கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுசு 1980 (2)

Page 1
மாவட்ட அபிவிருதத்திச் ғалауы8 சரக்கங்கள் சிலவும்
 

\ly.
2.

Page 2

அவள் ஏன் கலங்குகிருள்? நாம் ஏன் கலங்குகிருேம்?
அண்மைக்காலங்களாக எமது நாடகப் பிரசவங்கள், ஈழத்தில் யாழ்ப்பாணம்தான் நாடகத்தை வளர்க்கிறது, எனும் நினைப்புள்ளவர் கிளேச் சுலபத்தில் மட்டம்தட்டிவிடப் பெருமுயற்சி எடுத்துவருவது போலத் தெரிகிறது. வழமையிலும் வழமையாகிப் போய்விட்டகதைக் சிருக்களை எடுத்துக் கையாள்வது நாடக, அரங்கக் கல்லூரியின் உறவுகள், அவள் ஏன் கலங்குகிருள்? ஆகிய நாடகங்களில் தெளிவாகியது. l
பொறுத்ததுபோதும், கோடை, கந்தன் கருணை, விளக்கும் விரல்களும், டினில் குருட்டாட்டம், (இளவாலை நாடகமன்றத் தயாரிப்பு), கூடிவிள்ை ஈடு பாப்பா ஆகிய ஆறு நாடகங்களைக் கடந்த வருடம் நாடக அரங்கக் கல்லூரி தனது ரசிகர் அவைக்கு வழங்கியது. ஏதாவது குறிப்பிடத்தக்கவாறன தனித்துவங்கள் இந்நாடகங்களில் இருந்தன. இந்த ஆறில் எதுவுமே பிறமொழியில் எழுந்ததல்ல, இந்தவருடம் இதுவரை வழங்கப்பட்ட இருநாடகங்களும் எமது பிரதேசத்தைப் பகைப்புலமாய்க் கொண்டு எழுதப்பட்டவை, இதற்காகவே இவற்றை மன்னித்துவிட முடியவில்லை. அதேவேளை வாய்பாட்டு நாடகமரபில் ஊறியிருந்த யாழ்ப் பாணத்தில் நல்ல கலைப்படைப்புகள் பற்றிய பிரக்ஞையைப் பரந்தளவில் மிாடக அரங்கக் கல்லூரியின் பங்கினையும் மறுத்துரைக்க முடியாது.
இங்கு பரவலாக தயாரித்து மேடையேற்றப்படும் நாடகவடிவமொன் றை நாமும் தயாரித்து அந்த வடிவத்தை எவ்வாறு நாடக ஒழுங்குமுறை களுள் நிறுத்தி ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாகப் பார்வையாளர்களுக்கு வழங்கலாம் என்பதைக் காட்டவே உறவுகள் என்ற நாடகத்தைத் தயா ரித்தோம். எனக் கூறும் நாடக, அரங்துத் கல்லூரி இரண்டாவது தடவையும் அதே வீச்சில் நாடகம் வழங்கும் என்பது பலரால் எதிர்பார்க் கப்படாத ஒன்று. எனினும் நாடக அரங்கக் கல்லூரியின் ரசிகர் அவை யின் பெருமளவு அங்கத்தினர் கிராமங்களைச் சேர்ந்தோர் என்பதைக்கருத் தில் கொண்டு அவர்களைத் திருப்தியுறச் செய்யவே இத்தயாரிப்புகள் உரு வாகினவையோ என ஐமிச்சம் ஒன்று எழுவது தவிர்க்கஇயலாததே இலங்கை வானுெலி வர்த்தக சேவையில் ஒலிபரப்பான தொடர்நாடகம் என்பதாலேயே "அவள் ஏன் கலங்குகிருள்? அதற்குரிய சிறப்பியல்புகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
பொதுவாக நாடகத்தில் தம்பையா தற்கொலை செய்வதைக் காட்டும் நீள்காட்சி, கண்ணனின் பின்னணி இசை (சிறப்பாக இம்முறை) ஆனந்த ராணியின் நடிப்பு எனச்சிலவே திருப்தி தந்தாலும், நகைச்சுவை (?) க் காட்சிகளும், சிலவசனங்களும் எரிச்சலூட்டுகின்றன.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பாத நாடகம் இதுவெனத் திருப் தியுறட்டும். நாடக அரங்கக் கல்லூரி விழித்துக் கொள்ளட்டும்.
புதுசு 1

Page 3
வரும் நேரம்
உமா வரதராஜன்
புதுசு 2
ஒரு மரங்கொத்திப் பறவைபோல் என் மனசில் அந்த மனுேஹரி
Dorr & ஐந்தரைக்கும், ஆறுக்கும் இடையில் இந்தப் பாதை வழியாய் கண்ணுக்குத் தெரியாப் பூக்கள் நோகாமல் அவள் செல்வாள்
இரண்டு கொப்பிகளையும் கொம்பாஸ் பெட்டியும். தொட்டுப் போய், முழங்கால் வேண்டாம்.வேண்டாமென
விலக்கி விடினும்
ரகஸியம் சொல்லியே தீரும் கூந்தல்.
கோது தகர்த்து, பறக்கக் காத்திருக்கும் கூடொன்றின் குஞ்சு மாதிரி பஸ்ஸில் இருந்து இந்தப் பாதை வழியாய் மறுபடியும் மனேஹரி என்னைக் கடக்கிற போது வெயிலும் துன்பத்தில் மாயும், சாம்பல் பறக்க விழித்துக் கொண்ட நெருப்பு மாதிரியும்
9 - இது என் நெஞ்சா, மததளமா ? என்றும்" எண்ண வைக்கும் ள்ன்னை
ஒரு மரங்கொத்திப் பறவையாய் என் மனசில் அந்த மனேஹரி,

மூன்று பார்வைகள்:
* புதுசு விமர்சன அரங்கு இளவாலை நாடகமன்றத்தில் இடம் பெற் றபோது கே. டானியல் அ. யேசுராசா ஆகியோர் ‘புதுசுவை" விபரித் தனர். ஆர். எஸ் நடராசா அவர்கள் தலைமைதாங்கிய இவ் அரங்கில் விஜயேந்திரன் பதிலுரையாற்றிஞர். பார்வையாளர் சார்பில் திரு, சந்தியாப்பிள்ளை உரையாற்றினர். மூவரது விமர்சன உரையிலிருந்தும் சிலதகவல்கள் இதோ. இவை உரையின் முழுச்சுருக்கமோ அன்றி உரை யின் குறித்த தொடர்ப்புகுதியோ அல்ல. புதுசுவின் இலக்கியம் சார்ந்த மூன்று வெவ்வேறு பார்வைகள் இவை எனக் கருதியே இங்கு இந்தத்
தகவல்கள் பிரசுரமாகியுள்ளன. இவை பற்றிய மறு கருத்துகள் வரவேற் கப்படுகின்றன.
கே. டானியல்
* புதுசு எனும் இச்சிறு சஞ்சிகை மிகுந்த சிரமங்களினிடையில் வெளி வந்திருப்பதை என்னல் ஊகிக்க முடிகிறது. மிகச் சில வர்த்தக அன்பர்கள் கொடுத்த விளம்பர நிதியினல் மட்டும் இச் சஞ்சிகை வெளிவரமுடிகிறது. அதே வேளை இதை வெளியிட்ட மாணவர்கள் தமது கல்வியையும், இலக்கியத்தை
ஒரே நேரத்தில்  ைகி யா ள் வது
வியப்பை அளிக்கின்றது.
* இச்சஞ்சிகை மக்களுக்கு எதைச் சொல்ல வருகிறதென்பது தெளி வாக்கப்படவில்லை. உதாரணத்துக்கு மேற்கோள் போலி எனும் கதையில் கையாளப்பட்ட நடை மிக் கி
அழகானது. ஆனல், இக்கதை சமூ கத்துக்கு என்ன தீர்ப்பை வழங்கு
கிறது என்பதை ஆசிரியர் தெளிவு படுத்தத் தவறிவிட்டார்,
* முன்னைப் போலன்றி இப்போது பல்வேறு மொழிகளினதும் இலக்கி யங்கள் இங்குள்ள இலக்கிய கர்த்தாக் களைப் பாதிக்கின்றன. சமகால இலக் கியங்களுடனுே, பிறமொழி இலக் கியங்களுடனுே, எனக்கு நேரடிப்
பரிச்சயமில்லை; நேரம் போன்ற பல் வேறு காரணிகள் என்னை பிறமொழி இலக்கியங்களிலிருந்து எல்லைப்படுத் துகின்றன. M
Ko gamTb எழுத்தாளர்கள் எப்போ தும் காதலைப் பற்றி எழுதியே எழுத் துலக வாழ்வைத்தொடங்குகிருர்கள் முப்பது வருடங்களின் முன் நான் ഉഴ கதை எழுதினேன். என்னல் விரும்பப்பட்டவள் என்னை ஏமாற்றி வேருெரு வாழ்வை அமைப்பதான சம்பவம் ஒன்று என்னுல் கதையாக எழுதப்பட்டது. அந்த வயதில் ஏற் படும் அனுபவப் பாதிப்பால் அவ் வாறே எழுதுமாறு நேரிடும். வளர வளரப் புதிய அனுபவங்கள் தாமா கவே எழுத்தினுட் புகுந்துவிடும்.
* கலை, இலக்கிய வடிவங்கள் மக் களுக்காகப் படைக்கப்பட வேண் டும். சாதாரண மனிதர்களின் ஆசா பாசங்களைச் சித்தரிக்கவேண்டும். எழுத்தாளன் சமுதாயத் தி ன் வெளியே நிற்கும் ஒருவனல்லன்.
புதுசு 3

Page 4
2
* புதுக ஆசிரியர் குழுவினர் நால்
வருமே தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி உயர் வகுப்பு மாணவர்கள் என்பது வியப்பிற்குரியது. நான் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலங்களில் என் ஈடுபாடெல்லாம் அப்போது புகழ்பெற்றிருந்த மு. வர தராசன் போன்றேரின் எழுத்துக் களிலேயே இருந்தது. ஆனல் இவர் களோ நவீன இலக்கியத்துடன் பரீச் சியம் கொண்டது. மட்டுமன்றி அவற்றை ஆக்கும் முயற்சியிலும்
ஈடுபட்டிருப்பது. பெரிதும் வியப்
பிற்குரியதே.
* புதுசுவில் வெளியாகியுள்ள ஆக் கங்கள் யாவும் அவற்றை ஆக்கியவர் களின் சொந்த அனுபவ வெளிப்பா டாய் அமைந்துள்ளது. இது, புதுசு வின், "தரமான படைப்பு நிலைக்கு இலங்கை இலக்கியத்தை நகர்த்தும்" நோக்கத்திற்கு ஒருமுழுவெற்றியைக் கொடுத்திருக்கிறது. 4) சீன இலக்கிய சஞ்சிகையில் சீன வின் லில்லி மலர்களைப் பற்றியும் மூங்கில் காடுகளைப் பற்றியும் ஒவி யங்கள் கவிதைகள் வருகின்றன. இதில் எங்கேஎரியும் பிரச்சனை இருக் கிறது.? வர்க்க முரண்பாடு பற்றிய சித் தரிப்பு எங்கே? ஏகாதிபத்தியத் தியத்தின் எதிர்ப்புணர்வு எங்கே? என்று இங்குள்ளவர்கள் யாரும் கேட்பதாக தெரியவில்லை.
O கலையோ அன்றி இலக்கியமோ அழகியல் சார்ந்த சுக உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமே. உணர்வு பூர்வமாகப் படைக்கப் படாத எந்தக் கலேயும் முழுமையா னதாய் அங்கீகரிக்கப்பட இயலாது உதாரணமாக நி. மா. பூ க்கள் படம் திரைப்படம் ஒருகலை ஊட
புதுசு 4
மைப் படுத்தவேண்டுெ
அ. யேசுராசா
கம் எனும் அடிப்படை உணர்வு இல்லாத ஒருவரால் செய்யப்பட்டுள் ளது. அப்படித்தான் சொல்லவேண் டும்.
* என்னுடைய பலபட்டதாரி நண்
பர்கள் சமகாலமாக இலக்கியம் பற் றிய அறிவே அற்றுருக்கிருர்கள். தமிழ் (சிறப்பு) ஒருபாடமாக உள்ள பல, பல்கலைக்கழக மாண வி களுக்கு இப்போது நவீன இலக்கியத்
துறையிலுள்ள ஒரு பெரிய பிரச்சனை
பற்றிய பிரஞ்ஞை எதுவுமே இல்லை என்று காணக் கூடியதாயுள்ளது. இவற்றை நாம் சொல்லும் போது அவர்களுக்குப் புரிவதுமில்லை. ஏனெ னில் இது அவர்களுடைய பாடத் திட்டத்தில் இல்லை.
கலை, இலக்கிய வடிவங்கள் எல் லோராலும் புரிந்து கொள்ளுமாறு படைக்க வேண்டும் என்ற வேண் டுதல் அர்த்தமற்றது. விமானத்தைச்
செய்பவன், யாழ்ப்பாணத்து மாட்டு
வண்டி ஒட்டியும் ஒட்டுமாறு எளி தாக அதனைச் செய்யவேண்டுமென எப்படி எதிர்பார்பது?
கருக்தைச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு இலக்கியத்தை உட் படுத்தக்க டாது. கருத் முதன் ல் இலக் கியம் தேவையில்லை மேடைப்பேச்சா லன்றி ஒரு கட்டுன்ரயோ கருத்தை முதன்மை யாக வைப்பதற்குப் போதுமானது.
* குறித்த காலகட்டத்தில் மக் களின் கவனம் எந்தப்பிரச்சனையி லுள்ளது. என்று கண்டுபிடித்து அது பற்றி எழுதுவது ஒருபோதும் இலக்கியமாகாது, இது வெறும் பிர சாரமாக அல்லது வாசகரிடையே

