கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 1996.08-09

Page 1
H.I.E. G.I. IHIJ.
 
 
 
 

Qu』シ Noecege,)
T
"LA LIGILL

Page 2
lith 454t
FCW
6, JAWA MWA
Di:H TF 7
N

Uisle, Šlo
O PRINT
RDENA AVE WALA, 3-770

Page 3
(படைப்புகள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள்
\கருத்துக்களை எழுதுங்கள்.
உள்ளே.
நேர்காணல்
எம்.ஏ.நுஃமான்
கவிதை
சோலைக்கிளி, ஜெயபாலன்,
றஜிசன், இக்பால், மனோ, பாசில்,
மேமன்கவி, றவிடிமி, பௌசர்.
சிறுகதை
உமாவரதராஜன்
கட்டுரை
மோட்டார் சைக்கிள் டயறி,
தீர்வும் சமாதானமும் யுத்தமும், நமது மண்ணில் தமிழக
படைப்பாளிகள்,
ஈழத்து இலக்கிய பேரரங்கு.
- Líp ....
புத்தக பக்கம், கருத்து பக்கம்.
 
 
 
 
 
 
 

-
மனிதன்
முன்றாவது
வர்த்தைகளைசிங்ாக்கிவிட்டது
t
- Au

Page 4
(Uன்றாவது மனிதன் -2
ஆமாம், அ மலர்கள் நி கண்ணுக்கு அந்த ஆண் வீதிகளில்
அந்த ஆண் குளிர் மிகவு சூரியன் பெ ஆனால் பா
நுங்கு குடித் அணிலுக்கு அந்த ஆண் சுவாத்தியம் கனிகள் உ கிளைகள் ( கையடிக்கும் கசங்கிச் சி இந்த ஆண்
எவவளவு து நாம் முதன் சிறுநீரைப் ட இந்த ஆண் ஆண்டிகள்
அந்த ஆண் ஒரு மழைக் நாம் வீதியெ நினைவுண்ட காக்கை கு நீ கேட்டாே மிக அருடை
எனக்கு நிை உனக்கும் ந காக்கையெ6 தாளத்தில் அது சரி, ஆ மனிதப் பஞ் தன் வாத்தி வெட்கத்தாலி உயிர் இருந் அவன் ஆவி நாம் ஜன்ன அலைவது!
பேராசைப் ட மரணக் குளி
 
 

ந்த ஆண்டு
றையப் பூத்திருந்த ஓர் ஆண்டு
மை தீட்டிய பல பெண்கள்
டில்
உலவினர் தேர்போல்,
டில் பும் அதிகம் உலகிற்குள். யருக்கே வந்தது ஸ்தான் ஒழுகியது.
துப் பல சிறுவர்
ம் விருந்துவைத்த
டில்,
மிக நன்று, அதனாலே மரங்கள் திர, கிளிக் கத்தலுக்குத் தாளமிடும். முறியாது. ۔۔۔۔ ) கன்னிகளும் - றுகாயம் ஏற்பட்டு நோகாமல் டிற்கும், அந்த ஆண்டிற்கும் தூரம் நண்பனே!
முதலாய் சந்தித்த அந்த ஆண்டின் பருக்கினாற்கூட இந்த ஆண்டிற்கு தகும். (6
நடமாடும் ஊர் வரண்ட பூதம்.
L965
காலத்தில்
பான்றில் கதைத்திருந்தோம்.
II?
பில்போல பாட
,
Dயான சங்கீதம் அல்லவா இதுவென்று!
}னவுண்டு
நினைவிருக்கும்!
ன்ன, புழுவும் நெழிந்த காலமடா அது! Hப்போது வந்த பெரும் மழையென்ற இசைக் கலைஞன் சம் ஏற்பட்டு
யத்தை விற்று ல் நஞ்சருத்திச் செத்தானாம் மெய்யா! தால் வந்திருப்பான். தானா இடைக்கிடை அழுவதும் லைத் திறந்தால் மறைவதுமாய்
ாடகன், இன்னும் இந்த மண்ணில் பற்று வைத்த ரிக்குள் அடங்காத ஆத்மா.

Page 5
“இன்னும் பத்து வருடங்களாவது வாழக் கிடைத்தால் ஏதாவது
உருப்படியாகச் செய்யக்கூடும்’
இவரால் எழுதப்பட்ட திறனாய்வு நூலில் 'மார்க்ஸியமு மஹாகவியை அவருடைய கவிதைகளை தமிழ் படைப்புல
(tglug!
தற்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை சிரே
'மானுடம் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி விட்ட சூழலில் வாழ்வு
உங்களை யாராக அதிகம் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?
இலக்கிய உலகைப் பொறுத்தவரை ஒரு படைப்பாளியாக வெளிப்படுத்திக் கொள்வதையே பெரிதும் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் விமர்சனத்தை விட, ஆராய்ச்சியை விட படைப்புத்துறை அதிக திருப்தி தருகிறது எனக்கு.
 
 
 

(Uன்றாவது மனிதன் -3
ம் இலக்கியத் திறனாய்வும்' அதிக பார்வைக்குரியதாயிற்று. சின் பார்வைக்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கு பேசப்படக்
1ஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி எம்.ஏ.நு:மான்
து மிகுந்த துன்பம் தருவது'
fழத்தில் மூன்று தலைமுறைகளாக, தனது முதன்மையான
இருப்பை நிலைநிறுத்திக் கொண்டு தமிழுக்கு வளம் சேர்க்கும். தமிழ் மொழியியல் அறிஞர், கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என பல்வேறு தளங்களில் நீண்டகால பங்களிப்புள்ளவர் கலாநிதி எம்.ஏ.நு:மான்.
பல அணி சார்ந்து வளர்ந்த இலக்கிய வளர்ச்சியில் "காமம் செப்பாது கண்டதுமொழிகிற'திறனாய்வாளராக நு:மானை கொள்ளலாம் என்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக தமிழ் முஸ்லிம் வன்முறை இடைவெளிகளில் தனது பெளதீக இருப்புகள் பாதிக்கப்பட்டும் கூட தொடர்ந்தும் தமிழையும், தமிழர்களையும் தேசிக்கும் உயர்ந்த மனிதன்.
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் விமர்சன முன்னோடி 1980களின் பின் ஈழத்துக் கவிதைப் போக்கில் உருவான அரசியல் சார்ந்த எதிர்ப்பிலக்கிய கவிதையின் ஆரம்ப கர்த்தாக்களில் முதன்மையானவர். இவரது "துப்பாக்ச| அரக்கனும் மனிதனின் விதியும்' என்ற கவிதை அடக்குமுறைக்கெதிரான உண்மையான ஒரு கலைஞனின் சத்தியக் குரல்.
"தாத்தாமார்களும் பேரர்களும் " "அழியா நிழல்கள் "
'மழைநாட்கள் வரும்' என்பன இவரது கவிதைத் தொகுதிகளாகும். இவரது "பலஸ்தீனக்கவிதைகள்' தமிழ் மொழி பெயர்ப்பின் பின் நவீன தமிழ்க் கவிதையின் போக்கில் முக்கிய மாறுதல்கள் ஏற்பட்டன.
என்கிறார்.
என்றாலும் அண்மைக்காலமாக எனது படைப்பூக்கம் மங்கிவிட்டதாகவே தோன்றுகின்றது. அன்றாட வேலைச் சுமைகள், நெருக்கடிகள் என்னும் புகை மூட்டத்துள் சாம்பல் மூடிய தணல் போல் அது அடங்கிக் கிடக்கிறது. அது சிலவேளை முற்றிலும் அணைந்துவிடலாம். அல்லது, மீண்டும் கொழுந்து விட்டு எரியலாம். அதை ஊதி எரிய வைக்கவே நான் முயல்கிறேன்.

Page 6
(Uன்றாவது மனிதன் -4
இது எப்படியானாலும் சமூக வாழ்க்கையைப் பொறுத்தவரை என்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறேன். மனிதன் என்ற அடையாளம் மற்ற எல்லா அடையாளத்தையும் விட உயர்ந்தது. ஆனால் நாம் இன்று அந்த அடையாளத்தைத் தொலைத்து விட்டு வேறு எவற்றையெல்லாமோ சூடிக்கொள்ளப் போராடுகிறோம். மானுடம் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகிவிட்ட சூழலில் வாழ்வது மிகுந்த துன்பம் தருவது. ஒரு இலக்கியத்தின் வெற்றி தோல்வியை காலத்தால் அதற்கு ஏற்பட்ட செல்வாக்கையும் காலமாறுதலால் அதற்கு விளைந்த செல்வாக்கு இழப்பையும் வைத்து மதிப்பிட முடியுமா? இலக்கியத்துக்கு வெற்றியோ தோல்வியோ இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். ஒரு படைப்பு செல்வாக்குப் பெறுவதற்கும் பெற்ற செல்வாக்கை இழப்பதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். செல்வாக்கை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது. ஒரு உயர்ந்த படைப்பு காலமாறுதல்களின் ஊடாக தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. ஏனையவை பாறைப்படிவுகளாக இறுகிப் போகின்றன.
இன்று போரினால் சிதைந்து போய்விட்ட யாழ் பல்கலைக்கழகம் அன்று உங்களுக்குப் பல அனுபவங்களைத் தந்திருக்குமென நம்புகிறேன். அதனை நினைவுகூருங்களேன்? யாழ்.பல்கலைக்கழகத்தில் சுமார் பதினைந்து ஆண்டு காலம் பணிபுரிந்திருக்கிறேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. எனது வளர்ச்சியில், உருவாக்கத்தில் அதற்குப் பெரும்பங்கு உண்டு. என் வாழ்க்கையில் மிகுந்த சந்தோசமான ஆண்டுகளை, பயன்மிகுந்த ஆண்டுகளை நான் யாழ்ப்பாணத்தில் கழித்திருக்கின்றேன். யாழ்ப்பாணம் எனக்குக் கற்றுத் தந்தவை அநேகம் . அதன் அழிவு நம் காலத்து மாபெரும் சோகம். இந்தச் சோகம் எழுத்தில் இன்னும் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. எனது அனுபவங்களை ஏதோ ஒரு வடிவத்தில் பதிவு செய்யவே முயன்று வருகிறேன். அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கும் நீங்கள், (வியூகம் -பேட்டி) ஆயுதப் போராட்ட எழுச்சி உச்சமடைந்த காலகட்டத்தில் பலஸ்தீனத்தில் தோன்றிய வீறார்ந்த உணர்ச்சிதரும் கவிதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்து தந்திருக்கின்றீர்களே இது எதிர்

மறையான ஒரு விடயமில்லையா?
மனித வரலாறு முழுவதும் போராட்டத்தின் வரலாறுதான். வன்முறைப் போராட்டங்களின் ஊடாகவே மனித வரலாறு நகர்ந்து வந்திருக்கிறது. அவ்வாறு பார்க்கும் போது மனித விலங்கு ஒரு போரிடும் விலங்குதான். ஏனைய விலங்குகளைவிட குரூரமானதாகவே எனக்குத் தோன்றுகிறது. இந்த வன்முறைப் போராட்டத்தை புரட்சி என்றவகையில் ஒரு அரசியல் சித்தாந்தமாக வடிவமைத்தவர் கார்ல் மாக்ஸ் தான். ஆயினும் அவரது நோக்கம் உயர்வானது. சுரண்டல் அற்ற, ஏற்றத் தாழ்வுகள் அற்ற, அடக்குமுறைகள் அற்ற, போர்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க, எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபட்ட ஒரு முழுமையான மனிதனை உருவாக்க ஆயுதம் தாங்கிய பாட்டாளிவர்க்கப் புரட்சியால்தான் முடியும் என்று அவர் நம்பினார். ஆனால் நாம் அறிந்த புரட்சிகளின் அனுபவம் அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
வன்முறை வன்முறையையே பிரசவிக்கின்றது. அது அடக்குவோரின் வன்முறையாயின் என்ன? அதற்கு எதிரான அடக்கப்படுவோரின் வன்முறையாய் இருந்தால் என்ன. இது ஒரு நச்சு வட்டமாகவே சுழல்கிறது என்பதுதான் நமது அனுபவமும் . வன்முறையின் ஊடாக மனித விடுதலை சாத்தியமா என்பதில் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆயுத உற்பத்தியாளரின் பணப்பைகளை நிறப்புவதற்ககே அது பெரிதும் பயன்படுகிறது. அதனாலேயே நான் வன்முறை அரசியலில் நம்பிக்கை இழந்தேன். மனித விடுதலைக்கு மாற்றுவழிகள் உண்டா என்று நாம் தேட வேண்டும்.
கலகம் பிறக்காமல் நியாயம் பிறக்காது என்பதை மனித இயற்கையின் ஒரு மாறா விதியாக நாம் ஒப்புக்கொண்டால் கலகத்தினால் - யுத்தத்தினால் ஏற்படும் பேரழிவுகளையும் இயல்பானது, தவிர்க்க முடியாதது என்று ஏற்கவேண்டியிருக்கும். அதனை நியாயப் படுத்த வேண்டியிருக்கும். அது நம்மால் முடியவில்லை. நமக்கு அமைதி வேண்டும்; சமாதானம் வேண்டும்; விடுதலை வேண்டும். ஆனால் மனிதன் தொடர்ந்தும் போரிடுகிறான். ஒருவன் பிறிதொருவனை, ஒருவர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை, ஒரு இனம் பிறிதொரு இனத்தை அடக்கவும் , அடிமைப்படுத்தவும் ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின்றது. இது மானுடத்தின் நெருக்கடி,
முரண்பாடு. -

Page 7
இந்தப் பின்னணியில் பலஸ்தீனக் கவிதைகளை நான் மெ நான் 1970களின் தொடக்கத்தில் இருந்தே அவ்வப்பே பெயர்த்து வந்திருக்கிறேன். அப்போது ஆயுதப் புரட்சிய கவர்ச்சி நீங்கிவிட்டாலும் ஆயுதப் போராட்டத்தை ஒரு - முடியாவிட்டாலும் அடக்குமுறைக்கு எதிராக; சுரண்டலு சமூக சமத்துவத்துக்காக, நீதிக்காக போராடும் மக்களின் கவிதைகள் இன்றும் எனக்கு மிக நெருக்கமாக உள்ளன. ே காண்கின்றேன், அடக்குமுறைக்கு எதிரான விடுதலை அவற்றில் கேட்கிறேன். இந்த வகையில்தான் ஏனை விடுதலைப் போராட்டக் கவிதைகளையும் நான் கான்
பெயர்த்திருக்கிறேன்
வரலாற்று வளர்ச்சி என்பது அஞ்சலோட்டம்
போன்றது. ஒருவர் கொண்டுவரும் தடியை
எடுத்துக் கொண்டுதான்
வேகத்தைவிட பின்னவரின் வேகம் அதிகமாய் இருத்தல்
வேண்டும். வெற்றியில் எல்லாருக்கும் பங்கு உண்டு. இறுதியாக
ஓடியவர் நான்தான் ஒடிமுடித்தேன் என்று
இல்லை.
இலக்கியத்தில் 6 - நேர்மையான வி குற்றச்சாட்டுக் குறி
குழுமனப்பான்மை விமர்சனத்திலேயே தல்ல, சுலபத்தில் சி என்னவோ உண் படைப்பாளிகளிடத தங்கள் படைப்புகள் புகழ்ச்சியிலேயே பூரி அவர்களது குறிக்ே விமர்சனத்தை அவர் சுதந்திரத்தை மதிக்க குழுமனப்பான்மை ( சொல்வதானால் விப இல்லை. விமர்சகனு இயங்குகின்றான். அ மிக்க விமர்சகர்கள் ந
படைப்பிலக்கியம் குறிப்பாகச் சொல்ல
சமூக முன்னேற்றத்து மார்க்சீயர் கருதுக் மறுக்கமாட்டார்கள் 6
கைலாசபதி, சிவத் பரம்பரையினர் இன்
எல்லாரும் திருப்தி நடுநிலையான சிந்த நோக்கினால் இவ வேண்டியிருக்கும். அடுத்த தலைமுை அஞ்சலோட்டம் ே
 

(Uன்றாவது மனிதன் -5
ழிபெயர்த்தது உங்களுக்கு முரண்பாடாகத் தோன்றலாம். து எனக்குக் கிடைத்த பலஸ்தீனக் கவிதைகளை மொழி ல் எனக்கு ஒரு கவர்ச்சியும் இருந்தது. இப்போது அந்தக் அரசியல் சித்தாந்தமாக இன்று என்னால் ஏற்றுக்கொள்ள க்கு எதிராக, இன ஒடுக்கலுக்கு எதிராக, விடுதலைக்காக, பக்கமே நான் இருக்கிறேன். அந்த வகையில் பலஸ்தீனக் பார் வெறியை அன்றி போரின் குரூரத்தை நான் அவற்றில் பின் குரலை, அநீதிக்கு எதிரான நீதியின் குரலை நான் ப ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய ாகின்றேன். அவற்றில் சிலவற்றைக் கூட நான் மொழி
ா. என்னைப் பொறுத்தவரை இதில் முரண்பாடு எதுவும்
விமர்சனம் இன்று குழுமனப்பான்மையில் மூழ்கி மர்சனத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறதென எழும் த்ெது.
க்கு அப்பாலான, நடுநிலையான நேர்மையான எனது அக்கறை குவிந்துள்ளது. ஆனால் அது இலகுவான த்திப்பதல்ல. குழுமனப்பான்மை மேலோங்கி இருப்பது மைதான். அது விமர்சகனிடத்து மட்டுமல்ல; ந்தும் உள்ளது. நமது பெரும்பாலான படைப்பாளிகள் ள் உயர்த்திப் பேசப்படுவதையே விரும்புகின்றார்கள். ரித்துப் போகிறார்கள். படைப்பினால் கிடைக்கும் புகழ்தான் காள் என்று தோன்றுகின்றது. அதனால் எதிர்மறையான ர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. விமர்சகனின் அபிப்பிராய ாது அவனை நிராகரிக்கவும் திட்டவும் முனைகின்றனர். என்று முத்திரை குத்தவும் முயல்கின்றனர். நான் இவ்வாறு மர்சகனைக் காப்பாற்ற முனைகிறேன் என்று கருதத்தேவை ம் தான் சார்ந்தவர்க்கம், கருத்துநிலை, இவற்றுக்கேற்பவே வற்றை உடைத்துக்கொண்டு வெளிவரும் சிந்தனைத்திறன் தம்முள் மிகக் குறைவுதான்.
பற்றி மார்க்ஸியத்தின் கோட்பாடு என எதையும் Ù (1pւգսյաn?
|க்கு மனித விடுதலைக்கு அது பயன்பட வேண்டும் என்று கின்றனர். மார்க்சீயச் சார்பற்றவர்களும் இதனை என்று நம்புகிறேன். தம்பி போன்றவர்கள் குறித்து ஈழத்தைச் சேர்ந்த ஒரு ானும் திருப்தி கொள்ளவில்லையே அது ஏன்? பட வாழமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நனையோடு, வரலாற்றுப் பார்வையோடு இவர்களை ர்களது சாதனை பெரிது என்பதை ஒப்புக் கொள்ள இவர்கள் செப்பனிட்ட பாதையில் தான் இவர்களுக்கு ற நடைபயில்கிறது. வரலாற்று வளர்ச்சி என்பது பான்றது. ஒருவர் கொண்டுவரும் தடியை எடுத்துக்

Page 8
(Uன்றாவது மனிதன் -6
கொண்டுதான் மற்றவர் ஓடவேண்டும். முன்னவரின் வேகத்தைவிட பின்னவரின் வேகம் அதிகமாய் இருத்தல் வேண்டும். வெற்றியில் எல்லாருக்கும் பங்கு உண்டு. இறுதியாக ஓடியவர் நான்தான் ஓடிமுடித்தேன் 6T6র্তা 0; சொல்ல (Մ) tԳ եւ III:Ֆl. கைலாசபதி, சிவத்தம்பியுடன் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது உண்மைதான். அதற்காக அவர்களது சாதனையைக் குறைத்து மதிப்பிட முடியாது. இவர்களை நிராகரிப்பவர்கள் இவர்களது எழுத்துக்களை முழுமையாகப் படிக்காதவர்கள் : மற்றும் படி திருப்தியீனம் இவர்களை மீறிய, ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கியதாக இருந்தால் அதுவரவேற்கத் தக்கதுதான். அதையே அவர்களும் விரும்புவார்கள். தனக்கென சில கொள்கைகள், அந்தக் கொள்கைகளில் தளராத அசையாத நம்பிக்கை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள் மட்டுமே சிறந்த இலக்கியங்களை தரமுடியும் என வாதிடுபவர்கள் குறித்து.
நான் அப்படி நம்பவில்லை. நல்ல இலக்கியப் படைப்புக்கு கொள்கைப்பிடிப்பு மட்டும் போதாது. படைப்புத் திறனும் வேண்டும். தீவிர கொள்கைப் பிடிப்புள்ள மோசமான படைப் பாளிகள் பலரை நமக்குத் தெரியும் . அத்தகைய பிடிப் பற்ற சிறந்த படைப் பாளிகளையும் நமக்குத் தெரியும் நல்ல படைப்புக்குத் தேவை ஆழ்ந்த, அகன்ற அனுபவமும் அந்த அனுபவத்தைப் பொருள் கொள்ளும் நுண்ணிய உணர்திறனும் படைப்புத் திறனும்தான். கொள்கைப் பிடிப்பு இதற்கு மேலதிகமானதுதான். சமீபகாலமாக உங்களது விமர்சனமுறை, கருத்துக்கள் மிகவும் நழுவல் போக்கில் இருப்பதாகவும் முன்பிருந்த நுஃமான் இப்போது இல்லை எனவும் கூறப்படுகிறதே? இதைக் கேட்கும் போது நசுறுத்தீன் முல்லாவின் கதை ஒன்று ஞாபகம் வருகின்றது. முல்லாவிடம் ஒருவர் கேட்டார். 'முல்லா உங்களுக்கு வயது எத்தனை? ' "நாற்பது' என்று பதில் சொன்னார் முல்லா. 'என்ன முல்லா, ஐந்து வருடத்துக்கு முன்பு கேட்டபோதும் நாற்பது என்று தானே சொன்னீர்கள்' என்றார் கேட்டவர். "இங்கே பார் அப்பா, எனக்கு நேற்று ஒரு 'பேச்சு இன்று ஒரு பேச்சு பேசும் பழக்கமே கிடையாது. நான் எப்போதும் ஒன்றைத்தான் சொல்வேன்' என்று பதில் சொன்னார் முல்லா. இந்தக் கதை நமக்குச் சிரிப்பூட்டுகின்றது. ஆழ்ந்த சிந்தனையையும்

