவ ருக்குக் காட்டுகின்றேன். இதுவா? இது களனிப் பூவல்லவா? வர்கள் வியப்புடன் விடையளிக் கின்றனர். தந்தியாவார்த்தம் என்று கூறிப் பூரண விளக்கம் கொடுத்த பின்பு " மல்லிகையைச் சொன்னீர் களா?' என மாணவர் ஐய விஞத் தொடுக்கின்றனர். எனது "சாத்தா வாரி’ வாணவர்கட்குச் "சீக்குறிஞ்சி" ஆகின்றது. வகுப்பில் அடிக்கடி இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.
設。「「@リ了
வடக்கிலங்கைக்கும், கிழக்கி லங்கைக்குமிடையில் தா வ ர ப் பெயர்களில் எத்துணை வேறுபாடு? சின்னஞ்சிறு நாட்டிலே இத்துணை வேறுபாடாளுல், உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஆயிரக்கணக்கான மொழி பேசும் மக்களிடையே இப் பெயர்களில் எத்துணை வேறுபாடு
கள் இருக்கும்? 'இலவு' என்பது
நாமெல்லா மறிந்த பஞ்சு தரும்
மரமாகும் இதற்கு முள்ளிலவு ' என்பது வேருெரு ெப ய ர், மலை யாள மொழியிலும் இப்பெயர்களே உள. அசாம் மொழியில் "சிமாலு’ எனவும், வங்கா ள மொழியில் சிமில் ' என வும், குஜராத்தியில் 'இரட்டோ? எனவும், செமாலோ’ எனவும், இந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் "சிமார்’, ‘சிம்பால்" எனவும் இலவு வழங்கப்படுகிறது மராத்தி மொழியில் 'கதேச வார்" எனவும், ஒரிய மொழியில் "சிமுலி எனவும் இலவு பெயர் பெறுகின் றது. தெலுங்கர் இதனைக் கொண்ட புராகா”, “சல்மலி" என்ற பெயர்க ளாலும், சிங்களவர் * புல்லுங்கக என்ற பெயராலும் அழைப்பர்,
புதிய அறிவியற் கண்டுபிடிப் புக்களால் உலகம் நாளுக்கு நாட் சுருங்கி வருகிறது. அனைத்து நாடு களும் அறிவியற் செய்திகளைப் பரி மாறிக் கொள்கின்றன. இன்று விஞ் ஞானக் கலைச் சொற்களை ஆளுவ திற் கு ழ ப் L ம் இல்லை. ஆனல், தொடக்க நிலையில் இயற்கை நூல றிஞர்களைப் பொறுத்த வரையில், மேலே குறிப்பிட்டது போ ன் ற பெயர் மாறுபாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. பு தி ய நாடுகளைக்

காண வேண்டுமென்ற ஆவல் கட லோடிகளிடம் எழுந்த போது, இக் குழப்பம் மேலும் மிகுந்தது. அவர் கள் தாம் சென்ற நாடுகளிலிருந்து பெருந் தொகையான விலங்குகளை யும், தாவரங்களையும் புதிது புதி தாகக் கொண்டு வந்து குவித்ததே இதற்குக் காரணமாயமைந்தது.
எனவே, குழப்பத்தைப்போக்கி அவற்றைப் பற்றி அறியவும், ஆரா பவும் அவற்றைப் பாகுபடுத்திப் பெயரிட வேண்டிய அவசியம் ஏற் ul ill-gil பெயரிடும் போது மேற் கொள்ளும் முறை எளியதாகவும், நடைமுறைப் பயன் தருவதாகவும், செய்முறைக்குகந்ததாகவும் அறிவி யலாளரனைவரும் ஏற்றுக் கொள் ளக் கூடியதாகவும் இருக்க வேண் டும். இது போன்ற பெயர்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சி உரைகள் வெளியிட்டால் மட்டுமே உலகம் முழுவதும் அதனை விளங்கிப் பயன் பெறமுடியும்,
இத்தகைய பெயரீட் டு முறையை ஏற்படுத்தப் பலர் முயன் றனர். அவர்களில் ‘காள் இலின்னே" என்பவர் கருவிலே திருவுடையாராக இருந்தார். தாவரவியலாராய்ச் சியே அவரது உயிர் மூச்சாயிருந் தது. மருத்துவராக விருந்து மருத் துவத் துறைப் பேராசிரியராக உயர்ந்த இவர் தாவரவியல் ஆர் வம் காரணமாகத் தமது பேராசி ரியத் துறையை மாற்றிக் கொண்டு தாவரவியற் பேராசிரியராக விளங் கிஞர்.
இரு சொற் பெயரீட்டு முறை" எனப்படும் பெயரிடும் வழக்கை
9
இவர் வெளியிட்டார். தாவரங்க ளையும் விலங்குகளையும் இரு பெயர் களால் வழங்குவது இம்முறையின் இயல்பாகும். பெயர்கள் இலத்தீன் ஒலியியல் மரபுப்படி எழுதப்பட வேண்டு மென் பது விதியாகும். தனித் தமிழியக்கத் தந்தை ‘சுவாமி வேதாசலம் அவர் கள் தமது பெயரை மறை மலை அடிகள்' என மாற்றியமைத்தது போல இவரும் தமது பெயரை “காளசு இலின்னே us" (Carlous linnaeous) 6760 Lot fib றியமைத்துக் கொண்டார்.
இவரது முறைப்படி மேலே கூறப்பட்ட இலவு மரம் பொம் மலபாறிக்கம் ( Bombax malabaricum) 67687 36455657 ஒலி யில் உ ரோ ம ன் எழுத்துக்களில் எழுதப்படும். இப்பெயரில் இரு சொற்கள் உள்ளன. முதற் சொல் பெரிய எழுத்துடனும. இரண்டாம் சொல் சிறிய எழுத்துடனும் தொடங்கப்பட வேண்டும். எல்லா எழுத்துக்களும் சாய்வு எழுத்தில் அமைய வேண்டும் என்பது விதி.
பட்சு
தமது பெயரீட் டு முறைக் கேற்ப இலின்னேயசு தாவரங்களைப் பா கு பா டு செய்தார். இனப் பெருக்க உறுப்புக்களின் அடிப்படை யில் இப் பர்குபாடு அமைந்தது. பிரிவு, வகுப்பு, தொடர்கள், வரு ணம், குடும்பம், சாதி, இனம் என் பன இம்முறையிலுள்ள கூறுகளா கும். சாதி, இனம் என்று இரண் டும் தாவரப் பெயராயமைந்தன.
மங்கிபெரா இண்டிக்கா இலின் Mangifera indica Linn.) Grair o பெயரில் ம ங் கி பெ ரா என்பது

Page 7
IO
சாதிப் பெயர். இண்டிக்கா என் பது இனப் பெயர். இலின் என்பது தாவரத்தை முதன் முதலில் விப ரித்த ஆசிரியராகிய இலின்னேய சைக் குறிக்கும். தாவரத்தை யார் முதன் முதலில் பூரணமாக விபரிக் கிருரோ அவர் மரபுப்படி பெய ரிட்டுப் பெயரினிறுதியில் த ம து பெயர்க் குறுக்கத்தையும் எழுது 6 ft it.
புதிய தா வ ர வகையொன்
அதற்குத் தாம் விரும்பிய பெயரை இட்டழைக்கலாம். ஆன ல் அது மேற்குறிப்பிட்ட மரபை யொட் டியே அமைய வேண்டும் சாதிப் பெயர்கள் பொதுவாக விரும்பிய படி அமைக்கப்படுவதில்லை. இலியூக் கசு (Leucus) என்பது முடிதும்பை என்ற தாவரத்தின் சாதிப் பெயர் இலியூக்கசு சீலானிக்கா ( Leucus Zeanica) என்பது இதிலுள்ள பல இனங்களிலொன்று. இது இலங்கை யிற் காண ப் படும் சிறப்பினம் எனவே சீலானிக்கா " என நாட் டின் பெயர் இலத்தீன் முறைப்படி அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறே பல தாவரங்களின் இனப் பெயர் கள் நாட்டுப் பெயர்களாக உள் ளன. அபியூற்றிலன் இண்டிக்கம், அக் கலிபா இண்டிக்கா, பறிங்டோனியா
ஏசியற்றிக்கா, கோபியா அரபி பிக்கா, அக்கேசியா அரபிக்கா, பிம்பினெல்லா பழனியென்சிசூ,
பெப்பரோமியா திண்டுக்கலென்சிசு என்பன இதற்குதாரணங்களா கும்.
பல்வேறு தாவரங்களின் இனப் பெயர்கள் வழக்கிலுள்ள பெயர்
களினடிப்படையாகவும் தோன்றி யுள்ளன. வெண்கடம்பு என்ற தாவ ரத்தின் வழக்குப் பெயரே அதன் தாவரவியற் பெயராகவுமமைந் தது. அந்தோ செடாலசு கடம்பா என வழங்கப்படுகிறது. இவ்வாறே மு ரு ங் கை, வெட்டிவேர் என்ற வழக்குப் பெயர்களும் முறையே “மொறிங்கா ஒலியீபெரா" என்றும், ‘வெட்டிவீரியா இலாசோனை' என் றும் தாவரவியற் பெயர்களாய மைந்துள்ளன. யூபோவியா திருக் கள்ளி ( திருக்கள்ளி ), டைப்பர் பீற்றில் (வெற்றிலை) என்பனவும் இவ்வாறு அமைந்தனவே.
 ெத ல் லே ற் ரு என்பது ஒரு வகைப்பா சி. இதில் ஒருவகை , " அய் யங்காரியா தெல்லேற்ரு ' எனப் பெயரிட்டுள்ளது. புகழ்பெற்ற பாசி யியலாளரான அய்யங்கார் அவர் களின் நினைவாக இப் பெயரிடப்பட் டுள்ளது. இவ்வாறே தாதுலிங்க முதலியார் என்பவரின் நினைவாக *செனியோ தாதுலிங்கமை” எனத் தாவர மொன்றுக்குப் பெயரிடப் பட்டுள்ளது நாட்டுப்பெயர், வழக் குப் பெயர், அறிஞர் பெயர் பவற்றை விட த் தாவரங்களின் இ ய ல் புக %ள அடிப்படையாகக் கொண்டும் பிறவகைகளிலும் தாவ ரங்களுக்குப் பெயரிடப்படுகின்றது நீங்களும் விஞ்ஞானியாகிப் புதிய இனங்களைக் கண்டறிந்தால் உங்க ளுக்கு விருப்பமாஞேரின் பெயர் களை அ வ ற் றி ற் கு வைத்து விட
என்
6) fTLO,
அறிஞர்கள் தம் கருத்தைப் பரிமாறிக் கொள்வதை எளிதாக் கும் வகையில் இவின்னேயசின்

முறையை யொட்டி அனைத்துலகத் தாவரப் பெயரீட்டு விதிகள் 1905ம் ஆண்டு வியன்னுவில் ஆக்கப்பட் டன. 1910 இல் பி ர ச ல் சி லும், 1930 இல் கேம்பிரிட்சிலும், 1935 இல் அம்.கடாமிலும் இம் முயற்சி தொடர்ந்து மேற் கொள்ளப்பட் ، أو . حا
அமெரிக்கத் தா வ ர ப் பாகு பாட்டியலளார் கழகம் முன் ஆக்கப் பட்ட பெயர் களை 1946, 1950 ஆகிய ஆண்டுகளில் திருத்தியமைத் கது. பிரான்சியத் தாவரவியலாளர் கழகம் 1954 இற் கூடித் தாவரவி யற் பெயர்கள் அனைத்தையும் ஒரே பொதுத் திட்டத்துட் கொண் டு வந்தது.
இலின்னேயசுக்கு முன் கசுப் பார் போகின் (1550-1624) யோன் இரே (1628-1705) ஆகியோர் பாகு பாட்டு முறையை வகுப்பதில் ஈடு பட்டனர். ' குடந்தாமும் ஊக்க ரும்', ' எங்கிலர்' ஆகியோரும் இம்முறையில் ஈடுபட்டனர். இலின் னேயசின் பா கு பா ட் டு முறை செயற்கை முறை எனப் பிற்காலத் தில் ஒதுக்கப்பட்டது. எனினும் நவீன தாவர இயலாளர் தாவரங் கட்கு இரு சொற் பெயரீட் டு முறையிற் பெயரிடுவதை ஏற்றுக் கொண்டனர். விலங்குகளைப் பெய ரிடுவதிலும் இரு சொற் பெயரீட்டு முறையே நடைமுறையிலுள்ளது. இலின்னேயசின் பெயரீட்டு முறைப் " பெலிசு இலியோ ? என்றும் ஒட்டகம் 'கமேலியசு துருே மெக்தேரியசு' என்றும் வழங்கப் படுகின்றன. இலின்னேயசு தாவர வியலறிஞர்சளுள் இளவரசர்" எனப்
படி சிங்கம்
I
போற்றப்படுகிருர், அவரது நினை வாக இ லண் டன் இலின்னேயசுக் கழகம் இ ன் றும் நின்று நிலவு கிறது.
தாவர விலங்கியற் பெயர்கள் அனைத்துலக முறையில் விஞ்ஞானி களால் ஏ ந் நூறு க் கொள்ளப்பட்ட வையாகும். ஒருவர் எம்மொழியில் விஞ்ஞான நூல்களையோ, ஆய்வு ரைகளையோ எழுதினுலும் இப் பெயர்சளைத் தான் உபயோகிக்க வேண்டு மென் பது விதி; இதை எவரும் மீற முடியாது. மீறினல் அவருக்குக் கி ைட க் க வேண்டிய பெரும்புகழே கிடைக்காமற் போக லாமல்லவா?
இதுவரை இலக்கியத் தமிழா கவும் சமயத் தமிழாகவும் இருந்த எந்தமிழ் இன்று விஞ்ஞானத் தமி ழாயும் வளர்ந்து விட்டது. எனவே, விஞ்ஞானத்துறையிலும் இது உறு பயன் விளைக்கும பண்பட்ட மொழி யாக மாற வேண்டியது அ வ சி ய மன்ருே? தமிழ் பேசும் நல்லுலகம் என்று நாம் பெருமையுடன் பேசும் நாடு பல்வேறு நாடுகளிலுள்ள சிறு சிறு பகுதிகளின் கூட்டேயாகும். இத் தமிழ்கூறும் நல்லுலகின் பல் வே று பகுதிகளிலும் ‘விஞ்ஞான மொழி" பற்றி ய ஒருமைப்பாடு இ ன் னு ம் ஏற்படவில்லை. தமிழ் நாட்டரசாங்கத்தின் "தமிழ் வெளி யீட்டுக் கழகம்' வெளிவிடும் விஞ் ஞான நூல்கள் ஈழத் தமிழருழகுப் பயன்படா. இலங்கையரசின் "அரச கரும மொழித் திணைக்களம்" வெளி யிடும் நூல்கள் தமிழகத்தார்க்குப் புரியாதனவாக இருக்கலாம். இது மட்டுமல்ல - ஒரே நாட்டிற் கூட

Page 8
12
வெவ்வேறு வகை யான கலைச் சொல்லாக்க மரபுகள் பயன் படுத் தப்படுகின்றன. ஒரே நூலிற் கூடக் கலைச் சொல்லாக்க ம ர பு வேறு பாடுகள் காணப்படுகின்றன.
Spirogyra 67 6ör tip Go) Liu Lui rif ஸ்பைரோகைரா - இசுப்பைரோ கைரா - பைரோ கைரா எனப் பல் வேறு வகையில் எழுதப்படுவதை ஈழத் தமிழ் நூல்களில் நாம் காண் கிருேம். இது விஞ்ஞான மொழி மரபுக்கு முரணுனது. இது வாசிப் போரிடையே வேண்டாத குழப் பத்தை ஏற்படுத்தும். இதற்குக் கா ர ன ம் எழுத்துப் பெயர்ப்புச் செய்வதற்குத் திட்டமான விதி களின்மையே யாகும். தமிழ் வரி வடிவிலுள்ள சொற்களை ஆங்கிலத்
தில் எழுத்துப் பெயர்ப்புச் செய்ய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது போல ஆங்கி ல எழுத்திலுள்ள சொற்களைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்புச் செய்ய விதிகள் வகுக் கப்பட வேண்டும். இவ் வி தி க ள் கலைச் சொல்லாக்கக் குழுவினர்க்கு மாத்திரம் உரிய ‘சிதம்பர இரகசிய மாயிருக்காது அனைவரும் அறியக் கூடியனவாயிருக்க வேண்டும். எழுத் துப் பெயர்ப்பு விதிகள் கலைச் சொல் லகராதிகளுடன் பின் இணைப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். அல்லது தனி வெளியீடுகளாக வெளியிடப் பட வேண்டும். அப்போது புதிது புதிதாக அறியும் சொற்களைச் சரி யாக எழுத்துப் பெயர்ப்புச் செய் யும் நிலை உருவாகும்,
புத்தம் புதிய விண்வெளி நுட்பத்தை மெத்த அழகாகச் சொல்கிறது தமிழ்!
ஜனரஞ்சக அறிவியல் துறையில் ஒரு பிரகாசமான விடி வெள்ளி முளைத்திருக்கிறது. டாக்டர் க. இந்திரகுமாரின் மண்ணில் இருந்து விண்ணிற்கு என்னும் விண்வெளிப் பய ணம் பற்றிய நூலை வாசிக்கும் பொழுது இவ்வுணர்வுதான் மேலோங்கி நிற் கிற து. அத்தியாயத்திற்கு அத்தியாயம் தொடர்ச்சி அற்றுப்போகாமல் பழகு தமிழில் நடைபோடும் இந்நூலில் பக்கத்துக்குப் பக்கம் வரை படங்கள், வரலாற்றுப் புகழ் பெற்ற புகைப்படங்கள் பரவியிருப்பதனுல் தெளிவை ஏற்படுத்துவதுடன் வாசகருடன் ஒரு நெருக்கத்தையும் உண் டாக்குகிறது. நூல் மிக நன்ருக அச்சிடப்பட்டுள்ளதையும் குறிப்பிடவேண்டும்.
எல்லா பாடசாலை மாணவர்களும், அறிவியலில் ஆர்வ முள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய அருமருந்தன்ன நூல் மண்ணில் இருந்து விண்ணிற்கு.
விலை 7/50

