கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழியற் பணிகள்

Page 1
g). (HLU
தமிழியற்
 


Page 2

இலங்கைப் பேராசிரியர்களின்
w தமிழியற் பணிகள்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணப் பல்க்லைக்கழகம்
LL III se aflues D பதிப்பகம்
1998

Page 3
முதற்பதிப்பு உரிமை
வெளியீடு
அச்சுப்பதிவு
விலை
Title
Author
CopyRight to :
First Edition
Publishers
Printers
Price
gest 6f 1998
திருமதி மனோன்மணி சண்முகதாஸ், எம். ஏ, ஆய்வாளர்(இடைவரவு),
மொழி நிறுவனம், கக்சுயின் பல்கலைக்கழகம், தோக்கியோ, யப்பான்.
பூபாலசிங்கம் புத்தகசாலை.
பேர்பெக்ட் பிரிண்ட்ஸ்
கொழும்பு -12.
100/-
ILANKAIP PERACIRIYARKALIN TAMILIYAT PANIKA L. (Contributions to Tamilology By Sri Lankan Tamil Professors)
DR. Arunasalam Sanmugadas, Professor & Head, Department of Tamil, University of Jaffna, Jaffna, Sri Lanka."
Mrs. Manonmani Sanmugadas, M.A., Visiting Researcher, Language Institute, Gakushuin University,
Tokyo, Japan.
January 1998 Poobalasingam Book Depot.
Perfect Prints Colomboð -TZ
: 100/-

முன்னுரை
எங்கள் நாட்டுப் பேராசிரியர்களுடைய தமிழியற் பணிகள் பற்றி எம் முடைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகின்றது. சுவாமி விபுலாநந்தர் தொடக்கம் அல்லாமா உவைஸ் வரையுள்ள பேராசிரியர்கள் யாவருமே இலங்கைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். இவர்களுட் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே என்னுடைய ஆசிரியர்களாக இருந்தவர்கள். எனவே, இவர்களைப்பற்றி எழுதுவதே ஒரு மகிழ்ச்சியான செயற்பாடாகும்.
மாணவர்களுக்குப் பயன்படத்தக்க இந்நூலை வெளியிட முன் வந்த பூபாலசிங்கம் புத் தகசாலை உரிமையாளர் திரு.பூ. சிறீதரசிங் அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். எப்பொழுதுமே என் புலமை வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் என் துணைவி மனோன்மணி இந்நூலாக்கத்துக்கும் உதவியுள்ளார். இந்நூல் வெளிவரவேண்டுமெனப் பலர் விருப்பந்தெரிவித்தனர். அவர்களுக்கெல்லாம் இவ்வேளையிலே நன்றி கூறுகின்றேன்.
இந்நூலிலே குறிப்பிடப்பட்ட பேராசிரியர்களின் மாணவர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோருக்கும் இந்நூலை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
தமிழ்த்துறை அ.சண்முகதாஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் * திருநெல்வேலி
யாழ்ப்பாணம், இலங்கை.

Page 4
உள்ளடக்கம்
7 பேராசியர் சுவாமி வி லாநந்தா SLLLLSLS0L L 0L SLLLSLL S LLSLSLSLLS 0SLSL SS LSSSLLS LSL L LL SLLL S0SL0SLSLLLSLSLSSSLSLL LSLLS LS0LLLS0LLLLS0S 1 பேராசிரியர்
க. கணபதிப்பிள்ளை. 18 வண. பேராசிரியர் கலாநிதி
எஸ். தனிநாயகம் அடிகள். 30 பேராசிரியர் வி. செல்வநாயகம் . 39 பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன். 59 பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம். 66 பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி . 74
பேராசிரியர் கலாநிதி
அல்லாமா ம. முகம்மது உவைஸ் . 82

பேராசிரியர் சுவாமி விபுலாநந்தா
1. முன்னுரை
விபுலாநந்த அடிகளாருடைய பணிகள் பன்முகப்பட்டன. ஆன்மீகம், சமூகம், கல்வி, இலக்கியம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிலைகளிலே அப்பணிகள் அமைந்தன. அடிகளார் 1944ல் நெருப்புக் காய்ச்சலாலே பீடிக்கப்பட்டுத் துன்புற்றபோது, இலக்கிய நெஞ்சம் கொண்ட அடிகளாருடைய துயர் தீரவேண்டுமெனப் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை "மீட்சிப்பத்து” பாடினார். அடிகளாருடைய நோய் நீங்குவதற்குக் குயிலைக் கூவும்படி வேண்டுவதாக அமையும் பத்துப் பாடல்களிலே அவருடைய பன்முகத் தோற்றங்களையும் புலவர்மணி குறிப்பிடுகின்றார்.
"ஈழமுதற்பணி இமயம் வரைக்கொடி கட்டுமிசைத் தமிழன்
இந்திய வாணியை ஆங்கிலபீடத் தேற்றிய புதுமையினோன் தோழமை கொள்வட மொழியே மாகிய தொன்மை இசைத்தமிழை தூயதனித்தமிழ் வடிவில் தோற்றிய தந்தையெனுந் துணையால் குழமுதத் தமிழ்வாணர் மதிக்கொரு சோதிச் செஞ்சுடரோன் சுவாமி சிவானந்தக் கடலாடிய படிமைத் தோற்றத்தோன் வாழியவன் சுகமீள்கென இனிதே கூவாய் வரிக்குயிலே
மாதவ விபுலாநந்தன் வாழ்கெனக் கூவாய் வரிக்குயிலே"
என்னும் ஒரு பாடல் இங்கு வகைகாட்டியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புலவர் மணியின் இலக்கிய நெஞ்சம் உண்மையாகவே உருகிப் பத்துப் பாடல்களாக வெளிவந்தது. விபுலாநந்தரும் நோயிலிருந்து மீட்சி பெற்றார். அப்பத்துப் பாடல்களிலே அடிகளார் எவ்வெப் பணிகளை ஆற்றினார். அவற்றின் பலன்கள் யாவை என்பனவற்றைப் புலவர் கவிநயத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். விபுலாநந்த அடிகளாரும் ஒரு சிறந்த கவிஞர். அவர் பல கவிதைகளை இயற்றியுள்ளார். ஆங்கில மொழிக் கவிதைகளைத் தமிழிலே மொழிபெயர்த்துக் கவிதைகளாகவே தந்துள்ளார். எனவே அடிகளார் ஓர் இலக்கியப் படைப்பாளி. இலக்கியம் படைத்தது மாத்திரமன்றி, இலக்கியம் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மட்டக்களப்புக் காரைதீவிலே மயில்வாகனன் என்னும் பெயருடன் பிறந்தவர்தான் பின்னர் சுவாமி விபுலாநந்தா என்றும் துறவுப்பெயர் பெற்றார். யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலே பெளதிகவியல் ஆசியராகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் கடமைகள் செய்த பின்னரே துறவுபூண்டார். துறவியாகிய சுவாமி விபுலாநந்தர் தொடர்ந்து தமிழாய்விலே ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தமிழறிவினையும், ஆய்வுத்திறனையும் நன்குணர்ந்த
- 1 -

Page 5
\
சென்னைப் பல கலைக் கழகத்தினர் சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய தேவைபற்றி விதந்துரைக்க வேண்டுமெனக் கேட்டனர். அவருடைய விதந்துரையின் பின்னர் சிதம்பரத்திலே அண்ணாமலைப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்த் தவிசினை அலங்கரிக்க வேண்டுமென சுவாமி விபுலாநந்தரை அழைத்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்த சுவாமிகளை இலங்கைப் பல்கலைக் கழகமும் தமிழ்த்துறையின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அமரும்படி அழைத்தனர்.
சுவாமியினுடைய தமிழ்த்தொண்டு அளப்பரியது. ஈழத்தமிழருடைய கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு வியக்கத்தக்கது. அவர் அமைத்த இராமகிருஷ்ண கல்விக்கூடங்கள் இந்நாட்டிலே பல அறிஞர்களை, பல பெரியார்களை உருவாக்கியுள்ளன. சுவாமியினுடைய இன, மத பண்பாட்டுப் புரிந்துணர்வு அவருடைய ஆழமான அறிவின் வெளிக்காட்டலேயாகும். சுவாமியின் தமிழியற் பணிகளை நோக்குமிடத்து முதற்கண் எம் மனத்திலே தோன்றுவது அவருடைய யாழ்நூல் வெளியீடேயாகும்.
2. யாழ்நூல் தந்த தமிழ்-அறிவியலாளன்
சுவாமியினுடைய தொடக்ககாலச் சிறப்பறிவு பெளதிகவியலாகவே இருந்தது. பெளதிகவியலிலே சிறப்பறிவு பெற்ற ஓர் அறிவியலாளன் தமிழாய்விலே ஈடுபடத் தொடங்கினார். பண்டைத் தமிழருடைய யாழ் பிற்காலத்திலே வழக்கொழிந்து போனதைக்கண்டு, தமிழருடைய இசைக்கருவியாகிய யாழினை மீட்டெடுக்கும் பணியிலே ஈடுபட்டார். பண்டைய தமிழிலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், அதன் உரையிலும், ஏனைய இசைத் தொடர்பான நூல்களிலும் கூறப்பட்ட செய்திகளையெல்லாம் ஆராய்ந்து பண்டைத் தமிழருடைய யாழ் எத்தகையதென்பதை மீட்டுருச்செய்து, அதுபற்றி விரிவான விளக்கங் கொடுக்கும் ஆய்வேடாக யாழ்நூல் என்னும் அரிய நூலினை ஆக்கினார். அறிவியலும், தமிழியலும் இணைந்ததனால் ஏற்பட்ட பெருவிளைவே சுவாமியினுடைய யாழ்நூல் ஆகும். அந்நூலினை தங்களுடைய சங்கத்திலே அரங்கேற்றும்படி கரந்தைத் தமிழ்ச்சங்கம் சுவாமிக்கு அழைப்பு விடுத்தது. சுவாமியினுடைய ஆழ்ந்த புலமையினையும், தமிழறிவினையும் ஆராய்ச்சித்திறனையும் யாழ்நூல் வெளிப்படுத்துகின்றது.

3. அடிகளார் படைத்த இலக்கியம்
அடிகளார் ஒரு சிறந்த கவிஞர். அவருடைய கவித்திறனைத் தமிழ்நாட்டிலிருந்த கவிஞர்களும் கலைஞர்களும் போற்றினர் என்பதற்கு அடையாளமாக இரண்டு எடுத்துக் காட்டுக்கள் வகைகாட்டிகளாக இங்கு தருகின்றோம். ஒன்று திருச்சி வானொலிக் கவியரங்கிலே அடிகளார் பங்குபற்றிய நிகழ்வாகும். 13.4.1947 ஈழகேசரி இதழிலே பின்வரும் செய்தி வெளிவந்துள்ளது:
கவி அரங்கம்
திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்படுத்தியுள்ள கவியரங்கம் தமிழ் மக்களின் அபிமானத்தையும் கவனத்தையும் கவர்ந்து வருகின்றது. தமிழர் புத்தாண்டாகிய இத்தினத்தில் (144.47) திருச்சி வானொலியிற் காலை 9 மணிக்கு "கவியரங்கம்” நிகழ்கின்றது. அன்பு என்னும் பொருள் பற்றி தமிழ்க் கவிஞர்கள் எழுவரின் கவிதைகளைக் கேட்டு இன்புறலாம். ஈழத்துப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் அவர்களும் இதிற் கலந்து கொள்கின்றார். நாமக்கல் கவிஞர். வெ. ராமலிங்கம்பிள்ளை தலைமை தாங்குகின்றார்.
இக் கவியரங்கிலே அடிகளார் கண்ணப்பநாயனார் புராணத்தைத் தன்னுடைய கவிதை நடையிலே பாடி அரங்கேற்றினார். அவர் வானொலியிலே படித்த கவிதையை 11.5.1947 வெளிவந்த ஈழகேசரியிலே பிரசுரஞ் செய்தார். அதில் ஒரு பகுதியை இங்கு எடுத்துக்காட்டாகத் தருகிறோம்:
அன்பின் வடிவம்
"செங்கதிரோன் உச்சியினைச் சென்றணையும் போதினிலே, காளத்தி நாதர்தமைக் காதலித்த சிந்தையராய் வானத்(து) அரமகளிர் வாழ்த்திசைக்கும் தெய்வஒலி கந்தருவர் யாழின்ஒலி கானகத்துப் புள்ளினொலி தேனுகரும் வண்டினங்கள் செய்கின்ற பேரரவம், நீரருவி ஓசை நிறைந்தொன்றாய் நின்றிசைக்க வேடர்க் கிளவரசர் வெட்டம்போய்க் காட்டகத்துப் பன்னியொன் றைத்தொடர்ந்து பக்க மலைதாண்டித் தென்கயிலை என்னும் திறம்படைத்த காளத்தி நன்மலையின் உச்சியினை நாடினார்; அப்பொழுது முன்செய் தவங்கள் முடிவிலா இன்பமான அன்பினைக் காட்ட ஆர்வம் உளத்திற் பொங்க என்பை யுருக்கி எழுகின்ற வேட்கையொடு
- 3 in

Page 6
நாணலும் அன்பும் நளிர்வரையில் முன்செல்லத் தத்துவங்கள் என்னும் தனிப்படிகள் தாண்டியப்பால் அன்பாஞ் சிவத்தை அடைகின் றவர்போல மாமலையின் மீது வழிநடக்கும் எல்லையிலே திங்கட் சடையார் திருநோக்கஞ் செய்தருள அஞ்சிலைக்கை வேடனார் அன்பின் வடிவானார்."
A.
அடிகளாருடைய கவிதையைப் போற்றி அவரை மதித்தமைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு திருலோகசீதாராம் 1959 ல் பதிப்பித்து வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்னும் கவிதைத் தொகுதியாகும். இளங்கவிஞர்களாகிய பெ. தூரன், சுரதா, பிச்சமூர்த்தி போன்றவர்களுடைய புதுத் தமிழ்க் கவிதைகள் அடங்கிய தொகுதியிலே விபுலாநந்த அடிகளாருடைய "வெள்ளைநிற மல்லிகையோ” என்று தொடங்கும் பாடல்களையுடைய "ஈசனுவக்கும் மலர்” என்னும் கவிதை புதுத் தமிழ்க் கவிமலராகச் சேர்க்கப்பட்டுள்ளது. அடிகளாருடைய கவித்துவ வெளிப்பாடு அவர் இயற்றிய கவிதைகள் ஊடாகவும் அவர் மொழிபெயர்ப்புச் செய்த கவிதைகள் ஊடாகவும் இடம்பெற்றது.
3.1 அவர் இயற்றிய கவிதைகள்
அடிகளார் இயற்றிய கவிதைகள் பல விபுலாநந்தக் கவிமலர் (அருள் செல்வநாயகம் 1965) என்னும் தொகுதியிலே இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எவ்வெக் காலங்களிலே இயற்றப்பட்டன என்னும் விபரம் எமக்குத் தெரியவில்லை. எனினும், "ஈசனுவக்கும் மலர்" என்பதே முதற் கவிதையாக அச்சிடப்பட்டுள்ளது. அடிகளாருடைய கற்பனைத்திறனை வெளிக்கொணரும் கவிதைப் படிமங்கள், அகவுருவங்கள், குறியீடுகள், வர்ணனைகள் யாவுமே அவருடைய தவநிலை, அருள் நிறைந்த உள்ளம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டனவே. எடுத்துக் காட்டாக, "ஈசனுவக்கும் மலர்” கவிதையை நோக்குவோம்:
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ள லடியினைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ? மாப்பிளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ? காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது
- 4 -

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலிலாக் கற்பகமோ வாட்ட முறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ? பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலிலாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.
உள்ளக்கமலம், கப்பியகைக் காந்தள், நாட்டவிழி நெய்தல் ஆகிய மூன்று. மலர்களையே ஈசனுவக்கும் மலர்களாக அடிகளார் குறிப்பிடுகிற்ார். உள்ளமாகிய பூ மலர்ந்தால் அதனை எங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவன கைகளும் கண்களும் ஆகும். மாணிக்கவாசகள் இதற்குச் சான்று தருகிறார்.
மெய்தானரும்பி விதிர்விதிர்த்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து போற்றி சயசய போற்றி என்னுங் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.
என்னும் திருவாசகப் பாடலிலே “கைதான் தலைமேல் வைத்து" எனவும் "கண்ணிர் ததும்பி” எனவும் மணிவாசகள் குறிப்பிடுவதை நோக்குக. விபுலாநந்த அடிகளார் இன்னொருபடி மேலே சென்று தன்னுடைய மூன்று பாக்களினாலும், உள்ளம் பண்பட்டுக் கனிவடைய கப்பியகை வெளிக்காட்டும் அடக்கத் தன்மையும், நாட்டவிழி புலப்படுத்தும் அருள் நோக்கும் தானாகவே வந்துவிடுவன என்னும் உண்மையினைப் புலப்படுத்துகிறார்.
அடிகளாருடைய "கங்கையில் விடுத்த ஒலை" அவருடைய கவித்திறனைப் புலப்படுத்தும் இன்னொரு கவிதையாகும். சோழவந்தான் என்னும் ஊரில் திகழ்ந்த சைவநெறித் திருமடத்தைச் சார்ந்த கந்தசாமி என்பவர் அடிகளார் மனங்கவர்ந்த நண்பர். அவருடய நட்புத்தோன்றியதை,
“கந்தசா மிப்பெயரோன் வேட்களத்தி லென்னைக்
கண்டநா ளன்பென்னுங் கயிறுகொண்டு பிணித்தான் அந்தநாள் முதலாக நட்புரிமை பூண்டோம்"
என்று குறிப்பிடுகிறார். அந்நண்பருடைய தன்மைகள் யாவற்றையும் முதல் ஆறு பாக்களிலே எடுத்துரைக்கிறார். பல நூல்களிலுள்ள உண்மைகளைக் கற்று மனத்திலே திரட்டி தேக்கி வைத்துள்ள பண்பினை,
"பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்
பல்லெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்"
என்று அடிகளார் காட்டுகிறார். இத்தகைய நண்பன் திடீரென மறைந்துவிட்ட நிகழ்வு துறவுநிலை கொண்ட அடிகளாருடைய
- 5 -

Page 7
மனத்தையும் துவளச் செய்கிறது. தான் வடநாடு சென்றிருந்தபொழுது தனக்கு ஒலை எழுதத் தன் முகவரியை உசாவிப் பெற்ற நண்பன் ஒலை எழுதாமலே திடீரென இறந்துவிட்டதால் அவனுக்கு ஒலை எழுத ஆவல் கொள்ளுகின்றது. அடிகளாருடைய அருட்கொழுந்தோடிய உள்ளம். ஒலையிலே என்ன எழுதினார்?
தோற்றுவதும் மறைவதும் தொல்லியல்பென் றுணரத்
துயரகன்ற தெனினுமன்புத் தொடரகலா மையினால்
மாற்றமொன்று முரையாது வான்புகுந்தாற் கோலை
வரைவலென அன்புபொதி வாசகங்க ளெழுதி.
அறிவற்றங் காக்குமெது மறவுரையை யெழுதி
அறநெறியா லின்பமெய்து மனமதியையு மெழுதி
உறுநட்பு நிலைபெறுமென் றுறுதிப்பா டெழுதி
ஒதுவிபு லாநந்த னுரையிவையென் றெழுதி.
இவ்வாறு ஒலை எழுதியவுடன், தன் நண்பனுடைய முகவரி பற்றி எண்ணுகிறார். இவ்விடத்தில்தான் அடிகளாருடைய உன்னத கற்பனைத் திறனையும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற சால்பினையும் நாம் காண முடிகின்றது. செல்வம் மிகுந்த விண் உலகிலே கலைத்தெய்வம் வாழும் நல்ல நகரிலே தமிழ் வழங்குகின்ற ஒரு தெருவுண்டு. அத் தெருவில் உள்ள ஒரு வீட்டிலே துன்பம் எதுவுமே இல்லாமல் கந்தசாமிப் பேரறிஞன் வாழ்கின்றான். எனவே அந்த முகவரிக்கே தன்னுடைய ஒலையை அடிகளார் அனுப்புகிறார்:
செல்வமலி விண்ணாட்டிற் செழுங்கலைத்தெய் வம்வாழ்
திருநகரிற் றமிழ்வழங்குந் தெருவிலொரு மனையில்
அல்லலின்றி வாழ்கின்ற கந்தசா மிப்பே
ரறிஞனுக்கிவ் வோலையென வடையாளம் பொறித்தேன்.
தேவர் உலகிலேயே தமிழ் வழங்கும் தெருவொன்றை அடிகளார் அடையாளங் காணுகிறார். தமிழ் அறிஞன் கந்தசாமி வாழுகின்ற காரணத்தால், அவன் வாழும் தெரு தமிழ் வழங்கும் தெருவாயிற்று. ஒலை எழுதி முகவரியும் இட்டாயிற்று. அதனை எப்படி விண்ணுலகுக்கு அனுப்புவது? கங்கை நதி விண்ணிலும், மண்ணிலும் இருப்பதுபோலத் தோன்றும். மூவுலகஞ் செல்வதற்கு வல்லவளாகிய கங்கையின் கையிலேயே ஒலையை ஒப்படைக்க அடிகளார் முடிவுசெய்தார்.
தேவர் புகழ் கங்கையெனுஞ் செல்வநதி, நங்கை
செஞ்சடைவா னவனிடத்தா ளிங்குமுறை கின்றாள் மூவுலகுஞ் செலவல்லா ளெவ்வுயிரும் புரக்கும்
முதல்வியிவள் துணைபெறுவ னெனவியந்து துணிந்தே.
- 6 -

"கங்கையில் விடுத்த ஒலை" அடிகளாருடைய ஆளுமையினைப் புலப்படுத்தும் கவிதை.
அடிகளார் இயற்றிய பாடல்கள் பல (விபுலாநந்த கவிமலர் தொகுதியிலி இடம் பெறுவனவற்றுள்) af LD ulu (Gb சார்ந்தனவாகவேயுள்ளன. ஆனால் "நீரர மகளிர்” என்னுங் கவிதை விதிவிலக்காக அமைகின்றது.
"ஏரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும் சீரா ரியன்றசெந்நெ லின்சுவைத்தீங் கன்னலொடு மட்டக் களப்பென்று மாநாடந் நாட்டினிடைப் பட்டினப் பாங்கள்ப் பரந்ததோ ளாமுகமாய் ஐங்கரன் கோயி லமிர்த கழிக்கணித்தாய்ப் பொங்கு கடலுட் புகுநீர் நிலையொன்று நீர்நிலையி லுள்ளே நிகழ்ந்த வதிசயத்தைப் பாரறியக் கூறும் பனுவ லிதுவாகும்”
என்று தொடங்கி,
"தேனிலவு மலர்ப்பொழிலிற் சிறைவண்டு துயிலச்
செழுந்தரங்கத் தீம்புனலுள் நந்தினங்கள் துயில
மீனலவன் செலவின்றி வெண்ணிலவிற் றுயில
விளங்குமட்டு நீர்நிலையு ளெழுந்ததொரு நாதம்"
என்று கூறி, அந்நாதம் நீரர மகளிருடைய இன்னிசைத் தீம்பாடலெனக் கற்பனை செய்து அடிகளார் பாடுகிறார்.
3.2 மொழிபெயர்ப்புப் பாடல்கள்
அடிகளாருடைய மொழிபெயர்ப்புப் பாடல்களை ஆராய்ந்து அவருடைய மொழிபெயர்ப்புத் திறனையும் சொல்வளம் கவிவளம் , ஆகியவற்றினையும் பல அறிஞர்கள் பெருந்தொகையான கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றை இங்கு திரும் பக் கூறாது, மொழிபெயர்ப்புத்துறை தொடர்பான சில குறிப்புகளை இங்கு தருகின்றேன்.
பல்வேறு மொழிபெயர்ப்புக்களை ஆராய்ந்த மொழிநூலார் அம்மொழி பெயர்ப்புக்களை பின்வரும் ஆறு வகையாகப் பாகுபாடு செய்துள்ளனர்.
சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் விரிவான மொழிபெயர்ப்பு முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு முந்துநூற் செய்திகளைச் சுருக்கமாக மொழிபெயர்த்தல்
*
- 7 -

Page 8
5. தழுவல் மொழிபெயர்ப்பு 6. மொழியாக்கம்
மேற்காட்டிய வகைகளுள் அடிகளாருடைய மொழிபெயர்ப்புகள் தழுவல், மொழியாக்க வகைகளைச் சார்ந்தனவாகும். இவ்வகை மொழிபெயர்ப்புக்களிலே மொழிபெயர்ப்பாளனின் புலமை மிகுதியாகக் காணப்படும். இரு மொழிகளுக்கு இடையே விளங்கும் பண்பாட்டு வேறுபாடுகளை இவ்வகை மொழிபெயர்ப்புக்கள் ஓரளவு சமன்செய்துவிடுகின்றன. மூலத்தைத் தேவைக்கேற்ப மாற்றக்கூடிய வாய்ப்பும், மூலநூலின் கருத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு ஏனைய நிகழ்வுகள், கதைமாந்தர்கள், நிகழ்ச்சி மாற்றங்கள் போன்றனவற்றை மொழிபெயர்ப்பாளர் தன் எண்ணப்படி மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இவ்வகை மொழிபெயர்ப்புக்களிலே நிறைய உண்டு.
மேற்குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப் பண்புகள் யாவும் விபுலாநந்த g9HLç? 85 6TT T (Qb 60) u u.I மொழிபெயர் ப் புக் களிலே நாம் காணக்கூடியனவாயுள்ளன. பலரும் மேற்கோள் காட்டும் இரண்டு மொழிபெயர்ப்புப் பகுதிகளை இங்கு எடுத்துக் காட்டுகளாகத் தருகிறோம்.
1. Milton's Paradise Lost:
"My fairest my espoused, my latest found Heavens lest, best gift, my ever - new delight Awake, the morning shines, How nature paints her colours, how the bee Sits on the bloom extracting liquid Sweet'
ஆங்கிலப் புலவன் மில்ற்றன் இயற்றிய சுவர்க்க நீக்கம் என்னும் நெடும்பாடலின் ஒருபகுதி மேலே தரப்பட்டுள்ளது.
இப்பகுதியினை மொழிபெயர்க்கும் அடிகளார் தான் சொந்தமாகக் கவி புனைவது போல் பாடுகிறார்.
"என்னாருயிர்த்துணையே! ஈசன் எனக்களித்த செல்வநிதியே! செழுந்துயில்நித் தேயெழுவாய் புத்தமிழ்தே! புலரிப் பொழுதினிலே வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன் அருந்தும் விந்தையினைக் காண்போம் வழிதுயில் நீத் தேயெழுவாய்
வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தன காண்"
2. William Shakespaere: 'Seven stages of man' in
As you Like it. ”......................... At first the infant,
Mewling and puking in the nurse's arms"
- 8 -

a w And then the lover Sighing like furnace, with a woeful ballad Made to his mistress' eyebrow......... t
வில்லியம் சேக்ஸ்பியர் என்னும் ஆங்கிலப் புலவன் எழுதிய AS you like it என்னும் நாடகத்திலே “மனிதவாழ்வின் ஏழு படி நிலைகள்" என்றொரு கவிதைப் பகுதி இடம்பெறுகின்றது. குழந்தைப் பருவம் முதலாக முப்புப் பருவம் ஈறாக ஒவ்வொரு பருவத்தையும் கூறும் புலவன் குழந்தைப் பருவம், காதலர்ப் பருவம் என்னும் இரண்டினையும் மேற்காட்டிய ஆங்கிலக் கவிதை அடிகள் கூறுகின்றன. இவற்றினை மொழிபெயர்த்த அடிகளார் அவற்றிலே கூறப்பட்டுள்ள விடயங்களை உள்வாங்கிக்கொண்டு தன் கற்பனை யைப் பயன்படுத்திப் பின்வரும் பாடல்களைப் புனைந்துள்ளார்.
முதலங்கத் தியல்புரைப்பின் முலையருந்தி
மணியிதழ்வாய் முகிழ்தி றந்து குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித்தாய்
கரதலத்திற் கூத்து மாடித் திதலைப்பொன் செறிதனத்தார் சேர்த்தணைக்கச்
சிறுநகையிற் சிறப்புக் காட்டும் மதலைச் செம் பருவத்தின் வனப்பனைத்தும்
விளங்குகின்ற மார்க்க மாகும். எல்லைவந்த மூன்றாகு மங்கத்தின் குறிப்புரைப்பி னேருஞ் சீரும் புல்லநின்ற யெளவனமாம் பருவமுற வேனில்வேள் பொருபோர் வேட்டு மெல்லிநல்லார் தமைநாடி யன்னவர்தங்
கட்புருவம் நயந்து பாடிச் சொல்லரி காமனவ னுளம் வெதுப்ப
நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும்.
4. இலக்கியம் பற்றி அடிகளார் எழுதியவை
அடிகளார் இலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 1939ஆம் ஆண்டு கல்முனையில் நடைபெற்ற ஆசிரியர் விடுமுறைக் கழகத்தினுக்குத் தலைமை தாங்கி அடிகளார் “இலக்கியம் கற்றலும் இலக்கியச் சுவையில் ஈடுபடலும்" என்பது பற்றி ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவு "இலக்கியச் சுவை" என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது. தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயன்படத்தக்க வகையிலே இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி, அவற்றை விளக்கி, அவற்றிற் காணப்படும் சுவைத் திறன்களை வெளிக் கொணர்ந்துள்ளார். செய்யுட்களைச் சுவைக்கும் வழிபற்றிக் கூறுமிடத்து,
- 9 -

Page 9
"சந்தச் செய்யுட்களைச் செம்மையாக வாசிப்பதற்கு ஒரு சிறிது சந்த விருத்தத்தின் இலக்கணத்தை அறிந்திருக்க வேண்டும். தனதான, தத்த, தந்த எனச் சந்தக்குறிப்புக்களை எழுதப்பயின்று கொண்டாற் போதும், தெளிவுபெற வாசிக்க வேண்டும்; ஓசைக்காக ஒரு முறையும், பொருளுக்காக மற்றொரு முறையும் வாசிக்கலாம். செய்யுளிற் குறிப்பிட்ட இடங்கள், மக்கள், சந்தர்ப்பம், நிகழ்ச்சி என்றிவற்றை அகக்கண்ணோக்குதல் வேண்டும். செய்யுளிற் குறிப்பிட்ட பேச்சு, ஓசை, என்னும் இவற்றை அகக்காதினாற் கேட்க வேண்டும். சுவையோடு கூடிய மெய்ப்பாடு வாசிப்போரது உடலத்தில் ஒரு சிறிது தோற்றுதல் வேண்டும். உயர் குணங்களையும் செயற்கருஞ் செயல்களையும் நோக்கி உள்ளமானது உருகுதல் வேண்டும். கவி நுண்ணிதினமைத்து வைத்த அரும்பொருளின் செவ்வியை "ஆழ்ந்து நோக்கிப் பாராட்டுதல் வேண்டும்.
"ஐயமும் அழகும்" என்னும் கட்டுரையிலே அடிகளார், "நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி" இன்புறுதற்குரிய ஓவிய நூல் வட்டிகைச் செய்தி என்றித் தொடக்கத்தவாகிய அழகு நூல்களுக்கு (Fine Arts) ஐயம் கருவியாகும்" என்று கூறி, "ஐயத்தின் வழி அழகு பிறப்பதனை உணர்த்துவதற்கு ஆன்றோர் செய்தளித்த அழகிய செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக் காட்டுவாம்" என்று கூறித் தமிழ் இலக்கியங்களிலிருந்து பல எடுத்துக் காட்டுகள் காட்டி விளக்கிச் சொல்கிறார். இவ்வாறே “வண்ணமும் வடிவும்", "நிலவும் பொழிலும்”, “கவியும் சால்பும்" என்னும் கட்டுரைகளிலும் சுவைத்திறனுடைய செய்யுட்களைத் தமிழிலக்கியங்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குகின்றார்.
தமிழ் இலக்கியச் செழுமையினைப் பல கட்டுரைகள் மூலமாக எடுத்துக் காட்டிய சேக்ஸ்பியர், மில்ற்றன், ஷெல்லி, தெனிசன் போன்ற ஆங்கிலப் புலவர்களுடைய இலக்கிய ஆக்கங்களின் சிறப்புகளை "ஆங்கிலவாணி" என்னும் கட்டுரையிலே விளக்கிக் கூறுகிறார்.
தமிழிலக்கியங்கள் பிறமொழி இலக்கியங்கள் ஆகியவற்றிலே தாம் சுவைத்தனவற்றைப் பிற தமிழ் மக்களும் சுவைத்தற்பொருட்டு செந் தமிழ் நடையரிலே U6) கட்டுரைகளாகவும் தலைமையுரைகளாகவும் வெளியிட்டுள்ளார்.
- 10 -

5. அடிகளாரின் இலக்கிய நோக்கு
அடிகளார் இலக்கியம் பற்றியும் மொழிபற்றியும் எழுதிய கட்டுரைகளைப் படிப்பவர்கள் அவருடைய இலக்கிய நோக்கு எத்தகையது என்பதனை இலகுவிலே இனங்கண்டு கொள்வர். அவருடைய இலக்கிய நோக்குக்குப் பின்னணிகளாயமைந்தவற்றை இப்பகுதியிலே சிறிது விளக்கமாகக் காண்போம்.
5.1 சுவைத் திறனாய்வு
திறனாய்வு முறைகள் பற்றித் திறனாய்வு நூலார் விளக்கமாகக் கூறியுள்ளனர். செய்யுட்களிலே அமைந்து கிடக்கும் சொற்கள், சந்தம், கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலே புலவனின் உணர்வையும் பாடலின் சுவையையும் விளங்கிக் கொள்ளும் முறையினை அந்நூலார் சுவைத் திறனாய்வு முறை அல்லது இரசிக விமரிசன முறை என்று கூறுவர். அடிகளாருடைய இலக்கியக் கட்டுரைகளிலே தமிழிலக்கியச் செய்யுட்கள் இத்தகைய திறனாய்வு முறையிலேயே நயக்கப்பட்டு விளக்கம் பெறுகின்றன. வில்லி பாரதம் நூலிலிருந்து போர்க்கள, பூஞ்சோலைக் காட்சிகளை விரித்துரைக்குஞ் செய்யுட்களை எடுத்துக் காட்டுகளாகக் காட்டி, அவற்றின் திறன்களை அடிகளார் விளக்குமிடத்து,
"போர்க்களத்திலே பெருமிதச் சுவை தலையாய சுவையாகி நிற்கும். செயற்கருஞ் செயல்களைக் கண்டு இறும்பூ தெய்தும். உள்ளத்திலே மருட்கை யென்னுஞ் சுவை தோன்றும். எள்ளி நகைக்கின்ற நகையும், அசைவு கண்டிரங்கும் அவலமும், பகைமேற் செல்லும் வெகுளியும், இகழ்ந்துரையாடும் இளிவரலும், அஞ்சத்தக்கணகண்டுழி நிகழும் அச்சமும், வெற்றியாலெய்திய உவகையும், என ஏனைய சுவைகளும் போர்க்களத்திலே தோன்றுதற்குரிய."
"பூஞ்சோலைக் காட்சியினுள்ளே "காதலிருவர் கருத்தொப்ப ஆதரவுபட்ட உவகையும்" இனிய நகையும், வியப்பின் பாலதாகிய மருட்கையும், பிரிவு நோக்கிய அச்சமும், பிரிவாலெய்திய அவலமும், பெருவரவின் பொருள் குறித்தெழுந்த சுவையினால் மாத்திரமன்று, பாவினகத்து எழுத்துக்கள் அமைந்து நின்ற தாளவிகற்பங்களினாலும் கவிஞர் தமது உள்ளக் குறிப்பினை வெளிப்படுத்துவர்."
என்று "இலக்கியச்சுவை” என்னும் கட்டுரையிலே கூறுவது
சுவைத்திறனாய்வு முறையை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அவருடைய ஏனைய கட்டுரைகளிலும் இத்தகைய நோக்குப்
புலப்படுகின்றது. அவருடைய "ஐயமும் அழகும்", "வண்ணமும் - 11 -

