கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூலஸ்தானம்

Page 1


Page 2

மூலஸ்தானம்
மாத்தளை சோமு
தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003

Page 3
மூலஸ்தானம்
மாத்தளைசோமு C All rights reserved
First published in: August, 1998.
Page : 228 Copies : 1200 Size : Demy
publishers:
தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003
Tiù Qing-GlaDLDůL : W. Karunanithy
Price: 75.00
sidi. Curi: Parkar Computers & Publications
293, Royapettah High Road, Royapettah, Chennai- 600 Ol4, Ph; 8266637.

முன்னுரை
‘தெய்வங்கள் கூட செல்ல அஞ்சும் இடங்கள்’ என்று ஆங் கிலத்தில் சொல்வார்கள்.
மாத்தளை சோமு அத்தகைய 'இடங்களுக்குச் செல்ல அஞ்சாமல் தம் கருத்துச் சுதந்திரத்தை ஆணித்தரமாகப் பறை சாற்றியுள்ளார்.
தமிழ்நாட்டடில் சாதிப் பிரச்னையை மையமாக வைத்துக் கொண்டு நாவல் எழுதுவது என்பது கத்தி முனையில் நடப்பது போல். ‘ஒருபாற் கோடாமல் அணுகுவதென்பது மிகக் கடின மான பயிற்சி. மாத்தளை சோமு இதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் என்பதற்கு அவரை எவ்வளவு பாராட்டடினா லும் தகும்.
திருச்சி மாவடடத்திலிருக்கும் குக்கிராமம் “ஓமாந்தூர்' சித்திரப்படம் போல் நம் கண்முன் விரிகிறது. அவ்வூர் திரு விழா, நிகழும் சின்னச்சின்ன சம்பவங்கள், இயற்கைக் காடசி அனைத்தையும் காமிராக் கண்ணுடன் நகலெடுத்துக் காடடி யுள்ளார் மாத்தளை சோமு. இந்தப் பின்னணி கதையின் உக்கிரத்துக்கு அவசியம் வேண்டியிருக்கிறது.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் நம் மால் தமிழ்நாடடுக் கிராமங்களில் சந்திக்க முடியுமென்பதே கதையின் வெற்றி. அனைவரும் கறுப்பு வெள்ளைப் பாத்திரங் கள் இல்லை. பலங்களும் உண்டு, பலவீனங்களும் உண்டு.
ஐயர், வேல்சாமி, கோவிந்தன் ஆகிய மூவரும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்கள்.
இந்தியாவின் வரலாற்றில் ஏற்படட, ஏற்படடுவரும் சமூக அவலங்களுக்குப் பார்ப்பணியத்தின் பங்கு மிகவும் கணிசமானது என்பதை மறுக்க முடியாது. பிறப்பினால் உயர்ந்தவர், தாழ்ந்

Page 4
D மாத்தளைசோமு
தவர் என்று பாகுபடுத்திய கொடுமையே இந்தியா இன்றிருக்கும் நிலைக்குக் காரணம். ஆனால் கோட்டபாட்டடுக் குற்றம் தனிப் பட்டடவர் குற்றம் சபைக்குதவாது.
ஐயர் பிறப்பினால் உயர்ந்தவர் என்பதை ஒரு செருக்காகக் கொள்ளாமல் எதேச்சையாகப் பிறந்துவிடட அச்சாதிக் கேற்ற கடமைகளைச் செய்தாக வேண்டுமென்பதை வெறும் சடங்கு மந்திரமாகக் கொள்கிறார். தம் மகனுக்கு ஆபத்து என்ற போது அவருடைய சாதியினர் யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அந்நிலையில் அவருக்கு நேசக்கரம் நீடடி யவன் கீழ்சாதிக் காரனாகிய வேல்சாமி. அப்பொழுதுதான் அவரால் சாதி ஏற்றத் தாழ்வுகளின் அபத்தத்தை உணரமுடி கிறது. அப்பொழுதும் அவர் வேல்சாமிக்கும், கோவிந்தனுக்கும் தம் வீடடில் உணவு இடுவதை ஒரு சமூகச் சீர்திருத்தச் செய லாகச் செய்யவில்லை. ஒரு மனிதாபிமானச் செயலாகத்தான் புரிகிறார். இது ஓர் இயல்பான குணச்சித்திர மாற்றம். ஐயர் சிவராஜிக்கு கர்ப்பக்கிருஹத்தில் அடைக்கலம் தருவதும் மனி தாபிமான நேசக்கரந்தான்.
தனிப்படடடவர்களுடைய காழ்ப்புணர்வு, ஒரு சாதிச் சண் டையாக மாறி, ஊரே எரியும் போது இயல்பாகவே நல்லவராக விருக்கும் ஐயரால் 'இது ஏன் எப்படி நடக்கின்றது? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வேல்சாமி, 'ஐயர்' என்ற நாணயத்தின் மறுபக்கம். சாதிப் பூச்சினால் பாதிக்கப்படாத ஒரு நல்ல இதயம். கோவிந்தன் 'இடுக்கண்' வந்தால் மடடும் நகும் பாத்திரமில்லை; உலகத்தையே பார்த்து அதன் மதிப்பீடுகளின் அபத்தத்தையும் பார்த்துச் சிரிக்கும் பாத்திரம். அவனுடைய மதலைத் தன்மையே கொடூர வன்முறை உலகுக்கு ஒரு குற்றமாகத் தெரிகிறது. அவ னைக் கொன்று விடுகிறார்கள். சிலுவையிலேறிய “சிரிப்பு ஏசுநாதர் கோவிந்தன்.
மாத்தளை சோமுவுக்கு என் பாராடடுக்கள்.
- இந்திரா பார்த்தசாரதி சிட்னி - 1996

திரு. வல்லிக்கண்ணன் அவர்கள்.
மாத்தளை சோமு எழுதியுள்ள மூலஸ்தானம் நாவல் ஒரு சிறப்பான படைப்பு. சாதி உணர்வு மண்டியுள்ள சமூக மனிதர்களின் இயல்புகளையும், எண்ணங்களையும், சுயநலச் சிந்தனைகளையும் அழுத்தமாக எடுத்துக் காடடுகிற இந்த நாவல் சாதி உணர்வுகளை அடக்கி வென்றுவிடட ஒரு மனிதரின் உள்ளத்தின் உயர்வையும் உத்தமச் செயல்களையும் நன்கு சித்திரிக்கிறது. கோயிலில் பூஜை செய்து வாழும் சங்கர ஐயர் தமது சொற்களாலும், செயல் களினாலும், உண்மையான மனிதனாகத் திகழ் கிறார். 'இப்ப இருக்கிற மனுசாளுக்கு மனுசாள தெரியாது. இப்பல்லாம் மனுச நெஞ்சிலே கபடசி, சாதி எல்லாம் சேர்ந்திடுச்சி' என்று வேதனை யோடு சிந்திக்கிறார் அவர்.
அன்பும் மனிதநேயமும் கொண்டு எல்லோரையும் சமமாகக் கருதி, பலருக்கும் உதவி புரிந்து வாழ் கிற அவர், இறுதியில் ஆபத்தில் சிக்கிய இரண்டு சக மனிதர்களை காப்பாற்றத் துணிவுடன் செயல் புரிகிறார். அதனால் சமூகத்தின் குற்றச்சாட்டடுக்கும்
தண்டனைக்கும் இலக்காகிறார். அவ்வேளையில்,
இங்கு சமூகம் என்பது தவிர்க்க முடியாதது. சமூகம் சார்ந்த கல்வி, சமூகம் சார்ந்த கோயில், சமூகம் சார்ந்த அரசியல், எல்லாம் தவிர்க்க முடியாததாகி விடடது. மேலும் இந்த சமூகம்

Page 5
D மாத்தளைசோமு
என்பதே சாதியின் அடிப்படையில் இயங்கி வரு கின்றது' என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு மாமனிதர் என வாசகர்கள் உணரும் விதத்தில் மாத்தளை சோமு இந்த நாவலை வளர்த்து, சிறப்பான முடிவைத் தந்திருக்கிறார்.
தமிழ்நாடடின் கிராம சமுதாயம், மக்களின் வாழ்க்கை, கோயில் திருவிழாக் காலச் சிறப்புகள் முதலியவற்றை உரிய முறையில் படம்பிடித்துக் காடடும் இந்நாவல், அமெரிக்க வாழ்க்கைப் போக் கையும், அங்கு வசிக்க நேர்ந்துள்ள ஐயர் மகன் ராமின் அனுபவங்களையும் புதுமைச் சிந்தனை களையும் சுவாரசியமாக விவரிக்கிறது.
சிவராஜா - துளசிக்கிடையே வளர்ந்த காதல், குடி கார மருதமுத்துவின் சூழ்ச்சியும் சதிச் செயல் களும், சிரிப்பு கோவிந்தன் இயல்புகள், கோணங்கி யின் போக்குகள் முதலியன நாவலுக்கு கதைச் சுவையும், வெவ்வேறு குணச்சித்திர வர்ணங்களும் சேர்க்கின்றன. கதை ஒடடத்தினூடே ஆங்கங்கே ஆசிரியர் உதிர்த்துச் செல்கிற எண்ணச் சுடர்கள் பாராட்டடப்பட வேண்டியவை.
மூலஸ்தானம் வாசகருக்கு மனநிறைவு தரக்கூடிய நல்ல நாவல்.
முக்கியமான சமூகப் பிரச்னை பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய சீரிய படைப்பும்
ஆகும்.
10, வள்ளலார் பிளாட்டஸ் வல்லிக்கண்ணன் புதுத்தெரு, லாயிடடஸ் ரோடு, சென்னை - 600 005.

என்னுரை
மூலஸ்தானம்' என்ற இந்நாவல் தமிழகத்தில் ஒரு கிராமத் தில் நடப்பதைச் சொல்கிற கதையாகும். இதில் வருகிற அந்த தமிழகக் கிராமம் கற்பனையானதல்ல. மேலும் இதில் வருகிற கதாபாத்திரங்களுக்கு எனது வசதிக்காக சில பெயர்கள் சூட டியபோதும் அவர்கள் வெவ்வேறு பெயர்களில் நடமாடுவதே உண்மைதான். நான் தமிழகம் வரும் போதெல்லாம் உள்வாங்கிய நிகழ்வுகள் - சம்பவங்கள் யாவுமே இந்த நாவலில் கதையாக விரிகின்றன. இது உங்களுக்குத் தெரிந்த சாதிப் பிரச்னையின் தெரியாத பக்கங்களை எனது புலம் பெயர்ந்த அனுபவங்களோடு புதிய கோணத்தில் மானுடத்தை தேடுகிற வேடகையோடு சொல்ல முனைகின்றது.
சாதி என்பது தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டியது என்று சொல்லப்படட போதும் அந்த ஒழிப்புக் கோஷமே ஒரு சாதியாக மாறிப்போன விந்தையை இங்குதான் கண்டேன். மேலும் இந்த சாதி ஒழிப்பு என்கிற இயக்கம் கூட, ஒரு அரசிய லாகி அதனோடு இணைந்த பிரிக்க முடியாத சயாம் ரெட டைப் பிறவியாகி விடடது. இங்கு கல்வி - சமயம் - வர்த்தகம் ஏன் இந்த மனிதர்கள் வாழ்கிற தெருக்கூடச் சாதியின் அடித் தளத்தை மறைமுகமாகக் கொண்டு இயக்கப்படுகின்றது. இங்கு மேலெழுந்தவாரியான சாதி ஒழிப்புக் கூட மிகைப்படுத்தப் படுகின்றது. சாதி, மதம் என்பனவற்றைக் கடந்து மனிதர்களாக உருவெடுக்கிற ஒரு மனோபாவம் இங்குள்ள அரசியலில் கருகிப் போய் விடுகிறது. சாதி ஒழிப்பு சம்பந்தமான பேச்சு, எழுத்து, மாநாடு, கருத்தரங்கு எல்லாமே மூலதனம் இல்லாத ஆனால்

Page 6
D மாத்தளைசோமு
லாபம் தரக்கூடிய வர்த்தகமாகிவிடடது. விஞ்ஞானம் மனி தனின் வீடடுக்குள்ளேயே வாழ்கிறபோது கூட இந்தச் சாதி தனது நிலையை பல்வேறு வடிவங்களில் பலப்படுத்தியிருக் கின்றது. இன்னும் சொல்லப் போனால் பலர் தங்களை அறி யாமலே அதனோடு சமரசமாகி நேசம் கொண்டவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். மேலை நாடுகளில் வீடடுக்குள் இழிவு சொல்லாது எல்லாத் தொழிலையும் செய்கிற நம்மவர் கள் இந்த மண்ணில் கால் வைத்ததும் சாதி உணர்வு தூண்டப் படடவர்களாகிறார்கள். இதற்குக் காரணமே இங்குள்ள சுற்றப் புறச் சூழலும் அதனோடு ஒன்றிய இந்த அரசியலும்.
மேற்றிசை நாடுகளில் மனிதர்கள் கால் வைக்க முடியாத மூலஸ்தானம் இல்லை. ஆனால் இங்கு மனிதர்கள் கால் வைக்க முடியாத பல மூலஸ்தானங்களே மனிதர்களாலே நிறுவப் படடுள்ளன. மனிதர்களில் சிலரை உசத்தி, சிலரை தாழ்த்துகிற வேலையை மனிதனே செய்கின்றான். ஒரு உயிரைக் காப்பாற்றக் கூட இங்கு மூலஸ்தானம் உதவாமல் புனிதமாக இருக்க வேண் டும் என்று பிடிவாதமாயிருக்கிற மனிதர்களை அனுபவபூர்வ மாகக் கண்டேன். அதற்குத் துணையாகப் புராணத்தையும் சாஸ்திரத்தையும் துணைக்கு அழைத்ததை உணர்ந்தேன்.
மனிதனுக்காக உலகம் - மனிதனுக்காக பிரமம் என்பதெல் லாம் இங்கு புராணங்களாக - கதையாக இருக்கவேண்டும் என்பது பலரின் பிரார்த்தனை. தெய்வங்களின் கலப்புத் திரு மணங்கள் கூட ‘கதாகாலேடசபம் செய்கிற பாகவதர்களுக்கு ஏற்ற கதைகளாக இருக்கின்றன. மனிதன் சரிநிகரானவன் என்பது ஈழத்தில் பார்க்கிற படிக்கிற பேசுகிற ஒரு பொன்மொழி யாகவே இருக்கின்றது. ‘மனிதனாய் ஒன்றுபடடு மேம்பட வேண்டும்' என்கிற எண்ணமே சிதைவுற்றுப் போனதற்கு சமு தாயத்தில் சாதி மதம் தேசத்தின் கடசி, அரசியலே காரணங் களாகும். இவற்றை உணர்ந்து ஆழ விதைவிடட இந்த நஞ் சினை மேலெழுந்தவாரியாக களையாமல் “வேர்களோடு பிடுங்கி எறிந்தால் இங்கு எல்லோரும் மனிதராய் ஒன்று படுவதை எவராலும் தடுக்க முடியாது.

மூலஸ்தானம் L
இந்நாவல் மனிதர் அத்தனை பேரும் ஒன்று எனப் பேசு கிறது. இதனால் சாதி ஒழிந்து விடும் என்று நான் நம்புவது மிகைப் படுத்தப்படட ஒன்றாகும். ஆனால் இந்த நாவல் படிக் கிறவர்களின் மனதில் ஒரு உணர்வலையை எழுப்பி விடுமா னால் அதுவே எனக்குப் பெரிய வெற்றியாகும்.
மனிதனைப் பற்றி பேசுகிற மனிதராக்கப் பேசுகிற எழுத் துத்தான் இலக்கியம். எழுத்தும் சொல்லும் மனிதருக்கே என்ப தில் பரிபூரண நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் தான் இந்த நாவலை எழுதினேன். இது எனது நான்காவது நாவலாகும். இதனை ஏற்றுப் போற்றிப் பிரசுரிக்க இந்த நாவ லோடு ஒத்த கருத்துடைய இதழ்களைத் தேட வேண்டி இருந் ததனால் இது நேரிடையாக நூல் உருவிலேயே உங்களை வந்தடைகிறது. இதில் நான் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
இந்நாவலுக்கு ஆஸ்திரேலியா சிட்டனிக்கு வந்தபோது முது பெரும் எழுத்தாளர் எனது மதிப்புக்குரிய இந்திரா பார்த்தசாரதி அவர்கள் அற்புதமான ஒரு முன்னுரையை எழுதித் தந்தார். நாவல் பிரசுரபிடம் ஏற முனைந்த கடைசி நாடகளில் மதிப்புக் குரிய எழுத்தாளப் பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்களும் நாவல் சம்பந்தமான தன் கருத்தைக் கொடுத்து என்னை உற் சாகப் படுத்தினார். இவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.
இந்நாவலின் அடடைப் படத்தை சிட்டனியைச் சேர்ந்த ஒவியர், நண்பர் குணா என்று அழைக்கப்படும் திரு. குணசிங்கம் சிவசாமி அவர்கள் வரைந்துள்ளார். அவருக்கு என் அன்பான நன்றிகள்.
நாவலை அழகான முறையில் அச்சிடடுக் கொடுத்த சென்னை பார்க்கர் கம்பியூடடர்ஸ் வே. கருணாநிதிக்கு என் நன்றிகள். தொடர்ந்து எனக்கு ஆதரவு தரும் வாசகர்களுக்கு எனது அன்பான நன்றிகள்.
26.7.98 மாத்தளை சோமு

Page 7

1
கறுப்புத் துணியைப் போர்த்திக் கொண்டதைப் போலிருந் தது வானம். மனிதன் உற்பத்திச் செய்த வெளிச்சங்கள் மாத்திரம் அந்தக் கிராமத்தில் அங்கும் இங்கும் மிதந்தன. பேய் பிடித்த பெண் தலையை விரித்து ஆடுமாப்போல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது அந்தக் கோயில் வேப்பமரம். துறையூருக்குப் போகிற கடைசிப் பேருந்து சிறுகுடி கிராமத்தருகே வருகிற சத்தம் மெலிசாய்க் கேட்டடது.
பெரிய காமாட்டசியம்மன் கோயில் வாசல் தூணில் தலை சாய்த்து யோசித்துக் கொண்டிருந்த வேல்சாமியின் மனதில் ஒரு கேள்வி நின்றது. கதிரவன் லதான் சாமி கோடடையில இருந்து வருவாரு. அதுக்குள்ள மழை வந்திருமா?
கதிரவன் என்பது அந்தப் பகுதியில் திருச்சிக்கும் துறை யூருக்கும் ஓடிக் கொண்டிருக்கும் தனியார் பேருந்து.
வேல்சாமியின் பார்வை எங்கோ இருந்தது. எங்கிருந்தோ வந்த காற்று, அந்த இடத்தில் திடீர் சுழல் காற்றாக உருவெடுத் துக் கொண்டிருந்தது. வீதியில் ஒடடியிருந்த தூசி ஆள் உயரத் துக்கு வேகமாக மேல் எழும்பி மெதுவாக அடங்கியது.
காற்றில்தான் எத்தனை வகை? புன்னகையோடு வந்தால் தென்றல் காற்று. அழுது கொண்டு வந்தால் மழைக் காற்று. ஆவேசப்படடு வந்தால் புயல் காற்று. கோபமாக வந்தால் சுழல் காற்று. அசிங்கமாக வந்தால் புழுதிக் காற்று. நனைந்து போயி ருந்தால் குளிர் காற்று. காய்ச்சலோடு வந்தால் வெப்பக் காற்று. ஆனால் மழைக்கு முன்னால் மழையைத் தடுப்பது போல் வீசுகிற காற்றை என்னவென்று அழைப்பது?

Page 8
D மாத்தளைசோமு
நாசமாப்போன காத்து மழையப் பெய்ய விடாது போல இருக்கே
ஊர்க்காரர்கள் அப்படித்தான் அழைத்தார்கள் என்பதை விட, தங்கள் கோபத்தைக் கொடடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒமாந்தூர் என்ற அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்த கதிரவன், காமாடகியம்மன் கோயில் தெற்குத் தெரு வில் திரும்பும்போது, ஒரு ‘ஹாரன் அடித்தான். அதற்கு இரு அர்த்தம் உண்டு. ஒன்று கடைசி டிரிப் கதிரவன் வந்து விட டான். இரண்டாவது குறிப்பாக அந்த ஒமாந்துார் கிராம மக்க ளுக்கு மணி பத்தரை. இந்த ‘ஹாரன்’ கேடடுத் தூங்கப் போகி றவர்கள் சிலர். சாப்பிடுபவர்கள் பலர். திண்ணை பார்லி மெண்டை முடிப்பவர்கள் சிலர். இவையெல்லாம் அந்தக் கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளில் சில.
கிராம மக்களின் பாஷையால் “கோடடை’ எனச். சொல்கிற திருச்சியில் இருந்து புறப்படுகிற அந்த கதிரவன் சில நிமிடங்கள் ஒமாந்துரில் ஒய்வெடுத்துத்தான் போகும். எவ்வளவு நேரம்? அது யந்திரத்தைப் பொறுத்தது அல்ல. டிரைவரைப் பொறுத்த விஷயம். டிரைவர் ஆலமரத்து சந்திக்கு எதிராக இருக்கிற மணி டீ ஸ்டாலில் அரசியல் வம்புகளை சென்னை கோடடைக்கே போய் நேரில் பார்த்ததுபோல் ஒரு அளப்பு அளந்து விடுவார். அவரின் அளப்புகளை சுவாரஸ்யமாக கேட்டபார்கள். அவர்களின் சுவாரஸ்யத்தில் டிரைவர் தன்னை மறந்து விடுவார். ஆனால் அவரை அவர் கையில் உள்ள சிகரெட “ஞாபகப்படுத்தும்”
சிகரெடடை வாயில் வைத்து ஒரு தம் இழுத்து புகை விடடவாறு, ‘இன்னைக்கி பேப்பர் மேடடர் இதுதான். நாளைக்கி பார்ப்போம்' என்று சொல்லிக் கொண்டே பேருந்தை நோக்கிப் போவார். டிரைவர் சீட்டடில் உடகார்ந்து கொள்வார். மூன்று ‘ஹாரன் அடிப்பார். மூன்றாவது ‘ஹாரன்’ அந்தக் கிராமத்துக் காற்றோடு கலக்கும் போது கதிரவன் கிளம்பி விடுவான். இரவு துறையூரில் தங்கி, விடியற் காலை இதே ஊர் வழியாக திருச்சி போவான்.

மூலஸ்தானம்
மூன்றாவது ஹாரன் அடித்து விட்டடு ஒரு உறுமலுடன் கிளம்பிய கதிரவன் பின் பக்கமாய் “தொறையூர். தொரையூர்” என்று சத்தம் போடடுக் கொண்டு ஒருத்தர் கைப்பையோடு தலைதெறிக்க ஓடி வருவதைக் கண்ட கண்டக்டர் கொடுத்த விசிலில் கதிரவன் ஒரு ‘குலுங்கு குலுங்கி நின்றான். இது வழக்க மான காடசிதான்.
கைப்பையோடு அந்த ஆள் பஸ்ஸிற்குள் ஏற்றப்படடான். வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்துவிட்டடு திடடினான் கண்டக்டர்.
“நீ தானா? ஏன்யா? டைமுக்கு வந்தா என்னா? உள்ளூர்க் காரனே இப்புடி பண்ணினா மத்தவன் என்னய்யா செய்வான்?”
துறையூருக்கு டிக்கெடடு போடடுக் கையில் திணிக்க, புன்னகையும் பொறுமையுமாய் கண்டக்டரை சமாளிக்கிறான் அந்த ஆள். மாதத்தில் பலதடவை துறையூர் போவான் அவன். திருச்சிக்கும் போவான். திருச்சிக்குப் போவது வியாபாரத்திற்கு. துறையூருக்கு இந்த இருட்டடில் போவது வேறு சமாச்சாரம். துறையூரில் ஒரு வீடு அவனுக்கு உண்டு. இரவு தங்கிவிடடு காலை யில் முதல் பேருந்தில் வந்து விடுவான். அந்த வீடடைச் “சின்ன வீடு' என்று சொல்வார்கள்.
*கதிரவன் போயிடடான்' என்றவாறு மணி டீ ஸ்டாலை மூடுகின்றான் கடைக்காரன்.
ஜடப் பொருளான யந்திரத்திற்கு இந்த மனிதன் ‘உயிர்’ கொடுத்துவிடடுத் தானும் உயிர் இழந்தவனாகி விடுவான். சில நேரங்களில் அந்த டிரைவரைவிட அந்தப் பேருந்துக்குத்தான் மதிப்பு எப்போதாவது வேறு டிரைவர் அந்தக் கதிரவனை ஒடடி வரும்போது, ‘என்ன இன்னைக்கு கதிரவன் இப்புடி வருது?’ என்ற கேள்வி வரும். அதனோடு அதுவா இன்னைக்கி புது டிரைவர் அதான் இப்புடி வருது' என்ற பதிலும் வரும். பிறகு என்ன? அந்த பஸ் நிற்பதில் ஓடுவதில் வளைவதில் எல்லாம் குறை காண் பார்கள். இங்கே பஸ் வண்டிக்குத்தான் மதிப்பு. மனிதனுக்கு
13

Page 9
D மாத்தளைசோமு
இல்லை. யந்திரம் உசத்தப்பட்டடு மனிதன் தாழ்த்தப்படு கின்றான்.
வேல்சாமிக்கு தூக்கம் கண்களை மூட வைத்தது. எங்கி ருந்தோ வந்த காய்ந்த வேப்ப இலை அவன் முகத்தில் படடு அவன் தூக்கத்தை முறித்தது.சடாரென்று விழித்தான் அவன்.
அப்போதுதான் கதிரவன் புறப்படடுப் போனதே நினை வுக்கு வந்தது வேல்சாமிக்கு. பேருந்து போனது கூடத் தெரியா மல் அப்படி ஒரு குடடித் தூக்கமா? ‘சாமி வந்து விட்டாரா? திருச்சியில் இருந்து சிவராத்திரிக்கு தேவையான பொருடகள் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றாரே!
‘சாமி என்று அவன் அழைப்பது ஓமாந்தூர் பெரிய காமாட்ட சியம்மன் கோயில் சங்கர ஐயரைத்தான்.
வேல்சாமியின் கால்களுக்கு சக்கரம் முளைத்ததா? அப்படி வேகமாக ஓடினான். புலி வலம் வீதிக்கு வந்தான் அவன்.
வேல்சாமியை வரவேற்பது போல் வீதியோரத்து 60 6ut. - தூண்கள் எரிந்து கொண்டிருந்தன. அந்த டியூப் லைடடைச் சுற்றி பூச்சிகள் வடடமடித்துக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு வீட்டடில் இருந்த ரேடியோவில் வாழப்பாடி ராமன், வந்தவாசி சோமன், நாகை ராஜா, தஞ்சை சாந்தி, ஆற்காடு ரேவதி ஆகிய நேயர்களின் நேயர் விருப்பம் காற்றில் மிதந்து வந்து கொண் டிருந்தது. எங்கோ ஒரு தெருவில் நாய்கள் ராச்சியம் நடந்து கொண்டிருந்தது. ஆம். ஒருநாய் குரைக்க மற்ற நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன.
வேப்பமரப் பிள்ளையார் கோவிலருகே வந்தான் வேல் சாமி. டீக்கடை வாசலில் சில நாய்கள் எச்சில் இலைகளுக்காக சண்டை போடடுக் கொண்டிருந்தன. டீக்கடை மூடப்படடிருந்
தது. வேறு எவரையும் காணவில்லை.
வேல்சாமியின் நெஞ்சு படபடத்தது. இந்த பஸ்ஸில் சாமி வந்திருந்தால் வீடடுக்கு எப்படிப் போயிருப்பார்? ஒரு வழிப்

மூலஸ்தானம் D
பாதை தானே உண்டு. ஒரு விநாடி கண் மூடியதில் வந்த விபரீதமோ என்னவோ?
அந்த நேரத்தில்தான் அந்த “சிரிப்பு சத்தம் கேடடது. அந்த நேரத்திலும் இருபடடிலும் அப்படி சிரிக்க அவனால்தான் முடி யும். அந்த சிரிப்புதான் அவனின் பெரிய அடையாளம்.
“யாரு...! வேல்சாமியா?” என்று சொல்லி விடடும் ஒரு சிரிப்பு சிரித்தான் அவன். அந்த நேரத்தில் அந்தச் சிரிப்பைச் சகிக்க முடியாவிடடாலும் அவன் வந்தது நல்லது என்பதாய் நினைத்தான்.
"கடைசி பஸ் போயிருச்சா?” “அது இப்ப கோடடாத்தூருக்குப் போயிருக்கும்” “நம்ம சாமி வந்தாரா?” “எந்த சாமி?” “இந்த கிண்டல்தானே வேணாங்கிரது. நம்ம கோயில் அய்யருவந்தாரான்னு கேக்கிரேன்.”
“அய்யரா? நான் நல்லா பார்த்தேன், அவரு பஸ்ஸில வரலியே!”
வேல்சாமி ஒரு பக்கம் நிம்மதியடைந்தான். மறுபக்கம் பர பரப்பானான். கடைசி பஸ்ஸில் ஐயர் வரவில்லையென்றால் இனி எப்புடி வருவார்?
வேல்சாமி யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்தான். வீதியோரத்து மின் விளக்கு வெளிச்சத்தில் அவன் தெரிந்தான். வேல்சாமியின் தோள்பட்டடை உயரத்தில் இருந்தான் அவன். குண்டான தேகம். தலை நிறைந்த சுருடடை முடி. ஒரு மாதம் முகச் சவரம் செய்யாத முகம். “தொள தொள சடடை வெற் றிலை எச்சில் அடையாளம் போட்டட வேடடி. இவையெல்லாம் அவனுடைய உடல் அடையாளங்கள், உள்ளம் கபடு கசடு தெரியாதது. இந்த வாழ்க்கையையே ஒரு விளையாடடாய் புரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவன்.
15

Page 10
D மாத்தளைசோமு
‘சாமி! என்ன சின்ன புள்ள யா? நீ பயப்படாதே! அவர் வருவாரு” என்று சொல்லிவிடடு வழக்கம் போல் சிரித்தான். அதுவே பெரிய சத்தமாய் இருந்தது. சிரிப்பு அவன் அடையாளம். சிரிக்காமல் எதையும் அவனால் சொல்ல முடியாது. பிறக்கும் போதே சிரிப்போடு பிறந்தவன். --
அந்தக் கிராமத்தில் சாவு வீடடைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவன் அழையா விருந்தாளி. அவன் எப்படியும் வருவான் என்பதற்காக அவனுக்கு அழைப்பே கொடுப்பதில்லை. கல்யாண வீடுகளில் வேலை செய்ய அவனைத் துணையாக வைத்துக் கொள்வார்கள். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வேலை செய்பவர்களை தூங்காமல் பார்ப்பதே அவன் வேலை. தனக்கு தூக்கம் வராமல் இருக்க வெற்றிலை போடடுக் கொள் வான். அப்படியே எதையாவது சொல்லிக் கொண்டே சிரித்துக் கொண்டிருப்பான். அவன் சிரித்தால் எவன் தூங்குவான்?
ஒரு முறை ஒரு சாவு வீடடிற்குப் போனான் அவன். அங்கு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று
சிரித்து விடடான். “ஏன்டா சிரிச்சே?” என்று கேட்டடதற்கு “நான்
- செத்தால் ஏஞ் சிரிப்பு எங்கே போவும்னு நெனைச்சு பார்த்தேன் சிரிப்பு வந்திருச்சி.” என்றானே! அன்றோடு அவனைச் சாவு வீட்டடிற்கு வர விடுவதே இல்லை. *
ஒமாந்துாருக்கு வருகிற எல்லையைக் கடந்து ஒரு கார் வருகிற சத்தம் கேட்டடது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மரத் தடியில் ஒரு கார் வந்து நின்றது. கார் கதவைத் திறந்து கொண்டு ஐயர் இறங்கினார். அவரைக் கண்டதும் காரை நோக்கி வேல் சாமி ஓடினான். அவனைத் தொடர்ந்து சிரிப்பும் நடந்தான்.
“வாங்க சாமி! நீங்க கடேசி பஸ்ல வரலேனு வேல்சாமி ஒரு மாதிரி ஆயிடடாரு. பாவம் வேல்சாமி! கடவுளுக்கிடட சொல்லி தைரியத்த வேல்சாமிக்கு வாங்கி குடுங்க சாமி.”
சிரித்தான் அவன், அசதி மறந்து ஐயரும் சிரித்தார். வேல் சாமி மெளனமாக நின்றான்.

மூலஸ்தானம்
“கோவிந்தா! வேல்சாமிக்கு சிவராத்திரி முடிஞ்சி தைரி யத்த வாங்கி கொடுக்கலாம். இப்போ நீ சிரிச்சிகிடடே எங்கயும் போயிராத நெறைய சாமான் வாங்கி வந்திருக்கேன். கோயி லுக்கு எல்லாத்தையும் கொண்டு போவணும். ஒரு கை தர்ரியா?”
சிரித்தான் கோவிந்தான்.
“ஏன் சாமி? ஒரு கை போதுமா? ரெண்டு கை வேணுமா?”
சிரிக்க முடியாமல் அவனையே பார்த்தார். ஐயர். வேல் சாமி சிரித்தான்.
2
அந்தப் பெரிய காமாடிசியம்மன் கோயில் எல்லைக்குள் ஐயருக்கு வீடு கொடுக்கப்படடிருந்தது. அந்த வீடடை ஒட்டி னாற் போல் கோயில் பூஜைக்குத் தேவையான பொருடகள் வைக்கக்கூடிய ஒரு களஞ்சிய அறை இருந்தது. அந்தக் களஞ் சிய அறையில் மூன்று பேரின் சுமைகளும் இறக்கி வைக்கப் படடன. ஐயர் களஞ்சிய அறையைப் பூட்டடி விட்டு வீட்டை நோக்கி நடந்தார். அவரின் பின்னால் வேல்சாமியும் கோவிந் தனும் போனார்கள். வீடடில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் ஐயரின் மனைவி மீனாடசியம்மாள்.
“வேலு கோவி! நீங்க ரெண்டு பேரும் அப்படியே இருங்கோ. நா. கைகால் முகம் கழுவிடடு வர்ரேன்.”
வேல்சாமியும் கோவிந்தனும் ஐயர் வீடடுத் திண்ணையில் உடகார்ந்தார்கள். பத்தே நிமிடங்களில் ஐயர் சலவை வேடடி கடடிக் கொண்டு திண்ணையில் உடகார்ந்தார்.
“சாமி, மழை வருமா?”
வானத்தை அண்ணாந்து பார்த்துவிடடு வேல்சாமி கேட்ட
L_TTGöI.
ஐயர் ஆணி அடித்தாற் போல் சொன்னார்.
17

Page 11
D மாத்தளைசோமு
“சிவராத்திரிக்கு ரெண்டு நாள்தான் இருக்கு அதுக்கு முன் னால, ஒமாந்தூர்ல மழை பெய்யனும். என் ஆயுசுக்கு மழை பெய் யாமல் விடடதில்லை.”
“ஏன் சாமி! நம்ம கோயில் டிரஸ்டி புள்ள மெடராசில இருந்து வருவாரா?”
“சிவராத்திரி காத்தால கோயில்ல இருப்பார்.” அதற்கு ம்ேல் எதுவும் கேடகாத கோவிந்தன் மெளனமாய் இருந்தான். சென்னையில் இருந்து வரும் கோயில் தர்மகர்த்தா பிள்ளையைச் சந்தித்துப் பணம் கேடடு வாங்க வேண்டும். அவரை எப்போது எங்கு சந்திப்பது என்பதுதான் அவன் சிந்தனை. மீனாட்சியம்மாள் திண்ணை வாசலருகே நின்று குரல் கொடுத்தாள். “பலகாரம் ரெடியாயிடுத்து, சாப்பிட வாங்கோ.”
ஐயர் ஏதோ சொல்ல வேண்டும் என்பது போல் வேல்சாமி யைப் பார்த்தார். புரிந்தது அவனுக்கு.
“இருங்க சாமி, கைகால் கழுவிடடு வர்ரேன்.” வேல்சாமி கிணற்றடிக்குப் போனான். அது கோயில் பூந் தோடடக் கிணறு. கோவிந்தன் நின்றான், ஐயர் அவனை வார்த் தைகளால் தள்ளினார்.
“கோவி! நீயும் கால் கைய கழுவிடடு வா, சாப்பிடலாம்.” கோவிந்தன் ஒரு சிரிப்பு சிரித்தான். பிறகு சொன்னான். “நான் எப்பவே சாப்புடடுடிடேன் சாமி.”
ஐயர் புன்னகைத்து விடடுச் சொன்னார். “கோவி! இந்த ஐயர் ஆத்து தோசை சாப்பிடவா உன் வயித்தில இடம் இல்லை. வயிறுதான் பிள்ளையார் வயிறாடடம் இருக்கே!”
கோவிந்தன் சிரித்துக் கொண்டே பூந்தோடடக் கிணற்றை நோக்கி ஓடினான்.
வேல்சாமி கிணற்றுத் தண்ணிர் இறைத்துக் கழுவிக் கொண் டிருந்தான். மெல்லமாய் கோவிந்தன் அவனோடு பேச்சுக் கொடுத்தான்.

மூலஸ்தானம் D
“அய்யரு நல்ல மனுசன், நம்பளயெல்லாம் சாப்புட சொல் ராறு. நல்ல அய்யரு நம்ம ஊர்ல ஒரு அய்யர் இருந்தாரு, அவரு அவங்க ஆளுகள தவிர வேற யாரையும் தொடடுக்க மாட்டடாரு. சாதி பார்ப்பாரு, அவரப் பார்க்கிரபோது இந்த அய்யரு தங்கம்.” வேல்சாமி மெளனத்தையே பதிலாக்கி, கோவிந்தனை ஒரு பார்வை பார்த்தான். அது கோயில் கோபுர மின்னொளியில் தெரிந்தபோதும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டான் கோவிந்தன். வேல்சாமியின் பார்வையில் உள்ள அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாது.
“ஏன் வேல்சாமி! பேசாம இருக்கே, பேசுப்பா.” என்று சொல்லிவிடடு அந்த இருடடிலும் உரக்கச் சிரித்தான்.
“சிரிக்கிறயா? சிரி! நான் பேசினா நீ சிரிக்கவே மாடடே! நாளைக்கி காலையில குளிக்கிர நேரம் பேசுரேன். இப்ப பேசாம
99 GSAT.
வேல்சாமி அப்படி சொன்னால் ஒரு கதை இருக்கும். இரு வரும் ஐயர் வீடடுக்குள் நுழைத்தார்கள். வேல்சாமி சர்வ சாதா ரணமாக நடந்தான். கோவிந்தன் நடையில் ஒரு தயக்கம் பின்னியது.
மீனாடசியம்மாள் வீடு மணக்க தோசை சுட்டடிருந்தாள். மூன்று பெரிய வாழை இலை போடப்பட்டிருந்தது. ஒரு இலை யில் ஐயர் உடகார மற்ற இலைகளில் வேல்சாமியும் கோவிந்த னும் உடடகார்ந்தார்கள். மூவருக்கும் ஒரே மாதிரியாக பரிமாறி னாள் மீனாடசியம்மாள்.
கோவிந்தன் தோசையை சுவைத்து ரசித்துச் சாப்பிட டான். மீனாடசியம்மாள் மெலிதான குரலில் கேட்டடாள்.
“எப்படி இருக்கு நம்ம ஆத்து தோசை?” வாய்க்குள் தோசை இருந்ததால் மென்று கொண்டே சொன்னான் கோவிந் தன். “நா. இன் னைக்கிதான் அய்யர் வீடடுல மொத மொத தோசை சாப்பிடுரேன். இங்க சாப்புடுரதே பெரிசு? இதில நா. என்ன சொல்ரது?’ என்றவன் சில விநாடியின் பின்னே சொன்னான். “அய்யர் வீடடு தோசை, தோசைதான்.”
19

Page 12
D மாத்தளைசோமு
ஐயர் உடனே கேட்டடார். “எல்லா ஆத்துலயும் ஒரே மாதிரி தான் தோசை சுடுராங்க. இதில ஐயர் ஆத்து தோசையில என்ன தனிச்சிறப்பு?”
கோவிந்தன் சாப்பிடுவதை நிறுத்திவிடடுப் பதில் கொடுத் தான். “இருக்கு சாமி! உங்க வீடடு தோசைக்கு சாம்பார் சட. டினி பருப்பு பொடி இருக்கு. எனக்கு தெரிஞ்சவங்க வீடடுல தோசைக்கு கூட தொடடுக்க கவிச்சி இருக்கும். கவிச்சின்னா என்னான்னு உங்களுக்கு தெரியும். தோசை, இடலி, உப்புமா எல்லாம் வெசிடேரியன். இதில போயி கவிச்சிய கலக்கிரானுக. எனக்கு கலக்காம இருந்தாதான் புடிக்கும். அதை நெனைச்சித் தான் அய்யர் வீடடு தோசை தோசைதான்னு சொன்னேன்.”
அப்படியே உரத்த சத்தத்தில் ஒரு சிரிப்பு சிரித்தான் கோவிந்தன். அது அந்த இருளில் கலந்தபோது மீனாடசியம் மாளுக்கு என்னவோ போலிருந்தது. பயந்த மாதிரி நின்றாள். அதைக் கவனித்த ஐயர், “மீனு பயந்திடடியா? யானைக்குத் தும்பிக்கை மாதிரி கோவிந்தனுக்கு சிரிப்புதான் அடையாளம். அவன் நல்லவன், மனசு குழந்தை மாதிரி. அவனுக்கு தோசை வை.” என்றார்.
இரவு, ஐயர் வீடடின் உள்ளே படுத்துக் கொண்டார். வேல் சாமியும் கோவிந்தனும் திண்ணையில் படுத்துக் கொண்டார்கள். கதவு மூடப்படடு இருந்தது. சிறிது நேரத்தில் ஐயரின் குறடடை சத்தம் கதவை முடடியது. கோவிந்தனுக்கு தூக்கமே வரவில்லை. வேல்சாமி தூங்கிவிடடானா என்று பார்த்தான். அவன் தூங்க வில்லை.
மெல்லமாய் வேல்சாமியிடம் பேச்சுக் கொடுத்தான் கோவிந்தன். “என்னமோ சொல்ரேன்னு சொன்னிங்க? அது என்ன அண்ணே?”
“நான்தான் நாளைக்கி காலையில சொல்ரேன்னு சொன் னனே. அதுக்குள்ள அவசரமா?.”
“அவசரமா? எனக்கா?” என்ற கோவிந்தன் சிரித்தான். வேல்சாமி கோவிந்தனை முறைத்தான்.

மூலஸ்தானம் )
“மொதல்ல இந்த இருடடுல சிரிக்கிரதை நிறுத்து. அய்யரு முழிச்சுக்குவாரு”
"ஆமாண்ணே” என்ற கோவிந்தன் “இனி சிரிக்க மாட. டேன்” என்றான். வேல்சாமி சில நிமிடங்கள் மெளனமாய் இருந் தான். பிறகு மெல்லிய குரலில் ரகசியம் சொல்வது போல கோவிந்தன் காதில் பேசினான்:
“இன்னிக்கி உன்னையும் என்னையும் வீடடுக்குள்ளே கூப் பிட்டடு சாப்பாடு போடுற இந்த அய்யருபத்து வருசத்துக்கு முந்தி இப்படி இல்ல.” “எப்படி?” என்று தூண்டினான் கோவிந்தன். ஆனால் சிரிக்கவில்லை. -
“அது பெரிய கதை சொல்றேன். இந்த அய்யர் ஒரு காலத் தில் சாதி பார்த்துகிட்டடு இருந்தவரு. எங்க மாதிரி ஆள்களுக் கிடட தாமரை இல தண்ணி மாதிரி நடந்துக்குவாரு.”
கோவிந்தனுக்குப் புரியவே இல்லை. “தாமரை எல தண்ணி மாதிரின்னா.”
“தாமரை இலைய கொளத்தில பார்த்தா அது தண்ணி யோட ஒடடுன மாதிரி இருக்கும். தூக்கிப் பார்த்தா தண்ணியே ஒடடியிருக்காது. அப்படி இந்த அய்யரு நாசுக்கா நடந்து கிட்டடாராம். அப்ப அவரு பையன் திருச்சி சோசப்பு காலேஜ்ல படிச்சிகிடடிருந்தான். நல்லா படிச்சான்.” என்ற வேல்சாமி ஒரு பெருமூச்செறிந்து சொன்னான். “நல்ல வங்களுக்குத்தான் காலம் இல்லியே!”
“ஏன் அப்படி சொல்ற?”கோவிந்தன் கேட்டடான். “கதைய கேளு. புரியும்.” என்ற வேல்சாமி கதையைத் தொடர்ந்தான்.
“ஒரு நா. அய்யர் வீடடு பையன் திருவெள்ளறையில இருந்து சைக்கிள்ல வர்ர நேரம் திருட்டடுத்தனமா அரிசி ஏத்தி கிடடு வந்த ஒரு லாரிக்காரன் முடடிடடு போயிடடான். அய்யர் பையனுக்கு சரியான அடி. பேச்சு மூச்சு இல்ல. சைக்கிள் சுத்தமா நொருங்கி போச்சி. ஒரு கார் புடிச்சி பையன திருச்சி
21

Page 13
மாத்தளைசோமு
கவுருமெண்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனாங்க அக்கம் பக்கத்து ஆளுங்க. அய்யரு தகவல் வந்து போனாரு. ஒரே பையன். ஆஸ்பத்தியில பையன பார்த்த டாக்டர் உடனே ஆபரேசன் செய்யணும். அவசரமா ரத்தம் வேணும்னு சொல்லி யிருக்காங்க. பையன்வுடடு குரூப் ரத்தம் ஸ்டாக் இல்லேன் னதும் அய்யர் எங்கெங்கயோ போயி பார்த்தாரு. ரத்தம் கெடைக்கல்ல.”
கதையை நிறுத்தி பெருமூச்செறிந்தான் வேல்சாமி. “என்ன்து திருச்சி டவுண்லயா ரத்தம் கெடைக்கல்ல?.” என்று கேடடடான் கோவிந்தன்.
“திருச்சியில் ரத்தம் இல்லாம இல்ல. கவுருமெண்ட ஆஸ் பத்திரிக்கு முன்னாடியே நெறைய புரோக்கர் இருப்பாங்க. அவங்கள புடிச்சா வேண்டிய ரத்தம் கெடைக்கும். துடட வீசினா ரத்தமா கெடைக்காது? ஆனா அய்யர் தேடினது அவங்க சாதிக் காரங்க ரத்தம். அய்யரும் திருச்சி ஆண்டாள் தெரு, சீரங்கம் எல்லாம் போய் தேடிப் பார்த்தாரு. ரத்தம் கெடைக்கல்ல. அதாவது அவங்க சாதிக்காரங்க ரத்தம். அய்யர் அவங்க சாதிக் காரங்கள ரொம்ப நம்பியிருந்தாரு. ஆனா யாரும் கை குடுக் கல்ல. அதுல மனம் ஒடிஞ்சி அய்யர் ஆஸ்பத்திரி டாக்டருக் கிடட போய் அழுதாரு. விசயத்த சொன்னாரு. டாக்டருக்கு கோவம் வந்திருச்சி. நீங்க சாதி ரத்தம் தேடுறிங்க. இப்புடி எல்லாரும் சாதி ரத்தம் தேடினா மனுசங்க யாரும் பொழைக்க முடியாது. உங்க பையன் உசிரை விட சாதி ரத்தம்தான் உங்களுக்கு பெரூசா போச்சி. போங்க. யாரையாவது கூடடி கிடடடு வாங்க. இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள ரத்தம் ரெடி யாகலேன்னா உங்க பையன நீங்க மறந்திர வேண்டியது தானுடடாரு டாக்டர். இத்தனைக்கும் அந்த டாக்டரும் அய்யருதான்.
அய்யர் ஓடின்னாரு. ஒரு அஞ்சாறு பேரை கூடடிகிட்டடு வந்தாரு. டாக்டர் எல்லாருட்டடும் ரத்தத்தை சோதிச்சி பார்த்தாரு பையனுக்கு பொருந்திர மாதிரி இல்ல. அப்பதான் ஒரு சத்தம் கேடடிச்சி. எல்லாரும் திரும்பி பார்த்தாங்க.

மூலஸ்தானம் D
ஒருத்தன் அய்யருக்கு நல்லா தெரிஞ்சவன் அடிக்கடி கோயி லுக்கு வர் ரவன். 'ஏன் ரத்தத்தை பாருங்க டாக்டர்’னு கைய நீட்டினான். டாக்டர் சோதிச்சிப் பார்த்தாரு. அவன் ரத்தமும் டையன் ரத்தமும் ஒரே குரூப். டாக்டருக்கு சந்தோசம். உங்க பையனப் பத்திக் கவலையை விடுங்கோன்னு சொல்லிடடு டாக்டர் போயிடடாரு.”
வேல்சாமி கதையை நிறுத்தி யோசித்தான். கோவிந்தன் தூண்டினான். “அப்புறம்?” "அப்புறம் என்னா? ரத்தம் குடுத்து ஆபரேசன் செஞ்சு பையன காப்பாத்தியாச்சி. பையன் அதுக்கு பொறகு நல்லா படிச்சி. இப்ப அமெரிக்காவில படிச்சிகிடடே வேல செய்யிரா னாம். இதுக்கு பொறகுதான் அய்யர் மாறுனாரு. எல்லாரையும் மனுசனா பார்க்கிராரு.”
“அது சரி யாரு ரத்தம் குடுத்தா?” “எனக்குத் தெரியாது.” கோவிந்தனுக்கு கதைக்கு முற்றுப் புள்ளி போடாத மாதிரி இருந்தது.
“நெசமா தெரியாதா? இம்புடடுக் கதை சொன்ன ஒனக்கு அது மடடும் தெரியாதா?”
“தெரியாது” என்று சொன்ன வேல்சாமி ஒரு விநாடி மெளனத்தின் பின் கேட்டடான். “ஆமா தெரிஞ்சி என்ன செய்யப் போற?”
“ஒண்ணும் இல்ல. சும்மா கேடடேன்.” “சரி. சரி. தூங்கு நேரமாச்சு.” வேல்சாமி கண்களை மூடத் தொடங்கினான். மூடிய கண் களுக்குள் சில காடசிகள். சம்பவங்கள்.
கோவிந்தன் கண்களை மூடினான். தூக்கம் வரவில்லை. அவன் நெஞ்சில் அய்யர் பையனுக்கு ரத்தம் குடுத்தது யாரு? என்ற கேள்வி விசுவரூபமெடுத்து நின்றது.
23 O.

Page 14
0 மாத்தளைசோமு
3
ஒடடப் பந்தயத்தில் ஓடுபவர்களைப் போல் அந்தப் பள்ளிக் கூடத்தை விடடு ஓடிக் கொண்டிருந்தார்கள் இந்நாட்ட டின் நாளைய குடிமக்கள். எப்போது ஸ்கூல் மணி அடிக்கும் என்று அவர்கள் செவி காத்திருக்கும்போல் தெரிகின்றது. மெது வாகப் போகக் கூடாதா? நாலும் தெரிந்து கொள்ள வந்த இடத்தில் இந்த ஓடடத்தை தொடங்கிய இவர்கள்தான் அப் புறம் வாழ்க்கை முழுவதும் ஓடப் பழகிக் கொண்டார்களோ என்னவோ?
அந்தப் பிள்ளைகள் சத்தம் போடடுக் கொண்டே புழுதி யைக் கிளப்பியவாறு மையின் ரோட்டடுக்கு ஓடி வந்தார்கள். அவர்கள் மெயின் ரோடடுக்கு வருவதற்கும் ரோட்டடோரத்து வேப்ப மரத்தடியில் புழுதியைக் கிளப்பியவாறு கே.எம்.எஸ். பஸ் நிற்கவும் சரியாக இருந்தது.
இந்தப் பள்ளியில் படிக்கும் எந்தப் பிள்ளையும் அந்த வண்டியில் ஏறாது. இவர்களுக்காகவும் அது நிற்பதும் இல்லை. பஸ்ஸில் வந்து படிக்கக் கூடிய அளவிற்கு அது பெரிய புகழ் பெற்ற பள்ளிக் கூடம் அல்ல. அந்த்க் கிராமத்தில் ஸ்கூல் இருக் கிறது என்று சொல்வதற்காகவும், நாலு எழுத்து தெரிய ஒரு ஸ்கூல் இருக்கட்டடுமே என்று சொல்வதற்காகவும் அந்தப் பள் ளிக் கூடம் நடத்தப்படுகிறது. ஜனநாயக நாடடில் கல்வி, சாதி சமய, இன வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமாக தரப்படு கின்றது என்றாலும் உண்மையில் ஆசிரியர்கள் மனது வைத்தால் தான் அது நிஜமாகின்றது. இங்கேயும் அப்படித்தான்.
ஆறு மாதத்திற்கு முன்பு இங்கே நியமிக்கப்படட சிவ ராஜா என்ற ஆசிரியரால்தான் இப்போது அந்தப் பிள்ளைகள் 'அ. ஆ. இ. என்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு முன்னர், பள்ளிக்கூடம் இருந்தது; பிள்ளைகள் இருந்தார்கள்; ஆசிரியர் இருந்தார்; ஆனால், படிப்பு அதுதான்

மூலஸ்தானம் 0
இல்லை. காலையில் வகுப்பிற்கு வந்து 'அடடென்ட எடுக்கிற ஆசிரியர் கரும்பலகையில் நிறைய வாசிக்கத் தெரிகிறதோ என்னவோ பார்த்தால் தெரியும் தானே என்கிற மாதிரி ஒரு பாடத்தை எழுதி வைப்பார். பிறகு வாசிக்கக்கூடிய ஒரு பைய னைக் கூப்பிடடு ஒரு புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல் வார். பிறகு அவர் பக்கத்து அறைக்குப் போய்த் தன் பாடத்தை தொடங்குவார் பிள்ளைகளுக்கு ஒரு பாடம் கொடுத்தாயிற்று. தனக்கு ஒரு பாடம் தேவைதானே?
பக்கத்து டவுனில் இருக்கிற ஒரு அரிசி ஆலை முதலாளி யின் கணக்குப் புத்தகங்கள்தான் அவருக்குப் பாடம்! அரசாங்கத் திற்கு காட்டடப்படுகின்ற கணக்கை எழுதுவதே அவர் வேலை. பிள்ளைகள் கொஞ்ச நேரம் சும்மா இருப்பார்கள். அப்புறம் பேசத் தொடங்குவார்கள். நேரம் போகப் போக இரைச்சல் பெருகும். அப்போது மாஸ்டர் பக்கத்து அறையில் இருந்தவாறே வேப்ப மரக்குச்சியை மேஜை மீது தடடி, ‘சத்தமா போடு றிங்க? படிங்கடா. இந்தா வர்ரேன்’ என்று சத்தம் போடுவார். பிள்ளைகள் பயந்து மெளனமாவார்கள். நிஜமாகவே அவர் படித்துக் கொடுக்க வந்து விடுவாரென்ற பயம்!
இதுதான் முன்னர் அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்தது. அந்தப் பள்ளிக்கூடம் அந்தக் கிராமத்தில் இருந்த வையாபுரிப் பிள்ளை என்ற வசதி படைத்தவரால் கட்டடப்படடது. தெய் வானை நினைவு பள்ளிக்கூடம் என்பது அதன் பெயர்.
ஊர் மக்களின் பஸ் மறிப்பு போராடடத்திற்குப் பின்னர் மாஸ்டர் மாற்றப்படடு, அதே கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா நியமிக்கப்படடான். அவனோடு அதே ஊரைச் சேர்ந்த துளசி யும் நியமிக்கப்படடாள். சிவராஜா வந்த பிறகுதான் ஸ்கூல் நன்றாக நடக்கிறது என்ற செய்தியைக் கேள்விப்படடு திருப்தி யானார்கள் ஊர் மக்கள்.
அந்தப் பள்ளிக் கூடத்தில் இருந்து மாணவர்கள் எல்லோ ரும் போய் விடடார்கள். ஆசிரியர்களான சிவராஜா, துளசி மாத்திரமே ஒரு வகுப்பில் உடகார்ந்திருந்தார்கள். சிவராஜா
25

Page 15
0 மாத்தளைசோமு
துளசியையே பார்த்துக் கொண்டிருந்தான். “வீடடுக்குப் போகாம என்னயவே பார்த்துகிடடு இருக்கீங்களே? என்ன விஷயம்?.”துளசி கேட்டடாள்.
“வீடடுக்கு போகத்தானே போரேன். அதுக்கு முன்னம் உன்னோட கொஞ்சம் பேசனும்.”
துளசி யோசித்தாள். சிவராத்திரிக்காக மறுநாள் சனிக் கிழமையும் திங்கடகிழமையும் விடுமுறையாக்கப்பட்டடிருக்கிறது. இனிமேல் செவ்வாய்தான் பள்ளிக்கூடம். என்ன பேசப் போகி றான் இவன்?
ஒரு மெளனம் நீடித்தது. சிவராஜாவின் கண்கள் துளசி யைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தன; விநாடிகள் நிமிட மாகியது. நிமிடம் நிமிடங்களாகின. துளசிக்கு பசி வேறு. வீடடுக்குப் போனால் சாப்பிடலாம். இன்று வெள்ளிக்கிழமை சாம்பார், பப்படம், பாயாசம். ஒரு பிடி பிடிக்கலாம்.
“நாம ரெண்டு பேரும் இப்புடி இருக்கிறதை யாரும் பார்த்தா?.”
சிவராஜா புன்னகைத்துவிடடு சொன்னான் “நாம ரெண்டு பேரும் எப்படி இருக்கோம்?.” .
ஒரு விநாடி அவன் தன்னையும் துளசியையும் வேடிக்கை யாகப் பார்த்துவிடடுக் கேட்டடான்.
“ரெண்டு பேரும் உடுப்போடதான் இருக்கோம். யாரு பார்த்து என்ன சொல்ல?.”
அவள் முகத்தில் வெடகம் சிவப்பாய் ஒடடியது. “இந்தக் கிண்டல்தானே வேண்டாங்கிறது? நம்ம ரெண்டு பேரும் இப்புடி இருக்கிரதே இந்த ஊருக்குப் போதாதா? ஆயிரம் கதை கடட. ஸ்கூல்தான் விடடாச்சே.! அப்புறம் என்னா செய்றிங்கன்னு கேடடா?”
"படிப்பு சம்பந்தமா பேசிக்கிடடு இருந்தோம்னு சொல்ல வேண்டியதுதான்.”
ロ 26

மூலஸ்தானம் L
99 “பொய்யா?
“பொய்யில்ல. ஒரு சமாளிப்பு.” “எதுக்கு?”
"உனக்காக.” “எல்லாம் எனக்காகன்னா அப்ப உங்களுக்காக?” என்று கேடடாள் துளசி புருவத்தை உயர்த்தி.
"ஆமா. இப்ப பேசுரது எனக்காக. போதுமா?’ சிவராஜா ஒரு வழிக்கு வந்தான்.
“சரி. என்ன பேசணும். சீக்கிரம் சொல்லுங்க.” சிவராஜா கெஞ்சும் குரலில் சொன்னான். “என்ன துளசி உனக்குத் தெரியாதா? எதைப் பேசப் போறேன்னு.”
“தெரியும். தெரிஞ்சி என்ன செய்யச் சொல்றீங்க?” சரியான கேள்வி அது. பதில் இல்லை. அவளே தொடர்ந்தாள். “நாம ரெண்டு பேரும் தொடடுக்கப்படாதவங்க. ஒருத்தர் மேல தவறு தலாப் படடுபடடா பதறுவாங்க. எங்க ஆள்க.”
“துளசி! நீ தைரியமா இருந்தா மத்ததை நான் பார்க்கின் றேன். உன் தைரியம்தான் எனக்குத் தைரியம்.”
சிவராஜா அதற்கு மேல் பேசாமல் எழுந்து துளசியை நெருங்கினான். துளசி எழுந்து நின்றாள். அவன் கண்களுக்குள் ஒரு விநாடி அவளை முதல் முதலில் சந்தித்தது எல்லாம் எழுந்து அடங்கியது. துளசியின் இமைகள் படபடத்தன. கால்கள் அந்த இடத்தைவிடடு நகரவேண்டும் போன்ற உணர்வில் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளை அங்கே கட்டடிப் போட்டடது.
சிவராஜா துளசியை நெருங்கி, அவள் கைகளைப் பிடித்து முத்தமிடடான். துளசியின் இதயம் படபடத்தது. அவன் கைகள் அவள் கைகளின் மேல் நடந்து முதுகின் பக்கமாகப் போய் அவளை அப்படியே கட்டிப்பிடித்து அணைத்தன. துளசி அவன் நெஞ்சுக்குள்ளே சாய்ந்து விம்மினாள்.
27

Page 16
D மாத்தளைசோமு
“துளசி. என்ன இது சின்னபுள்ள மாதிரி. யார் என்ன சொன்னாலும் உன்னை கைவிட மாடடேன். இந்த சிவராத்தி முடிஞ்சதும் வர்ர பங்குனி மாசத்தில உன்னை வயலூர் முருகன் கோயில்ல வைச்சி தாலி கடடுவேன். எனக்கு நீதான். தைரியமா இருக்கணும். துணிஞ்சு என்னோட வர ரெடியாகணும். நாம கல்யாணம் செஞ்சு கிடடு இந்த ஊர் ல இருக்கலாம்னு மடடும் நெனைக்கா த.” என்று துளசிக்கு தைரியம் ஊடடினான் சிவ ராஜா. பிறகு அவள் முகத்தை நிமிர்த்தி முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சி இதழ்களை ஈரப்படுத்தப் போனபோது.
அந்தப் பள்ளிக்கூடக் கடடிடத்தின் கூரையில் குடியிருக் கிற சிடடுக்குருவிகள் சத்தம் போடடுக் கொண்டு பறந்தன.
மேலே பார்த்த இருவரும் சற்று விலகி நின்றார்கள். அந்த விலகலே புதிதாய் பார்ப்பவர்களுக்கு ஒரு நெருக்கமாய் தெரியும். அவர்கள் மெளனமாய் அப்படியே சில நிமிடங்கள் ஒருத் தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இந்தக் காடசி 'அவன் கண்களுக்குள் விழுந்தது. அவன் கோணங்கி. இது என்ன பெயரா? பெயர்தான். அந்தக் கிராமத்தில் அவனை அப்படித்தான் அழைத்தார்கள். அவனுக்கு தாய் தகப்பன் வைத்த பெயர் மங்கி. இந்தப் பெயரே தங்கிவிடடது. அவன் நடப்பதில் - பேசுவதில் - அச்ைவில் ஒரு கோணல் உண்டு. அதுவே “கோணங்கியாகி, ‘கோணங்கி என்ற பெயராக்கியது.
அந்தப் பள்ளிக்கூடம் வழியாக வயல் காடடுக்குப் போன 'கோணங்கி மீண்டும் கிராமத்துக்குள் போகத் திரும்பிய போது தான் ஏதோ நினைவில் பள்ளிக்கூடத்தைப் பார்க்க வந்தான். ஆசிரியர்களும் மாணவர்களும் இருக்கும் போது அந்தப் பக்கமே போக மாடடான். ஆனால் அங்கே என்னதான் இருக்கிறது என்று பார்க்கிற ஆசை மடடும் எப்போதும் அவன் நெஞ்சில் இருக்கும். அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகும்போது அவனுக்கும் ஏக்கம் வரும். அந்த ஏக்கத்தைத் தணிக்கத்தான் எவரும் இல்லாத நேரத்தில் பள்ளிக்கூடத் திற்குப் போய் பிள்ளையாரைச் சுற்றி வருவது போல் அந்தப்

மூலஸ்தானம்
பள்ளிக்கூடத்தைச் சுற்றி வருவான். அப்படி சுற்றி வந்தால் அவனைப் பொறுத்தவரையில் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிப் பது போன்ற உணர்வு ஏற்படும். அதில் அவனுக்கு ஒரு திருப்தி.
இன்று அதேபோன்று அந்தப் பள்ளிக்கூடத்தைச் சுற்றி வந்தபோது தான் சிவராஜா - துளசியைப் பார்த்துவிடடான். அவ்வளவுதான் அவன் நோக்கம் கரைந்தது. கோணிக்கோணி வேகமாக வெளியே நடந்தான். بر
இன்று அவனுக்கு நியூஸ் கிடைத்துவிடடது. அவன் அந்த ஊரில் ஊர் செய்தி சொல்லும் ஒரு நியூஸ் பேப்பர்.
4
துளசி முதலில் பள்ளிக்கூடத்தை விடடுப் போனாள். அவள் போய் சில நிமிடங்களின் பின்னர்தான் சிவராஜா வீடடிற் குப் போனான். இருவரும் அந்த ஒமாந்தூர் கிராமத்தை சேர்ந் தவர்கள்தான். ஆனால் அவள் இருப்பது ஒரு தெருவில் - அவன் இருப்பது ஒரு தெருவில். இந்த இரண்டு தெருவும் அதே ஊரில் தான் இருக்கின்றன. இருந்தும் என்ன! இரண்டும் ஒன்றை யொன்று சந்திக்கக்கூடாதா? கூடாது! தெரு மடடுமா? இல்லை! அந்த தெரு மனிதர்களும் தான். இந்திய நகரங்களில் இருந்து துரத்திவிடப்படட சாதிப் பேய் போக்கிடம் இல்லாமல் கிராமங் களுக்குள் புகுந்து ஆழமான கோடுகளைப் போட்டடு குந்தி விடடன. காந்தி நடந்தும், பெரியார் வந்தும், இந்த சாதி அழிய வில்லை. மேலோடடமாக அழிந்தது போன்றிருந்தாலும் அதன் வேர்கள் இந்த மண்ணில் சிலரின் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கின்றன.
சிவராஜா வீடடுக்குப் போனபோது மாயன் காத்திருந் தான்.
“வா. தம்பி! ஒரு பாரம் எழுதணும். நம்ம ஊரு கனரா
பாங்க்ல ஆடடுக்கு லோன் குடுக்கிராங்களாம்.”
29

Page 17
D மாத்தளைசோமு
ஏற்கனவே அவருக்கு இருபத்தைந்து ஆடுகள் தேறும். ஆயினும் அசை அடங்கவில்லை. புதிதாக ஆடடுக்கு ஒரு கடன். இப்படிப்படட ஆசை பிடித்த மனிதர்கள் இருக்கின்றபோது ஒரு நாடடில் எந்த திடடம் போடடாலும் சரிவருமா என்ன?.
சிவராஜா பேசாமல் மளமளவென்று பாரத்தை எழுதிக் கொடுக்கத் தொடங்கினான்.
துளசி வீடடிற்குள் நுழைந்தாள். அவளுக்காக அங்கே ஒரு கடிதம் காத்திருந்தது. அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்தது எழுத, வாசிக்கத் தெரியாத தங்கம்மா. ஒரு வகையில் சின்னம்மா Փ-ff) օN...
“வாம்மா. துளசி! உனக்காக காத்துகிடடிருக்கேன். மவன் மெடராசில இருந்து லெடடர் போடடிருக்கான். கொஞ்சம்
s
படிச்சிக் காடடேன்.
துளசி பசியையும் மறந்து அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள், எழுதியனுப்பியது பத்து வரிகள். பாதி தவறு. இங்கு தவறுகளா முக்கியம்? மகனின் மனசுதானே முக்கியம்?
துளசி கடிதத்தை வாசித்துக் காடடினாள். ‘சிவராத்திரிக்கு கடடாயம் வருவேன். லிவுக்குச் சொல்லி விடடேன். ரெண்டு நாள் தங்குவேன். உனக்கு ஒரு நல்ல சேலை, சடடை எடுத்துக் கிடடு வருவேன். - இப்படிக்கு ராசு",
“என் ராசா! வாப்பா. நீ எத்தன நாள் வேணும்னாலும் தங்குப்பா.” என்று சொல்லிவிடடு, துளசியை வாழ்த்திவிடடு, அந்தக் கடிதத்தோடு அவள் போய்விடடடாள்.
துளசி சாப்பிட மறந்து மெல்ல கண்களை மூடித் தூங்கப் போனாள்.
ஓமாந்தூர் கிராமத்தில் சற்று ஒதுக்குபுறமாக இருந்த ஒரு பெரிய வீடடிற்குள் நுழைந்தான் கோணங்கி. அந்த வீடடைவிட பெரிய வீடுகள் இன்று வந்துவிடட போதிலும் அந்த வீடடைப் “பெரியவீடு' என்றுதான் அந்த ஊரில் சொல்வார்கள். அந்தக் காலத்து மன்னர்களின் கோடடை மதில் சுவர் போல அந்த

மூலஸ்தானம் L
வீடடைச் சுற்றி பெரிய மதில்சுவர் இருந்தது. இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் நுழையக்கூடிய கதவு. இருபது கார்கள் நிறுத்தக் கூடிய பரந்த முற்றம். அதை வேறு வகையாகவும் சொல்லலாம். பலநூறு மூடை நெல் காய வைக்கக்கூடிய சிமெண்ட போடட வாசல். அதைத் தாண்டினால்தான் வீடு. அந்த வீடடுக் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும். காவலுக்கு ஒரு நாய், பூனை கூட கிடையாது.
கோணங்கி ஒரு காலை சாய்த்துச் சாய்த்து வாசலில் நடந்து உள்ளே போனான். அவன் கால் ஊனம் பிறப்பினால் வந்தது அல்ல. இடையில் வந்தது. இளம்பிள்ளைவாத நோயே அவன் காலை வளைத்து விட்டடது.
அந்த வீட்டடின் பெரிய திண்ணையில் ஒரு சாய்வு நாற்காலி யில் ஒரு உருவம். அது சாய்ந்து கொண்டு யோசித்தது. கோணங் கியைக் கண்டதும் பேசியது. “கோணங்கியா? வா. வா. என்னா நியூஸ்?”
அந்த உருவம் பேசுவதற்கு வாயைத் திறந்ததும் முதலில் வந்தது மது வாடை. பிறகே வார்த்தைகள்.
“ரொம்ப அர்சன்டட நியூஸ் அண்ணாச்சி. எதுக்கும் மொத ஒரு மடக்கு கொடுங்க” என்றான் உரிமையோடு கோணங்கி. அவன் கண்களில் ஒரு ஏக்கம்.
“தெரியுமே உன் குணம். நியூஸ் இருந்தா நீ மந்திரி. நான் வேலக்காரன்.” என்ற அந்த அவன் எழுந்து உள்ளே போய் ஒரு கிளாஸில் மதுவை ஊற்றிக் கொண்டு வந்து கோணங்கியிடம் நீடடினான். சாராய கிளாஸை வாங்கிக் கொண்ட கோணங்கி முகமெல்லாம் பிரகாசிக்கச் சொன்னான். “இல்லே அண்ணே! கார்த்தால இருந்து சுத்தினதில ஒரே அசதி. அதான் ஒரு மடக்கு கேடடேன்.”
கோணங்கி சொன்னதைப் போல் ஒரு கிளாஸில் உள்ள மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.
“மெதுவா குடி. கோணங்கி. இன்னும் வேணும்னா தர்ரேன்.”