மினிக் கட்டுரைகள்
17. சட புட டிம் அற் மருதனுமடம்!
கிலத்தரம் இருபதாம் வெள்ளி துலாத்தில்
தரம் சரிய ஆரம்பித்தது.
இப்படி மகாராணியையும், சேரக் கொலை செய்து படிப்படியாக மேலெழுந்த ஆங் நூற்றண்டின் ஆரம்பத்தில் நிற்க உச்சநிலையையடைந்தது. எனினும், 20 -ம் நூற்ருண்டின் மகாராசியில் எட்டுக் கிரகச் சேர்க்கை ஏற்பட்டவுடன் பிரிட்டிஷ் சாம்பிராஜ்யம் சட்னியானதுடன் ஆங்கிலத்
பாண்டியனையும் ஒரு
இடைக் காலத்தில்
சூரியன் அஸ்தமிக்காத பரந்த பிரிட்டிஷ் வல்லரசின் எழுச்சியை யும், வீழ்ச்சியையும் வரலாற்றுக் கண் கொண்டு ஆராய்ச்சி செய்தல் போன்று, மாட்சிமை தங்கிய மகா ராணியின் ஆங்கிலத்தின் எழுச்சி யையும, வீழ்ச்சியையும் மொழியா ராய்ச்சி செய்தால் உங்களுக்கு ஒரு பி. ஏச். டியை ஏதாவதொரு பல் கலக் கழக வளாகம் வழங்கும்! ' a-6) oli b (apt 69obsö3) (white hall)
அரச நிருவாகத்தை சேய்மையா Gib604 ( remote control ) elpsvud நடாத்திவந்த வல்லரசு தங்கள் சிவில் சேவையாளரை ஏஜண்டுக ளாக நியமித்து ஈழத்தை நிருவ கித்தனர். இன்று போல் நெருங்கிய போக்குவரத்து வசதிகள், தொடர்பு வசதிகளற்ற கால த் தி ல் இந்த ஏஜண்டுகள் பல துறைகளில் அதி சூரர்களாக இருத்தல் அவசியமா யிற்று. சாம்ராஜ்ஜியம் கைநழுவாம

Page 9
14
லிருக்க நம்பிக்கை, திறமை, விசு வாசமுள்ளவர்களை ஏஜண்டுகளாக நியமிப்பது த வி ர் க் க முடியாத தாயிற்று இவ் வேஜண்டுகளுக்கு ஊரவர்களோடும், ஊரவிச்சிகளோ டும் தொடர்பு கொண்டு ஆண் டான் - அடிமை உறவுகளே நிறு வுவதில் மொழி ஒரு தடையாக
ஆரம்ப காலத்தில் அமைந்தது. ஏஜண்டுக்கு தமிழ் தெ ரி யாது. இலங்கையருக்கோ ஆங்கி ல ம்
வராது இந்நிலையில் அரைகுறை ஆங்கிலமாவது தெரிந்தவர்களை சக் 35 L-ớ535 Tri (Secretary ), LD5 T (typ 5660
ஒரு தினம் சக்கடத்தார் வில்லு Guadalquildi) (Spring Vehicle) së சேரி நோக்கிச் செல்லும் பொழுது, மருதனு மடத்தடியில் அக்சிடண்ட் என்று சொல்லப்படக் கூடிய அடி தடி விபத்தில் சிக்கி, கச்சேரிக்குச் செல்லுவதில் தாமதமேற்பட்டது. சாரதி கந்தனுடைய கை முறிந் தது. குதிரையின் கால் முறிந்தது ஏஜண்டுத் துரை புருவத்தை மட் டும் உயர் த் தி கேள்விக்குறியாக வளைத்தார். பதிலிறுக்கும் முகமாக சக்கடக்தார்,
கந்தன்
வேலன் (of) கரவெட்டி ஈஸ்ற் (East)
G5th (came) 3/10/T (through) g5 456ööTL-Tu Jub 673
(with) ஏ சத்தகக் கத்தி இன் ஹான்ட் (hand) அன்ட் கட் (and cut) கனகர் கைம் பெண் கதிரி அற் (at) த கழுத்தடி'. முதலியாருக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கவினும் கவிதையழகும்
மிகக் கடாவினர்.
(in) Gyö6iv (his)
யார் எ ன் னு ம் பட்டங்களுடன் நியமித்தனர். தங்கள். திறமையைக்
கணத்திற்கு கணம் திரட்டக் கூடிய
அசகாய சூரர்களாக இச் சக்கடத் தரர்கள் விளங்கினர். அக்காலச் சமுதாயத்தில் இவர்கள் பெற்றி ருக்க செல்வாக்கை ’ எல்லாரும் ஏறிவிழுந்த குதிரையில் சக்கடத் கார் ஏறிச் ச று க் கி விழுந்தார்" என்ற பழமொழி மூலம் அறிய லாம். உவைற் ஹோல் சூரர்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய குட்டித் தெய் வங்களாக சக்கடத்தார் பரிணுமம்
பெற்ருர், நிற்க.
* சட, புட டிம் அற் மருதன மடம் கந்தன் ஹாண்ட் பிறேக்; ஹோர்ஸ் ( Horse ) லெக் பிறேக்” என விஷயத்தை புரியும் படி தத் ரூபமாக நடித்துக் காட்டினர். இந்த சம்பவத்தின் பின்னர் சக்கடத்தா ரின் ஆங்கிலமும், ஏஜண்டின் தமி ழும் கொஞ்சமாவது செம்மைப் பட் டிருக்கலாம்! இப்பொழுது எங்க ளுக்கு இதைக் கேட்கச் சிரிப்பு வர லாம், ஆனல் அன்று தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்படி யெல்லாம் யது சாத்தியமே!
நடககக கூடி
இந் நயமிக்க

கூற்றுடன் பருத்தித்துறை கோட்டு முதலியார் பகர்ந்த சில பதங்கள் ஒப்பு நோக்கற் பாலது. கீழ்க் கர வையூரில் நடந்த ைக மே ஈ சக் கொலை பற்றி கூறப் புகுந்து முத லியார் ‘கந்தன் வேலன் ஒவ் (of) கரவெட்டி ஈஸ்ற் (East) கேம் (came) திறு (through) த கண்டாயம் வித் (with) ஏ சத்தகக் கத்தி இன் (in) ஹிஸ் (his) ஹாண்ட் (hand) அன்ட் 6L (and cut) 4,6073, if 606 b GL65t கதிரி அற் (at) த கழுத்தடி' முத லியாருக்கு ஆங்கிலம் தெரியாவிட் -7இலும் க வினு ம் கவிதையழகு மிகக் கடாவினர் என்க.
இப்படி மகாராணியையும், பாண்டியனையும் ஒரு சேரக் கொலை செய்து படிப்படியாக மேலெழுந்த ஆங்கிலத்தரம் இருபதாம் நூற் முண்டின் ஆரம்பத்தில் வெ ள் வரி துலாத்தில் நிற்க உச்ச நிலை ைய யடைந்தது. இக்காலத்தில் பொன். இராமநாதன் அருணுசலம் போன்ற செம்மல்கள் சிங்கத்தின் குகையில் புகுந்து அவன்களுடைய பாஷையி லேயே க ர் ச் சித் து அட்டகாசம் செய்த போது அவனெல்லாம் கதிரைக்கடியில் பதுங்கிக் கேட்ட தாக மகாவம்சத்தின் மறு பகுதி யிலிருந்து அறியக் கிடக்கிறது
சேக்ஸ்பியரின் நாடகங்களி ல்ை கவரப்பட்டு ஆங்கிலத்தை செம்மையாக அறிந்து அதைத் தரங்குன்றமல் படிப்பித்த பல ஆசி ரியர்களின் முயற்சியிேைலயே இவ் விளைவு ஏற்பட்டது எனலாம்.
எனினும், இருபதாம் நூற்ருண்
டின் இடைக்காலத்தில் மகாராசி
5
யில் எட்டுக் கிரகச் சேர்க்கை ஏற் பட்டவுடன் பிரிட்டிஷ் சாம்ராஜ் யம் சட்னியானது. ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பது களி ல் ஆங்கிலத்தரத்தை அளவற்ற கடு மையுடன் நடைமுறைப் படுத்திய ஆசிரியர்களின் முயற்சியினுல் ஒரு தலைமுறை தமிழைச் சரியாக பேச எழுதத் தெரியாமல் வள ர் ந் து அவர்கள் ஆங்கிலத்
உயர்ந்தனர். தில் சிந்தித்தனர். ஆங்கிலத்தில் பேசினர். இக் கால கட்டத்தில்
இத்தகைய தனி ஆங்கில முயற்ச் சிகள் போற்றப்பட்டதன் காரணங் களை ஒரளவு அறிந்து கொள்ளலாம் எனினும் 1948ற்குப் பின்னரும் பள் ளிக்கூடங்களில் தமிழில் பேசு வதற்கு குற்றம் போடும் முறை நடைமுறையிலிருந்தது தா ன் கோமாளித்தனமாகும். கல் வி த்
துறை களில் செல்வாக்குப் பெற்ற
வாரணம் பிள்ளை, காரணம்பிள்ளை போன் ருேர் ஆங்கிலக் இலட்சியப்படுத்தி "ஆங்கிலச்சிறு வன்’ என்ற இலட்சிய உருவகத்தை எழுப்ப முயன்றனர். ஆணுல் கால ஒட்டத்தில் இப் பிம்பம் உடைய லாயிற்று. இப்பொழுதெல்லாம் ஆங்கில மோகமேறிய கறுத்த வெள் ளையருக்கு வயோதிப காலங்களில் தமிழில் ஆர்வமேற்பட்டது இத் ஞல் தட்டுத்தடுமாறி தமிழ் பேசத் தலைப்பட்டனர். இம் மனேரில் ஒரு வர் சுன்கைம் சந்தைக்குச் சென்று அங்கு கடகத்துடன் விற்றிருந்த ஒரு செ ந் த மிழ் மூதாட்டியிடம் "ஆஸ்ச்சி, துஸ்ட்டுக்கு எஸ்த்தனை கஸ்கரிக்காய்” என்று ஆங்கிலோ - தமிழில் வினவ, இதைக் கேட்டிட ஆஸ்ச்சிக்கு சொடுகுத் தலையில்
கல்வியை
எலுமிச்சம் புளி விட்ட்து போல்

Page 10
6
பற்றிக் கொண்டு வந்தது *மோனை கோஸ்தைக்கு எஸ்தன. .. என்று ஆச்சி சொன்னவை எம்மொழி யிலும் எடுத்தியம்பற் பாலதன்று.
இன்றும். எம்மில் நடுத்தர வர்க் கம் என அழைக்கக் கூடிய கழுதை யுமில்லாமல், குதிரையுமில்லாமல் கோவேறு கழுதைகள் என்ற வர்க் கத்தினரிடையில் த மிழ் மங்கை கன்னிகழிந்தும் கழியாமலும் திரி சங்கு சுவர்க்கத்தில் நின்று தவிக் இதற்குச் சிறந்த உதார "மிஸ்டர் அன்ட் மிசிஸ் டாமோடிரன்” என்ற பாத்திரங் களைக் கூறலாம். “சிரித்திரன்’ சிரிப் பேட்டில் உலாவும் இவர்கள் உரை யாடல் பின்வருமாறு நடைபெறும்.
கின் ருள் னமாகக்
Mrs.
Mr. Mrs:- வட் இஸ் கடைச் சங்கம் Mr. யூ டோ நோ யுவ டமில் கோப்பறேற்றிவ் ஸ்ரோர் தான கடைச சங்கம
டாமோ - டார்லிங் டாமோ :- யேஸ் டார்லிங்
Mrs:- தாங்யூ டார்லிங்.
இன்று ஆங்கிலத் தரம் குன் றிக் கொண்டு வருவதாக பரிச
ளிப்பு விழாக்களில் பல கல்விமான் கள் குறைபட்டுவருவதை ஈண்டு குறிப்பிடல் வேண்டும். இன்று அா சாங்க அலுவல்கள் உயர் மட்டத் தில் ஆங்கிலத்தில் தான் நடைபெறு
கிறது. இதல்ை தனித் தமிழ், தனிச் சிங்களப் பட்டதாரிகளும் வில்லங்கப் படவேண்டியுள்ளது
இத்துடன் இன்று கண்ட கண்ட இடங்கலெல்லாம் ருறிஸ்ட் ஹோட் திறக்கப்படுகின்றன. சில
பழைய கோவில்கள் கூட புதுப்பிக்
கப்பட்டு உல்லாச விடுதிகளாக கும் பாபிஷேகம் செய்யப்படக் கூடும் இவ் விடுதிகளை நடத்துவதற்கு ஆங் கிலம் மட்டுமல்ல பிரஞ்சு, ஜெர் மன் மொழிப் பரிச்சியமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இயல்பே. எப்படிப் பார்த்தாலும் அணைத்துலக மொழிகளான ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளும், ஜெர்மன். உருசிய மொழி போன்ற அறிவிய லடங்கிய மொழிகளும் தெரிந்திருத் தல் நன்று. ஒரு மொழியின் சிறப்பு அம்மொழியில் வேலை செய்யும் படைப்பtளிகளின் எண்ணிக்கையை பொறுத்திருக்கிறது. படைப்பு என் பது இலக்கியம், விஞ்ஞானம் என்று எல்லா மனித முயற்சிகளையும் உள் ளடக்கும்.
வீட்டுக்குள்ளி
உலகையளக்கும்
எமது குச்சு ருந்து கொண்டு யன்னல் ஆங்கிலமாகும். இன்றைய தலை முறையினர் மீண் டும் “சட புட டிம் அற் மாவிட் டபுரம்’ எ ன் று தத் ரூபமாக கார் விபத்தை நடித்துக் காட்டு வது ஒரு தமிழ்ப் புரட்சி என்று கொள்ளமுடியாது.
எனவே
பனம் பால் அருந்தி நிலாவில் நிற்கும் கணபதியார், பள்ளி மான வர்களை நோக்கி “டேய் மறி சைக் கிளை, 'பன்ஞடையும், கொக்கா லா யும் பனையிலிருந்து விழு ந் த து' உன் ரை இங்கிலீசுக்
*9
6T ഒ്f L. ( 5 தாளில் சொல்லு பார்ப்பம் பனம் மனம் கமழும் த மிழி ன் சிறப்பினை யு ன ர் த் தும் திறம் படைத்தவர் என்பதை போகிற G3. urtj, GRAổiv (en - passant) GIFT Gv Gö) வைப்போம்.
Gi Gjit

'அம்பு" என்னும் ஏட்டில் அறி வியலைப்பற்றி " அடியெடா படலை யி ை' என்று அட்டகாசமாக (வீரப் பாளின் வில்லன் சிரிப்பு ஹா! ஹா!
ஹ71 அட்டகாசத்திற்கு உதார ணம்). எழுதினனும் அதன் இயக் குனர்கள் அறிமுக விழாக்களில்
பங்கு கொள்ள அழைக்கப்படும் பொழுது தலைமறைவாகி விடுவதா கக் கேள்விப் படுகின்ருேம், இவர் களுக்குத் தமிழ் எழுத வந்தாலும்
| 7
தெளிவு. இவர்களும் எமது நோக் கில் கோவேறு கழுதைகளே உண் மையைச் சொல் ல ப் போனல் எமது நோக்கில் எ ல் லா ரு ம் கோவேறு கழுதைகளே’
நாமெல்லோருமே காலத்தின் விளைவுகள். எனவே தான் இதில் எது சரி எது பிழை என்பதை அறு தியிட்டுக் கூறி மண் ைட ைய உடைக்க முடியாது.
(வந்தாலுமா?) பேச வரா தென்பது
இக் கட்டுரை பன்மொழிப் பண்டிதர் பழனியாண் டித் தேவர் ஆருவது அனைத்துலக மொழியாராய்ச்சி மகா நாட்டிற்காக (சுமத்திரா தீவுகளில் நடைபெறும்) எழுதியதைச் சுருக்கி, தனித்தமிழை ஓரளவு தளர்த் தித் தருகிருேம். ஆனல் பன்மொழிப் பண் டி த ர் கோவேறு கழுதை என்று எம்மைக் குறிப்பிட்டதற்குப் பலமான ஆட்சேபம் தெரிவிக்க விரும்புகின்ருேம்.
"நான்' ஆணையிட்டால் . . . . . !
முதன் முதலாக கொயாரா கவர்னல் அவரைத் தரி சிக்க வேண்டித் தனது விசிட்டிங் காட்டை வேலையாள் மூலம் கொடுத்தனுப்பினர். காட்டில் ‘* கிடாகாகி, கொயா ரா கவர்னர் ' என்றிருந்ததை வாசித்தவுடன் ' இப்படிப் பட்டவனுடன் எனக்கு ஒரு வேலையும் இல்லை " எனத் திருப்பி யனுப்பினர். வந்தவர் இது த ன து பிழை எனக் கூறி 'கொயரா கவர்னர்' என்னும் பதங்களை அடித்துவிட்டு திரும்பவும் கொண்டு செல்லுமாறு பணித்தார். இந்தத் தடவை அவர் 'அடடா! இவன் கிடாகாகி யல்லவா இவனைச் சந்திக்க வேண்டு மென்றிருந்தேன்! வரச் சொல்லு' என்ருர் .
- ஒரு சென் மாஸ்டரின் கதை

