கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆட்சி இயல்

Page 1


Page 2

- Զեւ՛ ն) இயல்
ச. ஹன்டி-பேரின்பநாயகம்
சு ன் னு கம்: வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
பதிப்புரிமை 1

Page 3
முதற்பதிப்பு - 1962
சுன்னகம் : திருமகள் அழுத்தகம்
(உரிமை வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகத்தார்க்குரியது)

முன்னுரை
தம் தாய்மொழியிலேதான் பிள்ளைகள் யாவற்றையுங் கற்றல் வேண்டுமென்றும், தாய்மொழிமூலம் கல்வி பயிலல் என்னும் பிரச்சினேயில், மேல்வகுப்பு கீழ்வகுப்பு என்னும் வேற்றுமைக் கிடமில்லையென்றும் பல்லாண்டாய் ஆர்வத்துடனும், போதிய தருக்கநூற் சான்றுகளுடனும் நான் வாதாடிவந்திருப்பது பல ருக்குத் தெரியக்கூடும். இக்கருத்தை நாம் எடுத்துக் கூறும்பொழு தெல்லாம் இதை எதிர்ப்போர் இரண்டு நியாயங்களை எடுத்துக்
கூறுவர் :
(1) ஆங்கிலம் உலகமொழி. ஆகையால், எம் பிள்ளைகள் ஆங்கிலத்தைக் கல்வி மொழியாய்க் கொள்வதே எம் முன் னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படும்.
(2) கீழ்வகுப்புக்களில் தாய்மொழிக் கல்வி சாத்தியப்படு மென்ருலும் மேல் வகுப்புக்களுக்கு, சிறப்பாய்ப் பல்கலைக்கழகப் படிப்பிற்கு, தமிழிலும் சிங்களத்திலும் வேண்டிய நுண்மை வாய்ந்த சொற்களும் நூல்களும் இல்லை.
இவற்றுள் முதலாவது கூற்றிற்கு மறுமொழி கூறுவதிற் பய னில்லை. ஆட்சிப்பீடம் தாய்மொழி மூலமே பல்கலைக்கழக வகுப்பு உட்பட எல்லா வகுப்புக்களிலும் பாடங்கள் பயிற்றப்படல் வேண்டும் என்று முடிவுசெய்தவுடன் இரண்டாவது எதிர்ப்புக்கு மறுமொழி சிறிது சிறிதாய்த் தோன்றிவருகிறது. ஆட்சிப்பீடத்தின் நடவடிக்கையின் பெறுபேருகப் புது நூல்களும் புதுச் சொற்களும் தேவைப்படுகின்றன. தேவை தோன்றத் தேவையைத் தீர்ப்பதற் குரிய வழியும் தோன்றும். ஆட்சிப்பீடத்தார் வெவ்வேறு பாடங் களுக்கு வேண்டிய சொற்களைப் பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்த்தும் சிங்களத்திலும் தமிழிலும் புதிதாய்ச் சொற்களை ஆக்கியும் வருகின்றனர். அரச கருமமொழித் திணைக்களம் (Department of Official Languages) 3.5(LDTyf56tfisyli (5 gal நூல்களை வெளியிட்டுமிருக்கின்றது. தனியாட்களும் நூல்கள் எழுதிவருகின்றனர். இந்நூலும் மேற்கூறிய இரண்டாம் எதிர்ப் புக்கு மறுமொழிகூறும்முகத்தால் உருவெடுத்தது.
இந்நூலை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது பலதடைகள் ஏற் பட்டன. ஓரளவிற்கு அவற்றைச் சமாளிக்க முடிந்தது. ஆணுல் சமாளிப்பதற்கு மிகவும் அரிதான ஓர் இடர்ப்பாடும் தோன்றிற்று.

Page 4
iv
தாய்மொழியின் இன்றியமையாமையைப்பற்றியும் படிப்போருக்குத் தாய்மொழிக் கல்விமூலம் வரும் நலன்களைப்பற்றியும், பல்கலைக் கழகக்கல்வி தாய்மொழிமூலம் பயிற்றப்படுவதால் மொழிக்கேவரும் செல்வாக்கையும் சிறப்பையும் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதுவதும் பேசுவதும் எளிது. ஆணுல், இச் சீரிய கொள்கைகளைச் செயற் படுத்தி மேல்வகுப்புக்களுக்கு உரிய பாடநூல்களை எழுதி முடிப் பது அரிதிலும் அரிது, என்பதைச் செயலிற் கண்டுவிட்டேன்.
இந்நூல் பல்கலைக் கழகப் புகுமுக(University Entrance) வகுப்பு மாணவரின் தேவையைக் கருத்திற்கொண்டே எழுதப்பட்டது. இவ் வகுப்பின் பாடவிதானத்தை(Syllabus)ஆராய்ந்து அதை ஒட்டியே இந்நூலை எழுதினேன். பல்லாண்டுகளாய் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிலும், கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் இதேபாடத்தை இதே வகுப்பிற்குக் கற்பித்த பயிற்சியும் எனக் குண்டு. இப்பாடத்துடன் தொடர்புள்ள பிரித்தானிய அரசமைப்பு (British Constitution) என்ற பாடத்தை யாழ்ப்பாணக் கல்லூரியிற் படிப்பித்துள்ளேன். ஆட்சியியல் தொடர்புள்ள நூற்றுக்கணக்கான நூல்களையும் படித்திருக்கிறேன். ஆகையால், இதுபோன்ற ஒரு நூல் எழுதுவதற்கு எனக்குப் பலவகையிலும் அறிவும் ஆற்றலும் உண்டென்று கொண்டேன். ஆணுல், எழுதும் தொழிலில் ஈடுபட்ட பொழுதுதான் ஒருமொழியிற் கற்றவற்றையும் கற்பித்தவற்றையும் பிறிதொரு மொழியில் மாணவருக்கு விளங்கக்கூடிய முறையில் எழுதிமுடித்தல் எவ்வளவு கஷ்டமான ஒன்று, என்று அறிந்தேன். மாணவருக்கு விளங்கக்கூடிய முறையிலே எழுத என்னுல் இயன்ற மட்டும் முயன்றிருக்கிறேன். அவர்களுக்கு விளங்கக்கூடிய சொற் களே எடுத்து ஆண்டிருக்கிறேன். குறித்த தேவைக்கு உரிய சொல் பொதுவழக்கில் இல்லாதபோதுதான் அகராதிகளையும் அரச கருமமொழித் திணைக்களம் வெளியிட்ட கலைச்சொற்ருெகுதி போன்றவற்றையும் ஆராய்ந்து சொற்களைத் தேடியிருக்கிறேன். பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு மாணவரையே கருத்திற்கொண்டு எழுதியபோதிலும் இந்நூல் வேறு பேருக்கும் பயன்தரக் கூடு மென்று நம்புகிறேன். பொதுவாய் ஆட்சியியலைப்பற்றி அறிய விரும்புவோருக்கும் இந்நூல் உதவக்கூடும் என்பது என் கருத்து. என் கருத்து என்னவாய் இருந்தபோதிலும் நூலைப் படிப் போர் எங்ங்னம் இதை வரவேற்கப்போகிருர், என்பதிலிருந்தே என் முயற்சியின் வெற்றி தோல்வியைத் தீர்க்கலாம்.
மனிதரின் செயலுக்கும் சிந்தனைக்கும் உரிய யாவற்றையும் பற்றிக் கருத்து வேற்றுமை இருத்தல் இயல்பே. காய்தல் உவத்தல் சிறிதுமில்லாத நடுவுநிலைமையை உலகிற் காண்ட்ல் அரிது. சிறப்பாய் இன்றைய ஆட்சியுலகில் முதலாண்மைக்

W
(Capitalism) கொள்கைக்கும் சமூகநோக்குக் (Socialism) கொள் கைக்கும் பெரும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. இன்றைய மக்கள் இப் போராட்டத்திற் கருத்திலோ செயலிலோ நடுவுநிலைமையை முற்ருய்க் கடைப்பிடிப்பது அரிதிலும் அரிது. ஆகையால், இந்நூலில் நான் சிறிதும் விருப்பு வெறுப்பு அற்ற நடுவுநிலைமையைக் கடைப்பிடித்திருக்கிறேன் என்று சொல் வதற்கில்லை. ஒன்றிற்கொன்று முரணுன கொள்கைகளை ஆராயும் போது கூடியமட்டும் ஒவ்வொரு கொள்கையையும் நியாயமான முறையில் எடுத்துக் கூறியிருக்கிறேன். வேண்டியபொழுதெல் லாம் என் முடிபு என்னவென்பதையும் தெரியக் கொடுத்திருக் கிறேன். நூலைப் படிக்கும் பிள்ளைகளும் படிப்பிக்கும் ஆசிரியர்களும் நான் கூறியதை ஏற்கவேண்டுமென்பதில்லை.
இந்நூல் இலங்கைப் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு மாணவ ரின் தேவையைக் கருதி எழுதப்பட்டபோதும் இது ஒன்றையே படித்துவிட்டால் தேர்விலே சித்திபெற்றுவிடலாம் என்று எண் ணுவதற்கில்லை. கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் தனியே ஒரே நூலில் தமக்கு வேண்டிய யாவற்றையும் பெற்றுக்கொள்ளல் முடியாது. ஆனல், தமிழில் இத்துறையில் மேல்வகுப்பு மாண வருக்கு உதவக்கூடிய நூல்களைக் காண்டல் அரிது. ஆகையால், இந்த வகுப்பு மாணவருக்கு வேண்டியவற்றை என்னுல் முடிந்த மட்டும் இந்நூலிலே தர முயன்றிருக்கிறேன். ஆங்கிலத்தில் நூற் றுக்கணக்கான நூல்கள் இருந்தபோதும் மாணவருக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லாதபடியால் அவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டாது. ஆகையால், இந்நூலைப் பயன் படுத்தும் ஆசிரியர் தாமே ஆங்கில மொழியிலிருக்கும் நூல்களைப் படித்து இந்நூலிலே உள்ள குறைபாடுகளை நிவிர்த்திசெய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அரச கருமமொழித் திணைக்களத்தினர் வெளியிட்ட சொற்களை நான் இந்நூலிற் கையாண்டிருக்கிறபோதும் அவற்றில் இரண் டொன்றைப்பற்றி எனக்குச் சிறிது ஐயமுண்டு. Civics என்ற சொல் குடிமையியல் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. இம் மொழிபெயர்ப்பில், குறித்த நிலத்திற்குரிய வழக்கை ஒதுக்கிவைப் பது முறைபோலத் தோன்றவில்லை. Civics என்ற சொல்லிற்குக் குடியியல் என்ற தொடர் சில ஆண்டாய் வழக்கிலிருந்து வந்திருக் கின்றது. மேலும் குடிமை என்ற சொல் வண்ணுர் அம்பட்டரைக் குறிக்கும் பொருளில் யாழ்ப்பாணத்தில் ஆளப்பட்டு வருகிறது. (* அடிமை குடிமை' என்ற தொடரை நோக்குக.)Veto என்ற சொல் லிற்கு வீட்டு என்னும் மொழிபெயர்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறப்புமுறை யாதென்று கூறுவதற்கில்லை. ஆங்கிலச்

Page 5
vi
சொல்லின் தமிழ் எழுத்துக் கூட்டு (Transliteration) என்ருல் வீற்ருே அல்லது வீட்டோ என்றிருக்க வேண்டும். இவற்றை எடுத் துக் காட்டுவதினுல் இச் சொற்ருெகுதி பிழை மலிந்ததென்ருே பயனற்றதென்ருே கூறுவதாகாது. பெரும்பாலும் இதிற்காணும் சொற்கள் மிகப் பொருத்தம் உள்ளன ; தமிழில் நூல் இயற்று வோருக்குக் கட்டாயம் தேவையானவை. ஆகையினுலேதான் எனக்குக் குறை எனத் தோன்றியவற்றைக் கூறியுள்ளேன்.
இதுபோன்ற நூல்களை எழுதும் யாராவது தம் தனியாற் றலையோ விவேகத்தையோ மாத்திரம் பயன்படுத்திக் கொள்வ தில்லை. இத்துறையில் முன் வெளிவந்திருக்கும் நூல்களேப் படித்து அவற்றின் கருத்தை அலசி ஆராய்ந்து கொள்ளவேண் டியவற்றைக் கொண்டும், தள்ளவேண்டியவற்றைத் தள்ளியுமே இவ்வகை நூல்களை எழுதலாம். இதேமுறையைத்தான் நானும் ஆண்டுள்ளேன். பெரும்பாலும் உரிய இடங்களில் நான் உபயோ கித்திருக்கும் நூல்களையும் அவற்றின் ஆக்கியோர்களையும் குறிப் பிட்டிருக்கிறேன். பல நூல்களைப் படிக்கும் ஒருவர் என்னென்ன கருத்துக்களை என்னென்ன நூலில் தான் கண்டாரென்று எப் போதும் திட்டமாய்ச் சொல்ல முடியாதிருத்தல் கூடும் ஆகையால் எங்காவது. யாருடைய கருத்தையேனும் அவர் பெயரைக் கூருது ஆண்டிருப்பேனுகில் மேற்கூறிய நியாயத்தின்லேதான் இப்படி நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
ஆட்சியியலுக்குரிய கொள்கைகளோ, செயல்களோ நிலையாய் நிற்பதில்லை. நாளுக்குநாள் புதுப் புதுக் கொள்கைகளும் செயல் முறைகளும் இத்துறையில் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய மாய் இன்றைய உலகில் ஆட்சிச் சித்தாந்தத்தைப்பற்றியும் செயல்முறைகளைப்பற்றியும் ஆராய்ச்சியும் விவாதமும் எங்கும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகையால் இத்துறையில் வெளி வரும் எந்த நூலர்வது முடிவான உண்மையைக் கூறியுள்ள
தென்று கொள்ளல் முடியாது.
இந்நூல் எழுதப்பட்டு அச்சாகிக்கொண்டிருக்கும்போதே சில புரட்சிகளும் மாற்றங்களும் நடந்துவிட்டன. இதன் விளக் கத்தை இந்நூலின் அநுபந்தத்திற் பார்க்கலாம்.
உலக ஆட்சியியலில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நாளுக்குநாள் நடக்கின்றன என்பது மறுக்கொணு உண்மை. ஆகையால் ஆட்சியியலைக் கற்கும் மாணவரும் கற்பிக்கும் ஆசிரி யரும் எந்த நூலிலாவது உறுதியான உண்மையைக் கண்டு விடலாம் என்று எதிர்பார்க்கக்கூடாது. செய்தித்தாள்களில் வெளி வருவனவற்றைப் படிப்பதுடன் ஆராய்ச்சி வெளியீடுகளில் வெளி

vii
வரும் கட்டுரைகளையும் படித்தல் வேண்டும். தமிழில் இத்தகைய வெளியீடுகள் இதுவரையில் இல்லையென்றே சொல்லல் வேண்டும். ஆகையால் ஆங்கிலத்தில் வரும் வெளியீடுகளைத் தவருது படித் தால்தான் நாளுக்குநாள் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி அறிய முடியும். இக் கட்டுரைகளை விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய ஆங்கில அறிவு மாணவருக்கு இருத்தல் அரிது. ஆகையால் ஆசிரியரே இக்குறையைத் தீர்த்தல்வேண்டும்.
பின்வரும் வெளியீடுகள் இதற்குப் பெரிதும் உதவக்கூடு
மென்பது ஆக்கியோனின் கருத்து :
(1) New Statesman (London)
(2) The Economist (London)
(3) Encounter (London)
(4) Round Table (London)
(5) The Political Quarterly (London)
(6) Time (U. S. A.)
இந்நூலை எழுதும்போதும், ஆய்வோலே திருத்தும்போதும்
எனக்கு வேண்டிய உதவிபுரிந்த எனது மூத்தமகன் சித்தார்த்தன் பேரின்பநாயகத்திற்கும் நான் நினைத்து நினைத்துச் செய்த திருத் தங்கள், மாற்றங்கள் யாவற்றையும் முறுமுறுப்பின்றி ஏற்றுச் சேர்த்த திருமகள் அழுத்தக முகாமைக்காரருக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பது என் கடன்.
ச. ஹன்டி-பேரின்பநாயகம் மானிப்பாய்
5-5-62

Page 6
5.
பொருளடக்கம்
suso.mu
முதலாம் பாகம்
தோற்றம்
நோக்கம்
குடியாட்சி வரலாறும் அடிப்படையும்
அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும்
(Fundamental Concepts and Functions of
Government)
ஆட்சிமுறை
அரசமைப்பு
புதிய ஆட்சிக் கொள்கைகள்
இரண்டாம் பாகம்
இலங்கை ஆட்சி இயல் வரலாறு
இலங்கை ஆட்சி முறை
arl Llf uppoi) (Law-making) . . . O. O. sician sub (The Executive)
fỂ Bu filum 6p6oTub (Administration of Justice ) மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் (Central Government and Local Government) 2,1943 up) 31 836i (Political Parties) கட்சி முறையாட்சி இலங்கைக்கு வேண்டுமோ? இலங்கைக்கு உகந்ததோ ?
பக்கம்
19
23
57
73
8 I
88
O5
155
173
181
195
2OO
2 3
227

3.
ix
மூன்ரும் பாகம்
பிரித்தானிய அரசமைப்பு அரசமைப்பின் அம்சங்கள்
(Elements of the Constitution) of Lig5 60p (Legislature) LD6it GOTi (The Monarch)
அமைச்சும் அமைச்சரவையும்
(Ministry and Cabinet) LDTL as air (Conventions)
afil 9, 3 (Rule of Law) மன்னர் தவறு செய்தல் முடியாது
நான்காம் பாகம்
பேரரசுகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆணிலப்பதம் பொதுநலவாய தேயங்களின் தொடர்புமுறை ஒரே உலகம்
அநுபந்தம்
245
25O
259
272
276
284
288
296
305
319
330
336
363

Page 7

ஆட்சி இயல்
அதிகாரம் 1 தோற்றம்
LDனிதன் யாருக்காவது அடங்கிவாழ விரும்புவதில்லை ; தான் நினைத்ததைச் செய்வதற்கே விரும்புகிறன். மனித குலம் தோன்றிய காலந் தொடங்கி இவ் வியற்கை இருந்திருக்க வேண்டுமென நம்புவதற்கிடமுண்டு. மனிதனுக்கு மாத்திர மன்றி உயிருள்ள யாவற்றிற்கும் இவ் வியற்கை இருப்பதை நாம் அறிவோம். ஆனல், ஒவ்வொருவரும் தாம் நிர்னத்தபடி நடக்கமுடியாதென்பதை மனிதகுலங் தோன்றிச் சிறிது காலத் திற்கு கண்டுபிடித்திருக்க வேண்டும். 1ான் விரும்பிய யாவற்றையுஞ் செய்ய முயலும்போது மற்றவர்களுடனும் உலகிலுள்ள மற்றப் பொருள்களுடனும் மோதவேண்டி நேரிடும். இயற்கையே யாவரும் தாம் விரும்பிய யாவற்றையுஞ் செய்ய இடங்கொடாது.
மழை, வெயில், பனி, புயல், மலே, ஆறுகள் முதலியனவே ாேம் வாழ்க்கையைப் பெரிதுங் கட்டுப்படுத்துகின்றன. மற்றும் உயிரினங்களும் இப் பூமியிலிருக்கின்றபடியால் அவையும் மனிதகுலம் தான் விரும்பியபடி வாழ்வதற்குத் தடையா யிருக்கின்றன.
உலகில் வேறு மனிதர்களும் இருக்கிறர்கள் ; பல உயிர் களும் இருக்கின்றன. மலே, ஆறு, கடல் போன்ற இயற்கைப் பொருள்களும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனி மனிதனுடைய சுயாதீனத்திற்கு வரம்பு கட்டுகின்றன. பினரி, முப்புப் போன்றனவும் மன்ரித சுதந்திரத்திற்கு இடையூறு விளேக்கின்றன. ஆகையால் நாம் சுதந்திரம், சுயாதீனம் என்று எண்ணும்போதும், சொல்லும்போதும் காம் எதிர்பார்ப்பது பரிபூரண சுயாதீனமாயிராது. எப்பொதும் எமக்குக் கிடைப்

Page 8
2 ஆட்சி இயல்
பது அரைகுறைச் சுதந்திரந்தான். இயற்கையால் வரும் கட்டுப்பாடுகளேயும், மற்றும் உயிர்களால் வரும் தடைகளேயும் ஒருபுறம் ஒதுக்கி வைத்தாலும் மனிதரே ஒரே நலனையோ வெவ்வேறு நலன்களையோ தேடி முயலும்போது ஒருவருக் கொருவர் இடையூறு விளைக்கவேண்டி வரும். எண்ணியபடி யெல்லாஞ் செய்துகொள்வது முடியாது. மற்றவர்கள் தேவை களேயும் உரிமைகளையும் மதியாமல் ஒழுகினல் ஆட்சி நடத்து வதற்கென்று ஒருசிலர் இல்லாதுபோனலும் எவர்களுடைய உரிமைகள் அல்லது தேவைகள் பாதிக்கப்படுகின்றனவோ, அவர்களே தமக்கு வரும் இடர்களை அகற்றவோ தடுக்கவோ நடவடிக்கை எடுப்பர். மனிதகுலங் தோன்றிய காலத்தில் ஒவ்வொருவருக் தாம் நினைத்தபடி நடக்க முயன்றிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடமுண்டு. ஒருவன் விதைத்து வளர்த்த பயிரை விளைபருவத்தில் இன்னுெருவன் அறுத்துக் கொண்டு போயிருப்பான். ஒருவன் வேட்டையாடிய மிருகத்தை இன்னுெருவன் பறித்துக்கொண்டு போயிருப்பான். ஒருவனுடைய பெண்ணே இன்னுெருவன் கவர்ந்திருப்பான். விதைத்தவனே, வேட்டைக்காரனே, பெண்ணேப்பறிகொடுத்த வனே மற்றவனைக் கொண்டுபோக விட்டுவிட்டுப் பொறுத் திருந்திருக்கமாட்டான் ; பழிவாங்கப் பார்த்திருப்பான். அல் லது தான் பறிகொடுத்ததைத் திருப்பிப்பெற முயன்றிருப்பான். பறித்தவனுந் திருப்பிக் கொடுக்க ஒருப்பட்டிரான். போர் மூண் டிருக்கும். கைகலப்பு, சச்சரவு, கொலே முதலியன நடந் திருக்கும். உடல் வலிமையுள்ளவன் ஒருவன் தோன்றினல் மற்றவர்களேப் பயமுறுத்தித் தனக்கு வேண்டியதைப் பெற் றிருப்பான்; மற்றவர்கள் தனக்குப் பயப்படுவதைக் கண்டால் தனக்கு வேண்டிய பொருள்களே அவர்களிடம் பெற்றிருப்பான்; வேண்டிய வேலைகளை அவர்களைக்கொண்டு செய்வித்திருப்பான். மற்றவர்களிலும் விவேகத்திற்கூடிய ஒரு வன் தோன்றினல் தன்னுடைய செல்வாக்கினுல் மற்றவர் களைத் தன்வயப்படுத்தி அவர்க% த் தன் ஏவலாளராக்கி யிருப்பான். ஏதோ ஒன்றில் மற்றவர்களிலும் மேம்பட்ட வன், தன் மேம்பாட்டைக் கொண்டு தனக்குச் செல்வாக்கு உண்டாக்கியிருப்பான். முதன் முதல் ஆட்சிமுறை எங்ஙனம் தோன்றிற்றென்று கூறுவதற்குத் திட்டவட்டமான சரித்திரச் சான்றில்லை. இன்றும் சீர்திருந்தாதிருக்கும் மக்களுடைய ஆட்சி முறையைப் பார்த்து மனிதகுலம் ஆதியில் எங்ங்னம் ஆட்சி நடத்தியிருக்கவேண்டுமென்று ஊகிக்கலாம். மற்றும் சரித்திர

தோற்றம் 3
வாயிலாய்க் கிடைக்கும் சான்றுகளைக்கொண்டும் ஊகிக்கலாம். ஆனல் திட்ட வட்டமாய் இங்ங்னந்தான் ஆட்சி முறை தோன் றியதென்று சொல்லக்கூடிய சரித்திரச் சான்றுகள் இல்லை. இதைப்பற்றிய முடிபுகள் பெரும்பாலும் ஊகங்களே. நாம் இப்போது ஆராய்வதை நேரிற் கண்டவர்கள் இப்போது உயிருடன் இல்லை. நடக்கும்போது கண்டவர்களும் இதைப் பற்றி யாதும் எழுதிவைத்துப் போகவில்லை. அவர்களுக்கு எழுதத் தெரியாது. எழுத்தே அக்காலத்திலில்லை. தமக்குப் பின் வருகிறவர்கள் இதைப்பற்றி ஆராய்ச்சி நிகழ்த்துவார்க ளென்றும் அவர்கள் எண்ணியிருக்கமாட்டார்கள். ஆதலால் புதைபொருள் ஆராய்ச்சி, சாசன ஆராய்ச்சி போன்றவையும் இதற்குப் பெரிதும் பயன்படா. நாம் குறிக்குங் காலம், சரித் திர காலத்திற்குப் பெரிதும் முந்தியது. ஆகையால், எமதறி வாற்றலைக் கொண்டு ஊகித்தறிய முடியுமேயன்றி வேறு வழி யில்லை. அரும்பாடுபட்டுத் தேடிய ஒன்றை உடல்வலி கூடிய ஒருவன் பறித்துப்போவதை ஒருவரும் விரும்பார். மனம் வைத்துப் பேனிய ஒன்றையுஞ் சூழ்ச்சியால் இன்னெருவன் கவர்ந்து செல்வதை யாரும் விரும்பார். தான் காதல்கொண்ட பெண்ணே, தனக்கே உரியவள் என்று எண்ணியிருந்த ஒருத் தியை, இன்னுெருவன் சூழ்ச்சியாலோ உடல் வலிமையாலோ பறித்துப் போவதை யாரும் விரும்பார். விரும்பினுலென்ன விரும்பாதுபோனுலென்ன மேற்காட்டிய நிகழ்ச்சிகள் இன்றும் இருக்கின்றன ; அன்றும் இருந்தன. அன்றைக்கும் இன் றைக்குமுள்ள வேற்றுமை யென்னவெனில் இன்று இச் செயல்களால் வரும் பிணக்குகளை, கைகலப்போ சண்டை சச்சரவோ இல்லாது, சீர்திருத்தமான முறையிலே தீர்த்து வைப்பதற்கு வேண்டிய சாதனங்கள் இருக்கின்றன. இவை இருந்தபோதிலும் இவற்றைக்கொண்டு பிணக்குகளைத் தீர்ப்ப தற்கு வேண்டிய பொறுமை பலரிடமில்லை. தாமே பழி வாங்கித் தம் குறையைத் தீர்க்கும் முறை அணுச்சக்தி, செயற்கைக் கிர கங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கும் இன்றைய நாகரிக நிலையிலும் இருக்கிறதென்றல் மனித குலக் தோன்றிய காலத் தில் ஒவ்வொருவரும் தம்மையும் தம் உடைமைகளே யும் பேனிப் பாதுகாப்பதற்கு யாவருக்கும் பொதுவான நடுவு நிலையுள்ள ஆட்சித்தாபனத்தை ஆக்கி அதற்கு இப் பொறுப்பை ஒப்படைத்து அதன் தீர்ப்பை வழுவாது ஏற்று நடந்திருப்பாரென்று நம்புவதற்கில்லை. சூழ்ச்சித் திறனிலோ உடல் வலியிலோ மேம்பட்டவர்கள் தாம் நினைத்தபடி தாம்

Page 9
4 ஆடசி இயல்
விரும்பியதைச் ச்ெய்திருப்பாரென்றே கொள்ளவேண்டியிருக் கிறது. நாளடைவில் இம்முறையில் வாழ்வது தொல்லை நிறைக் தது என்பது இவர்களுக்குப் புலப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளுஞ் சண்டை சச்சரவு வந்துகொண்டிருந்திருக்கும். இர விலோ பகலிலோ உறங்கும்போது தனதென்று நம்பிய பொருள் உறக்கம்விட்டெழும்பும்போது பிறர் கைப்பட்டிருக் கும். ஆறுதலாய் உறங்கவும் மனம் ஒருப்படாது. ஒவ்வொரு வனும் தன் சொத்தைப் பாதுகாக்கத் தன்னல் இயலாது போனுல் வேறு ஒருவர் இருவரை அணேத்து ஒருவருக்கொரு வர் உதவிபுரிந்து சொத்தைப் பேணிவந்திருப்பர். கொலே களவு அடிக்கடி சாதாரண நிகழ்ச்சிகளா யிருந்திருக்கவேண் டும். இந் நிலையிலுள்ள குறைபாடுகள் ஆதிமனிதனுக்கு நாட் செல்லச் செல்லப் புலப்பட்டிருத்தல்வேண்டும். இவற்றை அகற் றவோ குறைக்கவோ அவன் வழி தேடியிருப்பான், தனி யாட்களோ தனிக் குழுக்களோ தம்மையும் தம் சொத்துக் களையும் பாதுகாப்பது சிரமம் நிறைந்தது. உணவுக்கு வேட்டை யாடுவதோ, பயிர் செய்வதோ, ஒய்வெடுப்பதோ எதையும் ஆறுதலாய் மன நிம்மதியுடன் செய்யமுடியாதிருந்தது. திருட் டாலோ ; பலாத்காரத்தாலோ, சூழ்ச்சியாலோ எப்போது எங் கிருந்து தீங்குவருமென்று சொல்லமுடியாத நிலையில் ஒவ் வொரு நாளும் வாழ்வது ஆதி மனிதனுக்குத் தாங்கொணுச் சஞ் சலத்தைத் தந்திருக்க வேண்டும். உறங்கும்போதோ உண் ணும்போதோ எதிர்பார்க்க முடியாத முறையில் வரும் தீங்குகளை எங்ங்ணம் தடுக்கலாமென்று தம் ஆற்றலுக்கேற்ப நம் முன்னுேர் தம் மூளையைக் கசக்கிப் பிழிந்து பார்த்திருக்க வேண்டும். தாம் நினைத்ததை முடிக்க முயன்ருல் மற்ற வனும் அப்படியே செய்வான். இப்படி யாவருக் தாம் தாம் நிக்னத்ததை முடிக்க முயன்ருல் ஒருவரும் ஒன்றுஞ் செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படும். எங்குங் குழப்பமும், சச் சரவுத் தலையெடுக்கும். இதைத் தீர்ப்பதற்குத் தோன்றிய உபாயந்தான், ஆட்சிமுறை என்று ஊகிப்பது பிழையாகாது.
தனிமனிதன் ஒருவன் தன்பாட்டிலே வேறு யாருடனும் தொடர்பின்றி வாழ்வதற்கு ஆட்சி அமைப்போ, சட்டமோ தேவைப்படாது. அவனுடைய ஆற்றலும் அவனுடைய விருப்பமுமே அவன் செயலுக்கு எல்லே. ஆணுல் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள்-இருவர்தானும்-இருந்தால் நியாயம், நீதி, உரிமை, கடமை, கட்டுப்பாடு, சட்டம், ஒழுக்கம் என்ற யாவும்

தோற்றம் 5
தோன்றிவிடும். ஆதலால், மனித இனம் சமூகமாய் வாழத் தொடங்க ஆட்சியமைப்புக் தோன்றியிருந்திருத்தல் வேண்டும். பிறன் என்ற ஒரு பேர்வழியில்லை யென்ருல் கடமை, உரிமை, ஒழுக்கம், சட்டம் என்ற சொற்கள் பொருளற்றுப்போம். ஒழுக் கம், கடமை, உரிமையென்ற சொற்களும் இவை குறிப்பன வும் மக்கள் கூட்டுவாழ்வு நடத்தத் தொடங்கியபோதே தோன் றும். அப்போதுதான் சட்டமும் வகுக்கப்படும். ஒழுக்க மரபு, ஆட்சிச் சட்டம் ஆகிய இரண்டு மில்லாத சமூகமில்லே.
சமூகமரபு
உண்மையில் ஆட்சிச்சட்டம் என்பது தோன்று முன் சமூகமரபு தோன்றிவிடும். மூத்தோர் இளையோர் ஒருவரோ டொருவர் எங்ங்ணம் ஒழுகுதல் வேண்டும்; யார் யாருடன் விருந்துண்ணலாம்; எந்தெந்த உறவினர் ஒருவரையொருவர் மணம் முடிக்கலாம் ; எந்தெந்த உறவினர் ஒருவரையொருவர் மணம் முடிக்கக்கூடாது ; உயர் வகுப்பினரும், மற்றவரும் ஒருவரோடொருவர் எவ்வாறு நடந்துகொள்ளல் வேண்டும்; கணவன் மனைவி ஒருவரோடொருவர் எவ்வாறு நடந்துகொள் ளல் வேண்டும் ; தாய் தந்தையருடன் பிள்ளைகள் எவ்வாறு கடந்து கொள்ளல்வேண்டும் ; இன்ன இன்ன வகுப்புக்குரிய வர்கள் இன்ன இன்ன தொழில்கள் செய்தல்வேண்டும் என் பன எல்லாம் சமூகக் கட்டுப்பாட்டின்பாற்பட்டன. சமூகம் சரி யெனக் கொள்ளும் ஒழுக்கமும், பிழையெனக் கொண்டு ஒதுக் கும் ஒழுக்கமும் என்னென்ன என்று குறித்த சமூகக்திற் குரியவர்கள் பெரும்பாலும் அறிவர். இவற்றைத் தொகுத்து ஒரேட்டிலோ வேறெங்கேனுமோ எழுதி வைப்பதில்லை. அச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குத் தெரியாமலே சமூகம் மதிப்பதை மதிக்கவும், வெறுப்பதை வெறுக்கவும் கற்றுக் கொள்வார்கள். சமூகம் கடைப்பிடிக்கும் ஒழுக்க முறைக்கு முரண்பாடாக நடப்பவர்கள் சமூகத்தின் வெறுப்புக்குந் தண்ட னேக்கும் ஆளாவார்கள். தண்டனை யென்றல் சிறையிடுதல் குற்றம்போடுதல் போன்றனவாயிருக்கத் தேவையில்லை. வெறுப்பைத் தெரிவிப்பதற்குப் பல முறைகளே ஒரு சமூகம் கையாளும். தவறு செய்தவருடன் தொடர்பு வையாதுவிடல் , பெண் கொடுத்தல், பெண் எடுத்தல் முதலியவற்றைக் கை விடல் ; கொடுக்கல் வாங்கல் வையாது விடல் போன்றவற் ருற் சமூகம் வெறுப்பைக் காட்டும்

Page 10
6 ஆட்சி இயல்
சமயக் கட்டுப்பாடும் ஆட்சிமுறையும் சமூகக் கட்டுப்பாட்டுடன் சமயக் கட்டுப்பாடுகளும் எச்
சமூகத்திலும் உண்டு. இயற்கையால் ஆதி மனிதனுக்குத் தொல்லைகள் வந்திருக்கும். பருவ மழையின்மையாலும், வெள்ளப் பெருக்காலும் பயிர்கள் அழிவதைப் பார்த்திருப் பான். பூகம்பம், கொள்ளை நோய் முதலியன செய்யும் அழி வையும் பார்த்துப் பயந்திருப்பான். இடிமுழக்கம், மின்னல், குரிய சந்திரருடைய தோற்றம் மறைவு முதலியவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பான். மூர்க்க விலங்குகள் அவ னையோ அவனைச் சேர்ந்தவர்களையோ தாக்கியிருக்கும். பிறப்பு இறப்பு எங்ங்ணம் நடக்கின்றன என்றறிய முயன் றிருப்பான். இவற்றில் ஒன்றிற்கோ பலவிற்கோ அரை குறையாய நியாயங் கண்டிருப்பான். கண்டவுடன் ஏனைய வற்றையும் அறிய முயன்றிருப்பான். இம் முயற்சி திருப்தி தரக் கூடியளவு கைகூடியிராது. தன்னை இயக்குகிற உயிரைப் போல ஆற்றலும் அறிவுங் கூடிய உயிரொன்ருே பலவோ இருக்கலாமென்று உளசித்திருப்பான். தன் அறிவுக்கெட்டாத வற்றிற்கு இந்த உயிரோ உயிர்களோ தான் பொறுப்பென்று எண்ணியிருப்பான். இவற்றைத் தன்வயப்படுத்தவோ திருப் திப்படுத்தவோ முயன்றிருப்பான். இயற்கையிலே தனக்குப் புலப்படாதவற்றிற்கு ஒரு தெய்வத்தையோ பல தெய்வங் களையோ கற்பித்து அவர்களைத் தன்வயப்படுத்த முயன்றிருப் பான். தன் இயற்கையை அவர்களுக்குக் கற்பித்துத் தனக்கு உகந்தவைகளே அவர்களுக்கும் உகந்தன என்று கொண்டு பூசைசெய்தல், பலியிடுதல் முதலியவற்ருல் அவர்களே வழி பட்டிருப்பான். இத்துறையில் அறிவு அனுபவங் கூடியவர்கள் சிலர் இருந்திருப்பார். அவர்கள் முதன்மை பெற்றிருப்பார் கள். அவர்களுக்குச் செல்வாக்கும் வளர்ந்திருக்கும். சமயம் தோன்றிவிடும். செயற்குரியன இன்னவின்ன வென்றும் தவிர்க்க வேண்டியன இன்னவின்ன வென்றும் வகுத்துவிடு வார்கள். சமயக் கட்டுப்பாடும் தோன்றிவிடும்.
* காலாதீதனன இறைவன் ஒருவன் இருக்கிற னென்பதையோ, அவன் தன்னை மனிதனுக்குத் தெரியப்படுத்தி ஆட்கொள்ளுகிறன் என்பதையோ மறுப்பது மேற்கூறியதன் நோக்கமன்று. சிற்றறிவுள்ள வர்கள் தம் அறிவின்மையால் இறைவனுக்குக் கற்பிக்கும் இயல்பு தான் உண்மையில் இறைவன் இயல்பென்பதும் பெறப்படவில்லை. ஆதிமனிதன் தத்தளித்துத் தடுமாறித் திரிந்த காலத்தில் அவனுக்குத் தோன்றிய இறைக்கொள்கை இதுபோன்ற ஒன்ருய்த்தான் இருக் திருக்கவேண்டுமென்று இத்துறையில் ஆராய்ச்சி செய்த அறிஞர் கண்ட முடிபே மேற்கூறியது.

தோற்றம் 7
சமயக் கட்டுப்பாடென்பது கண்டிப்பாய் இறைவழிபாட் டுடனும் அதற்குரிய சடங்குகள் முதலியவற்றுடனும் கின்று விடுவதில்லை. உண்ணல் உடுத்தல் மக்களின் உயர்வு தாழ்வு போன்றனவும் சமயத் தொடர்பு பெற்றுவிடும். புலாலுண் ணுமை, மற்றவர்கள் கண்படாது உண்ணல் முதலியன சமய அநுட்டானங்களாய் 6ம் நாட்டிற் கொள்ளப்படுவது யாவ ரும் அறிந்த ஒன்றே. சுபகருமஞ் செய்யும்போது தலையை மூடிக்கொள்ளல், கோயிலுக்குட் போகும்போது செருப்பு முத லியவற்றை அகற்றிவிடல் சமயத்தின்பாற்பட்டவை போலவே தோன்றுகின்றன. கிறிஸ்த சமய சித்தாந்தத்திற்கு அடி கோலியவராகிய பவுல் (Paul) என்னும் சமயகுரவர் பெண் கள் கோயிலில் தம் தலைகளுக்கு மொட்டாக்கிடல்வேண்டும் என்று கூறியிருப்பதும் இன்றும் இவ் வழக்கத்தைக் கிறீஸ்த திருச்சபையின் கூறுகள் சில கடைப்பிடிப்பதும் இத் தொடர் பில் நோக்கற்பாலன.
தொழிலைக்கொண்டு மக்களை நான்கு வருணங்களாய்ப் பிரிக்கும் ஒழுங்கும் பாரம்பரிய இந்துமதத்துக்கு அடிப்படை யான ஒன்று. இறப்புப் பிறப்பால் வரும் தீட்டுத் துடக்கு களும் சமயச் சார்புடையனவே. தீண்டாமையும் சமயக் கட் டுப்பாடுகளில் ஒன்றென்று வைதீகப் பேர்வழிகள் வாதாடு வதை யாம் அறிவோம். சமூக சமயக் கட்டுப்பாடுகளிலிருந்தே ஆட்சிக் கட்டுப்பாடு பெரும்பாலும் தோன்றியிருத்தல் வேண்டும். ஆட்சி வேறு சமயம் வேறென்பது இன்றைய கொள்கை. இன்னும் இக் கொள்கை எங்கும் முற்ருய்ப் பரவவில்லே. சமூகம், சமயம் என்பனவற்றிற்கு வேருய்த் தனிப்பொருளான ஆட்சி என்ற ஒன்றை இன்றுங் காண்டல் அரிது. முற்காலத்திலே சமயம், சமூகம், ஆட்சி ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்தெடுக்கக்கூடிய அள வில் வேறுபட்டிருக்கவில்லை. இவை மூன்றும் பிரித்தெடுக்க முடியாத அளவிற்கு ஒன்றேடொன்று பிணேக்கப்பட்டிருந்தன.
இங்கிலாந்திலே இன்றிருக்கும் சமய நிலை உண்மையில் மற்ற நாடுகளில் இருப்பதில் வேறுபட்டதன்று. ஆனலும் பிறநாடுகளிலில்லாச் சில விநோதங்கள் இன்றும் அங்குண்டு. சட்டப்படி நிறுவிய ஆங்கிலேய கிறிஸ்த சபை (Church of England as by Law Established) Gu 1657l JG 5 gigia Tigal) தேசச் சட்டப்படி அமைந்த சமய தாபனம். இன்றும்

Page 11
8 ஆட்சி இயல்
இங்கிலாந்தின் அரசர் வேறெந்தச் சமய தாபனத்தையும் சேர்ந்த வரா யிருக்க முடியாது. ஒரு நூற்ருண்டுக்குமுன் ஒக்ஸ்வோட், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் இத் தாபனத்தைச் சேரா தார் கல்விகற்க முடியாது. அதற்கும் முந்தி ஆட்சித்துறை யில் வேலையில் அமர்வோர் யாவரும் பேரளவிலாகிலும் இத் தாபனத்தைச் சேர்ந்தவர்களாயிருத்தல்வேண்டியிருந்தது. முக் கியமாகக் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் உயர்தரக் கல்வி, ஆட்சித்துறை உத்தியோகம் முதலியவற்றைப் பெற முடியாதிருந்தது. நாளடைவில் இவை அகன்றுபோக இன் றும் பேரளவில் இங்கிலாந்து மன்னர் ஆட்சித்துறை முதல் வர் மாத்திரமன்றி ஆங்கிலேய திருச்சபை முதல்வரும் ஆவர். இன்னும் மதத் தலைவர் (அத்தியகூஷர்) பலரை நியமிக்கும் உரிமை மன்னருக்கே உண்டு. அமைச்சர்களின் ஆலோசனையின்படியே இக் கடமைகளே அவர் செய்தபோதிலும் சட்டரீதியாய் இப் பொறுப்பும்உரிமையும் அவரைச்சார்ந்தவையே. மேற்கூறியவற்றி airl, i. 5, FLD! I sailpiti (9) (Religious Organization), 3 p 3, foop (Social System), -2,45Fiji 3. L. L. Ib, (Civil Law : Civil = Pertaining to Citizens) ஆகியவை இன்று வெவ்வேருகத் தோற்றமளிப் பினும் உற்பத்தியில் நெருங்கிய தொடர்புள்ளன என்பதும் ஒன்றினின்று மற்றதை வரையறுக்கும் வரம்புகள் என்றும் இருக்கவில்லை யென்பதும் புலப்படும், மதச் சார்பற்ற ஆட்சி A 1 GODA D'IL (Secular Government) - 2) D4D fiji J, IT GO36Igf5T 3öt (f. 35Göt முதல் தோன்றியதெனக் கொள்வதற்கிடமுண்டு. ஆசிய ஐரோப்பிய நாடுகளிற் சமூக அமைப்பு, சமய ஒழுங்கு, ஆட்சி யமைப்பாகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பிருந்துவந்தது. இந் நாடுகள் பழைய நாடுகள். இவற்றின் சரித்திரத்தில் சமூ கம், சமயம், ஆட்சி ஆகியவற்றைப் பிரித்து ரோக்கும் மனப் பான்மை தோன்றவில்லே. மத்திரி பிரதானிகள் அரசருக்கு ஆலோசனை கூறியபோதிலும், நாட்டுப் பாரம்பரியத்தை ஒட்டி ஆட்சி நடைபெற்றபோதிலும், ஆசிய ஐரோப்பிய ஆட்சி முறை பரம்பரையாய் முடியாட்சியாய்த்தான் இருந்தது. அரச குடும்பத்திற் சூழ்ச்சிகள், கொலைகள் நடந்தபோதும் ஒரு மன்னன் அகற்றப்பட்டால் அவன் இடத்தில் இன்னேர் மன் னன் தோன்றுவானே யொழிய ஆட்சியமைப்பில் யாதும் மாறுதல் தோன்றது. தொடர்பாய்ப் பல நூற்றண்டாய் முடி யாட்சி நடந்துவரும் நாடுகளில் ஆட்சித் திட்டமென்ற ஒன்றை வகுத்து ஒரேட்டிற் பொறித்து அதன்படி ஆட்சி நடத்தும்

தோற்றம் 9
மரபில்லை. பரம்பரை பரம்பரையாய் நடந்த முறையிலே மன்னன் நடத்தல்வேண்டும் ; ஆட்சியும் நடத்தல் வேண்டும்.
பெரும்பாலும் மன்னரும் அப்படியே செய்து வந்தனர். சமூக அமைப்பு, சமய ஒழுங்கு யாவும் பாரம்பரியத்தின்படியே செல்லும். பிரான்சில் நடந்ததுபோலப் புரட்சி தோன்றி முடி யாட்சிக்கு முடிவுகட்டி விட்டாலோ அல்லது அமெரிக்காவில் நடந்ததுபோலப் புரட்சியின் பயனுய் ஒரு நாடு முடியாட்சியி னின்று வெளியேறினுலோதான், ஆட்சித் திட்டமொன்று தோன்றுவதற்கேற்ற சக்தர்ப்பம் ஏற்படும். மற்றும்படி ஆட்சி முறை தேவைக்கேற்பத் தோன்றி மாறி மறைந்து வளர்ந்து கொண்டு வரும். இப்படி நடக்கும்போது நியாய இலக்கண ரீதியாய் இது சமயத்திற்குரியது ; இது சமூகத் தொடர்புடை யது ; இது ஆட்சி முறைக்குரியதென்று கண்டிப்பாய் வரை யறுத்தல் முடியாது. மேலும் பல மன்னர் தாம் தெய்வாம்ச மென்ருே அல்லது இறைவனின் பிரதிநிதிகளென்றே கொண்டு, இறைவனுக்கே தாம் கணக்குக் கொடுக்கவேண்டு மென்று கம்பியபடியால், ஆட்சிக்குஞ் சமயத்திற்கும் நெருங்கிய தொடர்பிருத்தல் இயல்பே. இந்திய மன்னர் பலர் சூரியனி லிருந்தோ சந்திரனிலிருந்தோ தோன்றியவர்களென்று ஒரு ஐதிகமுண்டு. ஒருகாலத்தில் இங்கிலாந்து மன்னர் தம் தெய்வத்தால் அபிஷேகம் பெற்றவரென்றும் தம்மைத் தாக்கு தலே தீண்டுதலோ தெய்வத்துரோக மென்றுங் கருதினர். இந்த நூற்றுண்டிலும், சென்ற மகா யுத்தத்தினுல் ஏற்பட்ட புரட்சிக்கு முன், யப்பானிய மன்னன் (சூரிய தேவதையின் வழித்தோன்றலென்றே யப்பானியரும் அவர் மன்னனுங் கூறி வந்தனர். யப்பானிய கல்வி முறையைப்பற்றிய ஒரு சிறு நூலில், யப்பானின் அன்றைய கல்வித்திட்டம், குரிய தேவதை தன் புதல்வனை மன்னனுக்கிட்ட ஆணேயின்படியே விருத்தி யடைந்து வருகிறது’ என்று கூறியிருந்ததை 1937இல் பார்த்தது நினைவிலிருக்கிறது.
முற்காலத்தில் எகிப்து போன்ற பல நாடுகளிற் சமய குரவரே அறிவில் மேம்பட்டிருந்தனர். பொழுது வரையறை, பருவ வரையறை (விதைப்புக்காலம், அறுவடைகாலம் போன் றவை), வானவெளியிலே தோன்றும் கோள்களின் போக்கு முதலியவற்றைப்பற்றிய அறிவு இவர்களுக்கே யிருந்தது. விவசாயத்(கமம்)தொழிலிலீடுபடும் பொதுமக்களுக்கு இவ்

Page 12
O ஆட்சி இயல்
வறிவு பெரிதும் வேண்டிய ஒன்று. ஆதலால் இவ் வறிவை யுடைய சமயகுரவருக்குப் பொதுமக்களிடம் பெரிதும் செல்
வாக்கிருந்தது. இவர்கள் அரச கடமையையும் நடாத்தினர்.
இன்றும் திபேத்தில் சமயத் தலைவரான தலைலாமாவே'
ஆட்சிக்குத் தலைவருமாவர்.
(இதை யெழுதிக்கொண்டிருக்கும்போதே சீனுவுக்கும் திபேத் திற்கும் மூண்ட போரின் பெறுபேருய்த் தலைலாமா இந்தியாவிற் சரணடைந்திருக்கிருர் என்ற செய்தி எட்டியது.)
கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்கள் தம் சமய முதல்வரை பாப்பரசர் (பாப்பு + அரசர்) என்று கூறுவர். அவருக்கே இன்று வத்திக்கான் நகரில் நிறைந்த ஆட்சியுரிமை புண்டு. முன்னெருகாலத்தில் இவருக்கு இதிலும் பன்மடங்கு கூடிய நிலப்பரப்பிற்கு ஆட்சியுரிமை இருந்தது. பிறநாட்டு ஆட்சி அலுவல்களிலும் பெரிதும் ஈடுபட்டிருந்தனர்.
ஆதலால், பாரம்பரிய முறையிலே ஆட்சி நடைபெற்ற, நடைபெறுகிற நாடுகளிலே ஆட்சித்துறைக்கும் சமயத் துறைக்கும் திட்ட வட்டமாய் வரையறைகூறல் எளிதன்று. இன்று சமயத்தாபனங்கள், சமூகத் தாபனங்கள், ஆட்சித் தாபனங்கள் கூடியமட்டும் வெவ்வேரு யிருத்தலே விரும் பத்தக்கதென்னுங் கொள்கை பெரும்பாலும் பரவி வரு கிறது. முக்கியமாய் ஆட்சித்துறைக்கும் சமயத்துறைக்கும் தொடர்பிருப்பதைச் சீர்திருந்திய நாடுகள் விரும்புவதில்லை. இறைவழிபாட்டிலோ மற்றுஞ் சமயச் சடங்குகளிலோ, ஆட்சியாளர் இயன்றமட்டும் தலையிடாதிருப்பதே விரும்பத் தக்கது என்ற கொள்கை கிலேபெற்று வருகிறது. ஒவ்வொரு வனும் தன் மனச்சாட்சியின்படி இறைவழிபாடு செய்யவோ வேறு சமயக்கடன் செய்யவோ ஆட்சிமுறை இடங்கொடுத் தல் வேண்டுமென்பதே இன்று பரவிவருங் கொள்கை. ஒரு சமயத்தை ஆதரித்து இன்னென்றைத் துன்புறுத்தல் நாகரிக ஆட்சியாகாது. ஆட்சித்துறையில் ஈடுபடுவதற்கோ அங்கு ஊழியராய் அமைவதற்கோ சமய நிபந்தனைகள் வைத்தல் அநாகரிகமென்று ஒதுக்கப்படுகிறது. கடமைக்கு வேண்டிய அறிவு, செயல்திறன், ஒழுக்கம் முதலியவையிருந்தாற் போது மென்பதே இன்று பெரும்பாலும் ஏற்கப்படுவது. சமூகத்தி லிருக்கும் உயர்வு தாழ்வு ஏற்பாடுகளையும் இன்றைய ஆட்சி முறை பாராட்டுவதில்லை. முன்னெருகாலம்-முப்பது நாற்பது

தோற்றம் 11
ஆண்டுகளுக்கு முன்னர்-இலங்கையிற் சில கடமைகளுக்கு உயர்குடிப்பிறப்பும் இன்றியமையாது வேண்டிய ஒன்ருயிருக் தது. மணியகாரன், உடையார், விதானைப் பதவிகள் ஒரு குறித்த வகுப்பினருக்கே பெரும்பாலும் உரியனவாயிருந்தன. உடையார் மகன் உடையார், மணியகாரன் மகன் மணியகா ரன் என்று அரச பரம்பரையில் தகப்பனிடத்தில் மகன் மன்ன ணுய் வருவதுபோன்ற முறை இக்காட்டிலிருந்தது. இதைவிட, குடியியற் சேவை (உயர்தர ஆட்சித்துறை உத்தியோகம்) (Civil Service) போன்ற ஆட்சிப்பதவிகளுக்கும் உயர்குடிப்பிறப்பும் வேண்டிய ஒன்ருயிருந்தது. இன்று சட்டரீதியாய் இம்முறை கைவிடப்பட்டபோதிலும் சமூகத்திற் பெரும் அதிர்ச்சியுண் டாக்கக்கூடிய முறையில் மனித சமத்துவத்தைச் செயற்படுத்த ஆட்சியாளர் பின்னிற்பர் என்றே கூறல் வேண்டும்.
இன்று ஆட்சித்துறையினர் பணம், பிறப்பு, சமயம் ஆகிய வற்றிற்கு இடங்கொடாது தகுதி, திறமை, அறிவு முதலியவற் றைக்கொண்டே பதவியோ தொழிலோ அமைய வேண்டு மென்பதைப் பெரும்பாலும் கிலே5ாட்ட முயல்கின்றனர். ஆனல் இந் நாட்டுச் சரித்திரத்திலென்றலும் வேறெந்த நாட்டுச் சரித்திரத்திலென்ருலும் சில மரபுகள் வழக்கங்கள் மனநிலைகள் இருந்து வந்திருக்கின்றன; இவை மக்கள் வாழ்க்கையில் உளறிக் கலந்துவிட்டன. இவற்றைப் போக்குவது எந்த ஆட்சியா ளருக்கும் எளிதன்று. சட்டஞ் செய்யலாம்; சட்டப்படி உரிமை களை வரையறுக்கலாம் ; சட்ட விரோதமான செயல்களுக்குத் தண்டனை விதிக்கலாம். ஆயினும் எதைச் செய்தபோதிலும் செல்வம், இனம், குடிப்பிறப்பு முதலியவற்றின் செல்வாக்கு முற்றுய் அற்றுப்போயிற்றென்று சொல்லுவதற்கில்லை.

Page 13
அதிகாரம் 2 நோக்கம்
முந்திய அத்தியாயத்தில் ஆட்சி எங்ங்னம் தோன்றிய தென்பதை ஆராயும்போது மனித இனம் சமூகவாழ்வில் இறங்கியபோதே ஆட்சியுந் தோன்றியிருத்தல் வேண்டுமென்று காட்டியுள்ளோம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்கள் ஒருமித்து வாழ நேரிடும்போது உரிமை, கடமை, சொத்து, சோந்தை என்பன தோன்றும். வாக்குவாதங்கள் வேற்றுமைகள் தோன்றும்போது இவற்றைச் சமாளிப்பதற்கு ஒருவரோ பலரோ கொண்ட ஒரு தாபனம் நிறுவப்படும். இத்தாபனம் உரிமை, கடமை முதலியவற்றை வரையறுக்கும். வரையறையை மீறி கடப்போருக்குத் தண்டனை விதிக்கும். தண்டனையை நிறை வேற்றுவதற்கு இன்னுெரு தாபனம் தோன்றும். முந்திய தாபனத்தின் தீர்ப்பு, நடுவு கிலேயினின்றும் வழுவிய தென்று இரு கட்சியில் ஒன்று எண்ணினுல் அக் கட்சியின் முறைப் பாட்டைக் கேட்டு ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவதற்குப் பிறிதோர் தாபனம் வேண்டும். இத்துடன் சமூகம் வளர்ந்து பெரு நாடாய் வந்துவிட்டால் வேறு பொறுப்புக்களும் தோன்றும். அயல் நாட்டவரோடு வியாபாரம் முதலியவற்ருல் தொடர்பு தோன்றும். இத் தொடர்பு தோன்ற அயல் நாட்டவர்க்கும் தம் நாட்டவர்க்கும் கொடுக்கல் வாங்கல் முதலியவற்றல் வரும் பிணக்குகளைத் தீர்க்கவேண்டி ஏற்படும். இதற்கென ஒரு தாபனம் நிறுவவேண்டி வரும். அயல் நாடொன்றுடன் போர் மூளக்கூடும்; எப்பொழுது கட்பு மாறிப் பகையேற்படு மெனச் சொல்ல முடியாது. ஆகையால் எப்போதும் ஒரளவிற் காயினும் போருக்கு ஆயத்தமாயிருத்தல் வேண்டும். இரா ணுவம், கடற்படை போன்றவற்றைச் சீர்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு தாபனம் நிறுவப்படும். வணிகர் விற்றல் வாங்கலில் நீதி தவருது ஒழுகுகிறர்களோ என்று பார்த்து வேண்டிய வேளே யில் 5டவடிக்கை யெடுக்க ஒரு சிலர் நியமிக்கப்படுவர். இவற்றிற்கும் இவை போன்ற

நோக்கம் 13
மற்றக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கும் பணம் வேண்டும். இவை யாவும் நாட்டு மக்களின் நலனுக்காகவே செய்யப்படு கிறபடியால் அவர்களே பணமிறுத்தல் வேண்டும். இப் பணத் தைச் சேர்த்து வேண்டியவகையிற் செலவிடுவதற்கு ஒரு சிலர் நியமிக்கப்படுவர். இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் வேண்டியவற்றைச் செய்வதற்குத் தாபனங்கள் நிறுவப்படும். இத் தாபனங்கள் யாவும் தம் கடமைகளைச் செம்மையாய்ச் செய்கின்றனவோ என்று பார்ப்பதற்கு ஒரு சிலர் நியமனம் பெறுவர். இவை யாவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் கொண்டதே ஒரு நாட்டின் ஆட்சி.
மேற்கூறியவற்றிலிருந்து ஆட்சியின் நோக்கம் யாதென் பது புலப்படுகிறது. நாட்டுமக்கள் ஒருவரோடொருவர் முரண் படாமல் வாழ்வதற்கு வேண்டிய நிலையை ஆக்கி வைப்பதும் முரண்பாடு வரும்போது அதைத் தீர்த்து வைப்பதுமே பெரும்பாலும் ஆட்சியின் நோக்கமென்று கொள்ளலாம். ஒரு வரின் சொத்துக்கோ உடலுக்கோ உயிருக்கோ இன்னெரு வர் தீங்கிழையாது தடுத்தலும் அங்ங்னந் தடுத்தல் முடியாது போனுல் நீங்கிழைத்தவருக்கு உரிய தண்டனை கொடுப்பதுமே ஆட்சியின் முக்கிய நோக்கமென ஒருகாலம் மக்கள் பெரும் பாலும் கருதி வந்தனர். ஆட்சி இதற்குமேல் மக்கள் வாழ்க்கை யில் ஈடுபடுதல் தவறென்றும் அறிஞர் பலர் கருதினர். கொலை, களவு, உள்நாட்டுக் கலகம், அடிபிடி, சண்டை போன்றவற்றைத் தடுத்தும் இவற்றைச் செய்வோரைத் தண்டித்தும் நாட்டில் அமைதி நிலவச்செய்தாற் போதுமென்பதே இவர்கள் கருத்து. அமைதியிருந்தால் மக்கள் தத்தம் ஆற்றலுக்கும் தேவைக் கும் வசதிக்குமேற்ப வேண்டியவற்றைச் செய்துகொள்ளலாம். பணமுள்ளவர்கள் வட்டிக்குப் பணம் கொடுத்தோ தொழிற் சாலை நிறுவியோ தம் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளலாம் ; தொழிலாளிகளுக்கு விரும்பிய கூலி கொடுக்கலாம் ; விரும்பிய அளவு வேலை செய்விக்கலாம் ; இயன்ற இலாபத்தைச் சம்பாதிக் கலாம். அதாவது முதலாளியும் தொழிலாளியும் பேரம்பேசித் தொழிலாளியிடமிருந்து எவ்வளவு குறைந்த கூலிக்கு எவ்வளவு கூடிய நேரம் வேலை செய்விக்கமுடியுமோ செய் விக்கலாம்.
பெண்களையும் வயதுவராத பிள்ளைகளையும் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தலாமென்றல் அப்படிச் செய்து

Page 14
14 ஆட்சி இயல்
கொள்ளலாம். தொழில் கிலேயத்தில் வேண்டிய காற்ருேட்டம், தொழிலாளருக்கு வேண்டிய சுகாதார வசதிகள், ஓய்வுநேரம், பொழுதுபோக்கு வசதிகள் முதலாளி விரும்பினுற் செய்து கொடுக்கலாம். தொழிலாளிகள் முதலாளியை நெருக்கி இவற் றைச் செய்விக்க முடியுமென்ருற் செய்விக்கலாம். தொழில் நிலையத்திலிருந்து வரும் நச்சு வாயுக்கள் தொழிலாளர் தேக சுகத்தைப் பாதிக்கலாம் ; அகாலமாய் அவர்கள் இறந்து போகலாம். அவர்கள் மனைவிமக்கள் வயிற்றுக்கு வழியில்லாமற் பிச்சையெடுக்கலாம். வயதுவராச் சிறுவர், கர்ப்பிணிகள் வேண்டிய ஒய்வுபெருது வேலைசெய்து நோயாளிகளாகலாம். வேலைபார்க்கும் தொழிலாளிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனல் அல்லது தொழில்பார்க்க முடியாமல் விலகிப்போனுல் முதலாளிமார் வேறு தொழிலாளரைப் பிடிக்கலாம். ஆட்சிப்பீடம் ஒன்றுஞ் செய்யாது, நடக்கிறது கடக்கட்டும்’ என்று பார்த்துக்கொண்டிருக்கும்.
தத்தம் ஆற்றலுக்கேற்ப முதலாளியும் தொழிலாளியும் ஒருவரோடொருவர் போட்டியிட்டு வெல்ல வகைதேடுவார்; வெல்லத் தகுதியுடையவரே வெல்லுவர் ; தோற்கவேண்டியவர் தோற்பர். இப்படி ஒருவரோடொருவர் போட்டியிட்டு வெல்ல முயல்வது இயற்கை. இங்கனம் போட்டியிட்டுச் சமர்புரிவதா லேயே மனிதன் முன்னேற முடியும். போட்டிச் சமரில்லாது போனல் உற்சாகமிராது; முன்னேற்றமிராது. இப் போட்டியில் உயிர்ச்சேதமேற்பட்டாலென்ன, மக்களின் உடல்நலம் குன்றினு லென்ன, பாலர்களும் மற்றும் வலிகுறைந்தோரும் எப்பாடுபட்டா லென்ன, இவை யொன்றையும் பொருட்படுத்தாது செல்வ முள்ளவரும்ஆதிக்கமுள்ளவரும்கொள்ளே இலாபத்தைப் பெற்ற லென்ன; யாவும் பரிதாபத்திற்குரியவைதான். ஆனல் இவற்றிற் கொன்றுஞ்செய்ய முடியாது. இயற்கையிலேயே வலி குறைந்த வற்றை வலி கூடியன அழிப்பது கண்க்கூடல்லவா ? வலி குறைந்த மக்கள் வாழ்க்கையின் போட்டிச் சமரில் வெல்லுதல் முடியாது. அவர்கள் அழிந்து ஒழிந்து போவது பரிதாபமான ஒன்ருயினும் மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு வேண்டிய ஒன்று. ஆதலால் ஆட்சிப் பீடம் இப் போட்டிச் சமரில் தலே யிடாது, சட்ட விரோதமில்லாது போட்டி நடக்கிறதோ என்ற ஒன்றையே நோக்கும். மனிதருடலால் உழைத்த காலம் போய் இயந்திரங்களைக் கொண்டு உழைக்குங் காலம் தோன்றிய போதுதான் மேற்கூறிய நிலையுந் தோன்றியது. இயந்திரங்கள் பெருகப் பெருகத் தொழிற்சாலைகளும் பெருகின. நகரங்களில்

நோக்கம் 15
நிறுவிய தொழிற்சாலைகளிற் தொழில்தேடி நாட்டுப்புற மக்கள் நகரை நாடித் திரள்திரளாய் வந்துகொண்டிருந்தனர். தொழி லாளர் தொகை தேவைக்கு மிஞ்சியிருந்தபடியால் தொழிற்சாலை முதலாளிமார் வேண்டியபோதெல்லாம் வேண்டிய தொழிலா ளரைப் பெறக்கூடியதாயிருந்தது. அவர்கள் சுகத்தையோ நலத் தையோ பற்றி முதலாளிகள் கவனிக்கவேண்டிய நிர்ப்பந்த மிருக்கவில்லை. நல்ல முதலாளிகள் இருக்கவில்லை யென்று சொல்வதற்கில்லை. ஆனல் பெரும்பாலானேர் தம் வருவாயை எவ்வளவுக்குப் பெருக்க முடியுமோ அவ்வளவுக்குப் பெருக்கு வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இந்தக் கண்ண ராவி 2 கிலேயைப் பார்த்த சிலருக்கு இதைப் பொறுக்க முடிய வில்லை ; இவர்கள் கிளர்ச்சி செய்தார்கள்; சட்ட மன்றங்களில் முழங்கினர்கள்; செய்தித்தாள்களில் எழுதினர்கள். இவர்க ளின் முயற்சியால் தொழிற்சாலைச் சட்டங்கள் (Factory Laws), தொழிற் சட்டங்கள்(Labour Laws)ஆகியவை நிறுவுதல் வேண்டு மென்று வற்புறுத்தினர்கள். தொழிற்சாலைக் கட்டிடங்கள் காற் ருேட்ட முள்ளனவாயும் தொழிலாளிகள் செளகரியமாய் வேலை செய்வதற்கேற்றனவாயும் இருத்தல் வேண்டுமென்று எடுத்துக் காட்டினர்கள். அவர்களுக்கு ஓய்வு நேரம் உணவு நேரம் முதலி யன சட்டப்படி வகுக்கப்படல் வேண்டுமென்றும் ஒரு குறித்த வயதுக்குக் குறைந்தவர்களே வேலையில் அமர்த்தப்படக் கூடா தென்றுங் கிளர்ச்சி செய்தார்கள். கர்ப்பிணிகளுக்கும், பால் கொடுக்குந் தாய்மாருக்கும் விசேட வசதிகள் இருக்க வேண்டு மென்று காட்டினர்கள். இவர்கள் முயற்சி கைகூடியது. சட்ட மன்றத்தில் இவர்கள் வேண்டியபடி சட்டங்கள் நிறைவேறின. தொழிலாளரும் தம் உரிமைகளைப் பேணவும் தம் நலனை வளர்க்கவும் தொழிற் சங்கங்கள் நிறுவினுர்கள். தொழிற்சாலைச் சட்டங்களும், தொழிற் சட்டங்களும் நிறைவேறிச் செயல்பட் டதும், கடக்கிறது நடக்கட்டும் என்ற கொள்கை (Laissez Faire) வலிகுறையத் தொடங்கியது. புதிய சித்தாந்தமொன்று தலை காட்டியது. அதனைத்தான் பொதுநலவரசு (Welfare State) என்று கூறுவது. இதுவரை கூறியது பெரும்பாலும் இங்கி லாந்தில் நடந்ததை அடிப்படையாய்க் கொண்டது. ஆனல் கைத்தொழிற்புரட்சி (Industrial Revolution) இங்கிலாந்திலே தோன்றி மற்று நாடுகளுக்கும் பரவியது. பரவியபோது இங் கிலாந்தில் நடந்த முறையே மற்ற நாடுகளிலும் பெரும்பாலும் இடம்பெற்றது. விவசாயிகளாயோ சிறுசிறு தொழில்களைத்

Page 15
6 ஆட்சி இயல்
தத்தம் வீடுகளில் நடத்தும் தொழிலாளிகளாயோ மக்கள் வாழ்ந்தபோது நடக்கிறது நடக்கட்டும் ? என்ற கொள்கையால் பாரதூரமான தீங்கு விளையவில்லை. செல்வருக்கு ஏவல்மேவல் செய்து பிழைத்த தொழிலாளிகளும் அவர்கள் முதலாளிமாரும் பெரும்பாலும் ஒரூரவர், அயலவர் ; ஒருவர் குறைநிறை மற்றவ ருக்குத் தெரியும். ஏற்ற தருணங்களில் செல்வர் தம்மை அண்டிப் பிழைப்பவருக்குக் கூலிக்கு மேலாகவும் உதவி செய் தனர். இந்த நாட்டுப்புறத்திற்குரிய நாகரிகம் (Rural Economy) LDT fi) (55i-60)553b TÁogio PET 5f5b (Urban-Industrial Economy) தோன்றியபோது புத்தம்புதிய நிலையொன்றும் தோன்றியது. தொழிலாளிக்கும் முதலாளிக்கும் தொழிலால் வருக் தொடர்பைவிட வேறு தொடர்பு பாதுமில்லை. தொழிற்சாலைச் சொந்தக்காரர் வருவாயையே போக்கினர். தொழிலாளரும் கூலியையே நோக்கினர். இந்த நிலையிலே முதாலாளிமார், தம்மிலும் செல்வமும் செல்வாக்கும் குறைந்த தொழிலாளிக ளுக்கு எல்லேமிறி இடர் விளேக்காது காப்பதற்கு ஆட்சிப்பீடம் தலேயிட்டது. இது இங்கிலாந்திலேயெ முதன்முதல் தோன்றிய தென்பது முன் கூறியிருக்கிருேம். இயந்திர நாகரிகம் சென்ற காடெல்லாவற்றிற்கும் இதே கொள்கையும் செயல்முறை யும் பரவியது. சுகாதாரமுறையில் அமைந்த கட்டிடம், ஓய்வு நேரப் பொழுதுபோக்கு வசதி (Recreation Facilities), அ. லிக் 3G is 6%) (Minimum Wages), Gay 2, Gil J G LIG 66i 26) (Maximum hours of work), J JTU I 55 (Рrovident Fund), glnyi »u fш 6a-i(5 (Prohibition of Child Labour) 37 6576)llb gig Loir 37 dat வேலேகளில் அமர்த்துவதற்குத் தடை போன்றவை இன்றயை ஆட்சிச்சித்தாந்தத்தில் இடம்பெற்றுவிட்டன. இற்றைக்கு ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டிற்கு முன் யாழ்ப்பாணம் பறங்கித் தெரு, பெரியகடை ஆகிய இடங்களில் வேலைபார்த்த சிப்பக் திகள் காலை 8 மணி தொடக்கம் இரவு 8-30 - 9 மணிவரை வேலை செய்ததைப் பலர் மறந்திருக்கக்கூடும். ஆனல் கடைத் தொழிலாளர் சட்டம் (Shop act) செயலுக்கு வரும் வரையும் இப்படியே நடந்தது. மாலை 6 மணிக்குப் பின்னரே தான் அருே கர் தம் ஏனைய அலுவல்களே முடித்துக்கொண்டு சாமான் வாங்கக் கடைவீதிக்குப் போவது. தீபாவளி, வருடப்பிறப்புக் காலமென்றல் கடை இரவு 12 மணி, 1 மணி வரையும் திறந் திருக்கும். கடைச் சொந்தக்காரர் மனமிரங்கிச் சிப்பந்திகளுக் குச் சம்பளத்தைவிட ஏதேனும் சந்தோஷம் கொடுப்பார்கள்.

நோக்கம் לן
வருடப்பிறப்பு, தீபாவளிக்கு கைவிசேஷம் (கைவியளம்), துணி மணி கொடுப்பார்கள். கொடுக்கவேண்டுமென்ற கட்டாய மில்லே. வேலை நேரத்துக்கு, மேலெல்லை இல்லை. மத்தியான உணவிற்கோ ஒய்வு கொடுப்பதில்லை. வேலை பார்க்கும் போதே அங்கொரு கடி, இங்கொரு பிடியாய் உணவருந்து வார்கள். கண்டி, கொழும்பு முதலிய இடங்களில் இச்சட்டம் செயற்பட்ட பின்னும் யாழ்ப்பாணத்தில் இதற்குப் பெரும் எதிர்ப்பிருந்தது.
யாழ்ப்பாண நகரசபை இச் சட்டத்தை எதிர்த்தது. இன்று தம் சொந்தக் கடைகளை நடத்துபவர்களை விட ஏவலாளராய்க் கடமை பார்ப்போருக்கு இச் சட்டத்தின் பயனுய்ப் பல உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் வேலைக்கு நேரமேலெல்லை சட்டப்படி வகுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வெல்லேக்கு மேல் வேலே செய்வித்தால் அதற்கு மேலதிக தனிச்சம்பளம் சட்டப் படி கொடுத்தல்வேண்டும். -
மத்தியானத்தில் உணவுக்கும் ஓய்வுக்கும் ஒரு குறித்த நேரம் விடல்வேண்டும். நாட்டிற்குப் பொதுவான விடுமுறை நாட்களிற் சிலவாயினும் கடைத் தொழிலாளருக்கும் விடுமுறை நாட்களாக இருத்தல்வேண்டும். தள்ளாக்காலத்தில் கிலேச மற்று வாழ்வதற்கு ஒரு சேமநிதி கிறுவி தொழிலாளிகளின் சம்பள முழுத்தொகையில் முதலாளிகள் 6சத விதத் தொகையையும், தொழிலாளிகள் 4சத வீதத் தொகையை யும் இறுத்தல் வேண்டும். இந்த எடுத்துக்காட்டிலிருந்து தற்போக்குக் கொள்கை என்னும் மனப்பான்மையுள்ள நாடு களுக்கும் பொதுநல ஆட்சி காடுகளுக்கும் இருக்கும் வேற்றுமை நன்கு புலப்படும். தற்போக்குக் கொள்கையை முற்ருய்க் கடைப்பிடிக்கும் நாடு யாவும் இன்று இல்லையென்றே கொள்ளல் வேண்டும். பொதுநல ஆட்சிச் சித்தாந்தமே உலகிற் கூடிக் கூடி வருகின்றது.
முந்திய சித்தாந்தத்தின்படி பிள்ளைகளைப் படிப்பிப்பது பெற் ருேர் கடமை. பாடசாலைகளே நிறுவுவது ஆட்சிப்பீடத்தின் கடமையன்று. சமயத்தாபனங்களோ, பரோபகாரிகளோ, பாட சாலைகளினுற் பிழைக்க விரும்புவோரோ பாடசாலைகளை நிறுவ லாம். இங்ங்னம் பாடசாலைகள் நிறுவினல் ஆட்சிப்பீடம் இவை பின்பற்ற வேண்டிய முறைகளை வகுத்துப் பாடசாலை முகாமைக்
ஆ - 2

Page 16
18 ஆட்சி இயல்
காரருக்கோ சொந்தக்காரருக்கோ தெரிவிக்கும். பின்பற்றத் தவறினல் தண்டிக்கும். ஓரளவிற்குப் பண உதவியுஞ் செய்யும். பண வசதியுள்ள பெற்ருேருடைய பிள்ளைகளே பாடசாலைக்குப் போவார்கள். இவ்வசதியில்லாதோர் முகாமைக்காரரையோ வேறு யாரையோ இரந்து சம்பளம் இறுக்காது தம் பிள்ளை களைப் படிப்பிக்கப் பார்ப்பார்கள். ஆட்சிப்பீடம் இதிற் றலை யிடாது. படிக்கப் பணவசதியுள்ள பிள்ளைகள் படிக்கட்டும் ; வசதியில்லாதவர்கள் சுருட்டுத் தொழிலையோ விவசாயத் தையோ வேறெதையோ செய்யட்டும். யாதும் செய்ய வசதி யில்லாவிட்டால் வீடுவீடாய் இரந்து வாழட்டும் ; அல்லது அறிவிலிகளாய், பண்பாடற்றவராய், பொறுப்புணர்ச்சி யற்ற வராய் சமூகத்திற்குப் பாதகமான வாழ்க்கையி லீடுபட்டு வளர்ந்து திருடராயோ காடையராயோ வந்தால் ஆட்சிப்பீடத் தின் கையில் அகப்பட்டுத் தண்டனை பெறட்டும். இவர்களுக் கெனச் சிறைச்சாலைகள் தூக்குமேடைகள் என்பனவற்றை
ஆட்சிப்பீடக் தன் செலவிற் கட்டி வைத்திருக்கும்.
பொதுநல ஆட்சி நாடுகளில் ஒரு குறித்த வயது வரைக்கும் கட்டாயக்கல்வி, ஆட்சிப்பீடச் செலவில் அளிக்கப்படும். அதற்கு மேல் உயர்தரப் படிப்பிற்கு பாடசாலைகளும், பல்கலைக்கழகங் களும் தொழிற்கல்விப் பாடசாலைகளும் இருக்கும். எங்கும் கட்டாய வயதுக்குப்பின் இலவசக் கல்வி இல்லையென்றபோதி லும் ஆற்றல் வாய்ந்த வறியபிள்ளே களுக்கு உதவி நன்கொடை யின் (Grants) மூலமோ அல்லது கல்விச் சகாயநிதி (வெகு மதி)களின் (Scholarships) மூலமோ கல்வி கற்பதற்கு வசதிகள் உள. கட்டாயக் கல்வி கற்கும்போது பிள்ளைகளுக்குச் சில நாடு களிலே ஒரு நேர உணவு இலவசமாய்க் கிடைக்கும்; புத்தகம் முதலியன வாங்குவதற்குப் பண உதவி கிடைக்கும் ; பிள்ளை களின் உடல் நிலையை ஆராய்ந்து கண் நன்றப்த் தெரியாமை, காது நன்ருய்க் கேளாமை போன்ற குறைபாடுகளுக்கு வேண் டிய சிகிச்சை செய்ய ஒழுங்குகள் இருக்கும் ; வேறும் தொற்று நோய்கள் கொளுக்கிப்பூச்சி நோய் போன்றவைக்குச் சிகிச்சை நடக்கும். கட்டாயக் கல்வியின் நோக்கம் இரண்டு போலும்: ஒன்று நற்பழக்கம், பண்பாடு, ஒழுக்கம், அறிவு ஆகியவற்றைப் பாடசாலையிற் கற்கும் பிள்ளைகள், வயது வந்தபோது சமூகத் துக்குப் பாதகமான வழியிற் பெரும்பாலும் இறங்கார், என் பது; மற்றது ஒரு நாட்டின் சிருர்தான் எதிர்காலத்தில் நாட் டின் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் ; பொறுப்பு வரும்

நோக்கம் 19.
போது அதை முறையாய் யோக்கியமாய், திறமையாய் நிறை வேற்றுவதற்கு உரிய காலத்திற் பயிற்றப்படல் வேண்டுமென் பது. பணமுள்ள பெற்றேரின் பிள்ளைகளுக்கே அறிவாற்றல் போன்ற திறமைகள் உண்டென்று சொல்லுவதற்கில்லை. ஆத லால், நாட்டின் பிள்ளைகள் யாவருக்கும் அவர்கள் ஆற்றலை யறிந்து விருத்திபண்ணுவதற்கு உயர்வு தாழ்வு நோக்காது, பணம் பணமின்மையைப் பாராட்டாது, ஆட்சியாளர் வாய்ப்புக் கொடுக்கவேண்டுமென்பதே கட்டாய இலவசக் கல்வியின் அடிப்படை நோக்கம். படித்துத் தேறிய பிற்பாடும் கல்விக் கும் மற்றுந் திறமைகளுக்கும் ஏற்பத் தொழில்வசதி ஆக்க லும் ஆட்சிப்பீடத்தின் கடமையென்று பொதுநல ஆட்சி நாடுகள் கருதுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவும் பயிற்சியுந் தேவை. பயிற்சியும் அறிவும் உடையவர் களுக்கு இவற்றைப் பயன்படுத்தத் தொழில் தேவை. கல்வி கற்றுப் பயிற்சி பெற்றுத் தமக்குத் திறமை யுண்டென்று அறிந்தவர்கள் தொழிலின்றித் திண்டாடித் திரிய நேரிடின் மனக் கசப்பும் வாழ்க்கையில் வெறுப்பும் சமூகத்தின்மேல் அபிமானக் குறைவும் ஏற்படும். இம் மனநிலையுள்ளோர் வெளித்தோன்ருது உள்ளிருந்து மனையும் நோய்போல் சமூ கத்தைப் பாதிப்பர். தம்பாற் றங்கியிருப்போர் பசிபட்டினியால் வருந்தும்போது நாட்டின் நலனேயோ சமூகத்துக்குத் தாம் செய்யவேண்டிய கடமைகளையோ நோக்கார். ஆகையால் பொதுகல ஆட்சி நாடுகள் கல்வி வசதி அளிப்பதுடன் நில்லாது இயன்றமட்டும் கல்விக்கும் பயிற்சிக்கும் ஏற்ற தொழில்வசதி யும் ஆக்கிக் கொடுக்க முயல்கின்றன.
கல்வி வசதி தொழில் வசதியை விட வேறு தேவைகளும் மனிதனுக்குள. வேலை செய்து இளேத்திருப்போருக்கு பொழுது போக்கு, விளையாட்டு முதலியன வேண்டும். பூங்காக்கள் காற்றேட்டமுள்ள பெருவெளிகள் விளையாட்டு மைதானங் கள் நூல் நிலையங்கள் வாசிகசாலைகள் போன்றவையும், மனித வாழ்க்கைக்கு வேண்டியன எனக்கொண்டு இவற்றிற்கும் ஆட்சியாளர் பணஞ் செலவழிக்கின்றனர். சிறந்த பொழுது போக்கு வசதிகள் இருந்தாற் குடிவெறி, சூதாட்டம் போன்ற வற்றில் மக்கள் பெரும்பாலும் ஈடுபடார்கள் என்று எண்ணு வதற்கு, திறவெலியன் (Trevelyan) என்ற ஆங்கில வரலாற்று நூலறிஞன் (Historian) இங்கிலாந்திலே 19ஆம், 20ஆம் நூற் ருண்டின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தோன்றிய சமூக

Page 17
2O ஆட்சி இயல்
மாற்றங்களைப் பற்றிக் கூறுமிடத்து அளவுக்குமிஞ்சி மது வருக் தும் பழக்கம் என்னென்ன நியாயங்களால் அருகிவந்ததென்று குறிப்பிடுகின்றர். கல்வி கற்பவர்கள் நூல்களை வாசித்துப் பொழுது போக்கினர்; பொறியியலில் ஈடுபட்டவர்கள், பொறி யாராய்ச்சியில் அல்லது பொறிகளைக் கழற்றிப் பூட்டித் திருத்திப் பொழுது போக்கினர் ; சைக்கிள் ஓட்டத்திற் பிரியமுள்ளவர்கள் சைக்கிள் ஓடிப் பொழுது போக்கினர் ; மோட்டோர்க் கார் (Car) ஓட்டத்தில் ஈடுபட்டவர் மோட்டோர்க் கார் ஒட்டி நேரங் கழித்தனர். இவ்வசதிகளில்லாதோர் அக்கியநாடுகளுக்குச் சென்றிருந்த உறவினர் பிள்ளைகளுடைய கிழற்படங்களையோ இறந்துபோன தம் குடும்பத்தினருடைய நிழற்படங்களையோ பார்த்துப் பொழுது போக்கினர். படம் பிடிக்குங் கருவி (Camera) மகத்தான சமூகசேவைக்குப் பயன்பட்டதென்பது இவர் கருத்து. தமக்கு இன்பந்தரும் பொழுதுபோக்குவசதிக ளிருந்தபடியாற் பலர் தொழிலால் வந்தவுடன் களைப்பையும் மனச் சோர்வையும் தீர்ப்பதற்கு மதுக்கடைகளை நாடும் வழக்கத்தை விட்டுவிட் டார்கள்" என்பதே இவ்வாசிரியர் முடிபு.
இவ்வத்தியாயத்தின் ஆரம்பத்தில், குறித்த ஒருநாட்டு மக்களின் உயிர், உடல், பொருள், தன்மானம் முதலியவற்றிற் குப் பங்கம் வராது தடுப்பதும் பங்கம் வரும்போது அதற் குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதுமே ஒருகாலம் ஆட்சி யின் நோக்கமென்று கொள்ளப்பட்டதெனக் காட்டினுேம். ஆட்சி வரலாற்றில் இயந்திரங்கள் தொழிற்சாலைகள் முதலிய வற்ருல் வந்த புதிய திருப்பத்தையுங் காட்டியிருக்கிருேம், இயந்திரங்கள் பெருந்தொகையாய்த் தோற்று முன் மனித இனம் உழவுத்தொழிலிலும் ஆடு மாடு கோழி போன்றவற்றை வளர்ப்பதிலும் தத்தம் இல்லங்களிலே செய்யக்கூடிய பிற தொழில்களைச் செய்வதிலுமே ஈடுபட்டிருந்து உணவுக்கும் உடைக்கும் வேண்டியவற்றைத் தம் உடல் வலியைக் கொண்டே ஆக்கியது. தூரப் பயணம் செய்வதற்கு, சாதாரணமாகக் குதிரை, மாடு, கோவேறு கழுதை போன்ற மிருகங்களை வண்டி யிழுப்பதற்கோ, ஏறிச் சவாரி செய்வதற்கோ உபயோகித்தனர். வனந்தரப் பிரதேசமக்கள் ஒட்டகத்தையும், பனிப்பிரதேச மக்கள் நாய்களையும் ஒருவகை மானையும் பிரயாணஞ் செய்வ தற்கு உபயோகித்தனர். கடற் பிரயாணத்திற்குப் பாய்க் கப்பல்,
* English Social History 569.

நோக்கம் 21
வள்ளம், கட்டுமரம் போன்றவற்றை உபயோகித்தனர். இயக் திரங்கள் தோன்றியதும் உழவுத்தொழில், கைத்தொழில், போக்குவரத்து யாவற்றிலும் புரட்சிகரமான மாறுத லேற்பட் டது. இயந்திரங்களைச் செய்வதற்கும், இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்விப்பதற்கும் தொழிற்சாலைகள் தோன் றின. நாட்டுப்புற உழவு-சிறுதொழில் பொருளாதார நாகரிகம் (Rural - Agricultural - Craft Economy) [535 T-GO) di G35T fosib GJIT (5 GITT 351TJ || 51T5f7#6LDIT 35 (Urban - Industrial Economy) LIDITAĎu 1 g5 . இந்த மாற்றத்தின் பெறுபேருக எதிர்பாராத சமூகப் பிரச் சினேகள் பல தோன்றின. இவை யென்ன என்ன என்பது இதே அத்தியாயத்திற் காட்டப்பட்டிருக்கிறது. தனியாட்களும் தாபனங்களும் கைத்தொழில், வணிகம் முதலியவற்றில் ஈடு படும்போது என்ன என்ன கட்டுப்பாடுகளுக்குட்படல்வேண் டும் ; இத் தாபனங்களில் தொழில் செய்வோருக்கு என்ன என்ன உரிமைகள், சலுகைகள் இருத்தல்வேண்டும்; சமூக நலனுக்காக ஆட்சியாளர் தனி முதலாளிகளுடையவும் முத லாளித் தாபனங்களதும் சுயாதீனத்தை எப்படி, எவ்வளவு கட்டுப்படுத்தல்வேண்டும் என்னுங் கேள்விகள் கிளம்பின. இக் கேள்விகளுக்கு மறுமொழிகண்டதோடு ஆட்சிச் சித்தாக் தத்திலும் புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டது.
கூடிய அளவு தனி ஆட்களையும் தாபனங்களையும் அவர் கள் சொந்த விருப்பப்படி நடக்கவிட்டு அம்முறையால் யாதே னும் தவறு நேரிட்டால் (அவர்களேத்) தண்டிப்பதே முறை யென்ற ஆட்சிச் சித்தாந்தமே நடைமுறையிலிருந்தது. * இயன்ற மட்டும் ஆட்சி செலுத்தா திருக்கும் ஆட்சிமுறையே சிறந்தது ”. (That Government is best which governs least) 67 Gör gp 96 வாட்சி முறையைப் பெரிதும் பாராட்டியவராகிய ஹேபேட் ஸ்பென்சர் (Herbert Spencer ) என்னும் அறிஞர் கூறியது இக் கருத்தைத் திட்டவட்டமாய்க் காட்டுகின்றது.
இயந்திர நாகரிகத்தின் பயனயெழுந்த சூழ்நிலையிற் புதிய தோர் ஆட்சிச் சித்தாந்தமும் தோன்றியது. நாட்டு மக்களின் உரிமைகளுக்குப் பங்கம் வராது தடுத்தலையும் பங்கஞ் செய் வோரைத் தண்டித்தலையும்விட நாட்டுமக்கள் யாவருடைய கலனையுங் கருத்தில் வைத்து ஆட்சித் திட்டமாக்கி நாட்டிலுள் ளோர் யாவரும் தம் தேவைகளைத் தீர்ப்பதற்கு வழிதேடுவதே ஆட்சிப்பீடத்தின் கடனென்னும் சித்தாந்தம் தோன்றியது.

Page 18
22 ஆட்சி இயல்
நோயாளிக்குச் சிகிச்சை வசதி, பிள்ளைக்குப் பாடசாலை வசதி, தொழிலாளிக்கு ஒய்வு, நீதியான கூலி, யாவருக்கும் தத்தம் ஆற்றலுக்கேற்பத் தம் திறமைகளே விருத்திசெய்யும் வசதி என்ப வற்றை ஆட்சிப்பீடமே ஆக்கிவைத்தல் வேண்டுமென்பதே புதிய சித்தாந்தம். இவ்வாட்சி முறையே பொதுநலஆட்சி (Welfare State) என்பது. தடுப்பதும் தண்டிப்பதுமல்ல இதன் நோக்கம். சமூகத்தின் நலனே-சமூகத்தில் வாழும் யாவ ருடையவும் கலனும் என்பதே இவ்வாட்சிச் சித்தாந்தத்தின் அடிப்படை. பெரும்பாலும் இக்கொள்கை பலநாடுகளில் இடம் பெற்றிருக்கின்றது. ஆயின், நாட்டிற்குநாடு வேற்றுமைகளும் உண்டு. இன்று நாடுகள் கீழே கூறப்படும் இந்த இரண்டில் 62(15 felpd) - -2) J3 L16i 55 g/6) is (Socio- political Philosophy) கொள்கையைத் தழுவுகின்றன. தனியாட்களின் உரிமைக்கும் முயற்சிக்கும் தேவைக்கும் முதலிடங் கொடுப்பது ஒரு கொள்கை. அதைத் தனியாண்மை (தனியாட்கொள்கை) (Individualism) என்று குறிப்பிடலாம். இக்கொள்கை முத லாண்மை (முதலாளிமுறை) (Capitalism)யோடு நெருங்கிய தொடர்புடையது. இன்று இக்கொள்கை அமெரிக்காவிலே பெரிதுஞ் செல்வாக்குப் பெற்றிருக்கிறது. ஆனல் அங்குதானும் பொதுநலவாட்சிக் கொள்கை முற்ருய் இடம்பெறவில்லையென்று சொல்லமுடியாது. மற்றக் கொள்கையிற் சமூகத்தின் நலன், உரிமை, தேவை முதலிடம் பெறுகின்றன. இதைச் சமூக வுடைமைவாதம் (சமூக நோக்குக் கொள்கை) (Socialism) என்று கூறலாம். இக்கொள்கை ரூஷியகாட்டிலும் சீனுவிலும் செயல் முறையி லிருக்கின்றதென்று கூறப்படுகிறது. இங்கிலாந்து இந்தியா போன்ற நாடுகளில் ஒருவகைக் கலப்புமுறையே இன்றிருப்பது.