Page 18
D மாத்தளைசோமு
கோணங்கிக்கு உற்சாகம்.
அவன் உள்ளே போய் இன்னொரு கிளாஸ் சாராயத்தை ஊற்றிக் கொண்டு வந்தான்.
கோணங்கி அதனைக் கண்டதும் சுறுசுறுப்பானான்.
Ké
மெல்லமாய் சிவராஜா - துளசி கதையை சொன்னான். “என் ரெண்டு கண்ணால பார்த்தேன் அண்ணே!.”
கோணங்கிக்கு அவன் அண்ணனானது பிறப்பினால் அல்ல. நடபால். கோணங்கியின் இந்த அண்ணன் அந்தக் கிராமத்தில் இருக்கிற வயதானவர்களின் ஆய்வுப்படி பொறுக்கி. ஆனால் இந்த நாட்டடு அரசியல் அகராதிப்படி ஒரு கடசியின் வடடாரச் செயலாளர். குறுக்கு மூளையில் பொருள் பெருக்க நினைப்பவர்களுக்கு அவன் ஒரு தலைவன். அன்றாட காய்ச்சி களுக்கு அவன் அண்ணாச்சி. அவன் பெயர். இப்போதைக்கு தேவையில்லை. பெயர் இல்லாமலே அவனைப் புரிந்து கொண் டிருப்பீர்களே!.
அவன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே துளசியின் முகத்தை நினைத்துப் பார்த்து யோசிக்கத் தொடங்கி னான். அவனுள்ளே இருந்து ஒரு வெறி வேகமாகக் கிளம்பியது.
பெரிய காமாடகியம்மன் கோயில் என்று சொல்லப் படு கின்ற பழைய கோயிலில் சிவன், பிள்ளையார், நவக் கிரகங்கள், நந்தி எல்லாவற்றையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார் ஐயர்.
சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாடகளே இருந்தன. ஒமாந்துர் சிவராத்திரி அந்த மாவடடத்திலேயே புகழ் பெற் றது. ஒரு காலத்தில் வெள்ளக்காரன் ஆண்டபோது ஒரே ஒரு காமாடகியம்மன் கோவில்தான் இருந்தது. எழுபது வருடங் களுக்கு முன் ஒரு சிவராத்திரி விழாவில் ஏற்படட தகராறு அந் தக் கிராமத்தையே இரண்டாகப் பிரித்தது. காமாட்டசியம்மன் முன்னாலேயே யார் பெரியவன்? என்று சண்டை போட்டடார் கள். கலவரம் பெருத்தது. திருச்சியில் இருந்து போலீசார் வந்து அந்தக் கிராமத்தில் முகாமிடடு கலவரத்தை அடக்கினார்கள்.

மூலஸ்தானம்
ஊருக்கு வந்த வெள்ளைக்கார கலெக்டர் ஊர் மக்கள்ை கூப்பிடடுப் பிரச்சனை என்ன என்று கேட்டடான். சிவராத்திரி யன்று யாருக்கு முதலில் காப்புக் கட்டடுவது என்பதில் தகராறு என்று மொழி பெயர்த்தார்கள். இரு கோஷ்டியும் நிலபுலம் பொருளோடு மிதப்பவை. எவருக்கு தீர்ப்பு சொல்வது? கடைசி யில் அதிகாரத்தைப் பயன்படுத்தினார் கலெக்டர். ஒரு தீர்ப் பைச் சொன்னார். அதனை ஏற்காவிடடால் கோயிலையே மூடுவதாகச் சொல்லிவிடடார். தீர்ப்பு இது தான். அந்தக் கோயில் பிடிக்காதவர்கள் வேறு கோயில் கட்டடிக் கொள்ள லாம். அரசு குறைந்த விலையில் காணி கொடுக்கும்.
புத்தனாம்படடிக்குப் போகிற பாதையில் புறம்போக்கு நிலம் கொடுக்கப்படடது. ஊரில் இருக்கிற காமாடடசியம்மன் கோயிலைவிடப் பெரிய கோயிலைக் கட்டடி முடித்தார்கள். ஆனால் ஊரில் இருக்கிற காமாடகியம்மனின் சிலையைவிட பெரிய சிலையை மாத்திரம் கர்ப்பக்கிரகத்தில் நிறுத்த முடிய வில்லை. பெரிய சிலை செய்ய முயன்ற போதெல்லாம் சிலையில் பழுது ஏற்படடு விடடதாம். அதற்குப் பிறகு சிறியதாக ஒரு காமாட்டசியம்மன் சிலையை வைத்துக் கோயிலை பெரியதாகக் கடடினார்கள். போடடி போடடுக் கொண்டு சிவராத்திரி விழா வையும் கொண்டாடினார்கள். ஊருக்கு வருகிறவர்கள் இரண்டு கோயிலுக்கும் போனார்கள். வெளியூர்க்காரர்கள் ஊரில் இரண்டு காமாடகியம்மன் கோயில் இருந்ததால் அவைகளை பழையது, புதியது என்று அடையாளப் படுத்துவதற்காக பழைய கோயிலை பெரிய காமாட்டசியம்மன் கோயில் என்றும் புதிய கோயிலை காமாட்டசியம்மன் கோயில் என்றும் அழைக்கத் தொடங்கினார் கள். இன்றும் அது தொடர்கின்றது.
இன்று இரண்டு கோயில்கள் ஊரில் இருக்கின்றன. ஆனால் கோஷ்டிகள் இல்லை. காமாடகியம்மன் கோயிலைப் போடடி போட்டடுக்கொண்டு கடடிய வம்சமே அந்தக் கிராமத்தில் இல்லை. காமாட்டசியம்மனின் சாபத்தால் அழிந்து போய் விட
டார்கள் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால்
33 D.

Page 19
D மாத்தளைசோமு
எப்படியோ எஞ்சி நின்ற ஒரு குடும்பத்தினர்தான் காமாட்டசியம் மன் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றார்கள். பெரிய காமாட்டசியம்மன் கோயில் பெரிய கோவிலாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் பெரிய காமாடகியம்மன் கோயிலில் பூசை நடந்த பிறகே அந்த மணிச் சத்தம் கேட்டடால்தான் காமாடகி யம்மன் கோயிலில் பூசையே நடக்கும். இது எழுதப்படாத ஒரு விதியாக இருக்கின்றது.
சைக்கிள் மணிச்சத்தம் கேடடது. ஐயர் கோயில் வாச லைப் பார்த்தார். சைக்கிளை கோயில் வாசலுக்கு வெளியே நிறுத்திவிடடு தபால்காரர் வெறும் காலோடு உள்ளே வந்தார். இன்று கடிதம் வந்திருக்கும். அதுதான் உள்ளே வருகிறார். கடிதம் இல்லாவிடடால் வெளியில் இருந்தே பேசிவிட்டு போய் விடுவார்.
“என்னா ஏகாம்பரம்! நமக்கு லெடடர் வந்திருக்கோ.?” “ஆமா. சாமி, பாரின் லெடடர், அனேகமாக உங்க மகன் தான் போட்டடிருக்கனும்.”
ஐயர் அமெரிக்காவில் இருக்கும் தன் மகனை நினைத்துக் கொண்டார்.
தபால்காரர் லெடடரை ஐயரிடம் நீடடினார். ஐயர் அந்தக் கடிதத்தை எண்ணெய்யும் கையுமாக இருந்ததால் ஒரு கனம் வாங்கிக் கொள்ள யோசித்தார். பிறகு அவரே சொன்னார். “என் கை அழுக்கா இருக்கு. நீங்க லெடடரை மண்டப வாசல்ல வைச்சிகிடடு அதுக்கு மேல ஒரு கல்லை வைச்சிட்டடு போங்கோ. காத்துக்கு லெடடர் பறந்திடும். நான் கையைக் கழுவிடடு எடுத்துக்கிரேன்.”
“இல்ல சாமி. நீங்க கையக் கழுவிடடு வாங்க. நான் காத்திருக்கேன். எனக்கு அவசரம் இல்ல.”
ஐயர் கிணற்றருகே போய் கையை கழுவிவிடடு வந்தார். தபால்காரர் கடிதத்தைக் கொடுத்தார். அமெரிக்காவில் இருந்துதான் வந்திருக்கிறது கடிதம்.

மூலஸ்தானம்
கடிதத்தைப் பிரிக்கவில்லை ஐயர். ‘சாமி! உங்க கையால விபூதி தர்ரீங்களா?” “ஒ!” என்ற ஐயர் தன் மடியில் வேடடியோடு சொருகி வைத்திருந்த விபூதிப் பையை வெளியே எடுத்து விபூதி கொடுத் தார். தபால்காரர் பயபக்தியோடு விபூதியை வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டார். ஐயரின் மனம் கடிதத்தைப் படிப்பதிலேயே இருந்தது.
“இந்த வடடாரத்திலேயே உங்க கோயில்தான் ரொம்ப சுத்தமா இருக்கு.”
ஐயர் "ஆமாம்” என்பதுபோல் புன்னகைத்தார். பிறகு சொன்னார். “இந்தக் கோயிலை சுத்தமா வைக்கிரது என் வேலை. ஏன் கடமைன்னு கூட சொல்லலாம். சுத்தம் கடவு ளுக்கு அடுத்த துன்னு சொல்லுவா. எங்கப்பா எனக்கு மொத மொதன்னு நீ எப்பவும் சுத்தமா இருக்கனும். நீ இருக்கிர இட மும் சுத்தமா இருக்கனும். அத்தோட உன் மனசும் சுத்தமா வைச்சின்டா நீ தான் மனுசன். நீ அப்படி மனுசனாயிடடா ஆண்டவன் பகவான் அருள் கிடைக்கும்னு சொன்னாரு. அதுப் படிதான் கோயிலை சுத்தமா வைச்சிருக்கேன்.”
"அப்பாடா.” தபால்காரர் அசந்து போய் விடடார். ஒரு கேள்வி கேட்டடதற்கு ஒரு பெரிய விளக்கம் மனதில் ஒரு சந் தோசம் அவருக்கு.
“சரி சாமி. நான் வர்ரேன்.” என்று தபால்காரர் புறப் பட்டடபோது கோவிந்தன் ஒடிவந்தான்.
“தபால்காரரே! எனக்கு ஏதாவது லெடடர்?’என்று கேட்டடு விடடு சிரித்தான் அவன்.
“உனக்கு லெடடர் வரணும்னா நீயே எழுதி போடணும்” என்று சொல்லி விடடு போனார் தபால்காரர்.
சைக்கிளின் மணிச்சத்தம் கோவிந்தனின் காதில் மோதியது.
35

Page 20
0 மாத்தளைசோமு
5
அந்தக் கடிதம் கைக்கு வந்ததுமே இந்த உலகமே மறந்து போய் விட்டடது ஐயருக்கு. அந்தக் கடிதத்தில் உள்ள முகவரி எழுத்துக்களைப் பார்க்கின்றபோது தன் மகனையே நேரில் பார்க்கிற உணர்வு ஏற்படடது அவருக்கு. அவன் முகம் நெஞ்சுக் குள் இருந்தாலும் விமான நிலையத்தில், “என்னை ஆசிர்வாதம் பன்னுங்கோ! போயிட்டடு வர்ரேன்பா. ஒடம்ப பார்த்துக் குங்கோ.” என்று கலங்கிய கண்களுடன் சொன்னானே அந்தக் குரல் மடடும் இன்னமும் காதுகளில் ஒலிப்பது போல் இருக் கின்றது. அதற்குப் பிறகு அவன் குரலை அவர் கேடடகவே இல்லை. கோயிலிலோ வீடடிலோ தொலைபேசி இல்லாததால் இந்தக் கடிதத்தைப் படிக்கின்றபோது மகனே நேரில் நின்று படிக்கின்ற உணர்வு ஏற்படும். அந்த உணர்வுக்காக மகனிட மிருந்து கடிதத்தை அடிக்கடி எதிர்பார்ப்பார் அவர்.
ஐயர் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கப் போனார். திடீரென்று மனதுக்குள் மின்னல்கள். “நாலு மனுசாளைச் சந்திக் கிற உமக்கே இந்தக் கடிதம் உணர்வுகளை ஏற்படுத்தினால் ஆத்துக்குள்ளேயே இருக்கிற மீனாடசிக்கு இந்தக் கடிதத்தைப் பார்த்தால் எப்படி இருத்கும்?”
வேகவேகமாக வேளியே வந்த ஐயர் கடிதத்தோடு வீட்டடிற் குள் போனார்.
“லெடடரா? ராம் எழுதியிருக்கானா..? படிங்க..” என்று ஐயரைக் கடிதத்தோடு பார்த்த மீனாடசி அவசரப்படுத்தினாள்.
ஐயர் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதனுள்ளே இருந்து ஒரு போடடோ கீழே விழுந்தது. விழந்த போட டோவை எடுத்துப் பார்த்த மீனாடசி கொஞ்சம் பதறினாள். “பகவானே! இந்த போட்டடோவ பாருங்கோ! நம்ம ராம் கையில கண்ணாடி கிளாஸ் இருக்கு. அதில் ஏதோ நிரப்பிண்டு இருக் கான். அமெரிக்காவில் ஆம்படையானும் பொம்மனாடடியும்

மூலஸ்தான்ம்
நல்லா குடிப்பாளாம். எனக்கென்னவோ பயமா இருக்கு. நம்ம
99
ராம்.
அதற்கு மேல் பேசவில்லை "மீனாடசி. அவளுக்கு உள்ளத் தோடு உடம்பும் பதறியது. ஐயர் உறுதியாக இருந்தார். ராம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
“வெறும் போடடோவைப் பார்த்துப் பதறாதே! நம்ம ராம் அப்படி செய்ய மாடடான். என்க்கு அவன் மேல நெறைய நம்பிக்கை இருக்கு.” என்ற ஐயர் அந்தப் போட்டடோவை வாங்கிப் பார்தார் போடடோவில் ராம் இருந்தான். அவன் கையில் ஒரு கிளாஸ். அனேகமாக கொக்காகோலா அதில் இருக் கலாம். அவனருகே நாலைந்து அமெரிக்க இளைஞர்கள். அவர் களோடு ஒரு நீக்ரோ பெண். அவளருகில் சில வெள்ளைக் காரிகள். எல்லோருடைய கையிலும் கிளாஸ் இருந்தது.
ஐயர் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார். மீனாடசிக்கு கேடகடடும் என்று சத்தம் போடடே வாசித்தார்.
"அன்புக்குரிய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகன் ராம் எழுதும் கடிதம். பகவான் அருளில் நான் சுகமாக இங்கே இருக் கேன். உங்க ரெண்டு பேரு சுகத்துக்கும் எழுதுங்கோ. நல்லா சுகமா இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். இந்தக் கடிதம் கிடைக்கும்போது சிவராத்திரி முடிஞ்சிருக்கலாம். அல்லது முடியாமல் இருக்கலாம். எப்படியோ என் கண்கள் சிவராத்திரியில் நிற்கின்றன. மீண்டும் அந்தத் தரிசனம் என்று கிடைக்குமோ?
உங்கள் கடிதம் கிடைத்தது எல்லாவிஷயமும் அறிந்தேன். அம்மாவுக்கு தனியாக எழுதவில்லை. சின்ன தலைவலின்னா லும் உடனே டாக்டரைப் பாருங்கோ. இங்கேயெல்லாம் சின்ன பிரச்சனைன்னாலும் டாக்டரை - ஸ்பெசலிஸ்டை பார்க் கிறா. தஞ்சாவூர் அத்தை, நாணா, ரமணா, திருவாரூர் தாத்தா லால்குடி சித்தப்பா, எல்லாரையும் கேடடதா சொல்லுங்கோ. வேல்சாமியை கேடடதா சொல்லுங்கோ.
37

Page 21
b மாத்தளைசோமு
இந்தக் கடிதத்தோடு ஒரு போட்டடோவை வைச்சிருக் கேன். அந்த போட்டடோ என்னோட பார்ட்ட டைம் வேல செய் யிற அமெரிக்க நண்பர்களோட பார்டடியில் எடுத்த போட்டடோ. இது பர்த்டே பார்டடி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருபத் தொன் னு வயசு ஆயிடுச்சின்னா இங்கே ஒரு பெரிய பார்டடி வைக்கிரா. இருபத்தொரு வயசு ஒரு ஆணுக்கும் பெண்ணுக் கும் ஆவது இந்த நாடடுல பெரிய விஷயம். அதை நல்லா கொண்டாடுவா. அப்புடி நடந்த ஒரு பார்ட்டடிக்குதான் நான் போனேன். மத்தவா எல்லாம் குடிச்சா. நான் மடடும்தான் கொக்காகோலா குடிச்சேன். அதை நம்புங்கோ. நீங்க நம்புவீங் கன்னு எனக்குத் தெரியும்.
இந்த நாட்டுக்கு அமெரிக்காவுக்கு வந்ததில பல விஷயங் கள் புரிஞ்சிண்டேன். பல அதிசயங்கள் நடக்கிற விஞ்ஞான காலத்துக்கு ஏற்றதாற்போல அமெரிக்கர்கள் தயாராயிடடு வர்ராங்க.. ஆனா நம்ம இந்தியாவ நெனைச் சாதான் வேத னையா இருக்கு. இன்னமும் சாதி பேசின்டு பிரிஞ்சின்டு வாழ்ந்து கிடடிருக்கோம். ஆளைப் பார்த்தாலே இன்ன சாதின்னு சொல்ற மாதிரி அடையாளங்களோட நாம வாழ்ந்துகிடடிருக் கோம். நமக்குள்ள என்ன வித்தியாசம் இருக்கு? முகத்தில் உடல் அமைப்பில் வித்தியாசம் - மொழி வித்தியாசம்? நன்னா யோசிச்சு பார்த்தா நம்ம எண்ணத்திலதான் வித்தியாசம். அவன் இன்ன சாதி, இவன் இன்ன சாதின்னு நம்ம நெனைக்கிரதை யார் சொல்லிக் கொடுத்தது?
அமெரிக்காவில சாதி இருப்பதாக தெரியல. சராசரி அமெரிக்கர்கள் சந்திச்சிகிடடா என்ன பேரு - எங்க இருக்கே - என்ன செய்யிரேனு கேப்பாங்க. என்ன சாதின்னு கேக்க மாடடா. என்ன ரொம்ப பேரு பூஜீலங்காவா - பாகிஸ்தா னான் னு கேட்டடா. முடிவெடடுரவா - லான்ரி நடத்திரவா - பிணம் சம்பந்தமா தொழில் செய்யிரவா எல்லாம் இங்க படிச்சி படடம் வாங்கினதான் தொழில் செய்ய முடியும். பிணத்த

மூலஸ்தானம்
வெபடடுரவா, வெடடி தைக்கிரவா படிச்சிதான் தொழில் செய் யிரா. அவாவுக்கு பேரு பீயூனரல் டைரக்டர். இதுவரைக்கும் என்னை எந்த அமெரிக்கனும் என்ன சாதின்னு கேட.டதில்லை. நானும் பூனூலை யாருக்கும் தெரியாம போட்டடுண்டு இருக் கேன். இப்பல்லாம் இந்த பூனூலை எடுத்திடடா என்னன்னு ஒரு யோசனை வந்துன்டே இருக்கிரது. அவா பூனூலை பத்தி கேடடா என்ன சொல்ரது?
இந்த நாடடுல நான் பார்த்த வகையிலே கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு. கல்ச்சரை பொறுத்தவரைக் கும் நாம கற்று கொள்ளக் கூடாதது நெறைய இருக்கு. பொருளாதார வித்தியாசம் - ஏழை பணக்காரங்கிற வித்தியா சம் தெரியிரது. ஆனா ஏழை கூட, பணக்காரன் மாதிரி இருக் கிறான். அடுத்த லெடடர்ல நெறைய எழுதுரேன்.
- இப்படிக்கு அன்பு மகன் ராம்.”
ஐயரின் கண்களில் நீர் வடிந்தது. “பார்த்தியா மீனாடசி ராம் என்ன எழுதி இருக்கான்னு.
அவன் என் மகன்.
“அப்ப எனக்கு?” என்று இழுத்தாள் மீனாடசி. “உன் மவனா இருந்தா சந்தேகப்படுவியா? சொல்லு மீனாடசி.”
“கண்ணாடி கிளாஸை ராம் கையில பார்த்ததும் பயந்துட டேன். வெள்ளைக்காரங்க கண்ணாடி கிளாஸ்ல தானே என் னென்னவோ குடிப்பாள்.”
ஐயர் புன்னகைத்தார். “அமெரிக்காவில எல்லாம் கண் ணாடி கிளாஸ்லதான் தண்ணியே குடிப்பா. டீ குடிப்பா. இப்ப இங்கயே குடிக்கிரா. நீ இன்னும் பழைய காலத்திலேயே இரு.”
மீனாடசி மெளனமாக ராமையே நினைத்துப் பார்த்தாள்.
“லெட்டடரை திரும்பவும் படிக்கிறதுன்னா படி. நான் நந்தி பீடத்தை சுத்தம் செய்யனும். முடிஞ்சா ஒரு காபி போட்டடு,
39

Page 22
0 மாத்தளைசோமு
எடுத்துண்டு வா. அப்படியே வேல்சாமிக்கும் கோவிந்தனுக்கும் காபி கலக்கு.”
அந்த கடிதத்தை மீனாடசியிடம் கொடுத்து விடடு கோயிலுக்குப் போனார் ஐயர். மீனாட்டசி மறுபடியும் கடிதத் தைப் பார்த்தாள். வரிவரியாகப் படித்துக்கொண்டு போன போது பழைய நினைவுகள் வரி வரியாக வந்தன.
ராம்மை எப்போது கடைசியாகப் பார்த்தாள் அவள்? விமான நிலையத்தில். மீனாடசியின் கண்களில் பாசத்தின் சின்னமாய் நீர் முத்துக்கள். வார்த்தைகள் வரவில்லை.
“இதுக்கு ஏன் அழனும்? சந்தோசமா அனுப்புங்க அம்மா.” “நான் அதுக்காக அழல்ல ராம்.” "அப்ப எதுக்கு அம்மா.” “அமெரிக்காவ நெனைச்சு அழுதேன். அமெரிக்கா போன பல பேரு இப்ப மனுசாளாவே இல்ல. தஞ்சாவூர் ரமணி ஐயர் பையன் போன வருசம் இங்க வந்தான். கண்னெல்லாம் செவந்து படடப் பகல்லயே தள்ளாடிகிட்டடு வந்தான். அத மாதிரி மதுரை ராமரத்தினம் தம்பி குடிச்சே செத்து போயிடடா னாம். அதையெல்லாம் நான் நென்ைச்சேன். அழுதேன்.”
அப்போது ராம் அம்மாவின் கையைப் பிடித்துச் சொன் னான். “நான் ஓமந்தூர் சங்கர ஐயர் மகன் சிவராமன். பயப் படாதே அம்மா."
மீனாடசியின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணிர்த் துளிகளாய் வழிந்தன.
6
இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் பலவீனங்கள் உண்டு. பலவீனம் இல்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியாது. சிலரின் பலவீனம் வெளியே தெரியும். சிலரின் பலவீனம் வெளியே

மூலஸ்தானம் 0
தெரியாது. ஒரு மனிதனின் பலவீனம் இன்னொரு மனிதனையோ, சமுதாயத்தையோ பாதிக்காமல் இருந்தால் அதுவே போற்று தலுக்குரியது. ஆனால் இங்கே சிலர் மற்றவர்களின் பலவீனத்தை வைத்துத் தங்களின் காரியங்களை முடித்துக் கொள்ளப் பார்க் கின்றார்கள். அதுகூட ஒருவகையில் அவர்களின் பலவீனம் தான். பிரச்சனைகளை நேரிடையாக, நேர்முகமாக சந்திக்க முடியாதவர்கள் மற்றவர்களின் பலவீனங்களை வைத்துக் காரி யத்தைச் சாதிக்க முனைகின்றபோது கோழையாகிப் போய் விடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட வில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் கோணங்கியிடமிருந்து செய்திகளைக் கறக்க வேண்டும். அதற்காக கோணங்கியின் பலவீனத்தை அவன் பயன்படுத்திக் கொண்டான்.
கோணங்கியின் கண்கள் சிகப்பு நிறத்தை இப்போது வாட கைக்கு எடுத்திருந்தன. குடிகார மொழியில் சொன்னால் அவன் அசுரபலம் கொண்டவனாக மாறியிருந்தான். அவ்வப்போது முடடைப் பொரியலை - ஆடடுக் கறியை - பொறித்த மீனைத் தொடடுக் கொண்டு குடிப்பது அவனுக்குச் சுகமாக இருந்தது. பிறந்ததே இதற்காகத்தான் என்று அவன் மூளை சொல்லியது. அவனுக்கருகில் இன்னும் இரண்டு கிளாசுக்கான மது தேவாமிர்த மாக மேசையில் காத்திருந்தது. அவனுக்கு அதையும் குடித்து விட ஆசைதான். ஆனால் அவனால் குடிக்க இயலுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே ஒரு மாதிரியாக இருந்தது அவனுக்கு.
கோணங்கியின் கைகள் அந்த கிளாஸைத் தொட நீள்வதும் பிறகு ஏதோ ஒரு நினைவில் பின் வாங்குவதுமான ஒரு விளை யாடடில் இருந்தன. அதையும் குடித்துவிட ஆசைதான். இனி எப்போது கிடைக்குமோ? மெதுவாகக் கைகளை அந்தக் கிளா
சருக்ே கொண்டு போனான் கோணங்கி,
“ஏய்! கோணங்கி! இப்பவே நீ ரெண்டு கோணங்கியா இருக்க. வேணாம்! ஒன்னால தாங்க முடியாது. மயங்கி
விழுந்திருவே.”
41

Page 23
D மாத்தளைசோமு
கோணங்கி 'திக்கி திக்கிப் பேசினான். “இன்னய தேதி வரைக்கும் குடிச்சி நா. வாந்தி எடுக்கவே இல்ல. நீங்க எதுக் கும் ரோசன பண்ணாதீங்க. அண்ணாச்சி.”
‘அண்ணாச்சி என்ற அவன் இன்று அதிகம் குடிக்கவில்லை. குடிப்பதைவிட யோசிப்பதிலேயே இருந்தான் அவன். வழக்க மாக பகல் சாப்பாடு முடிந்ததும் தன் வழக்கமான பூசையைத் தொடங்குவான் அவன். குடிப்பதைத்தான் சொல்கின்றேன். இன்றோ இரண்டு கிளாஸ் மடடும் குடித்து விடடு நாற்காலியில் சாய்ந்து இருந்தபோதுதான் கோணங்கி வந்துவிடடான். அவனை அந்த நேரத்தில் பார்த்தது பிடிக்கவில்லை. என்றாலும் சமாளித்தான்.
“வா. கோணங்கி! நல்ல நேரத்திலதான் வந்திருக்க.” கோணங்கி வாயெல்லாம் பல்லாக “ஆமா. அண்ணாச்சி’ என்றவாறு தரையில் உடகார்ந்தான்.
“டேய் பெஞ்சில இரு.” “இல்ல. அண்ணாச்சி! எனக்கு இதுதான் வசதி. நெலத்தில ஒக்காந்தா குடிச்சிக்கிடடே காலை நீட்டடிக்கலாம்.”
‘அண்ணாச்சி என்ற அவனுக்குத் தெரியும் கோணங்கி குடித் துக் கொண்டே அப்படியே தூங்கிவிடுவான் என்பது.
“ஊர்ல புது நியூஸ் இருக்கா?” கோணங்கி புன்னகைத்தான். அப்படி என்றால் செய்தி இருக்கும்.
“என்ன நியூஸ்?” கோணங்கி ஒரு கிளாஸ் மதுவை ஒரே மூச்சில் குடித்து விடடுச் சொன்னான். “நம்ம ராசு டீக்கடை முத்தையா மவன் இருக்கானே. அவன் நேத்து ராத்திரி ராமசாமி மவளை இழுத்து கிடடுப் போயிடடானாம். காத்தாலே தொறையூருக்கு போற மொத பஸ்சுல அவன பார்த்திருக்காங்க. அதே பஸ்சில தான் ராமசாமி புள்ள மவளும் போனாளாம்.”

மூலஸ்தானம் )
அண்ணாச்சியின் கண்களில் ஒரு படம் ஓடியது. பிறகு சொன்னான். “அட! அந்தக் குடடியா? மொளைச்சி மூணு எலை வுடல்ல. அதுக்குள்ளயா? இப்ப பொறக்கிறதெல்லாம் அர்ச் சண்டாவே பொறக்குது.”
அண்ணாச்சி கண்களை மூடினான் - தவம் செய்வது போல். அவன் அப்படி இருந்தால் எதையோ நினைக்கிறான் என்று அர்த்தம்.
“அந்தக்குபடடி பஸ்சில போகையில யாருக்கும் தெரியலியா?” கோணங்கி சிவந்த கண்களுடன் சிரித்து விடடு சொன் னான். 'ராமசாமி புள்ள மவ துலுக்கச்சி மாதிரி இல்ல முக்காடு போடடுகிடடு போனாளாம்.”
கோணங்கி இன்னொரு கிளாஸ் மதுவில் தன் நாக்கை நனைத்துக் கொண்டான். h−
கோணங்கி அரைத் தூக்கத்தில் இருந்தான். அண்ணாச்சி என்ற அவன் நெஞ்சுக்குள் ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த சம்பவம் மறுபடியும் அரங்கேறியது.
படடு வேடடி, சில்க் சடடை காற்றில் அசைய ஒரு பந்தா வோடு நாலைந்து பேர்களோடு அண்ணாச்சி என்ற அவன் அந்த வீடடிற்குள் நுழைந்தான். வாசலில் கால் வைக்கும் போதே சாமிக்கண்ணு வியப்பில் பேசினார். “என்னப்பா. இதெல்லாம்?” “தெரியலியா மாமா. பொண்ணு கேடடு வந்திருக்கேன். ஊர் நடைமுறைப்படி - சம்பிரதாயப்படி நான் தாய்மாமன். முறைப் படி தாய்மாமனுக்குத்தான் பொண்ணை கட்டணும். ஆனா.”
“என்ன ஆனா. வெவரத்த சொல்லு.”
“வெளி ஊர்ல மாப்பிள்ளை பார்க்கிரதா ஒரு சேதி. காதிலே விழுந்திச்சி மாமா.”
மாமா. மாமா' என்ற அழுத்தி சொன்னதில் ஒரு மறைமுக செய்தி இருப்பதாகவே படடது அவருக்கு.
43

Page 24
0 மாத்தளைசோமு
அதை முறியடிப்பதுபோல் அவனை ஒரு பார்வை பார்த் தார். அவன் உருவமே அவருக்குப் பிடிக்கவில்லை. சினிமாக் கதாநாயகன் போல் வகிடு எடுத்த தலைமுடி. தடித்த மீசை. உப்பிய கன்னங்கள். தடித்த தேகம். உப்பிய வயிறு. அப்பன் சொத்தில் வாழும் சொகுசு. முகத்திலும் பார்வையிலும் மொய்த்திருக்கிற திமிர்த்தனம். எல்லாம் இணைந்து ஒரு கேள் வியை அவருள் வைத்தன. இவனா உன் மருமகன்? ஒரு விநாடி எண்ணிப் பார்த்த அவர் எல்லா உணர்வுகளையும் நெஞ்சுக்குள் ளேயே விழுங்கிக் கொண்டு மெதுவான குரலில் பேசினார்.
“மருதை! நீ எனக்கு மருமகன் தான். அதை யாரு இல் லேன்னா. துளசிய நீ கட்டடிக்கிடடாலும் இல்லேன்னாலும் நீ என் மருமகன் தான். ஆனா நம்ம துளசி படிச்சவ. ஸ்கூல்ல டீச்சரா வேற இருக்கா. படிச்ச புள்ளக்கி படிச்ச மாப்பிள்ள பார்க்கிரேன். அதில என்ன தப்பு இருக்கு மருதை?”
‘அண்ணாச்சி என்கிற அவன் ஜனனப் பெயர் மருதமுத்து. அதுவே சாதிசனங்கள் மத்தியில் மருதை எனக் குறுகியது.
“தாய் மாமனை மீறி கட்டடி குடுப்பீங்களா மாமா?” அவன் கண்களில் சிவப்பேறி, அது கண்டு மூக்கு நுனி நடுங்கியது.
“என்ன மருதை குடிச்சிடடு வந்து பேசறியா? பொண்ணு டீச்சர் வேலை செய்யுது. அதுக்கேத்த மாப்பிள்ளைதான் பார்க்கணும். உனக்கு பொண்ணு வேணும்னா நானே நம்ம சாதியில பார்க்கிரேன்.”
"மாமா! நான் தாய் மாமன். துளசிக்கு முறை மாப் பிள்ளை.” உரிமை கோரினான் மருதமுத்து. அதற்கு பதில் கொடுத்தார் மாமா.
“மருதை! நீ தாய்மாமன் தான். துளசிக்கு முறை மாப் பிள்ளை தான். யார் இல்லேணு சொன்னா. ஆனா துளசிக்கு ஏத்த மாப்பிள்ளை இல்ல.”
மருதைக்கு கோபம் நெஞ்சுக்குள் கொப்பளித்தது. அடக்
w a. கிக்கொண்டு கேடடான். “முடிவா என்ன சொல்ரிங்க மாமா?.

மூலஸ்தானம் D
“முடிவாதான் சொல்றேன். துளசியை மறந்திரு.” மருதை கோபத்தோடு அங்கிருந்து கிளம்பிப் போனான். துளசியை அடைய இருந்த எல்லா வழிகளுமே அடைபடடுப் போனதாய் அவன் மனம் சொல்லியது. ஊரில் இருந்த சாதிக் காரர்கள் எவருமே அவனுக்கு ஆதரவாய் வரமாடடார்கள். அது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வதென்று தெரி யாமல் இருந்தான் அவன்.
அடுத்தநாள் துளசியின் அப்பா மருதையின் வீடடிற்குப் போனார் அவனை சமாதானப்படுத்தினார். “நல்ல பொண்ணா நானே பார்க்கிரேன்.”
மருதமுத்து முடிவாய் தன் முடிவை சொல்லிவிடடான். “துளசியை பார்க்கிரதுன்னா வாங்க. இல்லேன்னா போங்க.”
மருதையின் பிடிவாதம் அவருக்கு ஒருவிதமான பயத்தைக் கொடுத்துவிடடது. ஆயினும் அதைக் காடடிக் கொள்ளாமல் அவர் போனார்.
இது நடந்தது சில நாடகளுக்குப் பின் ஒரு நாள். மருதை யின் வயற்காடடில் ஆடு ஒன்று புகுந்து விட்டடதாக யாரோ சொல்ல அவசரமாக வயலுக்குப் போனான் மருதை. வயலைப் பார்த்தான். ஆடு இல்லை. ஆனால் ஆடுவந்து போன அடை யாளம் வயலில் பதிந்திருந்தது. தொடர்ந்து ஒரு மனிதனின் கால் அச்சும் ஓடியது. இடையிடையே ஒரு குச்சி ஊன்றிய அடையாளம்.
மருதைக்குப் புரிந்தது. கையில் இருந்த குச்சியால் ஒருத் தன் ஊன்றி ஊன்றி நடந்திருக்கின்றான். அது செல்லசாமிதான். அவன் கையில்தான் குச்சி இருக்கின்றது. அந்தி சாய்ந்ததும் ஆட்டடை ஒடடிக்கொண்டு வரும் செல்லசாமியை விசாரிக் கலாம் என்ற எண்ணத்தோடு மருதை வீடடிற்குத் திரும்பும் வழியில் அத்திமரக் கிணற்றுக்குள்ளே இருந்து நளினமான கலகலவென்ற சத்தம் மேல் எழுந்து வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். எவரும் இல்லை. மெல்ல அத்தி மரத்தருகே தன்
45

Page 25
D மாத்தளைசோமு
தேகத்தை மறைத்துக் கொண்டு துளசியும் வேறு ஒருத்தியும் குளித்துக் கொண்டிருந்தார்கள். எவரும் இல்லையென்ற நினைப் பில் இருவரும் உலகத்தையே மறந்தது போல் மார் போடு இருக்க வேண்டிய பாவாடையை மார்புக்கு கீழே கட்டடியிருந் தாள் துளசி, மற்றவள் அவளுக்குத் தேய்த்துக் கொண்டிருந் தாள். இருவரும் சிரித்துப் பேசினார்கள்.
துளசியைப் பார்த்த மருதை ஏதோ ஒரு உணர்வின் உந்து தலில் மற்றவளையும் பார்வையால் மேய்ந்தான். துளசியைவிட மற்றவள் கருப்பு நிறம். ஆனால் உடம்பில் துளசியை வென்று விடுபவளைப் போல் இருந்தாள். தேக்கு மரமாக மின்னின J94 Gu Gir D l —lồLH...
மருதை அத்தி மரத்தில் நின்று கொண்டு அந்தக் கிணற்றுக் குளியல் காடசிகளை ரசித்தான். ஆடு விவகாரம் மறந்தே போய்விடடது அவனுக்கு. செல்லசாமி மீதான கோபம் பறந் தோடியது.
துளசியும் மற்றவளும் குளித்துவிடடு மேலே வருவதற்குள் மருதை அங்கிருந்து வேகமாய் நடந்து போனான். துளசியை அவனால் மறக்க முடியவில்லை. எப்படியும் அவளை அடைய வேண்டுமென்று எண்ணினான். அந்த எண்ணம் சில நேரங்களில் ஒரு வெறியாக மாறி அவனை لنا با تایچی படைத்தது.
நினைவுப்படம் முடிந்த போது கோணங்கி தூங்கி விடட தைக் கண்டான் மருதை.
“டேய் கோணங்கி! நான் முந்தியே சொன்னேன். எந்திரி.”
தூக்கம் கலைந்து எழுந்த கோணங்கி, “இல்ல. அண் ணாச்சி. நான் வாரேன்” என்று சொல்லிவிடடு தடடுத் தடுமாறி நடக்கத் தொடங்கினான். வெளியே இருடடியிருந்தது.
பஞ்சாயத்து ரேடியோ ஆங்கிலச் செய்தி சொல்லிக் கொண் டிருந்தது. யார் அதைக் கேடகிறார்கள்? ஆனால் அது தன் கடமையை செய்து கொண்டே இருக்கிறது.

மூலஸ்தானம் )
கோணங்கி வீதியில் லேசான ஆடடத்துடன் நடந்தான். அவனை எதிர்கொண்ட கோவிந்தன் முதலில் சிரித்தான். அந்தச் சிரிப்பு கோணங்கியின் மது மயக்கத்தை கலைத்ததைப் போலிருந்தது.
“யாரு கோணங்கியா? இன் னைக்கி நல்ல விருந்து போல இருக்கே!”
“யாரு சிரிப்பா?”கோணங்கிதான் கேட்டடான்.
“ஆமாங்க.” சொன்னது கோவிந்தன். இவனைப் போன்ற வர்களுக்கு ‘ங்க போட்டடு விடுவது அவன் கொள்கை. இவர் களைப் போற்றுமாப் போல் உயரத்தில் வைத்துவிடடால் பிரச்சனையே இல்லை.
“நீ எங்க போற?”கேள்வி கோணங்கியிடமிருந்து வந்தது.
“நானுங்களா? கோயிலுக்கு போறேன். வேல இருக்கு” என்ற கோவிந்தன் பெரிய காமாட.சியம்மன் கோயிலை நோக்கி நடந்தான்.
அவன் நெஞ்சில் வேல்சாமியிடம் ஐயர் மகனுக்கு ரத்தம் கொடுத்தது யார்? என்று கேடக வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
7
திலைக்கு மேலே மெல்லிய நீலநிறத்துணியை விரித்து விடடாற்போல வானம் நீலநிறமாய் இருந்தது. வெய்யில் நெருப் பாய் கொளுத்தியது. ஐயர் வீடடுத் திண்ணையில் காற்று வாங்கு மாப்போல் உடகார்ந்திருந்தார். வீடடைச் சுற்றி இலை கிளை பரப்பிய மரங்கள். அந்த மரங்களின் நிழல்கள் ஒரு மதில் சுவராய் அந்த வீடடைச் சுற்றிக் கிடந்தன. வாசலில் பெரிய மாமரம் ஒரு குடையாய் நிழல் விரித்து நின்றது. பின்னால் வாழை மரங்கள். நிழலுக்குப் பஞ்சமில்லை. இந்த மரங்களினால் அந்த வீடடில் எப்போதும் ஒரு குளுமை இருக்கும். அதனோடு சேர்ந்து காற்று
47 O

Page 26
D மாத்தளைசோமு
வீசினால் ரம்மியமாகத் தோன்றும். இந்த வெய்யிலில் காற்று எங்கே வருகின்றது? ஆனால் சில நேரங்களில் கடலில் இருந்து வருவதைப் போன்று குளிர்ந்த காற்று வந்து போகும். இன்றோ மரம் செடி கொடிகூட அசைவதாய்த் தெரியவில்லை. அசையா விரதம் கடைப் பிடிக்கின்றதோ?
வீடடின் உள்ளே மீனாடசியின் கைவண்ணத்தில் உரு வாகும் சாம்பார் மணம் வீடடை விடடு வெளியே போய்க் கொண்டிருந்தது. வேல்சாமி மல்லிகைத் தோடடத்தில் மும் முரமாய் இருந்தான். வேல்சாமியின் கால்கள் அந்தப் பகுதியில் படட பின்னர்தான் மல்லிகைச் செடிகள் பூக்களை பூக்களாய் பூக்கின்றன. மலர்கள் கூட உழைப்பிற்கு மதிப்புக் கொடுக்கின் றன. வேல்சாமியின் உழைப்பைப் பாராடடித்தான் அவைகள் சிரிக்கின்றன.
இப்போதெல்லாம் நித்திய பூஜைக்குத் தாராளமாக மாலை போட முடிகின்றது. கோயில் தேவை போக ஆய்கிற பூக்கள் திருச்சிக்குப் போகின்றன. கண்களை மூடிச் சற்று தூங்க ஐய ருக்கு ஆசை. இப்போது தூங்கினால் பகல் தூக்கமே போய் விடும். பகலில் ஒரு மணித்தியாலம் தூங்குவது அவரின் வாடிக்கை. அது ரொம்ப நாடகளாக பழகிப்போன ஒன்று. தொடடில் பழக்கமல்ல. இடையில் தொற்றிக் கொண்டது. ஒரு நாளாவது தூங்காமல் இருக்கலாம் என்றாலும் மீனாடசி விடமாடடாள். 'கார்த்தால அஞ்சு மணிக்கு எந்திரிக்கிறியள். கொஞ்சம் பகல்ல சாப்பிடடு தூங்குங்கோ. என்று கெஞ்சுவாள்.
கெஞ்சிக் கொண்டே திண்ணையில் பாயை விரித்து விடு வாள். அவளின் தீர்ப்புக்கு அப்பீல் ஏது? மழையோ, குளிரோ காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கிணற்றில் நீர் அள்ளி குளித்து விடடு விடியல் இருடடில் கோயிலுக்குப் போய் விடுவார். கோயிலைக் கூடடிப் பெருக்கி விக்கிரகங்களை கழுவி படடு சாத்தி, மாலை போட்டடு நைவேத்தியம் செய்து படைத்து விடடு வீடடிற்குத் திரும்பும் போது ஒன்பது மணியாகிவிடும். காலை பலகாரம் சாப்பிடடுத் திரும்பவும் கோயிலுக்கு வந்தால்

மூலஸ்தானம்
வீடடிற்குத் திரும்ப பன்னிரண்டோ - ஒன்றோ ஆகும். இன்று காலை எல்லா வேலைகளையும் முடித்துவிடடு ஒய்வெடுக்க திண்ணையில் உடகார்ந்தார்.
சைக்கிள் மணிச் சத்தம் கேட்டடது. தபால்காரராக இருக்க லாம். தபால்காரர்தான். நேற்றுத்தானே வந்தார். இன்றும் கடிதம் வந்திருக்கிறதோ..?
‘சாமி.! உங்களுக்கு இன் னைக்கும் ஒரு லெடடர் வந்தி ருக்கு.” என்றவாறு ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்து விடடுப் புறப்படடார். பிறகு நின்று சொன்னார்.
‘சாமி. நமக்குத் தீடடு. நம்ம தம்பி மக பெருசாயிருச்சி.” “நல்ல காரியம். நல்ல காரியம்..” என்ற ஐயர் “தீட்டடு முடியிற வரைக்கும் ஆத்துப் பக்கமாக வந்து லெடடர் கொடுங் கோ.” என்று சொன்னார்.
“சரி சாமி. நான் வாரேன். பொண்ணுக்கு தண்ணி ஊத்த நல்ல நேரம் பார்க்க, அப்பறமா நா. வர்ரேன்.” என்றவாறு தபால்காரர் போய்விடடார்.
ஐயர் கடிதத்தைப் பிரித்துப் படிக்க முயன்றபோது சிரிப் புச் சத்தம் கேட்டடது. நிமிர்ந்து பார்த்தார். கோவிந்தன் வந்து கொண்டிருந்தான்.
“சாமி. இன்னைக்கி பேப்பர் இருக்கு. பார்க்கிறீங்களா?” ஐயர் கடிதத்தை மடியில் செருகிவிடடு, “பேப்பரா..? உனக்கு ஏது?” என்றவாறு அவனைப் பார்த்தார்.
*நா. எங்க பேப்பர் வாங்கினேன். பஸ் ஸ்டாண்டு திண் ணையில யாரோ படிச்சிடடுப் போடடுபடடுப் போனது. நா. எடுத்துகிடடு வந்தேன். பேப்பர் வாங்க நமக்கிடட ஏது காசு? அப்புடி வாங்கினாலும் வாசிக்க ஏது புத்தி? நீங்க படிங்க சாமி. கேப்போம்.”
கையில் இருந்த பத்திரிகையை ஐயரிடம் கொடுத்துவிடடு மெலிதான புன்னகையின்பின் சொன்னான் கோவிந்தன்.
49

Page 27
D மாத்தளைசோமு
“எங்க அப்பன் படி படின்னு தலயில அடிச்சிச் சொன்னான். நான் எங்க கேடடேன்? இப்ப பாருங்க. கைநாடடு பேர் வழியா இருக்கேன்.”
வழக்கம் போல் பேசி முடித்ததும் சிரிக்கிற கோவிந்தன் இன்று சிரிக்கவில்லை. அமைதியாக இருந்தான் அவன். ஆனால் அவன் கண்களில் ஈரம்.
ஐயரின் கண்கள் கோவிந்தன் கலங்கியதைப் பார்த்து விடடன.
'அட. கோவிந்தன். சிரிச்சி கிடடிருக்கிற நீயுமா அழு வுற. சரி. சரி. வுடு. என்னையும் தான் ஏன் தோப்பனார் டாக்டருக்கோ, இன்ஜினியருக்கோ படின்னார். ஏன் தலையில வேதம் சாஸ்திரம்தான் ஏறிச்சி. இப்ப இந்த கோயில்ல பூசை பன்னின்டு இருக்கேன். சரி. வா பேப்பரைப் பார்ப்போம்.”
ஐயர் அந்தப் பத்திரிகையின் முதல் பக்கச் செய்திகளைப் படித்தார். “பொதுத் தேர்தல் வருமா? டில்லி நிருபரின் செய்தி. இப்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடடு தேர்தல் நடாத்த வேண்டி வரலாம் என அவதானிகள் நம்புகின்றனர்.
இடையில் புகுந்தான் கோவிந்தன். “ஏன் சாமி கொஞ்சம் இருங்க. ஆறு மாசத்துக்கு முந்தித்தானே எலெக்சன் வந்திச்சி.”
“அது சடடசபைக்கு. இது டெல்லிக்கு.” “எப்படியோ சாமி. தேர்தல் வருது. அது போதும்” என்ற கோவிந்தன் சிரித்தான்.
ஐயரின் புருவங்கள் உயர்ந்தன. “தேர்தல் வந்தா. உனக்கு ஏன் சந்தோசம்?”
“சாமி! தேர்தல் வந்தா தானே நமக்கும் ஒரு மரியாதை கெடைக்கும். பத்தோ, அம்பது கெடைக்கும். போன எலெக் சன் ல அம்பது ரூபா கெடைச்சிச்சி. அதை கொடுத்தவங்களுக் குத்தான் ஓடடுப் போடடேன்.”
ஐயர் பேப்பர் படிப்பதை நிறுத்திவிடடு உரத்த குரலில் சொன்னார். “அடப்பா வி. பணத்தை வாங்கிடடு ஒடடடுப்

மூலஸ்தானம்
போட்டிருக்கியா? இது அநியாயம். உனக்கு அம்பது கொடுக் கிறவன் அதை ஈடுகடட லஞ்சம் வாங்குவான். அதை மறந் துடடியே?”
“அப்ப. சாமி. நீங்க காசு வாங்காம தான் ஒடடு போடு வீங்களா?”
கோவிந்தனின் கேள்வியில் அப்பாவித்தனம் மடடுமல்ல அந்த அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டு இங்கு அரசியலில் வெற்றியை அறுவடை செய்கிற அதர்மத்தை ஐயரால் உணரமுடிந்தது.
“காசு வாங்காம தான் எனக்கு பிடிச்சவருக்கு ஒடடுப் போடுவேன். காசு வாங்கிடடு ஒட்டடுப் போடுரது தப்பு. நாளைக்கு இந்த ஊருக்கு ஒண்னும் செய்யமாட்டா. கேடடா சும்மாவா ஒடடு போடட? துடடு வாங்கிடடு தானே போடட. போ. போன்னு சொல்லுவா.”
“நமக்கு இந்த விசயமெல்லாம் எதுவும் தெரியாது. சாமீ! நம்ம நன்மைக்குத்தான் காசு குடுக்கிராங்கன்னு நெனைச் சேன். இனிமே நீங்க சொல்ர மாதிரி கேக்கிரேன் சாமி.”
ஒடடுக்கு காசு வாங்காதேன்னுதான் நான் சொல்வேன். ஆனா யாருக்கு ஓட்டடு போடுன்னு சொல்லமாட்டடேன்.” என்ற ஐயர் பத்திரிகையைப் படிக்கத் தொடங்கினார்.
'வரவு செலவு திடடத்தில் விலைவாசி உயரலாம் அது பத்திரிகைச் செய்தி.
“இருக்கிற விலைவாசியே மூச்சைத் திணறடிக்குது” ஐயர் கருத்தும் சொன்னார்.
இரண்டாம் பக்கத்திற்குப் போனார் ஐயர். “தேனி தொகுதியில் சாதிக் கலவரம்.” கோவிந்தன் கேடடான். “யார் யாருக்கு சாமீ?” பத்திரிகையைப் படித்துக் கொண்டே சொன்னார் ஐயர். “மனுசாளுக்கும் மனுசாளுக்கும் ஆனா. அவா தாழ்த்தப்
51

Page 28
0 மாத்தளைசோமு
படடவங்களுக்கும் உயர் சாதிக் காரர்களுக்கும்னு. எழுதி யிருக்கா.”
“இது நித்தம் நடக்கிற விசயம்தானே சாமி.” அப்போது வேல்சாமி அங்கே வந்தான். “வா வேல்சாமி! நம்ம கோவிந்தன் பேப்பர் கொண்டாந் தான். படிக்கிரேன்.”
வேல்சாமி திண்ணையில் உடகார்ந்தான். ஐயர் கடைசிப் பக்கத்திற்கு வந்து பேப்பரை மடித்து கோவிந்தனிடம் கொடுத்தார்.
“என்ன நியூஸ் பேப்பர்ல சாமி.?”வேல்சாமி கேட்டடான். “தேர்தல் வருதாம். விலைவாசி ஏறுமாம். தேனி தொகுதி யில சாதிக் கலவரமாம்.”
வேல்சாமி மெளனமாக இருந்தான். ஐயர் அவன் முகத்தைப் பார்த்தவாறு பேசினார்.
“வேல்சாமி! நான் சொல்றதைத் தப்பா எடுக்காதே! பொது வாக பிராமணன், சாதி குலம் பார்க்கிரான்னு சொல்ரா. ஆனா அப்படி சொல்ரவா தான் இன்னொரு மனுசாள் கூடடத்தை சாதிங்கிற பேரால் நசுக்கிரா - சண்டை போடுரா. அதுதான் எனக்குப் புரியவே இல்ல.”
வேல்சாமிக்கு ஐயர் என்ன சொல்கிறார் என்பது புரிந்து விடடடது. பேசினான்.
“சாமி! நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது. பிராமணர்கள் சாதி பார்க்கிராங்கன்னு சொல்லிடடு மத்தவங்க சாதி சண்டை போடுறீங்களேன்னு கேக்கிறீங்க. ஞாயமானது. கிராமத்தில தெருவுக்கு ஒரு சாதி. ஊருக்கு ஒரு நீதி. அங்கெல் லாம் சாதி சண்டை பிராமணர்களால இல்ல. மத்தவங்களால சாமி. முடி வெபடடுரவன், துணி தொவைக்கிரவன் வீடடுல பொண்ணு எடுக்கவுட மாட்டான். ம். என்னைக்கி இந்த பூமி திருந்துமோ தெரியல.”

மூலஸ்தானம் L
“பூமி. அதான் லோகம் என்ன செய்யும்? மனுசாள் மாறுனா லோகம் மாறும். நாம இந்த லோகத்தில ஒரே நெறம் ஒரே மாதிரி முகத்தோட பொறந்து மதத்தால் சாதியால் பிரிஞ்சி இருக் கிறோம். ஆரியர் திராவிடர்னு பிரிக்கிறா. நாங்களாம் ஆரிய ராம். எங்கயோ இருந்து வந்தவான்னு சொல்றா. நானா வந் தேன்? நான் இங்கதான் இந்த மண்ணுலதான் பொறந்தேன். எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா எல்லாரும் இந்த மண்ணுலதான் பொறந்தா. ஆனா எங்கள இன்னைக்கும் ஆரியர்னு சொல்றா.
எல்லாரையும் மனுசாள்னு நெனைச்சா எந்தப் பிரச்சனை யும் இல்ல. பிராமணன் ஆகாசத்தில இருந்து வந்தவனல்ல. அவனும் ஸ்தீரி உதிரத்தில கருவாகி தொப்புள் கொடி அறுத்து பொறந்தவன்தான். பிராமணன் ஒரு மனுசன். எல்லாரையும் போல் ஆசை, பாசம், பசி, உணர்வு உள்ளவன். அவன் உசந்த சாதி இல்ல. உசந்த சாதின்னு சிலர் நெனைக்கிரா. அது தப்பு பிராமண்யம் ஒரு தவம். பிராமண்யம் நல்ல மனுசாளை அடை யாளம் காட்டடுற சின்னம். பிராமண்யம் என்பது குலத்தினாலோ வேதம் ஓதுவதாலோ சாஸ்திர ஞானத்தினாலோ உண்டாவ தில்லை. ஒழுக்கத்தில் உண்டாவது. இதை நான் சொல்லல்ல. மகாபாரதத்தில அறக்கடவுள் யடசனா வந்து தருமரைக் கேட்டட கேள்விக்குத் தருமர் சொன்ன பதில். அதை அறக்கடவுள் சரின்னு ஏத்துக் கிடடார்.
இதிலயிருந்து என்ன தெரியிரது? பிராமணன் என்பவன் உசந்த சாதியினால் வந்தவன் அல்ல. ஒழுக்கத்தால் உயர்ந் தவனே பிராமணன். ஆனால் லோகத்தில தர்மம் நலிஞ்சி அதர் மம் தலைதூக்கி, பணமே உலகம்னு ஆணப்புறம் பிராமணனை உசந்த சாதின் னு ஆக்கிடடா. சொல்லப்போனால் பிராம ண ன்னு சொல்ற இந்த மனுசாள் கூடடம் பயந்த சாதி. தன் வாழ்க்கையும் வாழ்வும் போயிடுமோங்கிற பயத்தில வாழ்ரவன்.
இவனைப் பார்த்து மத்தவா ஏன் பயப்படனும்?”
53

Page 29
D மாத்தளைசோமு
வேல்சாமி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் காதுகள் உன்னிப்பாகக் கேடடுக் கொண்டிருந்தன. கோவிந்தன் வியப்படைந்து ஐயரையே பார்த்தான். தான் கொண்டு வந்த ஒரு பத்திரிகையில் உள்ள செய்தியின் பின்னணியில் இவ்வளவு சேதிகளா?
ஐயர் தொடர்ந்து பேசினார். “என்னைப் பொறுத்த வரை யில பிராமணன்னு சொல்ரவா மத்த மனுசாளைப் போல ஒரு மனுசாள் கூடடம். காசு பணம்னு ஓடிண்டு இருக்கிறவா பின் னால ஒரே கூடடம். மத்தவாளப் போல இவனும் காசு பணம்னு அலையிரான். தர்மத்தை மறந்திடடான். வேதம் காசுக்கான வித்தையாயிருச்சி. உள்ள வாளுக்கு ஒரு மந்திரம் இல்லாத வாளுக்கு ஒரு மந்திரம். லோக சஞ்சாரத்தில பிராமணன் மத்த வாளைப் போல் வியாபாரியாயிடடான். அவன் எப்படி உசந்த சாதி? அமெரிக்காவில் இருக்கிற என் மகன் வெள்ளைக்கார மனுசாளிடம் சாதி இல்லேன்னு எழுதியிருக்கான். கேடக சந் தோசமா இருக்கு. பணத்தை வைச்சு அங்க மனுசாள் பிரிஞ்சி இருக்காளாம். அதுகூட மறைமுகமா இருக்காம். செய்யிற தொழில வைச்சு பிரிச்சி பேதம் பார்க்கிறது இல்லியாம். LD5odt எழுதியிருக்கான்.”
“ஏன் சாமி.? அமெரிக்காவில நெசமா சாதிங்கிறது இல் லியா..? நெசமா..?” வேல்சாமி ஆர்வமாய்க் கேடடான்.
“நெசமா இல்ல.” ஐயர் சொன்னார். “அதான் சாமி! அவங்க சந்திர மண்டலத்துக்கு போ னாங்க.” வேல்சாமி ஒரு புதிர் போடடான்.
ஐயருக்கு அது என்னவென்று புரியவே இல்லை. வேல்சாமி மெள்ளமாய் விளக்கினான். “சாமி! நம்ம நாட டுல யாரை மொதல்ல அனுப்புரதுங்கிறதில சாதி சண்டையே நடக்கும்.”
ஐயர் வாய் விடடுச் சிரித்தார். “சரியா சொன்ன.” வேல்சாமி எப்போது பேசினாலும் அர்த்தமாய்த்தான் இருக்கும்.

மூலஸ்தானம்
ஒரு விநாடி மெளனம் நிலவியது.
“கோவிந்தா! பேப்பரை மீனாடசிக்கிபடட கொடு. அவ பார்ப்பா. எனக்குக் கோயில்ல வேலை இருக்கு” என்று சொன்ன ஐயர் கையிலிருந்த பேப்பரை வேல்சாமியிடம் கொடுத்துவிடடு கோயிலுக்குள் போனார். கோயிலில் உள்ள மடப்பள்ளி அறைக் குப் போய் இடுப்பில் சொருகியிருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தார். கடிதம் அமெரிக்காவிலிருந்து மகன் எழுதியது.
8
அந்த அறையில் இருந்த வெப்பக்கருவி (Heater) பழு தாகிப் போனதால் மூன்று தடித்த போர்வையைப் போர்த்திக் கொண்டு கிடந்தான் ராம். தூக்கம் இன்னும் வரவில்லை. மணி ஒன்பதுக்கு மேல் இருக்கலாம். மெல்லிய வெளிச்சத்தில் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதே கால். இந்த அமெ ரிக்காவில் அவனுக்குப் பிடிக்காதது இந்தக் குளிர்தான். ஆனால் அதனை எதிர்கொண்டு, அதனையே பழகி அதனோடு சமரசம் செய்துகொண்டு, வாழ்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறார் கள் இந்த அமெரிக்கர்கள். விஞ்ஞானம் அவர்கள் கைகளில் இருக்கிறது என்றோ, விஞ்ஞானத்தை அவர்கள் நம்பி முன் னெடுத்துப் போகிறார்கள் என்றோ தான் சொல்லவேண்டும். அதனை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அவன் படுத்திருக்கின்ற அந்த ஒற்றைப் படுக்கை அறை முப்பதாவது மாடியில் இருக்கிறது. அது கம்பெனியே கொடுத் தது. முதலில் அந்தக் கட்டடிடத்தைப் பார்த்தபோது வியப்பும் மனதுக்கள் சில எண்ணங்களும் முகாமிடடன. மொத்தம் நாற் பது மாடிகள் அந்தக் கட்டடிடத்தில் இருக்கின்றன. இப்போது அதனைப் பார்க்கிறபோது சின்ன வயதில் வெற்றுத் தீப்பெடடி களைச் சேகரித்து ஒன்றன் மீது ஒன்றாய் வைத்துப் பெரிய கட டிடத்தைக் கட்டடி விளையாடியது ஞாபகமாய் வந்து
நிற்கிறது அவனுக்கு.
55 D

Page 30
D மாத்தளைசோமு
எப்போதாவது மனசு உற்சாகமாக இருந்தால் நாற்பது மாடியும் வியர்த்துக் கொடட ஏறி இறங்குவான். இந்தக் குளிரில் இந்த இரவில் உற்சாகம் எங்கே வரும்? நரம்புகள் எல்லாம் சுருண்டது போல் படுக்கையில் சுருண்டு கிடந்தான் அவன்.
தொலைபேசி மணி அடிக்கிற சத்தம் கேட்டடது. ‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?' என்ற எண்ணம் முளைவிட போர்வைக்குள்ளிருந்து தலையை மடடும் வெளியே எடுத்து கைக்கு எடடிய தூரத்தில் இருந்த தொலைபேசியின் ரீசிவரை எடுத்துக் காதருகே கொண்டு போனான்.
“ஹலோ.” கரோலின் தான் பேசினாள். இனிமையான திரும்பத் திரும் பக் கேடக வைக்கும் குரல். அவன் மனதில் கிளம்பியிருந்த எரிச் சல் கரைந்து போயிற்று. கரோலின் முகம் நெஞ்சுக்குள் ஒரு பூவாய் மலர்ந்தது.
ஹலோக்கள் பரிம்ாறப்படடன. “ராம். நீ இன்னும் தூங்கவில்லையா..?”
“இல்லை.”
డ 9s
ஏன்? “தூக்கம் வரவில்லை. ஆமாம். நீ ஏன் தூங்கவில்லை?” “அதுவா? நேற்று வாங்கிய கம்யூ டடரில் சிறு சிக்கல்.
என்னால் ஏனோ சரி செய்ய முடியவில்லை. நாளை ஈவினிங்
இங்கு வந்து சரி செய்து தருகிறாயா?”
“இயஸ்.” “ராம்.! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது.?” “தூங்க முயன்று கொண்டிருக்கின்றேன்.” “ஓ.யூஒன் பேட. ஐயாம் ஸாரி ராம்.” “தடஸ் ஓகே. தடஸ் ஓகே.” அவனையறியாமல் பல தடவை சொன்னான். அவள்
போனை வைக்காமல் இன்னும் பேசடடும் என்பது போன்ற

மூலஸ்தானம் D
ஒரு ஆதங்கம் அவனை அப்படிப் பேச வைத்தது. அவள் குரலில் ஒரு மயக்கம் அவனுக்கு இருக்கிறது. அந்தக் குரலை அடிக்கடி கேடக வேண்டும் என்பது அவன் வேண்டுதல். அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.
“எனிவே ராம். சீ யூடுமாரோ. குடநைட ராம்.” “குடநைட்ட கரோலின்.” டெலிபோன் ரீசிவரை வைத்தான் அவன். ஆனால் அவள் நினைவு - அந்த இனிய குரல் அவனில் இருந்து விடுபடவில்லை. போர்வையால் மீண்டும் தலையை மூடினான். கண்களுக்குள் கரோலின்.
நியூயார்க்கில் உள்ள கம்யூ.டர் கம்பெனியில்தான் ராம் வேலை செய்கின்றான். கரோலின் அதே கம்பெனியில் கம் யூடடர் டிரெயினிங்குக்கு வந்திருக்கின்றாள். ராம்தான் அவள் டிரெயினிங்குக்குப் பொறுப்பு. எடடுப் பேர் கொண்ட ஒரு குழு வில் அவளோடு சேர்த்து இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். மற்ற ஆறு பேரில் இரண்டு நீக்ரோக்கள். கரோலின் அந்த எடடு பேரில் கேள்விமேல் கேள்வி கேடபாள். எல்லாக் கேள்வியும் 'கம்பியூடடரைச் சுற்றியே வரும். அவ்வாறு கேள்வி கேடகும் போது அவள் அவனையே ஊடறுத்துப் பார்த்துக் கொண்டிருப் பதுபோல் கேடபாள். அப்போது அழகான அவள் முகமும் அந்த முகத்தில் ஒடடிக் கிடக்கும் புன்னகையும், வில்லாய் வளைந்த கண்களும் அதன் தீர்க்கமான காந்தமான பார்வையும் இடுப்பு வரை பொன்னிறத்தில் தொங்குகிற தலைமுடியும் அவனைத் தடுமாற வைக்கும். அதிலிருந்து மீள்வதே ஒரு போராட்டடம் அவனுக்கு. மெல்ல மெல்ல அவளிடம் தன்னை இழந்து வருவ தாக அவன் உணர்ந்தான்.
கரோலின் டிரெயினிங் வரும்போது 'பிரேக்பாஸ்ட - லஞ்ச் நேரங்களில் ராம்மின் அருகிலேயே உடகார்ந்து விடுவாள். அவள் கேன்டீனில் வாங்கித்தான் சாப்பிடுவாள். பொடடே டோ சிப்ஸ், ஒரு அம்பேகர், கோகோகோலா, சிக்கன் பேகர்
57

Page 31
மாத்தளைசோமு
இவைகள்தான் அவளுக்கு லஞ்ச். ராம் எதுவும் வாங்க மாட்ட டான். வரும்போது 'சான்டவிச் கொண்டு வந்து விடுவான். கரோலின் ஒருநாள் கேடடாள். “ராம்.! நீ ஏன் கேன்டீனில் எதுவும் வாங்க மாட்டடேன் என்கிறாய்?”
“நான் வெஜிடேரியன். சில நேரத்தில் இங்கு வெஜிடேரி யன் கெடைக்காது. அதனால் நானே கொண்டு வந்து விடு கின்றேன்.”
“ஓ. யூ ஆர் வெஜிடேரியன்.” என்ற கரோலின் கண் களை ஒரு கணம் சிமிடடி விடடுக் கேடடடாள். “யூ டேனிங் வெஜிடேரியன்.”
“நோ. ஐயாம், போர்ன் ஏ வெஜிடேரியன். மை பாதர் மை மதர் வெஜிடேரியன். மை கிராண்ட பாதர் ஆல்ஸோ வெஜிடேரியன்.”
அவனும் அவனுடைய அப்பா அம்மா வெஜிடேரியன் என் பதைவிட அவனின் தாத்தாகூட வெஜிடேரியன் என்பது ஆச்சரி யமாகத் தெரிந்தது கரோலினுக்கு. இப்படி ஒரு செய்தியை இப்போதுதான் முதன்முதலில் அவள் கேடகிறாள். எதுவும் பேசாத கரோலின் ராம்மின் கண்களை ஒரு விநாடி உற்றுப் பார்த்துவிடடு யோசித்தாள். ராம்மின் சுறுசுறுப்பும் வேலை யில் காடடுகிற ஆர்வமும், கேடகப்படுகின்ற கேள்விகள் தெளி வாகும் வரை சலிக்காமல் அவன் கொடுக்கிற பதில்களும் அவளுக் குப் பிடித்திருந்தன. அது மடடுமா?
அவன் தோற்றம். சுருள் சுருளான தலைமுடி. கல்லூரி மாணவன் போன்ற முகம். அந்த முகத்தோடு ஒட்டடிப் பிறந்த புன்னகை. பதறாது சிதறாது வேலை பார்க்கும் பக்குவம். பணிவு. ஆடம்பரம் இல்லாத அடக்கம். எல்லாம் அவளுக்குப் பிடித்து விடடன. இந்த பிடிப்புத்தான் அவளை அவனோடு நெருங்கிப் பழகத் தூண்டியது. ஒரு நாள் அவனைப் பார்க்கா விட்டடால் அல்லது அவனோடு பேசா விடடால் அந்த நாளில் எதையோ இழந்து விட்டதைப் போன்ற உணர்வு அவளுக்கு வருகின்றது. அதனை அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

மூலஸ்தானம்
முதல் நாள் இரவு சொன்னபடியே கரோலின் ராம்மைச் சந்திக்க காரோடு வந்தாள். அப்போது நேரத்தைப் பார்த்தான் ராம். சரியாக மணி ஐந்து. அமெரிக்கனிடம் இருந்து பழக வேண்டிய ஒன்று - சொன்ன நேரத்திற்கு வருவதை. சொகுசான நீளமான பென்ஸ் கார். டிரைவர் சீடடில் கரோலின். ஏதோ ஒரு நினைவில் பின் கதவு வழியாக ஏறப் போய்ப் பிறகு தானா கவே “ஸாரி சொல்லிக் கொண்டு முன்பக்கம் ஏறி கரோலினுக் குப் பக்கத்தில் உடகார்ந்தான். பெல்டட போடடுக் கொண்டான். காருக்குள் மிதந்த ரோஸ் பேர்பியூம் வாசனை அவனைத் தழுவி மயக்கியது. கூடவே ஸ்டீரியோ இசையில் பாடல்கள்.
வெகு லாவகமாக அந்தக் காரை கரோலின் ஒடடினாள். இடதுகை ஓடடம். முழங்காலுக்கு மேலே தொங்குகிற கவுன் உடுத்தியிருந்தாள். தொடை தெரியவில்லை. கவுனின் நிறம் நீலம். அவனுக்குப் பிடித்தமானது. முதன்முதலில் சந்தித்த கரோ லினுக்கும் இப்போதைய கரோலினுக்கும் வித்தியாசம் தெரிந்தது. ஏன் இந்த வித்தியாசம்? முன்பெல்லாம் மார்பகம் தெரிகின்ற மாதிரியான பிளவுஸ். தொடையைக் காடடும் ஸ்கேர்பட உடுத்தி வருவாள். அவைகள் ஒரு சராசரி அமெரிக்கப் பெண்களின் சர்வ சாதாரணமான உடைகள். ஆனால் இப்போதெல்லாம் கரோ லின் உடையில் பெரிய மாற்றம். அது வெறும் உடை மாற்றம் மடடும்தானா? உள்ளத்தின் மாற்றத்தால் வந்த உடையா என் பதும் அவனுக்குப் புரியவில்லை.
கார் ஓடுகிற சத்தமே உள்ளே ஒலிக்கிற பாடலில் தெரிய வில்லை. கார் ஓடிய போதும், பாடல் ஒலித்த போதும் கரோலி னோடு பேசாமல் வருவது ராம்மிற்கு என்னவோ போலிருந்தது. மெல்லமாய் பேச்சுக் கொடுத்தான். அவன் பேசத் தொடங்கிய தும் பாடலின் ஓசை குறைந்தது.
“வெரி நைஸ் டிரஸ் கரோலின்.”
“தேங்கி யூ.”
“ஐ லைக் புளூ கலர்”
59

Page 32
D மாத்தளைசோமு
கார் பிரதான சாலையை விடடு விலகி வேறு பாதையில் போய் ஒரு வீடடின் முன்னே நின்றது. ராம் காரை விடடு இறங்கி அந்த வீடடைப் பார்த்தான். பெரிதும் சிறிதும் இல்லாமல் மத்திம மான வீடு. பூங்காவில் வீடடைக் கடடியது போல் வீடடைச் சுற்றி மலர்ச்செடிகள். சிறுசிறு மரங்கள். விதவிதமான நிறங் களில் பூக்கள். ஒரு நாட்டடின் அழகும் சுத்தமும் ஒவ்வொரு வீட்டடிலிருந்துதான் தொடங்குகின்றது. அமெரிக்க வீடுகள் அதனை உறுதி செய்கின்றன. கரோலினோ அவள் குடும்பத் தைச் சேர்ந்த வேறு எவரோ பசுமை விரும்பியாக இருக்க வேண்டும்.
வீடடிற்குள் போனார்கள். வீடடின் ஹாலில் எதிரெதிரே இரண்டு பேர் உடகார்ந்திருந்தார்கள். ராம் அவர்களைப் பார்த் தான். அப்போது அவன் முகத்தில் அரும்பிய புன்னகை அறிமுகம் தேடியது. கரோலின் சாடை ஒரு பெண்மணியிடம் இருந்தது. அவள் கரோலின் அம்மாவா?. வயதைப் பார்க்கின்ற போது அம்மாவாகத்தான் இருக்கமுடியும் என நினைத்தான் அவன்.
கரோலின் ராம்மை அறிமுகப்படுத்தினாள். ராம்மோடு கை குலுக்கிவிடடுச் சில நிமிடம் பேசிவிடடு அவர்கள் வெளியே போனார்கள்.
ராம் மனதில் ஆச்சரியம். வயது வந்த மகளோடு வயது வந்த ஒரு ஆண் மகன். இதற்கு முன் தெரியாதவன். இதை எவ் வாறு எடுத்துக் கொள்கிறார்கள். எதையும் சமாளிக்கின்ற தைரியம் கரோலினுக்கு உண்டு என்றோ? இவர்கள் சந்திப்பை ஒரு பிரச்சனையாகவே எடுக்கவில்லை என்றோ, பெற்றோர் கள் போயிருக்கலாம். இது அமெரிக்காவில். நம் நாடடில்? ஆயிரம் கதைகளைக் கடடி விடுவார்களே!
ராம்மை கூடடிக்கொண்டு போய் கம்யூஉடரைக் காடடி னாள் கரோலின். சிறிது நேரம் அந்தக் கம்யூ உடரைப் பார்த்து விடடு அதன் இயக்கத்தை தன் கைக்கு கொண்டு வந்தான். பிறகு என்னவோ செய்தன அவன் விரல்கள். பதினைந்து நிமிடங்களில்
அந்தக் கம்யூஉடர் கரோலினை வரவேற்றது. வெல்கம். மிஸ்

மூலஸ்தானம் D
கரோலின். கம்யூ உடரில் மின்னிய எழுத்துக்களைப் பார்த்து கரோலின் தன்னை மறந்து குதித்தாள்.
“ஒ. லவ்லி ராம்.”
ராம் கையைக் குலுக்கிய கரோலின் தன்னைக் கடடுப் படுத்த முடியாதவளாய் ராம் மைக் கட்டடிப் பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிடடாள். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ராம்மிற்கு. ஒரு விநாடி கரோலின் தேகத்தில் கலந்த சென்ட வாசனை அவனை கட்டடித் தழுவியதாகவே அவன் உணர்ந்தான். சின்ன வயதில் அம்மாவின் முத்தத்தில் திணறியவன் அவன். ஆனால் இன்று அம்மா அல்லாத ஒரு இளம் பெண்ணின் முத்தத் தின் உணர்வுகளை அதனால் உண்டான அதிர்வுகளை அனுபவித் தான். அவனுக்கு அந்த முத்தம் உடலில் உணர்வுகளை கிளறி விடடது நிஜம். ஆனால் கரோலின் சர்வசாதாரணமாக எதுவும் நடக்காதவளாக இருந்தாள்.
“ராம். யூலைக் எனி டிரிங்ஸ்”
எங்கோ யோசித்துக் கொண்டிருந்தவன் நினைவு திரும்பி பதிலிறுத்தான் ராம். “இயஸ்.”
அவனுக்கு உடலெங்கும் வியர்த்தது போன்ற உணர்வு. ஏதாவது குடித்தால் நல்லது. “இயஸ்.”
“ராம். யூலைக் வைன் ஒர் பியர்.”
ராம்மிற்கு சிறு அதிர்ச்சி. மது வாடையே முகராதவன். "நோ.நோ. ஒன்லி ஜூஸ் ஆர் வாடடர் பிளிஸ்.”
“ரியலி.”
“இயஸ். பிளிஸ்.”
“தடஸ் குட” என்ற கரோலின் பிரிடஜை திறந்து இரண்டு சிறிய பாடடில் ஒரேஞ் ஜூஸ் எடுத்து வந்து அவனுக்கு ஒன்றைக் கொடுத்தாள்.
“தெங்கியூ.” என்ற ராம் பாடடிலை வாங்கி ஸ்ரோ மூலம் ஜூலை உறிஞ்சி நாக்கை நனைத்தான். சுகமாக இருந்தது.
61

Page 33
மாத்தளைசோமு
அன்று கரோலின் கூட ஒரேஞ் ஜூஸ் குடித்தாள். வழக்கமாக வெள்ளை வைன் குடிப்பாள்.
ராம்மை அபார்டமெண்டுக்கு காரிலேயே கொண்டுவந்த கரோலின் விடைபெறும்போது ராமின் கன்னத்தில் முத்தமிட டுப் போனாள். காரில் ஏறும்போது அவளின் நீலக் கண்களில் உணர்வுகள் மிதந்ததை அவன் கண்டான்.
அன்று இரவு அவன் தூங்கவில்லை. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டேயிருந்தான். மனதுக்குள் எல்லாக் கோணங்களிலும் கரோலின் தான் சிரித் துக் கொண்டிருந்தாள்.
9
பகலில் தூங்குவது எப்போதும் அவனுக்குப் பிடிக்காது. கிராமத்தில் அதிகாலையில் எழும்புகிற அப்பா பகலில் ஒரு குட டித் தூக்கம் போடும்போது அவன் புத்தகமும் கையுமாக இருப் பான். எவராவது அப்பாவைத் தேடி வந்தால் சாமர்த்தியமாகப் பேசி அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவான். அப்பாவின் தூக்கம் - அதனை ஓய்வென்றே எண்ணும் அவன் - கெடக் கூடாது என்று நினைப்பவன் அவன். ஒரு நாள் கோயில் தர்ம கர்த்தா அப்பாவைத் தேடி வந்தபோது அவன் அவரையும் திருப்பி அனுப்பி விடடான். தூங்கி விழித்ததும் அதை அறிந்த அப்பா அவன் மீது கோபப்படடார்.
“கோயில் தர்மகர்த்தா வந்திருக்கார். என்னை எழுப்பி யிருக்கலாமே?”
“உங்க ஓய்வு நேரத்தைக் கெடுக்க விரும்பவில்லை.” அப்பா சிரித்தார். “தர்மகர்த்தா நெனைச்சா நம்ம தூக்கமே போயிரும் ராம்.”
பதில் சொன்னான் அவன். “அப்பா! நீங்க கோயில்ல உங்க
தொழிலை கடமையாக செய்றிங்க.