Page 11
18. போன காற்றலை திரும்பி
வருகுது
சென்ற நூற்ருண்டில் காற் (Op&av 35 Gir (wind mills) GLA jib 55 jögðu நாடுகளில் மிகுந்த பிரபல்யமடைந் திருந்தன. எரிபொருள் மலிவாகக் கிடைத்தவுடன், அதற்கேற்ப எரி பொருளில் இயங்கும் என்சின்கள் பல அளவுகளில் விருத்தி செய்யப் பட்டன. அத்துடன் மின்சாரப் பரம்பல் பட்டி தொட்டிகளுக்கும் எட்டியது. இ த ஞ ல் மின் மோட் டார்களும் சிறி ய என்சின்களும் பெருமளவு புழக்கத்தில் வந்தன. இதற்கு முக்கிய காரணம் காற்ருடிலை கள் பருவக் கோளாறுக்குட்டடு வன. இதஞல் இவற்விருந்து வரை யறுக்கப்பட்ட நம்பகரமான சக்தி யைப் பெற முடியவில்லை. எனவே காற்ருலைகள் பின்னணிக்குத் தள் ளப்பட்டு கா ட் சிப் பொருளாகி விட்டன. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு என்பது போலக் காற்றலைகள் இன்று புது மெருகு பெற்று, திறமையாகச் செயல்படக் கூ டி ய முறைகளில் விருத்தி செய்யப்பட்டு வருகின் றன.
இன்று எ ரி பொருள் விஆ வயிற்றைப் ப ற் றி எரியும் வண் ணம் ஏறிக் கொண்டிருக்கிறது. இத ணுல் உலகமெங்கும் சக்தி நெருக் J. L.' (Energy Crisis) 6T disd Fi கமாக ஏற்பட்டுள்ளது! இது முற் றிலும் எதிர்பாராத தொன்றல்ல, எண்ணெய்க் கிணறுகள் சுரண்டப்
புது விசையோடு !
{0
படும் வேகத்தில் சக்தி நெருக்கடி ஏற்படப் போகின்றது என நிலவி யலாளர்களும், புள்ளி விபர” மதிப் பாளர்களும் கொஞ்சக் காலமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த னர். எரிபொருள் எரியும் பொழுது வெளியேற்றப்படும் நச்சு வாயுக் கள் சூழலைப் பாா தூரமாகப் பாதிக் கின்றது என சூழலியல் விஞ்ஞானி களும் இவர் களு ட ன் சேர்ந்து கோஷ்டி கானம் எழுப்பிக் கொண் டிருந்தனர். இவர்களின் கூக்குர லுக்கு அவ்வளவு செவிசாய்க்காத இன்று விழித்துக் கொண்டு விஞ்ஞானிகளின் முதுகில் தட்டிக் கொடுத்து "உனக்கு மூளை தவிர வேருென்றும் இல்லை! அட நீ சொன்ன மாதிரியே நெருக்கடி வந்து விட்ட கே, சக்தி நெருக்கடி யைச் சமாளிக்க மாற்றுக் கண்டு பிடிடா ராஜா " என உற்சாகப்
அரசாங்கங்கள
படுத்துகின்றன.
சூரிய பகவானின் வெப்பம், வாயு பகவானின் ஆற்றல், நீரின்
ஆற்றல், போன்ற பஞ்சபூதங்களில் சக்தி கறக்கும் வேலை மும்மர மார் கப்பட்டுள்ளது. இன்று இயற்கை யாகவே அசையும் எதையும் ஆற் றுப் படுத்தி வேலை வாங்க முடியு மாவென அலசுகின்றனர் விஞ்ஞா னிகள்! தியாகராஜ பாகவதருக்கும் காற்ருலைக்கும் மீண் டு ம் மெல்ல மவுசு ஏற்பட்டு வருகிறது.

காற்ருலேகள் மேற்கத்திய நாடு களில் தண்ணீர் இறைப்பதற்கும், தானியம் அரைப்பதற்கும், வேறு சிறு சிறு தொழில் கூட ங் களை உருட்டவும் பலகாலமாகவே பயன் பட்டு வந்துள்ளன. மேற்கத்திய தொழில் நுட்ப பாரம்பரியத்தில் காற்ருலைகள் ஒரு க ண ச மா ன பங்கு வகித்தன. வித்துவான்கள் டச்சுக் காரர்கள். ஒல்லாந்து தேசத்தின் ஒரு பகுதி கடல் மட்டத்திற்கு கீழு ஸ் ளது. இதனுல் கடலை மறித்து அணைகட் டியுள்ளனர். மழை பெய்யும் காலங் களில் மழை நீர் வழிந்தோடிக்
காற்ருலைகளின்
9
கொழுத்த முடி யாது, செய்மதி களைச் சுழல விட முடியாது. ஒரு நுள்ளானையாவது சந் தி ர னு க்கு ஏற்ற முடியாது, ஆனல் எங்களால் காற்ருலைகள் பற்றி ஆய்வு க ள் நடத்த முடியும் என நம்புகிறேன்!
காற்ருலை பற்றிய ஒரு பரிசோ தனை ஆய்வை கட்டுபத்தை வளா கத்து பொறியியல் மாணவர்கள் நடாத்தியுள்ளனர். இது பற் றி ஆய்வு நடாத்திய மாணவர் திரு ஞானனந்தன் பின்வருமாறு தகவல் தருகிருர் "ஆலையின் சுழல் சக்கர
* அரசாங்கங்கள் விஞ்ஞானிகளின் முதுகில் தட்டிக் " உனக்கு மூளை தவிர வேறென்றும் இல்லை. சக்தி நெருக்டியைச் சமாளிக்க மாற்றுக் கண்டு பிடிடா ராஜா!' என உற்சாகப் படுத்துகின்றன."
கொடுத்து
மின் சித்தன்
கடலில் சேர்வது இதனுல் மறிக் கப்படுகிறது. மழை நீரை தேங்க வைக்காமல் வெளியேற்ற காற்றலை களால் இயக்கப்படும் பம்பிகள் பர Gn 6 var B51 பயன்படுத்தப்பட்டன. டச்சுப் பொறியியலாளர்கள் நீரிய வின் சில துறைகளான நில மீட்பு (land reclarnation), fissillust 60Tub, துறைமுகம் ஆகிய துறைகளில் முன் னுேடிகளாகவுள்ளனர். இது நிர்ப்பந் தத்தினுல் ஏற்பட்ட விளைவாகும் என்பதையும் போகிற போக்கில் குறிப்பிடலாம்.
எங்களால் அணுவெடி (குண்டு என்பது அ நா க ரீ க ச் சொல் )
sy6vé556ír (Turbine blades) QuT65) தீன் மட்டையாலானது. இப்படி நான்கு அலகுகள் கொண்ட இக் காற்ரு:லை 10 மைல் 1 மணி வேகத் தில் காற்றடிக்கும் பொழுது குதி ரைவலுவை உற்பத்தி செய்கிறது. சுழல் சக்கரம் நிலத்திலிருந்து 15 அடி உயரத்தில் நிறுவப்பட்டது” சுழல் சக்கரத்தின் சுழற்சியியக்கம் ( rotorymotion ) g GMADLÜ (@). IT só மூலம் (gear) செங்குத்தான வியக் கமாக மாற்றப்படுகிறது. செலுத் gub g. Gio G (Drving Shaft) (Bufo 99/1b கீழுமாகச் செல்லும் பொழுது அவ் வியக்கத்தை ப ம் பி யை வேலை செய்ய உபயோகிக்கலாம். இவர்

Page 12
20
களின் ஆய்வுகளை ஊ க்கு வித் து, விரிவாக்கினுல் பயன் உண்டாகும். உதாரணமாக 1 2 குதிரை வலுவை 20 அடி உயரத்தில் நிறுவப்பட்ட காற்ருலை உற்பத்தி செய்யுமாயின் நீரிறைக்கும் பம்பிகளுடன் இணைக் கலாம். இப் படி ச் செய்யப்பட்ட காற்ருலே / பம்பி சோடி ரூபா 3000/- க்கு குறைவாக முடியுமென் ருல் ந ன் ரு க சந்தைப்படுத்தக் கூடிய சாத்தியம் உண்டு, மேற்கத் திய நாடுகளில் நடைபெறும் ஆய்வு கள் 1 குதிரை வலு தொடக்கம் 20 குதிரைவலு வரை யில் உற்பத்தி
(metal fatigue) sirut 60 TLDIT as sys) குகள் உடைவதுண்டு. உலோகவிய லில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பிரயோகித்து இத்தகைய வழமை யான குறைபாடுகளை நீக்க முடி யும். 1000 குதிரை வலுக் கொண்ட காற்றலைகள் இந்த உலோகச் சோர் வினுல் பழுதடைந்தன. மின் ஆய் வுக் கழக த் தி ன் ஆய்வுகள் 250 உவாட் வலு தொக்கம் 20,000 உவாட் வலு வரை உற்பத்தி செய் யக் கூடிய பல அளவு ஆலைகளைப் பற்றியன. இவை மின்சாரம் உற் பத்தி செய்வதற்காக மின்னுக்கிக
" உலகமெங்கும் சக்தி நெருக்கடி எக்கச் சக்கமாக ஏற்பட்டுள்ளது. இதனுல் போன மச் சான் திரும்பி வந் தான் பூமணத்தோடு என்பது போல் காற்ாலைகள் புது மெருகு பெற்று திறமையாகச் செயல்படக் கூ முமையில் விருத்தி செய்யப்பட்டு வருகின்றன".
A
- மின்சித்தன்
செய்யக் கூடிய காற்ருலேகளை பற் றியன. காற்றலைகளுக்குத் தேவை யான பராமரிப்புச் செலவு குறைவு. அத்துடன் சிக்கலில்லாத எந்திரங் கள் என்ற முறையில் நுணுக்கமான பராமரிப்பு நுட்பங்கள் தே ைவ
யில்லை.
காற்ருலைகள் பற்றிய விரிவான
ஆய்வுகளை இங்கிலாந்திலுள்ள மின் ஆய்வுக் கழகத்தினரின், சூழல் விஞ் ஞானப் பிரிவு மேற் கொண்டு வரு கிறது. சுமார் இரு ப து வருடங் களுக்கு மு ன் னர் நிறுவப்பட்ட காற்ருலைகள் உ லோ க ச் சோர்வு
স্বত্ত্ব
ளுடன் (generator) இணைக்கப்படும். காற்ருலை உற்பத்தி செய்யும் சக்தி நீரை உயர்த்துவதற்குப் பயன் படும். பின்ன்ர் இப்படிச் சேமிக்கப் பட்ட நீரை நீர் சுழல் சக்கரம் மூலம் இறக்குவதால் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இம் முறை யி ன ல் காற்று வேக வித்தியாசம் போன்ற பாதிப்புகளிலிருந்து ஒரளவு விடு தலை கி டை க் கி றது. சில முறை களில் நேரடியாக மின்சாரம் உற் பத்தி செய்து பற்றறிகளை செய்து, பின்னர் பற்றறியிலிருந்து தொடர்ச்சியாக மின் சக் தி ைய பாவனையாளர்கள் பெறுவர். மின்
&F Triët

சாரப் பரம்பல் கிட்டாத தனித்த இடங்களுக்கு இவை வரப்பிரசாத மாக அமையும்.
காற்றிலுள்ள சக்தியில் அரை வாசியை மட்டுமே எவ்வளவு திற கா ற் ரு லை மூலமாக வேனும் பெறமுடியும். ஆனல் வழ
6) Cliffor
மையாக காற்ருலைத் திறன் 7 சத
விகிதமாகும். இவற்றை 15 - 20 சத விகிதமாக உயர்த்த முடியுமென இவ் வாய்வாளர்கள் கருதுகின்ற னர். சுழல் சக்கரத்தின் அலகுகளின் அமைப்பு, துணைப்பொறியின் திறன் போன்றவற்றிலேயே காற்றலையின் திறமை தங்கியிருக்கிறது. காற்றியக் 56 usi (Aerodynamics) பரிசோத னைகள் மேற் கொள்ளப்பட்டு, அப் பெறுபேறுகளுக்கமைய விசிறி அல குகள் அமைக்கப்படும். காற்ருவைக ளின் விசிறி அமைப்பு பல மாதிரி யாக இருக்கலாம். முன் தள்ளி (pro pelor) மாதிரி இரு அலகு கொண்ட வையாகவோ அன்றி பல நூறு அலகுகள் கொண்ட பிரமாண்ட மான சக்கரம் போலவோ அமை யலாம். காற்றலைகள் திறமையாக இயங்குவதற்கு தரையிலிருந்து 10 தொடக்கம் 60 அடி வரையும் உயர முள்ள கோபுரங்களில் சுழல் சக்க ரங்கள் தாபிக்கப்பட வேண்டும். எனவே மொத்தச் செலவில் கணி சமான பகுதி இப்படி உயர் கோபுரத்திற்கு செலவிட வேண்டிய தவசியம் இந்த ஆய்வுத் தொகுதி கள் பிரிட்டிஷ் காற்ருலே உற்பத்தி பாளர்களை, இத் தொழில் நுட்பத் துறையில் முன்னுேடிகளாக்கும் என் பதில் ஐயமில்லை. இவ்வாய்வு அனு
21
பவங்கள் காற்றலைகளை ஒரு நம்ப கரமான சக்தி உற்பத்திச் சாதன மாக்க முனைகின்றன.
அவுஸ்திரேலிய தா பனம் ஒன்று பலகாலமாகவே காற்ருல் பம்பி எந்திரங்களை உ ற் பத் தி செய்து வருகிறது. இவர்களின் ஆலைகள் அதிசயிக்கத்தக்க ஆற்றல் கொண்டனவாயுள்ளன, ஒரு காற் ருலை 560 அடி ஆழத்திலிருந்து நாளொன்றுக்கு 5000 கலன் நீரை இறைக்கிறது. இன்னென்று 35 அடியிலுள்ள நீரை நாளு க் கு சராசரி 250,000 கலன் வீதம் இறைக்கிறது. இவற்றைப் பார்க் கும் பொழுது நாமும் காற்ருலே களில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. தனித்து விடப்பட்ட கிரா மங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்வதும், நீர் இறைப்பதும் இத ஞல் சாத்தியமாகலாம். இந்தியாவி லும் காற்றலைகள் செல்வாக்குப் பெற்று வருகின்றன என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
ஈழத்தில் காற்று 5 - 15 மைல் மணிக்கு என்ற மட்டத்தில் உண்டு. இங்குள்ள காற்று நிலபரங்களை அறிந்து அதற்கேற்ப காற்றலேகள் அமைத்தல் அவசியம். வரண்ட பிர தேசங்களுக்கு இவை மலிவான சக்தியைத் தரும். செலவும் குறைவு,
பராமரிப்புச்
தொண்டைமஞறு செல்லச்சன் னதியருகில் ஒரு காற்ருலே சிவனே யென்று, சுழன்றுகொண்டிருப்பதை சிலர் கண்டிருப்பீர்கள். (அட்டைப்

Page 13
22
படத்தைப் பார்க்கவும்.) தொண் டைமனறு உவர் நீரை நன்னீராக் கும் திட்டத்தில் பயன்படுமென்ற நோக்கத்தில் நிறுவப்பட்ட் இக்
காற்றலையின் பம்பி பழுதடைந்து
கிடக்கின்றது. கடல் நீரை மறிப் பதற்காகப் போட்ட அணைப் பட லைகள் (Gates) கறள் கட்டியபின் கழற்றப்பட்டுவிட்டன. இது பற்றி மேலும் 'அம்பு' குறிப்பிடவிருக்கி sigil.
அழகான புல்தரையில், புல் லுக்கு வேண்டிய நீர் காற்ருலேயி -ய்ை இறைக்கப்பட்டு - வளரும் புல்லே மேயும் ஆநிரைகள் என்ற தொரு பசுமையான கனவை இளை ஞர் ஞானனந்தன் வளர்த்து வரு கிருர், இக் கனவு நடைமுறைப் படுத்த ப் பட க் கூடியதொன்று. அவர் வாழ்நாளில் இது நிறைவு றும் எனக் கூறி கட்டுரையை முடிக்கிறேன்.
LSLSGSLGSLGSLSLSSLSLSSLSLSSTe
9.
முடவர்களை நடக்கவைக்கும்
பிருந்தாவனம்
ஸ்ரத் கிளைட்!
விபத்துக்களில் சிக்கி காலிழந் தவர்கள், கங்கரீன் உண்டாகி கால் துண்டிக்கப் ப. ட் ட வர் க ள் என் போரின் வாழ்வை ஓரளவு
Fl) நிலக்குக் கொண்டு வருவதற்கு அவர்களுக்குச் செயற்கைக் கால்
கள் பூட்டி நடக்க வைப்பது அவ சியமாகிறது. முழந்தாள் மூட்டிற்கு (Knee Joint) மேல் கால் துண்டிக் கப்பட்டவர் கட்கு செயற் கை க் கால் பொருத்துவதில் பல சிக்கல் கள் உண்டு. செயற்கையான முழந் தாள் கொண்ட் கால் பொருத்தி ஞல், அவர்கள் நடக்கும் பொழுது முழந்தாள் சோர்ந்து விழுந்துவிடு வோம் என்ற பயவுணர்வு (Insecu rity) ஏ ற் படும். மூளையிலிருந்து நரம்புகள் மூலம் கட்டுப் படுத்தும் இயக்கங்களை பொறிகளைக் கொண்டு எவ்வளவு திறம்பட செய்வித்தா
லும் அவை மனத்தில் ஆழ்ந்த நம் பிக்கை யுண் டா க் குவ தி ல் லைப் போலும், செயற்கை மூட்டு வைக் காமல் நேரான கா ல் களை ப் பொருத்தினுல் நடக்கும் பொழுது இழுத்து இழுத்து, நடக்க வேண் டும். உதாரணமாக முழந்தாளை ம டி க் கா ம ல் நேராக வைத்துக் கொண்டு நடந்து பார்த்தால் இந் தப் பிரச்சனை விளங்கும்.
நடக்கும் பொழுது 'மு த லி ல் ஒரு கால் உ ட ற் பாரத் தை த் தாங்க மறு கால் கொஞ்சம் பின் பக்கமாக மடிகிறது. இதனல் கால் நீளம் குறுகி காலை மு ன் வீசும் பொழுது அது நிலத்தில் உரசாமல் முன் சென்று நீள் கி றது. அப் பொழுது இக் கால் உடல் பாரத்தை ஏற்று மற்றைய காலை