Page 10
வடிவும்", "நிலவும் பொழிலும்”, “கவியும் சால்பும்" என்னும் கட்டுரைகளும் அடிகளாருடைய சுவைத் திறனாய் வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. நல்ல உணவைச் சுவைத்துச் சாப்பிடுவதுபோல அடிகளாரும் இலக்கியங்களின் சிறந்த பகுதிகளைச் சுவைத்தார். R
5.2 இந்திய கலைக்கோட்பாடு
அடிகளாருடைய இலக்கிய நோக்கினை இந்தியக் கலைக் கோட்பாடு - குறிப்பாக இந்திய அழகியற் கோட்பாடு பெரிதும் பாதித்துள்ளது. "கவியும் சால்பும்" என்னும் கட்டுரையும் ஏனைய சில கட்டுரைகளும் இக் கருத்தினை அரண்செய்வனவாயுள்ளன. சிவம், சத்தியம், சுந்தரம் என வடநூலார் கூறியவற்றை செம்மை, உண்மை, அழகு என அடிகளார் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில bj6)stir Goodness, Truth and Beauty 6166|UFr. Sibgfuji, B606)35(655(5 அடிப்படையாகக் கொள்ளப்படும் இப்பண்புகளையே சிறந்த தமிழ்க் கவிதைகளுக்கும் அடிப்படையாக அடிகளார் கொள்வர். "கவியும் சால்பும்" என்னும் கட்டுரையிலே,
"நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையாற் கல்வியழகே யழகு" என்புழி "நெஞ்சத்து நல்லம்" எனச் செம்மையும், 'கல்வியழகு என அறிவும், அழகின் வேறின்மை யாதல் கூறப்பட்டது. "உருவின் மிக்கதோர் உடம்பினைப் பெற்றோரும் கல்வியறி வில்லாதவழி அறிவுடையோரால் அழகில ரெனக் கருதப்படுவராதலின், ‘கல்வியழகே யழகு என்னுமிடத்து வந்த ஏகாரம் பிரிநிலையும் தேற்றமுமாயிற்று.
அழகும் உண்மையும் கவிப்பொருளாயினவாறு போலச் செம்மை வயத்ததாகிய சால்பும் கவிப்பொருளாயிற்று. காப்பியத் தலைவனிடங் காணப்படும் சால்பே காப்பியக் கவிகள் விரித்துக் கூறும் பெரும்பொருள்.
வாழ்க்கையிலே சால்புவாய்ந்தோனாகிய கவிஞனொருவன் சால்பினைக் கவிப் பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வானாயின், அச் செய்யுள் இனிமையும் மாண்பும் உறுதியுந் தந்து மிளிருமென்பது அறிஞராயினருக்கு உடம்பாடேயாம்."
என்று கூறுவது மேற்கூறிய கருத்துக்குச் சான்றாகின்றது.
- 12 -

5.3 ஒப்பியலாய்வு
அடிகளாருடைய ஒப்பியலாய்வு நோக்கு அவர் பிறமொழி இலக்கியங்களிற் கொண்ட சிறப்பான ஈடுபாட்டின் விளைவேயாகும். வடமொழி, ஆங்கில மொழிகளாலான இலக்கியங்களிலுள்ள சிறப்புக்களை நன்குணர்ந்த அடிகளார், அவற்றை தமிழ் மக்களும் அறிந்து சுவைக்க வேண்டுமென மொழி பெயர்ப்புக்கள் செய்து தந்தார். இவ்வாறு பிறமொழி இலக்கியங்கள், வரலாறு என்பனவற்றில் ஈடுபடும் போது அவற்றை எம்முடைய மொழி, வரலாறு என்பனவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயலுதல் இயல்பான செய்கையேயாகும். "யவனபுரத்துக் கலைச் செல்வம்" என்னும் கட்டுரையிலே அடிகளார் கிரேக்க மொழி இலக்கியங்களிலே காணப்படும் சில பண்புகளை வடமொழியுடனும் தமிழ் மொழியுடனும் ஒப்பு நோக்குகிறார். ஈழத்திலே ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடியாக அடிகளார் விளங்கினார். ஒப்பியல் ஆய்வுக்குப் பயன்படக்கூடிய தரவுகளை மொழி பெயர்ப்புகள் ஊடாகவும் கட்டுரைகள் ஊடாகவும் வழங்கினார். பாரதியினுடைய தேசியப் பாடல்களை பிரான்சு நாட்டுத் தேசியப் பாடலுடனும் பக்கிம்சந்திரரின் "வந்தே மாதரம்” பாடலுடனும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.
5.4 பண்டைய - நவீன இலக்கிய ஈடுபாடு
மரபுவழிவந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை நன்கு அறிந்து அவற்றின் திறன்களைச் சுவைக்கும் ஒருவன் தமிழிலே புதிது புதிதாகத் தோன்றும் இலக்கியங்களின் திறன்களையும் சுவைக்கத் தலைப் படுவான். விபுலாநந்த அடிகளார் இத்தகைய பண்புடையவராகவே திகழ்ந்தார். புதுமைகளை அவர் எப்பொழுதுமே வரவேற்றார். இதனாலேதான், அவருடைய காலத்திலே தன் புதுமைக் கவிதைகளாலே புத்துலகை நாவலிக்கக்கூவிய பாரதி ‘கஞ்சாக் கவிஞன் என உயர்ந்தோருலகாலே தள்ளிவைக்கப்பட்ட நேரத்தில், அவன் கவிதைகளின் திறன்களை இனங்கண்டு தான் சுவைத்தது மாத்திரமன்றி, தன் மாணவர்களுக்கும் அறிமுகஞ் செய்து வைத்தார். விவேகானந்தன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த காலத்தில் (1926 - 27) அதன் முதற்றொகுதி ஒன்பதாவது இதழிலே இந்துமதம் என்னும் கட்டுரையை எழுதினார். அதில், "இம்மதம் தன்னைக் கைக்கொண்டொழுகும் மானிடரைத் தேவராக்குவது. இதுவே இம் மதத்தின் சிறப்பியல்பு. கவிவாணரும் உத்தம தேசாபிமானியுமாகிய சுப்பிரமணிய பாரதியார் இவ்வுண்மையை வற்புறுத்தி,
= 13 سے

Page 11
"மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப்போல் மடிவில் லாமல் திண்ணமுற வாழ்த்திடலாம் இதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளிர் தண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாச்
செய்கையெல்லாம் நடத்தும் வீறாய்த் திண்ணியதல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்திற் சேர்த்து."
செய்கையெலா மதன்செய்கை நினைவெல்லாம்
அதனினைவு தெய்வமே நாம் v உய்கையுற நாமாகி நமக்குள்ளே
ஒளிர்வதென உறுதிகொண்டு பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம் ஐயமெனும் பேயையெல்லாம் ஞானமெனும்
வாளாலே அறுத்துத்தள்ளி
எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்து உயிர்கட் கினிதுசெய்வோர் தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்; சதுர்வேதங்கள் மெய்ப்பான சாத்திரங்க ளெனுமவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும் துப்பான மதத்தினையே உறிந்துமதம்
எனப்புவியோர் சொல்லுவாரே.
என இந்துமதத்துக்கோர் வரைவிலக்கணம் கூறுகின்றார்" என அடிகளார் குறிப்பிடுவதை நோக்குக. பாரதி ஒரு சிறந்த கவிஞன் என்பதனால் மட்டுமல்ல அவன் ஓர் உத்தம தேசாபிமானி என்பதானாலுமே அடிகளார் அக்கவிஞனை மேலாக மதிக்கிறார். யாழ்ப்பாணத்திலே முதன்முதலாகப் பொதுமேடைகளிலே மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசிய கல்விமான் சுவாமி விபுலாநந்தரே ஆவார். பண்டைத்தமிழ் இலக்கியங்களே செம்மை சான்றன என்று கருதும் பல பண்டிதர்களும் கல்விமான்களும் வாழ்ந்த யாழ்ப்பாணத்திலே நவீன கவிதைகள் பாடிய பாரதியைப் பற்றிப் பொதுமக்களுக்கு அடிகளார் எடுத்துக்கூற முயன்றார். இது அவருடைய பரந்த முற்போக்கான இலக்கிய நோக்கினை எடுத்துக் காட்டுகின்றது.
1962ல் விவேகானந்தன் ஆனி, புரட்டாதி, ஐப்பசி இதழ்களிலே
'பாரதி பாடல்' என்னும் கட்டுரையை அடிகளார் எழுதினார். சங்கச்
செய்யுட்கள் பழந்தமிழ் மொழியிலே அமைந்தன.‘நல்ல கருத்துக்கள்
- 14

செறிந்துள்ள அச்செய்யுட்களை இக்கால மக்கள் விளங்கத்தக்க மொழியிலே சொல்லத்தக்கவர்கள் தமிழ்நாட்டுக்குப் பேருபகாரம் செய்யக்கூடியவர்கள் என அடிகளார் கருதினார். "அத்தகு தகைமை சான்றவர் சுப்பிரமணிய பாரதியார்” என்பது அடிகளாருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை, அடிகளார் தான் அமைத்த இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளிலே1ே-8ஆம் வகுப்புக்குரிய) எதிர்ப்புக்கிடையிலும் 1932இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பாரதியார் கழகம் ஒன்றினை நிறுவி அப்பெருங் கவிஞனுடைய பாடல்களைப் பல்கலைக்கழக மாணவர்களும் சுவைத்துப் படிக்கவும் திறனாய்வு செய்யவும் வழிகோலினார்.
ஈழத்திலே ஈழகேசரிப் பத்திரிகையிலே "மறுமலர்ச்சி" எழுத்தாளர்கள் தம்முடைய ஆக்கங்களை வெளியிட்டுவரும் காலத்திலே விபுலானந்த அடிகளாரும் அப் பத்திரிகையிலே எழுதி வந்தார். மறுமலர்ச்சிக் கழகத் தொடக்கக் கூட்டத்திலே அடிகளார் பங்குபற்றி உரையாற்றியுள்ளார். பழமையை நன்கு அறிந்து பேணியது போலவே புதுமையையும் நன்கு சுவைத்து வரவேற்றுள்ளார்.
5. செம்மைசார் இலக்கியமும் நாட்டார் இலக்கியமும்,
தமிழ் உயர் இலக்கியங்களைப் போற்றியது போலவே, அவ் இலக்கியங்களுக்கெல் லாம் ஊற்றாயமைந்த நாட்டார் இலக்கியங்களிலும் அடிகளார் ஈடுபட்டார். நாட்டார் பாடல் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு புதுமைக்கவிகள் படைத்த பாரதியின் ஆக்கங்களிலே அடிகளார் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். பண்ணாராய்ச்சி செய்த அடிகளார், அப் பண்கள் சிலவற்றின் அடிப்படையிலிருந்த நாட்டுப்பாடல் மெட்டினையும் இணைத்து நோக்கினார். யாழ்நூல் தந்த அடிகளார், அந்நூலிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய தேவாரங்கள் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
"காலத்தாற் பிந்திய சுந்தரரருளிய தேவாரங்கள், நாட்டுப்பாடல்கள் பலவற்றை எடுத்தாண்ட சிறப்புடையன. தேவாரவியல் உரு0 உருக ஆம் பக்கங்களில் இந்தளப் பண்ணில் அமைந்து நின்ற திருப்பதிகம் மகளிரது கும்மிப்
பாடலுக்கு இயைந்த சந்தமாக நின்றது"
(யாழ் நூல். பக். 383)
சுந்தரர் இந்தளப் பண்ணிலே பாடிய 10 ஆம் பதிகத்திற்கு அடிகளார்,
தானதனாதன தானதனா- தன. தானதனாதன என மெட்டமைக்கின்றார். அந்த மெட்டுக்கேற்ப,
- 15 -

Page 12
கொடிகளிடைக்குயில் கூவுமிடம் மயில்ஆலுமிடம்
LD(g 6) T(6560)Lu கடிகொள் புனற்சடைக் கொண்டநுதல் கறைக் கண்டனிடம்
பிறைத்துண்ட முடி செடிகொள் வினைப்பகை தீருமிடம் திரு ஆகுமிடந்திரு
மாள்பகலத்(து) அடிகளிடம் அழல் வண்ணனிடம் கலிக் கச்சியநேகதங் காவதமே.
5.6 செந்தமிழ் - வழக்குத் தமிழ்
செந்தமிழையே தன் கட்டுரைகளிலும் உரைகளிலும் பயன்படுத்தி வந்த அடிகளார், அக்காலப் பெரும்பாலான பண்டிதர்களைப் போல வழக்குத் தமிழைத் தள்ளி வைக்கவில்லை. வழக்குத் தமிழின் சிறப்புக்களை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கினைப் பயன்படுத்தி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய சமூக நாடகங்களைப் படித்துச் சுவைத்தது மாத்திரமன்றி, அவருக்கு எழுதிய கடிதத்திலே அடிகளார்,
"நானாடகமும் காதலியாற்றுப் படையும் கிடைத்தன. முற்றும் படித்து மகிழ்வுற்றேன். பொருளோ பொருள் எனப் பெயரிய மற்றுமொரு நாடகம் அரங்கேறியதாக ஈழகேசரியிற் படித்தேன். மட்டக்களப்பு வழக்கு மொழியினையும் ஓரிரண்டு நாடகங்களிலே படம்பிடித்து வைப்பது நன்று”
என எழுதிய பகுதி இங்கு மனங்கொள்ளத்தக்கது. மட்டக்களப்பு வழக்கு மொழி யாழ்ப்பாணத்து வழக்கு மொழியினின்றும் வேறுபட்டது என்ற உண்மையினை முதன்முதல் உலகுக்கு எடுத்துக் கூறியவர் சுவாமி விபுலாநந்தரேயாகும். இவர் கலைமகளில் எழுதிய "சோழநாட்டுத் தமிழும் ஈழநாட்டுத் தமிழும்” என்ற கட்டுரையிலே,
"மட்டக் களப்பு நான் பிறந்த நாடு: ஈழத்தின் கிழக்குப்பாகத்திலுள்ளது. அந்நாட்டு வழக்குமொழி யாழ்ப்பாணத்து வழக்கு மொழியினின்றும் வேறுபட்டது"
என்று குறித்துள்ளார். இக் குறிப்பு செக்கோஸ்லாவாக்கிய நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் கமில் ஸ்வலபில் என்பவரை மட்டக்களப்புப் பேச்சு வழக்கை ஆராய ஊக்கப்படுத்தியது. இதுபற்றி அவர் எழுதிய கட்டுரைக்கு மகுடவாசகமாக மேற்காட்டப்பட்ட சுவாமியின் குறிப்புரையை எடுத்தாண்டுள்ளார்.
- 16 ܚ

6. நிறைவுரை
தமிழின் சிறப்பினையும் சுவையினையும் நன்குணர்ந்தவர் சுவாமி விபுலாநந்தர். அவர் தலைமைதாங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழக, இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு மிகச் சிறந்த அறிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சுவாமியினுடைய தமிழியற் பணிகள் அவருக்கு வரலாற்றிலே ஓர் உன்னத இடத்தைத் தேடித்தந்துள்ளன. 1993இல் சுவாமியினுடைய நூறாவது பிறந்த நாளையொட்டி நாடெங்கணும் விழாக்களும் அவற்றையொட்டிப் பல நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன. சிறப்புமலர்களும் வெளியிடப்பட்டன. நூல்கள் பல எழுதப்பட்டு அச்சேறின. சுவாமியினுடைய பல்வகைப் பணிகள் இவற்றிலே விரிவான விளக்கம் பெற்றன.
சுவாமி விபுலாநந்தர் பற்றி மேலும் அறிவதற்கு:
சற்குணம் (பதிப்பாசிரியர்), அடிகளார் படிவ மலர். அம்பிகைபாகன், விபுலாநந்தர் உள்ளம் (1976) சண்முகதாஸ், "முத்தமிழ் வித்தகள் சுவாமி விபுலாநந்தர்",
வசந்தம், யாழ்ப்பாணம் (1976). மெளனகுரு விபுலாநந்த அடிகளின் கலை இலக்கிய நோக்கு
(1991). செ. யோகராசா, சுவாமி விபுலாநந்தரும் ரீலறி ஆறுமுகநாவலரும்
(1992). க. அருணாசலம், சுவாமி விபுலாநந்தரின் சமயச் சிந்தனைகள்
(1992). வ. சுப்பிரமணியம், விபுலாநந்த தரிசனம் (1995). சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர், மட்டக்களப்பு, (1992). தமிழோசை (சுவாமி விபுலாநந்தர் நினைவு ஆய்வுக்கட்டுரைத் தொகுதி), தமிழ் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1993.
;
- 17.

Page 13
பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை
1. முன்னுரை
கந்தசாமி கணபதிப்பிள்ளை அவர்கள் 1903ஆம் ஆண்டு பருத்தித் துறையிலே பிறந்தார். வடமராட்சியிலே வளர்ந்து வந்த ஒரு புலமைத்துவ மரபு இவருடைய கல்விக்கு அடிப்படையாக அமைந்தது. வடமொழியிலும், தமிழ்மொழியிலும் வல்லதொரு புலமைக் குழுவினர் வடமராட்சியிலே சிறப்புற்று விளங்கினர். முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் போன்றோர் இக் குழாத்தினைச் சேர்ந்தவர்களாயிருந்து, இருமொழிக் கல்வியை வளம்படுத்தினர். கணபதிப்பிள்ளை இவ்வாறு வளம்பெற்றவர்களுள் ஒருவர் ஆவார். முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் வடமொழியையும் தமிழையும் கற்ற கணபதிப்பிள்ளை, பிற்காலத்திலே மாணிக்க மாலை என்னும் மொழிபெயர்ப்பு நாடகத்தை எழுதியபோது, தன்னுடைய ஆசிரியருடைய பெயரை அவர் அந்நூலைக் காணிக்கையாக்கி எழுதிய பாடலிலே,
"நந்தும் பருத்தித் துறைவாழ் சிவச்சுடர் நான்மறையோன் ஒத்தநல் லாரியம் செந்தமிழ் என்னை உணரவைத்தோன் முத்துக்குமார சுவாமிக் குருமணி மொய்கழற்கீழ் வைத்திப் பணுவலை மாணு மவனருள் வாழ்த்துவனே"
என்று குறிப்பிட்டுச் சொல்கின்றார். இளமையிலே தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்ற கணபதிப்பிள்ளை 1903ம் ஆண்டிலே இலங்கைப்பல்கலைக்கழகக் கல்லூரியிலே கலைமாணிப் பட்டத்தினை (முதற்பிரிவில்)ப் பெற்றார். இங்கு தமிழ், வடமொழி, பாளி மொழி ஆகியனவற்றைக் கற்றார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே விபுலாநந்த அடிகளாரிடமும் சோழவந்தான் கந்தசாமி ஆகியோரிடத்தும் தமிழை நன்கு கற்று வித்துவான் பட்டத்தினைப் பெற்றார். பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத்திலே நவீன மொழியியல் அறிவினைப் பெற்றுப் பேராசிரியர் ரேணர் (TURNER) அவர்களுடைய வழிகாட்டலிலே இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிநடை பற்றி ஆராய்ந்து எழுதி ஆய்வேட்டுக் கலாநிதிப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்று நாடு திரும்பிய கலாநிதி கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1947ல் தமிழ்ப் பேராசிரியராயிருந்த அருட்டிரு விபுலாநந்ந அடிகள் நோய்வாய்ப்பட்டு இவ்வுலகை நீக்க, கலாநிதி கணபதிப்பிள்ளை தமிழ்த்துறையிலே பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
- 18

2. பேராசிரியரின் கல்விப் பணிகள்
பேராசிரியர் கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்ட பொழுது, அங்கு தமிழ்த் துறைத்தலைவராக மட்டுமன்றி கீழைத்தேய மொழிப்பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் பீடத் தலைவராகவும் பணிசெய்யும் வேளையிலே, துணைவேந்தர் சேர் நிக்கலஸ் ஆட்டிகலை வெளிநாடு சென்ற வேளையிலே பதில் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டத்திலே இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவமைப்பு நாடுகளின் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டிலும் பங்குபற்றினார். பல கீழைத்தேச மொழியியல் மாநாடுகளிலே பங்குபற்றிக் கட்டுரைகளும் படித்துள்ளார். 1964ஆம் ஆண்டு புதுடில்லியிலே நடைபெற்ற கீழைத் தேசவியலாளர் மாநாட்டிலே இங்கிலாந்தில் இருந்து ஜோன் மார், ஆர்.இ. அஷர், தொமஸ் பரோ, பிரான்சு நாட்டில் இருந்து வடிான் பிலியோசா, அமெரிக்காவிலிருந்து எம்.பி. எமெனொ, இந்தியாவிலிருந்து வி.ஐ. சுப் பிரமணியம் , சுப் பையா, இலங்கையிலிருந்து அருட்திரு தனிநாயகம் அடிகளார், கா.பொ. இரத்தினம் ஆகியோருடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் பங்குபற்றினார். இம்மாநாடு முடிவுற்றபோது தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு, பண்பாடு முதலியன நுண்ணாய்வுக்கு உட்படுத்தக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தும் முகமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை ஏற்படுத்தினர். இதுவரை, கோலாலம்பூர், சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை,மொரிசியஸ், கோலாலம்பூர் ஆகிய இடங்களிலே உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்று வித்தவர்களுட் பேராசியரும் ஒருவர் என்பதை நாம் மறக்க முடியாது.
பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். பல கவிதை, சிறுகதை, நாவல், நாடக இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளார்.
மொழியியலாளனாக
தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், பாளி, ஆங்கிலம், லத்தீன் ம்ோழிகளிலே நன்கு தேர்ச்சியுற்ற காரணத்தினாலே, மொழியாய்வுத்துறையிலே இவருடைய நாட்டம் சென்றது. இலண்டன் பல்கலைக்கழகத்திலே மொழியாய்வு மேற்கொண்ட பொழுது நவீன மொழியியலிலே பயிற்சிபெறும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. சாசனத் தமிழை ஆராய்ந்து, அதிலே ஏற்பட்ட ஒலிவேறுபாடுகள் (எழுத்து வேறுபாடுகள்) பற்றிச் சில புதிய கருத்துக்களை முதன்முதல் முன்வைக்கும் வாய்ப்பினைப் பெற்றார். இவருடைய
- 19 -

Page 14
கலாநிதிப்பட்ட ஆய்வு சாசனத் தமிழைப் பற்றியதாகவே அமைந்தது. தமிழ்ச் சாசனங்களிலே 'ந' கரத்துக்கு ஈடாக 'ன கரமும், 'ன கரத்துக்கு ஈடாக 'ந' கரமும் எழுதும் வழக்குக் காணப்பட்டது. 'கொடு என்னுஞ் சொல் 'குடு' எனவும். 'தொடங்கு' என்னுஞ் சொல் 'துடங்கு' எனவும் எழுதப்பட்டன. இத்தகைய வேறுபாடுகள் அக்காலப் பேச்சு மொழியின் பண்புகளை ஒரளவு அறிந்துகொள்ள அமையும் சான்றுகள் எனப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை கருத்துக் கூறினார்.
இவருடைய மொழியியற் புலமை யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழையும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழையும் நுணுகி ஆராய்வதற்கு வழிவகுத்தது. “ஊருக்கொரு பேச்சு" என்றொரு கட்டுரையினைப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான இளங்கதிர் என்னும் இதழிலே இவர் எழுதினார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழின் இயல்புகளை எடுத்துரைக்கும் இக் கட்டுரையிலே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற்கும் மட்டக்களப்புப் பேச்சு வழககிற்குமுள்ள வேறுபாடும் விளக்கம் பெறுகின்றது. அதனுடன பேச்சு வழக்கு மொழி ஒவ்வொன்றும் சொற்களைத் தொடர்களாக ஒன்றுகூட்டி இசைக்கும்போது இடத்துக்கிடம் வேறுவேறு வகையாக இசைக்கும் என்றும், இத்தகைய பேச்சுமொழித் தொடர்கள் ஒரு பகுதியில் (மாவட்டம் அல்லது பேரூர்) ஒருவகை ஓசையுடனும் வேறொரு பகுதியில் வேறொரு ஒசையடனும் ஒலிக்கும் என்றும் பேராசிரியர் இக்கட்டுரையிலே விரித்துரைக்கின்றார்.
பல்கலைக்கழக ஆய்விதழ்களிலே ' பண்டைத் தமிழ்மொழி இயல்புகள் பற்றியும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழின் இயல்புகள் பற்றியும் ஆங்கில மொழியிலே பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். பேராசிரியருடைய மொழியியற் புலமை அவருடைய ஆக்க இலக்கிய முயற்சிகளுள் ஒன்றாகிய சமூக நாடக எழுத்துக்கு ஒரு புதிய போக்கினை நல்கியது. இது பற்றின் பின்னர் விளக்கமாகக் கூறப்படும்.
4. ஈழத்தமிழர் பண்பாட்டாய்வாளனாக
ஈழத்தமிழர் பண்பாட்டை நன்கு உணர்ந்துகொண்டு அதனைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதினார்; அத்தகைய கட்டுரைகளிற் சில ஈழத்து வாழ்வும் வளமும் என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. பொதுவாக ஈழத்தமிழர் பண்பாடு என்று அவள் குறிப்பிட்டாலும், பெரும்பாலான அவருடைய கட்டுரைகள் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டையே சிறப்பாக எடுத்துப் பேசுகின்றன. யாழ்ப்பாணத்துக் கோயில்களிலே அமைந்துள்ள கைலாய வாகனம், கேடகம், சப்பரம், தேள் ஆகிய பற்றி விரிவாக “கோயிலில் சிற்பக்கலை” (இளங்கதிர், 1953-54) என்னும் கட்டுரையிலே எழுதியுள்ளார்.
- 20 -

“யாழ்ப்பாணத்துக் கோயில்களில் உள்ள சப்பரங்கள் பல வகையாய் அமைந்தன. நல்லூர், மாவிட்டபுரம் முதலிய கோயில்களிலுள்ள சப்பரம் தட்டுத்தாய் ஒவியங்களமைந்த சேலைகளால் ஆயது. சில கோயில்களில் இச் சப்பரங்கள் கண்ணாடியிலே தீட்டிய ஓவிய வேலைப்பாட்டுடன் ஆக்கப்பட் டிருக்கின்றன. இவற்றைக் கண்ணாடிச் சப்பரம் என்று அழைப்பர். இந்நாட்களில் இச்சப்பரங்கள் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டு வருகின்றன. ஆனால் பருத்தித்துறைச் சித்திவிநாயகக் கோயிலில் இத்தகைய சிறந்த சப்பரம் ஒன்று இன்னும் இருக்கின்றது. சப்பரத் திருவிழாவன்று இச் சப்பரத்துள் கைலாயவாகனத்தை வைத்துப் பூட்டி அக் கைலாயவாகனத்தின் மீது சுவாமியை எழுந்தருளவைப்பர். தீவட்டி வெளிச்சத்திலே இச்சட்பரமும் கைலாயவாகனமும் கண்ணுக்கு மிகுந்த அழகாக இருக்கும்.
ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முந்திய ஒரு செய்தியினை மேற்காட்டிய பகுதியிலிருந்து பெறுகின்றோம். யாழ்ப்பாணத்தாரின் உணவுப் பழக்கம், நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் பற்றியெல்லாம் பேராசிரியர் தம்முடைய ஈழத்து வாழ்வும் வளமும் நூலிலே விரித்து எழுதியுள்ளார். பிள்ளைப்பேறு நடைபெற்றால், யாழ்ப்பாணத்தவர் பின்பற்றும் நடைமுறைகளும் இந்நூலிலே விரித்துக் கூறப்பட்டுள்ளன.
5. கல்வெட்டியல், வரலாறு தொடர்பாக
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்பவருக்குக் கல்வெட்டியல் ஒரு கட்டாய பயில்நெறியாக அமைந் திருந்தது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையே இப்பாடத்தை மாணவர்களுக்குக் கற்பித்தார். கவ்வெட்டியல் அறிஞர்களான கலாநிதி இந்திரபாலா, பேராசிரியர் வேலுப்பிள்ளை ஆகியோர் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்களே. ஈழத்துத் தமிழ்க் கல்வெட்டுக்கள் சிலவற்றைப் படித்து, அவற்றின் மொழியியல், வரலாற்றுச் சிறப்புக்கள் பற்றிக் 35 (660) J356it 6T(gg5u6i5TTT. University of Ceylon Review 6166tgjLD ஆய்விதழிலே மாங்கணாய், பாண்டுவஸ்நுவர ஆகிய இடங்களிலே பெற்ற தமிழ்க் கல்வெட்டுக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஈழநாட்டிலே கல்வெட்டியல் ஆய்விலே ஈடுபட்ட முதல் தமிழ் அறிஞர் பேராசிரியர் கணபதிப்பிள்ளையே ஆவர். அவருடைய முயற்சியினா லேயே அத்துறை இங்கு ஆய்வுநிலைத் துறையாக வளர்ச்சி பெற்றது. வரலாற்று ஆவணங்கள் ஆராயும் குழுவொன்று அப்பொழுது இலங்கை அரசினாலே உருவாக்கப்பட்டது. இக்குழுவிலே பேராசிரி யர்களும் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதனாலே தமிழ்க் கல்வெட்டுக்கள் பலவற்றை இலங்கைப் புதைபொருள் திணைக்களத் திடமிருந்து இவராலே பெறமுடிந்தது. இவ்வாறு பெற்றவற்றை இந்திரபாலா போன்றோருடன் சேர்ந்து வாசித்தறிய முற்பட்டார்.
- 21 -

Page 15
பாண்டுவஸ்நுவரக் கல்வெட்டிலே "தென்னிலங்கைக் கோள்" என்னும் தொடர் இடம்பெறுகின்றது. நிசங்கமல்லனுடைய ஆட்சிக் காலத்து (கி.பி. 1187 - 1196)க் கல்வெட்டிலே இடம்பெறும் இத் தொடர், இலங்கை இவனுடைய காலத்திலே தென் - வட எனப் பிரிவுற்றிருந்திருக்கலாமெனவும், தென் இலங்கையையே இது சுட்டுகின்றதெனவும் பொருள்படப் பேராசிரியர் எழுதியுள்ளார்.
பேராசிரியர் இலங்கை வாழ் தமிழர் வரலாறு என்னும் சிறிய நூலினை எழுதினார். இது சங்கிலி என்னும் அவருடைய நாடக நூலுடன் சேர்ந்து ஓர் இணைப்பாகப் பிரசுரிக்கப்பட்டது. இவ்வரலாற்று நூல் 1956ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்டது. ஈழத்துத் தமிழருடைய வரலாறு பற்றிப் பல இருட்டடிப்பு நடைபெற்ற காலம் அது. தமிழருடைய உரிமைகள் பல பறிபோய்க்கொண்டிருந்த காலம் அது. ஈழத்துத் தமிழர் தம்முடைய வரலாற்றை ஒரு தடவை முறையாகப் பின்நோக்கிப் பார்க்க வேண்டிய தேவை அக்காலத்திலே ஏற்பட்டது. இதற்கு ஒரு தூண்டுகோலாகவே பேராசிரியர் இவ் வரலாற்று நூலை எழுதினார்.
6. கவிஞனாக
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் அருட்டிரு விபுலாநந்த அடிகளார் இலக்கியம் படைக்கும் ஒரு பேராசிரியராக விளங்கினார். அவரைத் தொடர்ந்து தமிழ்த்துறைப் பேராசிரியர் பணிநிலையை அழகு செய்த கலாநிதி கணபதிப்பிள்ளையும் இலக்கியம் படைக்கும். ஒரு பேராசிரியராக விளங்கினார். பேராசிரியர் கணபதிப்பிள்ளை இலக்கியம் படைக்கும்போது இரண்டு வகையான மொழிநடையைக் கையாண்டார். சமூகத்திலே காணப்பட்ட பல சிக்கல்களை நாடகங்களாக எழுதியபோது யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கினைக் கையாண்டார். ஆனால், கவிதைகள் எழுதியபோது எப்போதுமே உயர்வழக்குத் தமிழையே கையாண்டார். தன்னுடைய நாடகங்களிலே யாழ்ப்பாணத்துச் சீதன வழக்காலேற்பட்ட கொடுமைகளைப் பேச்சுத் தமிழிலே சித்திரித்தார். ஆனால், தூவுதும் மலரே என்னும் அவருடைய கவிதைத் தொகுதியிலே இடம்பெறும் "சீதனக் காதை" என்னும் தொடர் செய்யுளை ஆசிரியப் பாவிலே இலக்கியத் தமிழிலே எழுதினார். படித்து விளங்கக்கூடியவர்கள் அச்சிக்கலின் கொடிய விளைவுகளை உணர்ந்து கொள்வர். எடுத்துக்காட்டாகச் சீதனக் காதை யில் வரும் பின்வரும் செய்யுளடிகளை நோக்குக:
"கூறுவன் கேட்பீர் கூறுவன் கேட்பீர் நல்வளம் செறிந்து மண்பொருள் படைத்து வாழ்பெருங் குடியில் வந்து பிறவாது பட்ட பெருந்துயர் பகரக் கேண்மீன் என்னரு மகட்கே
- 22 -