அதிகாரம் 3 குடியாட்சி
வரலாறும் அடிப்படையும்
ஆட்சியியலின் வரலாற்றிற் குடியாட்சி (சனநாயகம்) மிகவும் பிந்தித் தோன்றிய ஒன்றே. முடியாட்சியே பெரும் பாலும் பண்டைநாளில் நிலவியது. கிரேக்கநாட்டிலும் உரோமா புரியிலுங் குடியாட்சிமுறை ஓரளவிற்கு நடைமுறையிலிருந்த போதும் வாக்குரிமை ஒரு சிலருக்கே இருந்தது. பெரும் பான்மையோர் அடிமைகளாய் உரிமையற்ற வாழ்க்கையே வாழ்ந் தனர். இன்றும் பெண்களுக்கு வாக்குரிமை குடியாட்சி முறையைப் பெரும்பாலும் பின்பற்றும் சில நாடுகளில் இல்லை. பகுத்தறியும் ஆற்றலுடைய வயதுவந்தோர் யாவரும் ஆட்சியிற் பங்குபற்றுவதே உண்மையான குடியாட்சி. சமூகம் பகுத்தறி வற்றவர்களெனக் கொள்ளும் பாலவயதினரையும், பைத்தியக் காரர் என்று சட்டப்படி தீர்க்கப்பட்டவரையும் விட, ஏனையோர் யாவருக்கும் வாக்குரிமை இருந்தாலே, உண்மையிற் குடியாட்சி உண்டென்று கூறலாம். வாக்குரிமை யுள்ளவர்களும் தேசத் துரோகம்போன்ற பாரதூரமான குற்றம் செய்தால் வாக் குரிமையை இழக்க நேரிடும். இவைபோன்ற புறநடைக்குள் வராத யாவருக்கும் வாக்குரிமை இன்று பலநாடுகளிலுண்டு. மக்களாய்ப் பிறந்தவர்கள் மிருகங்களைப் போலவோ உயிரற்ற பொருள்களைப் போலவோ உரிமையற்றுப் பிறர் ஆதிக்கத்தி லிருப்பது மனித இனத்தின் தன்மானத்திற்கு முரணுன தென்பது ஒருபுறம். ஒருவன் ஏதேனும் ஒன்றைத் திறமை யாய்ச் செய்யவேண்டுமென்றல் அதில் அவனுக்கும் சோந்தை யிருக்க வேண்டும் என்பது ஒருபுறம். மற்றவர்களின் கட்டளை ஒன்றிற்காகவே செய்யுஞ் செயல் ஆர்வம் நிறைந்த செயலா யிராது. மற்றவர் கட்டளைக்குப் பயந்து வாழ்வோரிடம் பொறுப் புணர்ச்சியும் ஆர்வமும் காண்டலரிது. ஆதலால், மனித இனத்தின் தன்மானத்தைப் பேணலும் மனித வாழ்க்கையில்

Page 19
24 ஆட்சி இயல
ஆர்வமும் பொறுப்புணர்ச்சியும் இடம்பெறலும் குடியாட்சி முறையின் சிறப்புப் பண்புகள். ஒரு குறித்த பகுதியினர் என்றும் ஆட்சி செலுத்தலும் மற்ருெரு பகுதியினர் என்றும் ஆட்சிக் காளாயிருப்பதும் குடியாட்சியாகாது. குடியாட்சிமுறையிலே ஆட்சி செலுத்துவோர் ஆட்சிக்காளாவோர் சம்மதத்துடனே தான் ஆட்சிப்பீடத்தைப் பெறுகிருர்கள். யார் ஆளும் உரிமை பெறல்வேண்டுமென்றும் எவ்வகையான ஆட்சி நடைபெறல் வேண்டுமென்றும் தீர்க்குமுரிமை பொதுமக்களிடமே இருக் கிறது. இவ்வுரிமையைக் கண்ணுங் கருத்துமாய் அவர்கள் பாராட்டாது வேண்டா வெறுப்பாய் இராமன் ஆண்டா லென்ன ? இராவணன் ஆண்டாலென்ன?’ என்றிருப்பார்க ளெனின் அதனல் வரும் ஊழல்களுக்கு அவர்களே பொறுப் பாளிகள். கைக்கூலிக்கோ சாராயத்துக்கோ தம் வாக் குரிமையை விற்றுவிட்டு ஆட்சியாளர் அது செய்யவில்லை ; இது செய்யவில்லை? யென்று குறைகூறி வருந்துவதிற் பய னில்லை. பொதுமக்கள் ( வாக்காளர்) தம் பொறுப்பை புணர்ந்து உண்மையில் தகுதியுள்ளவர்களென்று தாம் நம்பு வோரைத் தெரிந்து ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் ஒப் படைத்தால்மட்டுமே குடியாட்சி திறம்பட நடைபெறும்.
நம்பித் தெரிந்தவர்களைப் பற்றி ஏமாற்றம் அடைய நேர்ந் தாற் பெரும்பாலும் அடுத்த தேர்தல் வரும்போது வேண்டிய பாடம் படிப்பிக்கலாம். அதுவரையும் ஒன்றுஞ் செய்யாதிருக்க வேண்டியதில்லே. பத்திரிகை வழியாகவும் பொதுக்கூட்டங் களிலும் ஆட்சிப் பீடத்தின் குறைகளை யாவருக்குக் தெரி விக்கலாம். குடியாட்சி முறைக்கு ஆணித்தரமான அடிப்படை, பொதுமக்கள் செல்வாக்கு. ஆட்சிப் பீடத்தி லிருப்பவர்களும் அங்குபோக விரும்புகிறவர்களும் பொதுமக்கள் விருப்பத் தைப் புறக்கணித்து நடத்தல் முடியாது. ஆதலால், முறைதவறி நடக்கும் ஆட்சியாளருடைய குறைகளைச் சலிப்பின்றிப் பொது மக்கள் அவதானத்திற்குக் கொண்டுவந்துகொண்டிருத்தல் குடியாட்சிக்கின்றியமையாதது. பொதுமக்கள் எதனை விரும்பு கிருர்களோ எதனை ஆதரிக்கிறர்களோ அதுவே குடியாட்சி யில் ஈற்றில் வெற்றிபெறும். ஆனல், இதற்குக் காலஞ் செல் லும். காலஞ் ச்ெல்வது குறையென்றும் கொள்வதற்கில்லை. உடன் தோன்றும் ஆத்திரத்தைக்கொண்டு நன்மை தீமை அளவிடல் சரியாகாது. ஆய்ந்து ஓய்ந்து சரியிழை காண்டலே வேண்டப்படுவது. ஒருபோது நாம் ஆத்திரத்தின்பேராற்

குடியாட்சி 25
பிழையென்று கொண்ட ஒன்று, ஆராய்வின் பிறகு பிழை யன்று எனத் தெளிதல்கூடும். குடியாட்சி, நோயுற்ற உறுப்பை அகற்றிவிடும் சத்திர வைத்தியத்தைப் போன்றதன்று. நாட் செல்லச் செல்லச் சிறிது சிறிதாகக் கூடிக் கூடிப் பயன்தரும் நடைமருந்துபோன்றது.
வாக்காளருக்கும் பொறுப்புணர்ச்சி கூடக் கூட, ஆட்சி யியல்ஞானம் கூடக் கூட, ஆட்சிமுறையும் திறமையிலும் நீதியிலும் சிறப்பெய்தும். வாக்காளர் அயோக்கியர், நீதி நியாயத்தைப் பாராட்டாதவர், அறிவிலிகள் என்ருல், இவர்கள் வாக்குகளைப் பெறுகிறவரும் ஓரளவிற்காயினும் இவர்கள் குணசீலங்களையுடையவராயே இருப்பார். வாக்காளர் யோக் கியர், பொதுநலப் பற்றுள்ளவர், நீதி நியாயத்தைப் பாராட்டி வாழ்பவரென்ருல் அவர்கள் தெரிந்தெடுப்பவரும் பெரும் பாலும் இப் பண்புகள் பொருந்தியவராய்த்தானிருப்பர். பல தடவைகளிற் சில குறித்த கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகி கள் சுயநலப்புலிகளென்றும், அயோக்கியரென்றும் இச் சங் கங்களேச் சேர்ந்தவர்கள், குறைகூறுவதைக் கேட்டிருக் கிருேம். அவர்களை நாம் திருப்பிப் பின்வரும் கேள்விகளைக் கேட்பது வழக்கம். இவ்வயோக்கியர், தம்மைத் தாம் தெரிய வில்லையே. யோக்கியர் இவர்களைத் தெரிந்திருப்பார்களா ? அயோக்கியர் தெரிந்தபடியினுலேதான் அயோக்கியர்கள் தெரிவுசெய்யப்பட்டனரா ??
தகுதிவாய்ந்தவர்களைத் தெரிதலும், தம் குறைநிறைகளைச் சலியாது ஆட்சிப் பீடத்திற்கு இடித்துக் கூறுவதும் தாம் தெரிந்தனுப்பியவர்கள் முறை தவறும்போதெல்லாம் அவர்கள் குறையை வெளி வெளியாய்க் கண்டிப்பதும் வாக்காளர் கடன். பகுத்தறிவு கூடக்கூட இக்கடமையை வாக்காளர் திறம் படச் செய்தால் குடியாட்சியுந் திறம்படக் கடமையாற்றும்.
பிரதிகிதித்துவம்
குடியாட்சியென்பது ஒரு குறித்த நாட்டின் பொதுமக்கள் தம்மைத்தாம் ஆள்வதே. இங்கு யாதேனும் ஒருநாட்டில் வாழும் பல நூறயிரம் மக்கள் தம்மைத்தாம் எப்படி ஆளமுடியுமென்ற கேள்வி தோன்றும். பண்டை நாளில் (கு மை (குடியுரிமை) (Citizenship) உள்ளவர்கள் ஒரு சிலரே. குடியுரிமை உள்ள நாடுகளில் இவர்கள் தாமே

Page 20
26 ஆட்சி இயல்
கேரில் ஆட்சி நடத்தினர். ஆனல், இன்று இம்முறை எங்காயி னும் வழக்கிலில்லை. ஒருநாட்டின் பொதுமக்கள் யாவரும் ஒன்று கூடி ஆட்சிவிடயங்களை ஆலோசித்துத் தீர்ப்பது இன் றைய நாடுகளிற் செய்யக்கூடிய ஒன்றன்று. எல்லாரும் ஒன்று கூடக்கூடிய இடமே காண்டல் அரிது. அப்படிக் காணி னும் பத்தாயிரம்பேர் ஆட்சி விஷயங்களைத் தீர்க்கமாய் ஆலோசித்துத் தீர்ப்பதென்றல் அது செய்யக்கூடிய ஒன்றன்று. ஒன்றும் நடவாமற் குழப்பமுங் கொந்தளிப்புமே பயனுய் முடியும். ஆகையால், நாட்டின் ஆட்சியிற் பங்குபற்றும் உரிமை யுள்ளோரைத் தொகுதி தொகுதியாய்ப் பிரித்து ஒவ்வொரு தொகுதியிலுள்ளவர்களுந் தம் சார்பாகப் பேசுவதற்குஞ் செயல் ஆற்றுவதற்குத் தகுதிவாய்ந்த ஒருவரைத் தெரிந்தெடுத்து அங்ங்னந் தெரிவு பெற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை விடுதலே இன்று வழக்கிலிருக்கும் முறை. இவர்களுக் தாமே நேரில் ஆட்சி செலுத்தாது இதற்கென ஒரு சிலரைத் தெரிந்து ஆட்சிப் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிடுவார். தெரிவு முறை நாட்டிற்குநாடு வித்தியாசப்படும். சில நாடுகளில் முத லமைச்சரை (முதன்மந்திரியை), சட்டக்கழகம் அல்லது பாராளு மன்றந் தெரிவு செய்யும். மற்ற அமைச்சர்களை முதலமைச்சர் தெரிவு செய்வர். ஆங்கிலநாட்டிலும் ஆங்கிலநாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகளிலுஞ் சட்டக்கழகத்திற் பெரும்பான்மை உறுப்பினரைக்கொண்ட கட்சித் தலைவரே முதலமைச்சராவர்; மற்ற அமைச்சர்களே அவர்தெரிவர். அமெரிக்காவிற் பொது மக்கள் குடிப்பதி (சனதிபதி)யாகிய குடியரசுத் தலைவரைத் தெரிவர். அவரே தமக்கு வேண்டிய அமைச்சர்களைத் தெரிவர். இத்தெரிவை மூதவை (மேற்சபை) (Senate) ஏற்றபின்னர்தான் அமைச்சர்கள் தெரிவு உறுதியாகும். சட்டக்கழகமும் அமைச் சர்களைத் தெரிவதுண்டு. இம்முறை சுவிற்சர்லாந்திற் பின் பற்றப்படுகிறது. வேறு முறைகளும் உண்டு. 1931 தொடக் கம் 1947 வரையும் இலங்கையில் நடைமுறையிலிருந்த டொனேமூர்த்திட்ட ஆட்சிமுறையில், ஆட்சிக்கழகம் ஏழு நிருவாகக் குழு(Executive Committees)க்களாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாலும் தெரியப்பட்ட தலைவர் அக்குழுவின் தலைவராகவும், அமைச்சர்களில் ஒருவராகவுங் கடமையாற்றி ர்ை. எங்ங்ணம் அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்கள் சட்டக்கழகத்திலிருந்தே பெரும்பாலுந் தெரியப்படு கின்றனர்; சட்டக்கழகத்துக்கே பொறுப்பாளிகளாய்க் கடமை ஆற்றுகிறர்கள். அவர்களே அகற்றும் உரிமை பெரும்பாலும்

குடியாட்சி 27
சட்டக்கழகத்துக்குத்தான் உண்டு. அமெரிக்காவில் அமைச் சர்கள் சட்டக்கழகத்தில் உறுப்பினராயிருத்தல்கூடாது. குடிப் பதிக்கே அவர்கள் பொறுப்பாளிகள் ; அவர்களே அகற்றும் உரிமை குடிப்பதிக்கேயுண்டு.
சட்டக்கழக உறுப்பினரைத் தெரிவது பொதுமக்கள். சட்டக்கழக உறுப்பினர்கள் அமைச்சர்களைத் தெரிவர். சட்டரீதியிலும் பெயரளவிலும் அமைச்சர்களைக் கட்டுப்படுத்தும் உரிமை யாதேனும் ஒருமுறையில் அவர்களுக்கே உண்டு. பெயரளவிலும், சட்டரீதியிலும் எனச் சொல்லப்படுவது ஏன் என்ற கேள்வி எழும். உண்மையில், முக்கியமாய் மந்திரம் (மந்திரிசபை) (Cabinet Government) ஆட்சி நடைபெறும் நாடு களில் சட்டமும் சம்பிரதாயமும் எவ்வாறிருந்தாலும் அமைச்சர் கள் சட்டக்கழகத்தைக் கட்டுப்படுத்துகிருர்களே அன்றி, அமைச் சர்களைச் சட்டக்கழகம் அல்லது பாராளுமன்றம் கட்டுப்படுத்துவ தில்லை. கழக உறுப்பினர் அமைச்சர் விரும்புவதை ஆதரியாது போனுல் மன்றத்தைக் கலைத்துப் புதுத் தேர்தல் வைக்கவேண்டி நேரிடும். இதை உறுப்பினர் பொதுவாய் விரும்பார். ஆகையால் கிலேமையை எப்படியோ சமாளிக்கவே முயல்வர். அமைச்சர்கள் புதுத் தேர்தலை விரும்பார்கள். உண்மையில் இருபகுதியாரும் ஓரளவிற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தே அலுவலைக் கொண்டு செல்வர். எப்போதாவது சமாளிக்க முடியாத முரண்பாடு அமைச்சர்களுக்குஞ் சட்டக்கழகம் அல்லது பாராளு மன்றத்துக்கும் ஏற்படுமென்ருல் அமைச்சர்களை நீக்கும் உரிமை சட்டக்கழகத்திற்கு அல்லது பாராளுமன்றத்திற்குண்டு. மேலும் இன்றைய உலகில் ஆட்சிப்பீடம் ஈடுபடும் விஷயங்கள் எண்ணிறந்தவை.
வரிவகுத்தல், அறவிடல், பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாணும் பாலும் வழங்கல், இராணுவம், கப்பற்படை, ஆகாயப் படை முதலியவற்றைப் பரிபாலித்தல், கல்விக்கு வேண்டி யன செய்தல், பலவகை ஆராய்ச்சிக்கு வேண்டியன செய் தல், தொழில் நிலையங்கள் நிறுவல், வேலையில்லாக் குறை தீர்த்தல், அனதைகள் முதிர்ந்தோருக்கு உதவிபுரிதல் போன்ற பலப்பல துறைகளில் இன்றைய ஆட்சிப்பீடம் தலையிடவேண்டி யிருக்கிறது. இவை யாவற்றையும் முற்ருய் ஆராய்ந்து தக்கதென்ன தகாததென்ன என்று சட்டக் கழக அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு வரும் அறிந்துகொள்ள அவகாசமில்லை; நேரமுமிராது. ஆதலால்

Page 21
28 ஆட்சி இயல்
பெரும்பாலும் அமைச்சர்கள் செய்வதை ஏற்பதுதான் சட்டக்கழகம் செய்வதும் செய்யக்கூடியதுமாகும். அமைச்சர் கள் முறையாக அலுவல்களை நடத்துகிருர்களென்று சட்டக் கழகம் நம்பினல் ஆமாச் சொல்லிக்கொண்டு போவார்கள். ஆணுல், நம்பிக்கை குறைந்தால் நடவடிக்கை எடுக்கும் உரிமை, சட்டக்கழகத்திற்குண்டு. அலுவல் நடந்துகொண்டு போவதையே சட்டக்கழகத்தினர் பெரும்பாலும் விரும்புவார் கள். ஆகையால் ஆட்சி அலுவலுக்கு அநாவசிய இடையூறு செய்ய விரும்பார். வேறு வழியில்லையென்ருல் அல்லது முக் கியமான ஒன்றைப்பற்றிச் சமாளிக்கமுடியாத முரண்பாடு தோன்றினுல் சட்டக்கழகம் வேண்டியதைச் செய்யும். ஆத லால் குடியாட்சி என்ருல் ஆட்சி அலுவல்கள் யாவற்றிலும் பொதுமக்கள் கலந்துகொள்கிருர்க ளென்பது பொருளன்று. யார் இதற்குத் தகுதியுள்ளவர்க ளென்று தீர்த்து இப் பொறுப்பை அவர்களிடம் விடலே பொதுமக்கள் செய்யத் தக்கது. பொறுப்பைப் பெற்றவர்கள் தம் கடமைகளைத் திறம் படச் செய்யவில்லையென்று கண்டால் அவர்களையகற்றிப் பொறுப்பை வேறுயாரிடமாவது ஒப்படைக்கும் உரிமையும் பொதுமக்களுக்குண்டு. இவர்கள் தெரிந்தனுப்பும் சட்டக் கழக உறுப்பினரும் தாமே நேரில் ஆட்சி அலுவல்களில் தலையிடுவதில்லை. தகுதி வாய்ந்தவரென்று சட்டக்கழகத்திற் பெரும்பான்மையோர் கருதும் ஒரு சிலருக்கே ஆட்சிப்பொறுப் புச் சேரும். இவர்களும் தங்கடமையை முறைப்படி செய்யத் தவறினுல் இவர்களே அகற்றிவிடும் உரிமை சட்டக்கழகத்திற் குண்டு. வாழ்க்கையிலே ஒருவன் தன் பணியாளேத்தானும் சிறு குற்றத்திற்கோ முதற் குற்றத்திற்கோ வேலையிலிருந்து நீக்குவதில்லை. அங்ங்ணமே சட்டக்கழகத்தினரும் பெரும்பாலும் அமைச்சருடன் ஒத்துழைக்கத்தான் முயல்வர். ஒத்துழைப்பது தவறென்ருே முடியாதென்ருே கண்டால் அமைச்சர் சபையை அகற்றவேண்டியதுதான்.
ஆதலால், குடியாட்சி என்பதன் பொருள் யாதெனில் பொதுமக்கள் தாமே ஆட்சியலுவல் யாவற்றையும் நடத்துவ தன்று ; இவர்கள். தெரிந்தெடுத்த சட்டக்கழகத்தினர் தாமே நேரில் ஆட்சி அலுவல் யாவற்றையும் நடத்துவதுமன்று. வேண்டிய அறிவு, அநுபவம், திறமை உள்ள ஒருசிலரிடம் ஆட்சிப் பொறுப்பைத் தாம் தெரிந்தெடுத்த சட்டக்கழக உறுப்பினர் மூலம் ஒப்படைப்பதுதான் பொதுமக்கள் உரிமையும்

குடியாட்சி 29
பொறுப்புமாகும். லாஸ்கி (Laski) என்னும் அறிஞர் குடி யாட்சி என்பது உண்மையில் (தகுதிவாய்ந்த ), ஒரு சிறு குழுவி னிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தலே, என்று கூறி used, is 5(oji (Democracy is delegated oligarchy). GLDQIth 67 i. செயலும் சிக்கனமாய்ச் சிறப்பாய் கிறைவேறுவதற்குத் தகுதி வாய்ந்த ஒருசிலர் பொறுப்பேற்று ஈடுபடலே சிறந்தமுறை. ஒரு சமூகத்திலுள்ள யாவரும் தகுதி அறிவு திறமையொன்றை யும் பாராது ஈடுபட்டாற் பலவகைக் குழப்பங்கள் ஏற்படும் ; வேலேயும் கிறைவேருது. ஆதலால், இப்பொறுப்பை ஒருசில ரிடம் ஒப்படைத்தல் தவருகாது. ஆனல், கட்டாயமாய் ஒப் படைத்தல் இருத்தல் வேண்டும். ஒப்படைப்போர், தாம் ஒப் படைத்தபடியால், அலுவல் முறையாய் கடக்கிறதோ என்று பார்த்துத் தவறுகள் தோன்றும்போது அவற்றை எடுத்துக் காட்டி எச்சரிக்கை செய்தல்வேண்டும். பொறுப்பைக் கொடுத்தபடியால் தமக்கினிக் கடமையோ உரிமையோ யாதும் இல்லை என்று எண்ணல் கூடாது. இவ்வாறே பொறுப்பை ஏற்றவர்களும் தம்முடைய வேலேதானே தாம் நினைத்தபடி யெதையுஞ் செய்துவிடலா மென்றெண்ணுது தம்மிடம் வேலையை ஒப்படைத்தவர்களுடைய விருப்பத்தையும் நோக் கத்தையும் நிறைவேற்றுவதே தம் கடமை யென்பதை மறத்தல் கூடாது. எல்லாருக்கும் எல்லாக் தெரியும் ; எல்லாருக்கும் எல்லாஞ் செய்யமுடியு மென்ற மூடத்தனமான கொள்கைக்குக் குடியாட்சித் தத்துவத்தில் இடமில்லே. அறிவு ஆற்றல் திறமை யோக்கியம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பொது மக்களுக்குண்டு. இவ்வாற்றலைக்கொண்டு ஆட்சியலுவல்களைத் திறம்படச் செய்யக்கூடியவர்களைக் கண்டுபிடித்து அவர்க ளிடம் இப் பொறுப்பை ஒப்படைக்கும் பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்குண்டு. பொறுப்பைப் பெற்றவர்கள் தம் பொறுப்பை முறையாய் நிறைவேற்றுகிறர்களோ என்று கண் காணிப்பதும் பொதுமக்கள் கடமையும் உரிமையுமாம். இவ் வாறே பொறுப்பை ஏற்றவர்கள் யோக்கியத்திலோ திறமை யிலோ தவறினல் அவர்களிடமிருந்து இப் பொறுப்பை எடுத்து வேருட்களிடம் ஒப்புவிக்கும் பொறுப்பும் உரிமையும் பொது மக்களுக்குண்டு. இவை யாவும் குடியாட்சிக்குரியன. இவை யில்லையென்ருற் குடியாட்சி இல்லை.
குடியாட்சியின் சிறப்பியல்புகள் யாவற்றிற்கும் அடிப்படை யெனத் தோற்றுவன இரண்டு. ஒன்று, ஒவ்வொரு தனி,

Page 22
3O. ஆட்சி இயல்
மனிதனையும் மனிதனய் எண்ணல். அவனது உரிமையைக கண்ணியப்படுத்தி அதற்குப் பங்கம் விளையாது பாதுகாத் தல். அவனே ஆட்சியாளரின் ஒரு கருவியாயோ, ஆட்சிப் பீடத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஒரு பொருளாயோ கொள்ளல்கூடாது. ஆட்சி உருவாயது மனிதனுக்கேயன்றி, ஆட்சிக்காக மனிதன் உருவானவனல் லன். மனிதன் சீராய்ச் சிறப்பாய் வாழ்வதற்கே ஆட்சி யமைப்பு ஏற்படுகிறது. ஆட்சி செம்மையாய் நடப்பதற்கு மனிதப் பண்புக்குப் பங்கஞ் செய்தல் தகாது.
மற்றது, மனிதன் பகுத்தறிவுள்ளவன் ; பெரும்பாலும் நன்மையெது தீமையெதுவென்று பகுத்தறியும் ஆற்றல் உடையவன் ; அவ்வறிவின்படி பெரும்பாலும் ஒழுக முயல் பவன் ; ஆதலால் மனிதனுக்கிருக்கும் இவ்வியல்பைப் பயன் படுத்தலாலே அவன் ஒத்துழைப்பைப் பெறலாம் என்னும் நம்பிக்கை ஏற்படுவது. இவ்விரண்டிலும் நம்பிக்கையில்லா தோர் குடியாட்சியிலேயும் நம்பிக்கை வையார். மேற்கூறிய இரண்டில் முந்தியது குடியாட்சி தோன்றியதற்குக் காரண மெனக் கொள்ளலாம். பிந்தியது குடியாட்சியின் செயல் முறைக் கடிப்படை. பேச்சு, எழுத்து, விளம்பரம், சுவரொட்டி கள், ஆர்ப்பாட்டங்களெல்லாம் குடியாட்சிமுறையில் இடம் பெறுகின்றன. ஏதோ ஒன்று நடக்கவேண்டுமென்று விரும்பு கிறவர்கள் சமூகத்தைத் தம்வயப்படுத்துவதற்குக் கூட்டங் களிற் பேசியும், தம் கருத்தை எழுத்துமூலம் வெளியிட்டும், வேறு முறையிற் பிரசாரஞ் செய்தும் தம் கொள்கையைப் பிறர் ஏற்பதற்கு முயற்சி செய்வார்கள். இக் கொள்கையை எதிர்ப் போரும் இதே முறைகளைக் கையாண்டு தம் கருத்தைச் சமூகத்திற் பரப்ப முயல்வர். மனிதன் பகுத்தறிவுள்ளவன் ; நன்மை தீமையை அறிந்து தன் அறிவின்படி ஒழுகக்கூடிய வன் ; யார் சொல்வதையுங் கேட்டு, கொள்ளத்தக்கதைக் கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளும் ஆற்றல் படைத்தவ னென்று நம்பாதுபோனல் மேற்கூறிய முயற்சியில் எவரும் ஈடுபடார்.
எவ்வகை ஆட்சி என்றலும் தனியே பலாத்காரத்திலும் கட்டுப்பாட்டிலும் தங்கியிருத்தல் முடியாது. ஆட்சி செலுத்து வோர் தாம் ஆளும் மக்களின் இணக்கத்தைப் பெற்றே ஆட்சி செலுத்த முயல்வர். இதனுலேதான் எல்லா ஆட்சி

குடியாட்சி 31
முறையிலும் பிரசாரம் முக்கிய இடம்பெறுகிறது. சர்வாதிகார நாடுகளும் பெருக்தொகைப் பணத்தைச் செலவிட்டுத் தீவிர பிரசாரஞ் செய்வதும் இதனுலேயே. சர்வாதிகாரிகள், தாம் பிரசாரஞ் செய்வாரேயன்றித் தம்மை எதிர்ப்பவர்களேப் பிர சாரஞ் செய்ய விடமாட்டார்கள். குடியாட்சியில் யாவரும் தம் கருத்தைப் பரப்ப, பிரசாரஞ் செய்ய இடமுண்டு. யாவரும் சொல்வதைக் கேட்டுத் தம் பகுத்தறிவுக்குச் சரியெனத் தோன்றுவதை வாக்காளர் ஆதரிப்பரென்னும் நம்பிக்கை குடி யாட்சிக் கடிப்படை. ஆகையாற் குடியாட்சியை இணக்கமுறை யாட்சியென்றுங் கூறலாம். ஆட்சிப்பீடம் மக்களின் இணக் கத்தைப் பலாத்காரமின்றிப் பெற்று நடத்தும் ஆட்சியென் பதே குடியாட்சியென்பதன் பொருள். இதை ஆங்கிலத்தில் Democracy is Government by Persuasion 676örgy 36). Op 6)Jif.
பெரும்பான்மை
எதைப்பற்றித்தானும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாவரும் ஒரே கருத்தைக் கடைப்பிடியார்கள்; எத்துறையிலும் கருத்து வேற்றுமை கட்டாயமாய் இருக்கும். உடை, உணவு, ஆட்சியியல், சமூகவியல் என்று எதைத்தான் பார்த்தாலும் யாவரும் ஒரே கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லையென்பது கண்கூடு. ஆகையால், குடியாட்சி முறையைப் பின்பற்றும் நாடுகள் ஈடுபடும் எதற்காயினும் நூற்றுக்கு நூறுவீதம் சமூக ஆதரவு இருக்குமென்று எதிர்பார்ப்பதில்லை. கூடிய தொகை யினர் ஏற்பதைச் செய்வதே முடியும் முடிபாகும். ஆதலால், குடி யாட்சி யென்பது பெரும்பாலும் ஒரு சமூகத்திற் கூடிய தொகை யினர் விரும்பும் அல்லது ஏற்கும் ஆட்சியேயாம். இதைவிட யாதும் செய்வதற்கில்லே. இது பரிபூரணமான ஒருமுறையன்று.
வாழ்க்கையிற் பரிபூரணமுள்ள எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. எதைச் செய்தாலும் எதைப் பார்த்தாலும் நன்றுந் தீதுங் கலந்ததாகவே இருக்கும். ஆதலாற் பரிபூரணம் என்ற ஒன்று, இவ்வுலக வாழ்க்கையிற் கைகூடாதென்பதை முன்னதாகவே அறிந்துகொள்வது நன்று.
குடியாட்சியென்பது எங்கும் பெரும்பான்மையினரின் ஆட்சியேயென்னும் நியாயத்தாற் பலர் குடியாட்சியைக் கண்டித் திருக்கின்றனர். எச் சமூகத்தை நோக்கினும் அதில் விவேகிகள் சிலரும் விவேகங் குறைந்தவர்கள் பலரும் இருப்பார்கள்.

Page 23
83 ஆட்சி இயல்
பாடசாலைத் தேர்வுகளின் பலாபலனை நோக்குமிடத்து சித்தி பெறுவோர் சிலர் ; பெருது இருப்பவர் பலர். முதலாம் வகுப்பிற் சித்திபெறுவோர் மிக மிகச் சிலரே. ஆதலால் விவேகிகள் சிறுதொகையினரென்பதும், விவேகங் குறைக் தோரே பெரும்பான்மையரென்பதும் தெற்றெனப் புலப்படும். இதிலிருந்து ஆட்சியியலில் நடைபெறும் பெரும்பான்மை யாட்சி விவேகங் குறைந்தோரின் ஆட்சியேயென்றும், அத னல் குடியாட்சி எவ்விடத்தும் எப்பொழுதும் விவேகங் குறைந்தோரின் ஆட்சியே என்றும் பலர் அநுமானித்துவிடுகின் னர். இதற்கு மூன்று மறுப்புக்கள் உள. முதலாவதாகக் குறித்த அநுமானம் தருக்க ரீதியான அநுமானம் அன்று. ஒவ்வொரு தேர்தலிலும் விவேகிகள் யாவருந் தோல்வியுறுங் கட்சியை ஆதரிக்கின்றனரென்றும், விவேகங் குறைந்தவர்கள் யாவரும் வெற்றிபெறுங் கட்சியை ஆதரிக்கின்றனரென்றும் நிரூபித்தாற்ருன் மேற்கூறிய அநுமானம் தருக்கநூல் விதிக் கமைந்ததென்று கொள்ளலாம். எத் தேர்தலிலாவது உண்மை யில் இப்படித்தான் நடக்கிறதென்று சொல்ல யாருக் துணி யார். இரண்டாவதாக, ஆட்சியின் நோக்கம் விவேகிகள் வேண்டியதைச் செய்வதுமன்று ; விவேகிகளுக்கு மாத்திரம் வேண்டியவற்றைச் செய்வதுமன்று. ஆட்சியால் வரும் நன்மை தீமைகள், விவேகிகள் விவேகமற்றவர்கள் என்ற வேற்றுமை யில்லாமல் நாட்டுமக்கள் யாவரையுஞ் சேரும். மனிதருக்குத் தமக்கு வர இருக்கும் நன்மை தீமைகளைப் பற்றி எது வேண் டும் எது வேண்டாமென்று சொல்லும் உரிமை, விவேகம் விவேகக்குறைவை ஒட்டிவரும் ஒன்றன்று. மனிதனுயிருக்கிற படியால் வரும் உரிமையே இது. தேர்தலில் தீர்க்கப்படு வது எது சரி, எது பிழையென்பதன்று ; எதைப் பெரும் பான்மையான மக்கள் ஆதரிக்கிறர்கள் என்பதே. மேலும் பெரும்பான்மையினரின் ஆதரவைவிட்டு அதன் இடத்தில் வேறெந்த ஆட்சிமுறையைக் கொள்ளலாம் என்பதும் ஆராயத் தக்கது. தனியாட்களுடைய சர்வாதிகாரத்தை விரும்பாதாருக் குப் பெரும்பான்மையினரின் ஆட்சியைக் கைவிடல் முடியாது. எச் சமூகத்திலாவது பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெருத எதுவும் நிலைக்காதென்பதும் இத்தொடர்பில் நோக்கற்பாலது. மூன்ருவதாக விவேகிகளின் ஆட்சியை எங்ங்ணம் கிறுவலாமென்ற கேள்விக்கு விடைகாண்பது இலகு வன்று. விவேகிகள் சிலரென்றும், விவேகமற்றவர்கள் பல ரென்றும் கொண்டால் குறித்த விவேகிகள் ஆட்சி நடத்துவ

குடியாட்சி 33
தாயின் எங்ங்னமோ விவேகம் குறைந்த பெரும்பான்மையின ரின் ஆதரவைப் பெறல்வேண்டும். பெரு விடின் ஆட்சி நடத்து வது முடியாது. ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் விருப் பத்திற்கு இவர்கள் இணங்குதல் வேண்டும். அப்படி யினங் கும்போதே தம் விவேகத்திற்கு முரணன பலவற்றைச் செய்ய நேரிடும். இப்படி இவர்கள் பெரும்பான்மையோரின் விருப் பத்திற்கு விட்டுக்கொடுத்தலே, பெரும்பான்மையினர் ஆதரவும் செல்வாக்குமின்றி ஆட்சி நடத்தமுடியாதென்பதற்குச் சான்ற கும். அப்படியாயின் பெரும்பான்மையினரின் ஆதரவுள்ள ஆட்சியே அது. தனியாட்களுடைய சர்வாதிகாரம் வேண்டா தோர் குடியாட்சியைவிட வேறெதையும் ஆதரிக்கமுடியாது. பெரும்பான்மை ஆட்சியைக் கடைப்பிடிப்பதற்கு இன்னுமோர் முக்கிய கியாயமுண்டு. யாருக்காவது இதுதான் செய்ய வேண்டியது, மற்ற யாவும் தவிர்க்கவேண்டியன” என்னும் முடிவுகட்டிவிட ஆற்றலில்லே. அப்படித்தான் இவ்வாற்றல் யாருக்காவது இருந்தபோதிலும் அவருக் கிவ்வாற்றலிருக்கிற தென்று மற்றவர்கள் ஏற்றுக்கொண்டாற்ருன் ஆட்சியில் அது பயன்படும். அங்ங்னம் ஏற்பதும் அரிது. ஆகையாற் கொள்ள வேண்டியது, தள்ளவேண்டியதைப் பற்றி எப்போதும் மக்க ளிடங் கருத்துவேற்றுமை யிருக்கிறபடியாலும், அதனைத் தீர்த்து வைப்பதற்குப் பெரும்பான்மை முறையைவிட வழி வேறு இதுவரையில் உருவாகாதபடியாலும், பெரும்பான்மையினரின் கருத்தின்படி ஆட்சி நடத்துவதே அநுபவத்திற்கும் அறிவிற் கும் பொருத்தம்போற் காணப்படுகின்றது. இங்கு பெரும் பான்மை என்றது நிரந்தரமான - என்றும் மாரு த - பெரும் பான்மையன்று ; அதாவது இனம், சமயம், மொழி போன்ற வற்றின் பெரும்பான்மையன்று ; கட்சிப் பெரும்பான்மையாயும் இருக்கவேண்டியதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறித்த விடயத்தை ஆராய்ந்து யாவரும் ஏற்கும் முடிவுக்கு வரமுடியா விட்டாற் பெரும்பான்மையினரின் தீர்ப்பை ஏற்பதே இங்கு கருதப்படுவது.
பெரும்பான்மை என்றதன் பொருள் ஆட்சி இயலில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற சொற்களுக்கு இடத்திற்கேற்ப வெவ்வேறு பொருள்கள் உள. பெரும்பான்மை ஆட்சி என்ற தொடரில், கட்சி முறையில் அல்லது கொள்கையிற் பெரும்பான்மை என்பதே கருத்து,
ベ3%ー3

Page 24
34 ஆட்சி இயல
ஒருநாட்டில் ஆட்சித் துறையில் வெவ்வேறு கொள்கையுள்ள இரண்டோ இரண்டிற்குக் கூடிய கட்சிகளோ இருந்தால் தொகையிற் கூடிய மக்களின் ஆதரவைப் பெறும் கட்சியின் ஆட்சியோ கட்சிகளின் கூட்டாட்சியோ (Coalition) நடைபெறு வதுதான் முறை. இன்று ஆட்சி செலுத்துங் கட்சி, நாளை வலி குறைந்து எதிர்க்கட்சியாய் மாறுதல்கூடும். இன்று எதிர்க் கட்சியாயிருப்பது நாளை ஆட்சிக் கட்சியாய் மாறும். கட்சிக ளுக்கு ஆதரவு கூடுவதும் குறைவதும் இயல்பே. ஆயினும் பகுத்தறிவுள்ளவர் கட்சிப் பலம் ஒன்றையே பாராட்டி ஆட்சி நடத்துவதில்லை. நாளே என்ன நடக்கும்? என்பதையுங் கருத் தில் வைப்பர் ; பொதுமக்கள் ஆதரவு எம்மட்டென்று ஊகித் தறிய முயல்வர். பொதுவாக, நாகரிகமுள்ள மனித வர்க்கம் தம் செயலை ஆதரிப்பாரோ கண்டிப்பாரோ என்றெல்லாம் சிந்திப்பர். ஆட்சி அனுபவமுள்ள நாடுகளில் ஆட்சி நடத்து வோர் உலகத்தின் கல்லெண்ணத்தை இழக்கக்கூடிய முறை யில் ஆட்சி செலுத்தப் பின் நிற்பர். புதுப்பணம் படைத்தவர் போல் புதிதாய் ஆதிக்கம் பெற்றவர்களும் கட்சிப் பலமொன் றையே கம்பித் தறுகுறும்பு செய்யக்கூடும். காட்டிற்கு வேண்டிய தைச் செய்தலே ஆட்சியின் நோக்கமானபடியால் இடை யிடையே ஆட்சிக் கட்சி எதிர்க்கட்சியுடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதும் உண்டு. கட்சிப்போக்குக்கும் சில கியதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. அவற்றைப் பேணி ஒழுகலே நாகரிக நாடுகளின் மரபு.
கட்சி வேறுபாட்டைவிடப் பல நாடுகளிற் பல வேறு பாடுகளும் உள. மொழி, இறைவழிபாடு, இனம், நிறம் போன்றவையை ஒட்டிய வேறுபாடுகளும் உள. இவற்றின் ஒன்றை ஒட்டிப் பெரும்பான்மை சிறுபான்மை வகுத்து ஆட்சி யையும் அதன்பாற்பட்டவற்றையும் அமைத்தல் ஆட்சி நூலார் ஏற்கும் ஒன்றன்று. மாறிமாறி வரும் பெரும்பான்மை சிறு பான்மை வேறு ; மாருது நிலைத்திருக்கும் பெரும்பான்மை சிறு பான்மை வேறு. ஒருநாட்டு மக்களின் பெரும் தொகையினர் வெண்ணிறமுடையவரும் ஏனையோர் கருநிறமுள்ளவர்களு மென்ருல் வெண்ணிறமுள்ளோர் என்றென்றும் ஆட்சி செலுத்தும் உரிமை உடையவர் என்பது குடியாட்சிக்குரிய பெரும்பான்மை ஆட்சிக் கொள்கையைத் தழுவியதாகாது. அல்லது ஒருநாட்டு மக்களிற் பெருந்தொகையினர் ஒருமொழி யைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் ஏனையோர்

குடியாட்சி 35
பிறிதோர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் என்ருற் பெரும்பான்மையோருக்கு என்றென்றும் ஆட்சி யுரிமை யிருக்கவேண்டுமென்பது குடியாட்சிக்கொள்கையன்று பெரும்பான்மையினர் தம்மொழியைச் சிறுபான்மையரிடம் திணிப்பதும் குடியாட்சிக்கு முரண்பாடானது. ஒரு சமயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோரும், வேறு சமயங்களைப் பின்பற் றுஞ் சிறுபான்மையினரும் ஒருநாட்டில் இருப்பின் பெரும் பான்மையினர் தம் சமயத்தை யாவரும் பின்பற்றல் வேண்டு மென்று சட்டம் வகுத்தலும் குடியாட்சியாகாது. பெரும் பான்மையாட்சி - ஆட்சியியலிலே கருத்து வேற்றுமை ஏற்படும் போது அதைத் தீர்ப்பதற்குக் கையாளும் முறையே அன்றிப் பெரும்பான்மையினர் சிறுபான்மை இனங்களையோ சமயங் களையோ என்றென்றும் தாம் எண்ணியபடி நடத்தலாம் என்பதன்று. பலநாடுகளில் மொழி, சமயம், இனம் ஆகிய வற்றிற் பெரும்பான்மையினரிலிருந்து வேறுபடும் சிறுபான்மை யினர் இருக்கின்றனர். சிறுபான்மையினரின் சமய உரிமை, மொழியுரிமை, இன உரிமை போன்றவற்றிற்கு யாரும் பங்கம் விளேயாமுறையில், சட்டக் கட்டுப்பாட்டுடன் அவை பேணப் பட்டிருப்பதை நாம் பல நாடுகளிற் காண்கிருேம். சுவிற்சர் லாந்து, பெல்ஜியம், கனடா போன்ற நாடுகளில் வாழும் வெவ் வேறு இனங்களுக்கும் தம் சுயமொழியை ஆட்சித்துறையில் உபயோகிக்கவும், தமது பரம்பரை வழக்கங்கள் சமயங்கள் போன்றவற்றைப் பின்பற்றவுஞ் சட்டப்படி உரிமை இருப்பதை யாவரும் அறிவர். சுயாதீன நாடுகளின் குடியுரிமையுள்ள யாவரும் தலே நிமிர்ந்து நடப்பதே குடியாட்சி முறைக்குப் பொருத்தம். ஒரு குறித்த மொழியையோ, சமயத்தையோ இனத் தொடர்பையோ கொண்டவர்கள், தாம் என்றென்றும் ஆட்சிபுரியும் உரிமையை கடத்துவதற்கு வழிகோலல் குடி யாட்சிக்கு நேர்மாருனது. சட்டப்படி சிறுபான்மையினரின் உரிமைகளை வகுத்து, அவற்றிற்குப் பங்கம் ஏற்படும்போது நீதிமன்றங்களின் மூலம் சிறுபான்மையினர் தம் உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சீர்திருந்திய நாடுகள் தம் ஆட்சியமைப்பிற் திட்டம் வகுத்திருக்கின்றன. சட்டம் என்பது தானுய்த்தோன் றும் ஒன்றன்று. சமூக கலனுக்கு யாதோ ஒன்று வேண்டும்; அதை வரையறுத்தல் வேண்டும்; அதை மீறி நடப்போரைத் தண்டித்தல் வேண்டும் என்றெல்லாம் ஒருநாட்டு மக்களிற் பெரும்பான்மையினர் உணர்ந்தால் உரிமை, கடமை, தண்டனை

Page 25
36 ஆட்சி இயல்
ஆகியவற்றை வரையறுத்துச் சட்டம் ஆக்குவர். பெரும் பான்மையோர் ஆதரிக்காச் சட்டம் செயற்படாது. ஆதலாற் சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கச் சட்டம் தோன்ற முன், சிறுபான்மை மக்களுக்கும் உரிமைகள் உள; அவர் களும் தன் மானத்துடன் வாழல்வேண்டும்; அவர்கள் உரிமை களே வரையறுத்தல் வேண்டும் என்றும், அவற்றை மீறு வோரைத் தண்டித்தல் வேண்டும் என்றும் உணர்ச்சி தோன் றல் வேண்டும். இவ்வுணர்ச்சியே சட்டம் தோன்றுவதற்குக் காலாயிருக்கும். இவ்வுணர்ச்சி தோன்றி வளர்ந்து செல்வாக் குப் பெற்றுச் சட்டரூபமாய்க் காட்சியளிக்கச் சிலநாடுகளிற் காலமெடுக்கும்.
ஆனல், இங்ங்னம் சட்டம் வரும்வரையும் சிறுபான்மை யினருக்கு மன ஆறுதல் இராது. ஆட்சியாளர் தங்களுக்கு நீதி வழங்கவில்லை என்று, என்றென்றும் மனம் நொந்துகொண் டிருப்பர். ஆட்சிப்பீடத்திற்கும் தீராத்தொல்லையிருக்கும். நாட்டின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் சிறுபான்மையினர் முட்டுக் கட்டையாயிருப்பர். அநீதிக்காளாகும் மக்களுக்கு காட்டுப் பற்றிராது ; காட்டின் வளர்ச்சியிற் பற்றிருக்காது; நாட்டின் உயர்வு, இழிவிற் தமக்கும் பங்குண்டென்ற உணர்ச்சி வராது. ஆகையாற் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பேணுது அவற்றிற்குப் பங்கம் விளைப்போர் சிறுபான்மையினருக்கு மாத்திரம் தீங்கு செய்பவரல்லர். அவர்கள் செயல் நாட்டிற்கே துரோகமாய் விளையும்.
பிரதிநிதி ஆட்சி
இன்று உலகில் உள்ள குடியாட்சி நாடுகளி லொன்றிலா வது அந் நாட்டு மக்கள் எல்லோருந் தாமே நேரில் ஆட்சியிற் பங்குபற்றுவதில்லை. அப்படி ஈடுபடுவது செய்யக்கூடிய ஒன்றன்று. இதை முன்பே காட்டியிருக்கிருேம். பெரும் பாலான நாடுகளில் பலநூருயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் வயதுவந்த யாவருக்கும் வாக்குரிமையுண்டு. இவர்கள் யாவரும் ஒருங்குகூடி ஆட்சி நடத்துவது நினைக்க வும் முடியாத ஒன்று. இந்தியா, சீனு, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் யாவரும் ஓரிடத்தில் வந்து கூடுவ தென்ருல் இவர்களைக் கொள்ளக்கூடிய இடம் காண்டலே அரிது. எங்ங்னமோ வந்து கூடினுலும் கூடிய சனசமுத்திரம்

குடியாட்சி 37
யாதாவது செய்யமுடியுமென் றெண்ணுவதற்கிடமில்லை; குழப்பமும் கொந்தளிப்புமே தோன்றும். இந்நாடுகளை ஒருபுறம் விட்டு மிகமிகச் சிறிய நாடுகளாகிய மெனுக்கோ (Monacco) இலக்சம்பேக் (Luxembourg) போன்ற நாடுகளிலும் மக்கள் யாவரும் நேரே ஆட்சி நடத்தல் முடியாது. மற்றென்ன. தான் இல்லாது போனுலும் ஆட்சி திறம்பட நடப்பதற்கு ஆலோசனை வேண்டும். ஆலோசனைக்கு அமைதி வேண்டும். பெருஞ் சனத்திரள் கூடும்போது அமைதி ஏற்படாது. பெருஞ் சனத்திரள்கள் செயலுக்குமுதவா. செயலாற்றுவதற்கு வேண் டிய பயிற்சியும், அறிவும், திறமையும் உள்ள சிலரைக் கொண்ட குழுவே செயலாற்றுவதற்குச் சிறப்பாய் வேண்டி யது. இதுபோன்ற நியாயங்களால் நேர்க்குடியாட்சி (Direct Democracy) என்பது இன்றில்லை. நாட்டைத் தொகுதி தொகுதியாய்ப் பிரித்துத் தொகுதி மக்கள் ஒருவரைத் தெரிந்து ஆட்சிக்கழகத்திற் கனுப்பி அவர் மூலம் ஆட்சியிற் பங்குபற்றுவதே இன்று கைக்கொள்ளும் முறையாகும். இம் முறையை மக்கள் கண்டுபிடித்ததே ஆட்சியியல் வரலாற் றில் மிக மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி என்று ஆட்சியியல் வல்லுனர் பலர் கருதுகின்றனர். இதைக் கண்டுபிடியாவிட் டாற் குடியாட்சியே செயலாற்றமுடியாமல் அழிந்துபட்டிருத் தல் கூடும். இங்ங்ணம் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதியின் (Representative) பொறுப்பென்ன? கடமையென்ன? உரிமை யென்ன? இவர் தம்மை அனுப்பிய தொகுதியின் தேவைகளை எடுத்துக் காட்டித் தொகுதிக்கு வேண்டியவற்றைச் செய் வித்தல் இவரது பொறுப்பென்று யாவரும் ஒத்துக்கொள்வர். இதற்குமேல் இவர் பொறுப்பென்ன? தம்மையனுப்பிய தொகுதியின் விருப்பத்தின்படி யாவற்றிலும் ஒழுகவேண்டுமா? தொகுதி மக்கள் சொல்லும்படி எப்போதும் வாக்களிக்க வேண்டுமா ? தமது தொகுதியின் நலனுக்கும் பொதுவாக நாட்டின் நலனுக்கும் முரண்பாடு வரும்போது இவர் என்ன செய்யவேண்டும்? உதாரணமாக, சீமேந்துத் தொழிற்சாலை ஒன்று நிறுவ முயற்சிகள் நடக்கின்றன. இவர் தொகுதியில் அதனை நிறுவினுல் அத் தொகுதி மக்களுக்குப் பிழைப்புக்கு வழியுண்டாகும். வேருே ரிடம் கப்பல், புகைவண்டி, விமானப் போக்குவரத்து வசதிகள் உள்ள இடமாயிருக்கும். பிந்திய இடத்தில் அமைத்தால் நாட்டிற்குக் கூடிய பயன் உண்டாகும். அல்லது இவர் தொகுதியில் உள்ளவர்

Page 26
38 ஆட்சி இயல்
களில் அநேகர் சட்டவிரோதமாய் அபின் கஞ்சா வியாபா ரத்தில் ஈடுபட்டுக் கொள்ளை இலாபமெடுக்கிறவர்களென்று வைத்துக்கொள்வோம். ஆட்சிப்பீடம் இதைத் தடுப்பதற்குத் திட்டம் வகுக்கிறது. தொகுதியிலிருந்து செல்வாக்குள்ள தூதுக்கோஷ்டி ஒன்று வந்து இம் முயற்சியை இவர் எதிர்க்க வேண்டுமென்று வற்புறுத்துகிறது. இவர் கடமையென்ன? ஒரு தொகுதியின் பிரதிநிதியானபடியால் யாவற்றிலும் தன் பகுத்தறிவின்படி செய்யாது தன் தொகுதி வாக்காளரின் சொல்லின்படி நடத்தல்வேண்டுமா?
இங்கிலாந்திலே பிறிஸ்தல் (Bristol) என்ற நகரின் வாக் காளருக்கும், ஆட்சியியலிலே உலகப்பிரசித்திபெற்ற மேதை யான எட்மன் பேர்க் (Edmund Burke) என்பவருக்கும், இதைப் பற்றி ஆட்சியியல் வரலாற்றிலேயே இடம்பெற்ற, ஒரு வாக்கு வாதம் நடந்தது. பிறிஸ்தல் மக்கள் தம் பிரதிநிதியான பேர்க்குக்குப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் ஒன்றைப் பற்றி எங்ங்ணம் நடந்துகொள்ளல்வேண்டும், எதைத் தம் வாக் கால் ஆதரிக்கவேண்டுமென்றும் வற்புறுத்தினர். பேர்க், அவர்க ளுக்குச் சொன்ன பதிலே இதைப்பற்றி ஆராய்ந்த அறிஞர் பலராற் பராட்டப்பட்டிருக்கிறது. தொகுதி மக்களே, பிரதிநிதி யைத் தெரிந்தாலும் நாட்டை ஆளும் பொறுப்பிற்காகவே அவரைத் தெரிவு செய்வதென்றும், தெரிவுசெய்த பிரதிநிதி தொகுதியின் நலனே மாத்திரம் பார்க்கவேண்டுமென எதிர் பார்ப்பது முறையன்று என்றும் (தொகுதிப் பிரதிநிதிகள் தத்தம் தொகுதி நலனையே பார்த்துக்கொண்டிருந்தால் நாட் டின் நலனை நோக்க யாரும் இரார்), ஒருவரைப் பிரதிநிதி யாய்த் தெரிவது வாக்காளரின் கருத்தையறிந்து பாராளு மன்றத்திற் சமர்ப்பிப்பதற்கன்று என்றும், தெரிந்தவர் தம் பகுத் தறிவின்படி பாராளுமன்றத்தில் கடப்பவற்றை ஆராய்ந்து தம் மனச்சாட்சியின்படி தமது வாக்கைக் கொடுக்கும் உரிமையுடைய வரா யிருத்தல்வேண்டுமென்றும் அவர் எடுத்துக் கூறினர். பிரதிநிதி (Representative) * வேறு ; பேராளர் (பதிலாளர் - Delegate) வேறு. பிரதிகிதி யென்பவரை ஒரு தொகுதி
* -gi SadigGal) Representative, Delegate at 657 p. gutairG சொற்களுக்கும் தமிழிற் பிரதிகிதி யென்ற சொல் வழக்கிலிருக் கிறது. இரு ஆங்கிலச் சொற்களுக்கும் வேற்றுமையுண்டு. ஒரு தொகுதியின் வாக்காளர் தெரிந்து சட்டக் கழகத்திற்கு அனுப்பு கிறவர்தான் பிரதிநிதி (Representative) ஆவர். தொகுதியின்

குடியாட்சி 39
மக்களோ வேறு யாரோ தெரிந்தபோதிலும் சமயோசிதமாய்ச் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தன் பகுத்தறிவின்படி ஒழுகும் உரிமையுடையவர். யாவற்றிலும் தெரிவு செய்தவர்களின் அனு மதியின்படியே ஒழுகவேண்டிய நிர்ப்பந்தம் பிரதிநிதிக்கில்லை. பெரும்பாலும் தெரிவுசெய்வோருக்கும் பிரதிநிதிக்கும் கருத்து வேற்றுமையிருக்கும். ஒவ்வொரு தனித்தனி அலுவல்களிலும் தெரிவுசெய்வோரை உசாவி அவர் கருத்தையறிந்து அதன் படி ஒழுகவேண்டிய கிர்ப்பந்தமிருக்குமென்ருல், அறிவாற்றல், தன்மானம் உள்ள எவரும் பிரதிநிதியாய்க் கடமையாற்ற முன்வருவாரோ என்பதும் ஐயம். மேலும் சட்டக்கழகத்தில் கடக்கின்ற யாவற்றையும் உடனிருந்து அறிகிறவரே குறித்த ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்யவேண்டுமென்று அறிவர். இப்படித்தான் செய்யவேண்டுமென்று சொல்லும்போது குறித்த விடயத்தில் என்னென்ன மாற்றங்கள் அடுத்த காளிலோ அடுத்த மணித்தியாலத்திலோ நிகழுமென்று யாரு மறியார். மாற்றம் நிகழும்போது இவர்கள் சொன்னபடி செய் வது பொருளற்ற செயலாய் முடிதல்கூடும்.
தேவைகளிற் கண்ணுேட்டஞ் செலுத்துவது அவர் கடமையாயினும் இவரை வாக்காளர் இன்னதுதான் சொல்லவேண்டு மென்ருே செய்யவேண்டுமென்ருே கட்டுப்படுத்துவதில்லை ; கட்டுப்படுத்த முடியாதென்றுஞ் சொல்லலாம். தம் பகுத்தறிவிற்கும் மனச்சாட் சிக்கும் ஏற்றபடி யொழுகலாம்.
பேராளர் (Delegate) என்பவருக்கு ஒரு தொழிற் சங்கமோ வேறுயாரோ தாம் சொல்வதையே சொல்லவோ செய்யவோ அதிகாரம் வழங்கும். இவர் பெறும் அதிகாரம் L 6) 6, 16065 யிலும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம். ஒரு குறித்த கருமத்திற்கோ சம்மேளனத்திற்கோ தான் இவர் அதிகாரஞ் செல்லும். கருமமோ சம்மேளனமோ முடிவுற்றதும் இவர் அதிகாரமும் முடிந்துபோம். அதிகாரங் கொடுத்தவர்கள் வரையறுக்கும் எல்லேயை இவர் மீற முடியாது. தமது பகுத்தறிவையோ மனச்சாட்சியையோ தெரிவு செய்தபின் குறித்த அலுவலிற் பயன்படுத்தல்முடியாது. Delegate என்ற சொல்லிற்கும், Representative என்ற சொல்லிற்கும் பிரதிநிதி யென்று தமிழிற் சொல்லும்போது ஆங்கிலச் சொற்கள் இரண்டிற்கு முள்ள வேற்றுமை மறைந்து போகிறது. வேற்றுமையைக் காட்ட வேண்டிய இடம் வரும்போது காட்டமுடியாதிருக்கிறது. ஆதலால் இந்நூலில் (Representative) என்ற சொல்லின் பொருளைக் குறிப்ப தற்கு பிரதிநிதி யென்ற சொல்லையும் (Delegate) என்ற சொல்லின் பொருளைக் குறிப்பதற்கு பேராளர்’ என்ற சொல்லையும் ஆண்டிருக் கிறேன்.

Page 27
40 ஆட்சி இயல்
இதைவிட, இன்று கட்சிக் கட்டுப்பாடு பெரிதும் வலுப் பெற்று வருகின்றது. கட்சித் தலைவரும் தலைமைப் பீடமும் தனித்தனி யுறுப்பினர் என்னென்ன செய்யவேண்டும் என்று கண்டிப்பாய் வரையறுத்துவிடுகின்றனர். தெரிவுசெய்யுங் தொகுதியிலும் பார்க்கக் கட்சிக்கே இன்று கூடிய செல்வாக் குண்டு. பெயரளவில் தொகுதிப் பிரதிநிதியானபோதிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீருது நடப்பதே இன்று பிரதிநிதி களின் முதற் கடமையாயிருக்கிறது. தெரிந்தனுப்புக் தொகுதி கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்துவது, இன்று சாத்திய மாகாதுபோலத் தோன்றுகிறது. ஆட்சியியலிலும் வாழ்க்கை யைப்போலே யாரோ ஒருவர் தாம் திட்டம் போட்டபடியோ விரும்பியபடியோ அணுவளவேனும் விட்டுக்கொடாது தம் கருத்தை நிறைவேற்றல்முடியாது. விட்டுக்கொடுத்தல் இல்லை யென்ருல் வாழ்க்கையோ ஆட்சியோ கைகூடாது. ஆதலால் ஆட்சியிலீடுபடுவோர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வரும் முரண்பாடுகளைத் தருணத்திற்கேற்பச் சமாளித்துவிடு வர். பேர்க்குக்கும் பிறிஸ்தல் வாக்காளருக்கும் நிகழ்ந்தது போல நெற்றிமுட்டு முரண்பாடு வரும்போது பிரதிநிதியாட்சி யின் அடிப்படைக் கொள்கை யாதென்று அலசியாராய்ந்து தீர்ப்பார்கள். ஆனல், பெரும்பாலும் இதுபோன்ற முரண்பாடு வராது சமாளித்துக்கொள்வார்கள். பிரதிநிதியைத் தெரியும் தொகுதிக்கும் பிரதிநிதிக்கும் முரண்பாடு வரும்போது யாது செய்வது என்பதைப் பற்றி இதற்கு முன் கூறியிருக் கிருேம். பாரதூரமான முரண்பாடு வரும்போது ஆட்சித் துறையிலே திட்ட வட்டமான பாரம்பரியமுள்ள நாடுகளின் பிரதிநிதி தாமே டதவியினின்றும் விலகிவிடுவர். தொகுதி வாக்காளர் கூட்டங்கள் கூடி, தீர்மானங்கள் நிறைவேற்றி, தம் வெறுப்பைத் தெரிவித்தால் வாக்காளரிற் பெரும்பான்மை யோர் தம்மை ஆதரிக்கவில்லையென்று அறிந்தால் தன்மான முள்ளவர்கள் தொடர்ந்து பிரதிநிதிகளாய்க் கடமையாற்ற விரும்பார். ஆனல், பிரதிநிதிகளாய்ப் போகிறவர்கள் யாவரும் தன்மானமுள்ளவர்கள் என்று சொல்வதற்கில்லை. போக் கணங் கெட்டவன் இராசாவிற் பெரியவன் ’ என்னும் நாடோ டிப் பழமொழியின் உண்மையை நிரூபிக்கும் பேர்வழிகளும் பிரதிநிதிகளாய்த் தெரிவுபெறுவதுண்டு. இவர்களுக் கென்ன செய்வது என்பதுதான் கேள்வி. தொகுதி வாக்காளருக்குத் தம் பிரதிநிதியைப் பதவியினின்று நீக்கும் உரிமை யிருப்பதை முற்ருய் ஆதரிப்பவர் மிகச் சிலரே. தெரிவுசெய்தவர்களுக்கு

குடியாட்சி 4
அகற்றும் உரிமையும் இருத்தல் நியாயமே என்பதுதான் இவர்கள் கருத்துப்போலும். ஆனல், இங்ங்னம் அகற்றும் உரிமை இருப்பதால் வரும் நன்மை அற்பமென்றும், வரக் கூடிய தீமை அதிகமென்பதுமே இதை யாராய்ந்த பெரும் பாலோரது முடிவு. எப்போது பதவியினின்று நீக்கிவிடுவார் களோ என்று அஞ்சிக்கொண்டிருக்கும் பிரதிநிதி யாவற்றையும் பகுத்தறிவின்படி தீர்க்கமாய் ஆலோசித்துச் செய்தல் முடியாது. அன்றன்று தொகுதி வாக்காளர் எதைச் சொல்லுகிருர்களோ அதைச் செய்யும் சூத்திரப் பொம்மையாய் மாறிவிடுவார். பிரதிநிதி, திட்டவட்டமாய் யாதையும் ஆராய்வதற்கு வாய்ப் பிராது. நாட்டுக்கு நெடுங்காலத்திட்டம் வகுப்பதற்கோ, முழு நாட்டின் தேவையை அல்லது நலனை நோக்கி வேண்டியவை செய்வதற்கோ யாருமிரார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்தொகுதி வாக்காளர் எப்பொழுது தம்மை அகற்றிவிடுவாரோ என்னும் அச்சத்தால் அவர்கள் நல்லெண்ணத்தை இழக்காது காத்துக் கொள்வதிலேயே கண்ணுங்கருத்துமாயிருப்பர். இதுதான் பிரதிநிதிகளின் கடமையென்றல் அறிவாற்றல், செயற்றிறன், தன்மானம் உள்ளவர்கள் பிரதிநிதிகளாய் வரவிரும்பார்கள். விரும்பியபோது அகற்றிவிடலாமென்ருல் அவர் பிரதிநிதியல்லர் G3Lu J FT GMT i (LuÁB6NDIT Gir) (Delegate not Representative). இந்த நியாயங்களினல் பிரதிநிதிகளைப் பதவியினின்று நீக்கும் உரி மையை அனுப்பிய தொகுதி வாக்காளருக்குக் கொடுப்பதை ஆதரிப்பவர் மிகச் சிலரே. * லாஸ்கி, அவர்களிலொருவர். அவர்தானும் வாக்காளருக்கிவ்வுரிமை கொடுக்கப்படின் கண் டிப்பான சில கட்டுப்பாடுகளும் இருத்தல்வேண்டுமென்றே கருதுகிறர். இக் கட்டுப்பாடுகள் பின் வருமாறு :- சட்டக்கழ கத் தேர்தல் நடந்து ஓராண்டாவது சென்ற பிற்பாடுதான் அகற்றும் முயற்சி ஆரம்பமாதல்வேண்டும். ஐந்தாண்டிற்கொரு முறை தேர்தல் நடப்பதென்ருல் 4ஆம் ஆண்டு முடிந்தபின் அகற்றும் முயற்சி ஆரம்பமாதல்கூடாது. முக்திய விதியின் அடிப்படை ஓராண்டாவது கடமையாற்றியபின்தான் தகுதி தகுதியின்மையைப் பற்றி முடிவுக்குவர முடியுமென்பதே. இரண்டாவது கட்டுப்பாட்டின் அடிப்படை இன்னுமொரு ஆண்டுதாணிருக்கிறபடியால் இம் முயற்சியில் இப்போது ஈடு படல் கருத்தற்றதென்பதே. குறித்த தொகுதிக்கு ஒர் இடைத் தேர்தல் நடத்தவேண்டுமென்று மனுப்பண்ணுவதற் - I ask Grammar of Politics - p. 320

Page 28
42 ஆட்சி இயல்
கும் குறித்த தொகுதி வாக்காளரிற் பாதிப்பேராயினும் ஆத ரித்தல் வேண்டும். அங்ஙனம் மனுப்பண்ணி இடைத் தேர்தல் நடந்தாலும் வாக்கெடுப்பிற் பங்குபற்றுவோரில் 3இல் 2 பங் காயினும் அகற்றுவதை ஆதரித்தல்வேண்டும். இல்லையெனில் இருந்த பிரதிநிதியே இருத்தல்வேண்டும். இக் கட்டுப்பாடுக ளுடன் தெரிந்தனுப்பிய பிரதிநிதியை அகற்றுவதற்குத் தொகுதி வாக்காளருக்குரிமை யிருத்தல் பிழையாகாதென்பது லாஸ்கி ஆசிரியர் கருத்து. இன்று பிரதிநிதிகள் பெரும்பாலுங் கட்சிச் சார்புடையவராய் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளால் குறித்த ஒரு கட்சியின் கொள்கைக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறதென்று பார்க்கலாமேயொழிய வேறு யாதுஞ் செய்யலாமென்று சொல்லுவதற்கில்லை. ஒரளவிற்குப் பிரதிநிதியில் தமக்கிருக்கும் வெறுப்பை வாக்காளர் காட்டவும் முடியும். லாஸ்கி ஆசிரியரும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடப்பதுபோல் இரண்டாண்டிற்கொருமுறை தேர்தல் கடக்கும் நாடுகளில் இது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லை என்று கருதுகிருர், தெரிந்த பிரதிநிதியை அகற்றவிரும்பினுல் அங்ங்னம் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு விரைவில் வந்துவிடும். பிரதிநிதி தவறு செய்வதற்கு உரிய காலமும் குறுகியதே. s
பிரதிநிதிகளுக்குத் தம் கடமையைத் தம் பகுத்தறிவின் படியும் மனச்சாட்சியின்படியுஞ் செய்யவிடுதலே முறையென் பது பெரும்பாலான அறிஞர் கருத்து.
பிரதிநிதி முறையைப் பற்றிய ஐயங்கள்
இன்றைய ஆட்சிக்குப் பிரதிகிதிமுறை இன்றியமையா ஒன்றென்பதை ஒத்துக்கொண்டபோதும், இன்று செயலிலிருக் கும் முறைதான் சிறந்ததோ ? இதிலுஞ் சிறந்தமுறை ஒன்றை வகுக்க முடியாதோ? இதிலுள்ள குறைகளை யகற்றிவிடல் முடியாதோ? என்னுங் கேள்விகள் 19ஆம் நூற்றண்டிலேயே தோன்றிவிட்டன. இங்கிலாந்தில் ஒருகாலம் சிலருக்கு ஒன் றுக்குக் கூடிய வாக்குக்கள் இருந்தன. வசிக்குக் தொகுதி, தொழில் பார்க்குக் தொகுதி இரண்டிலும் வாக்களிக்கும் உரிமை சிலருக்கிருந்தது. பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்குப் பல்கலைக்கழகச் சார்பான சட்டக்கழக உறுப்பினர் தெரிவில் வாக்குப்போடும் உரிமையிருந்தது. இன்று, இவை யாவும் நீங்கிவிட்டன. ஆகையாற் பெரும்பாலும் ஒருவருக்கு ஒரு வாக்கென்பதே இன்று இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்

குடியாட்சி w 43
செயலிலிருப்பது. ஒரு தொகுதிக்கு ஒரு பிரதிநிதியென்ற முறை யும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இடம்பெற்றுவிட்டன. ஆனல், இந்த முறையிற் பல குறைகள் இருக்கின்றன என் றும் அவற்றை யகற்றவேண்டுமென்றும் பலர் கருதுகின்றனர்.
குடியாட்சிக்குப் பிரதிநிதிமுறை வேண்டியது. அங்ங்னமே பெரும்பான்மை ஆட்சியும் வேண்டியது. பிரதிநிதிகளிற் பெரும் பான்மையினர் பெரும்பான்மை வாக்காளரின் பிரதிநிதிகளா யிருந்தால்தான் அவர்கள் நடத்தும் ஆட்சி குடியாட்சியாகும். ஆனல், இன்றையமுறையில் அப்படி நடக்கிறதென்று சொல்லு தல் முடியாது. வாக்காளரிற் பெரும்பான்மையினர் ஆதரிக்குங் கட்சிக்கே பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை இடம் கிடைக்கு மென்று சொல்லமுடியாது. ஒரு தொகுதியில் ஒரு கட்சிக்கு வெற்றி கிடைக்கும். அதே கட்சி இன்னுெரு தொகுதியில் மிகச் சில வாக்குக்களாலே தோல்வியடையும். இப்படிப் பல இடங்களில் கடப்பதுண்டு. ஈற்றில் இரு கட்சிகளுக்கும் நாடு முழுவதிலுங் கிடைத்த வாக்குக்களை யெண்ணிப் பார்த்தால் கூடிய வாக்குக்களேப் பெற்ற கட்சிக்குக் குறைந்த தொகைப் பிரதிநிதிகள் இருக்கக்கூடும். அப்படி கடந்துமிருக்கிறது. பிரதிநிதிகள் தொகைக்கும் நாட்டிலே கட்சிகள் பெற்ற ஆதர வுக்கும் வீத முறைத் தொடர்பு ஒன்றிருத்தலே நியாயம். அதா வது 10 சத வீத வாக்குக்களைப் பெற்ற கட்சிக்கு 10 சத வீதப் பிரதிநிதித் தொகையே இருத்தல்வேண்டும். 20 சத வீதமோ 25 சத வீதமோ இருத்தல் நியாயமாகாது. சிறுபான்மை வாக்குக்களைப் பெற்றுப் பெரும்பான்மைக் கட்சியென்று ஆட்சி செலுத்துவதும் கியாயமாகாது.
பல தேர்தல்களின் புள்ளி விபரங்களை ஆராய்ந்தோர் கட்சிகள் நாட்டிற் பெறும் ஆதரவுக்கும் பாராளுமன்றத்திற் பெறும் பிரதிநிதிகள் தொகைக்கும் பாரதூரமான முரண் பாடிருப்பதைக் காட்டியிருக்கின்றனர். பின்வரும் உதாரணங்கள் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. 1924இல் இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் பழைமைபேண் (Conservative) கட்சியைச் சேர்ந்த 382 பிரதிநிதிகள் தெரிவுபெற்றனர். நாட்டில் அவர்கள் பெற்ற வாக்குக்கள் 7,450,990. அதாவது தெரிவு பெற்ற ஒவ்வொரு பிரதிநிதிக்கும் சராசரி 18,505 வாக்குக்கள் அளிக்கப்பட்டன. தொழிற் (Labour) கட்சி 142 பிரதிநிதிகளைப் பெற்றது. நாட்டில் 5,488,088 வாக்குக்கள் அதன் சார்பில்

Page 29
44 ஆட்சி இயல்
அளிக்கப்பட்டன. சராசரி 38,613. அதே தேர்தலில் ஸ்கொத்துலாந்தில் தொழிற்கட்சிச் சார்பாக அளிக்கப்பட்ட வாக்குக்கள் பழைமைபேண் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்ட வாக்குக்களிலுங்கூடிய தொகை யானபோதிலும் பழைமைபேண் கட்சிக்கு 36 பிரதிகிதிகளும் தொழிற்கட்சிக்கு 26 பிரதிநிதி களுமே கிடைத்தனர்.
தொழிற்கட்சி 697,053. பழைமைபேண் கட்சி 680,298.
அமெரிக்காவில் ஒரு தேர்தலிற் சிறுபான்மை வாக்காளர் பெரும்பான்மைத் தொகையான பிரதிநிதிகளைத் தெரிந்தனர். 5,348,479 வாக்குக்களைப் பெற்ற கட்சி 164 பிரதிநிதி களைப் பெற்றது. 5,502,501 வாக்குக்களைப் பெற்ற கட்சிக்கு 161 பிரதிநிதிகளே கிடைத்தன.
எந்த நாட்டிலும் பலவகைச் சிறுபான்மைக் கூட்டங்கள் இருக்கின்றன. மொழி, சமயம், இனம், கொள்கையாகிய வற்றிற் சிறுபான்மையான மக்கள் இல்லாத காடில்லையென்றே சொல்லலாம். மொழி, இனம், சமயம் ஆகியவற்றிற் சிறு பான்மையா யிருப்போர் என்றென்றும் அப்படியே யிருப்பர் அவர்கள் கருத்துக்களும், தேவைகளும், உரிமைகளும் ஒன் றும் தலைதூக்கமுடியாமற் செய்யும் ஆட்சிமுறை குடியாட்சி யாகாது. சட்டக்கழகத்திலும் மற்றும் ஆட்சித் தாபனங்களிலும் அவர்கள் இடம்பெருதுபோனல் அவர்கள் தேவைகள், உரிமைகள் போன்றவை வெளிவரமாட்டா.
இவைபோன்ற குறைகளேத் தீர்ப்பதற்குப் பிரதிநிதித் தெரிவுமுறையிற் சில திருத்தங்கள் செய்யயப்படல் வேண்டு மென்பது பல அறிஞர் கருத்து.
பிரித்தானியர் ஆட்சிபுரிந்தகாலத்தில் இந்தியாவிலும் இலங் கையிலும் ஒருகாலம் வெவ்வேறு இனங்களின் சார்பிற் சிலரைப் பிரதிநிதிகளாய் நியமிக்கும்முறை யிருந்தது. தேர்தல் முறை யுருவான பின்னும் இதேமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டது. சுதந்திரம் வந்த பின்னும் இது அற்றுப்போகவில்லை. இந்தியா விலே கூட்டாட்சி (சமஷ்டி)ச் சட்டக்கழகத்திற்கும் (Federal Legislature) gol ID L'il Job, IPGR 35 infoûr. JF | ' -55 up 35 in(State Legislature) களுக்கும் அட்டவணை (ப்படுத்திய) சிற்றினங்கள் (Scheduled Tribes) egy L-6)JőOOT(lül (B5541) őFT556it (Scheduled Castes) என்ற இருவகுப்பினருக்கும் தம்பிரதிநிதிகளைத் தெரியும் உரிமை யுண்டு. (புதுஆட்சித் திட்டம் உருவாகிப் பத்தாண்டுகாலங்

குடியாட்சி 45。
தான் இவ்வுரிமையிருக்குமென்றும் கூறப்பட்டிருக்கிறது.) இலங் கையிலும் தேர்தலில் இடம்பெரு இனங்கள், வகுப்புக்களின் சார்பாக அறுவரை நியமிக்கும் உரிமை ஆள்பதிக்குண்டு. வெளிவெளியாய்த் தனி இனங்களுக்கென்று பிரதிகிதிகளைத் தெரிவதையோ, நியமிப்பதையோ இன்று ஆதரிப்பார் மிகச் சிலரே. ஒருநாட்டில் வாழும் மக்கள் ஒருவரோடொருவர் அளவளாவி ஒருவரையொருவர் நம்பி ஒத்துழைக்கப் பழகுதல் வேண்டுமென்றும், இனவாரியாய்ப் பிரதிநிதிகளைத் தெரியும் முறை இருந்தால் இனங்கள் ஒன்று சேரா என்றும், வேற் றுமை வளர்ந்துகொண்டே போகுமென்றும் கொள்ளப்படுத லால் இனப்பிரதிகிதிமுறை ஒதுக்கப்படல்வேண்டுமென்பதே முற்போக்காளர் கருத்து. ஆனல், சிறுபான்மையினங்கள் அல் லது வகுப்புக்கள் அழிந்தொழிந்து போகவேண்டு மென்பதோ, அவைதம் தனித்தன்மையைக் கைகழுவிவிட வேண்டுமென் பதோ முற்போக்கு மனப்பான்மை யாகாது. சிறுபான்மை இனங்களும் வகுப்புக்களும் சில துறைகளில் தம் தனித்தன் மையைப் பேணி, நாட்டின் பொதுவாழ்க்கையில் மற்றவர்களைப் போற் பங்குபற்ற வாய்ப்பளிப்பதே உண்மை முற்போக்கு. ஆகையால் நாட்டிற் பிரிவினேகளே வளர்க்கும் முறை களைத் தவிர்த்துச் சிறுபான்மைக் கூட்டங்கள், தாம் காட்டிற் சோந்தையோ உரிமையோ அற்றவர்களென்றெண்ணி மனச் சோர்வடையாது, வாழக்கூடியமுறை யொன்றை வகுப்பதே வேண்டப்படுவது.
எவ்வகைச் சிறுபான்மையினருக்குமென்று இடங்களை ஒதுக்கிவையாது நாட்டின் தேர்தல் முறையிலேயே சிறு பான்மை வகுப்புக்களும் தமக்குரிய பிரதிநிதித் தொகையைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாக்கி வைத்தல் சிறந்தமுறையென்பது பல அறிஞர் கருத்து.
ஆதலால், கட்சிகள் நாட்டிற் பெறும் ஆதரவிற்குக் கூடியோ குறைந்தோ சட்டக்கழகத்திற் செல்வாக்கிருப்பதைத் தடுப்ப தற்கும் சிறுபான்மைச் சமூகங்களும் தமக்குரிய பிரதிதிதி களைத் தெரிவதற்கு வாய்ப்புக் கொடுப்பதற்கும் விகிதசமப் பிரதிநிதித் தெரிவு பயன்படும் என்பது பல அறிஞர் கருத்து.
6áss-LD, GyárfisGisfa (Proportional Representation)
இரண்டுவகையாய் இது செயற்படுகின்றது. ஒன்று பட்டியல் முறைமை (List System) எனப்படுவது. மற்றது தனி

Page 30
46 ஆட்சி இயல்
LDTsbl) 6)JTá(5 (Single Transferable Vote) 6TGOTL'LJ(66)J55). 3)606)1 யிரண்டிற்கும் பல பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் தொகுதிகள் வேண்டும். தெரிவின் நோக்கத்தைத் திறம்பட நிறைவேற்று வதற்கு இந்தப் பட்டியல்முறை யுதவாதென்பதே இதை நுணுகி ஆராய்ந்தோர் கருத்து. இதன்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ் வொரு தொகுதிக்கும் உரிய இடங்களுக்குத் தாம் விரும்பும் பேர்வழிகளின் பட்டியலொன்றைத் தயாரிக்கும். ஐந்து பிரதி நிதிகள் தெரியவேண்டுமென்ருல் ஐந்து பெயர்கள் பட்டியலில் இடம் பெறும். பட்டியலிலுள்ள யாவரையும் ஆதரிக்கவேண்டும்; சிலரை ஆதரித்துச் சிலரை யாதரியாதுவிடமுடியாது. வாக்குக் கள் போட்டுமுடிந்தபின் வெவ்வேறு பட்டியல்களின் சார்பாகக் கொடுபட்ட வாக்குக்களேக் கூட்டி வெவ்வேறு கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குத் தொகையின்படி பிரதிநிதிகள் தொகை தீர்க்கப்படும். மூன்று கட்சிகள் தேர்தலிற் பங்குபற்றுவதாக வைத்துக்கொள்வோம். ஒரு பட்டியலுக்கு ஒரு கட்சியின் சார்பாக 60,000 வாக்குக்களும் மற்றக்கட்சிகளுக்கு முறையே 40,000 வாக்குக்களும் 20,000 வாக்குக்களும் கிடைத்தன என் றும் வைத்துக்கொள்வோம். தெரியவேண்டிய பிரதிநிதிகள் ஐவர். கட்சிகளுக்குக் கிடைத்த ஆதரவின் விகிதப்படி முதலா வது கட்சிக்கு 3 பிரதிநிதிகளும் இரண்டாவது கட்சிக்கு 2 பிரதிநிதிகளும் மூன்ருவது கட்சிக்கு ஒரு பிரதிநிதியும் 66aODLđiigub. 5GOfLDTsi) DI GJITjhgj (Single Transferable Vote), இதே விகித சமப்பிரதிநிதித் தெரிவிற் பெரிதும் இடம்பெறுவது. இதையும் பல பிரதிநிதித் தொகுதிகளிலேதான் உபயோகிக்க முடியும். இதன்படி ஒவ்வொரு வாக்காளனுக்கும் ஒரு தெரி வுரிமைதானுண்டு. ஆனல் தெரிவுசெய்யும்போது தெரிய வேண்டிய தொகைக்கு மேற்படாமல் முதலாவது இரண் டாவதென்று தன் தெரிவை வரிசைப்படுத்தி இடலாம். ஒரு தொகுதிக்கு 5 பிரதிநிதிகள் தெரிய வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அட்டவனே யில் 10 பெயர்கள் இருக் கின்றன. வாக்காளன் இந்தப் பத்துப்பெயர்களில் 5 பெயர் களுக்கெதிரே 1, 2, 3, 4, 5 என்று அடையாளம் இட்டு விடுவான். இவ்வெண்கள் அவன் தெரிவு வரிசையைக் காட்டும். 1 இடப்பட்ட பேர்வழியே அவனுடைய முதலாக் தெரி வாகும். அப்படியே மற்ற எண்களுக்கும், தெரிவுபெறுவதற் குப் பெரும்பான்மை வாக்குக்கள் தேவையில்லை. அநுமதிப்பங்கு (Quota) பெற்றற் போதும். இட்டவாக்குக்களின் மொத்தத்தை உரிய பிரதிநிதிகளின் தொகையெண்ணுற் பிரித்து வருவதே

குடியாட்சி 47
அநுமதிப்பங்கு. 50,000 வாக்குக்கள் இடப்பட்டிருந்தால், 5 பிரதிநிதிகளைத் தெரியவேண்டுமெனில் 10,000 அநுமதிப் பங்கு ஆகும். இதைப் பெறுகிறவர் தெரியப்படுவர். வாக்காளன் குறிப்பிட்ட தெரிவு வரிசையின்படியே வாக்குக்கள் சேர்க்கப் படும். ஆனல் வாக்காளன் முதலாக் தெரிவென்று குறிப்பிட்டவ ருக்கு அந்தவாக்குத் தேவைப்படாதுபோனல்-அதாவது அந்த வாக்கில்லாமலே அவர் தெரிவு பெற்றுவிட்டால்-அந்த வாக்கு வாக்காளனின் இரண்டாந் தெரிவு பெற்றவருக்குப் போகும். வாக்கு இந்த வரிசையில் மாறிக்கொண்டுபோகும். வாக்கா ளன் குறித்த முதலாந் தெரிவு அபேட்சகர் மிகக் குறைந்த வாக்குக்களைப் பெறும்போதும், இந்த முறையே வரிசையாய் நடைபெறும் வாக்குக்களே எண்ணும்போது முதலாக் தெரிவு களேயே முதல் எண்ணுவது. இதில் வேண்டிய பிரதிநிதிகள் தெரிவுபெருதுபோனுல் தெரிவு பெற்றவர்களுக்கு வேண்டிய தொகைக்கு மேலதிகமாயிருக்கும் வாக்குக்கள் வாக்காளரின் தெரிவுமுறைப்படி இரண்டாம் பேர்வழிக்குக் கொடுபடும். அப்போதும் வேண்டிய பிரதிகிதிகள் தெரிவுபெருதுபோனல் ஆகக்குறைந்த வாக்குக்கள் பெற்றவர்களே நீக்கிவிட்டு அவ ருக்குக் கிடைத்த வாக்குக்களை வாக்காளர் வகுத்த வரிசைப் படி, மற்ற அபேட்சகருக்குக் கொடுக்கப்படும். வேண்டிய தொகை வரும்வரைக்கும் இப்படியே நடக்கும்.
விகிதசமப் பிரதிநிதித்தெரிவின் நற்பயன்கள் பின்வருவன :
1. கட்சிகளுக்கு நாட்டிலிருக்கும் ஆதரவின்படியே அரசுக் கழகத்தில் ஏற்படும் செல்வாக்குமிருக்கும். நாட்டிலே பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெருத கட்சி அரசுக்கழகத்திற் பெரும்பான்மை பெற்று ஆட்சிநடத்தல் முடியாது. ஆட்சித் தொடர்பில் காட்டிலிருக்கும் வேற் றுமை அரசுக்கழகத்திலும் பிரதிபலித்திருக்கும்.
2. சிறுபான்மை இனங்கள், கட்சிகள், வகுப்புக்களுக்கும் ஆட்சியிற் பங்குபற்ற இடம் கிடைக்கும். சிறுபான்மைக் கூட்டங்களின் பிரதிநிதிகளும் சிறுதொகையினராய்த் தானே யிருப்பர்; அவர்கள் அரசுக்கழகத்தில் என்னத் தைத்தான் வெட்டிவிழுத்த முடியுமென்ற கேள்வி எழல் கூடும். அதற்கிதே மறுமொழி : வேறென்றையுஞ் செய்ய முடியாதுபோனலும் தம் குறைகளே எடுத்துக் கூறித் தமக்கு நடக்கும் அநீதியை அம்பலப்படுத்திவிடலாம். இதனுல் நன்மை வரவுங்கூடும். வராதுபோனலும் தமக்

Page 31
48 ஆட்சி இயல்
கிருக்குங் குறைகளை வெளிப்படுத்திவிட்டதாலேயே மன ஆறுதல் வரக்கூடும். ஆகையால், விகிதசமப் பிரதிநிதி முறையாற் சிறுபான்மைக் கூட்டங்களுக்கு வரும் நன்மை அற்பமென்று தள்ளிவிடல் முடியாது.
3. தனிமாற்ற வாக்கை உபயோகிப்போர் ஒருசிறிதாயினும் மூளைக்கு வேலைகொடுக்கவேண்டியிருக்கும். தம் தெரிவு வரிசையைத் தீர்மானிக்குமுன் அபேட்சகரின் தகுதி யைச் சீர்தூக்கிப் பார்த்தே வரிசைப்படுத்தல் வேண்டும். இப்படி நடக்குக் தெரிவால் நாட்டுக்கும் பயனுண்டு; வாக்காளருக்கும் பொறுப்புணர்ச்சி ஏற்படும்.
இதன் குறைகள் :
இதைப்பற்றிப் பின்வருங் குறைகள் கூறப்படுகின்றன:
1. சிறுச்சிறு கட்சிகள் பல அரசுக்கழகத்தில் இடம்பெற்று விடும். அப்படி நடக்கும்போது நிலையான ஆட்சிப்பீடம் நிறுவுவது இலகுவன்று. இரண்டு மூன்று கட்சிகள் ஒன்று கூடி ஆட்சிப்பொறுப்பை ஏற்ருல் ஒவ்வொரு கட்சியும் தன் கொள்கையில் விட்டுக்கொடுக்க வேண்டி வரும். திட்டவட்டமான கொள்கைக்கிடமிராது. ஒன்றுசேரும் கட்சிகளும் எப்போது பிரிந்துபோமென்று சொல்லவும் (Pl. tillfTjfd •
2. நாட்டிலிருக்கும் வேற்றுமைகள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டுபோவதற்கு இம்முறை துண்டிவிடும். நாட்டு மக்கள் வேற்றுமைகளே மறந்து ஒன்றுசேர்வதற்கு இது இடையூறு விளேக்கும்.
3. பட்டியல்முறையில் ஆட்களின் தகுதி தகுதியின்மை யைப் பார்ப்பதற்கிடமில்லே. பட்டியலிலுள்ள யாவரை யும் ஏற்கவேண்டும். அல்லது ஒருவரையும் ஏற்காது விடவேண்டும்.
இவற்றுள் இரண்டாம் மூன்றம் நியாயங்களே ஓரளவிற் கேற்ருலும் முதலாவதை ஏற்பது இலகுவல்ல.
கட்சிமுறை ஆட்சி யில்லாதுபோனல் குடியாட்சியே அற்றுப்போம் என்று வாதாடுவோரே முதலாம் நியா யத்தை ஏற்கமுடியும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுக் தான் ஏறக்குறையச் சம செல்வாக்குள்ள கட்சிகள் இரண்டு

குடியாட்சி 49
உருவாகி ஒன்றுமாறி ஒன்ருய் ஆட்சிபுரியும் நிலைபெற்றிருக் கிறது. இது பெரும்பாலும் இந்நாடுகளின் வரலாற்றின் விளைவு என்று பிறிதோரிடத்திற் (கட்சிமுறையாட்சியிற்) காட்டு வோம். எல்லா நாடுகளிலும் இந்தமுறைதான் நிலைபெற வேண்டுமென்று வாதாடுவது விவேகமாகாது. இங்கிலாந்தில் இரண்டு மூன்று கட்சிகள் ஒன்றுகூடி ஆட்சிபுரிய முடியாது போனுல் எங்கும் அப்படியே நடந்துவிடுமென்று தீர்த்து விடுவதும் நியாயம்போலத் தோன்றவில்லை.
இரண்டாவது கியாயத்தைப்பற்றி ஒன்று கூறலாம்.
ஒற்றுமையை வளர்ப்பதற்காக உண்மையிலிருக்கும் வேற் றுமையை அமுக்கிவிட முடியாது ; அமுக்கிவிட வேண்டியது மில்லை. சில சில வேற்றுமைகளிருப்பதால் நாட்டிற்கு நன்மை யுண்டு. வெவ்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், சமயங்கள் இருப்பதனுல் நாட்டின் ஒற்றுமை பங்கப்பட வேண்டிய கட்டாயமில்லை.
மூன்றவது நியாயம் விகிதசமப்பிரதிநிதித் தெரிவுக்கெதி ரான ஒன்றன்று. அதில் உபயோகமாகும் ஒருமுறையையே கண்டிக்கின்றது. விகிதசமப்பிரதிநிதித் தெரிவை ஆதரிப் போரிற் பலரும் இந்த முறையை யாதரிப்பதில்லை. பெரும்பாலும் தனி மாற்றுவாக்கு முறையையே ஆதரிக்கின்றனர்.
ஓர் ஆளுக் கொரு வாக்கு, ஒரு தொகுதிக் கொரு பிரதிநிதி யென்ற முறையிலுள்ள குறைபாடுகளைப்பற்றி இன்று பல 5ாடுகளில் அதிருப்தியிருக்கிறது. இவைகளே மாற்றுவதற்கு விகிதசமப் பிரதிநிதித் தெரிவைக் கையாளுகின்றனர்.
பிரித்தானிய நாட்டிற் பல்கலைக் கழகங்களுக்குச் சட்டக் கழகப் பிரதிநிதிகளைத் தெரியும் உரிமை யிருந்தபோது 1918ஆம் ஆண்டு தொடக்கமாய் அவற்றின் பிரதிநிதிகள் இந்தமுறையிலேதான் தெரிவுபெற்றனர். அயர்லாந்திலே எல்லாவகைத் தெரிவுகளும் இந்தமுறையிலேதான் நடக்கின் றன. தென் ஆபிரிக்காவிலும் இலங்கையிலும் முதவைத் தெரிவில் இம்முறை ஆளப்படுகிறது.
ஐரோப்பாக் கண்டத்திலும், தென்மாக், சுவிற்சலாந்து, ஒல்லாந்து ஆகிய நாடுகள் இந்த முறையையே எல்லாத் தெரிவுகளிலும் உபயோகிக்கின்றன.
呜一4

