கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும்

Page 1
இலங்கையில்
DILITG).pno
சகாக்களும்
கலாபூஷணம் S. M.A. ஹஸன்
 


Page 2

இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும்
கலாபூஷணம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன்

Page 3
Orabi Pasha ad his Companions in Sri Lanka
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும்
கலாபூஷணம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. ஹஸன்

"An Introduction of Orabi Pashas Social Life and Cultural activities in Sri Lanka and the life of his companions in Sri Lanka. ”
By Kalaboosanam Alhaj S.M.A.Hassan
6th Edition of Orabi Pasha Foundation Kandy
Edition: First December 2009 CopyRight Reserved
Type Setting & Printing Rainbow Grphics 63. Mosque Road, Beruwala. Mobile: 071-92.93073
Price: 200/-
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -3-

Page 4
பொருளடக்கம்
1. FLDril LIGOOTD
2. முகவுரை
3. அணிந்துரை
4. என்னுரை
5. ஆசியுரை
6. எகிப்தின் வரலாற்றுச் சுருக்கம்
7. அரசுக்கு எதிராக ஒறாபியும் சகாக்களும்
8. பிரித்தானியர் தலையீடு
9. மரணதண்டனையும் நாடுகடத்தலும்
10. ஒறாபி பாஷாவும் சகாக்களும் இலங்கை வருகை
11. அணிதிரண்ட முஸ்லிம்கள்
12. பத்திரிகையாளர் பேட்டி
13. இலங்கை முஸ்லிம்களும் ஒறாபி பாஷாவும்.
14. பாஷாக்களின் வாழ்க்கைச்சுருக்கம்
15. இலங்கையில் ஒறாபி பாஷா நூற்றாண்டு வைபவங்கள்.
16. ஒறாபி பாஷாவும் இலங்கை எபண்டி இஸ்மயில் லெப்பை
மரிக்கார் ஆலிமும்,
17. ஒறாபி பாஷாவும் இலங்கையில் இஸ்லாமிய
தேசிய புனருத்தாரணமும்
18. கண்டியில் ஒறாபி பாஷா நூதனசாலை
19. ஒறாபி பாஷா நிலைய செயற்பாடுகள்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன்
O5
O6
08
20
22
24
28
3
36
4
52
54
57
6
65

சமர்ப்பணம்
சமூகநலனும் நன்னோக்கும்
தன்னகத்தே கொண்டவராய்
நற்சேவை பல புரிந்து
உற்றார் உறவினர் மற்றையோர் நலன்காத்து நம்மியக்கத் தலைமையினை
இருபத்திரண்டாண்டு
ஏற்றம் பெறச்செய்தவர்
வைத்தியகலாநிதி எம்.ஸி.எம்.சுபைர்
அல்லாஹற் அழைப்பேற்று
14.06.2009 இறையடி எய்திய
அன்னாருக்கு இந்நூல் சமர்ப்பணம்,
ஏகன் அல்லாஹற் நற்பதி சேர்த்திட
இறையருள் வேண்டி
இருகரம் ஏந்தி
இறைஞ்சுகின்றோம்.!
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -5-

Page 5
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன்

முகவுரை.!
எகிப்திய தேசிய எழுச்சி இயக்கத்தில் சேர்ந்து மன்னர் ஆட்சிக்கெதிராகப் போராடிய ஒறாபிபாஷாவும் அவரது சகாக்களும் எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர். ஒறாபிபாஷாவுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அத்தனை பேரும் சிறந்த சிந்தனையாளர்கள், அவர்களது சிந்தனையால் ஏற்பட்ட விளைவை இன்று எகிப்திய தேசிய சுதந்திரத்தை எகிப்திய மக்கள் அனுபவிக்கின்றனர். இன்று நாடு கடத்தப்பட்ட அத்தனை பேரும் தேசிய வீரர்களாக மதிக்கப்படுகின்றனர்.
இன்று இலங்கையிலும் எகிப்திலும் அவர்களது நாமம் ஒரு வரலாற்றுத் திருப்பமாக மாறியுள்ளது. அவர்களது நினைவாக மண்டபங்கள், நினைவுத் தூபிகள், நூதனசாலைகள் என்பனவற்றோடு பல நூல்களும் வெளியாகியுள்ளன. இவர்கள் இலங்கை வரும்போது இவர்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவின. ஆங்கிலப் பத்திரிகைகள் தவறான கருத்துக்களை பரப்பின. ஆனால் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்களை ஒரு முஸ்லிம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களாக மதித்து வரவேற்றனர். அவர்களது இலங்கை வாழ்க்கையின் மூலம் நேர்மையான தேசப் பற்றும் சமூகப் பற்றும் மிக்கவர்களாக வாழ்ந்தமையால் ஆரம்பத்தில் இருந்து வந்த தவறான கருத்துக்கள் நீங்கின, தவறாக எழுதிய பத்திரிகைகளும் பாராட்டுத் தெரிவித்தன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒறாபி பாஷாவினதும் அவரது சகாக்களினதும் வருகை ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், அரசியல் துறைகளில் அறிஞர் சித்திலெப்பையுடனும், இலங்கை முஸ்லிம் தலைவர்களுடனும் சேர்ந்து ஒறாபி பாஷா ஆற்றியுள்ள பணிகள் மகத்தானவை. இதனால் ஒரு புதிய உத்வேகம் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் உருவாகியது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -7-

Page 6
இலங்கையில் ஒறாபி பாஷா வாழ்ந்த கண்டி இல்லமே இன்று “ஒறாபி பாஷா நூதன சாலையாகவும் அதன் மூலம் இயக்க ரீதியாக இயங்கும் (Orabi Pasha Foundation) என்னும் நலன்புரி நிலையமும் அமைந்துள்ளது.
இவற்றின் செயற்பாடுகள் பற்றியும், இலங்கையில் ஒறாபிபாஷாவும் சகாக்களும் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றியும் இன்றைய தலைமுறையினர் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு ஒரு நூல் எழுதப்பட வேண்டுமென எமது இயக்க அங்கத்தவர்கள் ஆதங்கம் கொண்டிருந்தனர். அதனால் இவ்வியக்கத்தின் முன்னாள் பணிப்பாளரும், பன்னுால் ஆசிரியருமான எஸ்.எம்.ஏ.ஹசன் அவர்களின் உதவியை நாடினோம். அவர் தனது 83வது அகவையிலும் மறுக்காமல் இந்நூலை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
ஒறாபிபாஷா நூதனசாலையில் பெறப்பட்ட அவரது அனுபவத்தையும் இந்நூலில் காணக்கூடியதாகவுள்ளது. இந்த அளவுக்காவது அவரால் எழுதப்பட வேண்டுமென்ற ஆலோசனையும் எமது இயக்க அங்கத்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. எமது வேண்டுகோளை ஏற்று இந்நூலை எழுதி எமது இயக்கத்தின் மூலமாக வெளியிட முன்வந்த அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸனின் இம்முயற்சியைப் பாராட்டுகின்றேன்.
அல்ஹாஜ் எம்.எச்.சலீம்தீன்
Lusardîn"UT6mrï ஒறாபிபாஷா கலாசார நிலையம் கண்டி,
(லங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -8-

அணிந்துரை.!
இலங்கை முஸ்லிம்களின் நவீன யுகத்தின் ஆரம்பம் 19ஆம் நூற்றாண்டில் நவீன கல்வியுடன் ஆரம்பமாயிற்று. அது ஒரு தொடர்ச்சியான கடின போராட்டங்களின் பின்னர் பெறப்பட்ட பெரிய சாதனை.
புதிய யுகத்தின் எதிர்காலத்தை முன்னறிவுப்புச் செய்த 19ஆம் நூற்றாண்டு வரலாற்றில் முக்கியமான நூற்றாண்டாக மதிப்பிடப்படுகிறது. கல்வி மட்டுமன்றி பல்வேறு மாற்றங்களை புதிய உலகுக்கான தேவைகளை வகுக்க 19ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியிருந்தது. வரலாற்றுக் காலக்கட்டங்கள் விளையாட்டுச் செய்தியல்ல. அந்தந்த யுகம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதை உணர்த்தவும், செயல்படவும் தலைவர்களும், சிந்தனையாளர்களும் தோன்றாத காலகட்டங்கள் இல்லை. 19ஆம் நூற்றாண்டும் அவ்வாறுதான். புதிய கல்வி, விஞ்ஞானம், நவீன ஆட்சி முறை, அடக்குமுறைக்கு எதிரான விடுதலை உணர்வு, பொருளாதாரக்கொள்கை, மனித உரிமைகள் என்று பல்வேறு புதிய சமூக அரசியல் தோற்றங்களையும் மாற்றங்களையும் முன்னறிவிப்புச் செய்த இந்த யுகத்தின் பிரச்சினைகளில் முஸ்லிம் உலகும் சம்பந்தப்பட்டிருந்தது.
காலனித்துவ எதிர்ப்போடு மன்னராட்சி முறையையும் தகர்க்கும் போராட்டங்கள் நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் வரலாற்றில் எகிப்து முன்னணியில் உள்ளது. ஒறாபிபாஷா அதற்குத் தலைமை தாங்கிய தேசிய வீரர், நவீன மாற்றங்கள் பற்றிய சிந்தனையோடு உள்நாட்டுக் கிளர்ச்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். எனினும் காலனிய ஆட்சியும் சூழ்ச்சித் திட்டங்களை வகுத்த மன்னராட்சிவாதிகளும் வெற்றி பெற்றதினால் அஹமத் ஒறாபிபாஷாவின் போராட்டங்களும் இலட்சியங்களும் அவரது நாடு கடத்தலோடு முடிவு பெற்றது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -9-

Page 7
இலங்கையில் அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சில சலுகைகளினால் இலங்கை முஸ்லிம் களின் கல்வி முன்னேற்றங்களில் சேவையாற்றும் வாய்ப்பை அவர் பெற்றார். இலங்கை முஸ்லிம்களின் நவீன் வரலாற்றின் முக்கிய உந்துசக்தியாக அமையும் அளவிற்கு அவரது அக்கால நடவடிக்கைகள் அமைந்திருந்ததால் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத தலைவராக அவர் போற்றப்பட்டார்.
அறபு நாட்டின் முஸ்லிம் தேசிய வீரர் ஒருவர் இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் வாழ்வதற்கும் அவர்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வதற்கும் கிடைத்த இந்த வாய்ப்பு வரலாற்றில் அபூர்வமாக பெறும் சம்பவமாகும். இலங்கை முஸ்லிம்கள் இந்த விடயத்தில் குறிப்பாக அவரது வருகையினாலும் சேவையினாலும் ஏற்பட்ட மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் மறக்க முடியாத நினைவுகளாகப் பாதுகாத்து வருகின்றனர்.
அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ ஹஸன் எழுதியுள்ள இந்த நூல் அந்த உணர்வுகளின் மற்றொரு வெளிப்பாடாகும். ஒறாபிபாஷாவைப்பற்றி சற்று விரிவாக எழுதப்பட்ட முதல் தமிழ் எழுத்துவடிவமாக இதனைக்குறிப்பிட முடியும். புதிய தலைமுறையினர் அறிந்திருக்க வேண்டிய பல செய்திகளையும், வரலாற்றுத் தொடர்புகளையும் ஒறாபிபாஷா மற்றும் அவரது சகாக்களின் இலங்கை வாழ்க்கையையும் இந்நூல் முன்வைக்கிறது.
அறிஞர் சித்திலெப்பை தமது முஸ்லிம் நேசன் பத்திரிகையில் அக்காலத்தில் ஒறாபிபாஷா பற்றி பல சமகாலச் செய்திகளையும் சிறிய எழுத்துக் குறிப்புக்களையும் வெளியிட்டு வந்தார். டெப் என்பவர் எழுதிய ஆங்கில நூலில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் வெளிவந்த போதும் ஒறாபிபாஷாவும் அவரது இலங்கை வருகையும் அதன் தாக்கங்களும் இன்னும் ஆராயப்பட வேண்டிய விடயப் பொருளாகவே இருந்துவரும் நிலையில் இந்த விடயத்தில் சிறந்த அறிவும் அனுபவமுள்ள அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் தாம் அறிந்தவற்றை அடிப்படையாக வைத்து. ஒரு நூலை வழங்கியிருப்பது இந்த விடயத்தை விரிவாக அறிய விரும்புவோருக்கும் புதிய ஆய்வுகளை ஆரம்பிக்க இருப்போருக்கும் ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஆரம்பத்தைத் தரும் என்பது உறுதி.
இலங்கையின் 19ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு முன்னரைப்பாதிவரை சிங்கள முஸ்லிம் வரலாற்றை நன்கறிந்த
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -10

நிலையிலிருந்துதான் ஒறாபிபாஷா என்ற விடயம் கையாளப்பட வேண்டும் என்ற அவதானத்தின் பின்னணியில் அதற்கு மிகவும் தகுதியானவராக விளங்கும் எஸ்.எம்.ஏ. ஹஸன் தனது கருத்துக்களை நூலாக்கம் செய்திருக்கிரார். அவர் மறைந்தும் மங்கலாகவும் கிடக்கும் பல விடயங்களை பரிசீலித்து உண்மையை மீண்டும் 19ஆம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வரலாற்றுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.
ஒறாபிபாஷாவின் எழுச்சி தனி நபர்களின் எழுச்சியல்ல. அது அந்த யுகத்தின் மாற்றங்களுக்கு முஸ்லிம் சமூகத்தை தயார்படுத்தும் உலகளாவிய பொது உணர்வின் ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடாகும். ஏனெனில் ஒறாபிபாஷா இங்கு நாடுகடத்தப்பட்டு வருமுன்னரே அறிஞர் சித்திலெப்பை இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் தலைவராக மக்கள் மத்தியில் சேவையாற்றிக் கொண்டிருந்தார். இந்த விடயங்களை சிந்திப்பதற்கு எஸ்.எம்.ஏ ஹஸனின் இந்த நூல் ஆய்வாளர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. இதற்காக அவர்களது இந்த அறிவுப்பணியை முஸ்லிம் சமூகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது. அதே வேளை இந்தவகையில் அஹமத் ஒறாபிபாஷாவின் செயல்பாடுகளையும் வரலாற்றையும் எழுத்து வடிவமாக வழங்குவதற்கு பெரும் முயற்சி செய்துவரும் ஒறாபிபாஷா நிலைய பணிப்பாளர் நண்பர் அல்ஹாஜ் எம்.எச்.சலிம்தீன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
மெய்யியல் துறைத்தலைவர் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -ll

Page 8
என்னுரை.!
இலங்கையில் ஒறாபி பாஷா என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதித்தரும்படி ஒறாபி பாஷா கலாசார, நூதன சாலையின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.சலீம்தீன் அவர்களும் ஒறாபி பாஷா பெளண்டேசன் அங்கத்தவர்களும் பலமுறை கேட்டுக் கொண்டதற்கிணங்கியே இந்நூலை எழுதினேன். அதே நிலையத்தில் இரண்டு தசாப்தங்களாக பணிப்பாளராகப் பணியாற்றியமையாலும் பன்னுால் ஆசிரியர் என்பதினாலுமே இதனை எழுதும்படி வேண்டிக் கொண்டனர். தமிழ் பேசும் மக்கள் ஒறாபி பாஷாவைப் பற்றியும் இலங்கையில் அவரால் ஏற்பட்ட இஸ்லாமிய தேசிய புனருத்தாரணம், முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சி என்பவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளும் நோக்கமாகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலுக்கான தகவல்களாக ஆங்கில நூல்கள், ஒறாபிபாஷா பற்றிய கைநூல்கள், நாளேடுகள், கண்டி ஒறாபிபாஷா நூதன சாலையில் பெறப்பட்ட குறிப்புகள் என்பன கையாளப்பட்டுள்ளன. ஒறாபி பாஷாவின் இலங்கை வருகை இந்நாட்டு முஸ்லிம்களின் ஒரு வரலாற்றுத் திருப்பமாகும். ஒறாபி பாஷாவும் அவரது சகாக்களும் இலங்கையில் ஆற்றிய பணிகள் மிகச் சுருக்கமாகவே தரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை தேசிய புனருத்தாரணத்துக்கும் முஸ்லிம்களின் கல்வி கலாசார முன்னேற்றத்துக்கும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் மேலும் ஆராயப்படலாம் என நம்புகின்றேன்.
இந்நூலை சரிபார்த்து செப்பனிட்டு ஒழுங்கு செய்து நூலாக மலர்வதற்கு முன்னின்று ஒத்துழைத்த பேராதனை பல்கலைக்கழக மெய்யியற் துறைத் தலைவர் கலாநிதி. எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தள்ளாத வயதில் இந்நூலை எழுதுவதற்கு அவர் தந்த உந்து சக்தி மறக்கற்பாலது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -12

இந்நூலை எழுதத் தூண்டிய ஒறாபி பாஷா கலாசார நிலைய இந்நாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.எச்.சலிம்தீன் அவர்களுக்கும் பெளண்டேசன் செயலாளர் திருமதி கதீஜா அபுசாலி, உதவிச் செயலாளர் ஆயிஷா மஹற்ரூப், தனாதிகாரி திருமதி பரீதா ரவுப் மற்றும் கலாபூஷணம் அல்ஹாஜ் எம்.வை.எம்.மீஆத் உட்பட எனது கட்டுரைகளை நூலாக வடிவமைத்து அச்சிட உதவிய அல்ஹாஜ் பாரிஸ் மொஹிதீன் அவர்களுக்கும், இந்நூலை அழகுற அச்சிட்ட அச்சகத்தாரான ருச்சிர அச்சகத்தாருக்கும் மற்றும் அனைத்து அங்கத்தவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
எஸ்.எம்.ஏ.ஹஸன்
235/36, ஈரஸ்ஸகல, கண்டி,
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -3-

Page 9
ஒறாபிபாஷா பெளண்டேஷன் தலைவரின்
ஆசியுரை.
நூலாசிரியர் கலாபூஷணம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் அவர்கள் முன்னாள் கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபின் சுமார் 20 வருடங்களாக ஒறாபி பாஷா கலாசார நிலையத்தின் பணிப்பாளராக சேவையாற்றியவர். அக்காலப் பகுதியில் அவரது ஆலோசனைப்படி நிறுவப்பட்டதுதான் ஒறாபி பாஷா தொழிற் பயிற்சி நிலையம் அன்று ஒறாபிபாஷா நலன்புரிச்சங்கம் என்ற பெயரில் இயங்கிய இந்த அமைப்பு 2007ம் ஆண்டில் “ஒறாபி பாஷா பவுண்டேஷன் என்ற அமைப்பாக உருவாகி அதே அங்கத்தவர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒறாபி பாஷாவினதும் அவரது சகாக்களினதும் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக தமிழில் நூல் வடிவில் எழுதுவதற்காக அவர் மேற்கொண்ட அயரா முயற்சியை மனமாரப்பாராட்டுகின்றேன். அது மாத்திரமின்றி அதனோடு சம்பந்தப்பட்ட பல வரலாற்று ஆய்வுகளையும் தேடிப் பெற்று உட்படுத்தியுள்ளார். உண்மையில் அவர் தமது 85வது வயதில் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு இந்நூலை உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.
ஒறாபிபாஷா கலாசார நிலையத்தில் அவரது கடந்த கால சேவைகளுக்காக 03.07.2010 அன்று நூல் வெளியீட்டுடன் பாராட்டு விழாவும் நடாத்தப்படவுள்ளது. பல நூல்களை எழுதியுள்ள அவரது இம்முயற்சி தொடரப் பிரார்த்திக்கிறேன். இவருடன் இந்நூலை வெளியிட்டு வைப்பதில் ஒறாபிபாஷா நிலையப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஹபீல் சலீம்தீன் மேற்கொண்ட அயரா உழைப்பையும் பாராட்டுகின்றேன். இந்நூலின் வடிவமைப்பை கணினி மூலம் அழகுற வடிவமைத்த அல்ஹாஜ் பாரிஸ் மொஹிதீன் அவர்களுக்கும் எமது பெளண்டேஷன் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன. ராயிஸ் முஸ்தபா
தலைவர் - ஒறாபிபாஷா பெளண்டேஷண் கண்டி
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -14
 

எகிப்தின்
வரலாற்றுச் சுருக்கம்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன்
-15