விடுவிக்கிறது. எனவே முழந்தாள் தன்னுற்றலாகச் செய்யும் இவ் வேலேயை முழ ந் தாளி ல் லா த நேரான கால் செய்ய வேண் டு மென்ருல் காலின் நீளம் நடைக்கு ஏற்றவாறு தன்னுற்றலாக கொஞ் சம் குறுகி நீளுதல் வேண்டும்.
இந்த நடக்கும் அல்லது "நடை முறைப் பிரச்சனையை அலசிய surg, 6ânt - (Strath Clyde) L's கலைக் கழக பொறியியலாளர்கள் இவற்றிற்கு தீர்வுகளைக் கொண்ட தொரு செயற்கைக் காலை விருத்தி செய்திருக்கிருர்கள், தொலை நோக் காட்டி அமைப்பு முறையில் (Teles cope) காலை உருவாக்கியுள்ளனர். நடக்கும் பொழுது உடற் பாரம் அக்காலில் வந்தவுடன் அங்குலம் குறுகுகிறது. பின் மற்றக் கால் நிறையை ஏற்றவுடன் காலில் உள் ளுக்குள்ள சிலிண்டரிலுள்ள வால்வு திறந்து அமுக்க மேற்றிய காற்றை வேருெரு சிலிண்டருக்குள் செலுத் துகிறது. இதனுல் கா லி ன் நீளம் 14 அங்குலமாக குறுகிறது. இத ணுல் இக் கால் நிலத்துடன் உர சாமல் முன்னுக்கு வீசப்படுகிறது.
23
கா ல் முன்னுக்கு வீசப் படும் பொழுது கால்கள் மீண்டும் வழமை போல் நீண்டு. உ ட ல் பாரத்தை சுமக்க ஆயத்தமாகிறது. இவ்வியக் கங்கள் தன்னுற்றலாகவே நடை பெறுகின்றன.
காலிழந்தவர் ஒரு வ ர் இக் காலைப் பொருத்தி நடந்து பார்த்த பரிசோதனையின் போது “இது ஒரு வரப்பிரசாதம்” என்று குறிப்பிட்
டுள்ளார். இருக்கும் பொழுது மட்
டும் இக்காலை ம டக் கு வ வ ற் கு விஷேச மூட்டுப் போடவும் ஆய்வு கள் நடைபெறுகின்றன. அத்துடன் இக் கால்கள் பாரம் அதி க மா க இருப்பதால் எடையைக் குறைப் பதற்கும் மேற் கொண் டு ஆய்வு கள் நடைபெறுகின்றன. பெருமள வில் இவ் வகை செயற்கைக் கால் களை உ ற் பத் தி செய்வதற்காக வேறும் பல விருத்திகள் செய்யப் படவுள்ளன.
பனி உ றை யும் வடகடலை (North Sea) 6T6 aust 53, Gasnais, L. பிரதேசமான ஸ்கொட்லாந்தின் பி ர தா ன தொ ழி ல் ந க ர ம்
சொல்லக விளக்கது சோதியுள்ளது
கெளதம புத்தர் சீடர்களுக்கு காலைப் போதனை தடத்திக் கொண்டிருக்கும் பொழுது அருகிலுள்ள மரத்திலிருந்து குயில்
ஒன்று விட்டு > விட்டுக் கூவியது. குயில் கூவி முடிந்த பின்னர் வடைந்து விட்டது” எனக் கூறி மேடையை
சென் ருர்,
பேச்சை நிறுத்தியவர், " காலைப் போதனை முடி விட்டிறங்கிச்
- சென் குட்டிக் கதை.

Page 14
24
நகரம் கிளாஸ்கோ
நல்ல செய்தி.
பனி உறையும் வடகடலை எல்லையாகக் கொண்ட பிரதேசமான ஸ்கொட்லாந்தின் பிரதான தொ ழி ல் இங்குள்ள இளைய பல்கலைக் கழக மான ஸ்ரத்கிளைட், நேரடித் தொழில் நுட்பப் பிரச்சனை களுக்கு தீர்வு காணும் ஒரு கேந்திரமாக விளங்குவது பொருத்தமாகும். சந்திரனில் ஓ ர டி எடுத்து வைத்த மனிதகுலம் பூமியில் ஓரடியைச் செம்மையாக எடுத்து வைக்க முடியாதவர்களைப் புறக்கணிக்காமல் இருப்பத
கிளாஸ்கோ. இந் நகரத்தின் கிளைட் கப்பல் கட்டும் தொழிற் கூடங் கள் இத் துறை யி ன் முன்னுேடி யெனப் புகழ் பெ ற் நி ைவ. வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்கள் பல இங்கு கட்டப்பட் டன . எனவே இங்குள்ள இளை ய பல்கலைக் கழகமான ஸ்ரத்கிளைட், நேரடித் தொழில் நுட்பப் பிரச் சனைகளுக்கு தீர்வு காணும் ஒரு கேந்திரமாக விளங்குவது பொருத் தமாகும்.
சந்திரனில் ஒரடி எ டு த் து வைத்த மனித குலம் பூமியில் ஒர
டியை செ ம் மை யா க எ டு த் து வைக்க முடியாதவர்களைப் புற க் கணிக்காமல் இரு ப் பது ந ல் ல செய்தி. ஊமைகளைப் பேச வைத் தல், குருடர்களைக் கா ண வைத் தல் முடவர்களை நடக்க வைத்தல் போன்ற முயற்சிகள் நடைபெறும் இடங்களெல்லாம் எவ்வளவு குளி ராயிருந்த போ தி லும் இதமான பிருந்தாவனத்தின் ஒரு பகுதியே யாகும்!
B. B. C. வெளிநாட்டுச்
சேவை.
ஆதாரம்:
காரணம் கேட்டு வாடி
நம்ப முடியாத மலிவான விலைக்கு கழுதைகள் விற்று
கொண்டிருந்தவரை ஒரு கழுதை வியாபாரி அணுகி
" நான்
கழுதைத் தீனியை களவெடுக்கிறேன். வேலையாட்களின் சம் பளத்தில் கெட்டித்தனமாக வெட்டுப் போடுகிறேன் என்ருலும் இவ்வளவு மலிவாக விற்க முடியவில்லை நீ ங் க ள் இப்படி விற்பதன் காரண மென்ன?" என விணுவினுர்,
" நீ தீனியையும் கூலியையும் களவெடுக்கிருய் நானுே கழுதைகளையே களவெடுக்கிறேன்." என்ருர்,
- முல்லா நசுருதீன் கதை

20.
உலகம் சுற்றிய இன்றைய
மருத்துவர்களும், போகமு னியும்!
பண்டைய இந்திய, அராபிய, சீன நாகரீகங்களில் மருத்துவம், வானசாஸ்திரம், இரசாயனம், இர சவாதம். மிருக வைத்தியம் போன்ற பல விஞ்ஞானத் துறை கள் ஒர ளவு வளர்க்கப்பட்டு வந்திருக்கி றது இம் மூன்று நாகரீகங்களுக் கிடையில் தொழில் நுட்பக் கருத் துக்கள், வாழ்க்கை பற்றிய கண் ணுேட்டம், ச ம ய க் கருத்துக்கள் காலத்திற்குக் கால ம் பரிமாறப்
லியன்றளவு வளர்த்தனர். இவர் கள் அரச சபைகளையும், மத தாப னங்களையும் மரியாதையான தூரத் தில் ஒதுக்கிய படியால் பண வசதி கள், சலுகைகள், சர்ச்சைகள் ( பூ பாண்டிமாதேவிக்கு அழகு கூட்டி யதா? அல்லது பாண்டிமா தேவி பூவுக்கு அழகு சேர் த் தா ள |ா? என்பது போ ன் ற சர்ச்சைகள்). என்ற செ ல் வா க்கு வட்டத்திலி ருந்து அந்நியப்பட்டு, மக்களோடு
" தொழில் நுட்பம், மருத்துவம்; ஆகிய பிரயோக
விஞ்ஞானங்களை தம்மாலியன்றளவு வளர்த்தனர்.
மக்
களின் மட்டத்தில் இயங்கிய சில ஞானபரம்பரையினர். இவர்கள் பண வசதிகள், சலுகைகள், சர்ச்சைகள் ( பூ பாண்டி மா தேவிக்கு அழகூட்டியதா? அல்லது பாண்டி
தேவி பூவுக்கு அழகு சேர்த்தாளா?
என்பது போன்ற
சர்ச்சைகள் ) என்ற செல்வாக்கு வட்டத்திலிருந்து அந் நியப்பட்டு மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்தனர்.
பட்டு வந்திருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. "நாகரீகங்கள்' என இங்கு குறிப்பிடும் பொழுது அரசின் ஆதரவின் கீழிருந்த நிறு வனங்சள் தான் இத் துறைகளை விருத்தி செய்ய முயற்சித்தன. என எண்ணத் தோ ன் று ம். ஆணு ல் பொதுவாகவே அரசர்களையும், பிர புக்களையும் கெட் டி த் த ன மாக ஒதுக்கி விட்டு, மக்களின் மட்டத் தில் இ யங் கி ய சில ஞான பரம் பரைகளே இத் துறைகளை தம்மா
மக்களாக வாழ்ந்து வந்தனர். அர சர் மேல் உலாப்பாடுதல், அரசியை குஷிப்படுத்தக் கவி என்று முதுகு சுரண்டும் தொழி இல வேண் டு மென்றே ஒதுக்கி வந்தனர், என்ப தற்கு இவர்களின் ஞான மார்க் கங்களை சிறிது கவனித்தால் புலனு கும், படைப் பாற்றல் கொண்ட இவர்கள் தெளித்த ஞான வித்துக் கள் தான் அங்கொன்று இங்கொன் ருக முளை த் து க் காலத்திற்குக் காலம் மக்களுக்கு பயன் பட்டிருக் கிறது.

Page 15
26
அக்காலத்திய தொழில் நுட் பக் கருத்துப் பரிமாறலுக்கு போக முனி ஒரு சிறந்த உதாரணம். (நீதி: தொழில் நுட் பக் கருத்துப் பரி மாறல் அனைத்துலக கருதரங்குக ளில் மட்டும் தா ன் நடை பெற வேண்டு மென்பதில்லே } என்னும் சீன மருத்துவர் இந்தியா விற்கு யாத்திரை செய்து, பின்னர் த மிழ் நாட்டில் காலூன்றிக் காலாங்கி நா த ரிட ம் சிட் ைச பெற்று சித்த வைத்தியத் துறை யில் பிரகாசித்தவர். போகர் வைத் திய முறையில் வெள்ளைப் பாஷா 6×7 Lib (Arsenic), 11 frog &F Lib (Mer cury ); 5 iš s 5 Lb ( Sulphur ) போன்ற ஆற்றல் மிக்க மூலகங்கள்
மருந்துகளாகக் கையாளப்பட்டன.
போகர்
அசாத்தியமான நோய்களுக்கு உலோக வகைகள், பா ஷா ண வகைகள், உப்பு வகைகளைத் தேர்த் தெடுத்து இரசாயன விதிப் படி அதற்கதற்கேற்ப அளவில் கலந்து செந்தூரம், பஸ்பம் கட்டு வகை கள் முதலிய பலவிதமான மருத்து களைக் கொடுத்துக் குணமாக்கினர் கள் விஞ்ஞான அறிவு குறைந்த அளவில் இருந்த கர்லத்தில் இப் படிப்பட்ட மருத்துவ விருத்தி அவ் வளவு இலேசான விசயமல்ல.
இவரது சீடரான புலிப்பாணி முனிவரும் சித் த வைத்தியத்தில் புலிப்பாணி வைத்தியத்தை உரு வாக்கி பிரபல்யமடைந்தவர். இவர் கூட ஒரு சீனர் எனக் கூறுவாரு முண்டு டோகர் இந்தியா வெங்கும் சுற்றியதுமல்லாமல் அ ரா பி யா, ருேமாபுரி ஆகிய மேற்கத்திய நாடு களுக்கும் யாத்திரை செய்திருக்கி
ருர், போகரும், திருமூலரும் கிட் டத்தட்டச் சம காலத்தவர்கள். திருமூலரின் குருமட வரலாற்றில் (திருமந்திரம்) “கலந்தருள் காலாங் கர், தம்பால கோரர், நல ந் த ரு மளிகைத் தேவர். நாதாந்தர், புலங் கொள் பரமானந்தர் போக தேவர்.” எனக் குறிப்பிடுகிருர், இவர்களின் காலம் பற்றி எமது ஆய்வாளர் களையணுகிஞல், ஒருவர் கூறுவார் திருமூலரின் காலம் கி. மு. 6000 என்று, வேருெருவர் சில ஆதாரங் களுடன் இவர் களின் காலத்தை கி. மு. 3000 என தி நு வு வார். மூன்ருவது ஆய்வாளர், திருமூலர் 3000 ஆண்டு கைலாயத்தில் தவ மிருந்த படியால் இரண்டு காலங் களும் சரியே எனக் கூறிப்போவார். எனவே இவர்களின் காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் விடு வது நன்று
போகர் சித்தர்களின் ஞா ன ம ர பில் நின் ற வர். சித்தத்தை யடக்கி, சித்திகள் பெற்று வித்தை கள் செய்பவர்கள் சித்தர்கள் என் பது பொதுவான அபிப்பிராயம் ரோமாபுரி, சீன. இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர் சென்று வருவ தாக குறிப்பிட்டுள்ளது வழக்கமான முறையைக் கையாளாமல் குளிகை களைப் போட்டுக் கொண்டு அப்ப டிச் சென்று வந்தாரென்பது ஒரு ஐதிகம். இது எப்படியிருப்பினும் மக்களின் தாளாந்த வாழ்க்கைக்கு தேவையான மருத்துவம், மிருக வைத்தியம், வானியல் போன்ற து ைற கள வளர்த்த பொறுப்பு இவர்களுடையது என நிச்சயமாகக் கூறலாம். அத்துடன் படைப் பாற் றல் மிக் க இவர்கள் மக்களின்

பழகு மொழியிலேயே இலக்கியம் செய்தனர் இதன்மூலம் வாழ்க்கை பற்றிய தமது கண்ணுேட்டத்தை மக்களுடன் பகிர்ந்து கொண்டனர். மக்களுடன் உறவை வளர்த்துக் கொண்டு அரச தொடர்புகளை ஒதுக்குவதற்கு கெட்டித்தனத்தை விட வேறு சிறப்பான காரணமும்
இருந்திருக்க வேண்டும்.
சித்தர்கள், அராபிய சூபிகள் (Suji) சீனத்து சென், தாவு எனப் படும் ஞான மரபுகள் மூன்றிலும் சி ல நெருங்கிய ஒருமைப்பாடு உண்டு. மத - அரச நிறுவனங்களைச் சாராது நின்றமை, சித்தாந்த ரீதி யான சிந்தனை வட்டத்தை ஒதுக்கி யமை, பழைய சமய நூல்களிலி ருந்து சொற்களை அகழ்ந்து சொற் சிலம்பம் ஆடுவதை எள்ளி நகை யாடுதல், மக்களோடு ஒன்ருக புழங் குதல் போன்ற பண்புகளை ஆர்ப் பாட்டமாக வளர்த்து வந்திருக் கின்றனர் இவர்களெல்லோரும்
போகருக்கும், புலிப்பாணிக் கும், தேரையருக்கும், சுதுமலை அண் ணுமலைப் பரியாரியாருக்கும், பாசை யூர் சுப்பிரமணியத்திற்கும் (டாக் டர் P. S.) தெரியாத பல புதிய நோய்கள் இன்று கண்டுபிடிக்கப்ப ட்டுவிட்டன, இவற்றைச் சோதித் தறியவும், போக்க முயலவும் பல புதிய உத்திகள் விருத்தி செய்யப்ப ட்டு விட்டன. இவற்றிற்காக பல புதிய கருவிகள் கண்டு பிடிக்கப்பட் டுக் கொண்டிருக்கின்றன இதற்கா கவே மருத்துவப் பொறியியல் (Me dical Engineering)676i gyuh g568) D வளர்க்கப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் ஆற்றல் மிக்க மருந்துகளும் கருவிகளும், அவற்றை
27
யாள மூண்களும் உண் டு, என்ரு லும் அங்கு இதய நாளங்கள் கடின மாகி விட்டன. இன்றைய ஆஸ்பத் திரியிலுள்ள முக்கிய அம்சமொன்று பிணியாளரினதும், உற்ருர் உறவி னரதும் மனங்களில் கிலேச மூட்டு வது இதற்காக அங்குள்ள வசதி களை விடுத்து போ க ர் போன்று மரத்தடியில் இருந்து நாடி பார்க் கும் படி வலியுறுத்த வில்லை. ஆனல் வசதிகளைப் பிரயோகித்து கிலேச மூட்டாமல் பரிவுடன் மருத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தாமல் இருக்க முடியாது. பரிவுடன் மருத்துவம் செய்ய த் தேவையான அவகாசம் இ ல் லை, மருந்துகள் இல்லை, நோயாளர்கள் கூடி விட்டனர். வியாதிகள் கூடி விட்டன என்பன போன்ற சமா தானங்களில் உள் ள உண்மையை மறுக்க வில்லை. என்ருலும் வ ச தி கள் இல்லா விட்டாலும் அத்துடன் கூடக் கருணையும் இல்லை. இன்றைய சமுதாயத்தில் இல்லாத ஒன்றை மருத்துவர்களிடம் மட்டும் எதிர் பார்ப்பது நியாய மன்று என்பதும் தெரியும்.
விக்கிரமாதித்தன் எ ன் னு ம் ராசாவினுடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பவர்கள் யாராயிருந்தா லும் அவர்கள் விக்கிரமாதித்தன் போலவே சிந் தி த் து, நடிக்கத் தொடங்குவார்கள் என்பது ஐதீகம். கழுத்தில் கொழுக்கியை மாட்டிய வுடன் 'தன்னம்பிக்கையுள்ள சென் டி மென் ட லா கா த, வலிமை கொண்ட இ ன் னு ம் வேறும் பல கொண்ட டாக்டர் பிம்பம் என் னும் முகமூடி உ ரு வா கி றது. கொழுக்கி என்ற விக்கிரமாதித்தன் சிங்காசனம் ஒரு மனிதரை, டாக்