எழில் பெறுமணவினை ஆற்றச் சீதனம் போற்றிக் கொடுக்க இயலாத்தன்மையால் அன்னவனடக்கு நிகழ்ந்த இன்னலும் நிலை யிலாத் தமியேன் கொண் அவலமும் கூறக் கேண்மோ"
பழைய தமிழ்ச் செய்யுளாலே புதுமையான பொருளைப் பாடுபவராகப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அமைந்தார். இந்த வகையிலேதான், ஆற்றுப்படை என்னும் பழைய இலக்கிய வடிவத்தைக் கையாண்டு யாழ்ப்பாண மண் மணம் கமழும்படியான இலக்கியமாகக் காதலியாற்றுப்படை என்னும் கவிதை நூலை எழுதினார். யாழ் யாழ்ப்பாணத்து ஊர்களின் புவியியலமைப்பு, அங்குவரிழ் மக்களின் வாழ்வியல் ஆகியன இச்செய்யுள் நூலிலே கலைநுணுக்கத்தோடு வெளிக்கொணரப்படுகின்றன. வடமராட்சிப் பிரதேச சமூக பண்பாட்டுக் கூறுகள் மிகத் தெளிவாக இந்நூலிலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வடமராட்சியிலே நெல்லண்டைப் பத்திரகாளியம்மன் ஆலய முன்றில் பல நாடக விற்பன்னர்களுடைய நாடகங்கள் மேடையேறும் இடமாகத் திகழ்ந்தது. அக்காலத்திலே அண்ணாவி தம்பையா வடமராட்சிப் பிரதேசத்திலே புகழ்பூத்த நடிகராகவும் அண்ணாவியராகவும் விளங்கினார். இச்செய்திகளை எல்லாம்.
"கூத்துப் பார்க்கக் கூர்நிலா வேளையிற் சேர்த்துப் பலரைச் சிந்துகள் பாடிக் கையில் தாளங் கணக்குறத்தட்டி ஆர்ப்பொடு தெருவில் ஆடவர் பெண்டிர் நெல்லண்டை நோக்கி நல்ல சோடினை செய்யும் பெரியதம்பியின் புதல்வன் நாடகத் தமிழை நன்கண முணர்ந்தோன் ஆடலும் பாடலும் அமைவருமாசான் அண்ணாவி தம் பையன் அருமையாய் பழகிய விலாசம் பார்த்த வெற்றிலை யருந்தி விரைந்து விரைந்து நடப்போர்."
என்னும் பாடலடிகளாலே குறிப்பிடுவர்
பருத்தித் துறையிலிருக்கும் காதலனுடைய ஊருக்கு யாழ்ப்பாணத்துக் காதலியை ஆற்றுப்படுத்துவதாகக் காதலி யாற்றுப்படை நூல் அமைகின்றது. யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித் துறைக்குமிடையே உள்ள ஊர்கள் பல சிறப்பித்துப் பாடப்படுகின்றன; இவ்வாறு பல ஊர்களுடாகச் செல்லும் காதலி பல நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் கண்டு செல்வதாகக் கொண்டு, அந்நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் விரித்துரைக்கிறார். பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்களை உண்மைக் காட்சிகளாக,
"ஏட்டைக்கட்டி இறப்பிலொழித்துப் புளிய மரத்திற் றுங்கிக் காய்க்கும் கல்லுப் பற்றியிலக்காயெறிந்தும் நாவண் மரத்து நலம்பெற வேறித் தாவிக் கொம்பரிற் நறாபழம் பறித்துங் சிந்தியடித்தும் வளையமுருட்டியும் தட்டப்பாய்ந்துங் கிட்டியடித்தும் மாவின் கொட்டை மகிழ்வொடு போட்டும் பலவகையாட்டம் பாங்குடனாடும் பள்ளிப் பொடியள்"
- 23 -

Page 16
என்னும் அடிகளாலே வடிக்கின்றார். உயர் இலக்கியத் தமிழிலே செய்யுள் புனைய முயன்றாலும் மண்வாசனைக்கேற்ற பணியாரம், வாய்ப்பன்கள், பள்ளிப்பொடியள், ஆத்தை, வல்லைமுனி போன்ற சொற்கள் தவிர்க்கமுடியாதபடி வந்துவிடுகின்றன.
மாணவர்களாகிய நாம் சேர்ந்து கவிதை எழுதிய பேராதனைக் கவிதை (1960) என்னும் நூலிலே பேராசிரியரும் பாட்டெழுதினார். குறிஞ்சிக் கோமான் என்ற புனைபெயரிலே மகாவலிகங்கை ஆற்றின் அருகே மாலையிலே காதல்புரியும் பல்கலைக்கழக நம்பியர் நங்கைகள் பற்றியொரு பாட்டு எழுதினார்.
"பறவைகளுக் கென்று மதன் விட்ட மலர்க்கணைகள்
பன்னுகுறி தப்பியங்கு பாங்கரதில் நின்ற
முறையுணர் கலைக்கழக நம்பியரை நங்கையரை
மோதிடவே மோனநிலை மேனியவள் நின்றார்”
என்றொரு பாடலை எடுத்துக் காட்டாக இங்கு தருகிறேன். மென்மையான நகை உணர்வுடன் பாடல் புனையும் பண்பு பேராசிரியரிடம் இருந்தது என்பதற்கு இப் பாடலடிகளும் சான்றாக அமைகின்றன.
பேராசிரியருடைய கவிதை ஆக்கங்கள் எல்லாமே சிறப்புடையன என்று நாம் கூறவேண்டியதில்லை. ஆனால், அவரிடம் ஒரு சிறந்த கவிஞனுக்குரிய உள்ளம் இருந்ததென்பதற்கு அவருடைய காதலியாற்றுப்படை காலங்காலமாகச் சான்று கூறி நிற்கும். அவர் கவிதைகளிலே மகிழ்ச்சி கண்டார். அவரே இதனைப் பின்வரும் கூற்றுக்களாலே இவ்வுண்மையினைப் புலப்படுத்துகின்றார்:
"இக்காலத்தில் நாவல் சிறுகதை முதலியவற்றின் மூலம் சமுதாய ஊழல்களையும் ஒழுக்க நெறியையும் எழுத்தாளர் உலகத்தார்க்குத் துலக்கிக் காட்டுவதுபோல நானும் சமுதாயத்திற் காணும் உயரிய பண்புகளையும் மட்டுமன்றித் தாழ்ந்த நிலைகளையும் இன்பதுன்பங்களையும் பாட்டிலே தீட்டிக் காட்டுவதில் உளநிறைவு கண்டேன். பாட்டின் மூலம் அழலாம். சிரிப்பிலும் பார்க்க அழுதலே கூடிய சுவையைக் கொடுக்கும். என் வாழ்வில் நகையும் அழுகையும் அதிகமாய் எழுந்த காலங்களில் தீட்டி வைத்தவையே இப்பாடல்கள். இவை எனக்கு இன்பத்தை ஊட்டின. இன்றும் ஊட்டுகின்றன."
பலர் சிறுகதை, நாவல் வடிவங்களாலே கூறமுயன்ற சமூகச் சிக்கல்களைப் பாடல்களினாலே வெளிப்படுத்தப் பேராசிரியர் முயன்றார். இதனாலே அவருடைய பெரும்பாலான கவிதைகள் கதைப்பாடல்களாக அமைந்தன.
- 24 -

7. புனைகதையாசிரியனாக
புனைகதைத்துறையிலே பேராசிரியருக்கிருந்த ஈடுபாட்டை விளக்கிக் காட்டுவதாக இவர் எழுதிய பூஞ்சோலை, வாழ்க்கையின் விநோதங்கள், நீரரமகளிர் என்ற மூன்று நூல்களும் விளங்குகின்றன. ஜேர்மானிய நாவலாசிரியர் டோர் கதாம் என்பவர் எழுதிய இம்மென்சே என்னும் நாவலின் தழுவலாக அமைந்ததே பூஞ்சோலை என்னும் நாவலாகும். பிரெஞ்சு நாவலாசிரியர் அபூ என்பவர் எழுதிய "இரட்டையர்” என்னும் நாவலைத் தழுவி, ஈழநாட்டுக் கதை ஒன்றினைப் புனைந்து கூறுவதாக வாழ்க்கையின் விநோதங்கள் என்னும் நாவல் அமைகின்றது. தழுவல்களாக இந்நாவல்கள் அமைந்தபோதும் எம் முடைய மணி னின் கதைகளே புனையப்படுகின்றன; எம்முடைய நாட்டு மாந்தர்களே இவற்றின் கதை மாந்தர்களாகவும் அமைகின்றனர். பேராசிரியருடைய கற்பனைத்திறன், பாத்திரப் புனைவுச் சிறப்பு, தன்னாட்டுணர்வு, கலையுள்ளம் ஆகியனவற்றை இந்நாவல்கள் மூலம் உணர்ந்து கொள்கின்றோம்.
பேராசிரியருடைய நீரரமகளிர் என்னும் சிறுகதையின் கதைக் கருவும் பிறமொழிக் கதையொன்றிலிருந்து தழுவப்பட்டதேயாகும். மட்டக்களப்பு வாவியிலுள்ள பாடும்மீன் பற்றி விபுலாநந்த அடிகளார் குறிப்பிட்டுள்ளார். திருமணத்தாலே மட்டக்களப்புத் தொடர்பு பேராசிரியருக்கு ஏற்பட்டது. இப்பாடு மீன்களை நீரர மகளிராகக் கற்பனை பண்ணலாம். இது அவருடைய சிறுகதைக்குப் பின்னணியாக நின்றுள்ளது எனில் மிகையாகாது.
8. நாடக ஆசிரியராக
பேராசிரியருடைய ஆக்கங்களையெல்லாம் நிரைப்படுத்திக்கூறிய வித்துவான் க. சொக்கலிங்கம் அவர்கள் (சொக்கன்) பைந்தமிழ் வளர்த்த பதின்மர் (1972:54) என்னும் நூலிலே இறுதியாக,
"இவற்றையெல்லாம் ஆக்கியிருப்பினும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவ்ர்களின் பெயர், அவர் ஒரு சிறந்த நாடகாசிரியர் என்னும் வகையிலேதான் தமிழிலக்கிய வரலாற்றிலே நிலைத்து நிற்கும் என்பது எனது கருத்தாகும்."
என்று கூறியுள்ளார். சொக்கன் அவர்களுடைய இக்கருத்தினை முழுமையாக நான் வழிமொழிகிறேன்.
ஈழத்து நாடக வளர்ச்சியை எண்ணுபவர், பேராசிரியர் கணபதிப்பிள்ளையை ஒருபோதும் மறந்துவிடார், மொழியியல், சாசனவியல், கட்டுரையியல் ஆகிய துறைகளிலே தமிழுக்குத்
- 25 -

Page 17
தொண்டாற்றிய பேராசிரியர் நாடகத் தமிழுக்கும் குறிப்பிடுமளவிற்கான தொண்டு செய்துள்ளார். அவர் எழுதிய நாடகநூல்கள் நான்கு வெளிவந்துள்ளன. அவை: நானாடகம், இருநாடகம், சங்கிலி, மாணிக்கமாலை ஆகியனவாகும். இவற்றுள் முதலிரு நூல்களும் ஈழத்துத் தமிழர் சமுதாய நிலையைச் சித்தரிக்கும் ஆறு சமூக நாடகங்களைக் கொண்ட தொகுதிகளாகும். மூன்றாவது நூல் ஒரு வரலாற்று நாடகமாகும். ஈழத்து யாழ்ப்பாண அரசை ஆண்ட செகராசசேகரன் என்னும் பெயர்கொண்ட சங்கிலி (கி.பி. 1519 - 1565) மன்னனே இந்நாடகத்தின் கதாநாயகனாவான். மாணிக்கமாலை என்பது ஒரு மொழிபெயர்ப்பு நாடகமாகும். இது கன்னோசி நாட்டை ஆண்ட ஹர்ஷவர்த்தனன் என்னும் புலமை மிகுந்த மன்னரால் வடமொழியில் எழுதப்பட்ட ரத்னாவளி’ என்னும் நாடக நூலைப் பின்பற்றியதாகும். ஆகவே, பேராசிரியர் சமூக நாடகம், வரலாற்று நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம் என நாடகத்துறையில் மூவகைப்பட்ட பகுதிகளுக்குத் தொண்டாற்றியுள்ளார். இனி இந்த நாடகங்களை ஆராய்வதன் மூலம் அவற்றிடையே காணப்படும் தனிப்பண்புகள், ஆசிரியருடைய நாடகத் திறமை ஆகியனவற்றைக் கண்டுகொள்ளலாம்.
ஒரு நாட்டின் மொழியென்பது, அந்நாட்டு மக்கள் பேசும் மொழியே என்னும் கருத்து இப்பொழுது வலுவடைந்து வருகின்றது. தமிழ்ப் பேசும் மக்கள் யாவரையும் உலகரீதியாகப் பிணைப்பது எழுத்து மொழியேயாயினும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதியினர் பேசும் மொழியே உயிர்த்துடிப்புடையது, உண்மைத் தன்மை உடையதாகும். தமிழைக் கற்ற மேனாட்டார் எழுத்து மொழியினை மேடைப் பேச்சு மொழியென்றும், செயற்கைத் தன்மை வாய்ந்த மொழியென்றும், பேச்சுத் தமிழே இயற்கைத் தன்மை வாய்ந்ததென்றுங் குறிப்பிட்டுள்ளார். இவ் உண்மையை மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை உணர்ந்து கொண்டார். இதன் பலனாக அவர் எழுதிய நாடகங்களில் பேச்சு மொழியினையே பெரிதும் கையாண்டார். இது பற்றிப் பேராசிரியரே பின்வருமாறு கூறுவர்:
"தமிழை இயல், இசை, நாடகம் என வகுத்தார் முன்னோர். இயற்றமிழ் வேறு நாடகத் தமிழ் வேறு என்பதை வற்புறுத்தற் பொருட்டன்றே, இதனை அறியாது இயற்றமிழில் நாடகமெழுதப் புகுந்தாரது பேதைமை என்னே! இக்குற்றத்தைக் திருத்துவான் நாடகத் தமிழில் எழுதினாலும் இவற்றை அன்றியும் நாடகம் என்பது உலக இயல்பை, உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே, வீட்டிலும் வீதியிலும் பேசுவது போலவே அரங்கிலும் ஆடுவார் பேசல் வேண்டும்."
- 26 -

இவ்வுரைகள் பேராசிரியரது எண்ணத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
மாணிக்கமாலை தவிர்ந்த ஏனைய நாடகங்களில் பெரும்பாலும் அவர் கையாண்ட மொழி, யாழ்ப்பாணத்துக்குப் பொதுவாயும், பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாயும் உள்ளது எனப் பேராசிரியரே குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு யாழ்ப்பாணப் பேச்சு வழக்கினை நாடகத்திற் புகுத்தி நாடகப் பாத்திரங்களுக்கு இயற்கைத் தன்மையினையும், யாழ்ப்பாணப் பேச்சு மொழிக்கு இலக்கிய அந்தஸ்தையும் வழங்கியுள்ளார் ஆசிரியர். இது இவர் ஈழத்துத் தமிழ் நாடகத்துக்குச் செய்த புதுமை எனலாம். பேராசிரியர் தொடக்கி வைத்த இப்புதுமை, சிறிது காலத்தில் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, வாழ்க்கையின் இயற்கைத் தன்மையைக் காட்டும் பண்பை மறைத்து, நகைச்சுவைப் பண்பையே ஊட்டி வந்தது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே ஒரு பாத்திரம் (பெரும்பாலும் ஒரு தரகள் அல்லது கதாநாயகனின் வயதுபோன தந்தை அல்லது சிறிய தந்தை முதலிய பாத்திரங்களாக அமையும்) மேடையில் உரையாடுவதென்றால், அப் பகுதி அவர்களுக்கு 'விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய நகைச்சுவைப் பகுதியாகவே இருந்தது. ஆனால் தற்போது, பேராசிரியருடைய இலட்சியத்தை நன்குணர்ந்த நாடக இளைஞர்கள் நம்மிடையே தோன்றிவிட்டார்கள். யாழ்ப்பாணப் பேச்சுமொழி நாடகத்திலே இடம்பெறுவது நகைக்காகவல்ல, பாத்திரங்களை யாழ்ப்பாண இயற்கைச் சூழலிலே அமைத்துக் காட்ட என்னுங் கருத்து வலுவடைந்து வருவதைத் தற்காலச் சமூக நாடகங்கள் சிலவற்றிலிருந்து அறியமுடிகின்றது.
"பொருளோ பொருள் நாடகத்தில் வரும் "சிவில் சேவன்ற்” வடிவேலு பேசுகின்ற மொழியும், 'முருகன் திருகுதாளத் தில் வரும் பேராசிரியர் சோமசுந்தரம் பேசும் மொழியும் அவர்கள் வீட்டிலே அன்றாடம் பேசும்மொழியேயாகும். படிப்பு, அந்தஸ்து, பணம் என்ற காரணத்தினால் வீட்டிலே பேசுகின்ற தமிழ்மொழி மாறிவிடாதல்லவா? இதையே பேராசிரியர் தன்னுடைய நாடகப் பாத்திரங்கள் மூலமாகப் புலப்படுத்துகின்றார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை தான் வாழ்ந்த காலத்துத் தமிழர் சமூக நிலையைத் தன்னுடைய சமூக நாடகங்கள் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். மேலைத்தேய நாகரிகம் எவ்வாறு தமிழர் சமூகத்தைத் தாக்கியதென்பதையும், அந்நாகரிகத்திற்குப்படாது பல படித்தவர்கள் அன்று வாழ்ந்தனர் என்பதையும் அவருடைய "பொருளோ பொருள்" என்ற நாடகம் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. உத்தியோகம், அந்தஸ்து முதலியவற்றால் யாழ்ப்பாணத்துக் கலியாணம், சீதனம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றத்தினைப் பேராசிரியரின் நாடகங்களிற் 8T600T6)TD.
- 27 -

Page 18
சங்கிலி நாடகத்திலே சங்கிலியனை ஓர் இணையில்லாத் தமிழ் மன்னனாகப் படைக்க முற்பட்டுள்ளார் ஆசிரியர். ஈழம்வாழ் தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் 1956ம் ஆண்டிலே ஒரு சோதனை ஏற்படத் தொடங்கியது. இவ்வரசியற் சூழ்நிலையிலே பழைய வரலாற்றுப் பின்னணியை நோக்கி ஒரு வீரத் தமிழ் மன்னனை, இலட்சிய வீரனாகப் படைத்துவிடுவதால், ஈழத்தமிழ் மக்கள் உரம் பெறுவர் என்று எண்ணிப்போலும் பேராசிரியர் "சங்கிலி” என்னும் இந்நாடகத்தை வெளியிட்டார் என எண்ணத் தோன்றுகின்றது. இந் நாடகமும் அக்கால அரசியல், சமூக, சமய, நிலைகளை நன்கு எடுத்துக்காட்டுவதால், ஒரு வரலாற்று நாடகநூல் எனக்கூறல் தகும்.
நாடிரக என்ற நாடக இலக்கணத்துக்கமைந்ததாகிய, "இரத்னாவளி நாடகத்தினை “மாணிக்கமாலை" எனத் தமிழிலே பேராசிரியர் எழுதியதிலிருந்து, அவருக்கு வடமொழியிலிருந்த புலமை மட்டுமன்றி, நாடகப் பண்பு குறையாது எழுதியதிலிருந்து, அவருக்கு நாடகத்திலிருந்த ஈடுபாடும் நன்கு வெளிப்படுகின்றது. பாத்திரங்களுடைய கூற்றுக்களும் இடையிடையே அவர் வாய்மூலமாக வரும் பாடல்களும் தெளிவான தமிழ் சொற்களிலே அமைந்துள்ளன. நாடகப் பண்பு குன்றாது, முதநூலுக்கேற்றபடி இந்நூலைப் பேராசிரியர் அமைத்துள்ளார்.
முடிவாக, பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்கு ஈழத்து நாடக வரலாற்றிலே ஒரு தனி இடமுண்டு. பேச்சுவழக்கினை முழுக்கப் புகுத்தி நாடகம் முதன்முதல் எழுதிய பெருமை அவரையே சாரும். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்தபடியால், பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு தன் நாடகங்களை மேடையேற்றுவித்தார். தன் நாடகங்களை மேடையிலே பார்த்து, அவற்றின் குறைநிறைகளை நோக்கி, பின் தான் எழுதும் நாடகங்களைச் சிறப் புற எழுதுவதற்கு அவற்றைத் துணைக்கொண்டார்.
= 28 س

பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பற்றி மேலும் விரிவான விளக்கம் பெறக்கூடிய நூல்களும் கட்டுரைகளும்:
”காதலியாற்றுப் படைக் காட் சி" 980ع w இளங்கதிர். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க ஆண்டு மலர். பேராதனை.
1962-63
சண்முகதாஸ்.அ. "ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு தமிழ்ப்
பேராசிரியர்” இளங்கதிர். 1968 - 69
சண்முகசுந்தரம். த. கலையருவி கணபதிப்பிள்ளை சில நினைவுகள். கலைப் பெரு மன்றம். தெல்லிப்பழை. 1974,
சிவானந்தன். இ. இலங்கைப் பல்கலைக்கழக தமிழ் நாடக
அரங்கம். கொழும்பு, 1979.
சிவநேசச்செல்வன். ஆ. "பேராசிரியர் கணபதிப்பிள்ளை
வாழ்க்கையும் பணியும்". சங்கமம். 1974.
செல்வரஞ்சிதம் சி. "பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு" (பிரசுரிக்கப்படாதது) தமிழ்த்துறைச் சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1988.
சொக்கன். க. பைந்தமிழ் வளர்த்த பதின்மர், ழரீலங்கா
அச்சகம், யாழ்ப்பாணம், 1972.
மனோன்மணி
சண்முகதாஸ் "ஈழத்து அறிஞர் வரிசையில் பேராசிரியர்
கணபதிப்பிள்ளை", பல்கலைக்கழகப் பிரவேசச் சிறப்புமலர், புனித யோசப் கல்லூரி, பண்டாரவளை, 1976,
வித்தியானந்தன். சு. "பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் ஈழத்து அடிநிலைத் தமிழர் பணி பாட்டு விழிப்புணர்வும்", வித்தியானந்தம் , மணிவிழா வெளியீடு, 1984.
- 29

Page 19
வண. பேராசிரியர் கலாநிதி எஸ். தனிநாயகம் அடிகள்
1. முன்னுரை
யாழ்ப்பாணம் நெடுந் தீவைச் சார்ந்த ஸ்தனிஸ் லாஸ் கணபதிப்பிள்ளை செசில் இராசம்மா தம்பதியர்க்கு 1913 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம் நாள் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் பிறந்தான். அப்பிள்ளை தான் பின்னர் வண.பிதா சேவியர் தனிநாயகம் ஆனார். ஆங்கிலம், லத்தீன் போன்ற மொழிகளிலே நல்ல தேர்ச்சி பெற்ற இவர் தமிழ்மொழியைத் தனியாக ஓர் ஆசிரியரின் துணையுடன் கற்றார். தமிழ்மீது அவர் கொண்ட விருப்பு அம்மொழியிலே மிகுந்த உயர்வான அறிவினைப் பெற வேண்டுமென ஊக்குவித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே முதுகலைமாணி, முதுவிலக்கியமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். உரோம் நகரிலே அருட்கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார்.
தன்னுடைய தமிழ் மொழியின் இலக்கியச் செழுமையினையும் நீண்ட பாரம்பரியத்தையும் நன்குணர்ந்த அடிகளார், அவ்வுண்மைச் செய்தியினை உலகமெல்லாம் பரப்ப வேண்டும் என்று எண்ணினார். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று பாரதி கண்ட கனவினை நனவாக்க வேண்டுமென அடிகளார் விரும்பினார். உலகின் பல நாடுகளுக்குச் சென்று அவரவர் மொழிகளிலே தமிழ் மொழியின், தமிழ் இலக்கியத்தின், தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக்களை எடுத்துக்கூறினார். ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜேர்மன் ஆகிய மொழிகளிலே புலமையுடையவர். சமஸ்கிருதம், மலையாளம், போர்த்துக்கீசம், எபிரேயம், மலாய், ரஸ்யன் ஆகிய மொழிகளையும் அறிந்தவர். இதனால் அவருடைய தமிழ்த்தூது பயனுடையதாக அமைந்தது. அடிகளாருடைய விரிவுரையைக் கேட்டவர்கள் தமிழ் மொழிபற்றி அறிய ஆவல் கொண்டனர். இவ்வாறு அவர் மேற்கொண்ட தமிழ்த்தூது பயண அனுபவங்களையெல்லாம் தமிழ்த்தூது எனும் நூலாக எழுதி வெளியிட்டார்.
பிற மொழியினர் தமிழ்ப் பண்பாட்டினை அறிந்துகொள்வதற்காக Tamil Culture (தமிழ் பண்பாடு) என்னும் ஆய்விதழை 1952 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியிடத் தொடங்கினார். இவ்விதழ் மூலம் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்த மேலைத்தேய ஆய்வாளர் பலர் தமிழாய்விலே ஈடுபடலாயினர். இத்தகைய ஆய்வு முயற்சிகள் பெருகிவரும் வேளையிலே தான் அடிகளார் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்.
- 30 -

1964 ஆம் ஆண்டில் கீழைத்தேய ஆய்வு மகாநாடு புதுடில்லியிலே நடைபெற்றது. இம்மாநாட்டிலே பங்குபற்றிய பேராசிரியர் ஷான் பிலியோசா, கலாநிதி றொன் ஆஷர், பேராசிரியர் ரொமஸ் பறோ, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் த.பொ. மீனாட்சிசுந்தரன், பண்டிதர் க.பொ. இரத்தினம் ஆகியோரை ஒன்றுகூட்டி அம்மகாநாடு முடிந்தவுடன் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் அமைப்பதற்குரிய ஆலோசனைகளை அடிகளார் நடத்தினார். மன்றடி அமைக்கப்பட்டது. முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டினை அடிகளார் மலேசிய அரசின் துணையுடன் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு நடத்தினார். தொடர்ந்து எட்டுத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெருந்தொகையான தமிழியல் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பல்கலைக்கழகங்களிலே தமிழ்த்துறைகள் தொடக்கப்பட்டன. தனிநாயக அடிகளாரின் தொலைநோக்குடைய தமிழ்ப்பணியின் பயன்களை நாம் இப்பொழுது கண்கூடாகக் காண்கிறோம்.
1952ஆம் ஆண்டு முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித்துறையிலே விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் மலேசியப் பல் கலைக் கழக இந்தியவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ்த்தூது சென்றும், தமிழ்ப் பண்பாட்டிதழை ஆங்கிலத்தில் நடத்தியும், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை அமைத்துத் தமிழாராய்ச்சி மாநாடுகள் மூலமாகத் தமிழை வளம் பெறச் செய்த அடிகளார் தாமும் தம்முடைய ஆய்வுகளினாலே தமிழியலுக்குப் பங்களிப்புச் செய்தார். அவருடைய பன்முகப்பட்ட ஆய்வுபற்றி இனி விரிவாக நோக்குவோம்.
- 2
2. அடிகளார் தமிழியல் ஆய்விலே ஈடுபட்டமைக்கான
பின்னணி
தமிழ் ஆய்வு வளர்ச்சியிலே தவத்திரு தனிநாயக அடிகளாரின் பங்களிப்புக் கணிசமாக அமைந்துள்ளது. மறையியலிலே தனது ஆய்வினைத் தொடங்கிய அடிகளார் தமிழியலிலும், கல்வியியலிலும் ஆய்வுகள் பல மேற்கொண்டு உள்ளார். தமிழியலிலே அவள் மேற்கொண்ட ஆய்வுகள் பன்முகப்பட்டன.
அடிகளார் தமிழியலிலே ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்கு முன்னர்
அவருடைய முயற்சிகள் எத்தகையன என்பதனை இங்கு சுருக்கமாக
நோக்குதல் அவசியமாகும். 1931ம் ஆண்டு முதல் கொழும்பு
அர்ச்.பேர்னாட் செமினரியில் மனிதப் பண்பியல், மெய்யியல்,
கல்வியியல் ஆகிய பாடநெறிகளைப் பயின்றார். சமய ஒப்பியல்,
சிங்களம், தமிழ் ஆகியனவும் அப் பாடநெறிகளுடன் அவருக்குப் - 31 -

Page 20
போதிக்கப்பட்டன. பிற்காலத்திலே தனிநாயக அடிகளாருடைய கல்வி ஆளுமை வளர்ச்சிக்கு இப்பாடநெறிகள் அடிப்படைகளாக அமைந்தன. 1934ம் ஆண்டு ரோம் நகரிலே மறையியலிலே கலாநிதிப்பட்ட ஆய்விலே ஈடுபட்டார். “கார்த்த ஜீனியன் குருமார்" என்னுந் தலைப்பிலே அவருடைய ஆய்வு அமைந்தது. அத்துடன் டறிபுரு, கிரிக், இத்தாலிய மொழிகளைப் பயின்றதுடன் ஐரோப்பிய கலை, தொல்பொருளியல் ஆகியனவற்றிலும் பயிற்சி பெற்றார். இத்தகைய ஆய்வுப்பயிற்சி பெற்றும், உயர்தரப் பாடசாலைகளிலே படிப்பித்தும் அனுபவம் பெற்ற பின்னரே தமிழ் ஆய்விலே அடிகளார் ஈடுபடலாயினர்.
அடிகளார் இத்தகைய பின்னணியுடன் தமிழியல் ஆய்விலே ஈடுபட்ட தன்மையினைப் பெரியதொரு பாரம்பரியப் போக்குடனே தொடர்புறுத்தி நோக்க வேண்டியுள்ளது. அப்பெரும் பாரம்பரியப் போக்கு என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டிலே அறிவியல் வளர்ச்சியில் ஏற்பட்ட துரித வளர்ச்சி காரணமாக ஒப்பியல் ஆய்வுத்துறையின் அவசியம் உணரப்பட்டது. மேலைத்தேயத்தவர்கள் கீழை நாடுகளுக்கு வந்த காரணத்தினால், இங்குள்ள கலை, கலாச்சாரம் ஆகியனவற்றை அறியவும், அவற்றைத் தத்தம் நாட்டுக் கலை, கலாச்சாரங்களுடன் ஒப்பிடவும் முயன்றனர்/அதன் பலனாக கீழைத்தேய மேலைத்தேய மொழி, இலக்கிய, கலை ஒப்பீட்டாய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. இத்தகையதொரு பெரும் பாரம்பரிய போக்கிலே தமிழ்மொழி, இலக்கிய கலாச்சார ஒப்பீட்டாய்வும் கிளைவிட்டு வளரலாயிற்று. இவ்வாய்வு முயற்சியிலே பெரும் பங்களிப்புச் செய்த தமிழர்களுள் தனிநாயக அடிகளாரும் ஒருவராவர். ஐரோப்பியக் கலை, மறையியல் வலியுறுத்தும் மனிதாயம் ஆகியவற்றிலே பயிற்சி பெற்ற அடிகளார் தமிழியல் ஆய்விலே ஈடுபட்டபோது எமது பண்டைத் தமிழிலக்கியங்கள் பிரதிபலிக்கும் தமிழ் நாட்டின் இயற்கை அழகு, தமிழரின் அழகுணர்வு, அவர்களுடைய மனிதாய ஆளுமை இயல்புகள் ஆகியவற்றிலே ஈடுபாடு கொண்டது ஆச்சரியமில்லை.
3. பண்டைத்தமிழ் இலக்கியங்கள்
அடிகளாருக்குப் பண்டைத்தமிழ் இலக்கியங்களிலே ஈடுபாடு ஏற்படுவதற்குரிய காரணம் முன்னுரையிலே சுட்டப்பட்டுள்ளது. அவள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் முதுமாணிப் LLJUL960)u (piggsglds05 T Soir (6 Master of Letters 676irgib பட்டத்திற்காக "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்னும் விடயம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பண்டைத்தமிழ் இலக்கியங்களிலே மனிதாயப் பண்புகளிலே ஈடுபாடு கொண்ட அடிகளார் அவ்விலக்கியங்கள் சித்திரிக்கும் இயற்கையினை.மக்களின் ஆளுமை
32

இயல்புகளுடன் தொடர்புறுத்தியே நோக்கினார். "சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு" (தமிழ்த்துாது, பாரிநிலையம், சென்னை, 1961, பக். 25-50) என்னுங் கட்டுரையிலே அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்:
"இலக்கியம் வளர்ந்தெழுவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள் மக்களும் இயற்கையுமே. இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத் மக்களையும், அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடுவரேல், அவ்விலக்கியம் குறைவுள்ள இலக்கியமாகவே விளங்கும். தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு முதற் பொருளாக மக்களையும், துணைப்பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர்."
சங்கப் பாடல்கள் என்றவுடன் போரையும் காதலையும் குறிப்பிடும் பாடல்களையே எண்ணுகின்ற வழக்கம் இருந்தது. அடிகளார் இப்போக்கிலிருந்து மாறுபட்டவர். பழந்தமிழ் மக்களின் ‘ஒன்றே உலகம்' என்னும் பரந்த நோக்கு, கண்ணோட்டம், அவர்களுடைய நிறை, நீதி, கல்விக்கொள்கை ஆகியவற்றைப் பறைசாற்றும் பாடல்களிலே அவர் ஈடுபட்டார். அவற்றை உலகம் அறியும்படியும் செய்தார். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் இலட்சிய வாக்கினை அளித்தமையினை இங்கு மனங்கொள்ளலாம்.
சங்கப் பாடல்களிலே கூறப்பட்டுள்ள சில செய்திகளைத் துணைக்கொண்டு சிந்துவெளி நாகரீகத்துக்கும் தமிழருக்குமுள்ள தொடர்பினை எடுத்துக்காட்டும் அடிகளாரின் நுண்ணிய ஆய்வு மனப்பாங்கு இங்கு குறிப்பிடற்பாலது. உதாரணம் ஒன்று தருகின்றேன். சங்க இலக்கியங்களிலே தலைவன் தன் தலைவியின் நலம் பாராட்டும்பொழுது அதனைத் தனக்கு விருப்பமான ஊருடன் அல்லது நகரத்துடன் ஒப்பிடுவது வழக்கம்.
"பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி மணங்கமிழ் பாக்கத்துக்குப் பகுக்கும் வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே"
என்னும் அகநானுாற்றுப் (செய்யுள் 10) பாடலடிகளிலே தலைவியினுடைய நலன் தொண்டி நகரத்துக்கு உவமிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு தமிழர், தம் அன்பு உடையவரை நகரங்களுடன் ஒப்பிடுவதனால் நமக்கு நகள்களிலே இருந்த பரிச்சயம், ஈடுபாடு, அன்பு ஆகியவற்றைப் புலப்படுத்தினர். "ஏட்ரியாற்றிக் கடற்கரையில் எழுந்த வெனிஸ் மாநகர மாந்தர் அக்கடலினைத் தம் நகரின் தலைவியாகப் பாராட்டியதுபோலவே, நம் தமிழ் மன்னரும்,
- 33