தூண்டுகின்றது. நாம் எப்போதும் நாற்பது வயசிலேயே இருக்கமுடியாது. கால மாற்றம் என்பது வெறும் ஆண்டுக் கணக்கல்ல. அது நமது அனுபவம், அறிவு, கருத்துநிலை எல்லாவற்றிலும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. கால வளர்ச்சிக்கேற்ப தன்னை வளர்த்துக் கொள்ளாதவன் கட்டித்து இறுகிப் போகிறான். பத்து இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நுஃமான் அல்ல இன்று இருப்பவன். அன்று பேசிய அதே குரலில் இன்று நான் பேசவில்லை என்பதை ஒரு குறையாக நான் கருதவில்லை, இன்று நான் பண்பாட்டுப் பன்மைத்துவத்துக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கின்றேன். இலக்கிய விமர்சனத்தில் மட்டும் நான் இப்பார்வையைப் புறக்கணிக்க முடியாது. பலவகையான இலக்கியப் போக்குகள் உள்ளன. அவற்றுள் ஒன்று எனக்குப் பிடித்தமானது என்பதற்காக ஏனையவற்றை என்னால் நிராகரிக்க முடியாது. எள்ளி நகையாட முடியாது அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவற்றைப் புரிந்து கொள்ள எனது விமர்சனப் பார்வை உதவவேண்டும். 1960, 70களில் கவிதை பற்றி என்னிடம் சில இறுக்கமான கருத்துக்கள் இருந்தன. அவற்றுக்குப் புறம்பானவற்றையெல்லாம் கவிதை அல்ல என்று எளிதாக நிராகரிக்க முடிந்தது. இன்று அவ்வாறு நிராகரிக்க முடியவில்லை. கவிதைகள் பலரகமாக இருக்கின்றன; எனக்குப் பிடிக்காத ரகத்தையெல்லாம் கவிதை அல்ல என்று நிராகரிப்பது அதிகாரத்துவ மனப்பாங்கின் வெளிப்பாடு என்று இன்று எனக்குத் தோன்றுகின்றது. மற்றும்படி என் கருத்துக்களில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.
ஈழத்து இலக்கியத்தில் அதிக அரசியல் வாடை அடிப்பதாக கூறப்படுகின்றது. 1984ல் கூட 'வண்ணநிலவன்' ஈழத்து தமிழ் இலக்கியத்தின் அரசியல் சார்பைக் கண்டித்து 'ஈழம் இந்த வியாதிக்கு உடனடியாக நல்ல கஷாயம் சாப்பிட வேணும்' எனக் கூறியுள்ளாரே இதற்கான உங்களது பதில் என்ன?
மனிதனை அரசியலில் இருந்து பிரிக்கமுடியுமானால் இலக்கியத்தையும் பிரிக்க முடியும் . இரண்டும் சாத்தியமல்ல என்றே நினைக்கின்றேன். இலங்கையில் அரசியல் முரண்பாடு உக்கிரமாக இருக்கும்போது இலக்கியத்தில் அதன் வாடை வீசாமல் இருக்க முடியாது. இங்கு துப் பாக்கி மனித உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கும் போது தோட்டத்துக்கு வெளியில் உள்ள சில பூக்களைப் பற்றி எங்களால் கவிதை எழுதிக் கொண்டிருக்க முடியாது

Page 9
என்பதைத்தான் வண்ணநிலவனுக்கு - அவர் அவ்வாறு சொல்லியிருந்தால் - பதில்ாகச் சொல்ல விரும்புகிறேன். இன்றைய சூழலில் மொழியின் அடிப்படையை மறுதலித்து இனரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்து நீங்கள் அச்சப்படுகின்றீர்களா?
ஆம்.இந்த இடைவெளி அச்சம் ஊட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியைக் கடந்து செல்லப் பாலம் அமைக்க வேண்டிய படைப்பாளிகளே இன அடையாளங்கள் பற்றி அதிக அக்கறை காட்டுவது எனக்குக் கவலை தருகிறது. இந்து முஸ்லிம் முரண்பாட்டுக்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் பலர் நிறைய எழுதியிருக்கிறார்கள். நமது எழுத்தாளர்கள் அதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இன்றைய படைப்பாளிகளில் அதிகமானோர் தங்கள் வசதிக்காக அதீத கற்பனை உத்திகளை பயன்படுத்துகின்றனர், இது யதார்த்த வாதத்திற்கு எதிராகுமா?
(5 படைப்பாளி தன் உணர்வை வெளிப்படுத்தவதற்குப் பொருத்தமான எந்த உத்தியையும் கையாளலாம். அது அவனது உரிமை. ஆனால் இது ஒரு Fashion ஆக மாறக் கூடாது.
போலியாகப் பின்பற்றப்படக் கூடாது. கவிதையின் மொழியில் அதீத கற்பனைக்கு எப்போதும் இடம் இருந்தே வந்திருக்கிறது. நாவல், சிறுகதை என்பன யதார்த்தத்தையே பெரிதும் வேண்டி நிற்கின்றன. எனினும் இன்று யதார்த்தவாதத்தை நிராகரிக்கும் கோட்பாடுகளும் உள்ளன; இலக்கியத்தில் எல்லாப் போக்குகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
தமிழில் புதுமைப்பித்தன், மெளனி, அசோகமித்திரன் போன்றவர்களை நவீனத்துவப்பானி படைப்பாளிகள் என பட்டியலிடுகின்றனர். ஈழத்தில் அப்படி உங்களால் கூறக்கூடிய நவீனத்துவப் பாணி படைப்பாளிகள் யார்? நவீனத்துவ பாணி என்பதை Modernism என்ற அர்த்தத்தில் கையாள்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இது ஐரோப்பாவில் 1940 களில் உருவாகிய கலைக்கொள்கை, 1960கள் வரை இது நீடித்தது. இதனை நவீன வாதம் என்று நாம்

(ன்றாவது மனிதன் - 7
அழைக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் யாரும் இதன் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. இங்கும் அப்படியாரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை.
கவிதை குறித்து வாசகர்களிடையே குழப்பமான சூழல் நிலவுவதால் அடிப்படையில் கவிதை என்றால் என்னவென்று விளக்குவீர்களா?
கவிதை என்றால் என்ன என்று சில வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது. பல ரகமான கவிதைகள் உள்ளன. ஆழமானவையும் அற்பமானவையும் உள்ளன. எல்லாவகையான கவிதைகளிலும் பரிச்சயம் கொள்ளும் போதுதான், பயிற்சி பெறும் போதுதான் நல்ல கவிதையை இனங்காண முடியும்.
இந்த இலக்கிய வாழ்வு உங்களுக்கு நிறைவாக இருக்கிறதா? நான் இலக்கிய வாழ்வு வாழவில்லை. பல்வேறு வாழ்க்கைச் சோலிகளுக்குள் நெருக்கடிகளுக்குள் . இலக்கியத்துடனும் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறேன். இப்போது 52 வயதாகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பு, விமர்சனத்துறைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனினும் எனது அறுவடை மிக மிகக் குறைவு. அந்த அளவு அர்ப்பணிப்போடு இத்துறையில் நான் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்றது. இந்தக் கால கட்டத்துள் நான் செய்திருக்கக் கூடியவற்றுள் செய்திருக்க வேண்டியவற்றுள் பத்தில் ஒன்று தானும் நான் செய்யவில்லை என்ற ஆதங்கம் நெஞ்சை உறுத்துகின்றது. இன்னும் பத்து வருடங்களாவது வாழக் கிடைத்தால் ஏதாவது உருப்படியாகச் செய்யக் கூடும்.
பொதுவாக இன்றைய ஈழத்தின் சிற்றிதழ் சூழல்பற்றி உங்கள் கணிப்பு என்ன?
இலங்கையில் வர்த்தக ரீதியான இதழ்கள் இல்லை எல்லாமே சிற்றிதழ்கள்தான். நமது சிற்றிதழ்கள் விட்டில்கள் போல் மிகவும் அற்ப ஆயுள் உடையவை. 'மல்லிகை', 'அலை’ போல் விதிவிலக்கு சிலதான். பெரும்பாலானவை இளைய தலைமுறையின், ஆரம்ப சாதகர்களின் வெளியீட்டுக் களமாகவே உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காணப்படுவதுபோல் ஒரு சிற்றிதழ் சூழல் பற்றி இங்கு பேசமுடியும் என்று தோன்றவில்லை. ஒரு தெளிவான கருத்தியல் தளத்தில் செயற்படும் சிற்றிதழ்கள் நம்மத்தியில் தோன்ற வேண்டும்.
சந்திப்பு: எம்.பௌசர்

Page 10
(Uன்றாவது மனிதன் - 8
S( صص
சூரியன் அன்று பெண்ணாய் அழகின் சுவாலையை ரவிக்கையுள் கண்களில் தீ நாக்குக போர்ப் பேய்களி கிழக்குக்கரையும் மேற்குக் கரையுமா
சூரியப் பெண்ணை உலகம் மாறி விட்டதை உண
நில்லடி தி
ஆறுக உன்
ஒரு மென்மலர்க் கவி உன் பார்வையின் தீை
s நிலம் ரே உன் கண்களை நோக்கிப் பேச விரு
எக்காலத்திலும் நான் கண்டதில்ை
G.
என்கிறபோதேன் ஏளன "உலகம் இப்படியேதான் இருக்கிறது
:×: நீதான் மாறி என்றும் இருந்தனர் சூரியப்
அன்றுன் கண்களில் ஆ என்றேன். நகை எனது மண்ணையும் விண்ணையும் உ
எனது காலத்து பெண்கு
மன்னித்துக் கொ
ஆண்குருடனாய் பஞ்சகல்யாணிகள் மேய்கிற
கழுதையாய் இருந்து வாழ்வைத் தொ
மனிதரின் ஒரு வழிப்
நெடுந்தூரம் வந்து விட்டேன் !
எல்லாவற்றிலும் பாதியை இழந்துபோன கவி
என்றாலும்
திருமணம் வரைக்கும் தம்முடை? குளிர்பதனப் பெட்டியுள் உறைந்:
நம்ப விரும்புவோர்
எனையேன் நை
ح

இருந்தது.
முடிந்து ள சுழல, ன் தீவில் பத்திரிகிற க் கண்டு
ார்ந்தேன்.
டந்தோழி
ஏறுநடை நன் நான் யத் தணி
தாக்காமல்
Líbuó(360T6ör.
ல சூரியப் பெண்ணை ாச் சிரிப்பு கவிஞனே
விட்டாய் பெண்கள் பூண்குருடு" க் கிறாய் தைத்தது
மின்னல்.
ரியர்களே ஸ்ளுங்கள் இருந்தேன் வெளியில் லைத்தேன் பாதையில் }ப்படியே. சூன் நான் ரிக்காதே.
னைவியர் ருந்ததாக தேசத்தில் கக்கிறாய்?
O
பறவையினங்களும் விலங்கினங்களும் எண் முகத்தில் எச்சமிடுவதாக மலம் கழித்துக் கொண்டிருப்பதாக
என் தலையை நிமிர்த்தி இதழ்கள் கிழித்து இரத்தம் வழிய விருட்சங்களில் தொங்கிய பேய்கள் முத்தமிடுவதாக
நான் வாழ்வு கற்ற மக்கள் ܐ̈ܠ இரு துப்பாக்கி சனியன்களின் முனைகளின் அழுத்தத்தில் முகம் வதைவதாக பின் துப்பாக்கிகளாகவே அவர்கள் மாறுவதாக
போர்வைக்குள் புகுந்த நாண் எனது கைககளால் எனை இறுக்கி இறுக்கி அணைத்து கொள்கிறேன்.
பயத்தால் நம்பிக்கையினத்தால் வெட வெடக்கும் உடலை பற்கள் இறுக்கி தாங்கிக் கொள்கின்றேன்.
சுடலையான வாழ்விலிருந்து அலறும் மரணக்குருவி காதுகள் அறைய கத்திக் கொண்டு பறப்பதாக. V

Page 11
6. டும் சக்திகளின் கரங்களில் ஆளும் அதிகா டக்கூடாது என்ற தவிப்பும் தாகமும் கதை தை அன்றாட நிகழ்வுகள் வெளிப்ப
'டியலை
 
 
 

முன்றாவது மனிதன் -3
மிகுதியைக் காண வெண்திரை கள் இல்லாமற் போன அரங்குக ளில் கரிபடிந்த சுவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தன. சுற்றி வர ஆளு யர முட்பற்றைகள் காவல் காத்து நின்றன. அவ்வப் போது வழிப் போக்கர்கள் உள்ளே போய் ஒன்றுக்கிருந்து விட்டு வந்தனர். சினிமாப் போஸ்டர்கள் அருகி வந்த நகரத்தில் மாட்டுச் சாணம் மலை போல் உயர்ந்து வர, அதை அகற்ற வழி தேடி மாநகர சுகாதார அதிகாரிகள் வீதிகள் தோறும் அலைந்து திரிந்தனர். சாணமடிப்ப திலும், சேறு பூசுவதிலும் வல்லமை பெற்ற பலரும் சினிமா போஸ்டர் கள் இல்லாத சலிப்பில் இலக்கியப் பத்திரிகைகளின் பக்கம் சென்று விட்டதாகத் தகவல் அறிந்தனர். ஏறத்தாழ இதே கால காட்டத்தில் அகில உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ் பொண்டும், தன் வாழ்வின் இன் னொரு தீரச் செயலாக இலக்கியப் பத்திரிகையொன்றை நடத்திக் கொண்டிருந்தான். கடலின் சுறாக்களோடு போராடி, சுழியோடி அடியில் புதையுண்டு கிடக்கும் கப்பல்களைக் கண்டு பிடித்தவன் அவன். கொட்டும் மழையில் ஆகாய வெளியில் விமானங்களுக் கிடையே பாய்ச்சல் நிகழ்த்திய சாகஸக்காரன் அவன். பனிமலைச் சறுக்கலில் சூரன், அவனுடைய கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை யும், குதிரைச் சவாரியும் பேர் பெற் றவை. எனினும் பத்திரிகையொ ன்றை நடத்துவதிலேயே, தன் காற் சிரங்கைச் சுட்டுவிரலால் லேசாகத் தடவுவதற்கொப்பான பேரின் பத்தை அவன் பெற்றான். தன் பூர்வீகத்தை மறவாத ஜேம்ஸ் பொண்ட் தனது பத்திரிகையில் க்ரைமிற்கு முன்னுரிமை அளித்

Page 12
(Uன்றாவது மனிதன் - 10
தான். இசைத்தட்டுக் களஞ்சியத் தினுள் காணாமற் போன ஸப்த நந் தனப் பிரியா ராகத்தை மீட்டெடுத் தமை, ஆலையடி மண்ணுக்குள் புதையுண்டு போன கிட்டிப்புள் ளைத் தேடியெடுத்தமை, பேராசிரி யர் சுகுமாரனின் உண்மை முகத் தைக் கண்டு பிடித்தமை சம்பந்த மாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனுடைய துப்புத்துலக்கும் திறனுக்கு சான்றுகளாக விளங்கு கின்றன எனப் பல இலக்கிய விமர்சகர்களும் கருதுகின்றனர்.
பனையோலைச் சுவடிகளால் வேயப்பட்ட சொற் கொல்லன் பட்டறையில் ஜேம்ஸ்பொண்டின் அலுவலகம் இயங்கியது. எழுத் தாணி ஏந்திய காவற்காரர்கள் வாச
லில் நின்றனர். சொற்களை எடை
யிட்டுப்பார்க்க ஒருதராசும் கொஞ் சம் மஞ்சாடிக் கொட்டைகளும், உராய்ந்து பார்க்க ஓர் அண்டா நிறைய நெருப்புத் தண்ணியும் இருந்தன.
சொற்கொல்லன் பட்டறையின் பின் புறத்தில் சமையற்கட்டு. சமையற் காரர்களாகஇருந்த ஜேம்ஸ்பொண் டின் சகபாடிகள் ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்க ளில் சமூகப் பிரக்ஞை சூப் தயாரித் தார்கள். விடுமுறை நாட்களில் அக வயம் -புறவயம் சுண்டல். விசேஷ பண்டிகைக் காலங்களில் போராட் டப் பாயாசம் அல்லது புகலிட ஐஸ் கிரீம். சமையற் கட்டில் இருக்கும் தடியன் ஒருவன் சதா இறைச்சி வெட்டிக் கொண்டும் இடையி டையே கவிதைகள் எழுதியவாறு மிருந்தான். இரண்டிலுமே ரத்தம்
வந்து கொண்டிருந்தது. சொற்கொல்லன் பட்டறைக் கூடத்தின் சாய்வு நாற்காலி
யொன்றில் போர்வை போர்த்திய ஒரு முதியவர் இருப்பார்.
வேலைக்கு நடுே சென்றுவிட்டநா த்திருக்கும் சலு முதற்பார்வைக்கு ஆனால் அவர் ஒரு பொன்னாை இசைத்தட்டுகளு கொள்ளக்கூடிய டப்பாக்களும் இ இருந்தமைக்காக ஆராய்ச்சி அமை அவருக்குப் பொ றைப் போர்த்தியி பிரிய மனமில்ல கூதலாலும் ெ னேயே அவரது சொற்கொல்லன் கழிந்து கொண் மழிக்கப்பட்ட யொன்று செல்: அங்கே உலா கொல்லைப்புறத் கொம்பு கொண் அவ்வப் போது சென்று புத்தகங்க மிதித்து, புழுதி ( திரும்பி வந்தன. ஜேம்ஸ் பொண்ட முக்கியமான ஈடுபட்டிருந்தான் குரலில் பேசும் ( தாளன் எவ்வாறெ தெல்லாம் தழுவு தைத் தனது பத்தி இதழில் விபரிக்க யிருந்தான். இதற். பாடு கொஞ்சம எழுத்தாளர்களை படி என்ற நூலெ6 லைப் பிரசுரம் இ டாத காரணத்தா ண்ட் வாலிவதை மன் வதைபடலம் படிக்கலானான்.

வ சிறுநீர் கழிக்கச் விதனை எதிர்பார் ன் கோலமென அவர் தெரிவார். போர்த்திருந்தது ட, கீறல் விழுந்த தம், ஒரு லொறி பெருங்காய }வரிடம் நிறைய தொல்பொருள் ச்சு அண்மையில் ன்னாடையொன் ருந்தது. அதைப் ாத காதலாலும், பான்னாடையுட அந்திமகாலம் பட்டறையில் டிருந்தது. மயிர் பூனைக்குட்டி லப் பிராணியாயப் வித் திரிந்தது. தில் நின்ற கூரிய ாட எருமைகள் மேடைகளுக்குச் ளைத் துவைத்து, கிளப்பி விட்டுத்
தற்போது ஆராய்ச்சியில் கட்டபொம்மன் வியாபாரி எழுத் ரல்லாம், எப்போ கின்றான் என்ப ரிகையின் அடுத்த அவன் விரும்பி காக அவன் பட்ட ல் ல, வியாபாரி க் கொல்வது எப் தையும் மணிமேக ன்னும் வெளியி "ல் ஜேம்ஸ் பொ படலம், சூரபத் ஆகியவற்றைப் நாடான் கடைக
ளின் பழைய பேப்பர் கட்டுகளை அறிவுப் பசியின் காரணமாகத் தின்று தீர்த்தான். ஏடுகளைத் தலை யில் சுமந்து மழையிலும், வெயிலி லும் அலைந்து திரிந்தான். பனை யோலைச் சுவடிகளைப் பாயாக வும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பேரகராதிகளைத் தலையணையாக வும் போட்டும் படுக்கப் பழகிக் கொண்டான்.தன் கண்களில் விளக் கெண்ணெயை ஊற்றி ராப்பகலாய் எரியவிட்டான். வியாபாரி எழுத் தாளன் தன் கதைகளில் பயன்படு த்தும் அத்தனை சொற்களும் தமிழகராதியிலே இருக்கின்ற ரகசியத்தை இவ்வாறுதான் அவன் கண்டுபிடித்தான். தெலுங்கரான பூரீ பலிவாட கந்தாராவின் ஆவியைப் பழங்காகித மணம் வீசும் நூலக மொன்றில் ஜேம்ஸ்பொண்ட் சந்தி க்க நேர்ந்தது இந்நாட்களில்தான்.
'வணக்கம்'
'யாரது?' என்றது பத்திரிகை படித் துக் கொண்டிருந்த பூரீபலிவாட காந்தாராவின் ஆவி. 'நான் தான் ஜேம்ஸ் பொண்ட். துப்பறியும் பத்திரிகையாளன். சங்கீ தம், நடனம், விளையாட்டு, நாட கம், சினிமா, கதை, கவிதை, ஓவி யம் எனப் பல துறை தெரிந்த சகல கலாவல்லவன்."
'சமையல், தையல், சோதிடம்?"
'அடுத்து வரும் இதழ்களில் அவற்றைப் பற்றியும் நான் எழுதப் போகின்றேன். அது சரி, பிக்கா ஸோவின் ஓவியக்கலை சுயமான ஒன்று என நீங்கள் நினைக்கின்றீர் களா? ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தியாகையர் நாட்டம் கொள்ளாதது என எடுத்த எடு ப்பில் திடீரென ஜேம்ஸ்பொண்ட்
ஏன் தெரியுமா?"
கேட்ட போது 'ஐயா நீங்கள் மகா எனக் கூறிவிட்டுக் கழன்று கொள்ள முயன்றது பூரீபலி
மேதாவிதான்'