Page 16
28
டர் என்ற முகமூடிக்கு பரிணும்ம்
செய்கிறது போலும்! இதனு ல் நோயாளர்கள் அந்நியப் படுத்தப் படுகிருர்கள்.
மேற் சொன்ன குறைபாடுகள் எல்லா மருத்துவர்களிடமும் இல் லாவிடினும் பொது மக்களின் அபிப்பிராயம் இதுவே. காருண்யம்
படைத்த மனப்பாங்குள்ள நவீன
மருத்துவர்கள் பலர் உள்ளனர்
என்பதும் உண்மையே.
அக்காலத்தில் தொழில் நுட்ப விருத்திக்காக உலகம் சுற்றியவர் கள் போக முனி போன்றேர். இக் காலத்தில் இளைய மருத்துவர்கள்
மருத்துவதுறை விருத்திக்காக உல கம்"சுற்றுகின்றனர். போகர் போன் ருேரின் உலக ம் சுற் ற லுக்கு தொழில் நுட்ப விருத்தியை விட வேறு கா ர ன மும் இருந்திருக்க லாம். எமது டாக்டர்களின் உலக வலத்திற்கு மருத் துவ த் துறை விருத்தியை விட வேறு காரணமும் இருக்கலாம்.
சித் த ர் க ளின் ைவ த் தி ய முறையை மூட நம்பிக்கை எனச் சொல்வது உசிதமல்ல. கழிக்க மூடி யாத ஒரு செல்வம் அவர்களிடம் இருந்திருக்கிறது மக் களு டை ய மனப்புண்ணையாற்றும் பரிவு அவர் களிடம் இருந்தது.
anarana Mara/NYNYn/n/
* நீ மட்டும் சாப்படப் புடிக்
3宠 காதே, உனக்கு
அதைக் கேட்டு நாலு விநாடி கள் கண்ணெடுக்காமல் அவனை ப் பார்த்தார் ஆன ந் த சாமி. திடீ ரென்று இந்த உலகம் முழுவதும் அவருக்குத் தா யா க த் தோன் றிற்று. கெல்லி, மாஸ்கி, சுவரில் மாட்டியிருந்த வர் ண ம் போன ஏசு, மூலையில் அந்த அழு க் கு ச் ச7ய்வு நா ற் கா லி யில் ஒண்டிக் கண்ணை மூடிக் கிடந்த பூனைக் குட்டி எல்லாமே அ வ ரு க் கு தாயாக தோன்றின. இருதயம் முழுவதும் விம்மிக் கொண்டே அந்த அறை சாலை வெளி வானம் எல்லாவற்றி லும் பம்முவது போ லி ரு ந் த து. பார்வை மட்டும் கெல்லியை விட்டு அகலவில்லை lifts;
பார்வை குத் திட்டுக் கிடந்தது. அம் மாவின் அந்தக் கண்கள் -
பார்க்காத
அடிக்
கடி நீர் வடியும் வலது கண் - ஆறு மாதங்கள் அவள் படுத்த படுக்கை யாகக் கிடந்த கி ைட - அனந்த சாமி அவள் ைக ைய வ ரு டி க் Go 95 fr Gisr G . “ pyrnt o grrro punt D என்று அவளுடைய அமைதிக்கை மன்ருடிய நிசிகள். ess a s as a 8
பட் பட் பட் பட் டென்று வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் பறந்தது. அடி வயிற்றைக் கலக்கும் ஓசை
* கெல்லி! நான் மரு ந் து கொடுக்கிறேன் கவலைப்படாதே ”
* நீ வந்தா என க் கு என்னு, கவலை? நீ வந்து நின்னலே போதும் ஏந்துக்கின்னு நடப்பேன்."
- அன்பே ஆரமுதே, நாவல் தி ஜான கிராமன்

புதிய தோருலகம் பாரீர்
1. அலைகடலினடியினிலே அற்புதமாயோருலகம்!
- இளங்கோ. ஆழ் கடலி னடியினிலே ஆணி முத்துத் தானுமுண்டு பேணி யெடுத்து நன்ருய் வாணி பமுஞ்செய் கின்ருர்!
ஒட்சிசனைக் கொண்டதுவுங் கட்புலனைத் தெளிவாக்கித் தட்ப வெப்பஞ் சீராக்கும் நுட்பமுள்ள முகமூடி,
உடலிலனிந்த பின்னர் உள்ளிறங்கி ஆழ்ந்துள்ள கடலி னடியில் முத்துச் சிப்பி பொறுக்கிடுவார்!
பொன்ஞன இவ்வுலகில் மின்னுகின்ற மீன்களையே பன்னூற் றடிகளின் கீழ்ப் படம் பிடித்துப் பார்த்திடுவர்!
இதற்கான கருவியையோ இயம்பிடுதல் மிகக் கடினம்; துள்ளி யெழுங் கடலடியில் அள்ளி யொளி வீசிடவே,
சேமிப்புப் பல கலங்கள் சேர்ந்து மின்னைச் செலுத்துகையில் வில் வடிவ விளக்குகளும் துல்லியமாய் எரிவதுண்டு!
(வேறு) பேரொளியை யிக்கருவி வீசிநிற்கப் பேரழுத்தந் தாங்குபடக் கருவியாலே, விசையாக நீந்துகின்ற மீன்கள் - மற்றும் திசை தெரியாக் கடலடியும் படம் பிடிப்பாரே.

Page 17
30
(வேறு) தொலைதூரம் கடலின் கீழ்த் தொடர் பாக்கும் கம்பிவடம் பலமாகப் போட்டதன் பின் தொலை பேசி பொருத்தினரே!
பனிக்கட்டிப் போர்வையின் கீழ்ப் பாங்கான தோருலகில், நியூக்கிளியர் சக்தி கொண்டு நீர்மூழ்கிப் படகோட்டித்,
திடமான மனதுடனே வட துருவ மூடறுத்துக் கட லடியில் மலைகளினைத் தொடராகக் கண்டார்கள்!
கடனீரி னடித்தரையிற் கனதுளைகள் போட்டபின்பு எண்ணுயிர மடிக்கீழ்
எண்ணெய் வளமாராய்வார்!
ஆராய்ந் தறிந்ததன்பின் பாருடு குழாய் செலுத்திப் பம்பிகளி னுதவியுடன் மேலிழுப்பா ரெண்ணெய்தன!
婆
O9th (Best drom
aveva ora opere
Trinco Road, BATT CALOA.

உணவில் கலப்படம்
(ஏ. எல். ஜெமீல். முஸ்லிம் மஹா வித்தியாலயம் அக்கரைப் பற்று) இன்றைய உலகில் விலைவாசிகளின் உயர்வும், உணவுத் தட்டுப் பாடும் வியாபாரிகளைக் கொள்ளை லாபம் பெறத்தூண்டுவதன் காரண மாக அதிக விலை கொடுத்தும் சுத்தமான கலப்படமில்லாத உணவுப் பொருட்களை மட்டுமல்ல வேறெந்த பொருளையுமே பெற்றுக் கொள்ள முடிவதில்லை. உணவில் கலக்கப்பட்ட பொருட்களையும் அவற் ைற க் கண்டு பிடிக்கும் விதத்தினையும் அறிந்திருப்பது நல்லது.
கடையில் வாங்கி வரும் அரிசியில் கற் களை ப் பொறுக்குவதற் கெனத் தனிநேரம் ஒதுக்கி அவற்றைப் பொறுக்குவது இன்றைய இல்லத் தரசிகளின் அன்ருட வேலைகளில் ஒன்றிவிட்டது. இதுபோலவே கோதுமை யில் வண்டுகளின் தொல்லையும்.
சமையலுக்கு உபயோகிக்கும் மிளகாய்த் தூளில் வண்ணம் கலந்த மரத்தூளையும் செங்கட்டித்தூளையும் கலக்கிருர்கள். இன்னும் நெய்யில் மிருகங்களின் கொழுப்பைக் கலப்பதும், பாலில் கொழுப்புச் சத் தை நீக்கி நீர் சேர்ப்பதும் தற்கால வியாபாரிகளின் நவீன யுத்திகள்.
மேலும் இனிப்புப் பண்டங்கள். சர் பத், பாகு முதலியவற்றில் கலக்கப்படும் வர்ணங்கள் நச்சுத் தன்மையுடையவை.
இப்படிப்பல ரகங்களில் நடைபெறுங் கலப்படங்களை இரசாயனப் பரிசோதகரின் உதவியுடன் தெரிந்து கொள்ளலாம். எனினும் இலகுவிற் செய்யக்கூடிய பரிசோதனை மூலம் இவற்றைத் தெரிந்திருப்பது நல்லது.
கீழே தரப்படும் அட்டவணை பொருட்களின் கலப்படங்களையும் இவற்றைக் கண்டு பிடிக்கும் முறைகளையும் விளக்குகின்றது.
பொருட்கள் கலப்படத்தை அறியும் விதம்,
sy si) பாலில் நீர் கலந்திருந்தால் மீற்றர் உதவி யுடன் இ ைத அறியலாம். அன் றி யும் கொழுப்புச் சத்தை எடுத்திருந்தால் பசை யின்றி நீர் மாதிரியிருக்கும்.
பாற்பொருட்கள் இதில் மாவுகலந்திருந்தால் அயடீனைச் சேர்த்
தவுடன் கரு நீல நிறமாகும்.

Page 18
32
மிளகாய்த்தாள்
கோப்பித்தாள்
வரசனைப் பாக்கு
சீனியிற் சலவைக் s
காரம் கலப்படம்
குங்குமப்பூ
கருஞ்சீரகம்
கிராம்பு
ஏலக்காய்
வண்ண மரத்தூளும் செங்கட்டித் துர ஞ ம் கலந்திருந்தால் நீரில் இதைப் போட்டதும் மரத்தூள் மேலே மிதக்கும் செங்கட்டித்தூள் கரையாது கீழே தங்கிவிடும்
கரித்தூளும் புளியங் கொட்டைத்தூளும் நீர் அடியில் செல்லும் கோப்பித்தூள் மேலே மிதக்கும்.
இதிற்கலக்கப் பட்டிருக்கும் மரத்துண்டுகள் நீரில் போட்டவுடன் மிதக்கும்.
இதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால் “இஸ்” என்ற ஒசையுடன் நுரைத் தல் உ ண் டா வ தன் மூலம் இதன் கலப்
படத்தை அறியலாம்.
வண்ணங்கலந்த வாசனை பூசிய சோளம்கதி ரின் மேற்பகுதியை இதில் கலக்கிருர்கள் சுத் தமான கு ங் கு ம ப் பூ நீரிற் போட்டதும் உடனே கரைந்து கலப்படத்தை வேருகக் காட்டும்.
கருஞ்சாயம் பூசிய புல்லரிசியை கையிலெடுத் துத் தேய்த்தால் கரிய நிறம் கையில் ஒட் டியிருக்கும்.
எண்ணெய் எடுத்திருந்தால் சுருங்கிச் சிறி தாக இருக்கும்.
எண்ணெயை எடுத்து வாசனைப் பொடி பூசி யிருக்கும் ஏலக்காயில் வாசனை குறைவாக வும் கையாற்றேய்த்தவுடன் வாசனைப்பொடி கையில் வருவதாகவுமிருக்கும்.
மேலும் உலர்ந்த பப்பாளி விதையுடன் மிளகும் புகையிலையில் இதன் காய்ந்த இலையையும் கலக்கிருர்கள். சிறிதளவு மிளகை நீரில் போட்டால் விதைகள் மேலே தங்கிவிடும், மிளகு அடியில் தங்கும்.
வச்சிரப்பசையில் கலப்படம் மிக அதிகம், சுத்தமான வ ச் சி ர ப் டாசையை நீரிற் கரைத்தால் பால் நிறத்துடன் வெண்மையான திரவ மாக விளங்குவதோடு, நல்ல ஒளியுடன எரியும்.

| தொழில் நுட்பமும் வாழ்வும்
உழவரோசை, உடைநீர் ஒசை,
Lu DŮ ஒசை!
இருபது வருடங்களுக்கு முன் பெல்லாம் பம்பிகள் (pumps) பரவ லாகப் பாவனைக்கு வரவில்லை அப் பொழுதெல்லாம் துலா வா ல் இறைப்பதற்கு துலா மிதிக்க ஒரு வர், பட்டை பிடிக்க ஒருவர், தண் ணிர் பா ய் ச் ச ஒருவர் எ ன க் குறைந்த பட்சம் மூவர் தேவைப் பட்டனர். கொழுத்தும் வெயிலில் இருந்து தப்புவதற்கு இவர் க ள் விடியற் காலை நான்கு ம ணிக் கு எழுந்து இறைக்கத் தொடங்குவது வழக்கம். இதனுல் ஒருவர் மு ன் னெழும்பிச் சென்று மற்றக் கூட் டாளிகளை கூ க வெனக் கூவி எழுப்புதல் வழக்கம். இப்படியான கூட்டு இறைப்பு முறையினுல் ஒவ் வொரு கமக்காரனும் அ ன் ைட அயலாருடைய உழைப்பை எதிர் பார்த்தும், தனது உழைப்பை அவர் களுக்கு ஈந்தும் வாழ்வை நடாத்தி வந்தனர். இது இப் படி யிருக்க கூட்டு இறைப்பில் ஈடுபடும் கமக் காரர்களை நடுநிசியில் வந்து கூவி யழைத்துச் செல்லுமாம் பே ய்! இறைப்பு மும்மரமாக நடைபெறும் பொழுது, தண்ணிர் அசுர வேகத் துடன் வந்து நீர் கட்டுபவரைத் திணறடிக்குமாம்! அமான்ஷய சக் தியின் அண்மையை யு ண ர் ந் து அவர் ஒடித் தப்பு முன்னர் பேய் அவரை 'அடித்து விட்டுச் சென்று விடுமாம். இப்படியான “ இறைப் புப் பேய்கள் ” பம்ப் வந்த பின்னர் தலை மறைவாகி விட்டன. இதற்கு
smo "செந்தி "
ஒரு காரணம் ப ம் ப் இருந்தால் விடிந்த பின் னர் இறைக்கலாம். துலா மிதிப்பவருக்காகவே வெயி லுக்கு முன் இறைக்கும் பழக்கம் இருந்தது. இரவிரவாகச் சென் று இறைக்கும் வழமை மாறியவுடன் பேய்களும் ஒதுங்கி விட்டன. இன் னுெரு காரணம் பம்ப் உண்டாஞல் உ த விக் கு கூட்டாளிகளைக் கூவி யழைக்கும் முறமை அணுவசியம்.
இன்றெல்லாம், பம்ப் குடா நாட்டில் மிகுதியாகப் பாவனைக்கு வந்துள்ளது. வட பகுதி கூட்டுறவு நிறுவனங்கள் சு ல ப மா ன கடன் வசதிகள் வழங்கிய படியால் பம்ப் விற்பனை தீவிரமடைந்தது. இதன் பலனுக இன்று உப உணவு உற்பத் தியில் முன்னேடியாகத் திகழ்கின றது எனலாம்.
முன்பு வந்த இறைப்பு பம்பி கள் பெரிதானவை. வூல்ஸ் லி, ணுட் எனப் பெயர் பெற்ற இவை பெரிய உருவங்கள். இ த ன ல் இவை ஒற்றைக் தி ரு க் க லி ல் வைத்துப் பூட்டப் பட்டு அதற் கேற்ற சிறிய நாம் பன் க ன் று இழுத்து வர உலா வரும். இன் றைய பம்பிகளான ஈசிபிறைம், அல் கன் போன்றவை கைவண்டியாக இழுத்துச் செல்லக் கூ டி ய ைவ. இன்று கமக்காரர்கள் கையிழுவை யாக பம்பை இழுத்துக் கொண்டு தோளில் மலைப் பாம்பு போல்