Page 10
எகிப்தின் வரலாற்றுச் சுருக்கம்
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பூர்வீக வரலாற்றையும் நாகரிகத்தையும் கொண்ட ஒரு நாடாக எகிப்து காணப்படுகின்றது. பூர்வீக காலந்தொட்டு நைல் நதி நாகரிகத்தின் மூலம் செழிப்புற்று பண்டைய மன்னர்கள் மாத்திரமின்றி வரலாற்றில் பல தீர்க்கதரிசிகளின் தோற்றத்தினால் இந்த நாடு சன்மார்க்கக் கலையிலும், கலாசார துறையிலும் பழைய கற்காலம் முதல் இன்றைய நவீனகால நாகரீகத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் ஒரு முன் மாதிரியாகக் காட்சி தருகின்றது.
கி.மு. 3100 முதல் 352 வரை பிர்அவுன்களும் அதனைத் தொடர்ந்து பத்து நூற்றாண்டுகள் கிரேக்க ரோம ஆதிபத்தியத்தில் மகா அலெக்சாந்தர், கிளியோபத்ரா, ஜூலியஸ்ஸிசர் போன்ற பேரரசர்களின் ஆட்சிக்காலத்திலும் எகிப்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடாகத் திகழ்ந்தது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சன்மார்க்க வரலாற்றிலும் எகிப்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு சமயங்களின் தோற்றத்தோடு தொடர்பு கொண்டுள்ள இந்த நாடு கி.பி. 640க்குப் பின்னர் இஸ்லாம் இங்கு பரவியதைத் தொடர்ந்து இன்றுவரை உலகில் புகழ் பெற்ற முஸ்லிம் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. ஆரம்பத்தில் கிலாபத் ஆட்சி முறையில் சுல்தான் சலாஹ”த்தீன் மற்றும் மம்லூக் மன்னர்களின் ஆதிக்கத்தின் போதும் எகிப்து இஸ்லாமிய நாகரீகத்தின் ஒரு முன்னுதாரணமான நாடாகத் திகழ்ந்தது. பாரம்பரிய மிக்க புராதன அரச வம்சத்தினரின் கல்லறைகள், பிரமிட்டுகள் மக்கள் வாழ்க்கையோடிணைந்த நுண்கலைப் பண்பாட்டுப் பொருட்கள், கட்டிடங்கள் என்பன இன்றுவரை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. உலமாக்களின் உல்லாச பூமியாக மிளிரும் இந்நாட்டில் காணப்படும் அல் அஸ்ஹர் சர்வ கலாசாலை ஆயிரம் ஆண்டுகளையும் தாணி டி சகல பல்கலைக்கழகங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கின்றது.
கலை, கலாசார அபிவிருத்திக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு குறிப்பாக இஸ்லாமிய கலாசார நெறிமுறைகளுக்கும்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் ! எஸ்.எம்.ஏ. ஹஸன் -6-

உலகளாவிய ரீதியில் அல் அஸ்ஹரின் பங்களிப்பு மகத்தானதாகும். இதன் மூலம் உருவான அறிஞர் கூட்டம், நூல் நிலையங்கள், நூதனசாலைகள், அழகிய மினாராக்களுடனும் இஸ்லாமிய கலைச்சிற்பங்களுடனான மஸ்ஜிதுகள் என்பன எகிப்தை ஓர் உன்னத ஸ்தானத்துக்கு உயர்த்தியிருந்ததில் வியப்பில்லை. இதனால் முஸ்லிம் உலகுக்கும் குறிப்பாக அறபு நாடுகளுக்கும் எகிப்து முன்மாதிரியான நாடாகக் கணிக்கப்பட்டது. இவ்வாறான எகிப்தின் உன்னதமான கலை, கலாசாரம் என்பன முஸ்லிம் ஆட்சியாளர்களால் 15ம் நூற்றாண்டு வரை பாதுகாக்கப்பட்டு வந்தன. அதே போன்று எகிப்தின் செழிப்பும், செல்வமும் அந்நியரால் கவரப்பட்டதனால் படிப்படியாக எகிப்து அந்நிய இராச்சியங்களாலும் மக்களாலும் சூறையாடப்படுமளவுக்கு பாதிப்படையவும் தொடங்கியது.
1517ஆம் ஆண்டு முதல் எகிப்தின் ஆதிக்கம் துருக்கிய வம்சாவழியினரின் கையில் சிக்கியது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்ட இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் எகிப்திய பொருளாதாரம், கலை, கலாசாரம் என்பவற்றில் மட்டுமன்றி மக்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அரச வம்சத்தினரும் செல்வந்தர்களும் பெரும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தனர். நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தந்த விவசாயிகளும் சாதாரண பொதுமக்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வந்தனர். வறுமையும், பஞ்சமும் நாட்டு மக்களை வதைக்கத் தொடங்கியபோதும் அரச வம்சத்தினரும் , செல் வந் தரும் களியாட்டங்களிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் காலத்தைக் கடத்தினர். இடைக்காலத்தில் துருக்கிய “கெஹதீவ்” மன்னர்களின் பலவீனத்தினாலும் கவனயீனத்தாலும் இந்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது.
1882ஆம் ஆண்டளவில் கெஹதீவ் மன்னர்களான இஸ்மாயிலும், தெளபீக்கும் அரசமாளிகையின் ஆடம்பர வாழ்க்கையினாலும் ஐரோப்பிய பெண்களின் உறவினாலும், விருந்துபசாரங்களினாலும், தம்மை மறந்து நாட்டின் செல்வத்தை வீணடித்து வந்தனர். இதனால் நாட்டில் பெரும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. வெளிநாட்டுக் கடன்களினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்புற்றது. மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து இறுதியில் இவ்வரசாங்கங்கள் பொதுமக்களின் ஆதரவை இழந்தன. இந்த நிலையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்திய மத்திய தரவகுப்பினரும் கல்விமான்களும் அறிஞர்களும் ஒன்றிணைந்து தேசிய எழுச்சி இயக்கமொன்றை ஆரம்பித்தனர். இஸ்லாமிய தத்துவஞானியும்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -7-

Page 11
பேரறிஞருமான மெளலானா அலீயுல் நதீம் எகிப்திய மக்கள் அந்நியரின் செல்வாக்கினால் அல்லலுறுவதை வன்மையாகக் கண்டித்தனர்.
இஸ்லாமிய மெய்ஞ்ஞானி மெளலானா ஜமாலுத்தீன் ஆப்கானியின் சீடரான முஹம்மத் அப்து என்ற சிரேஷட அறிஞர் மூலமாக இவ்வியக்கம் ஆரம்பமாகி அப்துல்லா அல் நதீம் போன்ற பேரரறிஞர்களாலும் அவ்வியக்கம் ஏற்கப்பட்டு 1878ல் ஆரம்பிக்கப்பட்டது. மெளலானா அலியுல் நதீம் இஸ்லாமிய புரட்சிக்கு தீவிரமாக பிரசாரஞ் செய்யவும் எழுதவும் தொடங்கினார். ஆட்சியாளர்களுக்கெதிரான “அல்தாலிப்” என்ற சஞ்சிகை மூலம் மக்கள் கிளர்ச்சிக்கு வழிகோலினார். இவரது பேச்சும் எழுத்தும் கவிதையாற்றலும் எகிப்திய மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் இதனால் கவரப்பட்டு அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.
இக்காலத்தில் எகிப்திய அரசாங்கப்படையிலும் பிளவுகள் ஏற்படத் தொடங்கியது. எகிப்தியரல்லாத கிரேக்க துருக்கியப் படையினருக்கு அரசாங்கம் விசேட சலுகைகளும், பதவி உயர்வுகளும் வழங்கிய அதேவேளை எகிப்திய படைவீரர்களின் உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்பட்டன. இதனால் பாதிப்புற்ற எகிப்திய படைத்தலைவர்கள் தேசிய இயக்கத்தோடு தொடர்புகொள்ளவும், அவற்றை ஆதரிக்கவும் தொடங்கினர். இதில் முதல் இணைந்து கொண்டவர்கள் மஹற்மூத் ஸமி அல்பருதி பாஷாவும், ஒறாபி பாஷாவுமாகும். மஹற்மூத் பாஷா ஒரு சிறந்த கல்விமானாகவும், கவிஞராகவும் இருந்தபோதிலும் அமைதியும் அடக்கமும் கொண்டவர். இந்தவகையில் ஒறாபி பாஷா ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தாலும், பேச்சு வலிமையும், போராட்ட வலிமையும் மக்களைக் கவரக்கூடிய தோற்றமும் உடையவராக இருந்தமையினால் புரட்சிக்குத் தலைமை தாங்க இயக்கம் அவரையே தெரிவு செய்தது. இயக்கத்தின் சார்பாக முதலில் அரசாங்க கெஹதீவ் தெளபீக் மன்னரிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
1. அரசியல் யாப்பை மாற்றியமைத்தல் 2. யாப்பு தாராளத்தன்மை கொண்ட லிபரல்யாப்பாக அமைவது
3. மக்கள் பாராளுமன்றமொன்றை அமைப்பது
ஆனால் இதனை மன்னரும் பிரமுகர்களும் எதிர்க்கத் தொடங்கவே ஒறாபி பாஷா தனது படைவலிமையையும், வீரத்தையும் ஆட்சிக்கெதிராகத் திருப்பினார். -
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் - 18

1.
அரசுக்கு எதிராக ஒறாபி பாஷாவும் சகாக்களும்
1881ல் எகிப்திய இராணுவத் தலைவர்களான ஒறாபி பாஷா, அப்துல் அல்ஹில்மி பாஷா, அலி பஹற்மி பாஷா ஆகியோர் கெஹதிவ் மன்னருக்கெதிராக எகிப்திய இராணுவத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைக் குற்றஞ் சாட்டி விசாரணை செய்யுமாறு ஒரு வேண்டுகோளை விடுத்தனர். இது மணி னருக்கு எதிரான நேரடியான குற்றச்சாட்டானபடியினால், ஆத்திரமடைந்த மன்னன் அரச மாளிகைக்கு அழைத்து நிந்தித்து அவமானப்படுத்தவும், பதவி நீக்கஞ் செய்யவும் தீர்மானித்தான். ஆனால் அரச சபைக்கு எதிராக இயங்கினால் தனது உயிருக்கே ஆபத்தேற்படும் என்பதையும், மக்கள் புரட்சிகளையும் கருத்திற் கொண்டு ஒரு சமரச ஏற்பாடாக ஒறாபியையும், சகாக்களையும் தலைநகருக்கு வெளியே வேறிடங்களுக்கு இடமாற்றஞ் செய்யும்படி கட்டளையிட்டார். கெஹதீவின் கட்டளையை ஏற்றுக்கொள்ளாத ஒறாபியும், சகாக்களும் தங்கள் படைகளுடன் மன்னன் மாளிகையை முற்றுகையிட்டனர். அதனால் தெளபீக் மன்னன் அபடன் மாளிகையில் தனிமையாக்கப்பட்டார்.
இந்த நிலையில் மன்னன் விருப்புடன் மீண்டும் ஒரு சமரசத் தீர்வு ஏற்பட்டது. அதன்படி அமைச்சரவையில் மஹற்மூத் ஸ்மி அல் பருதி பிரதமராகவும் ஒறாபிபாஷா பாதுகாப்பு அமைச்சராகவும் ஏனையோருக்கும் அமைச்சுக்களில் பதவிகளும் வழங்கப்பட்டன. இதனைத் தேசிய எழுச்சிக்கு கிடைத்த வெற்றியென மக்கள் கொண்டாடினர். ஒறாபிபாஷாவை ஒரு தேசிய வீரனெனப் பாராட்டினர். “அல்வாஹித் அல் மிஸிரி” எகிப்தின் “தலைவன்’ என்ற பட்டஞ் சூட்டிக் கெளரவித்தனர். எனினும் ஆட்சிப் பின்னணியில் ஒறாபியையும், அவரது சகாக்களையும் மம்லூக் அடிமைகளைக் கொண்டு கொலை செய்ய எத்தனித்த முயற்சியை ஒறாபியின் படைகள் கண்டுபிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர். ஆனால் மன்னரால் அவர்கள் பிற்காலத்தில் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -9-

Page 12
2. பிரித்தானியத் தலையீடு
இக்காலகட்டத்தில் எகிப்து மேற்கத்தைய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செல்வாக்குக்குட்பட்டிருந்தமையால், எகிப்திய பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பிரிட்டிஷ ஆதிக்கத்தில் சுயஸ்கால்வாய் இருந்தமையினால் அதனை சூழவிருந்த அலக்ஸாந்திரியா, ஒரு பிரிட்டிஷ குடியேற்ற நாடுபோல் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் மிக்கபகுதியாகவும், பிரிட்டிஷ படையினரின் ஒரு தங்கும் இடமாகவும் காணப்பட்டது. பிரிட்டிஷ பிரஜைகளுக்கும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளுக்கும் வழங்கப்பட்ட சுதந்திரத்தினால் எகிப்திய பிரஜைகள் பாதிப்படைவதை தவிர்ப்பது எகிப்திய தேசிய எழுச்சி இயக்கத்தின் ஒரு முக்கிய குறிக்கோளாகவும் அமைந்திருந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற முற்பட்டபோது வெளிநாட்டவர்களுக்கும், எகிப்தியர்களுக்குமிடையில் பல்வேறுபட்ட முறையில் கலவரங்கள் உருவாகின.
இதனால் அப்துல் ஆல், அலி பஹற்மி, மஹற்மூத் ஸ்மி ஆகியோர் தனது படைப்பிரிவுகளுடன் அலக்ஸாந்திரியா நோக்கிப் புறப்பட்டனர். ஒறாபி பாஷா அலக்ஸாந்திரியாவுக்குள் சென்றடைந்த போது பிரிட்டிஷாருக்குக் கொடுத்த இரகசியத்தகவல்கள் காரணமாக இடைவழியில் அலி பஹற்மி, மஹற்மூத் பஹமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மஹமூத் ஸ்மியின் படைகளும் இடைவழியில் தடுக்கப்பட்டதனால், ஒறாபி பிரிட்டிஷ படைகளுடன் தனித்து போராட வேண்டி ஏற்படவே போர்க்களத்திலிருந்து தப்பித்து இரவோடிரவாக புகையிரத மார்க்கமாக கெய்ரோ வந்தடைந்தாலும் கண்ட இடத்தில் சுடுவதற்கான கட்டளைப் பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தனது வாளைக் கீழே வைத்து சரணடைந்தார். இதனால் ஒறாபியும் அவரது சகாக்களும் ஆதரவாளர்களுமாக 140 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும் ஒறாபி பாஷாவைப் பற்றி பிரிட்டிஷ மக்களிடம் இருந்து வந்த தப்பபிப்பிராயத்தைக் களைவதற்கு எகிப்தில் வாழ்ந்த பிரிட்டிஷ பிரஜைகளான ஸர் வில்லியம் கிரகரி (Sir Williams Gregory), வில்பிரட் பிளன்ட் (Wilfred Blent) ஆகியோர் ஒறாபியின் தேசப்பற்றையும் நேர்மை,
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -20

சமூக சிந்தனை என்பவற்றை எடுத்துக்காட்டி மக்கள் எழுச்சிப் போராட்டம் பற்றிய அறிக்கைகளை பிரிட்டிஷ பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தனர். பிரிட்டிஷ பத்திரிகைகளுக்கும் எழுதினர். இதனால் ஒறாபிக்கும், சகாக்களுக்கு ஓர் அனுதாப அலை இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்டது. ஒறாபிக்கு மரணதண்டனை வழங்குவதைத் தடுப்பதற்கான நியாயங்களையும் எடுத்துக் காட்டினர். பிரித்தானிய பாராளுமன்ற லிபரல் கட்சியின் அங்கத்தவர்கள் ஒறாபிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். தேசிய விடுதலைக்காகப் போராடிய ஒறாபியையும், சகாக்களையும் துன்புறுத்தலுக்கோ மரண தண்டனைக்கோ உட்படுத்தக்கூடாதென வாதாடினர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -21

Page 13
3.
மரண தண்டனையும் நாடு கடத்தலும்
பின்வரும் குற்றச்சாட்டுகளின் பேரில் எகிப்திய அரசாங்கம் ஒறாபியையும் சகாக்களையும் விசாரணைக்குட்படுத்தியது.
1. எகிப்திய தேசியக் கொடியை அவமதித்தமை.
2. அலெக்ஸாந்திரியாவுக்கு தீயிட்டுப் போர்தொடுத்தமை.
3. அரசாங்க ஆயுதங்களைக் கொண்டே மன்னருக்கெதிராகப் போர் தொடுத்தமை.
4. மக்களை அரசுக்கெதிராகப் போரிடத் தூண்டியமை.
விசாரணைக்காக அரசாங்கத்தரப்பில் 140 சாட்சியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை எதிரிகளின் சார்பில் 400 சாட்சியாளர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குச் செலவைச் சமாளிப்பதற்காக பொதுமக்களோடு இங்கிலாந்தின் ரண்டோல்ப் சர்ச்சில் பிரபு, சி ஈகோர்டன், ஸர் ஹென்றி வுல்ப், ஸர் வில்லியம் கிரகரி உட்பட பலரும் ஒறாபிக்காக நிதிவழங்க முன்வந்தனர். காரணம் ஒறாபிக்கு மரண தண்டனை வழங்குவதை இங்கிலாந்து மக்கள் விரும்பாமையேயாகும். இதனால் அரசாங்கத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே நாட்டின் சட்டத்தை மதித்து ஓர் உடன்பாட்டை ஏற்படுத்துவதில் இங்கிலாந்து, எகிப்து தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
இதன்படி ஒறாபியும், சகாக்களும் குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உடனடியாக அதனைத் தளர்த்தி ஆயுட்கால நாடுகடத்தப்படும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதனை வில்பிரட் பிளன்ட் முன்னின்று செயற்படுத்தவே மஹற்மூத் ஸ்மி, அஹற்மத் ஒறாபி, அலி பஹற்மி, மஹற்மூத் பஹற்மி, யாக்கூப் ஸமி, துல்பாஸ் மெத், அப்துல் அல்ஹில்மி, அஹற்மத் அப்துல் கப்பார் அகியோர் தாம் குற்றவாளிகள் என ஏற்றுக்கொள்ளவே மரணதண்டனை விதிக்கப்பட்டு, அதற்கு மாற்றீடாக அவர்களுக்கு நாடு கடத்தப்படும் தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தப்படும் நாடுகள் பல
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -22

முன்வைக்கப்பட்டாலும், வில்பிரற் பிளன்ட் என்பவரின் விருப்புக்கேற்ப பிரித்தானியக் காலனித்துவ நாடான இலங்கை தெரிவு செய்யப்பட்டது. ஒறாபியும் அவரது சகாக்களும் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட புண்ணிய பூமியை நாடிச் செல்ல இருப்பதனால் கவலை கொண்டிருந்த ஒறாபியின் ஆதரவாளர்கள் ஓரளவு மனநிறைவைப் பெற்றனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -23

Page 14
4.
ஒறாபி பாஷாவும் சகாக்களும்
இலங்கை வருகை
1882 டிசம்பர் 27ஆம் திகதி அப்துல் கப்பாரும் அவரது குடும்பத்தினரையும் தவிர்ந்த ஏனையோரும் அவர்களது குடும்பத்தினரும் சுயஸ்கால்வாய் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எஸ்.எஸ்.மறியற் (S.S.Marriot) என்ற கப்பல் அங்கு தயாராக நின்றது. “மூரிஸ்பே' என்ற கெஹதீவின் ஆங்கிலத் தளபதி இவர்களுக்குப் பொறுப்பாக இருந்தார். உதவியாளராக சிரியா நாட்டைச் சேர்ந்த சலீம் அத்தல்லா கடமையாற்றினார். இவர்களது வருகைபற்றி பிரித்தானிய அரசாங்க செயலாளர் இலங்கை கவர்னருக்குப் பின்வருமாறு அறிவித்தனர்.
“எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கையை நோக்கிப் புறப்பட்டனர். தங்குமிடவசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஏழு பிரதானிகள் உட்பட, மனைவிமாரும், பெண்பிள்ளைகளும் 19 பேர், 17 ஆண்பிள்ளைகள், 8 ஆண் வேலையாட்கள் 6 பெண் தொழிலாளர்கள் என உடனடி அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்யத் தொடங்கியது. அக்காலத்தில் இலங்கை ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தில் இருந்தமையால் கவர்னர் உட்பட பொலிஸ் இராணுவப் படையிலும் அனைத்து உயர் அதிகார பீடங்களிலும் ஆங்கிலேயர்களே பதவி வகித்து வந்தனர். அன்றைய மகாராணி, பிரிட்டிஷ அரசாங்க செயலாளர் கட்டளைப்படி இலங்கையின் பரிபாலனம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதனால் கவர்னர், இராணுவம், பொலீஸ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையிலே ஒறாபி பாஷாவும் அவரது சகாக்களும் குடும்பத்தினரும் இருந்து வந்தனர். ஆங்கிலேயர் இவர்களை எகிப்தில் வழங்கப்பட்ட அந்தஸ்தின்படி பாஷாக்களென்றும் அதற்கு ஈடான துருக்கிய மொழியில் “எபெண்டி” “Afendi’ என்றும் அழைத்தனர். இவர்கள் கைதிகளாக இலங்கை வரவில்லை. ஆனால், சகல வசதிகளும் வழங்கப்படும் ஆயுள் காலப் பிரஜைகளாகவே பிரிட்டிஷ அரசாங்கம் இவர்களைக் கவனிக்கத் தொடங்கியது. எகிப்தை விட்டு வெளியேறியதும் இவர்களைப் பற்றிய
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -24