Page 32
50 ஆட்சி இயல்
இருவருக்குக் கூடிய அபேட்சகர் போட்டியிடும்போது ஆகக்கூடிய வாக்குக்களைப் பெறுவோரைத் தெரியும்போது தெரிவுபெற்றவர் தொகுதிவாக்காளரில் மிகச் சிலருடைய வாக்குக்களைக் கொண்டே வெற்றிபெற்றுவிடமுடியும். இந்த முறையே இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் சட்டக்கழகப் பிரதிகிதிகள் தெரிவில் ஆளப்படுகிறது. வேறு சிலநாடுகளில் 2 பேருக்கு மேற்பட்டோர் போட்டியிடும்போது ஒருவருக்கா வது வாக்குப்போட்டவரின் பெரும்பான்மையினரின் ஆதர வில்லாதபோது இரண்டாம் தேர்தல் ஒன்று நடத்தப்படுகின் றது. முதலாம் போட்டியில் முதல் இரண்டோ மூன்றே இடங் களைப் பெற்றவர்களே இந்தப் போட்டியிற் பங்குபற்றுவது.
பிரதிகிதி முறையிலே உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற் காகச் சிலநாடுகளில் வாக்காளர் தாமே சட்டம் ஆக்குங் கரு மத்தில் ஈடுபடுவதற்கிடமுண்டு.
வாக்காளர் கேர்ஈடுபாடு
குடியாட்சி என்பது பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் ஆட்சியே என்பதும், ஏன் வாக்காளர் யாவரும் நேரில் ஆட்சி அலுவல்களில் ஈடுபடமுடியாதென்பதும் முன்னரே காட்டப் டிருக்கின்றன. பிரதிநிதிகள் மூலம் ஆட்சி நடத்தலே பெரும் பாலும் செயற்படக்கூடியமுறை என்றபோதிலும் இம்முறை யிற் சில குறைபாடுகள் உள. வரைவிலக்கணத்தின்படி குடி யாட்சி, (i) மக்கள் நடத்தும் ஆட்சி, (ii) மக்கள் நலனைக் கரு தும் ஆட்சி, (iii) மக்கள் தம்மை ஆளும் ஆட்சி என்பதாம். மூன்றையும் பூரணமாய்ச் செய்துமுடிப்பதற்கு வாக்காளர் இவற்றில் நேரே ஈடுபடுதலே சிறந்தமுறை. ஆனல், இது செயலில் முடியாதபடியால் முழுப் பொறுப்பையும் பிரதிகிதி களிடமே விட்டுவிடவேண்டும் என்பதைப் பல நாடுகள் ஏற்பதில்லை. உண்மையில் வாக்காளர் ஆட்சியலுவல்களில் நேரே ஈடுபடுதல் உத்தமம். பிரதிநிதிமுறை மத்திமம். உத்தமமானதைச் செய்வது எப்போதும் முடியாதபடியால் மத்திமமானது உருவாயிற்று. மத்திமமானதை ஏற்றுக்கொண்ட படியால் உத்தமமுறையை முற்ருய்க் கைவிடவேண்டும் என்பது தவறு.
எந்தப் பிரதிநிதியாயினும் வாக்காளர் யாவரினதும் தேவை களை முற்ருய் அறிந்துவிடல் முடியாது. மேலும் தேர்தல் காலத்

குடியாட்சி ό Ι
திற் பிரதிநிதிகளைத் தெரியும்போது பல விஷயங்களை மனதிற் கொண்டு தெரிவு நடைபெறுகிறது. எல்லாவற்றிலும் ஒரு பிரதிநிதியின் கொள்கையை ஆதரிக்க முடியாதபோதும் போட்டி இடும் பேர்வழிகளுக்குள்ளே தக்கவரைத் தெரிதலே செய்யக்கூடியது. வாக்காளர் விரும்பும் ஒன்றைப் பிரதிநிதியோ அவர் கட்சியோ ஏற்கமுடியாமல் இருக்கும். மேலும் கட்சி முறை கண்டிப்பாய் இடம்பெற்று இருக்கும் நாடுகளிலே வாக்காளர் எந்தப் பிரதிநிதியையோ கட்டுப்படுத்த முடி யாது. வாக்காளர் கொடுக்கும் வாக்கு பிரதிநிதிக்கன்று; கட்சிக்கே. கட்சியின் கட்டுப்பாடு எளிதன்று. ஆகையால் கட்சி மூலமோ பிரதிநிதி மூலமோ பெறமுடியாத ஒன்றைத் தாம் நேரிற் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கும் உரிமை வாக்காளருக்கு இருத்தல் நியாயமே. அவ்வுரிமையைச் சாதித் தலும் வாக்காளரிடம் பொறுப்புணர்ச்சி உருவாவதற்கு வாய்ப் பளிக்கும். பிரதிநிதித் தெரிவில் வாக்குச் சீட்டைப் போட்ட தும் தம் கடமை முடிந்தது என்று கருதாது எப்போதும் ஆட்சி அலுவல்களில் உரிமையுங் கடமையுந் தமக்குண்டு என்று கொள்ளும் மனப்பான்மை வாக்காளருக்கு இருப்பது விரும்பத்தக்க ஒன்றே. இவ்வாறு ஈடுபடுவதால் ஆட்சி அலு வல்களிற் பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. சுவிற்சலாந்தில் இக்கொள்கை இரண்டுமுறைகளிற் செயற்படு கிறது. ஒன்றில், சட்டக்கழகம் நிறைவேற்றுவதை வாக்காள ரிடஞ் சமர்ப்பித்துப் பெரும்பான்மை வாக்காளர்ஆதரவு அதற்கு இருக்கின்றதோ என்று அறியும் பொறுப்புச் சட்டக்கழகத்திற் குண்டு. நாட்டின் அரசமைப்பின்படி (ஆட்சித்திட்டத்தின்படி - Constitution) சட்டக்கழகம் அரசமைப்பில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினல் விரும்பியபடி சட்டத்தை நிறைவேற்றி அதன்பின் வாக்காளர் தீர்ப்பை எடுத்தல்வேண்டும். வாக்காள ரின் பெரும்பான்மையானேரின் ஆதரவு இல்லை என்ருல் அத் திருத்தம் கைவிடப்படும். அரசமைப்பு மக்கள் நலனைக் கருதியே உருவானபடியால் அதில் ஏற்படும் மாற்றம் தமது நலனை எவ்வாருவது பாதிக்குமோ என்று மக்கள் கருதுகிருர் களா என்று அறிவதற்கே இம்முறை இடம்பெற்றது போலும். இதற்கு ஆங்கிலத்தில் * Referendum என்று பெயர். இதைத் தமிழில் ஒப்பங்கோடல் (கட்டாயச் சமர்ப்பணம்) என்று கூறலாம். ܗܝ

Page 33
53 ஆட்சி இயல்
இதைவிடப் பிறிதும் ஒரு முறையிற் சுவிற்சலாந்து மக்கள் சட்டமாக்கலில் ஈடுபடலாம். இதற்கு ஆங்கிலத்தில் "Initiative என்று பெயர். தமிழில் இதை குடிமுனைப்பு (வாக்காளர் நேர்தலையீடு) என்று சொல்லலாம். பிரதிகிதிகள் ஆக்கும் சட்டங்களைவிட வாக்காளர் தாமே விரும்பும் சட்டங்களை தாம் ஆக்கிக்கொள்ள இம்முறை வாய்ப்பளிக்கின்றது. விரும்பும் சட்டத்தை வாக்காளர் எடுத்துக் கூறி அதற்குச் சட்டப்படி வேண்டிய தொகையினரின் ஆதரவு உண்டென்று காட்டுவதற்கு ஒப்பங்களைப் பெற்றுச் சட்டக்கழகத்திற்கொரு மனு அனுப்புதல்வேண்டும். மனு முறைப்படியானதோ என்று ஆராய்ந்து தீர்த்தபின் வாக்கெடுப்புக்கு நாள் குறிக்கப்படும். குறித்த பிரேரணைக்கு வாக்கெடுப்பிற் கூடிய தொகை வாக்காளர் ஆதரவு இருந்தால் அது சட்டபூர்வமாய் நிறை வேறியதாய்க் கொள்ளப்படும். மேற்கூறிய இரண்டு முறை களும் சுவிற்சலாந்தில் மாத்திரம்தான் பெரிதும் பயன்படு கின்றன; என்ருலும் சுவிற்சலாந்தில் மாத்திரம்தான் இவை செயற்படுகின்றன எனக் கொள்வது தவருகும். சோவியத் ரூஷியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே சட்டமாக்குதலில் வாக்காளர் நேரில் ஈடுபடுவதற்கு இடம் உண்டு. முதலாம் உலக யுத்தம் முடிந்தபொழுது உருவான நாடுகளான அவுஸ்திரியா, செக்கோசிலாவாக்கியா, எஸ் தோனியா போன்ற நாடுகளின் அரசமைப்பிலும் சட்டமாக்க லில் வாக்காளர் நேரில் ஈடுபடுதற்கு இடம் உண்டு.
குடியொப்பம் (Plebiscite)
மேற்கூறிய முறைகள் இரண்டும் ஏதேனும் ஒரு சட்டத் தைப் பற்றியே நிகழக்கூடியன. இவற்றைவிட இன்னுமோர் தொடர்பில் மக்கள் நேரில் ஈடுபடுவதற்கிடமுண்டு. குறித்த ஒரு நாட்டினதோ அல்லது குறித்த ஒரு மக்கள் தொகுப்பினதோ ஆட்சிமுறையை கிரந்தரமாக மாற்றமுன் மக்கள் முடிவை அறிவதற்கு இம்முறை பெரும்பாலும் ஆளப்படுகிறது. காஷ் மீர்நாடு இந்தியாவுடனே பாக்கிஸ்தானுடனே இனே பட வேண்டுமென்பதைப்பற்றி காஷ்மீர் மக்கள் தீர்ப்புச் செய்வ தற்கு விடவேண்டுமென்று கிளர்ச்சி இன்றும் நடந்துகொண் டிருக்கின்றது. 1955இல் சார் (Saar) நாடு பிராஞ்சிய ஆட்சியிலிருக்க வேண்டுமோ அல்லது ஜேர்மனியுடன் சேர வேண்டும்ோ என்பது அந்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு விடப்

குடியாட்சி 53
பட்டது. இடையிடையே ஒரு தனிப் பிரச்சினையைப் பற்றி ஆட்சிப்பீடம் மக்கள் கருத்தை அறிவதற்கும் இம்முறை உப யோகிக்கப்படுகிறது. 1942இல் கனடா அக்காட்டு மக்களை வெளிநாடுகளிற் போர்க்கடமை புரிவதற்குக் கட்டாயச் சேர்ப்பு (Conscription) ஏற்படுத்த வேண்டுமோ என்றறிவதற்கு இம்முறையையே உபயோகித்தது.
இம்முறைகள் இருப்பதற்குக் கூறும் நியாயங்கள் சிறந்த னவே. ஆனல் இவை செயலில் இருக்கும் நாடுகளில் எதிர் பார்த்த அளவு நன்மைகள் இவற்றிலிருந்து வரவில்லை என்றே இதை ஆராய்ந்தவர்கள் கூறுகின்றர்கள். சுவிற்ச லாந்தில்தான் உரிய அளவிற்கு இவை பயன்பட்டிருக்கின் றன என்பதே இவர்கள் கருத்து. சுவிஸ் மக்களுக்குப்போல் வேறெந்த நாட்டினருக்கும் குடியாட்சிமுறையிற் பயிற்சியும் ஈடுபாடும் ஆர்வமும் இல்லை என்றும் இம்முறைகள் சுவிற்ச லாந்தில் திறம்படச் செயலானதற்கு அக்காட்டு மக்களின் தனிப்பண்புகளே காரணமென்றும் விறைஸ் பிரபு (Viscount Bryce) ở5)-gy 6Đqợi.
இம்முறைகளைச் செயற்படுத்துவதிற் பின்வரும் குறைகள் தோன்றியிருக்கின்றன. சட்டங்கள் குடியொப்பத் தீர்ப்புக்கு விடப்பட்ட சந்தர்ப்பங்களில் வாக்களித்தோர் மிகச் சிலரே. தேர்தல்களில் வாக்களிப்போர் தொகையிலும் மிகக் குறைந்த தொகை வாக்காளரே இதிற் பங்குபற்றுகிறர்கள். ஆட்களுக் குள் 5டக்கும் போட்டியில் இருக்கும் ஆர்வம் சட்டங்களின் தகுதி தகுதியின்மைகளைத் தீர்ப்பதில் வராதுபோலும்.
குடிமுனைப்பு (Initiative) இருக்கும் நாடுகளில் இம்முறை யின் முதற்படியான மனுவுக்கு ஒரு குறைந்த தொகைக் கையொப்பங்கள் வேண்டும். இவற்றைப் பெறுவதில் தகுதி யற்றமுறைகள் ஆளப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இவற்றைவிடப் பின்வரும் ஐந்து குறைபாடுகளும் இம் முறைகளுக்கு இயல்பாகவே உள.
(3) சட்டமாக்கல் யாவருஞ் செய்யக்கூடிய ஒன்றன்று. அதற்குச் சிறப்பான பயிற்சி வேண்டும்; ஆராய்ச்சி வேண் டும் , அனுபவம் வேண்டும். சட்டமாக்கல் என்ருல் யாதேனும் ஒன்றைச் செய்யவேண்டுமென்ருே அல்லது செய்யாதுவிட

Page 34
54 ஆட்சி இயல்
வேண்டுமென்ருே தீர்த்து விடுவதன்று. குறித்த சட்டத்திற் குரிய யாவற்றையுந் திட்டமாகவும் நுட்பமாகவும் வரையறுக்க வேண்டும். பொதுமக்கள் ஆக்கும் சட்டங்களில் இவ்வகை வரையறை இருத்தல் அரிது. சட்டக்கழகம் நிறைவேற்றுஞ் சட்டங்கள் யாவும் கழகத்திற்கு வர முன்னமே நுணுகி ஆராயப்படும். அறிவும் அனுபவமும் உள்ளவர்களே அதை வரையறுப்பதும் வரைவதும். சட்டக் கழகத்திலும் அதை அலசி ஆராய்வார்கள். பொதுமக்கள் தலையீட்டினுல் நிறை வேறும் சட்டங்களுக்கு இவ் வாய்ப்புக்களில் ஒன்று தானும் கிடையாது. ஆகையால் பொதுமக்கள் தலையீட்டால் நிறை வேற்றும் சட்டங்களில் திட்ப நுட்பங்கள் வேண்டிய அள விற்கு இடம் பெரு. இங்ங்ணம் நிறைவேறிய சட்டத்தை ஏற்படுத்தியபின்தான் அதன் குறைபாடுகள் வெளியாகும். அதனைச் செயற்படுத்த முடியாமலும் போகக் கூடும்.
(i) இவ்வகைச் சட்டங்களில் வாக்காளரது கரிசனை வேண்டிய அளவிற்கு இருக்கமாட்டாது. தேர்தல்களிற் பங்கு பற்றும் வாக்காளர்களுள் மிகக் குறைந்த தொகையினரே இவற் றிற்கு வேண்டிய வாக்கெடுப்பிற் பங்குபற்றுகின்றனர். பல முறை வாக்களிக்க வேண்டியிருந்தால் வாக்காளரின் ஆர்வம் அருகிப்போகும். இவ்வகைச் சட்டங்கள் நிறைவேறுவது சிறு பான்மை வாக்காளரது ஆதரவாலேதான். இது குடியாட்சி யாகாது. யாவருக்கும் வாக்குரிமை இருக்கும்போது வாக்காளர் பங்குபற்றவிட்டால் அவர்கள் குறித்த சட்டத்தை ஆதரிக் கிறர்கள் என்றே எடுக்கவேண்டும் என்று கூறுவது முற்றுஞ் சரியாகாது. பொதுத்தேர்தல் இடைத்தேர்தல்களில் வாக்குப் போடுவதோடு இவ்வகை வாக்கெடுப்பிலும் பங்குபற்றுவது சிரமமென்று கருதி வாக்காளர் நடக்கிறது நடக்கட்டும் ' என்று வேண்டா வெறுப்பாய் இருப்பர்.
(iii) கட்சி முறையையே அடிப்படையாகக்கொண்டு நடை பெறும் ஆட்சியில் ஒப்பங்கோடல் (Referendum) இடம் பெறு தல் அரிது. ஆளும் கட்சி நிறைவேற்றியதை வாக்காளர் ஏற்க மறுத்துவிட்டால் அதற்குப் பின்னும் ஆட்சிப் பொறுப்பை நடத்துவது இலகுவாய் இராது. தாம் செய்ததை வாக்காளர் ஏற்க மறுத்தால் ஆளும் கட்சி வாக்காளர் ஆதரவை இழந்து விட்டதாகவே கருதுதல்வேண்டும். பிரித்தானிய நாட்டில் இருப் பதுபோன்ற கண்டிப்பான கட்சி ஆட்சிப் பாரம்பரியம் உள்ள

குடியாட்சி 55、
நாடுகளில் வாக்காளர் தீர்ப்புக்குவிடும் முறை இடம்பெறல் அரிது. ஆனல், கட்சிமுறை இருந்தபோதிலும் பிரித்தானிய மரபைக் கடைப்பிடியாநாடுகளும் உண்டு. அத்தகைய நாடு களில் வாக்காளர்திர்ப்புக்குவிடுதல் (ஒப்பங்கோடல் ) கடை முறையில் இருக்கிறது. ஆகையால் இம்முறை பிரித்தானிய கட்சிக் கட்டுப்பாடும் கட்சிப் பாரம்பரியமும் உள்ள நாடுகளின் கட்சிமுறையுடன் ஒவ்வாதென்று சொல்லலாமே அன்றி எவ் விதக் கட்சி முறையுடனும் ஒவ்வாதென்று சொல்லுவதற்கில்லை.
(tw) சட்டக்கழகம் நிறைவேற்றுஞ் சட்டங்களை ப்பற்றி, வாக்காளர் முடிவான தீர்ப்புக் கூறலாமென்ருல் கழக உறுப் பினர் தம் கடமையில் வேண்டிய சிரத்தையெடார்; கழகத்தில் இடம்பெறுவதற்குக் தகுதி உள்ளவர் முன்வரார்கள். வாக்காளர் எதைச் செய்துவிடுவார்களோ என்று எண்ணி, கழக உறுப் பினர் துணிவுடன் எதையுஞ் செய்யப் பின் நிற்பர்.
(v) வாக்காளர் சட்டமாக்கலில் நேரில் ஈடுபட்டால் வேண்டியவற்றை உரியகாலத்திற் செய்யமுடியாது. இம்முறை அதிக காலம் எடுக்கும் என்றுங் கூறப்படுகிறது.
இக்குறைகள் தீர்க்கமுடியாதன அல்ல.
(i) எச் சட்டத்தையும் வாக்காளர் தீர்ப்புக்கு விடும்போது அத்துடன் அதைப்பற்றிய விளக்கக் குறிப்பொன்றையும் வாக் காளருக்குக் கொடுத்துச் சரியான தீர்ப்புக்கு வருவதற்கு உதவிபுரியலாம்.
(t) வாக்காளர் தலையீட்டால் வரும் சட்டங்கள் யாவும் சட்ட ந் தயாரிப்பதற்குத் தகுதிவாய்ந்த ஒருவராலே தயாரிக் கப்படல் வேண்டும் என்று விதி வைக்கலாம்.
(iii) கையொப்பம் இடுவோர் சமாதான நீதிபதிபோன்ற ஒருவரின் முன் ஒப்பம் இடல்வேண்டும் என்று விதி வைக்க லாம்.
(tr) வாக்காளர் தலையீட்டால் உருவாகுஞ் சட்டங்களைப் பற்றி வாக்கெடுக்குமுன் சட்டக்கழகமே அதை ஆராய்ந்து தன் கருத்தை வெளியிட இடம் கொடுக்கலாம்.

Page 35
ქწ6 ஆட்சி இயல்
எப்படியாயினும் வாக்காளர் நேர் ஈடுபாடு வெற்றிகர மாய் நடைபெறுவதற்குப் பின்வரும் நிபந்தனைகள் நிறைவேறல் வேண்டும்.
(i) வாக்காளர் தொகை சிறிதாய் இருத்தல்வேண்டும்.
(it) மக்கள் பொருளாதார நிலையிற் பாரதூரமான வேற்றுமை இருத்தல் கூடாது.
(iii) கண்டிப்பான கட்சிமுறை இருத்தல் கூடாது. வாக் காளருக்குக் கல்வியறிவும் பகுத்தறிவும் கொள்கையைக் கடைப்பிடிக்குக் தன்மையும் இருத்தல்வேண்டும், எப்படியா யினும் வாக்காளர் எளிதாய் விளங்கக்கூடிய விஷயங்களுக் கும் எளிதாய் 8 ஆம் அல்ல ? சொல்லக்கூடியவற்றிற்கும் அடிப் படை விஷயங்களுக்குமே இம்முறையை உபயோகித்தல் உசிதம்.

அதிகாரம் 4
அடிப்படைக் கொள்கைகளும்
உறுப்புக்களும்
Fundamental Concepts and Functions of Government
5r Gib efep8 (pih (State and Society): 15TGLGötl 15, GT6öżby வரையறையுள்ள நிலப்பரப்பை மாத்திரம் இங்கு குறிக்கவில்லை. எல்லைவரையறையுடையதாய்க் குறித்த ஒரு ஆட்சிப்பீடத்தின் ஆட்சியிலிருக்கும் நிலப்பரப்பே இங்கு நாடெனப்படுவது. ஆங்கிலத்தில் State என்ற சொல்லின் பொருளைக் குறிக்கவே இச் சொல் இங்கு ஆளப்படுகிறது. பொதுப்படக் கூறின் சமூகமென்பது மக்களின் எவ்வகைச் சேர்க்கையுமே என படும். இங்கு சமூகம் என்ற சொல் ஆங்கிலத்தில் Society என்ற சொல்லின் பொருளேயே குறிப்பது. கல்வி, பொழுது போக்கு, தொழிலாளர் உரிமை பேணல், விஞ்ஞான ஆராய்ச்சி, கலை ஆராய்ச்சி போன்ற பலவற்றிற்கு மக்கள் ஒன்று சேர்வர். இவை யாவும் சமூகங்களே. சில சமூகங்கள் பலநாட்டுத் தொடர்புள்ளனவாயுமிருக்கும். நாடும் சமூகமும் நோக்கத்தி லும் செயலிலும் வேறுபட்டனவாயினும் ஒன்றேடொன்று தொடர்புள்ளனவாயு மிருக்கின்றன. பெரும்பாலும் நாடு ட் அதாவது காட்டின் ஆட்சிப்பீடம் அங்குள்ள சங்கங்களின் வாழ்க்கையில் தலையிடுவதில்லை. ஆனல், சங்கங்கள் சமூகங் களின் செயலால் நாட்டிற்கு ஆபத்து வருமென்றெண்ணி ணுல் ஆட்சிப்பீடம் கட்டாயம் தலையிடும். ஆட்சிப்பீடத்தின் நோக்கமும், செயலும், நாட்டிலுள்ள சமூகங்களின் செயலா லும் பிரசாரத்தாலும் மாற்றமடைவதுண்டு. ஆட்சியுரிமை செலுத்தும் நாடென்ற ஒன்றில்லாதுபோனற் சமூகங்களும் சங்கங்களும் தம் நோக்கங்களே நிறைவேற்ற முடியாத நிஜல ஏற்படக்கூடும். நாட்டுமக்கள் யாவரையும் கட்டுப்படுத்தும் உரிமையும் ஆற்றலுமுள்ள ஆட்சியில்லாதுபோனற் சமூகங் களோ மக்களோ தனியாட்களோ யாதுஞ் செய்தல் ԱՔւգԱյTֆ/ ;

Page 36
58 ஆட்சி இயல்
செயலற்றிருக்க நேரிடும். ஆகையால் நாட்டின் மக்களும், சங்கங்களும், சமூகங்களும் தத்தம் நோக்கங்களே நிறை வேற்றுவதற்கு நாட்டின் மக்கள் யாவரையும், சமூகங்கள், சங்கங்கள் யாவற்றையும் கட்டுப்படுத்தும் உரிமையும் ஆற் றலுமுள்ள ஆட்சி ஒன்றிருத்தல்வேண்டும். ஆட்சிப்பீடத்தின் சிறப்பிற்காகவோ, வளர்ச்சிக்காகவோ, செல்வாக்கிற்காகவோ ஒருநாட்டு மக்களோ அங்குள்ள சமூகங்களோ வாழவேண்டு மென்பது தவறென்று கொண்டபோதிலும், நாட்டுமக்களின் நலனுக்காகவே ஆட்சிப்பீடம் உருவானதென்று ஏற்றுக் கொண்டபோதும், இதே நலன் உறுதியாய் யாவருக்கும் இருக்கவேண்டுமென்ருல் பொறுப்பும், உரிமையும் ஆற்றலு முள்ள ஆட்சி ஒழுங்கொன்றிருக்க வேண்டும். சமூகமும் நாடும் (ஆட்சி) ஒன்றிற்கொன்று முரணுனவையல்ல; ஒன்றை ஒன்று தழுவிச் செயலாற்றும் இயல்பும் கடமையுமுள்ளன.
silepth hig 60 LDLyth (Law and Custom): f(pó5th g (5 வாகும்போது அச்சமூகங்களுக்குரியவர்கள் ஒருவரோடொரு வர் நடந்துகொள்ளும் முறைகளில் சமூகத்திற்கும் தனியாட் களுக்கும் நன்மை பயப்பன மீண்டும் மீண்டும் பின்பற்றப் படும். சிறிதுகாலத்தின் பின் இம்முறை வழமையாய்விடும். இதை மீற யாரும் விரும்பார். சமூகமும் மீறுவதை ஏற்காது. ஆற்றலுக்குத் தக்கபடி மீறியவருக்கொரு பாடம் படிப்பிக் கும்.” மீறுவது இன்னுங் குறையும். யாவரும் பின்பற்றும் ஒழுக்கம் முறையாய்விடும். சிறிதுகாலத்தின்பின் சட்டமன்ற (நீதி நிலையம் - Law Courts) ங்களும் வழமைகளே மீறுவோரைக் தண் டிக்கத் தொடங்கிவிடும். ஒருமுறை சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்ப்பை ஒட்டிப் பிறகும் தீர்க்கப்படும். வழமை சட்டமாய் விடும். யாழ்ப்பாணத் தமிழருக்குரிய உரிமைச் சொத்துப் போன்றவையைப் பற்றிய சட்டத்தொகுப்பின் பெயர் தேச வழமை யென்பதை இங்கு நோக்குதல் வேண்டும். நாட்டி லிருந்த வழமைகளையே ஒல்லாந்த ஆட்சிப்பீடம் திரட்டித் தொகுத்துச் சட்டமன்றங்களிற் செயற்படுத்தியது. பிரித்தா னியர் காலத்தில் இதன் செல்வாக்குச் சிறிது சிறிதாய் அருகி வந்திருந்தபோதும் யாராவது இதை முற்ருய் நீக்கிவிட முன் வராதது, வழமைகள் எவ்வளவிற்கு மக்கள் வாழ்க்கையில் ஊறி இடம்பெற்றுவிடுகின்றன என்பதற்குச் சான்ருகும். வழமைகள் மாறுவதுமுண்டு. மாற்றம் கண்டிப்பாய் நிகழ்ந்து விட்டதென்றல் சட்டமன்றமும் அதை ஏற்றல்வேண்டும். என்

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 59
னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று ஆட்சிப் பீடமும் அறிதல்வேண்டும். இதற்காக ஆணைக்குழுக்களை நிய மிப்பதுண்டு. தேசவழமையைப்பற்றி விசாரனே செய்வதற் குப் பிரித்தானியர் காலத்திலும் இடையிடையே குழுக்கள் நியமனம் பெற்று விசாரணை நடத்தியதும் இத்தொடர்பிற் கருத்தில் வைக்கப்பட வேண்டியது.
எந்நாட்டிலும் எச்சமூகத்திலும் வழக்கத்திலிருந்து உரு வாகும் சட்டங்களே முதல் தோன்றுவது. ஆனல், இவ்வகை யில் உருவாகும் சட்டங்கள் நாட்டின் தேவை யாவற்றிற்கும் போதாமல் இருத்தல்கூடும். எதிர்பாராத ஒன்று நிகழும் போதோ ஆட்சிப்பீடம் நாட்டிற்குக் கட்டாயம் வேண்டிய தென்று கொள்ளும் ஒன்றைச் செய்வதற்கோ அதிகாரம் தேவைப்படல்கூடும். வேண்டிய அதிகாரத்தை யாருக்கோ கொடுப்பதற்கும் அதைச் செயற்படுத்தும் முறையை வகுப் பதற்கும் ஆட்சிப்பீடத்திற்குரிமையுண்டு. இங்ங்ணம் குறித்த வோர் தேவையை நோக்கி, திட்டம் வகுத்து ஆட்சிப்பீடம் நிறைவேற்றுவது சட்டம். யார் உருவாக்கியதென்று சொல்லு தல் முடியாது; எப்போது உருவாகத்தொடங்கியது என்றுஞ் சொல்லமுடியாதது வழக்கம். சட்டமோ, குறித்த காலத்தில், குறித்த தேவைக்கு, குறித்த ஒருவராலோ பலராலோ உரு வாக்கப்படுவது.
இறைமை (உச்சஆணை - Sovereignity) : சட்டம் ஆக்குவ தற்கு உரிமையுள்ள ஒருவரோ பலரோதான் அதைச் செய்தல் வேண்டும். அப்படியன்றென்ருல் அச்சட்டத்தை யாரும் மதி யார். அதைச் செயற்படுத்தவும் முடியாது. சட்டம் செயற் பட வேண்டுமென்றல், யாரையாவது கட்டுப்படுத்தவேண்டு மென்ருல், சட்டமாக்கவும், ஆக்கும் சட்டத்தைச் செயற்படுத்த வும், அதை மீறுவோருக்கு உரிய தண்டனே வகுக்கவும் உரிமையுள்ள தனியாளோ, அல்லது பலரைக்கொண்ட தாப னமோ இருத்தல்வேண்டும். இதன் ஆணேயை மீறும் உரித்து யாருக்கும் இருக்கமுடியாது. இதைக் கட்டுப்படுத்தி ஆணை செலுத்தவும் யாருக்கும் உரிமையிராது. ஆட்சியியலில் இதைப் பற்றிப் பல பல வாக்குவாதங்களும் கருத்து வேற்றுமைகளும் இடம் பெற்றிருக்கின்றன. பெரிதும் சிக்கலான ஒன்று. ஆகை யால் இதனை விரிவாய் ஆராய முடியாதபோதும் ஆட்சியியலைப் பற்றி அறிவதற்கு இதைப்பற்றிய அறிவும் சிறிதாயினும்

Page 37
60 ஆட்சி இயல்
வேண்டும். எனவே இதைப்பற்றிய முக்கிய அம்சங்கள் இரண் டொன்றை இங்கு கூறுவோம். முதலில் இறைமையை இரு வகையில் நோக்கலாமென்பதை வற்புறுத்த விரும்புகிருேம். குறித்தகாட்டைப் பொறுத்தமட்டில் இறைமைப் பீடத்தைக் கட்டுப்படுத்தவோ அது விதிக்கும் கட்டுப்பாட்டை மீறவோ யாருக்கும் உரிமை இல்லை. இதை உள்நாட்டு இறைமை (Internal Sovereignity) Gu 167 g) God Toi)6)6) Tib. pibit (B5%T. பொறுத்தமட்டில் வேறெந்த நாடாவது எவ்விதத்திலாவது ஒருநாட்டின் இறைமைப்பீடத்தைக் கட்டுப்படுத்தமுடியாது. இதைவிட இப்பீடத்தை வேறு வகையிலும் வரையறுப்ப துண்டு : சட்டப்படியான இறைமைப்பீடம் (Legal Sovereign) என்றும், ஆட்சிமுறை இறைமைப்பீடம் (Formal Sovereign) என்றும், செயல்முறை இறைமைப் பீடம் (Practical Sovereign) என்றும் வகுப்பது ஒருமுறை. இலங்கை யாட்சியமைப் பின்படி பெரும்பாலும் சட்டக்கழகம் விரும்பியதைச் செய்து மன்னர் பிரதிநிதியான மகாதேசாதிபதியின் சம்மதத்தையும் பெற்றுவிடலாம். ஆகையாற் சட்டப்படியாய்ச் சட்டக்கழகமும் மகாதேசாதிபதியுமே இறைமைப்பீடமென்று கூறலாம். ஆணுற் சட்டக்கழக உறுப்பினரைத் தெரிவதும், தெரியாது விடுவ தும் வாக்காளரே. அவர்கள் விரும்பினுற் சட்டக்கழகம் தீர்த்ததையும் தாம் தெரியும் பிரதிநிதிகள் மூலம் மாற்றியும் விடலாம். ஆகையால் வாக்காளருக்கும் ஒருவகை இறைமை யுண்டு. இதை மக்கள் இறைமை என்று சொல்லலாம்.
சம்பிரதாயப்படி மன்னர் பிரதிகிதியேதான் ஆட்சி முதல் வர். அவருக்கும் ஒருவகை இறைமை யுண்டென்று கூறலாம்.
இவை யாவையும் விடச் சட்டக்கழகம் செய்வது சட்ட முறையானதோ அல்லவோ என்று தீர்ப்பதற்கு இலங்கை, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டமன்றங்களுக் குரிமையுண்டு. ஆகையால் எல்லா காடுகளிலும் சட்டக்கழகம் விரும்பியதைச் செய்யலாமென்பது சரியல்ல. பிரித்தானிய நாட்டைப் பொறுத்தமட்டில் இது உண்மையே. ஆனல் உரிமை வேறு ; உரிமை பயன்படுதல் வேறு. யாருக்குத்தான் சட்டப்படி எவ்வதிகாரமும் இருந்தபோதிலும் பொறுப் புணர்ச்சி உள்ள எவராவது தம் செயலைப் பொதுமக்கள் ஏற்பார்களோ, அது செயலாகுமோ - அதன் பெறுபேருய் நாட்டிற் குழப்பம் ஏற்படுமோ, அதற்குத் தீவிர எதிர்ப்புத்

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 6,
தோன்றுமோ என்று ஆராய்ந்தே செய்வார்கள். ஆனல் பொது மக்களோ, அவர்களில் ஒரு குறித்த பகுதியோ ஆட்சிப்பீடம் செய்தது அநீதியென்று நினைத்தால் ஆட்சிப்பீடத்தின் செயலை எதிர்த்தே தீருவார்கள். சட்டம் செய்ய உரிமையிருக்கலாம். சட்டத்தைச் செயற்படுத்துவது எப்போதும் கைவராது. தமக் கிருக்கும் சட்ட உரிமை யொன்றையே நம்பி மக்கள் விருப்பு வெறுப்பைப் பாராது ஆட்சி நடத்திய ஆட்சிப்பீடங்கள் பட்ட பாடு வெவ்வேறு நாடுகளின் வரலாற்றைப் படித்தோருக்குத் தெரியும். ஆட்சிப்பீடம் நினைத்ததைச் செய்வதைத் தடுப்ப தும் சுதந்திர வாழ்க்கைக்கு வேண்டிய ஒன்றென்று பேரா சிரியர் லாஸ்கி (Laski) கூறுகிருர், நீதி நடப்பதிலும் பார்க்க நாட்டில் அமைதியிருப்பதே முக்கியமென்று நடப்போரின் சுதந்திரம் விரைவிற் பறிபோய்விடும் என்பதும் இவர் கருத்து.
இன்றைய சமூக கிலேயில் யாரேனும் ஒருவருக்கோ யாதேனும் ஒரு தாபனத்திற்கோ ஒருநாட்டு மக்களின் வாழ்க் கையைச் சகல துறைகளிலும் கட்டுப்படுத்தும் உரிமையிருத்தல் தவறென்றும், ஆட்சியென்பது ஆதிக்கம் செலுத்துவதன் றென்றும், இன்று ஆட்சிக்கு நாட்டிலுள்ள பலவகைத் தாபனங் களினதும், மக்கள் கூட்டத்தினரதும், ஒத்துழைப்பும் ஆலோ சனையும் வேண்டியன என்றுங் கூறுகிறர். மேலும் இறை மைப்பீடக் கொள்கை இன்றைய சர்வதேசத் தொடர்பிலும் இடையூறு விளைக்கிறதென்பதே இவர் கருத்து. விஞ்ஞான விளைவால், ஒன்று பட்டிருக்கும் உலகம் ஆட்சித்துறையில் தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்திருப்பது பொருத்தமல்லவென் றும், இன்றைய உலக கிலேக்குச் சர்வதேச ஆட்சியே (International Government) வேண்டியதென்றும் இந்நோக்கங் கள் கைகூடாது போவதற்கு இவ் இறைமைக் கோட்பாடே பெரிதுங் காரணமென்றுங் கூறுகிறர். முதலாம் உலக யுத்தம் முடிந்தபோது உருவான 5ாட்டுக் கூட்டவை (சர்வதேசசங்கம்League of Nations) பாறியதும் இன்றைய ஐக்கிய நாட்டமையம் (ஐக்கியநாடுகள் சங்கம் - U. N. O.) வேண்டியளவு பயன் படாதிருப்பதும் தனித்தனி நாடுகள் தம் தனி ஆணே உரிமை யைச் சிறிதும் விட்டுக்கொடாது பற்றிப் பிடித்திருப்பதுமே என்பது இவர்போன்ற பல அறிஞர் கருத்து.*
st'éfée5 fu sq5 Loris sir (Functions of Government): இங்கு பொதுவாக ஆட்சிப்பீடத்தின் கடமைகள், ஆட்சித்
* Laski Grammar of Politics p. 44.

Page 38
62 ஆட்சி இயல்
துறைக்குரிய உறுப்புக்கள் போன்றவற்றைச் சுருக்கமாய்க் கூறுவோம். சட்டம் ஆக்கல், அதைச் செயற்படுத்தல், அதைப் பற்றித் தகராறு தோன்றினல் அதைத் தீர்த்தல், காட்டில் அமைதி நிறுவல், குழப்பம் ஏற்பட்டால் அதை நீக்கல், கைத் தொழில் விருத்திசெய்தல், கல்வி வசதி ஆக்கல், தொழில் இல்லாருக்குத் தொழில் வாய்ப்புச் செய்தல் போன்ற பலப்பல கருமங்கள் இன்று ஆட்சிப்பீடத்தின் பொறுப்பு. இவை யொவ்வொன்றிற்கும் பொறுப்பான தாபனங்களோ உத்தி யோகத்தரோ இருத்தல் இன்றியமையா ஒன்று. ஆட்சிப்பீடம் செய்யவேண்டியதைச் சாத்துவீக முறையிற் செய்யமுடியா தென்று கண்டால் அடக்குமுறை பலாத்காரம் போன்றவற்றை யும் உபயோகித்தல்வேண்டும். அதற்குப் பொலீசார், இராணு வம் போன்றவை தேவை. எக்கருமத்திற்கும் பணம்வேண் டும். இங்கு குறித்த கருமங்களில் முக்கியமானவற்றைப் பற்றிப் பின்னதாக விரிவாகக் கூறப்படும்.
சட்டம் ஆக்கல் (Law Making) ஆட்சிப்பீடத்தின் கரு மங்களைச் சட்டம் (அல்லது திட்டம்) வகுத்தல், நிருவாகம், நீதிபரிபாலனம் என மூன்ருய் வகுக்கலாம். சட்டமாக்கும் பொறுப்புப் பெரும்பாலும் பொதுமக்கள் தெரியும் பிரதிநிதி களைக்கொண்ட சபைக்கோ சபைகளுக்கோ தான் உரியது. மக்கள் தேவைகள் உரிமைகள் கூடிக்கூடி வருகின்றபடியால் சட்டக்கழகங்களின் பொறுப்பும் வளர்ந்துகொண்டே வரு கிறது. மக்கள் தம் தேவைகளையும் தம் குறைபாடுகளையும் தம் பிரதிநிதிகள் மூலமும், பொதுக்கூட்டங்கள், செய்தித் தாள்கள் போன்றவற்றின் மூலமும் வெளிப்படுத்திச் சட்டக்கழ கங்களைக்கொண்டு நடவடிக்கை எடுப்பிக்க முயல்வார்கள். இதே பெரும்பாலும் கையாளும் முறை. ஒரு சில நாடுகளிற் பொதுமக்கள் தாமே சட்டமாக்குங் கருமத்தில் ஈடுபடுதற்கும் இடமுண்டு. இதைப்பற்றி முந்திய அத்தியாயத்திற் கூறப் பட்டிருக்கிறது.
நாட்டுமக்கள் நேராய்ச் சட்டமாக்கலில் ஈடுபடுதல் இன்று மிகச் சிறிய அளவிலேதான் நடைபெறுகிறது. நாட்டின் மக்கள் யாவரும் இக்கடமையிற் பங்குபற்றல் இன்றிருக்கும் நிலையிற் செய்யமுடியாத ஒன்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் யாவரும் இதுபோன்றவற்றில் ஈடுபடமுடியாதபடியால், நாட்டின் பரப் பைத் தொகுதிகளாய் வகுத்து ஒவ்வொன்றிற்கும் பிரதிநிதி

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 63
களைத் தெரியும் உரிமையைத் தொகுதி வாக்காளருக்குவிட்டு இப்படித் தெரிவுபெறும் பிரதிநிதிகளுக்கே வாக்காளர் சார்பிற் திட்டமாக்கும் பொறுப்பும் உரிமையும் விடப்பட்டிருக்கின்றன. இதைப் பற்றியும் தொடர்புள்ள வேறு சிலவற்றைப் பற்றியும் முந்திய அத்தியாயத்தில் விரிவாய்க் கூறப்பட்டிருக்கின்றன.
பிரதிநிதிகளைக்கொண்ட சட்டக்கழகங்களே இன்று எல்லா நாடுகளிலுஞ் சட்டம் ஆக்கும் கருமத்திற் பெரும்பாலும் ஈடு படுகின்றன. தேர்தல் நடக்கும்போதே கட்சிகள் தாம் இன் னரின்ன செய்யப்போகின்றன என்று திட்டம்போட்டுவிடும். தேர்தல் முடிந்ததும் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சி தன் கொள்கைகளைச் செயற்படுத்தச் சட்டக்கழகத்தின் மூலம் முயலும். எதிர்க்கட்சி எதிர்க்கும்; விவாதம் நடக்கும். இடையிடையே பெரும்பான்மைக் கட்சி எதிர்க்கட்சியின் விருப்பத்திற்குச் செவிசாய்க்கும். சட்டம் நிறைவேறும் ; செயற் படுத்தும் பொறுப்புடையோர் அதைச் செயற்படுத்துவர்.
இன்று உலகிலுள்ள சட்டக்கழகங்கள் யாவும் இவ் விரண்டு அங்கங்களைக் கொண்டன : ஒன்று பொதுமக்கள் தொகுதிவாரியாய்ச் சனத்தொகையின்படி தெரியும் உறுப்பின ரைக்கொண்டது , மற்றது பிறப்புரிமையாலோ, அல்லது நாட் டின் கூறுகளின் உரிமைகளைப் பேணுவதற்கென்றே, அல் லது மக்கள் சபையின் தெரிவாலோ, அல்லது ஆட்சிப்பீடத் தின் நியமனத்தாலோ இம்முறைகளில் ஒன்றுக்குக்கூடியவற் றின் சேர்க்கையாலோ நிறுவப்படுவது.
இங்கிலாந்தின் பிரபுக்கள்சபை பிறப்புரிமையை அடிப் படையாய்க் கொண்டது.
அமெரிக்க மேற்சபை (மூதவை-Senate) மாகாண வாரி யான பிரதிநிதிகளைக்கொண்டது.
இலங்கை மூதவை மகாதேசாதிபதியின் நியமனத்தாலும், மக்கள் சபையின் தெரிவாலும் நிறுவப்படுகிறது.
சட்டக்கழக அங்கம் ஒன்றே இரண்டோ? சட்டக்கழகங்களின் அமைப்பைப்பற்றி ஆராய்வோர் இவற்
றில் ஒரு அங்கமோ இரண்டு அங்கங்களோ இருக்கவேண் டும் என்று விவாதித்திருக்கின்றனர். இவ்வாராய்ச்சியில்

Page 39
64 ஆட்சி இயல்
பொதுமக்கள் சார்பாக வாக்காளர் தெரியும் பிரதிநிதிகளைக் கொண்ட அங்கத்தைப்பற்றி பொதுமக்கள் சபை (House of Commons) egy6ü605 8ybjjF6)LJ (Lower House)) 6T6öTLSab 67 cil வித கருத்து வேற்றுமையும்இல்லை. இவ்வங்கத்திற்குக்கூடிய பொறுப்பும் உரிமையும் இருக்கவேண்டும் என்று யாவரும் ஏற்றுக்கொள்கின்றனர். மேற்சபை (Upper House) அல்லது பிரபுக்கள்சபை (House of Lords) போன்ற ஒன்று தேவையோ என்பதைப்பற்றியும் தேவையென்ருல் அதன் உரிமைகள் கடமைகள் என்னென்ன என்பதைப்பற்றியும் பாரதூரமான வாக்கு வாதம் நடந்திருக்கிறது; இன்றும் நடக்கிறது. இன்று பெரும்பாலும் இரண்டு அங்கங்கள் உள்ள சட்டக்கழகங்களே இருக்கின்றன. இரண்டாவது அங்கம் எதற்கென்ற கேள் விக்கு யாராவது தக்க மறுமொழி கூறியதாகத் தெரிய வில்லை. அமெரிக்க மூதவை (மேற்சபை - Senate) யொன்றே இன்றுள்ள இரண்டாம் அங்கங்களிற் செல்வா க்குடனும் உப யோகத்துடனும் செயலாற்றுகின்றது. இலங்கை மூதவை (Senate), Giffigi Taoiu Jit STL did,6ir F60LJ (House of Lords) ஆகியவற்றைப்பற்றிக் கூறும் இடங்களில் இரண்டாவது அங்கமொன்று வேண்டுமோ என்பதைப்பற்றிச் சிறிது விரி வாய் ஆராய்வோம்.
நிருவாகம்
கிருவாகம் என்ருற் செயல் என்பதே பொருள். சட்டக் கழகம் தீர்க்கும் தீர்ப்புக்களைச் செயற்படுத்துவதே நிருவாகி கள் கடமை. நிருவாகிகள் (Executive) என்ற சொல்லிற்கு ஆட்சி இயலில் ஒன்றுக்கொன்று சிறிது தொடர்பான இரண்டு கருத்துக்கள் உள. ஒன்று கிருவாகத்திற்கு ஆட்சியியலில் முடி வான பொறுப்புடையவரான பிரதம மந்திரியையோ மந்திரி சபையையோ குறிக்கும். மற்றப்பொருள் நாளுக்குநாள் நாட் டின் பலப்பல துறைகளிலே வேண்டியவற்றைச் செய்யும் நிரந்தர உத்தியோகத்தரைக் குறிக்கும். இரண்டுக்கும் ஆட்சி இயலில் இன்றியமையா இடமுண்டு. அவற்றைப் பற்றிப் பிற்பாடு கூறுவோம்.
முடிவான பொறுப்புக்குரியோரைத் தெரிவதில் இன்று வெவ்வேறு முறைகள் உள. ஒன்று பிரித்தானிய நாட்டிலும் அந்நாட்டில் நடைபெறும் முறையைத் தழுவி யாட்சிமுறையை

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 6さ
வகுத்த மற்றநாடுகளிலுஞ் செயற்படுகின்றது. இதைப் பாராளு மன்ற நிருவாகம் (Parliamentary Executive) என்று கூறலாம்: மற்றது பாராளுமன்றத்துக்குப் புறம்பான நிருவாகம் (Non - Parliamentary Executive) 665) dipauTub. L'i55u gi பெரும்பாலும் குடிப்பதி யாட்சியிலேதான் இடம்பெறுகிறபடி Lu IT 6i) @g5lq til Iĝ5 fiŝo([56)JIT d5lb (Presidential Executive) 61 6ör றும் கூறப்படுவது.
Lu Tag T E5LD 67 på glög fluu 65 nur as lib (Parliamentary Ex
ecutive): இதே பிரித்தானிய காட்டிலும் இலங்கையிலும் நடை பெறும் முறை. பாராளுமன்றத்தில் உறுப்பினராயிருக்கும் முத லமைச்சருக்கே முடிவான கிருவாகப் பொறுப்புண்டு. அவரே மற்ற அமைச்சர்களைத் தெரிவதும் அவர்களின் கடமைகளை வகுப்பதும். அவருடன் ஒத்துழைக்க முடியாத அமைச்சர்கள் வெளியேற வேண்டியதுதான். அமைச்சர்கள் யாவரும் ஒரே கொள்கையைக் கடைப்பிடித்து அதே கொள்கையைச் செயற் படுத்துவதற்கும் முதலமைச்சரே பொறுப்புடையர். பாராளுமன் றத்தின் ஆதரவு நீங்கினல் முதலமைச்சரும் மற்ற அமைச்சர்க ளும் வெளியேறவேண்டியதுதான். அமைச்சராய்ச் செயலாற்றும் போது தத்தம் செயல்களைப் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடைகூறல்வேண்டும். விடைகூறத் தவறினல் அல்லது கூறிய விடையிற் திருப்தியில் லாதுபோனுல் பாராளுமன்றம் திருப்தியீனத்தைத் தெரிவிக்கும். திருப்தியினம் பாரதூரமானதென்றல் அமைச்சரவைக்கே முற் றுப் புள்ளி போட்டுவிடவுங்கூடும். அமைச்சர்களின் நடவடிக் கைகள் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினரின் கண்காணிப்பில் இருப்பதே இம்முறையின் சிறப்பு.
இம்முறை ஏறக்குறைய சம செல்வாக்குள்ள இரண்டு கட்சிகள் உள்ள நாடுகளிலேதான் நன்ருய் நடைபெறும் ஆட்சிக்கட்சி செய்வதைக் கண்டிக்கும் போது எதிர்க்கட்சி பொறுப்புணர்ச்சியோடுதான் இதைச் செய்யும். செல்வாக் குள்ள இரண்டு கட்சிகள் இருக்கும்போது பெரும்பாலும் எதிர்பாராத நேரத்திற் திடீரென ஆட்சிப்பீடம் வெளியேரு தென்றும் உரியகாலத்திற்குக் கடமையாற்று மென்றும் எதிர் பார்க்கலாம். இந்தமுறையிற் பல அறிஞர் கண்ட சிறப்பு வேறு மொன்றுண்டு. பாராளுமன்றத்திற்கும் நிருவாகத்துக்குரியவருக் கும் 5ெருங்கிய தொடர்பு இருக்கிறபடியால் இரண்டுபகுதி
♔ - 5

Page 40
66. ஆட்சி இயல்
யாரும் ஒருவரையொருவர் கலந்த்ாலோ சித்து, இருக்கும் கிலே மைக்குத் தக்கபடி நடந்துகொள்ள இடமுண்டு. இருபகுதி யாருக்குந் தீர்க்கமுடியா முரண்பாடு வந்துவிட்டால் இரு பகுதியினருமோ ( பாராளுமன்றமும் அமைச்சர்களும் ) அல்லது ஒரு பகுதியினர் மாத்திரமோ (அமைச்சர்கள்) வெளியேறினல் முரண்பாடு தீர வழிஏற்படும். புது அமைச்சரவையோ அல்லது புதுப் பாராளுமன்றமும் புது அமைச்சரவையுமோ உருவாகி விடும். பெரும்பாலும் பாராளுமன்றம் ஆதரிக்கும் என்று நம்பு வதையே அமைச்சர்கள் செயற்படுத்த முயல்வர். செல்வாக் குள்ள இரண்டு கட்சிகள் இல்லாத நாடுகளில் இந்தமுறை சிறப்புற நடைபெறுவதில்லை. பல்வேறு கட்சிகள் உள்ள பிராஞ்சு காட்டில் நிலையான நிருவாகம் உருவாவதே அரிதாய் இருந்து வந்தது. சிலவேளைகளில் ஆண்டிற் கிரண்டு மூன்று அமைச்சர் அவைகளுங் தோன்றி மறையும். இதை மாற்றுவதற்கு ஒரு புது ஆட்சித்திட்டம் உருவாகி இன்று நடைபெறுகிறது.
பாராளுமன்றத்துக்குப் புறம்பான (குடிப்பதி) கிருவாகம் (Non-Parliamentary Executive): ஆட்சியியலின் முக்கிய அம்சங்க ளான சட்டம் ஆக்கல், கிருவாகம், நீதி வழங்கல் ஆகிய மூன்றும் கண்டிப்பாய் வெவ்வேருயிருத்தல் வேண்டுமென்றும் இவைக் குள் எவ்வகைத் தொடர்பும் இருத்தல் தவறென்றும் ஒருகாலம் கருதப்பட்டது. வெவ்வேறு பொறுப்புக்களைச் சிறிதும் தொடர்போ, கலப்போ ஏற்படாமுறையில் வெவ் வேறு ஆட்கள் செலுத்தவேண்டியது ஆட்சி சிறப்பாய் நடப் பதற்கு வேண்டிய ஒன்றென்று இக்கொள்கையைக் கடைப் பிடித்தோர் கருதினர். சட்டமாக்கற்குரியோர் அதையே செய்ய வேண்டும் ; வேறு யாரும் அதில் தலையிடுதல் கூடாது. இவ் வாறே நிருவாகமும், நீதிவழங்கலும் வெவ்வேருட்களால், வெவ் வேருய், மற்ற இரண்டில் எதுவோடும் கலப்போ தொடர்போ இல்லாத முறையில் கடைபெறல் வேண்டுமென்பதே இக் கொள் கையின் அடிப்படை. இதன் விளேவாகவே பாராளுமன்றத்துக் குப் புறம்பான நிருவாகம் உருவானது. அமெரிக்க ஆட்சிமுறை இக் கொள்கையைத் தழுவியே உருவானது. இதில் நிருவாகப் பொறுப்புக் குடிப்பதிக்கேயுரியது. திருவாகத்தின் வெவ்வேறு துறைகளுக்குப் பொறுப்புக்குரியோரைத் தெரிவதும் அவரே. இவர் தெரிவை ஏற்பதற்கோ ஏற்காதுவிடுவதற்கோ மூதவை (Senate) க்கு உரிமையுண்டு. குடிப்பதியோ, அவர் கியமிக்கும்

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 67
அமைச்சரோ சட்டக்கழகத்தின் இரண்டங்கங்களில் ஒன்றி லாவது இடம் பெறுவதில்லை. சட்டக்கழக உறுப்பினரை அமைச்சராய்த் தெரியவுங்கூடாது. இவர்கள் செயலைப்பற்றி இவர்களிடம் கேள்விகள் கேட்கும் உரிமையும் சட்டக்கழகத் திற்கில்லை. நிர்வாகம் வேறு ; சட்டமாக்கல் வேறென்பது இங்கு திட்டவட்டமாய் நடைமுறையிலிருக்கிறது. குடிப்பதி யையோ, அமைச்சர்களையோ எவ்வாருவது கட்டுப்படுத்தும் உரிமை சட்டக்கழகத்திற்கில்லை. குடிப்பதி குறித்தகாலத்திற் குத் தெரியப்படுவர். அக்கால எல்லைக்குள், பாரதூரமான குற்றஞ் செய்து சட்டப்படி குற்றவாளியென்று கண்டாலன்றி, பதிவியிலிருந்து யாரும் அவரை நீக்குதல் முடியாது. அவரும் எக்காரணம் பற்றியும் சட்டக்கழகத்தைக் கலைத்துவிடமுடியாது? இந்த முறையின்படி குடிப்பதியோ அமைச்சரோ சட்டக்கழ கத்தை வழிபடவேண்டியில்லை. தாம் சரியென்று கொள்வ தைத் தாம் உத்தியோகம் வகிக்குங் கால எல்லேயிற் செய்ய லாம். ஆணுல், குடிப்பதியும் சட்டக்கழகமும் கலந்தாலோ சித்து நாட்டுக்கு வேண்டியவை என்னென்னவென்று தீர்ப் பதற்கு இம்முறையில் இடமில்லை. குடிப்பதி கியமிக்கும் அமைச்சர்களும் அவருக்கே பொறுப்புடையவர். சட்டக்கழகம் அவர்களைக் கட்டுப்படுத்தமுடியாது. இருபகுதியாருக்கும் முரண்பாடு ஏற்பட்டால் தத்தம் கால எல்லே முடியும்வரையும் தாம் விரும்பியபடி நடக்கவேண்டியதே. இதனுல் ஆட்சியிற் குழப்பம் நிகழுவதுமுண்டு. அமெரிக்காவிற் பலமுறை குடிப் பதிக்கும் சட்டக்கழகத்திற்கும் முரண்பாடு உருவாகியுள்ளது.
தனிநிருவாகமும், கூட்டுகிருவாகமும் (Single Executive and Composite i Executive) : G3LDjib35. siji uLJ GODHO?.- * g)Gör gp/G3LDT i முறையில் நிருவாகப் பொறுப்பை வகுக்கலாம். தனிநிருவாகம் என்பதும், கூட்டுகிருவாகம் என்பதுமாகிய இரண்டுவகை நிருவாகமும் ஆட்சித்துறையில் உள. தனி ஆள் திருவாகத்திற்கு அமெரிக்க குடிப்பதியே சிறந்த எடுத்துக்காட்டு. வேறு அமைச்சர்களிருந்தாலும் அவர்களே அவரே நியமிப்பது. அவர் ஆணேயின்படியே அவர்கள் ஒழுகுதல்வேண்டும். யாரையும் அகற்ற விரும்பினுல் அவர் யாரையுங் கேளாது அகற்றிவிட லாம். இம்முறையால் வரும் நன்மை யாதென்றல், காரியங்கள் விரைவில் நடைபெறமுடியும் என்பதே. பலர்ஈடுபாட்டால் வரும் தடைகள் சுணக்கங்கள் நிகழ்வதற்கிடமில்லை. பலர் ஈடுபடும் போது கருத்துவேற்றுமை தோன்றுதல்கூடும். தோன்றும்

Page 41
68 ஆட்சி இயல்
போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டிநிகழும். அதற்கும் இதில் இடமில்லை. ஆனல், பலருடன் கலந்தாலோசித் துச் செய்யுந் தீர்ப்புத் தீவிரமாயிராதபோதும் விவேகமுள்ள தாயிருக்கும். தீர்ப்புச் செய்பவரும் தம் பொறுப்பை மற்றவர் களுடன் பங்கிடுவதால் மன ஆறுதல் பெறமுடியும். பாரதா மான பொறுப்பைத் தனியே ஒருவரிடம் விடுவதும் புத்தியன்று. இன்றைய ஆட்சியியலில் எழக்கூடிய முக்கிய பொறுப்புக் களேத் தனியே தீர்த்துவிடக்கூடிய மேதைகளைக் காண்டல் அரிது. மேதைகள்தானிருந்தாலும் இவ்வளவு பொறுப்பு நிறைந்த தீர்ப்புக்களைத் தாமே தனியே செய்வதை அவர்கள் விரும்பார்கள்.
சுவிற்சலாந்திலே இருப்பது சரியான கூட்டுமுறை கிரு வாகம். கிருவாகம் அதற்கெனச் சட்டக்கழகத்தின் இரு அங் கங்களும் ஒன்று கூடித் தெரியும். எழு வரைக்கொண்ட அமைச் சரவைக்கே கிருவாகம் உரியது. இவர்கள் பெரும்பாலும் சட்ட க் கழக உறுப்பினரே. சட்டக்கழகமே தலைவரைத் தெரிவது, ஆண்டு தோறும் வெவ்வேறு தலைவர் தெரிவு பெறுவர். தலைவர் மற்ற அமைச்சர்களேக் கட்டுப்படுத்துவதில்லை. பெரும்பாலும் அமைச்சர்கள் கூடும்போது தலேமை தாங்குவதே இவர் பொறுப்பு. கொள்கையிலோ, செயலிலோ இவருக்கு விசேட பொறுப்பு யாதுமில்லை. இவ் அமைச்சரவை 4 ஆண்டிற்கொரு முறை தெரியப்படும். இவர்கள் சமர்ப்பிக்கும் யாதையும் சட்டக்கழகம் ஏற்காதுவிட்டால் அமைச்சரவை வெளியேற வேண்டியதில்லே ; வெளியேறுவதுமில்லே.
பிரித்தானிய அமைச்சரவை இரண்டிற்கும் இடையான ஒரு நிலையிலுள்ளதுபோலும். இங்கு அமைச்சரவைக்கே திரு வாகப் பொறுப்பிருந்தபோதும், அவர்களைத் தெரிவது சட்டக் கழகமன்று-முதலமைச்சரே. முதலமைச்சரைத் தெரிவது சட்டக்கழகமன்று - பெரும்பான்மையாயுள்ள கட்சியே. முத லமைச்சர் விரும்பினல் எந்த அமைச்சரையும் வெளியேற்ற லாம். கட்சி விரும்பினுல் முதலமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களையும் வெளியேற்றிவிடலாம். இது நியதி; சம்பிர தாயம் வேறு. யாவரும் மன்னர் நியமிக்கும் அமைச்சர்கள் - இவர்களுக்குள் உயர்வு தாழ்வில்லை.
முதலமைச்சருக்கே கூடிய செல்வாக்கிருக்கிறபடியால் இதைத் தனி கிருவாகமுறைக்குரியதென்று கூறலாம். ஆனல்

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 69
உண்மையில் அமைச்சரவைக்கும் செல்வாக்கில்லையென்று சொல்வதற்கில்லை. ஓரளவிற்காயினும் இது கூட்டு நிருவாக முறைக்கும் உரியதென்றும் தோன்றுகிறது.
f5ufuTGOGJTib - ( Administration of Justice)
ஆட்சி இயலில் இதுவரை சட்டமாக்கல், ஆக்கிய சட்டத் தைச் செயற்படுத்தல் ஆகிய இரண்டையும்பற்றிச் சிறிது ஆராயப்பட்டன. இப்போது இவை யிரண்டுடனும் ஓரளவிற் குத் தொடர்புடையதும் ஓரளவிற்கு வேறுபட்டதுமான நீதி பரிபாலனத்தைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். நாட்டின் சட் டத்தைச் செயற்படுத்தும்போது வரும் தகராறுகளைத் தீர்ப் பதும், சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிப்பதும், குறித்த ஒரு சட்டத்தின் பொருளே ப்பற்றிக் கருத்துவேற்றுமை யேற்படும்போது பொருளை வரையறுத்துரைத்தலுமே நீதித் துறையின் கடமை.
பிரித்தானிய பாரம்பரியத்திலே தனியாட்களின் உரிமையை ஆட்சிப்பீடம் பாதிக்காது பார்த்துவந்தது சட்டமன்றங்களே (Law Courts). நீதியைப் பொறுத்தவரையில் ஆட்சிப்பீடத்திற்கு விசேட உரிமை யாதுமில்லையென்றும், யாவருக்கும் ஒரே நீதியே வழங்கவேண்டுமென்றும், நீதி செய்யும் பொறுப்புள்ளோர் தம் கடமையைச் செய்வதற்கு வேண்டிய சுதந்திரம் அவர்க ளுக்கு இருக்கவேண்டுமென்ற கொள்கை பிரித்தானிய ஆட்சி முறையிலும் அதைத் தழுவி ஏற்பட்ட முறைகளிலும் முக்கிய இடம்பெற்றிருக்கிறதென்றும் கொள்ளப்பட்டது. நீதியென்பது 6 ன்றும் எங்கும் ஒன்றன்று. நீதியென்பது குறித்தகாலத்திற் குறித்த இடத்திற் செயற்படும் சட்டத்தைப் பொறுத்ததே ; சட்டம், சமூகம் என்ன அடிப்படையில் உருவாகியிருக்கிற தென்பதைப் பொறுத்தது. சமூகத்தில் எக் கொள்கைதான் ஆதிக்கம் பெற்றிருந்தாலும் அக் கொள்கை அடிப்படையிற் சட்டம் உருப்பெற்றுவிடும். நீதியென்பது எச் சட்டம் செயலி லிருக்கிறதோ அதைப் பாரபட்சமின்றிச் செயற்படுத்துவதே. நீதிபரிபாலிப்போர் கூடியமட்டும் யாருக்குங் கட்டுப்படாது தம் மனச்சாட்சியின்படி நடக்கக்கூடியவர்களாயிருத்தல் வேண் டும். இடையிடையே ஆட்சிப்பீடத்திற்கும், தனியாட்களுக்கும் ஏற்படுத் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பும் நீதிபதிகளுக்கு உரியது. ஆகையால் ஆட்சிப்பீடமும் நீதிபதிகளைக் கட்டுப்

Page 42
7O ஆட்சி இயல்
படுத்துவது முறையாகாது. அவர்கள் சம்பளத்திலோ, கடமை யிலோ இயன்றமட்டும் யாராவது தலையிடாது பார்க்கவேண் டும். இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் நீதிபதிகளுடைய சம்பளத்தைப்பற்றிச் சட்டக்கழகம் நடவடிக்கை யாதும் எடுப்ப தில்லை. நாட்டின் பொதுவருவாயிலிருந்து அது கொடுபடும் குறித்த வயது வரும்வரையும் நீதிபதிகள் கடமை பார்க்கலாம். அவர்களில் எவரையாவது பதவியிலிருந்து நீக்குவதென்ருல் இங்கிலாந்திலே, பாராளுமன்றத்தின் இரு அங்கங்களும் விரும் பினுலன்றி நீதிபதிகளை வேலையிலிருந்து அகற்றமுடியாது ; அமெரிக்காவிலே சட்டமன்றத்திலே குற்றஞ்சாட்டிக் குற்ற வாளியென்று தீர்த்தாலேதான் ஒரு நீதிபதியை அகற்றமுடியும்.
பிரான்சில் நீதிபதிகள் பரீட்சைகளின் மூலம் தெரியப்படு கிருர்கள். உத்தியோக உயர்வு தகுதியின்படியும் வயதின்படி பும் நடைபெறும். இவர்களேப் பதவியிலிருந்து நீக்க ஆட்சிப் பீடத்திற்கோ சட்டக்கழகத்திற்கோ உரிமையில்லை. இவ்வுரிமை உச்ச மேன்முறையீட்டு மன்றத்திற்கேயுண்டு (Final Court of Appeal). ஆகையால் பெரும்பாலும் நீதிபரிபாலிக்கும் பொறுப் புடையோர் சுதந்திரமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும், அவர்கள் சுதந்திரமில்லாமல் தம் கடமையைச் செய்வதற்கு எவ்வகையிடையூறு மிருக்கக்கூடா தென்பதும் பல நாடுகளும் கடைப்பிடிக்கும் ஒழுங்கு. சட்டத்தை மீறுவோரைக் கண்டிப் பதையும், சட்டத்தின் பொருளே வரையறுத்துரைப்பதையும்விட இடையிடையே நீதிபதிகள் சட்டம் ஆக்குவதுமுண்டு.
இன்றைய நாடுகளிற் பெரும்பாலும் இருவகைச் சட்டங் கள் இருக்கின்றன: வழமைச்சட்டம் (Common Law); சட்ட மன்றம் நிறைவேற்றும் நியதிச்சட்டம் (Statute, Law); இது பெரும் பாலும் வரையறையானதாயிருக்கும். இவ்வகைச் சட்டங் களைப் பொறுத்தமட்டில் நீதிபதிகள் சட்டத்தின் பொருளை வரை யறுத் துரைத்ததின்படி தீர்ப்பைக் கூறலாமேயன்றி வேறு யாதுஞ் செய்யமுடியாது.
வழமைச் சட்டத்தில் வரையறை சிறிது குறைவு. தாம் விசாரிக்கும் வழக்குகளில் வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதி லேயே சிலவற்றை வரையறுத்துரைக்க ஏற்படும். ஒரு நீதிபதி வரையறுத்துரைத்ததை மற்ற நீதிபதிமார் ஏற்று அந்த வரை யறையின்படியே ர்ேப்பளிப்பர். முதன் முதலாய் வரையறுத்

அடிப்படைக் கொள்கைகளும் உறுப்புக்களும் 7
துரைத்த நீதிபதி முன்னிருந்த சட்டத்தைத் தமது வரையறை உரையாற் சிறிது மாற்றியிருத்தல்கூடும். அவர் செய்த வரை யறை உரையை அனுமதித்துத் தீர்ப்பளித்த நீதிபதிகள் முக்தியவர் செய்த மாற்றத்தை நிலைபெறச் செய்துவிடுவர். இங்ங்னந்தான் நீதிபதிகள் சட்டம் ஆக்குவது. பாராளுமன்றம் அல்லது சட்டக்கழகம் வரையறையாய் நிறைவேற்றும் சட்டங் களேப் பொறுத்தமட்டில் இதற்கிடமிருத்தல் அரிது. வழமைச் சட்டங்களில் இதற்குக் கூடிய இடமுண்டு.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இவ்வகைச் சட்டத் திற்குக் கூடிய செல்வாக்குண்டு. ஆகையால் நீதிபதிகள் சட்டமாக்குவதற்கும் கூடிய வாய்ப்புண்டு. பிரான்சு 15ாட் டில் வழமைச் சட்டத்திற் கிடமில்லை. ஐரோப்பாக் கண்டத்தி லுள்ள மற்றநாடுகளிலும் அப்படியே. நாட்டின் ஆட்சிக்குரிய சட்டங்கள் கோவைப்படுத்தப்பட்டிருக்கின்றன (Codified). அவற்றைச் செயற்படுத்துவதே நீதிபதிகளின் பொறுப்பு. பிரான்சிலே நீதிபதிகள் தனித்தனி வழக்குகளிற் செய்யும் தீர்ப்பைக்கொண்டு சட்டமாக்கக்கூடாதென்று சட்டமிருக் கிறது. இருக்கும் சட்டத்தொகுப்பிலுள்ள சட்டம் எதையுங் கொண்டு தீர்க்கமுடியாத வழக்குகள் விசாரணைக்கு வரு மாயின் நீதிபதிகள் தமக்கு நியாயமெனத் தோன்றுவதைச் செய்யலாம். ஆனல் அத்தீர்ப்பை மற்ற நீதிபதிகள் பின்பற்ற வேண்டியதில்லை. நீதிபதிகள் தம் தீர்ப்புக்களாற் சட்டம் ஆக்கும் வழக்கமிருக்கும் நாடுகளிலும் பாராளுமன்றம் இவர்கள் யாதேனும் ஒன்றைக் குறித்துச் செய்த தீர்ப்பை விரும்பாவிட்டால் வரையறையான சட்டமொன்றை நிறை வேற்றி நீதிபதிகள் அன்றுதொட்டு அதன்படியே தீர்ப் பளிக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்திவிடலாம். சட்டம் நிறைவேறமுன் கூறிய தீர்ப்பைப்பற்றி யாதுஞ் செய்யப் பாராளுமன்றத்திற் குரிமையில்லை.
சட்டம் அவ்வப்போது நாட்டிற் செல்வாக்குப் பெற் றிருக்கும் சமூக தத்துவத்தை(Social Philosophy)த் தழுவியே உருவாகும். வெளிவெளியாய் யாதேனும் ஒருசட்டம், யாதே னும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதென்று கூறுவதில்லை. குறித்த தத்துவம் பெரும்பாலும் தோன்ரு அடிப்படையாயே யிருக்கும். நீதிபதிகள் பெரும்பாலும் பாரம் பரியத்தைப் பாராட்டும் பேர்வழிகள். பாராளுமன்றம் அவ்

Page 43
72 ஆட்சி இயல்
வப்போது செல்வாக்குப் பெற்றிருக்கும் கொள்கையின் இருப் பிடம். ஆகையால் நீதிபதிகள் செய்யும் தீர்ப்புக்களுக்கும், பாராளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் கொள்கைக்கும் முரண்பாடு தோன்றுதல் இயல்பே. அச்சமயங்களிற் பாராளு மன்றம் தன்கருத்தை நிலைநாட்டச் சட்டம் செய்வதும் இயல்பே. பாராளுமன்றத்திற்கே ஆட்சியில் உச்ச உரிமையுள்ள நாடுகளில், திேபதிகள் பாரளுமன்றஞ் செய்யும் சட்டத்தைத் தழுவியே நீதி செலுத்துதல்வேண்டும். அதிற் குறைகுற்றங் காண்டற்கு அவர் களுக் குரிமையில்லை. ஆனல், எல்லா நாடுகளிலும் பாராளுமன் றத்திற்கு உச்சஉரிமையில்லை. கூட்டாட்சி நாடுகளிற் பெரும்பா லும் பாராளுமன்றத்திலும்பார்க்க நீதிமன்றிற்கே கூடிய உரிமை புண்டு. அமெரிக்காவிலே அரசமைப்பிற்கே (Constitution) ஆதிக்கம் (Supremacy). அரசமைப்பு வகுத்த எல்லையைமீறிச் சட்டக்கழகம் யாதுஞ் செய்தல் முடியாது. அப்படி யெதையும் சட்டக்கழகஞ் செய்துவிட்டால் தனி நீதிபதியோ ஈற்றில் அமெரிக்க கூட்டாட்சி உச்சமன்று (Federal Supreme Court) குறித்த செயல், சட்டவிரோதமானதென்ருே முறையான சட்ட மல்லவென்றே தீர்த்துவிடும். கூட்டாட்சிமுறையிலே உச்ச மன்றிற்குச் சட்டக்கழகத்திற்கிருக்கும் உரிமையிலுங் கூடிய உரிமையுண்டு. ஆனல் அமெரிக்காவிலிருப்பதுபோல் வேறெங் கர்வதில்லை. சுவிற்சலாந்தில் இவ்வுரிமை சட்டமன்றிற்கில்லை.
சட்டக்கழகத்திற்குக் கூடிய செல்வாக்குள்ள நாடுகளில் சட்டமன்றுகளும், சட்ட உத்தியோகத்தரும் சட்டக்கழகம் கிறை வேற்றும் சட்டங்களின்படி அல்லது சட்டக்கழகம் ஆதரிக்கும் வழமைச்சட்டத்தின்படியே நீதிபரிபாலிக்கலாம். பொதுவாய் ஆட்சியமைப்பிற்கு முதன்மையுள்ள நாடுகளில், சிறப்பாய்க் கூட்டாட்சிமுறை இருக்கும் நாடுகளில், சட்டமன்றுகளுக்கும் சட்ட உத்தியோகத்தருக்கும் கூடிய உரிமையுண்டு. சட்டக்கழி கஞ் செய்த சட்டம் எதையும் சட்டவிரோதமானதென்றே வெறிது (செல்லா - Void)ச்சட்டமென்ருே தீர்த்துவிடும் உரிமை சட்டவுத்தியோகத்தருக்குண்டு.

அதிகாரம் 5
ஆட்சிமுறை
ஒட்றையாட்சியும் கூட்டாட்சியும்
சுதந்திரகாடுகள் இவையிரண்டில் ஒன்றைத் தழுவியதா யிருத்தல் வேண்டும். இரண்டில் ஒன்றைத் தழுவத6ாடு இல்லேயென்று கூறிவிடலாம். 5ாடு அடங்கலுக்கும் அதிகாரப் பொறுப்பு ஒரே ஆட்சிப்பீடத்திற்கிருப்பதே ஒற்றை ஆட்சி. இவ்வாட்சிப்பீடத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை நாட்டின் பாராளுமன்றத்துக்கன்றி வேறு யாருக்குமில்லை. நாட்டிலுள்ள யாவும் இப் பாராளுமன்றத்தின் ஆனேக்குட்பட்டன. பிரித் தானியநாடு, பிராஞ்சு, இத்தாலி போன்றவை ஒற்றை ஆட்சி நாடுகள். இந்நாடுகளில் வேறெந்த ஆட்சிப்பீடமுமில்லையென். தல்ல ஒற்றையாட்சியென்பதன் பொருள். நகரசங்கங்கள் மாகாணச் சங்கங்கள் இருக்கலாம் ; இருக்கின்றன. இவை பல முக்கிய பொறுப்புக்களே ஏற்று கடத்துகின்றன. ஆனல் இவை யாவும் தான்தோன்றிகளல்ல ; நாட்டின் ஆட்சிப்பீடத் தின் படைப்பே; நாட்டாட்சிப்பீடத்தின் அதிகாரத்துளடங்கி நடக்கவேண்டியவையே. ஒற்றையாட்சி நாடுகளுக்குச் சிறப் பியல்பு இரண்டு : (1) ஒற்றையாட்சி நாடுகளில் பாராளு மன்றத்தின் ஆணேயை யாருங் கட்டுப்படுத்த முடியாது. (2) இவ்வகை நாடுகளின் எல்லைக்குள் தனியானே யுற்ற ஆட்சிப்பீடமோ பாராளுமன்றமோ இருக்கமுடியாது. இலண் டன் மாநகரமன்றமும், கொழும்பு மாநகர சபையும் முறையே இங்கிலாந்திலும் இலங்கையிலும் சட்டம் வகுக்கும் பொறுப் பும், நிர்வாகப் பொறுப்புமுள்ளவையே யென்ருலும், இவைக் குத் தனியாணையில்லை. இவைக்கிருக்கும் பொறுப்புக்கள் யாவும் பிரித்தானிய பாராளுமன்றத்தின் செயலாலும் இலங் கைப் பாராளுமன்றத்தின் செயலாலும் உருவானவை. அவை களின் செயலால் இல்லாது போகவுங்கூடும்.

Page 44
74 ஆட்சி இயல்
கூட்டாட்சிமுறையில் அப்படியன்று.
அமெரிக்க சட்டக்கழகத்தின் அதிகாரத்துக்கெல்லையுண்டு அரசமைப்பின்படி தனி மாகாணங்களுக்குரிய துறைகளில் அமெரிக்க சட்டக்கழகம் தலையிடுதல் சட்டவிரோதமாம். அமெரிக்கசட்டமன்றும் யாராவது வழக்குத் தொடர்ந்தால் குறித்த செயல் சட்டவிரோதமென்று தீர்த்துவிடும்.
அமெரிக்கக் கூட்டாட்சி அமைப்பிலிருக்கும் தனிமாகாணங் களுக்கு அமெரிக்க சட்டக்கழகத்தை மேவாது தாம் விரும் பியபடி சில துறைகளிற் சட்டமாக்கும் உரிமையுண்டு. இவ் வுரிமையை நீக்க அமெரிக்க சட்டக்கழகத்திற்குரிமையில்லை. இவ் வுரிமையை அமெரிக்க சட்டக்கழகங் கொடுக்கவுமில்லை : எடுக்கவும் முடியாது.
சட்டப்படி சமவுரிமையுள்ள பல நாடுகள் குறித்த சில நோக்கங்களுக்காக ஒரே ஆட்சியிற் சேரும்போது கூட்டாட்சி முறை உருவாகும். சேரும் நாடுகளுக்குச் சில உரிமைகள் சேர்ந்தபின்னும் இருக்கும். சேர்க்கையால் உருவாகிய காட் டுக்குச் சேர்ந்த நாடுகளைச் சில துறைகளிற் கட்டுப்படுத்தும் உரிமையிருக்கும். இவ் விருபகுதியினருக்குமுள்ள உரிமைகள் வரையறை பெற்ருலன்றி ஆட்சியிற் குழப்பம் நிகழக்கூடும். ஆகையால் கூட்டாட்சிக் கடிப்படையாயிருப்பது அரசமைப்பு.
இவ்வரசமைப்பின்படி கூட்டாட்சிப் பிடத்தின் உரிமைகளும் மாகாண ஆட்சிப்பீடங்களின் உரிமைகளும் வரையறுக்கப் படும். இந்த அமைப்பை மாற்றவேண்டுமென்ருல்
தனியே ஒருபகுதியால் மாற்றமுடியாது; இருபகுதியாரும் ஈடுபட்டே நடவடிக்கை யெடுத்தல் வேண்டும். இருபகுதி யாருக்கும் முரண்பாடு தோன்றினுல் தீர்ப்பதற்கும் அதிகார முள்ள ஒரு தாபனம் இருக்கவேண்டும்.
ஆகையாற் கூட்டாட்சி முறையிற் பின்வரும் மூன்று அம்சங்களும் இருக்கவேண்டும்.
(1) கூட்டாட்சி முறையை உருவாக்கும் அமைப்பு.
(2) கூட்டாட்சிப்பீடத்தின் உரிமைகளுக்கும் மாகாண பீடங்களின் உரிமைகளுக்கும் வரையறை.
(3) இரண்டுக்கும் முரண்பாடு தோன்றும்போது தீர்த்து வைக்கும் பொறுப்பும் உரிமையுமுள்ள ஒரு தாபனம்.

ஆட்சிமுறை 75
எல்லாக் கூட்டாட்சி நாட்டிலும் இவை யாவும் இல்லை. சிலவற்றில் நிறைவான கூட்டாட்சிமுறையும் சிலவற்றில் அரை குறையான கூட்டாட்சிமுறையுந்தான் இருக்கிறது. கூட்டாட்சி இயல்பில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. கூட்டாட்சிமுறையில் ஒன்றுசேரும் நாடுகள் ஒரளவிற்குத் தம் தனித்தன்மையைக் கைவிட்டு உண்மையில் ஒரேநாடாய், ஒரேசமுகமாய்ச் சேரல்வேண்டும். சேரும் நாடு கள் ஒன்ருய் வரும்போதும் ஒருமையை விரும்புவதில்லை ; ஒற்றுமையையே விரும்பும். கூட்டாட்சியில் இனேயும் நாடுகள் பலதுறையிற் சுதந்திரம் விரும்புகிறபடியாலேதான் ஒற்றை ஆட்சியை நோக்காது கூட்டாட்சி முறையை நோக்குகின்றன. முன்னர் ஏதாவது தொடர்புள்ள நாடுகள்தான் கூட்டாட்சி முறையை உருவாக்க முடியும். அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இரண்டும் முன்னெருகாலம் பிரித்தானிய ஆட்சியி லிருந்த நாடுகள். சுதந்திரம் வந்தபோது தனிநாடுகள் யாது காரணத்தினலோ தனியாட்சி நிறுவ விரும்பவில்லை. தம் சுதந்தி ரத்தையும் முற்ருய்க் கைவிட விரும்பவில்லை. புதிதான ஒருநாடு (Nation, State) உருவானது. பழைய நாடுகள் நாடுகளாய் முற்றும் மறையவில்லை. கனடாவினதும் இந்தியாவினதும் வர லாறு சிறிது வேறுபட்டது. கனடாமுறை ஒற்றையாட்சி முறையி லிருந்து பின் இரண்டாய்ப் பிரிந்து கூட்டாட்சி முறை நிறுவி யது. இந்தியாவும் முன் ஒன்ருயிருந்து சுதந்திரத்தின் பின் இரண்டாய்ப் பிரிந்து கூட்டாட்சி முறையைத் தழுவியது. கூட்டாட்சியில் இணையும் நாடுகளை அமெரிக்காவிலும் அவுஸ்தி ரேலியாவிலும் ‘State என்றே கூறுவது வழக்கம். கனடாவில் * Province' என்றும் சுவிற்சலாந்தில் "Canton என்றுஞ் சொல்லு வார்கள். தமிழில் உறுப்பு நாடு’ என்ற சொல்லையே இங் நூலில் உபயோகிப்போம். (* நாடு’ Nation, State-என்ற பொரு வில் உபயோகப்படுகிறது.) மேலும் கூட்டாட்சி முறைக்குப் பின்வருவன பெரிதும் தேவை :
(1) வரையறையான அரசமைப்பு ஒன்று வேண்டும். கூட்டாட்சிப் பீடத்தின் பொறுப்புக்களும் உரிமைகளும் என் னென்ன என்றும் உறுப்பு நாடுகளின் பொறுப்புக்களும் உரி மைகளும் என்னென்னவென்றும் ஐயந்திரிபற்ற வரையறை யிருத்தல் வேண்டும். ஒருபகுதி மற்றப்பகுதிக்குரியவற்றிலே தலையிடாதிருப்பதற்கு வரையறையான ஒரு அரசமைப்பு இருத்தல் வேண்டும்.

Page 45
76 ஆட்சி இயல்
(2) அமைப்பு இருப்பதுடன் அமைப்பில் எதையும் பற் றிக் கருத்து வேற்றுமை தோன்றும்போதோ அல்லது அமைப்பைச் செயற்படுத்துவதில் யாதேனும் தகராறு ஏற் படும்போதோ, இவற்றைத் தீர்த்து வைப்பதற்குப் பொறுப்பும் உரிமையுமுள்ள தாபனம் ஒன்றிருத்தல் வேண்டும். பெரும் Luitgllb 5.LLITL3 p 3 FLD66 ) di Gd5 (Federal Supreme Court) இப்பொறுப்பிருக்கும். ஆகையாற் கூட்டாட்சியில் அரசமைப் புக்கும் கூட்டாட்சி உச்சமன்றுக்கும் பெருஞ் செல்வாக்கிருக் கும். ஆட்சியமைப்புக்களே இலகுவாய் மாற்ற முடியுமோ முடி பாதோ என்ற அடிப்படையில் நெகிழாயாப்பு (Rigid. Constitution), Gib$5thdéfu IIT lit 1 (Flexible Constitution) of air gy இரண்டு கூருய்ப் பிரிப்பது வழக்கம். இப் பாகுபாட்டிற் கூட் டாட்சித் திட்டம் நெகிழாவகையையே சேர்ந்ததாயிருக்கும்; 6)6) ir LT.ļuDruc5igti (Written Constitution). Js, T சிப் பீடத்திற்கும் உறுப்பு நாடுகளுக்கும் உரியவை நுணுக்க மாய் வரையறுக்கப்பட வேண்டியவை யானபடியாற் கட்டாயம் இருபகுதியாரின் உரிமைகள் எழுத்திலேதான் இருத்தல் வேண்டும்.
ஆகையால், கூட்டாட்சியிற் பங்குபற்றுவதற்கு ஓரளவாயி இனும் சட்ட அறிவும் சட்டப்படி 5டக்கும் பழக்கமும் வேண் டும். அரசமைப்பு வகுத்தல், பொறுப்புவரையறை, முரண் பாடு தீர்த்தல் ஆகிய யாவுஞ் சட்டத் தொடர்புடையனவே. கூட்டாட்சி நாடுகளில் வசிப்போர் தம் சொந்த உறுப்பு பூா டுச் சட்டத்திற்கும், கூட்டாட்சிப் பீடத்தின் சட்டத்திற்கும் கட்டுப்படுவர். இந்த இருவகைக் கட்டுப்பாடுகளையுஞ் சமr சப்படுத்தி வாழ்வது எப்போதும் இலகுவாயிராது.
(3) கூட்டாட்சியில் இணேயும் நாடுகள் அயல் நாடுகளா பிருத்தல் வேண்டும். ஒன்றிற்கொன்று தூரத்திலிருந்தால் ஒன்றுசேரும் விருப்பம் உருவாதல் அரிது; உருவானபோதும் நிலைத்தல் அரிது.
(1) பாகிஸ்தானின் இரு கூறுகளும் ஒன்றிற் கொன்று ஆயி ரங் கல் தொலைவிலிருப்பதையும் அலாஸ்கா ஹவாய் தீவுகள் அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவிலிருப்பதையும் நோக்குக. இவை இரண்டும் புறகடை.

