கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2002.09

Page 1
2002
September, 0.5
 
 


Page 2
விமர்சனமும் aru I esir IIDfraFesoroIII prib
மற்றவர்களின் குறைகளைக் காணும் போது.
ଜିଦ୍ଧି
தனது குறைகளைக் காணும் போது.
= குவா யனிவு
ཡོད༽
(இந்த இதழில
சிறுகதைகள்
சாமிநாதன் விமல் கோகுலராகவன் வனஜா நடராஜா
கவிதைகள்
சிவசேகரம் த. ஜெயசீலன் ஈழத்து தேவன் பூதனார் அழ, பகீரதன் பட்டனத்தடிகள் நடராசா சத்தியபாலன் இராம ஜெயபாலன் குகநாதசர்மா சிவகுமார்
கட்டுரைகள்
Guy ffluuii flauCFSyih பேராசிரியர் சோகிருஷ்ணராஜா
nauf
குமரன்
இராகவனி
சந்தா விபரம்: 6 இதழ்கள்- 100ரூபா 12 இதழ்கள் - 200ரூபா காசுக்கட்டளைகள் அபகீரதன் பெயருக்கு பனிடத்தரிப்பு தபாலகத்தில் மாற்றக்கூடியதாக பெற்று அனுப்பவேண்டிய E. தாயகம், 405ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 
 

புதிய ஜனநாயகம்
புதிய வாழ்வு புதிய பண்பாடு کمرہ .......� �.........................* கலை,இலக்கியூ சமூக விஞ்ஞான இதழ்
செப்டம்பர் 2002 இதழ் 45
இரண்டாவது சுதந்திரம்
ரு தசாப்தங்களுக்கு மேல் போர் மேகங்கள் கவிந்திருந்த மண்ணில் சமாதானத்தின் ஒளிக்கிற்றுக்கள் படர ஆரம்பித்துள்ளது. போரினால் சிதைந்தழிந்த தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் ஆறுதலையும் மன மகிழ்வையும் இது தந்துள்ளது. இச்சமாதானம் நிரந்தர சமாதானமாக நீடிக்க வேண்டும் என்ற பெருவிருப்பும் இந்நிலை நீடிக்குமா என்ற ஏக்கமுமே மக்களிடம் இன்று நிலவுகிறது. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
இலங்கைத் திவினர் வரலாற்றிலேயே இலட்சக்கணக்கான மக்களை பலிகொண்டும் பல கோடிக்கணக்கான சொத்துக்களை அழிவுகளுக்கும் உட்படுத்திய இப்போரின் பின்னரும் இலங்கையின் அரசியலில் பெருமளவு மாற்றம் ஏற்படவில்லை.
இப்போர்களில் இறந்தவர்கள் எவரோ, இழந்துபோன சொத்துக்கள் எவருடையதோ என்ற அந்நியப்பட்ட மனநிலையில் இருந்தே இவர்கள் இன்றும் அரசியலை அணுகுகின்றனர். முன்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்த பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவதற்கு காரணமாக அமைந்த அதே பொறுப்பற்ற அதிகார இழுபறி அரசியலே இன்றும் தொடர்கிறது.
இத்தகைய ஒரு சூழலில் அரசியல் தீர்வும் நிரந்தர சமாதானமும் எட்டப் படுமா என்ற கேள்வி மக்கள் மனங்களில் எழுவது இயல்பானது. ஆனால் வரலாற்றுப் பொறுப்புமிக்க ஒரு காலகட்டத்தில் சமாதானத்துக்கான வாக்களிப்புடன் தமது பணி முடிந்துவிட்டதாக மக்கள் ஒதுங்கிவிட முடியாது. நீதயான தீர்வுக்கும் நிலைத்த சமாதானத்துக்கும் தொடர்ந்து உழைப்பதிலும் தமது பங்கை ஆற்றவேண்டும்.
இனர்று ஏற்பட்டிருக்கும் சமாதானச் சூழலை உறவினர்களினர் ஒன்றுகூடலுக்கும், உல்லாசப்பயணங்களுக்கும், வர்த்தக வாய்ப்புக்களைப் பெருக்குவதற்கும் மட்டும் பயன்படுத்துவதுடன் நின்றுவிடாமல், சுதந்திரமானஅறிவுபூர்வமான-அரசியற் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Page 3
குறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற் கொள்ளாது தேசத்தினதும் மக்களினதும் எதிர்கால சந்ததியினதும் நலன்களை மனதிற் கொண்டு அனைத்து அரசியற் சக்திகளையும் அரவணைத்து திறந்த மனத்துடன் பேசி ஒரு முழுமையான அரசியற் திர்வை எட்டவேண்டும் என்ற மக்கள் கருத்தை வலுப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் முதல் கல்வியாளர்கள், புத்திஜீவிகள், மதத்தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இப்பணியில் கைகொடுக்க முன்வர வேண்டும்.
காலனித்துவம் கையகப்படுத்தி விட்டுச்சென்ற அரசியல் அதிகாரத்தை, விடுதலை உணர்வின் விரிவின்றி, வசதிபடைத்த வர்க்கத்தினர் தமக்குள் பங்கு போட்டுக்கொள்ள வாய்ப்பாக அமைத்துக்கொண்டதே பேரினவாத அரசியல். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நவகாலனித்துவ கருத்தியலை ஏற்று வல்லாதிக்க நாடுகளின் ஆசியுடன் தொடர்ந்த இப்பேரினவாத அரசியலின் விளைவே- இனக் கலவரங்களுக்கும் இருபதாண்டு யுத்தத்துக்கும் வித்திட்டது.
தேசத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் அடகுவைத்தாவது தேசத்து மக்களையும் தேசிய இனங்களையும் ஒடுக்க முனைந்ததே இதுவரை இருந்த வரலாறு. இனியும் வல்லாதிக்க நாடுகளின் தயவிலும் பலத்திலும் தங்கிநின்று அரைகுறைத் தீர்வை திணிக்க முனைவதை விடுத்து தேசத்தின் எல்லைகளுக்குள் தேசிய இனங்களின் உரிமைகளை ஏற்று மதிப்பது என்ற நிலை ஏற்பட வேண்டும்.
இச்சமாதான முன்னெடுப்புடன் இனப்பூசலுக்கான நச்சு விதைகளை இனங்கண்டு அடுத்த சந்ததியின் வாழ்வுரிமையையும் பாதிக்காத வகையில் அதனை அழித்தொழிக்க வேண்டும். இடைக்கால நிர்வாகமோ அரசியல் தீர்வோ இவற்றை அடிப்படையாக வைத்து நகர்த்தப்படுவதே இம்மண்ணுக்கும் மக்களுக்கும் விடிவைத் தரும்.
போரினால் பிளவுண்ட தேசத்தின் ஐக்கியம் என்பது தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆளும்- சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே உருவாகமுடியும். இனங்களுக்கிடையேயான ஐக்கியம் என்பது ஒருவரது உரிமையை ஒருவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதன் மூலமே ஏற்படமுடியும்.
அன்று காலனித்துவத்துக்கு எதிராக அனைத்து இனமக்களும் ஒன்றுபட்டு போராடிப் பெறாத சுதந்திர உணர்வை, அழகான இத்தீவில் இரு இனங்களும் சுதந்திரமாக மகிழ்வுடன் வாழும் நிலையை',அதன் விளைவுகளால் எழுந்த யுத்தப் பேரழிவுகளின் படிப்பினைகளில் இருந்தாவது பெறுகின்ற- இரண்டாவது சுதந்திரத்துக்கான- வாய்ப்பை இந்த நாடும் மக்களும் - இச்சமாதான இடைவெளியில் உணர்ந்து கொண்டு பயன்படுத்தும் வல்லமையைப் பெற வேண்டும்.
C2) தாயகம்

அதிகாரப்பீடங்களின் விருதுகளையும் நல்லாசிகளையும் , இரந்து பெற்றவர்கள் சொல்லுகிறார்கள்: உன் கவிதைகள் பரிசுக்குரியனவல்ல. நீயும் சான்றோர் மண்டலங்களின் அங்கீகாரத்துக்குரியனவல்ல. தூய கலை இலக்கிய அங்கியால் தம் அரசியலை மூடியவாறு அழகியல் உபாசகர்கள் சொல்லுகிறார்கள்: உன் கவிதைகள் காலத்தால் அழியாதவையல்ல. அவை உலகத்தரம் கொண்டனவுமல்ல. தங்களைச் சூழும் வட்டங்களின் எல்லைகளைக் காணத் தலைகுனிந்தும் பார்க்காதவர்கள் சொல்லுகிறார்கள்: '. . . உன் கவிதைகள் குறுகிய அரசியல் சிந்தனை வட்டத்துக்குரியன. நீ அதனின்று வெளியேற முயல வேண்டும். காலத்தால் அழியவொண்ணாக் கலைஞர்களெனத் தம்மைக் கற்பனை செய்கிறவர்கள் சொல்கிறார்கள்: நீ என்றுமே கலைஞனல்ல. -- கருவிலே திருவில்லாத நீ வெறும் எழுத்தாளன் மட்டும்ே. ஒரு வணிகன் என்னிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்கிறான்: உன் கவிதையை விற்று நீயும் பிழைக்க முடியாது, நானும் பிழைக்க முடியாது. ஒளிவுமறைவின்றி நானும் சொல்லுகிறேன்: மேலிடத்து அங்கீகாரமோ பரிசோ பெற வேண்டாது காலத்தாற் சிதைகின்ற காகிதத்தில் ూ வெய்யிலுக்கு மங்குகிற மை கொண்டு எழுதிய என் கவிதை v. உலகத்தரத்தை எட்டும் மொழிக்குப் பெயராமல் விற்பனைக்கில்லாத என்னுடைய அரசியற் சிந்தனை மீது உறுதியாகக் காலூன்றி நிற்கின்றது. இன்னுஞ் சொல்லுகிறேன்: ' °,, பெருமைமிக்க ஆரவாரங்கட்கு உரியோரின் பார்வைக்கு எட்டாத ஓர் உலகம் எனக்கு அருகே தெரிகிறதால், தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம் வேண்ட்ாமல், நான் எழுதும் எளிய வரிகளை, வேறு எவரேனும் இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம். என நன்கு அறிந்தும், v .ʻ~r. .- 3 :*. , '*. , என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சிவசேகரம்

Page 4
ஜீவிதம்
ன்ட பேரென்ன எண்டோ 6T கேட்டியள்? என்னை உங்களெல்லோருக்கும் தெரிய வேணும். நீங்கள் அறிவாளியளா இருக்காட்டி நீங்கள் ஒரு வேளை என்னை அறியாம இருக்கலாம். உங்களில எவருக்கேன் தெரியாம இருந்தாலும் எண்டு தான் சொல்லுறன். ஒருக்காத்தான் சொல்லுவன். எண்ட விரிவுரையள்ளையும் அப்பிடித்தான். இன்னொருதரம் திருப்பிச் சொல்லுவன் எண் டா ஒருவரும் கவனிச்சுக் கேளாயினம். அதாலை ஒரு கதையை ஒரு முறைதான் சொல் லவேணும். ஒரே கதையை வேணுமெண்டா வேற வேற மாதிரி வேற வேற சொல்லுகளைப் போட்டுச் சொல்லலாம். எண்டாலும், கதை ஒண்டுதான் எண்டு ஆரும் யோசிச்சுப் பிடிக்கேலாத மாதிரிச் சொல்ல வேணும்.
சிலநேரத்தில நான் என்ன நினைக்கிறன் எண்டு ஆரும் விளங்கேலாத மாதிரியும் கதைக்க வேண்டி இருக்கும். அது ஏனெண் டு சில பேருக்கு விளங்கிறேல்லை. பெரிய அறிவாளியளுக்கு ஒரு இலக்கணம் இருக்குது தெரியுமோ. அதைப்பற்றி நான் கதைக்கப் போன
னெண்டா விடிய விடியக் கதைக்கலாம்.
விசயம் என்னெண்டா, அறிவாளியளுக்கு எல்லாம் தெரியும் எண்டு சனங்கள் நினைக்கினை எண்டு மற்ற அறிவாளியள் நினைக் கினை எண் டதாலை, அறி வாளியளாக அறியப்படுற நாங்கள் அந்தப்படிமத்தைக் காப்பாத்த வேணும். உங்களிலை இங்கிலிஸ் தெரிஞ் ச 6O)6) discists& Gay TóigiD6öT. The intellectual image. the image of the everevasive intellectual is the essence of intellectual existence.
G)
தட்டிக்கழிக்கிற வேலை என்டு இதைத் தமிழிலை ஆரேன் சொல்லலாம். எண்டாலும் இங்கிலிசிலை இது விளங்காத எவருக்கும் தமிழிலையும் இது விளங்காது. தமிழிலை விளங்காது எண்டால் தமிழ் மட்டும் தெரிஞ்சவைக்கு விளங்காது எண்டும் சிலர் நினைக்கலாம். தமிழ் மட்டும் தெரிஞ் சவைக்கு விளங்கிற மாதிரித் தமிழைச் சொல்ல ஏலாது எண் டு நினைக்கிறதுக்கு இடமிருக்குது. தமிழிலை சொன்னா ஒருத்தரும் அதை விளங்கிக் கொள்ள தெண்டிக்காயினம் எண்டுங்கூட விளங்கலாம். இப்படி நிறைய வாசிப்பு செய்யேலும்.
ஏனெண்டா, மொழி- அதாவது language எண் டு சொல்லுறது - ஒரு குழப்பமான விசயம். இவ்வளவு காலமும் ஆக்கள் தாங்கள் நினைக் கிறதை மற்றவைக்கு விளங்கப்படுத்திற துக்குத் தான் இந்த languageஐப் பாவிக்கிறவை எண்டு நினைச்சிருந்தம். அப்பிடிச் சொல்லுறதால நானும் அப்பிடி நினைச் சனான் எண்டு சிலபேர் நினைக் கலாம். நான் 9{ الاf{2وا நினைக்கேல்லை எண்டு சொல்லுற துக்கும் நியாயம் இருக்குது. இதிலையும் நாங்கள் deconstruct பண்ணிய் பார்க்க நிறைய வரிசயம் இருக்குது. கட்டவிழ்க்கிறது எண்டு சில பேர் தமி ழிலை சொல்லுவினம். அந்த சொல்லை நாங்கள் தமிழிலை deconstruct பண்ணி 9. Él 565lóflgo 6ub reconstruct u60i னினா அதை வேற வேற விதமான
uDTFst re-read u60, 60fpg (3LJT6) தெரியும் இதாலைதான் எண் டு கொல்லேலாது.
எண்டாலும் பெரிய விஷயங்களைத் தமிழிலை சொல்லுறது எண் டா
 

இங்கிலிசிலை நாலு சொல்லுச் சேத்தாத்தான் அதுக்கு மரியாதை. கஞ்சிக்கு உப்புப் போடுற மாதிரி எண்டும் உவமை சொல்லலாம். எண் டலும் (366&p606) lig blood presure SObig,35T எண்டு யோசிச்சு சொல்லவேணும். பாலுக்குச் சீனி மாதிரி எண் டு வேணுமெண்டா உவமை சொல்லலாம். ஆனாலும் diabetes தமிழிலை. ஒ சலரோகம் எண்டா சொன்னனியள்?. வேறை ஆர் அது?. நீரிழிவுதான் சரியான தமிழ்ச் சொல்லோ? ஒ. அந்த வருத்தக் காரருக்கு முன்னாலை சொல்லிறது கவனமா இருக்க வேணும். அதுதான் சொல்லிறது, பிடி குடுக்காமல் கதைக்க வேணும் எண்டு. ஒரு கதை கேள்விப்பட்டிருப்பிளய். மூண்டு பேர் ஒரு கடை முதலாளிட் டைக் கணக்கப்பிள்ளை வேலைக்குப்போச்சினை. அவர் ஒவ்வொருத்தனாக் கூப்பிட்டுப் பேர் விலாசம் எல்லாம் கேட்டுப் போட்டு ஒரு கணக்கையும் கேட்டார்.
“ஐந்தும் ஐந்தும் எத்தினை” எண்டு கேட்டார். முதல் ஆள்கொஞ்சம் கணக்கு விக்கானவனா இருக்கலாம், இல்லாட்டி ஒரு மேதையா இருக்கலாம். கன நேரம் யோசிச்சுப் போட்டு “எட்டு” எண்டான். இரண்டாம் ஆள் உடனேயே "பத்து" எண்டு சொல்லிப்போட்டான்.மூண்டாம் ஆள், "ஐயா சொல்லுற மாதிரியே வைச்சுக்
கொள்ளுவம்” எண் டு சொன்னான்.
ஆருக்கு வேலை கிடைச்சது எண்டு யோசிக்கிறிங்களா. அதிலை தான் ஒரு பெரிய தத்துவமே இருக்கிது. முதலாளி கேட்ட கணக்கு சாதாரண அரிவு உள்ளவைக்குச் சாதாரணமான கணக்கு LongŠíf:55T6öT 656 Täig5úb. Porno-linguistics படிச்சிருந்தா. ஆரங்கை அது?"தூசணம் பற்றின படிப்பெல்லோ” எண்டு சொன்னது? நான் சொல்ல வந்தது என்னெண்டா என்னட்டையும் இப்பிடித் தான் முந்தி ஒரு கேள்வி கேட்டினம். முந்தின கேள்வியை விடச் சிக்கலான ஒரு கேள்வி
"அறிஞர், ஒண்டும் ஒண்டும் எத்தினை” எண்டு ஒரு நாள் ஒருத்தன் ஆக்களுக் கை வைச் சுக் கேட்டுப் போட்டான். என்னை மடக்கிறதுக்குத்தான் கேட்டவன் எண்டு தெரியும். எண்டாலும்
ஆரும் என்னைச் சும்மா பேர் சோல்லிக் கதையாயினம். அறிஞர் , மாமுேதை எண் டெல்லாம் சொல்லித்தான் கூப்பிடுவினம். அது தான் தமிழ் மரபு. ஏன் புருசன்மாரைப் பெம்பிறையள் பேர் சொல்ல மாட்டினம் எண்டதை எல்லாம் நான் கவனமா ஆராய்ஞ்சு, பழந்தமிழ் உரைநடை வழக்கில் கணவன் மனைவி உறவு சார்ந்த சொல்லாடல் பற்றியஒரு மீளாய்வு : பிற கேள்விகளும் அவற்றுக்கான விடைகள் எழுப்பும் பிற கேள்விகளும் அக்கேள்விகட் காண. ஆரங்கை.? கணக்குக்கு என்ன மறுமொழி சொன்ன னான் எண்டோ கேட்டனிர்?
'ஒண்டும் ஒண்டும் அனேகமாக மூண்டாக இராது’ எண்டு தான் முதலிலை சொல்ல யோசிச்சன். பிறகு, இண்டைக்கு விஞ்ஞானம் வளருகிற வேகத்தில அது மூண்டாக இருக்கிறதுக்கு இடம் இருக்குது எண்டு ஆரேன் காட்ட ஏலும் எண் டதா லை நான் அப் பிடிச் சொல்லேல்லை. முந்தி நாங்கள் வாய்ப்பாடு படிக்கேக்கை நான் கணக்குப் பிழை வரிடுகிறனான் எண் டு வாத்தியார் குட்டியிருக்கிறார். எனக்குள்ள அப்பவே ஒரு உள்ளுணர்வு: இந்த வாய்ப்பாடு எல்லாம் ஏதோ பிழையான விசயம் எண்டு. இப்ப பின்னவீனத்துவம் எண்டு நாங்கள் தமிழிலை சொல்லிற Postmodernist analysis மூலம் ஒண்டும் ஒண்டும் எத்தினை எண்டதுக்கு ஏழு. மூண்டு தசம் எட்டு, பதினாறரை எண்டதுகள் உட்பட எத்தினையோ மறுமொழிகள் இருக்குது. எண்டு கண்டு பிடிச்சிருக்கினம். ஆர் எண்டு கேக்கிறியளோ.
நான் புத்தகங்கள் வாசிச்சு இப்ப கன காலம். அதுக்கு நேரமும் இல்லை. கொமிட்டிகள் கூட்டங்கள் எண்டு கன சோலியள். காகமெல்லோ தாறாங்கள். கவண்மென்ற் .ஓ. ஒ. அரசாங்கம். மற்றது என்ஜிஓ. அதுக்கு இங்கை ஆருக்கும் தமிழ் தெரியுமோ? அதுதானே பாத்தன். அவையஞம் அள்ளித் தரு கினம். அதாலை ரண்டு மூண்டு. பெடி யன்களை விசாரிக்கப் பழக்கி வைச்சி ருக்கிறன் அவங்களுக்கு இங்கிலிஸ் தெரியாது. அதாலை என்னிலை ஒரு மரியாதை. எங்கையாவது கேட்டு
GS)

Page 5
விசாரிச்சு வந்து சொல்லுவாங்கள். ஜேர்மன் அல்லது ஃபிறெஞ் சுப் புத்தகப் பேர் குறிப்பிட்டுச் சொன்னா, இங்கை ஒருத்தரும் மறுப்புப் (3ud Tufa Tib. ஏதேன் அமெரிக்காவிலை நடக்கிறது எண்டு சொன்னாலும் மரியாதை, அமெரிக்காவிலை எல்லாமாதிரியும் தான் எழுதுகினம். அதாலை அமெரிக் காவரில எண் டு துணிஞ்சு எதையும் சொல் லேலும், ஏலுமெண்ட அளவுக்கு, நான் என்ன நினைக் கிறன் எண்டது ஆருக்கும் விளங்காமல் நான் கதைக்கிறது ஒரு கலை எண்டு சிலர் சொல்லுவினை. அது விஞ்ஞானம் எண்டும் சொல்லலாம். அது எல்லாத்துக்கும் அப்பாலான ஒரு விசயம் எண்டும் சொல்லலாம். அதைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்திலை தாங்கள் எந்தத் திசையிலை பாக்கினம் எண்டதைப் பொறுத்து முடிவு செய்யேலும். செய்யாமலும் இருக்கேலும்.
அண்டைக்கு நான் சநாதன இந்துத்துவ வர்ணாசிரம சபாவுடைய ஆண்டு விழாவிலை கதைக்கேக்கை அடொல்ஃப் ஹிற்லர் ஒரு ஃபாஸிஸவாதி எண்ட கருத்தை நாங்கள் மறுவாசிப்புச் செய்ய வேணும் எண்டதைப் பற்றிச் சொன்ன உடன எல்லோரும் சந்தோசமாக் கைதட்டினதைக் கேள்விப்பட்டு வேறை ஆக்கள் கோவிச்சக் கொண்டினம். முந்தி நான் ஃபாஸிஸத்தையும் ஹிற்லரையும் கண்டிச்சனான் எண்டும் இப்ப அதை மாறிக் கதைக்கிறன் எண்டும் அவைக்குக் கொஞ்சம் மனவருத்தம் எண்டு ஆரேன் நினைக்கவும் இடமிருக்குது. ஃபாஸிஸம் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுக் கட்டவிழ்க்கப்பட்டு ஜனநாயகத்தின்ட இன்னொரு வடிவமாக மீள கட்ட மைக்கலாமெண்டும் ஹிட்லரை நாங்கள் முந்திப் பாத்த பார்வை பிரிட்டிஷ் கொலனியத்தின்ட பார்வை எண்டும் ஒரு மறுவாசிப்புக்கு இடமிருக்கு எண்டும் நான் சொல்லேக்கை ஃபாஸிஸத்துக்கும் நாளிக் கொள் கைக்கும் உள்ள வித்தியாசத்தின்ட வெளிச் சத்திலை வரலாற்றை உன்னிப் பாய் பாக்க வேணுமெண்டு சொல்லிறதாக விளங் கிறதிலை நியாயம் இருக்குது. நான் பலஸ்தீன விடுதலை ஆதரவுக் கூட்டத்திலை கதைக்கேக்கை 1940களில
ெ
யூதர்களை ஏன் ஹிட்லராகக் கொண்டவன் எண்டு ஆரோ கேட்டவை. இதெல்லாம் நான் சொல்கிற விஷயங்களை அந்த அந்த இடத்துக்கு ஏத்த விதமாக வாசிப்புக்கு உட்படுத்தி விளங்கிக் கொள்ள ஏலாததாலை வருகிற பிரச்சினைகளாக இருக்கலாம்.
இப்ப ?(8JfT ᎶᏭ til éᎦlp ஆராச்சியின்படி உலகத்தில எல்லாரும் மாக்ஸியத்தை உள்வாங்கியிருக்கிறதால எல்லாரும் மாக்ஸியவாதிகள் எண்டும் உலகத்திலை உயிரோடை இருக்கிற மாக்ஸியங்களின் டை தொகை ஒரு செக் கணுக்கு நுாற்றுக் கணக் காலை அதிகமாகி வருகிறதெண்டும் ஒவ்வொரு செக் கணுக்கும் நுாற்றுக் கணக் கான மாக்ஸியங்கள் இறக்கு தெண் டும் சொல்லியிருக்கினை. அதையும் நாங்கள் யோசிச்சுப்பாக்க வேணும். தொல்காப்பியர் தான் மாக்ஸியச் சிந்தனையின்டை தோற்றுவாய் எண்டு தமிழ்நாட்டிலை ஆரோ ஆராய்ஞ்சு சொல்லி இருக்கினம் எண்டு தமிழ்நாட்டுக்குப் போய்வந்த எண்ட சிடப்பிள்ளை சொன்னவன். அதை ஆராயிறதுக்கு நான் தொல்காப்பியர் பிறந்த இடத்தைக் கண்டுபிடிக்க ஒரு Research grant கேட்டு ஒரு என்ஜிஓவுக்கு எழுதிப் போட்டிருக்கிறன். சரிவர வேணும். தொல்காப்பியர்தான் முதல்ல சொன்னவர் எண்டு காட்டினால் கால்மாக்ஸ் செய்தது ஒரு இலக்கிய மோசடி எண்டும் காட்ட ஏலும். அதேநோரம் கால்மாக்ஸைப் பாத்துத்தான் தொல்காப்பியர் எழுதினார் எண்டு சொல்லவும் ஏலும். இந்தப் பின்நவீனத்துவத்தாலை எங்களாலை எதையும் செய்யலாம் எண்டு தான் சீடப்பிள்ளை சொன்னான். ஆரது.
‘என்ன, என்னுடைய பேரென்ன இன்னஞ் சொல்லேல்லை” எண்டு கேக்கிறியளா? ஒருவிதமாக கட்டுடைச்சா அது சரியான கேள்வி. இன்னொருவிதமாக கட்டுடைச்சா அது பிழையான கேள்வி. ஏனெண்டா இந்தக் கேள்விக்கு நான் சொல்லுற மறுமொழி இங்கை ஆரோடை கதைக்கிறன் எண்டதிலை தங்கியிருக்குது. முதலிலை இங்கை வந்திருக்கிறவையை நாங்கள் கட்டுடைச்சுப்பாக்க. ப
 