Page 21
தமிழக மக்களும், நம் ஆறு, கடல், ஊர் முதலியவற்றை அன்புடன் பாராட்டிவந்துள்ளனர்." ("சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு", தமிழ்த்தூது, ப. 46) என அடிகளார் கூறியுள்ளதை இங்கு தொடர்புறுத்தி நோக்கலாம். சிந்துவெளி நாகரீக காலந் தொடக்கம் ஊர், நகர் ஆகியனவற்றிலே விருப்பும், அவற்றிலே பரிச்சயமும் உடையவராகத் தமிழர் இருந்த காரணத்தாலேயே தம் அன்புடையாரை நகரங்களுக்கும் ஊர்களுக்கும் ஒப்பிட்டனர் என அடிகளார் கூறுவது மிகப் பொருத்தமாக அமைகின்றது. (Tamil Humanism - The Classical Period, Bunker Memorial, Lecturers, 1972, p.7.)
சங்கப் பாடல்களிலே அவர் ஈடுபட்டதுபோலத் திருக்குறளிலும் அவர் மனம் ஆழமாகச் சென்றது. வள்ளுவனுடைய குறள் கூறும் நல்ல வழிகளையும் அவருடைய கத்தோலிக்க சமயங்காட்டும் நல்ல வழிகளையும் ஒப்பிட்டு ஆராயக்கூடிய வாய்ப்பு அவருக்கிருந்தது. தமிழ்த்தூது (ப. 21-22) என்னும் நூலில் அவள் கூறியுள்ள கருத்தினை இவ்விடத்திற் கூறுவது பொருத்தமாயமையுமென எண்ணுகிறேன்.
".நூலைத் திறந்ததும் முதன்முதல் நான் கண்ட குறட்பா
இருவே றுலகத் தியற்கை; திருவேறு தெள்ளிய ராதலும் வேறு
என்பது. அந்நேரத்தில், இச்செய்யுளின் ஆழ்ந்த கருத்தொன்று எனக்குத் தோன்றிற்று. அ.து உரைகாரர் கருத்துமன்று: ஊழைப்பற்றிய கருத்துமன்று; என் அருள்மறையின் கருத்தொன்று அச் சொற்களில் பொதிந்திருப்பது கண்டேன்." ,
இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களைத் துருவி ஆராய்ந்த அடிகளார், அவ்விலக்கியங்களின் அடிப்படையாக அமைந்த கோட்பாடுகளைத் தன் கட்டுரைகளிலும் பேருரைகளிலும் எடுத்துக் காட்டினார். அமரராவதற்குச் சற்று முன்பாக அடிகளார் "தமிழர் பண்பாட்டின் கோட்பாடுகள்" என்னுந் தலைப்பிலே தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்தும் கண்ணோட்டம் என்னும் இயல்பினை அவர் விரிவாக எடுத்து விளக்கினார். பண்டைய இலக்கியங்களிற் காணப்படும் இவ்வியல்பினை அடிகளார்,
"உலக மனப்பான்மையில் தோன்றி வேறொரு இயல்பினைக்
66666600TTLLlb 665Tg (Tolerance Ecumenism) 960pë56)TLD.
தமிழ் நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயங்கள் எல்லாம்,
தத் துவங்களெல்லாம் தமிழ் நாட்டில் தடையின்றிப்
போதிக்கப்பட்டன். பெரும் விழாக்களில் தத்துவவாதிகள்,
சமயவாதிகள் தத்தம் கொடிகளைப் பறக்கவிட்டுத் தம்
- 34 -

கருத்தக்களைப் பற்றி உரை நிகழ்த்தினர். திருவள்ளுவர் தம் கருத்துக்களைப் பல மூல நூல்களிலிருந்து எடுத்திருக்க வேண்டும். சங்க நூல்கள் பல்வேறு கருத்துக்களுடைய புலவர்களின் இலக்கியப் படைப்புக்களைக் கொண்டுள்ளன. சமணராகிய இளங்கோ அடிகள் தமிழர் தழுவிய பழக்க வழக்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் விரித்துக் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு அப்பாலிருந்து வந்த சமயத்தினைத் தழுவிய அடிகளாரின் இக்கூற்று அவருடைய பற்றற்ற துறவு வாழ்வினைப் போலக் "காமஞ் செப்பாத" ஆய்வு நோக்கும் அமைவதைக் காட்டுகின்றது.
4. நவீன இலக்கியங்கள்
பண்டைத் தமிழ் இலக்கியங்களின் ஈடுபட்டதுபோல அடிகளார் நவீன தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபட்டார். பாரதி, பாரதிதாசன் போன்றோருடைய கவிதைகளையும், மறைமலையடிகள், வி. கலியாணசுந்தரமுதலியார், கல்கி, மு. வரதராசன் போன்றோருடைய வசன இலக்கியங்களையும் அடிகளார் ஆராய்ந்தார். நவீன தமிழ் இலக்கிய ஆய்வுக்கும் அடிகளாருக்குமுள்ள தொடர்பினை Urbanism in Dr. Varatarajan's Novels" 6166tg) to 96 (560)Luu (BCB60 B6örg எடுத்துக்காட்டுவதாயுள்ளது. சென்னை மாநகரம் என்ன வகையிலே டாக்டர் மு. வரதராசனின் நாவல்களிலே சித்தரிக்கப்பட்டிருக்கின்ற தென்பதை அடிகளார் இக்கட்டுரையிலே விவரித்துள்ளார்.
5. மொழி
அடிகளாரின் மொழி தொடர்பான சிந்தனைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தமிழ் மக்களுடைய மொழியுரிமை பற்றியது. மற்றையது, மொழி கற்பித்தல் பற்றியதாகும். 1956ல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரவிருந்தபோது, அதனாலே ஏற்படக்கூடிய தீமைகளையும், பொதுவாக மொழி உரிமைப் பண்புகளையும் பல கட்டுரைகளிலும், நூல்களிலும் அடிகளார் எழுதி வெளியிட்டார். 1956ல் நம் மொழியுரிமைகள் - தனிநாயக அடிகளாரின் கருத்து என்னும் பிரசுரம் கண்டி தமிழ்ப்பண்பாட்டுச் சங்கத்தினாலே வெளியிடப்பட்டது. இது பின்னர் புதுப்பிக்கப்பட்டு இரண்டாம், மூன்றாம் பதிப்புக்களாக 1961இல் வெளியிடப்பட்டது. அப்பிரசுரத்திலே அடிகளார் இறுதியாகக் கூறியுள்ள கருத்தினை இங்கு மனங்கொள்ளுதல் நலம் என எண்ணுகிறேன்.
"இலங்கையின் தலைநகரிலிருந்து அகன்றிருப்பதாலும், பலஇனத்தாருடன் தொடர்பு ஒரு சிறிது குறைந்து இருப்பதாலும் நம் மாகாணங்களில் பரந்த விரிந்த மனப்பான்மை
35

Page 22
குன்றியிருத்தல் கூடும். எனவே சைவ, வைஷ்ணவ, முஸ்லிம், கத்தோலிக்க, புறட்டஸ்தாந்து என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மையும், கொழும்புத் தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத முறைகள் ஆகும். நம் இனத்திற்கு ஒற்றுமையும், உறுதியும் இருப்பதற்காக நம் எழுத்தறிஞர்களும், மேடைக் கலைஞரும் ஒத்துழைத்தல் வேண்டும். நமக்குப் புதிய பாடல்கள் வேண்டும், சின்னங்கள் வேண்டும், சிலைகள் வேண்டும், நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும், பல்கலைக்கழகங்கள் வேண்டும்."
6. தமிழர் வரலாறும் நாகரிக வளர்ச்சியும்
தனிநாயகம் அடிகளாருடைய பெரும்பாலான ஆய்வு முயற்சிகள் தமிழர் வரலாறு, தமிழர் நாகரிக வளர்ச்சி பற்றியனவேயாகும். இவ்விடயங்களிலே, பிற நாடுகளில் வாழும் தமிழர் பற்றிய ஆய்வு சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதாகும். பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தமிழ்த்தூது மேற்கொண்ட அடிகளார் தான் சென்ற இடங்களிலே வாழும் தமிழர்கள் பற்றிய தகவல்களைச் சேர்க்கத் தவறவில்லை. அவர்களுடைய வாழ்நிலை, பிரச்சினை பற்றியெல்லர்ம் தகவல்கள் திரட்டுவதில் ஈடுபட்டார். அத்துடன் தமிழ்மொழி வரலாற்றுக்குத் தேவையான தகவல்களையும் திரட்டினார். மேலைத்தேயங்களிலே அவர் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டபோது, தமிழிலே முதன் முதல் பிரசுரமான நூல்களைக் காண நேர்ந்தது. அவற்றினுடைய முக்கியத்துவம்பற்றி அறிவுலகம் epissfibsTas "The First Books Printed in Tamil" (Tamil Culture, 1958) என்னும் கட்டுரையினை எழுதினார். உரோம எழுத்துக்களாலே தமிழ் வரிவடிவங்களை உணர்த்தி லிஸ்பன் நகரிலே 1554ம் ஆண்டு Carthila என்னும் முதல் தமிழ் நூல் அச்சிடப்பட்ட தகவலை அடிகளார் இக்கட்டுரையிலே வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழ்மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பெருஞ்சிறப்புக் கொடுத்துள்ள விவரம் இதிலே விளக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளிலே வாழும் தமிழர்கள் பற்றிய தமது ஆய்வு முடிவுகளை அடிகளார் 1970ல் பரிஸ் நகரிலே நடைபெற்ற மூன்றாவது 6), B5 g5Lóps, JTujárd LDTBTL966) "The Study of Contemporary Tamil Groups - A Survey" 6T6örgi as G60) yu Tais& FLDTi Lig55Tr, தமிழர்கள் எந்தெந்த நாடுகளிலே வாழ்கிறார்கள். அவ்வந் நாடுகளில் அவர்களுடைய எண்ணிக்கை, தமிழர்களுடைய இடம், பெயர், வரலாறு ஆகியன பற்றியெல்லாம் இக் கட்டுரையிலே விவரித்துள்ளார். இம்மக்களுடைய புவியியற் பரம்பலையும், புள்ளி விபரத்தையும் அதிலே தந்துள்ளார்.
36 .

இவ்வாறு பரவியுள்ள தமிழருடைய வரலாறு, அவர்களுடைய சமூகநிலை, மொழி, சமயம் ஆகியனபற்றிக் கட்டுரையிலே அடிகளார் விளக்குகின்றார். பல தரவுகளையும், விளக்கங்களையும் இக்கட்டுரையிலே அளிக்கும் அடிகளார் பிற ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இவ்விடயமாக எத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளலாம் எனக் கட்டுரையின் இறுதியிலே குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் வரலாறு தொடர்பாக,>தமிழ்க் கலாச்சாரம் தென்கிழக் காசியாவிற் பரவிய வகையினை ஆராய்வதிலே அடிகளார் ஈடுபட்டார். தென்கிழக்காசிய நாடுகளாகிய கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி தமிழ்த் தூது மேற்கொண்ட அடிகளார், அங்குள்ள கலாச்சாரத்தினை நேரிலே தரிசிக்கவும், அதனைப் பிற கலாசாரங்களுடன் ஒப்பிட்டு நோக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்பிரதேசங்களில் வாழ்பவர்களே இக்கலாசார ஒப்பீட்டு ஆய்வினை மேற்கொள்ளவேண்டுமென அடிகளார் பல SLIslds6f(36) 6).libLogisg5 5-6iT6Trrir. "Tamil Cultural Influences in South East Asia" (Tamil Culture) 6T6örgri, d5(660Ju (36) g6. வேண்டுகோளை விடுவதுடன் தமிழ்க் கலாசாரத்தின் எத்தகைய எச்சங்கள் அந்நாடுகளிலே காணப்படுகின்றன என்பதை வரலாற்று அறிஞர்கள் கூற்றுக்களுடனும், தன் சொந்த அனுபவத்துடனும் எழுதிச்செல்கிறார். வரலாற்றறிஞர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தென்கிழக்காசியாவில் பரவிய கலாசாரம் பற்றிக் கூறிய கருத்துக்களை அடிகளார் சான்றாதாரங்களுடன் வன்மையாக இக்கட்டுரையிலே கண்டித்துள்ளார்.
7. கல்வி
அடிகளார் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியனவற்றிலே ஈடுபட்டதுபோலக் கல்வித்துறையிலும் பெருமளவு ஈடுபாடு கொண்டார். குருத்துவப் பட்டம் பெற்று உயர்தரப் பாடசாலை ஆசிரியராகத் தொடங்கிய அடிகளார் 1952ல் இலங்கைப் பல்கலைக் கழகத் கல்வித்துறை விரிவுரையாளராகக் கடமையேற்றார். தமிழர் கல்வி முறைபற்றி ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர் லண்டன் பல்கலைக்கழகத்திலே பண்டைய ஐரோப்பிய இந்திய கல்வி முறைகளை தமிழ்க் கல்வி முறைக்கு விசேட தொடர்பு காட்டி ஒப்பிட்டு ஆராய்ந்து 1957ல் கலாநிதிப் பட்டம் பெற்றார். தமிழருடைய கல்வி முறைபற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததுடன் தற்காலத்தில் தமிழ்மொழிக் கல்வி சிறக்க வழிகளும் கூறியுள்ளார். கல்வித்துறை தொடர்பாக அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்
கட்டுரைகளுள் முதலாவது கட்டுரையிலே பண்டைய இந்தியக் 1
கல்வி முறையினை அறிதற்குப் பண்டைய தமிழ் இலக்கியங்களின் பங்கு வரலாற்றாசிரியர்களாலே மறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்
- 37.

Page 23
காட்டியுள்ளார். இவ்விலக்கியங்கள் பற்றி அவர் கட்டுரையின் இறுதியிலே விவரித்துக் கூறுகின்றார்.
8. ஆய்வுகளின் நோக்கமும் பயனும்
அடிகளார் பன்முகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழருடன் தொடர்புடைய பல்வேறு துறைகளையும் 'தமிழியல்' என்ற ஒரு துறையின்கீழ் கொண்டுவரும் முயற்சி இவர் போன்றோரின் ஆய்வுகளினாலேயே ஏற்பட்டதெனலாம். அடிகளாருடைய ஆய்வுகள் எல்லாம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டமைந்தன:
1. தமிழ் தொடர்பான பல்வேறு விடயங்களையும் பிறரும் அறிய
வைத்தல். 2. தமிழர் வரலாறும் கலாசாரமும் முறையான ஆய்வுக்குள்ளாதல். 3. பண்டைய தமிழ் இலக்கியங்களின் மேன்மையினைத் தமிழரும்,
தமிழ் அறியாதாரும் அறிய வைத்தல். 4. பிற நாட்டில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி
கிடைத்தல்; பிறநாட்டு நூலகங்களிலுள்ள தமிழ் நூல்களைப் பேணுதல் போன்றவற்றிலே ஈடுபாடு.
அடிகளார் இந்நோக்கங்கள் யாவற்றையும் நிறைவேற்றினார் என்றே கூறலாம். அவர் குறிக்கோள் தவறாத ஒரு அறிவும் அருளும் சான்ற துறவி. அவர் எந்த இலட்சியங்களுக்காக உழைத்தாரோ, அவற்றையெல்லாம் ஓரளவு அடைந்த பின்னரே இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.
வண. பேராசிரியர் தனிநாயகம் அடிகள் பற்றி மேலும் தகவல்களுக்கு: பேராசிரியர் பொன்.கோதண்டராமன், "தனிநாயக அடிகளாரும் தமிழாய்வும்", தனிநாயகம் அடிகள் மாட்சி நயப்பு மலர், யாழ்ப்பாணம், 1981,
அ. சண்முகதாஸ், "தமிழ்ப் பெரும் பாரம்பரியத்தில் தனிநாயக அடிகளார்", மாட்சி நயப்பு மலர், 1981.
திருமதி. நிர்மலா இராசரத்தினம், "சுந்தரத் தமிழும் சுவாமி தனிநாயகமும்", தனிநாயகம் அடிகளார் நினைவு மலர், திருச்சி, 1992.
பேராயர் எஸ். ஜெபநேசன், தமிழ்த்தூது தத்துவபோதகள் முதல் தனிநாயகம் வரை, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் 2ஆவது நினைவுப் பேருரை, புனித சவேரியார் குருத்துவக் கல்லூரித் தனிநாயகம் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம், 1994.
- 38 -

பேராசிரியர் வி. செல்வநாயகம்
1. ஈழத்துக் கல்விப் பாரம்பரியம்
ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தினை இரு பெரும் பிரிவுகளிலே நோக்கலாம். ஒன்று நாவலர் மரபு வழிவந்த கல்வியென்றும், மற்றையது இலங்கைப் பல்கலைக்கழகம் வழிவந்த கல்விமரபென்றும் கூறலாம். நாவலர் வழிவந்த கல்வி மரபு நவீன விஞ்ஞான நோக்குடன் தொடர்புற்றதன்று. இவ்விடத்தில் இ. முருகையன் கல்வியியல் நோக்கில் நாவலர்’ என்னும் கட்டுரையிலே (1979:17)
‘நவீன கல வியியலின் நியமங்களையும் கருத்தோட்டங்களையும் நாவலர் பெருமானின் கல்விப் பணிகளுக்கும் கல்விக் கோட்பாடுகளுக்கும் நாம் பிரயோகிக்க முயலும்போது மிகவும் சாவதானமாக இருத்தல் வேண்டும். விஞ்ஞான, தொழில்நுட்ப விரிவுரைகளின் தாக்கம் நாவலர் காலத்தில் எமது தேசத்தில் அவ்வளவாக உணரப்பட்டவை அல்ல. அதனால் அதன் கூறுகள் நாவலரின் கல்விச் சிந்தனையில் இடம்பெறவில்லை. விஞ்ஞான நோக்குப் பற்றிய உணர்வோ அதன் நலந் தீங்குகள் பற்றிய எண்ணமோ நாவலரின் கவனத்துக்கு உட்பட்டவை அல்ல. ஆகையால் அவற்றை நாவலரிடம் தேடுதல் பொருந்தாது” என்று கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும். நாவலருடைய கல்வி மரபு சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், புன்னாலைக்கட்டுவன் கணேசையர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோருடாக வந்து சேர்ந்தது.
இலங்கையிலே பல்கலைக்கழகமொன்று அமைவதற்கு முன்னர் வட்டுக்கோட்டையிலே அமைந்த அமெரிக்கன் மிசனரிமாரின் 'வட்டுக்கோட்டைச் செமினரி' ஒரு பல்கலைக் கழகக் கல்விப் பாரம்பரியத்தை ஈழத்திலே தொடக்கிவைத்ததெனலாம். விஞ்ஞான, தொழில்நுட்ப விரிவுகளின் தாக்கம் இச் செமினரிக் கல்வியிலே செறிவுற்றிருந்தது. 1823ல் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட இந்நிறுவனம் பல்கலைக்கழக அந்தஸ்துடைய கல்லூரியாக அமைந்தது. எனினும் இது ஒரு சமயத்தைச் சார்ந்த நிறுவனமாக அமைந்ததென்பது உண்மையே. 1905ல் இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 1921ல் கொழும்பிலே பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்பட்டது. இது 1942ல் இலங்கைப் பல்கலைக்கழக மாக மாறியது. இப்பல்கலைக்கழகக் கல்வி மரபு சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் ஆ. சதாசிவம் ஆகியோரூடாக வந்து கொண்டிருக்கிறது.
- 39 a

Page 24
பேராசிரியர் வி. செல்வநாயகம் மேற்குறிப்பிட்ட இரு கல்வி மரபுகளையுஞ் சார்ந்தவராக அமைந்தார். இவர் நாவலர் கல்வி மரபிலே வந்த வித்துவசிரோமணி சி. கணேசையர் அவர்களிடம் கல்விகற்றதுடன் பல்கலைக்கழகக் கல்வி மரபுடைய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர். நீ. கந்தசாமிப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரப் பாரதியார் ஆகியோரிடமும் பயின்றார். இவ்விரு கல்வி மரபுகளும் இப்பேராசிரியருடைய ஆளுமையினை உருவாக்கின என்பதை அவரிடம் பயின்றவர்கள் நன்கறிவர். அவருடைய எழுத்துக்களும் இதனை நன்கு பிரதிபலிக்கின்றன. பாரம்பரியக் கல்வி மரபுடனும் தொடர்புற்றிருந்த காரணத்தினாலே மேனாட்டுச் சிந்தனைகளும் கோட்பாடுகளும் தான் எம்முடைய இலக்கியங்களின் திறன்களை அளவிடும் அளவுகோல்களென அவர் முற்றாகக் கொள்ளவில்லை. எம்முடைய இலக்கியங்களின் திறன்களை அளவிட எம்மவரே சில அளவுகோல்களைத் தந்துள்ளனர் என்பதை இவர் போன்றவர்களாலேயே உணரமுடியும்.
2. சிறிய வரலாற்றுக் குறிப்பு
பேராசிரியர் செல்வநாயகம் 1907ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் திகதி கொழும்புத்துறையில் வினாசித்தம்பி - அலங்காரம் தம்பதிகளுக்குப் பிறந்தார். அவருடைய ஆரம்பக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலேயே நடைபெற்றன. பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து படித்து லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சைகளிலே தேறிக் கலைமாணிப் பட்டம் (முதற்பிரிவினைப்) பெற்றார். பட்டம்பெற்றுச் சிலகாலம் இடைக்காடு இந்துக்கல்லூரியிலே ஆசிரியராகப் பணியாற்றினார். இக்கல்லூரியிலே கற்பித்துக் கொண்டிருக்கும் வேளையிலேதான் கணேசையருடன் தொடர்பு கொள்ளலானார். வித்துவசிரோமணி கணேசையரிடமும் பண்டிதர் வேதநாயகத்திடமும் மரபுவழிக் கல்வியைப் பெற்றார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இங்கு கடமையாற்றிக்கொண்டிருக்கும் போதுதான் 1942ல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று முதுமாணிப் பட்டம் பெற்றுத் திரும்பினார்.
1940ல் கொக்குவிலிலே திருமணஞ் செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தன. மனைவி அருகிலே நின்று உணவு பரிமாற அதனை இரசித்துச் சாப்பிடும் கணவனைக் காண்பதென்றால், பேராசிரியர் செல்வநாயகம் வீட்டுக்கே சென்றிருக்க வேண்டும். வீட்டுப் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரே மேற்கொண்டு செய்வது
- 40 -

வழக்கம். நாளாந்த சந்தை விவரங்களையெல்லாம் அறிந்து கொள்வார்.
3. பல்கலைக்கழக ஆசிரியராக
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழை ஒரு பாடமாகக் கற்றவர் எவரும் பேராசிரியர் செல்வநாயகத்தை இலகுவிலே மறந்து விடமாட்டார்கள். தூய வெள்ளைவேட்டியும், நாஷனலும், சால்வையும் அணிந்து கம்பீரமாகப் பல்கலைக்கழக வளாகத்தினுள் திரியும் இவரை எல்லா மாணவர்களுமே நினைவில் வைத்திருப்பர். தமிழ்த்துறையைச் சார்ந்த இருவர் இத்தோற்றத்திலே வருவர். ஒருவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, மற்றவர் பேராசிரியர் செல்வநாயகம். தமிழிலே புலமை பெற்ற இவர்கள், தூய தமிழ் உடையுடுத்தும் இவர்கள் சரளமாக ஆங்கில மொழியையும் பேசுவார்கள்.
வகுப்புகளுக்கு உரிய நேரத்துக்கு வருவதும், குறிப்பிட்ட பாடத்தை மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையிலே போதிப்பதும் எல்லா ஆசிரியர்களுக்கும் உரிய கடமைகளாகும். இவர் அக்கடமைகளிலே தவறுவது கிடையாது. மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதற்காக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டும், சிலவேளைகளில் அவர்களைக் 'கிண்டல் பண்ணியும் வகுப்புக்களை நடத்துவது இவருடைய தனித்துவமான பண்பாகும். தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் சிலருக்கு ஒரு தமிழ்ப் பாடலைச் சரியாக வாசிக் கத் தெரியாமலிருக்கும் . இப்படியானவர்களை இனங்கண்டு வகுப்பிலே குறிப்பிட்ட பாடநூலில் உள்ள பாடல்களை வாசிக்கும் படி கேட்பார். இத்தகைய மாணவர்களுக்கு இவரைப் பிடிப்பதேயில்லை. எனினும் பேராசிரியர் தன் கடமையிலிருந்து இம்மியும் தவறமாட்டார்.
மாணவர்களுடன் கருத்துமோதல் செய்வதிலே இவருக்கு நல்ல விருப்பம். கம்பராமாயண வாலிவதைப் படலம் எங்களுடைய காலத்தில் குறிப்பிட்ட பாடப்பகுதியாக அமைந்திருந்தது. அப்பகுதியினைப் படிப்பித்து முடித்தபின்னர், வாலிவதை தொடர்பாக மாணவர்களுடைய கருத்துக்களை அறிவதற்காகக் கடைசி இரண்டு விரிவுரை நேரங்களிலும் அப்பகுதி தொடர்பாக மாணவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று வாய்ப்புக் கொடுத்தார். ஒரு மாணவன் "இராமன் வாலியைக் கொன்றது பிழையான காரியம்" என்று கூறினான். அதற்கு அவர் "அது பிழைதான், அதற்கென்ன?" என்று திருப்பிக்கேட்டார். இப்படியே மாணவர்கள் ஒவ்வொருவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவரும் திருப்பிக் கேள்விகள் தொடுத்தார். ஏன் இப்படி அவர் திருப்பித் தம்மிடம் கேள்விகளைத் தொடுக்கிறார் என்பதன் உண்மையை உணராத மாணவர்கள், அவர் தங்களைக்
- 41 -

Page 25
"கேலிபண்ணுகிறார்’ என்றே நம்பினர். எந்த மாணவனுக்கோ, மாணவிக்கோ தன்னுடைய கேள்விக்குப் பதிலளித்து வாதிடக்கூடிய ஆற்றல் உண்டா என்பதை அவர் அறிய முயன்றார். ஆற்றல் உள்ளவர்களும் தப்பபிப்பிராயம் காரணமாக அவருடைய வகுப்புக்களிலே பேசாமல் இருந்துவிடுவது உண்டு.
வகுப்புக்களுக்கு ஒழுங்காக வராதவர்கள், குறிப்பிட்ட பாடங்களைப் படிக்காமல் வகுப்புக்கு வருபவர்கள் இவருடைய கண்டிப்புக்கு உட்படுவார்கள். தமிழ் இலக்கியப் பாடல்களையோ, தொல்காப்பிய இலக்கணத்தையோ, இலக்கிய விமரிசனத்தையோ இவர் கற்பிக்கும்போது மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் ஏற்படவும் அவற்றையொட்டி மேற்கொண்டு சிந்திக்கத் தூண்டும்படியும் விளக்கங்கள் கொடுத்துக் கற்பிப்பார். அவர் எதனைப் படிப்பித்தாலும், அப்பாடந் தொடர்பான சிந்தனைத் தெளிவு அவரிடமிருந்தது. இதனால் மாணவர்களின் சிந்தனையை அவருடைய கற்பித்தல் ஒருபோதும் குழப்பமடையச் செய்வதில்லை. சிந்தனைத் தெளிவில்லாத ஆசிரியர்கள் சிலர் தாமும் குழம்பி, மாணவர்களையும் குழப்பிவிடுவர்.
பேராசிரியரிடம் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படித்தவர்கள் அவருடைய கற்பித்தல் திறனை நன்கு அறிவர். தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு நச்சினார்க்கினியருடைய உரையினை நுண்ணாய்வு செய்து அவர் கற்பித்ததுபோல எவருமே கற்பிக்க முடியாதெனப் பல பெரியவர்கள் இப்பொழுதும் கூறிக்கொள்வார்கள். 'உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என மரபுவழிச் கல்வியாலே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் செல்வநாயகம், அதே மரபில் வந்த நக்கீரப் பார்வையினை நச்சினார்க்கினியருடைய உரையிலே செலுத்தத் தவறவில்லை. பொருளதிகாரச் சூத்திரங்கள் சிலவற்றுக்கு எழுதப்பட்டுள்ள நச்சினார்க்கினியரின் முரண்பட்ட உரைகளைச் சுட்டிக்காட்டி "மாணவர்களாகிய நீங்கள் எங்களுடைய விரிவுரைகளைச் சிலவேளைகளிலே பிழையாகக் குறிப்பெடுப்பது போல, இவ்வுரைப்பகுதிகளும் நச்சினார்க்கினியருடைய யாரோ ஒரு மாணவனால் எழுதப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறுவார். உரைகளிலே காணப்படும் முரண்பாடுகளை இனங்கண்டு விளக்கும் அதே வேளையில் இவ்வுரைகளின் சிறப்புப் பண்புகளையும் மாணவர்கள் உணரும் வகையிலே கற்பிப்பார்.
சிந்தனை விருப்பும் இரசனையும் உடைய மாணவர்களுக்கு அவருடைய இலக்கியத் திறனாய்வு வகுப்புகள் சுவையுடையனவாக அமைவன. அப்படி இல்லாதவர்களுக்கு அவை வேப்பங்காயாகவே இருப்பதுண்டு. ஏதாவது ஒரு பாடலை உரத்து அப்பாடலோசைக்கேற்ப வாசிப்பார். அப்பாடல் நல்ல பாடலா அல்லது கூடாத பாடலா என்று ஒவ்வொரு மாணவராகக் கேட்பார். நல்ல பாடலென்றோ,
a 42

கூடாத பாடலென்றோ கூறினால், அதற்குரிய காரணங்களைக் கூறும்படி கேட்பார். இலக்கியத்தைப் பகுத்துணர்ந்து சுவைக்கக்கூடிய பயிற்சியினை மாணவர்களுக்கு அளிப்பதே இப்பெரியாருடைய நோக்கமாயிருந்தது. இலக்கியத்தைச் சுவைக்கக்தெரியாமல் அதிலே சமூகவியல், வரலாற்றியல் தரவுகளை மட்டும் தேடுகின்ற நிலையுடைய இக்காலத்திலே பேராசிரியர் செல்வநாயகத்தினுடைய இலக்கியத் திறனாய்வுப் பயிற்சியினை எம்போன்ற மாணவர்கள் இன்று திரும்ப அசைபோடுவதுண்டு.
ஆசிரியருக்குரிய துணிவு, சிந்தனைத் தெளிவு, கண்டிப்பு, தான் கருதியவற்றை மறைக்காமல் கூறுதல், மாணவர் கருத்து வளர்ச்சியைத் தூண்டுதல் எனப் பல்வேறு பண்பு நலன்களைக் கொண்டவர் பேராசிரியர் செல்வநாயகம். இத்தகைய ஆசிரியரிடம் நாம் படிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று எண்ணுவதுண்டு. ஆனால் அவரைத் தமிழ்த் துறை நன்கு பயன்படுத்தவில்லை என்ற குறையும் சிலராலே கூறப்படுவதுண்டு. மரபுவழிச்சிந்தனையும், நவீன சிந்தனையுங் கொண்ட மிகச்சிறந்த பல்கலைக்கழகத் தமிழாசிரியர் பேராசிரியர் செல்வநாயகம் என்பதனை எவரும் மறுக்கமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.
4. இலக்கிய வரலாற்றாசிரியர்
தமிழ் இலக்கிய பரப்பினை தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பாகுபாடு செய்து, அப் பாகுபாட்டுக்கான அடிப்படைகளுள் அரசியல் மாற்றங்களை முதன்மைப்படுத்தி, ஒவ்வொரு பகுதியினையுஞ் சார்ந்த இலக்கியங்களின் பொருளமைதிக்கான காரணிகளைச் சுட்டி அவ்விலக்கியங்களின் வடிவ அமைதி, மொழிப்பிரயோகம் ஆகியவற்றையும் விளக்கி எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு ஆசிரியராக அமைந்தவர் பேராசிரியர் வி. செல்வநாயகம். இவருடைய இந்நூலே தமிழ் நாட்டிற் பலரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மாதிரியாக அமைந்தது. ஆனால், இத்தமிழ் நாட்டு அறிஞர்கள் எவரேனும் இவ்வுண்மையைத் தங்களுடைய நூல்களில் எவ்விடத்திலேனும் குறிப்பிடாது விட்டுள்ளனர். பேராசிரியர் செல்வநாயகம் சிலப்பதிகாரம் மணிமேகலைக் காப்பியங்களின் காலம் பற்றி "Date of Cilappatikaram and Manimekalai" 6T66GBT5 d5 (660Ju 60601 19486) 67(g;560Tsrh. (University of ceylon Review Vol.III) Giss (660Ju5G36) மொழிப் பிரயோகங்களை அடிப்படையாக கொண்டு மணிமேகலையின் காலம் சிலப்பதிகாரத்துக்குப் பிற்பட்டது எனப் பேராசிரியர் நிறுவியுள்ளார். 1961ல் மணிமேகலையின் காலம் என்னும் நூலை எழுதிய சோ.ந. கந்தசாமி என்பவர் பேராசிரியர் குறிப்பிட்ட அதே
- 43 ܡ

Page 26
காரணிகளைக் காட்டி மணிமேகலை சிலப்பதிகாரக் காலத்துக்குப் பிற்பட்டதெனக் கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய நூலில் எவ்விடத் தி லேனும் பேராசிரியருடைய கட்டுரையைக் (gp3) LIT floo606). Sgsui 3, Vaiyapuri pillais Dating of Cilappatikaram, என்னும் கட்டுரையை (1976) எழுதிய பேராசிரியர் சிவத்தம்பி.
"As for the linguistic variations between the two works the Consensus is to take. Cilappatikaram as Pre-Manimekalai. Chelvanayagam raised this point. Kandasamy reiterated it, unfortunately with no mention whatsoever to the earlier writing of Chelvanayagam, என்று குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
"இலக்கிய வரலாறு' என்னுந் தொடர், இலக்கியங்களுடைய வரலாறு எனவும் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாறு எனவும் பொருள்படும். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்கும் மாணவர்கள் இலக்கியங்களுடைய வரலாற்றிலே சிறப்பாக ஈடுபடுவர். இலக்கியங்கள் வழிவந்த வரலாற்றிலே வரலாற்றியல் மாணவர்கள் சிறப்பாக ஈடுபடுவர். பேராசிரியர் செல்வநாயகம் தமிழ் கற்கும் மாணவர்களுக்காகவே இலக்கிய வரலாறு எழுதினார். எனவே, அவர் இலக்கியங்களுடைய வரலாற்றினையே எழுதினார். இந்த வரலாற்றின் மூலமாக தமிழ் இலக்கியங்கள் எவையெவை என அறிதலுடன் இலக்கிய இரசனையையும் மாணவர்களுக்கு ஊட்ட முடியும். பேராசிரியருடைய நூல் இவ்விரு பணிகளையும் செய்தன.
வரலாறு என்றால் அதற்கொரு காலப்பகுப்புத் தானாக வந்தமைந்து விடும். இலக்கிய வரலாற்றுக்கும் காலப்பகுப்பு இன்றியமையாததாகும். தமிழ் இலக்கிய வரலாறுகளை எழுதியவர்கள் எவ்வகையான காலப்பகுப்புக்களை என்ன அடிப்படையிலே மேற்கொண்டனர் என்பதை இங்கு சுருக்கமாகத் தருகிறோம்.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றி முதன் முதல் சிந்தித்தவர் சி. வை. தாமோதரம்பிள்ளையாகும். அவருடைய பாகுபாடு, அபோத காலம், அஷரகாலம், இலக்கண காலம், சமுதாய காலம், அநாதார காலம், சமணர் காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என அமைகின்றது. இப்பாகுபாட்டின் பொருத்தமின்மை பற்றிப் பிற்காலத்தவர் குறிப்பிட்டனவற்றையெல்லாம் தொகுத்து மனோன்மணி சண்முகதாஸ் (சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு, 1983, பக். 168-171) கூறியுள்ளார். இவருக்குப் பின்னர் எழுந்த இலக்கிய வரலாற்று நூல்களின் காலப்பகுப்பு அடிப்படைகளைப் பின்வருமாறு நோக்கலாம்.
44 -