Page 13
வாட காந்தாராவின் ஆவி. ஆனால் ஜேம்ஸ் பொண்ட் விடுவதாக இல்லை.
'ஒரு சின்ன கேள்வி. நீங்கள் எலி யைப் பற்றி ஒரு கதை எழுதியிருக் கிறீர்கள் அல்லவா?" 'அது கீரியைப் பற்றியது. எலி யைப் பற்றிச் சில வரிகள் அதில்
"அது போதும். அது போதும் எனக்கு...' என்று எலிவாலைப் பிடித்த குதூகலத்துடன் துள்ளிக் குதித்தான் ஜேம்ஸ்பொண்ட். “என்னநடந்தது?" 'வியாபாரிஎழுத்தாளன் ஒருவன். வசமாக மாட்டிக் கொண்டான். அவனும் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறான்." 'அதனால்..?" 'அந்த எலிதான் இந்த எலி. இந்த எலிதான் அந்த எலி, காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரி என்று பாடத் தொடங்கினான் ஜேம்ஸ்பொண்ட். 'உலகின் அத்தனை எலிகளுக்கு மாக ஓர் பண்ணையை நான் நடத்து வதாக உங்களுக்கு யார் சொன்
னது?’ என்று பூரீபலிவாடகாந்தா ராவின் ஆவி எரிச்சலுடன் வினவி
եւ 15l.
'விண்வெளியில் விமானங்கள் முட்டுவது சாத்தியமா? யானைகள் வரும் தமிழ்ப் படங்கள் எல்லாம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பல் லவா?' என்றான் ஜேம்ஸ்பொ ண்ட்.
பூரீபலிவாட காந்தாராவின் ஆவி க்கு முதற் தடவையாக இப்போது பயம் வந்தது. துர்க்குணம் கொண்ட சாத்தானொன்று தன்னை ஏதோ சோதனை செய்து பார்ப் பதாக எண்ணிமிரண்ட அது புத்தக
அலுமாரிகளில் கொண்டு ஓடிய
'எலி. எலி. எ கொண்டே ஜேப தொடர்ந்து ஓடி பத்திரிகை படித் அனைவரும் அ ளைத் தூக்கிக் ெ மாதநாவல் சுவ போன எரிச்சல்
சைலன்ஸ். '
நூலகப் பொறுப்
இல்லை டெ மெல்லாம் ஒரே கின்றன. பதிளே காஜுராஹோ ளையும் மிஞ்சிய வல்கள். கம்பை
தழுவிக் கொ தாகூரைக் கலா
பெனகலை மகே
படிநிற்கிறார் முடினால் உை எப்போதும் தா6 என்ன அதிசய கனவுகளில் ட இல்லை. நதி குயில்களோ, 8 பெண்களோ இ என் கனவுகளில் அண்டங்காகங்க களும், மண்புழு
'எலிகள் அங்ே ன்றன என்று சு அலுமாரிகளை னாள். . அது

விழுந்தடித்துக் து. லி' என்று கத்திக் ம்ஸ் பொண்ட் பின் னான். நூலகத்தில் துக் கொண்டிருந்த அச்சத்தில் கால்க காண்டனர்.
ாரஸ்யம் குலைந்து ல்ெ 'சைலன்ஸ். என்று கத்தினாள் பாளர்.
ாக்டர், பார்க்குமிட தழுவலாகத் தெரி ாராம் நூற்றாண்டு கோயில் சிற்பங்க
நெருக்கமானதழு னக் கண்ணதாசன் ண்டு நிற்கிறார். ப்ரியாவும், ஷியாம் ந்திரனும் தமுவிய
கள், கண்களை
மயொருபாகன் ண்டவமாடுகிறான்.
ம் டொக்டர் என்
ச்சை வயல்கள்
சிகள் இல்லை. ளிேகளோ அழகிய ஸ்லை. எப்போதும் தீப்பெட்டிகளும், ளும், வான்கோழி க்களும் தான்.
கயல்லவா இருக்கி றிய அவள் புத்தக ச் சுட்டிக் காட்டி அசோகமித்திரனின்
(Uன்றாவது மனிதன் - 11
எலி, அது அம்பையின் எலி. அது
மலர்மன்னனின் எலி. அது இன்குலாப்பின்எலி. ' என்றாள் அவள்.
'இல்லை எனக்கு பூரீபாலிவாட காந்தாராவின் எலிதான் வேண் டும் ' என்று முனகியவாறு சொற் கொல்லன் பட்டறையை வந்தடை ந்தான் ஜேம்ஸ்பொண்ட்.
அன்றிரவு அவனால் தூங்கமுடிய வில்லை. நாகத்தின் விஷம் தோய் ந்த மூச்சுக்கள் அறையெங்கும் பரவியிருந்தன. கனவுமற்ற, நினைவுமற்ற ஓர் அந்தரிப்பில் அவன் பாலைநிலத்தில் அலைந்து கொண்டிருந்தான். படிக் கட்டில் அனாதையாக அழுது கொண்டு நிற்கும் அவனுக்கு அம்மை தருகி ன்றாள் ஞானப் பால், உறிஞ்சு கிறான், உறிஞ்சுகிறான் மூர்க்கம் கொண்டு அவன். அம்மை கலகல வென்று நகைக்கிறாள். அப்பால் நிற்கும் தோடுடைய செவியன் மர்மப் புன்னகை புரிகின்றான். ஞானப்பால் திகட்டிப் போய் கடைவாய் வழியே வழிகின்றது. பாலின் நிறம் மெது மெதுவாய் நீலமாகிறது. விஷம் உடலெங்கும் பரவி ரத்தம் நீலமாய் ஒடுகிறது. புத்தகங்கள் திடீர் திடீர் எனத் தீப் பற்றி எரிகின்றன. கூவும் குயில் களின் சிறகுகளெனப் பக்கங்கள் மெல்ல மெல்லக் கருகிமடிகின்றன. புத்தகங்களின் புகை வளையங்கள் சுற்றிச் சுற்றி வந்து அவன் குரல் வளையை இறுக்குகின்றன. காளி குலாயுதம் ஏந்தியவாறு அவனைத் துரத்துகிறாள். ஜேம்ஸ் பொண்ட் சைக்கிளில் ஏறித்தப்பி ஓடுகிறான்.
'ஏய் அது எனது சைக்கிள்.'
என்று கத்துகிறான் பின்னாலிருந்து வியாபாரி எழுத்தாளன்.
காலையில் முதல் வேலையாக டொக்டரைப் பார்க்கச் சென்றான்

Page 14
(Uன்றாவது மனிதன் - 12
ஜேம்ஸ்பொண்ட். இரவு முழுவதும் தூங்காததில் கண்கள் கலங்கிய குட்டை போலிருந்தது. "எல்லாமே மங்கலாகத் தெரிகிறதா?" அவனைப் பரிசோதித்த வைத்தியர் கேட்டார்.
6
'இல்லை டொக்டர், பார்க்குமிட மெல்லாம் ஒரே தழுவலாகத் தெரி கின்றன. பதினோராம் நூற்றாண்டு காஜDராஹோ கோயில் சிற்பங்க ளையும் மிஞ்சிய நெருக்கமானதழு வல்கள். கம்பனைக் கண்ணதாசன் தழுவிக் கொண்டு நிற்கிறார். தாகூரைக் கலாப்ரியாவும், வழியாம் பெனகலை மகேந்திரனும் தழுவிய படி நிற்கிறார்கள். மூடினால் உமையொருபாகன் எப்போதும் தாண்டவமாடுகிறான். என்ன அதிசயம் டொக்டர். என்
கண்களை
கனவுகளில் பச்சை வயல்கள் இல்லை. நதிகள் இல்லை. குயில்களோ , கிளிகளோ அழகிய பெண்களோ இல்லை. எப்போதும் என் கனவுகளில் தீப்பெட்டிகளும், அண்டங்காகங்களும், வான்கோழி களும், மண்புழுக்களும்தான்." ' த்சோ!' என்று அனுதாபப்பட் டார் டொக்டர்.
'எல்லா நூல்களையும் படிக்க என க்கு ஆர்வம். ஆனால் நான்கைந்து பந்திகளைக் கூடத் தாண்டமுடிவ தில்லை. படிக்கின்ற வாசகங்களை எல்லாம் ஏற்கனவே சந்தித்து விட் டதைப் போன்ற உணர்வு மனதைப் பிறாண்டிக் கொண்டேயிருக்கின் றது. மேய்ச்சல் நிலத்தை சரியாகப் பயன்படுத்தாத ஆட்டின்நிலைமை யில்நான்இருக்கிறேன்டொக்டர்" 'உங்கள் நோய் என்னவென்று ஓரளவு புரிகின்றது. மனதிற்குள் ஓர் இமயமலையை உண்டாக்கி அதன் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களை யாரும் கவனிக்கவில்லை என்ப
தால் புழுங்குகி: கவனிப்பார்கள் களைக் களை ஓடக் கூட நீங்க உங்கள் உடல் இசைவாக இ
ஜேம்ஸ் பொன் இருந்தான். ெ தார்.
'எல்லோரிலும் நம்பிக்கை. மை யைப் பார்க்கு கூட இவள் சோ யாகஇருப்பாே உங்கள் மன:ை தெருவில் போகு களைப் பார்த்து என்று கூக்குர உங்களுக்குத் உங்கள் மனதில் கறையான் புற்று 'போதும் டொக நோய் பற்றிய வி அது தீர என்ன சொல்லுங்கள்' 'மிகவும் எளி மேதாவி வேஷ விடுங்கள். து! ஒரு பக்கம் வைத் செய்யப் பழகு அன்பு செலுத்தட் எழுதித் தரும் பூ ட்டுக்கு முன்பும் பின்பும் படியுங் கப் போகு முன் தரும் இசை நா டுப் பாருங்கள். வில்லை என்ற ஒப்பரேஷன் ஒ
செய்ய வேண்டிய
டொக்டர் தா
பெயர்களைக் கி.
தளர்ந்த நடையு

ர்ரீர்கள். நூறு பேர் என்றால் ஆடை தெறிந்து விட்டு ள் தயார். ஆனால் வனப்பு அதற்கு ல்லையே என்ற
ட் மெளனமாக டாக்டர் தொடர்ந்
உங்களுக்கு அவ
னவியை, சகோதரி
ம் போதெல்லாம் ரம் போன ஒருத்தி ளா என்ற சந்தேகம் த வதைக்கின்றது. ம் குடும்பப் பெண்
'அடீ வேசி' லிடலாம் போல் தோன்றுகிறது. ன் சுவர்களில் பல
கள். '
க்டர் போதும். என் பரங்கள் போதும். ா வழி? அதைச்
து. உங்கள் அதி த்தைக் கலைத்து ப்பறியும் திறனை துவிட்டுதியானம் ங்கள், பரஸ்பரம் பழகுங்கள். நான் நூல்களை சாப்பா , சாப்பாட்டுக்குப் கள். இரவில் தூங் னர் இதில் எழுதித் டாக்களைக் கேட் இதற்கும் சரியாக ால் மூளை மாற்று ன்றுக்கு ஏற்பாடு பிருக்கும்' என்ற ளொன்றில் சில றுக்கித் தந்தார்.
டன் தன் அறைக்
குள் நுழைந்த ஜேம்ஸ் பொண்ட் கதவைத் தாளிட்டுக் கொண்டான். அன்று தாளிடப்பட்ட கதவுகள் இன்று வரை திறக்கப்படவில்லை. பல நூல்களையும், இசை நாடாக் களையும் அவன் அங்கிருந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சிலர் சொன்னார்கள். அவன் உள்ளே யிருந்து அடைகாப்பதாக சகபாடி கள் தெரிவித்தனர். அவனை இடை யூறு செய்யக் கூடாது என்ற நல் அதிமேதாவித் தனம் உள்ளே உறங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையை கதவில்
லெண்ணத்தில்
அவர்கள் மாட்டி விட்டு வெளியே காவலிருந்தார்கள்.
3O.O7. 1996

Page 15
சே குவேராவின் பொலிவியன் டயரி 1968இல்
வெளியிடப்பட்டபோது உலகைக் குலுக்கிய புத்தகங் களில் ஒன்றாக அது திகழ்ந்தது. கியூபா சே குவேரா ஆவணக் காப்பகத்திலிருந்து பெறப்பட்ட அவரது இரண்டாவது டயரியான மோட்டார் சைக்கிள் டயரி 1992ஆம் ஆண்டு கியூபாவிலும், 1993ஆம் ஆண்டு. இத்தாலியிலும் வெளியிடப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில், லண்டன் இடதுசாரிப் பதிப்பகமான வெர்சோ பதிப்பகத்தினால் 1995ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.
சே குவேராவின் இளம் மனைவியான அலீடா மார்ச்டீலா டோராவினால் இது பதிப்பிக்கப்பட்டி ருக்கிறது. நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்க பூர்வகுடிப் பெண்ணான ரிகபர்டா மெஞ்சுவின் சுய சரிதையான, Rigoberta Menchu புத்தகத்தை மொழி பெயர்த்த Ann Wright இப்புத்தகத்தையும் ஸ்பானிஷ மொழியிலிருந்து ஆங்கிலத்தில் தந்திருக்கிறார். குவே ராவின் பிரசுரிக்கப்பட்ட டயரியாக இது இருந்தபோதி லும் கியூபா புரட்சிக்கு வெகு முன்னதாக பொலிவியன் டயரிக்கான அநுபவத்துக்கு வேர்களாக இலத்தீன்
 

மூன்றாவது மனிதன் - 13
அமெரிக்காவை சே கண்டெடுத்த ஆதார யாத்திரைக் குறிப்புகளாகவே இந்த டயரி இருக்கிறது. கால வரிசைப்படி குவேராவின் முதல் டயரி இதுதான்.
1954ஆம் ஆண்டுதான் மெக்ஸிக்கோவில் பிடல் காஸ்ரோவைச் சந்திக்கிறார். கியூபப் புரட்சி அரசில் பங்கேற்ற பின்னால் 1965ஆம் ஆண்டு "20 வியட்நாம் களை உலகில் உருவாக்க" பொலிவியாவுக்குப் புறப் படுகிறார். குவேரா, பொலிவியன் டயரி பொலிவியப் புரட்சிகர நடவடிக்கைகளின் ஆவணம்.
இப்போது பிரசுரிக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள் டயரி 1951-52ஆம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தது. 1928இல் பிறந்த குவேரா (யூன் 14) 22வயது இளைஞனாகவிருந்தபோது மேற்கொண்ட இலத்தீன் அமெரிக்கப் பயணம் பற்றிய குறிப்புகள் இவை. 1954இலிலிருந்து 8 அக்டோபர் 1967இல் அவரது மரணம் வரையிலான காலகட்டத்திய அவரது நடவடிக் கைகள், நம்பிக்கைகள், கருத்துகள், தரிசனங்களுக்கான அவரது அறிவார்ந்த வேர்களின் தோற்றங்களை இந்த டயரியில் காணமுடியும்,
முழு இலத்தீன் அமெரிக்க மக்களின் ஆன்மாவை,

Page 16
(Uன்றாவது மனிதன் - 14
கலாச்சார வேர்களைத் தேடிய மானசீக யாத்திரை இப்புத்தகம், குவேராவின் பிற்கால வளர்ச்சி நிலை யோடு ஒப்பிடுகிறபோது பல்வேறு உள் முரண்பாடு களை இது கொண்டிருக்கிறது. இளமைக் காலத்துக்கே யுரிய சாகச-உணர்ச்சி, மனதில் பட்டதை நிதானமாக சிந்திக்காது, ஆழ்ந்த ஆய்வுகளின்றி வெளிப்படுத்தும் மனப்பாங்கு, கறுப்பு மக்கள், பூர்வீக இந்தியர்கள் பாலான அந்நியப்படுத்தல் உணர்வு, வேடிக்கை பார்க் கும் பண்பு, இலத்தீன் அமெரிக்கர்களுக்கே பொதுவாக உள்ள ஆண் பெருமித உணர்வு, பாலுறவுச் சாகசம் சார்ந்த செயல்கள், மதுவின் மீது தீராத காதல் போன்ற வற்றை இந்த டயரி வெளிப்படையாக முன்வைக்கிறது. அதே சமயத்தில் மனிதர்களை அழுத்திக் கொண்டி ருக்கும் தளைகளிலிருந்து முறித்துக் கொள்ளவேண்டிய உள்ளுணர்வு, பூர்வ குடி இந்திய மக்களின் இன் கலாச்சாரத்தின் தொன்மைபற்றிய பிரமிப்பு, இலத்தீன் அமெரிக்க மக்களின் ஒற்றுமைபற்றிய தேவை, வட அமெரிக்கர் பற்றிய விமர்சனம், இலத்தீன் அமெரிக்க நாடு முழுவதிலுமான புரட்சிக்காரர்களின் தொடர்பு, அரசியல், பொருளியல் வர்க்கக் கண்ணோட்டம் போன்றவற்றையும் இந்தப் புத்தகம் வெளிப்படுத்து கிறது.
22 வயதில் இத்தகைய உள் முரண்பாடுகளை தவிர்க்க முடியாததேயென சுயபரிசீலனையில் எந்தப் புரட்சிக் காரனும், சிந்தனையாளனும் உணரவே செய்வான். பிடல் காஸ்ரோவை விடவும் மிக விரைவாகவே மார்க் சீய படிப்பில் ஆழ்ந்த புலமையையும், தொலைதூர மானுட தரிசனத்தையும் மிக விரைவிலேயே சே குவேரா எட்டினார் என்பது வரலாறு. உருவே கவிஞன் எட்வேர்டோ கலீனோ சொல்கிறபடி சேவின் யாத்திரை பல்வேறுபயணங்களைக் கொண்டது சாகசத்தைத் தேடி ஏர்ணஸ்டோ சே குவேரா, இலத்தீன் அமெரிக்காவைத் தேடி ஏர்ணஸ்டோ சே குவேரா, பொலிவியாவில் சே வைத்தேடி ஏர்ணஸ்டோசேகுவேரா பயணங்களில் பயணங்களின் பயணமான இந்த யாத்திரையில் தனிமை இணைவாகப் பரிணமிக்கிறது. நான் நாமாகி விடுகிறது. இந்தப் பயணத்தில் இவர்கள் பூர்வகுடி இந்தியர்கள், செம்புச் சுரங்கத் தொழிலாளர்கள், தொழுநோயா ளர்கள், பொலிஸ்காரர்கள், வீதிப் பயணிகள், இலக் கற்று அலைபவர்கள் என பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். பயண நாள்களில் இவர்கள் தீயணைப்புப் படைவீரர்களாக, சமையற்காரர்களாக, குடிகாரர்களாக, சின்னத் திருட்டு செய்பவர்களாக, கால்பந்தாட்ட பயிற்றுநர்களாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர்களாக வாழ்வைக் கற்றுக் கொள்கிறார்கள். கியூபப் புரட்சிக்கு 8 வருடங்கள் முன்னதாக பயணம்

பற்றியது இந்த டயரி, சே குவேரா இறந்து கால் நூற் றாண்டுகளுக்குப் பின்னால் இந்த டயரி இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்காலத்துக்கான இலட் சிய நோக்கையும், ஒடுக்கப்பட்ட மனிதர்களுடனான ஒருமைப்பாட்டையும் இந்த டயரி வெளியிடுகிறது. அதேசமயம் அரசியல் ரீதியில் தீவிர தன்மையையோ ஒரு புரட்சிக்காரனின் உறுதியான பார்வையையோ கொண்டது அல்ல. இந்த டயரி 25 வருடங்களுக்குப் பின் இப்போது வெளியிடப்படுவதற்கான காரணமாக இது இருக்கக்கூடும் என்கிறது அட்டைக் குறிப்பு.
நேர்மையற்ற மனிதனை மறுக்கும் தனது பண்பும், இன்றைய மனிதனை அழுத்தமாக உருவாக்க நினைக் கும் மனமும் சே குவேராவுக்கு இயல்பாகவே அமைந் தவை. இந்த டயரி முதலில் குறிப்புக்களாக எழுதப் பட்டு ஒரு வருடத்திற்குப் பின் மறுபடி எழுதப்பட்டது. தான் நேற்றைய மனிதனாக இல்லை என்பதை இதை எழுதி முடித்ததும் சொல்கிறார். அதேவேளை, தான் நேற்று இருந்த நிலையை மறுத்துவிடவும் இல்லை என்கிறார் சே,
'இப்போது உங்களை என்னோடு விட்டு விலகுகி றேன். காலவோட்டத்தில் ஒருபோது இருந்த மனித னான என்னோடு." ஏர்ணஸ்டோ தனது டயரி பற்றி இவ்வாறுதான் தன் குறிப்புகளில் சொல்கிறார்.
1952ஆம் ஆண்டு ஜனவரி 4 இல் ஆர்ஜென்டீன தலைநகரிலிருந்து இரண்டு இளைஞர்கள் - ஆல்பர் ட்டோ கிறானடா எனும் உயிரியல் இரசாயன விஞ்ஞா னியும் , ஏர்ணஸ்டோ சே குவேரா எனும் இருதய மருத்துவரும் -தமது Norton 500 மோட்டார் சைக்கி ளோடு முழு இலத்தீன் அமெரிக்காவையும் தேடிப் புறப்படுகிறார்கள். ஆர்ஜன்டீனா சிலியில் தலா ஒன் றரை மாதங்கள், பேருவில் 3 மாதங்கள், கொலம் பியாவில் 20 நாள்கள், வெனிசூலாவில் 12 நாள்கள், மயாமியில் ஒரு மாதம் என செப்டம்பரில் மறுபடி புவனஸ் அயர்ஸ்.திரும்புகிறார்கள்.
இந்த 9 மாதங்களில் தத்துவம் பற்றி, சாகசம் பற்றி, தான் கற்றுக்க்ொண்ட வாழ்வு பற்றி குறித்து வைக்கிறார் சே, புறப்படும்போது தன் காதலியின் பிரிவுக்காக கட லோடு உரையாடுகிற சே, காதலிக்கும் தனக்குமான உறவுமுறிந்துவிடுவதை ஒருவரிச் சேதியில் குறித்து வைக்கிறார். விளையாட்டும், கவிதையும், போர்க் குணமும் இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வு முழுவதும் விரவியவை. ஆர்ஜென்டீனாவுக்கு மரோ டோனா எனும் கால்பந்துக்காரர் பிரேசில் நாட்டுக்கு மரணமுற்ற மோட்டார் பந்தயக்காரர் சென்னா, பிடல் காஸ்ரோவின் பேஸ்-பந்து பைத்தியம். இந்த சாகசத் தையும் கவித்துவ உணர்வையும் சேவின் மொழிநடை