ஆட்சிமுற்ை. 77
(4) இணையும் நாடுகள் பொருளாதாரம், கல்வி, நில்ப் பரப்பு போன்றவற்றில் ஏறக்குறையச் சமமாயிருத்தல் வேண் டும். இத் துறைகளிற் பாரதூரமான வேற்றுமையிருக்குமாயின் சில உறுப்பு நாடுகளின் செல்வாக்குக் கூடியும் சிலவற்றின் செல்வாக்குக் குறைந்தும் போகும். ஈற்றிற் செல்வாக்குள்ள காடு மற்ற நாட்டை ஆளும் கிலேயை யடைந்துவிடும்.
பொறுப்புப் பங்கீடு
கூட்டாட்சிப் பீடத்திற்கும் உறுப்பு நாடுகளுக்கும் உரிய பொறுப்புக்களை வரையறுப்பதில் இரண்டுமுறைகள் பின்பற் றப்படுகின்றன. ஒன்று கூட்டாட்சிப் பீடத்தின் பொறுப்புக் களை வரையறுத்துவிட்டு மற்ற யாவற்றையும் உறுப்புநாடு களுக்கு விட்டு விடுதல். இம்முறையே அமெரிக்கா, சுவிற்க லாந்து, அவுஸ்திரேலியா, சோவியத் ரூஷ்யபோன்ற நாடு களிற் செயற்படுவது.
உறுப்பு நாடுகளின் பொறுப்புக்களை வரையறுத்துவிட்டு மற்ற யாவற்றையுங் கூட்டாட்சிப் பீடத்திற்கு விட்டுவிடுவது மற்ருெருமுறையாகும். கனடாவில் உறுப்பு காடுகளின் பொறுப்பை வரையறுத்து மற்ற யாவற்றையுங் கூட்டாட்சிப் பீடத்திற்கே விட்டிருக்கிறது.
இம்முறைகளும் பெரும்பாலும் அடிப்படைக் கொள்கை களிலிருந்தே உருவாகின்றன. உறுப்பு காடுகளுக்குக் கூடிய பொறுப்புக் கொடுப்பதே நோக்கமென்றல், கூட்டாட்சிப் பிடத் திற்குரியனவென்ற முக்கியமான சிலவற்றை வரையறுத்து விட்டு ஏனேய யாவற்றையும் உறுப்பு நாடுகளுக்கு விடல் வேண்டும். கூட்டாட்சிப் பீடத்திற்குக் கூடிய ஆதிக்கம் வேண்டுமென்று விரும்பினுல் உறுப்பு நாடுகளுக்கெனச் சில: வற்றை ஒதுக்கி விட்டு விடுவர். தனித்தனியாய் இருபகுதி யாருக்கும் உரிய பொறுப்புக்களை விட இருபகுதியாரும் ஈடு படக்கூடிய சில துறைகளை வகுத்தலும் உண்டு. உறுப்பு காடுகள் தம் பொறுப்பு எதையும் அசட்டை செய்தாற் கூட் டாட்சிப் பீடம் தலையிட்டு வேண்டியதைச் செய்வதற்கே இந்தமுறை ஆளப்படுவது. இருபகுதியாரும் ஈடுபடக்கூடிய வற்றில் கூட்டாட்சிப் பீடத்தின் உரிமையே கூடிய செல்வாக் குடையது. அதாவது இருபகுதியாரும் இவற்றில் ஒன்றைப்

Page 46
78 ஆட்சி இயல்
பற்றிச் சட்டம் வகுத்தாற் கூட்டாட்சிப் பீடத்தின் சட்டமே, சட்டப்படி நிறைவேறியதாகக் கருதப்படும்.
உறுப்புகாடுகளுக்குப் பாதுகாப்பு ஆட்சித்திட்டம் கூட்டாட்சிப் பீடத்திற்கும் உறுப்புநாடுக ளுக்கும் உரியவற்றைத் திட்டவட்டமாய் வரையறுத்தபோதும் கூட்டாட்சிப் பீடம் உறுப்பு நாடுகளின் உரிமைகளிலே தலை யிடும்போது உருவாகுக் தகராறுகளை உச்சமன்று தீர்த்து வைக்கும். பெரும்பாலும் உறுப்புநாடுகளின் பாதுகாப்புக்காக ஆட்சித்திட்டத்தில் இரண்டு கட்டுப்பாடுகளும் இடம் பெறுவ துண்டு.
(1) கூட்டாட்சி நாடுகள் யாவற்றிலுஞ் சட்டக்கழகங் களுக்கு இரண்டு அங்கங்கள் உண்டு. ஒன்றுக்குச் சனத் தொகையின்படி பிரதிநிதிகள் தெரிவு பெறுவர் ; மற்றதிற்கு எல்லா உறுப்பு நாடுகளுக்குஞ் சமதொகைப் பிரதிகிதிகள் இடம் பெறுவர். - -
(2) ஆட்சித்திட்ட த்தில் மாற்றஞ் செய்வதிற் கூட்டாட்சிப் பீடமும் உறுப்பு நாடுகளும் ஈடுபடல்வேண்டும். ஈடுபாட்டிலும் கூடிய உரிமை உறுப்பு 15ாடுகளுக்கே யுண்டு. அமெரிக்கா வில் உறுப்பு நாடுகளில் காலில் மூன்று பங்கு ஏற்ருலன்றித் திருத்தம் நிறைவேறது. அவுஸ்திரேலியாவிலும் சுவிற்சலாக் திலும் வாக்காளரின் பெரும்பான்மையினரும் உறுப்பு நாடு களிற் பெரும்பான்மை காடுகளும் ஏற்ருலன்றித் திருத்தங் கள் நிறைவேற்ற முடியாது.
வெளியேறல் ஒன்று கூடிக் கூட்டாட்சி நிறுவியபின் உறுப்பு நாடுகளில் ஒன்ருே பலவோ வெளியேற விரும்பினுல் அப் படிச் செய்யலாமோ என்ற கேள்விக்குச் சட்டப்படி இவ் வுரித்தில்லையென்றே கூறல் வேண்டும். பலர் சேர்ந்து நிறை வேற்றிய ஒப்பந்தத்திலிருந்து ஒருவரோ ஒரு சிலரோ தாம் விரும்பியபடி வெளியேறுவது முறையாகாது. வெளியேறும் உரிமை ஆட்சித்திட்டத்தில் இடம் பெருதபோது குறித்த உறுப்பு நாட்டையோ நாடுகளையோ வெளியேற விடுவதற் கென ஆட்சித்திட்டத்தில் ஒரு திருத்தம் முறைப்படி நிறை வேற்றி வெளியேறுதலே முறையாகும். சோவியத் ரூஷ்ய நாட்டின் ஆட்சித் திட்டத்தில் விரும்பும் எவ்வுறுப்பு நாட்டுக்

sه
ஆட்சிமுறை 79
கும் வெளியேறுவதற்குரிமையுண்டு. ஆனல் இது சட்ட வரை யறையைப் பொறுத்த ஒன்றன்று. இதைப்பற்றியே அமெரிக்கா விற் குடிப்போர் (உள்ளூர்ப்போர்-Civil War) நடந்தது. இரு கட்சியாரும் தம் செயலே சட்டபூர்வமானதென்று வாதாடினர் ஏபிரகாம் லிங்கன் போரின் நோக்கம் காப்பிரி மக்களின் விடுதலேயன்றென்றும் நாட்டின் ஒற்றுமை சிதைந்துபோகாது காத்தலேயென்றும் பலமுறை கூறியுள்ளார்.
சட்டம் ஏற்றதைத்தான் வலியுறுத்தினுலும் இச் சட்டத்தை நாடித் தீர்க்கக்கூடிய ஒன்றன்று. வெளியேற வேண்டுமென்ற தீர்மானமும் அத் தீர்மானத்தை நிறைவேற்றுதற்கு வேண் டிய ஆயுத பலமும் இருந்தால் வெளியேறலாம்.
குறிப்பு : கூட்டாட்சிமுறையை அமைப்பிலும், கொண்டு நடத்து வதிலும் பலவகை வில்லங்கங்சள் இருக்கின்றன. கூட்டாட்சி முறைக்கேற்ப நாட்டைப் பங்கீடு செய்வதோ ஆட்சிமுறைகளை வரையறுப்பதோ இலகுவல்ல. மேலும் சமூகக் கொள்கைகளும், சமூகதேவைகளும் விரைவாய் மாறிக்கொண்டு போகும் இக்காலத் தில் இவைக்கேற்ப ஆட்சித்திட்டத்தை மாற்றிவிடுவது கூட்டாட்சி முறையில் முடியாது. மாற்றத்திற்கு வேண்டிய நடவடிக்கைகள் முற்றுப்பெற ஆண்டுக்கணக்கிற் காலம் எடுக்கும். ஒற்றையாட்சி யிலே தேவைக்கேற்பத் திருத்தங்களைப் பெரும்பாலும் வேண்டிய போதே செய்துமுடித்துவிடலாம். கூட்டாட்சிப் பீடத்திற்கும் தனித் தனியுறுப்பு நாடுகளுக்கும் உள்ள முரண்பாடு இல்லாமல் முற் போக்கு முறைகள் கூட்டாட்சி முறையில் விருத்திபெற இடமில்லை ; பாரம்பரிய முறைகளுக்கே கூடிய ஆதரவு இருக்கும்.
பெரும்பாலும் ஒற்றையாட்சியில் ஒரு ஆட்சிப்பீடத்திற்கே முடி வான பொறுப்புண்டு. குறித்த ஒன்றைச் செய்வது யார் கடமை யென்ருே, யார் பொறுப்பென்ருே ஆராயவோ ஆலோசிக்கவோ வேண்டியதில்லை. ஒற்றையாட்சியிற் குறித்த அலுவலுக்கு ஒரே பொறுப்பும், ஒரே தாபனமும், ஒரே செயலுந்தான் உள்ளபடியால் பலவகையிலும் சிக்கனம் உண்டு. கூட்டாட்சி முறையில் நாட்டின் வருவாய் வளங்கள் திறன்களைப் போதியளவு பயன்படுத்தல் இலகுவல்ல. -
ஒற்றையாட்சி முறையுடன் ஒப்பிடும்போது கூட்டாட்சிமுறை ஆற்றல் குறைந்ததாயே இருக்கும். இவ்வாற்றற்குறைவு கூட் டாட்சிமுறைக் கியற்கையேயென்பது பேராசிரியர் டைசியின் கருத்து, பலவகைப் பொறுப்புக்கள் ஒரே ஆளுக்கோ தாபனத்திற்கோ இராது, இரண்டாய்க் கூறுபட்டிருப்பதே இதற்குக் காரணம்,

Page 47
SO ஆட்சி இயல்
நாட்டுமக்களுக்கும் இரு வகையபிமானங்களைச் சமரசப்படுத்து வது எளிதன்று. தத்தம் உறுப்பு5ாட்டிற்குரிய அபிமானமே பெரும் பாலும் முதன்மைபெறும். கூட்டாட்சிப்பிடம் ஓரளவிற்கு அக்கிய ஆட்சிபோலவும் தோன்றக்கூடும். அமெரிக்காவிலே குடிப்போர், நடந்தபோது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தோர் பலரும் வேறு உத்தியோகத்தர் பலரும் குழப்பக்காரருடன் சேர்ந்தது தத்தம் உறுப்புநாட்டின்பாலுள்ள அபிமானத்திலேதான். வெளியேறும் உரிமைக்கெனப் போராடிய சேனையின் சிறந்த தலைவரான லிஎன் பவர் அமெரிக்க சேனையிற் பொறுப்பான பதவி வகித்தவர். ஆனல் தமது சொந்த நாடாகிய வேர்ஜினியாவின்பாலுள்ள அபிமானத்தி ணுலேதான் வெளியேற்றக் கட்சியைச் சேர்ந்தார்.
இக் குறைபாடுகள் கூட்டாட்சிமுறையிலிருந்தபோதும், இவை இயல்பாய் இருக்கக்கூடு மென்றறிந்தபோதும் சிலநாடுகள் கூட் டாட்சிமுறையைத் தெரிந்தது ஒற்றையாட்சி நிறுவுவதற்குப் பார தூரமான தடையிருப்பதேைலதான். கூட்டாட்சி முறையில் ஒன்று சேராதுபோனல் தனித்தனி ஆட்சியே நிறுவவேண்டி வந்திருக்கக் கூடும். செய்யக்கூடிய இரண்டிற் கூட்டாட்சிமுறையே சிறந்ததென்று கொண்டே இம்முறையைத் தழுவினர். ஒற்றுமையும் வேண்டும் வேற்றுமையையும்- அதாவது தனி உரிமைகளையும்-கைவிட மன மில்லை. இந்த கிலேயிற் கூட்டாட்சி முறையே பலிக்கக்கூடியது, கூட்டாட்சி முறையில் இன்னேர் 15 ன்மையுண்டு : மக்கள் தத்தம் உறுப்பு:நாடுகளின் ஆட்சியில் அபிமானத்துடன் பங்குபற்றி அவற்றின் வளர்ச்சிக் குழைக்கக்கூடியதா யிருக்கிறது. ஆணுல் ஒற்றை யாட்சி முறையிலேயே இந்த கன்மையைப் பெறமுடியும். உள்ளு ராட்சி (Local Government) கிலேயங்களுக்குப் பொறுப்பையும் வரு வாயையும் வேண்டிய அளவு பெருக்கிவிட்டால் அவ்வப் பகுதி ம்க்கள் ஆர்வத்துடனும் அபிமானத்துடனும் தத்தம் ஊர்ாட்சி யலுவல்களில் ஈடுபட்டு அவற்றைச் சிறப்பெய்தப்பண்ண முடியும்.
கூட்டாட்சி உருவாவதற்கு மீோழிவேற்றுமை இனவேற்றுமை போன்றன இருக்கவேண்டிய்தில்லை. அவுஸ்திரேலியாவிலும் அமெ ரிக்காவிலும் ஒரே மொழியும் ஒரே இனமுந்தான் இருந்தபோதும் கூட்டாட்சி முறையே உருவாகியிருக்கிறது. இனம், மொழியாகிய வற்றில் வேற்றுமை இருந்தாற் கூட்டாட்சி முறையே உருப்பெற்று விடும் என்று சொல்லுவதற்குமில்லை. பெல்ஜியம் (Belgium), பின் லாக்து (Finland) காடுகளில் ஒன்றுக்குக்கூடிய மொழிகளிருந்தும் ஒற்றையாட்சியே நடைபெறுகிறது.

அதிகாரம் 6
அரசமைப்பு
வரைந்தயாப்பு, வரையாயாப்பு (Written Constitution and Unwritten Constitution)
Tெந்தநாட்டிலாயினும் ஆட்சிமுறையை வரையறுக்கும் ஒரு யாப்பு அல்லது அரசமைப்பு (Constitution) இருக்கவேண் டும். அது ஒரே சாதனமாயோ, வெவ்வேறு தனிச் சாதனங்க ளாயோ, இவற்றேடு காலப்போக்கில் உருவான மரபுகளாயு மிருக்கலாம். முன்னுெருகாலம் இவற்றை வரைந்தயாப்புக்கள், வரையாயாப்புக்கள் என்று வகுக்கும் முறை இருந்தது. இன்று இம்முறை பெரும்பாலும் கைவிடப்பட்டிருக்கிறது முற்றும் வரைந்தயாப்போ, ஓரளவிற்காயினும் வரையாயாப்போ யாதுமில்லை. ஆட்சிமுறைக்கு வேண்டியதென்று தாம் கருதிய யாவற்றையும் அமெரிக்கவரசமைப்பை வகுத்தோர் வரைந்து வைத்தனர். ஆனல் அவர்கள் எண்ணியபடி நடக்கவில்லை. ஆட்சிமுறைக்குரிய சில மரபுகள் காலப்போக்கில் உருவாகி ஆட்சிமுறையில் இடம்பெற்றுவிட்டன. ஆள்பதியின் தெரி வுக்கு உறுப்புநாடுகளின் சட்டக்கழகங்கள் ஒவ்வொன்றும் திர்க்கிறபடி ஒரு குறித்த தொகைத் தெரிவாளர் தெரியப்படல் வேண்டுமென்றும் அவர்களே ஆள்பதியைத் தெரியவேண்டு மென்றும் அமெரிக்க ஆட்சித் திட்டம் கூறுகிறது. ஆனல் இன்று அப்படி நடப்பதேயில்லை. ஆள்பதித் தெரிவில் அபேட்சகராய் நிற்பவர்களில் ஒருவரையோ மற்றவரையோ ஆதரிப்போரே தெரியப்படுகின்றனர். அவர்களேத் தெரிந்தவுடன் யார் ஆள் பதியென்று தெரிந்துவிடும். அவர்கள் கூடிச் செய்யும் தெரிவு வெறும் சம்பிரதாயமே. பிரித்தானிய ஆட்சித்திட்டம் வரையா யாப்பென்றே கருதப்பட்டது. ஆனல், அதன் அடிப்படையான கொள்கைகளிற் சில வரையறையாய் எழுதப்பட்ட சாதனங்களில் இருக்கின்றன. மகாபட்டயம் (மகா உரிமைச்சாதனம் - Magna Carta) 6T63D giub, 2 fi6OLD LDg) (Petition of Rights) ai 667 fogliò
ஆ - 6

Page 48
82 ஆட்சி இயல்
பிரசித்திபெற்ற சாதனங்கள். பிரபுக்கள் சபையின் அதி காரத்தை மட்டப்படுத்துவதற்கு 1911இலும் 1945இலும் நிறைவேறிய சட்டங்களும் எழுத்திலேயே இருக்கின்றன. 1832 தொடக்கமாய் நிறைவேறி வந்திருக்கும் வாக்குரிமை வரையறைச் சட்டங்களும் (Reform Acts) எழுத்திலேதான் இருக் கின்றன. வரைந்தயாப்பு என்று கூறுவது வேண்டிய யாவற் றையும் ஒரே இடத்தில் வரைந்திருக்குந் திட்டமே. அமெரிக்க திட்டம் அத்தகைய ஒன்ருய் உருவெடுத்ததாயினும் காலப் போக்கில் வந்த மரபுகளும் அதில் இடம்பெற்றிருத்தலை முன் குறித்திருக்கிருேம்.
மேலும், அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலைபெறும் போதோ முன் வெவ்வேருய் இருந்த நாடுகள் ஒன்று சேரும் போதோ அல்லது நாட்டிற் பெரும் புரட்சி நடந்து அதன் விளைவாய்ப் புது ஆட்சிமுறை உருவாகும்போதோ அல்லது வேறெக் காரணத்தினுலும் ஒரு புதுமுறை யுருவாகும் போதோதான், பெரும்பாலும் அரசமைப்பை முற்ருய் எழுதி வைப்பதற்குச் சந்தர்ப்பம் இருக்கும். தம் வரலாற்றில் இவை நிகழா நாடுகளில் வரைந்தயாப்பு உருவாதலுக்குச் சந்தர்ப்பம் வராது. அது எப்படியாயினும் வரைந்த யாப்புக்கும் வரையா யாப்புக்கும் உள்ள வேற்றுமை, உருவ (Formal) வேற்று மையே யன்றிப் பொருள் (Real) வேற்றுமையன்று.
நெகிழ்ச்சியாப்பும் கெகிழாயாப்பும் (Flexible Constitution and Rigid Constitution)
இதிலும் முக்கியமான வேற்றுமை ஒன்று அரசமைப்பிற் காணக்கிடக்கின்றது. இவற்றுட் சில நெகிழ்ச்சி (Flexible) யாப் புக்கள், சில நெகிழா (Rigid) யாப்புக்கள். நெகிழ்ச்சியாப்புக் களில் எளிதாய் மாற்றங்கள் செய்துவிடலாம். நெகிழாயாப்புக் களில் மாற்றஞ் செய்வது எளிதன்று ; அதற்கென வகுத்த சிறப்புமுறையின்படியே மாற்றஞ் செய்யலாம். நெகிழாயாப் புக்கள் வரைந்த யாப்புக்களாயேயிருக்கும். ஆணுல், வரைந்த பாப்புக்களெல்லாம் நெகிழா யாப்புக்களல்ல. வரைந்தயாப்புக் ாள் ஒலவற்றில் மாற்றஞ் செய்வதற்குச் சிறப்புமுறை யாதும் வகுத்திருக்கவில்லை. நியூசிலந்தின் அரசமைப்பிற் பாராளுமன் றத்திற்கு மாற்றும் உரிமையுண்டென்று அரசமைப்பின் 62ஆம் டிரிவிற் கூறியிருக்கிறது. சிறப்புமுறை யாதும் வகுக்கப்பட

அரசமைப்பு 83
வில்லை. இத்தாலிய அரசமைப்பு உருவானபோது நெகிழாயாப் பென்றே கருதப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். ஆனல், அதில் மாற்றஞ் செய்யக்கூடா தென்று கூறப்படவில்லை. முதன் முதல் உருவானபோது இன்று இத்தாலியெனப்படும் நாட்டின் ஒரு சிறுபாகமான சார்தீனியா (Sardinia)விற்கே அது வகுக்கப்பட்டது; வேறு நாடுகளும் சேர்ந்து உருவான இத்தாலியநாடு முழுவதற்கும் அதே அடிப்படை அரசமைப்பாய் ஏற்பட்டது. ஆனல், அது முதன் முதல் உருவானபடி இன்று இல்லை ; பல மாற்றங்கள் இடம்பெற்றுவிட்டன. மாற்றக்கூடாதென்று அதிற் கூறி யிராதபடியால், மாற்றலாமென்று பொருள்கொண்டு பாராளு மன்றம் தேவைக்குத்தக்கபடி பல மாற்றங்கள் செய்திருக்கிறது. பின்லாந்தின் அரசமைப்பு 1919இலேதான் உருவானது. மாற்றமுடியாத் திட்டமென் றெங்காயினும் அதிற் கூறப்பட வில்லை. மாற்றத்திற்குச் சிறப்புமுறை வகுத்துமிருக்கவில்லை. ஆகையால், பாராளுமன்றம் தேவைக்கேற்ப மாற்றலாமென்றே கருதப்பட்டது. பிரித்தானிய அரசமைப்பு வரையாயாப்பாகும். அதாவது, அதற்குரிய அம்சங்கள் யாவையுந் திரட்டி ஒன்ருக்கி ஓரிடத்தில் எழுதப்பட்டில்லை. வரையா யாப்பானபடியால் அது நெகிழ்ச்சியாப்பே. ஆட்சிக்குரிய யாவற்றையுந் திரட்டி எழுதி வைக்கவேண்டிய நிலை பிரித்தானிய நாட்டில் எப்போ தாவது வரவில்லை. காலப்போக்கில் நாட்டிலும் உலகிலும் நிகழ்ந்த வெவ்வேறு மாறுதல்களுக்கேற்ப அவ்வப்போது பாராளுமன்றம் வேண்டிய மாற்றங்களேச் செய்தது. மாற்றஞ் செய்வதற்குச் சிறப்பு முறை யாதும் இல்லை. ஒருங்கு திரட்டி வரையறை பெருத் திட்டமானபடியாற் சிறப்புமுறை யாதும் இடம்பெற்றிருக்கவும் முடியாது.
இதுவரையுங் கூறியவற்றிலிருந்து குறித்த ஒரு அமைப்பு வரைந்தயாப்பா யிருந்தாலென்ன, வரையாயாப்பா யிருந்தா லென்ன இலகுவாய்ச் சிறப்புமுறை யாதுமின்றித் தேவைக்கேற் பப் பாராளுமன்றம் மாற்றக்கூடியதென்ருல் அது நெகிழ்ச்சி யாப்பென்பது தெளிவாகிறது.
கெகிழாயாப்புக்கள் இவை கட்டாயமாய் வரைந்த யாப்புக்களாயே யிருக்கும். இவற்றின் முக்கிய இயல்பு எளிதில் மாற்ற முடியாமையே. மாற்றத்துக்குச் சிறப்புமுறையும் வகுத்திருக்கும். இவ்வகை

Page 49
84 ஆட்சி இயல்
அமைப்புக்களுக்கு நுட்ப வரையறை கட்டாயம் வேண்டிய ஒன்று. எழுத்திலன்றித் திட்டவட்டமான வரையறை செய்ய முடியாது. ஆகையால், இவை வரைந்த யாப்புக்களாயே ஏன் இருக்கவேண்டுமெனத் தெளிவாகிறது. ஆட்சிக்குரிய சட்டங் களுக்கும் மற்றச் சட்டங்களுக்கும் வேற்றுமையுண்டென்றும், ஆட்சிக்குரிய சட்டங்கள் மற்றச் சட்டங்களிலும் சிறிதாயினும் சிறப்புவாய்ந்தன என்றும், அவற்றை நினைத்தபடி மாற்றி விடுவது முறையாகா தென்றுங் கருதியே இவ்வகை அமைப்புக் களை வகுப்போர் இவற்றை மாற்றுவதற்குச் சிறப்புமுறையை வகுப்பர். கூட்டாட்சி யாப்புக்கு (Federal Constitution) எளிதில் மாற்றமுடியா அரசமைப்புக் கட்டாயம் வேண்டிய ஒன்று. உறுப்பு நாடுகளுக்குச் சிறப்பாய்ச் சில உரிமைகள் இருக்கவேண்டுமென்று கருதியே கூட்டாட்சி முறையை நிறுவு வது. இத் தனியுரிமைகள் சிதைந்து போவதை உறுப்பு நாடு கள் ஒருபோதும் ஏற்கமாட்டா. இதனுலேதான் உறுப்புநாடு களின் உரிமைகளும் கூட்டாட்சிப்பீடத்தின் பொறுப்புக்களும் நுட்பமாய் வரையறுக்கப்பட்டிருக்கும். இவ்வரையறை மாரு திருக்க வேண்டுமென்ருல் இவ்வரையறையைக் கொண்ட அரசமைப்பும் மாரு தேயிருக்கவேண்டும். ஆனல் எதை யாவது வருங்காலத்தில் நடக்கக்கூடாதெனக் கட்டுப்படுத்து தல் விவேகிகள் செயலன்று; செய்யக்கூடிய ஒன்றுமன்று. ஆகையாற் கூடியமட்டும் மாற்றங்கள் நிகழாது தடுத்து விடுதலும், மாற்றங்கள் வரவேவேண்டுமென்ருல் போதிய ஆராய்வுடனும் உரியவர்களுடைய சம்மதத்துடனும்தான் வர வேண்டுமென்றுங் கருதியே மாற்றத்துக்குரிய முறை வகுக்கப் படும். பெரும்பாலும் உறுப்பு:நாடுகளில் அரைவாசிக்கு மேற் பட்டவற்றின் சம்மதத்துடனேதான் மாற்றங்கள் செய்யப் படுவன. அமெரிக்காவில் எந்த மாற்றமும் நிறைவேறுவதற்கு உறுப்பு நாடுகளில் காலில் மூன்று பங்கு நாடுகள் சம்மதிக்க வேண்டும். சுவிற்சலாந்திலும் உறுப்புநாடுகளிற் பெரும்பான்மை நாடுகளின் சம்மதம் வேண்டும். ஆனல், கூட்டாட்சி நாடு களின் ஆட்சித் திட்டங்களே நெகிழாயாப்புக்கள் என்று கொள் வது தவறு. ஒற்றையாட்சி நாடுகளிலும் பலவற்றில் நெகிழா யாப்புக்கள் உள. கூட்டாட்சி நாடுகளுக்கு நெகிழாயாப்புக் கட்டாயம் வேண்டிய ஒன்று. ஒற்றையாட்சி நாடுகளிலும் நெகிழாயாப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நெகிழா யாப்பென்று சொல்லும் எல்லாத் திட்டங்களுக் கும் ஒருவகை நெகிழாமைதான் இருக்கிறதென்று பொரு

அரசமைப்பு 85
ளன்று. நெகிழாமையிலும் ஏற்றத்தாழ்வுண்டு : சில திட்டங்க ரிென் நெகிழாமை கூடியது ; சிலவற்றின் நெகிழாமை குறைந் தது. கூட்டாட்சி அமைப்புக்களே நெகிழாமை கூடியவை. எல்லா நெகிழா யாப்புக்களுக்கும் பொதுவாயொன்றுண்டு. ஒவ் வொன்றிலும், அதில் எவ்வகை மாற்றமுஞ் செய்வதென்றல் பின்பற்றவேண்டிய சிறப்புமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. மாற்றங்கள் செய்வதற்கு வகுக்கப்பட்டிருக்கும் முறைகள் பின்வருவனவே :-
(1) பாராளுமன்றமே மாற்றத்தைச் செய்வது. செய்யும் போது சில கட்டுப்பாடுகளின்படியே செய்தல்வேண்டும்.
(11) நாட்டுமக்கள் மாற்றத்தைச் செய்வது. வாக்கெடுப்பின் மூலம் மக்கள் ஆதரவு இருக்கிறதோ என்றறிந்து அதன் படி செய்வது.
(111) கூட்டாட்சி நாடுகளில் உறுப்புநாடுகளிற் பெரும்பான்மை
நாடுகளின் ஆதரவோடு செய்தல்.
(IV) இதற்கெனக் கூடும் ஒரு மகாநாட்டின் தீர்ப்பின்படி
செய்தல்.
பாராளுமன்றம் செய்யும் மாற்றங்கள் பின்வரும் 3 கட் டுப்பாடுகளில் ஒன்றைத் தழுவியே செய்யப்படும் :
(i) மாற்றத்தைப்பற்றித் தீர்ப்பெடுக்கும் பாராளுமன்றக் கூட்டத்தில் ஒரு குறித்த தொகைக்குக் குறையாத உறுப்பினர் சமுகமாயிருத்தல் வேண்டும். அதை ஆத ரிப்போர் தொகையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர் தொகையில் ஒரு குறித்த வீதத்திற்குக் கூடியதா யிருத் தல் வேண்டும். இதே இலங்கையில் நடைபெறும் முறை. கூட்டத்திற்கு உரிய தாழ்வெண்ணிக்கை (Quorum) போதும். ஆணுல், பாராளுமன்றத்தின் மொத்த உறுப் பினர் தொகையில் மூன்றில் இரண்டு பங்காயினும் ஆதரித்தாலே மாற்றம் நிறைவேறும். அங்ங்ணம் வேண் டிய தொகை யுறுப்பினர் ஆதரித்தனர் என்று வாசகர் ? (சபாநாயகர் - Speaker) உறுதி கூறினலன்றி ஆள்பதி நாயகம் (Governor-General) தம் சம்மதத்தைக் கொடார். இலங்கை ஆட்சித் திட்டத்தின் 29ஆம் பிரிவின் 4ஆம் உபபிரிவில் இது கூறப்பட்டிருக்கிறது.
பெல்ஜியத்திலும் இந்த முறைதான் இடம்பெற்றுள்ளது.

Page 50
86 ஆட்சி இயல்
(i) மாற்றத்தைப்பற்றி முடிவான தீர்ப்புச் செய்யுமுன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிதாய்த் தெரிந்த பாராளுமன்றமே முடிவான தீர்ப்பைச் செய்தல். புதுப் பிரதிநிதிகளைத் தெரியும்போதே அவர்கள் மூலம் தம் கருத்தைத் தெரிவிப்பதற்கு வாக்காளருக்கு இம்முறை வாய்ப்பளிக்கிறது. நோவே, சுவீடின் நாடுகளில் இந்த முறையும் பாராளுமன்ற உறுப்பினரில் ஒரு குறித்த வீதத்தினரின் ஆதரவு முறையும் இடம்பெற்றிருக் கின்றன.
(iii) பாராளுமன்றத்தில் இரண்டங்கங்களும் ஒன்ருய்க் கூடிப் பெரும்பான்மை முறைப்படி தீர்த்தல். (V) மக்கள் வாக்கெடுப்பு. உத்தேசிக்கும் மாற்றத்தை வாக்
காளர் தீர்ப்புக்குவிட்டு அவர்கள் தீர்ப்பின்படி செய் தல். இம்முறை சுவிற்சலாந்திற் பின்பற்றப்படுகிறது.
(VI) கூட்டாட்சி நாடுகளின் உறுப்பு நாடுகளின் பெரும் பான்மை நாடுகளின் தீர்ப்பின்படி மாற்றஞ் செய்தல், உறுப்புநாடுகள் சார்பாக அவற்றின் பாராளுமன்றங் கள் தம் கருத்தைத் தெரிவிக்கலாம் ; அல்லது ஒவ்வொரு உறுப்புநாட்டிலும் வாக்காளர் கருத்தை வாக்கெடுப்பு மூலம் அறியலாம்.
சில நாடுகளில் இங்கு கூறியவற்றில் ஒன்றுக்குமேற்பட்ட முறைகளும் ஆளப்படுகின்றன. சுவிற்சலாந்திற் பெரும்பான்மை வாக்காளர் ஆதரவும் வேண்டும். உறுப்பு நாடுகளிற் பெரும் பான்மை நாடுகளின் ஆதரவும் வேண்டும்.
மேற்கூறியவற்றிலிருந்து நெகிழாயாப்புத் திட்டம் எதிலும் மாற்றஞ் செய்வதற்குச் சிறப்புமுறை யொன்றுண்டென்பதும் நெகிழாமையிலும் வெவ்வேறு தரங்கள் உண்டென்பதும் புலப் படுகின்றன. சிறப்புமுறையாலன்றி மாற்றமுடியாத அம்சங்களே விட எவ்வகையிலும் மாற்றமுடியா அம்சங்களும் ஒன்றிரண்டு அரசமைப்புக்களில் இடம்பெற்றிருக்கின்றன. பிராஞ்சிய திட் டத்தின் குடியாட்சி அடிப்படையை யாரும் எவ்வாருயினும் சட்டப்படி மாற்றமுடியாது. அமெரிக்கத் திட்டத்திலே ஒவ் வொரு உறுப்பு5ாடும் மூதவைக்கு (Senate) சமதொகைப் பிரதிநிதிகளை யனுப்பும் உரிமை பெற்றிருக்கிறது. இவ்வுரி மையை மாற்றக் குறித்த உறுப்புநாட்டைவிட வேறு யாராலும் முடியாது.

அரசமைப்பு 87
வாக்குரிமையும் தொகுதி நிர்ணயமும் (Franchise and Delimitation of Constituencies)
இன்றைய ஆட்சிமுறையில் இரண்டுவகை வாக்குரிமையே பெரும்பாலும் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று வயதுவந்த ஆண்கள் வாக்குரிமை. மற்றது வயதுவந்தவர் யாவருக்கும்ஆண்களுக்கும், பெண்களுக்கும்-வாக்குரிமை. இவ்வுரிமை ஒருகாலம் எங்கும் ஒரு சிலருக்கே யிருந்தது. காலப்போக்கில் வாக்குரிமையில்லாதோர் கிளர்ச்சியாலும், சமூகக் கொள்கை யில் நிகழ்ந்த மாற்றங்களாலும் இவ்வுரிமை இன்று பெரும் பான்மை நாடுகளில் வயதுவந்தோர் யாவருக்கும் இருக்கிறது. இது எளிதாக வந்த அல்லது வரக்கூடிய உரிமையன்று என்பதற்கு இரண்டு உதாரணங்கள் காட்டுவோம். பல வகையிலும் முற்போக்கு நாடென்றும் குடியாட்சிமுறை யின் உறைவிடமென்றுங் கருதும் சுவிற்சலாந்தில் இன்றும் பெண்களுக்கு வாக்குரிமையில்லை. இங்கிலாந்தில் இந்த நூற் ருண்டின் முற்பகுதியிற் பெண்கள் தமக்கு வாக்குரிமை வேண்டுமென்று பலத்த கிளர்ச்சி நடத்தினர். 1928இலே தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை வேற்றுமை யில்லா நிலை உருவானது.
தொகுதி நிர்ணயத்தில் இரண்டுமுறைகள் இன்று செயற் படுகின்றன: (1) ஒருவருக்கொரு வாக்கு, ஒரு தொகுதிக்கொரு பிரதிநிதி ; (2) ஒருவருக்கு ஒன்றுக்குக் கூடிய வாக்கு, ஒரு தொகுதிக்கு ஒன்றுக்குக் கூடிய பிரதிகிதிகள். தனிப் பிரதிநிதித் தொகுதிமுறையிற் சிறுபான்மையினங்களையோ சிறுபான்மைக் கட்சிகளை யோ சேர்ந்த பிரதிகிதிகள் இடம்பெறுவது கடின மென்று இவைகளுக்குத் தம் தொகைக்குத்தக்கபடி பிரதிநிதி களைத் தெரிவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்கே இரண்டா வது முறை உருவானது. பல பிரதிநிதித் தொகுதிகளில் விகித dFLDll:35555ig|G) b (Proportional Representation) GTGörg9) b முறை பெரும்பாலும் ஆளப்படுகிறது. பல பிரதிநிதித் தொகுதி களில் எப்போதும் இந்தமுறை ஆளப்படுவதில்லை. இலங் கையில் இதுவரையும் பல பிரதிநிதித் தொகுதிகள் சில இருந்தன. ஆனல், விகிதசமப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை.

Page 51
அதிகாரம் 7 புதிய ஆட்சிக் கொள்கைகள்
இவ் வுலகிற் புதியது யாதுமில்லையென்பது மெய்யே? எப்போதாவது புதியதென்று சொல்லுவது பெரும்பாலும் முன் எப்போதோ எங்கோ தோன்றிய ஒன்றே. போதிய ஆதர வில்லாமையாலோ, விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய புத்திக் கூர்மை யில்லாதபடியாலோ, பலவகை உண்மைகள், கருவிகள், கொள்கைகள் முதன் முதல் உருவானபோது ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. மக்கள் ஆதரவின்மையால் அவை செயலற்று வலியற்று மறைந்துபோம் ; பிறகெப்போதாயினும் தலையெடுக் கும். தோன்றும்போதுள்ள குழல் வாய்ப்பானதென்றல் வலிமைபெற்றுச் செல்வாக்குப் பெறும். இன்று உலகில் ஆட் சித்துறையிலும் சமூகத்துறையிலும் செல்வாக்குப் பெற்றிருக் குங் கொள்கைகள் இன்ருே தேற்ருே உருவாகவில்லை ; பல நூற்ருண்டுகளுக்குமுன் உருவெடுத்தவை : தீவிரவாதிகள், தீர்க்கதரிசிகள், இலட்சிய நோக்குள்ளோர் அகத்திலே தோன்றி வெளிவந்தவை. ஆனல், அன்றிருந்த சமூக அமைப்புப் போன்றவை இக் கொள்கைகளுக்கு நேர் எதிரானவையோ அல்லது இவற்றை வரவேற்காதவையோ என்றபடியால் மக் கள் ஆதரவு பெரும்பாலும் வேண்டிய அளவிற்கிருக்கவில்லை. ஆட்சியியலுடன் சம்பந்தப்பட்ட பல கொள்கைகள் இன்று புதுமெருகும் கூடிய செல்வாக்கும் பெற்றிருந்தபோதும் இங்கு அவற்றுள் இரண்டைத்தான் சிறிது விரிவாய் ஆராய எண்ணுகிருேம்.
இன்று இடதுசாரிகள் கொள்கைகளென்று கூறுவன வெல்லாம் * சமூகநோக்கு ’ (Socialism) அடிப்படையை உடையனவே. Socialism என்பதைச் சமதர்மம் என்று தமிழிற் சொல்லும் வழக்கம் இருந்தபோதும் நாம் ஏன் சமூக நோ க் கென்று சொல்லவேண்டுமென்ற கேள்வி இங்கெழக்கூடும், ‘Socialism என்ற சொல்லிலே சமத்துவ

புதிய ஆட்சிக் கொள்கைகள் 89
மென்ற பொருள் எங்காவது காண்பதற்கில்லை. அச் சொல் தனி ஆண்மை (Individualism) என்ற சொல்லின் எதிர்மறை. தனியாட்களின் உரிமையையும் நலனையுமே பெரி தெனக்கொண்டு அந்த அடிப்படையிற் சட்டம், தொழில், கல்விபோன்ற வாழ்க்கை அம்சங்களே நிறுவிச் சமூக அமைப் பாக்கல் தனியாண்மையெனப்படும். அதை ஆங்கிலத்தில் *Individualism என்று சொல்லுவது. இத்துடன் அடிப்படையிலும் மனித வரலாற்றிலும் இணேபிரியாதது முதலாண்மை ( முதலா Grĥii 35/6)Jub-Capitalism). - 9,60) 35 U JIT aö “Socialismo 2 - Liñ“Capitalismo?» – Lb ஒன்றுக்கொன்று அடிப்படையிலே 6 திர்மறையென்பது உண் மையே யென்றபோதும், Individualism'உம் ‘Socialism உமே சொல்லிலும் பொருளிலும் ஒன்றுக்கொன்று நேர்எதிர்மறை.1 சமூகத்தில் பிறப்பையோ பொருளாதார நிலையையோ ஒட்டி உயர்வு தாழ்வு இருத்தல் சமூகநோக்குக்கொள்கையில் இடம்பெருதபோதிலும் சமத்துவமே சமூகநோக்கத்தின் அடிப்படையென்று கொள்வது உண்மையாகாது. தனியாட் களின் சுயாதீனத்தைச் சமூகத்தின் நன்மைக்காகக் கட்டுப் படுத்தாத நாடோ சமூகமோ இன்றில்லே ; இதற்குமுன்னும் இருக்கவில்லை; இனிமேலும் இருக்குமென்று சொல்லுவதற் கில்லை. ஆனல், பொது உடைமைவாதம் (Communism) சமூகத் துக்கு எதிர்பார்க்கும் இறுதிநிலை ; ஆட்சிக் கட்டுப்பாடில்லா நிலை. பொதுஉடைமைக் கொள்கை செயற்பட்டுவர ஆட்சிக் கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாய்ச் சிதைந்துபோம் என்பதே யவர் கள் கொள்கை. பொதுமைமுறையில் வாழும்போதே சிறிது சிறிதாய் மக்களே தம்மைக் கட்டுப்படுத்தி மற்றவர் தேவைகளே யும் உரிமைகளையும் மதித்து வாழப் பழகிவிடுவார்கள் என் பது இவர்கள் கருத்து. பொதுஉடைமை நாடுகளேயோ மற்ற நாடுகளையோ இன்று உற்று நோக்கும்போது இவர்கள் கூறும் கிலே எங்காவது எப்போதாவது நடைமுறையில் வருமோ என்பதைப்பற்றி ஐயங்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனல், மக்கள் பிறர் கட்டுப்பாட்டாலன்றி மற்றவர் தேவையை யும் உரிமையையும் தம் உரிமை தேவைபோற் கருதித்
1. "சமூகவுடைமைவாதம்’ என்ற மொழிபெயர்ப்பும் உடைமை யொன்றையே குறிப்பதாற் பொருத்தமான மொழிபெயர்ப்பென்று கொள்ள முடியாது. சமூக நலனைக் கருத்திற் கொள்ளலே Socialism’. இவ்வடிப்படையில் உருவாகும் ஆட்சி முறையையும் ‘Socialism ? என்று கூறலாம்.

Page 52
9 O ஆட்சி இயல்
தம்மைத் தாமே கட்டுப்படுத்தி வாழும் முறை மிகச் சிறந்த ஒன் றென்றும், வரவேற்க வேண்டிய ஒன்றென்றும் யாரும் மறுக்க மாட்டார். ஆனல் இந்தப் பண்புடைய சமூகம் நடைமுறை யில் எப்போதாவது எங்காவது உருவாகுமோ என்பதைப் பற்றித்தான் ஐயம். ஆட்சிக் கட்டுப்பாடு இல்லா நிலையே சிறந்த நிலையெனக்கொள்ளும் ஒரு சித்தாந்தமும் உண்டு. மனித னுக்குப் புறக் கட்டுப்பாடு இருப்பதாலேதான் தன்னைத் தான் கட்டுப்படுத்தப் பழகமுடியாமலிருக்கிருனென்றும், இக் கட்டுப்பாடுகள் இல்லாதுபோனல் தன் பொறுப்பையுணர்ந்து பிறர் உரிமைகளையும் தன் உரிமைபோலவும் பிறர் தேவை களையும் தன் தேவைகள் போலவும் பாராட்டி ஒழுகப் பழகி விடுவானென்றும் வாதாடுகின்றனர். இது ஒரு கவர்ச்சிகரமான கொள்கையென்றபோதும் இதுவும் எப்போதாவது நடை முறையில் வருமோ என்று ஐயப்படவேண்டிய ஒன்றே. இதை ஆங்கிலத்தில் 'Anarchism என்று கூறுவர். தமிழில் இதை ஆட்சி யறுவாதம் ( புறக்கட்டுப்பாட்டில் ஆட்சி) என்று சொல்லலாம்.
* Communism என்ற சொல்லைப் பொதுவாய் பொது உடைமைவாதம்’ என்றே தமிழிற் சொல்லுவது வழக்கம். "Communism' at 63rofi) GLJTg5 g) 3DL60LD (Common ownership) மாத்திரமன்று ; பொதுக்கடமை (Common duties), பொது o føODLD (Common rights) Gul_J6ör LU GOT GyLib “Communism” g6id g)( di கின்றன. ஆகையால் பொதுமையே பொருத்தமான தமிழ்ச் சொல் எனத் தோன்றுகிறது.
96ởT DI “ Communism”, “ Socialism ’ 67 Gör i UGOT வெறும் சொற்களல்ல. பலநாடுகளில் இக் கொள்கைகள் வெவ்வே றளவில் நடைமுறையிலிருக்கின்றன. எந்த நாடாவது முற்ருகத் தனியாள் நோக்கிலோ, முதலாளித்துவ அடிப்படையிலோ ஆட்சி நடத்துவதில்லை; கடத்தவும் முடியாது. நாம் முன்கூறியது போல இவை இருந்தாற்போல இன்ருே நேற்ருே தோன்றி யன அல்ல. யேசுநாதருடைய சீஷர்கள், அவர் இவ்வுலக வாழ்க்கையை நீத்த பிற்பாடு, தமக்கென நிறுவிய வாழ்க்கை முறையிற் பொதுமையையே கடைப்பிடித்தனர் என்று விவிலிய நூல் கூறுகிறது. இன்றைய சமூக நோக்குக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கையான ' ஒவ்வொருவரிடமுமிருந்து அவ ரவர் ஆற்றலுக்குத் தக்கபடி : ஒவ்வொருவருக்கும் அவரவர் G56Dali,g) is 555 LIL. (From every man according to his

புதிய ஆட்சிக் கொள்கைகள் 91
ability, to every man according to his need) Guigiri),ub gigli படைச் சித்தாந்தமும் விவிலிய நூலிலே காணக்கிடக்கின்றது.
இங்கிலாந்திலே 14ஆம் நூற்றண்டின் இறுதியில் தொழி லாளிகள் கிளர்ச்சியொன்று தோன்றியபோது, காணி பூமிக் காரர், செல்வர், திருச்சபையின் அதிகாரிகள் போன்றவர் களைக் கிளர்ச்சிக்காரர் தாக்கினர். இவர்களிற் பலரைத் தொழி லாளிகள் கொன்றும்விட்டனர். திருச்சபையின் சொத்துக்களை யும், மடங்கள் சிலவற்றையுந் தீக்கிரையாக்கிவிட்டனர்.
* ஆதாம் நிலங்கிண்டியபோதும்
ஏவாள் நூல்நூற்றபோதும் பிரபு என்ற ஒருவர் இருந்தாரோ?? என்பதே இவர்கள் அப்போது ஆண்ட சுலோகம்?.
“When Adam delved and Eve span
who was then the gentleman'
என்பதே ஆங்கிலமூலம். (ஆதாம், ஏவாள் யூத - கிறித்தவ பாரம்பரியத்தின்படி இறைவன் படைத்த மனித வர்க்கத்தின் முதல் ஆனும் பெண்ணுமாவர்).
மனிதகுலங் தோன்றியபோது உயர்வு, தாழ்வு இருக்க வில்லையென்றும், காலப்போக்கில் ஒருசிலர் தம் உடல்வலிமை யினலோ புத்திக்கூர்மையினலோ மற்றவர்களிலும் மேம்பாடு பெற்று உயர்வு தாழ்வு நிறுவிவிட்டனர் என்றும், மீண்டும் முன்னிருந்த சமத்துவ நிலை உருவாக வேண்டும் என்ற கருத்து ஆட்சிஇயலின் வரலாற்றிலே இடையிடையே உருவாகி வந் திருக்கிறதென்றுங் கொள்ளப்படுகிறது. இம்மாதிரி உருவாகி இங்கிலாந்தில் 14ஆம் நூற்ருண்டில் நிகழ்ந்த மேற்கூறிய உள் ளூர்ப் போரின் (உள்ளுர்க் கலகத்தின் ) அடிப்படையும் இதே. 16ஆம் நூற்றண்டில் இங்கிலாந்திலே தோன்றி ஆட்சிஇயல் மேதையும் அறிவு, ஒழுக்கம் போன்றவற்றிற் சிறந்தவருமான சேர் தோமஸ் மோர் (Sir Thomas More) என்போர் சமூக நோக்கத்தை (Socialism) யே அடிப்படையாய்க்கொண்ட கற்பனை நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதன் பெயர் யுதோப் பியா?. இச் சொல்லின் பொருள் - எங்குமில்லா ஊர் . அக் காலத்தில் எங்காவது நடைமுறையிலில்லாத கொள்கைகள் எங்கோ நடைமுறையிலிருப்பதாகக் கற்பித்தே இந்நூல்

Page 53
92 ஆட்சி இயல்
எழுதப்பட்டிருக்கிறது. சமூக உடைமைவாதத்தைக் கடைப்பிடித் தால் வரும் மாற்றங்கள் இன்னின்ன என்று அதிற் காட்டப் பட்டிருக்கின்றன. வறுமையிராது - இரப்போர் இரார் - உயர்வு தாழ்விராது. 19ஆம் நூற்ருண்டிலேதான் இக்கொள்கை திட்ட நுட்ப வரையறை பெற்றது. காள் மாக்ஸும், எங்கெல்சும் (Karl Marx and Engels) 3?dišG3st Git GODá5óişG5IT (15 i BuLu (15' Luli கொடுத்து இதன் அடிப்படையையும் வரையறுத்தனர். இதற்குமுன் இக்கொள்கை தூயமனதுள்ள, தீர்க்கதரிசன, இலட்சிய மனப்பான்மையுடன் தொடர்புள்ளதாகத் தோன்றி யது. உயர்வு தாழ்வுகளால் நிகழும் அநியாயங்களேப் பொறுக்க முடியாதவரும், ஒடுக்கப்படுகிறவர்களுக்கு அநுதாபங் காட்டிய வரும், இவ்வநியாயங்கள் அழிந்துபோக வேண்டு மென்னும் அவாவுற்ற பேர்வழிகளும்தான் இடையிடையே இதையெடுத்துக் கூறினர். ஆனல் 19ஆம் நூற்றண்டில் தர்க்க ரீதியாய் இக்கொள்கையை ஆராய்ந்து-அன்று உருவா யிருந்த பொருளாதார அமைப்பு, முதலாளித்துவத்தையே அடிப்படையாய்க் கொண்டதென்றும், ஒரு சிலருக்கே சகல வித நலன்களையும் ஆக்கிக்கொடுப்பதே அதன் நோக்கமென் றும், சமூக சட்ட அமைப்பு யாவும் அதே நோக்கத்தை நிறைவேற்றவே உருவாக்கப்பட்டவை யென்றும்-நிரூபித்து விடலாமென்று காள் மாக்சும் எங்கெல்சும் கூறினர்; தம் கருத்தை நிரூபிக்க நூல்கள் எழுதினர். இந்நூல்களிலே முத லாளித்துவம் தொழிலாளிகளுக்குச் செய்யும் அநியாயத்தைத் தாங்கமுடியாமல் தொழிலாளர் புரட்சி செய்து முதலாளித்து வத்தை அழித்து ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிச் சிறிது காலம்-அதாவது பொது உடைமைவாதமோ, சமூகவுடைமை வாதமோ நிறைவாய் இடம்பெறும் வரையும்- சர்வாதிகார முறையில் ஆட்சி செலுத்தி ஈற்றில் ஆட்சிக் கட்டுப்பாடே இல்லா நிலை தோன்றிவிடும் என்று கூறினர். உண்மை யென்னவெனில் 18ஆம் நூற்ருண்டின் இறுதியில் உருவான கைத்தொழிற் ( இயந்திரப் ) புரட்சியின் விளைவுகள் 19ஆம் நூற் றண்டின் நடுப்பாகத்திலேதான் முதிர்வுபெற்றுத் திட்டவட்ட மாய்த் தோற்றமளிக்கத் தொடங்கின; தொழிற்சாலைகள் உரு வாகிவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் காட்டுப்புறங்களை விட்டு வேலைதேடி நகரங்களை நாடினர். தொழிற்சாலைக்காரர் கொள்ளை இலாபம் பெற்றனர். ஆட்சிப்பீடம் அவர்களிடமோ, அவர்களே ஆதரிக்கிறவர்க வரிடமோதான் இருந்தது. செல்வாக்குள்ள பேர்வழிகள்

புதிய ஆட்சிக் கொள்கைகள் 98
யாவரும் இயந்திர நாகரிகத்தையே பாராட்டி அதற்கே புகழ் மாலே சூட்டினர். போட்டிமுறைக்கு (Competition ) ஒருவகைத் தெய்வீகம் கற்பித்தனர். மனிதகுலத்தின் ஈடேற்றத்திற்குப் போட்டி இன்றியமையாத ஒன்றென்றும் அதன் அடிப்படையிலே தான் சமூகம் உருவாகவேண்டுமென்றும் பலர் வற்புறுத்தினர்.
இயந்திரங்களும், தொழிற்சாலைகளும் தனியாட்கள் போட்டியும் அடிப்படையான நாகரிகம் உருவாகிக்கொண்டு வரும்போதே அவற்றின் இயல்பைப்பற்றிய சில உண்மைகள் புலப்படத்தொடங்கின. தனியாட்களின் இலாபத்தைக் கருதியே எல்லா முயற்சிகளும் நடைபெற்றன. இலாபமே அடிப்படை யென்ருல் எவ்வளவு இலாபத்தைப் பெறலாமோ அவ்வளவு இலாபத்தைப் பெறுதலே முறையுங் கடமையுமாகும். முதலாளி களுக்கு இலாபந் திரட்டுவதே நோக்கமானபடியால் தொழி லாளிகள் இலாபம் தேடுவதற்கு வேண்டிய கருவிகளாவர். அதாவது கட்டாயமாய் வேண்டியவர்கள். ஆணுல், கருவிக ளாலே இயன்றமட்டும் இலாபத்தைப் பெருக்குவதே நோக்கமானபடியால் இக் கருவிகளை எவ்வளவு குறைந்த செலவிற் பெறமுடியுமோ அச் செலவிற் பெறுதலே முறை. அவர்களால் எவ்வித அனுவசியச் செலவும் ஏற்படுதல் முறையாகாது. காட்டுப்புறங்களிலிருந்து ஏராளமான தொழி லாளர் வந்துகொண்டிருந்தபடியால் வேண்டிய தொழிலாளர் எப்போதுங் கிடைத்தனர். ஆகையால், தொழிற்சாலைச் சொந் தக்காரர் இவர்களுக்கு எதுவிதச் சலுகையுங் காட்டவேண்டிய தில்லை ; விரும்பிய கூலியைக் கொடுக்கலாம் ; விரும்பியநேரம் வேலை வாங்கலாம்; விரும்பிய முறையில் தம் தொழிற்சாலையை யமைக்கலாம். தொழிலில் ஈடுபடுவது முதலாளிமாரல்ல; தொழிலாளரே. ஆகையாற் கட்டடம் அமைப்பதிற் சுகாதார விதிகளோ, மனிதனுக்கு வேண்டிய வசதிகளோ இடம்பெற வேண்டியதில்லை.
இங்கு கூறியிருப்பது பெரும்பாலும் இங்கிலாந்தில் இருந்த நிலையே. இங்கிலாந்துதான் தொழிற்புரட்சியின் பிறப்பிடம். விஞ் ஞான ரீதியான சமூக நோக்கமும் (Scientific Socialism) அங்குதான் உருவானது. காள் மாக்ஸ் பிறப்பில் ஜேர்மன் ; இனத்தில் யூதன். ஆனல், அவர் செய்த ஆராய்ச்சி இங்கி லாந்திலேதான் நடைபெற்றது. அங்கேதான் தம் நூல்களையும் 6т (ц 3, 69ti. GLJт у ојаDL.50)шLJ L 30), 616i) (Communist manifesto), முதல் (Capital) ஆகிய இரண்டுமே மாக்சீய சித்தாந்தத் தின் மூல கிரந்தங்கள். இவற்றில் இச் சித்தாந்தத்தின் அடிப் படைக் கொள்கைகள் வரையறையாய்க் கூறப்பட்டிருக் கின்றன.

Page 54
94 ஆட்சி இயல்
பொதுவுடைமைப் பனுவல் என்ற நூலிற் கூறியிருக்கும் பின்வரும் கொள்கைகளே மாக்சீயத்தின் அடிப்படைக் கொள்கைகள் :-
1. மனித வரலாற்றின் போக்கு எப்போதும் எங்கும் பொருளாதார அமைப்பையண்டியே செல்லும். மனித வாழ்க்கையில் உருவாகும் ஆட்சிமுறை, சட்டமுறை, சமூக அமைப்பு, ஆன்மீக விளைவுகள் ஆகிய யாவும் பொருள் ஆக்கமுறையிலேதான் தங்கியிருக்கும். மக்கள் தாம் விரும்பியபடி இவற்றில் எதையும் மாற்றல் முடியாது. விரும்பினுலென்ன விரும்பாதுவிட்டாலென்ன யாவரும் குறித்தகாலத்தில் நடைமுறையிலிருக்கும் பொருளாக்க முறையை ஏற்றே தீரல்வேண்டும். சட்டம், சமூகம், ஆட்சி போன்றவை அவ்வப்போதிருக்கும் பொருளாதார அமைப் பின்படியேதான் உருவாகும்.
உதாரணமாக : தனியாள் உடைமை நடைமுறையி லிருக்கும்போதே களவு குற்றமாகும். பொதுஉடைமை நிலையில் களவு என்று சொல்லக்கூடிய ஒன்று இராது. சமூகமும் அதை மறந்துவிடும். சமயங்களும் அதைப் பற்றிக் கட்டுப்பாடுகள் வரையறுக்கமாட்டா. சட்ட மன்றங்களும் அதற்குத் தண்டனை விதியா.
தொழிற் சங்கங்கள் தொழிலாளிக்ளின் தேவைகளைத் தீர்க்கவும் உரிமைகளைப் பேணவும் உருவானபோது பலவகையான எதிர்ப்புக்குள்ளாயின. தொழில்நிறுத்தம் (Strikes) போன்ற செயல்களைச் சமூகம் ஆதரிக்கவில்லை. சட்டமும் அமெரிக்கா, இங்கிலாந்துபோன்ற நாடுகளில் பெரும்பாலும் முதலாளிகள் சார்பாகத்தானிருந்தது. சட்ட மன்றங்களின் தீர்ப்புக்களும் அதேயடிப்படையிலேதான் நிகழ்ந்தன. லாஸ்கி ஆசிரியர் “ இன்றைய சமூகத்தில் Gas IT fid (ii.5ii. 56ir' (Trade Union in the New SocietyHarold Lasky) என்னும் நூலில் இதை விரிவாக ஆராய்ந் துள்ளார்.
நீதியென்பது பெரும்பாலும் அவ்வப்போது செயலி லிருக்குஞ் சட்டத்தை ஒட்டியே நடைபெறும். அவ்வப் போது சமூகம் கொள்ளுவதைக் கொண்டும், தள்ளுவ தைத் தள்ளியும், கண்டிப்பதைக் கண்டித்தும், தண்டிப்

புதிய ஆட்சிக் கொள்கைகள் 95
பதைத் தண்டித்துமே சட்டம் செயலாகும். சட்டம் தான் தோன்றியன்று ; சமூகத்தின் படைப்பே. தன் கருத்தை நிறைவேற்றவே சமூகம் சட்டத்தைப் படைப்பது. தனி யாள்நோக்குச் சமூகமும் அதேநோக்கை ஒட்டியே சட்டம் படைக்கும் ; நீதிபதிகளும் அதே நோக்கத்தையே நிறை வேற்றுவர். மக்கள் மனத்திலும் தனியாண்மையே சரி யென்றுபடும். தமக்குத் தெரியாமலே இச்சமூக அமைப்பை யும் அதன் அடிப்படைக் கொள்கைகளையும் மக்கள் ஆதரிப்பார்.
இதுபோன்ற பலவற்றை ஆராய்ந்தே மாக்ஸ், வர லாற்றுப்போக்கு எப்போதும் பொருளாதார அமைப்பை ஒட்டியே செல்லும் என்னுங் கொள்கையை வரையறுத் தார். இதை ஆங்கிலத்தில் Historical Materialism என்று கூறுவர்.
தனிச் சொத்துத் (Private Property) தோன்றியகாலத் தொட்டு பொருளாதார அடிப்படையிலே ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு வகுப்புக்கள் (வர்க்கங்கள் - classes) இருந்துவந்திருக்கின்றன. ஒருகாலம் அடிமைகொண்டோ ரும் அடிமைகளும், பிற்பாடு நிலப் பிரபுக்களும் அவர் ஊழியர்களும் (Serfs), இன்று முதலாளிமாரும் தொழி லாளரும் ஆவர். இதையே வகுப்புப் போராட்டம் என்பது (Class Struggle).
பொருள் விருத்திக்கு வேண்டிய யாவும் தமக்குச் சொந்தமாயிருப்பதால் முதலாளி வகுப்பு தொழிலாளருக் குச் சேரவேண்டிய மேலதிகப் பெறுமதியை அப கரித்துவிடுகிறது. ‘. .
சுருட்டுத் தொழிலாளரைப் பார்ப்போம். முதலாளி புகையிலைக்கு விலை கொடுத்து வாங்குவார்; தொழிற்சாலை நிறுவுவார் ; தொழிலாளரின் சம்பளத்தைக் கொடுப்பார். புகையிலை மூலப் பொருள்; சுருட்டு உபயோகப்பொருள் ; மூலப்பொருள் உபயோகப் பொருளாவது தொழிலாளர் வேலையாலேதான். மூலப் பொருளான புகையிலையின் விலை, தொழிலாளர் சம்பளம், தொழிற்சாலைச் செலவுகள்
எல்லாவற்றிற்குட் மேலதிகமாய் முதலாளி பெற்றுக்

Page 55
96.
ஆட்சி இயல்
கொள்வதே மேலதிகப் பெறுமதி. இது தொழிலா
ளிக்கே உரியதென்றும், இதை முதலாளி அபகரித்து
விடுகிறர் என்றும் மாக்ஸ் கருதுகிருர். இதையே " மேலதி
d5L.J (ou Q) LD3} * di Q5176ît 605 (Theory of Surplus Value) யென்று மாக்ஸ் கூறுகிருர்,
காலப்போக்கில் முதலாளிமார் தொகை வரவரக் குறைந்து
விடும். மூலதனம் ஒரு சிலரிடமே திரண்டுவிடும். தொழி
லாளரின் பொருளாதார நிலையுஞ் சீர்கெட்டுவரும்; ஆனல்
அவர்களிடம் ஒற்றுமை கூடும். இறுகிய இணைப்புள்ள
தாபனங்கள் உருவாகிவரும்; வகுப்புப் போராட்டம் முற்றி
முதிர்ந்துவிடும். புரட்சி உருவாகும். தொழிலாளர் முத
லாளிமாரைத் தோற்கடிப்பர். பொருள் உற்பத்திவேலைக்கு
வேண்டிய யாவையும் தொழிலாளர் கைப்பற்றிவிடுவர்.
இதுவே பாட்டாளியர் புரட்சி (Proletarian Revolution) என்பது.
ஆனல், பலவகைச் செளகரியங்களேயும் அனுபவித்த முதலாளி வகுப்புப் புதிதாய்த் தோன்றிய தொழிலாளர் ஆட்சியை ஏற்காது ; அதைக் கவிழ்க்க முயற்சிக்கும் ; சூழ்ச்சிகள் செய்யும். ஆதலால், தொழிலாளர் ஆட்சி வேரூன்றி வளர்ந்து கிலைபெறும்வரையும் பாட்டாளியர் Fff6)JT 565 (TJub (Dictatorship of the Prolitariat) (360/6oor டும். புரட்சியின் பலனே நிலைப்படுத்தல், தனியாட்கள் சொத்தைக் கைப்பற்றல், தொழில் முறையை ஒழுங்கு படுத்தல், நாட்டின் நிதித்துறையலுவல்களை ஒருமுறைப் படுத்தல், நாட்டின் பொறுப்பில் தொழிற்சாலைகள் நிறுவல், போக்குவரத்து வசதிகளைச் சீர்ப்படுத்தல் போன்றவற்
றிற்கு இந்தச் சர்வாதிகாரம் சிறிது காலத்திற்குக் கட்
டாயம் வேண்டும்.
ஈற்றில் மேற்கூறிய யாவும் செம்மையாய் நிறைவேறிய பின் ஆட்சியென்பதே தேவைப்படாது. ஆட்சிப்பீடமே சிறிது சிறிதாய்ச் சிதைந்து மறைந்துபோம். (The State will wither away)
மனித வரலாற்றிலே ஒரு புதிய யுகம் தோன்றிவிடும் ; புதுச் சமூக அமைப்பு உருவாகிவிடும். ஆற்றலுக்கேற்ற

புதிய ஆட்சிக் கொள்கைகள் 97
உழைப்பும் தேவைக்கு வேண்டிய பொருளுமே இதன் அடிப்படையாகும். ஒவ்வொருவரும் தம் ஆற்றலுக்கேற்ப உழைத்துத் தம் தேவைக்கு வேண்டியதையே எடுத்துக் கொள்வர். வறுமையுமிராது; செல்வமுமிராது. இவற்றிற் கிடமே கிடையாது.
மார்க்ஸிய சித்தாந்தத்தின் கொள்கைகளுக்கு அவை தோன்றிய காலக்தொட்டு இதுவரையும் பாரதூரமான எதிர்ப் பிருந்தே வந்திருக்கிறது. எதிர்ப்பு நடந்துகொண்டிருக்கும் போதே அவர் கூறிய சிலவற்றின் உண்மையும் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அவர் கூறிய எதோ முற்ருய் உண்மையென்ருே முற்றுந் தவறென்ருே சொல்லமுடியாது. சமூக அமைப் புக்கும் அவ்வப்போதிருக்கும் பொருளாதார முறைக்கும் நெருங்கிய தொடர்புண்டென்பது உண்மையே. ஆனுற் பொரு ளாதார முறையொன்றே சமூகத்தை எப்போதும் எங்கும் உருவாக்குவதென்பது மிகைபடக் கூறலென்றே சொல்லுதல் வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகளும் சிந்தனையாளர், மேதை கள் போன்றவர்களுடைய கருத்துக்களும் செயல்களும் இடை யிடையே சமூக அமைப்பை மாற்றியும் திருத்தியும் இருக் கின்றன. வகுப்புப் போராட்டக் கொள்கையும் ஓரளவிலேதான் உண்மை. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்றுப் போன் றவை செல்வாக்கற்றவையென்று கூறுவது சரியன்று. மார்க் சின் காலத்துக்குப் பிறகு கடந்த இரண்டு உலக யுத்தங் களிலும் அவற்றில் ஈடுபட்ட ஒவ்வொரு நாட்டுமக்களும் வகுப்பு வேற்றுமை காட்டாது தத்தம் நாட்டிற்காகப் போர் புரிந்திருக்கின்றனர். யுத்தகாலத்தில் வெவ்வேறு நாட்டுத் தொழிலாளர் ஒன்று சேர்ந்து எவ்வகை முயற்சியிலும் ஈடு பட்டதில்லை.
மார்க்ஸ், கட்டாயமாய் வருமென்ற புரட்சியும், கட்டாயமாய் வந்துவிடும்போலத் தோன்றவில்லை. அவர் கூறியது போல் தொழிலாளர் நிலை, சீர்கெட்டுப் போகவில்லை. தொழிற்சங்கங் களும் தொழிலாளர் கட்சிகளும் உருவாகி அவர்கள் தேவை களைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்திருக்கின்றன ; செய்கின்றன; தேவைகளைத் தீர்த்துமிருக்கின்றன. புரட்சி நிகழ்ந்தபோதும் முதலாளித்துவம் தனியாள் நோக்கம் விருத்தியடைந்திருந்த நாடுகளில் எதிலாவது அது உருவாகவில்லை. மானிய முறைமை
ஆ - 7

Page 56
98 ஆட்சி இயல்
(Feudalism) ஆதிக்கம் பெற்றிருந்த ரூஷியா நாட்டிலேதான் அது கிகழ்ந்தது.
கட்டாயமாய்ப் புரட்சி நடக்குமென்று மார்க்சும் அவரைப் போன்ருேரும் கூறியதே அதன் தோற்றத்தைத் தடைசெய் திருத்தலுங் கூடும். இப்படிக் கூறியதனல் முதலாளித்துவச் சமூகத்தில் இடம் பெற்றிருந்த ஊழல்கள் மக்கள் கவனத்திற்கு வந்திருக்கும். வந்ததும் நிலைமையை மாற்ற முயற்சிகள் நடந் திருக்கும். அவை கைகூடியுமிருக்கும். அவை கைகூடியபடி யாற் புரட்சி தேவையில்லாது போயிருக்கும். ஆகையால் மார்க்ஸின் தீர்க்கதரிசனமே அது நிறைவேறது போவதற்குக் காலாயிருந்திருத்தல் கூடும்.
உலகில் உருவான எந்தச் சர்வாதிகாரமும் தானே விரும்பி அகன்று விடவில்லை. வேறு யாரோ அவற்றைக் கவிழ்க்கப் பாடுபட்டே அவை அகன்றன. தொழிலாளர் நிறுவும் சர்வாதி காரம் ஒன்றே குறித்த நோக்கம் நிறைவேறியவுடன் தானே நீங்கிவிடுமென்று நம்புவதற்கிடமில்லை. இதொன்றுக்கே அதி கார மோகமும் பதவி மோகமும் இல்லாது போய்விடும் என்று நம்புவதற்கிடமில்லை. இப்படி அது தானே விரும்பி நீங்கி, அதன்பின் ஆட்சிக் கட்டுப்பாடே அற்றுப்போய் மக்கள் புறக் கட்டுப்பாடு யாதுமின்றித் தம்மைத் தாமே கட்டுப்படுத்தி யொழுகும் முறை உருவாகுமென்று நம்புவதும் எளிதன்று.
ஆனல், இன்று மார்க்ஸின் கொள்கைகளே ஆராய்ந்து என்ன குறைகளைக் கண்டாலும், இவர் சமுக சித்தாந்தத்தில் ஆணித்தரமான உண்மைகள் சிலவற்றை வரையறுத்துள்ளா ரென்பதையும் இவ்வுண்மைகள் இன்று உலகிற் பலபாகங் களிலும் ஆட்சியியலில் இடம்பெற்றுவிட்டன என்பதையும், இன்னும் இடம்பெறு மென்பதையும் மறுத்தல் முடியாது. இவை எங்கும் அவர் வகுத்த முறையிலேதான் இடம் பெறும் என் பதையும் ஏற்க முடியாது. நாடுகளிற் படிப்படி மாற்றமே வரும். எப்படித்தான் வந்தாலும் மார்க்ஸின் கொள்கைகளால் உருவான அதிர்ச்சியிலிருந்து எந்த காடாவது முற்ருய்த் தப்பிக் கொள்ளுதல் முடியாது.
இதுவரையும் நாம் ஆராய்ந்த சமூகவுடைமைக் கொள்கையி லும் இருவகைகள் உள. சமூகவுடைமை யடிப்படையைக்

புதிய ஆட்சிக் கொள்கைகள் 99
கொண்ட கொள்கையைப் பொதுவாய்ச் சமூகவுடைமை வாதமென்று சொல்வதே மரபு. இதை ஆங்கிலத்தில் ‘Socialism" என்று கூறுவர். ஆனற் சிறப்பாக சமுகவுடைமைவாதம் (Socialism) என்று இன்று கூறுவது புரட்சியில்லாமற் படிப் படியாய்ச் சமூகவுடைமைச் சித்தாந்தத்தை நிறுவும் முறையே, புரட்சிமுலம் திடீரெனச் சமூகவுடைமைவாத ஆட்சியை நிறுவும் முறையைப் பொதுவுடைமைவாதம் (Communism) என்று கூறுவதே இன்றைய மரபு. Socialism என்ற சொல்லும் ஒரே அடிப்படைக் கொள்கைகளைக் குறித்தபோதும் அதிலும் வெவ் வேறு வகைகளுண்டு. இவை யாவற்றையும் இங்கு ஆராய வேண்டியதில்லை. இவை யாவற்றிற்கும் பொதுவாயுள்ள சில வற்றை இங்கு குறிப்பிடுவோம். முதலாளித்துவம், தனி யாண்மை (Individualism) என்பவற்றிலிருக்கும் குறைபாடு களுக்குப் பரிகாரங் காணும் முறையிலேதான் சமூகவுடைமைக் கொள்கை உருவானது. வறியவர்கள், செல்வாக்கற்றவர்கள், தொழிலாளர், குடியேற்ற நாடுகளின் மக்கள் போன்ற புறக் கணிக்கப்பட்டோரின் உரிமைகள், தேவைகளை இக் கொள்கை யைக் கடைப்பிடிப்போர் வற்புறுத்தி வந்திருக்கின்றனர். இலா பம் ஒன்றையே கருத்திற்கொள்ளும் முதலாளித்துவத்தினல் வரும் இன்னல்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
சமூகவுடைமைக் கொள்கையிலே இரண்டு குறைகள் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். மனிதன் சுயநலத்தைக் கருதியுழைக்கும் இயல்புள்ளவன். தனது நன்மையையும் தனக் குரியோர் நன்மையையுங் கருதியுழைக்கும்போதே உற்சாகத் துடன் உழைப்பான். சமூக நலனுக் குழைக்கும்போது உற் சாகமோ ஆர்வமோ இராது. இலாபமில்லாமற் கடமை யொன்றையே கருதி மனிதர் உழைப்பார்களென்று எதிர்பார்ப் பது ஏமாற்றமாய் முடியும்.
இதை முற்றும் உண்மையென்று கருதுவது தவறு. இது வரையிருந்த சமுக அமைப்பின் அடிப்படை, போட்டியே. ஒவ்வொருவனும் மற்றவர்களுடன் போட்டியிட்டே தம் தேவை களைத் தீர்க்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இருக்கும் போது போட்டி மனப்பான்மை கூர்மை பெறுவதும் இயல்பே. வேறு முறை உருவாகி மக்கள் போட்டியின்றி வாழலாமென் பது நிரூபிக்கப்பட்டாற் புதுமுறையின் சிறப்பியல்புகளைக்

Page 57
OO ஆட்சி இயல்
கண்டு மக்கள் மனம் மாறல்கூடும். மேலும் சுய இலாபமொன் றைக் கருதியே இன்று தானும் உழைப்பதில்லை. ஊருக்காக, நாட்டிற்காக, சமூகத்திற்காக உழைப்போரும் பலர் உளர். புகழ் விரும்பியோ மற்றேர் மதிப்பை விரும்பியோ ஒன்றைத் திறம்பட்ச் செய்துமுடித்தால் அதனல், ஒருவனுக்கு வரும் இன்பத்திற்காகவும், அகப் பூரிப்பிற்காகவும் எதையுஞ் செய் வோருமுளர். காலப்போக்கில் மனிதர் உள்ளத்தில் மேற்கூறிய நோக்கங்கள் நிலையான இடம் பெறல்கூடும். அவற்றின் செல் வாக்கும் உறுதிப்பாடும் வளரல்கூடும்.
சமூகவுடைமைவாத வாழ்க்கையிற் கட்டுப்பாடு அதிகம் என்பதே இரண்டாவது குறை. இது உண்மையே. ஒவ்வொரு வரும் தான் நினைத்தபடி செய்வதென்ருற் சமுகமே அழிந்து போம். ஆனல், வாழ்க்கையிற் சிறிதும் சுயாதீனமிராதுபோனல் வாழ்க்கையே சுவையிழந்துபோம். அதனல், சமூக கோக்கு முற் றும் கட்டுப்பாடென்றுகொள்வது சரியாகாது. மேலும் சமூக வுடைமைவாத அடிப்படையில் உருவான பல கட்டுப்பாடுகள் தனியாட்களின் சுயாதீனத்தைப் பாதித்தபோதுஞ் சமூகநலனுக் காகவே உருவானவையென்றபடியால் மக்கள் அவற்றை யேற்று விட்டனர். இன்றுமே ஒரு குறித்த வயதுக்குட்பட்ட பிள்ளை கள் யாவருங் கல்விகற்றல் வேண்டும். வருமானத்திற் குறித்த வீதம் வரியாயிறுத்தல் வேண்டும். இவையாவும் தனியாட்கள் சுயாதீனத்தைப் பாதிக்கும் சட்டங்கள். ஆனல், சமூகம் இவற்றைப் பெரும்பாலும் ஏற்றுவிட்டது. ஆகையால், கட்டுப் பாடுகள் இருந்தாலும், (1) அவை சமூக நலனுக்காகவே உரு வானவையென்று தெளிவாதல் வேண்டும். அதாவது, அவை நியாயமானவையா யிருத்தல் வேண்டும். (2) அவை நியாய மானவை யென்ருலும் அவை கட்டுப்படுத்துவோருக்கும் நியாயமானவை என்று தோன்றல் வேண்டும்.
வருங்காலத்திற் சமூகவுடைமைவாதக் கொள்கை இப் போதையிலும் பார்க்கக் கூடிய செல்வாக்குப் பெறும் என்று தோன்றுகிறது. இங்கிலாந்தில் இயந்திரத் தொழில் விருத்தி யடைந்தபோதுதான் முதலாளித்துவத்தினதும் தனியாண்மையி னதும் (தனியாள் நோக்கினதும்) குறைகள் வெளித் தோன் றின. இவற்றைத் தீர்ப்பதற்கே பெரும்பாலுஞ் சமூகவுடைமை வாதக் கொள்கை உருவானது. தொழிற்சங்கங்கள், அவற்றிற்

புதிய ஆட்சிக் கொள்கைகள் 1 O1
குரிய சிறப்புரிமைகள் - தொழில் நிறுத்தம் (Strike), வேலை மறியல் (Picketing), தொழிற்சாலைச் சட்டங்கள் (Factory Laws), தொழிற்சட்டங்கள் (Labour Laws) போன்றனவுக் தோன்றின. மற்ற நாடுகளிலும் இயந்திர நாகரிகம் பெருகச் சமூகவுடைமைவாதக் கொள்கைகளும் முறைகளும் கூடக் கூட இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம். ஈற்றில் தனி யாட்களின் தேவைகளையும் சமூகத்தின் தேவைகளையும் சமர சப்படுத்தி இரண்டையும் பேணும் ஒரு முறையுங் கொள்கை யும் உருவாகுமென்றும் எதிர்பார்க்கலாம்.
நாட்டுச் சர்வாதிகாரம் (Fascism): முதலாம் இரண்டாம் யுத்தங்களுக்கிடையில் உருவானது இக்கொள்கை. இது இத் தாலி நாட்டிலேதான் தோன்றியது. பலவகையிலுங் குடியாட் சிக்கு முரணுனது. அதன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பொறுப்பாயிருந்த முசோலினியே அதன் அடிப்படைக் கொள்கைகளை வரையறுத்திருக்கிருர், தனியாட்களுக்கோ, அவர்களின் தேவைகளுக்கோ, உரிமைகளுக்கோ இதில் முக்கியமில்லை. நாட்டிற்கே முதன்மையும் பலவித உரிமையும். குடியாட்சி, சமூகவுடைமைவாதம், தனியாண்மை, சாதுகை (சமாதான நோக்கு - Pacifism) ஆகியவற்றையும் இக் கொள்கை ஒதுக்கித்தள்ளிவிடுகிறது. நாட்டின் சகல அலுவல் களிலும் நிறையாணை செலுத்தி, பொதுமக்களுடன் நீங்காத் தொடர்புகொண்டு, அவர்கள் கொள்கைகள், உணர்ச்சிகள் யாவற்றையும் விரும்பியபடியமைத்து, நாட்டுமக்களின் தேவைக ளென ஆட்சிப்பீடம் கருதுவதைத் தீர்த்துவைக்கும் ஆட்சி முறையே இது. இக் கொள்கையின்படி நாட்டிற்கே (State) முதன்மை ; மக்கள் தேவைகளை அறிவதும் தீர்ப்பதும் நாட் டின் பொறுப்பே. இக் கொள்கையின்படி நாட்டிற்கே உயிரும், உறுப்பும், செயலாற்றுக் திறனும் உண்டு. நாட்டிற்குப் புறம்புே யாரும் இல்லை. நாட்டிற்கெதிரே யாருமில்லை. * (None outside the State; None against the State) at airp of T is யம் இக் கொள்கையைச் சுருக்கமாகக் கூறுகிறது. நாட்டின் நலனைக் கருதி ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலையுங் கட் டுப்படுத்தும் உரிமை நாட்டிற்குண்டு. ஆட்சித்துறைக் கட்சி களோ, தொழிற் சங்கங்களோ, வணிகர் சங்கங்களோ, ஆட் சிப்பீட அனுமதியின்படியே உருவாகலாம். தொழில், ஓய்வு ஆகிய இரண்டும் ஆட்சிப்பீடத்தின் கட்டுப்பாட்டின்படியே நடைபெறல் வேண்டும்,

Page 58
1 0 2 ஆட்சி இயல்
இதன் அடிப்படை, நாட்டிற்காகவே மக்கள் வாழ்க்கை அமைதல் வேண்டும் ; நாட்டின் நலனே ஆட்சியின் நோக்கம் ; மக்கள் இந் நோக்கத்தை நிறைவேற்றுங் கருவிகள் ; கருவி களுக்கு உரிமையோ பொறுப்போ இரா.
இக்கொள்கை குடியாட்சிக்கும், வேறெவ்வித முற்போக்குக் கொள்கைக்கும் நேரெதிரானதென்பது வெளிப்படை. குடி யாட்சிக்கொள்கையின்படி மனிதனுக்கும் மனித உரிமைக்கும், மனித தேவைகளைத் தீர்ப்பதற்குமே முதன்மை. கட்டுப்பாடு கள் தோன்றுவது யாவருக்கும் இவை கிடைப்பதற்கே. மணி தனுக்குச் சகலவகையிலும் நிறைவுற்ற வாழ்வு உருவாவதற் காகவே ஆட்சியுருவாவதென்பது குடியாட்சிபோன்ற முறை களின் அடிப்படை ; மனிதன் கருவியல்லன் ; அவனுக்காகவே ஆட்சியுருவாவது. ஆட்சிக்காக அவனை இயற்கையோ இறை வனுே படைக்கவில்லை. ஆனல், இத்தாலியில் முசோலினி வகுத்த கொள்கையில் இவை யாவும் மறுக்கப்பட்டன.
ஜெர்மனியில் உவைமர் குடியாட்சி (Weimar Republic) முடி வுற்றவுடன், ஹிற்லர் தலைமையில் உருவான நாட்டுச் சமூக வுடைமைவாதம் (National Socialism) பெரும்பாலும் இதே கொள்கையைத்தான் தழுவியது. காட்டிற்கே முதன்மையும் சர்வாதிகாரமும்; மக்களுக்கு உரிமைகள் பாதுமிருக்கவில்லை; கடமைகளேயிருந்தன. நாட்டுச் சமூகவுடைமைவாதக் கட்சியை விட வேறெந்தக் கட்சிக்கும் இடமில்லை. பாடசாலைகள், வானெலி, புதினத்தாள்கள், பல்கலைக் கழகங்கள் போன்ற யாவும் ஆட்சிப்பீடத்தின் அதிகாரத்திலேதான் இருந்தன. இவை மூலமே கருத்துவேற்றுமைகள் உருவாகிப் பரம்புவது. ஆகையால், இவைகளுக்கு வாய்கட்டுவது சர்வாதிகாரத்துக்கு வேண்டிய ஒன்றே. வாலிபர் இயக்கங்கள், கூட்டுறவுச்சங்கங் கள் யாவும் ஆட்சிப்பீடக் கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவரப் பட்டன.
இதற்கொரு சிறப்பியல்புமிருந்தது. இது ஓர் இன அடிப் Lu 60L. (Folk State) -9, Sopop. இனங்களின் இரத்தம் அதாவது அவற்றின் இன இயல்பே அவற்றின் கொள்கை கள், நோக்கங்கள் யாவற்றிற்கும் கால். உயர்ந்த இனங்களுக் கியல்பாய் உயர்ந்த நோக்கங்களும் கருத்துக்களும் தோன் றும் ; இழிந்த இனங்களுக்கு இழிந்த நோக்கங்களும் எண்

புதிய ஆட்சிக் கொள்கைகள் 103
ணங்களும் தோன்றும், ஆரிய இனம் (Nordic Race) எல்லா இனங்களிலுஞ் சிறந்தது. இவ்வினத்திற்கே சகல சிறந்த பண்புகளும் இயல்பாய் அமைந்திருக்கின்றன. உலக வரலாற்றில் நிகழ்ந்த சகல சிறந்த செயல்களைச் செய்தோரும் இந்த இனத் தைச் சேர்ந்தவர்களே. ஜேர்மனியரும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களே. ஆகையால், இனத்தூய்மையைப் பேணுவ தற்குத் தம்மிலுங் குறைந்த இனங்களுடன் எவ்வித தொடர் பும் வைத்தல் தகாது. முக்கியமாய் யூத இனத்துடன் கலப்பு மணஞ் செய்வது சட்டப்படி தடுக்கப்பட்டது. இங்கு நடை பெற்றது தலைவர் ஆட்சி- அதாவது தனியாண்மைச் சர்வாதி காரம். அவர் விருப்பமே சட்டம்; அவர் செயலே ஆட்சி.
மேற்கூறிய இரண்டுவகைச் சர்வாதிகாரங்களும் இரண் டாம் உலக யுத்தகாலத்திற் பெரும் செல்வாக்குப் பெற்றிருந் தன. இன்றும் இங்கிலாந்தில், ஜெர்மனியில் உருவான சர் வாதிகாரமுறையைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கட்சி யிருக் கின்றது ; வேறு நாடுகளிலும் இருத்தல்கூடும். இத்தாலியும் ஜேர்மனியும் தோல்வியுற்றதாலும் ஹிற்லருக்கும் முசோலி னிக்கும் வந்த முடிவுகளாலும் இக்கொள்கைகளின் செல்வாக் குக் குறைந்துவிட்டதென்று சொல்லலாம்.