(அ) பொதுவாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை ஆதிகாலம், மத்திய காலம், நவீன காலம் என வகுத்தல். கமில் ஸ்வெலெபில் (1957), அ. சிதம்பரநாதன் செட்டியார் (1958), மு. வரதராசன் (1972), தேவ நேயப் பாவாணர் (1979) ஆகியோருடைய எழுத்துக்களிலே இத்தகைய பாகுபாடு காணப்படுகின்றது.
(ஆ) சமய நோக்கினை முக்கிய அடிப்படையாகக் கொண்டு காலப்பகுப்பினை மேற்கொள்ளுதல். எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை (1904), எம். சிறிணிவாச ஐயங்கார் (1914) மறைமலையடிகள் (1930) கா. சுப்பிரமணியபிள்ளை (1930) ஆகியோருடைய காலப்பகுப்பு இவ்வகையிலேயே அமைகின்றது.
(இ) தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான சில நிறுவனங்கள், இயக்கம், போக்குகள், இலக்கிய வடிவங்கள் ஆகியனவற்றின் பின்னணியிலே எஸ். வையாபுரிப்பிள்ளை (1957), திரு.திருமதி. ஜேசுதாசன் (1961), ந. சுப்பிரமணியம் (1981) ஆகியோர் காலப் பாகுபாட்டினைச் செய்துள்ளனர்.
(ஈ) அரசியல், சமயம், நிறுவனம், இலக்கியவடிவம் என்னும் அடிப்படையிலே மு. அருணாசலம் காலப் பாகுபாட்டினை மேற்கொண்டுள்ளார்.
(உ) இலக்கியத்தின் வழி வரலாறு என்ற அடிப்படையிலே கா. சிவத்தம்பி (1988). 1. ஆரம்பம் முதல் கி.பி. 600 வரை, 2 கி.பி. 600 முதல் கி.பி. 1400 வரை, 3. கி.பி. 1400 முதல் கி.பி. 1800 வரை, 4. கி.பி. 1800 முதல் இற்றை வரை என நான்கு பிரிவுகளாக வகுக்கின்றார்.
மேற் காட்டியவர்களினின்றும் வேறுபட்ட நோக்கினை உடையவராகப் பேராசிரியர் செல்வநாயகம் அமைந்தார். அவர் 'சங்கம்' என்னும் நிறுவனத்தையும் தமிழ்நாட்டு அரசியல் மாற்றங்களையுமே தன்னுடைய தமிழிலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்புக்கு அடிப்படைகளாகக் கொண்டார். கி.பி. ஆறாம் நூற்றாண்டுடன் தொடங்கும் பல்லவ மன்னர்களுடைய ஆட்சிபோன்று, அதற்குமுன்னர் சேரரோ, சோழரோ, பாண்டியரோ, களப்பிரரோ நீண்டகால நிலையான ஆட்சியினை அமைக்கவில்லை. அத்துடன் சங்க இலக்கியச் செய்யுட்களை ஆராய்ந்தால், அவற்றிலே குழுத் தலைவர்கள் நிலையிலிருந்து அரசர் என்ற நிலைக்கு மாற்றமடையும்
1. கா. சிவத்தம்பி தன்னுடைய தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூலில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு செய்தவர்கள் வரிசையிலே றொபேட் கால்டுவேல் அவர்களைக் குறிப்பிடுகிறார்.
ܚ 45 -

Page 27
அரசியல் வளர்ச்சியற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். எனவே, பல நூற்றாண்டுகளுக்கு முன் இறையனார் களவியல் உரைகாரர் குறிப்பிட்ட சங்கம் என்னும் நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு கி.பி. 600 வரையிலான தமிழிலக்கிய வரலாற்றுக் காலத்தைச் 'சங்ககாலம்' என்றும்; ‘சங்கமருவிய காலம்' என்றும் பேராசிரியர் செல்வநாயகம் பாகுபாடு செய்தார். ஏனையவை பல்லவர்காலம், சோழர் காலம், விஜயநகர-நாயக்கள் காலம், ஐரோப்பியர் காலம் என அரசியல் மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பாகுபாடுகளாகும். நவீன நோக்கினை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கெல்லாம் பேராசிரியர் செல்வநாயகத்தினுடைய தமிழ் இலக்கிய வரலாறு (1951) காலத்தால் முந்தியதாகும். பேராசிரியருடைய தமிழ்ப் பணிகளுள் இத்தகைய நூலை எழுதித் தமிழுலகுக்கு அளித்தமையுடன் பின்வந்த பல தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்தமை மிகச் சிறந்த பணியெனலாம்.
பேராசிரியரின் தமிழ் இலக்கிய வரலாறு நூலின் அமைப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு காலப்பகுதியின் இலக்கியங்களையும், அவை தோன்றிய காலப் பின்னணியினையும், அவ்விலக்கியங் களுடைய பொருள், செய்யுள், மொழி ஆகியனவற்றையும் தெளிவாக விளங்கும்வண்ணம் அமைந்துள்ளது. அவ்வமைப்பு விவரம் பின்வருமாறு:-
அ) சங்ககாலம்: (1) முச்சங்கங்கள் (2) சங்கச் செய்யுளும் பொருள் மரபும்: அன்பினைந்திணை, கைக்கிளை - பெருந்திணை, புறத்திணை (3) எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும் (4) சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்.
ஆ) சங்கமருவிய காலம்: (1) அரசியல் நிலை (2) பண்பாட்டு நிலை (3) சமயநிலை (4) நூல்கள் (5) உரைநடை இலக்கியம் (6) இலக்கியப்பண்பு
இ) பல்லவர் காலம்: (1) பல்லவர் காலத்துத் தமிழ்நாடு (2)
சமயநிலை (3) கலை வளமும் இலக்கியப் பண்பும் (4) பக்திப்பாடல்கள் (5) பிறநூல்கள் (6) உரைநடைநூல்கள்
ஈ) சோழர் காலம் (1) அரசியல் நிலை (2) சமயநிலை (3) இலக்கியப்பண்பு (4) திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும் (5) காவியங்கள் (6) சிற்றிலக்கியங்கள் (7) இலக்கண நூல்கள் (8) சைவசித்தாந்த நூல்கள் (9) உரைநூல்கள்
- 46 -

உ) நாயக்கர் காலம்: (1) அரசியல் நிலை (2) சமயநிலை (3) இலக்கியப்பண்பு (4) பிரபந்தங்கள் (5) இலக்கியங்கள் (6) உரையாசிரியர்கள் (7) தமிழை வளர்த்த அரசர்களும் ஆதீனங்களும்.
ஊ) ஐரோப்பியர் காலம்: (1) அரசியல் நிலை (2) சமயநிலை (3) இலக்கியப்பண்பு (4) உரைநடையிலக்கியம் (5) செய்யுள் இலக்கியம் (6) நாடக இலக்கியம்.
எ) இருபதாம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கை முறையிலே மாற்றம், பொது மக்களுக்குரிய காலம், பாரதி முதலான கவிஞர்கள், தமிழுரை நடை வளர்ச்சி, நாவல், சிறுகதை, இலக்கிய விமர்சனம், நாடக இலக்கியம்.
இந்நூலின் அமைப்பிலே ஆங்காங்கே சில குறைகளும் தென்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம் பேராசிரியராலே இன்னும் விளக்கமாக எழுதப்பட்டிருக்கலாம் என்று குறை கூறப்படுவதுண்டு. ஆனால், பேராசிரியர் இந்நூலை எழுதிய காலத்தினை நாம் அவதானிக்க வேண்டும். 1951 இல் இந்நூல் அச்சிடப்பட்டு வெளி வந்தது. இந்த நூற்றாண்டின் அரைப்பகுதிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதியை அவர் எழுதியதால், அத்துணை விரிவாக அவராலே எழுதியிருக்க முடியாது. நாயக்கர் காலத்திலே பிரபந்தங்கள் என்று ஒரு பகுதியிலே கூறி விட்டு, அடுத்து வரும் பகுதியினை 'இலக்கியங்கள்’ என்று அழைக்கின்றார். அப்படியானால் பிரபந்தங்கள் இலக்கியங்க ளல்லனவா என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஈழத்திலிருந்து முதன் முதல் எழுந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல் என்ற பெருமையிலும், தமிழகத்து அறிஞர்கள் பலருக்கு வழிகாட்டியாக அமைந்த நூல் என்ற பெருமையிலும் இது போன்ற சிறு குறைகளெல்லாம் மறைந்து போய் விடுகின்றன. பேராசிரியர் செல்வநாயகத்தின் இந்நூல் தொடர்பாகக் கா. சிவத்தம்பி தன்னுடைய தமிழில் இலக்கிய வரலாறு (பக். 131-32) என்னும் நூலிலே கூறியிருப்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
இக்கால கட்டத்தில் (அதாவது, ஐம்பதுகளில்) தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களில் கலைமாணி (B.A)ப் பட்டத்துக்கான தமிழ்ப் பாட நெறியில் இலக்கிய வரலாறும் ஒரு பகுதியாகச் சேர்க்கப் பட்டதாகும். காலஞ் சென்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் தீட்சண்ணிய நோக்குக் காரணமாக நாற்பதுகளிலேயே இப்பாடம், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ், பொது, சிறப்புத் தமிழ்த் தேர்வுகளில் இடம் பெற்றது. அங்கு அப்பாடத்தினை முதன் முதலிற்
- 47 ܡ

Page 28
படிப்பித்த வி. செல் வநாயகம் , இதற்கான ஒரு பாடப்புத்தகத்தின் தேவையை அறிந்தவராய் படிப்பித்தல் காரணமாக அத்தகைய ஒன்றினை எழுதுவதற்குத் தகுதியுடையவராக இருந்தார். அவள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூல், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைத் தமிழ்நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளின் பின்னணியில் வைத்துக் காட்டிற்று. முன்னர் சமண காலம், தேவார காலம், காப்பிய காலம், இடைக்காலம் எனக் குறிப்பிடப்பெற்றவை, இவர் நூலில் சங்கம் மருவியகாலம், பல்லவர் காலம், சோழப் பெருமன்னர் காலம், விஜயநகர நாயக்க மன்னர் காலம் எனக் குறிப்பிடப்பட்டன. செல்வநாயகத்தின் நூலின் திறனை வையாபுரிப்பிள்ளை முதல் ஜேசுதாசன், அருணாசலம் வரை பல அறிஞர்கள் போற்றியுள்ளனர். இந்நூல் இதன் பின்னர் வந்த பாடப்புத்தகங்கள் பலவற்றுக்கு மாதிரியாக அமிைந்தது. பின்வந்த பாடப்புத்தக ஆசிரியர்கள் பலர் எடுத்த இடத்தைக் கூறாது, பாடப்புத்தக ஆசிரியர்களுக்குரிய பண்பு தவறாது, இவருடைய கால வகுப்பு முறைமையினைத் தமதாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
பேராசிரியர் செல்வநாயகத்தின் பங்களிப்பினை மிகப் பொருத்தமாகக் கா. சிவத்தம்பி மதிப்பீடு செய்துள்ளார்.
5. ‘தமிழ் உரைநடை வரலாறு ஆசிரியர்
தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மாணவர்களுக்குக் கற்பித்தாலும், ஆய்வு செய்தாலும், தமிழ் மொழி செய்யுள் மரபிலிருந்து உரைநடை மரபுக்கு ஐரோப்பியருடைய வருகையின் பின்னர் மாற்றமுற்றதை நன்கு உணர்ந்த பேராசிரியர் செல்வநாயகம் தமிழ் உரைநடையின் வரலாற்றை நுணுகி ஆராயலானார். தக்க சான்றாதாரங்களுடன், உரைநடை வளர்ச்சிப் படிகளை இனங்காட்டி, அவற்றை இறுக்கமான நல்ல தமிழ் நடையிலே விளக்கி எழுதி யுள்ளார். பேராசிரியருக்குக் கலாநிதிப் பட்டம் இல்லை எனச் சில கட்டங்களிலே குறிப்பிடப்பட்டதுண்டு. இத் 'தமிழ் உரைநடை வரலாறு நுT லினை அக் காலத் திலே அவர் ஏதாவதொரு பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்திருந்தால், உடனடியாக அவருக்குக் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டிருக்கும். இவ்வுண்மையை உணர்ந்தபடியாற்றான் இலங்கைப் பல்கலைக்கழகம் அவரைப் பேராசிரியராக நியமித்தது.
“உலகிலுள்ள எந்த மொழியிலாயினும் இலக்கியம் தோன்றும் பொழுது அது செய்யுள் வடிவத்திலேயே முதலிற்றோன்றுகின்றது. பாட்டைத் தொடர்ந்து உரைநடை வெளிவருகின்றது. எனவே தமிழ்
- 48 a

மொழியிலும் முதலிலே தோன்றியது பாட்டு என்றும் அதனைத் தொடர்ந்து உரைநடை தோன்றிற்றென்றும் கொள்ளுதல் பொருத்த முடையதாகும்." இவ்வாறு தன்னுடைய உரைநடை வரலாற்றினைத் தொடங்குகிறார் பேராசிரியர் செல்வநாயகம். தமிழ் உரைநடைப் பரப்பினை ஐந்து காலக் கட்டங்களாகப் பகுத்து ஆராய்கின்றார். அக்காலங்களாவன: சங்ககாலம், களவியலுரைக்காலம், உரை யாசிரியர்கள் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு.
கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் எழுந்த உரைநடை வகைகளைச் சங்ககாலம் என்னும் காலப்பகுதியிலே பேராசிரியர் ஆராய்கின்றார். தமிழிலே ஆரம்பத்தில் உரைநடை தோன்றிபோது அது செய்யுளை ஒத்ததொரு நடையாகவே அமைந்திருக்கவேண்டுமென்னும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. தன்னுடைய இக்கருத்துக்குப் புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலிருந்து சான்றாதாரங்கள் காட்டுகின்றார். புறநானூற்றில்,
"முத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பாறர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பென."
எனத் தொடங்கிச் செல்லும் பாடலடிகள் புலப்படுத்தும் ஒசை சாதாரண பேச்சோசையைக் கொண்டதாய் அமைகின்றது எனக் குறிப்பிடும் ஆசிரியர், சிலப்பதிகாரத்தில் இடம்பெறும்.
"கயலெழுதிய இமய நெற்றியின்." எனத் தொடங்கும் உரைப்பகுதி பாட்டுப்போல அமைகின்றது எனக் குறிப்பிடுவர். இச்சான்றுகளாலே "உரைநடை தோன்றுகின்ற காலத்துச் செய்யுள் நடைக்கும், அவ்வுரை நடைக்கும் உள்ள பேதம் பெரிதன்று. காலஞ் செல்லச் செல்ல அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு கூடிக்கொண்டு போகின்றது" என்று அவர் கூறக்கூடியதாயுள்ளது. தொல்காப்பியர் செய்யுள் வகைகளுள் ஒன்றாக உரைநடையைக் குறிப்பிட்டதன் காரணமும் இதனாலே தெளிவுறுத்தப்படுகின்றது.
இவ்வாறு உரைநடையின் தோற்றத்தினை நோக்கிய ஆசிரியர் பின்னர் எழுந்த உரைநடை நூல்களிலே பயின்றுவந்த உரைநடையின் பண்புகளையும், அப்பண்புகளுக்கான பின்னணிக் காரணிகளையும், நுணுகி ஆராய்ந்து கூறுகின்றார். கி.பி. 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த இறையனார்களவியலுரையிலே காணப்படும் இரண்டு வகையான நடைகளை இனங்கண்டு அவற்றுக்கு உதாரணங்கள் தந்து விளக்கியிருப்பது சிந்தனைக்கு விருந்தளிக்கின்றது. "(அவள்) சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து - கண்டாள்" என்னும் உரைப்பகுதியை உதாரணங்காட்டி,
- 49 -

Page 29
"இவ்வுரைப் பகுதியின்கண் இடையிடையே எதுகை மோனை முதலிய ஓசைப் பண்புகள் வாய்ந்த சொற்றொடர்கள் வந்துள்ளன. அவற்றைப் பொருளறிந்து படிக்கும்போது செய்யுளொன்றைப் படிக்கும் நேரத்தில் எம்மிடத்தில் உண்டாகும் உணர்ச்சி எத்தகையதோ அத்தகையதோர் உணர்ச்சி எம்மனத்தில் எழுகின்றது"
என்று கூறி அவ்வுரைப்பகுதியை ஒரு பாடல் வடிவாகத் தந்துள்ளமை அவருடைய இரசனைத் திறனையும், திறனாய்வுப் போக்கினையும் காட்டுகின்றது. இன்னொரு வகையான உரைப்பகுதியையும் இறையனார்களவியலுரையிலே இடம்பெறுகின்றது. அது "என் பயக்குமோ இது கற்க எனின் வீடு பேறு பயக்கும் என்பது. என்னை இது களவியலன்றே, இது கற்க வீடு பேறு பயக்குமாறு என்னை" என அமையும் உரைப்பாங்காகும். "ஆசிரியன் மாணவனுக்கு ஒன்றை விளக்கும்போது எழுப்பும் கடாக்களும் அவற்றிற்கு அவன் கூறும் விடைகளும் பேச்சில் எவ்வாறு அமையுமோ அவ்வாறே எழுத்திலும் அமைதலை" இத்தகைய உரைநடை காட்டுவதாகப் பேராசிரியர் கூறுவர்.
ஒவ்வொரு காலத்து உரைநடை வகைகளை இலக்கியச் சான்றாதாரங்கள் மூலம் வகைப்படுத்திக் காட்டுகின்றார். ஒவ்வொரு வகை நடையின் தனித்துவமான பண்புகளை இனங்கண்டு, அத்தகைய நடையினாலே ஏற்படக்கூடிய பயன்களையும் கூட்டிச் செல்கிறார். உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடைபற்றிக் கூறும்போது,
"இனி இக்காலத்து உரைநடையிற் காணப்படும் பண்புகள் சிலவற்றை நோக்குவோம். சமுதாய வாழ்க்கையிலே பொதுமக்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்ற இக்காலத்தில் அம்மக்கள் படித்துப் பொருளறிதற்கு ஏற்ற ஒரு நடைவகை உருவாதல் இயல்பாகும். அந்நடையிற் காணப்படும் சிறப்பியல்புகளுள் கடினமான சந்தி விவகாரங்களின்றி மொழிநடை அமைதல், பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், சொற்றொடர்கள், இலக்கண அமைதிகள் என்பன இடம்பெறுதல், ஆங்கில மொழியிற் கையாளப்பட்ட குறியீட்டு முறைகள் பயின்றுவருதல் போல்வன சிலவாகும்"
என இக்கால உரைநடையின் இயல்புகள் சுட்டப்படுகின்றன.
இலக்கியத் திறனாய்வினை, பிற்காலத்தில் திறனாய்வாளர்களெனச்
சிறப்புற்ற க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களுக்கும்
வேறு பல பெருந்தொகையான மாணவர்களுக்கும் கற்பித்தும், 50 .

அத்துறைபற்றி எவரும் சிந்திக்காத காலத்திலே சிந்தித்தும், ஆய்வுகளும் மேற்கொண்டார் பேராசிரியர் செல்வநாயகம். அத்துறை தொடர்பான முயற்சிகளுள் முதற்படியான முயற்சிதான் இலக்கியங்களுடைய வரலாற்றை மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நோக்குவதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமையாகத் தரிசித்து எழுதிய பேராசிாயர், தமிழ் உரை நடையின் வரலாற்றை நுணுக்க ஆய்வாக மேற்கொண்டார்.
6. திறனாய்வுக் கட்டுரையாளர்
இன்று எழுத்துலகிலே ஒரு துரதிர் ஷடமான நிலை காணப்படுகின்றது. அது என்னவெனில், இலக்கியங்களின் திறன்களை ஆய்ந்து எழுதுபவர்களை விடுத்துத் திறனாய்வு பற்றி எழுதுபவர்களையே திறனாய்வாளர் எனக் கொள்ளும் சிலருடைய மனோபாவமாகும். பேராசிரியர் செல்வநாயகம் இலக்கியங்களின் திறன்களை ஆராய்ந்தும் எழுதியுள்ளார்; இலக்கியத் திறனாய்வு பற்றியும் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளை ஒரளவு காலவரன் முறையிலே நோக்கலாம். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க மலரான இளங்கதிர் இவருடைய பல கட்டுரைகளை வெளியிட்டது. "சொல்லும் பொருளும்” (மலர் 6, பக். 91-104, 1953-54) என்னும் கட்டுரை இலக்கியத்துக்குச் சொல்லினுடைய சொற்பொருளினுடைய இன்றியமையாமைபற்றியும், சொற்பொருள் என்னென்ன வகையிலே உணரப்படுகின்றது என்பது பற்றியும் கூறுகின்றது.
“இவ்வாறே, இலக்கியத்துக்குச் சொல் கருவியாகின்றது. ஆகவே, இலக்கியத்தைக் கற்று அனுபவிக்க விரும்பு வோர்க்குச் சொற் பொருளறிவு இன்றியமையாததாகின்றது. கவிதையில் அமைந்து கிடக்கும் அனுபவப்பொருள் புலவனுடையது. ஆனால், அவன் கருவியாகக் கொண்ட சொல் அவனுக்கும் எமக்கும் பொதுவாயுள்ளது. அதன் உதவியைக்கொண்டுதான் கவிதையில் அவன் குறித்துள்ளதை நாம் அறியவேண்டியிருக்கின்றது."
எனச் சொல்லினுடைய முக்கியத்துவத்தைச் சுட்டிச் செல்கிறார். "சொல் ஒலிவடிவு வரிவுடையது. அது பொருளோடு புணராத விடத்தும் சொல்லெனப்படாது" எனச் சொல்லினுடைய பண்பு கூறப்படுகின்றது. சொற்பொருளுக்கும் சமுதாய மக்களுக்குமிடையேயுள்ள தொடர்பு குறிக்கப்படுகின்றது. காட்சிப்பொருட்கள், கருத்துப் பொருட்கள் என்ற அடிப்படையிலும், செம்பொருள், சுவைப் பொருள் என்ற அடிப்படையிலும் சொல்லும் பொருளும் இக்கட்டுரையிலே நோக்கப்படுகின்றன. "பாட்டும் ஒசையும்” (இளங்கதிர், மலர் 7, பக் 114-22 1954-55) என்னும் கட்டுரையிலே கவிதைக்கு இன்றியமையாத ஓசைபற்றிக் கூறுகிறார்.
= 51 ョ

Page 30
"சொற்களின் பொருள் எமக்குப் புலப்படாத இடத்தும் பாட்டின் ஓசையைக் கொண்டே அதன்கண் பொருந்தியுள்ள சுவையைக் கிரகித்துக் கொள்ளலாம். இந்தத் தத்துவத்தை உரைநடை, பாட்டு என்பனவற்றில் மட்டுமன்று, சாதாரண பேச்சிலும் நாம் கண்டு தெளியலாம்."
என்று பேராசிரியர் கூறியுள்ள உண்மையினை உணர்ந்துகொண்டால் புதுக் கவிதையின் போக்கினைக் கிரகித்துக் கொள்வது இலகுவாயிருக்கும்.
பேராசிரியருடைய "வழக்குஞ் செய்யுளும்" (இளங்கதிர், மலர் 14, பக் 128-35, 1961-62) என்னுங் கட்டுரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அறுபதுகளில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களிடையே "மரபு" தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றன. ஒரு சாரார் தமிழிலக்கியங்களில் பேச்சு வழக்கு இடம் பெறக் கூடாதென அபிப்பிராயப்பட்டனர். இன்னொரு சாரார், பேச்சு வழக்கினை உபயோகித்து இலக்கியங்கள் படைத்தனர். அத்துடன் பேச்சு வழக்குத் தமிழிலக்கியங்களிலே உபயோகிக்கப்பட வேண்டும் என்று அபிப் பிராயமும் தெரிவித்தனர். இம் மரபுப் போராட்டம் தொடங்குவதற்குச் சற்று முன்னர் தான் பேராசிரியர் தன்னுடைய "வழக்குஞ் செய்யுளும்" கட்டுரையிலே,
'பேச்சு வழக்கில் உள்ள மொழி தான் வாழும் மொழி; அதற்கு உள்ள ஆற்றலை அவதானித்து அறிந்து, அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றவனே சிறந்த எழுத்தாளனாகின்றான்
என்று இலக்கியத்திலே பேச்சு வழக்கின் உபயோகத்தின் தேவையினை எடுத்துக்காட்டியுள்ளார். அது மட்டுமன்றி, இத்தகைய தேவையை உணராதவர்கள் இரு வகைப்பட்டவர்களெனவும் பாகுபடுத்தியுள்ளார்; 1) வழக்கொழிந்த சொற்கள், சொற்றொடர்கள், இலக்கண மரபுகள் ஆகியனவற்றைக் கையாளும் எழுத்தாளர், 2) முற்காலத் தமிழ் மொழி தான் இலக்கண வரம்புடையது; இக்காலப் பேச்சு வழக்குக்கு அத்தகைய இலக்கண வரம்பு இல்லையென்பவர். இவ்விரு சாராருடைய கருத்துக்களும் பிழையானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் பேராசிரியர் காட்டியுள்ளார்.
திறன்பல செறிவுற்றுள்ளன எனத்தான் கருதிய செய்யுட்கள், உரைநடை, இலக்கிய வடிவம் ஆகியனவற்றைப் பேராசிரியர் பகுப்பாய்வு செய்து தெளிவான நடையிலே கட்டுரைகள் எழுதியுள்ளார். கடலோசை (இளங்கதிர்) மலர் 10, பக். 86-94, 1957-58) என்னுங் கட்டுரை சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய தொன்றாகும். ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலிலிருந்து ஓர் உரைப்பகுதியினைத் தெரிந்தெடுத்து,
= 52 =

அதனைத் திறனாய்வு செய்து, அதிலே காணப்படும் நலன்களை ஆசிரியர் விவரிக்கின்றார். கவிதையிலே நலன்களைக் கண்டு கூறும் மரபே நம்மிடையே நீண்ட காலமாக இருந்து வந்தது. உரைநடையிலும் அத்தகைய நலன்களைக் காணலாம் என்பதை,
‘நயச் சிறப்புக்கள் பாட்டில் இருத்தல் போல உரை நடையிலும் உண்டு. ஒன்றைத் தர்க்க முறைப்படி ஆராய்ந்து, காரண காரியத்தொடர்பு உளதேல் அதனை எடுத்துக் காட்டித் தெளிவாகக் கட்டுரைத்தற்கு உரைநடை பெரும்பாலும் கையாளப் படுகின்றதெனினும், கவிதையைப் போல கற்பனையுருவங்களை அமைத்தற்கும் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அத்தகைய இடங்களில் அது பாட்டின் பண்புகள் சிலவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்குதலைக் காணலாம்.'
என்னும் அவருடைய கூற்றுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. நாவலிலே இடம்பெறும் ஒரு பாத்திரம் கடலோசையைக்கேட்டுக் கூறுவதாக இவ்வுரைப்பகுதி அமைகின்றது. கடலோசை சோகத்தினை உணர்த்துவதாகக் கூறும் நாவல் ஆசிரியர் பல வகைப்பட்ட சோகங்களுக்கிடையே காட்டும் வேறுபாடுகளை நன்கு உணர்ந்து, அவற்றுள் உச்சமான சோகம் எதுவென்பதை உணர்த்துகின்றார் என்பதை எடுத்துக்காட்டும் பேராசிரியர் செல்வநாயகம், அதனை நாவலாசிரியர் எப்படி உணர்த்துகின்றார் என்பதனை,
"சோகங்களுக்கிடையேயுள்ள வேறுபாடு (Contrast) இப்பந்தியிலே குறிப்பாகச் (implied) சொல்லப்படுகின்றது. ‘புத்திரனை இழந்த பிதாவின் சோகமும்', 'புருஷனை இழந்த மனைவியின் சோகமும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அது தனி மனிதனது தனித் துயரம் (Individual grief) அர்ச்சுனன் போர்க்களத்தில் அடைந்த சோகம் மகத்தானது; அது சர்வத்தையும் இழந்த அல்லது இழக்கப் போகின்ற ஒருவனது பெருந்துயர் (universal grief) என்னும் பகுதியினைப் படிப்பதன் மூலம் உணர முடிகின்றது. கடலோசை என்னும் கட்டுரை ஈழத்துத் திறனாய்வு வரலாற்றிலே முக்கியமான இடத்தைப் பெறக்கூடியது. உரைப்பகுதியைத் திறனாய்வு செய்து காட்டிய முன்னோடி எனப் பேராசிரியர் செல்வநாயகத்தைக் குறிப்பிடுவதிலே எவ்வித தவறும் இல்லை.
திறனாய்வாளன் இலக்கியங்களின் திறன்களை மட்டும் ஆராய்பவனல்ல. அவற்றிலுள்ள குறைகளையும் தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டவல்லவன். பேராசிரியர் செல்வநாயகம் தேசிக விநாயகம் பிள்ளை பாடிய 'கடல்' என்னும் கவிதையினை எடுத்துப்
53 -

Page 31
பகுப்பாய்வு செய்து, அதனிடையே காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் எழுதிய ‘கடல் (இளங்கதிர், மலர் 9, பக். 80-86, 1956-57) என்னுங் கட்டுரையிலே இத்தகைய திறனாய்வினை மேற்கொண்டுள்ளார். குழந்தைக்காக எழுதப்பட்ட இப்பாடலைப் படிக்கும்போது, தே.வி. தன்னைக் குழந்தையாகவே பாவனை பண்ணிப் பாடவில்லை என்பதற்கு அப்பாடலிலிருந்தே பல ஆதாரங்கள் காட்டப்படுகின்றன.
கம்பனிலேயிருந்து இரண்டு பாடல்களை எடுத்துப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் நலன்களை ‘கண்ணுற்றான் வாலி' (இளங்கதிர் மலர் 11, பக். 48-154, 1958-59) என்னுங் கட்டுரையாகவும், கம்பனில் ஒரு பாட்டு' (இளங்கதிர், மலர் 16, பக். 109-113, 1963-64) என்னுங் கட்டுரையாகவும் எழுதியுள்ளார். இராம பாணத்தால் வீழ்ந்து விட்ட வாலி முன்னர் இராமன் வருகின்றபோது, வாலியினுடைய உணர்வுகளைக் கம்பன் 'கண்ணுற்றான் வாலி' என்னும் செய்யுள் மூலம் எப்படிப் புலப்படுத்துகிறான் என்பதை முதற்கட்டுரை விவரிக்கின்றது. இச்செய்யுளில் மருட்கை, வெகுளி, இளிவரல் ஆகிய சுவைகள் முறையே அமைந்திருத்தல் கண்டு இன்புறற்பாலது. இவ்வாறு வாலியின் மனோபாவத்தையும் அவனிடத்தே தோன்றிய மூவகை மெய்ப்பாடுகளையும் ஒரு பாட்டிலே தெளிவுறக் காட்டும் ஆற்றல் கம்பன் முதலான பெரும் புலவர்களுக்குத் தான் உண்டு எனக் கட்டுரையை முடித்து வைக்கிறார். சுந்தரகாண்டத்தில் அசோகவனத்திலிருந்த சீதை முன் அனுமான் தோன்றியபோது சீதைக்கேற்பட்ட ஐயத்தினை உணர்த்துவதாக,
"அரக்கனே ஆக வேறோர் அமரனே ஆக அன்றிக் குரக்கினத்தொருவனே தான் ஆகுக, கொடுமையாக இரக்கமேயாக, வந்திங்கெம்பிரான் நாமஞ் சொல்லி உருக்கினணுணர்வைத் தந்தானுயிர் இதினுதவியுண்டோ என்னும் பாடலைக் கம்பன் அமைக்கிறான். இப்பாடலின் திறன்களை நன்கு ஆராய்ந்து கூறும் கட்டுரையாகக் 'கம்பனிலே ஒரு பாட்டு என்னுங் கட்டுரை அமைகின்றது. கம்பன் 'கொடுமையாக', இரக்கமேயாக’ என்னும் இரு தொடர்களை உபயோகித்ததின் உட்பொருள் கட்டுரையிலே தெளிவுறுத்தப்படுகிறது. அரக்கனே குரங்கு வடிவில் வந்து என்னுடைய இறப்பினைத் தடுப்பதென்றால், அவனுடைய நோக்கம் வேறுபட்டதே. அது கொடுமையானது. தேவர்களில் ஒருவன் இவ்வாறு வந்து நான் இறப்பதைத் தடுப்பானாயின், அது தங்களுடைய உய்வுக்காகவே இருக்கும். எனவே அதுவும் கொடுமையானதே. வானரங்களில் ஒருவன் தான் வந்து இச்செயல் செய்தானாயின் அது உண்மையில் இரக்கத் தினாலேயாகும்’ என்று சீதை எண்ணுவதாக இப்பாடலி னடிப்படையிலே பேராசிரியர் இக்கட்டுரையிலே கூறியிருப்பது நயத்தற்குரியது.
- 54 -