மூலஸ்தானம்
அதுக்கு தர்மகர்த்தா சன்மானம் கொடுக்கல்ல. சம்பளம் தர்ராறு. அதுக்காக அவரு உங்க ஓய்வு நேரத்தை.”
அவன் முடிப்பதற்குள் இதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசமுடியாது என்று உணர்ந்த அவர் “ராம்! நீ போயி படி.” என்று சொல்லிவிடடு கொஞ்சம் சத்தமாய்ச் சொன்னார் “புஸ் தகத்தில உள்ள லோகம் வெளிய இல்ல. இது இப்ப புரியாது. என்னைக்கி உன் கால்ல நிக்க போறியோ அன்னைக்கி தெரியும்!”
அவன் மெளனமாய் அவரைப் பார்த்தான்.
அது பகல் கடந்த மாலை நெருங்கிற ஒரு பொழுது. பள்ளிக் கால வயது. இன்றும் அப்படியான ஒரு ஞாயிறுப் பொழுதில்தான் அமெரிக்காவில் தன் அறையில் எம்.எஸ்.சுப்பு லடசுமியின் சங்கீதக்குரலில் தன்னை மறந்து மூழ்கிக் கொண் டிருந்தான். அப்போதுதான் டெலிபோன் மணி அழைத்தது. இது போன்ற ஒரு பொழுதில் இசையில் உலகத்தை மறந்து தன்னை மறந்து இருக்கும் நேரங்களில் எந்தக் குறுக்கீடடை யும் அவன் விரும்புவதில்லை. டெலிபோனில் யாராக இருக்கும் என்ற கேள்வியோடு எரிச்சலும் சேர டெலிபோனின் ரிசீவரை எடுத்தான். மறுபக்கத்தில் அந்த இனிமையான குரல். அந்தக் குரல் செவியில் படடதுமே மனதில் ஜனித்த கேள்வி, எரிச்சல் யாவும் கரைந்து மறைந்தது. பேசியது கரோலின் தான்.
“ஹலோ ராம்! ஹவ் ஆர் !!.?
"ஐயாம் பைன். ஹவ் ஆர் Lyr?”
“ஐ யாம் பைன் ராம்” என்ற கரோலின் ஒரு விநாடி மெளனத்தின் பின் “ஐ நீட சம் ஹெல்ப் புறம் யூ” என்றதுமே ராம் திகைத்துப் போய் விட்டடான். மறுபடியும் கம்யூடடரில் பிரச்சனையோ?
'உனக்கு உதவ எப்போதும் காத்திருக்கின்றேன்’ என்று சொல்ல ராம் வாயெடுப்பதற்குள் அவள் பேசினாள். “எனக்கு உங்கள் நாடடு கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள
ஆசையாக உள்ளது.
63

Page 34
0 ம்ாத்தளைசோமு
அது சம்பந்தமான புத்தகங்கள் உன்னிடம் இருக்கிறதா? நான் படிக்க வேண்டும்.”
ராம் ஒருகணம் யோசித்தான். திடீரென்று கலாச்சாரத் தைப் பற்றி ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாள்?
அவன் மெளனித்த அந்தக் கனத்தில் எம்.எஸ். சுப்புலடசுமி யின் குரல் டெலிபோனில் நுழைந்து கரோலின் காதில் விழுந்தது.
“JTLô.! &) லைக் அண்ட லவ் தட மியூசிக்” எங்கோ நினைவைப் பறி கொடுத்திருந்த ராம் மீண்டும் திரும்பி, "ஓ! அது கர்நாடக இசை” என்று சொல்லிவிடடுப் பிறகு அதனைப் பற்றி எடுத்துச் சொன்னான். கர்நாடக இசை பாரம்பரிய இசை, இந்தியாவுக்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டடுக் குப் பெருமை தருகிற இசை. விஞ்ஞானம், மின்சாரம் துணை இல்லாமல் மனிதர்களின் இதயத்தாலும் உழைப்பாலும் உரு வாகின்ற இசை. இதயத்தை தடவிக் கொடுக்கிற இசை.
ராம்மின் விளக்கத்தைக் கேடடு வியந்து போனாள் கரோ லின். விஞ்ஞானம், மின்சாரம் இல்லாமல் மனிதர்களின் இதயத் தாலும் உழைப்பாலும் உணர்வாலும் உருவாகின்ற இசை. கேடகவே ஆச்சரியமாக இருக்கிறதே!
"ராம்! உன்னிடம் இருக்கிற கர்நாடக இசை கசெடடு களைத் தருகிறாயா? கேட்டடுவிடடு தருகின்றேன்.” என்று ஒரு சின்னக் குழந்தைபோல் மாறி ஆசையோடு கேட்டடாள்.
“இயஸ்.” “ராம்! இன்னும் நாற்பது நிமிடத்தில் அங்கே வருகின் றேன். எங்கேயும் போய் விடாதே."
ராம் டெலிபோன் ரீசிவரை வைத்துவிடடு யோசித்துக் கொண்டே இருந்தான்.
கரோலின் சரியாக நாற்பது நிமிடத்தில் அந்த அபார்ட மெண்டட கதவருகே நின்றாள். ராம் கதவைத் திறந்தபோது “ஹாய்” என்ற கரோலின் ராம் நிற்கிற தோற்றத்தைப் பார்த்து

மூலஸ்தானம் 0
அசந்து போய் விடடாள். அவள் பார்வையில் பல கேள்விகள் எழுந்தன. அப்போதுதான் ராம்மிற்கு தான் சடடை போடாமல் வெறும் தேகத்தோடு கதவைத் திறந்து விடடது நினைவுக்கு வந்தது.
“ஐ யாம் ஸாரி.” என்ற ராம் உள்ளே அறைக்கு ஓடிப் போய் ஒரு சேடடை மாடடிக்கொண்டு பொத்தான்களைப் போட்டடும் போடாமலும் வந்தான். மனதுக்குள் எண்ணங் கள் ஊர்ந்தன. பூனூலை இவள் பார்த்திருப்பாளா? ஆனால் கரோலினோ பூனூலைப் பார்த்ததும் இல்லாமல் பேசவும் முனைந்தாள்.
“ராம்! உன் சொந்த விஷயத்தைப் பற்றிக் கேடகப் போகி றேன். பரவாயில்லையா..?”
ராம் முக்கு எதுவும் புரியவில்லை. என்ன கேடகப் போகி றாள் இவள்?
“உன் உடம்பில் ஒரு நூல் போட்டடிருந்தாயே. வெள்ளை
s யாய். அது என்ன?.
அந்தக் கேள்வியால் ஒரு விநாடி தடுமாறிப் போனான். பிறகு சமாளிக்க முனைந்தான். என்ன செய்யலாம்? பிரா மணன் என்றால் யார் என்ற கேள்வி வரும். சாதிக்காக போட்ட டிருக்கின்றேன் என்று சொல்ல முடியுமா? சமாளிக்க வேண்டும். துணிந்து ஒரு பொய்யே சொன்னான்.
“ஓ.! அதுவா மதத்துக்காகப் போட்டிருக்கேன்.”
s
?.. ولي! “ஐயாம் இந்து.”
“ஒ.! நாங்கள் சிலுவை போட்டடுக் கொள்வது போல நீங் கள் அந்த நூலைப் போடடுக் கொள்கிறீர்கள்” என்று தானா கவே ஒரு காரணத்தையும் கண்டு, அந்த பிரச்சனையை அத்
தோடு முடித்தாள்.
65

Page 35
D மாத்தளைசோமு
ராம் அவள் கண்களைச் சந்திக்கவே பயந்தான். தான் சொன்னது பொய் என்று அவள் அறிந்தால்?. உண்மையே சொல்லியிருக்கலாம் ஏன் பொய்யைச் சொன்னேன்.?
கரோலின் அவனிடமிருந்து கர்நாடக சங்கீத கசெட, டோடு சில புத்தகங்களும் வாங்கிக்கொண்டு திரும்பினாள். அவளுக்கு ஏதாவது குடிக்கக் கொடுக்க வேண்டும் என்பதுகூட மறந்து போய்விட்டடது. என்ன நினைப்பாளோ..?
சில வாரத்தின் பின் ஒருநாள் டிரெயினிங் சென்டரில் வைத்து ராம் மை தன் பிறந்த நாள் வைபவத்திற்கு வரும்படி அழைத்தாள் கரோலின். அப்போது அவள் சொன்னாள். ‘என் பிறந்த நாளன்று உனக்காக ஒரு அதிசயம் காத்திருக்கிறது என்று தூண்டிலும் போட்டாள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
“நீ கட்டடாயம் வரவேண்டும். நீதான் முக்கிய விருந்தாளி.” கரோலின் பிறந்த நாளன்று அறையில் சுவரோடு சுவராய் பதிக்கப்படட வாட ரோப்பில் தொங்கிய கோர்டி சூட.டை எடுத்துப் பார்த்தான். இந்தியாவில் இருந்து அமெரிக்கர் வரும் போது தைத்தது அது. போடடுக் கொண்டான். கண்ணாடியில் எப்படி இருக்கிறது என்று பார்த்தான். மிடுக்காக, எடுப்பாக இருந்தது அவன் தோற்றம். அந்தக் கோர்ட சூட திருச்சியில் மார்டடின் டெயிலரிடம் தைத்தது. திருச்சியில் புகழ்பெற்ற டைலர். அமெரிக்கா புறப்படப் பத்து நாட்களுக்கு முன் அவ ரிடம் சொல்லித் தைத்தது.
கண்ணாடி முன் நின்று தலையை சீவி முகத்திற்கு பவுடர், கிறீம் பூசி ஒரு சின்ன அலங்காரம் செய்து கொண்டான். ஒரு டாக்சி பிடித்து கரோலின் வீடடுக்குப் போனான்.
கரோலின் வீடடில் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். சுற் றும் முற்றும் பார்த்ததில் அவன் ஒருத்தன் தான் கறுப்பன். இந்தியன். மற்ற எல்லோரும் அமெரிக்க வெள்ளையர்கள். குடும்பம் குடும்பமாய். கணவன் மனைவியாய், காதலர்களாய்,
இளம் பெண்கள் குழுக் குழுவாய் இருந்தார்கள்.

மூலஸ்தானம் 0
எல்லோரின் கையிலும் பிறந்தநாள் நிகழ்வு தொடங்கி விடட அ ைபIளமாக சிறிய பீர் பாடடில்கள், பீர் கேன்கள், உயர்வகை விஸ்கி கலந்த கொக்காகோலா கொண்ட கிளாஸ்கள் இருந்தன. மிக மெல்லிசாய் இசை அந்த வீடடினுள் தவழ்ந்தது. முன்பின் தெரியாத முகங்கள் அதிகம் இருந்தமையால் தயங்கி தயங்கி விட டின் உள்ளே நடந்தான். சில வெள்ளைக்கார ஆண் களும் பெண்களும் அவனைப் பார்த்து ‘ஹாய்' என்றார்கள். பதிலுக்கு அவனும் ‘ஹாய் என்று சொல்லிப் புன்னகைத்தான்.
உள்ளே கரோலினைச் சுற்றி இளம் பெண்கள் கூடடம் வடடமிடடிருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. கரோலினா அது?. எப்படி இது நடந்தது? ஒரு இந்தியப் பெண்ணாய்ப் படடுச்சேலையில் ஒரு தேவதையாய் நின்றாள்.
ராமுவுக்கு அப்போதுதான் கரோலின் பிறந்த நாளன்று ஒரு அதிசயம் காத்திருப்பதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. கரோலின் ராம் வந்ததை கவனிக்கவில்லை. ராம் கரோலின் நின்ற இடத்தை நோக்கிப் போனான். அவன் வருவதைக் கண்ட அவள் தன்னைச் சுற்றி இருந்த வெள்ளைக்கார இளசுகளிடம் சொல்லிவிடடு ராம்மை எதிர்கொள்ள வந்தாள்.
ராம் கரோலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். வெறுமனே கரோலின் கையைக் குலுக்கி ஹெப்பி பேர்த் டே' சொன்னது போதுமானதாகத் தெரியவில்லை கரோலினுக்கு. அதற்கு மேல் எதையோ எதிர்பார்த்தாள்.
“ராம்! எப்படி இருக்கு இந்த சாரி எனக்கு.?” "பியூடடிபுல்.” அதற்கு மேல் வார்த்தைகள் இல்லை. “நீ கொடுத்த புத்தகங்களைப் படித்த பிறகுதான் எனக்கு சேலை கட்டடிப் பார்க்க ஆசை வந்தது. நேற்றுதான் சேலை வாங்கினேன். சேலை விற்ற பெண் ஒரு இந்தியன். அவள்தான் இங்கு வந்து எனக்கு உடுத்திவிடடுப் போனாள்.”
ராம் என்ன நினைத்தானோ மறுபடியும் “ஹாப்பி பர்த்டே" என்று சொல்லி கைகுலுக்கி விடடு கையில் இருந்த ஒரு
67

Page 36
0 மாத்தளைசோமு
பார்சலை அவளிடம் கொடுத்தான். பார்சலை வாங்கிக் கொண்ட கரோலின் அவன் முன்பே அதனைப் பிரித்துப் பார்த் தாள். ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஒப் இந்தியா' என்ற புத்தகமே அதில் இருந்தது.
“ராம். ரியலி ஐ லைக் இட. தெங்கியூ.” ராம் மீண்டும் கைகுலுக்கி “ஹாப்பி பேர்த்டே" சொன் னான். பிறகு மெல்ல நழுவப் பார்த்தான். ஆனால் அவள் விட வில்லை. “எங்கேயும் போக வேண்டாம்! இன்று என்னோடு நிற்கவும். உனக்காகச் சப்பாத்தி வைத்திருக்கின்றேன். சாப் பிட்டு விடடுத்தான் போகவேண்டும்.”
ராம் வேறு வழியில்லாமல் கரோலினுக்குப் பக்கத்திலேயே நின்றான். கரோலின் அவளை வாழ்த்த வருகிறவர்களிடமெல் லாம் அவனை அறிமுகம் செய்து வைத்தாள். அதன் பிறகு பல வெள்ளைக்கார ஆண், பெண்களோடு கைகுலுக்க வேண்டிய தாகி விடடது.
பிறந்தநாள் கேக்கில் உள்ள அழகான சின்னஞ் சிறிய மெழுகுவர்த்திகளில் சுடர் ஏற்றிவிடடு கரோலின் ஒவ்வொன் ற்ாக அணைத்தாள். எல்லோரும் கைதடடினார்கள். அவனும் தான். மெழுகுவர்த்திகளை எண்ணிப் பார்த்தான். மொத்தம் 22 இருந்தது. அப்படியானால் அவளுக்கு 21 வயது முடிந்து 22 பிறக்கிறதோ! கேக்கை வெபடடி அப்பாவுக்கும் அம்மாவுக் கும் கொடுத்துவிடடு ராம் முக்குத்தான் மூன்றாவதாகக் கேக் துண்டு கொடுத்தாள். அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு.
எல்லோரும் கரோலின் கன்னத்தில் முத்தமிடடு வாழ்த்துக் களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால் ராம் கை குலுக்கிய தோடு நின்றுவிடடான். அவனால் கரோலின் கன்னத்தில் முத்த மிடும் அளவுக்குத் துணிய முடியவில்லை. இங்கே மற்றவர்கள் முத்தமிடடது ஒரு சம்பிரதாயம். அவர்கள் பாஷையில் அது கலாச்சாரம். இதில் அவர்கள் துணிவதற்கு எதுவும் இல்லை. ராம் துணிய வேண்டியவன்.

மூலஸ்தானம் D
சப்பாத்தி சுடச்சுட இருந்தது. தொடடுக்கொள்ள உரு ளைக் கிழங்குக் கூடடும் சடடினியும் இருந்தன. எல்லோரும் பேப்பர் தடடை கையில் எடுத்துக்கொண்டு சாப்பிடத் துவங் கினார்கள். பரிமாறல் இல்லை. அவர்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளைக்காரனால் வெளி உலகிற்கு வந்த இந்த நடைமுறை உயர்வானது; அற்புதமானது. எவரையும் குறை சொல்ல வைக்காது.
ஒரு தடடில் இரு சப்பாத்தியைப் போட்டடுக்கொண்டு உருளைக் கிழங்கு கூடடு, சட்டனி தேவையான அளவு எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கியபோது ராமின் நெஞ்சுக் குள்ளே சில நெருடல்கள் மிதந்தன. இவர்கள் யார்? இங்கே துணிந்து இவர்களோடு சாப்பிடுகின்றேன். ஆனால் இந்தியா வில் இருந்தபோது இன்னொருத்தன் வீடடில் கை நனைப் பேனா? ஹோட்டடலுக்குப் போனால் கூட அது பிராமணாள் ஹோடடலா என்று பார்ப்பேனே! இங்கே எப்படி எதையும் யோசிக்காமல் சாப்பிடுகின்றேன்? ஒரு பக்கம் ஆடு கோழி என்று இறைச்சிகள். மறுபக்கம் சப்பாத்தி. இங்கே எப்படி சாப்பிட முனைந்தேன்? இது எப்படி நிகழ்ந்தது? ஊரில் மடடன், கோழிக் கடைப் பக்கமே பார்வையைத் திருப்பாதவன்!
‘விடை காண முடியாத, கேள்விகளோடு சாப்பிடட போதுதான், சில வெள்ளைக்காரர்கள் சப்பாத்தியை கையால் தொடாமல் எப்படி சாப்பிடுவது என்று தடுமாறிக் கொண்டிருந் தது அவன் பார்வையில் விழுந்தது. சப்பாத்தியைக் கையால் தொடாமல் பிளாஸ்டிக் நைப்பால் சிறு துண்டுகளாக வெடட பெரும் போராடடம் செய்தார்கள் அவர்கள். அவனோ கையா லேயே சாப்பாத்தியைச் சாப்பிடடு முடித்தான்.
கரோலினிடம் இருந்து விடைபெறும்போது “ராம்! நவ் டைம். லெவன். சரியாக ஒரு மணிக்கு என்னுடைய போன் கால் வரும். முக்கியம் தூங்கிவிடாதே.” என்று சொன்னாள். தலையாட்டிவிட்டடு வந்தான் ராம். பிறந்தநாள் பார்டடி நடந்து
69

Page 37
0 மாத்தளைசோமு
கொண்டே இருந்தது. குடிப்பவர்கள் குடித்துக்கொண்டே இருந்தார்கள். கரோலின் மிகவும் சந்தோஷமாக இருந்ததை அவள் முகத்தின் அடையாளத்திலும் அவளின் நடை உடை யிலும் உணர்ந்தார்கள் கரோலின் அப்பாவும் அம்மாவும். இது நாள் வரை அவர்கள் கரோலினுக்கு இன்னமும் சரியான போய் பிரன்ட கிடைக்கவில்லையே என்று கவலைப்படடார்கள். அந்தக் கவலை இனிமேல் எதற்கு என்பது போல்தான் கரோ லின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. எல்லோரோடும் கலகல வென்று நெருங்கியே பேசினாள் அவள். அதனால் அவளின் காதல் நண்பன் யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது அவள் மடடும் அறிந்த ரகசியமாகவே இருந்தது.
10
க்ரோலின் வீடடிலிருந்து டாக்சியில் புறப்படட ராம் வீட்டடிற்குப் போய்ப் படுக்கையில் விழுந்துபோதும் தூங்க வில்லை. ஏனோ அவனுக்கு தூக்கமும் வரவில்லை. எப்போது கரோலினிடமிருந்து தொலைபேசி வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தர்ன அவன். அதேநேரத்தில் அவன் எண்ண ம்ெல்லாம், அவளைக் கூடுகடடிக் கொண்டு கிடந்தது. அதனை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அதனைத் தவிர்க் கும் முகமாக படுக்கையில் படுத்துக் கொண்டோ, கிடந்து கொண்டோ பார்க்கக் கூடியதாக இருந்த டிவியைப் பார்த் தான். பார்வைதான் அதில் இருந்ததே தவிர எண்ணங்கள் கரோ லினைத் தேடிப் போய்விடடன. அதனை மாற்றும் ஒரு முயற்சி யாக அந்த டிவியில் இருக்கிற சானல்களை ரிமோட கன்ரோ லில் மாற்றி மாற்றிப் பார்த்தான். சானல்கள் மாறிக் காடசி கள் மாறின. ஆயினும் அவைகளை மீறி ஊடறுத்துக் கொண்டு கரோலின் தான் நினைவில் நின்றாள்.
கரோலின் சொன்ன நேரத்திற்கு இன்னும் முப்பது நிமிடம் இருந்தது. அந்த முப்பது நிமிடத்தை எப்படி ஒட்டடுவது? நேரமே

மூலஸ்தானம்
நகராது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு. மெல்லமாய் படுக் கையை விடடு இறங்கி கப்பில் காபி ஊற்றிக் கொண்டு வந்தான். நொடியில் கரைந்து கறுப்பான காபி. திடீர் காபி. அதனைப் பார்த்தபோது அம்மாவின் காபி நினைவுக்கு வந்தது. விஞ்ஞா னம் ஆகாயத்தை எடடியபோதும் அம்மாவைப் போல் காபி ஊற்ற இந்த அமெரிக்காவில் யார் உண்டு? இங்கு குடிப்பது காபியா என்ன? தண்ணிரைச் சுடவைத்து அதில் இன்ஸ்டன் காபித்தூளைப் போடடுக் கலக்கிப் பால் ஊற்றி சர்க்கரை போட்டடு. பெயர் காபி. ஒரு வாய் காபி குடித்தபோது டெலி போன் அடித்தது. நிச்சயம் கரோலின் தான். எடுத்தான்.
“ஹலோ. பீடடர்.” ராமின் ஆர்வம் சுருங்கிப் பதிலும் சுருங்கியது. “ஸாரி. ராம் ஹியர்”
66 29
ஸாரி.
எதிர்முனையில் போனை வைக்க அவனும் போனை வைத் தான். அவன் அந்த வீடடிற்கு வந்ததில் இருந்து இந்த “ஹலோ பீட்டடர்” வந்து கொண்டே இருக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வருகிறது. பீட்டடரைக் கேடகிறாள். அந்த பீட்டர் அவள் கணவனா, காதலனா, கள்ளக் காதலனா தெரியவில்லை. உடுதுணி மாற்றுமாப் போல காதல் மாறுகிற இந்த அமெரிக்கா வில் பீட்டடரைத் தேடி ஒரு வேடடை.
காபியைக் குடித்துவிடடு யோசித்தான் ராம். கரோலின் சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களே இருந்தன. அந்த நிமிடங் களும் கரோலினின் நினைவுகளாய் நகர மறுபடியும் தொலை பேசி அழைப்பு மணி. ரீசிவரை எடுக்கும் முன்னர் ஹலோ பீடடராக இருக்குமோ என்று எண்ணியவாறு இருந்தான். ரீசிவர் காதருகே போயிற்று.
“ஹலோ ராம். கரோலின் ஹியர்.”
அந்த இனிய குரலுக்குத்தானே காத்திருந்தான் அவன்.
71

Page 38
D மாத்தளைசோமு
“ராம். உன்னோடு தனியாகப் பேசத்தான் டெலிபோன் எடுத்தேன்.”
ராம்மின் மனதில் எண்ணங்கள் ஓடும் ரயிலின் முன்னே நீண்டு ஓடுகிற தண்டவாளமாய் நீண்டன. என்னோடு என்ன தனியான பேச்சு?
“ராம்! அன்று நீ போடடிருந்தாயே ஒரு வெள்ளை நிற நூல். ஞாபகம் இருக்கிறதா? அது ஏன் போடடிருக்கிறாய் என்று கேட்டடதற்கு மதம் என்று சொன்னாய். அது நெசம் தானா yrruö?”
ராம் ஒரு விநாடி ஆடிப் போய்விடடான். எங்கேயோ கை வைக்கிறாளே கரோலின். உதடுகள் ஒட்டடின. என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. நல்லவேளை இதை நேரில் கேடகாமல் தொலைபேசியில் கேடகிறாளே என்று ஆறுதலித்து நின்றான். ஆனாலும் பொய் சொன்ன குற்ற உணர்வு அவன் தலையில் உடகார்ந்து அழுத்தியது. எப்படி இதைச் சமாளிக்கப் போகின்றேன்? அப்போதுதான் அவள் பேசினாள்.
*ராம்! எனக்குத் தெரியும். அது பிராமணர்கள் என்ற சாதி யினர் போடுகிற பூனூல். சமயம் என்றால் எல்லா இந்துவும் போடடிருக்க வேண்டும். எங்கள் தெருவில் இருக்கிற ரெடடி என்ற இந்துவிடம் கேடடேன். அவன்தான் இதனை சொன் னான். அந்த ரெட்டடி நூல் போடவில்லையே ஏன்.?’ பள்ளியில் வாத்தியார் கேட்டபது போல் கேட்டடு விடடாள். தலையில் குடடி யது போன்றிருந்தது. 'உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஏன் அப்படி பொய் சொன்னேன்? அப்படி பொய் சொன்னதால் அந்தப் பூனூல் அணியவே தகுதி இல்லாதவனாகி விடடேனே.
UTLò மெளனமாக இருந்தான். அவனிடமிருந்து எந்த பதி லும் வராததால் கரோலினுக்கு அவன் சங்கடத்தில் இருக்கிறான் என்பது புரிந்துவிட்டடது.
“ராம்! இதையிடடு நீ கவலைப்படாதே! அந்த ரெடடி இந்தியாவில் உள்ள சாதிப் பிரச்சனையை விபரமாக எடுத்துச்

மூலஸ்தானம் 0
சொன்னான். உன் தர்மசங்கடம் எனக்குப் புரிகிறது. நான் இதனை கேடடே இருக்கக்கூடாது” என்று சொன்ன கரோலின் அவனிடம் ஏனோ மன்னிப்புக் கேடக முனைந்தாள். “ஐ யாம் ஸாரி ராம்.”
“நோ. நோ. கரோலின். நான்தான் தவறு செய்து விட டேன். இந்த சாதிப் பிரச்னையால் நம் நாடு முன்னேற முடியா மல் இருக்கிறது. நானும் அதனால் பாதிக்கப் படடவன்தான். உயர்சாதி என்று எங்களைச் சொல்லி எல்லாவற்றிலும் ஒதுக் கப் பார்க்கிறார்கள். எங்களில் சிலர் எப்போதோ தவறு செய் திருக்கலாம். அதற்காக எங்களைப் பழிவாங்க வேணுமா? இவற் றையெல்லாம் பேசவோ, நினைத்துக்கூடப் பார்க்க வேணாம் என்றுதான் பொய் சொன்னேன். என்னை மன்னித்துவிடு கரோ!” w
முதல் தடவையாக கரோலின் என்ற பெயரை கரோ' என சுருக்கி ஒரு ராகமாக அழைத்ததில் கரோலின் மகிழ்ந்தாள். அவளோடு மிக பாசமாக இருக்கிற அம்மாகூட அப்படி அழைத்த தில்லை. அப்படி அழைக்கிற ஒரு உயிர் தனது உள்ளத்தோடு மிக நெருங்கியதாக இருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள்.
குற்றம் செய்த உணர்வில் ராம் இருந்தான். அவன் உள்ளம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே என்று மீண்டும் மீண்டும் சொல்லியது. காலம் கடந்த ஒன்று. இனி என்ன செய்ய முடியும்?
கரோலின் எல்லாவற்றையும் முடித்து வைக்கும் முகமாக, “ராம். நடந்ததை மறப்போம். இதில் நீ எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனால் கடைசியாக ஒரு கேள்வி கேடக விரும்புகின்றேன்.” என்று ஒரு சொல்லிவிடடுச் சில நிமிடங்கள் மெளனித்துப் பிறகு கேட்டடாள். "ராம்! யூஆர் பிராமின்.”
ராம் ஒரு விநாடி மெளனமாய் இருந்துவிடடுப் படா ரென்று சொன்னான். “நோ. கரோலின். ஐ யாம் நொடி பிராமின். எனிமோர். நவ் ஐயாம் ஏ மேன்.”
கரோலினுக்கு அவன் ஏன் இப்படிப் பேசுகின்றான் என்று பரியவே இல்லை. இதற்கு மேலும் அந்தப் பேச்சை நீடிக்காமல்
73

Page 39
D மாத்தளைசோமு
ஒரு முற்றுப்புள்ளி போட முனைந்தாள். “ஓ கே ராம்! சிலிப் வெல். சியூடுமாரோ. குட நைட.”
“குட நைட. கரோலின்.” தொலைபேசியை வைத்துவிடடு யோசித்தான். கரோலி னுக்கு எவ்வளவு அன்பான உள்ளம்? சொன்னது பொய்யென்று தெரிந்தும் அதனைக் கண்டுபிடித்த பிறகும் அதனைப் பெரிது படுத்தவில்லையே! அவள் ஏன் பெரிதுபடுத்த வேண்டும். ராம் மீது அவள் கொண்ட காதல் எல்லாவற்றையும் வென்று விடு கிறதே! -
அன்று இரவு வெகு நேரம் படுக்கையில் தூங்காமல் கிடந் தான். மறுநாள். பாத்ரூமில் குளிக்கப் போனான் நிர்வான மாய். நிர்வாணம் என்றால் ஜனித்த தேகம். தொப்புள் கொடி அறுத்து வரும்போது அழுகை மடடும்தான் துணைக்கு வரு கிறது. எதுவுமே வேண்டாம் என்பதுபோல் கைகள் சுருங்கிக் கிடக்கின்றன. ஆசா பாசங்களை நீட்டடிப் பெருக்கும் கண்கள் மூடிக் கிடக்கின்றன. பிறக்கும்போது எல்லாம் நிர்வாணம்தான். இடையில் எல்லாம் சேர்ந்து விடுகின்றது. ராம் பூனூலைப் பார்த்தான். கரோலினிடம் பொய் சொல்ல வைத்த பூனூல். அந்தப் பூணுாலைத் தொட்டடுப் பார்த்தான். வெறும் நூலால் ஆன இந்தப் பூனூல் என்ன என்ன அர்த்தத்தைக் கொடுக்கின் றது. இதை போட்டடுக்கொண்டு எப்படி நிர்வாணமாய்க் குளிப் பது? நிர்வாணம் என்றால் எதுவும் தேகத்தில் இருக்கக்கூடாது.
ராம் மெல்லமாய்ப் பூனூலைக் கழடடிவிடடு அதனை கையில் வைத்துக் கொண்டே சவரில் குளித்தான்.
கரோலினிடம் பூனூலைக் கழற்றி விடடதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை ராம். என்று அமெரிக்காவில் நடந்ததை ஒரு கதை போன்று எழுதிய ராம் இப்போது தன் கருத்தை எழுதியிருந்தான்.
‘அப்பா! பூனூலைக் கழற்றி விடடேன் என்று என்னைத் திடடாதீர்கள். அதனைக் கழற்றிவிடடதால் எனது கொள்கை

மூலஸ்தானம்
மாறும் என்று எண்ணவேண்டாம். உங்களிடமிருந்து வந்த ராம் தான் உங்களைச் சந்திப்பான். பூனூலை ஏன் அணிகிறாய் என்ற கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை. சாதிக் காகத்தான் போட்டடிருக்கின்றேன் என்று எப்படிச் சொல்வது? அமெரிக்கர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இங்கே அமெரிக்காவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்தான் உண்டு. நம் நாடடைப் போல் சாதிக் கோடுகள் இல்லை. ஆங்காங்கே வெள்ளை கறுப்பு இனப் பிரச்னை உண்டு. அமெரிக்காவில் வெள்ளைக்காரர்கள் சாதியால் பிரிந்து கிடக்கின்ற அவலம் இல்லை. எவரின் உடம்பிலும் சாதியின் அடையாளம் இல்லை. ஏன் நான் மடடும்? என்னை மன்னித்து விடுங்கள்.
கடிதம் கடைசியாக ஊர்ச் செய்திகளையும் வேல்சாமி யையும் தனியாகச் சுகம் கேட்டடது. கடிதத்தை வாசித்து முடித் ததும் ஐயரின் மனதில் பல்வேறு எண்ணங்கள் கம்பளிப் பூச்சி யாய் நகர்ந்தன. பூனூலைக் கழற்றி விடடதைக்கூட அவர் மன்னிக்கத் தயாராக இருந்தபோதும் கரோலினைக் கைப் பிடித்து விடுவானோ என்ற அச்சம் அவருக்கு வந்தது. தஞ்சாவூர் ஜெயராம் ஐயரின் மகன் ஜனார்த்தராமன் என்கிற ஜானா லண்டனுக்கு மேற்படிப்புக்குப் போய் இந்தியா திரும்பி வந்த போது கையோடு ஒரு வெள்ளைக்காரியையும் கூடடி வந்து விட்டான். அந்த வெள்ளைக்காரி மடிசார் கட்டடிக்கொண்டு வந்திருந்தாள். ஜெயராம் ஐயரோ மகனுக்குப் பெண் பார்த்து வைத்திருந்தார். இன்று கரோலினுக்காக பூனூலைக் கழடடிய வன் நாளை..?
அந்தக் கேள்வியே அவரைச் சோர்வாக்கியது. அந்தக் கடி தத்தைக் கோயில் மடப்பள்ளியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தார். மீனாடசியம்மாளிடம் அந்தக் கடிதத்தைப் பற்றி பேசவே பயந்தார் அவர்.
மடப்பள்ளியை விடடு வெளியே வந்த ஐயர் பூஜைக்காக சிலர் வெளியே காத்திருப்பது தெரியவே, கோயில் பக்கமாய்ப் டோனார்.
75

Page 40
( மாத்தளைசோமு
அன்று இரவு சாப்பிடும்போது மீனாடசி ஐயரைப் பார்த் துக் கேடடாள். “ஏன் ஒரு மாதிரி இருக்கேள்?.”
எப்படித்தான் உணர்வுகளை மறைக்க முயன்றபோதும், முகம் அவருக்குக் கடடுப்படாமல் அது தன் கடமையைச் செய்து விடுகிறது. ஆனாலும் அவர் சமாளிக்கின்றார். “ஒண்னுமில்ல. கலவலி வர்ரமாதிரி இருக்கு. அதான்.”
மீனாடசியம்மாள் நம்பி விடடாள். நம்பிக்கை தானே வாழ்க்கை.
“மாத்திரை தர்ரேன். சாப்புடுங்கோ.”
ஐயர் திண்ணைக்கு வந்து உடகார்ந்தார். அங்கு ஏற்கனவே வேல்சாமி உடகார்ந்து இருந்தான். அவனைப் பார்க்கிறபோது எப்போதும் தவம் செய்பவனைப் போல் தெரியும். தவம் காடடுக் குப் போய்த்தான் செய்ய வேண்டுமா என்ன?. இருக்கிற இடத் திலேயே எல்லாப் புலன்களையும் அடக்கிச் செய்யலாம். வேல் சாமி அப்படிப்பட்டவன் தான். அவனுக்கென்று ஆசைகள் இருக்குமோ என்னவோ?
எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் கேட்டடது. அத னைத் தொடர்ந்து வேறு பல நாய்களும் சத்தம் எழுப்பின. அந்த சத்தங்கள் மங்கியதும் எவரோ இருட்டடில் ஓடிவரும் சத்தம் கேட்டடது. கோவிந்தன்தான் ஓடிவந்தான்.
“யாரு கோவிந்தனா?. ஆளையே காணாமே! எங்க போன?.” ஐயர்தான் கேட்டார்.
வேல்சாமி கோவிந்தனை வெறுமனே பார்த்தான்.
“சினிமா பார்க்கப் போனேன் சாமி. பழைய படம், சிவாசி படம். நல்ல கூடடம்.”
ஊர்ப் பஞ்சாயத்து எல்லையில் இருக்கிற தற்காலிக கொடடகையில்தான் சினிமா போடுவார்கள். திருச்சியில் ஓடி ஓடி அறுந்து போகிற படங்கள்தான் புதுப்படமாக இங்கு வரும்.
G& 4- 9. சாப்புபடடியா?

மூலஸ்தானம் D
சிரித்தான் கோவிந்தன். அதன் அர்த்தம் இல்லை என்பது தான். ஐயர் மீனாடசியைப் பார்த்தார். பிறகு கோவிந்தனைப் பார்த்தார். மீனாடசிக்குப் புரிந்துவிடடது.
கால் கை கழுவி இலை முன் கோவிந்தன் உடகார மீனாடசி இலையில் இடலிகளை வைத்தாள். பிறகு சாம்பார் ஊற்றினாள். அப்போது ஐயர் சொல்வது காதில் விழுந்தது.
“மீனாடசி! நானும் வேல்சாமியும் ஏரிக்கரைப் பக்கம் போயிட்டடு வர்ரோம். கோவிந்தா நீ சாப்பிடடு அம்மாவோட பேசிக்கிடடடு இரு. சரியா?.”
இடலியை வாயில் அதக்கிக் கொண்டே தலையாட்டடினான் கோவிந்தன்.
ஐயரும் வேல்சாமியும் ஏரிக்கரைப் பக்கம் போனார் கள். வேல்சாமி மறக்காமல் டார்ச் லைடடை எடுத்துக்
கொண்டான்.
11
ஒரு காலத்தில் ஏரி இருந்தது. ஒரு காலம் என்றால் இந்த ஐயரின் அப்பா உயிரோடு இருந்தபோது. எந்த மாதத்திலும் அந்த ஏரியில் தண்ணீர் குறையாது. வருடத்தில் ஒருநாள் காமாட சியம்மன் கூட ஏரிப்பக்கம் போய்த் தீர்த்தமாடித் திரும்புவாள். இன்று ஏரி இருந்த அடையாளம் தான் இருக்கின்றது. தண்ணிர் மழை பெய்தால் மடடுமே பார்க்க முடியும்.
ஏரியைச் சுற்றி இருந்த மரங்களெல்லாம் வெபடடியாகி விடடது. வெபடடிய மரத்திற்குப் பதிலாக எவரும் மரம் வைக் கவே இல்லை. வானில் பறக்கிற பறவைகள் துப்புகிற விதைகள் விழுந்துதான் சில மரங்கள் முளைத்திருக்கின்றன. நிறைய முட செடிகள் பரவிக் கிடக்கின்றன.
வானில் இருபடடுதான் ஏகமாகிக் கிடந்தது. இருடடினால் எதுவும் சரியாகத் தெரியவில்லை. ஐயர் திடீரென்று ஏன் ஏரிப்
77

Page 41
D மாத்தளைசோமு
பக்கம் கூப்பிடடார் என்று தெரியாமல் நடந்தான் வேல்சாமி. அவன் கையில் இருந்த டார்ச் லைபட வெளிச்சத்தைக் கொட
ԼԳ.Այ Ցl.
“ஏரியில தண்ணி இருக்குதோ இல்லியோ காத்து மடடும் இருக்கு சாமி.”
ஐயர் புன்னகைத்து விடடு சொன்னார், “நீ சொல்ரது நெசம்தான். காத்து நல்லா வருது. பக்கத்திலதான் கொல்லி மலை இருக்கு.”
இருடடு நேரத்தில் உருவம் தெரியாத காற்று உடலைத் தழுவும் போது இன்பமாக இருந்தது அவர்களுக்கு.
வேல்சாமி முன்னே நடக்க ஐயர் பின்னால் நடந்தார். ஆங்காங்கே காற்றில் கலந்த நாற்றம் மூக்கைத் துளைத் தது. எல்லாம் இந்த மனிதர்களின் வேலைதான். அந்தக் கிராமத் தில் பலர் மலம் கழிக்க ஒதுங்குவதே இந்தப் பகுதியில்தான். எங்கு தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அங்கே ஒதுங்கி நாற்ற மெடுக்க வைப்பார்கள். ஐயருக்கு இதெல்லாம் பிடிக்காது. எந்த ஊருக்கும் கிரகப்பிரவேசத்திற்குப் போனால் அவர்களி டம் கேடகும் கேள்வி. டாய்லபட வைச்சிருக்கேளா? டாய்லபட இல்லையென்றால் சலிப்புடன் பேசுவார். அவர் பேச்சைக் கேட்டடு டாய்லபட கடடியவர்கள் பலர்.
“என்னத்த திம்பானுகளோ இப்புடி நாறுது.” என்றான் வேல்சாமி.
“வேகமா போ. அந்தப் பக்கம் நாறாது.” ஐயர் சொல்ல வேல்சாமி வேகமாய் நடந்தான். ஐயர் சொன்னது நிஜம்தான். மூக்கு விடுதலையடைந்தது. நல்ல காத்து வீசியது.
ஐயர் மெதுவாகப் பேசத் தொடங்கினார். “வேல்சாமி! நெசமா காத்து வாங்க நான் வரல்ல. ஒரு சிக்கல். அதை நீதான் தீக்கணும்.”
வேல்சாமி அந்த இருடடிலும் சிரித்தான்.

மூலஸ்தானம்
“ஏன் சிரிக்கிற.?” “என்ன சாமி! சிக்கலை தீர்க்கிற நீங்களே என்ன கேடடா
** நான் என்ன செய்வேன்?.
“அடுத்தவங்க சிக்கலை சுலபமா தீர்க்கலாம். ஆலோசனை சொல்லலாம். ஆனா சொந்த சிக்கலை சுலபமா தீர்க்க முடி யாது. அதான் கூப்புடடேன்.”
ஐயரின் ஆதங்கம் வேல்சாமிக்குப் புரிந்தது.
“நம்ம ராம்! இன்னைக்கி லெடடர் எழுதியிருக்கான். 953. Ga). LGS) ßGTT. 39. — 5T. G)TLDT? 9G)3 5T. டினா நிச்சயம் அவ அழுவா.”
“ggs art 6?”
“ராம்! தான் போட்டிருந்த பூனூலை கழட்டிடடானாம். தன்ன்ோட படிக்கிற அமெரிக்க பொண்ணு ஏன் பூனூல் போட டிருக்கேன்னு கேக்க, ரிலிஜஸ்னு மொதல்ல சொல்லியிருக் கான். அந்த வெள்ளைக்கார பொண்ணும் அதை நம்பியிருக்கா. அப்பறம் அவளுக்கு பிராமணன் தான் பூனூல் போடுவாங்கிறது தெரியவர ராம்கிடட அதைப்பத்திக் கேட்டடிருக்கா. ராம் அப் புறம் நெசத்தச் சொன்னானாம். அத்தோட பூனூலை 65L L-L டானாம். அதை எழுதியிருக்கான். அதைப் பார்த்தா மீனாடசி என்ன மாதிரி மெளனமா இருப்பாளா? சொல் வேல்சாமி!”
வேல்சாமியின் புருவங்கள் உயர்ந்து தாழ்ந்தன. அந்த இருளில் அது ஐயருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.
ஐயர் தொடர்ந்து பேசினார். “அவன் பக்கமா இருந்து பார்த்தா அவன் செஞ்சது நியாயமா தெரியுது. ஆனா மீனாடசி ஏத்துக்க மாடடா. இப்பசொல் லெடடடைரக் காடட முடியுமா?” w
வேல்சாமி யோசித்தான். பிறகு சொன்னான்.
“சிக்கலான சிக்கல் சாமி. ஏரிக்கரைப் பக்கம் போயிடடு வருவோங்கிற போதே சிக்கல் இருக்கும்னு நெனைச்சேன்.
o 39 சரியான சிக்கல் சாமி.
79 D

Page 42
0 மாத்தளைசோமு
“அதான் உன்னை கேக்கிறேன். என்ன செய்யலாம்.”
வேல்சாமிக்கு ஏதோ படடது சொன்னான். “ஏன் சாமி! இப்புடிச் செஞ்சா எப்புடி? லெடடரைக் காடடாதீங்க. லெட டரைக் காட்டலேன்னு ராம் க்கு ஒரு லெபடடர் வெவரமாக எழுதிப் போடுங்க. ராம் ஊருக்கு வர்ரபோது நேரா சொல்
லடடும்.”
ஐயருக்கு இது சரியாகவே படடது. நம்ம மூளைக்கு இது தோணலியே!.
“இதுக்குத்தான் உன்னக் கேடடேன். நீ சொல்ரது சரி. அதுபடித்தான் செய்யப் போறேன். மீனாடசிக்குத் தெரியாம ஒரு லெடடர் எழுதி போடடா சரி.”
வேல்சாமி கொடடாவி விடடான்.
“உனக்கு கொடடாவி வந்திருச் சா. அப்ப போவோம். இங்க பேசினது இங்கயே இருக்கடடும்.”
அந்த இருபடடிலும் சிரித்தான்.
“ஏன் வேல்சாமி?”
“இந்த ஏரிக்கரைக்கு எத்தனையே வாட்டடி வந்திருக்கோம். எத்தனையோ பேசியிருக்கோம். வெளிய வந்திருக்கா சாமி? நமக்கிடட பேசுரதும் கெணத்திலி போடுர கல்லும் ஒன்று சாமி?”
ஐயருக்கு அவன் பேச்சில் உடன்பாடு உண்டு. இந்த ஏரிக் கரையில் எத்தனையோ தடவை இருவரும் பேசியிருக்கிறார் கள். விவாதித்திருக்கிறார்கள். முடிவும் கண்டிருக்கிறார்கள். ஆனால் வெளியே எவருக்கும் தெரியவே தெரியாது. ஏன் மீனாடசிக்குக் கூடத் தெரியாது. இந்த வேல்சாமி யாரோ - எவனோ? அவனுடைய பாதங்கள் இந்தக் கோயிலிலும் இந்த ஐயரின் நிழலிலும் எவ்வாறு இணைந்தன? இது எவருக்கும் தெரி யாதது. ஆனால் வெளி உலகத்திற்கு வேல்சாமி கோயிலில்
வேலை செய்பவன் மடடுமே!
இருவரும் ஏரிக்கரைக் காற்றைப் பிரித்துப் பிரிந்து நடந் தார்கள். வீட்டடிற்கு வந்தார்கள்.

மூலஸ்தானம் o
மீனாட்டசி உள்ளே படுத்திருந்தாள். தூங்கவில்லை. கோவிந் தன் குறடடை விடத் தொடங்கியிருந்தான்.
அன்று இரவு முழுவதும் ஐயர் நிம்மதியாகத் தூங்கவில்லை. தூக்கம் வரமறுத்தது. நெஞ்சில் எண்ணங்கள் கிளம்பி கடல் அலைபாய்க் கொந்தளித்துக் கொண்டிருந்தன. மீனாடசியை ஏமாற்றுகின்றேனா? தாலி கடடியதில் இருந்து இன்றுவரை அவளுக்குத் தெரியாமல் எதையும் செய்ததில்லையே! இந்தக் கடிதத்தைக் காடடினால் என்ன. இன்று மறைத்துவிடலாம். என்றாவது அது தெரிந்துவிடடால்.
மீனாடசி அமைதியாகத் தூங்கத் தொடங்கினாள். வெளியே கோவிந்தனின் குறடடைச் சத்தத்தில் தூங்கமுடியாமல் அவதிப் பட டான் வேல்சாமி. சிறு சத்தம் கேட்டடாலும் அவனால் தூங்க முடியாது. கோவிந்தனின் குறடடையோ இடி முழக்கமாய்க் கேடகிறதே.
வெளியே நிஜமான இடிமுழக்கம் திடீரென்று கேடடது. அதனைத் தொடர்ந்து மழை பெய்தது. அப்படிப் பெய்கிற மழையை அது எங்கெங்கு பெய்கிறது என்று பார்ப்பதைப் போல் எவரோ திடீர் திடீர் என்று வெளிச்சம் போடடுப் பார்த்தார்கள். மின்னலைத்தான் சொல்கின்றேன். முதலில் பெய்த மழை சில நிமிடங்களின் பின் பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. வேகமாக வீசிய காற்றினால் மழைத்துளிகள் திண்ணையில் படுத்திருந்தவர் களை எழுப்பிவிடடது. முதலில் குறடடை விடுத்து தூக்கம் களைந்து எழுந்தவன் கோவிந்தன்.
“அட. மழை பெய்யுது. மொரட்டு மழை.”
கோவிந்தன் போட்டட சத்தத்தில் அரை குறைத் தூக்கத்தில் இருந்த வேல்சாமி விழித்தான். உள்ளே அரைகுறைத் தூக்கத் தில் இருந்த ஐயர் கதவைத் திறந்து வெளியே வந்தார்.
திண்ணை பாதி நனைந்து போயிருந்தது.
“சிவராத்திரி மழை பெய்யுது வேல்சாமி. பகவான் ஊரை சுத்தமாக்கிராரு. வேல்சாமி கோவிந்தன கூடடிக்கொண்டு
81 п

Page 43
மாத்தளைசோமு
ஆத்துக்கு உள்ளார வா. பின்னாடி ஒரு ரூம் இருக்கு. அங்க போயி தூங்குங்க.”
வேல்சாமி அதற்கு ஒப்பாமல் வார்த்தைகளை இழுத் தான். “இல்ல சாமி இங்கயே. மழை நின்னுரும்.”
ஐயருக்கு கோப்ம் வந்தது. “வேலு வெளையாடாதே! அதுக்கு வேற நேரம் இருக்கு. நானும் மனுசன் தான். வேதம் சாஸ்திரம் படிச்சவன்தான். எந்த வேதமும் சாஸ்திரமும் என்னை மடடும் நிழல்ல இருந்துகிட்டு மத்தவாளை நனையவோ, காய வோ வைன்னு சொல்லல்ல. போப்பா.”
அந்த நேரம் பார்த்து வேல்சாமியின் தலையையும் முதுகை யும் நனைத்தது காற்றை துணைக்கு இழுத்துக் கொண்ட மழை.
“பார்த்தியா மழைகூட உன்னைத் துரத்துது. நான் சொல் றதைச் சரிங்கிறது.”
“இல்ல சாமி. என்னைச் சுத்தமாக்க குளிப்பாடடுது” என்று சொன்ன வேல்சாமி இன்னமும் உள்ளே போக யோசித் தான். கோவிந்தனுக்குத் தூங்கவேண்டும் போலிருந்தது.
‘சாமிதான் சொல்லிடடாரே! வா. உள்ளார போவோம்.”
வேல்சாமி முன்னே போக கோவிந்தன் பின்னே போனான். கதவு மூடப்படடது. சிறிய அறை. இருவர் அல்ல, நான்குபேர் படுத்துத் தூங்கலாம்.
வெளியே விடியவிடிய மழை பெய்தது. சிவராத்திரிக்காக அந்த ஊரையே தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்வது போல் மழை பெய்தது. அந்த மழை திருச்சியில் பெய்யவில்லை. இந்தக் கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் மாத் திரமே மழை பெய்தது. வெய்யிலில் இதுநாள்வரை காய்ந்த மரம் செடி கொடியெல்லாம் குளித்து முழுகி சுத்தமாயின. வானத் தின் தயவால் அந்தக் கிராமத்தில் உள்ள கிணறுகள, சிறு சிறுநீர்க்குடடைகள் மக்கள் திருப்திபடும்படி நிரம்பின.

மூலஸ்தானம் D
12
வேல்சாமிக்கு விழிப்பு வந்தபோது ஐந்தரை மணியிருக்கும். படுக்கையில் எழுந்து உடகார்ந்து பக்கத்தில் படுத்துக்கிடந்த கோவிந்தனைப் பார்த்தான். எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்தான். கோவிந்தனுக்கு நிரந்தரமான வீடு வாசல் இல்லை. சொந்த பந்தம் தேட வேண்டும். கையிலோ மடி யிலோ பயம் இல்லை. ஆனாலும் எந்தக் கவலையும் இல்லாமல் அவ்வப்போது சிரிப்பான். சிரிப்பதற்குப் பணம் கேடகிற இந்த மனிதர்கள் மத்தியில் இவனால் எப்படிச் சிரிக்க முடிகிறது? எப்படித் தூங்க முடிகிறது? படுத்ததும் தூங்கிவிடுவான். சொல் லப் போனால் அவனிடம் இருக்கற முக்கியமான செல்வம் இந்தத் தூக்கம்தான். ஐயர் அடிக்கடி சொல்வது போல் படுத்த தும் தூங்கிரவன் புண்ணியம் செய்தவன். சிலபேர் தூங்குவது போல் படுத்திருப்பார்கள். ஆனால் கண்களுக்குள் நினைவில் அவர்கள் அடைய முடியாத ஆசாபாசங்களை மீடடுப் பார்ட் பார்கள். அதில் கூட எத்தனையோ வகை? சிலர் அடைய முடி யாத பதவிக்காக வலை பின்னுவார்கள். சிலர் சொத்தை எண்ணி கனவு சேர்ப்பார்கள். சிலரோ பக்கத்தில் மனைவி படுத்திருந்த போதும் எப்போதோ பார்த்த அழகான பெண்ணோடு - அடைய முடியாத காதலியோடு - அடுத்தவனின் கவர்ச்சியான மனைவியோடு துகில் கொள்வார்கள். தூங்கும் போது பாவம் செய்யாது இந்த மனித ஜென்மங்கள் என்பார்கள். இங்கே தூங் கும் போது பாவம் செய்கிற மனிதர்கள் பகலில் மெளனியாக, அடக்கசாமியாக இருப்பார்கள். இதுவெல்லாம் இங்கே தூக் கம் என்கிற பேரில் நடக்கிற 'திருவிளையாடல்கள். கோவிந் தனோ இந்த 'திருவிளையாடல் எதுவும் இல்லாமல் படுத்ததும் தூங்கிப்போய் விடுவான். எதுவும் புரியாத தெரியாத பரிபூரண ஓய்வான தூக்கம் அவனுக்கு எப்போதும் வரும்!
வேல்சாமி மெள்ளமாய் படுக்கையை விடடு எழுந்து கத வைத் திறந்து பார்த்தான். மீனாடசியம்மாள் அடுக்களையில்
8з о

Page 44
மாத்தனைசோமு
வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. தான் குளிக்காமல் வீட்டடின் உள்வாசல் வழியே வெளியே போகக்கூடாது என்ற முடிவில் அந்த அறையில் இருந்த வேறு ஒரு கதவைத் திறந்தான். அது விடடின் பின் வாசலைக் காடடியது. வேல்சாமி வெளியே போய்ப் பார்த்தான். மழை நின்று போய் இருந்தது. இருள் இன்னும் விலகவில்லை. பனி மாசி மாதத்தை சொல்லிக் கொண் டிருந்தது. மாசிப்பனி மச்சையும் துளைக்குமாம். வேல்சாமிக்கு மெல்லிசாய்க் குளிர்ந்தது. இந்தக்குளிரில் பனியில் எப்படி குளிப் பது என்று நினைத்தபோதுதான் ஐயர் இன்னேரம் குளித்துவிடடு கோயிலில் இருப்ப்ார் என்ற சேதி அவன் முதுகைத் தள்ளியது. ஐயருக்கு எது எப்படிப் போனாலும் படுத்தெழும்பியதும் குளிக்க வேண்டும். குளிக்காதவரோடு பேசவே மாடிடார்.
வேல்சாமி திரும்பவும் அறைக்கு வந்து கோவிந்தனை எழுப்பினான்.
“ஏய் கோவிந்தா. எந்திரி வேல நெறைய இருக்கு.” கோவிந்தன் வேறு வழியில்லாமல் படுக்கையைச் சுருடடிக் கொண்டே எழுந்தான். நெஞ்சுக்குள் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் என்ன என்பதாய் ஆசை இருந்தது. அந்த இன்னும் கொஞ்ச நேரம் என்பது பத்துமணி வரை.
“ராத்திரி நல்ல மழை! ஆனா நீ குறடடவுடடு தூங்கின. சரி. வா. கோயிலக் கழுவணும். மொதல்ல குளிக்கணும்.”
“இந்தக் குளிர்லயா. நீ குளி. வேல்சாமி. நா குளிக்கல்ல.”
கோவிந்தனை வேல்சாமி எரித்து விடுபவனைப் போல் பார்த்தான். “இந்தா பாரு! கார்த்தால குளிக்காம இங்க இருக்க (Մ)ւգ-Ամո Ցl. இது கோயில். நம்ம சாமிக்கு தெரிஞ்சுது அம்புபடடு தான். என்ன பார்க்கிர? கெணத்துத் தண்ணிய அள்ளி தலயில ஊத்து குளிர் போயிரும். வா. வா."
அரைகுறை மனதோடு வேல்சாமியின் பின்னால் போனான்
கோவிந்தன்.

மூலஸ்தானம் u
இருவரும் மல்லிகைத் தோட்டத்து கிணற்றருகே போனார் கள். ஏற்கனவே கிணற்றருகே இருந்த தொடடி நிரம்பியிருந் தது. வேல்சாமி முதலில் அந்த தொடடித் தண்ணிரை வாளி யால் அள்ளி அள்ளித் தலையில் கொடடிக் குளித்தான். அவன் குளிக்கக் குளிக்க கீழே விழுகிற தண்ணீர் அது ஒடையாக ஓடி, அது ஓடிப் போவதற்கு ஏற்படுத்தப்படட பாதையில் பயணம் போனது. அந்தப் பாதை அந்த மல்லிகைத் தோடடத்தைச் சுற்றிச் சுற்றிப் போகிறது. குளிக்கிற தண்ணீர் வீணாகாமல் தோட்டத்து செடிகளின் கால்களை நனைக்கடிடும் என்பது வேல்சாமியின் தாவரவியல்.
கோவிந்தன் பல்லைக் கடித்துக்கொண்டு குளித்தான். வேறு இடமாயிருந்தால் முகம் கழுவுவதோடு நின்றிருப்பான். இங்கு இந்த ஐயரிடம் அது பலிக்காதே. مر
இருவரும் கோயிலுக்குப் போனபோது ஐயர் எதிரே வந் தார். குளித்து முழுகி விபூதி படடைகள் மிளிர, வெள்ளை வேடடி மின்ன, ஒரு எடுப்பான பார்வையுடன் அவர் இருந்தார். சடடை போடவில்லை. குளிருக்காக கலர் துணி போர்த்தியிருந்தார்.
“வணக்கம் சாமி! நீங்க சொன்னது போலவே ராத்திரி நல்ல மழை பெஞ்சிருக்கு. சிவராத்திரிக்காக ஊரையே கழுவி சுத்தம் பண்ணிருக்கு சாமி” என்றான் வேல்சாமி.
“நம்ம ஊரு காமாடிசியம்மனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். எப்படியும் வருசா வருசம் சிவராத்திரிக்கு முன்னமே மழைய கொண்ணாந்திருவா.” என்ற ஐயர் கோவிந்தனைப் பார்த்துச் சொன்னார். “வேல்சாமி கோயிலை நல்லா கழுவிரு. துணைக்கு கோவிந்தனை வைச்சிக்க."
கோவிந்தன் மெளனமாக இருந்தான். காலையில் குளிப் பதும் பிடிக்காது-வேலை செய்வதும் பிடிக்காது அவனுக்கு.
“சரி சாமி.” என்ற வேல்சாமி கோயிலுக்குள் போக முனைந்த போது ஐயர் அவனைத் திருப்பினார். “குளிச்சிடட இல்ல. மொதல்ல சூடா காபி சாப்பிடடு வா. அப்பதான்
85

Page 45
மாத்தளைசோமு
வேல செய்யலாம்.” கோவிந்தனுக்கு அப்போதுதான் புன் னகையே வந்தது.
வீடடுக்கு வந்த இருவரும் மீனாடசியம்மாள் கொடுத்த காபியைக் குடித்துவிடடுக் கோயிலுக்குப் போனார்கள்.
பூந்தோடடத்தில் கையில் பூக்கூடையோடு பூக்களை ஆய்ந்து கொண்டிருந்தார் ஐயர். இரவில் பெய்த மழையில் பூஞ் செடிகளெல்லாம் குளித்து தலை துவடடாத பெண்ணாய் நின்று கொண்டிருந்தன. காலை பூஜைக்குத் தேவையான பூக்களை அவருக்கு கடனாய்க் கொடுத்தன அந்த மலர்ச்செடிகள். அதனை அவர் திரும்பக் கட்டுவதே இல்லை - அதற்காக தின மும் கொடுப்பதை நிறுத்தவும் இல்லை!
வீடடின் உள்ளே ஐயர், வேல்சாமி, கோவிந்தன் மூவரும் ஒன்றாக, உடகார்ந்து இடலி சாப்பிடடுக் கொண்டிருந்தார் கள். வாசல் கதவு மூடியிருந்தது. வெளியே எவரோ கூப்பிடும் குரல் கேடடது.
88 9.
LÒT LÒT LÒT DIT
ஐயர் வீடடுக்குள்ளே இருந்தே சொன்னார். “அட நம்ம அம்பி வந்திருக்கான். சிவராத்திரிக்குத் துணையா இருக்க வரச் சொல்லி லெட.டர் போட்டடேன். வந்துபடடான். மீனாட்டசி நீ போயி உள்ள வரச் சொல்லு.”
மீனாடி.சி கதவைத் திறந்து வெளியே போனாள். வெளியே ஒரு துணிப்பையோடு அம்பி நின்று கொண்டிருந்தான். மெலிந்த உருவம். குழி விழுந்த கண்கள். சின்னக் குடுமி. காய்ச்சலில் படுத்துத் தப்பி எழுந்த அடையாளமாய் முகத்தில் சோர்வு. பழுப்பு நிறமாய் மாறிய வெள்ளை வேட்டி. தேய்ந்து ஓய்ந்து போன செருப்பு.
“மாமி! நன்னா இருக்கேளா? போன சிவராத்திரிக்குப் பார்த்தது.”
“நான் நன்னா இருக்கேன். நீ நல்லா இருக்கியா? உனக்கு
காச்சல்னு சொன்னா. நான் எங்க வருவேன். பகவானை

மூலஸ்தானம் 0
சொகப்படுத்தச் சொல்லி வேண்டிகிடடேன். ஆமா உன் ஆத் தில எல்லாரும் நன்னா இருக்காளா?”
“பகவான் கிருபையில் மலைக்கோடடை பிள்ளையார் கடாடசத்தில் நன்னா இருக்கோம் மாமி. மாமா எங்க மாமி.?”
"உள்ள சாப்பிடடுக்கிடடு இருக்கார்” என்ற மீனாடசி ஏதோ தவறு செய்தவள் போல் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “வெளியவே நிக்க வைச்சிப் பேசிகிடடு இருக்கேன். உள்ளவா அம்பி.” என்றாள்.
இருவரும் உள்ளே போனார்கள். உள்ளே போன அம்பி கூடத்தில் ஐயர், கோவிந்தன், வேல் சாமி ஆகியோர் ஒன்றாக உடகார்ந்து சாப்பிடுவதைப் பார்த்து விடடுத் தயங்கி ஒதுங்கி நின்றான். அவன் முகத்தில் ரேகைக் கோடுகள். அந்த ரேகைக் கோடுகளின் சரியான அர்த்தம் இது தான். இவாள்ளாம் யாரு? ஐயர் ஆத்தில உக்கார்ந்து சாப்புடு σπGοπι’
சிலர் நேரிடையாகப் பேசமாடடார்கள். முதலில் அடை யாளம் காடடுவார்கள். அப்படித்தான் அம்பியின் அடையாள மாய் அந்த ரேகைக் கோடுகள் இருந்தன.
“அம்பி! நீ ஒண்ணும் யோசிக்காதே! எல்லாம் நமக்கு வேண்டியவா. மொதல்ல நீ சாப்புடு அப்பறம் மத்த விசயத் தைப் பேசலாம்.” என்று அம்பியைப் பார்த்துச் சொன்ன ஐயர் மீனாட்டசி பக்கம் திரும்பிச் சொன்னார்.
"மொதல்ல ஒரு இலை போடு நம்ம அம்பிக்கு.” மீனாடசி இலை போடப் போனாள். “இல்லை மாமி! நான் அப்புறமா சாப்புடுறேன்” என்ற அம்பி வேல்சாமியையும் கோவிந்தனையும் ஒரு பார்வை பார்த் தான். அதனை வேல்சாமி புரிந்து கொண்டான். கோவிந்தன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இடலி சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தான்.
87

Page 46
மாத்தளைசோமு
வேல்சாமி அதுவரை மெதுவாகச் சாப்பிடடவன் அவசர அவசரமாகச் சாப்பிடடான். அவன் அவசரம் ஐயருக்குப் புரிய வில்லை.
“வேலு. மெதுவாச் சாப்புடு. என்ன அவசரம்?” “அவசரம் இல்ல சாமி. நெறைய இடலி சாப்பிடடா தூக்கம் தான் வரும். அதான்” என்று சமாளித்தான்.
கோவிந்தன் எதுவும் புரியாமல் கமுக்கமான சிரிப்பை உதிர்த்துவிட்டு, “எனக்கு இப்பவே தூக்கம் வருது” என்றான். அது நிஜம்தான். அவன் வேல்சாமியை விட இருமடங்கு இடலி சாப்பிடடிருக்கின்றான். அப்படியும் பசியடங்காத கோவிந்தன் இன்னும் இடலி சாப்பிட நினைத்தபோது வேல்சாமி இலையை மூடி எழுந்தேவிடடான். அதைத் தொடர்ந்து கோவிந்தனும் எழுந்துவிடடான். வேல்சாமியால்தான் இந்த ஐயர் வீடடு சாப் பாடு. அவனை மீற முடியுமா?
ஐயர் மெதுவாகச் சாப்பிடடுக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் மெதுவாகத்தான் சாப்பிடுவார். குடலுக்கு வேலை கொடுக்காமல் சாப்பிடும் போதே நன்றாக மென்றுதான் உள்ளே அனுப்புவார்.
வேல்சாமி வீடடுக்கு வெளியே நின்றான். “என்ன ரோசணை?” கோவிந்தன் மெல்லிய குரலில் கேட. u-пот.
“ஒண்ணுமில்ல." “ஒண்ணுமில்லியா? அவசர அவசரமாச் சாப்புடடும் சாப் பிடாமலும் எழும்பின. அப்பவே ஏதோ இருக்குன்ணு நெனைச் சேன். நீ இல்லேன நா. நம்புவனா?”
வேல்சாமி மிக மெதுவாகச் சொன்னான். “நாங்க சாப் புடலே வந்த அம்பி ஒருமாதிரி. மத்த ஆள்களப் பிடிக்காது. அதான் அவசரமா சாப்புடடு வந்துடடேன்.”
அப்போது மிக மெல்லிய குரலில் கோவிந்தன் கேடடான். "ஆமா அய்யர் மகனுக்கு யார் ரத்தம் குடுத்தது?”