பிரச்சாரம் அக்காலத்துப் பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியது. இதேவேளை, இலங்கைத் தீவில் வசிப்பதற்காக அறபிகள் வருகின்றார்கள் என்று முஸ்லிம்கள் பெருமிதமடைந்தனர். எகிப்தை ஆண்ட எகிப்திய மக்களின் தேசிய விடுதலைக்காகப் போராடிய தேசிய வீரர்களை வரவேற்பதற்காக அந்நிய ஆட்சியை எதிர்க்கும் இலங்கைப் பிரஜைகளும் வெளிப் படையாக அவர்களை ஆதரிக்கவும், வரவேற்கவும் முற்பட்டனர். இந்த நிலையை உணர்ந்த அக்காலத்து ஆங்கிலப் பத்திரிகையான
: “THE WEEKLY CEYLON OBSERVER, DECEMBER 26.1882
அதன் ஆசிரியத் தலையங்கத்தில் ஒறாபியையும் அவர்களது சகாக்களின் விருகையை ஒரு பயங்கரவாதக் குழுவினரின் வருகையாகச் சித்தரித்தது. இவர்கள் சிங்கக் குணம் படைத்தவர்கள், மூர்க் கத்தனமும் கொண் டவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், அரசு ஆயுதங்களையே அரசுக்கெதிராகப் பாவித்தவர்கள் என்றெல்லாம் எழுதியது மாத்திரமன்றி இஸ்லாத்தைப் பற்றிய தவறானதும், தப்பானதுமான நச்சுக் கருத்துக்க்ளையும் வெளியிட்டது. அறிஞர் சித் திலெப்பை அதனை வ்ன்மையாகக் கண்டித்து எழுதியதோடு, ஆங்கில ஸியோனிசத்தின் கொடிய போக்கு இதுவென்றும் ஆங்கிலேயருக்கு எதிராக எழுதினார்.
THE WEEKLY CEYLON OBSERVER, 26.12.1882
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -25

Page 15
கட்டாயப்படுத்தப்பட்ட நாடுகடத்தல் காரணமாக எதிர்வரும் எமது புத்தாண்டு பரிசாக 58 பேருக்கும் குறையாத எகிப்தியர்கள் எம்மை வந்து சேரவுள்ளனர். அந்தத் தொகை மேலும் கூடலாம் அல்லது குறையலாம். அனைவரும் சொந்த நாட்டிலிருந்து அரசியல் காரணத்துக்காக நாடு கடத்தப்பட்டவர்கள். அவர்களுடன் மனைவி மக்களும் வேலையாட்களும் அடங்குகின்றனர்.
இவ்வாறு வருகின்றவர்களுக்கு ஒரு தனிப்பட்ட படைக்குடியிருப்பு Army Barack ஏற்படுத்தப்பட்டாலே போதும் அதற்காக அரசு மேலதிகக் கவனஞ் செலுத்த அவசியமில்லை. அவர்களோ சித்த சுவாதீனமற்ற அரசியற் கைதிகள் . ஒரு சிறைச் சாலைக் கு வழங்கும் பாதுகாப்பளிக்கப்பட்டால் போதும். அரசு மேற்கொள்ளும் மேலதிக வசதிகள் வழங்கும் திட்டம் தேவையற்றது. என்றாலும் அவர்கள் ஸரந்தீபில் எந்த இடத்தில் எத்தகைய வசதிகளோடு வாழப்போகிறார்கள் என்பதை விரைவில் கண்டுகொள்ள முடியும்.
26ஆம் திகதி அலக்சாந்திரியாவில் இருந்து புறப்படும் அவர்களுக்கு இலங்கையர், குறிப்பாக முஸ்லிம்கள் அளிக்கப்போகும் வரவேற்பு இப்பொழுது முதல் ஏற்பாடாகிறது. 1883 ஜனவரி 12ந்திகதி அவர்கள் இங்கு வந்து சேர்வார்கள். பிர் அவுன்கள் வாழ்ந்த நாட்டில் பிரித்தானிய வல்லரசுக்கெதிராகப் போராடினார்கள். அதனால் அவர்களைப் பார்ப்பதில் மக்கள் ஆர்வங்காட்டுகின்றனர். பிரித்தானியா மேற்கொண்டுள்ள தாராள மனப்பான்மையை புரட்சியாளர்களின் மூர்க்கத்தனம் அசட்டை செய்யமாட்டாதென்பது எமது நம்பிக்கை. ஒறாபியுடன் சேர்ந்து போராடியவர்கள் அறபிகளாயினுஞ் சரியே, துருக்கியர்களாயினும் சரியே, அவர்கள் புரட்சிச்சதி நாசக்காரர்களேயாவர். ஒறாபியின் போராட்டத்தை மத பக்தியுடையோரும் தேசியப்பற்றுடையோரும் பாராட்டினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. முஹம்மதியா பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம் நாஸ்திகத்துக்கு ஒரு சாவுமனியென்றாலும் அதன் உள்ளடக்கம் உணர்ச்சிமிக்க தீவிரவாதத்தை தூண்டுவதாகும்.
ஒறாபி இந்தத் தீவிர உணர்ச்சிக்குள்ளானதையிட்டு கவலைப்பட வேண்டும். விசுவாசமும் அதிகாரமும் மிக்க ஒரு படைத்தளபதி அந்த நாட்டுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி தன் படைப்பலத்தால் சுல்தானின் மாளிகையை முற்றுகையிட்டு அரச பலத்தைக் கைப்பற்றுமளவுக்கு மாறியுள்ள முஹம்மதியரின் இந்த நம்பிக்கை இவ்வுலகுக்கு சாந்தப்படுத்த முடியாத ஒரு சாபமாகும். உலக வரலாற்றில் இத்தகைய சந்தேக நிலை உருவாகியதனால் கண்டியைச் சேர்ந்த
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -26

வழக்கறிஞர் சித்திலெப்பை முஹம்மதியர்களுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்கான பிரசுரம் ஒன்றை செய்தித்தாளாக முன்வைத்துள்ளார். அந்தச் செய்தித்தாளின் ஆங்கில உரையை பின்வருமாறு அதிலிருந்த மாதிரியே அத்தலையங்கத்தில் பிரசுரித்துள்ளதை காணலாம்.
“When the world was filled with the darkness, of ignorance all merciful, the almighty omniscient, all merciful and perfect god who is without beginning or end, sent a sun to dispel that darkness and proclaim his true religion, in the person of messenger our prophet Mogammed”
இவ்வாறு சித்திலெப்பையின் முஸ்லிம்நேசன் பத்திரிகையைக் குறிப்பிட்டதன் மூலம் தனது அதிருப்தியை வெளிக்காட்டுவதாகவே அது அமைந்துள்ளது. இவ்வாறு சித்திலெப்பை முன்னின்று எழுதுவதற்கு அன்றைய முஸ்லிம்களின் கல்வி அரசியல்துறை பின்னடைவே ஒரு காரணமாகும். இஸ்லாமிய எழுச்சிக்கு எதிராகவும் ஒறாபிபாஷாவையும் சகாக்களையும் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு வரவேற்பதற்கான திட்டங்களைத் தகர்ப்பதற்காகவும் இவ்வாறு ஒறாபி பாஷா இலங்கைக்கு வருமுன்னதாகவே பிரசுரங்கள் அமைந்தன. இவ்வாறான ஸியோனிஸ தந்திரோபாயங்கள் அன்றும் உலகம் முழுதும் வியாபித்திருந்தாலும், இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை அவர்களால் தகர்க்க முடியவில்லை. இதேவேளை ஆங்கில ஆட்சியாளர்களின் தாராளத்தன்மை நிலவியதால் முஸ்லிம்களின் உணர்வுகள் பாதிக்கப்படவுமில்லை. இலங்கை முஸ்லிம்களும் தளர்ந்து விடவில்லை. ஒறாபியையும், சகாக்களையும் பற்றி விமர்சித்த அதே பத்திரிகை அவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர்களது குணாதிசயங்களைப் பாராட்டியுள்ளதாயும் அவதானிக்கலாம்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -27

Page 16
5.
அணிதிரண்ட இலங்கை முஸ்லிம்கள்
ஒறாபிபாஷாவும், சகாக்களும் இலங்கை வந்தடைவதைக் கேள்வியுற்றதும் முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கொழும்பு நகரை வந்தடையத் தொடங்கினர். கண்டி, காலி ஆகிய பிரதேசங்களில் இருந்தும் ஏராளமானோர் புகையிரத மார்க்கமாகக் கொழும்பை வந்தடைந்தனர். இதற்காக பிரசார நடவடிக்கைகளை அறிஞர் சித்திலெப்பை, வாப்பாச்சி மரைக்கா பள்ளிவாசல்கள் கதீப்மார் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். ஒரு முஸ்லிம் நாட்டின் தேசிய விடுதலைக்காகப் போராடிய வீரர்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியுடனிருந்தனர். அவர்கள் தங்கள் மனைவி மக்களோடு வருவதனால் அவர்களைப் பார்த்து மகிழ ஆசைப்பட்டனர். அறபிகளையும் அவர்களது பெண்களையும் தோற்றத்தை மட்டுமல்லாமல் உடை நடை பாவனைகளையும் நேரடியாகக் காண்பதில் அவர்களுக்கு அவ்வளவு ஆசை. அக்காலத்தில் இலங்கையில் இரண்டு லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்ததாகவும் அவர்களுள் 32,208 பேர் கொழும்பில் வாழ்ந்ததாகவும் புள்ளி விபரங்கள் குறிக்கின்றன. எனவே கொழும்பில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்களும் இலங்கை தேசிய சுதந்திர வேட்கை கொண்ட முஸ்லிமல்லாதோரும் ஒன்று கூடியதில் ஆச்சரியமில்லை.
1883ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி எஸ்.எஸ் மறியட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அன்றைய பத்திரிகை அதனைப் பின்வருமாறு பிரசுரித்திருந்தது.
“ஒறாபியையும் சகாக்களையும் தாங்கி வந்த மறியட் என்ற கப்பல் மாலை ஐந்து மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலி வந்தடைந்த செய்தி கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் பரவத் தொடங்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக துறைமுகத்தை நோக்கி விரைந்தனர். அத்துடன் கொழும்பில் தங்கியிருந்த உலலாசப் பயணிகளும் சேர்ந்து கொண்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவு மக்கள் கப்பல்துறை முகமேடையை அடைய முயற்சித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த இலங்கை பொலசார் பெருமுயறர் சரியை மேறர் கொள்ள
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -28

வேண்டியதாயிற்று. வெகுநேரமாக காத்திருந்த மக்களுக்கு அன்று கிடைத்த செய்தி 'இன்று அவர்கள் கரையிறங்கமாட்டார்கள் நாளைக்காலையிலேயே கரை இறங்குவார்கள்’ என்பதாகும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றாலும் மறுநாட்காலையில் அதே கூட்டம் மீண்டும் வந்து துறைமுகத்தை முற்றுகையிட்டது. இதற்கிடையில் துறைமுகத்தலைவர் கெப்டன் டொன்னன் (Captain Donnan) துறைமுக வைத்தியப் பரிசோதகர் டாக்டர் கார்வின் (DrCaryin) ஆகியோர் கப்பலைச் சென்றடைந்தனர். 14 நாட்களாக கப்பலில் இருப்பவர்களின் தேகாரோக்கிய நிலையைப் பார்வையிட்டனர்.
ஒரு ஆஸ்த்மா நோயாளியைத் தவிர ஏனையோர் சுகதேகிகளாகக் காணப்பட்டனர். கப்பலில் எல்லாமாக 77 பேர் இருந்தனர். அதில் மேஜர் பொரிஸ்பே தலைமையில் 20 இராணுவ வீரர்களும் இருந்தனர். எகிப்திய அமைச்சினால் அறிவிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலின்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குடும்ப அங்கத்தவர்களும் அடங்கியிருந்தனர். இத்துடன் இவர்களை வரவேற்பதற்காக இலங்கை கவர்னரின் உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
அறபு மொழிபெயர்ப்பாளர் பாஷாக்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒறாபி பாஷா, பிரதமராக இருந்த ஸமிபாஷா, இராணுவப் பொறியியலாளர் முஹம்மது பஹற்மி, உதவி அமைச்சராக இருந்த யாக்கூப் ஸமி, அலி பஹற்மி பாஷா, துல்பா பாஷா, இல்மி பாஷா ஆகியோருடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. கலந்துரையாடலின் போது பாஷாக்களின் வீரமிக்கத் தோற்றத்துக்கேற்ப பேச்சும் ஆளுமையும் அளவிடக்கூடியதாக இருந்தது. இலங்கையில் எத்தனை ஆங்கில பத்திரிகைகள் இருக்கின்றன? அறபி பத்திரிகை உண்டா? அறபு மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்களா? கொழும்பில் இருந்து கண்டிக்கு எவ்வளவு தூரம்? போக்குவரத்து வசதியுண்டா? தகவல் தொலைதொடர்புகள்? பாடசாலைகள்? ஆயுள்பூராக வாழவேண்டிய இவர்கள் இவ்வாறு தமது குடும்ப நலனுக்குட்பட பல்வேறு விஷயங்கள் பற்றியும் கலந்துரையாடினர். முதல் நாள் ஏமாற்றத்துடன் சென்ற மக்கள் கூட்டம் அடுத்தநாள் காலையிலிருந்து காத்துக்கொண்டிருந்த போதும் வெளியேறாததால் ஒரு சில வள்ளங்கள் மூலமாகச் சென்று கப்பலைச் சுற்றிக் காத்திருந்தனர். கரையிரங்குவதற்கான ஏற்பாடுகளைப் பொலீசார் மேற்கொள்வது தெரிந்தது. முதலில் அவர்களது மூட்டைமுடிச்சுகள் இறக்கப்பட்டு துறைமுக மேடைக்கு எடுத்து வரப்பட்டது. காலை 10 மணியளவில் அலிபஹற்மி பாஷாவும் அவரது குடும்பத்தினரும் அரசாங்கப்படகில் ஏற்றப்பட்டு துறைமுக மேடையை வந்தடைந்தனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -29

Page 17
அவர்களைப்பார்வையிட மக்கள் கூட்டம் நெருங்கி வந்தது. பார்வையின் மத்தியில் மிக விரைவாக அலிபஹற்மி பாஷாவையும், குடும்பத்தினரையும் அவர்களுக்காக நிறுத்தப்பட்ட வண்டியில் விரைவாக ஏற்றி “பிறேயுரூ” லொட்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிற்பகல் ஒரு மணியளவில் முஹம்மதுஸமி, முஹம்மத் பஹற்மி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் அவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த “ஸ்ட்ரூவன்’ இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்றாவது குழுவில் ஒறாபிபாஷா வருவதை அறிந்த மக்கள் பெரும் ஆர்வத்தோடு தமது பார்வையைச் செலுத்தி முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.
பிற்பகல் இரண்டு மணியளவில் ஒறாபிபாஷா தனது குடும்பங்கத்தவர் ஆறு பேருடனும் துல்பாஷா மூவருடனும் அப்துல்ஸாமி பாஷாவோடும் ஜெட்டியை வந்தடைந்ததும் ஒறாபிபாஷாவை அரசாங்க சார்பில் மேஜர் டிரன்செல் வரவேற்றதும் “அல்லாஹ9 அக்பர்’ அஸ்ஸலாமு அலைக்கும் என்று சப்தமிட்டு வரவேற்று அவர்களைக் கண்டு மக்கள் மகிழ்ச்சிப் பேருவகையில் ஆழ்ந்தனர். தொடர்ந்தும் மகிழ்ச்சியுடன் சப்தமிடுவதைக் கண்ட ஒறாபிபாஷா தலை குனிந்து மகிழ்ச்சியைக்காட்டித் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த லேக்ஹவுஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இறுதியாக மூன்று மணியளவில் யாகூப்ஸமி பாஷா அவரது குடும்பங்கத்தவர் 12 பேருடன் “ஹபர்லன்” இல்லத்துக்கு அழைத்து செல்லப் பட்டனர். எடுப்பான அழகிய தோற்றமுடைய ஆண்கள், நீண்டகாற்சட்டையும், நீண்ட மேலங்கியும் துருக்கித்தொப்பியும் அணிந்திருந்தனர். பெண்கள் முகத்திரையுடன் கறுப்பு நிறப்பட்டாடையும் அணிந்திருந்தனர். எகிப்தியப் பெண்களை பார்த்து, அவர்களின் அழகைக்காண முயற்சித்த மக்களுக்கு இது ஒரு ஏமாற்றமாகும். இதனை அப்பத்திரிகை குறிப்பிடுகையில் “மூஸா நபியின் கோத்திரத்தில் உதித்த நைல் நதி நங்கையின் அழகைக் காண முடியாவிட்டாலும் அவர்களிடம் பளிச்சிட்ட கண் பார்வையின் மூலம் மக்கள் முழு அழகையும் கண்டு களித்தனர் என்று எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறு தற்காலிகமாகத் தங்க வைத்திருந்த இவர்களது வசிப்பிடங்கள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்புக் கருதி முஸ்லிம் பொலீசாரே நியமிக்கப்பட்டிருந்தனர். ஒறாபி பாஷாவும் குடும்பத்தினரும் லேக் ஹவ்ஸ் சென்றடையும் வரையும் 20 எகிப்திய இராணுவ வீரர்களும் தோளில் துப்பாக்கியும் கையில் வாளும் ஏந்தியவண்ணம் பின்தொடர்ந்து சென்றனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -30

6. பத்திரிகையாளர் பேட்டி
ஒறாபிபாஷா தனது இருப்பிடம் சென்றடைந்ததும் அடுத்த நாள் பத்திரிகையாளர் பேட்டியொன்று இடம்பெற்றது. பின்னர் ஏனைய பாஷாக்களையும் பேட்டி கண்டு ஆங்கிலப்பத்திரிகை பின்வருமாறு எழுதியுள்ளது. அவர்கள் இலங்கையில் வாழ்க்கைச் செலவு பற்றிக் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்தனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு ஸ்டேலிங் பவுன் வீதம் வழங்கப்பட்டதனால் அதற்குள் வாழ்க்கைச் செலவை எவ்வாறு சரி செய்யலாம் என்பதே அவர்களது முக்கிய நோக்காகும்
அக்காலத்தில் இத்தொகை ஒவ்வொரு குடும்பத்துக்கும் போதுமாக இருந்தாலும் எகிப்தில் இவர்களது வாழ்க்கைத்தரம் உயரியதாக இருந்தது. கட்டுப்பாடுடையதாக இருக்கவில்லை. இலங்கையில் ஆங்கிலமொழி தெரியாமல் எவ்வாறு காலங்கடத்துவீர்கள்? என்றுகேட்ட போது ஒறாபி தன்னிடமிருந்த ஒரு குறிப்புப் புத்தகத்தை எடுத்துக்காட்டினார். அதில் அறபுச சொற்களுக்கான ஆங்கிலக் கருத்துக்களை தன்கையால் எழுதியுள்ளதைக காட்டி தான் தொடர்ந்தும் ஆங்கிலம் கற்று வருவதாகவும் கூறினார்.
அதற்காக தன்னிடம் இருந்த புத்தகங்களையும் காட்டினார். ஸர் வில்லியம் கிரகரி தன்னைச் சந்திப்பதற்காக இலங்கை வருவார் அப்போது நான் அவருடன் ஆங்கிலத்தில் கதைப்பதற்குத் தயாராகி விடுவேன் என்ற உறுதி மொழியும் வழங்கினார். தற்காலிகமான வசதிகள் குறைந்த வாசஸ்தலங்களில் தங்கியிருக்கும் அவர்களுக்கு வசதிகளுடன் கூடிய வாசஸ் தலங்களை இலங்கை அரசாங்கம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்படுகிறது. முஹம்மத் பஹற்மி குறிப்பிடும்போது கொழும்புக்கு வெளியே விவசாயத் தோட்டத்துடன் ஓரிடம் கிடைக்குமாயின் காலத்தை வீணாகக் கழிக்காது தோட்டச் செய்கையில் ஈடுபட்டு ஐந்து பெண் மக்களுடன் கூடிய தனது பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.
“சுகவீனம் ஏற்பட்டால்” என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஆங்கில வைத்தியர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சோதிப்பதிலும், வைத்தியஞ் செய்வதிலும் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றனர். இதனால
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -31