Page 19
34
சுருட்டப்பட்ட 14 அங்குலப் பைப் பைச் சுமந்து செல்லுவது வழமை யாகும்.
பட்டை, துலாவால் இறைக் கத் தொடங்கு முன்னரும் துலா வுக்குக் கல்லுக் கட்டுதல், பட்டை கட்டுதல், இறைத்த பின் பு பட் டையை புகையடித்துக் காய்ச்சுதல் போன்ற சில கிருத்தியங்கள் செய்ய வேண்டும். பல மாதங்களுக் கொரு முறை பட்டை மூலைகளுக்கு சாக்கு, றப்பர் துண்டுகள் வைத்து பொத் துதல், பட்டைக் கல்லு மாற்றுதல், பேண் கட்டுதல் போன்ற சில சிறிய பராமரிப்பு வேலைகள் செய்ய வேண் டும். என்ருலும் மூ வர் கூடினல் நிச்சயமாக இறைக்கலாம் எ ன் ற நம்பிக்கை கமக்காரர்களுக் குண்டு. ஆனல் பம்ப் விசயம் இப்படியல் லவே! க யிற் றி ஞ ல் சுற்றி பல தடவை இழு ைவ இழு த் தும் வேலை செய்யத் தொடங்கா விடில் அதை விட எரிச்சல் வேறு இருக்க முடியாது. பம்ப் வேலை செய்யத் தொடங்கிலுைம்"புட் வால்வு"ஒழுகு கிறது பைப்பை பம் பி யு ட ன் g)ở001ởi (g) Lfìi -ởg, G}III ở ff'' (washer) சரியில்லை என்ற தொரு காரணத் தினுல் தண்ணிர் பாய்ச்ச முடியா மல் திண்டாட வேண்டும். பம்பி கள் பொதுவாகவே பழுதடைவ தில்லை யாயினும் பராமரிப்பையும் பாவித்த காலத்தையும் பொறுத்து கழுத்தறுக்கவே செய் கி ன் ற ன. கிணற்றடிச் சகதி சே ற் று க் குள் நின்று கொண்டு பம்பியுடன் மல் லுக் கட்டினுல் தான் இந்த 'சுகா னுபவம் தெரியும்,
இதல்ை கிராமத்துக்குக் கிரா மம் நன்முக ப ம் ப் திருத்துபவர்
ஒருவருக்கு நல்ல கிராக்கி யுண்டு, சில உதிரிப் பாகங்கள் இங்கு கடை சல், வார் த் த ல் செய்யப்படுகின் றன. குடா நாடு முழுவதும் ஓரிரு வகை ப ம் பி க ள் உள்ளதால் இப் பிரச்சனை சுமுக்கமாகத் தீர்க்கப்படு கிறது.
மனித வலுவைக் கொண் டு நீரை வெளியேற்றுதல் பட் ைட துலா இறைப்பு முறையால் முன்பு செய்யப்பட்டன. இன்று இம் முறை வழக்கத்தில் இல்லை. மி ரு க வலு வைக் கொண் டு சூத்திரத்தினல் இறைக்கலாம். இப்படிப்பட்ட சூத் திரங்கள் இங்கொன்று அங்கொன் ருக இருந்திருக்கின்றன. இரு மாடு கள் சூத்திரத்தை சுற்றிச் சுற்றிக் கொண்டு வருகையில், இரு பெரிய இரும்பு வாளிகள் இரும்புச் சங்கிலி மூலம் இழுத்து நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கும். ஒரு ப ம் பி ைய விட இம் முறை முதலும் பராமரிப் புச் செலவும் கூடியவை என்பத ஞல் கைவிடப்பட்டன இ ன் னு ம் இச் சூத்திரங்கள் கழற்றப்படாமல் சில கிணற்றடியில் உள்ளன.
மகாவலி க ங் ைக ஒரங்களில் வாழும் கமக்காரர்கள் கங்கையிலி ருந்து நீர் எடுக்க ஏற்றம் ' என்ற முறையை பின்பற்றுகின்றனர். இம் முறையிலும் மாடுகள் தோலால் செய்யப்பட்ட பட்டையை ஆற்றி லிருந்து இழுக்கின்றன. ஆன ல் மாடுகள் குத்திரம் போல் சுற்றிச் சுற்றி வருவதில்லை. இம் முறையில் மாடுகள் முன்னும் பின்னும் செல் லுகின்றன.
பம்பிகள் செய்வதிலிருந்துதான் நீராவி என்சின் முதலியன விருத்தி

செய்யப்பட்டன. பம்பிகள் மனித னின் அடிப்படைத் தேவையாகிய நீர்த் தேவையை பூர்த்தி செய்ய விருத்தி செய்யப் பட்டதால் இவற் றின் வளர்ச்சி சமு தா யத் தின் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது என த்
துணிந்து கூறலாம். நிலக்கரிச் சுரங் கங்களிலிருந்து ஊறி வரும் நீரை வெளியேற்றவே படம் பி க ள் பல விருத்தி செய்யப்பட்டன. காலியின், தெருவோரமாக ஒதுங்கி நிற்கும் ஒரு பம்பியின் படத்தை மேலே காணலாம்.
3 5
காலியில் குழாய் நீர்த்தட்டுப் பாட்டைச் சமாளிக்க; 10 அடி ஆழத்திலுள்ள நிலத்தடி நீர்ப் படுக் கைக்கு ஒரு குழாயைச் செலுத்தி, அத்துடன் ைக யா ல் இழுக்கும் பம்ப் ஒன்றையும் செய்து நிறுவியி ருக்கிருர்கள் இப் பம்பி பழைய கார்.
சிலிண்டர், பழைய வால்வுகள் என்பன போன்றவற்றில் இரு ந்து ஒரு கருச்சில் (Garage) (o uu பட்டது. மிக வும்
திரு ப் தி க ர மாக இயங்கும் இப் பம்பி பலருக்குப் பயன்படு கிறது.
இப் பம்பியை
பார்த்த பொழுது எ ம து அடிமட்ட
தொழி ல் நுட்ப அறிவு எவ்வளவு விருத்தியாகி விட்
டது என்பதை யுன ர்ந்து கொள்ளலாம். இது போன்று இன் னும் பல பம்பிகள் பாவனையில் இருக்க லாம். மெல்ல மெல்ல தொழில் நுட் பம் இங்கு வேர் விடுகி றது என்பதற்கு இப் ப ம் பி க ள் சாட்சி சொல்கின்றன.
*உழவரோசை, மறகோசை உடை நீர் ஒசை” என்னும் வரிகளை ஒரு பசுமையான க ள ைக் காட் சியை உருவகப் படுத்தப் பாவித் திருக்கிருர் ஒரு பிரபல ப ைழ ய புலவர். இன்றைய புலவர்கள் கிரா மிய வாழ்க்கையை படம் பிடிக்கும் பொழுது "பம்ப் ஒசையை மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

Page 20
"சர்றும் சக்தி மயம்" நேர் 96ി 6].rif;
சந்திர விஜயம் (paypi 2øguyub)
உரையாசிரியர்:தாமரைதிர்னி
(சித்தர் வாழ்த்து) போகன் தன் கதை பக்ர்ந்த சோகன் பாதம்
பாகான மருந்து சொன்ன பாணி பாதம் வேகாதி வேகத்தால் காலந்தன்னை
வென்றிடலாம் என்ற ஐயன் ஐயன்ஸ்டீன்பாதம் வாகாகப் பூமிதனே வலமே வந்து
வளமான காட்சி சொன்ன ககாரின் பாதம் சாகாத இச்சித்தர் பாதம் போற்றி
சந்திர பயணக்கதை சாற்றுவேனே.
(மின் சித்தனும் வேகரும் சந்திர பயணத்திற்கு
அடுக்குச் செய்தல்) மேலான சித்தர்களுட் சித்தனப்பா
மின் சித்தன் அம்பு விடும் விண்ணனப்பா பூலோக வரைபடங்கள் புகுந்து பார்த்தான்
புகழான பஞ்சாங்கம் புாட்டிப் பார்த்தான் *வாலாயமான உன்ரை வோக்ஸ் வாகன் கார்
வலியூட்டி வான் வெளிக்குள் முடுக்கு வாயேல் நாலாம் நாள் நன்ருய்நீ திங்கள் செல்வாய்
நம்பிக்கை!” என்றுறுதி நவின்றனப்பா,
பட்டப் பகல் போல நிலா பொழியப் பார் மேல்
பாங்கான மதி சென்று பாணிசேர “விட்டாயோ இத்தருணம் வேறே இல்லை
விரைந்து போ” என்று சித்தன் சொன்னனப்பா எட்டுக்கலன் பெட்ரோலை விட்டேனப்பா
எட தம்பி எழும்பாதை கதையைக் கேளு கொட்டாஞ்சேனைக்கள்ளுக் குடிச்சேன் பாரு
குதிச்செழும்பிக் குண்டிதட்டிப் புறப்பட்டேனே.

37
(வேறு)
அவ்வழி, -
சுழன்றது சுவிச்சாவி சீறிற்று எஞ்ஜின் !! சடசடத்தது கூெடிஸி , படபடத்தது பொடிவேக் வெண்புகை சரு கெரிந்த தோர் படியெழுந்தது! மயில்வாகனப்பேரா சிரியன் வழி காட்ட வானூர்தி போல வடிவான வோக்ஸ்வாகன் பேஸ்லைன் ருேட்டில் நெடுவழி போவதைக் காண்பார் கண் நோன் பென்னை.
(Galap) மின்சித்தன் வந்தங்கு நின்ருன்
மெக்கானிக் சில்வாவும் வந்தான் இந்நிலத்தோர் புகழ் எண் கணக்காளன்
எலியேசரும் எதிர் நின்றன் அன்னியன் என்றிடலாமோ
ஆதர் கிளாக்கும் அருகினில் நின்றன் அன்னவர் ஆங்கெதிர் கண்டென்
இதயத்து எழுந்ததோர் ஏக்கம்.
வவுத்தினிலும் வாயினிலும் வடிவாய்ப்போட்டு வலது கால் ஒடித்துவில் லன்வடுவாவை மவுத்தாக்கும் “மக்கள்பொட்டு” எம். ஜி. ஆரை
மறுபடியும் திரைவானில் காண்பதெப்போ? கவி கண்ணதாசனது கவிதையெப்போ?
களிக்க வைக்கும் “சிரித்திரனின்’ சேதியெப்போ? புவித்தாயின் மடியை விட்டுப் போகின்றேனே!
போய் மீண்டும் பூமிக்கே திரும்பாவிட்டால்?
மவுத்தாக்கும் மக்கள் பொட்டு எம்ஜியார
போதைப் பொருள் கள்ளைப் புசித்தபின்பு
புளிக்கும் போதேற்படும் பிசகிதென்ருன்
காதைத் திருகிக் கன்னத்திலேயடித்துக்
கலக்கத்தை என விட்டுக் கலைத்தானப்பா

Page 21
38
பாதத்தின் மிதியடி புட் போட்டிலே வைத்துப்
பயணத்தின் விதிகளைப் பகர்ந்தான் - முன்னுட்
கீதைப் பேருரைதனைத் தேர்த்தட்டிலே சொன்ன
கிருஷ்ணன்போல் எங்கள் சித்தன்.
(மின்சித்தன் பயண விதிகளைப் பொழிப்பாகக் கூறுதல்)
பொறல்லச் சந்தியில் புறப்பட்டு பேஸ்லைன் ருேட் வழி பாய்ந்துபோ! பத்துப் Mர்லாங்கு சென்ற பின் பெட்ரோலைப் பிந்தாமல் பூட்டி விட்டுப் புது ஜல வாயு புகுத்தி விடு அஞ்சாதே! ஆக்ஸி லேற்றர் தன்னை அழுத்தியே விரைவாக அமுக்கிவிடு! குண்டலினி என்ஜினிற் கிளர்ந்து பாய மாகாளி எக்ஸ் ஹோஸ்ற்றில் மறைந்து நிற்பசன் "ஆகா" என் றெழும்பிடும் பார் ஜெட்டின் வேகம் கடுகதியில் காற்றைப் போல் பாயம்பாரே களனி கங்கைப் பாலத்தின் மிதப்பின் மீது, சோக்கை இழுத்து மேல் சுவிச்சை சுழற்று சடாரென்று ரொப் கியர் மாட்டிவிடு நோான நீர் மட்டப் பரப்பதற்கு, நிமிர்வாகப் பதினைந்து பாகை தன்னில், எடுத்த ஒரு செக்கனுக்கோர் ஏழு கட்டை, எரிவேகத்தோடு நீ எழும்பிப் பாய்வாய். அதுவே தான் உத்தமனே அரிய வேகம்! ஆகர்ஷ்ண சக்தியையும் அறுக்கும் வேகம்! அவனி விட்டு அமரர்களின் லோகம் காண அப்பனே நீ போகும் அசுரவேகம்! புவியீர்ப் பின் பற்றறுக்கும் விடுதலை வேகம்!
 

39
(இப்படியாகச் சொல்லி விட்டு வேகரும், மெக்கானிக் சில் வாவும் பயணத்துக்கு தயார் செய்ய மின்சித்தன் கவுண்ட்
டவுன் செய்கிருர் .)
* பத்தெடா! சோக் பொத்தெடா! எட்டெடா பிரேக் விட்டெடா! ஆறெடா! பம்ப் அடியெடா
தாலெடா நறுக்கெடா
இரண்டெடா இறுக்கெடா அடுத்தது கோடாலி வெடியெடா சைபர் சரியெடா - சட்போடா” என்ருன்,
(தொடரும்)
----mത്ത , ബത്തml-l.
சந்திர விஜய உரை
-57
அவையடக்கம்:- மாவையான மனதிலிருத்தித், தலையிட்டியானைத் தப்பாமல் வணங்கி, வேகர் பெரு மான் அருளிய சந்திர விஜயத்திற்கு உரை செய்யத் துணிந்தேன், முச் சந்திகளில் ( உறுமீன் வருமளவும் ) வாடியிருந்தும், நான்கு வருடங்க ளாய் பிரபல பல்கலைக் கழக வளாக மொன்றில் வளவுக்கிருந்தும், ஈற் றில் புலித்தோல் போர்த்த பசுப் போல் 'பட்டதாரி' என்ற தொரு புனைபெயருடன் உலாவும் சாதா ரண மனிதன் நான், அறிவியலின்
ஆய்வு கூடப்படிகளிலும் தமிழின் தாழ்வாரத்திலும் ஒதுங்கிய ஒரே துணிவைக் கொண்டே இவ்வுரை செய்ய முயன்றேன்.
தெற்கு வீதியில் பட்டம் விட் டும் - இதை ஒ ர ள வு ஆகாயப் Luulu6OBOT 69luu Giv (feronautics) 6 TGör pylib சொல்லிக் கொள்ளலாம் - வடக்கு வீதியில் வானம் விடுவதைப் பார்த் திருந்தும் (இத்துறையை ருெக்கட் டியல் வளி நிருவாகம் - Rocketry and Space Administration 6 T687 QI

Page 22
40
ஆடம்பரமாகவும் சொல்லலாம் ) காலங்களித்த எனக்கு விண் வெளிப் பயணம் பற்றி வேறேதும் அனுப வம் இல்லை. எனவே, இவ்வுரையில் காணும் பிழைகளைப் பொறுத்தரு ளுமாறு கற்றுத் துறை போக்கிய வளாகத்து அறிவியல் அறிஞர்களை யும், NASA - நாசா நாயகர்களையும் இறைஞ்சுகின்றேன். நாசா என்பது தேசிய ஆகாயப் பயணவியல், வளி fictiourt 5lb (National Aeronautics and Space Administratiou) 676ër னும் அமெரிக்க நிறுவனம். இவர் களின் முயற்சியினுல் தான் அமெ ரிக்க விண்வெளிப்பயணங்கள் நடை முறைப் படுத்தப் பட்டன என்க,
வேகரின் காவியமும் எனதுரை யும் 'விரலுக்குத் தகுந்த வீக்கம்" என்பது போலும். ஆலையில்லா உளருக்கு இலுப்பைப் பூச் சர்க்கரை” என்பது போலும் அமையுமென்க.
வான் பற்றி நின்ற மறை பொருள் கூறுவோம்!
இச் சந் தி ர விஜயத்தையும், வேறும் பல அறிவியல் நூல்களை யும் விரும் பி ப் படிப்பவர்கட்கும், படித்தவற்றை மேற் கொண் டு துருவி உசாவுபவர்கட்கும், என்றும் அறிவியற் செல்வியின் அருள் கிட் டும். சந்திர பயணத்தை வில்லுப்
பாட்டாக இசைப்போருக்கும், கேட்
போர் கட்கும் எல்லா மங்களமும் உண்டாகுக! இது அறிவி ய லா ர் ஆன.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின், ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந் திரந், தான் பற்றப் பற்றத் தலைப் படுந் தானே.
வேகரின் சிறு சரிதம்
வருடத்திற்கு மூன்று மாதம் மட்டும், 50 அங்கு ல ம ைழ பொழிந்து, அந்நீர் நிலத்தில் ஊறி யூறி சுண்ணும்புக் கற் பாறைகளி லுள்ள கோறைகளில் ( கு ைக - * Carern) செறிந்து வருடம் முழுவ தும் வற்ருது சீராட்டி அமுதூட்டும் யாழ்ப்பாணக் குடா நா ட் டி ன் கண்ணே, அதன் மூ க் குப் போல நீண்டு நிற்கும் பருத்தித் துறையரு கில், கீழ்க்கரவை கீழ்க்கரவை என் னும் சிற்றுாரிலே தப்பிப் பிறந்த
வர் வேகர்.
சிறுவயதில் துடியாட்ட மிகுதி யால், பாடசாலைத் தலைமையாசிரி
யரின் முகத்தில் பைப் தண்ணிரை ைக யால் பொத்திச் சீறியடிக்கச் செய்த குற்றத்திற்காக * நீ காடு, கரம்பை யெல்லாம் சுற்றி, குளம், குட்டைகள், வா ய் க் கா ல் க ள் அமைத்து அலைந்து, யானைகளால் துரத்தப் படக் க ட வது ” எனச் சபிக்கப்பட்டவர்.
'மழை பொழிந்து, வழுக்கலா யிருக்கிற புதிய அல்லை அணைக் கட் டுச் சரிவிலிருந்து கீழிறங் கும் யானைக் கூட்டம், ஒய் யா ர மா க தமது முதுகில் சாய்ந்து கொண்டு சறுக்கி யிறங்கும் காட்சியும், சறுக்

