கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்த் தோணி (தமிழிலக்கியம் கற்போர்க்கு ஒரு கைநூல்)

Page 1


Page 2


Page 3

தமிழ்த் தேணிை
(தமிழிலக்கியம் கற்போர்க்கு ஒரு கைநூல்)
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ்
2005

Page 4
தலைப்பு
ஆசிரியர்கள் :
உரிமை
பதிப்பு
வெளியீடு
அச்சுப்பதிப்பு
Title
Authors
Edition
Publication :
Printing
Price
ISBN
தமிழ்த் தோணி
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ்
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
முதற்பதிப்பு:மார்கழி 2005
கோகுலம் வெளியீடு-1
கரிகணன் பிறிண்டேர்ஸ்,
424,காங்கேசன்துறை சாலை, யாழ்ப்பாணம்.
Tamilt Tõni
Dr.Manonimani Sanmugadas Prof.Arunasalam Sanmugadas
First Edition: December 2005
Kokulam Publication-l
Harikanan Printers, 424, K.K.S Road, Jaffna. Tel: 021-2222717,4590123
250/=
955 - 99.434-0 - 5
ii

பேராசிரியா சிகம்பாப்பிள்ளை சிவலிங்கராசா எம் தலைமுறைத் தோன்றல யாழ்ப்பாணப் பல்கலைககழகத தமிழத்துறைத் தலைவனாய் உயர்ந்தோன் எமது அன்புக்குரிய மாணவனின் அகவை அறுபதின் பொலிவு கண்டு மனம் நிறைந்து மகிழந்து நாம வழங்கும பரிசு. எம தலைமுறையாய் தமிழ் பணியைச் சிறப்புற ஆற்றிப பலவளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தி அளிக்கும் இனிய கொடை இதுவே.
சமனோன்மணி
அ.சண்முகதாஸ் 5 12.2005
iii

Page 5
உள்ளடக்கம்
1) முன்னுரை
2) அகநானூற்றுப்பாடல்களில் அகத்திணைச் செய்திகள்
3) எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே
4) நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
5) அமுதொடு கலந்த நஞ்சு
6) கடலாடு காதை ஒரு வாழ்வியல் திருப்புமுனை
7) கானல்வரிகாட்டும் கலை வாழ்வு
8) திருக்குறள் ஒரு தமிழர் கையேடு
9) வள்ளுவர் காட்டும் நாட்டு வாழ்வு
10)பக்தியின் மொழி நாச்சியார் திருமொழி
11) நாச்சியார் திருமொழிகாட்டும் வாழ்க்கைநெறி.
12)கோதையின் கோலவிளக்கு
13)சாதலின் சிறந்தது ஒன்றும் இல்லை
14)தொண்டர் புராணம் விரித்துரைத்த சேக்கிழார் பக்திநெறி
15)சேக்கிழாரின் காப்பியல்புனைவுத்திறன்
16)பொருவில் அன்புருவம்
iv
01-04
05-15
16-21
22-32
33-44
45-58
59-79
80-87
88-104
105-111
112-130
131-146
147-165
166-176
177-88
189-200

முன்னுரை
தமிழ்மொழியில் எழுந்துள்ள இலக்கியங்களைக் கற்பதற்கு இன்று பலர் அவாவுற்றுள்ளனர். விஞ்ஞான, தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இருபத்தோராம் நூற்றாண்டில், தமிழ்மொழி இணையத்தளத்தில் வலம் வரும் மொழியாகவும் விளங்குகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களால் ஏறக்குறைய 60க்கு மேற்பட்ட நாடுகளில் பேசப்படும் மொழியாகச் சீரிளமைத்திறத்துடன் பொலிகின்றது. உலக அரங்கில் செம்மொழியாகச் சிறப்புப் பெற்றுள்ளது. எனவே எமது இளந்தலைமுறையினர் தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய அறிவுடையோராய்த் திகழவேண்டியதும் காலத்தின் கட்டா யமாகி விட்டது. ஆகையால் பண்டைய பழந்தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகத்தை அவர்களுக்கு நல்க வேண்டிய பாரிய கடமை எம்மைச் சூழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய தமிழிலக்கியங்களை ஒரு புதிய குருகுலக்கல்வி முறைமையில், மீள அவற்றைப் பயிற்ற வேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நோக்குடனேயே இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
காதல் பற்றிய பாடல்களும், போர்பற்றிய பாடல்களும், பக்தியுணர்வுடைய பாடல்களும், காவியங்களும் எனப் பல்கிக்கிடக்கும் தமிழிலக்கியக் கடலில் முத்துக் குளிப்பது போலச் சில தொகுப்பு நூல்கள் பற்றிய அறிமுகமும் உள்ளடக்கமும் இந்நூலில் செய்திகளாகவும், தரவுகளாகவும், விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் சென்று கற்கும் அரிய வாய்ப்பினை இழந்த மாணவர்கள் புறநிலைக் கற்கை
He 01 -

Page 6
மூலமாக தமது உயர் கல்வியைப் பெற முயற்சி செய்கின்றனர். அவர்களுக்கு இந்நூல் ஒரு கைநூலாகப் பயன்படும்.
அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், நாச்சியார்திருமொழி, கம்பராமாயணம், பெரியபுராணம் என இலக்கியங்களின் பெயரை மட்டும் அறிந்திருப்போருக்கு அந்நூல்கள் பற்றிய அறிமுகவுரையாக இந்நூல் பயன்படும். தேர்வு நாடிகளுக்கு முழுநூலையும் படித்து அதன் சிறப்பி யல்பை அறிய வேண்டிய நிலையில் இந்நூல் உதவும் கரமாய் நிற்கும். தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வியல், தமிழர் வழிபாடு போன்ற விடயங்களைப் பற்றி அறியவிரும்புவோருக்கு ஒர் அடிப்படையான அறிவைப்பெறக்
கட்டுரையுள் அடக்கப்பட்ட விடயங்கள் துணை நிற்கும்.
தமிழ்மொழிப் பேணலில், தமிழ் இலக்கியத்திலே ஈடுபாட்டை ஏற்படுத்தி அவற்றைத் தேடிக்கற்கும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும். வாய்மொழியிலே பேணப்பட்டு வந்த இலக்கியப்பாடல்கள் அச்சு வாகனமேறி நூல்வடிவு பெற்ற போது அதனை எல்லோரும் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்நூல்களின் மொழிநடை இன்றைய தலை முறையினர் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதது. எனவே அவற்றை உரைநடையிலே கருத்துச் சுருக்க நிலையில் கட்டுரைகளாக ஆக்கித்தரப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தலைமுறைகள் தமிழ்மொழியை ஒரு சிறப்பு நிலையில் கற்க முற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏற்கனவே சில நாடுகளில் இத்தகைய தமிழ்க்கல்வி நடைமுறையில் உள்ளது. அத்தகைய கல்விப் பயிற்சியாளர்களுக்கும் இக்கட்டுரைகள் பயன்தரும். வேற்று மொழிப்புலமையோர் நந்தமிழ்மொழியைத் தாம் வாழும்
- 02 -
 

நாட்டுமொழியிலே கற்பிக்கும்போது இக்கட்டுரைத் தரவுகள் சான்றுகளாக விளங்கும். நந்தமிழ்மொழியில் எழுந்த இலக்கி யங்கள் உலகு தழுவிய இலக்கியங்கள் என்பதை உலகம் அறியப்பணிசெய்வோருக்கும் ஒரு செய்தி கூறும் பணியை இந்நூல் நிறைவேற்றவென எழுதப்பட்டது. பிறமொழி இலக்கியங்களை ஒப்பீட்டு நிலையிலே கற்கின்ற புலமையா ளர்க்கும் இந்நூல் சில தகவல்களைத் தரும். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ்நூல்கள் ஏற்கனவே பிறமொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. திருக்குறள் ஏறக்குறைய 90 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏனைய நூல்களும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டும். அதற்குரிய வாய்ப்பான காலமும் சூழலும் இன்று கனிந்துள்ளன. "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்" என்ற முதுமொழிக்கமைய நாம் செயற்படவேண்டியுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தலைமுறையினரிடம் இப்பாரிய பணியை நாம் கையளிக்க விரும்புகின்றோம். இப்பணி அவர்களின் தாய் தந்தையின் புலப்பெயர்வின் தேவையை நிறைவாக்கி அவர்களையும் தமிழ்த்தொண்டர்களாக்கிவிடும்.
ஒரு காலத்தில் மேலைநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கும் ஈழ நாட்டிற்கும் வருகை தந்தவர்கள் தமிழ்மொழியைக் கற்று இலக்கியங்கள் பற்றிய செய்திகளையும் தரவுகளையும் எடுத்துச் சென்றனர். இப்போது பிறநாடுகளில் வாழும் நம் தமிழ்த்தலை முறையினருக்குப் புலப்பெயர்வு துன்பமானதாக இருந்தாலும் தமிழ்மொழிக்கு பணிசெய்யும் வாய்ப்பு மனநிறைவை அளிக்கவுள்ளது. எனவே வாய்மொழியால் வாழ்ந்த எம் தமிழ்மொழி இலக்கியங்களைப் பிறமொழிகளிலே இணையத் தளத்திலே ஏற்றி உலகை வலம் வரச்செய்யலாம். அதற்கான தமிழ் இலக்கியத்தரவுகளை மூலப்பொருட்களை ஏற்றிவரும்

Page 7
இத்தமிழ்த்தோணி ஒரு சிறிய பங்களிப்பையே செய்ய முன்வந்துள்ளது. இன்னும் பல தோணிகள் இப்பணியைச் செய்ய முன்வரவேண்டும். தாயகத்தமிழ்ச் சான்றோர் அனைவரும் இப்பணியில் இணைய வேண்டுமென்ற பணிவான வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம். தமிழ் அன்னையின் தாள்களை இச்சிறுமலர் அணிசெய்யப் பணிசெய்கின்றோம். எம்மிடம் தமிழ் பயின்ற, பயிலும் அனைவரையும் இப்பணியில் இணைய வேண்டுமென எம் கரங்களை நீட்டுகின்றோம். எல்லோருமாய்,இணைந்து எம் தாய்மொழியைப் பேணுவோம். எம்மை மொழியால் இனம் காட்டுவோம்.
m 04 -

1. அகநானூற்றுப் பாடல்களில் அகத்திணைச் செய்திகள்
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட உயர்வு தாழ்வுகளை அறிய அந்நாட்டில் எழுந்த இலக்கியங்கள் உதவும். பண்டைக்காலத்து நம்முன்னோரு டைய வாழ்வியலின் சிறப்பை அறிவதற்கு பல இலக்கியங்கள் உள. கடல்கோளால் அழிந்தவை போக சில நூல்கள் இன்று எமககுக் கிடைத்துள்ளன. ஒரு மொழியிலுள்ள இலககண நூல்கள் எழுதது, சொல், உரைநடைத்தொடர், செய்யுள் அமைப்பு என்பனவற்றையே சிறப்பாக விளக்கிக்கூறும். எமது தமிழ்மொழியில் "பொருள் இலக்கணம்' என்ற தனித்துவமான இலக்கணமும் அமைந்துள்ளது. இது வேறெந்த மொழியிலும் இல்லாத சிறப்பு நிலையாகும். தமிழ் இலக்கியங்களிலே கூறப்பட்டுள்ள பொருளை வகுத்து விளக்கும் பொருள் இலக்கணம் ஒரு புதிய செய்தியாக அமைந்துள்ளது.
பண்டைத்தமிழ் மக்கள் வாழ்வியலிலே இயற்கையாக இணைந்துள்ள வழக்க ஒழுக்கங்களையே தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அன்பு நெறியிலே ஆணும் பெண்ணும் இன்பமாக வாழும் வாழ்வு பற்றிய செய்திகள் அகப்பொருள் என வரையறை செய்யப்பட்டுள்ளன. வாழ்வின் தேவைகளை நிறைவேற்றும் அறம் செய்தல், பொருளிட்டல், போர்செய்து பாதுகாத்தல் போன்ற செய்திகள் 'புறப்பொருள்' என வரையறை செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கையின் அறச்செயல் களையும் வீரச்செயல்களையும் தொகுத்து நோக்குகையில் வீரம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அகம், புறம் என்ற பெயர் வழங்கப்பட்டது.
= 05 =

Page 8
தமிழில் எழுந்த காலத்தால் பழைய இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு எனும் தொகுப்பு நூல்களாக இன்று கிடைத்துள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் இரு தொகுப்புகளும் மேற்கணக்கு நூல்களெனவும் வழங்கப்படும். அடியளவால் சிறுமை, பெருமை கொண்டமைந்த இந்நூல்கள் எண் அளவால் பதினெட்டாக அமைந்திருப்பது வியப்பைத் தருகிறது. இந்நூல்களின் மொழிநடை செம்மையானது. இயற்கை நிலையில் செய்திகளைத் தொகுத்துப் புலவர்கள் செய்யுள் களை இயற்றியுள்ளனர். மேற்கணக்கு நூல்களில் எட்டுத் தொகை நூல்கள் பத்துப்பாட்டு நூல்களைக் காட்டிலும் பழைமையானவை. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தார், தொகுப்பித்தார், தொகுத்தகாலம் என்பவற்றை அறியமுடியாதி ருக்கின்றது. ஆனால் எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாடல் அறிவிக்கின்றது.
"நற்றிணைநல்லகுறுந்தொகை, யைங்றுநூறு
ஒத்த பதிற்றுப்பத்தோங்கு பரிபாடல்
கற்றந்தோரேத்துங் கலியோ டகம்புறமென்று
இத்திறத்த வெட்டுத்தொகை" இந்நூல்கள் அகம், புறம் என்னும் பொருள் பற்றியும் கலி, பரிபாடல், அகவல் முதலிய யாப்புப் பற்றியே தொகுக்கப் பட்டுள்ளன. புறநானூறு முதலில் தொகுக்கப்பட்டதென்ற கருத்தும் உண்டு. அடியளவு குறைந்த 400 பாடல்கள் குறுந்தொகை எனவும் அடி நீண்ட 400 பாடல்கள் நெடுந் தொகை எனவும் தொகுக்கப்பட்டன. இடைநின்றவற்றுள் 400 பாடலை நற்றிணையாகவும் தொகுத்தனர். திணைக்கு 100 பாடல் என்ற நிலையில் 500 பாடல்கள் ஐங்குறுநூறாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மக்களின் அகவாழ்வு ஒழுக்கம் அகப்பொருள் இலக்கணத்தில் ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
= 06 -

புலவர்களது பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன. அன்பினைந்திணை' எனச் சிறப்பாகப் பேசப்படும் மக்கள் ஒழுக்கம் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும் அவற்றின் நிமித்தங்களும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நிலங்களில் விரித்துப் பேசப்பட் டுள்ளன. பொருள் இலககணத்தை எழுதிய இலக்கண ஆசிரியர் தொல்காப்பியர் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என வகுத்து விளக்கியுள்ளார்.
"முதல் கரு உTபoபாருள் என்ற மூன்றே
நுவலுட9 காலை முறை சிறந்தனவே
UTL-9). பயினறosநாடுங்சாலை" தலைவன், தலைவி முதலிய மக்கள் கூற்றுச் செய்திகளைப் புலப்படுத்துவது உரிப்பொருளாகும். அவை நிகழும் இடம. காலம் என்பவற்றைப் புலப்படுத்துவது நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளாகும். விலங்கு, பறவை, மரம், நீர்நிலை என மக்கள் வாழுமிடங்களில் உள்ள ஏனையவை கருப்பொரு ளாகும். இவற்றுள் உரிப்பொருளே சிறந்தது. ஏனையவை. அதை விளக்கி நிற்பவையாகும். அகப்பொருட் செய்யுட்களில், காணும் கூட்டம், பிரிவு முதலிய உரிப்பொருளுக்கு, முதற் பொருளும் கருப்பொருளும் இணைந்து நின்று அதனைச் சிறப்பிக்கும். இவற்றில் செய்யுளின் அடியளவுக்கு ஏற்ப இயைபு இருக்கும். தொல்காப்பியருடைய பொருளிலக் கணத்திற்கு உரைவகுத்த இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணை விளக்கத்திற்கும் அகநானூற்றுப் பாடல்களையே காட்டியுள்ளனர்.
அகநானூற்றுப் பாடல்களின் சுவையைக் கண்டு மூன்று வகையாக பெயரிட்டுள்ளனர். அவை விளக்கின் வருமாறு
அமையும்.
- 07 -

Page 9
1. களிற்றியானை நிரை - நிமிர்தொழுகும் அடியால் செருக் குற்றுச் செல்லும் செய்யுள் நடையால் இப்பெயர் பெற்றது. 120 - செய்யுள். 2. மணிமிடைபவளம் - மணியும் பவளமும் போலப் பொருட்சிறப்புடைய பாடல்கள் 180 தொகுக்கப்பட்டுள்ளன. 3.நித்திலக்கோவை - வெண்ணிலவின் கதிரைக்காட்டி லும் தண் மையும் ஒண்மையு முடைய நன்முத்தின் ஒளியெனச் செல்லும் பொருட்சிறப்புப் பெற்ற பாடல்கள் 100. தொகுப்பிலுள்ள செய்யுள் வைப்புமுறையும் தனித்துவமானது. ஒவ்வொரு பத்துச் செய்யுளிலும் உள்ள ஒற்றை எண்கள் பாலைப்பாடல்கள். இரண்டு எட்டு குறிஞ்சிப்பாடல்கள், நான்கு முல்லை, ஆறு மருதம், பத்து நெய்தல் எனவே ஒவ்வொரு திணைக்கும் வருமாறு பாடல் தொகை அமைந்துள்ளது.
1. பாலை - 200 செய்யுள் - பிரிதல் 2. குறிஞ்சி - 80 செய்யுள் - புணர்தல் 3. முல்லை - 40 செய்யுள் - இருத்தல் 4. மருதம் - 40 செய்யுள் - 26T1 ...6) 5. நெய்தல் - 40 செய்யுள் - இரங்கல்
அகநானூற்றைத் தொகுத்தவர் - உப்பூரிகுடி கிழான் மகனார் உருத்திரசன்மர் ஆவார். தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. பாலைப்பாடல்கள் அதிகமாகத் தொகுக் கப்பட்டதற்கு 3 சிறப்புக்களைக் காரணமாகக் கூறுவர்.
1. தான் அடிப்படையாக நின்று ஏனைத்திணை வேறுபாடு
களைத் தோன்றச் செய்தல் 2. அன்பின் ஐந்திணையின் பயனாகிய இன்பத்திணையைச்
சிறக்கச் செய்தல்.
H 08 -

3.
உலகம் நடைபெறுவதற்கு இன்றியமையாத பொருள் தேட்டத்திற்குக் காரணமாய் நிற்றல்.
அகநாநூற்றுப் பாடல்கள் அக்காலத்துப் பழக்கவழக்கங்
களையும் பதிவுசெய்துள்ளன.
நெய்தல்நிலம்:
1.
7.
இளம் பெண்கள் உப்புக்குவியலில் ஏறிநின்று கடலி லுள்ள திமில்களை எண்ணுதல். உப்பை விற்று நெல்லைப் பெறுதல். வருணனை நோக்கிச் சூளுரைத்தல் வலைப்பயன்பாராட்டி அயிரை மீன் வழங்கல் இரந்தோர்க்குக் கலம் நிறைய ஈதல்
சோற்றுடன் மீன் கருவாட்டையும" அயிலைப் புளிங்கறி
யும் சேர்த்து உண்ணல், நெல்லரிவோர்பறைகொட்டல்
8. பரதவர் சூழ்கொண்டு சென்று மீன் பிடித்தல்.
9. பரதவர் தம்மக்களை இரவில் கூட்டிச்சென்று மீன்
பிடிக்கப் பழக்குதல்.
10. பரத்தியர் வருணனை வணங்கல்.
குறிஞ்சி
1.
ஆண்கள் கொள்ளியைக் கையிலேந்தி உயர்ந்த பரண்மீது இருந்துதினைப்புனத்தைக் காத்தல். மார்பில் சந்தனம்பூசுதல், கழுத்தில் மாலையும் தலையில் கண்ணியும் சூடல்.
குறவர் தேன் கலந்து பலாச்சுளையோடு மாங்கனியுண்டு
மூங்கிற் புட்டியில் அடைத்த கள்ளைக் குடித்தல். இடையூறின்றித் தன்னுர் சென்றதற்கு அறிகுறியாகக் கொம்பு ஊதுதல்.
. நாய் வளர்த்தல்.
- 09 -

Page 10
6. பெண்கள் திணைப்புனத்தினைத் தட்டையென்னும் கருவி
கொண்டு கிளியோட்டல்.
7. வேலன் வெறியாட்டெடுத்தல்.
8. இளம் பெண்கள் இல்லுறை கடவுளை வழிபடல். 9. வளர்பிறையில் திருமணம் செய்தல். 10. குழியில் மணி அகழ்ந்தெடுத்தல். 11. வீடுகளில் ஒவியம் வரைதல்.
12. காவிரியில் நீராடிக் களித்துமகிழ்தல்.
13. விழாக்கள், குரவைக் கூத்தாடல்.
முல்லை
1.
2.
3.
தினைக்கள்ளுண்ணல்.
வில்வேட்டையாடல். மாடுமேய்தல், மாடுகளை விளித்து வாய்மடித்துச் சீழ்க்கை அடித்தல்,
. குழல் வாய்வைத்து ஊதல்.
களம்பழம், பழுப்புறு விளைதயிர், வரகுச் சோறு,
சேதாவின் வெண்ணெய், பாலடிசில், அரிசியோடு ஈயல் பெய்து அட்ட புளிச்சோறு என்பன உண்ணல். தினை, சோளம், கொள்ளு, எள்ளு, அவரை, துவரை, பயறு, உழுந்து என்பன விளைவித்தல்.
மருதம்
1.
2
3
4
5
6.
திருமணநடைமுறைகள்.
திருமணநாள் குறித்தல் பந்தர் அமைத்தல், அணிசெய்தல் முதிய பெண்கள் பங்கேற்றல்
. மணமகளை நீராட்டல் - வதுவை நன்மணம்
பாணனது செயற்பாடுகள்.
அகநானூற்றுப் பாடல்களில் வரும் உறுப்பினர்களில் மிகுந்த
= 10 =

பொறுப்புள்ளவள் தோழியேயாவள். தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, பரத்தை, பாணன் என்போர் குணவியல்பு களும் கூறப்பட்டுள்ளன. அவற்றைச் சுருக்கமாகத்தருவது பயனுடைத்து. 1. தோழி:எடுத்துக்காட்டாக பாடல் 2ஐக் குறிப்பிடலாம்.
தோழியே ஏனைய உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு அவரவர்க்கு ஏற்ற அறிவுரை கூறி வாழ்வியலைச் செப்பம் செய்பவள். தலைவன் குணங்களை நன்கு ஆராய்ந்து தலைவியை அவளோடு கூட்டி வைப்பவள். தலைவன் பிரிந்திருக்கும் போது அவன் பிரிவின் தன்மைகளை விளக்கித் தலைவியின் பிரிவை ஆற்றுவிப்பவள். தலைவனி டம் குறைகள் இருப்பின் அதனை நேரிற் கூறிக்களைபவள். நற்றாய் செவிலித் தாயாருக்கு தலைவன் தலைவியர் கூட்டு றவு நிலையைத் திறம்பட விளக்கி உடன்பாடு பெறுபவள். களவு, கற்பு இருநிலைகளிலும் தோழியின் தொடர்பு இன்றியமையாதது. தலைவனிடம் ஊர்வழக்கத்தையும் நடைமுறைகளையும் எடுத்துக்கூறி அவனுடைய கள வொழுக்கத்தைத் திருத்துகின்றவள். நிறைந்த மதிநுட்ப முடையவள். வருங்காலம் நினைந்து கடமையாற்றுபவள்.
2. பரத்தையர்
பரத்தையர் காதற்பரத்தையர், காமக்கிழத்தியர், இற்கிழத்தியர் எனத் தலைவனோடு கொண்டுள்ள நெருக்கமான தொடர்பு பற்றி அழைக்கப்பட்டனர். காதற் பரத் தையர் தலைவிமாரொடு எத்தகைய பகையும் கொள்ளாது அவர்களோடு நெருங்கிப் பழகவும் முயற்சி செய்வர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
".மையீர் ஓதி மடவோய் யானுநின்
சேரியேனே அயலிலாட்டியேன்
நுங்கையாகுவென் நினக்கெனத் தன்கைத்

Page 11
தொடுமணி மெல்விரல் தண்ணெணத் தைவர நுதலும் கூந்தலும் நீவி"
(அகம்.386) தலைவனுடைய நலமே தன்னலமாகக் கொண்டு தலைவன் தலைவியின் வாழ்வுக்கு இடையூறு விளைக்காதவராய் வாழ்ந்தமையால் புலவர் தமது பாடலில் பரத்தையரைக் குறிப்பிட்டுள்ளனர்.
. தலைவன்:
தலைவன் அறிவுள்ளவன், செல்வம் படைத்தவன். தலைவன் பெருமையும் உரமும் பலபாடல்களில் கூறப்பட்டுள்ளது. தன்கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் இவன் குணவியல்பு சுட்டப்பட்டுள்ளது. தலைவியைக் காண்பதற்குப் பல வழியிடர்களைப் பொருட்படுத்தாமல் வருபவன். பொரு ளிட்டும் கடமையுடையவன் தலைவியிடம் ஆராக்காதல் கொண்டவன். தத்தம் ஏவலரிடத்தும் பேரளிகொண்டவன். பாணன் நட்பும் பாகன் திறமும் தலைவன் செயற்பாடுகளும் உதவுகின்றன.
தலைவி. தலைவியின் குணவியல்பில் கற்புடைமை பெரிதும் பேணப்பட்டது. அது தெய்வத்தன்மையுடையதெனக் கருதப்பட்டது. தலைவனைப் பிரிந்திருக்கும் காலங்களில் மக்களைப் பேணல், சுற்றம் ஓம்பல் முதலான கடமையுடன் அவனையே நினைந்திருக்கும் பண்பு தந்தையர், தன்னையர், தாயர் முதலியோர் கட்டுப்பாட்டுக்கு அடங்கி ஒழுகும் களவுநெறியில் தலைவன் தரும் துன்பங்களுக்கு ஆளாகல். தன்துயர் சிறிதும் கருதாமல் தலைவன் துயரையே கருதிக் கவலும் தலைவியின் பெருமை போற்றற்குரியதாகும்.

5. செவிலி:
7.
தலைவியைப் பிறந்தநாள் தொட்டு வளர்க்கின்ற பொறுப்பை யுடையவள். தலைவிக்கு உடனலமும் உரனலமும் சேர நல்லவை கூறி வளர்ப்பவள். தலைவி பழியோடுபடாமல் காத்துநிற்றல். நன்னெறியான காதற்கூட்டத்தை தாயாரிடம் அறிவித்தல். திருமணம் முடித்தபின்னரும் இடையிடையே சென்று காணல், தலைவியின் உடன் போக்கு நிகழ்ந்தால்
மனம் வருந்தல்.
. பாணன்:
தலைவனுடன் தொடர்புற்றவன். தலைவனுடைய இன்ப வாழ்க்கைக்குரியவற்றைச் செய்பவன். குறிப்பாகப் பரத்தையுடன் தொடர்பு கொள்கின்ற காலத்தில் பாணன் தலைவியுடனும் தொடர்பு கொள்ளுதல். தலைவியின்
ஊடலுக்கு பாணனும் காரணமாவதுண்டு.
நற்றாய். தலைவியின் பெற்றதாய். அன்னை என்ற பெயர் "வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை", "பிணிகோளருஞ் சிறை அன்னை" என்று குறிப்பிடப்படுபவள். தலைவியின் களவு ஒழுக்கத்தை யுணர்ந்து தோழி மூலம் நெறிப்படுத்தும் கடமை. தலைவன் தலைவியைச் சந்திக்க வரும்போது நற்றாய் நாகரிகமாக நடந்து கொள்வாள்.
அகநானூற்றுப் பாடல்களில் புலவர்கள் பயன்படுத்திய உவமைகள் இலக்கியச்சுவைமிக்கவை. அவற்றுள் உள்ளுறை பொருளும் உள. தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தும் தோழி அவனுடைய களவொழுக்கத்தைக்கூறும் போது வருமாறு கூறுகின்றாள்.

Page 12
"கடுவனானது தேனை அளவு அறியாது நுகர்ந்து
பின்புதன் தொழிலாகிய மரமேற முடியாமல் பிறிதோரிடத்தில்
செல்லவும் முடியாது பக்கத்திலேயுள்ள சந்தனமரத்தின் நிழலிற் பூம்படுக்கை மீது
உறங்குவதுபோல நீயும் களவொழுக்கத்திலே இன்பம் நுகர்ந்து உனது
தொழிலாகிய அறநெறியையும் தப்பி இக்களவினை நீக்கி திருமணமும்
செய்யாமல் களவொழுக்கமாகிய இன்பத்திலே மயங்கி நிற்கின்றாய்"
(அகநானூறு:2) உரை திருமணமான பின்னும் தலைவன் பரத்தமை ஒழுக்கம் பேனும் நிலை சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கணவன் பரத்தை வீட்டிற்குச் சென்று வரும்போது அவனை மனைவி நாகரிகமாக இழித்துரைப்பதற்கு உள்ளுறை உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.
"நீர்நாய் வாளைக்குக் காவலாகிய வள்ளையினது
நிலையை நெகிழ்த்து இழிந்ததாகிய வாளையை நுகர்ந்து பிரம்பாகிய
முதியதுற்றிலே தங்கினாற் போல் நீயும் பரத்தையர்க்குக் காவலாகிய தாய் முதலாயினாரது
தலைமையை நெகிழ்த்து குலமகளிரல்லாத விலைமகளிரை நுகர்ந்து
முன்பு நுமக்குண்டாகிய எங்கள் பழைமையைப் பற்ற ஒரு பயன் கருதாது தங்குவதற்கு மாத்திரம் எம்மில்லத்திற்கு வந்தீரோ"
(அகநானூறு:6) உரை மனித வாழ்வின் அகவுணர்வுகளைத் துல்லியமாக அகநானூற் றுப் பாடல்கள் விளக்கியுள்ளன. இன்ப வாழ்க்கை வாழ்வதற்கு
ത്ത 14 -

இடையூறாக ஏற்படும் செயற்பாடுகளால் தலைவன் தலைவி யோடு தொடர்பு கொள்கின்றவரும் அகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். வாழ்க்கை என்பது உள்ளும் புறமும் என இருநிலைப்பட்டது. உள் வாழ்க்கையே அகம் எனப் பட்டது. அது தவிர்ந்த புறவாழ்க்கைப் புறம் எனப்பட்டது. எனவே இவ்விரு நிலைப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி களையே சங்கப்பாடல்கள் தருகின்றன. அவற்றுள் அகவாழ்வு
பற்றிய செய்திகளை அகநாநூறு கூறுகின்றது.
அகநானூற்றுப்பாடல்கள் கூறவந்த செய்திக்குரிய காலத்தை யும், களத்தையும் காட்டி கருப்பொருள்களால் அவற்றை மேலும் விளக்கிப் புலவர் சொல்ல வந்த விடயத்தைத் தெளிவு படுத்துகின்றன. சில பாடல்கள் வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றன. மூவேந்தர் ஆட்சி பற்றிய செய்திகளும் அகத்திணைச் செய்திகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இது புலவர்களின் ஆவணப்படுத்தும் பண்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாயுள்ளது. எனவே மக்கள் வாழ்வியலைப் பாட விரும்பிய புலவர்கள் அதற்கு அணிநிலையாக இருந்தவற்றை யும் பாடினர். இயற்கை மீறாத ஒரு வாழ்வியலே மனிதனுக்கு இன்றியமையாதது என்பதையும் அறிவுறுத்த எண்ணினர். அவர்களின் எண்ணத்தை ஏற்று வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம் தொல்காப்பியர் எழுதினார். தமிழ்மொழியின் செழுமையும், வளமையும் ஆற்றலும் அதற்குத்துணைநின்றன. அதனால் உலக இலக்கியங்களில் ஒரு தனிச்சிறப்புடைய இலக்கியமாக அகநானூறு திகழ்கிறது.

Page 13
2."எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
பண்டைத்தமிழ் இலக்கியப் பதிவுகள் காலத்தைக் கடந்து நிற்பவை செந்நாப் புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு இன்று எம் கையில் கிடைத்துள்ளது. அவற்றுள் புறநானூறு என்னும் 400 பாடல்களின் தொகுப்பு பண்டைத்தமிழரின் புறவாழ்வியல் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. வாய் மொழியாக வழங்கிவந்த பாடல்கள் புறநானூறு என்ற தொகுப்பாக் அமைக்கப்பட்டபோது கடவுள் வாழ்த்துப் பாடலும் 400 எனும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நூல் தொகுப்பு யாரால், யார் கேட்டதற்கு இணங்கத் தொகுக்கப்பட்டது என்ற விளக்கமும் இல்லை. எனவே வரலாறு பதிவு செய்யப்பட்டபோது உண்மையான செய்திகள்
மறைக்கப்பட்ட நிலையையும் நாம் உணர முடிகின்றது.
எனினும் புறநானூற்றுப் பாடல்கள் கூறும் செய்திகள் பண்டைய தமிழரின் புறவாழ்வியலைக் காட்சிப்படுத்திக் காட்டும் சிறந்த கவிதைகள். இன்றைய கவிஞர்களின் முன்னோடிகளான சங்கப்புலவரின் புலமைத்திறனுக்குச் சான்றாக நின்று நிலைத்திருக்கும் செய்யுள்கள். அவற்றைப் படிக்கும் போது எமது இலக்கிய வழியின் தடத்தை அறியலாம். இப்போதைய கவிஞர்களின் கவிதைக்குப் பாடுபொருளாக அமையவேண்டியது என்ன என வழிகாட்டும் திசைகாட்டியாக வும் புறநானூற்றுப் பாடல்கள் தோன்றுவதைப் பாடல்களை ஆழமாகக் கருத்துான்றிக் கற்போர் உணர்ந்து கொள்வர். செந்தமிழ் நடையில் சிறந்த கருத்துகள் பாடல்களிலே விரவிக்கிடக்கின்றன. தமிழ்மொழியின் கவிதைப்பண்பு நலனையும் ஊடகத்தொடர்பான ஆற்றல் நிலையையும் வெளிக்
கொணர ஒரு மீள் கற்கைநெறியும் இன்று இன்றியமையாதது.

அத்தகைய கற்கைநெறியிலே செல்லும் முயற்சியில் இக்கட்டுரை சிலபாடல்களை வகைமாதிரியாக எடுத்துக்காட்ட முனைகிறது. குறிப்பாகப் பெண்பாற்புலவர்களின் புலமைத் திறனையும் வாழ்க்கை நோக்கையும் வெளிப்படுத்தும் தமிழர் வாழ்வியல் மரபில் பெண்மையின் பங்கை எப்படி இணைக் கலாம் என்று எண்ணி இருப்போருக்கு ஒரு கைவிளக்காகவும் இது பயன்படும்.
புறநானூற்றுத் தொகுப்பிலே பாடல்கள் பாடிய புலவர்கள் பலராவார். பல்வேறு தொழில் செய்வோரும் பல்வேறிடங்களில் வாழ்ந்தவரும் எனப் புலவர்கள் நாடெங்கும் பரந்து வாழ்ந்ததை இது காட்டுகிறது. இவர்களில் ஒளவையார் என்னும் பெண்பாற்புலவர் பாடிய பாடல் பெண்மைபற்றிய குணநலன் ஒன்றைத் தனித்துவமாகக்காட்டுகிறது. பெண் ஒருத்திக்கு இவ்வளவு நெஞ்சுரம் இருந்ததா என வியக்க வைக்கும் இடம். "பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி" என்று இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் பாரதி பாடினான். பாரதிக்குப் புறநானூற்றுப் பாடல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்க வில்லை எனவே ஒளவையின் புலமை வீரம் தெரியவில்லை.
ஒளவையின் பாடல்கள் அவருடைய தமிழ்மொழிப் புலமையையும் யாருக்கும் அஞ்சாத வீர உணர்வையும் வெளிப்படுத்தும். மன்னன் அவையிலே சென்று நல்ல தமிழ்ப்பாடல்களைப் பாடிப் பாராட்டும் பரிசும் பெறும் புலவர் வாழ்க்கையில் ஆண் பெண் என்ற வேறுபாடு அந்நாளில் இருக்கவில்லை. மன்னனுடன் நட்புடையராக இருந்த புலவர்களில் ஒளவையாரும் ஒருவர். "ஒளவை' என்ற பெயரில் பலர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதியமான் நெடுமானஞ்சி' எனும் மன்னனிடம் பாடிப்பரிசில் பெறச் சென்ற
- 7

Page 14
ஒளவையார் பற்றிய செய்தி அவருடைய பாடல் மூலம் பெறப்பட்டது. புலமையின் செருக்கும் பெண்மையெனப் பணிந்து போகாத பண்புநலனையும் அப்பாடல் பதிவு செய்துள் ளது. மன்னனைப் பற்றித் துணிவோடு எடுத்துரைக்கும் ஆற்றலும் மனவுரமும் கல்விப்புலமையால் அக்காலத்துப் பெண்மை பெற்றிருந்ததையே அப்பாடல் சான்று காட்டி நிற்கிறது. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு. என்ற கருத்தை முதலில் வலியுறுத்திக் காட்டியவர் ஒளவையார் எனலாம். மொழி ஆற்றலால் வாழ்க்கைக்குத் தேவையானதைப் பெறமுடியும் வயிற்றுப்பசிக்கு வேண்டிய சோறு திக்கெங்கும் உண்டு. உன் மன்னனை மட்டும் நான் நம்பி இருக்கவில்லை என்று நிறுதிட்டமாகக் கூறும் அவருடைய நெஞ்சுரம் புலமை ஆற்றலால் பெற்ற பெருவீரம் என்றால் மிகையாகாது. நாட்டை ஆளும் மன்னனையே துச்சமாகக் கருதித் தூக்கியெறிந்து பேசும் பெண்மையின் கற்புநெறி எமக்கும் வேண்டும். ஒளவையார் பாடிய பாடல் அவரது சான்றாண்மையையும் காட்டி நிற்கிறது.
வாயிலோயே வாயிலோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி தாம் முன்னியது முடிக்கும் முரணுடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன்அறியலன்கொல் என்னறியலன்கொல் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே அதனால் காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை மரங்கொல் தச்சன் கைவல்சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து அற்றே எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"
(புறநானூறு:206)
- 18

மன்னன் அவையிலே சென்று தமிழால் பாடி அதற்கான பரிசினையும் பெறலாம் என்ற நோக்கோடு அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை சென்றார் ஒளவையார். அரண்மனையின் அடையாத வாயிலிலே சென்று தான் வந்திருக்கும் செய்தியை மன்னனுக்கு வாயில் காப்போன் மூலம் அறிவித்து விட்டு நீண்ட நேரமாகக் காத்து நின்றார். வாயில் காவலன் செய்தியை மன்னனுக்கு அனுப்பிவிட்டுத்தன் கடமை யில் நிற்கிறான். நேரம் கடந்து கொண்டிருந்தது. புலவர் ஒளவையாருக்கு உள்ளே செலவதற்கான மன்னன் அழைப்பு வரவில்லை. ஒளவையார் பொறுமையோடு காத்திருக்கிறார். அவர் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. பெண் என்று கருதி மன்னன் காலம் தாழ்த்துகிறானோ? மரபான நடை முறையை அவர் நினைவில் காண்கிறார். ஆனால் அடுத்த கணம் அந்த நினைப்பை உதறி எறிந்துவிட்டுப் புலமையின் ஆற்றலைக் கவசமாக்கிப்பாடுகிறார்.
வாயில் காவலனை விளித்து அவர் பாடிய முறைமை அதனைத் தெளிவாக உணர்த்துகிறது. அவருடைய புலமை நெறி நின்று வீரமாக அவனை விளித்துக் கூறும் செய்திதான் முக்கியமானது. உன்னுடைய மன்னன் தன்னிலை அறியாதவன் போலும் என்னுடைய தரத்தையும் அறியாதவனா? ஒளவையின் வினா கூரிய வாள்வீச்சாக சொல்வீச்சாக வந்து விழுகிறது.
இதுவரை பரிசிலர்க்கு அடையாத வாயிலைக்காத்து நிற்பவனே என வாயிற் காப்போனை அவன் செய்யும் உன்னதமான பணியை நினைவூட்டுகிறார். இந்த அரண்மனை வாயிலின் சிறப்பு தனித்துவமானது. தமிழின் சிறப்பையும் வளத்தையும் வரம்பிலா ஆற்றலையும் எங்கும் பரப்பும் புலமையாளரை வரவேற்கும் அடையாத வாயில் என்ற பெருமையை உன் மன்னன் மறந்துவிட்டான். தமிழப்
ự ] A sumus

Page 15
புலமையாளர் வாழ்வை வளம்படுத்துவதற்காக பரிசில் வழங்கும் மன்னன் தன்னிலை உணரவேண்டும். எமது மொழியென்னும் ஊடகத்தினூடாக அவன் நிலை எங்கும் பரப்பப்படுகிறது என்பதை அவன் உணரவில்லை. அவன் வாழ்வும், வரலாறும் எமது பாடல்களில் பேசப்பட்டு எல்லோரும் அறியும் வண்ணம் நாம் செய்யும் செம்மையான பணியை அவன் மதிக்காவிட்டால் நாம் கவலை கொள்ள மாட்டோம். அறிவும் புகழும் உடையோர் இல்லாத வறிய இடத்தில் நாம் வாழவிரும்பவில்லை. எனவே இசைக் கருவியான படைக்கலங்களை பையிலே கட்டி எடுத்துக் கொண்டு செல்கிறோம். ஒளவையாரின் கூற்று மன்னனின் குணநலக்குறைவைப் பாடலிலே மறைமுகமாகப் பதிவு
செய்துவிட்டது.
புலமையின் ஆற்றலை விளக்க ஒளவையார் எடுத்துக் காட்டிய உவமை இங்கு மனங்கொள்ளத்தக்கது. மரத்தைத் துணித்து தொழில் செய்யும் தச்சன் கைவல்லமையுடையவனாக இருந்தால் காட்டிற்குச் சென்றால் அந்தக்காட்டை அவன் ஏற்றவகையில் சிறப்பாகப் பயன்படுத்துவான். அவன் தொழிலின் திறமையை வெளிப்படுத்துவான். அதேபோன்று மொழிப்புலமையோர் எங்கே சென்றாலும் அப்புலமையால் நலம் தரும் பணியைச் செய்வர். கல்வியாளருக்கு எத்திசையிலே சென்றாலும் சோறு கிடைக்கும் என்று ஒளவை கூறுவது வெறும் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக மட்டும் நாம் மன்னரைப் பாடவில்லை. மன்னர் குறையை நாடறியச் செய்யவும் பாடுகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
பெண்மைக்கு கல்வி கவசமாக இணைந்து இருந்தால் அதன் வீரம் எப்படியிருக்கும் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. தன்னுடைய புலமையால் யார்க்கும் அஞ்சாமல்
ത്ത 20 അ

உள்ளதை உள்ளவாறு எடுத்துரைக்கும் நேர்மை நாம் அறியவேண்டியது. அதேவேளையில் பண்டைத்தமிழர் மரபில் பெண்ணின் மென்மை மட்டும் பேசப்படவில்லை. அதன் திண்மையும் பேசப்பட்டுள்ளது. அந்த மரபு மீண்டும் இன்று துளிர்ப்பதை எமது பெண்போராளிகளின் கவிதையில் காணும் போது பெண்மையின் பேராற்றல் என்பது ஒரு வற்றாத
வளநதியாக உலகை வலம் வருவது உணர்த்தப்படுகிறது.
எமது மண்ணில் களத்துப்போராடிய வீராங்கனைகளின் உள்ளத்து உரம் எனும் போராயுதம் ஒளவையின் பாடல்வழி வந்த ஊற்று என்பதில் ஐயமில்லை. புதிய புறநானூறு தொகுக்கும் வரலாற்றுப் பாதையில் தமிழ்மொழி தரித்து நிற்கும் இந்த வேளையில் புலமையாற்றல் மிகுந்த பெண் போராளிக் கவிஞர்களின் புதிய புறநானூறு தொகுக்கப்படும் பணி விரைவில் நடைபெறவேண்டும். பூவொன்று புயலாகியதை ஒளவையின் பாடல் காட்சிப்படுத்தியுள்ளது. அவருடைய கல்விச் செருக்கையே பாரதி நிமிர்ந்த ஞானச்செருக்கு என்றான். இருபத்தியோராம் நூற்றாண்டு தகவல் தொழில் நுட்ப ஆண்டாகி உலகை வலம் வரும் வேளையில் தமிழ்மொழிப் புலமை தந்த பதிவுகளை மீள்பதிவு செய்து எமது வரலாற்றுச் செல்நெறியைச் சீர்செய்யவேண்டியுள்ளது. அதற்கான பெண்மையின் பங்களிப்பு புதியதொரு உதவும் கரம் என்பதில் ஐயமில்லை. போர் வெற்றியடைந்த பெண் எழுத்திலும் வெற்றிதரக் காத்திருக்கிறாள்.
ത്ത 21 -

Page 16
3.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் என்பது செந்தமிழால் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. பண்டைத் தமிழர் வாழ்வியலை விளக்குவது. தமிழின் முப்பெரும் பிரிவுகளான இயல், இசை, நாடகம் என்பன பற்றி விரிவாகப் பேசுவது தமிழ் வேந்தரின் ஆட்சி நலனையும் தமிழ் மகளிர் கற்புநலனையும் உணர்த்துவது. தமிழ் மக்களின் வாழ்வியலையும் தொழில் வளத்தையும் கலை உணர்வையும் தெளிவாக உரைப்பது. தமிழ் நிலத்தின் செழுமையையும் வளத்தையும் காட்டுவது. இந்நூலில் முத்தமிழும் விரவிவருத லால் இயலிசை நாடகத்தொடர்நிலைச் செய்யுள் என்றும் நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுவது. இதனைச் சான்றோர் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விலக்கியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள் என்னும் இளம்துறவி. சேரநாட்டில் பிறந்தவர். தந்தை ஆராத்திருவின் சேரலாதன். தாய் நற்சோணை. இவர் மூத்தோன் பெயர் செங்குட்டுவன். இவர் வாழ்ந்த காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது. சிலர் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும் வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கருதுகின் றனர். தமிழ் நாட்டில் இக்காலத்தில் வைதிகசமயமும் புத்த: சமண, சமயமும் பரவியிருந்தன. இளங்கோவடிகளைச் சமணர் என்றும் வைதிக சமயத்தவர் என்றும் கூறுவர். துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் இவர் வாழ்ந்து
வந்தார். அச்சமயம் தண்டமிழ் ஆசானாகிய சாத்தனார் குறவர்
== 22 س

தம்மிடம் கூறிய கண்ணகியின் வரலாற்றை இளங்கோவடி களுக்குக் கூறினார். அதனையே சிலப்பதிகாரமாகப் பாடிய தாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகார பதிகத்தில் அமைந்துள்ள பின்வரும் அடிகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுTஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுTஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்"
(சிலம்பு பதிகம்:55-60)
சிலப்பதிகாரம் மூன்று நாடுகளின் கதை கூறுவது. சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்களான புகார், மதுரை, வஞ்சி என்பவற்றைப் பெயராகக் கொண்டு புகார்க்கண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பகுத்துப் பாடப்பட்டுள்ளது. கோவலன், கண்ணகி, மாதவி என்னும் மூவருடைய வாழ்வைப் listiq-ulg.J. கோவலன் கலையாசானாகவும், கண்ணகி கற்பரசியாகவும், மாதவி கலையரசியாகவும் படைக்கப் பட்டுள்ளனர். சிலப்பதிகாரத்தின் பெயர் அதன் மையத்தைச் சுட்டுகிறது. கண்ணகி "சிலம்பின் வென்ற சேயிழை" எனக் குறிக்கப்படுவதால் அவளது வெற்றியும் அதற்கு ஏதுவான சிலம்புமே காப்பியத்தின் மையமாகியுள்ளன.
இக் காப்பியத்தின் கதை தனியொரு சிலரின் கதையன்று. ஒரு சமுதாயத்தின் கதை. செல்வத்தால் சிறந்து அறநிலையால் தாழ்ந்த சமுதாயத்தின் கதையாகும். கதை மாந்தர் தெரிவிலும், கதைப்பின்னலிலும் இச்சமுதாயத்தை
இளங்கோவடிகள் இயங்க வைத்துள்ளார். வணிகர் குல
- 23

Page 17
கோவலன் கண்ணகியின் கதையோடு ஒருங்கிணைந்து சமுதாயம் காப்பியம் முழுமையும் செறிந்து நிற்கிறது. இதனைக் குறிக்கவே காப்பியத்தின் பெரும்பிரிவுகள் கதைநிகழ்வாலன்றி நகரங்களால் பெயர் பெற்றுள்ளன. சமுதாயத்தின் குலப்பிரிவுகளில் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. கணிகையர், வணிகர், வேட்டுவர், ஆயர், குறவர் என்பவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இன்னும் உழவர், பாணர், கூத்தர், பரதவர் ஆகியோரும் குயிலுவமாக்கள், காவலர், சாரணர் ஆகியோரும் வந்துள்ளனர். வேட்டுவர், ஆயர், குறவர் சிறப்பிடம் பெறுவதால் அவர்களின் பெயர் கொண்ட வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை என்னும் காதைகள் அமைந்துள்ளன. மனை, ஊர், நாடு என்பன முக்கியப்படுத்தப்பட்டு மனையறம்படுத்தகாதை, ஊர் சூழ்வரி, நாடுகாண்காதை என்னும் பிரிவுகள் அமைந்துள்ளன.
முழுநூல் பகுப்பமைப்பு வருமாறு அமைந்துள்ளது.
புகார்க்காண்டம் மதுரைக்காண்டம் வஞ்சிக்காண்டம்
1. மங்கலவாழ்த்துப்பாடல் 1. காடுகாண்காதை 1. குன்றக்குரவை
2. மனையறம்படுத்தகாதை 12. வேட்டுவவரி 2. காட்சிக்காதை
3. அரங்கேற்றுகாதை 3. புறஞ்சேரியிறுத்தகாதை 3. கால்கோட்காதை
4.அந்திமாலைச் சிறப்புக் 4.ஊர்காண்காதை 4.நீர்ப்படைக்காதை
செய்காதை 5.அடைக்கலக்காதை 5.நடுகற்காதை
5. ர விழவூ ரெடுத்த 6.கொலைக்களக்காதை 6. வாழ்த்துக்காதை
6.கடலாடு காதை 7. ஆய்ச்சியர்குரவை 7. வரந்தருகாதை
8. கன்பமாலை 7. கானல்வரி த்
8.வேனிற்காதை 9.ஊர்சூழ்வரி
9.கனாத்திறமுரைத்த காதை 10. வழக்குரை காதை
11.வள்சி 10:நாடுகாண் காதை வஞசனமாலை
12. அழற்படுகாதை
13. கட்டுரை காதை
H 24 -

சிலப்பதிகாரத்தில் மக்களின் வழிபாட்டிற்குரிய தெய்வங்களும் பாத்திரங்களாகியுள்ளன. பாசாண்டச்சாத்தன், வனசாயிணி, அழற்கடவுள், நாளங்காடிப்பூதம், மதுராபதித்தெய்வம் என்ப வற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். குலமாதர், கணிகையர் என இருவேறுபட்ட பெண்கள் பற்றிச் சிலப்பதிகாரம் பேசுகிறது. குலமாதர் சார்பாக கண்ணகியும் கணிகையர் சார்பாக மாதவியும் படைக்கப்பட்டுள்ளனர். கண்ணகி கணவனைப் பிரிந்து துன்புற்றாலும் பன்பான வாழ்க்கையால் உயர்ந்தவள். மாதவி கணிகையர் குலச்சூழலை மாற்றியவள். கோவலன் இறந்ததும் கலையையும், அழகையும் குலத்தையும் துறந்து உயர்ந்தவள். இதுவே இருவரதும் சிறப்பாகும். அக்கால சமுதாயம் இருவருக்கும் வாழ்க்கையில் பெரும் சிக்கலை உருவாக்கியது. அதனால் அவர்கள் துன்புற்றனர். வாழ்வின் இன்பத்தையும் பயனையும் இழந்தனர். கண்ணகியின் சிக்கல் சமுதாயத்தில் பல பெண்டிர்க்கு இருந்தது. குலமாதர் வாழ்வு கணிகையரால் கெடும் நிலை இருந்தது. இளங்கோ கண்ணகி யின் துயரக்கதையுடன் குலமாதர் அனைவருடைய கண்ணிரை யும் காட்டுகிறார். அவர்களின் கண்ணிருக்குக் காரணமான கணவர்மாரின் பரத்தமை ஒழுக்கத்தைக் கோவலனுடைய பரத்தமை ஒழுக்கத்தின் மூலம் காட்டுகிறார்.
கணிகையரிடம் கலைகள் இணைக்கப்பட்டிருந்தன. கணிகையரின் அழகும், இசைத்திறனும் பயிற்சியால் சிறந்திருந் தன. இதனை மாதவியின் பயிற்சிநிலை தெளிவுபடுத்துகின்றது. "சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவிதன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றினொன்று குறைபடாமல்
= 25 m