Page 18
அல்லாஹற்வின் கருணையால் தாம் சுகதேகியாக வாழ முடியுமென்றும் அவர்களும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பதையே விரும்புவதாகவும் தெரிவித்தனர். அப்பொழுது இலங்கையில் முஸ்லிம்கள் மத மாற்றத்துக்கு அஞ்சி கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்பதை மறுக்கின்றனர் என்று கூறியபோது எங்கள் குழந்தைகள் குர்ஆன் வழிகாட்டலில் நல்ல தேர்ச்சியுடையவர்கள், அதனால் அவர்கள் வழிதவறமாட்டார்கள் என்றனர். கொழும்பு “பிஷப்” பாடசாலையைப் பற்றிக்கூறினோம், அங்கு கிறிஸ்தவ நடைமுறைகளுக்கு அமைவாகவே மாணவர்கள் பயில்கின்றனர் என்ற போது தங்கள் பிள்ளைகளை அங்கேயே தங்கவைத்துப் படிப்பிக்க ஆவல் கொண்டுள்ளதாகவும் கூறினர்.
இவர்களுடன் ஏற்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து பத்திரிகையாளர் இவர்களது நல்லெண்ணங்கள் நற்குணங்கள் பற்றிப் பாராட்டியும் எழுதத் தொடங்கினர். ஆரம்பத்தில் விரோதமாகவும் குரோதமாகவும் எழுதிய அதே பத்திரிகை எகிப்தில் உயர் அந்தஸ்தில் வாழ்ந்த இக்குடும்பத்தினருக்கு இலங்கையில் வழங்கப்பட்டுள்ள தேவைகள் போதியதானதல்ல என்றும் எடுத்துக்காட்டினர். இதன் காரணமாக ஜனவரி 21, 1883ல் இலங்கை கவர்னர் Sirஜே.ஆர் லோங்டன் ஒறாபியையும் சகாக்களையும் இராணி மாளிகைக்கு அழைத்து ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் ஒறாபி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவது கோரிக்கையாக ஒறாபியுடன் இருந்த அப்துல் ஆல் ஹில்மி, துல் பாஷா ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனித்தனியான வதிவிடங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதை ஏற்றுக் கொண்ட கவர்னர் இரண்டு வீடுகள் உடனடியாக ஒழுங்கு செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இரண்டாவது கோரிக்கை தங்களது பிள்ளைகளின் கல்வியைப் பற்றியதாகும். அதற்காக கிறிஸ்தவ பாடசாலையான நோர்மல் பாடசாலை, பெண் பிள்ளைகளுக்கும், ஆண்களுக்கு கேர்டன் பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டு அங்கு இலவசக் கல்வியாக அனுமதி வழங்கப்பட்டது. கல்வியைத் தொடர்வதற்காகக் கண்டிக்கு இடமாறியபோது கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியிலும் கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரியிலும் அவர்களது ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் கல்வி பயின்றனர்.
மூன்றாவது கோரிக்கையான அவர்களது மருத்துவ வசதிக்காக டாக்டர், வைட் என்பவரின் தலைமையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -32

நான்காவதாக அவர்களது வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்படும் மாதாந்த சம்பளப்படி பற்றியதாகும். அது அவர்களின் குடும்பச் செலவுக்கேற்றதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பதால் இக்கோரிக்கை கவர்னரின் அதிகாரத்துக்குட்படாததால் அதுபற்றி பிரிட்டிஷ அரசாங்க செயலாளருக்கு அறிவிப்பதாக உறுதியளித்தார். அதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டார். அத்துடன் கவர்னர் பாஷாக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை தீர்க்க உத்தரவாதம் அளித்தார்.
இந்த முயற்சியின் பயனாக பிற்காலத்தில் ஒறாபிபாஷாவுக்கு 6000 ரூபாவும் ஏனையோருக்கு 4350ரூபா வீதமும் வழங்கப்பட்டது. இது அன்றைய இலங்கையின் இராணுவத் தளபதி, நீதிபதிகள், சிவில்சேவை அதிகாரிகளின் சம்பளத்தை விடக் கூடியதாகும்.
இதனால் இலங்கையில் இவர்களது வாழ்க்கைத் தரமும் உயரலாயிற்று. எகிப்திய குடும்பத்தினர் கொழும்பில் பல இடங்களில் இடம்மாறிய வண்ணம் வாழ்ந்து வந்தனர். பலருக்கு கொழும்பு சுவாத்தியம் ஒத்துவராததனாலும் தேகாரோக்கியம் கருதியும் மஹற்மூத் பஹற்மி பாஷாவின் குடும்பத்திரைத் தவிர ஏனையோர் கண்டியில் குடியேறத் தொடங்கினர். கண்டியின் மத்தியமான சுவாத்தியத்தை அவர்கள் விரும்பினார்கள். வடக்கு கிழக்கைத் தவிர்ந்த இலங்கையின் எந்தப்பாகத்திலும் வாழ்வதற்கு அவர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து வடக்குகிழக்கிற்குப் பிரயாணஞ் செய்யும் வசதிகள் மிகக் குறைவாக இருந்தமையினாலேயே அவ்வாறு அவர்கள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மஹற்மூத் பஹற்மி கடைசி வரை கொழும்பிலேயே சீவித்தார்.
அவர் கண்டிக்கு வர விரும்பினாலும் அவரது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில் கொண்டும் அவரது ஒரு மகன் கொழும்பு மருத்துவக கல்லூரியில் பயின்று கொண்டிருந்ததனாலும் கண்டியில் குடியேறும் எண்ணத்தை தவிர்த்தார். 1888ல் மஹற்மூத் ஸ்மியும், அவரைத் தொடர்ந்து யாக்கூப், துல்பாஸமத், அலிபஹற்மி ஆகியோரும் கண்டிக்கு வந்தனர். ஒறாபி 1893ல் கண்டிக்கு வந்தார். தலைநகரில் அரசாங்கத்துடன் இருந்த தொடர்பும் ஒறாபி பாஷாவைச் சந்திக்கவரும் வெளிநாட்டார் சந்திப்பும், கொழும்பு முஸ்லிம்களுடன் ஒறாபிபாஷாவிடம் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பும் அவர் பத்து ஆண்டு காலம் கொழும்பிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒறாபி பாஷாவிடம் கால அவகாசம் பெற்று இலங்கையின அரசியல் முக்கியஸ்தர்கள் தொழில் அதிபர்கள், தொழிற்சாலைத் தலைவர்கள் உட்பட சமயத் தலைவர்களும் இவ்வாறு சந்தித்தனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -33

Page 19
இவர்களுடன் கலந்துரையாடியதாலும் தனது சொந்த முயற்சியினாலும் ஒறாபி ஆங்கிலமொழியில் நல்ல பரிச்சயமுடையவராக மாறினார். இலங்கையின் முக்கிய முஸ்லிம் பிரபலஸ்தர்களான சித்திலெப்பை, வாப்பச்சி மரைக்கார், கரீம்ஜி போன்ற பலருடன் நெருங்கிய சகவாசங் கொண்டிருந்தார். முஸ்லிம் வைபவங்கள் விழாக்களில் கலந்துகொண்டனர். விருந்து வைபவங்களின் போது ஆண்கள் கலந்து கொண்டாலும் குடும்பத்தினருக்கும் உணவு அனுப்பி வைத்தனர்.
ஒறாபியின் ஆப் தநண்பரும் மரணதண்டனையை எதிர்த்துப் போராடியவருமான “வில்பிரட் பிளன்ட்’ அவரது மனைவி சகிதம் எகிப்தியர் குடும்ப நலன் கண்டறிவதற்காக 1833 அக்டோபர் மாதம் இலங்கை வந்தனர்.
“எஸ்.எஸ்.கோர்கா’ என்ற கப்பலில் அவர்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும் இலங்கை முஸ்லிம்களுடன் சேர்ந்து மகத்தான வரவேற்பளித்தார். வழக்கறிஞர் சித்திலெப்பையும் பிடளிஸ் பெரேரா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். அங்கிருந்து 30 வாகனங்களில் ஒறாபியின் இல்லம் சென்றனர். எல்லோருமாக அங்கே காலைச்சாப்பாட்டில் கலந்து கொண்டனர். வில்பட் பிளன்ட்டும் அவரது மனைவியும் சகல குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைகளை அறிந்து கொண்டனர். 1893 நவம்பர் 9ந் திகதி பிளன்ட் தளபதியினருக்கு விருந்தொன்று ஒறாபியின் வாசஸ்தலமாயிருந்த லேக்ஹவுஸில் நடைபெற்றது. பொலிஸ்மா அதிபர், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 120 பேர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இதிலும் முஸ்லிம் பிரமுகர்கள் முக்கிய பங்குகொண்டனர். முஸ்லிம் மக்களுக்கேற்ப இராப்போசன விருந்தை பொலிடன் ஹோட்டல் மூலம் தயார் செய்யப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொலிஸ் பேணி ட் வாத்திய இசையுடன் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. மறுநாட் காலையில் கொழும்பு கொம்பனித்தெரு எம்.எஸ்.ஜே.அக்பர் (நீதியரசர் அக்பரின் உறவினர்) அவர்களின் இல்லத்தில் காலைப்போசன விருந்தொன்றும் அளிக்கப்பட்டது.
1885ல் பொலிஸ்மாதிபர் கெம்பலின் மனைவி காலமானதையொட்டி இறுதிமரியாதை செலுத்துவதில் ஒறாபியும் சகாக்களும் இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட காட்சியை அன்றைய பத்திரிகை வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தது. துருக்கித் தொப்பியணிந்து எகிப்தியர்கள் மரணச்சடங்கின் போது கம்பீரமாகக் காட்சியளித்தனர் என்று அச்செய்தியில் எழுதியிருந்தனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -34

இவ்வாறே ஒறாபிபாஷாவும் சகாக்களும் 1887ல் விக்டோரியா இராணியின் ஜூபிலி விழா கொழும்பில் இலங்கை கவர்னரால் ஏற்பாடு செய்திருந்தபோது அணிவகுப்பில் கலந்து கொண்டமை பெரும் பாராட்டுப் பெற்று அதனை சிலோன் டைம்ஸ், லண்டன் டைம்ஸ் பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன. இவ்வாறு அவர்கள் தம்மை அரச கெளரவத்துக்குரிய பிரஜைகளாகக் காட்டிக் கொண்டனர். இதனால் அதிகாரிகள் பொது மக்கள் மத்தியில் பெரும் புகழுக்குள்ளானார்கள்.
ஒறாபிபாஷாவும் கண்டியில் வாழ்ந்த காலத்தில் சியாம் நாட்டு அரசர் இலங்கைவந்த போது ஒறாபிபாஷாவைக் காணவிருப்புற்றமையால் கண்டி குயின்ஸ் ஹோட்டலில் மன்னரும் ஒறாபியும் நெருங்கிப் பழகி சாதாரணமாகக் கலந்துரையாடினர். மன்னர் ஒறாபிபாஷாவை கெளரவித்து பல அன்பளிப்புகளும் வழங்கினார். அதே போல் கண்டிக்கு விஜயஞ் செய்த இங்கிலாந்தின் இளவரசர் “கோண்வோல்” ஒறாபியையும் பஹற்மி பாஷாவையும் அவர்களது இருப்பிடங்களுக்குச் சென்று சந்தித்தனர். இவ்வாறு கண்டிக்கு விஜயஞ் செய்து முக்கிய பிரமுகர்கள் ஒறாபியின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். இதனால் இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய சமூகத்தினரும் இவர்கள் மீது நல்லபிப்பிராயங் கொண்டிருந்தனர். ஒறாபியும் ஏனையோரும் தமது குடும்பத்துடன் அடிக்கடி நுவரெலியா, ஹப்புத்தலை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர். அப்போதெல்லாம் ஆங்கிலத் தோட்டத்துரை மார் தங்கள் தோட்டங்களுக்கு அழைத் து விருந்தோம்பியதோடு அவர்கள் பங்களாக்களில் தங்கியிருக்கவும் வசதி செய்து கொடுத்தனர். இவையனைத்தும் பத்திரிகைச் செய்திகளாக வெளிவந்ததால் எகிப்திய குடும்பங்களின் புகழ் இலங்கையில் மாத்திரமன்றி இங்கிலாந்திலும் ஆயுட்கால நாடு கடத்தியதிலிருந்து நீங்கவும் பிற்காலத்தில் தாய்நாடு திரும்பிச் செல்லவும் வழிசமைக்கும் காரணிகளில் ஒன்றாக அமைந்தன.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் ! எஸ்.எம்.ஏ. ஹஸன் -35

Page 20
7. இலங்கை முஸ்லிம்களும் ஒறாபிபாஷாவும்
ஒறாபிபாஷாவும் சகாக்களும் இலங்கை முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். முஸ்லிம்களின் சமய, கலாசார, கல்வி, அபிவிருத்தித் துறைகளில் அவர்களது பங்களிப்பு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. முஸ்லிம்கள் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டனர். அவர்களது நடை உடை பாவனைகளைப் பின்பற்றும் அளவுக்குப் பெருமதிப்புக்காட்டினர். துருக்கித் தொப்பி அணிதல், சர்வால் எனும் காற்சட்டை அணிதல், ஒன்றுகூடி உணவருந்துதல், குறுந்தாடி மீசை வைத்தல் போன்றவற்றை ஆண்களும், எகிப்திய பெண்களின் வாழ்க்கை முறைகளைப் பெண்களும் பின்பற்றத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் கல்வித் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். அதிலும் ஆங்கிலம் கற்பதை முற்றாகத் தவிர்த்துக் கொண்டனர். ஆங்கிலப் பாடசாலைகள் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்படடமையால் மத மாற்றங்களுக்கு அஞ்சிய முஸ்லிம்கள் அவ்வாறு தவிர்த்துக் கொண்டனர். ஆங்கிலமொழி கற்றலுடன் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்கு அறிஞர் சித்திலெப்பை மேற்கொண்ட முயற்சிக்கும் முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதேவேளை ஒறாபிபாஷாவும் சகாக்களும் ஆங்கில மொழி கற்று மக்களுடன் கலந்துரையாடிப் புகழடைந்ததையும் அவதானித்தனர். அவர்களது பிள்ளைகள் கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி பயின்றனர். இலங்கையில் அறபுமொழி பேசப்படாமையால் ஆயுட்காலம் முழுவதும் இலங்கையிலே தங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாயினாலும் தங்கள் குழந்தைகளுக்கு ஒறாபிகள் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தனர். இதிலும் தப்பபிப்பிராயம் கொண்ட முஸ்லிம்களுக்கு ஒறாபிபாஷா பின்வருமாறு பதிலளித்தார். “இஸ்லாமிய சன்மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் எந்த மொழியைக் கற்றாலும் அறபு மொழியிலான குர்ஆனை அந்த மொழியிலும் பரப்ப முடியும். இதனால் இஸ்லாத்தை எல்லா மொழிகளிலும் அறிமுகஞ் செய்யமுடியும்” என்று குறிப்பிட்டார். இதே சமயம் முஸ்லிம்கள் தாய்மொழியுடன் ஆங்கிலத்தையும் கட்டாயம் கற்க வேண்டுமென்ற சித்திலெப்பையின் கோரிக்கைக்கும் முஸ்லிம்களால் ஏற்பட்டு வந்த எதிர்ப்பலைக்கும் ஒறாபிபாஷா பின்வருமாறு கூறினார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -36

“உங்களுக்கு யார் எதிரியோ முதலில் அவர்களின் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை வெற்றிவாளாக ஏந்தி அவர்களது அறியாமைகளைத் தகர்த்துவிடலாம்”
அவர்களது பிள்ளைகளின் படிப்பைப்பற்றிக் கேள்விகேட்டபோதும் ஒறாபிபாஷா பத்திரிகையாளர்களிடம் பின்வருமாறு கூறினார்.
“எந்த மதத்தைச் சார்ந்த பாடசாலையாகவும் இருக்கலாம். அதில் நமது பிள்ளைகள் படிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஏனென்றால் எங்கள் பிள்ளைகள் குர்ஆன் வழிமுறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்”
என்றும் கூறினர். இத்தகைய கருத்துக்களும் விளக்கங்களும் முஸ்லிம்களைக் கவரத் தொடங்கின. அறிஞர் சித்திலெப்பையின் வழிகாட்டலுக்கு ஒறாபி பாஷா ஒரு உந்துசக்தியாக விளங்கினார். ஆரம்பத்தில் ஒறாபிபாஷாவும் சகாக்களும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்கு வருகை தரும்போது முஸ்லிம்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
சகல வைபவங்களிலும் வாப்பச்சிமரைக்கார், சித்திலெப்பை, கரீம்ஜி ஜெபர்ஜி ஆகியோர் முக்கிய பங்கு கொண்டனர். சித்திலெப்பை ஒறாபிபாஷாவின் கூட்டு முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஆரம்பமாயிற்று.
1884ல் அல்மத்ரசதுல் ஹமீதியா என்ற முஸ்லிம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் அமைந்துள்ள இப்பாடசாலை இன்று ஹமீத் அல்ஹஜூஸைனி என்ற பெயரில் ஒரு பிரபல கல்லூரியாக இயங்கி வருகின்றது. இதனை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட்ட நிலப்பரப்பைப் பெறுவதற்காக சித்திலெப்பை அன்றைய பெறுமதிப்படி மூவாயிரம் ரூபாய் வழங்கியதாகவும், ஆசிரிய சம்பளத்துக்காக ஒறாபிபாஷா நூறு ரூபா வீதம் தனது மாதாந்த படியிலிருந்து வழங்கியதாகவும் 1984ல் வெளியான ஹமீத் அல்ஹஜூஸைனி வித்தியாலய நூற்றாண்டு மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று கொழும்பு மருதானை பெரிய பள்ளிவாசலுக்கருகில் வாப்பச்சி மரைக்கார் அவர்களின் உதவியைப் பெற்று “மத்ரஸ்துல் ஸாஹிரா’ வை ஒறாபிபாஷாவும், சித்திலெப்பையும் வாப்பச்சிமரைக்காரும் சேர்ந்து ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -37

Page 21
“ஸாஹிரா’ என்ற பெயரைச் சூட்டியது ஒறாபிபாஷாவாகும். இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் கல்வித்துறையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய இக்கல்லூரியின் பெயரால் இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் இலங்கையின் பலபாகங்களிலும் ஸாஹிராக் கல்லூரிகள் உருவாகியுள்ளதை நாம் காணலாம். இதில் பயின்றவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம் கல்வி வளர்ச்சியின் முன்னோடிகளாக இருப்பதையும் காணமுடியும். இதேபோன்று கண்டியில் சித்திலெப்பையினால் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய சித்திலெப்பை மகாவித்தியாலயம், அக்குரனை உடுநுவர போன்ற மேலும் பல கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளும் பிற்காலத்தில் அரசாங்கப் பாடசாலைகளாக மாறி முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்திக்கு வழிகோலியுள்ளதை அவதானிக்கலாம்.
சுயமொழிக்கல்வியோடு ஆங்கிலமும் கற்கும் அதேநேரத்தில் முஸ்லிம்கள் அறபு மொழியும் கற்க வேண்டுமென்று ஒறாபிபாஷா முன்வைத்த ஆலோசனையின் பேரில் பிற்காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் அறபு ஆசிரியர்கள் நியமனம் பெற வழிகாட்டியதோடு, அதனால் படிப்படியாக சர்வகலாசாலை அறபு மொழிப்பீடம் உருவானதையும் காணமுடிகிறது. பதினேழு ஆண்டுகள் ஒறாபி பாஷாவும் அவரது சகாக்களும் இலங்கையில் வசித்து வந்தனர். இவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலம், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சிக்காலம் எனக் குறிப்பிடுவது மிகையாகாது. இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலை, கலாசார, சமூக வாழ்க்கை முறையில் ஒரு பாரிய மாற்றத்துக்கு வித்திட்ட காலமெனலாம். 1901ஆம் ஆண்டு ஒறாபிபாஷா இலங்கையை விட்டுச் செல்லும்போது அன்று ஆங்கில ஆட்சியில் பதிவு ஆணையாளராகக் கடமையாற்றிய சேர்.பொன்னம்பலம் அருணாசலம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"நாடு கடத்தப்பட்டு ஒறாபி பாஷாவும் சகாக்களும் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் இலங்கை சோனக சமுகத்தினரே அதிகப் பயனைப் பெற்றுள்ளனர். சோனக சமுகத்தரின் சகல துறை முன்னேற்றத்திலும் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வழிவகுத்துள்ளது.
இதேநேரம் பொலிஸ்மா அதிபர் வீ.வாமதேவன் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில் “ஒறாபிபாஷா இலங்கையில் வாழ்ந்த காலத்தில் இலங்கை மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக நெருங்கிப் பழகியவர். இவரது இலங்கை வருகை குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தினருக்கு ஓர் அதிர்ஷடமாகவே அமைந்ததெனலாம். இவரது
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -38