உருவகக் கதை
'லர்க்காடு தேன் சொரிந்து LDபுன்னகை சிந்தி நின்றது. மலர்களின் வகைகளும் வகைக்கேற்ற மணங்களும் அந்த மலர்க்கூட்டுக்கு குணங்களாகின. மலர்களின் அழகோ உள்ளத்தை கொள்ளை கொண்டு கவர்ந்திழுத்தது.
மலர் க் காட்டு நந்தவனத்தில் மலர்களின் நாமமே உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிடும். மல்லிகை, முல்லை, செவ்வந்தி, ரோஜா, சண்பகம், சூரிய காந்தி, பிச்சி, கனகாம்பரம். என்று மலரினங்களோ பலப்பல.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வழமையாக இந்த நந்தவனத்தை நாடிவரும் வண்டு ஒன்று தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து, அசைத்து பறந்து வந்து, மலர்க் காட்டில் பூத்துக் குலுங்கும் மலர்களில் ஒன்றன் மேல் அமர்ந்தது.
தன் புள்ளிக் கண்களை நந்தவனத்தின் நான்கு திக்குகளிலும் சுழல விட்டது. நீண்ட கால இடையீட்டின் பின் வந்ததினாலோ என்னவோ அன்றைய நாட்களை விட இன்று மிகுதியாக அழகு சிந்தி நிற்கிறதே, சுகந்தத்தை மூச்சாகக் கொண்ட இந்த மலரினங்கள் என்று எண்ணி தன் சிறு புள்ளிக் கண்களை மீண்டுமொரு முறை சுழல விட்டுவிட்டு ஆழ்ந்த பெருமூச்சினில் அநுதாபம், ஏளனம், பெருமிதம் எனப் பல்வகை உணர்வுகள் உள் பொதிந்திருந்தன.
மென்மைக்கு உவமையான மலரின்
இதழ்கள் வண்டாரின் பெருமூச்சின்
62160JosJ J51-J3T
ஆழத்தை உணர்ந்து கொண்டது. ஆனால் மலரின் மென்மையான இதயத்துக்கோ வண்டாரின் ப்ல உணர் வலைகளை உள்ளடக்கிய பெருமூச்சுக்கான காரணம் தான் என்னே என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. w
வண்டாரிடமே மலர் வினவியது. “வண்டாரே தங்கள் மனதினில் அப்படி என்ன விசாரம்?"
வண்டார் தன் வாழ்வின் நிறைவு குறித்த பெருமையுடன் “வாழ்வின் இருப்பு குறித்த தத்துவ விசாரம்தான்” என்றது சற்று அனுதாப உணர்வு மேலோங்க.
வாழ்வின் இருப்பு குறித்து அப்படி என்ன திருப்தி இன்மை? வாழ்வின் நிறைவுகளை மீறி எவ்வண்ணம் தங்கள் உள்ளத்தில் விசாரம் புகுந்ததோ?
மலரே நான் உன் வாழ்வு குறித்து விசாரப்படுகின்றேன். மனம் வருந்துகிறேனே தவிர என் வாழ்வு குறித்தல்ல."
“வண்டாரே புதிராக வியாக்கியானம் செய்கிறீரே? என் வாழ்வின் இருப்பு எனக்கு நிறைவு அளிக்கின்றது. என் இருப்பில் அப்படி என்ன விசாரம் கண்டிரோ நீர்?"
"உன்னைச் சூடிக் கொள்வதில் மாந்தர் அடையும் களிப்புக்கு தான் அளவு உண்டோ? எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நீ இல்லையேல் பூசை எவ் வண்ணம் நிகழும். அந்த அகிலேஸ்வரன் உருவச் சிலையை எவ்வண்ணம் அலங்கரிக்க முடியும். பூஜைக்கேற்றவள் நீ. அது மட்டுமா உன்
○

Page 6
உள்ளத்தில் பாகுபாடு என்பது இல்லவே இல்லை. மங்கலப் பொருளாகிறாய். சுமங்கலகாரியங்களிலும் மங்கலம் கொடுக்கிறாய். உன் உள்ளத்தின் மேன்மைக்கு, பாரபட்சமற்ற அன்புக்கு இதுவே சான்று. தாவரங்களின் வாழ்வின் தொடர் ச் சி உன்னிடம் அல்லவா ஒப்படைக்கப் பட்டுள்ளது."
“என்ன வண்டாரே புகழ்ச்சி பலமாக இருக்கிறதே!”
“இல்லை மலரே! இது என் இதயத்தின் ஆழ்ந்த வேதனை. இத்துணை மேன்மை பொருந்திய உனக்கு இறைவன் வஞ்சகம் இழைத்து விட்டானே"
“வண்டாரே இறைவன் எனக்கு வஞ்சகம் இழைத்தானா? அந்த இறைவன் எத் துணை மேன்மையை எனக்கு அளித்துள்ளான். அப்படி இருக்க நீரோ." “மலரே உன் மேன்மை தான் என்னே! ஆனால் உன் வாழ்நாளோ முழுமையாக
ஒரு நாட்பொழுது தான்கூட இல்லையே! அரை நாட் பொழுதில் உன் வாழ்வு அஸ்தமித்து விடுகிறதே"
“வண்டரே நிறைவுடன் ஒரு நாள் வேண்டாம் ஒரு கணம் வாழ்ந்தாலும் போதும். என் வாழ்வில் நிறைவு பொங்குகிறது. வாழ்நாட் கால அளவு முக்கியமானது அன்று. வாழ்வின் பயன் தான் முக்கியம், அது தான் முக்தி அதுவே வாழ்வின் பயன். வாழ்வின் பூரணத்துவம்.” “மலரே வாழ்வின் மேன்மை எனக்கு உணர்த்தினாய். உன்மேன்மை மேலும் உணர்ந்தேன்” எனக் கூறி மலரின் இதழ்களை முத்தமிட்டு வண்டார் பறந்து சென்றது.
காலத்தின் எல்லைப்பாட்டை உணர்ந்து மலர் அழகிய இதழ்களை விரித்து மணம் பரப்பியது.
JJJJJ JJJ JJ
மக்களும் கலைகளும்
உழைக்கின்ற மக்கள் இன்று கலாசாரப் பசியில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கலாசாரத் தேவை புறக்கணிக்கப்படுகிறது. நமது திரையுலகில் தயாராகிற படங்கள் பெரும்பாலும் நமது வெகுஜன கலாசாரத்தின் மோசமான படங்கள்தான். அவைகளே சாதாரண மக்களைச்
சென்றடைகின்றன.
நாடகங்கள் மக்களைச் சென்றடைய முடிவதில்லை. பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்கள். எனவே இலக்கியங்களும் அவர்களைச் சென்றடைய முடிவதில்லை. எழுதப் படிக்கத் தெரிந்த சிலரும் மூன்றாம் தரமான கதைக் குப்பைகளையும் கீழ்த்தரமான மஞ்சள் எழுத்துக்களையும்
தான் படிக்கின்றனர்.
-சப்தர் ஹாஷ்மி
 

ரு பண்பாட்டின் உன்னதங்கள் မွီမျိုး கருதப்பட்டவைகளை அப்பண்ப்ாட்டிற் தோன்றிய காவியங்களில் வெளிப்படையாகக் கண்டுகொள்ளக் கூடியதாயிருக்கும். குறிப்பாக காவியப் பாத்திரங்கள் மானிடர்களாயிருக்கும் பட்சத்தில் அக்காப்பியம் தரும் அழகியல்
இரசனைக்கப்பால், மனித வாழ்க்கை,
அவ் வாழ்க்கையின் விழுமியங்கள், போதனைகள் மற்றும் இன்னோரன்னவை அனைத்தும் அடிப்படையில் நூலாசிரியரின் (அக்காலச் சமூகத்தின்?) இலட்சியங் களை வெளிப்படுத்துவதாகவும் , அதே வேளை அக்கால மாந்தரின் உலகியலான வாழ்க்கையை மறைமுகமாக கொண்டி ருக்கும் என்ற எடுகோளின் அடிப் படையில் சிலப்பதிகாரம் தரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு பெண்பற்றிய அக் காலச் சித்தரிப்பை மதிப்பிட இக்கட்டுரை முயல்கிறது.
'ஆடித்திங்கள் பேரிருள் பக்கத்து, அழல்சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளிவாரத்து ஒளளெரி உண்ண, உரைசால் மதுரையொடு அரசு கேடுறும்
என மதுரை தீப்பற்றியெரிவது பற்றிய தீர்க்க தரிசனம்/gழைய சொல் ஒன்றின்படி மதுரை மூதூர் தீப்பற்றி எரிந்தது. இது தெய்வத்தின் சீற்றத்தினால் விளைந்ததென நம்பினர் . பெருந் தொகையானோர் இறந்தனர். சொத்திழப்பு ஏற்பட்டது. இதனால் 'ஒருமுலை குறைத் த திருமாயத்தினிக்கு, ஒருபகல் எல்லையில், உயிற்பலி ஊட்டப்பட்டது மதுரையின் அவலமும் போக்கப்பட்டு அங்கு சூழ்ந்திருந்த இருளும் நீக்கப்பட்டது.
* 愛期リD
பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா
: ఢ* జీ
தமிழ் இலக்கிய ஆய்வாளர் கூறும் வரலாற்றின்படி, அதன் ஆசிரியராகக் கருதப்படும் இளங்கோ மேற்படி எடுத்துரைப்பை அடித்தளமாகக் கொண்டு முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றினார். யதார்த்தவாதமும், அ-யதார்த்தமும் கொண்ட இவ்வெடுத் துரைப்பில் கற்பனைக் கூறுகள் பல கலந்து காணப்படுவதால், பிரதி முழுவதும் கற்பனையானதே என்ற முடி பிற்கு வரத் தேவையில்லை. மானிடவாத நிலைப்பட்டதாகவோ அல்லது கருத்தியல் நிலைப்பட்டதாகவோ இல் லாது, நியாயித்தலிற்குரிய திடமான பகுத் தறிவினடிப்படையிற் செயற்படும்பொழுது உண்மையையும், கற்பனையையும் வெவ்வேறாகப் பிரித்தறிவது இலகுவில் வசமாகும். இதனால் பிரதியிற் காணப்படும்
பகுத்தறிவிற்கொவ்வா விபரிப்புகளால்
சிலப்பதிகாரக் கால மக்களின்/பெண்களின் மெய்யானநிலையை அறிதல் சாத்தி யமோவென எவரும் ஐயுறத் தேவை யில்லை.
வணிக சமூகத்தினனான இக் காப்பிய நாயகன் கண்ணகியை மணம்புரிந்து, மாதவியுடன் சுகித்து, மனம்வேறுபட்டதால் அவளைப் பிரிந்து, மீண்டும் மனைவியுடன் பொருள் தேடும் நோக்கில் மதுரைக்கு சென்று, அங்கு கொலையுண்டு இறக்க, கண்ணகியோ தன்கணவன் குற்றமற்றவனென பாண்டியன் அரசவையில் நிரூபித்து, மதுரையை எரியூட்டி திருச்செங்குன்றத்து வேங்கை மரநிழலில் நின்று விண்ணகம் சென்றாள். முற்பிறப்பில் பரதன் என்ற பெயரைப்பெற்ற
(9)

Page 7
இக்கோவலன் அரச காரியம் செய்பவனாக, ஆராய்ந்து நீதிவழங்கலே அறம் என்ற நிலைப்பாடில்லாதவனாய் இருந்ததால், சங்கமன் என்ற விரோதிநாட்டான் வணிக நடவடிக் கைகளில் ஈடுபட்டுக் கொண் டிருந்த சமயம் அவனை ஒற்றனென கைதுசெய்து தன்னாட்டு அரசனைக் கொண்டு கொலை செய்வித்தான். இவ்வாறு கண்ணகி கதை நகர்ந்து செல்கிறது.
கோவலன் குற்றமற்றவனாக இருந்த
பொழுதும் அவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டதற்கு காரணம், அவன் தன்முற்பிறப்பில் செய்த தீவினையேயெனக் கூறப்பட்டாலும், கண்ணகியின் துன்பத்திற்குக் காரணம் அவள் அய்யிறப்பில் கோவலன் மனைவியாக இருந்ததைத் தவிர வேறுளதெதுவுமில்லை.
கோவலனே காவிய நாயகனாயினும், அக்காப்பியத்தை நகர்த்திச் செல்லும் பிரதான பாத்திரங்களும், துணைப் பாத்திரங்களும் பெண்களாகவே காணப்படுவதால் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் பெண்ணின் அந்தஸ்த்தைப் புரிந்துகொள்வதற்கு சிலப்பதிகாரம் மிகவும் பொருத்தமானதொன்று.
பொதுவாகவே இந்து/இந்தியமரபில் ஆண்,பெண் பற்றிய கருத்துருவாக்கம் எவ்வாறு உள் வாங்கப் பட்டிருக் கிறதென்பதை மிகச் சிறந்ததும், மிகப்பொருத்தமானதுமான முறையில் பிரகதாரணிய உபநிடதம், மைத்திரயாணி சம்ஹிதை, ஐதரேய பிராமணம் என்பவற்றில் வருகிற குறிப்புகள் தெளிவாக்கும் பிரகதாரணிய உபநிடதத்தில் 'அவனுக்கு(=ஆணுக்கு) ஒருதிடமான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதால் படைப்புத் தெய்வமான பிரஜாபதி தனக்குள்ளாகவே சிந்தித்து பெண்ணைப் படைத்தது. அவ்வாறு பெண்ணைப் படைக்கும்பொழுது ஆணுக்கு அடுத்த கீழானநிலையில் இருக்கத் தக்கதாக அவளைப்படைத்தது. சூதாட்டம், மது என்பவற்றோடு ஒத்தவொன்றாக பெண்ணை வர்ணிக்கும் மைத்திராணி சம்ஹிதை, அவர்களை சமூகத்திற்
(O)
காணப்படும் தவிர்க்கமுடியாத தீமை களிலொன்றாகக் கருதுகிறது. ஐதரேய பிராமணத்தில் நுாறு பெண் களை மனைவியராய்ப் பெற்றிருந்தும் ஆண் சந்தானமில்லாத ஹரிச்சந்திரன் என்ற அரசனிற்கும் நாரதமுனிவருக்கும் இடையிலான உரையாடலில் தனக்குப் பிறக்கும் ஆண்குழந்தையின் முகத்தைப் பார்ப் பதினால் தந்தை அழிவற்ற வனாகிறான்’ என்றதொரு குறிப்பு காணப்படுகிறது. முப்பது வருடங்களின் முன்னர் கூட ஒரு பெண்ணிடம் முதற்குழந்தையாக பெண்குழந்தையைப் பெற்றபொழுது, உனதும் உன் வீட்டாரதும் நிலமை எவ்வாறிருந்ததென ஒரு ஆய்வின்பொழுது வினவப்பட்டபொழுது அது மரணம் நிகழ்ந்தது போன்ற சம்பவமாக இருந்ததென அப்பெண் விடையளித்தாள். ஆணி,பெண் பற்றிய மேற்படி வருணனைகள் தமிழர் பண்பாடு உட்பட அனைத்து இந்து மரபிற்கும் பொருந்திவருமொன்றாகும்.
சிலப்பதிகாரத்தின் முற்பகுதியில் கோவலன் மனைவியாகவும், அதன்
பிற்பகுதியில் பத்தினித் தெய்வமாகவும்
இருவேறுபட்ட அந்தஸ்தில் இளங்கோ கண்ணகியை வர் னிக்கின்றார் . சாதாரணபெண் பத்தினித் தெய்வமாக நிலைமாற்றம் பெறும் கட்டம் அவ தானிப்பிற்குரியது. கண்ணகி தன்முலையை கையால் திருகி மதுரையை மும்முறை வலம்வந்து எறிந்தாள். அவ்வாறு எறிய முதிரா முலைமுகத்து எழுந்த தியானது மதுரை மூதுTர் மாநகர் சுட்டது. சிலப்பதிகாரத்து இவ்வரிகளின் தாற்பரியம் நேர்ப்பொருளைக் கொண்ட தல்ல"முலை” காமச் சுட்டி, உணர்ச்சிப்புலம் என்ற குறிப்பீட்டைக் கொண்டது. “தீயினால் எரித்தல்' பண்புமாற்றம்/மீளுருவாக்கம் என்ற குறிப்பீட்டைக் கொண்டது. முலையைத் திருகி எறிந்ததன் மூலம் கண்ணகி காமய்பொருள் என்ற குறிப்பீட்டை இழந்து, தாய்(=உலகத்தைக் காப்பவள்) என்ற தகுதியையும், மதுரையைத் தீயினால் எரித்ததின் வழி, தெய்வம் என்ற அந்தஸ்தையும் பெறுகிறாள்.
தாயகம்

தாய்த் தெய்வமான கண்ணகிக்குப் பலியிட்டமை பற்றி நீர்ப்டைக்காதையில் வருகிறசெய்தி இங்கு அவதானிக்
பொதுப்படையாக நோக்கும்பொழுது சிலப்பதிகாரம் மானிடப்பெண்ணான கண்ணகிக்கு பத்தினித் தெய்வம் என்ற உயர்ந்தஸ்தானத்தைக் கொடுத்தபொழுதும், அடிப்படையில் அது ஆண்பாலாரின் உலகத்தில் பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலையை நயமானவார்த்ததைகளில் வெளிப் படுத்துகிறது. இவ் வெளிப்பாட்டில் பெண்ணானவள், தாய் என்ற அந்தஸ்தில் ஒருவிதமாகவும், ஒருவனின் காதலி அல்லது மனைவி என்ற அந்தஸ்த்தில் பிறிதொரு விதமாகவும் புரிந்து கொள்ளப்படுகிறாள்.
ஒருபுறம் மனித வாழ்க்கையின் முடிவிலாத தொடர்ச்சி தாய்மையினூடாகப் பேணப்படுவதால், பெண்ணை இயற்கையின் அம்சமாகக் கருதும் நிலை ஒருபுறம் காணப்படுகிறது. பிரபஞ்சத்திற்கும் தனி மனிதத்திற்குமிடையிலான பிணைப்பின் பாலமாக தாயென்ற நிலையில் வைத்தெண்ணப்படுகிறாள். தாய்மையென்ற பண்பினால் தாய்த்தெய்வமாக, ஆணை அடிமைகொள்பவனாக, உலகின் தோற்றத் திற்கு ஏதுவானவளாக, ஸ்தூலமான நிலையில் அதனை ஆட்சிபுரிபவளாக, கட்டற்ற மனப்பாங்கினால் தன்னிச்சையாகச் செயற்படுபவளாகவும் கருதப்பட் டாள்.இறப்பு தவிர்க்கமுடியாத் தீமையாக இருப்பினும், அத்தீமையை பலியிடல் மூலமாக நிகழ்த்தும்பொழுது அது தனிமனிதவாழ்க்கை, சமூகம், பொதுவான நல்வாழ்க்கை என்பவற்றின் நற்பலன் களைத் தருமென நம்பப்பட்டதால், பெண்/ தாய்த்தெய்வ வழிபாட்டில் பலியிடல் ஊக்குவிக்கப்பட்டது. ஆண்பாலுலகில் தாய்த்தெய்வத்தின் முதன்மைஸ்தானம் அவள் எவரினதும் மனைவியாக இல்லாதிருப்பதன் மூலம் பேணப்பட்டமு. தாய் இயற்கையின் அம்சமாகவும், தன் படைப்பாற்றலினால் புரியாய் புதTராகவும் கருதப்பட்டாள். சிலப்பதிகாரத்தில் கொற் றவை மற்றும் ஏனைய பெண்தெய்வங்கள்
பற்றிய
குறிப்புகள் இதனைத் தெளிவுபடுத்தும்.
மறுபுறம் பெண்ணானவள் மனைவி அல்லது காதலி என்ற அந்தஸ்த்தில் ஆண்களின் உடமைப் பொருளாக, அதிஸ்டமற்றவர்களாக, நெருக்கடிகளைச் சந்திப்பவர்களாக, துன்பப்படுபவர்களாக, இருப்பதையும் அதேசமயம் அனைத்து நெருக்கடிகளையும் துன்பங்களையும் துணிவுடன் எதிர்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கண்ணகி மாதவி ஆகிய இருபிரதான பாத்திரங்களிலும் இதனைக் கவுண்டு கொள்ளலாம். கண்ணகி கோவலனைப் பிரிந்தபொழுதும் இழந்தபொழுதும், மாதவி தன் காதலனைப் பிரிந்த பொழுதும் அவர்கள் அதிஸ்டமற்றவர்களாகவும், நெருக்கடிகளைச் சந்திப்பவர்களாகவும், துன்பப்படுபவர்களாகவும் இருந்த துமட்டுமல்ல, அவையனைத்தையும் துணிவுடன் எதிர் கொண்டவர்களாகவும் செயற்பட்டனர்.
சமூகரீதியாக ஆண் சுயாதீன மானகவும் முழுமையான தனிமனிதனாகவும் இருக்கிறான். சமூக, குடும்ப தேவைகளைப் பூர்த்திசெய்யும் உற்பத்தியாளன் என்ற வகையில் அவனுக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் பெண்களிற்கு குடும்பம், இனப்பெருக்கம் சார்ந்த பங்களிப் பிருப்பினும் அவற்றை உழைப்பாகக் கருதாத நிலமை காரணமாக அவளுக்கு, ஆணோ டொத்த சமமான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. தினது சுமைகளில் பங்குபெற, தினது தேவைகளைப் பூர்த்தி செய்ய பெண் தேவைப்பட்டாளெனிலும், இயற்கையான இனவிருத்தி வேறுபாடு காரணமாக ஆண் பெண்ணிற் கிடையிலான அந்தஸ்தில் அசமுத்துவம் காணப்படுவதாக வாதிடுவது வலிதான நியாயமாகத் தென்படவில்லை. அசமுத்துவமும், அடக்குமுறையும் பெண்ணிங் உயிரியலமைப்பிலிருந்தே தோன்றுகின்றதெ OSimone de. Beauvoir 6Tögp 5GJosü பொண் ஆய்வாளர் எடுத்துக்காட்டுவார். அதாவது பிள்ளைகளைப் பெறல் என்ற

Page 8
இயற்கையன் மீளுற்பத்தியிற் காணப்படும் பால் வேறுபாடே பெண் ஆளப்படுபவ ளாகவும், ஆண் ஆள்பவன் என்ற தலைமைத்தானத்தைப் பெறவும் ஏதுவாகிறதென்பது இவ் வாதத்தின் உள்ளடக்கமாகும். இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை நிகழ்த்திய Shelamith Firestone olujifugio (gGould (biological family) என்ற கருத்தாக்கத்தின் மூலமாக இதனை விளக்குகிறார். சமூக அமைப்பு எத்தகமைத்தாகினும் அவ்வமைப்பிற் காணப்படும் ஆண் பெண் என்ற இனப் பெருக்க அலகே உயிரியற் குடும்பமென விளக்குமிவர், அவ்வலகில் பெண்ணின் நிலை தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.
பெண்ணின் உயிரியலமைப்புக் காரணமாக அவள் தனது பெளதீக இருப்பிற்காக வரலாற்றின் எல் லாக் காலகட்டங்களிலும் ஆண்களின் தயவிலேயே தங்கி யிருக்க வேண்டியிருப்பதும்,
மனிதக் குழந்தையானது மிருகங்களைப் பொலல் லாது தன் வளர்ச் சிக்கு மிகவும் நீண்டகால்த்தை எடுப்பதால், அக் காலமளவிற்கும் தன் பெளதீனகஇருப்பிற்கு பெற்றோர் களிலே அதிலும் தாயரிலேயே தங்கியிருப்பதும்,
பரஸ்பரம் தாய் பிள்ளை இருவரும் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதானது எல்லாக் காலத்தும் எல்லாச் சமூகத்திலும் ஒவ்வொரு பெண்ணினதும் ஏழந்தையினதும் உளவியலை உருவாக்கி வந்திருப்பதுமான நிலமையினால் ஒரு ஆணாலும் பெண்ணாலும் ஏற்படுத்தப்பட்ட உயிரியற்
குடும்ப அலகே அடிப்படையில் அசமத்துவத்திற்கு இடமளிக்கிறதென்ற (Մ) Լջ 6) பெறப்பட ஏதுவாகிறது.
சமத்துவமற்ற மேற்படி ஆண் பெண் பால்வேறுபாடு இயற்கையின் இயல்பே யென்ற நிலைப்பாடு சிலப்பதிகாரத்தின்
(2)
உள்ளீடுகளிலொன்று . அவ்வாதப்படி ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக படைக்கப் பட்டுளரென்பதே அவர்கள் சமத்துவ மற்றவர்கள் என்பதற் கான ஆதாரமாகும். கதையாடலின் கட்ட மைப்பின்படி கண்ணகியும் ஏனைய பெண்பாத்திரங்களும், பெண் பற்றிய மேற்படி கருத்துநிலையில் ஊடாடுவதை அவதானிக்க முடிகிறது ‘இயற்கை இயல்பு' என்பது ஒரு இன்றியமையா மனித மதிப்பீடல்ல. இயற்கையின் வரம்புகளைக் கடந்து செல்வதே மனித இயல்பாதலினால், பால் வேறு பாட்டடிப்படையில் பெண்கள் அசமத்துவமானவர்கள் என வாதிடுவது ஒரு வலிதற்ற நியாயமாகும்.
ஒரு எஜமானனுக்கு எவ்வாறு அடிமை தேவைப்படுகிறதோ அவ்வாறே ஒரு ஆணுக்கு பெண் தேவைப்படுகிறாள். அடிமையாயிருப்பதற்கான விருப்பம் ஒருவனுக்குளதோ அல்லதோவென ஆராய்வது, எஜமானுடைய நோக்குநிலையில் அபத்தமானதொரு ஆராச்சியாகும். இதுபுோன்றதொரு நிலைய்பாடே பெரும்பாலான ஆண்-பெண் தொடர்பிலும் காணப்படுகிறது. திருமண பந்தத்தினால் பெண் அடிமையாக் கப்படுவதுமட்டுமல்ல, அவளுடைய முத்திப்பேறும் கூட, எந்தளவிற்கு அவள் கணவனின் அடிமையாக, தன்நலன்களை இழந்து, கணவனிற்குரிய சகல கடமைகளையும் புரிந்து வாழ்ந்தாள் என் பதிலேயே தங்கியுள்ளது. குடும் பத்திலும் தனிச் சொத்திலும் குறிப்பாகக் கருத்துநிலையிலும் ஆணாதிக்கம் மேலோங்கிய மேற்படி சமூகத்தையே சிலப்பதிகாரத்தில் நாம் சந்திக்கிறோம். அங்கு ஆணுக்கும் ( கணவனுக்கும்) பெண்ணிற்கும் (மனை விக்கும்) சமமான அந்தஸ்த் து கொடுக்கப்படவில்லை. சிலப்பதிகாரம் கட்டுரைக்காதையில் வருகிற வெண்பா கண்ணகி தெய்வத்தைத் தொழாது கணவனைத் தொழுததால் தெய்வமும் தொழும் தகமை உடையவளாயி ருந்தாள் என்பது மட்டுமல்ல, அவள்
Bubasih