குவதிலிருக்கும் தனிச் சு தி யினை புணர்ந்து செ ல் ல வேண்டிய திக் கையும் மறந்து, ச ரி வி லி ற ங் கி முடிந்த பின்பும், ஒன்றன் வாலைப் பிறிதொன்று பற்றி க் கொண்டு திரும்பவும் அணைக் கட் டி ல் ஏறி மீண்டும் மீண் டும் இரவிரவாகச் சறுக்கீஸ் விளையாடும் மாட்சியும், சறுக்கும் பொழுது களிப்பு மிகுதி யால் பிளிறும் ஒசையைக் கேட்டுப் பக்கத்திலிருக்கிற பா ச ைற யி ல்
4
நடுங்கியும் 'நாளை மீண்டும் இச் சரி வுக்கு மண் நிரவிச் சரி செய்ய எப் படிக் கொ ந் தி ரு த் துக் காரரை வெருட்டலாம் என நினைந் துருகி யும், நாட்களை ஒட்டிய நான், காடு களனி சூழ் அல்லையில் பல முல்லை களையும் கண் டு களித்தேன் என வே க ர் த மது அல்லையந்தாதி
என்ற பிர ப ந் த த் தி ல் (அச்சில்)
குறிப்பிட்டுள்ளார்.
போகன் தன் கதை பகர்ந்த சோகன் பாதம் பாகன மருந்து சொன்ன பாணி பாதம்.'
போகர் (Po-Har) - சீன மருத்து வர். இவர் இயற்றியதாகவுள்ள "போகர் சத்த காண்டம்' என்பது ஆங்கிலமும், இன்றைய தமிழும் கலந்த நடையில் எழுதப்பட்டிருக் கிறது. இது போகருடைய நூல் போன்ற மருட்சியையுண்டாக்கும் திறனுள்ள நகல். இந்நகலே யாக்கிய பெயர் தெரியா த கவிஞருக்கு சோகர் எனப் பெயரிடுகிருர் வேகர். சோகர் என்பது Sad case என்ப் - ஆதாரம் போகர் சத்த காண்டம் q65 à Lug of (l'homme - sur - letiger) போக முனியின் முதற் சீடர். பாணி யென்பது புலிப்பாணியைச்
காரணத்தால்
சுட்டுமென்க, புலி மேல் ஏறி ச் சவாரி செய்வதால் புலி ப் பா னி எனப் பெயர் பெற்றவர். “சுகமாக வேங்கை தன்னில் ஏறிக் கொண்டு, நானே தான் சிவகிரியில் த ன் ட பாணி, நாதருக்கு பூ ைச செய்த ..” என்னும் வரிகளால் இது தெளிவாகிறது.புலிப் பாணி பா த ம் போற்றுவது புலி யில் சவாரி செய்தார் என்தபற் கன்று. சித்த மருத்துவ முறையை விருத்தி செய்தவர் என்பதற்காக எனக் கொள்க.
- ஆதாரம் புலிப்பாணி வைத்தியம்
"வேகாதி வேகத்தால் காலந்தன்னை வென்றிடலாம் என்ற ஐயன் ஐயன்ஸ்டீன் பாதம் '
9ysi) (3 u guió sin o só (Albert Cienstien) split; 1879 gaoli 1955 இவர் ஜெர்மனியில் பிறந்து, நாஜிகளின் ஆக்கினையால் இர ண் டாம் உலகப் பெரும் போர்க் காலத் தில் அமெரிக்கா சென்று குடியேறி யவர், நவீன கணித - பெளதிகத் துறைக்ளின் தலைக்குருக்கள் ஐயன் ஐயன்ஸ்டீன், தனது பொதுச் சார்
புக் கொள்கை, சிறப்புச் சார்புக் கொள்கை என்னும் கொள் ைக களால் விஞ்ஞான உலகில்ச் சி ந் தனைப் புரட்சி ஏற்படுத்தியவர். நோபல் பரிசு பெற்ற்வர் கூ ரிய கண்களும், பரந்த நெற்றியும், குழம் பிய தலைமயிரும் கொண்ட இவரது அழகிய புகைப்படத்தைக் கா ஞ தார் கண்ணென்ன கண்ணே! பிர

Page 23
42
பஞ்சத்தின் ஆனந்தத் தா ன் ட வத்தை அவரது முகம் பிரதிபலிக் கிறது என எனக்கு ஒரு பிரமை, அலுப்புச் சலிப்பில்லாமல் நா ன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சில ஆண்களின் பட த் தி ல் ஐயன்ஸ்டீன் பட மும் ஒன்ருகும். (galugs) UL-3605 Universe and Eienstien by Lincoln Barlette என்னும் நூலில் காணலாம். இது
ஒரு ஜனரஞ்சக அறிவியல் நூல்.) ஒளி யி ன் வேகத்தில் செல்லும் ருெக்கட்டில் கால ஓட்டம் ஸ்தம் பித்துவிடும். ஐயன் டீனின் சார் புக் ரெகள்கையின் படி காலம் அல் லது நேரம் வேகத்தைச் சார்ந் திருக்கிறது. ஒளியின் வேகத்தில்ச் சஞ்சாரம் செய்தால் காலத்தை வெல்லலாம் என்க.
வாகாகப் பூமிதனை வலமே வந்து
வளமான காட்சி
gy, f as 5 fsi (Yuri Gagarin) பிறப்பு: 1941 இறப்பு: 1968 விண் வெளியில் சஞ்சாரம் செய்து பூமியை 1 மணி 48 நிமிட நேரம் வலம் வந்த முதல் மனிதர் மேஜர் ககாரின் ஈர்ப்பு விசையை அறுத்
சொன்ன ககாரின் பாதம்.'
துடிக்கும் பிரதிநிதி ககாரின்,
விபத்தில்
துக் கொண்டு செல்லத் மனித குலத்தின் முதல் சோவியத் நாட்டு வீரர் 1968ம் ஆண்டு விமான
சிக்கி உயிரிழந்தார் வீரன் ககாரின்.
‘சாகாத இச்சித்தர் பாதம் போற்றி சந்திர பயணக்கதை சாற்றுவேனே!"
உடலையும் உயிரையும் மனம் விரும்பிய ஒரு துறைக்கு அர்ப்ப ணம் செய்து அத்துறையில் ஏதா வது சாதிப்பவர்கள் படைப்பாளி கள். இவ்வளவு கரிசனமாகச் செய் யப்படும் காரியத்திற்கு அழிவில்லை. படைப்பாளி என்ற தனிமனிதன் இறந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற பணி, வேறு மனங்களில் விதைக்கப்பட்டுத் தேவையான சம யங்களில் தேவையைப் பொறுத்து வேர் விடும். எனவே படைப்பு ஒரு இ ய க் க ம். போகர், புலிப்பாணி
ஐயன்ஸ்டீன், ககாரின் ஆகிய படைப் பாளிகளை இந்நோக்கில் தா ன் வேகர் காண்கிருர் நிறையில்லாத நிலை, நிறை கூடிய நிலை ஆகிய பல நெருக்கடியான கட்டங்களில் உறு தியாகச் செ ய ல் படுவதற்குத் தேவையான பயிற்சி உடலை வருத்தி, உள்ளத்தைக் கூர்மையாக் குவதற்குத் தவமியற்றும் யோகிகள் செய்யும் பயிற்சிகளை விட எவ்விதத்
*மேலான சித்தருள்ளே சித்தனப்பா மின்சித்தன் அம்புவிடும் விண்ணனப்பா'
-sósi d?íb að söl (The Electic A scetic) LÁGT FÅ 5 (5th வேகரும்
திலும் குறைந்தது அ ல் ல என வேகர் கருதுகிருர்,
சமகாலத்தவர் எ ன க் கல்லுண்
டாய்க் கல் வெட்டுகளிலிருந்து அறி

யக்கிடக்கிறது. 'தன்னுற்றலாகச் சித்தத்தை அமைதியாக்கி, சித்தி கள் பல பெறுபவர்கள் சித்தர்கள்' எனப் பெரியோர் ருலும் தன்னைச் சித்தர் பரவணி எ ன் று சொல்லாமல் சொல்லும் ‘மின்சித்தன்” எவ்வித ஆசைகளை
கருதுவர் என்
43
யும் விட்டதாகத் தெரியவில்லை. மின் சித்தரும். வேகரும் வளாக வளவில் சந்தித்ததாகவும், அதன் பின் இரு வரும் திணைக்கள மொன்றில் தின வெடுத்ததாகவும் சாத்தன் பாதிச் செப்பேடுகள் செப்பும்,
பூலோக வரைபடங்கள் புகுந்து பார்த்தான்'
சந்திரனுக்குச் செல்லும் விண் கலத்தின் போக்கைக் கணிப்பதற் கும், விண்வெளியில் ஏற்றுவதற்கும், பூமி யி ல் இறக்குவதற்குமுரிய இடங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும்,
"புகழான பஞ்சாங்கம்
இப் பஞ்சாங்கம் Rstronomical Flmanac என்னும் வானியல் கை
நூலாகும், சந்திரனுக்குச் செல்லும் திசைகளைத் துல்லியமாகக் (கணக்
பயண காலம் முழுவதும் விண் கலத்தைக் கட்டுப்படுத்திச் செய் திகளை வாங்குவதற்குமுரிய இடங் களைத் தெரிவதற்கும் வரைபடங் கள் தேவை.
புரட்டிப் பார்த்தான்'
கிட்டு, விண் கலத்தின் போக்கை அதற்கேற்றபடி) கட்டுப் படுத்த வானியல் கைநூல் உதவும் என்க.
*வாலாயமான உன்ரை வோக்ஸ் வாகன் கார்
G af a st sov SJ J 6 år (Volks Wagon) பிரபலமான ஜெர்மனிய கார். இதன் ஜெர் ம ன் பெயர் Volks (Folks) – LDé4,6r Wagon – வாகனம். அதாவது மக்கள் வாகனம் எனப் பொருள் படும். மிக நன் முகப் பெற்ருேல் வேலை செய்யக் கூடியது (கலனுக்கு 40 மைலுக்கு மேல்) என்பதனுல் ஈழத்தில் இக் கார் டாக்சியாகப் பயன்படுகிறது. இனி இக்காரின் சாமுத்திரிகா லட் சணமாவது, வண்டைப் போலவும், (Beetel)பின்பக்கம் செட்டையறுந்த
தாராப்போல சடக் என இறங்கும், ஒடும் பொழுது மிகக் குறைந்த காற்றெதிர்ப்பு வி ைச களை த் தோற்றுவிக்கக் கூடிய ஆகாய இயக்
கவியல் அடிப்படையில் செய்யப்
பட்டிருக்கிறது. பல காற்றுச் சுரங் கப் பரிசோதனைகள் மூலம் குறைந்த காற்று எதிர்ப்புக்காக டி ைச ன் செய்யப்பட்டது. எனவே தான் வேகர் வலாயமான 'வே (ா க் ஸ் வா கன்" எனக் காரை வாழ்த்தி ஞர் என்க.
வலியூட்டி வான் வெளியில் முடுக்கு வாயேல்
வாலாயமான காரை வா ன் வெளியில் எப்படி முடுக்குவது என்று பலரும் வினவலாம். வேறு ருெக்கட்
அவரிடம் இல்லாதபடியால் வேகர் வோக்ஸ் காரை எழுப்பவேண்டிய தாயிற்று எனலாம், அத்துடன் இப்

Page 24
44
படிப்பட்ட பூ ர ாயமான விண் வெளிப் பயணத்திற்கு அறிவியல்ப் புனைகதை மன்னர்கள் தாராளமாக வழி வகுத்திருக்கின்றனர். எனவே வோக்ஸ் கார் விண்வெளி செல்லல்
மரபின் பாற்பட்டதே. கலத்தை பீ ரங் கி ஏற்றுகிறது என்பது G3anu Gorffløöt (Jules Verne) is fibLuðb07.
1901-ம் ஆண்டு வெல்ஸ் (H. G Wells) ‘அம்புலியில் முதல் மனிதன்" (First Man on the Moon) 6T6576), a நவீனத்தில் க வ ைர ட் என்னும்
புவிஈர்ப்பு விசையை எதிர்க்கும் சக்தி வாய்ந்த மருந்து விண்கலத் தில் பூசப்படுவதனல் பூமியிலிருந்து கலம் தப்பி எழும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இ ன் ைற ய ஜெர்மன், ரஷ்ய, அமெரிக்க ருெக் கட் இ ய ல் நிபுணர்களுக்கு இந் நூல்கள் ஆதர்சமாக விளங்கியிருக் கின்றன குறுப்பிட வேண்டும். - (ஆதாரம்:- Man on the Moon by Mensfield)
என்பதைக்
பட்டப்பகல் போல நிலா பொழியப் பார் மேல் பாங்கான மதி சென்று பரணி சேர'
வேகர் பரணி சேர என்னும் பொழுது விண்கலம் வெளியேற நிச் சயி க் கப் பட்ட திசை கோட் சேர்க்கை (orientator) யைக் குறிப் பிடுகிருர், பூமி யி லி ரு ந் து கீழ்த் திசையை நோக்கி ருெக்கட் ஏ ற் றப்பட்டால், பூமியின் சுழல் வேக மும் இத்துடன் போனசாகக் கூட் டப்படும். இதற்கு ஏற்ருற் போல் சந்திர - பூமி நிலை கள் அமைதல் அவசியம், பூமியின் சுழ ல் வேகத் தில் முழுவதையும் (1000 மை/மணி) போனசாகப் பெறல் 18 வருடங்க ளுக் கொருமுறையே சாத்தியம். எனினும் இதில் ஒரு பகுதியையா வது பெறுவதற்கு ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மா த மு ம், அம் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தின மும் உண்டு. அத்துடன் சந்திரனுக் குச் செல்லும் திக்குக் கோணத்தின் 674#3 ( range of the angle of rocket firing ) g853, 5, 19.u 1.5 T 5 வும் அமைய வேண்டும். (ஆதாரம்:- H.M.S. O. hand book on space,
உ ச் சத் திசையமைவிலிருந்து சந்திரன் நட்சத்திரத்தைச் சேர வானத்தில் 13 பாகை 20 கலேகள் சஞ்சார ஓட்டமாகச் செய்ய வேண் டும்.
(ஆதாரம்: வாக்கிய பஞ்சாங்கம்)
TL- FL-j535 Gargasin (Chasis) UL ULigöğı GuTıp Gsuii (Body Work) என்னும் வ ரி க ள |ா ல் என்சின் அதிர்வை வேகர் உணர்த்துகிருர், க்ார்களுக்கு செசி என்பது நாரித் தண்டு போன்றது. இதற்கு மேல் பொடி, எ ன் சின் முதலியவற்றை வைத்துப் பூட்டுவர். பொடி தகரத் தாலானது. இ ைத காலத்திற்குக் காலம் கறள் தட்டிப் புதுப்பிப்பர். பதினைந்து வருடங்களுக்கு மு ன் பு
சிங்கள ரிங்கர்களும், மலையாள ரிங்
கர்களும் யாழ்ப்பாணத்தில் திறமா கத் தொழில் செய்தனர். இன்றைய யாழ்ப்பாண ரிங்கர்களும், மெக்கா னிக்குகளும் இச்சிங்கள மலையாள தொழில் விண்ணரிடம் முறையாக,

அடிவாங்கித் தொழில் பயின்றவர். (ஆதாரம்: மின்சித்தனின் யாழ்ப் பாண க ரா ஜி வைபோக மாலை (அச்சில்) இறுக் க ம |ா க பொடி அடித்த பின்பு அவற்றிலுள்ள மேடு பள்ளங்களைக் கரிசனையாக பரிவுடன் த ட விப் பார்த்துத் தேவையான இடங்களில் மெல்லிய தட்டுகள் போட்டு ஒரிஜினல் நிலபரத்திற்கு கொண்டு வரும் திறம்படைத்த கலைஞர்கள் அங்கு உண்டு. வேகர் தனது காரை இப்படிப் புதுப்பித்த பின்பும் சட சடத்தது அதற்குக் காரணம் அவர் சென்ற அ சுர வேக மென்க. இங்கு மயில்வாகனப் பேராசிரியர் மறை வழிகாட்ட' என்ற வரிகளில் பேரா df u i to us si) in d, so b (Prof A. W. Mailwaganann ) RF p is gif இரண்டு தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு *வ கித் த பேராசிரியர் இலங்கைப் பல்கலைக் கழக பெளதிகத் துறைப் பேராசிரியராகவும், ப தி ல் துணை வேந்தராகவும் பணி யாற்றிஞர் கேம்பிரிட்ஜ் பெளதிக ஆய்வு கூடத் தி லி ரு ந் து ஏர்னஸ்ட்றுதர்போட் தனது பிரபலமான அணுச் சிதைவு ஆய்வுகள் சிலவற்றை மேற் கொண் டார். இவ் விஞ்ஞான ம ர புக ளே ஈழத்திற்குக் கொண்டு வந்த முன் னுேடிகளில் ஒருவர்.
மெக்கானிக் சில்வா (Urugoda Wattage Mechanics lage Silva) காரை விண் வெளிக்கு ஜெட்டாகத்
எ ன் ரு ல்
45
தயார் செய்த மெக்காணிக் சில்வா எட்டு மூலை நட்டை (Nut) குறட்டி ஞல்த் திருகித் திருகி வட்ட வடிவ மாக ஆக்கும் திறன் படைத்தவர் எனினும் என்சினில் புதுமை செய்வ தில் நியூவேவ் நிபுணன்.
6 si6 (3 is a ii (Prof.C. J. Eliazer) இவர் இங்கிலாந்தில் சக்திச் சொட் (di Gas Irgit 605 (duantom theory) பற்றிய ஆய்வுகளில் முன்னணியில் நின்ற பேராசிரியர் தைராக் (Dirac) உடன் உதவியாளராகப் பயிற்சி பெற்றவர். வேகர் படித்த பா ட சாலை பழைய மாணவனை இவர் இலங்கைப் பல்கலைக் கழக கணித வியல்ப் பேராசிரியராகவும், விஞ் ஞா ன பீட அதிபராகவும் பணி யாற்றி யிருக்கிருர்,
gig i d5 617 gó (Arthur C. Clark) இவர் அறிவியல் புனைகதை களின் இன்றைய கண்ணதாசன்! இ வ ர து புனைகதைகளில் மிக ச் திரான முறையில் தொழில் நுட்பப் பிரச்சனைகள், வி தி கள் போன் றவை காவியம் போலக் கையா ளெப்படுகின்றன. இவர் விஞ்ஞ t னத்தின் வளர்ச்சி பற்றி ஆரூடம் சொல்லும் தீர்க்கதரிசி. இவர் பல் லாண்டுகளுக்கு முன்பே செய்மதி கள், சந்திர ப ய ண ம் இவற்றின் நிச்சயமான சாத்தியக் கூறு க ன் பற்றி அடித்துச் சொன்னவர். ஈழத் திற் பல காலமாக வசித்து வரு கிருர் எ ன் பதும் குறிப் பி ட ற் பாலது
"குண்டலினி என்சினில் கிளர்ந்துபாய மாகாளி எக்ஸ் ஹோஸ்ற்றில் மறைந்துகிற்ப ஆகா என்றெழும்பிடும் பார் ஜெட்டின் வேகம்!
மேற் குறித்த பாடல் மின் சித் தன் பகர்ந்த பயண விதிகள் என்க.
திரவ ஐதரசனும், திரவ ஒட்சி ச னும் சேர்ந்து மிளா சி எ ரி யும்