புகழ் பெறும் உத்தியாக மட்டுமே இருக்கும்.
* நம்பிக்கைதரும் புதிய எழுத்தா ளர்களில் பலகலை ஊடகங்களின் தாக்கங்கள் உள்ளன. இவர்களது
3
4) முற்போக்கு வாழ்வைப் பெற் கொள்ளத் துடிதுடிக்கும் இளம் சந் ததியினரின் சிந்தனைச் செல்வியாம் புதுசு " கண்டு களிகூருகிருேம். புதிய செல்வி பல்லோர் கையிலும் தவழ்ந்து தனிப்பெரும் படைப்பாக வளங்கவேண்டுமென்றும் வாழ்த்து கிருேம். புதுமைக்கும் பழமைக்கும் பாலமாக அமைந்து" உயர்வான இலட்சியங்களுக்கெல்லாம் இடம் தரும் உயிரூட்டும் ஒ வி யமாக ப் பொலிவுறுக. ஆணுல் ஒர் எச்சரிக்கை புதிசின் பிறப்பிடம் தத்துவார்த்த சூழலும் தமிழர் பண்பாட்டின்
தொட்டிலுமாகும். எ ன வே அது
சமயம், சன்மார்க்கம், மெஞ்ஞானம் ஒப்புரவுக்கும் பங்கம் ஏற்படாது கா ப் ப த ந் குப் பெரு ந் துணை யாக அமையவேண்டும் அதற்கு மாருக மார்க்க சீயவாதமே மக்கள்
* கவனத்திற்கு;
இலக்கியங்களில் நல்ல திரைப்படங் கள் சிலவற்றில் காணப்படும் விரை வுக் காட்சிகள் (Quick shots) காணப் படுவது இதற்கு நல்ல உதாரண
மாகுமி
Jgw. er 550au Aw'r Salò a'r
சமுதாய விமோசனத்துக்கு வழி என்ற தப்புக்கணக்குடன், தன்மதம் நிறுவுவதே ஏக குறிக்கோளாக வெளிச்சத்திகளால் உந்தப்படுமா சூல்ை அது " புதிசு வளர்ந்தோங்க நிச்சயம் பெருந்தடைக்கல்லாகலாம் என்றும் அஞ்சுகிறேன்.
தீவிரவாத உள்ளங்கள் புதிய சமுதாயத்தின் தோழியான "புதுசு உண்மையான தராசு கோ லா க அமையக் கவனிக்க வேண்டும் அப்போது அது யாவர் கைகளிலும் அன்புமொழி பே சித் தவழு ம். அமோக வரவேற்பைப் பெற்று தமிழ்துகூறும் நல்லுலகமெங்கும் நீடு வாழும். அங்ங்ணம் பாரெங்கும் பரக்கவேண்டுமென்பதே எனது ஏக ஆவல்.
* புதிசு " விற்குத் தரமான படைப்புகள் இளைய இலக்கிய, கர்த் தாக்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. பொருளாதாரச் சிரமங் களைக் கருதிப் படைப்புகளை மீளப்பெற விழைவோர் சுயமுகவரியிட்டு அஞ்சல் முத்திரை ஓட்டப்பட்ட அஞ்சற் கூடுகளை அனுப்பவும். இவ்வா றில்லாத படைப்புகள் எக் காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப் பப்படமாட்டா. ஏற்கனவே எமக்குக் கிடைத்துள்ள படைப்புகட்கும்
இது முற்றிலும் பொருந்தும்.
புதுசு 5

Page 5
எமது பத்திரிகைகள்
பெண்கள் பற்றிக் கூறுவதென்ன?
இன்று தமிழில் வெளிவரும் புத் திரிகைகளிலும், பெருஞ்சஞ்சிகை களிலும் பெண்களுக்கெனச் சிலபக் கங்கள் ஒதுக்கப்படுவது வழக்கமாகி விட்டது. பத்திரிகைகளில் வாரம் இரு முறையோ, ஒரு முறையோ பெண்கள் உலகம் எனவும், மங்கை யர் மஞ்சரி எனவும், மாதர் பகுதி எனவும் பெண்களுக்கான பக்கங்கள் அமைந்து விடுகின்றன. பத்திரிகை கள் இவ ற்றை வெளியிடுவதும் பெண்கள் இவற்றைப் படிப்பதும் இவற்றில் எழுதுவதும் வழக்கமான நடைமுறைகளுமாகி விட்டன,
இத்தகைய ' பெண்கள் பகுதி கள்' எத்தகைய விஷயங்களைத் தாங்கி வெளிவருகின்றன?
இவை பெண்களில் எத்தகை
யோரது பிரச்சனைகளைத் தொடுகின் றன?
இவை எத்தகைய கருத்தோட் டங்களைப் பரப்புகின்றன?
பெண்கள் பகுதிகளில் இடம்
பெறும் விஷயங்களை சாராம்சத்தில் இருவகையாகப் பிரிக்கலாம். சமை யற்கலை, தையற்கலை சம்பந்தமான குறிப்புகள், பெண்கள் தம்மை அழகு படுத்துவது சம்பந்தமான குறிப்பு கள் ஒருவகையாகும். இவை தனியே விவரங்களாகி விடுவன. பெண்கள் வேலை செய்வது உகந்ததா? பெண் களுக்கு உயர்கல்வி தேவை யா? குழந்தைகளின் உடல் உள வளர்ச்சி யில் பெண்களின் பங்கு என்ன ? முதலிய தலைப்புகளுடன் விவாதப்
புதுசு ே
சித்திரலேகா மெளனகுரு
பகுதிகளாகவும், கட்டுரைகளாகவும் வெளிவருபவை இன்னெரு வகை யாகும்.
இவ்விரு வகை விஷயங்களும் பெண் நிரந்தரமாக வீட்டுடன் சம் பந்தப்பட்டவள் என்ற கருதுகோ ளி ன் அடிப்படையில் எழுதப்படு கின்றன. இன்றைய உலகில் வீட்டு வாழ்க்கையுடன் மட்டும் அமையாது வெளியுலகிற்குக் காலடி எடுத்து வைக்கும் பெண்ணை மீண்டும் வீடு என்ற குறுகிய உலகுள் கட்டிப் போடத்தக்க வகையிலேயே இந்த விஷயங்கள் அமைந்துவிடுகின்றன. உயர் கல்வி கற்றலும், வெளியில் போய் வேலைசெய்து உழைத் தாலும் பெண் தனது வீட்டுக்குரிய கடமைகளைத் தவ ரு து நி  ைற வேற்ற வேண்டும் என்ற தீர்ப்பை இப் பத்திரிகை விவாதமேடைகள் அளித்து விடுகின்றன. இவ ற் றி லிருந்து சற்று மேம்பட்டு பெண் களின் முகப் பிரச்சனை என்ற அள வில் இப்பெண்கள் பகுதிகள் சீதனத் தைப் பற்றிப் பேசுவதையும் காண லாம். சீதன வழக்கத்தின் தீமையை அதனுல் பெண்களின் வாழ்வு உருக் குலைவதை இரங்கத்தக்க வகையில்
எடுத்துக்காட்டுவதுடன் அமைந்து
விடுகின்றன.
உயர்கல்வி, உத்தியோகம் ச்ெய் தல், சீதனம் முதலியவை பெண் களில் எத்தகையோரது பிரச்சனை கள்? இவை மட்டும் தான இன்று பெண்களின் பிரச்சனைகள்?

பொதுவாகக் குறிப்பிட்டால்
மத்தியதரவர்க்கப் பெண்களின் ஒரு
சில பிரச்சனைகளை இப் பெண்கள் பகுதிகள் மேலோட்டமாக விபரிக் கின்றன. இவை தவிர இன்றைய பெண்களுக்கு எத்தனையோ எரியும் பிரச்சனைகள் உண்டு, மத் தி ய த ர வர்க்கப் பெண்களை விட, கீழ்வர்க் கப் பெண்கள் ப்ல்வேறு பிரச்சனை களுக்கும் சுரண்டலுக்கும் உட்படு கிருர்கள். குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோட்டங்களில் நாட் கூலியாக வேலை செய்யும் பெண் ஆணிலும் குறைவான கூலியையே பெறுகிருள். பெருந்தோட்டத்துறை யிலும் இந்த நிலையே. இத்தொழில் களில் மாத்திரமன்றி ஒட்டுப்பீங் கான் தொழில், தும்புத் தொாழில்
தீப்பெட்டித் தொழில் முதலிய பல்
வேறு தொழில்களிலும் இச்சம்பள
வேறுபாடு தொடர்ந்து நிலவுகின் றது. இத்தகைய பொருளாதார சுரண்டல்கள் போன்றவற்றையோ, வேறுவகையானபாகு பாடுகளையோ, புறக்கணிப்புகளையோ * பெண் கள் பகுதிகள் கவனித்து வெளிச்சத் துக்குக் கொண்டுவருவது நன்மை பயப்பதாகும்.
கலாச்சாரம், மரபு, பாரம்பரி யம் என்ற போர்வையில் எமது சமூ கத்தில் பெண்களை அடக்குவதும்" சமூகரீதியாகக் கட்டுப் பாடுகளை விதிப்பதும் காணப்படுகிறது" நவீன உலகின் பெளதீக நிலைமைகளுடன் பாரம்பரிய மதிப்பீடுகளும் விழுமியங் களும் முரண்பட்டபோதிலும் இம் முரண்பாட்டினுல் பெண்களின் உள வியலில் சிக்கல் தோன்றிவிடுகிறது. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை இன்றைய பெண்ணினம் எதிர்நோ க்குகின்றது. இவற்றை எடுத்துக் காட்டவும், விவாதிக்கவும் இப் பெண்கள் பகுதிகள் களம் அமைப் பதன் மூலம் பெண்களின் சிந்தனை வளர்ச்சியிலும், மனப்பாங்கிலும்
தரும் விஷயமாகும்.
மட்டுமல்லாமல் சமூக சிந்தனையோட் டத்திலும் கூட சற்ருவது மாறுதலை ஏற்படுத்தலாமல்லவா?
ஆனல் மீண்டும் மீண்டும் குறிப் பிட்ட சில விஷயங்களையே பிரசுரிப் பதன்மூலம் பெண்ணினது மரபு திரி யான நிலையையும் செயற்பாட்டை யுமே இவை வற்புறுத்துகின்றன. பெண்ணை முழுச்சமூக இயக்கத்தி லிருந்து பிரித்து அவள் தனிப்பட்ட கடமையும் உரிமையும் கொண்ட பிறவி என்ற கருத்தோட்டத்தை வவர்க்கின்றன.
மேற்கூறிய நிலைமைகளிலிருந்து மாறுபட்ட பெசண்ணின் ஸ்தானத் தை உணர்த்தவும், பெண்களது பல் வேறு சமூகப்பிரச்சனைகளை எடுத்துக்
கூறவும் ஆராயவும் தனிப்பட்ட சஞ்
சிகைகளே வெளிவருவது நம்பிக்கை”
இலங்கையில் *பெண்ணின் குரல்" என்ற சஞ்சிகை இதற்கு எடுத்துக்காட்டு. தமிழ்நாட் டிலும் தமிழக ஜனநாயக மாதர் சங்கம் இத்தகைய பிரசார முயற்சி களில் இறங்கியுள்ளது. இவை வளர்க் கப்பட வேண்டியவை.
இதே நேரம் மேலே பார்த்தது போன்ற பெரும்பகுதிகளை இலகுவில் புறக்கணித்து விடமுடியாது. பொது மக்களின் கருத்தோட்டத்தை வளர்ப் பதில் இவை பலம் வாய்ந்தவை. எனவேதான் இப்பெண்கள் பகுதி களில் வெளிவிடப்படும் விஷயங்கள் பற்றிய அவதானம் தேவைப்படு கிறது. இவற்றை மாற்றியமைத்து சமூகத்தில் பெண்கள் பற்றிய விழிப் புணர்வையும் பெண்களிடையே விழிப்புணர்வையும் உருவாக்கப் பயன்படுத்த முயலவேண்டும். சமீபத் தில் இலங்கைப் பெண்கள் பணியகம் நடத்திய கருத்தரங் கொன்றிலும் இதே கருத்து வற்புறுத்தப்பட்டது. இதில் மாதர் இயக்கங்களும், பெண் களின் சமூக உயர்ச்சியில் அக்கறை யுள்ள ஏனையோரும் கவனஞ்செலுத் துவது தர்மமாகும்.
புதுசு

Page 6
F5Fuair Lukas riu as air
M.
தமிழில் இலக்கிய விமர்சனம் பற்றிக் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். அதுவும், குறிப்பாக இலங்கையில் விமர்சனத்தின் அடிப் படைகள் தகர்ந்து போவதையும். ஆழமான கண்ணுேட்டங்களும் ஒரு படைப்பின் உண்மையான உள்ளீட் டைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் அற்று வெறுமனே பொதுமைப்படுத் தப்பட்ட சொற்ருெடர்களையும், பொதுவான அபிப்பிராயங்களையும் விமர்சனம் என்று சொல்லிக்கொள் கிற தன்மையை விசனத்துட்ன் அவதானிக்கக் கூடியதாயிருக்கிறது. குறிப்பாக கே. எஸ் சிவகுமாரனின் எழுத்துக்களை, கை லா ச ப தி யின் பெரும்பாலான முன்னுரைகளைப் படிக்க நேர்கையில் இவ் (வா ரு ன உணர்வு மேலோங்குகிறது. இப்போ தைக்கு எல்லாவற்றையும் எழுதுவது இயலாத காரியம். கே. எஸ். சிவ குமாரன் பற்றிமட்டும் சொல் ல லாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவ்வப்போது ஆங்கிலத்திலும், தமிழிலும் "குறிப்புகள் எழுதிவருப வர் கே. எஸ். சிவகுமாரன்.
இவருடைய அனைத்து எழுத்து களைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது சஞ்சயனின் பக்கங்களைப் " புதுசு “ முழுமைக்கும் கொண்டு செல்லலாம் என்பதால் சில முக்கிய கட்டுரை களைப்பற்றி எழுதலாம். சாந்தனின் * ஒட்டுமா? பற்றி, (1980 ஜூலை 5 தினகரன்) எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ளதைப்பின்வருமாறு சுருக்
கலாம். 1 சிங்கள, தமிழ் உறவுகளை
நாசூக்காக ஆராயும் ஒரு சித்திரம் 2. இறுதியில் நாவல் என்ன கூறு கிறது.? கலாச்சாரங்கள் தனித்துவ
புதுசு 8
மானவை. செயற்கைரீதியாக இணை நீது சுவையூட்டினலும் அவை ஒன் முகா.சாந்தனின் இந்தக் கருத்து-சிங் கள தமிழ்ப் பிரச்சனையை அணுகும் மற்ருெரு பார்வை. இந்த இரண்டு வசனங்களையும்விட அந்தக்கட்டுரை முழுவதும் ஒட்டுமாவின் கதைச் சுருக்கம் அவ்வளவுதான்.
வேறுபல கட்டுரைகளில் தீவிர மான முகங்சாட்டும் விமர்சகராக வெளிப்படும் இவர்தீவிரமாக விமர் சிக்கப்படவேண்டிய ஒரு படைப் பான ஒட்டுமாவைப் பற்றிய விஷய த்தில் இவ்வாறு முடங்கிப் போவது கவனத்திற்குரியது.
* இலக்கியத்தின் சமூகப்பணி " ஆய்வறிவு ரீதியாக இயங்குதல் * என்பனவெல்லாம் நம் பிக் கை கொண்டதாய்க் காட்டிக் கொள்கிற கே. எஸ். சிவகுமாரனின் பெரும் பாலான எல்லாக் கட்டுரைகளிலும் ஒரு மேலோட்டமான குறிப்புத் தெரிவித்தலே உள்ளது. சரியான நேர்மையான விமர்சனங்களை வைத் தல் செய்யப்படுவதில்லை. ஒட்டுமா
நாவலில், சில மோசமான கருத்து
கள் முன் வைக்கப்பட்டுள்ளன. சிங் கள, தமிழ் உறவுகளைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளல்களை
அந்த நாவல் வெளிப்படுத்தவில்லை.
சதா நிலாந்தியினுடைய - காத லின் கனதிக்கும், இறுதியில் சதா வுக்கு ஏற்படுவதாக சாந்தன் சொல் லும் " பாரம் கழன்றது போன்ற " உணர்வுக்கும் உள்ள முரண், பீரீசின் இயல்புகளின் ஆரம்பத்துக்கும் இறு திக்கும் உள்ள முரண், சிங்கள, தமிழ் ‘காதல் ஒட்டாது என்ற

