கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதிற்றுப் பத்து (ஆராய்ச்சியுரை)

Page 1

巨百三 圭莓 截 昌 翡
■를 Ess를醫

Page 2


Page 3
.
,
P ...
ܙ ܕ . . . . | : , آنها به است. ... ''f's te ..., )?* )1-2**\\kبہت ہ *“ , , t ....” ፕo .بن مالية F.
- * ན་ is . k 4 x . ܡ s
፩ ፆ
к , , , , ! : :, \': '؛ ، . . . . . . . . » リ %" 、 م ) و لا
s
...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிற்றுப் பத்து
ஆராய்ச்சியுரை X
பழையவுரை ஒப்புமைப்பகுதி பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்கள் முதலியவற்றுடன்
மதுரைத் தமிழ்ச்சங்க அங்கத்தவரும் காலிநகர் அரசாங்க உயர்தர கலாசாலையின் முன்னைநாள்
தலைமையாசிரியருமாகிய *ン பண்டிதர் சு. அருஜாம்பலவனுர் VU )గ్రి و f به آن زع
Skö 27 - 07 = 1 அஐ3 ல், வெலிக்கடை சிறைச்சா% யில் NS
கொலை செய்யப்பட்ட பண்ணுகம் பண்டிதர் ஆறுமுகம் சேயோன் (ஆங்கில ஆசிரியர்) அவரிடமிருந்த இந் நூல் அன்ஞரின் தாழாரினுல் அன்பளிப்புச் செய்யப்பட்டது. Tger grave5ů Sifa
யாழ்ப்பாணத்துக் காரைநகர் அ. சிவானந்தநாதன் அவர்களால்
வெளியிடப்பெற்றது.
ant; பேர் gh . をで۔ ழ்ப்பாணம் a.
G༽
பதிப்புரிமை) விலை ரூபா 48. 50.
()

Page 4
முதற் பதிப்பு: 1960
ஆ. சேயோன் பண்ணும் சுழிபுரtb.
அச்சுப்பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்.
 

Ft f༧Li Car ༽
༥.J ཉིན་ Pi N༼
KANNAR Westerer...
ଶକ୍ତି । --
முக வுரை
செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் சங்க இலக்கியங்களுள் ஒன்ரு கத் திகழும் பெருமை சான்றது பதிற்றுப்பத்து. இது இற்றைக்கு ஆயிரத் தெண்ணுறு யாண்டுகளுக்குமுன் தமிழ்கூறு 15ல்லுலகத்தின் ஒரு பகுதியா கிய சேரநாட்டைக் கோல்கோடாது ஆட்சி புரிந்த சேரவேந்தர் பதின்மர் மீது சங்கப் புலவர்கள் பதின்மராற் பாடப்பெற்றது. ஒவ்வொரு சேரவேந் தன்மீதும் பத்துப் பத்தாகப் பாடப்பெற்ற பத்துப் பத்துக்களின் தொகை யாதலின் இது பதிற்றுப்பத்து எனப் பெயர் பெறுவதாயிற்று. இத் தொகை நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னர் இன்னரென்பது தெரியவில்லை. இது நற்றிணை குறுக்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களுள் நான்காவதாக விளங்குகின்றது. இது புறநானூற்றினைப் போன்று புறப்பொருள் பற்றிய நூலாகும். இந்நூற் பாடல்களிற் பல நச் சினுர்க்கினியர் முதலிய உரையாசிரியர்களாற் பழைய இலக்கண இலக்கிய உரைகளில் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.
தமிழகத்தை ஆட்சி புரிந்த முடியுடை வேந்தர் மூவருள்ளும் முதற்கண் வைத்து எண்ணப்படும் பெருமையுடையோர் சேரவேந்தராவர். பத்துப் பாட்டுள் ஒன்ருகிய சிறுபாணுற்றுப்படையுள் "இயறேர்க் குட்டுவன்" "கடுக்தேர்ச் செழியன்' 'கற்றேர்ச் செம்பியன்" என மூவேந்தருட் சேரனே முன் வைத்துக் கூறியிருத்தலும், “சேர சோழ பாண்டியர்' எனச் சேரனே முன் வைத்து மூவேந்தரை நச்சினுர்க்கினியரும் பரிமேலழகரும் தத்தம் உரை களிற் கூறியிருத்தலும், "போங்தை வேம்பே யாரென வருஉ, மாபெருங் தானே யர் மலைக்த பூவும்" என மூவேந்தரின் அடையாளப் பூக்களைக் கூறும்போது சேரர் பூவினே முன் வைத்துத் தொல்காப்பியனுர் கூறியிருத்தலும் சேரர் பெரு மையினை நன்கு புலப்படுத்துவனவாகும். சேரவேந்தரைப் பற்றிய வரலாறு புற5ானூறு முதலிய நூல்களிற் காணப்படினும் முழுவதும் சேரகுலத்தர சர்களுடைய வரலாற்றுச் செய்திகளைக் கால ஒழுங்கின்படி விரித்துரைக்கும் தனிச் சிறப்புடைய நூல் பதிற்றுப்பத்து ஒன்றேயாகும். இந்நூல் சங்ககாலச் சேரவேந்தரின் வரலாறு கூறும் வாயிலாக அவ்வேந்தரொடு மாறுபட்ட சோழ பாண்டியர்களினதும் அவர்களுக்குத் துணைவலியாகப் போந்த குறுநில மன் னர்களினதும் பிற தலைவர்களினதும் வரலாறுகளையும் மற்றும் பிற செய்தி களையும் கூறுதலாற் சங்ககாலத் தமிழ் மக்களின் வரலாறு கூறும் மாண்பு மிக்க நூலகவும் விளங்குகின்றது.
இவ் விழுமிய நூலின்கண், மறப்புகழை மற்றைப் புகழினும் மிக்க புக ழாகக் கொண்டு. சேர வேந்தரின் வீரமிகுதி கொடைத்திறம் படைப்பெருமை அரண்மாட்சி ட்சிக்கிறம் முதலியவற்றைப்பற்றிய செய்திகளும், சேரநாட்

Page 5
iV
டின் இயற்கையும், அங்காட்டின் மலைகள் ஆறுகள் ஊர்கள் முதலியவற்றைப் பற்றிய வரலாறுகளும், அங்காட்டு வழக்க ஒழுக்கங்களும், பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைக்ளும் நாகரிகப் பண்பாடுகளும் உழவு வாணிகம் முதலிய தொழில் வகைகளும், புலவர் பாணர் கூத்தர் விறலியர் முதலியோ ரின் வாழ்க்கை வரலாறுகளும் பிறவும் கன்கு கூறப்பட்டுள்ளன. சேரவேந் தரின் மறப்பண்பையும் கொடைத் திறத்தையும் ஒவ்வொரு பாட்டிலும் சிறப் பாகக் காணலாம்.
இந்நூலின் கடவுள் வாழ்த்தும் முதற்பத்தும் பத்தாம் பத்தும் கிடையா தொழிந்தமையின் இடைகின்ற எட்டுப் பத்துக்களே வெளிவந்துள்ளன. இவற்றுள், இரண்டாம்பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனரும், மூன்ரும்பத்து இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழுகுட் டுவனேப் பாலைக்கெளதமனரும், நான்காம்பத்து களங்காய்க்கண்ணி கார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனரும், ஐந்தாம்பத்து கடல்பிறக்கோட் டிய செங்குட்டுவனைப் பரணரும், ஆரும்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலா தனக் காக்கைபாடினியார் நச்செள்ளையாரும், ஏழாம்பத்து செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலரும், எட்டாம்பத்து தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும் பொறையை அரிசில் கிழாரும், ஒன்பதாம் பத்து குடக்கோ இருஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியவை. முதற் பத்தையோ பத் தாம் பத்தையோ சார்ந்த இந்நூற்பாடல்களிற் சில, தொல்காப்பியவுரை களிலும் புறத்திரட்டு என்னும் நூலினும் காணப்படுகின்றன.
இந்நூலின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை வண்ணம் தூக்கு பெயர் என்பவற்றைத் தெரிவிக்கும் குறிப்புக்கள் அமைந்துள்ளன. துறை பற்றிய குறிப்பு பிறநூல்களிற் காணப்படினும் ஒவ்வொரு பாடலுக்கும் இங்கான்கினையும் வகுத்துரைக்கும் குறிப்புக்கள் சிறப்பாகப் பதிற்றுப் பத்தி லேயே காணப்படுகின்றன. இந்நூற் பாடல்கள் யாவும் *பாடாண்டிணை ஒன் றனேயே பொருளாகக் கொண்டு பாடப்பெற்றனவாகும். இதனைத் தொல் காப்பியவுரையில் 'பதிற்றுப்பத்துநூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணை யேயாயிற்று" என நச்சினர்க்கினியர் உரைத்தலானும் அறியலாம். இதனுல் ஒவ்வொரு பாட்டிற்கும் திணை குறியாதொழிந்தனர். ஒவ்வொரு பாட்டிலும் பொருளாலாதல் அடையாலாதல் சிறப்புமிக்க தொடர் ஒன்றே அவ்வப் பாட்டின் பெயராக அமைந்திருக்கிறது. பத்துப்பாட்டுள் ஒன்ருகிய மலைபடு கடாம் என்னும் பாட்டினுக்கு அப்பாட்டிலுள்ள மலைபடுகடாம் என்னும் பொருட் சிறப்புடைய தொடரே பெயராக அமைந்திருத்தல் காண்க.
இந்நூலின் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தினல் பாடப் பெற்ற சேரவேந்தன் பெயரும் அவன் குடிவழியும் அருஞ்செயல்களும் அவ னைப் பாடிய புலவர் பெயரும் அவர் பாடிய பத்துப்பாடல்களின் பெயர்களும்
* பாடாண்-பாடப்படும் ஆண்மகனது ஒழுகலாறு. ‘பாடாண் என்பது பாடு தல் வினையையும் பாடப்படும் ஆண்மகனையும் கோக்காது அவன தொழுகலாரு கிய திணையை யுணர்த்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொ ழித் தொகை"-தொல் புற சூ 25 நச்.

அப்புலவர் பாடிப்பெற்ற பரிசிலும் அவ்வேந்தன் ஆட்சிபுரிந்த் காலஅளவும் தெரிவிக்கும் பதிகமும் வாக்கியங்களும் அமைந்துள்ளன. சில பதிக்ங்கள் நூலுட் கூறப்படாத செய்திகளையும் கூறுகின்றன. பதிகங்களின் அமைப்பு முறையைக் கூர்ந்து நோக்கின் இவை யாவும் பிற்காலப் புலவர் ஒருவரால் இயற்றப்பெற்று ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் சேர்க்கப்பெற்றனவென் பது புலனுகும். இப்பதிகங்கள் நச்சினர்க்கினியர் அடியார்க்கு5ல்லார் என் னும் உரையாசிரியர்களால் தத்தம் உரைகளில் எடுத்தாளப்பட்டிருத்தலின் இவை இவ்வுரையாசிரியர்களின் காலத்திற்கு முற்பட்டன என்பது தெளிவா கும். . . . 、 、 1st,
அருமையும் பெருமையும் வாய்ந்த இந்நூலுக்குப் பழையதோர் உரை உளது. இவ்வுரையை எழுதிய ஆசிரியர் பெயர் காலம் முதலியவற்றைத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இந்நூல் எழுபத்தாரும் பாட்டின் உரையில் "சின்மையைச் சின்னூலென்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க' என்று இவ்வுரையாசிரியர் எழுதியிருத்தலால் இவர் சின்னூல் என்னும் பெயரால் வழங்கப்படும் நேமிநாதம் என்னும் நூலை இயற்றிய குணவீர பண்டிதர் காலத்திற்கும், பதிகங்களுக்கும் குறிப்புரை எழுதியிருத்தலால் அப்பதிகங் களை இயற்றிய புலவர் காலத்திற்கும் பிற்பட்டவர் என்று தெரிகிறது இவர் சில்லேராளர் என்பதற்குத் தம் குலத்தானும் ஒழுக்கத்தானும் சிறிய ஏரா girlf' என்று *உரைத்திருப்பதால் இவரை ஆரியப் பான்மை மிக்க பார்ப் பனரோ என்று நினைத்தற்கு இடமுண்டு. இவர் இந்நூலுரையில் திருக் குறள் மதுரைக்காஞ்சி புறநானூறு என்னும் நூல்களை + மேற்கோள்களா கக் காட்டியிருக்கிருர். இவர் இவ்வுரையில் "..என்று உரைப்பாருமுளர் எனப் $ பல்விடங்களிற் பிறர் கருத்துக்களையும் எடுத்துக் கூறுதலால் இவர் காலத்துக்கு முன்பும் சிலர் இந்நூற்கு உரை எழுதினர் என்பது புலப்படுகிறது.
இவ்வுரையாசிரியர் அருஞ் சொற்களுக்கும் தொடர்களுக்கும் பொருள் கூறியும் சொன்முடிபு பொருண்முடிபு காட்டியும் இந்நூலுக்கு எழுதிய உரை சுருக்கமாக அமைந்திருத்தலால் இப்பழையவுரையின் துணை கொண்டு இதன் பொருளை விளங்குவது எளிதின் இயலாததொன்ரும். ஆதலின் இந் நூற் பொருளை யாவரும் எளிதின் அறிந்து கொள்ளத்தக்க நிலையில் இங் நூற்கு உரையிருத்தல் இன்றியமையாதெனக்கண்டு LᏗᎧᏓ) யாண்டுகளுக்கு முன்பு பதிற்றுப்பத்திற் கிடைத்துள்ள எண்பது பாடல்களுக்கும் பதிகங்களுக்கும் முதற்பத்தையோ பத்தாம் பத்தையோ சார்ந்த பாடல்களுக்கும் மிக விரிந்த் கிலேயில் ஆராய்ச்சியுரையினை எழுதி முடித்தேன். இவ்வுரை பதவுரை அகல வுரை வின்ைமுடிபு மேற்கோளாட்சி பழையவுரை ஒப்புமைப்பகுதி என்னும் பகுதிகள் அமைய எழுதப்பெற்றது. இந்நூற் பாடல்களின் சொன்னயம் பொருணயங்களை விளக்கியும் சொன் முடிபு பொருண் முடிபு காட்டியும் இலக்கணக் குறிப்புக்கள் தந்தும் துறை வண்ணம் தூக்கு இவற்றின் அமை * பதிற் 6:11 உரை + பதிற் 1:21; 21; 18; 63:5உரைகள்." s uglji) 13:11-2; 13:22-a; 16:1-4; 21: 23; 29. 6; 31; 5; 31; 10-1; 82: 156; 33: 6. 11; 40; 19; 48; 4; 48; 21; 48; 5-953:6-9; 59:13; 62; 838 உரை,

Page 6
wi
தியைப் புலப்படுத்தியும் இவ்வுரையினேத் தெளிவுற எழுதியுள்ளேன். முன் னேர் மொழி பொருளைப் பொன்னேபோற் போற்றிக்கொள்ளல் கடனு தலின் இந்நூற் பாடல்களின் பொருள்வரையுமிடங்களில் பழையவுரைக் குறிப்புக்களையும் ஆங்காங்கு இயைபுபடுத்தியுள்ளேன். பழையவுரையாசிரிய ரின் உரைநுட்பங்கள் நன்கு புலப்படும் வகையில் இதன்கட் பல ஆராய்ச் சிக் குறிப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. பழையவுரையாசிரியரின் கருத்துக்களை முற்றும் கொள்ளாது பல புதிய கருத்துக்களைத் தக்க மேற்கோளுடன் எழுதி யுள்ளேன் இந்நூலிலுள்ள அருஞ் சொற்களையும் தொடர்களையும் இந்நூலை இயற்றிய சங்கப் புலவர்கள் எவ்வெப் பொருள்களில் வழங்கினர் என்பதை நன்கு அறிந்து கோடற்குச் சங்ககாலத்தும் அதனை அடுத்தகாலத்தும் தோன் றிய தொல்காப்பியம் பததுப்பாட்டு எட்டுத்தொகை சிந்தாமணி சிலப்பதி காரம் முதலான நூல்களிலிருந்தும் அவற்றின் பழையவுரைகளிலிருந்தும் திவாகரம் பிங்கலந்தை என்னும் பழைய நிகண்டு நூல்களிலிருந்தும் பல மேற்கோள்களைக் காட்டியுள்ளேன். பழையவுரையைக் காண விழைவார்க் குப் பயன்படும் வகையில் ஒவ்வொரு பாட்டின் உரை இறுதியிலும் பழைய வுரை சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுமாறு இக் நூற் பாடல்களின் சொற் பொருள்களோடு ஒப்புமையுடைய பகுதிகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க் கணக்கு சிந்தாமணி சிலப்பதி காரம் மணிமேகலை பெருங்கதை முதலிய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டி யுள்ளேன். சேணுவரையர் நச்சினுர்க்கினியர் முதலிய உாையாசிரியர்கள் இக் நூற் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்ட இடங்களும் இதன்கட் காட் டப்பட்டுள்ளன. -
ஒரு நூலின் பாடற்பொருளே நுட்பமாக எடுத்து விளக்குவது ஆராய்ச்சி யுரையாகும் கற்போர்க்குச் சுவை பயக்குமாறு ஆராய்ச்சியுரையினை எழுதி யவர் மறைமலையடிகளாவர். அவர்கள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்டினப்பாலை ஆராய்ச்சியுரைகளை எழுதியமுறையில் திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை பெரும்பாணுற்றுப்படை ஆராய்ச்சியுரை என்னும் நூல்களை எழுதினேன். அக்காலத்தில் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேரா சிரியர்களாய் இருந்த நாவலர் கணக்காயர் டாக்டர் ச. சோமசுந்தரபாரதி யார் M. A. ; B. L. அவர்களும், நாவலர் பண்டித ந மு. வேங்கடசாமி நாட் டார் அவர்களும் அந்நூல்களைப் பார்வையிட்டு மதிப்புரை தந்து ஆராய்ச்சி யுரை எழுதுவதில் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தினர்கள். அதுவே இப் ப்திற்றுப் பத்து ஆராய்ச்சியுரையினே எழுதுவதற்கும் தூண்டுகோலாய் அமை வதாயிற்று. ஆராய்ச்சியுரை எழுதுவதில் கல்வழிகாட்டிய மறைமலையடிக ளுக்கும் என்னை ஊக்கப்படுத்திய கன்னர் நெஞ்சத்து இப் பேராசிரியர்க ளுக்கும் யான் என்றும் கன்றி பாராட்டும் கடமையுடையேன்,
பதிற்றுப்பத்து என்னும் பழக்தமிழ் நூலைத்தேடி ஆராய்ந்து முதன் முதல் அச்சிட்டுத் தமிழ் உலகிற்கு உதவிய பெரியார் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களாவர். அவர்களுக்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

γii
இவ்வுரையினை எழுதிவருங்கால் வேண்டும் உதவிகளைப் பேரன்புடன் செய்தவர்கள் சேற்றுார். ரா. சுப்பிரமணியக் கவிராயர், செந்தமிழ்ப் பத்தி ராதிபர் நாராயணையங்கார் இவர்களிடம் இலக்கண இலக்கிய தருக்கி நூல் களே கன்கு கற்றவரும் வடநூற் பயிற்சியுடையவருமாகிய எனது ஆசிரியர் பூனிமத், சி. சுப்பிரமணியதேசிகர் அவர்களும், யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலை முன்னைநாள் தமிழ்ப்பேராசிரியர் பண்டிதமணி சி. கணதிப்பிள்ளை அவர்களுமாவர். இவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி என்றும் உரியதாகும்.
இவ்வுரையை எழுதிமுடித்து அச்சிடத் தொடங்குமுன் செவ்வனே பார்வையிட்டு உதவி புரிந்தவர், எனது அருமை நண்பர் யாழ்ப்பாணத்துத் தும்பளை வித்துவான், பண்டிதர் திரு. க. கிருஷ்ணபிள்ளையவர்களாவர். அவர் களும் எனது மனம்பொருந்திய 15ன்றி என்றும் உரியதாகும்.
இவ்வுரையை யாழ்ப்பாணத்தில் அச்சிட முயன்றும் உலகப் பெரும் போர் காரணமாக அக்காலத்து உண்டான பலவகை நெருக்கடிகளாலும் அச்சிடுதல் இயலாதாயிற்று. பின்பு எனது கருத்திற்கியைந்து இரண்டாம் பத்து உரையைச் சென்னையில் அச்சிடுவித்துத் தந்தவர்கள் தமிழ்ப் பற்றும் சமயப்பற்றும் ஒருங்குடையவரும் என்பாற் பேரன்புடையவருமாகிய திரு மயிலை திரு. சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளையவர்களாவர். கைம்மாறு கரு தாது பிள்ளையவர்கள் பெரிதும் முயன்று செய்த பேருதவிக்கு என்றும் 5ன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
அச்சிடப்பெற்ற இரண்டாம் பத்து ஆராய்ச்சியுரை மிகப் பரந்துபட் டுச் சென்றமையின் அம்முறையில் நூல் முழுவதையும் வெளியிடுதல் இயலா தாயிற்று. அதனல் ஆராய்ச்சிப் பகுதியையும் ஒப்புமைப் பகுதியையும் சிறிது சுருக்கிப் பதவுரை முடிபு ஆராய்ச்சியுரை மேற்கோள் பழையவுரை ஒப்பு மைப்பகுதி என வகைப்படுத்தி முதற்பாதி இப்போது வெளியிடப்பெறு கின்றது. பாடினேர் வரலாறு அரும்பத அகராதி முதலியன உரை முழுவ துடன் பின்னர் வெளிவரும்.
இந்நூலைப் பார்வையிட்டு மதிப்புரை வழங்கிய அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர், பன்மொழிப் புலவர் திரு. T P. மீனுட்சிசுந்தரஞர் M. A, B.L; M. O. L. அவர்களுக்கும், எனது ஆசிரியர் பூணீரீமத் சி. சுப்பிர மணிய தேசிகர் அவர்களுக்கும், அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரை யாளர்கள் வித்துவான் திரு. மு அருணுசலம்பிள்ளை அவர்களுக்கும், மகா வித்துவான் திரு. ச. தண்டபாணிதேசிகர் அவர்களுக்கும், இரண்டாம் பத்து ஆராய்ச்சியுரையினைப் பார்வையிட்டு மதிப்புரை வழங்கிய யாழ்ப்பாணத்து மகா வித்துவான் பிரம்மழரீ சி கணேசையர் அவர்களுக்கும், சென்னை யூனி வர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ் தமிழ்ப் பண்டிதராயிருந்த இராமநாத புரம் திரு. மு. இராகவையங்கார் அவர்களுக்கும், யாழ்ப்பாணத்துச் சைவா சிரிய கலாசாலை முன்னைநாள் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்

Page 7
γiii
துறைத் தலைவர் டாக்டர் மு. வரதராசனுர் M. A. M. O. L, PH. D. அவர் களுக்கும் இக்கல்லூரியின் துணைத் தமிழ்ப் பேராசிரியர் திரு. அ. மு. பரமசிவானந்தம் M. A. M. LITT அவர்களுக்கும், முன்னுள் துணேத் தமிழ்ப் பேராசிரியர் திரு. அ. ச. ஞானசம்பந்தன் M. A. அவர்களுக்கும் சென்சீனப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் டாக்டர் திரு. மா. இராசமா of , , (of M. A.; M. O. L; L. T; PH. D. Jyolid, Gly igth, 5G5udlyu gig னப் பல்கலைக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் வித்துவான் திரு. செ. சிங்கார வேலஞர் B. A. அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி என்றும் உரிய தாகும்.
இவ்வுரையினைப் பதிப்பித்தற்குப் பண்டிதமணி திரு. சி. கணபதிப் பிள்ளையவர்களும், யாழ்ப்பாணத்துப் பிரபல வர்த்தகர் திரு ப. கந்தையா பிள்ளையவர்களும் நூறு நூறு ரூபாய்களை உவந்து அளித்தார்கள். இதனை அச்சிட்டு முடிப்பதில் ஊக்கம் குன்ருதவாறு அறிவினும் திருவினும் மிக்க பெரியோர்களும் பொருள் உவந்தளித்தார்கள். ஆயினும் இதனை அச்சிட்டு வெளியிடுவதில் பெருந்தொகையான கைப்பொருள் செலவாயிற்று. பொரு ளுதவி புரிந்த பெருந்தகையாளர்களுக்கும், இதனை வெளியிடுவதில் என் ைேடு ஒத்துழைத்த நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரி விக்கின்றேன்.
இவ்வாராய்ச்சியுரையை எழுதிமுடிப்பதில் தோன் ருத் துணையாய் இருந்து இன்னருள் புரிந்த ஆலவாய் இறைவன் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.
காரைநகர், இங்ங்னம், யாழ்ப்பாணம். சு. அருளம்பலம்.
31-2-60
«SJ2

ix
மதிப்புரைகள் அண்ணுமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பன்மொழிப் புலவர் T. P. மீனுட்சிசுந்தரஞர் M.A., B.L. M. O.L. அவர்கள் எழுதியது.
ஈழ5ாட்டுத் தமிழறிஞர் பண்டிதர் திரு. சு. அருளம்பலம் அவர்கள் பதிற்றுப்பத்திற்கு ஆராய்ச்சியுரை ஒன்று வெளியிட்டுள்ளார்கள். முன்னும் ஒருபகுதிக்கு வெளியிட்டது மிக விரிவாதல் கண்டு இதனை மிக விரிவாகவு மன்றி மிகச் சுருக்கமாகவுமன்றி உரை எழுதியிருப்பது போற்றத்தக்கதே யாம். பதிற்றுப்பத்திற்குப் பழையவுரை ஒன்று இடையிடையே சிதைந்த நிலைமையில் தமிழ்த்தாதாவழியே வெளிவந்து வழங்குகிறது. அதன் பெரு மையைப் புகழமுடியாது. ஆனல் மிகமிகச் சுருங்கிய நிலைமையில் உள்ள தால் அது அனைவருக்கும் உதவுமது இல்லை. ஆதலின் விளக்கவுரைகள் தோன்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னே உரைகள் ஆராய்ச்சி கள் எல்லாவற்றையும் மனத்திற்கொண்டு தாம் அவற்றில் திருத்தம் கண்ட இடத்தை விளக்கி இந்த ஆராய்ச்சி உரையை ஆசிரியர் எழுதியுள்ளார். ஒரு கால் நூற்ருண்டு இந்நூலில் ஈடுபட்டுப் பழகிய உள்ளத்தோடு இந்த உரையை ஆசிரியர் எழுதுகிருர், இத்தகைய உரை இக்காளில் தமிழ் ஆராய்ச்சிக்கு விருந்தாகி இனித்து ஒளிரும் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க அருளம்பலம்; வாழ்க அவர் உரை; வாழ்க பதிற்றுப்பத்து.
பூணீமத் சி சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் எழுதியது -sa-e-os
ஒண்தீம் தமிழின்கணுள்ள பண்டைய சங்கப்பனுவல்களுள் பழமைவாய்க் தது பதிற்றுப்பத்து. சேரஅரசர் பதின் மர்மீது நல்லிசைப் புலவர் பதின்ம் ரால் பாடப்பெற்ற பப்பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளின் தொகுப்பே இந்நூலாகும். இதற்குப் பழையவுரை ஒன்று உள்ளது. அது நூலுள் புகுந்து ஒருவாறு பொருள் காண்டற்கு உறுதுணையாக உள்ளதா யினும் வேண்டிய விரிவுடையதன்று.
பண்டைத் தமிழ் நூல்களை அரிதின் முயன்று வெளியிட்டு எங்கட்குத விய தாதா மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் செய்த குறிப்புரை மிகவும் சிறப்பாக நூற்பொருளை விளக்குவதாயினும் எல்லார்க்கும் பயன்படத்தக்க விரிவுடையதன்று. சிலகுறிப்புரைகள் ஐயரவர்கள் எழுதியனவோ என்று ஐயுறத்தக்கனவாயுள்ளன. -

Page 8
Χ
திருவாளர் ஒளவை. துரைசாமிப்பிள்ளை அவர்கள் செய்த விரிவுரை மிகவும் தெளிவாக நூற்பொருளை விளக்கி எல்லார்க்கும் பயன்படத்தக்க வகையில் அமைந்துள்ளதாயினும் பதிகங்களின் பொருளொருமை காண்டற்கு உறுதுணேயாகாது ஆராய்ச்சிக்கு இடமாயுள்ள அப்பகுதி தவிர்க்கப்பட்டுள் GOTT KJ/
திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை பெரும்பானுற்றுப்படை ஆராய்ச் சியுரை என்பவற்றின் ஆசிரியரும் எனது அரும்பெறல் அன்பரும் ஆகிய திருவாளர் பண்டிதர்-சுவாமி அருளம்பலவனுர் அவர்கள் பலகாலமாக அரி தின் முயன்று தாமெழுதிய பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரையின் ஒரு பகுதி யைச் சிலகாலத்துக்குமுன் வெளியிட்டனர். அது பரந்துபட்டுச் சென்றமை யால் அம்முறையில் நூல்முழுவதையும் வெளியிடுதல் முடியாதாயிற்று.
பின்னர் ஆராய்ச்சியுரையைப் பதவுரை முடிவு ஆராய்ச்சியுரை ஒப் புமைப்பகுதி என வகைப்படுத்திச் சுருக்கிப் பழைய உரையையும் தனியாகச் சேர்த்து இப்போது முதற்பாதியை வெளியிட்டுள்ளனர். இதிலும் ஆராய்ச் சிப் பகுதியும் ஒப்புமைப் பகுதியும் விரிவாகவேயுள்ளன.
இவ்விரிவுரை பதிற்றுப்பத்து முழுவதையும் தெளிவாக அறிதற்கேற்ற தாகவுள்ளது. இடர்ப்பாட்டுக்கிடனுய் தெளிவின்றி வரலாறு முரண்ப்டுவன வாயுள்ள பகுதிகளையெல்லாம் இனிது விளக்குகின்றது.
உதாரணமாக 13-ம் பாட்டு 8-10. 'மறம் வீங்கு பல்புகழ் கேட்டற் கினிது; நின் செல்வம் கேட்டொறும் காண்டல் விருப்பொடு" என்னும் பகுதிக்கு 'மறப்புகழைக் கேட்குக்தோறும் அமர்கடந்துபெற்ற பெருஞ்செல்வ முடையா னென்பதுமறியப்படுதலின் மறம்வீங்கு பல்புகழ் கேட்டற்கினிது எனவும், கேட்டொறும் அச்செல்வமெல்லாவற்றையும் வான5ாண வரையா தீயும் சேரன்பாற் சென்ருல் பெறலாம் என்னும் எண்ணத்தால் பரிசில் வாழ்க் கைப் பரிசிலர்க்கு அவனைக் காண்டற்கு விருப்புண்டாதலின் செல்வம் கேட் டொறும் காண்டல் விருப்பொடு' எனவும் காரணகாரிய முறைமை காட்டி யுரைத்துள்ளமை 15யக்கத்தக்கது.
19; 7. "மண்ணுறு முரசம்' என்பதற்கு நீராட்டப்பெற்ற என்ற குறிப்புரை கொள்ளாது இன்னெலியாக இமிழ்தற் பொருட்டு மார்ச்சனை யமைக்கப்பட்ட முரசென உரைத்தமை பொருணயமுடையது.
21: 8-10, "வருநர் வரையார் வாரவேண்டி, விருந்துகண்மாரு துணிஇய பாசவர், ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை” என்பதில் வேண்டி, உணி இய என்னுமெச்சங்களைப் பாசவர்க்கேற்றிப் பிறர் கூறுமாறு கூருது பாட்டுடைத் தலைவற்கேற்றிப், பாசவரைக் கொழுங்குறைக்கு விசேடணமாக்கி உரைத்திருக்கும் 15யம் மிகவும் பாராட்டத்தக்கது.
21:17, 'மாரியங்கள்ளின் போர்வல் யானை' என்பதற்குக் கள்ளினற் போரில் வல்ல என்று உரைகார்ர் கூறியது கொள்ளாது "கள்ளினை யும் யானையையும் உட்ைய மண்படும்ார்ப" 'என்'உரைத்திருப்பது மெச்சத் தக்கது. ༥ " " ༣་༡༡ ནཱ. " ༣.j, - ۰ به بر
轶 in

xi
3; 14. கயிறு குறுமுகவை என்பதில் 'தன்னுல் வாங்கப்படும் நீர் பெரி தன்றி, தன் கயிறே பெரிதாக வாங்கப்படும் முகவை' என உரைசெய்திருத் தல் வன்னிலமாகிய கொங்கர் காட்டின் இயல்புக்கும் கூவல்கள் ஆழமாய் சிறிதளவான நீரையுடையனவாய் இருப்பதற்கும் பொருங்துவதாகும். பத் தல் யாதென விளக்கியிருப்பதும் இன்றியமையாதது. கூவலில் நீர் முகக்கும் முகவைகள் கயிற்ருல் வாங்கப்படுவனவாகவும் கயிறுகுறுமுகவை என அடை கொடுத்து நீர்வாங்கும் முகவையன்றிக் கயிறு வாங்கும் முகவையென, வாங்கி யெடுக்கும் நீர் சிறிதாக வாங்குங் கயிறே பெரிதாக அமைதல1ற்போலும். 24: 18-33. "உண்மருங் தின் மரும் வரைகோளறியாது, குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்ருே, றடைச்சேம் பெழுந்த ஆடுறு மடாவின், எஃகு றச் சிவந்த ஊனத்தியாவரும், கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி” என் னும் பகுதிக்குப் பிறர் பிறவாறுரைக்க, 'உண்பாரையும் தின்பாரையும் வரைந்து கொள்ளுதலை அறியாமல் (என்றது இவ்வளவினரென அறியாமல்) சோறு இடுதற்கு வேண்டியநெல்லை ஒயாது குற்றுதலால் ஒலித்தலையுடைய பூண் மழுகிய உலக்கையையுடைய இடங்கள்தொறும் சேம்பின் இலையைப் போல எழுந்த அடுதல்பொருந்திய மடாவின், அரிவாள் படுதலால் இரத்தத் தாற் சிவந்த இறைச்சிகளையுடைய (என்றது சிவந்த இறைச்சியைச் சேர்த் துச் சமைத்த) யாவரும் கண்டு மதிமருளுதற்குக் காரணமாகிய குறையாத சோறு, 6ான உரைசெய்திருப்பது பொருளை இனிது விளக்கும் நயமுடை யது. அடைச்சேம்பெழுந்த என்றது அடர்ச்செம்பெழுந்த என்னும் பாடம் திரிந்ததோவென எண்ண இடமுண்டு. அங்ங்னமாயின் செம்புத் தகட்டாற் செய்யப்பட்டு உயர்ந்த மடா என உரைக்கலாம்.
26: 4-5. "ஆங்குப் பண்டுகற் கறியு5ர் செழுவள நினைப்பின், கோகோ யானே கோதக வருமே” என்னும் பகுதிக்கு அவ்விடத்தின் செழுமையான வளத்தை முன்பு நன்முகக் கண்டறிந்தவர் (கொதுமலர்) கினைப்பின் நெஞ்சு வருந்தவேண்டிவரும்; யான் நோகக்கடவேனே (கோகேன்) என உரைசெய் திருத்தலும் அப்பகுதிக்கு எழுதிய ஆரார்ச்சியுரையும் பொருட்சுவை மிக்கன. இங்ங்னமே இவ்வாராய்ச்சியுரையில் அநேக நயங்களுள்ளன. அன்றியும் பதிகங்களில் வரலாற்று முரண்பாடு உள்ள பகுதிகளுக்கும் மேற்கோளுடன் கல்லுரை கண்டிருப்பது போற்றத்தக்கது.
ஆகவே இந்தப் பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரையினைத் தமிழ் கூறும் நல்லுலகம் உவந்தேற்று உரையாசிரியரை மற்றைப் பாகத்தையும் வெளி யிடுவதற்கு ஊக்குவிக்குமாக,
27-07-19e3-á), வெலிக்கடை சிறைச்சாலை யில்  ܸ ,ܐܶ கொலே செய்யப்பட்ட பண்ணுகம் பண்டிதர்
ஆறுமுகம் சேயோன் (ஆங்கில ஆசிரியர்) அவரிடமிருந்த இந் நூல் அன்ஞரின் girr turtlesi) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

Page 9
xii
அண்ணுமலைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் வித்துவான் திரு. மு. அருணுசலம்பிள்ளையவர்கள்
எழுதியது
சங்கம் மருவிய தொகை நூல்களுள் ஒன்ருகிய பதிற்றுப்பத்தென்பது சொற்செறிவும் பொருட்பொலிவும் அருஞ்சொற்களும் ஆழ்ந்த கருத்துக்க ளும் ஒசையினிமையும் உடையதொரு சிறந்த நூலாகும். பண்டைச் சேர வேந்தர்களின் வரலாறுகளை அறிதற்கு இந்நூல் பெரிதுங் துணை புரிவது. இதன்கட் பல சேர மன்னர்களுடைய போர்ச்செயல்கள் வென்றிச் சிறப்புக் கள் ஆட்சிமுறைமை கொடைத்திறங்கள் அன்பின் இயைந்த ஒழுகலாறுகள் ஆகியவை நன்கு கூறப்பட்டுள்ளன. இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. ஆயினும் அதன் துணைகொண்டு பாடல்களின் பொருளையறிதல் கற்று வல் லார்க்கே இயல்வதாயிருந்தது. அதனுல் கற்கப்புகும் மாணவர்களும் எளி திற் சுவையுணர்ந்து படித்து இன்புறுதற்குப் பதவுரை முதலியவற்றுடன் கூடிய தெளிவானதோர் உரை வேண்டுமெனப் பலரும் எண்ணினர். இவ் வெண்ணத்தை நிறைவேற்றுதற்கு முன்வந்த புலவர்களில் பண்டிதர் திரு. சு. அருளம்பலவணுரும் ஒருவராவர்.
நண்பர் அருளம்பலவனருடைய உரையானது பதவுரை வினைமுடிபுகள் இலக்கணக் குறிப்புக்கள் கருத்துரை ஒப்புமைப்பகுதிகள் என்ற முறையில் அமைந்துள்ளது. எளிமையும் தெளிவும் இவ்வுரையில் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம் திருக்கோவையார் சிந்தாமணி முதலான பழம்பெரு நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் இவருக்குள்ள பயிற்சி மிகுதியையும் புலமைத் திறத்தையும் இவ்வுரை 15ன்கு எடுத்துக்காட்டுகிறது. இவ்வுரையினை எழுதி முடித்தற்கு 5ண்பர் அருளம் பலவனர் பல ஆண்டுகள் இடையருது உழைத்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை. இந்நூலுக்கு எழுதப்பட்டுள்ள பழைய உரை முழுதும் உள்ளவாறே காட்டப்பெற்றிருப்பது இப்பதிப்பிற் காணப்படும் ஓர் விசேடமாகும். இஃது இரண்டுரைகளையும் ஒப்புநோக்கியறிதற்கு உதவுகின்றது.
பதிற்றுப்பத்தில் இப்போது கிடைத்துள்ள எண்பது ப்ாடல்களுக்கும் இவர் பல்லாண்டுகளுக்கு முன்பே உரையெழுதி முடித்துள்ளாராயினும் முத லிலுள்ள 15ாற்பது பாடல்களுக்கு எழுதிய உரையே இப்போது வெளிவங் ள்ளது. எஞ்சிய பகுதியும் விரைவில் வெளிவரல் வேண்டும்.
நண்பர் அருளம்பலவணுருடைய உரைச் சிறப்புக்கள்பற்றி எழுதப் புகின் மிகவும் விரியுமாதலின் அதனை விடுத்து, இவர் பழையவுரையினையே பெரி தும் பின்பற்றிச் செல்கின்ருர் என்பதனைச் சில எடுத்துக்காட்டுக்கள் வாயி லாக இனிக் காண்போம்.
*கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்" (செய் 11)
 

xiii
என்றவிடத்து ஆரியராவார் இமயத்தின் கண் வாழும் அருந்தவ முனிவர்கள் எனவும், நிறைமொழி மாந்தராகிய அவரது ஆணையால் ஆண்டுவாழும் கவரி மான்கள் கவலையின்றியுறங்கிக் கனவுகாணும் எனவுங் கொண்டு இவர் பொருள் எழுதியிருப்பது பழையவுரையைத் தழுவியதாகும்.
இமயத்தில் முனிவர்கள் உறையும் செய்தி கண்ணகியின் படிவஞ் சமைத் தற்குக் கற்கொணரச் செல்லும் சேரன் செங்குட்டுவனைக் கண்டு ஆங்கிருந்து வந்த அருந்தவர்கள் கூறியதாலும் 'பொதியிலாயினும் இமயமாயினும் .ஒடுக் கங் கூருர் உயர்த்தோர் உண்மையின்' என்பதனுலும் அறியப்படும். மேலும், அத்தகைய முனிவர்கள் உறையுமிடங்களைச் சார்ந்து ஒன்றற்கொன்று பகை மையான விலங்குகளும் தம் பகைமை மறந்து ஒருங்கு துயில் கொள்ளுத லும் வேழம் போன்ற பெருவிலங்குகள் அவர்கட்கு வேண்டும் பணிசெய்த லும் உண்டு என்பது,
'கலைபாய்க் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற் செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக் களிறுதரு விறகின் வேட்கும் ஒளிறிலங் கருவிய மலை" (பெரும்பாண்) 496-500) எனத் திருவேங்கடமலை சிறப்பிக்கப்பெற்றிருத்தலாலும் தெரிகின்றது. ஆத லால் பழையவுரையும் அதனைத் தழுவி இவர் எழுதியிருப்பதும் பொருத்தமே யென எண்ணுகின்றேன்.
ஆயின், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடவாரிய மன்னரை வணங் கிய செய்தி ஈண்டுக் குறிப்பிட்டிருப்பதாகக் கொள்ளலாமெனின், இமயம் குமரி என்னும் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட மன்னர் களில் தம்மை மீக் கூறுவோருடைய மறந்தபக் கடந்து என்றதனுல் மீக்கூறிய ஏனைய மன்னர் களைப்போல ஆரியரையும் மறந்தபக் கடந்தான் என்பது பெறப்புடுதலாலும் வடக்குக் தெற்குமாகிய இருபேரெல்லைகளைக் கூற வந்தவிடத்து வடக்கின் கண்ணதாகிய இமயம் இத்தன்மைத்து என அதன் இயல்பு கூறுதலே ஆசிரி யர் குமட்டூர்க் கண்ணணுர் கருத்தாகலானும் 'ஆசிரியர் துவன்றிய பேரிசை யிமயம்' என்ற சொற்ருெடர் சேரலாதன் ஆரியரை வென்ற செய்தியுங் கூறப்பட்டிருப்பதாகப் பொருள் கொள்ளுதற்கு இடங்தராமையாலும் அது பொருந்தாது. இவற்றை உட்கொண்டே பழையவுரைகாரரும் நண்பர் அரு ளம்பலவனுரும் அங்ங்னம் பொருள் கூருது விடுத்தனர்போலும்.
"பலர்புகழ் செல்வம் இனிது கண்டிகுமே" (செய்யுள் 11) என்ற பகுதிக்கு இவர் எழுதிய விளக்கவுரையில்,
“செல்வம் என்றது மன்மீக்கூறுகர் மறந்தபக்கடந்த செல்வத்தை. இதுவே பழைய உரைகாரர் கருத்துமாதல் இதனுற் சொல்லியது அவன் வென்றிச் செல்வச் சிறப்புக் கூறியவாருயிற்று' என அவர் கூறுமாற்ருன் அறியப்படும். என்று எழுதி வெற்றியைச் செல்வம் என்று கூறுதற்கு அகநானூற்றிலிருந்து மேற்கோளுங் காட்டித் தங்கொள்கையை நிறுவியுள்ளார். இதனுல் வெற்

Page 10
xiv.
றிச் செல்வச் சிறப்பு என்ற தொடர்க்கு வெற்றியாகிய செல்வத்தின் சிறப்பு எனப் பொருள்கொள்ளவேண்டுமன்றி வெற்றிச் சிறப்பும் செல்வச் சிறப்பும் எனப் பொருள்கோடல் பொருந்தாது என அருளம்பலவனர் கருதுகின்ரு ரென்று தெரிகின்றது.
ஒருபாட்டிற் கூறப்படும் கருத்துக்கள் இரண்டாக இருப்பின் "அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஒலக்கச் சிறப்பும் உடன்கூறியவாருயிற்று" என அவ்விரண்டனையும் தனித்தனியே பிரித்து எண்ணும்மை கொடுத்து எழுது தலும், கருத்து ஒன்ருக இருப்பின் 'அவன் கொடைச்சிறப்புக் கூறியவாரு யிற்று' என ஒரே தொடராக எழுதுதலும் பழையவுரைகாரர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையுடன் முரணுதவாறு வெற்றியாகிய செல்வத்தின் சிறப்பு என அவர் விளக்கங் கூறியிருப்பது கினைக்கத்தக்கதாகும்.
"ஏறு பொருத செறு உழாது வித்துருவும்" (செய்யுள் 13) என்ற தொட ருக்கு எருமையேறுகள் ஒன்ருேடொன்று பொருதலால் சேறுபட்ட வயல் களாகிய உழாது விதைக்கும் இடங்களும் என்ற பொருள்பட இவர் உரை யெழுதியுள்ளார். இது "பொருத' என்றும் செறு' என்றுங் கூறப்பட்டுள்ள சொற்களுக்கு ஏற்ற உரையாகும். மேலும் இப்பாட்டில் வந்துள்ள 'புனல் வாயில்" என்பதற்கு “வாய்த்தலை' எனப் பொருள் கூறி வாய்த்தலை வேறு வாய்க்கால்வேறு என விளக்கியிருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும். இங்ங்னம் பல இடங்கள் எடுத்துக்காட்டலாமாயினும் இவ்வளவில் நிறுத்துகின்றேன். பழமையானதொரு நூலுக்கு எழுதப்பெறும் உரைக ளில் கருத்து வேறுபாடுகள் இருத்தல் கூடும். அதுபற்றி அவ்வுரைகளைக் குறைத்து மதிக்காமல் வரவேற்றல்வேண்டும்.
"பூத்த நெய்தல்’ என்னும் பதின்மூன்ரும் பாட்டின் பழையவுரையில் நெய்தல் எருமையின் நிரைதடுக்கு5வும் என்றது, நெய்தலானது அக்கரும்பு முதலாய மற்ருேரிரையின் பாங்களிற் செல்லாது தன்னையே நின்று தின்னும் படி தான் போதவுண்ட எருமை கிரையைத் தடுக்கும் இடங்களும் என்ற வாறு. இச்சிறப்பானே இதற்குப் பூத்தநெய்தல் என்று பெயராயிற்று' என விளக்கம் எழுதப்பட்டுள்ளது. டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் பதிப்பிலும் இப்பகுதி இவ்வாறேயுள்ளது.
இதன்கண் தான் போதவுண்ட' என்ற தொடர் பொருத்தமில்லாமற் காணப்படுகின்றது. இது தான்போதவிழ்ந்து என முன்பு எழுதப்பட்டிருந்து பிற்காலத்து ஏடெழுதுவோர் முதலானேரால் 'தான் போதவுண்ட' எனப் பிறழ எழுதப்பட்டிருக்கலாமென எண்ணுகிறேன். தான் போதவிழ்ந்து (தான்-அது; அங்கெய்தல், போதவிழ்க் து-பூத்து) என இருப்பின் பொருளும் பொருத்தமும் உடையதாய் அமையும். இதனே 5ண்பர் அருளம்பலவனரும் ஏனைய அறிஞர்களும ஆராய வேண்டுகிறேன்.
இங்ங்னம் அரிதின் முயன்று ஆராய்ந்து உரையெழுதித் தம் கைப் பொருள்கொண்டு அச்சிட்டு இக்நூலே வெளிப்படுத்திய நண்பன் அருளம்பல வனரைத் தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப்

Xν
பாடத்திட்டக் குழுவினர் இவ்வுரையுடன் கூடிய நூலைத் தமிழ் மேல் வகுப்புக்குப் பாடமாக வைப்பராயின் அதனுல் இவர்பெறும் ஊதியம் பெரிதா காதெனி னும் இவரை ஒருவகையிற் பெருமைப்படுத்தியதாகும். மேலும் இத்துறை யிற் செல்லுமாறு ஊக்கம் ஊட்டியதுடன் இதன் தொடர்பாக எஞ்சியுள்ள பிற்பகுதி வெளிவருதற்கு அது ஓரளவு உதவியாகவும் இருக்கும்.
தமிழ்மாணவர் ஒவ்வொருவரும் இவ்வுரையுடன் கூடிய பதிற்றுப்பத் தில் ஒவ்வொருபடி வாங்கிப்படிப்பராயின் அதுவே இவர்க்குச் செய்யுங் கைம் மாரு கும்.
திரு. அருளம்பலவனர் வாழ்க, அவரது முயற்சி வெல்க.
அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர், சித்தாந்தப்பேராசிரியர், விரிநூற்புலவர், உரை வளம்
மகாவித்துவான் திரு. ச. தண்டபாணிதேசிகரவர்கள் எழுதியது.
ఉంభాగలుGYసావా - பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. விழுமியநடை பழு கியசொல் கருத்தாழம் தன்மையொடு மரீஇய கற்பனைத்திறம் வரலாற்று ஆணுக்கம் முதலிய பல்லாற்ருனும் பழமையும் செறிவும் உடையது. புல வர்கள் புலத்தாழம் காணும் அளவுகோலாக அமைந்தது. சேரமன்னர் எண்மருடைய மரபு மாண்பு வீரம் வெற்றி கொடை முதலிய வாழ்க்கை வரலாற்றை ஒரு சேர அறிந்துகொள்வதற்குப் பெ ரு ந் துணையா வது. பாடாண்திணை ஒன்றையே கூறும் நூறு பாடல்களையுடையது என நச்சினர்க் கினியர் கூறுவர்.
வரலாற்றுக்கருவூலமாகிய இந்நூலின் கருத்தாழத்தை அறியப் பரந்து பட்ட சங்க இலக்கிய அறிவும் தமிழக வரலாற்று நுண்மதியும் மிகமிக இன்றி யமையாதன. இதற்கு ஊன்றுகோலாக மிகப் பழமையான அரும்பதவுரை ஒன்று உள்ளது, அது அரும்பதக் குறிப்புமாகாமல் பொழிப்புரையுமாகா மல் தேவையான இடங்களுக்குச் சொன்னயமும் பொருளும் இலக்கணக் குறிப்பும் தக்து செல்கிறது.
இந்நூலை முதற்கண் பதிப்பித்த என் ஆசிரியப் பெருந்தகை மகாமகோ பாத்தியாய ஐயர் அவர்களின் முற்சேர்க்கையும் பிற்சேர்க்கையும் அடிக்குறிப் பும் ஒப்புமைப் பகுதிகளும் பாடற்பொருளை அறிதற்குப் பெரிதும் துணை செய்வன. ஆணுலும் தொடர்புறுத்திப் பொருளுணரும் வகையில் எல்லாருக் கும் இடர்ப்பாடு இருந்துகொண்டுதான் இருந்தது.
அடியேன், வித்துவான் புலவர் B. O L; M. A. மாணவர்கட்குப் பாடம்சொல்ல நேர்ந்தபோது யான் ஐயரவர்களிடம் கேட்டறிந்த காலத் தைக்காட்டிலும் சொற்ருெடர்பு கண்டு பொருளமைதி கொண்டு ஆய்ந்து

Page 11
xvi
ணர்ந்து அறிவிக்கமாட்டாமையால் சிற்சில இடங்களில் இடர்ப்படநேர்ந்த தும் உண்டு. அதனை ஐயரவர்களுடைய வழிவழிப் பதிப்புக்களும் பின் னெழுந்த சேரர் வரலாற்று நூல்களும் செக்தமிழ்க் கட்டுரைகளும் பிறநூற் பதிப்புக்களில் எடுத்தாண்டுதவிய விளக்கங்களும் மாருதி தேடித்தந்த மருத்து மலையாகப் பயன்பட்டன. ஆனலும் இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரை யில்லையே என்ற குறை இடைக்கிடை தோன்றிக்கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் எங்கள் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பணிபுரிந்த வித்து வான் சிந்தாந்தகலாநிதி உயர்திரு ஒளவை. துரைசாமிப்பிள்ளையவர்கள் தக்கதோருரை தந்தார்கள்.
இதுபோழ்து, நுண்மாண் நுழைபுலமும் சங்க இலக்கியங்களில் முறை யான பயிற்சியும் பழையவுரையாசிரியர்கள்பால் மாருத பற்றும் புலவரைப் போற்றும் பண்பும் செருக்கற்ற சிங்தையும் உடைய அன்பர், யாழ்ப்பா ணம் காரைநகர் பண்டித அருளம்பலவனுர் அவர்கள் சிறந்தவுரையைச் செந்தமிழுலகிற்கு அளிக்கின்றர்கள்.
பொதுவாக நூல்களுக்குத் தாம்பெற்ற பலதுறையறிவைப் பலரும் கண்டு மதிக்க எழுந்தவுரைகளும், படிப்பார் தகுதியறிந்து அவர்கட்குத் தேவையான அறிவுவேட்கையையகற்றும் உரைகளும், பலர்கண்ட நுணுக் கங்களைத் தமவாக்கிக்கொள்ள பொருளிட்ட பதவுரையைப் பொழிப்புரை யாக்கிப் பொழிப்புரையைப் பதவுரையாக்கி எழுந்தவுரைகளும், எடுத்த நூற் கருத்தொடு ஒட்டியவாக எட்டப்பறந்து சென்று படிப்பவர்களைக் கண்கா ணுத் தூரம் இழுத்துச் சென்று மயங்கவைக்கும் உரைகளும் ஆகப் பலவகை உரைகள் எழுந்தன. அவை போலாது இந்நூலுரை நூலெழுந்தகாலத் துப் பழமையோடு ஒன்றத் தேவைக்கு வேண்டிய அளவு தன்னுரையானும் பிறநூலானும் கருத்தை விளக்கிச் செல்கின்றது.
இவ்வுரையாசிரியர் தாம் இடர்ப்பட்ட இடத்தும் தமது விளக்கத்தைப் புகுத்தக்கருதிய இடத்தும் பாடத்தைத் தம் விருப்பம்போல மாற்றிக்கொள் ளாமல் மரபுவழிவந்த பாடப்போக்கிலேயே இவ்வுரையை நடத்திச்செல் வது இவரது நாணயத்திற்கு (5ல்ல எடுத்துக் காட்டு.
இவ்வுரை ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை முடிபு ஆராய்ச்சியுரை பழையவுரை ஒப்புமைப்பகுதி மேற்கோள் என்ற ஆறு பிரிவாக எழுதப் பெற் றுள்ளது. பழையவுரை தந்த வளர்ச்சியே தம்முரையென்பதைப் பலவிடங்க ளில் படிப்போருக்கு வற்புறுத்திச் செல்கின்றது.
பதவுரை மாற்றுச்சொல்லாகமட்டும் அமையாமல் கருத்தறிய உதவும் வழக்குச் சொல்லால் தேவைக்குமிகாமல் உருபு முதலியவற்றை வேண்டிய விடத்து விரித்து மரபு பிழையாது விளக்கமாக அமைந்திருக்கிறது.
முடிபு பாடத்திற் கருத்தைத் தொகுத்துணர உதவும் திறவுகோல். இதில் எங்கேயாவது தேய்வு வளைவு ஓடிவு பிசிர் இருக்குமாயின் பாட்டுப் பூட்டுத் திறக்காது. இதனை 5 ன்ருக மனத்திருத்தி உரையாசிரியர் முடிபுகளைத் தொகுத்திருக்கிருர்,

Χγii
உண்மை காணவும் உறுதியான அறிவு பெறவும் உதவுவது ஆராய்ச்சி. எடுத்த கருத்து மணிகள் ஆராய்ச்சிச் சாணையிற் றீட்டப்பட்டாலல்லது ஒளி ராது. ஆகையால் இவ்வுரையாசிரியர் தம் கருத்துக்கொத்த - வலியுறுத்தக் கூடிய விளக்கங்களைப் பலநூல்களினின்றுங் தந்து செல்வது மிக உயர்ந்த முயற்சியாகும்.
பழையவுரை பழம் பதிப்புக்களிலுள்ளபடியே திருத்தமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. புதியவுரையின் விரிவும் நயமும் உணரத் துணைசெய்கின்றது" சற்றேறக்குறைய காலத்தால் ஒத்த சங்க இலக்கியங்களில் இந்நூற் கருத்துக்களும் சொற்ருெடர்களும் எங்ங்ணம் பரந்து வேரூன்றியுள்ளன என் பதை அறியவும் அக்காலத்து மரபுகளைத் தொகுத்துணரவும் பொருள்கொள் ளும்வகையில் துணிவு பிறக்கவும் ஒப்புமைப்பகுதிகள் மிக இன்றியமையா தன. இதனை நன்கெழுதவேண்டுமாயின் பரந்த சங்க இலக்கிய அறிவும் உரையாசிரியர்களின் நுணுக்கமான உரைகளில் நினைவு வன்மையும் பெரி தும் தேவை. அவற்றில் இவ்வுரையாசிரியர் முழுவெற்றியுடன் விளங்கு கின்ருர் என்பதை இவ்வுரை தெளிவாகக் காட்டுகின்றது.
இலக்கணவுரையாசிரியர்கள் தமதுரைகளில் ஆங்காங்கு எடுத்தாண்ட பகுதிகளை ஆங்காங்கே காட்டியிருப்பது உண்மையுணரப் பெரிதும் உபகா ரப்படுகிறது.
இவ்வண்ணம் அமைந்த இவ்வுரைப்படைப்பு பல்லாற்ருனும் அறிஞர் உலகிற்கு நல்விருந்தாகும். ஆதலால் இவ்வுரையை நன்முகச் சுவைத்து ஒருசில குறிப்புக்களைத் தொகுத்து கோக்குவோம்.
"புண்ணுமிழ் குருதி’யுள் அணங்குடையவுணர் ஏமம் புணர்க்கும் என்ற பகுதிக்கு இதுவரை யாம் கண்டவுரைகள் "பிறரை வருத்துதலை இயல்பாக வுடைய அவுணர்கள்' என விளக்கங்தந்தன. இவ்வுரைகாரர் ஏமம் புணர்க்கும் எனப் பின் வருதலைச் சிந்தித்து அணங்குடை யவுணர் என்பதற்கு 'பிறரை வருத்துதலையியல்பாகவுடைய அவுணராயிருந்தும் அப்பொழுது தாம் வருங் துதலைவுடையராயிருந்த அவுணர்' எனவுரைகண்டது யேம் பயப்பதொன் ருகும். இப் பகுதிக்குத் தம் கருத்திற்கு அரண்செய்ய "கொள்ளாத் தெவ்வர் கொண்மா” என்ற பரிபாடற் பகுதியையும் அதன் உரைக் குறிப்பையும் காட் டியிருப்பது ஆழமும் விளக்கமும் தெளிவும் தருவதாகும்.
இன்னும் இப்பாடலில் 'ஆரியர் துவன்றிய பேரிசையிமயம்' என்ற பகுதிக்கு, தவமுனிவர்கள் 5ெருங்கிய இமயம் என்றும், அவர்கள் ஆணைப் படி இமயத்தில் அனைத்தும் கடக்கின்றன என்றும் உரையும் விளக்கமும் தந்திருப்பது இலக்கியவுலகில் சாதிக்காழ்ப்பிற்கு இடனின்றி எழுந்த உரை யாகும. -
'மறம்வீங்கு பல் புகழில்" "வாளரில் மயக்கி என்ற பகுதிக்கு "வாட் பிணக்கம் உண்டாகப் போர் செய்து' எனப் பொருள்கொண்டு அதற்கு மேற் கோளும் விளக்கமும் பிறவுரைகளோடு ஒப்பிட்டுச் சிறந்தனகொள்ள வைத்த பெருமை பாராட்டுக்குரியது.

Page 12
xviii
'துயிலின் பாயலுள்" கணையமரங்களையும் காவல் மரங்களையும் கதவங் களையும் குத்தி நுதி மழுங்கிய கொம்பினையுடைய யானைகள் பன்றி போன் றனவாய்ப் பாசறைக்கண் முழங்கின என அறிவிக்கும் போது வரும் "மரங் கொல் மழகளிறு முழங்கும் பாசறை' என்ற அடிக்கு நுதி மழுங்கியதற்கு ஏதுவாகிய பகைவர் 15ாட்டு மரங்களையு கதவங்களையும் விட்டு தாம் கட் டப்பெற்றிருக்கும் கட்டுத் தறிகளையே இப்பொழுது அழிக்கின்றன எனப் பொருள் தந்தமை மிகவும் இன்பம் பயப்பது. பாசறைக்கண் கதவமும் காவன் மரமும் கணையமும் ஏது, கட்டிய கட்டுத்தறியொன்றே இருக்கும். அதனைச் சாடுகின்றது யானை என்ற பொருளே சாலச் சிறத்தல் தெளிக.
'கிரையவெள்ளத்துள்” தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பொன் றைக் காண்கின்ருேம். அங்கு ஆள்வழக்கற்றமையால் வேளைக்கீரை முளைத் திருக்கிறது. சுரைபடர்ந்திருக்கிறது. பீர்க்கங்கொடிகள் கூரைகளின்மேற் படர்ந்துள்ளன. நீரற்ற சாலில் செங்காங்தள் அடிசி வந்து உலர்ந்திருக் கிறது என்று அறிவிக்க வந்தவர் 'ரேறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதில்" என்கிருர், இதில் நிறை என்பதற்குச் சிலர் உழுசால் என உரைகண்டனர். இவ்வுரையாசிரியர் நீர்ச்சால் என உரைகொண் டிருக்கிருர், "நிறைஇ என்று வினைமுதற் பொருளைத் தரும் இகர விகுதி புணர்ந்து கெட்டு நிறை என நின்று கிறைதலையுடையது என்னும் பொருள் படுவ்து. இது நீர்ச்சாலையுணர்த்துமேயன்றி உழுசாலையுணர்த்தாது வீட் டுக்கொல்லையில் நீர் தேங்கும் உழுசாலுக்கு இடமின்று அதுவும் போரில் அழிந்துபட்ட ஆளற்ற ஊரில். ஆதலால் நீர்ச்சாலாகிய தாழியெனப் பொருள் கோடலே பொருந்துவதாம். திவாகரம் முதலிய நிகண்டுகளும் "கலம் நிறை பொழிதர” என்ற சீவகசிந்தாமணி 9ே-ம் பாடற் பகுதிக்கு நச்சினர்க்கினியர் நல்கிய உரையும் "தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி' "தாழிநறுங் குவளை" முதலிய எடுத்துக்காட்டுக்களும் இக்கருத்துக்குத் தக்க துணையாம். இவ்வண்ணம் ஆய்ந்துணந்தெழுதிய உரைப்பகுதிகள் பல.
“ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரக்து" (43; 13) என்ற பகுதிக்குக் களம்பாடும் பொருநர் பாணர் முதலியோர்க்குச் சுரங்து எனப் பொருள் கோடல் இயையாமையைக் காட்டும் ஏதுக்களும், "மகளிர். விருந்தின்வீவ் பிடி எண்ணுமுறை பெருஅ' (43:2-5) என்பதற்குக் காட்டியானை விரும் பும் பிடியெனல் பொருந்தாது. தம் கடையொடு ஒத்தலின் பெண்கள் விரும் பும் பிடி’ எனலே பொருக்தும் எனக் காட்டும் மறுப்புரையும், 'ஆர்கலிவா னம்' (43:18) என்பதற்கு முழக்கத்தையுடைய மேகம் எனப் பொருள் கோடலே பொருந்துவதாம் என்ற விளக்கமும் மிக இன்பம் பயப்பன.
இன்னும் பல ந பங்களும் உர நுணுக்கங்களும் மிளிர்கின்றனவாயி னும் ஒருபானே சோற்றுக்கு ஒருசோறு பதமாக (தாலி புலாக நியாயமாக) சிலவே எடுத்துக்காட்டினேம். ஆகவே இப்புதியவுரை ஏனையவுரைகளைக் காட்டிலும் பல்லாற்ருனும் சிறப்பெய்தி விளங்குகின்றதெனலாம்.

xix.
இவ்வண்ணம் பதிற்றுப்பத்துக்குச் சிறந்தவுரையெழுதிச் செந்தமிழுக் குச் சிறப்புத்தந்த ஞானச் செல்வம் அருளம்பலவனுர் அவர்களுக்கு எல்லா 15லனும் தந்து இனிது காக்க என ஞானமா 5டராசப் பெருமான் திருவடி யிணையைப் போற்றுகின்றேன்.
யாழ்ப்பாணத்துப் புன்னுலைக்கட்டுவன் மகாவித்துவான் பிரம்மழநீ சி. கணேசையர் அவர்கள் எழுதியது.
பதிற்றுப் பத்து என்னுஞ் சங்கநூலின் இரண்டாம் பத்திற்கு, காரை நகர், பண்டிதர் அருளம்பலமவர்கள் ஒரு ஆராய்ச்சியுரை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கிருர்கள். இப்பதிற்றுப்பத்திற்குப் பழையவுரை ஒன் றும் பூருமாங், ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட புத் துரையொன்றும் உளவாயினும், பண்டிதர் அவர்கள் பலநூற் பிரமாணங்க ளோடு விரிவான ஆராய்ச்சியுரை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கின் ருர்கள். பல இடங்களில் அவர்களது உரை முன்னேய புத்துரையினும் சிறப்பாகவே காணப்படுகின்றது. ‘கின் செல்வங் கேட்டொறும்" "மழகளி றரிஞமி ருேப்பும்' 'எழுமுடி கெழீஇய அகலம்’ ‘வெய்துற வறியா நந்திய வாழ்க்கை' 'கல்லெழில் 5ெடும்புதவு' முதலாய தொடர்களுக்கு எழுதிய உரைக் குறிப்புக்கள் நோக்கத்தக்கன.
இந்த இரண்டாம் பத்தினுேடு ஏனைய பத்துக்களையும் அச்சிட்டு வெளிப் படுத்தின் படிப்போர்க்கு மிக உபகாரமாயிருக்கும். பண்டிதர் அவர்களு டைய முயற்சியும் அறிவும் மிகவும் போற்றத்தக்கதாகும். பிரமாணங்களைச் சுருக்கிக் காட்டுவது உரைக்குச் சிறப்பாயிருக்கும் என்று எண்ணுகிறேன். தமிழபிமானிகள் இதனை அச்சிடுதற்கு உதவிசெய்வார்களாக,
இராமநாதபுரம் ராவ்ஸாஹேப் மு. இராகவையங்கார் அவர்கள் எழுதியது.
தாங்கள் அனுப்பின பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை நூலைப் பார்த்தேன். சொல்லாராய்ச்சி பொருளாராய்ச்சி பழையவுரை என முப்பகுதிகளை ஒவ் வொரு பாடலுங்கொண்டு தங்கள் நூல் விளங்குகின்றது. இவற்றுள் சொல் லாராய்ச்சி சிறிது விரிவுடையதே எனினும் பழையசொல் தொடர்களை முன் னேர் பலரும் ஒருமுகமான பொருணுேக்கங்கொண்டு காலவழக்குக்கேற்ற வாறு ஆட்சிபுரிந்து வந்தவர்கள் என்பதனே விளக்குவதால் வேண்டத்தக் கதே.
அவ்வாறே பொருளாராய்ச்சியும் வேண்டிய பொருட்கூறுகளையும் வழக் குகளையும் அறிய விளக்குவதோடு கற்றேரும் மற்றேரும் அறிதற்குரிய அரிய செய்திகள் பலவற்றுை யும் தெரிவிக்கின்றது.

Page 13
XX
மூன்முவதான பழையவுரை இவற்றுக்கெல்லாம் மூலமாய் பேருதவி புரிவ தாதலாலும் முன்னேர் மொழி பொருளைப் போற்றிக்கொள்ளுதல் நம் கடமை யாதலாலும் பெரிதும் வேண்டத்தக்கதேயாம். ஆக மூவகையிலும் தங்கள் ஆராய்ச்சியுரை இன்பம் பயக்கின்றது. சுருங்கச் சொல்லின் தமிழ்மொழிக்கு ஒரு கருவூலம் போலவும் விளங்குகின்றது தங்கள் நூல் எனலாம்.
யாழ்ப்பாணத்துச் சைவாசிரிய கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழு தி யது.
MeSMYG)GYpnas *நற்றிணை நல்ல குறுங்தொகை" என்ற பாட்டிற் பதிற்றுப்பத்துக்கு 'ஒத்த" என்று ஒரு அடை கொடுக்கப்பட்டிருக்கின்றது. பதிற்றுப் பத்துத் தான் பொருளுக்கொத்த சொற்கள் தொடர்களைச் சிறப்பாக உடையது போலும், 'புண்ணுமிழ் குருதி” “மறம் வீங்கு பல்புகழ்" என்றற் ருெடக்கத் துத் தொடர்களால் ஒவ்வொரு பாட்டும் பெயரிட்டு வழங்குவதும் இதனை வலிசெய்யலாம்.
கருத்துலகு தடுமாறிச் சொல்லுலகு தளர்ந்துபட்ட இக்காலத்துக்குப் பதிற்றுப் பத்துப் புறம்பானதொரு பாஷையாய்த் தோன்றும். "வரைமருள் புணரி வான்பிசிருடைய’ என்று பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்துத் தொடங்குகின்றது. முதற் பத்துச் சிதைந்து போயிற்று. தொடங்குகின்ற இந்த அடியில் 'உடைய' என்ற சொன்மாத்திரம் பொருள் புலப்படக்கூடிய தாயிருக்கின்றதெனினும் எது உடைய என்று விசாரிக்கும் வழி அதுவும் மரபு நமக்கெட்டாத கடுஞ்சொல்லாய் விடுகின்றது. பிசிர் என்ற வார்த்தை வித்துவ உலகத்தையே கலக்கிவிடும்.
மனக் கலவை' என்ற தொடரை யாராவது முன்பின் கேள்விப்பட்ட துண்டா? இத்தொடரும் இந்த முதற்பாட்டில் வருகின்றது. பதிற்றுப் பத் தின் சொற்ருெடர் மிடுக்கை ஊகிக்க அதன் தொடக்கமே போதுமானது.
இப்படிப்பட்ட பதிற்றுப்பத்துக்குச் சுருக்கமான பழைய குறிப்புரை ஒன்று உண்டு. அது பதிற்றுப்பத்தின் சொன்னயம் பொருணயங்களே நுகர் தற்கு ஒரு சிறிதும் போதாது. பண்டித பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் குறிப் பிட்ட பகுதியை மனப்பாடஞ்செய்து ஒருவாறு ஒப்பித்து வந்தார்கள். பாரிய மகா வித்துவான்கள் சிரமத்துக்கும் பொருட் செலவுக்கும் அஞ்சி உரை வகுத் கப் பின்னின்றர்கள். இதனைக் கண்டு சசிக்காத பண்டிதர் திரு. சு. அருளம் பலம் அவர்கள் தமது வாழ்காளே அர்ப்பணம் செய்து பதிற்றுப்பத்தில் வரும் அருஞ்சொற்கள் தொடர்கள் உவமைகள் உயர்ந்த கருத்துக்கள் என்றித் தொடக்கத்தனவற்றுக்கெல்லாம் பண்டைச் சான்றேர்களின் வாக்குகளில் வழக்காறு காட்டிப் பதவுரை விசேஷவுரைகள் வகுத்து, இனி விரித்தற்கு

xxi
இடமின்றி விரித்து பழையவுரையையுங் தந்து, ஒரு அருமந்த உரை இயற்றி யிருக்கின்றர்கள். இவ்வுரையை இயற்றுதற்குத் தொல்காப்பியம் முதலிய பண்டைச் சான்றேர்களின் நூலுரைகளை எத்தனை ஆயிரம்முறை திருப்பித் திருப்பிப் படித்திருப்பார்களோ!
காதற் கதைகளே எழுதிக் குவிக்கின்ற இந்தக்காலத்திலே இந்த உரை அமிர்தத்தின் அருமை அறிந்து ஆசி வழங்குவார் அரியர் ஆயினும், வானுலக வாசியாகிய டாக்டர் உ. வே. சாமிகாதையர் அவர்கள் இதனைக் கேள்விப்பட் டுக் காமுற்றுக் கசித்துருகிக் கண்ணிர்வார ஆசிவழங்குவார்களென்றே நான் 15ான் கருதுகின்றேன். இவ்வுரையின் அருமை பெருமை சிரமம் முதலியவை களே அறிக்கு மதித்தற்குரியவர்கள் ஐயர் அவர்கள்.
**செயற்கரிய செய்வார் பெரியார்"
சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்
டாக்டர் திரு. மு. வரதராசனுர் M. A.; M. O L ; PH. D. 9y6 u fi 35 Gir GT (!pg) uLugii.
googgoo 93 QS29)
பதிற்றுப்பத்து-இரண்டாம் பத்தின் ஆராய்ச்சியுரையினைப் படித்து உவந்தேன். உரையாசிரியர் திருவாளர் அருளம்பலம் அவர்களின் இலக்கியப் பயிற்சியும் ஆராய்வுத் திறனும் போற்றற்குரியன. பண்டைய மரபினையுங் காத்து முன்னைய உரையையும் போற்றித் தாம் காணும் புதிய உரைப்பகு திகளையும் இயைபுபடுத்தி இதனைத் தந்துள்ளார். அடிக்குறிப்பாகவும் மேற் கோளாகவும் அவர் எடுத்துக்காட்டியுள்ள குறிப்புக்கள் எண்ணில. பொறுமை மிக்க உழைப்புத் திறனும் நுண்ணிய ஆராய்ச்சி வன்மையும் விளங்கும் வகை யில் ஆங்காங்கு அமைக் துள்ள விளக்கங்கள் பற்பல. இவ்வுரையாசிரியரின் தொண்டு சிறப்புறுக; தொடர்ந்து பெருகி வளமுறுக.
சென்னை பச்சையப்பன் கல்லூரித் துணைத் தமிழ்ப் பேராசிரியர்
திரு. அ. மு. பரமசிவானந்தம் M. A., M. Litt. egy6) is Gir GT (p5) ugy
அன்புடையீர்!
வணக்கம். தாங்கள் அனுப்பிய பதிற்றுப்பத்தின் ஆராய்ச்சியுரை (இரண் டாம் பத்துக்கு உரியது) வரப்பெற்றேன். பத்துப் பாடல்களுக்கும் மிக விரிந்த நிலையில் விளக்கம் காட்டி ஒப்புமைப் பகுதிகளைப் பிற இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டி, பதவுரையும் விளக்கமும் பொருத்தி அமைத்துள்ள தங்க ளது ஆராய்ச்சி உரை சாலச் சிறந்ததாக உள்ளது. சொல்லுக்குச் சொல் விளக்கம் தரும் வகையில் அவற்றுள் பொதிக் துகிடக்கும் கருத்துக்களைத் துருவி ஆராய்ந்து வெளியிடும்முறை போற்றற்குரியதாகும்.

Page 14
xxii
இதுபோன்ற பிறபகுதிகளுக்கும் உரைவரும் என எண்ணுகின்றேன். தங்கள் பணி தமிழன்னைக்குச் சிறந்த தொண்டாக அமைந்துள்ளது. தங்கள் பணி சிறப்பதாக,
சென்னை பச்சையப்பன் கல்லூரித் துணைத் தமிழ்ப் பேராசிரியர்
திரு. அ. ச. ஞானசம்பந்தன் M. A. அவர்கள்
- எழுதிய து
sacreas (20so
பண்டித அருளம்பலவனரின் பதிற்றுப்பத்து முதற் பாகத்தின் உரை யைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று பலராலும் விரும்பிக் கற்க முடியாத பழங் தமிழ் நூல்களுள் பதிற்றுப்பத்தும் ஒன்று. காரணம் எளிய உரை ஒன்று இன்மையே. இக்காலம் நல்ல உரைகள் வந்துகொண்டிருக்கின்
றன.
அன்பரவர்கள் மிகுந்த உழைப்பை மேற்கொண்டு இதனை எழுதியுள் ளார். ஒவ்வொரு சொல்லுக்கும் சொற்ருெடருக்கும் அவர் தருகின்ற மேற் கோளாட்சி அவருடைய பரத்துபட்ட புலமையைக் காட்டுகின்றது. மேலும் ஆராய்ச்சிசெய்ய விழைவோர்க்கு இப்பகுதிகள் பெரும்பயன் விளைக்கும் என் பதில் ஐயம் இல்லை. பதிற்றுப்பத்து மிகவும் காலத்தாற் பிற்பட்ட நூல் என்ற தற்கால ஆராய்ச்சியாளர்க்கு 15ல்ல மறுப்பாக அமைந்துள்ளன அரு ளம்பலவனுரின் மேற்கோள்கள். சங்க இலக்கிய மேற்கோள்களையே பெரி தும் காட்டியுள்ளார்.
“நின் செல்வம் கேட்டொறும் (பக். 37) என்றுள்ள சொற்கட்டு நயம் கூறுவது மிகுதியும் சுவை பயப்பதாகவுளது. அரிதிற் கடப்பதை நீந்தி என்று கூறுவர் பழைய இலக்கிய ஆசிரியர். அச் சொல்லின் சுவைப்பாட் டையெல்லாம் சன்கு விளங்கியுள்ளார். 'எழுமுடி கெழீஇய திருருெமர் அகலத்து" (பக். 80) என்ற தொடருக்குத் தடைவிடைகளாற் பொருள்கண்டு தம் கருத்தை நிறுவுதல் பழைய உரையாசிரியர்களே நினைவூட்டுகிறது. தம் கருத்துச் செம்மையானதே என்பதை நிறுவப் பழைய இலக்கியங்களி லிருந்தே மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.
எவ்வாற்ருன் நோக்கினும் உரையாசிரியர் பெரிதும் பயனுடைய இரு செயலைச் செய்தாராயிற்று. காலத்திற்கேற்ற தொண்டு; சிறிதன்று பெரிது. தமிழுலகம் ஏற்றுப் பயனடைவதாக, விரைவில் ஆசிரியர் ஏஆனய பத்துக் கட்கும் உரை எழுதி வெளியிடுவாரென எதிர்பார்க்கிறேன்,
كانسسكسند * * :* ' سمو
namama

xxiii
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்
பேராசிரியர் டாக்டர் திரு. மா. இராசமாணிக்கனுர் M. A.; L. T.; M. O. L., PH. D. 9 au fi 35 Gir GT (up G) Luigi
நம் செந்தமிழ் மொழியில் இற்றைஞான்று கிடைத்திருக்கும் நூல்க ளுள் மிகத் தொன்மை வாய்ந்தவை எட்டுததொகை நூல்களாகும். அந்நூல் களுள் பதிற்றுப் பத்தும் ஒன்ருகும். பத்துப்பத்துப் பகுதிகள் சேர்ந்து அமைந்தமையின் பதிற்றுப்பத்து என்னும் பெயர் இதற்கு வந்தது. இக் நூல் முழுவதும் சேரமன்னர்களைப் பாராட்டுவது. ஒவ்வொரு சேர வேந்த ரையும்பற்றித் பத்துப் பத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை வண்மை தூக்கு பெயர் முதலியன அமைக் துள்ளன. ஒவ்வொரு பாட்டிலும் பொருளாற் சிறப்புடைய தொடரொன்று அவ்வப்பாட்டின் பெயராக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தின் முடிவிலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவனுடைய பெயரும் செயல்களும் அவனைப் பாடி னேர் பெயரும் பத்துச் செய்யுட்களின் பெயர்களும் பாடிய புலவர் பெற்ற பரிசிலும் சேர அரசர் ஆண்ட கால அளவும் ஒவ்வொரு பதிகத்தாலும் தெரி கின்றன். இந்நூலுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. ஆனல் அவ்வுரை வகுத்த சான்ருேரது வரலாறு காலம் முதலியன தெரியவில்லை. இப்பதிற் றுப் பத்து நூலுள் எட்டுப் பத்துக்சுளே கிடைத்துள்ளன. அதனுள் இரண் டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க்கண்ணணுர் பாடிய தாகும்.
இவ்விரண்டாம் பத்துக்குப் பண்டிதர் திரு. சு. அருளம்பலவனர் பழைய உரையை அகப்படுத்தி இனிய நல்லுரை ஒன்று வரைக்துள்ளார். இவ்வுரை பாடலும் கண்ணழிப்புரையும் மேற்கோளும் அகலவுரையும்கொண்டு ஒளிர் கின்றது. இறுதியில் பழைய உரையும் இடம்பெற்றுள்ளது. இனிய செக் தமிழ் மொழி மறுமலர்ச்சி பெற்றுவரும் இக்காலத்தில் இக்கல்லுரை இன்றி யமையாததொன்ருகும். ‘நின்செல்வங் கேட்டொறும்" "மழகளிறரிஞமி ருேப்பு" 'நீரழிபாக்கம்' 'எழுமுடிகெழீஇய அகலம்' 'ரேறு நிறைமுதற் சிவந்த காந்தள்' 'கல்லெழில் 5ெடும்புதவு" முதலாய தொடர்களுக்கு எழு தியுள்ள உரைக் குறிப்புக்கள் நோக்கத்தக்கனவாகும்.
இந்நூல் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பயிலும் மாணவர்கட்குப் பாடநூ லாக அமைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் பெற்றுப் பிறங்குகின்றது. இவ் வுரையினல் ஆசிரியரது நுண் மாண் நுழைபுலம் வெள்ளிடை விலங்கலெனத் தெரிகின்றது. ஆசிரியர் முயற்சி வெற்றிபெற்று எல்லா வளங்களும் பெற
த்துகின்றேன். இறையருளே வழுத்துகின்றேன். 9 22)
&ể
لیہہ یہ
Fr_r *. *ణ" "