மூலஸ்தானம்
வேல்சாமி அவனை முறைத்துப் பார்த்தான்.
‘எந்த நேரத்தில் இவன் எதைக் கேடகின்றான்?
மீனாடி.சி மறுபடியும் அம்பியை சாப்பிடச் சொன்னபோது மறுத்து விடடான்.
“சொல்ரேணு கோவிக்காதேள் மாமி. கண்ட கண்டவா எல்லாம் நம்ம ஆத்துக்கு வரக்கூடாது. ஐயர் ஆமெல்லாம் கோயில் மாதிரி. கோயில் கர்ப்பகிரகத்துக்கு நாம மடடும் போற மாதிரி நம்ம ஆத்தில நாம மடடும்தான் சாப்புடனும். மத்தவாள்ளாம் திண்ணையோட நிற்கணும்!”
ஐயருக்குக் கோபம் வந்தது.
“என்ன பேசுரேன்னு தெரிஞ்சுண்டு பேசு அம்பி.”
“மாமா! வேதம் படிச்ச உங்களுக்கு நான் சொல்ல வேண் டியதில்ல. பிராமணன் பிராமணன் மாதிரி இருக்கணும். நம்ம ஆத்தில கண்டவாள்ளாம் வரக்கூடாது. நிங்க என்னன்னா ஆத்துக்குள்ள யார் யாருக்கோ இலை போட்டடு இடலி போடு ரேள். நிங்க குடிக்கிர டம்ளரிலேயே குடிக்க குடுக்கரேள். என்னால இதைச் சகிக்க முடியல்ல.”
ஐயர் சாப்பிடுவதை நிறுத்திக் கையைக் கழுவிவிடடுப் பேசினார். “பிராமணனைப் பத்தி நீ பேசுரயா? யார் பிரா மணன்? வேதம் படிச்சிண்டு பூனூல் போடடுண்டு பணத்துக் காக எத்தனையோ பிராமணன் பகவானையே விக்கிறான். ஒரு பிராமணன் கடமை என்ன? தெரியுமா உனக்கு? வேதத்தை யும் புராணத்தையும் வளர்க்கிறதும் பாதுகாக்கிறதும். எத்தனை பேர் இதை செய்யிரா?. வெறுமனே பூனூல் போட்டடுண்டா அவன் பிராமணனா?. பிராமணன்னு சொல்லிண்டு பூனூல் போட்டடுண்டு பணத்துக்காக எல்லா தொழிலயும் தொடடுபட டான். அப்பறம் என்னடா தீடடு? உன் அக்கா புருஷன் மெட. ராசில என்ன செய்யிரான்? சினிமாவுல நடிக்க வைக்கிரேணு அழகான பொண்ணுகள கூட்டடிகிடடு போறான். இது பிராம ணன் செய்யிற வேலயா? பிராமணன்னா வேதத்த படிக்கணும்.
89

Page 47
D மாத்தளைசோமு
சத்தியமா நடக்கணும். மத்தவா வாழ பாடுபடனும். லோக சேமத்துக்குத் தொண்டு செய்யனும். நீயே இப்ப பகவான் சேவைக்கா இங்க வந்த? சிவராத்திரிக்கு உன்ன கூப்பிடடதுக்கு, துறையூர்ல செடடியார் கூப்பிடுரார். வேடடி, சடட கொடுப் பாங்க. பணம் தருவாங்கன்னு எழுதின. என்னைக்குப் பணத்த பத்திச் சிந்திச்சியோ அன்னைக்கே நீ பிராமணன் இல்ல. இப்ப பிராமணன் எல்லாம் பூனூல் போடடுண்டு பிராமணன் மாதிரியா இருக்கான். அவன் தேகத்துக்குள்ள எல்லாரும் குடி யிருக்கா. நீ என்னமோ பிராமணனப் பத்தியும் வேதத்தைப் பத்தியும் பேசுர. கலிகாலம். கலிகாலம்.”
மூச்சு விடாமல் ஒரு நீண்ட பேச்சை உதிர்த்தார் ஐயர். மீனாட்டசி பயந்து போனாள். அவர் இப்படிப் பேசியதை வேல் சாமி கூடக் கேட்டடதில்லை.
அம்பி பேச்சு மூச்சு இல்லாதவனாக நின்றான். அப்போது ஐயர் தணிந்த குரலில் சொன்னார், “அம்பி! நீ சொன்ன பிரா மணன் அல்லாத இந்த ரெண்டு பேரும் காசோ பொருளோ கேக்காம வாங்காம இந்த கோயில்ல வேல செய்யரா. வேலன்னு சொல்லக்கூடாது. வேலன்னா சம்பளம் குடுக்கணும். சம்பளம் வாங்கலேன்னா தொண்டுதானே? அவா தொண்டுல பரிசுத்தம் இருக்கு. அவாள்ளாம் பிராமணனா பொறக்க வேண் டியவா, தவறிப் பொறந்துடடா.”
அம்பி பதிலேதும் பேசாமல் அந்த வீடடை விடடு வெளியே போனான். வேல்சாமியின் காப்பி ஆறிப் போய்க் கிடந்தது.
13
"அம்பி கோவிச்சுண்டு போறானே.” மீனாடிசியம்மா ளின் குரல் கலங்கியவாறு வந்தது. அவள் எந்த விஷயத்திலும் அதிகம் பேசமாடடாள். ஒருசில வார்த்தைகள்தான் பேசுவாள்.
ஐயரோ எதற்கும் கவலைப்படவில்லை. தைரியமாகத்தான்

மூலஸ்தானம்
இருந்தார். “அவன் கோவிச்சுண்டு போனா போவபடடுமே! அவன் இல்லேன்னா சிவராத்திரி நடக்காதா?. நான் பொறந்த தில இருந்து சிவராத்திரிய பார்க்கிரேன். ஒரு சிவராத்திரி கூட இந்த காமாட்டசியம்மன் கோயில்ல நின்னு போனதில்ல. மீனாடி.சி உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம ராம் ஆஸ்பத்திரி யில இருந்தபோதுகூட சிவராத்திரி நன்னாதான் நடந்திச்சி. காமாடகியம்மன் யாரையாவது கொண்ணாந்து தருவா.” என்று தைரியமாகப் பேசினார்.
ஐயர் தைரியசாலி. இதற்கு வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளுக்குத் துணிந்து முகம் கொடுத்தவர். ஆனால் வேல்சாமி கோவிந்தன் ஆகியோர் காதுகளில் விழும் விதத்தில் இந்த அம்பி என்ன பேச்சுப் பேசிவிடடான்? அதுதான் அவருக்கு தர்மசங்கடமாகி விட்டடது.
வேல்சாமியை ஆறுதல் படுத்துவது போல் ஐயர் வெளியே போய் அவனைப் பார்த்தார். கண்களில் ஒரு கருணை. அம்பிக் காக மன்னிப்புக் கேட்டபது போன்ற ஒரு தோற்றம் நிழலாடியது.
‘சாமி சிவராத்திரி முடியிற வரைக்கும் நான் எங்காவது போயிடடு வர்ரேன். சிவராத்திரி ஒழுங்கா நடக்கடடும். அவரை அந்த சின்னசாமியைக் கூப்புடுங்க.”
ஐயருக்கு மூக்கின் நுனியில் கோபம். “வேலிசாமி நீயும் போறியா? போ. அப்புறம் திரும்பி வரக்கூடாது. போ!. அந்த அம்பிதான் பைத்தியக்காரத்தனமா சொல்றான்னா நீயேன் போவணும்.?”
வேல்சாமிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தவித் தான். இந்த நேரத்தில் எந்த வார்த்தைகளும் அவனுக்கு உத விக்கு வரவில்லை.
ஐயர் மறுபடியும் பேசினார். “வேல்சாமி! போறவன் போகட்டடும். நீ ஏன் போவனும்? நாம் ரெண்டு பேரும் மனு சாளா இங்க இருக்கிறோம். அந்த அம்பிதான் வெசத்த கொட டின்டு போறான்னா நீயேன் போவணும்? சொல்லு.?”
91

Page 48
0 மாத்தளைசோமு
வேல்சாமி ஐயர் முகத்தைப் பார்த்தான் அப்போதுதான் கேட்டடார். “நீ என்னை புரிஞ்சிண்டது அவ்வள்வுதானா?.” அதற்கு மேல் மெளனிப்பது மனிதனுக்கு அழகாகுமா?. வேல் சாமி சொன்னான். “இந்த வீடடுல தகராறு வரக்கூடாதுன்னு தான் அப்புடி சொன்னேன். அதை பெரூசா எடுத்துக்காதீங்க சாமி.”
ஐயர் அதற்கு மேல் எதுவும் பேசாது வீடடு திண்ணையில் உடகார்ந்தார். மீனாடசி வேல்சாமிக்கும் கோவிந்தனுக் கும் தம்ளர்களில் காபி கொண்டு வந்து கொடுத்தாள். ஆவி பறந் தது. திரும்ப சூடேற்றியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தான் கோவிந்தன். ஐயர் வேல்சாமியை ஒரு உயிராக, இல்லை, ஒரு மனிதனாக மதிக்கின்றார். அதனை இப்போது நேருக்கு நேர் பார்த்தான் அவன்.
ஐயரின் நினைவில் சில காடசிகள். அவர் எங்கோ இருந் தார். ஒரு கனவு காடசியாக விரிந்தது.
“வேல்சாமி! முதல்ல போயி மீசையை வெடடிண்டு குளிச் சிடடு வா.”
“ஏன் சாமி?” “எல்லாம் காரணத்தோடதான். உன்ன நான் பிராமண னாக்கப் போறேன்.”
வேல்சாமிக்குப் பேச்சு வரவில்லை. ‘என்ன சொல்கிறார் இவர்?.
“வேணாம் சாமி? இதெல்லாம் வெசப் பரீட்டசை. நான் நானாக இருந்திடடுப் போறேன். இதெல்லாம் வேணாம்.”
ஐயர் கேடகவில்லை. பேசத் தொடங்கினார். “எது விஷப் பரீடசை? மனசு சுத்தமா சேவை நோக்கோட இருக்கிற நீ பூனூல் போடலாம். அந்த அம்பிப் பய பிராமணன் தான். ஆனா உன்ன ஏன் ஆத்தில வைச்சு சாப்பாடு போட்டடதுக்கு என்ன என்னமோ பேசிட்டடு போறான். மனுசாளுக்கு தான்
பொறந்ததைப் பத்தி - பொறந்த இடத்தப் பத்தி ஒரு கர்வம்

மூலஸ்தானம் D
இருக்கத்தான் வேணும்! ஆனா அடுத்தவா பொறந்தத பத்தி - பொறந்த இடத்தப் பத்தி குறையே சொல்லக் கூடாது. பூமியில இருக்கிற எல்லா மனுசாளும் பிரம்மாவின் படைப்புன்னு வேதம் சொல்லுது. நாம நம்புரோம். அப்புறம் எப்படி ஒரு படைப்ப குறை சொல்ரது? அது பிரம்ம தோஷம் இல்லையா? இந்த பூமியில நான் பிராமணனாம். நீ பிராமணன் இல்லியாம். இது நாம கேக்காமலே வந்தது. இந்த உயிர் தேகத்தில இருக்கிற வரைக்கும்தான் பிராமணன். பிள்ளை. செடடியார். முதலி யார். உயிர் போயிட்டடுதுன்னா யாரா இருந்தாலும் உயிரை ஆத்மாவ ஐயர் ஆத்மா, பிள்ளை ஆத்மா, செட்டியார் ஆத்மா, முதலியார் ஆத்மான்னா சொல்றா? மொத்தத்தில ஆத்மா தான். ஆனா இந்த மனுசாள்தான் பிரிச்சிப் பிரிச்சி பார்த்து பிரிஞ்சி நிக்கிரோம்.
வானத்தில் இருந்து மழை பெய்யிரது. அது கங்கையில விழுந்தா கங்கா ஜலம். காவரியில விழுந்தா காவிரி ஜலம். குளத்தில விழுந்தா குளத்துத் தண்ணிர். குடடையில விழுந்தா குடடைத் தண்ணிர். ஏன் தலையில விழுந்தா மழைத் தண் ணிர். அது மாதிரிதான் மனுசாளும். நீ நெனைக்கிற மாதிரி பிராமணன் உசந்த சாதி இல்ல. ஆனா அவனுக்குன்னு சில கடமை இருக்கு. பகவானுக்குத் தொண்டு செய்யிறதும் வேதத்த பாதுகாக்கிரதும் சத்தியமாக நடக்கிறதும் சுத்த பிராமணன் கடமை. அடையாளம். அவன்தான் பூனூல் போடணும். இங்க பூனூல் போடுரது ஒரு அடையாளமா வைச்சிக்குட்டடா. வேதத்தோடயும் பகவானோடயும் சத்தியத் தோடயும் தொடர்பு இல்லாதவன் எப்படிப் பிராமணனா இருக்க முடியும்? உனக்கு பகவானோட தொடர்பு இருக்கு. சத்தியம் தெரியும். வேதம் தெரியாம போனாலும் வேதத்தப் பாதுகாக்க எனக்கு ஒத்தாசையா இருக்க. இப்ப சொல்லு. நீ என் பூனூல் போடக் கூடாது?.”
இந்த உலகத்திற்கே ஒரு லடசியத்தை உரத்த சொல்பவ ராக ஐயர் முழங்கினார். வேல்சாமிக்கு அவர் பேசியதாக
93

Page 49
p மாத்தளைசோமு
உணரவில்லை. அவருள்ளே இருந்து எவரோ பேசியதாகவே உணர்ந்தான்.
“வேல்சாமி பாரதியை உனக்குத் தெரியுமா? பாரதி ஒரு கவிஞன். மகாகவி’ என்று ஐயர் வேல்சாமியைப் பார்த்துக் கேட்டடார். வேல்சாமிக்கு பாரதியைத் தெரியாது. அவன் பள் ளிக்கு நிழலுக்காகக் கூடப் போனதில்லை. ஒரு வாத்தியாரின் திண்ணையில் அரிச்சுவடி மடடும் படித்தான். அதற்கு மேல் ஆடு மேய்ப்பதுதான் படிப்பாகவும் தொழிலாகவும் இருந்தது. ஆடடைப் பற்றிக் கேட்டடால் அற்புதமாகப் பேசுவான்.
வேல்சாமி தெரியாது என்பது போல் தலையசைத்தான். ஐயர் அதனைப் புரிந்து கொண்டு சொன்னார்.
“பாரதி ஒரு கவிஞன். பாடடு எழுதிறவன். அவனும் ஒரு பிராமணன். ஆனா சாதியை வெறுத்தவன். மீசை வைச்சவன். அவன் ஒரு ஹரிசனனுக்குப் பூனூல் போட்டுப் பார்த்தான். நான் உனக்குப் போடடுப் பார்த்தா என்ன? உன் கிடட நேர்மை இருக்கு. காசு பணத்தைப் பார்க்காம உழைக்கிற மனசு உன் கிட்டட இருக்கு. நீ பூனூல் போட்டா என்ன?.”
கோவிந்தன் முகத்தில புன்னகை பூத்து உதிர்ந்தது. “சாமி! நான் சொல்ரேன்னு கோவிச்சுக்காதீங்க. நீங்க எனக்கு பூனூல் போடலாம். ஆனா இந்த ஊர் ஏத்துக்குமா? எங்க சாதிக்காரனுகளே சண்டைக்கு வருவானுகளே. மத்த சாதிக் காரங்க ஓங்களோட சண்டைக்கு வருவாங்க. மொத்தத்தில நம்ம ரெண்டு பேரை இந்த ஊரே ஒதுக்கும். இந்த ஊரை ஒதுக்கிடடு நாம என்ன செய்ய முடியும்? ஊரைப் பகைச்சா வேரோட கெடடுப் போக வேண்டியதுதான். நானும் நீங்களும் பேசி என்னத்துக்குச் சாமி ஆகப் போவுது?”
எவ்வளவ தீர்க்கமான வார்த்தைகள். அதில் பொய்யோ பூசி மெழுகலோ இல்லை. இந்த நிகழ்கால உலகத்தைக் காட டும் தரிசனங்கள். இவனுக்குத் தெரிந்ததுகூட எனக்குத் தெரியா மல் போய் விடடதே. என ஐயர் மயங்கி நின்றார். அரிச்சுவடி

மூலஸ்தானம் 0
எழுத்துக்களின் அறிமுகம்தான் அவனக்கு உண்டு. ஆனால் ஆடு மேய்ப்பதில் பல்கலைக்கழக அனுபவம் உண்டு. இப்போது அவனைப் பார்க்கிறபோது ஆடு மடடும்தான் மேய்த்தானா? கூடவே படித்துக் கொண்டானா? என்ற கேள்விகள் உயர்ந்து நின்று தெரிந்தன.
“சிவராத்திரிக்கு வேற அய்யரைக் கூப்புடனும். யாரைக் கூப்புடப் போறிங்க” என்று கேடட வேல்சாமியை உற்றுப் பார்த்தார் ஐயர். பிறகு சொன்னார்.
“வேலு புலிவலத்திற்கு இப்பவே போயி ஸ்கூலுக்குத் தெக்க இருக்கிற சிவன் கோயில் சுப்ரமணிய அய்யர் அப்பாவ நான் சிவராத்திரிக்கு வரச் சொன்னதாச் சொல்லு.”
வேல்சாமி அப்போதே வாடகைச் சைக்கிள் எடுத்துக் கொண்டு புலிவலத்திற்குப் புறப்படடான்.
கோவிந்தன் மெல்லமாய்ச் சிரித்து விடடுக் கேட்டடான். “ஏன் சாமி? அவரைச் வரச் சொல்றீங்க. அவருக்குக் காது கொஞ்சம் கேக்காதே?”
“காது கேக்கலேன்னா என்னா? எனக்கு உதவியா இருந்தா போதும்.” ஐயரின் பதிலைக் கேட்டடு கோவிந்தன் உரத்துச் சிரித்தான். அவனுடைய வழக்கமான சிரிப்பு வந்து விடடது.
14
ஒமாந்தூர் காமாடகியம்மன் கோயிலைச் சுற்றி நீளமான மதில் உண்டு. கோயிலின் உள்ளே போக நான்கு பாதைகள் இருந்தபோதும் ராஜகோபுர வாசலோடு இருக்கிற பெரிய வாசல் வழியாகத்தான் மக்கள் உள்ளே போவார்கள். கோயில் மூலஸ்தானத்துக்குப் பின்னால் இருக்கிற பாதை அவ்வப் போது திறந்திருக்கும். மற்ற பாதைகள் மூடியே கிடக்கும். கோயிலின் முன்பாக பெரிய மைதானம் அகன்று நீண்டு கிடக்கிறது. அந்த மைதானத்தின் ஒரு பகுதியோடு வண்டிப்
95

Page 50
D மாத்தளைசோமு
பாதை. அந்த வண்டிப் பாதையையும் அந்த மைதானத்தையும் பிரிக்கிற எல்லையாக ஒரு அரசமரம். மிகப் பெரிய மரம். அதன் வயது எவருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் இப்போது ஊரில் இல்லை. அந்த அரசமரத்தின் அடிப் பகுதியைச் சுற்றி கற்களால் வட்டட வடிவத்தில் ஒரு பீடம் கட்டடியிருக்கிறார்கள். ஏதோ ஒரு நோக்கத்திற்காக அது கட்டடப்படடது. ஆனால் இன்று அந்தப் பீடம் பஸ் வண்டிக்காகக் காத்திருக்கிற பயணி கள் உடகாரவும் தூங்கவும் பயன்படுகின்றது. அரசமரத்தின் இடதுபுறமாக வண்டிப் பாதையை ஒடடித்தான் நாடார் கடை இருக்கின்றது.
அந்த நாடார் கடை காமாட்டசியம்மன் கோயிலைப் போல் பிரசித்தி பெற்றது. வெள்ளைக்காரன் இந்தியாவில் ஆடசி புரிந்த போது திறக்கப்படட அந்த நாடார் கடை இன்னும் அதே பெயருடன் அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலியில் இருந்து வந்த ஒரு நாடார்தான் இந்தக் கடையை முதன் முதலில் திறந்தார். இன்று இந்தக்கடைச் சொந்தக்காரர் எவரோ? சுதந்திரத்திற்குப் பிறகு கடையை வேறு ஒருத்தருக்கு கொடுத்து விடடு நாடார் திருநெல்வேலி போய் விடடார். பிறகுதான் தெரிந்தது அவர் வெள்ளைக்காரப் போலீசாரால் தேடப்படட ஒரு சுதந்திரப் போராடடத் தீவிரவாதி.
நாடாரிடம் இருந்து கைமாறிய அந்தக் கடை இன்று பலரிடம் கைமாறி விடடது. ஆனால் நாடார் கடை என்ற பெயர் மாறவே இல்லை. இந்த நாடார் கடையில் தாய் தந்தையரைத் தவிர எதையும் வாங்கலாம் என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கை. எதைக் கேட்டடாலும் இல்லை யென்ற சொல் வராது. இந்தக் கடையை நம்பிப் பத்துப் பன்னிரண்டு கிராமத்து மக்கள் அவ்வப்போது வருவார்கள். இந்த நாடார் கடையாலும் காமாடிசியம்மன் கோயிலாலும் அந்தத் கிராமத்தவர்கள் உயர்ந்து போயிருக்கிறார்கள். மற்ற கிராமத்தவர்கள் ஒமாந்தூர் காரனைக் கண்டால் உடனே
அவனுக்கு கிரீடம் சூடடிவிடுவார்கள்.

மூலஸ்தானம்
“உனக்கென்னப்பா நீ ஒமாந்துார்க்காரன். காமாச்சி கோயி லும் நாடார் கடையும் இருக்குது. உன்ன அசைக்க (Մ)ւգսլԲT?..."
அந்த நாடார்’ கடை தினமும் சூரியன் கிழக்குத் திசை வருவதற்கு முன்பே திறக்கப்படடுவிடும். திருச்சியில் இருந்து ஓமாந்தூர் வழியாகத் துறையூர் போகும் முதல் பஸ் வண்டி அன்றைய நாளிதழ்களைப் போடடுவிடடுப் போகும். பேப்பர் கடடைப் பிரித்துவிடடால் நாடார் கடை வர்த்தகம் தொடங்கி விடடது என்று அர்த்தம். சூரியனுக்குக் கூட ஓய்வு உண்டு. ஆனால் இந்த நாடார் கடைக்கு ஓய்வு இரவு பத்து மணிக்கு மேல்தான். கடைசிப் பேருந்து திருச்சியில் இருந்து துறையூர் போகும் அது போனதற்குப் பிறகுதான் கடை மூடப்படும்.
“சாமீ! நாடார் கடை வரைக்கும் போயிட்டடு வாரேன்.” வேல்சாமி புலி வலத்திற்குப் போன கொஞ்ச நேரத்தில் ஐயரிடம் சொல்லிவிடடு வீதியில் நடந்தான் கோவிந்தன்.
அவனுக்கு இரண்டு விஷயத்தில் அவசரம்; ஒன்று அன் றைய நாளிதழ் பார்க்க வேண்டும். மற்றது வெற்றிலை பாக்கு வாங்க வேண்டும். அவனால் பேப்பர் படிக்க முடியாது. ஆனா, ஆவன்னாவோ தெரியாது. ஆனால் பேப்பரை எடுத்துக் கடைக்காரரிடம் அல்லது வருபவரிடம் கொடுத்து ‘நியூஸ் என்ன? என்று கேடபான். கடைக்காரருக்கு நேரம் சரியாக இருந்தால் பேப்பரைப் பார்த்துச் செல்வார். இல்லாவிடடால் ‘கோவிக் காதே கோவி! இப்ப நேரமில்ல. என்று சொல்லிவிடுவார். அனேகமாக கோவிந்தனோடு கோவிக்கமாடடார். கோவிந் தன் கடைக்கு வரும்போது சிரித்துக்கொண்டே வருவான். கட டாயம் வெற்றிலை பாக்கு வாங்குவான். இந்தக் காலத்தில் இந்த இரண்டையும் எவன் செய்கின்றான்? விலைவாசியை நினைத்தால் எவனுக்குச் சிரிப்பு வரும்?
“என்னா நாடார்! யோசிக்கிராப்புல இருக்கு. சிவராத்திரி வருது. உசாரா இருங்க. நல்லா யாவாரத்தப் பாருங்க.”
நாடார் கடை' என்பதால் அந்தக் கடையை நடத்துகிறவர் பலருக்கு நாடாராகி விடடார்.
97

Page 51
0 மாத்தளைசோமு
கோவிந்தனின் வார்த்தைகளோடு சிரிப்பும் வந்தது.
அவன் சிரிப்பை ரசித்த கடைக்காரர் “கோவிந்தா! நீ தான் மனுசன்” என்றார்.
“ஏன்?” என்ற கோவிந்தன் மறுபடியும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு அதிர்வலை தெரிந்தது.
“இந்த ஊருல எவன் உன்ன மாதிரி சில்லறைக் காசை கொடடினமாதிரி சுத்தமா சிரிக்கிறான்? அவனவன் சிரிக்கக் காசு கேக்கிரானுக. ஆனா நீ எப்பவும் சிரிச்சிக்கிடடிருக்கே. இது மனுசனாலதான் முடியும். நீ மனுசன்.”
கடைக்காரரின் புகழ்ச்சியில் கோவிந்தன் உள்ளுர மகிழ்ச்சி யடைந்தான். பிறகு மெதுவாகப் பேசினான். “எனக்கும் கண்ணா லம் கட்டணும். புள்ள குடடி பெத்துக்கணும்னு ஆசை இருந் திச்சி. ஆனா எவளும் நம்மள என்னான்னு பார்க்கலயே இப்ப அந்த நெனைப்பே இல்ல.”
“நெசமாவா சொல்ர.?”
G s
SALDstகடைக்காரர் மெல்லிய குரலில் கேட்டடார். “அப்ப உனக்கு
99
பொம்பள ஆசயே இல்லியா?.
s
“நாடார் ஐயா இந்தக் குசும்புதானே வேணாங்கிறரது. என்று சொன்ன கோவிந்தன் ஒரு சிரிப்புச் சிரித்தான். வெற் றிலைச் சாறு காவியாய்ப் படிந்துபோன பற்களைக் காடடி முகமெல்லாம் ஒரு வெளிச்சம் பரவியது போல் சிரித்தான். கள்ளங் கபடமில்லாத சிரிப்பு. மனசு சுத்தமானது என்பதை அடையாளப்படுத்தும் சிரிப்பு. மனிதன் நாகரிகமானவன் என்ப தைச் சொல்வதுதான் இந்தச் சிரிப்பு. ஆனால் இந்த மனிதர்கள் தாங்கள் நாகரீகமானவர்கள் என்பதற்கு மடடும் தானா சிரிக் கின்றார்கள். சிலரை ஏமாற்றவும், வஞ்சிக்கவும் இந்த சிரிப்பை அல்லவா மூலதனமாகப் பயன்படுத்துகின்றார்கள்.
கடைக்காரர் கோவிந்தனின் சிரிப்பில் ஒரு விநாடி தன்
கவலையெல்லாம் மறந்து போனார்.

மூலஸ்தானம் (
“வெத்தல பாக்குக் கொடுங்க” என்றவாறு கோவிந்தன் சில்லறைக் காசைக் கொடுத்தான்.
“வெற்றிலை பாக்கு கைக்கு வந்ததும், நியூஸ் என்னான்னு சொல்லுங்க.”
பேப்பரைட் பார்க்காமலே கடைக்காரர் சொன்னார். “நியூஸ் என்னா? சடடசபையில அடிதடியாம். ஒரு எம்.எல். ஏ.க்கு காயமாம். வட இந்தியாவுல இந்து முஸ்லிம் கலவரமாம். விலைவாசியை அரசாங்கம் குறைக்குமாம். இதுதான் இன் னைக்கி நியூஸ்.”
“சரி நா. வாரேன். காமாடகியம்மன் கோயில்ல வேல. சிவராத்திரி வேல.”
“எந்த காமாடசியம்மன் கோயில்ல.?”
“பெரிய காமாடசியம்மன் கோயில்ல.?”
“வேல்சாமியோடயா?”
“ஆமாம்.” என்ற கோவிந்தன் தெருவில் நடந்தான். அவனை எதிர்கொண்டதுபோல் கோணங்கி வந்தான்.
கோவிந்தனைக் கண்டதும் கோணங்கி முகத்தில் புன்
GGHES -
“சிரிப்பூ என்ன சிரிப்பூ. ஆளையே காணாமே!”
கோவிந்தன் பேசவில்லை. சிரித்தான்.
“ஏன் சிரிக்கிற?”
"அப்புறம் என்ன! உன் கண் முன்னாலேதான் இருக்கேன். ஆளையே காணாம்னு சொல்றியே!”
கோணங்கி சத்தம் போடடுச் சிரித்தான். “சிரிப்பு என்ன சிரிக்க வைச்சிடடியே!”
கோவிந்தன் நடந்தான்.
கோணங்கி நாடார் கடையில் கோழி முடடை ஆறும், வறுத்த காரமான நிலக்கடலை பாக்கெட.டும் வாங்கினான்.
அது ஏன் என்பது கடைக்காரருக்குத் தெரியும்.
99

Page 52
மாத்தளைசோமு
“என்ன கோணங்கி! பூசயக் கார்த்தாலயே தொடங்கி
9 யாச்சா?
“இல்ல. இது சாயந்திரத்துக்கு.” “சரி. கோணங்கி சிவராத்திரி வருது பார்த்து குடி. சும்மா கெடைக்குதுன்னு குடியில குளிக்காதே’ கோணங்கி பதிலேதும் சொல்லாமல் சாய்ந்து சாய்ந்து நடந்தான்.
அந்தச் சிறிய மேஜையில் 'மது தீர்த்தம் நடக்கப் போகிற அறிகுறியாய் மூன்று தடடுகளில் அவித்த முட்டை, ஆம் லட, வறுத்த நிலக்கடலை, பொறித்த கோழிக்கால் எல்லாம் இருந் தன. சிவப்பு லேபிள் ஜானிவாக்கர் புத்தம் புதியதாய் இருந்தது.
கோணங்கி யோசித்தவாறு நின்று கொண்டிருந்தான். மருதை ஏற்கனவே வாயை நனைத்து விடடு நிலக்கடலை கொறித்துக் கொண்டிருந்தான்.
“நாளைக்கி சிவராத்திரி. இன்னைக்குமா?” என்று இழுத் தான் கோணங்கி. கடவுள்மேல் அவனுக்கு பயம் இருந்தது.
“உனக்கும் எனக்கும் என்னடா சிவராத்திரி? டேய்! கோணங்கி. தீர்த்தம் எடுத்துக்க.”
கோணங்கி யோசித்தான். நாக்கு நனைய ஆசை காடடி யது. மனம் வேண்டாம் என்றது. முடிவில் வென்றது நாக்கு.
கோணங்கி வாயை நனைத்து விட்டடு பொறித்த முட டை யைச் சாப்பிட்டடபோது மருதை அவன் அருகில் வந்து அவன் முதுகைத் தடவியவாறு சொன்னான்.
“கோணங்கி! நீயும் நானும் ஒரு சாதி. நல்லா குடி. சாப் புடு. பொறிச்ச கோழி எடுத்துக்க.. கடி. ஆனா நாளைக்கி எனக்காக ஒரு வேல செய்யனும். சின்ன வேல. உன்னாலதான்
முடியும். செய்வியா?”
கோணங்கி என்ன என்பதாய் விழித்தபோது ஒரு கிளாஸில் விஸ்கியை ஊற்றி அவனிடம் கொடுத்துக் குடிக்கச் சொல்லிக் குடித்ததும் மெள்ளமாய் காதில் சொன்னான். மருதை.
0 1 oo

மூலஸ்தானம்
“பூ இதுதானா? கரெக்டா செஞ்சிர்ரேன்.” என்று சிரித் தான் கோணங்கி. அவன் முகத்தில் விஸ்கியின் நிறம் மிதந்தது.
15
2ேெர தூங்கிக் கொண்டிருந்தது. புலிவலம் சினிமா கொட டகையில் கடைசி காடசி முடிந்து போகிற சைக்கிள்கள் கூடப் போய் விட்டடன. தெருநாய்களின் சத்ததைக்கூட காணோம். ஒரு பரிபூரண அமைதி. மாசி மாதப் பணி தெருவெல்லாம் விரிந்தது. அந்த நேரத்தில் வானம் விழித்துக் கொண்டு தண் னிரைக் கொடடத் தொடங்கியது. ஆம். இடி முழக்கத்துடன் மின்னல் வெபடடி மழை பெய்தது. திண்ணையில் படுத்தவர்கள் மழைத் தண்ணில் நனைந்ததும் பதறியடித்துப் படுக்கை யைச் சுருடடிக் கொண்டு வீடடிற்குள்ளே ஓடினார்கள். அவர் களுக்கு மடடும்தான் தெரியும் மழை பெய்வது. வீட்டினுள்ளே படுத்திருந்தவர்கள் நல்ல தூக்கம். மழை பெய்வது தெரிய வாய்ப்பில்லை.
ஒரு மணி நேரம் மழை பெய்தது. ஒமாந்தூர் தெருவெல் லாம் தண்ணிர் ஓடியது. கோயிலைச் சுற்றிச் செந்நிறமாக ஓடிய தண்ணீர் ஆங்காங்கே குழிகளில் தேங்கிக் கொண்டது. இயற்கை மனிதனுக்கு அவ்வப்போது செல்வங்களைக் கொடுக்கின்றது. ஆனால் இந்த மனிதனுக்குத்தான் அதனைப் பயன்படுத்துகிற அறிவு இல்லாமல் போய் விட்டடது. இங்கே அவ்வப்போது வானம் பொழியும் இந்த மழைச் செல்வத்தைச் சேமிக்க இந்த மனி தனுக்குத் தெரியவில்லை. தெருவெங்கும் வாய்க்கால் இருந்து அவையெல்லாம் ஓரிடத்தில் இணைந்தால் எவ்வளவோ தண் னிரை சேமிக்க முடியும்?
விடிந்ததும் ‘சிவராத்திரிக்காக ஊரையே கழுவி வெச்ச மாதிரி ராத்திரி மழை பெஞ்சிருக்கே! காமாடகியம்மன் சக்திய பார்த்தீங்களா?’ என்று ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொள்
வார்கள்.
1 Ο1 π.

Page 53
மாத்தளைசோமு
கோயிலின் கோபுர வாசலிலும் ஏனைய வாசல்களிலும் சிவராத்திரிக்காக வாழைக்குலையுடன் உயரமான வாழை மரங் கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவைகள் மழையில் நனைந்து பச்சை நிறமாய்ச் சிரித்தன. கோயில் மதில் சுவர்களின் மேலே கயிறு கட்டடி மாவிலைத் தோரணங்கள் ஏற்றப்படடிருந்தன. எப்போதோ ஒரு உபயக்காரர் பெயர் பொறித்துக் கொடுத்த காமாடடசியம்ம னின் ஒவியத் தடடியை கோயிலின் முகப்பு கோபுரத்தோடு வைத்திருந்தார்கள். அந்த ஓவியத்தைச் சுற்றி இரவில் கண் சிமிடட மின் விளக்குகள். அதற்குமேல் அந்த கோயில் நிர் வாகம் எந்த அலங்காரமும் செய்யவில்லை. நிர்வாகத்திற்கு வசூலில்தான் குறி. ஆண்டுதோறும் சிவராத்திரிக்காக கோயில் சுவர்களை வெள்ளையாக்குவதுதான் நிர்வாகத்தின் பெரிய திருப்பணி. இதற்குமேல் சேரும் சில்லறைகள் என்ன ஆகின்றன என்பது காமாடகியம்மனுக்கே வெளிச்சம்.
ஊரில் கோயிலுக்கு எதிர்கோஸ்டி உண்டு. கீரைக்கடைக்கு எதிர்க்கடை இருக்கும்போது கோயிலுக்கு எதிர்கோஸ்டி இருக் காதா என்ன? ஆனால் அந்தக் கோஸ்டி ஆங்காங்கே காமாடடசி பேரைச் சொல்லி நிர்வாகி கொள்ளை அடிக்கிறான் என்று பேசுவதோடு நின்று விடடடது. கோயில் நிர்வாகியின் பண, அரசியல் பலத்தோடு போடடி போட முடியாமல் வெறுமனே பேசித் தீர்த்துக் கொள்கிறது. அந்தக் கோஸ்டி இந்த இரண்டு கோஸ்டிகளையும் ஊரிலேயே பார்க்கலாம். நிர்வாகத்தை ஆதரிக்கிற, அதனால் லாபம் அடைகிற கோஸ்டியினர் தங்கள் வீடு வாசல்களை வர்ழைமரத் தோரணங்களால் ஜொலிக்க வைத்தார்கள். மற்ற கோஸ்டி காமாட்டசியம்மனுக்குப் பயந்து மாவிலைத் தோரணங்களால் அலங்காரம் செய்திருந்தது. இந்த இரண்டிலும் சேராதவர்கள் தங்கள் வீடடுத் திண்ணை களை கடைபோட வாடகைக்கு விடடிருக்கிறார்கள். அதனால் இரண்டு லாபம் அவர்களுக்கு. வாடகையும் கிடைக்கிறது. வீடடை அலங்காரம் செய்யும் பொறுப்பு கடைக்காரருக்குப்
போகிறது.
102

மூலஸ்தானம் L)
திருவிழாக் காலத்தில் காமாடகியம்மன் கோயிலின் அருகே உள்ள வீடடுத் திண்ணைகளுக்கு கிராக்கி உண்டு. ஒருநாள் பொழுதுக்கு கடை வைப்பது என்றாலும் வாடகை கேட்டடது கிடைக்கும். திண்ணைகள் போக ரோட்டடோரத்திலும் கடை கள் உண்டு. இந்தத் திண்ணைகளையும் ரோட்டடோரத்தையும் பிடிப்பதற்கு இரண்டு நாடகளுக்கு முன்னரே வியாபாரிகளின் பிரதிநிதிகள் வந்து விடுவார்கள். சிலர் கடிதம் மடடும் எழுதியே காரியம் சாதிப்பவர்களும் உண்டு. வெளியூர் வியாபாரிகள் கடை போடுவது உள்ளூர் நிரந்தர வியாபாரிகளுக்கு எரிச்சல். இங்க வருசக்கணக்கா யாபாரம் இல்லாம காயிரோம். திருவிழா காலத்திலதான் நாலு காசு தேடலாம். அதையும் கெடுக்க வந்திரானுகளே இந்த நாடோடிப் பயல்கள். என்று உள்ளூர் வர்த்தகர்கள் குமுறுவார்கள். யார் எங்கே கடை போடடாலும் ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கொண்டாட்டடம். கண்ணில் எண் னெய் ஊற்றிக்கொண்டு வரி வசூலிக்கும் சிலரை பஞ்சாயத்து நியமத்திருக்கிறது. ஞாபக சக்தியில் கம்யூ உடர் இவர்களிடம் பாடம் கேடகும். கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரி கள், திண்ணைக் கடைக்காரர்கள், தூக்கு வியாபாரிகள், சைக் கிளில் வர்த்தகம் செய்பவர்கள், மாட்டடு வண்டி வர்த்தகர்கள் என்று எவரையும் எதனையும் விட மாடடார்கள். பலூன் விற் கிறவன், மிடடாய் விற்கிறவன் எல்லாம் அழுதழுது காசைக் கொடுப்பார்கள். எது எப்படிப் போனாலும் இந்த வியாபாரிகள் இல்லாமல் திருவிழாவா என்ன!
திருச்சியிலிருந்து முதல் பேருந்து ஓமாந்துர் வந்தபோது அதிகாலை நாலரை மணியிருக்கும். துறையூரிலிருந்து பேருந்து வந்போது மணி ஐந்தாகிவிடடது. அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் இனிமேல்தான் வருவார்கள். ஏற்கனவே மக்கள் பல ஊர் களிலிருந்தும் கூடடம் கூட்டடமாக வந்துவிடடார்கள். உறவினர் களை நம்பி வந்தவர்கள் உறவினர்கள் வீடடுக்குள் முடங்கினார் கள். எவரையும் தெரியாதவர்கள், காமாடகியம்மனை மடடும் தெரிந்தவர்கள் ஆங்காங்கே வீடடுத் திண்ணைகளில், கோயில்
1 O3

Page 54
D மாத்தளைசோமு
கல்யாண சத்திரத்தில் தங்கி இருந்தார்கள். வருடா வருடம் சிவராத்திரிக்காகப் புதுக்கோடடை, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து மாட்டடு வண்டியில் குடும்பம் சகிதமாக, குழு குழுவாக வந்தவர் கள் கோயிலுக்குப் பின்னால் இருக்கிற கோயிலுக்குக்குச் சொந்தமான தோட்டடத்தில் முகாம் இடடிருந்தார்கள். கோயில் நிர்வாகம் அவர்களுக்குக் காடடும் சலுகைக்குக் காரணம் இல் லாமலா இருக்கும்? உண்மையான சிவராத்திரி பக்தர்கள் இவர் கள்தான். அவர்கள் சாமி கும்பிடுவதற்காக நிறையச் செலவு செய்வார்கள். குழந்தைகளுக்கு மொடடை போடுவார்கள். காது குத்துவார்கள். நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்வதற்காக ஆடடுக்கடாவைப் பூசாரிடம் கொடுப்பார்கள். இங்கு வரும் இந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் சில ஆயிரத்தை காமாட்டசி யம்மன் பேரில் செலவு செய்து விடடுத்தான் போவார்கள். பூசாரி யைப் பொறுத்தவரை அவர்கள் பணம் காய்ச்சி மரங்கள்.
‘வேலவெடடி இல்லாம ஊர்ப்பயலுக என்னமும் சொல் லடடும். நம்ம ஆத்தாளுக்கு அள்ளிக்கொட்டட புதுக்கோடடை, மதுரை, தஞ்சாவூர் ஜில்லாவிலிருந்து ஆள்க வருவாங்க என்று தைரியமாகச் சொல்லும் கோயில் நிர்வாகம்.
ஆண்டுக்கு ஒரு சிவராத்திரிதான். அந்தச் சிவராத்திரிக்கு வரும் வருமானமே ஒரு வருடத்திற்குப் போதுமே!
எல்லா ஊர்களிலும் விடிந்ததுபோல் இந்த ஊரிலும் சிவ ராத்திரி விடிந்தது. ஊர் சேவல்களின் கூவல்கள் ஓய்ந்தபோது ஊரில் உள்ள வானொலிகள் ஆங்காங்கே குரலெடுத்துப் பாட, பேசத் தொடங்கின. பேடடரி இல்லாமல் தூங்கிய சிறு ரேடி யோக்களுக்கும் உயிர் கொடுக்கப்படடது. ஆடகள் நடமாடத் தொடங்கினார்கள். இரவு மழை பெய்ததால் வீடடு வாசலில் கோலம் போட முடியாமல் தவித்தார்கள் பெண்கள். வாசல் காயடடும் எனக் காத்திருந்தார்கள். சிவராத்திரிக்காக வந்த மக்களும் மழை பெய்ததால் சிரமப்பட்டார்கள். பக்தர்களை
விட வர்த்தகர்கள் கலங்கிப் போனார்கள். காமாடகியம்மனை
Γ 1O4

மூலஸ்தானம் D
வேண்டினார்கள். ஊரையும் ஏமாற்ற விரும்பாதது போன்று சூரி யனும் அதிகாலையிலேயே தெருவுக்குள் இறங்கினான்.
இரவு மழை பெய்ததால் ஒரு புராணம் - ஒரு காரணம் சொல்வார்கள். சொன்னார்கள். இப்போது வெய்யில் அடிக் கிறதே. விடுவார்களா என்ன?.
‘சனங்க கஷ்டப்படக் கூடாதுன்னு காமாட்டசி சூரியனை இழுத்துக்கிடடு வந்திட்டடா. ராத்திரி மழையில நனைஞ்ச ஊரு இன்னும் கொஞ்ச நேரத்தில காஞ்சிடும்.
ஊர் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் வெய் யில் கொளுத்தியது. வாசல் ஈரமெல்லாம் காய்ந்தது. எல்லோரும் கோலம் போடடார்கள். நேரம் ஆகஆக தெருவில் நடமாட முடியாமல் போனது. அவ்வளவு கூடடம். கோயிலுக்குள்ளே போகப் பெருங்கூடடம். வரிசையில் காத்திருந்தது.
ஊரின் மற்ற கோடியில் இருக்கிற பெரிய காமாடகியம்மன் கோயிலிலும் கூடடம் இருந்தது. ஆனால் கோயிலின் உள்ள போக வரிசையில்லை. காமாட்டசியம்மனைப் பார்க்க வருகிறவர் கள் ஒருநடை பெரிய காமாடகியம்மனைப் பார்க்க வருவார்கள். சிவராத்திரி என்பதால் அங்கும் நான்கு சாம அபிசேகம், பூஜை நடக்கும். ஐயருக்கு உதவியாகப் புலிவலம் சாம்பவசிவக் குருக் கள் வந்திருந்தார்கள். வேல்சாமியும் கோவிந்தனும் கோயிலி லேயே இருந்தார்கள். கோவிந்தன் அடிக்கொருதரம் கோயிலை யும் மல்லிகைத் தோடடத்தையும் சுற்றி வந்தான். வேல்சாமி அதை சொல்லியிருந்தான். மல்லிகைத் தோடடத்தில் சில குடும் பங்கள் ஆங்காங்கே தங்கியிருந்தன. அந்தக் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் மல்லிகைத் தோடடத்தில் அசிங்கம் செய்தவிடக் கூடாதென்பதே வேல்சாமியின் எண்ணம்.
வெய்யில் வெளுத்து வாங்கியது. தெருக்களில் தேங்கியிருந்த தண்ணிரெல்லாம் ஆவியாகிப் போனது.
கோவிந்தன் வேல்சாமியிடம் சொல்லிவிடடு ஊருக்குள் வேடிக்கை பார்க்கக் கிளம்பினான்.
105

Page 55
D மாத்தளைசோமு
16
கோவிந்தன் சிவராத்திரி வேடிக்கையைப் பார்க்க ஊருக் குள் சுற்றி வந்தபோது ஒரு சின்னக் குழந்தையாகவே மாறிப் போயிருந்தான். மனிதனாக இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்காது. ஆனால் கோவிந்தனுக்கு எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பிரச்சனையை எதிர்கொள் ளும்போதுதான் அதற்கான தீர்வைத் தேடுவான் அவன். மற்ற படி அவனுக்கு என்ன பிரச்சனை? குடும்பமா - பிள்ளையா - குட்ட டியா? அவன் வாழ்க்கை எங்கே போகிறது என்றே அவனுக்குத் தெரியாது. விடிகின்றபோது விழிக்கின்றான். இருபடடும்போது தூங்குகின்றான். இதற்குள் அவன் வாழ்க்கை போகின்றது. அவன் வாழ்க்கை விசித்திரமானது. பிரம்மா அவன் வாழ்க் கையை வைத்துத் தான் படைப்புத் தொழிலை எழுதிப் பழகி னாரோ என்ற சந்தேகம் வரும். அவன் பிறந்து அம்மா என்ற போது மலேரியா காய்ச்சலில் அப்பா போய்விடடார். அம்மா முகத்தைப் பார்த்து ஆறுதலடைந்தபோது வயிற்று வலியில் அம்மா போய்விட்டடாள். அனாதை என்று உலகம் சொல்லாமல் இருக்க பாடடிதான் அவனை வளர்த்து வந்தாள். பாடடியோட வளர்ந்தபோதுதான் சிரிக்கக் கற்றான். அந்தச் சிரிப்புதான் அவனை இந்த உலகத்திற்கே ஒரு மனிதனாக அடையாளம்
காடடியது.
கோவிந்தனுக்கு பாடடிதான் மாதா, பிதா, குரு, தெய்வம். இந்தக் கிராமத்தை இந்த ஊரை, இந்த உலகத்தை அடையாளம் காடடினாள். தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடுத்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் சொல்லிக் கொடுத்ததை ‘வேதவாக்கியமாய் எடுத்துக் கொண்டான் அவன்.
மத்தவன பார்த்து கிண்டலா சிரிக்காதே? ஆனா சிரிச்ச
முகமா இரு. அதான் பெரிய செல்வம். இது எத்தன பேருக்கு கெடைக்கும்? பெரிய சொத்து வைச்சிருப்பான். பெரிய வீடு
미 1o6

மூலஸ்தானம் பு
வைச்சிருப்பான். ஆனா அவன் முகத்தில சிரிப்பே வராது. எவன் ஒருத்தன் சிரிக்கலியோ அவன் மனுசனே இல்ல. சிரிச்சுக் கிடடி ருக்கிறவன் கடவுளுக்கு சொந்தக்காரன். நீ சிரி! சிரிச்சிக் கிடடே இரு இதுதான் நான் சொல்லித் தர்ர பெரிய சொத்து.
பாடடியின் அந்த சொத்துதான் இன்றும் அவன் வாழ்க்கை யின் மூலதனம்.
பதினைந்து வயதாய் இருக்கும்போது பாடடி கண்ணை மூடிக் கொண்டாள். அதற்குப் பிறகு எப்படியோ வாழ்க்கையை ஓடடி விடடான்.
இன்று வயது கோவிந்தனுக்கு நாற்பதிருக்கும். அங்கொன் றும் இங்கொன்றுமாய் நரை முடிகள் தலையில் முளைத்து விட்டடன. அதையிடடு அவன் கவலைப்படவே இல்லை. ஆனால் அவ்வப்போது கல்யாணம் செய்துவாழ வேண்டுமென்ற ஆசை மேலோங்கி நிற்கும். ஊரில் நடக்கிற திருமணத்திற்குப் போனால் கல்யாணக் கனவுகள் விஸ்வரூபமாய் மனதில் விரிந்து நிற்கும். அந்தக் கனவுகள் விருந்து சாப்பிடும் போது கரைந்து போகும். காலப்போக்கில் வயதும் போகப்போக அவன் சின்னக் குழந்தை யாகவே மாறிப் போய்விடடான்.
ஓமாந்தூருக்குச் சிறுகுடி, புத்தனாம்பட்டி, எதுமலை ஆகிய ஊர்களிலிருந்து வீதிகள் வருகின்றன. இவைகளில் திருச்சி போவ தானால் சிறுகுடி வழியாகப் போகவேண்டும். புத்தனாம்படடி வழியாக துறையூர் போகலாம். எதுமலைக்கு போனால் திருச்சி துறையூர் மெயின் ரோடடுக்குப் போகலாம். இந்த மூன்று வீதி களும் காமாடகியம்மன் கோயிலைத் தொடடுத்தான் போகும்.
கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் அங்குலம் அங்குல மாய் நகர்ந்துபோன கோவிந்தன் வீதிகளில் கடை விரித்த பகுதி வரைக்கும் போய் வந்தான். எங்கு பார்த்தாலும் எக்கச்சக்கமான கூட் டம். நடக்கவே முடியவில்லை. கோவிந்தன் எப்படியோ அந்தக் கூடடத்துக்குள்ளே நடந்து முட்டி மோதி இடிபடடு வேர்த்து விறுவிறுத்துப் போனான்.
1 O7

Page 56
0 மாத்தளைசோமு
சிவராத்திரிக்காக ஊருக்குள் வந்திருக்கிற எல்லாவற்றை யும் பார்த்துவிடடு கோயிலுக்குத் திரும்பிய கோவிந்தன் வேல் சாமியிடம் தான் பார்த்து வந்ததை அளந்து கொண்டிருந்தான்.
“நா. சின்னப் புள்ளயா இருக்கிறதே நல்லது.” கோவிந் தன் இம்முறை சிரிக்காமல் ஒரு ஏக்கத்தில் பேசினான்.
“ஏன்?” வேல்சாமிதான் கேட்டடான். “சின்னப்புள்ள களப் பாரு.! உன்னாடடம் என்னடடாம் கவலப்படுதா? நேரத்துக்குச் சாப்பாடு. நேரத்துக்குத் தூக்கம். ஒரு கவல இல்ல. திருவிழான்னா ஊரச் சுத்தி சுத்திப் பார்க் கலாம்.”
கோவிந்தன் என்ன சொல்ல வருகிறான் என்று வேல்சாமிக் குப் புரிந்துவிடடடது.
“ஏன் நீ கூடத்தான் இப்ப சுத்தி சுத்திப் பார்த்தியே! வேணும்னா இன்னொரு வாடடி சுத்திடடு வா. யாரு குறுக்க நிக்கிரா?”
“வேல்சாமி! இந்த எடக்கு முடக்குப் பேச்சு தானே வேணாங்கிறது? நான் என்ன சொல்ரேன்னா திருவிழான்னா புள்ளைகளுக்குத்தான் கொண்டாடடம். பெரூசாயிடடா என்னா இருக்கு? மனுசன் பெரூ சாகப் பெரூசாக சிக்கல்தான் சேரும். ஊரைப் போயி சுத்திட்டடு வந்தா புள்ளைக சந்தோஷ மும் பெரிய ஆளுக சந்தோஷமும் எப்படின்னு தெரியும்? ஏன் ரொம்ப தூரம் போவ. ஒனக்கும் எனக்கும் குடும்பம் இல்ல. அதனால சின்னப் புள்ளைக மாதிரி கவலையில்லாம இருக் Sydrit?”
கோவிந்தனின் வார்த்தைகள் வேல்சாமியின் மனதில் எண்ணங்களை கிளறிவிடடன. இந்த கோவிந்தனுக்கு இன்று என்னவாகி விட்டடது. சிரிக்காமல் இருக்கிறான். ஏதேதோ பேசுகின்றான்? அவன் சொன்னதுபோல் குடும்பம் இல்லை. ஆனால் மனதில் குழந்தைகளைப் போல் நிம்மதி இருக்கிறதா என்ன?. ஏதோ ஒன்றுக்காக - ஏதோ ஒன்றை நினைத்து

மூலஸ்தானம் D
எதையோ இழந்து விடடதைப் போன்று ஒரு ஏக்கம் இருக்கத் தான் செய்கிறது. அது என்ன என்பதுதான் புரியவில்லை.
கோவிந்தன் தான் பார்த்ததைச் சொல்லிக் கொண்டிருந் தான். “ரோடெல்லாம் ஒரே கூடடம். எங்கிருந்துதான் இம் புடடுச் சனங்க வந்திச்சோ. நம்ம டீ க்கடையிலயே சரியான கூடடம். நான் வெளியவே நின்னு டீ வாங்கிக் குடிச்சேன். அப்ப தெருவுல ஒரு குடும்பம் போச்சி. அதைப் பார்த்தோன்ன சிரிப்புத் தாங்க முடியல்ல. சிரிச்சிடடேன். கடையில இருந்த வங்க, கடை ஒரமா போனவங்க எல்லாரும் என்னான்னு பார்த் தாங்க. டீ க்கடைக்காரர் மெள்ளமா சிரிப்பூ இன்னைக்குமா சிரிப்புன்னாரு?”
se
"ஆமா. நீ ஏன் சிரிச்ச?.
“தெருவுல ஒரு குடும்பமே மொடடட போடடுகிடடு போச்சி அப்பன், ஆயி, புள்ளைக எல்லாம் மொடட போடடிருந்திச்சி. அது போதாதுன்னு அப்பன் தோள்மேல ஒரு புள்ள. அதுவும் மொடட போடடிருக்கு. அதைப் பார்த்தோன்ன சிரிப்பு வந் திருச்சி. மொடடைக்கு மேல மொடடை.” என்ற கோவிந்தன் அந்தக் காடசியை நேரில் பார்த்தவன் போல ஒரு சிரிப்புச் சிரித்தான்.
“நேர்த்திக் கடனுக்கு மொடட போடடிருப்பாங்க. அதைப் பார்த்து சிரிக்காத. சரி. என்ன என்ன பார்த்த? அதைச்
சொல்லு?.
“அதுவா?. எல்லா தெருவயும் சுத்திப் பார்த்திடடேன். புத்தினாம்படடிக்குப் போற பாதையில ரைஸ்மில் பக்கமா ராட்டடினம் போட்டடிருக்காங்க. சர்க்கஸ் வேற இருக்கு. புலி வலம் போற பாதையில என்னமோ மெசிக் சோ போட்டடிருக் காங்க.. கடல்கன்னி - கடல்கன்னின்னு கத்திராங்க. சிறுகுடி பாதையில கீரியும் பாம்பும் சண்டை இருக்குது. எதைப் பார்க் கிரது? எதை விடுரது? எங்கப் பார்த்தாலும் யாவாரிக. திருச்சி
யில உள்ள கடைகளே இங்க வந்திடட மாதிரி எங்கப் பார்த்
109

Page 57
0 மாத்தளைசோமு
தாலும் கடைக. ரோடடோரமா கிளி, குருவி, எலி, உடுக்கு சோசியம். எல்லாத்திலயும் கூடடம்.”
கோவிந்தன் பெருமூச்சு விடடான். அப்போதுதான் வேல்சாமி அந்தக் கேள்வியைக் கேட்டடான்.
“ஆமா! நீ சோசியம் பார்க்கலியா?.” “நானா?” என்ற கோவிந்தன் சிரித்தான். அந்த சிரிப்பு வேல்சாமியை நோக்கி வீசப்படட ஒரு நக்கலாக இருந்தது.
“நம்ம பொழப்புதான் இப்படித்தான்னு தெரியும். அப்புறம் எதுக்கு சோசியம்?”
“சரி. அப்புறம் என்ன பார்த்த?.” “எங்கப் பார்த்தாலும் டீக்கடை,சர்பத் கடை. மோர் மடடும் ஒரு பந்தல்ல சும்மா குடுத்தாங்க. ஒரு கிளாஸ் வாங்கிக் குடிச்சேன். அதுவும் ஒரே பச்சத் தண்ணி. அப்பறம் கோயில் மடத்துல அன்னதானம் போடுராங்க. ஒரே ji... l. ll-Lö...”
அப்போது ஐயர் அங்கே வந்தார். “என்னா வேலு சிரிப்பூஎன்ன சொல்லுது?” ஐயர் கேடட கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னமே கோவிந்தன் சிரித்து விட்டடான்.
“ஒன்னுமில்ல சாமி! ஊரைச் சுத்திப் பார்த்தேன். அதைப் பத்திச் சொல்லிக்கிடடிருந்தேன்.”
“சிரிப்பூ சாயந்திரம் நம்ம கோயில்லயும் கூடடம் வந்திரும. சுறுசுறுப்பா இருக்கணும். அப்ப சிரிச்சிகிடடு இருக்காதே!”
“இல்ல சாமி.” என்ற கோவிந்தனுக்கு காமாடிசி கோயி லுக்குப் போக கூடடம் முண்டியடித்துக் கொண்டு நிற்பது நினைவுக்கு வந்தது. மெள்ளமாய் அதுபற்றிக் கேடடான்.
“ஏன் சாமி அந்த கோயில்ல மடடும் அம்புபடடுக் கூடடடம். இதுதானே பழைய கோயில்.”
110

மூலஸ்தானம்
ஐயர் புன்னகைத்துவிடடுச் சொன்னார். “இது பழைய கோயில் இல்ல. இதுதான் முதல்ல கட்டடின கோயில். அப்பறம் மனுசாள் சண்டை போடடு தனியா ஒரு கோயில் கட்டடினா. அதுதான் அந்தக் கோயில். மனுசாள் சண்டையில ரெண்டு காமாட்டசியம்மன் கோயில் ஆச்சு. அது பெரிய கோயிலாக் கடடினாலும் பெரிய கோயில்னு இந்தக் கோயிலதான் சொல்ரா. இங்கதான் அம்பாளுக்கு பெரிய உரு வச்சிலை இருக்கு. புதுசா வர்ரவாளுக்கு தடுமாற்றம் இருக்கு. எது காமாடகியம்மன் கோயில் - எது பெரிய கோயில். இது பெரிய காமாடடசியம்மன் கோயில். ஆனா எல்லாரும் இதை பெரிய கோயில்னு சொல்வா.”
கோவிந்தன் ‘இந்த இரண்டு கோயில்களிலும் இவ்வளவு விஷயங்கள் மறைந்து கிடக்கின்றனவா என்று எண்ணி வியந் தான்.
பொழுது சாயத் தொடங்கியதும் ஐயர் சொன்னதுபோல் கோயிலுக்குக் கூடடம் வரத் தொடங்கியது.
அதிகாலையிலேயே துளசி குளித்திருந்தாலும் வீடடில் நிறைய வேலைகள் இருந்ததால் வேலையெல்லாம் முடித்து விடடு அந்திக் குளிப்புக்கு கிளம்பினாள். இனிமேல்தான் அவள் ஊருக்குள் போய் வேடிக்கைப் பார்க்க வேண்டும்.
“ஏய்! துளசி. இருடடப் போவுது? குளிக்கப் போறியா. போயிடடு சீக்கிரமா வந்திரு.”
துளசி வயற்காடடை நோக்கிப் போனாள். இன்னும் வெளிச்சம் இருந்தது. போகிற வழியில் கோணங்கி புன்னகை யோடு வந்தான்.
“டீச்சர்! உங்களத்தான் தேடுனேன். உங்கள இருடடினதும் எடடு மணிக்குமேல மாஸ்டர் ஸ்கூலுக்கு வரச் சொன்னாரு.”
“எந்த மாஸ்டர்? என்று கேட்டக நினைத்து அதனை தன் நெஞ்சுக்குள்ளேயே அடக்கினாள். ஒரு இன்ப உணர்வு எழுந்து அடங்கியது.
1 11

Page 58
0 மாத்தளைசோமு
அதே நேரத்தில் சில கேள்விகள் எழுந்தன. ‘இவன் கிடட ஏன் சொல்லணும்? லூஸ் பய வேற எங்கயும் ஒளறிடடா.
துளசி மெளனமாக இருப்பதைப் பார்த்துவிடடு, “ஓங்க கிடட மாஸ்டர் ஏதோ பேசனுமா. கட்டடாயம் வரச் சொன் னாரு.” என்று சொல்லிவிடடு, "அப்ப நான் வர்ரேங்க” என்ற வாறு ஓடினான் கோணங்கி.
துளசி அவர் என்ன பேசப் போகிறார் என்று நினைத்தவாறு நடந்தாள்.
17
னெமே இருண்டபோதும் திருவிழா வெளிச்சத்தினால் அந்த ஊரில் இருபடடு தற்காலிகமாக பின்வாங்கியிருந்தது. திரு விழாவிற்காக எல்லாத் தெரு மின்விளக்குகளும் சிரித்தன. எல்லா வீடுகளிலிருந்தும் வெளிச்சம் வந்தது. மின்சார வெளிச்சத்தோடு தெரு வியாபாரிகளின் கைங்கரியத்தால் பெடரோமாக்ஸ், மண் ணெண்ணய் விளக்குகள் வேறு போடடியிடடன. காமாடடசியம் மன் கோயில் நிர்வாகம் வேறு தனி ஜெனரேடடர் போடடு கோயிலைச் சுற்றியும் கோயிலுக்குள்ளேயும் இருபடடே இல்லா மல் செய்திருந்தது. இப்படி எங்கு பார்த்தாலும் வெளிச்சம். பாவம். இன்றைய ஓமாந்தூர் கிராம ஆடசியை இழந்த இருபடடரசன் தெருவுக்கு அப்பால் பதுங்கியிருந்தான்.
அந்தப் பள்ளிக்கூடம் ஊரை விடடு தள்ளித்தான் இருந் தது. அங்கே எங்கும் இருபடடுதான். பள்ளிக்குப் போகிற பாதை யில் ஆங்காங்கே பஞ்சாயத்து மின் விளக்குகள் மெலிசாய் எரிந்தன.
ஏழரை மணிக்கெல்லாம் சாப்பிடட துளசி, "வளையல் வாங்கணும். பார்த்திடடு வாறேன்” என்று நடந்தாள்.
“ஏய் துளசி. இப்பப் போயி வளையல் வாங்கப் போனா நெருப்பு வெலை இல்ல சொல்வானுக. விடிஞ்சா மூடட கட்டடுர நேரம் குறைச்சி வாங்கலாம்.”
112

மூலஸ்தானம் D
அம்மாவின் குரல் கொக்கியாய் இழுத்தது. கொக்கியில் இருந்து விடுபட வேண்டுமே! “இப்ப வாங்கல அம்மா. பார்த்திடடு வருவேன்!” "அப்பாடா” என்று பெருமூச்சு விடடவாறு நடந்தாள். அவள் கால்கள் தெருவுக்குள் இறங்கி பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தன.
கோணங்கி சொல்லிவிடடுப் போனதில் இருந்து அவள் நிலையாய் இல்லை. ஏன் வரச் சொன்னார்? மனதுக்குள் பல கேள்விகளாய் நின்றன. எதற்குத்தான் விடை காண்பது, எது எப்படியோ முதலில் கோணங்கியிடம் ஏன் சொல்ல வேண்டும்? என்று கேடக வேண்டும். அதற்காக அவரோடு சண்டை போட வேண்டும். போயும் போயும் இந்தக் கோணங்கிப் பயலிடமா சொல்ல வேண்டும்? அவன் எங்காவது உளறி வைத்தால்?. ஆனால் அந்தக் கோபம் அவரை சந்திக்கப் போவதை நினைத் ததும் கரைந்து விடடது. மனம் சிலிர்த்தது - சிறகடித்தது. இன்று நிச்சயமாய் அந்த இருபடடில் கட்டடிப் பிடித்து முகம் தடவி, இதழ் நனைத்து. அதற்கு மேல் போகமாடடார். போக விடமாடடாள் துளசி.
இப்படித்தான் ஊரில் ஒருநாள் விடியவிடிய நாடகம் போடடார்கள். ஊரே கொடடகை முன்னே குந்தியிருந்தது. துளசியும் நாடகம் பார்க்கப் போயிருந்தாள். அந்தக் கூட உத்தில் அவனும் இருந்தான். ஊரே நாடகத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் கண்களால் தனி நாடகம் போடடார்கள். யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. பிறகு மெள்ள அவளைக் கண்களால் அழைத்துக் கூடடத்தைவிடடு வெளியேறினான் அவள். அவளும் மெள்ளமாய் கூடடத்தை விடடு நழுவினாள்.
அவன் அந்த இருடடில் பள்ளிக்கூடப் பக்கமாய் போனான். அங்கே அவர்கள் இருவரும் நெருக்கமாய். அவர்களின் நெருக் கத்துக்கு அப்போதைய இருட்டடே சாடசி. அவளின் கைகளைத்
தடவியவாறு அவன் பேசினான்.
113

Page 59
0 மாத்தளைசோமு
“நாடகம் எப்படி துளசி?”
“க்ளுக்” என்று உதிர்ந்தது துளசியின் சிரிப்பு.
“ஏன் சிரிக்கிற?”
“நான் நாடகமா பார்த்தேன்? நம்ம தான் தனி நாடகம் போடடோமே! நாடகத்த எங்க பார்த்தேன்.”
இருடடிலும் அவள் அழகாகத்தான் தெரிந்தாள். அவள் விடுகிற உஷ்ணக்காற்று அவனை என்னவோ செய்தது. “எத் தனை நாளைக்குத்தான் இப்படி இருடடில் சந்தித்துக் கொள் வது?”அதை அவன் அவளிடம் கேட்டடான்.
“கல்யாணம் வரைக்கும்” என்றாள் அவள்.
"அப்பறம்?”
“வெளிச்சத்தில்” என்று வாயெடுத்து, “இருபடடில்தான் எல்லாம்” என்றாள்.
"அப்பறமும் இருபடடுதானா?”
“நீங்க சரின்னா நான் ரெடி வெளிச்சத்தில்.”
அதற்குமேல் பேச்சு வரவில்லை இருவருக்கும்.
நாடகக் கொடடகை ஒலிபெருக்கியின் சத்தம் அந்த இருட டில் மிதந்தது.
வார்த்தைகள் பிரவிக்காத நேரம். அவன் கைகள் சும்மா இருக்கவில்லை. அவள் உடம்பில் நர்த்தனம் ஆடியது. துளசி யைக் கட்டடிப் பிடித்துத் தழுவிக் கொண்டான். முகத்தோடு முகம் வைத்து. காய்ந்து போன உதடடை துளசியின் உதட்ட டால் நனைத்தான் அவன். மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு. அதற்கு மேல். அதற்கு மேல். திடீரென்று தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள் துளசி.
“என்ன துளசி.?”அவன் குரல் கெஞ்சலாய் வழிந்தது.
“போதும்! போதும்! அதுக்கு மேலே போனா தப்பு நடந் திரும்.
29
D. 114

மூலஸ்தானம் D
“ஒனக்கே நம்பிக்கை இல்லியா?” “நம்பிக்கை இருக்கிறதுனாலதான் விலகிடடேன். போதும்.
o w s 92 வாங்க. வாங்க. போவோம்.
இனி யார் வந்தாலும் அவளை மாற்ற முடியாது. அது பிடிவாதமல்ல. முடிவு. உறுதியான முடிவு. மாற்ற முடியாது. அவளில் குறைவே இல்லை. எச்சரிக்கையாக இருக்கிறாள். ஒ பெண்ணுக்கு இருக்க வேண்டியதுதான். இருக்கட்டும்.
“சரி. நீ முன்னாடிப் போ. நான் பின்னாடி வர்ரேன்.” துளசி அவன் அருகே வந்து அவன் கைகளை இழுத்து முத்தமிடடாள். முத்தமிடடு விலகிப் போக முனைந்தபோது அவன் அவளைக் கட்டடிப் பிடித்து அழுத்தமாக முகம் சிவக்க முத்தமிடடான். அவள் கஷ்டப்படடுக்கொண்டு அவனிடம் இருந்து விலகி வெளியே போனாள்.
நாடகக் கொடடகையருகே போய் அந்தக் கூடடத்தில் நுழைந்து நீந்திக் கொண்டு போய் பார்வையாளர்களோடு
சங்கமித்தாள். அவளோடு வந்த மைதிலி “எங்கடி போன?
ரொம்ப நேரமா ஆளையே காணோமே!” என்று கேடடாள்.
துளசி இரு விரல்களைக் காடடினாள். மைதிலி சிரித்தாள். “இவ்வளவு பேர் நாடகம் பார்க் கிரபோது உனக்கு மடடும் எப்படி அது வந்தது?.”
துளசி அதைக் கேடடுச் சிரித்தாள். பிறகு சொன்னாள் “இப்ப அதைப்பத்திப் பேசப் போனா நாடகம் பார்க்க முடி யாது. பேச்சைவுட்டு நாடகத்தைப் பாரு.”
மைதிலியின் கவனத்தை நாடகப் பக்கம் திருப்பிவிடடு மெளனமாகி நாடகத்தைப் பார்க்கத் தொடங்கினாள் துளசி. சிறிது நேரத்தில் அவன் அந்தக் கூடடத்திற்குள் சங்கமித்தான். பிறகு அவளை தன் கண்களால் தேடினான்.
வெய்யிலுக்குப் பிடிக்கிற குடை பொத்தலில் தெரிகிற வெளிச்சம் போல் நடசத்திரங்கள் வானில் நீந்தின.
115 O

Page 60
0 மாத்தளைசோமு
அதனைக்கூட பொறாமைக்கார மேகங்கள் மறைத்து விடுகின்றன அவ்வப்போது.
துளசி பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள். ஆங்காங்கே நாய்கள் குலைக்கிற சத்தம் மெல்லிசாய்க் கேட்டடது. பாதை நெடுக இருடடு. இந்த இருடடைப் பற்றிக்கூட அவளுக்குக் கவலையில்லை. பாதை நெடுக சிவராத்திரிக்கு வந்த வெளியூர்க் காரர்களின் அசிங்கம் நாறியதுதான் கவலை. நடக்கவே கால் கள் கூசின. தப்பித்தவறி மிதித்துவிடடால். குமடடிக் கொண்டு வந்தது அவளுக்கு. ஊரில் திருவிழா வந்துவிடடால் இது ஒரு தொல்லை. இருபடடில் வசதியான இடத்தில் இறக்கி விடுவார் கள். இருடடில் தடமா பார்க்க முடியும்? இறக்கினால் போதும் என்றிருக்கும். ஆனால் நிலத்தில் ஒட்டடியது பலநாடகள் நாறும். திருவிழா முடிந்ததும் இது தொடரும். மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்கவேண்டும்.
பள்ளிக்கூடத்திற்கு வழக்கமான பாதையில் போயிருக்க லாம். இது குறுக்குப் பாதை. இவள் நடந்த சத்தத்தில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகள் ஓடின. அவள் பயந்தாள். பன்றிகள் முடடி விடுமா என்று.
துளசி பள்ளிக்கூடக் கேட்டருகே போனாள். சுற்றும் முற் றும் பார்த்தாள். எவரும் இருட்டடில் தெரியவில்லை. மெள்ளமாய் உள்ள போனாள்.
அந்தப் பள்ளிக்கூடம் நீண்ட ஒரு மண்டபமாய்க் கட்டடப் படடது. ஐந்தாம் வகுப்புவரை அங்கு உண்டு. ஐந்தாம் வகுப்பு பக்கத்தில் இருக்கிற வழிதான் அவள் கால்களுக்குப் பழக்க மானது. துளசி அந்த வழியே உள்ளே போனாள். கதவு திறந்தே இருந்தது. உள்ளே மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் காற்றில் அலைந்தது. கதவு மூடியது. மெழுகுவர்த்தியும் அணைந்தது. ‘என்ன என்று துளசி எண்ணுவதற்குள் ஒரு முரடடுக் கரம் அவள் வாயைத் துணி கொண்டு அடைத்தது. அதற்குமேல் அவளின் கத்தல் வெளியே வரவில்லை. அதே நேரத்தில்
116

மூலஸ்தானம் L
கோணங்கி மூச்சுவிடக்கூட முடியாமல் குடித்துவிடடு திணறிக் கொண்டிருந்தான்.
18
"சிவராத்திரி முடிஞ்சி எல்லாரும் ஊரைப் பார்த்துப் போயிடடாங்க. நீ இன்னுமா தூங்கிற? எந்திரிடா?.”
இடுப்பில் இருக்கவேண்டிய வேபடடி நழுவிப் போனது கூடத் தெரியாமல் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த ஏழு மலையைப் பார்த்ததும் கிழவிக்குக் கொப்பளித்த கோபம் வார்த்தைகளால் வெடித்தன.
அவன் எழும்பவில்லை. “கடடுன வேடடி போனது தெரியாம தூங்கறியே கொங் கணம் கெடடப் பயலே.” என்று சொல்லிக் கொண்டே குனிந்த அவன் முதுகைத் தொட்டடு அசைத்தாள் கிழவி. அவன் அப்போது அசையவில்லை. கிழவி விடவில்லை. மேலும் அசைத்தாள். மெள்ளமாய் கண்களை விழித்துப் பார்த்தான். தூக்கம் இன்ன மும் கண்களுக்குள்ளேயே இருந்தது. சிவராத்திரி முழுவதும் ஊருக்குள்ளே சுற்றியவன் அதிகாலை நாலரை மணிக்கு திண் ணையில் விழுந்தான்.
“போ! பாட்டடீ! எனக்குத் தூக்கம் வருது. நா. தூங்கணும். தூங்கணும்.”
“தூக்கம் வருதா? வரும். வரும். நீ இப்புடித் தூங்கினா நம்மள நம்பி இருக்கிற வாயில்லா சீவன்கள என்னடா செய்வ?”
அவள் சொன்னதை ஆமோதிப்பது போன்று படடியில் இருந்த ஆடுகள் கத்தின.
“கோழி கூவிச்சோ இல்லியோ. ஆடெல்லாம் சத்தம் போடடுகிடடே இருக்கு. போ. மூஞ்சக் கழுவிடடு வா. இடலி சுடடிருக்கேன். சாப்புடடு ஆடட மேய்ச்சிடடு வா..!"
ם 7 11.