சஞ்சயனின் இரண்டாவது பக்கம்
தொனியில் கருத்து சொல்கிற இந்த
நாவல் எல்லாம் மிகவும் ஆழமாக விமர்சித்து ஒதுக்கப்பட u606)I.
இந்த நாவலைப் பற்றிய மேற்
சொன்ன கருத்து களை யாவது இனங்கண்டு வெளிப்படுத்த வேண் டியது எந்த ஒரு நல்ல விமர்சகரும் செய்திருக்கவேண்டியது. ஆனல் சிவ குமாரன் செய்தது என்ன?
மஹாகவியைப் பற்றி மட்டும்
தான் கே. எஸ். சிவகுமாரன் சில
விமர்சனங்களை உதிர்த்திருக்கிறர்.
மற்றெல்லா விமர்சனங்களிலும் அவர் ஒருவகை "தப்பி ஓடுதல்" *பொதுமைப்படுத்தல்" போன்ற வாய்பாடுகளுள் அடங்கி விடுகிருர். மிக நல்ல உத்ாரணம், லங்கா கார் டியனில் கல்ாச்சாரப் பேரவை நட த்திய தமிழ் நாடக விழா பற்றி எழு திய கட்டுரை. அந்த நாடகங்களின் தமிழ்ப் பெயரின் ஆங்கில மொழி பெயர்ப்பை விட கே. எஸ். சிவ குமாரன் அந் த க் கட்டுரையில் என்ன எழுதியிருக்கிருஜர்? இதைவிட
வும் வேதனைதரும் விஷயம் (Tamil Drama but ro theatre gyalui 95 fb குத் தலைப்பிட்டிருந்தது. மிகவும்
பாரதூரமான இரு தவறுகளை இவ் விஷயத்தில் அவர் செய்திருக்கின்ருர் ஒன்று, அண்மைக்கால நவீன தமிழ் நாடக. அரங்க வளர்ச்சியை no theatre என்பதன் மூலம் பூச்சியப்படுத்தி யது. மற்ருென்று, தமிழ் கலை, இலக் கியத்தைப்பற்றி ஆங்கிலத்தில் எழு தும் போது துடனும், பொறுப் புணர்வுடனும் செய்யவேண்டிய ஒரு காரியம்) ஒரு
வேண்டி
(மிகவும் அவதானத்'
சில விஷயங்களையேனும் கூருமல் வெறுமனே குறிப்புகளை எழுதிய தன் மூலம் தமிழ் நர்டகம் இவ்வ ளவுதான் என்பதான ஒரு பிரமை யை ஆங்கில வாசகனுக்கு ஏற்படுத் தியது. இதனை உணர்ந்தோ என் னவோ பிறகு ஒரு லங்கா கார்டி யனில் (GLD 1, 80) Tamil Dram என்று ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அவைக்காற்று கலைக்கழகத்தினைப் பற்றிச் சொல்லிவிட்டு ஓடிவிடுகிருர் நாடக அரங்கக் கல்லூரியைப்பற்றி ஒரு வார்த்தை கிடையாது. எவ்வ ளவு தூரம் பொறுப்பற்ற வெளிப் பாடுகள் இவை. இத்தகைய தவ GospGu gyasri 5607 gil Tamil writing in eriLanka GT6öTAD 6l (B60Tu96yib (o)őFü திருக்கிருர், அந்தக் கட்டுரையால் தமிழ் பேசாத வாசகர் கட்குத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறி முகப் படுத்தியிருக்கிருர் என்று செர்ல்லி எங்களைஏமாற்றிக்கொள்ள
நாம் தயாரில்லை. இத்தகைய"நுனிப்
புல்மேய்தல்" விமர்சனங்களிலும் பார்க்க ஆங்கிலத்தில் எழுதாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று சொல்லத் தேர்ன்றுகிறது.
ஜுலை 1, 80 லங்காகார்டியனில் * மொழி பெயர்ப்புக்கிள் " பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிருர். தமிழ் - சிங்கள, சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்புக்கள் பற்றிய பதிவு களை அக் கட்டுரை தருகிறது என் பதை மறுப்பதற்கில்லை. எனினும் அக்கட்டுரையில் தமிழ் இலக்கியத் தைப் பற்றிய ஆங்கில எழுத்துக்கள் பற்றி அவர் எழுதுவதைக் குறிப்பி L-535it 6370/5, pg/. The author of this little book tamil writ
புதுசு 9

Page 7
சஞ்சயனின் மூன்றுவது டிக்கம்
bing insrilanka had been-persisbantly inbroducing the tana.
il cultural seene to "the Eng-.
lish reading publi for more than twenty five' years
தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம் என்பதில் எவருக்கும் கருத்து (வேறுபாடே இல்லை. பிரச் சனை என்னவெனில் 'அறிமுகத் துடின் நில்லாது சில விபரீதமான குறிப்புக்களையும் அவர் தருவது தான். இங்கு சில காலத்திற்குமுன் சிவத்தம்பி Iotu9 | 33963) - jeyłonese "tarnil writings at sift-gil பற்றி எழுதியதையும்" குறிப்பிட வ்ேண்டும். Lotu எனும் இழ் ஆபிரிக்க ஆசிய எழுத்தர்ளர் சசீகத் தால் அரபு, ஆங்கிலம், 'பிர்ஞ்சு போன்ற ம்ொழிகளில் * Golau &rfflu? --Lly படும் ஒடு'சர்வதிேசி" சஞ்சிகை. சிவ்த்தம்பியும்.இந்தக் இட்டுரையில் மல்லிகையில் வெளிவ்ந்)ஒரு சிங் களக் கதையின் தமிழாக்கத்தைப் பற்றி மட்டும் சில் குறிப்புகள் எழுதி விட்டு, மல்லிஃகக்கும் முதுகில் ஒரு * தட்டு * தட்டிவிட்டுக் கட்டுரையை முடிக்கிருர் ஆஞல், பெரிதாக ஒரு 9;• gig, Ceylonésie Gamrif wri ttings & Dissertation thesis களுக்கு கொடுக்கிறமாதிரி.
இத்தீன்கய கட்டுரைகள் பிர சுர்மர்வதன் அடிப்பண்ட நியாயம் என்ன விென்முது எனக்கும் புரியாத ஒன்ருகி இருக்கிதது. தமிழகத்தில் வெளிவீநீதி சிவ்த்தம்பியின் சில நூல்களிலும் இந்த மாதிரியான தன்மை:துல்லம்பரமாக உள்ளது.
இதுத 10
சுட்டுரைகளை வெளியிடி நேர்வுதி
லுள்ள அவசரமும், நிர்ப்பந்தமும். கூட ஒருகாரணமாயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிழது
.மஹாகவி புற்றிய ? எஸ் نظس) சிவகுமார்னின் கருத்துக்களைப்பற்றி எழுதுவது இவ்விபுத்தில் பொருந் தும். வீடும் வெளி யும் நூலே Daily News 3ão só o fi G,ã5 போது (திகதி எனக்குச் சரியாக (GT 3lääža) Maha Kavi o a Reo ramanbius Gtså my gåPú19L'. டிருந்தது அவ்விமாசனம். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் தமிழமு திலும் பிறகு அதே கட்டுரை Tamil writungs, in Sri Lanka விலும் சேர்க்கப்பட்டிருந்தது. மஹாகவியின் படைப்புகள் புற்ஜித் தீர்க்கமான விமர்சனக் கண்டுபிடிப் புகள் அவ்வப்போது இலக்கியுப் பரப்பில் சண்முகழ் சிவலிங்கம், துஃமான், முருகையன், யோகராச்ா ஆகியோரால் முன் வைக்கப்பட் இள்ளன.
மஹாகவியை இயல் பாகவே கற்பனுவாதத்தைத் தழுவிய ஒரு கவிஞராக கே. எஸ், சிவகுமாரன் காட்டுகிமுர். அதைவிடவும் மஹா 56? - 6?(5., ner „romanatius? என்று புதுவிதமாகவும் ஒரு அளவு கோலை முன் வைக்கிறர். இவற் றைப் பற்றி நான் எழுதத் தேவை யில்லை, ஏனெனில் மஹாகவியின் படைப்புகளில் நன்குபரிச்சயமுள்ள எவரும் மஹாகவியை ஒரு கற்பணு வாதம் தழுவிய கவிஞர் என்று கொச்சைப்படுத்த மாட்டார்கள். முற்சார்புகளோடு விமர்சனம் ஏழு

சஞ்சயனின் நாலாவது பக்கம்
தங்ஸ் புறப்படுவதன் விளைவு கள் இவை,
மஹாகவியைப் பற்றி அவரது கருத்துகளில் n முக்கியமாக நான் குறிப்பிட்டு எழுத t விரும் புவது இவற்றையல்ல.
இதே கட்டுரையில் "1. இங்குதான் கவிஞ்ர் வெறும் அவு தானிப்புக்ளுடன் நின்று விடுவதை நாம் கோண்கிருேம்- திட்டவட்ட மாகக் கருத்து, எதனையும் தெரிவிக்க அவர் தயங்கியது வெளிப்படை." என்றும் * அறிவின் ஆதாரத்தை யுடிைய "கவிதிைகளைத் தீட்ட மறந்து விடுகிறர் ' என்றும் எழுதுகிருர். சில அடிப்படை இலக்கியப் பிரச்சனை களை இவ்வரிஸ் எழுப்புகின்றன.
திட்டவட்டமாதத் தீர்க் மாகக் கருத்துக் ளைச் சொல்லுதல் என்ற தன்ழையை இலக்கியத்தில் எதிர் பார்ப்புதும்,பிரச்சனைகளுக்கான தீர் வையும் எழுதவேண்டு என்று சொல் வதும் ஒரு மாதிரிகான், இது இலக் கியத்தைப் பொறுத்தவரை ஒரு வறட்டுவாதம் இதே அளவுகோலை இவர் எல்லாப் படைப்பாளிகட்கும் பயன்படுத்துகுராரா என்ருல் அப் படியும் அல்ல. ஒட்டுமாவைப்பற்றிய விமர்சனத்தைப் பற்றி ஆரம்பத்தி லேயே எழுதியிருக்கிறேன். கவிதை களைவிட தீர்க்கமாக கருத்துகளைத் தெரிவிப்பது என்பது விமர்சனத் திற்கு ஒரு பிரதான இயூல்பு இலக் கியவாதியைப் பார்த்து நீ இப்படி -ன்முது அல்லது இப்படி எழுதியிருக்க லாம் என்று எவரும் சொல்ல முடி யாது. ஆனல் விமர்சகனை. நீ ஏன் திட்டமான கருத்துகளைத் தெரிவிக்க
ില്ക്ക என்று நாம், கேட்கலாம்.
அந்த இயல்பை அவரது விமர்சன்ங் கள் காட்டுவதில்லை. அ ப் புற மென்ன? இந்த மாதிரியான Dual Nature இன் இருப்பு ஒரு ஆரோக் கியமான தன்மை அல்ல. நான் முன் குறிப்பிட்டது போல "முற்சார்பு" களும், எல்லாப்படைப்புகளைப் புற்
றியும் தைரியமாக எழுத முடியா மையும் தான்
- கலம். இன்னும் ஒரு நல்ல உதா
இதற்குக் காரணமா
ரணம். ' ഷ് '," சமர் (கருத்து மோதல் தொடர்பாக தினகரனில் * அழகியல் பிரச்சனைகள் • என்ற
கட்டுரை எழுதும் போது, பேச்
சோசைப் பண்பைப் பற்றிக் குறிப்
பிடுகையில் கைலாசபதி மஹாகவி . யைப் பற்றிக் குறிப்பிட மறந்ததை
அ லை கட்டுரை (சுட்டிக்காட்டிய தைப் பற்றி ** கைலாசபதி, அப் படிச் செய்திருக்க கூடாது. விசனிக் கத்தக்கதுதான் ஃ' என்ற தொனி யில், சொல்கிற அவர் சுட்டுரை முடி வில் என்ன இருந்தாலும் கைலாச பதி, கைலாசபுதிதான் விமர்சனம் விமர்சனம் தான் என்ற தொனிப் பட முடித்து வைக்கிருர். (தப்பித்
தவறிக் கைலாசபதிக்கு இவர்மீது கோபும் வந்துவிட்டால் என்ன ஆவதாம்.
மஹாகவியின் வீடும் வெளி யும் ' தொகுதி என்னைப் பொறுத் தவரை மிக முக்கியமானது. கவி தைக்குரிய முப்பரிமான அமைப்புப் பற்றி முதன்முதலாக அதன் முன் னுரையில் குறிப்பிடுகிறர். கவிதை தவிர்ந்த ஏனைய எ ல் லா வடிவ ங்
க்ளும் இருபரிமாணம் கொண்டலேவ
தான். வாசகர்களுக்கும், ரசிது ர் களுக்கும், அது தெ எடர் பா ன
புதுசு 11

Page 8
சஞ்சயனின் ஐந்தாவது பக்கம்
விரிந்த உணர்வுகளையும், புதிய தன் மைகளையும் இவ்வடிவங்கள் எழுப் பினலும் முற்று முழுதான இன் னெரு பரிமாணத்தை அவை வைத் திருப்பதில்லை. இன்னும் எழிமைப் படுத்திச் சொல்வதானுல் சிறுகதை அல்லது நாவல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது கள் த் தில் தொடங்கி வேருேரு இடத்தில் அல் லது களத்தில் முடிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு முதலிரு பரிமாணங்களும் அந்த நாவலும் அதன் பிரத்தியட்சமான இயல்புகளும் ஆகும். உருவமும், உள்ளடக்கமும் என்று சொல்லிக் கொள்ளலாம். மூன்ருவது பரி மாணம் என்பது இவற்றை மீறி * அதனுள் " இருப்பது. அதுதான் ஒரு படைப்பிற்கு முடிவற்ற தன் மையைக் கொடுப்பது. படைப்பின்
தொடர்ச்சியைப் பூரணப்படுத்து வதற்கு வேண்டிய ஒரு முன் னெடுப்பை அது வாசகனுக்குத்
தருகிறது. மேலோட்ட்மான வாச கனுக்கு இது எட்டாது. ஆழ்ந்து கூர்மையாகப் படி க்கு ம் வாச ” கனுக்குத்தான் இ  ைவ யெல்லாம்: விமர்சனத்தின் தன்மை என்ன வெனில் ஒருபடைப்பின் இத்தகைய மூன்ருவது பரிமாணத்தை இனங் கண்டு வெளிப்படுத்தல் அல்லது அதனை நோக்கி ஒரு வாசகனை நெறிப்படுத்தலே. கவிதையைவிட ஏனைய வடிவங்களுக்கு இந்த மூன் ருவது பரிமாணம் ஒரு முழு அள விலான பரிமாணமாவது அ சு ர சாதனையால் மட்டும் முடியும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அண்மைக்காலச் சிறு க  ைத க ள், நாடகங்களில் இந்த மூன்றவது பரி
Liga 19
மாணத்தின் தன்மைகள் துலங்குவ தாக நான் உணர்கிறேன். மஹா கவியின் கவிதைகளைப் பொறுத்த வரையில் அவற்றில் மூன்ருவது பரி
மாணத்தை சண்முகம், சிவலிங்கம் . நுஃமான் ஆகியோர் ஒரளவு இனங்
கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏனைய கவிஞர்களைப் பற்றிய இக் கண்டுபிடிப்பு பூச்சியம்தான்.
தீர்க்கமாக முடிவுகளைக் கூறுதல் அல்லது பிரச்சனைக்கான தீர்வைச் சொல்லுதல் என்பது இலக்கியத்
தின் மூன்றுவது பரிமாணத்தையே
முற்றக இல்லாமல் செய்தலாகும். * காலம் சிவக் கி றது " என்று
இ. சிவானந்தன் தனது நாடகத்
துக்குத் தலையங்கம் வைத்த கணத் திலேயே அந்தப் படைப்பின் மூன்ரு வது பரிமாணம் அடைபட்டுப்போய் விட்ட்து. இத்தன்மைக்கு ஏராள மான கவிதைகளைக் உதாரணமாகக் கூறலாம். "முற்போக்குக்காரர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்க ளால் எழுதப்படும் So Caled முற் போக்குக் கவிதைகள் எல்லாம் இந்த வகைக்குள்தான் செத்துப் போயின? இந்த மூன்றுவது பரிமாணம் பற் றிய எனது கருத்துகள் விரிவாக எழுதப்படவேண்டியவை.இப்போது
குறிப்புக்காக மட்டும்இங்கு சொல்ல
வேண்டி ஏற்பட்டது.
' கவிஞனுக்கும் - வாசகனுக் கும், சிலவேளைகளில் கவிஞனுக்கும் " கவிஞனுக்கும் கூட உள்ள இடை வெளியை நிரப்புதல் . ** என்று மஹாகவி சரியாக இனங்கண்டு கொள்கிறது, இந்த மூன்ருவது பரி மாணத்தையும் - . விமர்சனத்தை யும் தான்.