Page 17
முழுக்க விரவியிருப்பதைக் காணலாம். ஆர்ஜன்டீன கால்பந்து வீரர்கள் லுஸ்டாவ், குவேராவின் வினைவு களில் நடமாடுவதைப்போலவே டாங்கோ பாடகன் கார்லோஸ் கார்டனும் இன்கா கடவுளும், கார்ஸியா லோர்க்காவும், பாப்லோ நெருடாவும் குவேராவோடு கூடவே மதுவருந்தி தூங்கப் போகிறார்கள்.
இந்தப் புத்தகம் வெளியாவதற்கு மூன்று மாதங்கள் முன்பாவே லண்டன் 'கார்டியன்' பத்திரிகை குவேரா வின் இன்னோரு முகத்தைச் சொல்லும் டயரி இது வென கட்டுரையொன்றை வெளியிட்டது. 'இன்டி பென்டென்ற் ஒன் சண்டே' தனது விமர்சன சிறப் பிதழை இப்புத்தகத்துக்காவே ஒதுக்கியிருந்தது. மது, பெண்கள், சரியற்ற அரசியல், அடுத்தவரது மனைவியரோடு குலவுதல், கறுப்பு மக்களைப் பற்றிய கீழான அபிப்பிராயங்கள் கொண்ட சேவின் மறுபக்கம் என டயரியில் சில பகுதிகளையும் பிரசுரித்திருந்தது. புத்தகத்தின் அட்டைக் குறிப்புக்களும் இப்பத்திரிகை களின் கட்டுரைகளும் பொதுவாகவே இடதுசாரி அறி வாளிகள், புரட்சிக்காரர்கள் ஆகியோரின் கடந்த கால தனிமனித வாழ்வு சார்ந்த பிரச்சினைகள் பேசப்படும் போது ஏற்படும் விளைவுகள் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. சே குவேரா பற்றியதும் பல்வேறு புரட்சிக்காரர்கள் பற்றியதுமான பிரச்சினை என்பதால் இதைச் சுற்றியிரு க்கும் பிரமைகளை உடைப்பது இக்கால கட்டத்தில் தேவை என்று நினைக்கத் தோன்றுகிறது.
சே குவேராவின் இப்புத்தகம் தனது வாழ்க்கை முரண் பாடுகளைத் தன்னளவிலேயே தனது நடவடிக்கைகள் மூலமே கடந்துபோன ஒருவனின் டயரி.
தெருத் தெருவாக அலைந்து பட்டினி கிடந்து; மலைப் புழுதிகளில் விழுந்த சிராய்ப்புகளுடன் நடந்து நாள் முழுக்கக் குடித்து, அடுத்த குடியிருப்புகளில் இருந்த மூன்று பெண்களுடன் வேண்டுமென்றே உரையாடி, வாத்துக்களைச் சுட்டுண்டு, Adrenalin ஏற்றிக் கொண்டு, போதையில் தள்ளாடி, மச்சுபிக்க மலைக் குன்றுகளுக்குப் போய் இன்கா மக்களின் போர்த் தந்திரத்தை வியந்து, வழியில் தென்படும் லாரி, டிரக் சாரதிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி இடம் பிடித்து, குளிரில் உறைந்து பனிப்புல்லில் கிடந்து, மரத்தில் கட்டிய ஊஞ்சலில் ஆடி, புரட்சிக்காரர்களோடு தொடர்பு கொண்டு, சுரங்கத் தொழிலாளர்கள் வறுமையோடு வாழ்ந்து பூர்வகுடி இந்திய மக்களின் முடை நாற்ற மெடுக்கும் உடுப்புகளை விமர்சித்து கறுப்பு மக்கள் தொடர்ந்து குளிக்காததால் கறுப்புநிறமாகிப் போனவர் கள் என கிண்டல் செய்து, வட அமெரிக்கர்களை ஏளனத்துடன் பேசி, தொழுநோயாளிகளோடு உண்டு

(Uன்றாவது மனிதன் - 15
உறங்கி, அவர்களோடு விளையாடி, ஒரே ஒரு டொலரை வைத்துக் கொண்டு 30 நாள்களைப் பட்டினியில் கழித்து, கண் கண்ட இடத்திலெல்லாம் காட்டு நதிகளில் குளித்து, அவ்வப்போது வழியில் தென்படுபவர்களிடமெல்லாம் இரந்து ஊர்ஊராக கால் தேய நடந்து நடந்து.
சே குவேரா முரண்பாடுகளுடன் வாழ்ந்ததை, வளர்ந் ததை, கற்றுக்கொண்டதை இந்த டயரி சொல்கிறது.
கார்ல் மார்க்ஸoக்கு முன்னரேயே சே குவேராவின் ஆதர்ச மனிதன் அல்பேட் சுவைடசர்தான், தொழு நோயாளிகளுக்கு தொண்டு செய்யும் கனவை விதைத் தவன் அவன் தான். மோட்டார் சைக்கிள் டயரி எழுதி யதே குவேராதான் பொலிவியன் டயரியையும் எழுதி னான். -
இதே குவேராதான் ஆபிரிக்க நாடுகளின் ஆயுத விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்க ஆபிரிக்க நாடுகளுக்குப் போனவன். ஆபிரிக்க மக்களை நெஞ்சாரத் தழுவியவன். இலத்தீன் அமெரிக்க பூர்வ குடிகளுடன் உண்டு உறங்கியவன். கொங்கோவில் திரிந்தவன். ஆசிய, ஆபிரிக்க, இலத்தினமெரிக்க மக்களின் ஒற்றுமைக்காகTr Continental Conference இல் முழங்கியவன். 22 வயதில் குவேரா எழுதிய மோட்டார் சைக்கிள் டயரி யைப் படித்து முடித்தபோது, குவேரா பற்றிய மதிப்பு இன்னமும் அதிகரித்தது. உண்மையில், வாழ்வையும் மனிதரையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதரின் பின்நோக்கிய நினைவுகளும், முரண்பாடு களை உள்ளபடி மறுபரிசீலனை செய்கிற மனமும் இவ்வாறுதான் வெளிப்பட முடியும். ஜாதீய சமூகத் திலிருந்தும், நிறவெறி சமூக அமைப்பிலிருந்தும் காலனியாதிக்க சமூகத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற முயலும் மூன்றாம் உலக மனிதனொருவனின் மத்தியதர வர்க்க மனிதனொரு வனின் உள்முரண்களை சே குவேராவின் மோட்டார் சைக்கிள் டயரி ஒருவருக்கு ஞாபக மூட்டக்கூடும். தன்னை எவ்வெவற்றிலிருந்து அறுத்துக்கொள்ள வேண்டும் என்கிற மறுபரிசீலனையையும் இது உணர்த்
g|LD.
மங்கலான என் சுயசித்திரம் எனும் தனது கவிதையில் சே குவேரா நமக்குச் சொல்கிறான்.
நாடோடிகளின் சடங்குகளைச் சுவீகரித்துக்கொண்டு மைல்களைக் கடந்து சிலுவையைப்போல என் ஆஸ்த்மா உடம்புக் கூட்டைச்

Page 18
ன்றாவது மனிதன் - 16
சுமந்துகொண்டு முரணான பிரதிமையோடு வினோத இதயத்தோடு நான் உங்களிடம் வருகிறேன்.
a > -- a அந்தப் பிடிவாதமான போர் எனக்கும் அவளுக்கு மிடையில், நான் புறப்படும்போது ஒரு கணம் ஒட்டே பெல்லாவின் கவிதை என் காதில் ஒலித்தது.
படகிலிருந்துநான் கேட்டேன் நனைந்த பாதங்கள் நீர் தெளிக்கின்றன பசியில் புதைந்த முகங்கள் தெருவுக்கும் அவளுக்குமிடையிலான உலகம் போல எனது இதயம் என்ன விதமான சக்தி அவளது விழிகளிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளச் செய்தது அவளது தோள்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளச் செய்தது?
அவளது துக்கத்தை கண்ணிர் மேகம் சூழ நின்றிருந்தாள் மழைக்கும் ஜன்னல் சட்டங்களுக்கும் பின்னால்
ஆனால் கதறுவதற்கு முடியாமல்
நில் நானும் உன்னோடு வருகிறேன்".
(ஆர்ஜன்டீனா பக்கம் 16
சிலிவைன் நன்றாக இருந்தது. அதில் நான் முக்குளித்து விட்டேன். அந்த வேளை நாங்கள் கிராமிய நடன துக்கு சென்றிருந்தோம். நான் எதற்கும் தயாராயி ருந்தேன். அந்தக் காரேஜிலிருந்து ஒரு மெக்கானிக் அவன் நல்ல ஆள், அவன் குடிப்பதற்கு மதுவைக் கலக்கிக் கொண்டிருந்ததால் அவன் மனைவியோடு என்னை நடனமாடச் சொன்னான். அவன் மனைவி கிளர்ச்சியுற்றிருந்தாள். முழுக்க சிலி வைன் போை யில் இருந்த நான் அவளை வெளியே இழுத்துக் கொண்டு போக முயன்றேன். அவள் விருப்பத்துடன் என்னைத் தொடர்ந்தாள். பின்னர் அவள் கணவன் அவளைக் கண்காணிப்பதை அவதானித்து தன் மனதை மாற்றிக் கொண்டாள். காரண காரியத்தைக் கண்டு கொள்ளும் நிலையில் நான் இல்லை. நடனத்தரையின் நடுக்கூடத்தில் நாங்கள் இருந்தோம். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு கதவைநோக்கி அவளை நான் இழுத்தேன். அவள் என்னை உதைக் முயன்றாள். நான் இழுத்ததால் நிலைகுலைந்துபோன அவள் தரையில் மோதி விழுந்தாள். ஆத்திரம் கொண்ட நடனக்காரர்கள் துரத்த நாங்கள் கிராமத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் அவள் கணவன்

T
எங்களுக்காக வாங்கியிருக்கக்கூடிய வைன் சிந்தச் சிந்த ஆல்பர்டோ புலம்பிக் கொண்டே வந்தான். (சிலி பக்கம் 43)
அங்கே திருமணமாகிய ஒரு தம்பதி எங்களுக்கு நண்பர்களானார்கள். அவர்கள் சிலி தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகள். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மேற் (கடுங் காப்பி போன்ற ஆர்ஜன்டீன பானம்) அருந்திக் கொண்டு ரொட்டித் துண்டை சீஸோடு கடித்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அந்த மனிதனின் ஒடுங்கிய உருவம் சோகமயமான சொல்லொணாத் துன்பத்தைக் குறித்திருந்தது. சாதாரண ஆனால், உணர் ச்சிகரமான வார்த்தைகளில் அவர் தனது மூன்றுமாத சிறை அநுபவத்தைச் சொன்னார். எடுத்துக்காட்டுக் குரிய அர்ப்பண உணர்வுடன் தன்னைத் தொடரும் மனைவி பற்றி, நல்ல மனமுள்ள அண்டை வீட்டுக் காரர்களிடம் விட்டுவரப்பட்ட தங்கள் குழந்தைகள் பற்றி, சுரங்கத்தில் வேலை தேடிய தனது பயனற்ற பயணம்பற்றி, மிகவும் பூடகமான முறையில் மறைந்து போன, கடலின் ஆழத்தில் எங்கோ இருப்பதாகச் சொல்லப்படும் தனது தோழர்கள் பற்றியெல்லாம் சொன்னார்.
குளிரில் உறைந்து பாலை இரவில் ஒருவரை ஒருவர்
அணைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதிகள் உலகெங்கும் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தினரின்
வாழும் உதாரணம். ஒரு மிகச் சாதாரணமான
போர்வையைக்கூட அவர்கள் கொண்டிருக்கவில்லை. எங்கள் போர்வைகளிலொன்றை அவர்களுக்குக் கொடுத்தோம். நானும் அல்பர்டோவும் மற்றொரு போர்வையில் உறங்கினோம். நான் கழித்த மிகக் குளிர்ந்த இரவுகளில் ஒன்று அது. ஆனால், ஒரு மனித ஜீவராசியுடன் வித்தியாசமான ஜீவியுடன் கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்த இரவும் அதுதான்.
(சிலி -பக்கம் 60)
எங்கள் பயணத்தில் அந்தக் காட்சி மிகமிக சுவாரசியமானது விரல்களே இல்லாத தனது வலது மணிக்கட்டோடு குச்சுகளைக் கட்டிக்கொண்டு ஒருவர் எக்கோடியன் வாசித்தார். ஒரு பாடகர் கண்ணில் லாதவர். மற்றைய அனைவருமே ஏதோ ஒரு வகையில் அங்கஹlனர்கள். இந்தப் பகுதியில் இருக்கும் நரம்பு தொடர்பான வியாதியால் இங்கு இது பிரசித்தம் , நதியில் பிரதிபலித்த விளக்குகளின் வெளிச்சத்தில் இந்தக் காட்சி ஒரு பயங்கரமான திரைப்படம் போல இருந்தது.
(கொலம்பியா தொழுநோயாளர் குடியிருப்பு -பக்கம் 141) நன்றி:காலச்சுவடு -ஜ"ன் 1996

Page 19
அடிப்படை இவற்றை ஆக்கிக் கொண்டு அநாவசியமாய்ச் சிந்திக்க வேண்டாம் பிரிவினை யுள்ளே பிதற்றிக் கொண்டு ஒருமையைக் காணுதல் உருப்படியாகுமா? ஒருமையில் மட்டுமே ஒற்றுமை யுண்டு
உறவுகள் உண்டு மனித நேயமும் உண்டு
ஒருமை பிழைத்தால் பன்மை பன்மையுள் ஒருமை யடங்கிய போதும் பல்விதக் குரல்கள் ஒத்திசைக்காது பிழைதான் முழுதும் பிழையே!
ஈழத்தின் சமகால சிறுகதைத் தொகுதி
எமது சமகால ஈழத்து சிறுகதைகளை தெரிவின்
அடிப்படையில் ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளியிடுவதற்கு
வி.ஜே பதிப்பகம் முன்வந்திருக்கிறது.
இத்தொகுப்பிற்கான சிறுகதைகளை ஈழத்துப் படைப்பாளி
களிடமிருந்து இப் பதிப்பகம் எதிர்பார்க்கிறது.
இது குறித்து எமது சிறுகதை எழுத்தாளர்கள் தங்களது
கருத்துகளை, படைப்புகளை அனுப்பி வைக்குமாறு வேண்டப்
படுகிறீர்கள்.
தொடர்புகளுக்கு : வி.ஜெயமுருகன்
6, நகரசபை விடுதி, காந்திநகர், திருகோணமலை,
 
 
 
 
 
 
 
 
 

மூன்றாவது மனிதன்
அழுகல் நாற்றத்தால் வாழ்க்கை மணக்கிறது. கோழைத்தனத்தாலும் அடிமைத்தனத்தாலும் இதயங்கள் ஊறிக்கிடக்கின்றன.
மடமையின் மெல்லிய கட்டுகளால் மனங்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.எவ்வளவு அற்பமாக;எவ்வளவு பரிதாபமாக
நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்.
-மாக்சீம் கார்க்கியின்
சிறுகதையிலிருந்து

Page 20
(Uன்றாவது மனிதன் - 18
تیامی لأمۂہا
ンで
நூல்: மலையகமும் இலக்கியமும் ஆசிரியர்: அந்தனி ஜீவா
ஈழத்து தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் ஒ( பகுதியாகும். மலையக இலக்கிய வரலாற்றை புறக் ணித்துவிட்டு, ஈழத்து இலக்கியத்தின் மீதான மதிப்பீட்ை ஒருக்காலும் மேற்கொள்ள முடியாது! ஈழத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றான் டுகளுக்குள் வாழ்ந்த இத் தோட்டத் தொழிலாளி மக்களில் பசியும், வறுமையும், கண்ணீரும் துன்பமும்; உரிை களுக்கான அவர்களது போராட்டமும் அவர்களிடத்ே இருந்து தோன்றிய படைப்பாளிகளிடமிருந்து வெளி பட்டு வந்திருக்கின்றன. வாய்மொழி இலக்கியமாக, கவிதையாக, சிறுகதையாக நாவலாக, பத்திரிகை, சிறு சஞ்சிகை முயற்சியாக ஈழத்து இலக்கியத்தினுள் மலையிலிருந்து தவழ்ந்து வந்த தென் லாக புயலாக சங்கமித்திருக்கின்றன. இந்தியாவின் தென் கோடித் தமிழர்கள் பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கா இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையிலிருந்து இன்றுவரை இவர்களது வாழ்வு இந்த மண்ணில் துன்பப நிறைந்ததாகவே உள்ளது. நாடற்றவர்களாக கூலிகளாக வாழும் இத்தோட்ட தொழ லாள மக்களின் மனவெளிப்பாடுகள் மனித வாழ்வின்
 

மீதான மாபெரும் துயரமிக அனுபவங்களை நமக்கு உணர்த்துகின்றன. இந்தியாவில் தலித் இலக்கியம் இந்திய இலக்கியத்திற்கு தந்த உயிர்ப்பை மலையக இலக்கியம் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு இன்னும் தரவில்லை என்பது பெரும் குறையே - இருந்தும் அங்கு தோன்றிய மூத்த எழுத்தாளர் சி.வி, வேலுப்பிள்ளை ஈழத்திலும் ஈழத்திற்கு வெளியேயும் அறியப்பட்ட சிறந்த படைப் uTatsuurts mist. 96 foot in The Ceylon Tea Garden GT667p கவிதைத் தொகுதியில் உள்ள கவிதை ஒன்றே இம்மக்க ளின் அவலத்தை நம்கண் முன் கொண்டுவர போதுமான தாகும்!
புழுதிப்படுக்கையில் புதைந்த எம்மக்களை போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை, பழுதிலாஅவர்க்கோர் கல்லறை இல்லை பிரிந்தவர் நினைவுநாள் பகர்வாரில்லை இன்றைய சூழல் மலையகத்தின் ஆக்க இலக்கிய துறை உற்சாகமாக இயங்கத் தொடங்கி இருப்பதை காட்டி நிற்கிறது. அண்மைக்காலமாக சிறந்த படைப்பாளிகள் மலையகத்திலிருந்து முகம் காட்டத் தொடங்கியுள்ளனர். "மலையகமும் இலக்கியமும்' கட்டுரை தொகுப்பு நூலின் ஆசிரியரான அந்தனி ஜீவா பல வருடங்களாக மலையக இலக்கியத் துறைக்கு உழைத்துவரும் படைப்பாளியா வார். தான் பிறந்த மண்ணின் இலக்கியப் பதிவுகளை உரிய தளங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பித்து விட வேண்டுமென்ற வேட்கையின் காரணமாக சதா மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உழைத்து வருபவர். 'குன்றின் குரல்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். மலையகப் படைப் பாளிகளின் படைப்புத் திறனை வெளிக்கொணர்வதற்காக மலையகத்திலும், தென்னிலங்கையிலும் கருத்தரங்குகள், பட்டறைகள் நடாத்துபவர். அந்தனி ஜீவாவின் உழைப்பு மலையக இலக்கியத்திற்கு உரம் தருவனவாய் இருக் கின்றன. இந்நூலில் மலையக இலக்கியம் பற்றிய மதிப்பீட்டிற்கு அல்லது ஆய்வுமுயற்சிக்கு உதவக் கூடிய அடிப்படையில் பல தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மலையக த்தின் வாய்மொழி இலக்கியங்கள், கவிதைகள், சிறுகதை கள், நாவல்கள் பிறகலை இலக்கிய முயற்சிகள் பற்றிய தகவல்கள் நமக்கு இந்நூலில் கிடைக்கிறது. ஈழத்து இலக் கிய சூழலை ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு அந்தணி ஜீவாவின் இந்நூல் பல தகவல்களைத் தரும்.
ஆர்.குணசீலன்

Page 21
நூல்:- கடலும் கரையும்
ஆசிரியர்:- மு.பொன்னம்பலம்
மு.பொ. 50களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய பரிமாணம் பெற்ற ஓர் எழுத்தாளர், சிந்தனையாளர்,
'திசை" என்ற பத்திரிகையின் ஆசிரியருமாவார்.
மு.பொ.புங் குடுதீவில் பிறந்தவர் என்பதால் அங்கு இனங்காணக்கூடிய தமிழ்நாட்டு வாழ்க்கை முறையின் சில கோலங்களையும் உள்வாங்கி உள்ளார் என்பது இவருடைய கதைகளிற் சிலவற்றின் உரையாடல்களிற் பிராமணியத் தமிழ் அசைவுகள் உச்சரிக்கப்படுவதில் காணலாம். இவருடைய தமையனார் -முதளைய சிங்கத் தின் ஆளுமை இவருடைய எழுத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
வடமாகாணக் கலாசாரத்தை இளமையாலும் அண்மையிலும் தனதாக்கி கொண்ட மு.பொ., தமது வளரிளம் பருவத்தின் போது சப்ரகமுக மாகாண
சூழலிலும் பாதிக்கப்பட்டவராவார். எனவே மு.பொ.குறுகிய யாழ்ப்பாண வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்திக்கத் தொடங்கியவர்.
இக்குறிப்பிட்ட தகவல்களின் பின்னணியில் இவருடைய சிறுகதையைப் படிக்கும் போது, ஏற்படும் அனுபவம்
புதுமையானது.
எந்தவொரு கலை இலக்கியவாதிக்கும் ஏதாவதொரு தத்துவத் தளம் இருத்தல் வேண்டும். இக்கதைகளில் அந்தரத்தில் தரிசன நோக்கில் இவர் வாழ்க்கை நோக்கு விரிவடைகிறது. அதற்கேற்ப வாழ்க்கையை கூர்ந்து நோக்கி சித்தரிக்கும் ஆற்றல் பெறுகிறது இவரது கதைகள், !
மு.பொ.வின் தத்துவத்தளம் ஆன்மிக ரீதியானது, மனித நேயம்கொண்டது. இவருடைய ஆரம்பகாலத் கதைகளில் மு.தளையசிங்கத்தினுடைய கதைகள் போன்ற ஒருவித
邀
 