தெய்வமாகவும் ஆனாளென குறிப்பிடுகிறது. அதாவது முற்றுமுழுதாக ஆணை மையப்படுத்திய வகையிலேயே இங்கு பெண் பற்றிய கருத்திற்கு வரைவிலக்கணம் தரமுயல்வது இங்கு அவதானிக்கத்தக்கது. குடும்பம் என்ற அலகில் முதன்மைத் தானம் ஆணிற்கு/ கணவனுக்கு கொடுக்கப் பட்டது. அவன் பெண்/மனைவி மீதான வரையறையற்ற அதிகாரத் தைக் கொண்டவனாக இருந்தான். ஆணின் அதிகாரத்திலிருந்து அவள் விடுபட முடியாதவளாயிருந்தாள். மானிட மதிப்பைப் பெறுவதற்கும், வாழ்க்கையை அனுப
விப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தன்
சீவனோபாயத்திற்கும் அவள் ஆண்களில் தங்கியிருக்க வேண்டியதாயிருக்க வேண்டியதாயிற்று. சுருங்கக் கூறின் ஒருவகையான ஒட்டுண்ணிப் பாத்திரமே ஆண் பாலுலகத்தில் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது. கோவலன் கண்ணகி, மாதவி உறவு பெண்மீதான ஆணதிகார அடக்குமுறை எவ்வாறு செயற்படு கிறதென்பதை தெளிவாக்கும்.
பொதுவாகக் கூறுவதாயின் ஆண்,பெண் என்ற வேறுபாட்டை மிகச்செறிவான முறையில் துருவப்படுத்திய கட்டமைப்பைக் கொண்டதே பண் பாடெனலாம். அத்துடன் அதன் அனைத்து அம்சங்களும் ஆண்களின் நலனை மையப்படுத்திய முறையில் அமைந் திருப்பதையும் மறத் தலியலாது. இலக்கியத்தினூடாக பண்டைத் தமிழரின் பண்பாட்டை அணுகுவோமாயின், அப்பண்பாட்டில் ஆணுக்கும் பெண் ணுக்குமிடையிலான பிணைப்பின் பிரதான கூறுகளிலொன்றாக காதல் /அன்பு பேசப்படுவதை அவதானிக்கலாம். ஆனால் அதுவே இன்றுவரை மனிதசமூகத்திற் காணப்படும் பெண்ணடிமையின் அச் சாணியாகவுளது. காதல் என்ற சொல்லின் கருத்தை bgਹੁib பெண்ணும்
ஒரேவிதமாகப் புரிந்துகொள்வதில்லை,
நியட்ஸே என்ற மெய்யியலாளர் Gay Science என்ற நூலில், காதல் என்ற சொல் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு
குறிப்பீடுகளைத் தரு கிறதென்கிறார். பெண் ணக்குக் காதல் என்ற சொல் எத்தகைய புறநடையோ அல்லது விதிவிலக்கோ இல்லாது உடலாலும் உள்ளத்தாலும் கொண்ட அர்ப்பணிப்பைச் சுட்டுகிறது. இதனால் அவளது காதல் தான் விரும்பியவனிடத்து எத்தகைய நிபந்தனையுமற்ற சரணா கதியை வெளிப்படுத்துகிறது, அதுேவேளை ஆணைப் பொறுத்தவரையில் தன் காதலியிடமிருந்து காதலை வேண்டி நிற்கு மொருவன் அவள் செலுத்தும் அதேயளவிலான உணர்வுச் செறிவை அவள் மீது வெளிளிடுவதில்லையென நியடிஸே குறிப்பிடுவார். சிலப்பதிகாரக் காதலிலும் இதுவே உண்மையாயுளது. கண்ணகிமீதும், மாதவி மீதும் கோவலன் கொண்ட காதல் அவனது வாழ்க்கையின் ஓரம் சமாக மட்டுமேயிருப்பதையும் அதேவேளை கண்ணகிக்கம் மாதவிக்கும் முறையே கணவனிலும், காதலனிலுமே அவர் களது வாழ்வினிருப்பு முற்று முழுதாகத் தங்கிருந்ததையும் அவ தானிக்கலாம். இது ஒரு சுமூகத்தின் அங்கத்தவரேயென்ற நிலையில் பெண்ணய் நிலமையை மேலும் மோசமாக்குவதுடன், அவளை உளவிய லான தங்கியிருப்பிற்கும், அதன் வழி சமூகரீதியான அடக்கு முறைக்கும் உள்ளாக்குகிறது. கணவனின்/ ஈணின் துணையில்லாதபொழுது பெண் ஒரு அனாதையாக, பாதுகாப்பின்மை கொண்டவளாக இருக்கிறாள். ஆனால் மனைவிஃபெண் துணையில்லாத பொழுது இத்தகைய இடர்களேதுவும் ஆணைப் பெருமளவிற் பாதிப்பதில்லை. கணவனைப் பிரிந்த கண்ணகியின் நிலை பற்றியதும்,காதலனைப் பிரிந்த மாதவியின் நிலை பற்றியதுமான இளங்கோவின் வருணனைகள் இதனைத் தெளிவுபடுத்தும் நியட்ஸே குறிப்பிட்டதுபொல ஆணிடம் பெண சரணாகதியடைவதற்கான காரணம் உயிரியலானதுோ அல்லவோ என்பது தெளிவற்றதேயாயினும், ஆண்-பெண் சமத்துவம் மானிட இலட்சியங்களில் ஒன்றென்பதில் ஐயமில்லை. நாகரீகமடைந்த மனிதரென வாதிடுமெவரும், அசமத்து
(3)

Page 9
வத்தை நியாயப்படுத்த இயலாது.
கணவனதும் காதலனதும் பிரிவி னால் துயருறும் கண்ணகியினதும், மாதவியினதும் நிலமையை மனோரதியப் பாங்கில் சிலப்பதிகாரம் வருணிக்கிறது. பெண்கள் தமது கீழான நிலையுை தாமுணராது வைத் திருப்பதற்கான" பண்டாட்டுக் கருவியாகப் பயன்படுவதே LD(360TT J g5ub (romanticism). 956 மையக்கருவாகவிருப்பது காமம் (eroticism). இது சமூகப் பற்றுக்கள், சமூகக்கடமைகள் என்பவற்றிலிருந்து பெண்ணை விலக்கி வைப்பதனால், சமூக அங்கத்துவம் அவளிற்கு இல்லாது போவதுமட்டுமல்ல, அவறை ஆணின் காமப் பொருளாகக் கருதும் நிலமையேற்படுகிறது. பூரீஇந்துமரபில் பெண்ணின் உடலியல் தொடர்பான அனைத்து வர்ணனைகறும் அது தெய்வமாகவோ அன்றி மானிடராகவோ, எவராயினும், கவிதையிலும் ஒவியத்திலும் சிற்பத்திலும் எவ்விடமாயினும், அது ஆணின் பாலியல் விருப்பைப் பார்த்தி செய்யும் வகையிலேயே வெளிப் படுத்தப்பட்டுள்ளது. சத்தியவதியின் விருப்பத்திற்கு இணங்கவும், பீஷ்மரின் அங்கீகாரத்துடனும் சந்தானத் தொடர்ச்சி வேண்டி அம்பிகை அம்பாலிகை என்ற விசித்திரவிரியனின் விதவைகள் வியாசரைச் சேருவதை வருணிக்கும் மாகா பாரதவரிகள், பாஞ்சாலி, ஊர்வசி மற்றும் ஜெயதேவரின் வாழ்க்கைக் குறிப்பு, கிதகோவிந்தம் எனப் பல உதாரணங்களை வடமொழி மரபில் இது தொடர்பாக எடுத்துக் காட்டலாம். தமிழ்மொழி மரபும் இதற்கு விதிவிலக்கல்ல. 'தீராக்காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரையும், புணர்தலுறும் தலைவனின் ஆற்றாமையை விவரிக்கும் வரிகளும் சிலப்பதிகாரத்தில் இதனை உணர்த்தும். அத்துடன் பெண் தன்னைத் தானே ஆணின் காமத்திற்குரிய பொருளாகவே இருத்தல் வேண்டு மென்பதையும் எதிர்பார்க்கிறது. அந்திமாலை சிறப்புச் செய்தகாதையில் மாதவி பற்றிய வர்ணனை இங்கு அவதானிக்கத்தக்கது.
இவையெல்லாம் பண்பாட்டினடியாக காமம் என்ற கருத்து எவ்வாறு பெண்ணின் தங்கு நிலையை உறுதிசெய்கிறதென்பதை தெளிவுபடுத்தும்.
பண்பாடு தொடர்புான பெண்களின் பங்களிப்பு எப்பொழுதும் ம  ைற மு க ம பா ன த ரா க வே இருந்துவந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் தமது மனவுணர்ச்சி ஆற்றல் அனைத்தையும் ஆண்மீது செலவிட அவர்களோ அதனைத் தமது செயற்பாடுவழி திருப்பிவிடுவதால், பண்பாட்டிற்கான உயிரற்றலாகவும், அகத்துTண்டுதலாகவும் பெண்ணின் ஈடுபாடுவிளங்குகிறதெனவும், இதனைக் கலைவரலாற்றிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடிய தாயிருக் đổìpQậ560ĩ6)]ửồ Shulamith Firestone குறிப்பிடுவார் . கோவலன் மீதான கண்ணகியினதும் மாதவியினதும் ஈடுபாடு இங்கு அவதானிக்கத்தக்கது. அது மட்டுமல்ல பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலை,இலக்கியத்தின் விடயமாகவும் பெண்களிருப்பதை மறுத்தலியலாது. இலக்கிய வரலாற்றில் புலவர்களால் கையாளப்பட்ட கருப்பொருள்களில் பெண்களோடு தொடர் படையதான விடயங்களை அகற்றி விடுவதாகக் கற்பனை செய்துபார்ப்பின், இதன் உண்மை விளங்கும். எவ்வாறாயினும் இவைய னைத்தும் பெண்கள் தாமாக தம்மை வெளிப்படுத்திய அனுபவங்களின் பெறுபேறு அல்ல, மாறாக ஆண்பாலாரை மையப் படுத்திய பண்பாட்டுச் செறிவின் பெறுபே றாகவே இருத்தல் கண்கூடு. இதனால் பெண்கள் தமது கண்களால் தம்மையும், தமது அனுபவத்தையும் வெளியிட இடமில்லாது போய்விடுகிறது. ஆண்பாலு லகத்தினால் உருவாக்கப்பட்ட பண்பாட் டுடன் முரண்படும் தமது நேரடி அனுப வத்தை வெளியிடும் விருப்பு மறுக்கப் படுவதுடன், அடக்கவும் படுகிறது. வரலாற் றின் எல்லாக் காலகட்டத்திலும் இருந்து வந்ததுபோல இளங்கோவின் மானிடப் பாத் திரங்களான கண்ணகியும் மாதவியும் இதற்கு விதி விலக்கில்லாது போய்விட்டனர். 0
 

நியூயார்க் இரட்டைக் கட்டிடங்கள் தரைமட்டமாகும்போது மனிதர்கள் இறந்த சோகக் காட்சியினை செய்தி ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காண்பித்து தேசபக்திஇனவெறி உணர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டன. ஒருபுறம் வால்மாட் கடைகளில் அமெரிக்கக் கொடிகள் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. மறுபுறம் ஆசிய நாட் டவர்கள் நுாற்றுக் கணக் கில் தாக்கப்பட்டனர். அதிலும் சீக்கியர் ஒருவரை வெள்ளையின வெறியன் ஒருவன் சுட்டுக் கொனறான்.
இவர் இந்த இனம்- நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக்கூட அறியாத முட்டாள்களா அமெரிக்க மக்கள் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல அதிபர் புஷ் தனது தேர்தல் பிரச் சாரமொன்றில் நைஜீரியாவை ஒரு கண்டம் என்று
*ళkఖ్య నీళ్లభభ 泌激
s গুঞ্জ భ அமெரகக இராணுவததைவட அதிகழ பேரைக்கொன்ற திரைப்பட கொமாண்டோக்கள்
தாயகம்
தெரிவித்தார். இதிலிருந்து புஷ் ஷம் புவியியல் அறிவற்ற முட்டாள் என்று கொள்ளலாமா?
இல்லை, இரண்டு தவறுகளுமே பொதுவான கல்வி அறிவின் குறை பாடுகளிலிருந்து நடக் கவரில்லை. அமெரிக்கா என்ற நாகரீக உலகத் தைத்தாண்டி இந்தியா, நைஜீரியா போன்ற காட்டுமிராண்டிகளின் நாடுகளையும் மக்களையும் தெரிந்து கொள்ளத் தேவையில்லை எனும் திமிரிலிருந்தும், மேட் டிமைத்தனத்திலிருந்தும் அந்தத் தவறுகள் நடக்கின்றன.
ஒரு சராசரி அமெரிக்கனிடம் இதைப்பற்றிக் கேட்டால், 'இந்த நாடுகளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து எனக்கு என்ன பயன்?'என்று சாதாரணமாகப் பதிலளிப்பான். அதுவாழ்வைப் பணத்திலிருந்து மதிப்பிடும் சுயநலத்திலிருந்து மட்டும் எழுவதில்லை. “அமெரிக்காவின் திரைப்படங்களையும், இசையையும், விளையாட்டையும் உலகமே பார்த்து-கேட்டு - ரசிக்கின்றது; பில் கேட் சின் கணினி, உலகத்தையே இணைத்திருக்கிறது. எனில் முழு உலகின் பண்பாடும், வரலாறும் நாம்தானே, நம்மைத் தாண்டி என்ன இருக்கிறது?’ என்ற சிந்தனையிலிருந்தும் அந்தக் கேள்வி எழுகிறது.
சிவப்பின் மீது வெறுப்பு : சிகாகோ நகரிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் வரலாற்றுப் பிரிவில் 1917 ரசியப் புரட்சி பற்றியும், 1945 இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியைத் தோற்கடித்த சோவியத் யூனியனின் வெற்றி குறித்தும் ஒரு செய்தி கூட கிடையாது. உலக அறிவையும், வரலாற்றையும் கற்றுத் தரும் இடத் திலேயே இந்த மாபெரும் வரலாற்று
G15)

Page 10
நிகழ்ச்சிகளை ஏன் மறைக்க வேண்டும்?
அதுதான் அெெமரிக்கா! தமக்குப் பிடிக்காத
ஒரு விசயத்தை மறுப்பதிலும், மறைப்பதிலும், அதையே திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்வதிலும் அவர்கள் வெட் கப் படுவதில்லை.
இருப்பினும் ஹாலிவுட் திரைப்பட முதலாளிகளுக்கு, "இளம் போல்ஷ்விக் அரசை எதிர்த்தும், ஏழைகளை பணக்காரர்களாக்கும் அமெரிக்காவின் மேன்மை குறித்தும்" படம் தயாரிக்குமாறு உத்தரவிட்டது. அன்று முதல் இன்றுவரை கம்யூனிசத்தைக் கேவலப்படுத்தி நுாற்றுக் கணக்கான திரைப்படங்கள் வெளிவந்து விட்டன.
இத்தகையப் பொய்ப் பிரசாரம் மக்களிடையே எடுபடுகிறது என்பதுதான் வேதனையான உண்மை. கம்யூனிச நாடுகள்தான் மக்களை மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்வதாக சில அறிவாளிகள் நம்புகின்றனர். உண்மையில் இந்தக் கூற்று அமெரிக்காவிற்குக் கச்சிதமாகப் பொருந்தும். அங்கிருக்கும் "வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ உள்ளிட்டு பல
1978 ஆண்டு ஜோன்ஸ் டவுன நகரத்தில் ஒரு மதக்குழுவைச் சேர்ந்த 900பேர் கூட்டாக தற்கொலை செய்த காட்சி
வானொலி நிலையங்கள் அரச உதவி பெற்றும் நேரடியாகவும் நடத்தப்படுகின்றன. பென்டகனும் சி.ஐ.ஏ.வும் பல்வேறு வானொலி அலைவரிசைகளைக் கையில் வைத்திருக்கின்றன. இதுபோக பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஹாலிவுட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபா மானியத்தை அமெரிக்க அரசு அளித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஊடகமும் அரசியல், பண்பாடு, செய்தித்துறைகளில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களைக் கூட தேசபக்திப் போர் என்றே அமெரிக்கள்கள் நினைக்கின்றனர். ஆப்கான் போருக்குக் கிளம்பும் அமெரிக்க வீரர்கள் காதலிகளுக்கு முத்தமிடுவதையும், குழந்தைகளுக்கு கண்ணிருடன் விடை கொடுப்பதும் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டன. இதே தருணத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க வீரர்களின் சாகசம் பற்றிய “ஃபேண்ட் ஆப் ப்ரதர்ஸ்’ எனும் ஸ்பில் பெர்க்கின் தொலைக்காட்சித் தொடருக்கான விளம்பரம் நடுப்பக்கத்தில் வெளியானது. இதுவரை 1500 மக்கள் கொல்லப்பட்டதைக் கூறும் தாலிபானின் செய்தி அமெரிக்க அரசின் மறுப்போடு மூலையில் ஒதுக்கப்படுகின்றன. ஆக நாம் ஆக்கிரமிப்பு எனக் கருதும் ஒவ்வொன்றையும் தேச பக்தி விம்ம, தியாகம் ததும்ப, சாகசம் பீறிட்டெழும் ஒன்றாக அவர்கள் கருதுகின்றனர்.
ஹாலிவுட் திரையின் பயங்கரம் இரண்டு கோடி மக்களைப் பலகொடுத்து, ஜெர்மனியின் நாஜி களிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சோவியத் யூனியனின் மாபெரும் தேச பக்தப்போர் குறித்து இன்றைய அமெரிக்க மக்களுக்கு எதுவும் தெரியாது. உண்மையில் ஜெர்மனியை முறியடித்தது அமெரிக்காதான் என்பது அவர்கள் கருத்து. ஹாலிவுட் அதை சாத்தி யமாக்கியிருக்கிறது. 60களில் வியட் நாம் எதிர்ப்பு இயக்கம் நடந்ததும்
 
 
 
 
 

70களில் தோல்வியுற்ற அமெரிக்க இராணுவம் வியட்நாமிலிருந்து திரும்ப, யதும் வரலாறு. ஆனால் 80 களில் வெளிவந்து வெற்றி பெற்ற ராம்போ வரிசைப்படங்கள் அந்த வரலாற்றை அமெரிக்கா சிந்தனையரிலிருந்து துடைத்தெறிந்து விட்டன.
‘ராம்போ ஒரு தனிமனிதனல்ல; முழுமையான இராணுவம்; வியட் நாமியர்களாலும், ரசியர்களாலும் கொடும் சித்ரவதைக்குள்ளான ஒரு அமெரிக்க வீரன், அதை மீறி பல சாகசங்களைச் செய்திருக்கும் போராளி; அத்தகைய மாவீரனை அமெரிக்க மக்கள் அலட்சியம் செய்து மறந்து போகலாமா?” என்று சில்வஸ்டர் ஸ்டாலோனின் ராம்போ படங்கள் அமெரிக்கப் பெருமிதத்தையும், தேசபக்தியையும் கிளப்பி விட்டு வசூலை அள்ளிச் சென்றன. ஆக்கிரமிப்பையே தேசபக்தியாகவும், தோல்வியின் இழப்பை, தியாகமாகவும், போர் எதிர்ப்பை தவறென்று. உணர்த்தும் சுயவிமர்சனமாகவும் ராம்பேர் பாத்திரம் மக்களிடம் பதிந்தது.
ராம்போ படங்களுக்குப் பிறகு போர் வரிசைப் படங்கள் பல வெளிவந்து வெற்றிபடைத்திருக்கின்றன. இந்தப் படங்களில் அராபியர்கள், ஏனைய முஸ்லிம்கள், ரசியர்கள், வியட்நாமியர்கள், கம்யூனிஸ் டுக்களை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் : அற்பப் புழுக்களைப்போல மிதித்து வெற்றி: பெறுகின்றர். அமெரிக்கா உண்மையில்: குண்டு வீசிக் கொன்ற மக்களின் எண்ணிக்கையை விட அமெரிக்க: கமாண்டோக்கள் இத்தகைய சினி மாக்களில் செய்த கொலை அதிகம்.
நிஜப் போர் அமெரிக்காவரின் மேலாதிக்கத்திற்கும், செல்லுவாய்டின் போர், அமெரிக்க மேன்மையை நியாயம் போல உணர்த்துவதற்கும் பயன்படுகின்றன. :
நுகர் பொருள் குவியலான வாழ்க்கையில் ஒரு சராசரி அமெரிக்: கனின் தொழில்நுட்ப வலிமை குறித்த கர்வமும் முக்கியமானது. சூப்பர்மேன் போன்ற படங்களும் , வேற்றுக் கிரகப் போர்
தாயகம்
படங்களும் அமெரிக்க வலிமைக்கு நிகரான எதிரிகள் பூமியில் கிடையாது என்பதை உணர்த்துகின்றன. எதிரிகளை மட்டுமல்ல. அமெரிக்கக் குழந்தைகளுக்கான நட்பும்: ஏனைய நாட்டுக் குழந்தைகளுடன் ஏற்படக் கூடாது என டயனோசர், பொம்மை, இடி போன்ற கற்பனைப் பொருட்களுடன் உறவாட வைக்கின்றனர்.
இப் படி ஹாலிவுட் தனது தோற்றத்திலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பண்பாட்டு ஏவல் நாயாக விசுவாசத்துடன் அழகு காட்டுகிறது. அந்த கொடூரமான அழகில் அமெரிக்க மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். செப்டம்பர் தாக்குதல் அந்த அழகை, ஓரளவுக்கேனும் உணர்த்தியிருக்கும்" என்றாலும் விரைவிலேயே அவை நமத்துப் போகும். தற்போதைய படங்களில் அமெரிக்க அதிபர்களே ஆக்ஷன் ஹீரோக் களாக அட்டகாசம் செய்கின்றனர்.
அதிபர் தேர்தலையே ஹாலிவுட் திரைப்படம் போல மாற்றிவிட்ட நாட்டில்
ஹாலிவூட் திரைப்படத்தின் ‘ஆக்ஷன்
ஹீரோவாக அதிபர் சித்தரிக்கப்படுவதில் ஆச்சரியமென்ன?
30சதவீத ஜனநாயகம்! முதலில் ஒரு அதிபர் அறிவுள்ளவரா, அற்றவரா, என்பது பெரிய பிரச்சினையல்ல ஒரு சோப்புக் கம்பனி தனது புதிய சோப்பை அறிமுகப்படுத்தி சந்தையில் வெற்றி பெற என்னென்ன செய்யுமோ அத்தனையும் அதிபர் தேர்தலுக்கும் பொருந்தும். இதில் சோப்பின் தரம் முக்கியமல்ல. அதை பிரண்டாக வெற்றி பெறச் செய்யப்படும் வித்தைகளே முக்கியம். அவரது உடல்
மொழி, உடைபாணி, பேச்சுவழக்கு, கையசைப்பது, கைகுலுக்குவது, குறிப்
பிப்பு: புகைப்படங்கள்; பெண்களைக் கவரும் விதம், குடும்பப் பாங்கு; புனையப்படும் இளம்பருவ சாகசங்கள்; விருந்துப் பண்பு' என்று ஏகப்பட்ட ஐட்டங்கள் கவனமாகத் தயாரிக்கப்படும்.
அமெரிக்க மக்களின் மனநிலை"
பொறுத்தவரை அரசியல்
()
யைப்

Page 11
கவர்ச்சிகரமான விழாவைப் போன்று உணர்த்தப்படுகின்றன. எதிர்க்கட்சிப் போராட்டம், கொள்கைப்பிரகடனங்கள், மக்கள் திரள் மகாநாடு-ஊர்வலம், பந்த், ஆர்ப்பாட்டம், சுவரொட்டி, பிரச்சாரம், அரசியல் போராட்டம் என்பதெல்லாம் அங்கு கிடையாது. இவை அநாகரிக அரசியலாக மக்களுக்கு போதிக் கப்படுகின்றன. நமது ஒட்டுக்கட்சிகளில் கூட மக்களை அணிதிரட்டும் தகுதியை வைத்து ஒரு தலைவரோ, தொண்டரோ மதிப்பிடப்படுகிறார். அமெரிக்காவிலோ, ஒருவரது பணம் திரட்டும் ஆற்றலே தலைவர், வட்டாரப் பிரதிநிதிகளின்
தகுதியை தீர்மானிக்கின்றது. சுருக்கமாகச்
சொன்னால் அரசியல் என்பது அங்கே நேர்த்தியாகச் செய்யப்படும் ஒரு தொழிலேயன்றி மக்களுக்கு சேவையாற்றும் துறையல்ல.
இதனைத் தம் சொந்த அனுபவத்தில் புரிந்துக் கொண்ட அமெரிக்க உழைக்கும் மக்கள் அநேகமாக வாக்களிப்பதே இல்லை. சமீபத்திய புதிய தேர்தல்களில் சராசரி வாக்குப்பதிவே 36சதவீதம்தான்.
அந்த 36சதவீதம்பேர்களும் அரசியல் தொழிலின் நேரடி ஆதாயங்களைப் பெறும் முதலாளிகள், அதிகார வர் க் கம், மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கம் அடங்கிய பிரிவினராகத்தான் இருக் கின்றனர். கடந்த தேர்தலில் அதிபர் புஷ்ஷின் தம்பி புஷ் ஆளுநராக இருக்கும் புளோரிடா மாநிலத்தில், ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் வாக்களிக்காமல் தடுக் கப்பட்டதும், ஜனநாயகத்தின்
நிறவெறியையும், வன்முறை கழிசடை
அரசியலையும் உணர்த்துகின்றன.
இறுதியில் அப்பா புஷ் நியமித்த நீதிபதிகளின் தயவில் இன்றைய கோமாளி புஷ் அதிபரானார்.அமெரிக்க நீதியின் நடுநிலைமை இலட்சணம் இதுவென்றால், நீதி கிடைப்பதற்கான செலவு சாதாரண மக்கள் நெருங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. சமீபத்தில் ஒரு நீதிமன்றத்தில் அரசியல் கைதியாக இருக்கும் ஒரு பெண் தான் செய்யாத குற்றமொன்றை செய்ததாக
ஒப்புக் கொண்டார். "செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஜூரிகளின்டுடுவர்கள்) மனநிலை எப்பிடியிருக்குமென அறிவேன். அவர்களிடமிருந்து நீதி கிடைக்காது என்பதால் அவ்வாறு ஒப்புக்கொண்டேன்" என்று தெரிவித்தார் அந்தப் பெண். அமெரிக்க நீதித்துறையை புரிந்து கொள்ள செருப்பாலடிக்கும் இந்த வார்த்தைகள் போதுமானவை. மதமும் ஆட்டுவிக்கிறது செப்டம்பர் தாக்குதலையடுத்து அமெரிக் காவெங்கும் ஓட்டப்பட்ட பேசப்பட்ட முழக்கம் “கடவுள் அமெரிக் காவைக் காப்பாற்றட்டும்” இந்து மத வெறியர்கள் ஆளும் இந்தியாவில் கூட கார்கில் -காசுமீர் பிரச்சினைகளின்போது ‘கடவுள் இந்தியாவைக் காப்பாற்றட்டும்’ என்று பேசப்படவில்லை. அமெரிக்காவில் பேசுவதற்குக் காரணம் அது உலகிலேயே தீவிரமான, மூட நம்பிக்கை மலிந்த, வெறிமிகுந்த பல்வேறு முட்டாள் மதப்பிரிவு குழுக்களும் ஏராளமாகச் செயற்படும் நாடாகும். 78-ஆம் ஆண்டில் அப்படி ஒரு மதப்பிரிவைச் சேர்ந்த 900பேர் தற் கொலை செய்து கொண்டனர். இந்தியாவின் அசட்டு சாமியார்கள் கூட அங்கே விலை பேசப்படுவதற்கு காரணம் அமெரிக்காவின் மத நம்பிக்கை தான். மூலதனத்தின் முன் மண்டியிருக்கும் மக்கள் மதத்தின் முன்னும் கட்டுண்டு கிடப்பது அதிசயமல்ல. ஆனால் அமெரிக்காவின் எல்லாத்துறை நிறுவ னங்களும் மதத்தின் ஒழுக்கத்தை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே யிருக்கின்றன.
இன்னொரு புறம் மதத்தின் ஒழுக்கம், அமெரிக்க நுகர் பொருள் வாழ்வின் ஓரங்கமே தவிர அதன் அடிப்படையல்ல. எல்லையற்ற நுகரும், பண்பாடு உருவாக்கியிருக்கும் நுகர்வியம் என்ற மதமே அமெரிக்காவின் சமூக உறவுகளைத் தீர்மானிப்பதிலும்-சீர்குலைய்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சமூகப் பிடிப்பற்ற குடும்பம்-குழந்தைகள்: அமெரிக்காவின் திருமண வாழ்க்கை
 