சஞ்சயனின் ஆருவது பக்கம்
- அறிவின் ஆதாரத்தையுடைய கவிதைகளைத் தீட்ட மறுத்தல் ? என்று கே.எஸ். சிவகுமாரன் சொல் வதுபற்றி ஒன்றும் எழுதாமல் இருப் பதுதான் புத்திசாலித்தனம். எனி glui Continuity of Life Gartlif
பாக மஹாகவி கொண்டிருந்த கருத்
5/56fair Scientific basis Luibold;
குறிப்பிட்டாக வேண்டும்.
இயற்கை விஞ்ஞானத்தின் பிர 25TGOTLDITGOT Uni fying concept என்பது பாரம்பரியத்தினதும் பரிணு
மத்தினதும் விளைவான வாழ்க்கை
யின் தொடர்ச்சியே. உண்மையில் பிறப்பு என்பதும், இறப்பு என்பதும் ஒரு நிலையிலிருந்து இ ன் ஞெ ரு நிலைக்கு மாறுதலே தவிர ஒன்றின் புதிதான தோற்றமோ அன்றி ஒன் றின் முற்றன அற்றுப்போதலோ τ96υ 6υο
அணுக்கள் - மூலக்கூறுகள் தி சு க்க ள் - இழையங்கள் - உறுப்புகள் - அங்கி - சனத்தொகை என்று விரிகிற தொடரில் இறப்பு என்பது மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கு இறங்குதல். பிறத்தல் என் பது கீழ் நிலையிலிருந்து மேல்நிலைக்கு வருதல். எனவே வாழ்க்கை முடி வற்றது. என்பதும் மனிதன் இறப்
பதில்லை என்பதும் மஹாகவி தன்
மேதாவி "
னளவில் உணர்ந்து வெளிப்படுத் திய முக்கியமான விஷயங்களாகும். இதற்கு விஞ்ஞானம் அறியவேண் டியதில்லை. சுயம்புவான சிந்தனை உணர்வும் " அறிவின் ஆதாரமும் " போதும். இப்போதைக்கு இவ்வள வும் போதும் என்று நினைக்கிறேன்.
மற்றுமொரு விஷயம் இவ்வளவு தூரம் எழுதி. அச்சிட்டு படிதிருத்தி முடிப்பதற்கிடையிலேயே * ìư ரொட்டிகள் " நாடகம் பற்றி ஒன் றிற்கொன்று முரண்பாடான கருத் துக்களை அவர் எழுதியிருப்பதை வாசிக்க நேரிடுகிறது. வீரகேசரி வார இதழொன்றில் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை என்று எழுதுகிற அதே சமயம் Times இல் 'ஆஹா! நன்றயிக்கிறது" என்ற தொனியில் எழுதுவது என்ன விமர்சக் லட்ச ணமோ ? ஒன்றும் பிடிபட மறுக் கிறது. இனியும் இனியும் இவர் இப்படி எழுதிக் கொண்டிருந்தால் சஞ்சயன் இனியும் இனியும் இப்படி எழுதுவான் என்று நினைக் கத் தேவையில்லை. மற்றைய எ ல் லா களும் இத் த  ைக ய போலிகளைப் பார்த்துவிட்டு, படித்து விட்டுச் சாதாரணமாக * உண்டு, உடுத்து, உறங்கிச் சீவிக்கையில் " சஞ்சயனுக்கு மட்டும் என்ன ? ஒரு சின்ன ஆத்திரம் அவ்வளவுதான்.
பொறுத்தது போதும் நாடகம் மூன்று துணை விருதுகளோடு ஜனதிபதி விருதையும் பெற்றுள்ளது. சிறந்த பிரதி, சிறந்த நெறியாள்கை என்பவற்றிற்குரிய விருதுகள் அ. தாசீசியஸிற்கும், சிறந்த நடிகருக்குரிய விருது பிரான்சிஸ் ஜெனத்துக்குக் கிடைத்துள்ளன. இது நாடக அரங்கக்
கல்லூரித் தயாரிப்பாகும்,
புதுசு 13

Page 9
எரியும் பொழுதும் இரவும்
Grarab v/4prao
நீண்ட நாளாயிற்று நிமிர்ந்து நின்று மூச்சுவிட்டு: வெம்பிப் பழுத்த இதயம் கூனிக்கிடக்கும் உடலுக்குள் குறுகுறுக்கும்:
நீண்டு
அணிவகுத்து நிற்கின்ற அசோக மரங்கள் கண்டு நாணும் நான்,
மூக்குத்தி வெள்ளி சின்ன இதழ் முதல் பிறை வானச் சிரிப்புக் கன்னிக்கு நீலச்சாரி வாங்கிக் கொடுத்தவன் மேல் வரட்டுப் பொருமை.
அவளுடைய கோபங்கள் அக்கினியாய்ச் சுடும் பகல் பொழுது என்னையே தண்டிப்பது போல் எரிந்து தொலைந்து போயிற்று
ஒரு நாள் புத்தகத்தின் இனிய பக்க இரவு இது
இதிலும் சோகக் கவிதை. மலைவேம்புத்தாய் உம்மென்று என்னையே பார்க்கும் பார்வை.
இந்தப் பொழுது நாளைக்கும் விடிந்து தொலைக்கும். நர்ளைக்கும் பகல் பொழுது என்னையே தண்டிப்பது போல் எரிந்து தொலைக்கும்.
புதுசு 14

வரலாற்றுக் குருடர்கள்
சுந்திரன் -
அமுக்கு, அமுக்கு இன்னும் சற்றே அதிகம் அமுக்கு அழுத்தம் அதிகரிக்கும்! வெடிப்பு நிகழும் !
சுடு, சுடு
நூறுபேர் விழட்டும் துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு
ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும் பிறகுதான் லெட்சம் லெட்சமாய் அணிகள் திரளும் துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்
மயிலாசனத்தின் அரசியல் அநாதையை நீ அறியாயா ?
நீங்கள் குருடர் !
பிறவிக் குருடர் !
வரலாறு உமக்குத் தெரிவதே இல்லை.
9 - 8 - 1980
Space donated by Logic Srikanthalingam
புதுசு 15

Page 10
புதிய மொட்டுக்கள் 0uva Lipus bres. Caradr
அந்தக் கரிக்கோடு போட்டு கோடிட்டார்கள். தெருக்களெல்லாம் மனிதத்தலைகளின் விரைவு உலகின் கெதியை மேலும் வேகப்படுத்தின. மனிதன். தன்னுள் அடக்கிய அந்த இயந்திரங்கள் அவனது விரைவை முறியடித்து மூசிச்சீறி அந்தத் தெருக்களை பிரளயத்துக்கு இழுத்துச்சென் றன. இந்த விரைவாலும் இயற்கை உணர்வை கொன்ருெழித்த இந்த மனித உள்ளங்களின் முன்னே வசந்தகால ** மஞ்சள்வானக மரப்பூக்கள் சொட்டுச் சொட்டாய் அந்தத் தெருக்களிலும். பொன்னுக் கிழவியின் அப்பக்கடைக் கூரையிலும் கொட்டிக்கோலம் போட்டும், தெருக்கரை யோடு ஒடிய சாக்கடைத் தண்ணியோடு மிதந்து எற்றுண்டு சென்றும் தெருக்கள் எங்கும். வசந்தம் உயிர்ப்புப் பெற்றுக்கொண்டிருந்தது.
இவற்றையெல்லாம் அந்த பிரதான தெருவைக் கடக்கின்றபோது புவனம் வினுேதமாகப் பார்த்து. இளமைக்கால குழந்தையுள்ளமாய் பார்த்து பார்த்து. அதனில் லயித்து. பள்ளிக்கூடம் சென்றவள் தான்.
வழமையான அந்த இயக்கத்தின் அவளது பார்வை இந்தக்காட் சியை. தினம். தினம் நெரித்து. . நெரித்து பஈர்த்து இயற்கைக்கு விடைகாண முற்பட்டதுண்டு. பாவம் அவள்பேதைப் பருவம்.
இன்று வழமையாக மணியடிச்சு ஒலிவியா ரீச்சர் இவளுடைய ஆரும் வகுப்பை பள்ளிக்கூட முன்மாமரத்தடிக்கு வரச்சொல்லி. எல்லாரும் எழுந்து சென்றபோதுதான் றஞ்சி புவணுவை இழுத் துப் பிடித்து " இனிபெரிய ஆள்த்தான் ' . . என்று கூறியபோது தான். அவளுக்கு விஷயம் புரிந்து. இனம் தெரியாத விக்கலும் விம்மலும் வகுப்பறை முழுவதும். தன்னையே நூதனப்பொருளாக பார்த்தபோதுதான். ஒலிவியா ரீச்சர் நாலைந்துசக தோழிமாருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். தாய் கமலம் வெள்ளை மேற்பாவா டையைநீக்கி பார்த்தபோதுதான் ஆமணக்கங் கயராய் புள்ளி குத்தி நின்ற சுவடுகள் கமலத்தின் முன் விஸ்வரூபமாய் தோன்றியழிந்தது.
இதுக்காக.. ஏன் இவள் இப்படி. அப்படி. என்று யோசிக் கோணும். காலங்காலமாய் தினமும் . . சூடுபட்ட. கருக்கொண்ட் பன்றியின் ஈனக்குரலாய் நச்சரிப் போடு. வாழ்க்கையை தினம்.
தினம் ஒவ்வொரு நாளும் துரத்திக்கொண்டிருக்கின்ற லிகிதர் வரிசை யிலே கந்தசாமி நின்ற நிலை. அதுக்குள் குமர் ஒன்று கொடி விட்டுக்
புதுசு 16

கொண்டு முன்னே நிற்கின்றபோதுதான் அவளால் இருப்புக்கொள்ள முடியவில்லை. ۔۔۔۔
கந்தசாமி கமலத்தை கூழாவடித்தெருவில் கைப்பிடித்த முத லாய். ஆண்பிள்ளையை எதிர்பார்த்துபார்த்து அடுத்தடுத்து ஒன்றன் மேல்ஒன்ருய் கிடைத்தது இரண்டுபெண்விக்கிரகங்கள் தான். இறு தியில் அவர்களது ஆசை நிறைவேறிய போதுதான் மனித உணர்வை அறுத்து சுமையை விடுவிக்க குடும்பத்தை மட்டுப்படுத்திக் கொண் டவர்கள்.
கமலம் பெண் என்பதற்காக இந்த சமூகத்தில ஏன் இப்படியெல்லாம் யோசிக்கவேணும். கமலத்தின் ஒவ்வொரு நடத்தையும் . முன்னே தட்டியை சாத்திப்போட்டு, போர்த்துக்கிடக்கிற புவனவைப் பற்றியது தான். ܖ
தெருப்படலைச் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தபோதுதான் நாகம் மாக்கிழவி வந்ததும் வராததுமாய் ' கமலம் எங்க. புட்டுக்களி ** என்றபோதுதான் " அதுக்கு இப்ப. என்ன அவசரம் ஆறுதலாய் தருவம் தானே ' என்று கமலத்தால் சமாதானப்படுத்த முடிகிறது.
"அது சரி புள்ள இனி உனக்கு பெரிய பொறுப்பொண்டு வந்திருக்குது. முந்தியப்போல . பொறுப்பில்லாமல் ஊர் அடிச்சுத்திரிய ஏலாது "'. நாகம்மாகிழவியைக் கண்டதும் புவணு முகத்தை திருப்பி குப்புறக் கிடந்த படியே முழிக்க. முழிக்க... எதை எதையோ தேடுவதுபோன்று. வெட்கத்தால் புழுங்கிக் கிடந்தாள்.
" அடி கமலம். முந்தித்தான் ஐஞ்சுபெண் பெத்தா. அரசனும் ஆண்டியாவான். இப்ப நம்முடைய சமூகத்தில. ஒரு பெண் இருந்தாப் போதும் அரசனும் ஆவியாய்ப் போயிடுவான் ??
நாகம்மாக்கிழவியின் வார்த்தைகளை புவணுவால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தப்புவணு மூக்குவடிந்த சிறுமியாய். மருதடிப் பிள்ளையார் கோவிலின்முன் குட்டைபிடித்து. ஆசனமாய் நீட்டியிருந்த அந்த மருத மரத்தடியில் இருந்து பள்ளிக்கூடத் தோழிமாருடன் அந்தக் கேணியுக்குள்ளே கடுதாசித்தோணி விட்டுப்பார்த்து நின்ற வாயாடியாய்த் தான் இந்தச் சமூகத்தின் முன் நேற்றுவரை நின்றிருந்தாள்.
புவன புத்தியறிந்த இரண்டு மாதமாய் தலைகால் தெரியாத லிகிதர் கந்தையாவின் விரைவு. தாம். . இந்தச் சமூகத்தில் இருந்து தப் பினல் போதும் என்ற சமூகக் கூட்டத்தின் வரிசையில் நின்றவர்களில் ஒருவராகத்தான் அவரால் நிற்கமுடிந்தது .
சதாநெரித்து. நெரித்துக்கொண்டு மனிதயந்திரமாய் தன்னை மாற்றிவிட்ட நிலமைக்காக வருத்தப்பட்டதோ... அல்லது சமூகத்தின் மீது வாஞ்சைப் பட்டதோ இல்லை. மதிலால் உறவுகளை வெட்டிக்கூறு
புதுசு 17