Page 15
xxiv
அண்ணுமலைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் திரு. T W. சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் எழுதியது
நலம். தங்கள் அன்புகூர்ந்தனுப்பிய பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை -இரண்டாம் பத்து உரியகாலத்தில் கிடைத்தது. படித்துப் பெருமகிழ்ச்சி யெய்தினேன். சங்க நூல்களிலும் பிறநூல்களிலும் தாங்கள் சிறந்த புலமை யுடையவர்கள் என்பதைத் தங்கள் பேருரை நன்கு புலப்படுத்துகின்றது. நுண்மாண் நுழைபுலமிக்க தங்கள் ஆராய்ச்சித் திறனையும் ஒப்பற்ற சீரியு. உழைப்பினையும் உளம் உவந்து மிகமிகப் பாராட்டுகின்றேன். இத்தகைய விரிந்த ஆராய்ச்சியுரைகளே படிப்போர்க்குப் பேரறிவை உண்டுபண்ணும் வாய்ப்புடையனவாகும். ஆதலால், பதிற்றுப்பத்து முழுவதற்கும் தங்கள் ஆராய்ச்சியுரை வெளிவரவேண்டும் என்பது உள்ளக்கிடக்கை. தங்கள் அரிய தமிழ்த் தொண்டினைத் தமிழ்மக்கள் நன்குணர்ந்து பாராட்டிப் பயன் கொள்வார்களாக, எல்லாம் வல்ல இறைவன் தங்கட்குப் பல்வகை நலன்க ளும் அருளுவாராக,
ammosm«ammaéaumm
தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்
வித்துவான் திரு. செ. சிங்காரவேலனுர் B.A. அவர்கள்
எழு தி ய து
McCaCYo)06Yoraxesa
சங்கப் பனுவல்களில் மிகவும் பழையதென வல்லுசராதல் மதித்துப் போற்றப்பெறும் பெரும்புகழ் வாய்ந்தநூல் பதிற்றுப்பத்து ஆகும். இதன் கண் முதற்பத்தும் இறுதிப்பத்தும் நீங்கலாகப் பிறபத்துக்கள் அனைத்தும் டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையர் அவர்களால் பழையவுரையொடுவெளி யிடப்பெற்றுள்ளன. 15ம் ஆதீனப்புலவர் திரு. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்ற புத்துரையும் இந்நூற்கு ஒன்று உண்டு. தேர்ந்த புலமையும் அழுத்தமான இலக்கண அறிவும் வாய்ந்த தமிழ்ப் புல வர் திருவாளர். சு. அருளம்பலவனுர் அவ்ர்களால் இரண்டாம் பத்துக்கு இப்போது ஒரு புதிய ஆராய்ச்சியுரை எழுதப்பெற்று வெளிவந்துள்ளது. சங்கநூற் கல்வி குறைந்திருக்கும் இக்காலத்து இஃது ஒர் இனியபேறு. தமி ழுலகிற்கு ஓர் இனிய வரம் இவ்வுரை. இவ்வுரையாசிரியரே ஏனைய பத்துக் களுக்கும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் உரை விரிப்பாராயின் தமிழுலகு நற்பயன் பெறும். அங்காள் விரைகவெனத் தமிழ்த்தாய் திருவடி பரவுவோம். இந்நூல் முழுவதுமே ஆசிரியரின் புலமையை விளக்கும். தமிழ்ப் புலவர் களுக்கும் தமிழாராய்ச்சிபுரியும் மாணவர்க்கும் இந்நூல் விருந்து.
~~~

ஆ. சேயோன் பண்ணுகம் சுழிபுரம்,
கணபதி துணை.
பதிற்றுப்பத்து
ஆராய்ச்சியு ரை.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனுர் பாடிய
இரண்டாம் பத்து.
புண்ணுமிழ் குருதி.
11, வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் களியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி அணங்குடை யவுன ரேமம் புணர்க்கும் 5 சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறுர்க் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குக ரறுப்ப அருகிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து 10 மனுலக் கலவை போல வரண்கொன்று முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுத றுமிய வேஎய் வென்றேறி முழங்குபணை செய்த வெல்போர் 15 நாரரி நறவி ஞர மார்பிற் ・ ー " 。
போரடு தானைச் சேர லாத மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்தகின்

Page 16
2 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
20 பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி பரந்திலங் கருவியோடு நரந்தங் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம் தென்னங் குமரியோ டாயிடை
25 மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே.
துறை-செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்-ஒழுகுவண்ணம்.
தூக்கு-செந்தூக்கு.
பெயர்-புண்ணுமிழ் குருதி. (8)
பதவுரை: 1-6. வரை மருள் புணரி வான் பிசிர் உடைய-மலையை ஒக்கின்ற அலைகள் வ்ெஸ்ளிய திவலைகளாக உடையும்படி, வளி பாய்ந்து அட்ட-காற்றுத் தாக்கிச் சிதைத்த, துளங்கு இரு கம குல்- அசைகின்ற பெரிய நிறைந்த நீரினையுடைய, நளி இரு பரப் பின்-குளிர்ந்த பெரிய பரப்பினையுடைய, மா கடல் முன்னி-கரிய கடலின நடுவைக் கருதிப் போந்து, அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்-பிறரை வருத்துதலையுடைய அவுனர்க்குக் காவ லாகச் சூழ்ச்சிசெய்த, சூருடை முழுமுதல் தடிந்த-சூரணுதற் றன் மையையுடைய மாவின் பெரிய அடியை வெட்டின, பேர் இசை கடு சின விறல் வேள்-பெரிய புகழினையும் கடிய சினத்தினையும் வெற்றியினையுமுடைய முருகவேள், களிறு ஊர்ந்தர்ங்கு-களிற்றினை ஊர்ந்து பொலிந்தாற்போல,
7-16. செ வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப-செய்ய வாயை
யுடைய வேல் எதிரில் கின்று தடுக்கும் பகைவரை அறுத்தலால், அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்- அப்பகைவரின் அரிய மார்பு பிளந்ததனுல் உண்டாகிய புண்கள் உமிழாநின்ற குருதியால், மணி நிற இரு கழி நீர் நிறம் பெயர்ந்து-நீலமணிபோலும் நிறத் தினையுடைய பெரிய கழியிலுள்ள நீர் நிறம் மாறி, மனுல கலவை போல-குங்குமக் கலவைபோலும்படி, அரண் கொன்று-அரணின அழித்து, முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை-மாறுபாடு மிக்க தலைமையுடன் உயர்ந்த முயற்சியையுடையையாய், பலர் மொசிங்து ஒம்பிய-பலர் மொய்த்துக் காத்த, திரள் பூ கடம்பின்-திரண்ட பூக் களேயுடைய கடம்பினது, கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்-காவலை யுடைய பெரிய அடி துணிபடும்படிப் படையை ஏவி, வென்று எறி முழங்கு பனை செய்த - வென்று அடிக்கப்படுகின்ற முழங்கும் முர சினைச் செய்த, நார் அரி நற வின்-பன்னுடையால் அரிக்கப்பட்ட

11 ஆம் பாட்டு ". 3
நறவினையும், ஆர மார்பின்-முத்து மாலை அணிந்த மார்பினையும், போர் அடு தான-மாற்ருரைப்போரின்கட் சொல்லும் படையினை யுமுடைய, சேரலாத-சேரலாதனே, −
17-25. கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி-முருக்கு நெருங் கின பக்கமலையிலே உறங்கும் கவரிமான், பரந்து இலங்கு அருவியொடு கரந்தம் கனவும்-பரந்து விளங்கும் அருவியையும் நரந்தம் புல்லை யும் கன விற் காணும், ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்ஆரியர் நிறைந்த மிக்க புகழையுடைய இமயமும், தென்னம் குமரி யொடு ஆயிடை-தென்றிசைக்கட்குமரியுமாகிய அவற்றுக்கிடைப் பட்ட காட்டின் கணுள்ள, மன்மீக்கூறுநர் மறம் தப கடந்து-அரசர் களுள் தம்மை உயர்த்துக் கூறுவாரது மறம் கெடும்படி எதிர் கின்று வென்று, மார்பு மலி பைந்தார்-மார்பிலே நிறைந்த பசிய மாலை, ஓடையொடு விளங்கும்-நெற்றிப்பட்டத்துடனே விளங்கும், வலன் உயர் மருப்பின்-வெற்றிமிக்க பருப்பினையுடைய, பழி தீர் யானை-குற்றம தீர்ந்த யானையின், பொலன் அணி எருத்தம் மேல் கொண்டு பொலிந்த நின-பொன்னரிமாலை அணிந்த பிடரியின்மேல் இவர்ந்து விளங்கிய கினது, பலர் புகழ் செல்வம இனிது கண்டிகும் -பலரும் புகழும் செல்வத்தை யாம் இனிதாகக் கண்டேம்,
முடிபு : சேரலாத, கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந்தாங்கு யானை எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகும் என்க.
ஆராய்ச்சியுரை: 1-6. மலையை ஒக்கின்ற பெரிய அலைகள் வெள்ளிய திவலைகளாக உடையும்படி கடுவளி பாய்ந்தடுதலின் "வரை மருள் புணரி வான்பிசிருடைய வளிபாய்ந் தட்ட" என்ருர், வரை-மலை, மருள்-உவ மவுருபு. புணரி-அலை. "வெண்டலைப் புணரிக் குடகடல்" (புற 2: 10) வான் பிசிர்-மிக்க பிசிருமாம்; பிசிர்-திவலை. "பசும் பிசிர்த், திரைபயி லழுவம்” (அக 210: 4-5.) கமஞ்சூல்-நிறைவினையுடைத்தாகிய சூல். சூல்-கருப்பம்; ஈண்டு நீரை உணர்த்திற்று. “கார்கோண் முகந்த கமஞ்சூல் மாமழை" (முருகு 7) என்புழிப்போல, நளி-குளிர்ச்சி. இனி "நளியென் கிளவி செறிவுமாகும்" (தொல், உரி 27) என்பவாகலின் நளிகடல் என்பதற்கு *முத்து முதலியன செறிந்த கடல்' என்றுரைப்பினும் அமையும், "செறி கடலே" (திருக்கோவை 179) எனப் பிருண்டும் வருதல் காண்க. மாக்கடன் முன்னிச் சூருடை முழுமுதல் தடிந்த விறல் வேள் எனக் கூட்டுக. முருக வேள் கரிய கடலுட் புக்குச் சூர்மாவைத் தடிந்ததனை,
* கருங்கடலுண் மாத்தடிந்தான்? - பு வெ. மா. 103. * பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முத றடிந்த சுடரிலே நெடுவேல் ?? - முருகு 45-6,
போரிரும் பெளவத்தி னுள் புக்குப் பண்டொருகாட் -
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே' - சிலப் 24 பாட்டும.ை

Page 17
4 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
என வருவனவற்ருலுமறிக. முன்னுதல் கருதிப் போதல்-கலி 9:10 நச்.
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் என்றது பிறரை வருத்துதலை யுடையராயிருந்தும் அப்பொழுது தாம் வருந்துதலையுடையராயிருந்த அவு ணர்க்குக் காவலாகப் புணர்க்கும் என்றவாறு. அவுணர்-அசுரர். அவு ணர்க்கு என நான்காவது விரிக்க, ஏமம் புணர்க்கும் முழுமுதல் என்றது அவுணரெல்லோரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலி யிலே கூடும்படி மந்திரங்கொண்டு சாதித்த மாவின் முதலென்றவாறு. மா அவுணர்க்கு ஏமமாதல், "கொள்ளாத் தெவ்வர் கொண்மா"-நின்னை மதி யாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த மா' என்னும் பரிபாடல் உரை யானும் (பரி 21: 8) தெளியப்படும். ஏமம்-காவல். சூரவன்மாத்தான் ஓர் மாமரமாய் நின்ருன் என்று புராணங் கூறுதலால், சூருடை முழுமுதல் என்பதற்குச் சூரணுதற் றன்மையையுடைய மாவின் முதல் என உரைக்க, *சூர்மா-சூரணுகிய மா' (சிலப் 24: உரையினி. அரும்பத) எனவும், சூர் மாமரமாய் நின்றமையால் (திருக்கோவை 285 வி. உரை) எனவும் வரு வன காண்க. தடிந்தது வேலினுலென்க, முருகன் ஒருவராலும் அளந்தறிய வொண்ணுத பெரும் புகழினை யுடையணுதலின் 'பேரிசைவேள்' என்ருர், "எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்" "பலர் புகழ் நன்மொழிப் புலவ ரேறே" (முருகு 61:268) எனப் பிருண்டும் வருவன காண்க. கடுஞ்சின விறல்வேள் என்ருர் சூர்மருங்கறுத்த சுடரிலை நெடுவேற் சீர்மிகு முருகனு தலின், முருகன் கடுஞ்சினம், “முருகற் சீற்றத்து" (பொருந131) “முருக னன்ன சீற்றத்து" (அக 158:16) என வருவனவற்ருலுமறியப்படும். வேள் இருவராதலின் வேனில்வேளின் வேறுபட்டவன் என்பது தோன்றக் குன்ருக் கொற்றத்து முருகனை விற்ல்வேள்' என்ருர் விறல் வேள்-வெற் றியையுடைய வேள். "செருவிலொருவ" (முருகு 261) "ஓங்கு விறற் சேஎய்" “வெல்போரிறைவ" (பரி 5:54, 17:49) என வருவன காண்க. முருகவேள் யானையை ஊர்ந்தமையின், விறல்வேள் களிறுார்ந்தாங்கு' என்ருர், முரு கற்கு யானை ஊர்தியாதல்,
கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு அ2லவாய்ச் சேறலு நி2லஇய பண்பே?? - முருகு 82.125. * *செங்கோட்டி யானைக், கழருெடிச் சேஎய்? . குறுந் 1: 2-3. * ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிமைக்குஞ் சென்னிப்
பொருசமங் கடந்த புகழ்சால் வேழம் ? - பசி 21:1-2 - என வருவனவற்ருலுமறிக, அது *பிணிமுகம் என்னும் பெயருடைத்தாத * பிணிமுகம் என்பது மயிலுக்கும் பெயராதல் பிணிமுகம்-மயிலுமாம்? (முருகு 267 கச்) * பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்’-'அம்மயிலாகிய ஊர் தியையுடைய ஒள்ளிய செய்யோனும் (புற 56; 8 உரை) "பிணிமுகம்-மயில்? (சிலப் 24: உரையினி. அரும்பத) என்னும் உரைகளான் அறியப்படுதலினலும், *பிணிமுக முயர்த்து நின்ற பெருந்தகை’ எனக் கந்தபுராணத்து வருதலினுலும் தர்மாத்தடிந்தபோது ஊர்ந்தது இந்திரணுகிய மயில் என அப்புராணத்துட் கூறப் படுதலானும், பிணிமுகம் - மயில் என் பாருமுளர்.

1. ஆம் LuIrử-6 - 5
லைப் பிணிமுகம்-முருகற்குரித்தாகிய யானை' (பரி 5 ; 2 உரை) எனவும்.
"பிணிமுகம் வாழ்த்தி-பிணிமுகமென்னும் பட்டத்தினையுடைய யானையை வாழ்த்தி" (முருகு 247 நச்) எனவும் வரும் உரைப்பகுதிகளான் அறிக.
முன்னி (3) தடிந்த (5) வேள் களிறூர்ந்தாங்கு (6) எனமுடிக்க,
7-16. எஃகம் விலங்குநரை அறுத்ததால் அருநிறந் திறந்த புண் ணுமிழ் குருதியாற் கழிநீர் நிறம் பெயர்ந்து மணுலக் கலவைபோலும்படி அரண்கொன்று, கடம்பின் முழுமுதல் துமியப் படையை ஏவிப் பணை செய்த சேரலாத என்க.
எக்காலமும் போர் செய்தலிற் செவ்வாய் எஃகம்' என்ருர், வாய் என் றது முனையை, எஃகம்-வேல், "சத்தி யெஃகம். ஞாங்கரயில் வேல்' என்பது திவாகரம். விலங்குநர் என்றது சேரன் படையை எதிரில் நின்று தடுக்கும் பகை வீரரை. விலங்குதல்-எதிரில் நின்று தடுத்தல். (புற 230 4 உரை.) விலங்குநரது பிறரால் திறத்தற்கரிய மார்பு சேரலா தனுடன் செய்த போரில் திறந்தமையின் 'அருநிறந்திறந்த என்ருர், அருநிறந் திறந்த புண்-அரும்புண். மணிநிற நீர் எனக் கூட்டி நீலமணி போலும் நிறமுடைய நீர் எனக் கொள்க. 'மணிநீர்-நீலமணி போலும் நீர் என நச்சினுர்க்கினியர் பொருளுரைத்தவாறுங் காண்க. (மதுரைக் 351 உரை) கடல்நடுவண் துருத்தியில் வாழ்ந்த கடம்பரது அரண் அருகே அக்கடலைச் சார்ந்த கழி நீர் நின்றமையால் இருங்கழிநீர்' என்ருர், அரும் புண்கள் உமிழா நின்ற குருதியாற் கழிநீர், தன் நீலநிறம்மாறி மனுலக் கலவைபோலும்படி சேரலாதனின் எஃகம் விலங்குநர் பலரை அறுத்தமை தோன்ற, மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மணுலக்கலவை போல என்ருர், குருதியால் நீர் நிறம்பெயர்தல் "பெருமீன், புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட' (அக 210 : 2-3) என்புழிக் காண்க. மேன்மேலும் பெருகாநின்ற குருதிச் செம்புனலால் நீர் மிகச் சிவக்குமாறு *தோன்ற மனுலத்தை எடுத்துக் கூறினுர், மனுலம் என்றது குங்குமம், சாதிங்குலிக மென்பாரும் உளர். மனுலக்கலவை போல என்ருர் இருங்கழியிற் குரு திச்சேறு பரத்தலின், "அகழி பரந்தொழுகு மங்குருதிச் சேற்று" (பு. வெ. மா. 111) எனப் பிருண்டும் வருதல் காண்க, போலவென்றது போலும் படியென வினையெச்சப் பொருள்பட்டு நின்றது.
அருநிறந் திறந்த' என முன்வந்த அடைச் சிறப்பானும் 'மணி நிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனுலக்கலவை போல’ எனப் பின்வந்த அடைச்சிறப்பானும் இச்செய்யுளுக்குப் புண்ணுமிழ்குருதிஎன்று பெயரா யிற்று.
அரண் என்றது பகைவரது மதிலை. கொன்று என்ருர் பின் திருத்தி னும் திருந்தாதவாறு அழித்தமையால், முரண்-மாறுபாடு. (மலைபடு 547 நச், புற 37, 10 உரை) ஈண்டுப் பகை வெல்லுதற்கேற்ற மாறுபாட்டை, "வேந்தன் அடுமுரண்" என்ருர் திருவள்ளுவரும். (குறள் 567) பெற்ற

Page 18
6 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வெற்றியான் போரின்கண் ஊக்கமிகுதலின் உயர்ந்த ஊக்கலை என்ருர், ஊக்கல்-முயல்தல். "உயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மின்" (மதுரைக் 743) ஊக்கலையாய் முழுமுதல் துமிய ஏஎய்ப் பனைசெய்த சேரலாத என்க.
காவல் மரமாகிய கடம்பினைச் சேரலாதன் தடியாதவாறு வீரர் பலர் மொய்த்து நின்று காத்தமையின், 'பலர் மொசிந்தோம்பிய கடம்பு என்ருர். மொசிதல்-மொய்த்தல். "கடுந்தே நுறுகிளை மொசிந்தன துஞ்சும்" (பதிற் 71:6.) ஒம்பல்-காத்தல் திரள் கடம்பு எனக் கூட்டித் திரண்ட அடியினை யுடைய கடம்பு எனக் கொள்க."திணிநிலைக் கடம்பின் றிரளரை"(குறிஞ்சி 176) எனவருதல் காண்க. பூங்கடம்பு என்ருர் மூப்பின்றி நின்றதாகலின். அது, "மூவாக் கடம்பெறிந்தான் மன்னர் கோச்சேரன்” என்புழி, மூவாக்கடம்பு -வஞ்சத்தால் நின்றதாகலின் மூப்பின்று ஒருநாளைப்போல நின்ற கடம்பு, என அரும்பதவுரைகாரரும் அடியார்க்குநல்லாரும் பொருளுரைத்தவாற் ருனும் (சிலப் 17: உள்வரி 3) அறியப்படும். அக்கடம்பு கடல் நடுவண் துருத் தியுள் நின்றதென்பதும், சேரலாதன் கடல்கடந்து சென்று பகைவர் வலி யை அழித்து அதனைத் தடிந்தான் என்பதும்,
"இருமுக்கீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் ? - பதிற் 20:2-5. என மேல்வருதலானுமறிக. இச்செய்தியைச் "சேரலாதன், முந்நீரோட்டிக் கடம்பறுத்து’ (அக 127; 3-4) என மாமூலனுரும், "முந்நீரி னுட்புக்கு மூவாக் கடம்பெறிந்தான், மன்னர் கோச்சேரன்" (சிலப் 17: உள்வரி 3) என இளங்கோவடிகளும் கூறுவர்.
கடம்பின் அடி பகைவர் அணுகாவண்ணம் காவலமைந்ததர்கலின் 'கடி யுடை முழுமுதல்' என்ருர் ஈண்டுக் கடியென்னும் உரிச்சொல் காவல் என்னும் பொருட்டாய் நின்றது. ஏஎய்-ஏவி. பணை-முரசு, (நெடுநல் 115 நச், 'முரசின் விசேடம் சீவக 2222 நச். வி. உரை) சேரலாதன் கடற் கடம் பெறிந்து முரசு செய்த செய்தி,
*துளங்குபிசி ருடைய மாக்கட னிக்கிக்
கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பனே ? - பதிற் 17:4-5, *சால்பெருங் தானைச் சேர லாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசின்? - அக 347:3-5, என வருவனவற்ருலும் அறியப்படும, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், மோகூர்மன்னனை வென்று அவன் காவல் மரமாகிய வேம்பினைத் துண் டங்களாகத் தறிப்பித்த செய்தியை,
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
கெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து, முரசுசெய முரச்சி? - பதிற் 44:14-6, எனப் பரணர் கூறுதல் ஈண்டைக் கேற்ப அறியற்பாலது.
 

11 ஆம் பாட்டு
பகைவரை வென்று அடிக்கும் முரசாதலின் வென்றெறி பணை' என் றும், அடிக்குங்கால் இடிபோல முழங்கலின் முழங்கு பணை' என்றும் கூறி ஞர். வேந்தர், வென்றெறி முரசின் நன்பல முழங்கி" (குறுந் 380: 1-2) எனப் பிருண்டும் வருதல் காண்க. பணைசெய்த சேரலாத, வெல்போர்ச் சேரலாத, நறவிற் சேரலாத, மார்பிற் சேரலாத, தானைச் சேரலாத எனத் தனித்தனி கூட்டுக, வெல்லும் போரை வல்ல சேரலாதனுதலின் "வெல்
போர்ச் சேரலாத' என்ருர்,
鸞
நறவு-கள். (மதுரைக் 213 நச்.) அதனைப் பன்னுடையால் அரித்தல் பற்றி நாரரி நறவு’ என்ருர், தன்பால் வரும் கூத்தர் பாணர் முதலான பரிசின் மாக்களுககு வழங்குங் கள்ளுடைமையாற் சேரனை ‘நறவிற் சேர லாத" என்ருர்,
*காரரி கறவிற் கொங்கர் கோவே?? - பதிற் 88:19, 'பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி? - நற் 253: 7. * நாரரி கறவி னெருமை யூரன்? - அக 36; 17. *இன் களி நறவின்.நன்னன்? - அக 173:16, *வண்டுபடு கறவின் வண்மகிழ்ப் பேகன்? - அக 282:16, எனப் பிறரும் கூறப்படுமாறு காண்க,
ஆரம் என்பதற்குப் பதக்கம் என்றுரைப்பினும் அமையும். மாற்ருரைப்
போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையுடைய படையாகலின் போரடு
தானை' என்ருர், மாற்ருரைப் போரின்கண் அடுதல் வீரச் செல்வமாதல், போரடு திருவின்-மாற்ருரைப் போரின்கட் கொல்லும வீரச் செல்வத்தி னையும் என்னும் புறப்பாட்டுரையிற் காண்க சேரலாதன் என்னும் புள்ளி யீற்றுயர்திணைப் பெயர் அண்மை விளிக்கண் சேரலாத என அகரவீருய் நின்றது. "அண்மைச் சொல்லிற் ககரமாகும்" (தொல், விளி 14) என்ப வாகலின்,
17-25. இமயமும் குமரியுமாகிய அவற்றுக்கிடைப்பட்ட நீாட்டின் கணுள்ள மன்னர்களுள் தம்மை மீக்கூறுவாரது மறங் கெடவென்று யானை எருத்தமேல்கொண்டு பொலிந்த நின்செல்வத்தை இனிதாகக் கண்டேம் என்க. .v. கவிர்ததை சிலம்பிற்றுஞ்சுங் கவரி அருவியையும் நரந்தத்தையுங் கனவிற் காணும், ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் என்க. இமயத்தின் பக்க மலைகளிலே முருக்கமரங்கள் நெருங்கியிருத்தலின் கவிர்ததை சிலம்பு என்ருர், கவிர்-முண் முருக்கு. 'கவிரே கிஞ்சுக முண்முருக்காகும்” என்பது பிங்கலந்தை, (பிங் 9: 46) ஈண்டு அதன் இனமாகிய பலாச மரத்தைக் கொள்ளினும் அமையும். ததைதல்-நெருங்குதல். சிலம்பு-பக்கமலை. "நளி மலைச் சிலம்பில்" நெடுநல் 100. சிலம்பில் துஞ்சும் கவரி அருவியொடு நரந்தம் கனவும் இமயம் என்றது, சிலம்பின் கண்ணே இனிதாக உறங்கும் கவரிமான் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினும் காண்பதற்கு இடனய இமயம் என்றவாறு, பகற்காலத்து

Page 19
8. பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நுகர்ந்த அருவியும் நரந்தமும் தன் மனத்திடத்தே கிடக்கையாலே கவரி மான் அவற்றைக் கனவிற் கண்டது என்க. இதனைக்,
* கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை நனவிற்ருன் செய்தது மனத்த தா கலிற் as are is as 63ro' - assis 49: 1-4.
என்பதனுலும் அப்பகுதியுரையானும் தெளியலாம். விலங்கு முதலியன தரம் நுகர்ந்தவற்றைக் கனவிற் காண்டல்,
*கூம்புமுகை யவிழ்ந்த குறுஞ்சிறைப் பறவை
வேங்கை விரியின ரூதிக் காந்தட் டேனுடைக் குவிகுலைத் துஞ்சி யானை இருங்கவுட் கடாஅங் கனவும்' - அக 132; 10-3. * கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிருக் கனவும் கள்ளென் யாமத்து? - அக 170; 10-2.
என வரூஉஞ் சான்ருேர் செய்யுட்களினுங் காண்க.
கவரி என்றது கவரிமாவை, "வான் மயிர் துடக்கிற் ருனுயிர் வாழாப், பெருந்தகைக் கவரி" பெருங் (1) 35:233-4. இமயச் சிலம்பில் அருவிநீர் பரந்து விளங்குதலின் பரந்திலங்கு அருவியொடு' என்ருர், ஒடு-எண் ணுெடு, நரந்தம்-நரந்தம் என்னும் புல். இதனை நரந்தந் தாஅய்-நரந் தப் புல்லின்கட் பரந்து' என்னும் (பரி 7:11) உரையானும் அறிக. இது நரந்தை எனவும் வழங்கும். இமயம், அருவி நரந்தம் கவரி என்பன வற்றை உடைத்தாதலை,
*அமைவர லருவி யார்க்கு, மிமையத்து’ - கலி 105; 74-5. *நரங்தை நறும் புன் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுஜன பருகி யயல தகரத் தண்ணிழற் பிஜூனயொடு வதியும் வடதிசை யதுவே வான்றே யிமயம்" - புற 132:4-7
என வரூஉஞ் செய்யுட்பகுதிகளா னறிக.
ஆரியர் என்றது முனிவர்களை, மும்மையுமுனரவல்ல அறிவுடையா ராகலின் அவர்களை ஆரியர் என்ருர், அறிவுடையார்க்கு ஆரியர் என்று பெயராதல், 'சான்ருேர் மிக்கோர். . ஆரியர் உலகென வாய்ந்த வான் ருேர் அறிவுடையோரே" என்னும் திவாகரத்துட் காண்க. வடநாட்டு வேந்தருமாம். அவர்கள் இமயத்து நிறைந்து வாழ்தலின் 'ஆரியர் துவன் றிய இமயம்' என்ருர், துவன்றுதல்-நிறைதல். ஆரியர் நிறைந்து வாழ்த லினுலும், 'தன் உயரத்தாற் பிறமலைகளை வென்ற வெற்றியினுலும், tநீல மேனி வாலிழை பாகத்தொருவன் வீற்றிருக்கப்பெற்றதனுலும் பெரும்
* ‘பணிவார் விண்டு விறல்வரை' பதிற் 31 17, 'கடவு னி2லய கல் லோங்கு நெடுவரை' பதிற் 4: 6

11 ஆம் பாட்டு " പ്
புகழுடைய இமயமாதலின் பேரிசை இமயம்" என்ருர், "பேரிசை இமய மும்” (குறுந் 158) எனவும் "பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை" (அக 396: 16-7) எனவும் வருவன காண்க.
இமயம் குமரியெனவே திசை பெறப்படுமாயினும் எல்லை கூறப் புகுந்தாராதலின் அதற்கேற்பத் திசை கூறி யெல்லை கூறுதன் மரபென் பதுபற்றித் தென்னங்குமரி என்ருர், தென்குமரி என்பது தென்னங்குமரி என அம்முச்சாரியை பெற்றது. ஒடு-எண்ணுெடு. குமரியைத் தென்னங்குமரி என்றமையால் இமயத்தை வடவிமயமாகக் கொள்க. "குமரியொடு வட்வி மயத்து" (சிலப் 29: 1) என வருதல் காண்க. கிழக்கு மேறகுத் திசைகட் குக் கடல்கள் எல்லையாகலின் வேறெல்லை கூருராயினர். ‘தென்குமரி வடபெருங்கல், குணகுட கடலா வெல்லை" (மதுரைக் 80-1) என வருதல் காண்க. ஆயிடையென்றது இமயம் குமரியாகிய அவற்றுக்கு இடையென்ற வாறு. அவ்வென்னும் வகரவீற்றுப் பெயர் ஆயிடையென முடிந்தது.
மன் என்பது அஃறிணை இயற்பெயர்போல ஒருமைக்கும் பன்மைக் கும் பொதுவாக வருமாதலின் அரசர்களுள் என உரைக்கப்பட்டது. இனி, மன் என்றதனை அரசு என்றதுபோல அஃறிணைப் பெயராக்கி அம்மன் கனில் மீக்கூறும் எனக் கொள்ளினும் அமையும். 'குடிமை யாண்மை. அன்ன பிறவு மவற்ருெடு சிவணி, முன்னத்தி னுணருங் கிளவியெல்லாம், உயர்திணை மருங்கி னிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்’ (தொல். கிளவி 56) என்பது இதற்கு விதி. மீக்கூறுதல்"உயர்த்துக் கூறுதல் குறள் 386 பரிமேல். மேலாகச் சொல்லுதல் நெடு நல் 116 நச், மறம்-வீரம். தப-கெட சேரலாதன் இமயம் குமரியாகிய அவற்றுக்கிடைப்பட்ட மன்மீக்கூறுநரை வென்ருன் என்பது,
'குமரியொடு வடவிமயத்
தொருமொழி வைத்துலகாண்ட சேரலாதற்கு? சிலப் 29: 1.
என இளங்கோவடிகள் கூறுதலானும் அறியப்படும். மறந்தபக் கஉந்து(25) எருத்த மேல்கொண்டு (19) என மாறிக் கூட்டுக.
யானையின் பிடர்மீதிவர்ந்து செல்லும் சேரலாதனின் மார்பிலே மலிந்த மாலை அதன் ஒடையளவுந் தாழ்ந்து அவ்வோடையொடு விளங்கலின், "மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்' என்ருர், ஈரிடத்துப் பொருள் கள் அண்மையிலிருத்தலால் ஒருசேர விளங்கல், "பாணன் சூடிய பசும் பொற் ருமரை, மாணிழை விறலி மாலையொடு விளங்க, சுரத்திடை யிருந் தனிர்" (புற 141:1-4) என்புழிக் காண்க. மலிதல்-மிகுதலுமாம். பைந் தார்-செவ்விப் பூவாலான பசியமாலை. செவ்விமாலை கலி 90: 16 நச், தார்-மார்பின் மாலை, " வண்ண மார்பிற் ருருங் கொன்றை" புற1:2. ஒடைநெற்றிப்பட்டம். அது பொன்னுற் செய்யப்பட்டு அணியப்பட்டமை யின் விளங்குவதாயிற்று. 'யானைப் புகர்முகத் தணிந்த பொன்செய் யோடை" (நற் 296) எனவும், "ஓடை விளங்கு முருகெழு 45ff Dig56)......
2

Page 20
10 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
யானை' (பதிற் 34 : 6-7) எனவும் வ ரு வ ன காண்க. விளங்கும் செல் வம் (20) எனக் கூட்டி விளங்குதற்குக் கரரணமாகிய செல்வம் எனக் கொள்க. பகைவரைக் குத்திக்கொன்றமையால் வெற்றிமிக்க மருப்பாத லின் 'வலனுயர் மருப்பு' என்ருர், வலன்-வலியுமாம். மருப்பின் யானை என இயையும். உயரமும் அழகும் புகர்நிறைந்த மத்தகமும் பிறவுமாகிய நல்லிலக்கணங்களமைந்த, குற்றத்தினிங்கிய யானை யாக லின் "பழிதீர் யானை' என்ருர், பொன் என்பது பொலம் எனச் செய்யுட்கண் வந்தது.
யானை எருத்தமேல்கொண்டு பொலிந்த நின் செல்வம் என முடிக்க. வெற்றிபெற்ற வேந்தர் யானைமீது இவர்தல், 'மயங்கமர் மாறட்டு மண் வெளவி வருபவர், தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ" (கலி 13 9-10) என்புழிக் காண்க. செல்வம் என்றது மன்மீக்கூறுநர் மறந்தபக் கடந்த வெற்றிச் செல்வத்தை. இதுவே பழைய வுரைகாரர் கருத்துமாதல், "இதனுற் சொல்லியது அவன் வெற்றிச்செல்வச் சிறப்புக் கூறியவாருயிற்று' என அவர் கூறுமாற்ருனறியப்படும். வெற்றியைச் செல் வம் என்றல்,
*இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து
ஒருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ்
செல்வ முடையோர்க்கு? அக 174; 1-3. என்புழிக் காண்க. வெற்றியைப் பலரும் புகழ்தல் ‘வெல்புக முலகேத்த விருந்துநாட் டுறைபவர்” என்னும் கலியினுங் காண்க. (கலி 26 12) சேரலாதன் பகைவரை வென்று யானைமீதிவர்ந்தபோது அவன் வெற் றிச் செல்வம் இனிது புலனுண்மையின் ‘இனிது கண்டிகும்’ என்ருர், கண்டிகும்-கண்டேம். இகும் என்னும் அசைச்சொல் தன்மைக்கண் வரு தல் அவற்றுள், இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந், தகுநிலையுடைய வென்மனுர் புலவர் (தொல் இடை 27) என்பதனுற் கொள்க.
சேரலாதற்கு முருகக் கடவுளை உவமை கூறிய ஆசிரியர் கடலிற்புக்கு மரந்தடிதலும் களிறுார்தலுமாகிய பொதுத் தொழில்களே இருவர்க்கும் எடுத் துக் கூறினர்.
இதனுற் சொல்லியது அவன் வெற்றிச்செல்வச்சிறப்புக் கூறியவாரு யிற்று. منبر
பழையவுரை
1. பிசிருடைய வென்றது பிசிராக உடைய வென்றவாறு, 2. கமஞ் சூல்-நிறைந்த நீர்; சூல் போறலாற் சூலெனப்பட்டது. 5 சூருடை முழு முதலென்றது சூரவன் மாத் தனக்கு அரணுகவுடைய மாவின்முத லென்ற வாறு. இனிச் சூரவன்மாத்தான் ஓர் மாவாய் நின்ருனென்று புராணம் உண்டாயின் சூரணுதற்றன்மையையுடைய மா வின் மு த லென்றவாரும். 9-10. நீர் நிறம் பெயர்ந்து மனுலக் கலவை போலவென முடிக்க. போல வேன்றது ஈண்டுப் போலும்படியென வினையெச்சப் பொருள்பட்டு நின்றது. மனுலமென்றது குங்குமம். சாதிங் குலிக மென்பாரும் உளர். 8-10. அரு நிறந் திறந்த' என முன்வந்த அடைச்சிறப்பானும், 'மணிநிற விருங்கழி நீர்

11 ஆம் பாட்டு 11
நிறம் பெயர்ந்து மணுலக் கலவை போல' எனப் பின்வந்த அடைச்சிறப்பா னும் இதற்குப் புண்ணுமிழ்குருதி என்று பெயராயிற்று. 19-20. மேல் கொண்டு பொலிந்த நின் செல்வமென முடிக்க, 21. கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுமென்றது ஆண்டு உறையும் ஆரிய ராணையானே முருக்கென்னும்
V முள்ளுடை மரமும், 'மயிர் நீப்பின் வாழாக் கவரிமா" (திருக்குறள் 969)
என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிர்க்கும் வருத்தஞ் செய்யாமையால் அக்கவிர் செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக உறங்குமென்றவாறு. 22. அருவி யொடு நரந்தம் கனவுமென்றது அவ்வாரிய ராணையானே பிற விலங்கா னும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியை யும் நரந்தத்தையுமே கன வி னும் காணுமென்றவாறு. 24. குமரியொடு வென்னும் ஒடு எண்ணுெடு. ஆயிடை யென்றது, இமயம் குமரியாகிய அவற் றுக்கு இடையென்றவாறு. அவ்வென்னும் வகரவீற்றுப்பெயர் ஆயிடையென முடிந்தது. 25. மன் என்றதனை அரசென்றதுபோல அஃறிணைப் பெய ராக்கி அம்மன்களில் மீக்கூறுமெனக் கொள்க. மறந்தபக் கடந்து (25) முழங்கு பணை செய்த (14) என மாறி முடிக்க, இங்ங்ணம் மாருது எருத்த மேல் கொண்டு (19) என்னும் வினையொடு மாறி முடிப்பாரும் உளர்.
சேரலாத (16) கடுஞ்சின விறல்வேள் களிறுார்ந்தாங்கு (16) யானை (18) எருத்த மேல்கொண்டு பொலிந்த நின் (19) பலர் புகழ் செல்வம் கண்டிகும் (20) என மாறிக்கூட்டி வினைமுடிபு செய்க.
இதனுற் சொல்லியது அவன் வெற்றிச்செல்வச்சிறப்புக் கூறியவா ருயிற்று. مے ’ ’ سے
ஒப்புமைப் பகுதி
1. புணரிக்கு ம&ல உவமை : "மைவரைபோற் றிரை’ ‘குன்றுபோற் றிரை கள்' தே. திருஞான, "மலைக்குங்க ரொப்பன வன்றிரைகள்? 'தடமால் வரை போற் றிரைகள்? தே. சுந்தர.
1-2 புணரி காற்ருல் பிசிராக உடைதல் : "மல்குதிரை, வளிபொரு வயங்கு பிசிர் பொங்கு, களிகடற் சேப்பனெடு? நற். 299; 7-9 சூரலங் கடு வளி யெடுப்ப ஆருற், றுடைதிரைப் பிதிர்வில் பொங்கி” “கொண்டலொடு, குரூஉத் திரைப் புணரியுடைதகு மெக்கர்? அக. 1:17-8; 10: 8-9.
-2* துளங்கிருங் கமஞ்சூல் : "விலங்குவளி கடவுங் துளங்கிருங் கமஞ்சூல்", பதிற் 45; 20.
3. மு. ‘நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி’ பதிற். இருங்கண் 8,
4. அணங்குடை மவுணர். “அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித் தென? புற, 174 : 1.
5. முழுமுதல்: முருகு 307; பெரும் பாண் 77; குறுந் 214, 255, 361. அக. 45; 10; புற 58; 2.
3-6. பசர்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச், சூர்முத றடிந்த சுடரிஜல நெடுவேல்.மாமுத றடிந்த மறுவில் கொற்றத், தெய்யர கல்லிசைச் செவ்வேற் சோய்: முருகு 45-61 'பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுய்ர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித், தீயழ றுவைப்பத் திரியவிட் டெறிந்து, கோயுடை நுடங்குதர் மாமுத றடிந்து.மாய வவுனர் மருங்கறத் தபுத்தவேல்” “கடுஞ்

Page 21
12 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தர் மாமுத றடிந்தறுத்தவே, லடுபோ ராள? ?சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே" "கீர்நிரங் தேற்ற நிலந்தாங் கழுவத்துச், சூர்ாகிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்? "மாதடிங் திட்டோய்" பரி 5 : 1-7; 9: 70-1; 14: 18; 18-3-4; 21 : 28-9; "உரவுநீர் மாகொன்ற வென்வேலான்? "மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர், வேல் வல்லான்? கலி 27: 15-6; 104; 13-4; 'இருங்கடல் மா கொன்ருன்? திணை நூற் 30 'மாத்தடிங் தானன்ன மாண்பினுன்? சீவக 1029 'உரவு நீர் மாகொன்ற வேல்" சிலப் 24: பாட்டுமடை "உரையினி, பனிக்கடற் பிறந்த வெஞ்சூர் தடிந்த வஞ்சுவரு சீற்றத்து, முருகவேள்' பெருங் (1) 42 : 229 -31. நீர்மாக் கொன்ற சேயோன்* கல்.
7. செவ்வச யெஃகம் : "செவ்வா யெஃகம் வளைஇய வகழி’ பதிற் 33; 9 8. அருநிறம் : “அருநிறத் தழுத்திய வம்பினர்” “வரிநுதல் யானை அரு நிறத் தழுத்தி? அக 61 : 8; 172; 8.
புண்ணுமிழ் குருதி : “புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதர? குறிஞ்சி 172; "கணவிர மாலை யிடுஉக் கழிந்த தன்ன, புண்ணுமிழ் குருதி? அக 31:9-10; * புண்படு குருதி? புற் 98 : 14; "புண்ணுமிழ் குருதி போர்த்த பொருகளம்? சீவக 1733; "புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப? 'புண்டாழ் குருதி புறஞ்சோர'
புண்பொழி குருதி? சிலப் 16: 214; 19; 37; 19: 48,
12-3. பகைவருடைய கரவன் மரங்களை அழித்தல் 'உறுசெறுங்ர் புலம் புக்கவர், கடிகாவி னிலை தொ8லச்சி? மதுரைக் 152-3; 'திதியன், தொன்னி2ல முழுமுதறுமியப் பண்ணிய, கன்னர் மெல்லிணர்ப் புன்னை போல’ அக 145; 11-3; "வடிாகவில் கவியம் பாய்தலினூர்தொறுங், கடிமரங் துளங்கியகாவும்? 'கெடுங்கை கவியம் பாய்தலின்ரிலையழிந்து, வீகமழ் கெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங், கடி மரந் தடியுமோசை? ?கடிமரந் தடித லோம்பு’ புற 23: 8-9; 36; 7-9; 57-10, "பழையன் காக்குங் குழைபயி னெடுங் கோட்டு, வேம்புமுதறடிந்த . பொறைய? Good 27:124-6. -
கடம்பு தடிந்தது : “கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே' 'துளங்குபிசி ருடைய மாக்கட னிக்கிக், கடம் பறுத்து’ பதிற் 12-3; 17: 4-5; “மால்கட லோட்டிக் கடம்பறுத்து? அக 347-4. “கடம்புமுத றடிந்த காவலனே? சிலப் 29: ஊசல்வரி
14. வென்றெறி முழங்கு பண : வென்றெறி முரசின்? அது 137-5; 68வென் றெறி முரசின் வேந்தர்? 'வென்றிரங்கும் விறன் முரசினேன்? புற 12-4; 387; 19: ெேவன்றி முரசி னிரங்கி? கரர்நாற் 35. -
15. தாரரி நறவு : “காரரி கறவ முகுப்ப? பரி 6: 49; 'நாரரி கறவுண்டிருந்த தந்தைக்கு’ ‘காரரி நறவின்’ அக 216:3; 296; 9. 'நாரரி, கஜனமுதிர் சாடி நற வின்* நோரரி தேறன் மாந்தி? 'நாரரி கறவின்? புற 297: 5-6; 367; 7; 400: 14.
ஆரமார்பு: முருகு 104; குறுந் 321:1; கலி 52-15; 79; 11-2; 135; 17-8; புற 19:19, 59:1; பு. வெ மா 43; சீவக 699; பெருங்(!) 47; 134.
16. போரடுதசனை : "போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ?? பதிற் 28; 10; 48; 11. “போரடு தானையான்" பரி 12: 86; “போரடு தாஜனக் கட்டி? அது 226; 16; போரடு தானை எவ்வி? புற 233; 6: போரடு தானேப் பொலந்தேர் வளவ*) தொல், புற 36; 1-2 கச். மேற்.
17-8, ஓடையானே: பதிற் 34: 6-7; நெடுநல் 169, நற் 296: 2-3; பரி 18: 27; 21:1-2,; கலி 86: 1; அக 100; 9-10 201:1-8; 358; 19; 387: 18; புற 3:7-11; 126 1; பு. வெ. மர 98; 170. சீவக 7; சிலப் 3; 123-4.
18 உயர்மருப்பியானே : “ஒளிறேந்து மருப்பிற் களிறு? தற் 284; 9: உயர் மருப் பியானே? அக 148; 3; 'உயர்மருப் பே ங் திய வரைமரு ணுேன் பகடு?? “உயர்மருப் பியானே? புற 161; 17; 334 : 8.

12ஆம் பாட்டு 13
19. “பெருங்கை யானையிரும் பிடர்த்தலை யிருந்து, மருந்தில் கூற்றத் தருக் தொழில் சாயாக், கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி? புற 3:11-3; 'யானை யெருத்தம் பொழியக் குடைநிழற் கீழ்ச், சேனைத் தலைவராய்ச் சென்ருே ரும்? நாலடி 3. “மழகளிற் றெருத்தின் மைந்துகொண் டிருந்த, மன்ன குமரன்? GuG5 i(t) 33: 130-1.
20. பலர் புகழ் செல்வம் : "பலர் புகழ் திருவின்? அக 338 : 5. 79-20 நின் செல்வம் கண்டிகும் : “நின் செல்வம், வேல்கெழு குரிசில் கண் டேஞதலின்? புற 198; 9-10.
21. சிலம்பில் கவரி துஞ்சல் : *கவரிமா னேறு கண்படை கொள்ளும், தகரங் கவினிய தண்வரைச் சாரல்’ பெருங்(!) 50: 20-1.
23. "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்? நற் 170 : 6.
28-4. "அரவழங்கும் பெருந்தெய்வத்து, வளைஞரலும் பனிப்பெளவத்துக்,
குணகுட கடலோ டாயிடை மணந்த" பதிற் 51: 13-5, ' வடாஅது பனிபடு நெடு
வரை வடக்குங், தெனுஅ துருகெழு குமரியின் தெற்கும்? புற, 6:1-2,
25. மறந்தபக் கடத்தன் : "மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த?? பதிற் 65...................3. '
2. மறம்வீங்கு பல்புகழ். 12. வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர் 5 அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்
தோடுகொ ஸிரினகிரை நெஞ்சதிர்ந் தாங்கு முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ் கேட்டற் கினிதுகின் செல்வங் கேட்டொறும் 10 காண்டல் விருப்பொடு கமழுங் குளவி வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை அண்ணன் மழகளி றரிDமி ருேப்பும் கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற் 15 ருெல்பசி யுழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந் தறுத்த வானினக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு நனயமை கள்ளின் றேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன 20 நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை

Page 22
f 14 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்ருேள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய அமர்புமெய் யார்த்த சுற்றமோடு 25 நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே.
இதுவுமது பெயர்-மறம்வீங்கு பல்புகழ். (8). பதவுரை 1-8 வயவர் வீழ வாள் அரில் மயக்கி-தம்முடனே போர்செய்யும் வீரர் படும்படி வாட்பிணக்கமுண்டாகப் போர்செய்து, இடம் கவர் கடம்பின் அரசு தலை பனிப்ப-அவர்க்குரிய நாட்டைக் கவர்ந்துகொள்ளும் படைத் தலைவரையுடைய பகை வேந்தர் தலை நடுங்க, கடம்பு முதல் தடிந்த-அவருடைய காவல் மரமாகிய கடம் பின் அடியை வெட்டின, கடு சின வேந்தே-மிக்க சினத்தையுடைய வேங்தே, М,
4-9. தார் அணி எருத்தின்-மாலையை ஒத்த பிடரி மயிரின யும், வர்ரல் வள் உகிர்-நீண்ட கூரிய நகங்களையுமுடைய, அரி மரன் வழங்கு சாரல்-சிங்கவேறு உலாவும் மலைப்பக்கத்திலே, பிற மான்-பிறவிலங்குகளின், தோடு கொள் இன நிரை-தொகுதியைக் கொண்ட இனமாகிய கிரை, நெஞ்சு அதிர்ந்தாங்கு-நெஞ்சு நடுங் கிணுற்போல, முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலியாது-முரசு ஒலிக்கின்ற உயர்ந்த அரண்மனைக்கண்ணே அரசுகள் துயிலாமல், மாதிரம் பனிக்கும்-திசைகளிலிருந்து நடுங்குதற்கு ஏதுவாகிய, மறம் வீங்கு பல்புகழ்-மறப்புகழாகிய மற்றைப் புகழினும் மிக்க பல் புகழ், கேட்டற்கு இனிது-கேட்டற்கு இனிதாகும்.
9-14. நின் செல்வம் கேட்டொறும்-கினது செல்வத்தைக் கேட்குங்தோறும், காண்டல் விருப்பொடு-கின்னேக் காண் ட ல் வேண்டுமென்ற விருப்பத்தால், கமழும் குழவி-மணங்கமழும் காட்டு மல்லிகையால், வாடா பை மயிர்-சோர்வில்லாத பசிய மயிரினயும், ஆடுநடை-வெற்றியைத் தோற்றுவிக்கும் நடையினையுமுடைய, அண்ணல் இளைய மழ களிறு-தலைமையினையுடைய இளைய களிற்று யானை, அரி ஞமிஅறு ஒப்பும்-வரிகளையுடைய Dமிறுகளை ஒட்டு கின்ற, கன்று புணர் பிடிய குன்று பல ந்ேதி-கன்ருேடு கூடிய பெண் யானேகளையுடைய குன்றுகள் பலவற்றை அரிதிற் கழித்து வந்து, அவண் இறுத்த- அவ்விடித்தே தங்கிய, இரு பெரு ஒக் கல்-மிகப்பெரிய சுற்றத்தின்,
15-25. தொல் பசி உழந்த பழங்கண் வீழ-தொன்றுதொட்ட பசியால் வருந்திய துன்பம் நீங்கும்படி, எஃகு போழ்ந்து அறுத்த

12 ஆம் பாட்டு 15
-அரிவாளாற் பிளந்து அறுக்கப்பட்ட, வால் கிண கொழு குறை -வெள்ளிய கிணத்தையுடைய கொழுவிய குறையாகிய, மை ஊன் பெய்த வெண்கெல் வெண்சோறு-ஆட்டுத் தசையை இட்டு ஆக் கின வெள்ளிய நெல் அரிசியின் வெள்ளிய சோற்றை, நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி-அரும்பில் அமைத்த கள்ளாகிய தெளிவுடனே உண்டு, நீர் படு பருந்தின் இரு சிறகு அன்ன-மழை நீரில் வருந்திய பருந்தினது கரிய சிறகை ஒத்த, கிலம் தின் சித்ா அர்-மண் தின்ற கந்தையை, களைந்த பின்றை-களேந்த பின்பு, நூலா கலிங்கம் வால் அரை கொளிஇ-நூலாறுாலாகிய பட்டு நூல் முதலியவற்ருற் செய்த கலிங்கத்தை வெள்ளிதாகிய அரை யிலே உடுத்தி, வணர் இரு கதுப்பின்-கடை குழன்ற கரிய கூந்த லினேயும், வாங்கு அமை மெல் தோள்-வளைந்த மூங்கிலையொத்த மெல்லிய தோளினையுடைய, வசை இல் மகளிர்-குற்றமில்லாத விறலியர், அமர்பு- அமர்ந்து, மெய் ஆர்த்த சுற்றமொடு-உண்மை மகிழ்வால் ஆரவாரித்த சுற்றத்தோடு, நின் பெரு கலி மகிழ்வு அகர்தற்கு இனிது-கின் பெரிய ஆரவாரத்தையுடைய ஒலக்கத் துச் செல்கின்ற விநோத மகிழ்ச்சி அநுபவித்தற்கு இனிதாகும்.
முடிபு: வேந்தே நின் செல்வம் புகழ் கேட்டற்கினிது; நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கினிது என்க.
(ஆ-ரை) வயவர்-வீரர். அரில்-பிணக்கம். இப்பொருட்டாதல் "நூலின் வலவா நுணங்கரின் மாலை” (பொருந161) என்புழிக் காண்க.மயக்கி-போர் செய்து. “பெருங்களிற் றினத்தொடு. இரு ம் புலி மயக்குற்ற" (கலி 48; 6-7) என்புழி மயக்குற்ற-போர் செய்தலுற்ற" என நச்சினுர்டிகினியர் பொருளுரைத்தவாறு காண்க. இனி, வாளரின் மயக்கி எனக் கொண்டு "வாள் வீரராற் கலக்கி’ என்றுரைப்பினுமமையும். வீ ரர் படும்படி போர் செய்தலோடு அவர்க்குரிய நாட்டையும் வெளவும் ஆற்றல் வாய்ந்த சுற்றத் தையுடைய வேந்தராதலின், இடங்கவர் கடும்பின் அரசு’ என்ருர், 'மயங் கமர் மாறட்டு மண்வெளவி வருபவர்’ (கலி 31-9) என்ருர் பிறரும். ஈண் டுக் கடும்பு என்றது படைத்தலைவரை. "உரைசெல வெறுத்த வவ னிங்காச் சுற்றமொடு” (மலைபடு 36) என்புழிச் சுற்றம் என்பதற்குப் படைத் தலைவர்' என நச்சினுர்க்கினியர் உரைத்தவாறு காண்க அரசு என்றது கடம்பைக் காவல் மரமாகவுடைய பகைவேந்தரை, வயவர் வீழ வாளரின் மயக்கி, இடங்கவர் கடும்பி னரசு’ என அப்பகைவேந்தரின் ஆற்றலை எடுத்துக் கூறியது, அவ்வாற்றலுடையாரை வென்ற சேரலாதலின் பேராற்றலைப் புலப்படுத்தற் பொருட்டென்க. இவ்வாறு பகைவரின் ஆற்றலைக் கூறுமாற் ருல் அவரை வெல்லும் வேந்தனின் பேராற்றலைப் புலப்படுத்தும் முறையை,
*வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து’ பதிற் 79; 12. 'தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னுர் தேய? பதிற் SS: 3-4.

Page 23
16 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
'கழிந்தோர் உடற்றுங் கடுந்தூ வஞ்சா
வொளிறுவாள் வயவேந்தர்
களிருெடு கலந்தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்ப? பதிற் 90; 5-8. என மேல்வருவனவற்றிலுங் காண்க.
அரசு தலைபனித்தல் சேரலாதனின் பேராற்றலைக் கண்டு. "அரைசுதலை பணிக்கு மாற்றலை யாகலின்" (புற 42-8) எனப் பிருண்டும் வருதல் காண்க. பகைவரை வென்றும் சினந் தணியப் பெருஞய் அவர் காவல் மரமாகிய கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தியதனுல் "கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே" என்ருர், "கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேர லாதன்" (பதிற் 20: 4-5) என வருதல் காண்க.
4-9. அரிமான் வழங்கும் சாரற்கண் பிறமான் நெஞ்சதிர்ந்தாங்கு நெடுநகர்களில் அரசர்கள் துயிலாமல் திசைகளிலிருந்து நடுங்குதற் கேது வாகிய மறம்வீங்கு பல்புகழ் கேட்டற்கு இனிது என்க. -
அரிமான்-சிங்கம். அதன் பிடரிமயிர் மாலைபோல் தூங்கலின் 'தாரணி யெருத்தின் அரிமான்' என்ருர், தார்-மாலை. அணி-உவமவுருபு. "மின் னணி நுண்ணிடை" (திருக்கோவை 342) என்புழிப்போல. எருத்து-பிடரி. ஈண்டு அதன் கணுள்ள மயிர்க்காயிற்று. ஏருதல் தோன்றத் 'தாரணி யெருத்தின்' என்ருர், வாரல், அல்சாரியை. வார்-நீட்சி. வள்-கூர்மை, தாரணி எருத்தின் என்றதனுல் அஞ்சத்தகு தோற்றமுடைமையும், வள்ளு கிர் என்றதனுற் பொருதற்கேற்ற கருவியுடைமையுங் கூறினர். "போருகிர் வள்புலி" (திருவாசகம், திருவார்த்தை 8) என வருதல் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. சிங்கம் உலாவும் மலைப்பக்கத்திலே பிற விலங்குகள் தோடு கோள்இன நிரையாக வாழினும் அதனை வெல்லும் ஆற்றலின்மையால் அஞ்சி நெஞ்சு நடுங்கி வாழ்வனவாயின. "நாகநடுங்கச் சிங்கம் வேட்டந்திரி சரி வாய்" (திருக்கோவை 156) என வருதல் காண்க. வழங்குதல்-உலாவுதல், பிறமான் என்றது மலைப்பக்கத்தில் வாழும் புலி, யானை, மான் முதலான விலங்குகளை, தோடு-தொகுதி. அரசர் பலர் ஒருங்கு கூடியும் அதனுல் வலிபெருராய்ச் சேரலாதனுக்கு அஞ்சி நடுங்குமாறு தோன்றப் "பிறமான், தோடுகொள் இனநிரை நெஞ்சதிர்ந்தாங்கு பனிக்கும்" என்ருர் சேரலாத னுக்குச் சிங்கமும் பகையரசர்களுக்குப் பிற விலங்கினங்களும் உவமை.
"இரும் புலி கொன்று பெருங்களி றடுஉம்
அரும் பொறி வயமா ன2னயை' பதிற் 75: 1-2.
எனப் பிறருங் கூறுமாறு காண்க,
மாக்கடல் நீக்கிக் கடம்பறுத்தல், இமயம் குமரியென்னும் எல்லைகளுக் குட்பட்ட நாட்டின் மன்மீக் கூறுநர் மறந்தபக் கடத்தல் முதலியவற்ரு லாய மறப்புகழைக் கேட்டு அப்புகழ்ச்சிக்குக் காரணமாய வலியையுடைய சேரன் தம்மேல் வருதலுண்டாம் என்று திசைதொறும் இருக்கும் அரசு கள் அஞ்சித் துயிலாது நடுங்குதலின் அரசு துயிலீயாது மாதிரம் பனிக் கும் மறம் வீங்கு பல்புகழ்' என்ருர்,
s

12 ஆம் பாட்டு 17
'விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்ட?லப் புணரிகின் மான்குளம் ப2லப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து
கெஞ்சுகடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே' புற 31: 12-7. எனப் பிருண்டும் வருதல் ஈண்டறியற் பாலது.
முரசு என்றது ஈண்டு ஏமமுரசை, 'ஏம முரச மிழுமென முழங்க நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற், றவிரா வீகைக் கவுரியர் மருக" (புற3: 3 5) என வருதல் காண்க. இவ்வுலகிற்குக் காவலாக முரசு முழங்கும் உயர்ந்த அரண்மனையை இடமாகக்கொண்டும் அதனுல் வலிபெருமல் துயிலாது நடுங்குமாறு தோன்ற முரசு முழங்கு தெடுநகர்’ எனப் பகை யரசரின் அரண்மனையைச் சிறப்பித்துக் கூறினர். அரசர்கள் அரண்கொண் டும் அச்சத்தால் துயிலாமை "தொன்மருங் கறுத்த லஞ்சி யரண்கொண்டு, துஞ்சா வேந்தரும்” (பதிற் 81; 35-6) என்பதனுலுமறிக. அரசு என்பது பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணைப் பெயராகலின் அரசுகள் என உரைக்கபபட்டது. "துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” என்புழி அரசு-அரசுகள் எனப் புறப்பாட்டுரைகாரர் (புற 31: 17) பொரு ளுரைத்தவாறுங் காண்க,
துயிவியாது என்பது துயிலாது என்னும் வினைத் திரிசொல். துயி லாமல் எனத் திரிக்க. இனித் திரியாது, இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்திற்கேற்றி, மாதிரமானது அரசு துயிலியாது பணிககு மென அம்மாதிரத்தின் வினையொடு முடிப்பினும் அமையும் மாதிரம்திசை. பனிக்கும் புகழ் என்பது நோய் தீரு மருந்து போனின்றது. பனிக்கும் என்னும் பெயரெச்சம் புகழ் என்னும் ஏதுப் பொருண்மை கோடல், "நிலனும் பொருளும்" என்னும் சூத்திரத்தில் (தொல். வினை 37) கருவிக்கணடங்கும்.
மறம் வீங்கு பல்புகழ் என்றது அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் கல்வி ஈகை முதலியவற்ருல் வரும் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழ் என்ற வாறு. இச்சிறப்பானே இச்செய்யுளுக்கு மறம்வீங்கு பல்புகழ் என்று பெயராயிற்று.
அரசர்க்கு மறப்புகழ் சிறந்த புகழாதல், 'அடுதிற லுயர்புகழ் வேந்தே" (மதுரைக் 130)என்பதனுலுமறிக, மறம்வீங்கு பல்புகழ் என்பதற்கு வீரத் தான் மிகுந்த பலவாகிய புகழ் எனினுமாம். பகையரசர்க்கு நடுக்கத்தை விளைக்கும் மறப்புகழ், இரவலர் முதலாயினுர்க்கு இன்பத்தை விளைத்தலின் மறவீங்கு புகழ் கேட்டற் கினிது’ என்ருர், புகழ் என்பது சாதி யொருமை யாகலின் இனிது என்னும் ஒருமைப் பயனிலைகொண்டது.
9-14, நின்செல்வத்கைக் கேட்குந்தோறும் நின்னைக் காணும் விருப் பத்தார், குன்றுபல நீந்திவந்து அவண் இறுத்த சுற்றம் என்க.
韃

Page 24
8 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
சேரலாதனின் மறப்புகழைக் கே ட் கு ந் தோறு ம் அமர்கடந்து பெற்ற பெருஞ்செல்வமுடையான் என்பதும் அறியப்படுதலின் 'மறம்வீங்கு புகழ் கேட்டற்கினிது; நின்செல்வம் கேட்டொறும் என்ருர், அச்செல்வ மெல்லாவற்றையும் வானநாண வரையாது ஈயும் சேரன்பாற் சென்ருற் பெறலாம் என்னும் எண்ணத்தாற் பரிசின் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அவ னைக் காண்டற்கு விருப்புண்டாதலின் செல்வம் கேட்டொறும் காண்டல் விருப்பொடு' என்ருர், விருப்பொடு குன்றுபல நீந்தி வந்து இறுத்த என முடிக்க, சேரநாட்டுக் குன்றுகள் பலவற்றையும் கடத்தல் அரிதென்றெண் ஞனது காண்டல் விருப்பத்தால் அரிதிற் கழித்துச் செல்லுதலாற் குன்றுபல நீந்தி' என்ருர். அக்குன்றுகள் பலவும் யானை முதலிய விலங்குகளையுடை மையால் எழிதிற் கழித்தற் கரியனவென்பார், அண்ணன் மழகளிறு அரி ஞமி ருேப்பும், கன்று புணர் பிடிய குன்று' என்ருர், வள்ளியோரை நினைந்து இரவலர் அரியவழி பலவற்றையுங் கடந்து செல்லல்,
'ஆனினங் கலித்த வதர்பல கடந்து
மானினங் கலித்த மலைபின் ஞெழிய மீனினங் கலித்த துறைபல நீந்தி யுள்ளி வந்த வள்ளுயிர்ச் சிறியாழ் சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண? புற 188:1-5. என வருதலானுமறிக. -
குளவி-காட்டுமல்லிகை என்பர் நச்சினுர்க்கினியர். (முருகு 191 உரை) மலைமல்லிகை" என்பர் புறநானூற்றுரைகாரர் (புற168: 12 உரை) மலைப் பச்சை' என்பர் திவாகரரும் பிங்கலரும். கடுப்புடைப் பறவையாகிய குளவி
யை நீக்குதற்குக் கமழுங் குளவி என்ருர், குளவி மணமுடைத்தாதல்,
“கான்மிகு குளவி” (பதிற் 30:23) 'நாறிதழ்க் குளவி"(புற 380; 7)என வரு
வனவற்ருலுமறியப்படும். குளவியால் ஒப்பும் எனமுடிக்க,
பைம்மயிரினையும் ஆடு நடையினையுமுடைய களிறு என்க. களிற்றின் உடம்பில் மயிர் நிமிர்ந்து நிற்பினும் பசுமையுடைத்தாகலின் "வாடாப் பைம்
மயிர்' என்ருர், இளைய களிறு என இயையும். ஆடுநடை என்பதற்கு
அசைந்த நடை என்றுரைப்பினுமமையும், இளைய என்பதனுற் களிற்றின் இளமை கூறப்பட்டமையின் மழகளிறு என்பது பெ ய ர் மாத்திரையாய் நின்றது. -
வரிகளையுடைய Dமிருதலின் அரிஞமிறு' என்ருர், 'அணிமிகு வரி Dமிறு” (குறிஞ்சி 111)எனப் பிறரும் கூறுதல் காண்க. அரி-வரி பு: வெ. மா. 287 உரை. கன்ருேடுகூடிய பிடியைப் புணர்ந்த களிறு அப்பிடியில் வீழ்கின்ற Dமிற்றை ஒப்புதற்கிடணுகிய குன்ருதலின், களிறு Dமிருேப் பும் கன்றுபுணர் பிடிய குன்று' என்ருர், 'கன்றுடை மருங்கிற் பிடிபுணர்ந் தியலும். அண்ணல் யானை" (நற்.190)என வருதல் காண்க, க ளி று பிடியில் வீழும் Dமிற்றை ஒப்பல்.
'உருகு காதலிற் றழைகொண்டு மழலைவண் டோச்சி
முருகு நாறுசெங் தேனினே முழைநின்றும் வாங்கிப் பெருகு சூலிளம் பிடிக்கொரு பிறைமருப் பியானே பருகு வாயினிற் கையினின் றளிப்பது பாராய்' கம்ப. சித்திரகூட 10

12 ஆம் штi“ () 19
என்பதனுலுமறியப்படும். இனி, களிறு ஞமிருேப்பும் என்பதற்குக் களிறு தன் மதத்தில் வீழ்கின்ற Dமிற்றைக் குளவியால் ஒப்பும் என்றுரைப்பினு மமையும். -
*நெடுநிலை யாஅம் ஒற்றி கனகவுள்
படிஞமிறு கடியும் களிறே? அக 59; 8-9. எனப் பிருண்டும் வருதல் காண்க. "மழகளிற் றரிDமிறு' எனப்படாமையின் களிற்றில் மொய்க்கும் Dமிற்றைப் பிடி ஒப்பும் எனல் பொருந்தாதென்க. ஒப்பும் குன்று என முடிக்க, குளவியும் யானையும் மலைக்குரியவாதல்,
*பருவி2லக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற் கடுங்கண் வேழத்துக் கோடுகொடுத் துண்ணும் வல்வில் லோரிக் கொல்லிக் குடவரை’ குறுந் 100. என்பதனுலுமறிக. அவண் இறுத்த' என்புழி அவண்' என்னுஞ் சுட்டு ஒக் கல் இருக்கும் இடத்தைக் குறித்து நின்றது. சுற்றம் என்றது கூத்தர்ச் சுற்றத்தை. "கோடியர் தலைவ. நின் னிரும்பே ரொக்கலொடு" பொருந 57-16. பாணர்ச் சுற்றமெனினு மமையும். இருபேரொக்கல் என்பதற்குக் கரிய பெரிய சுற்றம் என்றுரைப்பினுமமையும்.
விருப்பொடு (10) நீந்தி (18) இறுத்த ஒக்கல் (14)என்க. 15-25. ஒக்கற் பழங்கண் வீழ மையூன் பெய்த சோற்றைக் கள்ளின் தேறலொடு மாந்தி, நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ மகளிர் இழை யணிய நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கு இனிது என்க.
ஒக்கற் பழங்கண் எனக் கூட்டுக. பழங்கண்-துன்பம், திருக்கோவை 329 பேர். அது பலநாள் உணவின்மையால் உண்டாகிய பசியால் வருந் திய துன்பமாகலின் தொல்பசி யுழந்த பழங்கண்' என்ருர், அடுகின்ற பசி யால் மிக வருந்தியமை தோன்ற "உழந்த' என்ருர், 'ஆடுபசி யுழந்த நின் னிரும்பே ரொக்கலொடு” (பொருந.61)எனப் பிறருங் கூறுதல் காண்க வீழ (15) மாந்தி (18)என முடிக்க, எஃகு என்றது ஊனை வெட்டும் அரி வாளை, அதனுற் பிண்டமாகிய தசையைப் பிளந்து சிறு துண்டங்களாகக் குறைக்கப்பட்ட தசையை "எஃகு போழ்ந்தறுத்த குறை' என்ருர், தசை சிவந்திருப்ப அதனைப் பொருந்திய நிணம் வெண்மையதாகலின் வாணி ணம்' என்ருர், நிணத்தையுடைய கொழுவிய தசையாகலின் கொழுங் குறை' என்ருர், "பருத்திப் பெண்டிர் பனுவ லன்ன. நிணந்தயங்கு கொழுங்குறை’ (புற125:1-2)எனப் பிறருங் கூறுதல் காண்க. கொழுங் குறை-கொழுவிய தசை, பெரும்பாண் 472 நச், குறைக்கப்பட்டமையின் தசையைக் குறை என்ருர், குறையாகிய ஊன் என்க. மையூன்-ஆட் டுத்தசை 'செம்மறியாட்டின் தசை என்பர் புறநானூற்றுரைகாரர். (புற96: 72உரை) சோற்ருேடு ஊனையும்கூட இட்டு ஆக்குதலின் ஊன் பெய்த சோறு" என்ருர். இதனை,
* களிறறில் வீழும் வண்டைப் பிடிஒப்பல். "படுமதங் கவரும் வண்டு பைக் தளிர்க் கவரி யேந்திப், பிடிமகிழ்ந் தோப்ப நின்ற பெருங்களிற் றரசு? (சீவக 2715) என்பதிற் காண்க,

Page 25
20 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
"புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்? மதுரைக் 533. 'புலராப் பச்சி?ல யிடையிடுபு தொடுதத
மலரா மாலேப் பந்துகண் டன்ன வூன்சோற் றம2ல? புற 33; 12-4. 'அட்டான் ருஞக் பொழுந்துவை யூன் சோறும்" புற 113; 2. என வருவனவற்ருலும், "கோ மூன்குறைக் கொழுவல்சி" என்பதற்குக் கொழு த்த இறைச்சியையுடைய கொழுந்திருக்கின்ற சோற்றினையும்; ஊனைக்கூட இட்டு ஆக்குதலிற் கொழுவல்சியென்ருர்’ என்ற (மதுரைக் 141 நச்) உரை யினுலும் நன்குணரலாம். இனி, ஊன்பெய்த சோறு என்பதற்குக் கறியா கிய ஊனை இட்ட சோறு என்றுரைப்பினும் அமையும். *செந்நெல் வெண் சோற்றை விலக்க வெண்ணல் வெண்சோறு என்ருர்,
நனையமை கள் என்றது தென் னை பனை ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்ளை. கள்ளின் தேறல்-கள்ளாகிய தேறல். கட்டேறல்-கள்ளாகிய தெளிவு புற10:12 உரை. இன் தவிர்வழி வந்தது. தேறலை இடையிடையே பருகிச் சோற்றை உண்டலின் சோற்றைத் தேறலொடு மாந்தி' என்ருர், "நிணந் தய்ங்கு கொழுங்குறை, பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர, வுண்கும்" (புற.125; 2 -4)என வருதல் காண்க.
'நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு கிழிந்ததும் அழுக்கேறியதுமாகிய ஆடைக்குவமை, "கூதிர்ப் பருந்தின் இறஞ்சிற கன்ன, பாறிய சிதாரேன்” (புற 150: 1-2)எனப் பிறரும் கூறுதல் காண்க, சிறகன்ன சிதாஅர் என்க. பாயலின்றிக் கிடத்தலின் மண்தின்ற கந்தையாகலின் "நிலந்தின் சிதாஅர்" என்ருர், நிலந்தின் என்றது “உண்டற் குரிய வல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலு மரபே" (தொல் பொருள் 19) என்ற சூத்திரத்து உம்மை யாற் கொள்ளப்படும்.
நூலாக் கலிங்கம் என்றது ஒருவர் நூலா நூலாகிய பட்டுநூல் முதலாய வற்ருற் செய்த கலிங்கம் என்றவாறு. நூல் சினையும் கலிங்கம் முதலுமாக லின் அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமை பற்றி, நூற்ற என்னும் பெய ரெச்சத்தின் எதிர் மறையாகிய நூலாத என்னும் சினைவினையை முதன்மே லேற்றி வழுவமைதியாற் கூறினர் என்க. கலிங்கம்-ஆடை வாலரைஅழுக்கேறிய ஆடைகள் கிடத்தலின் வெள்ளிதாகிய அரை. "இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம், எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ" (மலைபடு 561-2)என்புழி, 'வெள்ளரை-அழுக்கேறிய சீலைகள் கிடத்தலின் வெள்ளிதாகிய அரை' என நச்சினுர்க்கினியர் உரைத்தவாறுங் காண்க.
மகளிர், கடைகுழன்ற கறுத்த மயிரினையுடையராகலின் 'வணரிருங் கதுப் பின்' என்ருர், “கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள்" என்ருர் சிந்தாமணியினும். (சீவக 164), வணர் - கடைகுழன்ற, (கலி 57-1)நச், நெறித்த எனினும் அமையும். 'வணர்குரல்-நெறித்த மயிர்' எனப் பரிமேலழகர் உரைத்தல் காண்க. (பரி 10-89 உரை) மகளிர்க்கு
* "செந்நெல் வெண்சோறு" நற். 367:3.
 

12 ஆம் பாட்டு 21
න6# [p]] இனிதாதல் நோக்கித் தோளுக்கு மென்மை கூறினுர், "வெண் ணெய்போன் றுாறினியள்” எனச் சிந்தாமணியாசியர் கூறுதலுங் காண்க. (சீவக 480.)
தொல்பசியுழந்த பழங்கணுடையராய்க் குன்றுபல நீந்தித் திரிதரும் நல் கூர் வாழ்ககையராயினும், வணரிருங் கதுப்பு வாங்கமை மென்ருேள் முத லியவற்ருல் அழகுடையராயினும் தம் ஒழுக்க நிலையில் தவருதவர் என்பார் வசையின் மகளிர்" என்ருர், மகளிர் என்றது விறலியரை, அவர்க்கு அர சன் இழைகளை அளித்தலின் "வயங்கிழை யணிய” என்ருர், 'மலர்ந்த வேங் கையின் வயங்கிழை பயணிந்து, மெல்லியன் மகளிர் எழினலஞ் சிறப்ப. நல்குவன் பலவே" (பதிற் 40: 22-31) எனவருதல் காண்க. வயங்கு இழை, முத்துமாலை பொன்னரிமாலை முதலியன. 'நூலின் வலவா நுணங்கரின் மாலை, வாலொளி முத்தமொடு பாடினி யணிய" (பொருந.16க் -2) "பொன் னின், ருெடையமை மாலை விறலியர் மலைய" (பெரும்பாண் 486-6)என வருவன காண்க. கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் கூத்தன், தன் சுற்றமொடு சென்று அரசனுல் தலைநா ளன்ன விருப்பொடு பன்னுள் உபசரிக்கப்பெற்று இன்புற்ருனுகலின். 'அமர்பு, சுற்றம்ொடு நுகர்தற் கினிது பெருங்கலி மகிழ்வே' என்ருன், அமர்பு என்பதற்கு மனம்விரும்பி என்றுரைப்பினும் அமையும். மெய் ஆர்த்த சுற்றம்-உண்டியும் உடையும் அணிகளும் பெற்ற உண்மை மகிழ்வான் ஆரவாரித்த சுற்றம். இனி, தன் மெய்யுடன் ஆர்க்கப்பட்டாற்போலப் பிரிவின்றித் திரியும் சுற்றமுமாம். சுற் றம் என்றது கூத்தற் சுற்றத்தை மந்திரி முதலிய சுற்றத்தார் என்று உரைப்பாருமுளர்.
இதனுற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஒலக்க விநோதச் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
பழையவுரை , 8 7. துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரிசொல்; துயிலாம லெனத் திரிக்க, இனித் திரியாது, 'யாறுநீ ரொழுகாது கிடந்தது என்னும் வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கேற்றி, மாதி ரமானது அரசுதுயிலீயாது பனிக்குமென அம்மாதிரத்தின் வினையொடு முடிப்பினும் அமையும். 8. மறம்வீங்கு பல்புகழென்றது அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு மறம்வீங்கு பல்புகழ் என்று பெயராயிற்று. 8-9. நின் செல்வம் இனிது; யாது இனிதெனிற் பல்புகழ் கேட்டற்கு இனிதென முடிபுகொள்க. 9 கேட்டொறு மென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க, 21 நூலாக் கலிங்கமென்றது ஒருவர் நூலாநூலாகிய பட்டு நூல் முதலியவற்ருற் செய்த கலிங்கமென்றவாறு. நூலாமையென்னுந் தொழில் கலிங்கத்துக் குச் சினையாகிய நூல்மேலதாதெனின், அச்சினையோடு முதற்குள்ள ஒற் றுமை பற்றிச் சினை வினையை முதல்மேலேற்றி வழுவமைதியாற் கூறி ஞனென்க. இனி நூலாநூற் கலிங்கமென்பான் நூலென்பதனைத் தொகுத்

Page 26
22 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
துக் கூறினுனென்பாரும் உளர். 25. நுகர்தற்கு இனிதுநின் பெருகலி மகிழ்வேயென்றது நின் பெரிய ஆரவாரத்தையுடைய ஒலக்கத்துச் செல் கின்ற வினுேத மகிழ்ச்சி அனுபவித்தற்கு இனிதென்றவாறு.
வேந்தே (3) நின்செல்வம் (9) புகழ் (8) கேட்டற்கினிது; (9) நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கினிது (25) என வினை முடிபு செய்க.
இதனுற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஒலக்க வினுேதச் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. வ பவர் வீழ : *உறுபுலி யன்ன வயவர் வீழ?? பதிற் 5-ம் பதி 10. வடி மணிப் புரவியொடு வயவர் வீழ’ பட்டினம் 232.
2. 'முனை, பனிப்பப் பிறந்து’ பதிற் 4-ம் பதி “நின், காமர் கழலடி சேரா, நாமஞ்சா றெவிவரி னடுங்கினள் பெரிதே? கலி 30: 19-21. “கன்மணித் திண்டேர் கயவார் தலைபனிப்ப? பு. வெ. மா; 128, "வேந்துதலை பனிப்ப வேந்துவாட் செழி யன்? சிலப் 14: 5
3. கடம்புமுத றடிந்த: “கடம்புமுத ற டிங் த காவலஜனப் பாடி? சிலப் 29, ஊசல்வரி.
சேரலாதன் கடம்பு தடிந்தது: பதிற் 11:12-3 அடிக், கடுஞ்சின வேந்தே: "கடுஞ்சின வேங்தே? "கடுஞ் சின வேந்தர்? பதிற் 30: 44; 70; 10. *க டு ஞ சின வேங் தன்? கடுஞ்சின வேந்த னேவலி னெய்தி?
தக 164; 14; 211: 11.
4. வள்ளுகிச்: பொருத 34; சிறுபாண் 136; 182; குறிஞ்சி 131; குறுந் 67; 3; 201: 3. - sy as 362: 5.
4-5. வள்ளுகிர் அரிமான்: “வள்ளுகிர் கோன்ருள் அரிமா?? நாலடி 198. 5. அரிமான்: பதிற் 88 15; சீவக 432; 3019; பெருங்(!) 44; 134 அரிம ன் வழங்கு சாரல்: 'அரிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும், பெரும2ல விடரகத் தொருங்குடன் குழி இ? கலி 103; 18-9.
7. முரசு முழங்கு நெடுநகர் : 'கெடுங்கர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்? முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்’ புற 68:17; 247; 8, 'வான்றேய் நக ருண், முழங்கு மதிரு முரசு’ பு: வெ. மா 158, "வள்வார் முர சம தி ர் மாநகர்? as à L. sb J,773.
8. பண்புகழ்: "கெடலரும் பல்புகழ்’ ‘மாயாப் பல்புகழ்?? பதிற் 48:3; 90; 10. "பல்புகழ் முற்றிய கூடல்' பரி 17: 22-3 °ப ல் புகழ் த் தடக்கை” "பல்புகழ் நிறைந்த வெல்போர் கந்தர்’ அக 22:5; 265; 4. "பல்புகழ் நுவலுகர் கூற' 'பாடு நர்க் கீத்த பல்புக ழன்னே? புற 160; 15; 221; 1.
மறம் வீங்கு பஸ் புகழ்: "வென்றிப் பல்புகழ்’ மமேபடு 544. "வெல்புக முயர் நிஜல? வெல்புகழ் மன்னவன்? கலி 105; 50; 118; 1. "அடுபுகழ் மேவலொடு" அக 214; 7. “விறற்புகழ், வசையில் விழுத்தினைப் பிறந்த, இசைமேந் தோன்றல்?? 'மறப்புகழ் நிறைந்த மைந்தினேன்’ புற 159: 26-8; 290: 6. 'விறற்புகழ் மன் னற்கு பழமொழி 275. 'வீங்கிய திண்டோள் வெல்புகழாய்? சீவக 1639, 'சயப் புழார் பலர் வாழும் தடங்குருகூர்’ திருவாய் (3)2-11.
11. ஆடுநடை 'ஆடுகடை யண்ணல்" பதிற் 4: 7; 86; 8. 12. மழகளிறு: பதிற் 16: 8; 32; 3; 84; 11. கலி 86: 1. அக 102:9) HA) 22; 8; 38:1; 103:17, புவெ: மா 162, சீவக 2917, பெருங்(!) 33; 130,

12 ஆம் பாட்டு 23
அரிஞமிறு: "தருமணன் மு ற் ற த் தரிஞமி ருர்ப்ப? மதுரைக் 634. ஆர மார்பி னரிஞமி ருர்ப்ப? அக 102:10,
களிறு ஞமிருேப்பல்: “படுவண் டோப்பும். அண்ணல் யானே? பெருங்(!) 48: 27-9.
13. கன்று புணர் பிடி: 'கன்றுடை மடப்பிடி? அக 12: 15.
12-3, களிறு பிடி கன்று: பொருந 125-6. மதுரை 101-2, நற் 202: 3-4; 399; 6-8 அக 168; 9-10; 321: 9; 347; 12-3. புற 369: 26-7. கம்ப. நாட்டுப் 32.
யானையையுடைய வழியை நீந்தல்: *ஓங்கல் யானை யுயங்கி மதந்தேம்பிப், பன் மர வொருசிறைப் பிடியொடு வதியுங், கல்லுடை யதரகானம் நீந்தி’ அக 295; 6-9
10-3. குளவிய குன்று: 'பெருந்தண் கொல் லி ச் சிறு ப சு ங் குளவி?? | s.ö 346 — 9.
13. குன்று பல நீந்தி: "குன்ற நீந்தி? நற் 212-6. "வெம்பர லதர குன்று
பல நீந்தி? 'கோடுயர் பிறங்கன் குன்றுபல நீந்தி? அக 33; 11; 393: 1.
14, இரு பேர்ொக்கல்: சிறுபரண் 139-144, பெரும் பாண் 25. மல்ேபடு 157, அக 301:23. புற 150; 13; 320:14-5; 370; 3: 378; 13; 391: 8; 393; 10; 394; 16; 396. 23. -
13-4. இரவலர் குன்று பல நீந்திச் செல்லல்; “கன்முழை யருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை" "குன்று மலையும் பலபின் ஞெழிய3 வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென? புற 147; 1-2; 208: 1-2.
15. 'பசித்த வொக்கற் பழங்கண் வீட? புற 389; 14, தொல்பசி : பெரும் பரண் 253, அக 193; 10. பழங்கண்: அக 48; 2-3; 174; 9. புற 389; 14. 16. வானினக் கொழுங் குறை : “ஊனத் தழித்த வானினக் கொழுங் குறை? பதிற் 21; 10. “செந்தி அண ங் கி ய செழுநிணக் கொழுங்குறை’ அக 287; 9, 'இழுதி யன்ன வானினக் கொழுங்குறை? புற 150; 9.
17. மையூன்: நற்83: 5. புற96: 7 ஊன் பெய்த சோறு; 'ஊணமலைச் சிறுகுடி" கலி50; 13; 'வானினம் உருக்கிய வாஅல் வெண்சோறு? அக.107; 9 'எய்ம்மா னெறிதசைப் பைஞ்ஞனம் பெருத்த பசுவெள்ளம2ல' 'நிணம்பெருத்த கொழுஞ் சோற்றிடை" புற177:13-4; 384: 15 *ஊன்களோ டவை பதஞ்செய்ய” கந்த மகேந்திர நகர்புகு 29.
18 ந&னயமைகள்: பதிற் 40; 19; 85; 17; அக213:17, 221:1; 366; 11: புற297: 6; 896: 16
20. சிதசஅர்; பொருந81; 154; புற69; 3; 138: 5, 398: 19: 400:10,
14-21:பொருந79-83:158-8; சிறுபாண்2 5-45; பெரும் பாண் 467-49 ம& படு560-66, புற113:1-4; 261, 6-10; 385: 5-7; 392:13-9; 393; 9-19; 398: 16-23; 400: 16-7.
22. வணரிருங் கதுப்பு: “வாருறு வணர் கதுப்பு" குறுந்821; 'வெறி கமழ் வண ரைம்பால்’ வாருறு வண ாைம்பால்" கலி57; 1; 58; 1. “வனர்சுரி ஐம் பால்’ அக 152; 3; "வணரொலியைம் பாலார்" இன்னு15; 'வணர்சுரி யைம்பா லோய்? லெப்7:31, -
வங்கமை மென் ருேள் : 'வாங்கமைத் திரடோள்' மமே படு57; 8 வாங்கமை மென்ருேட் குறவர்மட மகளிர்' கலி39; 16; வாங்கமை புரையும் வீங்கிறைப் ப2ணத் தோள்’ அக343: 1; “வாங்கமை மென்ருேட் குறவர் பகளிரேம்' திணை மொழி 8. "வாங்கமை மென்றேண் மடந்தை' நாற் சூ139 மேற் கண்ணுஞ் 'பஞ்சி ய2னய வேய்மென்ருேள்' சிவக351; “வாங்கமைப் பனைத் தோள் சிலப் 15: 201.
23. வயங்கிழை சிறுபாண் 18; பட்டினப்218; தற் 299; 4; ஐங்210; 4; 234; 1; கலி 11: 5, 31: 2; அக. 306: 10; புற 222: 1; பெருங்(2)120: 96

Page 27
24
பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வயங்கிழை யணிய: *வள்ளி மருங்குல் வயங்கிழை யணிய" புற 316; 9.
விறலியர்க்கு இழை: "ஒண்ணுதன் ம க ளிர் க் காரம் பூட்டி’ பதிற் 48; 2: 'விறலியர், சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய" பெற்ற வயவேந்தன், மறம்பாடிய பாடினியும்மே, சீருடைய விழைபெற் றிசினே? "சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி. பாரி வேள்பாற் பாடினே செலினே? 'பாடினி மாஜல யணிய* "வாடா மாலே பாடினி
யணிய" புற 11: 11-3; 105; 1-8; 319: 14; 864: 1.