போவதாக நாம் அறிந்திருப்பது சரியல்ல. அமெரிக்க வாழ்க்கைத் தரம் என்ற தகுதியை எந்த வழியில் விரைவாக அடையப் போகிறோம் என்பதில்தான் தம்பதிகளுக்குள் பிரச்சினை ஏற்படுகிறது. எதிர்கால பொருளாதார வாழ்க்கை குறித்த அச்சமே முழு அமெரிக்காவையும் பிடித்திருக்கும் நிரந்தர பீதி, அந்த பீதிதான் பெரும்பாலான திருமண உறவுகள் முறிந்து போவதற்கும் அடிப்படையாக இருக்கிறது. இதன் விளைவாக தந்தை அல்லது தாயுடன் மட்டும் வாழும் கணிசமான அமெரிக்க குழந்தைகள் மற்றொரு முக்கியப் பிரச்சினையாகும். இவர்கள் தனித்து விடப்படும் வாழ்க்கைக்குத் தயார் செய்யப் படுவதும், சமூகம் பாதுகாப்பு தராது என்பதைத் தெரிந்து கொள்வதும், இரக்கமற்ற தனிமனித வாதத்தில் விழுந்து வளர்வதும், பிஞ்சாக வெம்பிக் கனியும் காலத்திலேயே நடந்தேறுகிறது.
இந்த வெம்புதலோடு நுகள்பொருள் வாழ்க்கை இணையும் போது மனநிலைய் பிறழ்வு பல அளவுகளில் நடக்கிறது. தொலைக் காட்சிப் பெட்டி ‘பொது அறிவைக் கற்றுத்தரும் ஆசிரியனாகவும், வீடியோ விளையாட்டு தனிமையைத் துரத்தும் தோழனாகவும், எதிர்பாராத உலகங்களை அறிமுகப்படுத்தும் இணையம் இரத்த உறவாகவும் அமெரிக்கக் குழந்தைகளின் உலகில் ஒன்றுகின்றன. காலப்போக்கில் குழந் தைகள் இம்மூன்று கருவிகளையும் இயக்குவதிலலை: கருவிகள் குழந் தைகளை இயக்குகின்றன. அப்படித்தான் வன்முறைச் சிந்தனையும், நுகள் பொருள் வெறியும், சமூகத்திடமிருந்து தனிமைப் படுவதும் ஒரு போதை போல ஆட்கொள்ளுகின்றன.
அமெரிக்க கல்வி திட்டம் கூட 'ஜக் யூ” எனப்படும் (முதலாளித் துவ நிர்வாக) துறை சார்ந்த அறிவுத் திறனை மட்டுமே கற்றுத் தருவதிலும், வளர்ப்பதிலும் கவனம் கொள்கின்றது. ஆனால் நம்நாடு, உலகம், பல்வேறு மக்கள், பண்பாடு, வாழ்க்கை,போராட்டம் என்ற "
சமூக தாயகம்
அறிவத் திறன்” முதலாளித்துவக் கல்வி முறையில் கிடையாது. ஒரு சிறுவனிடம் சமூக நோக்கத்தை உணர்த்துவதற்கும், நீ இந்தச் சமூகத்தின் ஓரங்கம் என்று வளர்ப்பதற்கும் இந்த 'சமூக ஐக்யூ அவசியம். எனவே அமெரிக்க குழந்தைகள் தோற்றத்தில் திடகாத் திரமாகவும், அவர்களைச் சுற்றியுள்ள பொருள்கள் ஆடம்பரமாகவும் இருப்பினும் வாழவை இயக்கும் சிந்தனையில் சீக்காளிகளாகவே இருக்கின்றனர்.
செக்ஸ் காய்ச்சலில் காயடிக்கப்படும் தேசம்
குழந்தைகள் மட்டுமல்ல, வயது வந்த அமெரிக்கர்கள் கூட வாழ்வின் எல்லாத் துறைகளில் ஏதேனும் ஒரு அளவில் சீக்காளிகளாகவே இருக் கின்றனர். அத்தகைய சீக்கு ஒன்றிற்கு உதாரணமாக 'செக்ஸ் காய்ச்சலை” குறிப்பிடலாம்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் விபச்சாரம் சட்டப்படி தடை செய் யப்பட்டிருப்பது மட்டும் ஒரு சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிடலாம். அங்கே பல உத்திகளில் பல பெயர்களில் விபச்சாரத் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு தேவை எனப்படும் செக்ஸ் அங்கே ஆரோக் கியத்தை குலைப்பதற்கே பயன்படுகிறது. ப்ளே பாயும் அதனுடைய முதலாளியும், அவனது லீலைகளும், பில்கேட் சின் கணினிப் புகழை விட பிரபலமானது
உலக செக்ஸ் வக்கிரங்களின் தலைநகரான லாஸ்வேகாஸ் அமெரிக் காவிற்கு மட்டுமே சொந்தமானது. ஓரினச் சேர்க்கை சங்கங்கள், பாலுணர்வு வெறிப்படங்கள், நேரடியான பாலு ணர்வுக் காட்சிகள், தம்பதிகளுக்கு உறவை செய்முறையோடு கற்றுத்தரும் கிளினிக்குகள் - வீடியோ தகடுகழ், 24மணி நேரமும் இயங்கும் செக்ஸ் கடைகள், குழந்தைகளை அளிக்கும் தரகர்கள் என அமெரிக்கா முழுவதும் செக்ஸ் காய்ச்சல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இங்கு செக்சும் ஒரு நுகர் பொருள் U 6.xii . DIT &is

Page 12
மாற்றப்பட்டு எல்லையற்ற நுகர்வு ரசனைவெறியாக மாற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் ஒய்வு நேரத்தைக் காயடிப்பதில் இக்காய்ச்சல் முக்கிய பங்கு வகிக்கிறது.
+ + + + + + இதுவரை நாம் பார்த்த அமெரிக்க மக்களின் சிந்தனை- வாழ்க்கை முறையை நொடி தோறும் பாதுகாப்பதில் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பாரிய பங்கை ஆற்றுகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள அமெரிக்காவின் வார்ப்படங்களான ஜூனியர் விகடன்,
நக்கீரன், குமுதம் பத்திரிகைகளும்,
அரட்டை அரங்கம், டாப் டென், கேன்டிட் கேமரா, நையாண்டி தர்பார், அரி-கிரி, அசெம்பிளி, சித்தி, மந்திரவாசல் போன்ற தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுமே போதுமானது. இவை நாம் எதை எப்படிப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதை நம்மை அறியாமலேயே கற்றுத்தந்து மாற்றிவிடுகின்றன. இவை ஒரு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கும் சமூக நோக்கம் கொண்ட முற்போக்கான, மாற்றம் தேடும் மதிப்பீடுகளை அடித்து ஒழிக்கின்றன. இறுதியில் அற்ப விசயங்களும் -
நோக்கங்களுமே சிந்தனையின் அரியணையில் அரங்கேறுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியக்
கட்டமைப்புக்கேற்பவே அமெரிக்க சமூகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு விதத்தில் சமூகத்தைப் பாதிக்கின்றன. அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கையில் பெறும் ஒவ்வொரு வசதிக்கும் ஏதோ ஒரு இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க முதலாளிகளின் அளப்பெரிய ஆதாயம், மக்களிடம் உருவாக்கப்படும் அற்ப உணர்வுகளின் அடிப்படையில்தான் இருக்கின்றது. ஒரு நுகர் பொருளின் விற்பனை அது தேவையென கருதும் சிந்தனை உருவாக்கத்திலேயே சாத்தியம். அமெரிக்காவின் சமூகப் பண்பும் ஆடம்பரவாழ்க்கையும் இப்படித்தான் சங்க
(20
ஒரு அமெரிக்கக் குடிமகனின் மனதில் அச் சவுணர்வை உருவாக்கி னால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியை ஏவினால்தான் வயாக்ராவை சந்தைப்படுத்த முடியும். எயிட்ஸ் பற்றிய மரணமீதி அதிக ரித்தால்தான் ஆணுறைகளின் உற்பத்தியும் அதிகரிக்கும். புதிய நோய்கள் குறித்த பீதியை உருவாக்கும்போதுதான் புதிய மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய முடியும். பொதுப் போக்குவரத்தை இல்லாதொழிக்கும் போதே கார்களை அத்தியாவசியப் பொருளாக மாற்றமுடியும். போதைப் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் போதுதான் கடுமையான ராக் இசையின் விற்பனை சாத்தியம் அமெரிக்கா என்பதன் பொருள் இப் படித்தான் இருக்கிறது.
அமெரிக்க சமூகம் ஒரு சராசரி அமெரிக்கனிடம் உருவாக்கியிருக்கும் வாழ்க்கை குறித்த மதிப்பீடு என்ன? வாழ்க்கை என்பது வாழ்ந்து களிப்பதேவாழ்ந்து களிப்பது நுகள் பொருட்களை உடைமையாக்குவதே. உடைமை யாக்குவது டாலரை எப்படினுேம் சம்பாதிப்பதே- சம்பாதிப்பது வாழ்க்கையில் வேகமாய் ஓடுவதிலேயே - ஓடுவது தடைகளை இரக்கமின்றித் தாண்டுவதேதாண்டுவது சமூகத்துடன் முரண்படு வதிலேயே - முரண்படுவது தனிமனித வாதத்தில் முடங்குவதே என்பதுதான் இந்த மதிப்பீடு.
அதனால்தான் அமெரிக்க வாழ்க்கை என்பது உதட்டிலே சிரிப்பும் உள்ளத்திலே வெறுப்பும், தோற்றத்தில் கவர்ச்சியும் நடத்தையில் அருவருப்பும், பேச்சில் நளினமும் முடிவெடுப்பதில் இரக்க மின்மையும் தனி மனித வாழ்க்கையில் ஆடம்பரமும் சமூக வாழ்க்கையில் அவலங்களும் நிறைந்ததாக இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படும் வரையில் அமெரிக்க மக்களுக்கும் விடுதலை என்பது இல்லை.
நன்றி; புதிய கலாச்சாரம் டிசம்பர்2001
 

ள்ளிக் கூட இறுதி மணி Lஅடித்தது. காலையில் யானை மாதிரி அசைந்து, அசைந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் இப்போது சிட்டாகப் பறந்து விட்டனர். நான் எனது பையை சரி செய்து கொண்டு வெளியேறும் கையொப்பத்தை வைத்துவிட்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு முற்றத்து வேய்ப மரத்தடிக்கு வந்தேன்.
கிராமத்து பாடசாலை. அதிபர் ஏற்கனவே போய் விட்டார். பெண் ஆசிரியைகள் இருவர் அவர்களும் பிள்ளைகளுடனேயே போய்விட்டனர். நானும் சமூகக்கல்வி ஆசிரியர் தவாவும் எஞ்சி இருந்தோம். -
சிவா அலுவலகத்தை பூட்டிக்
கொண்டு, சைக்கிள் எடுத்துக் கொண்டு என் அருகில் வந்தார். வித்தியாசமான பேர்வழி வேட்டி, நஷனல், சுட்டி, குடு வைத்தவர். இந்தக் காலத்தில்.
இருவரும் ஏதுோ அரசியல் பிரச்சனையை கதைத்துக் கொண்டு இருந்தோம்.
“இது சேர் பெரிய ஆட்கள் கதைத்து தீர்க்கமாட்டாத பிரச்சனை. நாங்கள் கதைச்சு சரிவராது.
கோகுலராகவன்
“இல்லை சேர், மனம் வைச்சால் நடக்கும்."
"ஆர் சேர் மனம் வைக்கினம்" “உழைப்பில் எல்லோ சேர் மனம் வைக்கினம்”
“அது சரிசேர்” இந்த நேரம் பார்த்து எங்களை நோக்கி ஒரு இளைஞன் வந்து கொண்டிருந்தான். முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். ரன்னிங் சோட்சும், முழங்கை சேட்டும் அணிந்திருந்தான்.
நான் சேரை பார்த்தேன். அவர் என்னைப் பார்த்தார். இருவருக்கும் அந்த இளைஞனை முன்பின் பார்த்த அறிமுகம் இல்லை.
அவன் போட்டிருந்த சேட்டில் இடைக்கிடை கயர் இருந்தது. எனக்கு அது பெயின்ற் மாதிரி தெரிந்தது. பள்ளிக் கூடத்தில் யு.என்.எச்.சி.ஆர் மலசல கூடம் கட்டிக் கொண்டிருந்தோம். அதற்கு பெயின்ற் அடிக்க அதிபர் ஆள் தேடிக் கொண்டிருந்தார்.
"பெயின்ரர் போல கிடக்கு” என்றேன். தவா சேர் இல்லை என்கின்ற மாதிரி தலை அசைத்தார்.முதல் நாள் பள்ளிக்
()

Page 13
கூடத்தில் சிவா சேர் கணிப்பீட்டு ஒப்படை செய்யாததற்கு ஒரு பொடியனுக்கு அடித்த அடி காரணமாக பொடியனின் தகப்பன் கறுவிக் கொண்டு திரிகிறானாம். என்று கேள்வி.
“சபாதரனின் தகப்பன் போல கிடக்கு தவா சேர் சொன்னார். எனக்கு அப்பிடித் தோன்றவில்லை.
பள்ளிக்கூட குப்பைக் கூடை நிரம்பி விட்டது. விற்க வேண்டும் என்று அதிபர் யாருக்கோ சொன்னவர். குப்பை வாங்க வரும் ஆள் போலவும் தென்பட்டது.
இப்பொழுது இளைஞன் எமக்கு கிட்ட வந்துவிட் டான். எங்கள் இருவரையும் ஏற, இறங்க பார்த்தான். எதுவும் கதைப்பதாக தெரியவில்லை.
“அதிபரிட்டை வந்தனிங்களோ" இருவரும் ஒருமித்த குரலில் கேட்டோம். அவன் இல்லையென தலையாட் டினான். சிவா சேர் கேட்டார்.
“என்னட்டை வந்தனிங்களோ" அவன் மெளனமாக இருந்தான். நான் கேட்டேன்:
"பெயின்ற் அடிக்கின்றனிங்களோ" இப்பவும் அவன் எங்களை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எங்களுக்கு Լյալն வரத் தொடங்கிவிட்டது. இதென்னடா மாயமாலம் என்றாகி விட்டது.
“குப்பை பார்க்கப் போறிங்களோ" இப்ப அவன் லேசாக எங்களை பார்த்து சிரித்தான். சிரித்துவிட்டு கோட்டான்.
"இதில் கனநேரம் நிப்பியளோ" “கொஞ்ச நேரம் நிப்பம்” என்றோம். அந்த மனிதன் எமக்கு மிகவும் தெளிவான குரலில் பள்ளிக் கூட ஒழுங்கையைக் காட்டிச் சொன்னான்.
"நான் இதாலை போகப் போறன். என்னை யாரும் பின்தொடர்ந்து வந்தால் என்னை இதாலை போனது எண்டு சொல்லவேண்டாம். சரியோ"
சொல்லிவிட்டு வேகமாக வந்த ஒழுங்கையால் இறங்கி போய் விட்டான். நானும் தவா சேரும் அவன் போய்க் கொண்டருந்த போக்கை சிறிது நேரம் பார்த்துக் கொண்டபடியே நின்றோம்.
"சேர் ஆரும் பின் தொடர்ந்து வருமட்டும் நாம் ஏன் நிற்பான். வாருங்கோ போவம்"
நாங்கள் சையிக்கிள்களை எடுத் துக் கொண்டு வேகமாக உழக்க தொடங்கினோம்.
LMLLLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLLLL LL
(pl9UT5.
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLL LLLLLL
(2)
தேசியமும் சர்வ தேசியமும் நான் லத்தீன் அமெரிக்காவில் எங்கு இருக்கிறேன் என்பதல்ல பிரச்சினை. எங்கிருந்தாலும் நான் என்னை ஒருபோதும் அந்நியனாக கருதிக் கொண்டதில்லை. குவாத்திமாலவில் இருந்தபோது என்னை குவாத்திமாலன் என எண்ணிக் கொண்டேன். மெக்சிக்கோவில் நான் ஒரு மெக்சிக்சன். பெருவில் நான் ஒரு பெருவியன். இப்போது நான் கியூபாவில் நான் ஒரு கியூபன். ஆனால் நான் செல்கிற இடமெங்கும் நான் ஆஜென்டினனாகவும் இருக்கிறேன். ஏனெனில் என்னால் என் மேட் பானத்தையும் "அஸாடோவையும் மறக்கவே
அஸாடோ-ஆஜென்டினாவின் தேசிய உணவு. கரி அடுப்பில் வதக்கப்பட்ட இறைச்சி
-சேகுவாரா
 

மூகங்கள் தம்மைய் பல்வேறாக சிைேட்யாளப் படுத்திக் கொள் கின்றன. மனிதர், ஒரே காலத்தில் கூட, இடமும் சூழலும் சார்ந்து சில அடை யாளங்களுக்குக் கூடிய முக்கியம் தரு கின்றனர். தேசிய அடையாளம் என்பது ஒரு வகையான சமூக அடையாளமே. அதுவும் காலத்துடன் தன் உள்ளடக்கத்தில் மாற்றங்கட்கு உள்ளாகிறது. ஒரு தேசிய அடையாளம் சில பொதுவான பண்புகளைக் கொண்டிருந்தாலும் அப் பண்புகளின் முக்கியத்துவம் காலத்துடன் வேறுபடலாம். அது மட்டுமன்றி, வலுவான பொதுப் பண்புகளையும் மீறி ஒரு தேசிய அடையாளத்தினுள் பன்முகப்பட்ட தன்மை தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது.
தேசிய அடையாளம் என்பது ஒரு வரலாற்றுப் பரிமாணத்தையும் உடையது. ஒரு தேசமாக ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தக் கூடிய பண்புகள் இருப்பதால் மட்டுமே அச்சமூகம் தன்னை ஒரு தேசமாக அடையாளப்படுத்தி வற்புறுத்த முனைவதில்லை. எனினும், இன அடையாளத்திற்கு அப்பாற்பட்ட சமூகக் காரணிகள் வேறுபட்ட சமூகங்களை ஒன்றிணைக்க இடமுண்டு. மறுபுறம், வலிய பொதுவான அடையாளங்கள் இருந்தும் சமூகங்கள் பிளவுபட்டிருந்ததையும் நாம் காணலாம்.
இந்தியர், இலங்கையர் என்ற அடையாளங்கள், கொலனிய ஆட்சிக் காலத்தில், ஒருபுறம் கொலனிய ஆட்சி உருவாக்கிய புவியியல் எல்லைகள் சார்ந்தும் மறபுறம் கொலனிய ஆட்சிக்கெதிரான விடுதலை உணர்வு சார்ந்தும், உருவாகின. ஆயினும் தாம் உருவானவாறு அவற்றால் தொடர முடியவில்லை. அந்த அடையாளங்களின்
(23)
தொடர்ச்சியைப் பேணுவதற்கு ஒரு பொது அடையாளத்தை எல்லோ மீதும் திணிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதிரான விளைவுகளையே தந்ததை நாம் அறிவோம். பல தேச, தேசிய இன, சமூகப் பிரிவுகளின் அடையாளங்களை மதிக்கின்ற ஒன்றுபட்ட அடையாளம் நிலைக்கக் கூடியது. அதை மறுக்கின்ற பொது அடையாளம் ஏலவே உள்ள ஒற்று மையைக் குலைக்கக் கூடியது.
தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளம் ஒரு வரலாற்றுக் கால கட்டத்தின் சில அரசியற் தேவைகள் கருதி முன் வைக்கப்பட்டது. ஆயினும் அந்த அடையாளத்தின் பன்முகத் தன்மை சரியாக விளங்கிக் கொள்ளப்படாததன் விளைவாக, அது மூவேறு சமூகப் பிரிவுகளின் ஒன்றின் சார்பாக (அல்லது அந்த ஒன்றின் ஒரு பகுதியின் சார்பாக) மட்டுமே செயற்பட்டது. இந்தத்தவறான அணுகுமுறை ஒடுக் கப்பட்ட தமிழ்பேசும் தேசிய இனங்களின் ஒற்றுமை மிகவும் அவசியமாகவுள்ள ஒரு சூழ்நிலையில் கூடத் தொடர்ந்தது. அதன் விளைவாகத் தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் வலுவிழந்துள்ளது. இதன் விவரங்களுக்குள் போவது இக் கட்டுரையை அதன் நோக்கத்திலிருந்து வெகு தூரம் விலக்கி விடும். இன்று சில புதிய அடையாளப்போக்குகள் ஊக்கு விக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நாம் கவனிக்கத் தவறுவோமாயின், தமிழ் பேசும் தேசிய இனங்களின் ஒற்றுமை மட்டுமன்றித், தமிழர் என அடையாளப்படுத்தப்பட்டோரின் ஒற்றுமை கூட மேலும் சீரழிய இடம ளித்தோராவோம்.
இந்து என்ற சொல் பல்வேறு அரசியல், சமூக நோக்கங்கட் காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கொலனிய

Page 14
ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டத்தில் அந்த அடையாளம் செயற்பட்ட போதும் அது ஒரே விதமாகவோ ஒரே நோக்கத்துடனோ எல்லோராலும் பயன்படுத்தப்படவில்லை. இஸ்லாமோ கிறிஸ்துவமோ பெளத்தமோ சமணமோ தமக்குள் வேறுபாடுகளும்
பிரிவுகளும் அற்ற மதங்களல்ல. ஆனால்
இந்து என்று அடையாளப்படுத்தப்படுவது அவ்வாறான ஒரு மதம் அல்ல. இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு மத நம்பிக்கைகளை உள்ளடக்க அச்சொல் பயன்பட்டுள்ளது. அந்தப் பன்முக அடையாளத்தை ஏற்று ஒரு பொது மையைத் தேடவும் அது சிலருக்குப் பயன்பட்டுள்ளது. இந்தப் பொதுமை யைத்தேடும் முயற்சியின் போக்கில், கடந்த நூற்றாண்டின் போது, குறிப்பாக அதன் பிற்பகுதியில், பொது அடையாளங்கள் என்று சில அம்சங்கள் பல வேறு இந்திய (இந் து?) மதங்கள் மீதும் திணிக் கப்பட்டுள்ளன. இது, இந்து மதம் என்பதை பிராமணியக் கண்ணோட்டத்தில் மறு வார்ப்புச் செய்கின்ற ஒரு முயற்சியாகும். இதன் நோக்கம் இந்து என்ற அடை யாளப்படுத்தப்பட்ட மதங்களிடையே புரிந்துணர்வை உருவாக்குவது என்பதை விட இந்து என்ற பேரில் ஒரு பெரும்பான்மை வாதத்தை உருவாக்கு வதும் அதன் மூலம் ஒரு சிறிய அதிகார வர்க்கம் வர்ணாச்சிரமத்தின் மூலம் தான் அனுபவித்து வந்த வசதிகளையும் சமூக ஆதிக்கத்தையும் தொடர்வதும் என்பதே உண்மை. இதுவே இந்துவத்துவமாக இன்று உருவெடுத்துள்ளது. இது பற்றி நாம் எச்சரிக் கையாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இது இந்துக்களாக அடையாளங் காணப் படுவோருக்குப் பகைவர்களாக முஸ் லிம்களையும் கிறிஸ்தவர்களையும் முன் நிறுத்துகிறது. இதே நேரம், இந்திய மேலாதிக்கத்தின் மூலம் தன்னை வலுப் படுத்திக் கொள்வதற்காக ‘உலகமயமாதல்’ என்ற புதிய கொலனிய முறைக்கு உடந்தையாக அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவத்துடன்
இந்துத்துவம் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டுள்ளது.
இந்துத்துவம் என்பது சாதிய மேலாதிக்கத்தினதும் மதவெறியினதும் கொள்கையாகும். அதனால் காந்தியின் சகிப்புத் தன்மையைக் கூட ஏற்க முடிய வில்லை. 1917 ல் காந்தியைக் கொல்ல வெற்றிகரமாகச் சதி செய்த நிறுவனமே இன்று ஆர். எஸ். எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற பல வேறு பேர்களுடனும் பாரதிய ஜனதா கட்சியா கவும் செயற்படுகிறது. இதன் விஷ வேர்கள் கடல் கடந்தும் பரவியுள்ளன. இவை இலங்கை மண்ணில் பல வேறு வகைகளில் வெளிப்படுகின்றன. இலங்கை யில் 'இந்து மத வளர்ச்சி நடவடிக் கைகளில் இந்திய அரசும் அதன் தூதர கமும் பங்குபற்றும் சில காரியங்களும் இந்திய அரசின் மதச்சார்பின்மையைக் கேள்விக்கு உட்படுத்தக் கூடியனவே.
விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு 1970 களிலிருந்தே இலங்கையிற் கிளைகள் உள்ளன. இன்று இலங்கையில் ஹிந்து என்ற பேரில் இயங்கும் சில நிறுவனங்கள் இரண்டு முக்கியமான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒன்று கிறிஸ்தவர் கட்கும் முஸ்லிம் கட்கும் எதிராக, இந்துக்கள் எனப்படுவோர் பெளத்த மதவாதிகளுடன் சமரசம் காண்பது மற்றது, இந்தியாவின் அதிகார வர்க்கத்துடன், குறிப்பாக இந்துத் துவ பிராமணிய நிறுவனங்களுடன், உறவை வலுப்படுத்தி, இந்தியாவின் மேலாதிக் கத்திற்கு உடந்தையாகச் செயற்படுவது.
எல்லா இந்துத்துவ நடவடிக்கை களும் தெளிவாக அடையாளம் காணக் கூடிய சமூக-அரசியற் பண்புகளைக் கொண்டனவல்ல. ஆனால் சமய, பண் பாட்டுத் தளத்தில் இந்துத்துவத்தின் நோக்கங்கட்கு இவை உடந்தையானவை. இலங்கைத் தமிழரின் சமய அடையாளங் களில் சைவ அடையாளமும் சைவம் சார்ந்த பிற அடையாளங்களும் இன்று திட் டமிட்ட குழிபறிப்புக்கு உள்ளாகின்றனவா என்பது கவனிக்கவேண்டிய ஒரு விடயம்.
 