Page 59
இரண்டாம் பாகம்
இலங்கை இயல்

அதிகாரம் 1 இலங்கை ஆட்சி இயல் வரலாறு
பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை ஆளத் தொடங்கிய காலத்திலிருந்து இதுவரையும் இந்நாட்டில் ஆட்சித்துறையில் நிகழ்ந்தவற்றையே இங்கு ஓரளவிற் காராய்வோம்.
ஒல்லாந்தர் ஆட்சியிலிருந்த கடல் அடுத்தபாகம் 1796ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் வந்தது. வந்தபோது இந் தியாவில் வணிகமும் ஆட்சியும் செய்துவந்த பிரித்தானிய கிழக் கிந்தியக் கொம்பனியாரே இலங்கை ஆட்சிக்கும் பொறுப்பா யிருந்தனர். சென்னையிலிருந்த ஆட்சிப்பீடமே இப்பொறுப் பைப் பெற்று கடத்திவந்தது. இலங்கைக்கென ஓர் ஆள்பதி (தேசாதிபதி - Governor)யை நியமித்தபோதும் இம் முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டது. 1802இல், ஐரோப்பாவில் நடந்துகொண்டிருந்த யுத்தம் முடிவுற்றதும் ஏமியென்ஸ் பொருத்தனே (Treaty of Amiens) என்ற ஒப்பந்தம் நிறைவேறி யது. இதன்படி இலங்கை, பிரித்தானிய அரசரின் நேராட் சிக்கு வந்தது. இலங்கையின் அன்றைய நிலையை முடிசார் குடியேற்ற (Crown Colony) முறையென்று கூறுவர். இம்முறை முன்கூறியபடி ஒல்லாந்தர் ஆட்சியிலிருந்த பாகத்திற்கே ஏற் பட்டது. கண்டிநாடு சுயாதீன அரசாய் விளங்கியது. முடி சார் குடியேற்ற ஆட்சி பெரும்பாலும் ஆள்பதியின் ஆட்சியே. ஆள்பதிக்கு ஆலோசனை கூறுவதற்கென ஒரு சிறு குழு இருந் தது. நாட்டின் இராணுவத் தலைவர், பிரதம நீதிபதி, பிரதம செயலாளர் ஆகிய மூவரும் வேறு இருவரும் இக் குழுவின் உறுப்பினர்.
«9 - 7а

Page 60
106 ஆட்சி இயல்
ஆள்பதி இவர்களின் ஆலோசனையை யேற்றல்வேண்டு மென்று கட்டாயமில்லை. ஏற்காது போனுல் இங்கிலாந்திலிருக் கும் குடியேற்றச் செயலாளரு (Colonial Secretary)க்கு நியாயங் காட்டவேண்டியிருந்தது.
கண்டி இராச்சியம் இலங்கையின் ஏனைய பாகங்களுடன் 1815இல் இணைக்கப்பட்டது. அதுவரையும், மேற்கூறிய ஆட்சிமுறையே இருந்து வந்தது.
கண்டியைக் கைப்பற்றியபோது கண்டி மக்களுக்கும், (பிரித்தானிய அரசின் சார்பில்) இலங்கை ஆள்பதிக்கும் ஓர் ஒப்பந்தம் நிறைவேறியது. புத்தசமயத்தைப் பாதுகாக்க வும் அதுவரையும் நடைமுறையிலிருந்த நீதிபரிபாலன முறை யின்படி நீதி வழங்கவும், பிரித்தானிய அரசு ஏற்றுக் கொண்டது. கண்டிநாட்டுப் பிரதானிகள் தமக்குப் பரம்பரை யாய் இருந்து வந்த உரிமைகளே யுஞ் சலுகைகளையும், முன் போல் புதிய ஆட்சிப்பீடத்துடன் முரண்படாத முறையில், அனுபவிக்கலாமென்றுங் கூறப்பட்டது. பழைய கண்டி இராச் சியப் பிரதேசத்திற்கென ஓர் ஆட்சி முறையும் வகுக்கப்பட் டது. இது சிறிது காலத்துக்குள் சிதைந்துவிட்டது. குழப்ப மும் கலகமும் தலையெடுத்தன. 1817இல் கண்டிநாட்டிற் பெரியதோர் கலகம் நிகழ்ந்தது. இதை அடக்கித் தணித்த வுடன் ஆட்சிமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
முந்திய ஒப்பந்தத்தின்படி பிரதானிகளுக்களித்த சலுகை கள் உரிமைகள் யாவும் பறிபோயின. கண்டிநாடு ஆள்பதி யின் நேர் ஆணைக்குள் வந்தது. ஆட்சியில் உதவிபுரிவதற்கு
ஒரு சிலர் நியமனம் பெற்றனர்.
கோல்புறுாக் (Colebrook) விசாரணையுங் திட்டமும்
குடியேற்ற ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஆட்சிமுறையை ஆராய்வதற்கு உவில்லியம் கோல்புறூக் என் பவர் நியமனம் பெற்றர். இவர் முற்போக்கு மனப்பான்மை யுள்ளவர்.
கணடிநாடும் இலங்கையின் ஏனைய பாகங்களும் ஒருங் கிணைக்கப்படல்வேண்டுமென்றும், FL iš 54p5b (Legislative) Council) ஒன்றும் கிருவாகக்கழகமும் (Executive Council) ஒன்றும்

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 1 Oʻ/
நிறுவப்படல் வேண்டுமென்றும் இவர் வற்புறுத்தினர். ஆள்பதி தெரிவுசெய்யும் பதவிவழித்தொடர்புள்ள (Official) ஒன்பதின் மரையும், பதவிவழித்தொடர்பற்ற (Unofficial) அறுவரையுங் கொண்ட சட்டக்கழகம் ஒன்றும், ஒரு சில உத்தியோகத்தரைக் கொண்ட நிருவாகக்கழகம் ஒன்றும் நிறுவவேண்டுமென்றும் எடுத்துக்காட்டப்பட்டத்து.
செயல்முறைக்கு வருமுன் ஆட்சி அலுவல்கள் யாவற்றை யுக் திட்டவட்டமாய் ஆராய்வதே சட்டக்கழகத்தின் கடமை. ஆட்சி அலுவல்களிலும், வரிவகுத்தல், அறவிடல் போன்ற வற்றில் ஆள்பதிக்குதவிபுரிவதே கிருவாகக்கழகத்தின் வேலை 1910 வரையும் இவ்வாட்சி முறைதான் இங்கு நடைபெற்றது. இவர் வகுத்த திட்டம் ஏற்கப்பட்டு யாதொரு மாற்றமுமின்றி இந் நாட்டின் ஆட்சியமைப்பில் முக்கிய இடம் பெற்றிருந்தது. சிங்களர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர், ஆங்கிலேயர் என்ற இனங்களின் சார்பாக ஆள்பதி சட்டக்கழக உறுப் பினரைத் தெரிந்தார். இதுபோன்ற கடமைகளுக்கு உயர் பதவியிலுள்ளோரா லே தெரியப்படுவதிற் பல குறைகள் உள. ஓர் இனத்தின் பேரில் அதன் குறைநிறைகளை எடுத்துக் கூறுங் கடமைபுரிவோரை, குறித்த இனத்தைச் சேர்ந்த வர்கள் தெரிதலே முறை. தம்மைத் தெரிந்தவரைத் திருப் திப்படுத்துவதே அவர் கொள்கையாயிருக்கும். பொதுமக்கள் தெரிந்தனுப்பிய ஒருவர் தம் பொறுப்பை நிறைவேற்றத் தவறினுல் தெரிந்தனுப்பியவர்கள் வேண்டிய நடவடிக்கை யெடுப்பார்கள். தாம் தெரிந்தனுப்பியவர் தம் கடமையைச் செம்மையாய்ச் செய்யவில்லையென்று கண்டால் மறுமுறை அவரைத் தெரியாதுவிட்டுவிடுவார்கள். ஆனல், ஆள்பதி யாற் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக் குறித்த இனத்தின் குறைநிறைகள் நன்ருய்த் தெரியாதிருக்கலாம். தெரிந்திருந்த போதும், ஆள்பதியினுற் தெரிவுசெய்யப்பட்டமையால் மக்கள் குறை நிறைகளைத் தாம் எடுத்துக்கூறுவதிலும் பார்க்க ஆள்பதி யின் நல்லெண்ணத்தைப் பெறுதலே முக்கியமென்று இவர்கள் எண்ணல் கூடும். ஆதலால், உயர்பதவியிலுள்ளோர் பிரதி நிதிகளை நியமித்தல் குடி ஆட்சிமுறைக்கு முரணுனது ; பொது மக்கள் நலனைப் பாதுகாக்கக்கூடிய ஒன்றன்று. இக் குறைகள் இவ்வாட்சி முறையி லிருந்தபோதும் மக்கள் சார்பாக ஒரு சிலர்தானும் ஆட்சி அலுவல்களை ஆராய்ந்து அவற்றின் குறை

Page 61
108 ஆட்சி இயல்
கிறைகளே ஆட்சிப்பீடத்திற்கு வற்புறுத்த வாய்ப்பிருந்தது. புதினத் தாள்களில் இவ்விஷயங்கள் வெளிவந்தன. மக்கள் என்ன நடக்கிறதென்று அறிந்து தத்தங் கருத்தையுந் தெரி யப்படுத்தக்கூடியதா யிருந்தது. குடியாட்சியில் வாக்கெடுப்பு மாத்திரம் முக்கியமானதன்று; பொதுமக்கள் அபிப்பிராயம், ஆர்வம், அபிமானம் போன்றவைக்குச் செல்வாக்குண்டு. ஆட்சி அலுவல்கள் சம்பந்தமாகச் சட்டக்கழகத்தில் யாதே இனும் ஒன்றைப்பற்றி விவாதம் நடக்கும்போது ஊரிற் கிளர்ச்சி ஏற்பட்டால், வாக்கெடுப்பின்போது ஆட்சிப்பீடமே பெரும் பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பொதுமக்கள் கருத் திற்கு ஆட்சியாளர் செவிசாயாதிருத்தல்முடியாது. ஆள்பதியாற் தெரியப்பட்டவர்களென்றபோதிலும், பதவிவழித்தொடர்புள்ள உறுப்பினரே கூடிய தொகையினராயிருந்தபோதிலும் ஜோர்ச் 2 - 6) Taib (George Wall), GavT (GADGör 6ħv (Lorenz), (3aFiii (pig då குமாரசுவாமி, பொ. குமாரசுவாமி, பொ. இராமநாதன் போன்ற வர்கள் தங்கருத்தை அச்சமின்றி ஆணித்தரமாய் எடுத்துக் கூறியிருக்கின்றனர். ஆட்சிப்பீடமும் இவர்கள் கூற்றை மதி யாது விடமுடியவில்லை. இவர்கள் தம் சொல்வன்மையாலும் செல்வாக்காலும் சட்டக்கழகத்தில் செய்த சேவையினல் நாட் டிலும் இவர்கள் செல்வாக்கு வளர்ந்தது ; இவர்கள் கருத் துக்கு ஆதரவேற்பட்டது. நாட்டுமக்களுக்கு ஆட்சியிற் கூடிய உரிமையிருக்கவேண்டுமென்ற கிளர்ச்சி வளர்ந்து வந்தது. ஒரு முறை ஆள்பதிக்கும் பதவிவழித்தொடர்பற்ற உறுப்பினருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டால் மேற்கூறிய உறுப்பினர்கள் சட்டக் கழகத்தினின்றும் வெளியேறினர். 1863இல் இலங்கையின் இராணுவச்செலவு முழுவதையும் - அதாவது இலங்கைக்காக ஏற்பட்ட செலவையும் ஏகாதிபத்தியத்திற்காக இலங்கையில் ஏற்பட்ட செலவையும்-இலங்கையே பொறுத்தல்வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. சட்டக்கழகத்தின் அனுமதியின் றிப் பிரித்தானிய ஆட்சிப்பீடத்தின் தீர்ப்பின்படியே இது நடை பெற்றது, இலங்கைச் சட்டக்கழகத்தில் இச்செயல் பெரும் ஆத் திரத்தைக் கிளப்பியது. ஆள்பதியின் அரியணைப் பேச்சின் (FaubuDTaF GOTLŮ SU Fálasi 396öt - Speech from the Throne) 36ör FuDi 'iáš 35' LJUL 5 Gör síðu G3u(15 GODT (Address of Thanks) iš கொரு திருத்தப் பிரேரணையைப் பதவிவழித் தொடர்பற்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியும் விட்டனர். இதன் பெறுபேருய் இவர்களுக்கும் ஆள்பதிக்கும் முரண்பாடு தோன்றிற்று. பதவி

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 109
வழித் தொடர்பற்ற யாவரும் வெளியேறினர். இதுவே 19ஆம் நூற்றண்டில், இலங்கை ஆட்சித்துறையில் நடந்த மிக்க கார சாரமான நிகழ்ச்சி. நியமன உறுப்பினர் என்ருலும், மனச்சாட்சி யுள்ளவர்கள் தம்மை நியமிப்போரை எப்போதும் ஆதரியார். ஆட்சிபீடம் தரிசு நிலச் சட்டமென (Waste Lands Ordinance) ஒன்றை நிறைவேற்றியபோது அச்செயல் வழிபறிக் கொள் 2ntism Ti Gifugi) (Highway Robbery) Gustait flag 67 (2) gag) தமிழ்ப் பிரதிநிதியாயிருந்த பொ. குமாரசுவாமி ( இராமநாதன், அருணுசலம் ஆகியோரின் தமையன் ) கூறினுர். இக் கண்ட னம் ஆட்சிப்பீடத்தைப் பெரிதும் தாக்கியது. குமாரசுவாமி யொருவரே இரண்டாந்தரம் நியமனம் பெருத பிரதிநிதியென்று கூறப்படுகின்றது.
விக்ளவுவரி யென்ருெரு வரி, வயல் விளைவிலிருந்து ஒரு காலம் அறவிடப்பட்டது. இவ்வரி நீக்கப்படல் வேண்டு மென்று கிளர்ச்சி கடந்தது. வரியை ஆட்சிப்பீடம் அகற்றியது.
இங்கிலாந்தி லிருப்பதுபோல இங்கும் ஒருகாலம் ஆங்கி லேய திருச்சபையும் (Anglican Church), ஒல்லாந்த மூப்பர் (p60psis good Fadl Juyub (Dutch presbyterian Church) -9, Sill பீடத்தின் ஆதரவைப் பெற்றன. இச் சபைக் குருமாருக்கு நாட் டின் வருவாயிலிருந்து சம்பளம் கொடுத்தார்கள். புத்தரும், சைவரும் பெரும்பான்மையாயுள்ள ஒரு நாட்டில் அவர்கள் இறுக்கும் வரிப்பணத்தைக்கொண்டு கிறீஸ்த திருச்சபையை ஆதரிப்பது முறையன்று என்று சட்டக்கழகத்திற் கிளர்ச்சி கடந்தது. ஆட்சிப்பீடம் இம் முறையையுங் கைவிட்டது. சட்டக் கழகத்திற் குறித்த சில விடயங்களைப் பற்றிக் கிளர்ச்சி செய்வ துடன் நின்று விடாது சட்டக்கழகத்திலும் நாட்டிலும் இந்நாட் டுப் பொதுமக்களுக்கு ஆட்சித்துறையிற் கூடிய ஆதிக்கம் ஏற்பட வேண்டுமென்று கிளர்ச்சி நடத்தினர்கள். இவற்றின் விளைவே 1910இல் ஏற்பட்ட புதிய ஆட்சித் திட்டம்.
1910 திட்டம் இத்திட்டத்திற்றன் முதன் முதல், ஆள்பதி நியமிக்கும் உறுப்பினருடன் பொதுமக்கள் தெரிவு செய்யும் உறுப்பினருக் கும் இடம் இருந்தது. 21 உறுப்பினரைக் கொண்ட சட்டக் கழகத்தில் நால்வரே பொதுமக்கள் தெரிவால் இடம் பெற்ற னர். தெரிவுரிமை பெற்ற மக்களைப் பொதுமக்கள் ? என்று

Page 62
1 O ஆட்சி இயல்
கூறுவது பொருத்தமன்று. இலங்கையைத் தாயகமாகக் கொண்ட சிங்கள, தமிழினங்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதியைத் தெரியும் உரிமையே வழங்கப்பட்டது. ஒரு குறித்த அளவிற்குக் கல்வி அறிவு பெரும்பாலும் ஆங்கில அறிவு உடைய வருக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. பறங்கியருக்கு ஒரு பிரதிநிதியையும், ஐரோப்பியரில் நகர வாசிகளுக்கொரு பிரதி நிதியையும், நாட்டுப்புற வாசிகளுக்கொரு பிரதிநிதியையும் தெரியுமுரிமை வழங்கப்பட்டது. அறுவர் முன்போல இன முறையில் ஆள்பதியால் நியமிக்கப்பட்டவர்கள். ஏனைய பதி னுெருவரும், பதவிவழித் தொடர்பில் நியமனம் பெற்றனர். இத் திட்டத்தின்படி பதவிவழித் தொடர்புள்ள உறுப்பினர் பதி னெருவரும், பதவிவழித் தொடர்பற்ற உறுப்பினர் பதின்மரும் இடம் பெற்றபடியால் பதவிவழித் தொடர்புள்ள உறுப்பினரின் ஆதிக்கம் ஓரளவிற்குக் குறைந்தது. மேலும் மக்கள் தெரி வென்ற முறை இடம் பெற்றபடியால் இம்முறை இன்னும் கூடிய இடம்பெறல் வேண்டும் என்னுங் கிளர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாய்க் கல்விகற்ற நடுத்தர வகுப்பினர் இக் கிளர்ச்சி யில் ஈடுபட்டனர். நாட்டு மக்களுக்கு நாட்டின் ஆட்சியிற் கூடிய உரிமை இருத்தல் வேண்டுமென்ற எண்ணம் இவ் வகுப்பினரிடம் பரவியது. விரும்பிய உரிமையைப் பெறுவ தற்கு வேண்டிய முயற்சியும் நடந்தது. 1914 - 18இல் முத லாம் உலக மகாயுத்தம் நடந்தது. யுத்தம் நடக்கும்போது ஜேர்மனியோடும், ஜேர்மனியோடு பக்கத்திற் சேர்ந்த நாடுக ளோடும் போர்புரிந்த ஆங்கிலேயரும் அமெரிக்கரும் தாம் குடியாட்சி முறையைப் பேணுவதற்காகவே போரிலீடுபட்டன ரென்றும் சிறு நாடுகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே தம் நோக்கமென்றும் பறைசாற்றினர். தாம் யுத்தகாலத்திற் கூறியதை ஓரளவிற்காயினும் செயலிற் காட்டிவிடல் வேண்டுமென்ற எண்ணத்தினுற் போலும் யுத்தம் முடிந்ததும் ஆங்கிலேயர், இம்தியா இலங்கை போன்ற குடியேற்ருட்சி நாடுகளின் ஆட்சிமுறையிற் சிறு சீர்திருத்தங்கள் செய்வது முறையென்று கண்டனர். யுத்தகாலத்திற் புதிய உணர்ச்சி களும் கிளர்ச்சிகளும் தோன்றுவது இயற்கை. யுத்தம் முடிந்து சமாதானம் வந்ததும் என்ன என்னவோ செய்து விடுவோ மென்று திட்டங்கள் போடுவதும் இயல்பு. மேற்கில் யுத்தம் நடக்கும்போது ஏகாதிபத்திய ஆட்சியிற் கட்டுப்பட்டிருந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் உரிமை உணர்ச்சி

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 1 11
ஓரளவிற்கரும்பியது. இந்தியாவிற் பல்லாண்டாய் ஆட்சிச் சீர் திருத்தத்திற்காக உழைத்துவந்த இந்திய தேசீய மகாசபை (Indian National Congress) GODLJŮ GLUIT Gö7 AD 56ör GOop g3)6) iš GOD 5 u லும் நிறுவ முயற்சி நடந்தது. இலங்கையைத் தாய்நாடாகக் கொண்ட வெவ்வேறு இனங்களின் பிரமுகர்களும் ஒன்று கூடி garia) is is G55 LJ upas it facDL (Ceylon National Congress) 60.11 நிறுவி ஆட்சித் சீர்திருத்தத்திற்காக உழைக்க முன்வந்தனர். யுத்தகாலத்தில் இலங்கையில் ஓர் உள்நாட்டுக் கலகமும் கடந் தது. மேற்கூறியவற்றின் விளைவாய் இலங்கைக்கும் புதிய ஓர் ஆட்சித்திட்டம் உருவெடுத்தது.
LDTafi) is Lib (Manning Reforms )
1920இல் மானிங் ஆள்பதியின் ஆட்சியில் இத்திட்டம் நிறுவப்பட்டது. 37 உறுப்பினரைக்கொண்ட சட்டக்கழகத்தில் (Legislative Council) இருபத்திருவர் பதவிவழித் தொடர்பற்ற வர். இவர்களிற் பதினுெருவர் ஆள்புலத் (நிலத்) தொகுதிப் (Territorial Constituency) பிரதிநிதிகள் ; (சமப் பிரதேச விளை பொருள் உற்பத்திச் சங்கச் (Low-Country Products Association) சார்பில் ஒருவரும், பதவிவழித் தொடர்பற்றவர்கள் மூவரும் இடம் பெற்றனர்.) பெரும்பான்மை உறுப்பினர் (இருபத்தி மூவர்) பதவிவழித் தொடர்பற்றவரா யிருந்தபோதும் ஆள் புலத் தொகுதிகளின் தெரிவாலும் வேறு தொகுதிகளின் தெரிவாலும் இடம் பெற்றவர், 16 உறுப்பினரே. ஏனைய 21 உறுப்பினர் பதவிவழித் தொடர்புடையோரும் ஆள்பதி நியமித்தோருமாவர். ஆகையால், இத் திட்டம் மக்களாட்சியின் பாற்படமாட்டாது. மேலும் ஆள்பதிக்கு விசேட அதிகாரங் கள் இருந்தன. யாதேனும் ஒன்றை அதி முக்கியம் (Paramount importance) எனக் கூறிப் பதவிவழி உறுப்பின ரின் வாக்குகளைக் கொண்டே நிறைவேற்றும் உரிமை ஆள் பதிக்கிருந்தது. சட்டக்கழகத்தின் நடவடிக்கைகளையும் விரும் பியபோது கிற்பாட்டும் உரிமையும் அவருக்கிருந்தது. ஆத லால், இத்திட்டத்தை இலங்கை மக்கள் பெரிதும் ஆதரிக்க வில்லை. இதன் விபரங்கள் வெளியானதும் இத் திட்டத்தைப் பகிஷ்கரிப்பதற்கு முயற்சிகள் நடந்தன. இத் திட்டத்தின்படி சமபிரதேச விளை பொருட் சங்கத்திற்கு ஒரு பிரதிநிதியைத் தெரியும் உரிமை இருந்தது. அச் சங்கம் பிரதிகிதியைத் தெரிய மறுத்தது. இலங்கை மக்கள் திட்டத்தை ஏற்கார்க

Page 63
I 12 ஆட்சி இயல்
ளென்பது ஆள்பதிக்குப் புலப்பட்டது. விரைவிற் திருத்தங்கள் செய்வதாக ஆள்பதி வாக்குறுதி கொடுத்தபடியால் திட்டம் ஏற்கப்பட்டது. திருந்திய திட்டம் 1921 இற் செயற்பட்டது.
இதன்படி சட்டசபை உறுப்பினர் தொகை 49 :-
ஆள்புலத் தொகுதிப் பிரதிநிதிகள். ..... . 23. இனத்தொகுதிப் பிரதிநிதிகள் . 8.
(ஐராப்பியர்கள் 3, பறங்கியர் 2, மேல்மாகா ணத் தமிழர் 1, முஸ்லீம் 1, இந்தியர் 1.)
பதவிவழி உறுப்பினர் . . . . 8.
நியமனப் பிரதிநிதிகள் ... O.
ஒரு உபதலைவரைத் தெரியும் உரிமை சட்டக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்படியும் விரும்பிய எதையும் அதிமுக்கியமெனக் கூறி, பதவிவழி (Ex - officio) உறுப்பின ரதும், நியமன உறுப்பினரதும் வாக்குக்களை கொண்டே நிறைவேற்றும் அதிகாரம் ஆள்பதிக்கிருந்தது. நிர்வாக சபைக்குப் பதவிவழித் தொடர்பற்ற இருவர் நியமனம் பெற்றனர். இத் திட்டத்தில் மிகப் பாரதூரமான குறைபா டொன்றிருந்தது; இச் சட்டக்கழகத்தில் ஆட்சிக்குரிய வரவு செலவைக் கட்டுப்படுத்தும் உரிமையுடைய ஒரு நிதிக்குழு (Finance Committee) இடம் பெற்றது. இதன் உறுப்பினரிற் பெரும்பான்மையினர் பதவிவழித் தொடர்பற்றவர்கள். நிதிப் பொறுப்பைவிட ஒரு பொறுப்பும் சட்டக்கழகத்திற்கில்லை. அதிகாரமிருந்தது; பொறுப்பில்லை. யாதேனும் ஒன்றைத் தம் பொறுப்பில் தாமே திட்டம் வகுத்துச் செய்வதற்கு அதிகார மில்லை. ஆட்சியாளர் செய்வனவற்றிற்கும் பணம் ஒதுக்க மறுத்து முட்டுக்கட்டை போட அதிகாரம் இருந்தது. நிர்வாகப் பொறுப்பின்றிப் பணப் பொறுப்பு மாத்திரம் இருந்ததனுல் வந்த இக் நிலையைச் சமாளிக்கமுடியாமல் அக்காலத்து ஆள் பதி சேர் ஹியூ கிளிபோட் (Sir Hugh Clifford) அப்போதைய ஆட்சிமுறையை ஆராய்ந்து அதிலிருந்த குறைபாடுகளுக்குப் பரிகாரக் தேடுவதற்கு ஒரு ஆணே க்குழு (Commission) நிய மிக்க வேண்டுமென்று பிரித்தானிய ஆட்சிப்பீடத்தை வேண் டிக்கொண்டார். இவ் வேண்டுகோளின் விளைவுகளே " டொன முர் விசாரணையும் திட்டமும்’.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 1 13
டொனமூர்த் திட்டம்
ஆள்பதி சேர் ஹியூ கிளிபோட் (Sir Hugh Clifford) கேட் டுக்கொண்டபடி ஓர் ஆணைக்குழு இலங்கைக்கு 1927இல் வந்தது. இதன் தலைவர் டொனமூர்ப்பிரபு (Lord Donoughmore). மற்ற உறுப்பினர் டக்டர் டிறமன் ஷில்ஸ் (Dr. Drummond Shiels) 2 lb, Gai Gogg Gilaifi, UL6 (5lb (Sir Geoffrey Bulter)-2,6) i. இவர்கள் இலங்கையில் நடைபெற்ற ஆட்சிமுறையின் குறை பாடு யாதென்று விரைவில் அறிந்துவிட்டனர். சட்டக்கழக உறுப்பினருக்கு அதிகாரம் இருந்தது; பொறுப்பு இல்லை. பொறுப்பு இல்லாதபடியால் பொறுப்பு உணர்ச்சியும் இல்லை. இருந்த அதிகாரத்தைப் பொறுப்புணர்ச்சியின்றி ஆட்சிப் பீடத்தின் நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கவே உபயோகித் தனர். இக் குறையைத் தீர்ப்பதற்கு மக்களின் பிரதிநிதிகளுக்கு ஓர் அளவிற்கு அதிகாரமும் பொறுப்பும் இருக்கக்கூடிய ஒரு திட்டத்தை வகுத்தனர். சட்டம் ஆக்கும் பொறுப்பையும் ஆட்சி அலுவல்களே நடத்தும் பொறுப்பையும், அரசுக்கழகம் (அரசாங்கசபை - State Council) என்னும் பேர்பூண்ட ஒரு சபையில் விட்டனர். மக்களின் பிரதிநிதிகள் ஆட்சிமுறை யிற் பயிற்சி பெறுவதற்காக கிருவாகக்குழு மூலம் ஆட்சி (Government through Executive Committee ) 6T66), th 620) புதுமுறையை வகுத்தனர்.
வாக்குரிமை : நாட்டின் மக்களுக்கு ஆட்சித்துறையிற் செல்வாக்கு இருத்தல்வேண்டும். இருந்தாற்ருன் அவர்களின் வாக்குக்களைப் பெற விரும்புவோர் அவர்கள் படும்பாட்டை உணர்ந்து அவற்றிற்குப் பரிகாரக் தேட முயல்வர்; அவர் களின் தேவைகளே அறிந்து அவற்றைத் தீர்க்க முன்வருவர். குடியாட்சியின் பயன் யாவருக்குஞ் சேரல் வேண்டுமென்ருல் யாவருக்கும் வாக்குரிமை இருத்தல் வேண்டும். தொழிலாளி கள் விவசாயிகளது உரிமைகளைப் பாதுகாக்குஞ் சட்டங்கள் அக்காலத்தில் இலங்கையில் இல்லை. தொழிலாளர் நட்டஈட்டு 635 (Workmen's Compensation Act), G5T4ffbf Töuj fULüb (Factory Laws), G6).Jéal) Gib T GLDGaugia).j (Maximum hours of work) FLLò, Fl blu6T di 3Gyp6ò&a)é (Minimum wages) FL-tò போன்றவை இலங்கையில் இருக்கவில்லை. இக் குறைபாடு கள் யாரைப் பாதித்தனவோ அவர்களுக்கு வாக்குரிமை யிருந்தாலன்றி இக்குறைகள் தீரா என்று, இக் குழுவினர்
ஆ = 8

Page 64
114 ஆட்சி இயல்
கருதினர். மேலும் வாக்காளர் தொகை பெருகினுற் கைக் கூலி கொடுத்தல் போன்ற அயோக்கியச் செயல்கள் ஒரள விற்காயினுங் குறையும் என்றுங் கருதினர். சிறுதொகையின ருக்குக் கைக்கூலி கொடுப்பதிலும் பெருந்தொகையினருக்குக் கொடுத்தல் கடினம். ஒரு சிலருக்கே வாக்குரிமையிருந்தால் அவர்கள் நலனைக் கருதியே ஆட்சி நடைபெறும். பொதுமக்க ளின் தேவைகளைத் தீர்ப்பதற்கு வாக்குரிமை இன்றியமை யாத சாதனம். கல்வியறிவு, ஆட்சியனுபவம் இல்லாத மக்க ளுக்கு வாக்குரிமை வழங்குவது தவறு. என்று பலர் கருதினர். இன்றும் வெளிவெளியாய்ச் சொல்லாதுபோனுலும் பலரது உள்ளத்தில் இக் கொள்கை வேரூன்றியிருக்கிறது. நூலறிவு வேண்டியதொன்ருயினும், வாழ்க்கையிற் பெரிதும் பயன்படும் அறிவு செயல்மூலம்தான் வருவது. யாதேனும் ஒன்றைப்பற்றி நூல்களிற் கற்றுவிட்டால் அதைச் செய்து முடிக்கலாமென்று கம்புவது தவறு. வாக்குரிமையைச் சிறந்தமுறையில் உபயோ கிப்பதற்குப் புத்தகப் படிப்புப் போதாது. படம் விந்தாரிக்கப் பழகுவோர் இக் கலையைப்பற்றி எத்தனை நூல்களே க் கற்றபோதி லுங் கைத்திறன் பெருர் ; மையையும் தூரிகை(Brush)யையும் எடுத்தாண்டு பலமுறைகளாகப் பிழைகளை விட்டபின்தான் திறமை தோன்றும். அங்ங்ணமே வாக்குரிமையையும் ஆரம்பத் திற் பிழையாக உபயோகித்தல்கூடும்; ஆனல், அனுபவங்கூடப் பகுத்தறிவுங் கூடும் ; ஈற்றில் வாக்காளர் தமக்கிருக்கும் உரிமையின் பெறுமதியை யுணர்ந்து அவ் வுரிமையைப் பொறுப் புணர்ச்சியுடன் உபயோகிப்பர். இருபத்தொரு வயதான இலங்கை மக்கள் யாவருக்கும் வாக்குரிமை வழங்கியதே இத் திட்டத்தின் முக்கிய அம்சம். பெரும்பாலும் இக்குழு வினரது கருத்து உண்மையென்பது இலங்கையில் இக்கால வரலாற்றிலிருந்து அறியக்கிடக்கின்றது. இலவசக் கல்வி, தொழிற்சங்கங்களின் விருத்தி, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்குஞ் சட்டங்கள், இலவச வைத்திய சிகிச்சை, சனசமூக நிலையங்கள், தாய்மாருக்குஞ் சிறு குழந்தைகளுக் கும் வைத்திய உதவிபோன்றன வழங்கும் நிலையங்கள், பள்ளிக்கூடப் பிள்ளைகளின் உடல்நலச் சோதனை என்பன யாவும் இதை வலியுறுத்துகின்றன. இவையெல்லாம் சர்வ சன வாக்குரிமை வந்ததன்பின் வந்தவையே. தேர்தலிற் கைக் கூலி, கள்ளு, சாராயம் இடம்பெறவில்லையென்று கூறுவதற் கில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அபேட்சகர் பலர் இவற்றை

இலங்கை ஆட்சி இயல் வரலாறு I l5
உபயோகித்தனர். ஆனல், இவற்றை உபயோகித்ததால் வெற்றிபெற்றர் என்று சொல்வதற்கில்லை. வென்றவர்களும் தோற்றவர்களும் இவ்வயோக்கிய முறையைக் கையாண்டனர். யாராவது இதனுல் வெற்றிபெற்றரென்று சொல்லுதல் முடி யாது. ஒரு தொகுதியிலுள்ள பெருந்தொகையான வாக்காளர் யாவருக்குமோ அல்லது பெரும்பான்மையினருக்குத்தானும் கைக்கூலி, கள்ளு, சாராயம் கொடுத்திருத்தல் முடியாது. பள் ளிக்கூடப் படிப்பு, வாக்காளரை இவ்வயோக்கிய முறைகளுக்கு அகப்படாது தப்பப்பண்ணியிருக்குமென்று சொல்வதற்கு மில்லை. கள்ளு, சாராயம், கைக்கூலி முதலியவற்ருல் வெற்றி பெற முயன்றவர்கள் பள்ளிக்கூடப் படிப்புள்ளவர்களே பல்கலைக்கழகப் பட்டதாரிகளுங்கூட. யாதேனுமொரு தொகுதி யிற் போட்டியிட்டவர் பெரும்பாலும் இருவரோ மூவரோதான். கல்வியறிவும், பண்பாடும் உள்ள இருவரோ, மூவரோ அயோக்கிய முறைகளை உபயோகிக்கிறதில்லையென்று தமக் குள் ஓர் உடன்படிக்கை செய்து அதன்படி ஒழுகியிருக்கலாம் பலவித அறிவு படைத்த இருவர், மூவர் ஒன்று கூடித் தம் மைக் கட்டுப்படுத்த முடியாதென்றல் இப் படிப்பாளிகளும் அவர்கள் சார்பில் மற்ருேரும் இலவசமாய்க் கொடுத்த பணத்தையோ கள்ளு, சாராயத்தையோ படிப்பற்ற வாக்கா ளரிற் சிலர் பெற மறுக்கவில்லையென்று குறைகூறுவது நியாயம்போலத் தோன்றவில்லை.
rßaois G5ITSâů îJârâ6a56ir (Territorial Representatives)
ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த காலந்தொடங்கி டொன மூர்த் திட்டம் செயல்முறைக்கு வரும்வரையும் ஆட்சியமைப் பில் இனவேற்றுமை இடம்பெற்றிருந்தது. ஆள்பதி பிரதிநிதி களே கியமித்த காலத்தில் இனவாரி கியமனம் நடந்தது. வாக் காளர் பிரதிநிதிகளைத் தெரிந்தபோதும் இனப் பாகுபாட்டின் படி பல பிரதிநிதிகள் தெரியப்பட்டனர். ஐரோப்பியர், பறங்கி யர், இஸ்லாமியர், தமிழர் என்ற இனங்களின் பிரதிநிதிக ளாயே பலர் சட்டக்கழகத்துக்குச் சென்றனர். இவர்களும் பெரும்பாலும் ஆட்சி அலுவல்களை இனக்கண் கொண்டே நோக்கினர். இனப் பிரதிநிதி முறையைக் கைக்கொள்வதினுல் வேற்றுமை மனப்பான்மை பெருகியதென்றும், தாம் எல் லோரும் ஒரு நாட்டு மக்கள், தம் இனத்திற்கு மாத்திரமின்றித் தம் தாயகமாகிய இலங்கைக்கும் அபிமானம் காட்டல்வேண்டு

Page 65
16 ஆட்சி இயல்
மென்ற உணர்ச்சி இந்நாட்டு மக்களிடம் தோன்றவில்லை" யென்றும் டொனமூர் ஆணைக்குழுவினர் கருதினர். இக்கிலை மாறித் தம்மை இலங்கையரென்று கருதித் தம் இனத்தின் நலத்தை மாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் யாவரது நலனே யும் மனத்திற்கொண்டுழைக்கும் இயல்பு தோன்றுவதற்கு இனமுறையிற் பிரதிநிதிகளைத் தெரிவதையும் நியமிப்பதை யும் ஒழித்தல்வேண்டுமென்றுங் கருதினர்.
டொனமூர் ஆணைக்குழு இலங்கையின் பலபாகங்களுக்
குஞ் சென்று விசாரணை நடத்தியபோது பல இடங்களில் இனப் பிரதிகிதிகள் மாத்திரமன்றிச் சாதி - சமயப் பிரதிநிதி களும் இருத்தல் வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. இன்று சிறுபான்மைத் தமிழரென்று கூறும் வகுப்பினர் தமக்குத் தனிப் பிரதிநிதிகளைத் தெரியும் உரிமை வேண்டுமென்று வாதாடினர். யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் தமக்குத் தனிப் பிரதிகிதிகள் வேண்டுமென்று கோரினர். வேறு இடங்களி லும் இவைபோன்ற வேண்டுகோள்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இனமுறைத் தெரிவை முற்ருய்த் தொலைத்துவிட்டாலே இம் மனப்பான்மை அகன்றுபோகலாமென்றுகொண்டு டொன மூர் ஆணைக்குழு தம் திட்டத்தில் இவற்றிற்கு இடம் கொடுக்கவில்லை. என்ருலும் ஏதோ ஓரிடத்திற் போதியளவு தொகையில் வாழாது எங்கும் பரவியிருக்கும் இனங்களின் சார்பாகக் கடமையாற்ற எண்மருக்கு மேற்படாமல் பிரதிநிதி களை நியமிக்க ஆள்பதிக்கு அதிகாரமிருந்தது.
திட்டத்தின் பெருங் குறைபாடு
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் வரலாற்றில் இத் திட்டம் இதற்கு முன் தோன்றி மறைந்த யாவற்றிலும் பலவகையிலும் முற்போக்கானதாயிருந்தபோதினும் இதிலும் முக்கிய குறை பாடுகளிருந்தன. குடியேற்ற ஆட்சிக்குரிய கட்டுப்பாடுகள் சில இதிலும் இடம் பெற்றன. முன்போலவே அரசுக்கழகத்தின் தீர்மானங்களை கிராகரிக்கவோ, அதன் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்தவோ ஆள்பதிக்கு அதிகாரமிருந்தது. இத்திட்டத்தின்படி ஆள்பதிக்கிருந்த விசேட அதிகாரத்தைவிட ஒரு அமைச்ச ரவைக் கிடமிருந்தபோதும் ஆட்சித்துறையின் மூன்று முக் திய அலுவல்கள் ஏகாதிபத்திய உத்தியோகத்தர் மூவரது பொறுப்பிலிருந்தன. இம் மூவரும் சட்ட, கிதி, ஆட்சித்துறை

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 17
களின் பதவிவழித் தொடர்பான அலுவல்கள் ஆகியவற்றிற் குப் பொறுப்பாயிருந்தனர். இவர்களுக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தெரிவு செய்த அமைச்சருக்கும் பல தடவைகளில் முரண்பாடு தோன்றியது. இவ்வாட்சி முறைக்கு இரட்டை ஆட்சிமுறை (Dyarchy) என்று பெயர். இலங்கை யில் இந்த ஆட்சிமுறை கிறுவுவதற்குமுன் இந்தியாவிலும் இது செயலிலிருந்தது. சில முக்கிய பொறுப்புக்களை ஏகாதி பத்திய அதிகாரிகள் தம்மவர்பால் வைத்துக்கொண்டு அதி முக்கியமில்லாத அலுவல்களை நாட்டின் மக்கள் பொறுப்பில் விடுவதே இதன் சிறப்பியல்பு. ஏகாதிபத்திய அதிகாரிகள் இடமிருக்கும் பொறுப்புக்களுக்கு ஒதுக்கிய விடயங்கள் (ஒதுக்கிவைத்த துறைகள் - Reserved Subjects) என்றும், நாட்டின் மக்கள் அதிகாரத்தில் விட்ட துறைகளுக்கு இடமாற் றிய விடயங்கள் (ஒருபடைத்துறைகள் - Transfered Subjects) என்றும் பெயர். V
இலங்கைக்குச் சுயாதீனம் வரமுன் நடைமுறையிலிருந்த முறை இஃதே. பலவகையிற் சுயாதீனத்திற்கு அடிகோலிய முறையென்றும் இதனைக்கூறுவது தவருகாது. சர்வசன வாக் குரிமை வழக்கிலிருந்தபடியாற் பொதுமக்களுக்குத் தம் உரிமை கடமைகளைப் பற்றிய அறிவு அனுபவமூலம் வந்தது. தலைவ ருக்கு ஆட்சிப் பொறுப்புப் பெறும் வாய்ப்புக் கிடைத்தது.
இத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : அரசுக் கழகம் (State Council) இதன் உறுப்பினர் அறுபத்தொரு வர். இவருள் ஐம்பதின்மர் ஆள்புலத் (நிலக்கூறு-Territorial) தொகுதிப் பிரதிநிதிகள். எண்மர் தேசாதிபதியால் நியமனம் பெறும் இனவகைப் பிரதிகிதிகள் ; இவர்களுள் நால்வர் ஐரோப்பியர், ஒருவர் பறங்கியர், ஒருவர் இலங்கை இஸ்லாமியர், ஒருவர் மலாயர், மற்றவர் இந்திய வணிக வர்த்தகத்தின் சார்பில் நியமனம் பெற்றவர். மூவர் ஆள்பதி நியமிக்கும் பதவிவழித் தொடர்புள்ள உத்தியோகத்தர்.
நிருவாகக் குழுக்கள் : பொதுத்தேர்தல் முடிந்ததும் அரசுக் கழக உறுப்பினர்கள் கழகத்தின் சபாநாயகர் (Speaker), உப afuit (Situasi (Deputy Speaker), (gCup did, Gilair syá5 TT fat if (Chairman of Committees) -2,86ut 60|Tö G5 fl6). Gruy6)Jf. அதன்பின் தம்மை வெவ்வேறு குழுக்களாகப் பங்கீடு செய்வர்

Page 66
1 18. ஆட்சி இயல்
ஒவ்வொன்றிலும் 8 உறுப்பினருக்குக் கூடாமலும் 7 உறுப்பின ருக்குக் குறையாமலும் இருத்தல் வேண்டும். குழுக்கள் அட்டவணை பின்வருமாறு :
g) -6i (5/TL (B) eg)gy6)J6ö56ir (Home Affairs) பயிர்ச் செய்கை (Agriculture) 2-6ire05 TITL'S (2566) iTLS) (Local Government) சுகாதாரம் (Health)
வாணிபம், கைத்தொழிற்றுறை
(Local Industry and Commerce)
6.
disaba)? (Education)
போக்குவரத்து கட்டட வேலைகள்.
(Transport and Works)
7.
ஆட்சி உத்தியோகத்தர் மூவர்
1. பிரதம செயலாளர் (Chief Secretary): ஆள்பதிக்கடுத்த பதவி இவருக் கிருந்தது. ஆள்பதி கடமைசெய்ய முடியாக் காலங்களில் இவரே அவர் கடமைகளைச் செய்வார். அங்ங்னம் கடமை பார்க்கும் வேளைகளில், ஆட்சிப் பரிபாலன அலுவலர் (Officer Administering the Government) 67 Girl G5 galli 1956)? யின் பெயர். இவரே அமைச்சரவையின் உத்தியோகபூர்வ மான நிரந்தரத் தலைவர். ஆட்சி அலுவல், உத்தியோகம், வெளிநாட்டலுவல்கள், காட்டின் பாதுகாப்பு முதலியன இவர் பரிபாலனத்திலிருந்தன.
2. நிதிச் செயலாளர் (Finacial Secretary) : நாட்டின் நிதி வரவு - செலவு யாவற்றிற்கும் இவரே பொறுப்பானவர். அமைச்சர்கள் எதைச் செய்ய விரும்பினலும் இவர் பணவசதி யில்லையென்றல் அதைக் கைவிட வேண்டியதே. பணத் துறையில் இவருக்குச் சர்வாதிகாரமிருந்தது. இவர் பணப் பையை அவிழ்க்க மறுத்தால் அமைச்சர்களுக்கோ அரசுக் கழகத்துக்கோ எதுவுஞ் செய்தல் முடியாது. ஆள்பதி நியமித் தவரானபடியால் பொதுமக்கள் கருத்துக்கோ கிளர்ச்சிக்கோ இவர் செவிசாய்க்க வேண்டியதில்லை. அரசுக்கழகந்தானும் இவருக்கு யாதுஞ் செய்தல் முடியாது. பெரும்பாலும் ஆங் கிலேயரே இப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமையால் இலங் கையின் தேவையிலும் பார்க்க ஏகாதிபத்தியத்தின் நலனையே இவர்கள் பெரிதாகக் கொண்டார்கள் என்று பல புகார்கள் கிளம்பின.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 1 19
3. சட்டச் செயலாளர் (Legal Secretary): இவருக்கிருந்த முக்கிய பொறுப்பு நீதிபரிபாலனம். தேர்தல் ஒழுங்குகளும் இவரது பொறுப்பே. ஆட்சிப்பீடத்தின் சார்பாகப் பல்வகை வழக்குகளே கடத்துவதும், ஆட்சிப்பீடத்திற்கு வேண்டிய போது சட்டத்துறையில் ஆலோசனை கூறுவதும், சட்டங்களை ஐயந்திரிபற வரையறுப்பாய் வரைவித்தலும் இவர் பொறுப்பு.
இம்மூவரையும் ஆள்பதி நியமித்தபடியால் அரசுக்கழகத் தின் விருப்பத்தையோ பொதுமக்கள் விருப்பத்தையோ இவர்கள் மதிக்கவேண்டியிருக்கவில்லை ; பலதடவை மதிக்கவு மில்லை. ஆகையால் இவர்களுக்கும், அமைச்சர் அவைக்கும், அரசுக்கழகத்திற்கும் இடையிடையே முரண்பாடுகள் ஏற் பட்டது இயல்பே.
அமைச்சர் அவை
மேற்கூறிய மூவரும் 7 கிருவாகக் குழுக்களின் தலைவருமே அமைச்சர் அவையின் உறுப்பினர். தலைவர், பிரதம செயலாளர் s99 ởi ổ đ5ypđ5 (1056ü6)Ji (Leader of the State Council), 2 LJ5ồ) வர், அமைச்சர்மாரே தம்முள் ஒருவரை முதல்வராகத் தெரி வா. இச் சபையின் கடமைகள் பல. அரசுக்கழகத்தின் கூட் டங்களேயும், மற்ற நடவடிக்கைகளேயும் ஒழுங்குசெய்வது இவர்கள் பொறுப்பு. ஆண்டுதோறும் வரவு-செலவுத் திட் டத்தை இவர்களே ஆக்குதல்வேண்டும். இத் திட்டத்தை அரசுக்கழகம் ஏற்க மறுத்தாலோ அல்லது சமர்ப்பித்து மூன்று மாதத்திற்குள் ஏற்கத் தவறினுலோ அரசுக்கழகத்தை ஆள்பதி கலைத்துவிடுவார். இத்திட்டத்தை ஏற்காது திருப்பி ஆராயும்படி அமைச்சர்களிடம் ஒருமுறை விடும் உரிமை அரசுக் கழகத்திற் கிருந்தது; ஆராய்ந்த பின்புங்கூட அரசுக்கழகம் ஏற்க மறுத் தால் ஆள்பதி கட்டாயமாய்க் கழகத்தைக் குலைக்கவேண்டி நேரிடும். அமைச்சர்களில் நம்பிக்கையில்லை யென்று அரசுக்கழ கம் தீர்மானம் நிறைவேற்றினுலும் அரசுக்கழகம் குலைக்கப்படும். இவற்றைவிடத் தனி அமைச்சர் தம் திருவாகத்திற்குரிய அலு வல்களையும் இங்கு கலந்தாலோசிப்பர் ; தாம் எடுத்துக்கொள் ளுந் திட்டங்களுக்குப் பொறுப்பேற்பர். திட்டம் எளிதிற் செயற்படக்கூடிய ஒன்ருயின், கிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டுமென்ற முறையில் ஆலோசனை நடைபெறும். திட்டம் நிறைவேறினுல் அரசுக்கழகம் ஏற்றுக்கொண்ட எதை

Page 67
12O ஆட்சி இயல்
யும் மாற்றவோ நீக்கவோ இவர்களுக்கு அதிகாரமில்லை. பிரதம செயலாளர், நீதிச் செயலாளர், சட்டச் செயலாளர் ஆகிய மூவரும் அமைச்சர் அவையின் நடவடிக்கை விவாதங்களில் பங்குபெறலாம்; ஆலோசனை கூறலாம். ஆனல், வாக்குரிமை அவர்களுக்கில்லை.
ஆள்பதியின் அதிகாரம்
குடியேற்ற ஆட்சி நடத்தியவர்களுக்கு அதற்குரிய மனப் பான்மை எளிதில் மாறது. சர்வசன வாக்குரிமை வழங்கியதும், இனவகைத் தெரிவை இல்லாமற் செய்ததுமான டொனமூர்த் திட்டத்திலும் இம் மனப்பான்மை இடம்பெற்றது. பொதுமக் கள் தெரிவுபெருது பொதுமக்கள் தெரிந்த பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டிற்குப் புறம்பே ஆள்பதிக்கு மாத்திரம் பொறுப் புள்ளவர்களாய்க் கடமை ஆற்றிய ஆட்சியாளர் மூவரைப்பற்றி முன்கூறியுள்ளோம்.
இது குடியாட்சி முறைக்குப் பெரிதும் முரணுனது. இது போலவே இத் திட்டத்தில் ஆள்பதிக்கிருந்த அதிகாரமும் குடியாட்சிக் கோட்பாடுடனும் மரபுடனும் ஒவ்வாதது. ஆயி னும் இந்நாடு குடியாட்சி முறையில் முன் பயிற்சியில்லா நாடென்றும், இங்கு ஒன்றுக்குமேற்பட்ட இனங்களும், மொழி களும் சமயங்களும் இருக்கின்றபடியாலும், அரசுக்கழகத்தி னதும் அமைச்சர்களினதும் ஆதிக்கத்தை ஓரளவிற்குக் கட்டுப் படுத்த வேண்டுமென்று ஆள்பதிக்குச் சில விசேட அதிகாரங் கள் ஆட்சித் திட்டத்தில் இடம் பெற்றன. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினதும் இங்குள்ள ஆங்கிலேயர்களினதும் நலனைப் பாதுகாக்கவும் வேண்டியிருந்தது. இதற்கு ஆள்பதி யின் அதிகாரம் பயன்படும் என்று கருதப்பட்டது. குடியேற்ற ஆட்சியில் ஆள்பதிக்கு ஆட்சிப்பொறுப்பு முற்றயுண்டு. ஆள் நிலஆட்சி (Dominion Status) முறையில் அவர் மன்னர் பிரதிநிதி ; ஆங்கில ஆட்சிமுறையில் மன்னருக்கிருக்கும் இடமே அவருக்கு முண்டு. மக்கள் தெரிந்த பிரதிநிதிகள் தாம் விரும்பியதைச் செய்ய இடமுண்டு. ஆள்பதி ஆட்சி அலுவல்களிலே தலை யிடார். டொனமூர்த் திட்டத்தில் இவ்விரண்டிற்கும் இடை நடுவான ஒரு இடம் ஆள்பதிக்கிருந்தது. பெரும்பாலும் ஆட்சி அலுவல்களில் அவர் தலையிடாதுபோனலுங் குறித்த சில துறைகளில் அவருக்கு அதிகாரம் இருந்தது.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 121.
சட்ட ஆக்கத் (Legislation) துறையிலும் நிருவாகத் தொழிற் பாட்டுத் (Executive Function) துறையிலும் குறித்த சில சந்தர்ப் பங்களில் தலையிடும் உரிமை ஆள்பதிக்கிருந்தது. சட்ட ஆக் கத் துறையிற் பின்வரும் ஆறு வகையான சட்டங்களை அரசுக் கழகம் கிறைவேற்றினலும் அவற்றை ஏற்காதுவிடும் உரிமை ஆள்பதிக்கிருந்தது :- m
(அரசுக்கழகம் நிறைவேற்றும் எச்சட்டமாயினும் ஆள்பதி தாம் அதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தபின்புதான் சட்டரீதியான நிறைவுபெறும். ஆள்பதி ஏற்காதுவிடின் எதுவும் சட்டமாகாது.)
l. யாதேனும் இனத்தையோ சமயத்தையோ சேர்ந்தவர் களே மாத்திரம் பாதிக்கும் சட்டங்கள்; மற்றவர்களுக்கு இருக்காத உரிமைகள், சலுகைகள் யாதேனும் வழங்கி வேற்றுமை காட்டும் சட்டங்கள். 2. ஆட்சித்துறை உத்தியோகத்தரின் உரிமைகள் சலுகை
களைப் பாதிக்குஞ் சட்டங்கள். நாட்டின் பணநிலையைப் பாதிக்குஞ் சட்டங்கள். 4. நாட்டின் வெளிப் பாதுகாப்பு, போர்ப்படை, உட்பாது
காப்புப் பற்றிய சட்டங்கள். 5. ஏகாதிபத்திய அலுவல்கள், புறநாட்டு வணிகம், துறை முகங்கள், மரக்கலங்கள் (Shipping) Co.5ITLiil IIT 60T விடயங்கள் ஆகியவை பற்றிய சட்டங்கள். 6. நாட்டின் மீதி பரிபாலனத்தைப் பற்றிய சட்டங்கள்.
இவை யாவற்றையும் ஏற்காதுவிட்டு அரசர் பார்வை யிட்டு ஆகவேண்டியது செய்ய, ஒத்திவைப்பது ஆள்பதியின் கடமை. இவற்றைவிட அரசுக்கழகம் நிறைவேற்றும் எச்சட் டத்தையும் இங்கனம் ஒத்திவைக்கும் உரிமை ஆள்பதிக் கிருக்கிறது.
ஒத்திவையாது தாமே ஏற்க மறுக்கும் உரிமையும் அவருக் கிருந்தது. இவ்வுரிமைகளைவிட அவருக்குப் பின்வரும் உரிமை *ளு மிருந்தன. அரசுக்கழகம் நிறைவேற்றிய எந்தச் சட்டத்தை ம் உடனே ஏற்க மறுத்துக் குறித்த சட்டத்தை அரசுக்கழ ம் திரும்பவும் ஆராய வேண்டுமென்று திருப்பியனுப்பும் ரிமை. குறித்த சட்டத்தில், பாரதூரமான தத்துவம் ( அடிப்

Page 68
122 ஆட்சி இயல்
படைக்கொள்கை - Principle) இடம் பெற்றிருக்கிறபடியால் அச் சட்டத்தை அரசுக்கழகத்தின் உறுப்பினரில் மூன்றில் இரண்டு பங்கினராவது ஆதரிக்கவேண்டுமென்று தீர்த்தல்.
குறித்த ஒரு சட்டத்தை ஏற்றபோதிலும் அதை 6 மாத காலம் ஒத்திவைத்து அதன்பின்னர்தான் செயல்முறைக்கு வரலாமென்று தீர்த்துவிடல்.
மேற்கூறியவற்றையும் ஆள்பதி தாமே செய்துவிடலாம். ஆனல், இவற்றில் என்ன நடவடிக்கையை எடுத்தாலும் அதைக் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு (Secretary of State for the Colonies) G.5ifa'igil 6L6G6608T(Blb.
அரசுக்கழகம் தாம் வேண்டியபடி ஏதேனும் ஒரு சட்டத் தைச் செய்து செயற்படுத்தலாம். அதனைக் குடியேற்றச் செயலா ளருக்கும் தெரிவித்துவிடல் வேண்டும். நிருவாகத்துறை நிலையி லும் (Executive Stage) மேற்கூறிய உரிமைகளுக்கு நேரான உரிமைகள் ஆள்பதிக்கிருந்தன. ஒத்திவைத்தல், ஏற்க மறுத்தல், திரும்ப ஆராயும்படி தீர்த்தல் போன்ற நடவடிக்கைகளை வேண் டியபடி எடுக்குமுரிமைகள் அவருக்கிருந்தன. எடுத்த நட வடிக்கையைக் குடியேற்றச் செயலாளருக்குத் தெரிவித்தல் வேண்டும். அமைச்சரவையிற் கடமையாற்றிய அரச அலுவ obitotif (9 Su LjSGu IIT 55.5i - Officers of State) (p6) (Dub ஆள்பதிக்கே சட்டரீதியாய்ப் பொறுப்புள்ளவரானபோதிலும் உண்மையில் அரசுக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி நடக்கவேண்டியிருந்தது. அரசுக்கழகமே வரவுசெலவுக்கும் பொதுவாக ஆட்சிக் கொள்கைகளுக்கும் பொறுப்புடையது. ஆதலால், இவ் வுத்தியோகத்தர் அரசுக்கழகத்தின் கட்டுப் பாட்டை மீறுவது எளிதன்று. ஆகையால், இவர்கள் செயலை முற்றும் தாம் விரும்பியபடி கட்டுப்படுத்த ஆள்பதிக்கு முடிய வில்லை. ஏகாதிபத்தியத் தொடர்புள்ள அலுவல்களில் முக்கிய மாய் நாட்டின் பாதுகாப்பில் தாம் விரும்பியபடி செய்யும் உரிமை அவருக்கிருந்தது. மேலும் ஆள்பதியின் உத்தியோகத்திற்குரி யனவாகிய சில உரிமைகள் அவருக்கிருந்தன. பின்வருவனவே அவ் வுரிமைகள் :
1. குற்றவாளிகளைத் தண்டியாது மன்னித்துவிடல். அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டல். ஆட்சிச் சாதனம்

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 123
(Official Document) எதையும் பார்வையிடல். அமைச்சராய்த் தெரிவுபெற்றவர் தகுதியற்றவரென்று கருதினல் அத் தெரிவை ஏற்காதுவிட்டு இன்னெருவரைத் தெரியவேண்டுமெனத் தீர்த்தல்.
நாட்டில் எதிர்பாராத முறையில் உள்நாட்டுக் குழப்பம், வெள்ளம் புயல் மழையின்மை முதலியவற்ருல் திடீரென நிலைமாற்றம் ஏற்பட்டால் வேண்டிய நடவடிக்கை எடுக்கும் உரிமை ஆள்பதிக்கிருந்தது. விளம்பரம் மூலம் தன் நோக்கத் தைத் தெரிவித்தபின் ஆட்சித்துறையில் வேண்டிய அதிகாரத் தைத் தாம் செலுத்தலாம். அப்படிச் செய்யும்போது அதைக் குடியேற்றநாட்டுச் செயலாளருக்குத் தெரிவித்தல்வேண்டும். அரசுக்கழகத்தின் அனுமதியுடன் வேண்டிய சட்டங்களையும் நிறைவேற்றலாம். ஆட்சி அலுவல் உத்தியோகத்தரைத் தெரிதல், நியமித்தல், மாற்றல், அகற்றல் முதலியவற்றிற்கும் ஆள்பதியே பொறுப்பு. குடியேற்றச் செயலாளருக்கு இத் துறையில் மேற்பார்வைஉரிமை யிருந்தது.
பொதுப்படக் கூறின் ஆள்பதிக்கிருந்த உரிமைகள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் உபயோகிக்க வேண்டியனவுமல்ல ; எல்லாச் சந்தர்ப்பத்திலும் உபயோகிக்கக்கூடியனவுமல்ல. குடியேற்ற ஆட்சியில் ஆள்பதிக்கிருக்கும் பதவி, ஆங்கில ஆட்சியமைப்பில் மன்னருக்கிருக்கும் பதவிபோன்ற பதவியுமன்று ; தலையிட வேண்டுமென்று கருதும்போது தலையிடுவதும் மற்றப்படி தலை யிடாதிருப்பதுமே டொனமூர்த் திட்டத்தில் ஆள்பதிக்கிருந்த கடமை. இங்ங்ணம் ஒழுகுவதற்கு ஆட்சியில் என்னென்ன நடை பெறுகின்றன என்று ஆள்பதிக்குத் தெரிதல்வேண்டும். தெரிந் தால்தான் எப்போது தலையிடவேண்டுமென்று தீர்த்தல்முடியும் ஆகையால், அரசுக்கழகத்தின் நடவடிக்கைகள் - நிருவாகக் குழுக்களின் நடவடிக்கைகளின் வரலாறுகள் யாவும் ஆள்பதிக் கனுப்பப்பட்டன. இக்காட்டு ஆட்சி அலுவல்கள் யாவி லும் என்றும் நேரே ஈடுபட்டிருந்தால் அவர் தலையிட வரும்போது இருக்கும் நிலையை நடுவுநிலைமையுடன் பார்த்தல் முடியாது. எனவே இயன்றமட்டும் ஆட்சி அலுவல்களில் அவர் நேரில் ஈடுபடுவதில்லை. இதற்காகத்தான் அரசுக்கழகக் கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குவதில்லை.

Page 69
194 ஆட்சி இயல்
நிருவாகக் குழு ஆட்சி
இதை யெழுதிக்கொண்டிருக்கும்போது இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா திருவாகக் குழு ஆட்சியே இலங்கைபோன்ற நாடுகளுக்குப் பொருத்தமானதென்றும், ஆங்கில நாட்டிலும் ஆங்கிலேய ஆட்சியமைப்பைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் கட்சி ஆட்சி முறை (Party System) இந்நாட்டுக் குப் பொருத்தமற்றதென்றும் கூறியதைப்பற்றிப் புதினத்தாள் களில் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது. நிருவாகக் குழு ஆட்சியின் குறைகுற்றங்களைப் பலர் எடுத்துக் காட்டிக் கொண்டுவருகின்றனர். கட்சியடிப்படையில் உருப்பெறும் மந் திர (அமைச்சரவை - Cabinet) ஆட்சியின் சிறப்புக்களைப் பாராட் டுங் கட்டுரைகள் பல தோன்றியுள்ளன. பிரதமர் பண்டார நாயக்காவை வெளிவெளியாய் ஆதரிப்போர் யாரையுங் காணுேம். இக் கொள்கையை ஆதரிப்போரில்லையென்று இதி லிருந்து ஊகிப்பது முறையாகாது. அது எப்படியாயினும் நிரு வாகக்குழு ஆட்சிமுறையின் நன்மை தீமைகளை அலசி ஆராய் வதற்கு இது சிறந்த ஒரு தருணமென்றெண்ணுவதற்கு இட முண்டு. ஆனல், இங்கு ஆராய்வது கிருவாகக்குழு ஆட்சி யன்று. நிருவாகக்குழு ஆட்சியையும் மந்திர ஆட்சியையும் ஒப்புநோக்கி இவ்விரண்டின் சிறப்பு இழிவுகளைப் பற்றித் தீர்ப்பளிப்பதும் இங்கு வேண்டிய ஒன்றன்று.
டொனமூர்த் திட்டத்தில் இடம்பெற்ற நிருவாகக்குழு ஆட்சி முறை ஒன்றுதான் நிருவாகக்குழு ஆட்சியென்றும் அதில் மாற் றங்களுக்கோ திருத்தங்களுக்கோ இடமில்லையென்றுங் கூறுவ தற்கில்லை. டொனமூர்த் திட்டம் நடைமுறையிலிருந்தபோது நடைபெற்ற ஆட்சிமுறை சிறிது சீர்திருந்திய குடியேற்றமுறை ஆட்சியென்ருே அல்லது குடியேற்றமுறைக்கும் ஆள்நில ஆட்சிமுறைக்கும் இடைநடுவான ஒன்றென்ருே கூறுவது தான் பொருந்தும். அப்போது நடைபெற்ற நிருவாகக்குழு முறையிலிருந்த குறைகள் யாவும் எப்போதும் நிருவாகக்குழு முறையி லிருக்குமென்று கூறுவதோ அக் குறைகளில்லாத நிருவாகக்குழு முறையொன்று வகுக்கமுடியாதென்று கூறுவதோ பொருத்தமில்லை. இப்போது டொனமூர்த் திட்டத்தில் இடம் பெற்ற நிருவாகக்குழு முறையிலிருந்த குணங்களையும் குற்றங் களையும் ஆராய்வோம்.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 125
ஆள்பதியின் அதிகாரத்தை மீறி அரசுக்கழகமோ அமைச் சர்களோ யாதுஞ் செய்யமுடியாது. அமைச்சர்களும், அரசுக் கழகமும் ஏற்காததையும் கிறைவேற்ற ஆள்பதிக்கு அதிகார மிருந்தது. நிதிப்பொறுப்பு மக்களின் பிரதிநிதியாய் அரசுக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒருவரிடம் இருத்தல் வேறு. இந்நாட்டு மக்களுக்கோ அவர்கள் பிரதிநிதிகளுக்கோ கட்டுப் படாது வேறு ஒருவரிடம் இருப்பது வேறு. நிதிப்பொறுப்புப் போன்ற முக்கிய பொறுப்புக்கள் அமைச்சர்களின் கட்டுப் பாட்டுக்குப் புறம்பாயுள்ளவர்களிடம் இருந்தது. ஆக்கவேலை களுக்குப் பணம் ஒதுக்கும் பொறுப்பு அமைச்சர்களிடமிருக்க வில்லை. நிதிச் செயலாளர் அமைச்சர்களின் முயற்சிகளுக்கு விரும்பியபோதெல்லாம் முட்டுக்கட்டைபோடக்கூடிய நிலையி லிருந்தார். அவர் செயலை மட்டுப்படுத்தவோ நிராகரிக்கவோ அல்லது அவரைப் பதவியிலிருந்து அகற்றவோ அமைச்சர் களுக்கு அதிகாரமிருக்கவில்லை. அமைச்சர்களும் நிருவாகக் குழுக்களும், அரசுக்கழகமும் நிறைவேற்றுஞ் சட்டங்களேயும் செய்யுஞ் செயல்களையும் ஆள்பதி நிராகரிக்கவோ, தாமதிக் கவோ உரிமையிருந்தது. ஆள்பதிக்கு இவ்வதிகாரங்களிருந்த போதும் அவர் கியமித்த ஆட்சி உத்தியோகத்தர் மூவரையும் கட்டுப்படுத்தும் உரிமை அரசுக்கழகத்திற்கு இல்லாதபோது எந்த ஆட்சிமுறைதானும் சீராய் நடைபெற்றிருக்குமென்று சொல்ல யாருந் துணியார். அன்றிருந்த நிலையில் அமைச்ச ரவை முறையும் (Cabinet System) திருப்திகரமாய் நடந் திருக்குமென்று கூறுவதற்கில்லை. டொனமூர்த் திட்டத்தை வகுத்தவர்கள் ஒரு சில நோக்கங்களை கிறைவேற்றவே அதை வகுத்தார்கள். தனிக் குடியேற்ற முறையிலிருந்தும் சிறிது முன்னேற்றமான திட்டம் ஒன்றை உருவாக்க முயன்ருர்கள். பிரதிநிதிகளுக்குச் சட்டம் ஆக்கும் பொறுப்போடுகூட ஆட்சி அலுவல்களிற் பொறுப்பும் பயிற்சியும் இருக்கவேண்டுமென்று விரும்பினர்; அமைச்சரவை ஆட்சியிலுள்ள பெருங்குறை யொன்றை அகற்ற எண்ணினர். கட்சிமுறையை அடிப்படை யாகக்கொண்ட இம்முறையிற் கட்சிக்கும் அமைச்சர்களுக்குமே சர்வாதிகாரம். கட்சித் தலைவர்களே அமைச்சர்கள். திட்டம் போடுவதும் திட்டங்களைச் செயற்படுத்துவதும் அமைச்சர்கள் பொறுப்பு. அரசுக்கழக உறுப்பினரின் கடமை கட்சியின் தலை மைப்பீடம் சொல்லுவதைச் செய்வதே. அமைச்சரவையின் அதிகாரமும் கட்சியின் செல்வாக்கும் வளர்ந்து வளர்ந்து

Page 70
126 ஆட்சி இயல்
தனியுறுப்பினருக்குச் சுயாதீனம் இல்லாது செய்துவிடும். கட்சி ஆதிக்கத்தை யாராவது எதிர்க்க முயன்ருல் அவர்கதி அதோ கதிதான். பொதுமக்களும் பிரதிநிதிகளைத் தெரிந்தபின் ஆட்சி யின் அலுவல்களிலே தலையிடமுடியாது. தங் குறைகளைப் பிரதி நிதிகளுக்கு முறையிடுவார்கள். ஆனல், பிரதிகிதிகளும் தாமாய்ச் செய்யக்கூடியது அற்பந்தான். எல்லா அதிகாரமும் ஒருவர் கையிலேதானிருக்கிறது. நிருவாகக்குழு முறையால் இக் குறைகளைத் தீர்க்கலாமென்று டொனமூர்க்குழு எண்ணி னர் போலும். அமைச்சர்களே கிருவாகக் குழுவே தெரிகிறபடி யால் தனியுறுப்பினர் விருப்பங்களேயும் அவர்கள் தொகுதி களின் தேவைகளையும் புறக்கணிப்பது இலகுவாயிராது. பொதுமக்களுக்கும் தம் பிரதிநிதிகள்மூலம் குறைகளை அமைச் சர்களுக்குத் தெரிவிக்க இம்முறையிற் கூடிய வாய்ப்பிருக் கும். சுருங்கச் சொல்லின் பொதுமக்கள் செல்வாக்கும் தனிப் பிரதிநிதிகள் செல்வாக்கும் கூடுமென்று எதிர்பார்க்க இட மிருந்தது. இவ்விரு வகுப்பினரின் செல்வாக்கும் கூடினல் பொதுமக்கள் தேவைகளே விரைவில் கிவிர்த்தியாகும். அவர் கள் தேவைகளைத் தீர்ப்பதே குடியாட்சியின் முக்கிய நோக்க மானபடியால் இம்முறையால் உண்மைக் குடியாட்சி நாட்டில் ஏற்படுமென்று கொள்ள இடமுண்டு.
ஏழெட்டு உறுப்பினரைக்கொண்ட ஒரு குழுவில் நிருவாக அலுவல்களைப் பேசித் தீர்ப்பது, ஐம்பதுபேருக்கு மேலுள்ள சபையிற் பேசித் தீர்ப்பதிலும் இலகு. ஒவ்வொருவருக்கும் மற்றவர் உதவி தேவையானபடியால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். மேலும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களும் பெரும்பான்மை இனத்திற்குரியவர்களும் ஒரு திருவாக சபையிலிருந்தால் இருபகுதியினரும் ஒருவரோ டொருவர் நெருங்கிப் பழகி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத் துத் தத்தம் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். சில சமயங்களிற் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் பதவியையும் பெறக்கூடும். இம்முறையால் வேற்றுமைகளைப் பாராட்டாமல் விடுவதால் இனகட்பும் உரம்பெறும். கட்சி அபிமானமும் அதன் பெறுபேருய் வருந் தீமைகளும் குறையுமென்றும் எதிர்பார்க்க இடமுண்டு. நீதி நியாயத்தைக் கவனியாது யாவற்றையுங் கட்சிக்கண் கொண்டு பார்க்கும் மனப்பான்மை வளர்வதற்கும் இம்முறையில் இடமில்லை.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 127
மேலும் டொனமூர்த்திட்டம் தோன்றிய காலத்தில் ஆட்சித் துறைக் கட்சிகள் பெரும்பாலும் இங்கில்லை. ஆதலால் கட்சிகள் இயற்கையாய் நாட்டின் வரலாற்றின் விளை வாய்த் தோன்றவிடினும் அவற்றை வலிந்து ஆக்கி வைக்க வேண்டுமென்பது, சிறுபிள்ளைகள் விளையாட்டிற் காக இரண்டு கன்னைகளாய்த் தம்மைப் பிரித்துக்கொள்வது போன்ற ஒன்று. இங்கிலாந்திலே கட்சியாட்சியிருக்கிறபடியால் இலங்கையிலும் கட்சியாட்சி இருத்தலே முறையென்று கொண்டு கட்சிகளைச் செயற்கையாய்ப் படைக்க முயல்வது மதியினம். இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றிலும் (Political History) சமூகவரலாற்றிலும் (Social History) ஒன்றிற்கொன்று முரணுன இரண்டு கட்சிகள் தோன்றுவதற்கு அடிப்படையிருந்தது. வேறு நாடுகளிலும் அதே அடிப்படை இருக்கவேண்டுமென் றும், அது இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன இங்கிலாந் தைப்போன்று இருகட்சிகள் இருந்தே தீரவேண்டுமென்றும், அப்படி யிருப்பது குடியாட்சிக் கவசியமென்றும் கொள்வது பகுத்தறிவான செயலன்று. வாழ்க்கையில் வேறு பல துறை களிற் கருத்து வேற்றுமை இருந்தபோதிலும் அதைப் பெரி தாக்கிக் கட்சிகளாய்ப் பிரிந்து போவது மனித இயல்பன்று. வேற்றுமையுடையோர் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் சமாளிப் பது பெரிதுங் காணக்கிடக்கின்றது. ஆட்சித்துறையில் ஏனிப் படி விட்டுக்கொடுக்கும் முறையை ஆக்கக்கூடாது? அதுவும் வரையறையான கட்சிபேதமில்லாத நாடுகளிற் கட்சிகளை வலிந்து புகுத்தாமல் மக்களுக்கு இயற்கையாயுள்ள விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைப் பயன்படுத்தித் தேவைகளை அமைதியாயும் சுமுகமாயுக் தீர்க்கும் ஆட்சிமுறை ஒன்றை நிறுவக்கூடாதென்பது தெரியவில்லை.
ஒரு ஆட்டுக்குட்டி அண்மையில் மேய்ந்துகொண்டிருந்த கிழ ஆட்டை நோக்கி, "வா சண்டை பிடிப்போம்? என்றதாம். கிழ ஆடு, “ எனக்கும் உனக்கும் ஒரு முரண்பாடுமில்லையே ஏன் சண்டை போடவேண்டும்?? என்று கேட்டது. குட்டி ஒரு கல்லைக் காட்டி ** இங்கே பார் இந்தக் கல்லிங்கிருக்கிறது. இதை நான் என்னுடையதென்று சொல்லுவேன். நீ உன் னுடையதென்று சொல்லு. அப்போது சண்டைபிடிக்கலாம்? என்று சொல்லிவிட்டு சண்டைக்காயத்தமாய் “ இந்தக் கல் என்னுடையது” என்று உரத்த குரலிற் கூறிற்று. கிழ ஆடு * சரி எடுத்துக்கொள்’ என்று சொல்லிக்கொண்டு மேலும் புல் மேயத் தொடங்கிவிட்டது.

Page 71
128 ஆட்சி இயல்
கட்டாயமாய் ஆட்சியிற் கட்சிகள் இடம்பெறல் வேண்டும் என்போர் இந்த ஆட்டுக்குட்டியைப் போன்றவர்கள்தாம். வரலாற்றுப் போக்கில், இயற்கையாய்ச் சமாளிக்க முடியா வேற் றுமைகளை அடிப்படையாய்க்கொண்டு கட்சிகள் உருவாகி ஆட்சித்துறையில் ஆதிக்கம் பெறுவதால், கட்சி ஆட்சிமுறை தோன்றுவது ஒன்று. எங்கும் எப்போதும் கட்சிமுறையில் ஆட்சி நடைபெறவேண்டுமென்பது வேறு.
கருத்து வேற்றுமை இருப்பது இயல்பு. இவ் வேற்று மையை ஓரளவிற்குச் சமாளிக்கப் பார்ப்பதும் இயல்பே. இங்ங்ணம் சமாளிக்கமுடியா தென்றல் ஆட்சித்துறையில் எக் கொள்கைக்குப் பெரும்பான்மை ஆதரவிருக்கிறதோ அக் கொள்கையைக் கடைப்பிடிப்போர் ஆட்சி நடத்துவது முறையே.
காட்டின் வரலாறு, மக்களின் தேவை, காலத்தின்போக்கு முதலியவற்றை நோக்கி வேறு ஆட்சி அமைப்பை ஆக்கல் தவருகாது. நிருவாகக் குழுமுறையில் நன்மையுண்டென்ருல் இங்கிலாந்தில் அது கையாளப்படவில்லையென்ற நியாயத்திற் காக மாத்திரம் அதை ஒதுக்கவேண்டியதில்லை. டொனமூர்த் திட்டத்தில் இடம்பெற்ற முறை ஒன்றுதான் கிருவாகக் குழு முறையென்றும், அதிற் திருத்தங்கள் செய்ய முடியாதென் றும் கொள்ளவேண்டியதுமில்லை. டொனமூர்த்திட்டத்திலிருந்த குறைகள் யாவும் நிருவாகக் குழுவின் முறையினுல் ஏற்பட்ட விளைவென்று கூறுவதும் சரியன்று. ஆள்பதியின் தனி அதி காரம் ஒருபுறம் ; ஆட்சியுத்தியோகத்தர் மூவரின் அதிகாரம் இன்னுெருபுறம். இவை இரண்டும் குடியாட்சி முறைக்கு மாருனவை. குடியாட்சி முறையைத் தழுவிய ஆட்சிமுறை எதுவானுலும் டொனமூர்த்திட்ட வரையறையிற் குறைபாடின் றிச் செயற்பட்டிருத்தல்முடியாது. மக்கள் தெரிந்த பிரதிகிதி களும் அவர்கள் பிரதிநிதிகளான அமைச்சரும் ஆள்பதியின் அதி காரத்துடனும் ஆட்சி உத்தியோகத்தர் மூவரின் அதிகாரத் துடனும் மோதியிருப்பார்கள். கட்சிமுறையில் உருவெடுக்கும் அமைச்சரவையும் ஆள்பதியுடையவும் ஆட்சி உத்தியோகத்த ருடையவும் தனி அதிகாரங்களுடன் முரண்பட்டே இருந் திருக்கும். டொனமூர்த்திட்ட ஆட்சியிற் தோன்றிய குறைபாடு கள் நிருவாகக்குழு ஆட்சியிலேதான் ஏற்பட்டன என்று கொள் வது நியாயமாகாது. கிருவாகக்குழு ஆட்சியில் அப்போது தோன்றிய குறைபாடுகள் அமைச்சரவை ஆட்சியில் இடம்பெரு

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 129
என்ருே அல்லது ஒருபோதும் இடம்பெறுகிறதில்லையென்றே கூறுவது சரியன்று. இரண்டு குறைகள் நிருவாகக்குழு ஆட்சி முறையிலிருந்தே தோன்றியன என்று பலர் கூறுகிறர்கள். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு (Collective Responsibility) நிருவாகக்குழு ஆட்சியில் இராதென்பது ஒன்று. மற்றது கிரு வாகக்குழு ஆட்சியில் தனித்தனி உறுப்பினர் நாளாந்த ஆட்சி அலுவல்களிலே தலையிட்டு உத்தியோகத்தர் நியமனம், உயர்வு, மாற்றம் ஆகியவற்றில் தகுதியற்றமுறையில் ஈடுபட்டார் என்பது. இவற்றில் முந்தியதை முதல் ஆராய்வாம். கூட்டுப் பொறுப்பென்பது பாரம்பரியமாய் வரும் ஒன்று. காட்செல்லச் செல்ல ஆட்சிமுறையின் மரபுகள் இறுகி வலுப்பெறுதல் இயல்பு. திடீரென்று தோன்றுவது இயல்பன்று ஆட்சி முறையிலும் இறுகிய கட்டுப்பாட்டுடன் கட்சிகள் தோன்றிய பின்தான் இதுபோன்ற கட்டுப்பாட்டு மரபு தோன்றும். கிரு வாகக்குழு முறையிலே தெரிவுபெற்ற அமைச்சர்களும் காட் செல்லச் செல்ல இவ்வித கட்டுப்பாட்டு மரபொன்றைக் கடைப்பிடித்து ஒழுகியிரார் என்று சொல்வதற்கில்லே. காட் டின் ஆட்சி அலுவல்களை ஒன்று கூடி ஆலோசித்துத் திட் டம் வகுக்கும்போது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, நாட்டின் தேவைகளை நன்ருய் நோக்கி, வேண்டியவற்றை ஒன்ருய் ஆலோசிக்கும் வழக்கம் வளர வளரப் பொறுப் புணர்ச்சியும் வளரும். பொறுப்புணர்ச்சி வளரக் கூட்டுப் பொறுப்பு மரபும் வளரும். தனித்தனி அமைச்சர்களைத் தனித் தனி கிருவாகக் குழுக்கள் தெரிகிறபடியால் இக் கூட்டுப் பொறுப்புத் தோன்றவும் மாட்டாது; வளரவும் மாட்டாதென்று கொள்வது முற்றுஞ் சரியன்று. தம்மைத் தெரிந்த நிருவாகக் குழுக்களுக்குத் தாம் காட்டவேண்டிய பொறுப்பையும் தம் முடன் காட்டு ஆட்சி கடத்தும் அமைச்சர்களுடன் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பையும் சமரசப்படுத்தும் பழக்கம் காலப் போக்கில் ஏற்பட்டுவிடும். கிருவாகக்குழுக்களும் தாம் தெரி யும் அமைச்சர்கள் தமக்கு மாத்திரமன்றி மற்ற அமைச்சர் களுக்குங் கடமையுள்ளவர்களென்பதை உணர்ந்து விட்டுக் கொடுக்கவேண்டிய இடங்களில் விட்டுக்கொடுக்கப் பழகி விடுவார்கள். மரபுகள், பாரம்பரியங்கள் சட்டத்தாலுந் திட் டத்தாலுக் தோன்ற ; பழக்கத்தால், தேவையால், பண்பாட் டால் தோன்றுவன. டொனமூர்த்திட்டத்தில் இவை தோன் றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கவில்லை; வளர்ச்சிக்கு வேண்
ஆ - 9

Page 72
3O ஆட்சி இயல்
டிய காலமில்லை ; சூழ்நிலையில்லை. பலநாள் ஒருவரோடொரு வர் உழைத்தும் பழகியும் வரும்போது ஒருவரை ஒருவர் தழுவி ஒருவர் செயலே ஒருவர் ஆதரித்து ஒருவருக்கொரு வர் நட்புக் காட்டி வரும்போது, கூட்டுப்பொறுப்பு மனப் பான்மை தோன்றும். செயல்முறையில் இடையிடையே இம் முறை தவறினலுஞ் சிறிது காலத்தில் இது மரபாய் மாறி விடும். இங்ங்னந்தான் மரபுகள் (Traditions), சம்பிரதாயங் கள் (Conventions), வழமைகள் (Customs) தோன்றி நிலை பெறுகின்றன. டொனமூர்த் திட்டமும் கிருவாகக்குழு ஆட்சி யானபிற்பாடு, இலங்கையில் மூன்று அமைச்சரவைகள் கடமை யாற்றியுள்ளன ; நான்கு முதலமைச்சர்கள் கடமையாற்றியிருக் கின்றனர். டொன் ஸ்ரீவன் சேனநாயக்கா முதலமைச்சராயிருந்த போதுதான் கூட்டுப்பொறுப்பு ஓரளவிற்காவது இருந்தது. முதலமைச்சருக்குக் தமக்கும் வேற்றுமை ஏற்பட்டபோது திரு. செ. சுந்தரலிங்கமும் திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக் காவும் அமைச்சரவையிலிருந்து விலகினர். மற்றப்படி கூட்டுப் பொறுப்பு மரபை இவ்வமைச்சரவை பேணியது. இதற்குப் பின் வந்த எந்த அமைச்சரவையாவது கூட்டுப்பொறுப்பைப் பேணியது என்று சொல்வதற்கில்லை. அமைச்சர்கள் தம் கருத் துக்கு விரும்பியபடியே கூறிவந்திருக்கின்றனர். முதலமைச்சர் கருத்துக்கும் தம் கருத்துக்குமோ, அன்றித் தம் கருத்துக்கும் பிற அமைச்சர்களின் கருத்துக்குமோ ஒற்றுமை வேற்றுமை யைப் பற்றிச் சிறிதும் ஒளிப்புமறைப்பின்றிக் கருத்தை வெளி யிடுவதுதான் அமைச்சரவை மரபு என்று எண்ணுமளவிற்கு அமைச்சர்கள் தம் கருத்துக்களே விளாசினுர்கள். இம் முறை பண்டாரநாயக்கா அமைச்சர்வையில் நாடோறும் நடந் தது. இப் புது மரபு அத்துமீறி, அமைச்சரவைக்கே முற்றுப் புள்ளி போட்டுவிடும் கிலே தோன்ற, முதலமைச்சர் சமரச முயற்சியில் ஈடுபட்டு, போர்க்கோலம் பூண்டு நிற்கும் தம் நண்பர்களின் ஆத்திரத்தைச் சிறிது தணித்தார். சிறிதுகாலம் சமாதானம் நிலவிற்று. பின் போர் மூண்டது. முதலமைச்சர் சமரசம் செய்தார். இம்முறையைக் கூட்டுப்பொறுப்பு முறை யென்று சொல்லலாமோ ! அமைச்சர்களுக்குள் வேற்றுமை முற்றி நாட்டிலே மிகவும் நெருக்கடியான நிலை யுருவானது. அமைச்சர்கள் வெளியேறிப் பாராளுமன்றமும் கலைபடக்கூடிய நிலை ஏற்பட்டது. இரண்டு அமைச்சர்கள் வெளியேறினர்.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 131
புது அமைச்சரவை யொன்று உருவெடுத்தது. பண்டார நாயக்கா இறந்தபிற்பாடு தஹநாயக்கா பொறுப்பேல் (காபந்து) அரசாங்கத்தின் (Caretaker - Government) பிரதமராய்க் கடமை யாற்றினர். ஒருவர்பின் னெருவராக அமைச்சர்கள் பலரை இவர் பதவியினின்றும் அகற்றினர். 1960ஆம் ஆண்டு ஆடிமாதம் நடந்த பொதுத்தேர்தலின் பின் கடமையாற்றும் அமைச்சரவை இதுவரையிற் குழப்பம் யாதுமின்றி நடந்து கொண்டிருக்கிறது. கூட்டுப்பொறுப்பு மரபை இவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்களோ அல்லரோ என்பது இப் போது சொல்ல முடியாதது.
டொன் ஸ்ரீவன் சேனநாயக்கா முதலமைச்சராயிருந்த போது கூட்டுப்பொறுப்புச் சிறிது கூடியளவிருந்ததற்குப் பல கியாயங்களுள. அவற்றுள் முக்கியமானது அவரது தனிச் செல்வாக்கு. பல்லாண்டு ஆட்சித்துறையில் ஈடுபட்டவர்; இலங்கை எங்கும் செல்வாக்கு வாய்ந்தவர். அவருடன் அமைச்சர்களாகவிருந்தவரிற் பலர் அவருடன் முன்னும், டொனமூர் ஆட்சிக்காலத்திலும் அமைச்சர்களாயிருந்தவர்கள் ; அவருடன் கன்ருய்ப் பழகியவர்கள் ; அவர் அனுபவற்திற்கும் வயதுக்கும் மதிப்புக்காட்ட விரும்பியவர்கள். அவருக்குப் பின் கூட்டுப்பொறுப்புள்ள அமைச்சரவை யிருக்கவேயில்லை. ஆத லால் டொனமூர் ஆட்சியிற் கூட்டுப்பொறுப்பில்லையென்ருல் அது நிருவாகக் குழுமுறையின் குறையென்று கொள்வதற் கில்லை. உண்மையென்னவென்றல் குடியேற்ற காட்டாட்சி முறையில் அங்கியர் எம்மை ஆண்டனர்; எமக்கு ஆட்சிப் பயிற்சி கிடைக்கவில்லை. எம்மையாளும் பொறுப்பு வந்ததும் முன் பயிற்சி இல்லாமையால் ஏற்படும் குறைபாடுகள் தாண்ட வம் புரிந்தன. தம் பொறுப்புக்கேற்ப ஒழுக அமைச்சர்கள் பழகிக்கொள்ளவில்லை. பெரும்பான்மை இனமோ கட்சியோ தம்மில் எண்ணிக்கையிற் குறைந்தவர்களுக்கும் தமக்கும் பொறுப்பு உண்டென்று எண்ணவில்லை. ஆட்சி செலுத்துவதி லும் பண்பாடுள்ள முறை ஒன்றுண்டு. சட்டத்தையும் சம்பிர தாயத்தையும் பேணி ஆட்சியாளரும் தம்மைப் பல துறைகளி லும் கட்டுப்படுத்தி மற்றவர் உரிமையை மதித்து ஒழுகுதல் யாருக்கும் திடீரென வரும் ஒன்றன்று நாளெடுக்கும்; பிழை கள் நேரும். ஆட்சிக்கு வேண்டிய பண்பாடு நம்மவர்க்கு ஒரு போதும் வராதென்பதன்று. ஒருவேளை இப்போதே அது உரு வெடுத்துக் கொண்டிருத்தல் கூடும்.