Page 61
0 மாத்தளைசோமு
“என்னைக்குமா தூங்கிரேன். நேத்து சிவராத்திரி தூங்காம முழிச்சேன். அதான்.” என்று முணுமுணுத்தான் ஏழுமலை.
“நமக்கென்னடா சிவராத்திரி? நம்ம ராத்திரிதான் ஊர் சிரிக்குதே! எந்திரிடா. எந்திரிச்சாதான் இன்னைக்கு இடலி.”
கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தவாறு கேட்டடான் அவன். “நெசமா இன்னைக்கி இடலியா?”
“ஆமான்டா.” ஆண்டுக்கு மூன்று தடவை தீபாவளி, பொங்கல், சிவராத்திரி ஆகிய மூன்று நாடகளில்தான் இடலி. மற்ற நாடகளில் பழைய சோரும் மோரும்தான்.
ஒரு பழைய துண்டும், காவி நிற வேடடியையும் எடுத்துக் கொண்டு வயக்காடடிற்கு ஓடினான். யாராவது மோடடார் போட்டடிருக்கிறார்களா என்று பார்த்தான். தெற்கே மோட்ட டார் ஓடும் சத்தம் கேட்டடது. தெற்கே தென்னை மரத்துக்காரர் வயலில் ஓடிய மோடடாரினால் கிளம்பிய தண்ணீரில் தலையை நனைத்தான். வழியில் துவடடிக் கொண்டு வந்தான் அவன்.
வீடடில் இடலி, சட்டனி, தேங்காய் சடனி, முருங்கைக்காய் சாம்பார் கிழவியின் கை வண்ணத்தில் தயாராய் இருந்தன. ஒரு பிடி பிடித்தான். ஏழுமலை. அவன் சாப்பிடும்போது உள்ளே போகிற உணவெல்லாம் வெய்யில் சாப்பிடுகிறதோ என எண் ணுகிற அளவுக்கு உடம்பே இல்லை என்பதாய் மெலிந்து இருந் தான் அவன்.
எழுமலை படடியைத் திறந்தான். ஆடுகளுக்கு உற்சா கம். துள்ளிக் கொண்டு ஓடின. அதிலும் சின்னக் குடடிகளைக் கேடகவே வேண்டாம். அங்கும் இங்கும் துள்ளிக்கொண்டு ஓடின. வழிநெடுக புழுக்கைகளைப் போட்டடுக் கொண்டன.
பள்ளிக்கூடம் இருக்கும் வழியாகத்தான் ஆடு மேய்க்கப் போவது அவன் வழக்கம். ஊருக்கு வெளியே சிறுகாடு இருக் கிறது. அதனோடு சேர்ந்து ஒரு வெளி. அங்குதான் ஊரிலுள்ள ஆடு மாடெல்லாம் மேயும்.
118

மூலஸ்தானம் )
“என்னா ஏழுமல. இன்னைக்குமா ஆடு மேய்க்கணும்?”
வழியில் வந்த சாய்பு கேட்டடார். “நமக்குத்தான் சிவராத்திரி. ஆடடுக்குமா சிவராத்திரி?” என்றான் ஏழுமலை.
சாய்பு சிரித்துக் கொண்டே போனார்.
ஏழுமலை ஆடுகளை விரட்டடிக் கொண்டே நடந்தான். ஸ்கூல் அருகே வந்ததும் நின்று விட்டடான். அவன் நிற்கவும் ஆடுகளும் நின்றன. எழுமலை ஸ்கூலையே ஏக்கத்தோடு பார்த் தான். அது கல்விக் கண்களைத் திறக்கின்ற ஆலயம். அதன் வாசலைக்கூட அவன் தொடடதில்லை. ஆனால் இந்தப் பள் ளிக் கூடத்தைப் பற்றித் தாத்தா கதைகதையாய் சொல்லி யிருக்கின்றார்.
‘இந்தச் சுத்து வடடாரம் பத்துக் கெராமத்திலயும் கவுரு மெண்டட செய்யாத வேலய வையாபுரிபுள்ள செஞ்சாரு. அவரு ஒரு ஸ்கூல் கடடுனா ரு.வையாபுரிபுள்ள ஒமாந்துார்ல பேரும் புகழும் உள்ளவரு. வயல், வரப்பு, நெலம், புலம், வீடு, வாசல் எல்லாம் அவருக்கு இருக்கு. ஆனா குழந்தை குடடி இல்ல. பார்க்காத வைத்தியர்கள் இல்ல. டாக்டர்கள் இல்ல. எக்கச் சக்கமான சோசியமும் பார்த்தாரு. சாமியார்கள் பார்த்தாரு. எல்லாரும் குழந்தை பொறக்கும்னு சொன்னார்கள். ஆனா நாளும் பொழுதும் போச்சே தவிர சந்தோசமா எதுவும் நடக் கிறது நடக்கடடும்னு மெளனமா இருந்தாரு நாளாக நாளாக புள்ள இல்ல என்கிற குறையும் மறந்து போச்சு. ஒரு நா.
விடிந்ததும் கோலம் போட வீடடுத் திண்ணை வாசலுக்கு வந்த வையாபுரிப்பிள்ளையின் மனைவி, திண்ணையில் எவரோ படுத்திருப்பதைப் பார்த்துவிடடு அப்படியே நின்றாள். ஆளைப் பார்த்தல் சாமியார் மாதிரியும் இல்லை. பைத்தியக்காரன் என் றும் சொல்ல முடியாது. உடுத்தியிருக்கிற உடுப்பு வெள்ளை வெளே ரென்று இருந்தது. வழிப்போக்கனா? வழிப்போக்கன்
இங்கே வரமாடடானே!
119 ロ

Page 62
D மாத்தளைசோமு
ஊரை விடடுத் தள்ளித்தான் வீடு இருக்கிறது. இவன் எப்படி இங்கே வந்தான்? அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். முகம் மறைந்து ஒரு வெளிச்சம் தெரிந்தது. அவளுக்கு. வீடடுக் குள் போய்க் கணவனை அழைத்தாள், அவர் தொந்தி வயிற்றைத் தூக்கிக் கொண்டு வந்தார். திண்ணையில் படுத்திருப்பவ னைப் பார்த்தார். வெளிச்சம் பகீரென்றது. யோசித்தார். எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறார். இவனிடம் ஒரு காந்த சக்தி இருக்கிறது.
“யாருன்னு தெரியலே. படுத்திருக்கட்டடும். அப்புறமா தண்ணி ஊத்தலாம் “என்று மனைவியைப் பார்த்துச் சொன்ன வையாபுரிப்பிள்ளை நடந்தார்.
9 “பிள்ளைவாள்'.
குரல் கேட்டடுத் திரும்பினார். படுத்திருந்தவன் எழுந்து நின்றான்.
எம்மேல் தண்ணி ஊத்த வேணாம்னு சொன்னியே உனக்கு எந்தக் குறையும் வராது.” பழுத்த ஒரு ஞானியின் குரல்போல தெரிந்தது அவருக்கு.
“நீங்க என்ன சொல்றீங்க?.” “உம்ம வீடடுல ஒரு மழலைச் சத்தம் கேக்கப் போவுது பிள்ளைவாள்.”
‘இவன்’ என்பது இவராகியது. “இவர் யார்? இவருக்கு என் ஏக்கம் எப்படித் தெரியும்?.”
வையாபுரிப்பிள்ளை அப்படியே அவர் காலில் விழுந்தார். அவரைத் தொடர்ந்து அந்த அம்மாளும். இவர் ஞானிதான். சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்காத குறையாக அவரை வீடடுக்குள் அழைத்தார்கள். அவர் மறுத்தார்.
“பிள்ளை! அது வேணாம். சந்திரன் வானத்தில் இருக்கு. பார்த்துச் சந்தோசப்பட வேண்டியதுதான். அதை உம்ம வீடடு
லயே வைச்சிக்கலாம்னு ஆசைப்படலாமா? அது மாதிரிதான்.
120

மூலஸ்தானம் 0
நான் உம்ம வீடடுக்குள்ளார வர்ரது நான் திண்ணையிலேயே இருக்கேன்.”
அந்தத் திண்ணை வீடாகியது. படுக்கப் பாய், தலையணை, மாற்று உடுப்புகள், சாப்பிட எவர்சில்வர் தடடுகள். அவர் எதையும் தொடவில்லை. இலையில்தான் சாப்பிடடார். பழைய கோணிச் சாக்கைக் கொண்டு வரச் சொல்லி விரித்துப் படுத்துக் கொண்டார்.
பிள்ளை வீடடைவிடடு எங்கும் போகவில்லை. அவரோடு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார். திண்ணை ஒரு பள்ளிக் கூடமாகியது. அவர் சொல்வதைப் பயபக்தியோடு கேட்டடார். இந்தச் சேதி ஊருக்குள் பரவியது. வெற்றிலை பாக்குப் பழத் துடன் பலரும் வரத்தொடங்கினார்கள். அவர்களில் சிலரைப் பார்த்துப் புன்னகைத்தார். பழமெடுத்துக் கொண்டார்.
சிலரைக் கண்டதும் முகத்தைக் கோணிக் கொண்டார். குழந்தைகளைக் கண்டதும் குழந்தையானார். கிடைக்கிற பழம் தேங்காய் எல்லாவற்றையும் குழந்தைகளிடம் கொடுத்தார்.
ஒரு நாள் ஆற்று மணலை கொண்டுவரச் சொன்னார். ஒரு கூடை மணல் வந்தது. அந்த மணலை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அத்தனையும் சர்க்கரையாய் மாறியது. நக்கிப் பார்த்தார்கள். தேவாமிர்தமாய் இனித்தது.
பெரியவர்களும் கை நீட்டடினார்கள். ‘குழந்தைகளுக்குத் தான் இனிப்பு. வயசானவர்களுக்கு ஏன் இனிப்பு? இனிப்பை தூரத்திலேயே வைங்க..' என்று மறுத்தார்.
அப்போது பிள்ளைவாள் தனக்கு ஒரு குழந்தை இருந்தால் சர்க்கரை வாங்குமே. என்று கலங்கினார். அவரைப் பார்த்தார். “என்ன பிள்ளைவாள்! உமக்கு ஒரு குழந்தை இருந்தா சர்க்கரை வாங்கும்னு பார்த்தீரா? உம் முகம் சொல்லுது. கவலய விடும். அடுத்த அமாவாசைக்குப் பின்னால உமக்கு நல்ல சேதி
22 கெடைக்கும்.
121

Page 63
D மாத்தளைசோமு
சொல்லி வைத்தாற்போல, அமாவாசை முடிந்த மூன்றா வது நாளில் சாயந்திரமாய் பிள்ளையின் மனைவி வாந்தி யெடுத்தாள். அப்போதே அவர் காலில் விழுந்தார் பிள்ளை.
“எந்திரி எந்திரி இனிமே கண்டவன் கால்ல விழுர வேலய வுட்டடுர. அம்மா, அப்பா, வாத்தியார் கால்ல விழு. அப்படி விழுந்தா அவன்தான் மனுசன். கண்டவங்க கால்ல விழுறவன் மனுசன் இல்ல. சரி அதைவுடு. உனக்கு ஒரு பொண் குழந்தை பொறக்கும்.”
“பொண்ணோ, பிள்ளையோ ஒரு குழந்தைதான் வேணும்.”
32
“சரி எனக்கு ஒரு சத்தியம் செய்.
9s
“என்ன சாமி செய்யிரேன்.
தாடியும் மீசையுமான முகத்தில் ஒரு புன்னகை. “நான் சாமியா?. எல்லாரும் ஆசாமிகதான். மனுசன் சாமியாக முடி யாது. சரி. குழந்தை பொறந்தோன்ன அது நெனைவா ஒரு பள் ளிக்கூடம் இந்த ஊர்ல உன் செலவில கட்டணும். செய்வியா?”
“கண்டிப்பா செய்ரேன்.”
‘சாமி என்று வார்த்தைகள் வந்தபோதும் விழுங்கினார் GS) Quirtliff.
அடுத்தநாள். திண்ணை காலியாக இருந்தது. இரவோடு இரவாக அவர் போய் விடடார். ஆனால் அவர் சொன்னது போல் பத்து மாதத்தின் பின்னால் குழந்தை பிறந்தது. சொன் னதுபோல் பெண். தெய்வானை என்று பெயர் வைத்தார்.
இன்று அந்தப் பள்ளிக்கூடத்தின் பெயர் தெய்வானை நினைவு பள்ளிக்கூடம்.
ஏழுமலை நினைவு திரும்பினான். ஒரு ஆடடுக்குடடி பள்ளிக்கூடத்திற்குள் ஓடியது. அதைத் துரத்திப் பிடிக்க பள்ளிக் கூடத்திற்கு ஓடியவன் எதையோ பார்த்துவிடடு “அய்யோ! பொணம் தொங்குது” என்று அலறினான். அந்த அலறல் அந்தப் பகுதியையே உலுக்கியது.
122

மூலஸ்தானம்
பள்ளிக்கூடத்திற்குள் ஓடிய ஆடடுக்குட்டடி திரும்பி வந்து கூடடத்தோடு சேர்ந்தது.
19
தெய்வானை நினைவுப் பள்ளிக்கூடத்தின் முன்னர் அந்த ஊரே திரண்டிருந்தது. ஏழுமலை போட்டட அலறல், தெருவில் போனவர்கள் காதில் விழுந்து அவர்கள் என்னவென்று அறிந்து, அவர்கள் மூலமாக அது ஒலியை விட வேகமாய் ஊருக்குள் பர வியது. பஞ்சாயத்து தலைகள் உள்பட பெரிய தலைகள் எல்லாம் வந்துவிட்டடன. எவரும் பள்ளிக்கூடத்தின் உள்ளே போகவில்லை. வெளியே இருந்து பார்க்கிறபோதே பள்ளிக்கூடத்தின் உள்ளே ஒரு பெண் தூக்குப் போடடுத் தொங்குவது போலத் தெரிந்தது. ஆனால் முகம் தெரியாமல் மூடப்படடு இருந்தது. சிலர் உள்ளே போக முயன்றபோது, “டேய்! யாரும் உள்ளார போகாதீங்க. இது போலீசு கேசு” என்ற அதட்டடல் அவர்களைப் பின்வாங்க வைத்தது.
அங்கு கூடியிருந்த கூடடத்தினர் ஆளுக்கொரு அபிப் பிராயத்தைப் பகிர்ந்து கொண்டனர். நேரம் ஆக ஆக அவர்கள் ‘இது வெளியூர் பொண்ணுல்ல. நம்ம ஊரு பொண்ணுதான்' என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அந்தப் பொண்ணு யார் என்பதுதான் கேள்விக்குறியாக இருந்தது.
திடீரென்று ஒரு குரல் அலறியது. "அய்யோ இது துளசி தான். துளசிதான்.”
அந்தக் குரலுக்குரியவள் துளசியின் பக்கத்து வீடடுக் காரியான பார்வதி.
கூடடத்தினரின் கேள்விக்கு விடை கிடைத்தது போலா கியது இப்போது.
“துளசி வீடடல இருந்து யாரும் வரல்ல.?” பஞ்சாயத்துத் தலை யொன்று கேட்டடது.
123

Page 64
D மாத்தளைசோமு
பார்வதி அழுதுகொண்டே ஓடினாள். அடுத்த சில நிமிடங் களில் துளசியின் அம்மா, அப்பா அலறிக் கொண்டே ஓடி வந் தார்கள்.
பார்வதி அவர்களைத் தேடிப் போனபோது இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வீடடில் துளசியும் இல்லை. அப்படியானால் தொங்குவது?
துளசியின் அம்மாவிற்கு இரவு காப்புப் பார்க்கப் போகி றேன் என்று துளசி போனதுதான் தெரியும். திரும்பி வந்தது பற்றி எதுவும் தெரியாது. சிவராத்திரியில் எல்லாம் மறந்து போயிற்று. கூடடத்தை விலக்கிக் கொண்டு வந்து பார்த்தாள் துளசி யின் அம்மா. பெற்றவளுக்குத் தெரியாதா மகளை. முகம் மறைந்திருந்தாலும் மகளைப் பெற்றவளா அடையாளம் காண முடியாது?
“அய்யோ! துளசி உனக்கு ஏன்டீ இந்தக் கதி. ” அவள் மயங்கி விழுந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு ஒரு கூடடம் வீட்டடிற்குப் போனது. அங்கிருந்த கூடடத்தில் துளசியின் உறவினர்கள் ஒரு கூடடமாய் இருந்தார்கள். அவர் களின் பார்வை, எண்ணங்களைப் பரப்பியவாறு சங்கமித்தன. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். துளசி கொலை செய்யப்படடிருக்கிறாள். பிறகு தூக்கப்படடிருக்கிறாள். இதனைச் செய்தது யார்?
அந்தக் கேள்விதான் எல்லோர் மனதிலும் விசுவரூபமாய் எழுந்து நின்றது.
புலிவலத்திலிருந்து போலீஸ் வந்து இறங்கியது. மணி பதி னொன்றாகி விடடது. பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஒரு மேஜை, நாற்காலி போட்டடு விசாரணையைத் துவங்கினார் இன்ஸ்பெக்டர். ஏழுமலையைக் குடைந்து, குடைந்து விசாரித் தார். ஒரு கட்டடத்தில் ஏழுமலை அழுது விட்டடான்.
பாடடிக்குச் சரியான கோபம். அங்கேயே ஏழுமலையை அடித்தாள். “நீ ஏன்டா ஸ்கூலுக்குப் போன?”
C 124

மூலஸ்தானம்
“எல்லாத்தையும் மேய்ச்சிக்கிடடுப் போற நேரம் ஒரு ஆடடுக்குடடி ஸ்கூலுக்கு உள்ளார போயிருச்சி. umTL. LLEI ?”
இன்ஸ்பெக்டர் ஏழுமலையை நம்பினார். பிறகு ஸ்கூலின் உள்ளே போய்ப் பார்த்தபோது ஆடடுப் புழுக்கையைப் பார்த் தார். திரும்ப வெளியே வந்து ஏழுமலையைப் போகச் சொல்லி விட்டடு துளசியின் அம்மாவைக் குடைந்தார்.
“ராத்திரி எத்தனை மணிக்குத் துளசி வெளியபோனா?” “எட்டடுமணிக்கு மேல இருக்கும். "துளசியின் அம்மா பதில் சொன்னாள். z
“எத்தன மணிக்குத் திரும்புனா?” “தெரியலிங்க. சிவராத்திரினால எங்க வூ-டுல நெறைய
9
பேர் இருந்தாங்க. கவனிக்காம வுடடுடடேங்க.
“யார் மேலயும் சந்தேகம் இருக்கா?” அவள் கணவனைப் பார்த்தாள். பதில் இல்லை. தற்கொலையாக இருக்குமோ? தற்கொலை செய்ய என்ன பிரச்சனை துளசிக்கு? எந்த முடிச்சையும் அவிழ்க்க முடியவில்லை. பிணம் திருச்சிக்குப் போஸ்டட மார்ட்டடத்திற்கு போய் மறு நாள்தான் திரும்பி வந்தது. துளசி கற்பழித்துக் கொலை செய்யப் படடிருக்கிறாள் என்று பிரேத பரிசோதனை முடிவாய்ச் சொல் லியது. துளசியின் இனத்துக்காரர்கள் கூடிகூடிப் பேசினார்கள். ஒரு கோஸ்டி ஏழுமலையை மறுபடியும் மிரட்டியது.
“டேய் ஏழுமல நடந்ததை அப்படியே சொல்லு.” “ஆடடுக்குடடி ஸ்கூல் உள்ளார போச்சுங்க. அதைத் தொரத்தி கிடடுப் போனப்பதான் பொணம் தொங்கிரது பார்த்தேன்.” இன்ஸ்பெக்டரிடம் சொன்னதையே அவர் களிடம் சொன்னான்.
ஊரையே அலசியது ஒரு குழு.
125

Page 65
ப மாத்தளைசோமு
மருதையின் வீடடைத் தேடிப் போனார்கள் வேறு சிலர். கோணங்கி மருதை வீடடில் இருந்தான். பயந்து போய் கிடந்தான். வாய் ஒட்டியிருந்தது. “எங்கடா மருதமுத்து?”
“அவரு சிவராத்திரி அன்னைக்கி திருச்சிக்குப் போயிட 99 டாரு
“இன்னும் வரல்ல.” “இல்லைங்க” “எப்ப வருவாரு?” “தெரியலிங்க.” “சரி. வீடட பத்திரமா பார்த்துக்க.”
அவர்கள் போனார்கள்.
அப்போது ஒருத்தன் கேட்டடான். “யாரு இதைச் செஞ்சிருப்பா?”
எவருக்கும் தெரியாத கேள்வி.
துளசியைக் குறை சொல்ல முடியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள். “எனக்கு ஒரு சந்தேகம்.” - இது ஒருத்தன். . .
“என்னா. ”
“அந்த சிவராசா மாஸ்டர் அடிக்கடி துளசியோட வலிய வலிய பேசுவானாம். சாதி கெட்டப் பயலுக. சாதிப் பொண்ணு
எடுக்க அலையிரானுக. அந்தப் பய செஞ்சிருப்பானா?.” “இருக்கலாம். யாரு கண்டது?” ۔ “ஆள ஊர்லயே காணோமே!” அந்த சந்தேகம் அவர்கள் நெஞ்சில் விதையாகி வேர் போட்டடு வளர்ந்தது.
126

மூலஸ்தானம்
இருடடில் திண்ணையில் உடகார்ந்து வானத்தையே பார்த் துக் கொண்டிருந்தார் ஐயர். அவருக்குப் பக்கத்தில் வேல்சாமி சோகமாய் இருந்தான். வெற்றிலை வாயோடு இருந்தான் வேல் சாமி. வீடடின் உள்ளே அவர்களைப் பார்த்தவாறு கதவருகே உடகார்ந்திருந்தாள் மீனாடசி. எவரும் பேசவில்லை. மெளனமே ஒரு மொழியாக இருந்தது அங்கே. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மெள்ளமாய் அந்த மெளனத்தை விலக்கினார் ஐயர்.
“துளசிய எனக்கு நன்னாத் தெரியும். அவளுக்கா இந்தக் கதி.? யாரு இதைச் செஞ்சிருப்பா?”
வேல்சாமி மெளனமாய் இருந்தான்.
கோவிந்தன் வெற்றிலை வாயோடு ஏதோ சொன்னான். ‘சாமி! எனக்குன்னா அந்த மருதமுத்து மேலதான் சம்சியமா இருக்கு. சிவராத்திரி அன்னைக்கி கோணங்கிக்கு விஸ்கி விஸ் கியா ஊத்தியிருக்கான்.”
ஐயர், “மெதுவாப் பேசு கோவிந்தா. எவர் காதிலயாவது விழுந்திரப் போவுது. நமக்கெதுக்கு ஊர் வம்பு. மருதை குடிக் கிறவன்தான். ஆனா ஒரு பொண்ணை அதுவும் அவங்க சாதிப் பெண்ணை கொலை செய்யிர அளவுக்குப் போவானா? நீ என்ன
s
சொல்ற வேலு?.
“எனக்கென்ன தெரியும் சாமி? நா கோயிலுக்குள்ளயே உங்களோட இருக்கேன். நம்ம கோவிக்குத்தான் ஊர் சங்கதி தெரியும்!”
வேல்சாமியின் பதிலில் உள்ள உண்மையை உணர்ந்த ஐயர் பெருமூச்செறிந்து சொன்னார். “எது எப்படியே இந்த வருச சிவராத்திரிய ரத்தமாக்கிடடா. இது அழியா வடு. எங்கப் போய் முடியுமோ?.”
அப்போது வானில் எரிநடசத்திரம் கீழே இறங்கியது.
“அதென்ன சாமி?.” வேல்சாமி கேட்டடான்.
“அது எரிநடசத்திரம். அது கண்ணில் தெரியிற மாதிரி வானத்தில இருந்து பூமிக்கு இறங்கக் கூடாதாம். என் அப்பா
127

Page 66
D மாததளைசோமு
சொல்லியிருக்கார்’ ஐயரின் அந்த பதிலைக் கேட்டட வேல்சாமி கவலையோடு கேடடான் “யாருக்கு சாமி.?”
ஐயர் சர்வ சாதாரணமாகச் சொன்னார் “எனக்கா இருக்க லாம். உனக்கா இருக்கலாம். கோவிந்தனுக்கா இருக்கலாம். இந்த ஊருக்கா இருக்கலாம்.”
“நமக்கிடடே என்ன இருக்கு சாமி?. என் உசிர்தான் இருக்கு. வேற என்னா இருக்கு?.” என்று சொல்லிவிடடு அந்த இருபடடிலும் மெள்ளச் சிரித்தான் கோவிந்தன். அந்தச் சிரிப்பில் வாயிலிருந்த வெற்றிலை எச்சில் சடடையெல்லாம் படிந்தது.
ஐயர் கோபமாய் அவனைப் பார்த்தார். பிறகு சொன் னார் “இந்த ஊர்ல என்ன நடக்குமோன்னு நான் மடியில நெருப்ப கட்டடிண்டு இருக்கேன். சிரிக்கிற நேரமா இது? கோவிந்தா கொஞ்ச நாளைக்கி நீ சிரிக்காதே. அந்தச் சிரிப்பே சந்தேகமாயிரும்.”
வேல்சாமி, ஐயர் சொன்னது சரியானது என்பதுபோல
கோவிந்தனைப் பார்த்தான்.
2 Ο
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்தோன் றிய மூத்தத் தமிழ் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் முழுங்கி வருகின்ற அதே நேரத்தில் தமிழ் - தமிழர் சம்பந்தமான சரித் திரச் சின்னங்கள் கவனிப்பு இன்றிச் சிதைந்து வருகின்றன. அரசியல் தலைவர்களுக்கு சிலை வைக்கிற வேகத்தில் பழை! சரித்திரச் சின்னங்களை மறந்தே விடடனர் அவர்கள். எத் தனையோ கிராமங்களில் இருக்கிற கல்வெடடுகள் இன்றைய அரசியல் சினிமா பிரமுகர்களின் புகழ்பாடிக் கொண்டிருக்கின் றன. ஆடு மேய்க்கின்ற, காடடுக்கு விறகு பொறுக்கப் போகின்ற பையன்கள் எழுதிப் படிக்கின்ற கற்பலகைகளாகி விடடன
அந்தக் கல்வெடடுகள்.
128

மூலஸ்தானம்
இதுபற்றி யாரும் கவலைப் படடதாகவும் தெரியவில்லை.” புலிவலத்திற்குப் போகிற வழியில் ஒரு ஒற்றையடிப் பாதை போகிறது. அதில் போனால் ஒரு பாழடைந்த கல் கட்டடிடம் வரும். சிறியது. ஆனால் சோழர் காலத்து மண்டபம். அதன் தூண்கள் கலை நுணுக்கம் கொண்டவை. பாதி சிதைந்து மீதி நிமிர்ந்து நிற்கின்றன. இந்த சோழர் காலத்து மண்டபத்தை ஊரே மறந்தபோதிலும் ஊரிலுள்ள சிலர் மறக்காமல் அந்தரங்க மண்டபமாக வைத்திருக்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருப்பதால் கிராமவாசிகள் பகலில் கூட அங்கு வருவதில்லை. அதுவே பலருக்கு வசதியாய்ப் போய்விடடது.
வெளிச்சம் இருக்கிறவரைக்கும் 'சீபடடாட்டட கிளப்பாக இருக்கும். இருபடடி விடடால் என்னென்னவோ நடக்கும். இருட டானதும் பலானதுகளைத் தள்ளிக்கொண்டு வந்து ‘லாடஜ் ஆக்கி விடுவார்கள். சிலர் கூடடுச் சேர்ந்து குடித்து முடிப்பார் கள். அந்த மண்டபத்தில் என்ன செய்ய வேண்டும் என்று சோழன் சொல்லி விடடடா போனான்?.
அந்த பாழடைந்த கடடிடத்தின் உள்ளே மெழுகு வர்த்தி கள் எரிந்து வெளிச்சம் மெல்லிசாய்ப் பரவியிருந்தது. அந்த மெழுகுவர்த்திகளைச் சுற்றி சிலர் வடடடமிடடு இருந்தார்கள். சிகரெடடுகள், பீடிகள் தலைகள் நசுக்கப்படட முண்டங்களாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. லேபிள் இல்லாத வெற்றுப் பாடடில்கள் உயிர்போன உடல்களாய் இருந்தன. சக்கையாகிப் போன இறைச்சித் துண்டுகள் மாத்திரமே மீதியாகக் கொண்ட பார்சல்கள் விரித்தவாறு கிடந்தன. இவையெல்லாம் சொல் வது என்ன? அவர்கள் மூக்கு முடடடக் குடித்திருக்கிறார்கள். வானவெளியை புகை மண்டலமாக்கிற அளவுக்கு புகைத்திருக் கிறார்கள். அவர்கள் கண்கள் சிவந்து போயிருந்தன. ஆயுதங் கள் இல்லாவிடடாலும் கைகளாளேயே கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிற வெறி அவர்களுக்கு. “துளசி தற்கொலை பன்னல்ல.”
“கொன்னு தூக்கிடடானுக.”
129

Page 67
D மாத்தளைசோமு
“கொன்னது இல்லாம கெடுத்துக் கொன்னு தூக்கிட டானுக.”
“தூக்கினது யாருன்னு தெரியும் தானே? அவன் தான் அந்த. பயதான்.”
“இதை இப்புடியே விடடோம். நம்ம சாதியில எந்தப் பொம்பளயும் வாழ முடியாது.”
“அந்தப் பயல்களுக்கு ஒரு பாடம் படிச்சிக் குடுக்கணும்.” “மொதல்ல அந்தப் பயலத் தேடிப் புடிச்சி.”
அந்தப் பயல் என்றது அந்த சிவராஜா மாஸ்டரைத்தான். அங்கிருந்த ஒவ்வொருத்தர் வாயிலிருந்தும் வெளிவந்த வார்த்தை கள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது. ஒருத்தருக்கு இன்னொருத்தர் சளைக்கவில்லை. எண்ணெய் ஊற்றியதில் எவருக்கும் நீதி விசாரணை செய்து பார்க்க நேர மில்லை. நடந்த கொலைக்கு உடனே குற்றவாளிக்குத் தண் டனை கொடுக்கத் துடித்தார்கள். துளசிக்கு நேர்ந்ததை தங்கள் சாதிக்கு நேர்ந்ததாக எடுத்துக் கொண்டார்கள்.
திருச்சியிலிருந்து துறையூர் போகிற கடைசிப் பேருந்தும் துறையூரிலிருந்து திருச்சி போகிற கடைசிப் பேருந்தும் சந்தித் துக் கொண்டதன் அடையாளமாக ஹாரன் அடித்துக் கொண்ட நேரத்தில் மெழுகுத்திரியை அணைத்தார்கள் அந்த மண்டபத் தில் இருந்தவர்கள். மணி பத்தரையிருக்கும் ஊரே இருபடடுக் குள். அதற்குமேல் வதந்திக்குள் ஒடுங்கிக் கிடந்தது. துளசியின் பிணம் மயானம் போகும் வரைக்கும் ஊரே பரபரப்பாக இருந் தது. ஆனால் வதந்திகள் விசுவரூடமெடுத்து ஊருக்குள் பேயாட டம் ஆடின. ஊரிலிருந்தவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்துடன் கழித்தார்கள். அந்த இரவு போனால் போதுமென்று இருந்தார்கள் அவர்கள்.
திருச்சியில் இருந்து வந்த கடைசி பஸ்சில்தான் மருத முத்து ஊருக்குள் வந்திறங்கினான். தெருவில் எவரும் இல்லை. நாடார் கடைகூட மூடியிருந்தது. பஞ்சாயத்து மின்விளக்கைத்
130

மூலஸ்தானம் D
தவிர வேறு வெளிச்சங்கள் இல்லை. வானில் நிலவு இல்லை. நட சத்திரங்கள் இல்லை. அவனைத் தவிர வேறு எவருமே அந்த ஊரில் இறங்கவில்லை. அவன் நடக்கும்போது அவன் காலடிச் சத்தம் தெளிவாய்க் கேட்டடது. அதற்கே ஆங்காங்கே படுத் திருந்த நாய்கள் தலையைத் தூக்கிச் சத்தம் போட்டடுவிடடு படுத்தன.
ஒமாந்துார் கிராமமே மயான அமைதியில் இருந்ததை உணர்ந்தான் மருதமுத்து.
வாசல் ‘கேடடைத் தாண்டி உள்ளே போய் வீடடுக் கத வைத் தடடினான் மருதமுத்து. கொஞ்ச நேரத்தில் கோணங்கி வந்து கதவைத் திறந்தான். இன்னும் அவன் தூங்கவில்லை.
“நீ தூங்கலியா..?” கோணங்கி பதிலேதும் பேசாமல் கதவை மூடினான். உள்ளேபோன மருதமுத்து நாற்காலியை இழுத்துப் போடடு உடகார்ந்தான். பிறகு கோணங்கியை அருகில் வரச் சொல்லிக் கேட்டடான்.
“என்ன நடந்திச்சி ஊர்ல?.” கோணங்கி பயந்தவனாகப் பதில் சொன்னான். “துளசி டிச்சர் செத்துப் போச்சி. போலிசு வந்திச்சி. ஒங்க சித்தப்பா மவன் கூடடமா வந்து எனக்கிடட நீங்க எங்கன்னு கேட்டாரு.” மருதமுத்து மனதுக்குள் பயந்தான். “கோணங்கி உளறி யிருந்தால்.’
99 “என்னடா சொன்ன?.
“திருச்சிக்கு ராத்திரியே போயிடடாரு. அவர் வர்ர வரைக் கும் வீடடைப் பார்த்துக்கச் சொன்னாருன்னேன்.”
மருதமுத்துக்கு பெருமூச்சு வந்தது.
“சரி. சிவராத்திரி எப்புடி இருந்திச்சி?.
99
131 O

Page 68
0 மாத்தளைசோமு
“எனக்கு என்னமோ புடிக்கல்ல. வருசா வருசம் சிவராத் திரிக்கு புதுச்சடடை கெடைக்கும். இந்த வருசம் ஒன்னும் கெடைக்கலியே.”
“ஒனக்கு சடடதானே வேணும்? நான் தர்ரேன்.” என்ற மருதமுத்து பிரிப்கேஸைத் திறந்து இரண்டு சடடை இரண்டு கடசிக்கரை போட்டட வேடடி என்பனவற்றை எடுத்து கோணங் கியிடம் கொடுத்தான். கோணங்கிக்கு வாயெல்லாம் பல். சிவ ராத்திரிக்கு ஒரு சடடை தான் கிடைக்கும். இரண்டு கிடைத் திருக்கிறதே!.
சடடையை விரித்துப் பார்த்து அதன் அழ்கில் கோணங்கி மயங்கிக் கொண்டிருக்கும்போது பிரிப்கேஸைத் திறந்து ஒரு விஸ்கி பாடடிலை வெளியே எடுத்தான் மருதமுத்து.
கோணங்கிக்கு மறுபடியும் வாயெல்லாம் பல். சந்தோச மும் தாளவில்லை.
“ஒரு கிளாஸ் எடுத்துடடு வாடா.” கோணங்கி உள்ளே ஓடிப் போய் ஒரு கிளாஸ் எடுத்து வந்தான்.
“நேத்து பூராவே தொடவே இல்ல. தலைவரோட இருந் தேன். இன்னைக்கி ஒரு புடி புடிக்கணும்.”
விஸ்கி போத்தலின் மூடியைத் திருகி கழடடி கிளாசில் மதுவை ஊற்றினான். கிளாசின் அரைப்பாகம் நிரம்பியது. சோடா ஊற்றக் கூட நேரமில்லை அவனுக்கு. அப்படியே குடித்தான்.
கோணங்கிக்கு வாய் ஊறியது. “எனக்கு இல்லியா?.
99
éé
ஒனக்கா?” என்ற மருதமுத்து ஒரு புன்னகையை உதிர்த்து விடடுச் சொன்னான். “ஒனக்கு ஒரு கிளாஸ் இல்ல. இந்தப் பாடடிலையே தர்ரேன். ஆனா நான் சொல்ரதைக் கேப்பியா..?” “இம்புடடு நாளும் நீங்க சொல்ரதைத்தானே இந்தக் கோணங்கி செஞ்சான். என்னான்னு சொல்லுங்க.”
132

மூலஸ்தானம் L
“ஒனக்குப் பணம் தர்ரேன். நாளைக்கி காலையில பஸ் புடிச்சி அத்தை ஊருக்குப் போ. கொஞ்ச நாளைக்கி அங்கயே இரு. நான் கூப்புடுவேன். அப்பப்ப செலவுக்குப் பஸ் வண்டியில மூக்கன்கிடட பணம் குடுத்து விடுரேன் சரியா?”
மருதமுத்து கோணங்கியை அங்கிருந்து அனுப்புவதில் கருத்தாயிருந்தான்.
“சரி.” என்றான் கோணங்கி, அவனுக்கு எந்த சொந்தக் கருத்தும் இல்லை. மருதமுத்து சொல்வதை செய்வதுதான் அவன் வேலை.
மருதமுத்து விஸ்கி பாடடிலைத் தூக்கி கோணங்கியிடம் கொடுத்து விடடுச் சொன்னான்.“கொஞ்சம் குடிடா.”
வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே கோணங்கி
விஸ்கி பாடடிலை வாங்கிக் கொண்டான்.
பயண அசதியில் படுத்ததும் தூங்கிப் போனான் மருத முத்து. விடிந்து வெகு நேரத்திற்குப் பிறகுதான் கண் விழித்தான். அவன் வீடே அமைதியாய் இருந்தது. கோணங்கி எங்கே?.
வழக்கமாகக் கோணங்கி படுக்கும் மொடடை மாடிச் சந்தில் போய்ப் பார்த்தான். அங்கு கோணங்கி கால் கைகளை விரித்தவாறு கிடந்தான். வாயில் நுரை தள்ளியிருந்தது. விஸ்கி பாடடில் நிர்வாணமாகக் கிடந்தது. ஒரு சொடடுகூட இல்லை.
“பாவிப் பய எல்லா விஸ்கியையும் குடிச்சி ஒரேடியா போயிடடானே.”
கோணங்கியின் உடலைத் தொடடுப் பார்த்தான். குளிர்ந்து போயிருந்தது. மூச்சு இல்லை. மருதமுத்துவின் மனதுக்குள்
ஒரு நெளிவு. இருந்த ஒரு சாடசி சாய்ந்து போயிற்று. இனி எவருக்கும் பயமில்லை. முற்றும் முழுதான தைரியத்துடன்
மருதமுத்து தெருவுக்குள் கால் வைத்தான்.
133

Page 69
0 மாத்தளைசோமு
21
புலிவலம் போலிஸ் இன் ஸ்பெக்டர் மறுபடியும் ஒமாந்து ருக்குக் கோணங்கியின் சாவுக் கேசுக்காக வந்தார். துளசியின் சாவு தற்கொலையா - கொலையா? என்று முடிவு காண்பதற் குள் இந்தக் கிராமத்தில் இன்னொரு மர்மச் சாவு? இந்த இரண் டுக்கும் தொடர்பு உண்டா? என்று முடிச்சுப் போடடுப் பார்த் தார். ஏனோ முடிச்சு அவிழ்ந்து கொண்டே இருந்தது. பலரையும் விசாரித்தபோது எவரும் முடிச்சை இறுக்கிக் கொள்கிற மாதிரி பதிலே கொடுக்கவில்லை.
மருதமுத்து தானாக ஒரு புராணத்தை அவிழ்த்தான். “கோணங்கி அனாத மாதிரி. எப்பவும் இந்த ஊர் லதான் இருப் பான். நம்ம வீடடுல படுத்துக்குவான். இந்த ஊர்ல சொந்தக் காரங்க யாருமே இல்ல. கீலமலை கிராமத்தில ஒரே ஒரு அத்தை இருக்கா. அத்தைய வரச் சொல்லி இருக்கேன்.”
இன்ஸ்பெக்டர் தன் கேள்வியைத் தொடர்ந்தார், “ராத்திரி எங்க இருந்தான்?.”
கோணங்கியின் உடலைத் தன் வீடடில்தான் பார்த்தார் இன் ஸ்பெக்டர். திடீரென்று இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட கிறாரே என்று நினைத்தான் மருதமுத்து.
“ஏன் வூ-டுலதான் இருந்தான்.” “ராத்திரி என்ன குடிச்சான்?.” “விஸ்கி.”
“யாரு குடுத்தது?”
“நான்தான் குடுத்தேன். திருச்சியில இருந்து வர்ரப்ப ஒரு பாடடில் வாங்கிடடு வந்தேன். அதைத்தான் குடுத்தேன். குடுக் கிர நேரம் கொஞ்சம் குடிடான்னு சொன்னேன். பாவிப்பய முழு பாடடிலயும் குடிச்சான் போல.”
134

மூலஸ்தானம் L
“எப்ப திருச்சியில இருந்து வந்தீங்க?.”
“ராத்திரிதான் வந்தேன். நம்ம கடசி தலைவரு மெடரா சில் இருந்து வந்தாரு. அவரோட ஒரு நா. பூரா கடசி மேடடர் சம்பந்தமாட் பேசினோம். சிவராத்திரி அன்னைக்கி காலையில் போயிடடு நேத்து ராத்திரிதான் ஊருக்கே வந்தேன்.”
கடசித் தலைவரைச் சந்தித்தேன் என்றதும் இன்ஸ்பெக்டர் சுருதி திடீரென்று குறைந்தது.
இடைத் தேர்தல் வந்தால் ஆளுங்கடசியாக வரப்போகிற
*
கடசி. இப்போது இவரை ஏன் பகைக்க வேண்டும்? ஆயினும் சடடம் இருக்கிறதே! சடடம் இருந்தால் என்ன? கண் துடைப் புக்குச் சில வேலைகளைச் செய்ய வேண்டியதுதான். அதற்கு மேல் இன்ஸ்பெக்டர் கேள்வி ஏதும் கேடகாமல் விசாரணையை நிறுத்திக் கொண்டார்.
கோணங்கியின் உடல் போஸ்ட மார்டடத்திற்காக திருச்சிக் குப் போனது. அளவுக்கு மீறிக் குடித்ததினால் மாரடைப்பு வந்து மரணித்ததாக போஸ்ட மார்டடம் உண்மையையே சொல்லி யது. அந்த உண்மை பல உண்மைகளை மறைத்து விடடது.
கோணங்கியின் ஒரே உறவு அத்தைக் கிழவி வந்தாள்; கத றினாள், தலையில் அடித்துக் கொண்டாள். அவளை சமாதா னம் செய்து வைத்து பிணத்தை திருச்சியிலேயே எரித்தார்கள். பிறகு அத்தைக் கிழவிக்கு ஆயிரம் ரூபா கொடுத்து ஆறுதல் சொல்லி ஊருக்கே அனுப்பி வைத்தார்கள். ஒரு பொழுதுக்குள் கோணங்கியின் சரிதமே முடிந்து போயிற்று.
திருச்சிக்கும் போலீசுக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஒருநாள் முழு வதும் அலைந்ததில் பணம் செலவானபோதும் அதனையிடடு கவலைப்படாத மருதமுத்து அன்றிரவு நிம்மதியாய்த் தூங்கி னான். இருந்த ஒரே சாடசி அடங்கி விடடது. இனி எவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அந்த நம்பிக்கை அவனைத் தைரியப்படுத்தியது.
135

Page 70
0 மாத்தளைசோமு
கோணங்கியின் சாவு கோவிந்தனின் நெஞ்சை உலுக்கியது. அவனால் நம்ப முடியவில்லை.
அன்றிரவு ஐயர் வீடடுத் திண்ணையில் படுத்துக்கொண்டே கோணங்கியை நினைத்துக் கொண்டான். பாவம் அவன். உலகம் புரியாதவன். அவனைப் பயன்படுத்திக் கொண்டு மருதமுத்து அவனை ஆடடுவித்திருக்கிறான். இவ்வளவு சீக்கிரம் சாவு அவ னுக்கு எப்படி வந்தது?
கோணங்கியின் நினைவுகள் காடசிகளாகி கோவிந்தனின் நெஞ்சுக்குள் இறங்கின.
“என்ன கோவிந்து யோசிக்கிர?’ புழுக்கத்திற்காகக் கத வைத் திறந்துவிடடுப் படுத்துக் கொண்டிருந்த ஐயர்தான் கேட்டடார். அப்போதுதான் கோவிந்தன் சொன்னான்.
“கோணங்கிய நெனைச்சுப் பார்த்தேன் சாமி.! போன மாசம் காடடாத்துல குளிச்சிக்கிடடிருந்தான் கோணங்கி. துணி யெல்லாம் துவைச்சான். ஏன்னு கேடடேன். அத்தைய பார்க்கப் போறேன்னு சொன்னான். அத்தைக்குப் பொண்ணு இருக் கான்னு கேடடேன். இல்லைன்னு சொன்னாள். பொண்ணு இல்லேன்னா என்னா? அத்தைய பொண்ணு பார்க்கச் சொல் லேன்னு சொன்னேன். அதுக்கு கோணங்கி சொன்னான். அத் தைக்கே மாப்புள்ள கெடைக்கல்ல. எனக்கு எப்படி பொண்ணு தேடுவான் னு சொன்னான். அதை நெனைச்சேன் சிரிப்பு வந் திருச்சி. இன்னைக்கி அவன் இல்ல போயிடடான்.”
கோவிந்தனின் கண்கள் நனைந்தன. ஐயர் மானசீகமாக கோவிந்தன் கலங்குவதை உணர்ந் தார். “என்னப்பா சிரிப்பு? நீ ஏன் அழுவுற?”
“கோணங்கி என்ன மாதிரி ஒரு அனாதை. நானும் ஒரு அனாத. அதான் அழுதேன்.”
ஐயர் ‘வெடுக்கென்று கேடடார். "நீயும் அவனும்
99 ஒன்னா?
136

மூலஸ்தானம் D
ஒரு மெளனம் நிலவியது. ஐயர் மீண்டும் பேசினார். “அவன் மருதமுத்துவோடு இருந்தான். நீ எங்களோடு இருக்க. மருத முத்துவுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இருக்கா, இல்லையா..?”
“இருக்கு சாமி இருக்கு.” “துஷ்டனைக் கண்டா தூர விலகுன்னு சொல்வா. கோணங்கி சேர்ந்தே இருந்தான். முடிவுதான் தெரியுமே!’ என்ற ஐயர் “என்ன வேலு! தூக்கமா?.” என்று வேல்சாமியை இழுத்தார்.
“இல்ல சாமி நீங்க பேசுரதை கேடடுகிடடுதான் இருக் கேன்.” என்றான் வேல்சாமி.
“கோணங்கிய பத்தி நீ என்ன சொல்ற?.” ஐயர் கேட்டடார். “கோணங்கிய பத்தி நான் என்ன சொல்ல?. அவன் மனசில வஞ்சனை இல்லாதவன், பத்தாம்பசலி. மருதமுத்து அவன காரணத்தோடத்தான் வைச்சிருந்தான். அவன குடிக்க பழக் கினதும் அவன்தான். கடைசியில குடிச்சே செத்துடடான்.”
“ஒனக்கு எப்படித் தெரியும்?” “மருதமுத்து போலிசில திருச்சியில இருந்து விஸ்கி வாங் கிடடு வந்து கொடுத்தேன்னு சொல்லியிருக்கான்.” வேல்சாமி பதில் கொடுத்தான்.
“வேல்சாமி.! நீ எப்பப் பார்த்தாலும் கோயிலுக்குள்ள தான் இருக்கே. ஒனக்கு நிறைய விசயம் தெரியுதே!”
“சாமி! இது நானா தெரிஞ்சிக்கிடடதில்ல. சாயந்தரம் கோயிலுக்கு வந்த ஒருத்தர் சொன்னது.”
ஐயர் கவலை வார்த்தைகளில் தெறித்து விழுந்தன. “நானும் இந்த பூமியில் கால் பதிச்சிப் பல வருசம் ஆயிருச்சி. சிவராத்திரி சமயம் எதுவுமே நடந்ததில்ல. இந்த வருசம் இப் படி ஆயிருச்சி. ரெண்டு சாவு. இது நல்லதுக்கில்ல. மனு சாள் ஏதேதோ பேசுரா.”
137

Page 71
0 மாத்தளைசோமு
கோவிந்தன் தன் பயத்தை அவிழ்த்தான். “எனக்கும் பயமா இருக்கு சாமி. சிவராத்திரிக்கு பொறகு ஊரே மயானமா இருக்கு. ராத்திரியில தெருவுல ஆளே இல்ல. பஸ்லயும் கூடடம் இல்ல. அஞ்சரை கே.பி.எஸ். போனதுமே நாடார் கடைய மூடிடடு போறாரு. எனக்குப் பயமா இருக்கு சாமி! அதேநேரம் அந்த மருத முத்துவும் அவங்க ஆளுகளும் கூடி கூடிப் பேசு றாங்க. துளசியக் கெடுத்துக் கொன்னு தூக்கினது சிவராசா மாஸ்டருன்னு சொல்லிக்கிடடிருக்காங்க.”
ஐயர் பயந்தே போனார். ஊர் விவகாரம் எங்கோ போ வதை உணர்ந்தார். “அட கடவுளே! செய்யிரதையும் செஞ் சிடடு பழிய சிவராஜா மேல போடுராளா?. சிவராஜா நல்ல பையன்.”
வேல்சாமி அப்போதுதான் தன் உள்ளக் குமுறலை விரித் துக் காடடினான் “சாதிக் கலவரத்த தூண்டுரானுக சாமி.”
ஐயர் கவலை விரிந்தது. நிம்மதியான இந்த ஊரிலும் சாதிக் கலவரம் வந்து விடுமோ? மருதமுத்து ஒரு பக்கம். சிவராஜா மறுபக்கம். இடையில் துளசி. இதனிடையே சிக்குண்ட இந்த ஊரில் என்ன நடக்குமோ? ஒருத்தனை ஒருத்தன் குறை சொன் னால் சண்டை. ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் குறை சொன்னால் கலவரம் தானே வரும்?
22
அந்த லிப்டுக்குள் வேகமாக நுழைந்து கொண்டு போக வேண்டிய மாடிக்குரிய படடனை அழுத்தினான் ராம். லிப்டுக் குள் ஏற்கனவே நால்வர் இருந்தார்கள். ஒரு வயதான வெள்ளைக் காரி, ஷாப்பிங் போக வந்திருப்பாள் போலும். சிறிய வண்டி. ரொலி வண்டி அவர்கள் கையில் இருந்தது. அந்த ரொலி வண்டி யில் ஷாப்பிங் பேக்குகள். நடுத்தர வயது வெள்ளைக்காரன். அவன் அருகில் ஒருத்தி. அவள் அந்த வெள்ளைக்காரனின் மனைவியாக இருக்கலாம்; ஒருவேளை கேர்ல் பிரண்டாக
138

மூலஸ்தானம்
இருக்கலாம். இந்த நாடடில் ஒரு ஆணின் அருகில் இருப்பது நிச்சயம் மனைவியாகவோ, காதலியாகவோ இருக்கும். அடுத்து நடுத்தர வயது நீக்ரோ பெண் நவநாகரீக உடையில். அவளுக்கு அழகான கண்கள். சிவந்த உதடுகள். மார்பை உற்றுப் பார்க் கச் செய்யும் கவுன். கறுப்பு அழகில்லையென்று யார் சொன் னார்கள்? கறுப்பில் அழகு மடடுமல்ல, ஒரு கவர்ச்சியும் உண்டு. அதனை இங்குள்ள நீக்ரோ பெண்கள் நிரூபித்து இருக்கின் றார்கள்.
லிட்டில் இருந்த எல்லோரையும் பார்த்தான் ராம். அந்த நீக்ரோ பெண்ணைத் தவிர எவரும் உதடடைப் பிரிக்கவே இல்லை. அந்த நீக்ரோ பெண் மாத்திரமே புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
அந்த நீக்ரோ பெண் மெதுவாகக் கேடடாள். “யூஇந்தயன். ஓர் பாகிஸ்தானி.?” ராம் புன்னகை பூத்தவாறு, "ஐயாம் புறம் இந்தியா” என் றான். லிப்பட நின்றது. வயதான வெள்ளைக்காரி இறங்கிப் போனாள். அடுத்த மாடியில் அவன் இறங்க வேண்டும். அவன் லிப்டை விடடு வெளியே வந்தபோது நீக்ரோ பெண்ணும் வெளியே வந்தாள். அவள் முகம் நிறைய புன்னகை.
“யூலிவ்விங் இயர்?” “இயஸ்” என்றான் ராம். “ஹேவ் ஏ நைஸ் டே அன்ட நைஸ் வீக் என்ப.” என்று வாழ்த்தினாள் நீக்ரோ பெண்.
பதிலுக்கு “யூடு.” என்று வாழ்த்தினான் ராம்.
s Gðt-J... Gði ...
குதி உயர்ந்த செருப்பில் நடனமாடியவாறு நடந்தாள் அவள்.
இந்த நாடடில் வாழ்த்துக்களுக்கு பஞ்சமில்லை. ஒரு பைசா செலவில்லாத வாழ்த்து. ஆனால் அது கூட சிலரிடம் இருந்து
139

Page 72
மாத்தளைசோமு
வராதே! வாழ்த்து மனதில் இருந்து வரவேண்டும். எத்தனை பேருக்கு மனம் வரும்? வாழ்வதே பிடிக்காதபோது வாழ்த்து வேறு வேண்டுமா என்ன? ஆனால் இங்கு அனேகமான பேர்கள் வாழ்த்துக்களை பரிமாறுவார்கள். அவர்களைப் பொறுத்த வரை யில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு யந்திரமான வாழ்க்கை. டெலிபோன். டெலக்ஸ். பாக்ஸ். கம்யூ உடர். கார். ரயில். கோக் தரும் யந்திரம். பேப்பர் தரும் யந்திரம். பொடடேட டோ சிப்ஸ் தரும் யந்திரம். இந்த யந்திரத்தோடு மனிதன். வெள்ளி வந்துவிடடால் விடுதலை பெற்ற உணர்வில் மகிழ்ச் சிப் பொங்கும் சனி, ஞாயிறு யந்திரங்களைத் தடவ வேண்டிய தில்லை. அதுவே அவனுக்கு மகிழ்ச்சியாகின்றது. இந்த மகிழ்ச் சியை வெளிக்காட்டடவும் அடுத்தவன் அதே மகிழ்ச்சியை அடை யவும் வெளிக்காடடும் அடையாளமே இந்த வாழ்த்துக்கள்.
அந்த அறைக் கதவைத் திறந்து உள்ளே போனான் ராம். ஒரு படுக்கை அறை. சிறிய சமையல் கூடம். ஒரு சிறிய ஹால். அது அவனுக்குப் போதுமானது என்பதைவிட வசதியானது. அதன் வாடகையைப் பற்றி அவனுக்கு கவலையில்லை. அது கம்பெனியின் வேலை.
ஒரு பெருமூச்சை விடடுக் கொண்டே பிரிப்கேஸை ஹாலில் உள்ள மேஜையில் வைத்துவிடடு சோபாவில் சாய்ந் தான். சில நிமிட நிம்மதியான ஓய்வு. பிறகு மெதுவாக காலில் மாடடியிருந்ததைக் கழற்றினான். எழுந்து நின்று ‘டை'யைத் தளர்த்தி அவிழ்த்தான். சர்டடைக் கழற்றினான். பிறகு சூஸ், மேஸ் என்பனவற்றை அதனதன் இடத்தில் வைத்தான். சர்டடை ஹாங்கரில் தொங்கவிடடான். பெடரூமுக்குப் போய் கட்டடிலில் கிடந்த கைலியை எடுத்து வந்து கடடிக் கொண்டான்.
கைலியைக் கண்டு பிடித்தவன் கையைக் குலுக்கிப் பாராடட வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. கோர்ட, சூடடை உதறிவிடடு கைலிக்குள் இருப்பது தனி சுகமானது. இந்தியா வில் இருந்தபோது நாலு முழ வேடடிதான் கட்டினான். கைலி கட்டட ஆசைப்படடான். ஆனால் அப்பாவிற்குப் பயந்து அந்த
140

மூலஸ்தானம் D
எண்ணத்தைக் கைவிடடான். வெளியூர் போகும்போது மடடும் பெடடியில் கைலியை வைத்துக் கொள்வான்.
ஒருநாள் அப்பாவிடம் கேட்டடான் “ஆத்தில இருக்கிறப் போ கைலி கடடவா?.”
அப்பா யோசித்தார். பிறகு சொன்னார் “கைலி கடடுர தில எனக்கு ஆபடசேபணை இல்ல. குருக்கள் ஆத்தல கைலி கடடின்டா ஊர் என்னவாச்சும் பேசும். வேல்சாமி இங்க இருக்கிரதுக்கே என்னென்னவோ பேசுரா. ஒனக்கு விருப்பம்
99 Golf T... கடடிகக.
அவன் வீடடில் கைலி கடடவே இல்லை. அப்பாவும் ஏன் என்ற கேடகவே இல்லை. மனிதன் வசதிக்குத்தான் உடுப்பு. அதில்கூட சாதி, சமயப்பூச்சுப் பூசுவது அவனுக்குப் பிடிக்கவே இல்லை. கைலி முஸ்லிம்கள் மடடும்தான் கடட வேண்டுமா?. வேடடி இந்து மடடும்தான் உடுத்த வேண்டுமா?. இதெல்லாம் விபரீதமான கற்பனை. இங்கே அமெரிக்கர்களிடம் அப்படி யான பழக்கம் இல்லை. தொழிலுக்கான உடுப்புகள் மாறுபடும். ஆனால் கிளப்பில் டாக்டரும், புச்சரும் ஒன்றாகவே பீர் குடிப் பார்கள். சாதி இல்லை. கோத்திரம் இல்லை.
சோபாவில் சாய்ந்து உடகார்ந்து கண்களை மூடி யோசித் தான் ராம். உடனே ஓமந்தூர் கிராமம் வந்தது. அம்மா, அப்பா எப்படி இருக்கின்றார்களோ! ஓமாந்தூரைச் சுற்றிய அவன் நினைவு திருச்சி மலைக்கோடடை ஏறி இறங்கி பெரிய கடை வீதி, மாரீஸ் தியேடடர், அம்மா மண்டபம், பூனிரங்கம் கோயில் என நடந்தது. காவிரியில் நின்றது. கடைசியாக அவன் பார்த்த கா விரியில் தண்ணிர் இல்லை. பாலைவன மணல் மேடாக நதிப் பிரதேசம் இருந்தது. ஒரு ஒரமாய் பூமித்தாயின் கண் ணிர்த் துளிகளாய்த் தண்ணிர் ஓடியது.
டிவியைப் போடடான் ராம். வண்ண வண்ண விளம்பரங் கள். உலகையே கையில் அடக்கிக் கொண்ட தோரணையில்
இன்னும் அரை மணித்தியாலத்தில் செய்தி வரும். செய்திக்
141

Page 73
மாத்தளைசோமு
கென்று தனி ஒளிபரப்பு உண்டு. ஆனால் அதில் அவனுக்கு நியூஸ் பார்க்கப் பிடிக்காது. சலிப்பு தடடுகிற மாதிரி எல்லா செய்தி களையும் சொல்லிக் கொண்ட்ே இருப்பார்கள். ஆனால் இந்த ஒளிபரப்பில் முக்கிய செய்தி மடடுமே வரும். எத்தனை ஒளி அலைகள் இருந்தும் என்ன. இங்கு எல்லா ஒளிபரப்புகளிலும் அமெரிக்கா தான் ஜனநாயகப் பாதுகாவலனாகவும் அதற்காக போராடுவதாகவும் சொல்லப்படும்.
பாத்ரூமுக்குள் நுழைந்த ராம் அலுப்பு தீரக் குளித்தான். சுடுநீரில் குளிர்நீரை கலந்து குளிக்க இதமாக இருந்தது. ஆசை தீரக் குளித்தான். குளிக்கும்போது சில எண்ணங்கள் நெஞ்சுக்குள் சுழித்தன. ஊரில் இப்படி குளிக்க முடியுமா? கிராமத்தில் கிணற்றுத் தண்ணிரில் குளித்தால்தான் உண்டு. சுடுநீரில் குளிக்க வேண்டுமென்றால் அண்டாவில் தண்ணிரை நிறைத்து அடுப்போ டு போராட வேண்டும், வேல்சாமி அடுப் பெரிய விறகு பொறுக்கி வரவேண்டும்.
குளித்து முடித்துத் தலையைத் துவடடி கிச்சனுக்குள் நுழைந்து காபி கலந்து மேஜையில் வைத்துவிடடு பெடரூமில் இருக்கும் சுவரோடு ஒட்டடிய பீரோ வைத் திறந்தான். மலைக் கோடடை பிள்ளையார் சிலை கண்களில் படடது. மெள்ளமாய் கண்களை மூடி நெஞ்சுக்குள் மந்திரங்கள் சொல்லிப் பிரார்த்தித் தான். விபூதி பூசிக் கொண்டான். பிறகு ஒரு சேட உடுத்திக் கொண்டான். முன்னர் உடுத்திய கைலியைத் திரும்ப உடுத் தினான். சோபாவில் உடகார்ந்து காபியைக் குடித்துக் கொண்டு டிவியில் செய்தி பார்த்தான்.
அமெரிக்க ஜனாதிபதி பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தார். ரஷ்யாவைப் பற்றிய செய்திகள். ரொடடிக்குக் கியூ நிற்கிற சோவியத் மக்கள். கியூபாவைப் பற்றிய செய்தி. கியூபாவில் ஜனநாயகம் இல்லையாம். இந்தியாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான செய்தி. அமெரிக்காவில் சிக்காகோவில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு, பத்து நிமிடத்தில் ஒரு கொலை நடக்கிறதே. அதைப் பற்றி எதுவும்
142

மூலஸ்தானம் 0
இல்லை. டிவியை நிறுத்திவிடடு மேஜையில் இருந்த ஜே.கே.வின் புத்தகத்தை விட்டட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான்.
“கிறிஸ்தவர்கள் பைபிள் படிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் குர்ஆன் வாசிக்கிறார்கள். இந்துக்கள் புராணம் படிக்கிறார்கள். பெளத்தர்கள் தம்மபதம் படிக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் அவைகளைப் பின்பற்றுகிறார்களா? எத்தனை பேர் மதம் சொல்கிறபடி நடக்கின்றார்கள்? அப்படி நடந்தால் உலகில் கலவரமோ, சண்டையோ நடக்காதே!”
ஜே.கே.யின் சிந்தனை ஆழமானது. அகலித்தது. அதனைக் கற்றுக்கொள்ள இந்த மனிதனுக்குப் பக்குவம் இல்லை. என்று எண்ணிய ராம் அந்தப் புத்தகத்தை மூடிவிடடு மேலும் யோசித்தபோது டெலிபோன் அழைத்தது. ரிசீவரை எடுத்து “ஹலோ! ராம் இயர்.” என்றான்.
மறு பக்கத்தில் ஒரு மதுரமான பெண்ணின் குரல். கரோலின் தான் அழைத்திருக்கின்றாள்.
23
பெடரும் பீரோவில் பொறுத்தப்படடிருந்த நிலைக் கண்ணாடியின் முன்னே போய் நின்று அழகு பார்த்தான். அப் போதுதான் நெற்றியில் விபூதிக் கோடுகள் மெல்லிசாய் தெரிந் தன. ஒரு விநாடி யோசித்தான். அழித்து விடுவதா இல்லையா? கரோலினுக்குத் தான் இந்து என்பது தெரியும். ஆனால் வெளியே போகப் போகின்றோமே! எதற்கு இந்த விபூதிக் கோடுகள்? அழித்து விடலாமா? மறுபடியும் யோசனை.யோசிக்க பிரச் சனைதான் நீளும். முடிவு காண முடியாது. அதற்குள் அவனே கையால் விபூதிக் கோடுகளை அழித்தான். பிறகு நிவ்யா கிரீமைத் தேடியெடுத்து விரலால் தொடடு கண்ணுக்கு கீழே மூக்கைச் சுற்றி கன்னங்களிலும் பூசிப்பூசி அழகுபடுத்தினான். சில நிமிடங் களுக்குப் பிறகு பவுடர் போடடுக் கொண்டான். கடைசியாக
பேர்ப்பியூம் பாடடிலை எடுத்துச் சடடையில் ஸ்பிரே செய்து
143