Page 18
ஏழாண்டியற்றியோர் ஈராறாண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்வேண்டி.."
(சிலம்பு அரங்கேற்று:5-11) கலையையும் காமத்தையும் அனுபவிக்க விரும்பிய ஆடவர் கணிகையரை நாடிச் சென்றனர். புகார் நகரிலே கொண்டாடப் படும் இந்திரவிழா ஆடவர்களின் விருப்பை நிறைவேற்ற நல்வாய்ப்பு நல்கியது. ஊர்காண்காதை மதுரையில் ஆடவர் கணிகையுடன் பருவந்தோறும் களியாட்டயரும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கணிகையருள் சிறந்தவர்களுக்கு அரசன் தலைக்கோல்பட்டம் அளித்து பரிசுத்தொகையும் கொடுக்கின்ற மரபு மதுரையிலும், புகாரிலும் நிலவியது. இது கணிகையர்க்கு அரசு அளித்த இசைவாகி மக்களின் ஒழுக்கக்கேட்டிற்கும் வழிவகுப்பதாயிற்று. கலையில் ஆர்வம் உடைய கோவலன் மாதவியின் ஆடற்கலையால் ஈர்க்கப்பட்டு அவள்பால் ‘விடுதல் அறியா விருப்பினன் ஆகி வடு நீங்குசிறப்பின் மனையகம் மறந்து வாழ்ந்தான். இதனால் கண்ணகி இன்பப்பயனையும் அறப்பயனையும் இழந்து வாழநேர்ந்தது. கணிகையர் வாழ்வு சிலப்பதிகாரத்தில் இருவகையாகச் செயற்பட்டுள்ளது. ஒன்று அது கோவலனு டைய வீட்டு வாழ்வை அழித்தது. மற்றது மதுரைநகரக் கணிகையரின் ஆடலும் தோற்றமும் பாண்டியனின் மனதை மயக்க அது கண்டு பாண்டிமாதேவி ஊடல் கொள்ள மன்னன் மேலும் மயங்கித் தீரவிசாரியாமல் பொற்கொல்லன் சொற் கேட்டு கோவலனைக் கொல்ல ஏவியமை. கணிகையர் நிலை
மறைமுகமாகக் கோவலன் கொலைக்குக் காரணமாயிற்று.
இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் நகர வாழ்வை யும் நாட்டுப் புறத்து வாழ்வையும் சுட்டி அவற்றின் வேறுபட்ட தன்மையை விளக்கியுள்ளார். வணிகரும் விழாவெடுப்போரும் ஆடல்பாடல்களால் மகிழ்வோரும், பரத்தரும், பல்வேறு
- 26

தொழில் செய்வோரும் என நகர் வாழ்வு ஒரு புறம் நடக்கிறது. வேட்டுவர், ஆயர், குறவர் வாழும் நாட்டுப்புற வாழ்வு இன்னொரு புறம் நடக்கிறது. பண்பாலும் பணிகளாலும் அணிகளாலும் வாழ்க்கை முறையாலும் செயற்பாடுகளாலும் நகரமும், நாட்டுப் புறமும் வேறுபட்டிருப்பதை இளங்கோ துல்லியமாகவே காட்டியுள்ளார். ஆடம்பர வாழ்வும், ஆரவார மும் ஒழுக்கச்சீர்கேடும் நகரத்திலிருந்தது. வழிபாடும், ஒழுக்கமும், அமைதியும் நாட்டுப்புறத்திலிருந்தன. நகரமாந்த ருக்கு வழிபாடு ஒரு ஆடம்பரத் திருவிழாவாக அமைய, நாட்டுப்புற மாந்தருக்கு அது வாழ்வுடன் இணைந்த அமைதி யான செயற்பாடாக அமைந்திருந்தது.
பாத்திரப்படைப்பில் கண்ணகியை சொல்லறம் பேணும் பீடுகெழு நங்கையாகப் பத்தினித்தெய்வமாகப் படைத்த இளங்கோ அத்துடன் தனது நூலை நிறைவு செய்யவில்லை. நாட்டு மாந்தரால் அவள் பெருமை நகரமாந்தர்க்கும் அறிவுறுத்தப்பட்டு மன்னர் பலர் அவளைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் மரபைத் தொடக்கி வைத்து காப்பியத்தை முடிக்கின்றார். செங்குட்டுவன் பத்தினிக் கல் தேர்வு செய்வதற்கு இமயம் செல்கின்றான். கனகவிசயரை வென்று இமயத்தின் கல் கொணர்ந்து இலங்கையில் நீராட்டி கனகவிசயர் தலையில் ஏற்றிக் கொணர்ந்தமையால் நாடு முழுவதும் பத்தினித் தெய்வத்தை அறிந்து கொண்டது. அவன் வஞ்சி மாநகரில் பத்தினிக்கோட்டம் அமைத்து மன்னரை அழைத்து விழாமங்கலம் செய்தமையால் பத்தினி வழிபாடு பிறநாடுகளில் பரவிற்று. நாட்டுப்புறம் கண்ணகியைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்ட நிலை நகரப்புறங்களிலும் பரவிற்று. வழிபாடு நாட்டுப்புறத்தையும், நகரப்புறத்தையும் பக்தி உணர்வு கொண்டு இணைய வைத்தது. இதன் மூலம் பத்தினி வழிபாடே சிலம்பின் மையக் கருத்தாயிற்று.
- 27 -

Page 19
கண்ணகியின் காற்சிலம்பால் காப்பியம் பெயர் பெற்றது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசை நாடகக்குறிப்புகள் ஆசிரியரின் புலமைச்சிறப்பை அணி செய்கின்றன. மங்கல வாழ்த்துப்பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்து என்னும் பகுதிகளில் இசையும் நாடகமும் பயின்று வருகின்றன. துன்பமாலையும், வஞ்சினமாலையும் இசைவிரவி அழுகைச்சுவை மிருந்தவை யாகும். அரங்கேற்று காதை, வேனிற்காதை என்பவற்றில் பண்டைய இசைநாடகக் குறிப்புகளுள் மேலும் காண்டந் தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசைநாடகக் குறிப்புகள் பற்றிய சில சுருக்க விளக்கங்களைத் தருகின்றன. சிலப்பதிகாரத்திற்கு உரை செய்த அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் இக்குறிப்புகளை இணைத்துள்ளனர். இந்நூலின் உரைப்பாயிரத்தில் இசைநுணுக்கம், இந்திர காளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் என்னும் ஐந்து நூல்களையும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
ஆடல், பாடல் என்ற இரண்டினுள் ஆடல் நாடகத் திற்கும், பாடல் இசைக்கும் உரியனவாகும். ஆடல் வேத்தியல், பொதுவியல் என்றும் அகம், புறம் என்றும் அமைந்துள்ளது. வேத்தியல் வேந்தர் முன் ஆடுவது பொதுவியல் ஏனையோர் முன் ஆடுவது. ஆடல் 11 வகைப்படும். அரங்கேற்று காதை யிலும், கடலாடுகாதையிலும் இவ்வாடல்வகை விளக்கப்பட் டுள்ளது. ஆடல் வகையுள் சில கூத்து என வழங்கப்பட்டன. கூத்து பல திறப்படும். அவற்றுள் வரிக்கூத்து, கண்கூடு வரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுகோள்வரி என எட்டு வகைப்படும். வேனிற்காதையில் (வரி:74-108) இவை பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆடல் கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல், துடி, குடை,
=== 28 س

குடக்கூத்து, பேடு, மரக்கால், பாவை, கடையம் என பெயர் பெற்றது. கடலாடுகாதையில் (43-66) இவை பற்றிய விரிவான விளக்கம் உண்டு. இசைக்கருவி களில் மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லியம் என்ற நான்கும் சிறப்புடையன. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை யான யாழ் பற்றிய குறிப்புகள் உண்டு. இவை முறையே 21,19, 14, 7நரம்புகளைக் கொண்டிருந்தன.
பண்டைய சங்கநூல் கூறும் திருமண மரபு சிலப்பதிகார காலத்தில் மாற்றமடைந்துள்ளது. "இருபெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்தலும்" "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வதும்" முறைமையாக உள்ளன. மகளிர் தம் கணவரோடு கூடி அறவோர்க்கு அளித்தல், அந்தணரோம்பல், துறவோர்க்கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களைச் செய்தனர். இந்நடைமுறை கண்ணகி கூற்றாகக் கொலைக்களக்காதையில் (71-74) அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பற்றிய குறிப்புகளும் உண்டு. அவற்றுள் இந்திரவிழா சிலப்பதிகாரக்கதையில் முக்கிய விழாவாக அமைந்துள்ளது. இவ்விழா காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திரைத் திங்கள், சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாள் நடைபெற்றது. இந்திரவிழவூர்எடுத்தகாதை இவ்விழா பற்றிய செய்திகளைக் கூறுகிறது. விழா சிறப்புற நடைபெறுவதற்கு காவற்பூதத்துப் பலிபீடிகைக்கு மறக்குடிமகளிர் சென்று வழிபாடு செய்தமை கூறப்பட்டுள்ளது.
"காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையரணங்கெழுந்தாடிப்
பெருநில மன்னன் இருநில மடங்கலும்
- 29 -

Page 20
பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி மாதர்க்கோலத்து வலவயினுரைக்கும் மூதிர்ப் பெண்டிரோதையில் பெயர"
(சிலம்பு:இந்திரவிழபூ:67-75) பின்பு பூத சதுக்கம் முதலாகவுள்ள ஐவகை மன்றங்கட்கும் அரும்பலியூட்டுவர். மங்கலக்கொடிகளும் தோரணங்களும் பூரணகும்பங்களும், பொற்பாலிகைகளும் கொண்டு நகரையும் கோவில்களையும் அழகுபடுத்துவர். ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசகுமரரும் பரதகுமரரும். தேர் முதலிய நால்வகைப் படைவீரரும் பிறரும் ஒன்று கூடிக் காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து 'விண்ணவர் தலைவனை விழுநீராட்டி’ பிறவாயாக்கைப் பெரியோன் முதலாகவுள்ள கோயில்கள் பலவற்றிலும் வழிபாடாற்றுவர். இசைப்புலவர்கள் பாடநாடக மகளிர் ஆடலும் பாடலும் காட்டி மக்களை மகிழ்விப்பர். விழாவின் இறுதியில் உலாநாள் வருகிறது. மக்கள் விடியல் பொழுதில் கடலாடி கடற்கானச்சோலையில் தங்கி மகிழ்கின்ற னர். அங்கு அறவோரும், புலவரும் பிறரும் மக்களுக்கு அறம் உரைக்கின்றனர்.
நாட்டு மக்களிடையே நிலவிய நம்பிக்கைகளையும் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. நிமித்தம் காண்பதும், நாள் பார்த்தலும் கனாப்பயன்கருதலும் வழக்கமாக உள்ளது. இதனை இளங்கோ முதலில்
"உள்ளகம் நறுந்தா துறைப்பமீதழிந்து கள்ளுகநடுங்குங்கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவிசெங்கணும் உண்ணிறை கரந்தகத்தொளித்துநீருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன. விண்ணவர் கோமான் விழவுநாளகத்தென"
(இந்திரவிழவூ235-240)

இந்திரவிழவூரெடுத்த காதையில் குறிப்பிட்டுள்ளார். மகளிர்க்கு கண்முதலியன இடம் துடித்தல் நன்மையெனவும் வலம் துடித்தல் தீமையெனவும் கருதப்பட்டது. கண்ணகி மீண்டும். கோவலனுடன் சேர்வது உண்மையென்பதையும் மாதவி கோவலனைப் பிரிவது உண்மையென்பதையும் இந்நம்பிக்கை மூலம் இளங்கோவடிகள் உணர்த்த முற்பட்டுள்ளார். அக்காலத்துப் பெண்களின் ஆடை அணிகள் பற்றிய செய்தி களையும் சிலப்பதிகாரம் தருகிறது. மாதவியின் கோலப்புனை வைப் பற்றிக்குறிப்பிடுமிடத்து இச்செய்தி கூறப்பட்டுள்ளது. காலணிகள், பரியம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் என்பன தொடைக்கு குறங்குசெறியும். முப்பத்திரண்டு வடங்கொண்ட மேகலை இடையில் அணியப்படும். தோளுக்கு தோள்வளையும், கண்டிகையும் கைக்கு மணியிழைத்த சூடகம் பொன்வளை. பரியகம், வால்வளை, பவழவளை என்பன அமைந்தன. கைவிரலில் மோதிரமும் வயிரத்தாளும் அணியப்பட்டன. கழுத்தில் சங்கிலியும், நுண்சரமும், பொற்கயிறும் ஆரமும் பின்தாலி கோத்த மணிமாலையும் விளங்கின. காதில் தோடு, குழை, நீலக்குதம்பை முதலியன அணியப்பட்டன. தலைக்குத் தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் முதலியன அணிந்தனர். மூக்கணிபற்றிய குறிப்பு இடம்பெறாமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகிதான் முழுக் காப்பியத்திலும் நடமாடும் பாத்திரமாகும். புகார் நகரில் அடக்கமான குலப்பெண்ணாக இருந்த கண்ணகி மதுரையில் அரசனை எதிர்த்து வழக்காடுகிறாள். அவளது அவல வாழ்வே அவளுக்கு ஆற்றலையும் தந்தது. கணவன் மீது கொண்ட அன்பும் அவனை இழந்த அவலமும் அவளை வழக்குரைக்க வைக்கின்றது. சிலப்பதிகாரம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் காட்டுகிறது.

Page 21
நெய்தல் நிலத்தில் பிறந்த கண்ணகி நால்வகை நிலத்தும் நடந்து குறிஞ்சி நிலத்தில் தெய்வமாகிறாள். கணவனைப் பிரிந்த கண்ணகி மானுட நிலையில் உயர்ந்து நின்றாள். கணவனை இழந்தபோது தெய்வ நிலைக்கு உயர்ந்தாள். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியமாக, புரட்சிக்காவியமாகப் போற்றப்பட கண்ணகியே காரணமாகிறாள். அவளுடைய குணநலன்கள் கற்புநிலையை விளக்குகின்றன.
இளங்கோ தமிழ் மக்களைக் கருதியே தம் காப்பியத்தை இயற்றினார். நாடகச் சுவை கொண்ட சிலப்பதிகாரம் பாமரரும் கேட்டு இன்புறும் கதை. தமிழ்நாட்டையும் தமிழ் அரசர் ஆட்சியையும் தமிழையும் தமிழ் வாழ்வையும் மறக்கத் துணிந்து அறத்தின் பெயரால் புதியதோர் இனமாக உருமாறி அழிய விருந்த தமிழரைக் காக்க எண்ணி இயற்றிய காப்பியமே சிலப்பதிகாரம். மொழிப் பண்பையும் வாழ்க்கைப் பண்பையும் அதனுள் பொதிந்து வைத்துள்ளார். தம்கால வழக்குச் செந்தமிழ் உரைநடையையும் செய்யுள் நடைகளையும் கையாண்டுள்ளார். பழங்கவிதையின் பண்பைக் குன்றாது காத்தவர், தமிழ் மொழியை நிலைபெற வைத்தவர்.
-32 -

4.அமுதொடு கலந்த நஞ்சு
வாழ்வின் நெறிகளை வகைப்படுத்திக் காட்டும் இலக்கியங்கள் தமிழ்மொழியிலே காலத்துக்குக் காலம் தோன்றியுள்ளன. அவை மனித சமூகத்திற்கு வளமான வாழ்க்கையை வகுத்துக் காட்டுகின்றன. அன்று தொடங்கி இன்று வரை சிறப்போடு பல இலக்கியங்கள் நம்மிடையில் இருக்கின்றன. அவற்றைப் படித்து எம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்துச் சம்பவங்களை இலக்கியங்கள் கற்பனை செய்து கூறினாலும் அதனூடாகச் சில கருத்துக்களையும் அவை முன் வைத்துள்ளன. அக்கருத்துக் களைக் காலத்துக்குக் காலம் நடைமுறை வாழ்வோடு பொருத்திப் பார்த்து நலம் கண்டவர் பலர். அவர் காட்டும் வழி நின்று அவ்விலக்கியங்களை நாமும் ஆராய வேண்டியது அவசியம். தமிழிலக்கியங்களிலே சிலப்பதிகாரம் இத்தகைய தனிச் சிறப்புக் கொண்ட இலக்கியமாகப் போற்றப்படுகிறது. கதையமைப்பிலே சமூகத்திலே நடந்த உண்மைச் சம்பவங் களாக அதனை இளங்கோவடிகள் புனைந்திருக்கிறார். அவர் காட்டும் சிலப்பதிகாரச் சம்பவங்கள் மனதிலே நிறைத்து நிற்பவை. நாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று பாரதி பாராட்டும் வரிசையிலே இளங்கோவையும் இணைத்திருக்கிறார். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றொரு மணியாரம் படைத்த தமிழ் நாடு என்று சிலம்பின் பெருமையைப் பாராட்டியுள்ளார்.
சிலம்பின் வாழ்வு நெறி:
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இனிய கவிஞன்
பாரதி சிலம்பின் பயன் கண்டவகையில் அதனை விமர்சிக்கி
= 33 -

Page 22
றான். அவன் வாய்மொழி இன்னும் பொய்த்து விடவில்லை. காலத்தின் மாற்றங்களால் அழியாத சிலம்புக் காவியம் மனித காவியமாக அமைந்ததும் நோக்குதற்குரியது. மன்னனைப் பாடும் இலக்கியங்கள், அவை தோன்றிய காலத்துக்கு மட்டும் சிறப்பைத் தரவல்லவை. மனிதனைப் பற்றிய இலக்கியங்களோ மனிதகுலம் உள்ளவரை நிலைத்து நிற்க வல்லவை. மானிடம் வாழ வழி கூறும் சிலம்பின் இரசனை தெவிட்டாதது. இளங்கோவின் கவிதையாற்றல் தமிழின் இனிமை காட்டுவது; பிற மொழியாளரும் பேச இடமளிப்பது. அத்தகைய சிலம்பின் வாழ்வு நெறி காலத்தைக் கடந்தநெறி. பெருங்காப்பிய வரிசையிலே வைத்துப் போற்றப்படும் சிலப்பதிகாரம் காட்டும் வாழ்க்கை நெறியாக அது அமைந்திருப்பது பெருஞ் சிறப்பாகும். செம்மை சான்ற இலக்கியங்களின் வரிசையிலே இம்மையிலே இனிய நெறி காட்டி இலகு கவிதையிலே அதைக் காட்டி யுள்ளார் இளங்கோவடிகள். சேரர் குடியிற் பிறந்து இளம் பிராயத்திலே துறவறம் பூண்ட இளங்கோவடிகளின் நெஞ்சம் தமிழர் பண்பாட்டிலும் கலை வளத்திலும் ஊறிக்கிடந்ததைச் சிலப்பதிகாரம் உணர்த்தி நிற்கிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பொதிந்து முத்தமிழ்க் காவியமாக அதை அவர் இயற்றியமையே இதற்குச் சான்று.
இல்லறமாம் நல்லறம்:
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ் வங்கண் உலகளித்த லான் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரிநாடன் திகிரிபோற் பொறிகோட்டு மேருவலந்திரித லான் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலியுலகிற்கவன் அளிபோல்
H 34 -

மேனின்றுதான் சுரத்தலான் பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலியுலகிற்கவன் குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுகலான்" என்று காப்பிய மரபிற்கிணங்க வாழ்த்தோடு சிலப்பதிகாரம் ஆரம்பிக்கின்றது. மூன்று காண்டங்களாக முப்பது காதைகளில் கதையும் வளர்ந்து செல்கிறது. தமிழின் முதற் பெருங் காவியமாய் மூவேந்தர்க்கும் உரியதாய் முந்நாட்டினையும் பற்றியதாய், வளர்ந்தது. புகார், மதுரை, வஞ்சி என்னும் முத்தலை நகரங்கள் காண்டப் பெயர்களாய் அமைந்தன. யாப்புப் பல கண்டதாய், உரையிடைப்பட்ட பாட்டுடையதாய் விளங்கியது. திருமணத்தோடு மங்கலகரமாகக் கதை செல்கிறது. கோவலனும் கண்ணகியும் மாமுதுபார்ப்பான் மறை வழி காட்டிடத் தீவலம் செய்து மணமக்களாகின்றனர். பலரது வாழ்த்தையும் பெற்று, இல்லறமாகிய நல்லறத்தை மேற் கொள்கின்றனர். வாழ்க்கைக்கு வேண்டிய இளமையும் அழகும் இருவர்க்குமிணைந்திருந்தன. குடும்ப நலம் சிறக்க, குரவர் வழி காட்டலுமிருந்தது. குவலயத்தில் வாழ்வுநெறியைக் காட்டக் குடும்ப விளக்காகக் கண்ணகி விளங்குகிறாள்.
'மாசறு பொன்னே, வலம்புரிமுத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே, அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமடமகளே மலையிடைப் பிறவா மணியே, என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே, என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால்" இவ்வாறான கோவலன் காதல் மொழிகளைக் கேட்டு, கண்ணகி மகிழ்ந்தாள். தன்னழகிலே கர்வம் கொண்டாள். தன்னை விட்டுக் கோவலன் ஒருபோதும் பிரியான் என நம்பினாள். அந்

Page 23
நம்பிக்கையை ஆதாரமாக்கி இல்வாழ்க்கை இனிதாகுமென வாழ்ந்தாள். தனி மனித வாழ்க்கை இருவர்க்கும் எது குறையுமின்றியே இருந்தது. சில ஆண்டுகள் குடும்பத்தேர் இனிது சென்று கொண்டிருந்தது. "தூமப் பணிகளொன்றித் தோய்ந்தாலென ஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து" நாமம் தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார்கள். வாழ்வின் போக்கிலே ஏற்படும் சிக்கல்களைச் சிலப்பதிகாரம் தெளிவுபடுத்துகிறது. இனிதான இல்வாழ்வில் மின்னாமல் முழங்காமல் துயரமழை பெய்கிறது. ஆடற் பரத்தை மாதவியின் ஆட்டம் க்ாண கோவலனுக்கு ஒருவாய்ப்புக் கிட்டுகிறது. சிறப்பாக ஆடிய மாதவி பரிசாக வேந்தனிடம் ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெறுகிறாள். அதனைக் கூனியின் கையிலே கொடுத்து நகர நம்பியர் திரியும் பக்கத்தில் விற்றுவர வினாவுகிறாள். "மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி, கூனிதன் மணமனை புக்கு மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன். மயங்கி விடுதலாறியா விருப்பினன் ஆயினன். வடு நீங்கிய சிறப்பின் தன் மனையகம் மறந்து வாழ்ந்தனன். நெடுநிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்தில் கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்தாங்கு மாதவி ஆர்வத்தோடு கோவலனுக்கு எதிரிக் கோலங்கொண்டு இன்பம் நல்குகிறாள்"
பெண்மையின் தனிச் சிறப்பு
கணவன் பிரிவு கண்ணகியைத் துயரில் ஆழ்த்த, தன்னழகினை அழகு செய்யாமல் நம்பிக்கையோடு அவன் வருவான் எனக் காத்திருக்கிறாள். பொருள் தேட ஆடவர் வீடு விட்டு வெளிச் சென்றால் அவர் வரும் வரை காத்திருப்பது அக்கால மரபு. அவ்வாறு சென்றவர் தன்னை மறவாது திரும்புவார் எனக் கண்ணகி கோவலன் முன் சொன்ன இன்மொழிகளை நினைந்து துயரை மறைத்து வாழ்ந்தாள். அது
== 36 سس

பெண்மையின் தனிச்சிறப்பு: குலப்பெண்களின் பயிற்சி; வாழ்வின் செம்மை நெறி.
குலமாதரும்பரத்தையரும்:
திங்கள் மாலை வெண்குடையான் சென்னிசெங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்றறிந்தேன் வாழி காவேரி
மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சி கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற் பென்றறிந்தேன் வாழி காவேரி
உழவரோதை மதகோதை உடைநீரோதை தண் பதங்கொள் விழவரோதை சிறந்தார்ப்பநடந்தாய் வாழி காவேரி விழவரோதை சிறந்தார்ப்பநடந்த வெல்லாம் வாய் காவா மழவரோதை வளவன்தன் வளனே வாழி காவேரி,
கோவலன் பாடும் இப்பாட்டு சிலப்பதிகாரத்தில் வாழ்வு நெறியைக் காட்டும் பாட்டு, பெண்களைப் பற்றி ஒவ்வோர் ஆணும் கொண்டிருந்த கருத்தினை வெளிப்படுத்தும் பாட்டு. அக்கருத்து இன்றுவரை மாறாதிருப்பதும் அப்பாட்டிற்குச் சிறப்புத் தருவதாகும். அப்பாட்டு இடையில் கோவலன் வாழ்விலே தொடர்பு கொண்ட மாதவியைத்தான் சிந்திக்க வைத்தது. பெண்களுக்குரிய குணநலத்தைப் பிரித்து மாதவி பார்க்கின்றாள். அவள் பயிற்சி பெறாத புதுப் பண்பு அது. சிலம்பில் இக்கருத்தினை இளங்கோவடிகள் வெகு துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் சமூகத்தில் பல்வேறு பிரதி நிதிகளாகப் பல பெண்களைத் தமது காவியத்தில் அறிமுகம் செய்த இளங்கோவடிகள் மாதவியையும் கண்ணகியையும்
சிறப்பான பாத்திரங்களாக்கியுள்ளார். கண்ணகிக்கும்
است 37 =

Page 24
மாதவிக்குமிடையேயிருந்த வேறுபாட்டினை நுணுக்கமாகப் புலப்படுத்துகிறார். குலமாதர் பண்புதான் இளங்கோவடிகள் சிறப்பித்த பண்பாகச் சிலப்பதிகாரத்தில் விளங்குகின்றது. பரத்தையர் குலத்தில் பிறந்தவள் அம் மரபிலே ஊறியவள், குலப் பெண்ணுக்குரிய பண்புகளைப் பேணும் ஆற்றல் அற்றவள் என்பதை இளங்கோவடிகள் எடுத்துக் காட்டுகிறார். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் குலப்பெண் நின்று இயங்குவது போலப் பரத்தையர் குலப் பெண்ணால் இயங்குவது கடினம் என்பதை அவர் நன்கு புலப்படுத்திக் காட்டுகிறார். மாதவியின் வரலாற்றைக் கோவலனோடு இணைத்து அவள் குலப்பண்பினை அழகாக விளங்கியுள்ளார். கோவலன் பாடிய கானல் வரிக்கெதிராக மாதவி பாடிய பாடல்
மூலம் அதனை யாவரும் உணரவைக்கிறார்.
மாதவி கோவலன் பிரிவு:
நுளையர் விளரி நொடி தருந்தீம்பாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல் கொளைவல்லாய் என்னாவிகொள்வாழி மாலை
பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நிழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றாவேந்தன் எயிற்புறத்து வேந்தனொடென்னாதி மாலை
பையுள் நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை மாலைநீயாயின் மணந்தார் அவராயின்
ஞாலமோ நல்கூர்ந்ததுவாழிமாலை.

இப்பாட்டைக் கேட்ட கேர்வலன் மாதவியை அணைத்த கையை எடுத்து அவளைப் பிரிந்தான். மனைவியின் பண்பு அவன் ஞாபகத்திற்கு வருகிறது. மாதவி யாழில் மீட்டிய இசை அவள் வாழ்வையே அழிக்கிறது. கோவலன் மனம் திரும்பாமல் நேரே மனைவியிடம் தான் செல்கிறான். தன்னிலையில் தன்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய குணப் பண்பு கண்ணகியி டந்தான் உண்டு என்பதை அவன் உணர்ந்தான். இனிய அமுதோடு நஞ்சு கலந்தாற் போல் கோவலன் மாதவியிடம் கண்ட இன்பம் சிதைகிறது. கண்ணகியின் வாழ்வில் தான் கலந்த நஞ்சினைக் கோவலன் அப்போதுதான் உணர்கிறான். அவன் வாழ வேண்டுமென எண்ணுகிறான். மதுரை சென்று புதுவாழ்வளிக்க விழைகிறான். கண்ணகியின் "சிலம்புள கொண்ம்" என்ற வார்த்தை அமுதமாக அவன் செவியில் விழுகிறது. அவனியில் மீண்டும் இன்பம் காணலாம் என்ற நம்பிக்கையோடு மதுரைக்கு வருகிறான்.
கோவலன் பிரிவின் உண்மையை மாதவியும் அப்போதுதான் உணருகிறாள். தன் கர்வம் அடங்குகிறாள். குலமகளுக்குரிய குணப் பண்பினைக் காட்ட முற்படுகிறாள். தன் மனத்தைக் கோவலனுக்கு விளக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாள். பெண்ணுக்குரிய பொறுமையை மறந்துவிட்ட அவள் முயற்சி பலனளிக்கவில்லை. அனுப்பிய தூதினையும் கோவலன் மறுக்கிறான். மனம் விட்டெழுதிய மடலையும் படிக்கிறான்.
"அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கென்பிழைப்பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"
== 39 سس

Page 25
மாதவி தான் செய்த குற்றத்தை நினைத்துப் பார்த்திருக்கிறாள். கண்ணகிக்கும் தனக்குமுள்ள வேறுபாட்டையும் உணர்கிறாள். காலம் கடந்த அவள் அறிவால் என்ன பயன்? கோவலன் வாழ்வு சிதைகிறது. பெண்ணின் நலம் அவள் பால் இருந்திருந்தால் ஒரு குடும்பம் சிதையாது பாதுகாக்கப்பட்டிருக்கலாம். ஆணின் முன்னேற்றத்தை, சிறப்பை அவள் கவனிக்கவில்லை. அவள் அன்பு நஞ்சு போன்றது. தன்னைச் சார்ந்தவர்களை அழிக்கும் தன்மையது. கண்ணகி தன் வாழ்வில் மாதவி கலந்த நஞ்சை நெஞ்சத்தில் அடைத்துக் கொண்டாள். கோவலன் மீது பழி வந்தபோதும் அதைத் துடைத்தெறிந்தாள். மாதவி கலந்த நஞ்சை அவள் கோவலன் மீது படாது பாதுகாத்தாள். அவனை ஏற்று, குடும்ப விளக்கினைப் பிரகாசிக்க வைத்தாள். அவனை மன்னித்து வாழ்வு நெறியை வையகத்திற்கு உணர்த்துகிறாள். ஆயர்பாடியிலே அதனை உணர்த்தினாள். ஆயர்பாடியிலே மாதவி வீட்டிலே அன்பு நெறியினைக் காட்டுகிறாள். தன் பிழை உணர்ந்து மனந் திறந்து உரையாடிய கோவலன் மாதவியிடம் மன்னிப்புக் கோருகின்றான்.
கண்ணகியின் அன்பு மனம்:
"எம்முதுகுரவர் என்னுற்றனர் கொல்? மாயங்கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கியாவதும் அறியேன் வருமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கும் நன்னெறியுண்டோ? இருமுதுகுரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன். வழுவெனுறுப்பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என் செய்தாய்?"
= 40 ത്ത

கோவலன் கேள்விகள் கண்ணகியின் நெஞ்சத்துக் கவலை யினை வெளிக்கொணர்ந்து விடுகின்றன. கணவன் அன்பி னைப் பெறாத சந்தர்ப்பத்து, தான் எவ்வாறு அரற்றியிருந்தேன் என்பதை அழகாக எடுத்துரைக்கிறாள். மற்றவர் தன் துயரம் அறியாது மறைத்து வாழ்வாரது வாழ்வு அவள் மனதில் தோன்றுகிறது. அதனைச் சொல்லிலே வடித்துக் காட்டுகிறாள். "அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த்தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லாமுனிவிகந்தனனா அற்புளஞ்சிறந்தாங்கருள்மொழியளைஇ எற்பாராட்டயானகத்தொளித்து நோயும் துன்பமும் நொடிவது போலுமென் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் போற்றா வொழுக்கம் புரிந்தீர். யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்று எழுந்தனன் யான்" கண்ணகியின் இந்தப் பதில் கோவலனின் உள்ளத்துக் கதவுகளைத் திறக்கிறது. தன்னால் எவ்வளவு மனக்கவலையை அவள் அடைந்தபோதும் தன்னை வெறுக்காமல் பின் தொடர்ந் ததை எண்ணுகிறான். அவள் அன்பு மனம் அவனை வியப்பி லாழ்த்துகிறது. குடிமுதற் சுற்றத்தையும் குற்றிளையோரையும் அடியோர் பாங்கையும், ஆயத்தையும் நீங்கி நாணமும் மடமும் நல்லோர் வாழ்த்தும் பேணிய அற்புதமே பெருந்துணையாக வந்த அவள் தோற்றம் அவன் மனத்தில் இன்பத்தை விளைவிக் கின்றது. இனிய வார்த்தை கூறி அன்போடு அணைத்துச் சீராடிச் சிலம்பின் ஒன்று கொண்டு போய் விற்று வருவேன் என்று கூறுகின்றான். அவன் கண்கள் நீரைச் சொரிகின்றன. பனி
- 41 -

Page 26
கரந்த கண்ணனாகக் கண்ணகியைப் பிரிந்து செல்கிறான். கண்ணகி அவன் அன்புறவை மனதில் நினைத்துக் காத்து நிற்கிறாள். ஆய்ச்சியர் குரவையொலி அவள் செவியில் அமுதமாகப் பாய்கிறது.
"மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான் போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே
மடந்தாழுநெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்ற தொடர்ந்தாரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயண வென்னா நாவென்ன நாவே.
குடும்ப ஒற்றுமைக்கு வழி:
இளங்கோவடிகள் கண்ணகியினூடாகக் காட்டுகின்ற இல்லறம் எனும் இனிய அறம் இன்றும் நடைபெறுவதொன்று. அந்த அறத்தைச் செவ்வனே கற்க வேண்டின் அருந்தமிழிலக்கி யங்களை ஆழமாகக் கற்கவேண்டும். அவற்றிடையே அகலமாகக் கிடக்கும் வாழ்வு நெறிகளை உணர வேண்டும். அவற்றினை இன்றைய நடைமுறை வாழ்வியலோடு இணைத்து விடவும் வேண்டும். கோவலன் வாழ்வில் இனிய திருப்பத்தைத் தன்னால் ஏற்படுத்த முடியுமென எண்ணினான். ஆனால்
ത്ത 42 -

அவன் செய்த வினை அவன்ரின் முடிவுக்கே காரணமாகிறது. சிலம்பு விற்கச் சென்றவன் திரும்பவில்லை. வானுலகமே சென்று விட்டான். தீதேயறியாத கண்ணகி அவனை நிரந்தரமாகப் பிரிகின்றாள். அவனைப் பிரிந்த நிலையிலும் அவன் புகழுக்காகவே பாடுபடுகிறாள். கொலைக் குற்றத்திற்கு அநியாயமாக ஆளாகிய கோவலன் பழிதுடைக்கப் பாண்டிய மன்னனையே எதிர்த்து வாதாடுகிறாள்.
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறுஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுநூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்.
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் என்ற அவள் அழுகைக் குலப் பிறப்பாட்டியின் குணப் பண்பினை விளக்கி நிற்கிறது. தன் கணவன் தனக்குத் துன்பத்தையே கொடுத்தபோதும் அவன் மீது தான் கொண்ட அன்பு மாறாமல் கண்ணகி வாழ்ந்தாள். அந்த மனப்பக்குவம் தான் குடும்பத்தின் ஒற்றுமைக்கு வழிசெய்யும். இளங்கோவின் முக்கிய குறிக்கோளும் இதுவே. உரைசால் பத்தினியாகக் கண்ணகியைக் காவியத்தில் உயர்த்தி வாழ்க்கை நெறியை உணர்த்துகிறார். ஈற்றில் அவள் தெய்வமானதையும் சிறப்பிக் கின்றார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்குக் கண்ணகி எடுத்துக் காட்டாகிறாள். கொடுங்கோல் அழித்து கணவருக்குற்ற பழியைத் துடைத்து உயிரோடு விண்ணகம் புகுந்த கண்ணகி பத்தினித் தெய்வமாகின்றாள். பாண்டி மாதேவி கணவன் இறந்தவுடன் தானும் இறந்து பத்தினிப்
H 43

Page 27
பெண்ணாகிறாள். கண்ணகி வணக்கத்துக்குரியவளாகின்றாள். பாண்டிமாதேவி போற்றுதலுக்குரியவளாகின்றாள்.
அமுதிலே நஞ்சைக் கலந்தவளான மாதவியே கண்ணகி யைப் போற்றுகின்றதை மணிமேகலை காட்டுகின்றாள். "பத்தினிப் பெண் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து அத்திறத்தாரும் அல்லள் எம் ஆயிழை கணவற்குற்ற நெடுந்துயர் பொருசார் மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணிராடிய கதிரளவன முலை திண்ணிதிற் திருகிற் தீயழல் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய மா பெரும் பத்தினி" என மாதவி வாயாரப் புகழ்கிறாள். தன் குற்றம் உணர்ந்த மாதவி வாழ்வு நெறியை இன்று போற்ற முடியாது. துன்பத்தைத்தானே தேடித் துறவினை அதற்கு மாற்றாகக் கண்ட மாதவியின் வாழ்வு நெறியினை விட கண்ணகியின் வாழ்வு நெறி உயர்ந்தது. உலகிற்கு ஏற்றது. கண்ணகியின் கதையைக் கற்று நாம் நெஞ்சிற் கொள்ள வேண்டியவற்றை இறுதியில் வரந்தருகாதையில் இளங்கோவடிகள் தொகுத்துக் கூறுகிறார். மல்லல்மாஞாலத்து வாழும் வழி இதுதான் என வரையறை செய்துள்ளார்.
இதனையே "தேனில்ஊறிய செந்தமிழின் சுவை தேடும் சிலப்பதிகார மனித ஊனிலே எம்முயிர் உள்ளளவும் நிதம் ஒதி உணர்ந்தின்புறுவோமே" எனக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையும் சிறப்பித்துக் கூறுகிறார்.
"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ வாழியரோ வாழி வருபுனல் நீரிவையை சூழு மதுரையார் கோமன்தன் தொல்குலமே மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ வாழியரோ வாழிவருபுனல் நீர்த் தண்பொருகை சூழ்தரும் வஞ்சியார் கோமான்தன் தொல்குலமே.
- 44 m.

5.கடலாடுகாதை ஒருவாழ்வியல் திருப்புமுனை
தமிழ் மொழியில் தோன்றிய காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிறப்பானது. இருபதாம் நூற்றாண்டின் புதுமைக் கவிஞன் "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு' என்று அதன் பெருமையைப் பாடியுள்ளான். தமிழின் முதற் பெருங் காப்பியம் சிலப்பதிகாரம். மூன்று நாடு பற்றியதாப் மூவேந்தர்க்கும் உரியதாக விளங்குவது. புகார், மதுரை, வஞ்சி என்னும் மூன்று நாட்டுத்தலை நகரங்களையும், மூன்று காண்டங்களின் பெயராகவும் கொண்டுள்ளது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் பயின்று வருவது. உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்புடையது. தமிழ்நாட்டு நிலத்து மக்கள் வாழ்வியலை எடுத்துரைப்பது. மக்களின் பழக்க வழக்கங்கள், பலவகையான சமயத்திறங்கள், அயல்நாட்டுத் தொடர்புகள், தமிழக ஆட்சிமுறைகள், மன்னர் வரலாறு, தமிழ்மொழியின் ஆற்றல் போன்ற பல செய்திகளைத் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கியத்துறையில் புதுமையாக ஒரு குடும்பப்பெண்ணான கண்ணகி காவியத் தலைவியாகவுள்ளாள். துறவியான இளங்கோவடிகள் நூலின் குறிக்கோளாக மூன்று விடயங்களைக் கூறியுள்ளார்.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதுஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுTஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என"
எனச் சிலப்பதிகாரப் பதிகத்திலுள்ள அடிகள் அத ை55
ത്ത് 45 -

Page 28
விளக்கியுள்ளன. இளங்கோவின் இலக்கினைச் சிலப்பதிகாரம் நாடகக்காப்பியமாக அமைந்து நிறைவு செய்துள்ளது. பல காட்சிகளாக காதைகள் அமைந்துள்ளன. பல பிரதிகளை ஒப்புநோக்கி சிலப்பதிகாரத்தை நூல்வடிவிலே 1892 ஆம் ஆண்டு உவே.சாமிநாதையர் பதிப்பித்தார். இளங்கோவின் இலக்கையும் நோக்கையும் அவர் வருமாறு தமது பதிப்பிலே குறிப்பிட்டுள்ளார்.
அரசர் நீதியிற் சிறிது பிழைப்பினும் அவரை அறக் கடவுள் கூற்றாய் நின்று கொல்லுமென்பதும் கற்புடைய மகளிரை மக்களேயன்றித் தேவரும் முனிவருந் துதித்தல் இயல்பென்பதும் இருவினையும் செய்த முறையே செய்தோனை நாடிவந்து தம்பயனை நுகர் விக்குமென்பதும் ஆகிய இம்மூன்றினையும் இவ்வுல கத்தார்க்குத் தெரிவித்தற் பொருட்டே இளங்கோவடி களால் செய்யப்பட்டது. மேற்கூறிய மூன்று பகுதியையும் சிலம்பு காரணமாகத் தெரிவித்தலின் இந்நூல் சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெற்றது. இன்னும் இந்நூல் முத்தமிழும் விரவப்பெற்றதாதலின் இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யு ளென்றும் நாடகவுறுப்புக்களை உடைத்தாதலின் நாடகக்காப்பியமென்றும் உரைப்பாட்டும், இசைப் பாட்டும் இடையிடையே விரவப்பெற்றதாதலின் உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் என்றும் பெயர்பெறும். (சிலப்பதிகாரமூலமும் அடியார்க்கு நல்லார் உரையும் முகவுரை) முப்பது காதைகளாக அமைக்கப்பட்ட சிலப்பதிகாரம் கூறும் கதை கண்ணகி, கோவலன், மாதவி என்னும் மூவரது வாழ்வியல் பற்றிக் கூறுகிறது. முதலாவது காதை மங்கல வாழ்த்துப்பாடலென கோவலனும் கண்ணகியும் திருமணம்
செய்து கொண்டமையைக் கூறுகிறது. அவர்களின் குடும்பப்
= 46 -

பின்னணியும் குணநலன்களும் அக்காதையால் அறியப்படு கின்றன. 16 வயதுடைய கோவலனும் 12 வயதுடைய கண்ணகியும் திருமணம் செய்து மனையறம் செய்த மாட்சியை அடுத்து அமைக்கப்பட்ட மனையறம்படுத்தகாதை காட்டுகிறது. கணவனும் மனைவியுமாக இருவரும் மகிழ்வோடு வாழ்ந்த நிலையை இளங்கோவடிகள் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். மனைவியின் அழகையும் குணத்தையும் பாராட்டிக் கோவலன் பேசுகிறான்.
"மாசறு பொன்னே வலம்புரிமுத்தே காசறுவிரையே கரும்பே தேனே அரும் பெற்ற பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெருமடமகளே மனையிடைப் பிறவா மணியே என்கோ வலையிடப்பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங்கூந்தல் தையல் நின்னை
(சிலம்பு: ம.அ.ப.காதை) கோவலன் புகழ்ச்சி கண்ணகிபால் அவன் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இளங்கோவடிகள் கோவலன் கண்ணகியிடம் பேசியவற்றை 'உலவாக்கட்டுரை என்று குறிப்பிடுகிறார். கணவன் புகழும் வகையில் மனையறம் செய்த கண்ணகி கேண்மையோடு அறம் செய்து விருந்தின ரைப்பேணி இயல்பான வாழ்வு நடத்துகிறாள். குடும்ப வாழ்வியல் கண்ணகியின் மூலம் இளங்கோவடிகளால் வரையறை செய்யப்பட்டுள்ளதை சிலப்பதிகாரத்திலே காண முடிகிறது. சில ஆண்டுகள் இத்தகைய வரையறைக்குட்பட்ட வாழ்வு கண்ணகி வாழ்ந்தாள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
"வார் ஒலி கூந்தல் பேரியல் கிழத்தி மறப்பரும் கேண்மையோடு அறப்பரிசாரமும் விருந்து புறந்ததுஉம் பெரும் தண்வாழ்க்கையும்
- 47

Page 29
வேறுபடு திருவின் வீறு பெறக்கான உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க யாண்டு சில கழிந்தன. இற்பெரும் கிழமையில் காண்தகு சிறப்பில் கண்ணகி தனக்கென"
(ம.அ.ப.காதை) இந்நிலையில் கோவலன் கண்ணகியோடு நடத்திய இல்வாழ்வு அவனுக்கு நிறைவானதாக இருந்தது என்றே கொள்ளலாம். ஆனால் அடுத்து அமைந்துள்ள அரங்கேற்று காதை வரையறைசெய்து வாழ்ந்த குடும்ப வாழ்வியல் தடம்புரள்வதைக் காட்டுகிறது. கணிகையர் குலத்துப் பிறந்த மாதவி ஆடல், பாடல், அழகு மூன்றும் குறைவற நிறைந்தவள். அவள் ஆடல் அரங்கேற்றம் நாட்டு மன்னன் முன்னிலையில் நடைபெறுகிறது. தனது ஆடல் திறமையால் தலைக்கோல் பட்டமும் ஆயிரத்தெண்கழஞ்சு பொன்மாலையும் பெற்ற மாதவி பலராலும் புகழப்பட்டாள். அரங்கேற்றத்திற்குக் கோவலனும் போயிருந்தான். புகழ்பெற்ற வணிக்குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற சிறப்பினாலும் ஆடல், பாடல் கலைகளில் விருப்புற்றவன் என்ற நிலையிலும் கோவலன் மாதவியின் அரங்கேற்றத்துக்குச் சென்றிருந்தான். ஆனால் அவன் தன் மனைவியான கண்ணகியை அழைத்துச் செல்லவில்லை. இத்தகைய கலைநிகழ்ச்சிக்குக் குடும்பப்பெண்கள் இணைந்து செல்லும் வழக்கம் இருக்கவில்லைப்போலும்.
அரங்கேற்றம் கோவலன் எண்ணத்தில் ஒரு குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்பும் வீடு செல்லாமல் நகரத்திலே திரிந்து கொண்டிருந்தான். கண்ணகியின் நினைவை ஆழப்புதைக்கும் மாதவியின் அழகும் ஆடலும் அவனைத் தடுமாற வைத்தன. அந்த வேளையில் அரசன் மாதவிக்குப் பரிசாகக் கொடுத்த "மாலையை
வாங்குவோர்க்கு மாதவி உரிமையாவாள்" என்ற கூனியின் குரல்
- 48 m

கோவலன் எண்ணத்தை நெறிப்படுத்தியது. அவன் வைத்தி ருந்த செல்வம் வழிப்படுத்தியது. கோவலன் உரிய பொன்னைக் கொடுத்துக்கூனியிடம் மாலையை வாங்கி அவளோடு மாதவி மனைக்குச் செல்கிறான். அவன் நினைவில் புதிய தடம் பதிந்தது. இளங்கோவடிகளின் புலமைத்திறன் அதனை அழகாய் எடுத்துரைக்கிறது.
"மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமனை புக்கு மாதவிதன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுதல் அறியா விரும்பினன் ஆயினாள் வடுநீங்கு சிறப்பியல் தன் மனை அகம் மறந்தென்"
(அ.காதை) கண்ணகியோடு மனை அறம் செய்த கோவலன் மாமலர் நெடுங்கண்ணுடைய மாதவியைக் கண்டவுடன் மனம் திரிபடைகிறான். மாதவியை அவன் பரத்தை மணமுறை மைக்கேற்ப மணம் செய்கிறான். அந்த உரிமையோடு புதிய வாழ்வியலைத் தொடங்குகிறான். கண்ணகியை அவன் மணந்த போது மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து ஏற்றான். அத்திருமணத்திற்கு இருமுதுகுரவரும் ஏனைய உற்றார் உறவினரும் சாட்சியாய் நின்றனர். ஆனால் மாதவிக்கு அவன் மாலை சூட்டியபோது, தான் ஏற்கனவே கண்ணகியின் கணவன் என்பதை முற்றாக நினைவிலிருந்து அகற்றி விட்டான். குற்றமற்ற வீட்டையும் மனைவி கண்ணகியையும் மறந்து விட்டான். மாதவி என்னும் புதிய அழகின் வயப்பட்டு நின்றான். கணிகையான அவள் ஆடலிலும், பாடலிலும் மயங்கி விடுதலறியா விருப்புடன் புதிய வாழ்வில் புகுந்து கொண்டான்.
இந்தப் புதிய வாழ்வு கோலவனுக்கும் மாதவிக்கும் மட்டற்ற மகிழ்வைத் தந்தது. இந்திரவிழவு ஊரெடுத்தகாதை
ത്ത 49 -ത്ത

Page 30
என இளங்கோவடிகள் தொடுத்து அமைத்த காதையில் கோவலன் வாழ்வியல் அடைந்த மாற்றம் உணர்த்தப் பட்டுள்ளது. ஆனால் இந்திரவிழவு ஊரெடுத்த காதைக்கு முன்பு அந்திமாலைச் சிறப்புச் செய்காதை குடும்ப வாழ்வியலில் இன்பம் சேர்க்கும் மாலைப்பொழுதை எடுத்துரைக்கும் நிலையில் அமைநதுள்ளது. கணவரைப் பிரிந்த மகளிர் அவரொடு சேர்ந்து மகிழும் மாலைக்காலம் ஆனால் பிரிந்த காதலியர்க்குத் துன்பம் தருவது. மாதவி கோவலனோடு இணைந்தமையால் மகிழ்வாய் இருக்கிறான். கோவலனைப் புலவியாலும் கலவியாலும் மகிழ்வூட்டுகிறாள். கண்ணகியோ கோவலனைப் பிரிந்து இருந்தமையால் காலிற் சிலம்பு அணியாமல் நெற்றியில் திலகம் இடாமல் கண்ணுக்கு மைதீட்டாமல் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமல் முகத்தில் சிரிப்பின்றி இருக்கிறாள். குடும்பவாழ்வில் கோவலன் பிரிவு கண்ணகிக்கு பெரும் துன்பம் தந்தது. கோவலன் மாதவியுடன் குடும்பம் நடத்தும் செய்தியை கண்ணகி அறிந்திருந்தாள். ஆனால் அவளால் ஒன்றும் செய்யமுடியாத நிலை. கையறு நெஞ்சத்தோடு கலங்கியிருந்தாள். பெற்றோரால் இணைக்கப் பட்ட குடும்பம் கணிகைமாதவியால் பிரிந்தது. அதிலும் கண்ணகிக்கு எதுவுமே தெரியாத நிலையில் கோவலன் ‘மணிமேகலை’ என்னும் பெண் குழந்தையையும் மாதவி மூலம் பெற்றெடுத்து தந்தை நிலையில் வாழ்வுநடத்துகிறான்.
இந்திர விழவு ஊரெடுத்த காதையில் இக் குடும்ப வாழ்வியல் நடைமுறையை இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார். பரத்தமை ஒழுக்கம் பூண்ட கணவர் தமது மனைக்குத் திரும்பிச் செல்லும் போது மனைவியர் ஊடல் தீர்க்க விருந்தினரை அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்துள்ளது. இந்த வழக்கமே கோவலன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையைக் கண்ணகிக்கு ஊட்டியிருந்தது. பரத்தையர்
سے 50 سے