Page 11
போட்டு: ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு உலகமாய்: போனபோதும் நல்லநாள். சாவீடென்ருல்தான் சொந்தம் பந்தம் என்று யாரும் தலை காட்ட முடிகிறது. ༤
தினம் தினம் நச்சரிப்பாயும். விரைவாயும். மாறிப்ப்ோன வாழ்க் கையில் உண்மையான வாழ்க்கை என்பதே என்ன. திருமணம் அதன் மூலம் பெற்ற பிள்ளைகள். அதற்கு சீதனம் தேட்டம் சொத்து. என்று, வாழ்நிலையின் இறுதிவரை போராடுகின்ற சமூக அசிங்கங்களின் இந்த உண்மையை பதினைந்து வருடமாய் இச் சமூகத்தின் முன் நின்று மனத்தால். உணர்வால். புவணுவால் அறிந்துகொண்ட போதும் இப்பதான். அவளால் பூரணமாக் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஒ. இப்ப அவள் பெரிய பிள்ளை. V
நாளை விடிந்ததும் குப்பைத் தண்ணிவார்ப்பு. கமலம் மராயம் பெற்ற வீடெங்கும் சொல்லப் புறப்பட்டவள்தான் இருட்டியபோது தான் வீட்டில் விளக்குக்கு எண்ணெய் இல்லை என்ற நினைப்பு. படலையைத் திறந்து வீட்ட வந்தபோதுதான் புவன. சுவாமி மாடத்து தூண்டாமணி விளக்கை. தேங்காய் எண்ணைவிட்டு. கோழுத்தி. தலைமாட்டில் வைத்து. சிதறிக் கிடந்த. பேப்பரென்றில் சிறுகதையை. புரட்டி. புரட்டிப் பார்த்துக் கொண்டு கிடக்கிருள். அப்போதெல்லா ஆழும் வகுப்புச் சோதனைக்கு எழுதின கதையின் ஞாபகம் ஒ. அவளுக்கு தன்ர. சமூகத்தின் ஒவ்வொரு மனிதனதும் விரக்தி. வ்ெதும்பல். வேதனையால் அமுங்கிய ஈனக்குரல்கள் என்பனவற்றையும் சமூகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்ற. அழுக்காறு கொண்ட அசுத்த ஆவிகளின் அசிங்கங்களையும் இன்னபிறவற்றையும் மூர்க்கத் தனமாய்தன்ர பேணுவை ஆயுதமாகக்கொண்டு எதிர்க்க வேண்டு மென்று அவள் தன்ர அறிவொடு வரிந்து கட்டிக்கொண்ட நினைப்புத் தான்.
சேலவைச்சுருக்கி. நடந்துபோன குப்பைத்தண்ணீர் வார்ப்பையும். தன்னைப் புதுமணப் பெண்போல் சேலைகட்டி, நெற்றிப்பட்டம் போட்டு பார்த்து நின்ற தாயையும் வந்து நின்றவர்களையும் ஏறெடுத்துப் பார்க்கா, மல் நிலத்தையே. வெறித்து வெட்டி. வெட்டி. பார்த்ததை யும் வந்து நின்றவர்களின் கேலிப் பேச்சுகளும் .
புட்டுக்களியை தலையில் ஏற்றி இறக்கியபோதுதான் முன்வீட்டுச் செல்லம் கலியாண வீட்டோடு இதை ஏத்தி இறக்கியிருக்கலாம். என்று பகிடியாய் கூறிய வார்த்தைகளையும் நினைத்தும் எதையோ இழந் பெற்றதிமிராய். உலகத்துப் புதிர் ஒன்று விடுவிக்கப்பட்டவள் பேர்ன்று முள் முருக்கப் பூவாய் சிணுங்கி. சிணுங்கி. கிடக்கிருள். பக்கத்துவீட்டில் தண்ணிவாப்புக்கு எடுத்த சாமான்களைக் கொடுப்பதில் ஈடுபட்ட தாயுடன் நாகம்மாக் கிழவியின் வாய் எதை எதையோ.
புதுசு 18

ஓயாமல் பேசியபடி இருந்தது. அந்தக் கிராமத்து சாமத்திய வீடோ. கலியாணவீடோ. மனுசி சொல்லி வைச்ச முறைதான். கொண் டாட்ட முறைகள் தெரிந்த விஷயகாற. மணிசியெண்டு அந்தக்கிராமத் திலே பேர் போனவள்தான் நாகம்மாக்கிழவி
இப்ப அம்மாநான் பள்ளிக் கூடம் போறதைப் பற்றித்தான் கேட்டிருக்கோணும். அதைப் பற்றித்தான் அவள் ஏதோ பெரிசா கதைக்கிருள்.
* சி. எங்கடை பரவணியில் என்ர அறிவில புத்தியறிஞ்சாப் பிறகு பள்ளிக்கூடம் யார் விட்டவங்கள் சொல்லு பாப்பம். அவன் பரமுவின்ற மகள்கூட இவளவு செட்டிபிக்கெற்றுக்களை விளையாட்டில வாங்கியும் பிறகு கதப்பன் மரியாதை இல்லையென்று மறிச்சுப் போட்பான். இதுகளை படிப் பிச்சு என்ன விடிவு வந்திருக்கு. படிப்பிக்கத்தான் இதுகளுக்கு பிரச்சனை கூடுது" புவணுவால் எதையும் கூறமுடியவில்லை. தொண்டையை இரும்புக் கரங்கள் நெருடுவது போன்ற பிரமை. மூலை தட்டிக்கரை வாங்கிலில் இருந்து வெளியே வந்தாள். அவள் தான் பெற்ற அனுபவத்தால் படிப் பால் தான் ஏன் படிக்கவேண்டும் என்று தன்னுள்ளேயே தானே கேட்டு எண்ணிக்கொண்டிருந்த. இமய எண்ணக்கோபுரம் தன்முன்னே காலடியில் நாகம்மாக் கிழவியால் நொருக்கப்படுவதைப் பார்த்தாள். வெறும் கடதாசி பட்டம் பதவிக்காக, படிக்கின்ற படிப்பையே சுத்தி சுத்தி அசைபோடுகின்ற. இந்த சமூகத்தில். இந்த உலகத்தை மட்டும் புரிந்து கொள்வதிற்காக ஆயிரம்பிறவி எடுத்து பிறந்தாலும் படிக்கமுடியாது என்பதை இவர்கள் எங்கே அறியப்போகிறர்கள்.
பக்கத்து பனை வெளியில் உச்சிகளை தழுவிவந்த கொண்டல் காற் முல் வயிரவர் கோயில் பூசாரியின் தலையாய் முற்றத்து முன் வேம்பு வெறிகொண்டு ஓடியது. " அம்மா நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போறன். * புவனவின் இந்த வார்த்தைகள் நாகம்மரிக் கிழவியி னதும் கமலத்தினதும் தலையில் ஆயிரம் மலைகளை இடித்து நொருக்கி கொட்டுவது போன்ற பிரமை. புவன முற்றத்தில் இறங்கினள். அவள் முன்னே கொடிவிட்டு அவளால் வளர்ந்து முகைவிட்டு நின்ற முல்லையின் புதியமொட்டுக்கள் சன்னதம் கொண்டு தலையை ஆட்டி நின்றன.
டைடஸ் தொட்டவத்த தயாரித்து நெறிப்படுத்திய " ஹந்தியா " படத்துக்கு ரோம் திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்கள் யாவற் றிலும் மிகச்சிறந்த கதையமைப்பிற்கான விருது கிடைத்துள்ளது. இத் திரைப்பட விழாவில் சர்வதேச ரீதியில் சிறுவர், இளைஞர்கட்கான திரைப் படங்கள் பங்கேற்றன.
L4Šlመን 18

Page 12
ஸ்பானியக் கவிஞர் ஆங்கிலம் வழியாகத் 6 u få (3 As s as s š6mór ag J i as s 66ày தமிழில் இரு கவிதைகள் s. Gus Jaff
1. சந்திரன் தோன்றுகின்றது
சந்திரன் வெளியில் வரும்போது மணிச் சத்தம் மங்குகிறது, தெளிவற்ற பாதைகளும் தோன்றுகின்றன.
சந்திரன் வெளியில் வரும்போது கடல் பூமியை மூடுகிறது: r முடிவற்ற வெளியில்" ஒரு தீவைப்போல் இதயம் உணர்கிறது.
முழுநிலவின் கீழே யாருமே தோடம்பழங்கள் உண்பதில்லை பச்சையான குளிர்ந்த பழத்தைத் தான்
யாரும் உண்ண வேண்டும்.
ஒன்று போலான நூறு முகங்கொண்ட சந்திரன் வெளியில் வரும் போது, பையிலுள்ள வெள்ளி நாணயங்கள்
விம்முகின்றன.
புதுக. 20

2. பிரியாவிடை
நான் இறந்து போனுல் பல்கனியை திறந்தபடி விடு
சிறுவன் தோடம் பழங்களைத் தின்கிறன்
(பல்கனியிலிருந்து அவனைப் பார்க்கிறேன்) அறுவடையாளன் தானியத்தை அறுக்கிருன். (பல்கனியிலிருந்து அதைக் கேட்கிறேன்)
நான் இறந்து போனல் பல்கனியைத் திறந்தபடி விடு
அன்பளிப்பு 8. உலகநாதன் las ás al i) 60ió 6 கெரக் குவில்
புதுசு 21

Page 13
மேலும் ஒரு நல்ல திரைப்படம்
" as por así? ”
* பலங்கெட்டியோ " போன்ற சிங்களச் சினிமாக்கள் தந்த சுவாரசி யம் "பரித்தியாக' வை நம்பவைத்தது திரைப்படச் சாதனத்தை தமிழ்க் கலைஞர்களிலும் விட சிங்களக் கலைஞர்கள் அதிகமாகப் புரிந்து கொண் டுள்ளனர் எனும் என் நம்பிக்கை இது வரையும் சிதறடிக்கப்படவில்லை.
நூறு நிமிடங்களாலான இப்படத்தின் கதை சாதாரணமானது: முதிர்ந்த, எதிர்ப்புத் தெரிவிக்கப்படாத காதலைப் பற்றியதான கதை. அவனது தியாகம் காதலியின் தமக்கைக்கும் சீதனம் வழங்கும் பொறுப்பை ஏற்க முன்வருகின்றது. கராஜில் வேலை செய்யும் அவன் சீதனத்திற்காய் களவெடுக்கத் தூண்டப்படுகிருன். காதலியின் தமக்கைக்கு திருமணம் முடித்து விட்டு அதே மணமேடையில் தன் திருமணத்தைப்பற்றி கற்பனை செய்யும் போது பொலிசார் வசம் அவன் சிக்கப்படுகிறன்.
ரொனி றணசிங்காவின் நடிப்பில் அவன் உறுதியாக்கப்படுகின்றன். காதலியை சந்தித்த பின்னரான ரொனியின் சைக்கிளோட்டங்கள் அவ னது மன உணர்வை நுண்ணியமாக வெளிப்படுத்த உதவின. புடலங்காய் தோட்டத்திலும், கிணற்றடிப்பக்கலிலும் யன்னல் திரைக்கு அப்பாலும் அவன் தனது கா தலை மிக இயல்பாக உணர்த்துகிருன். இவனுக்கு ஈடு கொடுத்த வசந்தி சதுராணியும் மற்றைய நடிகர்களும் தங்கள் பாத் திரத்தை அதிகமாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
மெளன அசைவுகள் இப்படத்தின் வெற்றிக்கு மூலகாரணி எனின், நெறியாளர் பிரேமரத்ன அதிகம் பாராட்டுக்குரியவர்.
இச்சினிமாவின் குறைகள் நிவர்த்திக்கப்படக் கூடியதே. 'ரொனி"யின் நினைவில் பஸ்சில் களவெடுப்பதிலும் வா னில் கொள்ளையடிப்பதிலும் ஒன்றைத் தவிர்த்திருக்கலாம். ஹொலிவூட் பாணியில் அமைந்த களவெடுக் கும் காட்சி, முகத்தைச் சுளிக்க வைக்கிறது. இத்தகைய காட்சியும் இட மறிந்து பிரயோகிக்கப்படவில்லை என்பது என் கருத்து. கமரா தன் பங் கைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையோ எனும் ஐயப்பாடும் எனக் குண்டு. கோணங்கள் நன்ருடியிருப்பினும் அசைவுகள் போதாமை ஐயப்பாட் டிற்கான காரணியாகின்றது. பின்னணி இசை தேவைப்படுகையில் பாவித்து மற்றைய இடங்களில் தவிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்படியான சிங்களச் சினிமாக்களை தென்னிந்தியக் குப்பைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்து இப்பொழுதெல்லாம் மிக எரிச்சலுறுகின்ற தரமறியும் ரசிகர்களுக்காக - யாழ்ப்பாணத்தில் திரையிட் அரச திரைப் படக்கூட்டுஸ்தாபனம் முயற்சி செய்தால் என்னவாம் ?
புதுசு 22

யாழ்ப்பாணத்தின்
சமூக பொருளாதார வரலாறு
இறுக்கமான யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்மைப் பற்றி, அல்லது பொதுவாகவே தமிழர்களுடைய சமூக அமைப்பைப் பற்றிய பூரணமான சமூகவியல் ரீதியான ஆய்வு ஒருபோதும் செய்யப்பட்டதே இல்லை. எம் மிடையே நல்ல சமூகவியலாளர்கள் இல்லை என்பதும் ஒரு காரணமாகும். டாக்குத்தர், இன்ஜினியர், அக்கவுண்டன்மார் இவர்களைத் தவிர வேறு எதையும் பற்றிய ஞானமே இல்லாத எங்களது சமூகத்திற்கு சமூகவிய லாளர்களையும், மானிடவியலாளர்களையும், தெர்ல்பொருளியலாளர்களையும் எங்கே தெரியப்போகிறது? இன்றைய நிலையில் இவர்களுடைய இன்றியமை யாமை உணரப்பட்டு வருகிறது. ஆர்வமிக்க மாணவர்கள் இத்தகைய துறை களில் நிரம்பவும் ஈடுபாடுகொண்டு இறங்க வேண்டும். சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் மிகுவும் அவசியம். யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்புப் பற்றிய ஒரு நுனி எழுத்துக் கொடுத்தNலே இந்தக் கட்டுரை. இது தொடர்பான வேறு கட்டுரைகள், மறுகருத்துக்கள் விமர்சனங்களை வரவேற்கிருேம். யாழ்ப்பாணத்தலைவர்கள் பற்றி முழுமையான ஒரு சமூகவியல் ஆய்வு சாதிமுறைமை நிலவுடமை எச்சவொச்சங்களின் வெனிப்பாடு போன்ற பலவிஷயங்களைத் தெளிவுபடுத்தும் யாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய * றலி சைக்கிள்", "ஒஸ்ரின் கார் மனுேபாவம்" போன்ற பல இயல்புகளைப் பற்றியும் சுவையான விவரங்களைத் தருதல் கூடும். இது தொடர்பான ஆய்வுகளை என்றுமே வரவேற்கிருேம்.
சாதி அமைப்பும்
அதன் அடிங்படிைகளுல்
வ, ஐ. ச ஜெயபாலன்
இலங்கையில் சாதி அமைப்பை சிங்களவரிடையேயும் குடா
சிங்கள முறைமை தமிழ் முறைமை என எவ்வளவு இலகுவாகவும் தெளி வாகவும் பிரிக்கலாமோ அதைவிட இலகுவாகவும் தெளிவாகவும் தமிழ்
மக்களின் சாதி முறைமையை
யாழ்ப்பாண கு டா நா ட் டி ன்
முறைமை, மட்டக்களப்பு வன்னி மன்னர் போன்ற யரழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய தமிழ்ப் பிரதேசங்களின் முறைமை எனவும் பகுக்கலாம்.
நாடு தவிர்ந்த ஏனைய பிரதேசங் களில் வாழும் தமிழரிடையேயும் காணப்படுவதைவிட சாதி அமைப்பு யாழ்ப்பாண குடாநாட்டில் (கொடு, மையான முறையில்) இறுக்கமான ஒரு அமைப்பாக உள்ளது.
இவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை சமூக பொருளாதார வ ர ல |ா ற் று கண்ணுேட்டத்தில் ஆராய்வதும் இவற்றுக்கு எதிரான அரசியல் போராட்டங்களின் இலக்
புதுசு 23