முன்றாவது மனிதன்
மனித வேசாரித் தனங்கள் மீதான வெறுப்பு பரந்திருப்பதைக் காணலாம்.
போலந்தில் பிறந்து ஆங்கில மொழியில் வல்லுனராகி ஆழமான படைப்புகளைத் தந்த ஜோசப் கொன்றட் எவ்வாறு கடலை பின்னணியில் பயன்படுத்தினாரோ அதேபோன்று மு.பொவும் கடலை மையமாகக் கொண்டு இந்துமத தர்மத்தின் படி, ஆன்மீக விடுதலையைத் தேடிக் காட்டும் கதைகளை நிதர்சனமாக எழுதியிருக்கிறார்.
இவருடைய கதைகளில் கடல் ஒரு குறியீடு, திரும்ப திரும்ப வந்து நிற்கும் ஒரு படிமம், அடிமனது ஆழத்தில் புதையுண்ட ஒரு இலச்சனை எனவே கடல் எதைக் குறிக்கிறது, அதன் தன்மைகள் என்ன என அறிந்தால் அவற்றின் பிரயோகத்தில் மு.பொ.வின் கதைகளை நாம் அணுக முடியும்.
'கடலோடு கலத்தல்' என்ற மு.பொவின் முன்னுரையும் தொகுப்பின் இறுதியுள்ள மு.பொ., மது, கவியுவன் ஆகியோரின் உரையாடல்களும் கதைத் தொகுதியை நன்கு புரிந்து கொள்ள உதவும் . 144 பக்கங்களைக் கொண்ட இத் தொகுதியில் 1963முதல் 1995 வரை மு.பொ. எழுதிய 11 கதைகள் இடம் பெற்றுள்ளன.
மூடுபனி, அரைநாள் பொழுது, தவம், கடலும் கரையும், மாயை, கணவன், காடுபுகுதல், யுகங்களை விழுங்கிய கணங்கள், வேட்டை, பயம் கக்கும் விஷம், இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது? என்பன கதைகளின் தலைப்புக்கள், இவை மேலோட்ட மாக கதைகளின் போக்கை உணர்த்தி நிற்பன.
மு.பொ.வின் கதைகளைப் புரிந்து கொள்ள இலக்கிய, அரசியல் சங்கேதக் குறிப்புக்களையும் நாம் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. நிதர்சனமான வாழ் நிலைமைகளை கதாசிரியர் யதார்த்தமாகவும் கற்பனை விருப்பும் கொண்டும் மானுஷ்ய பாத்திரங்களைக் கொண்டும் விபரிக்கிறார். வெறும் கதைகளை மாத்திரம் சொல்லாது அதற்கும் அப்பாற் சென்ற சில அனுபவ ங்களை தோற்றுவிக்க முனைகிறார். இவர் கையாளும் உத்திகளும் மொழிநடையும் இப் பரிவர்த்தனைக்கும் பெரிதும் உதவுகின்றன.
இவரது முன்னைய கதைகளில் ஒருவித அங்கத்த தொனி காணப்படினும் பின்னைய கதைகளில் சகல பக்கங் களையும் பார்த்து பதிவு செய்யும் முதிர்ச்சியுடன் கூடிய சமநிலையை செய்யும் பாங்கு இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. உதாரணமாக கடைசிச் சிறுகதையான இருப்பின் அடையாளம்எது? அடையாளத்தின் இருப்பு

Page 22
(Uன்றாவது மனிதன் -2
எது? என்ற கதை - இது இன்றைய பரிதாபகரமான அரசியற் சமுதாய சூழலை ஒருவித தொடர் உருவமாக சித்தரிக்கிறது.
'மனிதனாக நின்றுதான் போராடுவேன், எனது போராட்டம் எந்த அடையாளத்திற்குள்ளும் புதைக்க முடியாதது அப்போதுதான் எல்லா மனிதருக்கும் அது உரியதாய் இருக்கும்' என்கிறார் தன் இந்தக் கதையின் ஊடே மு.பொ.
அரசியற் சார்ந்த கதைகளில் எவ்வாறு கருத்துப் பரிவர்த் தனையை நேர்த்தியாகச் செய்கிறாரோ அந்தக் கலைத் தன்மையுடன் தாம்பத்திய உறவுகளையும் வாழ்க்கையின் அடிப்படை பண்புகளையும் உணர்த்தி நிற்கும் மு.பொன் னம்பலம் தரமான சிறுகதையாசிரியனாக இதுவரை இனம் காணப்படாதது விந்தையே,
கே.எஸ்.சிவகுமாரன்
நூல் : தரப்பட்டுள்ள அவகாசம்
ஆசிரியர் : ஜபார்
தமிழ்க் கவிதை உலகில் என்பதுகளில் இணைந்தவர் ஜடார். 'திறக்கப்படாததீப்பெட்டிகள்' என்ற முதலாவது தொகுதியை அப்போது தந்திருந்தார். இதே காலப் பகுதியில் கிழக்கிலிருந்து இணைந்த இன்னொருவர் வாசுதேவன். வாசுதேவனின் முதல் தொகுதி 'என்னில் விழும் நான்' இவர்கள் இருவரினதும் முதல் தொகுதிகள் மேத்தா, மேத்தா தாசன், வைரமுத்து, நா. காமராசன் போன்றவர்களின் பாணியிலான ஜனரஞ்சக கவிதை களைக் கொண்டிருந்தன.
எண்பதுகளின் பிற்பகுதிகளில் இவர்கள் இருவரிலும்
 

மாற்றங்கள் ஏற்படுகின்றன. தாங்கள் முதல் எழுதிய கவிதைகளுக்காக இருவரும் வெட்கப்படுகிறார்கள். முன்னைய பாணியிலிருந்து விடுபட்டு 'வாழ்ந்து வரு தல்' என்ற தொகுதியை வெளியிடுகிறார் வாசுதேவன். 'தரப்பட்டுள்ள அவகாசம்' என்ற தொகுதியைத் தரு கிறார் ஜபார். எண் பதுகளின் வரையான நவீன தமிழ்க்கவிதையை எடுத்துக்கொண்டால் அது மஹாகவியில் தொடங்கி முருகையன், நீலாவணன், தா.இராமலிங்கம், சண்முகம், சிவலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், எம். ஏ. நுஃமான், சி.சிவசேகரம், அ. யேசுராசா, மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம் ஆகியோரை உள்ளடக்கிச் செல்கிறது. எண்பதுகளில் இந்த மரபில் புறக்கணிக்க முடியாதபடி இணைந்து கொண்டவர் சேரன். இன்னொருவர் சோலைக் கிளி எண் பதுகளில் உருவான கவிஞர்களில் பெரும் பாலானவர்கள் இந்த மரபினால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகர்சிக்கப்பட்டவர்கள். இதே மரபுக்கு சமாந்தரமான இன்னொரு நவீன கவிதை மரபு தமிழகத்தில் த.பிச்ச மூர்த்தியை மூலவராகக் கொண்டு வளர்ந்து வந்திருக் கிறது. ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு நவீன கவிதை மரபுகள் பற்றியும் இதுவரை விரிவான ஆய்வுகள் மேற் கொள்ளப்படவில்லை. தூலமான வேறுபட்ட இயல்பு களைக் கொண்ட இம்மரபுகளைப் பற்றிய ஆய்வுகள் இன்றி தொண்ணுறுகளின் கவிதைப் போக்குகளைப் பற்றி ஆராய்வது இயலாத காரியம். இந்த மஹாகவி-சோலைக்கிளி மரபினால் பாதிக்கப்பட்ட வரல்ல ஜபார். அவரை அதிகம் பாதித்தது ந.பிச்சமூர்த்தி யின் மரபு. தனிப்பட்ட உரையாடல்களின் போது ஈழக் கவிதைகளை விட தமிழகக் கவிதைகள் சிறந்ததாகக் குறிப்பிடுகிறார். பாதிப்பு என்கிற போது தான் எந்த ஈழத்துக் கவிஞர்களாலோ அல்லது தமிழகக் கவிஞர் களாலோ பாதிக்கப்படவில்லை என்கிறார். மறுதலையாக ஸென் பெளத்தம், தாவோயிஸம் கிறிஸ்தவ இருத்த லியல்வாதம், குரான் - சூபிசம், இந்தியத் தத்துவம் முத லிய தத்துவங்களாலேயே பாதிக்கப்பட்டதாகக் கூறுகி றார். தத்துவங்களால் தான் பாதிக்கப்பட்டபோதும் தான் ஒரு மார்க்சிய வாதியென்றும் மார்க்சியத்தினால் அணுக முடியாத பிரதேசங்களையே மேற்குறித்த 5 தத்துவங்கள் மூலமாக அணுகுவதாகக் கூறுகிறார். தலைப்பிடாத 34 கவிதைகளும் உள்ளடங்கிய இத்தொகு ப்பை நான் பிச்சமூர்த்தி மரபின் ஒரு தொடர்ச்சியாகவே காண்கிறேன். உணர்வுகளும் அனுபவங்களும் மிகுந்த கவிதைமொழி மஹாகவி மரபு என்றால் கருத்தும் தத்துவ விசரமும் மிகுந்த கவிதை மொழி ந.பிச்சமூர்த்தி மரபு. தத்துவ விசாரம் என்ற பெயரில் பெரும்பாலான தமிழகக் கவிஞர்கள் தமது கவித்துவப் பலவீனத்தை மறைத்துக் கொள்கின்றனர். கவிதையிலே ஒரு செயிற்கை இருண்

Page 23
மைத் தன்மையை உருவாக்கிறார்கள். இந்த இருண் மையை கவித்துவம், கவிதை தரும் போதை என்று மயங் குகிறார்கள். இவற்றின் விளைவாக அவர்களது கவிதை களை வாசிக்கின்ற போது தெளிவான பிம்பம் (Image) நம் மனக்கண் முன் விழுவதில்லை. இவ்வியல்புகளை தரப்பட்டுள்ள அவகாசத்திலும் காண்கிறேன். இத்தொகுப்பிலுள்ள 16ம் பக்க, 34ம் பக்க, 35ம் பக்க கவிதைகள் ஹைக்கூ கவிதை இயல்புகளைக் கொண்டு ள்ளன. ஜப்பானிய மொழியில் ஹைக்கூ வடிவம் வெற்றி யடைந்ததாயிருக்கலாம். தமிழில் இவ்வடிவம் பன்முகப் பட்ட கலைப்பரிசவ அனுபவத்திற்கு தடையாகவுள்ளது. பல கவிதைகள் எதைச் சொல்ல வருகிறார் என்று தெரியா மல் இருண்மைத் தன்மையோடு உள்ளது. உதாரணம்.
வட்டமிட்டு வட்டமிட்டு
வட்டத்துள்ளேயே -- இருத்தலும், நகர்தலும் கூடுமாயினும் முன்னம்மீறிப் பறத்தல் தவிர்த்து சனி பிடித்துத் தொங்க நேரின் தொட்டபடி இருக்கும் பாதங்கள் வட்டங்களைத் தொட்டபடி இருக்கும் (பக் 11)
31 வது பக்க கவிதையின் ஒரு பகுதி y
இருட்டு
9,619-pige) affTLDIT5 ஆடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது
இது ஒரு இருண்மையான பகுதி. இதற்கு மு.பொ முன் னுரையில் அர்த்தம் கற்பிப்பது வேறுவிடயம்
32ம் பக்கத்தில்
'எனது நெருப்பு எரியத்தொடங்கி வெகுகாலமாயிற்று அணைந்து எரிந்து அணைந்து எரிந்து அணைந்து எரிந்து
எரிந்தபடிதான் இருக்கிறது அணைந்தே போகாதபடி' இது சொற்களை மாற்றிக் காட்டுகின்ற ஒரு விளையாட்டு இவ்வாறு சொற்களை வைத்து பின்வருவது போல பல கவிதைகள் கட்டலாம். உதாரணமாக,
'எனது பனிக்கட்டி உருகத் தொடங்கி வெகுகாலமாயிற்று கட்டியாகி உருகி கட்டியாகி

(Uன்றாவது மனிதன் -21
உருகி கட்டியாகி உருகி
உருகியபடியேதான் இருக்கிறது கட்டியாகிப் போகாதபடி' இவை எந்தளவுக்கு கவித்துவ அனுபவமாகப் போகிறது. 28ம் பக்கத்தில் தொடங்கிய கவிதை இத்தொகுப்பில் தத்துவ விசாரத்திற்கு உதாரணம் காட்டக்கூடிய கவிதை, நீண்ட கவிதையும் கூட. இக்கவிதைகள் எழுதப்பட்ட காலம் 87 முற்பகுதியிலி ருந்து 88ன் பிற்பகுதிவரையாகும் என்று குறிப்பிடப்படு கின்றது. இந்திய ஆக்கிரமிப்பு சைனியங்கள் இலங்கை யில் நிலை கொண்டிருந்தகாலம். விடுதலை இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்ட காலம். இதுபற்றி ஜபார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இக்கவிதைகளின் காலம் மிக முக்கியமானது, முரண் பாடு, சார்பு வழிபாட்டுத்தளம், ஆக்கிரமிப்பு, கொலை யுணர்வு என்பவற்றின் வெம்மை உச்சத்திலிருந்த காலம். இக்காலத்து அனுபவங்களும் துயரங்களும் எவர்க்கும் பொதுவானவை" ஆனால் இப்பொது அனுபவங்களின் பிரதிபலிப்பாக இக்காலத்தின் கண்ணாடியாக இத்தொகுப்பு இருக்கின்றது என்று உரிமை பாராட்ட முடியாததாக உள்ளது. ஐயா இது தமிழ் தேசிய விடுதலை சம்பந்தமான பிரச்சினை. ஒரு பிராந்திய வல்லரசு ஒரு தேசிய இனக்குழுமத்தின் சுய நிர்ணய உரிமையை ஆக்கிரமிக்கின்ற பிரச்சினை. விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் விடுதலையல்ல. கவிஞர்களின் பிரச்சினை தத்துவ ஞானிகளின் பிரச்சினை யல்ல. மு.பொ.தன்னுடைய கருத்தியலின் பின்னணியில் இத்தொகுப்பை ஆன்மீக அடிப்படைகளில் அடையாளப் படுத்தலாம். ஆனால் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாது தனக்குள்ளே ஜீரணித்து விட்ட உணர்வுகளின் பொதுப்பதிவாக நிற்பதாக கூறமுடியாது. மேலும் 18ம் பக்கம், 25ம் பக்கம், 26ம் பக்கம், 36ம் பக்கம் முதலிய 6 பக்கங்களில் வந்துள்ள சில கவிதைகளே, (இவை மட் டுமே) இவ் வாக்கிரமிப்புக் காலத்தை ஆன்மீகத் தத்துவச் சரடுகளின்றி ஓரளவு தூலமாகப்பாடுகின்றன. 18ம் பக்கத்தில்
'மெய்மைக்கு மறைவின்றேல் எரிந்து கருகும் வரை தீமூட்டு வேலி என்பது பொய்' என்ற வரிகளையும் 23ம் பக்கத்தில்
'பெருவெளியில் சஞ்சரிப்பதே சுதந்திர (p(p60LO அதனால்தான்

Page 24
மூன்றாவது மனிதன் -22
சுமைகள் தவிர்த்துக் கட்டுக்களை விடுவிக்கத் துடிக்கிறேன்' என்று வருகின்ற கவிதை வரிகளையும் அப்பட்டமான தத்துவங்களெனக் காட்டலாம். இத்தொகுப்பிலுள்ள நல்ல கவிதைகளாக 25ம் பக்கத்தில்
'இருப்பேன் என்பது நிச்சயமே உனது வருகையில் தகர்ந்து அநந்தரமாகும் என் பயணம் பற்றியே Լյաւն ''
என்று இந்திய ஆக்கிரமிப்புச் சைனியங்களின் வருகை யைச் சுட்டித் தொடங்கும் கவிதையும் 27ம் பக்கத்தில்
'வெகுதூரம் போய்விட்ட பிறகு தூக்கத்தைப் பறித்து மிகக் குரூரமாய்ச் சண்டை செய்கிற இரவுகளே வந்து போகின்றன"
எனச் சொல்லிப் போகின்ற கவிதையையும் 37ம் பக்கத்தில் வருகிற
'காதலி உன் வார்த்தைகள் உடுத்தியிருக்கிற ஆடைகளை அவிழ்த்தெறி நான் நிர்வாணமாகிக்கொள்கிறேன் நூறாயினும் என என்னை இறுகத் தழுவி முத்தமிடு எஞ்சியிருக்கிற இடைவெளிகளைக் காற்றுநிரப்பட்டும் தோப்புக்குள் ஒதுங்குதல் இன்றி ஒட்டியுள்ளதைத் துடைத்தெறிந்து விட்டு
6ft இந்தப் பெருமணல் வெளியில் புணர்ந்தெழுவோம் என்ற கவிதையையும் மற்றும் 10ம் பக்க 41ம் பக்கங்களில் வருகிற கவிதை களையும் குறிப்பிடலாம். இக்கவிதைகளில் ஜபாரைப் பாதித்த தமிழகக் கவிதைத் தன்மை அல்லது போக்கு விடுபட்டு ஜபாருக்கேயுரிய தனித்துவம் வெளிப்படு வதும் தெரிகிறது.
நட்சத்திரன் செவ்விந்தியன்
நரகம் என்பது உன்னைத் தவிர வேறு அல்ல, அதேபோல சொர்க்கம் என்பதும் உன்னைத் தவிர
வேறல்ல. - ஒஷோ

ஒளியேறித் துலங்கிச் சுடர்ந்தன வெள்ளிகள். சிறிய, மிகச்சிறியகணநீக்கற்பொழுதில் முன்றாம் பிறை வளர்ந்து -முழு நிலவென்றாயிற்று.
வசமிழந்து, உச்சக்காதலொடுபடர்ந்துன்னில் மூழ்கியெழப்பரபரப்பிற்காளாகி, காலுதறிக்கையுதறி அடம்பிடிக்கும்பிள்ளையை-மனத்தை, மாற்றி வேறாய்ப்பராக்குக்காட்டி ஆற்ற
அண்ணார்ந்துவான்னோக்கி, தேறிவர மெல்லநானும் -
சுட்டனர்!
ởĩử L6öIỉT! ởĩử L6öIỉT!!ới LL6öIT !!! அசையும் இருளையெல்லாஞ்சுட்டே காற்றில் இட்டுப்பலபொத்தல் உள்ளே திணித்துவதந்தியையும் உலவவென்றே விட்டனர் ஊரெல்லாம்
இருள்மீய,
எரியூட்டி இரவின் இளங்குருத்தைக் கருக்கிச் சிதைத்தே ஒற்றித் துடைத்தெறிந்தனர் இரவை எங்கள் பாலிருந்தே
முகங்கறுத்துஇருள் வலுத்த உச்சிக்கு மேலான கறுப்பு வெளியிடை ஒளிர்விழந்த வெள்ளிப்போலிகளும், சூழ்பிய நிலவும்-துணையாய் மனம் ஈயநாணின்றித்தனித்தே விடப்பட கீழே, கொன்றே புலியொன்றை-வெறிதீரக் குதுகலிப்பர் அரச காவலர்கள்.
விடிய,
நானோ. பிச்சைக்காரப்பைத்தியமொன்றையோ, கட்டாக்காலிமாடொன்றையோ தவிரக் காணேன் வேறெதையும்.
O aas
19960810 "ܝ݇ܬ̈ܐ

Page 25
சிமாதானத்தின் எதிர்பார்ப்புகள் அனைத்தும்
நிராகரிக்கப்பட்டு விட்டது. யுத்தத்தின் மூலம் பிரச்சி னையைத் தீர்க்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம் பலத்த இராணுவ, மக்கள் இழப்புகளின் மத்தியிலும் யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருகிறது. இன்றைய தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் அதிகாரப்போட்டிக்குள் மக்கள் வழிதெரியாது திகை த்து நிற்கின்றனர். ஆகக் குறைந்த பட்ச சமத்துவத்தை யாவது ஏனைய இனங்களுக்கு வழங்கும் விடயத்தில் எந்த சிங்கள இனவாத அரசியல் தலைவர்களும் தயாரில்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. மக்களின் நிம்மதியான வாழ்வைப் பலிகொடுத்து குறுகிய அரசியல் இலாபங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நிற்கும் பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் அதிகாரப்பரவலாக்கல், சமஷ்டி போன்ற தீர்வுகளைதேர்தல் வெற்றிக்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்கின்றனர். தென்னிலங்கையில் இனவாதத்தீயை மூட்டுவதன் மூலம் தங்களது அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதே இவர்களது குறுகிய நோக்கமாகும் - நீண்ட நோக்கம் நாட்டை தொடர்ந்தும் யுத்தப் பிரகடனத்தில் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வாழ்வை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் செல்வதாகும். வளர்ந்து வரும் இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நிலவி வரும் கொடிய யுத்தம், அந்த நாட்டை விழுங்கி விடும் என்பது இப்போது நிரூபணமாகி விட்டது. சோமா லியா, எதியோப்பியா, ருவாண்டாவை நாம் அண்மி த்து விட்டோம். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, சமூக கலாசாரச் சீரழிவுகள், அடிப்படைப் பொருட்களுக்கான பற்றாக்குறை என் பன இப்போது எமது மக்களைப் பாதித்து வருகின்றன.
 