தொடர்புடைய கணவரையும் மனைஅறம் காக்கும் கற்புடைய மனைவியர் ஏற்று வாழ்ந்த வாழ்வியல் கோவலனும் அறிந்த ஒன்றே என்பதை இளங்கோ மறைமுகமாக இந்திரவிழவு ஊரெடுத்தகாதையில் உணர்த்துகிறார்.
"வடமீன் கற்பின் மனையுறை மகளிர் மாதர் வாள்முகத்து மணித்தோட்டுக் குவளைப் போது புறங்கொடுத்துபோகிய செங்கடை விருந்தின் தீர்ந்திலதாயின் யாவதும் மருந்து தரும் கொல் இம்மாநில வரைப்பென கையற்றுநடுங்கும் நல்வினை நடுநாள்"
(இ.வி.ஊத.காதை) குடும்பப் பெண்கள் கணவர்மாரது பரத்தமை ஒழுக்கத்தால் கோபமுறும்போது கடைக்கண் சிவப்பர். அதனைத் தீர்க்க விருந்தினரை அழைத்துச் செல்லும்போது மனைவியர் கோபம் தீரும். ஆனால் அச்சமயம் கோபம் தீராவிட்டால் பின்னர் கோபத்தைத் தீர்க்க வேறு மருந்து இந்த மாநிலத்தில் உள்ளதோ? என்றும் வருந்தும் கணவரையும் இனம் காட்டுகிறார் இளங்கோ. இக்காதையில் கண்ணகியையும் மாதவியையும் ஒருங்கே காட்சிப்படுத்திக் காட்டுகிறார்
கண்ணகி கருங்கணும் மாதவிசெங்கனும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீருகுத்தன. எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென"
(இ.வி.ஊ.எ.காதை) இங்கு கண்ணகியின் கருங்கண்கள் பிரிவினால் நீருகுத்தன. மாதவியின் செங்கண்கள் இன்பமிகுதியால் நீருகுத்தன. அத்தோடு கண்ணகிக்கு இடதுகண் துடிக்கின்றது. மாதவிக்கு வலது கண் துடிக்கின்றது. கோபத்தால் கண்ணகியின் கண்கள் நிறம் மாறவில்லை என்பதைச் சுட்டும் இளங்கோ
காமமிகுதியால் மாதவியின் கண்கள் செந்நிறமானதையும்

Page 31
சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் மரபான ஒரு நம்பிக்கையையும் இணைத்துள்ளார். பெண்களுக்கு இடது கண் துடிப்பது நன்மைக்கு அறிகுறி. வலது கண்துடிப்பது தீமைக்கு அறிகுறி. கோவலன் வாழ்வியலில் ஒரு திருப்பம் ஏற்பட இருப்பதை முன் இங்கு கூட்டியே அறிவித்து விடுகிறார்.
அதனைக் கடலாடுகாதை என ஒரு காதையை அமைத்து
மறைமுகமாக உணர்த்தியுள்ளார். காதல் வாழ்க்கையில் ஊடல் என்னும் உணர்வு இன்றியமையாதது. ஆனால் அது அளவோடு இருக்கவேண்டும். கண்ணகி கோவலனுடன் ஊடல் கொண்டதாகச் செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. ஆனால் மாதவி கோ வலனோடு ஊடியுள்ளாள். இளங்கோ கடலாடுகாதையில் கோவலன் ஊடல் கொள்வதை எடுத்துக் காட்டியுள்ளார். கோவலன் ஊடல் கொள்வதற்கு உரிய சூழல் கடலாடு காதையில் தான் அமைந்திருந்தது. இளங்கோ மாதவியின் ஊடற்பண்பை அந்திமாலைச் சிறப்புச் செய் காதையிலே
"நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்தாங்கு
ஆர்வ நெஞ்சமொடுகோவலர்க்கு எதிரிக்
கோலங்கொண்ட மாதவி."
(அ.மா.சி.செ.காதை)
என அவர் கூறுவது கோவலனுக்கு மாதவிமேல் இருந்த விடுதலியலாத பெருவிருப்பை உணர வழி செய்கிறது. ஏற்கனவே மணமுடித்திருந்த கோலவன் தனது பரத்தமை யொழுக்க நிலையிலே மாதவியிடம் அடங்கிக் கிடந்தான். மாதவியுடன் அவன் நடத்திய வாழ்வு குடும்பவாழ்வு அல்ல. போக நிலையான வாழ்வு. அதிலும் ஏற்கனவே திருமணமான கோவலன் மாதவியின் இல்லத்திலே தன் மனைவியை மறந்து வாழ்ந்தான். கோவலனுக்கு மாதவி தனக்கு மட்டுமே உரியவள்

என்ற எண்ணம் இருந்தது. அதனால் குலமகள் போல மாதவி குழந்தையைப் பெற்ற போது மனமகிழ்ந்தான். எனினும் மாதவி ஒரு குலமகளாக வாழ்க்கை நடத்த விரும்பவில்லை. தனது கலைப்பயிற்சியையும் அழகையும் எல்லோரும் புகழவேண்டும் என்று விரும்பினாள். அந்த விருப்பத்தை நிறைவேற்றமீண்டும் நடனமாடுகின்றாள்.
கடலாடுகாதையின் அமைவிடம் கோவலன் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ இருப்பதை உணர்த்தும் பாங்கில் அமைந்துள்ளது. இமயமலை வடசேடிக் கண் வாழும் வித்தியாதரன் இந்திரவிழாவைக் காண்பதற்காக தன் காதலியு டன் புகாருக்கு வருகிறான். பல்வேறு இடங்களை யெல்லாம் அவளுக்குக் காட்டியபடி வருகிறான். மாதவியின் ஆடல் இந்திரவிழாவில் இடம்பெற இருப்பதையும் தன் காதலிக்குக் கூறி மாதவியின் முற்பிறப்புக் கதையையும் உணர்த்துகிறான்.
"நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்காளாகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்கர வல்குல் ஆடலும் காண்குதும்" (க.ஆ.காதை) முற்பிறவியிலே மாதவியின் முன்னோர் ஆகிய மாதவி இந்திரன் சபையிலே நடனமாடிய உருப்பசி இந்திரன் மகன் சயந்தன்மேல் காமநோக்குடன் ஆடியமையால் சாபம் பெற்று மண்ணிலே தோன்றியவள். எனவே காமவழிச் சென்றமையால் கலை
தூய்மையற்றுப் பிறழ்ச்சியடையும் நிலையுருவாகிற்று. ஆடல்

Page 32
கவனம் குலையும்போது அனர்த்தம் விளையும் என்பதை
இப்பழைய கதைமூலம் இளங்கோ விளக்கியுள்ளார்.
இந்திரவிழாவிலே மாதவி மீண்டும் நடனம் ஆடுகிறாள். அவள் ஆடிய 11 வகையான ஆடல்களையும் இளங்கோ காட்சிப்படுத்தியுள்ளார். மாதவியின் ஆடல் கோவலன் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தனக்கு உரிமையான மாதவி பிறரை மகிழ்விக்க ஆடுவது வெறுப்புணர்வைத் தருகிறது. மாதவியின் நடனக்கோலம் கோவலன் மனதில் ஊடல் உணர்வைத் தூண்டியது. மாதவி அதனை உணர்ந்தாள். அதனால் நடனம் முடிந்தபின்னர் கோவலன் முகக்குறை கண்டு அதனைத் தீர்க்க முயற்சி செய்கிறாள். அதனை இளங்கோ
"கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து
பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தாள்
(க.ஆ.காதை)
என காட்சிப்படுத்தியுள்ளார். கோவலன் மாதவியுடன் வாழ்ந்த வாழ்வில் ஊடல் பெரும் பங்கை வகித்துள்ளது. குடும்ப வாழ்வில் கணவன் மனைவியர் இடையே ஏற்படும் பிணக்கை ஊடல் என்று கொள்ளாமல் ஊடல் என்பது காமம் சார்ந்தது என்பதை இளங்கோ உணர்த்தியுள்ளார். கண்ணகியோடு வாழ்ந்த காலத்தில் கோவலன் இத்தகைய ஊடல் உணர்வுடன் இருந்ததாக இளங்கோ குறிப்பிடவில்லை. கோவலன் முகக்குறிப்பையுணர்ந்து செயற்படும் ஆற்றல் மாதவியிடமி ருந்தது. எனவே தான் ஆடியதைக் கோவலன் விரும்பவில்லை யென்பதை உணர்ந்த மாதவி அவனை மகிழ்வுறுத்த கடல் விளையாட்டுக்கான அழைக்கின்றாள். கோவலன் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீங்க கடல் விளையாட்டு உதவும் என நம்புகிறாள். இருவரும் கடல் விளையாட்டுக்காணச் செல்கின் றனர். அவ்வாறு செல்லுகின்றபோது பல்வேறு காட்சிளைக் காணுகின்றனர்.
- 54 سیست

இடைவீதிகளிலே காணும் காட்சிகள் வணிகனான கோவலனின் மனதை அசைக்கின்றன.
"கோடிபல அடுக்கிய கொழுநிதிக்குப்பை மாடமலிமறுகிற் பீடிகைத் தெருவின் மலரணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்தாங்கு அலர் கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப இருபுடைமருங்கினும் திரிவனர் பெயரும்"
(க.ஆ.காதை) கடைத்தெருவிலே காணும் காட்சிகள் கோவலன் செய்யத் தவறிய ஒரு கடமையினை நினைவுபடுத்துகின்றன. புலம் பெயர்ந்து கலங்களிலே வந்த பிற நாட்டு வணிகர் பலவகையான கூலங்களைக் கொடிகளெடுத்து விற்பனை செய்கின்ற பாங்கினையும் காணும்போது கோவலன் உள்ளம் வேதனை அடைகின்றது. தனது மனைவாழ்வும் வணிகத் தொழிலும் நினைவுக்கு மீண்டு வருகின்றன. கடற்கரையிலே விளக்குகள் அருகே விற்கப்படும் பண்டங்கள் பலவற்றையும் பார்க்கும் கோவலனுக்கு தான் வணிகம் செய்து வாழ்வு நடத்திய காலம் மீட்டுருவாகிறது. நெய்தல் நிலப்பரப்பின் வளமான பொருட்களையும் பண்டங்களையும் விற்கின்ற வணிகர் கூட்டம் செய்யும் குலத்தொழில் கோவலன் உள்ளத்திலும் தெரிகிறது.
கடல் விளையாட்டுக்காண வருகின்றவர்களுக்கு அங்குள்ள காட்சிகள் மலைப்பையும் மகிழ்வையும் தந்தன. அரசிளங்குமரரும் உரிமைச் சுற்றமும் பரதகுமாரரும் பல்வேறு ஆயமும் ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும் எனப் பலர் கூடிவருகின்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கோவலன் உள்ளத்திலும் உறைந்து கிடந்த பழைய வாழ்வியல் நினைவலை களைத் தட்டியெழுப்பியது. அவனுடைய குடும்ப வாழ்வின்
== 55 س

Page 33
கோணலை அது நினைப்பூட்டியது. கண்ணகியோடு நடத்திய வணிக வாழ்வியலைத் தான் நீண்ட காலமாகத் துறந்து இருந்ததும் உள்ளத்தை நெருடலாயிற்று.
மாதவியின் அணிகலன் புனைந்த அழகும் ஆடலும் ஆரவாரமும் அவனுக்கு வெறுப்பூட்டின. கணவனையன்றிப் பிறரையும் ஆடல் பாடல் மூலம் மகிழ்விக்கவேண்டுமென்ற அவளுடைய குலப்பயிற்சி இப்போது தெளிவாகத் தெரிகிறது. கோவலன் ஊடல் கோபமாக மாற்றம் அடையத் தொடங் குகிறது. மாதவியோடு நடத்தும் குடும்பவாழ்வு பண்பானது அன்று. குழந்தைக்குத் தாயான பின்பும் ஆடல் மூலம் பிறரை மகிழ்விக்கும் மாதவி குணநலன் தீமையானது என்ற முடிவுக்கு கோவலன் வருகின்றான். அவன் மனமாற்றம் முகத்தில் வந்து படிந்து நின்றது. அதனை மாதவி உணர்ந்து கொண்டாள். அவள் தன்னுடைய கலைப்பயிற்சி மூலம் தொழில்நிலை ஒன்றையும் உணர்ந்தவள் எனக் கோவலன் எண்ணிய எண்ணத்தை அவள் உணரவில்லை. இத்தனை காலமும் கோவலன் ஊடியதில்லை. ஆனால் இப்போது அவனுடைய உள்ளத்திலே தோன்றிய சினத்தை மாதவி காணவில்லை. காமநிலையில் அவனை மகிழ்விப்பதே தன்னுடைய கடமை என மாதவி நினைத்திருந்தாள். அவள் உள்ளத்தில் தன் கலைத்திறனை எல்லோரும் காணவேண்டும் என்ற பேரவா நிறைந்திருந்தது. அதனால் இந்திரவிழாவிலே மீண்டும் ஆடினாள். பலருடைய பாராட்டுக்கிடைத்தது. அவள் உள்ளம் மகிழ்ந்தது. கோவலனுடன் இருந்த நிலையைவிட மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அதனை அவள் முகம் காட்டிற்று. இங்கு கோவலனுடன் மாதவி நடத்தும் வாழ்க்கை மனை அறமன்று என்பதை இளங்கோ உணர்த்தியுள்ளார்.
- 56 -

மாதவியின் அழகு பலரும் கண்டு மகிழும் அழகாக விளங்கியது. திருமணத்தின் பின் ஆடல் பாடல் கலைகளைத் தொடர்வது குடும்ப வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும். ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் தான் பொருத்தமானது என்ற எடுகோள் ஒன்றை வலியுறுத்திய இளங்கோ கடலாடுகாதையில் அதற்கான செயற்பாட்டினை தொடக்கி வைக்கிறார். கண்ணகியின் நினைவு கோவலன் உள்ளத்தில் இருந்து மறையக் காரணமாக இருந்த கலையே மீண்டு அவள் நினைவு கோவலன் உள்ளத்திலே தோன்றவும் காரணமாயிற்று என இளங்கோ விளக்கியுள்ளார். கோவலன் மனமாற்றம் கடலாடுகாதையில் மறைமுகமாகச் சுட்டப்படு கிறது. அதேபோன்று மாதவிக்கும் மனையறத்தில் நாட்ட மில்லை என்பதும் விளக்கப்படுகிறது. கணிகையர் குலமும் வணிக குலமும் பொருட்பலத்தால் இணைந்தாலும் வாழ்வியலில் முரண்பாடு தோன்றும். அதனால் அத்தகைய தொரு குடும்பவாழ்வு சிதையும் என்றும் முடிவு செய்யப் படுகிறது.
குடும்பவாழ்க்கையில் மகப்பேறு மிகமுக்கியமானது. கணவன் மனைவியரின் இணைப்புப் பாலமாக குழந்தை விளங்கும். ஆனால் கோவலனின் இரண்டாவது குடும்பவாழ்க்கையில் மணிமேகலை இருந்தும் கூடப்பிரிவு ஏற்படுகிறது. கற்பு நிலையில் கண்ணகியின் காத்திருப்பு கோவலன் உள்ளத்தைத் தொட்டு மாதவியை விட்டு விலகச் செய்தது. ‘விடுதல் அறியா விருப்பு என்னும் காமத்தளை கழன்று விடுகிறது. உடல் வாழ்க்கையைவிட உள்ளத்து வாழ்க்கையே நிறைவானது என்பது கோவலனுக்குத் தெளிவாக விளங்குகிறது. மனையறம் செய்து வாழ்வு நடத்தும் கண்ணகியின் கற்புநிலை தன்னையும் காத்து நிற்பதைக் கோவலன் நன்கு உணர்கிறான். கோவலனின் உள்ளத்துத்
H 57 -

Page 34
தெளிவை மாதவியின் கலைக்கண் காணவில்லை. காம வழியிலே அவன் ஊடலைத் தீர்க்க முடியும் என மாதவி நம்பினாள். அதனால் கடற்கரையிலே புன்னை மரநீழலில் யாழ் பாடி கோவலனை மீண்டும் தன்பால் ஈர்க்க எண்ணினாள். கானல்வரி என்னும் காதையின் தொடக்கமாக வசந்தமாலை யிடம் மாதவி யாழைப் பெற்றுக் கோவலனிடம் கொடுக்கிறாள். பாடலில் அவன் உள்ளத்தை அறிய முற்பட்டாள். அது அவள் அறிந்த கலைவழி. ஆனால் கண்ணகியின் காத்திருப்பு என்னும் பண்பாட்டு வழியே கோவலன் தேர்ந்தவழி என்பதை மாதவி அறியவில்லை. அழகும் இளமையும் மனையறத்திற்குப் போதாது. அன்பும் பண்பும் தேவை என்பதை அவள் உணரவில்லை. கோவலன் கடறக்ரையிலே அதை உணர்ந்து பாடுகின்றான். கானல் வரியாக அது கண்ணகியின் நினைவலைகளிலே அவன் புரண்டு செல்வதை மாதவி அப்போது உணர்கிறாள். அதனால் எதிர்வரி பாடுகிறாள். கலையால் இணைந்த காமவாழ்வு முடிந்தது. கோவலன் மாதவி வாழ்வில் ஒரு திருப்புமுனை தென்பட்டது.
- 58 -

6.கானல்வரி காட்டும் கலை வாழ்வு
சிலப் பதிகாரம் என்னும் பெருங் காவியத்தில் 'கானல் வரி' என்னும் காதை புகார்க் காண்டத்தில் அமைந்துள்ளது. இக்காதையின் பெயர் தனித்துவமானது. சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த சிலப்பதிகாரத்தின் மிகச் சிறந்த பகுதியாக மையமாக கானல்வரி விளங்குகிறது. 'கானல்’ என்பது கடற்கரைச் சோலை. வரி என்பது இசைப் பாடடு. கடற்கரையிலே பாடப்பட்ட இசைப்பாட்டே கானல் வரியாகும். சிருங்காரச் சுவை நிறைந்த அகத்திணை நுணுக்கங்களை எழில் செறிந்த சொல்வரிகளாக இளங்கோ பாடியுள்ளார். கண்ணகியை முறைப்படி மணந்து இல்வாழ்வு நடத்திய கோவலன் மாதவி என்னும் பரத்தையின் ஆடலாலும் பாடலாலும் மயங்கி அவளுடன் வாழ்வு நடத்துகிறான். இல்வாழ்வை விடுத்து கலைவாழ்வு சிறந்ததெனக் கருதி மனையறம் துறந்து மாதவியோடு வாழ்கிறான்.
மாதவி கணிகையர் குலத்தவள். சித்ராபதி என்னும் பரத்தையின் செல்வமகள். கண்டவர் விரும்பும் கட்டழகி. ஆடற்கலையில் தனக்கு இணையில்லாதவள். அவள் வடிவும் வனப்பும் கலைத் தோற்றமாகக் கோவலனைக் கவர்ந்தன. அதனால் அவளைப் பரத்தை மணம்புரிந்து கண்ணகியைத் துறந்தான். மணிமேகலையென்னும் மகப்பேறும் பெற்றான். கண்ணகி கணவன் பிரிவை ஆற்றாது வருந்திய போதும் அவனை வெறுக்காமல் மனத்திலிருத்தி வாழ்ந்தாள்.
பூம்புகாரில் வாழும் மக்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதத்து முழுநிலா நாளன்று இந்திரனுக்கென விழா எடுப்பது
- 59 -

Page 35
வழக்கமாயிருந்தது. விழா முடிந்ததும் கடலாடி மகிழ்வர். கலைகளை ரசிப்பர். இக்கலை வாழ்வு கோவலனையும் மாதவியையும் கவர்ந்திருந்தது. மாதவியின் விருப்புக்கேற்ப கடலாட இரு வரும் வருகின்றனர். மாதவியும் தன் கலைத்திறனை யாவரும் காணப் பதினொரு வகையான ஆடல்களை நிகழ்த்திப் பலருடைய பாராட்டையும் பெற்றாள். சிறுவயது முதல் அவள் பெற்ற பயிற்சியும் நாட்டுமன்னன் அரங்கேறிய போது அளித்த தலைக்கோலும் பரிசும் அவள் கலைவாழ்வை விரும்பக் காரணமாயிருந்தன. கோவலனை மணந்து மணிமேகலை என்னும் மகவைப் பெற்று மகிழ்ந்த போதும் அவள் மனம் இல்வாழ்வை விடக் கலை வாழ்வையே பெரிதும் விரும்பியது. எனவே இந்திரவிழாவில் மீண்டும் ஆடுகிறாள். மாயவனாடும் அல்லி, விடையோன் ஆடும் பாண்டரங்கம், நெடியோன் ஆடும் மல்லாடல், வேல்முருகன் ஆடும் துடியாடல், அயிராணி ஆடும் கடையம், காமனாடும் பேடு, துர்க்கையாடும் மரக்கால், திருமகள் ஆடும் பாவைக்கூத்து என மாதவி ஆடிய ஆடல். கோவலன் உள்ளத்தில் மாதவியின் மீது வெறுப்பைத் தோற்றுவிக்கின்றது. அவள் தன் கலைத் திறனை வெளிப்படுத்த ஆறுவகை ஆடல்களை நின்றாடு கிறாள். ஐந்து வகை ஆடல்களை வீழ்ந்தாடுகிறாள். அதனை வருமாறு விளக்கிக் காட்டலாம்.
நிலை-நின்றாடல் படிதம்-படிந்தாடல், வீழ்ந்தாடல்
1. கொடுகொட்டி - சிவன் பேடு - காமன் 2. பாண்டரங்கம் - சிவன் மரக்கால்-துர்க்கை 3. அல்லியம் - மாயவன் கடையம்-இந்திராணி 4.மல்லாடல் - மாயவன் பாவை-திருமகள் 5. துடி - முருகன் (J5.Lb - L DITUJ GJ6ốT 6. குடை- முருகன்

கடலாடு காதையில் மாதவியின் ஆடல் சிறப்பாக விளக்கப்பட்டுள்ள்து. அங்கு கலை வாழ்வில் கடைப்பிடிக்கப் படும் மரபையும் இளங்கோ பாடியுள்ளார். பதினொரு வகையான ஆடல்களையும் மாதவி ஆடுவதற்கு முன்னர் நடைபெறும் நடைமுறைகளையும் விளக்கியுள்ளார்.
"மாயோன்" பாணியும் வருணப்பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வானூர் மதியமும் பாடி.
(சிலம்பு:கடலாடு:35-37) இதனை உரையாசிரியர் வருமாறு விளக்கியுள்ளனர்.
"பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணி யாவது காத்தற்கடவுளாகிய மாயோன் பாணியென்ப. அது மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைந்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன் இலகெளித் தடவரைக் கரத்தினிலெடுத்தவன் இன நிரைத் தொகை களையிசைத்தலில் அழைத்தவன் முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன் முடிகள் பத்துடை யவன் உரத்தினை அறுத்தவன் உலகனைத் தையுமொரு பதத்திலொடுக்கினன் ஒளி மலர் கழல் தருவதற்கிணியழைத்துமே என்பது" எனவே மாயவனைப் பாடிய பின்னரே ஆடல்களை ஆடுவது அக்காலத்து மரபாக இருந்ததையறிய முடிகிறது. பதினொரு வகை ஆடல்களின் விளக்கத்தை உரையாசிரியர் வருமாறு விளக்கியுள்ளார். 1.கொடு கொட்டி
பாரதியரங்கமெனப் பெயர்பெற்ற சுடுகாட்டிலே தேவர் திரிபுரத்தைஎரியச் செய்ய வேண்டுதலால் வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்டவளவிலே உமையவள் ஒரு பக்கமாகத்
தேவர்கள் யாவரிலும் உயர்ந்த இறைவன் ஆடிய ஆடல்
= 61 -

Page 36
வெற்றிக் களிப்பால் கைகொட்டி நின்று ஆடியது. திரிபுரம் தீமடுத் தெரியக் கண்டு இரங்காது கைகொட் டியாடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கி கொடு கொட்டி எனப் பெயர் கூறப்பட்டது. "கொடு கொட்டி" என்பது விகாரமாயிற்று.
2. பாண்டரங்கம்
தேரின் முன்னிடத்து நின்ற நான்முகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணிற்றையணிந்து ஆடிய கூத்து பாரதி என்பது பைரவியைக் குறிக்கும். பாண்டரங்கம் நிறம்பற்றிய பெயராகும்.
3. அல்லியம்:
கஞ்சனுடைய வஞ்சகத்தை வெல்லுதற் பொருட்டு கரிய நிறத்தையுடைய மாயோன் கஞ்சன் வஞ்சத் தினால் வந்த யானையின் கொம்பை ஒடிப்பதற்கு நின்றாடிய கூத்து.
4. மல்லாடல்:
மாயோன் மல்லனாய் வாணாசுரனாகிய அவுணனைக் கொன்ற மற்கூத்து.
5. துடி:
கரிய கடலின் நடுவே நீரின் அலையே அரங்கமாக நின்று எதிர்த்து முன்நின்ற சூரனின் வஞ்சகத்தையறிந்து அவன் போரைக் கடந்த முருகன் துடிகொட்டி ஆடிய கூத்து.
6. குடை
அவுணர்கள் தாம் போர் செய்ததற்கு எடுத்த
படைக்கலங்களைப் போருக்காற்றாது போகட்டு வருத்தமுற்ற அளவில் அவர்முன்னே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒரு முகவெழினி யாக நின்று ஆடிய கூத்து.

7. குடம்
வானாசுரனது 'சோ' என்னும் நகரவீதியில் சென்று நெருடிய பூமியைத் தாவியளந்த மாயோன் குடங் கொண்டாடிய கூத்து
8. பேடு
ஆண்மைத் தன்மையில் திரிந்த பெண்மைக் கோலத் தோடு காமன் ஆடிய கூத்து. தன் மகன் அநிருத்தனை சிறை மீட்டு காமன் சோ நகரத்தில் ஆடியது.
9. மரக்கால்:
துர்க்கை அவுணர் உண்மைப் போரால் வெல்லுதல் ஆற்றாது வஞ்சப் போரால் வெல்லுதல் கருதி பாம்பு தேள் முதலியன வாய்ப் புகுதலையுணர்ந்து அவள் அவற்றை உழக்கிகளைதற்கு மரக்கால் கொண்டு .கூத்து للا{ا,[9ے
10. பாவை
அவுணர் வெவ்விய போர்க்கோலம் ஒழிய செந்நிற முடைய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய் ஆடிய கூத்து
11. 56)LujLo:
வானபுரமாகிய சோநகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று இந்திராணியென்னும் மடந்தை கடைசியர் வடிவுகொண்டு ஆடிய கூத்து. கடைசியர் என்பது உழத்தியர். வயன் மாதர் என்றும் குறிப்பிடப்படுவர்.
இந்த ஆடல் வகைகளை விளக்க வந்த இளங்கோவடிகள் ஒரு
முறைமையைக் கடைப்பிடித்திருப்பதை உரையாசிரியர் வரு
மாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
"பதினோராடலுள் இறைவன் ஆடிய இரண்டினை முன் வைத்தும் மாயோன் ஆடிய இரண்டினையும் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே

Page 37
அவற்றின் பின் வைத்தும் வென்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துகளின் பின் காமத்தால் சிறைப் பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோன் ஆடிய வினோதக் கூத்தினையும் அதன்பின் அவன் மகனாகிய காமன் ஆண்மை திரிந்து பேடியுருக் கொண்டாடிய கூத்தினையும் பின்னர் பெண் தெய் வங்களுள்ளே முறையே மாயவளும், திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்தும் அவரவர் தகுதிக்கும் ஆண்மை பெண்மைகட்கும் கூத்துகளின் இயல்புகட்கும் பொருந்த முறைப்படுத்தியுள்ள இளங் கோவடிகளின் கிரிப்பியப் புலமை மாண்பு செப்புதற் கரிய தொன்றாகும். இளங்கோவின் கலைபற்றிய அறிவு சிலப்பதிகாரம் முழுவதுமே விரவிக்கிடக்கின்றது. அதனை உரையாசிரியர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். கூத்து என்பது நாடகம், நாட்டியம் என்ற உட்பிரிவைக் கொண்டியல்வது. பரதம், அகத்தியம், கூத்து, முறுவல், சயந்தம், குணநூல், இந்திரகாளியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்பன கூத்தினை விளக்கும் பழந்தமிழ் நூல்களாகும். இவற்றுள் காலத்தால் முந்தியது பரதமும் அகத்தியமுமே எனக் கருதப்படுகிறது. கூத்து நகை, அழகை, இளிவரல், மருட்கை, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளையும் நிலைக்களனாகக் கொண்டது. இன்று மன உணர்வு, உடல் அசைவு, கட்டுரை வன்மை, புனைதற் சிறப்பு என்பவற்றால் செயற்படுகின்றன. கூத்தியற்றுவோருக்குப் பயிற்றும் ஆசிரியராக இருப்போர் புலமை மிக்கவராக நாட்டிய நன்னூல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இளங்கோ அரங்கேற்று காதையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பல்வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்ந்து
ா 64 மண

பதினோராடலும் பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து"
(சிலம்பு அரங்கேற்று:12-15) என்றும்
"இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத் தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்தாங்கு அசையா மரபினதுபட வைத்து மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து நாத்தொலைவு இல்லா நன்னூற் புலவனும்.
(சிலம்பு:அரங்கேற்று:37-44) கூத்தை அகக் கூத்து புறக்கூத்து என இருவகையாகக் கொள்வர். இது வேத்தியல் பொதுவியல் என்றும் குறிப்பிடப்
படுகிறது. ஆடுவோர் தாம் விரும்பியோர் முன்னிலை யில் ஆடுவதை அகக் கூத்து என்றும் பலர் முன்னிலையில் ஆடு வதைப் புறக்கூத்து என்றும் கொள்வர். இது மேலும் வசைக் கூத்து, புகழ்க் கூத்து, வரிக்கூத்து வரிச்சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, விநோதக்கூத்து, ஆரியம், தமிழ், இயல்புக் கூத்து, தேசிக் கூத்து எனப் பத்து வகைப்படும். இப்பத்தும் மேலும் பல பிரிவுகளைக் கொண்டு இயலும்.
d:{ iն ու ! |} |
இளங்கோவடிகள் அரங்கேற்று காதையில் கலை வாழ்வின் குறிப்புகளை அமைத்துள்ள போதும் கானல் வரியில் அதன் தனித்துவத்தை உணரச் செய்துள்ளார். இளங்கோவின் துறவு நெறி மனித வாழ்வியலைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்கும் மனப் பக்குவம் தந்தது. சிலப் பதிகாரத்தில் அமைந்துள்ள பதிகம் சிலப்பதிகாரம் பாடப்பட்ட வரலாற்றைக்
கூறுகிறது. குணவாயிற் கோட்டத்தில் தனக்குரிய அரசப்
安、、、 ಹಾ.. {: ಹಾ.

Page 38
பதவியைத் துறந்து இளங்கோ துறவியாக வாழும் போது கண்ணகியைக் கண்ட செய்தியைக்குறவர் கூறுகின்றனர். அ ப் போது இள ங் கோ வின் அருகில் இருந்த தண்டமிழ்ச்சாத்தன் கண்ணகியின் கதையை விரிவாக இளங்கோவுக்கு கூறுகிறார். அதனைக் கேட்ட இளங்கோ அந்தக் கதையை பாட்டுடைச் செய்யுளாகப் பாட அதுவே சிலப்பதிகாரக் காவியமாகிற்று எனப் பதிகம் குறிப்பிடுகிறது. இளங்கோவின் சிலப்பதிகாரம் வழிபாட்டு நெறியால் மனித வாழ்வு மேம்படும் என்பதை எடுத்துரைப் பதாக அமைந்துள்ளது. கண்ணகியின் கதை சோழ, பாண்டி, சேர நாட்டு மனிதர்களும் அறிய வேண்டிய கதை என அவர் கருதியுள்ளார். எனினும் இயற்கை நெறியில் வாழ்வதே சிறந்தது என உணர்த்துகிறார். இதனால் அவர் பாடிய நூல் இருசுடர் வழிபாட்டில் தொடங்குகிறது.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்
றிவ் வங்கண் உலகளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரிநாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேருவலந்திரித லான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் வீங்குநீர் வேலியுலகிற் கவன் குலத்தொடு மேல் நின்று தான் சுரத்தலான்.
(சிலம்பு மங் கல வாழ்:1-9) திங்களையும் ஞாயிறையும் மழையையும் போற்றி வாழும் மனிதருக்கு இளங்கோ காப்பியத்தின் நிறைவுக் காதையான வரந்தரு காதையில் வருமாறு பகர்கிறார்.

"தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்வீர் பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனுண்துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்மின் தவம் பல தாங்குமின் செய்நன்றிகொல்லன்மின் தீருட் பிகழ்மின் , பொய்க்கரி போகீமின் பொருள்மொழி நீங்கீமின் அறவோ ரவைக்களம் அகலாதனுகுமின் பிறவோரைக் களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஒம்புமின் அறமனைகாமின் அல்லவை கடிமின் கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவதொழியாது. செல்லுந்தேயத்துக்குறுதுணை தேடுமின் மல்லன் மாஞாலத்து வாழ்வீfங்கென"
(சிலம்பு வரந்தரு:185202) இந்த அறிவுரை மக்களுடைய வாழ்வியலை நெறிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை நன்கு உணர்த்தி நிற்கிறது.
கோவலனின் வாழ்வும் கண்ணகியின் வாழ்வும் சிதைவ தற்குக் காரணமாக இருந்தவற்றைக் கூர்மையாக அவதானித்த இளங்கோ இல்வாழ்வுக்கும் கலை வாழ்வுக்கும் இடையே இருந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்த விரும்புகிறார். அதனையே 'கானல்வரி என்னும் காதையில் செயற்படுத்தி யுள்ளார். கானல் வரியில் கோவலனும் மாதவியும் பாடிய வரிப்பாட்டுகள் இல்வாழ்வு கலை வாழ்வு என்ற இருவகை
- 67 ബ

Page 39
வாழ்வின் நிலைகளையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன. கானல்வரிப் பாடல்களின் அமைப்பும் இதனைத் தெளிவு படுத்தும். அது வருமாறு அமையும்: 1. பாடல் ஒன்று 20 அடிகள் கட்டுரை 2. பாடல் இரண்டு தொடக்கம் 23 வரை கோவலன் பாடிய
வரிகள் 3. பாடல் இருபத்திநான்கு 6 அடிகள் கட்டுரை 4. பாடல் இருபத்தைந்து தொடக்கம் 46 வரை மாதவி பாடிய
வரிகள் 5. L. L. Gu 47மாதவி பண் மாற்றல் 6. பாடல் 48 தொடக்கம் 50மாதவி பாடிய வரிகள். 7. பாடல் 52 தொடக்கம் 15அடிகள் கட்டுரை. இவ்வமைப்பு ஒரு நாடகக் காட்சியரங்கம் போல உள்ளது. முதலாவது கட்டுரையில் மாதவி யாழ் பற்றிய அறிவு மிக்கவள் என்பது புலப்படுத்தப்படுகின்றது. யாழை அவள் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் செய்வது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆடல் கலையாற்றல் பெற்ற மாதவி இசைக்கருவியை இயக்கும் ஆற்றலும் பெற்றிருந்தாள். அவளுடைய கருவிக் கையாட்சித் திறன் விரிவாக கட்டுரைப்பகுதியில் இளங்கோவால் புனையப் பட்டுள்ளது. குற்றமில்லாமல் செய்யப்பட்ட யாழை மீட்டி பண்ணமைத்துக் கோவலனிடம் மாதவி கொடுக்கிறாள். ஆடற் பயிற்சியோடு அவள் பெற்றிருந்த இசைக் கருவிக் கையாட்சிப் பயிற்சியும் இங்கே காட்டப்படுகிறது. இது அவளுடைய கலைவாழ்வுக்குத் தேவையான திறனாகும். இல்வாழ்விலிருந்து கலைவாழ்வுக்கு வந்த கோவலன் மாதவியின் இத்தனித்துவ மான திறனைக் கடற்கரையிலே காண்கிறான். அவன் மனம் அப்போது குழம்பியிருந்தது. இந்திர விழாவில் பலர் பாராட்ட ஆடிய மாதவியின் கலைத்திறன் இல்வாழ்கைக்கு ஏற்றது தானா என ஐயப்பட்டது. அந்த வேளையில் இல்வாழ்வையேற்று
இல்லறம் பேணும் கண்ணகியின் நி வந்தது. கலையின்
= 68 =

பால் விருப்புற்று அதனைச் சுவைப்பது வேறு. அதையே வாழ்வாகக் கொள்ள முடியாது என்ற எண்ணம் கோவலனுக்குத் தோன்றியது. அந்த எண்ணத்தையே வரிப்பாட்டாகப் பாடுகிறான். மாதவி மனம் மகிழ யாழ் வாசித்துப் பாடுகிறான். அவன் பாடலின் உட்பொருள் மாதவியை எதிர்வரி பாடத் தூண்டுகிறது. அவன் பாடலின் உட்பொருள் கோவலன் அவளை வெறுத்துப் பிரிய வைக்கிறது. எனவே கானல் வரிப்பாட்டு கலையால் இணைந்த காதலரைப் பிரித்த வரிப்பாட்டாகிறது. இருவரும் பாடிய பாடல்களை அருகருகே வைத்துப் பார்க்கும் போது இருவருடைய மனநிலையையும் குணவியல்பையும் தெளிவாக உணர முடிகிறது.
மாதவியின் கலைப்பயிற்சியின் ஆற்றல் அரங்கேற்று காதையில் நிறுவப்பட்டது. அப்போது அவள் ஆடிய வரிக்கூத்து கோவலன் மனதில் மகிழ்வூட்டியது. வரிக்கூத்து என்பது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல். இக்கூத்து கண்கூடுவரி, கானல் வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சி வரி, எடுத்துக்கோள்வரி என எட்டு வகைப்படும். இவை பற்றிய விளக்கத்தை வேனிற் காதையில் கோவலன் வாய்மொழியாக இளங்கோ விளக்கியுள்ளார். வேனிற் காதையில் கானல்வரி பாடக் கேட்ட பின்னர் கோவலன் மாதவி மீது கொண்ட வெறுப்பு நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது. கலைத்திறன் படைத்த மாதவியோடு சில காலம் வாழ்ந்த கோவலன் அவள் கானல் வரி கேட்டு அவளைப் பெரிதும் வெறுத்து விட்டுப் பிரிகிறான். இல்வாழ்வுக்கும் கலைவாழ்வுக்கும் உள்ள முரண் பாட்டைக் கோவலன் நன்கு உணர்ந்தமையால் மாதவி அனுப்பிய வசந்த மாலையிடம் அவளைப் பழித்து உரைக்கின் றான். இளங்கோ அதனை வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
69

Page 40
"ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற்றனவப் பைந்தொடி தனக்கென அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய மணிந்தோட்டுத் திருமுகம் மறுத்தற்கிரங்கி."
(சிலம்பு வேனிற்: 109-112) மாதவியின் கானல்வரிப்பாட்டு உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவள் எழுதிய கடிதத்தையே பார்க்க விரும்பாத நிலையை ஏற்படுத்திவிட்டது. மாதவியை வெறுத்து வந்த பின்னரும் கானல்வரிப் பாட்டையே நினைத்துக் கோவலன் வெறுப்புடன் இருந்தான். அவனுடைய வாழ்வின் மகிழ்ச்சி தந்த கலை இப்போது வெறுப்பைத் தந்தது.
கானல் வரிப்பாடல்களை ஆராய்ந்தவர் பலர். கலையம்சத்துடன் அதனை நோக்கும் போது அதனால் சிக்கல் இல்லை . ஆனால் வாழ்வியலோடு அதனை இணைத்து நோக்கும் போது அது மிக ஆழமானதொரு மனித உணர்வின் சிதறலை உணர்த்துகிறது. கலை வாழ்வு அழகும் இளமையும் சேர நிற்பது. இல்வாழ்வு முதுமைவரை நின்று நிலைப்பது என்பதை இளங்கோ மக்களுக்கு உணர்த்த முற்பட்டார். அதனால் கானல்வரிப் பாடல்களை வெகு நுண்ணிய உணர்வின் வெளிப்பாடாக இயற்றியுள்ளார்.
கோவலன் பாடிய பாடல்களையும் மாதவி பாடிய பாடல்களையும் தொகுத்து நோக்கும்போது இதனை உணர முடிகிறது.
கோவலன் பாடல் மாதவி பாடல் 1. திங்கள் மாலை.(2) மருங்குவண்டு. (25) மன்னுமாலை. (3) பூவார்சோலை . (26) உழவரோதை . (4) வாழியவன். (27)
= 70 -

2. மோதுதிரையான்.(5)
...(6)
கரியமலர். (7)
காதலராகி.
3. துறைமேய். (8)
நிணங்கொள். (9) வலைஞர் வாழ் . (10)
4. கயலெழுதி.(11) எறி வளைகள். (12) ւյ6Ù6)լtճ6ծI........................ (13)
5. பொழில்தரு. (14) திரைவிரி. (15) வளைவளர். (16)
கடல்புக்கு.(17) கொடுங்கண். (18) ஒடுந்திமில். (19)
6. பவள உலக்கை. (20) புன்னை நீழல். (21) கள்வாய்நீலம். (22)
7.சேரல்மடவன்னம்.(23)
தீங்கதிர்.(28) மறையின். (29) உண்டாரை. (30)
புணர்துணை . (31) தம்முடைய. (32) புன்ஃப் SLLSLLLLLSLLLLLSLLCLCLSLCCLC LCC CLLL0LLL0SLLLSLLLLSLSSLS (33) புள்ளியல்மான். (34) நேர்ந்தநங் காதலர். (35) நேர்ந்த நங்காதலர்.(36) நன்னித்திலத்தின். (37) வாரித்தளர. (38) புலவுற்றிரங்கி. (39)
இளையருள். (40) கதிரவன். (41) பறவைபாட் SL0LLLLLL0LLLLLLLLL LLLLLLLLS LCCLLL LSLL (42)
கதைவேலி. (43) கானல்வேலி. (44)
அன்னந்துணை . (45)
அடையல்குருகே. (46) நுளையர்.(48) பிரிந்தார். (49) பையுள்நோய். (50) தீத்துழை. (51)
- 71 -

Page 41
இந்திர விழாவைக் காணச் சென்ற கோவலனும் மாதவியும் கடலாடி மகிழ்கின்றனர். மாதவி பலர்முன்நிலையில் நடனம் ஆடியமை கோவலனுக்கு மனச் சலிப்பைத் தந்தது. கடலாடும் போது அது கிளர்ந்தெழுகின்றது. கோவலனுடைய கலை வாழ்வில் கறை படிவதை இளங்கோவடிகள் புலப்படுத்த கானல்வரியைப் பாட வைக்கிறார். கடற்கரையில் புன்னைமர நீழலில் அவர்கள் வீற்றிருந்த போது மாதவியின் தோழி வசந்தமாலை யாழேந்திவருகிறாள். மாதவி அந்த யாழை வாங்கி கோவலன் ஊடற்குறிப்பை உணர்ந்து அவனிடம் நீட்டுகிறாள். அவனும் அதை வாங்கி மாதவி மனம் மகிழ வாசித்து காவிரி நதியையும் கடற்கானலையும் பராட்டும் குறிப்பையுடைய வரிப்பாக்களை மெய்மறந்து பாடலாயினான். அவன் பாடிய வரிகள் கணவன் ஒருவன் பரத்தமையொழுக்கத்தில் ஈடுபட்டுச் சில காலம் செல்ல மனைக்குத் திரும்பும் போது அவனோடு கோபம் கொள்ளாது வரவேற்ற மனைவியைப் பராட்டும் சொற்களில் தொடங்கிக் களவியல் துறைகளைத் தழுவிச் செல்லலாயிற்று. பாடும் பாணியில் தன்னை மறந்து அகப் பொருள் துறையில் தோய்ந்தான். அப்பாட்டு மாதவியை வருத்திற்று. அதனால் அவனுக்கு எதிர்வரி பாட எண்ணங் கொண்டாள். தனக்கும் ஒருவன் பால் விருப்புளது என்னும் குறிப்புடைய பாடல்களைப் பாடினாள். கோவலனது பாட்டில் கரிகாற் சோழன் பெருமையும், அவன் பெற்ற வெற்றியும் காவிரி ஆற்றின் வளமும் பொருளாய் அமைந்திருந்தது. ஆனால் மாதவி அதற்குள் பாடுபொருள் ஒன்றைக் கண்டாள். கண்ணகியின் கற்பின் திறத்தை அவன் நினைந்து பாடுவதாக எண்ணி மாதவியும் பாடுகிறாள். சோழன் மேன்மைக்குக் காவிரியே காரணம் எனக் குறிப்பு உரைக்கின்றாள். இது கோவலனைப் பெரிதும் உறுத்தியது. எனவே கோவலன் புகாரின் சிறப்பைப் பற்றிப் பாடுகையில் வரைவுகடாதலைக் குறிப்பாய் உணர்த்து கிறான். அதற்கு எதிர்வரியாக மாதவி கோவலன் மனம் வருந்த வேண்டுமென எண்ணிப் பாடுகிறாள். இருவரும் பாடல்
- 72 1ത്ത

திறத்தால் ஒருவர் மனம் நோக எண்ணிப் பாடிய பாட்டு இருவரது கலைவாழ்வும் சிதையைக் காரணமாயிற்று.
"நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்"
என மாதவி குறிப்பிட்டுப் பாடியது. கோவலனைச் சினம் கொள்ளச் செய்து. இயற்கை அழகையும் உணர்வையும் கலை நயத்துடன் பாடும்போது பிரிவதற்கு இடம் இல்லை. ஆனால் உட்பொருள் ஒன்றை இருவரும் கண்டு வருந்தியமையால் பிரிய நேர்கிறது.
கானல் வரியில் கோவலன் மாதவி இருவரும் நடத்திய கலைவாழ்வு பொருத்தம் அற்றது என்ற முடிவு உருவாகி யுள்ளது. யாழ் வாசிப்பதும் பாடுவதும் இல்வாழககையில் இயல்பானவையன்று. அதனால் ஆண்கள் கலையின்பத்தை நுகர ஆடல் மகளிரை நாடிச் செல்வது அக்காலத்தில் அங்கீ கரிக்கப்பட்டிருந்தது. மாதவி கலைப பயிற்சி பெற்றது இல் வாழ்வுக்காக அன்று. இல்வாழ்விலீடுபட்ட கலையின்பத்தை நாடி வரும் ஆடவரை மகிழ்விப்பதற்கே. ஆனால் மாதவி இந்த வரையறையை மீறிக் கோவலனோடு வாழ்ந்து மணிமேகலை என்னும் குழந்தைக்கும் தாயாகின்றாள். எனினும் கலையைக் கைவிடாமல் தொடர்கிறாள். கோவலனை மகிழ்விப்பதற்கு மட்டுமன்றிப் பிறரையும் மகிழ்விக்க எண்ணி இந்திரவிழாவில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்துகின்றாள். அது இல்வாழ்வின் எல்லையை அவள் கடந்து ஒரு கலைவாழ்வை நாடியதை வெளிப்படுத்துகிறது.
கண்ணகியைப் பிரிந்து மாதவியோடு வாழும் கோவலன் கலையை அநுபவிக்க மாதவியைத் தன்னுடையவளாக்கினான். தன் மலை போன்ற பொருள் யாவற்றையும் அதற்கே பயன்படுத்தினான். மனையறம் செய்யும் மாண்புடையவளாக மாதவி மாறுவாள் என எதிர்பார்த்தான். அந்த நினைப்பில் கண்ணகியின் மனையறத்தை மதியாது வாழ்ந்தான். மாதவி மனையறம் பேணமாட்டாள் என்பதை இந்திர விழாவிலே நன்கு
- 73 =

Page 42
உணர்ந்து கொண்டான். அதனால் தன்னையே நொந்து கொண்டான். தன் எண்ணத்தை மாதவிக்கு பாடலால் வெளிப்படுத்திக் காட்டினான். ஆனால் மாதவி இல்வாழ்வு நிலை அறியாது கலைவாழ்வை நாடி மீண்டும் எதிர்வரி பாடி தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். மாதவியின் செயல் கோவலனின் ஆண்மையை அவமதிப்பது போலிருந்தது. கோவலன் பாடிய கானல் வரிக்கு எதிர்வரி பாடிய மாதவியின் குணநலத்தை அந்திமாலைச் சிறப்புச் செய் காதையிலேயே இளங்கோ வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலற் களித்தாங்கு ஆர்வ நெஞ்சமொடுகோவலற்கெதிரிக் கோலங்கொண்ட மாதவி." (சிலம்பு அந்திமாலை 31:34) மாதவி கோவலனுடன் நடத்திய வாழ்வு காமத்தையே அடிப்படையாகக் கொண்ட கலை வாழ்வாக இருந்தது. அந்த வாழ்க்கை இளமையிலே ஏற்றதாயிருக்கும். ஆனால் முதுமை வரை நிலைத்து நிற்பது இல்வாழ்வுதான். என்பதை இளங்கோ உணர்த்துகிறார். கலையால் இணைந்த கோவலனும் மாதவியும் கலையாலே பிரிய நேர்ந்தது. இதற்கு நல்ல சான்றாகும்.
கானல் வரி பாடும் போது கோவலனுடைய உள்ளத்தில் கண்ணகியோடு நடத்திய இல்வாழ்வு நினைவுக்கு வருகிறது. அந்த இல் வாழ்க்கையை இளங்கோ மனையறம்படுத்த காதையில் வருமாறு விளக்கியுள்ளார்.
"வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும் விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமோ டொருதணிபுணர்க்க யாண்டு சில கழிந்தன இற்பெருங் கிழமையிற் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென"
(சிலம்பு:மனையறம்: 84-90
- 74 -

இத்தகைய வாழ்க்கையில் கோவலன் மன நிறைவு பெற்றிருந் தான். வாழ்க்கைத் துணை என்ற நிலையில் கண்ணகி ஆற்றிய பணிகள் கோவலனையும் அவன் கடமைகளையும் நிறைவு செய்தன. ஆனால் மாதவியோடு இருந்த வாழ்வு கோவலன் கடமைகளைச் செய்யாது குறைவுபட்டவனானான். வெறும் கலையின்பைத்தையே பெற்றான். கலை; வாழ்வின் முழுமை யன்று. அதன் ஒரு பகுதியே என்பதை கானல்வரியிலே கோவலன் உணர்வதாக இளங்கோவடிகள் காப்பியத்தை அமைத்துள்ளார். கோவலன் வாழ்வோடு இணைந்த இருபெண்களில் யார் சிறந்தவள் என்பதை அவன் சீர் தூக்கிப் பார்க்கிறான். தான்விட்டுப்பிரிந்த போதும் தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றி இல்வாழ்வைக் குறைவு படாமல் காத்த கண்ணகியே சிறந்தவள் என்ற முடிவுக்கு வருகிறான். எனவே மாதவியிடம் ஒன்றும் கூறாமல் மெளனமாகப் பிரிகிறான். ஆடற்கலையின் பயிற்சியால் முகக் குறிப்பை உணரும் ஆற்றல் படைத்த மாதவி அவன் கடற்கரைச் சோலையிலிருந்து செல்லும் போது வாளா இருக்கிறாள். அவளது நிலையை இளங்கோ வருமாறு காட்டுகிறார்.
"கானல்வரியான்பாடத் தானொன்றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள் பாடினாளென யாழின் மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்துருத்ததாலின் உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய்ப் பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்றுடனெழாது ஏவலாளருடன் சூழ்தரக் கோவலன்தான் போன பின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஒதையாயத்து ஒலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக் காதலனுடனன்றியே மாதவிதன் மனைபுக்காள்"
(சிலம்பு:கானல்:53-61) கோவலன் புறப்பட்டபோது மாதவி உடன் செல்லாதிருந்தமை அவளுடைய கலை வாழ்வின் பண்பாயிற்று. போனவன் தன் அழகை நாடி வருவான் என மாதவி செருக்குற்று இருந்தாள்.