முன்மாதிரியையும் அறிவுறுத்தல்களையும் இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றினர். அதனால் முஸ்லிம் சமுதாயம் விழிப்படைலாயிற்று. இலங்கை வந்தபோது ஒறாபி பாஷாவைப் பற்றிய தப்பான அபிப்பிராயங்களையும் பெற்றிருந்தவர்கள் கூட இலங்கையை விட்டுச் செல்லும்போது அவரது நற்பண்புகளைப் பாராட்டியுள்ளனர்.
ஒறாபிபாஷாவையும் சகாக்களையும் பாதுகாப்பில் வைத்திருந்த பொலிஸ் திணைக்கள அறிக்கைகள் யாவும் ஒறாபிபாஷாவினதும் சகாக்களினதும் முன்மாதிரியான நடத்தை பற்றிய குறிப்புக்களை எடுத்துக்காட்டிப் பாராட்டியுள்ளன.
1983ஆம் ஆண்டு அகில இலங்கை முஸ்லிம்லீக், ஒறாபி பாஷாவும் அவர்களது சகாக்களும் இலங்கை வந்த நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. மர்ஹம் வைத்திய கலாநிதி எம்.ஸி.எம். கலீல் தலைமையில் “ஒறாபிபாஷா” நூற்றாண்டு விழாக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் இலங்கை "Sunday Times' பத்திரிகையில் ஒறாபி பாஷாவைப் பற்றிய ஒரு தொடர்கட்டுரையை ஓய்வு பெற்ற உதவி பொலிஸ்மா அதிபர் ஆதர் சி.டெப் என்பவர் எழுதி வந்தார். அதில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் இலங்கையில் வாழ்ந்தகால வரலாற்றை பொலிஸ் அறிக்கைகளை ஆதாரங்காட்டி விளக்கியிருந்தார். எனவே அவரைக் கொண்டே ஒறாபிபாஷாவினதும் சகாக்களினதும் வரலாறு பற்றி ஒரு நூல் வெளியிட நூற்றாண்டுக்குழுவினர் தீர்மானித்தனர்.
அத்துடன் இக்குழுவினருடன் எகிப்திய தூதரகமும் தொடர்பு கொண்டிருந்தமையால் 1981ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எகிப்தில் நடந்த ஒறாபிபாஷாவின் நூற்றாண்டு விழாவுக்கு இலங்கையின் பிரதிநிதிகளாக டாக்டர் எம்.ஸி.எம்.கலிலும், திரு.ஆதர் சி.டெப்பும் விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டனர். ஒறாபிபாஷா பிறந்த கிராமத்திலே அந்த விழாவை எகிப்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. எகிப்து “ஸகாஸிக்’ Zagazag இல் நடந்த நூற்றாண்டு விழாவின்போது ஒறாபிபாஷாவின் ஆரம்பகால வாழ்க்கை முறைகள் உட்பட மக்கள் அவர் மீது காட்டிய தேசியப்பற்றினையும் கண்டுகொள்ள முடிந்ததென இலங்கைப் பிரதிநிதிகள் குறிப்பிட்டதோடல்லாமல் அங்கு நடந்தேறிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், குர்ஆன் பாராயணம், விருந்துகள், கலந்துகொண்ட மக்கள் கூட்டம், வெளிநாட்டுத் தூதுவர்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் இலங்கை திரும்பிய பின்னர் இலங்கை நூற்றாண்டுக்குழுவினருக்கு எடுத்துக்கூறினர். எகிப்தின் பிரமாண்டமான வாசிகசாலைக்குச் சென்று ஒறாபிபாஷாவைப் பற்றியும் தேசிய எழுச்சி
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -39

Page 22
இயக்கம் பற்றியும் பல தகவல்களைப் பெற்றனர். எகிப்திய நூதனசாலையில் ஒறாபிபாஷாவினதும் சகாக்களினதும் போராட்ட நிகழ்வுக் காட்சிசாலை ஒரு தனிப்பிரிவாக அமைந்திருந்தது. இதில் ஒறாபிபாஷாவின் வீரமிக்க போராட்ட நிகழ்வுகள் புகைப்படக் காட்சிகளாகவும் அமைந்திருந்ததோடு ஒறாபி பாவித்த பொருட்கள், வாழ்க்கைச் சரித்திரத்தை எடுத்துக்காட்டும் நூல்கள் உட்படப் பல்வேறு சாதனங்களும் மிக நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இத்தனையும் பார்வையிட்டு இலங்கை திரும்பிய இலங்கைப் பிரதிநிதிகளுக்கு இலங்கையிலும் ஒறாபி ஞாபகார்த்த விழாவும், ஒறாபி பற்றிய நூல் வெளியிடும் முயற்சியிலும் ஆர்வம் பிறந்தமையும் ஒரு முக்கிய நோக்காகக் கருதப்பட வேண்டியுள்ளது. இந்த நோக்கத்தினால் கண்டியில் இன்று அமைந்துள்ள ஒறாபி பாஷா நூதனசாலைக்கும் அத்திவாரமிடப்பட்டது. 1983ல் கண்டியில் ஒறாபிபாஷா நூதனசாலை ஆரம்பித்த அதே ஆண்டு கொழும்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஆதரவில் ஆதர் சிடெப் என்பவரின் "The Egyptian In Ceylon' என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -40

பாஷாக்களின் வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -41

Page 23
அஹற்மத் ஒறாபிபாஷா
இவர் எகிப்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களின் தலைவராவார். எகிப்திய அரசாங்கத்துக்கெதிராக தேசிய இயக்கத்துடன் இணைந்து போரிட்ட இராணுவத்தினர்களின் தலைவராகவும் விளங்கினார். 1840ஆம் ஆண்டு “ஸ்காசிக்” என்ற மாவட்டத்தில் ஹரியத் அல்லஸ்னா என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் ஓர் “ஆலீம்’ ஆகவும் சன்மார்க்கத் துறையில் கிராம மக்களை வழிநடத்துபவராகவும் விளங்கினார். ஆரம்பத்தில் கெய்ரோ அஸ்ஹரில் கல்விபயின்ற இவர் தனது 14வது வயதில் இராணுவப் பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னர் 18 வயதில் இராணுவ அதிகாரியாகவும் 20 வயதில் “மேஜர்’ பதவியிலும் அதனைத் தொடர்ந்து “கேர்னல்’ பதவியிலும் பதவி உயர்வு பெற்றார். ஒறாபிபாஷா கேர்ணலாகப் பதவி வகிக்கும் காலத்தில் எகிப்தின் எதேச்சதிகார மன்னராட்சியில் விவசாயிகளும் சாதாரண பொதுமக்களும் வறுமையினாலும் பஞ்சத்தினாலும் அவதிப்படுவதையும் எகிப்தில் குடியேறிய செல்வந்தர்களும் மன்னர் குடும்பத்தினரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் அதற்காக எகிப்திய தேசிய இயக்கத்தினர் அரசுக்கெதிராகக் குரல் கொடுப்பதையும் அவதானித்துக் கவலை கொண்ட இவர் தேசிய இயக்கத்துடன் சேர்ந்து அரசுக்கு எதிராகத் தொழிற்படத் தொடங்கினார். அதேவேளை வெளிநாட்டு இராணுவத்தினருக்கு சகல சலுகைகளும் வழங்கி எகிப்திய இராணுவத்தினரின் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் எகிப்திய இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் ஒறாபியுடன் இணைந்து கொண்டனர். ஒறாபியின் வசீகரமான தோற்றமும் வீரமிக்கப் பேச்சும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. மாற்று வழி காண முற்பட்ட அரசாங்கம் இவரை பாதுகாப்பு அமைச்சராகவும் இவரது சகாக்களில் ஒருவரான மஹற்மூத் ஸாமிஅல் பருதி பாஷாவை பிரதமராகவும் கொண்ட ஒரு மந்திரி சபை அமைத்தாலும் பிரிட்டிஷார் அலக்ஸாந்திராவில் நடத்திய போரில் ஒறாபியும் சகாக்களும் பின்வாங்கினர். அதில் கைதுசெய்யப்பட்டு அரசுக்கெதிரான குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்பட்டனர்.
1883ல் இலங்கை வந்த ஒறாபிபாஷா இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் குறிப்பாக முஸ்லிம்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு சுமுகமாகப் பழகிப் பாராட்டுப் பெற்றார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -42
 

ஆரம்பத்தில் இவரைப் பற்றி தப்பாக எழுதியவர்களும் பேசியவர்களும் கூட இவரைப்பாராட்டி எழுதவும், பேசவும் தொடங்கினர். 1901 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுச் செல்லும் போது இவருக்களிக்கப்பட்ட பிரியாவிடை வைபவங்கள் இதற்கு முக்கிய சான்றாகும். முதலில் கண்டியில் முஸ்லிம் பாடசாலையில் கண்டி முஸ்லிம்கள் ஒன்று கூடி இவருக்கும் குடும்பத்தினருக்குமாக ஒரு பிரியாவிடை விருந்தளித்து கெளரவித்தனர். இவ்வைபவத்தின் போது 1898ல் காலமான அறிஞர் சித்திலெப்பையை ஒறாபிபாஷா வெகுவாகப் பாராட்டினார். இதே போன்று கொழும்பு முஸ்லிம் பிரமுகர்களாலும், கொழும்பு மத்ரஸ்துல் ஹமீதியாவிலும், கரீம்ஜி, ஜெபர்ஜி இல்லத்திலும் இவருக்கான பிரியாவிடை நிகழ்வுகளும் விருந்துகளும் இடம்பெற்றன.
ஒறாபிபாஷா இலங்கை வரும்போது அவரது முதல் மனைவி எகிப்தைவிட்டு வர மறுப்புத்தெரிவித்தார். அதனால் அவருக்கு இரண்டாம் தாரமாக ஒரு மனைவியும் முதல் மனைவியின் ஒரு மகனும் கூடவே வந்தனர். ஆனால் அவர் இலங்கையை விட்டுச் செல்லும் போது நான்கு மனைவியரும் பணியாட்களும் பிள்ளைகளுமாக 29 பேர் சென்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. இவரது ஆண்மக்கள் கண்டி கிங்ஸ் வுட் கல்லூரியிலும், பெண்பிள்ளைகள் கண்டி ஆங்கிலப் பாடசாலையிலும் கல்விப் பயின்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. இவரது மகன் அலிபே 1900ஆம் ஆண்டு கண்டியில் வைத்து யாக்கூப் ஷாமி பாஷாவின் மகளைத் திருமணஞ் செய்து கொண்டார். -
1901ஆம் ஆண்டு ஒறாபி சென்ற கப்பல் சுயஸ் கால்வாய் துறைமுகத்தை வந்தடைந்ததும் அவரை வரவேற்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு கூடியிருந்தனர். "Efendina Arabi' அறபிகளின் தலைவனே என்று வரவேற்றனர். எனினும் ஒறாபிபாஷா பத்து ஆண்டு காலம் அமைதியாக ஓய்வு பெற்று வாழ்ந்து 1911 செப்டம்பரில் கெய்ரோவில் காலமானார். எகிப்தின் மன்னர் ஆட்சியைக் கவிழ்த்து மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்காக தேசிய இயக்கத்துடன் ஒறாபி பாஷாவும் சகாக்களும் மேற்கொண்ட முயற்சியின் வெற்றியின் பயனை 1950 ஆண்டுகளில் “எகிப்திய அறபுக்குடியரசை’ உருவாக்கிய அப்துல் நசாரின் ஆட்சியில் காணலாம்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -43

Page 24
அப்துல் ஆல் ஹில்மிபாஷா
எகிப்தில் 1881ல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவரும் ஒறாபிபாஷாவுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரும் ஒரு சிறந்த போராட்ட வீரர். எகிப்திய இராணுவப் பிரிவொன்றின் தலைவராக “கேர்ணல்” பதவியில் இருந்தார். நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வரும் போது இவருக்கு வயது 42, இவர் ஆரம்பத்தில் தனியாகவே இலங்கைக்கு வந்தார். முதலில் ஒறாபி பாஷாவுடன் லேக் ஹவுஸில் தங்கியிருந்தார். பின்னர் இவரது மனைவி மகன், மருமகள் ஆகியோர் இலங்கை வந்து இவருடன் தனிக்குடித்தனம் நடத்தினர். சிலகாலம் இலங்கையில் தங்கியிருந்த இவரது மனைவியும் மக்களும் எகிப்துக்குத் திரும்பினர். தனியே இருந்த இவர் சுகவீனமுற்றதும் மவுண்ட் லெவனியா Dr.ரொக் வுட் என்பவரின் ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டார். இவருக்குத் துணையாக துல்பா பாஷாவும் கொழும்பைச் சேர்ந்த அப்துல் ரஹற்மான் என்பவரும் கூடவே இருந்தனர். எனினும் 19-031891இல் இவர் காலமானார். இவரது ஜனாஸா குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாவில் எகிப்திய பாஷாக்களுடன் ஏராளமான இலங்கை முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். 1983ல் எகிப்திய அரசாங்கத்தால் இவரது நினைவுத்தூபியொன்று குப்பியாவத்தை மையவாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
அலி பஹற்மி பாஷா
இலங்கைக்கு வரும்போது இவரது வயது 43, இவரும் எகிப்திய இராணுவத்தில் “கேர்ணல்” பதவி வகித்தவர். 1881 எகிப்திய கலவரத்தில் ஒறாபிபாஷாவுடன் இணைந்து செயற்பட்டவர். சுயஸ் கால்வாய் யுத்தத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியவர். இவர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வந்தாலும் 1899ல் இவரது மனைவி சுகவீனங் காரணமாக தனது மகளுடன் எகிப்துக்குத் திரும்பிச் சென்றார். இவர் 1901ம் ஆண்டு நாடு திரும்பினார். 1911ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் எகிப்தில் காலமானார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -44
 
 
 
 
 

மஹற்மூத் ஸாமி அல்பரூதி பாஷா
இலங்கைக்கு வரும்போது இவரது வயது 46, இவர் ஒரு சிறந்த ராஜதந்திரியாகவும், புகழ்பூத்த இராணுவ வீரராகவும் தலைசிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். புரட்சி அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்தவர். இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்த போதிலும் தேசியவாதிகளுடன் இணைந்து செயற்பட்டார். செல் வந்தராகவும், பெருஞ் சொத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும் இருந்த இவரது அனைத்துச் சொத்துக்களும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் அறபு இலக்கியத்துறை வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றவர். எகிப்திய மக்களின் மனங்கவர்ந்த இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இலங்கையில் இருக்கும்போது இவரது முதல் மனைவி எகிப்தில் காலமானார். தனது தாங்க முடியாத துயரை இரங்கற்பாக்களின் மூலமாக வெளிப்படுத்தினார். இவரது தனிமையைப் போக்குவதற்காக பாஷாக்கள் ஒன்று சேர்ந்து 1888ல் யாகூப்பாஷாவின் மகளைத் திருமணம் முடித்து வைத்தனர். இவர் 1888 முதல் நாடு திரும்பும் வரை கண்டி, திருகோணமலை வீதியில் வாழ்ந்து வந்தார். கண்டியில் வாழ்ந்தபோது ஆங்கில மொழியில் தடங்கலின்றிப் பேசும் வல்லமை பெற்றிருந்தார்.
இவரது கவித்துவ வல்லமை பற்றி கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி 1995ல் எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இவரது கவிதைத் தொகுதி இவரது மரணத்தின் பின்னர் நான்கு பாகங்களாக முஹம்மது அல் இம்மாம் அல் மன்ஸரி என்னும் புகழ் பெற்ற எகிப்திய அறிஞரால் வெளியிடப்பட்டது. 1909ஆம் ஆண்டு இரண்டு பாகங்களும் 1911ஆம் ஆண்டு இரண்டு பாகங்களும் வெளிவந்தன. அல்பரூதி உணர்ச்சி பூர்வமான ஆளுமை படைத்தவராக விளங்கினார். பொதுவாகத் தலைசிறந்த கவிஞர்களின் சிறப்பும் அவைகளில் ஒன்றாக அது அமைந்ததாலும் அல்பருதியில் இது மிகச்சக்தியோடு செயல்பட்டது எனலாம். அவர் பாடிய இரங்கற்பாக்கள் மரணத்தைப் பற்றிய தத்துவக் கவிதைகளாக அமையவில்லை. பிரிந்தோரின் புகழ்பாடும் வெறும் ஒப்புசாராக் கவிதைகளாகவும் அமையவில்லை. அவரது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட உண்மையான உணர்வுகளின் உணர்ச்சிச்சித்திரங்களாக அவை காணப்பட்டன. கண்டியில் அவர் வாழ்ந்த வீட்டில் நான்கு சுவர்களுக்கு நடுவில் சிறைப்பட்டிருந்த அவர் ஒரு
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -45

Page 25
மரக்கிளையில் சுதந்திரமாகப் பாடி மகிழும் ஒரு பறவையை ஜன்னலினூடாக அவதானிக்கின்றார். எத்தகைய கட்டுப்பாடும் தடையும் விலங்குமின்றி கிளைக்குக் கிளை தாவிப்பறந்து பாடி மகிழும் அப்பறவையைப் பார்த்ததும் தனது தாயகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு மிக்கத் தொலைவிலுள்ள ஒரு தீவில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் சிறைப்பட்டிருக்கும் அவரது உள்ளத்தில் வேதனையையும் கவலையையும் தோற்றுவிக்கின்றது.
"நான் விடியற்காலையை எதிர்பார்த்துள்ளேன்
இரவின் இருள் இன்னும் நீங்கவில்லை, காலைப் பொழுதின் வெளிச்சத்தையும் காணவில்லை
எனது கவலையைப் பற்றிக் கூறுவதற்கும் எனது பக்கத்தில் இங்கு யாரும் இல்லை,
எனது விடுதலை பற்றிய ஏதாவதொரு செய்தி? சுவருக்கும் கதவுக்கும் இடையில் அமர்ந்து கொண்டு அந்த விடிவையே நான் எதிர்பார்த்துள்ளேன்.”
அல் பரூதியின் தனிமை உணர்வும் விடுதலைக்கான ஏக்கம் எதிர்ப்பு ஆகிய அத்தனை உணர்வுகளும் மிகத்தத்ரூபமாக இந்த வரிகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவரது மனைவியின் பிரிவையொட்டி பாடிய இரங்கற்பாவின் பின்வரும் அடிகள் அவரது மனைவி மீது கொண்டிருந்த அன்பையும் நேசத்தையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.
உனக்குப்பகரமாக பிராயச்சித்தமாக
எந்த ஓர் உயிரையாவது ஏற்றுக்கொள விதி சித்தமாயிருப்பின், அது
உனது உயிருக்குப் பகரமாக எனது உயிரையே வழங்கச் சித்தமாயுள்ளேன், ஆனால் விதியின் முடிவுக்குப் பூரணமாய் அடிபணிவதை விட வேறு வழியே இல்லை.
நான் என்ன செய்வது?
அவரது பின்வரும் கவிதை அவரது தேசப்பற்றையும் நாட்டைத் துறந்து வந்ததால் ஏற்பட்ட இதய வேதனையையும் சித்திரிக்கின்றது.
எகிப்திய நாடே, என்னன்புத் தாயகமே!
இறைவன் உனது நிழலை நீட்டுவானாக!
நைல் நதியின் புதுப்புனலால் நீருட்டி உனது மண்ணின் தாகத்தை
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -46