Page 14
குகளை தெளிவாக்குவதுமே இக்கட் டுரையின் நோக்கம்.
பிரிட்டிஷ் காலம் வரை சிங்கள பிரதேசங்களில் நிலத்தில் தனியார் உடமை நிலவவில்லை. நிலம் அரச னுக்குச் சொந்தம். எல்லாச்சாதி யி ன ரூம் அவர் அவர் களு க் கென்று விதிக்கப்பட்ட ராசகாரி யத்தை செய்வதன் மூலம் தத்தமது சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத் தில் பயிர் செய்யும் உரிமையைப் பெறுவார்கள். ராசகாரியம் ஆக்கப் பணிகளாகவோ யுத்தகால சேவை களாகவோ அல்லது சாதாரண அரசு, கோவில் சம்பந்தப்பட்ட ச ட |ங் கு சம்பிரதாயங்களாகவோ அமையலாம். தொடர்ந்தும் ராச காரியம் செய்வதற்கு ஆண் வாரிசு இன்மை, ராசகாரியம் செய்யத் தவறுதல் போன்ற காரணங்களால் குறித்த ஒரு நிலம் அது எந்தச் சாதினயிருக்கானதோ அச்சாதியின ரிடையே பொருத்தமான வேறு ஒரு வரது கைக்கு அரசனுல் மாற்றப் படும். இத்தகைய நில உ ட  ைம சேவை மானிய முறை (Service
enure) GT68Til Gub.
மாருகத் தமிழரது பிரதேசங் களில் நிலத்தில் தனியார் உடமை நிலவியது. அரசன் விளைச்சலில் ஒரு பங்கை வரியாக வசூலிப்பதற்கு மட் டுமே உரித்துடையவன். நிலம் அர சனின் உடமையல்ல யாழ்ப்பாண அரசில் நிலவிய ஊழியம் ' ராச காரியம் போல நிலத்துடன் சம்பந் தப்பட்டதல்ல. ஊழியம் செய்யத் தவறின் குற்றப்பணம் இறுக்கவேண் டும். ரா சகாரியம் செய்யத்தவறின் நிலத்தை இழக்க வேண்டும்.
குடாநாட்டில் ஏக நில உடமையாளர்களாக வெள்
யாழ்ப்பாணக்
புதுசு 24
ளாளர்கள் அமைந்தனர். ஏனே ய சாதியினர் அடிமைகள் எனவும் குடி மைகள் எனவும் பிரிக்கப்பட்டனர்.
குடிமக்கள் என வகுக்கப்பட்ட வெள்ளாளருக்கு ஆடை துவைத்தல், முடிதிருத்துதல், கிரி யைகளில் பறை அடித்தல் போன்று தத்தம் சாதி அடிப்டையிலான பல் வேறு சேவைகளை செய்வதன் மூலம் தத்தமக்குரிய குத்திமை (படி) வி! பெற்றனர். இவர்கள் விவசாய உற் பத்தியில் நேரடியாக ஈடுபடவில்லை. (service Certi) 99.6).Losair o வகுக்கப்பட்ட சாதியினருள் கோ வியர் பெரும்பாலும் வாரக்குடி களாகவும், பள்ளர் நிலத்தில் வேலை செய்பவர்களாகவும், நளவர் மரம் ஏறுபவர்களாகவும் உற்பத்தி முயற்சிகளில் நேரடியாக ஈடுபடுத் தப்பட்டனர். இவர்கள் யாவரும் நிலமற்றவர்கள். சிங்கணப்பகுதிகள் போலன்றி, யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலஉடமை, அல்லது நில மின்மையும், சாதி அமைப்பும் ஒன் ருேடு ஒன்று பின்னிப்பினேந்ததாக அமைகின்றன.
ଗuffଣs fit
குடாநாடு தவிர்ந்த தமிழ்ப்பிர தேசங்களிலும் நிலத்தில் தனியார் உடமையே நிலவியது அங்கும் அர சனே, வன்னித்தலைவர்களோ விளைச் லில் தமது பங்கை வரியாகப்பெறு
வர் எனப்பொதுப்படக் கூறலாம்.
இங்கு பரந்து பட்டகாடுகள் காணப் பட்டன. நீர்ப்பாசன வசதிகளையும் சிறு குளங்களையும் அண்டி அல்லது மீன்பிடி வாய்ப்புக்கள் உள்ள கடற் கரையை அண்டித் தனித்தனிச் சாதி யினரின் குடியிருப்புகள் ஏற்பட்டேன. நிலம் பரந்த அளவில் காணப்பட்ட தால் மன்னரில் குடியேறிய மீன வர் சமூகத்தவர்களான கரைய7ர்

முழுமையாக விவசாயிகளாக மாறி னர். இதுபோலவே மட்டக்களப்பில் குடியேறிய முக்குவரும் மீன்பிடித் தொழிலுக்குப் பதிலாக விவசாயம் செய்பவர்களாக மாறினர்.
இப்பிரதேசங்களிலும் வன்னி யிலும் காணப்படும் மீனவர் கிரா மங்கள் தவிர்ந்த ஏனைய தனிச்சாதிக் கிராமங்களில் வாழ்பவர்கள் விவசா யம் செய்வதற்கும் குடியிருப்பதற் கும் நிலமுள்ளவர்களாக இரு ந் தனர். சாதி அடிப்படையிலான சேவைகள் இவர்களுக்கு மேலதிக வுருமானந் தரும் மார்க்கமாகவே அமைந்தன.
இங்கு நிலமின்மை காரணமா கவோ தொழில் வாய்ப்புக் காரண மாகவோ வெள்ளாளரில் ஏனைய சாதியினர் தங்கி வாழும் நிலைமை ஏற்படவில்லை. உற்பத்தியில் அடிமை முறையும் இருக்கவில்லை.
நாளடைவில் இப்பகுதிகளில் சனத்தொகைப் பெருக்கம் போன்ற காரணங்கள் நில மற்ற வர் களது தோற்றத்துக்கு வழிவகுத்தபோதி லும் அங்கு நிலவிய நில உட மையும் நிலமின்மையும் யாழ்ப்பா னக்குடாநாடு போன்று சாதி அடிப் படையிலான ஒரு தோற்றப்பா t-66)
குடாநாடு தவிர்ந்த தமிழ்ப்பிர தேசங்களில் காண ப் பட்ட து போன்ற தனிச்சாதிக் கிராமங்களின் தன்மைகள் சிங்களப்பிரதேசங்களில் குளம் சார் ந் த கிராமங்களிலும் காணப்பட்டன.
இவ்விரு பிரதேசங்களிலும் வாழ்ந்த பல்வேறு சாதியினரும் குடியிருப்புக் காணிக்காகவோ விவ
யினராகவும் உள்ளனர்.
சாயக் காணிக்காகவோ உயர்சாதி யினரில் தங்கியிருக்கவில்ஃல என்பதும் உயர்சாதியினர் தரும் " படி " அவர் களது ஜீவனுேபாயத்தின் அடிப் படை மார்க்கமாக அமையவில்லை என்பதும் முக்கியமானவை. அவர் க ள் தமது சொந்தக்காணியில் விவசாயம் செய்பவர்களாக இருந் தனர். சாதி அடிப்படையிலான கிரி யைகள் அவர்களுக்கு மேலதிக வரு மானம் தரும் மார்க்கமாக அமைந் தன எனலாம் நாளடைவில் நிலமற் றவர்கள் உருவாகியபோது அவர் களது தொழில் மார்க்கங்களாகவும் இவை பின்னர் ஓரளவுக்கு முக்கியத் துவம் பெற்றிருக்கலாம்.
தமிழரது சாதி அமைப்பில் ஆசா ரப்படி பிராமணர் மேல் நிலையில் வைக்கப்பட்டபோதும் உண்மையில் நிலச் சொந்தக்காரர்களான வெள் ளாளரே முதன்மை பெறுகின்றனர். தமிழ்நாட்டில் நிலப் பிரபுக்களான தஞ்சாவூர் பிராமணர்கள் பெறும் முக்கியத்துவத்தை பூசகர்களான யாழ்ப்ப ாணத்துபிராமணர்கள் பெற வில்லை. அவர்களுக்கு சமய அந்தஸ்து உண்டு. பொருளாதார அந்தஸ் தில்லே. இது சாதி அமைப்பில் இந்தி யாவுக்கும் இலங்கைக்குமுள்ள முக் கிய வேறுபாடாகும்.
இந்தியாவிலேயே குறிப் பாக தமிழ்நாட்டில் நிலச்சொந்தக்காரர் களான தஞ்சாவூர் பிராமணர்கள் பெறும் உயர்ந்த நிலையை உண்மை யில் நிலமற்ற பூசகர்களான எனைய பிராமணர்கள் சமூகரீதியில் பெ வில்லை எனலாம்.
இவற்றைவிட தொகை ரீதியாக பார்க்கும் போது யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர் ஏகப்பெரும்பான்மை இலங்கைத்
புதுசு 25

Page 15
தமிழரி  ைட யாழ்ப்பாணத்தவர் பெரும்பான்மையாக உள்ளமையும் இங்கு முக்கியமானதாகும்.
யாழ்ப்பாணத் தில் எனது கணிப்பின்படி வெள்ளாள ரி ன் தொகை 50 வீதத்திற்கும் அதிக ԼDո (35ւն.
சிங்களசாதி அமைப்பில் பிரா மணர்கள் இடம் பெறவில்லை வெள் ளாளர்என்று சிலவேளைகளில் குறிப் பிடப்படும் " கொவிகம? சாதி யினரே அங்கு முக்கியம் பெறுகின் றனர். எனினும் அவர்களிடையில் தொகை ரீதியாகவோ, சமூக பொரு ளாதார அந்தஸ்தின் அடிப்படை யிடையிலோ கொவிகம சாதியினரு டன் ஒரளவு ஒப்பிடக்கூடியவகையில் கரவா, சலகம சாதிப் பிரிவுகள் காணப்படுகின்றன. எனவே சமூக ரீதியிலோ அரசியல் பொருளாதார ரீதியிலோ கொவிகமவினரின் ஏக போகம் அங்கு இல்லை.
மட்டக்களப்பில் வெள்ளாளரு டன் ஒப்பிடும் போது சகலவழிக ளிலும் முக்குவரும் முதன்மை பெறு வர். மன்னுரிலோவெனில் தொகை ரீதியாகவோ அந்தஸ்தின் அ டி ப் படையிலோ வெள்ளாளர்கள் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை. பரவர், கரையார், கடையர் என்ற சாதியினர் இங்கு முதன்மை பெறு கின்றனர். தொகை ரீதியாக வெள் ளாளரை விட குறைவாக இருந்த போதும் மன்னுர்பட்டினத்தில் வசிக் கும் வாணிபர் சமூக பொருளாதார அரசியல் அந்தஸ்தைப் பொறுத்தது நெடுங்காலமாக மு க் கி ய த் துவம் பெற்றிருந்தனர்.
யாழ்ப்பாணம் போலன்றி இப் பிரதேசங்களில் பிராமணர் பூசகர்
புதுசு 26
களாக அமைந்த ஆகமக்கோவில் களின் "முக்கியத்துவம் குறைவா கவே காணப்பட்டது. பி ரா ம ண ருக்கு பதில் பூசாரிகள் இடம்பெறும் சிறுதெய்வ வழிபாட்டில் சாதி அவ் வளவாகமுக்கியத்துவம் பெறவில்லை. போத்துக்கீசர் காலத்திலிருந்து மன் னரில் கத்தோலிக்க சமயம் முதன்மை பெறுகின்றது.
மட்டக்களப்பிலும் ஆக ம வழி வராத கோவில்களே பரவலாக காணப்படுகின்றன. இங்கு பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் கப்புவ னர் எனப்படும் பூ ச ஈ ரிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள தேவாலயங்களும் விகா ரைகளும் தாழ்ந்த சாதியிரனது. பிரவேசத்தால் தீட்டுப்படுவதாகக் கொள்ளப்படுவதில்லை. மல்வத்தை, அஸ்கிரியதவிர்ந்த ஏனைய மடாலயங் களில் பிக்குகளாவதற்கும் ஒருவனது சாதி தடையாக இருக்காது.
யாழ்ப்பாணத்தில் ஆகமக்கோ வில்களின் முக்கியத்துவம் அதிகம்" யாழ்ப்பாணத்தில் தொட்ர்ந்தும் குறிப்பாக பின்னர் ஆறுமுகநாவல றின் காலத்திலும் பல சிறு தெய்வ வழிபாடுகள் ஆகமக்கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பிரர் மணனுக்கு அடுத்ததாக உண் மையில் பார்க்கப்போனல் கோவில் முதலாளியாகவும், முகாமையாள ராகவும் வெள்ளாளரே முதன்மை பெறுகின்றனர்.
பிராமணரும் வெள்ளாளரது கேர்விலில் வெள்ளாள பிரபுத்துவத் துக்கு சேவை செய்பவர்களாகவே இருந்தனர்.
தமது சமூக பொருளாதார அந்தஸ்தை வெளிப்படுத்தும் சாதன