Page 43
பின்னர் கோவலன் தன்மனை வராமையால் வசந்தமாலையிடம் திருமுகம் எழுதி அனுப்புகிறாள். வசந்தமாலை கூலமறுகிலே கோவலனைக் கண்டு அதனைக் கொடுப்ப அவன் வாங்க மறுத்து மாதவியைப் பழித்துரைக்கின்றான். அவளுடைய கலைத்திறன்களை மீள எடுத்துக் கூறுகிறான். ஆனால் அத்திறன்கள் எல்லாம் வாழ்க்கைக்காக அன்று. வெறும் நடிப்புக்காகவே எனச் சினந்து கூறுகிறான்.
"ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடு பெற்றனவப் பைந்தொடி தனக்கென"
(சிலம்புவேனிற்கா:109-10) என்ற கோவலனின் கூற்று மாதவியை அவன் முற்றாகத் துறந்ததை உணர்த்துகிறது. மாதவியின் நடன அரங்கேற்றம் கண்டு அவள் கலைதிறனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவளை அடைந்தவன் கோவலன். ஆனால் இப்போது அவளை வெறுக்கிறான். அன்று அவனுடைய மனநிலை வேறு. அதனை இளங்கோ வருமாறு காட்டியுள்ளார்.
"மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கி கூனிதன்னொடு மணமனைபுக்கு மாதவி தன்னொடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுதலறியா விருப்பின னாயினான் வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்"
(சிலம்பு:அரங்கேற்று:170-175) மனை வாழ்வை அன்று மறந்த கோவலன் கானல்வரிப்பாட்டால் மீண்டும் அதை நினைக்க நேர்ந்தது. கூனி கையால் மாலையை வாங்கி கூலமறுகிலிருந்து கோவலன் அவள் மனை சென்று கலைவாழ்வு நடத்தினான். இன்று மாதவியின் திருமுகத்தை கூலமறுகிலே மறுத்து இல்வாழ்வை நாடிச் செல்கிறான். அவனுடைய தடுமாறுள்ளம் செய்த தவறும் அதனால் கண்ணகி மனையை மறந்து வாழ்ந்ததும் மாதவியின் கானல்வரிப் பாட்டால் நன்கு உணர்த்தப்பட்டதாக கோவலன் எண்ணித்
- 76 H

தெளிவு பெறுகிறான். அதனால் மீண்டும் இல்வாழ்வு நடத்த வேண்டும் என்ற விருப்போடு கண்ணகியிடம் செல்கிறான். கானல் வரி என்னும் காதையில் கண்ணகி நேரில் தோன்றாத ஒரு பாத்திரமாக கோவலன் உள்ளத்திலே இருக்கின்றாள். மாதவியோடு அவளை அவன் ஒப்பிட்டு கானல்வரி பாடுகிறான். இசைப்பாட்டிலே குறிப்புப் பொருளாக கண்ணகி இருந்தாள். ஆனால் மாதவியின் வரிப்பாட்டில் வரும் ஆடவன் உண்மையான பாத்திரமன்று. கோவலன் ஊடலைத் தூண்ட மாதவி கற்பித்த கற்பனைப் பாத்திரம். வெறும் நடிப்பு நிலை கொண்டது. ஆனால் கோவலன் அதை கண்ணகி போல குறிப்புப் பொருளாகக் கொண்டான். கண்ணகியின் கற்புநிலை மாதவியிடம் இல்லை எனத் தெளிகிறான். வணிகத் தொழில் புரிந்த போதும் இசையறிவு பெற்றவனாக இருந்தான். உயர் குடிப்பிறப்பும் செல்வச் செழுமையும் கோவலன் காமத்தால் தொலைந்தன. ஊரைவிட்டே ஓடும் நிலை ஏற்பட்டது. கண்ணகியைக் கோவலன் பெற்றோரால் மனைவியாக ஏற்றான். மாதவியைத் தன் செல்வத்தால் பெற்றான். எனவே செல்வம் கோவலனின் காமவாழ்வுக்கு உதவியது. கலை வாழ்வுக்கு உதவவில்லையென்றே கூறவேண்டும்.
கானல் வரியில் கோவலன் மூலமாக இளங்கோவடிகள் காதலையும் காமத்தையும் சீர்தூக்கிப் பார்க்கின்றார். கோவலன் காமம் கண்ணகியின் காதலை உலகறியச் செய்தது. மாதவியின் காமம் கோவலன் வாழ்வைச் சிதைத்தது. எனவே சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் 'கானல்வரி என்னும் பகுதி ஒரு மையமாக அமைந்துள்ளது. கோவலனையும் மாதவியையும் பிரிக்கப் பொருத்தமான இடமாக கானற்சோலை அமைகிறது. அரசவையிலே அரங்கேற்ற மண்டபத்திலே கோவலன் இசை நடுவே மாதவியை அடைய விரும்புகிறான். பின்னர் கானற்சோலையிலே இசை நடுவே மாதவியை பிரிய விரும்புகிறான். காமத்தின் தோற்றமும் அழிவும் ஏற்ற
- 77 -

Page 44
இடங்களிலே நடைபெற்றுள்ளன. இது இளங்கோவின் காட்பியப் புனைவுக்குச் சிறந்ததொரு எடுத்துக் காட்டு. கண்ணகியின் கற்பு நெறியும் மாதவியின் கலை நெறியும் கோவலன் காம நெறியை மாற்றிவிடுகின்றன. அவன் திருந்திய வாழ்வொன்றைத் தேடிப்போக வைக்கின்றன. சோழ நாட்டை விட்டு பாண்டி நாட்டிலே புதுவாழ்வு நடத்த எண்ணும் கோவலன் தன் காமநெறி வழிப்பாடாது நிற்க கண்ணகியையும் உடன் அழைத்துச் செல்கிறான். அவள் கற்பு நெறியைத் தனக்கு ஒரு அரணாக்கி வாழ நினைக்கிறான். தான் செய்த தவறைக் கானல்வரியிலே தெளிவாக உணர்கிறான். இளங்கோவின் பாத்திரப் படைப்பில் கானல்வரியில் கோவலன், மாதவியின் குணவியல்பு மாற்றம் உணர்த்தப்பட்டுள்ளது. கதையின் போக்கை மாற்றும் களமாகக் கானற்சோலை அமைகிறது. காதலர் மகிழும் இந்திர விழாவிலே காம வயப்பட்ட கோவலனையும் மாதவியையும் இளங்கோ பிரித்துவிடுகின்றார். இருவர் மன நிலை யையும் சமநிலைப் படுத்துகிறார். கோவலனும் மாதவியும் தம்நிலை உணர வைக்கின்றார். கோவலன் கண்ணகியிடம் சென்று
"சலம்புணர் கொள்கைச்சலதியோ டாடிக் குலவந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு" (சிலம்பு கானத்திற69-71) என இரந்து நிற்கிறான். இதேபோல் மாதவியும் கோவலனுக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில்
'அடிகள் முன்னர் யாண்டி வீழ்ந்தேன் வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர் பணியன்றியும் குலப்பிறப்பாட்டியோ டிரவிடைக் கழிதற் கென்பிழைப்பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"
(சிலம்பு:புறஞ்சேரி:87–92) எனக் கேட்டு நிற்கின்றாள். மாதவி கோவலனது முடிவறிந்து
= 78 =

அதிர்ச்சியடைகிறாள். நான் பிழை செய்திருந்தால் அதன் பொருட்டு நீர் இருமுதுகுரவரைப் பேணும் கடமையையும் விட்டு கற்புடை மனைவியோடு இரவிலே வேற்று நாட்டிற்குப் போவது தகுதியா என்று மனங்கலங்கிக் கேட்கிறாள். அவள் எழுதிய கடிதத்தில் இல்வாழ்வைப் பற்றித் தெளிவு பெற்றிருப் பதையும் உணர்த்தியுள்ளாள். தன்னுடைய கலைவாழ்வு கோவலன் இல் வாழ்வைச் சிதைத்தது என்பதை மாதவி உணர்வதாக இளங்கோ காட்டுவது சமூகச் சீர்கேட்டுக்குக் காரணமான பரத்தமையைச் சுட்டி அதை அவர்களே களைய வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இளங்கோவின் 'கானல்வரி' வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஒரு இசைப் பாட்டாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு அழியாத கோலமாக அமைக் கப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்வியலைச் செம்மைப்படுத்த இலக்கியம் துணை செய்ய வேண்டும் என்ற இளங்கோவின் குறிக்கோள் சிலப்பதிகாரத்தில் நிறைவு பெற்றுள்ளது. வணிக வாழ்வும், கணிகை வாழ்வும் வழிபாட்டால் நெறிப்பட வேண்டும். ஆடலும் பாடலும் பொழுது போக்கிற்காக அன்றி வழிபாட் டொடு இணைய வேண்டும் கானல்வரியில் காதல் இசையால் திசை திரும்பியது. அதை மாற்ற இளங்கோ எண்ணி கண்ணகியின் காதல் மனத்தை முன்னிறுத்திக் காவியத்தை முடித்து வைக்கிறார். கானல்வரிப்பாட்டு உரைநடையில் இன்று வரை குடும்ப வாழ்வைச் சிதைக்க முயல்வதைக் காணும்போது இளங்கோவின் சிலம்பு யாவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் என்பது உணரப்படுகிறது.
= 79 m=

Page 45
7.திருக்குறள் ஒரு தமிழர் கையேடு
தமிழில் தோன்றிய நூல்களில் திருக்குறள் தனித்துவ மானது. உலக நூல்களுள் உயர்ந்த நூலாகக் கொள்ளப்படுவது. இதனை இயற்றிய வள்ளுவர் தமிழ்ப் புலமையாற்றல் நிறைந்தவர். தமிழ்மொழி என ஒரு மொழி இருப்பதை உலகம் உணரச்செய்தவர். அவர் வரலாறு அவர் வாழ்ந்த காலம், அவர் கருத்து எனப்பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இன்று திருக்குறளை இளந்தலைமுறையினர்க்கு ஏற்றவகையில் அறிமுகம் செய்யவேண்டியுள்ளது. இந்நூலின் சிறப்பைப் பலரும் தாம் உணர்ந்த நிலையில் பிறர்க்கு உணர்த்தியுள்ளனர்.
"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும் பாயிரத்னோடு பயின்றதன்பின் - போயொருத்தர் வாய்க்கேட்க நூல்உளவோ? மன்னுதமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்கலாம்" என ஒரு பாடல் சிறப்பினை உணர்த்தியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய புரட்சிக்கவிஞன் பாரதி,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டதமிழ்நாடு" என்று பாராட்டினான். தமிழ்நாட்டை உலகப்புகழ் பெறச் செய்த வள்ளுவருடைய திருக்குறளைச் சுத்தானந்தபாரதி வருமாறு உருவகப்படுத்திக்காட்டுகிறார். அவர் வரைந்து காட்டும் தமிழன்னையின் உருவத்திற்கு திருக்குறள் செய்கோலாய்த் திகழ்கின்றது.
"காதொளிரும் குண்டலமுங் கைக்குவளை
யாபதியுங் கருணை மார்பின் மீதொளிர்சிந்தாமணியுமெல்லிடையில்
- 80 -

மேகலையுஞ் சிலம்பார் இன்பப் போதொளிர்பூந் தாமரையும் பொன்முடிசூ
ளாமணியும் பொலியச்சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடு வாழ்க" தமிழைப் பெண்ணுருவாக வரைந்த அவர் ஒவியத்தைப் பார்க்கும்போது காதிலே குண்டலகேசி, கையில் வளையாபதி, மார்பில் சிந்தாமணியும் மெல்லிய இடையில் மணிமேகலையும் தாமரை அடிகளில் சிலப்பதிகாரமும் முடியிலே சூளாமணியும் பொலிய இருக்கிறாள். செங்கோலாகத் திருக்குறளைத் தாங்கி நிற்கிறாள். தமிழில் எழுந்த இலக்கியங்கள் தமிழின் வளத்தை யும், செழுமையையும், நடுநிலைமையையும் கொண்டிருப்பதை இப்பாடல் மூலம் அவர் விளக்கியுள்ளார். குறளின் பெருமை கூறும் ஒளவையார்.
'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வையத்தில் மனிதன் வாழவேண்டிய முறையைக் கூறும் குறள் அவன் அதனால் பெறும் பயனையும் விளக்கும் பண்புடையது. சாதி, மத, இன, மொழி வேறுபாடு இன்றி உலகமெல்லாம் ஒதுகின்ற பொதுமறை. இதனால் ஏறக்குறை யத் தொண்ணுாறு பிறமொழிகளிலே மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. கல்விக் களஞ்சியமாக நீதியின் சுரங்கமாக விளங்குகிறது. இதனால் நூலாசிரியர் பொய்யாமொழிப்புலவர், தேவன் எனப் பாராட்டப்படுகிறார். நூல் அமைப்பு அவருடைய தமிழாற்றலையும் திறனையும் காட்டி நிற்கிறது. பலர் குறளை மேற்கோள் காட்டித் தத்தம் ஆய்வைச் செய்துள்ளனர். 1330 குறள் வெண்பாக்கள் கொண்ட இந்நூல் மனிதன் அடையும் எல்லா நலங்களையும் அடைய வழி
== 81 ســــــــــــ

Page 46
கூறுகிறது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதால் 'முப்பால்' என்ற பெயரும் கொண்டது.
குறளே வள்ளுவர் வாழ்வும் வரலாறும் எனலாம். தனது காலத்துச் சமூகத்தை உற்றுநோக்கி அவர் பாடிய குறள் அவருடைய அநுபவங்களாக உள்ளன. வாசுகி என்னும் பெண்ணை மணந்து இல்லறத்தைச் செவ்வனே நடத்தினார். வாசுகியின் கற்புநெறி இல்லறத்தின் பெருமையை உணர்த்து வது. மன்ைத்தக்க மாண்புடைய மனைவியை இழந்தபோது வள்ளுவர் மனமுருகிப்பாடிய வெண்பா ஒன்று அவர்கள் இல்லறவாழ்வின் மேன்மையை உணர்த்துகின்றது.
"அடி சிற்கினியாளேயன்புடையாளே படிசொற் றவறாத பாவாய்–அடிவருடிப் பின்றுாங்கி முன்னெழுந்தபேதையே போதியோ என்றுாங்கும் என்கண் இரா" வள்ளுவர் தாம் வாழ்ந்த காலத்தில் புத்த சமண மதக்கருத்துக் களையும், வேதாந்த சித்ததாந்த தத்துவங்களையும், கெளடில் யர் அர்த்த சாஸ்த்திரத்தையும் மனுதர்மத்தையும் நன்கு அறிந்திருக்கிறார். பைபிளையும் கேட்டிருக்கிறார். அதனால் வையத்தில் வாழ்வாங்கு வாழும் நெறியைத் திருக்குறளாக இயற்றினார். அவரின் புலமையாற்றலால் இயற்றப்பட்ட குறள்களை பிற்காலத்து உரையாசிரியர்களே பிரித்து அதிகார மாக அமைத்தனர். திருக்குறளின் பெருமையைப் பாடியவர் பலர். கபிலர், பரணர், நக்கீரர், கல்லாடர், மணிமேகலை பாடிய சாத்தனார், ஆசிரியர் நல்லந்துவனார், சீரந்தையார், மாங்குடி மருதனார், பரதம் பாடிய பெருந்தேவனார், இடைக்காட்டுச் சித்தர், ஒளவைப்பிராட்டியார் போன்ற புலமையாளர் பாடிய பாடல்கள் திருவள்ளுவமாலை' என்னும் தொகுப்பு நூலிலே தொகுக்கப் பெற்றுள்ளன. வள்ளுவர் ஏற்றிய குறள்மணி
سے 82 سس

விளக்கிற்கு அறமே தகழி. பொருளே நெய், இன்பமே திரி எனலாம்.
திருக்குறளின் தொகுப்புநிலை வருமாறு அமைந்துள்ளது.
1. பாயிரம் 4 அதிகாரம் 04 குறள் 2. இல்லறவியல் 20 அதிகாரம் 200 குறள் அறத்துப்பால் 3. துறவறவியல் 13 அதிகாரம் 130 குறள் 380 குறள் 4. ஞானம் 01 அதிகாரம் 10 குறள் 5. அரசியல் 25 அதிகாரம் 250 குறள் 6. அங்கவியல் 32 அதிகாரம் 320 குறள் } பொருட்பால் 7. ஒழிபியல் 13 அதிகாரம் 130 குறள் 700 குறள் 8. களவியல் 07 அதிகாரம் 70 குறள் } ಕಪ್ಕಳ್ತನ 9.கற்பியல் 18 அதிகாரம் 180 குறள் 250 குறள்
10
133 அதிகாரம்1330 குறள் 1330 குறள்
வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவக் கருத்துக்களை எல்லாம் ஏழு சீர்களில் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறியிருப்பது வள்ளுவரின் புலமைத்திறன். இந்துமதத் தத்துவங்களிலே வேரூன்றி இருக்கும் நூல். ஆனால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் மதவேறுபாடின்றி மனித சமுதாயத்திற்குப் பொதுவாகவுள்ளன. வள்ளுவர் கூறிய அறமும், பொருளும், காமமும் உலகப்பொதுவானவை. "உலகு என்ற சொல் திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. முதன்மையும் தொன்மையும் வாழ்ந்தவர்களின் பண்பாடும் உலகத்தவர் வாழ்க்கைக் கூறுகளாக திருக்குறளில் கருவாக அமைந்தன. அதனை வள்ளுவர் நன்கு உணர்ந்தமையால் உலகப்பொது நூல் ஒன்றை எழுதவும் முடிந்தது எனலாம். அதனால் குறட்பாக்களின் உயிர்நாடியாய் அமைவது 'உலகம்

Page 47
ஒரு குலம்' என்பதாகும். இது தமிழர் பண்பாட்டின் குறிக் கோளாகவும் அமைந்திருந்தது. அன்புவழியே வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் அந்த வாழ்க்கையே பண்பும் பயனுடைய தாக இருக்கும். வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களை வகுத்துக் கூறியவர்களில் ஆதி மனு, அரிஸ்டோட்டல், வள்ளுவர் என்ற மூவரும் குறிப்பிடத்தக்கவர். மனுவின் வகுப்புமுறை பிறப்பால் உயர்வு, தாழ்வு, பெண்ணடிமை, தீண் டாமை, கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கி , நின்றது. அரிஸ்டோட்டலின் வகுப்புமுறை பொறாமை, போர், நாட்டாசை, சுரண்டல், இகல், கொலை என்பன மலிந்ததாய் இருந்தமையால் நிலைபெறவில்லை. வள்ளுவர் வகுத்த நெறியோ அறத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் இன்று வரை நிலைத்துள்ளது. மனத்துத்தூய்மையே வள்ளுவர் கூறிய அறத்தின் இலக்கணமா யிருந்தது. மனம் மாசற்றிருந்தால் அன்பு உண்டாகும். வள்ளுவர் வாழ்க்கை ஒரு கலைவடிவாகக் காட்டுகிறார். காமம் என்னும் உணர்வும் அதற்கான பொருள் வளமும் ஒழுங்கு நெறியிலே இயங்க அறம் துணைபுரியும். அதனால் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என அவருடைய குறட்பாக்களைப் பகுத்துக் காண்பதும் எளி தாயிற்று. உரையாசிரியர் இந்த பால் வைப்பு முறையை பிறிதொன்றாகப் பொருத்தியுள்ளனர். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்ற வைப்பு நிலையில் வாழ்க்கையில் அறநெறி நின்று
ஈட்டு பொருளால் இன்பம் துய்க்கலாம் என உணர்த்தியுள்ளனர்.
பழந்தமிழர் மரபான அறம், பொருள், இன்பம், வீடு என்ற நிலையில் வள்ளுவர் வீடு பற்றி எதையும் குறிப்பிடவில்லை. வீடு என்பது உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. மனம், வாக்குக் கடந்த நிலை. அதனை ஒழுகலாறாகக் கூறுவதற் கில்லை. மாசற்ற மனநிலையே வீடுபேறு பெற உதவும்.
- 84 അത്ത

பாயிரத்தில் வள்ளுவர் இறைவன் பற்றிக் கூறும் கருத்துகள் வீடு பற்றிய அவருடைய சிந்தனைக் கருக்களாயுள்ளன. திருக்குறள் எல்லோருக்கும் பயன்தரும் நூலாகும். இலக்கிய ஆய்வாளர் அதனைச் சிறந்த புலமைத்திறன் மிக்க நூலெனப் புகழுவர். அறவழிநிற்போர் அரிய சமய நூலெனப் போற்றுவர். அரசிய லாளர் நுட்பமான அரசியல் நூலென மதிப்பிட்டுள்ளனர். எனவே திருக்குறள் பற்றி. பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. வள்ளுவர் வாழ்க்கையை நோக்கிய தன்மை தனித்துவமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்க்கையை அவர் விளக்க முயன்றதன் விளைவே திருக்குறள் என்ற நூலாகிற்று. அவர் மனித வாழ்வியலின் அடிப்படையையும் பொதுத்தன்மையையும் இனங்காட்டியுள்ளார். திருக்குறளின் சிறப்பை மு.வரதராசன் வருமாறு கூறுகிறார்.
நூல்கள் இருவகை. தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று. நம் காலத்திற்குத் தான் வந்து உதவுவது மற்றொன்று. நூலைக் கற்கும் முறையும் இருவகை. வாழும் காலத்தை மறந்து நூலெழுதிய காலத்திற்குக் கற்பனைச் சிறகு கொண்டு பறந்து சென்று நூற்பொரு ளைக் கற்பது ஒருவகை நூலெழுதிய காலம் எதுவாயினும் அதைவிட்டு வாழும் காலத்திற்கே வந்து வழிகாட்டும்படியாக நூலைப் போற்றிக் கற்பது மற்றொருவகை. புலவரருகில் நின்று இலக்கியமாக மட்டும் போற்றப்படும் நூல்கள் முதல் வகையைச் சார்ந்தவை. இரண்டாம் வகை நூல்களோ எல்லா மக்களுக்கும் பயன் படுவனவாய் ஆட்சிபுரியும் சட்டநூல்களை விடச் செல்வாக்கு உடையனவாய் மக்களின் உள்ளங்களே கோயில்களாய் வாழ்வன. திருக்குறள், பகவத்கீதை, கன்பூஷியஸ் நூல், பைபிள், குர் ஆன்முதலியன இவ்வகையைச் சார்ந்தவை" திருக்குறளின் சிறப்பைத் தெளிவாய் அறிய அதற்கு எழுதப்பட்ட உரைநூல்கள் உதவுகின்றன. பலர் அதற்கு
- 85 മത്ത

Page 48
உரையெழுதிய போதும் பரிமேலழகர், பரிதி, தாமத்தர், மணக்குடவர், தருமர் என்போரது உரைகளே சிறந்த உரை களாகக் கொள்ளப்படுகின்றன. பரிமேலழகர், மணக்குடவர், பரிதிப்பெருமாள், காளிங்கர் என்போர் உரைகளே கிடைத் துள்ளன. எனினும் பரிமேலழகரே சிறந்த உரையாசிரியராகக் கருதப்படுகின்றார். தற்காலத்தில் திருக்குறளுக்கு எளிய மொழி நடையில் தெளிவுரை எழுதியவர்களில் இலக்குவனார், மு.வரதராசனார், புலியூர்க்கேசிகன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். திருக்குறளுக்கு உரையெழுதிய பெரியோர் களின் பெயரைப் பழைய வெண்பாப் பாடலொன்று வருமாறு தொகுத்துக் கூறுகிறது.
"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிமேலழகர் பரிதி திருமலையார் மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் கெல்லை உரை எழுதினோர்" உரையால் தெளிவுறக் திருக்குறளை உணர்ந்தோர் அதனைத் தம் மொழியால் பாராட்டியுள்ளனர். அதன் அறம் கூறும் பண்பை,
"வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி" என மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை கூறுகிறார். இதனையே பரிமேலழகர் "எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக்கூறல் திருவள்ளுவரது இயல்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். பொதுமை நிலையில் நின்ற வள்ளுவரைக் கல்லாடனார்
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப்பொருள் இதுவென்ற வள்ளுவன்" எனப் பாராட்டியுள்ளார்.
இன்று திருக்குறளை ஆராயமுற்படுவோர் பல்வேறு சமய நெறியில் நிற்போர் அது தங்கள் சமயச்சார்புடையது என

நிறுவமுயல்கின்றனர். குறளின் கருத்தைப் புறந்தள்ளாமல் தத்தமது சமயக்கோட்பாட்டிற்கு இயைபானது எனக் கூறி ஏற்றுள்ளனர். மானுடம் வளம்பெற வள்ளுவர் செய்த நூல் ஒரு தனிவழியைக் காட்டிநிற்கிறது. உலகப்பொதுமையைத் தமிழ்மொழி எனும் குடையின் கீழ் நிறுத்தவல்ல திருக்குறள் தமிழரின் பெருமையைப் பேணிநிற்கிறது.
- 87 -

Page 49
8.வள்ளுவர் காட்டும் நாட்டு வாழ்வு
முப்பொருள் பற்றிப் பேசும் வள்ளுவர் தமது திருக்குறளில் பொருட்பால் என்னும் பகுதியில் இரண்டு இயல்களில் நாடு பற்றியும் நாட்டு வாழ்வியல் பற்றியும் விரிவாகக் கூறுகிறார். அரசியல், அங்க இயல், ஒழிபு இயல், என மூன்று பகுதிகளிலே அவர் கூறும் விடயங்கள் நாட்டு வாழ்வு பற்றிய அவரது புலமைத்திறனைச் சிறப்பாக உணர்த்துகின்றன. ஒருநாடு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் தெளிவுறுத்தியுள்ளார்.
"நாடு என்ப நாடா வளத்தன, நாடு அல்ல
நாட வளந்தரும் நாடு"
(குறள் 739)
நாடு என்றால் அது தேடி வருந்தாமல் தானே அடையும் செல்வத்தையுடையதாய் இருக்க வேண்டும். அவ்வாறன்றித் தேடி வருந்தச் செல்வத்தைத்தரும் நாடுகள் நாடு ஆகாது என்கிறார். இயற்கை வளம் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது என்பது வள்ளுவர் கருத்தாகும். இயற்கை வளம் இருப்பின் அந்நாட்டு மக்கள் வருத்தமின்றி வாழ முடியும். நாடு மக்கள் விரும்பி வந்து நிலையாக வாழ்வு நடத்தும் இடமாகும். அத்தகைய இயற்கை வளம் கொண்ட நாட்டிலே அரசு என்னும் அமைப்பும் இன்றியமையாதது. அதனை 'அரசியல்' என்ற பகுதியில் வள்ளுவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அவர் வகுத்துக் காட்டும் அரசியலை அதற்குரிய இயல்பு நிலைகளை 25 அதிகாரங்களில் 250 குறட்பாக்களில் கூறியுள்ளார். அந்த அதிகாரங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளார்.
1. இறைமாட்சி 14. தெரிந்து வினையாடல் 2. கல்வி 15. சுற்றம்தழால் 3. கல்லாமை 16. பொச்சாவாமை

4.கேள்வி 17. செங்கோன்மை
5. அறிவுடைமை 18.கொடுங்கோன்மை 6. குற்றங்கடிதல் 19. வெருவந்த செய்யாமை 7. பெரியாரைத்துணைக்கோடல் 20. கண்ணோட்டம் 8. சிற்றினம் சேரா1ை0 21. ஒற்றாடல் 9 தெரிந்து செயல்வகை 22. ஊக்கமுடைமை 10. வலியறிதல் 23, LDL quîsöTGD) LO 11. காலம் அறிதல் 24. ஆள்வினையுடைமை 12. இடன் அறிதல் 23. இடுக்கண் அழியாமை
13. தெரிந்து தெளிதல் இவ்வதிகாரங்கள் உள்ளடக்கிய விடயங்களை நுணுகிக் கற்ற உரையாசிரியர் இவற்றின் வைப்பு முறைமையையும் தமது உரையிலே விளக்க முற்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் உலகிற்கு உயிராக அரசன் கருதப்பட்டான். அதனால் அவனே மக்களுக்கு இறைவனாகத் தோன்றினான். தன் நாட்டு மக்களைத் தீமைகளிலிருந்து காத்துப் பேண வேண்டியது இறையின் கடமையாயிற்று. எனவே வள்ளுவரும் முன்னோர் மரபு நிலையிலிருந்து வழுவாது இறை மாட்சி பற்றிய கருத்துக்களைக் கூறியுள்ளார். நாட்டு வாழ்வு நன்றாயமைய அரசன் குணச்சிறப்பியல்பே காரணம் என உணர்த்துகிறது. எனவே முதலில் அவற்றை விளகுகிறார். அரசனை வள்ளுவர் 'இறை எனக்குறிப்பிடுவதை விளக்க வந்த உரையாசிரியர் பரிமேலழகர் வருமாறு குறிப்பிடுகிறார்.
"உலகபாலருருவாய் நின்று உலகங்காத்தலின் இறையென்றார்.
"திருவுடைமன்னரைக் காணிற் றிருமலைக் கண்டேனே
யென்னும்" என்று பெரியாரும் பணித்தார்" மன்னரின் தோற்றத்திலே இறைவனைக்கண்ட அடியாராகிய பெரியாழ்வார் தனது பக்தி அநுபவத்தைத் திருவாய் மொழியிலே பாடியுள்ளார்.

Page 50
"திருவுடை மன்னரைக் காணிற்
றிருமாலைக் கண்டேனே யென்னு முருவுடை வண்ணங்கள்
காணினுலகளந்தா னென்று துள்ளுங் கருவுடைத் தேவில்க G) GITổio Guo Tuo
கடல் வண்ணன் கோயிலேயென்னும் வெருவிலும் வீழ்விலு மோவாள்
கண்ணன் கழல்கள் விரும்புமே".
(திருவாய்மொழி:30:8)
இறைபக்தி நிலையில் ஆழ்வார் பாடிய கருத்தை வள்ளுவர் அரசவாழ்வுக்கு அடித்தளமாக அமைத்துள்ளார். இறைமாட்சி என அதிகாரத்தின் பெயர் அமைந்தாலும் அரசன், வேந்தன், மன்னன் என்ற சொற்களையும் ஏற்றவாறு பயன்படுத்திக் கருத்தை உரைத்துள்ளார். வள்ளுவருடைய 10 குறள் கொண்ட அதிகாரத்தின் அமைப்பு நிலையின் சிறப்புகள் பற்றிப் பலரும் விதந்துரைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களின் அடிகளை ஒரு பார்வையில் நோக்கும் போது இக்கருத்து நிலை தெளிவு பெறும். 1. உடையான் அரசருள் ஏறு (38)அரசர்-ஆறு அங்கமுடையவர்
2. எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (382) வேந்தர் - நான்கு இயல்புடையவர்
3. Eris J, T நிலன் ஆள்பவர்க்கு (383). 2, it வர்-மூன்று குணமுடையவர் 4. மானம் உடையது அரசு (384)੭|- மானமுடைமை 5. வகுத்தலும்வல்லது அரசு (385)அரசு - வலியுடைமை 6. மிக்கூறும் மன்னன் நிலம் (386அரசு-தோற்றம் குணம்
7. நான் கண்டனைத்து இவ்உலகு (387)மன்னன் - இன்சொல் உடையவன் 8. இறை என்று வைக்கப்படும் (388)இறை-முறைசெய்து காத்தல் 9. கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (389)வேந்தன்-கடுஞ்சொற்பொறுத்தல்
10.உடையானாம் வேந்தர்க்கு ஒளி(390) வேந்தர்-ஒளியுடைமை.

இறைமாட்சி என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் தான் கூறவந்த செய்திகளை நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். மக்கள் மனதிலே கருத்துக்கள் பதியும் வண்ணம் வகுத்துக் கூறுகிறார். மக்களைக் காக்கின்ற பணியை ஏற்பவர்களாக அரசன், வேந்தன், ஆள்பவன், மன்னன் எனப் பெயர்பெற்றவர்களுடைய பண்பு நிலையை வள்ளுவர் எடுத்துரைக்கும் பாங்குமிகச் சிறப்பா யுள்ளது. அவை வருமாறு. 1. அரசர்களில் சிறந்தவன்; சேனை, நாடு, பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு அங்கங்களையும கொண்டி ருப்பான். 2. வேந்தன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் நான்கு குறைவுபடாதவன். கொடை அருள், செஞ்கோல்முறை, குடிஓம்பல், கடும்சொல் பொறுப்பவன். 3. ஆள் பவன் தூங்காமை, கல்வி, துணிவுடைமை. 4 மன்னன் காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன், இவன் முறை செய்து மக்களைக் காப்பதால் இறைவன் எனப் போற்றப்படுபவன். எனவே மக்களை ஆளும் அரசன் வேந்தனாக முறைப்படி கடமையாற்றி நிலைபெற்று மன்னனாகி மக்களை எனனும் காத்துநிற்பதால் 'இறை என்ற உயர்வான மதிப்பைக் கொண்டவனாகிறான்.
தொடர்ந்து வருகின்ற அதிகாரங்கள் அரசன் பேனும் குடிகளும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளாக உள்ளன. கல்வி, கல்லாமை என்னும் அடுத்துவரும் இரு அதிகாரங்களும் முன்னர் ஆள்பவனுக்கு இருக்கவேண்டிய தகுதிப்பாட்டை விரித்து விளக்குபவனாக அமைந்துள்ளன. வள்ளுவர் ତୂ(b கருத்தை விளக்கும்போது அதன் சிறப்பையும் சிறப்பின்மை யையும கூறும் பண்புடையவர். செங்கோன்மை, கொடுங்
கோன்மை என்ற அதிகாரங்களும் இதற்கு நல்ல எடுத்துக்
= 91 =

Page 51
காட்டாகும். தொகுப்பு நிலையிலே வள்ளுவர் கூறும் நாட்டு வாழ்வுக்குத் தேவையான நலங்களை நோக்குவது பயனுடைய
தாகும்.
1. கல்வி
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக்கற்று கற்றதற்கு ஏற்ப ஒழுகவேண்டும். 2) எண்ணும் எழுத்தும் மனிதர்களுக்கு கண்போன்றவையாகும். 3) கற்றோர் கண்னுடையவர். கல்லாதவர் கண் இருந்தும்
முகத்தில் இரு புண் உடையவராவர். 4) அனைவரும் மகிழும்படி கூடிப் பழகி இனி என்று காண்போம் என நினைந்து கற்றறிந்தவருடைய தொழிலாகும். 5) கற்றவர்களே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். 6) தோண்டிய அளவுக்கு நீர் சுரக்கும் மணற்கேணி போல
அறிவும் கற்ற அளவே ஊறும் 7) கற்றவர்களுக்கு 2610 5ւ0 தம்முடையதாக இருக்கும் சிறப்பு இருக்கவும் ஒருவன் கல்லாதிருப்பது என்ன காரணத்தாலோ? , 8) ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழும் பிறப்புக்கும் உதவும். 9) தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்விக்கு உலகம் மகிழ்வதைக் கண்ட கற்றறிந்தோர் மேன்மேலும் அக்கல்வியைக் கற்பர். 10ஒருவனுக்கு அழிவில்லாத செல்வம் கல்வியே. i 6) 60) GOTU!
மணியும் பொன்னும் அழியக்கூடியன.
மக்களுக்குக் கல்வி இன்றிமையாதது. சிறப்புடையவராக வாழ்வதற்கு கல்வியே துணை எனவே கற்கவேண்டிய நூல்களைக் கற்க வேண்டும். அதுமட்டுமல்ல கற்றபடி
வாழவேண்டும். (ਡੋ ਚੰ செயலும் ஒன்றிய வாழ்வு

பெருமை தரும். கல்வியின் வகைப்பாடும் எண்ணும் எழுத்துமாகும். எனவே கற்கப்படும் நூல்களின் கருவியாக இவை அமைகின்றன. கல்வியால் காலத்தையுணர்ந்து வாழும் இயல்புடையவர் ஞானக் கண் பெற்றவராவர். அவ்வாறு கல்லாதவர் ஊனக் கண்ணுடையவரே. கல்விக்குக் கரை இல்லை. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என நினைந்து மேன்மேலும் கற்க வேண்டும். கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வம் கல்வியாகும். கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிடைக்கும்.
2. 356toao Tao D:
கல்வியைக் கற்காவிட்டால் ஏற்படும் இழிவு நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக வள்ளுவர் எதிர்மறை நிலையால் இவ்வதிகாரத்தில் கருத்துக்களைக் கூறுகிறார். அதனால் கல்வி என்னும் அதிகாரத்தின் பின் அமைந்தது. 1) ஒருவன் அறிவு தரும் நூல்களைக் கற்காமல் கற்றவர் சபையிலே கருத்துக்கூற முனைவது அரங்கு ஒன்றை அமைக்காமல் வட்டாடியதைப் போன்றது. 2) கல்லாதவன் கற்ற வர் சபையில் ஒன்றைக் சொல்ல விரும்புவது முலை இரண்டும் இல்லாதவளுடைய பெண்மையை விரும்புவது போன்றது. 3) கற்றவர் சபையிலே ஒன்றையும் சொல்லாதிருந்தால்
கல்லாதவரும் நல்லவராவர். 4) கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருவகையில் நன்றாக இருந்தாலும் கற்ற வர் அதை அறிவுடைமை யூாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 5) கல்லாதவன் அறிவுடையேன் எனக் கூறுகின்ற நிலை
கற்றவர்களோடு உரையாடும் போது கெடடுவிடும். 6) கல்லாதவர் தமக்கும் பிறர்க்கும் பயன்படாத களர் நிலத்தை
ஒத்தவராவர்.
سص= 93 س

Page 52
7) பல நூல்களை ஆராய்ந்த நுண்ணறிவு இல்லாதவனுடைய எழுச்சி அழகும் மண்பாவையுடைய எழுச்சி அழகும் ஒத்தவையாகும். 8) கல்லாதவர்களிடம் சேர்ந்த செல்வம் கற்றவர்களிடத்தில்
உள்ள வறுமையைத் காட்டிலும் துன்பம் செய்யும். 9) மேற்குலத்தில் பிறந்தும் கல்லாதவராயின் கீழ்க்குலத்தில்
பிறந்தும் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவராவர். 10)கற்றவர் மக்களையும் கல்லாதவர் விலங்குகளையும் ஒப்பர் ஒரு நாட்டு மக்கள் கல்வியறிவற்றவராய் இருப்பின் அந்நாட்டில் உயர்வு ஏற்படர்து. வளம் இருக்காது. மக்கள் மக்களாக அன்றி விலங்குகளாக இருப்பர். கல்வியால் பெறும் அழகுதான் நிலையான அழகாகும். நாலடியார் இதனை வருமாறு விளக்குகிறது.
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகு மஞ்சள் அழகும் அழகல்ல-நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையாற் கல்வி அழகே அழகு
(5T6u La LLTří 131) மயிரினது அழகும் வளைய உடுத்த புடைவை யின் முந்தானையழகும் சுண்ணம் பூசிய அழகும் அழகல்ல. நெஞ்சத்தில் யாம் நல்லம் என்னும் நடுவுநிலைமையைச் செய்யும் கல்விப்பேறே உண்மையான அழகாகும். கல்வியின் சிறப்பை சிறுபஞ்ச மூலம் வருமாறு கூறுகிறது.
மயிர் வனப்பும் கண்கவருமார்பின் வனப்பும் உகிர் வனப்பும் காதின் வனப்புஞ் - செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந் சொல்லின் வனப்பே வனப்பு. .
(சிறுபஞ்சமூலம்.37) கல்வியின் சிறப்பை ஏலாதி வருமாறு குறிப்பிட்டுள்ளது.
سس 94 =سسس

இடைவனப்புத் தோள்வனப்பும் ஈடின்வனப்பும் 56Ꮱ 1 வனப்பு நாணின் வனப்பும் - L#38) Lig Tiŝo கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு"
(GJ GOTT 5:4) நீதிநெறி கல்விச் சிறப்பை வருமாறு எடுத்து உரைக்கின்றது
"கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றோரணிகலம் வேண்டாவா முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரோ அழகுக்கு அழகு செய்பவர்"
(நீதிநெறி:13) வள்ளுவர் கல்வியின் சிறப்பை வாழ்வோடு பொருத்தி விளக்கியுள்ளார். அச்சிறப்பை மேற்காட்டிய பாடல்கள் பிறிதொருவகையில் மக்கள் உணர்வு நிலையில் பொருத்திக் காட்டியுள்ளன. போலியான அழகை விரும்பும் மக்களுக்கு உண்மையான அழகை விளக்குகின்றன. அந்த அழகு கல்வியழகே என எடுத்து இயம்பியுள்ளன.
3. கேள்வி:
வாய்மொழிக் கல்வியை இவ்வதிகாரம் விளக்குகிறது. கற்றறிந்தவர் கூறக்கேட்டு அறிவை வளர்க்கும் மரபும் உண்டு. கல்லாதபோதும் அதனால் அறிவை வளர்த்தலால் கல்லாமை யின் பின்னே இதன் வைப்புநிலை அமைந்துள்ளது. 1) ஒருவருக்குச் செல்வங்கள் யாவற்றிலும் செவியால்
கேட்டறியும் கேள்விச் செல்வமே தலையானது. 2) செவிக்கு உணவு இல்லாதபோது வயிற்றுக்குச் சிறிது உணவு
கொடுக்கப்படும். 3) செவி உணவாகிய கேள்வியை உடையவர் நிலத்தில்
வாழ்ந்தாலும் தேவர்களுக்கு ஒப்பாவர்.
=y 95 =

Page 53
4) கற்காவிட்டாலும் கற்றவர் கூறுவதைக்கேட்க வேண்டும். அது வாழ்க்கையில் தளர்ச்சி ஏற்படும் போது துணை செய்யும். 5) வழுக்கக்கூடிய சேற்று நிலத்தில் நடப்பவர்க்கு ஊன்று
கோல் போல ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் உதவும். 6) ஒருவன் சிறிய அளவாயினும் நல்லவற்றைக் கேட்டால்
அவை அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும். 7) கேள்வி அறிவினை உடையவர்கள் பிறழ உணர்ந்த வழியும்
பேதமை தரும் சொற்களைச் சொல்ல மாட்டார்கள். 8) கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் செவிடாம்
தன்மையுடையன. 9) நுட்பமான கேள்வியறிவைப் பெறாதவர் பணிவான
சொல்லை உடையராதல் அரிது. 10) கேள்விச் சுவை அறியாத மனிதர் இறந்தாலும் இருந்தாலும்
LIUGS GI GSTGOT? செவியால் நுகரப்படும் சுவைகளாவன சொற்சுவையும், பொருட்சுவையுமாகும். சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைப்படும். பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என 9 வகைப்படும். வாயால் நுகரப்படும் சுவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு துவர்ப்பு, தித்திப்பு எனும் ஆறாகும்.
கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் நான்கு அதிகாரங்களும் வாழ்க்கையில் தெளிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். நூல்களைப் படிப்பதால் பெறும் அறிவு, கற்றறிந்தோர் வாயால் கேட்டு அறியும் அறிவு என இருவகையான அறிவு நிலையை மனிதன் பெறமுடியும். மனிதன் கற்காவிட்டால் அறிவுடை
யவன் ஆகான் அறிவுடைமை என்பது கல்வி, கேள்விகளினால்

மனிதன் பெறும் நிலையான பயன்ாகும். எனவே நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் அரசு மக்களை அறிவுடை யோராக்க வேண்டிய கடமைப்பாடுடையது. நாட்டு மக்களுக்கு அதனை ஏற்ற நிலைகளில் அரசு வழங்க வேண்டும். அப்போது அது மக்களை நெறிப்படுத்தும் கருவியாக மக்களால் பயன் படுத்தும் கவசமாகவும் விளங்கும். எனவே அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் அது பற்றி விளக்கிக் கூறியுள்ளார்.
4. அறிவுடமை
அரசருக்குத் தம்மைக் காக்கும் கருவியாகவும் பகைவரால அழிக்கமுடியாத அரணாகவும் உள்ளது அறிவு. 2) மனம் டோன வழி செல்லவிடாமல் நன்மையானவற்றிலே அதைச் செலுத்துவதே அறிவு மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு. 3) எப்பொருளை யார் பார் கூறக்கேட்டாலும் அப்பொருளின் உண்மையைக் காண்பகே அறிவு சொல்வோரது இயல்பு நோக்காது அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அப்வாகும். 4) அரியவைகளையும் பிறர்க்கு விளங்கும்படி எளிய முறையில் சொல்லிப் பிறரிடம் கேட்டறிவதில் அரிதாக இருப்பதைக் காண்பதே அறிவாகும். 5) உயர்ந்த வரை நட்பாக்குவது அறிவுடைமையாகும். அந்நட்பின் கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இல்லாததே அறிவாகும். 6) உலகம் எவ்வாறு நடக்கின்றதோ அவ்வாறு நடப்பதே
அரசனுக்கு அறிவுதரும், 7) அறிவுடையார் வரக்கூடியதை முன்னறியக்கூடியவராவர்.
அறிவிலார் அதனை அறியமாட்டாதவராவர்.
-97 -

Page 54
8) அஞ்சப்படுவதனைக் கண்டு அஞ்சாது இருப்பது பேதமை. அஞ்சப்படுவதனைக் கண்டு அஞ்சுதல் அறிவார் தொழிலாகும். 9) வரப்போவதை அறிந்து காக்க வல்ல அறிவுடையவர்க்குத்
துன்பம் இல்லை. 10) அறிவுடையார் எல்லாம் உடையவராவர். அறிவிலாதார்
எல்லாம் உடையவராயினும் இல்லாதவராவர்.
மேற்காட்டப்பட்ட 4 அதிகாரத்தில் கூறப்பட்ட விடயங் கள் அரசருக்கு மட்டுமன்றி அனைத்துப் பொதுமக்களுக்குமே இன்றியமைய்ாதவையாகும். 10 குறள்களில் கூறவந்த விடயத்தைத் தொகுத்துக் கூறும் வள்ளுவர் அதனுள் ஒரு வைப்புமுறையையும் பேணியுள்ளார். அது அவர் கூறவந்த விடயத்தைத் தெளிவாக மனத்துள் வாங்குவதற்கு உதவியாக
உள்ளது. அதனை வருமாறு காணலாம்.
1.இறைமாட்சி
குறள் 1,2,3,4 மாட்சி கூறல் குறள் 5 புகழ் கூறல் குறள் 6,7,8,9,10 மாட்சியும் பயனும் கூறல்
2. கல்வி
குறள் 1வேண்டுகோள் குறள் 2,3 உயர்வும் இழிவும் குறள் : 4 கல்வியால் பெறும் பயன் குறள் 5 உயர்வும் இழிவும் குறள் 6,7,8,9,10 கல்வியின் சிறப்பு
3. கல்லாமை
குறள் 1,2,3 கல்லாதார் நிலை குறள் : 4,5,6,7,8, 9, 10 கல்லாதார் இழிநிலை

4.கேள்வி
குறள் 1,2,கேள்வியின் சிறப்பு குறள் 3 அதனையுடையார் சிறப்பு குறள் : 4,5,6,7 கேட்டார்க்கு வருநன்மை குறள் 8,9, 10 கேளாவழிப்படும் குற்றம்.
5. அறிவுடைமை
குறள் : 1.அறிவின் சிறப்பு
குறள் 1 1,2,3,4,5,6,அறிவுடைமையின் இலக்கணம்
குறள் 7,8 அதனையுடையவரது இலக்கணம்
குறள் 9,10 அறிவுடையார் உடைமையும்
ஏனையோர் இன்மையும்
நாடு என்பது மக்கள் நல்வாழ்வு நடத்தும் இடமாக இருக்க வேண்டும். அதனால் கல்வியும் கேள்வியும் மக்களுக்கு இன்றியமையாத நலங்களாக வள்ளுவரால் சுட்டப்பட்டுள்ளன. மக்கள் பெறவிரும்பும் செல்வங்களையெல்லாம் பெறுவதற்குக் கல்வியும் கேள்வியும் அதனாற் பெறும் அறிவும் தேவை. உலகம் முழுவதற்கும் இது பொதுமையான அறிவுரையாக அமைந்துள் ளது. அதனைச் சிறப்பாக 2 குறளில் கூறியுள்ளார்.
"உலகந்தழிஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்லறிவு"
(அறிவுடைமை; 3)
உரையாசிரியர் இக்குறளில் வரும் 'உலகம்' என்ற சொல்லை உயர்ந்தோரைக் குறிப்பது என்பர். ஆனால்
"எவ்வதுறைவதுலக முலகத்தோ
டவ்வதுறைவதறிவு"
(அறிவுடைமை:6)
எனும் குறள் தீர்க்கமாக உலகத்தையே தொடர்புறுத்தி நிற்கிறது. வள்ளுவர் அரசியல் பற்றிக் கூறிய கருத்துக்களை இரண்டாகக் காணமுடிகிறது. ஒன்று அரசனுக்குரிய இயல்புகள் கூறல்.