அவன் திர்ப்பானாக! என் இனத்தின் மேய்ச்சல் தரை நியாவாய் எனது குடும்பத்தின் பாதையும், நண்பர்களின் விளையாட்டு முன்றலும் நீயேயாவாய் எனது முதாதையரின் அருமைத் தாயகமே! உனது மண்ணில்தான் எனது புகழ் என்னும் வாள் எனது குடும்பத்தை, உற்றாரை, உறவினரை அனைத்துக்கும் மேலான உனது கண்ணியத்தையும் உன்னிடம் விட்டுவிட்டு வந்தேன் உன்னைவிட்டுப் பிரிந்தது முதல், என் வாழ்வின் சுவையையும் நான் இழந்து விட்டேன்..!
(ஆதாரம்: தினகரனி வாரமஞசரி, 03.12.1995 கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி)
“சறந்தீபில் பருதி” என்ற நூலொன்று இலங்கையில் வெளியிடப் பட்டுள்ளது. கல்முனையைச் சேர்ந்த மெளலவி எஸ்.எச்.ஆதம் பாவா அவர்களால் அல்பருதியின் வாழ்க்கை வரலாறும் அவரது அறபுக் கவிதைகள் சிலவும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் அவர் பாடிய கவிதைகளும் அடங்குகின்றன. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் எம்.ஏ.நுட்மான் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.
அதில் “நூலாசிரியர் சில ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக இப்போது எமக்கு ஓர் அரிய நூல் கிடைத்துள்ளது. சிறிதும், பெரிதுமாக பருதியின் சுமார் ஐம்பது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இலங்கையின் இயற்கை வனப்பை வியந்து அவர் எழுதிய கவிதைகள் இவற்றுள் சில. நாடு கடத்தப்பட்ட வாழ்வு பற்றி அவரது உளக்குமுறலை வெளிப்படுத்தும் கவிதைகள் பல. பருதியைப் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை இந்த நூல் நமக்குத் தருகின்றது.’ என்றும் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக கவிஞர் அல்பரூதி கண்டியில் வாழ்ந்தபோது பாடிய ஏராளமான அறபு மொழிக்கவிதைகளைப் பற்றிய விவரங்கள் தேடிப் பெற வேண்டியதாகவுள்ளன. ஏனெனில் அவரது கவிதைகளில் மிகச் சிறந்தவை எனக் கருதப்படும் கவிதைகள் இலங்கையிலே இயற்றப்பட்டதாக எகிப்திய மக்கள் கருதுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியினரால் மன்னிக்கப்பட்டு கண்பார்வை இழந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட அல்பருதி 1900ம் ஆண்டு எகிப்துக்குச் சென்றார். அங்கு 1904ம் ஆண்டு இறையடி எய்தினார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களுட் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -47

Page 26
மஹற்மூத் பஹற்மி பாஷா
இலங்கைக்கு வரும்போது இவருக்கு வயது 46. இவர் ஒரு சிறந்த பொறியியலாளர். புரட்சி அரசாங்கத்தில் ஓர் அமைச்சுப்பதவி வகித்தவர். சுயஸ்கல்வாய்ப் பகுதியில் பலம்மிக்கதோர் படைப்பலத்தைக் கொண்டிருந்தவர். எனினும் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்க முடியாமல் இவர் சரணடைந்தார். நாடு கடத்தப்பட்ட இவர் கொழும்பில் கொட்டாரோட்டில் வாழ்ந்து வந்தார். இவர் குடும்ப நலனோடு இலக்கியத்துறை யிலும் ஆர்வம் காட்டினார். இவரது மூத்த மகன் பஹ்துபேடி என்பவர் எகிப்திய இராணுவத்தில் சேர்ந்திருந்தார். இவருடன் இருந்த ஹஸன்பே என்ற மகன் 1896ல் எகிப்து சென்றார் அப்துல் மஜீத் எனும் மகன் கொழும்பில் கல்வி பயின்று 1893ல் கேம்பிரிஜ் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு வைத்தியக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்தார். சிங்களமும் தமிழும் கற்றுக்கொண்ட மஹற்மூத் பஹற்மி பாஷா இலங்கையில் வெளியான வரலாற்று நூல்கள் சிலவற்றை அறபுமொழியில் மொழிபெயர்த்தார். 1894 இல் இவர் பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டார். சுதேச வைத்தியம் பார்ப்பதற்காக 1894ல் துல்பா ஸ்மத் பாஷாவினால் கண்டிக்கு அழைத்து வரப்பட்டார். 1894 ஜூன் மாதம் 17ந் திகதி இவர் கண்டியில் காலமானார். இவர் ஜனாஸா கண்டி மகியாவை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யஹற்கூப் ஸாமி பாஷா
இவர் எகிப்தின் வெளிவிவகார அமைச் சின் ஆலோசகராகக் கடமையாற்றியவர். எனினும் இவர் எகிப்திய தேசிய இயக்கத்திலும் முக்கிய பங்காற்றி வந்தார். தேசிய இயக்கம் போராட்டத்துக்கு இரகசியத் தகவல் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். 1888ல் இவர் தனது மூத்தமகளை கண்டியில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த மஹற்மூத் ஸாமி அல் பருதி பாஷாவுக்கு விவாகஞ் செய்து கொடுத்தார். அதனால் யாககூப் ஸாமி பாஷாவும் பிற்காலத்தில் கண்டியில் வாழ்ந்து வந்தார். இவர் சுகவீனமுற்றிருந்து 20.10.1899ல் கண்டியில் காலமானார். இவரது ஜனாஸா மகியாவை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -48
 
 
 

துல்பா ஸ்மத் பாஷா
இவர் இலங்கை வரும்போது இவரது வயது 43, தேசிய இயக்கத்தில் சேர்ந்து ஒறாபியுடன் அரசுக்கெதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர். அதனால் நாடுகடத்தலில் இவரும் இணைக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவர் தனிமையாக இலங்கை வந்தாலும் இவரது குடும்பத்தினர் இலங்கை வருவதும் போவதுமாக இருந்தனர். இவர் கண்டியில் அதிக காலம் வாழ்ந்தவர். இவரது மகன் அலிபுவாத் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் கல்வி பயின்றவர். கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் சகல துறைகளிலும் சிறப்பாக சயல்பட்டவர். அதனால் இன்றும் பழைய மாணவர் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அப்போதைய அதிபர் திரு பிளேஸஸ் (Blazes) என்பவரின் மதிப்புக்குரியவராகவும் திகழ்ந்து பழைய மாணவரின் மதிப்பையும் பெற்றவர். கிங்ஸ்வூட் வரலாற்றில் இன்றும் அலிபேயின் நாமம் மறக்கப்படாமல் இருந்து வருகின்றது. இவர் ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து எகிப்து சென்று பல உயர்பதவிகள் வகித்துப் பின்னர் வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக இருந்தபோதும் தான் படித்த கல்லூரி அதிபர் ஆசிரியர் சக மாணவருடன் தொடர்பு கொண்டவராக இருந்தார். 1937ஆம் ஆண்டு கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் ஆண்டு விழாவின் பிரதம அதிதியாகக்கலந்து கொள்ள இலங்கை வந்தபோது இவருக்கு பழைய மாணவர்களும் நண்பர்களும் மகத்தான வரவேற்பளித்து கெளரவித்தனர். கண்டி குயின்ஸ் ஹோட்டலில் அதிபர் ஆசிரியர்களுக்குப் பழைய மாணவர்களுக்கும் இராப்போசன விருந்தளித்து கெளரவித்ததாகவும் கூறப்படுகின்றது.
ஒறாபிபாஷாவுடன் வந்த ஆறு பாஷாக்களில் மூவர் இலங்கையில் காலமானார்கள். ஏனையோர் எகிப்துக்குத் திரும்பிச் சென்று அங்கு காலமானார்கள்.
அப்துல் ஆல் ஹில்மிபாஷா 19.03.1891இல் கொழும்பில் காலமானார்கள்.
அவரது ஜனாஸா கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மஹற்மூத் பஹ்மிபாஷா 17.03.1894ல் கண்டியில் காலமானார். இவரது ஜனாஸா கண்டி மகியாவை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாக்கூப் ஸாமிபாஷா 17.03.1894ல் கண்டியில் காலமானார். இவரது ஜனாஸா கண்டி மகியாவை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -49

Page 27
ஒறாபிபாஷாவின் நூற்றாண்டு நினைவுவிழா 1983ல் இலங்கையில் கொண்டாடப்பட்டபோது கொழும்பு குப்பியாவத்தையிலும் கண்டி மகியாவை முஸ்லிம் மையவாடியிலும் இவர்களுக்கான நினைவுத்தூபிகள் எகிப்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ளன.
ஒறாபிபாஷா 1901ஆம் ஆண்டு எகிப்து சென்றார் 1911 செப்டம்பரில் கெய்ரோவில் காலமானார்.
அலி பஹற்மி பாஷா 1901ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து எகிப்துக்குச் திரும்பிச் சென்றார், அவரும் 1911ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எகிப்தில் காலமானார்.
மஹற்மூத் ஸ்மி அல்பருதி பாஷா இவர் 1900ஆம் ஆண்டு எகிப்து திரும்பினார். 1904ஆம் ஆண்டு எகிப்தில் காலமானார். துல்பா இஸ்மத்பாஷா இவர் 1899ல் சுகவீனங்காரணமாக மன்னிப்பு வழங்கப்பட்டு நாடு திரும்பினார். அதே ஆண்டு இவர் எகிப்தில் காலமானார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -50

இலங்கையில்
ஒறாபி பாஷா நூற்றாணர்டு வைபவங்கள
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -51

Page 28
இலங்கையில் ஒறாபி பாஷா நூற்றாண்டு வைபவங்கள்
அன்னியரின் செல்வாக்கிலிருந்தும், மன்னர் ஆதிக்கத்திலிருந்தும் எகிப்து விடுதலை பெற வேண்டுமென்ற தேசிய எழுச்சி இயக்கத்தினதும் ஒறாபிபாஷா நடத்திய போராட்டத்தினதும் வெற்றி 1950களில் அப்துல் நாசர் தலைமையில் இடம்பெறலாயிற்று. இதனால் ஐரோப்பியரினதும் கிரேக்க, துருக்கியினதும் செல்வாக்கிலிருந்து எகிப்து தனிசுதந்திர நாடாக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த சுயஸ்கால்வாயும் தேசியமயமாக்கப்பட்டது. இதற்குக் காரணமாக விளங்கிய ஒறாபி பாஷாவும் அவரது சகாக்களும் எகிப்தின் தேசிய வீரர்களாக மதித்துப் போற்றப்பட்டனர். 1948ஆம் ஆண்டு இலங்கையும் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திர நாடாக விளங்கியதால் இலங்கை எகிப்திய உறவு வலுவடைந்தது. அதனால் எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மத் பெளஸ் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.
அவரது விஜயத்தின் போது கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபராக இருந்த எ.எம்.எ அஸிஸ் ஸாஹிராவை ஆரம்பித்து வைத்த ஒறாபிபாஷாவின் ஓவியப்படமொன்றை திரைநீக்கம் செய்வதற்கு அழைப்புவிடுத்தார். இதில் பழைய மாணவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். இதன் மூலம் இலங்யைருக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒறாபிபாஷாவுக்கும் இடையே நிலவி வந்த நிகழ்வுகளை எ.எம்.எ அசீஸ் அவர்கள் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து எகிப்திய இலங்கை தூதரகங்கள் மூலம் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் இலங்கை முஸ்லிம் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அதன் காரணமாகவே 1981ல் எகிப்தில் நடத்தப்பட்ட ஒறாபிபாஷா நூற்றாண்டு விழாவுக்கு இலங்கையின் முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.ஸி.எம். கலில்,
ஏ.ஸி. டெப் ஆகியோர் அழைக்கப்பட்டனர். அத்துடன் ஸாஹிராக் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் மாதம் முதலாந் திகதி ஒறாபிபாஷா ஞாபகார்த்த தினம் அனுஷடிக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இருந்த ஷாபிமரிக்கார் கல்லூரியின் நலன்புரிச்சங்கம், பழைய மாணவர்சங்கம் மருதானை பள்ளிவாசல் பரிபாலன சபை ஆகியவற்றுடன் இலங்கையின் முக்கியமான தலைவர்களையும் அழைத்து ஒறாபிபாஷாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பற்றிய கூட்டமொன்றை நடத்தினார்.அதில் ஒறாபிபாஷாவின் நூற்றாண்டு விழாக்குழுத்தலைவராக டாக்டர் எம்.ஸி.எம்.கலில் நியமிக்கப்பட்டார். எகிப்திய தூதரக ஒத்துழைப்புடன் ஒறாபிபாஷா இலங்கை வந்த நூற்றாண்டு
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -52

கொழும்பில் வெகு விமரிசையாக விழா நடைபெற்றது. இவ்விழாவின் அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தினால் பின்வரும் நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு முன்னால் உள்ள வீதியை ஒறாபிபாஷா வீதி எனப் பெயரிடப்பட்டது. இதன் பெயர் பலகை 24.07.1983 அன்று திறந்து வைக்கப்பட்டது. அப்போதைய முஸ்லிம் சமயபண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த அல்ஹாஜ் எம்.எச் முஹம்மத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஒறாபிபாஷாவின் ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிடப்பட்டது. எகிப்திய அரசாங்கத்தினாலும் கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் பெற்ற ஒறாபிபாஷாவின் சகாக்களில் ஒருவரான அப்துல் அல் ஹில்மி பாஷாவின் நினைவாக சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட நினைவுத்துாபியும் கட்டப்பட்டது. இதே போன்று கண்டியில் காலமான மஹற்மூத் பஹற்மி பாஷாவினதும், யாக்கூப் ஸமி பாஷாவினதும் ஞாபகார்த்தமாக கண்டி மகியாவை முஸ்லிம் மையவாடியில் இருவருக்குமாக ஒரு நினைவுத் தூபி நிறுவப்பட்டது.
எகிப்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நன்றி
செலுத்துமுகமாக எகிப்தின் கெய்ரோவிலுள்ள முக்கியமான ஒரு வீதியை “சிறீலங்கா வீதி’ என நாமமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -53

Page 29
ஒறாபிபாஷாவும் இலங்கை எபண்டி Effendi இஸ்மாயில் லெப்பைமரிக்கார் ஆலிமும்
ஒறாபிபாஷா குடும்பத்தினருக்கிருந்த உதுமானிய சாம்ராஜ்ஜியத்தின் அதிகெளரவ "Efendi’ எபண்டி பட்டம் போல் இலங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் லெப்பை மரைக்காருக்கும் ஒறாபிபாஷா இலங்கையில் வாழ்ந்த காலத்தில் கிடைக்கப் பெற்ற ருசிகரமான சம்பவமொன்றை முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி ஆலோசகருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் 08.03.2009 தினகரனில் எழுதியுள்ளார். இதன் மூலம் இலங்கை முஸ்லிம்களுடன் ஒறாபி பாஷா கொண்டிருந்த தொடர்பு எகிப்தில் ஒறாபிபாஷாவின் இல்லம் வரை விரிவடைந்திருந்தமையை நோக்கலாம். அக்கட்டுரையின் சுருக்கம் பின்வருமாறு.
எபண்டி Efendi இது ஒரு பெருமைக்குரிய கெளரவ பெயர். உதுமானிய சாம்ராஜ்ஜியத்தில் துருக்கியிலும் எகிப்திலும் பிரபல்யம் பெற்றிருந்த வம்சத்தினர் இவர்களுடைய பூர்வீகம் துருக்கி. இந்த எபெண்டி என்ற பட்டம் உதுமானிய சாம்ராஜ்ஜியத்தினால் அக்காலத்தில் வழங்கப்பட்ட அதிஉயர் தேசிய கெளரவ நாமமாகும். பிரித்தானியாவின் ‘ஸர் பட்டம்” மலேசியாவில் ‘டான்றி’ பட்டம் நம் தாயகத்தின் தேசமான்ய கெளரவப் பட்டம் போன்ற துருக்கியின் தேசிய விருதே இந்த ‘எபண்டி’ பட்டமாகும். காலப்போக்கில் இப்பட்டம் குடும்பப் பரம்பரை பட்டமாக மாற்றம் பெற்றது.
எபண்டி வம்சத்தினருக்கும் இலங்கைக்குமிடையே பூர்வீக காலந் தொட்டு தொடர்ப்பு இருந்து வந்ததை வரலாறு கோடிட்டுக்காட்டுகின்றது. எகிப்திய விடுதலை வீரர் ஒறாபிபாஷா 1882ஆம் ஆண்டு டிசம்பர் நாடுகடத்தப்பட்ட இக்காலத்தில் தான் எபண்டி குடும்பத்தினர் இங்கும் பிரபல்யமடைந்தனர். கொழும்பு மெஸன்ஜர் வீதி பழைய புதிய சோனகத் தெருக்கள் அன்று இலங்கைச்சோனக இஸ்லாமிய குடும்பங்கள் மார்க்கக் கடமைகளை ஒழுங்குறப் பின் பற்றி ஓர் ஒழுக் கசீல சமுதாயம் இந்த நாட்டில் தலைத்தோங்குவதற்கு பேருதவி புரிந்தன. அவர்கள் அஹற்லுஸ் ஸ?ன்னா- வல்-ஜமாஅத் அடிப்படையில் தமது வாழ்க்கையை கொண்டனர்.
லெப்பை மரிக்கார் ஆலிமின் ஹஜ்ஜூப் பயணம்
“பூமியில் பிரயாணஞ் செய்து இறைவனுடைய அபூர்வப் படைப்புகளின் அத்தாட்சிகளை மகத்துவங்களைக் கண்டு பல உண்மைகளை உய்த்துணரு
மாறு.’ உலக மாந்தர்களுக்கு அழைப்பு விடுக்கிறது திருக் குர்ஆன். இது சம்பந்தமான ஆயத்துக்களை வாசித்தறிந்த சோனகத் தெருவில் வாழ்ந்த
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -54

பிரபல சோனகக் குடும்பத்தைச் சேர்ந்த மார்க்கபக்திமிக்க இஸ்மாயில் லெப்பை மரிக்கார் ஆலிம் குர்ஆன் கூற்றுப்படி கடல் கடந்து செல்ல ஆசைப்பட்டார்.
“ஹஜ்ஜுக்குச் செல்லுங்கள் என்னும் குர்ஆன் அழைப்பை ஏற்று இவர் அன்று உலகைச் சுற்றிவரவுள்ள அனுபவப் புதுமைகளைக் கோடி கோடியாய் பெற்றுக் கொள்ள எண்ணி தமது பாதங்களை நகர்த்த ஆரம்பித்தார். தனது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். ஹாஜி யூசுப் லெப்பை சின்னமரிக்கார், ஹாஜி முஹம்மது லெப்பை மரிக்கார் செய்னுதீன், அஹமத் லெப்பை மரிக்கார், ஹம்ஸி லெப்பை மரிக்கார், சின்ன லெப்பை மரிக்கார் மஹற்மூத் ஆகியோர் உட்பட ஹாஜி ராவுத்தர் சமையற்காரர் ஆகியோர் இக்குழுவில் அடங்கினர்.
ஒறாபி பாஷாவின் கடிதம்
இஸ்மாயில் லெப்பை மரிக்கார் ஆலிம் அறபு மொழியில் நன்கு பாண்டித்தியம் பெற்றிருந்தார். இக்காரணமாக காலனித்துவ ஆட்சிக்கெதிராக எகிப்து நாட்டில் போர்க் கொடி தூக்கி நாடுகடத்தப்பட்டு இலங்கையில் வாழ்ந்த ஒறாபிபாஷா இவர்களோடு மிக நெருக்கமாகப் பழகினார். இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கண்களைத் திறந்துவிட்ட ஒறாபிபாஷா கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை உருவாக்குவதற்கு முக்கிய காலாக விளங்கியதோடு இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு சுமார் இரண்டு தசாப்தங்களாக ஆற்றிய பணி இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் கவின்மிகு அத்தியாயமாக என்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.
புனித ஹஜ்ஜை மேற்கொள்ள தனது நண்பர் மக்கா செல்வதைக் கேள்வியுற்ற ஒறாபிபாஷா தாம் அறபியில் எழுதிய கடிதங்களை அவர் கையில் கொடுத்து எகிப்தில் உள்ள தம் உறவினர்களுக்கு இம்மடல்களைப் பத்திரமாக எடுத்துச் சென்று ஒப்படைக்குமாறு வேண்டிக் கொண்டார்.
செங்கடலைத் தொட்டுநின்ற ஹிஜாஸ் மாநிலம் (மக்கா, மதீனா) உள்ளடங்கிய பூமிப்பிரதேசம் சென்றடைவதற்கு கப்பல்கள் சுயஸ்கால்வாய் மூலமாகத்தான் அங்கு செல்ல வேண்டும். இதனால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு பல நாட்கள் கழித்துச் செல்வது அன்றைய வழக்கமாகும்.
தம் பிரயாணம் ஆரம்பித்த முறையை இவர் அறபுத்தமிழில் எழுதிய தனது நாட்குறிப்பேட்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -55