13.
10
15
20
25
3. பூத்தநெய்தல்.
தோறுத்தவய லாரல்பிறழ்கவும் ஏறுபொருதசெறு வழாதுவித்துகஷம் ,
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்க னெருமையி னிரைதடுக் குகவும் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலே மூதா வாம்ப லார்கவும் ஒலிதெங்கி னிமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவி னழிய நாமக் தோற்றிக் கூற்றடுஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் - திரிகாய் விடத்தரோடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க ஊரிய நெருஞ்சி நீருடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய வூக்குநர் மிடறடத் துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே காடே கடவுண் மேன புறவே ஒள்ளிழை மகளிரோடு மள்ளர் மேன ஆறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்கர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருகர் பார மோம்பி அழல்சென்ற ம ருங்கி ன் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
ம8ல்படு 569-70 யேருடைய விழுக்களஞ்சிற்.

13 ஆம் பாட்டு 25
நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமரீ காத்த நாடே.
துறை-செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம்-ஒழுகுவண்ணம். தூக்கு-செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர்-பூத்தநெய்தல் (3). ப-ரை. 1-10. தொறுத்த வயல் ஆரல் பிறழ்கவும்-ஆநிரை கட்டிய வயல்களாகிய ஆரல்மீன் உகழும் இடங்களும், ஏறு பொருத செறு உழாது வித்துநஷம்-ஏறுகள் பொருதலாற சேறுபட்ட வயல் களாகிய உழாது விதைக்கும் இடங்களும், கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்-கரும்பு நிற்கும் பாத்தியிற் பூத்த நெய்தல், இரு கண் எருமையின் கிரை தடுக்குகவும்- அக்கருமபு முதலாய வேறு இரை யின் பாங்கரிற் செல்லாது பெரிய உடலிடத்தையுடைய எருமை கிரையைத் தடுக்கும் இடங்களும், கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்-ஆரவாரம் பொருந்தின துணங்கைக் கூத்தை மகளிர் ஆடிய இடத்தில் நின்று, வளை தலை மூதா ஆம்பல் ஆர்கவும்வளைந்த தலையையுடைய முதிய பசுக்கள் ஆம்பல் மலர்களையே நின்று தின்னுமிடங்களுமாகிய, ஒலி தெங்கின்-தழைத்த தெங்கினையும், இமிழ் மருதின்-புள்ளினம் ஒலிக்கும் மருதமரங்களேயும், புனல் வாயில்-நீரோடும் வாய்த்தலைகளையும், பூ பொய்கை-பூக்களையுடைய பொய்கைகளையும், பாடல்சான்ற பயம் கெழு வைப்பின்-புலவராற் பாடுதல் முற்றுப்பெற்ற பயன்பொருக்திய ஊர்களையுமுடைய,
“0-19. காடு கவின் அழிய-நாடுகள் அழகு அழியும்படி, நாமம் கோற்றி-அங்காட்டு மக்களுக்கு அச்சம் தோன்றும்படி செய்து, கூற்று அடூஉ கின்ற யாக்கைபோல-கூற்றுவணுலே கொல்லேப்படா கின்ற யாக்கை போலும்படி, நீ சிவந்து இறுத்த-நீ கோபித்துச் சென்றுவிட்ட, நீர் அழி பாக்கம்-வெள்ளத்தான் அழிவுபடினல் லது பகைவரான் அழியாத பாக்கங்கள், விரி பூ கரும்பின் கழனி புல்லென-விரிந்த பூக்களையுடைய கரும்பினேயுடைய வயல்கள் பொலிவு அழிய, திரி காய் விடத்தரொடு கார் உடை போகி-முறு கிய காயையுடைய விடத்தர் என்னும் மரத்தோடு கரிய உடைமர மும் நெடிதாக வளரப்பெறறு, கவை தலை பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க-கவைத்த தலைமயிரையுடைய பேய்மகள் பேயை ஊர்ந்து செல்ல, ஊரிய நெருஞ்சி நீருடு பறந்தலை-பரந்த நெருஞ்சி யையுடைய புழுதி பரந்த பாழ்பட்ட இடத்தையுடையவாய், தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து-தாதாகிய எரு ஒழிந்த ஆர
4.

Page 28
26 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வாரம் அழிந்த மன்றத்தையுடைய வாய், உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து- அம்மன்றிலே போதற்கு உள்ளம் அழியச்செய்தே பின்னும் தம் கரும வேட்கையாற் போகமேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே, உள்ளுநர் பனிக்கும் பாழாயின-பின்பு போக நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய பாழாயின.
20-28. காடே கடவுள் மேன-நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் கடவுளான் மேவப்பட்டன; புறவு ஒள் இழை மகளி ரொடு மள்ளர் மேன-அங்காட்டுச் சிறுகாடான இடங்களெல்லாம் விளங்கிய அணிகலத்தையுடைய மகளிரொடு நின் படையாளரான் மேவப்பட்டன; ஆறே அவ் அனைத்து-காடும் புறவும் அல்லாத பெருவழிகளும் கடவுளும் மள்ளரும் உலாவிப் போதரும் இடங்க ளாயின; அன்றி-இவை அல்லாமலும், ஞாலத்து கூலம் பகர்கர் குடி புறம் தரா-பூமியின் கண் நென் முதலிய பண்டங்களை விற்கும் வாணிகரின் குடியைப் பாதுகாத்து, குடி புறக் கருநர் பாரம் ஓம்பி -தம் கீழ்க் குடிகளாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளா கிய காணியாளர் குடும்பத்தைப் பாதுகாத்து, நீ காத்த நாடு- நீ பாதுகாத்த நாடு, அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது-செவ் வாய் சென்ற பக்கத்தில் சுக்கிரன் ஒடப்பெருது, மழை வேண்டு புலத்து மாரி நிற்ப-மழை வேண்டும காலத்து மழைபொழிய, நோயொடு பசி இகந்து ஒரீஇ-நோயும் பசியும்விட்டு நீங்கப்பெற்று, பெரும பூத்தன்று-பெருமானே பொலிந்தது.
(փւg tվ: நாடு கவினழிய நா மந் தோற்றிக் கூற்றடு உநின்ற sau arä6an s போலும் படி நீ சிவந்து இறுத்த நீரழி பாக்கங்கள் கழனி புல்லென விடத்தரொடு உடையோகப்பெற்றுப் பேய் மகள் கழுதூர்ந்து இயங் கப் பாழாயின் நீ காத்த நாட்டிற் காடு கடவுளான் மேவப்பட்டன; அந்நாட்டுப் புறவுகள் மள்ளரான் மேவப்பட்டன; அந்நாட்டு ஆறு அவ்வனைத்தாயிற்று; அன்றியும் கூலம் பகர்நர் குடிபுறந் தராக் குடி புறந்தருநர் பார்மோம்பி நீ காத்த நாடு மழை வேண்டு புலத் து மாரி நிற்ப நோயொடு பசியிகந்தொருவப் பெற்றுப் பூத்தது என்க.
(ஆ-ரை) 1-10. பிறழ்நஷம் வித்துநஷம் தடுக்குநஷம் ஆர்.நவுமா மாகிய, தெங்கினையும் மருதினையும் வாயிலினையும் பொய்கையினையும் வைப் பினையுமுடைய நாடு என்க. ஆநிரைகளுக்கு மேய்புலமாக இருந்த வயல் களில் நீர்நிறைந்து நிற்குமாறுதோன்றத் தொறுத்த வயல் ஆரல் பிறழ் நவும் என்ருர் தொறுத்த என்பது தொறு என்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம், தொறு-நிரை. இதனைத் 'தொகைமலி தொறுவை யாளும் தோன்றல்" (சீவக 474) எ ன் புழி த் தொறு-நிரை என நச்சினுக் கினியர் உரைத்தவாற்ருனுமறிக. "இருவகைத் தொறுவும்" (பெருங் (1) 37, 215) என வருதலின் தொறு என்பதற்கு பசுநிரை ஆட்டுநிரை ஆகிய

13 ஆம் பாட்டு V 27
இருவகை நிரைகளையும் கொள்ளினும் அமையும், ஆரல்-ஒருவகைச் சிறிய மீன். 'ஒழுகுநீ ராரல்’ (குறுந், 25) என வருதல் காண்க. வயலில் ஆரல் உண்மை “கழனியாரல்" (பெருங்(3) 7: 29)என்பதனுலுமறிக.
ஏறுபொருதசெறு உழாது வித்துநஷம் என்றது நீர்தேங்கி நிற்றலால் எருமைகள் உழக்கச் சேறுபட்ட வயல்கள் பின் ஏரான் உழப்படாது முளை விதைக்கும் இடங்களுமென்றவாறு.
'காரேறு பொருத கண்ணகன் செறுவின் உழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர் முடிகா றழுத்திய நெடுநீர்ச் செறுவின்? பெரும் பாண் 210-2. என வருதல் காண்க. ஏறு என்றது காரேருகிய கடாக்களை, செறு-வயல், செய்யைச் செறுவென்பது அருவாநாட்டு வழக்கு என்பர் நச்சினுர்க்கினி யர். (தொல், எச். 4)
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் என்றது கரும்பின் பாத்தியில் நீர் இடையருது நிற்றலின் தானே முளைத்துப் பூத்தநெய்தல் என்றவாறு. 'கரும் பின், பாத்திப் பன்மலர்ப் பூத்ததும்பின்று" (புற 386:10-11) என வருதல் காண்க, கரும்பு நடுதற்குப் பாத்திசெய்தலும் அதனுள் நீர் நிற்றலும் "கரும்புநடு பாத்தி யன்ன, பெ ரு ங் க ளி ற் றடிவழி நிலைஇய நீரே” (குறுந் 262) என்பதனுலுமறியப்படும்.
நெய்தல் எருமையின் நிரை தடுக்குநஷம் என்றது நெய்தலானது அக்கரும்பு முதலாய மற்ருேரிரையின் பாங்களிற் செல்லாது தன்னையே நின்று தின்னும்படி எருமை நிரையைத் தடுக்கும் இடங்களுமென்றவாறு, இச்சிறப்பானே இச்செய்யுளுக்குப் பூத்தநெய்தல் என்று பெயராயிற்று.
நெய்தலைப் பூத்த நெய்தல் என்றது, நெய்தன் மலர்களே இரையாகி எருமை நிரையைத் தடுத்தமையின், "வைகுறு விடியல் போகிய வெருமை, நெய்தலம் புதுமலர் மாந்தும்" (அக 100: 16-7) என வருதல் காண்க. பெரிய உடலிடத்தையுடைய எருமையாகலின் இருங்கண் எருமை என் ருர். இருங்கண் மூரி-பெரிய உடலிடத்தையுடைய எருது' எனப் பழைய வுரைகாரர் உரைத்ததுங்காண்க. (பதிற் 67:15 உரை) இருங்கண்-கரிய உடலிடம் எனினுமமையும். 'இருள்நடந் தன்ன கருங்கோட் டெருமை” (திணை நூற் ஐம்148) என வருதல் காண்க. "இருங்கண்' எனவும் "நிரை எனவும் முன்னும் பின்னும் எருமைக்கு அடைகொடுத்துக் கூறியது பெரிய உடலிடத்தையுடைய எருமையின்நிரை நின்று தின்றற்கேற்ற மிக்க பூக் களைப் பூக்கும் நெய்தலின் வளமிகுதி தோன்றற்பொருட்டு, இனி எரு மையின் இரை தடுக்குநஷம் எனப் பிரித்து, பூத்த நெய்தல்கள் எருமை களின் இரையாய் அவற்றை வேறு இரையின் பாங்கரிற்செல்லாது தடுக்கு மிடங்களும் என்றுரைத்தலுமொன்று. கரும்பு நெய்தல் எருமை என்ப வற்றை எடுத்துக் கூறியது, பகைவர் நாட்டின் நீர்வள நிலவளங்கள் நன்கு புலனுதற்பொருட்டு, "ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கு, நாடெனப் படுவது நினதே யத்தை" (புற35:10-11); "பழனம் படிந்த படுகோட் டெருமை. உரனழிந்தோடு மொலிபுன லூரன் (திணைமொழி ஐம் 31) எனப் பிருண்டும் வருவன காண்க,

Page 29
28 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
துணங்கை என்பது மசளிர் ஆடும் ஒருவகைக் கூத்து. "இலங்குவளை மடமங்கையர் துணங்கை" (மதுரைக் 159-60) எனவும். "மகளிர் தழீஇய துணங்கை யானும் ' (குறுந் 31: 2) எனவும் வருவன காண்க. 'பழுப் புடை யிருகை முடக்கி யடிக்கத் துடக்கிய நடையது துணங்கை யாகும்' (முருகு 156 நச். மேற்) என்பது இதன் இலக்கணம். பாடும் பாட்டுக்களி ஞலும், இயம்பும் வாச்சியங்களினுலும் காண்போரானும் துணங்கைக்கண் ஆரவாரமெழுதலின் கலிகெழு துணங்கை' என்ருர், புறத்துப்போய் இரை தேட மாட்டாத முதிய ஆக்கள் துணங்கை ஆடிய இடத்து நின்று. வீழ்ந்து கிடக்கும் ஆமபன் மலர்களைத் தின்னும் இடங்களைத் 'துணங்கை யாடிய மருங்கின், மூதா ஆம்பல் ஆர்.நவம்' என்ருர், "மகளிர், அணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த, ஆ” (நற் 395) எனப் பிருண்டும் வருதல் காண்க. ஆ என் றது காராவை. அது தலையைத் தாழ்த்திச் செல்லுதலின் "வளை தலை ஆ' என்ருர், "வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்" (பதிற் 67:16) என வரல் காண்க. இப்பகுதியாற் பெருக ஆம்பல் சூடித் துணங்கையாடுவாரை உடையனவென அவ்விடங்களின் செல்வச் சிறப்புக் கூறியவாருயிற்று. “மகளிர், இரவும் பகலும் பாசிழை களையார், குறும்பல் யாணர்க் குரவை யயரும்.புகாஅர்" (பதிந் 73; 5-9) எனப் புகாரின் செல்வச் சிறப்பைப் பிறரும் கூறுதல் காண்க,
பிறழ்ந, வித்துந, தடுக்குந என வந்தன வினைப்பெயர்த் திரிசொற்
கள். உம்மை-எண்ணும்மை.
நிலநலத்தானும் நீர்க்குறைவின்மையானும் தெங்கு தழைத்து வளர் தலின், ஒலிதெங்கின்' என்ருர், ஒலிதல்-தழைத்தல், "மஞ்ஞை, யொலி நெடும் பீலி" புற 50: 2-3 இமிழ் மருது-தன்னிடத்து இறைகொள்ளும் நாரை, சிரல், கிளி, மயில் முதலாய புட்கள் இமிழும் மருது. நாரை முத லியன மருதில் இறைகொள்ளல்,
'பழனப் பன்மீ னருந்த தாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்? ஜங், 70: 1-2.
'இருஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை யுறங்குங் தண்டுறை யூரன்’ அக 286; 6-7.
"கிளிவளர் பூ மருது' சீவக 264.
"மஞ்ஞை, பரித்தவை பழன காரைப் பார்ப்பொடு
மருதிற் சேக்கும்" சீவக 1853. என வரூஉஞ் செய்யுட்பகுதிகளிற் காண்க. 'இமிழ் மருதென்றதற்குப் புள்ளி மிழ் மருதென்று ஒரு பெயர் வருவிக்க' என்பர் பழையவுரைகாரர். புள்ளி னங்கள் ஒலித்தலின் 'இமிழ் என்னும் பொது வினையாற் கூறிஞர். "புள் ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் (புற15:4) எனப் பிறரும் கூறுதல் 凸5爪6矶厂d5。
புனல் வாயில் என்றது பொய்கைநீர் வயலுக்குச் செல்லும்பொருட்டு அதன் முன்னே படுத்த மதகை. புனல் வழங்கும் வாயிலாதலின் "புனல் வாயில்' என்ருர். இது வாய்த்தலை" என்றும் வழங்கப்பட்டமை, "புனல் வாயில்-நீரோடும் வாய்த்தலை என்னும் புறப்பாட்டுரையானறியப்படும்.

18ஆம் பாட்டு - 29
(புற 135; 25 உரை) வாய்த்தலையினின்றும் குதித்துவரும் வாய்க்கானிர்' (சிலப் 10; 90 அடிநல்) எனவும் "புனலாலே வாய்க்கால் உட்கரை முரித லின். வாய்த்தலையிலே மொய்த்தார் படலிடுதற்கென்க" (சீவக 40 நச்) எனவும் வரூஉம் உரைப்பகுதிகளில் வாய்த்தலையின் வேருக வாய்க்கால் கூறப்படுதலின் புனல்வாயில், வாய்க்கால் எனல் பொருந்தாதென்க. புனல் வழங்கும்படி வாய்த் தலைகளமைக்கப்பட்டமை,
*காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை? சிலப் 10; 108.
*பழங்கொள் தெங்கிலை யெனப் பரந்து பாய்புனல்
வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை’ சீவக 40, என வருவனவற்ருலுமறியப்படும். - - -
பொய்கையென்பது இடமகன்றதும் நன்னீரையுடையதுமாகிய நீர்நிலை.
'கண்ணகன் பொய்கை 1 (மரைதுக் 171) எனவும், "தேவரும் விழையுந் திருநீர்ப் பொய்கை" (பெருங்(1) 38; 74-5) எனவும் வருவன காண்க 'மா னிடராக்காத நீர்நிலை' என்பர் நச்சினுர்க்கினியர். (சீவக 337 உரை) பல வகைப் பூக்களையுடைமையாற் பூம்பொய்கை' என்ருர்,
*அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்யூ மலிந்த முதுநீர்ப் பொய்கை" பெரும் பரண் 293-4.
'முட்டாள சுடர்த்தாமரை
கட்கமழு கறுகெய்தல்
வள்ளித ழவிழ்நீல
மெல்லிலை யரியாம்பலொடு
வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை” மதுரைக் 249-53. என வருவன காண்க, பொய்கை வயற்கணுள்ளது. "தேங்கமழ் பொய்கை யகவய லூரனை" (ஜந், தெழு 45) என வருதல் காண்க.
பலவகைப் பயன்களும் பொருந்தலாற் புலவராற்பாடுதல் முற்றுப்பெற்ற நல்ல நாடாதலின் பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்' என்ருர், "பாடல் சான்ற நன்னுட்டு" (மதுரைக் 331) என வரல் காண்க. 'பாடல்சான்றபுகழ்தலமைந்த' எனினுமாம். பாடல்சான்ற (9) நாடு (10) எனமுடிப்பினும் அமையும், பயம் என்றது புது வருவாயின. "யாணர்ப், பயன்றிகழ் வைப் பின்" (புற 7; 12-3) எனப் பிருண்டும் வருதல் காண்க. வைப்பு-ஊர். பகைவர் நாட்டின் நலங்களையெல்லாம் எடுத்துக் கூறிஞர், அந்நலங்க ளெல்லாம் அழிந்து நாடு காடாகும்படி சேரலாதன் பகைவரை வெல்கின்ற சிறப்புத் தோன்ற,
10-19. நாடு என்றது பகைவர் நாட்டை, கவினழிய என்ருர் sp(35 பொருந்திய நாடாதலின். நாட்டின் கவின், “தொறுத்தவய லாரல் பிழழ் நவும். பயங்கெழு வைப்பின் நாடு” என்றதனுல் அறியப்படும். நாடு கவினழிய நாமந் தோற்றி என்றது நாட்டின் அழகழியும்படி எரியூட்டல் முதலாய செயல்களால் அந்நாட்டு மக்க ளின் உள்ளத்தே அச்சத்தைத் தோற்றுவித்து என்றவாறு, சேரலாதன் பகைவரது நாடு கவினழிய எரி யூட்டியமை,
*யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
P00 see LLLLLLLLLLLLLLLLLLLLLL SLLLS L00L LLLLLLLLL00L0L0

Page 30
30 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்?? பதிற் 15:1-8 என்பனுலுமறியப்படும். நாம்: நாமம் என உரிச்சொல் ஈறு திரிந்தது. நாம் -அச்சம் தோற்றி இறுத்த என முடிக்க, சிவந்து-கோபித்து, “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” என்பது தொல்காப்பியம். (தொல் உரி 76) இறுத்த பாக்கம் என முடிக்க.
கூற்ருவது: வாழ்நாள் இடையருது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்துங் கடவுள் அடூஉ நின்ற-அடப்படாநின்ற. என் றது கூற்றுவன் உயிரை அட்டுக்கொள்ளுங்கால் அஞ்சி வருந்திக்கிடக்கும் நிலையை. அந்நிலைக்கண் யாக்கை ஒருகாலைக்கு ஒருகால் அழகழியுமாறு போலப் பாக்கங்கள் சேரலாதன் சிவந்திறுத்துச்செய்யும் அழிவு செயல்க ளால் ஒருகாலைக் கொருகால் அழகழிதலின், ‘கூற்றடுஉ நின்ற யாக்கை போல, நீ சிவந்திறுத்த பாக்கம்' என்ருர், "யாக்கைபோல’ என்புழிப் போல வென்பதனைப் போலும்படியென வினையெச்ச நீர்மையாக்கி, போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாக உரைக்க, இனி, யாக்கைபோல(11) நாடுகவின ழிய(10) என மாறிக்கூட்டி உரைப்பினும் அமையும்,
நீரான் அழிவுபடினல்லது பகைவரான் அழியாத பாக்கம் என்பார் *நீரழி பாக்கம்' என்ருர்,
"உவலை துருடி உருத்துவரு மலிர்நிறைச்
செங்கீர்ப் பூச லல்லது வெம்மை ய ரிதுநின் னகன்றலே நாடே?? பதிற் 28; 12-4. 'தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
னிர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றென் றறியாத புரிசைசூழ் புனலூரன்? கலி 67; 3-5, என வருவன ஈண்டைக்கேற்ப அறியற்பாலன. நீர் என்றது யாற்றுநீரை. ஆகவே பாக்கம் என்றது நீர்க்கரைக்கணுள்ள ஊர்க்குப் பெயராமாறு அறியப்படும். பாக்கம் என்பது நெய்தநிலத்து ஊர்க்கேயன்றி,
'கறையகில் வயங்கிய களிபுன நறும் புகை
உறையறு மையிற் போகிச் சாரற் குறவர் பாக்கத் திழிதரு காடன்? குறுந் 339; 1-3. என்புழிக் குறிஞ்சிநிலத்தூர்க்கும்,
'குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந்தண் ணிலைய பாக்கமு முடைத்தே?? ஜங் 439. என்புழி முல்லைநிலத்தூர்க்கும் வந்தமைபோல, ஈண்டு மருதநிலத்தூர்க்குப் பெயராய் வந்தது. என்ன? "நாடுகவி னழியப் பாக்கம் கழனி புல்லென.பா ழாயின" என வருதலின். இனி, நீரழி பாக்கம்-தம் நீர்மையழிந்த பாக்கங்கள் என உரைப்பினுமமையும். பாக்கம் (12) பாழாயின (19) எனக் கூட்டுக. பாழாயின என்ற பன்மையாற் பாக்கங்கள் பலவாதல் அறியப் படும். பாய்புனலால் கழனிக்கண் கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்து பூத்திருத்தல் தோன்ற ‘விரிபூங் கரும்பின் கழனி என்ருர், "ஆய்கரும் படுக்கும் பாய்புன லூரன்" (அக 116:4) எனவும்,
*அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
 

18 ஆம் பாட்டு ri 3
வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது கினதே யத்தை’ புற35: 8-11. எனவும் வருவன காண்க. கழனி புல்லென என்றது விரிபூங்கரும்பினுற் பொலிவுபெற்ற கழனிகள் எரியூட்டலாற் பொலிவு நீங்கிப் புல்லென என்றவாறு. -
*கரும்பல்லது காடறியாப் பெருந்தண்ப2ண பாழாக வேம கன்னு டொள்ளெரி யூட்டினே? புற 18: 15-7. என வருதல் காண்க.
விடத்தர் உடை முதலிய முள்ளுடை மரங்கள் அழிக்கப்படுதலின்றி வளர்ந்து பூத்துக் காய்க்கும்படி, நெடுங்காலம் மக்களின்ருகப் பகைவர் நாடு பாழ்பட்டமை தோன்றத் திரிகாய் விடத்தரொடு காருடைபோகி' என்ருர், விடத்தர், "விடத்தேரை" எனவும், 'விடத்தே தொடரி" எனவும் வழங்கும். விடத்தரொடு-ஒடு உடனிகழ்ச்சி. உடை முள்ளுடைத்தாதல் "சிறியிலை யுடையின் சுரையுடை வான்முள்" (புற 324:4) என்பதனுலுமறியப்படும். போகி-போகப்பெற்று. செயப்பாட்டுச் செய்தெனெச்சம். போகல் என்பது நெடுமையாகிய பண்புணர்த்தல், "வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர் பும் நெடுமையுஞ் செய்யும் பொருள” (தொல், உரி21) என்பதனுலறிக. "உடை போகவெனத் திரிக்க' என்பர் பழையவுரைகாரர். 2. பேய்மகளின் சேர்ந்து திரண்ட மயிர் நிமிர்ந்து நுனி கவராய் நிற்ற லின் கவைத்தலைப் பேய்மகள் என்ருர், கவைத்தலை கூறினுர் எனினும் பிறழ்பல், பேழ்வாய் முதலாயினவுங் கொள்க.
*உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை யஜூலக்குங் காதிற் பினர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்' முருகு 47-51 எனத் திருமுருகாற்றுப்படையில் வருதல் காண்க. சேரலாதலான் பகை வர் நாட்டைப் பெரும்பாழ் செய்தலின் பேய்மகள் கழுதை ஊர்ந்து செல்ல எனருா.
'கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசை இப் பிணந்தின் "யாக்கைப் பேய்மகள் துவன்றவும்
அருங்கடி வரைப்பி னுார் கவி னழியப்
பெரும்பாழ் செய்து மமையான்" பட்டினம் 259-70. எனப் பிருண்டும் வருதல் காண்க, கழுது-பேய் பேயில் ஒருசாதி' என் பர் நச்சினுர்க்கினியர். (மதுரைக் 633 வி. உரை) ஊர்தல்-ஏறுதல்: "ஊர்ந் g5625 - see புகழ்சால் வேழம்" பரி21:1-2, இனி, பேய்மகள் கழுது ஊர்ந்து செல்ல என்பதற்குப் "பேய்மகளும் கழுதும் பரந்து செல்ல எ னி னும் அமையும், "பேயு மணங்கு முருவுகொண் டாய்கோற். கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப" (மதுரைக் 632-3) எனவருதல் காண்க. நாடு பாழ் பட்டமையின் முள்ளையுடைய நெருஞ்சி எங்கும் வளர்ந்தமையால் ஊரிய நெருஞ்சி' என்ருர், 'நெருஞ்சிக காடுறு கடுநெறி யாக மன்னிய.திருந்து

Page 31
32 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தொழில் வயவர் சீறிய நாடே" (பதிற் 26:10-14) என வருதல் காண்க. பெயன் மழை புரவின்ருக வெய்துற்றுப் பறந்தலை நீருடுவதாயிற்று, பறந் தலை-பாழ்பட்ட இடம் புற225; 7 உரை. போர்க்களம் எனினுமாம்.
தாதெரு மறுத்த மன்றம், கலியழி மன்றம் என இயையும், நிரைகள் ஊரினிங்குதலானும் சேரலாதன் தன்னுடனே பொருதார் தேயத்திலூர் களின் மன்றுகள் மக்களில்லையாய்ப் பாழாம்படி அழித்தலானும் தாதாகிய எருவும் ஆரவாரமும் இல்லாத மன்றங்களானமையின் தாதெரு மறுத்த கலியழி மன்றம்' என்ருர், தாதெரு-துகளாகிக்கிடக்கும் எரு பகைவர் ஊர்களின் மன்றுகளை அழித்தல் "அளியும்.மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட” (பெரும்பாண் 422-3) என்பதனுலுமறியப்படும், பாழான மன் றிலே போதற்கு மனவெழுக்சி அழியினும் பின்னும் தம் கருமவேட்கை யாற் போகமேற்கொண்டவருடைய வலியைக் கெடுதலின் 'மன்றத்து உள் ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து என்றும், அதனுல் பின்பு போக நினைப் பார் அஞ்சி நடுங்குதலின் 'உள்ளுநர் பணிக்கும்’ என்றும் கூறினுர், உள். ளம்-மனவெழுச்சி பரி2: 36 பரிமேல். ஊக்குநர்-மேற்கொண்டவர். ஊக் கார்-மேற்கொள்ளார்' எனப் புறநானூற்றுரைகாரர் உரைத்தவாறுங் காண்க. (புற122:1 உரை) தபுத்துப் பாழாயின என முடிக்க ஊக்குநர் உள்ளுநர் என்பன வினைப் பெயர்கள். பனிக்கும் என்னும் பெயரெச்சம் பாழ் என்னும் பெயர் கொண்டது.
சேரலாதன் தான் காத்தநாட்டிற் பெருங்காடுகளைக் கெடுத்து நாடா க்கி வளம்படுத்தியதனுல் ஆண்டு மக்கள் வதிந்து தாம் வழிபடு தெய்வங் களுக்குக் கோயில்கள் அமைத்தமையின் காடே கடவுண்மேன' என்ருர், அந்நாட்டுச் சிறுகாடான இடங்களை நன்கு திருத்திப் படையாளர்கள் மகளிரோடு உறையும் படைநிலைகளாக்கியமையின் "புறவு மகளிரொடு மள் ளர் மேன' என்ருர்,
' ஆன மும்மத மாடிய காடெலா
மானை கோக்கியர் வாய்மது வாடின? சீவக 2578. என்பதும், இவன் திருத்துதலின் ஆனை திரிந்த காடுகளெல்லாம் கணவ ரொடு கூடிய மகளிர் கொப்புளித்த மதுவை யாடின' என்னும் அப்பகுதி யுரையும் ஈண்டறியற்பாலன. காடு-பெருங்காடு, புறவு-சிறுகாடு.
காட்டில் ஆள்வழக்கற்ற பெருவழிகள், அத்தஞ்செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் ஆறலைகள்வரசனும், கோள்வலுளியமும் வாள்வரி வேங்கையும் முதலாய விலங்குகளானும் இடையூறின்றி முன் சொன்ன கடவுளும் மள்ளரும் உலாவிப்போதரும் வீதிகளானமையின் ஆறே அவ்வனைத்து' என்றர். அனைத்து என்னுது அவ்வனைத்து எனச் சுட்டு இரட்டித்தது அந்த அந்தத் தன்மையது என முன் நின்றவற்றின் பன்மை தோற்றற்கென்பது. கூலம்-பண்டங்கள். அவை நென் முதலா யின. பகர்நர் என்பதற்கு இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லி விற கும் வணிகர் எனினுமாம். "பல்பண்டம் பகர்ந்து வீசும், தொல்கொண்டித் துவன்றிருக்கை" (பட்டினப் 211-2) என் புழி, பகர்ந்து - இ லாப த் தை
- , , , η και
'് '
o
 

18ஆம் UT"-G - 33
வெளிப்படையாகச் சொல்லி என நச்சினுர்க்கினியர் உரைத்தவாறு காண்க. தாராவென்பது தராவெனக் குறுகிற்று. - குடியென்றது வாரம் முதலிய பகுதிதரும் வரிசையாளராகிய கீழ்க் குடிகளை. புறந்தருநர் என்றது அக் கீழ்க் குடிகளைப் புறந்தரும் மேற்குடி களாகிய காணியாளரை உணவின் பிண்டம் உண்டி முதற்ருதலான் குடி புறந்தருநரைப் பாதுகாத்தல் ஏனைக்குடிகளுக்கும் பாதுகாப்பாக அமைத லானும், வருபடை தாங்கிப் பெயர் புறத்தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றம், உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயணுதலானும் சேரலாதன் குடிபுறந்தருநர் பாரம் ஓம்பினுன் என்க.
"பகடுபுறங் தருகர் பார மோம்பிக்
குடி புறக் தருகுவை யாயினின் "அடிபுறக் தருகுவர் அடங்கா தோரே" புற 35: 3?-4. எனச் சான்ருேர் கூறுதல் காண்க. பாரம்-குடி புற 35: 32 உரை பார மோம்பி (25) நீ காத்த நாடு (28) என இயையும்.
மழைக் கோளாகிய வெள்ளி செவ்வாய் சென்று தங்கிய இராசியிற் சேர்ந்தாலும் அதன் பார்வைக்குட்பட்டாலும் மழை இலதாமாகலின் அழல் சென்ற மருங்கின் வெள்ளியோடாது மாரிநிற்ப' என்ருர், ஓடாது-ஓடப் பெருது. கோனிலை திரியிற் கோணிலை திரியும்; அஃதின்ருகப்பெற்று. கோனிலை திரிதலாற் கோணிலை திரிந்து மழையின்ருதல், *கோனிலை திரிந்திடிற் கோணி2ல திரியுங் O
கோணி2ல திரிந்திடின் மாரிவளங் கூரும்? மணி 7; 8-9 என்பதனுலுமறிக. அழ ல் என்றது செந்தீ வண்ணணுகிய செவ்வாயை. வெள்ளி-வெண்ணிறமுடைய சுக்கிரன், "வசையில் புகழ் வயங்கு வெண் மீன்" என்ருர் பட்டினப் பாலையினும்,
சேரலாதனின் ஆட்சிச் சிறப்பால் பசியும் பிணியும் நாட்டினிங்கலின் "நோயொடு பசியிகந் தொரீஇ நீ காத்த நாடு" என்ருர், "நீபுறந் தருதலின் நோயிகந் தொரீஇய யாணர் நன்னுடும்" (பதிற் 15: 23-4) என மேல் வருதலுங் காண்க, பசி முதலியன நீங்கல் ஒரு நாட்டின் இலக்கணமாதல்,
"உறுபசியு மோவாப் பிணியுஞ் செறு பகையுஞ்
சேரா தியல்வது நாடு' குறள் 734. எனத் திருவள்ளுவர் கூறியவாற்ருனுமறிக. பசியும் பிணியும் நீங்கலால் நாடு பொலிவுபெற்று விளங்குதலின் நாடு பூத்தன்று' என்ருர்,
இதனுற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் தன்நாடு காத்தற் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
தொறுத்த' என்றும் (2) ஏறுபொருத' என்றும் (7) ஒலிதெங்கின் என்றும் (8) புனல்வாயில் என்றுமிருந்த நான்கடியும் வஞ்சியடியான் வந்த மையான் வஞ்சித்தூக்குமாயிற்று.
மேற்கோள். "கறுப்புஞ் சிவப்பும்" (தொல்,உரி 76) என்னும் சூத்திரவுரையில் 'நீசிவந் திறுத்த நீரழிபாக்கம்' எனச் சிவப்பு வெகுளியாகிய குறிப்புணர்த்தும் என்றும்,
5 鷺
སྐྱོ་ ༣,་ག་ :** P...'

Page 32
34 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
"வார்தல் போகல்" (தொல் உரி 21) என்னும் சூத்திரவுரையில், "வெள் வேல் விடத்தேரொடு காருடைபோகி' என, போகல் என்னும் சொல் நெடு மையாகிய பண்புணர்த்தும் என்றும் உரைத்தனர் சேனுவரையர்.
'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல் புற 20) என்னும் சூத் திரவுரையில் இச்செய்யுளை எடுத்துக்காட்டி இதனுண் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற் றிரிந்த வேந்தனை யழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறும் கூறிற்று' என்றும், 'ஆனைமும்மத மாடிய காடெலாம்” என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையில் (சீவக 2578) இவன் திருத்துதலின் ஆனதிரிந்த காடுகளெல்லாம் கணவரோடு கூடிய மகளிர் கொப்புளித்த மதுவையாடின 'புறவே, யொள்ளிழை மகளிரொடு மள்ளர்மேன" என்றும் உரைத்தனர் நச்சினுர்க்கினியர்.
பழையவுரை
பிறழ்ந (1) எனவும் வித்துந (2) எனவும் தடுக்குந (4) எனவும் ஆர்ந (6) எனவும் வந்தன வினைப்பெயர்த்திரிசொல். 3-4 நெய்தல் எருமையின் நிரை தடுக்குநஷ்மென்றது நெய்தலானது அக்கரும்பு முதலாய மற்ருேரிரை யின் பாங்கரிற் செல்லாது தன்னையே நின்று தின்னும்படி தான் போத வுண்ட எருமை நிரையைத் தடுக்கும் இடங்களுமென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு, பூத்தநெய்தல் என்று பெயராயிற்று. 6. மூதா ஆம்பலார்நவமென் றது புறத்துப்போய் இரைதெவிட்டாத முதிய ஆக்கள் துணங்கையாடிய இடத்து நின்று (5) ஆம்பலையே தின்னும் இடங்களுமென்றவாறு. என் றது பெருக ஆம்பல் சூடித் துணங்கையாடுவாரை உடையனவென அவ் விடங்களின் செல்வச்சிறப்புக் கூறியவாருயிற்று, 7. இமிழ் மருதென்றதற் குப் புள்ளிமிழ் மருதென்று ஒருபெயர் வருவிக்க, 8. புனல்வாயில்-வாய்த் தலை. 1-10 ஒலிதெங்கென்னும் பெயர்க்கு முன்னின்ற பெயர்கள் எண்ணும் மையோடு நின்றமையால் அவற்றையுடைய நாடென இரண்டாவதன் தொகையாய், அச்சொல். அவற்றையெல்லாம் எழுவாயாக்க நாட்டிற்கு அவ்விடங்கள் சினையாகலின், நாடு கவினழியவென்னும் முதற்பயனிலை யோடு வழுவமைதியாக முடிக்க. 10-11 கூற்றடுஉ நின்ற யாக்கைபோல நாடு கவினழிய வென மாறிக் கூட்டிக் கூற்றுவணுலே கொல்லப் படாநின்ற யாக்கை ஒருகாலைக்கு ஒருகால் அழகழியுமாறுபோல, நாடு அழகழியும்படி யென உரைக்க. இனி, மாருதே போலும்படியென, போலவென்பதனை வினை யெச்ச நீர்மையாக்கி, போல்கின்றது மேல்வருகின்ற பாக்கமாக உரைப்பினும் அமையும். இனி, கூற்றுவனை அட்டுநின்ற யாக்கை உடையானுெருவன் உளணுயினும் அவனைப்போல நீ சிவந்தென்றுரைப்பாரும் உளர். 12, நீரழி பாக்கமென்றது வெள்ளத்தான் அழிவுபடினல்லது பகைவரான் அழியாத பாக்கமென்றவாறு. பாக்கமென்றது நெய்தநிலத்து ஊர்க்கேயன்றி, "கட் கொண்டிக் குடிப்பாக்கத்து நற்கொற்கை" (மதுரைக் 137-8) என்று வந்தமை யான் ஒரோவழி அரசனிருப்புக்கும் பெயராமாகலின் ஈண்டுப் பாக்கமுடைய பேரூர்களெனப்பட்டது. 14. உடைபோகவெனத் திரிக்க 17-19. மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர்ப் பணிக்கும் பாழென்றது

s Κ) O CO OO N)
18 ஆம் பாட்டு 85
அம்மன்றிலே போதற்குஉள்ளம் அழியச்செய்தே பின்னும் தம் கரும வேட் கையாற் போகமேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்குதற்குக் காரணமாகிய பாழென்றவாறு 18. தபுத்து: தபுக்கவெனத் திரிக்க, 20: காடே கடவுள் மேனவென்றது நின்நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முற்காலத்துக் கோயில்களான வென்ற வாறு. மேயினவென்பது மேனவென்று இடைக்குறைந்தது. 20-21, புறவு மகளிரொடு மள்ளர்மேன வென்றது சிறுகாடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரோடு உறையும் படைநிலைகளாயினவென்றவாறு. 22. ஆறே அவ்வனைத்தென்றது காடும் புறவும் அல்லாத பெருவழிகளும் ஆறலை கள்வரும் பிற இடையூறுமின்றி முன்சொன்ன கடவுளும் மள்ளரும் உறையுமிட மாயின வென்றவாறு அனைத்தென்னுது அவ்வனைத்தென்று சுட்டு இரட்டித்தது, அந்த அந்தத் தன்மையதென முன்நின்றவற்றின் பன்மைதோன்றற்கென்பது. 23. தாராவென்பது தராவெனக் குறுகிற்று. 34. குடிபுறந் தருநரென்றது தம் கீழ்க்குடிகளாகிய வரிசையாளரைப் புறந் தரும் மேற்குடிகளாகிய காணியாளரை. பாரமோம்பி (24)நீ காத்த (28) என மாறிக்கூட்டுக. வெள்ளியோடாமல் (25) எனவும் (26) பசியிகந்தொருவ (27) எனவும் திரிக்க. 22-6 இனி, ஆறு முன்சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி ஆறலைகள்வரின்றிக் கூலம்பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் கூலம்பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும். குடிபுறந்தருநர் பாரத்தை ஒம்பி மழைவேண்டு புலத்து மாரி நிற்பவென்றும், கூலம்பகர்நர் குடிபுறந் தருதலை ஆற்றின் தொழிலாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழை யின் தொழிலாகவும் கூட்டி உாைப்பாருமுளர்
கூற்றடுஉ நின்ற யாக்கைபோல (1) நாடுகவி ன்ழிய நாமந்தோற்றி (11) நீசிவந்திறுத்த நீரழி பாக்கங்கள் (12) கழனி புல்லெனக் (18) காருடை போகக் (14) கழுது ஊர்ந்து இயங்கப் (15) பாழாயின (15); நீ காத்தநாட் டிற் (28) காடு கடவுளான் மேவப்பட்டன (20); அந்நாட்டுப்புறவுகள் மள் ளரான் மேவப்பட்டன (21); அந்நாட்டு ஆறு அவ்வனைத்தாவிற்று: அன்றி
யும் (22) கூலம்பகர்நர் குடிபுறந்தராக் (23) குடிபுறந்தருநர் பாரமோம்பி
(24) நீகாத்த நாடு (28) மழைவேண்டிய புலத்து மாரிநிற்ப (26) நோயொடு பசியிகந் தொருவப் (27) பூத்தது (28) எனக் கூட்டி வினைமுடிபு செய்க.
இதனுற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் தன் நாடுகாத்தற்
சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
(1) தொறுத்த' என்றும் (2) ஏறுபொருத' என்றும் (7) ஒலிதெங்கின் என்றும் (8) புனல்வாயில் என்றுமிருந்த நான்கடியும் வஞ்சி யடியான் வந்த மையான் வஞ்சித்தூக்குமாயிற்று.
ஒப்புமைப் பகுதி. 2. "தொய்யாது வித்திய துளர்படு துடவை' மலேபடு 122. 3. கரும்பின் பாத்தி: 'கரும்பு நடு பாத்தி? குறுந் 23: 7.
5. துணங்கை: 'முழாவிடமிழ் துணங்கைக்குத் தழுஉப்புனை யாக" பதிற் 52; 14. 'துணங்கையங் தழுஉ வின் மணங்கமழ்சேரி” மதுரைக் 329; விழர்

Page 33
36 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
துணங்கை தழுஉகஞ் செல்ல’ நற் 50: 3, *எல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன? குறுந் 364: 6. “தளரிய லவரொடு, துணங்கையாய்? "நிரை தொடி நல்ல வர் துணங்கையுட் ட8லக்கொள்ள? கலி 66; 17-8; 73; 16. 6. மூதர: குறுங் 204: 4; அக 156; 4; புற 323; 2. 7 இமிழ் மருது : 'மருதிமிழ்க் தோங்கிய?? பதிற் 23: 18. 8. "மலரணி வா யி ற் பொய்கை’ ஜங் 81: 3; “வ ய ல மர் கழனி வாயிற் பொய்கை? புற 354; 4.
புனல் வா யில்: “தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை? புற 136; 25. பூ பொய்கை: * கீர்ப்பூம் பொய்கை” "கற்பூம் பொய்கை? பெருங் (1) 53: 173; (3) 9; 34; 'பூவார்ந்தன பொய்கைகள்' தே. சுங், திருத்துறையூர் 10.
9. பசடல்சான்ற வைப்பு: 'பாடல்சான்ற வைப்பின், நாடு’ பதிற் 75; 13-4; *பாடல்சான்ற கெய்த னெடுவழி’ சிறுபாண் 151.
பயங்கெழு வைப்பு: 'கழங்குறழ் முத்தமொடு கன்கலம் பெறுரஉம், பயங்கெழு வைப்பு? அக 126; 12-8; "பயங்கெழு வைப்பின்" சிலப் 26: 17
9-10. வைப்பின் நாடு: பதிற் 15; 13-15; 75; 13-4; 76; 15; பொருத 226; அக 201: 18; புற 2:11, 7: 18; 6:3; 14-5; 202: 21.
10. நாமததோற்றி: கனிகடுஞ் சிவப்பொடு நாமங்தோற்றி" அக 235; 14. 13. பூங்கரும் பு: வான்பூங் கரும்பின்* குறுந் 149; 3; 'பூங் கரும் பின்? புற 24: 13,
கரும பின் கழனி: 'கரும்பலாற் காடொன் றில்லாக் கழனி’ சீவக 2902. 14. பேச கி: களரி பரந்து கள்ளி போகி? புற 356; 1. 15. கழுது: நற் 171; 9, 255: 1; அக 122:14; 311: 4. 16. பறந்த இஸ்: “வெம்மை தண்டா எரியுகு பறந்தலை" அக 29; 15, 31. t தச தெரு: மல்ேபடு531; நற் 343: 3; அக 165; 4; புற 33; 11; 215; 2: தாதெரு மன்றம்: "தாதெரு மன்றத்து? ?காஞ்சித்தா து க் கன் ன தாதெரு மன்றத்து’ கலி 103; 62; 108; 60; 'தாதெரு ம ன் ற ந் தானுடன் கழி ந் து' சிலப் 16: 102,
19. உள்ளுநர்ப் பணிக்கும்; “உள்ளுகர்ப் பணிக்கும் ஊக்கருங் கடத்திடை? 'உள்ளுகர் உட் கும் கல்லடர்ச் சிறுநெறி" அக 29; 19; 72; 17; "இவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனி க்கு முள்ளம்" சீவக 2762; "உள்ளுார்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்? சிலம் 5; 117.
20 காடும் புறவும்: "காடும் புறவுங் கவின்று வளஞ்சிறப்ப? பெருங் (4):2:58, 21. ஒள்ளிழை மகளிர்: மதுரைக் 623; நற் 155: 1; 188:3; 253: 5; அக 146; 6: 239; 9; பெருங் (1) 55; 6.
24 குடிபுறந்தருதல்: “குழவிகொள் வாரி ற் குடிபுறந் தந்து’ பதிற் 6:ம் பதி 9; 'குடிபுறங் தருகுவை யாயின்’ புற 35: 33.
27. "பசியும் பிணியும் பகையு நீங்கி? சிலம் 5; 72; மணி 1: 70; பேசி பகை யானதுங் தீங்கு நீங்குக" இரண்டாவது குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி,
4. சான்ருேர் மெய்ம்மறை. 14, நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரி யையே நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை

14 ஆம் பாட்டு 37 5 போர்தலே மிகுத்த வீரைம் பதின்மரோடு
துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை அக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப 10 கூற்றுவேகுண்டு வரினு மாற்று மாற்றலேயே
எழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றேர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் 15 ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ 、、 பல்களிற்றுத் தொழுதியோடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் 20 முன்றிணை முதல்வர் போல நின்றுt
கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலிய ரோவில் வுலகமோ டுடனே.
துறை-செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம்-ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும் தூக்கு-செந்தூக்கு. பெயர்-சான்ருேர் மெய்ம்மறை (12). ப-ரை, 1-4. நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்-நில
மும் நீரும் காற்றும் ஆகாயமும் என்ற பூதங்கள் நான் கினையும்
போல, அளப்பரியை-அளத்தற்கரிய பெருமையையுடையை; நாள் கோள் திங்கள் ஞாயிறு கன அழல்-நாண்மீன்களும் கோண் மீன்களும் திங்களும் ஞாயிறும் முழங்கும் நெருப்பும் என்ற, ஐந்து ஒருங்கு புணர்ந்த-ஐந்தும் ஒருங்கு சேர்தலாலுளதாகிய, விளக்
கத்து அனேயை-விளக்கமபோலும் விளக்கத்தையுடையை,
5-7. போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு-பேரச்செய்வ தில் மிக்க மேம்பாடுற்ற துரியோதனன் முதலிய நூற்றுவரிடத்து, துப்பு துறை போகிய-வலிக்கூறுபாடாய்ப்போன, துணிவுடை ஆண்மை-துணிவுபொருந்திய ஆண்மையையுடைய, அக்குரன் அனய கைவண்மையை-அக்குரனைப்போலும்கொடையையுடையை,
8-10. அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர்-போரை வஞ் சியாது எதிர்கின்று பொருதி அம்பை குடிய பகைவருடைய, போர்

Page 34
38 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
பீடு அழித்த-போரையும் பெருமையையும் அழித்த, செரு புகல் முன்ப-போரைவிரும்பும் வலியையுடையோய், கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலை-கூற நுவன் வெகுண்டு எதிர்வரினும் அதனையும் விலக்கும் வலியையுமுடையை,
11-17. எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து-ஏழுமுடி யாற் செய்த ஆரம் பொருக்திய வெற்றித்திரு தங்கிய மார்பினையும், நோன் புரித் தட கை-வலிபொருந்து கலையுடைய பெரிய கையினை யுமுடைய, சான்ருேர் மெய்ம்மறை-வீரர்க்கு மெய்புகுகருவி போன்ற வனே, வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்-வானரமகளிர் அழகிற்கு அவளையொப்பேன் யானே யானே என்று தங்களில் மாறு கொள்ளுதற்குக் காரணமான, வயங்கு இழை கரந்த-விளங்குகின்ற தலைக் கலன்களால் மறைந்த, வண்டு படு கதுப்பின்-வண்டுகள் மொய்க்கின்ற கதுப்பாகிய, ஒடுங்கு ஈர் ஒதி-ஒடுங்கிய கெய்ப்பினே யுடைய கூந்தலையுடைய, கொடு குழை கணவ-வளைந்த மகரக்குழை யுடையாளுக்குக் கணவ, பல் களிறு தொழுதியொடு வெல் கொடி நுடங்கும்-பலவாகிய களிறுகளின் தொகுதியில் வென்றெடுத்த கொடி அசையும், படை ஏர் உழவ-படையை ஏராகவுடைய உழவ, பாடினி வேங்தே-பாடினிக்கு வேண்டுவன வழங்கும் வேந்தே,
18-22, இலங்கு மணி மிடைந்த பொலம் கலம் திகிரி-விளங் குகின்ற மணிகள் செறிந்த பொன்னணிகளையுடைய சக்கரத்தால், கடல் அக வரைப்பின்-கடலை எல்லையாகவுடைய பூமியில், இப்பொ ழில் முழுது ஆண்ட-இந்நாவலம் பொழிலை முழுதும் ஆண்ட, கின் திணைமுன் முதல்வர் போலகின்று-கின் குடியில் முன்னிருக்த முதல்வர்போல ஒழுகி, நீ கெடாஅ நல்லிசை நிலைஇ-நீ கெடாத நல்ல புகழை நிலைப்பித்து, இவ்வுலகமோடு உடன் தவாலியர்இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிவாயாக.
முடிபு: நிலமுதற் பூதம் நான்கும் போலப் பெருமை அளத்தல ரியை, நாண்மீன் முதலிய ஐந்தும் ஒருங்கு புணர்ந்த விளக்கத் தனையை; அக்குரன் அனைய கை வண்மையை அன்றி முன்பு, நின் வலி இருக்கும்படி சொல்லிற் கூற்று வெகுண்டு வரினும் அதனையும் மாற் றும் வலியையுடையை ஆதலால் சான்ருேர் மெய்ம்மறை, கோடுங் குழை கணவ, படையே ருழவ, பாடினி வேந்தே, நின் திணை முன் முதல்வர்போல நின்று நல்லிசையை நிலைப்பித்து இவ்வுலகத்தோடு கூடக் கெடா தொழிவா யாக என்க,
(ஆ-ரை) வெவ்வேருகிய குணங்களை இயல்பாகவுடைய நிலமுதற் பூதங்கள் நான்கும்போலச் சேரன்பால் இயல்பாகவமைந்த குணங்கள் நான்

14 ஆம் பாட்டு 39
கும் அளப்பரியவாதலின் "நிலநீர் வளிவிசும்பென்ற நான்கின் அளப்ப ரியை" என்ருர்,
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றங்
கவையளங் தறியினு மளத்தற் கரியை" புற (0: 1-5. எனப் பிறருங் கூறுதல் காண்க. அரியை என முதன் மேலேற்றிக் கூறி னும் குணங்களின் பெருமை அளத்தற்கரியது என்பது கருத்தாகக் கொள்க. பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலில் நிலத்தைப் போன்றும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளுடைமையில் நீரைப்போன்றும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியு முடைமையில் வளியைப் போன்றும், அவரை அழித்தற்கு உசாவும் உசா வினது விரிவில் விசும்பைப் போன்றும் அவ்வத்தன்மைக்கண் அளப்பரியை யெண் உவமையைப் பொருத்திக் கொள்க.
‘மண்டினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளிதலைஇய தீயுங்
திமுரணிய நீருமென்றங்
கை பெரும் பூதத் தியற்கை போலப்
போற்ருர்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுங் தெறலு மளியு முடையோய்? புற 2: 1-8. எனப் பிறருங் கூறுதல் காண்க. அன்றியும் நான்கும் எண்ணல் முதலிய அளவைகளானும் அளத்தற்கருமையுங் கொள க. -
நிலனை முற்கூறி அதனுல் அரசனது பொறையை முற்கூறிஞர் அது உலகம் பொன்றுந் துணை யும் புகழ் விளைப்பதாகலின். இனிப் பலவகை உயிர்ப்பொருள்களையும் உயிரில் பொருள்களே பும தாங்கும் சிறப்புப்பற்றி நிலத்தை முற்கூறினுர் எனினுமமையும். நிலம் நீரினும், நீர் தீயினும், தி வளியினும், வளி விசும்பினும் ஒடுங்கும் முறை பற்றி நில நீர் வளி விசும்பு' என முறைப்படுத் தோதினுர். பூதங்கள் ஐந்தையும் எண்ணுது தீயை ஒழித் தது மேல் விளக்கத்துக்கு உவமமாக எண்ணுகின்ற வற்றேடு கூட்டியெண் ணவேண்டி யென்பது
விசும்பிலுள்ள மீன்கள் நாண்மீன் என்றும் கோண்மீன் என்றும் இரு வகைப்படுதலின் நாள் கோள்' என்ருர் "நீணிற விசும்பின் வலனேர்பு திரி தரும், நாண் மீன் விராய கோண் மீன் போல" (பட்டினப் 67-8) என வரு தல் காண்க நாண் மீன் அச்சுவினி முதலிய இருபத்தேழும் பிறவும் கோண் மீன் ஞாயிறு முதலிய ஒன்பது ஈண்டுக் கோள் என்றது விளக்க ஒப்புமை யால் அஃதில்லாத இராகு கேது என்னும் இரண்டும் நீக்கி, நின்ற ஐந்தையு மென்பது, கனையழல்-செறிந்த நெருப்புமாம். ஐந் தொருங்கு புணர்ந்த எனத் தொகை கூறியது, நாளும் ஏனைக் கோளும் பலவாதலின் அவற்றை ஒவ்வொன்ருக நிறுத்தித் திங்கள் ஞாயிறு அழல் என்ற மூன்றுடன் எண்

Page 35
40 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
ணியபடியை விளக்குதற் பொருட்டென்க, ஐந்தும் என்ற உம்மை தொக்கது. விளக்கம்-ஒளி. "ஒளிமிக்கு, அவற்ருே ரன்ன சினப்போர் வழுதி" (புற51:3 -4) என்ருர் பிறரும்.
ஈரைம் பதின்மர்-நூற்றுவர். இது தொகைக் குறிப்புப் பெயர். ஒடு, இடப் பொருளில் வந்தது. ஈரைம்பதின்மரொடு போகிய என முடிக்க துப்பு -வலி. துறை-கூறுபாடு, பொருந120 நச். துப்புத் துறைபோகிய என் றது துணைவலியாய்ப்போன என்றபடி, 'மூவரு ளொருவன் றுப்பாகிய ரென" (புற 122. 5) எனவரல் காண்க, துறைபோகிய அக்குரன் என்க. பிறர்க்கு உவமையாகக் கூறுதற்கேற்ற மிக்க வண்மையையுடையான் அக் குரணுதலின் ‘அக்குரனனைய கைவண்மையை’ என்ருர், "அந்திமான் சிசுபால னக்குரன் வக்கிரன், சந்திமான் கன்னன் சந்தனிடை வள்ளல்" என இவனை இடைவள்ளல் எழுவரிலொருவனுகவும் கன்னனின் வேருகவும் பிங்கலந்தை கூறும். -
கடந்து-"வஞ்சியாது எதிர்நின்று', கலி 1: 4 நச். புற 110; 1 உரை. அமர்கடந்து மலை ந்த பகைவர் என்பதற்குப் பிறருடன் செய்த போரை வென்று பின் நின்னுடன் மலைந்த பகைவர்' எனினும் அமையும், ஈண்டுச் சேரனின் பேராற்றலேப் புலப்படுத்தற்பொருட்டு அ வ னு டன் மலைந்த பகைவரின் வெற்றியை எடுத்துக கூறினுராகக் கொள்க. பொருதற்குத் தும்பைசூடிய பகைவராதலின் 'தும்பைப் பகைவர்' என்ருர், “போர் கருதித், துப்புடைத் தும்ப்ை மலைந்தான் துகளறு சீர், வெப்பு டைத் தானையெம் வேந்து" (பு. வெ. மா 127) என வருதல் காண்க. பகைவர் போர் பீட ழித்த வலியினுல் சேரலாதன் மேலும் போரை விரும்புதலின் 'செருப்புகல் முன்ப' என்ருர், வெகுளியின் கூற்றஞ் சிறத்தலின் கூற்று வெகுண்டு வரினும் என்ருர், கூற்று வெகுண்டு எதிர்வரின் அ து வில்க்குதற்கரிய தொன்ருகவும் அதனையும் மாற்றும் ஆற்றலுடையான் என்றது சேரன் மன வலியைப் புலப்படுத்தற் பொருட்டென்க. "பகையெனிற் கூற்றம் வரினும் தொலை யான்" (கலி 43; 9-10) எனப் பிறருங் கூறுதல் காண்க. ஈண்டு ஆற்றல் என்றது மனவலியை.
*கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர் நிற்கும்
ஆற்ற லதுவே படை' குறள் 765. என்பதன் விசேடவுரையில் ஆற்றல்-மனவலி எனப் பரிமேலழகர் உரைத் தவாறுங் காண்க.
எழுமுடி கெழீஇய அகலம், திருஞெமர் அகலம் என இயையும். எழுமுடி யென்றது ஏழு அரசரை வென்று அவர்கள் எழுமுடியானுஞ் செய்ததோர் ஆரத்தை. பகைவரை வென்று அவர் முடிக்கலனைக் கொள்ளுதல்
இருபெரு வேந்தரையு முடனிலை வென்று முரசுங் குடையுங் கலனுங் கொண்டு’ பதிற் 8-ம் பதி என்பதனுலுமறியப்படும். சேரலாதன், எழுமுடியாரத்தை மார்பி லணிந் திருந்தமையால் 'எழுமுடி கெழீஇய அகலத்து' என்றர்.
*நீயே, பிற ரோம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டவர் "

14. ஆம் பாட்டு 4.
முடிபுனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழறைஇய
வல்லாளனை வயவேந்தே? புற 40: 1-5. எனப் பகைவரை வென்று அவர் மகுடமாகச் செய்த பொன்னுல் வீரக்கழல் செய்து புனைதல் கூறப்படுதலின், எழுமுடி கெழீஇய அகலம் என்பதற்கு ஏழு அரசரை வென்று அவர்கள் எழுமுடிப் பொன்னுற் செய்த ஆரம் பொருந் திய மார்பு எனப் பொருளுரைத்தல் அமையாதோ வெனின், அமையாது.
என்ன? முடிபுனைந்த பசும்பொன்னின். கழல் என்றதுபோல ஈண்டு
முடிப்பொன்னின் ஆ ர ம் எனக் கூறப்படாமையானும், முடிப்பொன்னுல் ஆரம் புனைந்து அணிந்துழி, அவ்வாரம் ஏனைப்பொன்னுரத்தின் வேறுபட்டு விளங்கி அரசர் எழுவரை வென்ற பெருவெற்றியை விளக்காமையானும் என் பது. எழுமுடியென்பது எழுமுடியாற்செய்த ஆரமாதல்.
“எழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்து’ பதிற் 40; 13. எனக் காப்பியாற்றுக் காப்பியனுரும்,
'எழுமுடி மார்பி னெய்திய சேரல்" பதிற் 45; 6. எனப் பாணரும்,
"எழுமுடி மார்ப? சிலப் 22:169. என இளங்கோவடிகளும் ஒருபெற்றிப்பட 'எழுமுடி’ என்றதன்றி எழுமுடிப் பொன்னுல் ஆரம் புனைந்தமையை எடுத்துக் கூருமையானும், 'எழுமுடி யென்பது ஏழு அரசரை வென்று அவர்கள் எழுமுடியானுஞ் செய்ததோர் ஆரமாம்' என இந்நூற் பழையவுரைகாரரும், 'எழுமுடி - எழுமுடியாற் செய்த ஆரம்' எனச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியரும் (சிலப் 28: 169 உரை) உரைத்தமையானும் நன்கு தெளியப்படும.
சேரலாதன் போர்த்தொழில் மிக்கு நடத்தலானே திருமகள் தங்கிய மார்பணுதலின் திருஞெமர் அகலத்து' என்ருர், "செருமிக்குப் புகலுந் திரு வார் மார்பன்" (மலைபடு 356) என்ருர் பிறரும். ஞெமர்-பரந்த எனினுமாம். இப்பொருட்டாதல் “வரிமணன் ஞெமர" (புற90; 8) என்புழிக் காண்க. அக லத்து மெய்ம்மறை, தடக்கை மெய்ம்மறை, சான்ருேர் மெய்ம்ம்றை என இயையும். நோன்-வலி. புரி என்பது ஈண்டு முதனிலைத் தொழிற் பெய ராய்ப் பொருந்துதல் என்னும் பொருள்பட நின்றது. "நோன்புரித் தடக் கை-வலியைச் செய்தலையுடைய தடக்கை' எனினுமாம். தடக்கை என்ப தற்கு முழந்தாளைப் பொருந்துமாறு நீண்ட கை என்றுரைப்பினும் அமை யும். 'தாடோய் தடக்கை, வெல்போர் வழுதி" (அக 312:11-2)என வரு தல் காண்க,
சான்ருேர்-போரிற்கு அமைந்தோராய வீரர். போரிற்கு அமைந்தோர்’ எனப் புறநானூற்றுரையாசிரியரும் (புற63; 5 உரை) போரில் அமைதி யுடைய வீரர்' என இந்நூற் பழையவுரைகாரரும் உரைப்பர். வீரரைச் சான்ருேர் என்றல்,
"சாந்தெழின் மறைத்த சான்றேர் பெருமகன்’ பதிற் 67:18,
கொலக்கொலக் குறையாத் தாஜனச் சான்றேர்?? பதிற் 82; 13. "தேர்தர வந்த சான்ருேர்’ புற 65; 5.
6

Page 36
42 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
என வருவனவற்றிலுங் காண்க. மெய்ம்மறை-மெய்புகுகருவி. அது போரில் அம்பு முதலிய கருவிகள் தாக்காதபடி உடம்பிலனியுங் கவசமாகும்.
*மொய்யமர் ஞாட்பினுண் முரண் கொண் மன்னவர்
மெய்புகு பொன்னனி கவச மொப்ப"ை சீவக 2819 'கற்படை கலியா நன்மையொடு பொலிந்த
சாலிகைக் கவயங் கோல மாகப் புக்க மெய்யினர்? பெருங் (3) 17:226-8. என வருவன காண்க. அது புலித்தோல் முதலியவற்ருற் செய்யப்படுதல், ‘புலிநிறக் கவசம்-புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவி' என் னும் புறப்பாட்டுரைய்ாம்ை (புற 13: 2 உரை) அறியப்படும் சேரலாதனைச் சான்ருேர் மெய்ம்மறை என்றது, அச்சான்ருேர்க்கு மெய்புகு கருவிபோலப் போரிற்புக்கால் வலியாய் முன்னிற்றலின். *நும்படை செல்லுங் கா?ல யவர்படை
யெடுத்தெறி தானே : முன்னரை யெனுஅ யவர் படை வரூஉங் கா?ல நும்படைக் கூழை தாங்கிய வகல்யாற்றுக் குன்று விலங்கு சிறையி னின்ற2ன யெஞஅ வலிதாற் பெரும கின் செவ்வி? புற 169: 1-6. என்பதனுல், தம்முடையபடை பகைவர்மேற் போம் காலத்து அவரது படை. யாகிய வேல் முதலியவற்றை ஓங்கியெறியும் படைக்கு முன்னே நின்றும், பகைவர்படை அடர்த்து வருங்காலத்துத் தம்படையினது அணியைத் தாங்க வேண்டி அதனைத் தடுத்து நின்றும் அரசர் தம்படைக்கு மெய்ம்மறையாக நிற்றல் அறியப்படும்.
சான்ருேர்ச்கு மெய்புகு சருவிபோலப் போரிற் புக்கால் வலியாய் முன் னிற்கும் சேரலாதனைச் சான்றேர் மெய்ம்மறை என்று கூறிய சிறப்பான் இச்செய்யுளுக்குச் சான்ருேர் மெய்ம்மறை என்று பெயராயிற்று.
சான்ருேர் மெய்பமறை என்றதனுல் சேரலாதன் வலியை இனிது புலப்படுத்தினுர். அது, 'எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில். நெடு மொழி மறந்த சிறுபே ராள, ரஞ்சி நீங்குங் காலை, யேம மாகத் தான்முந் துறுமே" (புற 178) என் புழி 'ஏமமாகத் தான்முந்துறுமே" என்பதற்கு அவர்க்கு அரணுகத்தான் தன்வலியான் முந்துற்று நிற்பன்' என அதன் உரையாசிரியர் உரைத்தவாற்ருனுமறியப்படும்.
வானுறை மகளிர் என்றது அர மங்கையரிற் சிறந்தோராகிய உருப்பசி திலோத்தமை முதலாகிய வானரமகளிரை. அது, 'அரமங்கையரென வந்து விழாப்புகுமஷ்வவர் வானர மங்கையரென வந்தணுகும் மவள்" என்னும் திருக்கோவையார் (371) விசேடவுரையில், 'அரமங்கையர் தேவப்பெண்களுக் குப் பொதுப்பெயர்; வானர மங்கையரென்றது அவரின் மேலாகிய உருப் பசி திலோத்தமை முதலாயினுரை' எனப் பேராசிரியர் உரைத்தவாற்ருனு மறியப்படும். வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் என்பதற்கு வானுறை மகளிரை நலனுல் இகல்கொள்ளும் என்றுரைப்பினும் அமையும், நலன்
 

14 ஆம் பாட்டு 43
அழகு. "சிறந்ததன் னுணு நலனு நினையாது" (கலி145; 10) என்புழிப்போல, இகல் கொள்ளும் கொடுங்குழை என இயையும்.
வயங்கிழை கரந்த கதுப்பு என்றது தலையிலணிந்த மின்னுமிழ்ந்தன்ன சுடரிழைகளின் விளக்கத்தாற் ருேன்ருது மறைந்த கதுப்பு என்றவாறு. 'இழைசுட ரெறித்தலானும். உருவினைத் தெரியக் காணுர்” (நைடத. சுயம் வர) எனப் பிருண்டும் வருதல் காண்க. இனி, தலைக்கோலங்களை அணிந்த மையால் அவற்ருல் மறைந்த கதுப்பு என்றுமாம். கதுப்பில் வண்டுபடுதல் அதன் நறுநாற்றத்தால் என்க. "வண்டுபடு நாற்றத் திருள்புரை கூந்தல்” (நற் 2 0) எனச் சான்ருேர் கூறுதல் காண்க.
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளுதற்கு வயங்கிழை கரந்த வண்டு படு கதுப்பு முதலியனவும ஏதுவாமாகலின் அவற்றை எடுத்துக்கூறினர். 'கேழ்கிளர் தொய்யகம். தாழ்தரு கோதையுந் தாங்கி முடிமிசை, யாழின் கிளவி யரம்பைய ரொத்தாள்" (சிலப் 6:106 8 அடி நல்மேற்) என வருதல் காண்க கதுப்பாகிய ஒடுங்கீரோதி என்க. "நெறிபடு கூந்தல், மையிரோதி" (குறுந் 199) எனப் பிருண்டும் வருதல் காண்க. நெய்ப்பினையுடைய மயி ரைச் சுருளாக முடித்தமையின் ஒடுங்கீரோதி' என்ருர், 'ஒடுங்கிரோதிசுருள்' என்ருர் பழையவுரைகாரரும். கொடுங்குழை என்பது அன்மொழித் தொகையாய்ச் சேரன் பெருந் தேவியை உணர்த்தியது. மகளிரைச் சார்த்து வகையாற் பாடுதலன்றித் தனித்துப் பாடுதல் சிறப்பன்மையின் ஒடுங் கீரோதிக் கொடுங்குழை கணவ' என்ருர்,
களிற்றுத் தொகுதியில் வெல்கொடி எடுத்த படையாகலின் களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும் படை' என்ருர், யானையில் வெல் கொடி எடுத்தல், ‘வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுக” நெடு நல் 87) "களிறணி வெல்கொடி" (அக 162, 22) என வருவனவற்ருலுமறிக. களிற்றுத் தொழுதி என்றது யானைப்படையை. அது படையின் உறுப்பாக லின் களிற்றுத் தொழுதியொடு நுடங்கும் படை' என்ருர், களிறு மா தேர்
மறவர் எனனும் நான்கன் ருெகுதியே படையென்பது.
'படுமணி மருங்கின பணைத்தாள் யசனையும்
கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
கடல்கண் டன்ன கண்ணகன் ருனே? புற 351: 1-4 என்பதனுலும், “உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை"-யானை முதலிய நான் குறுப்பானும நிறைந்து போரின்கனூறுபடுதற் கஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை ஈண்டுப் படையெனறது அந்நான்கன் ருெகுதியை என்ற (குறள் 761 பரிமேல்) உரையானும் அறியலாம். வெல்கொடி-போரை வென்று எடுக்கின்ற கொடி, வெல்கொடி நுடங்கும் படை என்றதனுல் சேர லாதன் இப்படையொடு மேற்சென்று பொருதுவென்றமை பெறுதும்.
ஏர்-உழுபடை பகைவராகிய விளைநிலத்தே படையாகிய ஏரால் உழுது
வேல் அம்பு முதலிய ஆயுதங்களாகிய விதைகளை வித்தி வெற்றியாகிய பயனைக்கொள்ளுதலின் சேரனைப் படையேருழவ" என்ருர், வீரரை வில்

Page 37
44 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
லேருழவர்' எனத் திருவள்ளுவர் கூறியிருத்தலும் (குறள் 872) ஈண்டைக் கேற்ப அறிக. இது ஒருவழியுருவகம். விறலியர்க்கு அணிகலம் முதலிய வற்றை நல்கி அவரைப் புரத்தலின் 'பாடினி வேந்தே' என்ருர், பாடினிவிறலி மேல் அரசனை வாழ்த்துகின்றவர் ஈண்டுக் கொடுங்குழை கணவ, பாடினி வேந்தே என அவனை முன்னிலைப்படுத்துவாராயினர்.
திகிரி என்றது ஆஞ்ஞா சக்கரத்தை. "காவிரி நாடன் திகிரி போல்” (சிலப் 1: 5) என்ருர் பிறரும். திகிரியால் (18) ஆண்ட (19) முதல்வர் (20) என இயையும். "ஐயமின்றி யானை யோடிய, தெவ்வத் திகிரி கைவத் துயரிய, நிலப்பெரு மன்னர்" (பெருங் (2) 15. 120-2) என வருதல் காண்க. கட லக வரைப்பு என்றது கடலை யெல்லையாகவுடைய மண்ணகத்தை ‘நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம்’ (புற 3: 1) என்ருர் பிறரும். வரைப்பு-எல்லை. இப்ப்ொழில் என்றது நாவலம் பொழிலை. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (தொல், செய் 79) என்புழி, பொழில் எ ன் ப த ற் கு நாவலம் பொழில் எனப் பேராசிரியர் உரைத்தமை காண்க. பிறவேந்தர் இப்பொழி லின் ஒரொரு பகுதியை ஆள, இவன் முன்னுேர் பொழின் முழுதையும் ஒருங்கு ஆண்டமை தோன்ற, பொழின் முழுதாண்ட என்ருர், நீயும் அம் முன்னுேரைப்போல இப்பொழின் முழுதையும் ஆளுகைசெய்து ஒழுகுவா யாகவென்பார் "பொழின் முழுதாண்ட முன்றிணை முதல்வர்போல நின்று
என்ருர்,
நின் திணை முன் முதல்வர் என மாறிக்கூட்டுக திணை-குடி, முன் முதல்வர் என்றது முன்னே ஆண்டுகழிந்த இவன் குலத்து முன்னுேரை. நின்று -அம்முதல்வர்போல ஒழுகி, முன்னுேர் வழி ஒழுகுதல் வேண்டு மென்பது, "பெரியோர் சென்ற வடிவழிப் பிழையாது" (மதுரைக் 182) என வும், "தொல்லோர் சென்ற நெறிய போலவும்" (புற 58:25) எனவும் சான்ருேர் கூறுமாற்ருனுமறிக ஒன்ருவுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன் ருது நிற்பதொன்றில்லை யாதலின் "கெடாஅ நல்லிசை என்றும், மண் ணின் மேல் வான்புகழ் நட்டார் சாவாவுடம்பெய்தினுராகலின் அவ்வுடம்பு எய்தவேண்டி நல்லிசையை நிலைபெறுத்துகவென்பார் ‘நல்லிசை நிலைஇ என்றுங் கூறிஞர் நிலைஇ-நிலைப்பித்து. நிலைஇத்தவாலியர் எனக் கூட் டுக. இவ்வுலகத்தோடு கூடநின்று நிலைபெறுவாயாகவென்று வாழ்த்து வார் 'தவாலியரோ இவ்வுலகமோடுடனே' என்ருர், "ஓங்குவாண் மாற. . நின்று நிலைஇய ருலகமோடுடனே" (புற 56; 21-5) என்ருர் பிறரும். தவல் -கேடு. தவலினுேய் செய்தார்க்கு” (கலி134; 11) உலகமோடுடனேஉலகத்தோடுகூட, புற 56; 25 உரை.
இதனுற் சொல்லியது அவன் பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாறயிற்று.
அளப்பரியையே (2) எனச் சொற்சீரடி வந்தமையாற் சொற் சீர்வண்
ணமுமாயிற்று. ஈண்டுச் சொற்சீரென்றது அளவடியிற் குறைந்தும் வஞ்சி யோசையின்றி அகவலோசையாயும் வரும் அடியின.

14 ஆம் பாட்டு 45
மேற்கோள்.
"அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே" (தொல். உவமை 38) என்னுஞ் சூத்திரவுரையில் நிரனிறுத்தமைத்தல் வருமாறு :-"நில நீர் வளி விசும் பென்ற நான்கி, னளப்பரி யையே". எனவரும் என்றும், "உவமப்போலி யைந்தென மொழிப" (தொல், உவமை 24) என்னும் சூத்திரவுரையில், பல பொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்து வ ரின் இதற்குவமையாம் என வுரைத்து "நாள்கோ டிங்கண்ஞாயிறு கனையழல் வந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை' என்று வரும் என்றும் உரைத்தனர் உரையாசிரியர்.
'வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇ’ (தொல், புற 27) என்னும் சூத்திரவுரையில் இச்செய்யுளை எடுத்துக்காட்டி. பரவற்கண் வந்த செந் துறைப்பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர் என்றுரைத்தனர் நச்சினுர்க்கினியர்.
பழையவுரை
1 பூதங்கள் ஐந்தையும் எண்ணுது தீயை ஒழித்தது மேல்விளக்கத் துக்கு உவமமாக (4) எண்ணுகின்றவற்ருேடு கூட்டவேண்டி யென்பது. 3 ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகு கேது என்னும் இரண்டும் நீக்கி நின்ற ஏழினும், சிறப்புப்பற்றி வேறு எண்ணப்பட்ட திங்கள் ஞாயி றென்னும் இரண்டும் நீக்கி, நின்ற ஐந்தையுமென்பது. 4 ஐந்தென்று தொகை கூறியது நாள் கோளென்னும் அவற்றைத் தொகைக்கூற்றின் ஒரோ வொன்ருக்க வென்பது. 11 எழுமுடி யென்பது ஏழு அரசை வென்று அவர்கள் ஏழு முடியானுஞ் செய்ததோர் ஆரமாம். 12 நோன்புரித் தடிக்கை யென்றது வலி பொருந்துதலையுடைய தடக்கையென்றவாறு ஈண்டுச் சான் ருேர் என்பது போரில் அமைதியுடைய வீரரை. மெய்ம்மறை-மெய்புகு கருவி. மெய்ம்மறை யென்றது அச்சான்ருேர்க்கு மெய்புகு கருவிபோலப் பாரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின். இச்சிறப்பு நோக்கி இதற்கு, 'சான்றேர் மெய்ம்மறை என்று பெயராயிற்று. 13 வானுறை மகளிர் நலன் இகல் கொள்ளுமென்றது, வானவர் மகளிர் அழகிற்கு அவளை யொப்பேன் யானே யானேயென்று தங்களில் மாறுகொள்ளுமென்றவாறு. 15 ஒடுங்கி ரோதி-சுருள்.
நிலமுதற் பூதம் நான்கும் போலப் (1) பெருமை அளத்தலரியை (2) நாண் மீன் முதல் (3) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை (4) கைவண்மையால் அக்குரனென்பவனை யொப்பை (T) அன்றி முன்ப (9) நின் வலி இருக்கும் படி சொல்லிற் கூற்று வெகுண்டுவரினும் அதனையும் மாற்றும் வலி யுடையை (10) ஆதலாற் சான்ருேர் மெய்ம்மறை (12) கொடுங்குழை கணவ (15) படை யேருழவ பாடினி வேந்தே (17) நின் குடி முன் முதல்வர் போல நின்று (20) நல்லிசையை நிலைப்பித்து (21) இவ்வுலகத்தோடுகூடக் கெடா தொழிவாயாக (22) என வினைமுடிபு செய்க,
இதனுற் சொல்லியது அவன் பலகுணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்தியவாருயிற்று. MENT

Page 38
46 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
"அளப்பரியையே" (2) எனச் சொற்சீரடி வந்தமையாற் (1) சொற்சீர் வண்ணமுமாயிற்று. ஈண்டுச் சொற்சீரென்றது அளவடியிற் குறைந்தும் வஞ்சியோசையின்றி. அகவலோசையாயும் வரும் அடியினை.
ஒப்புமைப் பகுதி. 1-2. நில முதலிய பூதங்கள் பெருமைக்கு எல்லே யாகக் கூறப்படுதல்: “கீர் நிலங் தீவளி விசும்போ டைந்தும், அளந்துகடை யறியினு மளப்பருங் குரையை? பதிற் 24: 15-6; 1.நிலத்தினும் பெரிதே வானி னு முயர்ந்தன்று, நீரினு மாரள வின்றே" குறுந் 3: 1-2; "நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் கட்பே? தொல் களவு 20: 30 கச் மேற். 'காலத்தினுற் செய்த கன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது? பயன்றுாக்கார் செய்த வுதவி நயன்றுாக்கின், நன்மை கடலிற் பெரிது? 'வானுயர் தோறற, மெவன்செய்யுக தன்னெஞ்சங், தானறி குறறப் படின்' குறள் 102, 103, 272. 'மண்ணினும் வானினு மற்றை மூன்றினும், எண்ணினும் பெரி யதோ ரிடர்" கம ப. அயோமுகி 99.
3. நாள் கேள்: "நீடுநாள்களுங் கோள்களு மென்னமே னிமிர்ந்து’ கம்ப. மராமர 128. -
திங்கள் ஞாயிறு: 'விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி? சிலப் 11:43, 5 ஈரை பகின்மர்: "ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவிய" பெரும் பாண் 415; "ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய? புற 2: 15; "ஈரைம் பதின்மரூம் போரெதிர்ந் தைவரோ டேதில ராகி' பழமொழி 356; "ஈரைம் பதின்ம ருடன்றெ ழுந்த போரில்? சிலப் 29: ஊசல்வரி; "ஈரைம் பதிர் கனிவளர?? வில்லி வாரணு வத 94.
6 துப்புத் துறை போகிய : "துப்புத்துறை போகிய வெப்புடைத் தும்பை? *துப்புத்துறை போகிய கொற்ற வேக்தே? பதிற் 89; 3; 62; 9
8. தும் பைப் பகைவர் : *தும்பைக், கறுத் து தெவ்வர்?? பதிற் 39; 3-4; 'வாடாத் தும்பை வயவர்' பெரும பாண் 101.
9. செருப்புகன் முன்ப : “அருங்கட னி ற த் த செருப்புகன் முன்ப?? பதிற் 77; 22; 'ஒன்னு ரோட்டிய செருப்புகன் மறவர்? மதுரைக் 728.
10. 'மடங்கல்போற் சினை இ? கலி 2, 3; * கூற்று வெகுண் டன்ன முன்பொடு?? *கூற்ருெத் தீயே மாற்றருஞ் சீற்றம்’ புற 42: 23; 58; 11; "கூற்றெனத் தெளித் தனர்’ சீவக 2226. "கூற்றையுங் கட்பொறி இறுகக் காண்பரே, லூற்றுறு குரு தியோ டுயிரு முண்ப ரால்? கம ப. இலங்கைக் கேள்விப 22,
11. திருஞெம ரக ம்ை : "திருளுெம ரகலத்து. அலங்கற் செல்வன்? பதிற் 31; 7-9; 'திருளுெம ரகலத்துச் செங்கோல் வேந்தே?? சிலப் 28: 157,
12. சான்ருேச் மெய் மறை: “ஏ க்தெழி லாகத்துச் சான்றேர் மெய்ம்மறை” பதிற் 58; 11.
14. வவங்கிழை : பதிற் 12: 23-ம் அடிக்குறிப்பு. வண்டுபடு கதுப்பு : “வண்டுபடு கூந்தல்' 'வண்டார் கூந்தல்" பதிற் 46; 4; 90; 5ரி. 'வண்டுபடு கூந்தலைப் பேணி? ஜங் 267; 4; *வண்டினம் மேவுங் குழ லாள்? திருக்கோவை 802; 'வண்டுழல் புரிகுழன் மடங்தை மாரொடும்? கம்ப, கரன்வதை 121. ததையும் வண்டிமிர் கருங் குழல்’ வில்லி, சம்பவ 31.
15. ஒடுங்கி ரோதி: 'ஒடுங்கீ ரோதி யொண்ணுதல்’ பதிற் 74:17; "ஒடுங்கி ரோதி மாஅயோளே? 'ஒடுங்கீ ரோதி நினக்கு மற்ருே? அக 86:31; 160; 1.
14-5, 'தன்னிறங் கரந்த வண் டு படு கதுப்பின், ஒடுங்கீ ரோதி? பதிற் 81:27-8.
15. கொடுங்குழை கணவ: 'திருந்திழை கணவ' 'வாணுதல் கணவ? 'கன் னுதல் கணவ" "ஆன்ருேள் கணவ' 'நல்லோள் கணவன்' 'சேயிழை கணவ ?
YA

14 ஆம் பாட்டு 47
*புரையோள் கணவ? "ஒண்டொடி கனவ?? பதிற் 24: 11; 38; 10; 42:7; 55: 1; 61; 4; 85; 10; 70; 16; 90; 50. 'மங்கையர் கணவ? முருகு 264; 'மங்கையர் கணவன்” “கொடியோள் கணவன்? மல்ேபடு 58; 424,
16. களிற்றுத் தெரழுதி : "ப ல் களிற் றுத் தொழுதியொடு” பதிற் 62; 1; "இரும்பிடித் தொழுதி? புற 44: 1; களிற்றின் ருெகுதியர்? சிலப் 5; 159.
வெல்கொடி : பதிற் 5-ம் பதி 1. முருகு 67; 122; முல்ல் 91; மல்படு 581-2; as 149: 15; 354: 3. -
களிற்றின் மீது கெசடி : 'கொடி நுடங்கு நி2ல ய கொல் களிறு? மேம்படு வெல்கொடி நுடங்கத், தாங்க லாகா வாங்குநின் களிறே? “மலையுறழ் யானை வான் ருேய் வெல்கொடி, வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்க?? பதிற் 52; 1; 53: 20-1; 89; 1-2; 'உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை? பதிற் 52: 1; 53; 20-1; 69: 1-2; 88:17; 'அரச, யானை கொண்ட துகிற்கொடி போல?? **க ளி ற னி வெல்கொடி? "ஒ  ைட யா னே யுயர்மிசை யெடுத்த, ஆடுகொடி? அக 111: 3-4; 162: 22; 358; 13-4; 'கொல்களிற்று மீமிசைக், கொடி? " கொடி நுடங்கு யானை" புற 9: 7, 228; 10.
16-7 வரைபுரையு மழகளிற்றின்மிசை, வான்றுடைக்கும் வகையபோல, விரவுருவின கொடி நுடங்கும், வியன்ருனே? புற 38: 1-4.
17. பாடினிவேந்து : "பசும்பூண் மார்ப பாடினி வேந்தே" பதிற் 17:14, 19. பொழின் முழுதாண்ட 'உலகமுழு தாண்ட சுந்தரனே’ திருவிளை, கட வுள் 10.
19-20, "உலக மாண்ட வுயர்ந்தோர் மருக" மதுரைக் 23, 8பொதுமை சுட் டிய மூவருலகமும், பொதுமை யின்றி யாண்டிசி னுேர்க்கும்" புற 357 2-3.
20. முன்றி&ண முதல்வர்: “முன்றி2ண முதல் வர் க் கோம்பின குறைந்து? *முன்றி2ன முதல்வர் போல நின்று? பதிற் 72; 4; 85; 5.
21. கெடா நல்லிசை : 'செல்லா கல்லிசை" பட்டினப் 184; 8தொ8லயா நல் லிசை' கைேபடு 70; 'கெடாஅ கல்லிசை" 'கெடலரு நல்லிசை? அக 135; 11: 339:14; 'தொலையா நல்லிசை" 'கெடுவினல்லிசை’ ‘மாயா கல்லிசை? புற123:3; 221:12; 399; 12; 'கேடி ல்ைலிசை? சீவக 14:58,
நல்லிசை நிலைஇ : 'கெடலரும் பல்புகழ் நிலைஇ’ பதிற் 48; 3; "மன்னு வுல கத்து மன்னுதல் குறித்தோர். தம்புகழ் கிறீஇத் தாமாய்க் தனரே' 'ஒருதா மாகிய பெருமை யோருந், த ம் புக ழ் நிறிஇச் சென்று மாய்க் தனரே" புற 165; 1-2; 366; 4-5; “இங்ாநிலத்து மன்னுதல் வேண்டி னிசை நடுக" நான்மணி 17,
5. நிரைய வெள்ளம். 15. யாண்டுதலைப் மேயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு, மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி ருெழுகிய நிரைய வெள்ளம் 5 பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்

Page 39
48
10
15
20
25
30
35
பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின் அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு கனந்தலை நன்னுட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச் சீர்பெறு கலிமகி பூழியம்பு முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின் போர்வல் யானைச் சேர லாத நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென உண்டுரை மாறிய மழலை நாவின் மென்சோற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவ லமர்ந்த சுற்றமோ டொன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும் பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர் மேயின ருறையும் பலர்புகழ் பண்பின் நீபுறந் தருதலி னுேமிகந் தொரீஇய யாணர்நன் னுடுங் கண்டுமதி மருண்டனென் மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா தீத்துக்கை தண்டா கைகடுந் துப்பிற்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏமமாகிய சீர்கெழு விழவின்