(Uன்றாவது மனிதன் -23
இந்த நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஆகக் கூடுதலான தொகை யுத்தத் தளபாடங்களுக்காகவும், இராணுவ செலவீனங்களுக்காகவும் ஒதுக்கப்படுவது நாட்டை இருளில் தள்ளியிருப்பதற்கான தக்கசான்று. முல்லைத்தீவு யுத்தத்தின் மூலம் இந்த தேசத்தின் ஆயிரக்கணக்கான வறிய தாய்மார்களின் குழந்தைகள் மாண்டு விட்டனர். தெகிவளை புகையிரத குண்டு வெடிப்பில் அப்பாவிச் சிங்கள மக்கள். கோரமாக மரணத்தைத் தழுவினர். கிளிநொச்சி மீதான இராணுவ நடவடிக்கையின் போது இரண்டு இலட்சம் மக்கள் அகதிகளாய்த் தஞ்சமடைந்திருக்கின்றனர். இம் மக்களின், வறிய குடும்பங்களின் மீதும், இம்மக்க ளின் வாழ்வின் மீதும் அரசியல்வாதிகள் தங்களது இருப்புகளை நிலைநிறுத்தி வருகின்றனர்.கடந்த 17 வருட காலமாக மூண்ட கொடிய யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புகளின் பின்னும் தென்னிலங்கை இனவாத அரசியல் சிங்களத் தலைவர்கள் இரும்புத் திரை வில காத கண்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்ற னர். ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைப் போராட் டத்தை இவர்கள் பயங்கரவாதமாக இன்னும் அடையா ளம் காணும் மனோபாவமானது யுத்தத்தை தீவிரப் படுத்தவே வழிகோலும்:யுத்தம் தொடர்ந்தும் நடப்பின் நாட்டின் எதிர்காலம் யாது? மக்களின் வாழ்வுக்கான உத்தரவாதத்தை யார் தருவர்? இக் கேள்விகளுக்கான பதில் யாரிடந்தானும் இல்லை. பொதுஜன முன்னணியினர் குட்டையைக் குழப்பி ஓய ஐக்கிய தேசியக் கட்சியினர் குட்டையைக் குழப்புவர். ஆள்மாறி ஆள் குட்டையைக் குழப்பும் வேலையை மாத்திரம் இராஜதந்திரமாகச் செய்து வருகின்றனர். தமிழர், முஸ்லிம்களுக்கான தீர்வு என்பது,இவர்களின் வாக்குகளை மாத்திரம் அபகரித்துக் கொள்வதற்காக ஏமாற்று அடிப்படையில் தயாரிக்கப்படும் இக் கட்சி களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் இறந்து விடு கின்றன. சந்திரிகா சரியா? அல்லது ரணில் சரியா? என்பதில் எம் மக்களுக்கு இன்று நம்பிக்கை போய்விட்டது. காத்தி ருந்து, பொறுத்திருந்து ஏமாந்த மக்கள் எமக்கு இந்த நாட்டில் சிங்கள அரசியல் தலைவர்களால் நீதி கிடைக் காது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கின்றனர். இந்த நாட்டில் நிம்மதியான, நீதியான சமத்துவ உரிமை வாய்க்கப்பெற்ற ஒரு தீர்வை அடைந்தே தீருவோம் என்பதிலும் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்கவு மில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் எப்பொழுதும் தவறான வழியிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம்.
- கருங்கொடியான்

Page 26
Uன்றாவது மனிதன் -24
நமது மண்ணில் த
96 5இல் கவிஞனாக வாழ்வைத் தொடங்கிய வன் நான்.
1967ம் ஆண்டு எனது முதல் நாவலான 'கரிசல்'
நாவலை எழுதத் தொடங்கினேன். கரிசல் நாவலை எழுதி முடிப்பதற்கு எனக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது. 71இல் எழுதி முடித்த எனது கரிசல் நாவல் அச்சில் 1975இல் வந்தது. ベ சமூக, பொருளாதார வரலாற்றுப் போக்குகளை அடிப் படையாக வைத்தே நான் எழுத விரும்புகிறேன். வெறும் கற்பனாவாதத்திலிருந்து வாழ்வைப் பார்க்க விரும்பாதவன். நான் பிறந்த மாவட்டம் குமரி மாவட்ட மாகும்- அங்கு வரலாறு புதைந்து கிடக்கிறது. அந்த மண்ணிலுள்ள ஒரு சிறு கல்லை மிதித்தாலும் அக்கல் பல கதைகளைச் சொல்லும் . தமிழ் நாட்டில் குமரி மாவட்டம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. பல போராட்டங்களை கண்ட மண் அது. அந்த மண்ணில் நிகழ்ந்த அவலங்கள், சோகங்கள் கண்ணீரை வைத்தே எனது அடுத்த நாவல் படைக்கப்படப் போகிறது. எனக்கொரு நாவல் எழுத 5 அல்லது 6 வருடங்கள் தேவைப்படுகிறது. குமரி மாவட்டத்தின் 200 ஆண்டு கால வரலாற்றை நாவலாக எழுத வேண்டுமென குமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊர்களிலும் 3 வருட மாக அலைந்து திரிந்திருக்கிறேன். இன்றைய நாவலா சிரியர் சிலர் 'ஒருநாவல் எழுதுவதற்கு 20 நாள் லீவு போட்டு விட்டு எழுதி முடித்து விடுகிறேன்' என்கிறா ர்கள்.
1840ம் ஆண்டளவில் குமரி மாவட்டத்தில் இரத்தம் ஆறாய் ஓடியது. மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
 

மிழக படைப்பாளிகள்
bJ eયઉછ
ਲ%yਉ
“Ja, ratuj. போன்னீலன்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர் சாதியினருக்கு மிடையே பகைமை தீபோல் பரவியிருந்தது. மன்னனு க்கு முன் பஞ்சமர் பெண்கள் மார்பை காட்டியே செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. கிறிஸ்தவம் வந்து இதை மாற்ற முற்பட்டபோது பெரும் கலகம் வந்தது. அடிமை மக்கள் கோயிலுக்கு போகமுடியாது -இத னால் இஸ்லாம், கிறிஸ்தவத்திற்கு அம்மக்கள் மாறினர். மகாத்மா காந்தியின் ஆலயப் பிரவேசம் போராட்டத் திற்கு முந்தியே அம்மக்கள் போராடினார்கள். காலகாலமாய் அடக்குமுறைக்குட்பட்ட மக்கள் இப் போது மேலே வந்திருக்கிறார்கள். வரலாறு அவர்களை கொண்டாடுகிறது - ஆனால் 1980ம் ஆண்டளவில் மீண்டும் அங்கு கலகம் தொடங்கிற்று. நான் அக் கிராமத்திற்கு அப்போது சென்றிருந்தேன். இரு சாரரு க்குமிடையே சமரசம் நடந்து கொண்டிருக்கும் போது 'பள்ளம்" என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமம் தீக்கு இரையாகிப் போயிற்று. இதைக் கண்ணால் கண்டவன் நான். 1800இல் இருந்து 1980வரை நடைபெற்ற சமூகக் கொடுமைகளை எழுதுவதற்கு நான் இப்போது தயா ராகி நிற்கிறேன். அதற்கு 'மறுபக்கம்' என நாமம் சூட்டியிருக்கிறேன். எனது அடுத்த 'மறுபக்கம்' நாவல் 4 பகுதிகளை கொண்டதாகவிருக்கும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றா ண்டுக்குள் நடந்த வரலாற்று நிகழ்வுகளை இருநூறு பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது. ஆகவே 4 பகுதிகளாக எழுதுவதாக தீர்மானித்திருக்கிறேன். 1840ம் ஆண்டுக் காலப்பகுதி 1920ம் ஆண்டுக் காலப்பகுதி

Page 27
1940ம் ஆண்டு சுதந்திரப் போராட்டக் காலப்பகுதி 1980இன் இந்தியாவின் மதக்கலவர காலப் பகுதியாக வெளிவரயிருக்கிறது. எனது மறுபக்கம் நாவலில் வரும் கதாபாத்திரங்களை மூதாதையர் -தந்தையர்கள், மகன், பேரன் 26ILT5& சொல்லியிருக்கிறேன். காலம் மாறுவதன் ஊடாக மனிதன் மாறுகிறான். பொருளாதாரம் எப்படி மாறு கிறது என்பதை எனது நாவலின் ஊடாக சொல்ல
கலை இலக்கியத்தின் எல்லை என்பது மிகவும் விசாலமானது, கலை இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் ! அனைத்தையும் மீறிய வேகப் ! பாய்ச்சலுடனான எலக்ரோனிச் சாதனங்கள் பற்றியும் பேசப்படல் வேண்டும். இலக்கிய வளர்ச்சி | பற்றிய பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன; இலக்கியத்தில் மனிதாபிமானம் இருக்கிறதா, அது 攤 மனிதனை மேப் படுத்துகிறதா என்பதே முக்கியமானது. ჯss>
சூழ்நிலை மாறும் போது இலக்கியத்தின் போக்கு மாறுகிறது. யாதார்த்த இலக்கியத்திற்கு அடிப்படைக் காரணம் இரண்டாம் மகா உலக யுத்தம் தான் - ஈழத்து இலக்கியத்தின் உச்சத்திற்கு காரணம் : இங்கு நிலவும் இனப்பிரச்சினையும் ! சூழலும்தான்.
மனிதன் பன்முகப்படுத்தப்பட்ட தன்மை கொண்டவன்; இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியன் இப்போது பன்முகத் தன்மை கொண்ட இந்தியனாக மாறிவிட்டான். ஒருகாலத்தில் தேசியம் பேசிக் கொண்டிருந்தவன். இப்போது அனைவரின் இன உணர்வுகளையும் பிரதிபலிக்கும் அரசு வேண்டும் என்கிறான், வகுப்பு வாதத்திற்கு எதிரான அரச வேண்டும் என்கிறான்.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கினர். தலித்துக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், படிப் பறிவில்லாதவர்கள் என்றால் அவர்கள் மனிதர்கள் இல்லையா? இந்தியா வில் தலித் இலக்கிய உருவாக்கத்திற்கு இடதுசாரி
 

முன்றாவது மனிதன் -25
முயன்றிருக்கிறேன். ܨܠ
எனது கடைசி நாவலான புதிய தரிசனத்தில் மக்களு டைய மொழி மக்களுடைய வாழ்வு, மக்களுடைய பண்பாடு, மார்க்ஸியத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை சொல்லியிருக்கிறேன். எனது 'மறுபக்கம்' நாவலில் பண்பாட்டில் வரலாற் றில் சாதி, மத மொழியினால் ஏற்பட்ட மாறுதல்களை சொல்லவிருக்கிறேன்.
களின் பங்களிப்பு கணிசமாகவிருந் தது, சித்திலிங்கய்யா போன்றவர்கள் மாராட்டியத்தில் இதற்காக உழைத் தார்கள்.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட4000 சாதியினர் இருக்கின்றார்கள், தலித் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்
- அதுவும் தலித் ஆண்களாலே
ஒடுக்கப்படுகின்றனர். 1ளத்தின் நாட்டை மாத்த முடியுமென்னா
拳 制 சும்மா மாத்த முடியுமா?
2) l ffhg0)LD மறுக்கும் அரசை மாத்த முடி 65 யுமென சும்மா மாத்த முடியுமா?
羲 O ஆகவே அதற்கான விவாதங்கள்; 6S தியாகங்கள் அவசியம்
காலகாலமாய் ச்மூகக் கோட்பாடு களால் ஒடுக்கப்பட்டு வந்த பெண் கேட்கிறாள், காலம்பூரா பாரம்
முழுவதையும் நானா சுமக்க
முடியாதா? பெண்களின்
நியாயமான எழுத்தால் ஆண்கள் குற்றவாளிக் கூண்டில் நிப்பாட்டப்பட்டிருக்கிறார்கள்,
பிரபஞ்சன் போன்றோர் வணிகப் பத்திரிகைகளில் தங்களது எழுத்தின் ஊடாக குடும்பங்களை சிதைக்கப் பார்க்கிறார்கள். குடும்ப அமைப்பை முற்றிலும் சிதைப் பதே பிரபஞ்சனின் தீர்வாக இருக்கிறது. குடும்பம்தான் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணமென்கிறார்கள். அது ஒரு சிறை என்கிறார்கள். பெண்கள் குடும்ப அமைப்பை நிராகரியுங்கள் என்றெல்லாம் எழுது கிறார்கள்; பிரபஞ்சனின் 'அன்பெனப்படும்' சிறுகதை அதிக விமர்சனத்திற்குரியது. பெரும்பாலான வணிகப்

Page 28
முன்றாவது மனிதன்"-26
பத்திரிகைகள் பணம் பண்ணும் நோக்கில் மேலைநாடு களின் உதிரிகளை எமது படைப்பாளிகள் பயன்படுத்து கின்றனர்.
தொலைக்காட்சி மக்களை பாழ்படுத்துகிறது, புத்தகம் வாசிக்கும் பரம்பரை மாறிவிட்டது. வி.லெனின் போன்ற ஆரோக்கியமான சினிமாக் கலைஞர்கள் போராட்டங்களை, மனித உணர்வுகளை அற்புதமாக குறுந் திரைப்படங்களின் ஊடாக வெளிப்படுத்து கின்றனர். வி.லெனின் 18 நிமிட நேர கொண்ட 'குற்றவாளிகள்' என்ற குறுந் திரைப்படம் 3 மணிநேர சினிமாவை விட எவ்வளவு அற்புதமாகவிருக்கிறது. ஏன் ஈழத்தில் இப்படியான காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ள முடியாது?
ஈழத்தைச் சேர்ந்த யோகநாதன், கணேசலிங்கம் போன் றவர்கள் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு அதிகமாக எழுதுகிறார்கள், "சோளகம்" என்ற அவருடைய நாவல், "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே' ஈழத்து சமகாலப் பிரச்சினையை மையமாகக் கொண்டது, புலம் பெயர்ந்தவர்களின் இலக்கியம் உலகத் தரமுடைய இலக்கியமாக மாறிவிடும் ஈழத்திலிருந்து புறப்பட்ட அந்த வேகம் - அவனின் உணர்விலிருந்து பிறக்கிறது. அவனின் துன்பத்திலிருந்து எழுகிறது. இத் தேசத்தைப் பிடித்திருக்கின்ற முக்கிய பிரச்சினை இனப் பிரச்சினை. உங்களுடைய துயரங்களில் நான்பங்கு கொள்கிறேன். இல்ங்கையைச் சேர்ந்த ஒருவர் நான் வரும் போது என்னருகே அமர்ந்து விமானத்தில் வந்தார். அவருடன் உரையாடிக் கொண்டு வரும் போது அவர் என்னிடம் சொன்னார் 'மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் மதுரை யில் விட்டுவிட்டு வருகிறேன். தொழில் நிமித்தம் அவசரமாய் துபாய் செல்ல வேண்டியிருக்கிறது' என்றார் - அவருக்கு நான் ஆறுதல் கூறும் போது என்மனது அழுதது இந்தியாவில் இருந்த மையப் பிரச்சினை வகுப்புவாதம் இன்று அது ஏப்பம் விட்டு எழுந்து நிற்கிறது. முஸ்லிம்களே இருக்காது போ என்றார்கள்! கிறிஸ்தவர்களை துரத்துங்கள் என்றார்கள். ஆனால் இவ் வகுப்புவாதத்திற்கு எதிராக கலைஞர்கள் ஒருமித்து புறப்பட்டார்கள்! பெரும் கலைஞரான சப்னா ஆஸ்மி போன்றவர்கள் வீதிகளில் இறங்கி வகுப்பு வாதத்திற்கெதிராக வீதி நாடகங்களின் ஊடாக தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது; 'ஆனந்தபட்ட வர்த்தன்' என்ற குறுந்திரைப்பட நாயகன் எரிந்து

கொண்டிருக்கும் அப்பிரதேசத்திற்கு சென்றான். அவனது கமராவின் ஊடே அங்கு நடந்ததை உலகுக்கு தெரியப்படுத்தினான். என்ன கோரம் , என்ன கொடுமை, சகோதரர் சகோதரர்களை கொன்று கொண் டிருப்பதை அவன் தனது கமராவின் மூலம் வெளிப் படுத்தினான். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யார்? கிறிஸ் தவர்கள் யார்? இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாரசீகத்திலிருந்து ஒட்டகம் விற்க வந்தவர்களா? இல்லை; கிறிஸ்தவர்கள் ஏதேன்சில் இருந்து வந்தவர்களா? இல்லவே இல்லை; இந்து மதத்தில் இருந்த இறுக்கமான சாதி ஒடுக்குதலின் காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையில் , இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தழுவி கொண்டவர்கள் அவர்கள். எமது சகோதரர்கள் அவர்கள்! நாம் தான் எமது சகோதரர்களைக் கொன்றோம் என்பதை வெளிப்படுத்தினான்.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்துவுக்கு சொந்தமா? முஸ்லிமுக்கு சொந்தமா? அது இந்தியாவிற்கு சொந்தம் என்பதே முக்கியமானது. மதசார்பற்ற அரசியல்மைப்பைக் கொண்ட இந்தியாவில் பாபர் மசூதி உடைக்கப்பட்டது ஒரு துரதிஷ்டமே. அரசியல் ரீதியானது. தீவிர எதிர்ப்பு பண்பாட்டுரீதியான வளர்ச்சியாகும். உணர்ச்சியின் உருவத்திற்கும் மனிதருக்கான பண்பாடு தெளிவுபடுத்த வேண்டும் -பண்பாட்டுப் புரட்சியை நோக்கி கலை இலக்கியம் நகர்தல் வேண்டும். இந்தியாவில் பண்பாடு 10 வருடம் நடாத்திய வகுப்புவாதத்திற்கெதிரான போராட்டம் காரணமாக விகேபி ஆட்சிக்கு வருவதற்கு எதிரணியில் இருந்து ஒரு பிரதிநிதியைக் கூட தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியவில்லை. え
இங்குதான் கலைஞனின் எழுத்தாளனின் பேனா கெளரவிக்கப்படுகிறது; அவன் மனிதாபிமானத்தின் உயர் வாழ்தலுக்காய் போராடினான் என பிரகடனம் செய்ய முடிகிறது.
கவிதை பற்றி பாரதி சொன்ன போதுதான்; அநேக விசயங்கள் புரிகிறது. நவீன கவிதை பற்றிய விடயங் கள் பாரதியை அடியொற்றியதாகவே இருக்கிறது. பாரதி வசன கவிதையை தோற்றுவித்தவன் என்பது டன் அதன்பின் வந்த பிச்சமூர்த்தி புதுக்கவிதையைத் தொடங்கினான்.
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலவிய

Page 29
நிலவுடமை சமுதாயத்தின் போக்குகளை எதிர்த்து அவரது கவிதைகள் பிறந்தது; கண்ணதாசன் சிறப்புமிகு பாடல்களை எழுதியவன், அப்படிப்பட்ட மரபையொட்டிய கவிஞர்கள் இன்று வந்தாலும் இன்றைய சிறந்த கவிஞராக இப்போக்குக்கு மாறுபட்ட 'பரிநாமம்' அவர்களையே சிறந்த கவிஞராக கொள்ள முடியும்.
இன்று தமிழ்நாட்டில் 'திருமூர்த்தி' என்ற கவிஞர் விசேட கவனிப்புக்குரியவராகிறார். இவரொரு தெருப் பாடகன் , கல்வி அறிவற்றவர், அவருடைய கவிதை கள் அசாத்திய உயிர் கொண்டவை. தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை; விலைவாசி
சிற்றிதழ்கள் ப
هاله له ل2
திமிழில் புதிய இலக்கிய முயற்சிகளுக்கும், புதிய பரிசோதனைகளுக்கும் சிற்றிதழ்கள் பெரும் பங்காற்றி இருக்கின்றது. தமிழில் 1950களில் புதிய போக்கு ஏற்படஇச் சிற்றிதழ்களின் வருகை அத்திவாரமாயிற்று. இன்றைய தமிழ் புனைகதைகள் புரியாத மொழியில் எழுதப்படுகிறது. மேற்கத்திய எழுத்துக்களின் பாதிப் பில் புரியப்படாது எழுதப்படும் புனைகதைகளே சிறந்த கதைகள் என போலிகள் கூறுகின்றனர். இந் நிலை தொடர்ந்தும் நீடிக்காது. இவை வீழ்ந்து விடும். அமைப்பியல்வாதம், சர்லியசம், மெஜிகல் ரியலிசம் போன்ற ஐரோப்பிய, கனவுக்கதைகள், பாம்பு பிசாசுக் கதைகள் இப்போது வெளிவரத் தொடங்கியிருக் கின்றன.
இப்படியான கருத்துக்கள் இலக்கியத்தின் ஊடாக விதைக்கப்படும் இக் காலத்தில் ஆரோக்கியமான சிற்றிதழ்களின் வருகை அவசியமாகிறது. ஆரோக்கி யமான சிற்றிதழ்களின் ஆயுளை வணிகப் பத்திரிகை கள் தின்று விடுகின்றன. குமுதம்' ஐந்தரை இலட்சம் விற்பனையாகிறது. அடுத்தது ஆனந்த விகடன், சிற்றி தழ்களின் ஊடாக காத்திரமான எழுத்தாளர்கள் என
 
 

(Uன்றாவது மனிதன் -27
ஏற்றம், சமூகக் கொடுமைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலக்கியங்கள் பிறக்கிறது. இங்கு இனப் பிரச்சினை, மரணம் , அடக்குமுறை என்பன இலக்கியத்திற்குரிய அக்கறைக்குரிய காரணிகளாக இருக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த 'றசூல்' என்ற கவிஞர் 'அதிகாரத்திற்கு எதிரான ஈழத்துக்கவிதைகள்' என்ற கட்டுரையை எழுதுகிறார். ஈழத்து இலக்கியம் புது போக்குகளையும் புதிய கருக்களையும் பார்வையையும் கொண்டிருக்கிறது என்பது ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
அடையாளம் காணப்பட்டவர்கள் கூட கொச்சைப் பத்திரிகைக்கு எழுதப் புறப்படுவது துரதிருஷ்டவச
LDFTGOTj. மத்திம இதழ் வரிசையில் 'அன்னம் விடுதூது’ என்ற இதழை வெளிக் கொணர்ந்தோம். 10 இதழ்களுடன் 10,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நிறுத்தி விட்டோம். 'சுபமங்களா' தனிப்பாங்காக வெளிவந் தது. எல்லாக் கொள்கைகளுக்கும், எழுத்தாளர்களுக் கும், சர்ச்சைகளுக்கும் தீவிர இடம் கொடுக்கப்பட்டது. பொதுத்தளத்தில் வந்தது. 5 வருடம், 'சுபமங்களா' மரணமடைந்துவிட்டது 'கோமலுடன்' சுஜாதா, அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஞானி ஆகியவர்களிடம் சுபமங்களாவின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுநடத்தக் கேட்டும் அவர்கள் கோமலு க்குச் செய்யும் மரியாதையாக அதைப்போல் நடத்த முடியாதென மறுத்துவிட்டனர். சிறுசஞ்சிகை நடாத்துவது என்பது மாபெரும்
போராட்டம்தான்.
தொகுப்பு: அ.ஜெகநாதன்

Page 30
(Uன்றாவது மனிதன் -28
எந்த வடுக்களுக்காக நீங்கள் படுக்கையிழந்து திரிகிறீர்களோ அதே வடுக்களின் பிரசவத்திற்காகவே நாமும் தயார் நிலையில் நிற்கிறோம் சுருங்கி நிற்கிறோம்
விழி பிதுங்க ஒடுங்கி நசுங்கி ஒராயிரம் இரத்தத் துளிகளின் அர்த்தத்தில் மிதக்கிறோம்.
புணர்ந்து கழியும் பொழுது பிரிந்து
சினுங்கும் நினைவு
61606) TLD ஒரு கணக் கடத்தலின் கனவு
கனத்து நகரும் உறவில் வலிமை எமக்குள் விரயம், வீரியம் என்பது எல்லாம் உளத்திடத்தில் இன்று பொய்
பிரபஞ்சத்தில் நாம் நின்று நிலைக்க விரும்பி நமது இயக்கம் நின்று வாடும் சுயம் அன்று சொன்னது எல்லாம் இன்று
சரி என்பதல்ல தத்துவம் மாற்றவல்ல மாற்றம் மட்டுமே நிகழாமல் இருக்கவும் இயலாது.
 