Page 30
“எனது மக்களிற் பலர் முஸ்லிம்கள் ஏனைய நணி பர்கள் லெப்பைமார்கள், கதீப் மார்கள் எம்மை ஊர்வலமாக கொழும்புத் துறைமுகம் வரை அழைத்துச் சென்றனர். எஸ்.எஸ்.மல்வா (S.S.Malwa) என்ற கப்பல் மூலம் நாம் 1884ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ந் திகதி சரியாக 12.00 மணிக்கு எமது இலங்கைத் தாய்நாட்டின் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு பயணமானோம். 1884ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி சுயஸ்கால்வாயை அடைந்தோம். இரண்டு நாட்கள் கழித்து புகைவண்டி மூலம் கெய்ரோவைச் சென்றடைந்தோம். அஹற்மத் ஒறாபிபாஷாவின் வீட்டைக் கண்டுபிடித்தோம். ஒறாபிபாஷா என்கையில் அமானிதமாகத் தந்த கடிதங்களை அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக கையளித்தோம்.
அன்றைய பிரிட்டிஷ ஏகாதிபத்திய காலனித்துவ ஆட்சி காலத்தில் அவ்விதம் கள்ளத்தனமாகக் கடிதங்களை எடுத்துச் செல்வது தேசத்துரோகக் குற்றமாகும். தம் தாய் நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்ட நெருங்கிய நண்பன் ஒறாபிபாஷாவுக்குரிய ஆத்மார்த்த கைமாற்றாக மிகவும் தைரியத்தோடு இஸ்மாயில் லெப்பை மரிக்கார் இக்கடிதங்களை எடுத்துச் சென்றுள்ளார்.
மிஸ்ர் தேசத்து விடுதலை வீரர் ஒறாபிபாஷாவின் உறவினர்களை அவர்களது இல்லத்துக்குச் சென்று சந்தித்த பெருமை இந்த இஸ்மாயில் லெப்பை மரிக்காரையே சாரும். இரண்டு வாரங்கள் கழிய நாம் துருக்கி நாட்டின் ஸ்தாம்பூலை ஒரு ரஷயக் கப்பல் மூலம் சென்றடைந்தோம். அங்கு அஸ்மிரி (Azmire) என்னும் இடத்தில் இரண்டு குதிரைவண்டிகளை வாடகைக்கு அமர்த்தி நகர்வலம் வந்தோம். பட்டுப்புடவை, முத்து ஐரோப்பிய - சீனப் பொருட்கள் பலவிதமான அழகு சாதனப் பொருட்கள், பலசரக்குகள் என்பனவற்றைக் கண்டு களித்தோம். இங்கேதான் இஸ்மாயில் லெப்பை மரிக்காருக்கு (எபண்டி Efendi) பட்டம் சூட்டப்பட்டது. அதுவும் உதுமானிய சுல்தான் ஒருவரால்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -56

ஒறாபிபாஷாவும் இலங்கையில் இஸ்லாமிய தேசிய புனருத்தாரணமும்
பேராசிரியர் எம். சிவராஜா அவர்களது ஆய்வில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். தேசியத்துவ உணர்வு தொடர்பாக இலங்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியினைக் கண்டது. அது இலங்கையிலிருந்த சகல மரபு ரீதியான மதக் குழுக்களிடையேயும் எழுச்சியடைந்த கலாசார புனருத்தாரணமாகும். பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் எல்லோரது புனருத்தாரண இயக்கங்களும் ஒரு பொதுத் தளத்திலிருந்தே எழுந்தன. அது கிறிஸ்தவமும் கிறிஸ்தவர்களும் இலங்கையில் பெற்றிருந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்த்தாக்கம் என்பதேயாகும்.
இவ்வாய்வின் நோக்கம் இலங்கையின் தேசியத்துவ இயக்கத்தில் இஸ்லாமிய புனருத்தாரண இயக்கத்தின் இடம் எத்தகையதென்பதைக் கண்டறிவதேயாகும். இதுபற்றி ஏற்கனவே பல ஆய்வாளர்கள் தமது கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். கலாநிதி விஜய சமரவீர, கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், திரு.அமீன், கலாநிதி அமீர் அலி, இஸ்ஹாக் ஹஜூஸைன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இலங்கையில் இஸ்லாமிய புனருத்தாண இயக்கம்
பெளத்த, இந்து புனருத்தாரண இயக்கங்கள் முழுமூச்சாக செயற்பட்ட நேரத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு உந்துவிசையாக அமைந்த ஒரு சம்பவம் நடந்தது. அது இலங்கை முஸ்லிம்களின் புனருத்தாரணத்துக்கு வலுவூட்டியது. அது 1883ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்த ஒறாபிபா ஷாவும் அவரது பிரதான உதவியாளர்களினதும் இலங்கை வருகையாகும். ஒறாபியின் எகிப்திய கிளர்ச்சிகள் இலங்கையில் இருந்த முஸ்லிம்களிடையே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஏற்படுத்தாவிடினும் உள்ளூர் புதினத்தாள்களில் எகிப்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி ஓரளவு அறிக்கைகள் இடம்பெற்றன. இதற்கு மாறாக அவரது வருகை இலங்கை முஸ்லிம்களிடையே கணிசமான அளவு உணர்வலைகளை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் பெருமளவு முஸ்லிம்கள் அவரை வரவேற்கச் சென்றமை பற்றி புதினத்தாள்கள் அறிவித்தமையாகும். எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் பிரசன்னம் உள்ளூர் சமூகத்தின் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி காலனித்துவ அரசாங்கம் குறிப்பிடத்தக்களவு ஆதங்கம் கொண்டிருந்தது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -57

Page 31
அதனால் இவ்வாதங்கள் பிழையானவை என பின்வந்த நிகழ்வுகள் நிரூபித்தன. ஏனெனில் இலங்கையில் ஒறாபிபாஷா வழங்கிய முதலாவது புதினத்தாள் செவ்வியில் உள்நாட்டு அரசியலில் ஈடுபடப் போவதில்லை எண் பதைத் திடமாக அறிவித் தார். ஆரம்பத் தல முஸ் லிம் சனத்தொகையினருக்கும் நாடுகடத்தப்பட்டவர்களுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் இவை துரிதமாக நீக்கப்பட்டன.
உண்மையில் பிரயாணஞ் செய்வதற்கு அவர்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் அவர்களைக் கண்காணித்து வந்தனர். ஆனால் விரைவில் நாடுகடத்தப்பட்டவர்கள் “மிகச் சிறந்த நடத்தையுடையவர்கள்” என்ற நாமத்தைப் பெற்றனர். ஒறாபிபாஷா பற்றி கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒறாபி பாஷா இலங்கையில் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். எகிப்து நாட்டு எழுச்சியின் சின்னமாக விளங்கிய ஒறாபியின் வருகையால் இலங்கை முஸ்லிம்கள் உற்சாகமும் பெருமிதமும் அடைந்தனர். மேலும் ஒறாபிபாஷாவின் நட்பை நாடியவர்களுள் எம்.சி.சித்திலெப்பையும் ஒருவர் எனக் குறிப்பிட்டு ஒறாபி சித்திலெப்பைக் குத் தக்க துணையாக நின்றதுடன் நவீன கல்வித்துறையை முஸ்லிம்கள் வரவேற்க வேண்டிய கட்டாயத்தையும் அவர்கள் எடுத்துக்காட்டினார். என்றும் எழுதியுள்ளார். மேலும் நவீன கல்விக்காகப் போராட முன்வந்த சித்திலெப்பையும், வாப்பிச்சி மரைக்காரும் ஒறாபியின் கருத்துக்களால் புதிய தைரியத்தையும் பெற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சித்திலெப்பையின் கருத்துக்களும் கொள்கைகளும் அவர் நடத்திய முஸ்லிம் நேசன்’ மற்றும் “ஞானதீபம்’ போன்ற பத்திரிகைகளின் மூலம் வெளியிடப்பட்டன. ஏனைய சமூகத்தவர்கள் பெற்றிருந்ததைப் போல முஸ்லிம்களும் அரசியல் உரிமைகளை அனுபவிக்க வேண்டுமென்ற குரலை அவர் முன்வைத்தார். சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்ற அவரது போராட்டம் 1889ஆம் ஆண்டில் முகம்மதியர் இருவர் அங்கத்துவம் பெற்றனர். (இது ஒறாபிபாஷா இலங்கையில் வாழ்ந்த காலத்திலாகும்) இது இலங்கையில் அரசியல் சீர்திருத்த இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்கினை எடுத்துக்காட்டாகவுள்ளது.
முஸ்லிம் புனருத்தானத்தின் ஆரம்பக்குறி மையம் கல்வி பற்றிதாகவே இருந்தது. கல்வி மீதான பெளத்தர்களினதும் இந்துக்களினதும் ஆரம்ப ஆர்வம் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்த காரணங்களிலிருந்தே பிறந்தது. ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்தவ மிஷனறி ஒழுங்கமைப்புக்களான ரோமன்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -58

கத்தோலிக்க திருச்சபை, டச்சு சீர்திருத்த திருச்சபைகள் மத மாற்றத்துக்கான பிரதான வாகனம் கல்வி எனக் கொண்டு தீவிலிருந்த முறையான கல்விக் கட்டமைப்பினுள் ஒரு ஆக்கிரமிப்பு நிலையைப் பெற்றிருந்தன. பெளத்தர்களும் இந்துக்களும் இதனை நிறுத்துவதற்கான தேவையினை உணர்ந்து தத்தமது கல்வி ஸ்தானங்களை உருவாக்க முனைந்தனர். இவை பெளத்த இந்து சூழ்நிலைகளில் கற்பித்ததோடு நவீன கல்விக்கூடமாக அல் மத்ரஸ்துல் ஸாஹிராவின் அங்குரார்ப்பணக்கூட்டம் 1892ல் கொழும்பில் நடைபெற்றபோது ஒறாபிபாஷாவே ஸாஹிரா’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். முஸ்லிம் புனருத்தாரண இயக்கத்தை ஒரு நவீனப்படுத்தும் இயக்கமாகக் கொண்டால் அதனை முஸ்லிம்களின் கூட்டு அடையாளத்தினுாடாக ஒரு சமுதாயமாகவும் தனித்துவமான ஒரு குழுவாகவும் கொள்ள வேண்டும். முஸ்லிம் என்பதைப் பிரதிபலித்த ஓர் இயக்கமாகவும் கொள்ள வேண்டும். முஸ்லிம்களைத் தேசிய அங்கத்தவராக அடையாளப்படுத்தும் கருத்துக்கள் அறிஞர் எ.எம்.ஏ. அஸிஸ் அவர்களின் எழுத்துக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளதாக கலாநிதி எம்.எஸ்.அனஸ் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் லீக் தலைவருமான மர்ஹஉம் டாக்டர் எம்.ஸி.எம்.கலில் ஒறாபாஷா பற்றி ஆதர் ஸி. டெப் எழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்திலெப்பையுடன் ஒறாபிபாஷா நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார் சித்திலெப்பை தமிழ் அறபு ஆங்கிலம் பாரசீகம் ஆகிய மொழிகளிற் தேர்ச்சி பெற்று தத்துவக் கருத்துடன் இணைந்த பல நூல்களையும் எழுதியுள்ளார். கல்வித்துறையில் பின்னடைந்து காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அவர் பெருங்கவலை கொண்டிருந்தார். முஸ்லிம்கள் நவீன கல்விமுறையில் சுறுசுறுப் பின்றி பின் தள்ளப்பட்டிருப்பதை ஒறாபியுடன் சேர்ந்து சமூகத்தைத் தட்டியெழுப்ப முன்வந்தார். அவரது முயற்சிக்கு ஒறாபி பக்கபலமாக விளங்கினார். அதன் பயனாகவே மருதானைப் பள்ளிவாசல் வளவில் அன்று முஹம்மதியன் ஆண் பாடசாலையாக இயங்கிய ஆரம்பப் பாடசாலை மதரஸ்துஸ் ஸாஹிரா என்ற பெயருடன் இன்றைய ஸாஹிராக் கல்லூரி தோன்றியது. அதன் பணிப்பாளராக வாப்பச்சி மரிக்கார் நியமிக்கப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் கரீம்ஜி, ஜெபர்ஜி அவர்களால் இரண்டு தட்டுக்கட்டிடமாக மாற்றியமைக்கப்பட்டது. வாப்பச்சி மரிக்காரும் தனது சொந்தச் செலவில் பல நிர்மாணப் பணிகளைச் செய்தார். அதன் பின்னர் என்.எச்.எம். அப்துல் காதர் அவர்கள் அதன் பணியைத் தொடர்ந்தார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -59

Page 32
முஸ்லிம்கள் தமது பிள்ளைகள் ஆங்கிலக்கல்வி கற்பதில் அச்சங் கொண்டனர். இந்த அச்சம் மதமாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பினார். ஆங்கிலேயர் இலங்கை வரமுன்னர் போர்த்துக்கேய ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களே இதற்குக் காரணமாகும். தமது சொந்தத் தலைவர்களின் கூற்றுக்களை விட ஒறாபிபாஷாவின் கருத்துக்களை முஸ்லிம்கள் ஏற்கத்தலைப்பட்டனர். ஒறாபிபாஷா இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களுக்கு அமைவாக கவர்ணர் முதல் சகல உத்தியோகத்தர்களுடனும் சகஜமாகப் பழகியவர். இதனால் பிரிட்டிஷ பாராளுமன்றத்தில் கூட ஒறாபியினதும் சகாக்களினதும் சுக துக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்பும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றவர். அது தான் சித்திலெப்பையின் மறுமலர்ச்சிக் கொள்கைக்கும் வழிகாட்டியாக அமைந்தது. ஒறாபிபாஷாவின் இலங்கை வாழ்க்கையானது அக்காலத்தில் தோன்றியிருந்த உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளையும் செயற்பாடுகளையும் செல்லாக்காசாக மாற்றியது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -60

கண்டி ஒறாபிபாஷா நூதனசாலை
ஒறாபிபாஷா 1892முதல் 1901ஆம் ஆண்டு வரை கண்டியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். இவர் வசித்து வந்த இல்லமே இன்று இவரது பெயரால் நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது. இது கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா மாவத்தையில் உள்ள 26வது இலக்க இல்லமாகும். ஒறாபிபாஷா வாழ்ந்த காலத்தில் இது ஹல்லொலுவ வீதி என அழைக்கப்பட்டது. இந்த இல்லம் நூதன சாலையாக மாற்றம் பெறும் காலம் வரை இது அறபி இல்லம் "Arabi House' என்றே அழைக்கப்பட்டது. இலங்கையிலும் எகிப்திலும் நடைபெற்ற ஒறாபிபாஷாவின் நூற்றாண்டு விழாவின் போது எகிப்திய அரசாங்கம் இதனை விலைக்கு வாங்கத் தீர்மானித்தது. தனிமனித உடமையாக இருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எகிப்திய அரசாங்கம் இதனை வாங்க வேண்டியிருந்தமையால் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரகங்கள் மூலம் இதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இக்காலகட்டத்தில் ஹிஜ்ரி 1400ஆம் ஆண்டு விழா முஸ்லிம் சமய கலாசார அமைச் சின் ஆதரவுடன் இலங்கையின் பலபாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அப்போதைய அமைச்சர் எம்.எச்.முஹம்மது அவர்களும் டாக்டர் எம்.ஸி.எம் கலீல் அவர்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் மத்திய மாகாண ஹிஜ்ரா கமிட்டியின் தலைவராக வக்பு சபையின் தலைவராக கடமையாற்றி வந்த ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எச்.எம். மஹற்ரூப் அவர்கள் கண்டி மாவட்ட ஹிஜ்ரா கமிட்டித் தலைவராக நியமனம் பெற்றிருந்தார். இவ்வாறு மாவட்ட ரீதியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா அகில இலங்கை ரீதியில் நடைபெற்றது உலக இஸ்லாமிய மாநாடாகக் கொழும்பில் நடைபெற்றது. வெகு விமரிசையாக நடைபெற்ற இம்மாநாட்டில் முஸ்லிம் நாடுகளின் அமைச்சர்கள் பலரும் உலக இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு விஜயஞ் செய்த எகிப்தியக்குழுவின் தலைவர் அப்போதைய வக்பு அமைச்சர் ஒறாபிபாஷா வாழ்ந்த இல்லத்தைப் பார்வையிட விரும்பினார். அமைச்சர் எம்.எச்.முஹம்மத் அவர்கள் அந்தப் பொறுப்பை அல்ஹாஜ் எஸ்.எச்.எம் மஹற்ரூப் அவர்களிடம் ஒப்படைத்தார். எகிப்திய குழுவினர் அவ்விடத்தைப் பார்வையிட சகல ஏற்பாடுகளையும் செய்ததோடு அக்குழுவினதும் எம்.எச்.முஹம்மத் அவர்களினதும் வேண்டுகோளுக்கேற்ப அந்த இல் லத்தை எகிப்திய அரசுடமையாக்குவதற்கான உடமை உறுதி என்பனவற்றைத் தேடும் பணியிலும் அதற்கான தஸ் தாவேஜுகளைத் தயாரிப்பதற்கான பணியிலும் ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.மஹற்ரூப் முன்னின்றுழைத்தார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -61

Page 33
இதன் காரணமாக 1983ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த் தன இலங்கை அரசாங்க கெஸட் டின் மூலம் உரித்துடமையாக்கப்பட்ட முப்பது லட்சம் ரூபாவை சொந்தக்காரர்களுக்காக எகிப்திய தூதரகம் வழங்கி இதனை எகிப்திய அரசாங்கம் சொத்துடமையாக்கிக் கொண்டது. ஒறாபிபாஷா வாழ்ந்த காலத்தில் இந்தப் பிரமாண்டமான கட்டிடமும் நிலப்பரப்பும் அக்காலத்தில் கண்டியில் நிலச்சுவாந்தரராக வாழ்ந்த டொன், எச் விஜயநாயக்க என்பவருக்குரித்தாக இருந்து பின்னர் அவரது குடும்பத்தினர் இதில் வாழ்ந்து வந்தனர். எனினும் பிற்காலத்தில் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இரத்தினக்கல் வியாபாரியும் முன்னாள் அதிபர் மர்ஹஉம் ஓ.எல்.ஏ.அசீஸ் என்பவரும் இதில் வாழ்ந்து வந்துள்ளனர். இறுதியாக இது ஒரு சுற்றுளாப் பயணிகள் தங்கும் இடமாக இருந்தது.
1983ஆம் ஆண்டு எகிப்திய அரசினால் நூதனசாலைக்கான திருத்த வேலைகள் ஆரம்பமாயின. எனினும் அதன் வெளித்தோற்றம் 19ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைத் தோற்றங்களில் எவ்வித மாற்றங்களுமின்றி உட்புறமும் மேல்மாடியும் நூதனசாலைக்கேற்ற விதத்தில் திருத்தியமைக்கப்பட்டது. அதனால் இப்போதமைந்துள்ள இயற்கைச்சூழலில் 19ஆம் நூற்றாண்டுக்கலை அம்சங்களுடன் கட்டட நிர்மாணக்கலைஞர்களான எம்.இஸட் எம்.ஆரிப், அப்ஸல் மரைக்கார் ஆகியோரால் திருத்தங்களுடன் நிர்மாணிக்கப்பட்டது. எனினும் எகிப்து நூதனசாலையைச் சேர்ந்த காட்சிச்சாலை பணிப்பாளர்கள் பலர் ஒறாபி பாஷாவையும் எகிப்தையும் மத்தியாகக் கொண்ட காட்சிப்பொருட்கள் வரை படங்கள், சித்திரங்கள், உருவங்கள் என்பவற்றை எகிப்திலிருந்து எடுத்து வந்து ஒரு நூதனசாலைக்குப் பொருத்தமான விதத்தில் அமைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த நூதனசாலை 1983 நவம்பர் மாதம் 13ம் திகதி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவுக்கு எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அவர்களின் பிரதிநிதியாக கலாசார அமைச்சர் முஹம்மத் அப்துல் ஹமீத் ரத்வான இலங்கையின் எகிப்திய தூதுவர் தூதரக அதிகாரிகள், இலங்கை அமைச்சர்கள் உட்பட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் தலைவர்களும் கலந்துகொண்டனர். எகிப்திய தூதரகத்தின் பரிபாலனத்தில் இயங்கும் இந்த நூதனசாலையின் முதலாவது பணிப்பாளராக ஓய்வுபெற்ற ஆசிரியர் மெளலவி ஹஸன் நியமிக்கப்பட்டார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து 1987 ஜனவரி முதல் டிசம்பர் 2006 வரை ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் நியமனம் பெற்றிருந்தார். தற்போது இதன் பணிப்பாளராக அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்கத் தலைவராக இருந்த அல்ஹாஜ் எம்.எச். சலீம்தீன் நியமனம் பெற்றுள்ளார்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -62