Page 74
0 மாத்தளைசோமு
கொண்டான். மறுபடியும் கண்ணாடியைப் பார்த்தான். அவன் வெள்ளை நிறம் என்றோ மாநிறம் என்றோ சொல்ல முடியாத ஒரு பளிச் நிறம். அழகாய்த்தான் இருந்தான். அவனுக்கு இந்த மேக்அப் செய்வது பிடிக்காது. ஆனால் இந்தக் கம்பெனிக்கு அப்படிப்போக வேண்டியிருக்கிறது.
தினமும் கலையாத உடுப்பு, முகத்தோடு ஒடடிய புன் னகை, எப்போதும் அழகான தோற்றம் தேவைப்படுகின்றது. அங்கு தினமும் பல்வேறு நாடடவர்கள் வந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அது சர்வதேச கம்யூ டடர் ஆய்வு நிலையம். புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அங்கு வேலை செய்கிற எல்லோரும் தினமும் விதவிதமான ஆடையில் தான் வருவார்கள். ஆடை பாதி ஆள் பாதி என்று படித்ததை நேருக்கு நேர் சரியென்று இங்குதான் உணர்ந்தான் அவன், குறிப் பாக ஜோர்ஜ் மத்தியூ தன் உடையில் எடுக்கிற அக்கறையை அவன் நேரில் பார்த்தான். அவனுக்கு வாழ்க்கையின் எந்தப் பிரச்சனையுமே இருக்காது என்றுகூட நினைத்தான் அவன். ஆனால் அது பொய்யானது என்பதை ஜோர்ஜ் மத்தியூவோடு பேசியபோது உணர்ந்தான்.
ஜோர்ஜ் மத்தியூ ஒரு கம்யூட்டர் புரோகிராமர். விரல் நுனியில் கம்யூடடரை ஆட்டடிப் படைப்பவன். ஆனால் மாதத் தில் மூன்று நாடகள் "சிக் போட்டடு விடுவான். அவன் வராத நாளில் மத்தியூ வரவில்லையே என்ற உணர்வு எல்லோருக்கும் தெரியவரும். வேலைக்கு திரும்பும் மத்தியூவை முதல் இரண்டு மணித்தியாலம் யாருமே போய் பார்க்க முடியாது, பேசமுடி யாது. தன் ரூமை மூடிக்கொண்டு கம்யூ உடரோடு பேசிக் கொண்டிருப்பான். அதனை நீண்ட நாடகளாகக் கவனித்தான்.
ஒரு நாள் மத்தியூவிடம் கேட்டடான் ராம். “விரல் நுனியில் கம்யூ உடரை வைத்திருக்கிற என் முகத் தில் ஏன் கவலை என்று கேடகிறாயா?.” மெள்ளமாய் ஒரு
புன்னகையை உதிர்த்துவிடடுப் பேசத் தொடங்கினான்.
144

மூலஸ்தானம் D
“உலகம் முழுவதும் அமெரிக்கர்களைப் பற்றி ஒரு பெருமை. அமெரிக்கன் பணக்காரன். அமெரிக்கன் அறிவாளி, அமெரிக்கன் விஞ்ஞானத்தைக் கையில் வைத்திருக்கின்றான் என்று உலகெங் கும் பரவிவிடடது. அமெரிக்க அரசு உலகத்தின் எஜமானனாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது. தன்னைக் கண் மூடித் தனமாக ஆதரிக்கிற நாடுகளுக்குப் பணத்தை அள்ளிக் கொடடு கின்றது. அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் ஜனநாயகவாதிக ளாகவும் எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். அமெரிக்கர்கள் பணக்காரர்கள், கொடையாளி கள், ஜனநாயகக் காவலர்கள் என்ற பெயர் உலகெங்கும் பரவ அரசு மும்முரமாக இருக்கிறது. ஆனால் சாதாரண அமெரிக் கனின் மனதை யார் நாடி பிடித்துப் பார்த்தார்கள்? அமெரிக்க மக்களும் ஏனைய நாடடு மக்களைப் போன்ற மக்கள்தான். நீங்கள் ரூபாவில் செலவழிப்பீர்கள். நாங்கள் அதே தொகையை டாலரில் செலவழிப்போம்.
இங்கும் வேலை இல்லாதோர் உண்டு. ஏழைகள் நிறைய இருக்கிறார்கள். உங்கள் நாட்டில் வேலை இல்லாவிடடாலும் குடும்ப முறை இருக்கிறது. சந்தோசமாக வாழலாம். எதுவும் இல்லாவிடடால் பிச்சை எடுத்தாவது வாழலாம். ஆனால் இங்கு பிச்சை எடுக்கவே முடியாது. தெரிந்தோ தெரியாமலோ பிச்சை எடுக்கிறார்கள். இங்கு பலர் போலி வாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். நீ நினைப்பதுபோல் எனக்கு கவலை நிறையவே உண்டு. இப்போது தனியே வாழ்கின்றேன். என் மனைவி என் னைப் பிடிக்கவில்லையென்று தனியே போய்விடடாள். எனது திருமண வாழ்க்கை கனவுபோல் ஆகிவிடடது. இத்தனைக்கும் அவளை மூன்று ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்தேன். இன்னமும் அவளை விரும்புகின்றேன். ஆனால் அவளுக்கு விருப்
பம் இல்லை.”
இவனுக்குள் இத்தனை குமுறல்களா என்று எண்ணிக் கொண்டே ராம் மத்தியூவையே பார்த்தான்.
145

Page 75
D மாத்தளைசோமு
கடைசியாக மத்தியூ சொன்னான்.“சராசரி அமெரிக் கனுக்குப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் எல்லா வற்றையும் எனது உடுப்புகளும் போலியான புன்னகையும் மறைத்து விடுகின்றன. அப்படி மறைப்பவர்களில் நானும் ஒருத் தன் ராம். இது இந்தப் பதவிக்காகப் போடுகிற வேஷம். எனது தேவைகளுக்காகப் போடுகிற நாடகம்.”
ராம் மத்தியூ கையைக் குலுக்கி, “கவலைப்படாதே.! உனக்கு இருக்கிற திறமைக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது. நடந்ததை நினைத்துக் கவலைப்படாதே, நீ வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்.” என்றான்.
‘எந்த அமெரிக்கனும் சொல்லாத வார்த்தைகளை இவன் சொல்வது மனதுக்கு இதமாக இருக்கிறதே! என்று நினைத்த மத்தியூ அதற்காக நன்றியுடன் ராம்மைப் பார்த்துப் புன்னகைத் தான், “தேங்கியூராம்.”
கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ராம். கரோலின் சொன்ன நாற்பது நிமிடம் முடிய சில நிமிடங்கள் இருந்தன. இன்னும் சில நிமிடங்களில் கரோலின் புன்னகையோடு வந்துவிடுவாள். அவள் வந்ததும் இருவரும் வெளியே போகவேண்டும். போனில் பேசியபோது எடுத்த முடிவு. ‘ஸ்ஸ்ர்ர்ர். பஸ்ஸர் சத்தம் ஒலித் தது. ரீசிவரை எடுத்து “ஹலோ! ர்ாம்! இயர்.” என்றான்.
“ஹலோ! ராம்! கரோ இயர்.” கரோலின் வந்துவிடடாள். படடனை அழுத்தினான். பிறகு ரூம் கதவைத் திறந்து வெளியே போய் நின்றான். சில நிமிடங் களில் கரோலின் புன்னகையோடு வந்தாள். ராம் கையை நீட.டி “கம் இன்” என்று அழைத்தான். கரோலின் பதிலுக்கு அவன் கை யைப் பிடித்தாள். அப்போது ரோசாப்பூ இதழொன்றைத் தொட்ட உணர்வே ஏற்படடது ராம்முக்கு. அழகாக இருந்தாள் அவள். முதன்முதலில் கவர்ச்சியில் அரைகுறை உடையில் பார்த்த கரோலின் அல்ல இவள். புதிய கரோலின். கழுத்து வரை மூடியும் மணிக்கட்டடு வரை நீண்டும் முடடுக்கால் வரை
O 146

மூலஸ்தானம் D
தொங்கியும் குடை ராடடினம் போன்று இருந்தது கவுன். சின்ன வயதில் கதைப் புத்தகத்தில் படித்த சின்ர லா தேவதைதான் அவன் ஞாபகத்தில் வந்து நின்றது.
சில விநாடிகள் உள்ளமும் உதடும் மெளனியாகி விடடது. பேச்சு வரவே இல்லை. அவள் ராம்மைப் பார்த்து மயங்கிப் போயிருந்தாள். இருவரும் அந்த அறையின் உள்ளே போனார் கள். ராம் உள்ளே போன பிறகுதான் பேசினான். “யூலுக் வெரி நைஸ். பியூடடிபுல்”
G6 99
Այ, (6). அவள் குரலில் மயக்கம் இருந்தது.
அவள் கண்கள் படபடத்தன. கண்களில் பரவசம். தலைக்கு மேல் பூக்களைக் கொடடினாற் போல் உணர்வு.
மெள்ளமாய் ராமை நெருங்கி அவன் கன்னத்தில் முத்த மிடடடாள் கரோலின். ராம் அதனை எதிர்பார்க்கவே இல்லை.
நியூயார்க் நகரத்தைப் பார்க்க, அதன் அழகை ரசிக்க, இர வில் ஆயிரம் கண்கள் ஒரு மனிதனுக்குப் போதாது. வானத்தைத் தொடடுவிடடாற் போன்ற கடடிடங்கள், வளைந்து நெளிந்து பாம்பாய் ஓடுகின்ற வீதிகள், எங்கு பார்த்தாலும் மின்சார சூரியன்கள், பகலில் ஒரு சூரியன் மடடுமே! ஆனால் இரவைப் பகலாக்க பல சூரியன்கள் இங்கே. சாலை ஓரங்களில், முச் சந்திகளில் உயர்ந்த கட்டடிடங்களில் நடனமாடும் மின்சார போர்டுகள்.
கரோலின் கார் ஓடடிக் கொண்டிருந்தாள். இடது கை ஒடடம். வலது பக்கம் ராம் உடகார்ந்திருந்தான். புதிய கார் போலும். குலுக்கலே இல்லை. பஞ்சு மெத்தையில் இருக்கும் போது யாரோ தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் இருக்கிறது.
கார் ஸ்டீரியோவில் மெல்லிசாய் இசை வந்தது. முதலில் காரில் ரேடியோ, பிறகு கசெடடஸ், ஸ்டீரியோ. இப்போது கம்பாக் டிஸ்க். டெலிபோனும் வந்து விட்டடது. டெலிவிசன்
147

Page 76
0 மாத்தளைசோமு
வரப்போகிறது. விஞ்ஞானம் எங்கெங்கோ நுழைந்து கொண்டு மனித இனத்தையே ஒரு ஆட்டு ஆடடிக் கொண்டிருக்கிறது.
“எதைப் பற்றி யோசனை?.” கரோலின் காரோடடிக் கொண்டே அவ்வப்போது அவனைக் கவனித்ததில் கேடடாள்.
ராம் முகத்தில் முதலில் மலர்ந்தது புன்னகை. பிறகு வார்த்தைகள்.
“எங்கிருந்து இவ்வளவு மின்சாரம் கிடைக்கின்றது இங்கே! நம் நாடடில் அதற்குத் தட்டடுப்பாடு. இந்தியாவில் வெய்யில் காலத்தில் ஒரு நாளைக்கு ஏழு தடவை மின் வெட்டடு. இங்கே மடடும் எப்படி இவ்வாறு.”
தலைக்கு ஊத்திக்க தண்ணீரும் கண் பார்வைக்கு வெளிச்ச மும் எந்த நாட்டடுல கிடைக்குதோ அந்த நாடு சொர்க்கப் !آفليي" என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அப்படி யானால் நியூயார்க் சொர்க்க பூமியா?.
கரோலின் சிரித்தாள். “ஏன்.” என்றான் ராம். காரை லாவகமாக ஒடடிக்கொண்டே பேசினாள் கரோ லின், “இங்கே மின்சாரம் ஒருநாள் இல்லாவிடடால் அமெரிக்கன் செத்து விடுவானே! ஒரு தடவை எங்கள் வீடடில் மின்சாரம் இல்லாமல் போய் விடடது. சுமார் எடடு மணித்தியாலம் இருடடில் இருக்கவேண்டும். எங்கள் வீடடில் அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா?.”
“என்ன செய்தார்கள்?.” “பக்கத்தில் உள்ள ஒரு ஹோடடலில் ரூமெடுத்து எங்க ள்ைத் தங்க வைத்தார் அப்பா. மின்சாரம் வந்ததும்தான் வீடு திரும்பினோம். மின்சாரம் இல்லாமல் நீங்கள் வாழ்ந்து விடு வீர்கள். ஆனால் அமெரிக்கன் வாழமாடடான். செத்து போய் விடுவான், பலருக்குப் பைத்தியமே பிடித்து விடும்.”
மின்சார வெபடடில் எண்ணெய் விளக்கில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மண்ணெண்ணய் ஒளியில் சாப்பிடடது, படித்தது,
o 148

மூலஸ்தானம் 0
நடந்தது எல்லாம் சிறுசிறு காடசிகளாய் ராம் நெஞ்சில் மின்னி மின்னி மறைந்தன.
கரோலின் சொல்வதைப் பார்த்தால் சராசரி இந்தியன் கண்ணிர், மின்சாரப் பற்றாக்குறையிலும் எப்படியோ வாழத் தெரிந்தவன்; வாழப் பழகியவன். ஜனநாயகம் என்ற போர்வை யில் உரிமைகள் மறுக்கப்படடு அரசியல் சூதாடடத்தில் அலைக் கழிக்கப்படடு தனிநபர் வழிபாடடில் சிந்தனை இல்லாமல் போய் வாழ்கின்றான். நெஞ்சில் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் நிறையவே இருந்தாலும் கிடைத்ததில் கைக்கு எடடியதில் ஒரு திருப்தி காண்கிற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருக்கின்றதே!
“ஒருமுறை மூன்று நாடகள் மின்சாரமே இல்லை. சமா ளித்தோம். மின்சாரம் வரும் வரை முணுமுணுப்புகள் மட்டும் இருந்தன. அதுதான் எங்கள் நாடு.”
இதழில் புன்னகையை மலரவிடடுக் கொண்டே காரை ஒடடினாள் கரோலின். அந்த புன்னகை காந்தமாய் ராமை ஒட்டிக் கொண்டது. அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு பெரிய சீன ஹோடடலின் முன்னே அந்தக் கார் நின்றது.
24
கிரைவிட்டடு இறங்கிய கரோலின் ராமின் இடதுகையை வலதுகையால் தொடடடுக்கொண்டே அந்தப் பெரிய ஹோடட லின் உள்ளே நடந்தாள். அது ஒரு சீன ஹோடடல். நியூயார்க் நகரில் மிகவும் புகழ் பெற்றது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக் கானவர்கள் உடகார்ந்து சாப்பிடக் கூடிய பெரிய ஹோடடல்.
இன்று உலகம் முழுவதும் சீனர்கள் குடியேறாத நாடுகளே இல்லையெனலாம். குறிப்பாக சீன உணவு வகைகள் மூல மாக அவர்கள் பல மேற்கத்திய நகரங்களை வசப்படுத்தியிருக் கின்றார்கள். சீன உணவு இந்த உலகின் பெரும்பான்மை
149

Page 77
D மாத்தளைசோமு
நகரங்களிலும் கிடைக்கின்றது. அந்த உணவு மூலமாக எல்லா மேற்கத்திய நாடுகளிலும் உறவு கொண்டாடத் துவங்கியிருக் கிறார்கள் அவர்கள்.
மெல்லிய சீன இசை காதுகளைத் தடவியபடி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலியைத் தவிர வேறு சத்தமே இல்லை. சைவ உணவு வகைகளுக்கு ஒரு தனியான பகுதி இருந்தது.
அவர்களை ஒரு சீன சர்வர் அழைத்துச் சென்று உள்ளே ஒரு மேஜையில் எதிரும் புதிருமாக அமர வைத்தான்.
இரண்டு பேர் மட்டும் உடகாரக்கூடிய மேஜை, அந்த மேஜைக்கு மேலே பால் போன்ற வெளிச்சம் கொடடடியது. மற்றபடி வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே பலர் தம்பதிகளாக, காதலர்களாக உடகார்ந்திருந்தார்கள்.
ஒரு சர்வர் வந்து கரோலினையும் ராம் மையும் பார்த்து மாலைநேர வாழ்த்துக் கூறி, சிறிய புத்தகங்கள் இரண்டைக் கொடுத்தான். அது அந்த ஹோடடல் மெனு.
“ராம்! யூலைக் சைனீஸ் LO ...” அவன் சைனிஸ் டீ குடித்ததே இல்லை. சீனர்தான் டீயைக் கண்டுபிடித்தார்களாம். குடித்துப் பார்ப்போமே!.
“இயஸ்.” “சைனீஸ் டீ ப்ளீஸ்.”
சர்வர் புன்னகையோடு நகர்ந்தான். கரோலின் மெனு புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். ராமு வும் பார்த்தான். அவனுக்கு பல பெயர்கள் புரியவே இல்லை.
“என்ன சாப்பிடலாம்?” கரோலின் கேட்டடாள். “எனக்கு எதுவும் தெரியாது. நீயே கொடு.” “ஒகே.யூலைக் நூடுல்ஸ் ரைஸ்?” “பிறந்ததில் இருந்து அரிசி சோறுதான் சாப்பிடடு வரு கிறோம். மாறுதலுக்கு நூடுல்ஸ்.” என்றான் ராம்.
150

மூலஸ்தானம் D
s
“ஒ. கே.
சர்வர் அழகான சிறிய டீ கேடடிலோடு சித்திர வேலைப் பாடமைந்த இரு சிறிய கப்புகளை மேஜையில் வைத்தான். டீ கேட்டடிலில் இருந்து ஆவி பறந்தது.
டீ கேட்டடிலையே பார்த்து ரசித்தான் ராம்.
‘அழகானது' என்று வாய் முணுமுணுத்தது. பிரம்மனுக்குப் போடடியாக மனித பிரம்மாக்கள் அந்த டீ கேட்டடிலை அழகாகப் படைத்திருக்கிறார்கள்.
கரும்பச்சை நிறத்தில் பால் இல்லாத தேநீர். சர்க்கரை தனியே போட்டடுக்கொள்ள வேண்டும். சர்க்கரை இல்லாமல் தான் இந்தத் தேநீரைக் குடிக்க வேண்டுமாம்.
சிறிய கோப்பையில் ஊற்றிக் கொஞ்சம் குடித்துப் பார்த் தான் ராம். சர்க்கரை இல்லாமலே நன்றாக இருந்தது. வித்தியாச மானது. சொடடு சொடடாக உறிஞ்சிக் குடிக்க நல்லது. கரோ லின் ரசித்துக் குடித்தாள். ஏற்கனவே குடித்த அனுபவம்.
ஆவி பறக்க நூடுல்ஸ் வந்தது. கூடவே காய்கறி வகைகள். சாப்பிடப் போன ராம் கேடடான், “கரோ! நீ நொன் வெஜி சாப்பிடலியா?.”
கரோலின் முகத்தில் லேசான புன்னகை. பிறகு பேசினாள். “உன்னை சந்தித்ததில் இருந்து வெஜிடேரியனாக மாறி விட டேன். வெஜிடேரியன் கிளப்பில் சேர்ந்திருக்கின்றேன். ஹாட டிரிங்ஸ் விடடுவிடடேன். ஏற்கனவே நான் ஸ்மோக் பண்ண
99. LDTu. (SL6öT.
“வெரிகுட.” என்று சொன்ன ராம் தனக்குள் கேடடுக் கொண்டேன். எதற்காக இதனைச் செய்கிறாள்? தன்னைக் கவர வேண்டுமென்றா?.
டின்னர் முடிந்தது. சர்வர் கொண்டுவந்த பில்லுக்கு காசு கொடுக்கப் போனான் ராம். கரோலின் தடுத்தாள், ராம் வற் புறுத்தினான்.
151

Page 78
0 மாத்தளைசோமு
கரோலின் விடவில்லை. “இன்று என் முறை. அடுத்த முறை நீ.”
99 “gff...
அடுத்த அரை மணித்தியாலத்தில் ஒரு பெரிய ஹோட்ட லின் முன்னே கார் நின்றது. காரை விடடு இறங்கியதுமே மியூசிக் சத்தம் காதுகளைத் தடவியது. கரோலின் இரண்டு டிக்கெட்டடு களை வாங்கிக் கொண்டு ராம்மையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனாள்.
உள்ளே காதைப் பிளக்கும் மியூசிக் சத்தம் கேட.டது. வண்ண வண்ண விளக்குகள் சுழன்று மின்னின. எதிர்கால அமெரிக்கப் பிரஜைகள் அங்கே குழுமியிருந்தார்கள். அங்கே ஒரு பெரிய இடம் ஒதுக்கப்படடிருந்தது. அந்த இடத்தைச் சுற்றி வண்ண வண்ண வெளிச்சம் பாய்ச்சப்படடிருந்தன. அந்த வெளிச் சத்தில் நனைந்தவாறு ஜோடி ஜோடியாக இளைய வயதினர் ஆடிக் கொண்டிருந்தார்கள். அளவுக்கு மீறிய மதுவைக் குடித்த ஒன்றிரண்டு ஆண்களும், பெண்களும் தனித்தனியே ஆடினார் கள். அவர்கள் எவரைப் பற்றியும் கவலைப் படடதாகத் தெரிய வில்லை. அங்கே எத்தனையோ விதமான ஜோடிகள், எத்த னையோ விதமான இளம் பெண்கள், காதலனைத் தேடும் கனவுகள் அந்தப் பெண்களின் கண்களில் மிதந்தன.
ராம்முக்கு ஒரு புதிய அனுபவமாகத் தெரிந்தது. வாழ்க்கை யிலேயே முதல்முறையாக அந்த இடத்தைப் பார்க்கின்றான். அது அந்த ஹோடடலோடு உள்ள டிஸ்கோ கிளப் நடனமாடு கின்ற பகுதி, அவன் நிதானமாக எல்லாவற்றையும் பார்த்தான். அங்கு விதவிதமான ஜோடிகள். அவகைளில் சில நெருங்கி அனைத்துக் கொண்டோ, சாய்ந்து கொண்டோ ஆடுகின்றன. வேறு சில ஆடிக்கொண்டே முத்தமிடுகின்றன. இன்னும் சில இன்னும் நெருங்காமல் நெருங்குவதா, இல்லையா என்று யோசித்துக் கொண்டே ஆடுகின்றன. சில பெண்கள் இன்னமும் காதலன் கிடைக்காததால் தன்னுடைய தோழியோடு ஆடுகின் றார்கள். சிலர் ஜோடி ஜோடியாக இந்தக் காதைக் கிழிக்கும்.
152

மூலஸ்தானம் D
சத்தத்தைப் பற்றியோ, நடனத்தைப் பற்றியோ கவலைப்படா மல் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று முத்தமிடடுக் கொண்டே இருந் தார்கள். கன்னத்தில் இதழ் வைத்தா முத்தமிடடார்கள்.? இல்லை. வாயோடு வாய் வைத்து மூச்சுக் கொடுப்பதுபோல் முத்தமிடடுக் கொண்டே இருந்தார்கள் அவர்கள். இத்தகைய முத்தத்தால் நிமிடங்களாய் ஆயுள் குறையும் என்று எங்கோ படித்த ஞாபகம் அவனுக்கு வந்தது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படடதாகத் தெரியவில்லை. ஆயுளில் சில நாடகள் குறைந்தால் என்ன? முத்தமிடுவதில் வருகிற சுகம் சும்மா இருந்தால் வருமா என்ன?. கரோலின் ராம்மோடு மிக நெருக்க மாக நின்றாள். அங்கு எக்கச்சக்கமான கூடடம். கரோலின் அங்கு உடகார இடம் தேடினாள். ஒரு இடத்தில் இரண்டு பேர் உடகாரக் கூடியதாக ஒரு மேஜையும் நாற்காலிகளும் இருந் தன. அதில் எவருமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். யாரும் இருந்திருந்தால், அவர்கள் எங்காவது போயிருந்தால் ஹேன்டபேக், சிகரெட பெடடி, பியர் விஸ்கி கிளாஸ் என்பன அடையாளங்களாக இருக்கும். ஆனால் அது வெறும் மேஜை. யாருக்கோ காத்திருந்தது அது.
கரோலின் ராம்மின் கையை இழுத்துக்கொண்டு அந்தக் கூடடத்திற்குள் நுழைந்தாள். பிறகு காலியாகக் கிடந்த மேஜை யின் ஒரு பக்கம் உடகார்ந்தாள். எதிர்ப்பக்கம் ராம் உட்கார்ந் தான். சில நிமிடங்கள் மெளனமாய் நகர கரோலின் திடீரென்று எழுந்து தன் நாற்காலியை ராமின் அருகே போட்டடு மிக நெருங்கி உடகார்ந்தாள். அவளின் முழு உடலும் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்ததைப் போன்று ஒரு நெருக்கம். அது ஒரு வகை யான உணர்வை ராம்மின் உடலில் பரப்பியது. ஒரு அழகான இளம் வயதுப் பெண்ணோடு மிக நெருங்கி உடகார்ந்திருப்பது மடடுமல்ல அவளின் சுவாசம் படுவதே இதுவே முதல் தடவை.
அவன் முகத்திற்கு மிக அருகில் அவளின் முகம் மெள்ளமாய் அவன் திரும்பினாலே முத்தமிடடது போலாகிவிடும். ராம்மின் நெஞ்சில் பல எண்ணங்கள் கிளர்ந்து மறைந்தன.
153

Page 79
D மாத்தளைசோமு
கரோலின் ராம்மை ஒரு கரத்தால் அனைத்தவாறு உட கார்ந்து நடனம் ஆடுபவர்களை ரசித்தாள். ராம் அந்த நடனம் பார்த்துக் கொண்டே யோசித்தான்.
நடனம் ஆடிக் களைத்த ஒரு ஜோடி நாற்காலிகளில் உட. கார்ந்தனர். ஒருத்தரை ஒருத்தர் உற்றுப் பார்த்துக் கொண்டார் கள். பிறகு முத்தமிடத் துவங்கினார்கள். எவரைப் பற்றியும், எங்கே இருக்கிறோம் என்பதெல்லாம் அவர்கள் நினைக்க வில்லை. அது பற்றிய கவலையுமில்லை, இதை வேடிக்கைப் பார்க்க இங்கு எவரும் இல்லை. இங்கு இது சர்வசாதாரணக் காடசி. ஆண்களைப் போல சிகரெட பிடிக்கிற பெண்கள், நன்கு கவனித்தால் இளவயது பெண்கள் சிகரெட்ட பிடிப்பது அதிகமாகத் தெரியும். காதலனை தேடுவதும், தேடிய காதலனை கணவனாக்குவதும் பெண்களுக்கே உரியது. இது ஆணுக்கும் பொருந்தும், மனதுக்கு பிடித்தவனை நேசித்து பிறகு அவனோடு போகித்து எல்லாவற்றிலும் திருப்தி கண்டு இவனே கணவன் எனறு உறுதியான பிறகுதான் திருமணமே நடக்கின்றது. இந்த திருமணத்திற்கு முதல் கட்டம்தான் இந்த ஹோடடல் கிளப்பு கள். இங்குதான் காதலனை, காதலியை சந்திக்கின்றார்கள் அவர்கள்.
ராம் முக்கு இவையெல்லாம் புதிய அனுபவங்களாக இருந் தன. அவன் பிறந்த உலகம் வேறு, பண்பாடே தனி ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து ஒருத்தரிடம் ஒருத்தர் இழந்து சுகா னுபவம் காண்பதெல்லாம் தனி அறைக்குள்தான். அதுகூட கணவன் மனைவிக்கு மாத்திரமே பொருந்தும். இங்கே ஒரு வயதுக்கு மேலே எல்லாமே மூடி மறைக்கப்படட விஷயங்கள். காதலிப்பது ரகசியம், காதலர்கள் சந்திப்பது ரகசியம், மனை வியை நேசிப்பதும் இங்கு ரகசியம், ஆனால் இங்கு எல்லாம் எதிர்மாறாய் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற போதும் பெண்கள் ஒரு போதைப் பொருளாக, லாகிரி வஸ்து
வாக அன்றாட வாழ்க்கையில் அறிமுகம் செய்யப்படடுகிறது.
154

மூலஸ்தானம் D
அரைகுறை உடையில் பெண்களை விளம்பரமாக்கும் வர்த்தகம் இங்கு அதிகம்.
கையில் பியர் கேனுடன் எங்கிருந்தோ வந்த ஒரு வெள் ளைக்காரன் ராம்மின் அருகே வந்து கண்ணடித்துப் புன்னகைத் தான். பதிலுக்கு ராம் புன்னகைத்தான். அந்த வெள்ளைக் காரனோ அவன் காதருகே குனிந்து, நைஸ் பியூட்டிபுல் பேர்ட என்று சொல்லி விடடுப் போனான்.
கரோலின் கேட்டடாள். “என்ன சொன்னான்?” சொன் னதை அப்படியே சொன்னான்.
கரோலின் சொன்னாள் “அவன் யூகப்படி. நீ என் போய் பிரண்டட. நான் உன் கேர்ல் பிரண்ட.”
ராம் எதுவும் பேசவில்லை. கரோலின் தூண்டினாள். “அவன் சொன்னது நிஜம் தானே?” ராம் சொன்னான். “இயஸ் வீ ஆர் பிரண்டஸ்.” கரோலின் நண்பர்கள் மடடும்தானா? என்று கேடக நினைத்தாள். ஆனால் ஏனோ கேடகவில்லை.
ராம் தனக்குள் கேட்டடுக் கொண்டான். நண்பர்கள் மடடும் தானா? அதற்குமேல் எதுவும் இல்லையா? அவளைக் காணாத போது நினைப்பது, அவளைச் சந்திக்க வேண்டும் என்று துடிப் பது, சில நாடகள் அவளைப் பார்க்காவிடடால் எதையோ இழந்து விடடது போல் இருப்பது எல்லாம் அர்த்தமில்லாமலா நடக்கின்றது? ஒரு அர்த்தம் அவனுக்கு மடடும் தெரியும். ஆனால் அதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்தான் அவன்.
25
மேலை நாடடுக் கலாச்சாரத்தில் மேற்கத்திய இளைஞர் களின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை இந்த நடனப் பார்ட டிகளில் நிச்சயிக்கப்படுகின்றது. பல இளையோரின் காதலர்கள்,
155

Page 80
D மாத்தளைசோமு
வாழ்க்கைத் துணைவர்கள் இங்கேதான் தெரிவு செய்யப்படு கிறார்கள். பெரும்பான்மையான திருமணங்கள் இங்கே பெற் றோர்களால் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. வயது வந்ததும் ஆணும் பெண்ணும் தாமாகவே துணைகளைத் தேடிக் கொள் கிறார்கள். இதெல்லாம் ராம்மிற்கு முதல் அனுபவம்.
“நீ இங்கே அடிக்கடி வருவாயா?.”ராம்தான் கேட்டடான்.
g 99
...فاد?ۍ "அப்படியானால்.” என்று இழுத்தான் ராம். ராம் என்ன நினைத்து அப்படிக் கேடகிறான் என்பது கரோலினுக்குப் புரிந்தது.
“நானும் எதிர்காலக் கணவனைத் தேடித்தான் இங்கே வந்தேன்.”
“முடிவு?.” “நான் எதிர்பார்த்தேன், எதிர்பார்த்தவன் இங்கே கிடைக்க வில்லை.”
CG . 99 காரணம.
“நான் எதிர்காலக் கணவனைத் தேடியது போல் இங்கே எவரும் எதிர்கால மனைவியைத் தேடி என்னிடம் வரவில்லை. விபரமாக சொல்கின்றேன். இங்கு வரும் போதெல்லாம் பலர் என்னைக் கண்டதும் அருகே வருவார்கள். புன்னகை சிந்து வார்கள், சிரிப்பார்கள், ஜோக் கடிப்பார்கள், டிரிங்ஸ் வேண்டுமா என்றவாறு நெருங்கி உடகார்வார்கள். டான்ஸ் ஆடக் கூப்பிடு வார்கள். டான்ஸ் ஆடும் சாக்கில் என் உடலைத் தொடடுப் பார்க்க முயற்சி செய்வார்கள். மொத்தத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பெண்களைக் கண்டதும் கொஞ்சம் பழகிவிடடு படுக்கைக்குத்தான் கூப்பிடுவார்கள். செக்ஸ்தான் அவர்களின் நோக்கம். அது எனக்குப் பிடிக்கவில்லை.”
அப்போது ராம் சொன்னான், “பெண்களை செக்ஸுக்காக
மடடும் என்கிற மனப் பான்மை நம் நாட்டிலும் உண்டு. ஆனால்
D 156

மூலஸ்தானம் )
பண்பாடு, குடும்ப உறவு இருப்பதால் மேலை நாடடைப் போன்ற அணுகுமுறை இல்லை. அப்படியும் சில பெண்கள் ஏமாந்து விடுவார்கள் காதல் என்ற பெயரால்.”
கரோலின் சொன்னாள், “என்னைப் பொறுத்தவரையில் இரு பக்கமும் அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் சுய கட்ட டுப்பாடு அவசியம் இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் பிரச்சனை இல்லை.”
இது மேற்கத்திய பெண்ணின் குரலாய்த் தெரியவில்லை. ராம் சிரித்தான். “ஏன் சிரிக்கிற?.” “அமெரிக்கர்கள் விஞ்ஞான வாழ்ககையில் சலிப்படைந்து அதில் விடுதலை அடைய விரும்புகிறார்கள். ஆனால் இந் தியா வில் உள்ளவர்கள் நீங்கள் நிராகரிக்கிற விஞ்ஞான வாழ்க் கையை அடையத் துடிக்கின்றார்கள். அதை நினைத்தேன். சிரிப்பு வந்து விடடது.”
Č č.
யூ ஆர் கரெக்ட ராம். எல்லாவற்றிலும் ஓபன் என்ற கொள்கையின் பலன். இன்று அமெரிக்காவை எய்டஸ் பயமுறுத்துகின்றது. ஜப்பானில் ஹிரோசிமாவில் அணுகுண்டி னால் செத்த மக்களை விட அதிகமானோர் அமெரிக்காவில் ஏய்டஸ் நோயினால் சாகப் போகிறார்கள். போதைப் பொருள் அமெரிக்க இளைய சமுதாயத்தை சீரழித்து வருகிறது. இங்கு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நீண்ட இடை வெளி இருக்கிறது. இது தெரியாத உங்கள் நாடடவர் அமெரிக்கர் கள் போன்று வாழ விரும்புகிறார்களா?.”
ராம் பதில் சொல்லாமல் கரோலினைப் பார்த்தான். பிறகு சொன்னான் “அமெரிக்க திரைப்படங்களையும் தொலைக்காடசி நிகழ்ச்சியைப் பார்த்து விடடு அமெரிக்க வாழ்க்கையை விரும்பு கிறார்கள். ஆனால் இங்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.”
57

Page 81
மாத்தளைசோமு
கரோலின் எதுவும் பேசாது டான்ஸ் ஆடுபவர்களைப் பார்த்தாள். ராம் அவளையே பார்த்தான்.
அப்போது ஒரு பாடல் முடிந்து புதிய பாடல் ஒலிக்க இருந்தது. கரோலின் ராம்மைப் பார்த்துக் கேட.டாள், “ராம்! டான்ஸ் ஆடுவோமா?.”
ராமின் கையைப் பிடித்துக் கொண்டாள் கரோலின். “டான்ஸா? எனக்கா? அனுபவமே இல்லை, நான் ஆடிய தும் இல்லை.” என்று மறுத்தான் ராம்.
“இதற்கெல்லாம் அனுபவம் தேவையில்லை. டான்ஸ் ஆடும் மற்றவர்களைப் பார்த்து ஆடுங்கள்.”
கரோலின் விடவில்லை. ராம்மால் அதற்குமேல் மறுக்க முடியவில்லை. அவன் மெளனமாக இருப்பதைப் பார்த்துவிடடு ராமின் ஒரு கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
இருவரும் நடனம் ஆடும் பகுதிக்குப் போய் அங்கிருந்த கூடடத்தில் சங்கமித்தார்கள். வண்ண வண்ண விளக்குகள் மேலே அசைந்து திரும்பி கீழே நடனம் ஆடுபவர்களின் மேல் பல்வேறு நிறங்களைக் கொடடின. கரோலினுக்கு நடனம் ஆடத் தெரியும். ஆனால் ராமுக்காக மெதுவாக ஆடினாள். ராம் தயங்கித் தயங்கி அசைந்தான். பிறகு மெல்லமாய் அசைந்தான். அந்தக் கூடடத்தில் அவனுடைய தடுமாற்றம் எவருக்கும் தெரிய வில்லை. சிறிது நேரம் தடுமாறினான். பிறகு மற்றவர்களைப் பார்த்து ஆடத் தொடங்கினான். நேரம் செல்லச்செல்ல தயக்க மெல்லாம் ஓடிப் போக மகிழ்ச்சியோடு ஆடினான் அவன்.
நடனம் ஆடிக்கொண்டே கைக்கடிகாரத்தில் மணி பார்த் தாள் கரோலின். மணி நள்ளிரவைத் தாண்டிவிடடது. ஒரு மணி யிருக்கும். கரோலின் மெதுவாகச் சொன்னாள், “ராம்! நாளை கலிபோர்னியாவுக்குப் போகவேண்டும். அம்மாவின் அம்மா வுக்கு பிறந்தநாள். ஞாயிறு இரவுதான் திரும்புவேன்.”
ஞாயிற்றுக்கிழமை வெறுமையாகி விடடதை அப்போதே
உணர்ந்தான் அவன்.
158

மூலஸ்தானம் 0
இருவரும் அந்த ஹோடடலை விடடு வெளியே வந்து காரில் ஏறினார்கள். கார் ஓடத் தொடங்கியது. “ராம்! உனக்கு கார் ஓடடத் தெரியுமா?” “தெரியாது.” “அமெரிக்காவில் இருந்து கொண்டு கார் ஓட்டடத் தெரியாது என்கிறாயே! இப்படியே இருந்து விடுவாயோ. நேரம் கிடைக் கும்போது பழகிக்கொள், நிறைய டிரைவிங் ஸ்கூல் இருக்கிறது.”
gTLñ சரியென்றான். கரோலின் திடீரென்று பேச்சைத் திருப்பி மீண்டும் நடனத் திற்கே போனாள். “உங்கள் நாடடில் இது போன்ற டிஸ்கோ கிளப்புகள் இருக்கின்றனவா?.”
பம்பாய், டில்லி, மெடராஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரம்தான் டான்ஸ் கிளப்புகள் பெரிய ஹோடடல்களில் இருக்கின்றன. ஆனால் அமெரிக்கா போன்று நம் நாடடில் எல்லா இளைஞர்களும் அந்தக் கிளப்புக்குப் போவதில்லை. அப்படிப் போவதே தவறானதாக ஒரு எண்ணம் இருக்கிறது.
ராமின் பதில் கரோலினுக்கு ஆச்சரியமாக இருந்தது. “ரியலி.” “ஒரு ஆணும் பெண்ணும் இங்குபோல் அங்கு ஆடுவது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படடதல்ல. குறிப்பாக டான்ஸ் ஆடுகிற பெண்களை எங்கள் சமூகத்தில் மதிக்கவே மாடடார்கள்.”
"அப்படியானால் பெண்கள் ஆடமாடடார்களா?” “ஆடுவார்கள் . பரதநாட்டியம்.” சொல்லக் கஷ்டப்படட்டாள் கரோலின் “பர்ரத நாடயம்.” கரோலினுக்கு பரநாட்டடியத்தைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அதைக் கேட்டடதும் அவளுக்கு ஆச்சரியமாக
159

Page 82
மாத்தளைசோமு
இருந்தது. பெண் மட்டும் தனியாக பரத நாடடியம் ஆட முடியுமாமே! எப்படி?. அவளால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ee a
நியூயார்க்கில் பரதநாட்டியம் நடக்கும்போது உன்னை அழைத்துப் போகின்றேன். அப்போது நீயே அதனைப் புரிந்து கொள்வாய்”
சிக்னலுக்காக ஒரு சந்தியில் கார் நின்றது.
“உலகின் முதல் டான்ஸர் யார் என்று தெரியுமா?.”
ராமின் அந்தக் கேள்வியே புதுமையாகத்தான் இருந்தது. 'மனிதர்கள்தான் நடனம் ஆடுவார்கள், அதில் முதல் நடனக் காரர் யார்?. அவளுக்குப் பதில் தெரியாதது மடடுமல்ல அந்தக் கேள்வியே புரியவில்லை.
“தெரியாது ராம்.”
ஒரே வரியில் சொன்னாள் கரோலின், அமெரிக்கர்கள் தெரி யாததை தெரியாது என்பார்கள். அதில் கூட ஒரு கம்பீரம் இருக்கும். பூசி மெழுக மாடடார்கள்.
ராம் பதில் சொன்னான்.
“லோடி சிவா.”
கார் நகர்ந்தது.
சிதம்பரத்தில் காலைத் தூக்கி நடனம் ஆடிக் கொண்டிருக் கிற சிவனைப் பற்றி எடுத்துச் சொன்னான் விரிவாக.
கரோலினுக்கு அப்போதே இந்தியாவுக்குப் போய் வர வேண்டும் என்ற ஆசை நெஞ்சுக்குள் முளை விடடது.
கார் ராம்மின் அபார்டமெண்டட இருக்கிற பகுதிக்குப் போய் கார் பார்க்கில் நின்றது. ராம் முதலில் காரை விடடு இறங்கினான். கரோலினும் இறங்கினாள். கார் பார்க்கில் கார்களைத் தவிர எவருமே இல்லை. இருவரின் பார்வையும் அவர்கள் அறியாமல் கலந்தன. கரோலின் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ராமின் அருகே போய் அவனை முத்தமிடடு, “ஐ லவ் யூராம்”
160

மூலஸ்தானம் 0
என்றாள். ராம் அதனை எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்கு அவளைக் கட்டிப்பிடிக்க நினைத்தபோது ஏதோ ஒன்று அவ னைத் தடுத்தது. அவன் மெளனமாகவே இருந்தான். கரோலின் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. இந்தியர்களின் தயக்க மனோபாவம் அவனிடமும் இருக்கக்கூடும் என்று நினைத்தாள்.
அவன் உள்ளத்தில் ஒரு கிளர்ச்சி. ஒரு உத்வேகம், அவளுக் குப் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்துக் கொண்டே இருந்தது.
கரோலின் அவனிடம் சொல்லிவிடடுக் காரை நோக்கி நடந்தாள்.
26
கறுப்புப் போர்வையை விரித்துப் பிடித்தது போன்று வானம் இருண்டு கிடந்தது. சந்திரனைக் காணவில்லை. நடசத் திரங்களையும் காணவில்லை. மொத்தத்தில் தலைக்கு மேலே எந்த வெளிச்சமும் இல்லை. ஆனால் அந்த ஒமாந்தூர் கிராமத் திலும் மின் வசதி உண்டு என்பதை சொல்வது போல் மங்கலாய் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த மின் விளக்கு களின் வெளிச்சம் கூட ஆங்காங்கே ஊடுருவிய இருளில் கரைந்து கொண்டிருந்தது.
அந்தக் கிராம மக்களே ஒரு பீதியில் ஏதோ நடக்கப் போகின்றதை எதிர்பார்த்து மெளனம் காத்தார்கள். டில்லியில் இருந்து வரும் ஆகாசவாணி 'இத்துடன் செய்திகள் முடிவடைந் தன' என்றதும் பலர் வானொலியை நிறுத்திவிடடார்கள். சிலர் மடடுமே விவசாயத்திற்குப் போனார்கள். அவர்கள் கூட எடடு மணியோடு மெளனம். தூக்கம் வருகிறதோ இல்லையோ படுக்கையில் கிடந்தார்கள்.
ஊரடங்கு உத்தரவு போட்டடதுபோல் தெருக்களே வெறிச் சோடிக் கிடந்தன. மனித நடமாடடமே இல்லை. துறையூருக் கும் திருச்சிக்கும் போகின்ற கடைசி பஸ்களும் எவரையும்
161

Page 83
மாத்தளைசோமு
ஏற்றாமல் எவரையும் இறக்காமல் போய் விட்டடன. வீடடுக்குள் படுத்துக் கிடந்தவர்கள் தூக்கம் வருகிறதோ இல்லையோ தங்கள் தூக்கம் போக வேண்டும் என்பது போல் பிரார்த்தனை செய்தார்கள்.
பொதுவாக ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வார்
கள். அவர்களும் அப்படியே. தூக்கில் தொங்கிய - தொங்க வைக்கப்படட துளசிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். கோணங்கிக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். இந்த இரண்டுக் கும் தொடர்பு இருக்கக்கூடாது என்று பிரார்த்தித்தார்கள். தொடர்பு இருப்பதாக ஊர் பேசுகிறது. தெரு சொல்கிறது. வயல் காடு எல்லாம் “கிசுகிசுக்கிறது. உண்மையில் தொடர்பு இருக்கிறதா?. அதுதான் எல்லோருக்கும் பயமாக மிதக்கிறது நெஞ்சில்.
கடடுக்கதைகளைக் கேட்டடு சதைகளைக் குலுக்கி நிமிர்ந்து பார்க்கிற மனித காலம் இது யார் சொல்வது உண்மை? எவர் வாயில் பொய்? எவருக்குத் தெரியும்? எவர் வாயிலிருந்து வந் தாலும் எடை போட்டடுப் பார்க்க நேரம் ஏது? உணர்ச்சி வழி போகிற மனிதர்கள்.
புலிவலத்திற்குப் போகிற பாதையில் உள்ள பாழடைந்த மண்டபத்தின் உள்ளே மெழுகுவர்த்தி வெளிச்சம்தான் காற் றில் ஆடிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பலரின் கையில் மலே சிய டைகர் டார்ச் லைட இருந்தது. பலரின் பாயிலிருந்த பீடி, சிகரெட விடுகிற மூச்சு மேகங்களாய் மண்டபத்தில் மிதந்தது.
* “என்னடா வண்டியக் காணோம்.
“வரும்டா. வர்ர நேரம்தான். வந்திருக்கணும் ஒரு வேளை டோல்கேட்டடுல மாட்டடிருக்கோ!...”
“பயலுக எப்பதான் மேம்பாலம் கட்டடுவானுகளோ?.”
தூரத்தில் வண்டி வரும் சத்தம் கேட்டடது.
“வீராணி பக்கமா வண்டி வருதுடா.”
D 162

மூலஸ்தானம்
அவர்களின் ஒருத்தன் மடடும் வெளியே போய்த் தெரு வைப் பார்த்தான். ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது தூரத்தில்.
“வண்டி வருது. வாங்க எல்லாரும்.” மெழுகுவர்த்தியை அனைத்துவிடடு எல்லோரும் மண்ட பத்தை விடடு வீதிக்கு வந்தார்கள். கைகளில் டார்ச் லைட. இருந்தும் வெளிச்சம் போடவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு வெள்ளைநிற மினிவேன் வண்டி வந்து நின்றது. கதவைத் திறந்து கொண்டு இருவர் இறங்கினர். முன் பக்கத்தில் இருந்து மருதமுத்து இறங்கினான். பிறகு அங்கு நின்றவர்களைப் பார்த்துச் சொன்னான்,
“டோல்கேட்டடுல கேட்ட போட்டடுடடானுக. அதான் லேட” "அப்படித்தான் நாங்க நெனைச்சோம்.” இருடடில் குரல்தான் கேடடது. முகம் தெரியவில்லை. அவசர அவசரமாக எல்லோரும் சிகரெட, பீடியைப் போடடு மிதித்துக் கொன்றார்கள். நெருப்பும் புகையும் மர னித்தது.
“டேய். மணி. பாடடிலையும் கிளாசையும் எடுடா.” நான்கு பாடடில்கள் வந்தன. அவைகளைப் பங்கு போட ஒரு டசன் கண்ணாடி கிளாஸ்கள்.
“வெறும் தண்ணிமடடும் தானோ?.” "அதுதான் இந்த மருதைகிடட இல்ல.” என்ற மருத முத்து, “டேய் மணி! அந்தப் பிரியாணி பார்சலை எடுடா.” என்றான். வரும்போதே குடித்திருந்தான் அவன். கண்கள் சிவந் திருந்தன.
மணி பல பிரியாணி பார்சல்களைக் கொண்டு வந்தான். பிறகு எங்கே அவைகளை வைப்பது என்றவாறு அப்படியே நின்றான். வந்தவர்களில் ஒருத்தன் ஓடிப்போய் வேனின் பின் பக்கத்தில் இருந்த சாக்கினை எடுத்து வீதியில் விரித்தான்.
163

Page 84
D மாத்தளைசோமு
“ஒனக்கும் டைமுக்கு ஏத்தமாதிரி மூளை வேல செய்யுது.” என்றவாறு மருதமுத்து அந்த சாக்கில் உடகார்ந்தான். அதன் பின் எல்லோரும் உடகார்ந்தார்கள். டைகர் டார்ச் லைட. வெளிச்சம் போடடது. பிரியாணி பார்சல்களை முத்து விரித்து வைத்தான். சாராய பாடடில்கள் திறக்கப்படடன.
“பிரியாணி எல்லாம் உங்களுக்குத்தான்.” “நாங்க ஜங்ஷன்ல சாப்புடடோம்.” மருதமுத்து குடிப்பதிலேயே குறியாய் இருந்தான். ஆளுக் கொரு கிளாஸில் சர்ராயம் ஊற்றியதில், ஒரு பாடடில் முதல் சுற்றிலே முடிந்தது. கூடவே இரண்டு பாடடில் சோடா.
“நேரம் ஒண்ணாச்சு.” மருதமுத்து சொல்லிக்கொண்டே வாயை நனைத்தான். நேரம் நகர நகர அவன் பேச்சில் ஒரு அதிகாரம் சேர்ந்தது.
“எல்லாத்தையும் முடிங்கடா. மிச்சம் மீதி இருக்கக் கூடாது”
அப்போது மணி சிரித்தான்.
s
“ஏன்டா சிரிக்கிற?.
“சொல்லடடுமா?.
“சொல்லுடா.” “நீங்க சொன்னாலும் சொல்லாடடியும் இங்க யாரும் மிச் சம் வைக்க மாடடாங்க. ஒலகத்தில இந்த பார்டடியில அதான் தண்ணி பார்ட்டடியில்தான் எவனும் மிச்சம் வைக்க மாடடான். அன்னதானத்தில மிஞ்சும், கல்யாணத்தில மிஞ்சும், தண்ணி பார்டடியில எங்க மிஞ்சும்?.”
“தத்துவம் பேசிறியா? உள்ள போடடாச்சில்ல. இனி நீங்கள்ளாம் கண்ணதாசன் ஆயிடுவீங்க, நாங்க கேக்க வேண்டி யதுதான்.”
மூன்று பாடடிலும் காலியாகியது, பார்சல்களும் காலியாகியது. எல்லோருக்கும் இறக்கை முளைத்தது போன்ற
164

மூலஸ்தானம் )
உணர்வு. எல்லா பாடடிலும் காலியானதின் பிரதிபலிப்பே அது தானே?.
காலி பாடடில்களையும் சோற்றுப் பார்சல் பேப்பர்களை யும் அள்ளிக்கொண்டு போய் எங்கோ வீசப் போனான் மணி. மருதமுத்து உடனே தடுத்தான். குடித்திருந்தாலும் குறி தவறா தவன் அவன்.
“டேய் வேற வெனையே வேணாம். எல்லாத்தையும் வேனுக்குள்ள போடு, இங்க ஒரு தூசிகூட விழக்கூடாது.”
மருதமுத்துவின் முன்னெச்சரிக்கை அப்போதுதான் அங்கு இருந்தவர்களுக்குப் புரிந்தது.
அடுத்த சில நிமிடங்களில் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வேன் நகர்ந்தது. இவ்வளவையும் புலிவலத்திலிருந்து வந்த கோவிந்தன் புளியமரத்தின் பின்னால் மறைந்திருந்தவாறு பார்த் துக் கொண்டிருந்தான்.
காலையிலேயே புலிவலத்திற்குப் போய்விடடான் கோவிந் தன். புலிவலத்தில் அரிசிமில் செடடியார் வீடடில் பேரன் பிறந்த தற்குப் புண்ணிய தானம். சாதி சனத்திற்கு விருந்து, ஏழை பாழைக்கு அன்னதானம். எடுபிடி வேலைக்கும் வேலை செய்கிற வர்கள் சோர்வு நீங்க சிரிக்கவும் செடடியார் கோவிந்தனை ஆள் விடடுக் கூப்பிட்டடிருந்தார். புண்ணிய தானம் முடிந்ததும் பகலே புறப்படடான் அவன். செடடியார் அவனைத் தடுத்து நிறுத்தி ராத்திரி சாப்பிட.டுப் போவலாமே என்று சொல்லிவிடடார். பிறகு என்ன? ஊர்க் கதை, சிவராத்திரிக் கதை, துளசி சாவு, கோணங்கி மரணம் என்று எல்லாவற்றையும் அவன் வாயி லேயே கேடடுத் தெரிந்து கொண்டார். இம்முறை அவன் பேச் சிலே சிரிப்பைக் காணவில்லை. அதை அவனிடமே கேட்டடார்.
“சீதையில்லாத ராமன பார்த்த மாதிரி சிரிப்பு இல்லாம இன்னைக்கிப் பார்க்கிறேன். உன் சிரிப்பு எங்க போச்சி
99
கோவிந்து?.
165

Page 85
D மாத்தளைசோமு
கோவிந்தனுக்கு ஊருக்கு ஒரு பெயர், செடடியாருக்கு கோவிந்து, ஐயருக்கு கோவி. சிலருக்கு சிரிப்பு, சிலருக்கு கோவிந்தன்.
“துளசி தூக்கில் செத்துபடடாளாம், கோணங்கி குடிச்சி செத்துடடானாம். ஓமாந்தூரே பயந்துக்கிடடு இருக்கு. எப்புடி சிரிப்பு வரும்? நான் சிரிச்சா என்னையும் தூக்கினாலும் தூக்கு வானுக. இங்க மூச்சு விடுரதே, பயமா இருக்கு. செடடியாருக்கு சிரிப்பு வேணுமாக்கும் சிரிப்பு?.”
கோவிந்தனின் பேச்சைக் கேடடு செடடியார் தன்னை யறியாமல் சிரித்து விடடார்.
கோவிந்தன் புறப்படடான். “நான் போவணும்.” வெளியே இருடடிவிடடது. “கோவிந்து போறேன்னு சொன்னா பறவை ரெக்கையை விரிச்சிடடதா அர்த்தம். சரி சாப்புடடு போ!...”
கோவிந்தன் சாப்பிட்டடு, வெற்றிலை போடடுக் கிளம்பிய போது மணி பதினொன்றுக்கும் மேலாகி விடடது.
“சரி. இனி எப்ப வருவே?.
99.
செடடியாரின் கேள்வி கொக்கிபோல் கோவிந்தனை இழுத் தது. “அடுத்த பேரன் பொறந்ததும் வர்ரேன்.”
“பேரன் நாளைக்கா பொறக்கப் போறான்? அடுத்த மாசம் நம்மூரு முருகன் கோயில்ல திருவிழா. மறந்திராம வந்திரு. மயில் வாகனத் திருவிழா என்னுது. ரெண்டு நாளைக்கி முந் தியே வந்திரு.” என்ற செடடியார் அவன் கையில் எதுவுமே இல்லாததைக் கண்டு கேட்டடார். “வேபடடி கொடுத்தேனே. எடுக்கலியா?”
அப்போதுதான் செடடியார் கொடுத்த வேடடித் துண்டு நினைவுக்கு வந்தன கோவிந்தனுக்கு. உள்ளே ஓடினான். திரும்ப வந்தபோது கையில் வேடடித் துண்டு.
166

மூலஸ்தானம்
“வாரேங்க” என்ற கோவிந்தனை உடகார வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் செடடியார்.
கோவிந்தன் அங்கிருந்து புறப்படடபோது நள்ளிரவாகி விடடது. புலிவலம் பாதையில் நடந்து வந்தபோதுதான் UTe டைந்த மண்டபத்தில் வெளிச்சத்தைக் கண்டான் அவன். உடனே பக்கத்தில் இருந்த ரோடடோரத்து புளியமரத்தில் பதுங்கினான்.
அந்த வேன் ஒமாந்தூருக்குள் நுழைந்தது. எல்லையோ ரத்துப் பிள்ளையார் கோவில் அருகே நின்றது. வண்டியின் கதவைத் திறந்து கொண்டு எல்லோரும் இறங்கினார்கள். எல் லோர் கையிலும் பெடரோல் டின் இருந்தது. அவர்களிடம் மெதுவாக எதையோ சொல்லிவிடடு இருளில் மறைந்தான் மருத முத்து. அவன் போன சில நிமிடங்களில் அம்பேத்கார் மன்றம் அக்கினியில் எரிந்து விழுந்தது. கோவிந்தன். குறுக்குப் பாதையில் ஐயர் வீடடை நோக்கி ஓடினான்.
27
கோவிந்தன் சொன்னதைக் கேட்டடு ஐயர் ஒரு நிமிடம் ஆடிப்போய் விடடார். வேல்சாமியின் முகத்தில் பயம் அப்பியது. அமைதியான அந்த ஊரில் சாதிப்பேய் கால் வைத்துவிட்டடது. இனி என்ன என்ன நடக்குமோ? துளசியின் மரணத்திற்கு முடிவு தெரியாததால் முடிவு தெரியாத மரணங்கள் நடக்கப் போகின்றன.
உள்ளே படுத்திருந்த மீனாடசியை எழுப்பினார் ஐயர். தூங்கிக் கொண்டிருந்த மீனாடசி பதறிக் கொண்டு விழித்தாள். அவள் கண்கள் தூக்கத்தில் சிவந்திருந்தன. செவிகளில் ஐயரின் வார்த்தைகள் ஏறின. “மீனாடசி! ஊருக்குள்ள சாதிக்கலவரம் வந்திடடதடி.”
வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் “அங்க பாருங்க. நெருப்பா எரியுது. கறுப்பாப் பொகை போகுது.”
167

Page 86
மாத்தளைசோமு
என்றான். எல்லோரும் வானத்தைப் பார்த்தார்கள். கரும்புகை ஊரில் தென்பகுதியில் இருந்து மேலே கிளம்பிக் கொண்டிருந் தது. வேல்சாமிக்கு அந்தப் பகுதியே கண்ணுக்குள் இருந்தது.
“பொகை வர்ரத பார்த்தா ஆலமரத்துச் சந்திக்கு அப்பால உள்ள தெருவில இருக்கிற அம்பேத்கார் மன்றம். அதுக்கு அடுத் துள்ள டீக்கடை. இந்த ரெண்டும் எரியுது. கோவிந்தன் சொல் ரதை வைச்சிப் பார்த்தா அவங்க அந்தத் தெருவுக்குள்ள போயிடடாங்க.”
வேல்சாமி மிகவும் மெல்லிய குரலில் சொன்னான். ஐயர் சொன்னார். “நான் நெனைச்சது சரியாப் போச்சு. சிவராத் திரிக்கு அப்பறமா ஊர்ல இருந்த அமைதி எனக்கு சநதேகத்தை கொடுத்தது. இப்ப அம்பேத்கார் மன்றத்தை எருச்சிடடா. இனி என்ன நடக்கப் போகுதோ?”
மீனாட்டசி அப்போது கேட்டடாள். “இப்போ நாம என்ன
s
செய்யிரது?.
அது அவளின் கேள்வி மடடுமல்ல அங்கிருந்த யாவரின் கேள்வியும் கூட.
“நாம என்ன செய்ய முடியும்? இதை தடுத்து நிறுத்திர சக்தி எனக்கு இல்ல.”
கவலையுடன் பேசினார் ஐயர். ஐயருக்குத் தெரிய அந்த ஊரில் இனக் கலவரங்களே நடந்த தில்லை. வேல்சாமி பயந்து விடடான். அவன் முகம் அதைத்தான் காடடியது. அதைவிட மனதுக்குள் பெரிய போராட்டம்.
வேல்சாமி மறுபடி பேசினான். “சாமி. இந்தக் கல வரத்தை எப்படியாவது தடுக்கணும்.”
ஒரு மெளனம் நிலவியது. மீனாட்டசி கவலையுடன் இருந்
தாள். அவள் முகத்தில் சுருக்கமும் இருளும் சேர்ந்திருந்தன. தூக்கக் கலக்கம் எங்கோ ஓடிவிடடது. கணவரின் முகத்தையே பார்த்தாள். தாலி கட்டடிய நாள் முதல் இன்று வரை அந்தக்
168

மூலஸ்தானம் D
கோயில் வீடடுக்குள்ளே தான் அவரோடு வாழ்ந்திருக்கிறாள். அவர்தான் அவளுக்கு எல்லாமே.
ஐயர் நீண்ட சிந்தனையில் இருந்து விடடு பிறகு பேசினார். “அந்தக் காலமா இருந்தா நான் ஊருக்குள்ள போய்க் கல வரத்தை நிறுத்திவிடுவேன். அப்ப என் பேச்சுக்கு ஒரு மரியாதை, மதிப்பு இருந்தது. இன்னைக்கி போய் நாம சொன்னா அசிங் கமாத் திட்டடுவா. டேய் பாப்பாரப் பயலுக்கு இங்க என்னடா ஜோலின்னு கேப்பா. இப்ப இருக்கிற மனுசாளுக்கு மனுசாள தெரியாது. இப்பல்லாம் மனுசாள் நெஞ்சில கடசி, சாதி எல் லாம் சேர்ந்திருச்சி. நான் சொல்லி எப்புடி கேப்பா? வேணும்னா ஒண்னு செய்யிரேன். இப்பவே புலிவலம் போயி போலிசில சொல்ரேன்.”
மீனாடசி பயந்தாள். சொன்னதுபோல் அவர் போய் விடு வாரா என்று யோசித்தான். அப்போதுதான் வேலு சொன்னான். ஒரு முடிவுக்கு வந்தான்.
“சாமி! நீங்க புலிவலம் போக வேணாம். நான் போயிடடு வாறேன்.”
வேல்சாமி சொல்லி முடித்ததுமே ஐயர் தலையிடடு மறுத் தார். “வேல்சாமி! நீ போக வேணாம் நீ போயிட்டடா எனக்கு இங்க காலும் ஓடாது கையும் ஓடாது.”
இந்தக் கலவரத்தில் அவன் வெளியே போனால் ஆபத்து. அவனைக் கண்டதும் ஒரு குழு அடிக்க வரும். அதற்கு கார ணமே சாதி.
"அப்பயார் போறது?.” வேல்சாமியின் கேள்வி.
ஐயரின் பார்வை கோவிந்தன் மேல் விழுந்தது. அதனைப் புரிந்து கொண்ட கோவிந்தன் பேசத் தொடங்கினான்.
“சாமி! யாரும் போக வேணாம். நான் புலிவலம் போறேன். ரைஸ்மில் செடடியாரப் புடிச்சி போலீசிக்கிடட சொல்லச் சொல்ரேன்.” x *
69

Page 87
D மாத்தளைசோமு
ஐயர் மெளனமாக இருந்தார். ஆனால் பிரச்சனைக்கு முடிவு கண்டதுபோல் வேல்சாமி “கோவிந்தனையே அனுப்பு வோம்” என்றான். கோவிந்தன் அதை ஆமோதிப்பதுபோல் “வேலு! சாமியை பத்திரமா பார்த்துக்க நான் போயிடடு வர்ரேன்.” என்று சொல்லிவிடடு ஒரு நிமிடம் வேல்சாமியை ஏக்கத்துடன் பார்த்து விட்டடு நடக்கத் தொடங்கினான்.
ஊருக்குள் நாய்கள் சங்கிலித் தொடர்களாய் குரைக்கின்ற சத்தம் கேட்டடது. வேல்சாமி மெளனமாய் இருந்தான்.
மீனாடசி ஐயரைப் பார்த்துக் கேடடான். “நேக்கு என்ன செய்யிரதுன்னு தெரியலியே!.”
“நீ ஏன் கவலைப்படுர மீனாடசி. எல்லாம் அவன் பார்த் துக்குவான். இந்த பூமியில்தான் பிறந்தோம். இந்த பூமியில்தான் வாழ்ரோம். நம்ம முடிவும் இந்த பூமியில்தான். லோகத்தையே ரபடசிக்கிற காமாடகி நமக்கு ஒரு வழி காடடாமலா போவா? சரி. மீனாடசி முடியும்னா காபி போடு. இன்னைக்கி சிவ ராத்திரிதான்.”
ஐயர், வீடடுத் திண்ணையில் உடகார்ந்தார்.
வேல்சாமியும் உடகார்ந்தான். மீனாடி.சி காபி போட உள்ளே போனாள்.
“மீனாடிசி லைடட போடாத, வெளிச்சம் வேணாம். குத்து விளக்க ஏத்திக்க.”
மீனாட்டசி சமையல் கடடுக்குள் குத்துவிளக்கோடு நுழைந் தாள்.
‘சாமி! நாம இருபடடுல உக்காந்திருக்கோம். விளக்கு கொண்டு வரவா?.”
“வேணாம் வேலு! ஊர்ல நெருப்பு எரியும் போது நாம வெளிச்சத்தில இருக்கக் கூடாது.”
ஐயர் சொன்னதை ஏற்றவனாக வேல்சாமி மெளனித்தான். “எனக்குத் தெரிய வேலு. ஊர்ல இப்படிக் கலவரம் வந்திருப்பது
- 17Ο

மூலஸ்தானம் 0
இதுதான் முதல்முறை. இதுக்கு முன்பு தெருச்சண்டை கூட வந்தது இல்லை. என்னைக்கி ஊர்ல கடசி கொடி ஏத்தினாளோ அப்பவே சனியன் புடிச்சாச்சு, ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கடசிக்கொடி. அவனவனுக்கு அவனவன் கடசி பெரிது. இது எங்க போய் நிக்குமோ?”
"சாமி! எனக்கு ஒண்ணுதோணுது. நான் கொஞ்ச நாளைக்கி எங்கயாவது இருந்திடடு வர்ரேன். என்னால ஓங்களுக்கு பிரச் சனை வந்தாலும் வரும்.”
வேல்சாமியின் குரலில் ஒரு பயம் தெரிந்தது. “வேலு.” என்று உரத்துச் சொன்ன ஐயர், பிறகு தாழ்ந்த குரலில் சொன் னார். “நீ இன்னைக்கி நேத்தா இங்கே இருக்க? வேலுங்கிற உன்ன இந்த சங்கர ஐயர் உசுரைக் குடுத்துக் காப்பாத்துவான். ஒரு மனுசாள காப்பாத்துரதுதான் இன்னொரு மனுசாள் கடமை. அதை நான் செய்ய மாடடேன்னு நீ நெனைச்சா கெளம்பலாம்.”
வேலுவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை, மீனாடசி இரண்டு தம்ளரில் காப்பி கொண்டு வந்தாள். தம்ளரை கையில் எடுத்த ஐயர் “மீனாடசி! நீ காபி குடிக்கல்லே.” என்று கேடடார். மீனாடசி “இல்லை.” என்றாள்.
இருவரும் காபியைக் குடித்து முடித்தார்கள். தம்ளரை மீனாடசி உள்ளே கொண்டு போனாள். அப்போது எவரோ கோயில் பூந்தோட்டடம் வழியாக ஓடி வருகின்ற சத்தம் கேட்டது. ஐயரும் வேலுவும் சடாரென்று எழுந்தார்கள்.
“அய்யா சாமி என்ன காப்பாத்துங்க..” என்ற குரல் ஓடி வருகிறவனுக்கு முன்பேயே வந்தது. கண் மூடித் திறப்பதற்குள் ஒரு உருவம் வீடடு படியேறி ஐயரின் காலில் விழுந்து அழுதது. வேறு எவரும் அந்த உருவத்தின் பின்னே வரவில்லை. ஐயர் எழுந்து நின்று கீழே குனிந்து காலில் விழுந்தவனைத் தூக்கி நிறுத்தினார். அப்போதுதான் யாரென்று பார்த்தார். குத்து விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது, ஸ்கூல் மாஸ்டர் சிவராஜா.
171 D

Page 88
மாத்தளைசோமு
‘சாமி! எங்க தெருவையே கொளுத்திடடாங்க. என்னய கொல்ரதுக்கு தேடிக்கிடடு இருக்காங்க. தப்பி வந்திடடேன். என்னய காப்பாத்துங்க சாமி.”
ஐயர் மெளனமாய் அவனைப் பார்த்தார். துளசியைக் காத லித்தவன் அவன்.
“சாமி! என்னய நம்புங்க துளசியைக் காதலிச்சது நிஜம். ஆனா அவ கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. துளசியே என்னய கட்டடிக்கிரேன்னு சொன்னா. காமாச்சி அம்மா மேல சத்தியமா சொல்ரேன். என்னய நம்புங்க சாமி.”
ஐயர் அவனைக் கீழே உடகாரச் சொன்னார்.
28
"FTS! அவங்க என்னயத் தேடி வர்ராங்க. நீங்கதான் என் உசுரைக் காப்பாத்தனும்.” கீழே தரையில் உடகார்ந்திருந்த சிவராஜா மெதுவாய்ச் சொன்னான். அவன் மூச்சு வாங்கியது. தேகம் பயத்தால் நடுங்கியது. ஐயருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னிடம் சரணாகதி அடைந்து உயிர்ப்பிச்சை கேடகின்றான் இவன்! எப்படியும் இவனைக் காப்பாற்ற வேண் டும். அவனுக்கு அடைக்கலம் கொடுப்பதனால் ஊரில் ஒரு சாதியே எதிர்த்து வரும். ஆனால் நீதி? நீதிக்காக மனித நேயத் துக்காக அவனைக் காக்கவேண்டும். இத்தனை நாளும் ஒதிய வேதங்கள் நிஜமென்றால் அவனைக் காப்பாற்றியே தீர வேண்டும்.
ஊருக்குள்ளே இருந்து தெரு நாய்களின் சத்தம் தொட ராய்க் கேட்டடன. இடையிடையே மினிதர்களின் அலறலும் ஒலித்தன.
ஐயர் யோசித்தார். அப்படியே கோபுரத்தைப் பார்த்தார். அந்தக் கோபுரக் கலசத்திற்கு மேல் தொங்கி எரிகின்ற சிறிய பல்பின் வெளிச்சத்தில் கோபுரத்தின் மேற்பகுதி தெரிந்தது.
172

மூலஸ்தானம் (
அது தர்மகர்த்தாவிடம் சொல்லிப் போட்டட வெளிச்சம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்த கிராம மக்களின் கண்களில் இருடடிலும் அந்தக் கோபுர தரிசனம் தெரியபடடும் என்று அவர் செய்த ஏற்பாடு.
மீனாடசி, காமாடிசியம்மனை மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள். ‘அம்பிகையே! என் கணவரைக் காப்பாற்று. வேதம் pl. Glfg, TGT அவருக்குத் தெரியும். ஆயுதமோ ஆள் அம்போ இல்லாதவர். அவர் எப்படி சிவராஜாவைக் காப்பாற்ற முடியும்? நீதான் அம்மா உதவ வேண்டும்.
நாய்களின் சத்தம் தெளிவாகக் கேடடது. சில நிமிடங் களில் மனிதக் குரல்கள் நாய்களின் சத்தத்தை மீறிக் கேட்டடன.
“சாமி. யாரோ வர்ர மாதிரித் தெரியுது. அவங்க இங்க வந்தா என்னயக் கொல்வாங்க. நான் எந்தத் தப்பும் செய்யா தவன். என்னய காப்பாத்துங்க..” என்று கலங்கியவாறு மீண்டும் ஐயரின் காலில் விழுந்து விடடான்.
வேல்சாமியின் முகத்தில் சோபையே இல்லை. அவன் மனதில் பல்வேறு எண்ணங்கள் எரிமலைகளாய் குமுறிக் கொண் டிருந்தன. ஐயர் மறுபடியும் கோபுரத்தைப் பார்த்தார். மூளைக் குள் ஒரு மின்னல். இந்த மனிதர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும்.
“மீனாட்டசி.1 கோயில் சாவிய எடுத்துண்டு வா.” ஐயர் ஒரு முடிவுக்கு வந்துவிடடார். அது புரியாத மீனாடசி உள்ளே போய் சாவிக்கொத்தை எடுத்து வந்து ஐயரிடம் கொடுத்தாள். சாவிக் கொத்தை வாங்கிய ஐயர், “வேலு! நீயும் வா. சிவராஜா நீயும் வா.” என்று சொல்லிவிடடுக் கோயிலை நோக்கி நடந்தார். அவர்கள் இருவரும் அவரின் பின்னால் நடந்தார்கள்.
ஐயர் எந்தப் பதடடமும் இல்லாமல் கோயில் கதவைத் திறந்தார். எல்லோரும் உள்ளே போனார்கள். உள்ளே குறைந்த வெளிச்சம் தரக்கூடிய பல்ப் எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில ஐயர் திரிபுரசுந்தரி அந்தக் காமாட்டசி அம்மனின்
173