பேராசிரியருடைய திறனாய்வுப் போக்கினையும் இலக்கியங்களிலே அவருக்கிருந்த ஈடுபாட்டினையும், குறை காணின் அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் தன்மையினையும் புறநானூற்றில் ஒரு பாட்டு (இளங்கதிர், மலர் 12, பக். 84-88, 1959-60) என்னுங் கட்டுரை எடுத்துக் காட்டுகின்றது. களிறு கடை இயதாள், கழலுரீஇய திருந்தடி. எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலே இக் கட்டுரையில் பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பொருளே இலக்கிய வடிவத்தை நிச்சயிக்கின்றது என்னும் உண்மை இக்கட்டுரையாலே தெளிவுறுத்தப்படுகின்றது. சங்கப் புலவர்கள் அகவற்பாவினையும் வஞ்சிப் பாவினையும் தாம் எடுத்துக் கொண்ட பொருளினைப் புலப்படுத்தப் பொருத்தமுற உபயோகித்துள்ளனர் என்பதை இப்பாடலிலே இடம்பெறும் அகவல், வஞ்சியடிகளையே சான்றாகக் காட்டி விளக்கங் கொடுக்கின்றார். இப்பாடலுக்கு உரை எழுதியுள்ளார் உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர். அவ்வுரையிலேயே குறை காணுகின்றது செல்வநாயகத்தின் நக்கீரப்பார்வை. மன்னனுடைய வீரச் சிறப்பினைக் கூறுகின்ற இப்பாடலிலே 'மா மறுத்த மலர் மார்பு என்னும் அடி இடம் பெறுகின்றது. இப்பாடலடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் 'திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பு எனப்பொருள் கொண்டுள்ளார். இது தவறான உரை எனக்கொள்ளும் பேராசிரியர் செல்வநாயகம், மன்னன் மார்பிலே திருமகளுறைவதாகக் கூறும் மரபு பிற்காலத்தது என்றும், வீர மன்னனுடைய மார்பு பற்றிக் கூறும்போது இப்படிக் கூறுவது பொருத்தமில்லை என்றும் வாதிடுவார். அவர் இப்பாடலடிக்குக் கொள்ளும் பொருள் மிகப் பொருத்தமாக அமைவதைக் காணலாம். 'மா' என்றால் 'திருமகள்' என நச்சினார்க்கினியர் பொருள் கொள்ள 'வில் நாண்’ என்று பேராசிரியர் பொருள் கொள்கின்றார். வீரனாகிய அம்மன்னன் எண்ணிலாத் தடவைகள் வில்லை வளைத்து பகைவர்மேல் அம்புகள் தொடுத்திருப்பான். அவ்வாறு வில்லை வளைக்கின்ற போது, அதன் நாண் அவனுடைய மார்பு; எனவே அந்நாண் உராய்வு அம்மாள்பிலே மறுவினை ஏற்படுத்துகின்றது என்று ‘மா மறுத்த மலர்மார்பு என்னும் செய்யுளடிக்குப் புத்துரை வகுத்துள்ளமை கண்டு இன்புறற்பாலது.
தமிழில் எழுந்த இலக்கியங்களிலே காணப்படும் இலக்கிய மரபினைத் தன்னுடைய இலக்கிய வரலாற்று நூலிலே சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுட் சிலவற்றை விவரித்து விளக்கமாகத் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதியுள்ளார். சங்க இலக்கிய மரபினை "Tradition in Early Tamil Poetry" (University of Ceylon Review Vol. XXIV, 142, 1966, PP. 106-114) 6T6öSOE) g5 (660)J விளக்குகின்றது. சங்க இலக்கியத் திணைக் கோட்பாடு பற்றியும் இக்கட்டுரையே முதன் முதலாகப் புதியதொரு கருத்தினை முன்
வைத்ததெனலாம்.
- 55 -

Page 32
The tradition of having five divisions inakam or love originated at a time when people lived in all the five regions, Paalai, Mullui, Kutinji, Marutham and Neithal in the Tamil land. During the time of Kapilar and Paranar the people of Paalai had moved into the more fertile regions of Kutinji and Mullai for permanent settlement, and therefore, the theme of separation had to be modified to fit into the new pattern of society that occupied only four of the five natural regions. Therefore, the paalaithhinai or separation in love, which was meant earlier for the people of the Paalai region was considered appropriate during the time of Kapilar and Paranar for the men of the hilly tracks who had to go to distant places through the arid Paalai region in search of their livelihood. This change in paalaithhinai had occured by the time of Kapilar and Paranar. This is only an example to show how the early tradition of love poety was changing as the life of people was changing in the early days.
என அவர் எழுதியுள்ள பகுதியினைப் படித்துப் பார்ப்பின் சங்க இலக்கியத்திணை மரபு எப்படி மக்கள் வாழ்க்கைக்கேற்ப மாறி வந்துள்ளது என்பதை அறியக்கூடியதாயுள்ளது. இத்தகைய மரபு மாற்றத்தினை ஒழுங்காக அறிந்து கொள்வதற்கு தற்போது எம்மிடமுள்ள எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களிலேயுள்ள செய்யுட்கள் வரலாற்றடிப்படையிலே புதிதாக நிரைப்படுத்த வேண்டும் 6T6öru605 Therefore, this change in the tradition and the stages by which it took place cannot be traced historically as long as the poems in the eight Anthologies and the ten Idylls are not arranged in their chronological order. Until Tamil scholars take to this aspect of study seriously, the history of early Tamil poetry cannot be traced என்னும் மேற்காட்டிய கட்டுரைப் பகுதியிலே குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாகப் பேராசிரியர் குறிப்பிட்ட இப்பணி இன்னும் முற்றுப் பெறவில்லை. புறநானூறு என்னும் தொகுதியிலே காணப்படும் பாடல்கள் எல்லாம் ஒரேகாலத்தவை எனக் கூறமுடியாதுள்ளது. நெல்லரிசிப் பண்பாட்டுக்கு முன்னரே எழுந்த பாடல்களும் இத்தொகை நூலிலே இடம் பெற்றுள்ளன என்பதை இவ்விடத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.
தமிழிலக்கியங்களிலே பக்திப் பாடல்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. இப்பாடல்களிலே காணப்படும் இலக்கிய மரபினையும், தமிழிலக்கிய மரபுப் பின்னணியிலே இப்பாடல்கள் வகிக்கும் இடத்தினையும் 'தமிழிலக்கியமும் பக்திப் பாடல்களும் (கணேசையர் நினைவுமலர் 1960) என்னும் கட்டுரை விபரிக்கின்றது.
- 56 -

7. முடிவுரை
இலங்கைப் பல்கலைக்கழகம் இரண்டு தமிழ்ப் போக்குகளை உருவாக்கியது. ஒன்று திராவிட மொழியியல், நாட்டாரியல், இலக்கணம், நாடகம் என்னும் துறைகள் தழுவிய பேராசிரியர் கணபதிப்பிள்ளை போக்கு. மற்றையது இலக்கிய விமரிசனம், நடையியல் என்னும் துறைகள் தழுவிய பேராசிரியர் செல்வநாயகம் போக்கு. ஈழத்திலே தலையாய விமரிசகள்களை உருவாக்கிய ஆசான் இவராகும். ஆனால், எவராவது இதுவரை தம்முடைய இலக்கியத் திறனாய்வுப் பயிற்சிக்கு இவர் காரணமாயிருந்தாரென்று எங்கேனும் தெளிவாகக் கூறியதாயில்லை. இது விசனிக்கத்தக்கதே. தமிழ் இலக்கிய வரலாறு என்றொரு நூலை எழுதி ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர் 'இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் கேரளப் பல்கலைக் கழகத்திலும்தான் அறிவியல் ரீதியான தமிழிலக்கிய ஆய்வுகள் நடைபெறுகின்றன என்று 1968ல் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே கமில் ஸ்வெலெபில் குறிப்பிட்டார். அப்படி அவர் குறிப்பிட்ட அறிவியல் ரீதியான தமிழிலக்கிய ஆராய்ச்சி இலங்கைப் பல்கலைக் கழகத்திலே நடைபெறுவதற்குக் காரணமாயிருந்த வர்களுள் பேராசிரியர் செல்வநாயகமும் ஒருவராவர். அவர் செய்த இலக்கியப் பணி எல்லோராலும் நினைவு கொள்ள வேண்டியது. மறந்தவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இந்நினைவுரை மூலம் நினைவூட்டுகின்றது. vn
உசாத் துணைகள்
1. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழில் இலக்கிய வரலாறு,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1988.
2. மனோன்மணி சண்முகதாஸ் சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1983.
3. முருகையன், இ, 'கல்வியியல் நோக்கில் நாவலர் - நாவலர் நூற்றாண்டு மலர் பூரீலழரீ ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணம், 1979, js. 17-26.
4. Sivathamby, K., "Vyapuripillai's Dating of Cilappathikaram" Vidyodaya Journal of Arts, Science and Letters. Vol. 5 Nos. 1&2, 1972-76, p.p. 1-12.
- 57

Page 33
பேராசிரியர் கலாநிதி. சு. வித்தியானந்தன்
1. முன்னுரை
யாழ்ப்பாண மாவட்டத் தெல்லிப்பளையிலுள்ள வீமன்காமம் என்னும் ஊரில் சுப்பிரமணியம்-முத்தம்மா தம்பதியினர்க்கு 08.05.1924 ஆம் ஆண்டு இரண்டாவது மகனாக வித்தியானந்தன் பிறந்தார். இலங்கைப் பல்கலைக்கழக மாணவனாகும் வாய்ப்பு இவருக்கு 1941 ஆம் ஆண்டிலே கிடைத்தது. அங்கு பேராசியர்களான சுவாமி விபுலாநந்தா, க.கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோரிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றார். 1944 இல் கலைமாணிப்பட்டத்தினையும், 1946 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1948 இல் இலண்டன் பல்கலைக்கழகக் கீழைத்தேயக் கல்விக் கல்லூரியிலே "பத்துப்பாட்டு - வரலாற்று, சமூக மொழியியல் நோக்கு" என்னும் விடயம் பற்றிக் கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். பட்டம்பெற்ற கலாநிதி வித்தியானந்தன் 1970 இல் பேராசிரியராகப் பதவியேற்றார். இப்பேராசிரியருடைய தமிழியற் பணியினைத் தமிழ் அறிவுலகம் என்றும் மறக்காது. இவர் உருவாக்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் இவர் பெயர் சொல்ல இருக்கின்றது. தமிழைக்கற்கும் மாணவர்களிடையே ஏனைய தமிழ்ப் பேராசிரியர்களைப் போல இவரும் இறவாப் புகழுடன் இருப்பார் என்பதிலே ஐயமில்லை. ご
༨༽ N
2. தமிழிலக்கிய ஆய்வு v Y
தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும் தமிழர் பண்பாட்டாய்விலும் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவருடைய முதல் நூல் இலக்கியத்தென்றல் 1953ல் வெளியாகியது. பேராசிரியருக்கு அழியாப் புகழ்தேடிக் கொடுக்கும் நூல் அவருடைய தமிழர் சால்பு ஆகும். இந்நூல் 1954 இல் வெளியாகியது. பண்டைத் தமிழருடைய பண்பாடு எப்படி இருந்தது என்பது பற்றி அக்கால இலக்கியத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதே இந்நூல். பண்பாடு' என்னுஞ் சொல் மிக அண்மைக் காலத்திலேயே தமிழ்மொழிக்கு அறிமுகமானது. முன்னர் இச் சொல்லுக்கு ஈடாக 'சால்பு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது. தமிழர் சால்பு நூலிலே வித்தியானந்தன் தமிழருடைய பண்டைய வரலாறு, அரசமைப்பு, நாட்டுப் பொருளாதார நிலை, சமூக அமைப்பு, கலை, கல்வி என்பன பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். தமிழருடைய கலை, இலக்கியம், மொழி, வரலாறு, சமூகம், அரசியல், பொருளியல், சமயம், நடைமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களையும் ஆய்வு செய்யும் துறையினைத் 'தமிழியல்' என்று அண்மைக்காலங்களிலே
- 58 -

அழைக்கத் தொடங்கியுள்ளனர். அத்துறை ஆய்வுப் பரப்பினை உள்ளடக்கிய நூலாகவும் முன்னோடி நூலாகவும் அமைகின்றது. பேராசிரியர் வித்தியானந்தனின் தமிழர் சால்பு தமிழர் வாழ்வியலை இலகுவான இனிமையான தமிழிலே இந்நூல் தருகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னெழுந்த தமிழ் இலக்கியங்களை நன்கு ஆராய்ந்தும், பிற வரலாற்றுத் தரவுகளை ஒப்பிட்டு நோக்கியும் தமிழருடைய சால்பு என்ன என்பதை ஆசிரியர் நூலிலே தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார். பதினான்கு இயல்களைக் கொண்டுள்ள இந்நூல், பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றி எழுதப்பட்ட உதிரிக் கட்டுரைகளின் தொகுப்பாகவன்றி, தமிழருடைய அரசியல் வரலாறு தொடக்கம் கலைவரலாறு ஈறாக ஒழுங்கு முறையிலே ஆய்வுக் கட்டுக் கோப்பு குன்றாத வகையிலே எழுதப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் மாணவர் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய நூல் இதுவாகும். தமிழருடைய பண்பாடு பிற தேசத்தவர் சிலருடைய பண்பாட்டுடன் தொடர்புடையதா யுள்ளதென இக்காலத்தில் ஆய்வு நடைபெறும் வேளையிலே, தமிழர் பண்பாட்டுத் தரவு நூலாக தமிழர் சால்பு பெரிதும் துணை செய்கின்றது. தமிழர் பண்பாடு பற்றி வழங்கி வந்த தவறான கொள்கைகளைக் கண்டித்து, அவற்றினைத் தக்க சான்றுகளுடன் மறுத்து, உண்மைநிலை எதுவென நிறுவும் போக்கினை இந்நூலிலே நாம் காணலாம். சில ஆரியத் தெய்வங்களும், வேத யாகங்களும் சங்க நூல்கள் குறிப்பிட்டமையைச் சான்றாகக் கொண்டு சங்ககாலத்திலே தமிழரிடையே ஆரியச்சமயம் வேரூன்றியிருந்ததென அறிஞர் சிலர் கருத்துத் தெரிவித்தனர். இது தப்பான கருத்து என்பதனையும், தமிழருக்கே சிறப்பாக உரிய வழிபாட்டு முறைகள் பல அக்காலத்தில் இருந்தன என்பதையும் இந்நூலின் ஐந்தாம் இயல் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
தமிழிலக்கியம் பற்றிப் பல விரிவான கட்டுரைகளை இவள் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியப் பரப்புப் பற்றியும் சோழர்கால, விஜயநகர நாயக்கர் கால இலக்கியங்கள் பற்றியும் இவர் எழுதிய கட்டுரைகள் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க இதழாகிய இளங்கதிரில் வெளியாயின.
தமிழிலக்கியத்தினுள் ஒரு பகுதியாக அமையும் இஸ்லாமிய கிறிஸ்துவ இலக்கியங்கள் பற்றியும் இவர் ஆய்வு செய்து பல கட்டுரைகளையும் நூலையும் எழுதியுள்ளார். 1953 ஆம் ஆண்டு தொடக்கமே கலாநிதி வித்தியானந்தன் இஸ்லாமியர் இலக்கியம், கலை, சமயம், பற்றிச் சிந்தித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மன்ற இதழாகிய Univeristy Majlis என்பதில் இவர் "இஸ்லாமியரும் தமிழும்", "இஸ்லாமியர் தமிழிற் பாடிய
- 59 -

Page 34
புதிய பிரபந்த வகைகள்", "இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள்", "இஸ்லாத்தின் திருத்தூதர் காட்டிய வழி" என்னுங் கட்டுரைகளை எழுதியுள்ளார். இலக்கியம் மாத்திரன்றி இஸ்லாமியருடைய கலை, பண்பாடு என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து கலையும் பண்பும் (1961) என்னும் நூலை எழுதினார். இந்நாலின் இறுதி இரண்டு இயல்களும் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி விவரிக்கின்றன. தமிழில் ஏற்கனவே தோன்றிய காப்பியம், கலம்பகம், அம்மானை, அந்தாதி, ஆற்றுப்படை, திருப்புகழ், கும்மி, தாலாட்டு, மாலை, ஏசல், சிந்து முதலிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியப் புலவர்கள் கையாண்டமைபற்றியும் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்த அவர்கள் முனாஜாத், படைப்போர், கிஸ்ஸா, மசலா, நாமா முதலிய இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்தியமை பற்றியும் இவ்வியல்களிலே வித்தியானந்தன் விரிவாகக் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் தமிழ் மொழிக்காற்றிய தொண்டுபற்றியும் இவர் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். தமிழ்ச் சங்க இதழாகிய இளங்கதிரில் “கிறித்தவரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியும்” (1962) என்னும் கட்டுரையினையும், உடுவில் மகளிர் கல்லூரி இதழிலே "அமெரிக்க மிஷனும் தமிழர் கல்வியும்" (1969) என்னும் கட்டுரையினையும் எழுதியுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டிலே "ஈழத்து மிஷனரிமார் தமிழ்த்தொண்டு" (1964) என்னும் விடயம் பற்றி ஆங்கிலத்திலே ஆய்வுக்கட்டுரை படித்தார்.
முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1964 இல் கோலாலம்பூரில் நடைபெற்றபோது ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் ஆய்வு எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது பற்றிப் பல அறிஞர்கள் எழுதிய ஒரு தொகுப்பு நூலை வண. பேராசிரியர் தனிநாயகம் அடிகள் வெளியிட்டு வைத்தார். அதிலே 1964 வரை இலங்கையிலே தமிழ் இலக்கியம், மொழி, சமயம், வரலாறு, பண்பாடு பற்றி ஆங்கிலமொழி மூலம் நடைபெற்ற ஆய்வுகளைத் திரட்டி விரிவான ஒரு கட்டுரையினை கலாநிதி வித்தியானந்தன் எழுதினார்.
பேராசிரியர் வித்தியானந்தன் தமிழியல் தொடர்பாக எழுதிய கட்டுரைகள் பலவற்றைத் தொகுத்து யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் தமிழியற் சிந்தனைகள் என்னும் நூலாக 1979 இல் வெளியிட்டது. 1961 இல் வெளிவந்த இவருடைய கலையும் பண்பும் நூலும், 1979 இல் வெளிவந்த தமிழியற் சிந்தனைகள் நூலும் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசுகள் பெற்றுச் சிறப்புற்றன.
- 60 -

3. நாட்டார் வழக்காற்றியலுக்கு வித்தியானந்தனின்
பங்களிப்பு
இலங்கை நாட்டார் பாடல்களில் ஆய்வினை மேற்கொள்பவள் எவருமே இரண்டு பெயர்களை மறக்க முடியாது. ஒன்று, மக்கள் கவிமணி மு. இராமலிங்கம்; மற்றையது பேராசிரியர் சு. வித்தியானந்தன் என்னும் பெயர்களேயாகும். பேராசிரியர் வித்தியானந்தன் ஈழத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த நாட்டார் பாடல்களைத் தொகுப்பதிலே ஈடுபட்டார். பாமர மக்களின் உணர்ச்சிக் கவி வளமுள்ள பாடல்கள் காலவெள்ளத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதற்காக அவருடைய நண்பர்கள், மாணவர்கள் ஆகியோருடைய உதவியுடன் மட்டக்களப்பிலும் மன்னாரிலும் நிலவிவரும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் என்னும் நூல் 1960 இலும் மன்னார் நாட்டுப் பாடல்கள் 1964 இலும் பதிப்பித்து வெளியிடப்பட்டன. ஈழத்து நாட்டுப்பாடல் ஆய்வுக்கு இந்நூல்கள் சான்றாவணங்களாகத் துணைசெய்வன.
ஈழத்துத் தமிழருடைய நாடகக் கலையின் அடிப்படை நாட்டுக் கூத்தேயாகும். கிராமந்தோறும் இரவிரவாக ஆடப்பட்டு வந்த நாட்டுக்கூத்துக்கள் எங்கள் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு கூறாகும். நகரவாழ்வின் வளர்ச்சியாலே இக்கலை அழிந்துபோகும் ஆபத்து இருந்தது. இவ்வேளையிலேதான் பேராசிரியர் வித்தியானந்தன் நாட்டுக்கூத்துக்களைப் பேணும் பணியிலே ஈடுபட்டார். இப்பணியினை நான்கு வகையாகப் பாகுபாடு செய்து விளக்கலாம்:
1) கிராமியக் கூத்துகளை நகரத்தாரும் அறிந்து அவற்றை அவர்கள் பார்த்து மகிழ்வதற்கேற்றபடி அக்கூத்துக்களுக்குப் புத்துருவம் கொடுத்தார்.
2) கூத்துக்களைப் பழக்கியும் மேடையேற்றியும் பணிசெய்யும் அண்ணாவிமார்களைக் கெளரவித்தும் அவர்களுக்கு புதிய நாடக உத்திகள் பற்றிக் கருத்தரங்குகள் மூலம் விளக்கமளித்தும் அவர்களை ஊக்குவித்தார்.
3) நாட்டுக்கூத்துக்களை பேணுவதற்கு ஒரு வழியாக அக்கூத்துப் பிரதிக்ளை அச்சேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மட்டக் களப்புக் கூத்துப் பிரதியே முதன் முதலில் வித்தியானந்தனால் பதிப்பிக்கப்பட்டது. அலங்கார ரூபன் நாடகம் என்னும் பிரதி 1962 இல் நூலாக வெளிவந்தது. பின்னர் மன்னாரைச் சேர்ந்த மூன்று கத்தோலிக்க நாட்டுக்கூத்துப் பிரதிகளைப் பதிப்பித்து வெளியிட்டார். அவை: எண்டிறிக்கு எம்பரதோர் நாடகம் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞானசெளந்தரி நாடகம் (1967) என்பனவாகும்.
- 61 -

Page 35
4) நாட்டார் பாடல், நாட்டுக்கூத்துப் பற்றி அவர் ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளும் நூாலும் தமிழியலுக் குப் பங்களிப்புச்செய்வன. "ஈழத்தின் கிராமிய நாடகங்கள்" என்னும் கட்டுரை மட்டக்களப்பிலும் மன்னாரிலும் ஆடப்படும் கிராமிய நாடகங்கள் பற்றி ஆராய்கின்றது. கிராமிய நாடகம் பற்றிய பல நுணுக்கமான விவரங்கள் இக் கட்டுரையிலே தரப்பட்டுள்ளன. "நாட்டுக் கூத்து " என்று இன்னொரு கட்டுரை எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளிலும் கலையிதழ்களிலும் ஆங்கிலமொழியில் தமிழ்க்கூத்துப் பற்றி எழுதியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மகாநாட்டிலே ஈழத்தவருக்கே தனித்துவமான இரண்டு மோடிக் கூத்துகளைப் பற்றி விரிவான விளக்கங் கொடுக்கும் " A Study of Two types of Folk Drama Particular to the Tamils of Ceylon" (1968) என்று ஆங்கிலத்திலே கட்டுடிைத்தார். 93560)6OT 6). "Tamil Folk Drama in Ceylon" (1964) 616150p 35 (660).ju)6O)6OTutb, "Tamil Folk Drama Basis for future Tamil Theatre" (1964) என்னும் கட்டுரையினையும் எழுதினார். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட கட்டுரை எதிர்காலத் தமிழ் அரங்குக்குத் தமிழ்க் கிராமிய நாடகம் அல்லது கூத்து எவ்வாறு அடிப்படையாக அமையும் என்பதை ஆராய்கின்றது.
4.
இக்காலத் தமிழ் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வருபவர்கள், ஈழத்துத் தமிழ் நாடகங்களுக்கு அடிப்படையாக அமைவன மரபுவழி நாடகங்களே என்னும் உண்மையினை உணர்ந்துள்ளனர். மரபுவழி நாடகங்களின் பல்வேறு கூறுகளைத் தமது நாடகங்களிலே புகுத்தி, குழந்தை சண்முகலிங்கம், அ. தார்சிசியஸ், நா.சுந்தரலிங்கம், சி. ம்ெளனகுரு, இ. பர்லேந்திரா போன்றோர் பரிசோதனை செய்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் ஈழத்து மரபுவழி நாடகங்கள் பற்றியும், நாடக உத்திகள் பற்றியும் விளக்கங் கொடுத்தவர் பேராசிரியர் வித்தியானந்தனேயாகும். ஈழத்துத் தமிழர்களுடைய நவீனநாடகம், நடனம், நாட்டிய நாடகம் போன்றவற்றிலே புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மரபுவழி நாடக உத்திகள் என்றுமே வற்றாத ஊற்றுக்களாயமைவன. அவ்வற்றாத ஊற்றுக் கண்களைப் பேராசிரியருடைய நாட்டுக்கூத்துப் பற்றி ஆய்வுகள் திறந்து வைத்தன.
இவருடைய கிராமிய நாடக ஆய்வுகள் பல மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. க.சொக்கலிங்கம் (சொக்கன்) முதுகலைமாணிப் பட்டத்துக்காக ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி என்னும் ஆய்வேட்டினை இவருடைய மேற்பார்வையிலே எழுதினார். சி.மெளனகுரு மட்டக்களப்பு கிராமிய நாடக அரங்கு பற்றிய கலாநிதிப்பட்ட ஆய்வேட்டினை இவருடைய நெறிப்படுத்தலிலே எழுதினார். கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை, இ. சிவானந்தன் போன்றோருடைய ஆய்வுகளுக்கும் இவர் வழிகாட்டியாக இருந்தார்.
- 62 -

4. தமிழாராய்ச்சி மகாநாடும் வித்தியானந்தனும்
தமிழாய்வில் உள்ள ஈடுபாடு பேராசிரியரை உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துடன் இணைத்தது. கோலாலம்பூர், சென்னை, பாரீஸ், மதுரை ஆகிய இடங்களிலே நடைபெற்ற மகாநாடுகளில் பேராசிரியர் பங்கு பற்றிக் கட்டுரைகள் படித்துள்ளார். உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளைக்கு இவர் தலைவராயிருந்த காலத்திலே 1974 ஆம் ஆண்டு பல்வேறு இடர்களுக்கு நடுவிலும் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை யாழ்ப்பாணத்திலே சிறப்பாக நடத்தினார். பெருந்தொகையான ஆய்வுக் கட்டுரைகள் இம்மகாநாட்டில் படிக்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எங்கும் நடைபெறவில்லை. இதனால், உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் இலங்கைக் கிளை சுருங்கிய அளவிலாவது ஒரு தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த எண்ணியது. பேராசிரியருடைய அறிவுறுத்தலின்படி இலங்கைக் கிளை மட்டக்களப்பில் ஒரு மாவட்ட மாநாட்டை ஒழுங்குசெய்தது. ஈழத்து அறிஞர்களும், கலைஞர்களும் மட்டக்களப்பிலே கூடினர். ஒரு வாரகாலமாகத் தமிழாய்வு நடைபெற்றது. கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. அம்மாநாடு நினைவாக ஒரு மலரும் வெளியிடப்பட்டது. மட்டக்களப்புப் பற்றிய எல்லாத் தரவுகளும் ஆவணப்படுத்தப்பட்டன. அப்பகுதியின் வரலாறு, சமூகம், அரசியல், பொருளியல், மொழி, கலை, சமயம் பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டிலே படிக்கப்பட்டன.
இதே போன்று 1983 இல், வன்னி மாவட்டத் தமிழாராய்ச்சி மாநாடு ஒன்றினை முல்லைத்தீவிலே பேராசிரியர் வித்தியானந்தன் சிறப்புற நடத்தினார். வன்னி மாவட்டம் பற்றிய அரிய செய்திகள் இம்மாநாடு ஊடாக வெளிக்கொணரப்பட்டன. வன்னி மாவட்டம் தொடர்பாகப் பல ஆய்வுகள் இவ்வேளையிலே வெளிவந்தன. வன்னித் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாகவும் ஒரு சிறப்பு மலர் வெளியிடப் பட்டது. இம் மலரிலேயும் பல பயனுள் ள ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்தன. இத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தியதனூடாகப் பேராசிரியர் வித்தியானந்தன் தமிழியலுக்கு அளப்பரிய தொண்டு செய்துள்ளார். அவருடைய தமிழ்ப்பணி நிலைபெறத்தக்கனவாயமைய இவையும் துணை செய்கின்றன.
5. நிறைவுரை
ஆராய்ச்சி செய்பவரே தன் ஆய்வின் பயன்களை எளிமையுடனும், நயத்துடனும், கேட்டார்ப் பிணிக்கும் திறனுடனும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதென்றால், அது போன்றதொரு சிறப்பான விடயம் வேறில் லை. பேராசிரியர் வித்தியானந்தன் அத்தகைய திறனுடைவராயிருந்தார். இப்பண்பினை
- 63 -

Page 36
"பட்டம் பதவி எல்லாம் இவருக்கு இலகுவாகக் கிடைத்தன. பேர் புகழுக்கோ குறைவில்லை. இருந்தும் பேராசிரியர் உள்ளத்திலே விலைமதிக்கமுடியாத கோட்பாடு ஒன்று மிளிர்கின்றது. மக்கள் இல்லாமல் மொழி இல்லை: சால்பு இல்லை: ஆராய்ச்சி இல்லை என்பதே அந்தக் கோட்பாடு. அதனால் இவர் எப்போதும் பொதுமக்கள் தொடர்பை வளர்த்து வருகிறார். மொழியை, கலையை, சால்பை வெறும் ஆய்வுகூடப் பொருளாக்கி அவற்றை ஆய்வுகூடச் சுவர்களுக்குள் மட்டும் வைத்திருக்க இவர் விரும்புவதில்லை. பேராசிரியர் வித்தியானந்தன் என்றுமே மக்களை நன்கு புரிந்து வாழ்பவர். இதிலே பெருமையும் இன்பமும் காண்பவர்."
என்று த. சண்முகசுந்தரம் (தமிழியற் சிந்தனை பக். XXVI, 1979) பொருத்தமாகக் கூறியுள்ளார். இத்தகைய பண்பு காரணம்ாக நாடெங்கிலுமுள்ள நிறுவனங்களும், பாடசாலைகளும், அறிஞர் குழாங்களும், மக்கள் இவருடைய சொற்பொழிவுகளைக் கேட்டுப் பயன் பெறுவதற்காக, எண் ணற்ற தடவைகளில் இவர் மேடையேறுவதற்கு அழைப்புகள் விடுத்து வந்துள்ளன. இவரும் சோர்வின்றி அச்சிறப்பான கடமையினைச் செவ்வனே ஆற்றினார்.
1989 இல் இவர் இவ்வுலகைவிட்டு நீங்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணி புரிந்தார். துணைவேந்தராயிருந்து பல பல்கலைக்கழகப் பொறுப்பாள்கைப் பணிகளை நிறைவேற்றும் பொழுதும் சில சிறப்புத் தமிழ்ப் பாடநெறிகளை மாணவர்களுக்குப் புகட்டுவதிலும், உயர்மட்ட மாணவர்களின் ஆய்வுகளுக்கு வழிகாட்டுவதிலும் ஈடுபட்டிருந்தார்.
தமிழியலுக்குப் பேராசிரியர் வித்தியானந்தன் ஆற்றியுள்ள பங்களிப்பு அவரைத் தமிழுலகம் நினைவுகூர வைத்துள்ளது.
பேராசிரியரைப் பற்றி மேலும் தகவல் பெறப் பின்வரும் வெளியீடுகளைப் பார்க்கவும்:
அ. சண்முகதாஸ், துணைவேந்தர் “வித்தி", தமிழ் மன்றம்,
கலஹின்னை, கண்டி, 1984.
ஏ. ரி. பொன்னுத்துரை, அரங்குகண்ட துணைவேந்தர், குரும்பசிட்டி, 1984.
வேலுப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் காட்டும் گ ஈழத்துத் தமிழர் சால்புக் கோலம், வித்தியானந்தன் நினைவுப்பேருரை, கொழும்புத் தமிழ்ச் சங்கம்,1989.
- 64 -

பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம்
ஈழத்துத் தமிழ் கவிதை பற்றி ஆய்வு செய்பவர்கள் எவரும் பேராசிரியர் ஆ.சதாசிவத்தை மறக்கமாட்டார்கள். ஏனெனில், அவர் தொகுத்து 1964 இல் வெளியிட்ட ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலை அவ்வாய்வாளர்கள் கட்டாயம் பயன் படுத்துவார்கள். அதனால், அப்பொழுது பேராசிரியர் சதாசிவத்தை நினைத்துக் கொள்வார்கள்.
அராலி தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ஆறுமுகம் சதாசிவம் (15 -02 - 1926) அராலியிலே தொடக்க நிலைக் கல்வியைப் பெற்றார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் ஆனந்தாக்கல்லூரியிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியைப் பெற்றதுடன் மதுரை தமிழ்ப் பண்டிதத் தேர்விலும் நல்ல பெறுபேற்றினைப் பெற்றார். 1948 இல் பேராதனை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1952 இல் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தினை முதற் பிரிவுச் சிறப்புடன் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 1954 இல் முதுகலைமாணிப் பட்டத்தினைப் பெற்றார். 1956 இல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் இவருக்கு கலாநிதிப் பட்டத்தினை வழங்கியது.
1952 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே உதவி விரிவுரையாளராகப் பணி செய்யத்தொடங்கிய திரு.சதாசிவம் 1956 இல் முதுநிலை விரிவுரையாளராகப் பணி நிலைப்படுத்தப்பட்டார். இலங்கைப்பல்கலைக் கழகத்தின் கொழும்புப் பிரிவுத் தமிழ்த்துறைத் தலைவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய கலாநிதி சதாசிவம் 1970 இல் தமிழ்ப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்து வருடங்களாகக் கொழும்புப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணி செய்து கொண்டிருக்கும் பொழுது 1988 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
மதுரைப் பிரவேசபண்டிதத் தேர்வில் முதற்பிரிவிலே தகைமை பெற்றதற்கான பரிசில் இவருக்கு வழங்கப்பட்டது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேலியோல் கல்லூரியின் சேர் மகாராஜா சிங்கினுடைய பரிசினை இவர் பெற்றார். புல்பிரைற் புலமைப்பரிசில் (Fulbright Scholarship) பொதுநலவமைப்பு நாட்டுப் புலமைப்பரிசில் (Commonwealth Countries Scholarship) g5 (65 FT 6 ful பல்கலைக்கழக ஆய்வுப் புலமைப் பரிசில் பெற்றுப் புகழடைந்தவர் பேராசிரியர் சதாசிவம். பல பல்கலைக் கழகங்களிலே ஆய்வு செய்ததுடன் பல உலக ஆய்வு மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்
65

Page 37
2. பல்கலைக்கழக ஆசிரியராக;-
மரபுவழித் தமிழ்க் கல்வியும் ஆங்கில மொழியூடான உயர் ஆய்வுக் கல்வியும் ஒருங்கு சேரப்பெற்றவர் பேராசிரியர் சதாசிவம் அவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மிகச் சிறந்து விளங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பேராசிரியர் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், பேராசிரியர் சதாசிவம் ஆகிய மூவரும் இவ்வகையான பாரம்பரியமுடையவர்கள். இதனால், அவர்களுடைய அறிவு பரந்து பட்டதாகவும், ஆழமானதானவும், ஆய்வுப் போக்குடையதாகவும் அமைந்தது. இந்த அறிவினை என் போன்ற மாணவர்களுக்கு அவர்கள் தாரளமாகப் பகிர்ந்தளித்தனர். தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, தமிழ் இலக்கிய வரலாறு போன்றனவற்றைத் தமக்கேயுரிய முறையிலே கற்பிப்பார். தமிழ் இலக்கிய வரலாறு படிக்கும்பொழுது பெருந்தொகையான நூல்களைச் சுமந்து கொண்டு விரிவுரை மண்டபத்துக்கு வருவார். நாம் பார்க்காத பல நூல்களைப் பார்க்கும்படி செய்வதுடன், அவற்றிலிருந்து பல சுவையான, பயனுள்ள செய்திகளை எடுத்துக் கூறுவார். விரிவுரை முடிந்தவுடன் அவர் வகுப்பிலே அறிமுகஞ் செய்த அத்தனை நூல்களையும் திரும்பவும் பார்க்க வேண்டுமென்ற உந்துதலுடன் நூலகத்திற்குச் செல்வோம். நாம் நினைவிலே வைக்க வேண்டிய ஏதாவது கருத்தினைக் கூறுவதற்கு முன்னர், "இதனை உங்கள் தலையிலே செருகி வையுங்கள்." என்று கூறுவார்.
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்பிக்கின்ற போது தானும் சுவைத்து மாணவர்களையும் சுவைத்துப் படிக்க வைக்குந் திறனுடையவர். அவருடைய மாணவனாயிருந்தவரும்! தினகரன் ஆசிரியராயிருந்து ஓய்வு பெற்றவருமாகிய திரு. இ. சிவகுருநாதன், அவர் சிலப்பதிகார நூலைக் கற்பித்தது பற்றி,
“சிலப்பதிகாரம் பேராசிரியர் விரும்பிப் படிப்பிக்கின்ற நூல். சிலம்பின் காதையைச் சுவைத்துப் படிப்பிக்கின்ற திறமை இவருக்கிருந்தது. பொன் செய் கொல்லன் தன் சொற் கேட்ட மன்னவனின் வாயில் காவலனிடம் சென்று, கண்ணகி கூறியதாக வரும் அடிகளை அவர் அறுத்து அறுத்துச் சொல்கின்ற போது எமக்கு மெய்சிலிர்க்கும்.
"அறிவறை போகிய பொறியது நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே" என்று இளங்கோ பாடியதனை அவர் சொல்லும் பாணி எம் நெஞ்சத்தை அள்ளும்.”
(பேராசிரியர் கலாநிதி ஆ. சதாசிவம்) அவர்களின் நினைவு மலர்(1988, பக்19)
- 66 -