உலக உருண்டையில் அதோ - கசாப்புக்கடையில் சதைப்பிண்டமாய் தொங்கும்
என் தேசம்!
அதோவாசலில் வழியும் குருதி 6160185 சுயத்தை அந்த உருண்டையில் தேடும் படலம் உலக உருண்டையில் அதோ - கசாப்புக் கடையில் சதைப்பிண்டமாய் தொங்கும் என் தேசம்! காலக் கடலில் காணாமல் போன ஊசியாய் அதோ, அந்த ஆழிப் பெருவெளியில் அமிழ்ந்து போனது எனது தேசம்.
மனுஷ ரத்தத்தின் அரிப்பில் இதோ
எனது வாசல் பிரமாண்டமான புவியியல் வெளியாகி. நானும்
என் இருப்பும் ஒற்றைத் துளியாய் g|É15LDLDIT5
கால விழியில் விழுந்தோம் கண்ணீர்த்துளியாய்.1 .

Page 31
ஈழத்து இலக்கிய பேரரங்கு
கடந்த ஜுலை மாதம் 05-06-07ம் திகதிக சரஸ்வதி மண்டபத்தில் இலங்கைமுற்போக்கு திணைக்கணத்தின் அனுசரணையுடன் நடந்தே தமிழக முத்த எழுத்தாளரான வள்விக்கண்ணி இதழ் ஆசிரியர்மகேந்திரன்ஆகியோர்இதில் இப்பேராங் சின் குறிப்பிடக் கூடிய அ எழுத்தாளர்களுக்கும் இளைய தலைமுறை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவாய்ப்பு ஏற்பட் பவத்தவாதப் பிரதிவாதங்கள் எறும் நீண்டக தீர்வு கிடைக்கும் என்றுநம்பிச் சென்றவர்கள் புதிய தேடல்களையும் புதிய தொடக்கத்தை என்பதில் சந்தேகமில்லை. இப்படியான கரு அரங்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட
ஜன்னல்களை திறந்துவைப்போம்:புதியக
பேரரங்கில் பேசப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பி
நிம் இலக்கிய மாற்றங்கள் எல்லாக் கோணங்களையு காலகட்டங்களையும் பார்க்கும் போது புதிய பார்வை அவருடைய புதிய கவிதைகள் வித்தியாசப்பட்டிருக்கி வந்து கொண்டிருக்கிறது. கவிதையில் சேரன், ஜெயப ரஞ்சகுமார், உமா வரதராஜன், புதிய பரம்பரையினர் இது நடந்தது. இங்கும் நடந்தது.
புனைகதையில் புதிய குரல்க்ள் கேட்கின்றன கேட்பதற்க இலக்கியங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையி இலக்கியத்திற்கு சிறு சஞ்சிகைகள் ஆக்கம் கொடுக்கில்
 
 

முன்றாவது மனிதன்
ல் ஈழத்து இலக்கியப் போரங்கு கொழும்பு முத்தாளர்சங்கத்தினால் இந்து சம்பகலாசார நியது. ன் நாவாசிரியர் போன்லைன்:தாமரை வந்துகொள்வதற்கு கோழும்புவந்திருந்தனர். ம்சங்களிலொன்ற முத்த-தலைமுறை த்தாளர்களுக்குமிடையே தமது கருத்துக்கள்ை துதான் ாலமாய் நமக்குள் இருக்கும் சந்தேகங்களுக்கு இருப்பின் அவர்களுக்கு ஏமாற்றம்தான். பும் இப் பேராங்கு தொடக்கி வைத்திருக்கிறது துப் பரிமாறல்கள் களங்கள் ஈழத்து இலக்கிய
வேண்டும்.
ற்றுகள் உள்வரட்டும்.
வற்றில் சில குறிப்புகள்.
மாற்றி விடுகிறது. 1950, 1960களில் இருந்து ஒவ்வொரு வருகிறது. முருகையனின் ஆரம்ப கட்டப் போக்கிலிருந்து து குறிப்பிட்ட காலங்களின் பின் ஒவ்வொரு தலைமுறை லன். அதன்பின் நட்சத்திர செவ்விந்தியன் சிறுகதையில் ரும்போது புதிய பார்வையும் வருகிறது. தமிழ்நாட்டிலும்
கமட்டுமல்ல, புதிய வினைத்திறன்களையும் காண்கிறோம்.
புதிய உற்பத்தியும் உறவும் ஏற்படுகிறது. இப்போது 1ET,

Page 32
(Uன்றாவது மனிதன் -30
பேரரங்கில் நடைபெற்ற ஆய்வரங்கில் எம்.6 சிவத்தம்பி ஆகியோர்அமர்ந்திருப்பதையும் நதிரா சந்தானம் ஆய்வுக்கட்டுரை வாசிப்ட
திறந்த பொருளாதாரக் கொள்கை நமது கலை இெ விளம்பரத்தின் ஊடே இலக்கியம் வளர்கிறது. விளம்ப சமூக சக்திகளை நம்பி நாம் இலக்கியம் வளர்க்க வே: சர்வதேச மாற்றத்தின் ஊடாக நாம் நமது இலக்கிய யூனியனின் வீழ்ச்சி, யுகம் மாறுகிறது என்ற வகையி செல்கிறது. இலக்கியக் கொள்கைகளிலும் சிந்தனைகள் படைப்பாற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொட கண்ணோட்டமுள்ளது. ܗܝ
அமைப்பியல் வாதத்தின் ஊடான குறைபாடுகள் கார பலமத்திகள் (Decentre) என மாறிவிட்டது. ஒரு பெ படைப்பாளிகளின் கருத்தை விட வாசகனின் கருத்து பாடல் என்பது படைப்பவனால் மட்டுமல்ல; வா அப்போதுதான் அது பூரணத்துவம் அடையும்; அங்கு
 

ாச். எம்.ஷம்ஸ், பிரேம்ஜி சோ.தேவராஜா, பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தையும்காணலாம்.
க்கியத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. த்தின் ஊடே இசை வளர்கிறது. இலங்கைக்கு அப்பால் உள்ள எடியிருக்கிறது.
தை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணமாக சோவியத் ல் இலக்கியம் பல்தேசிய, சர்வதேசிய முகத்திற்கு இட்டுச் லும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மனித ாது; மனித அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
ாமாக ஒரு கருத்திற்கு ஒருமத்தி (Centre) என்ற நிலைமாறி ருளுக்கு ஒரு வாசிப்பு இல்லை, பல வாசிப்புகள் இருக்கிறது. க்கியமானதாகிவிட்டது. சிப்பவனாலும் விளக்கம் கொடுக்கப்படல் வேண்டும். ான் விமர்சனம் தனது பணியைச் செய்கிறது.

Page 33
சித்ரலேகா மெளனகுரு
இலக்கியத்தில் 40 வருடங்கள் நீண்ட பரம்பரையை நாம் நோக்கப் போகிறோம். இந்த மதிப்பீடு எதற்கு? இந்த இன்று எங்கே கொண்டு எம்மை நிறுத்தப் போ அமைப்பியல் மையச் சிதைப்பு வாதத்தின் அடிப்படை நோக்கும் போது பல்வேறு இலக்கிய அணுகுமுறை, இ கோட்பாடுகள் அமைந்ததை காணலாம், இலக்கியத்தில் முற்போக்குவாதம், தேசிய வாதம், பிரே (மண்வாசனை) யாதார்த்த வாதம் போன்ற 4 கோட்பாடு இலக்கியத்தில் முன்வைக்கப்படுகின்றன. அநேக படைப்பு 4 விசயங்களைத்தான் முக்கியத்துவப்படுத்துகின்றன. தமிழ் கூறும் நல்லுலகில் ஈழத்து இலக்கியத்தை ஒரு அ காணும் அதேவேளை, எமது விசேட தன்மைகள் காரணப இலக்கியம் வேறுபட்டு நிற்கிறது. இங்கு இலக்கியமும் சமூ இது ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான விே 1960களில் இலக்கியத்திற்கும் சமூகத்திற்குமான தொட வாழ்க்கையை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்துதான் ( 20ம் நூற்றாண்டு இலக்கியம் சவால்களை எதிர்நோக்கி பலவிடயங்களை ஆராயும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ே போன்றவர்களின் சிறுகதை பற்றி மட்டக்களப்பு பல்கலைச் அம்சங்களாகும். சர்வதேசரீதியாக ஏற்பட்ட மாறுதல்கள் கலை இலக்கியத்திலு பால், சாதி போன்ற விசயங்களை மறுஉருவாக்கம் செய்ய முன்வைக்கப்படுகிறது. 'அல்துசர் " போன்ற படைப்ட இக் கோட்பாடுகள் ஏற்படக் காரணம் -மொழியியலில் பற்றியதுதான். தவிர்க்கவியலாத வகையில் இப்படியா இவைபற்றி சிந்திப்பதுதான் நவீன உலகின் இலக்கியம் சரி ஈழத்திற்கு தமிழ் பாரம்பரியம் ஒன்றுள்ளது என்று நாம் அங்கமென்றும் தென்னாசிய இலக்கியத்தில் ஒரு பகு பார்வையை நாம் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விட்ட இன்று இலக்கியம் என்பது தனியே இலக்கியத்தைபகு: பார்க்கும் ஒரு விடயமாக மாறி விட்டது. அரசியல் கார தொடர்புகொண்டிருக்க வேண்டியிருந்தது. உதாரணமாக இன்று தொடர்பாடலில் ஏற்பட்ட பாய்ச்சல் காரணமாக ே தொடர்புகள் ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இது காரணமாக தமிழ்நாட்டில் அண்மையில் அதிகமாக 6 இக் கருத்து மாறுதல்கள் எதிர்காலத்தில் நமது இலக்கியத்
சோ.தேவராஜா எமது நாவல்களை பச்சாபத்துடன்தான் நாம் பார்க்கிறே புனைகதையியல் எம்மிடையே ஏற்பட்ட நெருக்க பன்டக்கப்படல் வேண்டும். நவகால நாயகர்கள் உருவாகக் கூடிய சூழலில் எமது பிர பிரச்சினையின் மையத்தை நாம் ஆராயும் போது சாதி. ( ஆய்வாளன் என்பவன் மரணவிசாரனை அதிகாரியாக

வ்வாறு திப்பீடு ன்றன ல் நாம் }க்கியக்
சவாதம் கள்தான் கள் இவ்
) FLDIT353,
ாக நமது கமும் ஒரு தொடர்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சடமாகும்.
ர்பு நிலைபெறு அடைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் சாதியம், வர்க்கம், பெண்ணிலைவாதம்) இது நிகழ்ந்தது. கொண்டிருக்கும் காலகட்டத்தில் விடுபட்டுப் போன ாாம், பித்தன் கதைகள், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பான
லும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு, வர்க்கம், இனம், இலக்கியம் எவ்வாறு செயற்படுகிறது என்ற கருத்துக்கள் ாளிகள் இக் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஏற்பட்ட ஆராய்ச்சிதான். மொழி குறியீடாக மாறியது ன பார்வை மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே யாக வெளிப்படுத்தப்படுவதற்கு தகுமென நம்புகிறேன். கதைத்தாலும் நாம் முழுத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு நி என்பதையும் மறுக்க முடியாது! இத் தென்னாசியப்
l. துப்பார்க்கும் விடயமல்ல, சமூகத்துடன் இணைத்துப் ணங்களுக்காகவே நாம் வேறு நாடுகளுடன் இலக்கியத் சோவியத் - இலங்கை உறவைக் குறிப்பிடலாம். ஆனால் வறு நாடுகளுடன் அரசியல் தவிர்ந்த கலாசார, இலக்கியத்
ரும் மொழிபெயர்ப்பு நூல்களை குறிப்பிடலாம். ஆகவே நிலும் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.
oIP
களை கொண்டிருந்தலோடு நுண்ணிய நோக்கோடு
சினைகளை நாம் எவ்வாறு நோக்கப் போகிறோம்? எமது னம் என பிரிவுபடுத்தப்பட்டதாகக் காண்கிறோம். இல்லாமல் மருத்துவிச்சியாகவே இருத்தல் வேண்டும்.

Page 34
(Uன்றாவது மனிதன் -32
டானியலுடைய நாவல்கள் வெளிவந்தபோது நாம் அ ஏனைய ஈழத்து நாவல்களின் படிக்கட்டுக்களாக இருந் குறுகிய தேசியவாதத்தின் தன்மை தலை தூக்கும் இ அதிகாரங்களை நாம் எதிர்த்துப் போராடும் போது மலையக மக்களின் இலக்கியத்தைப் பார்க்கிறோம்; ெ எம்மவர்கள் அநேகருக்கு இருக்கக்கூடிய குறைபாடு எப் கண்ணோட்டங்களாகும். மாற்றுக் கருத்துக்களுக் கொடுக்கிறோமா? 50 தொடக்கம் 80 களிலிருந்து நாவலில் ஒப்பீட்டு ஆ செங்கை ஆழியனின் படைப்புகளை நாம் ஒப்பீட்டு செய்யவில்லை. மட்டக்களப்பு இலக்கியம்; மலையக இலக்கியம் வள பல்தேசிய மட்டங்களில் இதனை நாம் வைத்துப் பார்க்
நதிரா சந்தானம்
S 0களில் ஈழத்து இலக்கியத்தில் புதிய போக்குகள் க புதிய போக்குகள் தரும் சில குறிப்புகளைத் தர விரும்பு நாவல் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது அமைப்புக்களை குறிப்பிடலாம். இனப்பிரச்சினை தொடர்பாய் ' ஒரு கோடை விடுமுை உலகம்', 'புதிய அவர்கள்', 'தாகம் ' என்பன குறிட் பிரச்சினை, 83 யூலை கலவரம் போன்றவைகளை அடி மாத்தளை சோமு போன்றவர்கள் இதற்கு உதாரணங்கள் இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை விடுத்து பிரதேச தொடங்கி உள்ளது. புலம்பெயர் இலக்கியங்களின் உ6 குறிப்பிடத்தக்கவர்கள் ராஜேஸ்வரி பாலசுப்ரமணிய யோகநாதன் போன்றவர்களை குறிப்பிடலாம். பெண்களின் பிரச்சினையை பெண்களின் நோக்கிலிருந்து ஒருநாள் கலையும்' என்ற நாவலை குறிப்பிடலாம். இ நாவல் வளர்ச்சியடையவில்லை. ஈழத்து தமிழ்நாவல்களி செங்கை ஆழியனின் "காட்டாறு' என்பனவாகும்.
G)9. GuIII95JIrJ-II
S 0ਲcia பின்னரான ஈழத்து கவிதைப் போக்கை நா
1.80களின் பின் ஈழத்து கவிதைகளின் மிக முச் 2.ஈழத்துக் கவிதைகளில் 80களில் ஏற்பட்ட ம 3.ஒப்பீட்டு நோக்கில் 80களின் பின் - ஈழத்துச் 4தமிழ் கவிதை உலகுக்கு ஈழத்துக் கவிதை அ 80களின் பின் ஈழத்துக் கவிதைப் போக்கில் ஏற்பட்ட கவிதைகள், புகலிடக் கவிதைகள், பெண்ணிலைவாதக் ஈழத்துக்கவிதைகளில் 80களில் ஏற்பட்ட மாற்றங்களாக வகைப்படுத்தலாம். மலையக இலக்கியங்கள் 80க்குப்பின் அதிக பிரக்ஞை
كم

நனுடன் முரண்பட்டோம். டானியலுடைய ஆரம்பம்தான் ருக்கிறது என விமர்சன அடிப்படையாகக் கொள்வோம். ன்றைய நிலையில் அதிகாரம் பற்றிய கேள்வியில் அவ் கிழக்கு முஸ்லிம்களின் இலக்கியத்தைப் பார்க்கிறோம். ன்னிலங்கை மக்களின் இலக்கியத்தை பார்க்கிறோம்.
முடைய இனம், எம்முடைய சாதி, எம்முடைய ஊர் போன்ற கும் பரவலான அபிப்பிராயங்களுக்கும் நாம் இடம்
ய்வு நாம் செய்யவில்லை. டானியல், சுபைர் இளங்கீரன், இருக்கிறோமா? பல வருடங்களாகியும் நாம் இதனைச்
ப்போருக்கு வென்னீர் ஊற்றுகிறோம்; இது ஆபத்தானது
வேண்டும்.
ாணப்படுகிறது. பட்டியல் தருவதை நான் விரும்பவில்லை. கிறேன். து. அதன் தோற்றத்திற்கு காரணமாக சமூக, தனிமனித
றை", "போராளிகள் காத்திருக்கிறார்கள்', 'புதியதோர் பிடக் கூடியவை. மலையக இலக்கியங்களில் தொழிலாளர் ப்படையாகக் கொண்டதாகிறது. மாத்தளை கார்த்திக்கேசு, TrE5ub.
மண்வாசனை கொண்ட நாவல்கள் ஈழத்தில் வெளிவரத் ாடாக நமது இலக்கியம் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதில் ம், ராஜன் குகநாதன், பார்த்தீபன், செ.கணேசலிங்கம்,
எழுதப்பட்ட நாவலாக கோகிலா மகேந்திரனின் 'துயிலும் இந்திய தமிழ் நாவல்களுடன் ஒப்பிடும்போது ஈழத்து தமிழ் ல் குறிப்பிடத்தக்கவை பாலமனோகரனின் 'நிலக்கிளி'
ன்கு பார்வையாய் நோக்கலாம்.
கிய போக்குகள்.
ற்றங்கள். கவிதைகளில் தோன்றிய தனித்துவ அம்சங்கள். ளித்த பங்களிப்பு. திய போக்குகளாக எதிர்ப்புக் கவிதைகள், போராட்டக் விதைகள் என்பவற்றைச் சொல்லலாம்! பொருள்சார்ந்த மாற்றம், ஓசை சார்ந்த மாற்றங்கள் என
புடன் வளரலாயிற்று. இதில் அல்-அஸoமத், குறிஞ்சித்

Page 35
தென்னவன் முக்கியமானவர்கள். 81களில் வெளியான எ மொழி பெயர்ப்பில் முக்கிய முயற்சியாகும். கே.கணே6 சிங்கள மொழிபெயர்ப்பில் எம்.எச்.எம்-ஷம்ஸ் ஆகிே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சரிநிகர் பத்திரிகையின் வரவு இத்துடன் சிறு சஞ்சிகைகள குன்றின் குரல் கவிதைக்கு முக்கிய பங்களிப்பு செய்திருச் 90களில் வெளிப்பட்ட படைப்பாளிகள் இலக்கியத் தாக முஸ்லிம் கவிஞர்கள் அதிகமானோர் என்பது குறிப்பிடத் சிங்களத்தில் இனப்பிரச்சினை பற்றிய கவிதை மொழி துவக்கிலிருந்து அருணா வரை இப்பணியை மேற் ெ இனப்பிரச்சினை பற்றிய கவிதைகள் குறிப்பிடக் கூடியன அரசியல் கவிதைகளின் காரணமாக சமூக யதார்த்த முக்கியமானது. அரசியல் கவிதைகள் எழுதுபவர் 8 கவிஞர்களாகவே இருக்கிறார்கள். ஈழத்து தமிழ்க் கவிதை தமிழ் கவிதை உலகுக்கு அளித்து வைத்துள்ளது. மூன்றாம் உலகக் கவிதைகளுடன் ஒட் வெளிப்பாட்டு முறையில் வித்தியாசமான கோணங்க6ை குறிப்பிடலாம். தமிழக நாவல்கள் உலகத் தரமானவை, தமிழக சிறு பின்தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழத்தில் நாவலும், சி அதிக உயரத்தில் இருக்கிறது. ஈழத்துக் கவிதைகளை தமிழகக் கவிதைகளுடன் ஒப்பி இருக்கிறது என்பதற்கு பின்வருவனவற்றை அடிப்படைய
. கடந்த 10 ஆண்டுகால வாழ்வு
உடன்பதிவுகளை கவிதைகள் கொண்
படைப்பாளிகளின் மொழிப்பன்முகம் எமது மூத்த விமர்சகர்களுக்கு நவீன கவிதைகளில் அதிக வாய்ப்பாயிற்று. இவர்கள் மஹாகவியையும் நீலவாணன
Got
ஈழத்து இலக்கியத்தின் கடந்த 30,40 ஆண்டுகளை நாம் ! காண்கிறோம். 50 தொடக்கம் 80களில் சிறுகதைகளின் 60களின் பிற்பகுதிகளில்தான் தேசிய மட்டத்தில் சிறுகை சாதி அடக்குமுறை, வர்க்கமுரண்பாடுகள், சீதனம், ஏ முரண்பாட்டுச் சிறுகதைகளே அதிகமானதாகவிருந்தது. இன்றைய சூழலில் எரியும் பிரச்சினைகள் காரண வந்திருக்கின்றன. மரணம், படுகொலை, அகதி வாழ்வு ச உருவாகி இருக்கின்றனர்.
படைப்பாளியைப் பொறுத்தவரை
எனது பேனா சிந்துவது மையல்ல கை
எனது பேனா சிந்துவது எழுத்தல்ல,
என்ற உரத்த சிந்தனைகள் வெளிப்ப

(Uன்றாவது மனிதன் -33
ம்.ஏ.நுஃமானின் 'பாலஸ்தீனக் கவிதை' தமிழ்க் கவிதை , சிவசேகரம், மலையகத்தில் பண்ணாமத்துக் கவிராயர் பாரின் பங்களிப்பு முக்கியமானது. ள், கொழும்பு நெருக்கடி, சமாதானப் பேச்சுவார்த்தை, ான அலை, வெளிச்சம், திசை, வியூகம், தடம், முனைப்பு, கின்றன. ) கொண்டவர்கள். இவர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த தக்கது.
பெயர்ப்புகள் நடந்திருக்கின்றன. பராக்கிரம கொடித் காண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் கிருஷ்சாந்தனின்
o). ங்கள் உடனுக்குடன் பதிவாகி வருவதுதான் மிகவும் ள் தங்கள் தங்கள் வகையால் ஒரு தனித்துவமான
ள்ள பங்களிப்பில் தமிழ் கவிதையின் பரப்பை விசாலிக்க புநோக்கும் தன்மைகளை கொண்டிருக்கிறது. கவிதை ா தந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக சோலைக்கிளியை
கதைகள் உலகத் தரமானவை. தமிழகக் கவிதைகள் றுகதையும் பின்தள்ளப்பட்டுக் கிடக்க, ஈழத்துக் கவிதைகள்
விடும் போது ஏன் ஈழத்துக் கவிதைகள் அதி உயரத்தில்
பாகக் கொள்ளலாம்.
டிருப்பது.
) எனபனவாகும. அக்கறை இல்லாமல் இருந்தது இங்கு கவிதை வளர்வதற்கு னயும் புரிந்து கொள்ள மிகவும் நாள் எடுத்தது.
பார்க்கும் போது போராட்ட சூழலின் ஊடான தன்மையைக் போக்கில் வெளியான படைப்புகளை பார்க்கும் போது தகள் தோன்றின.
ழ்மை போன்றவை கருக்களாக இருந்தன. இதில் வர்க்க
மாக ஈழத்துச் சிறுகதைகள் பேசப்படும் கதைகளாக ாரணமாக பல்வேறுபட்ட சிறந்த படைப்பாளிகள் நம்மில்
60 ஆன்மா ட்டு நிற்கின்றன.