மாகவே யாழ்ப்பாணத்தில் கோவில் கிள் அமைந்தன.
வெள்னாளக் குடும்பங்களும் கிராமங்களும் பிளவுபடும்போதெல் லாம் புதிய புதிய கோவில்கள் எழுப் பப்பட்டன. என்ருல் மிகையாகாது.
சிங்கள பகுதிகள் யாழ்ப்பாணத் துடன் ஒப்பிடும்போது இறுக்கமான சமூக அமைப்பை கொண்டவையல்ல எனினும் தனித்து சிங்கள பகுதியை எடுத்து நோக்கும் ஒருவர் யாழ்ப்பா ணத்துக்கும் ஏனைய தமிழ் பிரதேசங் களுக்கும் உள்ள தொடர்பை, கண் டிக்கும் ஏனையசிங்கள பிரதேசத்துக்கு மிடையில் கண்டு கொள்ளக்கூடும்.
பிரிட்டிஷாரின்வருகைக்குப் பின் னர் இங்கு குறிப்பிடப்படும் மாதிரி களில் பல வெளிப்படையான மாற் றங்கள் ஏற்பட்டன.
யாழ்ப்பாண குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் சனத்தொகைப் பெருக்கத்தால் ஏற்பட்ட நில மின்மை சிங்கள பகுதிகளில் மிகவும் கூர்மை அடைகின்றது. மலைநாட்டில் பெருந்தோட்டப்பயிர் செய்கையும் கரையோரங்களில் ஆரம் பத் தி ல் தென்னையும் பின்னர் றப்பர்த்தோட் டங்களும் பெரும்பகுதி நிலங்களைப் பிடித்துக் கொள்கின்றன.
அங்கு நிலவுடமை தொடர்பாக சேவை மானிய முறை ஒழிக்கப்பட்டு தனியார் உடமை ஏற்படுகின்றது. எது எப்படி அமைந்த போதிலும் முன்னர் குறிப்பிடப்பட்டது போல யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிர தேசங்களில் நிலஉடமையும், நில மின்மையும் சாதி அடிப்படையிலான ஒரு தோற்றப்பாடல்ல என ப் பொதுப்படக் கூறலாம்.
பின்னர் வரண்டபிரதேசக் குடி யேற்றத் திட்டங்கள் அமைக்கப்படு கின்றன.
கல்வியும் வர்த்தகமும் ஏனைய தொழில் துறைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இத் த ரு ண ங் களி லெல்லாம் இப்பிரதேசங்களின் எதிர் காலப் போக்கை நிர்ணயிப்பதாக அவற்றின் சமூக பொருளாதார வர லாற்று பின்னணி முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏற்கனவே தொகை ரீதியாக அதிமுக்கியத்துவம் பெற்றிருந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களு டன் மடப்பள்ளி, அகம்படியார், பரதேசி தனக்காரர் போன்ற பல் வேறு சாதியினரும் ஒன்று கலந்து வெள்ளாளரின் தொகை மேலும் அதிகரித்தது.
வெள்ளாளரின் கையில் நன்செய் நிலங்கள் இருந்தமையால் பொது வாக அவர்களே நிலம் சார்ந்த பொருளாதார உபரியை பெறுவார் களாகவும் பல்வேறு துறைகளில் மேற்படி உபரியை முதலீ செய்வ தற்கு வல்லவர்களாகளாவும் இருந் த&ர். கல்வி, தென்னிலங்கையில் வர்த்தகம், மலேசியாவிலும் இலங் கையிலும் உத்தியோக வாய்ப்புகள் எ ன் பவற்றில் யாழ்ப்பாணத்து வெள்ளாளரின் கை ஓங்கியமைக்கு யாழ்ப்பாணத்து பிரதேச உற் பத்தியில் உபரி அவர் களது கைக்குச் சென்றமையே முக்கிய காரணம் வெள்ளாளரின் இடையே வர்க்க ரீதியான ஆய்வை மேற் கொள்ளும் ஒருவர் நிலஉடமைக் கும் மேற்படி துறைகளில் யாழ்ப் பாணத்து மனிதரின் எழுச்சிக்கும் இடையிலான தொடர்பை மேலும் தெளிவாக உணரலாம்,
புதுசு 27

Page 16
வெள்ளாளரிடையேயும் பெரு நில உடமையாளர்களான, பரம் பரைகளில் வந்தவர்களுக்கு பல் வேறு துறைகளிலும் முதலீடு செய்ய வும் மேல் நிலைகளை எய்தவும் இதன் மூலம் தமது ஆதிக்கத்தை புதிய
மாறிவரும் நிலைமைகளிலும் ஸ்தா பித்துக் கொள்ளவும் கூடியதாக
இருந்தது.
அவர்கள் எங்கு எந்த நிலையில் வாழ்ந்த போதிலும் யாழ்ப்ப்ாணத்
தில் அவர்களது அந்தஸ்தையும்.
சாதிப் பெருமைகளையும் அவர்கள் பெரும் நிலச்சொந்தக்காரர்களின் பரம்பரையினர் என் பதினூடா கவே பெற்றுக்கொண்டனர்.
முழுமையாக இலங்கைத்தமிழர் களையும் எடுத்து பார்க்கும்போது தொகை ரீதியாக யாழ்ப்பாணம் பெறும், பெரும் முக்கியத்துவம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார நடவடிக்கை களில் யாழ்ப்பாண தமிழர்களது. முக்கியத்துவத்தையும் அதனுTடாக வெள்ளாளரின் முக்கியத்துவத்தை யும் உணர்த்தும்.
குடிமைகளாக வகுக்கப்பட்ட சாதியினர் சனத்தொகை ரீதியாக அதிக முக்கியத்துவம் பெறவில்லை. இவர்களுள் தொகை ரீதியாக வண் ணுர் குறிப்பிடதக்கவர்கள். அடுத்து பறையர், தச்சர், அம்பட்டர் என் பவர்களை வரிசைப்படுத்தலாம்.
அடிமைகளாக வகைப்படுத்தப் பட்ட சாதியினரில் கோவியருக்கும் பள்ளர், நளவர் வகுப்பினருக்கு மிடையிலான உறவின் பாரம்பரி யம் இன்றைய யாழ்ப்பாணத்தில் சமூக ரீதியாக முக்கியத்துவம் பெற் றுள்ளது.
இவ் விரு பிரிவினர்களுக்கு மிடையில் உறவுகள் அ டி க்க டி பாதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் பெரும்பாலான சாதிப்போராட்டங் களில் வெள்ளாளருக்குப் பதிலாக கோவியரின் பங்கு முதன்மை பெற் றி ரு ந் த மை அவதானிக்கப்பட் டுள்ளது.
கோவியரின் தோற்றம் பற்றிய பழைய கோட்பாட்டை யாழ் ப் பாண வைபவமாலை முன்வைக்கின் றது. இதன்படி இவர்கள் கோவில் அடிமைகளான வறியவர்கள். டச்சு காலத்தில் கோவில்கள் இடிக்கப் பட இவர்கள் கோவில் எசமானர் களால் பிறருக்கு விற்கப்பட்டனர்.
முதலியார் சி. இ. ராசநாயகம் அவர்கள் முன்வைத்த கோட்பாட் டின்படி கோவியர் யாழ்ப்பாண அர சில் சிறைபிடிக்கப்பட்ட சிங்கள கொவிகம சாதியினரின் வழித்தோன் றல்கள். இக்கோட்பாடு இலங்கையி லும் வெளிநாட்டிலும் மிகவும் செல் வாக்கு பெற்றதாகும்.
எனது ஆய்வுகள் கோவியரின் தோற்றம் பற்றி விளக்கம் தருகின்
இந்தக் கட்டுரையின் உசாத்துணை நூல் விவரப்பட்டியல் வேண்டு வோர் " புதுசு விற்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம். இடவசதி கரு
தியே பட்டியல் பிரசுரமாகவில்லை:
புதுசு 28

றது. வெள்ளாளரின் வாரக்குடிக ளாக சாண்டாருள் ஒருபிரிவினரான வெள்ளான் சாண்டாரும் பின்னர் பெருமளவில் வடுகர் என ப் படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்கு விவசாயிகளும் இடம் பெற்றனர். இவர்களுக்குத் தமது உடமையா ளர்களுக்கும் அரசுக்கும் ஊழியம் செய்யும் கடப்பாடு உண்டு. பொது மக்களுக்கான ஊழியத்தில் கடுமை யான பகுதி இவர்கள் மேற்பணிக் கப்பட்டது. போத்துக்கீசர், பிரஞ்சு கோவே முறைமை ஒத்த (Corree) இவர்களது கடும் ஊழிய சேவையை தோம்பில் COrwe) எனக் குறித் தனர். தமிழ்த் தோம்புகளில் இது கோவி, கோவியம் என குறிக்கப் lul -gil.
கோவே (Gove) என்ற பிரஞ்சு சொல் வாரக்குடிகள் வழங்கும் கூலி யற்ற உடல் உழைப்பை குறிப் ப டதாகும். எழுதப்பட்ட கோவியர் என்ற வழக்கு இங்கு நோக்கத்தக் கிது.
தோம்பின் அடிப்படையில் ஒவ் வொரு மூன்றுமாதத்துக்கும் ஒரு முறை மூன்று நாட்கள் கோவ்வி
(corve) 660 குறிக்கப்படும் கடுமை யான ஊழியத்தைச் செய்வதற்காக இவர்கள் அழைக்கப்பட்டனர். இத்
தகைய கடமையைச் தோம்புகளில்
வேறு சாதிகளை சேர்ந்த வாரக்குடி
சேவை தமிழில் கோவி, கோவியம் என அழைக்கப்
கள் செய்யும்
பட்டது. மேற்படி சேவைகளை செய்
பவர்கள் பின்னர் கோவியர் எனத் தனிச்சாதியினராக தோற்றம் பெற்
றனர்.
இவர்களது ஒத்த பொருளாதா ரப்பின்னணியும், இவர் களு க்கு தீட்டு இருப்பதாக வெள்ளாளர், கருதவில்லை என்பதும் இங்கு முக் கியமாகும். இதனுலேயே பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு சமூகவிய லார் இவர்களை உள்வீட்டு அடிமை asgir (Indoor Slayer) எனவும்,நள வரையும் பள்ளரையும் வெளி அடி மைகள் (Outdoo! Slaver) என வும் வகுத்தனர்.
இங்குமுக்கியமான ஒரு குறிப்பு வெள்ளாளருக்கும் கோவியருக்கும் ஏனைய அடிமை சாதியினருக்கும் இடையிலான உறவு நிலைகள், அடிப் படையில் அவர்களுக்கும் நிலத்துக்கு மிடையிலான உறவு நிலை களி ல் இருந்து எழுவதாக காணப்படுவ தாகும்.
இத்தகைய சமூக பொருளாதார வரலாற்றுப் பின்னணியில் இ ல ங் கையில் காணப்படும் சாதிமுறையை ஆராயும் ஒருவர் ஏன் யாழ்ப் பாணத்தில் சாதிமுறை இறுக்கமான ஒரு நிறுவனமாக அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நில உடமை க்கு ம், சாதி அமைப்புக்கும் இடையில் நிலவிய தொடர்பு, யாழ்ப்பாணத்தில் மட் டும் உற்பத்தியில் அடிமைமுறை நிலவியமை, சனத்தொகை அடிப் படையில் யாழ்ப்பாணத்தில் வெள் ளாளரின் ஏ க ப் பெரும்பான்மை காணப்படுதல், சமூகத்தில் ஆகம முறையில் அமைந்த இந்துக்கோவில் களின் செல்வாக்கு, நிலம் அடிப் படையான மரபு சார்ந்த உற்பத்தி யின் முக்கியத்துவம், விவசாய உபரி (Surplas) பெரும்பகுதியும் வெள் ளாளரிடம் சேர்ந்தமை, கல்வி வர்த்
தகம் உள்நாட்டு வெளி நா ட் டு
புதுசு 29

Page 17
வேலைவாய்ப்புகளை நிர்ணயிப்பதில் நிலம் மூலம் பெற்ற (Surplus)
உபரியின் முக்கியத்துவம், இதனல்
தொடர்ந்து செல்வம் குவிவதற்கும் சமூக அரசியல் செல்வாக்கு வலுப் படவும் வழி ஏற்பட்டமை, சேர்ந்த செல்வத்தில் சேமிப்பின் விகிதம் முதலீடுகள் ஒன்றில் மரபுசார்ந்த தாகவோ அல்லது வேறு பிரதேசங் களி ல் முடக்கப் படுவதாகவோ அமைந்தமையால் யாழ்ப்பாணத் தில் குறிப்பிடக்கூடிய வகையில் மரபுசாராத தொழில் வாய்ப்புகள் ஏற்படாதமை, அரசு முதலீட்டில் காட்டப்பட்ட பாரபட்சம் எ ன் பவை யாழ்ப்பாணத்தில் சா தி அமைப்பின் இறுக்கத்தை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவும்.
தாழ்த்தப்பட்ட ம க் களை ப் பொறுத்து மேன்நிலை அடைவதற் க்ான மரபுசாராத தொழில் மார்க் கங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.
அழுக்குப்படுத்தும் மெக்கானிக் போன்ற தொழில்கள் கடினமான உழைப்பு தேவைப்படும் தொழில் கள் என்று குறிப்பிடக் கூடிய சில தொழில் வாய்ப்புகளிலேயே அவர் கள் ஆரம்பத்தில் சமூக மேன்நிலை அடைவதற்கு முழுமையாக தங்கி யிருந்தன.
மரபு சார்ந்த தொழில்களான நிலத்தை அடிப் படை யாக க் கொண்ட தொழில்களும் சீவல் தொழிலும் சேவைத் தொழில்களும் வெள்ளாளரிடம் தங்கி வாழும் மரபு நிலைமைக்கு புதிய வடி வ ம் கொடுப்பதாகவே அமைந்தது. மேற் படி மரபுசார்ந்த தொழில்களைப் பொறுத்து உற்பத்திக் காரணி களின் உடமையாளனுக பெரும்
புதுசு 30
பாலும் இவள்ளர்ளரே காணப்படு கின்றனர்.
வேம்பிராய் போன்ற T G 5 சங்களில் தாழ்த்தப்பட்ட- மக்களின் குடியிருப்புக் காணிக்கும் வெள்ளா ளரே உடமையாளராக இருக்கும் நிலைமை மிகவும் மோசமான மரபு சார்ந்த தங்கியிருந்தனுக்கும் சாதி ஒடுங்குதல்களுக்கு வழிவகுக்கின்ற தாக உள்ளது
உற்பத்தியில் நிலம் அடிப்படைக் காரணியாக முக்கியத்துவம் பெறும் பகுதிகளிலேயே சாதிப்பிரச்சனைகள் வலுவடைந்து காணப்படுவது குறிப் பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கைத்தொ ழில் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவுஇன்று வளர்ச்சியடைந்தமை யால் மரபு சாராத தொழில் வாய்ப் புகள் அருமையாகவே காணப்படு கின்றது.
அரசின் பாரபட்சத்தால் அரசு துறைக் கைத்தொழில் முதலீடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகம் செய்யப் படாதமையும் யாழ்ப்பாணத்தில் நிலவும் அளவுமிஞ்சிய சே மி ப் பு விருப்பும் முதலீட்டை விட சேமிப்பு பலமடங்கு அதிகமாகக் காணப்படும் தன்மையும் முதலீடுகள் உற்பத்தி அடிப்படையில் அமையாமல் வர்த் தகரீதியிலும் சேவை அடிப்படையி லும் மட்டும் அமைவதும் அதிலும் பெ ரும் பகுதி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் அமைவதும் கூட மிரH சார்ந்த சமூகஇயல் பண்புகள் யாழ்ப்பாணத்தில் தா க் கு பி டி ப் பதற்கு காரணங்களாக இங்கு குறிப் பிடப்படலாம்.
யர்ழ்ப்பாணத்தில் நிலமற்றவர் களில் தாழ்த்தப்பட்ட மக்க ளின்