என்று கூறுவதை எடுத்துக்காட்டாக இங்கு தருகிறேன். தம்முடைய கற்பித்தலினாலும் வாழ்க் கையினாலும் மாணவர்களின் ஆளுமையினை வளர்த்தவர்கள் பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆசிரியர்கள். இத்தகைய ஆசிரிய குழாத்தினைச் சேர்ந்தவராகவே பேராசிரியர் சதாசிவமும் விளங்கினார்.
3. மொழியியல் வல்லுனராக
தமிழ்மொழி, வடமொழி ஆகியவற்றை வரன் முறையாகக் கற்ற திரு. சதாசிவம் அவர்கள் பல்கலைக்கழகத்திலே பாளி மொழியையும் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய மலையாள மொழியினையும் கற்றார். இத்தகைய மொழியறிவுடனேயே 1954 இல் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அப்பல்கலைக்கழகத்திலே கீழைத்தேய மொழிவல்லுனராகவும், திராவிடமொழியியலிலே சிறந்த ஆய்வாளராகவும் விளங்கிய பேராசிரியர் தொமஸ் பறோ (Thomas Burrow) அவர்களிடம் மொழியியற் பயிற்சியினையும் ஆராய்ச்சி நெறிமுறைப் பயிற்சியினையும்பெற்று கலாநிதி சதாசிவமானார். இவர் ஒக்ஸ்பேர்ட் கலாநிதிப்பட்டம் பெற்று வந்ததினால் ஏற்பட்ட விளைவுபற்றிப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறரர்.
"பேராதனையிலிருந்த ஒரே இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த் துறையிலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தினார். மொழியியல் ஆய்வுத் துறையின் முக்கியத்துவத்தைப் பலர் மனதிலும் பதித்தார். சர்வதேச ஆய்வுக் கருத்தரங்குகள் பலவற்றிலே பங்கு பற்றினார். பேராசிரியர் சதாசிவம் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்த்துறை, சங்கத்துறை, சிங்களத்துறை ஆகியவற்றிலிருந்து பலர் கலாநிதிப் பட்ட ஆய்வுக்கு ஒக்ஸ்பேர்ட் பலகலைக்கழகத்திலே பேராசிரியர் பறோவைத் தேடிப் போக வழியமைத்தது. தமிழ்த்துறையிலிருந்து நானும் பேராசிரியர் பூலோகசிங்கமும் பறோவின் மாணவர்களானோம்."
(பேராசிரியர் நினைவுமலர், பக். 1)
இவ்வாறு பலரும் விதந்து கூறக்கூடிய மொழியியற் பயிற்சியினை இவர் பெற்றதனாலே தொடர்ந்து திராவிட மொழியியலிலும்; ஒப்பீட்டு மொழியியலிலும், தமிழ்மொழியியலிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல கருத்தரங்குகளிலே கட்டுரைகள் சமர்ப்பிக்கக் கூடியதாயிருந்தது.
சங்க இலக்கியங்களிலே இடம்பெறும் இடைச்சொற்கள் ஒவ்வொன்றினுடைய பயன்பாடும் விரிவாக ஆராயப்பட வேண்டியது
- 67 ܘ

Page 38
என்பதைப் பேராசிரியர் சதாசிவம் நன்குணர்ந்திருந்தார். சங்கச் செய்யுட்களிலே பல இடங்களிலே பயின்று வரும் சின் என்னும் இடைச்சொல்லின் பயன்பாட்டினை விரிவாக ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையாக எழுதினார். பழந்தமிழினுடைய தொடரியல் பற்றியும், பழந்தமிழுக்கும் மூலத்திராவிடமொழிக்குமுள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார்.
பேராசிரியர் சதாசிவம் தமிழில் ஒசையமைப்புப்பற்றி எழுதிய கட்டுரை பலருடைய கவனத்தை ஈர்த்ததொன்றாகும். ருஸ்யப் பேராசிரியர் அந்தொரொணொவ் தன்னுடைய ஒரு கட்டுரையிலே பேராசிரியர் சதாசிவம் பழந் தமிழ் ஓசையமைப்பினை விளக்கியுள்ளமை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
ஒவ்வோர் ஆய்வாளரும் தமக்கென ஒரு வாழ்நாள் ஆய்வினை மேற்கொண்டு வருவது வழக்கம். "அவருடைய வாழ்க்கைப்பணி என்று கூறத்தக்கது அவருடைய சுமேரியமொழி ஆராய்ச்சியாகும். இடையிலே சில ஆண்டுகள் தவிர 23 ஆண்டுகளாக அவர் இப்பணியில் ஈடுபட்டிருந்தார். மொசப்பட்டேமியா, பபிலோன், அல்ஜீரியா, ஈராக் என்று பல்வேறு பெயர்களை வெவ்வேறு காலங்களிலே தாங்கும்நாடு சுமேரியமொழி வழங்கிய நாடாக ஒரு காலத்தில் இருந்தது. சுமேரியர்கள் யார் என்பதிலே பலத்த கருத்து வேறுபாடு காணப்படுகிறது. யூதர்களின் முன்னோரே சுமேரியர் என்ற கருத்து ஓரளவு செல்வாக்குள்ளது. சுமேரியமொழி ஆதித்தமிழ் அல்லது திராவிடம் என்று நிரூபித்து தமிழர்களின் தொல் பண்பாட்டு வரலாற்றுச் சிறப்பை உலகம் அறியச் செய்ய வேண்டுமென்பதே பேராசிரியரின் உயிர் மூச்சு எனலாம்” (ஆ. வேலுப்பிள்ளை, பேராசிரியரின் நினைவுமலர், பக். 2-3). பேராசிரியர் விருப்புடன் ஆராய்ந்து வந்த சுமேரியர்-திராவிட ஒப்பீடு தொடர்பாக கலாநிதி லோகநாதன் முத்தரையன் போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளனர். 1966இல் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "சுமேரிய எழுத்தினின்று திராவிடத் தோற்றம்” (ஆங்கிலத்தில்) என்னும் கட்டுரையைச் சமர்ப்பித்தார். 1965இல் சுமேரியன் ஒரு திராவிட மொழி என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். 1988இல் சுமேரிய திராவிட மொழிகளின் சொல்லிலக்கணத் தொடர்பு என்னும் நூலை ஆங்கில மொழியிலே எழுதி முடித்தார். தட்டச்சுப் பிரதியாக இருக்கும் அந்நூல் அச்சிடப்பட வேண்டியதொன்றாகும். 1982 முதல் மனோன்மணியும் நானும் பேராசிரியர் சுசுமு ஓனோவுடன் தோக்கியோ கக்சுயின் பல்கலைக்கழகத்திலே "தமிழ் (திராவிட) - யப்பானியமொழி ஒற்றுமை" பற்றிய ஆய்வுக்கும் தன்னுடைய "திராவிட - சுமேரிய ஒற்றுமை" ஆய்வுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக 1986இல் பேராசிரியர் சதாசிவம் கக்சுயின்
- 68 -

பல்கலைக்கழகத்திலே சில மாதங்கள் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்டார்.
4. இலக்கியப்பணி
பேராசிரியருடைய இலக்கியப்பணிகளில் ஒன்று ஈழத்திலே எழுந்த பள்ளு இலக்கிய நூலொன்றினைப் பதிப்பித்து வெளியிட்டதாகும். ஈழத்தில் முதல் எழுந்த பள்ளு இலக்கியம் கதிரைமலைப்பள்ளு என்பதாகும். இரண்டாவது எழுந்ததாக ஞானப்பள்ளு என்னும் நூலினைக் கொள்வர். யேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூல் 257 செய்யுட்களைக் கொண்டது. பேராசிரியர் சதாசிவம் ஞானப்பள்ளு நூலின்ை நன்கு ஆராய்ந்து 1963இல் ஒரு திருத்திய பதிப்பாக வெளியிட்டார். ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைப் பிற்காலத்திலே நுணுகி ஆராய்வதற்கு இத்தகைய வெளியீடுகள் பெருந்துணையாயிருந்தன. இந்த வகையிலே பேராசிரியருடைய இரண்டாவது இலக்கியப்பணி மிகச் சிறந்ததொன்றாக அமைந்தது.
1966இல் இலங்கைச் சாகித்திய மண்டல வெளியீடாக, பேராசிரியர் சதாசிவம் தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம் அவருடைய பெயரை ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றாசிரியர் ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் வெளியீடாக அமைந்தது.
"ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் இயற்றிய செய்யுட்களுட் சிறந்தவை சிலவற்றை அப்புலவர்கள் வாழ்ந்த கால முறைப்படி தொகுத்துக் கூறும் 'ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்னும் இந்நூல், பல நூற்றாண்டு களாக இந்நாடு தமிழிலக்கியப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. ஈழநாட்டுப் புலவர்கள் இயற்றிய பல பிரபந்தங்களுட் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. அங்ங்னம் அச்சிடப்பட்டுள்ளனவற்றுட் பெரும்பாலானவை ஒருமுறை மட்டும் பதிக்கப்பட்டமையால், அந்நூற் பிரதிகள் அருகியே காணப்படுகின்றன. அவற்றையும் ஏட்டுவடிவிலுள்ள ஏனைய நூல்களையுந் தேடிப்பெற்று, அவற்றிலுள்ள செய்யுட்களிற் சிலவற்றைத் திரட்டி நூல் வடிவில் உதவிய கலாநிதி ஆ. சதாசிவம் ‘அவர்களின் தமிழ்த்தொண்டும், அதனை அச்சிடுதற்கு வேண்டிய பணத்தை உதவி ஊக்கிய இலங்கை சாகித்திய மண்டலத்தின் பணியும் பாராட்டுக்குரியவை. ஈழநாட்டுத் தமிழிலக்கிய வளத்தினை வரலாற்று முறைப்படி ஆராய்வதற்கும், ஈழத்துத் தமிழ்ப் பிரபந்தங்களின் இலக்கியச் சிறப்பினை மட்டிடுவதற்கும் ஒரு சிறந்த கருவியாக இந்நூல் அமைந்துள்ளது.”
- 69 -

Page 39
இவ்வாறு இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரும் சாகித் திய மணி டலச் செயற் குழு உறுப் பினருமாகிய திரு.வி. செல்வநாயகம் அந் நூலின் அணிந்துரையிலே குறிப்பிட்டுள்ளார். மேற்காட்டிய பகுதியிலே அவர் இறுதியாகக் கூறியுள்ளது பேராசிரியர் சதாசிவம் தொகுத்து வெளியிட்டுள்ள நூலின் மிகச் சிறந்த பயன்பாட்டை எடுத்துக் காட்டுவதாயுள்ளது.
ஆறு காலங்களாக பகுப்பாய்வு செய்து அவ்வக் காலத்திற்குரிய செய்யுளாக்கங்களைக் குறிப்பிடுவதுடன் அவற்றுட் சிலவற்றிலிருந்து எடுத்துக் காட்டுகளாக சில செய்யுட்களும் தரப்பட்டுள்ளன. சங்ககாலம் என்னும் பகுதியில் (கி.மு. 300 - கி.பி. 200 எனத் தொகுப்பாசிரியர் இக்காலப் பகுதியினைக் குறிப்பிட்டுள்ளார். ஈழத்து பூதன்றேவனார் என்னும் புலவர்பற்றிய வரலாற்றுச் செய்திகளும் தரப்பட்டுள்ளன. அடுத்ததாக யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலம். (கி.பி.1216 - 1621) என்னும் பகுதியில் தேனுவரைப்பெருமாள் என்று வழங்கிய போசராச பண்டிதர் முதல் முத்துராசக் கவிராயர் ஈறான பதின்மூன்று புலவர்கள் பற்றியும் அவர்களுடைய ஆக்கங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில் போர்த்துக்கேயர் காலம் (1621-1658), ஒல்லாந்தர் காலம் (16581796), ஆங்கிலேயர் காலம் (1796-1947), தேசிய எழுச்சிக்காலம் (1947) என்னும் பகுதிகளில் வாழ்ந்த புலவர்கள் பற்றிய குறிப்புக்களும், அவர்களுடைய செய்யுளிலக்கியங்களிலிருந்து எடுத்துக் காட்டுகளும் தரப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு இலக்கிய வரலாற்றுத் தரவு நூல் ஒன்றினை ஆக்கியளித்த பேராசிரியர் சதாசிவத்தின் தமிழ்ப் பணி காலங் காலமாக நிலைத் து நினைக்கப்படக்கூடியதொன்றாகும்.
1963இல் வெளியிடப்பட்ட கருத்துரைக் கோவை என்னும் நூல் பேராசிரியர் சதாசிவம் உதிரிகளாக எழுதி வெளியிட்ட பல தமிழ்க் கட்டுரைகளின் தொகுப்பாகும்.
5. ஆய்வுப்பணி
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநெறிகளிலே நல்ல பயிற்சி பெற்ற பேராசிரியர் சதாசிவம், அந்நெறிகளினடிப்படையிலே பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல் களையும் தானே எழுதியதுமட்டுமன்றி இளம் ஆய்வாளர்களை அந்நெறிகளைப் பின்பற்றக்கூடிய பணிகளையும் ஆற்றினார். திரு.இ.பாலசுந்தரம் கொழும்புப்பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராக இருந்தபோது அவருடைய கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வேட்டினைத் தயாரிக்கும் பொழுது அதனை ஆய்வு நெறிப்படுத்தியுள்ளார். தற்போது பேராதனைப் பல்கலைக்கழக இந்து நாகரீக விரிவுரையாளராயுள்ள திரு.வை. கனகரத்தினமும் இவருடைய ஆய்வு வழிப்படுத்தலுக்
70 -

குள்ளானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராயிருந்த திரு.கே.எஸ்.நடராசா பேராசிரியருடைய நெறிப்படுத்தலிலேயே தன்னுடைய ஆய்வேட்டினை எழுதிக் கலாநிதிப் பட்டம் பெற்றார். இவற்றுக்கு மேலாக ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை என்னும் நூலை எழுதி 1963 இல் வெளியிட்டார். இந்நூல் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயன்தருவதொன்றாகும்.
கேரளப்பல்கலைக்கழகம், சென்னைப்பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மலேசியப்பல்கலைக்கழகம், எடின்ப்பரோப் பல்கலைகழகம் ஆகியவற்றின் கலாநிதிப் பட்ட ஆய்வேடுகளை வெளிவாரித் தேர்வாளராக மதிப்பீடு செய்யும் பணியினை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளார்.
6. தமிழ்மொழிப் பணி.
ஈழத்துத் தமிழ்மொழி வரலாற்றிலே அறுபதுகளில் இடம்பெற்ற "மரபுப்போராட்டம்" ஒரு குறிப்பிடக்கூடிய நிகழ்வாகும். பேச்சுத் தமிழ் நடை பயின்ற சிறுகதை, நாவல், கவிதை ஆகிய இலக்கியங்களை இளம் எழுத்தாளர்கள் ஆக்கி வெளியிட்டனர். இவ்வேளையிலே, தமிழ் இலக்கியம் மரபுக்குட்பட்ட செந்தமிழ் மொழியிலேயே அமையவேண்டுமென்னுங் கருத்தினை ஒரு சாரார் முன்வைத்தனர். இவர்கள் பெரும்பாலும் பண்டிதர்களாகவே இருந்தனர். இவர்களுடைய பக்கம் வலுவற்றதாகவே இருந்தபோதிலும், ஆசிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத் தலைவராகவும், தமிழ்ப் பண்டிதர் சங்கத் தலைவராகவும், செந்தமிழ்க் குழுவின் தலைவராகவும் இருந்த பேராசிரியர் சாதாசிவம் மொழித்தூய்மை பேணப்படவேண்டும் என்னும் மரபுப் போராட்ட அணியின் தலைமையினை ஏற்றுச் செயல்பட்டார். பழமைக்குப் பழமையாகவும் புதுமைக்குப் புதுமையாகவும் அவர் இருந்தார் என்பதை இதன் மூலம் உணரக்கூடியதாயுள்ளது. மேலும், செந்தமிழ் வழக்கு இலக்கியத்திலே பயின்று வரவேண்டுமென வாதிட்ட குழுவினருக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் அவர்கள் ஈழத்துப் பேச்சுத்தமிழ் அகரமுதலி ஒன்றினை வெளியிட முனைந்தார். தட்டச்சு வடிவத்தில் ஐந்து தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளன.
7. கல்விப்பணி.
பேராதனையிலே அமைந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தில்
பெளத்த நாகரீகம் ஒரு பயில் நெறியாக அமைந்திருந்தது. இதே
போன்று இந்து நாகரீகமும் ஒரு பாட நெறியாக அமைய வேண்டுமென
- 71.

Page 40
பலருடைய கோரிக்கைகளுக்கேற்ப பேராதனைப் பல்கலைக்கழக மூதவையின் பணிப்புரையின் பேரில் பேராசிரியர் வி.செல்வநாயகம் கலாநிதி.கா. கைலாசநாதக் குருக்கள் ஆகிய இருவரும் அப்பயில் நெறியின் பாடவிதானம், ஏனைய விளக்கங்கள் ஆகியனவற்றை ஆக்கி, அப்பயில் நெறியைத் தொடக்குதற்குரிய ஒப்புதலைப் பெற்றார். ஆனால், அப்பாடநெறி கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே முதன் முதல் தொடக்கப்பட்டது. அதனைத் தொடக்கி நடாத்தியவர் பேராசிரியர் சதாசிவமே ஆவர்.
நிறைவுரை. -
ஈழத் திலே தமிழ் ப் பேராசிரியர் களாக u 600s நிலைப்படுத்தப்பட்டவர்கள் வரிசையிலே நான்காவது இடத்தைப் பெற்றவர் பேராசிரியர் ஆசதாசிவம். இவருடைய தமிழ்ப் பணியினை கற்பித்தல் நிலையில், நூல்வெளியீட்டு நிலையில், ஆய்வு நிலையில் நாம் பார்த்துள்ளோம். ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூல் பேராசிரியர் சதாசிவத்தின் தமிழ்ப்பணியைக் காலங்காலமாக நின்று பறை சாற்றும். அவருடைய ஒப்பீட்டு மொழியியல் ஆய்வான "திராவிட சுமேரியன் ஒற்றுமை" தொடர்ந்து ஆராய வேண்டியதொன்றாகும். இந்த ஆய்வு தொடர்பாக எண்ணுபவர்கள் சதாசிவத்தினையும் நினைக்க வேண்டியுள்ளது.
- 72 -

பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி
1. முன்னுரை
க. கைலாசபதி 1933 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் 5 ஆம் நாள் கோலாலம்பூரிலே பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் இளையதம்பி கனகசபாபதி. தாயின் பெயர் தில்லைநாயகி. ஆரம்பக் கல்வியினைக் கோலாலம்பூரிலே பெற்ற அவர், யாழ்ப்பாணம் வந்து, யாழ் / இந்துக்கல்லூரியிலே தம்முடைய இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலே பயின்று, 1953 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராகச் சேர்ந்தார். பல்கலைக்கழகத்திலே அவர் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றார். 1957 இல் முதல் பிரிவிலே தேர்ச்சி அடைந்து கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றார். 1957 ஆம் ஆண்டிலேயே தினகரன் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1958 முதல் அவரே அவ்விதழின் முதன்மை ஆசிரியராக ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் துணை விரிவுரையாளராகப் பணிபுரியத் தொடங்கினார். 1963 இல் பர்மிங்ஹோம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்காகச் சென்றார். அப்பட்டத்திற்காக அவர் எழுதிய ஆய்வேடு (Tamil Heroic Poetry) (தமிழ் வீர ஊழிக்காலக் கவிதை) 1968 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகத்தினால் வெளியிடப்பட்டது
இங்கிலாந்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, 1966 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குத் திரும்பினார். 1969 இல் கொழும்புப் பல்கலைக் கழகத்திற்கு இடமாற்றம் பெற்றார். 1974 இல் வித்தியாலங்கார இந்து நாகரிகத்துறைத் தலைவரானார். அதே ஆண்டில் யாழ்ப்பாண வளாகம் திறக்கப்பட்டபோது, அவர் அதன் தலைவராக நியமனம் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதற் பேராசிரியராகவும் அவர் நியமனம் பெற்றார். பின்னர் யாழ்ப்பாண வளாகம் தனித்துவமான நிறுவனமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியபோது, அதன் கலைப் பீடாதிபதியாகப் பதவி ஏற்றார். இப் பணியினை அவர் ஆற்றிக் கொண்டிருக்கும் போதுதான் திடீரெனச் சுகவீனமுற்று 1982 ஆம் ஆண்டு மார்கழி 6ஆம் நாள் தன்னுடைய 49ஆவது அகவையில் காலமானார். அவருடைய இறப்பு தமிழியல் உலகுக்குப் பேரிழப்பாகும். அவர் உயிருடன் இருந்திருந்தால், தமிழியல் துறைக்கு மேலும் பல புதிய கருத்துக்களும் ஆக்கங்களும் கிடைத்திருக்கும்.
- 73 -

Page 41
2. பத்திரிகைப்பணி
ஈழத்துத் தமிழ் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் ப்லர் தினகரன் இதழிலும் சுதந்திரன் இதழிலும் எழுதியுள்ளனர். நாளேடுகள் வெறுமனே செய்திகளை வெளியிடும் இதழ்களாகவன்றி, இலக்கிய வளர்ச்சிக்கும் துணைசெய்யக்கூடியன என்னும் உண்மையினை ஈழத்திலே தினகரன் இதழ் உணர்த்தியது. இதற்குக் காலாக இருந்தவர் அவ்விதழின் முதன்மை ஆசிரியராக 1958 முதல் பணியாற்றிய க.கைலாசபதி ஆவர். இவருடைய பத்திரிகை ஊடான தமிழ்ப்பணி மூன்று வகைப்பட்டதாகும்.
1) கவிதை, சிறுகதை, நாவல் எழுதியவர்களை ஊக்குவித்தமை.
2) இலக்கியப் படைப்புக்களை விமர்சிக்கும் பழக்கத்தை
ஊக்குவித்தமை
3) தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பல்வகைப்பட்ட
செய்திகளைத் தினகரன் ஊடாக அளித்தமை.
இளம் எழுத்தாளர்களைத் தினகரன் இதழிலே எழுதும்படியாக நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் தூண்டினார். சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடத்தி இளையவர்களின் எழுத்து ஆர்வத்தை வளர்த்தார். இளங்கீரன் போன்ற எழுத்தாளர்களின் தொடர்கதைகளை வெளியிட்டு, வாசகர்களுடைய வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளார். "நீதியே நீ கேள்" என்னும் தொடர் கதை தினகரனிலே வெளிவந்தபோது அதன் முடிவிலே கதாநாயகி பத்மினி சாகக்கூடிய நிலைமை ஏற்பட்டபோது "பத்மினி சாகக்கூடாது" என்று பல தந்திச் செய்திகள் தனக்கு வந்தன என்று கைலாசபதி எழுதியுள்ளார். வாசகள்களுடைய ஆர்வம் எப்படியிருந்தது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திறனாய்வு எண்ணத்தினை வளர்ப்பதற்காகக் கைலாசபதி தினகரன் இதழை நன்கு பயன்படுத்தினார். சிறுகதை, நாவல், கவிதை நூல்கள் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியங்களைப் பொதுவாக மதிப்பிடும் கட்டுரைகள், நாடகம், திரைப்படம் ஆகியன பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் தினகரனிலே வெளியிடப்பட்டன. இலக்கியம் படைப்பவர்களிற் பெரும்பான்மையினர் திறனாய்வாளர்களாகவும் அமையும்படி கைலாசபதி தினகரன் ஊடாக ஊக்கம் நல்கினார். ஈழத்திலே திறனாய்வுத் துறை நன்கு வளர்ச்சியடையவும் இவர் தினகரன் ஊடாகப் பணியாற்றினார்.
தமிழ் இலக்கிய மாணவர்கள் மட்டுமன்றி, வாசகர்கள் எல்லோருடைய இலக்கிய அறிவினையும் வளர்ச்சியடையச் செய்யப் பல கட்டுரைகள் தினகரனிலே வெளியாயின. தினகரனிலே "புதன்
- 74 -

மலர்”, “மாணவர் பகுதி", ஆகியன அமைக்கப்பட்டன. வாசகர்களில் ஒவ்வொரு பகுதியினருடைய சுவைக்கும் ஏற்றபடி இதழிலே வெளியான கட்டுரைகள் முதலாயின அமைந்தன.
3. ஒப்பியல் இலக்கிய ஆய்வு
பேராசிரியர் கைலாசபதி தமிழரின் பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்ககால இலக்கியங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவை பழைய இலக்கியங்கள் என்ற காரணத்துக்காக அவற்றிலே அவர் ஈடுபாடு கொள்ளவில்லை. அவற்றைப் படிப்பதன் மூலமாகப் பெறப்படும் விளக்கங்கள் தற்காலத் தமிழியல் ஆய்வுகளுக்கு உதவக்கூடும் என அவர் எண்ணினார். அத்துடன் சங்கப் பாடல்கள் வீர ஊழிக்காலத்துச் செய்யுட்கள் என்னும் உண்மையினை உணர்வதுடன், அவ்வூழிக்காலத்துச் செய்யுட்கள் எவ்வகைப் பண்புகளைக் கொண் டமைந்தன என்பதனைக் கிரேக்க வீரவூழிக்காலத்துப் பாடல்களுடன் ஒப்பிட்டுக் காட்டினால், கிரேக்க, ஐரிஸ் பாடல்களிலே காணப்பட்ட வாய்மொழி மரபு சங்கப் பாடல்களிலும் காணப்படுகின்றதெனக் கைலாசபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வாய்மொழி மரபாக சங்கப் பாடல்கள் கையளிக்கப்பட்டு வந்தமைக்கு அப்பாடல்களிலே காணப்படும் சில பண்புகளை அவர் சான்றுகளாகக் காட்டியுள்ளார். அப்படியான சான்றுகளுள் ஒன்று சங்கப்பாடல்களிலே திரும்பத்திரும்பச் சில அடிகள், தொடர்கள், சொற்கள் இடம் பெறுவதாகும். வாய்மொழி மரபாக அமையும் நாட்டார் பாடல்களிலே இப்படித் திரும்பத்திரும்ப ஒரே அடிகள் அல்லது தொடர்கள் இடம்பெறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம். தமிழ் வீர ஊழிக்காலப்பாடல் என்னும் தன்னுடைய நூலிலே திரும்பத்திரும்ப இடம் பெறும் சங்கச் செய்யுட்கள் அடிகள், தொடர்கள் ஆகியன பற்றிய விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. வகைமாதிரிக்குப் பின்வரும் எடுத்துக்காட்டினை நோக்கலாம். கல்லா என்னும் பெயரெச்சத் தொடர் 35 தடவைகள் சங்கப் பாடல்களிலே திரும்பத்திரும்ப உபயோகிக்கப்பட்டுள்ளது.
கல்லா இளைஞர் கல்லா மாந்தர் கல்லா மறவர் கல்லாக் கோவலர்
கிரேக்க, ஐரிஸ் மரபிலே காணப்பட்ட வாய்மொழி இலக்கியப் பண்பாடு சங்க கால இலக்கியங்களிலும் காணப்படுகின்றது, என்னுங் கருத்தினைக் கைலாசபதி தன்னுடைய ஒப்பியல் இலக்கிய ஆய்வுமூலம் முன்வைத்தார்.
75 -

Page 42
கைலாசபதியின் ஒப்பியல் ஆய்வு முயற்சி அவருடைய இருமகாகவிகள் என்னும் நூலுடனே தொடங்கியது. பாரதியையும் இரவீந்திரநாத் தாகூரையும் ஒப்பிட்டு இரு கவிஞர்களுடைய கவிதைகளையும் ஆராய்ந்து நோக்கி இந்நூலை அமைத்தார். ஒப்பியல் இலக்கிய ஆய்வின் தொடக்க முன்னாடிகள் என வ.வெ.சு. ஐயர், வண.பிதா.தனிநாயகம் அடிகள், க.கைலாசபதி ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். இம்மூவருள் கைலாசபதி மட்டுமே ஒப்பியல் இலக்கிய ஆய்வினை முதன்மைப்படுத்தித் தன்னுடைய இலக்கிய அணுகுமுறைக்கு அதனை அடிப்படையாகக் கொண்டார். பண்டைத்தமிழ் இலக்கிங்களின் சிறப்புக்களையும் தமிழ் இலக்கிய் போக்கினையும் தமிழர் பண்பாட்டினையும் நன்கு விளங்கவும், தனிப்பண்புகளை இனங்கண்டு கொள்ளவும் ஒப்பியல் அணுகுமுறை இன்றியமையாதது என்னும் உண்மையினைக் கைலாசபதி வெளிப்படுத்தினார். இத்தகைய இலக்கிய ஒப்பியல் ஆய்வு பற்றிய விளக்கங்களையும் நடைமுறைகளையும் வெளிப்படுத்துவதாக அவருடைய ஒப்பியல் இலக்கியம் என்னும் நூல் அமைகின்றது.
கைலாசபதியின் ஒப்பியல் ஆய்வு இரண்டு வழிகளிலே
சென்றுள்ளதைக் காண முடிகின்றது. திறனாய்வுத் துறையிலே
ஈடுபடும் காலத்திலே கைலாசபதி மார்க்சியக் கண்ணோட்டத்திற் பெரிதும் ஈடுபட்டார். இதனால், பாரதியையும், தாகூரையும் ஒப்பிட்டு எழுதிய இருமகாகவிகள் போக்கிலிருந்து வேறுபட்டார். மேற்கட்டுமான இலக்கியக் கருத்தமைவுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது சமூக-பொருண்மிய ஆழமைப்பே என்னும் மார்க்சிய நோக்கிலே பண்டைத் தமிழர் வாழ்வினையும் வழிபாட்டினையும் பார்த்தார். பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் என்னும் நூலை இவர் எழுதினார். வணிக குழாத்தின் துணைகொண்ட சமண மதச் செல்வாக்கினை நீக்கி, அச்சமயங்களை வெற்றிகொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் துணைகொண்ட சைவமதம் சோழப் பெருமன்னருடைய காலத்திலே சைவசித்தாந்தத்தை முன்வைத்தது தொடர்பாகக் கைலாசபதி எழுதிய "பேரரசும் பெருந்தத்துவமும்” என்னும் கட்டுரை பலருடைய கவனத்தை ஈர்த்ததொன்றாகும். இத்தகைய இலக்கிய ஆய்வுப்போக்கு அவருக்குப் பல எதிர்ப்புக்களையும் தேடிக் கொடுத்தது. ஆனால், பண்டைத் தமிழிலக்கியத்திலும், நவீன தமிழ் இலக்கியத்திலும் நல்ல புலமை பெற்ற கைலாசபதி இவ்வொப்பியற் புலமை ஊடாக நல்லதொரு இலக்கிய மதிப்பீட்டினை இலக்கியத் திறனாய்வினைச் செய்கின்ற ஒரு நிலைப்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணை ஆயினார்.
- 76 سه

4. கைலாசபதியும் திறனாய்வும்
கைலாசபதியின் ஒப்பியல் ஆய்வு நோக்கு அவருக்கு இலக்கியத்தினைப் பல்வேறு அறிவுப் புலங்களுடன் இணைத்துப் பார்க்கும் போக்குக்கு வழிகாட்டியது. ஆக்க இலக்கியம் படைப்பவர் களுக்கு சமூக அறிவியல் துறைகளின் ஆய்வுப் போக்குகள் பற்றிய அறிவு பெரிதும் துணைசெய்யும் என அவர் எண்ணினார். இதனால் யாழ்ப்பாண வளாகம் தொடங்கிய காலத்திலே தமிழ்த்துறை ஊடாக "ஆக்க இலக்கியமும் அறிவியலும்” என்னும் கருத்தரங்குத் தொடரினைத் தொடக்கி நடத்தும்படி அப்பொழுது தமிழ்த்துறைக்குப் பொறுப்பாக இருந்த என்னிடம் கூறினார். சமூகவியல், மானிடவியல், நடையியல், மொழியியல், மெய்யியல், அரசறிவியல் போன்ற துறைகள் எவ்வாறு ஆக்க இலக்கியங்களுடன் தொடர்புறுகின்றன என்பது பற்றிப் பல கட்டுரைகள் படிக்கப்பட்டன. (இக்கட்டுரைகள் பின்னர் ஆக்க இலக்கியமும் அறிவியலும், பதிப்பாசிரியர் அ. சண்முகதாஸ் என்னும் நூலாக வெளியிடப்பட்டன.) எல்லாத் துறைகளிலும் பெறும் அறிவு நல்ல பகுப்பாய்வுத் திறனாய்வுக்கு வழிகாட்டும் எனக் கைலாசபதி அனுபவ மூலமாக உணர்ந்து கூறினார். அவருடைய அடியும் முடியும் என்னும் நூலிலே "புலைப் பாடியும் கோபுர வாசலும்” என்னும் கட்டுரையிலே நந்தனாருடைய வரலாற்றின் பின்னணியினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய திருத்தொண்டத் தொகையிலிருந்து தொடங்கி ஈழக்கவிஞன் முருகையன் வரை பார்த்து ஆராய்கிறார். இக்கட்டுரை பற்றிப் (UTiffuj 6.Fédg5T60 bip67 (K.Kailasapathy Commemoration/ Volume பக் 4) "இக் கட்டுரை முழுவதும், சமய, இலக்கியம், அரச-சமூக வரலாறு, தொல்லியல் ஆகியவற்றிலுள்ள குற்றமற்ற அறிவின் வலுவிலிருந்து உருவாக்கிய ஒரு பகுப்பாய்வுத் திறனாய்வுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றன" என்று கூறியுள்ளார்.
இவர் தமிழ் இலக்கியத் திறனாய்வு பற்றிப் பெருந்தொகையான கட்டுரைகளை எழுதியுள்ளார். "உரையும் விமர்சனமும்" (கலைப்பூங்கா, 1961) "பொருள் மரபும் விமர்சனக் குரல்களும்" (எழுத்து, 1961), "இலக்கியத் திறனாய்வு" (கல்வி 1963), ஈழத்தில் "தமிழ் இலக்கியத்திறனாய்வு முயற்சிகள்” (தமிழ் இலக்கிய விழா மலர், 1972), "தற்காலத் தமிழ் திறனாய்வுப் போக்குகள்", (தாமரை 1973), "தற்காலத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள்" (வானொலி மஞ்சரி 1974), "இலக்கியத் திறனாய்வும் உணர்வு நலனும்" (சிந்தனை 1976), "தமிழில் திறனாய்வுக்கலை” (5ம் உலகத்தமிழ் மாநாடு மலர் 1981), "தமிழும் விமர்சன இலக்கியமும்” (செம்மலர் 1981) போன்ற கட்டுரைத் தலைப்புகளை வகைக்காட்டிகளாக இங்கு தருகிறேன். திறனாய்வு தொடர்பாகப் பல நூல்களைக் கைலாசபதி
- 77 -