நெடியோ னன்ன நல்லிசை
ஒடியா மைந்தகின் பண்புபல நயந்தே,
துறை-செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்-ஒழுகுவண்ணம், தூக்கு-செந்தூக்கு. பெயர்-நிரைய வெள்ளம் (4).

15 ஆம் பாட்டு 49
ப-ரை 1-15. பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்பபரவி ஆடுகின்ற கழங்குகள் அழிதற்குக் காரணமான அரசர்களின் குலத்தை இல்லையாக்க வேண்டி, மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி-மேகம் தவழ்ந்து மழையைப்பெய்த மதிலின் வாயிலிலுள்ள கணேய மரத்தை முறித்து, கிரை களிறு ஒழுகிய-நிரைத்த களிறு கள் சென்ற, நிரைய வெள்ளம்-பகைவர்க்கு நரக வேதனையைச் செய் யும் படைவெள்ளத்தோடு, யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து-யாண்டு கழியத் தான் அழிக்கவேண்டுமென்ற கிலங்களிலே தங்கி, முனை எரி பரப்பிய துன் அாரும் சீற்றமொடு-பகைப்புலத்தே நெருப்புப் பரவுமாறு செய்த கண்ணுதற்கரிய கோபத்தோடு, கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பெரர-தீக்கொழுந்து விடுகின்ற நிறத் தையுடைய புகை பிசிராகும்படிக் காற்று அடித்தலால், அழல் கவர் மருங்கின் உருவு அற கெடுத்து-நெருப்புப் பற்றிய இடங்களைப் போல உருவம் நீடிக்கும்படி கெடுக்கப்பட்டு, தொல் கவின் அழிந்ததன் பழைய அழகு அழிந்த, கண் அகல் வைப்பின்-இடம் அகன்ற ஊர்களையும், வெண் பூ வேளை யொடு பை சுரை கலித்து-வெள்ளிய பூக்களையுடைய வேளைச் செடியுடனே பசிய சுரையும் தழைத்து வளரப்பெற்று, பீர் இவர்பு பரந்த-பீர்க்கங்கொடி ஏறிப் பரந்த, நீர் அறு நிறை முதல் சிவந்த காந்தளின் முதல் சிதை மூதில்-ர்ேஅற்ற சாலிடத்தேயுள்ள சிவந்த காந்தளின் அடி சிதைந்த பழைய வீடு களையுடைய, புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்-புலால் காறும் வில்லின் தொழிலையே உழவுத்தொழிலாகவுடைய புல்லிய தொழிலை யுடைய ஆறலைகள்வர் இயங்கும். புல் இலை வைப்பின்-புல்லிய இலைகளாலே வேயப்பட்ட வீடுகளையுடைய ஊர்களையுமுடைய, புலம் சிதை-இடஞ் சிதைந்த, அரம்பின்-குறும் பினேயுடைய, அறியா மையான் மற ந் து துப்பு எதிர்ந்த-நினது வலிமிகுதியை அறி யாமையால் நின்னெடு எதிர்தல் தகாது என்பதை மறந்து கின் வலியோடு மாறுபட்ட, நின் பகைவர் நாடும் கண்டு வந்திசின்கின் பகைவருடைய நாட்டையும் கண்டு வந்தேன.
16-28. கடலவும்-கடலிலுள்ளனவும், கல்லவும்-மலேயிலுள்ள னவும், யாற்றவும்-யாறு செல்லும் முல்லை மருத கிலங்களிலுள்ள னவும், பிறவும்-பிற இடத்திலுள்ளனவுமாகிய, வளம பல நிகழ்தரும் -வளங்கள் பலவும் உளவாகும், நனதலே நல் நாட்டு-அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள விழவு அறுபு அறியாவிழாக்கள் நீங்கி யறியாத, முழவு இமிழ் மூதூர்-முழவு முழங்கு கின்ற மூதூர்க்கணுள்ள, கொடி நிழல் பட்ட பொன் உடைகிய மத்து-கொடிகளின் நிழலமைந்த பொன்னையுடைய அரசன் கோயி
7

Page 40
50 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
லில், சீர்பெறு கலி மகிழ் இயம்பு முரசின் வயவர் வேங்தே-வெற் றிப் புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற வீர முரசினை யுடைய வீரருக்கு வேந்தே, பரிசிலர் வெறுக்கை-பரிசிலருடைய செல்வமாக இருப்பவனே, தார் அணிந்து எழிலிய-மாலை அணியப் பெற்று அதனுல் அழகு பெறற, தொடி சிதை மருப்பின்-தொடி சிதைந்த மருப்பினையுடைய, போர் வல் யானை சேரலாத-போர் செய்தலில் வல்ல யானையையுடைய சேரலாதனே.
24-84. உண்டு உரை மாறிய மழலை நாவின்-கள்ளே உண்டு சொல் தடுமாறிய மழலை வார்த்தையையுடைய நாவினையும், மென் சொல்-மெல்லிய சொல்லினையுமுடைய, கலப்பையர்-வாச்சிய முட் டுக்களையுடைய பையையுடைய பாணர் முதலியோர், இவ்வுலகத் தோர்க்கு நீ வாழியர் என-இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ வாழ்வாயெனச் சொல்லி, திருந்து தொடை வாழ் தத-திருந்திய 15ரம்புத் தொடையினையுடைய யாழொடு வாழ்த்த, வெய்து உறவு அறிய சது நந்திய வாழ்க்கை-துன்பம் உறுதலை அறியாது பெரு கிய வாழ்க்கையினையும், ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை-கட வுளேப் பரவி அதனுல் ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினேயும், கிரயம் ஒரீஇய வேட்கை-நரகத் துன்பத்தினின்று நீங்கு தற்கிேது வாகிய நல்வினைகளை விரும்புதலையுமுடைய, புரையோர்-உயர்ந்தோர், செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு-தாம் செய்த காரியங்களைப் பின் சிதையாது மேவுதலைப பொருந்தின சுற்றத்தாரோடு, என்றும் பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி-எக்காலத்தும் ஊரை விட்டு நீங்குதலை அறியாது தங்கித் தவநுகர்ச்சியைப் பெற்று, மேயினர் உறையும்- இவன் நாட்டிலே வாழவேண்டுமென்று விரும பினராய் வாழும், பலர் புகழ் பண்பின் நீ-பலரும் புகழும் பண்பினே யுடைய ,ே புறந்தருதலின்-காத்தலினல், நோய் இகந்து ஒரீஇயபசியும் பிணியும கைவிட்டு நீங்கிய, யாணர் நல் நாடும-புது வரு வாயையுடைய நல்ல நாட்டையும, கண்டு மதிமருண்டனென்-கண்டு அறிவு இறும் பூது எய்தினேன்.
35-40. மண்ணுடை ஞாலத்து மன் உயிர்க்கு-அணுச் செறி தலையுடைய ஞாலத்தில் நிலைபெற்ற உயிர்களுக்கு, எஞ் சாது ஈத்துகுறையாது கொடுத்து, கை தண்டா-அவ்விகைச் செயலில் மாறத, கைகடு துப்பின்-ஈத்தலிற் கையிடத்துள்ள மிக்க வலிமையால், புரைவயின் புரைவையின் பெரிய நல்கி-உயர்ந்த தேவாலயங்கள் தோறும் பெரிய ஆபரணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, ஏமமா கிய சீர் கெழு விழவின்-இன்பமாகிய சிறப்புப்பொருந்திய விழாவினே யுடைய, கெடியோன் அன்ன நல்இசை-திருமாலைப் போன்ற கல்ல

15 ஆம் பாட்டு 51
புகழையுடைய, ஒடியா மைந்த-கெடாத வன்மையையுடையோய், கின் பண்பு பல நயந்து-கின் பண்புகள் பலவற்றையும் காண விரும்பி
முடிபு : மைந்த, நின் பண்புகள் பலவற்றையும் காண விரு பி நின் பகைவர் நாடும் கண்டுவந்தேன்; அது வே ய ன் றி வேந்தே, வெறுக்கை சேரலாத நீ புறநதருதலின் நோய் இகந்து ஒரீஇப நின் நாடும் கண்டு மதிமருண்டேன் என்க *
(ஆ-ரை) 1-15. மன் மருங் கறுப்ப வேண்டி வெள்ள்மொடு வேண்டு புலத்து இறுத்த நீ சீற்றமொடு உருவறக் கெடுத்தலாலே தொல் கவின் அழிந்த கண்ணகன் வைப்பினையும், புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பி னையுமுடைய புலஞ்சிதைந்த பகைவர் நாடுங்கண்டு வந்தேன் என்க.
மகளிர் பரவி நின்று கழங்கு ஆடுதலின், பரந்தாடு கழங்கு' என்ருர், "மகளிர். முத்த வார்மணற் பொற்கழங் காடும்” (பெரும்பாண் 327-35) எனவும், “கழங்காடு மகளிரோதை யாயத்து" (சிலப் 27, 24-5) எனவும் வருவன காண்க. கழங்கு அழி மன் என்றது எண்ணுதற்குக் கருவியாயுள்ள கழங்கு எண்ணுதற்குப் போதாமைக்குக் காரணமாகிய மிக்க அரசர் என்ற வாறு. 'எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுந" (பதிற் 32; 8) என்பதனுல்
கழங்கு எண்ணுதற்குக் கருவியாதலறிக. அழி மன் என்பது " நோய்தீரு
மருந்துபோனின்றது. மன் என்றது பகையரசர்களை, மருங்கு-குலம். அறுப்ப (8) இறுத்து (1) என மாறிக் கூட்டுக. ۔۔۔۔"
மலைநாட்டமைந்த உயர் மதிலாதலின் 'மழைதவழ்பு தலைஇய மதில் என்ருர், தலைஇய-பெய்த மலைப்டு 1 நச். மதின் மரம் என்றது மதிற் கத வங்களைத் தடுத்து நிற்கும் கணைய மரத்தை. இதனை, "எழுஉத் தாங்கிய கதவு’ (புற 97; 8) என்பதனுலும், 'கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவு என்னும் அப்பகுதியுரையானும் அறியலாம். மதின்மர முருக்கிய களிறு எனக் கூட்டுக.
*கடுங்கண்ண கொல்களிற்றற்
காப்புடைய வெழுமுருக்கி? புற 14: 1-2 என்ருர் பிறரும். நிரைகளிறு-நிரைத்த களிறு கலி 132; 5. நச், யானை யுடைய படை காண்டற் கினிதேயாயினும் அச்சிறப்புப்பற்றிக் கூருது, மதின் மர முருக்கிய சிறப்புப்பற்றிக் களிருெழுகிய வெள்ளம்" எனப் படையிற் களிற்றை எடுத்துக் கூறினர். மதிற்கால் சாய்த்தற்குக் களிறு சிறந்தமை யின் அதனையே கூறிஞர்' எனப் பேராசிரியர் கூறுதலும் காண்க. (திருக் கோவை 338 உரை) நிரயம் என்பது நரகவேதனையை உணர்த்தல், "நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே" (புற 376:15)என்புழிக் காண்க. நிர யத் தான-நரக வேதனையைச் செய்யும் தானை' என்ருர் அடியார்க்கு நல் லாரும் (சிலப் 26: 37 உரை) ३: *
பகைவர்க்கு நரகம்போலும் வேதனையைச் செய்யும் படை வெள்ளத்தை நிரயவெள்ளம் என்று கூறிய சிறப்பானே இச்செய்யுளுக்கு நிரைய வெள் ளம் என்று பெயராயிற்று. நிரையவெள்ளமென்றது பகைவர்க்கு நிரய பாலரைப்போலும் படைவெள்ளமென்றவாறு; நிரையமென்றது நிரயத்து

Page 41
பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வாழ்வாரை இச்சிறப்பானே இதற்கு நிரையவெள்ளம் என்று பெயரா யிற்று' என்பர் பழையவுரைகாரர்.
படையை வெள்ளம் என்றது அதன் மிகுதிபற்றி, வெள்ளமொடு என மூன்ருவது விரித்து (4) வேண்டு புலத்து இறுத்து (1) என மாறிக் கூட்டுக. "வெள்ளத் தானையொடு வேண்டுபுலத் திறுத்த கிள்ளி வளவன்' (அக 346: 21-2) எனப் பிருண்டும் வருதல் காண்க. வேண்டுபுலம்-வேண்டும் நிலங்கள்’ (மதுரை 150 நச் தாம் வேண்டிய இடம' புற230: 2 உரை. மிக்க சீற்றமொடு பகைப்புலத்தே எரியைப் பரப்புதலின் 'முனையெரி பரப் பிய துன்னருஞ் சீற்றமொடு' என்ருர். இது, எரிபரந்தெடுத்தல்' என்னும் துறை கூறிற்று. சீற்றமொடு (2) அழல் கவர் மருங்கி னுருவறக் கெடுத்து (7) என முடிக்க, /
அழல் என்றது காட்டுத்தீயை, கொடி விடு புகை என்றது அத்தீயி னின்று எழுகின்ற புகையை கொடி-ஒழுங்குமாம். மிக்க தீயினின்றும் திரண்டெழுகின்ற புகை கரிதாக விளங்கித் தோன்றலின் குரூஉப்புகை என்ருர், 'முனைசுடவெழுந்த மங்குன் மாப்புகை" (புற 108; 6) என்ருர் பிற ரும், கடுங்காற்ருதல் தோன்றப் புகை பிசிர' என்ருர், அழல் கவர் மருங்கு என்றது கடுங்காற்று அடித்தலாற் சுடர் சிறந்துருத்துக் காட்டுத்தீ பற்றிய இடங்களே.
*கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்' பதிற் 25: 6-7. என வருதல் காண்க, கெடுத்து-செயப்பாட்டுவினையெச்சம், மருங்குஇடம். இன், ஒப்புப்பொருட்டு, பிறரால் அழிக்கப்படாமையால் தொன்று தொட்டு வருகின்ற கவின் சேரனுல் அழிந்தமை தோன்றத் தொல்கவின்' என்ருர்,
சேரலாதனுல் நாடு அழிந்தமையின் ஊரில் வாழ்வார் இன்ருய் வேளை யும் சுரையும் நன்கு தழைத்து வளர்தலின் வேளையொடு சுரை கலித்து' என்ருர்,
*வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டுர் வயவர் வேங்தே" பதிற் 90: 29-30. என வருதல் காண்க. வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து என்ரு ராயினும், வேளையொடு சுரை கலித்துப்பூக்க என்பதுவே கருத்தாகக்கொள்க.
"வேரறுகு பம்பிச் சுரை படர்ந்து வேளை பூத்
தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினுர் நாடு’ என முத்தொள்ளாயிரத்து வருதல் காண்க. வேளை-ஓர் செடி, இதன் பூ வெள்ளிதாதல் “வேளை வெண்பூ" (புற 215: 3) என்பதனுலும் பாழிடத்தே வளர்தல் வெருவரு பறந்தலை, வேளை வெண்பூக் கறிக்கும். ஆளி லத்த மாகிய காடே" (புற23; 20-2) என்பதனுலுமறிக, ஒடு உடனிகழ்ச்சிப் பொருளது. சுரை-காட்டுச் சுரை. கலிக்கவெனத் திரிப்பினுமமையும்" பாழ்த்த வீடுகளில் பீர்க்கு ஏறிப் படர்ந்தமையின் 'பீரிவர்பு பரந்த மூதில்"

15 ஆம் பாட்டு 53
என்ருர், 'ஊரெழுந் துலறிய பீரெழு முதுபாழ்” "பீரெழுந்து, மனை பாழ்
பட்ட' (அக 167; 10; 273: 1-2) என வருவன காண்க. பீர்க்கு-பேய்ப் பீர்க்கு.
இல்லில் மக்களின்ருகச் சாலில் நீரற்றுப்போதலின், அச்சாலிடத்து
வளர்ந்த காந்தளின் முதல் சிதைந்தமையின், 'நீரறு நிறைமுதற் காந்தண்
முதல் சிதைமுதில்" என்ருர் நிறை-சால். 'கலம்நிறை பொழிதர நின்ற மேதியால்' (சீவக 69)என்புழி, நிறை-சால் என நச்சினுர்க்க்னியர்உரைத்த வாறு காண்க. 'நிறை வட்டம் இடங்கர் நீர்ச் சாலாகும்" என்பது பிங்க லந்தை, (பிங், 6, 636) நிறைமுதல்-நிறையிடத்து 'தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்தி’ (அக 129; 7) என்ருர் பிறரும், உடைவளை கடுப்ப
மலர்ந்த காந்தள்’ (புற90: 1) என வெண்காந்தள் கூறப்படுதலின் அதனை
விலக்கிச் செங்காந்தள் என்பது தோன்றச் சிவந்த காந்தள் என்ருர், சிவந்த என்பது இயல்பான சிவப்பைக் குறித்து நின்றது. "சிவந்ததா மரை” என்புழில்போல. முதல் என்றது கிழங்கை, மூதில் என்றது பாழ்த்த மனையை. மூதில்லையுடைய புல்லிலை வைப்பு எனக்கூட்டுக. -
புலவுவில் லுழவிற் புல்லாள்-என்றது ஆறலைகள்வரை. புலவுவில்புலால் அம்பைத் தொடுத்தலின் புலால் நாற்றத்தையுடைய வில். 'எய்த அம்புதன்னை மீட்டுந் தொடுத்தலிற் புலால் நாற்றத்தையுடைய வில்' என் ப்ர் நச்சினுர்க்கினியர். (மதுரைக் 142 உரை) வில்லுழவின் என்பதற்கு வில்லாகிய ஏரினுல் உழுதலையுடைய எனினுமாம். வழிப்போவாரை மறைந் திருந்து கொல்லும் புல்லியதொழிலுடைமையால் ஆறலைகள்வரைப் "புல் லாள்' எனருர், -
"கடிகை வெள்ளிலுங் கள்ளி வற்றலும் வாடிய வுவலொடு நீடதர் பரப்பி யுழைவயிற் றிரியாது முழைவயி னெடுங்கிய வாற2ல யி2ளயரை யாண்மை யெள்ளி' பெருங் (1) 55: 83-6. என வருதல் காண்க, புல்லிலை வைப்பு என்பதனை நூலாக்கலிங்கம்" (பதிற் 12: 21) என்றதுபோலக் கொள்க. வைப்பு என்றது குடிபோய்ப் பாழ்த்த ஊர்களை. சேரனுல் நாட்டின் இடங்கள் பலவாறு சிதைந்தமையின் ‘புலஞ் சிதை நாடு' என்ருர், 'இழிபறியல் பெருந்தண்பணை, குரூஉக்கொடிய வெரி மேய, நாடெனும் பேர் காடாக. ஊரிருந்தவழி பாழ்ாக. பாழாயின? (மதுரைக் 154-76) என வருதல் காண்க
அரம்பிற் (13) பகைவர் (15( துப்பெதிர்ந்த (14) பகைவர் (15) எனத் தனித்தனி கூட்டுக. அரம்பு-குறும்பு. சீவக 2727 நச். பகைவர் நின் வலி மிகுதியை அறியின் நின்னுெடு எதிர்தல் தகாது என்பதனை நினைந்து நின் வலியொடு மாறுபடார் என்பது தோன்ற, "அறியாமையான் மறந்து துப்பெதிர்ந்த பகைவர்' என்ருர், துப்பெதிர்தல்-வலியோடு மாறுபடுதல், (புற 50: 8-9 உரை)-வந்திசின், இசின் தன்மைக்கண் வந்தது. "இனிது கண்டிசிற் பெரும" (புற22, 36) என்புழிப்போல,
16-23. கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவுமாகிய வளம்பல நிகழ் தரும் நன்னூட்டு மூதூர் நியமத்தின்கண் வெற்றிப் புகழ்பெற்ற மிக்க

Page 42
54 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
மகிழ்ச்சியான் இயம்பும் முரசினையுடைய வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்
கை, சேரலாத என்க.
கடல என்றது கடலிலுள்ளனவாகிய அரும்பொருள்களை. அவை முத்து பவளம் சங்கு முதலியன. கல்-மலை. 'கல்காயுங் கடுவேனிலொடு" (மது ரைக் 106) கல்ல என்றது மலையிலுள்ளனவாகிய அரும் பொருள்களை. அவை பொன் மணி அகில் சந்தனம் முதலியன. யாற்ற என்றது யாறு பாயும் முல்லை மருத நிலங்களிலுள்ள பொருள்களை, முல்லை நிலத்துப் பொருள்கள் : ப்ொன் தேன் மயிற்பீலி முதலியன. மருத நிலத்துப் பொருள் கள் : செந்நெல் கரும்பு வாழை முதலியன. பிறவும் என்றது ஒரு நில மாகச் சொல்லப்படாத பல நிலப்பண்புகளையுடைய இடத்துப் பொருள்களை. பிற இடத்தனவும் என்பர் நச்சினுர்க்கினியர் (மதுரைக் 504 உரை) நிகழ் தரும் என்ருர் இடையருது நிகழ்தலின்.
வளம்பல நிகழ்தரும் நன்னுட்டு மூதூர் செல்வம் மிக்கதாதலின் ஆண்டு விழா என்றும நிகழ்தலின் விழாவறுபறியா' என்றும். விழாவில் அடிக்கப்படும் முழவு எக்காலத்தும் மூதூர்கண் ஒலித்தலின் முழவிமிழ் மூதூர்' என்றும் கூறினுர், "முழவுகண் புலரா விழவுடை யாங்கண்" (நற் 220: 6) என்ருர் பிறரும். அறுபு-அற்று * செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 'கொடியறு பிறுபு செவி செவிடுபடுபு' (பரி 2: 38) என்புழி அறுபு-அற்று' எனப் பரிமேலழகர் பொருளுரைத்தவாறுங் காண்க. பேரொ லியாக ஒலித்தல்பற்றி முழவினை எடுத்துக் கூறினராயினும், குழல் யாழ் முதலியன ஒலித்தலுங் கொள்க.
"குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப விழவரு வியலாவணத்து? 756-8.
எனப் பட்டினப்பாலையில் வருதல் காண்க. மூதூர் (18) நியமத்து என இயை யும். கொடிநிழற்பட்ட நியமம் எனக்கூட்டி மிக்க கொடிகள் நனிவிரவுதலி ஞல் அவற்றின் நிழலிலமைந்த நியமம் எனக்கொள்க. திருவீற்றிருந்த நியமமாகலின் பொன்னுடை நியமம் என்ருர், நியமம்-அங்காடித்தெருவு மாம். நியமத்து (19) இயம்பும் (20) என முடிக்க, சீர் என்றது ஈண்டு வெற் றிப் புகழை, வீரர்க்கு எல்லாப் புகழினும் வெற்றியாலுளதாகும் புகழ் உயர் புகழாதலின் அதனைப் பெற்றதனுலுளதாகிய மிக்க மகிழ்ச்சியைக் 'கலிமகிழ்' என்ருர் சேரலாதன் தன் வீரருடன் சென்று பகைவரை வென்றமை தோன்றச் சீர்பெறு கலிமகிழ் ர் இயம்பு முரசின் வயவர் வேந்தே என்ருர், பரிசிலர் வாழ்வுக்கு வேண்டும் செல்வத்தை வரையாது வழங்குதலின் சேரலாதனைப் பரிசிலர் வெறுக்கை' என்ருர், "பாணர்க் ககலாச் செல்வ முழுதுஞ் செய்தோன், எங்கோன் வளவன்" (புற 34; 14-5) என வருதல் காண்க. பரிசிலர்-பரிசிற் பொருளால் வாழ்க்கையை நடத்துதலையுடைய பாணர் கூத்தர் முதலியோர். “பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்" (சிறுபாண் 218) என்ருர், பிறரும். வெறுக்கையாக இருப்பவனை வெறுக்கை' என்ருர், அந்தணருடைய செல்வமாக இருப்பவனை 'அந்தணருடைய வெறுக்கை"
米
* அறுதல்-நீங்குதல் 'எல்லாத் தவறு மறும்’ (கலி 107:17) என்புழிப்போல * வென்றிவெம் முரச மார்ப? சீவக 299,

、象 鬣
15 ஆம் பாட்டு 55
எனத் திருமுருகாற்றுப்படையில் கூறி யிரு த் த ல் ஈண்டறியற்பாலது வெறுக்கை அண்மைவிளி.
தாரணிந்தெழிலிய யானை, மருப்பின் யானை, போர்வல்யானை எனத் தனித்தனி கூட்டுக. தார் என்றது கழுத்திலணிந்த மாலையை, தார் அணி யப்பட்டதனுல் அழகு மிகப்பெற்ற யானையாதலின் "எழிலிய யானை' என்றர். 'எழிலிய-எழில்பெற்ற புற 68; 5 உரை. இது பண்புப் பெயரடியாக வந்த பெயரெச்சம். தொடிசிதை மருப்பு-பகைவர் மதிலையும், மதிற் கதவையும் பொருதலாற் தொடி சிதைந்த மருப்பு.
* நீண்மதி லசனம் மாய்த்தெனத் தொடிபிளந்து
வைநுதி மழுகிய தடங்கோட் டியானே? ஐங் 444: -3 "கடிமதிற் கதவம் பாய்தலிற் ருெடிபிளங்து
நூதிமுக மழுகிய மண்ணை வெண் கோட்டுச் சிறுகண் யானே? ویہy gs 24 : 11--3 எனப் பிருண்டும் வருவன காண்க, தொடி-மருப்புச் சிதையாவண்ணம் இருப்பினுற் செய்து அதன் நுனியில் அணியப்படும் பூண். 'யர்னை மருப்
பின், இரும்பு செய்தொடியின்" (அக 26:6-7) என வருதல் காண்க. வினைநவின்ற போர்யானையாதலின் "போர்வல் யானை' என்ருர். இப்ப்குதி
யால் சேரலாதன் அலங்கரிக்கப்பட்ட யானை முதலிய படையுடன் மேற் சென்று பகைவர் மதிலை அழித்தமை கூறிஞர்.
24-31. நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கு" எனக் கலப்பையர் திருந்து
தொடையொடு வாழ்த்த, வெய்துறவறியாது நந்திய வாழ்க்கையினையும், ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கையினையும், நிரையமொரீஇய வேட்கை யினையும் உடைய புரையோர் செய்த மேவலமர்ந்த சுற்றத்தோடு என்றும் பதிபிழைப்பறியாது துய்த்தலெய்தி மேயினருறைவதும், நீ புறந்தருதலின், நோயிகந்தொரீஇயதுமாகிய நாடும் கண்டு மதி மருண்டனென் என்க. "
இவ்வுலகத்தோர் என்றது பாணர் கூத்தர் முதலிய பரிசின்மாக்களை. அரியவும் பெரியவுமாகிய பொருள்களை ஒம்பாது வீசீப் பரிசிலர் யாவரதும் ஆக்கத்துக்குக் காரணமாய் விளங்கிய சேரலாதன் நெடுங்காலம் வாழின் தமது வாழ்க்கை செல்வக்குறைபாடின்றி இனிது செல்லும் என்னும் கருத் தாற் கலப்பையர் தம்மைப் பிறர்போல் வைத்து நீ வாழியர் இவ்வுலகத்
தோர்க்கு’ எனச் சொல்லி வாழ்த்துவாராயினர். சேரலாதன் பரிசிலர் யாவர்க்
கும் ஓம்பாது வீசியமை.
'விரியுளை மாவுங் களிறும் தேருக் རི: ༦༡ ༈
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசி
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும், கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்?? பதிற் 20, 15.23, என்பதனுலறியப்படும். ့့််.. ႏွစ္ထိမ္း
இவ்வுலகத்தோர்க்கென வாழ்த்த என முடிக்க, உண்டு உரை மாறிய நா என இயையும் மழலைநா-கள்ளையுண்ட மயக்கத்தால் மழலை வார்த்தை

Page 43
56. பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
யையுடைய நா. “உண்டு மகிழ்ந்தட்ட மழலை நாவிற் பழஞ் செருக்காளர்" (மதுரைக் 668-9) எனவும், "நறவார்ந்து.மழலைச் சொற்களின் வைதி ை கூறினுன்' (சீவக 939) எனவும் வருவன காண்க. மழலை என்றது தெளி வில்லாத மொழியை, இசைவல்லோரது சொல்லும் மென்மையாக இருத்த லின் மென்சொற் கலப்பையர் என்ருர், 'மென்மொழி* மேவலர் இன்ன ரம்புளர" என்ருர் திருமுருகாற்றுப்படையினும் (முருகு 141) மழலை நாவினை யும் மென்சொல்லினையுமுடைய கலப்பையர் எனக் கொள்க கலப்பையர் என்றது முழவு தூம்பு பதலை கரடிகை முதலாகிய இசைக்கருவிகளைக்கொண்ட பையையுடைய பாணர் கூத்தர் முதலாயினுரை. *வாங்குபு தகைத்த கணப்பைய ராங்கண்
மன்றம் போக்து மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள1 பதிற் 23: 4-6. *த?லப்புணர்த் தகைத்த பஃருெகைக கலப்பையர் இரும்பே ரொக்கற் கோடியர்’ அக 310: 22-3. எனவருவன காண்க. "கலப்பை-வாச்சிய முட்டுக்களையுடைய பை, மலைபடு 13 நச் தொடை-நரம்புத்தொடை, ஈண்டு ஆகுபெயராய் யாழை உணர்த் தியது. அதனைத் திருந்துதொடை என்றது வாசித்துக் கைவந்த யாழாதல் பற்றி தொடையொடு என விரியும் ஒடு வேறுவினை ஒடு என்பாருமுளர். யாழொடு வாழ்த்த எனவே யாழில் மிழற்றுவதும் வாழத்துரையே யாகலின், ஆண்டு விரியுமொடு வேறு வினையொடுவாவது யாண்டையதென்க. வாழ்த்த நீ புறந்ததெலின் (33) என முடிக்க.
பசி பிணி முதலியன நீங்கச் சேரலாதன் நாட்டை இனிது புறந்தரு தலின் ஆண்டு வாழ்வோர் துன்பமுறுதலறியாது பெருகிய வாழ்க்கை வாழுதலின் "வெய்துற வறியா நந்திய வாழ்க்கை' என்ருர், வெய்து-வெம் மை. ஈண்டுத் துன்பத்தை. இதனை, "இருதலை வந்த பகைமுனை கடுப்ப, இன் னுயி ரஞ்சி இன்னு வெய்துயிர்த்து" (மதுரைக் 402-3) என் புழி வெய்து யிர்த்து வெப்பத்தைப்போக்கி; எனவே அச்சத்தால் நெஞ்சிற் பிறந்த வருத்தத்தைப் போக்கியென்ருர்’ என்னும் நச்சினுர்க்சினியர் உரையானு மறிக. நந்திய-பெருகிய செய்தன என்பது கடைக்குறைந்தது. அமர்ந்த -விரும்பிய எனினுமாம். மேவலமர்ந்த என்பதற்கு மேவுதலையுடைய அத் தலைவரொடு மனம்பொருந்தின' என்பர் பழையவுரைகாரர். மனனுணர் . வுடைமையாற் பிறப்பற முயன்று கடவுளை வழுத்தி அதனுல் ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினையுடைமையால் ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கை' என்ருர். எல்லா உலகங்களுக்கும எல்லாவுயிர்களுக்கும் முதல் வணுயிருக்கும் ர் கடவுள் ஒன்று என்பது யாவர்ச்கும் துணியாகலின் கடவுளை 'ஒன்று' என்ருர், அடங்கிய என்பதற்கு 'மனமொழி மெய்களால் அடங்கிய வெனினுமமையும். 砷 " .
நிரயம் என்றது நரகத்துன்பத்தை $ தீவினைசெய்தோர் நரகத் துன் - 'கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழி' திருக்கோவை 78. ܚ̄-ܨ--------------
f 'ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவ?ன' திருமந், 1744, $ 'பாவர்சென்று அல்கும் கரகம்-தீவினையார் சென்று தங்கும் கரகம்’ திருக் கே வை 337 பேர்,

15 ஆம் U rů () 57
பத்தை எய்துவராகலின் அத்துன் பத்தினின்று நீங்குதற்கு ஏதுவாகிய நல் வினைகளின் மேற்சென்ற பற்றுள்ளத்தை நிரயமொரீஇய வேட்கை" என் ரூர் வேட்கை-பற்றுள்ளம், வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் தொல், உயிர்மயங்கு 86 நச். புரையோர் என்றது சான்ருேரை "ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றேர்" (புற 191: 6-7) எனவும், "சான்ருேர்-முற்றவுணர்ந்து ஐம்பொறியுமடக்கியோர்’ (தொல், கற்பு 5:15 நச்) எனவும் வருவன காண்க. பதிபிழைப்பு என்றது பகைவரால் துன்பம் வந்தவிடத்துக் குடிமக்கள் அந்நாட்டைக் கைவிட்டு நீங்குதலை.
'வெஞ்சின வேந்தன் பகைய2லக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்?? நற் 153: 8-9. *பண்புடை கன்னுட்டுப் பகைதலே வந்தென
வதுகை விட் டகன்ருெரீஇக் காக்கிற்பான் குடைகீழற் பதிபடர்ந் திறைகொள்ளும் குடிபோல? கலி 78; 4-6, என வருவன காண்க. சேரன் ஆட்சித் திறத்தால் குடிமக்கள் ஊரைவிட்டு நீங்குதலை என்று மறியாமையின் என்றும் பதிபிழைப்பறியாது' என்ருர், இது பகையின்மை கூறிற்று. துய்த்தல்-அடங்கிய கொள்கையாலுதாகும் தவப்பயனை நுகர்தல், மேயினர் முற்றெச்சம்.
பலர்புகழ் பண்பின் நீ என்க. பலர் புகழ் பண்பு என்றது நட்பினரும் பகைவரும் முதலாகிய பலரும் ஒரு பெற்றிப்படப் புகழ்தற்கேதுவாகிய ஆண் மையும் வண்மையும் பொறையும் முதலாகிய நற்பண்புகளை. பண்பு-நற் குணங்கள் கலி 78; 4 நச். சேரலாதன் அரசியற் சிறப்பால் பசியும் பிணியும் நாட்டினின்று நீங்குதலின் 'நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய நாடு என்ருர், 'நோயொடு பசியிகந் தொரீஇப், பூத்தன்று பெருமநீ காத்த நாடே’ (பதிற் 13: 21-8 என வந்தவாறுங் காண்க. ஈண்டு நோய் என் றது பசியையும் பிணியையும், 'நோயிகந்து நோக்கு விளங்க. gol6):5 மாண்ட வுயர்ந்தோர்" (மதுரைக்-13-23) என் புழி நோய் என்பதற்குப் பசியும் பிணியும் என நச்சினுர்க்கினியர் பொருளுரைத்தமை கண்க. ஒரீ இய நாடு என இயையும். யாணர் நாடு-நீ புறந்தருதலால் மிக்க புது வருவாயையுடைய நாடு "மெலிவில் செங்கோ னீபுறங் காப்ப, பெருவிறல் யாணர்த்தாகி . வருவிருந் தயரு, மென்புல வைப்பி னன்னுட்டுப் பொருந” (புற 42:11-18) என்ருர் பிறரும்.
நின் பகைவர் நாடுங் கண்டேன். நின் நாடுங் கண்டேன்; அறியா மையான் மறந்து துப்பெதிர்ந்த பகைவரின் பாழ்த்த நாட்டைக் கண்டு மதிமருட்கை எய்தாது, புரையோர் சுற்றமொடு பதிபிழைப்பறியாது துய்த்த லெய்தி மேயினருறைவதும் நோயிகந் தொரீஇயதும் மிக்க புதுவருவாயை யுடையதுமாகிய நின் நாட்டினைக்கண்டு மதிமருட்கை எய்தினேன் என்பார் நின் பகைவர் நாடுங் கண்டுவந்திசினே . நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய யாணர் நன்னடுங் கண்டு மதிமருண்டனென்' என்ருர் ஈண்டு மருட்கை, பெருமை காரணமாகப் பிறந்த மருட்கை. "புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு, மதிமை சாலா மருட்கை நான்கே" என்ருர் தொல்

Page 44
58 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
காப்பியனுரும். (தொல், மெய் 7) மதி மருண்டனென்-அறிவு உவக லழக்கி னுள் நின்றவாறு நில்லாது திரிந்து வியப்படைந்தேன். மதி-அறிவு' திருக்கோவை 171 பேர். இயற்கையாகிய நுண்ணறிவு குறள் 637 பரிமேல். ஞாலத்தில் நிலைபெற்ற உயிர்களுக்கு எஞ்சாது ஈத்து அவ்வீகைச் செயலில் மாருத கையிடத்துள்ள மிக்க வன்மையாற் புரை வயிற் புரைவ யிற் பெரிய நல்கி நெடியோனன்ன புகழையுடைய மைந்த, நின் பண்பு கள் பலவற்றையும் காணவிரும்பியதால் என்க.
இவ்வுலகத்திலுள்ள பரிசிலர் யாவர்க்கும் அவரவர்க்கு வேண்டும் அள விற் குறைவுபடாது கொடுத்தலின் 'மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்து' என்ருர், மண்-அணு, ஞாலத்து மன்னுயிர் எனக் கூட் டுக. 'மலர்தலை யுலகத்து மன்னுயிர்" (பெரும் பாண் 32) என்ருர் பிறரும். ஈண்டு மன்னுயிர் என்றது மக்களுயிரை, சேரலாதன் மன்னுயிர்க்கு எஞ் சாது ஈத்துப் பின்னும் இரப்போர்க்கு மாருது ஈத்தலின் 'ஈத்துக் கைதண்டா? என்ருர்,
*இரந்தோர் வாழ கல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித நறிருக்கை’ பதிற் 76; 7-8 'இன்று செலினுங் தருமே சிறுவரை
நிள்நு செலினுந் தருமே பின்னு முன்னே தந்தனெ னென்னது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னகி யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்? புற 171:1-5. என வருவன ஈண்டறியற்பாலன. கை-செயல் நெடுநல் 45 நச், தண்டா"மாருத பதிற் 76; 8 பழையவுரை. 'தணியாத புற 6: 26 உரை. தண்டா மைந்த எனக் கூட்டுக. இனித் தண்டாத் துப்பு எனக் கூட்டித் தண்டா மைக்குக் காரணமாகி வலி என்றுரைப்பினும் அமையும். கைகடுந்துப்பு என்றது கையிடத்தமைந்த வரையாத வண்மைத் தன்மையை, துப்பின் நல்கி எனக் கூட்டுக. கைவள்ளிகை-கைவண்மையாற் கொடுக்கும்கொடை (புற 148; 6) என்ற உரை காண்க. தேவாலயங்கள் உயர்ந்த இடங்களா தலின் புரைவயின்' என்ருர், புரை-உயர்ச்சி. அடுக்குத் தொறுப்பொரு ட்டு, ஏமமாகிய விழவு என்க. ஏமம்-இன்பம், விழவின் நெடியோன் என்க. நெடியோன்-திருமால். 'நீணிற வுருவின் நெடியோன்" பெரும் பாண் 402. உரைசால் சிறப்பின் நெடியோணுதலின் புகழுக்குத் திருமாலை உவமை கூறினர். "புகழொத்தீயே யிகழுந ரடுநனை" "மாயோ னன்ன, உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற” (புற 56; 13:57, 2-3) எனப் பிறரும் கூறுதல் காண்க. நல்லிசை மைந்த என முடிக்க, மைந்து-வலி. பண்பு பல என்றது ஆண்மையும் வண்மையும் செங்கோன்மையும் முதலாகிய பண்பு கள் பலவற்றை. நயந்து என்னும் வினையெச்சம் ஏதுப்பொருட்டு. நயந்த தால் நின்பகைவர் நாடுங் கண்டுவந்தேன்; நின்நாடுங்கண்டு மதிமருண் Lனென் என்க.
இதனுற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் தன் நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.

15 ஆம் பாட்டு 59
மேற்கோள். 。 "நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப" (தொல், உரி 77) என்னும் சூத்திரவுரையில் கறுத்த காயா' 'சிவந்த காந்தள்’ என அவை வெகுளியே
யன்றி நிறவேறுபாடுணர்த்தற்குமுரிய என்றவாறு' என்று உரைத்தனர் சேனுவரையர், -
"இயங்குபடையரவம்" (தொல். புற8) என்னும் சூத்திரவுரையில், அடுத் தூர்ந் தட்டகொற்றத்தானும்-எடுத்துச்சென்ற இரு பெரு வேந்தர் படை யாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந்நாட்டைக் காவல்புரிந்தோரைக்கொன்ற கொற்றமும்; 'யாண்டு தலைப்பெயர...முழ விமிழ் மூதூர்' என்னும் பதிற்றுப்பத்தும் அழிவுகூறிய இடம் அப்பாற் படும்' என்று உரைத்தனர் நச்சினுர்க்கினியர்,
பழையவுரை. நீ சீற்றமொடு (2) அழல் கவர் மருங்கின் உருவறக் கெடுத்து (7) என முடிக்க, 4. நிரைய வெள்ளமென்றது பகைவர்க்கு நிரைய பாலரைப்போலும் படை வெள்ளமென்றவாறு. நிரையமென்றது நிரையத்து வாழ்வாரை. இச் சிறப்பானே இதற்கு நிரைய வெள்ளம் என்று பெயராயிற்று. 5 மன்மருங் கறுப்பவென்றது மன் மருங்கறுப்ப வேண்டி யென்றவாறு, T கெடுத் தென்ப தனைக் கெடுக்கவெனத் திரிக்க, தொல்கவினழிந்த கண்ணன் வைப்பினை யும் (8) புல்லாள் வழங்கும் (12) புல்லிலை வைப்பினையுமுடைய புலஞ்சிதை (18) நாடு (15) என முடிக்க, 8 தொல்கவினழிந்த வைப்பென்றது சூடுண்டு அழிந்த ஊர்களை, 13 புல்லிலை வைப்பென்றது குடிபோய்ப் பாழ்த்த ஊர் களை, 9 சுரை கலிக்கவெனத் திரிக்க. 10-11 நிறைமுதற் காந்தளெனக் கூட்டுக. 11-13. மூதில்லையுடைய புல்லிலைவைப் பெனக் கூட்டுக. 13 புல் லிலை வைப்பென்றது புல்லிய இலைகளாலே வேயப்பட்ட ஊரென்றவாறு. இதனை நூலாக் கலிங்கம் (பதிற் 12:21) என்றதுபோலக் கொள்க. 12 புல் லாளென்றது புல்லிய தொழிலுடைய ஆறலை கள்வரை. அரம்பிற் (13) பகைவர் (15) என முடிக்க. 13 அரம்பென்பது குறும்பு. 20-21. சீர்பெறு கலிமகிழியம்பும் முரசின் வயவரென்றது வெற்றிப்புகழ் பெற்ற மிக்க மகிழ்ச்சி யானே ஒலிக்கின்ற முரசினையுடைய வீரரென்றவாறு. 19-20 நியமத்து இயம்புமென முடிக்க, 24-6. நீ வாழியரிவ்வுலகத்தோர்க் கெனத் திருந்து தொடை வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ வாழ்வாயாகவெனச் சொல்லித் திருந்திய நரம்புத் தொடையினையுடைய யாழொடு வாழ்த்தவென வுரைக்க, தொடையொடென விரியும் ஒடு வேறு வினையொடு, 25-6. மழலைநாவினையும் மென் சொல்லினையுமுடைய கலப் பையரெனக் கொள்க. வெய்துறவறியாது நந்திய வாழ்க்கையினையும் (27) ஒன்று மொழிந்தடங்கிய கொள்கையினையும் (29) நிரைய மொரீஇய வேட் கையினையும் உடைய புரையோர் (31) செய்த மேவலமர்ந்த சுற்றத்தோடு (28) பதி பிழைப்பறியாது துய்த்தலெய்தி (30) மேயினருறையும்(32) நாடென (34) மாறிக் கூட்டியுரைக்க, 28 செய்த மேவலமர்ந்த சுற்ற மென்றது (சுற் றத்) தலைவர்செய்த காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை மேவு

Page 45
60 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தலையுடைய அத்தலைவரோடு மனம்பொருந்தின சுற்றமென்றவாறு. செய் தன வென்பது கடைக்குறைந்தது. ஈத்துக்கை தண்டா (36) மைந்த (40) என முடிக்க. 37. புரை வயிற் புரைவயிற் பெரிய நல்கியென்றது உயர்ந்த தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்தென்றவாறு.
நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன் (15); அதுவேயன்றி வேந்தே வெறுக்கை (21) சேரலாத (23) நீ புறந்தருதலின், நோயிகந் தொரீஇய நின் (33) நாடும் கண்டு மதிமருண்டேன் (34); இவை இரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும்காண நயந்து (40) என வினைமுடிபு செய்க.
இதனுற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் தன் தாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று. '.
ஒப்புமைப் பகுதி. 1, "வென்று கலக் தரி இயர் வேண்டுபுலத் திறுத்து’ பதிற் 53: 1, ‘வெடிபடக் கடந்து வேண்டுபுலத் திறுத்த ப2ணகெழு பெருக்திறற் பல்வேன் மன்னர்? மது ரைக் 233-4. V
1-2, பகைப்புலத்து எளிபரப்பல்: 'அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்?? "முஜன சுடு கனையெரி யெரித்தலிற் பெரிது, மிதழ்கவி ன ழி ங் த மாலையொடு? *ஊரெரி கவர வுருத்தெழுந் துரை இப் போர் சுடு கமழ்புகை மாதிர மறைப்ப?? பதிற் 20; 20; 48; 10-1; 71; 9-10 "காலெனக் கடிதுராஅய், காடுகெட வெரிபரப்பி** * இழிபறியாப் பெருந்தண்பனை, குரூஉக்கொடிய வெரிமேய, காடெனும்பெயர் கா டாக" மதுரைக் 125-6; 154-5; "வாடுக விறைவாகின் கண்ணி யொன்னுர், நாடுசுடு கமழ்புகையெறித்த லானே'பகைவ.ரூர்சுடு விளக்கத்தழுவிளிக்கமப2லக்,கொள்ளை மேவஜல?? 68பெருந்தண்பனை பாழாக வேம கன்ன டொள்ளெரி யூட்டினை? "முஜன சுட வெழுந்த மங்குன் மாப்புகை, மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும், பகைப்புலத் தோனே? புற 6: 21-2; 7:7-9; 16:16-7; 103; 6-8; "செம்ம லடையர்ர் நாட், டோரெரியுள் வைகின வூர்' பு. வெ. கா. 49.
3. 'திருமழை தலைஇய' மல்ேபடு 1. மழைதவழும் மதில் : "வரைபுரை நிவப்பின் வான்றே யிஞ்சி? மல்படு 92; வான்ருே யிஞ்சி? “வான்ருேய் புரிசை* அக 35; 2; 114; 9: 'மழை துஞ்சு நீளர ணம்?? பு.வெ. மா. 119; “புயல்வந்த மாமதில்" திருக்கோவை 381 மழைவிளையாடு மதில்? தஞ்சை 238.
4. நிரைய வெள்ளம்; "நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்? குறுந் 258; 6. நிேரையத் தானையொடு? சிலப் 26: 37.
5. மன்மருங்கறுத்தல் ; 'சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு பொருந? முருகு 275-6; 'சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே? பரி 14:13; 'துர்மருங் கறுத்த சுடரிலே நெடுவேல், சீர்மிகு முருகன்’, 'மன்மருங்கறுத்த மழுவா னெடியோன்* அக 59; 10-1; 220: 5; “மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால் போல்? தொல். புற 13 கச் மேற்; "மன்மருங் கறுத்த மழுவா ணெடியோன்' மணி 22: 25; “சூர்மருங் கறுத்த நெடுவேல்" பாரதப் பாட்டு.
6. குரூஉப்புகை : "குரூஉக் குய்ப்புகை” மதுரைக் 757, 6ட7. "கஜனயெரி பரப்பக் காவெதிர்பு பொங்கி? புற 229: 11. 8. தொல்கவின் நற் 283; 4; 350; 5: 381:1; கலி 2: 28; 26: 10; அக 147; 12. கண்ணகன் வைப்பு : 'கண்ணகன் வைப்பின் மண் வகுத் தீத்து? பதிற் ஐ.ம் பதி, 5. 'கண்ணகன் வைப்பி னடு மூரும்" தற் 377: 2.

15 ஆம் பாட்டு 61
10-11. 'பீரிவர் வேலிப் பாழ்மனே? பதிற் 26: 10, 11. காந்தண் முதல் : 'காந்தண் முழுமுதல்" குறுந் 361; 4, 12. புலவு வில் : 'புலவுவில் லிளேயர்? பதிற் 71; 15; 'புல வு விற் பொலி கூவை?* மதுரைக் 142.
வில்லுழவு : 'வில்லே ருழவர்" அக 193; 2; "வில்லே ருழவின்? புற 371:13, 'வில்லேருழவர்?? பு. வெ. மா 5; குறள் 872; "மாரி வளம்பெரு வில்லே ருழவர்?? சிலப் 11:210. -
13. புல்லில் : “புல்லிலை வெட்சியும்" கலி 103; 2. - புல்லில் வைப்பு: 'ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" பெரும் பாண் 83; இ2லவேய் குரம்பை" மதுரைக் 310; 'புல்வேய் குர ம்  ைபக் குடிதொறும் மஐபடு 439; 'கொன்னிலைக் குரம்பை" குறுந் 284; 7; ‘தேக்கின், அகலிலை குவித்த புதல்போல் குரம்பை அக 315: 15-6.
வரம பு: 'அரம்பு மல்ல லு ம்’ பெருங் (2) 12: 48; 'அரம்புசெய் பிணி? தணிகை. பிரமன் 19.
14. அறியாமையான் எதிர்தல்: “நின், மைந்துமலி பெரும்புக ழறியார் மஜலந்த, போரெதிர் வேக்தர்? 'அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்று" பதிற் 23:15-7; 59: 11: 'பாரியது, அருமை யறியார் போரெதிர்ந்து வந்த, வலம்படு தானே வேந் தர்? புற 116; 16-S; “அருந்தமி ழா ற் ற லறியார் மலை ங் த, கனக விசயரை?? got 27: 189-90.
துப்பெதர்தல்: 'துப்பெதிர்ங் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்? புற 380; 10, "துன்னருந் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து’ பு வெ. மர 243,
8-15. வைப் பின் நாடு : பதிற் 13: 9-1;ெ அடிக்குறிப்பு. 16. மஜலயவுங் கடலவும்" பெரும் பாண் 67; "மலையவு நிலத்தவு நீரவும் பிற வு 39 மதுரைக் 504; 'கல்லவும் கடத்தவும்” கலி 103; 4; "மலையவுங் கடலவு மரும்பல கொணர்ந்து' சிலப் 23:33,
18. "முழவிமிழ் மூதூர்’ பதிற் 30; 20; “ஊரூர் கொண்ட சிர் கெழு விழ வினும்? முகுரு 220; “அருஅ யாண ரகன்றலைப் பேரூர்ச், சாறு? பொருத 1-2; :விழவு மேம்பட்ட பழவிறன் மூதூர்’ பெரும்பாண் 411: "முழவிமிழுமகலாங்கண். விழவுகின்ற வியன்மறுகில்" மதுரைக் 327.8; 'துஞ்சா முழவின் மூதூர்’ குறிஞ்சி 233; சாறயன் மூதூர்” பட்டினம் 215; ஆடியல் விழவி னழுங்கன் மூதூர்? “Cypyp வுக்கண் புலரா விழவுடை யாங்கண்" "விழவுத்தலைக்கொண்ட பழஷிறன் மூதூர்? உவரே.கலிகெழு மறுகின் விழவய ரும்மே” நற் 90: 1; 220: 6, 293; 4; 348; 3 உ4; 5 பேரூர்கொண்ட வார்கலி முழவின்’ குறுந் 222: 1; 'அழியா விழவின் அஞ்சு வரு மூதூர்: "பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவு' 'முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்?' 'விழவுகொள் மூதூர்’ அக 115; 1; 141; 10-11; 206: 1; ஐ52; 5; 'கல்லென் பேரூர் விழவுடை யாங்கண்' புற 94; 4; 'விழவுடை வீதி மூதூர்? சீவக 816,
19. கொடி நிழல்: 'விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப், பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்? சிலப் 14:215-6.
பொன்னுடை நியமம் : 'பொன்னுடை நியமத்து’ பதிற் 30:12, 18-19. மூதூர் நியமம் : 'கெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்' நற் 45; 4; அக 83; 7.
21. வயவர் வேத்தே ! "விரவுமொழிக் கட்டுர் வயவர்வேந்தே? பதிற் 90; 30.
சிலர் வெறுக்கை; "பரிசிலர் வெறுக்கை பாணர்நாளவை" "பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை?? பதிற் 38; 9; 85; 11.
22-3. தார் அணி யர&ன; 'பொலந்தார் யானை" பதிற் 75: 3:'தாரொடு பொலிந்த வினைகவில் யானை' மல்படு 227; "மலர்தார், மையணி யானே? தார்பூண் களி றின்' அக 116; 12-3; 166; 12; 'தாரணி யானை' புற201:13,

Page 46
62 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தொடிசிதை மருப்பின் ய7&ன: 'அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின், பிடிமிடை களிற்றில்" "பகைவர் மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பிற், கந்துகால் ஒசிக்கும் யானை' அக 99; (2-3; 164:11-3. 23. போர்வல் யானே? பதிற் 21: 17: அக 36; 16, 26. கலப்பையர்: "வாங்குபு தகைத்த கலப்பையர்' "காவிற் றகைத்த து ை) கூடு கலப்பையர்? பதிற் 23: 4; 41: 5; 'நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்? மக்ல படு 13,
27 'நாம மறியா வேம வாழ்க்கை” பதிற் 68:12, 31. நிரையம் : "நிரைய கெஞ்சத் தன்னை' தந் 236; 5. 30-2. “பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇ . இனிதமர்ந் துறையும்? up&ouG 479-85.
யாணர் நன்னடு: "அருஅ யாணரவ ரகன்றலே காடே? பதிற் 23: 25; 'யானர் ாக ன்னுட் டுள்ளும்' புற 212: 6.
கண்டுமதி மருளல்: 'கண்டுமதி மருளும் வாடா ச் சொன்றி? பதிற் 24: 22. 35. பண்ணுடைஞாலம் பதிற் 18: 9; 31: 2; 89; 12; தற் 153: 2; அக 379: 6; புற 2: 1; 19; 1; 35: 3: தி&னதுாற் 146; சிறுபஞ். கடவுள். கார்நாற் 8; சிலப் 26: 42; மணி 11: 95; திருவாய்மொழி (3) 6: 11.
38, சீர்கெழு விழவு : 'ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்' முருகு 220. 39. கல்லிசை பதிற் 14: 21 அடிக்குறிப்பு.
6. துயிலின் பாயல் 16. கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி ,“ நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற்
றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள் பூணு வையவி தூக்கிய மதில 5 நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு
பேன மாகிய நுனிமுரி மருப்பிற் கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே 10 யாறிய கற்பி னடங்கிய சாய
லூடினு மினிய கூறு மின்னகை யமிர்துபோதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்நுத லசைநடை யுள்ளலு முரியள் பாய லுய்யுமோ தோன்ற ருவின்று 15 திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோ டுறழ்ந்துபூண் சுடர்வர் வெழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்துப் புரையோ ருண்கட் டுயிலின் பாயல்

16 ஆம் பாட்டு 63
பாலுங் கொளாலும் வல்லோய்கின் 20 சாயன் மார்பு கனியலைத் தன்றே.
இதுவுமது. பெயர் - துயிலின் பாயல் (18). ப-ரை. -9. கோடு உறழ்ந்து எடுத்த கொடு கண் இஞ்சிமலையொடு மாருட எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதிலையும், நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல்-கண்டார்க்கு காடு கண் டாற்போன்ற அப்புக்கட்டுகள் தங்கும் மலைபோன்ற இடைமதிலையு முடைய துஞ்சு மரம் குழாஅம் துவன்றி-மதில் வாயிலிற் றுரங் கும் கணையமரங்களின் கூட்டம் நெருங்கப்பெற்று, புனிறு மகள் பூணு ஐயவி தூக்கிய-ஈன்றணிமையையுடைய மகள் அணியாத ஐயவி தூக்கப்பட்ட, மதில நல் எழில் நெடு புதவு முருக்கி கொல்லுபு-மதி லிடத்தனவாகிய கன்ருகிய அழகிய நெடிய கதவுகளே முறித்து அழித்தலால், ஏனம் ஆகிய நுனி முரி மருப்பின்-பன்றியின் கொம் பைப்போலாகிய நுனி முரிந்த மருப்பினேயுடைய, கடாஅம் வார்ந்து கடு சினம் பொத்தி-மதம் சொரியப்பெற்று மிக்கசினம் மூளப்பெற்று, மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை-கட்டுத்தறியை அழிக் கின்ற இளைய களிறுகள் முழங்கும் பாசறையிடத்து, டிேனையாக லின் காண்கு வந்திசின்-கீட்டித்தாயாகலின் கின்னக் காண்பேன் வந்தேன்.
10-20. ஆறிய கற்பின்-அறக்கற்பினேயும், அடங்கிய சாயல் -தன் கண்ணே அடங்கிய மென்மையினேயும், ஊ டி னு ம் இனிய கூறும்-ஊடிய காலத்தும் இனிய மொழிகளைக் கூறுக், அமிர்து பொதி துவர் வாய்-அமிழ்து பொதிந்த செம்மையுடைத்தாகிய வாயினையும், அமர்த்த நோக்கின்-அமர்த்த கண்களையும், சுடர்நுதல் -ஒளியையுடைய நெற்றியையுமுடைய, அசை நடை உள் ளலும் உரியள்-அசைந்த நடையினையுடைய பெருங்தேவி நின்னை நினைத்து வருந்துதலுமுரியள்; பாயல் உய்யுமோ-அவள் பாயல் வருத்தத் திற்கு உய்வாளோ, உய்யாளன்றே; தோன்றல்-தலைவனே, தா இன்று திருமணி பொருத திகழ் விடு பூண் பசும் பொன்-வலியில்லை யானபடியாலே அழகிய மணிகளோடு பொருத ஒளி விடுகின்ற பூணுன் பசும்பொன், வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து சுடர்வர-தன் னிடை அழுத்தின விளங்குகின்ற கிரணங்களையுடைய வயிரங்க ளோடு மாறுபட்டு விளங்க, எழுமுடி கெழிஇய திரு ஞெமர் அக லத்து-எழுமுடியானுஞ் செய்த ஆரம் பொருந்திய திருமகள் தங் கிய பரந்த மார்பாகிய, புரையோர் உண் கண் துயில் இன் பாமல் -க சதன் மகளிரின் கண்ணினது துயிலுக்கு இனிய பாயலை, பாலும்-கின் மகளிர்க்கு கின்னிடத்தினின் அறும் பகுத்தலையும், கொ

Page 47
64. பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
ளாலும்-அம்மகளிர்பால் நின்றும் வாங்கிக் கோடலையும், வல்லோய் -வல்லவனே, நின் சாயல் மார்பு கனி அலைத்தன்று-நின் மென் மையினேயுடைய மார்பு அவளே மிக வருத்திற் று.
பாசறைக்கண் நீ நீடினையாகலின் நின்னைக் காண வந் *ابواطU) தேன்; நின் தேவியாகிய அசைநடை நின்னை நினைத்தலுமுரியன்; அன பின்பு அவள் பாயல் வருத்தத்திற்கு உய்யுமோ, உய்யாளன்றே; தோன்றல்! அகலப் பாயல் பாலும் கொளசலும் வல்லோய்! நின் மார்பு அவளை மிக வருத்திற்றுகாண்; நீ அவள் பாற் கடிதெழுக என்க.
ஆ-ரை, 1-4. மதிலிடத்தனவாகிய கதவுகளை இடித்தழித்தலால் நுனிமுரிந்த மருப்பினையுடைய களிறு முழங்கும் பாசறைக்கண் நீடினையா கலின் நின்னைக் காண்பேன் வந்தேன் என்க.
கோடுறழ்ந்தெடுத்த இஞ்சியென்றது மலையுள்ள இடங்களிலே அம் மலைதானே மதிலாகவும் மலையில்லாத இடங்களில் மதிலே அரணுகவும் அவ்வாறு மலையொடு மாருடவெடுத்த மதில் என்றவாறு, அரண் அமைந்த இடம் மலைநாடாதலின் * மலைகளை இயற்கை அரணுகக்கொண்டு, இட்ை யிடையே மலையற்ற பகுதிகளுக்கு அம்மலைபோன்று சுவர் அமைத்து அரண் செய்தனர். இனி, கோடுறழ்ந்தெடுத்த இஞ்சி என்பதற்கு மலையொடு மாறு பட்டுத் தோன்றுமாறு எடுத்த மதில் எனினுமமையும். "வரைபுரை நிவப் பின் வான்ருேயிஞ்சி" (மலைபடு 92) எனப் பிருண்டும் வருதல் காண்க.
கோடு-மலை. 'கோடுகொண் டெழுந்த கொடுஞ் செலவெழிலி' முல்லை 5. உறழவெனத் திரித்து அதனை 'எடுத்த வென்னும் வினையொடுமுடிக்க. இனித் திரியாதே “உறழ்ந்து என்பதனைப் பிறவினை வினையெச்சமாகக் கொண்டு எடுத்த என்பதனேடு முடிப்பினும் அமையும். உறழ்தல்-மாறு படுதல். "முள்ளுறழ் முளையெயிற்று” கலி 3; 13 எடுத்த-கட்டிய, தான் வளைந்த உள்ளிடத்தையுடைய மதிலாதலின் ‘கொடுங்க ணிஞ்சி யென்ருர், 1உடன் வளைஇ யோங்கு நிலை"-இவ்விடங்களையெல்லாம் சேர வளைத்து உயர்ந்த மதில்' என்ற (நெடுநல் 92 நச்) உரைப்பகுதி ஈண்டறியற்பாலது. கொடுங்கண்-வளைந்த இடம். கொடுமை-வளைவு. ‘கொடுங்காய் கொண் டன வவரை’ மலைபடு 110. இஞ்சி-மதில் மலைபடு 92 நச். ஈண்டு இஞ்சி யென்றது புறமதிலை.
நாடு கண்டன்ன விலங்கல் என்றது, S பகைவர் முற்றுகையால் நெடுநாட்பட மதில் அடைபட்டுக் கிடக்கும் காலத்தே ர் அகத்தார் உண * நிரரண் நிலவரண் மலையரண் காட்டரனென இயற்கையுஞ் செயற்கையு DIT LI J இந்நான்கானுஞ் தழப்படுவது அரனென்பதாம்’- குறள் 742 Ꭵ, iflᏣ upᏍ.
S சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து நெடுங்கிள்ளியால் மதில் அடைபட்டுக்கிடந்தயை புறம் 44 ம் செய்யுளால் அறியலாம்
* மூவேந்தரும் பறம்பை முற்றுகையிட்டகாலத்து அகத்தார் உணவின்றி வருந்தியமை அகம 78; 15-22; 303:10-14 அடிகளாலும் அவற்றின் பழையவுரை யானும் அறியலாம்.

16 ஆம் பாட்டு 65 வின்றி வருந்தாவாறு விளைத்துக்கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்போன்ற மதில் என்ற வாறு, மதில் சூழ்ந்த உள்ளிடம் ஒரு நாடுபோன்ற விரிவினையுடையதென்ற வாறு, உள்ளிடத்தின் தோற்றம் மதின் மேலேற்றப்பட்டது.
கணைதுஞ்சு விலங்கல் மதிலுக்கு வெளிப்படை, ! அப்புக்கட்டுக்கள் தங்கும் ஞாயிலையுடைய மதிலாதலின் 'கணைதுஞ்சு விலங்கல்' என்ருர், மதில் $ ஞாயிலில் அம்பு துஞ்சல், 'எயில். ஞாயில் தொறும புதை நிறீஇ"-"மதிலிடத்தே . .அதன் தலையில் எய்து மறையுஞ் சூட்டுத்தோ றும் அம்புக்கட்டுக்களையும் கட்டிவைத்து' (பட்டினப் 288-91 நச்.) எனவும் 'அம்புடை ஞாயி லரண்"-"பகழியையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலி டத்து (பு. வெ. மா. 118 உரை) எனவும் வரும் உரைப்பகுதிகளானுமறிக. கணை -அம்பு. 'கணைகொடிது யாழ்கோடு" குறள் 279. துஞ்சுதல்-தங்கு தல். 'அம்பு துஞ்சுங் கடியரணுல்" புற 20:16, விலங்கல் போறலின் மதில் விலங்கலெனப்பட்டது. விலங்கல்-மலை. 'விலங்கலைக் கால் விண்டு மேன்மே லிட” திருக்கோவை 24. இதனுல் இம்மதில் பேரிடத்ததாகி உறுபகை யூக்க மழிப்பதாய்ப் புறத்தாராற் கொளக்கரிதாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைகெளிதாம் நீரதாய் அமைந்தமை கூறினர். ஈண்டு விலங் கல் என்றது இடைமதிலை, - :ܘ
துஞ்சுமரக்குழாஅந் துவன்றி ஐயவி தூக்கிய புதவு எனவும், மதில நல்லெழில் நெடும்புதவு எனவும் கூட்டுக. மதிலிடத்தனவாகிய கதவுகளுக் குக் காவலாகத் துஞ்சுமரமும் ஐயவியும் அமைந்தமையின், துஞ்சுமரக் குழாஅந் துவன்றி ஐயவி தூக்கிய மதில புதவு' என்ருர், துஞ்சுமரம் என் றது மதில்வாயிற் றுாங்கும் கணையமரங்களை. 'துஞ்சுமரந் துவன்றிய.ஒங்கு நிலை வாயில்" (பதிற் 22:21-2) என வருதல் காண்க. அர் மரங்கள்தாம் பலவாதலின் துஞ்சுமரக் குழாஅம்' என்றும், நெருங்சக் கிடத்தலின் துவ ன்றி' என்றுங் கூறினுர், குழா அம்-கூட்டம். துவன்றல்-நெருங்கல். "ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி" மதுரைக் 580. கணைய மரங் களை நெருங்க அமைத்தமை பகைவரின் போர்வல் யானைகள் கதவங்களை"S இடித்து அழிக்காதபடி என்க. 'களிறே, எழுஉத் தாங்கிய கதவுடிமலைத்து' (புற 9 : 8) என வரல் காண்க, | 3: ત્રિ * * {
ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கிப்படும்! துலாமரத்தை. "ஓங்குநிலை வாயிற் றுாங்குபு தகைத்த வில்விசைமோஸ்டிவ் விழுச்சீரையவி. நெடுமதில்" (பதிற் 22:22-5)என மேலவருதல்க்ர்ண்ர்க. இது "ஐயவித்துலாம்' எனவும்படும். இது கதவையணுகாதபடி மதில்வாயி லிற் கற்கவி தொடங்கி நாற்றப்படும் மரம் என்பது, 'ஐயவித்துலாம்-கத வையணுகாதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாமும்மி என் அடிய்ார்க்கு
! அப்புக்கட்டு-அம்புக்கட்டு, 'அப்பும் புதையும்? பெருங் (1) 52: 16.
$ ஞாயில்-மதிலுறுப்பு. "நிரைநிலை ஞாயில் நெடுமதில்’ அக 124; 16.
9 s ".
இశ్లో

Page 48
66 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நல்லார் உரைத்தவாற்ருனும் (சிலப் 15:213 உரை) அறியப்படும். இவ்வைய வித்துலாம் நெருங்கினர் தலைகளைத் திருகிக்கொள்ளும் வலியுடனே நெருக்கு மரமென்பது "நற்றலைகள் திருக்கும்வலி நெருக்குமர நிலையே" (சீவக 102) என்பதன் விசேடவுரையில், தலைகளைத் திருகிக்கொள்ளும் வலியுடனே நெருக்குமரமாவது ஐயவித்துலாம் என நச்சினுர்க்கினியர் உரைத்தலான் அறியலாம். புனிற்றுமகள் பூணும் வெண்சிறுகடுகிற்கும் ஐயவி என்று பெயர் ராதலின் அதனை விலக்கி ஐயவித்துலாம் என்னும் பொருள் தோன்றப் "புனிற்றுமகள் பூணு ஐயவி என்ருர். இது வெளிப்படை என்னும் இலக்க ணத்தின் பாற்படும். புனிறு-ஈன்றணிமை. "புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின்" தொல், கற்பு 5:27. பூணுதல்-புகைத்தல். "ஐயவி புகைப்பவும்" புற98: 15. துவன்றி, தூக்கிய செயப்பாட்டு எச்சம். ஈண்டு மதில் என்றது உண்மதிலை.
கொடுங்கணிஞ்சியையும் (1) விலங்கலையுமுடைய (2) மதில் (4) எனக் கூட்டுக. மதில (4) புதவு (5) என இயையும்.
நல்லெழில் நெடும்புதவு என்றது ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டுதலால் வலிநன்ருகியதும், சாதிலிங்கம் வழித்தலால் அழ கியதும் வென்றெழு கொடியொடு வேழஞ் சென்று புகும்படி உயர்ந்த மதில் வாயிலின் நெடுநிலையிலமைதலின் நெடியதுமாகிய கதவு என்ற வாறு. நக்கீரர்,
ஒருங்குடன் வளைஇ யோங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇத்
துணைமாண் கதவம் பொருத்தி யி2ணமாண்டு
ஐயவி யப்பிய நெய்யணி கெடுங்லை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயில்" 79-88. என நெடுநல்வாடையிற் கூறுதல் காண்க.
எழில்-அழகு புதவு-வாயில், "புதவக் கதவம் புடைத்தனன்" சிலப் 23; 43. ஈண்டு வாயிலிலமைந்த கதவங்களை மதில புதவக் கதவம் முருக் கிக் கொன்று + ஏனக்கொம்புபோலாகிய மருப்பினையுடைய களிறு என்க: முருக்கி-முறித்து சீவக 807 நச், ஏனம் என்பது ஈண்டு அதன் கொம்பை யுணர்த்தலின் ஆகுபெயர். இனி, நுனிமுரி மருப்பின் ஏனமாகிய களிறு என மாறிக்கூட்டி, மதிலிடத்தனவாகிய கதவுகளை முறித்து நுனிமுரிந்த மருப்புடைமையாற் பன்றிபோலத் தோன்றிய களிறு என்றுரைப்பினு மமையும்.
* களிறு, கதவெறியாச் சிவந்துராஅய்
நுதிமழுங்கிய வெண் கோட்டா
னுயி ருண்ணுங் கூற்றுப் போன்றன! புற 4; 10-3.
* ஏனம்-பன்றி. அதற்குக் கொம்புண்டென்பது, "வளை மருப் பேண ம்?? பெரும்பாண் 110 "நிலந்தின் மருப்பின். இருள்துணிக் தன்ன ஏனம்’ மலைபடு 245-7; “வையேந்து மருப்பின்.பன்றி! 'பிறையுறழ் மருப்பிற் கடுங்கட்பன்றி? அக 178; 1-2; 822: 10.

16 ஆம் பாட்டு 67
எனக் கதவை முறித்து நுனைதேய்ந்த கோட்டையுடைய களிறுகளுக்குக் கூற்றை உலமை கூறியிருத்தல் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. இதனுற் பகை வர் மதிலழித்தமை கூறினர்.
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம்பொத்தி மரங்கொல் மழகளிறு முழங் கும் பாசறை என்றது போர்வேட்கையான் மதஞ்சொரியப் பெற்று அத ணுற் கடுஞ்சினம் மூளப்பெற்று அச்சினத்திற்கேறபப் போர் பெருமையின் கட்டுத்தறியை முறிக்கின்ற இளைய களிறுகள் முழங்கும் பாசறை யென்ற
6 fsf ss)
“ം... ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை' அக 144:11-3.
* கார்மழை முழ கினும் வெளில்பிணி நீவி
நுதலணங் தெழுதருங் தொழினவில் யானை" பதிற் 84: 3-4. என வருவனவற்றலும் வினைநவின்ற யானைகளின் போர்வேட்கை இனி தறியப்படும் யானைகளுக்குப் போர்வேட்கையாற் கடாஅம் வார்தலும், அத ணுற கடுஞ்சினம் பொத்துதலும், "பிடிபுணர்ந்து இயலவென்றது; அவ் வினை நவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி அச்சினத்திற் கேற்பப் போர்பெருமையிற் பாகர் அதன் சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் அப்பிடியொடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரிய வென்றவாறு’ எனப் பழையவுரைகாரர் உரைத்தலானும் (பதிற் 82:4-6 உரை) அறியப்படும. மதத்தாற் சினம் மூளல், சினந்திகழ் கடாஅம்-சினம் விளங்குதற்குக் காரணமாகிய மதம் (குறிஞ்சி 164 நச்) என்பதனுலுமறிக. பொத்தி-மூண்டு கலி 145; 58 நச்; கலந்து பு.வெ.மா. 288 உரை. வார்ந்து, பொத்தி செயப்பாட்டு வினையெச்சங்கள் மரம் என்றது கட்டுத் தறியை, யானை அதனை அழித்தல், "கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று” (சீவக 2765) என்பதனுலுமறிக, மரங்கொல்-மரங்களை முறிக்கின்ற எனினு மாம். கடாஅம் வார்தலாற் s களிறுகள் கார்காலத்து மழையின் உரு மேறுபோலப் பிளிறுதலின் முழங்கும்' என்ருர், 'மாமலைபோல் யானை மத
முழக்கம்' (இனியவை 16) "கடுமதக் களிப்பினுற் காரென முழங்கலின்?
(சீவக 1831) எனப் பிருண்டும் வருவன காண்க.
இன்ன காலத்து வருவேன்' என்று தன் மனையாளுக்குச் சொல்லிப் பகைவரொடு பொருதற்குப் புறப்பட்ட சேரலாதன் வினைமுடித்து மீளாது குறித்த காலத்துக்குமேலே பாசறைக்கண் நீட்டித்தமையின் "பாசறை நீடினையாகலின்' என்ருர், 'வியனெடும் பாசறை நீடிய வயமான்ருேன்றல்” (ஐங் 500)என வருதல் காண்க. காண்கு என்பது செய்கென்னும் வாய் பாட்டு வினைமுற்று. இது வந்திசின்' என்னும் வினைகொண்டு முடிந்தது. 'அவற்றுள், செய்கென் கிளவி வினையொடு முடியினு, மவ்விய றிரியாதென் மஞர் புலவர்” (தொல். வினை சூ, 7) என்பது விதி.
S யா2ன முடிக்கிற்கு இடி குறிஞ்சி 162-5; பரி 8:17-8; அக 145; 7-10; 330; 10-11; புற 81: 11 பு: வெ. மா. 37:289 பெருங் (1) 54:40-1.

Page 49
68 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
10-20. நின் தேவியாகிய அசைநடை உள்ளலும் உரியள்; ஆன பின்பு பாயல் உய்யுமோ தோன்றல்! அகலப்பாயல் பாலும்கொளாலும் வல்லோய்! நின் சாயன் மார்பு அவளை நனியலைத்தன்று என்க.
ஆறிய கற்பினையும் அடங்கிய சாயலினையும் ஊடினும் இனிய கூறும் வாயினையும் அமர்த்த நோக்கினையும் சுடர்நுதலினையுமுடைய அசைநடை என்க. சேரலாதனின் பெருந்தேவி மிக்க துன்பத்தும் சீற்றம்கொள்ளாத அறக்கற்பினையுடையளாதலின் ஆறிய கற்பின்' என்ருர்,
* ஆறிய கற்பிற் றேறிய கல்லிசை
வண்டார் கூந்த லொண்டொடி" பதிற் 90; 49-50. எனப் பிறருங் கூறுதல் காண்க.
பெருந்தேவியிடத்து ஐம்பொறியானும் நுகரும் மென்மையெல்லாம் அடங்கிக்கிடததலின் "அடங்கிய சாயல்' என்ருர். அது "அமிர்துபொதி துவர் வாய் அமர்த்த நோக்கிற், சுடர்நுத லசைநடை" என வருமாற்ருனும றியப்படும். சாயல் என்ப்து ஐம்பொறியானும் நுகரும் மென்மையை உணர்த்துமென்பது, "சாயலென்னுஞ் சொல் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகளாலு நுகரும் மென்மையையுணர்த்தும் எனவும் (தொல், உரி 27 உரை), சாயன்மென்மையெனப் பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியாலும் நுகரு மென்மையெல்லாம் அடங்குதற்கு, 'மயி லன்ன சாயல்' (ஏலாதி 28) "சாயன் மார்பு” (கலி 65) என ஒளிக்கும் ஊற்றி ற்கும் வந்தன; பிறவுங் காண்க எனவும் (சீவக 8 உரை) வரும் நச்சினுர்க் கினியர் உரைப்பகுதிகளான் அறியலாம். அடங்கிய-தன்கண்ணே யடங் கிய, "அடங்கிய கற்பி னுய்நுதன் மடந்தை" (புற 249; 10) என்புழி அடங் கிய கற்பு-தன் கண்ணேயடங்கிய கற்பு என அதன் உரையாசிரியர் உரைத்தவாறு காண்க.
உயர்குடிப் பிறந்த கற்புடை மகளான பெருந்தேவி. பாசறை நீடல் முதலிய ஏதுக்களால் தன் தலைவனுடன் ஊடிய காலத்தும் இன்முகந் திரிந்து "பாசறை நீடி நந்நோய் அறியா வறணிலாளன்' தோள்வளை நெகிழ்த்த கொடியன் t என்பன போன்ற கடியனவற்றை மொழியாது தன் ஆறிய கற்பினுல் இனிய மொழிகளை இன்னகையுடன் மொழிதலின் "ஊடினும் இனிய கூறும் இன்னகை வாய்' என்ருர், -
“ -- ............ --- .. - Ge5GöTop Gheb (up 5 TL - Gör 5.་སྟོང་
வருவதோர் காலை இன்முகங் திரியாது கடவுட் கற்பி னவனெதிர் பேணி? குறுந் 252; 3-5, 'தகவுடை மங்கையர் சான்ருண்மை சான்றர்
இகழினுங் கேளவரை யேத்தி யிறைஞ்சுவார்? புரி 20: 88-9. எனச் சான்ருேர் கூறுதல் காண்க. ஊடினும் என்ற உம்மை எச்சவும்மை உயர்வுமாம். ' ' ' ', '':
'காய்ச்சின வேந்தன் பாசறை நீடி, நக்கோ யறியா வறணி லாளர், இந் கோய் க2ளகுவர் கொல்லென? அக 294; 12.4; “நெடிய திரண்ட தோள்வ8ள
கெகிழ்த்த, கொடிய னகிய குன்றுகெழு காடன்” குறுந் 252: 1-2.
* தலே வனைக் கொடியன் என்றல்; நற் 28:4; குறுந் 261—8;2552;2784; 807: ; 387: ; 163:12; 379; هي . . و لم يل N" ."" ، : . -

16 ஆம் பாட்டு : 69
அமிர்து என்றது எயிற்றில் ஊறிய நீரை. அதுதான் அமிழ்துபோலும் இனிய நீராதலின் அதனை அமிர்து' என்ருர், "கரும்பின், காலெறி கடி கைக் கண்ணயின் றன்ன, வாலெயி நூறிய வசையி ஹீநீர்" (குறுந் 267) "முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரை” 'ஊறுநீர் அமிழ்தேய்க்கு மெயிற்ருய்" (கலி 4:13, 20:11) எனச் சான்ருேர் கூறுதல் காண்க. துவர் -செம்மை நிறம், இயல்பாகவே சிவந்த வாயாதலின் செவ்வாய் என்னுது துவர்வாய்' என்ருர், துவர்ச்செவ்வாய்-இயல்பான சிவப்பாற் சிவந்தவாய்' என்னும் (கலி 55: 4நச்) உரையானும் துவர் என்பது இயல்பான சிவப்பைக் குறித்தல் அறியலாம். அமர்த்தல்-அமர்செய்தல்; மாறுபடுதலுமாம். 'கண் டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப், பேதைக் கமர்த்தன கண்' (குறள் 1034) என்பதன் விசேடவுரையில் அமர்த்தல்-மாறுபடுதல் எனப் பரிமேலழகர் உரைத்தவாறு காண்க. ۔۔۔۔۔۔
சுடர்நுதல்-ஒளியையுடைய நுதல், நுதலுக்கு ஒளியுண்மை, "தண்க திர் மண்டிலம் அவிரறச் சாஅய்ப், பகலழி தோற்றம் போலப் பையென, நுதலொளி கரப்பவும்" (அக 277; 1-3) என்புழிக் காண்க, இனிச் 3-Lř நுதல் என்பதனை உவமைத் தொகையாகக்கொண்டு, 'பிறைபோன்ற நுதல்
என்றுரைப்பினுமமையும். "கவின்பெறு சுடர்நுதற், கூரெயிற்று முகைவெண்
பற் கொடிபுரையு நுசுப்பினுய்" (கலி 58; 3-4)என்புழி, சுடர்நுதல்-பிறை
போன்ற நுதல்' என நச்சினுர்க்கினியர் உரைத்தவாறு காண்க: பாசறைக்
கண் நீடிய அரசன், பெருந்தேவியை நினைந்து அவள்பாற்கடிதின் எழ
வேண்டி அமிர்துபொதி துவர்வாய்" முதலாயினவற்றைக் கூறுவாராயினர்
s: ". . . . 11 ܠ ܠ ܘ ” ܗ ーリー。
கொடிபுரை நுசுப்பினையுடைய பெருந்தேவி இடையின் நுண்மையால் நுடங்கிய நடையினையுடையளாதலின் "அசைநடை' என்ருர், அசையியற்கு -நுடங்கிய இயல்பினையுடையாட்கு குறள் 1098 பரிமேல், அசைநடைஅசைத்த நடை கலி 128: 3 நச், அசைநடை என்பது ஈண்டு அன்மொழித் தொகையாய்ப் பெருந்தேவியை உணர்த்திற்று. ܢ • a
உள்ளலுமுரியள் என்றது யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்க வென்ற நின்னேவல் பூண்டு நின்னை உள்ளாதிருத்தலேயன்றி, நீ குறித்த நாளுக்குமேலே நீட்டித்தாயாகலின் நின்னை நினைத்து வருந்தலுமுரிய ளென்றவாறு, "காய்சின வேந்தன் பாசறை நீடி, நந்நோ யறியா வறணி லாளர்" (அக 294: 12-3) என்பதனுலும் பிரிந்த தலைவன் மீளாது நீட்டித் தலால் தலைவி வருந்தலறியலாம். ஈண்டு உள்ள ல்-நினைத்து வருந் தல். ‘அரும்படர்-பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோய் புற 145; 10 உரை. உள்ளலுமுரியள் என்புழி உம்மை இறந்ததுதழிஇய எச்சவும்மை, தன் தலைவன் பாசறை நீடலாற் பெருந்தேவிக்கு நினைவாலுளதாகிய நோய் படுக்கைக்கண் மிகுதலினுலும், அதனுல் மருந்து பிறிதில்லாப் பெருந் துயர் எய்துதலினுலும் பாயல் உய்யுமோ' என்ருர், பாயல்-படுக்கை, "பயினறுங் கதுப்பிற் பாயலுமுள்ளார்" குறுந் 254, ஈண்டுப் பாயலிற் படும் துன்பத்தை உய்யுமோ, ஓ எதிர்மறை தோன்றல், அண்மை விளி.

Page 50
  

Page 51
72 - பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை "அழிபட ரலைப்ப வகறலோ கொடிதே? கலி 192:24 மார்பு அலைத்தன்று: என்பது sஅவ்வலைவு தீருமாறு அவள்பாற் கடிது எழுக என்னும் குறிப் பிற்று. .
இதனுற் சொல்லியது அவ ன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
மேற்கோள். *器 ,
சாயல் என்னும் உரிச்சொல் மென்மைப் பொருளில் வருதற்குச் *சாயன் மார்பு என்பது மேற்கோள். (தொல். உரி 29 சேனு.)
பழையவுரை. همسر - (1) கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சி யென்றது மலையுள்ள விடங்களிலே அம்மலைதானே மதிலாகவும் மலையில்லாத இடங்களில் மதிலே அரணுகவும் இவ்வாறு மலையொடுமாருட எடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதிலென்றவாறு உறழவெனத்திரிக்க, கோடுபுரந்தெடுத்த' என்பது பாடமாயின் மதிலில்லாத இடங்களை மலை காவலாய்ப் புரக்கவெடுத்த வென்க. (2) நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கலென்றது நெடுநாட் பட அடைமதிற்பட்ட காலத்தே விளைத்துக் கோடற்கு வயலும் குளமும் உளவாகச் சமைத்து வைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்போன்ற அப்புக்கட்டுக்கள் தங்கும் மலைபோன்ற இடைமதிலென்றவாறு விலங்கல் போறலின், விலங்கலெனப்பட்டது. நாடுகண்டாலொப்பது அம்மதிலை யடைந்த விடமென்னின், அவ்விடவணுமைப்பற்றி அதன் உவமையை அம் மதில் மேலதாகக் கூறிற்றெனக்கொள்க. (3) துஞ்சுமரமென்றது மதில் வாயி லிற் றுரங்கும் கணையமரங்களை; இனிக் கழுக்கோலாக நாட்டிய மரமென்பாரு முளர். (4) ஐயவி யென்றது கதவிற்குக் காவலாகப் புறவாயிலே தூக்கப் படும் துலாமரத்தை; அப்புக்கட்டென்பாருமுளர் ஈண்டு மதிலென்றது உண் மதிலை. கொடுங்கணிஞ்சியையும் (1) விலங்கலையுமுடைய (2) மதில் எனக்கூட் டுக. இனி, இடையில் விலங்கலென்றதனை மாற்ருர் படையை விலங்குதலை யுடைய வென்ருக்கி, முன்னின்ற கொடுக்கணிஞ்சியென்ற தொன்றுமே மதி லதாக ஐயவி தூக்கிய மதிலென்றதனை ஆகுபெயரான் ஊர்களுப் பெயராக்கி நாடு கண்டன்ன ஊரென மாறி யுரைப்பாருமுளர் (13) உள்ள லுமுரிய ளென்றது யான் குறித்த நாளளவும் ஆற்றியிருக்கவென்ற நின்னேவல் பூண்டு நின்னை உள்ளாதிருத்தலேயன்றி நீ குறித்த நாளுக்குமேலே நீட் டித்தாயாகலின் நின்னை நினைத்து வருந்துதலுமுரியளென்றவாறு (14-5)தா வின்று திருமணிபொருத திகழ் விடு பசும்பொன்னென்றது வலியில்லையான படியாலே அழகிய மணிகளொடு பொருத ஒளிவிடுகின்ற பசும்பொன் னென்றவாறு ஈண்டுத் தாவென்றது வலி, பொன்னுக்கு வலியாவது உர னுடைமை. இன்றென்பதனை இன்ருகவெனத் திரித்து இன்ருகையாலெனக் கொள்க. என்றது, ஒளியையுடைய மணிகளொடு பொரவற்ரும்படி ஒட்டற்ற
g 'துணிதீர் கொளகைகங் காதலி யினி துற, பாசறை வருத்தம் வீடநீயும் ...கொய்சுவற் புரவி கடவுமதி' 'காய்சின லேந்தன் பாசறை நீடி, கந்நோ யறியா வறணி லாளர், இங்கிலை களைய வருகுவர் கொல்’ அக்124:1-13; 294: 12-4.

16 ஆம் பாட்டு 73
ஒளியையுடைய பசும்பொனென்றவாறு. (15-6) பூண் பசும் பொன்வயிர மொடு உறழ்ந்து சுடர் வரவெனக் கூட்டி, பூணுன பசும்பொன் தன்னிடை யழுத்தின வயிரங்களொடு மாறுபட்டு விளங்கவென வுரைக்க, ( யோரென்ற பன்மையாற் காதன்மகளிர் பலரெனக் கொள்க. (17-8) அக லப்பாயலென இருபெயரொட்டாக்கி, அத்தை அல்வழிச் சாரியை என்க. துயிலினிய பாயலெனவுரைக்க, அகலத்தை மகளிர்க்குப் பாயலெனச் சிறப் பித்தமையான் இதற்கு, துயிலின் பாயல் என்று பெயராயிற்று (19) பாலுங் கொளாலும் வல்லோயென்றது அவ்வகலப்பாயலை வேற்றுப்புலத்து வினை யில்வழி நின்மகளிர்க்கு நுகரக் கொடுத்தற்கு நின்னிடத்தினின்றும் பகுத் தலையும், வினையுள்வழி அம்மகளிர்பால்நின்றும் வாங்கிக் கோடலையும் வல் லோயென்றவாறு.
பாசறைக்கண் நீ (8) நீடினையாகலின் நின்னைக் காணவந்தேன் (9) நின் தேவியாகிய அசைநடை நின்னை நினைத்தலுமுரியள் (13); ஆனபின்பு அவள் பாயல் வருத்தத்திற்கு உய்யுமோ (14) உய்யாளன்றே; தோன்றல்; அகலப் (17) பாயல் (18) பாலும்கொளாலும் வல்லோய்; நின் (19) மார்பு மிக அவளை வருத்திற்றுக்காண்; (20) நீ அவன்பாற் கடிதெழுகவென வினை முடிபு செய்க. s
இதனுற் சொல்லியது, அவன் வென்றிச் சிறப்பும் குலமகளோடு
நிகழ்ந்த இன்பச்சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
ஒப்புமைப் பகுதி.
1 மதிலுக்கு மல்ே : “ வரைபோ லிஞ்சி ?? பதிற் 62; 10; 'வரையுறழ் நீண்மதில்?? கலி 92; 12; ! ஓங்கன் மதிலுள்? பு, வெ'மச. 90; "மதில்வடி வாகிய மலைப்புடை மருங்கே? பெருங் (3) 27; 46.
2. கணே துஞ்சு விலங்கல் : “அம்பு துஞ்சுங் கடியரணுல்" புற 20: 16.