ஆறுமுக நாவலரால் விருத்தி செய்யப்பட்ட சைவ அடையாளத்தில் யாழ்ப்பாணச் சைவ வேளாள நலன்கள் ஒரு முக்கிய பங்கு கொண்டிருந்தது உண்மை. ஆறுமுக நாவலரை அவரது காலத்து யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அடிப்படையில் நோக்கும் போது, சைவத்தையும் தமிழையும் நவீன உலகிற்கு இசைவானவை ஆக்குவதற்கும் அவர் பணியாற்றினார் என்பதையும் நாம் காணலாம். அவர் வழி வந்த சிந்தனைப் போக்கின் 9 (Ob பகுதி சைவ அடையாளத்தையும் தமிழ் அடை யாளத்தையும் ஒன்றெனக் கருதித் தமிழின் பிற அடையாளங்களை மறுக்க முயன்றதும் உண்மை. மறுபுறம் சைவத்தை வலி யுறுத்தியபோதும் மதப் பகைமையை மறுத்த ஒரு தளர்வான போக்கும் உருவாகி வந்தது. இதற்கும் அப்பாற் சென்று சாதியத்தை மறுக்கவும் தமிழுக்குப் பல மதங்களின் பங்களிப்பைச் சமத்துவமான முறையில் அங்கீகரித்த ஒரு மதச் சார்பற்ற அடையாளத்தை வலுப்படுத்தியதில் இடதுசாரிச் சிந்தனைக்கு ஒரு பெரும் பங்கு இருந்தது.
நாத்திகமாகவே தன்னை அடை யாளப்படுத்திய போதும், தமிழகத்துப் பகுத்தறிவு இயக்கம், குறிப்பாக ஈ. வெ, ராமசாமியாரும் அவரது பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக நின்றவர்களும், தமிழகத்தில் மதங்களின் பேரால் மோதல்கள் நேராத அளவுக்குச் சகிப்புணர்வை வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்களித்தனர். தமிழகத்துச் சைவ சித்தாந்த மரபு தனக்கே உரிய முறையில் தமிழ் அடையாளத்துக்குப் பங்களித்தது என்றால், அந்த அடையாளத்தை சமூக அளவில் விரிவாக்கி வலுப்படுத்துவதில் பகுத்தறிவு இயக்கத்திற்கும் ஒரு பெரிய பங்கு இருந்தது. ஆரிய திராவிட என்ற முரண், உண்மையில் பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான நோக்கில் முன் வைக்கப்பட்டதே. திராவிடம்' என்பது அன்றைய சென்னை மாநிலம் தனியே தமிழ் மாநிலமாக இல்லாததன் விளைவாக உருவான ஒரு அடையாளம் மட்டுமே அன்றி வேறல்ல.
தாயகம்
தரமாக்கும் வித்தைகளும்
பிரிந்துணர்வு நீங்கி புரிந்துணர்வு ஏற்பட புதுப்பொலிவு கண்டது யாழ்ப்பாணம்
பாதைகள் திறந்தன பயணங்கள் பெருகின பந்தங்கள் தோன்றின சொந்தங்கள் மலர்ந்தன பலரிங்கே வந்தனர் பார்த்தேங்கிச் சென்றனர்.
முதலீட்டாளர்கள்
மும்முரமாய் வந்தனர் முறையாக வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டனர் விநயமாக பலவழியால் விளம்பரமும் செய்தனர்.
பாதையோர விற்பனையோ படுஉசாராய் நடக்குது தரமற்ற பொருட்களும்
தேடுவாரற்றவையும் தேவலோகப் பொருளாகி தேடிப்பெறும் விந்தையை தெருவெங்கும் காணலாம்.
இன்றைய யாழ்ப்பாணத்தில் இங்கிதமற்றுப்பல சங்கதிகள் நடக்கிறது வார்த்தையில் வடிபடாத வக்கிரங்கள் ஏராளம். இன்றைய யாழ்ப்பாணம் இழையும் இப்பாதையில் தய்பாது செல்வது தடுக்கப்பட வேண்டியதே
குகதாசசர்மா சிவகுமார்

Page 15
எவ்வாறாயினும், மதச்சார்பின்மை,
தமிழகத்தின் மக்களை ஒற்றுமைப்படுத்த மிகவும் உதவியுள்ளது என்பது உண்மை. மதச் சார்பின்மையை நாம் மதங்களின் நிராகரிப்பு என்று கொள்ளத் தேவை இல்லை. மறுபுறம் இந்து என்ற பேரில் பகவத் கீதையை இந்துக்களுக்குப் பொதுவான ‘அற நூலாக வலியுறுத்தும் முயற்சி இன்று முனைப்புப் பெற்றுள்ளது. வைணவம் தமிழரிடையே ஒரு காலத்தில் சிறப்புப் பெற்ற ஒரு சமயம். அது இன்று நலிந்துள்ளது. ஆயினும் வலிய தமிழ் அடையாளமுடைய பக்தி இயக்கக் காலத்து வைணவமும் இன்று பரப்பப்படுகிற பிராமணிய வைணவமும் ஒன்றல்ல.
நலிவுற்ற நம்பிக்கை கெட் ட வாடியிருக்கிற ஒரு மக்கள் திரள் நடுவே மூட நம்பிக்கைகள் செழிப்பது இயல்பு. இன்று பலவகையான ஜோசியங்களும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளும் மக்களை ஏமாற்றிப் பணம் கறக்கிற குறளி வித்தைக்காரர்களும் பல வேறு மோசக் கும்பல்களும் தமிழரிடையே மலிந்துள்ளதை நாம் காணலாம்.
‘இந்து' என்ற அடையாளத்தின் மூலம் நம்மை ஒரு 'பெரும்பான்மை இனமாக்கலாம் என்ற மயக்கம் சிலரிடம்
விஞ்ஞான வழி
விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காத வர்க ளுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.
கா.மார்க்ஸ்
レ
இருக்கலாம். அண்மைக் கால வரலாற்று அனுபவமோ அதை மறுக்கிறது. நாம் நம்முடைய அடையாளத்தை ஒரு மேலாதிக்க அடையாளத்துக் குள் கரைத்துக் கொள்வதால் அந்த மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாகி உயர ԱՔԼջաTՖl.
மறுபுறம், நமமுடைய உண்மையான அடையாளங்களை நம்மிடையே உள்ள மற்ற அடையாளங் கட்குச் சமமான முறையிலும் மரியாதையுடனும் பேணுவது நமது சமூக விடுதலைக்கும் சகோதரச் சமூகங்களுடனான நல்லுறவுக்கும் சகலரதும் மேம்பாட்டுக்கும் பயனுள்ளது.
இன்று களவாகவும் வெளிவெளி யாகவும் நுழைக் கப்படுகிற இந்து இடையாளம் விவேகானந்தர் போன்றோர் கொண்டிருந்த பரவலான சகிப்புணர்வும் மனித சமத்துவமும் இணைந்த பார்வை கொண்டதல்ல. இந்துத்துவ மேலாதிக் கத்தின் நோக்கங்கட்கு இரையாகாமல் தமிழ்ச் சமூகம் தன்னை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது பற்றி இலங்கையின் பல்வேறு ‘இந்து சமய நம்பிக்கை யாளர்களும் ஆழச் சிந்திப்பது அவசியம்.
நன்றி: 'இளங்கதிர்’ 2001
 
 

ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது. உண்மைதான். ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது சுகார்த்தோ பற்றியும் மார்க்கோஸ் பற்றியும் ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது. சிலேயில் காணாமற் போனவன் இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான். மிருசிவில் புதைகுழியும் சூரியகந்தவினதும் ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும் யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான் பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன. அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது. ஷார்ப்வில் படுகொலைச் செய்தி மிலாய் கிராமத்தின் படுகொலையையும் ஜாலியன்வாலா பாக் படுகொலையையும் எனக்குச் சொன்னது. மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான். கற்சிலை மடுவில் இருப்பது, தனியே பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா? இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில் யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன? மலேசியாவில் கமயூனிஸ்ட்டுகட்கான முகாம்களும் தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும் தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின? உலகம் ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை உள்ளே வராதே என்று சொன்ன பலகை, ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை நுழையாமல் தடுத்தது. அமெரிக்காவின் கூக்ளுக்ஸ்க்ளான் கையில் ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர் குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர். மட்டக்களப்புக்குப் போகும் வழியில் தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
தாயகம்

Page 16
(28)
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான் அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால் அழிக்கப்பட்ட மொழி துருகன்கியின் ஆதிக்கத்தில் உள்ள குர்தியனின் மொழியல்லவா. ஐ. ஆர். ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அன் குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு விட்டன. ஹலி ட்டுமன் ஹிரோமாவில் எறிவித்ததும் வின்ஸ்ற்றன் சேர்ச்சில் ட்டெஸ்டெனில் எறிவித்ததும் இன்றைய பக்தாத் மீது அல்லவா விழுகின்றன. வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள் “ஒற்றுமைகளில் அதிகம் இல்லை வேற்றுமையே முதன்மையானது" என்பவன் அறிவானா, தென்னிலங்கையின் மானம்பெரிக்கும் தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு மனம்பெரி இறந்ததும் பத்மினி மணமானவள் என்பதுமே என? கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும் தேசிய கீதங்களின் மெட்டுக்களும் வேறு, சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு. இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத ஒற்றுமை இருப்பதாலே தான், இஸ்ரேல் பற்றி எழுதினால் சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும் குர்திஸ்தான் பற்றி எழுதினால் இலங்கை அதிகாரியும் காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும் உள்ளுர்ச் செய்திகள் பற்றிய தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார். அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும் வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?
சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப்பிணித்த துணி அவிழ்க்கப்பட்டபோது உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண் உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை செய்கிறாள் ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும் கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது. கொலம்பியாவின் கெரில்லாப் போராளியும் மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும் பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே மறவாதே, கர்மீர விடுதலைப் போராளி ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான். எனவே எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும் இன்னொன்று பற்றியும், ஏன் எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.
 

சிரியலதா சாமர்த்தியப்பட்டாள். நுாற்றுக்கணக்கான சனங்கள் மத்தியிலே அதாவது அகதி முகாமிலே சிரியலதா சாமர்த்தியப்பட்டாள்.
ஒரு சிறிமியை கன்னியாக்கும் சடங்கு அவளுக்கு மாத்திரம் அல்ல, தாய் தந்தை உறவினருக்கும் கொண்டாட்டமானது அல்லவா. சிரியலதா தன் சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டாள். இந்த மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பத்தில் அவளோடு இருப்பது அவளது அம்மா மாத்திரமே.
சாமர்த்தியப்பட்ட தன் மகளை உலகத்தின் கண்களில் இருந்து மறைத்து வைக்க சுமனாவதிக்கு ஓர் மடம் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் அவ்வாறான இட வசதியில்லை. சின்னஞ் சிறிய வகுப்பறைகளில் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர். கிட்டத்தட்ட அறுநூறு குடும் பங்களுக்கு அந்த மூன்று கட்டடங்கள் மட்டுமே நிழலாக இருந்தது. சிரியலதா, தாய், மற்றும் ஏனைய சகோதரிகளுக்கென ஒதுக்குப்பட்டிருந்த சிறிய இடத்தை இப்பொழுது சிரிய
சிங்களத்தில் ஹென்றி வர்ணகுலசூரிய தமிழாக்கம் : சாமிநாதன் விமல்
லதாவிற்கு மாத்திரம் அவர்கள் ஒதுக்கி கொடுக்க வேண்டியிருந்தது.
தன் மகளை ஆண்களுடைய கண்களிலிருந்து பேணிப் பாதுகாக்க சுமனாவதி கடும் முயற்சி எடுத்தாள்.
அந்தச் சூழலில் அவளது விருப்பை ஈடேற்றுவது கடினம்தான். ஆனாலும் மரபுவழியான சடங்குகள் யாவையும் தனது மகளுக்கு செய்யவேண்டும் என சுமனாவதி எண்ணினாள்.
சுமனாவதியரின் ஒரேயொரு சேலையை எடுத்து சிரியலதாவிற்கான அறையை அமைத்தாள். அது சிரிய லதாவின் தந்தை சுமனாவதியைத் தன் விருப்பின்படி கூட்டி வந்த போது எடுத்துக்கொடுத்த கலியாணச் சேலை யாகும். திருமணங்கள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் தவிர மற்றும் படி அவள் அந்தச் சேலையை அணியமாட்டாள்.
முகாமில் காவலுக்காக நின்ற ஒரு சிப்பாய் தயக்கமின்றி அங்கும் இங்கும் நடமாடுவதைச் சிரியலதா கண்டாள். சிரியலதா தனக்குள் சிரித்தாள். அவன் அப்படி திரிவது தன்னைக்காண முடியாத

Page 17
காரணத்தால் என அவளுக்கு தெரியும். திரைச்சேலை அகற்றிவிட்டு அவனுடைய கண்களுக்கு தெரியும்படி நிற்கவேண்டும் போல ஒரு எண்ணம் அவளுக்குத் தோன்றினாலும் அவள் அதை அடக்கிக் கொண்டாள்.
அகதிமுகாமுக்கு அவர்கள் வந்து சேர்ந்ததிலிருந்து பல நாட்கள் அவன் காவல் கடமையில் ஈடுபட்டு நிற்பதை அவள் கண்டாள்.
கவர்ச்சியான சீருடை காரணமாக
அவனது தோற்றம் கவர்ச்சியாக இருந்தது. ஆனால் அவனுடைய பார்வைகள்தான் அவளால் தாங்கமுடியாத உணர்வைத் தந்தது. அவனுடைய கண் பார்வை களுக்கு தான் இலக்கானபோது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்ச்சி தன் உள்ளத்தில் தோன்றுவது சிரியலதாவிற்கு புரிந்தது. அந்த ஒவ்வொரு நிமிடத்திலும் அவனுடைய உதடுகளில் மலரும் புன்முறுவல் எவ்வளவு அழகானது என அவள் எண்ணினாள்.
சிரியலதாவின் குடும்பத்தில் மற்ற அனைவரையும் காணக் கூடியதாக இருக்க சிரியலதாவை மட்டும் இன் காணவில்லை என்ற சந்தேகத்துடன் அந்த சிப்பாய் நோட்டமிட்டான். சேலையால் சுவரிட்ட மறைப்பிற்கு அருகிலிருந்து சுமனாவதி தன் மகளுக்கு ஏதோ கூறிக் கண்டிப்பதை அவன் கண்டுகொண்டான்.
காலை பாண் வாங்குவதற்காக வரிசையில் நிற்கிற போது கூட தான் பருவமடைந்த விடயம் சிரியலதாவிற்கு புரியவில்லை.
“அக்கா உன் கவுனில் இரத்தம்” அவளுக்குப் பின்னால் நின்ற தம்பி சத்தமிட்டபோதும் என்ன நடந்துள்ளது என அவளுக்கு புரியவில்லை. அருகில்
நின்ற அம்மா உடனே வந்து அவளை
அவசரமாக இழுத்துக் கூட்டிக்கொண்டு போகும் போதுதான் சிரியலதாவிற்கு அது புரிந்தது. தாங்க முடியாத வெட்க உணர்வு அவள் உள்ளத்தில் தோன்றியது.
சனங்களில் இருந்து ஒதுக்கிவைத்த
பிறகு கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும் முகாமில் அனைவரும் தன்னைப் பற்றித்தான் கதைப்பது போல அவளுக்குப் பட்டது. பாண் வாங்குவதற்கு வரிசையில் நின்ற பையன்களுடைய சிரிப்பு ஒலி மீண்டும் எதிரொலித்தது போல இருந்தது. அகதி முகாமிலுள்ள ஒரு வயதான கிழவர் நீராட்டுவதற்காக சுபமுகூர்த்தத்தை நிர்ணயித்தார். இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியை சிறியளவிலாவது கொண்டாட வேண்டும் என்று பலர் கூறினாலும் அது அவளுக்கு எட்டாத கனியாகவே இருந்தது.
முகாமிலுள்ள அனைவருடைய மனங்களையும் அந்தரப்படுத்திய ஒரு வதந்தி அந்த முகாம் முழுவதும் பரவியது. பள்ளிக்கூடத்தில் இருந்த அகதிமுகாமை இராணுவ முகாம் அமைந்துள்ள மேட்டுப் பகுதிக்குக் கொண்டுபோகபோவதாக கலவரமடைந்த முகங்களுடன் ஒருவரோ டொருவர் கதைத்துக் கொண்டனர்.
பிரதான வீதிக்கு அருகிலுள்ள இப்பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து அகதிகள் தங்கியிருந்தால் “பெரியவர்களுடைய” கண்களுக்குப்படும். தூர இடத்துக்கு கொண்டுபோய்த் தங்களையும் தமது துயரங்களையும் மறைக்க முயல்கிறார்கள் என்ற சந்தேகமும் அந்த மக்களிடையே தோன்றின. முகாமிற்குக் கொடுத்த நிவாரணமும் குறிப்பிட்டளவில் குறைக் கப்பட்டிருந்தது. அதோடு பல முறையற்ற நடவடிக்கைகளும் அங்கு அமுலாக்கப் பட்டிருந்தது.
மறுநாள் காலை பாண் வரிசை
முடிந்தவுடன் சில ஆI பார வண்டிகள்
அந்த முகாமின் முன்புறமாக கொண்டுவந்து நிறுத்தப்பட்டன.
“எல்லோரும் உங்களுடைய சாமான்களை எடுத்து ஆமி வண்டிக்குள் ஏற்றுங்கள்” என்ற கண்டிப்பான கட்டளை அவர்களுக்கு இடப்பட்டது.
“எமக்கு வேற எங்கையும் போக முடியாது. தொந்தரவு கொடுக்காம இங்கை இருக்க விடுங்கோ."
 

ஒரு கிழவர் கத்தினார். அவருடைய கருத்துக்கு பலர் ஒத்துழைப்பு வழங்குவது
போல எல்லோரும் அதே குரலை
எழுப்பினர்.
“வாயளை ஸ்ல்லோரும் மூடுங்கோ. இது மேல் மட்டத்திலிருந்து வந்த கட்டளை" ஒரு சிப்பாய் கத்தினான்.
"மேல் மட்டத்திலிருக்கிறவர்களுக்கு சொல்லி உந்தத் துப்பாக்கியாலை எங்களை சுட்டுக்கொல்லுங்கோடா” எவரது துணையும் இல்லாத ஒரு பெண்
6. "எலும்புகளை உடைக்கிறதுக்கு முன்னம் ஏறுங்கோ. இந்தத் துப்பாக்கி சுடாது எண் டு நினைக் கிறியளா? மூதேவிகள்."
அந்தக் குரல் யாருடையது என அறிய சிறியலதா எட்டிப்பார்த்தாள். தன்னோடு கண்ணாலே கதைக்க முயலும் அந்தச் சிப்பாய்தான். அவளால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருந்தது:
"உண்மையாகவே பார்த்தால் இவங்கள் எல்லாரும்.?"
சிறியலதாவை தலையில் இருந்து கால் வரை வெள்ளை துணியால் போர்த்திருந்தனர். கடைசி ஆமி பார வண்டியில் முன் ஒரத்திலுள்ள ஒரு இடத்தை அவளுக்குக் கொடுத்தனர்.
இதை ஒழுங்கு செய்வதில் சுமதிபால ஆர்வமாக ஈடுபட்டான். ஊரிலும் பல சங்கங்களில் தலைவராக இருந்த அவரே இந்த முகாமில் அகதிகளுடைய தலைவராக நின்றார் . பலவிதப் பிரதேசங்களிலிருந்து வந்த அகதி களுடைய தலைவராக அவனைப் போட்டியின்றியே நியமித்தனர். நிவாரண விநியோகித்தல் மற்றும் பலவித பிரச்சினைகளில் அகதிகளுடைய பிரதிநிதியாக சுமதிபால செயற்பட்டார். இராணுவ அதிகாரிகளோடு பேசித் தீர்வுக்காக முயன்றார்.
இராணுவ முகாமில் ஒரமாகவுள்ள சன சந்தடியற்ற ஓரிடத்தில் கூடாரங்களை அடித்து அகதிமுகாமை அமைத்தனர்.
தாயகம்
இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களின் அழிவுச் சின்னங்களை அங்கு காணக்கூடியதாக இருந்தன.
அந்த அகதி முகாமின் அருகில் ஒரு காடு. அவ்வளவு பெரிய காடாக இல்லாவிடினும் பன்றிகள், முள்ளம் பன்றிகள் ஆகியவை அங்கு வசித்தன. மேல் மட்டத்திலுள்ளவர்களுக்கு அகதி முகாமை புதிய இடத்துக்கு மாற்றுவதில் இருந்த ஆர்வம் அகதிகளுடைய அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதில் இருக்கவில்லை.
முகாம் உள்ள இடத்திற்குப் பகல் நேரங்களில் வாகனங்கள் வந்தால் அது எவராவது உத்தியோகத்தருடையதாக தான் இருக்கும். ஆனால் இரவில் அப்பிடியில்லை. வறுமை காரணமாகவும், வாழ்வதற்கு வேறு வழி இல்லாததாலும் தம் உடலை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களை இராணுவ முகாமின் சிற் சில இடங்களுக்கு கூட்டிய்போகவும் திரும்பிக் கூட்டி வரவும் வாகனங்கள் இரவு முழுவதும் ஓடின.
புதிய இடம் சிரியலதாவின் நிலைமைக்கு நன்றாக இருக்கவில்லை. திடீரென பெய்த மழை அவர்களுடைய கூடாரத்தை ஈரமாக்கியது. கூரையில் இருந்து ஒழுகும் மழைத்துளியில் இருந்து தப்புவது மிகச் சிரமமான பிரச்சினையாகியது.
உண்மையாகச் சொன்னால் முழு முகாமுமே நரகமாகியது. நித்திரை கொள்ளாமல் விழித்திருந்த ஒருத்தியாக சிரியலதாவும் இருந்தாள். உயர் அதிகாரிகளை ஏசி, ஏசி நனையாத ஓரிடத்தைப் பல தேடும்போது சிரியலதா மழை ஒழுக்கில் நனைந்து ஈரமாகிவிட்ட தன் சிறிய மறைப்புக்குள் இருந்து கண்ணிர் விட்டாள்.
தான் பருவமடைந்த நேரத்தில் உள்ள அமங்கலத்தன்மை தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணமானது என
யாரோ சொல்வது சிரியலதாவின்
செவிகளுக்கு கேட்டன.
(3)

Page 18
“இந்தப் பெட்டை சாமர்த்தியமானது தான் இந்த பிரச்சினைகள் எல்லாம். இவ்வளவு காலம் இருந்திட்டு முகாமிலே சாமர்த்தியப்பட்டாள். அதுவும் பெடியன்கள் மத்தியிலே."
நடுவயதிலுள்ள ஒரு பெண் சொல்லி,
காறித்துப்பிய சத்தத்தை சிரியலதா கேட்டு
மிக வேதனை அடைந்தாள்.
தண்ணிர் பவுசர் வந்தபோது தண்ணிர்
எடுத்து சேகரித்து வைக்க பாத்திரங்கள்
அவர்களிடம் இருக்கவில்லை. தம் அனைத்து சொத்துக்களையும் விட்டுவிட்டு கைகளுக்குக் கிடைத்ததை மட்டும் எடுத்து அகதி முகாமுக்கு ஓடி வநதவாகளதான அநத மககள. நடநதது ஒரேஒரு சம்பவம் தான். ஓர் இரவில்
பணக்காரர்களும் ஏழைகளும் அனை
வருமே அகதிகளாகினர். தாங்கள் தப்பி ஓடிவந்த அந்த இராத்திரியில் தம் வீடுகள் அனைத்தும் தீக்கிரையாகின என்று கேள்விப்பட்டனர்.
ஒரு சமூக சேவை அமைப்பால் வழங்கிய பாயையும் போர் வைச்
சீலையையும் தவிர அவர்களுக்கு அகதி முகாமில் தந்த பழைய ஆடைகள், உணவுப்பாத்திரங்கள் மாத்திரம் தான் அவர்களுடைய சொத்துக்கள். " "
சிரியலதாவை நீராட்ட வேண்டிய மங்கலகரமான அந்த நாளில் தண்ணிர் அண்டா ஒன்றை எப்படி எடுப்பது என சுமனாவதி யோசித்தாள். கடைசியில் சுமனபாலவின் உதவியால் தண்ணிர் சேர்த்து வைக்கக் கூடிய ஒரு பெரிய பாத்திரம் கிடைத்தது. அவர்களுடைய தேவையைக் கேட்ட உயர் அதிகாரி யொருவர் நிந்தனையாக சிரித்தார்.
ஏனைய நாட்களில் காலையிலேயே வந்து சேரும் தண்ணிர் பவுசரின் சத்தம் இன்றைக்கு கேட்கவில்லை. முகாமில் அனைவரும் மிக அந்தரப்பட்டனர். காலை முகம் கழுவக் கூட தண்ணிர் இல்லை. கைக் குழந்தைகளுடன் இருக்கும் தாய் மார்களுடைய நிலைமை மிக மோசமாகியது, விரக்தியும் ஆத்திரமும் முகாம் முழுவதும் நிலவியது.
O O
ஏளனம் எளியவள்மேல்
அதிகாரக் கரங்கள் பாவியாய் இருப்பவர் மேல்
படு பாதகங்கள் மேவி நிற்பவர் முன்
ஆமாப் போடும் மனிதங்கள்
மனிதனை மனிதன்
மதியா ஓரங்கட்டல்கள்
ஜெயபாலுன்
சுதந்திரக் காற்றை சுருட்டி சூழ்ச்சிக்கு வித்திடுதல் இவைகள் உனக்குள் புரியாமல் புதைந்து கிடக்கும் முட்கள் ஆனாலும் உன்னிடம் நட்பு
உண்டு. தியாகமுண்டு, விஸ்வாசமமுண்டு. விளங்கிக்கொள் இவை
குறுகிய வட்டத்தின் பரிமானங்கள்!
தாயகம்
 