Page 43
எழுதியுள்ளார். அவை வருமாறு.
1. கவிதை நயம் (இணை. இ. முருகையன்) 1970.
இலக்கியமும் திறனாய்வும், 1972. திறனாய்வுப் பிரச்சினைகள், 1980. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், 1980. பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், 1980.
இலக்கியச் சிந்தனைகள், 1983.
ஈழத்திலிருந்து தனித்துவம் மிக்க திறனாய்வாளராகக் கைலாசபதி போற்றப்பெற்றார். தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம் அவருடைய பெயர் நவீன திறனாய்வுத்துறையுடன் தொடர்புபடுத்தியே நினைவுகூரப்படுகின்றது.
4. நவீன தமிழ் இலக்கியம்
பண்டைய இலக்கியங்களிலே ஆழமான அறிவும் ஈடுபாடும் கைலாசபதிக்கு இருப்பினும், அவருடைய முனைப்பான சிறப்பு நோக்கு நவீன தமிழ் இலக் கசியப் பக் கமேயாகும் . பல் கலைக் கழகத்திலும் மாணவர்களுக்குப் பணி டைய இலக்கியங்களுடன் நவீன இலக்கியங்கள் பற்றியும் விரிவுரைகள் ஆற்றுவார். நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகளைத் தெளிவாகக் கட்டுரைகள், நூல்கள் மூலமாகவும் விளக்கியுள்ளார். அவர் முன்னைய கால இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொள்வதன் காரணம் நவீன இலக்கியங்களின் போக்கினைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கேயாகும். அவருடைய தமிழ் நாவல் என்னும் இலக்கிய நூலிலே வேதநாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம், மாதவையரின் பத்மாவதி சரித்திரம் ஆகிய முதன் மூன்று தமிழ்நாவல்களும் தமிழிலே தோன்றிய உரைநடைக் காவியங்கள் என்று கூறுவர். செய்யுளிலே அமைத்துவந்த காவிய மரபின் செல்வாக்கு நவீன உரைநடை வடிவான நாவலிலே பதிவுற்றதின் பின்னணியைக் கைலாசபதி தெளிவுறுத்துமிடத்து அவருக்கிருந்த பண்டைய இலக்கியப் புலமை எவ்வாறு நவீன இலக்கியப் போக்கைத் தெளிவிறுத்த உதவியுள்ளது என்பதை உணரமுடிகின்றது.
மேலைத்தேயத்தவருடைய வருகை, ஆங்கிலக்கல்வி, வரலாறு பற்றிய புதிய உணர்வு ஆகியன எப்படித் தமிழ் இலக்கியப் போக்கினை மாற்றியமைத்துள்ளன என்று நோக்குமிடத்திலே அவர் இன்னொரு விடயத் தினையும் நுணுக நோக் கலினார் . மூலபாடத் திறனாய்வு எவ்வாறு நவீன தமிழ் இலக்கிய
- 78 a

வளர்ச்சிக்கேற்றபடி நவீனத்துவம் பெற்றது என்பதை உணர்ந்து கொண்டார். இதனாலேதான் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாட விதானத்திலே நவீன தமிழ் இலக்கியத்துக்குச் சிறப்பிடம் கொடுக் குமிடத் து, மூல பாடத் திறனாயப் வு என்றொரு பயில்நெறியினையும் அறிமுகப்படுத்தினார்.
5. ஈழத்துத் தமிழ் இலக்கியம்
ஈழத்தமிழருடைய இலக்கியம் என்றொரு தனிப்பாகுபாடு உருவாகி அது மிக ஆழமாகவும் அகலமாகவும் ஆராயப்பட வேண்டும் எனக் கைலாசபதி எண்ணங்கொண்டிருந்தார். ஈழத்தின் "இலக்கிய வழி" என்ன என்பதைப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை கோடிட்டுக் காட்டியதை அவர் நன்கு அறிவார். இலக்கியத்திலே எதைப்பற்றிப் பேசினாலும், அது ஈழத்திலே எப்படியிருந்தது என்பதைப்பற்றி நோக்க அவர் மறப்பதில்லை. இங்கிலாந்திலிருந்து அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குச் சென்ற ஆங்கிலேயர் ஆங்கில இலக்கியம் என்ற பொது அடிப்படைக்குள்ளிருந்து விடுபட்டுக் கால வோட்டத்திலே அவுஸ்திரேலிய இலக்கியம், அமெரிக்க இலக்கியம் எனத் தமக்குத் தனித்துவமான இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கிய போக்கினைக் கைலாசபதி ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிக் கூறும்போது குறிப்பிடுவார். 1955 இலேயே "ஈழத்துத் தமிழ் இலக்கியம்" (சாந்தி) என்னும் கட்டுரையினை எழுதியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திலே தமிழ் சிறப்பு மாணவர்களுக்கு "ஈழத்துத் தமிழ் இலக்கியம்” என்றொரு பயில்நெறியினைப் பாடவிதானத்திலே முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். யாழ்ப்பாணத்திலே பல்கலைக்கழகம் தொடங்கிய போது தமிழ்ச் சிறப்பு மாணவர்களுக்கு அப்பயில் நெறியினை அறிமுகஞ் செய்ததுடன், ஈழத்து இலக்கியம் தொடர்பாக இப் பல்கலைக் கழகத்திலே பட்டப்பின் ஆய்வுகள் நிறைய மேற்கொள்ளப்பட வேண்டும் என விரும்பினார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழில் முதுகலைமாணிப் பட்டத்தினை முதன் முதல் பெற்ற யோகேஸ்வரி கணேசலிங்கம், மனோன்மணி சண்முகதாஸ், சித்திரலேகா மெளனகுரு, சி.வன்னியகுலம், துரை மனோகரன் ஆகிய ஐவருமே ஈழத்து இலக்கியம், மொழி, பண்பாடு தொடர்பான ஆய்வுகளையே மேற்கொண்டனர். இது தமிழ் பேராசிரியராயிருந்த கைலாசபதியின் தூண்டுதலின் விளைவு என்பதில் ஐயமில்லை.
எம்முடைய நிலத்தின் பல தனித்துவமான பண்புகள் எம்முடைய இலக் கரியங் களிலே பதியத் தொடங்கிய காலம் ஆறுமுகநாவலருடைய காலம் எனக் கைலாசபதி கூறுவர். ஈழத்துக்கே தனித்துவமான மொழி, பண்பாட்டுக் கூறுகள் ஆகியன எம்மவர்கள் படைத்த இலக்கியங்களை தமிழ்நாட்டு இலக்கியங்களி
- 79 -

Page 44
னின்று வேறுபடுத்திக் காட்டுவன. எனவே, இவை தனியாக நோக்கப்பட வேண்டியன என்பது அவருடைய கருத்தாகும்.
நிறைவு.
கைலாசபதிக்கு முன்னர் பேராசிரியர் வி.செல்வநாயகமே சிறந்த விமரிசராகப் பல்கலைக்கழகத்திலே கணிக்கப்பட்டார். பேராசிரியர் , செல்வநாயகத்தின் மாணவனாகத் தமிழைச் சிறப்புறப் பாடமாக அவரிடம் படிக்கும் போது தொல்காப்பியம், இலக்கியவிமர்சனம் ஆகியனவற்றைக் கைலாசபதி கற்றார். நிறைய வாசிக்கும் பழக்கத்தையுடைய கைலாசபதி வாசிப்பனவற்றை நினைவிலே வைப்பதுடன், அவை பற்றி ஆழமாகச் சிந்திப்பவருமாவார். மீசையைப் பிடுங்குகிறார் என்றார் ஆழமாகச் சிந்திக்கிறார் என எண்ணலாம். பண்டைத்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு ஒப்பியல், இலக்கிய ஆய்வு, ஈழத்து இலக்கியம் என்பனவற்றிலே மிகுந்த ஈடுபாடுடையவராகப் பேராசிரியர் கைலாசபதி திகழ்ந்தார். அவர் எழுதிய பல நூல்கள் தமிழ் மொழியின் சாகாவரம் பெற்றனவாக அமையும் என்பதிலே ஐயமில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்குக் கைலாசபதியை மேற்கோள் காட்டாமல் நவீன இலக்கிய, திறனாய்வு இலக்கியக் கட்டுரைகள் வெளிவரமாட்டா என நம்புகிறேன். திரு. அரணமுறுவல் என்பவர் கைலாசபதி தமிழியலுக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றி விரிவாக ஆராய்ந்து கலாநிதிப் பட்ட ஆய்வேட்டினை எழுதிச் சென்னைப் பல்கலைக் கழகத்திலே கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்.
பேராசிரியர் க. கைலாசபதி பற்றி மேலும் அறிவதற்கு:
சித்திரலேகா மெளனகுரு, கே.சண்முகலிங்கம், சி.மெளனகுரு, Kailas, 60)856oTaFLug (660)6OT6|D6IOJ, 1988.
பன்முக ஆய்வில் கைலாசபதி, தேசிய கலை இலக்கியப் பேரவை, கொழும்பு, 1992.
சுபையர் இளங்கீரன், பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும், கொழும்பு, 1992.
- 80 -

பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம. முகம்மது உவைஸ்
1. முன்னுரை
பேராசிரியர் அல்லாமா ம. முகம்மது உவைஸ் அண்மையிலேதான் காலமானார். இவருடைய தமிழியற்பணி விரிவாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். ஹேனமுல்லை என்னும் இடத்தில் பெரியார் மகுமுது லவ்வை அவர்களுக்கும் பெருமாட்டி செய்நம்பு நாச்சியார் அவர்களுக்கும் 1922 ஆம் ஆண்டு தைத்திங்கள் 15 ஆம் நாளன்று உவைஸ் பிறந்தார். உவைசினுடைய பிறப்பு ஒரு பாரிய கடமையினை முடிப்பதற்கு இறைவன் அருளிய கொடை என்று கூறவேண்டும்
"தமிழ் இலக்கியப் பரப்பிலே இஸ்லாமிய இலக்கியம் என்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவகை இலக்கியம் உண்டா? என்ற வினா சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பலரால் எழுப்பப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழில் இத்துணை இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கின்றனவா என்று பலர் இன்று மூக்கின்மேல் விரலை வைக்கின்றனர். இந்தப் பாரிய மாறுதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை அறிய விழைவார்முன் ஆரவாரமெதுவுமின்றி, ஆனால் வெகு துலாம்பரமாக ஓர் அறிஞர் தோன்றுவார். அவர்தான் பேராசிரியர் ம.மு. உவைஸ்"
என்று பேராசிரியர் சிதில்லைநாதன் கூறியுள்ளதை (மணிவிழா மலர், 1994) நோக்கும்போது அப்பாரிய கடமை என்ன என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். உவைசினுடைய உயர்கல்வி வாழ்வு 1946 இல் தொடங்குகின்றது. இலங்கைப் பல்கலைக்கழக புகுமுகத் தேர்வாக ஒரு நேர்முகப் பரீட்சை சுவாமி விபுலாநந்தர் தலைமையிலே நடைபெற்றது. இஸ்லாமிய காப்பியம் ஒன்றின் பெயரைக் கூறமுடியாமல் உவைஸ் தத்தளித்த ஒரு நிகழ்வு அன்று ஏற்பட்டது. இது பற்றி அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல், "இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு சிறந்த தமிழ்க் காவியம் சீறாப்புராணம் என்பதை அன்று சுவாமி விபுலாநந்தர் அறிந்திருந்தார். உவைஸ் அதனை அறிந்திருக்கவில்லை. ஒரு வேளை இந்தச் சிறிய சம்பவம் பிற்காலத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட உவைசுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட ஒரு F6T6T6 அமைந்திருக்கலாம்" என்று கூறியிருப்பது மிகவும் பொருத்தமான கூற்று என்றே கருதுகிறேன்.
1949 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்ற உவைஸ் 1951ஆம் ஆண்டில்
- 81 -

Page 45
முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்னும் ஆய்வேடு முதுகலைமாணிப் பட்டத்துக்காக உவைஸ் அவர்களால் இலங்கைப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய உவைஸ் 1959 முதல் இன்று ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் என்று பெயர் பெற்றுள்ள வித்தியோதயப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பின்னர் அப் பல்கலைக்கழக நவீன கீழைத்தேய மொழிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 1979 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறை ஒன்று அமைக்கப்பட்டது அத்துறையின் பேராசிரியர்த் தவிசினை அலங்கரிக்க வேண்டுமெனப் பல்கலைக்கழகம் இவரை அழைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த் துறைப் பேராசிரியர்த் தவிசினை அலங்கரிக்கும்படி சுவாமி விபுலாநந்தரைத் தமிழகம் அழைத்த பொழுது ஈழநாடு பெருமையுற்றது. இரண்டாவது தடவையாக அந்நிகழ்வு நடைபெற்றது. ஈழத்தவருக்குப் பெருமை தேடித்தரும் வகையிலே 1979 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 15ஆம் நாள் கலாநிதி ம.மு. உவைஸ் மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேராசிரியராகப் பதவி ஏற்றார்.
2. இஸ்லாமியத் தமிழ் ஆய்வுக்கு முன்னோடியும்
வழிகாட்டியும்
உவைஸ் கலைமாமணிப் LJL L-Lô பெற்றவுடன் முதுகலைமாணிப்பட்டஆய்வினை மேற்கொள்ளும்படி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவருக்கு அறிவுரை கூறியது மட்டுமன்றி, தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பினை ஆய்வு செய்யும்படியும் கூறினார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தொலை நோக்கினையும், உவைஸ் அவர்களுடைய ஆர்வத்தினையும் இங்கு நாம் மனங் கொள்ளவேண்டும். 1951இல் தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்னும் முதுகலைமாணிப்பட்ட ஆய்வேடு 1953 இல் நூல்வடிவம் பெற்றபோது "இலங்கையிலும் தமிழகத்திலும் அறிஞர் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நீண்டகாலத் தேவையை மிகச் சிறப்பாகச் செய்து முடித்த உயரிய ஆய்வென இது போற்றப்பட்டது. இஸ்லாமிய இலக்கிய உலகம் இதுவரை செயற்படுத்தாத ஆனால் நவீன கல்வியுகத்தின் தேவையாயிருந்த தற்கால ஆய்வறிவு முறைகளுக்குரிய வகையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை அணுகமுயன்றமுதல் நூலாகவும் இது அமைந்தது. (எம்.எஸ்.எம். அனஸ், மணிவிழா மலர், 1994) முதன்முதலாக வெளிவந்த இத்தகைய ஆய்வு நூலை ஜனாப்
- 82

அனஸ் தன்னுடைய கட்டுரையிலே விரிவாக ஆராய்ந்துள்ளார். அந்நூலின் ஒவ்வொரு இயலின் சிறப்புக் கூறிவந்த ஜனாப் அனஸ் "இதுவரை பேசப்படாத துறைகளையும் இஸ்லாமிய உலகுக்கு அறிமுகம் பெற்றிராத நூல்களையும் உவைஸ் தமது ஆய்வில் குறிப்பிட்டார். இருநூற்றுக்கும் அதிகமான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அவர் இவ்வாய்வுக்காகப் பயன்படுத்தியிருந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் இடத்தை மதிப்பீடு செய்ய தமிழ் இலக்கியங்களுடனான ஒப்பீட்டையும், அதேவேளை இஸ்லாமிய இலக்கியங்களின் தனித்துவமான பண்பினையும் அவர் இவ்வாய்வுரைமுழுக்க ஒரு முக்கிய இலட்சியமாக அமைத்திருந்தமை இவ்வாய்வின் சிறப்பிற்குப் பிரதான அடிப்படையாக அமைந்தது."
என்று கூறியுள்ளதை நோக்குமிடத்து உவைஸ் அவர்களுடைய
ஆய்வுத் திறனையும் ஆழமான அறிவினையும் நாம் உணரக்கூடியதாயுள்ளது.
உவைஸ் அவர்களுடைய இரண்டாவது ஆய்வு அவருக்குக் கலாநிதிப் பட்டத்தைக் கொடுத்தது. தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் காப்பியங்கள் என்னும் ஆய்வேடு ஆங்கிலத்திலே எழுதப்பட்டது. 56,60Ti seigl Muslim Epics in Tamil Literature 61601 b|T6) reis வெளிவந்தது. பன்னிரண்டு முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களைத் தம்முடைய ஆய்வுக்கெடுத்துக்கொண்டார். இந்த ஆய்வும் இஸ்லாமிய இலக்கியப் பாரம்பரியத்தின் செழுமையினையும், உவைஸ் அவர்களுடைய ஆய்வுத்திறனையும் வெளிக்காட்டியது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலே பேராசிரியராகப் பதவி ஏற்றவுடன், அப்பொழுது அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா யிருந்த டாக்டர்.வ.சுப.மாணிக்கம், டாக்டர் உவைஸ் அவர்களிடம் இரண்டு ஆய்வுத்திட்டங்களை ஒப்படைத்தார். ஒன்று, இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களிலே இடம்பெறும் அரபு,பார்சி மொழிச் சொற்களை இனங்கண்டு, அவற்றின் பொருளைத் தமிழ் இலக்கியம் கற்பவர் யாவரும் உணர்ந்து கொள்ளும் வகையிலே ஓர் அகராதியினை ஆக்குதல். மற்றையது, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றைத் திட்டமிட்டு எழுதுதல், "கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?” என்று கூறுவார்கள். இஸ்லாமியத் தமிழியல் ஆய்விலே ஊறித்திளைத்த பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு இவ்விரு ஆய்வுத்திட்டங்களும் கரும்பு தின்னக் கைக்கூலி கொடுத்தது போலத்தான். நான்கு ஆண்டுகளில் தமிழ் இலக்கிய அரபுச்சொல் அகராதி (1983) மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. இந்நூல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொண்ட பேராசிரியர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்),
- 83 -

Page 46
"இஸ்லாமிய இலக்கியத் தமிழ் நூல்களில் இடம்பெறும் அரபுச்சொற்களை எளிதில் விளங்கிக்கொள்ள இயலாததால் தான், அத்தகைய நூல்கள் தமிழ் மக்களால் தொடர்ந்து படிக்கப்படுவதில்லை. இவ்வகராதியின் மூலம் அக்குறை நீங்கிவிட்டது.”
என்று பாராட்டுரை வழங்கியதாக அறிகிறோம். (தகவல்: மு.முகம்மது கவுஸ், மணிவிழா மலர், 1994) எத்தகைய பயன்பாடுள்ள ஆய்வினைப் பேராசிரியர் உவைஸ் செய்துள்ளார் என்பதை இதன்மூலம் உணரமுடிகின்றது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது ஆய்வுத்திட்டமும் பேராசிரியர் உவைஸ் அவர்களாற் செவ்வனே நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு ஆறு தொகுதிகளாக எழுதி முடிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளும் பின்வரும் பொருளடைவுடையனவாயுள்ளன:
(1) தொகுதி 1: கி.பி.1700 வரையிலான இஸ்லாமியத் தமிழ்
இலக்கிய வரலாறு.
(2) தொகுதி 11: இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களின் வரலாறு.
(3) தொகுதி 111: இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின்
வரலாறு.
(4) தொகுதி 1V: இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள். (5) தொகுதி V: அரபுத் தமிழ் இலக்கியங்கள்.
(6) தொகுதி W1: பழங்கால வசனநடை, தற்காலக் கவிதை.
கலாநிதி பீ.மு. அஜ்மல்கானுடன் இணைந்து பேராசிரியர் உவைஸ் எழுதிய மேற்படி தொகுதிகளுள் முதலாவது தொகுதி 1986ஆம் ஆண்டிலும், இரண்டாவது தொகுதி 1990 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. ஏனைய தொகுதிகளை மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் விரைவிலே வெளியிடப்போவதாக அறிகிறோம். பேராசிரியர் உவைஸ் எழுதிய இஸ்லாம் வளர்த்த தமிழ் என்னும் நூலை உலகத் தமிழாய்வு நிறுவனம் 1984 இல் வெளியிட்டு வைத்தது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினைத் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தி, பின்னர் அவை நூலுருப் பெற்றன.
இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழி லக்கியத்திலுள்ள முஸ்லிம் இலக்கிய வடிவங்கள் பற்றி ஆங்கில GLDITpulsi) "Muslim Literary Forms in Tamil Literature" (1968)
- 84 -

என்னும் கட்டுரையைப் படித்தார். ஐந்தாவது லtத் தமிழIIச்சி
மாநாட்டில் "மதுரைக் கலம்பகமும் மக்கா in) (பு" ( 182) என்னும் ஆய்வுக்கட்டுரையுடன், புதுகுஷஷாம் 11வியம் பறிய ஆய்வாக ஆங்கிலமொழியிலே "Putukuan pit girl f the Tamil speaking Muslims" (1982) totoopt ensi () „nu îl noment) சமர்ப்பித்தார். மலேசியாவில் ந ைபெற ஆவது தமிழராயச்சி
மாநாட்டில் "தனிச்சிறப்பு மிக்க சீறாப் புராணம்" (1981) எனனும் கட்டுரையைப் படித்தார். இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடுகளிலே சிறப்பான பங்களிப்புச் செய்பவராக இவர் பணியாற்றினார். திருச்சி (1973), சென்னை (1974), காயல்பட்டணம் (1978), கொழும்பு (1979) ஆகிய இடங்களிலே நடைபெற்ற நான்கு இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் பங்குபற்றி ஆய்வுக்கட்டுரைகள் படித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டை இவர் முன்னின்று ஒழுங்குபடுத்தி நடத்தினார். இம்மாநாட்டையொட்டிப் பேராசிரியர் அவர்களாலே பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூல் பிறைக்கொழுந்து (1979) ஆகும். இஸ்லாமியரின் வரலாறு, பண்பாடு, கலை என்பன பற்றியெல்லாம் அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்தது.
3. பதிப்புப்பணி
மரபு வழி இஸ்லாமியத் தமிழறிஞர்கள் பேராசிரியர் உவைஸ் அவர்களுடைய பதிப்புப் பணியினை மிக உச்சமாக மதிக்கின்றார்கள். நாகூர் மகாவித்துவான் குலாம் காதிறு நாவலர் அவர்களுடைய மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை கிடைத்தற்கரிய நூலாக இருந்தது. பேராசிரியர் உவைஸ் அவர்களுடைய முயற்சியினாலே அந்நூல் அச்சு வாகனமேறியது. புத்துாஹஜூஷ்ஷாம் வசன காவியத்தை மூன்று பாகங்களாகப் பதிப்பித்ததோடமையாமல், அக்காப்பியத்தின் முஹம்மதியா, சித்தீக்கியா, பாருக்கியா என்னும் மூன்று காண்டங்களுக்கும் முறையே ஜெ.எம்.எம். அப்துல் காதிறு, புலவர் மணி அல்ஹாஜ், ஏ.எம். ஷரிபுத்தீன் ஆகியோரால் எழுதப்பட்ட உரைகளையும் காப்பியப் பதிப்பிலே சேர்த்துக்கொண்டமை பலருடைய பாராட்டுக்குள்ளாகியது. இவருடைய முயற்சியினாலே ஆசாரக்கோவை, திருமக்காக்கோவை ஆகியன மறுபதிப்புப் பெற்றன. புகழ்ப்பாவணி என்னும் நூலும் இவராலே பதிப்பிக்கப்பட்டது. நாலாவது இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக இவர் பதிப்பித்து வெளியிட்ட பிறைக்கொழுந்து பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
- 85 -

Page 47
4. GDI Gusī
தமிழ்மொழி, சிங்களமொழி, ஆங்கிலமொழி ஆகிய மூன்றிலும் பாண்டியத்தியமுடையவர் பேராசிரியர் உவைஸ். தமிழ்மொழியில் வெளியான சில நூல்களைச் சிங்கள மொழியிலே பெயர்த்தெழுதி வெளியிட்டுள்ளார். மெளலவி எம். அப்துல் வஹற்ஹாப் எழுதிய தித்திக்கும் திருமறை என்னும் நூலை குர்ஆன் அமாபிந்து எனச்
சிங்களத்தில் மொழிபெயர்த்தார். எம்.ஆர்.எம். அப்துற் றகீம் எழுதிய
நபிகள் நாயகம் சிங்களத்தில் நபிநாயக சரிதய என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். தமிழிலிருந்து சிங்களத்துக்கும், சிங்களத்திலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். இவருடைய மொழிபெயர்ப்புப் பணியின் உச்சம் எனக் கொள்ளக் கூடியது சிங்களக் கலைஞரும் அறிஞருமாகிய மார்டின் விக்கிரமசிங்க எழுதிய கம்பெரலிய என்னும் சிங்கள நாவலைத் தமிழிலே மொழி பெயர்த்துச் சிறப்புப் பெற்றதேயாகும். கிராமப்பிறழ்வு என்று தமிழிலே மொழி பெயர்க்கப்பட்ட அந்நாவல் 1964 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூலுக்குப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மதிப்புரை எழுதியுள்ளார். "தலை சிறந்த மொழிபெயர்ப்பொன்றினை அளிப்பதற்கு, மொழி பெயர்ப்பாசிரியருக்கு இரு மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு இருப்பதோடு, மூலக் கதையின் உயிரோட்டத்தையும் உணர்வினையும் வெளிப்படுத்தக்கூடிய நுண்மாண் நுழைபுலம் இருக்கவேண்டியதவசியம். மொழிபெயர்ப்புக் கடினமான ஒரு பணியாகும். எனினும், ஜனாப் உவைஸ் அவர்கள் அதனைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளார். மூலநாவலின் மொழி நுட்பத்தையும் மரபையும் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான நெறியினின்னும் அவர் பிறழ்ந்து விடவில்லை" என்று பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் உவைஸ் அவர்களுடைய கிராமப்பிறழ்வு மொழிபெயர்ப்பு நாவல்பற்றிக் கூறியுள்ளமை உவைஸ் அவர்களுடைய மொழிப் புலமையினை வெளிப்படுத்துகின்றது.
5. முஸ்லிம் தமிழ் பற்றிய ஆய்வு
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் உவைஸ் முஸ்லிம்களுடைய பேச்சுத் தமிழ் பற்றியும் ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 1974ல் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அச்சிறப்பு மலரிலே முஸ்லிம்களுடைய பேச்சுத்தமிழ் பற்றிக் கட்டுரை எழுதினார். தமிழாராய்ச்சி மாநாட்டிலே "The spoken Dialects of the Muslims of Srilanka" 61601 ஆங்கிலத்திலேயே முஸ்லிம்களுடைய பேச்சுவழக்குகள் பற்றிக் கட்டுரை படித்தார்.
86 -

6. Soon I Just)
கற்றவர்களுக்கு ஒரு தலையாய கடமை உண்டு. தாம் கற்றவை கற்றவர்களுக்கு மாத்திரம் பயன்படாமல், மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். இந்த வகையில் பேராசிரியர் உவைஸ் தன் கடமையை மிகச் சிறப்பாகவும் உயரிய முறையிலும் செய்துள்ளார். முதுகலைமாணிப்பட்ட ஆய்வின்போது இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றித் தான் அறிந்த செய்திகளை மக்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணிய உவைஸ் அவர்கள் 1952 இலிருந்து தினகரன் வார மஞ்சரியில் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிய கட்டுரைகள் இஸ்லாமும் இன்பத் தமிழும் என்னும் நூலாக வெளி வந்தன. குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களுடைய பாடல்பற்றியும் வரலாறு பற்றியும் எழுதிய கட்டுரைகளும் மக்களுக்குப் பயனளிப்பன. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குச் சென்ற அனுபவத்தையும் இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற அனுபவத்தையும் மக்களுடன் பல கட்டுரைகள் வாயிலாகப் பகிர்ந்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக எழுதியவை நெஞ்சில் நிறைந்த சுற்றுலா (1982) என்னும் நூலாகியது. 1973 இல் திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக எழுதியவை இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம் (1974) என்னும் நூல்வடிவு பெற்றன. 1970 ஆம் ஆண்டில் திருமக்கா மாநகருக்குத் துணைவியாருடன் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினார். அதில் தான் பெற்ற அனுபவங்களைப் பத்திரிகையிலே கட்டுரைகளாக எழுதினார். ஓராண்டு எழுதப்பட்ட அக்கட்டுரைகள் மக்காப் பயணம் என்னும் நூலுருப்பெற்றுள்ளன.
தொடர்புச் சாதனங்களாகிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி யாவற்றின் ஊடாகவும் பேராசிரியர் உவைஸ் அறிவுப் பரம்பலைச் செய்தார். அதுபற்றி ஜனாப் ஜமீல் அவர்களுடைய சொற்களிலே பார்க்கலாம்:
"1953 ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பகுதி நேர நிகழ்சித் தயாரிப்பாளராகக் கடமை புரிந்து பிற்காலத்தில் தொடர் நிகழ்ச்சிகள் பலவற்றை முஸ்லிம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய இரண்டு பேச் சுத் தொடர் தொகுக் கப்பட்டு இரண்டு நூல் களாக வெளிவந்துள்ளன. ஒன்று வழியும் மொழியும்" என்பது; மற்றது 'உமறுப்புலவர் ஓர் ஆலிமா என்பது. இரண்டும் சென்னையில் அச் சாகி உள்ளன." இவ்வாறு வானொலி ஊடாகவும் பேராசிரியர் மக்களுக்குத் தனக்குத் தெரிந்தவற்றைக் கொடுத்துள்ளார்.
87 -

Page 48
7. நிறைவுரை.
சமுக, சமயப் பணிகளோடு மிக உயர்ந்த அறிவுப்பணி செய்தவர் பேராசிரியர் கலாநிதி ம.மு. உவைஸ் அவர்கள். அவர்களாற்றிய தமிழ்ப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றிலே விதந்து பேசப்படும். முஸ்லிம்கள் அவருடைய பணிக்கு நன்றி கூறுவது போல், தமிழுலகமே அவருக்கு நன்றி கூறுகின்றது. உவைஸ் அவர்களுடைய பணிகளை நன்குணர்ந்த எஸ்.எம்.ஹனிபா ஹாஜியார் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே உத்தமர் உவைஸ் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். பேராசிரியருடைய தமிழியற் பணிகளைப் பார்த்துத் தமிழுலகமே வியந்து நிற்கின்றது.
"அளப்பரிய சாதனைகள் பல புரிந்து, தன்னலம் சற்றுமின்றி, எம் இஸ்லாமியத் தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் அயராது ஈடுபட்டுழைத்துவரும் டாக்டர். உவைஸ் ஹாஜியாரவர்களுக்கு, மக்களனைவரும், மக்களின் அரசினரும், பல்கலைக்கழகத்தினரும் கருத்தொருமித்து, மனமகிழ்வெய்தி புகழ்சாற்றுகின்றனர்."
என்று ஜனாப் மு.கா. ஸையிது யூசுபு கூறியுள்ளதை இங்கு தருகின்றேன்.
இக்கட்டுரை எழுத உதவியவை:
எஸ். எம். ஹனிபா, உத்தமர் உவைஸ், தமிழ் மன்றம்,1981. பேராசிரியர் அல்ஹாஜ் ம.முகம்மது உவைஸ் மணிவிழா மலர். (பதிப்பாசிரியர்: அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல்) முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், கொழும்பு,1994. அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல், "உவைஸ் ஓர் அறிமுகம்" மணிவிழா
D6)ff, Llds.21-35. பேராசிரியர் சி. தில்லைநாதன், "ஆன்ற அறிவும் அகன்ற உள்ளமும்",
மணிவிழா மலர், பக்.55-56. எம்.எஸ்.எம். அனஸ், "இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளும்
பண்பாட்டுப் பங்களிப்பும்", மணிவிழா மலர், பக். 62-65. நஜ்முஷஷஆறா சாரணா கையூம், "முற்றத்து மல்லிகை", மணிவிழா
D6)ff, Luis.92-96. கவிஞர் ஏ.இக்பால், "இலக்கியச் சித்தர்”, மணிவிழா மலர், பக்.98
103. மு.முகம்மது கெளஸ், “அந்த இரு நிகழ்ச்சிகள்", மணிவிழா மலர்,
Jib. 158-160.
மு.கா.ஸையிது யூசுபு, “மிடுக்கற்ற ஒரு நற்றொண்டர்", மணிவிழா
மலர், பக். 192-195.


Page 49
முதுநிலை விரிவுரையாளர முதுநிலை ஆய்வாளராகக் சுசுமு ஓனோவுடன் தமிழ் இவருடைய துனைவியார் ஆய்விலே ஈடுபட்டு 1986
। ।।।। கக்கயின் பல்கலைக்கழகத்
தமிழ் மொழி இ (ELD||15||5 GFTLi||TEL : இவர் எழுதியுள்ளார்
யாழ்ப்பாணம் முத்த 酉山ü击引手 于国 தலைவராகவும் பணியாற்று
POOPALA
Trust Comple, 3, IE 고1 F.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் 2-1-1940)函ü由Gānā namsušnu口 பிறப்பிடமாகக் கொண்டவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரிய TEi தமிழ்த்துறைத் 고ITTEFII பணியாற்றுகிறார்
1982 இல் நைஜீரியாவின் இபாடன் ÕEET) thլքե55 மொழியியல் நைஜீரிய பிமாழித்துறையிலே விருந்து ாகவும் 1983 இல் யப்பான் நிறுவன கக்கயின் பல்கலைக்கழகப் பேராசிரியர் யப்பானிய ஆய்வினை மேற்கொண்டார் மனோன்மணியுடன் இணைந்து இந்த இலும், 1990-92 இலும் அபே நிதிப் ராகவும் விருந்துப் பேராசிரியராகவும் திலே பணி செய்துள்ளார்
லக்கியம், நாட்டார் வழக்காற்றியல் ETTGÖFGING TILLILE EԼ{BEնiյե5hiեIIալr
மிழ் வெளியிட்டுத் தலைவராகவும், சைவ E. (Hindu Board of Education)
SeaStreet, Colombo II, Sri Lank
Till
*。 DNE GRAplici a