Page 73
132 ஆட்சி இயல்
ஆட்சித்துறை உத்தியோகத்தர் தெரிவு, நியமனம், மாற்றம், உயர்வு முதலியவற்றிற் பாராளுமன்றத் தனி உறுப்பினர் தலே யிட்டது உண்மையே. ஆணுல், டொனமூர் ஆட்சிக்கு முன்னும் இது நடந்தது; இன்றும் கடக்கிறது. அதிகாரமுள்ளவர்களும், செல்வாக்குள்ளவர்களும் உறவினர் நண்பர்களுக்குப் பலவித சலுகைகளைப் பெற்றுக்கொடுத்தல் எங்காவது எப்போதா வது முற்றும் அற்றுப்போம் என்று நம்புவதற்கில்லே. யேசுக் கிறிஸ்துவின் சீடர் இருவரினது தாயார் முத்திகிலேயிலும் ( பரலோக இராச்சியம்) தம் மக்களுக்குக் கண்ணியம் நிறைந்த இடங்களை அளிக்கவேண்டும் என்று பரிந்து பேசியதாக விவிலியநூல் (Bible) கூறுகின்றது. தகுதி, திறமை ஒழுக்கம் முதலியவற்றை ஒட்டியே உத்தியோகத்திற்கு ஆட்களேத் தெரி தல்வேண்டுமென்பதை யாவரும் ஏற்பர். ஆனல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள் தம் உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும், தகுதி தகுதியின்மையை ஒதுக்கிவிட்டு, எக்காட்டிலும் உதவிபுரிவது சிலபோது கூடியும், சிலபோது குறைந்தும் நடைபெற்று வந்திருக்கிறது. இதுபோன்ற துறைகளில் முன் னேற்றமடைந்த நாடென்று பலர் கொள்ளும் இங்கிலாந்திற் கூட உத்தியோக நியமனம்போன்றவற்றில் இன்னுஞ் செல் வாக்கும் அதிகாரமும் முற்ருய் அகன்று விடவில்லை. அங்கு பரீட்சை வைத்து, தகுதியை ஆராய்ந்து நியமனஞ் செய்யும் முறை ஏறக்குறைய நூற்ருண்டுகளுக்கு முன்தான் தோன்றி யது. இராணுவப் பதவியை வெளி வெளியாய் விலை கொடுத்து வாங்கும் வழக்கம் ஒருகாலம் அங்கிருந்தது. பாராளுமன்றப் பதவி, 1832ஆம் ஆண்டில் நிறைவேற்றிய ஆட்சித் திருத்தச் சட்டம் வருதற்குமுன், பணத்திற்குப் பெறக்கூடிய ஒன்ருயிருந்தது. இன்றும் அமெரிக்க ஆட்சி முறையில், கொள்ளை முறைமை (Spois System) என்று வழங்கும் ஒரு முறை இடம் பெற்றிருக்கின்றது. போரிலே தோல்வி யுற்றவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் வழக்கம் இருந்தது போலத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆட்சித்துறையின் உத்தியோகங்களின் பெரும்பாகத்தைக் கைப்பற்றுவது அமெ ரிக்க ஆட்சிமுறையில் ஒரு மரபாய் விட்டது. அங்குள்ள பிரதி pÉ GS35 air F GOD JAG GOTTg5 Lò (House of Representatives), p530d6 யினரதும் (Senate) ஆதரவைத் தாம் தாம் விரும்பியவர் களுக்கோ, தாபனங்களுக்கோ பெறுவதற்கு வெளியாய் முயற்சி செய்யுந் தாபனங்களிருக்கின்றன. இவை சட்டப்படி பதிவுபெற்ற கிலேயங்கள். யாதேனும் ஒன்றைப்பற்றிச் சட்ட

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 133
சபை உறுப்பினரை கண்டு பேசி அவர்கள் செல்வாக்கைக் கொண்டு அதை நிறைவேற்றுவதே இத் தாபனங்களின் நோக்கம். வணிக நிலையங்கள், பிறநாடுகள் போல்வன இதற் காகப் பணம் செலவிட்டுத் தமக்கு வேண்டியதைப்பெற முயல்கின்றன. இவற்றிற்கு மன்றக்கூட்டம் (Lobby) என்று. பெயர். சியாங்கைசேக்கின் போர்மோசா (Formosa) ஆட்சிப் பீடத்திற்கு ஆதரவு பெற முயலும் சீன மன்றக்கூட்டம் (China Lobby) இவற்றுள் பேர்போன ஒன்று. பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வமான செலவிற்கென்று ஒரு தொகைப் பணம் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் கொடுப்பது அமெரிக்க முறை. எழுத்துவினைஞர் (3,355i - Clerk), தட்டெழுத்துக்காரர் (Typists), வரவேற்பாளர் (Receptionist) முதலியவர்களின் சம் பளத்திற்காகவே, இப் பணம் கொடுப்பது. ஒரு பிரதிநிதி பாடசாலையிற் படிக்கும் தன் மகனுக்கு இவ் வுத்தியோகங் களில் ஒன்றைக் காட்டி அமோகமான சம்பளம் கொடுத்தார் என்றும் இன்னும் ஒரு பிரதிநிதி தம் தலைவாயிலைக் காரியா லயமாக உபயோகித்து அதற்கு வாடகைக் கணக்குக் காட்டினு ரென்றும், இன்னெருவர் மனையாளுக்கு உத்தியோகத்தை வழங்கிக் கணக்குப் போட்டாரென்றும் அமெரிக்காவில் வெளி யாகும் ஒரு சஞ்சிகை வெளிப்படுத்தியது. இவற்றை எடுத்துக் காட்டுவது யோக்கியமான அல்லது தகுதியுள்ள செயலென்று கருதியன்று ; இவை போன்றவை இலங்கையில், மாத்திரம் கடப்பதல்ல என்று காட்டுவதற்கே. டொனமூர்த்திட்ட நிருவாகக் குழு முறையில் மாத்திரத்தான் இவ்வூழல்கள் இடம்பெற்றன அல்ல. இவ்வூழல்களை அகற்றுவது தனியே சட்டத்திலோ, திட்டத்திலோ தங்கிய ஒன்றன்று. ஆட்சி முறைப் பயிற்சியும், பொதுமக்களிடம் தகுதி, ஒழுக்கம் முதலியவற்றைப் பாராட்டும் இயல்பும் வளர இவ்வூழல்கள் குறையும் என்றும் கம்பலாம். இது திடீரென நடந்துவிடாது ; காலமெடுத்துத்தான் நிறை வேறும். அமெரிக்காவை - இங்கிலாந்தை நோக்காது இலங் கையை நோக்கினலே சட்டம் வேறு, செயல் வேறு என்பது புலப்படும்.
இன்று இலங்கையிலே உத்தியோகத்திற்கு வேண்டிய வர்களைத் தெரிதல், நியமித்தல், இடம் மாற்றல், அவர்களைக் காறுபாறு செய்தல் முதலியன அரசாங்க சேவையானைக்குழு (Public Service Commission) என்னுங் குழுவின் பொறுப்பி லிருக்கின்றன. ஆனல், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்

Page 74
134 ஆட்சி இயல்
பினர், வேறுஞ் செல்வாக்குள்ள பேர்வளிகள் இவற்றிலே தலை யிடாதிருக்கின்றனர் என்று நம்புவதற்கில்லை. பொலிசுத் தலை வர் நியமனத்தில், மேற்கூறிய குழு யாதுஞ் செய்ததாகத் தோன்றவில்லை ; முதலமைச்சர்தானும் இதற்கொரு குழு இருக் கிறதென்பதைச் சிறிதும் மதியாமல் தாம் விரும்பியவரை நியமித்தது யாவரும் அறிந்த ஒன்றே. இதைப்பற்றிய வாக்கு வாதம் கிளம்பியபோது, தாம் தகவுரை செய்ததேயன்றி நியமிக்க வில்லையென்று கூறியதை அவரோ, வேறு யாரேனுமோ உண்மையென்று கருதவில்லை. இவ்வாண்டு (1959) மே மாதத்தில் நடந்த அமைச்சரவையின் தகராறு காரணமாய் ஒரு அமைச்சர் வெளியேறியவுடன் அவர் அமைச்சராயிருந்த போது செய்த நியமனங்கள் யாவற்றையும் அவருக்குப் பின் அமைச்சராய் வந்தவர் மாற்றிவிட்டது உலகறிந்த ஒன்றே
டொனமூர்த்திட்டம் வகுத்தவர்கள் சிறுபான்மை மக்க ளுக்கு இதன் மூலம் ஓரளவிற் பாதுகாப்பு வரக்கூடுமென் றும், அவர்களில் ஒருவரோ இருவரோ ஆட்சிப் பீடத்தில் இடம்பெறுவரென்றும் எதிர்பார்த்தனர். இத் திட்ட ஆட்சி முறையின் முதற் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இவர்கள் எதிர்பார்த்தபடி நடந்தது. சிறுபான்மையினர் ஒருவ ருக்கு வாசகர் (சபாகாயகர்-Speaker) பதவியும், இருவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தன. முதற் பாராளுமன்றம் செயலாற்றி வரும்போதே திட்டத்தை மாற்றவேண்டாமென்றும் ஆள்பதியின் அதிகாரத்தையும், ஆட்சி உத்தியோகத்தர் மூவரின் அதிகாரத்தையும் நீக்க வழிதேடல் வேண்டுமென்றும் கிளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. சிறுபான்மை யினத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இக் கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. ஆணுல், அமைச்சரவையிலுள்ள யாவரும் ஒரேமுகமாய்த் திருத்தம் வேண்டுமென்று கூறினுலன்றித் திருத்தங்கள் ஏற்படாதென்று குடியேற்ற நாட்டு அமைச்சர் கூறிவிட்டார். இரண்டாவது பாராளுமன்றத் தெரிவு நடைபெற்றதும், சேர் பாரன் ஜெய திலக்காவும் அவர் தோழர்களும் தம்முடன் ஒத்துழைக்க மறுத்த சிறுபான்மையினருக்கும் கிருவாகக் குழுமுறையால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு ஏற்படுமென்று கருதிய பிரித்தானிய அமைச்சர்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்கத் தீர்மானித்துவிட்டார்கள். கணித விற்பன்னர் ஒருவரின் உதவியைக்கொண்டு ஒவ்வொரு நிருவாகக் குழுவிலும் சிங்களரே பெரும்பான்மையாய் வரக்கூடிய முறையில் நிருவாகக்

இலங்கை ஆட்சி இயல் வரலாறு I35
குழுத்தேர்தலை நடத்திவிட்டனர். இதன் பெறுபேருய்த் தனிச் சிங்கள அமைச்சரவை தோன்றிற்று. பெரும்பான்மையரான சிங்களர் விரும்பினுல் எல்லா அமைச்சர் பதவியையும் கைப்பற் றலாமென்பது உறுதியாயிற்று. நிருவாகக்குழு முறையிற் சிறு பான்மையினருக்குக் கட்டாயமாய்ப் பாதுகாப்பு ஏற்படாதென் பதும் உறுதியாயிற்று. சிங்களரைத் தமிழர் போன்ற சிறு பான்மை இனங்கள் நம்பாமல் விடுவதற்குப் புதியதோர் நியாயம் உண்டாயிற்று. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கைக்குச் சுயாட்சி கொடுப்பது தவருய் முடியுமென்று காட்டுவதற்கு அப்போது ஆள்பதியாயிருந்த சேர் அன்ட்ரு di T6ò di Gas Tsi) (Sir Andrew Caldecott) disg5' புதியதோர் நியாயமும் வாய்த்தது.
கால்டிக்கொற் (Caldecott) அறிக்கை
கால்டிக்கொற் ஆள்பதியாய் நியமனம் பெறும்போதே போதியளவு ஆட்சிப் பொறுப்பு இந் நாட்டினருக்கு இருக்க வில்லையென்றும், கிருவாகக் குழு ஆட்சியை அகற்றிவிட வேண்டுமென்றும், ஆள்பதியின் விசேட அதிகாரங்கள் குறைய வேண்டுமென்றும், ஆட்சி உத்தியோகத்தர் மூவரும் ஆட்சியிலிருத்தல் தவறென்றும் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது. சிறுபான்மை இனங்களும் ஆட்சித்துறையில் தமக்கிருக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கவில்லையென்றும் தனிச் சிங்கள ஆட்சிப்பீடம் தமக்கு வஞ்சகஞ் செய்கிறதென்றும் கூக்குரல் போட்டுக்கொண்டிருந்தன. டொனமூர் முறைக்கு நாட்டிற் போதிய ஆதரவில்லை யென்றுணர்ந்த குடியேற்றநாட் டமைச்சர் ஆள்பதியைப் பல கட்சிகளுடனும் கலந்தாலோசித்து நிலைமையை அறிந்து தமக்கொரு அறிக்கை அனுப்புமாறு பணித்தனர். முக்கியமாய் ஆள்பதியின் விசேட அதிகாரங்கள், நிருவாகக்குழு ஆட்சி, அரசுக்கழகம் அமைப்பு, சிறு பான்மை இனங்களுக்கு இருக்கவேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை, வாக்குரிமை யாவற்றையும் ஆராய்ந்து அறிக்கை தரும்படி கேட்டுக்கொண்டனர். அங்ங்னமே ஆள்பதி 1938இல் ஓர் அறிக்கையை அனுப்பினர். நிருவாகக்குழு ஆட்சியால் ஏற்பட்ட தீங்குகளே எடுத்துக்காட்டி அது நீக்கப்படல் வேண்டு மென்று கூறினர். அதனிடத்தில் அமைச்சரவையினை (Cabinet) நிறுவ வேண்டுமென்றும், அமைச்சரவையில் ஆட்சி உத்தி யோகத்தர் இடம்பெறல்கூடாதென்றும் சிறுபான்மையினங்

Page 75
136 ஆட்சி இயல்
களுக்குச் சட்டரீதியாய் அமைச்சரவையில் இடமளித்தல்வேண்டு மென்றும் வற்புறுத்தினர். ஆட்சி உத்தியோகத்தர் பொறுப்பி லிருந்த கடமைகளிற் சிலவற்றை அமைச்சர்களிடம் விடல் வேண்டும் ; ஏனையவற்றை அதற்கென நியமிக்கப்பட்ட உத்தி யோகத்தரிடம் விடல்வேண்டுமென்றும் கூறினர். பிரதம செய லாளரிடமிருந்த நாட்டுப் பாதுகாப்பும், புறநாட்டலுவல்களின் பொறுப்பும் அமைச்சர் பதவியில்லாத புது உத்தியோகத்தர் பொறுப்பில்விடல் வேண்டுமென்றும், அவர் பிரதான செயலா ளர் (Principal Secretary) என்றியம்பப்படல்வேண்டுமென்றும், அவரே புதிய திட்டத்தில் இடம்பெறும் ஆட்சி உத்தியோகக் குழுவின் தலைவரா யிருத்தல் வேண்டுமென்றுங் காட்டினர். நிதிச் செயலாளரின் கடமைகளிற் சிலவற்றை நிதி அமைச்ச ரிடமும் மற்றையவற்றை ஆட்சி உத்தியோகக் குழுவிடமும் பங்கீடு செய்தல் வேண்டுமென்றும் ; நிதித் துறையில் வேண் டிய ஆலோசனை கூறுவதற்குத் தகுதிவாய்ந்த ஒருவரை நிய மித்தல் வேண்டுமென்றும் ; அங்ங்னமே சட்டச் செயலாளரின் கடமைகளிற் சில உள்நாட்டு அமைச்சரிடம் சேரல்வேண்டு மென்றும்; ஆள்பதிக்குக் குற்றமன்னிப்பு, சட்ட அங்கீகாரம், நிதி உத்தியோகத்தர் நியமனம் போன்றவற்றைப் பற்றி ஆலோ சனை கூறுவதற்குச் சட்ட ஆலோசகர் ஒருவரை நியமித்தல்
வேண்டுமென்றுக் தெரிவித்தனர்.
ஆட்சி உத்தியோகத்தர் தெரிவு, நியமனம், உயர்வு, மாற் றம் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு ஒரு குழு புதிய திட்டத்தி லிடம்பெறல்வேண்டுமென்றும் அதற்குப் பிரதான செயலாளர் தலைவராகவும், மற்ற இரண்டு ஆலோசகரும், உத்தியோகத் தொடர்பற்ற மூவரும் உறுப்பினரா யிருத்தல் வேண்டுமென்றும் கடைசியாய்க் குறிப்பிட்ட மூவரையுந் தெரி யும் உரிமை ஆள்பதிக்கே இருத்தல்வேண்டுமென்றுங் கூறினர். நாளுக்குநாள் நடக்கும் அலுவல்களுக்கு இக் குழுவே பொறுப் Luftu?(15565b. 5&Oorä56Té5 5&6)Ji (Department Heads) go-Lu தலைவர், மாகாண அதிபதி போன்றவர்களின் நியமனம், மாற் றம் முதலியவற்றைப்பற்றி அமைச்சரவையின் கருத்தையும் அறிதல்வேண்டும் என்று கூறினர்.
சிறுபான்மையினர் பிரச்சினையைப் பற்றிப் பின்வருமாறு கூறினர் :- சிங்கள மக்களிற் பிரதிநிதிகள் தொகையும், ஏனே யோர் பிரதிநிதிகளின் தொகையும் சரிசரியாயிருத்தல் "ஐம்பதுக்

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 137
கைம்பது?, என்பதை ஆள்பதி சிறிதும் ஆதரிக்கவில்ல்ை. ஆனல் நாட்டில் அவர்கள் எண்ணிக்கையின்படி இருக்கவேண்டிய தொகையிலுஞ் சிறிதும் கூடிய தொகைப் பிரதிநிதிகள் அவர் களுக்கிருத்தல் நியாயமென்று அவர் கருதினர். பிரதிநிதிக ளில்லா வகுப்பினரின் சார்பாக நியமன அங்கத்தவர்கள் எண்மருக்கு இத் திட்டத்தில் இடம் வகுக்கப்பட்டது.
ஆள்பதியின் விசேட அதிகாரங்கள் இருந்தபடியே இருக்க வேண்டுமென்றும், சிறிதளவும் அவற்றில் மாற்றமோ திருத் தமோ செய்யப்படாதென்றும் வற்புறுத்தினர். இதைப் பெரும் பான்மை இனத்தினர் முற்ருய் வெறுத்தனர்.
டொனமூர்த் திட்டத்திலிருந்த குறைபாடுகளைத் தீர்க்க ஆள்பதி எடுத்த முயற்சி கைகூடவில்லை. அவர் அறிக்கையை அரசுக்கழகம் ஆராய்ந்தபோது யாரும் அதை ஏற்கவில்லை. குடியேற்றநாட்டமைச்சருக்கும் அப்படியே ஆள்பதி கால்டிக் கொற் அறிவித்துவிட்டார். W
யுத்தகாலம்
மேற்கூறியவை நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே இரண் டாவது உலக யுத்தம் தொடங்கிவிட்டது. அரசுக்கழகம் கலேயவேண்டிய கால எல்லே முடிந்தபோதும் புதுத் தேர்தல் நடத்தாது முன்னிருந்த அரசுக்கழகமே தொடர்ந்து மேலும் இரண்டாண்டிற்குக் கடமையாற்றல்வேண்டுமென்று தீர்க்கப் பட்டது. நாட்டிற் செயலிலிருந்த ஆட்சிமுறையைப் பற்றி முறு முறுப்பு இருந்தபோதிலும் பிரித்தானிய ஆட்சிப்பீடம் நடை முறையிலிருக்கும் ஆட்சிமுறையைத் திருத்தியமைப்பது முக்கிய மென்பது தாம் அறிந்த ஒன்றென்றும் ஆணுல், ஆகவேண்டிய திருத்தங்களைப்பற்றி நாட்டுமக்களிடங் கருத்துவேற்றுமை யிருந்தபடியால் இதை மீண்டும் ஆராய்வதற்கு ஓர் ஆனேக் குழுவோ, அல்லது கலந்தாலோசிப்பதற்கு ஒரு மகாகா டோ வேண்டியதென்றும் யுத்தகாலமாயிருத்தலால் யாதுஞ் செய்ய முடியாதென்றும் யுத்தம் முடிந்தவுடன் வேண்டியது செய்யப் படும் என்றும் வாக்குறுதி செய்தது. இதை இலங்கை அமைச்ச ரவை ஏற்கவில்லை. ஆள்பதி, அரசமைப்பை ஆராய்ந்து தம் முடிபைத் தெரிவித்துவிட்டபடியால் மீண்டும் ஆராய வேண்டிய தில்லையென்றும், அரசுக்கழகத்தின் கால எல்லைத் திட்டத் திருத் தத்தின் பேரால் ஏற்கெனவே இரண்டாண்டு நீடிக்கப்பட்ட

Page 76
38 ஆட்சி இயல்
தென்றும், இன்னும் நீடிப்பதற்கு நியாயமில்லையென்றுங் கூறி னர். இங்ங்ணம் பிரித்தானிய ஆட்சிப் பீடத்திற்கும் இலங்கை அமைச்சரவைக்கும் விவாதம் நடந்துகொண்டிருக்கையில் யுத் தத்தில் பிரித்தானியருக்கு எதிராக யப்பான் இறங்கியது. இந் நிகழ்ச்சி பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்டிருந்த இந்துசமுத் திரப் பிரதேசத்திற் பரபரப்பை உண்டாக்கியது. 1942ஆம் ஆண்டு பெப்பிருவரிமாதம் குடியேற்றநாட்டமைச்சரின் வேண்டு கோளின்படி ஆள்பதி அப்போது ஏற்பட்டிருக்கும் நெருக் கடியை முன்னிட்டு அரசுக்கழகத்தின் கால எல்லை மீண்டும் நீடிக்கப்படல்வேண்டுமென்று அரசுக்கழகத்துக்கு ஒர் அறிக்கை விடுத்தார். யுத்தம் முடிந்த பின்புதான் அரசமைப்புத் திருத் தம் செய்யமுடியுமென்பது யாவருக்கும் தெளிவானபோதி லும் அமைச்சரவையினர் தம் முயற்சியைக் கைவிடவில்லை. சேர் ஸ்தா போட் கிறிப்ஸ் இந்தியாவிற்கு வந்தபோது அவர் இலங்கைக்கு வரவேண்டுமென்றும் அங்ங்னம் அவர் வர முடியாதென்றல் இலங்கையிலிருந்து ஒரு பிரதியாளர்குழு (ġbir ġ5 G35 IT 65; Lq - Deputation) அவரைச் சென்று காண ஒழுங்கு செய்யப்படல்வேண்டுமென்றுங் கேட்டனர். குடி யேற்றநாட்டமைச்சர் இரண்டிலெதையுஞ் செய்யமுடியாதென்று விட்டார். இலங்கை அமைச்சர்களுஞ் சளைக்கவில்லை. இலங்கை யில் யுத்த முயற்சி நன்றப் நடைபெறல் வேண்டுமென்றல் இலங்கையின் அரசமைப்பிலே திருத்தத்தைப் பற்றிப் பிரித் தானிய ஆட்சிப்பீடம் திட்டவட்டமான அறிக்கை வெளியிடல் வேண்டுமென்று வற்புறுத்தினர். இதன் பெறுபேருய் 1943ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானிய ஆட்சிப்பீடம் பின்வரும் அறிக் கையை வெளியிட்டது :
1. யுத்தம் முடிந்தபின் ஏற்படும் ஆட்சிமுறையில் உள்நாட்டு அலுவல்கள் யாவற்றிலும் இலங்கைக்குப் பிரித்தானிய மன்னர் ஆணே யில், பூரண சுயவாட்சி இருக்கும்; இராணு வப் பொறுப்புப் புறநீங்கலாக இருக்கும்.
2. நாட்டின் பாதுகாப்பும் பிறநாட்டு விவகாரங்களும் பிரித்
தானிய ஆட்சிப்பீடத்தின் பொறுப்பிலிருக்கும்.
3. பிரித்தானிய மன்னரின் தனி உரிமை பற்றிய சட்டங்களை யும், பிரித்தானிய மன்னரின் இலங்கையில் வசியாப் பிரஜைகளின் சொத்துச் சோந்தை முதலியவற்றைப்

லங்கை அட்சி யல் வரலாறு 139
<盟
பற்றிய சட்டங்களையும், ஏகாதிபத்திய நாடுகளின் வாணி கம், கப்பல் ஏற்றல் இறக்கல் (Shipping) முதலியவற் றைப் பற்றிய சட்டங்களை யும், யாதேனும் இனத்தையோ சமயத்தையோ சார்ந்தவர்கள் தமக்கு அநியாயம் புரிவ தென்று கொள்ளும் வேறெந்தச் சட்டத்தையும் ஒத்திவைக் கும் உரிமை ஆள்பதிக்கிருக்கும்.
4. மற்றநாடுகளுடன் வர்த்தகஞ் செய்ய இலங்கை விரும்பி
னுற் பெரும்பாலும் இதற்கிடையூறிராது.
யுத்தம் முடிந்த பின்னரே தான் புதிய திட்டம் வகுத்தல் முடியும். ஆயினும் உடனே அமைச்சர்கள் மேற்கூறிய நிபந்தனைகளுக்கு இணங்க ஒரு திட்டம் வகுத்து அதற்கு அரசுக்கழகத்தின் நாலில்மூன்று (3) பங்கு உறுப்பினரின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபடலாம். நாலில் மூன்று என்னும்போது, அரசுக்கழகத்தின் வாசகர் (சபாநாயகர்), ஆட்சி உத்தியோகத்தர் மூவரையும் தள்ளியே கணக்கிடல் வேண்டும்.
5
அமைச்சரவையின் திட்டம்
பிரித்தானிய ஆட்சிப்பீடத்தின் அறிக்கையை அமைச்சர் கள் ஏற்று அதற்கியைய அரசமைப்பு ஒன்றை ஆக்கும் முயற்சியி லீடுபட்டனர். ஆக்கிய அரசமைப்பைக் குடியேற்றநாட்டமைச் சருக்கனுப்பி அதை ஆராயவேண்டுமென்றும் விரைவில் ஒரு முடிவுக்கு வரல்வேண்டுமென்றும் அரசுக்கழகத்தின் கால எல்லை 1945இல் முடியும்போது வரும் புதுத் தேர்தலைப் புதிய அரச மைப்பின்படி நடத்தல் வேண்டுமென்றும் வற்புறுத்தினர். ஆனல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் இவ்வரசமைப்பை ஆக்கும் போது தம்மைக் கலந்தாலோசிக்கவில்லையென்று முறையிட்ட னர். இந்திய ஆட்சிப்பீடமும் இந்திய வம்சாவளியினருக்குப் புதிய அரசமைப்பில் என்ன நடக்குமோவென்று அச்சமுறுவதா கத் தெரிவித்தது. இலங்கை அமைச்சர்கள் சமர்ப்பித்த அரச மைப்பை ஆராய்வதற்கும் சிறுபான்மையினர் இந்திய வம்சா வளியினர் முதலியோருடைய முறையீடுகளைப் பற்றி விசாரிப் பதற்கும் ஒரு ஆணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பத் தீர் மானித்திருப்பதாக 1944ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரித் தானிய பாராளுமன்றத்தின் குடியேற்றநாட்டமைச்சர் கூறினர். யுத்த முயற்சிக்குப் பங்கம் விளையாதிருப்பதற்காக அரசுக்

Page 77
14O ஆட்சி இயல்
கழகத்தின் கால எல்லை மீண்டும் இரண்டாண்டிற்கு நீடிக்கப் பட்டது. சிறுபான்மையினங்களுட்படப் பலரையும் விசாரிப்ப தற்கு ஒரு குழுவை அனுப்புவதை இலங்கை அமைச்சர்கள் பெரிதுங் கண்டித்தனர். சிறுபான்மை இனங்களின் ஆதரவைப் பெறுதலைப்பற்றிய நிபந்தனை அரசுக்கழகத்தின் 3 பங்கு உறுப்பி னரின் ஆதரவைப் பெறல்வேண்டும் என்ற நிபந்தனையில் அடங் கிய தென்றும், மீண்டும் அதைக் கிளறவேண்டியதில்லையென் றும், குடியேற்றநாட்டமைச்சர் தாம் முதன்முதல் (1943இல்) செய்தவாக்குறுதியினின்று வழுவிவிட்டனரென்றும் அமைச்ச ரவை ஆக்கிய திட்டம் குடியேற்றநாட்டமைச்சர் வெளியிட்ட அறிக்கையுடன் இயைபுள்ளதோ அல்லவோ என்ற ஒன்றையே ஆராய்வதற்கு ஆணைக் குழுவிற்கு உரிமையுண்டென்றும், வரும் ஆணேக் குழுவுடன் தாம் ஒத்துழைக்க முடியாதென்றும் கூறி, சமர்ப்பித்த திட்டத்தையும் திரும்ப எடுத்துக்கொண்டனர்.
அமைச்சர்களின் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 1. நிருவாகக்குழு ஆட்சி நீங்குதல்வேண்டும். 2. பத்து அமைச்சர்களும், பத்துக்குக் கூடாத உப அமைச்சர்களும் நியமனம் பெறல்வேண்டும். பத்து அமைச்சர் களும் அமைச்சரவையாய்க் கடமையாற்றல் வேண்டும். முதலமைச்சரை ஆள்பதிநாயகம் (Governor-General) தெரிவு செய்வார். மற்றைய அமைச்சர்கள் முதலமைச்சரின் தகவுரையின்படி (சிபார்சு) தெரிவுபெறுவர்.
3. gUstś85p8 b (Council of State) : Jpä(3563 pu BTy உறுப்பினர் கொண்ட ஒரு அரசுக்கழகம் நிறுவுதல் வேண்டும். உறுப்பினர் தொகை கூடியபடியால் சிறுபான்மை யினங்களுக் குக் கூடிய தொகைப் பிரதிநிதிகள் கிடைக்கும். தொகுதி வகுப்பதற்குக் குடிசனம் நிலப்பரப்பு ஆகிய இரண்டும் அடிப் படையாயிருக்கும். இலங்கைத் தமிழரும் இஸ்லாமியரும், குடி சனம் குறைந்த பிரதேசத்திலேதான் பெரும்பாலும் வாழ் கின்றபடியால், இம்முறையின்படி அவர்களுக்குக் கூடிய தொகைப் பிரதிநிதிகள் கிடைக்கும். . . .
இரண்டாம்மன்றம் (Second Chamber) ஒன்று வேண் டாமோ, வேண்டுமோ என்பது அரசுக்கழகம் பின் எப் பே?தோ தீர்க்கலாமென்று விடப்பட்டது (பெரும்பான்மை உறுப்பினர் தீர்ப்பு ஏற்கப்படும்).

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 141
4. ஆள்பதிநாயகம் : 1943இல் குடியேற்றநாட்டமைச் சர் கூறியபடி ஆள்பதிநாயகத்துக்கு டொனமூர்த்திட்டத்தி லிருந்த விசேட அதிகாரங்கள் இல்லாது போதல் வேண்டும். புறநாட்டலுவல்களிலும், நாட்டின் பாதுகாப்பலுவல்களிலும் அவருக்கு விசேட உரிமைகள் உண்டு.
5. ஆட்சியுத்தியோகக்குழுவும், நீதியுத்தியோகக் குழுவும்: ஆட்சித் துறையுத்தியோகத்தர் தெரிவு, நியமனம், உயர்வு, மாற்றம் முதலியவற்றைக் கண்காணிக்க ஒரு குழுவும், அங்ங் னம் நீதித்துறை உத்தியோகத்தர் நியமனம் முதலியவற்றைக் கண்காணிக்க இன்னுெரு குழுவும் நியமிக்கப்படல்வேண்டும்.
சோல்பெரி ஆணைக்குழு சோல்பெரிப் பிரபுவின் தலைமையில் இங்கு வந்த ஆணைக்
குழுவினர், அமைச்சர்கள் சமர்ப்பித்த திட்டத்தை அடிப்படை யாகக் கொண்டே தம் விசாரணையை நடத்தினர். அமைச்சர்கள் விசாரணையிற் கலந்துகொள்ள மறுத்தபோதிலும், வெளிவெளி யாகப் பங்குபற்றதுவிட்டபோதிலும், ஆனேக்குழு அமைச் சர்களைத் தனித்தனியாகக் கண்டு, அவர்கள் கருத்தை அறிந்த தென்றும், அவர்கள் கூறியவற்றைப் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டதென்றும் நம்ப இடமுண்டு. சிறுபான்மையோர், முக்கியமாய்த் தமிழினத்தின் சார்பாகச் சாட்சியங்கூறிய அகில gal)(ii. 60).5 is blfpi LD5IT FacDLI, (The All Ceylon Tamil Congress) டொனமூர்த்திட்டம் செயலில் வந்த காலக்தொட்டுத் தமிழருக் கும், தமிழர் வசிக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் சிங்கள ஆட்சிப்பீடம் வஞ்சகஞ் செய்ததென்று குற்றஞ்சாட் டினர். மூன்று வகையில் இவ்வஞ்சகம் நடைபெற்றதென்றும் எடுத்துக் காட்டினர் :-
1. நாட்டின் வருவாயைப் பங்கீடு செய்தலில்.
2. ஆட்சித்துறை உத்தியோத்தர் நியமனத்தில்.
3. சட்டம் வகுத்தலில்,
1931க்கும் 1943க்குமிடையில் பெரும்பகுதி நீர்ப்பா d 607 Galléal (Major Irrigation Works)5(6.5d G.56örgy Gargu வான ஒரு கோடி ரூபாவுக்கு மேலான தொகையில் 20 இலட்சமே ( செலவான தொகையில் 19%) வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் செலவானது. இதே காலத்திற் Siu Silut faT (56).J2a)dab (Minor Irrigation Works)á35i

Page 78
142 ஆட்சி இயல்
செலவான 32 இலட்ச ரூபாவில் 4 இலட்சமே (முழுத் தொகையில் 124%) வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் செலவானது. சிங்களர் வசிக்கும் பகுதிகளிற் காடடைந்த நிலங்களைத் திருத்துவதிலும் பெரும்பகுதி நீர்ப்பாசன வேலைகளைப் புதிதாய்ச் செய்வதிலும், பழையனவற்றைத் திருத்துவதிலும் பெருக்தொகைப் பணம் செலவானது. வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் குறைந்த தொகையே செலவானது. மேலும் யுத்தத்தால் இறக்குமதி குறைந்து அரிசிப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும்போது நெல் விளைவிற்கு ஏற்றதாய் வடக்குக் கிழக்கு மாகாணங்களி லிருந்த நிலங்களே உபயோகியாது வடமேற்கு, வடமத்திய மாகாணங்களிலுள்ள ( பின் எப்போதோதான் பயன்தரக் கூடிய ) காட்டு நிலங்களேச் சீர்ப்படுத்துவதிற் பணத்தை விரயம் பண்ணுவது மதியீனம்.
ஆணைக்குழு இக்குற்றச் சாட்டுக்களை நம்பியது போலில்லை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 1951க்கு முன் பெருந் தொகையான பணம் செலவு செய்யப்பட்டதென்றும், 1905ஆம் ஆண்டுக்கும் 1931ஆம் ஆண்டுக்குமிடையில் முழு இலங்கை யிலும் நீர்ப்பாசன வேலைக்குச் செலவான மூன்று கோடி ரூபாவில் 1 கோடிக்கு மேற்பட்ட தொகை வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் செலவானதென்றும், இதனுலேயே இலங்கை யின் ஏனைய பாகங்களிற் செலவிடுவதற்குத் தமக்கு நிதி கிடைக்கவில்லையென்று சொல்ல இடமிருக்கின்றதென்றும் எடுத்துக் காட்டினர். முன் கவனியாது கிடந்த நிலங்களைத் திருத்துவதில், அதுவரை நடைபெற்றவேலையை மெச்சவேண்டு மென்று, தமக்குத் தோன்றியதாகவும், இவ்வேலையைத் தொடங் கியபோது அரிசிப் பஞ்சப் பிரச்சினையிருக்கவில்லையென்றும் கூறினர். மேலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீர்ப்பாசன வேலையைத் தொடங்குவதற்கு வேண்டிய படம் வரைதல், நில அளவை போன்ற ஆயத்த வேலைகள் செய்தாயிற்றென்றும், வேண்டிய உத்தியோகத்தர் கிடைத்தவுடன் வேலை தொடங்கு மென்றும் விவசாய அமைச்சர் தமக்கு உறுதி கூறியதாகவும் கூறினர். மேலும், விவசாய விருத்தித் திட்டங்கள் ஒரு சில இடங்களுக்கு நன்மைபயப்பதற்காக அன்றி இலங்கை முழுவ தின் நலத்தையும் கருதியே நடைபெறல் வேண்டுமென்று விவ சாய அமைச்சர் கூறியதைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினர்.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 143
டொனமூர் ஆட்சிக்காலத்திற் கல்வி, வைத்திய வசதி முதலிய துறைகளிற் பெருந்தொகைப்பணம், சிங்களர் வசிக்கும் பகுதிகளிற் செலவானதென்றும், தமிழர் வசிக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் போதிய தொகை செலவாகவில்லை யென்றும் அகில இலங்கைத் தமிழர் மகாசபையின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர். குறித்த கால எல்லையின் வைத்தியசாலைகள் (Hospitals), LD(Digid fin & 5(65ds (Dispensaries) Gas GOTd Gatewart 60T 1,20,00,000 ரூபாவில் ஏறக்குறைய 10,00,000 ரூபாவே தமிழர் வசிக்கும் இடங்களிற் செலவானதென்றும், இக்காலத் தில் ஆட்சிப்பீடம் நிறுவிய அல்லது ஆதரித்த 4000 பாடசாலை களுள் 3000 சிங்களப் பாடசாலைகளெனவும் 900 தமிழ்ப் பாடசாலைகளெனவும் கூறினர். இதொன்றையும் ஆணைக்குழு ஏற்கவில்லை. தமிழர் வசிக்குமிடங்களிற் பிறநாட்டு மதத் தாப னங்கள் நிறுவிய பாடசாலைகள், வைத்தியசாலைகள், மருந்துச் சாலைகள் ஏற்கனவேயே இருந்தன. இவ்விடங்களின் தேவைக் கேற்பப் பணியாற்றப்பட்டதென்றும், இவ்வசதிகள் இல்லா இடங்களில் இவற்றை நிறுவுதல் முறையே யென்றும் அங் ங்ணம் செய்தல் யாருக்காவது வஞ்சகஞ் செய்வதற்கென்ருே அல்லது யாருக்காவது அகியாயமாய்ச் சலுகை செய்வதற் கென்றே கருதுவது பிழையென்றுங் கூறினர். கல்விச்சபை அதுவரையுங் கவனியாதுவிட்டிருந்த இஸ்லாமியருக்கு அப் போதிருந்த கல்வி அமைச்சர் ஆக்கிய கல்வி வசதிகளைத் தாம் மெச்சுவதாகவும் கூறினர்கள்.
உத்தியோக நியமனத்திலும் 1931 இன்பின் தமிழருக்கு அதற்கு முன்னிருந்த நிலையைக் கெடுப்பதற்குப் பல முயற்சி கள் நடந்துவந்திருக்கின்றனவென்று தமிழர் பலர் கூறினர். பாடத்திட்டங்களிலும், பிரவேச நிபந்தனைகளிலும் சிறுச்சிறு மாற்றங்கள் சிங்கள அமைச்சர்கள் செய்தனர். தெரிவுக் குழுக்களின் கருமத்தால் தமிழருக்கதுவரையும் ஆட்சி உத்தி யோகத்துறையிலிருந்த இடத்தைச் சிதைத்துவிட்டனர் என் றுங் குற்றம் சாட்டினர். இக் குற்றச்சாட்டு ஓரளவிற்குண்மை யென்றலும் இலங்கையில் ஏனைய பாகங்களிலும் கல்வி விருத்தியடைந்து வருவதே தமிழருக்கு உத்தியோகத்துறை யில் அதற்கு முன்னிருந்த உச்சநிலை குறைந்து வருவதற்கு முக்கிய காரணமென்றும் தாம் தகவுரை (சிபார்சு) செய்யும் அரசாங்க சேவையானைக்குழு (Public Service Commission) ஒன்று நிறுவினுல் இக் குறைகள் தீர்ந்துவிடுமென்று கூறினர்.

Page 79
f44 ஆட்சி இயல்
சட்ட ஆக்கத் துறையில் 1931இல் நிறைவேறிய (1) (புத்த) கோயிற் சொத்து (Temporalities) ச்சட்டம், 1942இல் நிறைவேறிய (2) அனுரதபுரி காப்பாற்றுச் சட்டம், 1940இல் நிறைவேறிய (3) மீன்பிடிச் சட்டம், 1942இல் நிறைவேறிய (4) பஸ்வண்டி அனுமதிச் (Licensing) சட்டம் சிறுபான்மை யினருக்கெதிராய்ப் பட்சபாதங் காட்டுஞ் சட்டங்களென்று கூறப்பட்டன. அனுரதபுரி காப்பாற்றுச் சட்டத்தைவிட மற்ற யாவும் பட்சபாதமானவையென்று ஆனேக்குழு ஏற்றுக் கொண்டது.
குறிப்பு :
(1) புத்தகோயிற் சொத்தை நாட்டின் வருவாயிலிருந்து சம் பளம் பெறும் ஒருவர் பரிபாலிப்பது முறையாகாதென்பதே இங்கு நோக்கவேண்டியது.
(2) அனுரதபுரிநகரை முன்னிருந்த இடத்திலிருந்து அகற்றிப் பிறிதோரிடத்தில் நிறுவுவதே சட்டத்தின் நோக்கம். சரித்திரப் பெருமைவாய்ந்த பழம்பதியைக் காப்பாற்றவே இச் சட்டம் செய்த தென்றே சட்டம் ஆக்கியோர் கூறினர். தமிழர், இஸ்லாமியர் பெருந் தொகையாய் அனுரதபுரத்தில் வாழ்ந்தவர்கள். நிலங்கள், கடைகள், கட்டிடங்கள் இவர்களுக்கு இருந்தன. இவர்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் மட்டக்தட்டுவதற்கே இச்சட்டம் நிறுவப்பட்ட தென்பது சிறுபான்மையினரின் கட்சி.
(3) மீன்பிடிச் சட்டத்தின்படி இலங்கையர் அல்லாதார் இலங் கைக்குரிய கடற் பாகங்களில் அனுமதிச் சீட்டின்றி இலாபம் நோக்கி மீன்பிடித்தலைத் தடைசெய்தது இது பெரும்பாலும் இந்திய வம்சா வளியினரையே தாக்கியது.
(4) மோட்டார் பஸ்வண்டி அனுமதிச் சட்டத்தின்படி இலங் கையில் பஸ்ஒட்டும் எந்தக் கம்பனியின் மூலதனமும் குறைந்த பட்சம் 85 சதவீத மென்றலும் இலங்கையருடையதாக இருத்தல் வேண்டும். இதுவும் பெரும்பாலும் இந்திய வம்சாவளியினரையே பாதித்தது.
சோல்பெரித்திட்டம்
அமைச்சரவையார் முன்னர் சமர்ப்பித்த திட்டத்தைத் தழுவியே இத்திட்டம் உருவானது. டொனமூர் ஆட்சியின் சிறுபான்மையினருக்கெதிராய்ப் பட்சபாதம் இருந்ததென்பதை வலியுறுத்துவதற்காக எடுத்துக்காட்டிய பலவற்றை ஆனேக் குழு ஏற்கவில்லை. வேண்டுமென்று பட்சபாதமோ, அநியா

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 145
யமோ நடந்ததென்றும் அவர்கள் நம்பிக்கை வைத்ததாகத் தெரியவில்லை. ஆனலும் நாட்டிற்குச் சுயவாட்சி வருமாயின் பெரும்பான்மையினரான சிங்களர் சிறுபான்மையினருக்கு அநீதி செய்வரென்னும் அச்சம் மக்களிடங் குடிகொண் டிருப்பது தாம் அறிந்த ஒன்றென்று தம் அறிக்கையிற் கூறி னர். இவ்வச்சத்தை ஓரளவிலே தீர்ப்பதற்கென அமைச்சர்கள் திட்டத்திற் சில மாற்றங்கள் செய்தனர்.
சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு
இத்திட்டத்தின்படி பிரதிநிதிகள் தொகையைக் கூட்டுவ தாலும் பாராளுமன்றத்தில் மூதவை (மேற்சபை) வகுப்பதா லும் அரசியல் தொடர்பற்ற அரசாங்க சேவை யானேக்குழு, ஆட்சி உத்தியோகத் தொடர்பற்ற நீதிமுறைச் சேவை ஆனேக் (35(!p (Judicial Service Commission) Bulu 6 u fib6Oop 15 gp 6 || 6u5T லும் ஆள்பதிக்குச் சில சிறப்புரிமைகளை ஒதுக்கி வைப்பதா லும் சிறுபான்மை யினங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கு மென்று கருதப்பட்டது.
பிரதிநிதித்துவம்
புதுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர் இடம்பெறல் வேண்டு மென்றும் அவர்களுள் தொண்ணுாற்றைவர் ஆள்புலத்தொகுதிகளின் (Territorial Seats) பிரதிநிதிகளாய் இருத்தல்வேண்டும் என்றும் எஞ்சிய அறுவரை யும் ஆள்பதிநாயகம் நியமித்தல்வேண்டும் என்றும் நிறுவப் பட்டது. சிறுபான்மை யினங்கள், ஒதுக்கப்பட்ட சாகியங்கள் போன்றவற்றிற்கே இந்த ஆறு நியமனங்களும் கொடுக்கப்படல் வேண்டும் என்றுங் கருதப்பட்டது.
முன்கூறிய 95ஆள்புலத் தொகுதிப்பிரதிநிதிகளைப் பங்கீடு செய்வதிற் சிறுபான்மை யினங்களுக்குச் சிறிது சலுகை காட்டப்பட்டது. அமைச்சரவை சமர்ப்பித்த திட்டத்தில் இருந்த விதியே சோல்பெரித்திட்டத்திலும் இடம்பெற்றது. அது பின் வருமாறு:
ஒவ்வொரு குடி மதிப்பும் (Census) முடிந்து ஓராண்டுக்குள் ஆள்பதி, தொகுதி வரையறைக்குழு ஒன்றை நியமித்தல் வேண் டும். இக்குழுவிற்கு உறுப்பினர் மூவர்; இவர்கள் கூடிய மட்டும் அரசியல் தொடர்பற்றவர்களாய் இருத்தல் வேண்டும்.
ஆ - 10

Page 80
146 ஆட்சி இயல்
இக்குழு தொகுதிகளைப் பின்வரும் முறைப்படி வரையறுத்தல் வேண்டும் :
(i) ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மக்களில் ஒவ் வொரு 75,000 ஆட்களுக்கும் ஒரு பிரதிநிதி இருத்தல் வேண்டும். (75,000க்குச் சிறிது குறைந்த தொகையும் 75,000 ஆகக் கருதப்படும்.) இதைவிட மாகாணங்களின் நிலப்பரப்பை ஒட்டியும் பிரதிநிதிகள் ஒதுக்கப்பட்டனர். ஆயிரம் சதுர மைலுக்கு ஒரு பிரதிநிதியாக ஒவ்வொரு மாகாணத்துக்கும் பிரதிநிதிகள் பின்வருமாறு ஒதுக்கப் பட்டனர். (ஆயிரம் சதுரமைலுக்குச் சிறிது குறைந்த நிலப்பரப்பும் ஆயிரம் சதுரமைலாகக் கொள்ளப்பட்டது.)
மேல்மாகாணம் மத்தியமாகாணம் தென்மாகாணம் வடமாகாணம் கிழக்குமாகாணம் வடமேற்குமாகாணம் வடமத்தியமாகாணம் ஊவா மாகாணம் சப்பிரகாமமாகாணம்
மாகாணங்களில் தொகுதி வரையறை செய்யும்போது கூடியமட்டும் வெவ்வேறு தொகுதிகளின் சனத்தொகை சம மாய் இருத்தல்வேண்டும். ஆனல், குறித்த மாகாணத்திலும் தொகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வசதிகள், இன ஒற்றுமை வேற்றுமை, தொழில் ஒற்றுமை வேற்றுமை முதலிய வற்றை நோக்கியே வரையறைக்குழு கடமையாற்றுதல் வேண் டும். இதன் பயனுகச் சிறுபான்மை மக்கள் திரண்டிருந்த சில இடங்கள் தொகுதிகளாய் வரையறுக்கப்படும். மேலும் ஏற்ற இடங்களில் ஒன்றுக்குக்கூடிய பிரதிகிதிகளைத் தெரியும் பல்லுறுப்பினர் (Multi-member) தொகுதிகளும் நிறுவப்படல் வேண்டும். இம்முறையால் வெவ்வேறு மதத்தினர் இனத் தினர் போன்றவர் தம் வாக்குக்கள் யாவற்றையும் ஒரு அபேட்ச கர்க்கே கொடுத்து அவரை வெற்றியீட்டச் செய்தல்முடியும்.
நியமன உறுப்பினர் அறுவரைத் தெரிவதில் ஆள்பதிநாயகம் தாம் விரும்பியபடியே செய்யலாம். முதல் அமைச்சரையோ வேறு யாரையோ அவர் கேட்டு கடக்கவேண்டியதில்லை.

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 47
all-gigap (Legislature)
சோல்பெரித் திட்டத்தின்படி சட்டத்துறை இரண்டு உறுப் புக்களைக் கொண்டது. பிரதிநிதிகள் சபையைப் பற்றி முன் விளக்கியிருக்கிருேம். பொதுமக்கள் தெரிவால் கிறுவப்படு வது பிரதிநிதிகள்சபை, வேறு முறையில் நிறுவப்படும் உறுப்பொன்றும் சட்டத்துறையில் இடம்பெறல் வேண்டுமென்று சோல்பெரி ஆஃணக்குழுவினர் கருதினர். இதுவே மேற்சபை எனப்படும் மூதவையாகும். இதன் மூலமும் சிறுபான்மை யினங்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுமென்று கருதப்பட்டது. இவ்வவையின் உறுப்பினர் முப்பதின்மரிற் பதினைந்துபேரை ஆள் பதிநாயகம் தம் சொந்தக் கருத்தின்படி நியமிப்பார். மற் றப் பதினைந்துபேரையும் பிரதிநிதிகள் சபை தனி மாற்று வாக்கு (Single Transferable Vote) up albGé5 fta)/Qaf 14 jub. 3)6j6)J606Ju9 லும் சிறுபான்மையினங்களுக்குச் சில பிரதிநிதிகள் கிடைக்கக் கூடும். பிரதிநிதிகள்சபையின் செயல்களையும் கருத்துக்களையும் இம் மூதவை சமரசப்படுத்தக்கூடுமென்று எண்ணப்பட்டது.
பணத்தொடர்புள்ள எந்தச் சட்டத்தையும் ஆரம்பிக்கும்
உரித்து இவ் வவைக்கு இல்லை. இத்தகைய (அதாவது பணத் தொடர்புள்ள) சட்டங்களை முப்பது நாள் வரையும் தடை செய்ய இவ்வவைக்கு உரித்துண்டு. வேறு வகைச் சட்டங்கள் பிரதிநிதிகள்சபையில், இரு கூட்டத் தொடரில் (Session) நிறை வேறிய பின் முதவையின் அதே இரண்டு கூட்டத்தொடரில் கிராகரிக்கப்படுமாயின் இச் சட்டம் நிறைவேறியதாகக் கொள் ளப்படும். அமைச்சரில் இருவராயினும் இவ்வவையின் உறுப் பினராய் இருத்தல்வேண்டும்; இவர்களுள் ஒருவர் நீதி அமைச் சராயிருத்தல் வேண்டும். பாராளுமன்றக் காரியதரிசிகளில் இருவருக்குக் கூடாமல் இவ்வவையில் இடம்பெறலாம்.
அரசாங்க சேவை
உத்தியோகங்களுக்குத் தகுதியுள்ளவர்களைப் பட்சபாத மின்றித் தெரிவதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும். ஆள்பதிநாயகம் இப்பொறுப்புக்குத் தகுதிவாய்ந்த வர்கள் என்று தாம் கொள்ளும் மூவரைத் தெரிதல்வேண்டும். அரசாங்க சேவையாளரின் நியமனம், இடமாற்றம், பதவி யேற்றம், பதவியினின்று நீக்கல், காறுபாறு (கண்காணிப்பு) ஆகியவற்றின் பொறுப்பு இவர்களுடையதே.

Page 81
148 ஆட்சி இயல்
நீதிமுறைச் சேவை ஆணைக்குழு
இக்குழுவில் முதன் நீதியரசர் தலைவராகவும், உச்சமன்று நீதியரசர்கள் இருவர் உறுப்பினராகவுமிருப்பர். இவ்விருவ ரில் ஒருவர் இளைப்பாறியவராய் இருக்கலாம். ஆள்பதியே தம் எண்ணப்படி இவர்களை நியமிக்கலாம். உச்சமன்று நீதிபதி களைவிட மற்ற நீதிஉத்தியோகத்தோர் யாவரையும் நியமிப்பது பற்றி ஆள்பதிநாயகத்துக்கு ஆலோசனை கூறுவது இவர்க ளுடைய கடமை. இவ்வுத்தியோகத்தரின் இடமாற்றம், டதவி யேற்றம், பதவியினின்று அகற்றல், காறு பாறு (கண்காணிப்பு) ஆகியவையைப்பற்றியும் ஆலோசனை கூறல் இவர்கள் கடமை. ஆட்சிப் பீடம் சட்டம் நிறைவேற்றும் எச்சட்டமாவது சிறு பான்மை மக்களுக்குப் பாதகமானது என்று கருதினுல் அச் சட்டத்தைத் தடைசெய்வதற்கு ஆள் பதிநாயகத்துக்கு உரிமை இருக்கும். சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைக்கக்கூடியன என்று பின்வரும் சட்டவகைகளை மன்னர் மேற்பார்வைக்கு அனுப்புதற்கு ஆள்பதி ஒத்திவைக்கவேண்டு மென்று நியதி இருந்தது : 1. யாதேனும் ஒரு இனத்தினது அல்லது வகுப்பினரினது பாரதூரமான எதிர்ப்புப் பெற்ற அம்சங்களையுடைய சட்டம் எதுவும், ஆள்பதிநாயகத்தின் எண்ணத்தின்படி, குறித்த இனத்திற்கோ வகுப்பிற்கோ அநீதி விளைக்கு மென்ருல், 2. (அ) யாதேனும் ஒரு இனத்திற்கோ சமயத்திற்கோ சேர்ந்த வர்களுக்கு, மற்ற இனங்களையும் சமயங்களையும் சேர்ந் தவர்களுக்குக் கிடையாச் சலுகைகள் கொடுக்கும் சட்டம் எதையும் இலங்கைப் பாராளுமன்றம் நிறைவேற்றுதல் கூடாது. அங்கனமே மற்ற இனங்களுக்கோ சமயங் களுக்கோ இல்லாத தடைகள் கட்டுப்பாடுகள் போன் றவை யாதேனும் ஒரு இனத்தையோ சமயத்தையோ சேர்ந்தவர்களை மாத்திரம் பாதிக்கும் சட்டங்களென்ருல், (ஆ) எச்சமயத்தைச் சேர்ந்தவர்களும் தாம் விரும்பியபடி தம் சமயத்தை வழிபடுவதற்கு இடையூறு விளைக்கும் சட்டமென்ருல், 3. பிறநாட்டு மக்கள் இலங்கையிற் குடியேறுவதைத் தடுக் கும் சட்டங்களே ஆள்பதிநாயகம் பொதுவாய் ஒத்தி

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 149
வைக்கத் தேவையில்லை. ஆணுல், பொதுவாக இலங்கை யிலேயே வாழ்ந்து வருவோர் பிறநாடு சென்று திரும்பி வருவதைத் தடுக்கும் சட்டங்கள் அநீதியானவை என்றே, நியாயமற்றவை என்ருே ஆள்பதிநாயகம் கருதினுல்,
மேற்கூறியவற்றைவிட வேறு சில விடயங்களைப்பற்றிய
சட்டங்களும் மன்னர் பார்வைக்கு அனுப்புதற்கு ஒத்திவைக் கப்படவேண்டி இருந்தன. அவை :
1.
காட்டின் பாதுகாப்பு, நாணயங்கள், வங்கி நோட்டுகள் வெளியிடுதல், மன்னரின் தற்கிழமை (தனியுரிமைPrerogative), இலங்கையில் வசியாத பிரசைகளின் சொத்து, பிரித்தானியப் பொதுநல நாட்டின் எப்பகுதியி னதும் வணிகம் போக்குவரத்து ஏற்றுமதி இறக்குமதி போன்றவை. ஆட்சியமைப்பின் எந்த அம்சத்தையாவது மாற்றும் அல் லது அகற்றும் சட்டங்கள். ஆட்சியமைப்பிற்கு முரணன சட்டங்கள். குறித்த மாற்றங்களே அங்கீகரிக்கலாம் என்று குடியேற்றநாட்டுச் செயலாளர் அனுமதி கொடுத்தால் ஆள் பதிநாயகம் அங்கீகரிக்கலாம். ஆள் பதிநாயகம் நிறைவேற்றிய எச்சட்டத்தினுடனும் முரணன சட்டங்கள். வெளிநாட்டுத் தொடர்பைப்பற்றிய சட்டங்கள்: பின்வருவன இவ்விதிக்கு விலக்கானவை: (அ) பிரித்தானிய ஆட்சிப் பீடத்தின் அங்கீகாரத்துடன் பிரித்தானிய பொதுநல நாட்டின் ஏனைய பாகங்களுடன் செய்யும் வணிக ஒப்பந்தங்கள். (ஆ) பிறநாட்டவர் இலங்கையில் குடியேறுவதைத் தடுக் கும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டங்கள். (குறித்த சட் டங்கள் பொதுவாய் இலங்கையில் வசிப்போர் பிறநாடு சென்று திரும்பி இலங்கைக்கு வருவதைத் தடைசெய் தல் கூடாது.)
(இ) வாக்குரிமையைப்பற்றிய சட்டங்கள்.
(ஈ) பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தலைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், பிறநாட்டுப் பொருள்களுக்குத் தீர்வை வகுத்தல் போன்றவற்றைப்பற்றிய சட்டங்கள்

Page 82
I 50 ஆட்சி இயல்
(இச்சட்டங்கள் எந்நாட்டிற்காவது பாரபட்சமற்றவையா யிருத்தல் வேண்டும்.)
ஆள்பதிக்கு வெளிநாட்டின் அலுவல்களை ப்பற்றியும் காட் டின் பாதுகாப்பைப்பற்றியும் சட்டமாக்கும் உரிமையிருந்தது. இச்சட்டங்களுக்கு ஆள்பதிநாயகத்தின் சட்டங்கள் (Governor General's Ordinances) என்று பெயர். பாராளுமன்றத்தைக் &h. 6iv (Summoning), Jõpib 35 ar Gélas LDT #5 ஒத்திவைத்தல் (Proroguing), கலைத்தல் (Dissolving) ஆகியவற்றில் பிரித்தானிய் ஆட்சியியல் மரபைப் பின்பற்றல்வேண்டும். அமைச்சரை நிய மித்தல் அகற்றுதல் ஆகியவற்றிலும் அங்ங்னமே செய்தல் வேண்டும். அதாவது முதல் அமைச்சரின் ஆலோசனையின் படியே ஆள்பதிகாயகம் ஒழுகுதல்வேண்டும்.
அமைச்சரவை
டொனமூர்த் திட்டத்தில் இருந்த நிருவாகக்குழுமுறை (Executive Committee System) 60.d5 oil-l'ul Lay. Lifisit afu முறையைப் பின்பற்றி அமைச்சரவை இடம்பெற்றது. முதல் அமைச்சர் ஆள்பதிநாயகத்தால் நியமிக்கப்படுவர். மற்ற அமைச்சர்கள் முதல் அமைச்சரின் தகவுரையின்படி ஆள்பதி நாயகத்தால் நியமிக்கப்படுவார்கள். இரண்டு அமைச்சர்கள் என்ருலும் மூதவையில் இடம்பெறல்வேண்டும். கூடியபட்சம் இரண்டு பாராளுமன்றக் காரியதரிசிகளும் இவ்வவையில் இடம் பெறல் வேண்டும். முதல் அமைச்சர் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் ஆகியவற்றிற்குப் பொறுப்பாய் இருப்பர்.
சோல்பெரித் திட்டத்தின் விளைவுகள்
சோல்பெரித் திட்டம் 1945ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவந்தது. இத்திட்டம் வெளிவரமுன் திரு. டீ. எஸ். சேனநாயக்காவை இங்கிலாந்திற்கு அழைத்து அப்போது கடமையாற்றிய அமைச்சரவையின் கருத்தை எடுத்துரைக்கு மாறு பிரித்தானிய ஆட்சிப்பீடம் கேட்டது. ஆணிலப்பதம் (Dominion Status) இலங்கைக்குக் கிடைத்தல் வேண்டும் என்று அவர் வாதாடினர். பிரித்தானிய ஆட்சிப்பீடத்தாருக்கு இருந்த அச்சங்கள் ஐயங்களைத் தீர்ப்பதற்கு நாட்டின் பாதுகாப்பை யும் வெளிநாட்டு அலுவல்களையும் பற்றி (Diffence and External Aftairs) ஓர் ஒப்பந்தம் செய்ய ஏற்றுக்கொண்டார். பிரித்தா னிய ஆட்சிப்பீடம் ஆணிலப்பதவாட்சியை உடனே கொடுக்க

இலங்கை ஆட்சி இயல் வரலாறு I5 I
மறுத்துவிட்டது. அப்பொழுது இந்தியாவைப்பற்றிப் பிரித்தா னிய ஆட்சிப்பீடம் ஒரு முடிபுக்கும் வராதபடியால் இலங்கைக்கு ஆணிலப்பதவாட்சி வழங்குவதைப்பற்றித் திட்டவட்டமாய் ஒன்றுங் கூறுவதற்கு அதனுல் முடியவில்லை ஆகையால் சோல் பெரித்திட்டத்தின் முக்கிய அம்சங்களைக்கொண்ட ஒரு வெள்ளை அறிக்கை (WhitePaper) வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை ஏற்று அதன்படி ஆட்சியைச் செம்மையாய் நடத்தினுல் விரை வில் ஆணிலப்பதவாட்சி கிடைக்கக்கூடுமென்று இவ்வறிக்கை கூறிற்று, சோல்பெரித்திட்டத்தில் ஆள்பதிக்கு இருந்த சில அதிகாரங்கள் மாற்றப்பட்டன. இவ்வறிக்கை இலங்கை அரசுக் கழகத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது 51 உறுப்பினர் சார்பாகவும் 3 உறுப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இந்தியாவிற்குச் சுயவாட்சி வருவது திண்ண மென்று அறிந்த போது திரு. சேனநாயக்கா பின்னுமொருமுறை இலங்கைக்கு ஆணிலப்பத ஆட்சி வழங்கப்பட ல் வேண்டுமென்று வற்புறுத்தி னர். இம்முறை பிரித்தானிய ஆட்சிப்பீடம் திரு. சேன காயக்காவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தது. 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் குடியேற்றநாட்டுச் செயலாளர் சோல் பெரித் திட்டத்தின்படி ஆட்சிப்பீடம் அமர்ந்தவுடன் ஆலைப் பதவாட்சியைப் பற்றித் தாம் இலங்கை அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக வாக்குறுதி கூறினர்.
சோல்பெரித் திட்டத்தின்படி 1947இல் நடந்த தேர்தலில் gaš8ш 353 u 16 41.34GB5 (United National Party) LIT U Tony மன்றத்திற் கூடிய தொகை யுறுப்பினர் இருந்தனர் இக் கட்சியின் தலைவர் திரு. சேனநாயக்கா முதல் அமைச்சரானுர், உடனே இலங்கைக்குச் சுயவாட்சி பெறுவதற்குப் பேச்சு வார்த்தை ஆரம்பமாயின. 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி இலங்கைக்குச் சுயவாட்சி கொடுப்பதற்கு வேண்டிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன இவ்வொப் பந்தங்கள் பாதுகாப்பு, வெளிநாட்டு அலுவல்கள், ஆட்சி உத்தியோகத்தர் என்ற மூன்றையும் பற்றியன. இலங்கை யின் சுயவாட்சிக்கு அடிப்படைச் சாதனங்கள் ஐந்து :
1. 3 avij60) && di u j6jn Ligaj fLiLub (Ceylon Independence Act) ( 1947). 2. இலங்கைச் சுயவாட்சி அரசுக்கழகத்துப் பனி ( Order
in Council- 1947)

Page 83
52 ஆட்சி இயல்
3. UITg5 5.T lith 62 Luigilb (Defence Agreement).
4. வெளிநாட்டு slayougi) 62.lius;5th (External Affairs
Agreement). 5. அரசாங்க அலுவலாளர் ஒப்பந்தம் (Public Officers'
Agreement). இலங்கைச் சுயவாட்சிச் சட்டத்தின்படி அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஆணிலப்பத வாட்சியும் அதற்குரிய உரிமைகளும் இலங்கைக்கும் வழங் கப்பட்டன. இச் சட்டம் நிறைவேறிய பின் இலங்கையின் ஆட்சி அலுவல்களிற் பிரித்தானிய ஆட்சிப் பீடத்தின் ஈடுபாட் டிற்கு இடமில்லை. இலங்கை விரும்பினல், பிரித்தானிய பொது நலவாய ஆட்சியிலிருந்தும் விலகிக்கொள்வதற்கும் உரிமை யுண்டு. இச்சட்டம் இலங்கையைப் பாதித்த பிரித்தானிய சட்டங்களையும் நிராகரித்துவிட்டது.
அரசுக்கழகத்துப்பணி அன்றிருந்த ஆட்சித்திட்டத்தில் இலங்கையின் சுயவாட்சிக்கு முரணுயிருந்த அம்சங்களை அகற்றி விட்டது. ஆள்பதிக் குப் (Governor) பதிலாக ஆள்பதிநாயகம் (Governor-General) இடம்பெற்ருர், புதுப்பதவியில் அவர் பிரித் தானிய ஆட்சிப்பீடத்தின் பிரதிநிதியாய் இராது மன்னரின் பிரதிநிதியாயே கடமையாற்றினர். குடியேற்றநாட்டமைச்சரின் பிரதிநிதியாய் அவர் செய்துவந்த கடமைகள் அவரிடமிருந்து அகற்றப்பட்டன. பிரித்தானிய ஆட்சி மரபிலே மன்னருக்கு இருக்கும் இடமும் கடமைகளுமே இவருக்கும் இருக்கின்றன. தம் எண்ணத்தின்படி செய்யலாம் என்று இருந்த கடமைகளை இனிமேல் முதலமைச்சரின் ஆலோசனையின்படியே செய்ய வேண்டி ஏற்பட்டது. உதாரணமாக தொகுதி வரையறை ஆணைக்குழுவின் உறுப்பினர் , அரசாங்கசேவை ஆஃணக்குழு உறுப்பினர், பிரதிநிதிகள் சபை உறுப்பினர், மூதவை உறுப் பினர் போன்றவர்களை நியமிக்கும்போது தன் எண்ணத்தின் படி நடக்க இவருக்கு இருந்த உரிமை அகற்றப்பட்டது. இவை யாவற்றையும் முதல் அமைச்சரின் ஆலோசனைப் படியே செய்யவேண்டிய கிலேமை ஏற்பட்டது. சில சட்டங் களை மன்னர் பார்வைக்கு ஒத்திவைக்கும் உரிமையும் இவ ரிடமிருந்து எடுக்கப்பட்டது. அதாவது, இலங்கைப் பாராளு மன்றத்திற்கு விரும்பியபடி எதைப்பற்றியும் சட்டம் ஆக்கும் உரிமை கிடைத்தது. ஒரே ஒரு கட்டுப்பாடுதான் இவ்வுரிமை யைப் பாதித்தது. அக்கட்டுப்பாடு பின்வருமாறு :

இலங்கை ஆட்சி இயல் வரலாறு 53
மேற்கூறிய இலங்கைச் சுயவாட்சி அரசுக்கழகத்துப்பணி (Ceylon Independence Order in Council) 29.-g,lb | )íflø?6ö 2ஆம் உபபிரிவில் இக் கட்டுப்பாடு இடம்பெற்றிருக்கிறது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றத்திற்குக் கீழ்க்காணும் விடயங்கள்பற்றிச் சட்டம் ஆக்குவதற்கு உரிமையில்லை : 1. எவ்வகைச் சமய வழிபாட்டையும் கட்டுப்படுத்தல் அல்
லது தடுத்தல்.
2. ஏதேனும் ஒரு சமயத்தைச் சேர்ந்தவருக்கோ அல்லது ஏதேனும் ஒரு இனத்தைச் சேர்ந்தவருக்கோ மற்றச் சம யங்களையோ, இனங்களேயோ சேர்ந்தவர்களுக்கு இல் லாத குறைபாடுகள் கட்டுப்பாடுகள் முதலியவற்றை வகுத்தல். 3. மற்றச் சமயங்கள் இனங்களைச் சேர்ந்தவருக்குக் கிடை யாத சலுகைகளையோ நலன்களையோ ஒரு குறித்த இனத் தையோ சமயத்தையோ சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கி வைத்தல். 4. சமய தாபனங்களின் ஆட்சி அமைப்பை அவற்றிற்குப் பொறுப்பான தாபனத்தின் அங்கீகாரம் இன்றி மாற்றல்,
இக் கட்டுப்பாடு சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆக்கப்பட்டது. இதை மாற்றுவதற்கோ அகற்றுவ வதற்கோ பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு (*) பங்கு அங்கத்தவர்களின் சம்மதம் வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு என்னும்பொழுது வாக்கெடுப்பு நேரத்திற் சமுகம் கொடாத அங்கத்தவர்களையுஞ் சேர்த்தே எண்ணப்படும். இதுவரையும் இலங்கையின் பாதுகாப்பு ஆட்சித் திட்டம் வெளிநாட்டுத் தொடர்பு முதலியவற்றைப்பற்றிச் சட்டம் ஆக்குவதற்குக் கோமறைக்கழக (மன்னர் மன்ற)த்திற்கு (Privy Council) இருந்த உரிமை அகற்றப்பட்டது. பிரித்தானிய பாராளு மன்றத்திற்கும், இலங்கை விரும்பிக் கேட்டாலன்றி, இலங் கையைக் கட்டுப்படுத்தும் சட்டமாக்குவதற்கு உரிமை இல்லாதுபோயிற்று.
பாதுகாப்பு ஒப்பந்தம்
இவ் வொப்பந்தத்தின்படி பிரித்தானிய நாடு இலங்கைக்கு வேண்டிய படை உதவி செய்ய ஏற்றுக்கொண்டது.

Page 84
154 ஆட்சி இயல்
இலங்கையும் தன்னுடைய தேவைக்கேற்ப வேண்டிய உதவி செய்ய ஏற்றுக் கொண்டது. முக்கியமாய் இலங்கையின் பாது காப்புக்காகவும் பிரித்தானிய படையின் போக்குவரத்துக்கு வேண்டியதுமான கப்பற்படை இராணுவம் முதலியவற்றிற்கு இலங்கையிலே தள வசதிகள் கொடுக்க இலங்கை ஏற்றுக் கொண்டது.
வெளிகாட்டு அலுவல் ஒப்பந்தம்
இவ்வொப்பந்தத்தின் படி இலங்கைக்கு உலக விவகாரங் களிற் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஐக்கியநாட்டமையத் தின் அங்கத்துவம் கோரச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பிற காடுகளுக்குத் தூதமைச்சர் (Ambassadors) அனுப்பும் வாய்ப் புங் கிடைத்தது. விரும்பினுல் பிரித்தானிய நாட்டின் தூதமைச் சரைத் தன் தேவைகளுக்கு இலங்கை உபயோகிக்கலாம். இவ் வொப்பந்தத்திற்குப் பின் இலங்கை விரும்பியபடி பிறநாடுகளு டன் ஒப்பந்தங்கள் செய்யும் உரிமை உண்டு. ஆனல் பிரித் தானிய ஏகாதிபத்திய மகாநாடுகள் வகுத்த ஒழுங்கின்படி மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடன் கலந்து ஆலோசித்து ஒத்துழைக்க இலங்கை ஒப்புக்கொண்டது. அதாவது, பிரித்தானிய ஆட்சிப் பீடம் வெளிநாட்டுத் தொடர்பில் என்னென்ன செய்ய உத்தே சிக்கிறதென்று இலங்கைக்குத் தெரிவிக்கும். இலங்கையும் தன் கருத்தைப் பிரித்தானிய ஆட்சிப் பீடத்திற்கு நேராயோ அல்லது தன் தூதமைச்சர் மூலமோ தெரிவிக்கும். இலங்கையும் வெளிநாட்டுத் தொடர்பில் என்னென்ன செய்ய உத்தேசிக்கிற தென்று பிரித்தானிய ஆட்சிப்பீடத்திற்குத் தெரிவிக்கவும் பிரித்தானிய ஆட்சிப் பீடத்தின் கருத்தை அறிந்துகொள்ளவும் ஏற்றுக்கொண்டது.
ஆட்சி உத்தியோகத்தர் ஒப்பந்தம்
இவ் வொப்பந்தத்தின்படி சுயவாட்சிக்குமுன் குடியேற்ற நாட்டு அமைச்சர் நியமித்த உத்தியோகத்தரும் முடிசார் முகவருடன் (Crown Agents) ஒப்பந்தஞ் செய்த உத்தியோ கத்தரும் நாட்டில் ஏற்பட்ட மாறுதலாற் பாதிக்கப்படாது பார்ப்பதே இதன் நோக்கம். இவர்கள் விரும்பினுற் போதிய நட்டஈடு பெற்று இளைப்பாற அல்லது வேறெங்காயினும் மாறிப்போக ஒழுங்குசெய்யப்பட்டது. இவ்விரண்டு முறையை யும் பயன்படுத்தாதவர்கள் குடியேற்றநாட்டமைச்சரின் ஆதிக் கத்தினின்றும் நீங்கி இலங்கை ஆட்சித்துறை உத்தியோகத் தர்களாயினர்கள்,

அதிகாரம் 2 இலங்கை ஆட்சிமுறை
ஆணிலப்பத ஆட்சிமுறையே (Dominion Status) இன்று இங்கு நடைபெறுகிறது. பிரித்தானிய தொடர்பின் பெறு பேருய்ப் பிரித்தானிய ஆட்சியமைப்புமுறையும் அடிப்படைக் கொள்கைகளும் இங்கும் ஓரளவிற்கு இடம்பெற்றுவிட்டன. இருசபைகள் கொண்ட பாராளுமன்றம் கட்சியரசாங்கம், கட்சிமுறைமை, அமைச்சரவை, பிரித்தானிய அமைச்சரவை முறை (Cabinet System), அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு (Collective Responsibility), 457 f555 frofu, u (up6Opu96ö up6ör6Orio செய்வதையே செய்யும் ஆள்பதிநாயகம், பாராளுமன்ற ஒழுங்கு முதலியவற்றிற் பிரித்தானிய சம்பிரதாயங்களைத் தழுவல் போன்றவை கூடியுங் குறைந்தும் இங்கும் இடம்பெற்றிருக் கின்றன. கண்ட பாவனையிற் கொண்டை முடிபவர் எப்போதும் எண்ணியதைச் செய்துவிடுவதில்லை; அழகாய்க் கொண்டை முடிவதற்கும் பயிற்சி வேண்டும். அழகு என்ருல் என்ன? எனும் அறிவு வேண்டும். ஒன்ருே டொன்று முரண்படாமுறையில் அழகின் அம்சங்களை இணைக்கும் ஆற்றல் வேண்டும். ஆட்சி முறையிலும் பிறிதோர் நாட்டின் முறையைப் பின்பற்றுதல் இக்காட்டிற்குச் சுயவாட்சி வந்தகாலம் தொடக்கம் இன்று வரையும் சில வேற்றுமைகளுடன் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 1959ஆம் ஆண்டில், இலங்கை அமைச்சரவை இரு கூருய்ப் பிரிந்து இவ்வாட்சிப்பீடமே கவிழ்ந்து போகுமோ வென்ற நிலையிலிருந்தது. இதைப்பற்றிச் சிறிது விரிவாய்ப் பிற்பாடாராய்வோம். இப்போது இக்காட்டாட்சியமைப்பின் அங்கங்களை ஒவ்வொன்ருகச் சிறிதாராய்வோம்.
gassir Ug5T u ssib (Governor-General) ; FL LLJL JLqulub * LibL 5T தாயப்படியும் ஆட்சிப் பொறுப்பும் உரிமையும் மன்னருக்கே உரியன. ஆட்சி, மன்னராட்சி; அமைச்சர்கள், மன்னரின் அமைச் சர்களே ; சட்டங்கள், மன்னரின் சட்டங்கள் ; மக்கள் மன்னர்
ஆ - 11

Page 85
156 ஆட்சி இயல்
குடிகள் ; எதிர்க்கட்சியும் மன்னரின் எதிர்க்கட்சி. அதாவது மன்னரின் அமைச்சர்கள், மன்னர் ஆணேயிற் செய்வதை எதிர்த்தும் தடுத்தும் வரும் கட்சியும், மன்னரது எதிர்க்கட்சி (His Majesty's Opposition) 6T667 g) is foll (B5pgil. gig air தலைவரும் மன்னரது எதிர்க்கட்சித் தலைவரென்றே கூறப்படு கின்றனர். இந்த மன்னரின் பிரதிநிதியே ஆள்பதிகாயகம். ஆன லும் தாம் விரும்பியபடி மன்னர் அவரை நியமித்தல் முடியாது, இலங்கை முதலமைச்சரின் ஆலோசனைப்படியே கியமனம் நடக்கும். மன்னர் விரும்பும்வரையே உத்தியோகம்; அதாவது விரும்பியபோது நீக்கலாம். வெகுதூரத்திலிருக்கும் நாட்டில் யார் ஆள்பதிகாயகமாய் இருத்தல்வேண்டு மென்பது பற்றி மன்னர் பெரும்பாலும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பர். ஆனல், முதலமைச்சரும் ஆட்சிக் கட்சியும் விரும்பாதுபோனுல் மன்னர் விரும்பாததுபோலவே கொள்ளப்படும் ; மன்னரும் ஆள்பதிநாயகத்தைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார். மன்னர் பிரதிகிதியென்றபோதிலும் சட்டப்படி இவர் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்திலே மன்னர் கடமைகள், உரிமைகள் பாரம்பரிய வரையறுப்பைத் தான் உடையவை. இலங்கை ஆட்சியமைப்பின்படி மன்னர் ஆள்பதிநாயகத்திடம்விடாது தானே செய்யவேண்டியகடமைகள் சிலஉள. தூதமைச்சர் (Ambassadors) நியமனம், உடன்படிக்கை கள் செய்தல்,போர்ப் பிரகடனஞ்செய்தல் போன்றவை இலங்கை மன்னரென்ற முறையில் மன்னரே தமது அமைச்சர்களின் ஆலோசனைப்படி செய்யவேண்டியன. ஆள் பதிநாயகம்மூலம் இவற்றைச் செய்வது முறையாகாது. இரண்டாவதாக மன்னர் தாமோ அல்லது ஆள் பதிநாயகம் மூலமோ செய்யக்கூடிய கரு மங்கள் சில உள. இலங்கை யரசமைப்பின் 7ஆம் பிரிவின்படி மன்னர், பிரதிநிதிகள்சபை, மூதவைஆகிய மூன்று உறுப்புக்களை யும் கொண்டதே பாராளுமன்றம். ஆதலால், மன்னரும் இக்காட் டுப் பாராளுமன்றத்தில் உரிமைபெற்றிருக்கிருர். இவ்வுரிமையை அவர் நேரே செலுத்தலாம் ; அல்லது ஆள்பதிநாயகம் மூலம் செலுத்தலாம். விரும்பினுல் பாராளுமன்றத் திறப்புவிழாவைத் தன் சார்பில் நடத்துவதற்கு ஆள்பதிநாயகத்தைவிட வேறு யாரையும் அனுப்பலாம். 1948இல் நடந்த இவ்வைபவத் திற்கு அப்போதரசாட்சிபுரிந்த மன்னர் தம் தம்பியாராகிய கிளஸ்தர் கோமகனை (Duke of Gloucester) அனுப்பினர். அங் வனமே பாராளுமன்றத்தைக் கலேப்பதற்கும் ஆள்பதிநாயகத்தை விட வேறு யாரையும் அனுப்பும் உரிமையும் மன்னருக்கு

இலங்கை ஆட்சிமுறை 157
உண்டு. ஆணுல், இவைபோன்றவை சட்டப்படி நடக்க முடியுமென்ருலும் பெரும்பாலும் உண்மையில் நடவா. அங் கனமே முதலமைச்சரை நியமித்தல், கணக்குப் பரிசோதனைத் தலைவரை (Auditor-General) நியமித்தல், நிலைப்புச் ( நிரந்தர) செயலாளர்களை நியமித்தல், அமைச்சரவைக் காரியதரிசியை நியமித்தல் போன்றவற்றையும் சட்டப்படி மன்னர் தாமே செய்ய முடியுமென்ருலும், செயலில் இப்படி எப்போதாவது நடக்கு மென்று எண்ணுவதற்கில்லை.
மூன்ருவதாக, சட்டப்படி ஆள்பதிநாயகம் செய்யவேண் டிய கருமங்களும் உள. பிரித்தானிய ஆட்சிமுறையிலே மன்னர் பின்பற்றும் சம்பிரதாயங்களைத் தழுவியே ஆள்பதி 5ாயகம் கடந்துகொள்வாரென்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஆட்சியமைப்பின் 4ஆம் பிரிவின் இரண்டாம் உப பிரிவு கூறுகிறது. பெரும்பாலும் முதலமைச்சர் கூறும் ஆலோ சனேயின்படி ஆள்பதிநாயகம் நடக்கவேண்டுமென்பதே இதன் பொருள். தேவைக்கேற்ப எச்சரிக்கவோ, புத்திமதி கூறவோ, உற்சாகமூட்டவோ மன்னருக்கு, பிரித்தானிய நாட்டிலிருப்பது போல, இங்கே ஆள்பதிநாயகத்துக்கும் உரிமையுண்டு. ஆனல் முதலமைச்சர் விட்டுக்கொடாவிட்டால் ஆள்பதிகாய கம் விட்டுக்கொடுத்தல் வேண்டும். அங்ங்ணம் விட்டுக் கொடாது போனுல் முதலமைச்சர் வெளியேறுவார்; புது அமைச்சரவை அமைதல் வேண்டும். இவ்வளவுதூரம் ஆட்சி அலுவல்களிலே தலையிட்டால் ஆள்பதிகாயகத்தின் பத விக்கிருக்கவேண்டிய மதிப்புஞ் செல்வாக்குங் குறைந்துவிடும்; பதவியின் நடுநிலைமையும் சிதைந்துபோம். பொறுப்புணர்ச்சி யுள்ள ஆள் பதிநாயகமெவரும் இவ்வளவு தூரம் போக முன் வரார். ஆள் பதிநாயகம் அமைச்சர்களின் ஆலோசனைகளுக்குச் செவிசாயாது விடுத்தற்குச் சட்டமிடங்கொடுக்கிறது. பிரித் தானிய சம்பிரதாயங்களின்படி ஒழுகாதுவிட்டதற்காகச் சட்ட மன்றுக்கு ஆள் பதிநாயகத்தை இழுக்குமுரிமை யாருக்குமில்லை யென்று இலங்கையரசமைப்புக் கூறுகின்றது.
பாராளுமன்றத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் கலைக்க வும் ஆள்பதிகாயகத்துக்குரிமையுண்டு. முதலமைச்சர், எதிர்க் கட்சித் தலைவர் முதலியோருடன் கலந்தாலோசித்தே அவர் மேற்கூறியவற்றில் கடவடிக்கை யெடுப்பார். பொதுவாய்

Page 86
l58 ஆட்சி இயல்
முதலமைச்சரின் விருப்பப்படி பாராளுமன்றத்தைக் கலைக்க ஒருப்படுவார். ஆனல், வேறு யாராவது முதலமைச்சர் பதவியை ஏற்றுப் புது அமைச்சரவையொன்றை நிறுவமுடியு மென்று கம்பினுல், பாராளுமன்றத்தைக் கலைக்கமறுக்கும் உரிமை ஆள்பதிநாயகத்துக்குண்டு. சட்டப்படி ஐந்தாண்டிற்கு மேல் பாராளுமன்றம் கடமையாற்ற முடியாதபடியால், ஐந்தாண்டு முடிந்தவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து, அதன்பின் 4 மாதத்துக்குள் புதிய பாராளுமன்றத் தெரிவுக்கு வேண்டியன செய்யும் பொறுப்பும் ஆள்பதிநாயகத்துக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறையாவது பாராளுமன்றக் கூட் டம் நடத்தல்வேண்டும். அங்ங்னம் நடக்கச் செய்வது ஆள்பதி நாயகத்தின் பொறுப்பு. மன்றம் கலைந்திருக்கும் காலத்தில் யாதேனும் திடீர் நெருக்கடி தோன்றினுல் அரசமைப்பின் 13ஆம் பிரிவின் 5ஆம் உபபிரிவின்படி கலைந்திருந்த மன் றத்தை மூன்றுநாள் முன்னறிவித்தல் கொடுத்துக் கூட்டி வைக்கலாம். இங்ங்ணம் கூட்டிய மன்றம் புது மன்றம் கூடும் வரையுங் கடமை பார்க்கலாம். பெரும்பாலும் இவை யாவற்றி லும் முதலமைச்சரைக் கலந்தாலோசித்தே ஆள்பதிநாயகம் நடவடிக்கை யெடுப்பார்.
மன்றம் நிறைவேற்றிய சட்டங்களுக்கு மன்னர் சார்பாகச் சம்மதம் கொடுப்பது ஆள்பதிநாயகத்தின் கடமை. அமைச்சர் கள் தயாரிக்கும் அரியணை ( சிம்மாசன)ப் பேச்சையும் மன்னர் சார்பாக மன்றத்தின் ஒவ்வொரு அமர்வுக் (Session) தொடங்கும்போது வாசிப்பார்.
மூதவைக்கு 15 உறுப்பினரையும் பிரதிகிதிகள் சபைக்கு ஆறு உறுப்பினரையும் நியமிக்கும் உரிமை ஆள்பதிநாயகத்துக் குண்டு. இவர்களின் பதவி வெற்றிடமாகும்போது புதிய உறுப்பினரை நியமிப்பதும் அவர் பொறுப்பே. போதிய அள விற்கோ அல்லது முற்ருயோ பாராளுமன்றத்தில் இடம்பெருத இனங்கள், வகுப்புக்கள் போன்றவைக்கே இவ்விடங்கள் போகவேண்டுமென அரசமைப்பில் இவை இடம்பெற்றுள்ளன. ஆனல், அக் கொள்கைப்படி இவ்விடங்களுக்கு ஆட்களே கிய மிக்குமுரிமை இப்போதில்லை. முதலமைச்சரின் ஆலோசனைப் படி செய்வதே ஆள்பதிகாயகத்தின் கடமையாகும்.
ஒவ்வொரு குடிமதிப்பும் முடிந்து ஓர் ஆண்டுக்குள் ஆள் பதிநாயகம் மூன்று உறுப்பினரடங்கிய ஓர் எல்லைவரையறைக்

இலங்கை ஆட்சிமுறை I59
குழுவை ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு குறித்த தொகைத் தொகுதிகளாய்ப் பிரிப்பதற்கு நியமித்தல் வேண்டும். இவ் வரையறைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவது ஆள்பதி நாயகத்தின் பொறுப்பு.
( ஆட்சித்துறையில் மூன்று பெரும் பிரிவுகள் உள. கிரு வாகத் தொழிற்பாடு (Executive Function), சட்டத்தொழிற்பாடு (Legislative Function), fầG(yp6Od spi G 5T fibulu IT (B) (Judicial Function) ஆகிய மூன்றுமே அவை. ஒவ்வொன்றுக்கும் வெவ் வேறு அமைப்பொழுங்குகளும் இருக்கும்.)
ஆள்பதிநாயகத்துக்குச் சட்டத் தொழிற்பாட்டி லுள்ள பொறுப்புக்கள் இதுவரையும் ஆராயப்பட்டன : நிருவாகத் தொழிற்பாட்டில் அவருக்குள்ள பொறுப்பை இனி ஆராய் வோம். இலங்கைச் சுயவாட்சித் திட்டத்தின் 45ஆம் பிரிவின் படி நிருவாகப் பொறுப்பு முன்போல மன்னரிடந்தானிருக்கு மென்றும் ; சுயவாட்சி அரசமைப்பின்படியும், நிருவாகத்தைப் பற்றிச் செயலிலிருக்கும் மறு சட்டங்களின்படியும் மன்னர் சார்பில் ஆள்பதிநாயகம்அப்பொறுப்பைச் செலுத்துவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. பிரித்தானிய ஆட்சிமுறையில் மன்னருக் கிருக்கும் நிருவாகப் பொறுப்பே பெரும்பாலும் ஆள் பதிநாய கத்துக்கும் உண்டு. மன்னர் பொறுப்பைப்போல் இவர் பொறுப்பும் பேரளவுப் பொறுப்பேயாகும். உண்மைப் பொறுப்பு முதலமைச்சரிடமும், மற்ற அமைச்சர்களிடமுக் தான் இருக்கும். மன்னர் பொறுப்போ மாருப் பொறுப்புகட்சிச் செல்வாக்கிலோ, பாராளுமன்றத்தின் ஆதரவிலோ தங்கிய ஒன்றன்று. மன்னர் சார்பிற் பொறுப்பைச் செலுத்தும் போதும் மன்னர்பதவிக்கு இருக்கும் வாய்ப்புக்கள் இவர் பத விக்கில்லை. மன்னர் உயிருடன் இருக்கும்வரையும் அவர் பொறுப்பு மாறது. (எட்டாம் எட்வர்ட் மன்னரைப்போற் பத வியைத் துறக்கும் மன்னர் அரிதினும் அரிதே. ஆதலால் அதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கவனிக்கவேண்டியதில்லை.) இந்த வாய்ப்பும் ஆள்பதிநாயகத்துக்கு இல்லை. முதலமைச்சருடன் முரண்பட்டால் ஆள்பதிநாயகம் பதவியை விட்டகல நேரிடும். இந்த எல்லைக்குள்ளேதான் அவர் மன்னரைப்போல், மன்னர் சார்பில் நடந்துகொள்ளலாம். ஆள்பதிநாயகமே முதலமைச் சரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிப்பது. உண்மையிற் பாராளுமன்றத்திற் கூடிய கட்சிப்பலம் உடையவரையே கிய மித்தல் வேண்டும்-அவரே மற்ற அமைச்சர்களையும் உப

Page 87
60 ஆட்சி இயல்
(பிரதி) அமைச்சர்களையுந் தெரிவார். அவர் தெரிவை ஆள் பதிநாயகம் பெரும்பாலும் ஏற்பர். இவர்கள் யாவரும் மன்னர் விரும்பும்வரையுந்தான் பதவியிலிருக்கலாமென்பது சட்டம். ஆனல், உண்மையில் முதலமைச்சரை ஆதரிக்குங் கட்சி பாராளு மன்றத்திற் செல்வாக்குடன் இருக்கும்வரையும் முதலமைச் சரோ வேறு அமைச்சர்களோ வெளியேற நேரிடாது. இடை யிடையே அமைச்சர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு அப் பிணக் கைச் சமரசமாய்த் தீர்க்கமுடியாதென்றல் அமைச்சரவையி லிருந்து ஒருவரோ ஒன்றுக்குக் கூடிய தொகையினரோ வெளியேற நேரிடும். அப்போதும், அமைச்சரவைக்குப் பாராளு மன்றத்திற் போதிய ஆதரவில்லாதுபோய் அமைச்சரவை முற்ருய் வெளியேற வேண்டிவரும்போதும் ஆள்பதிநாயகத் துக்கே வெளியேற்றத்தைத் தெரிவித்தல் வேண்டும்.
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நிலைப்புச் செயலாளர் கள், பாராளுமன்றச் செயலாளர்கள் ஆகியவர்களை நியமிக் கும் உரிமைபோலவே கணக்குப் பரிசோதனைத் தலைவர் ( Auditor-General), FIL-jög 6Oop 15 Tuusub (Attorney-General ) ஆகிய உத்தியோகத்தரை நியமிக்கும் உரிமையும் உத்தியோ கத்திலிருந்தகற்றும் உரிமையும் ஆள்பதிநாயகத்துக்கேயுண்டு. உச்சமன்றின் முதல் நீதிபதி (Chief Justice)யையும், துணை நீதிபதி (Puisne Justices)களையும், பருவமன்றின் ஆணையாளரை (Commissioners of Assize) யும் ஆள்பதிநாயகமே நியமிப்பர். முதலமைச்சருடன் கலந்தாலோசித்தே இந் நியமனங்களைச் செய்வர். மேற்கூறிய நீதிபதிகள் இளைப்பாறவேண்டிய 62 வயது வந்தபின்னும் 1 ஆண்டிற்குக் கூடாது உத்தி யோகத்தில் இருக்க ஆள்பதிநாயகம் உத்தரவளிக்கலாம். பாராளுமன்றத்தின் இரண்டு அங்கங்களும் ஒன்று கூடி மனுப் பண்ணினலன்றி உச்சமன்றின் நீதிபதி யெவரையும் உத்தியோ கத்திலிருந்து நீக்கும் உரிமை ஆள்பதிநாயகத்திற்கில்லை. பொதுப்படக்கூறின், ஆள்பதிநாயகம் சம்பிரதாய வைபவங் களிலும், சடங்கு வைபவங்களிலும் காட்டின் ஆட்சிப்பீடத் தின் பிரதிநிதியாகத் தோற்றமளிப்பார். பாராளுமன்றத் திறப்பு விழாக்கள், அமைச்சர்கள் விசுவாசச் சத்தியஞ் செய்து பதவி யேற்றல், பிறநாட்டு ஆட்சித்துறைப் பிரமுகர் இங்கு வரும் போது வரவேற்று உபசரித்தல், இராணுவ அணிவகுப்புப் போன்றவற்றில் முதன்மை தாங்குதல் போன்றவையே பெரும் பாலும் இவருக்குரியன. ஆல்ை, இவரை முதலமைச்சர் ஆட்டிவைக்கும் ஒரு பொம்மையென்று எண்ணுதல் தவருகும்.

இலங்கை ஆட்சிமுறை 1 6 1
இன்னும் இந்நாட்டிற் கட்டுப்பாடான கட்சிமுறை அரசாங் கம் நிலைபெறவில்லை. கட்சி மாறுவோரும் கட்சிக் கடடுப்பாட்டை மீறுவோரும் பலர் இன்னும் இங்குளர். ஒன்று போனல் மற்றதே ஆட்சியை நடத்தும் என்று எதிர்பார்க்கக்கூடியளவுக்குக் கட்சி முறை உருவாகவில்லை. இன்றிருக்கும் (1960) அமைச்சரவை ஒன்றைத் தவிர சுயவாட்சியின் பின் தோன்றிய அமைச்சரவை யெல்லாம் கூட்டு அமைச்சரவைகளே (Coalition Cabinets). இந்த நிலையில் ஆள் பதிநாயகத்துக்குத் தம் செல்வாக்கை உப யோகிக்க இடமுண்டு. பிரிந்திருக்கும் இரண்டு கட்சிகளை ஒன்றுசேர்த்து அமைச்சரவையை நிறுவும்படி செய்வதற்கு ஆள்பதிநாயகம் தம் செல்வாக்கை உபயோகிக்கலாம். இப்படி உருவாகும் அமைச்சரவைக்குள் என்று பிளவு வரும் என்று சொல்லுதல் முடியாது. பிளவு வராது பார்ப்பதற்கும் வரும் போது அதை முற்றவிடாது சமாளிப்பதற்கும் ஆள்பதி நாயகம் பயன்படுவார். அமர்த்திய (நியமன) உறுப்பினர் அறு வரின் நியமனத்திற்குமுன் யாதேனும் ஒரு கட்சிக்கோ, கட்சி களின் இணைப்பிற்கோ அமைச்சரவை நிறுவப் போதிய ஆதரவு இல்லாதுபோனல் ஆள்பதிாாயகம் தாம் நியமிக்கும் உறுப்பினர் மூலம் விரும்பியவரை முதலமைச்சராக்கித் தம் சொற்படி நடக்கச் செய்யலாம். கட்சி ஆட்சிமுறை இறுக்கம் பெற்று, கட்சிகளின் தொகை குறைந்து இரண்டோ முன்ருே கட்சிகள் தோன்றும்வரை ஆள்பதிநாயகத்தின் செல்வாக்கை அலட்சியஞ் செய்தல்முடியாது. பதவிக்குரிய செல்வாக்கை விடப் பதவியிலிருப்பவருக்குக் கல்வியாலோ, இயற்கை ஆற்ற லாலோ, விவேகத்தினுலோ, ஆட்சியனுபவத்தினலோ வரும் செல்வாக்குமுண்டு. இரண்டையும் வெவ்வேருக்கல் முடியாது. ஆதலால், ஆள்பதிநாயகம் செய்வதும், செய்யாது விடுவதும் மேற்கூறிய இரண்டிலுமே பொறுத்துள்ளது. இவர் நாட்டை விட்டு எங்காவது போக நேரிட்டால் உச்சமன்றின் முதல் நீதிபதியே இவரிடத்திற் கடமை பார்ப்பார். விடுமுறையிற் போனுலும் அப்படியே.
5'llidairplb (Legislature) இலங்கை ஆட்சியமைப்பின் சட்டமாக்கும் பொறுப்பு இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றத்திற்கே உரியது. தனித்தனி நகரங்கள், பட்டினங்கள், கிராமங்களின் ஆட்சிக்கெனத் தனித்தனி நிலையங்கள் இருக்கின்றன.

Page 88
162 ஆட்சி இயல்
அவற்றையும்பற்றிப் பிறிதோரிடத்திற் கூறுவோம். இங்காராய் வது நாடுமுழுவதிற்கும் சட்டம் ஆக்கும் பாராளுமன்றத்தைப் பற்றியே. இதன் உறுப்புக்கள் பிரதிநிதிசபையும் மூதவையும். இவையிரண்டும் வேண்டுமோ என்ற கேள்வி ஆட்சித்துறையிற் பெரிதும் அடிபடும் ஒன்று. அதுவும் பெரும்பாலும் பிறப்பினுற் பாராளுமன்றத்தி லிடம்பெறுதல் முறையோ என்ற கேள்வி பிரித்தானிய ஆட்சிமுறையைப் பொறுத்தளவில் முக்கியமான ஒன்று. இரண்டு சபைகள் இருக்கும் நாடுகளில் ஒன்றில் பிறப்பால் உறுப்பினர் இடம்பெருதுபோனல், இரண்டுக்கும் உறுப்பினரைத் தெரியும் முறையில் வேற்றுமையுண்டு. இங்ங் னம் வேற்றுமையிருத்தல் குடியாட்சிக் கொள்கைக்கு முரணு னதோ என்ற கேள்வி தோன்றும். இவை யாவற்றையும் விரி வாய்ப் பிறிதோரிடத்தில் ஆராய்வோம்.
இப்போது இலங்கையிலிருக்கும் முறை யாதென்று பார்ப்போம்.
Gjálfsdiraraou (House of Representatives)
இதன் உறுப்பினர் தொகை 151. இதில் 145 பேர் வாக் தாளர் தெரிவினுல் இடம்பெறுவர் - மற்ற அறுவரும் தெரிவி குல் இடம் பெருது, மக்கட்பகுப்புக்களின் சார்பிற் கடமை பார்ப்பதற்கென நியமனம் பெறுவர். முதலமைச்சரின் ஆலோ சஆனயின்படியே இக் கியமனங்கள் நடைபெறும். தொகுதிகளை முதல் மாகாண வாரியாய்ப் பங்கீடுசெய்து, பின் எல்லைகளை வரையறுக்கும் முறையே பின்பற்றப்படுகிறது. தொகுதிகளி லும் பல உறுப்பினர் தொகுதிகளும் தனி உறுப்பினர் தொகுதி களும் உள. சிறுபான்மையினங்கள், சமூகங்கள் தங்கள் வாக்குக்களை முற்றயோ, பெரும்பான்மையாயோ ஓர் அபேட் சகருக்குக் கொடுத்தால் தாம் விரும்பியவரை ஒருபோது தெரியமுடியுமென்ற நோக்கத்தினலேதான் பல உறுப்பினர் Q5rg35oir (Multimember Constituencies) (9)L-lb GLip60T.
வாக்குரிமை : சர்வசன வாக்குரிமை இங்குண்டென்பது முற்றும் உண்மையன்று. வாக்குரிமையில்லாத பல்லாயிரவர் கள் இங்கிருக்கின்றனர்.

இலங்கை ஆட்சிமுறை 163
இலங்கைக் குடிகளுக்கே வாக்குரிமை யுண்டு. சிங்களர், இலங்கைத் தமிழர், இலங்கை இஸ்லாமியர் ஆகியோர்க்கு இக் கட்டுபாட்டால் தொல்லை யாதுமில்லை. இவர்கள் இந்நாட்டுப் பழங்குடிகள் ; வேறு தாயகம் இவர்களுக்கில்லை. குடி(பிரசை) கள் யார் என்பதை 1948இல் நிறைவேறிய இலங்கைக் குடி உரிமைச் சட்டமும் 1949இல் நிறைவேறிய இந்தியர்பாக்கிஸ்தானியர் குடி உரிமைச் சட்டமும் வரையறுக்கின்றன.
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை, இறப் பர்த் தோட்டங்களில் தொழில்செய்ய வந்தோரின் பிற்சந்ததி யார் பல்லாயிரவர் இலங்கையின் பல பாகங்களில், முக்கிய மாய் மலைநாட்டில், தங்கிவிட்டனர். இவர்களுக்கு இந்தியா வுக் தாயகமன்று ; இலங்கையுந் தாயகமன்று. இலங்கைக் குடியுரிமை பெறுவதும் இவர்களுக் கிலகுவன்று. குடியுரிமை மனுக்களைப் பார்த்துத் தீர்ப்புக்கூறும் முறையிற் பல குறைக ளிருக்கின்றன என்று புகார் கூறப்படுகிறது.
இத் தீர்ப்பை ஆட்சேபித்து உச்சமன்றிற்கு முறையீடு செய்யப் பெருக்தொகைப் பணம் தேவை. ஆகையாற் குடி யுரிமையையும் அதன் மூலம் வாக்குரிமையையும் பெறுவதற்கு இவர்கள் செய்யும் முயற்சி நத்தை வேகத்திலேதான் செல்லு கின்றது.
பிரதிநிதிகள்சபை
உறுப்பினராதற்குத் தகுதியற்றவர்கள் : 1. இலங்கைக் குடிகள் அல்லாதோர். 2. பிரித்தானிய குடிகள் அல்லாதோர்.
3. வாக்காளர் இடாப்புத் தயாரித்த ஆண்டின் யூன் மாதம் முதலாம் திகதி பதினெட்டு வயது நிறையாதவர்கள்.
4. மூதவை உறுப்பினர், அரசாங்க அலுவலாளர், நீதிமுறை அலுவலாளர், கணக்குப் பரிசோதனைத்துறை நாயகம் (Auditor-General).
5. சித்தப் பிரமை உள்ளோர் என்றே, தம் கடன்களை இறுக்க முடியாதவர் (Insolvents) என்றே பொறுப்பு வாய்ந்த சட்டமன்றினுல் ர்ேக்கப்பட்டவர்.