Page 55
மற்றது அரசனுக்கும் மக்களுக்கும் உரிய இயல்புகள். அரசனும் மக்களில் ஒருவனே என்பதால் முதல் 5 அதிகாரங்களும் எல்லோருக்கும் பொதுவான குணஇயல்புகளைக் கூறுகின்றன. ஏனைய 20 அதிகாரங்களும் அரசனுக்குச் சிறப்பாக அமைய வேண்டிய குணவியல்புகளை விளக்கிநிற்கின்றன. மக்களைப் பேணும் அரசு மக்களின் தேவைகளை உணர்ந்ததாக அவற்றை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டதாக இருக்கவேண்டும். எனவே அதற்குரிய தகுதிப்பாடுகளையும் அது கொண்டிருக்க வேண்டும். எனினும் செயல்நிலையை நிறைவேற்றும் குணவியல்பு அரசனுக்கு இருக்க வேண்டும். அத்தகைய குணஇயல்புகள் எவையென்பதையே வள்ளுவர் வரையறை
செய்து குறட்பாக்களிலே காட்டியுள்ளார்.
அரசாட்சி பொதுமக்களின் நன்மையைக் கருத்தாகக் கொண்டது. மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தல், பகையை நீக்கல், பசியும் பிணியும் நாட்டில் பரவாதபடி காத்தல், நீர்வளம், நிலவளம், தொழில்வளம் என்பவற்றைப் பெருக்கல், எல்லோர்க்கும் ஒத்த உரிமை வழங்கி செங்கோன்மை செய்தல் போன்ற அடிப்படையான செயற்பாடுகளை வள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார். வள்ளுவருடைய அரசு பற்றிய கருத்துகள் முன்னைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரசு பற்றிய கருத்துக்களை விட வேறுபட்டடவை. ஆட்சித் தலைவனை ஏறக்குறைய 45 முறை வேந்து, மன்னன், இறை என்ற பெயர்களால் குறிப்பிட்டுள்ளார். அவை அவர் சுட்டிச் சொல்ல விரும்பியவற்றை விளக்கிநிற்கின்றன.
l. .......... ஏதம் இறைக்கு (432) 2. ... ஆள்வாரை யாரோ. (447)
3. ....... எமராமன்னன். (448) 4. வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481) 5. m. நாடுக மன்னன் (520)
-100 -

6. பொது நோக்கான் வேந்தன்
7. வந்தானை வேந்தன்
8. .......... இறைபுரிந்து.
9. ......... மன்னவன் கோல்.
10........... மன்னவன் கோல்.
11. ............ மாநில மன்னன்.
. மன்னவன் நாட்ட.
13. ............ மன்னவன் கோல்.
14. இறை காக்கும்.
5......... முறை செய்யா மன்னவன்.
16......... வேந்தன் தொழில்
17. ......... வேந்து ஒறுத்தல் 18.......... ஒழுகும் வேந்து 19. முறை செய்யா மன்னவன்
20......... செய்யும் அரசு 21. மன்னர்க்கு . மன்னர்க்கு ஒளி 22. அற்றே வேந்தன் 23. மன்னவன் கோல்.
24. ........ மன்னவன்.
25. காவலன் காவான்
26........ ஒறுப்பது வேந்து
27. இன்னாச்சொல் வேந்தன்.
28........... தண்டமும் வேந்தன். 29.......... எண்ணாதவேந்தன். 30........... செய்யா வேந்தன்.
31. ......... மன்னவன் கண்
32.......... வேந்தன் தொழில் 33. ......... தெரியா மன்னவன்.
34. மடிஇலா மன்னவன்.
వెన్. . அரசருள் ஏறு
(528)
(530)
(541)
(542)
(543)
(544)
(545)
(546)
(547)
(548)
(549)
(SSO)
(551)
(SS3) (554)
(556)
(557)
(58)
(9ر ز.)
(S60)
(561)
(S64)
(567)
(S68)
(569)
(581)
(582)
(583)
(610)
(381)
-10 -

Page 56
პ6......... வேந்தற்கு இயல்பு (382)
37............. நிலன் ஆள்வார்க்கு (383) 38. UITSðTíb 2) 6ð)L-u15| SUJar (38-4) 39............. வல்லது அரசு (385) 40............. மன்னன் நிலம் (386) 41.............. காப்பாற்றும் மன்னவன். (388) 42........... பண்புடைவேந்தன். (389) 43. ........... வேந்தர்க்கு ஒளி (390)
வள்ளுவர் அடுத்து அமைத்த அமைச்சியலில் ஆட்சித் தலைவனை ஏறக்குறையப் பத்து இடங்களில் மட்டுமே சுட்டி யுள்ளார். மக்கள் எல்லோருமே ஆட்சித்தலைமைக்கு வேண்டிய தகுதியைப் பெறவேண்டும் என வள்ளுவர் விரும்பினார். குடியாட்சி சீராக நடைபெறுகிறதா என்பதை மக்களே உணரவேண்டும். குடியாட்சி முறை பற்றிய தெளிவு குடிகளுக்கு இருக்கவேண்டும். குடியாட்சி திருத்தமாக அமைந்த நாட்டில் தலைமைப் பதவிக்குத் தகுதியாகக் கல்வியும், பண்பும் திறனும் அமையப் பெற்றவர் பலர் இருப்பர். வள்ளுவர் அரசியலில் அரசனுக்கு உரியன என்று கூறும் பல இயல்புகள் நாட்டு மக்களுக்கும் இருக்கவேண்டிய இயல்புகளாகும். நாட்டு மக்களுள் சிறந்த தலைமை உருவாக வேண்டிய தேவையை வள்ளுவர் நன்கு உணர்ந்திருந்தார். எனவே அதற்குரிய பண்புகளையும் இயல்புகளையும் அதிகாரங் களாகப் பாடி வைத்துள்ளார். அவை ஒவ்வொன்றும்
தனித்தனியே விரிவாக நோக்க வேண்டியவை.
வள்ளுவர் பொருட்பாலில் வகுத்த உட்பிரிவுகள் மூன்றெனப் பரிமேலழகர் உரையால் அறியக்கிடக்கின்றது. அவையான அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்பனவாகும். போக்கியார் என்னும் புலவர் பெய்ரால் உள்ள பழையவெண்பா ஒன்றில்
வேறுபட்ட வகைப்பாடு கூறப்பட்டுள்ளது.
-102 m

"அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து உருவவல்லரணிரண்டொன்று ஒண்கூழ் - இருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடி பதின்மூன்று எண் பொருள் ஏழாம் இவை"
என்னும் பாடலின்படி பொருட்பால் ஏழு பகுதிகளையு
டையதாகக் கூறப்பட்டுள்ளது.
1. அரசியல் - 25 அதிகாரம் 2.அமைச்சியல் 10 அதிகாரம் 3. அரண் - 02 அதிகாரம் 4. 5n Lp - 01 அதிகாரம் 5. UGOL. - 02 அதிகாரம் 6. நட்பு - 17 அதிகாரம் 7. குடி 13 அதிகாரம்
இப்பாகுபாட்டின் அடிப்படைக்குத் திருக்குறள் ஒன்றும் உள்ளது. அது வருமாறு:
"படை குடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு"
(குறள்.381)
இதன்படி அரசின் அங்கம் ஆறாக இருந்ததை உணரமுடிகிறது. அதன் தலைவன் ஆகிய அரசன் பற்றித் தனியே சில அதிகாரங்களை அமைத்திருப்பது திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாகவுள்ளது.
ஒரு நாட்டின் வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக வள்ளுவர் கூறும் கருத்துகள் 25 அதிகாரங்களாக விரித்துப் பேசப்பட்டுள்ளன. வள்ளுவர் தான் கூறவந்த கருததுகளைப் புலமைத்திறன் கொண்டு தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளார். கருத்தைத் தெளிவுபடுத்த அவர் கையாண்ட உவமைகள் மிகவும் பொருத்தமானவை. மக்கள் வாழ்விய
லோடு இணைந்த விடயங்களை உவமையாகக் காட்டிட்
- 103 a

Page 57
பொருளைத் தெளிவுபடுத்துவார். முகத்துப்புண்ணையும் மணற்கேணியையும், முலை இல்லாத பெண்ணையும் எல்லோரும் அறிவர் எனவே அவற்றைத்தான் கூறவேண்டிய பொருளுக்கு ஏற்ற வகையில் பொருத்திக் காட்டுவர்.
மக்கள் வாழுகின்ற நாடு சிறந்த அரசமைப்பு நிர்வாகம் உடையதாக இருக்க வேண்டும். நாடவிளைவது நாடு. இயற்கையின் விளைவே காடு. மக்கள் அறிவின் செயற்கை நலமே நாடு. அவர்கள் தம் அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கும் இடமே நாடு. நாடு என்பது நிலப்பரப்பு. அதனுள் காடும் அடங்கும். காடு அதற்கு அரனாய் விளங்கும். அரசன் காவலுடன் இருப்பதே நாடு. குடிகளும் அரசும் ஒருவருக்கு ஒருவர் துணையாய் அன்பாலும் ஒன்றாகி இருப்பதே நாடு. சங்கப்புலவர் . 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
(புறநானூறு 186)
என்ற கொள்கை வயப்பட்டிருந்தனர். வள்ளுவரும் அதிலிருந்து வழுவிவிடவில்லை. ஆனால் மன்னனுடைய தகுதிப்பாடுகளை விரிவாக விளக்கிக் கூறுவது நாடு பற்றிய அவரது கருத்தைத் தெளிவாக்கியுள்ளது. நாட்டு வாழ்வியல் பற்றிய வள்ளுவரது திட்டம் பல செயற்பாடுகளை நெறிப்படுத்தவல்லது. குடிமக்கள் பண்புடையவராக வாழ மன்னனுடைய குணவியல்புகளும் செயற்பாடுகளுமே காரணமாகும். அங்கவியலில் நாடு எனத் தனியே ஒரு அதிகாரத்தை வள்ளுவர் அமைத்துள்ளார். வள்ளுவர் காட்டும் நாட்டுவாழ்வியல் மன்னனைச் சார்ந்ததாக இருந்தது. எனவே அவனுக்குரிய குணவியல்புகளை விரிவாகப் பேச வேண்டிய தேவையும் அவருக்கிருந்தது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு தலைமைத்துவம் மிகவும் இன்றியமையாதது என்பதைச் சுட்டிய வள்ளுவரின் குறள்கள் உலகத்தவரால் நுணுகிக் கற்க வேண்டியவையாகும்.
= } ()4 ജ

9.பக்தியின் மொழி நாச்சியார் திருமொழி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டிய நமது முன்னோர் வரிசையில் நாச்சியார் தனிச்சிறபபடையவர். திருமால் மீது எல்லையற்ற பக்தி கொண்டு ஒழுகிய பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் கோதை என்ற பெயரோடு சீரோடு வளர்ந்தவள். பூமாலை சாற்றும் வழிபாட்டு நடைமுறையில் இணைந்து பாமாலை சூட்டிய பாவையாகப் பெருமை பெற்றவள். பெரியாழ்வார் கண்ணனுக்கு எனக் கட்டி வைத்த பூமாலையைத் தானும் சூடி அழகு பார்த்த பின்பே கண்ணன் சூட்டக் கொடுத்தவள். அதனால் "சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி" என்ற பெயராலும் அழைக்கப்பட்டவள்
துளசிப் பாத்தியில் கலியுகம் பணி பராங்குசர் அவராதி 98 ஆவதான நள வருஷம் ஆடிமாதம் சுக்கிலபசுஷிம், சதுர்த்தசிதிதி, செவ்வாய்க் கிழமை பூரநட்சத்திரத்தன்று ஆண் டாள் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் பெரியாழ்வா வாழ்ந்த பூஞரீ வில்லிபுத்தூர் தெய்வீக ஆற்றல் பெற்றது. மலரிட்டு வணங்கும் வழிபாட்டின் முதற்பேறாக அழகிய பெண் மகவாக நாச்சியார் பெரியாழ்வாருக்குக் கிடைத்தாள்.
மனித வாழ்வுக்கு ஒரு இலக்கு உண்டு. அதை அடைய மனிதன் முயற்சி செய்ய வேண்டும். பிறப்பின் பயனை இறையனுபவம் பெற்றவர் தத்தப அனுபவநிலைக்கேற்ப விளக்கிக் கூறியுள்ளனர். இறைவனுடைய அற்புதக்கோலம் கண்டு நித்தம் நிறைவான மகிழ்வு எய்த அப்பர் மனிதப்பிறவி வேண்டுமென்றார். சிவனருளில் மனம் ஒன்றிய காரைக் காலம் மை யார் மீண்டும் பிறப் புண் டேல் இறையை
மறவாதிருக்க வரம் கேட்டார். ஆனால் ஆண்டாள் காட்டும்
-105

Page 58
பக்தி வாழ்வியல் மிகவும் உன்னதமானது இறைவனோடு ஒன்றி இருக்க விரும்பி நோன்பு நோற்று அவனோடு இணையும் புதிய தொரு அன்பு நெறியை ஆண்டாள் விளக்கியுள்ளார். கண்ணன் மீது கொண்டிருந்த எல்லையற்ற பக்தி காதல் நிலையாக மாறியது. அவனைச் சென்றடைவதே மண்ணிற் பிறந்தார் கடன் என்பதைத் தெளிவுபடுத்தியவர் நாச்சியாரே
அவருடைய புதியநெறி வழிபாடு, உடல் உணர்வு, மனித நிலை என்ற மூவகை நிலையில் சென்றது. வீட்டு வாழ்வியல் நடைமுறைகளோடு பக்தி உணர்வையும் கலந்து மனித விழுமிய வெளிப்பாட்டை நெறிப்படுத்தி நின்றது. இன்றைய வேகமான மனித வாழ்வியல் நடைமுறை என்னும் தளத்தில் நின்று ஆண்டாளின் பக்தி வெளிப்பாட்டை உற்று நோக்கும் போது மிகப் பெரிய உண்மையொன்று வெளிப்படுகின்றது.
எம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் பேராற்றலை நாம் சிலவேளைகளில் மறந்துவிடுகின்றோம். அத்தகைய மறதி வேளைகளில் எமது மனித குணங்கள் ஐம்புலன்களின் செல்வாக்கிற்கு உட்பட்டுத் திசை மாறித் தொழிற்படத் தொடங்கிவிடுகின்றன. மெய், வாய், கண்மூக்குசெவி என்ற ஐம்பொறிகளும் தறிகெட்டு இயங்கத் தொடங்குகின்றன. இத்தகைய வேளையில் மீண்டும் புலன்களையும் பொறி களையும் சீரான செயற்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழிகாட்டல் இன்றியமையாதது. அந்த செம்மையான வழியையே ஆண்டாள் காட்டிச் சென்றுள்ளார். பக்தி என்னும் காதல் நெறி நின்று மனிதக் குணங்களைச் செம்மைப்படுத்த ஆற்றுப்படுத்தியுள்ளார்.
அவர் காட்டிய நெறியை உணர்ந்து அதன் வழி சென்று பயனடைவதற்கு பக்தியின் மொழியாக தமிழ் மொழியை ஒரு
சிறந்த ஊடகத் தொடர் பாடல் மொழியாகப் பயன்
- 106 -

படுத்தியுள்ளார். அவர் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் தொகுதிகளை ஆழமாகப் படிக்கும் போது இதனைத் தெட்டத் தெளிவாக உணரமுடிகின்றது. திருப்பாவை 30 பாடல்களின் தொகுப்பு நாச்சியார் திருமொழி 140 பாடல்களின் தொகுப்பு ஆண்டாளின் புதிய நெறிபுகட்டும் கவிதைகள் தமிழ்க்கவிதைப் பரப்பிற்கே புதிய வளத்தைச் சேர்த்துள்ளன. இன்னிசையால் இன்தமிழால் பாடப்பட்ட கவிதை மாலை கண்ணன் அணியும் மாலையாக அன்றி தமிழறிந்தவர் அனைவருமே உள்ளத்தில் சூடும் மாலையாகப் புதுப்பொலிவு பெற்று விளங்குகிறது. பூமாலை சூடும் பண்பான மனிதவாழ்வியலைட் பாமாலை சூடும் ஒரு மரபான வாழ்வியல் நெறிக்குள் செலுத்தியவள். அதனால் அவள் பாடிய பாடல்களை அவை காட்டும் புதிய பொருத்தமான வாழ்வியல் நெறியை இன்றைய இளந்தலைமுறையினர்க்கு ஏற்றவாறு
எடுத்து உரைக்க வேண்டியபணி எம்முடையதாகும்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையில் ஒரு வழிபாட்டு மரபைக் கவிதையிலே ஆவணப்படுத்தியுள்ளாள் மாதங் களிலே மிகவும் குளிர்மையானது மார்கழி மாதம் இயற்கையின் இயக்க நிலைக்கேற்ப வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே இயல்பானது. அந்த இயல்புவாழ்க்கையை திட்ட மிட்டுக் கொடுத்தவள் ஆண்டாள் என்றால் மிகையா காது. கோயில் வழிபாட்டு மரபு சமூக அங்கத்தவர் அனை வரையும் ஒன்றிணைக்கும் பொது இடமாக விளங்கிய ஆண் டாள் காலத்தில் அவள் ஒரு புதிய மரபையும் தொடக்கிவைத்தாள். நாடும் விடும் வாழ வேண்டி நோன்பு நோற்று வழிபட வழிகாட்டினாள் பாவைநோன்பு எனப் பெண்களால் பேணப்பட்ட வழிபாட்டு மரபு காலத்தால் அழியாத பண்பாடாக நின்று நிலைக்க ஆண்டாள் கவிதை
மாலை ஒன்றை ஆக்கினாள்.
=107 ജ

Page 59
திருப்பாவைப் பாடல்களில் பெண்கள் செய்த வழிபாட்டு நடைமுறைகள் செம்மையாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. ஆயர் பாடியில் Ձյուgib சிறுமிகளும் ஒரு ഫ്രഞ്ഥLTഓT Luഞ്ഞ് മൃഞ1_L ഖ!,ികT് (1) ஆண்டாள் LITT LQ LULJ கவிதைமாலை 8p ID || 6Ù 681 5, 68) 6 | Ա |ւb ஐம்பொறிகளையும் இயற்கையுடன் இணைத்த செயற்பாடாகவே விளங்குகின்றது. பெண்களை அவள் ஒருங்கினைக்கும் போது பயன்படுத்திய சொற்கள் கவிதைமாலையில் இனிய மணம்வீகம் மலர்கள். நேரிழையிர் செல்வச்சிறுமீர்கள் பிள்ளாய் பேய்ப் பெண்ணே! பாவாய் மாமன்மகளே! பொற்கொடியே, புனமயிலே தங்காய் செல்வப் பெண்டாட்டி நங்கைமீர் எம்பெருமாட்டி மருமகனே என அவள் ஏற்ற உறவும் தொடர்பும் கூறி அழைக்கும் தன்மை சமூக நிலையான ஒருங்கிணைப்பை வழிபாடுதரும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
பெண்களின் குண இயல்புகளை மனத்துள் வாங்கி வார்த்தைகளால் மாலையாக ஆண்டாள் தொடுத்துக் காட்டுவது அவள் புலமைச்சிறப்புக்குச் சான்றாக உள்ளது. பெண்கள் மனத்துள் இருக்கும் உணர்வுகளையெல்லாம் உள்ளே புகுந்து அள்ளி வந்து சொல்லோவிய மாய் வரைந்துள்ளாள். நோன்பின் திறத்தை வையத்தில் வாழும் அனைவரும் அறியச் செய்துள்ளாள். இன்றைய நவீன தொழில் நுட்ப தொடர்பாடல் கருவிகள் எதுவும் இல்லாத ஆண்டாள் காலத்தில் அவள் இசைமாலையே வாய் மொழியாகப் LJU 65ug).
நெய்யுண்ணோம், பாலுண்ணோம் நாட்காலேநீராடி மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் நோன்பின் நடைமுறைகளை ஆண்டாள் சொல்லும் போது ஐம்புலன்களையும் ஐம்பொறிகளையும் வென்றெடுக்கவும்
வழிகாட்டுகிறாள். இந்த நோன்பினால் எல்லாப்பெண்களும்
−108 =

ஒரே இலக்குடன் செயற்பட அதன் பயன் என்ன என்பதையும் சுருக்கச் செய்தியாக ஆண்டாள் கூறிவிடுகின்றாள்.
நாங்கள் பாவைநோன்பு நோற்றால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் செந்நெல் வயல் விளையும் பெரும் பசுக்களின் வளம் பெருகும் பெண்களின் வழிபாட்டால் செல்வம் பெருகி நாடுவளம் பெறும் இந்த வழிபாட்டு மரபு எப்போதும் நிலைபெற்றிருக்க வேண்டுமென வரம் கேட்கும் ஆண்டாள் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெண்கள் ஆற்றக் கூடிய உன்னதமான பணியை தமிழ் மொழியால் நயம் பட எடுத்துரைத்துள்ளாள்.
ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி வழிபாட்டு நிலையில் உணர்வுகளை நெறிப்படுத்த முயல்கிறாள் அதற்கு தனது அனுபவத்தையே பாடல்களில் பொதிந்துள்ளாள் பெண்மையின் இளமைக் குண நிலை களையெல்லாம் ஒழிவுமறைவின்றிக் கூறுகின்றாள். கண்ணனை அடைய விரும்பிக் காமனைத் தொழுகிறாள். தெய்வத்தின் அருளைப் பெறச் செய்யவேண்டிய முயற்சிகளை அவள் வரிசைப் படுத்திப் பக்திமாலையாக்கியுள்ளாள். பெண்மையின் கற்பனை வாழ்வியல் நினைப்புகளையும் ஆண்டாள் தனது உள்ளத்திலே தேக்கிவைக்காமல் கவிதையிலே வெளிப்படுத்தும் பாங்கு புதுமையானது. தை மாசி, பங்குனி என்னும் மூன்று மாதங்களிலும் செய்கின்ற வழிபாட்டு நடைமுறைகளை ஆண்டாள் வரிசைப்படுத்திச் சொல்லும் போது பெண்களின் கடைமைகளையும் பேசுகிறாள்.
தைமாதம் தரையை விளக்கி கோலம் போடும் நடை முறையை ஆண்டாளின் கவிதை எனும் ஒளிப்படக்கருவி அழகாகப் படம் பிடித்து வைத்துள்ளது. மாசி மாதத்தில் வெண்மணல் கொண்டு வீதியை அழகுபடுத்தும் பண்பும் எரிஒம்புதலும் முருக்க மலர் கொண்டு முப்போதும் தொழும்
H109 m

Page 60
நிலையும் அவரில் இறைவன் பேரெழுதி வழிபடும் தன்மையும் பண்டைய வழிபடும் மரபு பற்றிக் கூறுகிறது.
உணர்வு நிலையிலே மனித உடல் வளர்ச்சிக்கு ஏற்பத் தோன்றும் மாற்றங்களை ஆண்டாள் உன்னிப்பாகவே பாமாலையிலே காட்டுகிறாள். சிறுமியாக இருக்கும் பருவத்தில் சிற்றில் கட்டி விளையாடுவதையும் குமரிப்பருத்தில் கோலச் சிற்றாடை அணிந்ததையும் அவள் குறிப்பாய்க் காட்டி உணர்வுநிலை மாற்றத்தையும் நயமாகக் காட்டியுள்ளாள். இளம்பெண் தன் உள்ளக் கருத்தை உரியவனிடம் தெரிவிப் பதற்கு தூதனுப்பும் நிலையை ஆண்டாள் கூறும் போது அக்காலத்து தகவல் தொடர்பு இயற்கையுடன் ஒன்றியிருந்ததை உணரமுடிகிறது. மனதுக்குப் பிடித்தவரை மணம் புரிய விரும்பும் பெண்ணின் உள்ளத்திலே அவரையே திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாடு இருக்கும் அதனால் அவளுடைய கனவிலே திருமணம் நடைபெறுவதாக
கவிதைமாலையை ஆண்டாள் தொடுத்துள்ளாள்.
மணவறையிலே மணமகன் புகுதல், மாலை சூட்டல, காப்புக் கூட்டல், கைத்தலம் பற்றல், தீவலம் செய்தல், அம்மிமிதித்தல், பொரிமுகம் தட்டல், மஞ்சனமாட்டல், மங்கலமானவீதிவலம் என இன்று நடைபெறும் திருமண நடைமுறைகளின் மூலப் பொருளை ஆண்டாள் கவிதை மாலையால் அறிய முடிகிறது. ஆண்டாள் கவிதையில் உள்ளத்து உணர்வுகளை வடிக்கும் போது அதை உள்ளவாறு கூறும் பண்புநிலை பேணுகிறாள். கண்ணனின் திருப்பவளச் செவ்வாயின் வாய்ச்சுவையும் நாற்றமும் அறிய வேண்டி அவன் கையில் இருக்கும் சங்கிடம் கேட்பதாக அவள் பாடிய பதிகம் தமிழ்க் கவிதைமரபில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. மானிடக்காதல் உணர்வுகளை தெய்வத்தின் மேல் கொண்ட காதலுணர்வாக அவள் பாடியது
ஆண்டாளின் ஒப்பற்ற காதல் நிலை. அதுவே மானிடக்
=110 =

காதலையும் தெய்வீகக் காதலையும் ஒன்றெனக் கருதும் உயர்ந்த பக்திநிலையின் தத்துவமானது. ஒருவனுக்கு ஒருத்தி எனவும் ஒருத்திக்கு ஒருவன் எனவும் வரையறை செய்யப்பட்ட வாழ்வியலை நிலைபெறச் செய்ய அதை பேராற்றல் படைத்த இறையன்போடு இணைத்துவிட்டாள். மனித உள்ளத்திலே என்றும் மறையாத அழியாத காதலாக அதை ஆக்கிய பெருமை ஆண்டாளையே சாரும். பெரியாழ்வாரின் வளர்ப்புமகள் அவருடைய வழிபாட்டுத் தத்துவத்தை எல்லோரும் எளிதாய் உணர ஒரு புதிய பக்தி மரபைத் தொடக்கிவைத்தாள். மானிடக் காதலைவிடத் தெய்வீகக்காதலின் ஆழத்தை ஆண்டாள் பாமாலையால் விளக்கினாள். அவளுடைய வழிபாட்டு நெறி
கவிதை யாற்றலால் பதிகப் பாமாலை களாகிற்று.
இன்று பக்தியின் மொழி தமிழ் என்று விதந்து பேசுவோர் ஆண்டாளின் பாமாலையைப் படிக்கும் போது புதிய அனுபவத்தைப் பெறுவர் வழிபாட்டு நடைமுறைகளும் பக்தியுணர்வும், காதல் நிலையும் மொழிவழியாகப் பரவ ஆண்டாள் தமிழ்ப் பணி செய்துள்ளாள். நாயகன் நாயகி பாவத்தில் பெண்மையின் குணநலன்களை ஆண்டாள் பாடிய நயம் தமிழ்மொழியின் ஆற்றலுக்கோர் எடுத்துக்காட்டு. கோவில்களிலெல்லாம் உறையும் தெய்வத்தின் தோற்றப் பொலிவையும் அருட்சிறப்பையும் ஆற்றலையும் கவிதையிலே கூறும் மரபுக்கு ஆண்டாள் புதிய வளம் சேர்த்தாள். பிருந்தா வனத்திலே கண்ணனைக் கண்டதாக ஆண்டாள் பதிகம் நிறைவுறுகிறது. கோதை எனப் பெரியாழ்வார் பெயர் சூட்ட சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாக வளர்ந்து ஆண்டாளாக மலர்ந்து நாச்சியாராக நிறைவு பெற்ற ஒரு பெண்மையின் வாழ்வியல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்புநூலில் காலத்தை வென்ற பாமாலைகளாக நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
=111 =

Page 61
10.நாச்சியார் திருவமாழி காட்டும் வாழ்க்கை நெறி.
'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் வைணவ ஆழ்வார்களின் பாடல்களின் தொகுப்பு நூலில் "நாச்சியார் திருமொழி"யும் இணைக்கப்பட்டுள்ளது. பெரியாழ்வாரின் வளர்ப்புமகளான ஆண்டாள் பாடிய பாடல்கள் திருப்பாவை. நாச்சியார் திருமொழி என இரண்டு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. திருப்பாவை இன்றும் மார்கழி மாதத்தில் காலைப்பொழுதில் ஒதப்பட்டு வருகிறது. ஆண்டாள் திருமாலையே காதலனாகக்கொண்டு அவனைக் காணத் துடிக்கும் தன்மை கொண்ட பாடலாக நாச்சியார் திருமொழி அமைந்துள்ளது. அப்பாடல்கள் பழந்தமிழ் இலக்கியமரபான
அகப்பொருள் துறையைத் தழுவிப் பாடப்பட்டுள்ளன.
பெண்மையின் உணர்வுகளும் காதல் வயப்பட்ட மகளிரது உள்ளமும் கற்புடைய மகளிர் இயல்பும் பெண்களின் கடமையும் செயற்பாடுகளும் ஆண்டாள் பாடல்களிலே விளக்கப்பட்டுள்ளன. நாச்சியார் திருமொழியில் மாயவனை மணம் செய்து கொண்டதாக கண்ட கனவு எனப் பத்துப் பாடல்கள் உள. இப்பாடல்கள் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலே மக்களிடையே இருந்த திருமணச்சடங்கு முறைகளைப் பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்களையும் ஆண்டாள் பாடல்கள் விளக்கிநிற்கின்றன.
பண்டைக்காலத்தில் பெண்களின் வாழ்க்கைநெறி இல்லற நெறியிலே இயைபுபட்டிருந்தது. பக்தி மார்க்கம் பரவிய காலத்தில் பெண்களின் உரிமை மதிக்கப்பட்டது. ஆண் பெண் அன்பு கடவுளை நாயகனாகவும் அடியவர் தங்களை நாயகியாகவும் வைத்துப்பாடும் மரபுக்கு வழிகாட்டிற்று.
-112 -1

கடவுளிலே அன்பு செலுத்திக் கடவுளையே நாயகனாக அடையவேண்டும் என்ற உறுதிநிலையில் வாழ்ந்த நாச்சியார் பாடிய திருமொழி ஒரு புதிய வாழ்க்கை நெறியாகியது. நாயகன் நாயகி பாவத்தில் பாடும் பக்திப்பாடல் மரபு ஒன்றை உருவாக் கிற்று. துன்பத்தின் கொடுமையை அதனை உணர்ந்தவர்களிடம் முறையிட்டால் பரிகாரம் கிடைக்கும். உணராதவரிடம் முறையிட்டுப் பயன் இல்லையென ஆண்டாள் கூறுகிறாள். நாச்சியார் தனது காலத்திலே இருந்த பெண்களின் வரிபாட்டு நடைமுறைகளை எடுத்துப் பாடியுள்ளார். காமன் வழிபாடு பெண்கள் விரும்பிய காதலரை அடைய வழிவகுக்கும். கன்னிப்பெண்கள் தமக்கு நல்ல கணவனைத் தர வேண்டு மெனக் காமனை வணங்கி வந்தனர். ஆணுக்கும் பெண்ணுக்கு மிடையே தொடர்பை ஏற்படுத்துவது காமம். அதுவே பின்னர் காதலாகி ஒருவர் மீது ஒருவர் அன்புசெலுத்தும் நிலைக்கு இட்டுச் செல்வது. ஆனால் காமம் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காக காமத்தைக் 'காமன் எனத் தெய்வமாக வழிபடும் நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. நாச்சியார் திருமொழியில் காமனை வழிபடும் முறைமை கூறப்பட்டள்ளது. நாச்சியாருடைய பாடல்களில் காட்டப்படும் வாழ்க்கை நெறி இளமைக்காலத்துப் பெண்மையை வழிப்படுத்துவதாக
உள்ளது.
நாச்சியார் திருமொழியில் 14 பதிகங்கள் உள்ளன. அவற்றின் அமைப்பும் ஆண்டாளுடைய நோக்கை விளக்கி நிற்கின்றது. கண்ணனை வழிபட்டுப் பெறும் பயனை எல்லோரும் அறியும் வண்ணம் பாடியுள்ளார். பொதுவாக பதிகம் 10 பாடல்கள் கொண்டதாக உள்ளது. சிலபதிகங்களில் 11 பாடலும் அமைந்துள்ளன. அப்பதினோராவது பாடல் முத்திரைக்கவியென அழைக்கப்பட்டது. நாச்சியார் திருமொழி
யமைப்பை வருமாறு காணலாம்.
=113 -

Page 62
1 ஆந்திருமொழி:
2 ஆந்திருமொழி:
3 ஆந் திருமொழி:
4 ஆந் திருமொழி:
5ஆந்திருமொழி:
6 ஆந்திருமொழி:
7 ஆந்திருமொழி:
8 ஆந்திருமொழி:
9 ஆந்திருமொழி:
10 ஆந்திருமொழி:
11 ஆந்திருமுறை : 12ஆந்திருமுறை:
13ஆந்திருமுறை:
14ஆந்திருமுறை:
கண்ணனிடம் கூட்டும்படி காமனைத் தெழுதல். 10 பாடல் சிறுமியர் மாயனைத் தஞ்சிற்றில் சிதையேலெனல் 10 பாடல் கன்னியரோடு கண்ணன் விளையாடல்
10 TL6) கூடலிழைத்தல் 10 பாடல் + முத்திரை எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்குக் கூறுதல்10 + 1 UTL6) மாயவன்றன்னை மணஞ்செய்யக்கண்ட தூயநற்கண்வைத்தோழிக்குரைத்தல் 10 பாடல் + முத்திரை பாஞ்சசன்னியத்தை பத்மநாபனோடுஞ் சுற்ற மாக்குதல் 9 பாடல் + முத்திரை மேகவிடுதூது 10 பாடல் திருமாலிருஞ்சோலை யெம்பிரானை வழிபடல் 9 பாடல் + முத்திரை தலைவி பிரிந்த நிலையில் மனம் பெறாது வருந்திக் கூறுதல் 10 பாடல் திருவரங்கத்துச் செல்வனைக்காமுறுதல் தலைவி கண்ணனுள்ள இடத்தில் தன்னை க் கொண்டு விடும் படி உற்றாரை வேண்டல் 10 பாடல் தலைவி கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றால் தன் வாட்டத்தைத் தவிர்க்க வேண்டுதல் 10 பாடல் பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறுதல் 10 பாடல்
நாச்சியார் பாடிய பதிகத்தின் அமைப்பில் இறுதிப்பாடல்,
பதிகத்தைப் படிப்பதால் பெறும் பயனைக் கூறுகின்றது. எனவே
- 14

அதனை முத்திரைக் கவியின் அமைப்பெனக் கொள்ளவும் இடமுண்டு. அவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து நாச்சியார் ஒருவழிபாட்டின் பயனைக் கூறுவதை நன்கு உணரமுடிகின்றது. விட்டுசித்தன் பெயரும் ஊரும் இணைத்துக் கூறும் பாங்கு
நாச்சியார் தன்னை வளர்த்த கடனுக்கு நன்றி சொல்வது போல இருக்கின்றது. ஏறக்குறைய எல்லாப்பதிகங்களும் இவ்வாறே அமைந்துள்ளன.
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோண்டி நண்ணுவரே. வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லி புத்துர் மன் விட்டு சித்தன்றன் கோதை வாய்த்தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தஞ் சேர்வரே. பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை இன்னிசையாற் சொன்ன மாலையீரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே. கூடலை குழற்கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கில்லை பாவமே. பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான்கோதை சொன்ன நண்ணுறு வாசக மாலைவல் லார் நமோ நாராயணய வென்பாரே.
ஏயர் புகழ்வில்லிபுத்தூர்க்கோன்கோதை சொல் தூய தமிழ் தமிழ்மாலை யீரைந்தும் வல்லவர் வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வாரே.
-115 -

Page 63
11.
12
14.
ஏய்ந்த புகழ்பட்டர் பிரான் கோதைதமிழிரைந்தும் ஆய்ந்தேத்த வல்லாரவருமனுக்கரே
போகத்தில் வழுவாத புதுவையர்கோன்கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பா ரவடியாராகுவரே சுந்தரனைச் சுரும்பார் குழற்கோதை தொகுத்துரைத்த செந்தமிழ் பத்தும்வல் லார் திரு மாலடி சேர்வர்களே
வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டுமே. தம்மை யுகப்பாரைத் தாமுகப்பரென்னுஞ் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாராரினியே. பொன்னியல் மாடம் பொலிந்துதோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை இன்னிசையாற் சொன்ன செஞ்சொல் மாலை யேத்த
வல்லார்க்கிடம் வைகுந்தம்மே.
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக
விரும்பும் சொல்லைத் துதிக்கவல்லர்கள் துன்பக் கடலுள் துவளாரே. பிருந்தாவனத்தே கண்டமையை விட்டுசித்தன் கோதை சொல் மருந்தா மென்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாளுடைய பிரானடிக் கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே.
பெரியாழ்வார் வளர்ப்பு மகளான கோதை தனது பதிகங்களின்
நிறைவுப் பாடலில் அவரைக் குறிப்பிட்டுச் சென்றுள்ளமை
மனங்கொள்ளத்தக்கது. வழிபாட்டின் பயன் கூறவந்த இடத்தில் தனக்கு அந்த வழிபாட்டுப் பயிற்சியை அளித்த வளர்ப்புத் தந்தையைக் குறிப்பிடுகிறாள். தனக்கு அவர் இட்ட கோதை
என்ற பெயரையும் குறிப்பிடுகிறாள். வழிபாட்டின் பயன் இன்னது என்பதை எடுத்துக் கூறும் ஆண்டாள் தான் வாழ்ந்த வில்லிபுரத்தூரையும் சிறப்பித்துப்பாடுகிறாள். நாராயணனை
ത്ത116 =

வழிபடும் மக்கள் வாழும் ஊரின் வளத்தை "பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவை" எனவும் 'பொன்னியல்' மாடம் பொலிந்து தோன்றும் புதுவை" என்றும் புகழ்ந்து பாடுகிறாள். இன்று வழங்கும் கோயில்லில்லா ஊரிற் குடியிருக்கவேண்டாம் என்ற முதுமொழி ஆண்டாள் காலத்தில் தோன்றவில்லைப் போலும். வழிபடுவதற்குக்கோயில் அமைப்பு அவசியம் என்பதையும் ஆண்டாள் உணர்த்தியுள்ளாள். தாம் செய்த பாவங்களைத் தீர்ப்பதற்கும் நன்மக்களைப்பெற்று மகிழ்வதற்கும், துன்பத்திலிருந்து மீள்வதற்கும் வழிபாடு தான் இன்றியமையாதது என ஆண்டாள் மக்களுக்கு உணர்த்து
கின்றாள்.
ஆண்டாள் பாடிய பதிகங்களில் ஒரு புதிய வழிபாட்டு நெறியின் முறைமையைக் காணலாம். பெண்களின் வழிபாட்டு நடைமுறைகளை அவர்களுடைய பருவவளர்ச்சி நிலைக்கு ஏற்ப வகுத்துக்காட்டுகிறாள். இங்கு தன்னுடைய வாழ்க்கை யனுபவத்தை ஆண்டாள் பாடியுள்ளாள். சிறுவயதுமுதல் கன்னிப்பருவம் வரைதான் செயற்பட்ட வழிபாட்டுநெறியை பாடல்களால் எடுத்தியம்புகிறாள். 'திருப்பாவை’ என ஆண்டாள் பாடிய பாடல்ளில் மார்கழி மாதத்தில் நடை முறையிலிருந்து ஒரு வழிபாட்டைக் குறிப்பிட்டுள்ளாள். நாச்சியார் திருமொழியில் காமன் வழிபாடு பற்றிக் கூறுகிறாள். அவ்வழிபாடு செய்யப்படும் மாதம்; வழிபாட்டு நடைமுறைகள் என்பவற்றை விரிவாக விளக்கியுள்ளாள். ஆண்டாளின் திருப்பாவை ‘மார்கழித்திங்கள் என அந்த வழிபாட்டின் காலத்தைத் தொடக்கத்திலேயே சுட்டி நிற்கிறது. அது போல தைமாதத்து வழிபாட்டு நடைமுறைகளின் தன்மையையும் பங்குனி மாதத்து வழிபாட்டு நடைமுறைகளின் தன்மையையும் குறிப்பிட்டுள்ளாள். திங்கள் என்னும் சொல்லைக் காலக்
கணிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளாள். தை, மாசி, பங்குனி எனத்
-117 ഞ

Page 64
தொடர்ந்து வரும் மாதங்களின் பெயர் நாச்சியார் திருமொழி யின் முதற்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. திங்களைக் கொண்டு காலத்தைக் கணிக்கும் மரபினையும் நாச்சியார் பதிவு
செய்து வைத்துள்ளாள்.
வழிபாட்டு நடைமுறைகளில் ஒர் ஒழுங்கும் தூய்மையும் இருப்பதை நாச்சியார் உணர்த்துகின்றாள். அவற்றைப் பாடலில் குறிப்பிட்டுக் கூறுகின்றாள்.
1.தைமாதம் தரையை விளக்குதல் -1ஆம் திருமொழி பாடல் 1 2.மாசி முன்னாள் தெருவை ஐயநுண்மணல் கொண்டு அழகு
படுத்தல் (1:1) 3. விடிய முன்னர் நீராடுதல் (1:2) 4. முள்ளில்லாத சுள்ளியெடுத்து எரிமடுத்தல் (1:2) 5 பூமாலை தொடுத்தல் (1:2) 6.பேர் எழுதி வழிபடல் (1:2) 7. முருக்க மலர் கொண்டு முப்போதும் வழிபடல் (1:3) 8.மத்தனறு மலர் கொண்டு வழிபடல் (1:3) 9. சுவரில் பேரெழுதி சுறவுக்கொடி நட்டுவழிபடல் (1.4) 10. பங்குனிநாளில் நோற்றல் (1.6) 1.காயுடை நெல், கரும்பு, கட்டியரிசி அவல் படைத்து
வழிபடல் (1:7) 12. ஒரு போது உண்டு வழிபடல் (1:8)
கண்ணனை வழிபடும் நடைமுறைகளைக் கூறும் ஆண்டாள் அவனுடைய பேராற்றல் பற்றிய செய்திகளையும் குறிப்பிட் டுள்ளாள். தனது நோன்பின் இலக்கு கண்ணனை அடைவதே என்பதை உணர்த்த
"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே" (1.5) என்று உறுதியாக இருக்கிறாள்.
H. 118

கண்ணனுடைய தோற்றத்தை ஆண்டாள் பல பாடல் களிலே குறிப்பிட்டுள்ளாள். அவற்றைத் தொகுத்துக் கூறின் வருமாறு அமையும்.
1. ஆலிலையில் பள்ளிகொள்ளுதல்
2.கடலில் பள்ளி கொள்ளல்
3. அரவணைமேல் பள்ளிகொள்ளல்
4. சக்கரமேந்திநிற்றல்
5.முகில்வண்ணம்
6. செந்தாமரைக்கண்
7.முறுவல் செய்தல்.
கண்ணனுடைய பல்வேறு பெயர்களையும் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளாள். வேங்கடவன், கோவிந்தன், காயா வண்ணன், கமலவண்ணன், திரிவிக்ரமன், கேசவன், நாராயணன் திருமால், மாயன், வாமனன், கோவலன், குழகன், சிறீதரன், மாதவன், மதுசூதன், வாசுதேவன், செங்கண்மால், சிசுபாலன், திருவரங்கன், நந்தகோபன், நெடுமால், குறும்பன், கோவர்த்தன், வைகுந்தன் எனப் பாடல்களிலே ஆண்டாள் சுட்டும் பெயர்கள் வழிபாட்டு நடைமுறையில் முக்கியத்துவம் பெற்றவை யாயுள்ளன. அவனுக்கு நாமம் ஆயிரம் என்ற குறிப்பையும் ஒரு பாடலில் தந்துள்ளாள்.
"நாமமாயிரம் ஏத்த நின்ற நாராயணா' (2:1) இத்தகைய இறைவன் பெயர்களைக் கூறும் வழிபாட்டு மரபு இன்று வரை நிலைத்துள்ளது.
ஆண்டாளின் இலக்கியப்புலமைச் சிறப்பிற்கு அவர் பாடிய பாடல்கள் சான்றுகளாயுள்ளன. தனக்கு முன்னே வாழ்ந்தவர் மூலம் பரப்பப்பட்ட திருமாலின் பெருமைகளையும் அருட்டி றங்களையும் நன்கு அறிந்தவளாக இருக்கின்றாள். அதனால் பாடல்களில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளாள். அவற்றை இங்கு குறிப்பிடுவது பயனுடைத்து
- 119 H

Page 65
1. "குண்டு நீருறை கோளரீமதயானை கோள்விடுத்தாய்"(23) 2"கடலையடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று
இலங்கையைப் பூசலாக்கல்" (2:6) 3."முற்ற மண்ணிடந்தாவி விண்ணுற நீண்டளந்து
கொண்டாய்" (2:9) 4."சீதை வாயமுதம் உண்டாய்" (2:10) 5.'குதி கொண்டு அரவில் நடித்தாய் (32) 6."வில்லா விலங்கை அழித்தாய்"(33) 7. "கஞ்சனை வலைவைத்தது" (3:9) 8."வஞ்சகப் பேய்ச்சி பாலுண்டது" (3:9) 9."வாய்த்த காளியன் மேல் நடமாடியது" (4:4) 10. "ஒடை மாமதயானை உதைத்தவன்" (4:5) 11."கஞ்சனை வஞ்சனையிற் செற்றவன்" (4:6) 12. "சிசுபாலனைக் கொன்றது" (4:7) 13."அண்டமும் நிலமும் அடியொன்றினால் கொண்டது" (4:9) 14.'உண்பது சொல்லி உலகளந்தான்" (7:8) 15."ஊன் கொண்ட வள்ளு கிராலிரணியனையுட
லிடந்தான்"(8:5) 16."கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரன்" (10:4)
புராணக் கதைகளில் ஆண்டாளுக்கிருந்த பயிற்சியை
இவ்வெடுத்துக் காட்டுகள் நன்கு உணர்த்துகின்றன.
இறைவன் மீது அன்பு பூண்டு ஒழுகும் ஒரு வாழ்க்கை
நெறியை உணர்த்தும் ஆண்டாள் அதற்குத் தன்னுடைய் அன்பு நிலையையே எடுத்துக் காட்டாக்கியுள்ளாள். சிறுமியாக சிற்றில்
இழைத்து விளையாடிய போதும் கன்னியாக கண்ணனை
நினைந்து நோன்பிருந்த போதும் ஆண்டாள் தான் பெற்ற
அநுபவங்களைக் காட்சிபடுத்திக் காட்டியுள்ளாள். சங்கப்
பாடல்கள் பற்றிய அறிவு ஆண்டாளுக்கு இருந்தமையைப் பாடல்களில் கிடைக்கும் தரவுகள் உணர்த்துகின்றன.
-120 -ത്ത

‘கூடலிழைத்தல்' என்னும் நடைமுறை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. நாச்சியார் பாடிய 4 ஆந்திருமொழியில் இந் நடைமுறை பற்றியே பாடியுள்ளாள். 10 பாடல்களிலும் "கூடிடு கூடலே" என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளாள். "கண்ணன் வந்து தன்னைக் கைப்பற்ற வேண்டும்" என்ற எண்ணம் நிறைவேறுவதற்காக இந் நடைமுறையைச் செயற்படுத்து வதாகப் பாடியுள்ளாள். நாட்டுப்புற நம்பிக்கையை ஆண்டாள் உணர்த்தமுற்பட்டுள்ளாள். இதே போன்று'சிற்றில் இழைத்தல் என்ற நடைமுறைபற்றியும் பாடியுள்ளாள். சிற்றில் அமைக்கும் முறை பற்றிக் குறிப்பிடும் போது
"இன்று முற்றும் முது நோவ இருந்து இழைத்த சிற்றில்" (22) எனக் குறிப்பிட்டுள்ளாள். மேலும் "வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்கைகளால்
சிரமப்பட்டோம்" (2:3) "வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட
வீதிவாய்த் தெள்ளிநாங்கள் இழைத்த கோலம்." (2:5) "வட்ட வாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும் மணலுங்
கொண்டு இட்டமா விளையாடு வோங்களைச் சிற்றிலீடழித் தென்பயன்" (2:8) என்ற குறிப்புகளும் சிற்றில் பற்றிய செய்தியைத் தருகின்றன.
சங்க இலக்கியங்களிலே குறிப்பிடட்படுகின்றதுாது பற்றிய நடைமுறையை ஆண்டாள் கண்ணனை அடையும் வழிபாடடு நடைமுறைச் செயற்பாடாக்கிப் பாடல் பாடியுள்ளார். குயிலைக் கூவியழைக்கும் படி வேண்டுகிறாள். குயிலுடைய குண இயல்புகளைச் சுட்டிக் கூவும்படி கேட்கிறாள். பொதும் பினில் வாழும் குயிலையும் பூமலர் கோதிக் களித்திசைபாடும் குயிலையும் காதலியோடு வாழும் குயிலையும் அழைத்துப்
-121 m.

Page 66
பேசுகிறாள். அக்குயிலைத் தன்னோடொத்த ஒரு பெண்
போலவே கருதிப்பாடுகின்றாள். அவள் அதனோடு நேரில்
நின்று உரையாடுவது போலப் பாவனை செய்து பாடுகிறாள்.
"கண்ணனை நான் மனத்தால் உகந்தமையால் சங்கிழக்க வேண்டி நேரிடுமோ? விமலன் எனக்கு உருக்காட்டான். உள்ளத்திலே நாளும் நைவிக்கின்றான். நான் துன்பக் கடலிலே புகுந்து வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன். அன்புடையவரைப் பிரிவதால் வரும் துன்பத்தை நீயும் அறிந்திருப்பாய். உனக்குத் தோழமையாக நான் இன்னடிசிலொடு பாலமுதுாட்டி யெடுத்தவென் கோலக் கிளியைத் தருவேன். சோலையி லிருந்து என்னை
வதைக்காதே. இன்றே நாராயணன் வரக் கூவுவாய்"
என ஆண்டாள் குயிலோடு பேசுவது கண்ணன் மீது தான் கொண்ட காதலை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. கண்ணன் நினைவால் தான் படுகின்ற துன்பத்தைக் குயில் கூவித் தீர்க்குமென நம்புகிறாள். குயில் வாழுமிடங் களைக் குறிப்பிடும்போது ஆண்டாள் பயன்படுத்தும் சொற்கள் அவள் தமிழ்ப்புலமைக்குச் சான்றாகவுள்ளன. பொதும்பு, போதலர்கா, மாம்பொழில் என்ற சொற்கள் வேறுபட்ட சோலைகளை விளக்கி நிற்கின்றன. குயிலின் மொழியை அறிந்தவள் போல ஆண்டாள் பேசுவது அவளுக்குத் துணை யாக மனிதர்கள் யாருமே இல்லை என்பதைப் புலப்படுத் துகின்றது.
இதே போன்று முகில்களிடமும் தன்னிலையை எடுத்துரைக்கின்றாள். முகில்களுக்கு அவள் வழங்கியுள்ள அடைமொழி ஆண்டாளின் புலமைச்சிறப்புக்குச் சான்றாகும்.
விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்! மாமுத்த நிதி சொரியும் மாமுகில்காள்! s
ത്ത122 -

அளியத்தமேகங்காள்! மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! கலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள்! கார் காலத்தெழுகின்ற கார் முகில்காள்! மதயானை போலெழுந்த மாமுகில்காள்!
இயற்கையான முகில்களின் செயற்பாட்டை தன் உணர்வுடன் பொருத்திக் கூறும் ஆண்டாளின் கற்பனைத் திறன் உயர்ந்தது. வேங்கட மலையிலே படிகின்ற முகில்களை தூதாக அனுப்புகிறாள். கண்ணனுக்கு "ஒரு பெண்கொடியை வதை செய்தான்" என்னும் இழிநிலை ஏற்படாதிருக்க மேகங்களைத் தூது போகும்படி வேண்டுகிறாள். மேகங்கள் தன்னிலையை உணர்வுபூர்வமாக விளக்க வேண்டுமென விரும்புகிறாள். அதனால் மேகங்களை விளித்து செப்புமினே! சாற்றுமினே! உரையீரே! என வெவ்வேறு சொற்கள் மூலம் வேண்டுகிறாள்.
10 ஆந்திருமொழியில் தன்னிலையை இயற்கைத் தோற்றங் களுக்கும் பறவை விலங்குகளுக்கும் எடுத்துக் கூறுகிறாள். அவற்றை வருமாறு காணலாம்.
1. கார்க்கோடற் பூக்காள்!
2.மேற்றோன்றிப்பூக்காள்!
3.கோவை மணாட்டி!
4. முல்லைப் பிராட்டி!
5. பாடும் குயில்காள்!
6.கணமாமயில்காள்!
7.தோகை விரிக்கின்ற மயில்காள்!
8. மழையே! மழையே!
9. கடலே!கடலே!
-123 =

Page 67
இவ்வாறு இயற்கையை ஆண்டாள் உறவு பாராட்டுவதற்கு முக்கிய காரணம் அவள் பெரியாழ்வார் வளர்ப்பு மகளாக
தாயற்ற குழந்தையாக இருந்தமையேயாகும்.
ஆண்டாளுடைய பாடல்களில் அவள் மாயவனை மணம் செயக் கண்ட தூய நற்கனவு மிக உன்னதமான உணர்வுச் சித்திரங்களாகும். அவள் வாழ்ந்த காலத்தில் நடைமுறை யிலிருந்த திருமணத்தைக் கனவிலே நடந்ததாகக் குறிப்பிடப் பட்டுப் பாடலிலே பதிவு செய்துள்ளாள். ஒரு முழுமையான வாழ்க்கை நெறியை தனது பக்தி நிலையில் நின்று மீள் பார்வை செய்யும் ஆண்டாள் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவு செய்த பெருமை பெற்றுள்ளாள். மணச் சடங்கை நிரைப்படுத்திக் கூறும் ஆண்டாள் ஒரு பேரிளம் பெண் போல எல்லா நடை முறைகளையும் எடுத்துக் கூறியுள்ளாள். பாடல்: மணமகன் ஊர்வலமாக வருதல், பூரண பொற்குடம்
வைத்தல், புறமெங்கும் தோரணம் நாட்டல். பாடல் 2 திருமணநாள் குறித்தல், மணப்பந்தர் ஒப்பனைகள்,
மணமகன் மணப்பந்தருள் வருதல், பாடல்:3 வருகை தந்தோர் விபரம், மணமகளுக்கு ஒப்பனை
செய்தல், கோடி உடுத்தல். பாடல் 4 நாற்றிசைத் தீர்த்தம் கொணர்தல், காப்புக்கட்டல், பார்ப்பனச்சிட்டர் பலர் கிரியைகள் செய்தல், பாடல்:5 மணமகனைத் தீபம் கலசமுடன் சதிரிள மங்கையர்
எதிர் கொள்ளல். பாடல் 6 மத்தளம் கொட் டல் , வ ரி சங்கம் ஊ த ல் ,
மணப்பந்தலிற் கைத்தலம் பற்றல். பாடல் 7 மணமகன் கைப்பற்றி தீவலம் வருதல். வாய் நல்லார்
மந்திரமோதல் பாடல்: 8 மணமகன் மணமகள்தாள் பற்றி அம்மியில் வைத்தல்.
ത്ത124 -

பாடல் 9 மணம் மகன் கைமேல் மண்மகள் கை வைத்து பொரி
முகந்தட்டல். பாடல் 10 மங்கல வீதிவலம் வருதல். இருவரையும் யானைமேல்
இருத்தி மஞ்சன மாட்டல்.
இப்பதிகத்தில் அமைந்துள்ள 11ஆம் பாடல் இப்பதிகப் பயன் கூறும் முத்திரைக் கவியாய் அமைந்துள்ளது. நன் மக்கள் பேறடைய இப்பதிகத்தைப் படிக்க வேண்டும். ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் திருமணம் நன்மக்கட் பேறடைய வேண்டியே செய்யப்பட்டது. வாழ்க்கைநெறி என ஆண்டாள் கருதியது இல்லற வாழ்வு நடத்தும் போது இறைவழிபாடு செய்வதையே. அதனால் கனவிலே அதைக் காண்கிறாள். மனித வாழ்வியல் நடைமுறைகளில் திருமணம் என்பது ஒரு தூய்மையான 'சடங்காகும். விலங்கு போல வாழ்க்கை நடத்தாமல் ஒரு ஒழுங்கான வாழ்வு நடத்துவதற்கு திருமண நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. சடங்குமுறைகள் பலர் முன்னிலையில் செய்யப்படும் போது அவை ஒழுங்காக நடைபெற்றன. ஒழுக்கச் சீர்கேடற்ற ஒரு ஒழுங்கான சமூகம் ஆண்டாள் காலத்தில் நிலைபெற்றிருந்தது. இறைவனோடு சேரும் உயர்ந்த பக்திநிலையை மனித வாழ்க்கை நெறியிலே நின்று அடைவதற்கு ஆண்டாள் வழிகாட்டினாள். இதனை அவள் பாடிய 7 ஆம் திருமொழி தெளிவாய்க் காட்டுகிறது. இறைவனோடு ஒன்றியிருக்கும் நிலையை உணர்வு பூர்வமாக அநுபவிக்க விரும்புகிறாள். கண்ணன் கையிலே இருக்கும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கை விளித்துக் கேட்பதாக அமைந்த பாடல்கள் தமிழிலே எழுந்த பக்தி இலக்கியங்களிலே தனித்துவமாக அமைந்துள்ளன. பதிகத்தின் முதற் பாடல் அதற்குச் சான்றாகவுள்ளது.
"கர்ப்பூரம் நாறுமோ? கமலப்பூநாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ?
-125 Hr

Page 68
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே" (7:1) இறைவனுடைய கையிலே உள்ள சங்கு அவன் வாயிலே வைத்து ஊதப்படுவது. அதனிடம் கண்ணனுடைய வாய்ச்சுவையும் நாற்றத்தையும் பற்றிக் கேட்கும் ஆண்டாளின் பக்தி மிகத் துல்லியமானது. கண்ணனையே கணவனாக அடைந்து அவனோடு இன்பமாக இணைய விரும்பிய ஆண்டாள் கேட்கும் கேள்வி தான் சிறப்பானது. கர்ப்பூரத்தின் நாற்றமும் கமலப்பூவின் நாற்றமும் இறைவழிபாட்டில் இணைந்தவை. மனித நிலையில் நாம் உணர்ந்தவை. எனவே அதே வழிபாட்டுச் சூழலில் நின்று ஆண்டாள் பாடுகிறாள். கண்ணனின் "வாய்ச்சுவையும் நாற்றமும்" ஆண்டாள் விரும்புகின்றவையாக இருந்த போதும் கர்ப்பூரத்தையும் கமலப்பூவையும் நினைத்துக்கேட்பது அவளுடைய பக்திநிலை வரம்பு மீறாதிருப்பதை உணர்த்துகிறது. வழிபாட்டு நடைமுறையில் கர்ப்பூரம், மலர் இரண்டும் முக்கியமானவை. அதே போலச் சங்கொலியும் வழிபாட்டுடன் இணைந்திருப்பது. பத்மநாபனின் சுற்றமாக ஆண்டாள் வலம்புரிச்சங்கை விளித்துப்பாடுவது பக்தியின் புதிய செல்நெறியாகக் காணப்படுகிறது. கண்ணன் கையில் வீற்றிருக்கும் சங்கை தாமரை மலர் மேல் இருக்கும்.அன்னம்என உவமிக்கின்றாள். 'சங்கரையா உன் செல்வம் சாலவழகியதே' என்று புகழ்கிறாள். தன்னைப் போலச் சங்கினுடைய செயற்பாட்டை உற்று நோக்கும் பிற பெண்களையும் ஆண்டாள் சுட்டிக் காட்கின்
MOTGIT.
"பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயிற் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்குநீயுண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ் சங்கே!" (7:9)
=126 -