வளர்ச் சரிக்கான
މޮށަށަ7 கற்பனைத்திறனும் விந்துநானமும்
ஞானத்தைவிட கற்பனைத்தறணி முக்கியமானது. ஏனெனில் ஞானம் மட்டமானது. கற்பனைத்திறனோ உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆட்கொள் கிறது. முனர்னேற்றத்தினர் பரிணாம
திகழ்கிறது. கறாராகச் சொன்னால்
கற்பனைத் திறன் விஞ்ஞான 'ശ്
/ %
யதார்த்தமான காரணியாகும்.
மூலஊற றாகத்
காலை எட்டு மணி போல
வந்துசேர்ந்த இராணுவ உயர் அதிகாரியொருவர் தண்ணிர் பவுசர் இடையில் பாதை ஓரத்தில் தடம் புரண்டுவிட்டது என்று கூறினார்.
“இப்பொழுது பவுசரை தூக்கிறம்.
வேறு பவுசரில் தண்ணிர் எடுத்து உடனே கொண்டுவர."
அவருடைய பேச்சை முடிக்க முன் சனங்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள். இராணுவ உத்தியோகத்தர்கள் ஜீப்பில் புறப்பட்டனர்.
காலை பத்து மணி ஆகினாலும் தண்ணிர் பவுசர் வரவில்லை. தான் எவ்வளவு துரதிஸ்டம் என எண்ணி சிரியலதா கண்ணிர் விட்டாள். கண்ணிரால் கன்னங்களை ஈரமாக்கிவிட்டுக் கீழுே சரிந்தாள். い
காலை சின்னதாகப் பெய்யத்
தொடங்கிய மழை சுப முகூர்த்தம் கிட்ட
பெருமழையானது. சுமனபாலாவின் மனதில்
நல்லதொரு யோசனை பிறந்தது.
உண்மையாகவே அவருடைய கருத்தை அமுலாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
நீராட்ட வேண்டிய மங்களகரமான (3sbJuDT 607
பருவமடைந்த
போது சிரியலதாவை
கூடாரத்தில் இருந்து வெளியே கூட்டிச்சென்றனர்.
கடும் மழையில் நனைவது சிரியலதாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது. 6f Sib காற்று இதமாக இருந்தது. கூடாரத்தினுள் இருந்த வர்களிடம் இருந்தும் மகிழ்ச்சி ஒலிகள் கேட்டன. சுமதிபாலாவும் தன்னை பார்த்தபடி நிற்பதை அவள் கண்டாள்.
தண்ணிர் பவுசர் அப்பொழுதுதான் வந்து சேர்ந்தது. கடும்மழையில் ஒரு அரக்கன் போல வந்து சேர்ந்த தண்ணிர் பவுசரை யாரும் கவனிக்கவில்லை. அந்த சிப்பாய் தான் தண்ணிர் பவுசருக்கு காவலுக்காக வந்து நின்றான்.
மழைநீரில் நனைந்து ஈரத்தால் உடலோடு ஒட்டிக்கிடந்த ஆடையுடன் நின்ற சிரியலதாவின்மீது அந்த சிப்பாயின் பார்வை வலை படர்ந்தது. சிரியலதா அவனுடைய கண் பார் வைக்கு ஈடு கொடுக்கமுடியாமல் கீழே பார்த்தாள். சிப்பாயின் பார்வையில் உள்ளது காதல் தான் என சிரியலதா எண்ணினாள். தான் நேரம் அமங்கல கரமானதல்ல என்ற எண்ணம் அவளது மனத்தில் எழ அந்த அவலமான சூழலிலும் தான் மகிழ்வடைவதாக உணர்ந்தாள். ,

Page 19
அல்லல் நிறையப் பட்டது உந்தன் குடும்பம். அன்றோ அரைவயிற்றுக்கும் வழியற்று நின்றனர் சோதரர் தொழிலற்ற தந்தையோ கூலிக்கு சென்று காத்தார்! அன்னை பலவீட்டில் மாவிடித்த சேமித்த பணத்தில் நீயும் படித்தாய் எழுத வாசிக்க! போர் மேகம் சூழ்ந்த காலம் இடம்பெயர்ந்தது குடும்பம். நீயோ புலம் பெயர்ந்தாய். பெண்ணாய் பிறந்ததும் உண்தந்தை தாயம் * சோதரர் சேமத்திற்காய்
ஏழ்மைநிலை போக்குவதற்காய் மேவி உலகில் வாழ்தற்காய் ஐரோப்பிய நகரொன்றில் அல்லல் படுகிறாய். கடும் உழைப்பில் காலம் கரைக்கின்றாய் பலஅடுக்குத் தொடர்மாடியில் படியேறிப் படியேறிச் சுத்தம் செய்கிறாய் மாடிகள் தோறும் சென்று
விரிப்புக்கள் விரிக்கின்றாய் அந்நாட்டில் உண்கடலி
குறைவெனிலும் நீயோ திண்னாமல் குடிக்காமல் சேமித்து சோதரர்க்காய் அனுப்புகிறாய் இன்று இங்கோ, பணத்தால் மேன்மையற்றனர் பணம் தண்ணிராய் கரைந்தது படிப்பு நிறத்திவிட்டு தெகுச்சுற்றிகளாய் சோதரர் பேணிடும் தந்தையோ குடித்துவிட்டுத் தெருவில் கிடந்தார் அன்னை ரீவி பெட்டிக்கருகில்! வீட்டுக் கோடியில் தோட்டம் இல்லை. தென்னையில் இருந்து வீழும் ஒலைகள் பின்னத் தெரியவில்லை யார்க்கும்! மாதாமாதம் நீயவைப்பும் வெளிநாட்டுப் பணத்தில் சோம்பல் பத்திச் சொகுசாய் வாழும் இவர்க்குத் தெரியா உன் துன்பம்! இவர்க்காய் நீ ஏன்.?
தாயகம்
 
 

சினிமா விமர்சனம்
"சதை" கலாசாரம் மேலோங்கியி ருக்கும் இன்றைய தென்னிந்திய சினிமாவிலிருந்து சிறிது வேறுபட்டு கதைக் கருவை முக்கியத்துவப்படுத்தி உணர்வுகளை இரத்தமும் சதையுமாக ஓர் அழகான திரைக்கவிதையாக அழகி வந்திருக்கிறாள். தனது 'வெள்ளைமாடு” சிறுகதைத்தொகுதியிலுள்ள கல்வெட்டு’ சிறுகதையை அழகி" யாக்கித் தந்ததன் மூலம் தங்கள் பச் சான் இயக்குனராக இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார். அவர் ஏற்கனவே சிறந்த படைப்பாளியாகவும், ஒளி ஒவியராகவும் தனது பரிமாணத்தை வெளிப்படுத்தியவா. அழகியில் கதை, திரைக்கதை, வசனம், ஒளி ஒவியம், இயக்கம் என முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சரியான வர்ணங்களை சரியாக கலந்து திரைக் கவிதையொன்றைத் தந்திருப்பதற்காக தங்கர்பச்சானை பாராட்டலாம்.
பாலுமகேந்திராவுக்கு 'அழியாத கோலங்கள்' போலவே இவருக்கு "அழகியும் அமைந்துவிட்டாள். ஒரு ஓவியத்தை அல்லது சிற்பத்தை அளவெடுத்து நிதானமாக உருவாக்கு வதுபோன்று ஒவ்வொரு காட்சியையும்
தாயகம்
நிதானமாகச் செதுக்கியிருப்பது (சிற்சில இடங்களைத் தவிர்த்து) வெற்றிக்குப் பங்களிக்கும் அடிப்படைக்காரணியாக அமைந்துவிடுகிறது. சண்முகம், தனலட்சுமி எனும் இரு பிரதான கதாபாத்திரங்களும் சிறுபராயத்திலிருந்து பதின்ம வயதுவரை கொஞ்சமும் பிசகில்லாத தோற்றப்பொருத் தத்தோடு மிளிரவைக்கும் வகையில் கையாளப்பட்டிருப்பது அழகிக்கு அழகு சேர்க்கும் அம்சங்களில் ஒன்று. இது தென்னிந்திய தமிழ் சினிமாக்களில் இது வரை பூரணமாகக் கையாளப்படாத ஓர் உத்தியென்றே கருதவேண்டும்.
சண்முகம் சின்னஞ்சிறு வயதில் இருந்தே தனலட்சுமி மீது கொள்ளும் நேசம் அவளுக்கான அவனது அழகான தியாகங்கள். அவளை அடைந்து கொள்ள முடியாமல் போகும் பரிதாபம். அவளுடைய கணவனுக்கு சண்முகம் செய்யும் உதவி கள். என எல்லாவற்றிலும் மிகைப்படுத் தப்படாத உணர்வுகளின் வெளிப்பாடுகள் எழுத்தில் முழுமையாக எழுதிவிட (plg. usb60d6d.
இங்கே அழகிக்கு அழகும் பலமும் சேர்க்கும் காட்சிகளாக பின்வருவன
ଓ୭

Page 20
அழகி கிராமத்துப் பள்ளிக்கூடத் துக்கு படிக்கவருகிறாள். எல்லா மாணவர் களுக்கும் மிட்டாய் கொடுக்கிறாள். சண்முகமும் அவனது தோழர்களும் மிட் டாயைக் குவியலாய் அள்ளிக்கொள் கின்றனர். சண்முகம் மிட்டாய் சாப்பிட்டு விட்டு கையை தலையில் துடைத்துக் கொள்ளப் போகையில் தனலட்சுமி தனது பட்டுப் பாவாடையில் துடைக் கச் சொல்கிறாள். இவ்வாறாக நகரும் சின்னஞ் சிறுசுகளின் வாழ்வியல், பதின்ம வயதுக்காலங்களின் வாழ்வியல். என்பன தொடர்பான அனைத்துக் காட்சிகளும். இங்கே பதின்ம வயதுக்காரனாக வரும் சண்முகம் கண்களில் கனவுகள் சுமந்து வருகிறான்.
தனலட்சுமியின் சேரி வாழ்க்கை, அங்கே சண்முகத்தோடு நிகழும் உரையாடல்கள், மழை தூறத் தொடங்கு கையில் கோயில் மண்டபத்தினுள் தஞ்சம் புகுந்து கொள்ளல். இடையே தனலட்சுமி யிடமிருந்து விடைபெற்று கோயில் மண்டபத்தைவிட்டு வெளியேறி சண்முகம் மழையில் நனைந்தபடி நடக்கையில் அவன் மறந்துவிட்டுச் சென்ற அவனது கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு மழையில் நனைந்தபடியே ஓடிவரும் தனலட்சுமி அதை அவன் தலையில் வைக்கிறாள்.
சண்முகத்தின் வீட்டில் படுக்கை யறையைச் சுத்தம் செய்ய உள் நுழையும் தனலட்சுமி அங்கே சண்முகத்தின் திருமணப் புகைப்படத்தைக் கண்டு மெய்மறந்து நிற்கிறாள். (இங்கே தனலட்சுமியின் உள்ளக்கிடக்கையை சிறப்பான உத்தியோடு ஏனைய திரைப்படங்களில் இருந்து கொஞ்சம் வேறுபடுத்தி படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகத்தின் மனைவி தனலட்சுமியை அழைத்தபடி வந்து படுக்கையறைக் கதவைத் திறக்கும்போது எங்கள் இதயத்துடிப்பும் வேகமாகிறது)
மணற்பரப்பில் காலடித்தடங்கள் நீண்டு செல்கின்றன. மணற்பரப்பில் மட்டுமா பார்ப்பவர்களின் மனங்களிலும் காலடித் தடங்கள் பதியத்தான் செய்கின்றன.
நாகதாழிகளில் சோடிகட்டி பெயர் எழுதி உணர்வுகளைப் புதுப் பித்து மெருகூட்டும் அம்சம் தென்னிந்திய சினிமாவுக்கு கொஞ்சம் வித்தியாசமானது. சண்முகம், தனலட்சுமி ஆகியோருக் கிடையிலான உறவு பற்றிய சந்தேகக் கோட்டில் சண்முகத்தின் மனைவி நின்று கொண்டிருக்கிறாள். சங்கீதக் கதிரை நடக்கிறது. ஒரு கதிரை மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போட்டியாளராக தனலட்சுமியும் சண்முகத்தின் மனைவியும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தனலட்சுமி வெற்றி பெறும் தருணத்தில் அவளை நிலத்தில் தள்ளிவிட்டு சண்முகத்தின் மனைவி கதிரையில் அமர்ந்துகொள்கிறாள். இதற்கும் மேலாக சண்முகம், தனலட்சுமி, சண்முகத்தின் மனைவி, தனலட்சுமியின் கணவன் எனும் பிரதான கதாபாத்திரங்களாக வரும் பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயாணி, ஷயாஜிஷிண்டே ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்க ளாகவே மாறிவிட்டிருப்பது அழகிக்கு இன்னொரு பலம் சேர்க்கும் அம்சம் என்றே சொல்ல வேண்டும். இதிலும் தனலட்சுமியே கூடுதலான பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறாள்.
இரட்டை அர்த்தமுள்ள கிண்டல், கேலித்தனமான வசனங்களோடு வருகின்ற பார்த்திபனை ஓர் உணர்வுபூர்வமான பாத்திரமாக உலவ விட்டிருப்பதற்காக நாங்கள் நிம்மதியடையும் அதேவேளை இயக்குனரை இதற்காகப் பாராட்டத் தான்வேண்டும்.
ஆனாலும் அழகியின் வசீகரத்தைக் குறைத்து சாதாரண தென்னிந்திய மசாலா சினிமாவுக்குள் தள்ளிவிடும் முனைப்புடன் இயக்குனர் செயற்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழாமலில்லை. கதையோடு பொருந்தாத நகைச்சுவைக்காட்சிகள், சண்முகம் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது வருகின்ற பாடல் காட்சி என்பன படத்திற்கு எந்த விதத்திலும் பொருத்தமற்றது. அவசியமற்றது என்பதெல்லாம் இயக்குனர் அறியாததா?
 

7
தவமிருக்கும் நினைவுக்குக் கவிச்சாரம் ஊட்டி
சொல்தேர்ந்தது பொருள்கோர்த்து
எழுதவரும் கவிதை!
காற்றாடும் பூவொன்றின்
இதழ்வந்து மெதுவாய்
கடினத்தோல் தடவுகையில்
மெல்லவரும் கவிதை!
முள்தைத்த உள்வலியே
சொல்லிடையில் இன்றி
சொல்வலியாய் உருமாறி
உருவாகும் கவிதை!
மென்மனசின் பூம்பரப்பில்
கல்லெறியும் விதமாய்
சொல்லெறியும் கொடுமைதனைப்
பேசவரும் கவிதை!
ܓܠ
7. கவிதை வரும் பொழுது
ஆழ்கிணற்றின் அடிபுகுந்த
கல்லொளன்ற போல
ஆழமனத் தயர் விழிப்பில் ஆளாகும் கவிதை!
எணர்ணியிராத் திசையிருந்து
எழுந்திடுமோர் குரலின்
மென்வருடல் நெஞ்சுதொட மிதந்திடுமோர் கவிதை!
உள்ளத்தின் உள்ளுக்குள் உள்ளதனை ஏந்தி
உலவிவரும் பார்வைவிழி
தொடமலரும் கவிதை!
கவிமலரும் நெஞ்சுந்தோர்
வரம்பெங்கும் இல்லை
புவிஅசையும் சிறு அசைவும்
கவிதை தரும் அதிலே!
M
அவர் நம்பிக்கை வைத்திருந்தால் நாம் என்ன செய்யமுடியும்?. எது எப்படியோ இந்தக் காட்சிகள் அழகிக்கு திருஷ்டி கழிப்பதாகவே அமைந்திருக்கின்றன.
அழகியின் வரவு தென்னிந்தய சினிமாவின் மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் நாங்கள் எப்போதும் வசீகரம் கொஞ்சமும் குறைந்துவிடாத கன்னத்தில் திருஷ்டி பொட்டில்லாத
‘அழகிகளையல்லவா எதிர்பார்க்கிறோம். எனவே தங்கர்பச்சான் போன்றவர்கள் மசாலா சினிமாக்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் எங்கள் எதிர் பார்ப்புக் களை நிறைவேற்றி தென்னிந்திய தமிழ் சினிமா மீது எங்களை நம்பிக்கை கொள்ளவைக்கலாம். ஆனால், அது எவ்வளவு தூரம் சாத்தியமானது?
டு)

Page 21
செப்ரம்மம் பதினொன்ற அமெரிக்கப் பெருநகர் மாடிகள் சரிந்தன! பாறி விழுந்தன பார் முழுதும்! ஆய்க்கினை பண்ணுகிறேன் பார்!~என்றார். ஊர் எலாம் உலகெலாம் ஒன்றாய்க்கூடி வேர்விட்டு நாகரிக விழுதான்றி நின்ற ஆப்கானிஸ்தான்! அதன்மீது ஐயகோ ஆர்கேட்பாரின்றியும் ஆனமட்டும் மலையுடைத்து வீரிட்டு மக்கள் புலம்பியழ பீறிட்டு ரத்த ஆற பெருகியோட ஆள்வீட்டுச் சொத்தென்ற அமெரிக்கர் ஆர்ப்பரித்தார்! அபகரித்தார்:
O
O
()
O
O
O
O
O
O
O
O
O
O
O
O
O
O
()
O
O
O
O
O
O
O
O வேற,
இரணியன் என்ற சொல்
O இஸ்ரேலுக்கு இனிப்பொருந்தும்
: தரணியெங்கும் ஆனத் தப்புக்கணக்கோடு O பரணி மாடிப் பலஸ்தீனமதைப் பலி கொள்ளும் : இஸ்ரேலே இனி நீ மரணஅடி பெறுவது () திண்ணம் திண்ணம் தித்தோம் தகதோம். ()
O
O
O
O
O
O
O
O
O
() O
()
O
O O
O
O
O O
O
O
O
()
O
O
இன்னொன்று,
ஆஸ் என்றால் ஆங்கிலத்தில் கழுதையெண்றொரு கருத்து. ஆஸ்லி வில்ஸ் என்றால் அமெரிக்கத்த அனுமன்! புலிக்கும் சிங்கத்தக்கும் சிக்கலென்றால் கழுதை இங்கேண் கழுத்து நீட்டுகிது?
குரங்கு இங்கேன் அப்பம் பங்கிட
ஆர்வம் காட்டுகுத?
ஆப்பிழுத்த குரங்கு ஆவதற்கு அவசரமோ? போங்காணும் சும்மா!
பொழுதொன்ற மாறாம்~ தருமம் மறுபடி வெல்லும்.
ஈழத்து தேவன் யூதனார்
 
 
 
 
 
 
 

தவிழிக்கண்விற்ேறுகிறான
பேராசிரியர் சிசிவசேகரம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 11 யூலை 2002 அன்று நிகழ்ந்த பேராசிரியர் அ.துரைராஜா நினைவுப் பேருரையின் போது ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். 哆
bJT
தாய்மொழிக்கல்வி என்றால் என்ன?
தாய்மொழி என்பது சில அரசியல், சமூகத் தேவைகள் காரணமாக ஒருவரது பெற்றோரின் அல்லது பெற்றோரில் ஒருவரின் பிறப்பால் அடையாளங் காணப்பட்டு வந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டால், ஆங்கில மூதாதையரைக்கொண்ட அனைவருக்கும் ஆங்கிலமே தாய் மொழியாகவும் தமிழரை மூதாதையராக கொண்ட அனைவருக்கும் தமிழே தாய் மொழியாகவும் இருக்க வேண்டும். புலப்பெயர்வு, ஆங்கிலேயர் அல்லாதோரை மொழியால் ஆங்கி லேயராக்கிவிட்டது. கொலனி ஆட்சி தென்னாசியாவில் தம்மொழியை ஆங்கி லமாகக் கொண்ட பலரை உருவாக்கி விட்டது. ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்களும் வேல்ஸ் மக்களிற் பெருவாரி யானோரும் தமது மொழி அடையாளத்தை இழந்து ஆங்கிலம் பேசுவோராகிவிட்டனர். ஒரு சில ஆங்கிலேயர் பிற நாடுகட்குப் பெயர்ந்து அந்த மண்ணின் மொழியைத் தமதாக்கியும் உள்ளனர். இன்று தமிழ்ப் பேசும் மக்களிடையே தெலுங்கு வம்சாவழியினர் கணிசமாக உள்ளனர். இன்னும் பல உதாரணங்களை என்னாற் தர இயலும். ஆயினும் முன்சொன்னவற் றினின்று தெளிவாகத் தெரியும் ஒரு விடயம் ஏதெனின் தாய்மொழி என்பது தனியே வம்சாவழியால் நிருணயமாகும் அடையா ளமல்ல. வம்சாவழியால் நிருணயமாகும் அடையாளமாக மொழி இருப்பின், மொழிகள் அழிவதும் மொழிகள் உருவாவதும் நிகழ்ந்திரா.
لفظ : 3
அப்படியானால், மொழி அடையாளம் என்பது பொருளற்ற ஒன்றா? அது ஒரு மாயையா? தாய்மொழி என்பது எவ்வாறு மனிதருடன் உறவு பூணுகிறது? இக் கேள்விக்குரிய விடையை இறுக்கமான பழமைவாத மொழிக் கொள்கைக்குள் தேடினால், மொழி அடையாளம் பொருளற்ற ஒன்றாகவே வந்து முடியும். மறுபுறம், மொழி என்பதன் சமூக முக்கியத்தைப் புறக்கணித்து, அதை வெறுமனே ஒரு கருத்துப் பரிமாறற் கருவியாக மட்டுமே கொண்டால், அது இன்னொரு கருவியால் எளிதாக மாற்றீடு செய்யக்கூடிய ஒரு உற்பத்திப் பண்டம் போலாகிவிடும்.
மொழி என்பது காலத்துடன் மாறி வருகிற ஒன்று. அதன் இருப்பு அதன் பயன்பாடு சார்ந்தது. சமூகம் ஒன்றினுள் இயங்கும் வரையில் அது உயிருடன் இருக்கும். அந்தச் சமூகம் அழியும் போதோ, ஏதாவது நெருக் கடிக்கு உள்ளாகிச் சீரழியும் போதோ, ஒரு மொழி அழிய இடமுண்டு. பரந்துபட்ட சமூக மட்டத்தில் இயங்குகிற மொழிகள் தொடர்ச்சியான மாற்றங்களை உள்வாங்கி வாழ்ந்து வளர்கின்றன. அவ்வாறு செயற்படத் தவறுகிற மொழிகள் சிறு பாலோரது வழக் காகி, இறுதியில், வழக்கொழிந்து சாகின்றன. ஒரு மொழியின் வளர்ச்சியை அது வழங்கும் சமூகம் அல்லது சமூகங்களின் வரலாற்று வளர்ச் சியை வைத்தே நம்மாற் சரிவர அடையா ளங் காண முடிகிறது. எனவே ஒருவரது தாய் மொழி எனநாம் கூறுவது அவரது வம்சாவழி அடையாளமாக அல்லாமல்,
69)

Page 22
அவர் வாழுகிற சமுகச் சூழலால் விதிக்கப்பட்ட ஒரு அடையாளமாகக் காணுவதே பொருந்தும்.
எந்தப் பண்பாட்டு அடையாளமும் நிலையானதல்ல. மொழி அடையாளமும் அவ்வாறே. நிரந்தர அடையாளங்களை நீக்கி வரலாற்று வளர்ச்சி வழியான அடையாளமாகக் காணும் போது, மொழி அடையாளம் பொருளுடையதாகிறது. ஒரு மொழிக்குத் தனது சமூகத்தின் சமகால இருப்புடன் மட்டுமன்றி, அதன் கடந்த கால அனுபவங்களுடனும் அவற்றின் வழிப்பெறப்பட்ட தகவல்கள், அறிவுத் திரட்சி, சிந்தனை முறைகள், அணுகு முறைகள் என்பனவற்றுடனும் நெருக் கமான உறவு உண்டு. மொழி பெயர்ப்பின் பிரச்சனைகள் மொழியின் இந்தச் சமூகப் பண் பினின்றே பெரிதும் எழுகின்றன எனலாம்.
தாய்மொழிக் கல்வியின் தேவையை மொழி அடையாளத்துடன் ஒட்டிய சமூகத் தன்மையின்று பிரித்து நோக்க இயலாது. ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளர்ச்சியினின்று பிரித்து நோக்க இயலாது. எனும் போது நாம் “சான்றோர் வழக்கு” எனப்படும் சிந்தனையையும் மொழியையும் மட்டுமே கருதுவோமாயின் தவறான முடிவுகளையே காண நேரும். சமூகமும் மொழியும் நலிவு கண்ட வேளைகளில் அவற்றை மீள வளப்படுத்த உழைத்த சான்றோர் உள்ளனர். ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் அவர்களுட் சிலர் நெடுங்காலமாகப் போற்றப்பட்டு வந் துள்ளனர். எனினும், ஒரு மொழி சமூக வளர்ச்சியினுTடு மட்டுமன்றிச் சமூக நெருக் கடிகளுடும் வளர்ச் சிகண்டு நிலைப்பதிற் சமூக வழக்கே அடிப் படையானது. இதனாற் தமது அன்றாட வாழ்விற் தாய் மொழிக்கு முதன்மை கொடுக்கும் மக்களே தாய்மொழி நிலைத்து நீடிக்க வகை செய்தோராவர்.
சமூக மேம்பாடு பெற்றோரிடையே, குறிப்பாகப் புலமை மூலம் தம் சமூக மேல் நிலையைப் பேணுவோரிடையே, மொழிப் பற்று என்பது அவர் களது
தொழிலுடன் தொடர்பானதாகவே இருக்கக் காணலாம். பல ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் மொழி அரச கருமங்கள், கல்வி, சமயம் ஆகிய துறைகளில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரஷ்யாவில் நீண்ட காலமாக பிரெஞ்சு மொழி set f 6O)6) மொழியாயிருந்தது. இலங்கையில் கண்டி ராச்சிய காலதில் அரசவையில் தமிழ்மொழி ஆதிக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. தமிழ்ச் சமுதாயங்களில் இன்னும் சமய அலுவல்களில் சமஸ்கிருத ஆதிக்கம் உள்ளது. இச் சூழல்களில் எல்லாம் தாய்மொழயும் தாய் மொழி சார்ந்த இலக்கிய மரபும் உயிருடன் இருந்ததாயின், அது சாதாரண மக்கள் மூலம் நடந்ததே ஒழியச் சான்றோரால் நிகழ்ந்ததல்ல. வாய்மொழி மரபே தமிழின் வரலாற்றுத் தொடர்ச்சியான நிலைப்புக்குக் காரணமாக இருந்தது எனலாம்.
எனவே ஒரு சமூகம் சுயமாகவோ, சூழலின் நிர்ப்பந்தங்களாலோ தனது மொழயின் செல்திசை பற்றி மட்டுமன்றி தனக்குரிய மொழி எது என்ற தெரிவையும் செய்கிறது. ஐரிஷ் மக்களின் கெல்ற்றிக் மொழியும் ஸ் கொட்டாந்தின் கேலிக் மொழியும் அவர்கள் தாமாகவே கைவிட்டவையல்ல. ஆயினும் முதலாளிய சமூகத்தின் உருவாக்கமும் ஆங்கிலேய மேலாதிக்கமும் அந்த மொழிகளின் அழிவை இயலுமாக்கின. மறுபுறம், 400வருடக் கொலணி ஆட்சி சிங் களத்தையோ தமிழையோ அழிக்கவில்லை. சிங்களம் மடடுமே சட்டத்தின் வருகையின் பின்பு இலங்கைத் தமிழரிடையே தமிழை வளர்க்கும் முனைப்பு வேகம் பெற்றது. மறுபுறம் சில தமிழ்ச் சமூகங்கள் சிங் களத்தைத் தமது மொழியாக்கியுள்ளன. துருக்கிய அடக்குமுறையாட்சி குர்திய மொழிக்கு விதித்த தடையால் குர்திய மொழி அழியவில்லை. 6T60T (86) எந்த மொழியினதும் இருப்பு அம்மொழக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் மீதே தங்கியுள்ளது எனவும் தாய்மொழி என்பது
ஒரு சமூகம் தனக்காகத் தீர்மானிக்கும் ஒரு
தாயகம்