4-8, “செற்றேர், கடியரண் டொ?லத்த கதவுகொன் மருப்பின் . ஒங்கெ ழில் யானை" பட்டினப் 228-31; "செற்ருேர், வெல்கொடி யரண முருக்கிய, கல்லா யானை 'நீண் மதிலரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து, வைக் நுதி மழுகிய தடங் கோட் டியானே? ஐங் 429: 2-4; 444; 2-3; "அயிறிணி நெடுங்கத வமைத்தடைத் தனிகொண்ட, வெயிலிடு களிறேபோல்? கலி 185: 3-4; "கடிமதிற் கதவம் பாய் தலின் தொடிபிளந்து, நுதிமுகம் மழுகிய மண்ணை வெண்கோட்டுச், சிறுகண் யானே ? 'பகைவர், மதில்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பிற், கந்துகால் ஒசிக் கும் யானே? அக 24:11-3; எயிறு படையாக வெயிற்கத விடாஅ . பெருங் கை யானே? 'நுதிமுக மழுங்க மண்டி யொன்னுர், கடி மதில் பாயு கின் களிறடங் கலவே’ ‘களிறே எழுஉத்தாங்கிய கதவுமலைத்தவர், குழுஉக்களிற்றுக் குறும் புடைத்தலிற், பரூஉப்பிணிய தொடி கழிந்தனவே புற 3: 9-11; 31: ?-8; 97; 8-10, *களிறுங் கதவிறப்பப் பாய்ந்த? பு, வெ. மர, 107.
7. மு 'கடாஅம் வார்ந்து, கடுஞ்சினம் பொத்தி’ பதிற் 82; 5,
7-8, "கடாஅம் வார்ந்து, நிலம்புடையூ வெழுதரும் வலம்படு குஞ்சரம்? பதிற். 'இலங்குதொடி 1-2; “கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக . சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு, மையல் வேழ மடங்கலின்? குறிஞ்சி 162-5; 'கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற் களிறு' நற் 103: 3-4
10

Page 52
74 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
8. மழகளிறு : பதிற் 12:12 அடிக்குறிப்பு. களிறு முழங்கல் : 'வெண்கோட் டியான முழங்கிசை" அக 347, 12; "முழங்கு மால் களிறு' சீவக 1857; "யாஜன முழங்கு மாநகர்? பெருங் (1) 57; 115,
களிறு முழங்கு பாசறை : “ ச.டாஅயா?ன முழங்கும் பாசறை யானே? பதிற் வந்தனென்? 9-10; 'கடாயாஜன ஒருபாற் களித்ததிரு, மாய்கழலான் கட்டுரகத்து" 2. Gonu. te ar 53.
8-9. வேந்தன் பாசறையில் தங்குதள் : "பகைவெம் மையிற் பாசறை மரீஇ' பதிற் 50; 23; “கல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப், பாசறை யல்லது நீயொல் லாயே" புற 31: 5-6; “தண்குவளைத் தூமலர்த் தாரான், பகை மெலியப் பாசறையுளான்? பு, வெ. மா. 56.
பாசறையில் நீடுதல் , ' காய்சின வேந்தன் பாசறை நீடி? அக 294; 12. 9. க சண்குவந்திசினே : பதிற் 41: 13; 54: 1; 64:15; 82:11; 90; 55; புற 17:33; 125: 4; 391 = 14
12. துவர் வாய்; பொருந 27; நற் 190; 9: குறுந் 300; ஐங் 185; கலி 55: 4: அக 27: 10; 29: 13; 39:23; 62: 2; 75: 10; 162: 13; 179; 11; 212: 5; 343: 18; 385: 16; சீவக 1074. " .
அமிர்து பொதி துவர் வாய் 'பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய், நீரினு மினிய வாகிக் கூரெயிற்று, அமிழ்த முறுஞ் செவ்வாய்? அக 335 23-5; “படு திரைப் பவளிவா யமுத மாந்தியும்" "வாளினுன் மிடைந்த கண்ணுள் வருமு2லத் தடத்துள் வைகித், தோளினுன் மிடைந்து புல்லித் தொண்டை வாயமுத மாந்தி? Gf sou as 196; 1694.
11-12 இன்னகைத் துவர் வசப் : 'இன்னகை, முருக்தெனத் திரண்ட முள் ளெயிற்றுத் துவர் வாய்? அக 179:10-11; 'இன்னகைத் துவர்வாய், வாசவ தத்தை" பெருங் (2) 2: 48-9.
12. அமர்த்த நோக்கு: "கடைசிவந்து, ஐய அமர்த்த வுண்கண்" அக 237:15-6 10-13 “சுடர்நுதன் மடகோக்கின், வாணகை யிலங்கெயிற், றமிழ்து பொதி துவர் வா யசைகடை விறலியர்' பதிற் 51: 19-21; "வாருறு வுணரைம் பால் வணங்கிறை நெடுமென்ருேட் பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானுேக் கிற். காரெதிர் தளிர்மேனிக் கவின் பெறு சுடர்நுதற், கூரெயிற்று முகைவெண் பற் கொடி புரை நுசுப்பினுய்? கலி 58:1-4; “இன்னகை, மூருந்தெனத் திரண்ட முள்ளெயிற்றுத் துவர்வாய்க், குவளை காண்மலர் புரையு முண்கணிம், மதியேர் வாணுதல்’ அக 179; 10-3
15. திருமணி பொருத : “ வயங்குமணி பொருத’ அக 167: 1. 14-2 தரவின்று பொருத பெசன் : "தாவி னன் பொன்’ அக 212:1; 'தன் ம8லப் பிறந்த தாவி னன் பொன்? புற 152: 28,
17. மு. ‘எழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்து’ பதிற் 14: 11.
1-7 மார்பில் பூண் : பதிற் 17:14; 81:14; 70; 16; மதுரைக் 715-6; குறிஞ்சி 121-2; பட்டினப் 297; ஐங் 353; புற 88; 4; களவழி 6. சீவக 695; சிலப் 13, 127. 20 சசயன் மார்பு : ,'தண்ணங் துறைவன் சாயன் மார்பே? நற் 327; 9: *ஊரன் மார்பே. இன்சா யற்றே? ஐங் 14; "சாயலின மார்பன்' 'இன்சாயன் மார்பன்' 'தண் டாத் தீஞ்சாயற் பரத்தை வியன் மார்ப? கலி 42: 30; 85; 5; 93; 1; 'சாயன் மார்பில்? 'சார ணுடன் சாயன் மார்பே? அக 210: 10; 328; 15
ஆடவர் மார்பு மகளிரை வருத்தல் : உறுகதி ரிளவெயி லுண்ணு நாட, னின்மார் பணங்கிய செல்ல லருகோ, யார்க்குகொங் துரைக்கோ யானே? நற் 396, 7-9; 'ஆய்வய லூரன், விழைதரு மார்ப முறுநோய்" ஐத்-ஐம் 25.

17 ஆம் பாட்டு 75
7. வலம்படு வியன் பனே. 17. புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புரு ராயினும் பகைவர் பணிந்துதிறை பகரக் கொள்ளுகை யாதலிற் றுளங்குபிசி ருடைய மாக்கட னிக்கிக் 5 கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறுஉந் தொடித்தோ ளியவர் அரணங் காணுது மாதிரக் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞலம் வருகவிங் நிழலென 10 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மார்ப பாடினி வேந்தே.
இதுவுமது, பெயர்-வலம்படு வியன் பணை (5). ப-ரை. 1-3. புரைவது நினைப்பின்-நினக்குப் பொறுமையி ல்ை ஒப்பதாகிய பொருளே நினைத்தால், பகைவர் பெரிய தப்புநரா யினும்-பகைவேந்தர் பெரியனவாகிய பிழைகளே ச் செய் தினராயினும், பணிந்து திறை பகர கொள்ளுகையாதலின்-பணிந்து நினக்குத் திறையை அளிக்க அத்திறைகளே ஏற்றுக்கொள்ளுவாயாதலின், புரைவது இன்று-அங்ஙனம் ஒப்பாம் பொருள் ఇషుడ్ని
1-14: துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி-அசைகின்ற நீர் பிசிராக உடையும்படி பெரியகடலைக் கடந்து, கடம்பு அறுத்து -பகைவரது காவல்மரமாகிய கடக்பின அறுத்து, இயற்றிய-அக் கடம்பினுற் செய்யப்பட்ட, வலம்படு வியல் பண-வென்றி தன் பாலேபட கின்ற அகலத்தையுடைய முரசை, ஆடுநர் பெயர்ந்து வந்து-ரோடுதலையுடையராய்ப் பெயர்க் து வந்து, அரும் பலி தூஉய் - அரிய பலியைத் தூவி, கடிப்பு கண் உறுா உம்-கடிப்பை முர சின் கண்ணில் உறுவிக்கும், தொடி தோள் இயவர்-தொடியணிந்த தோளினையுடைய இயவர், அரணம் காணுது மாதிரம் துழை இயபாதுகாப்பான இடத்தைக் காணுது திசையெல்லாம் சென்று தேடிய, நன தலை பைஞ்ஞலம் இங்கிழல் வருக என- அகன்ற இடத்தி லுள்ள மக்கட்டொகுதி இக்குடை கிழற்கண்ணே வருக என்று சொல்லி, ஞாயிறு புகன்ற-ஞாயிறு விரும்பிய, தீது தீர் சிறப்பின்

Page 53
76 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
--குற்றக் தீர்ந்த சிறப்பினையுடைய, அமிழ்து திகழ் கருவிய கண மழை கலை இ-நீர் விளங்குகின்ற மின்னல் முதலிய தொகுதியை யுடைய கூட்டமாகிய மேக்ங்களைப் பெய்வித்து, கடு கால் கொட்கும் -கடியகாற்றுச் சுழன்று அடிக்கும், கன் பெரும் பரப்பின்-ான்ரு கிய பெரிய பரப்பினையுடைய, விசும்புதோய் வெண்குடை நுவலும். ஆகாயத்தை முட்டிய வெண்கொற்றக் குடையின் அருட் சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாகிய, பசும் பூண் மார்ப-பசியபொன்னுற் செய்த பூணயணிந்த மார்பனே, பாடினி வேந்து-பாடினிக்கு அரசே,
முடிபு: வியன்பணே யைக் கடிப்பைக் கண்ணுறுTஉம் இவர் அர ணங் காணுது மாதிரந் துழை இய பைஞ்ஞலம் இந்நிழற் கண்ணே வருக எனச்சொல்லி வெண்குடையின் அருட்சிறப்பைச் சொல்லுதற் குக் காரணமாய் நின்ற பசும்பூண் மார்ப, பாடினி வேந்தே, நினக்குப் புரைவது நினைப்பிற் பகைவர் பேரிய தப்புநராயினும் பணிந்து திறை பகரக் கொள்ளுநையாகலின் புரைவதோவின்று என்க.
(ஆ-ரை) 1-3. புரைவது-ஒப்பது. புரை-ஒப்பு. “கொடிபுரை நுசுப் பினுள்" கலி; கடவுள் 9. 'பெரிய தப்புந ராயினும் பகைவர், பணிந்துதிறை பகரக் கொள்ளுநை' எனப் பொறையுடைமை கூறுதலாற் பொறையுடை மையால் ஒப்பதாகிய பொருளே நினைக்கப்பட்டது என்பது தெளிவாகும் , * புரையுநர் என்னுது புரைவது என்றதனுல், "அகழ்வாரைத் தாங்கு நிலம் போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்த றலை” (குறள் 151) எனச் சான் ருேராற் பொறையுடைமைக்கு எடுத்துரைக்கப்பட்ட நிலமும் ஒப்பாகாது என்றபடி, ‘நினைப்பின்' என்ருர் ஒப்பாம் பொருள் அரிதாகலின், 'புரைவ தோவின்று’ என்றதனுல் நீ பிறர்க்குப் பொறையுடைமையால் உவமமாகப் பொருந்துவதல்லது நினக்குப் பிறருவமமாகா வொருபெரு வேந்து என்ப தனைக் குறிப்பித்தார். இன்றே ஏ, தேற்றம். புரைவது இன்ருவதற்கு மிக்க பொறையுடைமையே ஏதுவென்பார், பெரிய தப்புநராயினும் பகைவர் திறை பகரக் கொள்ளுநை' எனப் பொறையுடைமையை எடுத்துக்காட்டினுர்,
பெரிய தப்பு, இகழ்ந்துரைத்தல் திறையிடாதொழிதல் போல்வன. 'சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை, யருஞ்சமந் ததையத்தாக்கி முரசமொ, டொருங்ககப் படேஎ னுயின்" (புற 72; 9-9) எனப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் உாைத்ததும், “இமை யத் தாபதர் எமக்கீங் குணர்த்திய, வமையா வாழ்க்கை யரைசர் வாய்மொழி, நம்பா லொழிகுவ தாயி னுங்கஃ, தெம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரு உம்' (சிலப் 26: 9-12) எனச் சேரன்செங்குட்டுவன் உரைத்ததும், 'பதி பாழாக வேறுபுலம் படர்ந்து" (பதிற் 71:18) எனத் திறையிடாக் குறும்பர் நாட்டிலே அந்நாட்டுப்பதி பாழாகப் பெருஞ் சேரலிரும்பொறை சென்றமை கூறப்பட்டிருத்தலும் ஈண்டறியற்பாலன. உம்மை, எதிர்மறை, திறை,
*" புரையுங் ரில்லாப் புலமையோய்? முருகு 280.

17 ஆம் பாட்டு 77
பகைவராற் கொடுக்கப்படும் களிறு கலம் முதலாயின. "ஒளிறுவாள் வய வேந்தர், களிருெடு கலந்தந்து, தொன்றுமொழிந்து தொழில் கேட்ப" (பதிற் 90: 6-8) எனப்பிருண்டும் வருதல் காண்க. 'பகர--கொடுக்க 2) 116; 13 உரை. இனித் திறைபகர வென்பதற்குத் திறையைக் கொள்வா" யாக எனச் சொல்லித்தர' எனினுமாம். “ஞாலத்தரசர்-திறைகொள் இறை யோ வெனவந்து இடம்பெறுதலின்றி, முறையோ வெனநின்ருர் மொய்த்து"
என முத்தொள்ளாயிரத்து வருதல் காண்க. கொள்ளுநை என்றது பகை
வர் பெரிய பிழைகளைச் செய்தனர் என்று எண்ணி அவர் அளிக்கும் திறை களை மருது பிழைகளைப்பொறுத்து ஏற்றுக்கொள்வாய் என்றவாறு. பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தல்வேண்டுமென்பது "போற்ருர்ப் பொறுத்தலும். உடையோய்” (புற 2:7-8) எனப் பிறர் கூறுமாற்ருனு மறிக கொண்டனை என்னுது கொள்ளுநை' என்ருர், பிழைபொறுத்தல் எக்காலத்தும் உண்மையின்.
4-14. துளங்கு என்றது துளங்குகின்ற அலையை, அலை பிசிராக உடைதல் "வரைமருள் புணரி வான்பிசி ருடைய" (பதிற் 11:1) என்பத ஞலுமறிக. உடைய நீக்கி என இயையும். மாக்கடல்-பெரிய கடல் சீவக 911 நச். நீரானிறைந்ததோர் பெரிய கடல்" திருக்கோவை 147 பேர். கடல் நடுவிலுள்ள துருத்திக்கண் நின்ற கடம்பைக் கடல்கடந்து சென்று தடிந்த மையின் 'மாக்கடனீக்கிக் கடம்பறுத்து' என்ருர், நீக்கி-கடந்து இனி மாக் கடனீக்கி என்பதற்குத் தன்னுள் வாழ்வார்க்கு அரணுகிய பெரிய கடல் வலியை அழித்து' என்ருவது, பெரிய கடலின்கண் பகைவர் வலியை அழித்து' என்ருவது உரைப்பினுமமையும். கடம்பு துருத்திக்கணுள்ள பகை வரின் காவல் மரம். கடம்பறுத்தியற்றிய பணை என்க. -
வலம்படு வியன்பணை யென்றது, போர்செய்து வருந்தாமற் பகைவர் வெருவி ஓட முழங்கி அரசனுக்கு வென்றி தன் பாலே படநின்ற முரசென்ற வாறு. இச்சிறப்பான் இச்செய்யுளுக்கு வலம்படுவியன் பணை என்று பெய ராயிற்று.
முரசு வென்றிக்கு ஏதுவாதல், 'வலனிரங்கு முரசு-வெற்றியுண்டாக ஒலிக்கு முரசு’ (பரி 7; 6 பரிமேல்) என்ற உரையானும் அறியப்படும். படு தல்-உண்டாதல். வியல்-அகலம், ஆடுநர் என்றது வினையெச்ச முற்று வினைத்திரி சொல். அரும்பலி-அரியபலி, என்றது குருதிப்பலியை. அரும் தி ாேறு தசை முதலிய அரியபலி, அரியபலி கிடைக்காதபலி என்பர் தஞ்சைவாணன்கோவை உரையாசிரியர். (தஞ்சை 334 உரை) பலிதூவியது முரசிற் கடவுள் உறைதல் பற்றி.
6ே அருக்திறன் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோ னேந்திய அரும்பெறற் பிண்டம்" பதிற் 30; 34-5 என்புழிக் ‘கடவுளென்றது முரசுறை கடவுளை' எனப் பழையவுரைகாரர் உரைத்தமை காண்க கடிப்பு-முரசு அடிக்குங் குறுத்தடி, "பறையறை கடிப் பின்’ நற் 46. கண் என்றது முரசின், குறுந்தடியால் அடிக்கும் பக்கத்தை. கண்போறலின் கண் எனப்பட்டது. "பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச,

Page 54
78 பதிற்றுப் பத்து ஆராய்ச்சியுரை
மாக்க ணகலறை யதிர்வன முழங்க" (பட்டினப் 336-7) என வருதல் காண்க. உறுTஉம்-கடிப்பைக் கண்ணில் உறுவிக்கும்; என்ற து அடிக்கும் என்றபடி, கண்ணுறுநூஉம் என்பது ஈண்டுப் பிறவினைமேல் நின்றது "சிறு சொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை. ஒருங்ககப் படேஎணுயின்’ (புற 72:7-9) என்புழிப்போல, இயவர் பலிதூவி முரசு முழங்குதல்,
* உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச" பதிற் 19: 8-8 என்புழிக் காண்க.
தொடி-வீரர் புயத்தில் அணியும் வீரவளை, "தொடியணிதோ ளாட்வர் தும்பை புனைய’ வெ. மா. 241. வெருவரு செங்களத்து அஞ்சாது நின்று முரசு முழக்கும் மறப்பண்புடைமையால் இயவரும் வீரர்போன்று தோளிற் ருெடியணிவாராயினர் "செங்கள விருப்பொடு. இயவர். தொடித்தோ ளோச்ச’ (பதிற் 19:5-8) என வருதல் காண்க. ஈண்டு இயவர் என்றது முரசடிப்போரை. இப்பெயர் தோற்கருவி இசைக்கு மாக்களுக்குப் பெயரா தல் 'இயவர் தோற்கருவி இசைக்கு மாக்கள்” என்னும் திவாகரத்துட் காண்க. வியன்பணையைக் (5) கடிப்பைக் கண்ணுறுTஉம் இயவர் (7) என்க.
அரணங் காணுது மாதிரந் துழைஇய, நனந்தலைப் பைஞ்ஞலம் வரு கவிந் நிழல்' என்பது இயவர் கூற்று. அரணங் காணுது-தம் நாட்டை ஆள்பவர் கலக்கமுறுத்த அலைபெற்றுத் தம்மைப் பாதுகாத்தற்கேற்ற பாது காப்பைக் காணுது பல திசைகளிலும் ஆராய்ந்து தேடுதலின் 'மாதிரந் துழைஇய' என்ருர் துழைஇய பைஞ்ஞலம் என்க. பைஞ்ஞலம் - மக்கட் டொகுதி. 'பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞலம்’ புற 62; 10. நனந்த லைப் பைஞ்ஞலம் என்ருர், அகன்ற இடத்தையுடைய நாட்டிலிருந்தும் பைஞ் Dலம் அரண்காணுமை தோன்ற மக்கள் யாவராயினும் தன்கீழ்வரின் பகை நொதுமல் நட்பு என்னும் வேறுபாடு கருதாது ஒரு பெற்றித்தாகப் பாது காக்கும் அருட்சிறப்புடைமையின் பைஞ்ஞலம் வருக இந்நிழல்' என்ருர், இந்நிழல் என்றது சேரலாதன் வெண்குடை நிழலை. அதனை நிழல் என் றது தன்கீழ் வாழ்வாரைப் பகை முதலிய வெம்மைகளினின்றும் காத்து இன்பம் நல்குதல் பற்றி. -
* கடனறி மன்னர் குடைநிழற் போலப்
பெருந்தண் ணென்ற மரநிழல்’ நற் 136; 4-5. * கண்பொர விளங்குகின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்ருே வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வள்வ? புற 35:19-21. 'மண் குளிரச் செய்யு மறவேல் கெடுந்தகை
தண்குடை" சிலப் 19: 21-2. எனப் பிருண்டும் வருவன காண்க. நாடு ஆட்சிபெற்ற அரசர் செய்யும் வருத்தத்திற்கு அஞ்சி வந்தடைந்தோரை நெஞ்சு வருந்தாதபடி காக்கும் சேரலாதனின் அருட்சிறப்பைக் குடைமேலேற்றி இந்நிழல்' என்ருர், வருக
இந்நிழலென (9) நுவலும் (13) என முடிக்க,
(
 

17 ஆம் பாட்டு 79
ஞாயிறு புகன்றதும் தீது தீர் சிறப்பினையுடையதும் கருவிய கண மழை தலைஇக் கடுங்கால் கொட்பதும் நன்பெரும் பரப்பினையுடையதுமாகிய விசும் பினைத் தோய்ந்ந வெண்குடை என்க. ஞாயிற்றின் வெயிலாலும் கருவி வானத்தின் மிகுபெயலாலும், காற்றின் கடிய வேகத்தாலும் கெடாது நின்று காக்கும் குடை என்பது தோன்ற, ஞாயிறு புகலுதல் முதலாயின வற்றை விசும்பினுக்கு அடையாக்கியுரைப்பாராயினர். குடையையுயர்த்துக் கூறுதல் "நடைமிகுத் தேந்திய குடைநிழன் மரபு' (தொல் 36) என்னும் துறையின்பாற்படும். புகன்ற-விரும்பிய, ஞாயிறு விசும்பில் இயங்குதல் பற்றி ஞாயிறு புகன்ற' என்ருர், "விண்ணுார்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலம்" (நெடுநல் 160-1) என்ருர் பிறரும் S மைம்மீன் புகைதல். தூமந் தோன்றுதல் முதலாகிய குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைமையால் தீது தீர் சிறப்பின் விசும்பு என்ருர்,
அமிழ்து திகழ் மழை, கருவிய மழை. கணமழை எனத் தனித்தனி கூட்டுக. கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழையாதலின் 'அமிழ்து திகழ் மழை' என்ருர், அமிழ்து என்றது நீரை, தான் உணவாகி உலகத்தை நிலைநிறுவுதற்கு ஏதுவாதல்பற்றி அதனை 'அமிழ்து என்றர். "வானின் றுலகம் வழங்கி வருதலாற், ருனமிழ்த மென்றுணரற் பாற்று" என்ருர் திருவள்ளுவரும், (குறள் 11) கருவியமழை-மின்னும் இடியு முதலாகிய தொகுதியையுடைய மழை.
* பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள்
இன்னிசை முரசி னிரங்கி மன்ன
ரெயிலூர் பஃருேல் போலச்
சென்மழை தவழுமவர் கன்மலை காட்டே" தற் 197; 9-12,
** இருள் தூங்கி முழங்கி மின்னிப் புலரா விரவும்
பொழியா மழையும்' திருக்கோவை 259.
எனப் பிருண்டும் வருவன காண்க. கருவி-தொகுதி. மழை-மேகம், "மாரிக் குன்றம் மழை சுமந் தன்ன' பெரும்பாண் 49 தலைஇ-துளிகளைச் சொரி வித்து எனலுமாம். ஏவல் வினையெச்சம் தலைஇக் கால்கொட்கும் விசும்பு என்க. இனித் தலையவெனத் திரித்துக் கொட்கும் என்னும் வினையொடு முடிப்பி னும் அமையும், தீது தீர் சிறப்பினையுடைமையால் 'நல்' என்றும், தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே யகன்று விரிதற்குக் காரணமா கிய மிக்க பரப்புடைமையால் 'பெரும் பரப்பின்' என்றும் விசும்பினுக்கு அடைகொடுத்துக் கூறுவாராயினர். வெயிலழல் கவியாது வியலக வரைப் பின் உயிரழல் கவிச்கும் உயர்ச்சித்தாகிய வெண்குடையாதலின் விசும்பு தோய் வெண்குடை என்ருர், வெண்குடை நுவலுமென்றது வெண்குடை யின் அருட்சிறப்பைச் சொல்லுமென்றவாறு. 'நனந்தலைப் பைஞ்ஞலம் வருக விந்நிழல்' என்றதனுல் நனந்தலையுலகத்துள்ளார் யாவராயினும் தன் நிழற்கீழ்வரின் பாதுகாக்கும் தன்மையதாகலின், தொடர்பு பற்ருதே வருத்தமுற்ருர்மேற் செல்வதாய அருளுடைமை பெறப்பட்டது. நுவலும்(18)
=سسسسسسسسسسسسيس
s * மைம்மீன் புகையினுக் தூமங் தோன்றினும் புற 117; 1

Page 55
80 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
மார்ப (14) என முடிக்க. இயவர், நனந்தலைப் பைஞ்ஞலம் வருக விந்நிழல்' என்று வெண்குடையின் அருட்சிறப்பை நுவலுதற்குத் தன்னையடைந் தோரைப் பாதுகாக்கும் மார்பின் வலி ஏதுவாகலின் மார்ப என்பது ஏதுப் பெயர். "கொண்பெருங் கானத்துக் கிழவன், றண்டா ரகல நோக்கின மலர்ந்தே" (புற 155; 7-8) என்புழி ‘மண்டை அகல நோக்கி மலர்ந்த வென்ற கருத்து, கொடுக்கும் பொருள் மார்பின் வலியான் உளதாமாக லின் அகலநோக்கினவென்றதாகக் கொள்க' என்ற உரைப்பகுதி ஈண்ட றியற்பாலது.
இதனுற்சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன் வென் றிச்சிறப்புக் கூறியவாருயிற்று
பழையவுரை,
(5) வலம்படு வியன்பணை யென்றது போர்செய்து வருந்தாமற் பகை வர் வெருவியோடமுழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபட நின்ற முரச மென்றவாறு. இச்சிறப்பான் இதற்கு 'வலம்படுவியன் பணை' என்று பெய ராயிற்று. (6) ஆடுநரென்றது வினையெச்ச முற்றுவினைத்திரிசொல். (11) அமி ழ்து திகழ் மழையென முடிக்க. அமிழ்தென்றது நீர், தலைஇயென்பதனைத் தலையவெனத் திரிக்க. (13) வெண்குடை நுவலுமென்றது வெண்குடையின் அருட்சிறப்பைச் செல்லுமென்றவாறு (13-4) நுவலும்மார்பவென முடிக்க. இஃது ஏதுப்பெயர்.
வியன் பணையைக் (5) கடிப்பைக் கண்ணுறுமியவர், (7) 'அரணங்காணுது மாதிரந்துழைஇய (8) பைஞ்ஞலம் இந்நிழற் கண்ணே வருக எனச்சொல்லி (9) வெண்குடையின் அருட்சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாய் நின்ற (13) பசும்பூண்மார்ப, பாடினிவேந்தே (14) நினக்குப் புரைவது நினைப்பிற் (1) பகைவர் பெரிய தப்புநராயினும் (2) பணிந்து திறைபகரக் கொள்ளுநை யாதலின் (3) புரைவதோவின்று (1) என மாறிக் கூட்டி வினைமுடிபு செய்க.
இதனுற் சொல்லியது, பொறையுடைமையொடு படுத்து அவன் வென் றிச்சிறப்புக் கூறியவாருயிற்று.
ஒப்புமைப் பகுதி.
2-3. பகைவர் திறை பகர்தல்: "பணிந்து திறை தருபங்ண் பகைவராயின்' 'பணிந்து திறை தருபகின் பகைவ ராயின்’ பதிற் 59; 12; 62; 12; 'பல்வேறு வகை யிற் பணிக்த மன்னர்’ பெரும பாண் 428, "பகைவர் திறைதந்த யானைகள்? ம& படு 5/2 நச். பகைவரும், தந்திறை கொடுத்துத் தமராயினரே? “கன்கலங் களிற்றெடு கண்ணு ரேந்தி, வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து? அக 44: 1-2; 124; 1-2; ' வந்து தந்த பணி திறையால்’ புற: 22:26; 'கோடி, நிதியந் தின ற யளந்தார் கேராரும் பு: வெ. மா 45; 'திறை சுமந்து நிற்குக் தெவ்வர் போல' Gada 25: 36.
4. மரக் கடல் பதிற்: 11: 3 அடிக்
5 கடம்பறுத்த து: பதிற் 11:12-3 அடிக்,
கடம்ப றுத் தியற்றிய பஜன: பதிற் 11: 12-4 அடிக்
வலம்படு பணை: 'வலம்படு முரசம்' 'வலம்படு முரசின் 3: பதிற் 56; 4; 84; 13 *வலம்படு முரசிற் சேரலாதன்' அக 127:

18 ஆம் பாட்டு 81
வியன் பணே: பதிற் 31; 30; 39: 5. - 5-6. முரசுக்குப் பலி: "விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட, மயிர் புதை மாக்கண்? பதிற் 29: 11-2; 'குருதி வேட்கை யுருகெழு முரசம்? “பலிபெறு முர சம்? 'குருதிப் பலிய முரசு’ புற 50: 5; 362; 3; 369:5; 'பலிபெறு முர சி ன்? பு. வெ. மச 158; 'மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி? "உயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன்(முழக்கத்து, மயிர்க்கண் முரசமொடு? சிலப் 5: 88; 26: 195-6 °கூற்றுக் கண் விழிக்குங் குருதி வேட்கை, முரசு?? கணி1; 30-1; 'கோற்ருெழில் வேந்தன் கொற்ற முரசம், பெரும்பனை க் கொட்டிலுள் அரும் பலி யோச்சி' பெருங் (2)2: 29-30. 'பரவிய பலிபெறு முரசம்’ குழா, சுயம்வர 210. 7. இயவர்: பதிற் 27: 5 மதுரைக் 304; புற 336; 6. 8. மாதிரந் துழைஇய: அக 189:11, 229; 9 புற 174; 21; 370; 4, 9. பைஞ்ஞலம்: 'உண்ணுப் பைஞ்ஞலம்’ பதிற் 31: 8; "வேறுபடு பைஞ்ஞ லம்’ புற 62; 10
10. தீறு தீச்சிறப்பு: *திருநிலை பெற்ற தீதுதிர் சிறப்பின்? நெடுதல் 89; 'திது தீர் சிறப்பிற் றிருமகளாயினும்? பெருங் (3) 5; 71; “தீது தீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி? சிலப் 11:30,
11. கருவிய மழை: பதிற் 31; 15; 76; 10; பொருந 236; பெரும்பாண் 24 நற் 213: 8; 238: 5; 329; 10-11; 365; 6; குறுந் 42; 94; 197; 205; ஐங் 476; 488; அக 4: 6; 139; 18-9; 158; 1; 304: 1; புற 159; 19; 204* 13 சீவக 725; 2752 மணி17; 92,
மழைதலே இ. பதிற் 84; 23; ஜங் 371:2; 12. கடுங்க சல்: “கடுங்காலொடு கரைசேர* மதுரைக் 78. 13. விசும் புதோய் வெண்குடை ' வான் ருேய் வெண்குடை? பதிற் 52:31; 'விண்டோய் வெண்குடை? "விசும்பிவர் வெண்குடை? அக 135; 11; 231; 12; “விசும் புற வோங்கிய வெண்குடை? “விண்பொரு நெடுங்குடை? “வான்ருேய் நீள்குடை புற 75:11, 175; 6: 266 7. 'வானுயர வோங்கு குடை? சீவக 2490; 'விண்டோய் குடை? திருக்கோவை 383
14 பசும் பூண் நற் 227: 5; 349; 9: அக 162; 21; 253: 5; 266:12, 303:4; 838: 5; புற 69:15; 76; 9; 153: 3.
பாடினிவேந்து : பதிற் 14: 17 அடிக்,
8. கூந்தல் விறலியர் 18. உண்மின் கள்ளே யடுமின் சோறே
எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலக் தெளிர்ப்ப இருள்வண ரோலிவரும் புரியவி ழைம்பால் 5 ஏந்துகோட் டல்குன் முகிழ்ககை மடவரற்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே பெற்ற துதவுமின் றப்பின்று பின்னும் மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட

Page 56
82 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
10 தண்ணிய லெழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும் சேரலாதன் பொய்யல னசையே.
துறை-இயன்மொழி வாழ்த்து, வண்ணம்-ஒழுகு வண்ணம். தூக்கு-செந்தூக்கு. பெயர்-கூந்தல் விறலியர். (6) ப-ரை. 1-7. கள் உண்மின்-நீயிர் கள் விரி னே உண்மின்; சோறு அடுமின்-அதுவேயன்றி உண்டற்குச் சோற்றை அடுமின்; திற்றி எறிக-அதுவேயன்றித் தின்றற்கு இறைச்சியை அறுமின்ச் புழுக்கு ஏற்றுமின்-அதுவேயன்றித் தி ன் ற நிற் கு ப் புழுக்கப்படு மவற்றை அடுப்பிலே ஏற்றுமின் வரு5ர்க்கு வரையாது-வரு வார்க்கு வரையாதே கடிதின் உதவுதற்பொருட்டு, பொலம் கலம் தெளிர்ப்ப-பொன்னுற் செய்யப்பட்ட அணிகலங்கள் ஒளிப்ப, இருள் வணர், ஒலி வரும் புரி அவிழ் ஐம்பால்-இருண்ட கடை குழன்ற தழைத்த நெறிப்புப் பரந்த கூந்தலினேயும், ஏந்து கோடு அல்குல்உயர்ந்த வளைவினையுடைய அல்குலினையும், முகிழ் நகை-தோன்று கின்ற முறுவலினையும், மட வரல்-மடப்பம் வருதலினையுமுடைய, கூந்தல் விறலியர்-வரிசை பெறுதற்குரிய கூந்தல் விறலியரும், அடுப்பு வழங்குக-அடுப்புத் தொழிலிலே வழங்குக; பெற்றது உத வுமின்-இன்னும் வருநர்க்குச் சோறிடுதலேயன்றி அச் சேரன் பால் காம் பொருளாகப்பெற்றது கொடுமின்; பின்னும் தப்பு இன்றுஇவ்வாறு எல்லாம் கொடுத்தாலும் பின்னும் காரியத்தில் தப்பில்லை. 8-12 மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட-அணுக்களே யுடைய இங்கிலவுலகத்தைப் பாதுகாத்தலை ஏற்றுக்கொண்ட, தண் இயல் எழிலி-தண்ணிய இயல்பையுடைய மேகம், தலையாது மாறி -பெய்யாது ஒழிந்து, யாண்டு பல துளக்கி-பலயாண்டுகளாக நிலை கலங்கச் செய்து, மன் உயிர் அழிய-கிலைபெற்ற உயிர்கள் அழி யும் படி, மாரி பொய்க்குவதாயினும்-மழை பெய்தலிற் பொய்த்தா லும், சேரலாதன் நசை பொய்யலன்-சோலாதன் விரும்பிய பரிசிற் பெர்ருள்களைத் தருதலிற் பொய்த்தல் செய்யான்.
நீயிர் கள்ளினையுண்மின்; அதுவேயன்றி உண்டற்குச் * الموا () சோற்றை யடுமின்; அதுவேயன்றித் தின்றற்குத் திற்றியை யறுமின்; அதுவேயன்றித் தின்றற்குப் புழுக்கப்படுமவற்றை அடுப்பிலே ஏற்று மின் வருநர்க்கு வரையரதே கடிதின் உதவுதற்பொருட்டுக் கூந்தல் விறலியர் அடுப்புத் தொழிலிலே வழங்கு க. இன்னும் வருநர்க்குச் சோறிடுதலேயன்றி அவன் பால் நாம் பொருளாகப் பெற்றது கொடு
كړ
 

18 ஆம் பாட்டு 83
மின்; இவ்வாறு எல்லாம் கொடுத்தாலும் பின்னும் காசியத்திற் றப் பில்ல; இதற்குயாது காரணமெனின் மன்னுயிரழிய மாரி பொய்த்தாலும் சேரலாதன் நசை பொய்யலன் என்க.
(ஆ-ரை) 1-7 ‘உண்மின் கள்ளே யடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே" என்பது சேரலாதன்பாற் பரிசில்பெற்ற தலைமைப் பாணன் தன் இற்கண் அடுப்புத்தொழிற்குரியாரை நோக்கிக் கூறியது. வழங்குக அடுப்பே' என்றது வரிசை மகளிராகிய கூந்தல் விறலியரை நோக்கிக் கூறியது. உண்மின் கள்ளே என முதற்கட் கூறியது அடுப்
- புத் தொழிற்குரியார்க்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் உண்டாதற்பொருட்டு.
அடுமின் சோறே எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே" என ஏவியது அடுப் புத் தொழிற்குரியா ரையாதலின் உண் மின் கள்ளே' என ஏவியதும அவரையே என்பது தெளிவாகும். * கள்ளும் உணவெனப் படுதலின் உண்மின் கள்ளே' எனப் பொது வினையாற் கூறினர். 'வெப்புடைய மட்டுண்டு" "நாட்கள்ளுண்டு’ (புற 24: 5; 123; 1) எனப் பிறரும் கூறுதல் காண்க. எறிதல்-அரிவாளினுல் அறுத்தல், "எஃகுபோழ்ந் தறுத்த வானி ணக் கொழுங்குறை' பதிற் 12:16. திற்றி-தசை. "நாகா வீழ்த்துத் திற்றி தின்ற” அக 249, 13. ஏற்றுமின் புழுக்கு என்றது வருநர்க்குச் சோற் றுடன் உதவுதற்பொருட்டுத் திற்றியையேயன்றிப் புழுக்கப்படுமவற்றையுஞ் சமைப்பீராக என்றவாறு. புழுக்கு-புழுக்கப்படுவனவாகிய அவரை துவரை முதலியன. புழுக்கல்-அவரை துவரை முதலியன' என்ருர் சிலப்பதிகார அரும் பதவுரைகாரரும். (சிலப் 5; 68 உரை) உண்மின் அடுமின் ஏற்றுமின் என்ற பன்மையால் அடுப்புத் தொழிற்குரியார் பலர் என்பது அறியப்படும்.
பொருளின்மையால் உணவின்றி வருந்தும் பாணன் சேரலாதன்பாற் பெற்ற பெருவளமுடையணுதலின் தன்பால் வருநர்க்கு வழங்குதற் பொருட்டு, அடுமின் சோறே எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கேஎன ஏவுவா னுயினுன், பாணன் சேரலாதன்பாற் பரிசில் பெற்றமை பெற்ற துதவுமின் .சேரலாதன் பொய்யலன் நசையே” என வருதலான் அறியப்படும். வருநர் என்றது விருந்தினரை, வருநர்க்கு-விருந்தினர்க்கு புற 10: 8 உரை. வரு நர்க்கு வரையாது (3) வழங்குக அடுப்பு (6) என முடித்து, வரையாது என் பத%ன வரையாமல் எனத் திரித்து வரையாதொழியும்படி யெனக் கொள்க. ஈண்டு வரைதல், காலத்தை அளவுபடுத்திக் கூறுதல், தெளிர்த்தல்ஒலித்தல், தெளிர்ப்ப (3) வழங்குக (6) என முடிக்க. "செறிதொடி தெளிர்ப்ப விசி (நற் 20: 5)” எல்வளை தெளிர்ப்ப நின்போல் யானும் ஆடி" (தொல் களவு சூத் 23 நச் மேற்) என வருவன காண்க.
ஐம்பாலினையும் அல்குலினையும் நகையினையும் மடவரவினையுமுடைய கூந்தல் விறலியர் என்க. கருமை முதலிய நல்லிலக்கண மமைந்த கூந்த லென்பார் இருள்வண ரொலிவரு புரியவிழ் ஐம்பால்' என்ருர், "கண் *"மட்ட்ப்புகTபதிந்0ே:26; 'அரியலம் புகவின்’ குறுந் 258:5; கள்ளாகிய உண விஜனயுடைய இழிந்த குடி மதுரைக் 137 கச்

Page 57
84 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
னிருண்டு நெறிமல்கிக் கடை குழன்ற கருங்குழல்கள்" என்ருர் சிந்தாமரிை யிலும். (சீவக 164) இருள் ஐம்பால் என்ருர் கருமை மிக்க கூந்தலாதலின், 'வீங்கிருள், பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதை' (சீவக 14:57) என் ருர் பிறரும், வணர்-கடை குழன்ற புரி-நெறிப்பு. சீவக 2688 நச். இனி, வணர் என்பதற்கு வளைவு எனப் பொருளுரைத்துப் புரியவிழ் ஐம்பால் என்பதற்குச் சுருள் விரிகின்ற ஐம்பால் என்றுரைப்பினும் அமையும். ஜம்பால் -குழல் அளகம் கொண்டை பணிச்சை துஞ்சை யென்ற ஐந்து பகுதியை யுடைய கூந்தல், ஏந்துகோட்டல்குல் என்பதற்குஏந்திய பக்கத்தினையுடைய அல்குல் எனினுமாம். முகிழ் நகை என்றது தோன்றுகின்ற நகை, முகிழ்த்தல்-தோன்றுதல், ‘தெ ய்யில் சூழ் இ ள முலை முகிழ் செய" கலி 125; 8-9, நகை-முறுவல், மடம் என்பது ஒன்றினை அறிந்தும் அறி யாததுபோல் இருக்கும் தன்மை, கொழுத்தக்கொண்டு கொண்டது விடாமை என்பர் நக்கீரரும் இறை சூத் 2 உரை) நச்சினுக்கினியரும் (சீவக 359 உரை) அடியார்க்கு நல்லாரும். (சிலப் 16:86 உரை)வரிசை மகளிர் ஆடல் பாடற்கேற்ற அழகுடையராதல் தோன்ற அவர் கூந்தன் முதலியவற்றை எடுத்துக் கூறினர்.
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பென்றது வந்தார்க்குச் சோறு கடிதின் உதவுதற்பொருட்டு அடுப்புத்தொழிற்குரியரல்லாத வரிசை மகளி ரும் அடுப்புத் தொழிலிலே வழங்குகவென்றவாறு. இச் சிறப்பானே இச் செய்யுளுக்குக் கூந்தல்விறலியர் என்று பெயராயிற்று.
ஐம்பால் (4) எனக் கூந்தல் முற் கூறப்பட்டமையால் கூந்தல் விறலி யர் என்றதை ஒரு பெயராக வுரைக்க, இனி, ஐம்பாற் (4) கூந்தல் (6) எனக் கூட்டி ஐந்து பகுதியையுடைய கூந்தல் என்றுரைப்பினு மமையும்,
பாணன் சேரலாதன்பாற் பெரும் பொருளைப் பரிசிலாகப் பெற்றணு தலின் சோற்றை அட்டும் திற்றியை எறிந்தும் புழுக்கை ஏற்றியும் வரு நர்க்குச் சோறிடுதலேயன்றி அவன்பால் நாம் பொருளாகப் பெற்றதும் கொடுமின் என்ருன். பரிசிலர் தாம்பெற்ற பொருளைப் பிறர்க்கு ஈதல்,
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
யோம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை?? புற 47; 4-6, என்பதனுலுமறிக. பிறர்கரு வழங்கத்தக்க பெரும் பொருளைப் பாணர் (pg5 லாயினர்க்கு அரசர் வழங்கினர் என்பது 'வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி . யாமவ ணின்று வருதும்" எனப் பெரும்பானுற்றுப்படையில் (26-8) வருதலானுமறிக. முன்னே தந்தனன் என்னுது பின்னும் பரி சிலர் விரும்பிய பொருளைச் சேரலாதன் தப்பாது வழங்குதலின் பின்னும் தப்பின்று' என்ருன்.
*முன்னே தந்தனெ னெனுது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யல ஞகி யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன்? புற 171:3-5
என்ருர் பிறரும். பின்னும் தப்பின்று என்ருன் முன்னும் தப்பின்மை யான்,

18 ஆம் பாட்டு 85
8-12, மேகம் இவ்வுலகைப் புரக்குமாறு தோன்ற, "மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட எழிலி என்ருர், 'உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வழங்கெழு கமஞ்சூல்" பதிற் 81:1-2 * மாரியு முண்டீண் டுலகு புரப்பதுவே" புற 107 *வானின் றுலகம் வழங்கி வருதலான்? குறள் 11 - எனப் பிற சான்றேரும் கூறுதல் காண்க. மண்-அணு, ஞாலம் என்றது ஞாலத்துயிர்களை; ஆகுபெயர். புரவெதிர் கொண்ட என்றது தான் உண வாய் நின்றும், நல்ல உணவுகளை உளவாக்கியும் நீர் வேட்கையையும் பசி யையும் நீக்கி உயிர்களைப் பாதுகாத்தலை ஏற்றுக்கொண்ட என்றவாறு. புரவு-புரத்தல், பாதுகாத்தல். எதிர்கொள்ளல்-ஏற்றுக்கொள்ளல்" "எஞ் சொல் எதிர் கொண்டு’ (பு. வெ. மா 220) என்புழிப்போல. புர வெதிர் கொண்டவென இறந்த காலத்தாற் கூறினர், மேல் தலையாது மாறி எனப் பெய்தலின்மை கூறுதலின். எழில்-மேகம், கார்கோண் முகந்த கமஞ்சூ லெழிலி பாதல் தோன்றத் தண்ணிய லெழிலி யென்ருர், இனிக் குழவி யைப் பார்த்துறுTஉந் தாய்போல் உலகத்தை மழைசுரந்து ஒம்பும் தண் ணளியுடைமைபற்றித் தண்ணியலெழிலி என்ருர் எனினுமாம். தலையாது -பெய்யாது. தலைதல்-பெய்தல். "மாரி தலையு மவன் மல்லல் வெற்பே" மலைபடு 233. மாறி-தவிர்ந்து எனினு மாம். புரவெதிர் கொண்ட மேகம், பெய்யாது தவிர்தலால் விளவஃகிப் பசிநீடுதலால் உலகத்துயிர்கள் கலக்க மெய்துதலின் 'துளக்கி’ என்ருர்,
'விண்ணின்று பொய்ப்பின் விரி நீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி” குறள் 13. என்ருர் திருவள்ளுவரும். எழிலி பலயாண்டுகளாகப் பெய்யாதொழிதலின் 'யாண்டு பல துளக்கி" என்ருர், நிலபேறுடைய உயிர்களாயினும் மேலும் மாரி பொய்த்தலால் இறந்துபடுமாதலின் 'மன்னுயிரழிப மாரி பொய்க்குவ தாயினும்' என்ருர், மழை இன்மையால் உயிர்கள் அழிதல், *"மன்னுயிர் மடிந்த மழைமா றமையத்து" (அக 31: 4) ' கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்.எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை" (புற 103; 1-3) "மாரிவறங் கூரின் மன்னுயிரில்லை" (மணி 7:10) 'மழை வறந்துழி அத
ணுல் வாழ்வார்போல இறந்துபடுதலே நமக்குள வென்பதாம்" (குறள் 1192
பரிமேல்) எனவருவனவற்ருலுமறிக. மாரி-மழை. பொய்த்தல்-பெய்யுங் காலத்துப் பெய்யாதொழிதல். 'காலத்தினன் மழை மாறினும்? திருக் கோவை 27. பொய்க்குவதாயினும் என்ற உம்மை சேரலாதனின் செது கோற் சிறப்பால் அவன் நாட்டில் மழை பொய்யாமை தோன்ற நின்றது. செங்கோன்மையால் மழை பொய்த்தலின்மை,
*வானம் பொழுதொடு சுரப்ப
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்?? பதிற் 89:1-9. *கோ ஒல் செம்மையிற் சான்ருேர் பல்கிப்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே" புற 117; 6-7 என வருவனவற்ருலு மறிக, எழிலி பொய்த்தலின்றேவெனின் அருகி வரும்

Page 58
86 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
வற்கட காலத்தன்றிப் பொய்த்தலின்று என்க. "எ பூழி லி பொய்க்குவதா யினும் சேரலாதன் பொய்யலன்’ எனக் கொடையில் மாரியினும் சேரலா தனை உயர்த்திக் கூறியவாறு. “பாரி யொருவனு மல்லன், மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே" (புற 107) எனப் பாரியை மாரியோடொப்பித்துக் கபிலர் கூறியிருத்தலும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. சேரலாதன் பரிசிலர் விரும்பிய பொருள்களைத் தப்பாது அளித்தலின், "சேரலாதன் பொய்யலன் நசையே என்ருர்,
'வள்ளியை யென்றலிற் காண் குவங் திசினே
உள்ளியது முடித்தி" பதிற் 54:1-2, "வரைமருண் முகவைக்கு வந்தனென் பெரும' புற 370: 21. என வருவனவற்ருற் பரிசிலர் விரும்பிய பொருளைப் பெறுதற்கு அரசர்பாற் செல்லுதலும், இரவலர்க் குள்ளிய நசைபிழைப் பறியாக், கழருெடி யதிகன் அக 162:17-8) "வைகலுஞ் செலினும் பொய்யல னுகி, யாம்வேண்டி யாங் கெம் வருங்கல நிறைப்போன்” (புற 171:4-5) என வருவனவற்ருல் அர சர் பரிசிலர் விரும்பிய பொருளைப் பொய்யாது அளித்தலும்அறியப்படும். இத ணுற் பின்னும் தப்பின்மைக்குக் காரணம் கூறினன்.
இதனுற் சொல்லியது அவன் கொடைச்சிறப்புக் கூறியவாருயிற்று.
பழையவுரை (2) திற்றி-இறைச்சி. வருநர்க்கு வரையாது (3) வழங்குக அடுப்பு (6) என முடிக்க; வரையாமல் எனத் திரித்து வரையாதொழியும்படியெனக் கொள்க. பொலங்கலந் தெளிர்ப்ப (3) என்பதனையும் வழங்குக (6) என்பத னுேடு முடிக்க. 6. கூந்தல்விறலியர் வழங்குக அடுப்பென்றது வந்தார்க்குச் சோறு கடிதின் உதவுதற்பொருட்டு அடுப்புத்தொழிற்குரியரல்லாத வரிசை மகளிரும் அடுப்புத்தொழிலிலே வழங்குக வென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு, கூந்தல் விறலியர் என்று பெயராயிற்று. ஐம்பாற் (4)கூந்தல்(6)என மாறிக் கூட்டுக. இனி, மாருது கூந்தல் விறலியரென்றதை ஒரு பெயராக உரைப்பினும் அமையும்
நீயிர் கள்ளினையுண்மின்; அதுவேயன்றி உண்டற்குச் சோற்றையடு மின்; அதுவேயன்றித் (1) தின்றற்குத் திற்றியை யறுமின்; அதுவேயன் றித் தின்றற்குப் புழுக்கப்படுமவற்றை அடுப்பிலே யேற்றுமின் (2); வரு நர்க்கு வரையாதே கடிதின் உதவுதற்பொருட்டுக் (3) கூந்தல் விறலியர் அடுப்பிலே வழங்குக (6); இன்னும் வருநர்க்குச் சோறிடுதலே யன்றி அவன்பால் நாம் பொருளாகப் பெற்றது கொடுமின்: இவ்வாறு எல்லாங் கொடுத்தாலும் பின்னுக்குக் காரியத்திற் றப்பில்லை (7): இதற்கு யாது காரணமெனின், மன்னுயிரழிய (8) மாரிபொய்த்தாலும் (11) சேரலாதன் நசைபொய்யலன் (12) அதுகாரணமென வினைமுடிபு செய்க.
இதனுற் சொல்லியது அவன் கொடைச் சிறப்புக் கூறியவாருயிற்று.
ஒப்புமைப் பகுதி,
2. திற்றி: 'அழித்தாக்ை கொழுந்திற்றி மதுரைக் 211; 'விழவயர்க் தன்ன கொழும்பல் திற்றி' அக 113:16,

19 ஆம் பாட்டு 37 3. வருநர்க்கு வரையாது: "வருநர்க்கு வரையா? 'வருநர்க்கு வரையாது’ புற 10:8; 177: 17,
பொலங்கலந் தெளிர்ப்ப; "ஒண்பொ ன விரிழை தெளிர்ப்ப? ம துரைக் 661; “பொலக் தொடி தெளிர்ப்ப? " இலங்குவ8ள தெளிர்ப்ப? ? தெரியிழை தெளிர்ப்ப? ஐங் 24; 197; 235; "சேயிழை தெளிர்ப்ப? செறிதொடி தெளிர்ப்ப? “னல்வளை தெளிர்ப்ப' 'இலங்குவ8ள தெளிர்ப்ப? அக 51: 12; 106; 8; 140: 6, 261; 5:
4. 'ஒலிவகுங் கூந்தல்' 'ஒலிவருங் தாழிருங் கூந்தல்" நற் 6: 10; 295; 2: 'வெறிகமழ் வன ரைம்பால்? கலி 57: 1; 11வனரொலி யைம்பாலார்” இன்னு 15; *வணரொலி யைம்பாலாய்" கர்நாற் 11.
5. ஏந்து கோட்டல்குல்: "பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்குல்" நெடுநல் 245; 'ஏந்துகோட், டம்பூக் தொட2ல யணித்தழை யல்குல்? புற 341: 1-2; *ஏங் தெழி லல்குலாய்" கார் காற் 13,
5-6 மடவரல் விறலியர்: “மடவரல் வள்ளி? 'முருகு 102; மேடவரன் மகளி ரொடு' பெரும்பாண் 387; "மடவரன் மகளிர்" நெடுநல் 39;
6. கூந் தன் விறலியர்: 'கூந்தன் மகளிர்? நெடுங்ஸ் 53; நற் 145; 3; 'விரையொலி கூந்தனும் விறலியர்? புற 109:16; 'கூந்தன் மகளிர்" சீவக 23:55,
4-6. "சுடர்நுதன் மடநோக்கின், வாணகை யிலங்கெயிற், றமிழ்துபொதி துவர்வா யசைகடை விறலியர்?' 'வீங்கிறைத் தடைஇய வமைமருள் பனைத் தோள், ஏங்தெழின் மழைக்கண் வ?னந்துவர லிளமுலை ப், பூந்து கி லல்குற் றேம் பாய் கூந்தல், மின்னிழை விறலியர்?? பதிற் 51: 19-21; 54: 3-6; "பாதிரி கமழு மோதி யொண்ணுத, லின்னகை விறலி" 'ஏந்துகோட் டல்குன், மடவர லுன்கண் வாணுதல் விறலி? புற 70; 14-5; 89; 1-2.
8. மன்னுயிர்: புதிற் 15: 35 அடி க். 9 மண்ணுடைஞால : பதிற் 15: 35 அடிக் புர வெதிர்தல்: பதிற் Rரி: 10; நற் 237; 8; புற 54:5; 75; 10; 199; 5: 9-10. 'மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும். மாமழை" பதிற் 24: 27-7; "வானத், துளிநோக்கி வாழுமுலகம்? நான்மணி 28
10, தண்ணியலெழிலி: "தண்ணியலெழிலி தாழ்ந்த பொழுதே? அக 175:18, எழிலி தலையாது மாறி: "பயங்கெழு மாமழை பெய்யாது மாறி? புற 266:1 8-10. 'மன்னுயி ரழிய யாண்டுபல மாறித், தண்ணிய லெழிலி தலையா தா யினும்?? பதிற் 20:24-5.
11. 'கருவி வானம் பொய்யா தாயினும் 'கற்365; 6.
வளனறு பைதிரம்.
19. கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப ஒண்பொறிக் கழற்கான் மாற வயவர் திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்பச்
5 செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச வம்புகளை வறியாச் சுற்றமோ டம்புதேரிந்

Page 59
88 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
10 தவ்வினை மேவலை யாகலின்
எல்லு நனியிருந் தெல்லிப் பெற்ற அரிதுபேறு பாயற் சிறுமகி ழானும் கனவினு ஞறையும் பெருஞ்சால் போடுங்கிய நாணுமலி யாக்கை வாணுத வரிவைக்
15 கியார்கோ லளியை
இனக்தோ டகல வூருட னெழுந்து நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ வாழ்த லீயா வளனறு பைதிரம் அன்ன வாயின பழனங் தோறும் 20 அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப அரிகர் கொய்வாண் மடங்க வறைநர் தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த இன்றே வன்றே தொன்றேர் காலை 25 நல்லம னழிய தாமெனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க மான மாட்சிய மாண்டன பலவே.
துறை-பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு. வண்ணம்-ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும்,
தூக்கு-செந்தூக்கு, பெயர்-வளனறு பைதிரம். (18)
ப-ரை: 1-10, கொள்ளை வல்சி-கொள்ளைப் பொருளை உண வுடைய, கவர் கால் கூளியர்-செலவை விரும்பின க்ாலையுடைய மறவர், கல்லுடை 5ெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப-கற்களே யுடைய நீண்டவழியை அகழ்ந்து வழியில் அருமையை நீக்க, ஒள் பொறி கழல் கால்-தாங்கள் செய்த அரிய போர்த் தொழில்களைப் பொறித்தலையுடைய ஒள்ளிய கழல் அணிந்த காலினையுடைய, மாரு வயவர்-வீரத்தின் மாறுபடாத வயவர், திண்பிணி எஃகம் புலி உறை கழிப்ப-திண்ணிய பிணிப்பையுடைய எஃகினைப் புலித்தோ லாற் செய்த உறை கழித் துப் போர்க்குரியவாம்படி பண்ண, செங்கள விருப்பொரு-குருதியாற் சிவக்கும் களத்தே செல்லும் விருப்பத் தோடு, கூலம் முற்றிய உருவம் செந்தினே-பலிக்குரிய பண்டமாக முற்றிய அழகிய சிவக் த தினை யை, குருதியொடு அா உய்-குருதி யுடன் கலந்து தூவி, மண் உறு முரசம் கண்பெயர்த்து-மார்ச்சனே
 

19 ஆம் பாட்டு 89
பொருந்திய வீர முரசத்தை இடத்தினின் அறும் பெயர்த்து, இயவர் -முரசு முழக்கும் வீரர், கடிப்புடை வலத்தர் தொடி தோள் ஒச்ச -குறுந்தடியை வலப்பக்கத்திலுடையராய்த் தொ டி ய னி ங் த தோளால் அடிக்க, வம்பு களவு அறியா சுற்றமொடு-கைச்சரடு களே தலையறியாத படைவீரரொடு, அம்பு தெரிந்து - அம்புகளை ஆராய்ந்து, அவ்வினை மேவலை-அப்போர்த் தொழிலை விரும்புதலை யுடையையா யிருந்தாய் '
11-5. ஆகலின்-நீ வினையை மேவுகின்றபடியால், எல்லு கனி இருந்து-பகற்பொழுதின் கண்ணே நின்பிரிவை மிகவும் ஆற்றி யிருந்து, எல்லி பெற்ற-இரவின் கண்ணே பெற்ற, அரிது பெறு பாயல் சிறு மகிழானும்-அரிதிற் பெறுகின்ற உறக்கத்தின் கண் உண்டாகும் சிறு மகிழ்ச்சிக் காலத்தும், கனவினுள் உறையும்கனவினுள் தங்கி வருந்தும், பெரு சால்பு ஒடுங்கிய-பெரிய அமை தித்தன்மை தங்கப்பெற்ற, நாணு மலி யாக்கை-நாணம் மிகுந்த யாக் கையையுடைய, வாள் நுதல் அரிவைக்கு அளியை-ஒளிபொருங் திய நெற்றியையுடைய அரிவைக்கு அருளுடையையாகிய,ே யார் கொல்-என்ன உறவு உடையை. * ,
16-27. பல-பலவாகிய, நீ வாழ்தல் ஈயா-நீ பண்டுபோலே குடியேறுகவென்று வாழ்வு கொடாத, வளன் அறு பைதிரம்-வளப் பம் அற்ற பகைவர் நாடுகள், ஊர் உடன் எழுந்து இனம் தோடு அகல-ஊரிலுள்ளார் ஒருங்கு எழுந்து சுற்றமும் பசுமுதலிய தொகு தியும் விட்டு நீங்க, நாஞ்சில் கடிந்து நிலம் கண் வாட-உழுவர் ரின் மையின் கலப்பைகள் வெறுக்கப்பட்டு நிலங்கள் ஒளப்பமின் றிப் பொலிவழிய, அன்னவாயினவை-அவ்வியல்பினையுடையவா யினவை, பழனம் தோறும்-நீர்நிலைச் செறுக்கள் தோறும், அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து-நெருப்புப்போன்ற தாமரை ஆம் பலொடு மலர, கெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப-நெல்லினை யுடைய வயலில் நெய்தல்கள் மலர, அரிகர் கொய் வாள் மடங்கநெல்லை அரிவாரது கொய்யும் அரிவாட்கள் நெற்ருளின் பருமை யாலே தங்கள் வாய்மடிய, அறைகர் தீ பிழி எந்திரம்-கரும்பை வெட்டுவாரது இனிய சாற்றைப் பிழியும எந்திரம், பத்தல் வருந்த -பலகாலுஞ் சாருேடிப் பத்தல் வருக்த, தொன்று ஓர் காலை நல்ல மன்-பண்டு ஒரு காலத்து நல்ல, இன்ருே அன்று-இன்றைக்கு அன்ன தன்மையுடையவன்று அளியதாம் என சொல்லி-இரங் கத்தக்கனதாம் என்று சொல்லி, காணுநர் கை புடைத்து இரங்க
12 -

Page 60
90 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
-காண்போர் கைகொட்டி இரங்க, மாட்சிய மாணு மாண்டனமாட்சியவாய் முன்பு கிடந்தன மாட்சிமைப்படாதன வாய் மாண்டன.
முடிபு: நீ அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ அவ்வினையை மேவு கின்றபடியால், எல்லு நனியிருந்து எல்லிப் பெற்ற சிறு மகிழ்ச்சிக் காலத்தும் கனவினுள் உறையும் நின்னரிவைக்கு நீ யார் கொல்; நீ அவள் பால் வாரரமைக்குக் காரணம் a) Tsi P நீ அழிக்க * ஏ ன்று அழிந்த நாடுகள் அழிந்து அற்ருல் வருவல் எனின், ஆம் அழிக்க அழிநது நீ பின் வாழ்தலியாத பைதிரம் காணுநர் கைபுடைத்திரங்க மாட்சிய மாணு மாண்டன; அதனுல் அது குறையன்று; நின் அன்பின்மையே குறை; இனி நீ அவள் பாற் கடிது எழுக என்க.
(ஆ-ரை) 1-10, கூளியர் சுரணறுப்ப, வயவர் புலியுறை கழிப்ப, இயவர் தோளோச்ச நீ சுற்றமொடு அவ்வினை மேவலையாயிருந்தாய் என்க.
கொள்ளை வல்சிக் கூளியர் எனவும், கவர்காற் கூளியர் எனவும் கூட் டுக, கொள்ளை வல்சிக் கூளியர் என்றது பகைப்புலத்துக் கொள்ளையா கப் பெற்ற பொருளை உணவாகவுடைய கூளியர் என்றவாறு.
'சூர்கவை முருகன் சுற்றத் தன்னகின்
கூர்கல் லம் பிற் கொடுவிற் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்’ புற 23:4-7 என வருதல் காண்க கொள்ளைப் பொருளை உணவாகக் கோடல், 'கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக" (பெரும்பாண் 454) என்பதனுலுமறிக. வல்சி-உணவு. "வெள்ளெட் சாந்தொடு புளிப் பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாக" புற 246:7-8. கொள்ளை வல்சிக் கூளியர் பகைப் புலத்தைக் கொள்ளை கொள்ளும் விருப்பால் விரைந்து சேறல் பற்றிக் கவர்காற் கூளியர்' என்ருர், இனித் தானை செல்லுதற்கு வழியமைக்க வேண்டி விரைந்து சேறல் பற்றிக் கவர்காற் கூளியர்' என்ருர் எனினு மாம், கூளியரின் விரைந்து செல்லும் விருப்பை அவர் காலின்மேலேற்றிக் கவர்கால்" என்ருர், கவர்-விருப்பு. "கவர்விருப்பாகும்” என்பது தொல் காப்பியம் (உரி 66) கவர்கால்-பகுத்து விரையும் கால் எனினுமாம் கூளி யர்-மறவர். 'குறவரும் மறவரும் கூளியராகும்" என்பது பிங் கலந்தை, அரசன் பணித்தவாறு ஏவல் செய்யும் கூளிப்படை மறவராதலின் கூளி யர் என்ருர், முருகப் பெருமானின் ஏவலாளரை 'வேறுபல் லுருவிற் குறும் பல் கூளியர்" (முருகு 282) என நக்கீரனுர் கூறியிருத்தலும், கூளியர்சேவித்து நிற்போர்' என நச்சினுர்க்கினியர் உரை எழுதியிருத்தலும் ஈண்டைக்கேற்ப அறிக.
சேரலாதன் பகைபுலத்துக்குச் செல்லும் நெடுவழி மலைகளையுடைய
அருவழியாயிருத்தலின், படையிலுள்ள தேர் முதலியன இனிது சேறற் பொருட்டு மலையிடத்துக் கல்லைப்போழ்ந்து வழியில் அருமையை நீக்கு
ஏன்று-ஏற்றுக்கொண்டு அக 168; 6 உரை "எதிர் நின்று முருகு 55 நச்.
 

19 ஆம் பாட்டு 91
தலைக் "கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப" என்ருர், "அடுக்கன் மீமிசை. இடிச்சுர நிவப்பின் இயவு" (மலைபடு 19-20) எனப் பிருண் டும் வருதல் காண்க. மோரியர் பகைவரொடு பொரக்கருதித் தென்னுடு போந்த காலை அவர் தேருருள் செல்லுமாறு குறுக்காக நின்ற மலையைப் போழ்ந்து வழி செய்தமை, "மோரியர், பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை" (அக 69) "மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக விடைகழி யறை” (புற 175) என வருவனவற்ருல் அறியப்படும். கல்-மலை. சுரன்-வழியிலருமை. அறுப்ப-நீக்க,
கழல் என்பது வீரத்துக்கும் கொடைக்கும் அடையாளமாக ஆடவர்க
ளால் அணியப்படும் காலணி. 'விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய,
கழலே யாடவர் கான்மிசை யணிவடம்” எனத் திவாகரத்தும், 'ஆடவர் கொடை வீரத்தா லணிவது கழலென்ருமே” எனச் சூடாமணியினும் வரு வன காண்க. ஈண்டுக் கழல் என்றது வீரக் கழலை. "வீரவார் கழல்" (வில்லி பதின்மூன்ரும் 20) என வருதல் காண்க, ஒண்பொறிக் கழற்கால் என்ப தற்குப் பொன்னுற் செய்யப்பட்டமையால் ஒள்ளிய விளக்கத்தையுடைய கழலை அணிந்தகால் என்றுரைப்பினும் அமையும். பொறி-விளக்கம். சீவக 44 உரை, மாருவயவர்-போரிலே பிறக்கடியிடாமையும் தம்மொடு வீர மொத்தாரோடன்றிப் பிறரொடு படையெடாமையும் அடி பிறக்கிட்டோனை யும் படையிழந்தோனையும் கொல்லாமையும் முதலாகிய வீரத்தின் மாறு படாத இயல்புகளையுடைய வீரர்.
*அடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு மதுரைக் 37-8,
'அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும் பை துளுடாது மலைந்த மாட்சி
யன்னுேர்?? பதிற் 42:4-7.
எனப் பிருண்டும் வருவன காணக, 8.
ஈண்டு எஃகம் என்பது வேல் வாள் என்னும் ஆயுதங்களின் பொதுப் பெயராக நின்றது. "வைநுதி மழுகிய புலவுவா யெஃகம்” (பெரும்பாண் 119) என்புழி வேலையும், 'எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து' (முல்லை 68) என்புழி வாளையும் எஃகம் என்பது உணர்த்திவரல் அவற்றி னுரைகளானும் அறியப்படும். வேலுக்குத் திண்பிணி குழைச்சினுள் இறு கச் செறிந்திருத்தலாகவும், வாளுக்குத் திண்பிணி பிடியுடன் இறுகச் செறிந் திருத்தலாகவும் கொள்க. 'காழ் மண்டெஃகம்" (மதுரைக் 739) எனவும் "திண்பிடி பொள்வாள்" (முல்லை 46) எனவும் வருவன காண்க. போரிற் கலங்கித் தந்நிலையிற் றிரியாத ஆயுதமென்பார், 'திண்பிணியெஃகம்" என்ருர்,
"வேலே, குறும்படைந்த வரண் கடந்தவர்
நறுங்கள்ளி ஞடுாைகத்தலிற் சுரைதழிஇய விருங்காழொடு மடை கலங்கி ங்லைகலங் கினவே? புற 97; 4-7

Page 61
92 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
என்பதனுற் போரில் வேல்நிலை கலங்குதலறிக. வேல் வாள் என்னும் போர்க் கருவிகளைப் புலித்தோலாற் செய்த உறையில் இட்டு வைத்தமையால், எஃகம் புலியுறை கழிப்ப என்ருர், உறை கழிப்ப வென்றது எஃகினை உறை கழித்துப் போர்க்குரியவாம்படி பண்ண என்றவாறு. எஃகம் புலியுறை கழிப்ப என்ருராயினும் ஏனைக் கருவிகளையும் போர்க்குரியவாம்படி சித்தஞ செய்தல் கொள்க.
செங்கள விருப்பொடு செந்தினையைக் குருதியொடு தூஉய் முரசங் கண்பெயர்த்து இயவர் தோளோச்ச வென்க, செங்களம்-போரிற்படும் மாவி னதும் மாக்களினதும் உடல்களினின்றும் பெருகுங் குருதியாற் சிவக்குங் களம், "குருதிச் செங்களம்” (அக 268; 3) என்ருர் பிறரும். "வியன்கள்த்து -a- POP அந்தி மாலை விசும்புகண் டன்ன, செஞ்சுடர் கொண்ட குருதி மன் றத்து’ (பதிற் 35: 4-8) என்பதும் ஈண்டைக்கேற்ப அறிக. செங்கள விருப் பொடு ஒச்ச என முடிக்க, கூலமுற்றிய வென்பதற்கு பலிக்குரிய மற்றைப் பண்டங்கள் குறைவறக் கூடின வெனினுமாம். கூலம்-பண்டங்கள். செந் தினையைக் குருதியொடு தூவியது முரசுறை கடவுளுக்குப் பலியாக வென்க. கடவுளைச் செந்தினையும் குருதியுங்கொண்டு பூசிக்கும் வழக்கம்,
'குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகி ப நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர்’ முருகு 42-4 *உருவச் செந்தினை குருதியொடு தூஉய்' அக 22-10, என வருவனவற்ருலு மறியப்படும், குருதிவேட்கை முரசினைப் பூசித்தற் குக் குருதி சிறந்தமை பற்றிக் குருதியொடு என ஒடுக்கொடுத் தோதினுர், குருதியென்றது யாட்டின் குருதியை. அது,
'மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய துாவெள் ளரிசி சில்பலி செய்து முருகு 232 4. 'மறியருக்துங் திண்பிணி முரசம்’ பு: வெ. மச. 98 என வருவனவற்ருலுமறியப்படும். இன்னுெலியாக இமிழ்தற் பொருட்டு மார்ச்சனை அமைக்கப்பெற்ற முரசாதலின் ‘மண்ணுறு முரசம் என்ருர், "மண்-மார்ச்சனை சீவக 628 நச், கொற்ற முரசினைப் பலியிடுதற்கு வைக் கப்பட்ட இடத்தினின்றும் பெயர்த்தலைக் கண்பெயர்த்து என்ருர், கண்ட இடம். கடிப்பை வலக்கையிற் கொண்டு முரசை ஒச்சுதலின், கடிப்புடை வலத்தர் தோளோச்ச' என்ருர்,
'பழக்க காள்வரு மேருவை யுள்ளுறத் தெ78ளத்தொரு பண்ய க்கி
வழக்கி னுலுல களக்தவ னமைத்ததோர் வான்குணில் வலத்தேந்தி
முழக்கினுலென? - கம்ப. கும்ப 347. எனக் கம்பர் கூறுதல் காண்க. இயவர் தொடியணிந்த தோவினராகலின் தொடித்தோளோச்ச' என்ருர், "கடிப்புக் கண்ணுறுTஉந் தொடித்தோ ளிய வர்" (பதிற் 17.8) என வந்தமை காண்க. தொடி-தோள்வளை, ஈண்டுத் தோள் என்றது கையை, "தாளிற் கடந்தட்டுத் தந்தையைக் கொன்ற

19 ஆம் பாட்டு 93
னைத் தோளிற் றிருகுவான் போன்ம்" (கலி 101: 31-2) என்புழிப் போல, ஒச்ச-அடிக்க,
வம்பு களைவறியாச் சுற்றம் என்றது போர் வேட்கையான் எப்பொழு தும் கையினின்றும் வம்பைக் களைதலறியாத படைச்சுற்றம் என்றவாறு. வம்பு-கைச்சரடு இது கைக்கு அணியும் தோலாலாகிய கவசம். சுற்றமொடு அம்பு தெரிந்து அவ்வினை மேவலையாகலின் எனக் கூட்டி அம்பு தெரிதலும் வினைமேவுதலும் சுற்றத்தினதும் அரசனினதும் தொழில்களாகக் கொள்க. இனிச் சுற்றமொடு வினைமேவலையாகலின் எனக் கூட்டி அம்பு தெரிதலை அரசன் தொழிலாக வுரைத்தலுமொன்று. அம்புகளை ஆராய்ந்து நல்லன வற்றைக் கைக்கொள்ளுதலை, ‘அம்பு தெரிந்து' என்ருர், "நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப், புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே" (கலி 7:9-10) 'அடுசில யழல வேந்தி யாருயிர் பருகற் கொத்த, விடுகணை தெரிந்து" (சீவக 1086) எனப் பிருண்டும் வருவன காண்க.
சுரனறுப்ப (2) புலியுறை கழிப்பத் 4) தோளோச்ச (8) அ வ் வி னை மேவலை (10) என முடிக்க,
11-15. நீ வினையை மேவுகின்றபடியால் பகலெல்லாம் மிகவும் ஆற்றி யிருந்து இராக்காலத்தே பெற்ற சிறுமகிழ்ச்சிக் காலத்தும் கனவினுள் உறை யும் நின் அரிவைக்கு நீ யார்கொல் என்க.
பிரிவுத்துயர் ஆற்றுதற்கரிதாகவும் பகற்பொழுதின்கண் மிகவும் ஆற்றி யிருத்தலின் எல்லுநனியிருந்து' என்ருர், எல்லு-பகற் பொழுது, நனி என்றது ஆற்றுதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியின் மிகுதியைக் குறித்து நின்றது. ஈண்டு இருத்தல் என்றது தலைவன் பிரிந்துழித் தலைவி ஆற்றி யிருத்தலை, 'பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லையாகலின் இருத்தலை அதன்பிற் கூறி' எனத் தொல்காப்பிய வுரையில் (அகத் சூத் 14 உரை) நச்சினுர்க்கினியர் உரைத்தலுங் காண்க. எல்லிப் பெற்ற (11) மகிழ் (12) எனமுடிக்க, எல்லி-இராப் பொழுது, 'எல்லிப்பொழுது வழங்காமை முன்னி னிதே' இனியவை 35. அரிது பெறு பாயல் என்றது இராப்பொழுதின் கண்ணே நெடுக வருந்தியிருந்து பின் அரிதாகப்பெற்ற உறக்கம் என்றவாறு,
'இரும்பல் கூந்தற் சேயிழை மடங்தை
கஜன யிருள் நடுநாள் அனையொடு பொருந்தி வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொ டைதுயிரா ஆபிதழ் மழைக்கண் மல்ககோய் கூர்ந்து பெருந்தோள் நனைக்குங் கவிழ்ந்துவார் அரிப்பனி மெல்விரல் உகிரிற் றெறியினள்
S LLLL SS S SS S LSLLSLLLLLS SSLS S SqqqS SLLL LLSL0SL 0SL
துயில்துறங் தனள் கொல் அளியள் தானே. அக 373; 10-19. எனப் பிரிந்த தலைவி துயிலின்றி வருந்தல் கூறப்பட்டிருத்தல் காண்க தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மண்ணசையாற் பொருதற்குச் சென்ருனுக, அவன் பெருந்தேவி கூதிர்ப்பானுளின்கண் துயிலின்றிப் புலம்பொடு வதிந்தமையை,
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவு கெடியவு முரைபல பயிற்றி

Page 62
94. பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
யின்னே வருகுவர் இன்று2ண யோரென வுகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழிந்து
முரண் மிகு சிறப்பிற் செல்வனெடு நிலை இய வுரோகிணி நி%னவன னேக்கிநெடி துயிரா மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பணி செவ்விரல் கடைக்கண் சேர்த்திச்சில தெறியா புலம்பொடு வதியும் கலங்கிள ரரிவை?? நெடுநல் 153-163. என நக்கீரனுர் விரித்துரைத்திருத்தல் ஈண்டு அறியற்பாலது.
ஈண்டுப் பாயல் எ ன் ற து உறக்கத்தை, "எமக்குமெங் கண்பாயல் கொண்டு” (கலி 145; 23-4) என்புழிப்போல சிறிது கால உறக்கத்தில் துனி மறத்தலின் அது வே சிறுமகிழ்' எனப்பட்டது. துயிலுங்காலத்து உணர்வின்மையின் அக்காலத்து வருத்தமின்ருயிற்று “தொழுதெழுவார் வினைவள நீறெழ நீறணி யம்பலவன்’ என்னும் திருச்சிற்றம்பலக்கோவை யார் உரையில் 'தொழுதெழுவார் என்றது துயிலெழுங்காலத்தல்லது முன் னுணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து மறவாது நினைவார் என்ற வாறு' எனப் பேராசிரியர் உரைத்திருத்தல் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. சிறுமகிழ் என்புழிச் சிறுமை காலத்தின் மேற்று. உம்மை, எச்சவும்மை. சிறுமகிழ்ச்சிக் காலத்தும் பெருந்தேவி நினவு மிகுதியால் s தன் தலைவனைக் கனவிற் கண்டு வருந்துதலின் கனவினுள் உறையும்' என்ருர்,
'கனவின னல்காக் கொடியார் கனவின
னென்னெம்மைப் பீNப் பது ' குறள் 1217. என்ருர் திருவள்ளு வரும். பெருந்தேவி தன் ஆற்ருமையைப் பெருஞ் சால்பினுலும் நாணினுலும் வெளியிட்டுரையாது வருந்துதலின் 'பெருஞ் சால் பொடுங்கிய நாணுமலியாக்கை யரிவை” என்ருர்
'உட்கரங் துறையு முய்யா வரும்படர்
செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்" குறிஞ்சி 11-2 * என்ரு னி?னந்தா ளி தபோலுமிவ் வேட்கை வண்ணஞ்
சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவ தன்ரு யரிதா யகத்தே சுட்டுருக்கும் செக் தீ யொன்றே யுலகத் துறுநோய் மருந்தில்ல தென்ருள்' சீவக 1932. என வருவன காண்க.
கற்பும் நிறையும் பொறையும் முதலாகிய சிற ந் த குணங்களின் அமைதி தங்கப்பெற்ற அரிவையாதலின் பெருஞ்சால்பொடுங்கிய அரிவை' என்ருர், சால்பு-தத்தங் குலத்துக்கேற்ற குணங்களின் அமைதி. குறிஞ்சி 15 நச். ஒடுங்குதல்-தங்குதல். 'இடங்கர் ஒடுங்கி' மலைபடு 211. நாணு -நாணம். அது காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக் கம்’ என்பர் நச்சினுர்க்கினியர். (தொல் களவு சூத்8 உரை). பெண்டிர்க்கு இயல்பாகவே உள்ளதொரு தன்மை' என்பர் நக்கீரனும், (இறை சூத் 2 உரை) இது மனத்தின் பண்பாதல், 'கன்னிமனஞ் சூழ்கிடந்த நாணென் னுங் கடியரணம்” (நைட, அன். தூது 97) என்பதனுலறியப்படும். இக் s, அரிதினில் துயிலெய்திய வழித்த8லம 2னக் கனவிற் கண்டு தொல் மெய்ப் 224

19 ஆம் பாட்டு 95
குணம் யாக்கைமூலம் வெளிப்பட்டுத் தோன்றலின் நாணுமலியாக்கை என்ருர் 'பெருநா னணிந்த சிறுமென் சாயன், மாணலம்' (அக 120: 7-8) “தெரிவையர்க்கு, மெய்நாண் உயிரினு மிக்கதொன்ருல்" (தஞ்சை 31) எனப் பிருண்டும் வருவன காண்க, யாக்கையையுடைய அரிவை என்க. சேரன், பெருந்தேவியின் அழ ை5 நினைந்து அவள்பாற் கடிதின் எழவேண்டி, அவள் அழகை நூதன்மேலிட்டு 'வாணுதலரிவை என்ருர், ஈண்டு அரிவை என்" பது பருவங்குறியாது பெண் என்னுந் துணையாய் நின்றது. ‘புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்கு” (நெடுநல் 166) என்புழிப்போல, அளி-அருள். யார்கொல் என்றது கனவினுள் உறையும் அரிவையின் பிரிவாற்ருமையை நீக்க முயலாது யாதோர் இயைபும் இல்லாதவன் போல் போர் வினையை மேவி நீட்டித்தாய் என்ற குறிப்பிற்று. யார் என்னும் வினைக் குறிப்பு ஈண்டு முன்னிலைக்கண் வந்தது.
16-27. "பலவாகிய நீ வாழ்தலீயா வ ள ன று பைதிரம் ஊருட னெழுந்து இனந்தோடகல, நாஞ்சில் கடிந்து நிலங்கண் வாட அன்னவா யினவை, பழனந்தோறும் தாமரை ஆம்பலொடு மலர, நெல்லின் செறு வில் நெய்தல் பூப்ப, அரிநர் கொய்வாண் மடங்க, அறைநர் எந்திரம் பத் தல் வருந்தத் தொன்ருேர்காலை நல்லமன்; இன்றே அன்று அளியதாம்" எனச் சொல்லிக் காணு நர் கைபுடைத்திரங்க மாட்சிய மாணு மாண்
டன என்க.
பல (27) பைதிரம் (8) எனக் கூட்டுக, ஊருடனெழுந்து இனந்தோ
டகல (16) எனவும், நாஞ்சில் கடிந்து நிலங்கண் வாட (17) எனவும் கூட் டுக. சேரலாதனின் போர்வினைக்கு அஞ்சிப் பகைவரது ஊரிலுள்ள குடி மக்கள் ஒருங்கு எழுந்து அகல அவர்களால் ஒம்பப்பட்ட சுற்றமும் பசு முதலியவற்றின் தொகுதியும் ஊரைவிட்டு அகலுதலின் இனந்தோடகல வூருடனெழுந்து' என்ருர் ஊர்-குடிமக்களுக்கு ஆகுபெயர், ப்கைதலை வந் தெனக் குடிமக்கள் ஊரைவிட்டு நீங்கல்,
"பண்புடை கன்னுட்டுப் பகைத?ல வக்தென
அதுகை விட் டகன்ருெரீஇக் காக்கிற்பான் குடைகீழற்
பதிபடர்ந் திறைகொள்ளும் குடிபோல்? கலி 78; 4-6.
'ஊரெழுக் துலறிய பீரெழு முதுபாழ்’ அக 167:10, என வருவனவற்றலுமறியப்படும். உடன்-ஒருங்கு. ஊரெழுந்து என் னும் முதல் வினையை வழுவமைதியால் இனந்தோடகலவென்னும் அதன் சினைவினேபொடு முடிக்க, ஊர் உடனெழுதலால் நாட்டில் மக்களின்மை யிற் கலப்பைகள் கடியப்பட்டு நிலம் பயிர்செய்யப்படுதலின்ருய்ப் பொலி வின்றிக் கிடத்தலின் 'நாஞ்சில் கடிந்து நிலங்கண் வாட என்ருர், நாஞ் சில்-கலப்பை, 'அறனுழு நாஞ்சில்' கலி 8; 12. கடந்து என்பது கடியப் பட்டு எனச் செயப்பாட்டுப் பொருள்பட நின்றது கடிதல்-வெறுத்தல், ஈண்டு விரும்பி ஓம்பப்பட்ட கலப்பைகள் தேடுவாரற்றுப் பயனின்றிக் கிடத் தலை, கண்-இடம்,

Page 63
96 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நீ வாழ்தலியாவென்றது நீ பண்டுபோலே குடியேறுகவென்று வாழ்வு கொடாதவென்றவாறு. ‘வாழ்தலீயா" என்ற அடைச் சிறப்பான் இச் செய்யு ளுக்கு வளனறு பைதிரம் என்று பெயராயிற்று.
பைதிரம்-நாடு, ‘‘பைதிரம் மண்டிலம் பாடி தேயம். நாடென்ப" என்பது பிங்கலந்தை. இடையறவு படாது பிதிர் வழியாற் பகைவர்க்கு வந்த நாட்டைச் சேரலாதன் வென்று தன்னடிப் படுத்தியமையால் வாழ்தலீயாப் பைதிரம்' என்ருர், சேரலாதன் அழிக்க அழிந்து தம் வளப்பமெல்லாம் நீங் கிய நாடுகளாதலின் "வளனறு பைதிரம்' என்ருர். அன்ன என்னுஞ் சுட்டு இனந்தோடகலல் நிலங்கண் வாடல் என்பவற்றைக் குறித்தது. பைதிரம் (18) தோடு அக ல க் (16) கண்வாட (17) அன்னவாயின என முடிக்க. ஈண்டு ஆயின வென்பது வினையாலணையும் பெயர்.
இனி, இனம் தோடு அகல ஊருடனெழுந்து-சுற்றமும் பசு முதலிய தொகுதியும் விட்டு நீங்க ஊரிலுள்ளார் ஒருங்கு எழுந்து, நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து-நிலம் வளப்பமின்மையாற் பொலிவழியும்படி கலப்பை யால் உழுதல் நீங்கி; எழுந்து, கடிந்து வளனறு பைதிரம் என்க. ஊரும் நிலமும் பைதிரத்தின் பகுதிகளாதலின் சினைவினை முதல் வினையொடு முடிந் தது. அன்ன என்னுஞ் சுட்டு, எழுதல் கடிதல் வளனறுதல் என்பவற் றைக் குறித்தது' என உரைப்பினும் அமையும்.
பழனம்-நீர்நிலைச் செறு சிலப் 10:113 உரை. பழனத்தில் வளர்த லும் க்ாலையில் மலர்தலுமாகிய ஒற்றுமைபற்றித் தா ம  ைர ஆம்பலொடு மலர்ந்து என்ருர்,
களனி விடியற் கணைக்கா லாம்பல் தாமரை போல மலரு மூர' ஐங் 62. என வருதல் காண்க மலர்ந்த செந்தாமரை மலர்கள் அழல்போற் ருேன் றலின் "அழன்மலி தாமரை” என்ருர், 'எரிய ைகந் தன்ன தாமரை" (அக 106; 1) "எரிமருள் தாமரைப் பெருமலர்' (புற 364, 3) என வரு வ ன காண்க. மலி உவமவுருபு. ஆம்பல்-கருங்குவளை மலர். ஆம்பலிற் செவ் வாம்பலு முண்மையின் அழன்மலி என்றதனை ஆம்பலொடு கூட்டி நெருப் புப்போலும் செவ்வாம்பல் மலர்கள்' என்றுரைப்பினும் அமையும். 'பகலிற் ருேன்றும் பல்கதிர்த் தீயின், ஆம்பலஞ் செறுவில்” (ஐங் 57) எனவும்,
‘அள்ளற் பழனத் தரக்கா ம்பல் வாயவிழ
வெள்ளங் தீப்பட்ட தெனவெரீஇப்-புள்ளினந்தம் கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ நச்சி?லவேற் கைக்கோதை நாடு" முத். எனவும் வருவன காண்க. ஒடு-எண்ணுெடு, மலர்ந்து என்பதனை மலர வெனத் திரிக்க, இனித் திரியாதே மலர்ந்து-மலரப்பெற்று என உரைப் பினுமமையும், நெல்லின் செறுவில் நீர் இடையருது நிற்றலின் அந் நீரால் நெய்தல் வளர்ந்து பூப்பதாயிற்று.
" வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியலங் கழனி? நற் 190: 5-6. 'தண்ணறு நெய்தற் ற2ள யவிழ் வான்பூ
வெண்ணெ லfகர் மாற்றின ர றுக்கும்? ஜங் 1901-2
YA

19 ஆம் பாட்டு - 97
எனப் பிருண்டும் வருவன காண்க. இதனுல் நாட்டின் நீர்வளம் இனிது அறியப்படும்.
அரிநர் என்றது நெல்லரிவாரை, கொய்வாள்-நெல்லின் தாளைக் கொய்யும் அரிவாள் 'நெல்லரி தொழுவர் கூர்வாள்" (நற் 195; 6) என்ருர் பிறரும். நெற்ருளின் பருமையாலே கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடிந்தன. நெற்ருள் மூங்கில்போலும் பருமையுடைத்தாதல் "முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற் 32:13) என வருதலானுமறிக, அறை நர் என்றது கரும்பறுப்பாரை. நெல் அரியப்படுதலும், கரும்பு அறுக்கப் படுதலுமுடைமையால் அவற்றைச் செய்வாரை 'அரிதர்' 'அறைநர்' என்ருர்,
"அறைக் கரும்பி னரி நெல்லின்" பெருந193-1. 'அரிகர், கீழ்மடைக் கொண்ட வாளையும் .
அறைாகர், கரும்பிற் கொண்டதேனும்? புற 42: 1. என வருவன காண்க. எந்திரம் என்றது கரும்பின் தீஞ்சாற்றை பிழியும் ஆலையை, "எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை, விசய மடூஉம் புகைகு
ழாலை தொறுங், கரும்பின் றிஞ்சாறு விரும்பினிர் மிசைமின்” (பெரும் பாண் 260-2) "கழைக்கரும் பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்' (சீவக 1614) என வருவன காண்க. எந்திரம் வருந்தலாவது கரும்பின் மிகுதி யால் இடையருது சாற்றைப் பிழிதல், பத்தல் என்றது கரும்பின் சாறு விழும் கூனை,
*நிருதர் எந்திரத்திடு கரும்பாமென கெரிவார்
குருதி சாறெனப் பாய்வது குரைகடற் கூனில்" கம்ப கிங் 40, *குழுவு மீன்வளர் குட்டமெனக் கொளா
வெழுவு பாட லிமிழ்கருப் பேந்திரத் தொழுகு சாறகன் கூனையி னுாழ்முறை முழுகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே? கம்ப. ஆறு செல் 49. என வருவன காண்க, பத்தல் வருந்தலாவது பலகாலும் கரும்பின் சாறு ஒடிக் கூன் இசிவடைதல். "எந்திரமென்னும் முதலெழுவாயை வழுவமைதி யாற் பத்தல் வருந்தவென்னும் அதன் சினை வினையொடு முடிக்க' என்பர் பழையவுரைகாரர்.
அன்னவாயினவை, தாமரை மலர (20) நெய்தல் பூப்ப, (21) வாள் மடங் கப் (22) பத்தல் வருந்த (23) தொன் ருேர் காலை (24) நல்ல (25) என முடிக்க நல்லவென்பது குறிப்பு வினைமுற்று. மன் கழிவிரக்கப் பொருளில் வந் தது. இப்பகுதியால் பகைவர் நாட்டின் வளமிகுதியைக் கூறினர்.