Page 25
46
(Combustion) G U IT gf 67 fibuGħ சக்தி வெளிப்பாட்டை வெகு நேர்த் தியாக குண்டலினி எ ன் சினி ல் கிளர்ந்து பாய, மாகாளி எ க் ஸ் ஹோஸ்ற்றில் (exhaust) மறைந்து நிற்பாள் என்கிழுர், மாகாளி என் பது பிரம்மாண்டமான சக்தியின் வெளிப்பாடு. இதைக் காளி என்று பெண்மை உ ரு வம் கொடுத்துக் கவிதை நயத்தைக் கூட்டுகிருர் வேகர். ஜெட் என்சின்கள், ருெக் கட்களில் விசை எரிந்த பொருட்கள் வெளியேற்றும் குழாயடியில் தான் இருக்கிறது என்பதையும் இங்கு
கவனிக்க வே ண் டு ம். குண்டலினி என்பதும் உள்ளார்ந்த சக்தியின் (Internal Combustion) 6 on ti j6) யாகும். ஐதரசன் இடும் வால்வுக்கு இரு அடி கீழேயும், பு ைக வெளி யே ந் நூறு ம் பீ ச் சு வாய் குழாய் (Exhaust) க்கு இரு அடி மேலேயு மாக உருவிடும் சோதியைக் கட்டுப் படுக்தி ஸ்திரப்படுத்தினுல் அங்கு கூவிக் கொண்டு குடியிருச்கும் சக்தி குழாய் வழியாக வெளியேறுவாள் என்க. இதிலிருந்து மேலும் விபரம் வேண்டுவோர் மண்ணில் இருந்து விண்ணிற்கு" என்ற நூலை உசாவுக.
"அதுவேதான் உத்தமனே அரியவேகம் ஆகர்ஷ்ண சக்தியையும் அறுக்கும் வேகம்,
பூமியினுடைய ஈர்ப்பு மண்ட லத்தினின்று விடுதலைபெற்று வெளி யேற ம ணிக் கு 25,000 மைல் வேகத்தில் அல்லது செக்கனுக்கு ஏழு மைலில் ருெக்கட் செல்ல வேண் டும். சந்திரனின் ஈ ர் ப் பு வி ைச குறைவானது தெரிந்ததே. சந்திர னிலிருந்து விடுதலை பெற தேவை யான வேகம் மணிக்கு 5,500 மைல் களாகும். இவ்விடுதலை வேகத்தை (escape velocity) விடக் கொஞ்சம் குறைவான வேகத்திற் சென்றல் சந்திரனுக்குச் செ ல் ல முடிடிம். மணிக்கு 18,000 மைல் வேகத்தில் ஏற்றப்படும் முெக்கட் பூ மியின் செய்மதியாகிறது. இதற்குக் குறை வான வேகத்துடன் ஏற்றப்படும் ருெக்கட்கள் தரையை நோக்கி விழுந்து விடும். அத்துடன் இவ்வேக மானது காற்று மண்டலம் கடந்த பின்பு தான் பெறப்பட வேண்டும். அல்லாவிடில் காற்று எதிர்ப்பு விசை யினுல் ஏற்படும் உக்கிரமான வெப் பத்தில் ருெக்கட் பஸ்பமாகி விடும். எனவே மூன்று கட்டங்களில் வேக
மேற்றும் ருெ க் க ட் என்சின்கள் பயன்படுவதவசியம் காற்று டலம் பூமியைச் சுற் றி 30 மைல் ஆழமுள்ள ஒரு மெல்லிய போர் வையாகும். ஆகர்ஷ்ண சக் தி ைய யறுக்கும் வேகம் என்பது 24,500 மை/மணி வேகமாகும். என்ருலும் களனி கங்கைப் பாலத்துத் தட்டி லிருந்து இவ்வேகத்துடன் வோக்ஸ் வாகன் கிளம்பியிருக்க மு டி யு மா வென்பது சந்தேகம்
(ஆதாரம்; டாக்டர் இந்திரகுமா ரின் மண்ணில் இருந்து விண்ணிற்கு)
o ni si - o si (Count down) க வு ன் ட வு ன் எ ன் பது பரி பாஷையில் மின் சித் தன் கருவி இயக்கங்களைச் சோதனை செய்தும், இயக்கிப் பார்க்கும்படி வே க ரி ட மும் சில்வாவிடமும் கூறு கி ரு ர். இதை ஆதிபரியந்தம் விபரிக்க முடி யாது. நடைமுறைக்கை நூலின் படி (Manual procedure for s p a c e flight) இப் பரிபாஷைகள் உருவாக் கப்பட்டன.

பெயர்:-
விலாசம் :-
குறுக்கெழுத்துப் போட்டி இல, 1
《 ། TX |
元一十一正 <کك
Mù) || ||—||—||X
10 | 2
X X
:
1. 2.
வெட்டவும் அல்லது பிரதி பண்ணவும், இடமிருந்து வலம்:. V
பிரபலமாகிக் கொண்டுவரும் அறிவியல் எழுத்தாளனின் புனைபெயர் அற்புதங்களைச் செய்யும் வல்லமை படைத்தவன் பாத்திரங்களைத் துலக்க இலங்கையிலுள்ள ஒரு தூள். குறிஞ்சியிலுள்ளது குழம்பியுள்ளது. பயிர் வளர்ச்சிக்கு அவசியமான உப்பு ஒன்றை வழங்கும் இயற்கை gd Otto இது இல்லையேல் சொல்லும் தெளிவில்லை. ஒரு பழம் உள்.க்கதிர்களாலே, நோவுகள் குணமாக்கப்படுகின்றன மேலிருந்து கீழ்
சக்தியின் ஒரு வடிவம் குரங்குகளில் ஒரு வகை. உடலின் ஒரு முக்கிய உறுப்பு. கவிஞனின் கற்பனையில் இருந்து வந்த இதனை இப்போது விஞ்ஞா னிகள் முக்கியமாக ஆராய்கிருர்கள். உடைகளில் ஒன்று ஆதிகாலத்திலேயே கற்பாறைகளில் தோன்றிய பாசி வகை. சீமெந்தின் மூலப் பொருள்களில் ஒன்றையும், ஆபரணங்களில் பதிக்கப்படும் விலைமதிப்புமிக்க முத்தையும் இதில் காணலாம். மீன்களுக்கும், ஈக்கட்கும் யமன்
விண்ணில் விரையும் இதில் நீங்களும் நிச்சயம் விரைந்திருப்பீர்கள்.

Page 26
28
இப் போட்டியிற் பங்கு பற்ற விரும்புபவர்கள்
முற்பக்கத்தில்
காணப்படும் அம்பு சின்னத்தையும் கத்தரித்துப் போட்டிக்கான விடை
டும்.
யுடன் இணைத்து செப்டம்பர் 20-ம் திகதிக்கு முன் அனுப்ப வேண்
சரியான விடையை அனுப்பும் முதல் ஆறு அதிர்ஷ்டசாலிகட்கு, அம்பு இதழ்கள் ஆறு மாதத்திற்கு இலவசமாக அனுப்பிவைக்கப்படும்.
முதலாவது அனுப்பிவைக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி:
A. H. A. Usir
நிர்வாக ஆசிரியர், சாகிராக் கல்லூரி,
கல்முனை.
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூபா
25/. பரிசாக
பரிசளிப்பவர்.
எம். ஏ. எம். ஜமீல் ஆசிரியர், சாகிராக் கல்லூரி,
கல்முனை.
புகையடிக்காத புதுமையான
பஸ் வெள்ளோட்டம்
- வெ. ஜெயதீசன், இராமகிருஸ்ண மிசன் பாடசாலை, கல்முனை.
எரி ெபா ரு ஸ் விலை யேற்றத் தைத் தொடர்ந்து, பற்ற றி யில் இயங்கும் பிரயான சாதனங்களை விருத்தி செய்வதில் கவனம் குவிந் திருப்பது தெரிந்ததே! மான் செஸ் டரில் சென்ற மாதம் தொடக்கம் பற்றறியில் இயங்கும் பஸ்கள் சில பரீட்சாத்திகரமாக ஒட விடப்பட் டுள்ளன. இப் பற்றறிகளை 'குளோ ரைட்" தாபனம் உற்பத்தி செய்கி sog. 2)ß5 (lead acid) Q6vL-96l - (கார் பற்றறி வகை) 330 வோல்ட், பற்றறிகளில் 165 செல்கள் உண்டு. தொடர்ச்சியாக 280 அம்பியர் மின் சாரத்தை இவை வழங்கும். இந்த பஸ்கள் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தை எட்டக் கூ டி ய ைவ பகல் முழுவதும் இயங்கிய பின்னர் இரவில் பற்றறிகள் சார்ஜ் செய் யப் படுகின்றன. 34 மணியில் முழு
மையாக சார்ஜ் செய்யக் கூ டி ய
பற்றறி சார்ஜர்களும் விருத்தி செய் யப் பட்டுள்ளன என்சினிலிருந்து பு ைக கக்காமல், அதிர்வுகளின்றி, சத்தம் அதிகமின்றி இயங்கும் பஸ் களுக்கு Silent rider எனப் பெயர் சூட்டி யுள்ளனர் 50 பேரை ஏற்றிச் செல்லும் இவை வெகு விரைவில் பிரபல்யம் அடையும் என உற்பத் தியாளர் கருதுகின்றனர். இ ைவ பிரேக் போடும் பொழுது, அந்த ஆற்றலை திரும்ப வும் மின்சார மாக்கி பற்றறிகளை சார்ஜ் செய் utb regenerater braking 6T667 னும் முறை பாவிக்கப் பட்டுள்ளது. டீசல் பஸ்களை விட இ வ ற் றி ன் பராமரிப்புச் செலவு குறைவு. தற் பொழுதுள்ள ஆரம்ப நிலையிலும் இவற்றின் விலை டீசல்பஸ்களை விட 1ழ் பங்கு மட்டும் அதிகமாகும் நாள டைவில் இவை டீசல் பஸ்களை விட மலிவாகக் கிடைக்கக் கூடும்.

குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சங் கத்தினர் 24 - 5 - 74 வெள்ளியன்று சன் மாாக்க சபை மண்டபத்தில் 'அம்பு பற் றிய ஆய்வரங்கு ஒன்றை நடத்தினர். விழா விற்குச் சங்கத் தலைவர் திரு. க. சிவபாலன் தலைமை வகித்தார்.
திரு. செ. அசோகமூர்த்தியவர்களின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமாகியது. தலைவர் சிவபாலன் பேசுகையில், 'அம்பு' சஞ்சிகை யின் தனித்துவத்துடன் போட்டியிட இன்று வேறு சஞ்சிகைகள் கிடை யாது என்ருர்,
இவ்வரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய வசாவிளான் மத் திய மகா வித்தியாலய ஆசிரியர் திரு. த. அரிய ரத்தினம் B.Sc. அவர்கள் தமதுரையில் “இப்பத்திரிகையில் மணிமணியான தலைப்புக்கள் இடப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்தால் நிச்சயமாக இச் சஞ்சிகை வளரமுடியும்” என்ருர், தொடர்ந்து பேசுகையில் 'மின் சித்தனின் முயற்சியைப் பாராட்டிய அவர், 'முத்துக் குளிக்க வாரீகளா?" போன்ற அம்சங்கள் மிகவும் சிறப்பாயமைந்துள்ள தாகக் குறிப்பிட்டார்,
செல்வன் பூ. சிறீஸ் கந்தபாலன் அம்பு இதழ்களில் வெளியான உயிரியல் சம்பந்தமான கட்டுரைகள் பற்றி விரிவாக விமர்சித்தார்.
செல்வன், பொ. சிவராசா, ஆசிரியத் தலையங்கங்களின் சிறப்பினை எடுத்துக் கூறி, இரண்டாவது இதழில் வெளியான ஒட்சிசன் என்பது போன்ற சுயசரிதைக் கட்டுரைகள் ( நிர் வாக ஆசிரியர் எழுதிய) தொடர்ந்து அம்பில் வெளிவர வேண்டுமெனக் கூறினர். தொகுப்புரை வழங்கிய இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள் அம்பு குழுவினரின் முயற்சியைப் பாராட்டிப் பேசுகையில் 'இன்றைய அறிவியல் சஞ்சிகை களுள் 'அம்பு தனித்துவத்தை யுடைய சிறப்பான சஞ்சிகை" என்ருர்.
அம்பு சார்பில் கலந்து கொண்ட செல்வன் சி. இள ங் கே ர 'அம்பு வளர்ச்சி பற்றியும், அதில் இடம் பெறும் அம்சங்கள் பற்றியும் விரி வாக எடுத்துரைத்தார்.
இறுதியாகச் சங்கத்தின் செயலாளர். பொன். பாலகுமார் நன்றி யுரை கூறிஞர்.

Page 27
50
கட்டுபத்தைப் பல்கலைக் கழக வளாகத்தின் தமிழ்ச் சங்கம் 'அம்பு' பற்றிய தொரு அறிமுக விழாவை 27-6-74 இல் நடத்தியது. இவ்விழா வில் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 'அம்பின் கடந்த ஆறு இதழ்களையும் விமர்சித்த திரு. க. பாலேந்திரா, ‘அம்பு' விஞ்ஞானத்தை மிகவும் கவர்ச் சிகரமான முறையில் பொப் தலையங்கங்களுடன் ஜனரஞ்சக மாக்கு கிறது” எனக் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில் * அறிவொளிக்குப் பின்னர் ஒரு திட்ட வட்டமான கொள்கையுடன், அறிவியலை ஜனரஞ் சக மாக்கும் ஒரு ஆற்றல் மிக்க இயக்கமாக ‘அம்பு' பரிணமித்துக் கொண் டிருக்கிறது” என்றும் சொன்ஞர் இதற்கு உதாரணமாக 'ஒன்றும் ஒன்றும் இரண்டுந் உன் மேலாசை கொண்டு என்ற கம்பியூட்டர் பற்றிய கட்டு ரையையும் 'சின்னச் சின்னப் பார்வைகள்', ‘முத்துக் குளிக்க வாரீகளா?', 'மறைந்திருந்தே தாக்கும் மர்பமென்ன?" போன்ற பல கட்டுரைகளையும் விமர்சித்தார். இவ்விழாவில், கவிஞர். அம்பி, திரு. க. சச்சிதானந்தன் திரு ஞானனந்தன், திரு குமாரபாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
As (S அன்புடையீர்!
தங்கள் கடிதமும் அம்பு இதழ்கள் இரண்டும் கிடைத்தன. நன்றி. சஞ்சிகையின் இரு இதழ்கள் வானெலியில் விமர்சனம் செய்யப்பட்டன. ಖ್ವಿ ಅರು அறிவித்திருந்தேன். தங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுக் குரியதே.
s. spssor sugo M.A. (Cey) PhD Birm) 29, 42 வது ஒழுங்கை, கொழும்பு - 6 ல்ெ கி அன்பின் நிர்வாக ஆசிரியர் அவர்கட்கு, VA
தங்களின் நிறை அன்பு அளிப்பான, யாவும் நிறைந்த அம்பு’ என் மீதேறியது குறித்து மிக மகிழ்வடைகிறேன். இதற்காக என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். த ங் க ள் முதல் வெளியீடான ஜூலை - 73 இதழில் பல வகை கருத்துக்களும் செறிந்துள்ளன. வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டி உதவப் புறப்பட்ட தங்களின் 'அம்பு' மேலும் மேலும் கூர் தீட்டப் பெற்று வாசகர்களின் மனதை ஊடுருவிச் செல்லட்டும். இறக்காமம் ம. வித்தியாலய மாணவர்கட்கும் சில அம்பு களை எய்து விடுவீர்களா?
கே. எல். எம் ஹாசீம் ஆசிரியர்
இறக்காமம். S (F) அம்பு பற்றிய உங்கள் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எமக்கு எழுதுங்கள்.
எழுதி அனுப்ப வேண்டிய முகவரி,
'நெஞ்சோ டு நெஞ்சம்” மே/பா அம்பு ஆசிரியர் 54, சிறீ மகிந்த தர்ம மாவத்தை,
கொழும்பு - 9. மன்னிக்க வேண்டுகிருேம் . . . . .
இம்முறை வரவிருந்த பல கட்டுரைகள் இட நெருக்கடி காரண மாக பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிருேம் . அடுத்து வரும் இதழ் களில் இவை இடம்பெறும்.
— 9, fof Mu iš


Page 28
Registered as a News Magazine
m
அடுத்த இதழில்
"-
蔷、
* リ*
எழுதும் புதிய
旱 உறங்கும்போது 2-0):
* வரண்டவாழ்வை
- ܐ -- -- ܒ ---------------ܒܒܕ ܡ
அறிவியலுடன் வ | Կիբելյլը
விஞ்ஞான் எழுத்தாளர் கழகம்
, ਪੁਸ਼ । உதவியுடன் பின்னேயா திர்காமநாத சந்திரா அச்சகத்தில் அச்சிட்டு வெது

曰r Lünkā。
*ந்தனே விருந்து
றும் க்கடிக்கும் கனவுகள்
அமுதமாக்கும் நிலத்தடிநீர்
ழ்வை இணக்கும் {=LD|{اقے
ாப் இசை அம்பு
வனி வருவது
-
பூறி மகிந்ததர்ம மாவத்தை
ாஹிரு விஞ்ஞானக் கழகத்தினரின் தன் அவர்களால் காங்கேசன்துறை, ரியிடப்பட்டது,
t