கண்ணனுடைய கையிலுள்ள சங்கை அஃறிணைப் பொருளாக ஆண்டாள் நோக்கவில்லை. அவனுடைய கோல அழகோடு சங்கு இணைந்திருப்பது ஆண்டாள் உள்ளத்தைக் கவர்ந்தது. அதனால்அவ்வழகினை அநுபவித்துப் பாடுகிறாள். கண்ணன் கருநிறமேனியும் வலம்புரியின் வெண்மையும் கோலநிலையில் ஒன்றிணைந்திருப்பது ஆண்டாளுக்குக் கண்ணன் மேல் காதல் பெருக வைத்தது. மானிட வாழ்வுக்கு அப்பால் உள்ள தெய்வீக வாழ்வை அடையத் தூண்டுகிறது. அதனால் திருமாலிருஞ் சோலையிலே உள்ள பெருமானை வழிபட்டுப் பாடுகிறாள். அங்குள்ள கோயில் சூழலை விரிவாகப் பாடியுள்ளாள். வழிபாட்டில் இணைந்த மடையிடும் மரபையும் குறிப்பிட்டுப் பாடுகிறாள்.
"நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவிவைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்" (9:6)
எண்ணிக்கையான வெண்ணெய்யும் அக்கார அடிசிலும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண்டாள், மடையிடும் மரபையும் விளக்கியுள்ளாள். நாள் தோறும் கோவில் வழிபாடு செய்யப்பெண்களை ஆற்றுப்படுத்துகிறாள். வெண்ணெய்யும் அக்கார அடிசிலும் கண்ணனுக்கு விருப்பமானவை. அதை மடையிட விரும்பிய ஆண்டாள் பாமாலையிலே தொடுத் துள்ளாள். 12 ஆம் 13 ஆம் திருமுறைகள் தலைவனைப் பிரிந்த தலைவி தான் கண்ணனிடம் போக விரும்பியவளாக உற்றாரை வேண்டுகிறாள். கண்ணன் அணிந்த ஆடை முதலியை வற்றால் தன் வாட்டத்தைத் தீர்க்கும்படி வேண்டுகிறாள். 14 ஆம் பதிகம் பிருந்தாவனத்திலே பரந்தாமனைக் கண்டதைக் கூறும் பதிகமாகும். வழிபாட்டின் நிறைவான பயனை இப்பதிகம்
உணர்த்துகிறது.
- 127 He

Page 69
  

Page 70
இல்லற நிலைநின்றே இறைவழிபாடு செய்யத் தூண்டுகிறாள். மனத்தால் வழிபட்டு மகிழ்வாய் இருக்க வழிகாட்டுகிறாள்.
கண்ணன் மீது அன்பு கொண்ட பன்னிரு ஆழ்வார் களில் ஆண்டாள் தனித்துவம் பெற்றுள்ளாள். இறைவனது குணங்களிலே ஆழ்ந்து போகும் இயல்பில் அவளுடைய பக்திநிலை ஆழமானதாகவும் அந்தரங்கமானதாகவும் விளங்குகிறது. அதற்கு அவள் பாடிய பாடல்களே சான்று. "மானிடவர்க்கு பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே" எனத் தனது உறுதியான அன்பு நிலையை உணர்த்தும் ஆண்டாள் பக்தியின் பெரு வடிவாகத் தோன்றுகிறாள். மனிதவாழ்வில் பக்தி இணைய வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தி பெண்களிலே பெரும் சிறப்படைகிறாள்.
-130 H

11.கோதையின் கோல விளக்கு
ஆண்டாள் அறிமுகம்:
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள். கோதையெனப் பெயர் பெற்ற பாவை. நாலாயிரம் என்னும்அருந்தொகுப்பிலே அமைந்துள்ள திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல்களைப் பாடிய தெய்வமகள். புதுவை ஆண்டாள் எனவும் போற்றப்படுபவள். இன்னிசையால் பன்னுதிருப் பாவைபாடிக் கொடுத்தவள். பாமாலையோடு பூமாலையும் சூடிக்கொடுத் தமையால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற காரணப் பெயரையும் பெற்றவள். தான் வாழ்ந்த காலத்து வழிபாட்டைப் பாடல்களிலே பதிவு செய்து தந்தவள். இந்த அருள் நங்கையை ஒருபாடல் அழகாக அறிமுகம்செய்கிறது.
அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலைபூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல். ஆண்டாள் அரங்கன் அழகையும் அருள் திறத்தையும் அனைவரும் காணப்பணி செய்தாள். அவளுடைய பக்திப்பணி இன்று வரையும் தொடர்கிறது. வழிபாடு என்னும் மனித வாழ்வுக்கான செல்நெறியைக் காட்டியவள். இருண்டு கிடந்தவாழ்வுச் சூழலைப் பக்தி என்னும் கோலவிளக்கேற்றி ஒளி மயமாகியவள். வீடு தொடங்கிஊர்களுடாக நாடுவரை அந்தவிளக்கு ஒளி தந்து நின்றது. மனத்தின் துன்ப இருளை அகற்ற ஆண்டாள் ஏற்றிய கோலவிளக்கு அணையாத அகவிளக்காக நிற்கிறது. அந்த விளக்கை அவள்ஏற்ற வழி காட்டியவர்கள் முதலாழ்வார்கள். ஒளி விளக்கேற்றும் முறை மை யையும் அதன் ஒளியிலே இறைவனை க்
கண்ணாரக்காணும் தன்மையுைம் அவர்கள் காட்டினார்கள்.
=13 || -

Page 71
பொய்கையாழ்வார் வையம் தகளியாக வார்கடலே நெய்யாக ஊற்றி வெய்ய கதிரோன் என்னும் உலகோர் காணும் ஒருவிளக்கை ஏற்றினார். அந்த விளக்கின் அடிப்பாகத்தைச் சுற்றிய சொல்மாலைகள் இடர்களையும் என்று காட்டினார். இதுபலரும் காணும் பாரியதொரு புறவிளக்கு. பூதத்தாழ்வார் அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தையை இடுகின்ற திரியாக்கி ஒரு ஞானச்சுடர் விளக்கை ஏற்றினார். இது பக்திவயமாகி ஏற்றும் அகவிளக்கு. இந்த இருவிளக்குகளின் ஒளியிலே அரங்கனைக் கண்டு வணங்கிப்பாடியவர் பேயாழ்வார். ஆண்டாள் ஏற்றிய கோலவிளக்கு வழிபாட்டின் முறைமைகளைக் காட்டுகிறது. ஒளிவிளக்கை ஏற்றிப் பூமாலையால் விளக்கின் அடித்தளத்தை அணி செய்து பாமாலை சூட்டிப் பரவசமாகி நிற்கும் நிலைதான் மனத்தை நிறைவிக்கும். இருளகன்று போக ஒளியில் தெரியும்இறைவன் கோல அழகு கண்டு மெய்சிலிர்த்து கண்களில் நீர்வடிய நிற்கும் நிலை அவன் கருணையில் உருகிக் கரையும் மனித உருவம். இந்தப் பக்தி அனுபவத்தைப் பெற்ற ஆண்டாள் அதனைப் பிறரும் பெறுவதற்கு வழிகாட்டப் பல கோலவிளக்குகளை ஏற்றி வைத்தாள். காலம் பல கடந்தாலும் அந்த விளக்குகள் அணையா விளக்குகளாய் நின்று ஒளிகாலுகின்றன.
ஆண்டாள் பாடிய திருப்பாவை இந்தக் கோல விளக்கின் அமைப்பை நன்கு விளக்குகிறது. பெரியாழ்வாரின் வளர்ப்புநெறி ஆண்டாளைப் பக்தி நெறியில் செல்லப் பயிற்சி அளித்தது. தாயின் வளர்ப்பு நெறிக்கு மாறுபட்ட தந்தையின் வளர்ப்பு நெறி ஒன்று ஆண்டாளின் வரலாறு ஊடாக எமக்குத் தெரிகிறது. பெரியாழ்வார் பெற்ற மகளாக அன்றி வளர்ப்பு மகளாக செல்ல மகளாக ஆண்டாள் விளங்குகிறாள். பெரியாழ்வார் ஆண்டாளை வளர்க்கும் போது ஏற்பட்டநேரடி
அனுபவத்தையே கண்ணனைக் குழந்தையாகப் பாவனை
سح سے 132-س

செய்து பாடும் போதுவெளிப்படுத்தியுள்ளார். பெரியாழ்வாரின் வழிபாட்டு நடைமுறை ஆண்டாளைப் பெரிதும்கவர்ந்தது. கண்ணனுக்கென அவர் கட்டி வைத்த பூமாலையைச் சூட்டி மாலையின் நேர்த்தியைச் சூட்டியிருக்கும் நிலையில் காண அவள் விழைந்தாள். அந்தமாலையைத் தானே சூடிக் கண்ணாடியில் அதனைப் பார்த்து தந்தையின் கைவினை நுட்பத்தை அறிந்து கொண்டாள். அந்த நுட்பத்தை அடிப்படையாக வைத்துக் கண்ணனுக்குப் பாமாலை சூட்டினாள். அது அற்புதமான பக்தியனுபவத்தை, அதன் சீர்மையைக் காட்டியது. பெரியாழ்வார் தொடுத்த பல நிறப்பூக்கள் அவருடைய வண்ணத்தெரிவின் ஆற்றலைக் காட்டின. அதற்கும் மேலாக அதைச் சூடி நிற்கும் கண்ணனின் கோல அழகை மனதிலே காணும் பரவசத்தை உணர்த்தியது.
கண்ணனுக்குத் தொடுத்த பூமாலைகள் ஆண்டாளின் உள்ளத்திலே ஒரு புதிய உணர்வைத் தூண்டின. பூமாலை சூடிய கண்ணனின் அழகிய தோற்றம் அவளைப் பெரிதும் கவர்ந்தது அவனையே தனதுகணவனாக வரித்துக் கொண்டு வாழ முற்பட்டாள். சிறுவயது முதல் கண்ணனின் கோல அழகு கண்டு அவன் மீது காதல்கொண்டகோதை அவனையே அடைய வேண்டி நோன்பு நோற்றாள். பெரியாழ்வாரும் கண்ணன் மீது பக்திகொண்டு வழிபாடு செய்தவர். எனவே கோதையின் வீட்டுச் சூழல் வழிபாட்டு நடைமுறைகளைப் பேணும் இட மா யிருந்தது. பெரியாழ் வார் கண்ணனு க் கச் செய்துவந்தபூமாலை சாற்றும் தொண்டுப்பணி அவர் வளர்ப்ட மகளான கோதையையும் கவர்ந்தது. அவள் கண்ணன் மீது கொண்ட ஈடுபாடு வளர்ந்து காதலாய் வளர்ந்தது. கோதையின் காதலைப் பெரியாழ்வாரே தாயாகி நின்று வருமாறு கூறுகிறார்.
"காறை பூணுங்கண்ணாடி காணும் தன்கையில் வளைகுலுக்கும் கூறையுடுக்கும் அயர்க்கும் தன்கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
H133 H

Page 72
தேறித்தேறிநின்றாயிரம்பேர்த்தேவன் திறம் பிதற்றும் மாறின் மாமணிவண்ணன் மேல்இவள் மாலுறுகின்றாளே"
(பெரியா திருமொ 3:8:8)
இத்தகைய கோதையின் மானுட நிலையினைப் பெரியாழ்வார் எடுத்துக் கூறும்போதுஅவளுடைய இளமைப் பண்பை அறிய முடிகிறது. வளர்ப்பு மகளின் மணமறிந்த ஒரு தந்தையாகப் பெரியாழ்வார் தோன்றுகிறார். கண்ணன் மீது அவர் கொண்ட பக்திக்கு மேலாக கோதையின் காதல் அவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்பு உள்ளம் கொண்ட தந்தையின் வளர்ப்பு கோதையை வழிபாட்டு நடைமுறைகளைப் பேணவேண்டும் என்ற விருப்புக்குள்ளாக்கிற்று. அந்த விருப்பினையே அவள் பாடிய திருப்பாவையிலே தர்சிக்க முடிகின்றது. வழிபாட்டின் தன்மைகளையும் நன்மைகளையும் பக்தி என்னும்கோல விளக்கேற்றி வைத்துஆண்டாள் எமக்குக் காட்டுகிறாள். கோலவிளக்கின் ஒளிவீசும் திரிகளிலே அவள் காட்டிய பக்திக்கோலம்துல்லியமாகத் தெரிகிறது. அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்குகளாகி பல வழிபாட்டு நடை முறைகளைத் தெளிவாகக் காட்டுகின்றன.
காலத்தைக் காட்டும் கைவிளக்கு:
ஆண்டாளின் திருப்பாவை விளக்கிலே ஒரு சுடர் காலத்தைக் காட்டும் கைவிளக்காக ஒளிவீசுகிறது. வழிபாடு செய்ய வேண்டிய காலத்தைக் காட்டுகிறது. வழிபாட்டு நடைமுறைகளைச் செய்வதற்கு உரிய காலத்தை முன்னோர் வகுத்து வைத்திருந்த முறைமையை ஆண்டாள்குறிப்பிட்டுக் கூறுகின்றாள்.
"மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
(திருப்பா:1)
മr}34 =

ஒர் ஆண்டுக் காலத்தில் நடைபெற வழிபாட்டு நடை முறைகளைத் தான் வாழும் காலத்திலே செயற்பாட்டில் ஆண்டாள் செய்திருந்தாள். மார்கழி மாதத்திலே சிறப்பாக நோன்பு நோற்கப்பட்டது. அந்த நோன்பின் தொடக்க காலம் மதிநிறைந்த நன்னாள் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. கீதைஉபதேசம் செய்த கண்ணன் மாதங்களிலே நான் மார்கழி என்றான். வெப்பத்தின் கொடுமையற்ற குளிர்மையான காலம் மார்கழி மாதம். திங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியின் நிறைவையும் கொண்டு காலம் கணிக்கப்பட்டதால் மார்கழித் திங்கள் என மார்கழி மாதத்தை ஆண்டாள் குறிப்பிட்டாள். காலத்தைக் குறிப்பிட்ட பின்னர் ஒரு நாளின் தொடக்கத்தை உணர்த்தி நோன்புக்கான முன்னோடிச் செயற்பாடுகளை உரைக்கின்றாள். நோன்பு மேற்கொள்ளும் பெண்களுக்கு ஆண்டாள் கைவிளக்கில் காலம் மட்டுமல்ல அந்தகாலத்துக் காட்சிகளும் தெரிகின்றன. நேரத்தை அறிவிக்கும் ஒலிகளைச் சொல்லிக்காட்டுகின்றாள்.
"புள்ளும்கிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
(திருப்பா:6)
விடியற்காலை வேளையில் புட்களின் ஒலிகேட்டு உறக்கம் கலையும் தன்மை இங்கே சொல்லப்படுகிறது. வீட்டினருகில் இருக்கும். பறவைகள் விடியற் காலையில் ஒலியெழுப்பி எம்மைத் துயில் கலைய வைக்கும் இயற்கையான வாழ்வியலை இங்கே ஆண்டாள் காட்டுகிறாள். பறவைகளின் ஒலிகளை அடுத்து வழிபாட்டுக் கடமையைச் செய்ய அழைக்கும் வெள்ளைச் சங்கின் விளிக்குரல். காலை வேளையில் காதிலே வந்து மோதும் சங்கொலி பேரொலியாகக் கேட்கும். பறவைகளின் ஒலியை எல்லாம் மேவி வந்து ஊரவரை எழுப்பும். தனியொரு வீடடில் வாழ்பவரை மட்டுமன்றி ஊரவர்
யாவரையும் வழிபாட்டுக் கடமையைச் செய்ய கோவிலுக்கு
-135 =

Page 73
அழைக்கும். இந்த பண்பாட்டு நிலையை இன்னும் விளக்கமாக ஆண்டாள் பாடியுள்ளாள்.
"கீசுகீசு என்றெங்கும்ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிவையோ?"
(திருப்பா:7) "கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வன பரந்தன காண்."
(திருப்பா:8)
ஆனைச்சாத்தான் என்றழைக்கப்படும் பறவைகளின் கலகலப் பான பேச்சொலி மக்களின் உறக்கத்தைக் கலைக்கும். விடியல் வேளையை உணர்த்தும். கீழ்வானம் வெள்ளென வெளுத்துத் தோன்றும். எருமைகளெல்லாம் மேய்ச்சலுக்காகப் பரந்து செல்லும் காட்சி ஒருநாளின் தொடக்கத்தையும் கடமையையும் உணர்த்தும். ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் கடிகாரம் புழக்கத்தில் இருக்கவில்லை. இயற்கைக் காட்சிகளின் தோற்றத்தையும் மாற்றத்தையும்கொண்டே மக்கள் தமது நாளாந்த, வாராந்த, மாதாந்த கடமைகளை வகுத்துச் செயற்பட்டனர். உறக்கத்தை விட்டெழுந்து மனிதர்தமது கடமைகளைச் செய்வதற்கு இயற்கையே துணை செய்தது. பறவைகளின் ஒலியை அடுத்து வீட்டிலே கேட்கின்ற ஒலியொன்றை ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.
"காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஒசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ"
(திருப்பா:7)
வீட்டிலே பெண்களின் மோர்கடையும்காட்சி ஆண்டாளின் கைவிளக்கின் ஒளியில் அழகாய்த்தெரிகிறது. ஆய்ச்சியர் மோர்கடையும் போது இருவகையான ஒலிகள் கேட்கும். ஒன்று ஆய்ச்சியர் கைகளிலே அணிந்திருந்த அணிகலன்களின் ஒலி காசு, பிறப்பு என்ற அணிகளும் கையில் அணியப்படுபவை.
H 36

அவற்றை ஆண்டாள் குறிப்பிடுவது மகளிர் கடமை நேரத்திலும் நேர்த்தியுடன் இருந்ததைக் காட்டுகிறது. அணிகலன்களின் ஒலி அவற்றின் அமைப்பையும் உய்த்துணர வைக்கின்றது. மற்றது கை பேர்த்து மோர்கடையும் போது தயிரும் நீரும் கலந்து எழுப்பும் ஒலி. இது உறக்கத்திலிருந்து விழிப்போருக்கு உணவையும் நினைவுபடுத்தும் ஒலியாக உள்ளது. இருள் பிரியும் விடிகாலை வேளையில் வீட்டில் எழும் இந்த ஒலி வீட்டின் செல்வ நிலையையும்உணர்த்தும். ஆண்டாள் தனது பாடலிலே இந்த ஒலிகளின் கூர்மையை அநுபவித்தே கூறுகின்றாள். பெண்களின் வீட்டுக்கடமைகளும் மனிதர் உறக்கத்ைைதக் கலைக்கும் நிலையை ஆண்டாள் கூறுவது வீட்டிலிருந்தே பெண்களின் தொழிற்பாட்டால் எல்லோரும் இயங்கும்
நிலையை மறைமுகமாகக் காட்டி நிறகன்றது.
கோலங்கள் காட்டும் சுடர் விளக்கு.
ஆண்டாள் காலைத் துயில் கலைந்து கடமை செய்யும் நிலைகளைக் காட்சிகளாகக் காட்டுகிறாள். உறக்கம் விட்டெழு வோர் கண்கள் தேடும்அழகுக் கோலமொன்றை வருமாறு பாடுகிறாள்.
"உங்கள் புழைக்கடைத்தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்"
(திருப்பா:14) வீட்டின் பின்புறத்திலே தோட்டத்திலே உள்ள வாவியில் செங்கழுநீர் மலர்ந்து விட்டது. ஆம்பல் மலர் கூம்பிவிட்டது. இந்த இரு மலர்களும் நேரம் காட்டும் கடிகாரங்கள். செங்கழு நீர் காலையிலே மலரும். ஆம்பல் மாலையிலே மலரும். இவை இரண்டும் காலையையும் மாலையையும் பிரித்து காட்டும். மலர் மலரும் போது பொழுது தொடங்குகிறது. மலர் கூம்பும்போது
-137 m

Page 74
பொழுது முடிவடைகின்றது. இயற்கையின் சீர்மையை மலர்கள் தமது தொழிற்பட்டால் விளக்கி நிற்பதை ஆண்டாள் சொல்லிக் காட்டுகிறாள்.
அடுத்து அவள் காட்டும் காட்சி மிகத்துல்லியமானது. செங்கல் நிற ஆடை அணிந்த, வழிபாடு செய்யும்ஆண்களைக் காட்டுகிறாள். திருக்கோவிலிலே சங்கு ஊதுவதற்காக அவர்கள் அணியாகச் செல்கிறார்கள். அவர்களின் வழிபாட்டு ஆடையின் சீர்மைஆண்டாளின் சுடர்விளக்கில் ஆழகாய்த் தெரிகிறது. மார்கழி மாதத்தில் விடியற்காலையில் கோவிலிலே கூட்டாக நின்று சங்கை வாயிலே வைத்து ஒலியெழுப்பும் செயற்பாடு ஆண்களின் வழிபாட்டு நிலையாக இருந்ததை இதனால் நன்கு உணரமுடிகின்றது. சிவந்த நிறத்து ஆடையின் தோற்றம் அக்காலத்தில் வழிபாட்டுஆடை அணியும் மரபு ஒன்றிருந்ததை விளக்குகிறது. சிவப்பின் தோற்றத்தை அறிய “செங்கல் பொடிக்கூறை' என்று ஆண்டாள் கூறுவது அவளுடைய நிறத்தை வகைப்படுத்தும் கலைத்திறனை உணர்த்துகின்றது. சங்கை எடுத்து வாயிலே வைத்து ஊது ப வருடைய வாயழகையும் சுட்டுகிறாள். வெண்பல்லுடைய தவத்தவர். இங்கே ஆண்டாள் அவர்களுடைய வயது நிலையை மறைமுகமாகக் கூறுகிறாள். திருக்கோவிலை நோக்கித் தூய்மையான கோலத்தோடு அணியாகச் செல்லும் அந்த தவத்தோரும் நாளின் தொடக்கத்தை அறிவிக்கும் நல்ல நாட்காட்டிகளே.
ஆயர் பாடியில் உள்ள சிறுமிகளுக்கு ஆண்டாள் ஒரு வழிபாட்டுப்பயிற்சி அளிப்பவளாக இருக்கின்றாள். வீடு வீடாகச் சென்று விடியற்காலையில் அவர்களைத் துயில் எழுப்பி நீராடச் செல்லும் வழக்கம் ஒன்று இருந்துள்ளது. நீராடிய பின்னர் திருக்கோயில் வழிபட வேண்டும் என்ற ஒரு
-ത്ത138 -

கற்பித்தல் முறைமை இருந்ததையும் ஆண்டாள் காட்டுகிறாள். துயிலும் காட்சிகள் மூலமாக வழிபாடு வற்புறுத்தப்பட்ட தையும் உணரமுடிகிறது. தூமணி மாடத்திலே சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில் அணை மேல் உறங்குபவரை எழுப்பும் முயற்சி நடைபெறுகின்றது. எழுந்திராத வன்துயில் வயப்பட்டாரை கும்பகருணனுடன் ஒப்பிட்டுஎழுப்புகின்றனர். தோழிய ரெல்லாம் புடை சூழவந்து வீட்டு முற்றத்தில் நின்று கண்ணன் புகழைப் பாடி எழுப்புகின்றனர். நேற்று நானே வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிச் சென்றவள் இன்று இன்னும் உறங்கும் காட்சி.
நப்பின்னையைச் சென்று எல்லோருமாய் எழுப்பும் இன்னொரு காட்சி. அங்கு துயில் எழும்பும் நிலைவேறு பட்டுள்ளது. சாதாரண வீடு அல்லாமல் மாளிகையில் வாயில் காப்போன் கொண்ட செல்வநிலை.
"நாயகனாய் நின்ற நந்த கோபன்னுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும்தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழுப்பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்"
(திருப்பா:16) மாளிகை வாயிலில் நிற்கும் காவலனை முதலில் கண்டுபேசிய பின்னரே துயில் எழுப்பும் நடைமுறையை மேற்கொள்ளலாம். தோரணவாயில் அமைப்புக்கொண்ட பெரிய மாளிகையுள்ளே செல்ல அனுமதிபெற வேண்டும். ஆயர்பாடியில் வாழும் சிறுமியர் நப்பின்னை வாழும் மாளிகைக்குத் தூய்மை நிலையில் செல்லவேண்டும் என்பதும் குறிப்பிடப்படுகிறது. நப்
=139 =

Page 75
பின்னையை நேரில் சென்று எழுப்பும் நிலையை ஆண்டாள் மனித வாழ்வியல் நடைமுறையுள் இணைத்துக் காட்டுகிறாள். வாசலிலே வந்து நின்று
"நந்த கோபாலன் மருமகனே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் வந்தெங்குங் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார்விரலி உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்
(திருப்பா:18) எனச் சிறுமியர் கேட்கின்றனர். குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்சணை பரப்பிய படுக்கையிலே துயில் கொள்ளும் நப்பின்னை தனித்து உறங்கவில்லை. தன்கணவனோடு உறங்குகிறாள். இதனால் அவளை எழுப்பும் போது கண்ணனையும் எழுப்பவேண்டிய நிலை. இந்தநிலையை ஆண்டாள் நயம்படச் செய்கிறாள். இயற்கைநிலையிலே கோழி கூவி விடியலை உணர்த்தும். பலமுறை குயில் கூவி எல்லோரையும் எழுப்பும். இந்த நல்ல வேளையிலே நப்பின்னையின் மைத்துனன் புகழ் பாட வேண்டுமென ஆண்டாள் அழைக்கின்றாள். மார்கழித் திங்கள் நோன்பின் பயனையும் பாடி அவன் அருள் வேண்டுகிறாள்.
கண்ணனுடைய ஆற்றல்களையும் அருள் திறத்தையும் திருப்பாவை என்னும் சுடர் விளக்கிலே கண்டறிய முடியும். ஒவ்வொரு பாடலிலும் அதனை எடுத்துச் சொல்கிறாள். யசோதை பெற்ற இளஞ்சிங்கம், கார்மேனிகொண்டவன். செங்கண்ணன், கதிர் மதியம் போல முகமுடையான். நாராயணனின் தோற்றம் சுடர் விளக்கில் தோற்றுகிறது. அவன் ஆற்றல்களை அந்த தோற்றம் நினைவில் கொணர ஆண்டாள்
H140 -

அவற்றைப் பாடல்களிலே பதிவு செய்கிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன், தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன். பேய் முலை நஞ்சுண்டவன், மனத்துக்கினியவன், அரக்கனைக் கிள்ளிக் களைந்த வன், மூவுலகையும் அளந்த வன்; தென்னிலங்கை செற்றவன், சகடம் உதைத்தவன், கன்று குணிலாய் எறிந்தவன், குன்றுகுடையாய் எறிந்தவன். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவன். கஞ்சன் வயிற்றில் நெருப்பெண் நின்றவன். வங்கக்கடல் கடைந்தவன், கூடாரை வெல்லும் கோவிந்தன் என அவள் கூறும் கண்ணனின் ஆற்றல் அவனை வணங்கி வழிபடத் தூண்டுகிறது. அவனைப்பல்வேறு நாமம் கொண்டு போற்ற வழி சொல்கிறது. நாராயணன், மாயன், கண்ணன், தாமோதரன், கேசவன், மாதவன், வைகுந்தன், முகில் வண்ணன், நெடுமால் எனப் போற்றித் துதிக்க வைக்கிறது. நாற்றம் தரும் துழாய் முடியும் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையும், பங்கயக் கண்ணும் வழிபடுவோர் மனக்கண்ணிலே தெரிய ஆண்டாள் ஏற்றிய பக்திச் சுடர் விளக்கு உதவுகிறது. கண்ணனை வழிபடுவோரை வழிப்படுத்தும் ஆண்டாள் தனது பக்தியனுபவத்தைப் பிறரும் அடைய வேண்டுமென எண்ணினாள். தன்னிலையிலுள்ள இளம் பெண்களை யெல்லாம் ஒன்றிணைத்து வழிபாட்டு மரபைப் புகட்டுகிறாள். பெரியாழ்வாரிடம் கற்றுப் பயிற்சி பெற்ற கோதை அதனை மற்றவர்க்கும் கற்பிக்க எண்ணித் திருப்பாவை பாடினாள். ஊர் ஒன்று கூடி வழிபட கோவில் வழிபாடு வகைசெய்தது. ஆண்டாள் இளமையின் ஆற்றலை வழிபாட்டுடன் இணைக்கின்றாள். நாளின் தொடக்கத்திலே வழிபாட்டைச் செய்ய எல்லோருக்குமே வழிகாட்டுகிறாள். ஆண்டாள் வாழந்த காலத்தில் வழிபாடு வாழ்வியல் நடைமுறையாக இருந்தது. மரபுடன் இறுகப் பிணைந்திருந்தது. காலத்தை உணர்த்தி கடமைகளைச் செவ்வனவே செய்ய
சிறந்ததொரு கையளிப்பாக விளங்கியது. எனவே ஆண்டாள்
س= 141 س

Page 76
காலத்து வழிபாட்டு மரபு அவள் ஏற்றியசரவிளக்குகளின் ஒளியிலே துலக்கமாய்த் தெரிகிறது.
வழிபாட்டு மரபுகாட்டும் கோல விளக்கு
மார்கழி நோன்பின் மரபை ஆண்டாளின் திருப்பாவை விளக்குகிறது. ஆயர்பாடிச் சிறுமிகளின் வழிபாட்டு மரபிலே மார்கழி நோன்பும் இடம் பெற்றதை ஆண்டாள் ஏற்றிய கோல விளக்கின் ஒளியால் உணரமுடிகிறது. முப்பது பாடல்களில் வழிபாட்டின் வரலாறு, முறைமை, பயன்,என்பன கூறப்பட்டுள்ளன.
"வையத்து வாழ்வீர்கள் நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையுமாந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணியுகந்தேலோ ரெம்பாவாய்" உலகத்தவருக்கு ஒரு வழிபாட்டு மரபை எடுத்துச் சொல்லும் ஆண்டாளின் மனப் பக்குவம் ஒரு பண்பட்ட சமூகத்தை எமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. கண்ணனை வழிபட ஒரு நோன்பு முறை அக்காலத்தில் இருந்துள்ளது. உணவைச் சுருக்கிய ஒரு உடலைப் பக்குவப்படுத்தும் முறை விடிகாலை யில் நீராடி உடலைத் தூய்மை செய்யும்முறை, தம்மை அழகுபடுத்தாத துறவு மனப்பாங்கு, செய்யவொண்ணாதவை என முன்னோர் வரையறை செய்தவற்றைச் செய்யாத மனவுறுதி, தீயனவற்றைப் பேசாத நயம் என ஆண்டாள் நிரைப்படுத்தியிருக்கும் பழக்கமும் வழக்கமும் சரவிளக்குப் போலநிரையாக அமைந்துள்ளன.
ー142ー

இறைவன் பெயரைச் சொல்லி நீராடினால் தீங்குகள் நேராது. நாடு முழுவதும் மட்டுமன்றி நாடுகள் எல்லாவற்றிலும் திங்கள் மும்மாரி பெய்யும் என்ற முன்னோரது நம்பிக்கையை ஆண்டாள் மீட்டுருவாக்கம் செய்து காட்டுகிறாள். மழையால் வயல்விளையும் வயிற்றுப்பசிதீரும். வளங்கள் பெருகும். எனவே மழையை வேண்டிக் கண்ணனைப் பரவுவது ஒரு முறைமையாக இருந்ததுள்ளது. உலகம் செழிக்க, உயிர்வாழப் பெண்கள் செய்த வழிபாடு தான் துணைசெய்தது. ஆயர் குல அணிவிளக்காம் கண்ணனிடம் மழையை வேண்டும் வழிபாடு மார்கழித் திங்கள் முழுவதும் நடைபெற்றது. உலகத்து உயிரினங்கள் அனைத்தும் நலமாய் வாழ நீர் இன்றியமையாதது. அதனால் உடலைத்தூய்மை செய்து நல்லுணவைத் துறந்து மனத்தை ஒருமுகப்படுத்தி எல்லோரும் ஒன்றிணைந்து வேண்டுதல் செய்யும் வழிபாடு செய்யும்போது மழை பெய்தது. பெண்கள் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டு மென ஆண்டாளின் விண்ணப்பம் திருப்பாவைப் பாடலாய் வெளிவந்தது. வழிபாடு தொடர்ந்து நடை பெற்றால் அது மரபாகி மக்களுக்கு நன்மை தரும். அதனாலே அதனைத் தொடர்ந்து செய்ய உறுதியுரை செய்கிறாள்ஆண்டாள்.
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வா னன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழே பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்"
(திருப்பா:29) இப்பாடல் வழிபாடு ஏழேழ் பிறவிக்கும் தொடரப்பட வேண்டி யதை உணர்த்துகிறது. எதற்காக விடிகாலையில் வழிபாடு
1-143 -

Page 77
செய்கிறோம் எனக் கண்ணனுக்கு விளக்குவது போல உலகத்த வருக்கே விளக்கம் கூறுகிறாள். எப்போதும் உன்னையே நினைத்துப் பணிசெய்வோம். இந்தப் பிறவியில் மட்டுமல்ல இனி வருகின்ற எல்லாப் பிறவிகளிலும உன்னை வணங்க வேண்டும். அதற்காக எங்களுடைய ஏனைய காமங்களை எல்லாம் நாம் மாற்றிவிடுவோம். உடலழகைவிடுத்து உள்ளத் தூய்மையுடன் வழிபாடு செய்ய ஆண்டாள் மார்கழி நோன்பைக் காட்டுகிறாள். பசுக்களை மேய்த்து வாழ்வு நடத்தும் ஆயர் பாடிமக்களைக் கோவில் வழிபாட்டில் ஈடுபடுத்தும் பக்திப் பணியை ஆண்டர்ள் மேற்கொண்டாள். காரைக்காலம் மையாரைப் போல தனிப்பட்ட வழிபாட்டு நிலை ஆண்டா ளுக்கு இல்லை. இளம் பெண்களை இணைத்து ஒரு சமூகவயப் பட்ட வழிபாட்டைப் பேணுகிறாள். அறியாத பிள்ளைகளுக்கு வழிபாடுபற்றிய அறிவை வழங்கும் பணி செய்கிறாள். இத்தகைய வழிபாட்டின் பயன் என்ன என்பதையும் ஆண்டாள் தெளிவாகக் கூறுகிறாள்.
"கூடாரை வெல்லும்கீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே யென்றனைய பலகலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்"
(திருப்பா:27) மனித நிலையில் வழிபாட்டின் பயனை எதிர்பார்ப்பது இயற்கையே. செல்வச் சிறப்பைப் பெறுவதால் நாடு புகழ் பெறும். மக்கள் வாழ்விலும் செல்வத்தின் செழுமை விளங்கும். வழிபாட்டினால் வாழ்வுமிகுந்து வரும். நோன்பில் வழிபாட்டை நிலைபெறச் செய்ய வேண்டும். உணவைச் சுருக்கி சிலநாட்கள்
-144 m

இறை நினைவோடு இருப்பது நல்லது. நமது உள்ளத்தைச் செம்மைப்படுத்த இது ஒரு நல்லவழி. உடல் நலத்திற்கும் உணவுச் சுருக்கம் நன்மை தரும். நோன்புக்காலம் முடிய ஆடை அணிகளால் அழகு செய்துடாற்சோற்றை நெய்யோடு உண்ணும் பாங்கு சிறந்தது. கூடியிருந்து எல்லோருமாய் மகிழ்வோடு பகுத்துண்டு வாழ்வதுதான் ஆண்டாள் காட்டும் முன்னோ ருடைய வாழ்வியல் நடைமுறை. வழிபாடு எல்லோரையும் இணைக்கும் செயற்பாடாக இருந்தது. அது தொடர ஆண்டாள் திருப்பாவை பாடினாள். கண்ணனை வழிபடும் வகையைக் காட்டினாள்.
கண்ணனுடைய திருநோக்கு எம்மீது படவேண்டும்.
அதுவே எமக்கு எல்லாம் தரும். "செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல்நோக்குதியேல் எங்கள் மேல் சாபமிழிந்தேலோ ரெம்பாவாய்"
(திருப்பா:22) செங்கண்மாலின் கண்களைச் சந்திர சூரியராகக் காட்டுகிறாள். இயற்கை நிலையிலே இவை எழுந்து வரும் போது இருள் விலகும். ஒளி பிறக்கும் மனிதவாழ்வின் இருளைப் போக்கும் இந்த இரு சக்திகளும் துணையாக நின்று நலம்தருபவை. மழையை வேண்டிப் பாடும் பாட்டு வறுமையிருளைப் போக்கும் வழிபாடு. பால்சொரியும் பசுக்களால் நிறைந்த செல்வம் சேரும். மனிதன் இயற்கையுடனும் பறவை, விலங்குகளோடும் இயைபுபட்டு வாழந்த ஒரு வாழ்கையை ஆண்டாள் துன்பமற்ற மகிழ்வான வாழ்வாகக் கண்டாள். அதையே மீண்டும் பேண முயன்றாள். அவள் காலத்தில் அதற்கென வகுக்கப்பட்ட நடைமுறைகள்வீட்டு வாழ்வையும் நாட்டு வாழ்வையும் செம்மைப்படுத்தன. மனித மனம்
வழிபாட்டால் பண்பட்டது. வழிபாட்டின் பண்பும் பயனும்
-4.5 m

Page 78
எல்லோரும் உணர்ந்த ஒன்றாக இருந்தமையை ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் இயம்புகின்றன.
பெண்களின் வழிபாடு உலகம் முழுமைக்கும் பெரு நன்மை தருவதை அறிய ஆண்டாளின் கோலவிளக்குச் சுடர்வீசுகிறது. புதுவைப் பட்டர் பிரான் மகள் கோதை சொன்ன பாமாலை ஒரு கோல விளக்கு. விளக்கேற்றிய திருக்கோவில் போல ஆண்டாளின் திருப்ாவை அமைந்துள்ளது. அவள் ஏற்றிய விளக்கின் ஒளியிலே ஏனைய சரவிளக்குகளையும் ஏற்றி நாம் வழிபட்டால் இடர் தீரும். இன்னல்போம். துன்பம் ஒடும். எனவே ஆண்டாள் பணியைத் தொடர அனைத்து மகளிரும் இணைந்து செயற்படவேண்டுவதும் இன்றியமையாதது.
-146 -ത്ത

12.சாதலின் சிறந்தது ஒன்றும் இல்லை
தமிழில் எழுந்த இலக்கியங்களில் கம்பராமாயணத் திற்கு ஒரு தனித்துவம் உண்டு. பிறமொழியாகிய வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணத்தைத் தழுவித் தமிழிலே கம்பனால் விருத்தப்பாவினால் எழுதப்பட்ட இராமாயணம், கம்பராமாயணம் என்று பெயர் பெற்றது. ஏறக்குறைய பன்னிராயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களில் ஆறு காண்டங் களாக அமைந்துள்ள கம்பராமாயணம், தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகத்திலே மகாகாவியங்கள் என மதிக்கப்படும் தூல்களில் கம்பராமாயண மும் அடக்கப்பட்டுள்ளமை தமிழ் மொழிக்குப் பெருமை தருவது வாய்மொழி நிலையிலும் எழுத்து மொழிநிலையிலும் மக்களிடையே இலக்கியச் சுவையை நிலைநிறுத்தக் கம்பராமாயணம் பெரிதும் உதவியுள்ளது. இந்நூல் எல்லோரும் போற்றும் இலக்கியமாக விளங்கியதைப் பின்வரும் கூற்று நன்கு விளக்குகிறது.
கம்பராமாயணத்தை வைஷ்ணவர்கள் மட்டுமே அனுபவித்தார்கள் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. எல்லா மதங்களைச் சேர்ந்த அறிஞர் களும் இந்தக் காவியம்தான் எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று போற்றியிருக்கிறார்கள். வைஷ்ணவர் களோடு தமிழ்ப் பேரறிஞர்களாக விளங்கிய பல சைவப் பெரியார்களும், முஸ்லீம் பெரியார்களும், சிறிஸ்தவப் பெரியார்களும் இந்தக் காவியத்தின் பெருமைகளை எடுத்துக் கூறுவதையே தங்களுடைய பிரதான இலக்கியப் பணியாகக் கொண்டிருந்தார்கள் என்பது நாம் கண்கூடாகக் கண்டறிந்த உண்மை.
H147

Page 79
அதனால் ராமபக்திக்காக மட்டுமே இந்தக் காவியத் தைப் படிப்பதாகவோ புகழுவதாகவோ கூறமுடியாது"
(கு.அழகிரிசாமி)
தமிழ் மொழியை விட கன்னடம் , தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இராமாயணம் சிறப்புற்றுள்ளது. இராமாயணம் இன்றுவரை பிரசங்கமரபு வழியாகவும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. இதனால் இராமாயணத்தை நுணுகிக்கற்கும் ஒரு தலை முறையும் இன்றுவரை நிலவுகிறது. தமிழ் நாட்டில் பூனி வ.வே.சு.ஐயரும், பூர்டிகேசியும் இப்பணியை முன்னெடுத் தவர்கள் எனலாம். இக்காவியத்தின் அரிய நயங்களை அவர்கள் புலப்படுத்தினார். கம்பராமாயணம் காட்டும் மனித உணர்வு களின் செல்நெறியை மக்கள் அறியவேண்டும். மனித வாழ்வியல் உணர்வுகளின் வழிநிற்கின்ற வேளைகளில் செல்நெறி மாற்றங்களை எதிர்கொள்வதைக் கம்பராமாயணம் துல்லி யமாக எடுத்துக் காட்டியுள்ளது அவற்றில் ஒரு சிறுதுளியை இக்கட்டுரை முன் வைக்கிறது.
மீட்சிப்படலம் சீதையின் மீள்பதிவு
கம்பராமாயணத்தில் ஆறாவது காண்டமாக அமைந் துள்ள யுத்தகாண்டத்தில் மீட்சிப்படலம் ஒரு தனித்துவமான படலமாகும். இப்படலத்தின் பாடல்தொகையில் வேறுபட்ட கருத்துக்கள் உள. பல செருகு கவிதைகளும் இடம் பெற்றிருப் பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கம்பன் கவிதையை உணர்வோடு படிப்பவர் அவற்றை இனம் கண்டு கொள்வர். இக்கட்டுரைக்கு ஒரு வரையறையாக, சென்னைக் கம்பன் கழகப் பதிப்பே பயன்படுத்தப்படுகிறது. பதிப்பாளர் கம்பனை நன்கு உணர்ந்தே கம்பராமாயணப் பதிப்பை வெளிக்கொணர்ந் துள்ளனர். அவர்களின் கம்பன் பற்றிய மதிப்பீடு அதனை நன்கு வெளிப்படுத்துகிறது.
= 148 =

தத்துவஞானியாகவும், கணிதநூற்புலமையும் அறிவும் பெற்றதுடன் அவற்றைப் பேசும் விஞ்ஞானி யாகவும், கற்பனைத்திறம் மிகுந்த கவிஞனாகவும், சொற்களை ஆட்சி செய்யும் செஞ்சொற் கவியாகவும், இசை நுணுக்கம் பேசும் பேரறிஞனாகவும், நாட்டியக் கலை தெரி நட்டுவனாகவும், உலகியலும் பெரியோர் இயல்பும் அறிந்த அறிஞனாகவும், அரசியல் நுணுக்கம் பேசும் அரசியல் மேதையாகவும், மக்கள் மனஆழத்தை அறிந்துபேசும் மனவியல் நிபுணனாகவும், காலதேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்கும் கருத்துக்களை அள்ளிவீசும் காலங்கடந்த ஞானியாகவும் GOTTLD காதையில் கம்பன் மிளிர்கின்றான். இதனால் கம்ப நாடன் இயற்றிய இராமாயணம் எண்ணிய சகாத்தம் எண்ணுாற்று ஏழில் தோன்றியதிலிருந்து சென்ற பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்துவரும் ஒப்பற்ற காவியமாக விளங்குகிறது" இப்படலம் இராமன் கதையில் வரும் ஒரு முக்கிய இடமாக உள்ளது. இராவணனை வதம் செய்த வீரன் இராமன் மனநிலையில் வீரத்திற்கும் மேலாக உறைந்திருந்த மனித மனவியல்பு வெளிப்படும் நிலை இப்படலத்தில் விளக்கமாய்த் தெரிகிறது. பல்வேறுபட்ட மனித இயல்புகளிடையே உணர் வுப் புலப்பாடு துல்லியமாக வெளிப்படும் தனித்துவம் ஒன்றுண்டு. அது அவரவர் மனநிலையைப் பொறுத்து வெளிப்படும். இராமனுடைய இத்தகைய ஒரு மனித இயல்பின் உணர்வு வெளிப்பாட்டைக் கம்பன் தன் செய்யுட்கோப்பில் மிகத்திறமையாக எடுத்துக்காட்டியுள்ளான். இராமனும் சீதையும் பிரிந்திருந்து மீண்டும் கூடுகின்ற வேளை அவர்களு டைய உணர்வுகள் மீளக்கலக்கின்ற நேரம் சீதையின்
காத்திருப்பு வீண்போகாமல் வீரன் இராமன் அவளை
മ്മ 149 ജേ

Page 80
இராவணன் சிறையிலிருந்து மீட்டான். அந்த நிகழ்ச்சியைக் கம்பன் மிக நுணுக்கமாகப் பாடியுள்ளான். 124 செய்யுட்களில் காட்சிப்படுத்தியுள்ளான். இராமாயணத்தைப் படிக்கின்ற கேட்கின்ற கலைஞர் அனைவரும் ஆவலோடு இப்பகுதியை அறிய ஆவலாயிருப்பர். அவர்கள் மனமறிந்து கம்பன் மீட்சிப் படலத்தைப் பாடியுள்ளான் அப்போது மூன்று நிலைகளை அவன் உணர்த்த எண்ணியுள்ளான். 1. பிரிந்தவர் கூடும் உணர்வுநிலை வெளிப்பாடு 2. கற்பும் வீரமும் வேறுபடுகின்ற தன்மை 3. ஆண்மையும், பெண்மையும் சமநிலையாகும் அற்புதம் இந்த மூன்று நிலைகளையும் தெளிவாக அறிவிப்பதற்குக் கம்பன் செய்திகளை நகர்த்தும் பாங்கு அவன் புலமைச் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.
இராவணன் போரில் மாண்டான். இராமபாணம்
அவன் உயிரை மாய்த்தது. இலங்கை வேந்தனாக இராமன் ஆணைப்படி இலக்குவன் விபீடனுக்கு முடிசூட்டுகிறான். போரின் முடிவும் இலங்கையின் ஆட்சியும் இனிதே நிறைவேறிவிட்டது. ஆனால் இராமனின் தனிப்பட்ட வ1ழ்வியல் இன்னமும் சீர்பெறவில்லை. இராவணனால் அசோகவனத்திலே சிறைவைக்கப்பட்ட சீதை மீண்டும் இராமனோடு இணைய வேண்டும். கம்பன் இந்த இணைப்பை மனித இயல்போடுதான் ஏற்படுத்தியுள்ளான். இராமன் சீதை எங்கேயிருக்கிறாள் என்று தெரியாமலிருந்தபோது அநுமன் தான் அவள் இருக்குமிடத்தையும், இருப்புநிலையையும் அறிந்து வந்து இராமனிடம் செய்தி சொன்னான் கம்பன் செய்யுள் அதனை வருமாறு காட்சிப்படுத்தியுள்ளது.
"விற்பெரும் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆயநங்கையைக் கண்டேன் அல்லேன்
-150 H

இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடனம் புரியக்கண்டேன்
(திருவடி தொழுபடலம் 29) இப்போது சீதையைச் சிறை மீட்கும் வேளை வந்தபோதும் இராமன் தான் சென்று அவளை மீட்டுவரமுடியாத நிலையில் உள்ளான். மரவுரிதரித்து வனவாசத்தை மேற்கொண்டிருப்ப தால் இலங்கை மாநகருள் நுழையமுடியாது. விபீடணனுக்கும் இராமன் முன்னின்று முடிசூட்டவில்லை. எனவே சிறந்த தூதனான அனுமானிடமே சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்புகிறான்.
"இப்புறத்து இன எய்துறு காலையில் அப்புறத்தை உன்னி அனுமனை துப்புஉறச் செய்வாய் மணித்தோகைபால் செப்புறு இப்படிப்போய் எனச்செப்பினான்"
(மீட்சிப்படலம் 14) இராமன் வாய் சொன்னதை கம்பன் பாடலில் சாற்றுகிறான். சிறை இருக்கும் சீதையின் நினைவு இராமன் நெஞ்சில் இருந்தது. ஆனால் அரசியல் கடமைகளைச் செவ்வனே நிறைவு செய்தபின்னர்தான் தனது தனிப்பட்ட வாழ்வுக்குத் திரும்பும் மன்னர் வாரிசாக இருக்கிறான். இராமனுக்கு யாரிடம் சீதையை அழைத்து வரச் சொல்லி அனுப்புவது என்பது தெளிவாக இருந்தது. அநுமனே சீதையிருக்குமிடத்தை முதலில் அறிந்து வந்தவன். சீதை அவனோடு வரவிரும்பாமல் இராமனுக்கு அனுமன் மூலம் ஒரு செய்தி அனுப்பியிருந்தாள். அச்செய்தியை கம்பன் செய்யுள்தருகிறது.
இங்குள தன்மை எல்லாம் இயைபுளி இயையக்கேட்டாள் அங்குளதன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னான் திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை மங்குவென உயிரோடு என்று உன்மலரடி சென்னி வைத்தாள் (திருவடி தொழுதபடலம் 45)
-151 =

Page 81
சீதையின் செய்தியை இராமன் நினைவில் தாங்கி அவள் மனவியல்பு உணர்ந்து அனுமனிடமே செய்தியனுப்புகிறேன். தனது சொல்லுறுதியை அனுமன் சீதைக்குணர்த்த இதுவே அரியவேளை, அனுமன் மிகுந்த மகிழ்வோடு சீதையிடம் சென்று சுருக்கமாக ஆனால் சீதையின் மனமுணர்ந்தவ்னாய் அவளிடம் சென்று இராமன் பெயரைப் பலமுறை சொல்லிப் பாடியாடுகின்றான். சீதைக்குச் சொன்னதைச் செயற்படுத்திய மகிழ்வுடன் சுருக்கமாக ஆழமான பொருள் புதைந்து செய்தியைச் சொல்லுகிறான்.
"ஆழி ஆன அரக்கனை ஆரியச் சூழியானை துகைத்தது சோபனம்" என்ற கம்பனின் பாடல்வரிகள் அனுமனின் சொல்லின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. தொடர்ந்து இராவணன் போர்க்களத்தில் இறந்து கிடந்த காட்சியைக் கூறுகிறான். அனுமன் கூறும் இராமன் பெற்ற வெற்றி சீதைக்கு மிகமுக்கிய மான செய்தி. மாயமானைத் தொடர்ந்து சென்ற இராமனை இலக்குவன் தேடாமல் தன்னைக் காத்துநின்ற போது சீதை பெண்மையின் நிலை நின்று கடிந்து சொன்ன சொற்கள் நினைவில் வரச் சீதை ஒன்றும் பேசாமலிக்கிறாள். நெருப்பிலே நான் வீழ்ந்து இறப்பேன்’ என்று இலக்குவனிடம் சீதை சொல்லியபடியால் அவன் சீதையைத் தனியே விட்டு இராமனைத் தேடிச் சென்றான். அன்று அறியாமையால் சீதை சாவைத்தழுவத் துணிந்தாள். அந்த முடிவு இன்றுவரை, இராவணனை இராமன் வென்ற செய்தியைக் கேட்கும்வரை பல்வேறு இன்னல்களைத் தந்தது. இப்போது தன்னால் வந்த ஒரு மாசு நீங்கிவிட்டது என்ற நிலையில் சீதை சூழலை மறந்து ஒன்றுமே சொல்ல முடியாமல் இருக்கிறாள். அவளுடைய நிலையைக் கம்பன் செய்யுள் காட்டுகிறது.
"அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் இணையது இன்னது இயம்புவது என்பது ஒர்
-152 ത്ത