Page 89
164
1 O.
ஆட்சி இயல்
சட்டமன்றினல் விடுதலைபெருத * வங்குருேட்டுக்காரர் (Bankrupts).
தேர்தல் தொடர்பில் ஊழற்பழக்கம் (Corrupt Practice) அல் லது சட்டமுரணுன செயல் (Illegal Practice) செய்ததாகச் சட்டமன்றினல் தீர்க்கப்பட்டவர்.
குறித்த தேர்தலுக்கு முந்திய ஏழு ஆண்டுகளுக்குள் பிரதிநிதிகள் சபை உறுப்பினராய் இருந்து அப்பதவிக்கு உரிய நடுகிலேயில் நின்று வழுவுவதற்காகக் கைக்கூலியோ t சந்தோஷமோ ? பெற்ருரென்று தகுதிவாய்ந்த சட்ட மன்றினுல் அல்லது பிரதிநிதிகள் சபையின் சம்மதத்தோடு நிறுவப்பெற்ற ஒரு விசாரனேக் குழுவினுல் அல்லது பிரதி நிதிகள் சபையின் குழு ஒன்றினல் தீர்க்கப்பட்ட எவரும்.
(தொழிற் சங்கங்கள் போன்றவை ஓர் உறுப்பினரின் வாழ்க்கைச் செலவிற்காகக் கொடுக்கும் பணம் இதற்கு விதி விலக்காகும்.)
12 மாத காலத்திற்குக் கூடியகாலம் மறியல் தீரக்கூடிய ஏதேனும் ஒரு குற்றத்திற்காகத் தகுதிவாய்ந்த சட்ட மன்றின் தீர்ப்பின்படி 3 மாத காலத்திற்கு அல்லது அதற் குக் கூடியகாலத்திற்குத் தெரிவுகாலத்தில் மறியலில் இருப் போர், அல்லது மேற்குறித்தவாறு தெரிவுக்கு முந்திய ஏழாண்டு காலத்திற்குள் மறியலில் இருந்த எவரும்.
மரணதண்டனை பெற்றேர் அல்லது அத்தண்டனைக்குப் பதிலாக மூன்று மாத காலத்திற்கு, அல்லது அதிலுங்கூடிய காலத்திற்கு மறியலில் இருப்போர், அல்லது தெரிவுக்கு முந்திய ஏழாண்டுக் காலத்திற்குள் மேற்குறித்தவாறு மறியலில் இருந்தோர். ஆனல், இக்குற்றத்திற்குப் பூரண மன்னிப்புக் கிடைத்திருந்தால் கிடைத்த காலத் தொட்டு இக்கட்டுப்பாடு நீங்கிவிடும்.
* வங்குருேட்டு’ என்னும் சொல் Bankrupt என்ற சொல்லின்
F
பொருளில் பொதுமக்கள் வழக்கில் இருக்கிறது. * எட்டாங் கட்டளை எழுதியவர்' என்ற வழக்கும் இடையிடையே கேட் டிருக்கிருேம். * வங்குருேட்டு தான் பெருவழக்கு.
ந்தோஷம் * Gratification', 'Tip ' என்ற ஆங்கிலச் சொற்
களின் கருத்து. " சந்தோஷம் பொதுமக்கள் வழக்கு,

இலங்கை ஆட்சிமுறை 165
11. ஆட்சிப்பீடத்துடன் வெளிநாட்டிற்கனுப்பப் பணம் உதவு வதற்கு எவ்வகையான ஒப்பந்தமும் செய்துள்ளோர், அல்லது ஆட்சிப்பீடத்துடன் இந் நாட்டிலே உபயோ கிப்பதற்கு எவ்வகைப் பொருளேனும் கொடுக்கவோ அல்லது எவ்வகை வேலையேனும் செய்யவோ ஒப்பந்தஞ் செய்துள்ளோர்.
12. தேர்தலுக்கு முன் 12 மாதத்திற்குள் ஆட்சிப்பீடத்தாரின் அல்லது ஆட்சி உத்தியோகத்தர் எவரினதும் தனியுரிமை யால் வழங்கப்படும் நன்கொடை யாதாவது பெற்றேர். இவ் வகை நன்கொடை பெற்ற தனியாட்கள் மாத்திரமன்றி இரு பத்தைக்து பேருக்குக் குறைந்த தொகையினரை உடைய சங்கங்களின் உறுப்பினரும் இக் கட்டுப்பாட்டாற் பாதிக் கப்படுவர். இச் சங்கங்கள் சட்டப்படி உருவாக்கப் பட்டன(Incorporated) என்ருலும் அங்ங்ணம் உருவாக்கப் படாதன என்ருலும் இக் கட்டுப்பாடு அவற்றின் உறுப் பினரைப் பாதிக்கும்.
குறிப்பு :- மேற்கூறிய இரண்டு கட்டுப்பாடும் பின்வரு
வனவற்றைப் பாதிக்கா.
(t) விளம்பரஞ் செய்து அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து
பெறும் கடன்களிற் பங்கு பெறுவோர்.
(i) நாட்டின் வருமானத்திலிருந்து அல்லது ஆட்சிபீடத்தின் நிதியொன்றிலிருந்து இளைப்பாறற் சம்பளம் (Pension), நன்றிப் பணம் (Gratuity) போன்றவற்றைப் பெறுவோர்.
(i) நாட்டின் சட்டப்படி சட்டங்களில் நிறுவப்பெற்ற நகரசபை as Git (Municipalities), Lully 607 F60) J356ir (Urban Councils) போன்ற பொதுத் தாபனங்களுக்கு வழங்கப்படும் நன் கொடைகள்.
tiv) பெரும்பாலும் கல்வி, சமயம், தானதருமம், போன்றவற்றிற் காகத் தனியாட்களுக்கோ, சங்கங்களுக்கோ வழங்கப்படும் நன்கொடைகள்.
(w) மேற்கூறிய நோக்கங்களுக்காக அரசாங்க அலுவலாளர் அல்லாத ஆட்களுக்கு நாட்டின் வருமானத்திலிருந்து அல்லது வேறெந்த ஆட்சித்துறை நிதியிலிருந்தாவது சம்பள மாக அல்லது படி(Alowance)யாக வழங்கப்படும் பணம்,

Page 90
166 ஆட்சி இயல்
செயல்முறை : காலவரையறை.
பிரதிநிதிகள் சபை 5 ஆண்டிற்குமேற் கடமை பார்க்க முடியாது. இக்கால எல்லேக்கு முன்னும் முதலமைச்சரின் வேண்டுகோளின்படி ஆள் பதிநாயகம் சபையைக் கலைக்கலாம்.
வாசகர் (Speaker): புதிதாய்த் தெரிந்த சபையின் முதற் கடமை, வாசகரைத் தெரிவதே. இவரைப் போட்டியின்றித் தெரியும் மரபு இங்கிலாந்தில் உண்டு. இது இங்கு இன்னும் நிலைபெறவில்லை. முதலாவது வாசகர் தெரிவிற் போட்டியிருந் தது; இரண்டாவதிற் போட்டியிருக்கவில்லை. தொகுதியிற் போட்டியிடாது விடுதலும் இங்கு இன்னும் கிலேபெறவில்லை தெரிவுக்காலத்திற் கட்சிச் சார்புடையவரா யிருந்தபோதிலும், தெரிவு முடிந்ததும் கட்சித் தொடர்பை முற்றும் உதறித் தள்ளிவிடுவார் என்பதே சம்பிரதாயம். கட்சிப் பற்றும் பத விக்கு இன்றியமையாது வேண்டிய நடுநிலைமையும் ஒன்ருே டொன்று முரண்பாடானவை. சபைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி அவற்றை முறையாய் நடத்துவதே இவரது முக்கிய கடமை. சபையின் விதிகளைப்பற்றி வாக்குவாதம் நேரிடின் இவர் கூறும் தீர்ப்பை உறுப்பினர் ஏற்றல் வேண் டும். பலர் ஒரே நேரத்திற் பேச எழும்பினுல் யார் முதலிற் பேசவேண்டும் என்று தீர்ப்பதும் இவரே. இவர் செய்த எத் தீர்ப்பையும் உறுப்பினர் உடன் ஏற்றல் வேண்டும். ஏதா வது தீர்ப்பை ஆட்சேபிப்பது என்ருல் அதற்கென ஒரு பிரே ரணை கொண்டுவரல் வேண்டும். இவர் சபையில் நடக்கும் விவாதங்களிற் கலந்துகொள்வதில்லை. ஆட்சிச் சட்டத்தின்படி இவருக்கோ உப-வாசகருக்கோ பொதுவாய் வாக்குக் கொடுக் கும் உரிமையில்லை. இரு பக்கமும் வாக்குக்கள் சரிசமமாயிருக் தால் இவர்கள் வாக்குக் கொடுக்கலாம். பிரித்தானிய வாச கர் பின்பற்றும் மரபையே இவரும் பின்பற்றி, வாக்குக் கொடுக்கவேண்டியபோது இருக்குமொன்றை மாற்ருதுவிடு வதை ஆதரித்தே வாக்குக் கொடுப்பார். ஆட்சிப்பீடத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தஞ் செய்யுஞ் சட்டம் மன் னர் சம்மதத்திற்குப் போகும்போது குறித்த சட்டம் வேண் டிய மூன்றிலிரண்டு வீத வாக்குக்களைப் பெற்றதென்று இவர் உறுதிமொழி கூறியே யனுப்புதல் வேண்டும். பண சம் பந்தமான சட்டங்களை மன்னர் சம்மதத்திற்கோ அல்லது மூதவைக்கோ அனுப்புமுன்பு, குறித்த சட்டம் பணத்தொடர்

இலங்கை ஆட்சிமுறை | 67
புடையதென்று இவர் கூறல்வேண்டும். அங்ங்னம் செய்யு முன் சட்டத்துறைகாயகத்தின் (Atorney-General) அலலது அவருக்கு அடுத்த பதவியிலுள்ள சட்ட அறிஞர்நாயகத்தின் (Solicitor-General) ஆலோசனையைப் பெறுதல்வேண்டும்.
carp 6LDios Git (Sessions or Sittings)
பாராளுமன்றம் காலத்துக்குக்காலமே கூடும். கூடினுல் தொடர்ந்து சில கிழமைகளாயினும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படித் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் காலஎல்லை ஒவ்வொன்றும் ஓர் அமர்வு (Session) எனப்படும். ஒவ் வொரு அமர்வும் எவ்வளவு காலம் நடைபெறல் வேண்டு மென்பதும் அதில் என்னென்ன நடைபெறும் என்பதும் இருக்கும் வேலையை ஒட்டியதே. அமைச்சரவை குறித்த காலத் தில் என்னென்ன செய்யத் திட்டம் போட்டிருக்கிற தென்பதை ஒட்டியே ஒவ்வொரு தனியலுவலுக்கும் நேரம் பங்கீடு செய்யப் படும். ஆட்சிக்கட்சியின் சார்பாக மன்ற அலுவல்களைச் செய்ப வர் மன்றத்தலைவர் (Leader of the House). பெரும்பாலும் அவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து பேசி அமர்வு நேரப் பங்கீட்டைச் செய்வார்கள். ஒன்றுக்குக்கூடிய எதிர்க் கட்சிகள் இருந்தால் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசுவதும் உண்டு. அரசமைப்பின்படி ஆண்டுக்கொரு அமர்வாவது நடத்தல் வேண்டும். ஆனல், பொரும்பாலும் ஒன்றுக்குக்கூடிய அமர்வுகள் நடக்கும். ஒவ்வொரு அமர்வும் தொடங்கும்போது மன்றத்தின் இரண்டு சபைகளின் உறுப் பினரும் ஒருங்குகூடி ஆள்பதிநாயகம் வாசிக்கும் அரியணைப் பேச்சைக் கேட்பர். பெரும்பாலும் ஆள்பதிகாயகமே இக்கடமை யைச் செய்தபோதிலும் மன்னர் விரும்பினல் தாமே இதைச் செய்யலாம்; அல்லது இதற்கென வேறு யாரையுந் தெரிந் தனுப்பலாம். முதன்முதற் கூடிய பாராளுமன்றத்தின் இரண் டாவது அமர்வின் அரியணைப் பேச்சை வாசித்தது கிளஸ்தர் கோமகன் (Duke of Gloucester) ஆவர். முடிந்த அமர்வில் ஆட்சிப்பீடம் நிறைவேற்றியவற்றைப்பற்றிக் கூறுவதும் நடக்க இருக்கும் அமர்வில் என்னென்ன செய்ய உத்தேசம் இருக் கிறதென்று தெரிவிப்பதுமே இப்பேச்சின் நோக்கம். அரியனைப் பேச்சு, பட்டி மண்டபம் (Assembly Hall) என்ற இடத்தில் நடக் கும். பேச்சு முடிய இருசபைகளுக் தத்தம் இடங்களுக்குத் திரும்பும். அங்கு ஆட்சிக் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவர்

Page 91
168 ஆட்சி இயல்
நன்றியுரை (Address of Thanks) எனும் ஒன்றைப் பிரேரிப் பார். அதன் பின் விவாதம் கடக்கும். எதிர்க்கட்சியினர் நடந்த வற்றிலுள்ள குறைபாடுகளே எடுத்துக்காட்டுவர் ; புதிய திட் டத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்யலாமென்று கூறுவர் ; திருத்தப் பிரேரணைகள் கொண்டுவருவர். ஆட்சிக் கட்சிக்கே பெரும்பான்மை ஆதரவிருக்கும்போது சிறுபான்மையான எதிர்க்கட்சி இவை யாவற்றையும் செய்வது பயனற்றதென் றும் இதைச் செய்து ஏன் அவர்கள் நேரத்தைப் போக்கிவிடல் வேண்டுமென்றும் பலர் கேட்கக்கூடும். பாராளுமன்றத்தில் கடப்பன மன்ற உறுப்பினர்க்கு மாத்திரமென்றெண்ணுவது தவறு. நாடெங்கும் மன்றத்தில் என்ன நடக்கிறதென்று ஆவ லோடு பார்த்துக்கொண்டிருப்பவர் பலர். ஆட்சிக் கட்சி செய்வது சரியோ எதிர்க்கட்சி செய்வது சரியோ என்று ஆராய்ந்து முடி வுக்கு வந்துகொண்டிருக்கும் பேர்வழிகள்தான் அடுத்த தேர்த லின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள். அவர்களுக் காகத்தான் ஆட்சிக் கட்சியும் எதிர்க்கட்சியுஞ் செய்யும் செயல் களும் சொல்லுஞ் சொற்களும், கடத்தும் ஆர்ப்பாட்டங்களும், போடும் வேடங்களும். ஆம் விவாதம் முடிவுற்றதும், வேண்டிய குழுக்கள் நியமிக்கப்படும். அமர்வு காலத்தில் இரண்டு சபை களும் தேவைக்கேற்பத் தற்காலிகமாக நடக்கும் அலுவலை முடித்தோ ஒத்திவைத்தோ ஒய்வெடுக்கலாம். அமர்வுக்குரிய அலுவல்கள் யாவும் முடிந்தவுடன் ஆள்பதிகாயகம் ஒரேகாலத் தில் இருசபைகளையும் ஒத்திவைக்கப் பிரகடனம் நிகழ்த்து வார். அதே பிரகடனத்தில் அடுத்த அமர்வுக்குக் தொடக்க காளை நியமிப்பார். இகங்ணம் நியமித்தல் வேண்டுமென்பதும், மன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கிடையிலுள்ள காலம் 4 மாதததிற்குக் கூடப்படாதென்பதும் அரசமைப்பின் கியதி. மேலும் ஒத்திவைத்திருக்கும் காலத்திலும் ஆள்பதிநாயகம் முதலமைச்சரின் ஆலோசனைப்படி பிரகடனஞ் செய்து பாராளு மன்றத்தைக் கூட்டலாம். பிரகடனஞ் செய்து மூன்றுநாளுக் குப் பின்பே மன்றம் கூடலாம். ஒத்திவைத்திருக்கும்போதே மன்றத்தைக் கலைக்கவும் ஆள்பதிநாயகத்துக்குரிமையுண்டு. அப்படிச் செய்வதாயின் முதலமைச்சரின் ஆலோசனைப்படியே செய்வார். அப்படிச் செய்யும்போது பொதுத் தேர்தலுக்கு நாளை யுங் குறித்தல் வேண்டும். பிரகடனஞ் செய்து 4 மாதத் துக்குள் புதிதாய்த் தெரிந்த பாராளுமன்றம் கூடுதல்வேண்டும்.

இலங்கை ஆட்சிமுறை 169
பாராளுமன்றத்தைக் கலைத்த பின்னும் எதிர்பாராத இடர்ப்பாடு யாதும் நிகழ்ந்துவிட்டதென்று ஆள்பதிநாயகம் கருதினுல், கலைத்த மன்றத்தைத் திரும்பவும் கூடும்படி ஏற்படுத் தலாம். இங்ங்ணம் கூட்டுவதற்கு 3 நாள் அறிவித்தலாயி இணுங் கொடுத்தல் வேண்டும். தேர்தல் நடந்து புது மன்றம் கடமையேற்கும் வரையும் முந்திய மன்றம் கடமையிலிருத்தல் வேண்டுமென்று தீர்த்துவிடும் உரிமை ஆள்பதிநாயகத்துக்கு உண்டு.
அரசமைப்பின் 27ஆம் பிரிவு அரசுக்கழகத் (State Council) திற்கிருந்த உரிமைகளும் சலுகைகளும் இப்போதைய மன்றத் திற்கும் இருக்குமென்று கூறுவதுடன் மன்றத்தின் இரண்டு சபைகளும் தத்தம் உரிமைகள், சலுகைகள் விதிவிலக்குகளைத் தீர்த்துக்கொள்ளலாமென்றும் கூறுகிறது. ஆனல், பிரித்தானிய GuTjuDj56irefou(House of Commons)di G35T Jgi 567 g gil பினர்களுக்கோ இல்லாச் சலுகையெதாயினும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கோ அதன் உறுப்பினருக்கோ இருக்கப் படாதென்றும் அதே சட்டம் வரையறுக்கிறது.
பிரதிநிதிகள்சபைக் குழுக்கள்
L3 fligi Taofu Sulpit air F6DLJusait (House of Lords) உறுப்பினர் தொகை எண்ணுற்றிற்கு அதிகமாகும். பொது மக்கள் சபையின் தொகை 625. இலங்கைப் பிரதிதிதிகளின் தொகை 151. இவ்வெண்களைப் பார்த்தாலே இத்தனை பேரும் எப்படி அலுவல்களை விவாதித்துத் தீர்த்துவிடுகிறர் களோ என்று ஐயங் தோன்றும். விவாதித்தலிலேயே நேரம் கழியும். அலுவல்களைச் செய்துமுடிப்பதற்குப் பெருந்தொகை யினர் கூடுவது இடையூறயிருக்கும். ஆணுல், பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கு ஆட்சியிற் பங்குபற்றும் உரிமையில்லாது போனுற் குடியாட்சியே யில்லை. பிரதிநிதிகள் தொகையும் நாட்டின் பரப்பையும் மக்கள் தொகையையும், இடம், தொழில், மொழி, பழக்கவழக்கம், தேவை முதலியவற்றில் அவர்களுக்குள்ளிருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளையும் பெரும் பாலும் பிரதிபலிப்பதாய் இருத்தல்வேண்டும். குறைகிறைகளை அம்பலப்படுத்தி மனவேதனையைத் தீர்த்துவிடுதலும் குடி யாட்சியில் வேண்டிய ஒன்று. குறைகளைத் தீர்ப்பதற்கு வேண் டியவற்றைச் செய்யவேண்டியதும் எவ்வித ஆட்சிக்கும் வேண்

Page 92
170 ஆட்சி இயல்
டியதே. ஒருவகைத் தேவைக்கு விவாத மன்றமும் வேருெரு வகைத் தேவைக்குச் சிறு குழுக்களின் மூலம் அலுவல்களைச் செய்துமுடிக்கும் முறையும் பயன்படுகின்றன. உண்மையில் அமைச்சரவை பாராளுமன்றத்தின் கிருவாகக் குழுவே (Executive Committee). இதைப்பற்றிப் பிறிதோரிடத்திற் கூறு வோம். இதைவிட வேறு குழுக்களையும் பாராளுமன்றம் கிறுவி இவை மூலம் கிருவாக வேலைகளைச் செய்கின்றன. இலங்கைப் பிரதிநிதிகள் சபையும் வெவ்வேறு கருமங்களைப் பல வகைக் குழுக்களின் மூலம் செய்கின்றது. பின்வரும் குழுக்கள் பிரதி நிதிகள் சபையின் நடைமுறையில் இடம்பெறுகின்றன.
1. (pņš F6Duš5(g (Conmittee of the Whole House); liš தானிய ஆட்சிமன்றத்தில் முழுச்சபைக் குழு என்ற ஒன்றுண்டு. உண்மையில் இது குழு அன்று. ஒரு சில நோக்கங்களுக்கு முழுச் சபையுங் கூடும்போது கூட்டம் குழுமுறையில் நடைபெறுகிறது. வாசகர் வழக்கமாய் இருக்கும் பீடத்திலிருந்து வெளியேறுவார். இதற்கென 15u LD607th Glufip (g(p is 5266) ii (Chairman of Committees) தலைமை தாங்குவார். விவாதமுறைக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் இங்கிடம்பெரு. உறுப்பினர் விரும்பிய அளவிற்கு எத்தனை முறை யென்ருலும் பேசலாம். ஆட்சிக் கட்சியும் எதிர்க்கட்சியும் சிறிதாயினும் ஒன்றுக் கொன்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் அலு வலை நிறைவேற்றும். வருடாந்த வரவுசெலவுத் திட்டமும் மற்றும் பணத்தொடர்புள்ள திட்டங்களும் இக் குழுமுறை யிலேதான் ஆராயப்படும். w
2. Ggfsg (Select Committee): 2, Fai 358Fu? @yub 67 Briä. கட்சியிலுமிருந்து, தெரியப்பட்ட 7 உறுப்பினரைக்கொண்ட இக்குழுவே மிகவும் பொறுப்பு வாய்ந்தது. மற்றக் குழுக் களில் உத்தியோகபூர்வமாக இடம்பெறும் உறுப்பினரைத் தவிர ஏனைய உறுப்பினரைத் தெரிவது இதன் கடமை.
3. fa) up (5(g is 66ir (Standing Committees) gig 603T G. இவற்றில் ஒன்று A க் குழு , மற்றது B க் குழு. ஒவ் வொன்றிலும் தெரிகுழு தெரிந்த 30 உறுப்பினர் இடம் பெறுவர். சபை முழுவதும் குழுமுறையில் ஆராயாத சட்டப் பிரேரனேகள் எல்லாவற்றையும், வாசகர் தம்

இலங்கை ஆட்சிமுறை 17
விருப்பப்படி இக் குழுக்களிலொன்று ஆராய்வதற்கு விடு வார். குறித்த ஒரு பிரேரணையை ஆராய்வதற்கெனச் சாதாரண உறுப்பினருக்கு மேலதிகமாக மூன்று உறுப் பினரை நியமிக்கத் தெரிகுழுவுக்குரிமையுண்டு. இவற்றின் கூட்டங்களுக்கு நிறைவெண் 10.
4. rs2k) Luis L2.T 3.5g (Standing Orders Committee): (f60LJ
யின் கூட்டங்களும் அவற்றில் நடக்கும் அலுவல்களும் முறையாய் நடப்பதற்குச் சில விதிகளைப் பின்பற்றல் வேண்டும். கிகழ்ச்சி நிரலில் எதற்குப் பின் எது வரல் வேண்டும் ; ஒரு பிரேரணையைப் பற்றிய நடவடிக்கைகள் என்னமுறையிற் செல்லல் வேண்டும் என்று வரையறுப் பதற்கு விதிகளுண்டு. இதைப்போல வேறு அலுவல் களைப் பற்றியும் வரையறையான விதிகளுண்டு. உள்ள விதிகளை முறையாய்ச் செயற்படுத்துவதும், தேவை ஏற் படும்போது வேண்டிய விதிகளே ஆக்குவதற்கு வழி வகுத்தலுமே இக் குழுவின் பொறுப்பு.
வாசகரும், உபவாசகரும், குழுக்களின் உபதலைவரும் ஆட்சிக் கட்சி எதிர்க் கட்சிகளிலிருந்து தெரியப்பட்ட நால் வருமே இதன் உறுப்பினர்கள். தலைவர்-வாசகர்.
சபைக் குழு (House Committee) ; சபை உறுப்பினரின் உணவு, ஒய்வு, விடுதிவசதிபோன்ற செளகரியங்களைக் கண்காணித்தல் போன்றவையே இதன் பொறுப்பு. வாசகரே இதற்குத் தலைவர். இவரைவிட ஆட்சிக்கட்சி எதிர்க் கட்சிகளிலிருந்து தெரியப்பட்ட ஐவர் இதன் உறுப்பினராவர்.
gigs Trias 5 5600Taiga, gg (Public Accounts Committee) : இது 7 உறுப்பினரைக்கொண்டது. ஆட்சியமைப்பிலுள்ள வெவ்வேறு பகுதிகளின் வரவுசெலவுக் கணக்குகளைக் கணக் குப் பரிசோதனைத் தலைவர் உதவியுடன் ஆராய்வதே இதன் பொறுப்பு.
பொதுமக்கள் மனுக்(பிட்டிசம்)குழு (Petitions Committee) : வாசகரைத் தலைவராயும் அவருட்பட ஐவரை உறுப்பினராயும் கொண்டது இக்குழு. பொதுமக்கள் தம் குறைகள், தேவைகள் முதலியவற்றைப்பற்றிப் பிரதிநிதிகள் மூலம் அனுப்பும் மனுக்களை இக்குழுவே பார்வையிட்டு யாது செய்தல் வேண்டுமென்று
ஆ - 12

Page 93
172 ஆட்சி இயல்
அறிக்கை செய்யும். எந்த மனுவையும் சபைக்குச் சமர்ப்பிக்க முன்னர் வாசகரிடம் காட்டல் வேண்டும்.
தெரிகுழுக்கள் (Select Committees): இவற்றைவிட அமர்வு காலத்தில் தேவையேற்படும்போது ஒரு குறித்த நோக்கத்திற் காகத் தெரிகுழுக்களையும் சபை நியமிக்கும். சாட்சிகளை வரச் செய்து அவர்கள் வாய்ப் பிறப்பைப் பெறவோ, சாதனங் களைப் பார்வையிடவோ, வேண்டிய உரிமைகளை, சபை இத்தகைய குழுக்களுக்கு வழங்கும். குறித்த வேலை முடிந்து தம் அறிக்கைகளைச் சமர்ப்பித்ததும் இக் குழுக்களும் மறைந்துவிடும்.
குழுக்கள் மூலம் கருமஞ் செய்வதில் இன்னுமோர் நன்மை யுண்டு. மன்றத்தில் விவாதிக்கும்போது கட்சிகள் ஒன்றுக் கொன்று விட்டுக்கொடுக்கமுடியாது, போர்க்கோலம்பூண்டு, தாக்குவது மரபு. ஆனல், ஒரு சிறு அறையிற்கூடி ஒருவருக் கொருவர் கிட்ட இருந்து பேசும்போது போர்க்கோலம் பூணல் இலகுவாகாது. ஆட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரோ டொருவர் இருந்து தேநீர் பருகிச் சிற்றுண்டி யருந்திக்கொண்டே அலுவல் நடத்துவார் கள். இந்நிலையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது இலகுவாகும். ஒரு கட்சியையும் சேராத தனிப்பட்ட உறுப்பி னரும் தாம் விரும்பிய சிலவற்றை நிறைவேற்றுவதற்கும் இங்கு இடமுண்டு. யாவரும் கட்சி அபிமானத்தைச் சிறிது நெகிழ விட்டு உண்மை, நீதி, நியாயம் என்பவற்றின்படி 5டப்பதற் கும் இடம் ஏற்படும்.

அதிகாரம் 3
(fl LL6 LusisDai) (Law-making)
ஒவ்வொரு மன்ற அமர்வுக்குமுரிய காலத்தில் என் னென்ன செய்வதென்று ஆட்சிக்கட்சி எதிர்க்கட்சித் தலைவ ரோடு கலந்தாலோசித்துத் திட்டம் வகுக்கும். உள்ள நேரத் திற் பெரும்பாகம் ஆட்சிக்கட்சியின் அலுவல்களிலேயே செல வாகும். தனிப்பட்ட உறுப்பினர் ஏதாவது அலுவலைப்பற்றி நடவடிக்கை எடுப்பதற்கென ஒவ்வொரு அமர்விலும் சில நாட்கள் ஒதுக்கப்படும். இவர்கள் கொண்டுவரும் தீர்மானங் கள் நிறைவேறினலும் ஆட்சிக்கட்சி அவற்றை ஏற்றுச் செயற் படுத்தாதுபோனல் அவர்கள் செய்யக்கூடியது யாதுமில்லே. இடையிடையே யாதேனும் முக்கியமான ஒன்றைப்பற்றி விவாதிப்பதற்கு நேரம் ஏற்படுத்தல்வேண்டும் என்று எதிர்க் கட்சி கேட்கும். பெரும்பாலும் ஆட்சிக்கட்சி விட்டுக்கொடுக் கும். இடையிடையே ஆட்சிக்கட்சியின் போக்கைக் கண்டிப் பதற்கு ஆட்சிக்கட்சியில் தமக்கு கம்பிக்கையில்லையென்று ஒரு தீர்மானத்தை விவாதிக்க நேரம் வேண்டுமென்று எதிர்க்கட்னி கள் கேட்கும். வேண்டியதொகை உறுப்பினர் இதை ஆமோ தித்தால் ஆட்சிக்கட்சி இதற்கு கேரம் வகுக்கும். இவை சாதாரணமாய் நடப்பவை அல்ல. திபேத்திலிருந்த தலை லாமா வெளியேறியதற்குக் காலாயிருந்த நிகழ்ச்சிகளை விவாதிப்ப தற்கு நேரம் ஒதுக்கியதும், 1958ஆம் ஆண்டு, மேமாதம் ஏற்பட்ட கலகக் காலத்தில் ஆட்சிப்பீடம் கடந்துகொண்ட முறையைக் கண்டிப்பதற்கும் ஆட்சிப்பீடத்தில் நம்பிக்கை யில்லையென்னுந் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. (அமைச்ச ரவையைப் பற்றிக் கூறும்போது இவை சிறிது விரிவாய் ஆராயப்படும்.) ஆனல், அமைச்சரவை தயாரிக்கும் சட்டப் பிரேரணைகள் போன்றவற்றை விவாதித்து நிறைவேற்றுவ திலேயே ஒவ்வொரு அமர்வின் காலமும் பெரும்பாலும் செலவாகிறது.

Page 94
174 ஆட்சி இயல்
பிரதிநிதிசபையிலேதான் முக்கியமான பிரேரணைகள் ஆரம்பமாவது. நிறைவேற்ற விரும்பும் பிரேரணேயை வரை யறையாய்த் தயாரித்து முதல் சபை லிகிதரிடம் (Clerk of the House)ஒப்படைப்பார்கள். முதல்வாசிப்பிற்கு(சமர்ப்பணத்திற்குFirst Reading) திகதி குறிக்கப்படும். அத் திகதியில் நிகழ்ச்சி நிரலிற் குறித்த பிரேரணை இடம் பெறும். வாசகர் நேரம் வந்ததும் பிரேரணைக்குப் பொறுப்பான அமைச்சரின் பெய ரைக் கூப்பிட அமைச்சர் பிரேரணையைச் சமர்ப்பிப்பார். அப்போது பிரேரணையின் அடிப்படைக் கருத்தே வெளியா கும். விவாதம் நடவாது. இரண்டாவது வாசிப்பிற்கு (Second Reading) நாள் குறிக்கப்படும். முதலாம் வாசிப்பு நிறைவேறிய பின் பிரேரணையின் பிரதிகள் உறுப்பினருக்குக் கொடுக்கப்படும். இரண்டாம் வாசிப்பின்போதுதான் முறையான விவாதம் நடக் கும். பிரேரணையின் தனித்தனி அம்சங்களைப் பற்றி விவாதிப்பது முறையாகாது. பிரேரணையைத் தோற்கடிக்க விரும்புவோர் குறித்த பிரேரணையைச் சபை ஏற்க விரும்பவில்லையென்ருே அல்லது அடுத்த அமர்வுக்கு ஒத்திவைத்தல் வேண்டுமென்ருே ஒரு பிரேரணையை நிறைவேற்றப் பார்ப்பார்கள். ஆட்சிக்கட்சி யின் பிரேரணையானபடியால் தோற்கடிக்கும் முயற்சி கை கூடாது. கைகூடினுல் ஆட்சிக்கட்சி வெளியேற வேண்டி வரும். விவாதத்திற் பிரேரணையின் அடிப்படை நோக்கம் ஆராயப்படும். வாசிப்பு நிறைவேறியபின்னர் பிரேரணைக் குழு வின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும். பெரும்பாலும் A, B, குழுக் களில் ஒன்றுக்கே அனுப்பப்படும். ஆனல், பணத்தொடர்பான பிரேரணைகள், முழுச்சபைக் குழுவுக்குப் போதல்வேண்டும். வேறு முக்கிய பிரேரணைகளும் இக் குழுவுக்கு விடப்படுவ துண்டு. அல்லது ஒரு தெரிகுழு ஆராய்தல் வேண்டும் என்று தீர்க்கப்படும். இப்போதுதான் நுண்ணிய ஆராய்ச்சி நடக்கும். பிரிவு பிரிவாய் நோக்கி, குறைவுகள் நிறைவுகளை ஆராய் வார்கள். திருத்தங்களும் இப்போதுதான் நடைபெறும். ஆராய்ச்சி முடிந்ததும் திரும்பச் சபைக்கு வரும். இதனை யறிக்கைநிலை(Report Stage)யென்பர். இது முடிந்தபின் மூன் ரும் வாசிப்பு (Third Reading) நடக்கும். இப்போதும் திருத் தப் பிரேரணைகள் பெரும்பாலும் இடம் பெரு. பொருளே மாற்ருத, சொல்மாற்றங்களுக்கிட முண்டு. அவசரமாய் ஒன்று செய்யவேண்டுமென்ருல் எல்லா நடவடிக்கைகளையும் ஒரே நாளில் ஒன்றன்பின் ஒன்ருய்ச் செய்துவிடலாம். ஆனல், குழு ஆராய்ச்சிபோன்றன நடைபெரு.

சட்டமியற்றல் 175
இதன்பின் பிரேரணை மூதவைக்குப் போகும். அங்கும் இதேமுறையில் விவாதமும் நடக்கும். மூதவையிற் பிரேரணை நிறைவேறினல் மன்னர் சம்மதத்திற்கு ஆள்பதிநாயகத்திடம் அனுப்பப்படும். அவர் சம்மதம் தெரிவித்ததும் சட்டமாய் விடும். மூதவை ஏற்காதுவிட்டால அல்லது அது பிரதிநிதிகள் சபை விரும்பாத திருத்தங்களைச் செய்தால், பிரதிகிதிசபை தன் கருத்தைச் சாதித்துவிடுவதற்கு இலங்கை ஆட்சிச் சட்டத்தின் படி உரிமையுண்டு. (மூதவையைப் பற்றிக் கூறிய இடத்திற் பார்த்து இதன் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.) மூதவை யில் முதல் உருவெடுக்கும் பிரேரணைகளைப் பற்றியும் இந்த நடவடிக்கைகள்தான் பெரும்பாலும் எடுக்கப்படும். மூதவை யில் நிறைவேறிய எதையும் ஏற்காதுவிடும் உரிமை பிரதிநிதி கள் சபைக்குண்டு.
மூதவை இதன் அமைப்பைப் பற்றியும் அதிகாரத்தைப் பற்றியும் சோல்பெரித் திட்டத்தைப் பற்றிக் கூறும்போது கூறியிருக்கி ருேம். சோல்பெரித் திட்டத்தின் மூதவைக்கும் சுயவாட்சித் திட்டத்தின் மூதவைக்கும் அதிகாரத்திலோ அமைப்பிலோ வேற்றுமையில்லை.
இலங்கைப் பாராளுமன்றத்திற்கு 2 சபைகள் வேண்டும் என்று சோல்பெரித் திட்டம் எடுத்துக்கூறியது. இன்றைய இலங்கையைப் பொறுத்தமட்டில் சோல்பெரிக்குழு மூதவை வேண்டுமென்பதற்குக் கூறிய நியாயங்கள் வலியிழந்துவிட் டன. சிறுபான்மை இனங்களுக்கு மூதவை மூலம் பாதுகாப்பு ஏற்படுமென்பது பொய்த்துப் போயிற்று. ஆள்பதிநாயகத் துக்குத் தனியுரிமைகள் வைத்து ஆக்கிய சோல்பெரித் திட் டம் சிறிது காலந்தான் நடைமுறையிலிருந்தது. அக்காலம் மூதவையினுற் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வரமுடி யுமோவென்றும் பார்ப்பதற்குப் போதாது. ஆணுற் சட்ட மென்னவாயிருந்தபோதிலும் ஆள்பதிநாயகம் அமைச்சர்களின் சொல்லைப் புறக்கணித்து விரும்பியவரை நியமித்திருப்பா ரென்று நம்புவதற்கிடமில்லை. பிரதிநிதிகள் சபைத் தெரிவு முறையிலும் கட்சிச் செல்வாக்கில்லாதவர்கள் இடம்பெற்றிருத் தல் முடியாது. பேரளவில் என்றலும் ஆள்பதிநாயகத்துக் கிருந்த அதிகாரம் சுயவாட்சி வந்தபின் இல்லாமற் போயிற்று: ஆணிலப்பத ஆட்சியில் ஆள்பதிநாயகம் அமைச்சர்களின்

Page 95
176 ஆட்சி இயல்
ஆலோசனையின்படி நடக்கவேண்டியவரே. மூதவை உறுப் பினர்கள் பிரதிநிதிசபையால் தெரியப்பட்ட பின்னரே தான் ஆள்பதிநாயகம் தாம் நியமிப்போரை நியமித்தல் வேண்டு மென்று சட்டமிருக்கின்றது. பிரதிநிதிகள் சபையின் தெரிவில் இடம் பெருத இனங்கள், வகுப்புக்களின் சார்பாக மூதவைக்கு ஆள்பதிநாயகம் யாரையும் நியமிப்பதற்காகவே இச் சட்டம் கிறுவப்பட்டது. ஆனல், இதனுற் பயன் யாதுமில்லை. முக்தி கிய மித்தாலென்ன பிந்தி நியமித்தாலென்ன முதலமைச்சர் விரும் பியவரையே நியமிக்கவேண்டி நேரிடும். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கும் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபை கிறைவேற்றினுல் மூதவை அதை எதிர்த்தல் முடியாது. பிரதிநிதிகள் சபையிலிருக்கும் கட்சிப்பலந்தான் பெரும்பாலும் முதவையிலுமிருக்கும். அப்படித்தான் இராதுபோனுலும் மூதவை எதைத்தான் செய்தபோதிலும் பிரதிநிதிகள்சபை தாம் விரும்பியதை ஈற்றிற் செய்துமுடித்துவிடலாம். சிறிதுகால தாமதம் ஏற்படல்கூடும்; அம்மட்டுந்தான். ஆதலால் சிறு பான்மை யினங்களுக்கோ வகுப்பினருக்கோ மூதவை பாது காப்பளிக்குமென்பது உண்மையன்று. இந்த கியாயத்தைவிட மூதவை என்ற ஒன்று இருப்பதற்கு கியாயங்களுண்டா? பெரும் பாலும் எடுத்தாளப்படும் நியாயம் ஒன்றுண்டு. இரண்டு சபைகள் உள்ள பாராளுமன்றம் இருந்தால் எவ்விடயத்தை யும் இருமுறை நுணுகி ஆராய வாய்ப்புண்டு. அவசரமாயோ ஆத்திரத்தோடோ யாதுஞ் செய்ய இடமிராது. பொதுமக்கள் தெரிவால் ஏற்படுஞ் சபை, பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் அதை இழந்துவிடாது காப்பாற்றுவதற்காக வும் நாட்டிற்குப் பின்னர் தீங்கு விளேக்கக்கூடியவற்றையும் செய்யக்கூடும். பொதுமக்களின் வற்புறுத்தலினுலே பிரதிநிதி கள் தாமே பிழையென்றுணர்வதையுஞ் செய்தல்கூடும். ஆழ்ந்த விருப்பு வெறுப்புப்போன்ற உணர்ச்சிகளினல், சித் தத் தெளிவுடன் தாம் செய்வதின் நன்மை தீமைகளை உய்த் துணரமுடியா கிலே ஏற்படல்கூடும். இதன் விளைவாக காட் டிற்கே தீங்கு விளைக்கும் சட்டங்கள் நிறைவேறல்கூடும். பிரதி நிதிகள் சபைத் தெரிவுமுறையிலிருந்து வேருன ஒருமுறை யில் தெரிந்த சபையொன்றிருப்பின் இக் குறைகளை ஒரளவிற் காயினும் நிவிர்த்திபண்ணக்கூடுமென்று கருதுவோருமுளர். பிறப்பையொட்டியேற்படும் மூதவையை ஆதரிப்பார் யாரும் இன்று எங்காயினும் இருப்பது ஐயம். பிரித்தானிய நாட்டிலும் பிரபுக்கள் சபை இக்காலப் போக்குக்குப் பெரிதும் முரணன

சட்டமியற்றல் 177
ஒன்றென்பதைப் பலரும் ஒத்துக்கொள்கின்றனர். பண்டை நாள் தொடக்கம் இருந்துவந்தபடியாலேதான் இந்தமுறை இன்றும் இருக்கிறது. அதைத் திருத்தியமைக்கும் முயற்சி களும் தோன்றிப் பிறகு நூர்ந்து போகின்றன.
சமூகத்திற்குச் சிறந்த தொண்டாற்றியவர்கள், அறிவுத் துறைகளில் மேம்பாடடைந்தவர்கள், வணிகம், கைத்தொழில் போன்றவற்றில் முதன்மை பெற்றவர்களைக்கொண்ட ஒருசபை இருந்தால் அதனுல் நாட்டின் ஆட்சிக்கு நன்மை வரும் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் தத்தம் துறைகளில் மேம் பாடடைந்தவர்க ளென்றபடியால் ஆட்சித்துறையிலும் இவர் களுக்கு விசேட ஆற்றலோ அறிவோ இருக்கவேண்டுமென் பது பெறப்படவில்லை. ‘இவ்வகையில் அமைந்த ஒரு சபை உறுப்பினரின் வகுப்புக்களினதோ சமூகங்களினதோ நலனையே வளர்க்க முயலுமேயன்றிப் பொதுமக்கள் தேவைகளை நோக்கா? என்று இதை எதிர்ப்போர் கூறுவர்.
குடியாட்சி பொதுமக்கள் தேவைகளைத் தீர்க்கப் பொது மக்கள் தாமே ஆக்கும் ஆட்சிமுறையென்றல் அந்தப் பொது மக்களைக் காக்கும் கடமையோ உரிமையோ யாருக்கிருக் கிறது? யாரிடமிருந்து காப்பது? பொதுமக்களை அவர்களின் அவசரபுத்தி, பொறுமை யின்மை போன்றவற்றிலிருந்து காத் தல் என்பதுதான் பொதுவாகக் கிடைக்கும் மறுமொழி. இதைப் பொதுமக்கள் ஏற்கார்-இருக்கும் எந்த ஆட்சிமுறை யிலும் சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் இடமிருக்கிறது. எப் பிரேரணையையும் மூன்று முறை சமர்ப்பிக்கும் முறை இருப்ப தால் இவற்றிற்கிடையில் நடக்கும் குழு ஆராய்வு போன்றவற் ரூல் பிரேரணையின் நன்மை தீமைகளைப் பெரும்பாலும் அறிந்து விடலாம். பிரேரணையைத் தயாரிக்குமுன்னும் ஆராய்வு நடக் கும். விவாதத்தில் கன்மை தீமை எடுத்துக் காட்டப்படும். இவை யாவற்ருலும் நன்மை ைேம பெரும்பாலும் வெளியாகி விடும். மக்கள் பெரும்பாலும் புதிய கொள்கைகளையோ, முறைகளையோ, விரைவில் வரவேற்பதில்லை. இங்கிலாந்திலே தொழிற்கட்சி 30 ஆண்டுவரையில் ஆட்சித்துறையில் உழைத்த பிற்பாடுதான் பொதுமக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கி யது. இலங்கையிலும் சர்வசன வாக்குரிமை ஏற்பட்டு ஏறக் குறைய 30 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஓர் இடதுசாரி ஆட்சிப்பீடம் தோன்றவில்லை. புதுமுறைகளோ, கொள்கை களோ தோன்றியவுடன் செல்வாக்குப் பெறுவது இயல்பல்ல.

Page 96
178 ஆட்சி இயல்
படிப்படியாயே இவற்றை மக்கள் அறிவார்கள். இவற்றைப் பரப்ப விரும்புவோரும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கா கத் தம் கொள்கைகளிற் சிறு சிறு மாற்றங்களைச் செய்தல்கூடும். காலப்போக்கிற் கொள்கைகளும் ஓரளவிற்கு மாறிவிடும். பொதுமக்களும் மாறிவிடுவர். புரட்சிகள் நடப்பதில்லையென்று கூறுவதற்கில்லை. புரட்சிகள் இடையிடையே நடந்திருக்கின் றன. இனிமேலும் நடத்தல்கூடும். பாராளுமன்ற ஆட்சி (Parliamentary Government) வலியிழக்கும்போதோ ஆட்சிப் பீடம் பொதுமக்களின் குரலுக்குச் செவிசாய்க்காதபோதோ தான் புரட்சி தோன்றும். பாராளுமன்றமுறையிற் புரட்சி வரு தல் அரிதினும் அரிது. சட்ட ஆட்சியை மதியாத மனப் பான்மையிலிருந்துதான் புரட்சி தோன்றும். ஆனபடியால் பாராளுமன்றங்கள் புரட்சிகரமான எதையுஞ் செய்யுமென்று கூறுவது பொருத்தம்போலத் தோன்றவில்லை.
ஒருநாட்டின் சமூக நிலை, பொருள் நிலை, அறிவு நிலை போன்றவற்றிலிருக்கும் குறைபாடுகளின் திரண்ட பலனே LJ'9. 53a u (Russian Revolution), 19J. TGörgull LT G. (French Revolution) போன்றவற்றின் வரலாற்றிலிருந்து நாம் அறியு முண்மை யொன்றுண்டு. இவையிரண்டும் தலைமுறை தலை முறையாய் இந்த நாடுகளின் வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வந்த ஊழல்களின் விளைவேயன்றி யாரோ ஒருவரோ பலரோ வேண்டுமென்று வருவித்தவையல்ல. புரட்சிகள் பெரும்பாலும் யாரும் திட்டம்போட்டுச் செய்யக்கூடியவையல்ல. ஆதலால் இரண்டு சபைகள் உள்ள பாராளுமன்றத்திற் புரட்சிவராது தடுக்கலாமென்பது சரியன்று. பிரான்சியப் புரட்சி நடந்தபோது அங்கு மூன்று சபைப் பாராளுமன்றம் இருந்தது. வருகிற புரட்சியை இரண்டல்ல மூன்று சபைகள் படைத்த பாராளு மன்றத்தாலும் தடுத்தல்முடியாது. வராத புரட்சியை ஒரு சபைப் பாராளுமன்றம் வரப்பண்ணுது.
இலங்கையில் மூதவை இதுவரை 10 ஆண்டிற்கு மேல் இருந்துவந்திருக்கிறது. இதில் நடக்கும் விவாதங்களோ செயல் களோ இது இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தை வலி யுறுத்தக் கூடியனவாயில்லை. அறிவாளிகள் அநுபவசாலிகள் வெவ்வேறு துறைகளிற் சிறந்த திறமைவாய்ந்தவர்கள் நாட்டி லிருப்பர். ஆனல்,அவர்கள் தேர்தல் அரங்கை அணுகவிரும்பாத வராயிருத்தல்கூடும். தேர்தற் செலவிற்கு வேண்டிய பணம்

சட்டமியற்றல் 179
இல்லாதவர்களாயிருக்கலாம். இப்படிப்பட்டவர்களின் திறமை களை நாட்டுக்குப் பயன்படுத்துவதற்கு மூதவை பயன்படும் என்றும் கூறப்பட்டது. எத்திறமையும் என்ன அநுபவமும் இருந்தாலும் போதாது. ஆட்சிக்கட்சியை ஆதரிப்போரே பெரும்பாலும் மூதவையி லிடம்பெறுவர். பிரதிநிதிகள்சபை யின் கட்சிப் பலத்தையே மூதவையும் பிரதிபலிக்கிறது. பிரதி நிதி சபையில் நடந்த வாதப் பிரதி வாதமே மீண்டும் மூதவை யில் நடக்கும். ஆகையால் மூதவை ஒன்று வேண்டுமோ வேண்டாமோ என்ற விவாதம் ஆட்சியியல் வட்டாரங் களில் நடந்துகொண்டிருக்கிறது.
பிரான்சு நாட்டின் ஆட்சியியல் மேதையான அபே சியஸ் (Abbe Styes) என்பவர் ** இரண்டாவது மன்றம் மக்கள் பிரதிநிதி களுடன் இணங்கினுல் அணுவசியம். அவர்களோடு முரண் பட்டால் அது தீங்கிளைக்கும் ? என்று கூறியிருக்கிறர். இவர் கூற்றின்படி இலங்கை மூதவை அனுவசியம். பெரும்பாலும் பிரதிநிதிகள் சபை செய்வதை ஆமோதித்தே வந்திருக்கிறது மூதவை.
இங்கிலாந்தின் பிரபுக்கள்சபை பிரதிகிதிகள் சபையுடன் பலமுறை முரண்பட்டு பொதுமக்களின் விடுதலைக்கும் முன் னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுவந்தது. 1832இல் பிரதிநிதித் தொகுதிகள் வரையறை, வாக்குரிமை வரையறை போன்றவற்றைப் பொதுமக்கள் சார்பில் திருத்தியமைக்கும் ஒரு திட்டம் மக்கள் சபையில் நிறைவேறியது. பிரபுக்கள் சபை அதைத் தீவிரமாயெதிர்த்தது; நாட்டிலே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பிரபுக்கள் விட்டுக்கொடுப்பதாய்த் தெரியவில்லை. திட்டத்திற்குச் சார்பான பிரபுக்களைத் திட்டம் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு மன்னர் மூலம் நியமித்துத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமானபோதுதான் பிரபுக் கள் விட்டுக்கொடுத்தனர்.
அதற்குப்பின் 1909இல் மக்கள் சபை நிறைவேற்றிய முற்போக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் பிரபுக்கள் ஏற்க வில்லை. இருசபைகளுக்கும் பெரும் முரண்பாடு தோன்றிற்று. முதலமைச்சர் மன்னரைக்கொண்டு மக்கள் சபையைக் கலைப் பித்துப் பிரபுக்கள் சபையின் அதிகாரத்தை மட்டத்தட்ட வேண்டுமென்னும் பிரச்சினையையே வாக்காளர்முன் சமர்ப்பித்

Page 97
18O ஆட்சி இயல்
துப் பொதுத்தேர்தல்மூலம் வாக்காளர் ஆதரவைப் பெற்றர். புது அமைச்சரவை பிரபுக்கள் சபையின் அதிகாரத்திற்குச் சில முக்கிய எல்லைகளை வரையறுக்கும் ஒரு சட்டத்தை மக்கள் சபையில் நிறைவேற்றியது. பிரபுக்கள் சட்டத்தை எதிர்த்த னர். 1832இல் நடந்ததுபோலவே சட்டத்தை நிறைவேற்றுவ தற்கு வேண்டியதொகைப் பிரபுக்களை நியமித்தல்வேண்டு மென்று அமைச்சரவை மன்னருக்கு வற்புறுத்திற்று. மன்னரும் இணங்கினர். பிரபுக்கள் விட்டுக்கொடுத்தனர். அத்துடன் பிரபுக்கள் சபையின் ஆதிக்கம் குறைந்தது. அதற்குப் பின்னும் 1947இல் பிரபுக்கள் சபையின் ஆதிக்கம் மீண்டும் குறைக்கப்பட்டது.
இன்று அதன் செல்வாக்கும் அதிகாரமும் பெரும்பாலும் அகன்றுவிட்டன. ஆட்சிக்கட்சிக்குப் பொருளுதவி செய்தோ ருக்கு நன்றி காட்டுவதற்கும், ஏதேனும் ஒரு துறையில் மேம்பாடெய்தியோரைக் கண்ணியப்படுத்துவதற்கும் பொது மக்கள் சபையில் உயர்பதிவியிலிருந்தோர் இளைப்பாறியும் இடையிடையே ஆட்சி அலுவல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப் பளிப்பதற்குமே பிரபுக்கள்சபை பெரும்பாலும் பயன்படுகிறது. ஆங்கிலேயர் பெரும்பாலும் பழைமையைப் பேணும் பாங் குடையவர்கள். யாதேனும் ஒன்று பயனற்றுப் போனுலும் அதை முற்ருய் ஒழித்துவிட விரும்பார்கள். மேலும் பிரித்தா னியநாட்டிற் பழைமையைத் தழுவும் கட்சியொன்றுண்டு ; அது செல்வர், உயர்குடிப் பிறந்தோர், நிலம்புலமுடையோர் ஆதரவைப் பெறும் கட்சி. பிரபுக்கள் சபை இக் கட்சியையே என்றும் ஆதரித்து வந்தது. கட்சியும் பிரபுக்கள் சபையை ஆதரித்து வந்தது; வருகிறது. ஆதலால் பிரித்தானிய பிரபுக் கள் சபை அற்றுப்போமென்று எண்ணுவதற்கில்லை. இலங்கை யிலே இந்த நியாயங்கள் எதுவும் இல்லை. மூதவைக்கும் பழைமையின் கவர்ச்சியில்லை; எந்தக் கட்சியாவது அதில் அபிமானங் காட்டுவதாயுமில்லை. ஆகையால் இலங்கையின் மூதவை நிலைக்குமென்று சொல்வதற்கில்லை.

அதிகாரம் 4
I5(56).JITölb (The Executive)
முதலமைச்சர் : கட்சிமுறையாட்சியிற் பாராளுமன்றத்திற் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே முதலமைச்சராய் வரு வது இயல்பு. ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மை பெருது போனுல் இரண்டு மூன்று கட்சிகளின் கூட்டாட்சி (Coalition Government) ஏற்படும். கட்சிகளின் சேர்க்கையால் உருவாகும் கூட்டுக் கட்சியின் தலைவரே முதலமைச்சராவார்.
முதலமைச்சரைத் தெரிவது பெயரளவில் ஆள்பதிநாயகமே. சட்டப்படி ஆள்பதிநாயகம் மன்னர் பிரதிநிதி; பெரும்பான்மைக் கட்சியின் தலைவரைத் தெரியாது விட அவரால் முடியாது. ஆனல் திட்டவட்டமான பெரும்பான்மை எக்கட்சிக்கும் இல்லாத நிலையிலோ, தலைவர் யாரென்பதைப் பற்றி யாதேனும் ஐயத்திற் கிடமிருந்தாலோ ஆள்பதிநாயகம் தன் சொந்தப் பகுத்தறிவின் படி நடக்கலாம். கட்சிகள் உறுதிவரையறை பெருத நிலையில், ஆள் பதிநாயகமே யார் முதலமைச்சராக வேண்டுமென்று தீர்த்தல் முடியும். அவர் யாருடனும் கலந்தாலோசிக்கலாம். பெரும்பாலும் முதலமைச்சராயிருந்தவருடன் ஆலோசிப்ப துண்டு. மற்றும் ஆட்சி இயலில் அனுபவம், செல்வாக்குள்ள பேர்வழிகளுடனும் ஆலோசிப்பதுண்டு. ஆருக்குக் கூடிய ஆதரவுண்டென்று உறுதியாய்த் தீர்க்கமுடியாத நிலையில், ஆள்பதிநாயகம் நியமிப்பவருக்கு முன் போதிய ஆதரவில்லாத போதும் நியமனத்தின் பிறகு வேண்டிய ஆதரவு ஏற்படல் கூடும். ஒருவர் முதலமைச்சராய் நியமனம் பெற்றபிறகு அங்கோ இங்கோ என்று ஊசலாடிய பேர்வழிகள் நியமனம் பெற்றவரை ஆதரிக்க விழுந்து கட்டி முன்வருவார்கள்.
நியமன உறுப்பினர் நியமனம் பெறுமுன், எக் கட்சிக்கா வது பெரும்பான்மையில்லாத நிலையிலும் ஆள்பதிகாயகத்திற் குச் செல்வாக்குண்டு. தாம் விரும்பிய கட்சிக்குப் பெரும் பான்மையை யுண்டாக்கி அதன் தலைவரை முதலமைச்சராக்கி விடலாம்,

Page 98
182 ஆட்சி இயல்
ஆனல் உறுதியான கட்சியமைப்பும், தெளிவான பெரும் பான்மையுமிருந்தால் ஆள்பதிநாயகம் செய்யக்கூடியது ஒன்று தான் : பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக் கட்சித் தலை வரை முதலமைச்சராக்க வேண்டியதுதான். ஆள் பதிநாயகத் தின் சேவைக்காலம் நிறைவுற அவரைத் திரும்பவும் நிய மிப்பதோ, விடுவதோ என்பதைப் பெயரளவில் மன்னரே தீர்மானிப்பதென்றலும், உண்மையில் முதலமைச்சரே தீர்ப் பது. மற்ற அமைச்சர்களைப் பெரும்பாலும் அவரே தெரிவர். செல்வாக்குள்ள தலைவர் தமக்குக் குறித்த பதவி வேண்டு மென்று பெற்றுக்கொள்வது முண்டு. அமைச்சரவை யாட்சி முறையாய் நடப்பது பெரும்பாலும் முதலமைச்சரின் செல் வாக்கிலே தங்கியிருக்கும். அமைச்சருக்குள் முரண்பாடு வராது பார்த்தல் வேண்டும் ; சட்டமன்றத்தின் மூலம் தாம் விரும்பியதைச் செய்தல் வேண்டும் ; கட்சியின் அபிமானத் தைப் பெறல்வேண்டும் ; வாக்காளர் நம்பிக்கையைப் பெறல் வேண்டும் ; ஓரளவிற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பெறல்வேண்டும் ; வெளிநாடுகளில் தம் நாட்டின் செல் வாக்கை வளர்த்தல் வேண்டும்; அதுதான் முடியாதுபோனு லும் இருக்கும் செல்வாக்கை இழக்காது பாதுகாத்தல்வேண் டும் ; ஏனைய அமைச்சர்கள் என்ன செய்கிறர்கள் என்றறி தல் வேண்டும்; மற்ற அமைச்சர்களுக்குரிய துறைகளில் யாதாவது குறையிருந்தால் அதைத் தீர்த்தல் வேண்டும்; வெளியுலகைப் பொறுத்தமட்டில் நாட்டின் தலைவராகவும் பிரதிகிதியாகவும் கடமையாற்றல் வேண்டும் ; இவை யாவற்றை யும் திறம்படவும் செய்தல் வேண்டும் ; இவற்றை அட்டவணைப் படுத்தவே முதலமைச்சரின் பொறுப்பு எம்மாத்திரமான ஒன் றென்பது புலப்படும். இவை யாவையும், அதுவும் காட்டின் வாழ்க்கையில் ஆட்சிப்பீடத்தின் ஈடுபாடு நாளுக்குநாள் கூடி வரும் இக்காலத்தில், யாரும் ஒரு தனியாள் செய்துமுடிக்கலா மென்று சொல்லுதல் முடியாது. தானே செய்யாதுபோனுலும் தகுதிவாய்ந்தவர்களைத் தெரிந்து அவர்களைக்கொண்டு செய் வித்தபோதிலும், முழுப்பொறுப்பும் முதலமைச்சருக்கே உரியது.
அமைச்சரவை அமைச்சரவை பெரும்பாலும் பிரித்தா னிய முறையைத் தழுவியே ஏற்பட்டது. பிரித்தானியமுறை யில் மன்னருக்கிருக்கும் உரிமை கடமைகள் பெரும்பாலும் ஆள்பதிநாயகத்துக்கிருக்கின்றன. பெயரளவில் அவரே ஆட்சி யதிபதி ; ஆட்சி நடவடிக்கைகள் யாவும் அவர் செய்வதென்

நிருவாக்ம் 183
பதே சம்பிரதாயம். சட்டப்படியும் ஆட்சித்துறையில் நடப்பன யாவும் மன்னர் பிரதிநிதியென்ற முறையில் அவர் ஆணையில் நடக்கின்றன என்றே கருதப்படுகிறது. பிரித்தானிய நாட்டில் மன்னர் பேரில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் யாரோ ஒரு அமைச்சர் பொறுப்பு. இலங்கையிலும் அப்படியே. மன்னர் அங்கு செய்யுங் கடமைகளை யே பெரும்பாலும் ஆள்பதிநாய கம் இங்கு செய்வார்.
ஆட்சிக்கட்சியினதோ, கட்சிகளினதோ அமைச்சர்கள் மூதவையிலோ பிரதிநிதிகள் சபையிலோ உறுப்பினராயிருத் தல் வேண்டும். பாராளுமன்றத்திற் பெரும்பான்மையுள்ள கட்சியோ கட்சிகளோ தம் நோக்கங்களை நிறைவேற்றும் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்புவிக்கும். அதை ஒரு குறித்த கால எல்லைக்குட் செய்துமுடிப்பதே அவர்கள் பொறுப்பு. இவர்கள் யாவருக்கும் பெரும்பாலும் ஆட்சியலு வல்களிற் கருத்துவேற்றுமை யில்லையென்றே கருதப்படுகிறது. இன்று ( 1961) கடமையாற்றும் அமைச்சரவையைத் தவிர இதுவரை இலங்கையில் ஆட்சி நடத்திய எந்த அமைச்சரவை யைப்பற்றியும் இதனே முற்ருய் ஏற்றுக்கொள்ளல் முடியாது. முதலிரண்டு அமைச்சரவைகளிலும் பிணக்குகள் தோன்றிய போதும் பிளவேற்படாதபடி ஒருவகையாய்ச் சமாளித்துவிட் டனர். மூன்றவது சபையிலே உலகறிந்த வேற்றுமை ஆட் சிப்பீடத்திலிருந்தது. பூநீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும், புரட்சிவாத சமசமாஜக்கட்சி (V. L. S. S. P) யைச் சேர்ந்த அமைச்சர்களுக்குமிடையிற் பலத்த முரண்பாடு பலமுறை தோன்றி 1959ஆம் ஆண்டு மே மாதத்தில் உச்ச நிலையையடைந்தது. பின்கூறிய கட்சித் தலைவரான பிலிப் குணவர்த்தணுவை வெளியேற்றினுலன்றித் தாம் வெளியேறி விடுவோமென்று முன் கூறிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கள் பதின்மர் முதலமைச்சருக்குத் தெரிவித்தனர். பலநாட்க ளாய் அமைச்சரவையில் இருகூறினருக்கும் பிணக்கு ஏற்பட்டு முடிவுருதிருந்தது. முதலமைச்சர் சமரசம் ஏற்படுத்த எடுத்த முயற்சி கைகூடவில்லை. ஈற்றில் இடதுசாரி அமைச்சர்கள் இருவரும் அவர்களே ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆட்சிக்கட்சியிலிருந்து வெளியேறினர். இவை யாவும் உணவு அமைச்சர் கொண்டுவந்த கூட்டுறவு வங்கிப் பிரேரணையி லிருந்தே தோன்றியன. உண்மையிற் கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவையும், அதை ஒட்டிய ஒழுங்கும் இருந்திருந்தால்

Page 99
184 ஆட்சி இயல்
இவைபோன்றவை நடப்பதற்கிடமில்லை. கூட்டுப் பொறுப்பின் பிறப்பிடமாகிய இங்கிலாந்தில் நடப்பதைச் சிறிது ஆராய்ந்தால் நம் கூற்றின் உண்மை புலப்படும். அமைச்சரவை செயலாற்று வதற்குப் பின்வரும் முறை இங்கிலாந்திற் கண்டிப்பாய்ப் பின் பற்றப்படுகிறதென்று பேராசிரியர் ஜென்னிங்ஸ் கூறுகிருர் :
1. அமைச்சரவையுறுப்பினர் யாவருக்கும் 5 நாள் அறிவித் தல் கொடுத்தன்றி எந்த அலுவலாவது அமைச்சரவைக் குக் கொண்டுவருதல் கூடாது. அப்படிச் செய்வதாயின் முதலமைச்சரின் அனுமதி பெற்றே செய்தல்வேண்டும். ஆட்சித்துறையில் வரும் திட்டங்கள் பெரும்பாலும் ஒன் றுக்குமேற்பட்ட அமைச்சர்களின் ஆட்சித்துறைகளுக்குரி யனவாயிருக்கும். ஆகையால் ஒவ்வொரு அமைச்சரும் தன் அமைச்சு (Ministry) அலுவலருடன் குறித்த திட்டத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்தல் வேண்டும். இதற்காகவே முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டு மென்ற விதி அமைந்தது.
2. கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்துடனும், அதைப்பற் றிய விளக்கம் விரிவாக எழுதிய குறிப்புத் தாளொன்று ஒவ்வொரு அமைச்சருக்கும் கிடைத்தல் வேண்டும். அப்படி யானுல் அவர்களின் அமைச்சு அலுவலரும் திட்டத்தை ஆராயமுடியும்,
3. ஒன்றுக்குமேற்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய திட்டங்கள் கொண்டுவர முன் குறித்த அமைச்சுக்களுக்கு அறிவித்தல் கொடுத்து அவற்றின் கருத்தை அறிதல்வேண் டும். பொதுவாகக் குறித்த அமைச்சுக்களின் சம்மதத் துடன்தான் திட்டங்கொண்டு வரல்வேண்டும். சம்மதம் ஏற்படாதுபோனுல் அமைச்சரவைக்குக் கொண்டுவந்து பிணக்கைத் தீர்த்தல்வேண்டியிருக்கும்.
4. பணத்தொடர்பு- வரவோ செலவோ-உள்ள திட்டம் எதுவும் நிதி அமைச்சு ஆராய்ந்த பிறகே அமைச்சரவைக்கு வரல்வேண்டும்.
கூட்டுப் பொறுப்பென்றது பேச்சளவில் இருத்தலிற் பயனில்லை; செயலிலும் இருத்தல்வேண்டும். இருப்பதற்கு வேண்டிய வழிவகைகளும் இருத்தல்வேண்டும்.

நிருவாகம் 185
அமைச்சரவை ஆட்சியில், தனி அமைச்சர் தாம் நினைத்த படி திட்டம் செய்யவோ நிறைவேற்றவோ இடமில்லை. திட் டம் உருவாகமுன் எல்லா அமைச்சர்களும் அதன் பொருளே யும் நோக்கத்தையும் அறிதல்வேண்டும். அறிந்து, கலந்தாலோ சித்து வகுத்த திட்டம் அமைச்சரவையின் ஆதரவுடன் சமர்ப் பிக்கப்படும். இதுவே பிரித்தானியமுறையாகும். இம் முறையோ, இதைப்போல அமைச்சர்களுக்கு முன்னறிவித்த லும் கலந்தாலோசிப்பதற்கு வாய்ப்பும் அளிக்கும் வேறு முறையோ, கூட்டுப் பொறுப்புக்கு இன்றியமையாத ஒன்று. இதுபோன்ற ஒழுங்கு இலங்கையிலிருந்திருந்தால் மேற்கூறிய தகராறு தோன்ற இடமிருந்திராது. உணவு அமைச்சரின் திட் டம் அமைச்சரவைக்கு வரமுன்னரே அதைப்பற்றிய விளக் கக் குறிப்பைத் தனித்தனி அமைச்சர்கள் தத்தம் அமைச்சு அலுவலர் உதவியைக் கொண்டாராய்ந்திருப்பர் ; பிற்பாடு அமைச்சரவையிலாராய்ந்திருப்பர்.
இங்கு முரண்பாடு தோன்றினுற் சமரசம் செய்திருக்க லாம்; சமரசம் ஏற்படாதுபோனுற் சட்டத்தை ஒத்திவைத் திருக்கலாம். எவ்வாருயினும் சமரசம் உருப்படாது போய்க் கட்டாயமாய் அமைச்சர் வெளியேற வேண்டுமென்ருல் அதற் குரிய முறையில் வெளியேறியிருக்கலாம்.
காட்டிலேற்பட்ட குழப்பங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடக் திருக்க வேண்டியதில்லை. நாட்டிலும் பாராளுமன்றத்திலுமிருக் கும் ஆதரவாளர் கொடுக்கும் பொறுப்பையே அமைச்சர்கள் நிறைவேற்றுவர். ஆதரவாளர்களிடம் வேற்றுமைகள் தோன்றி னல் அவை அமைச்சர்களிடத்திலும் தோன்றும். சட்டப்படி அமைச்சர்கள் பாராளுமன்றத்தின் ஆனேக்குட்பட்டவரென்ற போதிலும் உண்மையிற் பாராளுமன்றத்தைக் கொண்டு கடத்து வது அமைச்சர்களே. ஆட்சிக்குரிய, ஆட்சிக்கு வேண்டிய யாவற்றையுந் தீர்ப்பது அமைச்சர்களே. வரி விதித்தல், பிற நாட்டுப் பூட்கை (கொள்கை-Foreign Policy), உள்நாட்டுத் தேவைகளைத் தீர்க்க வழிதேடல் போன்ற யாவற்றிற்கும் அமைச்சர்களே பொறுப்பு. ஆட்சிக் கொள்கையை வரையறுத் தல், அதை கிறைவேற்றத் திட்டமிடுதல், திட்டத்தைப் பாராளு மன்றத்திற் சமர்ப்பித்தல், பாராளுமன்றத்திலோ நாட்டிலோ எதிர்ப்புத் தோன்றினல் எதிர்ப்பை எதிர்த்தல் அல்லது சமாளித்தல் ஆகிய யாவும் அமைச்சரவையே செய்வது.

Page 100
186 ஆட்சி இயல்
அமைச்சரவையும் பாராளுமன்றமும் : அமைச்சரவையே பாராளுமன்றத்தைக் கொண்டுகடத்துவ தென்பது உண்மையா யினும், அமைச்சரவை தான்தோன்றித் தன்மையுடையதன்று. பாராளுமன்றத்தின் படைப்பே அமைச்சரவை. பாராளுமன்ற மில்லாமல் அமைச்சரவையிராது. அமைச்சரவை பாராளுமன் றத்தைக் கொண்டு நடத்துவதும் மன்றத்தின் சம்மதத்துடன் தான். அமைச்சர்களை ஆதரிக்குங் கட்சியின் ஆதரவு நின்ருல் அமைச்சர்கள் வெளியேறல்வேண்டும். நாட்டிலும் தம்செயல்களை மக்கள் எங்ஙனம் வரவேற்கிருர்களென்று பார்த்தே அமைச்சர் கள் நடந்துகொள்வார்கள். ஈற்றில் ஆட்சிப்பீடத்தின் செயல் களைப் பற்றிய தீர்ப்புக் கூறுவது வாக்காளர்களே. பாராளுமன் றத்திலும் நாட்டிலுமிருக்கும் எதிர்க்கட்சியினரும் எப்போது பிழைபிடிக்கலாமென்று பார்த்துக்கொண்டிருப்பர். அமைச்சர்கள் இதனை மறந்துவிடல் முடியாது, அமைச்சரவையின் செயலைப் பாராளுமன்றம் ஏற்காதுபோனுல், அமைச்சரவையை வெளி யேற்ற மன்றம் நடவடிக்கை யெடுக்கும் அமைச்சரவையில் தமக்கு நம்பிக்கையில்லையென்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் ; அல்லது அமைச்சரவை சமர்ப்பிக்கும் ஒரு முக்கிய பிரேரணையையோ, திட்டத்தையோ ஏற்காதுவிடலாம். இவற் றின் மூலம் அமைச்சரவையை வெளியேற்றிவிடலாம்.
ஆணுல், இவ்வகைக் கடும் வைத்தியமுறைகளைக் கையாள ஆட்சிக்கட்சியோ எதிர்க்கட்சியோ பெரும்பாலும் பின்னிற்கும். அமைச்சரவை வெளியேறினுல், வெளியேற்றியவர்களும் வெளியேறவேண்டிவரும்; இன்னுமொரு தேர்தலில் ஈடுபட நேரிடும். இதனுல் வரும் செலவு, அலைவு, மனச்சலனம் போன்றவற்றை யாராவது தேடுவதற்கு யோசனையின்றி முன் வரார். ஆகையால் வேறு வழியில்லையென்று காணும்வரையும் அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுபடமாட்டாது.
வெளியேற்றுவது எப்போதும் செய்யக்கூடிய ஒன்றன்று. நாளுக்குநாள் அமைச்சர்களது செயல்களிலுள்ள குறைகளை எடுத்துக் காட்டியும், செய்யவேண்டியதைச் செய்யாதுவிடும் போது அதை எடுத்துக்கூறியும், கண்டனத்துக்குரியவற்றைக் கண்டித்தும், அவர்களின் செயல்களைக் கண்காணிப்பதற்கு வழியுண்டு.

நிருவாகம் 187
மன்றங் கூடும்போது ' விஞவேளை ( கேள்விநேரம் - Question Time)இருக்கும்.அப்போது அமைச்சர்களிடம் “இதேன் இப்படி நடந்தது?? “ அதேன் அப்படி நடக்கவில்லை?” போன்றவினுக்களை வினவினல் அமைச்சர்களின் தவறுகளே எடுத் துக் காட்டல்முடியும். மன்றம் அமைச்சர்களில் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று தீர்மானம் கொண்டுவந்தும் அமைச் சர்களைக் கண்டிக்க இடமுண்டு. கூட்டம் கூடும் நாட்களில் நாளுக்குரிய பணிகள் முடியுமுன் ஒத்திவைப்புப் பிரேரணை (Adjournment Motion) என்ற ஒன்றைக் கொண்டுவந்து அதை விவாதிக்கும்போது அமைச்சர்களைக் கண்டிக்கலாம். இவை அமைச்சர்களைக் கண்டிப்பதற்கு உபயோகிக்கும் உபாயங் களே. நம்பிக்கையில்லை யென்னும் தீர்மானம் நிறைவேறு வ தற்கு வேண்டிய ஆதரவில்லாதபோதும் இதைக் கொண்டு வருவது அமைச்சர்களைக் கண்டிப்பதற்கே. ஒத்திவைப்புப் பிரேரணை யும் எதனையும் ஒத்திவைப்பதற்காகக் கொண்டு வருவதன்று. ஏதேனும் ஒன்றைப்பற்றிப் புகார் கிளப்புவதற் காகப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆளப்படும் சம்பிர தாயத்தையே இலங்கையிலும் அதே நோக்கத்திற்குபயோகிக் கின்றனர். இதற்கு ஒரு குறித்த தொகைக்குக் குறையாத உறுப்பினரின் ஆதரவிருத்தல்வேண்டும். வெறுங் குழப்பத்திற் காக இதுபோன்ற நடவடிக்கைகளை எடாது இருப்பதற்கே இந்தக் கட்டுப்பாடு.
இதைவிடத் தனியுறுப்பினர் அலுவலுக்கென ஒதுக்கப் படும் நாட்களில் விரும்பியதைப் பற்றிப் பிரேரணை கொண்டு வரும் உரிமை தனியுறுப்பினருக்குண்டு. ஆட்சிக் கட்சியோ, வேறெந்தக் கட்சியோ ஆதரியாதபோதும் தனியுறுப்பினர் தாம் கரிசனை கொண்டவற்றைப் பற்றிப் பிரேரணை கொண்டு வருவது தாம் முக்கியமென்று கொள்ளும் ஒன்றைப் பாராளு மன்றத்திற்கும் பொது மக்களுக்கும் அறியப்படுத்துவதற்கே. பிரேரணையின் விடயம் வேண்டிய ஒன்றென்றல் ஆட்சிப்பீடம் அதன் பொறுப்பை ஏற்று வேண்டியதைச் செய்யக்கூடும். அப்படி கடவாதுபோனுலும் பாராளுமன்றத்தினதும் பொது மக்களினதும் கவனத்திற்குக் குறித்த விடயத்தைக் கொண்டு வருவதே போதுமென்று கருதி இவ் வகைப் பிரேரணைகளே க் கொண்டுவருதலுமுண்டு.
ஆ - 13

Page 101
188 ஆட்சி இயல்
இம்முறை இலங்கையில் வேண்டிய அளவு பயன்படுத் தப்படவில்லை யென்பதே பேராசிரியர் ஜென்னிங்ஸின் கருத்து அங்ங்ணம் விணுவேளை யையும் போதியளவு மன்ற உறுப்பி னர் பயன்படுத்தவில்லையென்றே அவர் கூறுகிறர்.
அமைச்சர்களும், உபஅமைச்சர்களும் : அமைச்சர்கள் பிரதிநிதிகள் சபையிலோ மூதவையிலோ உறுப்பினராயிருத்தல் வேண்டும். அமைச்சர்கள் இருவராயினும் முதவை உறுப் பினராயிருத்தல் வேண்டும். அவர்கள் சார்பாக உபஅமைச் சர்கள் ( பாராளுமன்றச் செயலாளர்) பிரதிகிதிகள் சபையிற் கடமையாற்றல் வேண்டும். அமைச்சர்களின் பொறுப்புத் தொடர்பான விளுக்கள் எழுந்தால் அவர்களே மறுமொழி கூறல் வேண்டும் ; பிரதிநிதிசபையைப் பொறுத்தளவில் அமைச் சர்களின் பொறுப்பை அவர்களே செலுத்துதல் வேண்டும். மற்ற அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் உப அமைச்சர்க ளிருக்கத் தேவையில்லை. ஆனலும், செல்வாக்குள்ள சிலருக்கு இப் பதவி கிடைக்கும். பின்னுெருகாலம் அமைச்சராய்க் கடமையாற்றுவதற்குப் பயில்வதற்கு இப் பதவி உதவுமென்று கருதப்படுகிறது. அமைச்சர்கள் பிறநாடுகளுக்குப் போகநேரிட் டால் இவர்களுக்கு அமைச்சர் பதவி பெரும்பாலுங் கிடைக்கும். அமைச்சரும் உபஅமைச்சரும் மன்றத்தின் வெவ்வேறு சபையில் உறுப்பினரென்றல், உபஅமைச்சர், தான் இருக்கும் சபை யிற் குறித்த அமைச்சுக்குப் பொறுப்பு வகிப்பார். இருவரு மொரேசபையி லுறுப்பின ரென்ருல் அமைச்சுக்குரிய கடமை யைப் பங்கீடு செய்துகொள்வார்கள். ஆட்சித்துறையி லும் அமைச்சர் சில முக்கிய பொறுப்புக்களைத் தாம் எடுத்துக்கொண்டு சிலவற்றை உப அமைச்சருக்கு விடுவார். இது பெரும்பாலும் அமைச்சர்களின் தேவைக்கும் விருப்பத் திற்கும் ஏற்பச் செய்வதே. அமைச்சர்கள் பலர், உபஅமைச்சர் களுக்கு ஒரு பொறுப்பும் கொடுக்கிற தில்லையென்று உப அமைச்சர்கள் குறைகூறுவதாக இடையிடையே செய்தித் தாள்கள் கூறிவருகின்றன. தத்தம் பொறுப்பிலிருக்கும் அலு வல்களைக் கண்காணிப்பதே அமைச்சர்களின் கடமை. முக் கியமாய்த் தத்தம் அமைச்சுக்களுக்குரிய கொள்கை(Policy)களை வரையறுப்பதும் அவற்றைச் செயற்படுத்த வேண்டிய திட்டங்களை வகுப்பதுமே அமைச்சர்கள் செய்வதும், செய்ய வேண்டியதும். செயற்படுத்துவது கிலேப்புச் செயலாளரது கடமை. அதிலே தலையிடுவதோ, யாருக்குஞ் சலுகை காட்டு

கிருவாகம் 189
வதோ, அரசாங்கலுவலர் தெரிவு, நியமனம், உயர்வு போன்ற வற்றிற் தலையிடுவதோ தவறென்பது நல்லாட்சி விரும்பு வோர் கருத்து. ஆனல், டொனமூர்த்திட்டம் நடைமுறையி லிருந்தபோது பழகிய பழக்கத்தாலோ வேறெக்காரணத்தி ணுலோ, பொதுவாய் அமைச்சர்கள் தலையிடக் கூடாத அலு வல்களில் அமைச்சர்கள் தலையிட்டனரென்று நம்புவதற் கிடமுண்டு. அரசாங்கலுவலர் நியமனம் போன்றவற்றின் பொறுப்பு அரசாங்க சேவையாணைக் குழுவிற்கே யிருந்த போதும் அமைச்சர்கள் தலையிடும்போது இக்குழு யாதுஞ் செய்யமுடியாது. பொலிஸ் தலைவர் நியமனத்தில் அக்காலத் திருந்த முதலமைச்சர் தாமே ஈடுபட்டுத் தாம் விரும்பியவரை கியமித்தது யாவரும் அறிந்த ஒன்றே. தாம் நியமிக்கவில்லை யென்றும் அரசாங்க சேவைக்குழுவுக்குத் தாம் புத்திமதி கூறியதே யன்றி வேறுயாதும் செய்யவில்லையென்றும் சொன் னதை யாராவது நம்பியிருப்பாரென்றெண்ணல் முடியாது.
இங்கிலாந்திலே எல்லா அமைச்சர்களும் அமைச்ச ரவையில் இடம் பெறுவதில்லை. அங்கு அமைச்சர்களின் தொகை முப்பதுக்கு மேற்படும். இவர்களில் முக்கியமான ஒரு சிலரே அமைச்சரவையி லிடம்பெறுவர். இலங்கையில் அமைச்சர்கள் யாவரும் அமைச்சரவையி லிடம்பெறுவர்.
இலங்கையிலின்று 11அமைச்சர்களிருக்கின்றனர். அமைச் சர் பதவிகள் பின்வருமாறு :-
1. முதலமைச்சர் : நாட்டுப்பாதுகாப்பு, பிற நாட்டலுவல்கள். பயிர்ச் செய்கை, நிலப் பரிபாலனம், நீர்ப் பாசனம், சக்தி,
கைத்தொழில், உள்நாட்டு, பண்பாட்டு அலுவல்கள். உடனலம் (சுகாதாரம்). கல்வி, ஒலிபரப்பு. போக்குவரத்து, தொழில். 2 Giraj, JITLiga (5606)ITLiga-Local Government), வீடமைப்பு வாணிபம், வியாபாரம், உணவு, கப்பற்போக்குவரவு.
நீதி.
தொழிலாளர், நாட்டுரிமைச் சேவைகள்,
i

Page 102
190 ஆட்சி இயல்
அமைச்சரவைச் செயலகம்
உரிய அலுவல்களை அமைச்சரவை முறையாகச் செய் வதற்கும் வேண்டியவற்றைச் செய்வதற்கும் அமைச்சரவைச் செயலகமே (Cabinet Secretariat) பொறுப்பு. இதன் மேற் பார்வை அமைச்சரவைச் செயலாளரின் கடமை. இவர் ஓர் அனுபவம் முதிர்ந்த குடியியற் சேவை (Civil Service) அலுவ லராயிருப்பர். ஆள்பதிகாயகமே, முதலமைச்சரின் ஆலோ சனைப்படி இவரை நியமிப்பர். அமைச்சரவைக் கூட்டங்களின் வரலாற்றை எழுதிவைத்தல், அமைச்சரவைக் கூட்டங்களுக் கொழுங்கு செய்தல், தீர்மானங்களை உரிய உரிய அலுவலர் களுக்குத் தெரிய வைப்பது, முதலமைச்சரின் சொற்படி மற்றும் அமைச்சர்களுக்கோ மற்றும் அலுவலர்களுக்கோ உத்தரவுகள் அனுப்புவது என்பனவே பெரும்பாலும் இச் செயலாளரின் பொறுப்பு.
slduayalaoisóir (Government Officers)
ஆள்பதிநாயகத்துக்கு ஆட்சியிலிருக்கும் பொறுப்புப் பெரும் பாலும் சம்பிரதாயமே. அமைச்சர்களின் பொறுப்பு, கொள்கை வரையறுத்தலும் திட்டம் வகுத்தலுமென்றே முன் கூறினுேம். நாளுக்குகாள் ஆட்சித்துறையில் நடப்பதற்குப் பொறுப்பு, ஆட்சித்துறையிற் கடமை பார்க்கும் கிலேப்பு அலுவலர் களே. அமைச்சர்கள் வரையறுக்குங் கொள்கைகளைச் செயற் படுத்துவதுக் திட்டங்களை நிறைவேற்றுவதும் இவர்களே. அமைச்சர்கள் ஒவ்வொரு பொதுத் தேர்தலுடனும் மாறக் கூடும். ஆட்சியலுவலர்களோ தம் கடமையை இடைவிடாது செய்துவருபவராவர். அமைச்சர்களின் கொள்கைகள் மாறும் ; திட்டங்கள் மாறும் ; மாறிமாறி வரும் அமைச்சர்களின் கொள்கையைச் செயற்படுத்துவதே இவ் வலுவலர்களின் பொறுப்பு. யாதேனும் ஓர் ஆட்சிக் கொள்கையை இவர்கள் ஆதரிப்பவராயிருக்கலாம் ; கட்சித் தொடர்புள்ளவராயுமிருக்கக் கூடும். ஆனல், அலுவலாளர் (Official) செயலில் இவை இடம் பெறல்கூடாது. அதுபோலவே, தமது கடமை முறையாய் நடக் கிறதோ என்று பார்ப்பதைவிட்டு, இவர் என்ன சமயத்தவர், என்ன இனத்தைச் சேர்ந்தவர், ஆட்சி இயலில் இவர் எச் சார்புடையவரென்று ஆராய்வதும், ஆராய்ந்து பெற்ற அறிவின் பயனுய்ப் பாரபட்சம் காட்டுவதும் அமைச்சர்களுக்கு முறை யாகாது.

திருவாகம் 191
எந்த அமைச்சராவது ஆட்சியலுவலர்களின் ஒத்துழைப் பின்றி எதையுஞ் செய்தல்முடியாது. இவர்கள் அனுபவசாலி கள் ; செயல்முறையிற் பயின்றவர்கள் ; தேவைகளை அறிந்த வர்கள் ; எதையுஞ் செய்துமுடிப்பதற்குரிய பணப்பொறுப்பு, செயல்முறை போன்றவற்றை அறிந்தவர்கள். அமைச்சர்கள் இவர்களுடன் கலந்தாலோசித்தே திட்டத்தை வகுப்பர்; ஆனல், இவ்வலுவலர்களின் செயல்முறைகளிற் பெரும்பாலும் குறுக் கிடமாட்டார்கள். அமைச்சர்களுக்கும் ஆட்சியலுவலர்களுக் கும் முரண்பாடு ஏற்பட்டால் அமைச்சர்களின் சொல்லின் படியே அலுவலர்கள் நடத்தல்வேண்டும். ஆனுற் கொள்கை, திட்டம் ஆகியவற்றைத் தவிர மற்ற யாவற்றிற்கும் அலுவலர் களே பொறுப்பாளர். அமைச்சர்கள் தீர்க்கும் எதையுஞ் செய்வதும், செய்விப்பதும் அவர்களே. உண்மையில் இன் றைய உலகில், நாடுகளின் ஆட்சியை நாளுக்குநாள் நடத்துவது மன்னரோ, அமைச்சர்களோ அல்ல ; ஆட்சியலுவலர்களே.
இலங்கையில், இவர்கள் தெரிவு, நியமனம் போன்றவை 9) Jat Tijds (3d606) LIT &007 dig (up (Public Service Commission) என்னும் ஒன்றின் பொறுப்பிலிருக்கிறது. இதன் உறுப்பினர் முவர். முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆள் பதிநாயகமே இவர்களை நியமிப்பர். தகுதி, திறமை முதலியவற்றைக் கொண்டே அலுவலர்கள் தெரிவும் நியமனமும் இருத்தல் வேண்டுமென்றே இம்முறை ஆக்கப்பெற்றது. அமைச்சர் களோ அல்லது செல்வாக்குள்ள வேறெந்தப் பேர்வழிகளோ இக்குழுவின் பொறுப்பில் விடப்பட்டவற்றில் தலையிடுதல் கூடாது என்பது வழக்கிலுண்டு. ஆனல், இதை நம்புவோர் தொகை குறைந்துவருகிறது. அலுவலர் தெரிவு, நியமனம், சேவையுயர்வு போன்றவற்றில் திறமையும் தகுதியும் இடம் பெறுகின்றனவோ என்பது சொல்வதற்கில்லையெனலாம்.
மேலும், அமைச்சர்களின் பொறுப்பு இது, இதற்கப் பாற் செல்வது முறைகேடு ; அலுவலர்களின் பொறுப்பிது, இதிலே அமைச்சர்கள் தலையிடுவது முறையன்று; என்று ஒழுகும் சீரியமுறை இக்காட்டில் இன்னும் வேண்டிய அளவு இடம்பெறவில்லையென்றே கூறுதல்வேண்டும். அலுவலர்கள் தாம் கட்சிக்கப்பாற்பட்டவர்கள் ; யார்தான் ஆட்சிபுரிந்தாலும் தம் கடமையை எவ்வகையான பாரபட்சமுங் காட்டாது செய்ய வேண்டியவர்களென்று அவ்வாறு ஒழுகுவது இந்நாட்டில்

Page 103
193 ஆட்சி இயல்
வேண்டிய அளவு இடம்பெறவில்லை. இது அலுவலர்கள் குறையென்றே சொல்வதற்கில்லை. நடுநிலைமையில் நின்று தம் கடமையைச் செய்வதற்கேற்ற சூழல் இங்கில்லை. அமைச்சர்கள், கட்சிப்பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியவர்கள் ஆட்சியலுவல்களில் அவருக்காகவும், இவருக்காகவும்-கந்தருக் காகவும், பூதருக்காகவும் - தலையிடுவதால் வரும் சீர்கேடு ஒருபுறமுண்டு. ஆளும் கட்சியை எதிர்க்கிறவர்களோ, தனிப் பேர்வழிகளோ, ஆட்சிப் பீடத்திடமிருந்து எதையும் எதிர் பார்த்தல் கூடாதென எண்ணுதலுண்டு. சுயவாட்சிக் காலத்தின் முன்ருவது அமைச்சரவையின் ஆட்சிக்காலத்தில், பலமுறை நாட்டில் இனக்கலம்பகங்கள் தோன்றின. இவையேற்பட்ட போது நாட்டில் அமைதியைப் பேணுவதையே பொறுப்பா யுடைய பொலிசுப் பகுதியினர் வேண்டிய காலத்தில் வேண் டியதை வேண்டிய அளவு செய்திருந்தால் ஈற்றில் ஏற்பட்ட அவலநிலை வந்திராதென்பது பலர் துணிபு. பொலிசார் அங் நுனம் செய்யாதது அவர்கள் குறையன்றென்றும் அவர்கள் மேல் அதிகாரஞ் செலுத்தும் பேர்வழிகள் பொலிசாரின் பராமுகத்திற்குப் பொறுப்பென்றும் எண்ணியவர்கள் பலர் இந்நாட்டிலிருந்தனர். இக்குறைகள் வராது தடுப்பதற்கென்றே அரசாங்கசேவையானைக்குழு இந்நாட்டு ஆட்சியமைப்பில் இடம்பெற்றது. டொனமூர்த்திட்டம் செயலிலிருந்த காலத்தில் பலவகைக் குறைபாடுகள் இருந்தன என்றும், அலுவலர்க ளின் நியமனம், தெரிவு, உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றில் அமைச்சர்கள் தலையிட்டு அநீதியான பலவற்றைச் செய்து விட்டனர் என்றும் கூறப்பட்டது. சோல்பெரிக் குழுவுக்கும் இதே முறைப்பாடு செய்யப்பட்டது.
இவற்றின் விளைவாகவே அரசாங்கசேவையாணக்குழு உருவானது. ஆள்பதி நாயகமே இதன் உறுப்பினரைத் தெரிவது. சுயவாட்சி நாடானபடியாலே முதலமைச்சரைக் கலந்தாலோசியாமல் அவர் தெரிவுசெய்தல் முடியாது. இக் குழுவமைப்புக்குப் பின்வரும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன :- பிரதிநிதிகள் சபை, முதவை ஆகிய இரண்டில் எதிலா வது உறுப்பினராயிருப்போர் அரசாங்க சேவையானைக் குழுவில் இடம்பெறல் முடியாது. . ஆள்பதிநாயகம் ஒருவரே முழு உறுப்பினரையும் பதவியி லிருந்து நீக்கலாம். நீக்கும்போதும் தாம் ஏன் அப்படி

நிருவாகம் 193
நீக்குகிருரென்பதற்குப் போதிய நியாயங் காட்டுதல் வேண்டும்.
i. இக் குழுவோ இதன் உறுப்பினரோ செய்யுங் கடமை யில் வேறு யாரும் தம் கடமைமுறையின்றி ஈடுபட்டுக் குழுவின் அலுவல்களில் தம் செல்வாக்கைச் செலுத்த முயன்ருல் அப்படிச் செய்வோருக்கு 1000 ரூபாவுக்கு மேற்படாத குற்றமோ, ஒராண்டுக்கு மேற்படாத மறி யலோ, இரண்டுமோ விதிக்கப்படும்.
குழு இருந்தபோதும் மேற்கூறியவிதிகள் இருந்தபோ தும் டொனமூர்த் திட்டக் காலத்திலிருந்த நிலை இன்னும் மாற வில்லையென்றே கூறல்வேண்டும். ஆயினும், கியமனங்களுக்கு ஒருமுறை வகுத்து, விளம்பரம் செய்து, சோதனைகளை வைக்க வேண்டியவற்றிற்குச் சோதனை வைத்து, வேண்டிய தரா தரத்தை வெளிப்படுத்தி, நேர்முகச் சோதனை வேண்டிய இடத்து அதையும் வைத்து நியமனஞ் செய்வது வேண்டிய ஒன்றே. குடியியற் சேவைக்கும் வெளிநாட்டுச் சேவைக்கும் வேண்டியோர் எழுத்துச் சோதனை மூலம் தெரிவுசெய்யப்படு கின்றனர். நேர்முகச் சோதனையும் உண்டு. இதே சோதனை யின் மூலமே வேறு சில சேவைகளுக்கும் ஆட்களைத் தெரி வார்கள். ஆண்டுக்கு 3,780 ரூபாவுக்குக் குறைந்த சம்பளம் பெறும் அலுவலர்களேத் தெரியும் பொறுப்பை இக் குழு குறித்த திணைக்கள(துறை-Department)த் தலைவர்களிடம் ஒப்பு வித்திருக்கின்றது.
மேற்கூறியதைவிட அலுவலர்கள் நியமனம்போன்றவற் றின் பொறுப்பை இக் குழுவிடம் விடுவதால் வேறு பல இடர்ப் பாடுகளும் தோன்றுகின்றன.
அலுவலர்களின் செயல்களுக்குக் குறித்த அமைச்சுக்குரிய அமைச்சரே பொறுப்பென்பது சம்பிரதாயம். அவர்களின் அலுவல்களிற் குறைகிறையைப் பற்றிப் பாராளுமன்றத்தில் யாரும் கேள்வி கேட்டால் மறுமொழி கூறவேண்டியது அமைச் சரே. ஆனல், நியமனம் முதலியவற்றிற்குத் தமக்குப் பொறுப் பில்லாதபடியால் இப் பொறுப்பும் தமக்கில்லேயென்று அமைச் சர் கூறிவிடுவார். பாராளுமன்றம் அமைச்சர்கள் மூலந்தான் அலுவலர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தவோ, அவற் றைப்பற்றியறியவோ முடியும். ஆனல், நியமனம்போன்ற

Page 104
194 ஆட்சி இயல்
வற்றிற் பொறுப்பில்லாதபோது அமைச்சர்கள் இப் பொறுப்பை ஏற்கமுடியாமலிருக்கிறது. அலுவலர்களைப் பாராளுமன்றத்தில் யாரும் தாக்கிப் பேசினல் மறுமொழி கூறல்முடியாது. அமைச் சர்களே இதைச் செய்வது மரபு. ஆனல், அமைச்சர்களுக்கு கியமனப் பொறுப்பில்லாதபடியால் அமைச்சர்கள் அங்ங்ணம் செய்யாதுவிடுவதோடு தாமும் அலுவலர்களே இடையிடையே தாக்குகின்றனர். இந்த நிலையைத் தீர்ப்பதற்கு அரசாங்க சேவையானைக்குழுவையே அகற்றிவிடலாமோ என்றும் சிலர் கருதுகின்றனர். ஆட்சிப்பீடத்தின் தலையீடின்றித் தகுதியின் படி கியமனம்போன்றவை நடைபெறல் வேண்டுமென்பது ஒரு புறம் ; அமைச்சர்களுக்கும் நியமனம் போன்றவற்றிற் பொறுப் பிருத்தல் வேண்டுமென்பது மறுபுறம். இவையிரண்டையும் ஒருங்கே செய்து முடிப்பது இலகுவன்று. இந்தியாவிலும் தென் ஆபிரிக்காவிலும் இன்று நடைபெறும்முறை ஓரளவிற்கு இரண்டு கோக்கங்களையும் நிறைவேற்றுகிறது. அரசாங்க சேவையாணேக்குழுவின் தகவுரையின்படிதான் நியமனம் போன்றவை நடக்கும். நியமனப் பொறுப்பு நாட்டின் ஆட்சிச் செயல் முதல்வருக்குண்டு. நியமனம் செய்வோர் அரசாங்க சேவையானைக்குழுவின் தகவுரையை ஏற்காது விட்டால் அதைக் குறிப்பிட்டு நியாயமும் எழுத்திற் காட்டுதல்வேண் டும். ஆண்டுக்கொருமுறை யிவை யாவும் பாராளுமன்றத் திற் சமர்ப்பிக்கப்படும். அப்போது பாராளுமன்றம் கேள்வி மூலமோ, வேறு வழியாலோ, யாராவது ஒழுங்கு தவறி நடந் திருந்தால், அதை அம்பலப்படுத்தவும், வேண்டியதைச் செய்ய வும் முடியும். இந்தமுறை இங்கும் பயன்படக்கூடிய ஒன்று.