Page 36
எழுதுவதற்கு நடை Z6 -
'மூன்றாவது மனிதன்' வாசிக்கக் கிடைத்தது;
ஜெயபாலனின் நேர்காணல் சுபமங்களா Style ஏன் தனித்து வமாய் செய்ய முடியாதா? நீங்கள் நினைப்பது போல் இலக்கிய சாதனை ஏதும் ஜெய பாலன் புரிந்தவரல்ல. வயசுக் கணக்கெடுப்பால் நிற்கும் அவர் வாசிப்புக் கணக்கெடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இலக்கியம் செய்தவர்களின் சூழல் சாதிப்பிரச்சினையின் பின்னணியே; இது இலங்கையில் ஏனைய இடங்களில் மாறுபட்டது. மட்டக்களப்பு, அம் பாறை முற்றிலும் மாறுபட்டது. 'கோமல்' சொந்தக்காரரின் பணபலத்தால் ஆக்கப்பட்ட பத்திரிகையை வழிநடாத்தினார். ஒரு விமர்சகர் பத்திரிகை நடாத்துவான் என்பதற்கு நல்ல சான்று அது. 'கைலாசபதி' 'தினகரன்' பத்திரிகையை அவ்விதம் நடாத்தினர். ஆனால் 'கோமலை' தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை. இலங்கை வந்த அவர் முற்போக்கென்னும் பிற்போக்காளர்கள் வலையுள் சிக்கினார். வந்தார், சென்றார். அவர் பிறந்த தினத்தை கொழும்புக் கூட்டம் கொண்டாடிய போது இறப்புச் செய்தி வந்துவிட்டது. சொந்தக்காரர்கள் பணத்தை முடக்க விரும்ப வில்லை. "சுபமங்களா' கல்லறை சென்றது. உண்மையில் இலங்கையில் ஏற்பட்ட யுத்த மேகத்திற்கு முன் பெய்த இலக்கிய மழையை அவதானித்துப் பிறந்த இலக்கிய ங்களை கணக்கெடுக்க வேண்டும். பாடசாலையில் மாண வர்களுக்கு புத்தகத்தில் புகுத்த இன்றைய இவர்களது இலக்கியம் வழி செய்வதாக இல்லை. முற்றுமுழுதாக வாக்குச் சீட்டை நம்பியிருக்கும் அரசியலில் நியாயங்கள் பேச முடியாது. இதையும் "மூன்றாவது மனிதன்' புரிய வில்லை
பத்திரிகை வரப் பிரார்த்திக்கிறேன்; அது உலவும் போது தான் கருத்துக்கள் தெறிக்கும். என்றாலும் 'மூன்றாவது மனிதன்' எதையாவது சாதிக்குமா?
ஏ.இக்பால்
தர்கா நகர்
 
 
 
 

'மூன்றாவது மனிதன்' முதல் இதழ் பார்த்தேன்.
சஞ்சிகையை பார்த்ததும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. அச்சு அமைப்பு நேர்த்தியாகவிருக்கிறது. ஏற்கனவே சஞ்சிகை வெளியிட்டு அனுபவப்பட்ட நண்பர் 'எம் - பெளசர்', இன்னும் அக்கறைபட்டு செயற்பட்டி ருப்பது தெரிகிறது. கட்டுரை கவிதை சிறுகதை, விமர்சனம் பல்வேறு அம்சங்களை கொண்டிருப்பதால் நிறைவு தெரி கிறது. வ.ஐ.ச.ஜெயபாலனின் நேர்காணலில் கவிதை, சிறுகதை துறைகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய படைப் பாளிகளை குறிப்பிட்டிருந்தார். ஆனால் இவர் நேசிப்பதாகச் சொல்லும் மலையகத்தின் ஒரு எழுத்தாளரையோ ஒரு கவிஞரையே குறிப்பிடாதது ஏனென்று தெரியவில்லை. அண்மையில் வந்த சஞ்சிகையினுள் 'மூன்றாவது மனிதன்' நம்பிக்கை தருவனவாய் உள்ளது.
அந்தனி ஜீவா தினகரனில்
உள்ளடக்கத்தில் தரமாகவும் உயர் விசயங்களைத் தாங்கியும் மூன்றாவது மனிதன் வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கிய உலகிற்கு இத்தகைய சஞ்சிகைகளின் தேவை அதிகமாகவுள்ளது. படைப் பாளிகள் இலக்கிய ஆர்வலர்கள் தேடி வாசிப்பது அவசியமாகின்றது, எமது சஞ்சிகைக்கு நாம் உரமிடுவதன் மூலம் எமது இலக்கிய த்திற்கு உரமிடுகிறோம்.
SystoirecTim வீரகேசரியில்
வணிகப் பத்திரிகைகள் பிரபலமாகி வாசகர்களை சென்ற
டையும் அளவுக்கு இலக்கியத் தரமிக்க பத்திரிகைகள் பிரபல
மாவதில்லை. கவர்ச்சிக்கும் போலிக்கும் பெறுமதி அளிப்ப
தற்கு மட்டுமே எம்மில் அநேகர் தயாராய் இருப்பதுதான் காரணமென நினைக்கின்றேன்.
திருமதி உருத்திரா
மண்டூர்

Page 37
நீண்டகாலமாகவே ஈழத்தில் ஒரு மத்திம இலக்கிய இதழுக் கான தேவை இருந்து வருகின்றது. தமிழகத்தில் 'கணை யாழி' நீண்டகாலமாகவே ஒரு மத்திம இதழாக இருந்து வருகிறது. அதனை விட இடையிடையே 'இனி' எனும் சஞ்சிகையும் 'சுபமங்களா' என்ற சஞ்சிகையும் ஒரு குறிப்பி ட்ட காலத்திற்கு இப்பணியைச் செய்து இன்று வெளிவராது போய்விட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 'அலை', 'புதுசு' முத்லிய சஞ்சிகைகளும் கிழக்கிலிருந்து வெளிவந்த "வியூ கம்', 'இருப்பு' போன்ற சஞ்சிகைகளும் சிறுபத்திரிகை என்ற வகையீட்டுக்குள்ளே வரக்கூடியவை. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக 'மல்லிகை" வெளிவருகின்ற போதிலும் ஒரு மத்திம சஞ்சிகையாக அதனைக் குறிப்பிட முடியவில்லை. மத்திம இதழுக்குரிய குணாம்சங்களுடன் 'மூன்றாவது மனிதன்' வந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதுதான் முக்கியம். r
ந.செ. சரிநிகரில்
ஆரம்பித்திருக்கும் சஞ்சிகை பொருத்தமாக வந்திருக்கிறது. இன்று சகல துறைகளிலும் சுற்றிச் சுற்றிப் பகற் கொள்ளை யர்களின் படையெடுப்பும் அட்டகாசமும் அடங்கா வெறித் தனமுமே கூடிச் சென்று கொண்டிருக்கிறது. மனிதநேய முள்ளவர்கள் இன்னும் மெளனத்தையே கடைப்பிடிப்பது சிறந்ததல்ல். இப்பவே வெகு தூரத்தை விட்டுவிட்டோம் நெறிபிரளாமல், தூரப் பார்வையுடனும் நிரந்தர அமைப்புக் களுடனும் மனிதநேயம் வளர்க்கும் அமைப்புக்களும் அதனோடு தொடர்பான சஞ்சிகைகளும் பொது நிகழ்வுகள், செயற்பாடுகளும் உடனடியாக பலபாகங்களிலும் தொடராக வெளிக் கொணரப்படல் வேண்டும். புத்திஜீவிகள், கலைஞர்கள், படித்தவர் என்ற ஒரு சில பத்திரிகை படிக்கும் மக்களுடன் மாத்திரம் இவ்வாறான சஞ்சிகைகள் தொடர்பாடாமல், அனைத்து மக்களையும் புடம் போட வைப்பதற்கானதாக அமைந்து தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஏனெனில் எவ்வாறான கருத்தோட்டங்கள், தெளிவுகள் மக்களின் முன்னால் வைக்க ப்பட்டாலும் அவர்கள். அவற்றை விளங்க முயற்சிப்பவர் களாகத் தெரியவில்லை. விளங்க முடியாதவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர், ஆக்கப்படுகின்றனர். இதற்கான தடைகள் சமாதியாக வேண்டியவையே ஆகும். மக்களின் இன்றைய நிலை பாரதி சொன்னதைப்போல் "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் யாதென்ற அறிவுமிலார்’ இந்த மக்கள் தட்டியெழுப்பப்படக்கூடியவர்களாக மாற வேண்டும். உண்மை உணரப்பட்ட மக்களாக திறமையுள்ள மக்களாக அன்புள்ளம் கொண்ட் மக்களாக-பட்டைதீட்டப் பட வேண்டும். எனவே எங்கள் எழுத்துக்களில் அவர்களின் யதார்த்தம்

முன்றாவது மனிதன் -35
பாத்திரங்களாக வேண்டும் படித்த மக்களின் பேட்டிகள் மட்டுமல்லாது பாமரமக்களுடனான பேட்டிகளும் நேர் காணல்களும் அமைய வேண்டும். ஈழத்து இலக்கியகர்த்தாக்கள், ஈழத்து நவீனதமிழ், ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கின் பிதாமகர்கள், ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சிப் போக்கின் வாரிசுகள், அகலிப்பான புதுக்கவிதை. இலக்கிய வரலாற்று மரபுகளை உடைத்த (பட்டியல் நீளுகிறது) சட்டகத்தினுள் இருந்து விலகி கவிதை படைப்பவர்கள் மீண்டும் சட்டகங்கள் உருவா க்கும் நிலை இன்று துரதிருஷ்டமாக எமக்குள் ஏற்பட்டு ளளது. ஒரு குறிப்பிட்ட வகையான விமர்சகர்களின் பட்டியலிடுதல் (விமர்சகர்கள் என்ற பதத்துள் படைப்பாளிகளும் அடங்கு வர்) 70,80,90களுக்கு ஊடாகப் பார்க்கும் போது, படைப்பு களைப் படைப்பதை விடவும், படைத்த படைப்புக்களை சரிவர தெளிவாக மக்களைத் தட்டி விடக் கூடியதான வகை யில் விமர்சனம் அல்லது ஆய்வுகள் செய்யப்பட்டதை விடவும் அதிகமாகவே இருக்கின்றது. வ.ஐ.ச.ஜெயபால னின் நேர்காணலும் அவரின் பட்டியல் அத்தன்மையையே கொண்டிருந்தீது எனலாம். இறுதியாக வந்த 'வியூகம்" இதழில் பேட்டியளித்த எம்.ஏ.நுஃமான் அவர்களின் பதில் களிலும் இதே பட்டியலிடல் காணப்படுகின்றது. (ஈழத்துப் புதுக் கவிதை" என்ற நாமமும் அதனை வளர்த்தவர்கள், வளர்க்கின்றவர்கள் வாரிசுகள் என்ற பட்டியலும்) இத்தன் மைகள் அவசியம் தானா என்று வாதிட முனைகின்ற போது இன்றைய சூழலும் ப்ெரும்பான்மையான பாமரத்தனமான மக்களும் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். அதற்கேற்ப நாம் என்ன கடமைப்பாட்டை உடனடியாக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்? என்பன உணரப்படல் அவசியம். 'தாய்ப்பால்' இப்படியான படைப்புக்கள் அருமையானது. அவசியம் சாதாரணமக்கள் வரை சென்றடைய வேண்டிய ஒன்று. தர்க்கிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு மக்களுக்குள் செல்ல வேண்டும் மக்கள் சினிமாவினால் எம்மால் எண்ணிக் கூடப்பார்க்க முடியாத தூரத்திற்கு சென்றுள்ளனர். சினிமாவின் தத்துவ வீச்சுக்களையும், கொள்கைகளையுமே வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கொண்டவர்கள் இன் றைய பாமர வாழ்க்கை வாழும் மக்களுக்குள் 75 சதவீதமான வர்கள் இருக்கின்றார்கள். திரைப்படங்கள் என்ற ஸ்தான த்தை ஒன்றிரண்டு படங்கள் கொண்டிருந்தபோதும் இவை தடைசெய்யப்படவேண்டியவையே. அந்த ஒன்று இரண்டை மாத்திரம் வேண்டுமானால் ஒரு கலைப்படைப்பைப் போல் நாம் எடுத்துப் பார்த்து விமர்சித்து மக்களுக்குள் செலுத்த லாம். அடுத்த இதழையும் தீொடருங்கள்.
மு.மு.மு.பாசில் கல்முனை
மு.பொவின் கட்டுரை குறித்து ஒரு எதிர்வினை
எண்ணங்களாடும் சூட்சும உலகை மையப்படுத்துகின்ற ஊடகம் கவிதைதான். அது- திறமையல்ல, இருத்தலியலின் உள்ளுணர்வுப் பகுதி. அகப் பார்வை போலவே பிறப்பினது

Page 38
(Uன்றாவது மனிதன் -36
நிர்குணமென்றே அதைக் கூறவேண்டும். வழிமுறைகளும், சோதனைக் கையாலளிலும் கூடும் படிப்பினையானது அதனை வளர்க்கும். பிறகும் கவிதையை தனித்துவமான திறமை என்பதுவும் ஓரளவேதான் ஒன்றித்த கொள்ளல். கவிதை ஆத்மார்த்த பண்பென்று தெளிவாகவே சுட்டும் மு.பொ.மதவாதிகள் போல் பிறகுபற்றி அச்சமூட்டுவதும் வழி கொணர்ந்து விரிப்பதும் மனிதத் தன்மையை அவர்கள் எவ்வாறு தொலைத்தார்களோ ஒப்பவே கவிதையியலில் உடைவை செருகின்ற நச்சுத் தடுப்பின்றி வேறு என்ன? கவிதை பற்றிய எதிர்கால ? அடையாளத்தில்: அது தாகிக்கும் போது, அந்த தீ பரவத் துடிக்கும் போது நுழைவாயில் பற்றி கூறுவது விடுத்து நீர் வார்க்க முனைகிற குற்றம் 'பெருங் கலை விடுதலைக்குள்' என முக்காடு சாத்தப்பட்டிருப்பது - அவரது நிலையை மேலும் அழுத்திக் காட்டுகிறது. மு.த.வின் புதிய ஊடகக் கலப்பு என்பதில் பொடி தூவி, அது பற்றி கவிஞனை சுயக் கைதியென மெய்யுணர்வில் கீறும் நிலை - அவனது இருப்பை அகலக்கால் விரிக்கத் தூண்டு வதே. அழித்தலெனும் நோக்கின் புத்திசாலித்தனமான ஆரம்பித்தலை அவர் வெளிப்படையாகவே செய்கிறார். 'மனித ஆளுமையை நிலை நாட்ட அவனுள் மறைந்துள்ள ஆத்ம சக்தியே கை கொடுக்கலாம்.' எனும் ஹக்ஸ்லியின் கருத்தை எடுத்தாளும் இவர், கொம்பியூட்டர்களின் கலை ஈடுபாட்டிற்கு பிறகு நாமும் கவிதை பண்ணுகிறோம் என்பது ஒரு கேலிக்கூத்தாகவே அமையும். எனக் கூறுவது கவிதை, ஆத்மார்த்த பண் பென்று அவர் தெளிவில்லாமலேயே கூறினார் என எண்ணத் தூண்டுகிறது. துவைதம், அத்வைதம், விஷிடாத்வைதம் எனும் மூன்று நிலையிலும் உடன்பாடுள்ள விவேகானந்தர் 'அத்வை தத்தை நிரூபிக்கிறதில் விஞ்ஞானம் தன் ஞானத்தை வளர்த்
‘வாழ்க்கை எழுத்தாளஓ சிந்தனையாளனுக்கு அலுப்புத்தட்டி பணக்காரர்களுக்கு பூஞ்ே ஏழைக்கோ: மரணத்தை எதிர்பா
நம்மிடையே வாழ்ந்து மறைந்து போன சிறுகதை சமரசம் செய்து கொள்ளாத ஒரு சத்திய எழுத்தால் அனுபவித்து பிறந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட நி பே
கடந்த ஐம்பது ஆண்டு காலமாய் எழு தன் வாழ்நாளினுள் போட முடியாத துர்ப்ப இறுதிக்காலத்தில் பாரிய ஏக்கங்களுடனேயே மரணி அவர் எழுதிய 16 சிறுகதைகள் "பித்தன் கதைக
母
 
 
 
 

துக் கொள்கிறது. அது நிரூபிக்கப்படும் போது அதன் வளர்ச் சியும் நின்று விடும்' எனக் கூறியிருப்பதின் ஒரு பகுதியை நினைவு கூரல் இங்கு அவசியத்தின் அவசியந்தான். கவிதை என்பது ஒரு அற்புதம், அதனை பரிசோதித்துப் பார்க்கும் சமூகப் பணிதான் -கொம் புயூட்டரில் கவிதை. கவிதை திறமையானதாய் இருக்குமிடத்து தோற்றுப் போவது நிஜமே. அற்புதங்களை அந்நிலை தொட்டு அறுக்கவே (1plգեւIn 5l. தெளிவது என்னவெனில்-கவிஞனை, கவிதையை அளவிட ஒரு புதிய அலகு முறைக்கான முயற்சியே இந்தப் பணி. கவிதை பற்றி நம்பிக்கை அற்றவர்களும், அதனை பரிசோதி க்க தைரியமிழந்தவர்களுந்தான் மனவெழுச்சிக்கு பலவீன மளிக்கும் இதுபோன்ற கட்டுரைகளை எழுத விளையலாம். உண்மையான கலைப்படைப்பென்பது ஒரு கண்டுபிடிப்பு என்பதில் இரு வேறு கருத்தில்லை. அந்தக் கண்டுபிடிப்பின் பரிசோதனை சாலைகளை கண்டு; வெகுண்டு, விஞ்ஞா னத்தை ‘பஸ் மாசுரன்' நிலை எனக்கூறல் -தனிப்பட்ட பின்வாங்கல்.
வார்த்தை அலங்காரம், அனுபவிக்கும் மேற்கோள், ஒவ்வொ ன்றாய் நெருட்டும் கவித் துண்டுகள் மூலம் ஒரு நீண்ட, தம்முள் முரண்கொண்ட கட்டுரையை சாயமடித்துள்ளபடி -யாருமே இதனை மேய்ந்து விழி விரிப்பதென்பதிலும் ஆச்சரியமொன்றுமில்லை. தொடர்ந்து பார்க்கையில் ஒவ்வொரு வரியையும் உருவிக் காட்ட - ஒரு எழுத்தாளன் கொஞ்சமேனும் காயப்பட்டுத் தான் ஆகவேண்டும். அந்தக் காயமே அவனது அடுத்துள்ள வெற்றியின் பின்புல மாகலாமல்லவா!.
அஸ்வர் மொஹீடீன்
றுக்கு கதையின் கருவூலம் ய மூன்றாம் வகுப்பு ரெயில் பிரயாணம் சாலையின் தென்றல் காற்று ர்த்து நிற்கும் ரெயில்வே ஜங்ஷன்"
- பித்தன் ஷா
எழுத்தாளன் கே. எம். ஷா (பித்தன்) போலிகளுடன் ான். வறுமையுடன் போராடி, வாழ்வில் துன்பங்களையே லையில் எங்கோ ஒரு மூலையில் அகதியாய் மரணித்துப் T60TT66. ழதி, ஒரு சிறுகதைத் தொகுதியையாவது ாக்கியத்தை சந்தித்த அந்த எழுத்தாளன் தனது த்துப் போயிருப்பான், அவரின் நண்பர்களின் உதவியால் ள்" என மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்துள்ளது.
சிரியர்.

Page 39
序ニ
lill, /%t
IN ME
MARHOOM -
உரியகாலத்தில் சஞ்சிகையை கொண்டு வரா முக்கியமான காரணமாகும். அத்துடன் மூ படைப்பாளிக

lishes SJᏤᎤfᏤ1Ꮣ
MORy OF
Al. IMM)
一。
ததிற்கு காத்திரமான படைப்புகள் கிடைக்காமை ன்றாவது மனிதனில் வரும் படைப்புகளுக்கு |ள பொறுப்பாவர்.
Fflur -

Page 40