பங்கு பெரிதாகும். 1844 ல் இலங் கையில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்ட போது வெள்ளாளரின் காணிகளில் குடியிருந்து அவர்களில் தங்கி வாழ்ந்த சிறுபான்மைத் தமிழ்மக் களுக்கு குடியிருப்பு காணியோ சுதந்திரமான தொழில் மார்க்கங் களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட
உண்மையில் 1844 ன் சட்ட ரீதியான அடிமை ஒழிம்பு பொரு ளாதார ரீதியில் அடிமை முறையை ஒழிக்கவில்லை எனலாம்.
யாழ்ப்பாண சா தி ப் பிரச் சனையை ஆராயும் ஒருவர் இவற்றை புரிந்து கொள்ளுவது அவசியம்.
குடியிருப்பு நிலம் சகலருக்கும் உறு தி ப் படுத் த ப் படுவது, மரபு சாராத தொழில் மார்க்கங்கள் அதிகரிக்கப்படுவது போன்ற வழி களில் சுரண்டல் அ  ைம ப்  ைப உடைத்து பொருளாதார வி டு தலைக்கு ஏற்பாடு செய்யப்பட வேண் டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொழில் வாய்ப்பு, வருமானம் என் பவற்றை வழங்குவதில் நில ம் பெறும் முக்கியத்துவத்துக்கும் சாதி இறுக்கத்துக்கும் நேர டி யா ன தொடர்புண்டு. மேற்படி முக்கியத் துவத்துவம் குறைந்து வரும் இடங் களில் இறுக்கம் தளர்ந்து வருவது அவதானிக்கத்தக்கது.
* புதுசு " வின் பிரதி விற்பனையில் கிடைத்தவர்களும் இயலுமானவரை
உதவியோரும், அஞ்சல்மூலம் "புதுசு விரைவில் உரியபணத்தைப் புதுசு
விற்கு செலுத்துமாறு வேண்டுகிருேம். ஒரு சிறு சஞ்சிகை இன்றைய ஈழத் துச் சூழலில் பொருளாதார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்களென நம்புகிருேம்.
og db M sıf Ü y
பூபாலசிங்கம் புத்தகசாலை
4, பஸ்நிலைய முகப்பு uvrhlývat/jooveň
புதுசு 31

Page 18
புதுசு 32
வெளவால்கள் ஹம்சத்வனி
வெண்மையான விண்ணகத்து மேகங்கள் கருக் கொண்ட கார்காலம்,
பனைகளின் கீழே அறிவுக் கதிரவன் ஆடி அடங்குகிற அந்தி வேளை.
எங்கள் சாம்ராச்சியத்தின் எண்ண வானத்தில் மேற்கே தலை வைத்து வடக்கே பறக்கும் வெளவால்கள் அந்நியம்தான்!
எங்கள் கிராமத்துக்குச் சொந்தமில்லாத கறுப்புக்கோட் வெளவால்கள் எங்கள் இத்திகள், இலுப்பைகளின் இளைய தளிர்களைப் பூக்கள் ஒலமிடச் சப்பித் துப்பிச் சக்கையாக்கும்
அந்தப் பருவத்திலும்
வெளவால்கள் அலைகடல் தாண்டிப் பறந்துவரும் அப்போதும்,
எமது இலுப்பைகள் மணம் நிறைந்துபூப்பூக்கும் இத்திகளிலே இளந்தளிர்கள் எண்ணிக்கையற்று நிறைந்திருக்கும்,
இனி,
சுழன்று வீசுகிற காற்றில் களைத்துப்போய் ஒதுங்கிக் கொள்கிற வெளவால்கள்.

களைப் பொறுத்தவரை அவை அதிகாரமில்லாத, வெறுமனே பொருளா தார வாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகளை அரசுக்கு முன்வைக்கும் அமைப்புகள் மட்டுமே.
மாவட்ட அபிவிருத்திச்சபைக்குக் கொள்கை வகுப்பதற்கு எவ்வித மான அதிகாரமுமில்லை. சில துணைச் சட்டங்களை ஆக்கமட்டுமே அதிகார முண்டு. இவ்வாறு சபை ஆக்குகிற துணைச்சட்டங்கள் கூட மாவட்ட அமைச்சரால் ஏற்கப்பட்டுப் பின்பு அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே செல்லுபடியான வை. எமது (தமிழ்) மாவட்ட அபிவிருத்திச் சபைகள் ஆக்கும் துணைச் சட்டங்கள் அமைச்ச ரவையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதும், தனிநாடு உடனே கிடைக்குமென எதிர்பார்ப்பதும் ஒரு வகை தான்.
தமிழ் மக்களை அடிக்கடி உலுக்கி வரும் கலவரங்கள் " ஆபத்தான வையாக மாறக்கூடிய விதத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் படிப்படியாக நிகழ்கின்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்கு இந்த அமைப்புஎவ்விதத்திலும் அதிகாரமற்றது. சில காலத்தின் முன் வவுனியாப் பகுதியை மதவாச்சி யோடு இணைக்க எடுக்கப்பட்ட முயற்சியையும் இங்கு நினைவுகூர வேண்டும் இவ்வாறன முயற்சிகளைக் கூட எதிர்க்கின்ற வலு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கில்லை.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்பதன் மூலம் " சிங்கள குடியேற் றத் திட்டங்களை அமுல் படுத்தப் போவது பற்றி உடனடியாகவே தெரியும் இது ஒரு பெரிய லாபம் இல்ஃப்யா ? , என்று சில "மேதாவிகள் நியாயப்படுத்துகிருர்கள். ஒரு குடியேற்றம் வரமுன்பே அதற்குரிய முன் னெடுப்புகளான், விகாரைகள் இத்தியாதி உருவாகிற போதெல்லாம் ஒரு பகிடி " என்பதாகத்தான் இவ்வளவு காலமும் இருந்தார்கள் போல.
மாவட்ட அபிவிருத்திச்சபையில் சகல கட்சிகளும் அங்கம்வகிக்கக் கூடியதான ஒரு நிலை உள்ளது இதுவே எல்லா மயக்கங்களுக்கும் மூலகார ணம். "எமது மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றிய ஒரு சபையில் ‘நாம் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியானது தான். ஆனுல் அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களெதுவும் எமக்கில்லாமல் ஆம் அரசே ' போடுவதற்கோ அல்லது ஆலோசனைகளை வெறுமனே உதிர்த்து விட்டுவருவதற்கோ பெயர் அபிவிருத்தியல்ல. அதேவேளை எமது பிரதேசங்களில் சபை நிறைவேற்ற முடியாத அல்லது தோல்வியடைந்து போகின்ற எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்துக்கும் பழியை எமது தலைமீது போட இது ஒரு நல்ல வாய்ப் பாகும். மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்பதிலுள்ள முக்கிய ஆபத்து இதுவே. தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்தியில் தமிழருக்கு உரிமை இருப் பதால் (?) இனிமேல் நாம் எமது மண் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று குரலெழுப்பமுடியாது. எழுப்பினலும் எமது மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் மீதே பழி வந்து சேரும். எனவே எந்த வகையிலும் தமிழ்ப் பிர
புதுசு 33

Page 19
தேசங்களில் அபிவிருத்தி என்ற கதையை வாய்திறந்து சொல்கிற சந் தர்ப்பமே நம்மை விட்டுத் தொலைதூரம் போய் விட்டது.
மிகுந்த சிரமத்துக்குமத்தியில்யாழ்ப்பாணக் குடாநாட்டு விவசாயிகள் உப உணவுச் செய்கையில் ஈடுபட்டிருக்கிருர்கள். முக்கியமாக இங்கு விளை விக்கப்படும் மிளகாய், வெண்காயம் என்பன இந்த அரசின் பொருளா தாரக் கொள்கையின் படி இறக்குமதியும் செய்யப்படுகின்றன. இதனல் முன்னெப்போது மில்லாதவாறு விலை வீழ்ச்சியடைந்துள்ளன. அதேவேளை குடாநாட்டு விவசாயிகள் 77க்குப் பிறகு நம்பிக்கையின்மையால் உற்பத்தி யைப் படிப்படியாகக் குறைத்து வருகின்றனர். குடாநாட்டு மக்களின் பெரும்பான்மையினர் பாதிக்கப்படும் இவ்விடயத்தில் எத்தவொரு முன் னெடுப்பையும் வழங்க மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு அதிகாரம் இல்லை; அதேவேளை தன்னளவிலேயே அதிகாரமற்ற சபை மத்திய அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையை ஆட்சேபிக்கவோ எதிர்க்கவோ எவ்வித திரா ணியுமற்றது என்பதையும் உணரவேண்டும்:
தலைக்குமேல் வெள்ளம் ஒடுவதைத் தமிழ் மக்களிற் பலர் இன்னும் சரிவர உணரவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. மாவட்ட அபிவிருத் திச் சபைபற்றிய விரிவான சர்ச்சையை மக்கள் முன் நடத்துதல் நல்ல பய னளிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் மழுப்பல்தனமான கூட்டங்கள் நடத்து வதிலிருந்தே மக்கள் சிறிதளவு தெளிவு பெற்றுள்ளார்கள்.
பாலுக்குக் காவல் வைக்கப்பட்டவர்கள் பூனைகளுக்குத் தோள்கொடுப் பதில் ஏற்படுகிற ஆபத்துக்களில் இது ஒரு வகை. சிங்கள மக்களின் மத் தியிலும், சில இடங்களில் தமிழ் மக்களின் மத்தியிலும் தமிழரின் பிரச் சனை தீர்க்கப்பட்டு விட்டது. இத்தீர்வைத் தமிழச்கள் ஏற்றுக் கொண்டுள் ளார்கள் என்கிற மாதிரிய்ான பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருப்பதிலிருந்து இது தெளிவாகும். இதே நிலையில் "சோஷலிசத் தமிழ் ஈழம் மலரும் என்று மக்கள் முன் வைக்கப்படும் வெற்றுக் கோஷமும் பலமிழந்து வருகின்றது. இவை பற்றியெல்லாம் உங்களுக்குப் பிறிதொருதடவை விரிவாகச் சொல் வோம். என்ன நடந்தாலும் நடக்கட்டும். விரல்மீது மையூசக் காலம்வரும். அடுத்த தேர்தல் தமிழ் ஈழத்தில் தான் நடைபெறும் என்று ( 77 ல் தந்த வாக்குறுதி) மனப்பூர்வமாக நம்புவோமாக,
Poly Institutes Tellippalai
--m =سه هاسس
புதுசு 34

With Best Complements
frem
事
flintonexpo
106 1.1 & 1/3, Reolamation Road
COLOMBO - 11 T No 35687 -
Importers, Exporters, Estate Suppliere, Government Contraotors, Solo Distridutor8 đ: Indenting Agents
புதுசு - தியாகி அகம், சிறுவிளான், இளவாலை விஜயேந்திரனல் புதுசுகளுக் காக இணுவில் துர்க்கா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது, அட்டை ஓவியம் - அ. குலேந்திரன்

Page 20
a-klassir 6r støvnafgudsor
பிளாஸ்டிக், பி. வி. சி. பொருட்களுக்கு
y
பிறீலங்கா இண்டஸ் ரீஸ் த. பெ. எண் - 4 மினுவாங்கொடிை றேட் ஜர் - எல
தொலைபேசி : 419, 265, 412 தந்தி : “ கலசஸ் ஜா-எல
புதுசு 38

சகலவிதமான ஒலிப்பதிவு வேலைகளுக்கும் au a gi bas s6id முன்னணி ஸ்தாபனம்
Radios Pathy
58, Kasthuriyar Road J A FFINA
ஏற்கெனவே எம்மிடமுள்ள நவீன இயந்திரங்களுடன் இப்போதைய புதிய தருவிப்புகள்
* சுலோட்டிங்
மெஷின் எலெகறிக் கட்டிங்
மெஷின் * ஸ்பிரே வெல்டிங்
மெஷின்
ஆதியன
6їu) J п fї யாழ்ப்பாணம்
தொலைபேசி: 7352

Page 21
மாவட்ட அபிவிருத்திச் ժ6toւյսյմ» மயக்கங்கள் சிலவும்
* புதுசு களின் " அரசியல் நிலைப் ரணத்தைப் பின்னெரு தடவை உங்க என்று தானிருந்தோம். ஆனல் காலம் துகிறது; இதுவே தொடக்கம் இன் தொடரும்,
அரசியல் ரீதியாகவோ அன்றிப் ே கவோ தமிழ்பேசும் மக்களுக்கு விமோ, அமைப்பு என்று பெரும்பான்மையி: அபிப்பிராயம் கொள்ளப்படும் மாவட் களை ஏற்றுக்கொள்வது எவ்வளவு தூர பது பலரால் இங்கு உணரப்படவில் விருத்திச்சபை எவ்வாரு?ன அமைப்பு, என்ன என்பனபற்றியெல்லாம் பெ விளக்கம் இதுவரை முழுமையாகக்கின
மாவட்ட அபிவிருத்திச்சபைபற்றி விளக்கத்தை ஓரளவு புரியவைக்க இக் சபையின் "கையாலர்காத்தனம்" எவ் "புதுசு வாசகர்கள் புரிந்துகொண்டா இக் கட்டுரையின் வெற்றி. கூரைை நாணயங்கள் சொரியும் என்கிறமாதிரி இங்குள்ள பலரிடத்தும் காணப்படுகிற காரணம் இங்குள்ள பலரது நம்பிக்!ை திருக்கும் 'அரசகட்டில்காரர்'களின் பி
சிலகாலங்களின் முன் தமிழர் வி
ரால் நிராகரிக்கப்பட்ட பதவியான குறித்த ஒரு அபிவிருத்தித் திட்டத்து முன்பாக அத்துறையைச் சார்ந்த பார் அங்கீகாரம் பெறவேண்டும். தவிர ப நியமனத்தை எப்போதும் ஜனதிபதி அரசினல் நிய்மனம் பெறும் - அதா6 மாவட்ட அமைச்சரின் அதிகாரங்களே "மக்களால்" தெரிவு செய்யப்படப் ே சபைகளுக்குப் பெரிதான அதிகாரங்க எவரும் எதிர்பார்க்கமுடியாது. மாவ: (தொ

பாடுகள் பற்றிய விவ ள் முன் வைக்கலாம் சிறிது அவசரப்படுத் எனும் வரும் பிறகும்
பொருளாதர்ர ரீதியா சனத்தைத் தரும் ஓர் னரிடத்தில் பரவலாக ட அபிவிருத்தி சபை ம் ஆபத்தானது என்ப 29. மாவட்ட அபி அதன் ஆளுமைகள் ாதுமக்களுக்குத் தக்க
டக்கவில்லை.
ய அமைப்பு ரீதியான கட்டுரை முயல்கிறது. வாருனது என்பதை லே போதும். அதுவே யப் பிய்த்துத் தங்கி நம்பிக்கைகள் இன்று றது. இதற்கு முக்கிய ககளை இன்றும் வைத் பிரச்சாரமே.
டுதலைக் கூட்டணியின மாவட்ட அமைச்சர், க்குள் அவர் இறங்கு ராளுமன்ற அமைச்சின் ாவட்ட அமைச்சரின் ரத்துச்செய்யமுடியும். வது அரசுசார்புடையா இவ்வாறிருக்கையில் போகும் அபிவிருத்திச் ளை அரசு வழங்குமென
ட அபிவிருத்திச் சபை
டர்ச்சி 33ஆம் பக்கம்)
Gð s జ్ఞాg di G. ཕྱི་
{
s
*