நினைவு இலாது நெடிது இருந்தாள்-நெடு மனையின் மாசு துடைத்த மனத்தினாள்"
(மீட்சிப்படலம் 24) சீதையின் மனநிலையில் ஒரு அமைதி ஏற்பட்டது. மன்னர் தலைமுறைக்கே ஒரு மாசு ஏற்படுத்தியவள் என்று எண்ணியி ருந்தவள் இப்போது இராவணன் இறந்தமையால் அத்தகைய ஒரு மாசு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டு விட்டது. சீதையின் நிலை அனுமனுக்கு வியப்பைத்தருகிறது. நான் சொல்லும் தூது பொய்க்கும் எனச் சீதையிடம் வினவுகிறான். அப்போது சீதை பேசத் தொடங்குகிறாள். அவளுடைய மனநிலையைச் சொற்களில் வெளிப்படுத்துகிறாள். அனுமனே! நீ கூறிய செய்தி எனக்குப் பேருவகை தருகிறது. அதைக்கூறத் தகுந்த சொற்கள் கிடைக்காமல் தவிக்கின்றேன். நீ முன்னே சொன்ன சொல்லுறு தியை நிறைவேற்றிவிட்டாய். ஆனால் நானோ உனக்கு எதுவும் அளிக்கமுடியாத அவலநிலையில் உள்ளேன். உனது செய்திக்கு உலகம் மூன்றையும் கொடுத்தாலும் ஈடாகாது. காலமெல்லாம் என் தலையால் தொழுவதே நான் செய்யக்கூடிய கைம்மாறு. இதனை விட ஏதும் செய்யமுடியாத நிலையில் உள்ளேன். அனுமனிடமே இனி என்ன செய்யலாம் என வினவுகிறாள். அனுமன் சீதையின் ஆழ்மனத்தை உணர்ந்து கொண்டான். இராமன் மனைவி என்ற இருப்பு நிலையை மீண்டும் அடையும் வரை சீதை தனித்தவளே. எனவே அவள் அவலம் தீர்க்க எண்ணி அயலில் காவல் செய்யும் அரக்கியரை அழிக்க வேண்டுகிறான்.
சீதை அனுமனைத் தடுக்கிறாள். "என்னுடைய செயற்பாட்டால் இத்தகைய துன்பத்தை நான் பெற்றேன். இந்த அரக்கியர்கள் கூனி போலக் கொடியர் அல்லர்" என்று விளக்கம் தருகிறாள். சீதை தனது துன்பங்களுக்கு எல்லாம் மூலமாக இருந்த கூனியை நினைவில் நிறுத்தி அரக்கியரோடு ஒப்பிட்டு
-س 153-س-

Page 82
அனுமனுக்கு உணர்த்துகிறாள். சிறை வாழ்வு சீதைக்கு வரநேர்ந்ததை மீள நினைத்துப்பார்க்க வேண்டிய ஒரு வேளை இது. துன்பம் அனுபவித்த சீதைக்கு அது தீர்ந்தவேளை வந்தபோது அதற்கான காரணத்தையும் மீண்டும் மனப்பதிவு செய்கிறாள். வாழ்வில் மீண்டும் இத்தகைய தவறு நேராதிருக்க இந்த மீள் பதிவும் தேவை. பெண்மையின் குணஇயல்பு கம்பன் செய்யுளில் துலக்கம் பெற்றுள்ளது. சீதையின் துன்பமான சிறை வாழ்வினை அனுமன் ஒருவனே நேரில் கண்டவன். இராவணனாலும் அரக்கியராலும் சீதை பட்ட துயரம் எத்தகையது என்பதை அவள் தற்கொலை செய்ய முயற்சித்த போது அனுமன் நன்கு உணர்ந்து கொண்டான். இராமன் காணாததுன்பம் அது. சீதை தனக்கு உயிர்தந்த அனுமனை வணங்கவேண்டும் என்று கூறியது சொல்லின் செல்வனான அனுமன் உள்ளத்தில் மனிதப் பண்பின் விழுமியத்தை பதியவைத்தது. அரக்கியர் உயிரையும் காத்த சீதையின் பண்பட்ட உள்ளத்தை அனுமன் காண்பது வியப்பே. தன்னுடைய சாவைத்தானே தீர்மானிக்கும் சீதைக்கு துன்பஞ்செய்தோரை யும் வாழவைக்க வேண்டும் என்ற பண்பான உள்ளம் இருப்பதை உணர்ந்து கொண்டான். கம்பனுடைய பாடல் இதை நன்கு விளக்குகிறது.
"எனக்கு நீஅருள் இவ்வரம் தீவினை தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் மனக்கு நோய் செயல் என்றனள் மாமதி
தனக்குமா மறுத்தந்த முகத்தினாள்"
வீரமும் கற்பும் வேறுபடல்
சீதையைத் தன்னிடம் அழைத்து வரும்படி இராமன் விபீடணனிடம் கூறுகிறான். கம்பராமாயணத்தில் இந்த இடம் மிக முக்கியமானது. இராமன் விபீடணனிடம் 'வீடண் சென்று தாநம்தேவியை சீரொடும்" எனக் கூறுகிறான். விபீடணன்
Ha154

உடனே சீதையிடம் செல்கிறான். இராமனைக் காண கோலம் புனைந்து வருக என வேண்டுகிறான். இராமன் வீரம் விபீடணனுக்கு அரசு தந்தது. எனவே அரசமிடுக்குடன் வீரன் இராமன் தேவியை அழைத்துச் செல்ல விரும்புகிறான். சீரொடும் சென்று தா' என்ற இராமன் கூற்று வீரத்தின் வேண்டுகோளாக விபீடணனால் உணரப்பட்டது. சீதை அவனுக்குத் தான் இருந்தபடியே இராமனிடம் வருவதே நல்லதெனக் கூறுகிறாள்.
"யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் கோனும் அம்முனிவர்தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி மேல்நிலைக்கோலம் கோடல் விழுமியது அன்று வீர'
(மீட்சிப்படலம் 40) நான் இந்த இலங்கை நகருள் சிறை இருந்தபோது எவ்வாறு இருந்தேன் என்பதை எனது கணவனான இராமபிரானும் தேவர்களும், முனிவர்களும் கற்புடையமாதர்களும் உள்ளபடி காணுமாறு நான் இப்போதுள்ள தோற்றத்துடனேயே இராமபிரான் இருக்குமிடம் வருவதே தகுதி. அலங்கரித்துக் கொண்டு வருவது தகுதியன்று' என விளக்கிச் சொல்கிறாள். ஆனால் வீர உணர்வால் விபீடணன் அதை மறுத்து நீலக்குன்று அன தோளினால் தன் பணியின் குறிப்பு இது என சீரோடும் தா என்ற இராமன் கூற்றை நினைவில் கொண்டு சீதைக்கு வலியுறுத்திக் கூறுகிறான். சீதையும் அவன் கூறியதை நம்பி வானமாதர்கள் அலங்கரிக்க அழகுக்கோலம் பூண்டு விபீடண னுடன் வான மடந்தையர் தொடர்ந்துகூட வானவரும் அரக்கி யரும் புறஞ்சூழ்ந்துவர இராமனிடம் செல்கிறாள். அமர்க் களத்திலே இராமன் கோலம் கண்ட சீதை அனுமானை நினைக்கிறாள். தன்னுடைய நிலையை அவனே யாவரும் அறியச் செய்தான் என்பதை உணர்ந்து எண்ணிய எண்ணங்
களைக் கம்பனது செய்யுள் வருமாறு கூறுகிறது.
- 155 m

Page 83
"சீலமும் காட்டி என் கணவன் சேவகக் கோலமும் காட்டி என் குலமும் காட்டி இஞ் ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக காலமும் காட்டும் கொல் என் கற்பு என்றாள்"
(மீட்புப்படலம் 56) அனுமனே என்னுடைய நல்லொழுக்கத்தின் நிலையையும் என்னுடைய கணவனுக்குத் தெரியச் சொன்னவன், நானும் என் கணவனுடைய வீரத்தோற்றத்தைக் காணச்செய்தவன், என் குலத்தின் பெருமையை யாவரும் உணரச் செய்தவன், உலகத்தை யும் அழியாமல் காப்பாற்றினான். என் கற்பு நாள்கள் அனுமனுக்கு நீண்ட வாழ்நாளைக் கொடுக்குமா என எண்ணிப் பார்க்கிறாள். அத்துடன் என் உடல் இராவணன் கொணர்ந்து சிறை வைத்தமையால் அசுத்தப்பட்டது. இதனை என்னுடைய கணவன் இனிமேல் என்னை ஒருபோதும் விரும்பான். ஆதலால் என் கணவனைப் பிரிந்த இந்த உடம்பு உயிரை யொழித்துத் தற்கொலை செய்து கொண்டு இறக்கவேண்டி யதே. எனக்கு இனிமேல் உயிர் வாழ்வதில் ஆசை கொள்ளத் தகுதியில்லை எனப் பலவாறு எண்ணியதை இப்போது மீட்டுப்பார்க்கிறாள்". பச்சிலை வண்ணமும் பவளவாயுமாய்க் கைச்சிலையேந்தி நிறைதனைக் கண்ணுற்றாள் எனக் கம்பன்
அதனைக் காட்சிப்படுத்தியுள்ளான்.
நீண்ட நாள் பிரிந்திருந்த இராமனைத் தொழுது "நான் இனி இராமனை மறப்பினும் நன்று இனி இறப்பினும் நன்று" என எண்ணுகிறாள். அந்தவேளையில் இராமனும் அவளை நன்கு பார்த்தான். கண்களில் நீர் சொரியத் தன்னை வணங்கிய கற்பினை, வீரனாம் இராமன் கடுமொழியால் கடிந்து உரைக்கின்றான். சீதையின் சிறைவாழ்வை இராமன் நேரில் காணவில்லை. சொல்லின் செல்வன் அனுமன் சொல்லக்
கேட்டுள்ளான். சீதையின் கோலம் இராமன் பார்வையில்
-56 -

ஆண்மையின் சீற்றம் வெளிப்படக்காரணமாயிற்று. கம்பன் இராமன் மனித நிலை நின்ற உணர்வை ஏழு செய்யுட்களில் வடித்துக் காட்டுகிறான். சீதையின் சிறையிருப்பு இராமன் வாய்ச்சொற்களால் காட்சிப்படுத்தும் முறைமை ஒரு அவல நிலையை உருவாக்கிவிட்டது. சீதையின் கணவன் என்ற உறவு நிலை நின்ற இராமன் சொன்னவை சீதையை என்ன நிலைக்குட்படுத்தியிருக்கும் சீதையின் புனைவு பெற்றஅழகுக் கோலம் இராமன் உணர்வில் கோபத்தையே வெளிக் கொணர்ந்தது.
"ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை முறைதிறம்பு அரக்கன் மாநகர் ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் மீண்டது என் நினைவு என விரும்பும் என்பதோ"
(மீட்சிப்படலம் 62) சீதை சிறையிலிருந்த பத்துமாத காலமும் உணவு உண்ணாமல் இராமனையே எண்ணி நலிந்திருந்தாள் இராவணன் இராமன் கையால் வீழ்ந்தான் என்ற செய்தி கேட்ட பின்பே உயிர்த்தாள். இதனை நேரிலே கண்டவன் அனுமன். இராமன் சீதையை அறுசுவை உணவை விரும்பி உண்டாயே என்று கடிந்துரைக்கும் போது அனுமன் உண்மையைச் சொல்லவில்லை. சீதையின் ஒழுக்கம் பற்றி இராமன் கூறிய கூற்று அனுமன் சிந்தையையே உறைய வைத்துவிட்டது. மேலும் "நான் உன்னை விரும்பு வோன் என்று எண்ணி இங்கே வந்தாயா" என்று இராமன் சீதையிடம் கேட்டபோது அழைத்து வந்த விபீடணனும் வாயடைத்துப் போனான். உன்னை மீட்பதற்காக நான் இங்கே போர் செய்ய வரவில்லை. மனையாளைக் கவர்ந்தவனைக் கொன்றிலனே என்ற பழியிலிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இராவணனைக் கொன்றேன். இராமன் தன் வீரம் பற்றியே பேசுகிறான். மனையாளைக் கவர்ந்தவனிடம் தன் வீரததை உணர்த்தவே இராமன் விரும்பினான் . சீதை
-157 mus

Page 84
அரக்கர் வாழ்க்கை முறைப்படி மதுவுண்டு, மாமிசம் உண்டு மகிழ்வாய் இருந்திருப்பாள் என எண்ணிய இராமன் அதைச் சொல்லிலே காட்டுகிறான். உணவுப் பழக்கத்தை இராமன் முன்னிறுத்துவது சீதையின் சிறை வாழ்வை அறியாமையே. மரவுரி தரித்து காடாள வந்த வேளையிலே சீதை கற்புநெறி மாறி. இலங்கை நகர வாழ்வில் இணைய நேர்ந்தது. இலக்குவன் சொல்லை மீறச் செய்த சீதையின் சொற்களை நினைந்தே இராமன் பேசுகிறான். புழுப்போல நிலத்தில் பிறந்தமையால் நீ குலத்தைக் காக்கும் தன்மையற்றவள். சீதையின் பிறப்பைச் சுட்டி இராமன் கூறுவது அவள் அரசகுலத்தில் பிறக்கவில்லை என்பதை இலங்கையிலே எடுத்துக் கூறுவதாக உள்ளது. மீண்டும் சீதையின் பிறப்பை மிகவும் கொடுமையாக சுடுசொற் களைக் கூட்டிப்பேசுகிறான்.
"பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் உண்மையும் நீஒருத்திதோன்றலால் வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்"
(மீட்சிப்படலம் 66) சீதை பிறந்தமையால் பல நல்ல பண்புகள் அழிந்தனவே என இராமன் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்கிறான். இவ்விடத்து இராமன் குறிப்பிடும் குணஇயல்புகளை மனித நிலையிலே வரிசைப்படுத்துகிறான். எல்லாவற்றையும் பேணும் நல்லியல்பினையுடைய பெண்மை இங்கே குற்றம் சாட்டப் பட்டு நிற்கிறது. மனவடக்கம் கொண்டவளாக சீதை இருக்க வில்லை என இராமன் மேலும் குற்றம் கூறுகிறான். கணவரைப் பிரிந்த மகளிர் இவ்வாறு கோலம் புனையார். பெருந்தவக் கோலம் பூண்டிருப்பர். பழிநேர்ந்தால் உயிரைவிட்டுப் பழியைப் போக்குவர். நீ அப்படி அதையுமே செய்யவில்லை. இப்போதாவது இறந்தொழி அல்லது உனக்குத் தகுந்த இடத்திற்குச் சென்றுவிடு நான் உண்னை ஏற்றுக்கொள்ள
-158 re

மாட்டேன். இராமன் சொற்கள் சீதையின் நெஞ்சில் நெருப்புத்துண்டங்களாக விழுந்தன. இராமன் பிரிவினால் அவன் அனுபவித்த துன்பத்தை விட இப்போது பெரும் துன்பத்தை அனுபவித்தாள். அவள் கண்களில் கண்ணிர் சொரியவில்லை. குருதியே வெளிப்பட்டது. இலங்கையிலே கொடிய அரக்கரிடையே சிறையிருந்தபோது இராமன் வீரம் தன்னை வந்து சிறை மீட்கும் என்று நம்பியிருந்தாள். வீரமும் கற்பும் வேறுபட்டதைச் சீதை முதன்முதலாக உணர்ந்தாள். தனது மனவுறுதியென்னும் கற்பு நெறியால் இராமனை மீண்டும் காணநேர்ந்ததை எண்ணி மகிழ்ந்த சீதைக்கு, இராமன் வீரத்தையே நம்பியிருந்த சீதைக்கு உலக இயல்பு மாறுபட்டது என்ற உண்மை தெரிந்தது.
சீதையின் நிலை கண்டு அயலிலே நின்ற முனிவர்களும், தேவர்களும், மாதர்களும், அரக்கர்களும் மனம் பொறாமல் வாய் திறந்து கதறினார்கள். இராமன் கடுசொற்கள் அவர்களையும் வருத்தின. சீதையோ இராமனோடு சேரவேண்டும் என்ற பேராவல் அடங்கப் பேதமையுற்று நிற்கிறாள். தனது நீண்ட கண்களில் நீர் தாரையாக வடிய உலகத்தாரை முன்னிலைப்படுத்திப் பேசுகிறாள். நான் உயிர் வாழ்ந்தமையால் பெற்ற பயன் இது போலும். அவள் வாய்ச்சொற்களைக் கம்பன் ஐந்து செய்யுட்களில் காட்டுகிறான். சீதை அனுமன் தன்னிடம் தூதாக வந்து போனதை இராமனும் நினைவூட்டுகிறாள். "அனுமன் உன்னிடம் என் நிலையைப் பற்றிச்சொல்லவில்லையா?" "நீ என்னை மீட்க வருவாய்" என்ற தூதை நினைந்தே நான் இதுவரை இறவாமல் வாழ்ந்தேன். உன்னைப் பிரிந்து இனி என்னால் வாழமுடியாது என்ற முடிவில் நான் இறக்க முற்பட்ட போதுதான் அனுமன் என்னைக் கண்டான். தூதன் என் நிலை பற்றி விரிவாகச்
சொல்லியிருப்பான் என்ற நம்பிக்கையோடு நானிருந்தேன்.
== 159 س

Page 85
இதுவரை நான் காத்து வந்த என் ஒழுக்கநெறி பற்றி அவன் உரைத்திருப்பான். நீயும் என் அவலநிலையை நன்கு உணர்ந்திருப்பாய் என்று எண்ணியே உயிர்வாழ்ந்தேன். உலகமெல்லாம் என்னைப் பத்தினியென்று எண்ணியிருக்கும் வேளையில் என் கணவன் அதை மறுத்துரைத்தால் அதனை மாற்றம் செய்ய தெய்வந்தான் வழிசெய்ய வேண்டும். பெண்களின் மனநிலையை உணரமுடியாதவர் என் கணவர் என நான் அறிந்தேன். என் கணவன் உள்ளமே என்னை அறியாது போயிற்று சீதை ஒரு முடிவு செய்து விட்டாள். கற்பு என்பது சொல்திறம்பாமை என்ற நம்பிக்கை பாழ்பட சீதை இராமனை நோக்கிச் சொல்கிறாள்.
"ஆதலின் புறத்து இனியாருக்காக என் கோது அறு தவத்தைக் கூறிக் காட்டுகேன் சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே வேதநின் பணி அது விதியும் என்றனள்."
(மீட்சிப்படலம் 77) இனிமேல் நான் யாருக்கு எனது கற்பு நெறியை விளக்கிக் காட்ட வேண்டும்? உன் பிரிவு என்னை இறக்கவே தூண்டியது. உன் தூதால் நான் அம் முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் இப்போது நீயே சொல்லிவிட்டாய். உன் சொல்லை நர்ன் மீறுவதற்கில்லை. தாயுரை கேட்டு தந்தையின் பணியேற்று காடாளும் கடமையை ஏற்றவன் நீ அன்று உன் பிரிவால் நான் இறந்து விடுவேன் என்று அஞ்சியே உன்னோடு காட்டு வாழ்வு வாழ முடிவு செய்தேன். இப்போது உன் கட்டளையை நிறைவேற்றி என் கற்புநெறியை நான் காக்கவேண்டும். ஆண்மையின் பழியேற்று பெண் உலகில் வாழமுடியாது. இது உலகத்தில் விதியாக உள்ளது.
சீதையின் தன் கற்புநெறி காக்க இலக்குவனை அழைத்துத் தீமூட்டச் சொல்கிறாள். இலக்குவன் சீதையின்
-160 m

ஏவலை நிறைவேற்ற இராமனிடம் கண்களால் அனுமதி வேண்டுகிறான். இராமன் பார்வையால் இலக்குவனுக்கு அனுமதியளிக்கிறான். வீரன் இராமன் கட்டளை நிறைவேற்ற இலக்குவன் தீ முட்டினான். யாருமே இராமனின் எண்ணத்தை மாற்றும் வலியுடையராக இல்லை. மனிதகுண இயல்பு மிக்கோங்க கணவன் சொல்லை நிறைவேற்றுவதே மனைவி யின் தலையாய கடமை இதற்கும் மேலாக ஒரு உண்மையை உலகம் உணரவேண்டும். இது இராமனின் வாழ்வியற் கோட்பாடாக இருக்கிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இல்லறத்து நீதியாக வேண்டும். பிறன் மனையாளை நயப்பவன் அழிக்கப்படவேண்டியவன். வாலி சுக்கிரீவன் மனையாளைக் கவர்ந்தான். எனவே அவன் இராமனால் கொல்லப்பட்டான். இராவணன் இராமன் மனையாளை வஞ்சகமாகக் கவர்ந்தான். அதனால் இராமனால் கொல்லப் பட்டான். பெண்மையைக் காப்பாற்ற இம்மரபை இராமன் உருவாக்கினான். பெண்ணின் பெருமையைச் சிதைப்பவரை அழிக்கவேண்டியது வீரன் கடமை என்பதை இராமன் உலகுக்குக் காட்டவேண்டி
யிருந்தது.
பிறர்மனை சென்று வாழநேர்ந்த பெண்மையும், தன்னை அழித்துக் கொள்வதே சிறந்த கற்புநெறி என மனித விழுமியத்தை இராமன் சீதை மூலமே காட்டுகிறான். சீதை தன் கற்பின் வழி இதனை முன்னரே உணர்ந்திருந்தாள். பலர் முன்னிலையில் சுடுசொல் வீசிய இராமனின் கொள்கை வீரம் கீதையின் கற்புநெறியால் உலகறிய வேண்டும். எனவே தீயில் விழுந்து தன்னை அழித்து இராமன் கொள்கை வீரம் வெல்லச் சீதை துணைநிற்கிறாள். வீரமும் கற்பும் சேர்ந்து உலகைப் பண்படுத்த மனிதவாழ்வியல் சிறக்க வேண்டும். இராமனும் சீதையும் மனத்தால் உணர்ந்ததைச் செயற்படுத்தினார்கள். இராமன் சீதையிடம் தனது கொள்கையினை அவளைத்
-161 m

Page 86
திருமணம் செய்தபோதே உணர்ந்திருந்தான். இருவரும் மட்டுமே அறிந்திருந்த அந்த கொள்கையைச் சீதை அனுமனிடம் கூறி இராமனைத் தன்னை மீட்பதோடு மட்டுமல்லாமல் இராவணைனை விரைவாய் அழிக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறாள்.
"வந்து என்னக் கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிறவிக்கு இருதாமரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செல்வரம் தந்த வார்த்தை திருச்செவிசாற்றுவாய்
(சூடாமணிப்படலம் 34) அன்று தந்த செம்மையான வரத்தை இராமன் நிலை நாட்டினான். ஆனால் சீதை தன் ஆசையால் மாயமான் மீது கொண்ட விருப்பினால் இராமனைப் பிரிய நேர்ந்தது. சீதை செய்த குற்றம் அதுதான். அதன் விளைவாகவே பத்து மாதம் இராவணனால் சிறையிருக்க நேர்ந்தது. பெண்மையின் மனவுரம் பேணப்படவேண்டும். இதனை சொல்லின் செல்வன் அனுமனும் நன்குணர்ந்தவன். இராமனின் கேள்விகள் சீதையை வேதனைப்படுத்தினாலும் அவளுடைய தவறை எடுத்துக்கூற வேண்டிய இராமன் கடமையை எல்லோரும் உணரவேண்டும். கணவனே அதைச் செய்யமுடியும்.
இந்தக் கற்புநெறியை உலகம் உணர சீதை அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். தீயுட் புகுந்து இறத்தல் என்பது குற்றத்தை, மாசை நீக்கும் ஒரு தூய்மையான செயற்பாடு. ஆனால் அதை சீதை மேற்கொண்டபோது அயல் நின்றவர் கலங்கினர். ஆண்மையும், பெண்மையும் இணையும் இல்லறத்தின் கற்புநெறி பேணப்பட்டதை அவர்கள் உடனடி யாக உணரவில்லை. மனத்தில் மாசுபடாத சீதையின் கற்புநெறி வாழ்வை அனுமன் மட்டுமே நேரிற் கண்டிருந்தான். எனவே அவள் கற்பு நிச்சயம் வெல்லும் என்று நம்பியிருந்தான். சீதை
-162 -

எரியுட்புகுதல் எல்லோருக்கும் கண்ணாற் காணமுடியாத சோகநிகழ்வாக இருந்தது. இயற்கையே திகைத்து நின்றது.
கம்பன் செய்யுட்கள் அதனைக் காட்சிப்படுத்துகின்றன. வான்முதல் உலகமும் உயிர்களும் ஒலமிட்டன. வாய்திறந்து அரற்றின. இது தக்கிலது எனச் சாற்றின. இடம் திரிந்தன, சுடர், கடல்கள் ஏங்கின. ஆனால் சீதை மனம் திரியவில்லை. கற்புடனே தீயிற் பாய்ந்தாள். தீ உடனே தீய்ந்தது. சீதையை அக்கிணிதேவன் அங்கையால் சுமந்து எழுந்தான். சீதை தோற்றம் மாறாமல் சூடினமலர்கள் வாடாமல் இருந்தாள். இது கண்டு எல்லோரும் வியந்தனர். இராமன் அக்கினியிடம் சீதையை நீ ஏன் சுடவில்லையென வினவுகிறான். அக்கினி இராமனுக்குத் தகுந்த விடை கூறுகிறான். அவள் கற்புநெறியை நான் தெளிவிக்கிறேன். அக்கினியைச் சாட்சியாக வைத்துத் திருமணம் செய்தபின் ஐயப்படலாமோ ஆனால் ஐயமேற் படும் போது தீக்குளித்தே நிறுவும் மரபும் உண்டு. பொய்மை யில்லாத அனுமன் சொற்களைக் கேட்ட பின்னரும் சீதையின் கற்புநெறியை அறியாதிருக்கலாமோ. 'சீதை அக்கினிப் பிரவேசம் செய்தபோது ஏனைய உயர்களெல்லாம் வருந்தி யதை நீ அறியாயோ அதர்மமான இந்தப் பொருளை நீ எங்கிருந்து பெற்றாய்'இவள் மனத்திலே கோபம் கொண்டால் மழை பெய்யுமோ பூமி பிளந்துவிடுமோ 'தருமம் நடக்குமா இவள் சபித்தால் பிரமனும் அழிய நேருமே எனப் பலவாறு தெருட்டிச் சீதையை இராமனிடம் கொடுக்கிறான். இராமன் அக்கிணிதேவனிடம் சொல்லும் வார்த்தைகள் மானிட இயல்பு டனே வெளிப்படுகின்றன. நீ இந்த உலகுக்கெல்லாம் தவறுதலிலாத சாட்சியாக இருக்கின்றாய். ஆதலால் இவளைக் குற்றமற்றவன் எனக் கூறிவிட்டாய். இனிமேல் இவளில் மாசில்லை, பழியில்லை எல்லோரும் இதனை உணர்ந்திருப்பர் எனக்கூறி இராமன் சீதையை ஏற்றுக்கொள்கிறான்.
-163 -

Page 87
இவ்வாறு சீதை அக்கினிப் பிரவேசம் செய்து மாசற்றவள் என நிரூபிக்கப்பட்டமை கம்பராமாயணத்தில் ஒரு புதிய நெறிமுறையைக் காட்டுகிறது. சொல் பிழைத்தால் தீயுள் புகுந்து உயிர் நீத்தல் என மரபாகியுள்ளது. இதனை பரதனும் மேற்கொண்டான் "14 ஆண்டுகள் கடந்து வருவேன்" என்று இராமன் சொல்லியதை எண்ணி வாழ்ந்த பரதன் குறித்த காலத்தில் அவன் வராமையால் தீயுள் பாய்ந்து உயிர்விட எண்ணுகிறான். தம்பி சத்துருக்கனிடம் வரமாக அதை வேண்டுகிறான்.
"சொன்ன நாளில் இராமன் தோன்றிலன்
மின்னு தீயிடையான் இனி வீடுவென்" என்ற பரதன் கூற்று அவன் கற்புநிலை பேணுவதைக் காட்டுகிறது. தீ மூட்டி அதில் பரதன் இறக்கப்புகும்போது அனுமன் தோன்றி கையினால் எரியைக் கரிஆக்கிப் பரதன் உயிரைக் காப்பாற்றுகிறான். இராமன் வரவைத் தீவிரமாக எதிர்பார்த்திருந்த சீதையும் பரதனும் நெருப்பில் மாளத் துணிந்தவர். ஆனால் இருவரிலும் வேறுபாடு உண்டு. பரதன் இராமனிடம் ஒரு வேண்டுகோள் மூலம் எரியில் வீழ்ந்து
இறப்பேன் என்றான். ஆனால் சீதையோ இராமனின்
சொல்காக்க தீயில் இறக்கத் துணிந்தாள். வள்ளுவர் கூறிய தற்காத்து, தற்கொண்டான், பேணிதகைச்சான்ற சொற்காத்து நின்றாள். ஆண்மையும், பெண்மையும் இல்லறம் பேணும் தன்மையில் வேறுபாடு உண்டு. ஆண்மை தன்னை மட்டும் எண்ணி சொல் காக்கும் தகுதி வாய்ந்தது. பெண்மையோ மற்றாரையும் எண்ணியே கற்புநெறி காக்கும் பண்புடையது. இது மனித இயல்பில் இணைந்திருப்பதையே இராமன் கதை உணர்த்துகின்றது. தெய்வநிலையிலும் இந்த இயல்புகள் உண்டு. ஆனால் மாசுபடிந்த மனமற்ற மானிடத்தையும் கம்பன் காட்டுகிறான். உள்ளத்தை உணர்ந்தபின்னர் பிறர்பழி கூறுவர்
என்பதற்காகத் தள்ளி வைக்கப்படும் பெண்மையின் நிலையும்,
-164 -

அந்தப் பெண்மை தன்னைக்காத்துப் பிறரையும் காக்கும் முறைமையும் கம்பராமாயணத்து மீட்சிப்படலம் காட்டுகிறது. இப்படலம் சிலபிரதிகளில் சீதாபிராட்டி திருவடி தொழுத படலம் அல்லது பிராட்டி திருவடி தொழுதபடலம் என்றும் தொடர உள்ள பாடல்கள். கடவுளர் காட்சிப்படலம் என்றும் காணப்படுகிறது. மனித இயல்பில் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் நிலையும் தெய்வீக நிலையில் வெளிப்படும் தன்மையும் இணைத்துக் காட்டப்பட்டுள்ளன. சீதை கற்பின் கனலியாக வெளிப்பட்டபோது தெய்வீக நிலை மனித இயல்போடு தோன்றும் பாங்கு தென்படுகிறது. அதனைக் கம்பன் கத்திமுனையில் நடப்பது போலக் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளான். இது அவன் புலமையின் செழுமை.
-165 മ

Page 88
13.தொண்டர் புராணம் விரித்துரைத்த சேக்கிழாரின் பக்திவநறி
உலகமெலாம் உணர்ந்து ஒதற்கரிய ஒருவனை வணங்கி வாழ்ந்த உத்தமர்களுடைய பெருமைகளை எடுத்துரைக்கவென எழுதப்பட்டது திருத்தொண்டர்புராணம். இந்நூலை யாத்தவர் அநபாயச் சோழமன்னனின் அமைச்சரான சேக்கிழார். தொண்டர்சீர் பரவும் பண்பாளர். அடியார் அறுபத்து மூவர் வரலாற்றைப் பாடியவர். அதனால் அந் நூல் "பெரிய புராணம்' என்னும்பெயராலும் வழங்கப்பட்டது. சைவக் காப்பியம் என்றும் சிறப்புப் பெயர் பெற்றது. கேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். இவருடைய வரலாற்றை அறிவதற்கு உமாபதிசிவாசாரியார் எழுதிய திருத்தொண்டர் புராண வரலாறு பல தரவுகளைத் தருகின்றது.
சேக் கிழார் தொண்டை நாட்டிலே புலியூர்க் கோட்டத்திலே குன்றத்தூர் நாட்டிலே குன்றத்தூரிலே வேளாளர்குலத்திலே பிறந்தவர். இளமையிலே கல்வியில் தேர்ச்சிபெற்று அறிவில் முதிர்ந்துமன்னனால் 'உத்தமச்சோழப் பல்லவர் என்னும் பட்டத்தைப் பெற்று முதன்மந்திரியாய் பணிசெய்தவர். பல்லவர்களை வென்ற சோழரால் வழங்கப் பட்ட பட்டம்அவருடைய ஆளுமைத்திறனுக்கு சான்றாக விளங்கியது. சோழ நாட்டிலேயுள்ள திருநாகேச்சுரம்' என்னும் தலத்திலே மிகுந்த பக்தி கொண்டு வழிபட்டசேக்கிழார் அங்கு கோயிலும் திருமடவளாகமும் அமைத்துப் பணியாற்றினார். அக்காலத்தில் 'சீவகசிந்தாமணி என்ற சமணநூல் சமூகத்தில் பாராட்டுப் பெற்றிருந்தது. மக்கள் மனம் மாறி சைவ நெறியிலிருந்து விலகிச் செல்வதைச் சேக்கிழார் உணர்ந்தார்.
H166H

அரசனும் அந்நூலைப் பாராட்டுவது கண்டு முதன்மந்திரி என்ற தகுதிப்பாட்டிலும் மன்னனுக்கு அறிவுரை செய்தார். அரசன் அவரிடம் சிவனடியார்களின் வரலாற்றைக் கேட்டறிந்த போது அதனை ஒரு காப்பியமாகச் செய்யும்படி வேண்டினான். அருண்மொழித்தேவரும் அதற்கிசைந்து தில்லையிலே சென்று தங்கியிருந்து காப்பியம் செய்ய அரசனிடம் அனுமதிபெற்றுத் தில்லை சென்றார்.
தில்லையில் உறையும் இறைவன் 'உலகெலாம்' என அடிஎடுத்துக் கொடுக்க இரண்டு காண்டமாக, அவற்றுள் 13 சருக்கங்களை அமைத்து 4253 செய்யுட்களில் பெரிய புராணமாகப் பாடிமுடித்தார். தில்லையின் ஆயிரங்கால் மண்டபத்தில் சேக்கிழார் சித்திரைத் திங்கள் திருவாதிரையிலே புராணம் படித்துப் பொருள் சொல்லத் தொடங்கி அடுத்த ஆண்டு சித்திரைத் திங்கள் திருவாதிரையிலே நிறைவு செய்தார். பெரியபுராணம் நம்பியாண்டார் நம்பிகளால் வகுக்கப் பெற்றிருந்த பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. அருண்மொழித்தேவருக்கு தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சேக்கிழார் தில்லையிலே வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். சேக்கிழாரின் தம்பியாராகிய பாலறாவாயரே மன்னனுக்கு மந்திரியாக அமர்ந்து "தொண்டமான்' எனப் பட்டமும் பெற்றார். உமாபதிசிவாசாரியார் இச் செய்திகளை எழுதியுள்ளார். குன்றத்தூரில் கிடைத்த கல்வெட்டுகளும் இதற்கு அணையாக உள்ளன. சேக்கிழாரது பாடலிலும்
தகவல்கள் உள்ளன.
பெரியபுராணத்தை விரித்துப்பாடுவதற்கு மூலநூல்கள் சேக்கிழாருக்குக் கிடைத்திருந்தன. நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத்தொகை அடியவர்களை இனம் காட்டியது.
ത്ത1 67 -

Page 89
இறைவன் மீது பக்தி கொண்ட ஒரு திருக்கூட்டத்தை நம்பியாரூரர் 11 பாடல்களில் உள்ளடக்கிக் காட்டினார். பல்வேறு காலத்திலே வாழந்த பல்வேறு மக்களை ஒன்றுபடுத்தி அடியவர் எனப்பெயரிட்டு அறிமுகம் செய்தார் நம்பியாரூரர். சிவனில் எல்லையற்ற பக்தியும் மக்களுக்குத் தொண்டு செய்வதில் நாட்டமும் கொண்டவர்களாகவும் தமது கொள்கை யிலே உறுதி கொண்டவராகவும் வாழ்ந்த அந்த மெய்யடியார் களின் வாழ்வு குறிக்கோளுடையதாக இருந்தது. அதனை எல்லோரும் அறியவேண்டுமென விரும்பிய நம்பியாரூரர் அவர்களைப் பாடினார். அடியவரை வணங்கும்மரபைத் தொடக்கி வைத்தார். அவ்வாறு பாடும் போது அடியவர்கள் பற்றி அவர்குறிப்பிட்ட செய்திகள் குறுக்கமானவை. பாடல் வரிசைப்படி அவர்பாடிய அடியார்களை வருமாறு பகுத்துக் காணலாம். பாடல் தில்லை வாழ் அந்தணர்
திருநீலகண்டத்துக் குயவர் இல்லையே என்னாத இயற்பகை இளையான் குடிமாறன் அடியார் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்
விரிபொழில் சூழ் குன்றையார் விறல்மிண்டர்
அல்லி மென் முல்லையந்தார் அமர்நீதி
பாடல் 2 இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர் ஏனாதிநாதன் தன்அடியார் கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பன் கடவூரிற் கலையன் தன் அடியார் மலை மலிந்ததோளன் மானக்கஞ்சாறன்
எஞ்சாத வாட்டாயனடியார்
அவைமலிந்த புனல் மங்கையானற் கடியேன்
-168 H

பாடல் 3மும்மையாலுல காண்ட மூர்த்தி
LuTL6)
முருகனுக்கு முருத்திர பசுபதி செம்மையே திருநாளைப்போவார் திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார் தாதையை மழுவினால் எறிந்த அம்மையானடிச்சண்டி
முருகர்
4 திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரசன் பெருநம்பி குலச்சிறை தன்னடியார் பெருமிழலைக்குறும்பர்
பேயர்
ஒருநம்பி அப்பூதியடியார் ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கன் அருநம்பி நமிநந்தி
பாடல் 5 மதுமலர் நற்கொன்றையனடியலாற்பேணா
எம்பிரான் சம்பந்தனடியார் ஏயர் கோன் கலிக்காமன் நம்பிரான் திருமூலனடியார் நாட்ட மிகு தண்டிக்கு மூர்க்கர் அம்பரான் சோமாசிமாறன்
பாடல் 6 உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த
சாக்கி சீர் கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலி செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர் கார் கொண்டகொடைக்கழற்றறிவான்
கடற்காழி கணநாதன்
- 169 -

Page 90
பாடல் 7 பொய்யடிமை இலாத புலவர்
பொழில் கருவூர்த்துஞ்சிய புகழ்ச்சோழன் மெய்யடியரான சிங்கமுனையர் விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்
கலியன் கழற்சத்திவரிஞ்சையர் கோன் ஐயடிகள் காடவர் கோன் 7
பாடல் 8 கணம்புல்ல நம்பி
காரி நின்றசீர் நெடுமாறன் தொன் மயிலை வாயிலானடியார்
வேல்நம்பி முனையடுவார்
பாடல் 9 காடவர்கோன் கழற்சிங்கன் மன்னவனாம் செருத்துணை புகழ்த்துணையார் அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலி மடல் சூழ்ந்ததார் இடங்கழி
பாடல் 10பத்தராய்ப்பணிவார்
பரமனையே பாடுவார் சித்தத்தைச் சிவன் பால் வைத்தார் திருவாரூரிற் பிறந்தார் முப்போதும் திருமேனி தீண்டுவார் முழுநீறுபூசியமுனிவர் அப்பாலுமடிச்சார்ந்த அடியார்
பாடல் 11 பூசலார்
வரிவளையாள் மானி
நேசன்
=170 -ത്ത

செங்கணார் திருநீலகண்டத்துப் பாணர் சடையனார்
இசைஞானி
நம்பியாண்டார் நம்பிபாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடப்பட்டுள்ள அடியார்கள் பற்றிய குறிப்புக்களையும் சேக்கிழார் சேர்த்துப் பெரியபுராணத்தை விரிவான நூலாகப் பாடினார். உமாபதி சிவாசாரியார் பெரிய புராணத்தின் தோற்றத்திற்கு உதவிய ஏனைய நூல்களைப் பற்றி வருமாறு குறிப்பிடுகிறார்.
"மூவரோது திருநெறித்தமிழும்.அம்மையாரது
அருணுால்களும் சேரமான் பெருமாள் நாயனாரது அந்தாதி, உலா, கோவை
என்றவையும் ஐயடியார்களது திருவெண்பாவும் திருமூலர் திருமந்திரமாலையும்
என்னும் இவை இதற்கு உறுப்பாகவும் பொருள் கோள் உயிராகவும் விருத்தப்பா
உடலாகவும் கொண்டு இதுநாலடியால் உலகெலாம் நடந்தது" மூவர் தேவாரங்களைப் படித்தசேக்கிழார் ஒரு புதிய பக்தி நெறியைக் கண்டார். தனக்கு முன்னே வாழ்ந்தவர் குறிப்பிட்டுச் சென்ற அடியார்களின் வரலாற்றை ஆழமாக உற்று நோக்கினார். வரலாற்றுத் தரவுகளையும் செய்திக்குறிப்புக் களையும் தொகுத்து விரித்து ஒரு காப்பியமாக அமைப்பதே அவரது பக்திநெறியாகிற்று. இறைவன் உணரத் தொண்டு செய்துவாழ்ந்தவரை ‘திருத்தொண்டர்’ எனச் சிறப்பித்துக் காட்டினார். அதனால் காப்பியத்தின் பெயரையும் திருத் தொண்டர் புராணம்' என அமைத்தார். பிறருக்குத் தொண்டு
செய்து தனக்கெனவாழாது பெருமக்களையும் யாவருக்கும்
-17

Page 91
அடியவராகவாழும் பக்திநெறியில் நின்றவரையும் சேக்கிழார் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
இதுவரை தனியொருவருடைய வரலாற்றையே காப்பியமாகப் பாடும் மரபினை மாற்றித் தொண்டாகிய பண்பையே காப்பியத்தலைமையாக்கினார். சிலம்பு காப்பியத் தலைமை பெற்ற மரபு முன்னர் இளங்கோவால் தொடக்கப் பெற்றது. ஆனால் சேக்கிழார் ‘தொண்டு' என்னும் பண்புநிலையை பக்தநெறியின் வழிகாட்டியாக்கிக் காப்பியம் ஒன்றைச் செய்தார். திருத்தொண்டர் புராணம் தனக்கென ஒருதனிவழியை வகுத்துக் கொண்ட கருப்பொருளிலும் புதுமை கொண்டதாக பக்திச் சுவை சொட்டும் காப்பியமாகத் திகழ்கிறது. மக்கள் இறைவனை வழிபடுவதும் பிறஉயிர்க்குத் தொண்டு செய்வதும் மனிதப் பிறவியின் தலையாய கடன் என்பதைச் சேக்கிழாரின் பக்தி நெறி உணர்த்துகிறது. 'தொண்டு என்ற பண்புதான் உலகைக் காக்கும் பேராற்றல் படைத்தது. தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமான திருத்தொண்டத்தொகை யின் அடிநாதத்தை நன்குணர்ந்த சேக்கிழார் தொண்டு என்ற பண்பின் வரலாறே பெரிய புராணமாக அமைய வேண்டுமென எண்ணி அதனைப் பாடினார். தொண்டு செய்யும் திருக் கூட்டத்தை சமூகத்தவருக்கப் பக்திநிலையில் நின்று அறிமுகம் செய்தார். பெரிய புராணம் காட்டும் தொண்டர்கள் அனைவருமே சமய அநுபத்தில் நன்கு திளைத்தவர்கள்.
சங்கப்பாடல் தொகுப்புக்களில் ஒன்றான பரிபாடல் உண்மையான வழிபாட்டு நெறியில் நிற்போரை அவர் வாய்மொழிமூலம் இனம் காட்டுகிறது.
"... யாம் இரப்பவை பொன்னும்பொருளும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினார்க் கடம்பின் ஒலிதாரோயே"
(பரிபாடல்:5:79:84)
-172 -

பிறருக்குத் தொண்டாற்ற விரும்பும் அடியார் இறைவனிடம் அருள், அன்பு, அறம் என்னும் முப்பெரும் பண்புகளையே வேண்டிநின்றனர்.
பிற சமயங்களின் செல்வாக்கினால் சைவநெறி குன்றிய
போது அதை மீண்டும் மக்கள் மனதிலே நிலைநாட்ட அன்பும் தொண்டும் தேவை. அதை வளர்க்க ஒரு புதிய பக்தி நெறியை உருவாக்க வேண்டும். எனவே அத்தகைய பக்தி நெறி வயப்பட்டோரின் வரலாற்றைச் சேக்கிழார் விரித்துப் பாட எண்ணினார். சேக்கிழாருக்கு முன்னே பக்திநெறி நிற்போரது பண்புகளைச் சில நூல்கள் குறிப்பிட்டுள்ளன.
"தனக்கென வாழப் பிறர்க்குரியாளன்"
(மணிமேகலை:573) "தனக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
(புறநானூறு:182)
சேக் கிழார் திருத் தொண்டர்த் தொகையில் கண்ட அடியார்களின் வரலாற்றினூடாக ஒரு புதிய பக்தி நெறியைக் காண்கிறார். அதற்கெனப் பெரியபுராணம் பாடுகிறார். தான் பெற்ற கல்வியின் ஆற்றலாலும் புலமைத்திறத்தாலும் அதைப் பெருங்காப்பியமாகப் பாடியுள்ளார். அவர் தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், திருமுறைப்பாடல்கள் என முன்னர்த் தோன்றிய நூல்களையெல்லாம் கற்றார். ஏட்டுவடிவிலே இருந்த செய்திகளைப் பக்திச் சுவை நனி சொட்டப்பாடினார். உயர்வு நவிற்சிக்கு அதிகம் இடம் கொடாமல் தெளிவாக விருத்தப்பாடல்களில் அடியார் வரலாற்றைப் பாடியுள்ளார். அடியார் வரலாற்றை அறிவதற்கேற்ற சூழலை அமைப்பதில் கைதேர்ந்தவர். பாடல்களின் சொல்லாட்சியில் தேவாரத் தொடர்களை எடுத்தாண்டுள்ளார். சுந்தரர் வரலாற்றைப் பாடுகையில்
-173 -

Page 92
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் முன்றில் ஒன்று காட்டுவாய் என்ன
(தடுத்தாட்கொண்ட:56:1-2) பக்தி நெறிக்கு இசை பக்கபலமாக நிற்கவேண்டும் என்பதைச்
சேக்கிழார் பலவாறு உணர்த்தியுள்ளார்.
அடியார் பக்திநிலையில் கொடை ஒரு தனித்துவமான குணஇயல்பாக சேக்கிழாரால் முன்வைக்கப்பட்டள்ளது. இயற்பகை நாயனார் தனது மனைவியையே கொடை செய்யும் மெய்யடியாராகவுள்ள்ார். கண்ணப்பர் தனது இரு கண் களையும் கொடையாக அளிக்கும் இயல்புடை யராகவுள்ளார். இத்தகைய கொடையுள்ளம் அன்புநெறியில் செல்வோரது சிறப்பான பண்பாகும். உலக இன்பங்களை விட மேலான மன நிறைவையும் மகிழ்வையும் பெறக் கொடையுள்ளம்தேவை. பக்தி நெறியில் விருந்தோம்பலும் கொடையும் முக்கிய செயற்பாடுகள் என்பதைச் சேக்கிழார் பல மெய்யடியார் வரலாறு மூலம் காட்டியுள்ளார். உண்மையான பக்தி நெறி நிற்போர் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பிறருக்குத் தொண்டு செய்வதை விட உயர்ந்த சமயம் வேறில்லை எனப் பாகவதம் கூறும். எல்லா உறவையும் மறந்துவிட்டு இறைவனுக்கும் தனக்குமிடையேயுள்ள உறவை மட்டும் அவாவி நிற்பதே உண்மையான பக்தியாகும். இத்தகையவர் களையே பக்தர், தொண்டர், அடியார், பாகவதர்
எனச்சிறப்பான பெயர் பெற்றவராகக் காண்கிறோம்.
சேக்கிழார் பாடிய பெரியபுராணம் மனிதர்களின் வாழ்வியலை நெறிப்படுத்தஒரு பக்தி நெறியைக் காட்டுகிறது. சாதாரணமான மக்களுடைய வாழ்க்கையில் பக்திநெறி எவ்வாறு இணைந்திருந்தது என்பதையும் அதனால் தனி மனிதனைவிடச் சமூகம் பெற்ற பயனையும் உணர்த்துகிறது.
-174 1ത്ത

மக்கள் நலம் பேணும் மந்திரியானசேக்கிழார் நாட்டு நலம் காக்கும் மன்னனுக்கு அறிவுரை கூறும் நிலையில் இருந்த போதுசமூகத்தில் மக்களிடையே பரவும்கீர்கேட்டைக் களைய வழியைத் தேடினார். தனக்கு முன்னோர் செய்த சமூகப்பணியின் பண்பை மீள் நோக்கினார். அப்போது வழிபாட்டு நெறியில் மக்களை ஒருங்கிணைக்கும் பக்தியே தேவை என்பதை உணர்ந்தார். எனவே அந்தப்பக்தி உணர்வை மக்களுக்கு ஊட்ட ஒரு காப்பியத்தை இயற்ற முடிவு செய்தார். அவருடைய மக்களை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு பெரியபுராணமாக திருத்தொண்டர் புராணமாக சைவக்காப்பியமாக எழுந்தது. சுந்தரரும் நம்பியாண்டார் நம்பியும் சுட்டிக்காட்டிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் மக்கள் பக்திநெறியில் செல்லமுனைவர் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. ஏனைய புறசமயங்களால் கவரப்பெற்ற மக்கள் மனதில் அடியார் வரலாற்றில் இணைந்திருந்த தொண்டுணர்வும் அன்பு நிலையும் பதியலாயிற்று. சைவசமயக் காப்பியமாக இலக்கிய உலகில் சிறப்பிக்கப்பட்டது. மக்களைத் தொண்டில் ஈடுபடுத்தவும் இறைவன் நினைப்பில் உறுதியாய் நிற்கவும் பெரியபுராணம் வழி கூறிற்று. சைவத்திருமுறைகளின் வகுப்பு நிலையில் பன்னிரண்டாவது திருமுறையாக வகுக்கப்பெற்றுள்ளது. சேக்கிழார் பாடிய தொண்டர்களில் அரை வாசிப்பேர் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள். சோழநாடு தமிழ் வளர்த்த நாடு. எனவே சேக்கிழாரின் பெரியபுராணம் தமிழ் மொழியை ஊடகமாகக் கொண்ட ஒரு பக்திநெறியைக் காட்டும் பெருங் காப்பியமாகவும் மதிக்கப்படுகின்றது. உலகத்து மக்கள் அனைவருமே வாழ்வியலூடாக பக்தி நெறி நின்று பயன்பெற வழிகாட்டிய பெருமை சேக்கிழாரையே சாரும். வள்ளுவர்
கூறிய
-175 -

Page 93
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற குறளின் தெளிபொருளாக சேக்கிழார் பெரியபுராணம் விளங்குகின்றது. எனவே சேக்கிழார் பாடிய பெரியபுராணம் தமிழ்மொழியால் உலகம் எலாம் பரப்பும் பக்தி நெறியாக சிறப்புற்றுத் திகழ்கிறது. தமிழரது பெரும் இலக்கியச் சொத்தாக வும் நிலைபெற்றுள்ளது.
=176 -

14.சேக்கிழாரின் காப்பியப்புனைவுத் திறன்
தமிழர் கதையைத் தமிழில் காப்பிமாகப் பாடிய சேக்கிழாரது காப்பியப்புனைவுத் திறன் தனித்துவமானது. அடியார்கள் வரலாற்றை காப்பியமாக அமைப்பதற்கு சேக்கிழாருக்குத் திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி ஒருவகையில் உந்து சக்தியாக விளங்கியது. சமண பெளத்தர் களின் வீறடக்கிய சைவத்தை மறுமலர்ச்சியுறச் செய்த 'பக்தி வீரம்" மக்கள் மனதை மாற்றியது. புலமை வழிநின்று நாயன்மார்கள் வரலாற்றைச் சேக்கிழார் பாட எண்ணியதற்கு முக்கிய காரணம் மக்கள் மனத்தைத்தெளிவிப்பதற்கேயாம். எனவே பெரியபுராணம் ஒன்றைப் பாடிமுடித்தார்.
இளங்கோ நெடும்பாட்டால் அமைத்த காரத்தை காப்பியப் புனைவுக்கு அடிப்படையாகக் கொள்ளாது புதிய வடிவத்தைக் கையாண்டார். விருத்தப் பாவால் அடியார் வரறாற்றை விரித்து விளக்கமாகப் பாடினார். எனினும் எடுத்துக் கொண்ட பொருள் முன்னைய அடியவர் பேசிய பொருளே என்பதைச் சேக்கிழார் முதலிலேயே கூறிவிடுகிறார். காப்பியத்தின் அமைப்பைத் திட்டமிட்டே செய்துள்ளார். முதலிலே பாயிரம் அமைந்துள்ளது. அது நான்கு பகுதிகளாகப் பாடப்பட்டுள்ளது. வாழ்த்து, திருக்கூட்டம், அவையடக்கம், நூற் பெயரென அவை பெயர் பெற்றுள்ளன. 1. வாழ்த்து 3 பாடல்கள் கொண்டமைந்தது. முதற்பாடல் சிவன் ஆற்றலும் வடிவும், இயல்பும் கூறிவாழ்த்துகிறது. உலகத்தோர் உய்ய வேண்டும் என்ற இலக்கில்
முதலாவது பாடல் 2) Gao (O) J5 Ga) TLD ...... என்று
தொடங்குவது தனிச்சிறப்பு. கம்பன் பாடிய இராமன்
=177 ജ്ഞ