பண்டு நல்லனவாகிய இயல்புகளையுடைய பைதிரங்கள் சேரணுல் அழிக்கப்பட்டு அவ்வியல்புகள் எல்லாம் நீங்கப்பெற்றமையின் இன்ருே அன்று' என்றும், அவை காண்பார் இரங்கத்தக்க நிலையில் உள்ளன வென்பார் 'அளியதாம்' என்றும் கூறினர். இன்ருே என்புழி ஒகாரம் வினு: அன்று அளியதாம் என்பது அதற்கு விடை, அன்ருே, ஓகாரம் அசை நிலை. அன்று-அன்னதன்மையுடையதன்று. காணுநர் கைபுடைத்திரங் கல் இரக்கமிகுதியால்,
13

Page 64
98 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
“வலமின் றம்ம காலையது பண்பெனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூஉ மெலிவுடை கெஞ்சினர் சிறுமை கூர" பதிற் 26: 7-9. என வருதல் காண்க.
மாணு மாண்டனவற்றை மாட்சியவென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த் தோன்றிக் கிடந்த பண்புபற்றியெனக் கொள்க. அன்னவா யின (19) மாணுமாண்டன (27) என்றது ஊருடனெழுதல் முதலாய தன்மை யுடையவாயினவை மாட்சிமைப்படத் திருத்தினும் திருந்தா நிலைமையவாய் ஊரும் வயலும் தெரியாதபடி உருவம் மாய்ந்தன என்றவாறு. “ஊரறிய லாகா கிடந்தனவே-போரின், மு கைய வி ழ் தார்க்கோதை முசிறியார் கோமான், நகையிலைவேல் காய்த்தினுர் நாடு' என முத்தொள்ளாயிரத் தும் வருதல் காண்க. இனி, மாண்டன பல (27) அளியதாம் எனச் சொல் லிக் (25) காணுநர் கைபுடைத்திரங்க (26) மாணு மாண்டன (27) என மாறிக் கூட்டி, மாட்சிமைப்பட்டனவாகிய அப்பைதிரங்கள் பலவும் காணுநர் அளி யதாம் எனச் சொல்லிக் கைபுடைத்திரங்க மாட்சிமைப்படாத தன்மையுடைய வாயின என உரைப்பினும் அமையும்.
இதனுற் சொல்லியது அவன் வெற்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
பாணன் பாசறைக்கண் வந்து தேவியின் ஆற்ருமை கூறி, இனி அவள் பாற் 1போகவேண்டுமென்று இரந்தமையாற் பரிசிற்றுறையாயிற்று.
அவ்வினை மேவலை யாகலின்’ (10) எனவும், 'யார்கொலளியை (15) என வும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமும் ஆயிற்று.
LI 50)4puLJ6).q50) y.
1. கவர்கால்-செலவை விரும்பின கால், 2 சுரன்-வழியில் அருமை. 4. எஃகம் புலியுறை கழிப்பவென்றது எஃகினைப் புலியுறை கழித்துக் கடை வன கடைந்தும் அல்லன வாய்கீறியும் போர்க்குரிய வாம்படி பண்ணவென்ற வாறு, 5. கூலம் முற்றியவென்றது பண்டமாக முற்றியவென்றவாறு; இனிப் பலிக்குரிய மற்றைப் பண்டங்கள் குறைவறக் கூடினவென்பாரும் உளர். 9. வம்பு-கைச்சரடு, சுரணறுப்ப (2) புலியுறை கழிப்பத் (4) தோளோச்ச (8) அவ்வினை மேவலை (10) என முடிக்க. 11. எல்லு நனியிருந்தென்றது பகற்பொழுதின்கண்ணே ஒரு வினுேதமும் இன்றி நெடுக வருந்தியிருந் தென்றவாறு பெற்ற (11) மகிழ் (12)என முடிக்க, அரிது பெறுதலைப் பயன்
1 போகவேண்டுமென்று இரத்தலும் பரிசிலாதல்,
* அரிமதர் மழைக்க ணம்மா வரிவை
கெய்யொடு துறந்த மையிருங் கூந்தன் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் களுல வின்று பெயரி னது மனெம பரிசில் ஆவியர் கோவே? புற 147. என வையாவிக் கோப்பெரும்பேகனைப் பெருங்குன்றுார்கிழார் பாடியவாற்
ருனுமறியப்படும்.

19 ஆம் பாட்டு 99
மேல் ஏற்றுக. ஈண்டுப் பாயல், உறக்கம். ஊருடனெழுந்து இனந்தோ டகல (16) எனவும், நாஞ்சில் கடிந்து நிலங்கண்வாட (17) எனவும் கூட்டுக. ஊரெழுந்தென்னும் முதல் வினையை வழுவமைதியால் இனந்தோடகல வென்னும் அதன் சினைவினையொடு முடிக்க, தோடகலக் (16) கண்வாட (17) அன்னவாயின (19) என முடிக்க. ஈண்டு ஆயினவென்பது தொழிற் பெயர். 17-8 நீ வாழ்தலியாவென்றது நீ பண்டுபோலே குடியேறுகவென்று வாழ்வுகொடாத வென்றவாறு. ‘வாழ்தலீயா' என்ற அடைச்சிறப்பான் இதற்கு 'வளனறு பைதிரம்' என்று பெயராயிற்று. . 20. தாமரை மலர வெனத் திரிக்க, 22 கொய்வாள் மடங்கவென்றது நெற்ருளின் பருமை யாலே கொய்யும் அரிவாட்கள் தங்கள் வாய் மடியவென்றவாறு 23. எந்திர மென்றது ஆலையை, எந்திரமென்னும் முதலெழுவாயை வழுவமைதியாற் பத்தல் வருந்த வென்னும் அதன் சினை வினையொடு முடிக்க, பத்தல் வருந்த லாவது பலகாலும் சாருேடி நனைந்து சாதல். தாமரை மலர (20) நெய் தல் பூப்ப (21) வாள் மடங்கப் (22) பத்தல் வருந்த (23) நல்ல (25) என முடிக்க. (27) மாணுமாட்சிய மாண்டன வென்றது மாட்சிமைப்படத் திருத் தினும் மாட்சிமைப்படாத அழகையுடையவாய்ப் பின்னைத் திருந்தாதவளவே யன்றி உரு மாய்ந்தனவென்றவாறு. மாணுதவற்றை மாட்சிய வென்றது பண்டு அழகிய ஊரும் வயலுமாய்த் தோன்றிக்கிடந்த பண்புபற்றி யெனக் கொள்க. மாட்சிய வென்பது வினையெச்ச முற்று. இனி மாணுமாட்சிய வென்பதற்கு மாணுமைக்குக் காரணமாகிய பெருக்கு முதலாயவற்றின் மாட் சியவென்பாருமுளர். பலவாகிய (27) நீ (17) வாழ்தலியா வளனறு பைதிரம் (18) ஊருடனெழுந்து இனம்தோடு அகல (16) நாஞ்சில் கடிந்து நிலங்கண் வாட (17) அன்னவாயினவை பழனந்தோறும் (19) தாமரை ஆம்பலொடு மலர (20) நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப (21) அரிநர் கொய்வாள் மடங்க அறைநர் (22) எந்திரம் பத்தல் வருந்தத் (23) தொன்ருேர் காலை (24) நல்லமன் அளியதாமெனச் சொல்லிக் (25) காணுநர் கைபுடைத்திரங்க (26) மாணுமாட்சிய மாண்டன (27) எனக் கூட்டுக. பைதிரம் (18) என்னும் எழுவாய்க்கு மாண்டன (2) என்பது பயனிலை; அன்னவாயின (19) என் னும் பெயரும் இடையே ஒரு பயனெனப்படும். அன்னவாயின (19) மாணு மாட்சிய மாண்டன (27) என்றது பைதிரங்கள் (18) ஊருடனெழுதல் (16) முதலாய வறுமையையுடைய அளவாய் நின்றன; பின் அவ்வளவினவன் றித் திருத்தவும் திருந்தா நிலைமையவாய் நின்றன; பின் அவ்வளவுமன்றி ஊரும் வயலும் தெரியாதபடி உருவம் மாய்ந்தன (27) என்றவாறு, -
நீ அவ்வினை மேவலையாயிருந்தாய்; நீ வினை யை மேவுகின்றபடி யால் (10) கனவினுள் உறையும் (13) நின்னரிவைக்கு (14) நீ யார்கொல் (15); நீ அவள்பால் வாராமைக்குக் காரணம் யாது? நீ அளிக்க ஏன்று அழிந்த நாடுகள் அழிந்து அற்ருல் வருவலெனின், ஆம்; அழிக்க அழிந்து நீ பின் வாழ்தலீயாத பைதிரம் (18) காணுநர் கைபுடைத்திரங்க (26) மாணு மாட்சியவாய் மாண்டன (27); அதனுல் அது குறையன்று; நின் அன் பின் மையே குறை; இனி நீ அவள்பாற் கடிது எழுகென வினை முடிபு செய்க,

Page 65
100 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
இதனுற் சொல்லியது அ வ ன் வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும் உடன் கூறியவாருயிற்று.
பாணன் பாசறைக்கண் வந்து தேவி ஆற்ருமை கூறி இனி அவள்பாற் போகவேண்டுமென்று இரந்தமையாற் பரிசிற்றுறையாயிற்று,
'அவ்வினை மேவலை யாகலின்’ (10) எனவும், யார்கொ லளியை (15) எனவும் சொற்சீர் வந்தமையாற் சொற்சீர் வண்ணமும் ஆயிற்று.
ஒப்புமைப் பகுதி
1. கவர்கால்: "கவர்காற் கோவலர்’ அக 264; 4. 2. "வெஞ்சுரம் போழ்ந்த துஞ்சுவரு கவலை' அக 207: 4, 3. ஒண்பொறிக் கழற்கான் மறவர்: 'ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற் கால்,. மறவர்’ ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால் .விரிநூலறுவை 'யர்' பதிற் 30:40-1; 34; 2-3; ' ஒண் பொறிப் புனேகழல் சேவடிப் புரள , புனனயங் தாடும் அத்தி" அக 376: 7-10; ‘பூம்பொறிக் கழறகால் நெடுந்தகை?? புற 281; 9. * .
மாரு வயவர்: “மாரு மைந்தர்? " முனைபுகல் புகல்வின் மாரு மைந்தரொடு ' பதிற் 39; 9; 84; 17; 'மாரு துற்ற வடுப்படு நெற்றி.மறவர்’ ம துரைக் 594-6; “மாறமைந்தின். முதியர்? அக 233; 6-8; "மாருத மாமன்னர்? இனியவை 34. - 4, திண்பிணி: 'திண்பிணித் திவவு?? பொருத 15.
ஆயுதங்களை உறையில் வைத்தல்: “உறைகழி வாழின் மின்னி?? தற் 337; 9; *கழித்துறை செறியா வாழுடை யெறுழ்த்தோள்? அக 24; 16; கதிர்வா ளுறை கழித்து? திருவாசகம் திருப்பாண்டி 4. “உறை கழியா ஞெள்வாளும்? பு வெ மா 148; உறைகழி வாளினன்' பெருங் (3) 20: 110.
செங்களம்: பதிற் 4ம் பதி 11 குறுந் 1: 1; புற 278; 7; பு. வெ. மர 127; 137; 207 சீவக 279; தெ7 ல் புற சூ 24: 16-7ாகச் மேற்.
6. உருவச் செந்திண்: 'உருவச் செந்தினை நீரொடு தூஉய்" அக 172:14, -ே7. முரசுக்குக் குருதிப் பலி: "பல்வேறு கூலமொடு குருதி வேட்ட, மயிர் புதை மாக்கண்? பதிற் 29: 11-2; “குருதி வேட்கை யுருகெழு முரசம்? புற 50: 5, 'உயிர்ப்பலி யுண்ணும். மயிர்க்கண் முரசொடு’ சிலப் 5, 87-8. “குருதி வேட்கை முரசு? மணி 1; 30-1.
7. மண்ணுறு முரசு: மண்ணுறு முரசின் வேந்து" ஐங் 443, 7-8 தொடித்தோணியவர்: பதிற் 17-7 அடிக. 8. கடிப்புடை வலத்தச்: 'தண்டுடை வலத்தர்?’ எஃகுடை வலத்தர்' தோமர வலத்தர்? 'அம்புடை வலத்தர்?? பதிற் 41:12; 51: 30; 54:14; 80; 11. - 9 அம்பு தெரிந்து: " தெரிகனை நோக்கி? கலி 39:22, 'கணை வலக் தெரிந்து" "வரிபுனை வில்லன் ஒருகணை தெரிந்து' 'உருவ வல்வில் பற்ற அம்பு தெரிந்து ? அக 33; 4; 48; 12; 82:11; 'கொண்ட கொடுஞ் சிலையன் கோல்தெரிய? பு: வெ. மா 1, 'ஆருயிர் பருகற் கொத்த, விடுகனை தெரிந்து? சீவக 1086; "கணைதெரிந்து? as itäb tu. In5(Ta95 L_u m gF 71.
*வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப், புனைமாண் மரீஇய வம்பு தெரி தியே’’ கலி 7:9-10; “விரற்றலைப் புட்டில் வீக்கி வெஞ்சிலை கணயோ டேந்தி: சீவக 2202. "விரற்புனை கோதைவல் வில்லின் வல்லவர்' வில்லி பதின்மூன்ரும் 254 'முன்கைக், கார்விற் செறிகா ணெறிகைச் செறிகட்டி' பெரிய, கண்ணப்பு 60
11. எல்லு: "எல்லும் எல்லின்று? அக 370; 2. எல்லி: "எல்லியுங் காலையும்? பெருங் (4) 3:17, "எல்லியும் கண்பகலும் இடர் கூருதல் இல்லையென்றே தே சுத் திருப்பழ 10.

20 ஆம் பாட்டு 101
12 அரிது பெறு: 'அரிதுபெறு சிறப்பிற் காமம்? அக 385: 5. சிறும கிழானும்: 'சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்?? பதிற் 23:9. 14. நாணுமலி யாக்கை: "சேணு மெம்மொடு வந்த, நாணும்? தற் 15: 9-10; 'காணே கம்மொடு, கனிநீ டுழந்தன்று? குறுந் 149; "காணுெடு மிடைந்த கற்பின் வாணுதல், அங் தீங் கிளவிக் குறுமகள்? “இவளே, பெருகா னணிந்த சிறுமென் சாயல்’ அக 9: 21-5; 120: 6-7; 9 பெண்பாலவர்கட் கணியாய்ப் பிரியாத காணும்" சிவக 1961,
வானூ தல சிவை: 'மீனெடு புரையுங் கற்பின், வாணுதலரிவை’ பதிற் 89: "26 سس-19
16. 'கொடுவி லாடவர் படுபகை வெரீஇ, ஊரெழுந் துலறிய” அக 167; 9-10. 18. பைதிரம் ‘வளந்தலை மயங்கிய பைதிரம்?? பதிற் 38: 3, 20. தாமரைக்கு நெருப்பு உவமை: 'அழன் மருள் பூவின் தாமரை” பதிற் 23: 23; "சுடர்த் தாமரை" மதுரைக் 249; “விளக்கி னன்ன சுடர்விடு தாமரை” நற் 310:1: "எரிமலர்த் தாமரை?? பரி 9: 4; "சுடர்ப்பூந் தாமரை? அக 6:16; 'அழலவிழ் தாமாை யாய்வய லூரன்’ ஐந்-ஐம 25, 'புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை” ge onuras, 1 180.
தாமரை அம்பல்: "ஆம்ப, ருமரைக் கிறைஞ்சுங் தண்டுறை யூரன்? நற் 300: 3-4; "அரக்காம்பல் தாமரை யஞ்செங் கழுநீர்? கை க் நிக்ஸ். மருதம் 11: * நெய்தலுங் குவளைப் பூவும் நெகிழ்ந்தசெங் கமலப் போதும்" கம்ப கர்ப எழுச்சி 54.
19-20. பழனத் தாமரை: கழனித் தாமரை” ஐங் 53; 94; “தாமரை ப் பழ னத்து' 'பூத்த தாமரைப் புள்ளிமிழ் பழனத்து? அக 106:1; 178; 6: 'செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை' புற 397; 19; “தாமரை மலருஞ் செய்வய லூர' திணை மெ ழி ஐ 33; “பழன வெண்டாமரை’ சிவக 1555; 'ப ழ ன ப் பாசடைப் பயி லிளங் தாமரை’ சிலப். w
பழன ஆம்பல்: "பழனத் தேங்தெழின் மலர தூம்புடைத் திரள்கால், ஆம்பல்” குறுந் 178; 1-3. - ري
21. 'நீர்ச்செறுவி, னிணெய்தல்" பட்டினப் 11-2; "செறுவிற், கண்ணுறு கெய் தல் கதிரொடு கயக்கும்" "செறுவிற் பூக்கும், நின்னூர் கெய்த லனையேம்' குறுந் 296; 309; "நீரார் செறுவி னெய்தல் பூப்ப? கலி 75: 1: 1 நெய்தலஞ் செறுவின் ? அக 113; 6: 'நெய்தலங் கழனி? புற 209: 2.
23. தீ பிழி யெந்திரம்: 'கரும்பி னெந்திரங் கட்பினேதை" மதுரைக் 258; *கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்?? ஐங் 55; கரும்பி னெந்திரஞ் சிலைப் பின்* புற 322; 7. ே
25 அளியதாம் : 'பெரும்பா ழாகும னளிய தாமே?? பதிற் 22:38,
10. அட்டு மலர் மார்பன் 20. நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்புமுத றடிந்த கடுஞ்சின முன்பின் 5 நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும் மாற்றேர் தேஎத்து மாறிய வினையே

Page 66
102 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா நண்னர் தேஎத்தும் பொய்ப்பறி யலனே 10 கனவினும், ஒன்னர் தேய வோங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும் கடாஅ யானைக் கணநிரை யலற வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ 15 விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக் கடிமிளைக் குண்டுகிடங்கின் - நெடுமதி னிலைஞாயில் அம்புடை யாரேயி லுள்ளழித் துண்ட 20 அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும் பரிசின் மாக்கள் வல்லா ராயினும் கொடைக்கட னமர்ந்த கோடா னெஞ்சினன் மன்னுயி ரழிய யாண்டுபல மாறித் 25 தண்ணிய லெழிலி தலையா தாயினும்
வயிறுபசி கூர வீயலன் வயிறுமா சிலீயரவ னின்ற தாயே.
துறை-இயன் மொழி வாழ்த்து. வண்ணம்-ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு-செந்தூக்கும் வஞ்சித்துாக்கும். பெயர்-அட்டுமலர் மார்பன் (20).
ப-ரை. நும் கோ யார் என வினவின்-நும்முடைய இறை வன் யார்தான் என்று கேட்பீராயின், எங்கோ- எம்முடைய இறை வன், இரு முந்நீர் துருத்தியுள் - கரிய கடலிடையேயுள்ள தீவில், முரணியோர் தலைச்சென்று-பகைவரை முடிவுசெய்து, கடம்பு முதல் தடிந்த-அவருடைய காவல் மரமாகிய கடமயினது அடியை வெட் டின, கடு சின முன்பின் கெடுஞ் சேரலாதன்-கடிய சினமும் வலியு முடைய நெடுஞ்சேரலாதனு வான்; அவன் கண்ணி வாழ்க-அவன் கண்ணி வாழ்வதாக,
6-10. மாற்ருேர் தேஎத்து மாறிய வினை-பகைவர் கர்ட்டிலே பின்வாங்கிய போர்வினையை, வெயில் துகள் அனைத்தும் வாய்ப்பு அறியலன்-ஞாயிற்றின் கதிரினிடையே தோற்றும் துகள் அளவும்
 

20 ஆம் பாட்டு ,* 103
வாய்த்தல் அறியான்; கண்ணின் உவந்து-கண்ணினுல் உவகையை வெளிப்படுத்தி, நெஞ்சு அவிழ்பு அறியா-மனத்திற் பகையை வெளிப்படுத்துதலை அறியாத, கண்ணுர் தேஎத்தும்-பகைவரிடத் தும், கனவினும் பொய்ப்பு அறியலன்-கனவின் கண்ணும் பொய்த்த லறியான். -
10-20. ஒன்னர் தேய ஓங்கி நடந்து-பகைவர் அழியும்படி மனவெழுச்சியோடு மிக்குச் சென்று, படியோர் தேய்த்து-பகை வரை அழித்து, வடி மணி இரட்டும்-வடித்த மணி ஒன்றற்கொன் அறு மாறி ஒலிக்கும், கடாஅ யானே கண நிரை அலற-மதமிக்க யானேத் திரளின ஒழுங்குகள் அலறும் படி, வியல் இரு பரப்பின் மா கிலம் கடந்து-அகன்ற பெரிய பரப்பினையுடைய பெரிய நிலத்தை வஞ்சி யாது எதிர்கின்று வென்று அடிப்படுத்து, புலவர் ஏத்த ஓங்கு புகழ் கிறீஇ-புலவர்கள் உயர்த்துக் கூறும்படி உயர்ந்த வெற்றிப் புகழை உலகின் கண்ணே நிறுத்தி, விரி உளை மாவும் களிறும் தேரும்-விரிந்த தலையாட்டத்தினையுடைய குதிரைகளையும் களிறுகளையும் தேர்களே யும், வயிரியர் கண்ணுளர்க்கு ஒம்பாது வீசி-வயிரியர்க்கும் கண் ணுளர்க்கும் தனக்கென்று பாதுகாவாது பெருகக் கொடுத்து, கடி மிளை-காவற் காட்டினேயும், குண்டு கிடங்கின்-ஆழத்தினேயுடைய அகழியினையும், நெடுமதில்-கெடிய மதிலினையும், கிலே ஞாயில்நிலைத்த ஞாயிலினையுமுடைய, அம்புடை ஆர் எயில்-அம்புக்கட்டுக் களே யுடைய அணு கற்கரிய அரணை, உள் அழித்து உண்ட-உள் புக்கு அழித்து உண்ட, அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்ஊர் சுடு புகை செறிந்து அகன்ற மார்பன்,
21-3. பரிசின் ம்ாக்கள் எமர்க்கும் பிறர்க்கும்-பரிசின்மாக்க ளாகிய எமர்க்கும் பிறர்க்கும், யாவராயினும்-கண்டார் மதிக்கும் தோற்றம் இலரrயினும், வல்லாராயினும் .ஒரு கல்வி மட்டாராயினும், கொடை கடன் அமர்ந்த-கொடையாகிய கடனே விரும்பிய, கோடா நெஞ்சின்ை-கோட்டமில்லாத நெஞ்சினையுடையவன்.
24-37. மன் உயிர் அழிய-நிலைபெற்ற உயிர்கள் அழியும்படி, யாண்டு பல மாறி-பல யாண்டுகள் தன்னியல்பில் மாறுபட்டு, தண் இயல் எழிலி தலையாதாயினும்-தண்ணிய இயல்பினையுடைய மேகம் பெய்யாதாயினும், வயிறு பசி கூர ஈயலன்-வயிற்றிற் பசி மிகும்படி ஈதலைச் செய்யான், அவன் ஈன்ற தாய்- அவனைப் பெற்ற தாய், வயிறு மாசு இலீஇயர்-வயிறு குற்றமின்றி விளங்குவாளாக,
முடிபு: நுங்கோ யாரென வினவி ன் எங்கேர் சேரலர் தன்; அவன் கண்ணிவாழ்க, அவன் மாற்ருேர் தேஎத்து மாறிய வினையே வெயிற் றுகள் அனைத்தும் வாய்த்தலறியான்; பொய்த்தலறியான்;

Page 67
104 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
அட்ர் அ அடுபுகை அட்டுமலர் மார்பன்; கொடைக் கட் னமர்ந்த கோடா நெஞ்சினன்; கோடையிடத்து எழிலி தலையாதாயினும் வயிறு பசி கூர ஈயலன்; ஆதலான், அவனை யீன்றதாய் வயிறு குற்றமின்றி விளங்கு வாளாக என்க.
ஆ-ரை 1-5. சேரலாதன்பாற் பரிசில் பெற்று மீளும் பாணன் தன் செல்வப் பொலிவு கண்டு நுங்கோ யார் என்று வினவியாற்கு, "எங்கோ முந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த் தலைச்சென்று, கடமடி முதல் தடிந்த சேரலாதன்' எனத் தன் இறைவன் இன்னுன் என்று கூறி ஞன், நுங்கோ யாரென்று வினவுதலும், பரிசில் பெற்று மீள்வோன் தனக் குப் பரிசில் நல்கியோன் இன்னுன் என்று கூறுதலும்,
நுங்கோ யாரென வினவி னெங்கோ
யாணர் கன்னுட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்" புற 212:1-8, என்ற பிசிராந்தையார் செய்யுளுள்ளுங் காண்க. பாணன் தன் இரும்பே ரொக்கலொடு பரிசில் பெற்று மீளுதலின் அச் சுற்றத்தாரையும் உளப் படுத்தி நும்' என்று பன்மையிற் கூறினுன், ஈண்டுக் கோ என்றது பரி சில் நல்கிப் புரப்போனை, எங்கோ (1) சேரலாதன் (5) என இயையும்.
தன்னுெடு மாறுபட்ட பகைவர் கடல் நடுவண் தீவொன்றில் வாழ்ந் தமையாற் சேரலாதன் கடல் கடந்து அப்பகைவரை முடிவுசெய்து அவர் காவல் மரமாகிய கடம்பின் அடியைத் தடிந்தமையின், "இருமுந்நீர்த் துருத்தி யுள், முரணியோர்த் தலைச்சென்று, கடம்பு முதறடிந்த சேரலாதன்' என் ருன், நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழி லுடைமையின் முந்நீர்: ஆகுபெயர். 'யாற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரு முடைமையால், கடற்கு முந்நீரென்று பெயராயிற்று' என்பர் புறநா னுாற்றுரைகாரர். (புற 9: 10 உரை) முந்நீர்த் துருத்தி-தீவு மு ர னி யோர்-மாறுபட்டோர். என்றது பகைவரை. முரண்-மாறுபாடு. தலைச் சென்று-முடிவிலே சென்று. என்றது முடித்து என்றபடி, முரணியோரை முடிவுசெய்தும் சினந்தணியப் பெருனுய் அவர் காவல் மரமாகிய கடம்பை அடியோடு தடிந்தமையின் "கடம்பு முதறடிந்த கடுஞ்சின. சேரலாதன்' என்ருன், 'அதிரமண்டி . பாழ்பலசெய்து.விறல்வேம்பறுத்த, பெருஞ் சினக் குட்டுவன்" (பதிற் 46; 8-17) எனக் கடல்பிறக் கோட்டிய குட்டுவன் இயல்பைப் பரணர் கூறுமாறுங் காண்க. முந்நீர்த் துருத்தியுள் முரணி யோர்த் தலைச்சென்ற வலியுடையோணுதலின் முன்பிற் சேரலாதன்' என் ருன், எங்கோ நெடுஞ்சேரலாதன் என்று தன் தலைவனைக் கூறினமை ய்ால் அதற்கேற்ப ‘வாழ்க வவன் கண்ணி என்று அவ ன் கண்ணியை வாழ்த்துவானுயினுன், "கோடியர் முழவின் முன்ன ராடல், வல்லா னல்லன் வாழ்க வவன் கண்ணி" (பதிற் 56; 2-3) "நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றேன், யார்கொல் வாழ்கவவன் கண்ணி" (புற 77; 5-6) எனப் பிற

20 ஆம் பாட்டு 105
ரும் தலைவரைக் கூறி அவர் கண்ணியை வாழ்த்துதல் காண்க. நீடு வாழ்க வென்பான் வாழ்கவவன் கண்ணி’ என்ருன். கண்ணி-போர்ப்பூ என்பர் அகநானூற்றுரைகாரர் (அக, கடவுள் 2 உரை) 'கண்ணியென்பன சூடும்பூ என்பர் பேராசிரியர். (தொல், மரபு 79 உரை)
6-10 சேரலாதன் மிக்க வலியானே தான் அழிக்கவேண்டுமென்று விரும்பிய பகைவர் நாட்டிற் சென்று பொருதலின் 'மாற்ருேர் தேஎத்து' என்ருர், தேஎம்-நாடு. பகைவர் நாட்டிற் செய்த போரில், அவர்க்கு அஞ்சி அடியொதுங்கிப் பிற்பெயர்தலாகிய செயல் சேரலாதன் பால் எக்காலத்தும் நிகழாமையின் மாற்றேர் தேஎத்து மாறிய வின வாய்ப் பறியலன்' என்ருர், மாறுதல்-பிற்பெயர்தல், முதுகிடுதல். மாருமைந்து-முதுகிடாதவலி மலை படு 332 நச். மிகச்சிறிதும் பிற்பெயராமை தோன்ற "வெயிற்றுகளனைத் தும் வாய்ப்பறியலன்' என்ருர், வெயிற்றுகள்-சிற்றிடுக்கின் வழியே வீட்டி னுள் நுழையும் ஞாயிற்றின் கதிரில் தோன்றும் நுண் துகள்கள். அவை வெயிற்கதிரிலன்றிப் புலப்படாச் சிறுமையவாகலின் மி க் க சிறுமைக்கு வெயிற்றுகளை எடுத்துக் கூறினுர்,
*நுண்வெயிற் றுகளினும் நொய்தா லம் மதானே? தொல் 21:16 கச் மேற் *இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன்' திருவ சகம். திருவண்ட 5-6.
எனப் பிறசான்ருேருங் கூறுமாறு காண்க, அனைத்தும்-அளவும். "கடிப் பகை யனைத்தும். அரலை தீர வுரீஇ" மலைபடு 22-4. இதனுற் பகை வர்க்கஞ்சிப் பிற்பெய்ராத சேரலாதன் ஆண்மை கூறினுர், "எறிபடைக் கோடா வாண்மை’ (புற 154; 10) என்ருர் பிறரும்.
அகத்துச் செற்றம் நிகழவும் அதனை மறைத்தற்பொருட்டு அச்செற் றத்தின் மறுதலையாய உவகையைக் கண்ணினுல் வெளிப்படுத்தலின் 'கண்ணி னுவந்து' என்றும், அகத்தே நிகழும் செற்றத்தை யாதோராற்ரு னும் வெளிப்படுத்தாமையின் 'நெஞ்சவிழ் பறியா' என்றும் கூறினுர், முகத்தி னினிய நகாஅ அகத்தின்ன வஞ்சராய அப்பகைவரிடத்தும் நனவின்கண் ணன்றிக் கனவின்கண்ணும் பொய்த்தலறியாமையின் 'நண்ணுர் தேஎத்தும் பொய்ப்பறியலனே கனவினும் என்ருர், தனக்கு வெற்றியுண்டாமாறு போர்தொடங்குதற்குச் சிறந்த நாட்கேட்ட துரியோதனனிடத்தும் பொய் யாது நாட்கூறிய சகாதேவன் செயல் இதற்கு எடுத்துக்காட்டாக அறி யத்தக்கது நெஞ்சவிழ்பறியா என்பதற்கு அகத்தே நிகழுஞ் செற்றத்தால் மனம் மலர்தலை அறியாத எனினுமாம். நண்ணுர்-தன்னையடையாதவர்; என்றது பகைவரை, தேஎத்தும்; உம்மை உயர்வு சிறப்பு. பொய்ப்புபொய்த்தல், கனவினும்: உம்மை எச்சவும்மை.
10-20 ஒன்ஞர் தேய ஓங்கி நடந்து படியோர்த் தேய்த்து மாநிலங் கடந்து ஓங்கு புகழ் நிறீஇ மாவும் களிறும் தேரும் வயிரியர் கண்ணு ளர்க்கு ஒம்பாது வீசி, ஆரெயில் அழித்துண்ட அடாஅ அடுபுகை அட்டு LD6U)st LDs, sf L60T 6TSOT 5.
14

Page 68
106 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
கடுஞ்சின முன்பிற் சேரலாதன் மனவெழுச்சியோடு மிக்குச் செல்லு தலால் அவன் பகைவர் அழிதல் ஒருதலையாகலின் 'ஒன்னுர் தேய வோங்கி நடந்து' என்ருர், ஓங்கி நடந்த சேரலாதன் தன்னை வணங்கியோரை நீக்கி, வணங்காதாரை அழித்தலின் 'படியோர்த் தேய்த்து' என் ருர், பேடியோர்த் தேய்த்த வாண்மை?? பதிற் 79; 8. - *படியோர்த் தேய்த்த பணிவி லாண்மை’ மலைபடு 423. *படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை” அக 22: 5 என வருவனவற்ருலும் படியோர்த் தேய்த்தல் அரசன் செயலாதல் தெளி யப்படும். யானையின் செயலாக வுரைப்பாருமுளர் படியோர்-வணங்காதார். மலைபடு 423 நச். இச்சொல் பிரதியோர்' என்னும் வடமொழித் திரிபு என்பர் அகநானூற்றுரைகாரர். (அக 22; 5 பழையவுரை) வடிமணி-தெளிந்த மணி எனினுமாம், கயிற்றிற் பிணித்து இடுதலால் இருபக்கத்துந் தாழ்ந்த மணி கள் யானை நடக்குந்தோறும் ஒன்றற் கொன்று மாறி ஒலித்தலின் 'மணி இரட்டும் யானை' என்ருர், இரட்டல்-மாறி ஒலித்தல், கடாஅ யானைபோர் வேட்கையால் மதமிக்க யானை, படையிடத்து யானைகள் தொகுதி யாக ஒழுங்குபட நிற்றலின் 'யானைக் கணநிரை' என்ருர், 'வான்மருப்பிற் களிற்று யானை மாமலையிற் கணங்கொண்டு" (பதிற் 80: 1-2) என வருதல் காண்க, கடாஅ யானைக் கணநிரை' எனப் பகைவரது யானைப் படையின் நண்ணுதற் கருமையைக் கூறியது அதனை அலறப் பொருகின்ற சேரலாதன் பெருவலி தோன்றப் பொருட்டென்க. அலறுதல்-துதிக்கை மருப்பு முத லாயின தடியப்படுதலாலுளதாகிய துன்பத்தாற் கதறுதல், "யானைத், தூம் புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சிலொப்ப நிலமிசைப் புரள, வெறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்’ (புற 19:9-12) "அரசுவா வழைப்பக் கோடறுத்து’ (பதிற் 79; 13) என வருவன காண்க. நால்வகைப் படைகளுள் வலி சிறந்த யானைப் படையைத் தம் மிகுவலியாற் சென்று அழித்தலின் யானைக் கணநிரை அலற' என்ருராயினும் ஏனைக் குதிரைப் படை முதலாயின் அழித்தலுங் கொள்க. படையை அழித்துப் பகைவரை வென்று அவர் நாட்டை அடிப்படுத்தலின் யானைக் கணநிரை யலற மா நிலங் கடந்து ' என்ருர், கடந்து என்பதற்குக் கடந்து அடிப்படுத்து என ஒருசொல் வருவிக்க, கடத்தல்-வெல்லல், ஒன்னுர் தேய நடந்து மாநிலம் கடந்தமையால் சேரன் வெல் புகழ் பூமியில் நிலைபெறுதலின் "மாநிலங் கடந்து ஓங்குபுகழ் நிறீஇ' என்ருர்,
*பரந்து பட்ட வியன் ஞாலம் -
தாளிற் றந்து தம்புகழ் நிறிஇ? புற 18: 2-3. - எனப் பிறரும் கூறுதல் காண்க. புகழ் என்றது வென்றிப் புகழை, அர சர்க்கு மற்றைப் புகழினும் வென்றிப் புகழ் உயர்புகழாதலின் அதனை ஓங்கு புகழ்' என்ருர், அதனைப் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடுதலின்" புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ" என்ருர், "வென்றிப் பல்புகழ் விறலோ டேத்தி" என்ருர் மலைபடு கடாத்தும். (மலைபடு 544. )

20 ஆம் பாட்டு 107
போர்க் குதிரைகளை உளை முதலியன சூட்டி அலங்கரித்தலின் " விரி யுளை மா’ என்ருர், 'பரியுடை நன்மா விரியுளை சூட்டி" (பதிற் 65; 2) என் ருர் பிறரும். அது கவரியாதல், 'முரசுடைச் செல்வர் புரவிச்சூட்டு, மூட் டுறு கவரி" (அக 156:1-2) எனவும் 'நன்மான் பொங்குளை - நன்மான் தலைக்கணிந்த வெண்கவரி (ஐங் 13-1 உரை) எனவும் வருவனவற்ருலறி யப்படும். மாவை விரியுளைமா என்றதற்கேப்பக் களிறு தேர்களை, ஒடை யொடு பொலிந்த களிறு, நெடுங் கொடிய தேர் எனக்கொள்க. பாடுபெற அலங்கரிக்கப்பட்ட படையொடு வந்த பகைவரைச் சேரலாதன் வென்று மா முதலியவற்றைக் கைக்கொண்டு அவற்றைத் தனக்கெனப் பாதுகாவாது பரிசிலர்க்கு வழங்கியமையின் விரியுளை மாவுங், களிறுந் தேரும் ஒம்பாது வீசி' என் ருர்,
வயிரியர் கண்ணுளர் என்போர் கூத்தராவர் என்பது, 'நாடகர் நிரு தர் நடரே கண்ணுளர், கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர்’ எனப் பிங்க லந்தையினும் (பிங் 5; 99) "கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடரென்றெண் ணிய பெயர்கள் கூத்தற் கெய்தும்" எனத் திவாகரத்தும் (மக்கட்) வருவன வற்றலும், வயிரியர்' என்பதற்கும் (மதுரைக் 628, 750 நச்; புற 9:9 உரை) கண்ணுளர் என்பதற்கும் (மலைபடு 50 நச்; புற 153: உரை) கூத்தர் என்று நச்சினுர்க்கினியரும் புறநானூற்றுரைகாரரும் பொருளுரைத்தமையானும் தெளியப்படும். அங்ங்ணமாயின் கூத்தர் என்னுது வயிரியர்' 'கண்ணுளர் என இரு வேறு பெயர்களாற் கூறியதென்னையெனின், கூத்தர் பலவகை யினராதல் பற்றியென்க. தொல்காப்பியவுரையில்,
கூத்தராயிற் பாசவரும் வேள்ாளரும் பிறரும் அவ்வாடற்
ருெழிலுக்கு உரியோர்களும் பாரதி விருத்தியும் விலங்
கியற் கூத்தும் கானகக் கூத்துங் கழாய்க் கூத்தும்
ஆடுபவராகச் சாதிவரையறை யிலராகலின அவரை முன்
வைத்தார்’ a என நச்சினுர்க்சினியர் உரைத்தவாறுங் காண்க. (தொல், புறத். 36; 3-6 உரை). ஈண்டு வயிரியர் என்றது பாடுங் கூத்தரை, 'மன்றம் போந்து மறுகு சிறை பாடும் வபிரிய மாக்கள்" (பதிற் 23:3-6) என வருதல் காண்க; பாணர் எனினுமாம், " அருஞ்சிறை யறையிசை வயிரியர்” என் னும் பரிபாடல் (பரி 10:130) உரையில் வயிரியர் என்பதற்குப் பாணரும் கூத்தரும்' எனப் பரிமேலழகர் பொருளுரைத்தமை காண்க. கண்ணுளர் என்றது. சாந்திக் கூத்தரை, "கண்ணுளர்-சாந்திக் கூத்தர்' என அடி யார்க்குநல்லாரும் பொருளுரைத்தவாறு காண்க. (சிலப் 5: 49 உரை) இவர் கழைக்கூத்தாடுதலுமுண்டு என்பது 'கலிநடைக் கழைக் கண்ணுளர்" (கம்ப. பம்பை 21) என கம்பர் கூறுமாற்ருனறியப்படும். மேலே, "கொடைக் கட னமர்ந்த கோடா நெஞ்சினன்" (23) என்று கொடை கூறுகின்ருன், ஈண்டு 'ஓம்பாது வீசி' என்று கொடை கூறியதற்குப் போர்க்குச் சென்ற விடத்துக் கொண்டவற்றைக் கள ம்ப ா டச் சென்ருேர்க்குக் கொடுக்குங் கொடையென வுரைக்க. பாணர் கூத்தர் களம்பாடல்,

Page 69
108 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
* பாணர் பைம் பூ மலைய விளையர்
இன்களி வழா அ மென்சொ லமர்ந்து . கெஞ்சுமலி யுபைகையர் வியன்களம் வாழ்த்த ?? பதிற் 40: 24-6. * அகன்சட் டடாரி தெளிர்ப்ப வொற்றி
வெந்திறல் வியன்களம் பொலிகென் , றேத்தி" புற 370: 18-9 என வருவனவற்ருலு மறிக, பரிசிலர்க்கு மா முதலியவற்றைப் போர்க்களத் தில் அளித்தலை, 'மாற்ருர், உறுமுரண் சிதைத்தநின் னேன்ருள் வாழ்த் திக், காண்கு வந்திசிற் கழருெடி யண்ணல். மழையினும் பெரும்பயம் பொழிதி யதணுற், பசியுடை யொக்கலை யொரீஇய, இசைமேந் தோன்ற னின் பாசறை யானே" (பதிற் 64:13-20) என்பதனுலு மறிக.
17-20. மிளையினையும் கிடங்கினையும் மதிலினையும் ஞாயிலினையு முடைய ஆரெயில் என்க காவற்காடு முதலியனவுடைத்தாக அரண்கள் அமைக்கப்பட்டமை,
*அருங்குழுமி2ாக் குண்டுகிடங்கின்
உயர்ந்தோங்கிய கிரைப்புதவின் நெடுமதில் நிரைஞாயில் அம்புமிழ், அயிலருப்பம்" மதுரைக் 64-7 என்பதஞலு மறிக மதிலரணைச் சூழ்ந்து அகழியும், அதனைச் சூழ்ந்து காவற்காடும் அரணுக அமைந்தமையின், "கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில்' என்ருர், மதிலரணைச் சூழ்ந்து காட்டரண் முதலாய அரண் கள் அமைந்திருத்தல்,
‘மணிநீரும் மண்ணும் ம%லயும் அணிநிழற்
காடு முடைய தரண்' குறள் 742. என்பதனுலு மறியப்படும்.
கடிமிளை-காவற்காடு. அது கடத்தற்கரிய செறிவுடைத் தென்பது, ' அருங்குழுமிளை (மதுரைக் 64) 'கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை" (புற 21:5) என்பவற்ருலும் பகைவர் கடத்தற் கரிதாம்படி முட்கள் பரப்பப் பட்டுக் கிடக்கும் என்பது, "தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து, அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் சூழ்ந்து' என்பதனுலும் அறியப்படும். (தொல், புற சூ 10 நச் உரை) ஆழ்ந்த அகழியாதலின் குண்டகழி என்ருர், ' நிலவரை யிறந்த குண்டு கண் ணகழி’ (புற 21:3) எனப் பிருண்டும் வருதல் காண்க, ஏணிக்கு எட் டாதவாறு மிக உயர்ந்திருத்தலின் நெடுமதில் என்ருர் மதிற்குச் சிறப் புப் பற்றி உயர்வு கூறினுராயினும், புறத்தார்க்கு அகழலாகா அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாந் தலையகலமும் கல் இட்டிகைகளாற் செய்யப்படுதலிற் குத்தப்படாத திண்மையும் முதலாயினவுங் கொள்க.
உேயர்வகலந் திண்மை யருமையிக் நான்கின்
அமைவரண் என்றுரைக்கு நூல்" குறள் 743 எனத் திருவள்ளுவர் கூறியவாறுங் காண்க.
ஞாயில் என்பது மதிலுறுப்பு. அது 'மதிலு ஞாயிலின்றே" (புற355:1) 1 ஞாயின் மதில்’ (பு. வெ. மா. 99) என்பனவற்ருலுமறியப்படும். “ஞாயில்

20 ஆம்பாட்டு 109
. மதிலுறுப்பெனக் கூறும்" என்பது பிங்கலந்தை. இது சிற்றுறுப்பா தல் 'மீன் பூத் தன்ன வுருவ ஞாயில் " (புற 21:4) என்பதனுலும், மதிற் றலையிலமைந்திருத்தல், “ஞாயி லேந்து நிலை யரணம்" (பு. வெ. மா.86) என் பதனுலும், எய்தால் மறைதற்கு மதிற்றலையில் அமைக்கப்படுவதென்பது,
* நிரைஞாயில்-நிரைத்த சூட்டினையுடைய அஃது எய்தால்
மறைதற்கு உயரப்படுப்பது மதுரைக் 66 கச். * ஞாயில் -ஏப்புழைக்கு கடுவாய் எய்து மறையுஞ் சூட்டு? சீவக 105 கச் என்னும் உரைப் பகுதிகளாலும் அறியப்படும். பிறரால் அழிக்கப்படாமை யின் நிலைஞாயில்' என்ருர், -
அம்புடை எயில் எனக்கூட்டி அம்புக்கட்டுக்களையுடைய எயில் எனக் கொள்க. \ அம்பு துஞ்சுங் கடியரணுல்" (புற 20:16) என வருதல் காண்க, அம்புக்கட்டுக்களை ஞாயிலில் வைத்தல், 'அம்புடை ஞாயில்" (பு. வெ. ம. 118) ஞாயில் தொறும் புதைநிறீஇ-எய்து மறையுஞ் சூட்டுத் தோறும் அம்புக் கட்டுக்களையும் கட்டிவைத்து’ (பட்டினப் 288 நச்) என்பனவற்ரு லறியப்படும். கடிமிளை குண்டு கிடங்குகளானும் மதிற்பொறிகளானும் அணு கற்கரிய மதிலாதலின் ஆரெயில்' என்ருர், "அருமை-பொறிகளான் அணு கற்கருமை' எனப் பரிமேலழகர் உரைத்தவாறுங் காண்க (குறள் 743 உரை) எயில்-அரண் மதுரைக் 367 நச். பகைவரது அரணின் கடிமிளை முத லியவற்றை எடுத்துக் கூறினுர், அதனைக் கடந்து உள்ளழித்துண்ட சேர லாதனின் பேராற்றலை நன்கு புலப்படுத்தற் பொருட்டு,
உள்ளழித் துண்ட வென்றது எயிலைக் கடந்து உள்ளழித்தன்றிஉணவு உண்குவ மல்லேம்' என்று தாம் உரைத்த வஞ்சினத்துக்கேற்பப் பகைவர் எயிலைக் கடந்து உள்ளழித்து உணவினை உண்ட என்றவாறு. இதனை,
"இன்றினிது நுகர்ந்த ன மாயின் நாளை மண்புனே யிஞ்சி மதில் கடங் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்" பதிற் 40: 5-8. 'இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றிய
பொற்றேரான் போனகங் கொள்ளானல்’ தெரன். புற 12 கச் மேற். என வருவனவற்ருலுமறிக, உண்ட மார்பன் என இயையும். அடாஅ அடு புகை-ஊர்சுடு புகை. இது வெளிப்படை என்ற இலக்கணத்தின்பாற் படும். அட்டு-செறிந்து. -
அடாப்புகையை அடுபுகையெனவும், அப்புகை அட்டுமலர்ந்த மார்பன் எனவும் கூறிய சிறப்பால் இச் செய்யுளுக்கு அட்டுமலர் மார்பன் என்று பெயராயிற்று.
ஊர்சுடுபுகை உடலிற் பரத்தல் "வாடுக விறைவதின் கண்ணி யொன் ஞர், நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புற 6: 21-2) என்பதனுலு மறிக. சேரலாதன் பகைவர் நாட்டை எரியூட்டி அழிவுசெய்தமை, “யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து, முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்ற மொடு" (பதிற் 15. 1-2) என்பதனுலு மறிக, 'அட்டுமலர் மார்பனென்றது

Page 70
110 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
பகைவரைக் கொன்று அச்செருக்கானே அகன்ற மார்பனென்றவாறு; இச் சிறப்பானே இதற்கு, அட்டுமலர் மார்ன் என்று பெயராயிற்று' என்பர் பழையவுரைகாரர்.
21-23 பரிசின்மாக்கள்-பரிசிலர். அவர் பாணர் கூத்தர் முதலா னுேர், எமர்க்கு என்றது தன் பாணராகிய எமர்க்கு என்றவாறு. எமர்க் கும் பிறர்க்கும் கொடைக்கடனமர்ந்த என முடிக்க. வல்லாராயினும் என்று ஒரு கல்விமாட்டாதவர் கூறப்படுதலின் யாவராயினும் என்றது எமர்க் கும் பிறர்க்கும் எனப்பட்ட பரிசின்மாக்களிற் கண்டார் மதிக்கும் தோற்ற மில்லாதாரை என்க. உம்மை, இழிவு சிறப்பு. வல்லாராயினும என்பதற் குச் சிலவற்றைச் சொல்ல அறியாராயினும் எனினுமாம். 'வல்லினும் வல்லேனுயினும்' என்பதற்குச் சிலவற்றைச் சொல்ல அறிவேனுயினும் அறியேனுயினும் எ ன ப் புறநானூற்றுரைகாரர் பொருளுரைத்தவாறு காண்க. (புற 161 23 உரை) பயன் கருதாது பிறர்க்கீயும் சேரலாதன், பரிசின் மாக்கள் யாவராயினும் வல்லாராயினும் வறுமையான் வருந்தி வந்தோராதலின் அவர்க்குக் கொடைக்கடனமர்ந்தான். 'உண்ணுமையின் ஊன்வாடித் தெண்ணீரிற் கண்மல்கிக், கசிவுற்றவன் பல்கிளையொடு, பசி யலைக்கும் பகையொன்றென்கோ. .எமக் கீவோர் பிறர்க்கீவோர், பிறர்க் கீவோர் தமக்கீபவென வனைத்துரைத்தனன் யானுக" (புற 136, 6-22) என்பதும், எமக்கீவோர் பிறர்க்கீவோர்' என்பதற்கு "வறுமையுற்ற எங்க ளுக்கு ஒன்றை இடுவோரன்ருே பயன் கருதாது பிறர்க்கு இடுமவர்களா வர் என அதன் உரைகாார் எழுதிய வுரையும் ஈண்டு சிந்திக்கற்பாலன. வல்லார் முதலியோர்க்கும் ஈதல்வேண்டுமென்பது "வல்லாராயினும் வல் லுநராயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, யருள வல்லை யாகுமதி" (புற 27:15-7) எனச் சான்றேர் கூறு மாற்றணு மறியப்படும். "வரையாது கொடுத்தலும்-அங்ங்னம் கல்விமிகுதியில்லாத பரிசிலர்க்குக் கொடாதிருத் தலை மேற்கொள்ளாதே அவர்கள் அளவிற்குத் தக்கவற்றைக் கொடுத் த2லயும் (சிறுபாண் 217-8 நச்) என்பதும் ஈண்டறியற்பாலது. வல்லாரா யினும் என்ற உம்மை வல்லுநர்க்கும் கொடைக்கடனமர்ந்தான் என்பது பட நிற்றலின் எச்சவும்மை.
*வல்லினும் வல்லா ராயினும் சென்ருேர்க்குச்
சாலவிழ் நெடுங் குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆஅய்" அக 152; 19 21. என வருதல் காண்க. வல்லாராயினும் என்ற உம்மை எதிர்மறை என்று பழையவுரைகாரர் உரைத்தது வல்லார்க்குக் கொடுத்தலின்மைபற்றியென்க. "வல்லாராயினும். அருளவல்லை யாகுமதி" (புற 27:15-7) எனச் சான் ருேர் அறிவுறுத்துவதனுல் வல்லார்க் குச் சிலர் கொடாதொழிந்தமை துணி யப்படும். ஈகை கடனுதல்பற்றிக் கொடைக்கடன்' என்ருர், "ஈதல் இசை பட வாழ்தல்” எனத் திருவள்ளுவர் பணித்தவாறும் காண்க. (குறள் 231) கடன்-கடமை. 'அடனசை மறந்தவெங் குழிசி மலர்க்குங், கடனறியா ளர் பிறநாட் டின்மையின்’ புற 393; 4-5. கொடைக்கடனமர்ந்த சேர்

20 ஆம் பாட்டு 111
லாதன் தன்பாற் பரிசில்பெற வந்த பரிசின்மாக்கள் கண்டார் மதிக்கும் தோற்றமுளராயினும் இலராயினும் ஒருகலை வல்லுநராயினும் மாட்டாரா யினும் அவரவர் தகுதிக் கேற்ப ஈயும் கோட்டமில்லாத நெஞ்சினனுத லின் கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்' என்ருர், "கொடைக் கட னேன்ற கோடாநெஞ்சின் உதியன்" (அக 168; 6-7) எனப் பிறரும் கூறுதல் காண்க.
நடந்து (10) கடந்து (13) நிறீஇ (14) வீசி (16) என நின்றவற்றை நெஞ்சினன் (23) என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.
24-27. உலகில் நிலைபெற்ற உயிர்களின் பசியையும் நீர்வேட்கை யையும் நீக்கும் எழிலி, யாண்டுபலவாகப் பெய்யாதொழியின் அவ்வுயிர்கள் அழியுமாகலின் "மன்னுயிரழிய யாண்டுபல மாறி எழிலி தலையாதாயினும்" என்ருர், 'மன்னுயிரழிய யாண்டுபல துளக்கி . தண்ணியலெழிலி தலை யாது மாறி, மாரி பொய்க்குவதாயினும்” (பதிற் 18: 8-11) என வந்தவா றுங் காண்க. மாறி என்றது யாண்டுதொறும் பருவம் பொய்யாது பெய் யும் தன்னியல்பில் மாறுபட்டு என்றவாறு, பருவம் பொய்யாது பெய்தல் வானத்தின் இயல்பு. "பொய்யா வானம்" என்ருர் பிறரும். (நெடுநல் 2; சிலப் 23. கட்டுரை 9) 'துளிபதனறிந்து பொழிய" (புற 391:20) என்பதும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. தலையாதாயினும், உம்மை எதிர்மறை.
யாண்டு பலவாக எழிலி தலையாதொழிதலால் விளைவஃகிப் பயன்கள் குன்றிய வற்கடகாலத்தும் இரவலர்க்கு வயிற்றிற் பசி மிகும்படி சிறிது ஈதலைச் செய்யானுதலின் வயிறு பசிகூர வீயலன்' என்ருர்,
* அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்க வவன்றளே' புற 101: 11-2 *வெள்ளி த்ென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை யிரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெருமபெய يقة أكثرL TIbfb هاً " . . . . . . ........ ....-....-.......... ... هم. தன்னிலை யறியுக கை வக் நிலை யிடுக்க ணரிரியல் போக வுடைய கொடுத்தோ னெங்தை கொடைமேந் தோன்றல்" புற 388: 1-7. என்பன ஈண்டறியற்பாலன. இதனுல் வற்கடகாலத்தும் இரவலரின் பசி தணியுமாறு நிரம்பக் கொடுத்தல் கூறினர். 'வயிறுபசிகூர வீயலனென மூன்ருவதும் கொடை கூறியதற்கு, மழை பெய்யா விழைவில் காலைத் தன் பரிகரமாயுள்ளார்க்கு அவர்கள் பசித்து வருந்தாமல் வேண்டும்பொழுது களிலே வேண்டுவன கொடுக்குமென்று ஓர் கொடை நிலையாக வுரைக்க” என்பர் பழையவுரைகாரர்.
பலர்புகழ் பண்பினையுடைய சேரலாதன் பாணர் கூத்தர் முதலாகிய யாவர்க்கும் வேண்டுவன வழங்கி அவர்கள் இன்மை தீர்க்கும் நல்லோ ணுய் வாழ்ந்தானுகலின் அவனை ஈன்ற தாய்வயிற்றை வியந்து 'வயிறு மாசிலீஇய ரவன் ஈன்ற தாயே" என வாழ்த்தினர். 'புலிசேர்ந்து போகிய

Page 71
112 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
கல்லளை போல, ஈன்ற வயிருே விதுவே, தோன்றுவன் மாதோ போர்க் களத் தானே' (புற 86; 6) என ஒரு வீரனைப் பெற்ற தாய் தன் வயிற்றை எடுத்துக் கூறுதலுங் காண்க, நல்லோன் ஒருவனை வாழ்த்துதலொடு அவனைப் பெற்ற தாய் தந்தையரையும் வாழ்த்தல்,
*சிறுவெள் ளருவிப் பெருங்க ணுடனே
நீவா ழியர்நின் தந்தை
தாய்வா ழியர்ரிற் பயந்திசி னுேரே? புற 137; 13-5.
என வருமாற்ருனறியப்படும், தாய்வயிறு விளங்குவாளாகவென்றது அத் தாய் வயிற்றை யாவரும் புகழ்ந்து பேசுமாறு அவள் வயிற்றிற் பிறந் தோர் இசைமேஎந் தோன்றல்களாய் நெடுங்காலம் வாழ்தலொடு, அவர் கள் சந்ததியும் வழிவழிப் பெருகுவதாக என்பதாம். அவன் ஈன்ற தாய் வயிறு மாசிலீஇயர் என்பதற்கு அவனைப்பெற்ற தாயின் வயிறு குற்ற மின்றி விளங்குக' என்றுரைப்பினும் அமையும்.
இதனுற் சொல்லியது அவன்றன் செல்வப் பொ லிவு கண்டு நீ யாருடைய பாணன் என்று வினவியாற்கு யான் இன்னுருடையேன் என்று சொல்லி முடிக்க அவன் குணங்கள் இன்ன கூறிப் பின் அவனை வாழ்த்தி
முடித்தவாருயிற்று.
வய்த்தலறியான்; பொய்த்தலறியான்; அட்டுமலர் மார்பன்; கொடைக் கடனமர்ந்த கோடாநெஞ்சினன்; வயிறு பசிகூர வீயலன் என அவன் இயல்புகளை மொழிந்து அவனை வாழ்த்தி முடித்தலின் துறை இயன் மொழி வாழ்த்தாயிற்று.
இருமுந்நீர் (2) எனவும், 'முரணியோர் (3) எனவும், "கடிமிளை (17) எனவும், 'நெடுமதில் (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடியாக லான் வஞ்சித்தூக்குமாயிற்று.
கனவினும் என்பது கூன்.
பழையவுரை.
3 முரணியோரையென விரியும் இரண்டாவதனைத் தலைச்சென்றென் பதற்கு இடத்திலே சென்றென்பது பொருளாக்காது முடிவிலே சென் றென்பது பொருளாக்கி அதற்குப் போந்தபொருள் முடிவு செயலாக்கி அதனெடு முடிக்க, மேலே கொடைக் கடனமர்ந்த கோடா நெஞ்சினன் (23) என்று கொடை கூறுகின்ருன் ஈண்டு ஒம்பாது வீசி(16)என்று கொடை கூறியற்குக் காத்தற்குச் சென்றவிடைக் கொண்டவற்றைக் களம்பாடச் சென் ருர்க்குக் கொடுக்கும் கொடையெனவுரைக்க, 20, அடாஅ அடுபுகைஊர்சுடு புகை, அட்டுமலர் மார்பனென்றது பகைவரைக் கொன்று அச் செருக்கானே அகன்ற மார்பனென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு அட்டு மலர் மார்பன் என்று பெயராயிற்று. 21, எமர்க்கும் பிறர்க்குமென நின்ற வற்றைக் கொடைக்கடனமர்ந்தவென்பதோடு முடித்து, எமர்க்கென்றது தன் பாணராகிய எமர்க்கென்றும், பிறர்க்கென்றது தன்பாணரல்லாத பிறர்க் கென்றும் உரைக்க, 21-2 பரிசின் மாக்கள் யாவராயினும் வல்லாரயினு

20 ஆம் பாட்டு - 113
மெனக் கூட்டிப் பரிசின்மாக்களென்றதற்கு முன் சொன்ன எமர்க்கும் பிறர்க் குமெனப்பட்டாரையே ஆக்கி, யாவராயினு மென்றதற்குக் கண்டார் மதிக் கப்படும் தோற்றமிலராயினுமெனவும், வல்லாராயினு மென்றதற்கு ஒரு கல்விமாட்டாராயினுமெனவும் உரைக்க. யாவராயினுமென்ற உம்மை இழிவு சிறப்பு: வல்லாராயினும் என்ற உம்மை எதிர்மறை. நடந்து (10) கடந்து (18) நிறீஇ (14) வீசி (16) என நின்றவற்றை நெஞ்சினன் (2) என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க. 26. வயிறு பசிகூர வீயலனென மூன்ரு வதும் கொடை கூறியதற்கு மழை பெய்யா விழைவில்காலைத் தன் பரிகர மாயுள்ளார்க்கு அவர்கள் பசித்து வருந்தாமல் வேண்டும் பொழுதுகளிலே வேண்டுவன கொடுக்குமென்று ஓர் கொடை நிலையாக வுரைக்க.
நுங்கோ யாரென வினவின் எங்கோ (1) சேரலாதன், அவன் கண்ணி வாழ்க (5); அவனியல்பிருக்குமாறு சொல்லின் மாற்றேர் தேஎத்து மாறிய வினையே (7) வெயிற்றுக ளனைத்தும் வாய்த்தலறியான் (6); பொய்த்தலறி யான் (9); அட்டுமலர் மார்பன் (20); கொடைக்கடனமர்ந்த கோடாநெஞ்சி
னன் (23); கோடையிடத்து எழிலி தலையாதாயினும் (25) வயிறு பசிகூர
வீயலன் (26) ஆதலான் அவனையீன்ற தாய் வயிறு விளங்குவாளாக (27) வினை முடிபு செய்க.
இதனுற் சொல்லியது அவன்றன் செல்வப் பொலிவு கண்டு நீ யாருடைய பாணனென்று வினவியாற்கு யான் இன்னுருடையேனென்று சொல்லி முடிக்க அவன் குணங்கள் இன்ன கூறிப் பின் அவனை வாழ்த்தி முடித்தவாருயிற்று.
இருமுந்நீர் (2) எனவும், முரணியோர் (3) எனவும், "கடிமிளை (1) எனவும், நெடுமதில் (18) எனவும் எழுந்த நான்கடியும் வஞ்சியடியாக லான் வஞ்சித்துாக்குமாயிற்று, கனவினுமென்பது கூன்.
an
ஒப்புமைப் பகுதி 3. தலைச்சென்று: மதுரைக் 8ே, 139, 221; புற 16:3; 221: 5. 4. கடுஞ்சினமுன்பு: “காலனனைய கடுஞ்சின முன்ப" பதிற் 39; 8; "கடுஞ்சின முன்பிற் களிறு' நற் 103; 3
4-5. சேரலாதன் கடம்பு முதல் தடிந்து: பதிற் 11:13-6 அடிக் குறிப்பு. 5. நெடுஞ்சேரலாதன்: 'குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்கு பதிற் 5ம் பதிகம் 2; "குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு’ கேம் பதிகம் 1.
கண்ணியை வாழ்த்தல்: "யாங்குவல் லுகையோ வாழ்கநின் கண்ணி'உள்ளி யது முடித்தி வாழ்கநின் கண்ணி" "சினஞ்செலத் தணியுமோ வாழ்கங்ன் கண்ணி’ பதிற் 52:27; 54:2; 59; 13; "வாழ்ககின் கண்ணி? நற் 121:7; 'இனிதுசெய்தனை யால் வாழ்கநின் கண்ணி? அக 314; 18; 'வேல்கெழு குருசில் கண்டே ஞதலின், விடுத்தனென் வாழ்கநின் கண்ணி? புற 198:11, 2; 'வண்டார் கமழ்கண்ணி வாழ்க
வென்று பு. வெ. மா. 13; வாழ்கநூங் கண்ணி மாதோ? சீவக 1890.
7. ஒன்னுர்தே எத்து: "பகைவர் தேஎத் தாயினும்’ பதிற் 32:16, 9 நண்ணுர்: பட்டினப் 225; பு வெ. மா. 46,
15

Page 72
114 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
10. ஒன்ஞர்தேவ: “ஒன்னர் தேயப் பூம8லக் துரைஇ? 'தம்பெயர் போகிய வொன்ஞர் தேய? பதிற் 40; 9; 88; 4.
வடிமணி: பதிற் 31:5; 52; 2; பெரும் பாண் 120: படடினம் 232, ஐங் 468; பசி 12:29; கலி 97; 13 அக 350; 7; பு. வெ. மர 253,
11-2 மணியையுடைய யானை பதிற் 33; 2-3; சிறு பாண் 141; 2; தற் 227:5: பரி 19:28: கலி 99; 7; புற 22: 2-8; 72; 3-4; 165; 6-7 201:4; 351: 1 பு வெ. மா. 53; இன்னு 14; சீவக 2155.
12. யானைக் கணநிரை: "நிவந்த யானைக் கணநிரை’ மதுரைக் 744, 14. புலவர் பாடும் புகழுடையோர்? புற 27: ?. புகழ்நிறீஇ 'தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ" புற 18:3. விரியுண்மச: * விரியு2ளப் பொலிந்த வீங்குசெலற் கலிமா ?? : விரியு2ள கன் மான் " " விரியுளைப் பொலிந்த பரியுடை கன்மான் ? நற் 121; 8; 185; 4; 270; 83 அக 125; 16; 8 விரியுஃா நன்மா ? ஐங் 488 கலி 75; 16; "விரியுளே மான்’ திணே நூற் 113 ۔
மா களிறு தேர்: 'நெடுகல் யானையுந் தேரு மாவும் ?? ' ஆடு நடைப் புரவியும் களிறுங் தேரும் ' புற 240: 1; * ப ரு மித் த களிறு மாவும் பரந்திய றேரும் பண்ணி ?? " ஆய்மதக் களிறு திண்டேர் அணிமணிப் புரவி' சீவக 263; 2178; * ஆடியல் யானையுங் தேரும் மாவும் " சிலப் 26: 83. ' தேரும் புரவியும் வார் கவுள் யானேயும் ' பெருங் (2) 19: 218.
16. ஓம்பாது வீசி: * அரிய வென்ன தோம்பாது வீசி' பதிற் 44; 4; 'ஓம் பாது வீசி? மதுரைக் 146. سمي
15-6. பரிசிலர்க்கு மா முதலியன வழங்கல்: பதிற். 'வந்தனென்? 2-3; சிறு பரண் 142-3; பெரும் பாண் 27-8; மதுரைக் 223-4; மைேபடு 399-400; கலி 42:20-1; 50; 15-7; அக 238; 11-14: புற 89; 18; 114:6; 123: 3-4; 205:12-4. 33; 2-4 334; 8-10; 359; 15-6; பு. வெ. மா. 214.
13-6. அமர்கடந்து பெற்றவற்றைப் பரிசிலர்க்கு கல்கல்: பதிற் 2ம் பதி 8-11; 43:28-9; 44: 3-4; 47:1-2; 48; 4-7; 6ம் பதி 3-4; 9ம் பதி 8-9; சிறுபரண் 246-8; பெரும் பாண் 491-3; மதுரைக் 145-6; 220-4; 766 கச் மல்படு 71-2; அக 349, 5-8; புற 6:11-16; 12:3-5; 122:6-7; 320:16-7; பு: வெ. மா. 16:51, !
18. நில்ஞாயில்: "நிரை நிலை ஞாயில் நெடுமதில்: அக 124; 16,
17-9. கடிமி2ளக் குண்டு கிடங்கின் நெடுமதி னிரைபதணத், தண்ணலம் பெருங்கோட் டகப்பா? பதிற் 22:4-8; "குண்டுகண் ணகழிய மதில்' 'கோள் வன் முதஜலய குண்டுகண் ணகழி, வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை' * குண்டுகண் ணகழிய குறுந்த7ண் ஞாயில், ஆரெயில்' 'நெடுமதி னிரைஞா யிற், கடிமிளே குண்டு கிடங்கின், மீப்புடை யாரரண்" பதிற் 22:4-6; 45; 7; 53; 8-9; 71:12-3; "இலங்குதொடி 11-8; “கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங் கின், நல்லெயில்’ மதுரைக் 730-1; 'தூர்ந்த கிடங்கிற் சோர்ந்த ஞாயிற், சிதைந்த விஞ்சிக் கதுவாய் மூதூர்’ புற 350: 1-2; 'கிடங்கு சூழ் மதில்’ சீவக 526; * அருமிளை யுடுத்த வகழி சூழ் போகி.போருழந் தெடுத்த வாரெயில்? சிலப் 13: 18.3-9. -
19, ஆரெயில்: பதிற் 29; 13; 33; 11; 62; 4; 71; 18; 84; 8; துைரைக் 367; புற 203 10; 392: 7; d. Gau. Dr. 210.
21. எமர்க்கும் பிறர்க்குஞ் செம்ம8ல யாகலின்? புற 161; 8 22. பரிசின்மக்கள்: பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கி' 'பரிசின் மாக் கள், வரிசை யறிலோ வரிதே' புற6:16; 121; 2-3,

2-ஆம் பதிகம் 115
வல்லாரா வினும்: வல்லா ராயினும் வல்லுனராயினும்? புற 57; 1. கொடைக்கடன்: 'கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்து" பெரும்பரண் 445 "கொடைக்கட னிறுத்த செம்மலோய்.” மைேபடு 543; இதனுற் கொடைக்கட னிறுத்த அவன் தொல்லோர் வரவு கூறினர் மல்படு 539-40 கச் வி. உரை. * கொடைக் கடனுஞ் சா அஅயக் கண்ணும்? நாலடி 184.
24 பதிற் 18:8 அடிக்குறிப்பு. மன்னுயிர்: பதிற் 15: 35 அடிக்குறிப்பு. யாண்டுபல: “யாண்டுபல கழிய’ மதுரைக் 150, 25. தண்ணியலெழிலி: பதிற் 18: 10 அடிக் குறிப்பு. 24-5, பதிற் 18: 8-10 அடிக்குறிப்பு. -
பதிகம். மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசி னுதியஞ் சேரற்கு வெளியன் வேண்மா னல்லினி யீன்றமகன் அமைவர லருவி மிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி ஞரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ அருவிலை கன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி அமையார்த் தேய்த்த வணங்குடை கோன்ருள் இமைய வரம்ப னெடுஞ்சேர லாதனைக் குமட்டுர்க் கண்ணனுர் பாடினுர் பத்துப்பாட்டு, அவைதாம்: புண்ணுமிழ் குருதி, மறம்விங்கு பல்புகழ், பூத்தநெய் தல், சான்றேர் மெய்ம்மறை, நிறையவெள்ளம், துயிலின்பாயல், வலம்படு வியன்பனை, கூந்தல்விறலியர், வளனறுபைதிரம், அட்டுமலர் மார்பன்.
இவை பாட்டின் பதிகம் " . -- ܀ -- .ነ
பாடிப்பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறுர் பிரமதாயம் கொடுத்து முப்பத்தெட்டியாண்டு தென்னுட்டுள் வருவதனிற் பாகம்
கொடுத்தான் அக்கோ, ~) , ' ' + ".
இமையவரம்ப னெடுஞ்செரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு
வீற்றிருந்தான். SSSMSSSSSSS S
*பிரமதாயம்-அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்.

Page 73
116 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
ப-ரை: 1-3 மன்னிய பெரும் புகழ்-நிலைபெற்ற பெரிய புக ழினையும், மறு இல் வாய்மொழி-குற்றம் இல்லாத மெய்ம்மொழியினே யும், இன் இசை முரசின்-இனிய ஓசையையுடைய முரசினையுமுடைய, உதியஞ் சேரற்கு - உதியஞ்சேரல் என்ற வேந்தனுக்கு, வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-வெளியன் மகளான நல்லினி என் பாள் ஈன்ற மகன்,
4-7 அமை வரல் அருவி இமையம் வில் பொறித்து-அமைந்து வருதலையுடைய இமயமலையில் வில் இலச்சினையைப் பொறித்து, இமிழ் கடல் வேலி தமிழகம் விளங்க - ஆரவாரத்தையுடைய கடலை வேலியாகவுடைய தமிழ்காடு விளங்கும் படி, தகை சால் சிறப்பொடு தன் கேர்ல் கிறிஇ-நன்மை அமைந்த தலைமையால் செங்கோலை நிலை நிறுத்தி, பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி-பெரிய புகழ் பொருந்
திய முறைமையினேயுடைய வடநாட்டரசரை வணங்கச் செய்து,
8-13 நயன் இல் வன் சொல் யவனர் பிணித்து-இன்பம் பயத் தலில்லாத வன்சொல்லைப் பேசுவோராகிய யவனரைப் போருள் அகப்படுத்தி, கெய் தலை பெய்து-நெய்யை அவர் தலையில் இட்டு, கை பின் கொளிஇ-கையைப் பிறகு ஒன்ருேடொன்று பொருந்தப் பிணி த்து, அரு விலை நல் கலம் வயிரமொடு கொண்டு-மதித்தற் கரிய வி3ல யையுடைய நன் ருகிய அணிகலன்களையும் வயிரங்களையும் பின் தண்ட மாகக் கொண்டு, பெரு விறல் மூதூர் தக்து பிறர்க்கு உதவி-அவற் றைப் பெரிய வெற்றியையுடைய மூதூரிம் கொணர்ந்து பாணர் முத லிய பிறர்க்குக் கொடுத்து அமையார் தேய்த்த-பகைவரை அழித்த, அணங்குடை நோன் தாள்-பிறரை வருத்தலையுடைய வலிய முயற்சி யுடைய, இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை-இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் வேந்தன, குமட்டூர் கண்ணனூர் பாடினர் பத்துப் பாட்டு-குமட்டூர்க் கண்ணனர் புகழ்ந்து பாடினர் பத்துப்பாட்டு,
முடிபு: இமையம் விற்பொறித்துத் தமிழகம் விளங்கத் தன் கோனி றிஇ ஆசியர் வணக்கி யவனர்ப் பி னித் து நன்கலம் வயிரமெrடு கொண்டு மூதூர்த் தந்து பிறர்க்குதவி அமையார்த் தேய்த்த நேர்ன்ரு 2ளயுடைய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணஞர் பாடினர் பத்துப்பாட்டு என்க.
ஆடரை 1-3. பெரும்புகழினையும் வாய்மொழியினையும் முரசினையுமுடைய உதியஞ்சேரல் என்க. பெரும் புகழ் என்றது வென்றி கொடை முதலியவற்ரு லாய புகழை. அப்புகழ்கள்தாம் உலகுள்ளனவும் அழியாது நிலை பெறுதலின்

2-ஆம் பதிகம் 117
*மன்னிய பெரும் புகழ்' என்ருர், தீங்கு பயத்தலில்லாத மெய்ம்மொழியை "மறுவில் வாய்மொழி’ என்ருர்,
* Gin urrun, 55ouro எனப்படுவ தியாதெனின் யாதொன்றுக் தீமை யிலாத சொலல்’ குறள் 291 என்ருர் திருவள்ளுவரும். இன்னிசை முரசின் உதியஞ்சேரல் என்ருர், சேரல் முடியுடையப் பெருவேந்தனுகலின், "இன்னிசை முரசிற் பொருப்பன்" (கலி, 105-73) எனப் பாண்டியனைப் பிறர் கூறுதலுங் காண்க. முடிவேந்தர்க்கு முரசு உரியதாதல் "படையுங் கொடியுங் குடையு முரசு.தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய" (தொல்: மரபு 71) என்பதனுலறிக வேண்மாள்வேளிர்குல மகள். உதியஞ்சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன் (3) இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் (18) என இயையும்,
4-7. பனிபடு நெடுவரையாகிய இமயத்து அரு வி எக்காலத்தும் அமைந்து வருதலுடைமையின் அமைவரலருவி இமயம்" என்ருர், அமைவர லருவி யார்க்கு மியைத்து (கலி 105; 74-5) எனப்பிறரும் கூறுதல் காண்க சேரலாதன் இமையத்துத் தன் இலாஞ்சனையாகிய வில்லைப்பொறித்தமை,
'வலம்படு முரசிற் சேர லாதன்
முக்கீ ரோட்டிக்" கடம்பறுத் திமையத்து முன்னுேர் மருள வணங்குவிற் பொறித்து? அக 396: 3-5. 66 மாமூலனுரும். -
*ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்கு விற் பொறித்து வெஞ்சின வேக்தரைப் பிணித்தோன்’ அக 393: 16-8. எனப் பரணரும் கூறுமாற்றுமானும் அறியப்படும். பொறித்து-வைத்து. சிறுப்ாண் 41 நச். தமிழகம்-தமிழ்நாடு. இது சேரர் சோழர் பாண்டியர் என் னும் மூவர்க்கும் உரியதென்பது, 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி, குற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மனுர் புலவர்" (தொல், செய்: 79) எனத் தொல்காப்பியனுர் உரைத்தவாற்ருனும் அறியப் படும். தமிழகத்தின் வடதிசை ஒழிந்த மூன்று திசைகளும் கடலை வேலியாகவு டைமைபற்றி இமிழ் கடல் வேலித் தமிழகம்' என்ருர், 'தெற்கின்கட் குமரிக் கடலும் கிழக்கின் கண்ணும் மேற்கின் கண்ணும் ஒழிந்த கடலுகளுமே தமிழ் நாட்டிற்கு எல்லையென்று கூறுபடுத்த. நல்ல நாட்டிடத் தென்க' என அடியார்க்கு நல்லார் உரைத்தலுங் காண்க. ( சிலப் 8:1-2 உரை ) கடல் வேலி-கடலாகிய வேலி எனினுமாம். வேலி-அரண். சூழ்தலுமாம். தமிழகம் விளங்கத் தன்கோல் நிறீஇ என்றது தன் நாடாகிய குடபுலமன்றித் தமிழகம் முழுமையும் விளங்கும்படி தன் கோலே நிறுத்தி என்றவாறு. இதனுல் நெடுஞ் சேரலாதன் தமிழகத்தைத் தன் கோற்கீழ் வைத்தாண்டமை கூறினுர், தகை சால் சிறப்பொடு தன்கோணிறீஇ என மாறிக்காட்டுக. தகை-நன்மை, என் றது அறநெறியை, கோல்-அரசாட்சி. இனி மாருதே, தகைசால் சிறப் பொடு ஆரியர் வணக்கி எனக் கிடந்தவாறே கொண்டு அறநெறி பொருந்திய தலைமையால் ஆரியரை வணங்கச் செய்து என்று உரைப்பினும் அமையும்,
3922)

Page 74
118 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
ஈண்டு "மாண்ட, அறநெறி முதற்றே யரசின் கொற்றம்" (புற 55; 9-10) என்பது அறிதற்பாலது. பேரிசை-வென்றி முதலியவற்றணுய பெரியபுகழ், சேரலாதனுக்குப் பகைவராகிய ஆரியமன்னரைப் பேரிசை மரபி ஞரியர்' என மிகுத்துக் கூறியது அப்புகழுடையாரை வணக்கிய சேரலாதனின் பேராற் றல் புலப்படவேண்டி என்க.
8-18. யவனர்மொழி தீந்தமிழ் போன்று இன்பம் பயவரது கடின மொழியாயிருத்தல்பற்றி “நயனில் வன்சொல் யவனர்" என்ருர், "வன்சொல் யவனர்" என்ருர் இளங்கோவடிகளும். (சிலப் 29: ஊசல் வரி ) யவனப் பிணித்து-தன்னெடு மாறுபட்டு எதிர்ந்தவன அரசரின் வலியைக் கெடுத்து அவரைப் போரில் அகப்படுத்தி, பகைவரைப்போரிற் பிணித்தல்,
'சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
யருஞ்சமங் ததையத் தாக்கி முரசமொடு ஒருங் ககப் படேன் னுயின்' புற 72; 7 - 9 'பகைவர்ப் பிணிக்கு மாற்றல்" pgo 229:: ون. என்பனவற்ருலும் அறியப்படும். நெய்தலைப் பெய்தலும் கைபிற் கொள்ளுத லும் அவரை அவமதித்தற் பொருட்டு என்க. போரில் தோற்ருர் கையைப் பிணித்தல், "போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ" என்னும் பரிபாடலி னுங் காண்க. (பரி 18:34) அருவிலை நன்கலம் வயிரமீொடு கொண்டு என்றது அந்த யவனரைச் சிறைவிடுத்தற் பொருட்டு அருவிலை நன்கலங்களையும் வயி ரங்களையும் பின் தண்டமாகப் பெற்று என்றவாறு,
"நிறையருக் தானே வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே? புற 156; 5.6. எனப் பிருண்டும் வருதல் காண்க.
அருவிலை நன்கலமும் வயிரமும் கொண்டு மூதூர்த்தந்து பிறர்க்குதவி என்க. பகைவர் பாற் பெற்ற பொருள்களை தம் மூதூர்க் கொணர்ந்து, பிறர்க் குக் கொடுக்கும் வழக்கம்,
'தண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டி யுட் டந்து கொடுப்பித்து" பதிற் 6-ம் பதி. *பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனேயும்
வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி? பதிற் 9-ம் பதி. என வருவனவற்ருலுமறியப்படும்.
மூதூர் என்றது வஞ்சியை சேரலாதன் மூதூர் வஞ்சியாதல், "ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத், தொன்றுமுதிர் வடவரை வ ண ங் கு விற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன், வஞ்சி" (அக 396: 16-9) எனவும், "முந்நீரினுள்புக்கு மூவாக் கடம் பெறிந்தான், மன்னன் கோச்சே ரன் வளவஞ்சி" (சிலப் 17: உள்வரி 3) எனவும் வருவனவற்ருலுமறியப்படும், அதனைப் பெருவிறன் மூதூர் என்றது ‘தன்னலத்தாற் பிற மூதூர்களை வென்ற பெரிய வெற்றியையுடைய மூதூராதல்பற்றி. 'வலம்படு சிறப்பின்
* 'வஞ்சியன்னவென் கலந்தந்து? அக 396: 19,
 

2-ஆம் பதிகம் 19
வஞ்சி மூதூர்" என்ருர் சிலப்பதிகாரத்தும். (சிலப் 28-4) பிறர்க்குதவிழியன் றது, விலைமதித்தற்கரிய நன்கலன்களையும் வயிரங்களையும் தனக்கென ஒத் பாது பாணர்முதலாகிய பரிசிலர்க்கு அளித்து என்றவாறு, "அரிய வெல்லா மெளிதினிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி” என மதுரைக்காஞ்சி udaು வருதல் (மதுரைக் 145; 6) ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. -
நோன்ருள்-வலிய முயற்சி. மலைபடு 163 நச், 'தாளென்றது படைய றுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவிமுதலாயின இயற்றலும் புற 109 13 வி. உரை. சேரலாதன் வலிய முயற்சியாற் பகைவரை அழித்தமையின் ‘அமையார்த் தேய்த்த நோன்ருள்" என்ருர், "மண்டம ரட்ட மதனுடை நோன்ருள்.விறல்கெழு வேந்தே" (புற 213:1-2) எனப் பிறருங் கூறு தல் காண்க. பகைவரைக்கொன்ற முயற்சி பிறர்க்கு அச்சத்தைச் செய்தலின் அதனை அணங்குடை நோன்ருள்' என்ருர்.
பிறர்குதவி அமையார்த் தேய்ந்த எனக் கூட்டிப் பிறர்க்கு ஈந்து அதனல் பகைவரை அளித்த என்றுரைப்பினுமமையும், ஈகை வென்றிற்கு ஏதுவாதல்
*அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக கெடாத் துப்பினின் பகையெதிர்க் தோரே? புற 27: 17-9. என்பதன் விசேடவுரையில், "அருளிலர் கொடாமை வல்லராகுக வென்ற தனுல் பயன் அவையுடையோர் பகைவரை வெல்வராதலால் பகையெதிர்ந் தோர் அவையிலராக வென்பதாம்' என அதன் உரையாசிரியர் உரைத்த வாற்ருனும் அறியப்படும். அமையார்-தன்னெடு பொருந்தாதோர்; என்றது பகைவரை. இமய வரம்பன்-தன் ஆணைக்கு இமயத்தை வரம்பாகவுடைய வன். சேரலாதன் தெற்கே குமரிமுதல் வடக்கே இமயம் வரை தன் ஆணை யைச் செலுத்தினுன் என்பது, tk w
"ஆரியர் துவன்றிய பேரிசை யிமையம்
தென்னங் குமரியோ டாயிடை பன்மீக் கூறுகர் மறந்தபக் கடந்தே" பதிற் 11: 23-5
என்பனவும் 'குமரியொடு விடவிமையத் தொருமொழி வைத்துலகாண்ட சேர லாதற்கு (சிலப் 29; உரைப்பாட்டு)எனவும் வருவனவற்றிலும் அறியப்படும்.
ஒப்புலமப் பகுதி
1. பெரும் புகழ்: “மைந்துமலி பெரும்புகழ்" பதிற் 23:16; 8உ2லவில் பெரும் புகழ், பெருங் (1) 54 82.
வாய்மொழி: பொய்யறியா வாய்மொழியால்" மதுரைக் 19,
2. இன்னிசை முரசு " இன்னிசை முரசு முழங்க? இன்னிசை முரச மிடைப் புலத் தொழிய" மதுரைக் 80-349; 'இன்னிசை முரசி னிரங்கி? நற் 197:10; “இன் னிசை முரசின் கலி 105; 73; 'இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்க?? 'இன்னிசை மூரசி னிரங்கி? அக 251: 9; 312:10;

Page 75
120 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை முரசின் உதியஞ் சேரல்: பதிற் 15:20-1 அடிக்குறிப்பு. 4. அருவி இமையம்: ' உயர்வரை யிமயத் துச்சி, வாஅ னிழி தரும் வயங்கு வெள்ளருவி ?? தற் 369; 7-8.
இமையத்து விற் பொறித்தது: "வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட், டிமயஞ் சூட்டிய வே10 விற்பொறி, மாண் வினை நெடுக்தேர் வானவன் ' புற 32; 14-6; ‘விடர்ச்சிலை பொறித்த வேந்தன்' , 'இமையத்து, வானவர் மருள மலைவிற் பூட் டிய வானவர்'; 'விற்றிலேக் கொண்ட வியன்பேரிமையத்து'; 'விடர்ச்சிலை பொறித்த விறலோனுயினும்? சிலப் 23: 82; 25: 1-3; 25; 118; 25: 183; 23; 136; சேவிடர்ச்சிலை பொறித்த வேந்தன்? மணி 28; 104
5. கடல்வேலி: விரிகடல் வேலி வியலகம்? சிறுபரண் 114, தமிழஓம்: *வையக வரைப்பிற் றமிழகம்?? புற 188; 18; "இமிழ் கடல் வ,ை ப் பிற் றமிழகம்" சிலப் 3: 47; ‘சம்புத் தீவினுட் டமிழக மருங்கில்' மணி 17: 62.
6. தன் கேர னிறீஇ' 'உம்பற் காட்டைத் தன்கோ னிறீஇ" பதிற் 3-ம் பதி, தகைசால் சிறப்பு: 'தகைசால் சிறப்பிற் றன்னெடு' பெருங் 37; 56 9. நெய்தல்ப் பெய்து பெருங் (3) 22:199, 10. அருவில் நன்கலம்: *அருவிலே நன்கல மமைக்குங் கா ஜூல? புற 218: 4 :அருவி2ல கன்கலஞ்செய் போர்வை’ சீவக 2586; “அருவிலை கன்கல மமைந்தவை பிறவும்? பெருங் (4) 2; 82.
11. விறன்மூதூர்: பெரும்ப சண் 411 மல்ேபடு 487; அக 17: 19; 114; 10; சில ம் 19: கட்டுரை 4,
10-11 'காடொறு நன்கலங் களிற்றெடு கொணர்ந்து, கூடுவிளங்கு வியப்னகர்ப் பரிசின் முற் றளிப்ப? புற 148:36,
7-11. பகைவர்பாற் பெற்றவற்றைப் பிறர்க்கிதல்: பதிற் 20; 13-7 அடிக் குறிப்பு.
12. அமைபசர்த் தேய்த்தல் பதிற் 20: 11 அடிக்குறிப்பு தோன்முள்: பதிற் 64: 14; முருகு 4; பொருந 53; 147; சிறு பாண் 115; பட்டினப் 278; மலேபடு 163: நற் 8:7; அக 29: 1; புற 75; 6:148:2; 182: S; 387:29
 

மூன்ரும் பத் து
1. அடுநெய் யாவுதி
(21) சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்
றைந்துடன் போற்றி யவைதுணை யாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி 5 உருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருகர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாரு துணிஇய பாசவா 10 ஊனத் தழித்த வானினக் கொழுங்குறை
குய்யிடு தோறு மான தார்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை யெழுந்த வடுகெய் யாவுதி இரண்டுடன் கமழு காற்றமொடு வானத்து 15 நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி
ஆர்வளம் பழுகிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் ܗܬܐ ' 1 ܥ ܒ ܢ ܡ ܬܐ போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து
கன்கலந் தருஉ மண்படு மார்ப 20 முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறுஉம் மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை 25 பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந 30 யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து
16,

Page 76
122 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணு வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல் ஒரீஇயின போல விரவுமலர் கின்று 35 திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்த வரிலங்குநீ ரழுவத்து வேயுறழ் பணைத்தோ ளிவளோ டாயிர வெள்ளம் வாழிய பலவே.
துறை-செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்-ஒழுகுவண்ணம். தூக்கு-செந்தூக்கு. பெயர்-அடுநெய் யாவுதி. (13) 11-ரை: 1-7 சொல்-சொல்லிலக்கணம் சொல்லும் நூல், பெயர்-பொரு ளிலக்கணம் சொல்லும் நூல், 15ாட்டம்-சோதிடநூல், கேள்வி-வேதம், நெஞ்சம் - இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய நெஞ்சம், என்ற ஐந்து உடன் போற்றி-என்று சொல்லப்பட்ட ஐந்தினையும் ஒருங்கே பேணி, அவை துணையாக - அவ்வைந்தும் துணையாக, எவ்வம் குழாது விளங்கிய கொள்கை-உயிர்க்கு வருத்தம் செய்ய எண்ணுமல் விளக்கமுற்ற கொள்கையொடு, காலை அன்ன சீர் சால் வாய்மொழி-ஞாயிற்றினைப் போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய நன்மையமைக்த வேதத்தினல், உரு கெழு மர பின் கடவுள் பேணியர்-உட்குதல் பொருந்திய முறைமையினையுடைய தேவர் களை வழிபடும்பொருட்டு, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் - எடுத்த வேள்வித் தீயின் சுடர் எழுந்தோறும், விரும்பு மெய் பரந்த-விரும்பப்படும் மெய்யின்கட் பரந்த, பெரும் பெயர் ஆவுதி-பெரிய புகழினையுடைய ஆவு' திப் புகையும்,
8-13. வருகர் வரையார் வாரவேண்டி - தன்பால் வருவார் அளவு படுத்தாராய் வாரிக்கொள்ள வேண்டியும், விருந்து கண்மாருது உணிஇயவிருந்தினர் இடம் மாறிச் செல்லாமல் உண்ணவேண்டியும், பாசவர் ஊனத்து அழித்த வால் நிண கொழு குறை ஆட்டு வாணிகர் இறைச்சி கொத்தும் அடை குறட்டிலே வெட்டிய வெள்ளிய கிணத்தையுடைய கொழுவிய தசையை, குய்யிடுதோறும்-பொரிக்குங்தோறும், செழு நகர் நடுவண்-வளவிய நகரின் நடுவே, கடல் ஒலிகொண்டு ஆனது ஆர்ப்ப - கடலின் ஒலியையுடைத்தாகி அமையாது ஒலிக்கும்படி, அடு மை எழுத்த-அடுதலாம் கருமையாக எழுந்த, அடுநெய் ஆவுதி-அடிசில் கெய்யாகிய ஆவுதிப் புகையுமாகிய,
14-19. இரண்டு உடன் கமழும் காற்றமொடு-இரண்டும் ஒருங்கு கமழ்கின்ற காற்றத்தால், வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக பேணி. தேவருலகில் நிலைபெறுகின்ற கடவுளும் அது விரும்பத் தேவர்களையும் விருந்
 

21 ஆம் பாட்டு 123