விடயம் எனவும் காணலாம். தனிமனித அளவில் நிகழும் மொழி மாற்றம் தனிப்பட்ட சூழ்நிலைகளால் முடிவாகிற ஒரு விடயமே. அந்தளவில் ஒருவரது மொழி, பிறப்பால் மட்டுமே முடிவாகுவது இல்லை என நாம் காணலாம்.
தாய் மொழியும் கல்வியும்
மாணவர்களுக்குக் கல் வரி யூட்டுவதற்குத் தாய் மொழியே அதி சிறந்தது என்ற கருத்து கல்வியியலாளராற் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதன் பொருள், ஒரு குழந்தைக்குப் பிறவியிலேயே தன் தாய் மொழியில் இயல்பான ஒரு ஆற்றல் உள்ளது என்பதல்ல. மாறாகக், கல்வி என்பது பாடங்கள் மூலம் மட்டுமே புகட்டப்படும் ஒன்றாக இல்லாமல் ஒருவரது சமூக நடைமுறை மூலம் விருத்தி பெறுகிற ஒன்றாகவும் இருக்கிறதால், ஒரு குழந்தை, தன் சமூகச் செயல்பாடுகளிற் பயன்படுத்துகிற மொழி மூலம் புதிய த க வ ல க ள வழங்கப் படும் போது அவற்றை
ஒரு மொழி சமூக
ஆங்கிலக் கல்வியே கல்வி என்ற மனோபாவம் கொலனிய ஆட்சிக் காலத்தில் மட்டுமன்றி அதன் பின்பும் தொடர்ந்துள்ளது. இதை விளங்கிக் கொள்வதற்குக் கொலனிய சிந்தனைமுறை நமது சிந்தனை மரபில் எவ்வளவு ஆழமாகவேரோடி உள்ளது என்பதை நாம் ஆராய வேண்டும். எவ்வாறாயினும், தாய் மொழியின் மீதான மற்றும் அதன் ஆற்றல் பற்றிய ஐயமும் நம்முள் தாய்மொழி பற்றிய ஒரு இரண்டக மனநிலையை உண்டாக்கியள்ளது என்று கூற நியாயமுண்டு. இது மொழி பற்றி மட்டுமன்றிப் பண்பாடு, மரபு, மதம் என்பன தொடர்பாகவும் அயல் ஆதிக்கத்திற்கு ஆளான மூன்றாமுலகச் சமூகங்கள் பலவற்றில் நாம் காணக் கூடிய ஒரு பண்பாகும்.
எந்த மொழியும் தன் சமூகத்தின் வளர்ச்சியை ஒட்டியே விருத்தி பெறுகிறது. பொருட் பேர்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகள், வாக்கிய அமைப்புக்களின்
எளிதாக உள வளர்ச்சியினூடு மட்டுமன்றிச் சமூக வாங்கிக் கொள நெருக்கடிகளுடும் வளர்ச்சிகண்டு (p6 b6OL’கிறது என்பதே நிலைப்பதிற் சமூக வழக்கே அடிப் முறையிலி தாய்மொழிக்கல் படையானது. ருந்து எழு 0 வன. ஒரு வியின் ஆற்ற பொ லுககுக கார ருளையே ணமாகிறது. ფ2ღIb მნცეbჭ5
சிலர் அடிப்படைக் கல்விக்குத் தாய் மொழியே சிறந்தது என்றாலும் உயர்கல்விக்கு விருத்தி பெற்ற வேற்று மொழியே பொருத்தமானது என்று வாதிப்பர். இங்கே தாய்மொழி மூலம் உயர்கல்வியைப் பெறுவது இயலாதது அல்லது மிகவுங் கடினமானது என்ற ஊகத்தை நாம் அடையாளங் காணலாம். இத்தகைய பார்வை தென்னாசியச் சமூகங்களில் சமூக மேம்பாடு பெற்றோரிடையே வலுவாக உள்ளதுடன், சமூக மேம்பாட்டை வேண்டுகிற கீழ் அடுக்குக்களிலும் கணிசமான பாதிப்பைச் செலுத்துகிறது.
தாயகம்
தையோ குறிக்கும் வசதி ஒரு மொழியில் இல்லை யெனின் அப்பொருளோ கருத்தோ அம்மொழி பேசும் சமூகத்துக்குப் புதியதும் அயலானதும் ஆகும் என்று நாம் கூறலாம். அதனால், அவற்றைக் குறிக்கும் ஆற்றல் அந்த மொழிக்கு இல்லை என்று ஆகிவிடாது. சமூகத் தேவை மொழியின் புதிய சொற்களும் புதிய வாக்கிய அமைப்பு முறைகளும் இலக்கண விதிகளும் உட்பட்ட புதிய சாத்தியப்பாடுகளை இயலுமாக்குகிறது.
மாற்றங்கள் மரபை ஒட்டியும் வெட்டியும் ஏற்படலாம். ஆயினும் அவை மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதன.

Page 23
மாற்றத்தை மறுப்பது வளர்ச்சியை மறுப்பதாகும். ஒரு மொழியில் கூற இயலாதது என்பது ஒரு மொழிக்கு மறுக் கப்படுவதே ஒழிய மொழியின் அடிப்படைக் கோளாறு அல்ல என்பதை வலியறுத்த விரும்பகிறேன்.
தாய் மொழி மூலம் மரபு சார்ந்த அறிவையோ ஆக்க இலக்கியத்தையோ ஆன்மீகத்தையோ கற்பிக்க் இயலாது என்று யாருங் கூறுவதில்லை. தமக்கு அயலான விடயங்களைக் கற்க நமது மொழி தக்கதல்ல என்பதே தாய் மொழியின் போதாமை பற்றிய பிரதானமான வாதமாகும். இந்த வாதம் உயர் கல்வி, விஞ்ஞானம், நவீன மருத்துவம், தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம் போன்ற துறைகளில் உயர் கல்வி தொடர்பாகப் பயன்பட்டு வருகிறது. தாய் மொழிக் கல்விக்குஎதிராக தென்னாசியாவில் முன் வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானவை தாய் மொழியில் பட்டம் பெற்றால் உள் நாட்டில் மட்டுமே வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் அதற்கு மதிப்பில்லை.
தேசிய இன ஒடுக்கு முறை உள்ள சூழலில் தாய் மொழிக் கல்வியால்
சிறுபான்மைத் தேசிய இனத்தவருக்கு
வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படும். நவீன அறிவுத் துறை ஆங்கி லத்திலேயே பிரதானமாக வளர்ச்சி பெறுகிறது. எனவே, உலகின் முன்வரிசை மொழி அல்லாத எந்த மொழி மூலமும் நவீன அறிவைப் பெற (Մ)ԼջաT35l. இது தகவல் யுகம். இன்று ஆங்கிலம் மூலமே அவசியமான தகவல்கள் அனைத்தையும் நாம் பெறமுடியும். நம் மொழிகளின் போதாமை அதிகமாகி வருவதால் தாய் மொழிக் கல்வி நம்மை மேலும் பின்தங்கினோராக்கி விடும்.
இந்த விதமான வாதங்கள், நாம் எதிர் கொள்ள வேண்டிய சமூக, அரசியற் பிரச்சனைகள் பற்றிக் கூறுவனவே ஒழியத் தாய் மொழியின் போதாமை பற்றிய ஆதாரங்கள் அல்ல. தாய் மொழி மூலம் இன்று இயலாது என்பதால் தாய் மொழிக்
G2)
கல்வியை மறுப்பது தாய் மொழி மூலம் என்றமே இயலாத நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்.
கூர்ந்து நோக்கினால், தாய் மொழிக் கல்விக்கு எதிரான வாதங்களில் தொக்கி நிற்பது ஒரு தனிமனிதப் பார்வையே. ஒருவர் தனது உயர்வும் தனது எதிர் காலமும் அயல்மொழி ஒன்றின் மூலமே இயலும் என்று எண்ணலாம். ஆனால் அது சமூகத்தின் உயர்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஏற்றதா என்ற கேள்வியே தாய் மொழிக் கல்வி பற்றிய அடிப்படையான கேள்வியாக இருக்க முடியும்.
எனவே தாய்மொழிக் கல்வி பற்றிய கேள்வி ஒரு சமூகம் தன்னை எவ்வாறு கருதுகிறது, தனக்கு எத்தகைய எதிர் காலத்தை வேண்டி நிற்கிறது என்பதையொட்டிய கேள்வியே ஒழிய வேறல்ல. மொழியும் கல்வியும் பற்றிய அடிப்படைப் பிரச்சனைகள் சமூக - அரசியற் பிரச்சனைகள் அல்லாது விஞ்ஞான தொழில் நுட்பப் பிரச்சனைகளும் இல்ல. தனி மனிதப் பிரச்சனைகளுமல்ல. எனவே கல்வி, உயர் கல்வி பற்றிய பிரச்சனைகள் சமூக நோக்கிலேயே கருதப்படவேண்டும்.
ஆங்கில வழிக் கல்வியின் பயன்கள்
ஆங்கிலமே கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்று வாதிப்பவர்கள் முன்வைக்கும் சில வாதங்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலானவை. தென்னாசியாவுக்கு வெளியே வட ஆபிரிக்கா முதல் ஜப்பான் வரையிலான நாடுகளின் ஏகப் பெரும்பாலான மக்கள் தம் நாட்டின் பிரதான மொழியிலோ தாய் மொழியிலோ தான் தமது கல்வியைப் பெறுகின்றனர். ஆங்கிலம் உலகப் பொது மொழியாகப் பெற்ற பின்னருங் கூட, இந்த நாடுகளில் அதை எல்லாருங் கற்க வேண்டும் என்ற தேவை உருவாகவில்லை. அவ்வாறு நம் வாழ்நாளில் நிகழும் என்பதும் ஐயமே. எனினும் சீனா, ஜப்பான், அரபு நாடுகள் , ஈரான், தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளில் நவீன
Ambasa

விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை மக்கள் தமது தாய் மொழியிலேயே பெறுகின்றனர். அமெரிக்க சார்பு இஸ்ரேலில் கூட, 1948க்குப் பிறகு புத்துயிரூட்டப்பட்ட ஹீப்று மொழியிலே பல்கலைக் கழகக் கல்வி வழங் கப்படுகிறது.
எனவே ஆங்கில மொழிக் கல்வியின் தேவை முழுச் சமூகத்தினதும் மேம்பாட்டுக்கானது என்பதோ நமது மொழிகளால் ஆங்கிலத்தார் போல நவீன தகவல்களை வழங்க இயலாது என்பதோ செல்லுபடி
ப ா கு ம
உயர் கல்வி ஆங்கி லத்தில் வழங் கப்படும் இந் தியா, பாகிஸ் தான், இலங் போன்ற நா களில் ஆங்
சமூகங்களும்
2 அமைதியுமல்ல.
இலங்கையினி எல்லாத் தேசிய இனங்களும் சமூகங்களும் சமமாக வாழக் கூடிய ஒரு தீர்வின் மூலமே அ ல ல . இந்த நாட்டின் நிலையான அமைதி ஏற்படும் எனவும் bԼԸ5! மொழி நம்புகிறோம். அந்தத் தீர்வு எல்லாத் தேசிய இனங்களும் களுடைய '
சமமான அடிமைகளாக அந்நியரது மேலாதிக் கத்துக்கு உட்பட்டோராக வாழும் ஒரு தீர்வாக இருக்குமாயின் அது தீர்வுமல்ல, அதன் மூலம் கிட்டுவது
வாதங் கள்
ஆங்கிலத்தை பிரதயிடுவ தன் மூலம்
கல்வி மூலம் நன் மையடை வோர் பெரும்
பாலும் படித்த உயர் -நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவினருமே யாவார்.ஆங்கிலமே கல்வி மொழியாக வேண்டும் என்போர், எல்லோருக்கும் ஆங்கிலத்தையே
போதனா மொழியாக்கலாம் என்ற தீர்வை
முன்வைக்கின்றனர்.
இது எவ்வளவு தூரம்
நடைமுறைக்கு ஏற்றது என்ப்தும் சமூகத்தின் மீது இதன் பாதிப்பு என்ன
என்பதும் பற்றி நாம் கொலனிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளில் நடந்தவற்றை வைத்துப் பயனுள்ள முடிவுகட்கு வரலாம். இது விரிவான ஒரு ஆய்வுக்குரியது என்றாலும், ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் ஸ்பானிய மொழியும் இன்று ஆபிரிக்காவிலும் அமெரிக்கக் கண்டங்களதும் அவுஸ்ரேலியாவினதும் பல்வேறு தீவுகளதும் பழங்குடிகளது மொழிகளின் இடத்தைப் பிடித்துள்ளன. சில இடங்களில் ஐரோப்பிய மொழியே தாய் மொழியாகிவிட்டது. மற்ற இடங்களில் தாய் மொழியின் பாவனை மிகவும் வரையறுக்கப்பட்டுவிட்டது. இந்த இடங்களிலெல்லாம் அயல் மொழி ஆதிக்கம் அடிமைப்பட்ட மக்களில் ஒரு சிறு பகுதியினர் போக மற்றவர்களை மேலும் அடிமையாக்கி உள்ளது அல்லவர்.
Vy
, b LD . ği5] மொழியின் வளர்ச்சிக்கு உதவமாட்டோம் என்பது மட்டும் உறுதி
அதே வேளை, எவரும் ஆங்கில மூலம் கற்பதும் ஆங்கிலத்தில் புலமை பெறுவதும் அப்படியே தீயன என்றோ பயனற்றன என்றோ நான் கூறவில்லை. சில சூழ்நிலைகளில் ஆங்கில மூலமே சில துறைகளில் பயிற்சி பெற முடிகிறது. நமது தாய் மொழியின் போதியளவு நூல்களும் நவீன அறிவும் தொழில்நுட்பமும் சார்ந்த செயற்பாடும் இல்லாத போது ஆங்கிலத்திற் புலமை பெற்றோர் மூலமே நமக்கு வேண்டிய விடங்களை நமது சமூகத்திற்குப் பெற்றுத்தர முடிகிறது.
நமது பின்தங்கிய பொருளாதார, தொழில் வளர்ச்சி என்பன காரணமாக மட்டுமன்றிச் சமூக அநீதிகள் காரணமாகவும் தாய் நாட்டிற் தொழில் வாய்ப்புப் போதாத நிலை படித்த, பயிற்சி பெற்ற இள வயதினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தொழில் தேடி அயல் நாடுகட்குப் போகுமாறு கட்டாயத் திற்குள்ளாகின்றனர். இச்சூழ்நிலை களில் ஆங்கில அறிவு அவர்கட்குக் கைகொடுக்கிறது. தாய்மொழி உட்பட்ட இருமொழிப் புலமையுடையோரால் அயல் மொழிகளினின்று பயனுள்ள பல விடயங்களை நமக்குக் கொண்டுவர

Page 24
முடியும். இன்று உலகிற் பன்மொழிப் புலமையுடைய பெரும்பாலோருக்கு ஆங்கிலப் புலமை உள்ளது. எனவே ஆங்கில வாயிலாகவே 6) இலக்கியங்கள் பலவும் அயல்நாட்டுத் தகவல்களும் நம்மை வந்தடைகின்றன.
பன்னாட்டு வணிகம், தொலைத் தொடர்பாடல் போன்ற விடயங் களிலெல்லாம் ஆங்கில அறிவு பய னுள்ளதாக இருப்பதை நாம் மறுக்க இயலாது. இவ்வாறு, பொதுப்படவே ஒரு அயல்மொழியிற் புலமையாற் கிட்டும் நன்மைகளில், ஆங்கிலம் அந்த அயல் மொழிகளிலிருப்பது ஒருபடி கூடுதலான நன்மை தருகிறது என்பதையும் ஏற்க வேண்டும். ஆயினும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் தாய் மொழிக் கல்வியின் இடத்தில் ஆங்கிலத்தைப் புகுத்தப் போதியனவா? .
சற்றுக் கூர்ந்து நோக்குவோமாயின், முற்குறிப்பிட்ட நன்மைகள் யாவும் குறுகிய கால நோக்கிலோ தனிப்பட்ட ஒருவரது உடனடியான பிரச்சனைகளின் நோக்கிலோ செல்லுபடியாவன. அவற்றை நீண்ட கால நோக்கில் நன்மையானவையென்று கொள்ள இயலாது. ※
தாய்மொழி மூலமே உயர் கல்வி கற்பிக்கப்படும் போது அயல் மொழியில் புதிய அறிவியற் தொழில்நுட்பத் தகவல்களைத் தாய் மொழிக்கு மாற்றுவதன் தேவை ஏற்படுகிறது. அதன் விளைவாக, மொழிபெயர்ப்பு முயற்சிகளும் அயல் மொழி மூலம் பெற்ற தகவல்களைத் தாய் மொழியில் மீள வழங்கும் முயற்சிகளும் பெருகுகின்றன. கலைச் சொல்லாக்கம் மொழி நடைமுறைக்கு நெருக்கமாகிறது. இவற்றின் விளைவாக மொழி, வெவ்வேறு அறிவுத் துறைகட்கு ஏற்ற வளர்ச்சியைப் பெறுகிறது.
இந்த அணுகுமுறை தென்னாசிய அரசாங்கக் கொள்கையாகும் போது ஆங்கிலப் புலமையுடையவர்கள் அனுபவித்து வந்த சில வசதிகள் அவர்கட்கு இல்லாது போகின்றன. இது தனிப்பட்ட முறையிலும் சமூக அளவிற்
G4)
சிறிதும் பாதகமானது தான். ஆயினும் ஆங்கில மூலமே கல்வி என்ற கொள்கை சமூகத்தில் எந்தளவு பெரிய பகுதி யினருடைய உயர் கல்வி வாய்ப்பை மறுக்கிறது என்பதையும் நாம் நினைவி லிருத்த வேண்டும்.
ஒரு நாட்டு மக்கள் அயல் நாடொன்றிற் தம் உழைப்பை விற்க வேண்டிய நிலை குறை வளர்ச்சியின் அடையாளமே ஒழியச் சமுதாய விருத்திக்கான தளமல்ல என்பதைக் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நாம் அனுபவ வாயிலாகக் கண்டுள்ளோம். ஒரு சமூகத்தின் ஒரு பகுதி அயல் நாட்டு வேலைவாய்ப்பில் தங்கியிருப்பது, ஒரு சமூகத்தின் சீரான வளர்ச் சிக்கோ மேம்பாட்டுக்கோ வழிகாட்டாது. எனவே கல்வி பற்றிய முடிவுகளை இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் எடுக்க இயலாது.
சில துறைகளில் தாய்மொழியினது பின்தங்கிய நிலைக்கும் சமூகத்தின் பின்தங்கிய நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப் பின்தங்கிய நிலைகள் ஒவ்வொன்றினின்றும் மீள்வதற்குத் தாய்மொழிக் கல்வியின் புறக்கணிப்பு எவ்வகையிலும் உதவப்போவதில்லை.
ஆங்கில வாயிலான கல்வியும் ஆங்கில மொழிக் கல்வியும்
ஆங்கிலத்தினுTடாகவே பல தகவல்களைப் பெறவேண்டிய தேவை அல்லது பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிற ஒரு உலகச் சூழலிலி. மூன்றாமுலக நாடுகளில் ஆங்கில அறிவிற்கான தேவை தொடர்ந்தும் இருக்கும். இதற்கு முகம் கொடுக்க, அத்தகைய தகவல் கள் தேவைப்படும் ஒவ்வொருவருக் கும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண் டும் அல்லது அவை கிரமமாகத் தமிழ் மொழிக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.தாய்மொழிக் கல்வி முதன்மைய் படுத்தப்படும் நாடுகளில் இரண்டு வித மான அணுகுமுறைகள் செயற்படு கின்றன. ஒவ்வொரு துறையிலும் பரவலாக
 

அறியப்பட வேண்டிய தகவல்கள் தொகுக் கப்பட்டு நுால்களாகவோ கட்டுரைகளாகவோ தாய்மொழியில் கிடைக்கின்றன. அரிதாகவே பயன்படும் தகவல்களை அறிய விரும்புவோர் நேரடியாகவோ இன்னொருவர் உதவி யுடனோ தகவல்களை ஆங்கிலத்தில் பெறுகின்றனர். இதன்மூலம் நாம் காணுவது ஏதெனில், தாய்மொழி வழிக் கல்வி என்பது வேறு எந்த அயல் மொழியையும் கற்பதற்கு மாறான ஒரு கோட்பாடல்ல என்பதே.
சமூக மட்டத்திற் கல்வி தாய்மொழி
வாயிலாகவே வழங்கப்படும் அதேவேளை,
பயனுள்ள எந்த அயல்மொழியையும் கற்பதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப் படுவது சமூகத்துக்கு மிகவும் பயனுள்ளது. கற்கப்படும் அயல் மொழிகளில் ஒன்றாக ஆங்கிலமே இருக்கும் என்பது நமது சூழலில் எதிர்பார்க்கக் கூடியதே. ஆயினும்
அது ஆங்கிலமாக மட்டுமே இருப்பது
நமது சமூகத்திற்கும் பிற சமூகங்களுக் குமிடையே விருத்தி செய்யக் கூடிய உறவிற்கு அதிகம் உகந்ததல்ல. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் தகவல்களின் இழப்புக்கோ திரிப்புக்கோ இடம் தரும் என்பதால் பிற மொழிகளினின்று நேரடியாக நமது மொழிக்குத் தகவல்கள் கொண்டு வரப்படுவது பயனுள்ளது.
ஆங்கிலமே கல்விக்கான மொழியாக இருக்க வேண்டும் என்போர் தமது குறுகிய தேவைகளதும் அநுபவத்தினதும் அடிப்படையில் கல்விப் பிரச்சனையைப் பார்க்கின்றனர். அத்துடன் தாய்மொழிப் பாவனை மூலம் மக்கள் பெறக்கூடிய நலனையும் நவீன சிந்தனைகள் தாய்மொழியில் விருத்தி செய்யவோ வேண்டிய தேவையையும் இவற்றின் வழியே சமூகச் சிந்தனை காணும் வளர்ச்சியையும் மறுக்கின்றனர். இவர்கள் எவ்விதமான புதிய நியாயங்களை முன்வைத்த போதும், இவர் களது அணுகுமுறை, கொலனிய யுகத்தின் ஆங்கில மோகத்தையும் மேலாதிக் கத்தையும் சார்ந்தே உள்ளது.
மறுபுறம், ஆங்கிலமே வேண்டாம் என்பது ஒரு கிணற்றுத் தவளை
பல்கலைக் கழகப்
மனோபாவமாகும். தாய்மொழியிலேயே நமக்கு வேண்டிய எல்லாமே உண்டு என்பதோ தாய்மொழியில் மட்டுமே இயங்கித் தமது சமூகத்தின் தேவை களை நிறைவு செய்யலாம் என்பதோ நமது சூழலின் யதார்த்தத்துக்குப் பொருந்தாதது. ஆங்கிலம் ஒரு விருப்பப்பாடமாகவோ சில சூழ்நிலைகளில் ஒரு கட்டாயப் பாடமாகவோ கலை மாணவர்கட்கும் கற்கக் கிடைப்பது நல்லது. நவீனத்துவத்துக்கு முகங்கொடுக்கும் ஆற்றலைச் சமூகத்துக்கும் தாய் மொழிக்கும் இயலுமாக்க இன்று இது
89ഞ്ഞഖ.
ஆங்கிலம் இல்லாமல் இயலாது என்பதும் ஆங்கிலம் இருப்பது கூடாது என்பதும் ஒரே அளவு தவறானவை. இளம் பருவத்தில் அயல் மொழிகளைக் கற்பது இலகு. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட அயல்மொழிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அந்த மொழிகள் யாவை என்பது சமூக நலன் சார்ந்த ஒரு முடிவாகவே அமையக் கூடும்.
தாய்மொழிக் கல்வியின் நிலை
1948இன் சுதந்திரத்தின் பின்பு தாய் மொழி வழிக் கல்வி மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டதை அறிவோம். 196070 காலகட்டம் தாய்மொழி மூலம் உயர்கல்விக்கான ஊக்குவிப்பு உச்சத்தை எட்டியது எனவும் கூறலாம். தாய்மொழி வழிக் கல்விக்கு உதவியாகப் பாடநூல்களை மொழிபெயர்க்கும் முயற்சியும் தாய்மொழியில் நூல்களை எழுதுவதிலும் போதியளவு சாதிக்கப்படாமைக்கு நல்ல காரணங் களும் அல்லாத காரணங்களும் இருக்கலாம். ஆயினும் 1960 அளவில் தமிழ் சிங்களக் கலைச் சொல்லாக் கத்தில் இலங்கையிற் செய்யப்பட்ட அரும்பணி பின்னர் மங்கிவிட்டது. புனையப்பட்ட கலைச் சொற்களிற் குறைபாடுகள் இருந்தாலும் அவை யாவும் களையக் கூடியனவே. தாய்மொழியிற் சிந்தனையை விருத்தி செய்ய ஆங்கிலப்
டு5)