Page 94
கதையும் "உலகம்யாவையும்."
முன்னிறுத்தியே தொடங்குகிறது. "உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலிவேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
என உலகத்தை
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்."
(பெரியபுராணம்) "உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே"
(கம்பராமாயணம்) சேக்கிழார் இரண்டாவது வாழ்த்துப் பாடலில் தில்லையில் நடனஞ்செய்யும் சிவன் தாள் தொழுவதால் அடையும் பயனைக் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பாடல் காவியம்இனிதே பாடி முடிக்க கணபதியின் அருள் வேண்டுகிறது. தில்லையம் பலத்திலே ஆடும் இறைவன் மகனை வேண்டும் மரபு பேணப்படுகிறது.
2. திருக்கூட்டம்: இறைவன் வணங்கும் அடியாரை வழிபடும் ஒரு
புதிய மரபு இங்கே விளக்கப்படுகிறது. "மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப் பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கிவெல்கவே"
(பாயிரம்:4) இங்கு கேக்கிழார் குறிப்பிடும் "புனிதர்பேரவை" ஒரு ஆழமான சொற்றொடராகும். அடியார் கூட்டமாக இயங்குவது மட்டுமல்ல, ஒரு போராட்ட வாழ்வும் உண்டென்பதையும்
அதன் மூலம் விளக்கியுள்ளார். சேக்கிழாரின் நிர்வாகப்
-1.78 -

பணியின் குணநிலைக்கேற்ப இப்புதிய சொல்லை ஆக்கியுள் ளார். மனித நிலையில் புலன்களோடு போராடி இறைவனை அடைய ஒரு தொண்டர்படை இயங்கியதைக் காப்பியம்
முழுவதும் விளக்கியுள்ளார்.
3. அவையடக்கம்: இப்பகுதியில் தன்னுடைய முயற்சியைத் தெளிவாகக் கூறுகிறார். 5 பாடல்களில் அவையடக்கம் கூறப்படுள்ளது.
"அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரிதாயினும்
அளவிலாசை துரப்ப அறைகுவேன்"
(பாயிரம்:5)
பெருமைக்குரிய அடியவர்களது வரலாற்றைப் பாடுவதற்கச் சேக்கிழார் பெருமுயற்சி மேற்கொண்டுள்ளார். தன் மொழி யாற்றலின் துணை கொண்டு பாடும் வல்லமையை உணர்த்தி நிற்கிறார். அறைதல், புகல்தல், உரைத்தல், கூறுதல், செப்புதல் எனப் பல்வேறு வகையாக உணர்த்தியுள்ளமை சிறப்பானது.
நூற்பெயர்: இத்தகைய அரிய காப்பியத்துக்கு அவரிட்ட பெயரையும் அழகாகப் பாடலிலே பொறித் துள்ளார். "இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்துநின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்குகின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்
(பாயிரம்10) சேக்கிழார் காலத்தில் மக்கள் புறசமயத்தின் பாற் சென்றிருந் தமையால் சைவம் நிலை குன்றிருந்தது. எனவே அத்தகைய மக்களின் அறியாமையை நீக்க, மக்களை நேர்வழியில்
-179

Page 95
நெறிப்படுத்த ஒரு மக்கள் காப்பியத்தைப் புனைந்துள்ளார். அதனால் அதன்பெயரையும் திருத்தொண்டர் புராணம் எனப்
புதுமையாக வைத்துள்ளார்.
நூலின் அமைப்புநிலை:
சேக்கிழாரின் காப்பியப் புனைவு உட்பகுப்பு நிலையில் காண்டம் எனப்பெரும் பிரிவாகவும் சருக்கம் எனச் சிறு பிரிவாகவும் அமைந்துள்ளது. அது வருமாறு.
1. முதற் காண்டம்
1. திருமலைச் சருக்கம் 2. தில்லை வாழந்தணர் சருக்கம் 3.இலை மலிந்த சருக்கம் 4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
5. திருநின்ற சருக்கம்.
2. இரண்டாம் காண்டம்
6. வம்பறா வண்டுச் சருக்கம் 7. வார் கொண்ட வனமுலையாள் சருக்கம் 8.பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் 9. கறைக்கண்டன் சருக்கம் 10. கடல் சூழ்ந்த சருக்கம் 11. பக்தராய்ப்பணிவார் சருக்கம் 12. மன்னிய சீர்ச்சருக்கம் 13.வெள்ளானைச் சருக்கம் பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடுபொருளாகக் கொண்டது உளவீரமாகும். உடல் வீரம் விடுத்து உளவீரம் பெருக்க வழிசொல்கிறார். திருத்தொண்டத்தொகைப் பாடல்களின் அடிப்படையிலேயே தமது காப்பியத்தின் சருக்கப்பிரிவையும் அமைத்துள்ளார். சுந்தரது பாடல்களின் அடிகளையே
சருக்கப்பெயர்களாக ஆக்கியுள்ளார். சேக்கிழாருடைய
un 80 =

காப்பியப் புனைவுத்திறனை ck சுப்பிரமணிய முதலியார் வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெரிய புராணத்தைத் தனித்தனி பற்பல சரிதங்கள் கோத்தகோவை என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு பெரியபுராணமானது தொடர்நிலைச் செய்யுளாய் ஒரு பழஞ் சரிதத்தைச் சொல்வதாய் ஒருபெரிய கற்பனையை எடுத்துக் காட்டுவதாயுள்ள ஒரு பெருங் காவியமேயாகும். (சேக்கிழார்.பக்34)
சேக்கிழார் வரலாற்றுக்குறிப்பைத் தந்த சுந்தரரது வரலாற்றையே தடுத்தாட் கொண்ட புராணம் என முதலில் அமைத்துக் காப்பியத்தைப் பாடினார். சுந்தரரே பாட்டுடைத் தலைவராக பரவையாரும் சங்கிலியாரும் தலைவியர் களாகின் றனர். சோழ நாடும் திருவாரூரும் இப் பெருங்காப்பியத்தின் நாடும் நகரமுமாயமைந்தன. சிவபக்தி, அடியார் பக்தி என்ற இருவகையான அன்பே காப்பியத்தின் உள்ளுறையாகிய
கற்பனையாகும்.
காப்பியத்துள் நடமாடும் அடியார் தொகையைச் சேக்கிழார் 63 ஆக வரையறை செய்துள்ளார். இதற்கு அவரது காப்பியத்துக்குத் தகவல் தந்த முதல் நூல்கள் காரணமாகலாம். எனினும் அவர் பாடிய அடியார்கள் பல்வேறு சமூக நிலையில் வாழ்ந்தவராவார். அவர்களை அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்திக் காட்டுவதாயின் பின்வருமாறு அமையும்.
அடியார் பெயர் குலம் நாடு ஊர் வழிபாடு 1 அதிபத்தர் நுளையர் I சோ. நாகபட்டினம் லி, 2. அப்பூதியடிகள் அந்தணர் சோ, திங்களுர் கு. 3. அமர்நீதியார் 616figពុំ சோ. பழையாறை 凸F, 4. அரிவாட்டாயர் வேளாளர் சோ. கணமங்கலம் გენს. 5. ஆயனார் இடையர் மழ மங்கலலூர்

Page 96
அடியார் பெயர் | குலம் நாடு 2) οπή வழிபாடு 6. இசைஞானியார் ஆதிசைவர் நடு திருவாவலூர் 7 இடங்கழியார் அரசர் கோ. கொடும்பாளுர் 3. இயற்பகையார் 66 சோ. காவிரிப்பூம்பட்டினம் ச. 9. இளையான்
குடிமாறர் (366 TGT, - இளையான்குடி 10 உருத்திர பசுபதியார் அந்தணர் சோ. திருத்தலையூர் 66). 11 எறிபத்தர் தெரியாது சோ. கருவூர் லி. 12 ஏயர்கோன் கலிக்காபர் வேளாளர் சோ. திருப்பெருமங்கலம் லி. 13. ஏனாதி நாதர் சான்றார் சோ. எயினனூர் 巴F。 14 ஐயடிகள்காடவர்கோன் அரசர் தொ. காஞ்சீபுரம் ග6]. 15 கணநாதர் அந்தணர் சோ. சீர்காழி @· தெரியாது - இருக்குவேளுர் 66). 17 கண்னப்பர் (36) 1Lfr தொ. உடுப்பூர் 66). 18 கலிகம்பர் வணிகர் நடு திருப்பெண்ணாகம் ச. 19 கலியர் செக்கார் தொ. திருவெற்றியூர் 66). 2O கழறிற்றறிவார் |- மலை. கொடுங்கோளுர் லி 21 கழற்சிங்கர் அரசர் - - 6. 22 í g,fTrfu fTír தெரியாது சோ. திருக்கடவூர் ଗୋଧି. 231 காரைக்காலம்மையார் வணிகர் சோ. காரைக்கால் 凸F。 24| குங்கிலியக்கலையர் அந்தணர் I சோ. திருக்கடவூர் 66). 25 குலச்சிறையார் தெரியாது பா. மணமேற்குடி (95. 26 கூற்றுவர் அரசர் - களந்தை Gტს. 27 கோச்செங்கட்சோழர் அரசர் சோ. - 65). 28 கோட்புலியார் வேளாளர் சோ. நாட்டியத்தான்குடி லி. 29 F6)_u GTរាំ ஆதிசைவர் நடு. திருவாவலூர் 66). 30 சண்டேசுரர் அந்தணர் சோ. சேய்ஞலூர் 65. 31 சத்தியார் வேளாளர் I சோ. வரிஞ்சியூர் 母、
1321 சாக்கியர் (36), GITT6Tfr | - திருச்சங்க மங்கை 6 ტ).
33 சிறப்புலியார் அந்தணர் சோ. திரு ஆக்கூர் 65). 34|சிறுத்தொண்டர் மாமாத்திரர் சோ. செங்கட்டாங்குடி ச. 35 சுந்தரர் ஆதிசைவர் நடு திருநாவலூர் · 36 செருத்துணையார் வேளாளர் சோ. தஞ்சாவூர் । ରା. 37 சோமாசிமாறர் அந்தணர் சோ. திருவம்பர் கு. 38 தண்டியடிகள் தெரியாது சோ. திருவாரூர் 65).
മ്മ 182 =

391 திருக்குறிப்புத் தொண்டர் ஏகாலியர் தொ. காஞ்சிபுரம் . 40 திருஞானசம்பந்தர் அந்தணர் சோ. சீகாழி கு. 41 திருநாவுக்கரசர் வேளாளர் நடு. திருவாமூர் கு. 42. திருநாளைப்போவார் | புலையர் சோ. ஆதனூர் 66). 43 திருநீலகண்டர் குயவர் சோ. சிதம்பரம் 巴F。 44 திருநீலகண்ட
யாழ்ப்பாணர் L J FITGooT fi நடு எருக்கத்தம்புலி கு. 45 திருநீல நக்கர் அந்தணர் சோ. சாத்மங்கை G5). 46. திருமூலர் இடையர் I சோ. சாத்தனூர் கு. 47 நமிநந்தியடிகள் அந்தணர் சோ. ஏமப்பேறுார் 65). 48 நரசிங்க முனையர் I அரசர் நடு. ܚ ܝ 乐。 49 நின்றசீர் நெடுமாறர் அரசர் LITT. மதுரை கு. 50 நேசர் சாலியர் - 35 TLD ‘’GÚS 巴汗。 51 புகழ்ச் சோழர் அரசர் சோ. உறையூர் 乐。 52 புகழ்த்துணையார் 1 ஆதிசைவர் - செருவிலிபுத்தூர் 53| UgGorTři அந்தணர் தொ. திருநின்றவூர் 66. 54 பெருமிழலைக்குறும்பர் தெரியாது - பெருமிழலை கு. 55 மங்கையர்க்கரசியார் அரசர் Lsl. மதுரை @· 56 மானக்கஞ்சாறர் வேளாளர் 1 - 57 முருகர் அந்தணர் சோ. 58 முனையடுவார் C3@GTTOT C3gT. 59) மூர்க்கர் 3616TTT | @gT. 60 மூர்த்தி வணிகர் F. 61| மெய்ப்பொருளாளர் அரசர் நடு. 62 வாயிலார் வேளாளர் தொ. 63 விறன்மிண்டர் (36) 16ITITGTiff || 0605) Ga)
குறிப்பு கோ - கோனாடு, சோ - சோழநாடு தொ- தொண்டை நாடு, நடு - நடுநாடு, பா - பாண்டி நாடு, மலை - மலைநாடு, மழ -மழநாடு வழிபாடு கு- குருவழிபாடு லி- இலிங்கவழிபாடு, ச- சங்கம
(அடியார்) வழிபாடு இவ்வடியார்களில் சேக்கிழார், இசைஞானியார், காரைக் காலம்மையார், மங்கையர்க்கரசியார் என 3 பெண்ணடி
யார்களையும் இணைத்திருப்பது குறிப்பிடு தற்குரியது.
=183 =

Page 97
பொய்யடிமை இல்லாத புலவர்களையும் பக்தராய்ப் பணிவோரையும், பரமனையே பாடுவோரையும் சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்களையும் சேக்கிழார் மக்களிடையே கண்டார். அவர்களை மக்களுக்கும் எதிர்காலத் தலை முறையினருக்கும் பெரியபுராணம் பாடி அறிமுகம் செய்ய விழைந்தார்.
பெரியபுராணம் என்னும் காப்பியப் புனைவில் அதன்பயன் உச்சமாக இருக்கவேண்டுமென்பதே சேக்கிழாரது இலக்காயிருந்தது. சமூக நிலைப்பாட்டில் தெளிவற்று இருந்த விடயங்களைத் தெளிவு செய்யும் சமயப்பயிற்சிக் களமாகவும் பெரிய புராணம் திகழவேண்டுமெனவும் எண்ணினார். அதனால் அதற்குத் தேவையான விளக்கச் செய்திகளையும் தகவல் களையும் ஏற்ற இடத்தில் ஏற்றவாறு இணைத்துக் கொண்டார். மக்கள் வாழ்வியல் பற்றிய நடைமுறைகளையும் நம்பிக்கை களையும் விளக்கியுள்ளார். அக்கால அரசியல் மரபு பற்றிய செய்திகளையும் விரிவாகவே காட்டியுள்ளார். மனித வாழ்வியலில் ஏற்படும் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் சுட்டிக் காட்டி அவற்றைத் தீர்க்கப் பக்தி நெறியான வாழ்வியல் நடைமுறையே சிறந்ததெனக் கூறிச் சென்றுள்ளார். காப்பியப் புனைவில் உள்ளடக்கிய செய்திகளை வருமாறு தொகுத்துக்
காட்டலாம்.
1. அரசியல் நடைமுறைகள் தொடர்பானவை:
1. அரசியலும் அமைச்சும் குடிமையும் அரசமரபுகளின் சிலவழக்கங்கள் தமிழ் அரசர் முடிசூட்டு அரச அங்கங்கள் அமைச்சு
அமைச்சர் பண்புநலன்கள்
பண்டைத்தமிழர் நீதிமுறை
മ്മ 184 -ത്ത

7. அரச அடையாளங்கள் 8. அரசாங்கக் காவல் முறை 9. ஆயுதச் சட்டம் 10. அமைச்சர் கடமைகள் 11 சிற்றரசர்களை அடக்கல் 12 குடிகட்டுத் தீங்கு வராமல் காத்தல் 13. தீங்கு செய்தாரைத் தண்டித்தல் 14. சிறை செய்து விசாரணைக்குக் கொண்டு வருதல் 15. சமயப்பாதுகாப்புமுறை. 16. உண்ணாவிரதம் 17. குடிகளின் தீங்குக்கு அரசாட்சியே பொறுப்பு 18. எல்லா உயிர்களுக்கும் காவலன் அரசன் 19. பிறபிராணிகளின் பேச்சறியும் ஆற்றல் 20. போர்முறை 21. வேளாளரும் போர்த்தொழிலும் 22. தமிழர் நீதிமுறை 23. ஆராய்ச்சி மணி 24. வாய்மொழி வாக்குமூலம் 25. மூவகைச் சாட்சியம் 26. வழக்குகளின் வகை, தீர்ப்புமுறை 27. ஊர் நீதிமன்றங்கள் 28. வாக்குமூலம், விசாரிக்குமிடம் 29.ஒப்புதலின் பேரில் தீர்ப்பும் பிரமாணம் செய்யச்
செய்தலும் 30. சிறுவர் செய்யும் குற்றத் தீர்வு
2. இல்வாழ்க்கை நடைமுறைகள் தொடர்பானவை:
1. பெண் பேசல்
2. குலம்,குணம் பேசல் 3. விவாக வயது
ـــــــــــــــ=185ــــــــ

Page 98
4. மணவோலை-நாள்வகுத்தல் 5. மணச்சடங்கு-முளைசாத்துதல், மணஎழுச்சி 6. மணப்பந்தர் - நீள்வார்த்துக் கொடுத்தல் 7. மணஇசைவு - சடங்கு 8. உடன் கட்டை ஏறல், கைம்மை நோற்றல் 9.மணமகனையே மகனாகக் கொள்ளல் (மருமகன்) 10இல்வாழ்க்கையில் பெண்களுரிமைகள்
இளையான் குடிமாறன் மனைவி, குங்கிலியக் கலையர் மனைவி, திருவெண்காட்டுநங்கை 11. கணவன் வழிநிற்றலே கற்பின்திறம் 12. பிள்ளைகளுக்கு வழிபடு கடவுளின் பெயரிடல் மரபு 13 விருந்தினரையும் அடியாரையும் வரவேற்று உபசரித்தல்
மனைவியின் கடமை 14. சமூகநிலையில் பெண்கொள் மரபு மேற்குலத்தில்
கீழ்க்குலம் பெண்கொளல் 15. சாதியும் உடனுண்டலும், தீண்டாமை 16. ஆண்மக்கள் விளையாட்டு 17. பெண்மக்கள் விளையாட்டு 18. யாழும், குழலும், இசைமரபு 19. கூத்து 20. மருத்துவம் தீர்க்கும் பணி சேக் கிழார் அமைச்சராகப் பணி செய்த பட்டறிவு பெற்றிருந்தமையால் தமது காப்பியத்தில் மேற்காட்டிய விடயங்களைப் பொருத்தமுற இணைக்கும் ஆற்றலைப் பெற்றாரெனலாம். நாட்டின் அமைப்புக்களையும் விரிவாகக் காட்டியிருப்பது இக்கருத்துக்கு மேலும் சான்று பகர்கின்றது. திருநாவுக்கரசர் திருக்காளத்தியிலிருந்து திருக்கைலாயத்துச் சென்றபோதும் திருமூல தேவர் திருக்கைலாயத்திலிருந்து பூவுலகிற்குச் சென்றபோதும் சேக்கிழார் காட்டும் வழி நடைப்
= 186-س-

பயணம் அவருடைய பட்டறிவு நிலையைத் தெளிவாய் உணர்த்தி நிற்கிறது.
காப்பியத்தலைவரான சுந்தரர் வரலாறு வெள்ளையானைச் சருக்கத்தில் மீண்டும் அவர் கயிலைக்கு வெள்ளையானையில் செல்லும் வரலாற்றோடு நிறைவு பெறுகின்றது. ஆனால் உட்கிடையாக அமைந்த ஏனைய அடியார் வரலாறுகளும் அறம், பொருள், இன்பம் வீடு என்ற நாற்பொளையும் விளக்கி நிறைவு பெறுகின்றன. மரபான அறிவுககுட்பட்ட பக்தி நிலையையும் புெருவில் அன்பு நிலையையும் காட்டுவதற்காக கண்ணப்பர் வரலாறு பெரியபுராணக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. சிவகோசரியாரும கண்ணப்படும் வெவ்வேறு சமூகச்சூழலிருந்து வந்தவர்கள். அவர்களில் யாருடைய பக்தி மேலானது என்பதை இறைவனே நேரில் தோன்றிக் கூறியதாகச் சேக்கிழார் புனைவு செய்திருப்பது அவருடைய புலமைக்குச் சான்றாயுள்ளது. வாழும் சூழலும் முன்னோர் மரபும் கற்றுத் தராத ஒரு வன்பக்தி நிலையைச் சேக்கிழார் கண்ணப்பநாயனார் புராணத்தில் காட்டி, சைவத்தின் பேணலுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமையை விளக்கியுள்ளார். இதன் மூலம் தனது காப்பியத்தின் மேலான இலக்கையும் நிறைவேற்றியுள்ளார்.
"அறம், பொருள், இன்பம், வீடு, அடைதல் நூற்பயனே" என்ற மூத்தோர் வகுத்துள்ள முறைமையைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் ஒரு பெருங்காப்பிய வடிவாக அமைத்துக் காட்டியுள்ளார். அன்பு நிறைந்த இடத்தில் இறைவன் இருப்பதை யாவரும் அறியவைத்துள்ளார். அவருடைய இலக்கியப் புலமைத் திறனை நன்கு பயன்படுத்திப் புதிய காப்பிய மரபுகளையும் ஆக்கிப் பெரிய புராணத்தை இயற்றியுள்ளார். பிற்காலத்தில் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிறமதங்களும் தம்பக்திநெறியைப் பரப்பச் சேக்கிழாரைப்
-187 -

Page 99
பின்பற்றிக் காப்பியவடிவில் புராணங்கள் இயற்றுவதற்கும் சேக்கிழாருடைய காப்பியப்புனைவுத்திறன் ஒரு வழிகாட்டி யாக நின்று உதவியுள்ளது. என்பதில் ஐயமில்லை. உலக உய்ய ஒருபுராணம் பாடிய சேக்கிழாரை உலகு தழுவி நிற்பதும் உண்மையே. எனவே சேக்கிழாரும் உலகெலாம் உணர்ந்து ஒதும் சிறப்புப் பெற்று விளங்குகின்றார். எனலாம்.
HI88 He

15.பொருவில் அன்புருவம்
திருத்தொண்டர்புராணத்தில் முதலாவது காண்டத் திலே அமைந்துள்ள இலைமலிந்த சருக்கத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் அமைந்துள்ளது. தமிழர் அன்புநெறியை விளக்கவே சேக்கிழார் இப்புராணத்தைப் பாடினார் எனலாம். இறைவன் மீது அன்பு பூண்டு ஒழுகும் மரபான இறையடி யார்கள் வரிசையில் கண்ணப்பர் இடம் பெறுவதற்கு அவரு 6ծ) Լ-ն l புெருவில் அன்பே காரணமாயிற்று. திருத்தொண்டர்தம் வரலாற்றுபபாட வந்த சேக்கிழாரும் கண்ணப்பர் வரலாற்றைத் தனித்துவமானதொரு நிலையாகவே காட்டியுள்ளார். 'பக்தி எனும் உணர்வு 11 வழிகளில் வெளிப்படுமென நாரதபக்தி சூத்திரம், சாண்டில்ய பக்தி சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கியுள்ளன. அக்குணவியல்பு வருமாறு கூறப்பட்டுள்ளது.
1. தற்புகழ்ச்சியின்மை 12. பிறர்செய் தீமையைச்
சகித்தல்
2. எளிமை 13. நேர்மையுடைமை
3. அகங்காரமின்மை 14. துணிவுடைமை
4. பிறருக்குத் தீங்கு செய்யாமை 15. அளவான பாலுணர்ச்சி
5. அச்சமின்மை 16. பிறரை வெல்லாமை
6. உண்மையுடைமை 17. பொருட்பற்றின்மை
7. சினமின்மை 18. உடல், மனத்துரய்மை
8. அனைவரிடமும் 19. துறவு மனப்பான்மை
அன்புடைமை
9. உயிர்களிடத்து 20. வள்ளன்மை
இரக்கமுடைமை
10.யாரிடத்தும் பகைமை 21. சகிப்புத்தன்மை
பாராட்டாமை
11. ஆசையின்மை 22. போதுமென்றமனமுடைமை
-1.89 m.

Page 100
23. நடுவுநிலைமையுடைமை 26. பகை என எதையும்
கருதாமை 24.துன்பம், இன்பம், 27. உலக பந்தங்களில் இரண்டிலும் பேதுறாமை கட்டுண்ணாமை 25. புகழ், இகழ், இரண் 28. சாவு, வாழ்வு என்பவற் டையும் ஒன்றாகக்கருதல் றைக் கண்டு மனம்
நடுங்காமை.
இத்தனை குணங்களையும் உடைய ஒருவனே இறைவனின் மீது அன்பு கொண்ட உண்மைப் பக்தனாக இருக்கமுடியுமென்ற கருத்தையே இது காட்டுகிறது. ஆனால் சேக்கிழார் இப்பண்பு களையெல்லாம் கொண்டநிலைக்கு ஒருவன் எப்படி வரமுடி யும் என்பதைக் கண்ணப்பரின் வரலாற்றின் மூலம் காட்டுகிறார் பக்திவழிநின்று உயர்நிலையடையும் பக்குவத்தைக் கண்ணப்பர் தன்னியல்பான வாழ்வியலூடாகவே பெறுகின்றார். சாதாரண வேட்டுவ குலத்திலே பிறந்து அதன் மரபான வாழ்வியல் நடைமுறைகளுடாக வளர்ந்த திண்ணனார் கண்ணப்பராக உணர்வு பெற்ற காலம் மிகக்குறுகியதாகும். திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் திண்ணனாருடைய வாழ்வியல் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் 'கண்ணப்பநாயனார் புராணமாகப் பாடும்போது திட்டமிட்டே பாடியுள்ளார். காப்பியத்துள் ஒரு முக்கியமான வரலாறு அது. சேக்கிழார் மக்களுக்குப் போதிக்க வந்த அன்புநெறியை விளக்கும் கதையும் அதுவே. 186 விருத்தப்பாக்களின் உள்ளடக்கமாக அமைந்த கண்ணப்பநாயனார் புராணத்தின் கட்டமைப்பு அதன் நோக்கிற்கு ஏற்றதாயுள்ளது. காப்பியத்துள் ஒரு சிறு காப்பியம் போலத்தனிச்சிறப்புடன் பாடப்பட்டுள்ளது.
பொத்தப்பி நாட்டிலே உடுப்பூரிலே வேட்டுவச்சூழலில் திண்ணனாரின் வரலாற்றைச் சேக்கிழார் தொடங்குகிறார்.
பொத்தப்பி நாட்டு வளமும், யானைக் கோட்டினால்
-190 -

வன்தொடர்வேலி அமைத்துக் காவல் 'நிறைந்த உடுப்பூரும் தலைவனின் பிறப்பிடச் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளன. வேட்டுவ வாழ்வு பற்றிச் சேக்கிழார் தரும் செய்திகள் அவருடைய இலக்கிய ஆளுமையைக் காட்டுகின்றன. சிறந்த சொல்லோவியங்களாகத் திகழ்கின்றன. குன்றிலே வாழ்பவர் வாழ்வியல் வேறுபட்டது. அதனைப் பின்வரும் இரு சொல்லோவியங்களும் காட்டுகின்றன.
"குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவிஞமலியார்த்த வன்றிரள் விழவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்குங் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்"
(க.புராணம்3)
"வன்புலிக் குருளையோடும் வயக்கரிக் கன்றினோடும் புன்றலைச் சிறுமகார்கள் புரிந்துடன் ஆடலன்றி அன்புறு காதல்கூர அணையும் மான்பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்"
(க.புராணம்:4) வேட்டுவர் வாழ்விடங்களைப் பற்றியும், அவர் வாழ்க்கையோடு இணைந்த விலங்குகளைப் பற்றியும் சேக்கிழார் வரைந்து காட்டுகிறார். ஞமலி, பன்றி, புலி, எண்கு, மான் என்னும் விலங்கு கள் முற்றத்திலே காணப்படுகின்றன. அத்துடன் ஐவனம் என்னும் மலைநெல்லும் உணங்குவதற்காக முற்றத்திலே போடப்பட்டிருக்கிறது என்று சுட்டுவதன் மூலம் வேட்டுவரது உணவுப்பழக்கத்தையும் அறிவிக்கின்றார். வேட்டுவச் சிறாரின் விளையாட்டுத் தோழர்களாக புலிக்குருளையும், கரிக்கன்றுமே சொல்லப்பட்டுள்ளன. இங்கு சேக்கிழாரின் மொழியாற்றலும் பேணுகையும் தென்படுவது குறிப்பிடத்தக்கது. புலியின் குருளை, கரிக்கன்று என்னுந்தொடர்களில் மரபான பிள்ளைப்
பெயர்களை மறவாது பயன்படுத்துகிறார். தற்போது மரபான
H191 m.

Page 101
பிள்ளைப் பெயர்களின் பயன்பாடு அருகிவிட்டது. 'குட்டி என்ற சொற்பயன்பாடே வழக்கமாகிவிட்டது. விளையாட்டு நிலையில் ஆண்மகவிற்கும் பெண்மகவிற்கும் வேறுபட்ட விலங்கினத்தைக் குறிப்பிட்டுள்ளார். வேட்டுவர் குலத் தலைவனின் வாழ்வியலுக்கூடாக பிற பழக்கவழக்கங்களும் கூறப்பட்டுள்ளன. அச்சமும் அருளும் இல்லாதவர்களாக நறவும் ஊனின் புழுக்கலும் உண்ணும் பழக்கம் உடைய வேடர் தலைவனுக்கு பிள்ளையில்லாத குறையால் முருகனை வழிபடும் முறைமை கூறப்படுகிறது. முருகனுக்கு ஒவ்வொரு நாளும் பரவுக்கடன் செய்து வழிபட்டதைக் கூறுகின்றார்.
"வாரணச்சேவலோரும் வரிமயிற்குலங்கள் விட்டுத் தோரணமணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப் போரணி நெடுவேலாற்குக் புகழ்புரி குரவை தூங்கப் பேரணங்காடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை"
(க.புராணம்.11) வழிபாட்டு நடைமுறையின் செயற்பாடுகளைச் சேக்கிழார் காட்டும் போது அதனுாடே ஒரு செய்தியைச் சொல்ல விரும்பியுள்ளார். பிள்ளைப் பேற்றிற்காக முருகனைச் சிறப்பாக வழிபடும் மரபு இன்றுவரை மக்களிடையே நிலவி வருகிறது. இவ்வழிபாட்டு மரபு தமிழர் வழிபாட்டு மரபாகத் தனித்துவமுடையதாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த வழி பாட்டின் பயனாக திண்ணனார் பிறக்கின்றார். எனவே வணங்கும் தெய்வத்தின் அருள்மீது அசையாத நம்பிக்கை கொண்ட பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்து அன்பான வளர்ப்பு நிலையால் சிறப்புப் பெறுகிறார். அவன் பிறப்பு பெருவிழாவாக எடுக்கப்பட்டபோது.
"கருவரை காளமேகம் ஏந்தியதென்னத்தாதை பொருவரைத் தோள்களாரப் புதல்வனை
எடுத்துக்கொண்டான்"
(க.புராணம்:15)
-192 -

எனச் சேக்கிழார் காட்சிப்படுத்தியுள்ளார். 'கருங்கதிர் விரிக்கும் மேனியுடைய காமரு குழவி எனக் காட்டுகிறார். தவமிருந்து வழிபட்டுப் பெற்ற புதல்வன் என்பதால் தந்தையும் குலவி மகிழ்கிறான். பெயரிடும் போதும் குழந்தையின் திண்மை கண்டு திண்ணனார் எனப் பெயர் சூட்டுகின்றனர். அவ்வேளையில் சேக்கிழார் குழந்தை பறறிய சிறப்புச் செய்தி ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.
"புண்ணியம் பொருளாயுள்ள
பொருவில் சீர் உருவினானை"
(க.புராணம்:17) திண்ணனார் வேறுபட்ட தோற்றம் பின்னர் அவருடைய அன்புநெறியை அறிய உதவுகிறது. சாதாரண வேடர் குழந்தையென்று சேக்கிழார் திண்ணனாரைக் கூறாமல் அவருடைய தனித்துவத்தை உருவத்தோற்றத்திலேயே முன்ன தாகக் காட்டிவிடுகிறார். திண்ணனாருடைய வளர்ச்சியை படிமுறையில் எடுத்து இயம்பியுள்ளார். கடவுட் காப்பு மரபினைப் பேணிப் பெற்றோர் குழந்தையை வளர்க்கின்றனர். தம்முடைய முன்னோர் முறைமைகளைப் பேணி குழந்தைக்கு "விரையிளந்தளிருஞ் சூட்டிவேம்பிழைத்திடையே கோத்த அரைமணிக்கவடிகட்டி அழகுற வளர்க்கு நாளில்"
(க.புராணம்:18)
பருவந்தோறும் தெய்வத்திற்குப் பெருமடை கொடுக்கின்றனர். வேடர்களுக்கு விருந்து அளிக்கின்றனர். குழந்தைக்குச் சிறப்பாக புலியுகிர்ச்சுட்டி, எயிற்றுத்தாலி, காசொடு தொடுத்த காப்பு, கலன்புனை அரைஞாண் என்பவற்றை அணிவித்து மகிழ்கின்றனர். மழலை பேசி எல்லோரையும் மகிழ்விக்கும் திண்ணனார் சிறுவரோடு சேர்ந்து குறுநடைக் குறும்புகள் செய்து வளர்கிறார். 5 வயது வரை அவருடைய செயற்பாடுகள் கூறப்பட்டு அடுத்த பருவமான சிலைபயில் பருவம் சிறப்பாக
விளக்கப்பட்டுள்ளது. அது ஒரு சடங்காகவே நடைபெறு
Hi83 H

Page 102
கின்றது. முதியவர் கூடி நாட்குறித்து, மறவர்க்கு அழைப்பு விடுத்து, சுற்றத்தவர் போற்ற பராயக்கடன் பல செய்து வில்விழா எடுக்கப்படுகிறது. திண்ணனாரிடம் சிலையினைக் கையளித்து திண்புலி நரம்பிற் செய்த நலமிகு காப்பும் கையில் கட்டப்படுகிறது. இச்செய்தி மூலம் வேடரின் பக்தி நெறி ஒன்று சடங்கு நிலையாகப் பேணப்பட்டதைச் சேக்கிழார் காட்டு கிறார்.
வேடர்கள் விழாக்காலத்தில் உண்கின்ற சிறப்பான உணவு வகைகளை இங்கு சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.
1.ஐவன அடிசில் 6. செந்தினை இடியும் தேனும்
2. புன்பாற் சொன்றி 7. தேனில் தோய்த்த வெந்த ஊன்
3.தினை மென் சோறு 8. விளங்கனிக் கவளம்
4. மூங்கில் வன்பதங்கள் 9.ஈயல் உண்டி
5. ஊன் கிழங்கு 10. பல்நறவு இவற்றை உண்ணும் திறத்தினை வேறுபட்ட சொற்களால் கூர்மையாக விளக்கிக் காட்டியுள்ளார். அருந்துதல், அயில்தல், கொள்தல், மிசைதல், ஆர்தல், மாந்தல் எனச் சேக்கிழார் பயன்படுத்திய சொற்கள் அவருடைய புலமைத்திறனைக் காட்டுகின்றன. இவ்விழாவின் ஏழாம் நாள் திண்ணனார் வில் பிடித்துப் பயிற்சியைத் தொடங்குகிறார். இக்கால அளவு முக்கியமானதொன்றாகும்.
அடுத்து திண்ணனார் பதினாறு வயது நிறையத் தந்தை மூப்பு எய்தியதால் வேடர் தலைவனாகப் பொறுப்பேற்கிறார். அவ்வேளையிலும் அவருடைய 'கன்னிவேட்டை நடை முறையைச் சேக்கிழார் விளக்கியுள்ளார். அதற்குரிய 'காடுபவி மகிழ்வூட்டல்' நடைபெறுகின்றது. தலைமரபின் வழிவந்த தேவராட்டி அழைக்கப்படுகின்றாள். அவளுடைய தோற்றத் தைச் சேக்கிழார் வருமாறு காட்சிப்படுத்தியுள்ளார்.
H194 m.

"கானில் வரித்தளிர் துதைந்த கண்ணிசூடிகலைமருப்பின்
அரிந்த குழைகாதிற்பெய்து மானின் வயிற்று அரிதாரத்திலகம் இட்டு மயிற்கழுத்து
மனவு மணிவடமும் பூண்டு தானிழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தலைப்பீலி
மரவுரிமேல் சார எய்திப் பூநெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர்வேடர்
கோமானைப் போற்றி நின்றாள்"
(க.புராணம் : 48) திண்ணனார் வேடர் தலைமைப் பதவியேற் ப ைதத் தேவராட்டியிடம் நாகன் கூறும்போது.
"பூட்டுறு வெஞ்சிலை வேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான்" எனக் குறிப்பிட்டு அதற்காகக் காட்டிலே உறைகின்ற தெய்வங்கள் விரும்பி உண்ணக் 'காடுபவியூட்டு' என வேண்டு கின்றான். இந்நடைமுறை வழிபாட்டு நடைமுறைகளில் பெண்களின் பங்கேற்பைத் தெளிவாய்க் காட்டுகின்றது.
திண்ணனார் வேட்டைக்குச் செல்லும்போது அதற்கெனச் சிறப்பான ஆடை அணிகள் பூண்கிறார். அவருடைய அங்கங்களிலே முறைப்படி அணியப்படும் பொருட்களைச்
சேக்கிழார் எடுத்துக் கூறியுள்ளார்.
1.தலையில் அணிவன - கண்ணி, பீலி, முல்லை, குறிஞ்சி,
வெட்சிப்பூ
2. முன்நெற்றியில் - மயிர்க்கயிறு
3. காதில் - சங்கினால் செய்த வெண்தோடு
4 கண்டத்தில் - வெண்கவடிக்கதிர்மாலை பன்மணி
கோத்த ஏனக்கோடு
5 மார்பில் - மணித்திரள் மாலை
6. தோளில் - வலயம்
H195 H

Page 103
7. முன்கையில் - கங்கணம், கைச்செறி
8. அரையில் - உரிஆடை, வெள்ளலகு, வார்விசி 9. காலில் - வீரக்கழல் 10. பாதத்தில் - தொடுநீடு செருப்பு
வேட்டைக் கோலம் பூண்டு வேட்டைக்குச் சென்ற திண்ணனா ரோடு வேட்டைக் கருவிகளோடு உதவியாளரும் சென்றனர். வேட்டை நாய்களும் சென்றன. வேட்டையாடிப் பல மிருகங் களைக் கொன்றனர். திண்ணனாரின் வேட்டைத் திறனைச் சேக்கிழார் ஏறக்குறையப் 15 பாடல்களில் காட்சிப்படுத்தி யுள்ளார். வேட்டையில் களைத்த மறவர் சற்று இளைப்பாறிப் பசியாறுகின்றனர். அச்சமயம் தண்ணிர் தேடிப் பொன்முகலி யாற்றங்கரைக்குச் சென்றனர். முன்னே தெரியும் குன்றில் ஏறினர். அங்கே சென்றால் திருக்காளத்தியமர்ந்துறையும் குடுமித்தேவரைக் கும்பிடலாம்' என நாணன் கூறுகிறான். திண்ணனார் அவரைக் கும்பிட விரும்பி மலைமேல் ஏறுகிறார். உச்சியிலே கேட்கும் ஒலி அவரை ஈர்க்கிறது. மிருகங்களின் ஆரவாரமல்லாத ஈக்களின் ஒலி அங்கு கேட்கிறது. அந்த ஒலி அவர் அன்புநெறி செல்லத்தூண்டுகிறது. விரைவாகச் செல்கி றார். அவருடைய அப்புதிய வேகமான நிலையைச் சேக்கிழார் வருமாறு காட்சிப்படுத்தியுள்ளார்.
"முன்புசெய்தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கி என்பு நெக்குருகி உள்ளத்தெழு பெருவேட்கையோடும்"
(க.புராணம் 102) திண்ணனாருடைய முன்பு செய்த வழிபாட்டின் வழிகாட்டலில் 'கும்பிடுதல்' என்ற அன்புநெறியில் செல்கிறார். காதல் பெருக உள்ளம் உருக விரைந்து செல்கிறார். மலையிலே திண்ணனார் குடுமித்தேவரைக் காணுமுன்பே இறைவனுடைய அருள்திரு நோக்கினால் திண்ணனார் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்
H196 -

அன்புருவம்' ஆனார். அதன் பின் அவருடைய செயற்பாடுகள் முற்றாக மாற்றம் பெற்றன. ஏகநாயகரை விரைவாகச் சென்று தழுவி மோந்து நிற்கிறார். அவர் புளகமுற்று கண்ணிர் விட்டு நின்ற காட்சி சேக்கிழார் காட்டும் ஒப்பற்ற உயர்ந்த அன்பு நிலையாகும். இறைவன் இருக்குமிடத்தினை ஆராய்கிறார். பச்சிலையும் பூவும் இட்டு நீரும் வாாத்திருப்பது கண்டார். இது அவர் அறியாத வழிபாட்டு நடைமுறை. எனவே அதை ஒவ்வாது எனத் தள்ளுகிறார். நாணன் சிவகோசரியாரின் மரபான வழிபாட்டு நடைமுறை பற்றித் திண்ணனாரிடம் கூறுகின்றான்.
இவை இறைவனுக்குரிய இனிய செய்கைகளல்ல இறைவன் தனிமைபோக உடனிருப்பதும் இனிய இறைச்சி உண்ணக் கொடுப்பதுமே தனது கடமையாகக் கொள்கிறார். அவருடைய காதல் வயப்பட்ட உள்ளம் இறைவனைப் பிரியமுடியாமல் வருந்தி நிற்கிறது. விட்டுப்பிரிந்துபோக முடியாமல் அவர் படும்பாடு.
"போதுவார், மீண்டும் செல்வர். புல்லுவர், மீளப்போவர் காதலின் நோகதி நிற்பர் கனறகல் புனிற்றாப் போல்வர் நாதனே அமுதுசெய்ய நல்லமெல் இறைச்சிநானே கோதறத் தெரிந்து வேறு கெண்டிங்கு வருவேன் என்பார்"
(க.புராணம்:12) தாய்மையுணர்வோடு திண்ணனார் உணவு கொண்டுவரச் செல்கின்றார். குழந்தையைத் தனிய விட விரும்பாத தாய்போல அவலப்படுகிறார். இந்த அன்புநிலை ஒப்பற்றது. அதை நாணன் உணர்ந்து கொள்கிறான். கீழே மலைச்சாரலில் காத்து நிற்பவருக்கு திண்ணனார் நிலையை விளக்கிக் கூறுகிறான்.
"அங்கு இவன் மலையில் தேவர் தம்மைக்
கண்டணைத்துக்கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும்பு என்ன நீங்கான்
-197 H.

Page 104
இங்கும் அத்தேவர் தின்ன இறைச்சி
கொண்டே கப்போந்தான். நங்குலத் தலைமை விட்டான். நலப்பட்டான்
தேவர்க்கு என்றான்
(க.புராணம்.116)
நாணன் வேட்டுவமக்கள் உணரக்கூடய உவமை மூலம் திண்ணனாருடைய அன்பு நிலையை விளக்குகின்றான். திண்ணனார் முற்றாக ஒரு புதிய பக்தி நெறியில் புகுந்திருப்பதை எல்லோருக்கும் உணர்த்துகின்றான்.
காளத்தி இறைவனுக்கு நீராட்டி உணவு கொடுக் வேண்டுமென ஒரு தாயன்பு நிலையிலே திண்ணனார் செயற்படுகிறார். கல்லையிலே ஊனமுது அமைத்து நீராட்டுவதற்கு நன்னீரை வாயிலே முகந்து கொய்த பூக்களைத் தன் தலையிலே செருகி வில்லை ஒரு கையிலும், இறைச்சிப் போனகத்தை மறு கையிலும் ஏந்திக்கொண்டு மலை ஏறும் ஒரு தனித்துவமான பக்தியைச் சேக்கிழார் காட்டுகிறார். திண்ண னார் சிறு குழந்தைபோல இறைவன் முடிமலரைக் காற்செருப் பால் மாற்றுகிறார். வாயில் கொணர்ந்த நீரால் இறைவன் முடிமேல் நீராட்டுகிறார். தன் தலையில் செருகிவந்த ഥണ്ഡങ്ങ]് இறைவன் திருமுடிமேல் சூடுகிறார். பின்னர் கல்லையில் கொணர்ந்த ஊனின் திருவமுதை உண்ணும்படி வேண்டுகிறார். அவரோடு பேசி உணவூட்டும் தாய்மை நிலையே ஒப்பற்ற அன்பு நிலையாகும். இரவு முழுவதும் காவல் இருக்கும் திண்ணனா ருடைய பக்திநிலையை அறியாத மரபு வழிபட்ட பக்தி நெறி நின்ற சிவகோசரியார் வேடுவர் செயல் என நினைந்து அதனைத் தூய்மை செய்து தனது ப்க்திநெறிநின்று வழிபடுகின்றார்.
இத்தகைய இருவேறுபட்ட வழிபாட்டு நிலைகளில் சிறந்தது எது என்பதை இறைவனே சிவகோசரியாருக்கு உணர்த்துகிறார். தன்னுடைய கண்ணிலிருந்து இரத்தம் வடியச்
ത്ത198 -

செய்கிறார். அது கண்டு திண்ணனர் தர்மறிந்த பச்சிலைவகை எல்லாவற்றையும் பிழிந்து விட்டுப் பார்க்கிறார். குருதி யோட்டம் நில்லாமை கண்டு தமது குலநிலைக்கேற்ற 'ஊனுக்கு ஊனிடல்' என்றுணர்ந்து தன்னுடைய கண்ணையே இடந்து அப்புகின்றார். அப்போது குருதி நின்று விட்டது. ஆனால் காளத்தியப்பனோ திண்ணனாரின் உள்ளத்து வலியைச் சிவகோசரியருக்குக் காட்ட எண்ணி வலது கண்ணிலும் குருதி வடியச் செய்கிறார். திண்ணனாரும் மருந்து கண்டேன் என மகிழ்ந்து மற்றக் கண்ணையும் இடந்து அப்ப எண்ணுகிறார். அதற்கு வாய்ப்பாக இறைவன் திருக்கண்ணில் தனது இடக்காலை ஊன்றியபடி நிற்கிறார். இக்காட்சியைக் கண்ட போது சிவகோசரியார் தன் பக்திநெறியின் பலவீனத்தை உணர்கிறார். திண்ணனார் இரண்டாவது கண்ணை இடந்து அப்ப உன்னியபோது இறைவன் 'கண்ணப்ப நிற்க' என்று தம்கையால் தடுக்கிறார். 'என் வலத்தில் மாறிலாய் நிற்க' என்று பணிக்கிறார். திண்ணனார் கண்ணப்பராக இறைவன் வலப்பக்கத்தில் நிற்கும் பேறுபெற்றதை நேரிற் கண்ட சிவகோசரியார் வியப்படை கிறார். பொருவிர்ல் அன்புருவான கண்ணப்பரின் அன்பு நெறியே உயர்ந்தது எனத் தெளிவடை கிறார்.
அன்பு நெறிப்படாத வழிபாடு பயனற்றது என்பதையே கண்ணப்பர் வரலாற்றின் மூலம் சேக்கிழார் உலகிற்குக் கூறுகிறார். சிவகோசரியார் மரபான வழிபாடு பின்பற்றுபவர். அவருடைய பக்தி வெறுமனே சடங்காசாரமாக அமைந்தது. ஆனால் கண்ணப்பருடைய பக்தியுணர்வு இயற்கையோடு இயைந்த சாதாரண மனித வாழ்வியல் நெறியூடாக வளர்ந்து தனித்துவமாக மிளிர்கிறது. ஊணும், உடையும், உறையுளும், காவலும் தேடி வாழும் மனிதவாழ்வு நிலையில் தெய்வத்தையும் நோக்கி அன்பு செலுத்திய திண்ணப்பர் விரைவாக இறை வனைக் காணும் பேறு பெற்றார். அவராலேயே சிவகோசரி
=سس= 199 سس

Page 105
யாரும் இறைவனைக் காணும் பேறு பெற்றார். பெரியபுராணம் மூவர் தேவாரங்களூடாகப் புலப்படுத்திய பக்திநிலைக்கு மேலான ஒரு பக்திநிலையைக் கண்ணப்பர் வரலாற்றின் மூலம் காட்டுகிறது.
அன்பு செய்யும் நிலை மனித உணர்வோடு ஒன்றியதாக அமையும்போது தனிச்சிறப்புடையதாகிறது. பக்திநெறி நிற்பவரைப் 11வழிகளில் அறியமுடியும் என்பர்.
1. இறைவன் கல்யாணகுணங்களைப் புகழ்தல் 2. அவன் அழகில் ஈடுபடல் 3. அவனை வழிபடுதலில் இன்பம் காணுதல் 4. ஓயாது அவனை நினைத்தல் 5. தொண்டு செய்வதில் ஈடுபடல் 6. இறைவனை நண்பனாக நினைத்தல் 7. இறைவனைத்தந்தையாக எண்ணல் 8. இறைவனைக் கணவனாக எண்ணல் 9. இறைவனிடம் தன்னை முழுமையாகத்தியாகம் செய்தல் 10. அவனிடமே முழுவதுமாக அமிழ்ந்துவிடல் 11. அவனைப் பிரிய நேரின் அதற்காகப் பெரிதும் வருந்தல் இத்தனிச்சிறப்புகளை அன்புநெறி நிற்பவர் கொண்டிருப்பர். அவரது இயல்புக்கேற்ப சிறப்பு நிலையிலும் வேறுபாடு காணப்படும் என்பதையே சேக்கிழார் பெரியபுராணத்தில் காட்டியுள்ளர். திருநாவுக்கரசர் பாடிய "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்." என்ற பாடல்கூறும். பக்தி வளர்ச்சிநிலை கண்ணப்பருடைய பக்தி வளர்ச்சி நிலைக்கும் பொருத்தமாகக் காணப்படுகின்றது. ஆனால் பெண்மையுணர்வு நிலையில் நாவுக்கரசர் பக்தியை விளக்குகிறார். கண்ணப்பர் தனது வேட்டுவ வாழ்வியல் நெறிநின்றே பொருவில் அன்புருவாக மாறுகிறார். அவருடைய வரலாறு இறைவன் மீது கொள்ளும் அன்பு அவனருளாலேயே கிடைக்கும்என உணர்த்துகிறது.
س= 200-سس


Page 106
ஒரு காலத்தில் மேலைநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தமிழ்மொழிை செய்திகளையும் தரவுகளையும் எடுத் களில் வாழும் நம் தமிழ்த்தலை முறை னதாக இருந்தாலும் தமிழ்மொழிக்கு
அளிக்கவுள்ளது. எனவே வாய்மெ இலக்கியங்களைப் பிறமொழிகளிலே வலம் வரச்செய்யலாம். அதற்கான பொருட்களை ஏற்றிவரும் இத் தமிழ் செய்ய முன்வந்துள்ளது. இன்னும் ப முன்வரவேண்டும். தாயகத்தமிழ்ச் ச இணையவேண்டுமென்ற பணிவான றோம். தமிழ் அன்னையின் தாள்கை செய்கின்றோம். எம்மிடம் தமிழ் பய பணியில் இணைய வேண்டுமென எல்லோருமாய் இணைந்து எம் தாய் மொழியால் இனம் காட்டுவோம்.
ISBN 955.99.434 - 0.5
955.99
 
 

தமிழ் நாட்டிற்கும் ஈழ நாட்டிற்கும் யக் கற்று இலக்கியங்கள் பற்றிய துச் சென்றனர். இப்போது பிறநாடு றயினருக்குப் புலப்பெயர்வு துன்பமா பணிசெய்யும் வாய்ப்பு மனநிறைவை ாழியால் வாழ்ந்த எம் தமிழ்மொழி இணையத் தளத்திலே ஏற்றி உலகை தமிழ் இலக்கியத்தரவுகளை மூலப் ந்தோணி ஒரு சிறிய பங்களிப்பையே ல தோணிகள் இப்பணியைச் செய்ய ான்றோர் அனைவரும் இப்பணியில் வேண்டுகோளையும் முன் வைக்கின் ள இச்சிறுமலர் அணிசெய்யப் பணி ன்ற பயிலும் அனைவரையும் இப்
எம் கரங்களை நீட்டுகின்றோம். மொழியைப் பேணுவோம். எம்மை