தாய் வரும் மக்களையும் பேண, ஆர்வளம் பழுகிய - நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த, ஐயம் தீர் சிறப்பின்-ஐயத்தினிங்கிய சிறப்பினையும், மாரியம் கள்ளின்-மாரிபோன்ற கள்ளினையும், போர்வல் யானை-போரிலே வல்ல யானை யினையுமுடைய, போர்ப்பு உறு முரசம் கறங்க-தோல் போர்த்தலுற்ற முர சம் முழங்க, ஆர்ப்பு சிறந்து-ஆரவாரம் மிக்கு, நன்கலம் தரூஉம்-கன்ருகிய அணிகலங்களைக் கொணரும், மண்படு மார்ப-பகைவர் மண்ணெல்லாம் படு கின்ற மார்ப,
30-34. முல்லை கண்ணி-முல்லைப் பூவாற் செய்த கண்ணியையுடைய, பல் ஆன் கோவலர்-பல பசுவையுடைய கோவலர், புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி-புல்லுடைய அகற்சியையுடைய நிலத்தே பல பசுவை மேயவிட்டு, கல், உயர் கடத்திடை-துறுகற்களுயர்ந்த காட்டினிடத்தே, கதிர்மணி பெறுTஉம்ஒளியையுடைய மணிகளைப் பெறுகின்ற, மிதி அல் செருப்பின் பூழியர் கோவே-மிதியாகிய செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையையுடைய பூழி காட்டார்க்கு வேந்தே, குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - போர்க் கண்ணியெல்லாம் குவிதலே புடைய கண்ணியையுடைய மழவர்களுக்கு மெய்புகு கருவி போன்றவனே,
25-29. பல் பயம் தழீஇய - பல பயன்களும் பொருந்திய, பயம் கெழு 5ெடு கோட்டு-பயன் பொருந்திய உயர்ந்த சிகரங்களையுடைய, நீர் அறல் மருங்கு வழிப்படா-நீர் அற்ற இடத்தின்கண் செல்லாத, பாகுடி பார்வல்
கொக்கின்-கூர்மையான பார்வையையுடைய கொக்கினது, பரிவேட்டி அஞ்சா
-இரையை விரும்பிக் குத்துதலுக்கு அஞ்சாத, சீருடை தேளத்த - புகழை யுடைய தேயத்தின் கண்ணேயுள்ள, முனைகெட விலங்கிய-பகைவர் போர் கெடுதற்குக் காரணமாய்க் குறுக்கிட்டுக் கிடக்கின்ற, நேர் உயர் கெடு வரை. நேரே உயர்ந்த நெடிய மலையாகிய, அயிரை பொரு5 - அயிரை மலைக்குத்தலை வனே,
30-38, யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து-யாண்டுதொறும் பிழைத்தல் அறியாது பயன்பொருக்திய மழை சுரக்கப்பட்டு, மாந்தர்க்கு நோய் இல் ஊழி ஆக-மக்கட்கு கோய் இல்லாத வாழ்வு நெடுங்காலம் உண் டாக, மண்ணு வாயின் மணம் கமழ் கொண்டு-மயிர்ச் சந்தனத்தைப் பூசுதல் செய்யாவிடத்தும் நறுமணம் கமழ்தலைக்கொண்டு, கார் மலர் கமழும்-முல்லை மலரின் நறுமணம் க ம மும், தாழ் இரு கூந்தல் - தாழ்ந்த கரிய கூந்த வினையும், ஒரீஇயின போல-அக்கூந்தலினே நீங்கின மலர்களைப்போல, இரவு மலர் கின்று-இராக்காலத்தும் மலர்ச்சி கிலேபெற்று, திருமுகத்து அலமரும் பெரு மதர் மழை கண்-அழகிய முகத்திலே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களினையும், அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து-குலை அசைகின்ற காந்தளையுடைய விளங்குகின்ற நீரையுடைய நதியின் கரையிலுள்ள, வேய் உறழ் பணை தோள் இவளோடு-மூங்கிலை ஒத்த பெருமையையுடைய தோளினே யுடைய இப்பெருந் தேவியோடு, பல ஆயிர வெள்ளம் வாழிய பல ஆயிர வெள்ளகாலம் வாழ்வாயாக.

Page 77
124 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
முடிபு: மண்படு மார்ப, பூழியர் கோவே. மழவர் மெய்ம்மறை, அயி ரைப் பொரு5, பயமழை சுரந்து மாந்தர்க்கு கோயிலூழி உண்டாக இவ ளோடே பலவாயிரம் வெள்ளம் வாழிய என்க, ஆ-ரை: 1-7 சொல் முதலிய ஐந்தையும் போற்றி அவை துணையாகக் கொள்கையொடு வாய்மொழியாற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் ஆவுதி என்க.
சொல் என்பது சொல்லிலக்கணஞ் சொல்லும் நூலுக்காதலின் ஆகு பெய்ர். பெயர் என்பது பொருள். இதனைப் பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய" (பதிற் 90; 83) என்பதனலுமறிக. நாட்டம்-கண். 'நுதல திம்ையா நாட்டம்' அக, கடவுள், 4. ஈண்டுக் கண்போன்று மேனிகளுங் கருமங்களை அறிதற்குக் கருவியாகிய சோதிட நூலை. "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங், கண்ணென்ப வாழு முயிர்க்கு” (குறள் 392) என்ருர் திருவள் ளுவரும், கேள்வி-வேதம். இப்பொருட்டாதல் "வடுவில் கொள்கை யுயர்ந்தோ ராய்ந்த, கெடுவில் கேள்வியுள்' என்னும் பரிபாடலினுங் காண்க. (பரி 8:34-5) "சொற் பெயர் காட்டங் கேள்வி" என்றெழியாது கெஞ்சையும் உடன் கூறி யது இந்திரியங்களின் வழியோடாது அடங்கிய தூய நெஞ்சமில்வழி அவற்றை ஒதியுணர்ந்தும் பயனின்மையின்,
'உரனென்னுங் தோட்டியா னேரைக்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து' குறள் 24.
என்பது ஈண்டு அறியற்பாலது. நெஞ்சும் ஒன் ரு க எண்ணப்பட்டமை
தோன்ற ஐந்து எனத் தொகை கூறினர். சொல் முதலிய கான்கையும் ஒதி
யுணர்ந்ததோடு நெஞ்சினை இந்திரியங்களின் வழியோடாது காத்ததனல்
ஐந்துடன் போற்றி” என்ருர், உடன்-ஒருங்கு. போற்றி-பேணி. கலி2ே:9) நச், துணையாகக் (2) கொண்ட (6) என முடிக்க.
விரதத்தின்கண் உயிர்க்கு வருத்தஞ்செய்ய எண்ணுமையின் "எவ்வஞ் குழாது விளங்கிய கொள்கை' என்ருர், எவ்வம்-வருத்தம். "உண்ணின்ற வெவ்வ முரைப்ப" (கலி 14: 24) என்புழி நச்சினுர்க்கினியரும், 'வாய் போற் பொய்ம்மொழி யெவ்வமென் களைமா" (அக 3; 14) என்புழி அதன் பழையவுரைகாரரும் எவ்வம் என்பதற்கு வருத்தம் எனப் பொருளுரைத்த வாறு காண்க. இனி, எவ்வஞ் சூழாது (3) கொண்ட தீ (6) எனக் கூட்டி உயிர்ப்பலி கொடுத்தலை எண்ணுமற் கொண்ட தீ என் உரைத்தலுமொன்று. குழாமல் எனத்திரிக்க. கொள்கையென்றது வேள்வி வேட்டற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்களை.
"கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனே யுயர்ந்தோ ருவப்ப" பதிற் 74: 1-2.
என வருதல் காண்க. கொள்கை-விரதமாதல், "ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்றமாக. வேள்வி முற்றிய" (புற 26; 12-5) என் புழிக் கொள்கை என்பதற்கு விரதங்கள்' என அதன்
 
 
 

21 ஆம் பாட்டு 125
உரைகாரர் உரைத்தலானுமறிக. அது கைக்கொள்வாரிடத்து விளங்கித்
தோன்றலின் விளங்கிய் கொள்கை' என்ருர்,
காலையன்ன வாய்மொழி யெனக் கூட்டி ஞாயிற்றினைப்போல எஞ்ஞான்
றும் தப்பாதாகிய மெய்ம்மொழி யெனக் கொள்க.
'முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி
யேமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்றகின் சொன்னயக் தோர்க்கே” நற் 288; 6-8. "வாய்மை வயங்கிய வைகல்" பரி 2; 34.
என வருவன காண்க, காலை, நாட்காலையிற் ருேன்றும் ஞாயிற்றுக்கு ஆகு பெயர். வாய்மொழி-வேதம். “வலம்புரி வாய்மொழி யதிர்புவான் முழக்குச் செல்' (பரி 13: 44) என்புழி வாய்மொழி - வேதம்' எனப் பரிமேலழகர் பொருளுரைத்தமை காண்க. வாய்மொழியாற் (4) கொண்டதீ (6) என்க. 'மறையார் வேள்வி மந்திரச் செக்தி" (சீவக 1059) பிறரும் கூறுதல் காண்க. வாய்மொழியொடு என ஒடு விரிப்பினு மமையும். வேதமொழி நன்மை பயத் தலின் "சீர்சால் வாய்மொழி என்ருர், சீர்-புகழுமாம்.
தெய்வவடிவு மக்களுக்கு அச்சம் பயக்கும் தன்மைபற்றி 'உருகெழு மரபிற் கடவுள்' என்ருர், "வாடாப் பூவி னிமையா நாட்டத்து, காற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு" (மதுரைக் 457-8) என மாயோன் முருகன் முதலிய தெய்வங்களையும், 'உருகெழு மரபி னயிரை" (பதிற் 88; 13) எனக் கொற்றவையையும் சான்ருேர் கூறுதல் காண்க. கடவுள் என்றது ஈண்டுத் தேவர்களை தேவர் பொருட்டு வேள்வி செய்தல், "வேள்வி வேட் டனை யுயர்ந்தோ ருவப்ப" (பதிற் 74; 2) "அமரர்ப் பேணியு மாவுதி யருத் தியும்" (புற 9ெ: 1) என வருவனவற்ருலுமறியப்படும். கடவுள் என்பதற்கு "முனிவர் எனக்கோடல் அமையாதோவெனின், அமையாது. டிஎன்னே?'கட வுட்பேணியர், கொண்ட தீயின் சுடரெழு தோறும், விரும்புமெய் பரந்த பெரும்பெயராவுதி' எனக் கடவுட்பொருட்டு வேள்வி செய்தல் கூறப்படுத லின்,
"வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
யுயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை" பதிற் 70:18-9. என் முனிவரின் வேருகக் கடவுளைக் கூறி அவரை வேள்வியின் அருத்து தல் கூறப்படுதலினலும், வேள்வியின் அருத்துதல் தேவர்களையே யென்பது 'அமரர்ப்பேணியுமாவுதி யருத்தியும்' (பட்டினப் 200)என்பதனலும், தேவர் களை வழிபட்டும் யாகங்களைப் பண்ணி அவற்ருன் ஆவுதிகளை அவர் நுகரப் பண்ணியும்' என்னும் அப்பகுதி உரையானும் அறியப்படுதலினலும் கடவுள் என்றது ஈ ன் டு த் தேவர்களையே யென்பது தெளியப்படும். கடவுள் என்பதற்குத் தே வர் க ள்' என்றே இந்நூற் பழையவுரைகாரரும் பொருள் கொண்டனர் என்பது பேணியென்றது முன்சொன்ன வேள்வி யால் தேர்களையும்.பேணி என அவர் உரைத்தலான் அறியப்படும்.

Page 78
126 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
*காற்றவுணவினராகிய தேவர்களைக் கருதி வேள்வித்தீயின்கண்ணே சொரி
யும் ஆவுதிகளை அத்தேவர் நுகர்தலின், அவரைப் பேணுதற்குக் கொண்ட தீயைக் "கடவுட்பேணியர் கொண்ட தீ என்ருர், ஆவுதி சொரியுந்தோறும் வேள்வித்தீ ஓங்கியெழுதலின், 'தீயின் சுடரெழுதோறும் என்ருர், "சுடர் விடு வேள்வியகத்து' (பு. வெ. மா. 163) எனப் பிருண்டும் வருதல் காண்க. சுடரெழுதோறும் மெப் பரந்த ஆவுதியெனக் கூட்டுக. அண்மையிலிருந்து ஆவுதிகளைச் சொரிதலான் எழும் ஆவுதிப் புகை மெய்யின்கட் பரத்தலின் "மெய்பரந்த ஆவுதி' என்ருர் ஆவுதி 5றும்புகை மெய்யின்கட் பரத்தல் வாழ் நாள் நீட்சிக்குக் காரணமாதலின் அதனல் விரும்பப்படும் புகையை விரும்பு ஆவுதி' என்ருர், இனி விரும்பு மெய் பரந்த ஆவுதி' என்பதற்கு விருப்பும் மெய்யும் பரத்தற்குக் காரணமாகிய ஆவுதி யெனினுமாம். ஈண்டு விருப்பு மெய் என்னும் ஒற்று மெலிந்தது எனக் கொள்க. "மை பரந்த" என்பது பாடமாயின் மை போலப் பரந்தவென்க. பெரும் பெயர் - பெரிய புகழ். 'பெரும் பெயர்ப் பிரமன்' (சீவக 3307) ஆவுதி-தீயின்கண்ணே வேட்டலைச் செய்யும் நெய் முதலியன. "அங்கி வேட்கும் ஆவுதி' என்ருர் பட்டினப் பாலையினும். (பட்டினப் 54-5) ஈண்டு ஆவுதியென்றது ஆவுதிப் புகையை.
8-13. வரு5ர் வாரவேண்டியும் விருக்து உணிஇய வேண்டியும் கொழுங் குறை குய்யிடுதோறும் செழுநகர் (5டுவண் கடலொலிகொண்டு ஆனது ஆர்ப்ப எழுந்த ஆவுதியென்க.
வருகர் என்றது சுற்றத்தாரை. விருந்து கண்மாரு துணி இய வென்றது விருத்தினர் சுவை மிகுதியால் வேறு இடம் மாறிச் செல்லாமல் உண்ணவேண்டி யென்றவாறு. 'கொய் குரல் மலிந்த கொழுந்துவை யடிசில், இரவலர்த் தடுத்த வாயில்" (புற 250: 1-2)எனப் பிறரும் கூறுதல் காண்க. கண்மாறல்-இடம் மாறல். இப்பொருட்டாதல். "புயல்கண் மாறிய வுவகையர்” (புற 143: 4) என்பதனலுமறிக. குப்யிடுங் கொழுங்குறையைப் பாசவர் ஊனத் தழித்தமை யின், "பாசவர் ஊனத் தழித்த குறை' என்ருர், பாசவர்-ஆட்டு வாணிகர். 'பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்பாருமாம்" என்பர் அடியார்க்குநல்லார். (சிலப் 5; 26 உரை) ஊனம்-இறைச்சி கொத்தும் அடை குறடு. "பாசவர் எஃகா டூனம் கடுப்ப மெய் சிதைந்து' (பதிற் 67: 16-7) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. நிணமுடைமையிற் கொழுங்குறை' என்ருர், குறையென் றது ஆட்டுக்கிடா யின் தசையை. “மைவிடை யிரும் போத்துச் செந்தீச் சேர்த்தி. இரப்போர்க் கீந்து' (புற 364; 4-?) என வருதல் காண்க. குய்-தாளிப்பு. ஈண்டுப் பொரித்தலை, வருவார்க்கெல்லாம் குறைவின்றி வழங் கற்பொருட்டுக் குய்யிடுதல் பன்முறை நிகழ்தலின் குய்யிடுதோறும் என்ருர், குய்யிடுதோறு (11) கடலொலிகொண்டு (12) ஆர்ப்ப (11)எனக் கூட்டுக.
'வையங் காவலர் வழங்கெழு திருநகர் மையல் யானை யயாவுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூ னேசை" புற 261, 6-8
** souri, Linc, பூவி னிமையா காட்டத்து, காற்ற வுணவினுேரும்? புற 0ே: 16-7.

21 ஆம் பாட்டு 127
என வருதல் காண்க. இனிக் கடலொலிகொண்ட' என்பது பாடமாயின் கடலொலிகொண்ட நகர் என்க. .
"கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார் சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவர் இலங்குபொற் கிண்கிணி யிரங்கு மோசையும் உலம்புமா லுவர்க்கட லொலியின் மிக்கவே'. சீவக 833.
என வருதல் காண்க. நகர்-அரண்மனை. மாளிகை’ அக, 15; 11 பழையவுரை. கேர் (5டுவண் என்றது அட்டிற்சாலையை,
"கொடைக்கட னேன்ற கோடா கெஞ்சின்
உதியன் அட்டில் போலவொலி யெழுந்து' அக. 168; 6-7. எனப் பிருண்டும் வருதல் காண்க. புகை மிகுதியால் மையெழுந்த என்ருர்" 'குரூஉக் குய்ப்புகை மழை மங்குதலிற், பரந்து தோன்ரு வியனகரால்" என் ருர் மதுரைக்காஞ்சியினும். (மதுரைக் 757-8) மையெழுந்த - மைபோல வெழுந்தவெனினுமாம். ஆர்ப்ப (11) எழுந்த (18) என முடிக்க. ジ
அடுகெய்யை ஆவுதியென்றது. விருக்து புறக் தருலையும்ஒரு வேள்வியாக் கிக் கூறலானுமென்பது. t
'இனத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்' குறள் 87. 'பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்' குறள் 88. என விருந்தோம்பலை வேள்வி என்று திருவள்ளுவர் கூறியிருத்தலும், வேள்வி -விருந்தோம்பலாகிய வேள்வி; sஐம்பெரு வேள்வியினென்ருதலின் வேள்வி யென்றும்' எனப் பரிமேலழகர் உரையெழுதியிருத்தலும் (குறள் 8? உரை) ஈண்டறியற்பாலன. s
அடுநெய்யிலெழுந்த புகையை வேள்விப்புகையோடொப்பித்து அடுநெய் பாவுதியென்ற சிறப்பானே இச்செய்யுளுக்கு அடுநெய்யாவுதி யென்று பெய ராயிற்று. ܕܬ
'அடுநெய்யாவுதியென்றது அடிசில் கெய்யாகிய ஆவுதியென்றவாறு; அடு நெய்யை ஆவுதியென்றது விருந்துபுறந்தருதலையும் ஒரு வேள்வியாக்கி +ஆள் வினை வேள்வியென்று ஒருதுறையாக நூலுட் கூறலானென்பது. இச்சிறப் பானே இதற்கு அடுநெய்யாவுதியென்று பெயராயிற்று' என்பர் பழையவுரை காரர். எழுந்த என்ற வினையான் ஆவுதியென்றது ஆவுதிப்புகையை, இரண்டு
S, ஐம்பெருவேள்வி: கடவுள் வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானுடவேள்வி தென்புலத்தார்வேள்வியென்பன, "கடவுள் பிரமம் பூத மானுடக். - தென்புலத்தா ரென்றைவகை வேள்வி பிங்கலங்தை 83
* "வாள் வினநீக்கி வருக விருந்தென்னும், ஆள்வினை வேள்வி யவன்'(215)என்று ஆள்வினைவேள்வியென்பதனை ஒருதுறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை 6a-c). LD.

Page 79
128 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
என்றது பெரும்பெயராவுதிப்புகையும் அடுநெய்யாவுதிப்புகையுமாகிய இரண்ட னையும். "ஆவுதியென்ற இரண்டனையும் அவற்ருனய புகைமேற்கொள்க' என்பர் பழையவுரைகாரர். விருந்துகொடுத்தல் ஆள்வினை வேள்வியாமன்றி அதற்கு அடுதல் அஃதாகாது. அடுதலால் அது நிகழ்தலின் காரணத்தைக் காரியமாகக் கூறினர். இரண்டுடன் கமழு காற்றமொடு என்ருர் இருவேள்வியும் ஒருங்கு நிகழ்தலின். நாற்றமொாடு (14) பேணி (15) என க் கூட்டும. நாற்ற மொடு என்பதனை காற்றத்தான் எனக்கொள்க. கடவுளும் விழைதக வென் றது, கடவுளும் இவ்வாறு 15ாம் அறஞ்செய்யப்பெறின் அழகிது' என்று அது விருப்ப வென்றவாறு. பேணி என்றது முன்சொன்ன வேள்வியால் தேவர் களையும் பின்பு அதனேடு ஒப்பித்துச்சொன்ன ஆள்வினை வேள்வியால் விருங் தாய்வரும் மக்களையும் பேணியென்றவாறு. அதனைத் திரித்துப் பேணப்பழுகிய (16) எனழுடிக்க. பழுகியவென்பது பெயரெச்ச வினைத் திரிசொல். ஆர் வளம் - கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வம், "பாடுகள் கொளக் கொளக் குறையாச் செல்வத்து' (பதிற் 8:12) எனப் பிருண்டும் வருதல் காண்க. பழுகிய, முற்றுப்பெற்றவெனினுமாம். வளம் பழுகிய சிறப்பு என்க. சிறப்பின் மார்ப என இயையும் கள் ளரின் மார்ப எனக் கூட்டுக. 'பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி' (நற் 353:7) எனவரல் காண்க. தன்பால்வரும் பரிசிலர்க்கு வழங்கும்பொருட்டு மாரி போன்ற கள்ளுடைமை யின் "மாரியங்கள்ளின்' என்ருர்,
"சேறுசெய் மாரியி னளிக்குகின்
சாறுபடு திருவி னனைமகி ழானே’ பதிற் 65; 16-7.
எனப் பிருண்டும் வருதல் காண்க. 'கள்ளிற் போர்வல் யானையென்னும் ஒற்று மெலிந்தது என்டர் பழையவுரைகாரர். யானேயையுடைய மார்ப என்க. 'போர்வல் யானைச்சேரலாத" (பதிற் 15; 23) எனவருதல் காண்க, முரசம் என்றது வென்றிமுரசை. ஆர்ப்பு-வெற்றியாலுண்டாகும் ஆரவ r LTLħ அது முரசம் முழங்க மிகுதலின் 'முரசங் கறங்க வார்ப்புச் சிறந்து' என்ருர், ஆர்ப்புச் சிறந்து (18) கன்கலங் தரூஉம் மார்ப (19) எனக்கூட்டுக. கலம் என்றது பகைவர் காட்டிற்பெற்ற அருங்கலங்களை. மண் என்றது பகைவர் நிலத்தை. "மயங்கமர் மாறட்டு மண்வெளவி வருபவர்' கலி 31, 9. மண்படு தற்கு மார்பின் வலி ஏதுவாகலின் மார்ப என்பது ஏதுப்பெயர். -
20-24 கோவலர் வியன்புலம் பல்லா பரப்பிக் கடத்திடைக் கதிர் மணி பெறுTஉம் செருப்பிற்பூழியர் கோவே, மழவர் மெய்ம்மறை என்க.
கோவலர் முல்லைநில மக்களாதலானும் அங்கிலத்துப் பூக்களில் முல்லை சிறத் தலானும் கோவலர் முல்லைக் கண்ணியை அணிவாராயினர். 'பல்லான் கோவலர் கண்ணிச், சொல்லுப வன்ன முல்லைமென் முகையே" (குறுந் 358) என வரு தல்காண்க, கோவினத் தயாராகலின் “பல்லான்கோவலர்' என்ருர், பல்லான் கோவலர் என்பதற்குப் பலபசுக்களையும் பல எருதுகளையுமுடைய கோவலர் என்பர் அடியார்க்கு நல்லார். (சிலப் 16:98 உரை) புல்லுடைவியன்புலம் என் றது மேய்புலத்தை, அது பல்லான்களும் மேயத்தக்க அகற்சியையுடைய நில மாகலின் வியன்புலம்' எள்ளுர்,
 

KO O ES 21 -9bf L_I FT" 06 129 *காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்துப் பேராது சென்று பெரும்பதவப் புன்மாந்தி நீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்' கலி 109 1-3. என வருதல் காண்க. கடம்-காடு, மலைபடு 415 நச். ஈண்டுச் செருப்பு என் னும் மலையைச் சூழ்ந்த காட்டை. அதில் உயர்ந்த துறுகற்களுண்மையின் 'கல்லுயர் கடத்திடை' என்ருர், 'கல்லியல் வெம்மைக் கடம்" (திருக்கோவை 201) எனப் பிருண்டும் வருதல் காண்க. கல்லிற் பிறந்த கதிர்மணி கடித் திடைப் பரந்து கிடத்தலின் கடத்திடை மணி பெறுTஉம்' என்ருர், சிறந்த மணியாதல் தோன்றக் கதிர்மணி என்றர். மணிபெறுTஉம் (32) செருப்பு (33) எனக் கூட்டுக.
செருப்பு என்பது ஒருமலை. மிதியல் என்பது அடை, மிதியென்று *செருப்பிற்குப் பெயராகிச் செருப்பல்லாத செருப்பு என்று வெளிப்படுத் தானுக வுரைக்க. 'குவியற் கண்ணி என்னும் தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்தது. பூழியர்-பூழிநாட்டவர். s பூழிநாடு செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்த கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டனுள் ஒன்று. இந்நாடு இச்சேரன் ஆட்சிக் குட்பட்டமையாயின் ‘பூழியர் கோவே' என்ருர், பிறசேர ரும் இதனை ஆட்சிபுரிந்தமை 'பூழியர் கோவே' (பதிற் 84: 6) 'பூழியர் பெருமகன்" (புற 337 28) என வருவனவற்ரு லறியப்படும்.
குவியற்கண்ணி யென்பதற்கு வெட்சி முதல் வாகையீருய போர்க்கண்ணி யெல்லாம் குவிதலையுடைய கண்ணியெனக் கொள்க. 'கண்ணி கண்ணிய வய வர் பெருமகன்" (பதிற் 58; 8) என்புழிக் கண்ணி கண்ணுதல் - தாங்கள் குடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினை செய்யக் கருதுதல்' என்ற பழையவுரை யானும் வீரர் போர்க்கண்ணி குடுதல் அறியப்படும். + வெட்சிக் கண்ணி முதலியன அவ்வத்திணையின் அடையாளமாகச் சூடப்படுவனவாகலின் குவி யற் கண்ணி மழவர், வெட்சி முதலிய புறத்திணைகளை மேற்கொண்ட மழவர் என்று உணரலாம். சேரனே இம் மழவர்க்கு மெய்ம்மறை என்றது, சேரன் வெட்சி முதலிய போர்த்துறைகளை மேற்கொண்டு அப் போர்களில் மழவர்க்கு மெய் புகு கருவிபோல வலியாய் முன்னின்றமை பற்றியென்க, மழவர்-வீரர், புற 90; 11 உரை, சில வீரர் மதுரைக் 395 நச்.
"தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர்' மதுரைக் 395, "மைபடு பெருந்தோண் மழவர்" மதுரைக் 8ே7. 'உருவக் குதிரை மழவர்' அக 1: 3.
*** செருப்புத் தன் காற்கேயாம் ? காலடி 85; 7. S தொல் எச்ச சூ 4 சேஞவரை யர் உரை பார்க்க
* வெட்சி முதலிய புறத்திணைகளுக்கு வெட்சி முதலிய பூக்களைச் சூடுதல் மரபு, இதனே, "வெட்சியாவது களவின் கண் நிரைகொள்ளு மொழுக்கம்; இதற்கு அப்பூச்சூடுதல் உரித்தென்று கொள்க’ (தொல். புற சூ 1 கச்) "வஞ்சியென்றது ஒருவர் மேலொருவர் சேறலை; இதற்கு வஞ்சி தடிச் சேறலு முலகியல் (தொல் புற சூ 5 நச்) *தும்பையென்பது சூடும் பூவினுற் பெற்ற பெயர்’ (தொல் புற சூ 114 கச்) என
வரூஉம் தொல்காப்பிய உணரப்பகுதிகளானு மறிக.
17

Page 80
130 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
"தகர் மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த
சுவன்மாய் பித்தைச் செங்கண் மழவர்' அக 101: 4-5. "ஓங்குதிற, லொழிறிலங்கு நெடுவேன் மழவர்' புற 88 3-3. "வழுவில் வன்கை மழவர்' புற 90: 11. என வருஉஞ் செய்யுட் பகுதிகளான் மழவரின் வீரம் வலி முதலியனவற்றை அறியலாம்.
25-1: பல்பயந் தழீஇயதும் பயங்கெழு நெடுங்கோடுடையதும் கொக் க்கின் பரிவேட்பஞ்சாததும் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கியது மாகிய அயிரைமலைக்குத் தலைவ என்க.
பல்பயம் என்றது மலையிற் பொருந்திய பழம் கிழங்கு தேன் முதலாகிய பொருள்களை. 'பாரியது பறம்பே. உழவருழாதன நான்கு பயனுடைத்தே' (புற 109 1-3) எனப் பிறரும் கூறுதல் காண்க. அயிரை, அருவியின் பயன் பொருந்திய உயர்ந்த சிகரங்களையுடைமையாற் "பயங்கெழு நெடுங்கோட் டயிரை' என்ருர், பயம் என்றது அருவிப் பயனுதல், 'பாடின் னருவிப் பயங்கெழு மீமிசை' என்பதனுலும், 'ஒசையினிதாகிய அருவியின் பயன் பொருந்திய உச்சி மலையிலே' என்ற அப்பகுதி யுரையினலும்(மலைபடு278 நச்) அறியப்படும். 'பாடின் னருவிப் பயங்கெழு மாமலே' எனச் சிந்தானியில் (சீவக 312) வருதலும் ஈண்டறியற்பாலது. அயிரை அருவியுடைத்தாதல்,
"இழுமென விழிதரும் பறைக்குர லருவி
முழுமுதன் மிசைய கோடுதொறுங் துவன்றும் அயிரை நெடுவரை' பதிற் 70, 23-6. என்பதனலுமறிக.
நீரறன் மருங்கு வழிப்படா (36) அயிரை (39) எனக் கூட்டுக. அயிரை மீன் நீர் குறைந்த இடத்து எதிரேறிச் செல்லு மியல்புடைமையின் அதனை விலக்குதற்கு நீரறன் மருங்கு வழிப்படா என்ருர், மீன்கள் அற்றர்ேக்கு எதிரேறிச் செல்லுமியல்பு, 'கடும்புனல் சாஅய் கயல் அறல் எதிர"- "கடிதா யோடின நீரினின்றும் ஒருகால்பற்றிக் கயல்கள் அற்ற நீர்க்கு எதிரே வருகையி ஞலே' என்னும் (நெடுநல் 18 நச்) உரையானும் அறியப்படும். மருங்குஇடம். கொக்கு இரையைக் குறித்து சேய்மையிலிருந்து நுனித்து நோக்கு வதின்மையின் பாகுடி யென்பதற்குச் சேய்மையெனல் பொருந்தாதென்க. இனிப் பாகுடி அயிரை எனக்கூட்டிப் பலியாக இட்ட பொருள்களையுடைய அயிரை எனினும் அமையும். பார்வல்-பார்வை. "இன்கனுடைத்த்வர் பார் வல்' குறள் 1153. கொக்கு இரையைப் பார்த்திருத்தல் "கொக்கின், பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு” (குறுந் 147) என்பதனுலுமறிக.
பரிவேட்பு என்றது ஈண்டு இரையை விரும்பிக் குத்துதலை. "கொக் கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து' (குறள் 490) என்பது காண்க. கொக்கின் பரிவேட்புக்கு அயிரைமீன் அஞ்சுதலின் அதனை விலக்கி அயிரை மலை என்று பொருள் கோடற்பொருட்டுக் கொக் கின் பரிவேட் பஞ்சா அயிரை ' என வெளிப்படை கூறினர். பயங்கெழு நெடுங்கோட் டயிரை, முனைகெட விலங்கிய அயிரை, நேருயர் 5ெடுவரை

21 ஆம் L u Fru' (6) . 131
அயிரை என அயிரை இன்னது என வெளிப்படுத் துரைக்கின்றவர் “கொக் கின் பரிவேட் பஞ்சா அயிரை' எனவும் வெளிப்படை கூறியது * ஒரு வகை மீனுக்குப் பெயராகிய அயிரை என்பதைப் பெயராகவுடைமைபற்றி யென்க. இனிப் புனைந்துரை நயம்பற்றியெனினுமாம். அயிரைமலை நாடுக ளினிடைப் பட்டிராது சேரநாட்டெல்லை யகத்திருத்தலின் "சீருடைத் தேளத்த" என்றும், புறத்தேயுள்ள பகைவர் போர் கெடுதற்குக் காரணமாய்க் குறுக் கிட்டுக் கிடத்தலின் ‘முனைகெட விலங்கிய' என்றும், செங்குத்தாக உயர்ந்த 5ெடிய மலையாகலின் "நேடுயர் நெடுவரை' என்றுங் கூறினர். அயிரைமலை சேரநாட்டிலுள்ளதென்பது, "அயிரை பரைஇ யென்றது தன்னுட்டு அயிரை யென்னும் மலையில் வாழும் கொற்றவையை. வழிபட்டு (பதிற். ம்ே பதி& உரை) என்பதனலும் அறியப்படும். முனை-போர். அயிரை நெடுவரையா தல் "அயிரை நெடுவரை' (பதிற் 70) என வருதலானுமறிக.
30-8. யாண்டு பிழைப்பறியாது பயமழை சுரந்து மாந்தர்க்கு கோயி
லூழியாக இவளோடே பல ஆயிரவெள்ளம் வாழியவென்க.
யாண்டுதொறும், பிழைப்பறியாது மழை சுரத்தற்கும் மாந்தர்க்கு நோய் நீங்கப்பெற்று நெடுங்கால வாழ்வு உண்டாதற்கும் சேரன் செங்கோன்மை காரணமாதலின் 'யாண்டு பிழைப்பறியாது பயமழை சுரந்து கோயின் மாக் தர்க் கூழியாக. வாழிய' என்ருர், 'கோஒல் செம்மையிற் பெயல் பிழைப் பறியா' (புற 117) எனவும், "நோயிகந்து நோக்கு விளங்க.உலக LmíTGöTL. உயர்ந்தோர் மருக" (மதுரைக் 13-33) எனவும் சான்ருேர் கூறுதல் காண்க. யாண்டு மழை சுரந்து பிழைப்பறியாது மழை சுரக்து எனத் தனித் தனிகூட்டுக. இனி யாண்டு பிழைப் பறியாது என்பதற்கு ஒர் யாண்டேனும் பிழைத்தலறி யாது’ எனினுமாம். பயமழை-உயிர்களின் பசியையும் நீர் வேட்கையையும் நீக் குதற்குப் பயன்படும் மழை, சுரந்து ஈண்டுசெயப்பாட்டு வினையெச்சம். மாக் தர்க்கு கோயிலூழியாகவென மாறிக் கூட்டுக. இனி கோயின் காந்தர்க் கூழி யாக எனக் கிடந்தவாறே கூட்டி, மழை சுரத்தலான் கோயில்லாத மாந்தர்க்கு ஊழிகால வாழ்வு உண்டாக எனினுமாம். 5ோய்-பசியும் பிணியும். ஊழிநெடுங்காலம். பு. வெ, மா. 16 உரை,
தாழிருங் கூந்தலினையும் மழைக்கண்ணினையும் பணத்தோளினையுமுடைய இவள் என்க.
தன் தலைவன் வேற்றுப்புலத்து வினைசெய்தற்குப் பிரிந்துழிப் பெருந்தேவி தன் கூந்தலைக் கைசெய்யாமையின் "மண்ணுவாயின்' என்ருர். உயர்குடிப் பிறந்த கற்புடை மகளிர் கணவன் பிரிந்தவழித் தம் கூந் தலைப் புனைந்து கொள்ளார் என்பது,
* அயிரை என்பது ஒருவகை மீனுக்குப் பெயராதல், "அயிரைக் கொழுமீ ஞர் கைய" (பதிற் 29: 4-5) 14 தொண்டி முன்றுறை யயிரை ' 'தண்கடற் படுதிரை
பெயர்த்தலின் வெண்பறை, நாரை நிரைபெயர்க் தயிரை யாரும்” (குறுங் 128, 166) என வருவனவற்ருலறிக.

Page 81
132 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
அரிமதர் மழைக்க ணம்மா வரிவை கெய்யொடு துறந்த மையிருங் கூந்தன் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல வின்று பெயரி னதுமனெம் பரிசி லாவியர் கோவே' புற 147; 5-9, என்பதனுலுமறியப்படும், மண்ணுதல்-பூசுதல். குறிஞ்சி 108 கச். தகர முத லியவற்றைப் பூசுதலாற் கூந்தல் நறுமணம் கமழ்தல், 'தண்ணறுக் தகரங் கமழ மண்ணி, மணிகிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்” (குறிஞ்சி 108-119) *ருறுந்தண் டகரமு கானமு காறு, நெறிந்த குரற் கூந்தல்" (கலி 93: 21-3) தகர நாறுங் தண்ணறுங் கதுப்பினை’ (அக 141, 13) என வருவனவற்ரு லறியப்படும். பெருந்தேவியின் S கூந்தல் இயற்கைமணமுடைமையால் 'மண்ணு வாயின் மணங்கமழ் கொண்டு' என்ருர், "சூழ்பொழில்வாய் முகை தணித் தற் கரிதாம் புறக்தாழ்தரு மொய்குழலே'-சூழ்ந்த பொழிலிடத் துளதா கிய போதுகளாற் றனது நறுநாற்ற மாற்றுதற் கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலையுடையாய் (திருக்கோவை 314 பேர்) என்பதனலும் கூந்த லுக்கு இயற்கைமணமுண்மை யறியப்படும். மண்ணுவாயினும் என்ற உம்மை தொக்கது. S கற்புக்கு அடையாளமாக முல்லைமலரையணிதலின் கார்மலர் கம மும் கூந்தல்' என்ருர், 'கார்மலர் கமழுங் கூந்தல்" (அக 198:5) எனப் பிற ரும் கூறுதல் காண்க. + முல்லை கார்காலத்து மலர்தலின் அதனைக் கார்மலர்' என்ருர், புறத்தே தாழ்க்த ன்ேட கரிய கூந்தலாதலின் 'தாழிருங் கூந்தல்'
என்ருT.
ஒரீஇயினபோல வென்பதற்கு மேற் சொன்ன கூந்தலை ஒருவின குவளை மலர்களைப்போலவென வுரைக்க.
"அறலென வவிர்வருங் கூந்தன் மலரென
வாண்முகத் தலமரு மாயிதழ் மழைக்கண்' அக 162; 10-11.
எனச் சான்ருேர் கூறுதல் காண்க. இனிப் பொய்கையென வருவித்துப் பொய் கையை ஒருவின குவளைமலர்களைப்போல வென உரைப்பினும் அமையும்.
இரண்டு கண்களும், இரண்டு குவளை மலர்கள் சேர்ந்தாற் போன்றமை யின் ஒரீஇயின போல' வெனப் பன்மையாற் கூறினர். 'குவளை, யெதிர் மலர்ப் டிஜனய லன்ன விவ, ளரிமதர் மழைக்கண்' (5ற் 160) எனப் பிறரும் கூறுதல் காண்க. ஒரீஇயின போலவெனக் கண்ணிற்கு உவமை கூறப்பட்டமைக்கு ஏற்பத் திருமுகம் என்பதற்குத் தாமரைபோலும் திருமுகம் எனக் கொள்க.
s கூந்தலுக்கு இயற்கை மணமுண்மை: கற் 95;8; 187:1; 250; 8; 20; 2-3;
குறுக் 2: 4-5; 116:1; 199; 3-4; 270; 8; 272; 8; 312:6; கலி 43-23; 57; 1; புற
3; 9 என்பனவற்றலுமறியப்படும்.
+ முல்?ல கார்காலத் து மலர்தல்; கற் 115; 248; குறுங் 108, 126, 162, 186, 1883 220, 221, 358; 382; ஐங் 437, 448, 476 அக 144-3; 224: 4-6; 364; 7-9 ஜந் எழு 23; கைந்நிலை 25; சீவக 413; 1981; 2382 என்பனவற்றிற் காண்க,
s கற்புக்கு அடையாளமாக முல்லை அணிதல்: சிறுபாண் 30 நச்; அக 274:13-4, சிவக 626; 2438 கச்.
 

21 ஆம் பாட்டு 133
"தூமலர்த் தாமரைப் பூவினங்கண்
மாயிதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்' அக 361:1-3. எனவும்,
*தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்க டம்மால்' சீவக 2138. எனவும் வருவன காண்க. "மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும் செக் தாமரை வாய்' (திருக்கோவை 66) என்பதும், மையழகையுடைய குவளே போலும் கண்ணுகிய வண்டினம் தான் வாழ்வதற்குத் தகும் இவள் முகமா கிய தாமரை மலர்க்கண்' என அப்பகுதிக்குப் பேராசிரியர் எழுதிய உரையும் ஈண்டறியற் பாலன. திரு-கண்டாரால் விரும்பப்படும் தன்மை கோக்கம் திருக் கோவையார் 1 பேர்.
இரவுமலர் நின்று எ ன் றது * பொம்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற்று என்றவாறு. மலர் ஈண்டு முதனிலைத் தொழிற்பெயர். மலர் நின்று (34) அலமலரும் (35) என முடிக்க, அலம ரும்-சுழலும், 'அலமர றெருமர லாயிரண்டும் சுழற்சி” என்பது தொல் காப்பியம். (உரி 14) கண் அலமரல் அச்சம் முதலிய பெண்ணியல்பால் என்க. மதர்-செருக்கு, மழைக்கண் என்பதற்கு மழைபோலக் குளிர்ந்த கண் எனி னுமாம்.
அலங்கிய காந்தள்-குலை அலங்கிய காந்தள். 'குலையலங் காந்தள்” (கலி 40-12)எனவும், "அலங்குதலைக் காந்தள்' (நற் 359) எனவும் வருவன காண்க, அலங்குதல்-அசைதல், காந்தளையுடை நீரழுவம் என்க. 'ரேயற் கலித்த கெரி முகைக் காந்தள்" (பரி 14-13) என வருதல் காண்க. இலங்குநீர் அழுவம்-விளங் குகின்ற நீர்ப் பரப்பு. நீர் விளங்குதல், 'இலங்கு நீர்ச்சேர்ப்ப" "இலங்குநீர்த் தண்சேர்ப்ப" (கலி 135; 15,136; 5) என வருவனவற்ருலு மறிக. அழுவம்பரப்பு. "உரவுநீ ரழுவத் தோடுகலம் கரையும்" பெரும்பாண் 350. ‘அலங்கிய காந்தள் என முன்னும் அழுவத்து வேய்' எனப் பின்னும் வந்தஅடைகளான் நீரழுவம் என்றது நதியை, நீரழுவத்து வேய் என்றது ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தேயிருக்கும் தோள் என்றற்கென்க. வேயு றழ் தோள்-நிறத்தானும் திரட்சியானும் அழகானும் மூங்கிலையொத்த தோள்.
"வேய்கிறத் தோளினர்க்கு' சீவக 1893. 、 "வேயெனத் திரண்ட தோள்' கலி 57; 1. "வேய்வனப் புற்ற தோளை நீயே" நற் 82. என வருவன காண்க. காந்தளுள்ளவிடத்து எழுந்த மூங்கிலைத் தோளுக்கு உவமை கூறியமையால் S அக்காக்தளையும் கைக்கு உவமையாக்குக.
* பொய்கைப்பூ இரவிற் கூம்புதல் "நீலம் கூம்பும் மாலை"(ஐங் 116)'இம்மாஜல, இருங்கழி மாமலர் கூம்ப? "இன்கழி மாமலர் கூம்ப. இறுத்தந்த மருண் மாஜல? (கலி 130: 4-5; 147; 6-7) என வருவனவற்றிற் காண்க.
S மகளிர் கைக்குக் காந்தள் உவமை: ஜங் 293; பரி 19 19; 76; கலி 40; 11-2; 59; 3-4 அக 105; 15-8. திணை, ஐம் 2.

Page 82
134 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
'காந்தளங் துடுப்பிற் கவிகுலே யன்ன
செறிதொடி முன்கை' (153-4) என்ருர் பட்டினப்பாலையினும், பெருமதர் மழைக்கண் பணத்தோள் மக ளிரின் நல்லிலக்கணங்கள். 'அகலல்கு ருேள்கண்ணென மூவழிப் பெருகி" (கலி 108-3) எனச் சான்றேர் கூறுதல் காண்க. இவளோடு ஆயிர வெள் ளம் வாழியவென்க. -
“வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடி
ஊழியோ டுழி யுலகங் காத்து நீடுவா ழியரோ நெடுந்தகை" சிலப். நடுகல் 193-6. Gof 60T இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. சேரன் மாதேவியை 'இவள்' என அண்மைச் சொல்லாற் சுட்டலின் அரசனும் தேவியும் ஒருங்கிருந்துழிப் புலவர் வாழ்த்தியவாருகக் கொள்க. மிகப் பலகாலம் வாழ்கவென்பார் ஆயிர வெள்ளம் வாழிய பலவே' என்ருர், பல ஆயிர வெள்ளம் என மாறிக் கூட் டுக. வெள்ளம் என்பது ஒரு பேரெண்ணுதல், "வெள்ள வரம்பி லூழி' (ஐங் 281) "வெள்ளமு நுதலிய, செய்குறி யீட்டம்' (பரி 3; 4-5) பல வெள்ளம்-பல வெள்ளம் என்னும்எண்ணப் பெற்ற காலம் (மதுரைக் 99 கச்) என்பனவற்ருலுமறிக.
இது நாடு காத்தற் சிறப்புக் கூறி வாழ்த்திய செந்துறைப் பாடாண்
பாட்டு.
மேற்கோள்
"அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொல் புற 30) என்ற குத்திர வுரையில், "ஐவகை மரபி னரசர் பக்கமும்' என்பதி லரசியலென்னது பக்க மென்றதனன் அரசர் ஏனே வருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் ருேன் றிய வருணத்துப் பகுதியோருஞ் சிலதொழிற்குரியர் என்று கொள்க' என்று கூறிச் 'சொற்பெயர் நாட்டம்.பெரும்பெய ராவுதி' என்ற பகுதியை எடுத் துக் காட்டி இதன்கண் ஒதியவாறுங் காண்க என்றும், 'வழக்கொடு சிவணிய வகைமையான' என்னும் (தொல் புற 31) குத்திரவுரையில் "மிதியற் செருப் பிற்பூழியர் கோவே. அயிரைப் பொருடு' என்ற இது மலையடுத்தது என்றும் கூறுவர் நச்சினுர்க்கினியர்.
(1) சொல்-சொல்லிலக்கணஞ் சொல்லும் தூல், பெயர் - பொருளிலக் கணஞ் சொல்லும் நூல். “பெற்ற பெரும் பெயர் பலர்கை யிரீஇய' (பதிற் 90; 83) என இத்தொகையுள் மேலே வந்தமையால் பெயரென்பது பொரு ளாம். நாட்டம்-சோதிட நூல், கேள்வி-வேதம். நெஞ்சமென்றது இந்திரி பூங்களின்வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை. (3) எவ்வம் குழாமைஉயிர் வருத்தம் குழாமை. குழாமலெனத் திரிக்க, காலை அ ன் ன வாய் மொழி-ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி; மொழி யானென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினும் அமையும். துணையாகக் (3)

21 ஆம் பாட்டு 185
கொண்ட (6) என முடிக்க. (?) விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது. ‘மைபரத்த' என்பது பாடமாயின் மைபோலப் பரந்தவென்க. (9) பாசவர்ஆட்டு வாணிகர். (10) ஊனம்-இறைச்சி கொத்தும் அடைகுறடு கடலொலி கொண்டு (18) ஆர்ப்ப (11) எனக் கூட்டிஆர்ப்ப எழுந்த (18) என முடிக்க; இனிக் கடலொலி கொண்ட' என்பது பாடமாயின் கடலொலி கொண்ட நக ரென்க. (13) அடுநெய்யாவுதியென்றது அடுசில்கெய்யாகிய ஆவுதியென்ற வாறு; அடுநெய்யை ஆவுதியென்றது விருந்து புறக்தருதலையும் ஒருவேள்வி யாக்கி ஆள்வினை வேள்வியென்று ஒரு துறையாக நூலுட் கூறலானென்பது. இச்சிறப்பானே இதற்கு அடுநெய்யாவுதி என்று பெயராயிற்று. (7-13) ஆவுதியென்ற இரண்டனையும் அவற்ருனுய புகைமேற்கொள்க. (14) 5ாற் றமொடென்பதனை நாற்றத்தானெனக் கொள்க. (15) கடவுளும் விழை தகவென்றது கடவுளும் இவ்வாறு நாம் அறஞ்செய்யப் பெறின் அழகிதென்று அது விரும்பவென்றவாறு, பேணியென்றது முன் சொன்ன வேள்வியால் தேவர்களையும், பின்பு அதனேடு ஒப்பித்துச்சொன்ன ஆள்வினை வேள்வி யால் விருந்தாய் வரும் மக்களையும் பேணியென்றவாறு; அதனைத் திரித்துப் பேணப் பழுனரிய (16) என முடிக்க. பழுனரியவென்பது பெயரெச்ச வினைத் திரிசொல். (16) ஆர்வளம் பழுணரிய சிறப்பென்றது கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த சிறப்பென்றவாறு, (17) கள்ளிற் போர்வல் யானையென்னும் ஒற்று மெலிந்தது. ஆர்ப்புச் சிறந்து (18) கலந்தரூஉம் மார்ப (19) எனக் கூட்டுக. (19 மண்படுமார்ப வென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்ப வென்றவாறு. பல்லா பரப்பிக் (31) கதிர்மணி பெறுாஉஞ் (23) செருப்பு (33) என முடிக்க, (23) செருப் பென்பது ஒரு மலை, மிதியலென்பது அடை, மிதியென்று செருப்பிற்குப் பெயராகிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானக வுரைக்க. குவி யற் கண்ணி (34) என்னுந்தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்தது. மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்வாரும் உளர். (34) குவியற் கண்ணியென்றதற்கு வெட்கிமுதல் வாகையீறய போர்க்கண்ணியெல்லாம் குவிதலையுடைய கண்ணியென்க. (26-9) பரிவேட்பு அஞ்சா அயிரையென்று வெளிப்படை கூறுகின்றனுதலின் அதற்கேற்ப, ரேறன் மருங்கு வழிப்பட்ா வென்று பெயரெச்சமறையே பாடமாதல்வேண்டும். இனிப்படாதென்று வினையெச்ச ம  ைற யா கி ய பாடத்திற்கு நீரற்றவிடத்தில் தான்படாத படியாலே கொக்கின் பரிவேட்புக்கு அஞ்சா அயிரையென வுரைக்க, அயிரை யென்பது ஒரு மலை, கெடுங் கோட்டு (35) அயிரை (39) என முடிக்க. (31)மாந்தர்க்கு கோயிலூழியாகவென மாறிக்கூட்டுக. கிடந்தவாறும் பொருள் படும். (34) ஒரீஇயினபோல வென்பதற்குப் பொய்க்ையென வருவித்துப் பொய்கையை ஒருவினபோலவென உரைக்க. இனி மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயினபோல வென்பாருமுளர். இரவுமலர் நின்றென்பது பொய்கைப்பூப் போலன்றி இரவுக்காலத்தும் மலர்ச்சிநிலைபெற்றென்றவாறு, ஒரீஇயினபோல (34) அலமரும் (35) எனக் கூட்டுக. (36) காந்தளுள்ளவிடத்து எழுந்த மூங் கிலைத் தோளுக்கு உவமை கூறி அக்காந்தளையும் கைக்கு உவமையாக்குக.

Page 83
136 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
நீரழுவம்-டுதியென்க. (36-7) நீரழுவத்து வேயென்றது ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தேயிருக்கும் தோளென்றற்கென்க.
மண்படு மார்ப (19) பூழியர் கோவே (33) மழவர் மெய்ம்மறை (34) அயிரைப் பொரு5 (29) பயமழை சுரந்து (30) மாந்தர்க்கு கோயிலூழி உண் டாக (31) இவளோடே (37) பலவாயிர வெள்ளம் வாழிய (38) எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனற் சொல்லியது அவன் நாடுகாத்தற் சிறப்புக் கூறி வாழ்த்திய வாருயிற்று.
ஒப்புமைப் பகுதி 5. கடவுட் பேணியர்: "அருந்திறன் மரபிற் கடவுட் பேணியர்'
பதிற் (30; 34) 8. வருநர் வரையார்: 1 வருகர் வரை யாப் பெருநாளிருக்கை'
அக 27: 15. 10. வானிணக்கொழுங்குறை: பதிற் 13:16 அடிக்குறிப்பு. 10-11. “செந்தியணங்கிய செழுகிணக் கொழுங்குறை' அக 337; 9. 9-11 'மையறப் புழுக்கிய நெய்கனி வெண்சோறு, வரையா வண்மை யொடு புரையோர்ப் பேணி" அக 136; 1-8; 'அமிழ்தட் டானக் குய்யுடை யடிசில், வரு5ர்க்கு வரையா வசையில் வாழ்க்கை' புற 10: 7-8.
13. செழுநகர்: பெரும் பாண் 485, நற் 159; 7: அக 305:17; புற 391; 17
16. வளம் பழுநிய: "பெட்டாங்கீயும் பெரு வளம் பழுனரி" புற 113; 3 17. மாரியங்கள் 'மழையென மருளு மகிழ்செய் மாடத்து'பொருந84; "மாரி வண் மகிழ்" "மாரிவண்மகிழ் ஓரி' நற் 190; 9; 365; 7; "இரும்பிழி மாரி யழுங்கண் மூதூர்' 'கனைமுதிர் சாடி, பன்ன ளரித்த கோ ஒய் உடைப்பின், மயங்கு மழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்" "தூவற் கள்ளின்' அக 122: 1; 166:1-8; 298: 15. -
போர்வல் யானை: பதிற் 15: 33 அடிக்குறிப்பு. 18. போர்ப்புறுமுரசம்: "போர்ப்புறு முரசங் கண்ணதிர்க் தாங்கு” பதிற் 84; 2: போர்ப்புறு முரசி னிரங்கி' அக 188; 3; 'போர்ப்புறு முரசங் கறங்க' புற 341; 4. -
19. நன்கலந்தரூஉம் : "பாடுசானன்கலக் தரூஉம்' "காடுகெட வெருக்கி நன்கலந் தரூஉம்' பதிற் 59; 18; 83; 7; 'நேரார், நாடுபடு நன்கலங் தரீஇயர், டிேனர் தோழி" ஐங் 468. 'அம்புடைக் கையர் அரண்பல நூறி, கன்கலக் தரூஉம் வயவர் பெருமகன்' அக9ே: 18-9; 'ஒன்னர் வாட அருங்கலக் தந்து' புற 198:15,
20 கோவலர் முல்லைக்கண்ணியணிதல்: "ஆடுடையிடைமகன் சென் னிச் சூடியவெல்லாஞ் சிறுபசு முகையே" குறுந் 391; 4-5; "புல்லினத்தாயர் மகன் குடிவந்ததோர், முல்லை யொருகாழுங் கண்ணியும்' கலி 115; 4-5;

21 ஆம் பாட்டு 137
"இடையன் தண்கமழ் முல்லை தோன் றி யொ டு விரைஇ, வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்' அக 94; 4-6; 'முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாயர், ஒல்லென வொலிப்ப வோடி” சீவக 488.
பல்லான் கோவலர் ஐங் 87; 1; 476; 3; அக 399: 11; புற 365; 4; so 16: 98.
31. மு. "புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி" பதிற் 6:3; 13. 30-31, 1 கொடுங்கோற் கோவலர், ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பி" நெடுநல் 3-4.
23. கடத்திடை மணிபெறல் 'கான்த்து. புன்புலம் வித்தும் வன் கை வினைஞர். அலங்குகதிர்த் திருமணி பெறுாஉம்" "கடத்திடை.இலங்கு கதிர்த் திருமணி பெறு உம்' பதிற் 58; 18 8; 66; 17-9.
24. மழவர் மெய்ம்மறை "வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை"பதிற்க38, 37. பார்வல்: பதிற் 84:5; மதுரைக் 231; அக 22:14; 391; 1; புற 3: 19. பார்வற் கொக்கு: " கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல். பார்வலிருக் கும் " அக 846, 3-11.
முனைகெட விலங்கிய: " ஒன்னத் தெவ்வர் மு னே கெட விலங்கி" பதிற் 53; 10.
30. பயமழை 'பயமழை தலைஇய' கலி 53:7; "பயங்கெழு மாமழை' புற 266; 1. -
83. கமழுங் கூந்தல்: நற் 6:9-10; 95; 8; 137:1; 250; 8; 270: 2-3; 398 10-11; 301, 9: குறுந் 2: 4-5; 116; 1-4; 199; 4; 270, 6-8; 272; 8: 313:6; கலி 43; 23; அக 244; 4-5; 291; 22-3; 295; 21; புற 113; 9.
35. திருமுகத் தலமருங் கண்: "திருமுகத் தலமருங் கண் ணினைந்து" நற் 369: ;ே " மலரென வாண்முகத், தலமரு மாயிதழ் ம  ைழ க் கண்" அக 162; 10-11.
"பெருமதர் மழைக்கண்: 'ஈரிய கலுழு மிவள் பெருமதர் மழைக்கண்' குறிஞ்சி 848; 1 பெ ரும த ர் ம  ைழ க் கண்” அக 361:3; மணி 39; 83; பெருங் (1) 33; 136.
88. ஆயிரவெள்ளம்: "ஆயிரவெள்ளமென்றறிந்த தாழியாய்" கம்ப. இலங்கை கேள்வி 80.
வாழிய பல 'வழுதி வாழிய பல' நற் 150; 4; 'நுண்பஃ றுளியினும் வாழிய பலவே' 'வயங்குபன் மீனினும் வாழியர் பலவென' புற 34:33-3; 3?1: 5.
ஆயிரவெள்ளம் வாழிய: " ஆயிர வெள்ள வூழி, வாழியா த வாழிய பலவே' பதிற் 6:3; 20-1.
18

Page 84
138
(22)
பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
2. கயிறுகுறு முகவை.
சினனே காமங் கழிகண் ைேட்டம் அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை தெறல்கடு மையோடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடையாகுக் தீதுசே னிகந்து நன்றுமிகப் புரிந்து கடலுங் கானமும் பலபய முதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
10
மூத்த யாக்கையோடு பிணியின்று கழிய ஊழியுய்த்த வுரவோ ரும்பல் பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
5
2)
25
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும் ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல் உழைப்பொலிந்த மா இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர் அமர்க் கெதிர்ந்த புகன் மறவரோடு துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயிற் றுங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக் கடிமிளைக் குண்டுகிடங்கின் நெடுமதி னிரைப்பதனத் தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த போன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ
போர்த்தெறிந்த பறையாற் புனல்செறுக் குநரும்
3)
நீர்த்தரு பூசலி னம்பழிக் குநரும், ஒலித்தலை விழவின் மலியும் யாணர் நாடுகெழு தண்பன சீறினை யாதலிற் குடதிசை மாய்ந்து குணமுதற் ருேன்றிப் பாயிரு ளகற்றும் பயங்கெழு பண்பின்
 
 

22 ஆம் பாட்டு 139
ஞாயிறு கோடா நன்பக லமயத்துக் 35 கவலை வேண்னரி கூமுறை பயிற்றிக்
கழல்கட் கூகைக் குழறுகுரற் பாணிக் கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பா ழாகுமனளிய தாமே.
துறை-வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம்-ஒழுகுவண்ணமும் சொற்சீர் வண்ணமும். துரக்கு-செந்துரக்கும் வஞ்சித்துாக்கும் பெயர்-கயிறுகுறு முகவை (14). சினன்-அளவிறந்த சினமும், காமம்-அளவிறந்த காமமும், கழி கண் ணுேட்டம்-அளவிறந்த உவகையும், அச்சம்-பகைவர்க்கு அஞ்சுதலும், பொய்ச் சொல்-பொய் கூறுதலும். அன்புமிக உடைமை-பொருண்மேல் மிக்க அன் புடைமையும், தெறல் கடுமையொடு பிறவும்-குற்றத்தின் மிக்க தண்டமும் ஆகிய இவற்ருெடு பிறவுமாகிய, இவ்வுலகத்து அறம் தெரி திகிரிக்கு வழி யடை ஆகும் தீது-இவ்வுலகத்தே தரும நூநெறியைத் தெரிந்து செலுத்தும் ஆக்ஞா சக்கரத்துக்குத் தடையாகும் தீமைகள், சேண் இகந்து-தூரத்தே விட்டு நீங்க, கன்று மிக புரிந்து - கன்ருகிய கருமங்களை மிகவும் செய்து, கடலும் கானமும் பல பயம் உதவ-கடலும் காடும் பலவாகிய பயன்களைக் கொடுக்க, பிறர் பிறர் கலியாது-ஒருவரை ஒருவர் வருத்தாமலும், வேற்று பொருள் வெஃகாது-பிறர் பொருளே விரும்பாமலும், மை இல் அறிவினர் செவ் விதின் நடந்து-குற்றம் அற்ற அறிவினராய்ச் செவ்விய நெறியிலே ஒழுகி, தம் அமர் துணை பிரியாது - தமது கெஞ்சிற்கு அமர்ந்த வாழ்க்கைத் துணை வியைப் பிரியாமல், பாத்து உண்டு-பிறர்க்குப் பகுத்தளித்துத் தாமுமுண்டு, மாக்கள் மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய-குடிமக்கள் மூத்த யாக்கை யும் பிணியுமில்லாமல் அவற்றினின்று நீங்க, ஊழி உய்த்த உரவோர் உம் பல்-நெடுங்காலம் அரசியலைச் செ லு த் தி ய வலியுடையோருடைய வழித் தோன்றினுேய்!
11-16. பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து - இரும்பினுற் செய்த குந்தாலியால் திண்ணிய செறிவையுடைய பாறையை உடைக்க சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் - சிதறி ஊறுதலின்றிச் சில்லூற்ருக ஊறிய ைேரத் தன்னிடத்தே பெற்ற பத்தலினின்று, கயிறு குறு முகவை - தன் கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவையை, மூயின மொய்க்கும் - நீருண் 'னும் பொருட்டு நெருங்கிச் சூழ்ந்தனவாய் மொய்க்கும், ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த - பசுக்களையுடைய கொங்கரது காட்டை அகப்படுத்திய, வேல் கெழு தானே-வேல் பொருந்திய சேனையையுடைய, வெருவரு தோன் *றல்-அஞ்சத்தக்க தோன்றலே,
፵?... -õ?. உளே பொலிந்த மா-தலையாட்டத்தாற் பொலித்த குதிரைக ளோடு, இழை பொலிந்த களிறு-பட்டம் முதலாகிய பூண்களாற் பொலிந்த யானைகளோடு, வம்பு பரந்த தேர்-தேர்ச்சிலை பரந்த தேர்களோடு, அமர்க்கு

Page 85
140 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
எதிர்ந்த புகல் மறவரொடு-போரை ஏற்றுக்கொண்ட போரை விரும்பும் வீரரோடு, துஞ்சு மரம் துவன்றிய-கணேய மரங்கள் நெருங்கிய, மலர் அகன். பறந்தலை-பரந்து அகன்ற வெளியையுடைய, ஒங்குநிலை வாயில்-கோபுர வாயிற் கண், தூங்குபு தகைத்த - தூங்கக் கட்டிய, வில்விசை மாட்டிய விழு சீர் ஐயவி-வில்லின் விசையை மாளப்பண்ணிய மிக்க கனத்தையுடைய ஐய வித்துலாத்தையும், கடி மிளே-காவற் காட்டினையும், குண்டு கிடங்கின்-ஆழத் தினையுடைய கிடங்கினையும், நெடு மதில்-கெடிய மதிலினையும், கிரை பத ணத்து-கிரைத்த மதிலின் உயர் மேடையினையுமுடைய, அண்ணல் அம் பெரு கோடு அகப்பா எறிந்த-தலைமையையுடைய அழகிய பெரிய சிகரங்களோடு கூடிய அகப்பாவை அழித்த, பொன் புனை உழிஞை - பொன்னுற் செய்த உழிஞை மாலையைச் சூடிய, வெல் போர் குட்டுவ-வெல்லும் போரைச் செய் யும் குட்டுவ, -
28-38. போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குகரும்-தோலைப் போர்த்து முழக்கிய பறையின் ஒலியால் ஆற்று நீரை அடைப்பவரும், நீர் தரு பூசலின் அம்பு அழிக்கு5ரும்-நீரிற் செய்கின்ற விளையாட்டின் ஆரவா ரத்தினுல் அம்பினுற்செய்யும் போரின் ஆரவாரத்தினை அழியச் செய்வாரும், ஒலி தலை விழவின் மலியும்-ஒலியைத் தன்னிடத்தே கொண்ட நீர் விழாவின் கண் மக்கள் மிக்காற்போல மிகும், யாணர் காடு கெழுதண் பணை-புதுவருவா ய்ையுடைய நாட்டிற் பொருந்திய மருத நிலங்கள், சீறினையாகலின்-நீ பகைவ ரைக் கோபித்தாயாதலின், குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றி-மேற்றிசை யிலே மறைந்து கீழ்த்திசையிடத்தே தோன்றி, பாய் இருள் அகற்றும்-பரந்த இருளை நீக்கும், பயம் கெழு பண்பின் - பயன்பொருந்திய பண்பினையுடைய, ஞாயிறு கோடா 15ன்பகல் அமையத்து-ஞாயிறு ஒருபாற் சாயாமல் கின்ற நன்ருகிய உச்சிக்காலத்தே, கவலை வெள் கரி கூ முறை பயிற்றி-கவ்ர்ந்த வழி களிலுள்ள வெள்ளிய 15ரிகள் கூவுதலைப் பலகாற் செய்ய, கழல் கண் கூகை குழறு குரல் பாணி-பிதுங்கிய கண்ணையுடைய கூகை குழறுகின்ற குரலா கிய தாளத்துக்கு ஏற்ப, கருங்கண் பேய் மகள் வழங்கும் - கொடிய கண்ணை யுடைய பேய்மகள் ஆடும், அளிய தாம் பெரும் பாழாகும் மன் - இரங்கத் தனவாம்படி பெரிய பாழாகும் நிச்சயமாக,
முடிபு: உரவோரும்பல், தோன்றல், குட்டுவ, நீ சீறினையாதலின் நாடு ' கெழு தண்பணை அளியதாம் பெரும்பாழாகும் என்க. ஆ-ரை; 1-11. சினன் முதலியனவும் பிறவுமாகிய அறக்தெரி திகிரிக்ம் வழியடையாகும் தீது சேணிகப்ப கன்று மிகப் புரிந்து, கடலும் கானமுகு பயனுதவ, மாக்கள் பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல் என்க. சினன்-சினம், "சென்ற கவுதமன் சினனுற' பரி 19: 15. சினம் தன்னின் வலியார்மேலெழின் தனக்கே தீங்கு பயத்தலானும் மற்றை யெழியார்மே லெழிலின் இம்மைக்கட் பழியும் மறுமைக்கட் பாவமும் பயத்தலானும் முகத் தின்கண் நகையையும் அகத்தின்கண் உவகையையும் கெடுத்தணுலும் அருள் முதலாகிய கற்பண்புகளை நீக்கி ஆகாதனவாகிய தீச்சிங்தைகளெல்லாவற்றை யும் பிறப்பித்தலானும் சினம் மக்களாற் கடியப்படவேண்டிய்தொன்ருயினும்,

22 ஆம் பாட்டு 141
பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் செங்கோல் செலுத் தும் அரசர்க்கு அளவான சினம் வேண்டப்படுதலின், ஈண்டுச் சினன் என் றது அளவிறந்த சினத்தை என்க. நடுவு நின்று உண்மை ஆராயும் அர சர்க்கு அளவிறந்த சினம் தோன்றிய வழிக் கலக்கத்தான் ஒரு பொருளின் உண்மை தோன்ருமையின் * அஃது அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது என்க. ' இறந்த வெகுளியிற் றீதே" (குறள் 581) எனத் திருவள்ளுவர் கூறுதலுங் காண்க. ஏகாரம் எண்ணுப்பொருட்டு. இதனைக் காமம் முதலிய வற்ருேடும் கூட்டுக.
காமம் என்றது அளவிறந்த காமத்தை, சிறியோர் செயலாகலின் இத னேச் 'சிறுமை’ என்பர் திருவள்ளுவர் (குறள் 431). இது ஆக்கத்தைச் சிதைத்து அழிவைத் தந்து பழியையும் பாவத்தையும் ஆக்கலின் இதுவும் அறக்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது என்க. -
'காணுச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணுமை பேணப் படும்" குறள் 866. என்பதன் உரையில் முன்னேனுக்கு யாவரும் பகையாகலானும் ஏனேனுக் குக் காரியங் தோன்ருமையானும் தாமே அழிவர்" எனப் பரிமேலழகர் உரைத் தலுங் காண்க. செங்கோன்மையனுகிய சச்சந்தன் தன் மனைவியாற் கொண்ட அளவிறந்த காமத்தால் அவளுடன் இடைவிடாதிருப்பக் கருதித் தன் அமைச் சருள் ஒருவனுகிய கட்டியங்காரனிடம் தன் அரசியற் பாரத்தைக் கொடுத்துத் தான் எண்ணிய வண்ணம் இன்புற்றிருங்கால், தானே அரசாளக்கருதிப் பட்ை யொடு போந்த கட்டியங்காரனுடன் பொருது சச்சந்தன் மாய்ந்த செய்தி, அளவிறந்த காமம் அரசர்க்குத் தீதா தலைக் காட்டும்.
கழிகண்ணுட்டம் என்றது அளவிறந்த உவகையை, இதனே, "மாணு
உவகை என்பர் திருவள்ளுவர். அது 'மாணு உவகையும்-அளவிறந்த உவ
கையும்; அளவிறந்த உவகையாவது கழிகண்ணுேட்டம்' என்னும் பரிமேலழ கர் உரையானும் அறியப்படும். (குறள் 432 உரை) கழிகண்ண்ேட்டம், செல் வம் புகழ் முதலியன கெடுதற்கேதுவாகிய s மறவி தோன்றுதற்கு ஏதுவாக லின் இதுவும் அறக்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது என்க.
"இவறலு மாண்பிறந்த மானமும் மாணு வுவகையு மேத மிறைக்கு' குறள் 433. என்ருர் திருவள்ளுவரும்.
அச்சம்-பவைர்க்கு அஞ்சுதல். படையும் கட்பும் அரணும் முதலாகிய திட்பங்களெல்லாம் உடையராயினும் அச்சமுடையார்க்கு அவை பயனில வாய்க் கெட்டுப்போதலின் அச்சம் அறக்தெரி திகிரிக்கு வழியடையாகும் திதாகும் என்க. 'அச்ச முடையார்க் கரணில்லை' ' வினைத்திட்ப மென்ப
* அரசர் கடுஞ்சினத்தைக் கடிக்தொழுகியமை ' வெஞ்சின மின்மையும் வய வரேத்த? (சிறுபாண் 210-2) என்பதனுலு மறிக
S 'சிறக்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி " குறள 531 பரிமேல்.

Page 86
142 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தொருவன் மனத்திட்ப, மற்றவை யெல்லாம் பிற ' 'அஞ்சாமை யீகை அறி வூக்க மிக்கான்கும், எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' (குறள் 534, 661, 383) எனத் திருவள்ளுவர் கூறுதலுங் காண்க. ' பகை பெருமையிற் றெவ்வஞ் செப்ப " (பதிற் 89; 1) என்பதனுலும் பகைவர்க்கு அஞ்சுவார்க்கு அரண் முத லியன அரணுகாமை தெளியப்படும்.
பொய்ச் சொல், புகழைக் கெடுத்துக் காரியக்கேட்டிற்கு ஏதுவாகலின் இதுவும் அறக்தெரி திகிரிக்கு வழியடையாகுக் தீது என்க. " உயர்நிலை யுலக மமிழ்தொடு பெ றி னு ம், பொய்சே னிங்கிய வாய்நட் பினையே" (மது ரைக் 197-8) என்பதனுல் பண்டைத் தமிழ் அரசர் பொய்ச்சொல்லைத் தவிர்க் தொழுகியமை அறியப்படும்.
அன்புமிகவுடைமை, பொருளாற் றனக்குச் செய்துகொள்ளப்படுவனவற் றைச் செய்துகொள்ளாது அதன்மேல் அளவிறந்த பற்றுள்ளமுடையணுதல். இது " உலோபம் ' எனப்படும். பற்றுள்ளம் ' என்பர் திருவள்ளுவர். பொருளாற் செய்யப்படுவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளின்கட் பற்றுள்ளானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடுதலி னலும் குணங்களெல்லாவற்றையும் கீழ்ப்படுத்துதலினுலும் அன்பு மிக வுடைமை அறிக்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது என்க.
"பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று' குறள் 433. என்ருர் திருவள்ளுவரும்.
தெறல் கடுமையை, மிகுதண்டம்' என்றும் " கையிகந்த தண்டம் என் றும் ஆன்ருேர் கூறுவர். தெறல் தெறுதல்; தெறுதல் - தண்டஞ் செய்தல், தண்டமாவது: ஒழுக்க 5ெறியினும் வழக்கு நெறியினும், வழீஇயினரை அங் நெறி நிறுத்தற்பொருட்டு ஒப்ப5ாடி யத்தக வொறுத்தல். இவ்வாறு ஒறுத் தல் அரசர்க்கு முறையாயினும் தெறல் கடுமையினுல் தேசமும் கெட்டு பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடும் சுருங்குதலின் இதுவும் அறக்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது என்க.
* கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்" குறள் 567. என்ருர் திருவள்ளுவரும்.
பிறவும் என்றது செல்வக் களிப்பாகிய செருக்கு, நன்மையினிங்கிய மானம், மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி முதலாயினவற்றை, பிறவு மாகிய தீது என்க. இச் சேரனின் முன்னேர் தருமநுாநெறியைத் தெரிந்து உலகோம்பியமையின் இவ்வுலகத்து அறக்தெரி திகிரிக்கு ' என்ருர், அரசர் அறம் தெரிந்து அரசு புரிந்தமை, 'மன்னவன்.கல்லாற்றி னுயிர் காத்து' - 'அரசன். நல்ல தருமநுானெறியாலே பல்லுயிர்களையும் பாதுகாத்து' (கலி 118; 1-2 நச்) என்பதனலுமறியப்படும். திகிரி-ஆக்ஞா சக்கரம், வழி யடை-தடை, இப்பொருட்டாதல் குன்றம் உருண்டால் குன்றி வழியடை யாகாதவாறு போலவும் (இறை. சூ 3 உரை) எனவருதலானு மறிக. சினன்
 

22 ஆம் பாட்டு 143
முதலாகத் தீமைகள் பலவாயினும் சாதிபற்றித் தீது என்ருர், தீமைகளை முற்ருகக் கடிக்தொழுகியமையின் சேணிகத்து' என்ருர், இகந்து என்பத னேத் திரித்து இகப்ப உய்த்த (11) என முடிக்க.
நன்று என்றது செவ்வியோர்க்கு அளித்தல் யாவர்க்கும் தலையளி செய் தல் முதலியவற்றை. கடிந்த தீமைகளிலும், செய்த கன்மைகள் மிகப்பலவா தலின் 'நன்று மிகப் புரிந்து' என்ருர், புரிந்து உய்த்த(11) என முடிக்க.
கடலும் கானமும் பல பய முதவ என்றது உரவோரின் செங்கோன்மை யால் கடலும் கானமும் பலவாகிய பயன்களை உதவ என்றவாறு. 'கிலம் பயம் பொழிய.இலங்கு கதிர்த் திகிரி முந்திசினேரே " (பதிற் 6:3; 13-7) எனவும், ' தொடுப்பினுயிரம் வித்தியது விளைய, கிலனு மரணு பயனெதிர்பு 15க்த. உலக மாண்ட் உயர்ந்தோர் " (மதுரைக் 11-23) எனவும் வருவன காண்க. கடலும் கானமும் என்ரு ராயினும், உபலக்கணத்தால் மருதமும் குறிஞ்சியும் பலபய முதவுதலுங்கொள்க.
"கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு கனந்தலை கன்னட்டு" பதிற் 15:16-?. எனக் குமட்டுர்க்கண்ணனுர் கூறுதலுங் காண்க. ' உதவ' என்பதனையும் உய்த்த(11) என்னும் வினையொடு முடிக்க.
பிறர் பிறர் நலியாது வேற்றுப் பொருள் வெஃகாது மையிலறிவினராய்ச் செவ்விதின் நடந்து தம் துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக் கையும் பிணியுமின்றிக் கழிய ஊழி உய்த்த உரவோர் என்க. பிறர் பிறர் 15லியாது என்றது கருவியிற் கொல்லுதல் தீக்கொழுவுதல் முதலிய தீச்செயல் களாற் குடிமக்கள் ஒருவரை ஒருவர் 5லியாது என்றவாறு. நலிதல்-வருத் , துதல். ' வயவு நோய் கலிதலின் ' கலி 29: 1. பிறர் பொருளை விரும்பலும் குற்றமாகலின் வேற்றுப் பொருள் வெஃகாது என்ருர், பிறர் கலியாது பிறர் வேற்றுப்பொருள் வெஃகாது என கிர னிறையாகக் கூட்டிப் இபாருளுரைப் பாருமுளர், வேற்றுப் பொருள் பிறர் பொருளாகலின் அவ்வாறு உரைத்தல் பொருக்தாதென்க. தெறலும் அன்பு மிகவுடையும் அரசர் தொழிலாக முற் கூறப்பட்டமையின் பிறர் பிறர் கலியாது வேற்றுப் பொருள் வெஃகாது 9ք(Լք குதலைக் குடிமக்கள் செயலாகக் கொள்க. மையில் அறிவு-ஐயங் திரிபு மயக்கங்க ளாகிய குற்றங்களினிங்கிய அறிவு. மை-குற்றம், 'மையறுசிறப்பி னுயர்க் தோர் ' (தொல், களவு சூத் 36) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மையிலறிவினர் என்றதனுல் குடிமக்கள் 5ல்லதன் நலனும் தீயதன் தீமையும் பகுத்துணரும் அறிவுடையராமாறு இச்சேரனின் முன்னேர்கல்வியை வளம் படுத்தியமை கூறினர். தம் அறிவிற்கேற்ப நடுவுநிலைமை யுடையோராய் ஒழுகினமை தோன்றச் ‘செவ்விதின் கடந்து' என்ருர், செவ்விதின்-நடுவுநிலை மையுடையோராய். "செவ்வியோர் - நடுவுநிலைமையுடையோர்' எனப் புறப் பாட்டுரைகாரர் உரைத்தலுங்காண்க. (புற 29, 8 உரை)
> தம் துணை எனக் கூட்டுக. துணை என்றது வாழ்க்கைத் துணையை, கெஞ் சிற்கு அமர்ந்த துணையாகலின் அமர்துணை' என்ருர், துணைப்பிரியாது என்

Page 87
144 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
றதனல் தம் துணைமேற் செய்யத்தகும் அன்பும், பாத்துண்டு என்றதனல் பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறனும் பொருந்த மக்கள் இல்வாழ்க்கை நடாத்தியமை கூறினர். உண்டு என்னும் எச்சத்தினைக் கழிய என்னும் வினையொடு முடிக்க. மூத்த யாக்கை என்றது காலம் எய்துமுன்னரே f560( ע" முதலியவற்ருல் மூத்துத் தோன்றும் யாக்கை. மக்கள் மூத்த யாக்கையும் பிணியுமின்றி வாழ்தலுக்கு அரசியற் செம்மையும் ஏதுவாதல். 'யாண்டுபல வாக கரையில வாகுதல், யாங்கா கியரென வினவுதி யாயின். வேந்தனு மல் லவை செய்யான் காக்கும் " (புற 191) எனவும், "நோயிகந்து நோக்கு விளங்க. உலக மாண்ட வுயர்ந்தோர்" (மதுரைக் 13-28) எனவும் சான் ருேர் கூறுமாற்ருனு மறியப்படும். இன்றியென்னும் வினையெச்சக் குறிப்பின் இறுதிக்கணின்ற இகரம் செய்யுட்கண் உகரமாக நின்றது. என்னே?
'இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற விகர முகர மாத ருென்றியன் மருங்கிற் செய்யுளு ஞரித்தே' தொல். உயிர் மயங்கு 35. என்பவாகலின், ஊழி-நெடுங்காலம். ' உலவா வளஞ்செய்தா னுாழி வாழ் கென்று" (பு. வெ. மா. 161) என்புழி, ஊழி-நெடுங்காலம் என அதன் உரை காரர் உரைத்தலுங் காண்க. உய்த்த-அறந்தெரி திகிரியைச் செலுத்திய,
இகப்ப(5) கழிய (10) உய்த்த உரவோர் (11) என்க. உம்பல் என்பதற் குக் குடியிற் பிறந்தோய் என்றுரைப்பினும் அமையும். முன்னேர் புகழைக் கூறி அவர் வழித் தோன்றினுேய் என்று அரசரை விழிக்கும் மரபு,
"முழங்கு முக்கீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல்" புற 18: 1-4. என்புழியுங் காண்க. -
12-16. கொங்கர் காட்டை அகப்படுத்திய வேல்கெழுதானையையுடைய தோன்றல் என்க.
கணிச்சியால் திண்பிணியுடைக்கச் சிலவாக ஊறிய நீர் வாய்க்கப்பெற்ற பத்தலினின்று வாங்கப்படும் முகவையை மொய்க்கும் ஆக்களையுடைய கொங் கர் என்க. பொன்-இரும்பு. " பொன்னியற் புனைதோட்டியான்' புற 14: 8. கணிச்சி-குந்தாலி, ' குந்தாலிப் படை கலி 101: கச். கணிச்சியால் உடைத்து எனக் கூட்டுக. " காமக் கணிச்சி யுடைக்கும்" (குறள் 1251) என்ருர் பிறரும். திண்பிணி என்றது திண்ணிய பிணிப்பையுடைய பாறையை. பிணி-செறிவு. உடைத்து என்றதனை உடைக்க எனத் திரித்து ஊறிய என்னும் வினேயொடு முடிக்க. இனித் திரியாதே உடைக்கப்பட்டு ஊறிய எனப் பொருளுரைப்பி னும் அமையும். பாறை செறிந்த முரணில மாதலின் கணிச்சியால் திண்பிணியை உடைக்கக் கூவலிற் சிதறி ஊறுதலின்றிச் சில்லூற்றக ஊறுதலின், 'சிரறு சில வூறிய ’ என் ருர், ' "

22 ஆம் பாட்டு - - 145
"பரல்மண் சுவல முரணில முடைத்த வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலர் ஊரு திட்ட வுவலைக் கூவல் 'அக 21:21-3. என்பது ஈண்டு அறியற்பாலது. சிரறுதல்-சிதறுதல். "சிரறு சேலாடிய gif வாய்ப் பதத்த' என்ருற் போல, சிரறுதல் சிதறுதன்மேல் நின்றது என, நச்சினுர்க்கினியர் உரைத்தலுங் காண்க. (கலி 88; 13 உரை)
பத்தல் என்பது கூவல் நீரை ஊற்றி ஆனிரையை உண்பிக்கும் பொருட்டு அதன் அயலிற் ருேண்டப்படும் குழி. அது, - -
"வெயில்வெய் துற்ற பரலவ லொதுக்கிற்
கணிச்சியிற் குழித்த கூவ னண்ணி யான்வழிப் படுகர் தோண்டிய பத்தல்" நற் 340 என்பதனலுமறியப்படும். கூவற் கண் நீர் நிற்கும் குழி அப்பத்தல் போற லின் அதனைப் பத்தல் என்ருர், .
கயிறுகுறு முகவை என்றது தன்னல் நீர் வாங்குவது பெரிதன்றித் தன்
கயிற்றையே பெரிதாக நின்று வாங்கப்படும் முகவையென்றவாறு, இச் சிறப்
பானே இச்செய்யுளுக்குக் கயிறுகுறு முகவை என்று பெயராயிற்று.
கூவற்கண் நீர் மிக்க ஆழத்திலிருத்தலால் முகவையால் நீர் வாங்குதலி னும் முகவை பூண்ட நீண்ட கயிற்றை வாங்குதல் பெரிய கருமமாயிற்றென்க. குறு-முதனிலைத் தொழிற் பெயர். குறுதல்-வாங்குதல், வலித்தல். முகவை. கீரை முகக்கும் கருவி. நீர் வேட்கையாற் பசுக்கள் நீரை உண்ணவேண்டி முக வையை நெருங்கிச் சூழ்ந்தன. மூய்தல்-நெருங்கிச் சூழ்தல், 'ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை" கந்த, சகத் 18. மூயின, முற்றெச்சம். மொய்க்கும் ஆ என்க. ஆ என்றது ஈண்டு ஆனிரையை, ஆகெழு கொங்கர் என்ருர், கொங்கர் பசுக்களை மிகுதியாகவுடையராகலின். இதனைக் 'கொங்கர், ஆபரந்தன்ன செல வின்’ (பதிற் ??: 10-11). " கொங்கர் படுமணி யாயம் ' (அக 29: 5-6) என வருவனவற்ருலு மறியலாம். கொங்கர் நாடகப் படுத்த தோன்றல் எனக் கூட் டுக. கொங்கர் காடு-கொங்கு நாடு. இக்காட்டைப் பிறசேரரும் ஆட்சி புரிக் தமை 'கொங்கர் கோ" (பதிற் 88; 19) என வருதலான் அறியப்படும். வேல் கெழுதானையொடு சென்று கொங்கர் காட்டை அகப்படுத்தியமையால் 'கொங் கர் நாடகப்படுத்த, வேல்கெழுதானேத் தோன்றல்' என்ருர், அகப்படுத்தஅகப்படுத்திய, " என் அறிவகப் படுத்தே ' கலி 57:34, சிறப்புப்பற்றி வேற் படையே கூறினராயினும், "மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின், மொழியா ததனையும் முட்டின்றி முடித்தல்" (தொல் செய். 110) என்னும் உத்தியால் வில் வாள் முதலிய ஏனைப் படைகளையும் கொள்க. நாடகப்படுத்த ஆற்றலும் தானேயுமுடைமையாற் சேரனுக்குப் பகைவர் அஞ்சுதலின் 'வெரு வரு தோன்றல்' என்ருர், தோன்றல் அண்மைவிளி.
1?-27. மாமுதலிய கால்வகைப் படையுடன் சென்று அகப்பா எறிந்த குட்டுவ என்க.
19

Page 88
46 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
உளைப்பொலிந்த மா, இழைப்பொலிந்த களிறு, வம் புப் ரங் த தேர் என்றதனல் சேரன் படைத்தகையுடன் பாடுபெறச் சென்றமைகூறினர். குதிரையைப் பொலிவு செய்யும் அணி க ஞ ள் உளே சிறத்தலின் "உளைப் பொலிந்த மா' என்ருர், ' விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மா' (நற் 370) எனப் பிறருங் கூறுதல் காண்க. இழை, 1ெ5 ற் றி ப் ப ւ: - ւն முதலி யன. "விழுச் சூழிய விளங்கோடைய.வினை நவின்ற போர்யானை" (மது ரைக் 43-7) என வருதல் காண்க. வம்பு - தேர்ச் சீலை, அமர் க் கு-அமரை. உருபு மயக்கம். எதிர்தல்-ஏற்றுக்கொள்ளல். “போரெதிர்ந்து வந்த, வலம்படு தானே வேந்தர் " (புற 116; 17-8) என்புழிப் போரெதிர்ந்து - போரேற்று' என அதன் உரைகாரர் உரைத்தலுங் காண்க. அமர்க்கெதிர்ந்த மறவர் உளம் பொருந்திப் போருடற்றுதற்கேற்ற விருப்பு டை ய ராக லின் அவரைப் "புகன் மறவர்' என்ருர், மறவரொடு, ஒடு எண்ணெடு. இதனை மா முதலிய மூன்றுடனும் கூட்டுக. மறவர் என்றது காலாட்படையை. மா முதலிய வற்றையும் அவற்ருனுய படைமேற் கொள்க. மறவரொடு (20) எறிந்த (26) குட்டுவ (37) என முடிக்க.
கடிமிளையினையும் குண்டுகிடங்கினையும் நெடுமதிலினையும் நிரை பதணத் தினையுமுடைய அகப்பா என்க. -
துஞ்சுமரம் என்றது மதிற்கோபுர வாயிலில் தூங்கும் கணைய மரங்களே. துவன்றிய என்ருர், அவை ஒன்ருேடொன்று நெருங்கத் தூக்கப்பட்டமை
யின் துவன்றிய வாயில் என இயையும். பறந்தலை என்றது ஓங்குநிலைவாயி
லின் முன் அமைந்த வெளியை, இடமகன்ற பெரிய வெளியாகலின் அதனை "மலரகன் பறந்தலை' என்ருர், மலரகன் என்பதில் மலர்ச்சி அகலுதலை விசே டித்து நின்றது. 'உயர்ந்தோங்கிய கிரைப்புதவின்" (மது ரைக் 65) என்புழி உயர்ச்சி ஒங்குதலை விசேடித்து நின்ருற்போல. பறந்தலையையுடைய வாயில் என்க. ஓங்குகில வாயில்-கோபுரவாயில். ஓங்கின நிலையையுடைய கோபுரத்தை ஓங்குகிலையென்ருர்; ஆகுபெயர். மதிலுக்குக் கோபுரவாயிலுண்மை, 'எயின் முகப் படுத்தல் யாவது. குழுஉநிலைப் புதவிற் கதவு மெய் காணின் . தாங்கலாகா வாங்கு நின் களிறே" (பதிற் 58; 13-21) என்புழிக் குழுஉநிலைப் புதவென்றது பலநிலமாகச் செய்த கோபுரவாயிலென்றவாறு' எனப் பழைய வுரைகாரர் உரைத்தலானுமறியப்படும். ஓங்குகிலைவாயிற் றுாங்குபு தகைத்த ஐயவி எனக் கூட்டுக. தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் கால வழுவமைதியெனக் கொள்க, ஐயவியென்றது கதவிற்குக் காவலாகப் புறவா யிலிலே தூக்கப்படும் துலாமரத்தை. அதுதான் பகைவரது விசையையுடைய வில்லானும் துளையுருவ எய்யமுடியாது அதன் விசையை மாளப்பண்ணிய மிக்க கனத்தையுடைமையால் 'வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவி என்ருர், மாட்டிய சீரையுடைய ஐயவி என்க. சீர்-கனம். ' சீருஞ் செம்மையு மொப்ப வருகெறிந்து' நெடுநல் 118. துஞ் சும ரங் துவன்றிய ஓங்குகிலை வாயிற் றுTங்குபு தகைத்த ஐயவி என்ருராயினும், துஞ்சுமரக் துவன்றியதும் ஐயவி தகைத்ததுமாகிய வாயிலையுடைய ஓங்குகிலை என்பது கருத்தாகக் கொள்க.

22 ஆம் பாட்டு 147
* துஞ்சுமரக் குழாஅங் துவன்றிப் புனிற்றுமகள்