அதிகாரம் 5
|Ë5LJill.JIT@6OTLb (Administration of Justice)
ஒருநாட்டின் ஆட்சி திறம்பட நடக்கிறதோ இல்லையோ என்று அங்கு செயலிலிருக்கும் நீதிமுறையைக் கொண்டு தீர்த்துவிடலாம். நீதி என்ற சொல்லின் பொருள் என்றும் ஒன்ருயிருப்பதில்லை. நாட்டின் காகரிகம், சமூக அமைப்பு (Social Organization), Gar Tigi, fool Ddi Gd5(Tairaodds (Theory of Property Rights) போன்றவை மாற மாற நீதியென்னும் சொல் லின் பொருளும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனல், நீதியென்ற ஒன்றும், அதைச் செயற்படுத்தும் வழிவகைகளும் இல்லாத ஆட்சிமுறையில்லை; இருக்கவும் முடியாது. ஆனல் இதைப்பற்றி இங்கு விரிவாய் ஆராயாது விட்டுப் பிறிதோ ரிடத்தில் (பொதுவியல் பார்க்க) சிறிது விரிவான விளக்கங் கொடுப்போம். இங்கு, இலங்கையின் செயலிலிருக்கும் நீதி பரிபாலன முறையைச் சிறிதாராய்வோம். இங்கு இன்று நடை முறையிலிருக்கும் நீதிமுறை பிரித்தானிய ஆட்சியோடு உரு வாகியதே. தோன்றியபோ திருந்த முறையிலும் பார்க்கச் சிறு மாற் றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆட்சிக்கும் நீதிக்கும் ஒருவரோ ஒரு வர்க்கத்தவரோ பொறுப்பாயிருத்தல் முறையன்று என்பது பிரித் தானிய ஆட்சித் தத்துவத்திற்கும் (Constitutional Philosophy) பரிபாலனத் தத்துவத்திற்கும் (Administrative Philosophy) அடிப்படையானது. மீதி நடத்தல் வேண்டும் ; நீதிமுறையில் யாதேனும் சிறு தவறுதானும் நடப்பதற்கிடமிருத்தல் கூடாது. தவறு நடைபெறதபோதும் நடப்பதாக யாரேனும் ஐயங்கள் கொள்ள இடமிருத்தல்கூடாது. இந்த அடிப்படையிலேதான் பிரித்தானியர் தம் நீதியமைப்பை நிறுவியிருக்கின்றனர். இதன் பொருள் அங்கு எப்போதாவது அநீதி நடப்பதில்லையென்ப தன்று. கூடியமட்டும் அநீதி நிகழாதிருக்கும்படி, தம் நீதிமுறை யைப் பிரித்தானியர் வகுத்திருக்கிறர்களென்பதே. ஆட்சியலு வலர்களே நீதிப் பொறுப்பையும் செலுத்தினற் பொதுமக்களுக் கிருக்கவேண்டிய பாதுகாப்பிராதென்பதாலேயே, இரண்டு

Page 105
196 ஆட்சி இயல்
கடமைகளுக்கும் வெவ்வேறு அலுவலர்கள் கியமனம் பெறு கின்றனர். ஆட்சிப்பீடமே பொதுமக்களுக்கு அநீதி விளைக்கக் கூடும் ; விளைப்பதுமுண்டு. அப்போது நீதி வேண்டிப் போகும் பொதுமக்களுக்கு ஆட்சித் தொடர்போ பொறுப்போ இல் லாத அலுவலர்களே முறையாக நீதி செய்தல் முடியும். ஆணுல் இலங்கையில் ஒருகாலம் இக் கொள்கை, ஆட்சிமுறையில் இடம்பெறவில்லே. ஆட்சி வேறு, நீதி வேறென்றும் இவற்றின் பொறுப்பும் வெவ்வேருட்களிடம் இருத்தல்வேண்டும் என்ற கொள்கையும் இங்கு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக் குள்ளேதான் முற்ருய்ச் செயல்பெற்றது. இன்றைய நிலை பெரும்பாலும் பிரித்தானிய நிலையைப் போன்றதே. சுயவாட்சி அரசமைப்பின் உச்சமன்று நீதிபதிகளை (Supreme Court Judges) Lyub, J (56 JuDGör gp -&3OOT LITT GMT GODT(Commissioner of Assizes) quib நியமிக்கும் உரிமை ஆள் பதிநாயகத்துக்கேயுள்ளது. மேற்கூறிய நீதிபதிகள் 62 வயதுவரையுங் கடமை பார்க்கலாம். ஆள்பதி நாயகம் விரும்பினுல் இன்னும் 12 மாதம் கடமையாற்ற அக் காலத்தை நீடிக்கலாம். அவர்கள் சம்பளம் பாராளுமன்றத்தாற் தீர்க்கப்பெற்று நாட்டின் ஈட்டநிதியி(Consolidated Fund)லிருந்து கொடுக்கப்படும். அவர்கள் சம்பளத்தைக் குறைப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அவர்களில் ஒருவரை வேலையி னின்றும் அகற்றும் உரிமை பாராளுமன்றத்திற்கேயுண்டு. மூதவையும் பிரதிகிதிகள் சபையும் குறித்த ஒரு நீதிபதியை அகற்றுதல்வேண்டுமென்று பிரேரணை நிறைவேற்றி ஆள்பதி நாயகத்துக்கனுப்ப அவர் வேண்டியதைச் செய்தல்வேண்டும். இவ்வித பாதுகாப்பு யாவும் ஏன் இருத்தல் வேண்டும்? பொதுப்படக் கூறின், நீதி வழங்கும் பொறுப்புள்ளோருக்குத் தாம் நீதியென்றுகொள்வதை நிறைவேற்றுவதற்கு எவ்வித தடையுமிருத்தல் கூடாது. சம்பளத்தைப் பற்றியோ, உத்தி யோகத்தைப் பற்றியோ நாளே என்ன நடந்துவிடுமோ என்று பயப்படவேண்டிய நிர்ப்பந்தம் நீதி வழங்குவோருக் கிருத்தல் கூடாது.
மற்ற நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு நீதிமுறைச்சேவை gé00Tă (5(Ip(Judicial Service Commission) 6/kg, fiul gl.
நீதிமுறைச் சேவை ஆணைக் குழு இக்குழுவின் உறுப்பினர் மூவர். தலைவர், உச்சமன்று முதல் நீதிபதி ; ஏனைய இருவரில் ஒருவர் உச்சமன்று நீதிபதி

நீதிபரிபாலனம் 197
களில் ஒருவர் ; மற்றவர் நியமனகாலத்தில் உச்சமன்று நீதி பதியாயிருப்பவரோ அல்லது அதற்குமுன் உச்சமன்று நீதி பதியாயிருந்தவரோ ஆவர். தலைவர் தவிர மற்ற உறுப்பினரைத் தெரியுமுரிமை ஆள்பதிநாயகத்துக்குரியது. பாராளுமன்ற உறுப்பினர் இக்குழுவில் இடம் பெறர். தலைவரைத் தவிர மற்றவர்கள், 5 ஆண்டிற்குக் கடமை பார்ப்பர் , திரும்பவும் நியமனம் பெறலாம். ஆள்பதிநாயகம் அவர்களில் எவரை யாவது நியாயங் காட்டிப் பதவியிலிருந்து நீக்கலாம்.
நீதி செலுத்தும் உத்தியோகத்தர், கட்சிச் சார்புள்ள ஆட் சிப் பீடத்தின் நேர் ஆணேயில் இருந்தாற் பட்ச பாதமின்றி நீதி செலுத்துதல் எப்போதும் இயலாது, என்று கருதியே இம் முறை வகுக்கப்பெற்றது.
உச்சமன்று நீதிபதிகளைத் தவிர ஏனைய ரீதியலுவலர்களின் தெரிவு, நியமனம், உயர்வு, மாற்றம், காறுபாறு ஆகியவை இக்குழுவின் பொறுப்பிலுள்ளது.
நீதி வழங்கும் முறை இலங்கையிலே இன்று 5 தரமான நீதி நிலையங்கள் உள:
1. poli LD667 g) - (Rural Court) 2. få ganu T 6ör D6ör gp - (Magistrate’s Court) 3. 6î68óT 600T hul D6ör gp — (Court of Requests) 4. LDira). LLD6örg) - (District Court)
5. 2d FLDairg) - (Supreme Court)
இவை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் பிரச்சினைகள் இரு வகைப்பட்டன : தனியாட்களின் உரிமைகள், தொகுப்பகங் (Corporations)களையொத்த தாபனங்களின் உரிமைகள் போன்ற வையே பெரும்பாலும் ஒருவகைக்குரியன. மற்றது நாட்டின் அமைதிக்கோ, நாட்டுமக்களின் உடம்புக்கோ, உயிருக்கோ, பொருளுக்கோ ஊறு செய்வோரைத் தண்டிப்பதற்குரியது. முந்தியதைக் குடியியல் (Civil) என்றும் பிந்தியதைப் பாதகவியல் (Criminal) என்றுங் கூறுவர். இவ்விரு சொற்களும் எவ் வெவற்றைச் சுட்டுகின்றன என்பது பெரும்பாலும் இவ்வூர்ப் பொதுமக்களுக்குத் தெரியும். அவர்களும் இவற்றைச் சீவில் ? என்றும் கிறிமினல் (அல்லது "கிறிமில்") என்றும் வழங்கு

Page 106
198 ஆட்சி இயல்
கின்றனர். மேற்காட்டிய நாலுவகை நிலையங்களுக்கும் இங்கு கூறிய இருவகை வழக்குகளையும் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் பொறுப்புண்டு. 1. ஊர்மன்றுகளுக்கு 100 ரூபாவுக்குட்பட்ட சிவில் வழக்கு களையும் 50 ரூபாவரை குற்றம் போடக்கூடிய அல்லது 14 நாள் மறியல் விதிக்கக்கூடிய கிறிமினல் ” வழக்குகளை யும் விசாரிக்கும் அதிகாரமுண்டு. 2. நீதிவான் மன்று-இதற்குத் தனியே கிறிமினல் வழக்கு களையே விளங்கும் பொறுப்புண்டு. 6 மாத மறியலும், 100 ரூபா குற்றமும், இதன் தண்டனை அதிகார எல்லை கள். இவற்றிலும் பாரதூரமான குற்றங்களையும் முதலில் விசாரித்து மாவட்டமன்றுக்கு அல்லது உச்சமன்றுக்குப் பாரப்படுத்தவோ, குற்றஞ் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யவோ நீதிவானுக்கு அதிகாரமுண்டு. 3. விண்ணப்பமன்று-300 ரூபாவுக்குக் குறைந்த பெறுமதி யான எதைப்பற்றிய சீவில் வழக்கும் இம் மன்றுக் குரியது. 4. மாவட்டமன்று-300 ரூபாவுக்கு மேற்பட்ட எல்லாவகைச் * சீவில் வழக்குகளும் 2 வருட மறியலுக்கு மேற்படாத மறியல் அல்லது 1000 ரூபாவுக்கு மேற்படாது குற்றம் விதிக்கக்கூடிய கிறிமினல் வழக்குகளும் இம்மன்றுக் குரியன.
இந்நிலையங்களின் தீர்ப்பை ஏற்காதவர் அதை மாற்றி விடும்படி மேன்முறையீடு (Appeal) செய்யும் உரிமை யுண்டு. தமிழிற் பெரும்பாலும் அப்பல்” என்ற சொல் வழக்கிலுண்டு. ஊர்மன்றுகளின் தீர்ப்பை ஆட்சேபித்து மாவட்டமன்றுக்கு மேன்முறையீடு செய்யலாம். மற்ற வற்றின் தீர்ப்புக்களே ஆட்சேபித்து மேன்முறையீடு செய்வது உச்சமன்றுக்கேயாம்.
உச்சமன்று மற்ற மன்றுகளிலிருந்துவரும் மேன்முறையீடு களை விசாரித்து ஆகவேண்டியதைச் செய்வதைவிட, சில வகை வழக்குகளை நேரே விசாரிக்கும் பொறுப்புமுடையது. கொலை, கைபிழைபாட்டுக் கொலை, மக்கள் உயிர்ச்சேதம் (Homicide), இராசதுரோகம் போன்ற பாரதூரமான குற்றங் கள் பற்றிய வழக்குகள் இம் மன்றுக்கேயுரியன. மற்றும் மன்றுகளிலிருந்து பாரப்படுத்திவரும் குற்ற(கிறிமினல்)வழக்

நீதிபரிபாலனம் 199
குகளை விசாரிப்பதற்கு மாகாணத் தலைப்பட்டினங்களிற் கூட் டப்படும் பருவமன்றுக்களுக்கு நீதிபதிகள் சென்று நடுவர்களின் (விசாரணை உதவியாளர்-Jurors) உதவியுடன் விசாரணை செய்வார்கள். இவர்களேத் தமிழில் யூரித்துரைமார்', 'யூரிக் கனவான்கள்’ என்று சொல்லுவது வழக்கம்.
உச்சமன்றைவிட மற்ற மன்றுக்களுக்கு நிலப்பரப்பாளெல்லை (Territorial Jurisdiction)யும் வகுக்கப்பட்டிருக்கும். குறித்த ஒரு மன்றின் ஆளெல்லை(ஆட்சியெல்லை), குறித்த ஒரு நிலப்பரப் பிற்கப்பாற் செல்லாது. உச்சமன்றின் ஆதிக்கம் நாடு முழு வதிலுஞ் செல்லும். குற்ற சம்பந்தமான வழக்குகளைப் பொறுத்தளவில் இலங்கை முழுவதற்கும் ஒரே சட்டம்.
மற்றவகை வழக்குகளுக்கு இடையிடையே வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் செயற்படுத்தப்படுகின் றன. யாழ்ப்பாணத் தமிழருக்கு தேசவழமை? என்னுஞ் சட்டமும், இஸ்லாமியருக்கு முஸ்லீம் சட்டமும் சில துறை களிற் செயற்படுத்தப்படுகின்றன. கண்டி நாட்டினருக்கும் கண்டிச் சட்டம்’ என்ற ஒன்றுண்டு. யாவருக்கும் பெரும் பாலும் செயலாகுஞ் சட்டம் ரோம-ஒல்லாந்த சட்டம் ? (Roman-Dutch Law). ஒல்லாந்தர் இங்கு ஆட்சிபுரிந்தகாலத்தில் இம்முறை இங்கும் இடம்பெற்று இன்றும் பலதுறைகளில் நாடுமுழுவதிலும் செயற்படுகின்றது. ஆங்கிலச் சட்டமும் பல துறைகளில் இங்கு இடம்பெற்றிருக்கிறது.
குறிப்பு:
சட்டமன்று என்ற சொல் இங்கு ஆளப்பட்டிருந்தபோதிலும் * கோடு’ என்ற சொல்லே பெருவழக்கிலிருக்கிறது.
Supreme Court - சுப்பிறியங்கோடு.
District Court - Guiu Gast G.
Magistrate’s Court - பொலிசுக்கோடு - இது முன் ஒரு காலம், ஆங்கிலத்தில் Police Court என்றுதான் இருந்தது. அப்போது வழங்கிய பெயரே இன்றும் வழக்கிலுண்டு.

Page 107
அதிகாரம் 6
மத்தியவாட்சியும் உள்ளுராட்சியும் (Central Government and Local Government)
10த்தியவாட்சி (காட்டாட்சி) யென்பது குறித்த ஒரு நாடு முழுவதற்கும் பொறுப்பாய், பலதுறைகளிலும் வேண்டியபடி ஆணை செலுத்துவதற்கு வேண்டிய முறைகளைக் கையாண்டு வருதலேயாம். ஈற்றில் எல்லாத் துறையிலும் அதற்கே பொறுப் பும் உரிமையுமுண்டு. காட்டில் இருக்கும் வெவ்வேறு கிராமங் கள், பட்டினங்கள் பெரும் நகரங்களுக்குத் தனித்தனியே சில துறைகளில் தமக்கு வேண்டியவற்றைச் செய்யும் பொறுப் பையும் உரிமையையும் விடுவதற்கு இன்று பல நாடுகளின்ஆட்சி (popuigi) (Govenmental System) 3Lusci, d55 airpg. 5.TL1 லுள்ள ஆட்சி அலுவல் யாவற்றையுங் கண்காணிக்கும் உரி மையும் பொறுப்பும் நாட்டின் ஆட்சிப்பீடத்திற்கே யிருக்கும். ஆனற் சில அலுவல்கள் ஒரு குறித்த இடத்திற்கே வேண்டி யனவா யிருத்தல்கூடும். சில அலுவல்களைத் திறம்படச் செய்வதற்கு அவற்றைச் சிறு சிறு கூறுகளாய்ச் செய்வதே வேண்டியதாயிருக்கும். தத்தம் ஊர் அலுவல்களைச் செய்வதில் மக்களுக்குப் பெரும்பாலும் ஆர்வம் வரும். ஆர்வங்கொண்டு செய்வன, சிறப்பாய் நிறைவேறும். குறித்த ஓரிடத்தில் வாழ்ப வருக்கே இடத்தின் தேவைகள், குறைகள் கன்ருய்த் தெரி யும். அவர்களே இவற்றைத் தீர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டு வர். யாவருக்கும் தத்தம் அலுவல்களேச் செய்து கிறைவைக் காண்டலில் ஒருவகை இன்பம் உண்டு. பாராளுமன்றத் தொகுதிகளைப் போலல்லாமல், தொகுதிகள் இங்கு சிறியன வாயேயிருக்கும். ஆதலால் பிரதிநிதிகளாய்ப் போவோரை வாக்காளர் பெரும்பாலும் கன்ருய் அறிந்து பழகியிருப்பர். போனபின்பும் கலியாணவீடு, சாவீடு, வீடு குடிபுகுதல் போன்ற வைபவங்களிலோ, நாளாந்தர வாழ்க்கையிலோ காண நேரிடும். காணும்போது தம் குறைகளை எடுத்துக்கூற

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 2O
வாய்ப்பிருக்கும். நாளுக்குநாள் காணவேண்டியவரை ஏமாற்று தல் பிரதிகிதிகளுக்கு எளிதாயிராது. ஆகையால், வாக்காளர் தேவைகளைத் தீர்ப்பதற்கு மத்தியவாட்சியிலும் பார்க்க உள்ளு ராட்சியிற் கூடிய வாய்ப்புண்டு. எவருக்காயினும் தன் அயல வர், ஊரவர் மதிப்பையிழக்க மனம் ஏ வாது. ஆகையால், பிரதி நிதிகள் தவருண முறையில் நடத்தலும் எளிதன்று. கைக்கூலி வாங்கினலோ வேறெவ்விதத்திலாவது முறைகேடாய் நடந்து கொண்டாலோ அதை இரகசியமாய் வைத்துக்கொள்ளுவதும் எளிதன்று. ஆனபடியால், குடியாட்சிமுறையைக் கையாளுவ தற்கு உள்ளுராட்சியிற் பெரிதும் வாய்ப்புண்டு. குடியாட்சி வெற்றிகரமாய் நடப்பதற்கு வேண்டிய பல தன்மைகள் உள்ளு ராட்சியி லமைந்திருக்கின்றன.
நம் நாட்டில் பண்டை5ாளில் ஒருவகை ஊராட்சியிருந் திருக்க வேண்டுமென்று கம்புவதற்கு இடமுண்டு. பொது மக்கள் உரிமை பூண்டு தெரிந்த பிரதிநிதிகள் இதை நடத் தினரென்று சொல்வதற்கில்லை. அந்தக் காலம் நிலச் சொக் தக்காரருக்கே செல்வாக்கிருந்தது. ஒரு சிலருக்கே நிலமிருந் தது ; மற்றவர்கள், குடிமக்களாயும் ஏவலாளராயுமே வாழ்க்கை நடத்தினர். ஊரில் நிகழும் சச்சரவுகள், பிணக்குகளை வயதில் முதிர்ந்த சிலர் தீர்த்துவைக்கும் வழக்கமும் இருந்திருத்தல் வேண்டும். இவ் வழக்கம் இன்றும் முற்ருக அற்றுப்போக வில்லை. கிராமப்புறங்களிலே செல்வாக்குள்ள பேர்வழிகள் இன்றும் இடையிடையே இதைச் செய்கின்றனர். இவர்கள் இன்று போலவே அன்றும் பெரும்பாலும் கிலம்புலமுள்ளவர் களும் குடிப்பிறப்புள்ளவர்களுமா யிருந்திருத்தல் வேண்டும். இவ்வுரிமை பரம்பரையாய்ச் சில குடும்பங்களுக்கே இருந் திருத்தல் வேண்டும். இந்நாடு அக்கியர் கைப்பட்ட பிறகும் இம்முறை முற்ருய்க் கைவிடப்படவில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இதுபோன்றவற்றிற் பாரதூரமான மாற்றம் யாதும் செய்ததாகத் தெரியவில்லை. பிரித்தானியரின் ஆட்சியின் போது கண்டிநாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது செய்த உடன்படிக்கையில் அந்நாட்டின் பாரம்பரிய முறையிலேதான் தாமும் ஆட்சி நடத்துவதாக ஏற்றுக்கொண்டனர்.
ஆணுல், நில உரிமையை அடிப்படையாய்க்கொண்ட நாக ரிகமும் பிரித்தானியர் ஆட்சியில் மாறத் தொடங்கியது. மேற்கு நாடுகளிலே தோன்றிய மாற்றங்கள் இக் காட்டையும்

Page 108
2O2 ஆட்சி இயல்
தாக்கின. பண்டமாற்றுமுறை மாறிப் பணத்திற்கு விற்றல் வாங்கல் தோன்றியது. வண்ணுர், அம்பட்டர் போன்றவருக்கு அறுவடை காலத்தில் நெல்லையே கூலியாய்க் கொடுக்கும் வழக் கம் இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னுமிருந்தது ; இன் றும் சில இடங்களில் இருத்தல்கூடும். இதுவும் ஒருவகைப் பண்டமாற்றே. மனிதன் மிருகங்களின் உடல்வலியாலும் தன் வலியாலும் செய்த வேலையையே பின்னர் யந்திரங்கள் செய்யத்
வளர்ந்தது; நிலஉரிமை நாகரிகத்தின் செல்வாக்கும் குறைந் தது; புதிய ஆட்சிமுறையும் தோன்றியது. மக்களுக்குவரும் பிணக்குக்களைத் தீர்ப்பதுதான் ஆட்சியின் ஒரே நோக்கமன்று. ஆட்சிச் செலவிற்கு வரிப்பணம் அறவிடுதலும் ஆட்சிக்குரிய முக்கிய கோக்கங்களில் ஒன்று. அரசனுக்கிறுக்க வேண்டிய வரிப்பணத்தைப் பெற்றுக் குறித்த அலுவல(உத்தியோகத்த) ரிடம் சேர்ப்பிப்பதற்கு ஊர்தோறும் அலுவலர்கள் பண்டைநாளி லும் இருந்திருப்பர். பிரித்தானிய ஆட்சிமுறையிலும் அங்ங் னம் அலுவலர் நியமனம் பெற்றனர். இவர்கள் பிரித்தானிய ஆணையையே நிறைவேற்றினர். மன்னர் ஆள்பதியை நியமிக்க அவர் மாகாண அதிபதிகளை நியமிக்க அவரே பெரும்பாலும் தமது ஆணேயிற் கடமை நடத்தும் அலுவலர்களே கியமனம் செய்தார். இம்முறையே பல்லாண்டாய் நடைபெற்றது. இப்படி கியமனம் பெற்ருேர் பொதுமக்கள் ஒத்துழைப்பைப் பெறுதல் அரிது. அவர்கள் தம்மை நியமித்தோரையே திருப்திப்படுத்தப் பார்ப்பது இயல்பு. பொதுமக்களுக்கு இருந்த உரிமைகளும் மிகச் சிலவே. அலுவலர்கள் தம்மை வருத்தினுலும் அதைப் பற்றி முறையிடப் பொதுமக்கள் பெரும்பாலும் துணியார் கள். இவ்வலுவலர் நியமனங்களும் ஊரிலே செல்வாக்குள்ள வர்களுக்கும், குடிப்பிறப்புள்ளவர்களுக்குமே கிடைக்கும். பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாய்ச் சில குடும்பங்களைச் சார்ந்தவர்களே நியமனம் பெறுவர். அவர்களோடு முரண் படாது வாழ்வதே பொதுமக்களின் நோக்கமாயிருந்தது. கிரா மப்புறங்களில் இவர்கள் அதிகாரம் சர்வாதிகாரம். ஆட்சிப் பீடத்திடமிருந்து எதைப் பெறல்வ்ேண்டுமென்ருலும் இவர் கள் மூலமே பெறல்வேண்டும். மழைக்குறைவால் விளைவு குறைந்து பஞ்சம் ஏற்பட்டாலோ, பெருவெள்ளத்தால் அழி வேற்பட்டாலோ இவர்கள் மூலந்தான் முறையிடலாம் ; இவர் கள் மூலந்தான் உதவிபெறலாம். இவர்கள் சிற்றரசர்களாகவே தம்மை எண்ணினர். பொதுமக்களும் அங்ங்னமே அவர்களை

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 203
மதித்தனர். மத்தியவாட்சியிற் சுயவாட்சிமுறை இடம்பெற உள்ளுராட்சியிலும் மாற்றங்கள் தோன்றின. கொழும்பிலும் கண்டியிலுந்தான் முதன் முதல் உள்ளூராட்சிமுறை ஆரம்ப மானது. 1865இல் நிறைவேறிய ஒரு சட்டத்தின்படி 1866இல் கொழும்பிலும் கண்டியிலும் 1867இல் காலியிலும் நகரசபை கள் (Municipalities) உருவெடுத்தன. கொழும்பு இந்த நாட் டின் தலைநகர் ; கண்டி தோட்டப்பகுதியின் முக்கிய நகரம் ; காலி ஒரு பிரதான துறைமுகம். இம் மூன்று நகரங்களிலும் நகரமக்களுக்குப் பெரும்பான்மையான உறுப்பினரைத் தெரி யும் உரிமை இருந்தபோதும் தலைவரைத் தெரியும் உரிமை உறுப்பினருக்கிருக்கவில்லை. கொழும்பில் இதற்கென நியமனம் பெற்ற குடியியற் சேவையாளன் (Civil Servant) ஒருவர் தலை வராய்க் கடமை பார்த்தனர். கண்டியிலும் காலியிலும் அர சாங்க அதிபதியே (Government Agent) தலைவராய்க் கடமை பார்த்தார். மதிப்பீட்டுவரி (சோலேவரி - Assessment Rate) போன்ற வரிகளால் வந்த பணம் இவ்வாட்சி மன்றங்க ளின் செலவுக்குதவியது. தெருக்களேத் திருத்துதல், தெருக் களுக்கு வெளிச்சம் அமைத்தல், நகரமக்கள் நல்ல குடி தண்ணிர் பெற ஒழுங்கு செய்தல், உணவுப் பொருள்கள் விற்பனைக்குச் சந்தைகள் நிறுவுதல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், நகரைச் சுத்தமாய் வைத்திருத்தல் போன்றனவே இம் மன்றங்களின் பொறுப்பு. இப் பொறுப் புக்களை ஏற்று நடத்தும்போது ஆட்சிமுறையிற் பயிற்சி பெறும் வாய்ப்பும் நகர மக்களுக்குக் கிடைத்தது. மேற்கூறிய மூன்றும் நகரசபைகளாகும். இவற்றிலும் சிறிய பட்டினங்களின் மேற்பார்வைக்கான சங்கங்கள் நிறுவுவதற்காக 1876இல் ஒரு சட்டம் நிறைவேறியது. இச் சங்கங்களுக்கு உள்ளூர்ச் சபைகள் (Local Boards) என்று பெயர். இவையும் அரசாங்க அதிபதியின் அல்லது அவருடைய உதவியாளர் தலைமையிலே தான் கடமை யாற்றின. தெரிவுறுப்பினர் (Elected Members) தொகையும், நியமன உறுப்பினர் (Nominated Members) தொகையும் சமமாயிருந்தன. இவற்றின் பொறுப்பும் பெரும் பாலும் நகரசபைகளின் பொறுப்புப் போலவே இருந்தது.
1892இல் இன்னும் சிறிய பட்டினங்களுக்கும் ஒருவகை உள்ளூராட்சிமுறை நிறுவப்பட்டது. சுகாதார சபை (Sanitary Board) என்ற பெயருடன் ஆள்பதி நியமித்த உறுப்பினர் பொறுப்பில் இவை கடமையாற்றின.
ஆ - 14

Page 109
204 ஆட்சி இயல்
இதற்குப்பின் உள்ளூராட்சியிற் பொது மக்களுக்கு உரி மையும் பொறுப்பும் சிறிது சிறிதாய்க் கூடிவந்தது. நியமனத் தலைவரை நீக்கி உறுப்பினரே தம் தலைவரைத் தெரியும் உரிமை உருவெடுத்தது. உறுப்பினரை நியமிக்கும் முறையும் சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டது. ஆனல் இம் மாற்றங்கள் நிகழ்ந்தது சிறிது காலத்திற்குமுன்தான். கிராம சங்கங்கள் தோன்றியபோது நியமன உறுப்பினர்தான் இடம்பெற்றனர். மணியகாரர்கள் இச் சங்கங்களுக்குத் தலைமை வகித்தனர். பட்டினசபைகளிலும் (Urban Councils) தெரிவுறுப்பினருடன் நியமன உறுப்பினரும் இருந்தனர். இப்போது உள்ளுராட்சி அமைப்பில் நியமன உறுப்பினருக்கிடமில்லை. பாக்கங்களாய் (வட்டாரங்கள்-Wards) பிரிக்கப்பட்டுள்ள குறித்த ஊரெல் லேக்குள் வாழும் மக்கள் ஒவ்வொரு பாக்கங்களுக்கும் தம் பிரதிநிதிகளைத் தெரிகின்றனர். 1931இல் செயல்முறைக்கு வந்த டொனமூர்த் திட்டத்தின் படி மத்தியவாட்சித் தேர்தலில் வாக்குரிமை 21 வயதுக்கு மேற்பட்ட யாவருக்கும் வழங்கப் பட்டபோதும் உள்ளுராட்சி வாக்குரிமைக்குச் சில கட்டுப்பாடு கள் இருந்தன ஒரு குறித்த தொகை பெறுமதியான நிலம் இருத்தல் வேண்டும்; அல்லது ஒரு குறித்த தொகை, வருட வருவாயிருத்தல் வேண்டும்; சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்றில் ஒன்றையாவது எழுத வாசிக்கத் தெரிந்திருத் தல் வேண்டும்.
இவை யாவும் இப்போதில்லை. மத்தியவாட்சி வாக்குரி மையைப்போல, உள்ளூராட்சி வாக்குரிமையும் இலங்கைக் குடிகள் யாவருக்கும் உண்டு.
இப்போது நான்கு வகையான உள்ளுராட்சி நிலையங்கள் இருக்கின்றன. அவையாவன :
1. (55J d60)Lassir - (Municipalities) 2. Util 60T F60), 156ir - (Urban Councils) 3. Lil 1607 Fiassia, air - (Town Councils) 4. STITLD d is assids air - (Village Committees)
பெரிய நகரங்களிலே நகரசபைகள் இருக்கின்றன. நகர
பதியை (Mayor) உறுப்பினரே தெரிவர். இவர் நகரச் சார்பில் நடக்கும் சடங்கு வைபவங்களில் நகரபதிக்குரிய உடையுடன்

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 2O5
காட்சியளிப்பார். நகரில் நடைபெறும் வைபவங்கள் யாவற்றி லும் அவருக்கு முதலிடங் கொடுப்பது மரபு. ககருக்கு வருகை புரியும் கண்ணியம் பொருந்திய பேர்வழிகளை நகரின் சார்பாக வரவேற்குமுரிமையும் உபசரிக்குமுரிமையும் அவருக்கே உரியன. பலவகைப் பொதுக்காரியங்களிலும் அவர் கலந்து கொள்வா ரென்று எதிர்பார்க்கப்படும். சடங்குகள் சம்பிரதாயங்களை விட நகரின் பரிபாலனம் பொதுப்பட அவர் கடமையேயாகும். அவர் சம்பளம் பெறும் அலுவலரல்லாதபடியால் தம் முழு கேரத்தையும் இவ்வேலையிற் செலவிடல்முடியாது. வெவ்வேறு அலுவல்களுக்கு வெவ்வேறு நியமன அலுவலர்கள் இருக் கின்றனர். நகர அலுவல்கள் யாவற்றையும் கண்காணிக்க ஒரு நியமன அலுவலர்-நகரசபை ஆணேயாளர் (Municipal Commissioner)-இருக்கின்றர். இவர்கள் யாவரையும் கண் காணித்து நகரத்திற்கு வேண்டியவற்றைச் செய்விப்பது நகரபதி யின் பொறுப்பு. நகரசுத்தி, குடிதண்ணிர், மின்சார, சுகாதார வசதிகளை யாக்கல்; தெருக்களே, ஒழுங்கைகளை ஆக்கல் ; செப்ப னிடல் ; இடுகாடு, சுடுகாடுகளை மேற்பார்த்தல்; சந்தைகள் நிறுவல், அவற்றைச் சுத்தமாய் வைத்திருத்தல் ; பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், நூல் நிலையங்கள், வாசிகசாலை கள், சனசமூக நிலையங்கள் முதலியவற்றை நிறுவிப் பரிபாலித் தல் போன்றவையே உள்ளூராட்சி நிலையங்களின் பொறுப்பு. எல்லா நிலையங்களும் இவை யாவற்றையுஞ் செய்வதில்லை; வருவாய்க்குத் தக்கபடியே செய்தல்முடியும். பெரும்பாலும் நகர சபை ஆட்சிமன்றங்கள் மேற்கூறிய யாவற்றிலும் ஈடுபடுகின் றன. மற்றவகையான நிலையங்கள் தத்தம் ஆற்றலுக்கும் வரு வாய்க்கும் ஏற்றபடி ஈடுபடுகின்றன. எம் நாட்டில் உள்ளூராட்சி முறை சிறிது காலத்திற்குமுன்தான் தோன்றி நிலைபெற்றது. ஆகையால், இவற்றின் பொறுப்புப் போதிய அளவு வளர வில்லை. மேலைநாடுகளிலே உள்ளூராட்சி நிலையங்கள் நூதன சாலைகள்(Museums),மிருகக்காட்சிச்சாலைகள்(ZoologicalGardens), ஓவிய சிற்ப நிலையங்கள் (Art Galleries) போன்றவற்றின் பொறுப்பையும் ஏற்று நடத்துகின்றன. இங்கிலாந்திலே பள் ளிப் படிப்பின் பொறுப்பும் பெரும்பாலும் உள்ளு ராட்சி நிலையங்களிடந்தான் இருக்கின்றது. இலண்டன் மாநிலக்கழகம் (London County Council) ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாக்களேக் கல்விக்குமத்திரம் செலவழிக் கின்றது. பள்ளிக்கூடப் பிள்ளைகளின் மத்தியான உணவு,

Page 110
2O6 ஆட்சி இயல்
புத்தகச் செலவு போன்றவற்றிற்கும் இச் சபை பணம் வழங்கு கிறது. கல்வி வரியென்று ஒரு வரி வகுக்கும் உரிமை இங்கி லாந்திலே உள்ளூராட்சி நிலையங்களுக்குண்டு. இதையும் உள்ளூராட்சிப்பீடம் உதவும் பணத்தையும் கொண்டே இவை இப் பெரும் பொறுப்பை நிறைவேற்றுகின்றன. கொழும்பு நகரசபையினரும் சில ஆண்டுகளாய் வறிய பிள்ளைகளுக்கு இலவசமாய்ப் புத்தகங்கள் கொடுக்கின்றனர். இந் நிலையங் கள் பெரும்பாலும் வெவ்வேறு துறைகளில் நடப்பதைக் கண் காணிப்பதற்கு வெவ்வேறு கிருவாகக் குழுக்களே நியமித்து அவை மூலம் வேண்டியவற்றைச் செய்கின்றன.
மற்ற உள்ளூராட்சி கிலேயங்களும் இவை போன்ற பொறுப்புக்களையே இதே முறையிற் செலுத்துகின்றன. இவைக் கிருக்கும் வேற்றுமை பெரும்பாலும் பண வசதியையும் ஆட்சி செய்யும் நிலப்பரப்பின் அளவையும் ஒட்டியவையே. நகர சபைகள் (Municipalities) பெரிய நகரங்களில் ஆட்சிபுரிகின்றன. மத்தியவாட்சிப் பீடத்திலிருந்து நன்கொடையாய்ப் பணவுதவி இவற்றிற்குக் கிடைப்பதரிது. பெரும்பாலும் தாம் விதிக்கும் வரிகள் மூலம் பெறும் வருவாயைக் கொண்டே இவை ஆட்சி நடத்துகின்றன. ஆதலால், மத்தியவாட்சிப்பீடம் இவற்றின் நாளாந்தர அலுவல்களிற் பெரும்பாலுந் தலேயிடுவதில்லை. பொறுப்பைநியாயமாய் கடத்தும் வரையும் மத்தியவாட்சிப்பீடம், தலையிடுவது அரிதே. பட்டினசபைகளின் (Urban Councils) அலுவல்களிலே தலையிடுவதற்குக் கூடிய உரிமையுண்டு. இவற்றின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை உள்ளூராட்சி 2,300T (UTGIT ii (Commissioner of Local Government) Lutii 606). யிட்டனுமதித்தல் வேண்டும். உள்ளூராட்சி ஆணையாளரே மத்தியவாட்சிப்பீடத்தின் சார்பாக உள்ளூராட்சி நிலையங்களைக் கண்காணிப்பவர். நகரசபைகளின் அலுவல்களில் அவர் தலை யிடுவதில்லை. மற்றவகை கிலேயங்களின் அலுவல்களைப் பல. துறைகளில் மேற்பார்வையிடுவது அவர் பொறுப்பு. உதவி ஆணையாளர் நாட்டின் பலபாகங்களிலும் கடமையாற்றுகின்றனர். அவர்களே பெரும்பாலும் ஆணேயாளர் கடமைகளைச் செய் வர். பட்டின சபைகளுக்கு ஆலோசனை கூற இவருக்குரித் துண்டு. என்னென்ன வேலைகளில் ஈடுபடல் வேண்டுமென்று பட்டினசபைகளைக் கட்டாயப்படுத்தும் உரிமை மத்தியவாட்சிப் பீடத்திற்குண்டு. இச் சபைகளின் கணக்கு ஏடு(புத்தகங்)களேப் பார்வையிடும் உரிமையுமுண்டு. தக்க நியாயத்திற்குப் பட்

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 207
டினசபைத் தலைவரைப் பதவியிலிருந்து மத்தியவாட்சிப்பீடம் நீக்கிவிடலாம். பட்டினசங்கங்களின் (Town Councils) அலுவல் களிலும் இதேயளவு தலையிடும் உரிமை மத்தியவாட்சிப்பிடத் திற்குண்டு ; கிராம சங்கங்களின் அலுவல்களிலேயே ஆகக் கூடிய தலையீடுண்டு. இவை பெரும்பாலும் மத்தியவாட்சிப் பீடத்திலிருந்து பெறும் பணத்தைக் கொண்டே தம் கருமங் களைச் செய்கின்றபடியால், மத்தியவாட்சிப் பீடத்தின் தலை யீடும் அதிகரிக்கிறது.
எவ்வித வரி விதிப்பதற்கோ, மற்றும் நிலமோ கட்டிடமோ வாங்குவதற்கோ, சங்கத்திற்குரிய நிலம் கட்டிடம் ஆகியவற் றைக் குத்தகைக்குக் கொடுப்பதற்கோ, சம்பளம் உள்ள ஒரு புது அலுவலர் பதவியை ஆக்குவதற்கோ, நூறு ரூபாவுக்கு மேற்பட்ட தொகையைச் செலவு செய்வதற்கோ, நூறு ரூபா வுக்கு மேற்பட்ட ஒப்பந்தஞ் செய்துகொள்வதற்கோ யாதே னும் தருமத்திற்கு அல்லது வெள்ள நிவாரணம்போன்றவற் றிற்கு எத்தொகையையும் கொடுப்பதற்கோ கிராம சங்கங் கள் மேலதிகாரிகளின் அனுமதியைப் பெறல் வேண்டும்.
கிராம சங்கம், பட்டின சங்கம், பட்டின சபை, நகரசபை ஆகிய நான்கும் முறையே படிப்படியாய் ஆதிக்கத்திலும் செல்வாக்கிலும் கூடியன. அங்ங்ணமே இவை நான்கிலும் மத்தியவாட்சிப் பீடத்தின் தலையீடும் படிப்படியாய்க் குறைந் திருக்கிறது. கொடுக்கும் பண உதவியின் அளவே மத்திய வாட்சிப்பீடத்தின் தலையீடும், அதிகாரமும். தாம் கொடுக்கும் பணம் தக்கமுறையிலே செலவாகிறதோ என்று நிச்சயப் படுத்தும் உரிமையும் கடமையும் மத்தியவாட்சிப் பீடத்திற்கு உண்டென்று கருதப்படுகிறது. வரிவிதிக்கும் உரிமையிருந்த போதும் இவ்வுரிமையைச் செலுத்தும் கிராம சங்கங்கள் மிகச் சிலவே.
எவ்வித ஆட்சிக்கும் பணம் வேண்டும். அலுவலர்களின் சம்பளம் ஒருபுறம் இருக்க இங்கிலேயங்கள் செய்யவேண்டிய, செய்யக்கூடிய ஆக்கவேலைகள் பல உள. அவை என்னென்ன என்று முன் கூறியிருக்கிருேம். இவை யாவற்றிற்கும் பணம் வேண்டும். சந்தைகள், வர்த்தக வணிக நிலையங்கள் உள்ள இடங்களிலும் குடிசன நெருக்கமுள்ள இடங்களிலும் வரிதிரட்டு வது கடினமன்று. உள்ளூராட்சி நிலையங்களின் வருவாய்

Page 111
2O3 ܖ ஆட்சி இயல்
பெரும்பாலும் இதன் கீழ்க் குறிப்பனவற்றிலிருந்தே வரும். மதிப்பீட்டுவரி (நிலத்திலிருந்தோ கட்டிடத்திலிருந்தோ வரும் வருவாயின் குறித்த சதவீதம்); வாகன வரி, மிருகவரி, சந்தை, வண்டிக் காலைகள் போன்றவற்றின் வருவாய் உத்தரவுச்சீட்டு வழங்குவதால் வரும் வருவாய் (Licensing Fees)-உணவுச்சாலை கள் தொழிற்சாலைகளை நடத்துவோர், அச்சாலைகளின் பேரில் இறுக்கும் தொகை-சட்டத்தை மீறி நடப்போரிடம் அறவிடும் குற்றப்பணம்; மின்சார விதியோகம் போன்றவற்ருல் வரும் இலா பம். இவ்வருவாய்கள் பெரும்பாலும் அன்ருடச் செலவுக்கே போதும்; மின்சாரத் திட்டம், குடிதண்ணிர்த் திட்டம் தெரு ஆக்கும் திட்டம், வீடுகட்டுக் திட்டம் போன்ற பெரிய ஆக்க வேலைகளுக்குப் போதா. இவைபோன்ற ஆக்கவேலைகளில் ஈடுபடாதிருத்தலும் இந் நிலையங்களால் முடியா. இவ்வகை வேலைகளே இந்நிலையங்களின் முக்கிய பொறுப்பு. ஆதலால் இத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு மத்தியவாட்சிப் பீடத்திட மிருந்து நெடுங்காலக் கடன்களைப் பெறும் வசதியிருக்கிறது. குறைந்தவட்டியில் 20, 30 ஆண்டுக்குச் சிறுச் சிறு கூறு களாய்த் திருப்பிக் கொடுக்கக்கூடிய கடன்கள் இவை. இடை யிடையே குறித்த தனி நோக்கம் ஒன்றிற்கு நன்கொடையாக மத்தியவாட்சிப்பீடம் பணம் உதவுவதுமுண்டு. இவ்வகை யுதவி பெரும்பாலும் கிராம சங்கங்கள், பட்டின சங்கங்கள் போன்ற, வருவாய் குறைந்த, கிலேயங்களுக்கே கிடைக்கிறது. பொதுமக்களுக்கு உள்ளூராட்சியே பெரிதும் உதவுவது; உதவக்கூடியது. குடி தண்ணிர், தெருக்கள், மின்சாரம், நூல் நிலையம், விளையாட்டு மைதானம், சுகாதார வசதிகள் போன் றவை பொதுமக்களுக்கு என்றும் வேண்டியவை. உள்ளு ராட்சியில் ஏற்படும் குறைநிறைகளே பொதுமக்களைப் பெரி தும் பாதிப்பன. ஆகையால், ஆட்சித்துறையில் உள்ளூராட் சிக்கு முதலிடங் கொடுத்தல் பிழையாகாது. ஆணுல், விதானே, உடையார், மணியகாரன், மாகாண அதிபதி என்ற முறையில் நடைபெற்ற ஆட்சி இங்கு பல்லாண்டுகளாய் வேரூன்றியிருந்தது. பொதுமக்களுக்குச் சிறிதும் உரிமையோ கடமையோ இருக்கவில்லை. உள்ளூராட்சியிற் பயிற்சிபெறும் வாய்ப்போ, ஊரின் வளர்ச்சிக்கும் திருத்தத்திற்கும் உழைக் கும் இயல்போ, ஊரவரின் முன்னேற்றத்தில் தமக்கும் பொறுப் பிருக்கிறதென்னும் உணர்ச்சியோ தோன்ற இடமிருக்கவில்லை இறு கிராமங்களிலும் சிறு பட்டினங்களிலுமுள்ள உள்ளூராட் சிக்கு வேண்டியதைப் போதியளவு செய்யப் பணவசதியில்லை.

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 2O9
இவற்றைப் பொறுத்தமட்டிற் பணக்குறைவே பெரும் இடை யூறு விளைவிக்கின்றது. மத்தியவாட்சிப்பீடம் சட்டக்கட்டுப்பாட் டின்படியே பண உதவி புரிதல்முடியும். தேவைக்கேற்ப ஒரு கிலை. யத்திற்குக் கூட்டியும் இன்னென்றிற்குக் குறைத்தும் பண உதவி புரிவது இலகுவன்று. பொதுமக்களும் எல்லாவித நலன்களும் வசதிகளும் வேண்டுமென்று கிளர்ச்சி செய்வர். வரி இறுப்ப தில் ஆர்வங்காட்டும் வரியிறுப்பாளரைக் காண்பதோ அரிதி னும் அரிது. நேர் நேரே ஊரவரிடம் வரி அறவிடும் முறை (நேர்வரி-Direct Taxation) உள்ளுராட்சியில் உபயோகிப்பதற்கு ஒரு நியாயமுண்டு. வரியிறுப்போரே எவ்வித ஆட்சியிலும் உண்மையான உரிமையாளர். தாம் இறுக்கும் பணம் தகுந்த முறையிலே செலவாகின்றதோ என்று பார்ப்பது அவர்கள் உரிமையும் கடமையும் ஆகும். பல வரிகளை, இறுக்கிருே மென்று தெரியாமலே இறுத்துவிடுகிருேம். குடைகள், பட் டுப் பருத்தித் துணிகள் போன்றவற்றை அன் ருடத் தேவைக்கு நாம் வாங்கும்போது வரியிறுத்துக்கொண்டே யிருக்கிருேம். இறக்குமதி செய்தவர் பெருக் தொகையாய்க் கட்டிய தீர்வை யைச் சில்லறை விற்பனையாளர் சிறிது சிறிதாய் எம்மிடம் அறவிடுகிருர். ஆனல், எமக்கோ இறுக்கிருேமென்று தெரி யாது. ஆகையாற் சிறிதும் முணுமுணுப்பில்லாது குறித்த விலையைக் கொடுத்துப் பொருளைப் பெற்றுக்கொள்கிருேம். சில பொருள்களுக்குத் தீர்வை நூற்றுக்கு நூறு வீதம். அவ் விதத் தீர்வையிறுத்த பொருளை வாங்கும்போதும் நாம் கொடுக்கும் விலையிற் பாதிவரையில் வரிப்பணம் என்பதை உணர்வதில்லை. ஆனல், ஒரு கிராமசங்கமோ, மதிப்பீட்டுவரியாய் ஆண்டொன்றுக்கு 3 ரூபாவை நான்காய்ப் பங்கிட்டுக்கொடுக்க வேண்டுமென்று தீர்த்தால், அதனை எதிர்த்துக் கிளர்ச்சியும், மனுக்களும் தூதுக்கோஷ்டிகளும் எங்கிருந்தோ கிளம்பிவிடு கின்றன. மத்தியவாட்சிப்பீடம் ஒரு சில பொருள்களின் தீர்வை யைச் சிறிது கூட்டி, கூட்டியதால் வரும் வருவாயை உள் ளூராட்சி நிலையங்களுக்குப் பங்கிட்டுவிட்டால் யாரும் ஒன் றுஞ் செய்யாதிருப்பர் ; உள்ளூராட்சி நிலையங்களுக்கும் பெரிய தோர் தலைவலி நீங்கிவிடும். ஆனல், மத்தியவாட்சிப்பீடம் எளிதான இம் முறையை ஏன் உபயோகிப்பதில்லை ? உடல் வருந்தியோ, மனம் வருந்தியோ பணத்தைக் கொடுக்கும் போதுதான் மக்கள் அந்தப் பணத்தின் பெறுமதியைச் சிறி தும் குறைவின்றித் திரும்பப் பெறப் பார்ப்பர். திரும்பப் பெறு

Page 112
21 O. ஆட்சி இயல்
வது ஊழியமென்ரு லென்ன, பொருளென்றுலென்ன மனம் வருந்திப் பணங் கொடுத்தவர், தாம் கொடுத்ததற்கு நிகரான தைப் பெற்ருலன்றி மனம் ஆறர். ஆதலால், உள்ளூராட்சி கிலேயங்களில் நேர் வரியிறுப்போர் தாம் இறுக்கும் பணம் நல்லமுறையிற் செலவாகிறதோ, சூறையாடப்படுகிறதோ, அதைக்கொண்டு தம் தேவைகளேத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்று கண்ணுங் கருத்துமாயிருப்பா ரென்று கருதப்படுகிறது. மனம் வருந்தாதுபோனலும் தாம் என்னத்திற்கு வரி இறுக்கிருேம் என்றறிகிறவர்கள் அப்பணம் செலவாகும் முறையிலும் கருத்தாயிருப்பர் என்பது உண் மையே. நேர்வரியை இறுத்ததும் தம் கடன் தீர்ந்ததென்று அதன்பின் என்ன நடக்கிறதென்று கவனியாதார் இல்லை யென்று சொல்லல்முடியாது. என்ருலும் நேர்வரியிறுப்போர் தாம் எதற்காக அதை யிறுக்கின்றனர் என்றறிவார்கள். அப் படி அறிகிறவர்கள் அப்பணம் முறைகேடாய்ச் செலவாவதை அறிந்தாற் பெரும்பாலும் அதைச் சகித்துக்கொண்டு யாதும் செய்திரார்கள். ஓரளவிற்காயினும் தாம் கொடுத்த பணத் தின் பயனைப் பெற முயல்வார்கள். ஆகையால், நேர்வரிகளை அறவிடுவது சிரமமென்ருலும் நேர்வரிமுறையிற் சில நன்மைக ளுண்டென்பதை மறுத்தல்முடியாது. எத் துறையிலும் குடி யாட்சி செம்மையாய் கடப்பதற்கு ஆட்சிக்குட்படுவோர் தம் உரிமைகளிற் கண்ணுங் கருத்துமாயிருத்தல் வேண்டும். நேர் வரிமுறை இதற்கு ஓரளவாயினும் உதவுகின்றது.
வருங்காலத்தில், முடியாட்சிக் காலத்திலிருந்த தலைமைக் காரர் ஆட்சிமுறை சிறிது சிறிதாக மறைந்துவிடும் என்று நம்புவதற்கிடமுண்டு. முன்னுெருகாலம் தலைமைக்காரர் செய்த பல கருமங்களே இன்று உள்ளுராட்சி நிலையங்கள் செய்கின் றன. இடையிடையே உள்ளுராட்சி நிலையங்களும் தலைமைக் காரரும் ஒன்று கூடி உழைப்பதும் உண்டு. பஞ்ச நிவாரணம், வெள்ள நிவாரணம், அகதிகளுக்குதவிபுரிதல் போன்ற துறை களில் இரு சாராரும் ஒன்று பட்டு உழைக்கின்றனர். தலைமைக் காரர் ஆட்சியை நீக்குவதற்கு இடையிடையே யோசனைகள் தோன்றியும் இக்கோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. பல் லாண்டாய் இருந்துவந்த ஒன்றை உடனே நீக்கிவிடுவது குடியாட்சிமுறையில் கடத்தல் அரிது. ஆனல், இப்போது நாடு போகும் போக்கிலிருந்து இன்று தலைமைக்காரர் பொறுப்பி லிருக்கும் பல கருமங்கள் விரைவில் உள்ளூராட்சி நிலையங்

மத்தியவாட்சியும் உள்ளூராட்சியும் 21
களுக்குரியனவாகி விடுமென் றெண்ணனுவதற்கு இடமுண்டு. உள்ளூராட்சி நிலையங்கள் பலவற்றிற்கு இருக்கும் முக்கிய இடர்ப்பாடுகளில் வருவாய்க் குறைவும் ஒன்று. இதைத் தீர்ப் பதற்கு யாது செய்யலாமென்று பலமுறை ஆராய்ச்சி நடந்திருக் கின்றது. இரண்டொரு விசாரணைக் குழுக்களும் இதைப் பற்றி ஆராய்ச்சி கடத்தியிருக்கின்றன. செயல்முறையில் யாதும் கடந்ததாய்த் தெரியவில்லை. உள்ளூராட்சி நிலையங்கள் பெரும் பாலும் மத்தியவாட்சிப்பீடத்திடம் பண உதவி பெறுகின்றன. பண உதவி பின்வரும் தலைப்புக்களின்படி கிடைக்கும் :
1. மொத்த நன்கொடை(Block Grants)த் தொகை குறித்த நிலையம் வரியாய்ப் பெறும் வருமானத்தின் சதவீதம். கிராம சங்கங்கள் முன்னெருகாலம் தலைவரியென ஒன்றை அறவிட்டன; இப்போது அந்த வரியில்லை; அதற்கீடாக மொத்த நன்கொடை பெறுகின்றன.
á2. (5 gólj5 35Tá, s F56ül Glas T60L- (Grants for Specific Purposes): இன்னின்னத்திற்கென வரையறுத்து சனசமூக நிலையங் கள், கிணறு வெட்டல், வீட்டுத்திட்டம், நீர்ப்பாசன வேலைகள், தாய் பிள்ளை நலன் பேணும் நிலையங்கள் (Maternity and Welfare Clinics) GLJH 67 polisii)(35 gai வகை நன்கொடை பெரும்பாலும் கிடைப்பது.
3. ஒதுக்கு நன்கொடை (ASsigned Grants): இது மத்திய வாட்சிப்பீடம் உள்ளூராட்சி நிலையங்களின் சார்பாக அற விடும் குற்றத் தொகைகள், கூலித் தொகைகள் (Fees) முத்திரை வரிகளுக்காக ஒதுக்கிவிடும் ஒருதொகை.
இவ்விதமான உதவியைச் செய்யும்போது செலவிடும் பணம் நேர்மையாய் உபயோகமாகின்றதோ என்று பார்க்கும் பொறுப்பு மத்தியவாட்சிப்பீடத்திற்கிருப்பது முறையே. கணக் குப் பரிசோதனைப் பகுதியாருக்கு இந்நிலையங்களின் வரவு செலவுக் கணக்குக்களை நுணுக்கமாய் ஆராயும் உரிமையுண்டு.
முன்கூறியதுபோல சிலவகை நிலையங்களின் வரவுசெல வுத் திட்டங்களை ஏற்கவோ, ஏற்காதுவிடவோ உள்ளூராட்சிச் சேவையாணையாளருக்கு உரிமையுண்டு.

Page 113
212 ஆட்சி இயல்
மத்தியவாட்சிக்கும் உள்ளுராட்சிக்குமுள்ள தொடர்பு
மத்திய வாட்சியின் ஒரு கிளையே உள்ளூராட்சி. ஊர்கள் நாட்டில் அடங்குவதுபோல உள்ளுராட்சியும் மத்தியவாட்சியி லடங்கும். மத்தியவாட்சிப்பீடம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக் கமைந்தே உள்ளூராட்சி நடக்கும். ஆனல், மத்தியவாட்சிப்பீடம் தேவையின்றி உள்ளுராட்சியில் தலையிடாது விடுதலே மரபு. நகரசபை, பட்டினசபை, பட்டினசங்கம், கிராமசங்கம் ஆகியவை முறைகேடாய் நடந்துகொள்கின்றன என மத்தியவாட்சிப் பீடத்திற்குத் தெரியவந்தால் அவற்றைக் கலைத்துவிட்டு, வாக்காளருக்கு வேண்டியவற்றைச் செய்வதற்கு அது ஒரு சிறப்பு ஆணையாளரை (Special Commissioner) நியமிப்பதற்கு உரிமையுண்டு. உள்ளூராட்சி அமைச்சருக்கே இப்பொறுப் புண்டு. சிறிதுகாலத்திற்குமுன் கொழும்பு நகரசபை கலைக்கப் பட்டு அதன் அலுவல்கள் ஒரு சிறப்பு ஆணையாளர் பொறுப்பில் விடப்பட்டன. இதற்குமுன்னும் சில பட்டினசபைகள் கலைக்கப் பட்டன. கிலேமை திருந்தியதென்று உள்ளுராட்சி அமைச்சருக் குப் படும்போது புதுத் தேர்தல் நடைபெற நிலையம் பிறகும் முன்போலக் கடமை பார்க்கும். கொழும்பில் அப்படியே நடந் தது. இங்ங்ணம் கலேத்துவிடல் மற்ற நாடுகளிற் பொதுவாய் நடக்கும் ஒன்றன்று. எங்காவது கடத்தற்குரிய ஒன்று மன்று. பெரும்பாலும் குறித்த நிலையம் கடமையாற்றுவதற்குத் தகுதி சிறி தும் இல்லாததென்றும் வேறு முறையில் நெருக்கடியைத் தீர்க்க முடியாதென்றும் அமைச்சர் கொண்டால்தான் இங்ங்னம் செய் யப்படும். கூடியமட்டும் வாக்காளர் தெரிவை மதித்து நடப்பதே முறை. ஒரு தலைவரிலோ, ஒரு சில உறுப்பினரிலோ அவர்கள் கடைப்பிடிக்கும் ஆட்சிக் கொள்கையிலோ அமைச்சருக்குப் பிடிக்கவில்லே யென்னும்போதெல்லாம் நிலையங்களைக் கலைத்து விடுவதென்றல் அது குடியாட்சியுமன்று, உள்ளுராட்சியுமன்று ; அமைச்சரின் ஏகாதிபத்தியமே. அமைச்சரின் ஆணையில் உள்ளூராட்சிக்குப் பொறுப்பாய், உள்ளூராட்சி ஆணையாளர் (Commissioner of Local Government) Lustifujuif. அவருக் குதவியாய் வெவ்வேறிடங்களில் உதவி ஆணையாளர்கள் கடமையாற்றுவர். இலங்கை முழுவதிலும் உள்ளூராட்சித் துறையிற் சேவைபுரியும் நிலைப்பு அலுவலர்களின் நியமனம், உயர்வு, மாற்றம், காறுபாறு ஆகியவற்றின் பொறுப்பு உள்ளு ராட்சிச் சேவை 23aOOT di 55(p(Local Government Service Commission)and (55 2 fugi.

அதிகாரம் 7 -9), Logou iu li) фL SRфoir (Political Parties)
கட்சிகள் : பிரித்தானியர் ஆட்சி நடத்தியகாலத்தின் முற் பகுதியில் இங்கு எவ்வித கட்சியும் உருவாவதற்கு வேண்டிய சூழல் இருக்கவில்லை. குடியேற்ற ஆட்சியே(Colonial Government) நடைபெற்றது. இனவாரியாய் ஆள்பதி நியமித்த பிரதிநிதிகள் தத்தம் இனங்களின் சார்பாய் அவற்றின் தேவைகளை எடுத்துக் கூறிப் பெறக்கூடியவற்றைப் பெறுவதே ஆட்சிமுறையாயிருந் தது. நாட்டுமக்களி லொருசிலருக்காயினும் ஆட்சியிற் பங்கு பற்றும் உரிமையிருந்தாலன்றிக் கட்சிகள் உருவாதல் அரிது. அங்கியரே ஆட்சிப்பொறுப்பு முற்றையும் செலுத்தும்போது கொள்கையடிப்படையில் இரண்டு கட்சிகள்தான் உருவாக முடியும்- அந்நிய ஆட்சியை ஆதரிக்குங் கட்சி, அதை எதிர்க்குங் கட்சி. ஆரம்பத்தில் இவை பெரும்பாலும் வெறும் வாய்ப்பேச்சுக் கட்சிகளாயே இருக்கும். அந்நிய ஆட்சிக்கு எதிர்ப்புக் கூடிவரக் கட்சியுறுதியுங் கூடும். யாழ்ப்பாணத்தில் வாலிபர் மகாநாடும் (Youth Congress), இலங்கையின் ஏனைய பாகங்களில் இடது சாரிக் கட்சிகளும் உருவாகுமுன்னதாக, பிரித்தானிய ஆட்சிக் குத் தீவிரமான எதிர்ப்பு இலங்கையில் எப்போதாவது இருக்க வில்லை. 1915இல் நடந்த உள்ளுர்க் கலம்பகத்தின்பின் இலங்கை ஆட்சியிற் சிறிது தீவிரம் தோற்றியபோதும் யாராவது பூரண சுயவாட்சி பெறல் வேண்டுமென்று முயற்சித்ததாகத் தோன்றவில்லை. முதலாம் உலகயுத்த முடிவில் உருவான இலங் 60)55 Gb9ul LD5II a 60) Llulli (Ceylon National Congress) Liliul யாய்ச் சில திருத்தங்களைப் பெறுவதையே நோக்கமாய்க் கொண்டிருந்தது. இச் சபையிலே ஆரம்பகாலத்தில் இலங்கை மக்கள் இன, சமய வேற்றுமையின்றி ஒருங்கு கூடினர். சிறிதுகாலத்திற்குப்பின் சிங்களருக்கும் இலங்கைத் தமிழருக் கும் வேற்றுமை தோன்றித் தமிழர் வெளியேறினர். அதன் பின் இது பெரும்பாலும் சிங்களச் சபையாயே இருந்துவந் தது. அதன்பின் இவ்விரு இனங்களையும் ஒற்றுமைப்படுத்த

Page 114
214 ஆட்சி இயல்
முயற்சிகள் நடந்தன. ஆட்சிகடத்திய பிரித்தானியர் இம் முயற்சிகளை வரவேற்றரென்ருே ஆதரித்தாரென்ருே சொல்லு வதற்கில்லை. இரண்டினங்களிலுமுள்ள தீவிரப் போக்குடை யோர் இன்றும் இடதுசாரிக்கட்சிகளிற் சேர்ந்திருக்கின்றனர். ஆணுல், இன்றும் இனவாரிக் கட்சிகளே செல்வாக்குள்ளன. சுயவாட்சி வந்தபோது கொள்கையடிப்படையிற் கட்சிகள் உருவாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஓரளவிற்கு அப்படி யும் நடந்தது. பிரித்தானிய ஆட்சியின் கடைசிக்காலத்தில் இடதுசாரிக் கொள்கைகளும் இங்கு பரவின. மேனுட்டுக் கல்வி கற்றவர்களும், மேனுடு சென்று திரும்பிய இளை ஞருமே பெரும்பாலும் இந்தக் கொள்கைகளே ஆதரித்தனர். இவர்களுக்குப் போதிய செல்வாக்கு நாட்டிலிருக்கவில்லை. வலதுசாரித் தலைவருக்கே செல்வாக்கிருந்தது ; இவர்கள் இன வாரிக் கொள்கைகளையே பெரும்பாலும் கடைப்பிடித்தனர். சுயவாட்சியுடன் இந்நிலை சிறிது மாறத் தொடங்கியது. இன வாரிக் கட்சிகள் மறைந்துபோம்போலத் தோன்றின. ஐக்கிய (353°u Já d5 3F(United National Party)GU3) ub GLju (5L6ór 6205 வலதுசாரிக் கட்சி உருவாகிற்று சிங்கள இனத்தைச் சேர்ந்த பழைய தலைவர்கள் யாவரும் இதை ஆதரித்தனர். தமிழரிலும் கொள்கையில் வலதுசாரி மனப்பான்மையுடையோர் சிறிது சிறி தாக இக்கட்சியிலே நுழைந்தனர். 1947இல் நடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணப் பகுதிகளில் பெரும்பாலும் செல்வாக் குப் பெற்றிருந்த தமிழ் மகாசபை(Tamil Congress)யும் தேர்தல் நடந்து சிறிது காலத்திற்குப்பின் ஐக்கிய தேசீயக் கட்சியுடன் ஒத்துழைக்க ஒருப்பட்டது. முதலமைச்சராயிருந்த திரு. டீ. எஸ். சேனநாயக்கா திடீரென இறந்ததும் யார் முதலமைச்ச ராவதென்பது பற்றிக் கட்சிக்குள் வேற்றுமை தோன்றிற்று. இறந்த முதலமைச்சரின் மகன் டட்லி சேனநாயக்கா வுக்கும் அவரின் நெருங்கிய உறவினரான சேர் ஜோன் கொத்தலாவலைக்கும் முதலமைச்சர் பதவியிற் கண்ணிருந்தது. திரு. டட்லி சேனநாயக்காவே முதலமைச்சரானர். சேர் ஜோன் கொத்தலாவலே இதை முற்ருய் ஏற்கவில்லை. திரு. டட்லி சேனநாயக்கா முதலமைச்சராயிருந்த காலத்தில் அரசாங்கம் அரிசி, சீனி முதலிய அவசிய உணவுப் பொருள்களின் விலை யைக் கூட்டியது. நாட்டிற் கிளர்ச்சி உருவாயிற்று. நாடெங் கும் ஆட்சிப்பீடத்தின் செயலே எதிர்க்கும்படி கடையடைப்பு (ஹர்த்தால்) ஒன்று நடைபெற்றது. இதன் பயனுக ஊரடங்க லுத்தரவு (Curfew) பிறப்பிக்கப்பட்டது. கலம்பகத்திற் பங்கு

ஆட்சியியற் கட்சிகள் 215
பற்றிய பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குழப்பம் ஒரளவிற்குத் தணிந்தவுடன் டட்லி சேனநாயக்கா முதலமைச்சர் பதவியி லிருந்து வெளியேறினர். கொத்தலாவலை முதலமைச்சரானர். இவை நடக்குமுன் வேறு மோர் கட்சி உருவாகிவிட்டது. சிங்கள மகாசபையென்னும் பெயருடன் இனவாரிமுறையில் கிறுவிய ஒரு கட்சியின் தலைவராயிருந்த திரு. எஸ். டபிள்யு. ஆர். 2. பண்டாரநாயக்காவும் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியிற் சேர்ந்து அமைச்சர் பதவி ஏற்றுக் கடமையாற்றியவர். ஐக்கிய தேசியக் கட்சியின் போக்கில் வேண்டிய தீவிரமில்லையென்றும் இக் கட்சியின் செயலிலும் கொள்கையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்றும் வற்புறுத்தினர். சிங்கள மகாசபை யிற் சில தீர்மானங்களும் நிறைவேற்றி ஐக்கிய தேசீயக் கட்சிக் குச் சமர்ப்பித்தனர். காட்டுமொழிகளான சிங்களம், தமிழ் இரண்டிலும் ஆட்சியலுவல்களை கடத்துவதற்குத் தீவிர நட வடிக்கைகள் எடுத்தல் வேண்டு மென்பதும், சமய நிலையங் களுக்கு ஆட்சிப்பீடம் பொருள் உதவிபுரிதல் வேண்டு மென் பதுமே திரு. பண்டாரநாயக்கா முக்கியமாய் வற்புறுத்தியன. ஐக்கிய தேசீயக் கட்சி இவற்றை ஏற்க மறுத்தது. பண்டார நாயக்காவும் அவரைச் சேர்ந்தோரும் இக் கட்சியிலிருந்து வெளியேறினர். வெளியேறி பூநிலங்கா சுதந்திரக் கட்சி யெனும் பெயருடன் ஒரு கட்சியை யுருவாக்கினர். இது தோன்றிய காலத்தில், இது இடதுசாரிக் கொள்கைக்கும் வலதுசாரிக் கொள்கைக்கும் இடைநடுவான போக்குடையதாயிருந்தது. ஐக்கிய தேசீயக் கட்சி எதையும் காட்டுரிமை (Nationalize) யாக்குதலை விரும்பவில்லை. இடதுசாரிக் கட்சிகள் நாட்டின் பொருளாதார அம்சங்கள் பலவற்றைத் தீவிரமாய் நாட்டுரிமை யாக்கல் வேண்டுமென்று கருதின. பூநிலங்கா சுதந்திரக் கட்சி சிலவற்றைப் படிப்படியாய் நாட்டுரிமையாக்குதல் வேண்டு மென்று கருதினது. மொழிக் கொள்கையிலும் ஐக்கிய தேசீயக் கட்சி ஆங்கிலம் நடைமுறையிலிருக்கச் சிங்களமும் தமிழும் படிப்படியாய் ஆட்சியி லிடம்பெறல்வேண்டு மென்று கூறிற்று. பூரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்களமும் தமிழும் உடனடியாய் ஆட்சியி லிடம்பெறல்வேண்டு மென்று கூறிற்று. ஆகையால் இதை இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் நடுவான கட்சியென் பதே பொருத்தம். தமிழ் மகாசபை, ஐக்கிய தேசீயக் கட்சியைச் சேர்ந்தபோது, அச் சபைப் பிரமுகர்கள் சிலர் இதை ஏற்க. வில்லை. திரு. டெஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் தலைமை

Page 115
216 ஆட்சி இயல
யிற் சேர்ந்த சிலர், தமிழ் மகாசபையின் இச் செயலை யெதிர்த் தனர். எதிர்ப்பைப் பொருட்படுத்தாது தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்திருந்தது. எதிர்த்தவர்கள் வெளியேறி ஒருபுதிய கட்சியை நிறுவினர். இதுதான் கூட்டாட்சிக் கட்சி யென்னும் தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டிக் கட்சியாகும். அக்காலத்தில் பின்வரும் கட்சிகள் இருந்தன : 1. 3255u Gas Sud d5 3. (United National Party-U. N. P.) 2. பூரீலங்கா சுதந்திரக் கட்சி
(Sri Lanka Freedom Party-S. L. F. P.) L0354, 6ii (35tạ_L10 ởi đi đ5L’6ì (People's Republican Party) G5.T. ffids 3 (Labour Party) Liit5 (351u u T3, då 35L6R (Buddhist Republican Party)
கூட்டாட்சிக் கட்சி (தமிழரசுக் கட்சி
அல்லது சமஷ்டிக் கட்சி) (Federal Party-F. P.)
இலங்கை சமசமாஜக் கட்சி
(Lanka Sama Samaja Party-L. S. S. P.) 8. இலங்கை சமசமாஜக் கட்சி (விப்பளவகாரி)-(V. L. S. S. P) 9. GLJIT 5, 2 60L60)LDd 5LS (Communist Party-C. P.)
இதன்பின் சேர் ஜோன் கொத்தலாவலை முதலமைச்சராய் வந்தபோது தமிழ் மகாசபைத் தலைவர் திரு. ஜி. ஜி. பொன் னம்பலம் அமைச்சரவையிலிருந்து வெளியேறினர். தமிழ்மகா சபையும் ஐக்கிய தேசீயக்கட்சித் தொடர்பை நீக்கி மீண்டுந் தனிக்கட்சியாய்க் காட்சியளித்தது.
கட்சியாட்சி நடக்கும் எங்காயினும் ஒரே கட்சி இரண்டு முறைக்கு மேலே தொடர்ந்து ஆட்சி நடத்துவது அரிது. புது ஆட்கள், புதுமுறைகள், புதுக்கொள்கைகளை வரவேற் கும் மனதிலே மக்களிடம் தோன்றிவிடும். இரண்டுமுறையிலும் ஆட்சிப்பீடம் செய்த தவறுகளையும், செய்யத் தவறிய நன்மை களையும் எதிர்க்கட்சியார் வாக்காளருக் கெடுத்துக் கூறிக் கொண்டிருப்பர். பெரும்பாலும் புதிய ஒரு கட்சிக்கே ஆட்சிப் பொறுப்புக் கிடைக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1956இல் கிடைத்த தோல்விக்கு இதுவுமோர் காரணமென்றற் பிழையாகாது. சுயவாட்சி வந்த தும் நாட்டிலிருந்த குறைபாடுகள் போய்ச் சுவர்க்கலோகம் உருவாகிவிடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்துபோனர்கள்.

ஆட்சியியற் கட்சிகள் @17
செல்வர் முன்போலச் செல்வராயிருந்தனர்; செல்வாக் குள்ளவர்கள்தான் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றனர். ஆங் கிலம் கற்றவர்கள் ஓர் இனம் என்ற முறையே தொடர்ந்து நடைமுறையிலிருந்தது. ஆட்சியுலகிலும், சமூகத்திலும் ஆங் கிலம் கற்றவர்களுக்கிருந்த செல்வாக் கிருந்தபடியே இருந்தது. சிங்களம், தமிழ் கற்றவர்கள் முன்போலவே செல்வாக்கற்று வாழ்ந்தார்கள். சிங்களருக்குள் சிங்களம் கற்ருேருக்கும் ஆங்கி லம் கற்ருேருக்கும் இருந்தளவு சமுக வேற்றுமை தமிழருக் குள் தமிழ் கற்ருேருக்கும் - ஆங்கிலங் கற்ருேருக்குமிடையி லில்லை. யாது காரணத்தினுல் இங்ங்னம் இருப்பதென்பதை இங்காராய வேண்டியதில்லை. யாம் அறிந்தளவில் இது உண்மைபோலத் தெரிகிறது. ஆங்கிலம் கற்றேருக்கே உத்தி யோகம், செல்வாக்கு, மரியாதை யாவும் கிடைப்பதையும் தமக்கிவையில்லாதிருத்தலையும் ஆங்கிலங் கல்லாத சிங்களர் பொறுக்கவில்லை. அந்நியர் ஆட்சிக்காலத்தில் நடந்தவையே சுயவாட்சிக்காலத்திலும் நடப்பதை நிறுத்துதல் வேண்டுமென் றுணர்ந்தனர். இதுவே, இயல்பாய் முதல் உருவான உணர்ச் சியாயிருந்திருத்தல் வேண்டும். ஆங்கிலங் கற்றுச் செல்வாக்குப் பெற்றேரிற் பலர் தமிழர். அவர்கள் செல்வாக்கையும் தொலைத்து விட வேண்டுமென்று பிரசாரம் ஆரம்பமாயிற்று. தனிச் சிங் கள மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்து சிங்களம் ஒன்றையே ஆட்சிமொழியாக்கிவிட்டால், ஆங்கிலங் கற்றேர் சிங்களரா யினுஞ்சரி, தமிழராயினுஞ்சரி அவர்தம் செல்வாக்கு அற்றுப் போம். சிங்களம் கற்ருேருக்குச் செல்வாக்கு வரும். ஆட்சியில் இதுவரை வாக்குச்சீட்டுப் போடுவதைவிட வேறெதையும் செய்யாத பொதுமக்கள் தமக்கும் ஆட்சியில் ஏதோ பங்கேற் படுமென்று எண்ணினர். ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த ஐக்கிய தேசீயக் கட்சியும், எதிர்க்கட்சிகள் (பூநிலங்கா சுதந்தி ரக் கட்சியுட்பட) யாவும் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழி களாயிருக்க வேண்டுமென்பதை ஏற்றிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர், கொத்தலாவலை யாழ்ப் பாணம் வந்தபோது சிங்களத்திற்கும் தமிழுக்கும் ஆட்சி மொழிச் சமநிலை சட்டரீதியாய் ஆட்சிமுறையில் இடம்பெறு வதற்கு வேண்டியதைத் தாம் செய்வதாக வாக்களித்தார். இக் கட்சியைக் கவிழ்ப்பதற்கு இதையுபயோகிக்கலாம் என்று வேறு சில கட்சிகள் தீர்த்துவிட்டன. சிங்களம் ஒன்றே ஆட்சிமொழியா யிருக்கவேண்டுமென்ற கிளர்ச்சி உருவா

Page 116
218 ஆட்சி இயல்
கிற்று. இக் கிளர்ச்சி பெரும்பாலும் ஐக்கிய தேசீயக் கட்சியைத் தோற்கடிக்கவே தோன்றியது. ஐக்கிய தேசியக் கட்சியும் அங்கு மிங்கும் பார்த்துவிட்டுத் தனிச் சிங்களக் கொள்கையைக் கடைப்பிடித்தது. சிங்களப் பொதுமக்களின் அபிமானத்தைப் பெறுவதற்காகவே பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசி யக் கட்சியும் தனிச் சிங்களக் கொள்கையைக் கடைப்பிடித்தன போலும். பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கே இவ்விரு கட்சிகளும் திடீரென இக் கொள்கையைக் கையாண்டன. பொதுத்தேர்தல்வரச் சிறிது காலத்துக்குமுன், இவ்விரு கட்சிக ளாயினும் வேறெந்தக் கட்சியாயினும் சிங்களம் ஒன்றே ஆட்சி மொழியாயிருத்தல் வேண்டுமென்று சொல்லவுமில்லைக் கருதவு மில்லை. இவ்விரு கட்சிகளிலும் தமிழர் இருந்தனர். ஐக்கிய தேசி யக் கட்சியில் தமிழர் அமைச்சர் பதவியும் வகித்தனர். பரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவரொருவர் தமிழர். இணைக் காரியதரிசிகளில் ஒருவர் தமிழர். இக்கட்சிப் பிரமுகர்கள் பலர் யாழ்ப்பாணத்திலும் இக்கட்சிக் கிளே ஒன்றை கிறுவ முயன்றதை யும் யாம் அறிவோம். இடதுசாரிக் கட்சி ஒன்ருவது தனிச் சிங் களக் கொள்கையை எப்போதாவது ஆதரித்ததில்லை. பூநிலங்கா சுதந்திரக் கட்சியும் இதன்மூலம் வெற்றிபெற்றபோதும் இதைச் செயற்படுத்துமென்று வெகுசிலரே எதிர்பார்த்தனர். தென் னிலங்கைத் தொகுதிகளில் தமிழர் பலர் பூரீலங்கா சுதந்திரக் கட்சியையே ஆதரித்தனரென்று கம்புவதற்கிடமுண்டு. இடது சாரிக் கட்சிகளும் தாம் அபேட்சகரை நிறுத்தா இடங்களில் இக் கட்சியை ஆதரித்தனர். ஐக்கியதேசியக் கட்சியைத் தோற்கடிப் பதே இவர்கள் நோக்கமாயிருந்ததேயன்றித் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தை ஆதரிப்பதன்று. தேர்தற்காலத்திற்குச் சிறிது முன்பாக பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் விப்பளவகாரி சமசமா ஜக் கட்சியும் ஒன்றுகூடி இணைப்புக்கட்சி ஒன்றை நிறுவின. gibi)(35 LD di 35 Gir iš 36 Lu (UDGST GOT GOf (Mahajana Eksath PeramunaM. E. P) யென்று பெயரிட்டனர். இவர்கள் தனி ஆட்சிப் பீடம் அமைப்பதற்கு வேண்டிய அளவு வெற்றிபெறுவரென்று எதிர்பார்க்கப்படவில்லை. இடதுசாரிக் கட்சியொன்றுடன் கூடி ஓர் இணேப்பு அமைச்சரவை ஆக்கவேண்டிய அளவுதான் இவர்கள் வெற்றியிருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் ஐக்கிய தேசீயக் கட்சிக்கு எதிராய்த் திரண்ட சக்திகள் எல் லாம் மக்கள் ஐக்கிய முன்னணியை ஆதரித்தன. யார் உதவியு மின்றி அவர்கள் ஆட்சிப்பீடம் அமைக்கக்கூடியதாயிருந்தது.

ஆட்சியியற் கட்சிகள் 219
தேர்தற் கோஷமாய் உருவெடுத்த தனிச் சிங்களக் கொள்கை சட்ட உருவெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. மக் கள் ஐக்கிய முன்னணியின் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேறிய தும் தாம் வாக்காளருக்கு வாக்குப்பண்ணிய மற்றையவற்றையும் சாதித்துவிடலாமென்று ஆட்சிப்பீடம் கருதியிருந்ததுபோலும். ஆனல், இச் சட்டத்தின் விளைவுகள் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றி ஆட்சிப்பீடத்திற்கு நீங்காத தலைவலியைக் கொடுத் தது; கொடுக்கிறது. 1958ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்த வற்றின் விளைவுகள் இன்னும் முடியவில்லை. இச் சிக்கலில் ஈடுபட்ட ஆட்சிப்பீடம் ஆக்கவேலையிற் போதியளவு ஈடுபட முடியாதுபோயிற்று. இத்துடன் ஆட்சிக் கட்சிக்குள்ளேயே பாரதூரமான தகராறு தலைதூக்கிற்று. இடதுசாரி அமைச்சர் களும் அவர்களை ஆதரிப்போரும் ஆளும் கட்சியிற் சிறு பான்மையாயிருந்தபோதும் அவர்கள் கருத்துக்களுக்குச் செல் வாக்கிருப்பதையும் அவை செயற்படுவதையும் வலதுசாரிகள் விரும்பவில்லை. இடதுசாரிகள், பொது உடைமைக் கட்சியின் கொள்கைகளைச் செயற்படுத்துகிறர்களென்றும் இவை குடி யாட்சி முறைக்குப் பாதகமானவை யென்றும் புகார் கிளம்பி யது. விப்பளவகார சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த மந்திரி (பிலிப் குணவர்த்தன) வெளியேறினுலன்றித் தாம் வெளியேறி விடுவதாக வலதுசாரி அமைச்சர்கள், முதலமைச்சருக்குக்
கண்டிப்பாய் வற்புறுத்தினர். இதற்கு முடிவான தீர்ப்பு வரும் வரையும் தாம் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் போகமாட்டோ மென்றுங் கூறிவிட்டனர். முதலமைச்சர் சமரச முயற்சிகளில் ஈடுபட்டாரென்று கூறப்படுகிறது. பிலிப் குணவர்த்தனு தயா ரித்த கூட்டுறவு வங்கித் திட்டத்தைப் பற்றியே தகராறு முத லில் உருவானது. முதலமைச்சர் அத்திட்டத்தைச் செயற்படுத் தும் பொறுப்பைத் தாம் எடுப்பதாகக் கூறியபோதும் வலது சாரி அமைச்சர்கள் திருப்திப்படவில்லை. தகராறு நீடித்தது. முதலமைச்சர் இடதுசாரி அமைச்சர்களாகிய பிலிப் குணவர்த் தனவுக்கும் உவில்லியம் சில்வாவுக்கும் இருந்த சில பொறுப்பான திணைக்களங்(துறை)களே அவர்களிடமிருந்து எடுத்து வேறு அமைச்சர்களிடம் ஒப்படைத்தார். இடதுசாரி அமைச்சர்கள் இருவரும் வெளியேறினர். அவர் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஐவர் வெளியேறினர். பூநிலங்கா சுதந்திரக் கட்சியினரும் சிலர் வெளியேறியதும் வெளியேறததுமான ஒரு கிலையில் இருந்த னர். வெளியேறியும் தாம் முதலமைச்சரின் முற்போக்குத் திட் டங்களை ஆதரிக்கப்போவதாகவும் எதிர்க்கட்சி முதற்கோலாசா
ஆ - 15

Page 117
220 ஆட்சி இயல்
னுக்கு (காறுபாறு-Chief Whip) கட்டுப்படமாட்டோமென்றுங் கூறினர். எதிர்க்கட்சியிலிருந்த இருவர் முதலமைச்சர் கட்சியைச் சேர்ந்தனர். ஒருவர் சேராது போனுலும் ஆதரிப்பதாகக் கூறினர். இங்கிலேயிற் பாராளுமன்ற அமர்வு குலேக்கப்பட்டது.
இன்றும் தனிச் சிங்களச் சட்டத்தால் உருவான குழப்ப நிலையே இலங்கையாட்சி முறையைப் பிடித்திருக்கிறது. தனிச் சிங்களச் சட்டம் நிறைவேறியதற்குச் சிறிது பின் தமிழுக்கு நியாயமான உரிமை வழங்குவதாகச் சமஷ்டிக் கட்சியுடன் முதலமைச்சர் ஒப்பந்தஞ் செய்தார். அவ்வொப்பந்தம் செயற் படமுன் சிங்கள எழுத்துக்களே வாகனங்களின் இலக்கத் தகடுகளிற் பொறிக்கப்பட வேண்டுமென்று போக்குவரத்து அமைச்சர் திட்டமிட்டார். சிங்கள எழுத்துக்களுடன் தமிழர் வாழும் பகுதிகளுக்கு பஸ் வண்டிகளை யனுப்பியபோது எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடந்தன. தமிழரசு (கூட்டாட்சி) க் கட்சி இதில் ஈடுபட்டது. பூநீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்த புத்தசக்கியாசிகள் சிலர் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகை யிட்டுச் தமிழரசுக் கட்சியுடன் செய்த ஒப்பந்தத்தை ஒழித்து விடும்படி வற்புறுத்தினர். முதலமைச்சரும் இணங்கினர். பிற் பாடு, 1958ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்த குழப்பத்தின் பின் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நிருவாகக் குழுவைச் சேர்ந்தவர்களும் வீட்டு மறி யல் அல்லது தடுப்புக் காவலிலிருக்கும்போது தமிழ்மொழி நியாயமான உபயோகச் சட்டமென்ருென்றைப் பாராளுமன் றம் நிறைவேற்றியது.
இதற்குப் பின்தான் மேற்கூறிய இடது-வலது பூசல் உருவாகி முற்றியது. இன்று கட்சிகளின் நிலை பின்வருமாறு :-
ழரீலங்கா சுதந்திரக் கட்சி: இதே இப்போது ஆட்சி நடத் தும் கட்சி. இது சமூகவுடைமைவாதக்கொள்கை (Socialism) யைக் க