Page 89
0 மாத்தளைசோமு
மூலஸ்தானத்தருகே போய் அதன் கதவைத் திறந்தார். மெல் லிய வெளிச்சத்தில் திரிபுரசுந்தரி நின்று கொண்டிருந்தாள். “ம். உள்ள போங்க.”
சிவராஜா, வேல்சாமி இருவருமே பயந்தார்கள். வேல்சாமி பதறினான். “வேணாம் சாமி.”ஐயருக்குக் கோபம் வந்தது.
“உங்களக் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல்ல. நான் வேதம் ஒதுரவன். எனக்கிடட கத்தி கம்பு இல்ல சண்டை போட.! போங்க உள்ளார நேரமாவுது.”
அப்போது கூட அந்த இருவரும் யோசித்தார்கள். அந்த மூலஸ்தானத்திற்குள் ஐயரைத் தவிர வேறு எவரும் போன தில்லை. இப்போது எப்படிப் போவது?
“உங்க ரெண்டு பேரையும் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல்ல. கே. பிலோ, குளமோ, தீர்த்தமோ, புராணமோ, மனுசாளையும் ஜிவராசிகளையும் காப்பாத்தத்தான் இருக்கு. தெரியுமா? தைரியமா உள்ளார போங்க. போங்கோ.”
அவர்களைக் கைப்பிடித்துத் தள்ளாத குறையாகத் தூண்டி னார் ஐயர். அவருடைய பார்வை வேறு அவர்களை நெருப் பாய்ச்சுடடது. அரைகுறை மனதுடன் அவர்கள் இருவரும் அந்த மூலஸ்தானத்திற்குள் தயங்கித் தயங்கிக் கால் வைத்தார்கள்.
“நான் கார்த்தால வந்து கதவைத் திறக்கிற வரைக்கும் உள்ளாரயே இருங்க.” அவர்கள் எதுவும் பேசாமல் பயந்தவாறு திரிபுரசுந்தரியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். பிறகு இருகையெடுத்துக் கும்பிடடார்கள். ஐயர் அந்த மூலஸ்தானத் தின் கதவை மூடிவிடடு நடந்தார்.
மூலஸ்தானத்தின் உள்ளே இருந்த இருவரும் திரிபுரசுந்தரி யின் சிலைக்குப் பின்பக்கமாய்ப் போய் நின்றார்கள். இப்போது அவர்களுக்கு உயிர்ப் பயம் இல்லை. ஆனால் அவர்கள் இந்த மூலஸ்தானத்தில் இருப்பது வெளியே தெரிந்தால்? அதுதான் பயமாக இருந்தது.
174

மூலஸ்தானம் D
ஐயர் கோயில் கதவை மூடிவிடடு வீடடுக்குப் போய்ச் சாவிக்கொத்தை மீனாடசியிடம் கொடுத்தார். மீனாடசி ஐய ரோடு போன இரண்டு பேரைப் பற்றி விசாரிக்க ஆர்வமாய் இருந்தாள். ஆனால் அதைப் பற்றி விசாரிக்க யோசித்தாள்.
வாசல் கதவு மூடப்படடு வீடடுக்குள்ளே நடுஅறையில் ஒரு பாயை விரித்துப் போடடு அவர்கள் இருவரும் உடகார்ந் திருந்தார்கள். அந்த அறையில் மெல்லிய வெளிச்சத்தில் எண் ணெய் விளக்கு எரிந்தது. அதன் வெளிச்சத்தில் இருவரும் முகம் பார்க்க முடிந்தது.
மீனாடசி ஐயரின் முகத்தையே பார்த்தாள். அப்போது ஐயர் சொன்னார். “எனக்கு வேற வழியே தெரியல்ல மீனாடசி! அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தனும். கோயில்ல மூலஸ் தானத்தில் வைச்சுப் பூ.டிடடேன். திரிபுரசுந்தரி கோவிச்சுக்க மாடடா. எனக்கு வேற வழியே தெரியல. நிச்சயமா அவா இவாளைத் தேடி வருவா.”
அவா மூலஸ்தானத்தில இருக்காளா என்பதை மனதுக் குள் நினைத்த மீனாடசியின் தேகம் நடுங்கியது. வேறு வழியில் லாமல்தான் அவர் இதைச் செய்தார் என்ற போதும் அதனால் என்னென்ன பிரச்சனைகள் பூதாகரமாக வரப்போகின்றனவோ எனக் கவலைப்படடாள் அவள். பிரச்சனையைத் தீர்க்க வேறு ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று எவரோ சொன்னது வேறு அவளுக்கு ஞாபகமாய் வந்தது. அதன்படி அவர் அவர்கள் இருவரின் உயிரையும் காப்பாற்ற ஒரு முயற்சி எடுத்துவிடடார். ஆனால் இனிமேல்.
ஒரு நிமிடம் ஒரு யுகமாய் நகர்வதைப் போல் தெரிந்தது அவர்களுக்கு. கோவிந்தன் திரும்பி வரும் வரைக்கும் விழித் திருப்போம் என்று எண்ணிக்கொண்டு உடகார்ந்திருந்தார் ஐயர். அவர் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். அவ்வளவுக்கும் அவர் பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்கள் இங்கிருந் தால் தேடிவருகிற அந்தக் கூடடம் அவர்களைப் பிடித்து அடித்துக் கொல்லும். தன் கண் முன்னே இரு கொலைகள்
175

Page 90
D மாத்தளைசோமு
நடககலாம். சாஸ்திரம், சம்பிரதாயம் பெரிதென்றால் அந்த இருவரைப் பலி கொடுக்க வேண்டும். ஆனால் அந்தச் சாஸ்திரம் சம்பிரதாயத்தை விட இந்த மனித உயிர்கள் மேலானவை என்பது அவருக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில்தான் மூலஸ் தானத்தின் கதவைத் திறந்தார்.
அவர்கள் வீடடுக் கதவை எவரோ தட்டும் சத்தம் கேட்ட டது. எவரோ என்ன? நெருப்பு வைத்தவர்கள் வந்து விட டார்கள். மீனாடடசியின் தேகம் நடுங்கியது. மனம் காமாடடசி அம்மனைச் சரணடைந்தது. இருவரும் எழுந்தார்கள். ஐயர் மெதுவாக மீனாடசியின் காதில் சொன்னார். “என்ன நடந் தாலும் மூச்சு விடாதே"
நடுஅறை மின் விளக்கைப் போடடார். பிறகு “யாருப்பா அது?” என்றவாறு கதவைத் திறந்தார் ஐயர். வெளியே வாச லில் கையில் கத்தி, தடி, இரும்புக் கம்பி போன்றவற்றோடு பலர் நின்றார்கள். சாராய நெடி அவர்களை அடையாளம் காடடியது. ஐயருக்குப் பின்னால் மீனாடசி நின்றாள்.
அவர்களில் எவரையும் ஐயருக்கு அடையாளம் தெரிய வில்லை. ஊருக்குப் புதியவர்கள்.
“சாமி!” என்று ஒருத்தன் ப்ேசத் தொடங்கியபோது வேறு ஒருத்தன் இடைமறித்து, “என்னடா சாமீ. அவனும் நம்மள மாதிரி மனுசன் தான்.” என்றான்.
“துளசியக் கொன்ன சிவராசா பய இங்க வந்தானா?” வார்த் தைகள் தடித்து வெளியே வந்து விழுந்தன.
“இங்க நாங்கதான் இருக்கோம். வேற மனுசாள் இல் லையே!”
“ பொய் சொல்லாத அய்யரே! அதுசரி இங்கயே இருப் பான் . பய எங்க அவன்?”
“அவன் கார்த்தாலயே புலிவலத்துக்குப் போயிடடானே!”
ஐயர் பொய்தான் சொன்னார்.
176

மூலஸ்தானம்
“இப்படிக் கேட்டடா அய்யப்பய நெசத்தச் சொல்ல மாட டான்.”
“தம்பி மரியாதையாப் பேசுங்க. நீங்கள்ளாம் வெளியூர்க் காரங்க மாதிரி இருக்கீங்க.”
“நாங்க எந்த ஊரா இருந்தா ஒனக்கென்னயா? ரொம்ப வாய் போடுறியே!” என்று ஒருத்தன் கத்தினான்.
“அய்யரே? கோவில் சாவிய எடுத்துகிடடு வாய்யா. கோயி லுக்குள்ள இருந்தாலும் இருப்பானுக.”
மீனாடசி சாவிக்கொத்தை ஐயரிடம் கொடுத்தாள். அவரின் உடல் உள்ளம் எல்லாம் நடுங்கியது. இனிமேல் தன் னால் ஆவது எதுவும் இல்லையென்ற முடிவுக்கு வந்தார் அவர். ஆனால் மனதுக்குள் தான் இத்தனை நாள் ஒதிய வேதம் உண் மையானால் அவர்கள் இந்த நீசர்கள் கையில் சிக்காமல் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
ஐயர் கோயில் கதலைத் திறந்தார். கோயிலுக்குள் புகுந்த அவர்கள் ஒரு வெறியோடு எல்லா இடங்களிலும் தேடினார்கள்.
“எல்லா இடத்திலயும் தேடியாச்சி காணோமே!.”
“மூலஸ்தானத்த பார்ப்பமா?.”
“போயிப் பார்ப்போம்” என்றான் ஒருவன்.
9 "அம்மனோட மடடும் வெளையாடாதே!.
குடித்த போதும் ஒருத்தனுக்கு அம்மன் மீது பயம் இருந்தது. உள்ளே திரிபுரசுந்தரியின் சிலைக்குப் பின்னால் இருந்த இரு வரும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியே என்ன நடக் கிறது என்பது தெரியாவிட்டாலும் தங்களைத் தேடி வந்திருப்பது மடடும் அவர்களுக்குத் தெரிந்தது.
ஒருத்தன் மூடியிருக்கிற மூலஸ்தானத்தின் கதவுத் தூரத் தின் வழியாகப் பார்த்தான். உள்ளே திரிபுரசுந்தரி நின்று கொண் டிருந்தது தெரிந்தது. அவளின் பார்வை அவனுக்குப் பயமாக (მდხbჭ, ტ].
177

Page 91
D மாத்தளைசோமு
c.6. 29 வாங்கடா போவம்.
அவர்கள் கோயிலை விடடு வெளியே வர ஐயர், “நல்லா பார்த்திடடீங்களா? கதவ மூடுரேன்.” என்று சொல்லிவிடடு மின் விளக்குகளை அனைத்துக் கதவைப் பூடடினார். அப் போது ஒருத்தன் கத்தினான் “அய்யருக்கு குசும்பு குறையல்ல.”
ஐயர் “தப்பா ஒன்னும் சொல்லல்லப்பா.” என்று சொன்ன போது “நீ தப்பா சொல்லல்ல நாங்கதான் தப்பு செஞ்சுடட டோம்.” என்று சொன்ன ஒருத்தன் கையிலிருந்த தடியால் ஐய ரின் தலையில் ஒரு போடு போடடான். மறுவிநாடி ஐயர் “காமாடசி. மீனாடசி.” என்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்தார். வெறி பிடித்த அந்தக் கூடடம் மகிழ்ச்சியுடன் 9ֆւգ-ԱմՑl.
29
வெறி வந்துவிடடால் மனிதனுக்கு என்ன செய்கிறோம் என்பது தெரியாது. அந்த நேரத்தில் சிந்திக்க முடியும் என்ப தையே அவன் மறந்து போய் விடுகின்றான். அந்தக் கூடடமும் அப்படித்தான் நடந்துகொண்டது. இந்த ஊருக்கும் அவர்களுக் கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவர்கள் வெறி பிடித்தவர்களாக மாறியதால்தான் ஆயுதமே இல்லாத, எதிர்த்து அடிக்கக் கை ஓங்காத, மரியாதைக் குறைவாகப் பேசாத ஐயரை அடித்துப் போட்டடுவிடடுப் போனார்கள்.
கீழே விழுந்த ஐயர் மெள்ளமாய் எழுந்து தலையைத் தடவிப் பார்த்தார். ரத்தம் கசிந்தது. அதனோடேயே வீடடுக் குப் போனார்.
“கோயிலுக்குப் போயிருக்காரே என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்த மீனாட்டசி ரத்தக் கசிவோடு வந்த ஐய ரைப் பார்த்து அழுதுவிடடாள்.
“மீனாடசி! அழாதேடி. காயம் பெரூசா இல்ல. பயப்
படாத. சின்ன காயத்தோடு காமாடகி என்னைக் காப்பாத்
178

மூலஸ்தானம் 0
திடடா. கோயிலைத்தான் திறந்து பார்த்தா. மூலஸ்தானத்தை அம்பாளே திறக்கவிடல்ல.”
மீனாடசி நடந்ததைப் புரிந்து கொண்டாள்.
ஐயர் மறுபடியும் சொன்னார் “அம்பாள் என்ன காப்பாத் திட்டாடீ.”
ஐயரின் நெற்றியில் ரத்தம் கசிவதைக் கண்ட மீனாடசி ம ள்ளே போய் பீரோவைத் திறந்து பழைய நாலு முழ வேடடி யைத் தேடியெடுத்து துண்டுகளாகக் கிழித்து எடுத்து வந்து ஐயரின் தலையில் கசியும் ரத்தத்தைத் துடைத்துக் கட்டடுப் CuTu T Git.
“லேசா குளிருது மீனாடசி. கதவ சாத்தி வை.”
அந்த அறையின் கதவு சாத்தப்பட்டது.
“நீங்க தூங்குங்கோ.”
“நானா? எங்க தூங்கிறது. மீனாடசி? தூங்கிர மாதிரியா ஊர் இருக்கு.”
ஐயர் படுக்கையில் படுத்திருந்தார். தூங்கவில்லை. மீனாட்டசி அவருக்குப் பக்கத்தில் உடகார்ந்திருந்தாள்.
ஐயரின் எண்ணங்கள் இறக்கைக் கட்டடிக் கொண்டு பறக்கத் தொடங்கின.
சில வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை. புதுக் கோடடையில் ஒரு திருமணத்தை நடாத்தி வைக்க ஐயர் புறப் படடார். கூடவே வேல்சாமியும் போனான். ஒமாந்துாரில் பஸ் ஸேறினார்கள். திருவானைக்காவலில் இறங்கி அம்மனை தரிசித்துவிடடு மீண்டும் ஒரு பஸ்ஸைப் பிடித்தார்கள். பஸ் ஸில் கண்டக்டர் டிரைவரைத் தவிர வேறு எவரும் இல்லை. கண்டக்டர் ஐயருக்குத் தெரிந்தவர். ஒமாந்தூர் பஸ் சேவையில் தனியார் முதலாளியிடம் வேலை பார்த்தவன். இப்போது அரசு பேருந்தில் வேலை.
39 “வாங்க சாமி.
179

Page 92
0 மாத்தளைசோமு
“யாரு. ராசமாணிக்கமா? நல்லா இருக்கிறீயா? ஆத்துல எல்லாம் செளக்கியமா?.”
“எல்லாரும் செளக்கியம் சாமி.” என்றவன் தயங்கிய வாறு கேட்டடான். “சாமி கேக்கிரேன்னு கோவிக்காதீங்க. ஒரு பயணம் போற நேரம் எங்க போறிங்கன்னு கேக்கக்கூடாது. கேட்டடா சகுனம் சரியில்லன்னு சொல்றாங்க.. ஆனா ஏன் வேலையே எங்க போறிங்கன்னு கேக்கிறது”
ஐயர் சிரித்தார்.
“நீ சரியான கில்லாடிப்பா. ஜங்சனுக்குத்தான் போவணும். ஜங்சன் போயி புதுக்கோடடைக்குப் போவணும். ரெண்டு டிக்கட குடுப்பா.”
இரண்டு டிக்கெட கிழித்து ஐயர் கையில் கொடுத்தான் ராசமாணிக்கம். நோட்டடு ஐயரிடம் இருந்து போகப் பதிலுக்கு சில்லறைகள் ஐயரிடம் வந்தன.
“சாமி! இன்னைக்கிப் பார்த்து ஜங்சனுக்குப் போறிங்க. ஜங்சனுல கறுப்புச் சடடை ஊர்வலம் நடக்குது.”
பஸ் ஸ்டாப்புகளில் எவரும் இல்லாததால் பஸ் எங்கும் நிற்காமல் gֆւգ-Այ5].
திருச்சி ஜங்ஷனில் கடவுள் இல்லையென்பவர்களின் ஊர் வலம் - மாநாடு.
“அது பாடடுக்கு நடக்க உடும். ராசமாணிக்கம். அவா நம் மள என்ன செய்யப் போறா? பிராமணனைத் திடடுவா. திட-டட. டும். நான் பிராமணனா பிறப்பேன்னு எனக்குத் தெரியுமா? சின்னக் குழந்தையில எனக்கு எதுவுமே தெரியல்ல. என்னைக்கி ஸ்கூல் போனனோ அப்பதான் என் சாதி என்னன்னு தெரிஞ்சது. நான் கேட்டடா இந்த சாதியில பொறந்தேன். எங்க பரம்பரையே சாஸ்திரம் பண்ணி வந்த குடும்பம். வேதம் ஓதின குடும்பம், வேதம் ஒதுரதுனால என்னை பிராமணன்னு சொல்ரா. செய் யிர தொழில வைச்சிதான் இந்தச் சாதி வந்தது. தேவாரம்
18O

மூலஸ்தானம் L
திருவாசகம் எல்லாம் மனுசனதான் சொல்லுது. சாதி பேசல்ல. மாணிக்கவாசகர்னு ஒரு நாயனார் இருந்தார். அவர் சிவன் மேல ஒரு புராணம் பாடினார். அதுக்கு பேரு சிவபுராணம் அந்தப் புராணத்தில ஒரு இடத்தில உலகத்தில உள்ள பிறப்பு களைச் சொல்ரார் கேளு.
புல்லாய் பூண்டாய் புழுவாய் மரமாய் பல்மிருகமாய் பறவையாய் பாம்பாய் கல்லாய் மனிதராய் தேவராய் வல்லசுரராய் பேயாய் கணங்களாய் -னு
பாடுராரு. அந்த சிவபுராணத்தில மனிதராய்னு மனுசாளபத்தி மடடுமே பாடியிருக்காரு. அந்த பாடல்ல பிராமணன பத்தியோ வேற யாரையும் பத்தியோ சொல்லல்ல. ஒரே வரியில எல்லா ரையும் மனுசாள்னு சொல்லிடடாரு. இப்படி பெரியவா எல் லாம் மனுசாள்னு சொல்ரபோது இந்த மனுசாள் மடடும் சாதி சாதின்னு அலையறான்? பிராமணன் யாரு? அவனும் ஒரு மனு சாள். வேதம் ஒதுரதுதான் அவன் தொழில். ஆனா எத்தனை பிராமணன் வேதம் ஒதுரான். பூனூல் போடடுன்டா வேதம் ஒதனும். இல்லேன்னா போடக் கூடாது.”
வேகமாக ஓடிய பஸ் சடாரென்று பிரேக் போட குலுங்கி நின்றது.
“அய்யர் பேச்சக் கேடடுபடடு எங்கயும் முடடிராதப்பா”
கண்டக்டர் டிரைவரிடம் கேட்டடான். டிரைவர் “இல்லப்பா டிக்கட கை காடடிச்சி. அதான் பிரேக் போடடேன்” என்று பதில் கொடுத்தான்.
படிக்கட்டடில் எடடிப் பார்த்த ஒரு நடுத்தர வயது மனிதன் “ஏங்க. இது மெயின் காட்ட கேட்டடுக்கு போவுமா?.” என்று
கேட்டடான்.
டிரைவருக்கு வாயில் அசிங்கமாக வந்தது. ஐயர் இருப் பதால் அடங்கினான் தானாக.
181

Page 93
0 மாத்தளைசோமு
“மெயின் காடடா? எதுத்த பக்கம் நில்லு.” படிக்கடடுக் காலியாகியது. பஸ் உறுமிக்கொண்டு புறப் --gil.
“மெயின் கார்ட். எந்த பக்கம்னு தெரியாம இன்னும் ஆள்க இருக்காங்க. என்னத்த ஓதி என்ன செய்ய?’ என்றபடியே டிரைவர் வண்டியை ஒடடினான். -
ஐயர் கண்டக்டரைப் பார்த்தார். தூரத்தில் கறுப்புப் படை யின் சத்தம் மெல்லிசாய்க் கேட்டடது.
‘சாமி! இந்த ரவுண்டானாவோட வண்டி போவாது; நீங்க ஜங்சனுக்கு நடந்துதான் போவணும்.”
ரவுண்டானாவைச் சுற்றி ஓரிடத்தில் நின்றது பஸ். ஐயர் பஸ்ஸை விடடு இறங்கினார். அவருக்குப் பின்னால் வேலுவும் இறங்கினான். ராசமாணிக்கம் அவர்களுக்கு முன் னால் இறங்கி வெளியே நின்றான்.
‘சாமி! உங்கள மாதிரி எல்லாரும் இருந்தா போதும்.” “வாரேன் பா.” “வாங்க சாமி.” “வர்ரேன் தம்பி.” அப்போதுதான் வாயை திறந்து வேலு பேசினான்.
அவர்கள் தலை மறைந்ததும் பீடியைப் புகைத்துக் கொண்டே டிரைவர் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டடான். “இந்த அய்யரு பெரிய சோசலிசவாதியா இருப்பார் போல இருக்கே.”
“அதெல்லாம் இப்ப. ஒரு காலத்தில படித்தவங்க கை படடாலே ஓடிப் போயி குளிக்கிறவரு. கோயில்ல விபூதி கூட கைபடாம தான் குடுப்பாரு. ஒரே மவன் பஸ்ஸில அடிபடடு கெடந்தான். சரியான காயம். டாக்டரு ரத்தம் குடுக்கணும்னு சொன்னாரு. அய்யர் ரத்தம் தேடி அலைஞ்சாரு.”
182

மூலஸ்தானம்
"பணம் குடுத்தாதான் ரத்தம் கெடைக்குமே.” அது டிரை வரின் கேள்வி.
“அவர் தேடியது அய்யரின் ரத்தம்.” “அய்யர் ரத்தமா? ரத்தத்துல ஏ, பி, சி தான் எனக்குத் தெரியும்.” என்ற டிரைவர் பீடிப்புகையை விடடு அந்த இடத் தில் மேகத்தை சூழ வைத்தான்.
“ஏன்யா. இந்த பீடிய குடிச்சுப் பொகையா கக்கிர. சகிக்கல்ல. நாத்தம். நீ குடிச்சிக் கெடடு போறதும் இல்லாம அடுத்தவனுக்கு ஏன்யா ரோதனையை குடுக்கிர?.” என்றான் ராசமாணிக்கம்.
டிரைவர் பீடித் துண்டை வீதிப் பக்கமாய் வீசினான். வேச மாய் வந்த ஒரு லாரியின் சக்கரத்தில் அது நசுங்கி சமாதியாகியது. “நீ உன் புராணத்த வுடுய்யா. விசயத்த சொல்லு.” “அய்யரு அவங்க சாதி ஆள்க ரத்தத்த எடுத்து கொடுக்ச ஒடுனா ரு. திருச்சி ஆண்டாள் தெருவுல தேடிப் பார்த்தாரு எந்த அய்யரும் ரத்தம் கொடுக்க வரல்ல. டாக்டர் ரத்தம் இல்லேன்னா பையனைக் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட டாரு. அப்புறம்தான் ஓடுனாரு அய்யரு. எப்படியோ ரத்தம் குடுத்து மவனைக் காப்பத்துனாரு.”
“அது சரியாருய்யா ரத்தம் குடுத்தது?” “அதுதான் யாருக்கும் தெரியாது.” “அது தெரியாம அய்யர் கதயத் தெரிஞ்சி என்ன செய்ய?” “சரி. அடுத்த டிரிப் எங்க?” “தென்னூர் வழியா மெயின் கார்ட கேட.” புது போர்டு மாற்றி பயணியை எதிர்பார்த்து காத்திருந் தார்கள் அவர்கள்.
OOO
183 D

Page 94
0 மாத்தளைசோமு
வாசல் கதவு தடடப்படும் சத்தம் கேட்டது. விடிகிற நேரம். தூங்கி தூங்கி விழுந்த மீனாடசிக்குத் தூக்கம் போன தோடு பயம் வந்துவிட்டது. ஐயரும் பயந்தார். 'யார் கதவைத் தட்டுவது?.
என்ன செய்வது என்று யோசித்தபோது அந்தக் குரல் கேட்டடது “நான்தான் முத்துப்பிள்ளை. கதவ திறங்க சாமி.”
ஐயர் பெருமூச்சு விடடார்.
3O
மீனாடிசி லைடடைப் போட்டடுவிடடு வாசல் கதவைத் திறந்தாள். வாசலில் முத்துப்பிள்ளை நின்று கொண்டிருந்தார். அவரோடு தபால்காரர், ஊர் மணியக்காரர், ராமசாமிப் பிள்ளை ஆகியோர் நின்றார்கள். அவர்களை மீனாடசி வீடடின் உள்ளே அழைத்தாள்.
மூவரும் உள்ளே போனார்கள். ஐயர் படுக்கையில் உட கார்ந்திருந்தார். அவர் தலையில் இருந்த துணிக்கட்டடு ரத்த அடையாளத்தைச் சொல்லியது.
முத்துப்பிள்ளை நடந்ததை யூகித்துக் கொண்டு பேசினார்.
s
“பாவிப் பயலுக. உங்களையும் அடிச்சானுகளா சாமி?.
ஐயர் நடந்ததைச் சொன்னார். வேல்சாமி, சிவராஜ் மூலஸ் தானத்தில் இருப்பதை மடடும் சொல்லவில்லை.
“ஊருக்குள்ள போலீஸ் வந்திருச்சி. இனி பயமில்ல. புலி வலம் இன் ஸ்பெக்டர் வந்திருக்காரு. கலவரம் செய்யிறவங் களச் சுடச் சொல்லி கலெக்டர் ஆடர் கொடுத்திடடாரு. ஆனா கீழத்தெரு வீடெல்லாம் எரிஞ்சி போச்சி. ஆள்க எல்லாம் ஸ்கூல்ல இருக்காங்க. பத்து மணிக்கு கலெக்டர் வர்ராராம். ஆனா.” என்ற முத்துப்பிள்ளை அதற்கு மேல் பேசவில்லை.
ஐயர் என்ன என்பது போல் முத்துப்பிள்ளையைப் பார்த்தார்.
184

மூலஸ்தானம்
“கீழத்தெரு ஆப்பக்கார அன்னம்மா நெருப்புல வெந்து செத்துடடா. இன்னும் ரெண்டு பேர் உசிர் இழுத்துக் கிடடி ருக்கு. அதான் பயமா இருக்கு.”
ஐயருக்கு முத்துப்பிள்ளை சொன்ன பயம் என்ன என்று புரிந்தது. இங்கே நடந்திருக்கின்ற சம்பவங்கள் வதந்திகளாக மாறி பரவும். கம்பி இல்லா தந்திகூட சமயத்தில் காலை வாரும். வதந்திகள் வேகமாக போய்ச் சேரும். அதன் எதிரொலி? இதனி டையே சாதிக் கொடி போடடுக் கொண்ட அரசியல்வாதிகளின் அறிக்கை. ஒடடு வங்கிகள் மாறிவிடக் கூடாதென்று நடுங்கும் அரசு. பழிக்குப்பழி வாங்கத் திரளும் சாதியினர். தலையைப் பிய்த்துக் கொள்ளும் காவல்துறை. இன்னும் கலவரம் பல ஊர்களில் வெடித்து பலர் செத்துத்தானே வழக்கமாக அமைதி வரும்? அப்படி ஆகிவிடுமா?. பயந்தார் ஐயர். மனதுக்குள் அமைதிக்காக காமாடகியை வேண்டிக் கொண்டார்.
“பாவம். கெழவி! சத்தம் போடடுக் கூட பேசமாட டாளே. அவளையா?.”
ஐயரின் கண்களில் நீர் திரண்டது. அவருக்கு கிழவியை நன்றாகத் தெரியும். அவரை எந்த இடத்தில் பார்த்தாலும் ஒதுங்கி நின்று, “சாமி! சொகமாக இருக்கீங்களா?..” என்று கேட்டடுக் கும்பிடடுவிடடுப் போவாள்.
மெல்லமாய் ஐயர் நினைவில் ஒரு காடசி விழுந்தது. கீழத்தெரு பிள்ளையார் கோயில் பூஜைக்கு அவர் போன போது ஆப்பம் சுடடுக் கொண்டிருந்த கிழவி ஐயரைப் பார்த்து கேட்டடாள்.
“சாமி! தேங்காய் பால், ஆப்பம் சாப்புடுறீங்களா?.” நெஞ்சில் வஞ்சனை இல்லாமல் கேட்டடாள் கிழவி. ஐய ருக்குத் 'திக்கென்றது. கிழவி விளையாடடாக கேடகிறாளா?. அல்லது உள்ளொன்று வைத்துக் கேடகிறாளா? அவர் ஏதோ சொல்ல யோசிப்பதற்குள் கிழவி மீண்டும் பேசினாள். ஆப்பத்தை சடடியில் ஊற்றிக்கொண்டே,
185

Page 95
D மாத்தளைசோமு
“வெசனம் இல்லாமதான் கேட்டடேன் சாமி யாரைப் பார்த் தாலும் அப்புடி கேக்கிறது என் புத்தி. கோவிச்சுக்காதீங்க. சாமி! உங்கள நான் திடீர்னு ஆப்பம் சாப்புடுறீங்களா ன்னு கேட்டடா ஒங்களால என்ன பதில் சொல்ல முடியும்? இதே மாதிரி என்னய நீங்க சாப்புடுறியான் னு கேடடாலும் அப்படித்தான் சாமி. பதிலே வராது.” என்றாள் கிழவி.
ஐயரின் மனதை கிழவி ஒரு விநாடி உலுக்கி விடடாள். கிழவி என்ன சொல்கிறாள்? ஐயர் வீடடில் தன்னை சாப்பிடக் கூப்பிடடால் உடனே தன்னால் பதில் சொல்ல முடியாது என் பது எந்த அர்த்தத்தில்? நீங்கள் என் வீட்டடில் சாப்பிட யோசிப் பது போல் நானும் உங்கள் வீட்டடில் சாப்பிட யோசிப்பேன் என்கிறாளா?. ஒன்று மட்டும் புரிந்தது. அடுத்தவர் வீடடில் சாப்பிட ஐயர் யோசிப்பது போல் ஐயர் வீடடில் சாப்பிட அடுத் தவரும் யோசிப்பார்கள். இது ஏன் தனக்கு இத்தனை நாளா கத் தெரியாமல் போனது. அன்றிலிருந்து கிழவிக்கு ஒரு மரியாதை ஐயரிடம் இருந்தது.
“இந்த ஊர்ல பாதிப்பேர் அந்த அம்மாகிடட சாப்பிடட வங்கதான்.”
கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னார் ஐயர். ‘சாமி! இதெல்லாம் அசலூர்க்காரங்க வேல. வெளியில இருந்து ஆள் வந்திருக்கு. ஆனா தூண்டுதல் நம்ம ஊர்க்காரனுங்க.”
“யாரையும் புடிச்சாங்களா?.” ஐயரின் கேள்வியில் இன் னும் ஒரு கேள்வி தொக்கி நின்றது.
“யாரையும் புடிக்கல்ல சாமி. ஆனா அப்படி புடிச்சாலும் தண்டனையா குடுக்கப் போறாங்க? அவங்கள விடுவிக்கத்தான் சாதி அரசியல் இருக்கே சாமி. என்ன பொறுத்தவரைக்கும் யாரையும் கைது பன்னாடடியும் பரவாயில்ல சாமி. கலவரம் தொடராம இருந்தா போதும்.” என்ற முத்துப்பிள்ளை நினைவு திரும்பியவர் போல,
O 186

மூலஸ்தானம்
“காயத்துக்கு மருந்து போடலியா? ரத்தம் வேற கசியுதே. விடிஞ்சிருச்சி. வெளிச்சம் நல்லா வந்ததும் ஆஸ்பத்திரிக்கு போங்க.” என்றார்.
வெளியே வெளிச்சம் மெல்லமெல்ல வந்து கொண்டிருந்தது. மீனாடசி லைட'டை அனைத்தாள். முத்துப்பிள்ளையும் மற்றவர்களும் ஐயரிடம் சொல்லிவிடடு புறப்படடுப் போனார் கள். ஐயரின் மனதுக்குள் மூலஸ்தானக் காடசியே இருந்தது. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? தாகத்துக்கு தண்ணிர் குடிக்கக்கூட வாய்ப்பில்லையே! தனக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டார் அவர்.
வெளியே விடியலுக்கான வேலைகள் நடந்து கொண்டிருந் தன. உலகைப் போர்த்தியிருந்த கறுப்புச் சேலையின் நிறம் மங்கிப் போயிற்று. எவரிடமும் சம்பளம் வாங்காமல் சேவல்கள் கடமையைச் செய்தன. பறவைகள் அன்று எங்கு போகலாம், என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டன. மீனாடடசியை வீடடடில் இருக்கச் சொன்ன ஐயர் ஆஸ்பத்திரியை நோக்கிப் போவதற்காக தெருவுக்குள் இறங்கினார். சில வீடடுக் கதவுகள் திறந்தன. சிலர் எடடிப் பார்த்தனர். சிலர் வெளியே வந்து பேசப் பார்த்தனர். ஐயர் தானாகவே ஆஸ்பத்திரிக்கு மருந்து போட போறேன். என்று வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே போனார். அவர்களோடு நின்று நிதானமாக பேச நினைத்தார். ஆனால் ஆஸ்பத்திரிக்குப் போய் காயத்திற்கு மருந்து போட வேண்டியதால் நடந்தார்.
ஊரே தூங்கவில்லை என்பது எல்லோரின் முகத்தைப் பார்க்கின்றபோது தெரிகின்றது. கூடவே அந்த முகங்களில் பல உணர்வு கலந்திருந்தது.
பஸ் நிற்கின்ற இடத்தில் இரு போலீசார் துப்பாக்கியோடு நின்றார்கள். தெருக்களில் மனித நடமாட்டடமே இல்லை. நாய்
களைக் கூட காணவில்லை.
187

Page 96
D மாத்தளைசோமு
ஆஸ்பத்திரிக்குள் சிறிய கூடடமே கூடியிருந்தது. வெள் ளைக்காரன் ஆண்டபோது திருச்சியில் இருந்த வெள்ளைக் காரக் கலெக்டர் உத்தரவில் கட்டடப்படட கடபடிடத்தில் எழுந் ததுதான் அந்த ஆஸ்பத்திரி. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு அடையாளமா வெள்ளை அடித்ததுதான் மிச்சம். வேறு எது வுமே வரவில்லை. நோயுற்றவர்களின் படுத்துக் கொள்ள கடடி லும், பாயும் இருப்பதால் இன்னமும் மக்களால் ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படுகின்றது.
ஆஸ்பத்திரி வாசலில் முத்துப்பிள்ளை. அவரைக் கண்ட தும் “வாங்க மருந்து போடுவோம்.” என்று அவரைக் கூடடிப் போய் டாக்டரிடம் காடடிவிடடு நர்சிடம் மருந்து போட்டடு புதிய கட்டடுப் போட வைத்தார். காயம் ஆழமாக இல்லை என்று நர்ஸ் ஆறுதல் கூறினாள்.
ஆஸ்பத்திரியை விடடு வெளியே வந்ததும் முத்துப்பிள்ளை யிடம் ஐயர் கேடடார், "ஆமா. இவ்வளவு சீக்கிரமா எப்படி ஊருக்குள்ள போலீசு வந்தது?.”
அந்தக் கேள்வியைக் கேட்டடபோது ஐயரின் மனம் கோவிந் தனை நினைத்தது. கோவிந்தன் சொன்னதுபோல் புலி வலம் போய்ச் செடடியாரைச் சந்தித்துக் காரியத்தை முடித்து விடடானே!.
“யாரோ போன் பண்ணாங்களாம். யாருன்னு இன்ஸ் பெக்டர் சொல்லல்ல.”
“யாரோ நல்லதைச் செஞ்சிருக்கா.” கோவிந்தன் போனதை சொல்லக் கூடாதென்று முடிவு செய்தார் ஐயர். இன்ஸ்பெக்டர் புத்தியோடு பேசியிருக்கிறார். ஜனநாயகம் என்று சொல்கிற இந்த அமைப்பில்தான் அநியாயத் திற்கு எதிராக சாடசி சொல்லவும் பயமாக இருக்கிறது? நீதிக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாடசிக்கு ஏது பாதுகாப்பு?
மனதுக்குள் கோவிந்தனுக்கு நன்றி சொல்லக் கொண்டார் ஐயர். இதனை வேல்சாமி கேடடால் மகிழ்ச்சியடைவான்.
188

மூலஸ்தானம் D
ஆனால் அவன் நிலை.? ஒரு அவசரம் வந்தது ஐயருக்கு. உடனே போய்க் கதவைத் திறந்து அவர்களை வெளியே விட வேண்டும். இதற்குமேல் அங்கே வைக்க முடியாது.
ஐயர் ஆஸ்பத்திரியை விடடு வேகமாக நடந்தபோது "சாமீ. சாமீ.” என்ற குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. திரும்பிப் பார்த்தார் பால்கார கோலப்பன். மூச்சு இளைக்க ஓடி வந்து கொண்டிருந்தான்.
31
"சாமி! நம்ம கோவிந்தன யாரோ கத்தியால குத்திபட டாங்க. சாகப் பொழைக்கக் கெடந்தவன போலீஸ்காரங்க ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. ஒங்கள பார்க்கணும்னு சொல்ரான். வேலிசாமியையும் கேடடான். போயி ஒடனே பாருங்க சாமி.”
பால்கார கோலப்பனிடமிருந்து கவலையுடன் வார்த்தை கள் வந்து விழுந்தன. அதற்குமேல் அவன் பேசவில்லை. அவ னுக்குக் கோவிந்தனை நன்கு தெரியும். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் நினைத்ததும் எப்படி இவனால் சிரிக்க முடிகின்றது என்பதுதான் நினைவுக்கு வரும். அந்தக் கிராமத்தில் பால் கொடுக்கிற அவனே எப்போ தாவதுதான் சிரிப்பான். அதுவும் சில நேரத்தில் வலிந்து சிரிப் பான். தானாகச் சிரிப்பு மலர்வது எப்போதாவதுதான். சிரிப்பு மனிதனுக்கு மாத்திரம் சொந்தமானது. அதனை மெளனமாக வும் அடையாளப்படுத்தலாம், சத்தமாகவும் வெளிக்காட்டட லாம். மெளனமாய் வரும்போது அது புன்னகை, சத்தமாய் வந்தால் சிரிப்பு. இது இரண்டுமே எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமானதல்ல. பணத்தில் கோடியைக் கண்ட சிலரால் சிரிப்பின் ஒரு கோடியைக் கூடத் தொட முடியாது. சிலர் சிரிக்க பணம் கேடபார்கள். சிரித்து வாழ்ந்தவனுக்கு நோயில்லை. பலர் சிரித்து வாழ்ந்தவனுக்கு வாழ்க்கை இல்லை. சிரிக்காமல்
189 D

Page 97
0 மாத்தளைசோமு
வாழ்ந்தவனுக்கு எதுவும் சொந்தமில்லை. சிரிக்கவே பிறந்தவன் கோவிந்தன். சிரிக்கக் காசும் கேட்டடதில்லை அவன். காசுக்காக சிரித்தவனும் இல்லை. சிரிப்பினால் தன்னை அடையாளம் காட்டடிப் பலரை அடையாளம் கண்டு வாழ்ந்தவன். அவன் சிரிப் பதைக் கண்டு கோலப்பன் பொறாமைப்படடவன்.
கோலப்பன் அந்தக் கிராமத்தில் குடடி மாடடுப் பண்ணை வைத்திருக்கின்றான். ஏழெடடுக் கறவை மாடுகள் அவனிடம் இருக்கின்றன. எந்த நேரத்தில் போய்க் கேடடாலும் பால் மடடும் இல்லையென்று சொல்லமாடடான். அது எப்படி முடி கின்றது என்று கேட்டால் 'எனக்கிடட புள்ளைக இருக்கிற வரைக்கும் எனக்குப் பால்ல பிரச்னையே இல்ல' என்பான். அவன் 'பிள்ளைகள்' என்று சொல்வது பால் தரும் பசுக்களை. அவன் பக்கத்தில் இருந்தால் போதும் மெளனமாக பால் நிறைய கறக்குமாம். அவன் பக்கத்தில் இல்லாவிடடடால் பால் நிச்சயம் குறையுமாம். அவன் பாலுக்காக மடடும் அந்த பசுக்களை வைத்திருக்கவில்லை. சொந்தப் பிள்ளைகளாக அவைகளை நேசித்தான். அந்த நேசிப்பின் நெகிழ்ச்சியே பால் சொரிதல். ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தாற்போல் பசுக்களை விடடுப் பிரிந்து இருக்க மாடடான். வெளியே போனால் விடியும் முன்னர் வந்துவிடுவான். அவன் அதிர்ஷ்டம் இதுவரை வெளியே போய் தங்குகிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை அவனுக்கு.
ஐயருக்குப் பால் கொடுப்பது அவன் தான். பல வருடங் களுக்கு முன்னர் பால் கறவை மாடடை ஐயர் வீடடுக்கு நடத் திப் போய் நேருக்கு நேர் பால் கறந்து கொடுப்பான். அதைத் தான் ஐயர் விரும்பினார். அது ஏன் என்று அவனுக்கு மடடும் தான் தெரியும். அவன் வீடடில் வேலை செய்யும் மற்றவர்கள் கையில் பால் கறந்து வந்த பால் தன் வீடடுக்கு வந்துவிடக் கூடாது என்பதும், பாலில் தண்ணிர் கலந்து விடுவான் என்ற சந்தேகமுமே காரணமாகும்.
ஒருநாள் ஐயரிடம் அவன் கேடடான், “சாமி! நாமதான் சாதி பார்க்கிறோம். ஆனா இந்த ஆடுமாடுக சாதி பார்க்குமா?.”
190

மூலஸ்தானம்
ஐயர் அவனை உற்றுப் பார்த்தார். “நான் படிக்காதவன். மாடடைப் பத்தித்தான் எனக்கு தெரியும். அதான் கேட்டடேன் சாமி.”
ஐயர் திருப்பிக் கேட்டடார். “ஏன் ஆடு மாடுகளுக்கு சாதி இருக்கே. சீமை மாடு, காங்கேய மாடு, மனப்பாறை மாடு. இப்புடி மாடடுலயும் சாதி இருக்கே கோலப்பா.”
கோலப்பன் விடவில்லை, “இருக்கு சாமி. அது மனுசனே வைச்ச பெயர். ஆனா மாடுக சாதிக்காக சண்டை போடாது. சீமை மாடும் நம்ம ஊரு மாடும் சேருமே. சேர்த்து வைப்பாங் களே! மனுசங்களால முடியுமா?. சாமி! நான் பால் கறக்கிறவன் தான். ஆனா இந்த மனுசன பத்தி பேசப்போனா பால் கூட
s கெடைக்காது.
ஐயர் பதில் பேசவில்லை. முகத்தில் ரேகைகள் நெளிந்தன. “ஏன் சாமி தப்பா சொல்லிடடேனா?.” “இல்லப்பா. நீ உள்ளதைதான் சொன்ன.” கோலப்பன் தொடர்ந்து பேசினான், “சாமி! மனு சங்க ளோட வாழ்றதை விட ஆடுமாடு கால்நடைகளோட வாழ்ரது நல்லது சாமி!. மனசுக்கு சந்தோசமா இருக்கு. என்னமோ தெரியல்ல. இப்ப மனுசங்களோட வாழவே எனக்கு புடிக்கல்ல. இப்புடி சொன்னேன்னா கேக்கிறவங்க என்ன சொல்வாங் கன்னா. ஆடு மாடுகளோட இருந்து இருந்து நானும் ஆடுமாடு மாதிரியாயிடடேனு சுளுவா சொல்லுவாங்க. ஆனா அது நெச மில்லன்னு எனக்குத்தான் தெரியும். எனக்கிடட பத்து ஆடும், ஆறு பசுமாடும், நாலு காளை மாடும் இருக்கு. ஆட்டடோடயும் மாடடோடயும் எனக்குத் தெரிஞ்ச பாசையிலதான் பேசுரேன். அதுக மூலமா எனக்கு வருமானம் வருது. வருமானம் வருதுன்னு அதில மடடும் நான் குறியா இல்லாம அதுகளயும் கவனிக் கிரேன். தவிடு, புண்ணாக்குத் தவறாம குடுக்கிறேன். தெனம் குளிப்பாட்டடுரேன். அதுசு இருக்கிற எடத்த சுத்தமா வைச்சி ருக்கேன். நோய் நொடி வந்தா ஒடனே மாடடு டாக்டரை
191 D

Page 98
D மாத்தளைசோமு
கூடடி வந்து காடடுறேன். மொத்தத்தில என் புள்ள மாதிரி பார்க்கிறேன். ஏன் பொண்டாடடிகூட சொல்வா. ஒங்களுக்கு ஆடு மாடுக தான் புள்ள குடடின்னு. அந்த புள்ள குடடிக ஒழுங்கா இருந்தாதான் நாம இருக்க முடியும். எனக்கிடட பல ஊர்ல இருந்து புடிச்ச பல சாதி ஆடு மாடுக இருக்கு. <2, GðIT எதுவும் ஒன்னோட ஒண்னு சண்டை போடடதே இல்லை. அது அது பாடடுக்கு இருக்கு சாமி. ஆனா இந்த மனுசன்தான் வாய் இருக்குன்னு என்னென்னமோ பேசுரான்.”
ஐயர் யோசித்தார். அவன் சொல்வதில் உண்மைகள் இருக் கின்றன. ஆனால் அந்த உண்மைகளை இவன் மடடும் தெரிந்து கொண்டு ஏற்றுப் பேசினால் போதுமா? இவனை இப்படியே விபடடால் பேசிக்கொண்டே இருப்பான். இவனை கத்தரித்து விட வேண்டும். கோலப்பன் பேசுவதற்குள் அவர் முந்தினார்.
“கோலப்பா! நீ பால ஊத்து. பேசிகிடடே இருந்தா வேல நடக்காது.”
கோலப்பன் சிரித்து விடடுச் சொன்னான். "ஆமா! சாமி ரொம்பப் பேசிடடேன்.” அவன் நகர்ந்தான். இது வேலுசாமி வருவதற்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம்.
OOO
பழைய காடசிகள் நிழல்களாக நெஞ்சுக்குள் எழுந்து நடந்து அடங்கக் கோலப்பனைப் பார்த்தார் ஐயர். சிறிய மீசை, தொழிலுக்கு ஏற்ற மாதிரி வெள்ளை முகம், தொந்தி இல்லை. ஒடிய காலத்தின் அடையாளமே தெரியாத உருவமாய் அன்று பார்த்ததுபோல் இன்னும் இருக்கின்றான்.
“ஊர்ல நடந்த கலவரத்தில எங்கயும் பால் குடுக்கல்ல சாமி. பொழுது நல்லா வெளுக்கடடும்னு இருக்கேன்.” என்ற
கோலப்பன் கவலையுடன் முகத்தை வைத்திருந்தான்.
192

மூலஸ்தானம்
ஐயர் அவன் முகத்தையே பார்த்தார். அப்போதுதான் கோலப்பனின் மூளையில் மின்னலாய் ஏதோ மின்னியது.
“சாமி! நான் வந்ததை மறந்திபடடு எதையோ பேசிகிடடு இருக்கேன் பால் எப்பவாவது ஊத்தலாம். நீங்க போயி ஒடனே கோவிந்தனைப் பாருங்க. ஒங்களையும் வேல்சாமி யையும் பார்க்கனும்னு சொல்லிகிட்டடே இருக்கிறான். அவன பார்த்தா பயமா இருக்கு.”
'6?..'
“கோவிந்தன் பொழைப்பான்னு தெரியல்ல. நர்சு அப்படித் தான் சொன்னா.”
ஐயரின் முகம் வாடியது.
s “ஆமா. சாமி! வேல்சாமி எங்க?.
ஐயர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சொன்னார், “என்ன கோலப்பா? ஊரு நெலமை தெரிஞ்சுண்டுதான் பேசுறியா? கலவரத்துக்குப் பயந்து வேலு தலைமறைவா இருக்
99
கிறான். அவன எப்புடி கூப்பிட முடியும்?.
பொய்தான் ஐயர் சொன்னார். இந்த பொய் எந்த லாபத் துக்கும் அல்ல. ஒரு உயிரைக் காப்பாத்த.
“ஆமாம் சாமி! நானும் வெபரம் புரியாம கேட்டடுடடேன். எனக்கு எப்பவும் பால் நெனைவுதான். மனுசங்களா மறந்தே போயிடடேன். வேலு இல்லேன்னா என்னா சாமி. நீங்க போயி பாருங்க. அவன பார்க்கிற நேரம் பாவமா இருக்கு. எப்புடி சிரிச்சிகிடடு இருந்தவன். இப்ப சிரிப்பே அடங்கின மாதிரி கெடக்கிரான் சாமி.”
ஐயரின் கண்களுக்குள் கோவிந்தனும் அவர் செவிகளில் அவன் சிரிப்பும் மேலெழுந்து நின்றது.
“போயி பார்க்கிறேன்பா.” ஐயர் ஆஸ்பத்திரியை நோக்கி திரும்பவும் நடந்தார். மன துக்குள் கோவிந்தனைப் பார்த்து விடடு கோயிலுக்குப் போய்
193

Page 99
0 மாத்தளைசோமு
எவருக்கும் தெரியாமல் வேல்சாமி, சிவராஜ் இருவரையும் வெளியே அனுப்பிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டார். அதே நேரத்தில் இன்று இன்னமும் காலை பூஜையை செய்ய வில்லையே என்ற கவலை அவர் நெஞ்சுக்குள் எரிமலையாய்
குமுறியது.
32
ஆஸ்பத்திரியில் வார்டில் ஒரு கடடிலில் கோவிந்தன் கிடத்தப்படடிருந்தான். தலையில் பெரியகடடு போடடிருந் தார்கள். அந்தக் கட்டடின் பாதித்துணி ரத்த நிறமாக மாறி விடடிருந்தது.
ஐயர் கடடிலருகே நின்று “கோவி. கோவி..” என்று மெள்ளமாய் கோவிந்தன் காதில் விழுமாப்போல அழைத்தார். எந்த அசைவும் கோவிந்தனிடம் இல்லை. பிறகு குனிந்து கோவிந் தனின் காதருகே அவன் பெயர் சொல்லி அழைத்தார். அசைய வில்லை அவன். கண்களை மூடினார் ஐயர். கோவிந்தனுக்காகப் பிரார்த்தனை செய்தார். மெளனப் பிரார்த்தனை. சில நிமிடங் களில் பின்னர் மறுபடியும் குனிந்து கோவிந்தன் காதில் பெயர் சொல்லிக் கூப்பிடடார். விடாமல் கூப்பிடடார். கோவிந்தனின் கண்கள் அசைந்தன. இமைகள் திறக்க முயன்றன. முடிய வில்லை.
அப்போது டாக்டர் வந்தார். அவருக்கு ஐயரைத் தெரியும்.
“வாங்க.”
“எப்படி இருக்கு டாக்டர்?” ஐயர் கேட்டடார்.
“இவருக்கு தலையில அடிபட்டிருக்கு. உடனே ஆபரேசன் செய்யனும். திருச்சி பெரியா ஸ்பத்திரிக்கு போன் பன்னியிருக் கேன். ஆம்புலன்ஸ் வரும். ரத்தம் நெறைய வெளிய போயிடட துனால மயக்கமாவே இருக்காரு. எப்பவாவதுதான் விழிப்பு
வரும்.” என்றார் டாக்டர்.
194

மூலஸ்தானம் D
“டாக்டர் எப்படியாவது இவனக் காப்பாத்தணும்.” என்று டாக்டரிடம் தழுதழுத்த குரலில் சொன்னார் ஐயர்.
“புரியுது. ஆனா அது என் கையில மடடும் இல்ல. மேல ஒரு கை இருக்கு, இந்த ரெண்டு கையும் சேர்ந்தா தான் முடியும். எவ்வளவு சீக்கிரம் திருச்சிக்கு கொண்டு போறோமோ அவ்வள வுக்கு நல்லது”டாக்டர் அந்த இடத்தை விடடுப் போனார்.
ஐயர் யோசித்தார், இனி காமாடகியைத்தான் நம்ப வேண் டும். கோவிந்தனின் காதில் மெள்ளமாய் மந்திரங்களை ஓதி னார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. அசைவுகள் மட்ட டுமே தெரிந்தன.
கோவிந்தனின் வாய் அசைந்தது. சத்தம்தான் வந்தது. வார்த்தைகள் உருவகிக்கவில்லை. ஐயர் காதை அவன் வாய ருகே கொண்டு போனார்.
“வேல்சாமி. வேல்சாமி.”
அந்த வார்த்தைகள் தெளிவாகக் கேட்டடன. “கலவரத்தினால எங்கயோ மறைஞ்சின்டிருக்கான் வேல் சாமி. இன்னைக்கி சாயந்தரம் வருவான். ஏன்?.”
கோவிந்தன் காதில் சொன்னார் ஐயர். கோவிந்தன் பதில் முணுமுணுப்பாக வந்தது.
“வேல்சாமிகிடட பேசணும்.”
ஐயர் அதைக் கேடடு யோசித்தார். ‘என்ன பேசப் போகி றான் இவன்?
இப்போது கோவிந்தன் தெம்படைந்தவனாக பேசினான். “நான் வேல்சாமிய சாகிறதுக்கு முன்னம் பார்க்கணும். சாமி!. நான் பொழைக்க மாடடேன். அதுக்காக நான் கவலப்படல்ல. நான் அனாதை. நான் செத்தா யாரு அழுவா? ஆனா கண்ணை மூடு முன்னம் வேல்சாமியப் பார்க்கணும்.”
அவன் வார்த்தைகளில் தொக்கி நின்ற ஆசையை நேரி லேயே உணர்ந்தார் ஐயர்.
195

Page 100
0 மாத்தளைசோமு
அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேல்சாமி யைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறானே! கோயில் கத வைத் திறந்தால் வந்து பார்க்கப் போகின்றான். ஊரில்தான் போலிஸ் வந்துவிடடதே. இனியும் அவர்களை மூலஸ்தானத் தில் வைக்க வேண்டுமா என்ன?. அப்போது டாக்டர் வந்தார். கோவிந்தனை கையைப் பிடித்து நாடியைப் பார்த்தார்.
ஐயர் மெதுவாகக் கேட்டார். "ஆம்புலன்ஸ் வரலியா டாக்டர்?.”
“நான் திருச்சிக்குப் போன் போடடேன். ஆம்புலன்ஸ் புறப் படடிருச்சாம். இன்னேரம் வந்திருக்கணும். இவரை சீக்கிரம் கொண்டு போவணும். ஆனா காவேரிப் பாலத்துக்கிடட பால் வண்டிக்காரங்களுக்கும் பஸ்காரங்களுக்கும் தகராறு. ரெண்டு கோஸ்டியும் ரோடடை மறிச்சிகிடடு இருக்காங்களாம்.” என்ற டாக்டர் சலிப்புடன் தொடர்ந்து பேசினார்.
“தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாயிடடாங்க. யார் போய் யாருக்குப் புத்தி சொல்ல முடியும்? கொடி போடட வன் எல்லாம் தலைவனாயிடடான். கடசிக் கரை வேடடி கட்டடி னவன் கவர்னர் னு நெனைக்கிறான். சின்னப் பையனுக்குப் புத்தி சொல்ல முடியாம இருக்கு. ஆதிக்க பாவம் எல்லா இடத் திலயும் வந்திருச்சி. சாதி பேரால் ஆதிக்கம். கடசி பேரால் ஆதிக்கம். பணத்தால் ஆதிக்கம். எப்புடி இந்த ஊரு உருப் படும்?. புரட்சி வந்தா இங்க எதுவும் மாறாது. ஒரு பிரளயம் வரணும். அப்பதான் ஒரு மாற்றம் தெரியும்.”
ஒரு டாக்டரின் மனதில் இத்தனை குமுறல்களா? ஐயரால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒன்றை நம்பினான். ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கப் போகிறது இந்த சமுதாயத்தில். அதற் கான அறிகுறியே இந்தக் குமுறல். எத்தனை நாளைக்குத் தான் கனவுகளை நம்பிக் கொண்டிருக்கப் போகின்றான் இந்த மனிதன். இங்கு கனவுகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளே அதிகம். கல்வியில் கனவு. அரசியலில் கனவு. சினிமாவில் கனவு. காதலில் கனவு. எத்தனை நாளைக்குத்தான்
196

மூலஸ்தானம் )
இந்தக் கனவுகள் இங்கு மயக்கமாய் இருக்கப் போகின்றன? மயக்கம் தீரும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.
“உங்களைப் போன்ற படிச்சவங்க குமுறல் இந்த நாடடுக்கு நல்லதில்ல. இந்த அரசியலே பாவமாயிருச்சி. மக்களுக்காக அரசியல்ங்கிறது போயி, கபடசிக்காக தலைவனுக்காக அரசி யல்னு ஆயிபடடுது. இது நிலைக்காது டாக்டர். எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு.”
“அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறேன்.” என்ற டாக்டர் ஐயரிடம் சொல்லிவிடடு அடுத்த நோயாளியிடம் போனார்.
ஐயருக்கு இந்த டாக்டரை மட்டடுமல்ல, அவரின் தந்தை யையும் தெரியும். தஞ்சாவூர் மாவடடக் கடலோரக் கிராமத் தைச் சேர்ந்தவர். மீன் பிடிப்பது அவரின் தொழில். மகனை டாக்டருக்குப் படிக்க வைத்தார். மகன் டாக்டரானதும் கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவரின் லடசியம். அவரின் லடசியத்தை டாக்டர் தொடர்ந்தார். திருநெல்வேலி யில் ஒரு கிராமத்தில் டாக்டராக இருந்தார். ஒரு உள்ளூர் அரசியல்வாதியோடு ஏற்படட பிரச்சனையில் இவர் நின்றது சரியான பக்கமானாலும் அது அந்த அரசியல் பிரமுகருக்கு எதி ராக இருந்ததால் திருச்சிக்கு, இந்தக் கிராமத்துக்கு மாற்றப் படடார். சூசை என்பது அவர் பெயர். சூசை டாக்டர் என்பது இந்த வடடாரத்தில் பிரபல்யம்.
ஐயர் கோவிந்தனைப் பார்த்தார். அவன் இப்போது உறங் குவதுபோல் இருந்தான். சில விநாடிகள் அவன் முகத்தையே பார்த்துவிடடு வீடடை நோக்கி நடந்தார். நடையில் ஒரு வேகம் இருந்தது.
கோயில் மூலஸ்தானத்திற்குள் இருந்த வேல்சாமிக்கு நிம்மதியே இல்லை. இரவு முழுவதும் தூங்கவே இல்லை. தன் உயிர் பாதுகாக்கப்படட போதும் அதற்காக இந்த மூலஸ்தானத் திற்குள் வந்திருக்க வேண்டுமா என்ற கேள்வி அவன் நெஞ்சை ரம்பமாய் அறுத்தது. தானோ தன்னோடு சம்பந்தப்படடடவர் களோ வரக்கூடாத இடத்திற்கு வரவும் நினைக்கக் கூடாத
197

Page 101
p மாத்தளைசோமு
இடத்திற்கு வந்தாயிற்று. ஐயா உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக கூப்பிடடபோது எதுவும் புரியாமல் தெரியாமல் இருந்தநிலை இப்போது. இங்கு வந்தபிறகு பதடடம் உடலில் விழுந்த மழைத்துளிகளாய் வடிந்த போது மனதுக்குள் புதிய கேள்வி உருவாகியது. தான் இந்த மூலஸ்தானத்திற்குள் இருப் பதை, இருந்ததை ஊர்க்காரர்கள் பார்த்து விடடால்? இது அவனை மடடுமல்ல அவனோடு இருந்த சிவராஜாவையும் குடைந்தெடுத்தது. மூலஸ்தானத்தில் இருக்கிற வேல்சாமி திரி புரசுந்தரியின் பின் தோற்றத்தைக் கண்ணால் இருடடில் பார்த் துக்கொண்டு அவள் முகத்தை நினைவுப் படுத்தினான். பிரமாண் டமான சிலை. அந்த வடடாரத்திலேயே அப்படி ஒரு சிலை இல்லை. கம்பீரமான ஒரு நிஜமான ஒரு தாய் நிற்பதைப் போல் நிற்கிற இந்தச் சிலைக்குப் படடுச் சேலை கடடி, நெற்றியில் படடயம் கடடி, ரத்த நிறத்தில் திலகமும் இட்டடு, செவ்விதழ் ரோசாப்பூ மாலையை சூடினால் பார்க்க இரு கண்கள் போதாது.
இன்று திரிபுரசுந்தரி. ஒரு காலத்தில் பெரிய காமாடடசி. இந்த மனிதர்களின் பிளவினால், பிரிவினால், அவர் பெயர் பெரிய காமாட்டசி என்பது அகன்று வெறும் காமாடகியாகியது. இப்போது திரிபுரசுந்தரியாகவும் இருக்கிறது. ஆனால் இந்த திரி புரசுந்தரிதான் பெரிய காமாட்டசி என்பதும் அவள் ஏன் நின்று கொண்டிருக்கிறாள் என்பதற்கும் கதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளை வேல்சாமிக்குச் சொன்னது பாடடி தான்.
அந்தக் கிராமத்தில் ஒருத்தியாகிப் போன அந்தக் காமாடகி யைப் பற்றித்தான் எத்தனையோ கதைகள். அவள் நின்று
கொண்டிருப்பதற்கே ஒரு கதை.
33
பெரிய மன்னர்களும் சிற்றரசர்களும் மண்ணைப் பங்கு போடடுக் கொடி கடடிய காலம். ஒமாந்தூரில் இருந்து மேற்கே
198

மூலஸ்தானம் L
இருக்கிற கொல்லிமலையில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவன் ஆடசிக்கு இந்தப் பகுதி உடபடடது. மனித நடமாட்டங்களே இல்லை. எங்கும் நெருங்கி நிற்கும் மரங்களின் நேசிப்பில் உரு வான காடுகள். கொல்லி மலை அரசன் கோயில் கடட இடம் தேடிக் கொண்டிருந்தான். தனது எல்லையில் ஒரு கோயிலைக் கட்டடினால் மலையில் இருந்து அதைப் பார்க்கலாம் என்பது அவன் எண்ணம். எனவே ஒமாந்தூரைத் தெரிவு செய்தான். படையோடு வந்து காடடை அழித்தபோது மண்ணில் ஒரு சிலை கிடைத்தது. தேவியின் திருவுருவம். சிலை மிகச் சிறியது. அந்தச் சிலை தானாகக் கிடைத்ததையிடடு மகிழ்ச்சியடைந்தான் அவன். ஆனால் சிலை மிகச் சிறியதாக இருந்ததால் அதனை அவன் விரும்பவில்லை. அந்த சிலையைக் கைவிடடு வேறு பெரிய சிலை செய்ய சிற்பிகளுக்கு உத்தரவிடடான். இது அரச னோடு வந்த ஒரு படை வீரனுக்குப் பிடிக்கவில்லை. அரசரிடம் அது பற்றி பேசவே பயந்த அவன் அந்தச் சிலையை ஒரு மரத் தின் அடியில் வைத்து வணங்கி வந்தான்.
காலம் கரைந்தது. ஒரு நாள் சிற்பிகள் எல்லோரும் ஒன் றாக கவலையோடு அரசரிடம் வந்தார்கள். இனித் தங்களால் சிலையைச் செய்ய முடியாது என்று சொல்லி விடடார்கள். இது வரை செய்த சிலைகள் எல்லாம் ஏனோ உடைந்து விடடனவாம். அரசரை அழைத்துக்கொண்டு போய் நூற்றுக்கணக்கான சிலை களைக் காண்பித்தார்கள். கை உடைந்து, கால் உடைந்து, செவி இழந்து, மூக்கிழந்து போன பல சிலைகள்.
அப்போது படைவீரன் “மன்னா நீங்கள் விரும்பினால் நான் ஒரு சிலை தர முடியும்.”என்று சொன்னான்.
“உனக்கு ஏது சிலை?" - மன்னனின் கேள்வி.
“அரசே முதலில் தேடியெடுத்த சிலைதான். காடடுப் பகுதி யில் வைத்திருக்கின்றேன். அதையே கோயிலில் வைக்கலாம்.”
மன்னன் புன்னகைத்துவிடடு சொன்னான். “அது சிறிய சிலை. எனக்கு என் தாயார் நிற்பது போல் சிலை வேண்டும். நிற்கின்ற சிலை தர முடியுமா உன்னால்?.”
199

Page 102
D மாத்தளைசோமு
படைவீரன் மெளனியானான். அன்று இரவு அவன் கனவில், “நாளைய பொழுது நீ வந்து என்னை காடடுக்குள் பாரு. நான் வளர்ந்து கொண்டிருப்பேன்’என்று ஒரு பெண்மணி சொன் னாள். அவள் பொட்டு வைத்து, பூ வைத்து பார்ப்பதற்கு ஒரு தாயைப் போல இருந்தாள்.
விடிந்ததும் அரசனிடம் தன் கனவைச் சொன்னான். அவன் முதலில் நம்பவில்லை. பிறகு மனம் மாறி அன்று மாலை காடடுக் குள் போனான். சூரியன் மேற்கு திசையில் விழுந்தான். இருள் சேர்ந்தது. சின்னச் சிலை வளர்கிறதா? என்று பார்த்தனர். எத னையும் காணோம். பொறுமை இழந்த மன்னன் அந்த படை வீரனை கைது செய்யச் சொல்லி விடடுப் புறப்படடான். அப் போது ஒரு வெளிச்சம் மின்னலாய் வெடடியது. அரசன் சிலை யைப் பார்த்தான். என்ன அதிசயம்! சிலை வளரத் தொடங்கியது. மண்ணில் கீழே குந்தியிருந்த தாய் எழுந்து நிற்பதைப் போல ஒரு அற்புதம். எழுந்து நின்ற தாயும் மேலே எழுந்து எழுந்து. அப்படியே வானத்தைத் தொடடு விடுவாளா?.
மன்னன் மண்ணில் விழுந்து, “தாயே! என்னை மன்னித்து விடு. உன்னைச் சோதிக்கவில்லை.” என்று அழுதான்.
சிலை அப்படியே நின்றது. ஒரு சத்தம் கேட்டடது.“மன்னா! எனக்கு இங்கேயே கோயில் கட்டடு. இதுபோன்ற உயரமான சிலை. வேறு எங்கும் இல்லை.”
மன்னன் அங்கேயே கோயில் கடடினான். அந்தக் காலத் தில் மூலஸ்தானத்திற்குக் கதவில்லை. நிற்கிற காமாடகியின் வைர மூக்குத்தி வெளிச்சம் விளக்கு வெளிச்சத்தில் ஒரு நடசத் திரமாய் கொல்லி மலையில் இருந்து பார்த்தால் தெரியும். அதனைப் பார்த்து தொழுது விடடுத்தான் தூங்கப் போவானாம் அந்த மன்னன். இந்தக் கதையைப் பாடடி சொல்லும்போது
கேடக சுவாரஸ்யமாக இருக்கும்.
அந்தக் காமாட்டசியை - திரிபுரசுந்தரியை இன்று நேருக்கு நேர் பார்க்கின்றபோது அவர்கள் இருவருக்கும் மனதுக்குள்
20O

மூலஸ்தானம் D
பயம் வருகின்றது. ஏன்? கடவுளைக் கண்டு பயம் வரவேண்டும் சக்திதான் கடவுள். ஏன். இந்த பயம்? அது பயமல்ல. பக்தி தான். அந்த பக்திதான் சில நேரத்தில் பயமாகவும் தோன்று கிறது. மனிதன் தைரியமாக வாழத்தான் கடவுளை வேண்டுகின் றான். ஆனால் அந்தக் கடவுளின் அருகில் இருக்கவே பயப்படு கிறார்களே இந்த மனிதர்கள். இங்கேதான் உலகம் இருக்கிறது. இந்த உலகத்தில் அவர்கள் அந்த மூலஸ்தானத்தில் கால் வைக் கக் கூடாதென்பது சிலர் கூடி எடுத்த எழுதாத விதி, இப்போது அவர்கள் அந்த மூலஸ்தானத்தில். இதனால் இது வெளியே தெரிந்தால் என்ன நடக்குமோ?. அந்த எண்ணமே அவர்களை பயப்பட வைத்தது.
வெளியே விடிந்து விட்டது என்பதற்கு அடையாளமாய் மூலஸ்தானத்தில் காமாடகியம்மனின் தலைக்கு மேலே கட்டடி டச் சுவரில் இருந்த ஜன்னல் வழியாக வெளிச்சமும் சுவர்களைத் தேடி வந்து விடடது.
நேற்று உயிர் தப்பினால் போதும் என்றிருந்த அவர்கள் இப்போது அந்த மூலஸ்தானத்திலிருந்து வெளியே போனால் போதும் என்றிருந்தார்கள்.
சிவராஜா மெளனமாய்ச் சொன்னான். “ஐயர் பேச்சைக் கேட்டடு இங்க வந்தது தப்பா போச்சி. நாம இங்க இருந்து வெளியே போறதை யாரும் பார்த்தா நிச்சயம் இன்னொரு கலவரம் வரும்.”
வேல்சாமி அதற்குப் பதில் கொடுத்தான். “இதுவரைக்கும் எங்கள காப்பாத்தினவ மலை மாதிரி நிக்கிரா. இனியும் காப் பாத்தாமலா போவா? ஐயர் இல்லேன்னா நாம ரெண்டு பேரும் உசுரோட இருப்போமா. படிச்ச நீங்களே இப்படி
99. Cu3F GottonT?...
“வேல்சாமி! நான் ஐயரை குறை சொல்லல்ல. எனக்கு உயிர் கொடுத்ததே அவர்தான். நான் இப்பதான் பொறந் திருக்கேன். அவர் மடடும் இல்லேன்னா என் ஆயுள் முடிஞ்
2O1