பூணு வையவி தூக்கிய மதில நல்லெழி னெடும் புதவு ' பதிற் 16:3-5, என்பதனுலுமறிக. தோட்டி முண்முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள் ஆழ்ந்த அகழி புறஞ்சூழ்ந்த உயர்ந்த மதிலாதலின் கடிமிளைக் குண்டு கிடங்கின், நெடுமதில்' என்ருர், பதணம்-மதிலுண் மேடை, 'பரிய மகப்பா பதணமூன்றும், உரிய மதிலுண் உயர்மே டைக்கே" என்பது திவா கரம். துஞ்சுமரம் முதலிய பொறிகளாலும், கடிமிளை முதலியவற்ருலும் தலைமையமைத்த மதிலாகலின் அண்ணலம் அகப்பா' என்ருர், பகைவரது அகப்பாவின் கலங்கள் எல்லாம் எடுத்துரைத்தார் அதனை அழித்த குட்டுவ னின் அருந்திறலைப் புலப்படுத்தற்பொருட்டு.
"மிகப்பெருக் தானையோ டிருஞ்செரு வோட்டி
அகப்பா வெறிந்த வருந்திற லாயினும்’ 28; 143-4. எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. எறிதல்-அழித்தல். பு. வெ. மா. 209 உரை. எயில் கோடற்கு உழிஞை குடல் மரபாகலின் "உழிஞைக் குட்டுவ" GTGör(?iii.
*முடிமிசை யுழிஞை குடி யொன்னர்
கொடிநுடங்காரெயில் கொளக்கரு தின்று' பு. வெ. மா? 95. என வருதல் காண்க. "உழிஞை-கொற்ருன்; அது குடநாட்டார் வழக்கு என் பர் புறநானூற்றுரைகாரர். (புற 50 உரை). குட் டு வ ன் உழிஞையைப் பொன்னற் செய்தணிந்தமையின் பொன்புனே யுழிஞை' என்ருர், புறத் திணைப் பூக்களைப் பொன்னுற் செய்தணிதல், 'பொன்புனே யுழிஞை குடி' (பு. வெ. மா. 98) எனவும், ': பொலம்பூக் தும்பை" (புற 3:14) எனவும் வருவனவற்ருலுமறியப்படும். அகப்பா எறிந்தமையின் வெல்போர்க் குட் டுவ’ என்ருர்,
28-38 மீ சிறினையாகலின், புனல் செறுக்குருரும் அம்பழிக்கு5ரும் ஒலித் தலை விழவின் மலியும் நாடுகெழு தண்பணே, ஞாயிறுகோடா நன்பகலமை யத்து 5ரி கூமுறை பயிற்றக் கூகை குழறுகுரற் பாணிக்குப் பேய்மகள் வழங் கும் பெரும்பாழாகும் என்க.
பெருகிவரும் யாற்றுப் புதுப் புனல் கரையை யுடைத்தலின் அதனை அடைக்க ஆட்களை வரும்படி முழக்கிய பறையின் ஒலியாற் கரையைக் கட் டிப் புனலை அடைப்பாரைப் போர்த்தெறிக்த பறையாற் புனல் செறுக்குரு ரும்' என்ருர். இதனே,
'வரைச்சிறை யுடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை யுடைத்தன்று கரைச்சிறை யறைகெனு முரைச்சிறைப் பறையெழ வூரொலித் தன்று " பரி 6, 134. என்பதனலும், திரைச்சிறை யுடைத்தன்று கரைச்சிறை யற்ைகெனும் என்பதற்கு வையையின் திரையாகிய சிறகு கரையாகிய காவலையுடைத்தது;

Page 89
148 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
அஃதடைக்க ஆளேறுதற்குப் பறையறைகெனும் ' என்ற உரையானும் தெளி யலாம். 5ாக் கடிப்பாக அறையும் *வாய்ப்பறையை விலக்கித் தோல் போர்த்த பறை என்று கோடற் பொருட்டுப் போர்த் தெறிந்த பறை' என்ருர், போர்க்களப் பறையினதுகண் பகைவர் அம்பாற் கிழிவதுபோலச் செய்தியைத் தெரிவிக்க அடிக்கப்படும் பறையின்கண் இ  ைட யே கிழிவதின்மையின் ‘போர்த்து' என்பதற்குப் ‘புதுத்தோல் போர்த்து' எனல் பொருந்தாதென்க. செறுத்தல்-அடைத்தல். புற ?: 13 உரை. -
துருத்தி முதலிய கருவிகளையுடையராய் மகளிரும் மைந்தரும் நீர்விளையாட் யாட்டயரும் யாறு போர்க்களம் போன்று விளங்குதலினுலும் ஆண்டு எழு கின்ற ஆரவாரம் போர்க்கள ஆரவாரத்திலும் மிக்கமையாலும் நீர்த் தரு பூசலி னம்பழிக்கு5ரும்' என்ருர்,
"ஏரணி யணியி னிளையரு மினியரும் ஈரணி யணியி னிகன்மிக நவின்று தனிபுனலாடுத் தகைமிகு போர்க்கண்' பரி 6:27-9. எனவும்,
"சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி
UTUTUT வக்கழ லாடவ ரோடும் போரர வக்களம் போன்றுபொன் னுற்புனல் நீரர வம்விளைத் தார்கிக ரில்லார்' சீவக 914. எனவும் வருவன காண்க. நீர் என்றது யாற்றினை. பூசல்-ஆரவாரம். அம்பு என்றது அம்பு முதலிய கருவிகளைக்கொண்டு செய்யும் போர்க்கண் எழும் பூசலை, ஒலித்தலை விழவு - பலவகை ஒலிகளைத் தன்னிடத்தேகொண்ட நீர் விழவு. ,
"புகுவோ ரரவமும் போவோ ரரவமும்
தொகுவோ ரரவமுங் தொடர்ந்துகை தழிஇ நடந்தியன் மறுகி னகுவோ ரரவமும்
பாடலொ டியைந்த பல்லோ ர ரவமும் ஆடலொ டியைந்த வணிககை யரவமும் யாற்ருெலி யரவமொ டின்னவை பெருகிக் கூற்ருெலி கேளாக் கொள்கைத் தாகி
SSSSSS LLLLLLL C C SS LLLL LSL S SL CC CSLL LLSL L LLL L LLLL C LL L C C CLSSLS LS S L LSSLS SSSS oe
நீராட் டரவ நிகழுமா லினிதென்” பெருங் (1) 41; 109-135. எனப் பிருண்டும் வருதல் காண்க, விழாவின்கண் மக்கள் மிக்காற் போலப் புனல் செறுக்கு5ரும் அம்பழிக்கு5ரும் அவ்வவ்விடங்களில் மிகுதலின் விழ வின் மலியும்' என்ருர்,
宗 வாய்ப்பறை: “நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்? சிலப்: 14:29; *நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்தீர்? மணி 25: 51; வாய்ப்பறை யறைந்து வாழ்த்துப்பல கூறி? பெருங் (4)7; 118.

22 ஆம் பாட்டு 149
"தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலா
முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே' சீவக 40. என்பது ஈண்டைக் கேற்ப அறியற்பாலது. இதனல் பகைவர் நாட்டு நீர் வளமும் செல்வ மிகுதியும் கூறி னர். மலியும் தண்பணை எனக் கூட்டுக. இனி, மலியும் நாடு எனக் கூட்டினும் அமையும். நாடு என்றது பகைவர் காட்டை, அங்காடு நீர்வளத்தாலும் அரசியற் செம்மையாலும் இடையருத புதுவருவாயுடைமையால் யாணர் நாடு' என்ருர், யாணர்-செல்வமுமாம். தண்பணை-மருதநிலம், குட்டுவன் பகைவரைச் சீறியமையால் அவர் நாட்டு மருதநிலம் அழிதல் ஒருதலையாகலின் "காடுகெழு தண்பணே, சீறினையாகலின். பாழாகும்' என்ருர், பகைவரின் மருத நிலத்தை அழிவுசெய்தல்,
* இழிபறியாப் பெருந்தண்பணை
குரூஉக்கொடிய வெளிமேய
நாடெனும்பேர் காடாக
பாழா யினநின் பகைவர் தேஎம்" மதுரைக் 154-76.
என்பதனலுமறிக. -
குடதிசை மாய்ந்து குணமுதற் ருேன்றிப் பாயிருள் அகற்றும் பயங் கெழு பண்பின் ஞாயிறு என்க. இருள் அகல்தற்கு ஞாயிற்றின் தோற்றம் ஏதுவாகலின் குடதிசை மாய்தலே முன்னும் குணமுதற் ருேன்றலைப் பின்னும் கூறினர். S குணதிசை என்னுது "குணமுதல்' என்ருர், ஞாயிறு கீழ்த்திசை அடிவானத்தில் எழுதரும்போதே இருளையும் அகற்றுதலின். தோன்றி இருள் அகற்றும் எனக் கூட்டித் தோன்ரு நின்று இருளே அகற்றும் என உரைக்க. இருட்டகத்து விளக்குக் கொண்டு புக்கால் விளக்கு வாராத முன்னரும் இருள் நீங்காது; விளக்கு வந்தபின்னரும் இருள் நீங்காது; விளக்கு வருத லும் இருணிக்கமும் உடனே நிகழும்' என இறையனுர் அகப்பொருளுரை யில் (இறை. கு 3 உரை) வருதல் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. பாயிருள் -ஞாயிறு குடதிசை மாய்தலால் உலகிற் பரந்த இருள். குணமுதற் ருேன்றி நன்ருகிய ஒளியைப் பரப்பித் திதாகிய இருளை நீக்குதலின் "பயங்கெழு பண் பின் ஞாயிறு" என்ருர்,
'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி" பெரும்பாண் 1-2.
எனப் பிறரும் கூறுதல் காண்க. இருள் பரவுமாறு குடதிசை மாயும் ஞாயிற் றைப் பயங்கெழு ஞாயிறு என்றது என்னேயெனின், ஞாயிறு குடதிசை மாய்தலால் இருளைத் தோற்றுவித்து இரவுப்பொழுதை உண்டாக்கி உயிர் களுக்கு உறக்கமளித்து அயர்வு அகற்றி வாழ்காள் நீட்சிக்கு ஏதுவாக அமை தல்பற்றி என்க. -
ஞாயிறு கோடா நன்பகல் என்றது ஞாயிறு மேற்றிசைக்கண் சாயப் பெருத உச்சிப் பொழுதை, "கோடா' என்றது உச்சிப் பொழுதையும், நல்" என்பது அதன் இயல்பையும் விளக்கி நின்றன. 15ரி கூவுதலும் கூகை குழறு s" குணதிசைக் கோணத், தீடமை பீடிகை பாடுபெற விருந்த? பெருங் (2) 3: 27.8

Page 90
150 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
தலும் பேய்மகள் வழங்குதலுமாகிய இரவில் நிகழ்தற்குரிய நிகழ்ச்சிகள் நன் பகலிலும் நிகழும்படி பகைவர் நிலம் மக்களின்ருகப் பெரும்பாழாகுமென்பர், "நன்பகலமையத்து கரிகூமுறை பயிற்றிக் கூகைகுழறுகுரற் பாணிக், கருங்கட் பேய்மகள் வழங்கும் பெரும்பாழாகும்" என்ருர்,
'கணங்டுகTள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவும்
வளைவாய்க் கூகை கன்பகற் குழறவு மருங்கடி வரைப்பி னுார்கவி னழியப் பெரும்பாழ் செய்து மமையான்" பட்டினப் 359-70. எனப் பிறருங் கூறுதல் காண்த. குட்டுவன் மருதநிலத்தைப் பாழாகும்படி அழித்தலின் மக்கள் இயங்கிய வழிகள் அருவழிகளாகப் போதலின், அவற் றில் திரியும் குறுநரிகளைக் கவலைவெண் 5ரி' எ ன் ரு ர். கவலை - அருவழி. அக?2, 16 பழையவுரை. கவர்ந்த வழியுமாம். கூகையின் குழறு குரலைப் பாணி என்றதற்கேற்ப கரியின் கூவுதலைப் பேய்மகளின் ஆடற்கேற்ற முழவாகக் கொள்க.
"வெள்வா யோரி முழவாக விழிந்தா ரீமம் விறகாக
ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கி னிழல்போ னுடங்கிப் பேயாட'சீவக309. எனப் பிறரும் கூறுதல் காண்க. கரி சத்தமிடுதலைக் கூவுதல் என்றல் ԼԸՄԼվ.
'குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு" சிலப் 10: 235. ് 'நீண்முக 15ரியின் ரீவிளிக் கூவும்' மணிமேகலை 6: 74. என வருவன காண்க, பலகாற் கூவுதலின் கூமுறை பயிற்றி" என்ருர், கூ-கூவு தல், 'வினைபுனை நல்லி லினே கூஉக் கேட்பவும்" புற 44; 8. பயிற்றி-பலகாற் செய்து, அதனைத் திரித்துப் பயிற்ற வழங்கும் எனக் கூட்டுக. குழறு குரல்கூப்பிடுகின்ற குரல், பாணி-தாளம். "சிலதியர் பாடற் பாணி' பெருவ (1) 33; 24-5. கூகை கால ஒழுங்கமைய விட்டுவிட்டுக் குழறுதலின், குழறு குர ஐலப் பாணி' என்ருர், கருங்கண்-செக்கிறத்ததாய்க் கண்டார்க்கு அச்சத்தைச் செய்யும் கொடிய கண். 'கொள்ளிகொண் டிரண்டே முழையிற் புகிற், குன்று தோன்றுவ போல விழிப்பன" (கலிங் 188) எனப் பிறரும் கூறுதல் காண்க. கருமை-கொடுமையென்னும்பொருட்டாதல் கருங்கழல்-கொடிய கழல் என நச்சினுர்க்கினியர் உரைத்தலானுமறிக. (சீவக 1739 உரை) கருங்கட் பேறு கள் என்ருராயினும் "உலறிய கதுப்பு பிறழ்பற் பேழ்வாய்' முதலியனவுங் கொள்க. வழங்குதல்-ஆடுதல். "அரவழங்கும் பெருக்தெய்வத்து'(பதிற் 51:13) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. முழவு மு த லிய இன்னியங்கள் ஒலிக்க மகளிர் ஆடுதலையுடைய காடுகெழு தண்பணே, கரி கூமுறை பயிற்றக் கூகை குழறுகுரற் பாணிக்குப் பேய்மகள் வழங்கும் பாழாகும் என்ற புல வரின் கற்பனைத் திறம் மிகவும் வியற்கற்பாலதொன் ருகும். அழியதாம் பெரும் பாழாகும் என மாறிக் கூட்டுக. பாழான இடத்தைக் கண்டு ழக்கள் இரங்கல்,

22 ஆம் LI IT (6) 151
"இன்ருே வன்ருே தொன் ருேர் காலை நல்லம னழிய தாமெனச் சொல்லிக் காணு5ர் கைபுடைத் திரங்க மாணு மாட்சிய மாண்டன பலவே' பதிற் 19 24-7. என்பத்ணுலறிக.
பழையவுரை. 3. அச்சம்-பகைவர்க்கு அஞ்சுதல். அன்பு-பொருண்மேலன்பு, 13 சிரறு சிலவூறிய வென்றது பல்லூற்ருெழியச் சில்லூற்ருக வூறிய வென்றவாறு. சிரறுதல்-சிதறுதல். 14. கயிறு குறு முகவையென்றது தன்னல் நீர் வாங்கு வது பெரிதன்றித் தன் கயிற்றையே கின்று வாங்கப்படும் முகவையென்ற வாறு. இச்சிறப்பானே இதற்குக் கயிறுகுறுமுகவை என்று பெயராயிற்று. 33. தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் காலவழுவமைதியெனக் கொள்க. தகைத்தல்-கட்டுதல். 38. வில்விசைமாட்டிய விழுச்சீர் ஐயவி என் றது விசையையுடைய வில்லானும் துளையுருவ எய்யமுடியாது மிக்க கனத்தை யுடைய ஐயவித்துலாமென்றவாறு. 37. கருங்கண்-கொடிய கண், வழங்குதல். ஆடுதல்.
உரவோரும்பல் (11) தோன்றல் (16) குட்டுவ (37) நீ சீறினையாத லின், காடுகெழு தண்பணை (31) அளியதாம் பெரும் பாழாகும் (38) எனக் கூட்டி வினைமுடிபு செய்க. - " .
இதனற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறயிற்று. சீறினையாதலின் நாடுகெழு தண்பணை பாழாகுமென எடுத்துச் செலவினே மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாணுயிற்று.
'உளைப்பொலிந்த மா (17) என்பது முதலாய கான்கடியும், "கடிமிளை (34) என்பது முதலாய இரண்டடியும் வஞ்சியடியால் வந்தமையால் வஞ்சித் தூக்குமாயிற்று.
20. "புகல்" என அடியிடையும், "ஒடு" என அடியின் இறுதியும் வங்தன
th-6. -
- ஒப்புமைப்பகுதி, 7. பிறர் பிறர்: "பிறர் பிறர் அறிதல் யாவது' நற் 331: 11: “பிற் பிறர் கூற' புற 150; 24; "பிறர் பிறர் சீரெலாக் தூற்றி” நீதிநெறி 30,
9. அமர்துணை குறுந் 215, 6, 237, 1, ஐங் 64 1, கலி 66; 9: அக 23: 8; 385: 15.
11. உரவோரும்பல்: "கொற்றத் திருவினுரவோரும்பல்" பதிற் 90:24; * திரைதரு மரபி னுரவோ ரும்பல்" பெரும்பாண் 31 ஒருதா மாகிய வுரவோ ரும்பல்" புற 18: 4.
13: சிலநீர் கலி 11: 8; 34; 3; சீவக 2344; 2540. 15. ஆகெழுகொங்கர்: "கொங்கர், படுமணி யாயம்' அக 79; 5-6.

Page 91
152 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
12-15. "வேட்டச் சீறூர் அகன்கட் கேணிப், பயநிரைக் கெடுத்த மணிநீர்ப் பத்தர்' நற் 92; 5-6; 'கல்லாக் கோவலர் கோலிற் ருேண்டிய, வானிர்ப் பத்தல்" ஐங் 304; 1-3. "படுமணி யினநிரை உணிஇய கோவலர், விடுகில முடைத்த கலுழ்கட் கூவல்' 'கடற்றடை மருங்கின் கணிச்சியிற் குழித்த, உடைக்கண் டேமை யூறலுண்ட, பாடின் றெண்மணிப் பயங்கெழு பெருகிரை' அக 321:7-8; 899 6-8.
16. வேல்கெழுதானை நற் 387, 8 அக 3338; புற 37; 8.6; 836-5; பு. வெ. மா. 131. சீவக 554; சிலப் 37; 13. -
17. உளைப்பொலிந்தமா: பதிற்; 20; 14 ஒப்புமைப்பகுதி பார்க்க. 18. இழைப்பொலிந்த களிறு பதிற் 6:3; 2 அக 308:7; 326: 9; 346:9; புற 158; 2; பெருங் (1) 34:37,
30. வீரர் போரை விரும்பல்: "பெருஞ்சமங் ததைந்த செருப்புகன் மறவர்' 'ஆய்ந்து தெரிந்த புகன்மறவரொடு' 'முனேயுகல் புகவின் மாரு மைந்தரொடு’ பதிற் 30: 41; 69; 8; 84:17; "மண்டமர் நசையொடு கண் படை பெருஅ" முல்லை 67; 'ஒன்ன ரோட்டிய செருப்புகன் மறவர்’ மது ரைக் 736. "போர்வேட் டெழுந்த மன்னர்' 'செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணுடவர்" அக 144; 14; 157; 4; 'போரெனிற் புகலும் புனைகழன் மறவர்" "உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக், கேவா னகலிற் சாவேம் யா மென, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" "பொதுவிற் றுTங்கும் விசி யுறு தண்ணுமை, வளிபொருதெண்கண் கேட்பின், அதுபோ ரென்னு மன் னையுமுளனே" "செருப்புகன் மறவர்” “வாள்வடு விளங்கிய சென்னிச், செரு வெங் குருசில்' புற 31; 9; 68; 11-3; 89; 7-9; 174; 13, 321:9-10; 'அமர் வேட்டுக் கலித்த பெரும்படை மறவர்க்கு" சிலப் 36; 48-9.
17-30, "கடுஞ் சினத்த கொல்களிறுங், கதழ்பரிய கலிமாவு, நெடுங் கொடிய நிமிர்தேரு, கெஞ்சுடைய புகன்மறவருமென' 'ஒளிறுவாண் மறவ ருங் களிறு மாவும்" புற 55; 7-8; 237; 4; 'கவுளழி கடாத்த வேழம், போர் விளை யிவுளித் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள்" சீவக 433; "ஒளிறு வாண் மறவருங் தேரு மாவுங், களிறுஞ் சூழ்தர' மணி 1 68-9.
23. ஓங்குநிலை வாயில்: “குன்றுங்குயின் றன்ன வோங்குகிலை வாயில்” நெடுநல் 88. . . . -
23. வில்விசை: "வில்விசை யுமிழ்ந்த வைம்முள்ளம்பின்' பதிற் 33 8. 21-3 பதிற் 16:2-4 ஒப்புமைப்பகுதி பார்க்க. 24-5. பதிற் 20:17-8 ஒப்புமைப்பகுதி பார்க்க. 36. அகப்பா எறிந்தது: "அகப்பா வெறிந்து பகற்றி வேட்டு" பதிற் 8ம் பதி 8.
33. "குடதிசை குணமுதல்: குடதிசை கின்று குணமுதற் செலினும்" L/m) 386: 21. -
 

22 ஆம் LI TI' (65 153
33. பாயிரு ளகற்றும் ஞாயிறு: 'பாயிரு ணிங் கப் பல்கதிர் பரப்பி, ஞாயிறு குணமுதற் ருேன்றி யாஅங்கு' பதிற் 59, 5-6; 'பாயிரு ணீங்கப் பகல் செய்யா வெழுதரு, ஞாயிறு" மலைடு 84-5; "ஈண்டுநீர் மிசைத்தோன்றி யிருள் சீக்குஞ் சுடரே போல்' 'பாயிருட் பரப்பினைப் பகல்களைக் ததுபோல்' கலி 100: 1; 148; 29; 'இருளற, விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக், கடுங்கதிர்' பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன்' அக 53:1-8; 239; 1: 'மீன்றிகழ் விசும்பிற் பாயிருளகல, வீண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ, துரவுச்சினத் திருகிய வுருகெழு ஞாயிறு' 'அங்கண் விசிம்பி னரிருளகற் றும், வெங்கதிர்ச் செல்வன்' 'மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய விருளு முண்டோ ஞாயிறு சினவின்’ புற 25: 1-8; 56 32-3; 90; 4-5; "வெய்யவன் கதிர்களென்னும் விளங்கெளித் தடக்கை நீட்டி, மையிருட் போர்வை நீக்கி" சீவக 1406.
34. நன்பகல் முருகு 130: பொருந46, கலி 74; 10; 98; 18; அ4 135; 20; 327, 8 சிவக 1596; சிலப் 18:16; 23:30,
35. கவலை வெண்ணரி: "கவலைக் கணகரி யினணுெடு' ஆக 375 5 6: 36. கழல்கட் கூகை: 'கழல்கட் கூகையொடு கடும் பாம்பு தூங்க” முருகு 49.
கூகை குழறல்: "குன்றக் கூகை குழறினும்' குறுந் 153:1; "மன்றம ராஅத்த கூகை குழறினும்' அக் 158; 18; “வெருவக் குழறிய விழிக்கட் கூகை' பெருங் (3) 23 151.
34-6. நண்பகலிற் கூகை குழறல்: "வளைவாய்க் கூகை நன்பகற் குழற வும்' பட்டினப் 368. "பகலுங் கூவுங் கூகையொடு' 'வாய்வன் காக்கை கூகை யொடு கூடிப், பகலுங் கூவு மகலு ளாங்கண்' புற 356, 3, 368; 17-8; 'பேணு ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும்" பு, வெ. மா. 89.
37. "கருங்கட் பேய்மகள்: கருங்கட் பேய்மகள் கைபுடையூ குடுங்க” பதிற் 30; 36.
87-8 பேய்மகள் வழங்கும் பாழாகல்: "பேய்மகளிர் பெயர் பாட.
பாழாயினநின் பகைவர் தேஎம்" மதுரைக் 163-76. "பிணந்தின் யாக்கைப்
பேய்மகள் துவன்றவும்.பெரும்பாழ் செய்து மமையான்' பட்டினப் 360-70,
அளியதாம்: பதிற் 19, 35 ஒப்புமைப்பகுதி.
20

Page 92
154 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
3. ததைந்த காஞ்சி (23) அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து நிலம்பை தற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் 5 மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிங் தாடச் சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் 10 போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேம் கண்டனம் புன்மிக்கு வழங்குக ரற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந் தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் 15 விண்ணுயர் வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தோராலின் மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியோடு 20 முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழன்மருள் பூவின் முமரை வளைமகள் குரு அது மலர்ந்த வாம்பல் அருஅ யாணரவ ரகன்றலே நாடே.
துறை-வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் -ஒழுகு வண்ணம். தூக்கு-செந்தூக்கு. பெயர்-ததைந்த காஞ்சி (19). 1-10, அலங்தலை உன்னத்து அங்கவடு பொருக்தி-காய்ந்த தலையினை யுடைய உன்னமரத்தின் கிளையின் அகமாகப் பொருந்தி, சிதடி கரைய-சிள் வீடு என்னும் வண்டுகள் கரையும்படி, பெரு வறம் கூர்ந்து-பெரிய வற்கடம் மிகுந்து, நிலம் பைது அற்ற-நிலம் பசுமை அற்ற, புலம் கெடு காலையும்-விளை நிலங்கள் விளைவின்றிக்கெட்டகாலத்தும், வாங்குபு தகைத்த கலப்பையர்-இழுத்

23 ஆம் பாட்டு 155
துக்கட்டிய வாச்சிய முட்டுக்களையுடைய பையையுடையராய், ஆங்கண் மன் றம் போந்து - தாம் சென்ற ஊரிடத்து மன்றிலே சென்று, மறுகு சிறைபாடும் வயிரிய மாக்கள்-தெருவின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசையின் பக்கமாகப் பாடிச்செல்லும் கூத்தர், க டு பசி நீங்க - தமது மிக்க பசி நீங்குமாறு, நெஞ்சு மலி உவகையர் உண்டு - கெஞ்சிலே மிகுந்த மகிழ்ச்சியினையுடைய ராய் உண்டு, மலிந்து ஆட - மகிழ்ச்சிமிக்கு ஆடுதலைச் செய்ய, பொன்செய் புனே இழை ஒலிப்ப - பொன்னுற் செய்யப்பட்ட புனேந்த ஆபரணங்கள் விளங்க, பெரிது உவந்து-மிக விரும்பி, சிறு மகிழானும் பெருகலம் வீசும்சிறிய மகிழ்ச்சியுடைய காலத்தும் பேரணிகலங்களை வழங்கும், போர் அடு தானே-போரிற் பகைவரைக் கொல்லுகின்ற தானேயையுடைய, பொலம் தார் குட்டுவ-பொன்னுற் செய்த மாலையினேயுடைய குட்டுவ,
15-25. நின் மைந்து மலி பெரும்புகழ் அறியார் மலைந்த-நினது வலியால் மிகுகின்ற பெரிய வென்றிப் புகழினை அறியாராய் கின்னுடனே பொருத, போர் எதிர் வேந்தர் - போரை ஏற்ற வேந்தர், தார் அழிந்து ஒராலின் - தூசிப் படை கெட்டொழிய நீங்குதலால், மருது இமிழ்ந்து ஓங்கிய-மருத மரங்கள் புட்கள் ஒலிக்குமாறு உயர்ந்த, 5ளி இரு பரப்பின் - குளிர்ந்த பெரிய பரப் பினையுடைய, மணல் மலி பெருந்துறை - மணல் மிகுந்த பெரிய துறைக்கண், ததைந்த காஞ் சி யொ டு - சிதைவுபட்டுக்கிடக்கின்ற காஞ்சி மரங்களோடு, முருக்கு தாழ்பு எழிலிய - முருக்கமரங்கள் தாழப்பெற்று அதனுல் அழகு பெற்ற, கெருப்பு உறழ் அடைகரை - கெருப்பையொத்த நீரடையும் கரை யினேயும், கந்து 5ாரையொடு செவ்வரி உகழும் - சங்குபோலும் வெள்ளிய காரைகளுடனே செவ்வரி 5ாரைகள் தாவும், களனி வாயில்-கழனி வாயிலை யும், பழனம் படப்பை-நீர்நிலைச் செறுவையும் தோட்டத்தையும், அழல் மருள் பூவின் தாமரை - நெருப்பை ஒத்த பூவினையுடைய தாமரையினையும், வளை மகள் குருஅது மலர்ந்த ஆம்பல் - விளையாட்டு ம க ளி ர் பறிக்காமையால் மலர்ந்த ஆம்பலினையும், அருஅ யாணர் - இடையருத புது வருவாயினையு முடைய அவர் அகல் தலை நாடு - அப்பகைவரது அகன்ற இடத்தையுடைய |5ாடுகள்,
11-15. வழங்குநர் அற்றென மருங்குகெட தூர்ந்து-வழிச்செல்வோர் அற்றதாக இடங்கள் கெடும்படி தூர்வடைக் து, புல் மிக்கு - அறுகு முத லிய புல் மிகுந்து, பெரு கவின் அழிந்த ஆற்ற - பெரிய அழகு அழிந்த வழிகளை யுடையனவாய், அண்ணல் மரை ஆ - தலைமையையுடைய மரையாக்கள், ஏறு புணர்ந்து அமர்ந்து இனிது உறையும்-ஏறுகளுடனே கூடி விரும்பி இனி தாக உறையும், விண் உயர் வைப்பின காடாயின-மரங்கள் விண்ணிலே செல் வோங்கிய இடத்தையுடைய காடுகளாயின, கின் கயத்து வருவேம் கண்டனம். கின்னேக் காணவிரும்பி வருகின்ற யாங்கள் அதனைக் கண்டேம்,
முடிபு: குட்டுவ, போரெதிர் வேந்தர் தாரழிக் தொராலின் அவர் அகன் றலே நாடு காடாயின; அதனை கின்னயந்து வருவேம் கண்டனம் என்க.
ஆ-ரை. 1-10. பெருவளங் கூர்ந்து புலங்கெடு காலையும் மன்றம் போந்து மறுகு சிறைபாடும் வயிரிய மாக்கள் கடும்பசி நீங்க உண்டு மலிந்தா டிப் பெருங்கலம் வீசும் குட்டுவ என்க.

Page 93
156 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
கடுங் கதிர் தெறுதலின் பெருவறங் கூர்தலாற் காய்ந்த தலையினையுடைய உன்னத்தை 'அலந்தலை உன்னம்’ என்ருர், அலந்ததலை, அலந்தலையென விகா ரம், உன்னம்-உன்னமரம். 'உன்ன மரத்த துன்னருங் கவலை’ புற 3: 23. பெருவறம் கூர்தலால் கிலம் பசுமையற்றுப் போதலின், ஈர நிலத்திலிருக்கும் சில்வீடு, உன்னத்துக் கவடு பொருந்திக் கரைவனவாயின. 'தெறுகதிர் ஞாயிறு நடுகின்று காய்தலின் . சில்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து' (அக 89; 1-6) என வருதல் காண்க. அங்கவடு பொருந்தி - கவட்டின் பொரிந்த பட்டைகளின் அக மாக ப் பொருந்தி, ‘கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய, சிறியிலை வேலம்' (பதிற் 58; 13-4) எனவும், 'உலவை யோமை யொல்குகிலை யொடுங்கிச், சிள்வீடு கறங்குஞ் சேய்நாட் டத்தம்' (நற் 858) எனவும் வருவன காண்க. கவடு-கணுவுமாம், சிதடி-சிள் வீடு என்னும் வண்டு, சிதடி ஆர்த்தலைக் கரைதல் என்றல் 'சிதடி கரையுங் திரிந்து'(திணை. நூற் 83) என்புழியுங் காண்க, கூர்தல்-மிகுதல். நிலம் பைதற்றகாலை எனக் கூட்டுக. பெருவறங் கூர்தலால் கிலமேயன்றி நீர்ச்செறிவுடைய விளைபுலங்களும் பைதறக்
காய்தலால் விளைவின்றிக் கெடுதலின், ‘பெருவறங் கூர்ந்து நிலம் பைதற்ற
புலங்கெடு காலையும்' என்ருர், புலம்-வயல். காலை-காலம். புலங்கெடு காலை
யும் (3) மன்றம் போக்து மறுகுசிறை பாடும் (5) வயிரிய மாக்கள் எனக்
கூட்டுக, “கடுத்திறல் வேனில். கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரி
தரும், புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண' (பெரும்பாண் 3-39) எனப் பிருண்டும் வருதல் காண்க.
வயிரிய மாக்கள் ஆடல் பாடல்களுக் கேற்ற வாச்சிய முட்டுக்களைப் 60( ן_juil லிட்டு இழுத்துக் கட்டிச் சுமந்து செல்லுதலின் வாங்குபு தகைத்த கலப்பை யர்' என்ருர்,
'கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்’ மலைபடு 12-3,
d
"தலைப்புணர்த் தசைத்த பஃருெகைக் கலப்பையர்’ அக 301:32, என வருவன காண்க. வாங்குதல்-இழுத்தல், 'குடவாய்க் கொடிப் பின்னல் வாங்கித் தளரும். குறுமாக்கள்' கலி 83; 9-10. தகைத்தல்-கட்டுதல், வாங் குபு தகைத்த பையாதலின் கலம் என்றது பிறகலங்களுடன் பையிலிட்டு
வலித்துக்கட்டுதற்கு அமையாத யாழ் ஒழிக்த முழவு முதலிய பிற கலங்களை
யென்க.
"புணர்புரி 5ரம்பின் றிக்தொடை பழுகிய வணரமை 15ல்யா ழிளேயர் பொறுப்பப் பண்ணமை முழவும் பதலையும் பிறவும் கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் ' பதிற் 41: 1-5. 'காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை" புற 806: 10,
என வருவன காண்க, கலப்பை-வாச்சிய முட்டுக்களையுடைய பை. ம?லபடு ஜார். கலப்பையராய்ப் போந்து (5) என்க. சுரம்பல கடந்து செல்லும்

T
23 ஆம் பாட்டு 157
வயிரியர் ஊண்பெறுதல் முதலியன ஏதுவாக ஊர்மன்றிற் செல்லுதலின் ஆங்கண் மன்றம் போந்து' என்ருர். "மன்றில் வதியும் சேட்புலப் பரிசிலர்' (மலைபடு 493) எனவும், 'மன்றத்துக். கொழுஞ்சோ ருர்ந்த பாணர்க்கு” (புற 34 13-4) எனவும் வருவன காண்க. ஆங்கண் - ஊரிடம். மன்றம். ஊர்க்கு நடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடி, முருகு 336 கச். வயிரியமாக் கள், ஊரிடத்து வீதியின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசைகளின் பக்கமா கப் பாடிச் செல்லுதலின் 'மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள்' என்ருர், 'வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழிஇ, மன்ற கண்ணி மறுகுசிறை பாடும்" (பதிற் 39. 8-9) என்பர் மேலும்,
‘பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டி னிம்மென விமிரு மேர்தரு தெருவின்' நற் 30: 3-4.
*நன்ன ராளர் கூடுகொ வின்னியம்
தேரூர் தெருவில் ததும்பும் ഉബi' 95 189: 13-5.
என்பனவும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலன. கடும்பசி-பலநாள் உணவின் மையால் உண்டாகிய மிக்க பசி. பசிநீங்க உண்டு எனக் கூட்டுக. கடும்பசி கலக்கிய இடும்பைகூர் கெஞ்சத்து வயிரிய மTக்கள், குட்டுவன் அளித்த உரை வினைப் பெறுதலால் கெஞ்சிலே மிகுந்த மசிழ்ச்சியுடையராய் உண்டலின் "5ெஞ்சு மலி யுவகையர் உண்டு’ என்ருர், மலிக் து என்றது கடும்பசியால் உழந்த பழங்கண் வீழ்தலால் உளதாகிய மகிழ்ச்சி மிக்கு என்றவாறு, மறுகு சிறை பாடும் வயிரியமாக்கள் ஆட என்றதனுல் அவர்கள் ஆடல் பாடல் களில் வல்லராதல் அறியப்படும். புனையிழை என்றது சேரன் அணிந்த தொடி முதலிய ஆபரணங்களே. அவை கலம் வீசும்போது விட்டு விளங்கவின் ஒலிப்ப' என்ருர், 'மார்பி லணி யாரம், யக்தர நிலத்திரவி og'F வொளி விஞ்ச. கடிதெழுந்தான்” (கம்ப. கையடை4) எனக் கம்பர் கூறுதல் ஈன் டறியற்பாலது. ஒலிப்ப - விளங்க. "உதிர்துக ளுக்ககின் னுடை யொலிப்ப" என்புழி ஒலிப்ப-விளங்க என நச்சினுர்க்கினி பர் பொருளுரைத்தலுங் கான்யூ (கலி 81: 31 உரை) மனம் வருக்திக் கொடுப்போரு முண்மையின் அவர்டு லன்றிக் குட்டுவன் மனத்தான் மிகவிரும்பிக் கொடுத்தலின் பெரிதுவந்து என்ருர் ஆட உவந்து வீசும் எனக் கூட்டுக. சிறுமகிழானும் என்றது வயிரிய மாக்கள் ஆடலால் எழுகின்ற பெருமகிழ்ச்சியினன் றிச் சிறு மகிழ்ச்சிடி னும் என்றவாறு. சிறுமகிழானும் என்பதற்குச் சிறிய கள்ளுண்டுமகிழ்ச்சி பெற்ற காலத்தும்' என்று உரைப்பாருமுளர். கள்ளுண்ட மகிழ்ச்சியால் ஈதல் யார்க்கும் எளிதாகலின் அவ்வாறு உரைத்தல் சிறப்பின்ரும் என்க. கள்ளுண்டு மகிழாது ஈதலே சிறந்த கொடையாதல், -
'காட்கள் ஞண்டு காண்மகிழ் மகிழின்
யார்க்கு மெளிதே தேரி தல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன்

Page 94
158 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
மகிழா தீத்த விழையணி நெடுக்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி யுறையினும் பலவே' புற. 133. எனச் சான்ருேர் கூறுமாற்ருனு மறிக. சிறுமகிழானும், உம்மை உயர்வு சிறப்பு. பெருங்கலம் என்றது விலைமதித்தற்கரிய பொன்னரிமாலை முத்து மாலை முதலியனவற்றை, வீசும் என்ருர் பெருங் கொடையாதலின், 'ஈதல் வீசல் இசைத்த னரீட்டல்.பெருங் கொடை' எனப் பிங் கலந்தையில்(?: 371) வருதல் காண்க. வீசும் குட்டுவ என்க.
11-25. நின் மைந்து மலி பெரும்புகழை அறியாராய் மலைந்த பகைவேக் தர் தார் அழிந்து நீங்குதலால், பெருந்துறைத் ததைக்த காஞ்சியொடு முருக் குத் தாழ்பு எழிலிய அடைகரையினையும் 15ந்து காரையொடு செவ்வரி உக ழும் கழனிவாயிலினையும் பழனத்தினையும் படப்பையினையும் தாமரையினை யும் குவளையினையும் நீங்காயாணரையு முடைய அவர் அகன்றலை நாடுகள் பெருங்கவின் அழிந்த ஆற்றவாய், மரையா ஏறு புணர்ந்து இனிது உறை யும் விண்ணுயர் வைப்பின காடாயின; அதனை நின்னயந்து வருவேம் கண் டனம் என்க.
மைந்து - வலி. ' மைந்து பொருளாக வந்த வேந்தனை" தொல். ւյք கு 15. அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க புகழா தலின் அதனைப் பெரும்புகழ்' என்ருர், மைந்தினல் மறப்புகழ் மிகுதல் *மறப்புகழ் நிறைந்த மைந்தினேன்" (புற 290, 6) என்பதனலுமறியப்படும். சேரன் பெரும்புகழைப் பகைவேக்தர் முற்பட அறிந்திருப்பரேல் மலையாதொழி வர் என்பார், பெரும்புகழ் அறியார் மலைத்த வேந்தர்' என்ருர், மலைதல்மாறுபடுதலுமாம். தம்பெருவலி காரணமாகப் போர்செய்தலை "மேற்கொள் ளும் வேந்தராதலின் போரெதிர் வேந்தர்' என்ருர், போர் எதிர்தல்-போர் செய்தலை மேற்கொள்ளல். கலி 89; 5 கச். அத்தகைய பெருவலி சான்ற பகை வேந்தர் போரிலே தம் தூசிப்படை யழிந்து நீங்குதலின் 'தார் அழிக் தொராலின்' என்றர் தார்-தூசிப்படை, ஒரால்-நீங்குதல். "நீடுபசி யொரால் வேண்டின்' பொருந63 ஒராலின் (17) அவர் அகன்றலை காடு (25) giFTL (T யின என முடிக்க.
இளி நாரை முதலிய புட்கள் தங்கி ஒலிக்குமாறு மருதமரம் ஓங்கி வளர்ந் திருக்கின்ற பெருங் துறையை "மருதிமிழ்க் தோங்கிய பெருந்துறை' என்ருர், இமிழ்ந்து' என்பது மருதமரத்தின் ஒக்கத்தின் பெருமையைப் புலப்படுத்தி கின்றது. ம ரு த ம ரத் தி ல் புட்கள் தங்கி ஒலித்தல் "இமிழ் மருதின்" (பதிற் 13:?) என்பதனலுமறியப்படும். இமிழ்ந்து - இமிழ. எச்சத்திரிபு. அன்றி, இமிழ்ந்து' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் தொழிலொடு நிகழ்ந்தது எனினுமாம். மருது முதலிய மரங்கள் ஓங்கி நிற்ற லாற் குளிர்ச்சியுடைய பெரிய பரப்பினேயுடைய பெருந்துறையாகலின் களி யிரும் பரப்பின் பெருந்துறை' என்ருர், 'மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்' (புற 136; 12) எனப் பிறரும் கூறுதல் காண்க. 15ளி என்பதற்கு மரங்கள்

23 ஆம் பாட்டு 159
செறிந்த என்றுரைப்பினும் அமையும். மணன்மலி பெருந்துறை யென்றது யாற்றின் கடுவிசைப் பெரும்புனலாற் கொண்டுவந்திட்ட மணல்மிக்க பெருக் துறையென்றவாறு, "வருபுனல் வையை வார்மண லகன்றுறை' எனவும், 'கனைவிசைக் கடுநீர்க், காவிரிப் பேரியாற் றயிர்கொண் டீண்டி, எக்க ரிட்ட குப்பை வெண்மணல்' எனவும் (அக 36; 9; 181: 11-3) வருவன காண்க. பெருந்துறையென்றது யாற்றில் ரோடும் பெருந்துறையை, "காவிரிப், பல ராடு பெருந்துறை' (குறுங் 358) என வருதல் காண்க. பெருந்துறைக் காஞ்சி எனக் கூட்டுக. 'காஞ்சித்துறை" (கலி 74; 4) என வருதல் காண்க.
ததைக்த காஞ்சியென்றது விளையாட்டு மகளிர் பலரும் தளிரும் முறியும் தாதுவும் கோடலாற் சிதைவுபட்டுக் கிடக்கின்ற காஞ்சியென்றவாறு. இச் சிறப்பானே இச்செய்யுளுக்குத் ததைந்த காஞ்சி என்று பெயராயிற்று.
மகளிர் காஞ்சியின் தளிர் முதலியவற்றைக் கொய்தல் 'கொய்குழை யகை காஞ்சி' என்பதனுலும் 'மகளிர் கொய்யும் தழை தளிர்க்கின்ற காஞ்சி" என்ற அப்பகுதியுரையினுலும் (கலி 74; 5) அறியப்படும். ததைதல்-சிதை தல், "சமந்ததைந்த வேல்' பதிற் ?0: 3. காஞ்சி-காஞ்சிமரம். 'காஞ்சி கீழற் ஹமர் வளம் பாடி' அக 386, 4. இதனை எடுத்துக் கூறினுர் பகைவர் காட் டின் 5லம்தோன்ற, 'காஞ்சி கல்லூர" (பு. வெ. மா. 313) எனவும், 'காஞ்சித் துறையணி கல்லூர' (கலி ?4: 5) எனவும் சான்றேர் கூறுதல் காண்க. காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய அடைகரையென்க. ஒடு - எண்னெடு. தாழ்பு என்றது செயப்பாட்டு வினையெச்சப் பொருட்டாக நின்றது. இனித் தாழி எனத் திரிப்பினும் அமையும். எழிலிய அடைகரை-காஞ்சியும் முருக் கும் பூத்துக் கிடத்தலால் அழகுபெற்ற அடைகரை, கெருப்புறழ் அடைகரை என்றது முருக்கின் செங்கிற மலர்கள் வீழ்ந்து கிடத்தலால் செருப்பை ஒத்த அடைகரையென்றவாறு, முருக்கின் பூ கெருப்பை ஒத்ததென்பது,
'கருகனே யவிழ்ந்த வூழுறு முருக்கின்
எரிமருள் பூஞ்சினை' அக 41, 3-8 'கனைமுதிர் முருக்கின் சினை சேர் பெருங்கல்
காய்சினக் கடுவளி யெடுத்தலின் வெங்காட்டு அழல்பொழி யானையி னையெனத் தோன்றும்" அக 233; 5-?. “பொங்கழன் முருக்கி னெண்குரல்" அக 377:17, என வருவனவற்றிற் காண்க. ததைக்த காஞ்சியொடு முருக்குத் தாழ் பெழி லிய நெருப்புறழ் அடைகரை யென்றதனல் காஞ்சியும் முருக்கும் ஒரே காலத் திற் பூத்தலறியப்படும். அது இளவேனிற் காலமென்பது,
'குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லிணர்ப்
பொற்றகை நுண்டா துறைப்பத் தொக்குடன் குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும் யாணர் வேனின் மன்' அக 341; 9-12.
鷲

Page 95
160 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
'பாசரும் பீன்ற செம்முகை முருக்கினப்
போதவி ழலரி கொழுதித் தாதருக் தந்தளிர் மாஅத் தலங்கன் மீமிசைச் செங்க ணிருங்குயி னயவரக் கூஉம் இன்னிள வேனிலும்' அக 389: 16-30. என வருவனவற்ருலுமறியப்படும்.
15க்து காரை, உம்மைத் தொகை. 15ந்து-சங்கு. ‘நந்து பணிலம் வளை காகு
சுரிமுகம், கம்புகோடு சங்கெனப் படுமே" என்பது திவாகரம். உகழ்தல் வினை சங்கினுக் கின்மையின் நந்து காரை என்பதற்குச் சங்குகளும் காரை களும் எனவுரைத்தல் அமையாது. காரையொடு செவ்வரி உகழும் என்றத னல், செவ்வரி என்றது செவ்வரி நாரையை, 'பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை" (புற 351, 9) எனப் பிருண்டும் வருதல் காண்க. செவ்வரி, நாரை யின் இறகில் உண்டு என்பது, -
'கவிரித ழன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் காரைக்கு' குறுந் 103; 2-3.
"கானிய சென்ற மடநடை நாரை
பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி' ஐங் 156; 2-3.
"சிறுமீன் கவுட்கொண்ட செந்நூவி நாராய்” ஐந், எழு 68. - என வருவனவற்றலறியப்படும். பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும் என்னும் (கலி 196: 3-4 நச் விசேட) உரைப்பகுதியால் செவ்வரிகாரை பெரிய காரை என்பது அறியப்படும். உகழும்- தாவும் நெடுநல் 93 நச். கழனி வாயில் வழியாக ஓடும் நீரில் வரும் மீனைப் பிடித்துத் தின்னும்பொருட்டு காரை யும் செவ்வரியும் உகழ்வனவாயின. 'வயமலர் கழனி வாயிற் பொய்கைக் கயலார் நாரை" (புற 354; 4-4) என வருதல் காண்க. பழனம்-நீர்நிலைச்செறு, சிலப் 10:113 அடி நல். "நீர்நிலம் சீவக 2902 நச். படப்பை-தோட்டம், பழ னப் படப்பைப் புனனடு' என்புழிப் படப்பை-தோட்டம் என நச்சினர்க் கினியர் உரைத்தல் காண்க (சீவக. 1934 உரை) : ' பூவின் தாமரை முதலுக் கேற்ற அடை, வளைமகள் குருஅது மலர்ந்த ஆம்பல் என்றது விளையாட்டு மகளிராற் பறிக்கப்படாமல் மலர்ந்த ஆம்பல் என்றவாறு, வளை மகளிர்-விளையாட்டு மகளிராதல், வளையோர்-வளையணிந்த விளையாட்டு மகளிர்' என்ற புறப்பாட்டுரையானும் அறிக. (புற 248:1 உரை) குரு.அது என்பது குற்று என்பதன் எதிர்மறை. குற்றல்-பறித்தல். "நீர்தரு மகளிர் குற்ற குவளையும்" (புற 43; 16) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. யாணர்-செல்வ வருவாய் எனினுமமையும். அவர் என்றது போரெதிர் வேந்தரை,
நாட்டில் மக்களின்ருய் இயங்குவாரின்மையின் வழங்கு5ரற்றென என்
பக்கமுமாம். தூர்ந்து புல்மிக்கு என மாறிக் கூட்டுக. வழங்கு5 ரற்றமையின் மிகுவதாயிற்று. பெருங்கவின் அழிந்த ஆறு பொன்னுடை கியமத்தா
 

23 ஆம் பாட்டு 161
னும் மல்லன் மனைகளானும் இயங்குவாரானும் உளதாகிய அழகு அழிக்த வழி. ஆற்ற காடாயின எனக் கூட்டுக. ஏறு-மரையேறு. புணர்ந்து உறை யும் என முடிக்க, ஏறு புணர்ந்து மரையா இனிதுறையும் என்றதனுல் காட் டின் செறிவும் விண்ணுயர் வைப்பின என்றதனுல் உயர்ச்சியும் கூறினர். 'மரையா வுகழும் மரம்பயில் சோலை' (கைக்கிலை 6) எனப் பிறரும் கூறுதல் காண்க. "பெற்றமு மெருமையு மரையு மாவே" (தொல் மரபு 60) என்றதனல் மரையா என்ருர். "மென்னடை மரையா' (குறுந் 331, 5) 'தூங்குகடை மரையா' (அக 3: ?) 'க ன் று  ைட மரையா" (புற 168: 9) எனப் பிறருங் கூறுதல் காண்க. மணன் மலி பெருக் துறை முதலியவற்றையுடைய பெருவளம் சான்ற பகைவர் அநாடு சேரனுல் அழிந்து காடாயின என்பதே ஆசிரியர் கருத்தாகலின் விண்ணுயர் வைப்பின காடாயின என்பதற்கு விண் ணிலே பொருந்துமாறுயர்ந்த மாடங்கள் பொருந்திய ஊர்கள் காடுகளாயின எனல் பொருந்தாதென்க. பழையவுரைகாரரும், அகன்றலே நாடு காடாயின. என்றே முடிபு செய்தனர். வைப்பு என்பது இடம் என்னும் பொருட்டாதல், 1 யாணர் வைப்பிற் கானம்' (நற் 392) "அருஞ்சுர வைப்பிற் கானம்' (குறுங் 154) என வரூஉஞ் செய்யுட்பகுதிகளிற் காண்க. 'கல் பிறங்கு வைப்பிற் கடறு' (பதிற் 53: 4) என்புழி வைப்பு-இடம் எனப் பழையவுரைக்ாரர் உரைத்தலுங் காண்க. அழிந்த நாடுகள் பலவாதலின் காடாயின' என்ருர். அதனே கின்னயந்து வருவேம் கண்டனம் என ஒருசொல் வருவித்து முடிக்க. நின்னயந்து-பரிசில் காரணமாக நின்னைக் காணவிரும்பி, "வள்ளியை யென் றலிற் காண்குவந் திசினே' (பதிற் 54:1) என வருதல் காண்க.
ஒப்புமைப்பகுதி. 1. அலந்தலை பதிற் 89; 12, நற் 394; 2: அக 111:5; 187:11,
ತಿ85; 9: up ತಿಳಿà: 11;
1-2 'கற்ங்கிசைச் சிதடி பெரியரைப் பொருந்திய, சிறியிலை வேலம்" பதிற் 58; 1344; "சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து" "சிள்வீ டார்க்கும்
e o ae o ஓதி' “வறன்மரம் பொருந்திய சில்வீடு.ஆர்க்குஞ் சுரனிறந்து' அக 89; 6; 14: 52-3, 303:17-8.
4. கலப்பையர்: பதிற் 15: 36 ஒப்பு. *
5-6. மன்றம் படர்ந்து மறுகுசிறை புக்கு ...வாழ்த்தும் அகவலன்' பதிற் 43 26-8.
魯 பொன்செய் புனையிழை: “பொலம்புனே யவிரிழை" முருகு 18; 'பொன்
செய் புனையிழை" குறுந் 21:21, "பொலம்புனை யவிரிழை பரி 16: 6.
8. நெஞ்சுமலி யுவகையர்: "நெஞ்சுமலி யுவகையர் வியன் களம்
வாழ்த்த' பதிற் 40:36.
" 10. போரடுதானே பதிற் 16:16, ஒப்பு.
பொலந்தார்க்குட்டுவ: புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்"
upತಿ.4ತಿ: 9. ,
ས། リし。 LERA* JA*NA

Page 96
162 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
மு. "போரடு தானப் பொலந்தார்க் குட்டுவ" பதிற் 43:11. 12. பெருங்கவின்: 'பெருங்கவின் தொலைந்த நின்" குறுந் 358. 3. 14. அமர்ந்தினிது: "அமர்த்தினிது கோக்கி' மலைபடு 560; முகத்தான் "அமர்ந்தினிது சோக்கி" குறள் 93.
16. மைந்துமலிபெரும்புகழ்: 'படைதொலை பறியா மைந்துமலி பெரும் புகழ்' பெரும்பாண் 898,
பெரும்புகழ் அறியாது மலைதல்: பதிற் 15: 14 ஒப்பு. 17. போரெதிர்வேந்தர் பதிற் 33; 12: புற 84; 8. 18-9. மருதோங்கிய பெருந்துறை: பதிற் 27:6. குறுந் 258, 3; ஐங் 31:3; 33; 2; 75: 3. சிலப் 14: 72.
23. பழனப்படப்பை: "கழனியும் பொய்கையும் பழனப் படப்பையும்' பெருங் (1) 46:383.
23. தாமரைப் பூவிற்கு நெருப்பு: பதிற் 19 20 ஒப்பு. அருஅ யாணர்: பதிற் 80; 8; 71: 1 பொருந1; மதுரைக் 210; புற 375 9-10.
அவர் அகன்றலை நாடு; “வெம்மையரிதுகின் னகன்றலை நாடே" பதிற் 28; 14; 'பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே" புற 98; 20.
15-25. நாடுகாடாயின; "காடெனும் பேர் காடாக" மதுரைக் 156.
4. சீர்சால் வெள்ளி (24) நெடுவயி னுெளிறு மின்னுப் பரந்தாங்குப்
புலியுறை கழித்த புலவுவா யெஃகம் ஏவ லாடவர் வலனுயர்த் தேந்தி ஆரரண் கடந்த தாரருங் தகைப்பிற் 5 மீடுகொண் மாலைப் பெரும்படைத் தலைவ ஒதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் ஈத லேற்றலென் ருறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிக் தொழுகி ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று 10 நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்
திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ குலையிழி பறியாச் சாபத்து வயவர் அம்புகளை வறியாத் தூங்குதுளங் கிருக்கை இடாஅ வேணி யியலறைக் குருசில் 15 நீர்நிலங் தீவளி விசும்போ டைந்தும்
அளந்துகடை யறியினு மளப்பருங் குரையைகின்
 

24 ஆம் 63
வளம்வீங்கு பெருக்க மினிதுகண் டிகுமே உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றே 20 றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எஃகுறச் சிவந்த வூனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி வயங்குகதிர் விரிந்து வானகஞ் சுடர்வர வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி 25 பயங்கெழு பொழுதோ டாநிய நிற்பக்
கலிழுங் கருவியோடு கையுற வணங்கி மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும். கொண்டற் றண்டளிக் கமஞ்சூன் மாமழை காரெதிர் பருவ மறப்பினும் 30 பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே.
துறை-இயன்மொழி வாழ்த்து. வண்ணம்-ஒழுகுவண்ணம் தூக்கு-செந்தூக்கு. பெயர்-சீர்சால் வெள்ளி (24) 1-5. நெடு வயின் ஒளிறு மின்னு பரந்தாங்கு-நெடிய ஆகாயத்தி னிடத்து விளங்கும் மின்னல் பரந்தாற்போல, புலி உறை கழித்த - புலித் தோலாற்செய்த உறையினின்று நீக்கிய, புலவுவாய் எஃகம்-புலானுறும் வாயை யுடைய வேலை, ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏக்தி-கினது ஏவலராய வீரர் தம் வலக்கையில் உயர்த்து விளங்க எடுத்து, ஆர் அரண் கடந்த தார் அரு தகைப்பில் - பகைவருடைய அரிய அரணங்களை வென்று கொண்ட தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்ருர்படை வகுப்பிலே, பீடு கொள் மாஆல பெரும்படை தலைவ-வென்றி செய்து பெருமைகொள்ளும் இ ய ல் பை
6-11. ஓதல்-வேதத்தை ஓதல், வேட்டல்-யாகஞ் செய்தல், அவை பிறர்ச் செய்தல்-அவையிரண்டையும் பிறரைச் செய்வித்தல், ஈதல்-கொடுத்தல், ஏற் றல்-கொள்ளத்தகும் பொருளைக் கொள்ளுதல், என்று ஆறு புரிந்து ஒழுகும்.
என்று சொல்லப்பட்ட ஆறு தொழில்களேயும் செய்து ஒழுகும், அறம்புரி அக்
தணர்-அறத்தை விரும்பிய அந்தணரிடத்து, வழிமொழிக்த ஒழுகி-வழிபாடு சொல்லி நடந்து, ஞாலம் நின்வழி ஒழுக - ஞாலத்திலுள்ளார் நின் ஏவல் கேட்டு நடப்ப, பாடல் சான்று - புகழ்தல் அமைந்து, நாடு உடன் விளங் கும்-காடு முழுவதும் பரந்து விளங்கும், நாடா நல்லிசை -ஐயுற்ற ஆராயப் படாத உலகறிந்த நல்ல புகழினையுடைய, திருந்திய இயல் மொழி - திருந்திய இயல்பினையுடைய மொழியினையுடைய, திருந்து இழை கணவ - திருந்திய இழையையுடையாட்குக் கணவ,

Page 97
164 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
13-4. குலை இழிவு அறியா சாபத்து வயவர் - 5ாணியை இறக்குதலை அறியாத வில்லையுடைய வீரர், அம்பு களைபு அறியா - போர்வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைதல் அறியாத, தூங்கு துளங்கு இருக்கை-படை இடம்படாது செறிந்து துளங்குகின்ற இருப்புக்களையுடைய, இடT ஏணி - அளவிடப்படாத எல்லையையுடைய, இயல் அறை குருசில்-பாச
றைக்குள்ள இயல்பையுடைய பாசறையையுடைய தலைவ!
15-6. நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் - நீரும் நிலமும் நெருப் பும் காற்றும் ஆகாயமுமாகிய ஐ க்தி னே யும், அளந்து கடை அறியினும்அளக்கு முடிவு அறிக்தாலும், அளப்பரும் குரையை-பெருமை அளந்தறிதற். கரியை.
16-30. நின் வளம் வீங்கு பெருக்கம்-நின் செல்வம் மிக்க பெருமையை, இனிது கண்டிகும் - இனிது கண்டேம்; அஃது எவ்வாறு இருந்ததெனில், உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது-உண்பாரையும் தின்பாரையும் வரைந்துகொள்ளுதலை அறியாமல் இடுகின்ற, குரைதொடி மழுகிய உலக்கை வயின் தோறு - ஒலித்தலையுடைய பூண் மழுகிய உலக்கையையுடைய இடங் கள்தோறும், அடை சேம்பு எழுந்த - சேம்பின் இலையைப்போல எழுந்த, ஆடு உறு மடாவின்-அடுதல் பொருக்திய மடாவின், எஃகு உற சிவந்த ஊனத்து அரிவாள் படுதலால் இரத்தத்தாற் சிவந்த இறைச்சிகளையுடைய, யாவரும் கண்டு மதிமருளும் வாடாசொன்றி-யாவரும் கண்டு மதி மருள தற்கு க் காரணமாகிய குறையாத சோறு, வானகம் சுடர்வர வயங்கு கதிர் விரிந்துவானிடம் விளங்கும்படி விளங்குகின்ற கதிர் விரிந்து, வறிது வடக்கு இறைஞ் சிய சீர் சால் வெள்ளி - சிறிது வட திசைக்கண் தாழ்ந்த புகழமைந்த வெள்ளி பயம் கெழு பொழுதொடு ஆகியம் நிற்ப - மழைக்குப் பயன்படும் மற்றக் கோட்களுடனே தான் நிற்கும் நாளிலே நிற்க, கலிழும் கருவியொடு- உயிர், கள் அஞ்சிமனம் கலங்குதற்குக் காரணமான மின்னு முழக்கு முதலியவற் றின் தொகுதியொடு, கை உற வணங்கி-பக்க வானத்திற் பொருந்தத் தாழ்ந்து, மன் உயிர் புரைஇய-கிலேபெற்ற உயிர்களைப் புரத்தற்பொருட்டு, வலன் ஏர்பு இரங்கும்-வலமாக எழுந்து ஒலியுண்டாகப் பெய்யும், கொண்டல் தண் தளி கம சூல் மா மழை - நீரை முகந்துகொள்ளுதலையுடைய தண்ணிய துளியாகிய நிறைந்த சூலினையுடைய பெரிய முகில், கார் எதிர் பவரும் மறப்பினும்மழையை ஏற்றுக்கொள்ளும் கார்ப் பருவத்தே பெய்தலை மறந்தாலும், பேரா யாணர்த்து - நீங்காத புதுவருவாயை யுடையது. கின் வளன் வாழ்க - இப் பெற்றிப்பட்ட நின் வளம் வாழ்க.
முடிபு. பெரும்படைத் தலைவ, திருக்திழை கணவ, குருசில், நீர்முத
லேந்தினையும் அளந்து முடிவறியினும் பெருமை அளத்தற்கரியை. கின் செல்வ மிக்க பெருமை இனிது கண்டேம். அஃது எவ்வாறு இருந்ததெளின், வாடாச் சொன்றி மழை காரெதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்து; அப்பெற் றிப்பட்ட நின்வளம் வாழ்க என்க. -

24 ஆம் பாட்டு - 165
ஆ-ரை. 1-5. மிக்க உயரத்திலிருத்தலின் ஆகாயம் 'நெடு வயின்" எனப்பட்டது. நெடுவயின் ஒளிறும் மின்னு என்க. மின்னு-மின். “கொடி விடு பிருளிய மின்னுச் செய் விளக்கத்து' கலி 8:6. மின்னுப் பரந்தாங்கு எஃகம் ஏந்தி என்க. 'கூர்நுனே வேலு மின்னின் விளங்கும்” “மின்னு கிமிர்ந் தன்னநின் னெளிறிலங்கு நெடுவேல்" புற 43; 4; 57; 8. என வருவன காண்க. வேலைப் புலித்தோலாற் செய்த உறையிலிட்டு வைத்தலின் புலியுறை கழித்த எஃகம் என்ருர், 'திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப" (பதிற் 19: 4) என வருதல் காண்க. புலவு வாய் எஃகம் - பகைவரைக் குத்துதலாற் புலால் 15ாறும் வாயையுடைய வேல். இதனல் ஆடவர் பகைவரைப் பொருது வென் றமை கூறிர். எஃகம்-வேல். பெருமபாண 119 கச். ஆடவர் - வீரர். அவர் அரசன் ஏவல்வழி நிற்றல் 'வடிருவி லம்பின் ஏவலாடவர்" (அக 215:10) என்பதனுலுமறிக. 'வேலை வலக்கையின் ஏந்தல்' 'எஃகுடை வலத்தன்' 'புனைமாண் எஃகம் வலவயின் ஏக்தி" (அக 103; 11, 315:4) என வருவன வற்ருலுமறியப்படும். 'மின்னுப் பரந்தாங்கு' என்பதற்கு ஏற்ப, ஏந்தி என்ப தற்குப்பரந்து விளங்க ஏக்தி எனவுரைக்க. ஏந்தியென்னும் சினைவினையைக் கடந்த என்னும் முதல் வினேயொடு முடிக்க, ஆரரண்-மதில் கிடங்குகளானும் பொறிகளானும் புறத்தாராற் கோடற்கரிய அரண், அத்தகைய அரண்களை வென்றுகொண்டவலிசான்ற தூசிப்படை என்பார்'ஆரரண் கடந்த தார்' என் முர்.சேரனது தூசிப் படையின் ஆற்றலே எடுத்துரைத்தது அப்படையால் அழித்தற்கரிய மாற்றர் படை வகுப்பின் பெருவலி தோன்றற்பொருட்டு, தகைப்பு என்றது மாற்ருர் படை வகுப்பை. இதனைத் 'தாரருக் தகைப்பு-ஒழுங் குடைய மாற்ருராற் குலத்தற்கரிய படைவகுப்பு' என்னும் (பதிற் 66:10) உரையானும் அறியலாம். சேரன் பெரும்படை, அத்தகைய பெருவலிசான்ற படைவகுப்பில் வென்றிசெய்து பெருமைகொள்ளுதலே இ ய ல் ப ா க வுடைமையின் அருந்தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெருப்படை' என்ருர், பீடு-பெருமை. மாலை - இயல்பு. "மாலை இயல்பே' என்பது தொல்காப்பியம். (உரி 17) பெரும்படை வென்றிசெய்து பெருமை கொள்ளும் இயல்புடைமைக்கு சேரன் தலைமைதாங்குதலே ஏதுவென்பது தோன்றப் பெரும்பன்டத் தலைவ"
என்ருர்,
6-11. அந்தணர் வழிமொழிக் தொழுகி ஞாலகின்வழியொழுகப் பாடல் சான்று நாடுடன் விளங்கும் கல்லிசையையுடைய சேர என்க.
ஒதல் முதலிய ஆறுபுரிக்தொழுகும் அந்தணர் என்க. அதனல் அந்தணர் *அறுதொழிலோர்' என்றும் கூறப்படுவர். ஒதல்-வேதத்தை ஒதல். 'ஓத லந்த ணர் வேதம் பாட' என்ருர், மதுரைக்காஞ்சியினும். வேட்டலாவது: ஐக்தியாயி னும் முத்தியாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கல மரபினுற் கொடைச் சிறப்புத் தோன்ற அவி முதலியவற்றை மந்திர விதியாற் கொடுத்
துச்செய்யும் செய்தி. அவை பிறர்ச்செய்தலாவன: ஓதுவித்தலும் வேட்
பித்தலும், ஒதுவித்தலாவது கொள்வோ னுணர்வுவகையறிந்து அவன் கொளவரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்பித்த லாவது: வேள்வியாசிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையணுய் மாணுக்

Page 98
166 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
கற்கு அவன்செய்த வேள்விகளாற் பெறும் பயனைத் தலைப்படுவித்தலை வல்ல ணுதல் ஈதலாவது: வேள்வியாசானும் அவற்குத் துணையாயினரும் ஆண்டுவர் தோரும் இன்புறுமாற்ருன் வேளாண்மையைச் செய்தல், ஏற்றலாவது கொள் ளத்தகும் பொருள்களை அறிந்துகொள்ளுதல். அறம்புரி - அறஞ் செய்தலை விரும்பிய எனினுமாம். அந்தணர்க்கு என கான்காவது விரிக்க வழி மொழிந்து -வழிபாடு சொல்லி புற 8; 1 உரை, ஒழுகி-ஒழுக. ஞால நின்வழி யொழுக வென்றது தீத்தொழிலைப் போக்கி நடுவு நிலைமையைச் செய்தலானே நின் ஆளுகைக்குட்பட்ட நிலத்து மக்கள் யாவரும் ஒருபெற்றிப்பட நின் ஏவல் கேட்டு நடப்ப என்றவாறு. குன்று மலை காடு 5ாடு என்னும் இடங்களி லுள்ளார் யாவரும் அடங்க ஞாலம்’ என்ருர், வழி ஒழுக - ஏவல்வழியே செல்ல எனினுமாம். பாடல் சான்று என்பதற்குப் புலவராற் பாடுதல் முற் றுப்பெற்று என்று உரைப்பினுமமையும். பாடல் சான்றமையின் நல்லிசை நாடுடன் விளங்குவதாயிற்று. நாடா கல்லிசை என்ருர் உகறிந்த நல்ல புக ளாதலின். நல்லிசை என்றது. செங்கோன்மையானுய புகழை. "அரசர்க்குப் புகழ்கடாம் நிலைபெறுதல் செங்கோன்மையானும், அச்செங்கோன்மையில்லை யாயின் அவர்க்கு அப்புகழ்கடாம் உளவாகா' எனப் பரிமேலழகர் உரைத் தல் (குறள் 556 உரை) காண்க. திருக்திய இயல் மொழி-பொய் குறளை முத லிய குற்றங்களினிங்கித் திருந்திய இயல்பினையுடைய மொழி. மொழிக்குற் றம் மனக் குற்றம் காரணமாக எழுதலின், திருக்திய இயன்மொழித் திருந்திழை, இயல்பாகவே கற்குணமுடையவள் என்பது பெறப்படும். சேரனைத் 'திருக் திழை கணவ' என்றது நாடுடன் விளங்கும் காடா கல்லிசைக்குப் பெருந்தேவி யும் ஏதுவாதல்பற்றியென்க. -
13-4. குலையிழிபு அறியாச் சாபத்து வயவர் அம்பு களைவறியாத இருக் கையையுடைய பாசறைக் குருசில் என்க.
இன்னபொழுது போருண்டாம் என்று அறியாதே எப்பொழுதும் காணி ஏற்றியே கிடக்கும் வில்லைக் குலையிழிபறியாச் சாபம்' என்ருர், குலை-நாணி. இப்பொருட்டாதலே, 'வில்குலை யறுத்து-வில்லின் காணியை யறுத்து' எனப் பழைய்வுரைகாரர் உரைத்தலானுமறிக. (பதிற்?9: 11 உரை) இனிக் குலை என்பதற்கு வில்லின் காணேப் பூட்டி இறுக்குதற்கு அதன் இருதலையினும் இடப்படும் குதை என்று உரைப்பினுமமையும். 'குலையே வில்லி னிருதலைக் குதையே' என்பது பிங்கலந்தை (பிங் 6: 447) தூங்குதல்-செறிதல். "இரு டூங்கு சோலையிலங்குநீர் வெற்ப' கலி 505, *துளங்கா விருக்கையும் உண் மையின் அதனை விலக்குதற்குத் துளங்கிருக்கை' என்ருர், துளங்கிருக்கை என்றது கூடிாரங்களே. 'கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை' என முல்லைப் பாட்டில் (40) வருதல் காண்க. ஏணி-எல்லை. ‘நளியிரு முக்கீ ரேணி யாக' புற 85: 1. இயல் என்றது பாசறைக்குள்ள வியல்பை இதனை,
'கான்யாறு தழிஇய' வகனெடும் புறவிற்
சேணுறு பிட்வமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
* துளங்கா விருக்கை, மல்லற் பேரூர்’ பெரும்பாண் 253: 4.

24 ஆம் Lu To” (6 67
விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி' முல்லை 84; 8. 'மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை' பதிற் 16: 8. 'உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை' பதிற் 1ே: 8. என வருஉஞ் செய்யுட்பகுதிகளாலு முணர்க. பாசறை அறையெனத் தலைக் குறைந்தது, குருசில், அண்மை விளி.
15-6. நீர் முதல் ஐந்தினையும் அளந்து முடிவறியினும் பெருமை அளக் தறிதற் கரியை என்க,
நீர் முதலிய பூதங்கள் ஐந்தும் அளப்பரியனவாதலின் சேரன் பெருமைக்கு அவற்றை எடுத்துக் கூறினர். ‘நிலநீர் வளி வி சு ம் பென்ற நான்கின், அளப்பரி யையே’ (பதிற் 14: 1-2) எனப் பிறருங் கூறுதல் காண்க. நீர், கிலம், தி, வளி, விசும்பு என்னும் முறைபற்றிப் பூதங்களைக் கூறுதலே,
*ருே கிலனும் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடன்" 453-4. என்னும் மதுரைக்காஞ்சியினும் காண்க. நிலம் நீர் தீ வளி விசும்பு என ஒன்று ஒன்றனுள் அடங்குமுறையாற் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியது என்னே யெனின், பூதங்கள் ஐந்துங் கலக்குங்கால் மயங்கிகிற்கு மென்றற்கு அவ்வாறு கூறினர் என்க. விசும்போடு, ஓடு எண்ணுெடு, இதனை நீர் முதலியவற்ருே டுங் கூட்டுக. பூ த ங் க ள் ஐ க் தா க லி ன் உம்மை கொடுத்தார். கடை-முடிவு. " செல்வங் கடைகொள” (கலி 61: 2) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. அறியினும் என்ற உம்மை அளந்து கடையறிதற்கு அருமை தோன்ற கின்றது. குரை-அசைநிலை. “பல்குரைத் துன்பங்கள் சென்றுபடும்' (குறள் 1048) என்புழிப் போல. இப் பகுதியாற் சேரன் பெருமை கூறினர். 16-30. நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டேம். இஃது எவ் வாறு இருந்ததெனின், உண்மாரையும் தின்மாரையும் வரைகோளறியாமல் இடுகின்ற சொன்றி, மழை காரெதிர் பருவம் மறப்பினும் பேராயாணர்த்து; அப்பெற்றித்தாய நின்வளன் வாழ்க என்க.
உண்மரும் தின்மரும் வரைகோளறியாமல் இடுகின்ற சொன்றி, காரெதிர் பருவமறப்பினும் பேராயாணர்த்தாதல் சேரன் செல்வ மிக்க பெருமையை இனிதுபுலப்படுத்தலின் நின்வளம் வீங்கு பெருக்கம்இனிது கண்டிகும் என்ருர்,
'சாறயர்க் தன்ன மிடாச் சொன்றி
வரு5ர்க்கு வரையா வளநகர் பொற்ப" குறிஞ்சி 801-3. என்பது ஈண்டைக்கேற்ப அறிதற்பாலது. உண்மாரும், தின்மாரும் என்பன குறுகி நின்றன. "புலனுழு துண்மார் புன்கணஞ்சி' (புற 46; 3) எனப் பிருண்டும் வருதல் காண்க. உண்மாரையும் தின்மாரையும் என்னும் இரண் டாவது *விகாரத்தால் தொக்கது. வரைகோள் - தடைசெய்தல். எல்லையறி உயர்தி2ணயிடத்து ஒழியாது வரவேண்டுமென்பது, "உயர்திணை மருங்கி னுெழியாது வருதலும்' (தொல், தொகை மரபு 15; 8) என்பதனுலறிக.

Page 99
168 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
யப்படுதலுமாம், வரைகோள் அறியாமல் இடுகின்ற சொன்றி என ஒரு சொல் வருவித்து முடிக்க. "யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி” (குறுந் 233)
மரும் தின்மரும் அளவு வரைந்து கொள்ளுதலை அறியாது யாவரும் கண்டு மதி மருளும் சொன்றி எனினுமாம். தொடி - உலக்கையின் பூண். வருவார்க் கெல்லாம் நாடொறும் சோறு இடுதற்கு வேண்டிய நெல்லைக் குற்றுதலின் உலக்கையின் தொடி மழுகியது. "இருங்கா முலக்கை யிருப்புமுகங் தேய்த்த, அவைப்பு மாணரிசி" (சிறுபாண் 193-4) என வருதல் காண்க. உலக்கை வயின்ருேறு ஆடுறு மடா எனக் கூட்டி அட்டிற் சாலையின் இடங் கள்தோறும் அரிசி குற்றப்படுதலும், மடாவில் சமையல் செய்யப்படுதலுங் கொள்க. வயின்-இடம். தொறு-இடப்பன்மைப் பொருளில் வந்த இடைச் சொல். சேம்பு அடை எழுந்த மடா என மாறிக் கூட்டி கிலத்தில் திருக்கும் சேம்பின் இலையைப்போலப்பரந்துஉயர்ந்தெழுந்தமடாஎனக்கொள்க. 'அடைச்சேம் பெழுந்த' என்றதல்லது போல வென்றதில்லையாலோவெனின் உவமக் தொக்குகின்றதெனக் கொள்க. என்ன?
*வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே
வினையின் ருெகையே பண்பின் ருெகையே யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே' தொல், எச்ச 16.
என்ருேதினமையின். "எஃகுறச் சிவந்த ஊனத்துச். சொன்றி' என மேல் வருதலின் சேம்பெழுந்த மடா என்பதற்குச் சேம்பின் தண்டையும் கிழங்கை யும் வேகவைத்தலின் அவை மேலே எழுகின்ற மிடா எனல் பொருந்தாதென்க. 'அடர்ச்செம்பெழுந்த' என்பது பாடமாயின் தகடாகிய செம்பால் உயர்த்துச் செய்யப்பட்ட எனவுரைக்க. "செப்பி னுயிரம் மிடா' (சீவக 692) என வரு தல் காண்க. பச்சிறைச்சியாகலின் "எஃகுறச் சிவந்த வூனம்' என்ருர், எஃகுஅரிவாள். உற-பட படுதல் ஈண்டு அறுத்தல். ஊனத்துச்சொன்றி எனக் கூட்டுக. "மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு' (பதிற் 13 17) என வருதல் காண்க, யாவரும் என்றது வறியவர்களேயன்றிச் செல்வர்க ளும் என்றவாறு, உம்மை, உயர்வு சிறப்பு. மருளும்-வியக்கும். மருட்கைசொன்றியின் பெருமைகாாணமாகத் தோன்றிய மருட்கை.
"புதுமை பெருமை சி றுமை யாக்கமொடு
மதிமை சாலா மருட்கை 5ான்கே' மெய்ப் ?. என்பது தொல்காப்பியம். வாடாச் சொன்றி என்ருர் வற்கடமுற்றகாலத்தும் குறைவுபடாச் சொன்றியாகலின். வாடா-குறையாத, "வாடாத வென்றிமிகு சச்சந்தன் என்பான்' (சீவக?) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சொன்றி-சோறு, ‘சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி” (பெரும் பாண் 18) "புன்புல வரகின்'சொன்றி' (புற197-13) எனவருவன காண்க. சொன்றி (29) ப்ேராயாணர்த்தி (30) எனக் கூட்டுக,
''+'پر کمپی % ,

24 ஆம் பாட்டு 169
வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி பயங்கெழு பொழுதொடு ஆகியகிற் பக் கருவியொடு கையுற வணங்கி இரங்கும் மழை என்க. வானகஞ் சுடர்வரக் கதிர்விரிக் து வயங்கு வெள்ளி என மாறிக் கூட்டுக. “குழ்கதிர் வான் விளக் கும் வெள்ளி சுடர் விரிய" (பு வெ. மா. 204) ' விரிகதிர் வெள்ளி ' (சிலப்
10:103) “வயங்கு வெண்மீன்” (பட்டினப் 1) எனப் பிருண்டும் வருவன
காண்க. மழைக்கோளாகிய வெள்ளி மழை பெய்தற்கேதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்ற வறிதுவடக் கிறைஞ்சிய வெள்ளி என்ருர், வெள்ளி தெற்கே கின்ருல் மழையின்ருதல், “வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும். புயன்மாறி வான் பொய்ப்பினும்' (பட்டினப் 1-3) 'தென் றிசை மருங்கின் வெள்ளி யோடினும். பெயர்பிழைப் பறியா" (புற
117: 2-7) என வருவனவற்ருலுமறியப்படும். மழைக்குக் காரணமாகிப் புக
ழமைந்த வெள்ளியாதலின் "சீர்சால் வெள்ளி' என்ருர். 'வசையில் புகழ் வயங்கு வெண்மீன்' (பட்டினப் 1) என ஆசிரியர் உருத்திரங்கண்ணனுர் கூறு தல காணக.
‘வறிது வடக் கிறைஞ்சிய' என்னும் அடைச்சிறப்பான் இச்செய்யுளுக் குச் சீர்சால்வெள்ளி என்று பெயராயிற்று.
பயங்கெழு பொழுது என்றது மழைக்குப் பயன்படும் புதன் சனி செவ் வாய் என்னும் கோள்களை. வெள்ளி பயங்கெழு பொழுதொடு மழைபெய் தற்குரிய நாளில் நிற்றலின் 'ஆகியம் நிற்ப' என்ருர், ஆகியம்-நாள். பிங்க லந்த 2: 191. நாள்: சுவாதி முதலியன கலிழுங் கருவியொடு - மக்களும் பிற விலங்கு முதலியனவும் மனம் கலங்குதற்குக் காரணமாகிய மின்னும் இடி யும் முழக்குமாகிய இவற்றின் தொகுதியொடு. கருவி-தொகுதி. வானம் 15ாற்றிசையினும் தாழ்ந்து பரத்தலின் 'கையுற வணங்கி என்ருர், புரைஇய இரங்கும் எனக் கூட்டுக. இரங்கும் என்பதற்கு இரங்கிப் பெய்யும் என ஒரு சொல் வருவித்துரைக்க. கொண்டல் மாமழை எனக் கூட்டி நீரை முகத்து கொள்ளுதலையுடைய கரியமேகம் என வரைக்க. "கடன் முகந்து கமஞ்சூன் மாமழை (நற் 99 6) "கடன் முகத்துகொண்ட கமஞ்சூல் மாமழை" (அகA3:1) "கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி' (கார் 33) என வருவன காண்க. கொண் டல்-கொள்ளுதல் என்னும் பொருளது. இனிக் கீழ்காற்ருன் வரும் பெரிய முகில் என்று உரைப்பினுமமையும். தளி-துளி. தளியாகிய குல் என்க. காரெதிர்பருவம் என்றது கார்ப்பருவத்தை. மறப்பினும் என்ற உம்மை எதிர் மறைப் பொருளது. மழை பருவம் மறப்பினும் வருவார்க்கெல்லாம் சோற்றை ஆக்கி இடுதலின் சொன்றி பேரா யாணர்த்து' என்ருர், ஆல்-அசை. மழை பருவம் பொய்த்து விளைவு குன்றியகாலத்தும் பலர்க்கும் பயன்படும் சேரன்
இப்பகுதியாற் சேரன் கொடைச்சிறப்புக் கூறினர்.
இது சேரன் தன்மையினைக் கூறி வாழ்த்தினமையான் இயன்மொழி வாழ்த்தாயிற்று.
* !4ഴി
وق فينية في مهنا
"ibiji ih its

Page 100
170 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
பழையவுரை. 4-5. தாரருக் தகைப்பிற் பீடுகொண் மாலைப் பெரும்படையென்றது திார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்ருர் படைவகுப்பிலே வென்றி செய்து பெருமைகொள்ளும் இயல்பையுடைய அணியாய் நிற்கும் பெரும்படையென்ற வாறு. 6 அவைபிறர்ச் செய்த லென்புழிப் பிறரையெனவிரியும் இரண்டா வதனை அவை செய்தலென நின்ற செய்தலென்னும் தொழிலைப் போந்த பொரு 1ளாற் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனெடு முடிக்க. 13. குலையிழிபு அறியாச் சாபமென்றது போர்வேட்கையான் இன்னபொழுது போருண்டா மென்று அறியாதே எப்பொழுதும் காணியேற்றியே கிடக்கும் வில்லென்ற வாறு. 13. அம்பு களைவறியா வென்றது போர்வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம் பைக் களைதலறியா வென்றவாறு. தூங்கு துளங்கு இருக்கையென்றது படை இடம்படாது செறிந்து துளங்குகின்ற இருப்பென்ற வாறு. 14. இடா ஏணி-அளவிடப்படாத எல்லை. இயலென்றது பாசறைக் குள்ள வியல்பை, பாசறை அறையெனத் தலைக்குறைந்தது. 18. உண்மாரும் தின்மாருமென்பன குறுகி நின்றன; உண்மாரையும் தின்மாரையுமென்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது. அறியாதென்பதனை அறியாமலெனத் திரிக்க. 34-5. வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயம் கெழுபொழு தோடு ஆகியம் நிற்பவென்றது சிறிது வடக்கிறைஞ்சின புகழானமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே தான் கிற்கு5ா ளிலே கிற்கவென்றவாறு. பொழுதென்றது அதற்கு அடியாகியகோளே. வறிது வடக்கிறைஞ்சியவென்னும் அடைச்சிறப்பான் இதற்கு "சீர்சால் வெள்ளி' என்று பெயராயிற்று.
பெரும்படைத் தலைவ (5), திருந்திழை கணவ (11), குருசில் (14), நீர் நிலமுதலைத்தினையும் (15) அளந்துமுடிவறியினும் பெருமை அளந்தறிதற் கரியை, (16) கின் செல்வம்மிக்க பெருமை இனிது கண்டேம். (17) அஃது எவ் வாறிருந்ததென்னின், வாடாச் சொன்றி (22) மழை (38) காரெதிர் பருவ மறப்பினும் (29) பேராயாணர்த்து; அப்பெற்றிப்பட்ட கின் வளம் வாழ்க என வினைமுடிவு செய்க.
இதனுற் சொல்லியது) அவன் பெருமை யும் கொடைச்சிறப்பும் கூறி வாழ்த்தியவாருயிற்று. " . -
ஒப்புமைப்பகுதி, 3. புலியுறைபெஃகம் பதிற் 19: 4 ஒப்புமைப்பகுதி. புலவுவாய் எஃகம்: 'வைக்நுதி மழுகிய புலவுவா யெஃகம்" பெரும்
LT65T 119.
வேலுக்குமின் "கண்ணுெளி ரெஃகிற் கடிய மின்னி' பரி 23:7; 'ஆரிரு ளகற்றிய, மின்னுெளி ரெஃகம்' 'செல்சமத்துயர்த்த, அடுபுகழெஃகம் போலக் கொடிபட மின்னி' அக 273:4-5, 313; 13-4. 'மழை மின்னென விமைக் கும் வேலை" சீவக 383. -
2 ஏவ லாடவர்: "வடிருவி லம்பின் ஏவ லாடவர்” அக 215; 10
ܖ
 

24 ஆம் பாட்டு 171
2-3 எஃகம் வலன் ஏந்தி: "வேலைவல னேந்தி” சீவக 383. 4. *அரண்கடத்தல்: 'ஓம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன்” “அரண் பல கடந்த முரண்கொள் தானே வழுதி' 'ஆரரண் மடந்த.சேந்தன் தந்தை நற் 39 :9; 150 : 3-4; ஆரரண் கடந்த சீர்கெழு தானே வெல்போர் வேந்த னெடு" ஐங் 459: 3-4; “அரண்பல கடந்த முரண்கொள் தானே, வாடா வேம்பின் வழுதி' 'ஒன்னுர், ஒம்பரண் கடந்த வீங்குபெருங் தானே, அடுபோர் மிஞலி' அக 93: 8-9; 181: 3-5; 'ஒன்னுர், கடிமதி லரண்பல கடந்த, நெடுமா னஞ்சி" புற 93; 4-6.
தாரருந்தகைப்பு: 'உறுமுரண் தாங்கிய தாரருங் தகைப்பின்" பதிற் 66; 10.
5. பெரும்படை பெருங் (2) 19; 236; (3) 1:14; கம்ப. கரன்வதை133 6-8. "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" தொல். புற கு 30; "இருமூன் றெய்திய வியன்டபினின் வழாஅ. இருபிறப்பாளர்"முருகு177-183. *அறுதொழி லந்தணர்" புற 897; 20; சிலப் 23:70
8. அறம்புரியந்தணர்: அறம்புரி.அந்தணிர்" ஜங் 387, 'அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்" புற 98; 7.
வழிமொழிந்து: “உண்கடன் வழிமொழிக் திரக்குங்கால்' கலி 39:1; "மதிக் குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும்" "வாணுட் கொளலும் வழிமொழிக் து வந்தடையா’ பு. வெ. மா. 56, 97.
வழிமொழிந்தொழுகல்: 'வையங் காவலர் வழிமொழிக் தொழுக” Ljეთ 8: 1.
9. பாடல்சான்று: 'பாடல் சான்று டிேனை யுறைதலின்' பதிற் 51 33 "பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலோடு" பரி 17:33-8; பாடல் சான்ற கெய்த னெடுவழி" சிறுபாண் 151; "பாடல்சான்ற கன்னுட்டு நடு வண்" மதுரைக் 331.
10. நாடா நல்லிசை: "நாடா கல்லிசை கற்றேர்ச் செம்பீயன் 'சிறு Tsor 82.
11. திருந்திழை கணவ: பதிற் 14: 15 ஒப்புமைப் பகுதி. 13. துளங்கிருக்கை: 'தசும்பு துளங் கிருக்கை" பதிற் 43:11. 14. "இடாஅ வேணி வியலறைக் கொட்ப” “இடாஅ வேணிகின் பா சறை யானே’ பதிற் 81:14; வந்தனென்' 10.
15. ‘நிலந்தி நீர்வழி விசும்போடைந்தும்" தொல் மரபு கு 89. 'தீவளி விசும்பு நிலனி ரைந்தும்' பரி 3; 4; ‘மண்டினிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும், வளித்தலைஇய தீயுங், தீமுரணிய நீரு மென்ருங், கைம்பெரும் பூதத்து’ புற 2: 1-6.
16. அளந்துகடையறிதல்: "அளந்துகடை யறியா வளங்கெழு தார மொடு" மதுரைக் 697; 'அளந்துகடை யறியா வருங்கலஞ் சுமந்து' சிலப்
25 : 33,
அளப்பருங்குரையை: “அனைய அளப்பருங் குரையை' பதிற் 97; 8.

Page 101
172 பதிற்றுப்பத்து ஆராய்ச்சியுரை
17. இனிது கண்டிகும். 'பலர்புகழ் செல்வ மினி து கண் டிகுமே” பதிற் 11:30, -
19. தொடியுலக்கை: 'தொடிமா னுலக்கை' அக 9:13, 893; 11. வயின் ருேறு: 'வயின்ருே றின்ன தலைக்கு மூதையொடு” நற் 188; 6-1. 23. கண்டுமதி மருளல்; பதிற் 15: 34 ஒப்பு. 30-3. மடாவின் சொன்றி: "சாறயர்க் தன் ன மிடாஅச் சொன்றி" குறிஞ்சி 301.
24-8, "பயங்கெழு வெள்ளி யாகி