Page 25
பதங்களுக்குரிய தாய் மொழிப் பதங்களைத்
தீர்மானிப்பதை விட முக்கியமான பணி
தாய்மொழியிலேயே நவீன சிந்தனையை விருத்தி செய்வதாகும். இவ்வாறான நோக்கத்துடன் அறிவொளி, பின்னர் ஊற்று போன்ற ஏடுகளும் சிந்தனை போன்ற ஆய்வு ஏடுகளும் தமிழில் வந்துள்ளன. கலைக்கதிர் தமிழகத்தில் நீண்ட காலமாக ஒரு நற்பணியைச் செய்து வந்துள்ளது தமிழகத்திற் பல விஞ்ஞானச் சிற்றேடுகள்
காலத்துக்குக் காலம் வந்துள்ளன.
எனிலும் ஆங்கிலத்திற் கற்கா விட்டால் எதிர்காலம் இல்லை என்ற
மனநிலை 1960களின் போதே இலங்கையில் மீள உறுதிப்பட்டுவிட்டது. இதன்
விளைவாக, தொழில்நுட்பம், மருத்துவம்,
வேளாண்மை, விலங்கு மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் தாய் மொழியில் உயர் கல்வி என்ற அரசாங்கக் கொள்கை நடைமுறையிற் கைவிடப்பட்டது.
தாய்மொழிக் கல்வி திட்டமிட்ட புறக்கணிப்புக்கு உள்ளாகியது என்பது என் வாதமல்ல. ஆயினும் சமூகங்களில் ஆதிக்கஞ் செலுத்தும் தேசியவாதம் குறிப்பிட்ட சில சமூக அடுக்குகளின் நலன் சார்ந்தது. அதன்
முக்கிய பண்பு சகோதரச் சமூகங்
களுடனான போட்டியும் பகையுமே என்று
கூறலாம். ஏகாதிபத்திய விரோத முனைப்பு குறுகிய கால இடைவெளிகளில் தலை
தூக்கிய போதும், அது நிச்சயமாக
1970களின் பிற்பகுதியில் இல்லாது போய்விட்டது.
திறந்த பொருளாதாரக் கொள்
கையுடன் சேர்ந்து அந்நியப் பொருட்கள்
மீதான மோகமும் ஆங்கில மோகமும் ஊக்கம் பெற்றன. 1956க்குப் பின்பான தேசியவாத எழுச்சிகளின் பின்னணியில் அடங்கிக்கிடந்த கொலனிய காலத்துச் சிந்தனைகள் பேரினவாத, குறுகிய தேசியவாதச் சிந்தனைகளுடன் இணைந்து வெளிப்பட்டன.
“சிங் களம் மட்டுமே அரச கருமமொழி” என்ற கொள்கையின்
G6)
btfDġj5li.: 1
நோக்கங்களில், சிங்கள மொழி பேசுவோ ரது நலன் பேணுவதை விடச் சிங்கள வர் அல்லாதோரை ஓரங்கட்டுவதே மேலும் முக்கியமாகி வந்தது. இது கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தெளி வாகியுள்ளது. இன்று நடைமுறையில், வணிகம் அரச நிருவாகம் போன்ற துறைகளில் ஆங்கிலமே உண்மையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே வேளை சிங் களம் ஆதிக்கம் செலுத்திய காலத்தைவிட அதிகளவில் இன ஒதுக் கற் கொள்கை கடைப் பிடிக் கப்படுகிறது. ܐ
தென்னாசிய அரசியலில் 1947க்குப் பின்பு, தேசிய முதலாளியத் தலைமையின் மொழிப்பற்று பசப்பானது என்று இன்று பல பிரதேசங்களிலும் நிருமாணமாகி வருகிறது. இதன் காரணம் ஏகாதிபத்தியம் 1975க்குப் பின்பு கண்ட மீளெழுச்சிக்குத் தென்னாசியத் தலைமைகள் பணிந்ததன் விளைவாகப் பழைய கொலனிய யுகத்தின் விழு மியங்களும் எழுச்சி பெற்றன என்பதே.
இவை அனைத்தினும் மேலாக, மொழிக் கல்வி மிகவும் புறக்கணிப்புக்கு உள்ளாகிவந்துள்ளது. இது கல்வித் துறையின் சீரழிவுடன் தொடர்புடையது. ஆங்கிலமே பாடசாலைக் கல்வி மொழியாக இருந்தபோது தமிழ் இலக் கணம் கற்கப் பட்ட அளவுக்கு இன்று கற்கப்படுகிறது என்று கூறுவது கடினம். ஒரு மொழியின் இலக்கண விதிகளை கண்டு கற்ற ஒருவர் எளிதாக இன்னொரு மொழியைச் செம்மையாகக் கற்க முடியும்.
நமது சூழலில் பாடசாலைகளில் எந்த
மொழியுமே செம்மையாகக் கற்பிக்கப் படுவதாகக் கூற இயலாதுள்ளது.
தாய்மொழிக் கல்வியின் சரிவுக்கு இன்னொரு காரணம், அரசாங்கமே பாடநூல்கள் அனைத்தையும் வெளியிட்டு விநியோகிப்பது என்றதோடு ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் ஏற்ற ஒரு நுர்ல் மட்டுமே பாடநூலாக விதிக்கப்பட்டமை எனலாம். இதன் விளைவாக, நமது சந்தைப் பொருளாதாரச் சூழலில், 1970களின் நடுப்பகுதியின் பின்னர் மாணவர்களது
 

வாசிப்புக்கான மாற்றுப் பாடநுால்கள் வருவது நின்று விட்டது.
சோதனையிற் தேறுவதை மட்டுமே முதன்மைப்படுத்துகிற போட்டா போட்டி,
பாடசாலைக் கல்வியைப் பொருளற்றதாக்கி
டியூட்டறிகள் மூலம் அறிவை வளர்க்க உதவாத, பரீட்சைக்கான ஒரு பயிற்சி முறையை வளர்த்துவிட்டது. இதனால் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. தொலைக்காட்சியின் வருகை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இன்று நாம் வாழும் சூழலில் தாய்மொழிக் கல்வி மட்டுமின்றி நாட்டின் கல்வி முழுவதுமே நலிந்துள்ளது.
தாய்மொழிக் கல்வியின் எதிர்காலம்
இன்று தாய்மொழிக் கல்விக்கு எதிரான அலை வலுவாக வீசுகிறது. நமது கல்வி துறையின் நலிவுக்கான காரணங்கள் இலவசக்கல்வியும் தாய்மொழிக் கல்வியுமே என்று சிலராற் கூசாமற் பேசமுடிகிறது. தனியார் பாடசாலைகள், சர்வதேசப் பாடசாலைகள் என்ற பேரில் புகுத்தப்பட்டுள்ளன. இவை ஆங்கிலம் மூலமே கல்வி புகட்டுகின்றன. தனியார் பல்கலைக்கழகங்கட்கான அத்திவாரமும் இடப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலமூலம் கல்வி கற்ற ஒரு சிறுபான்மையை உருவாக்கி ஆங்கில மொழி ஆற்றல் கொண்டு பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நவகொலனிய எசமான வர்க்கம் உருவாகிவருகிறது.
எல்லோருக்கும் ஆங்கிலக்கல்வி,
ஆங்கில மூலம் பாடசாலைக்கல்வி என்பது
நாட்டின் மிகப் பெரும்பான்மையான பாடசாலைகளில் ஆங்கிலமும் இல்லாமல் கல்வியும் இல்லாமல் கல்வியை மேலும் சீரழிக்கும் வாய்ப்பே அதிகம். ஆயினும் இந்த நாட்டில் வசதியுடன் வாழ்வோருக்கு அது மிகவும் பொருத்தமானது. தாய்மொழிக்கல்வியின் புறக்கணிப்புத் தொடருமேயானால், இந்த நாட்டில் ஒரு சிறுபான்மை அயலார் தயவில் அந்நிய மேலாதிக்கத்துக்குத் துணையான ஒரு சக்தியாக ஆதிக்கம் செலுத்தும் நிலை
参
妲
மேலும் உறுதிப்படும். எனவே இன்றைய
நிலைமைகளும் இன்றைய போக்கும்
தாய்மொழிக்கல்வியின் விருத்திக்குப் பகையானவையே.
நான் சுட்டிக்காட்டியவற்றினின்று
கல்வி பற்றிய பிரச்சனை ஒரு சமூக
அரசியற் பிரச்சனை என்பதை அடையாளங் காணலாம் நம்ட முன் உள்ள பெரிய சவால் அயல் ஆதிக்கத்துக்கு, குறிப்பாக ஏகாதிபத்தியத்துக்கு முகங்கொடுப்பதே. இதைச் செய்வதாயின் மக்களின் நலன்களைப் பாதிக்கிற விடயங்களில் நாம் கவனம் செலுத்தவேண்டும். எனவே தாய் மொழிக் கல்வி உரிமைக்கான கோரிக்கை வலுப்பெறவேண்டும். உயர் கல்வியைத் தாய்மொழியிலேயே வழங்குவ தற்கான காரியங்களை நாம் மேற்கொள்
’ளத் தயங்கும் அளவுக்கு நமது மொழிகளின்
ஆற்றலும் நமது சமுதாயங்களின் ஆற்றலும் நலிவடையும்.
நமது இலங்கையின் எல்லாத் தேசிய இனங்களும் சமூகங்களும் சமமாக வாழக் கூடிய ஒரு தீர்வின் மூலமே இந்த நாட்டின் நிலையான அமைதி ஏற்படும் எனவும் நம்புகிறோம். அந்தத் தீர்வு எல்லாத் தேசிய இனங்களும் சமூகங்களும் சமமான அடிமைகளாக அந்நியரது மேலாதிக் கத்துக்கு உட்பட்டோராக வாழும் ஒரு தீர்வாக இருக்குமாயின் அது தீர்வுமல்ல, அதன் மூலம் கிட்டுவது அமைதியுமல்ல என அறவோம்.
நமது எதிர்காலம் கல்வியின் பரவலாக்கத்திலும் கல்வித்தரத்தின் மேம்பாட்டிலும் தங்கியுள்ளது. நமது தாய்மொழி நமது அடையாளத்தின் ஒரு முக்கியமான, அடிப்படையான அம்சம் என நாம் நம்பினால், அம் மொழியிற் பொதிந்துள்ள பண்பாட்டுக் கூறுகளும் ஞானமும் அறிவும் நமது எதிர்காலத்துக்கும் முழு மானுடத்துக்கும் பயனுடையனவும் பேணவேண்டியனவும் என நாம் நம்பினால் நமது மொழியின் வளமும் நமது மக்களது வாழ்வின் தரமும் நெருங்கிய உறவுடையன என நாம் நம்பினால், தாய் மொழிக் கல் வரிக் காகப் போராடுவதையும் கடுமையாக உழைப்பதையும் வரிட
வழியில்லை. 

Page 26
மழைக்குறி' என்ற தனது நாவல்
மூலமாக ஈழத்து நவீன தமிழ் இலக்கிய
உலகிற்கு நன்கு அறிமுகமான படைப்பாளி சுதந்திரராஜா அவர்கள் . 1972ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுவரை அவர் சிறுசஞ்சிகைகளிலும் பத்திரி கைகளிலும் எழுதிவந்த நாற்பத்தாறு சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதை எனும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பிலேயுள்ள கதைகளில் பெரும்பாலானவை சமூகத்தில் வர்க் கரீதியாக எழும் முரண்பாட்டையே தமது கருப்பொருளாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் சுரண்டலுக்கு எதிரானதும், ஏழைத் தொழிலாளர்கள் மீது அனுதாபம் காட்டுவதும் வர்க்க முரண்பாட்டுக்குச் சோசலிச யதார்த்தவாதப் பின்னணியில் தீர்வு காண முனைவதுமான கருத்தோட்டங்கள் இக் கதைகளினுTடாக முன்வைக் கப்படுகின்றன. இக் கதைகளேயன்றி இனப்பிரச்சனை சம்பந்தமாகவும் மெல்லிய அகமன உணர்வுகளை பிரதிபலிப்பதாகவும் கதைகளை எழுதியுள்ளார். இது அவர் குறுகிய வட்டம் ஒன்றுக்குள் மட்டும் சுழன்றுகொண்டிருக்காத தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது.
சுதந்திரராஜா அவர்கள் மார்க்சிய தளத்தில் நின்றுகொண்டே மேற்படி கதைகளைப் படைத்துள்ளார். சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள் , ஏற்றத் தாழ்வுகள் பிரச் சினைகள் என்பவற்றிற்கு வர்க்க அடிப்படையான வேறுபாடே காரணம் என்ற தொனியை அவர் கதைகளில் முன்வைப்பதைக் காணலாம். சமத்துவமான ஒரு சமுதாயம்
சுதந்திராஜாவின் சிறுகதை சிறுகதைத்தொகுதி
ஏற்படாதவரை இம் முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாதவை எனக் கருதுகின்றனர். முதலாளி வர்க்கத்தினரின் சுரண்டல்களும், அடாவடித்தனங்களும் தொழிலாளி வர்க்கத்தினரைப் பலிக்கடாக்களாக்கும் தன்மையைக் கதைகளினூடே வெளிக் கொணர முயல்கின்றார்.
வர்க்க முரண்பாடுகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் நோக்குகின்றவர் என்ற வகையில் இன,மத, மொழி, நாடு வித்தியாசமின்றி எங்கும் நடக்கும் அநியாயங்களை; அநியாயங்களுக்கு எதிரான போராட்டங்களை கதைகளில் கொணர அவர் முனைந்திருக்கின்றார். அந்த வகையில் வர்க்க முரண்பாடு,
வர்க்கப் போராட்டம் சம்பந்தப்பட்ட
அவரது கதைக்களங்கள் பரந்தவையாக உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் என எங்கும் நிகழும் வர்க்கப் போராட்டங்களை வெளிக்
கொணர முனைந்திருக்கின்றார். வெவ்வேறு
பிரதேசங்களைக் கதைக்களனாக்கிய போதும் இயல்பு நெறிக்கு முரணாகாத வண்ணம் அப்பிரதேசப் பகைப்புலத்தில், அப்பிரதேச மக்களின் மொழிநடையில் அவர் கதைகளை நகர்த்துவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மேற்படி வர்க்கரீதியான பிளவுகள், பிரச்சினைகள் , முரண்பாடுகள் ஒழிக் கப்படுவதற்குச் (88 Tિ + 65ીટ; யதார்த்தவாத அடிப்படையிலான புரட்சி ஒன்றே வழிவகுக்கும் என சுதந்திரராஜா அவா கள கருதுவதை அவரது சிறுகதைகள் துல்லியமாகக் காட்டுகின்றன.
 
 
 

இத்தொகுதியிலுள்ள பத்துக்கு மேற்பட்ட கதைகள் சோசலிச யதார்த்தவாதப் பின்னணியில் எழுதப்பட்டவையாகும். பொதுவாக சோசலிஸயதார்த்தவாதப் பின்னணியில் எழுதப்படும் இலக்கியங்கள் பல வாய்ப்பாட்டுத்தன்மை கொண்டனவாக அமைகின்றன என முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுதந்திரராசா அவர் களது கதைகளும் விதிவிலக் கானவை அல்ல.
இனமுரண்பாடுகள் போர்க்கால வாழ்வு என்பன பற்றியும் கூர்மையாக அல்லவேனும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுதந்திரராஜா பேசியிருக்கிறார். தனிச்சிங்கள மொழிச் சட்டம் தமிழ் அரச ஊழியர்களைப் பாதித்தமை, சொந்த நாட்டிலேயே “பொலிஸ் ரிப்போட்' இல்லாமல் வாழமுடியாத நிலை, விமானத்தாக்குதல்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி நிலை, கிளாலி கடற்பயண அவலம் வீடுகளை இழந்து துன்புறும் மனநிலை முதலானவை அவர் கதைகளில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இத்தகைய கதைகளை அவள் கட்சி, கொள்கை என்ற எல்லைகளுக்கு அப்பால் பொதுமக்களை மையப்படுத்தி எழுத முற்பட்டமை கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆயினும் இனமுரண்பாடுகள் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை அவரது கதைகள் தரத் தவறிவிட்டன.
மெல்லிய மன உணர்வுகள் பற்றிய கதைகளில் பாதார பிம்பம்’ என்ற கதையைத் தனித்துச் சுட்ட வேண்டும். இத்தொகுதியிலுள்ள சிறந்த கதை இதுவாகும். தன் பாதணிகளை வெளியே
கழற்றிவிட்டு அதனை யாரும் எடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத் துடன் ஆலயத்துள் Ֆl60) Քպլք
ஒருவனுக்குக் காண்பவை அனைத்துமே பாதணிகளாகத் தெரியும் அகமனச் சித்திரத்தை அழகாக வரைந்துள்ளார். ஆனால் அக்கதையின் முடிவு சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. அதனால் ஒரு சாதாரதான கதையொன்றை வாசித்த அனுபவம் ஒன்றையே அது தருகின்றது.
தாயகம்
சுதந்திரராஜா அவர்களது சிறுகதைகள் அளவில் குறுகியவை. நேரடியாகவே விடயத்துக்குள் இறங்கி அதனை விபரிக்க அல்லது அலசி ஆராய முனைபவை. அந்த வகையரில் அவற்றுள் பெரும்பாலானவை கட்டிறுக்கம் மிகுந்தவை. ஆனால் அவை சிறுகதைச் சுருக்கங்களாகவே அமைகின்றனவேயன்றி எழுத்தாளர் சாந்தன் பின்பற்றுகின்ற புதுக் கவிதை” வடிவமாக அமைய வில்லை. புதுக்கவிதை வடிவமானது' கதைப்பின்னல், பாத்திர வார்ப்பு, மொழிநடை என்பனவற்றில் 'சிறுகதைச் சுருக் கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்துவம் கொண்டும் அமைதல் கவனிக் கத் தக்கதாகும்.
கதைப்பின்னலைப் பொறுத்தமட்டில் இவர் ஒரே பாணியையே பின்பற்றுவது தெரிகின்றது. தொடக்கம் வளர்ச்சி நிறைவு என்ற மரபு ரீதியான சிறுகதை வடிவத்திற்குள்ளேயே கதைகளை நகள்த்துகிறார்.
சுதந்திரராஜா அவர்கள் மொழி நடையில் அதிக கவனம் செலுத்தியி ருக்கிறார்கள். தன் கதைகளுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் களங்கள் யதார்த்த பூர்வமானதாக அமைதல் வேண்டும் என்பதற்காக அவ்வப் பிரதேச மொழி நடையை இயல்பாகவே அவர் கையாளுவது கவனிக்கத்தக்கதாகும். சுருக்கமான பாத்திர உரையாடல்கள் விண்அலட்டலற்ற சொற்கோலங்கள் அவர் கதையை அழகு செய்கின்றன. ஆனால் சில கதைகளில் பிரச்சாரத் தன்மையான சொற் கோலங்களையும் அவதா னிக்கமுடியும். தனது கொள்கை நிலைப் பாட்டை வலியுறுத்த அல்லது தனது புலமையை வெளிப்படுத்த இத்தகைய செயற்கைத்தன்மையான மொழிநடையை அவர் பின்பற்றுவது தெரிகின்றது. பணமுதலை', 'ஏகாதிபத்தியம்', 'வர்க்க சுபாவம், 'உற்பத்தித் தேக்கம்", 'உற்பத்திச் சாதனம், முதலாக வருகின்ற சொற்கள் கதையின் இயல்பான நடையைப் பாதிக்கின்றன. சில இடங்களில் கதைக்குள்

Page 27
உப்தேசம் செய்கின்ற் போக்கையும் சுதந்திரராஜா அவர்கள்:பின்பற்றுகிறார். இவ்ை சிறுகதை வடிவத்தைப் பாதிக்கின்ற விடயங்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். F་ཅ༥, , , 1.
'தன் க்தைகள்ல் பாத்திரங்களை சிக்கனமாகவே இவர் படைத்துள்ளார். பாத்திரங்களைக்*கதைத் தொடக்கத் திலேயே அறிமுகம் செய்யும் போக்கு இவரி பமுண்டு. கதைக்களங்களின் வேறுபாட் டுக்கு இணங்க பல்வேறுபட்ட மொழி, மத, இன,ஜாதி மக்கள் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சில கதைகளில் பாத்திரங்கள் 'பொது மனித உணர்வு” கொண்டவையாக இயங்குவதும் சுட்டிக் காட்டத்தக்கதாகும். * * * * ۔۔: ۔۔۔ :۔
LLLL LL LLLLL LL LL LL LLL LLLL LL L LLLS LL LLL LL LLL LLLL LL LLL LL LLLLL LL L L LL LLL LLLLLL
போரொடுங்கும் புகழொடுங்காது? “போரை ಙ್ಗಗೆ త్తిళ్లుaు. போரைத் தவிர்ப்போர் வீரர்”
போரைத் தவிர்ப்பதுவும், புகழென்று புகல்வோரே.
அழிவடையும் நம்மிற்கும் ஆக்கம் பெருக்குவோரும்,
இசை, கல்வி, வாழ்முறையில்
முயன்றுதம் பலத்தால்
முகஞ்சிதைத்துத் தங்களது 海
6H է0 • •ه
‘မွိုးနှိမှိနိါရှိ #
சிரிக்கின்ற நடைமுறையில்.
மாயமானாய் வந்து மயக்கி நம்வேர் அழிக்கும்.
போரைத் தவிர்ப்பதுவும்
புகழென்று புகலுவிரோ?
இ0)
"யாரொடும் பகை கொள்ளலன் எனின்
யாரோடும் பகைமை கொள்ளாதிருப்பதுவும்,
வலிந்து பகைப்போரும்போரைத் திணிப்போரும்
'உலகமயமாதல் எனும் விசுவ ரூபத்துள்
எளிமைகள்; சிறுபான்மைத் தத்துவத்தை; வளர்ச்சிகளை; " - - - விழுங்கித் தமைவளர்க்கும் விண்ணர்களும்; சமயத்தில் • இலக்கியத்தில், மொழியில்
கீய்ம்காட்டும் விழுமிய்த்தில் சுரண்டி, நிமிர்வகற்றி
முகழ்டி த்ன்ன்எம்க்கு மிகுடமாகத் தருவோரும், LD655
யாரொடும் பகைமை கொள்ளா திருப்பதுவும்,
எவ்வர்றெனினும், நர்வுல்ஃஇலக்கிய
வரலாற்றில் தன்பெயரை வலுவாக்கவே பொறித்துக் கொண்ட சுதந்திரராஜா
அவர்கள் சிறுகதைத்துறையிலும் மேற்படி கதைகளினுடாகத் தன்னை இனங்
காட்டியுள்ளார். அவரது சிறுகதைகளினூ
டாகத் தன்னை இனங்காட்டியுள்ளார்.
அவரது சிறுகதைகளில் காணப் பட்டவுை
யாக எடுத்துக்காட்டப்பட்ட பலம், பலவி
“னங்களுக்கு அப்பர்ல் சுமார் முப்பது ஆண்
டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வரும் அவரது முயற்சி பாராட்டப்படத்
தக்கதாகும். கதைகளினூடாக வெளிப்படும் அவரது கொள்கை நிலைப்பாடு, அஞ்சா நெஞ்சு, நேர்மை என்பன விதந்துரைக்
கப்படத் தக்கன. அவரது இம்முயற்சிகள் மேலும் தொடர்தல் வேண்டும்.
த.ஜெயசீலன்
 
 
 
 

Z
g கௌதமன் னறாவது முறையாகவும மண்ணுக்கு வந்த செய்தி கேட்டு !மள்ள்கள் மகிழ்ச்சி கொண்டனர் ابن الله
ဇွို வரவேற்புப்பலகையில TALO GENTIELD AN புதிய $ இருந்தது ಫ್ಲೆ ரீ ಕ್ಲಿಕ್ಕಿ , . . . ஊடகங்கள் பேசிக் கொண்டன: மணிபல்லவம்' என்பதில்தான் கௌதமனுக்குப் பிரியம் தேசத் தலைவியைச் முனனா இருமுறை சந்திக்க் எண்ணித்தூதனுப்பினான்
நூேல் ತಿಗ್ಹೇಳ್ತೀನಿ. கர்ங்கேசத் AIGAITA: கரழி ங்கினான்: முதல் மந் திரியாரும் 體 ளைபபர முதன்மைய்ாய் வந்து பணிந்து
Lம தேடினான: ஆசிபெற்று ஏகினார்! சுற்றிவரக் குடிமனைகள்
ိဗ္ဗိနီ နှိုးနှီး” நீளத் துண்டுக் கட்டங்கள் வடக்கு நோக்கிப் பழந்தன! ஒருபுறம் வெறுந்திடல் ஈஸ்வர்ன், விநாயகன், மத்தியில் ஒருஅம்மன் கோவில் முருகள் என அததனையும மும்மூர்த்திகள் மட்டுமல்ல ಕ್ಲಿಕ್ಹತ್ಲಿ ப்ஞ்ச்கிருத்தியர்கள், ஆள்ரம்அற்றுக்கிடந்தன பாலகர்கள், 9DLOR ဖြိုးဝှိစ္စံ ။ நவக்கிரகர்கள், வேதியர் அரச மரம் மட்டும் எழுந்து நின்ற்து சப்த தேவர்கள்,
தசக்கிரீவர்கள், ! தென்தடிநீழல் மணிகண்டத்தார், விமல அங்கு கிடைத்தது வம்சத்தார், மகிந்தர்கள், தங்கனான E Irrari ! ருட் வாகனர்கள், தங்கித் தகவல் கொடுத்தான்! ஸ்ரந்து வந்து வணங்கி
e ஆசிபெற்றுக்கொழும்பேதினர் கௌதமன் தடி நிழல் மகா நர்யக்கர்களுக்குக் கொஞ்சம்
தீதச் மனப்புழுக்கம்! யினும் ே པ་གང་ཟགས་ அநநிய நாட்டவராயினும் தங்கித் தகவல் கொடுத்தான்! 器 ់ னும் தேடி ܓܠ
彰
Nasliño

Page 28
  

Page 29
செய்திப் பத்திரிகையாகப் பதிவு செய்யப்பட்ட Registered as a News Poper in Sril
தேசிய கலை இல புதிய ெ
கிடைக்
சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேற் லிமிடட்,
1. மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்ே கொழும்பு-11
L தொலைபேசி 335844
இச்சஞ்சிகை தேசிய கனலை இலக்கியப் ே வசந்தம் நிறுவனத்திலுள்ள க, தணிகாசல
 

Onka.
லை காட்டுவீர் - அதில் ள் ஒட்டுவீர்.
-பாரதி
கத்தின் alien
க்கிய பேரவையின் வளியீடுகள்
துேம் இடங்கள்:
வசந்தம் புத்தக நிலையம் 蠶 வீதி,
தாகுதி
பரவைக்காக யாழ்ப்பானம் 405,ஸ்ரான்லி வீதி, ம் அவர்களால் அச்சிட்டு வெளியிடபபட்டது.