Page 103
0 மாத்தளைசோமு
சிருக்கும். அதெல்லாம் எனக்குத் தெரியும். மறக்கல்ல. ஆனா நாம இங்க இருக்கிரதை யாரும் பாத்தா பெரிய பிரச்சனை. இன்னொரு கலவரமே வருமே! அதான் யோசிச்சேன்.”
“நம்ம கையில. என்ன இருக்கு மாஸ்டா! எல்லாம் அவி கையில. அவ பார்த்துக்குவா.”
சிவராஜ் அதற்குமேல் பேசவில்லை. மெளனமாக இருந் தான். ஒரு விநாடி தன் உயிரைக் காப்பாற்றிய ஐயரை விமர் சித்து விடடேனே!. இதுதான் படித்தவனிடம் இருக்கிற திமி ரின் அடையாளமா? படிக்காத வேல்சாமிக்குத் தெரிந்த ஞாயம் கூட தெரியவில்லை!. தன்னைத் தானே நொந்து கொண்டான். சிவராஜ் அதனைப் புரிந்து கொண்டவனாய் வேல்சாமி காமாடகி யம்மனின் சிலையைப் பார்த்தான். லேசான வெளிச்சத்தில் ஒ. என்ன கம்பீரம் அவள் முகத்தில் .
வேல்சாமியின் நினைவுகள் பின்னோக்கி ஓடின. சின்னப் பிள்ளையாய் இருந்தபோது சிவராத்திரியன்று பாடடியோடு அந்தக் கோயிலுக்கு வந்தது அவன் கண்களில் தெரிந்தது.
சிவராத்திரிக்கு வருவதற்கு முன்னர் பல இரவு பாடடி கதை சொல்வாள். எல்லாக் கதையும் காமாடசியம்மனின் பெரு மையைப் பற்றிதான் இருக்கும். ஒவ்வொரு இரவுக்கும் ஒரு கதை. வீடடுத் திண்ணையில் சமுக்காளத்தை விரித்துக் காலை நீட்டடிப் போட்டு வெற்றிலையை அதக்கியவாறு கிழவி கதை சொல்வாள். கதை கேடக அந்த தெருவிலுள்ள பிள்ளைகளும் வருவார்கள். திண்ணை நிரம்பி வழியும். மலேசியாவில் இருந்து வந்த லந்தாரம் வெளிச்சம் கொடுக்கும்.
இது தினமும் நடக்கிற ஒன்று. கிழவி கதை சொல்வதை அந்தத் தெருக்காரர்கள் விரும்பினார்கள். கிழவி கதையோடு கருத்தையும் சொல்வாள். எந்த வீடடிலாவது எந்த வாண்டா வது அடம் பிடித்தால் அது கிழவிக்கு காதில் விழுந்தால் அன்று அந்த வாண்டு கதை கேடக முடியாது. கிழவிக்குப் பயந்து
O 202

மூலஸ்தானம் L
வாண்டுகள் ஒழுங்காக இருக்கும். ஒருநாள். கிழவி கதை சொல்லத் தொடங்கிளாள் தொடங்கும் போதே ஒரு கேள்வி கேட்டடாள்,
“நம்ம ஊருல திருடனே இல்ல. தெரியுமா?” குழந்தைகள் எல்லோரும் விழித்தார்கள். அதில் வேல்சாமி யும் ஒருத்தன். அப்போது அவனுக்கு வயது பதினாலு இருக்கும்.
34
பTடடி கதையைத் தொடர்ந்தாள், “நம்ம கிராமத்துல திருடடே இல்லே. திருடனும் இல்ல. ஏன் தெரியுமா? காமாடகி அம்மன் இருக்கிறதுனால. அவ கருணையில் ஊரு நல்லா இருக்கு. எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்ப ஏன் திருடனும்? ஊர்ல வயக்காடெல்லாம் நல்லா வெளைஞ்சு, அறுவடை முடிஞ்சு, அரிசி காய் கறிய வித்து, எல்லோரும் பணத்தை வீடடுல வைச் சிருந்த காலம். அப்ப பணம் போட பேங்கா பாங்கா அது ஏது?.
கொஞ்சம் நஞ்சம் இருக்கிறவங்களும் பெரிய மனுசங்களுக் கிடட குடுப்பாங்க. மத்தவங்க வீடடுலதான் வைப்பாங்க.”
இந்த இடத்தில் கதையை நிறுத்திவிடடுக் கேள்வி பதிலுக்கு வந்தாள்.
“டேய் ராசு ஒங்க வூட்டுல எங்கடா பணத்தை வைப் பாங்க.”
“தெரியாது பாடடி’ அடுத்த கேள்வி கேடபதற்கு முன்னர் ஒரு வாண்டுகள் கேட்டடான் ஒரு கேள்வி, “பாடடி! நீ எங்க பணத்தை வைப்ப.?” கிழவி வெள்ளையாகிப் போன புருவத்தை உயர்த்திப் பார்த்து விடடு இடுப்பில் சொருகி இருந்த சுருக்குப் பையை எடுத்துக் காடடினாள். “இதில்தான் வைப்பேன். இது எப்பவும் ரொம்பனதே இல்ல. வெத்தல பாக்கு வைச்சிருப்பேன்,
2O3

Page 104
D மாத்தளைசோமு
கொஞ்சம் சில்லறை வைச்சிருப்பேன். சரி. கதைக்கு வர்ரேன்.”
எல்லாப் பிள்ளைகளின் பார்வையும் பாடடியையே மொய்த்தன. கதை தொடர்ந்தது.
“ஒரு நா. அமாவாசை. இருபடடு. அப்ப இந்த கரென்ட லைபட இல்ல. எல்லாரும் சாப்புடடு படுத்தாச்சி. ஊரே அடங் கிப் போச்சி. அப்பதான் திருச்சிக்குத் தெக்கால இருந்து ஒரு கூடடம் ஊர் ல திருட வந்திருச்சி. அவங்களுக்கு திருடுரது தான் தொழிலாம். அதுவும் பரம்பரைத் தொழிலாம். அந் தக் திருட்டடுக் கூடடம் ஊர் ல கொள்ளையடிக்க முன்னாடி கோயில்ல கொள்ளையடிக்க கெளம்பிச்சாம். எந்தக் கோயில்ல.” என்று ஒரு கேள்வியோடு கதையை நிறுத்தினாள். பாடடியின் கேள்விக்குப் பதில் வரவில்லை. “எந்தக் கோயில்ல.?”பாடடி திரும்பவும் கேட்டடாள். ஒரு பதில் வந்தது “ரெண்டு கோயில் இருக்கு. யாருக்குத் தெரியும் எந்தக் கோயில்?.”
பாடடி நிதானமாகப் பதில் சொன்னாள். “அப்ப ரெண்டு கோயில் இல்ல. ஒரே ஒரு கோயில்தான் இருந்திச்சி. அது பெரிய காமாட்டசி கோயில்தான். மத்தது புதுசா வந்த கோயில்.”
“கதையைச் சொல்லு பாடடி தூக்கம் வருது.” ஒருவன் சிணுங்கினான்.
கிழவிக்கு கோபம் வந்தது. “தூங்கிறவன் இங்க என்னத்துக்கு இருக்கிரான்? போயி தூங்கு. உன் அவசரத்துக்கு கதை சொல்ல மாடடேன்.”
எவரும் பதில் சொல்லவில்லை. பிறகு கதையைத் தொடர்ந்தாள் அவள்.
“காமாடகியம்மன் கோயிலுக்குள்ள போன திருடடு கும் பல் கோயில்ல இருந்த வெளக்கு, அண்டா, குண்டா எல்லாத் தையும் அள்ளி மூடடையா கடடிகிடடானுகளாம். அவனுகள்ள
204

மூலஸ்தானம் D
ஒருத்தன் காமாட்டசியம்மனைப் போய்ப் பார்த்தானாம். குத்து விளக்கு வெளிச்சத்தில் மூக்குத்தி ஜொலிச்சதாம். அந்த மூக்குத்தி யில பெறுமதியான வைரம் இருக்கு. அது குத்து வெளக்கு வெளிச் சத்தில் பளிர் பளிர்னு அடிச்சிச்சாம். திருட்டடுப்பய மூக்குத்திய எடுத்திருவோமின்னு காமாடகியம்மனுக்கிடட போய் கைய தூக்கினானாம். அம்புடடுதான் அய்யோ..! அம்மான் னு அலறி னானாம். ஏதோ பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சாம். எங்க பார்த்தாலும் இருபடடாம். அப்பதான் அவனுக்குப் புரிஞ்சிச் சாம் கண் திடீர்னு குருடா போனது. அய்யோ அம்மான்னு கத்தினானாம். அவனோட இருந்த ஒருத்தன் என்னான்னு கேட்டடு கனவு கண்டியான்னு சிரிச்சிடடு மூக்குத்திய எடுக்க போனானாம்.”
ஒரு விநாடி கதையை நிறுத்தி எல்லோரையும் பார்த்தாள். யாராவது தூங்குகிறார்களா?. என்று நோட்டடம் விடவே அந்தப் பார்வை. எவரும் தூங்கவில்லை.
கிழவி கதையைத் தொடர்ந்தாள். “அவனுக்கும் அதேகதி கண்ணு குருடாப் போச்சாம். மத்தவங்களுக்கும் அது காமாச்சி வேலன்னு புரிஞ்சுச்சாம். அம்புடடுத்தான் கொள்ளை அடிச்ச அண்டா, குண்டா, குத்து வெளக்கு, பாத்திரம் எல்லாத்தையும் அங்கயே வைச்சிடடு எல்லாரும் கீழ விழுந்து கும்பிடடு அழு தாங்க. அப்ப ஒரு சத்தம் கேட்டடிச்சாம். ஒரு அம்மா பே சுர மாதிரி சத்தம்.
'உங்களுக்கு திரும்பப் பார்வை வரனும்னா வருசா வருசம் சிவராத்திரிக்கு நீங்க உங்க ஊர்ல திருடவே கூடாது. அது அசரீரி மாதிரி கேடடிச்சாம். அதை கேடட திருட வந்தவனுக எங்கள மன்னிச்சிரும்மா காமாடகி. நாங்க சிவராத் திரிக்கு வருசா வருசம் வர்ரோம்னு சொல்லி அழுதானுகளாம். அடுத்த நிமிசம் அந்த ரெண்டு பேருக்கு கண் பார்வை திரும்ப வந்திச்சாம்.”
பாடடி பெருமூச்சு விடடுக் கொண்டாள். கதை முடிந்தது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
2O5

Page 105
மாத்தளைசோமு
பாடடிக்குப் பிறகும் ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு அந் தக் கிராமத்துக்கு வருவது அவன் குடும்பத்தாரின் வழக்கம். இன்றோ ஐயரின் உதவியால் அதே கோவிலில் ஒரு தொண்டு செய்கின்றான் இந்த வேல்சாமி, குடும்பமோ பிள்ளையோ குட. டியோ இல்லாத அவனுக்கு அந்தக் கோயில்தான் உலகமாகி விடடது.
நினைவுகள் உதிர்ந்து வேல்சாமியின் கண்களில் காமாடகி யம்மனின் சிலை தெரிந்தது. இப்போது அதிகமான வெளிச்சம் அந்த மூலஸ்தானத்துக்குள் இருந்தது. எப்போது அங்கிருந்து போக முடியம் என்பதைத்தான் அவன் நினைத்துக் கொண் டிருந்தான்.
மூலஸ்தானத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டடது. வேல்சாமியின் இதயம் "படபடத்தது, கதவைத் திறப்பது எவரோ?. குரல் கொடுத்துக் கேடகவும் பயமாகவும் இருந்தது அவனுக்கு. அதே உணர்வுதான் சிவராஜாவுக்கும். இருவரும் என்ன நடக்குமோ என்ற உணர்வில் காமாடகியம்மனைப் பார்த் துக் கொண்டார்கள். பெரிய கதவு திறக்கப்படடது. ஐயர்தான் வந்திருந்தார். அவர் தலையில் கட்டடு.
ஐயரைக் கண்ட வேல்சாமி எல்லாவற்றையும் மறந்து கேடடான், “என்ன சாமி தலையில் காயம் .”
“உங்களத் தேடி வந்தவா நீங்கள்ளாம் எங்கன்னு கேட்டடாதெரியாதுன்னேன். போறச்சே அடிச்சிடடுப் போயிடடா
w 99 சின்னக் காயம்.
ஆசுவாசத்துடன் வேல்சாமி சிவராஜாவைப் பார்த்தான். சிவராஜா குற்ற உணர்வில் தலையை கீழே கவிழ்ந்தான்.
“கலவரம் அடங்கிருச்சி. ஊருக்குள்ள போலீஸ் வந் திருக்கு. கெளம்புங்கோ.”
வேல்சாமி ஐயரை ஏக்கத்துடன் பார்த்தான்.
அப்போதுதான் அவர் சொன்னார்.
206

மூலஸ்தானம் 0
“வேல்சாமி! ஊர் ல இருக்கிரதிலே இனி பிரச்சனையே இல்ல. மாஸ்டர் சிவராஜா மட்டடும் கொஞ்சநாள் ஊரைவிடடு இருக்கிரது நல்லது. நீ தப்பு செய்யலேன்னாலும் உன்ன
A. s தேடுவா. கொலை செய்யவும் தயங்கமாடடாள்.
சிவராஜாவுக்கும் ஐயரின் வியூகம் புரிந்தது. துளசியைக் காதலித்தது மடடும்தான் நிஜம். துளசியை எவனோ கொலை செய்திந்தாலும் அவனை எப்படி நம்பும்?
சிவராஜா திருச்சிக்குப் போய் ஒரு வக்கீலைப் பார்க்க முடிவு செய்தான். இருவரும் மூலஸ்தானத்தை விடடு வெளியே வந்தார்கள்.
சிவராஜா, “நீங்க இல்லேன்னா நாங்க உயிரோட இருக்க மாட்டடோம்.”என்று சொன்னவாறு ஐயரின் காலில் விழப் போக ஐயர் அதனைத் தடுத்து விட்டடார்.
வேல்சாமியின் கண்களில் கண்ணிர் முத்துக்களாய் உதிர்ந் தன. ஐயர் நிதானமாக பேசினார்.
“இது என் கடமை. வேதம் சொல்ரதோட என் கடமை முடியல்ல. உயிரைக் காப்பத்திரதும் என்னோட கடமை. வேதம் படிக்கிரதும், சொல்ரதும் மனுசாள் நல்லா இருக்கவும், இந்த லோகமே சேமமா இருக்கவும்தான். அதைத்தான் நான் செய்தேன். நான் செஞ்சேன்னு சொல்ரதைவிட அந்த மூலஸ்தா னத்தில் இருக்காளே காமாடகி - திரிபுரசுந்திரி லோகமாதா அவ செஞ்சான்னுநெனைச்சுப் பாருங்க. அவகால்ல விழுங்கோ.”
சிவராஜா உடனே மூலஸ்தானத் திசையை நோக்கி விழுந்து வணங்கினான். வேல்சாமியும் அப்படியே செய்தான்.
மூவரும் கோபுர வாசலருகே வந்தார்கள். அப்போது ஐயர் வேல்சாமியிடம் மெல்லிய குரலில் சொன்னார் “வேல்சாமி! நீ உடனே காடடாஸ்பத்திரிக்குப் போ. நம்ம கோவிந்தன் அடிபடடு கெடக்கிரான். உன்ன பார்க்கணும்னு சொன்னான்.”
வேல்சாமி பதறிக்கொண்டே கேட்டடான். “யாரு அடிச்சா?”
2O7

Page 106
0 மாத்தளைசோமு
“வேற யாரு? கலவரக்காரனுக. சரி. நீ ஆஸ்பத்திரிக் குப் போ.” வேல்சாமி கேள்விக் குறியோடு ஐயர் முகத்தைப் பார்த்தான்.
“கோவிந்தனைப் பார்த்திட்டடு ஆத்துக்கு வா.” என்று வேல் சாமிக்கு பதில் சொல்வதுபோல் சொன்னார் ஐயர்.
வேல்சாமியின் பார்வை அர்த்தமானது. அந்த அர்த்தம் ஐயருக்குப் புரியும். வேல்சாமி ஆஸ்பத்திரியை நோக்கி நடந் தான். சிவராஜன் எங்கே போவது என்பது போல் நின்று கொண் டிருந்தான். ஆனால் ஐயர் அவனுக்குப் பொருத்தமான ஒரு வழியைச் சொன்னார்.
“சிவாரஜா! நீ புலிவலம் போய்த் திருச்சி போறது நல்லது. உங்க அம்மா அப்பாவுக்கு நான் தகவல் சொல்றேன். நீ புலிவலம்
s
GLrT.
“நீங்க சொல்ரதுதான் சரி சாமி.” என்ற சிவராஜா புலி வலம் நோக்கி வேகமாக நடந்தான்.
இருவரும் போன பிறகு ஒரு பெரிய பாரம் இறங்கிவிடடது போன்ற உணர்வு வரவே ஐயர் கோபுரத்தைப் பார்த்துக் கும் பிடடார். ஒரு நிம்மதிப் பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. அவர்களை கோயிலில் வைத்திருந்தால் அவர்கள் கலவரக் காரர்களிடம் பிடிபடடுப் போயிருப்பார்கள். காமாடகியம்ம னின் மூலஸ்தானம் தான் அவர்களைக் காட்பாற்றியது. அந்த மூலஸ்தானத்தில் எந்தத் துணிவில் அவர்களை வைத்து பூடடி னேன் என்பது இப்போது நினைத்தாலும் ஒரு பிரமிக்க வைக்கக் கூடிய செயலாகத் தெரிந்தது அவருக்கு.
இங்கு மனிதர்களே தாங்களே வகுத்திருக்கிற கோடு களில் பிரிந்து போயிருக்கிறார்கள். ஒரு மனிதன் இன்னோரு மனிதனை தாழ்த்துகின்றான். இப்படித் தாழ்த்தவும் உயர்த்தவும் இந்த மனிதனுக்கு எவரும் அதிகாரம் கொடுக்கவில்லை. இது இவனே தேடிக்கொண்ட சாபக்கேடு. அதனை மாற்றிவிட இவனுக்கு முடியும் என்று தெரிந்தும், அதைப் பற்றி சிந்திக்காமல்
208

மூலஸ்தானம்
அதற்கே அடிமையாகிப் போனான். ஐயர், உயிரைக் காப்பாற் றத்தான் அவர்களை மூலஸ்தானத்தில் வைத்தார். ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரிந்தால்? அவர்கள் இந்தக் கோயிலுக்கு வரவே போராடடம் செய்தவர்கள். அவர்கள் மூலஸ்தானத்தில் இருந்தார்கள் என்ற செய்தி வெளியே தெரிந்தால்?.
ஐயர் காமாடசியம்மன் மேல் பாரத்தைப் போடடு விடடு கோயிலுக்கு உள்ளே போனார். இதையெல்லாம் கோயிலுக்கு எதிர்ப்புறமாய் இருக்கிற வயக்காட்டடில் நின்று கொண்டிருந்த காசிநாதப்பிள்ளை மகனுக்கு சந்தேகம் வந்தது. கொஞ்ச நேரத் துக்கு முன்னர் ஐயர் மடடும் கோயிலுக்குள் போனார். அவர் திரும்பி வந்தபோது அவரோடு சிவராஜா, வேல்சாமி. எவ்வாறு இது நடந்தது? கலவரத்தினால் தலைமறைவாகியிருக்கும் போது இவர்கள் இருவரும் இந்தக் காலையிலேயே எங்கே இங்கு வந்தார்கள்? பல்வேறு சந்தேகங்கள் விசுவரூபமெடுத்து பிடரியைத் தள்ள காசிநாதப்பிள்ளை மகன் எங்கோ ஓடினான்.
35
கோயிலில் பூந்தோடடத்தில் நிழல் விரித்து நின்று கொண் டிருந்த வேப்ப மரத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார் ஐயர். அவர் கண்களுக்குள் பல காடசிகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அவையெல்லாம் ஒரு கனவாக இருந்து விடக் கூடாதாவென்ற நப்பாசை வேறு. அந்தக் காடசிகளைத் துரத் திக் கொண்டே இருந்தன. வேல்சாமி அவருக்கு அருகிலேயே இருந்தான்.
வேல்சாமி ரொம்பவே சோர்ந்து போய் விடடான். ஒடிந்து விழுந்த பந்தல்போலச் சரிந்து போயிருந்தது அவன் மனம். 'கண் களுக்குள் இருக்கிற கோவிந்தனை இனிப் பார்க்க முடியாது. சாகும் போதுகூடச் சிரித்துக் கொண்டே செத்தானே அவன்? இப்படி ஒரு சாவு எவனுக்கு வரும்? ஆனாலும் வேல்சாமியின் நெஞ்சுக்குள்ளே ஒரு குடைச்சல். ஏதோ ஒன்று ரம்பமாய்
2O9

Page 107
0 மாத்தளைசோமு
அறுத்தது. ஐயர் மகனுக்கு ரத்தம் கொடுத்தது யார் என்று கேட்டடானே! அதுவும் எத்தனையோ தடவை? அட சாகும் போது கூட கேட்டடு வைத்தானே! சொல்லியிருக்கலாம். அவன் ஆத்மா சாந்தியடையாதே! கோவிந்தனின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யவே இல்லையே.
ஒரு குற்றவாளியாய்த் தன்னை எண்ணி எண்ணிக் குலுங்கி குலுங்கி அழுதான் வேல்சாமி. அவன் கண்களில் இருந்து கண் ணிர்த் துளிகள் கீழே விழுந்தன. உதடுகள் அசைந்தன. ஆனால் வார்த்தைகள் சத்தமாய் பிரசவிக்கவில்லை.
“ஏன் வேல்சாமி.! நீ அழர. பிறக்கிரதும், போறதும் லோகத்தில எல்லாருக்கும் சொந்தமானது. இந்த லோகத்தில எல்லாரும் யாரையோ இழந்தவங்கதான். மனுசாளுக்கு இது சொந்தமானது. பகவானுக்கு மட்டடும் இது இல்ல. இது உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்.”
வேல்சாமி அழுவதை நிறுத்தி விடடுச் சொன்னான். “கோவிந்தன் போனதில் எனக்கு கவலைதான். சதா சிரிச்சி கிடடு யாருக்கும் எந்த தீங்கும் நெனைக்காம இருந்தவன் அவன். அவன் இவ்வளவு சிக்கிரமா போயிருவான்னு நான் நெனைக்கல்ல. அது எனக்கு கவலைதான். ஆனால் நான் அழுதது அதுக்கு இல்ல."
ஐயரின் பார்வை வேல்சாமியின் முகத்தில் பதிந்தது. ‘என்ன சொல்ல வருகின்றான் இவன்.?
“உங்க மகனுக்கு ரத்தம் குடுத்தது யாருன்னு கேடடுக் கிடடே இருந்தான். நான் சொல்ரேன், சொல்ரேன்னு சொல் லிட்டடுச் சொல்லவே இல்ல. சாகப் போற நேரத்தில கூட கேட்டடான். அப்ப கூட நான் சொல்லல்ல. சொல்லியிருக்க லாம்னு இப்ப நெஞ்சு சொல்லுது. அதான் அழுதேன்.”
ஐயர் ஆணி அடித்தாற் போல் பதில் சொன்னார். “அது உன் தப்பு. நீ தான் ரத்தம் கொடுத்தேங்கிறதை சொல்ல வேண்டியதுதானே. ஏன் சொல்லல்ல.”
21 O

மூலஸ்தானம் )
வேல்சாமி கவலையுடன் சொன்னான். “சொல்லியிருப் பேன் சாமி. ஆனா உங்களுக்கு நானே யாருக்கும் சொல்ல மாடடேன்னு சொல்லிடடேன். அதான் சொல்லல்ல.”
ஐயர் ஒரு நிமிடம் மெளனமாய் இருந்து விடடுச் சொன் னார். “வேல்சாமி! ஏன் மேலயும் தப்பு இருக்கு. என் மகன் உயிர் தப்ப உன் கிட்டட இருந்து ரத்தம் வாங்கினேன். அன் னைக்கி ஏன் மகனை காப்பாத்தினதே நிதான். அன்னைக்கி உனக்கிடட இருந்து ரத்தம் மாத்திரம் வாங்கல்ல. ஞானத்தை யும் வாங்கினேன். நீ தான் மனுசாள் எல்லாரும் பகவானுடடு படைப்புன்னு சொல்லாம சொன்னவன். அதை ஏன் நான் மறைக்கனும்? அன்னைக்கி ஏன் மறைக்கணும்னு நெனைக்கி ரேன். எனக்கென்னமோ கோவிந்தன் சும்மா கேக்கல்ல. என்ன சொதிக்கத்தான் பகவான் அவனை கேக்க வைச்சான். அவன் தெரிஞ்சு என்ன செய்யப் போறான்? இது பகவான் திருவிளை யாடல். எனக்கு நல்லாப் புரியுது. உனக்கிடட ரத்தம் வாங்க வைச்ச பகவான் உன்ன காப்பாத்திர வேலயையும் ஏன் கிடட குடுத்திடடானே! பார்த்தியா வேல்சாமி.”
வேல்சாமி அதைக் கேட்டடு திடுக்கிடடுப் போனான். “நீங்க எந்தத் தப்பும் பன்னல்ல. என்னைக்கி நான் ரத்தம் குடுத் தோன்னோ அதோட அது முடிஞ்சி போச்சி. குடுத்ததப் பத்தி மனுசன் பேசக் கூடாது.”
ஐயர் உறுதியாகச் சொன்னார். “நீ சொல்ரது சரி. ஆனா தப்பு யார் செஞ்சாலும் - நீ செஞ்சா என்ன? நான் செஞ்சா என்ன? தப்பு தப்புதான். நாமெல்லாம் மனுசாள்தான். ஒரு சுய நலத்துக்காக நீ வேற, நான் வேறன் னு பிரிச்சிக்கலாம். ஆனா கடவுளுக்கு நாம ரெண்டு பேரும் மனுசாள்தான். இது புரிய மாடடேங்குது. நான் செத்தா இந்த தேகம் பொணம், நீ செத் தாலும் இந்த தேகம் பொணம். வேற பேரு என்ன? ஒண்னும் இல்ல. அழியிற தேகத்துக்கு அலங்காரம் செய்யலாம். உசத்தி, தாழ்வுன்னு பேசலாம். ஆனா, நம்ம உள்ள இருக்கிற ஆத்மா எல்லாம் ஒண்னுதான் வேல்சாமி! இதை மேல்நாடடுல
21 1 O

Page 108
D மாத்தளைசோமு
இருக்கிற வெள்ளைக்காரங்க புரிஞ்சின்டு நடக்கிராங்க. மவன் ராம் எழுதுர லெட்டர் விசயத்தை படிக்கிறபோது அப்படித் தான் தோணுது.”
ஐயரின் வார்த்தைகள் இதுவரை வேல்சாமி கேடகாதது. கோவிந்தனின் சாவு அவருக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி யிருப்பதோடு இத்தனை காலமும் அவர் தனக்குள் ஒரு போராட டம் செய்து வந்திருக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லி யது. தன்னை ஒரு மனிதனாக மடடுமல்ல அதற்கு மேலயும் வைத்து வந்திருக்கிறார் அவர். கலங்குவதை நிறுத்திய வேல் சாமி தன் முடிவைச் சொன்னான். “நான் திருச்சிக்குப் போயி புதுக்கோடடைக்குப் போறன் சாமி. இங்க இருந்தா பிரச்சனை.” புதுக்கோடடையில் தங்குவதற்கு இடம் கொடுக்கிற ஒரு நடபு வேல்சாமிக்கு உண்டு.
ஐயர் திடுக்கிடடார். அவர் மனம் ஆடிப் போய் விபட்டது. எத்தனையோ வருடமாக பக்கத்தில் இருந்தவன் இன்று எங்கோ போகின்றேன் என்கிறானே!.
“நீ ஏன் போவனும்? உன் மேல யாருக்கு என்ன கோபம்? 'நீ பயப்படாம இரு. உன் உயிரைக் காப்பாத்தின காமாடசி
ஒரு வழி காட்டடமலா விடுவா? நீ எங்கயும் போக வேணாம்.”
ஐயரின் வார்த்தைகளில் ஒரு முடிவே இருந்தது. அதனை தான் மீற முடியாது என்பது வேல்சாமிக்கு நன்றாகத் தெரியும்.
அப்போது மீனாட்டசி வந்தாள், “வாங்க ரெண்டு பேரும். கார்த்தால இருந்து சாப்புடாம இருக்கீங்க. உப்புமா கிண்டி யிருக்கேன். சாப்பிட வாங்கோ.”
கோயில் கிணற்றில் இருவரும் அவசர அவசரமாகக் குளித்து உடுத்திக்கொண்டு இலை முன்னே உடகார்ந்திருந்தார் கள். உப்புமாவு ஆவி பறந்தது. இருவரும் சாப்பிடடார்கள். வேல்சாமி நன்றாகவே சாப்பிடடான்.
காபி குடிக்கும்போது வேல்சாமி ஒரு கேள்வி கேட்டடான். ‘சாமி! நான் கேக்கிறேனு தப்பா எடுக்காதீங்க. என்னயும்
212

மூலஸ்தானம் L
மாஸ்டரையும் மூலஸ்தானத்தில பூடடி வைச்சிங்களே அதை
யாரும் பார்த்திருந்தா?.”
அந்தக் கேள்வி ஐயரே நினைத்துப் பார்க்காத ஒன்று. “பார்த்தா என்ன?.”
Φ 3笼 “எனக்கென்னவோ பயமா இருக்கு சாமி.
“பயப்படாதே வேல்சாமி! நடக்கிறது நடக்கட்டடும்.”
என்ற ஐயர் புன்னகைத்தார்.
“ஏன் சாமி. சிரிக்கிறீங்க?.”
་་་་་་་་་་་་་ என்ன சாமின்னு கூப்புடுர. ஆனா உன் பேர்லயே சாமி இருக்கு. பார்த்தியா நல்ல பொருத்தம். சாமி.”
வேல்சாமி தன்னை மறந்து சிரித்தான். மீனாடசியும் அதில் கலந்து கொண்டாள்.
ஐயர் அப்போது வேல்சாமிக்கு வாக்குறுதி கொடுப்பது போல் வார்த்தைகளைக் கொடடினார். “வேல்சாமி! நடக்கிறது நடக்கும். நீ தைரியமா இரு. எல்லாம் அவ. பார்த்துக்குவா, புரியிரதா?.”
சாப்பிடட பின்னர் திண்ணையில் இருவரும் உடகார்ந் தார்கள். இரவெல்லாம் சரியாகத் தூங்காததால் ஐயருக்கு தூக்கம் வந்தது. வேல்சாமி தூங்காது உடகார்ந்திருந்தான். தூங்கவில்லை. தூங்குகிற மாதிரியா இருக்கிறது நினைப்பு?.
மாலை நாலு மணிக்கு ஊருக்குள் கலெக்டர் வந்து விடட தாக தகவல் வந்தது. காலையில் வர வேண்டியவர் இப்போ தாவது வந்தாரே! சம்பிரதாயத்துக்காக ஒருநடை போய் ஐயர் கலெக்டரைப் பார்த்துவிடடு வந்தார். வழக்கமான புன்னகை. விசாரிப்பு. சரியான நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். என்ற ஆறுதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, வேடடி, சேலை, பாய், படுக்கை, சடடி, பானை, ரொக்கம் எல்லாம் வழங்கப்படுமென்ற உத்தரவு. பாதிக்கப்பட்டட குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதி உதவி கிடைக்குமாம். செய்திதான். பத்திரிகை யாளர்கள் வருகிறார்களே, எழுத ஏதாவது வேண்டுமே...!
213

Page 109
0 மாத்தளைசோமு
அன்று இரவு ஆகாசவாணி செய்தி முடிந்தபோது முத்துப் பிள்ளை ஐயரைத் தேடி வந்தார். வழக்கமான முகம் அவருக்கு இல்லை. அது காணாமல் போயிருந்தது.
“சாமி! நாளைக்கி ராமசாமி புள்ள வீடடுல ஒரு கூடடம். நீங்க கடடாயம் வரணும். கார்த்தால பத்து மணிக்குக் கூடடம்.”
ஐயருக்கு ஏதோ ஒன்று மடடும் தெரிந்தது. ஆனால் என்ன வென்று புரியவில்லை.
థ
ஏன். புள்ள திடீர் கூட்டம்?.
“கூடடம் உங்களப் பத்திதான். கார்த்தால வாங்க பேசு வோம்.”
முதலில் “கூடடம் நடக்கப் போகின்றது வாங்க..” என்ற அழைப்பு. அப்புறம் காலையில் பேசுவோம். ஐயருக்குப் புரிந் தது. காமாடகியம்மனின் அடுத்த காடசி நடக்கப் போகின்றது.
முத்துப்பிள்ளை போய்விடடார். அவர் வந்தபோது வேல் சாமி அங்கேயே இல்லை. மீனாடசி மட்டும் ஐயரோடு இருந்
தாள.
36
இருடடில் ஒமாந்துர் கிராமமே அடங்கி ஒடுங்கிப் போய்க் கிடந்தது. அதற்கு இருள் மடடுமே காரணமல்ல. நடந்து முடிந்த கலவரமும் காரணமாகும். எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போன பிறகு போலீசார் ஆங்காங்கே காவலுக்கு இருந்தார் கள். மூடிக்கிடந்த அரிசி ஆலை தற்காலிகமாக அவர்களின் தங்குமடமாகியது. எவரின் நடமாட்டமும் ஊரில் இல்லை. காலையில் இருந்து எந்த வாகனமும் ஓடாததால் வீதிகள் ஏங்கிப் போய்க் கிடந்தன. தற்காலிகமாக திருச்சிக்கும் துறையூருக் கும் போகிற பேருந்துகள் வழி மாற்றப்படடன. மனிதர்கள் வீடடுக்குள் முடங்கிப் போனதால் இந்த நாய்களும் மெளனம்
காத்தன.
214

மூலஸ்தானம் L
வேல்சாமி ஐயர் வீடடுத் திண்ணையில் படுக்கையில் உடகார்ந்திருந்தான். அவன் தூங்கவில்லை. தூங்க முடிய வில்லை. தூக்கம் வரவில்லை. அவன் மனதில் சிலந்தி வலையாய் எண்ணங்கள் பின்னிக்கொண்டே இருந்தன. துளசி தற்கொலை, ஊரில் கலவரம், கோணங்கி சாவு, கோவிந்தன் மரணம் எல் லாம் இந்த ஊர் மீது, இந்த உலகத்தின் மீது இந்த வாழ்க்கை மீதே ஒரு வெறுப்பைக் கொடுத்தது அவனுக்கு. கபடமற்ற கோவிந்தன் ஏன் சாக வேண்டும்? அவனுக்கும் இந்தக் கலவரத் திற்குத் என்ன சம்பந்தம்? உதடடைப் பிரிக்கவே பணம் கேடகிற இந்தக் காலத்தில் வயிறு குலுங்க கல் மனதையும் கரைத்து தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்தானே, அவன் எங்கே இப்போது? அந்த சிரிப்பு எங்கே? காதுகளில் இப்போது கேடபதுபோல் இருக்கிற அந்த சிரிப்பு இனிமேல் நிஜமாய் கேடகுமா?. அவன் ஏன் செத்தான்?.
அவன் ஏன் சாக வேண்டும்? சாகிற வயதா அது? நோயா அவனை அள்ளிக் கொண்டு போயிற்று? உருவமே இல்லாத - உருவமே தெரியாத - ஒன்று இருப்பதாக எண்ணி மயங்கி வெறித்து அதிலேயே முடங்கி மதம் பிடித்து அவனை அடித்துக் கொன்று விட்டடார்களே! இனி எப்படி அந்த சிரிப்பைக் கேடக முடியும்? இப்போது நினைத்தாலே கண்ணுக்குள்ளே அவன் உருவமும் காதுக்குள் அவன் சிரிப்பதும் மாறி மாறி வருகின்றன. அவைகள் இப்போ நிஜமாகி விடுமா என்ன?.
அவையெல்லாம் வெறும் நிழல்கள், கழிந்து போன நாளின் நினைவலைகள்.
கோவிந்தன் எழுந்து இனி நடக்கமாடடான். சிரிக்க மாடடான் என்பதெல்லாம் அவனைப் பொறுத்தவரையில் நம்பவே முடியவில்லை.
ஆனால் அவன் இல்லையென்பது இந்த உலகமே அறிந்த
உண்மை.
வேல்சாமியால் தன்னைத்தானே ஆசுவாசம் செய்யமுடிய வில்லை. இரவெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தான்.
21 5

Page 110
D மாத்தளைசோமு
இரவெல்லாம் வேல்சாமி செத்துப்போன கோவிந்தனை நினைத்துக் கொண்டிருப்பான் என்பது வீடடின் உள்ளே படுத் திருந்த ஐயருக்கு மானசீமாகத் தெரிந்தது. வேல்சாமிக்கு ஒரு பேச்சுத்துணை - சிரிப்பைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க, ஒரு உயிர் இனிமேல் இல்லை. இதனை எப்படி அவன் தாங்கிக் கொள்ளப் போகிறானோ தெரியவில்லை.
காலையில் எழுந்ததும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண் டும் என்று எண்ணிக் கொண்டார் ஐயர்.
காலையில் முத்துப்பிள்ளை வரச் சொன்னது அப்போது கூட அவர் நினைவில் வெடடியது.
மீனாடிசி சாப்பிடும் போது ‘ஏன் வரச் சொல்ராளோ? என்று ஒரு கேள்வியைக் கேட்டடு வைத்தாள். அந்தக் கேள்வி அவரைக் கொக்கி போடடு இழுத்தது. ஐயர் சர்வ சாதாரண மாக அதற்கு பதில் சொன்னார்.
என்ன கேக்கப் போறா? என்ன கேடடாலும் என் பதில் ஒண்ணுதான். ரெண்டு உயிரைக் காப்பாத்தத்தான் செஞ்சேன்.
அந்த பதிலில் ஐயர் உறுதியாக இருந்தார்.
காலையில் சாப்பிடடு காபி குடிக்கும்போது வேல்சாமிக்கு ஆறுதல் சொல்லிவிடடு பத்தர்ை மணிக்கு ராமசாமிப்பிள்ளை வீடடிற்குப் போனார். எல்லோரும் அவருக்காகக் காத்திருந் ததைப் போல் உடகார்ந்தார்கள். எல்லோரையும் பார்த்து புன்னகைத்தார் ஐயர். ராமசாமிப் பிள்ளை, தம்பிப் பிள்ளை, நடராஜப் பிள்ளை, திருப்பதியா பிள்ளை, ஆனைக்குடடியாப் பிள்ளை என்று அந்தக் கோயில் தர்மகர்த்தா சபையின் முக்கிய மானவர்கள் வந்திருந்தார்கள். முத்துப்பிள்ளை “வாங்க சாமி! உங்களைத்தான் பார்த்துகிடடிருக்கோம்.” என்றார். மற்றவர் கள் புன்னகையோடு மடடும் பேசினார்கள்.
ஐயருக்கு ஒரு நாற்காலி போடப்பட்டடிருந்தது. அதில் உடகார்ந்தார் அவர். காமாடடசியம்மனின் உருவத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டு தைரியமாக இருந்தார். அந்த தைரியம் நான்
O 216

மூலஸ்தானம் 0
எந்த தவறையும் செய்யவில்லை என்று, சொல்லாமல் சொல்லி யது. ஆனால் ஒன்றை உறுதியாகத் தெரிந்து கொண்டார். கோயில் விவகாரம் பேசத்தான் கூடியிருக்கிறார்கள். இல்லாது போனால் கோயில் தர்மகர்த்தா சபையைச் சேர்ந்தவர்கள் கூடியிருப்பார்களா?
எல்லோரும் மெளனமாக இருந்தார்கள். எவரும் எதுவும் பேசவில்லை. எப்படி தொடங்குவது என்று முத்துப்பிள்ளை யோசித்தார். இது வழக்கமான சந்திப்பு அல்ல. வழக்கமாக திருவிழா, சிவராத்திரி நடத்துவது சம்பந்தமாக ஒரு சந்திப்பு நடக்கும். அப்போதெல்லாம் கலகலவென்று பேசுவார்கள். இன்று அப்படியான சூழ்நிலை இல்லை. இறுக்கமான முகங் கள்தான் அங்கிருந்தன. அந்த முகங்களே அவர்கள் ஏன் வந்திருக் கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியது.
ஐயர் எல்லோருடைய முகத்தையும் எடை போடடுப் பார்த்து விட்டடு அவர்கள் பேசத் தயங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அந்த மெளனத்தை உடைத்தார்.
“என்ன யோசிக்கிறேள். சொல்லுங்கோ.” முத்துப்பிள்ளைக்கு சின்ன அதிர்ச்சி நெஞ்சில். ஐயரை விசாரிக்க அழைத்தோம். ஆனால் இங்கு ஐயர் தைரியமாகப் பேசுகிறார். நாமோ?.
மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் முத்துப்பிள்ளை. “சாமி! உங்க மேல தப்புச் சொல்ரதா நெனைக்காதீங்க. ஆனா ஒரு தப்பு நீங்க தெரிஞ்சே நம்ம கோயில்ல நடந்திருக்கு.”
ஐயர் அவர்கள் வாயால் எல்லாம் வரடடும் என்பதுபோல் மெளனமாக முத்துப்பிள்ளையைப் பார்த்தார்.
முத்துப்பிள்ளை மீண்டும் பேசத் தொடங்கினார். “ஊர்ல கலவரம் நடந்த ராத்திரி ரெண்டு பேரை நம்ம கோயில் மூலஸ் தானத்தில வைச்சு பூடடியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டடோம். கோயிலுக்குள்ளார வைச்சிருந்தா பரவாயில்ல. ஆனா நிச்சயமா கோயிலுக்குள்ளார இல்ல. ஏன்னா கலவரக்காரங்க கோயிலுக்கு
217

Page 111
0 மாத்தளைசோமு
குள்ளார பார்த்திட்டடு உங்கள அடிச்சிடடுப் போயிருக்காங்க. அப்படின்னா மூலஸ்தானத்தில ரெண்டு பேரை வைச்சிருக்கீங்க. ஒண்ணு உங்க கூடவே இருக்கிற வேல்சாமி. மற்றது ஸ்கூல் மாஸ்டர் சிவராஜா. துளசி கொலையில் சம்பந்தப்படடவரு.”
ஒரு குற்றப் பத்திரிகை போல் முத்துப்பிள்ளையின் பேச்சு நீடித்தது.
“உங்களுக்கு தெரியாத வேதம் இல்லை. சாஸ்திரம் இல்லை கோயில் மூலஸ்தானத்தில் அவங்கள வைச்சு பூடடியிருக் கீங்கண்ணு நெனைக்கிறோம். கோயில் மூலஸ்தானத்தில நீங்க மடடும்தான் போகலாம், வரலாம். நீங்க நடத்துர கோயில்னா லும் அதை நாங்க ஏத்துக்கிடடு வர்றோம். அப்படி இருக்கும் போது சிவராஜாவை மூலஸ்தானத்தில வைச்சிருக்கீங்க. வேல் சாமிய வைச்சிருக்கீங்க. சிவராஜா ஸ்கூல் மாஸ்டர். அது எல்லா ருக்கும் தெரியும். அவன் சாதி என்னன்னு உங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். எங்க தாத்தா காலத்தில அவனுக கால டியே கோயில் நெழல்ல கூடப்படாது. இப்ப அதைச் சொல்ல முடியாது. உலகம் மாறிப்போச்சு. ஆனா மூலஸ்தானத்தில அவனுக போகிற மாதிரி உலகம் மாறல்ல சாமி. இது நீங்க தெரிஞ்சே நடந்தது. யாருக்கும் தெரியாதுன்னு நீங்க நெனைச் சிருக்கலாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் கோயிலுக்குள்ளார இருந்து வர்ரதை நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் பார்த்திருக்காரு. அவர் தான் இந்த விசயத்தையே எங்ககிடட சொன்னாரு. அதே நேரத்தில இந்த விசயம் இங்க இருக்கிற எங்களுக்கு மாத்திரம்தான் தெரியும். இது ஊருக்குத் தெரிஞ்சா இன்னொரு கலவரம் வெடிக்கும். இதுக்கு என்ன சொல்றீங்க.”
ஐயர் எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டடார். சில நிமிடங்கள் மெளனம்ாக இருந்தார். அதனைக் கண்டு அங்கிருந் தவர்கள் ஐயரால் பதில் சொல்ல முடியவில்லை போலும் என்று நினைத்தார்கள். ஆனால் ஐயர் பதில் சொல்வதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
218

மூலஸ்தானம் )
மூலஸ்தானத்துக்குள் அவர்களை வைத்திருந்தது நேற்றுத் தான் தெரிய வந்திருக்கின்றது. அப்படியானால் அவர்களை கோயில்ல இருந்து வெளியே வரும்போது பார்த்திருக்கிறார் கள். யார் பார்த்தது? யார் பார்த்தால் என்ன? உண்மை ஒரு நாள் வரத்தான் வேண்டும் வந்து விடடது. இப்போது அது கேள்வியல்ல. இரண்டு உயிரைக் காப்பாற்ற எடுத்த முடிவு சரியா? தப்பா?.
ஐயர் நிமிர்ந்து உடகார்ந்தவாறு சொன்னார். “என்னை பத்தி உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்! எந்தப் பிரச்சனைக் கும் போகமாடடேன். ஒரு காலத்தில் நான் கன்சர்வேடடியா இருந்தேன். மத்தவா தொடடா தீடடுன் னு நெனைச்சேன். ஆனா பகவான் என்ன இந்த வேல்சாமி மூலமா மாத்திட்டடான். என் மகனுக்கு ரத்தம் குடுக்கனும்னு டாக்டர் சொன்னபோது நம்ம ஆளுக பிராமணர் ரத்தம் தேடினேன். கெடைக்கல்ல. அப்பதான் டாக்டர் என் கண்ணை தெறந்தாரு மகன் இருக் கணும்னா யாருக்கிடடவாவது ரத்தம் கேடடு கொண்டு வாங்க. சாதிதான் முக்கியமனா நீங்க நெனைக்கிர மாதிரியே செய்யுங்க. அப்பதான் வேல்சாமி ரத்தம் பொருந்தி ரத்தம் குடுத்தான். இன்னைக்கு நான் பழைய ஐயர் இல்ல. எல்லாத்தோடயும் நல்லா அன்பா பழகுவேன். மனுசாளை மதிக்கிறேன் மனு சாளா..! அதனால் மத்த பிராமணர் என்னை ஒதுக்கிண்டு வர்ரா. நான் அதைப்பத்தி கவலப்படல்ல. இந்த லோகத்தில நாம ஜனிச்சது என் கடமையை செய்ய. மத்தவாளுக்கு பயந் துண்டு வாழ மாடடேன். இதுதான் சுருக்கமா என்ன பத்தி சொல்ரேன். இனி நடந்த விசயத்துக்கு வர்ரேன்.”
ஒரு நாவலுக்கு முன்னுரை கொடுப்பது போல் பேசிவிடடு கொஞ்சம் ஒய்வெடுத்தார் ஐயர். உடகார்ந்திருந்தவர்கள் ஐயர் இனி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்தார்கள்.
ஐயர் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினார். “ஊர்ல கலவரம் வந்திருச்சி. அது பெரிய கலவரமா வந்திடக் கூடா துன்னுதான் கோவிந்தனை புலிவலத்துக்கு அனுப்பி வைச்சேன்.
219 O

Page 112
0 மாத்தளைசோமு
புலிவலம் போன கோவிந்தன் ரைஸ்மில் செடடியாருக்கிடடட கலவரத்தை பத்திச் சொல்லியிருக்கான். செடடியார் புலிவலம் போலிஸ் இன்ஸ்பெக்டருக்கிபடட சொல்லியிருக்காரு. இரு ஒரு பக்கம் நடக்கும் போது மறுபக்கம் இங்க கலவரம் பெரூசா நடந் தது. அன்னைக்கி நான் தூங்கல்ல. அப்பதான் சிவராஜா ஓடி வந்தாரு. ஏன் கால்ல விழுந்து என் உயிரை காப்பாத்துங்கன்னு அழுதான். துளசி கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. அவள காதலிச்சது மடடும்தான் நிஜம். சத்தியமா சொல்ரேனு அழுதான். அவன் குற்றவாளியா இல்லையான்னு தீர்ப்பு சொல்ல நான் ஜடஜ் இல்ல. ஆனா இப்ப அவன் உயிரை காப்பாத் தனும். யோசிச்சு பார்த்துத் தான் இந்த முடிவுக்கு வந்தேன். எனக்கு வேறு வழியே தெரியல்ல. அப்புறம்தான் நான் முடிவு செஞ்சேன். ரெண்டு பேரையும் கூடடிப் போயி நான்தான் மூலஸ்தானத்தில வைச்சுப் பூடடினேன்.
அதுதான் பாதுகாப்பான இடம்னு நான் நம்பினேன். அதை உறுதி செய்யிற மாதிரி கலவரக்கராங்க என் ஆத்துக்கு வந்து என்னை பார்த்தா, கோயிலை திறந்து பார்க்கனும்னு சொன்னா, திறந்து காடடினேன். நல்ல நேரம் மூலஸ்தானத்தை திறந்து பார்க்கல்ல. நான் செஞ்சது சரியான முடிவுதான். ரெண்டு பேரை. ரெண்டு உயிரைக் காப்பாத்திடடேன். இது சரியா தப்பாங்கிறது வேற விஷயம். ஆனா அவா ரெண்டு பேரை காப்பாத்த எனக்கு வேற வழியே தெரியல்ல.”
முத்துப்பிள்ளை ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஐயர் தொடர்ந்து பேச விரும்பியதால் மெளனம் காத்தார்.
“இதை நான் தெரிஞ்சிண்டுதான் செஞ்சேன். இதை மறைக்க நான் விரும்பல்ல. சாவகாசமா உங்களுக்கிடட சொல்லலாம்னு இருந்தேன். என்னைப் பொறுத்த வரைக்கும் ரெண்டு உயிரை காப்பாத்தின திருப்திதான் தெரியுது. வேதம் ஒதுரது மடடும் என் வேலை இல்ல. மனுசாளை காப்பாத்திர தும் என் வேல. அதை நான் செஞ்சேன். இதுக்குமேல் நான்
22O

மூலஸ்தானம் (
ஒண்ணும் சொல்ல விரும்பல்ல. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நான் உடன்படவேண்டியதுதான்.”
காரசாரமான விவாதம் வருமென்று நினைத்திருந்தார்கள் அங்கிருந்தவர்கள். சிலவேளை ஐயர்தான் செய்ததை மறுக்கக் கூடும் என்று கூட எண்ணினார்கள். ஆனால் அவைகளுக்கான அறிகுறியே அங்கிருக்கவில்லை.
ஐயர் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடடார். முத்துப்பிள்ளை என்ன பதில் சொல்வது என்று யோசித்துப் பார்த்தார்.
"தைரியமாகச் சொல்லுங்கோ. எதுவானாலும் சரிதான் சொல்லுங்கோ.”
ஐயர் சர்வ சாதாரணமாகப் பேசினார். அங்கிருந்தவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
முத்துப்பிள்ளை முடிவைச் சொல்வதற்கு யோசித்துக் கொண்டிருந்தார்.
35
“நீ செஞ்சதை நீங்க சரின்னு சொல்லலாம். அது உங்களுக்கு சரியானதாகவும் இருக்கலாம். அதுக்காக ஆயிரம் சமாதானம் நீங்க சொல்லலாம் ஆனா காலம் காலமா கோயில்ல இருக்கிற ஒரு சம்பிரதாயத்தை தெரிஞ்சே நீங்க மீறியிருக்கீங்க. கோயில யாரும் கடடி முடிக்கலாம். அப்படிக் கடடுன கோயிலுக்கு கும்பாபிசேகம் நடந்துபடடா அதுக்குப் பிறகு கடைப் பிடிக்க வேண்டிய சம்பிரதாயம் ஒண்னு இருக்கு. அது உங்களுக்கு நல்லாத் தெரியும். அதை மீறித்தான் நீங்க நடந்துகிடடீங்க. சடங்கு சம்பிரதாயத்தை நடத்தி வைக்கிற நீங்களே அதை மீறினது எங்களால ஏத்துக்க முடியாத ஒண்ணா இருக்கு. நீங்க செஞ்சதை இந்தச் சமூகம் எப்படி ஏத்துக்கும்? இதை பேசி னாலே பெரிய பிரச்சனை வரும். ஏன் இன்னொரு கலவரம்
221

Page 113
0 மாத்தளைசோமு
கூட வெடிக்கலாம்.!” என்ற முத்துப்பிள்ளை ஒரு விநாடி பேச்சை நிறுத்திவிட்டு ஐயரை நேருக்குநேர் பார்த்தார்.
ஐயர் மெளனமாக ஆனால் ஒரு கம்பீரத்துடன் தான் செய்தது சரியானது என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தார். அவரின் அந்தக் கம்பீரம் முத்துப்பிள்ளையைத் தடு மாற வைத்தது. ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு அவர் மற்றவர்களைப் பார்த்துவிடடுப் பேசினார்.
“நாங்க நல்லா யோசிச்சுத்தான் ஒரு முடிவை எடுத்திருக் கோம். இதை விட வேற வழி எங்களுக்கு தெரியல.”
ஒரு விநாடி மீண்டும் மெளனமானார் முத்துப்பிள்ளை. அவர்கள் எடுத்திருக்கும் முடிவை எப்படிச் சொல்வது என்று ஒரு தயக்கம். அவரைப் பின் தள்ளியது.
அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட ஐயர் அவருக்குத் தைரியம் ஊடடுமாப்போல் சொன்னார். “நீங்க எடுத்த முடி வைச் சொல்லுங்கோ பிள்ளைவாள். இதிலே தயங்கிறதுக்கு என்ன இருக்கு?”
முத்துப்பிள்ளையின் பார்வை ஒரு தடவை எல்லோரை யும் தொட்டடுவிடடு ஐயரிடம் கடைசியாக வந்தது.
“நீங்களாகவே கோயிலை விடடு நின்னுக்கிரது ரெண்டு பக்கத்துக்கும் நல்லது. ஆனா உங்களுக்கு சேரவேண்டிய கணக்கு களைச் சடடப்பூர்வமாகவும் மனிதாபிமானத்தோடும் பார்க்க முடிவெடுத்திருக்கோம். இன்னைக்கி புதன்கிழமை. வெள்ளிக் கிழமை காலையில கோயில் சாவிய குடுத்திருங்க. வீடடை வசதிப் படி காலி செய்ங்க.”
கடைசி வார்த்தைகள் முத்துப்பிள்ளையிடம் இருந்து நனைந்தே வந்தன.
எல்லோரும் சேர்ந்தே எடுத்த முடிவுக்கு அவர் என்ன செய்ய முடியும்? இரண்டு உயிரைக் காப்பாற்றத்தான் ஐயர் மூலஸ்தானத்தில் அவர்களை வைத்தார். அது தவிர்க்க முடி யாதது. அதனை அப்படியே விடடு விடலாம் என்று சொல்லி
D 222

மூலஸ்தானம்
வாதாடிப் பார்த்தார். முடியவில்லை. அதனை மீறினால் சமூகத் தையே பகைக்க வேண்டிவரும். இங்கு சமூகம் என்பது தவிர்க்க முடியாதது. சமூகம் சார்ந்த கல்வி, சமூகம் சார்ந்த கோயில் - சமூகம் சார்ந்த அரசியல் எல்லாம் தவிர்க்க முடியாததாகி விடடது. மேலும் இந்தச் சமூகம் என்பதே சாதியின் அடிப்படை யில் இயங்கி வருகின்றது. இதனை மீறுவது என்பது முத்துப் பிள்ளை போன்றவர்களால் முடியாத ஒன்றாகும்.
ஐயர் நாற்காலியை விடடு எழுந்தார். அவர் நெஞ்சுப் பகுதி யில் வியர் வைத் துளிகள் பூத்தன. கால்களில் ஒரு லேசான நடுக்கம். இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் தன் உணர்வுகளைக் காடடிக் கொள்ளாமல் சமாளித்தார்.
நான் வேதம் ஒதுபவன். இதற்கெல்லாம் தைரியத்தை இழக்கக் கூடாது அவர் மனம் சொல்லியது.
“நான் காசோ பொருளோ வாங்கிண்டு இதைச் செய் யல்ல. ரெண்டு உயிரைக் காப்பாத்தனுங்கிர கடமையில செஞ் சேன். காப்பாத்தப்படடது என் உறவினர் அல்ல. மனுசாள். அதுக்காக இதுதான் முடிவுன்னா நான் அதை ஏத்துக்கிரேன்.” என்று ஐயர் உறுதியாகச் சொன்னார்.
அங்கிருந்தவர்கள் எவரும் பேசவில்லை. ஒருத்தரை ஒருத் தர் பார்த்துக் கொண்டார்கள். “வெள்ளிக்கெழமை கார்த்தால வாங்க. கோயில் சாவிய தர்ரேன். ஆத்தை எவ்வளவு சீக்கிரமா காலி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமா காலி பண்ரேன். எல்லாருக்கும் நமஸ்காரம். காமாடகி அருள் பாலிக்கடடும்.”
ஐயர் கம்பீரமாக நடந்து வெளியே போனார். அவர் முகத் தில் எல்லாவற்றையும் மீறிய ஒளி என்றும் இல்லாதவாறு பிரகா சித்தது. எல்லோரும் என்ன நினைத்தார்களோ எழுந்து நின்று விடை கொடுக்குமாப் போல் கைகுவித்தார்கள்.
ஐயர் வீடடுக்குப் போனபோது மணி பன்னிரண்டாகி விட்டடது. மீனாடசி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
223

Page 114
0 மாத்தளைசோமு
வேல்சாமி திண்ணையில் காத்துக் கிடந்தான். வீடடுக்குள்ளே போய் நாற்காலியில் உடகார்ந்த ஐயர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார். வேல்சாமியும் வீடடுக் குள்ளே இருந்தான். திண்னையில் இருந்த அவனைக் கண்ணால் சாடை காடடி உள்ளே வரச் சொன்னதே அவர்தான்.
மீனாடசி ஐயரின் முகத்தையே பார்த்தாள். அவள் முகத் தில் கேள்விகள் இருந்தன.
ஐயர் மெதுவாக நடந்ததை விபரித்துக் கோயிலை விடடுப் போகச் சொல்லி விடடார்கள் என்றதுமே மீனாடசி கலங்கிப் போனாள். வேல்சாமி அழுது விடடான். ஆனால் அவர்களை ஐயர் தைரியப்படுத்தினார்.
“இப்ப என்ன ஆயிடுத்து? கலங்குரே! வேற கோயிலுக்குப் போய்ச் சேவகம் செய்யப் போரேன். அவ்வளவுதான். இது புரியாம அழக்கூடாது மீனு.”
மிக நெருக்கமான நேரத்தில் ஐயர் சொல்கின்ற வார்த்தை அது. மீனாடசி சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஐயரைப் பார்த்தாள்.
“மூலஸ்தானத்தில அவாள் ரெண்டு பேரை எப்படி ஒளிச்சி வைக்க முடியும் ணு கேடடடா. ம்னு சாளை காப்பாத்தினது தப்பா? இந்தத் காத்து ஆகாசம், பூமி, ஜலம், நெருப்பு, வேதம், புராணம் எல்லாம் மனுசாளுக்காகத்தான். ஒரு மனுசாள் இன் னொரு மனுசாளால் சாகப் போறதை பார்த்திண்டு இருக்கச் சொல்லி எந்த வேதமும் சொல்லல்ல. நான் அவாளை மூலஸ் தானத்தில வைச்சிக் காப்பாத்தினது தப்புன்னா தப்பாவே இருக் கட்டடும். அதுக்காக நான் கவலைப்படல்ல. இதுநாள் வரைக் கும் காமாடகி அம்மனுக்கு சேவகம் செஞ்சேன். இனிமே ஒரு முருகனோ, சிவனோ, மாரியம்மனோ, பிள்ளையாரோ கிடைக்
99 காமலா போகும்?.
ஐயரின் வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. அவர் அடுத்த பயணத்திற்கு தயாராகி விடடார்.
224

மூலஸ்தானம்
மீனாடசிக்கு எதிர்காலம் இருபடடியது போன்ற உணர்வு. இந்தக் கோயிலை விடடு இந்த ஊரை விடடு எங்கே போவது? பழகிப்போன பாதைகள். தெரிந்த முகங்கள். வேர் ஊன்றிய தைரியம். இவற்றையெல்லாம் உதறிவிடடு எங்கே போவது?.
“இத்தனை வருசமா இந்த ஊர்ல இந்த வீடடுல இருந்: தோம். இனி எங்கே போவது?
மீனாடசி கலங்கிய குரலில் தன் வேதனையை விரித்து வைத் தாள். ஐயர் நிலையாமை ஒன்றே நிலையானது என்பதைப் புரிந்தவர்போல புன்னகைத்து விடடு பதில் கொடுத்தார்.
“மீனாட்டசி படிச்ச நீயே இப்படிப் பேசினா மத்தவா என்ன பேசுவா? இந்த ஊரும் இந்த கோயிலும் நமக்கு எழுதியா இருக்கு? சேவகம் செய்ய வந்தோம். செஞ்சோம். இப்ப வேணாம் னுபடடா. வேற கோயில பார்ப்போம். வேதம் சொல்ல எந்த ஊருன்னா என்னா? நாம தைரியமா போனா தான் அவாளை காப்பாத்தினது சரின் னு லோகம் சொல்லும். நீ எதுக்கும் கவ லைப் படாதே? வேற கோயில் சேவகம் கெடைக்கிற வரைக்கும் திருவாணைக்கா அக்கிரஹாரத்தில என் தம்பி ஆத்துல இருக்க லாம். அவன்தான் டில்லியில இருக்கானே! அந்த ஆத்து சாவி கூட என்கிடட இருக்கு..” என்ற ஐயர் திடீரென்று மெளனமாகி பிறகு எதையோ கண்டுபிடித்தவர் போல் சொன்னார்.
“மீனு! நம்மள காமாடகி கைவிடலடி. இந்தக் கோயில்ல யும் காமா படசி. திருவாணைக்காவிலயும் அகிலாண்டேஸ்வரி. அவளும் காமாடிசிதான். பொருத்தத்தப் பார்த்தியா?.”
“இத்தனைப் பிரச்சனைக்கு மத்தியில் எப்படி ஒப்பீடு செய்ய முடிகிறது இவரால்?. மீனாடசிக்கு அவரின் வார்த்தை கள் நம்பிக்கையைக் கொடுத்தன. இருப்பதற்கு வீடு இருக்கிறது. தொழில் அவரைத் தேடிவரும். அதற்கு மேல் அவள் எதுவும் பேச வில்லை. அவரைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். தைரி யம் தான் அவரின் ஆயுதம். தைரியம் ஒன்றே வாழ்க்கையின் முன்னிடு என்பது அவரின் வேதம். தாலி கட்டடிய பொழுதில் இருந்தே அவர் நிழல்தானே அவளுக்கு வீடு.
225

Page 115
0 மாத்தளைசோமு
ஐயர் வேல்சாமியைப் பார்த்தார். அந்தப் பார்வை அவன் அடக்கி வைத்திருந்த உணர்வைக் கொடட வைத்தது. அழு தான் அவன்.
“என்னாலதான் இந்தப் பிரச்சனை. எங்கள எங்கயாவது ஒடி ஒளிஞ்சிக்க சொல்லியிருந்தா நாங்க ஓடியிருப்போம்.
கோயில்ல வைச்சீங்க. எங்க உசுரைக் காப்பாத்தினிங்க.
s
ஆனா.
ஐயர் வேல்சாமியருகே போய் அவனைப் பார்த்தவாறு பேசினார்.
“வேல்சாமி! நான் நல்லதைத்தான் செஞ்சேன். உங்க ரெண்டு பேரையும் மூலஸ்தானத்தில அன்னைக்கி வைக்க லேன்னா இப்ப உசுரோட இருக்க மாடடேள்! அவனுக வெறி யோட கோயிலுக்குள்ள தேடினது எனக்குத்தான் தெரியும். நான் செஞ்சது சரியானது. அதிலே தப்பே இல்ல. நான் தைரிய மாத்தான் இருக்கேன். நீங்கள்ளாம் எனக்கு உதவியா இருந்தா போதும்.”
வேல்சாமி கலங்கிய கண்களைத் துடைத்து விடடுச் சொன் னான். “சாமி! பெரிய வார்த்தையெலாம் பேசாதீங்க. நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் செய்ரேன். நீங்க எங்க இருக்கிறீங்களோ அங்க நான் இருப்பேன்.”
மீனாடசி அப்போதுதான் சொன்னாள். “நீங்க கவலைப் படக் கூடாதுங்கிரதுதான் என் ஆசை! நீங்க எங்க கூப்பிடடா லும் நான் வர்ரேன். நீங்க இருக்கிற இடம்தான் எனக்குக் கோயில்.” ஐயர் அவர்கள் இருவரும் அறியாதவாறு கண் களைத் துடைத்துக் கொண்டார். அவர் வெளியே தைரிய மாகப் பேசினாலும் உள் மனதில் பல கேள்விகள் எழுந்து நின்று கொண்டே இருந்தன. சாவியைக் கொடுத்துவிடடால் இனி இந்தக் கோயிலுக்கு ஒரு பக்தனாய் வந்து போகலாம்.
வெள்ளிக்கிழமை காலை. வழக்கம்போல் பூந்தோட்டடக்
கிணற்றில் குளித்தார் ஐயர். கோயிலில் காலை பூசைக்கான
226

மூலஸ்தானம்
வேலைகளைச் செய்தார். ஒவ்வொன்றையும் செய்யும் போது இன்றுதானே இது கடைசி. இன்றோடு இதனைப் பிரிய வேண் டியதுதான். என்று நினைத்துக் கொண்டார். பூந்தோடடத்தில் நடந்து பூசைக்கான பூக்களைக் கொய்த போது கண் கலங்கினார் ஐயர். முதன் முதலில் கால் வைத்தபோது காடாய் மேடாய் கிடந்த இடம். வேல்சாமி பாதம் இந்த மண்ணில பதிந்த பிறகு தான் இது பூந்தோடடமாக மாறியது. எத்தனை பொழுது வெய்யிலில் காய்ந்து கிணற்றிலிருந்து தண்ணிர் பாய்ச்சி உருவாக் கினான் அவன். நல்ல பூஞ்செடிகளுக்காக மதுரை, திருச்சி, சேலம் போய் வந்திருக்கின்றான். இங்கு மலர்களால் பூத்துக் குலுங்கும் செடிகள் யாவும் வேல்சாமியின் கரம்படடவை. பூமாலை கடட மல்லிகை செடிகள், துளசி, ரோசாப்பூ கன காம்பரம். கிணற்றோரமாகக் கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டி, முருங்கை, அவரை. ஆங்காங்கே வாழை மரங்கள்,
கொய்யா மரங்கள்.
வேல்சாமி தோட்டடத்தைப் பார்த்து அழுதான் “எம்புடடு கஷ்டப்படடு இந்த பூந்தோடடத்தை செஞ்சோம். இனிமே.”
அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை. ஐயர் ஒரு முடி வுக்கு வந்தார். வேல்சாமியை இப்படியே விடடால் அவ்வப் போது எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுவான். யோசித்தார். பிறகு சொன்னார்.
“வேல்சாமி! இந்த தேகத்தை விடடு ஆத்மாவே ஒருநாள் போகப் போவுது. நீ என்னமோ தோடடம் போறதைப் பத்தி பேசுர. விடு கவலய.”
அன்று இரவு படுக்கையில் கிடந்த ஐயரால் தூங்க முடிய வில்லை. காலையில் கோயில் பொருடகளின் படடியலை ஒப்பு வித்து பொருடகளைக் காண்பித்து முத்துப்பிள்ளையிடம் கையெழுத்து வாங்கினார். எல்லாம் சரியாக இருந்தது. மீனாடடசி மூலஸ்தானத்திற்கு முன்னே சாவியைக் கொடுத்தார் ஐயர்.
227

Page 116
0 மாத்தளைசோமு
இனி கோயிலோடு தொடர்பில்லை. ஒரு பக்தனாய் போய் வரலாம்.
ஐயரின் மூடிய கண்களில் கோயிலே திரும்பத் திரும்ப வந்தது. தூக்கம் வரவேயில்லை.
மீனாடசியும் தூங்கவே இல்லை. வெளியே திண்ணையில் படுத்திருந்த வேல்சாமியும் தூங்கவில்லை. இவர்கள் இப்படி தூங்கவில்லையொன்றால் அமெரிக்காவில் இருக்கும் ராமும் தூங்கவே இல்லை. காலையில் தான் அப்பாவுக்குக் கடிதம் எழுதினான்.
கடிதத்தில் கரோலினை அறிமுகம் செய்து அவள் சேலை கட்டடுவதை, மஞ்சள் பூசுவதை, பொடடு வைப்பதை சைவ மாக மாறிவிடடதைக் கதை கதையாகச் சொல்லிக் கடைசியில் அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் அதற்கு ஆசிர் வாதம் கேட்டடும் எழுதியிருந்தான் அவன்.?
அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டடு அப்பாவும் அம்மாவும் என்ன சொல்வார்களோ என்ற பயம் அவனைத் தூங்கவிடவே இல்லை.
அவர்கள் தூங்காததால் இந்த உலகம் மடடும் விழித்துக் கொண்டிருக்குமா என்ன?
- முடிந்தது -
228


Page 117
‘தெய்வங்கள் இடங்கள் என்று ஆ மாத்தனை சோமு அ செல்ல அஞ்சாமல் ஆணித்தரமாகப் பை
தமிழ்நாட்டில் சா வைத்துக் கொண்டு கத்தி முனையில் கோடாமல் அணுகு பயிற்சி மாத்தள்ை மாகச் செய்து மும்
அவரை எவ்வளவு பா
இந்நாவலில் வரு வரையும் நம்மால்த சந்திக்க முடியுமென்ட
மாத்தளை சோமு. நாவல் ஒரு சிறப்பான
தமிழ்நாட்டின் கி வாழ்க்கை கோயில் கள் முதலியவற்றை துக் காட்டும் இந்நாள் போக்கையும், அங்கு மகன் ராம்மின் அது
சிந்தன்ைகளையும் சு
 
 

கூடச் செல்ல அஞ்சும் நங்கிலத்தில் சொல்வார்கள். த்தகைய இடங்களுக்குச் தம் கருத்துச் சுதந்திரத்தை றசாற்றியுள்ளார்.
திப் பிரச்னையை மையமாக நாவல் எழுதுவது என்பது நடப்பது d:rrmToJ. ஒருபாற் பதென்பது மிகக் கடினமான சோமு இதை வெற்றிகர டித்திருக்கிறார் என்பதற்கு ராட்டினாலும் தகும்.
நம் கதாபாத்திரங்கள் அனை மிழ் நாட்டுக் கிராமங்களில்
தேகதையின் வெற்றி
இந்திரா பார்த்தசாரதி
எழுதியுள்ள மூலஸ்தானம்'
TL LL.
ராமசமுதாயம் மக்களின்
திருவிழாக் காலச் சிறப்பு உரிய முறையில் படம் பிடித் வல்,அமெரிக்க வாழ்க்கைப் தவசிக்க நேர்ந்துள்ள ஐயர் துபவங்களையும் புதுமைச் வாரசியமாக விவரிக்கிறது.