இன்று இலங்கையிலுள்ள நூதனசாலைகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுடனும் இலங்கை எகிப்திய மக்களுடைய நல்லுறவுடனும் தொடர்புப்பாலமாக இந்நூதனசாலை அமைந்துள்ளதைக் காணலாம். கண்டிக்கு விஜயஞ் செய்யும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் குறிப்பாக அறபுநாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் உல்லாசப் பயணிகளும் இங்கு விஜயஞ் செய்து ஒறாபிபாஷாவின் வரலாற்றை ஆவலோடு அறிய முற்படுகின்றனர். இலங்கைப் பாடப் புத்தகத்தில் ஒறாபிபாஷாவைப் பற்றிய பாடமொன்று இடம்பெற்றுள்ளதால் பாடசாலை மாணவர்கள் தமது உல்லாசப் பயணங்களில் இங்கு விஜயஞ் செய்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் அறபு நாடுகளில் ஏற்பட்ட பாரிய அரசியல் மாற்றங்களும் பல முஸ்லிம் நாடுகளின் தோற்றத்துக்கும் ஒறாபி பாஷாவின் அரசியல் புரட்சியும் ஒரு முக்கிய காரணமாய் அமைவதாலும் மத்திய கிழக்கு அரசியல் வரலாற்றில் அது முக்கியத்துவம் பெற்றிருப்பதாலும் அறபுநாட்டு வரலாற்று ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் இங்கு அடிக்கடி வருவதுண்டு.
இவ்வாறு வருவோர் ஒறாபிபாஷாவின் இலங்கை வாழ்க்கைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து ஒலி, ஒளி நாடாக்களைப் பதிவு செய்தும் அறபு நாடுகளில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி வானொலிகளிலும் இந்த நூதனசாலை பற்றியும் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். மலேசியா, மாலைதீவு, குவைத் அமைச்சர்கள், கட்டார் இளவரசரின் விஜயம், சவூதி மஸீரா கவுன்சில் சபாநாயகர் அமைச்சர்களின் விஜயத்தின் போதும் இவ்வாறு ஒளிப்பதிவு செய்து அந்தந்த நாடுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -63

Page 34
ஒறாபி பாஷா நிலையச் செயற்பாடுகள்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -64

ஒறாபிபாஷா நிலையச் செயற்பாடுகள்
இப்பொழுது ஒறாபிபாஷா பெளண்டேசன் Orabi Foundation என அழைக்கப்படும். ஒறாபிபாஷா நூதனசாலையின் நலன்புரிச்சங்கம் 1988ஆம் ஆண்டு ஒறாபிபாஷா கலாசார நிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. எகிப்திய தூதுவராக இருந்த பாரூக் செல்பாயா அவர்களும் அன்றைய பணிப்பாளராக இருந்த அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ ஹஸன் அவர்களினது கலந்துரையாடலின் பயனாகவே இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இவ்வியக்கம் Orabi Pasha Foundation என்று பெயரிடப்பட்டது. இவ்வியக்கத்தினால் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றியும் அதன் வளர்ச்சி முன்னேற்றம் பற்றியும் அதன் ஆரம்பம் முதல் இன்று வரை பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வரும் திருமதி கதீஜா அபுசாலி, திருமதி ஆய்வுா மஹற்ரூப் ஆகியோரின் தகவல்களுடன் தினக் குறிப்புக்கள், ஆண்டறிக்கைகள் நாளேடுகள் என்பனவற்றின் மூலம் கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் செயற்பாடுகள் சமூக நலனைக் கருத்திற் கொண்டு குறிப்பாக படித்துத் தொழிலின்றி இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கான தொழிற்பயிற்சி வழங்கும் நிலையமாகவும் கல்வி கலை இலக்கிய சமூக சேவை நிலையமாகவும் இவ்வியக்கம் இயங்கி வருவது பாராட்டப்பட வேண்டியதாகும். இப்பயிற்சிகளில் சேர்ந்துகொண்ட அனேகமானவர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் முன்னேறியுள்ளனர். பலர் அரசாங்கத்துறையில் சேவையாற்றுகின்றனர். இன்றும் சிலர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். பலர் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புப் பெற்றுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செயற்படும் இவ்வியக்கம் சமூக, கலாசார இலக்கியத்துறைகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் சமய விழாக்கள், பாலர் பாடசாலை மாணவர்களதும் பயிற்சி பெறும் மாணவர்களினதும் கலை விழாக்கள், பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு விஜயம் செய்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. பல அறிஞர்கள் இங்கு வந்து சொற்பொழிவாற்றுகின்றனர் அதற்காக வெளிநாட்டு அறிஞர்களும் அழைக்கப்படுகின்றனர்.
ஒறாபிபாஷா நினைவு தினம் உட்பட சித்திலெப்பை, பேராசிரியர் உவைஸ் கலாநிதி பதியுத்தீன் மஹற்மூத், எ.எம்.ஏ அளிலிஸ், டாக்டர் கலில், ஸர் ராசிக் பரீத், கவிமணி எம்.சி.எம்.சுபைர் உட்பட பல பெரியார்களின் நினைவு தினங்களும் இடம்பெறுகின்றன. மீலாத் விழா போட்டிகளும் ஏனைய கலை விழாக்களும்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -65

Page 35
நடைபெறுவதாலும் ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் ஒன்று கூடுவதாலும் இவ்வியக்கத்தின் செயற்பாடுகளில் கலந்துகொள்வதில் பொதுமக்களும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.
எகிப்திய தூதர்களினதும் தூதரக அதிகாரிகளினதும் ஒத்துழைப்பினால் இந்நிகழ்ச்சிகள் மேலும் பலமடைந்து வந்துள்ளன. இங்கு நடக்கும் முக்கியமான விழாக்களிலும் அவர்கள் பங்கு கொள்கின்றனர். இலங்கைக்கு விஜயஞ் செய்யும் எகிப்திய அறிஞர்கள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுட்பட பலரும் இங்கு வருகை தரும் போது இயக்க முயற்சிகளைப் பாராட்டுகின்றனர். இவ்வாறு அடிக் கடி பல சிந்தனையாளர்களும் அரசியற் தலைவர்களும் சுற்றுலாப்பயணிகளும் இந்நிலையத்துக்கு விஜயஞ் செய்து இதன் செயற்பாடுகளை அவதானித்ததன் பின் மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் பலவற்றை அன்பளிப்புச் செய்வதுமுண்டு. கட்டார், குவைத், மாலைதீவு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு விஜயஞ் செய்த பல அமைச்சர்கள் கண்டிக்கு வரும்போது முன்கூட்டியே அறிவித்துவிட்டு இந்நிலையத்துக்கு விஜயஞ் செய்துள்ளனர். இவர்களை மாணவர்களும் இயக்க அங்கத்தவர்களும் வரவேற்று உபசரித்துள்ளனர். இலங்கைக்கு விஜயஞ் செய்த சவூதி மஸ”ராக் கவுன்சில் சபாநாயகர் தலைமையில் விஜயஞ் செய்த அமைச்சர்களுக்கு இங்கு மாபெரும் வரவேற்புபசாரம் ஒன்றும் அளிக்கப்பட்டது.
இதேபோன்று சமூக நலனைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட சில நிகழ்ச்சிகளைப் பற்றியும் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது. 1989ம் ஆண்டு சீடா இயக்கத்தின் அப்போதைய இலங்கைப் பொறுப்பாளராக இருந்த திருமதி ஆமர் இங்கு நடைபெறும் தொழிற்பயிற்சி முறைகளைப் பார்வையிடுவதற்கு விரும்பினார். அதனால் அவ்வாண்டு நடைபெற்ற மாணவிகளின் பொருட்காட்சியைப் பார்வையிட அவருக்கு இயக்கம் அழைப்பு விடுத்தது. அப்போதைய எகிப்திய தூதுவர் செய்யது பன்ஹாவியும் விஜயஞ் செய்தனர். மாணவிகளின் ஆற்றலையும் திறமையையும் கண்டறிந்த திருமதி ஆமர் இங்கிருந்த சில குறைபாடுகளை நிறைவேற்றித்தர முன்வந்தனர். அதன் மூலம் சீடா நிறுவனத்தால் பாலர் பாடசாலைக் கட்டடமொன்றும் சிறிய அளவிலான ஒரு வரவேற்பு மண்டபமொன்றும் நான்கு ஆண்டுகளுக்கு வகுப்புக்களை நடத்துவதற்குமான நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கென சீடா நிறுவனம் பன்னிரண்டு லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
சீடா நிறுவனத்தின் நிதி உதவிகள் 1994ஆம் ஆணி டு முற்றுப்பெற்றது.எனினும் அந்நிறுவனம் வழங்கிய கட்டடங்கள் உபகரணங்கள் மூலமாக பணிகளைத் தொடரக்கூடியதாக இருந்தது. இவ்வியக்கத்தின் செயற்பாடுகளுக்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் இல்லாமையினால் 1995ஆம்
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -66

ஆண்டு முதல் இரண்டு தையல் வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்தச் செலவுக்கென நிதி வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகளிடம் பெறப்படும் மிகக் குறைந்த கட்டணத்தின் மூலமாகவும் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பினாலும் புனித ரமழான் மாதத்தில் பெறப்படும் ஸதகாப் பணத்தினாலும் இவ்வியக்கப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. தட்டச்சுப்பயிற்சி
கொம்பியூட்டர் பயிற்சி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இங்கு நடைபெற்ற தட்டச்சுப்பயிற்சியினால் பல மாணவிகள் அரசாங்க தனியார்துறைகளில் வேலை வாய்ப்புப் பெற்றனர். ஆரம்பத்தில் கண்டி “பெஸ்ட்சிலக்ஸன்” உரிமையாளர் ஹம்ஸா ஹாஜியார் அவர்கள் 35,000 ரூபா பெறுமதியான இரண்டு தட்டச்சுக்களையும் டாக்டர் எம்.ஸி.எம்.சுபைர் அவர்கள் 18,500ரூபா பெறுமதியான தட்டச்சு ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினர். இப்பயிற்சி நெறிகளை அவதானித்த முஸ்லிம் சமய கலாசார இலாகாவின் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் திருமதி பெளமியா நிஸார் 55,500 ரூபா பெறுமதியான மும்மொழியிலான மூன்று தட்டச்சுக்களை அன்பளிப்புச் செய்துள்ளார். இதன் மூலம் ஏராளமான மாணவிகள் தொழில் வாய்ப்புப்பெற முடிந்தாலும் கம்பியூட்டர் முறை அறிமுகமானதும் இத்துறையில் ஒரு வீழ்ச்சியைக் காணமுடிந்தது. இதனால் அந்த நிலையத்துக்கு விஜயஞ் செய்த சிலிங்கோ நிறுவனத்தின் பிரதித்தலைவர் திருமதி லலித் கொத்தலாவல 70,000 ரூபா பெறுமதியான கம்பியூட்டர் ஒன்றை வழங்கி கம்பியூட்டர் பயிற்சி முறையை ஆரம்பித்து வைத்தார். நூல் நிலையம்
இங்கு பயிலும் மாணவர்களுக்காகவும் வெளியார் பயன்பாட்டுக்காகவும் ஒரு சிறிய நூல் நிலையமும் இயங்கி வருகின்றது. ஆங்கிலக் கலைக் களஞ்சியங்கள், அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன. அத்துடன் ஆங்கில தமிழ் சிங்கள நூல்கள் சன்மார்க்க கலை, இலக்கிய வரலாற்று நூல்களுடன் சிறுவர்களுக்கான நூல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றால் மாணவரும் வெளியாரும் பயன் பெறுகின்றனர். இந்த நூலகத்துக்குத் தேவையான நூல்களைப் பலர் அன்பளிப்புச் செய்துள்ளனர். பின்லாந்தைச் சேர்ந்த அலி அஸானி முஸ்லிம் கலாசார இலாகாவைச் சேர்ந்த பெளமியா நிஸார், எஸ்.எச்.எம்.ஜெமீல், ஈரானிய தூதரகப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்ரசீன் ஆகியோர் நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -67

Page 36
கர்ப்பிணி பெண்களுக்கான இலவச வைத்திய வசதி
இந்த மருத்துவவசதி 1998முதல் 2003ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஞாயிறு தோறும் டாக்டர் எம்.சி.எம். ஸ%பைர் தலைமையில் நடைபெற்று வந்தது. பல நூற்றுக்கணக்கான பெண்கள் இதனால் பயனடைந்த போதும் கண்டி பேராதனை வைத்தியசாலைகளில் சமூக நலன்கருதி சேவையாற்றிய முஸ்லிம் வைத்தியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதனாலும் டாக்டர் ஸ°பைர் அவர்கள் சில காலம் வெளிநாட்டில் தங்கியிருந்தமையினாலும் இச்சேவையைத் தொடரமுடியாமற் போயிற்று. எனினும் இதில் மும்முரமாக ஈடுபாடு கொண்டு சேவையாற்றிய டாக்டர் அலி அஸானி, டாக்டர் நஜிமுத்தீன், டாக்டர் ஸாலி ஆகியோர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது அவர்களது சேவையைப் பாராட்டி இயக்கத்தால் கூட்டங்களும் விருந்துபசாரங்களும் நடத்தப்பட்டன.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -68

இயக்கத்தினால் நடத்தப்பட்ட சில முக்கிய கலை கலாசார நிகழ்வுகள்
இலங்கை முஸ்லிம்களின் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய தவறான கருத்துக்கள் வெளிவந்த 1990ஆம் ஆண்டு காலத்தில் மர்ஹம் கவிமணி எம்.ஸி.எம்.சுபைர் அவர்களின் தலைமையில் மத்திய இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் பலரை இயக்கம் ஒன்று கூட்டியது. அதன் மூலம் தவறான கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து பத்திரிகைகளின் மூலம் கட்டுரைகளும் கை நூலொன்றும் வெளியிடப்பட்டது.
முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் அப்போதைய செயலாளராக இருந்த அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களது வேண்டுகோளின் நிமித்தம் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஒரு நூல் எழுதப்படுவதற்காக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களின் தலைமையில் அல்ஹாஜ் எஸ்.எம்ஏ.ஹஸன், ஐ.ஏ.ரஸ்ஸாக், மாத்தளை அல்ஹாஜ் புவாஜி ஆகியோரைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதனால் கண்டி முஸ்லிம்களின் வரலாறு பற்றிய ஒரு நூலை கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களினால் தொகுக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
நஹற்ஷபந்திய தரீக்காவின் உலகத்தலைவர் அல்ஹக்கானி ஷெய்கு நாஸிம் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்த போது கண்டி மாவட்ட உலமாப்பெருமக்களுடன் இக்கலாசார நிலையத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது அதற்கான முக்கிய பங்களிப்பை இவ்வியக்கம் மேற்கொண்டுள்ளது.
கண்டி மத்ரஸாக்களின் புனருத்தாரணம் சம்பந்தமான கருத்தரங்கொன்றை அல்ஹாஜ் சலீம்தீன், அல்ஹாஜ் எ.எம்.இஸ்மாயில் முன்னின்று இந்நிலையத்தில் நடத்தினர். இதில் மத்ரசாக்களின் பொறுப்பாளர்கள் போதனாசிரியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் சமய கலாசார இலாகாவின் உதவிப்பணிப்பாளர் ஹாஜியானி பெளமியா நிஸார் அவர்களின் ஏற்பாட்டின்படி ஒழுங்கு செய்த பல கூட்டங்களில் பயிற்சிபெறும் மாணவிகள் மட்டுமன்றி முஸ்லிம் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சீடா நிறுவனத்தின் தலைவர் திருமதி ஆமர் செயலாளர் சுஜாதா விஜேதிலக ஆகியோர் நடத்திய குடும்ப வாழ்க்கை, சமூக நலன், சிறுவர் பராமரிப்பு போன்ற கருத்தரங்குகளில் இயக்கம் சார்ந்த பெண்களும் சாராத முஸ்லிம் மாதர் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -69

Page 37
இரண்டாயிரமாம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா சம்பந்தமான கலந்துரையாடலொன்று அப்போதைய அமைச்சர் ரவூப்ஹகீம் தலைமையில் இங்கு நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் எ.சீராசிக் உட்பட அமைச்சு மட்ட அதிகாரிகள் கண்டி மாவட்ட நகர, கிராம மட்டத்திலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஒறாபிபாஷா நிலையத்தின் பங்களிப்பாக இவ்வியக்கத்தின் சார்பில் இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மூலம் அக்குரணையில் இளம் பெண்களுக்கான பல்வேறு தொழிற்துறைசார்ந்த விசேட பயிற்சி வகுப்புக்கள் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.
கண்டி மாவட்ட வாலிப முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டமொன்று இங்கு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்களான எ.எச்.எம். அஸ்வர், இம்தியாஸ் பாக்கிர்மாக்கார் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஹஉம் எச்.எல்.ஏ.நபிக் முஸ்லிம் ஊடகத்துறைத் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பிரதேச வாரியான முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது கண்டி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.
“இலங்கை இஸ்லாமிய பேரவை’ எனும் அமைப்பை ஆரம்பிப்பது சம்பந்தமான பூர்வாங்க ஆலோசனைக்கூட்டங்கள் இங்கு இடம்பெற்றன. கலாநிதி எம்.எஸ்.எம். இக்பால், சட்டத்தரணி பஸ்லிவாஹித், ஏ.ஜி.எம்.ஏ.ஹஸன் ஆகியோரைக் கொண்ட குழுக்கூட்டத்தினர் இக்கூட்டங்களில் பங்காற்றி வந்தனர். அல்ஹாஜ் ஏ.ஜே.எம்.முபாறக் அவர்களின் நெறிப்படுத்தலில் நடந்த இக்கூட்டங்களில் கண்டி மற்றும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூகம், அரசியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டன. இதன் பயனாக இஸ்லாமியப் பேரவை என்ற அமைப்பு உருவாகியது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -70

Memorable Movements. நினைவுச்சுவடுகள
ஒறாபி பாஷா நலன்புரி சங்கத்தின் ஆரம்ப அங்குரார்ப்பணக்கூட்டம் 1987 ல், அப்போதைய எகிப்திய தூதுவர் கெல்பாயா பாரூக் மற்றும்
- அதில் கலந்து கொண்டோர்.
முன்னாள் எகிப்திய தூதுவர் மற்றும் அமைச்சர் எம்.எச். முஹம்மத் டாக்டர் எம்.ஸி.எம். சுபைர் உட்பட ஒறாபிபாஷா நலன்புரி சங்க அங்கத்தவர் 1996 ல் நடைபெற்ற பொருட்காட்சி வைபவத்தின் போது.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -71

Page 38
Memorable Movements. நினைவுச்சுவ டுகள
&ண்
ஒறாபி பாஷா விழா கண்டி ஒறாபிபாஷா நிலையத்தில் நடந்தபோது டாக்டர் எம்.ஸி.எம்.கலீல் உரையாற்றுகிறார்.
முன்னாள் எகிப்திய தூதுவர் ரம்ஸி அல்லாம் ஒறாபிபாஷா நிலையத்துக்கு விஜயஞ்செய்தபோது எடுக்கப்பட்ட படம்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -72
 
 

Memorable Movements. 5606016.jéórós (6661
முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ். ஹமீத் ஒறாபிபாஷா நூதனசாலைக்கு விஜயஞ் செய்தபோது பார்வையிடும் காட்சி
முன்னாள் எகிப்திய தூதுவர் செய்யது அல் பன்ஹாவி ஒறாபிபாஷா நலன்புரிநிலைய மாணவிகளின் பொருட்காட்சியை பார்வையிடும் காட்சி
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ர். ഖണ്ഡങ്ങി
-73

Page 39
நினைவுச்சுவடுகள
Memorable Movements.
ஒறாபிபாஷா நிலையத்தினரால் வைத்தியர் திலகம் அப்துல் அஸிஸின் சேவையைப்பாராட்டி விழாவில் எகிப்திய தூதுவர் செய்யத் அல் பன்ஹாவியும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்ட காட்சி.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -74
 

நூல் வெளியீடுகள்
கல்ஹின்னை மர்ஹ"ம் மாமா ஹனிபாவின் மாணிக்கச்சுடர் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் உவைஸ் கவிமணி எம்.ஸி.எம். ஸ்பைர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் கலாநிதி துரை மனோகரன் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் பல ஊடகவியளாளர்களும் எழுத்தாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அத்துடன் ஒறாபிபாஷா பதிப்பகத்தினால்
பின்வரும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1997 6Ꮝ கலாபூஷணம் தமிழ் ஒளி, பேராதனை
ஷர்புன்னிஷாவின் கிராமிய மணம்,
1998 6Ꮡ கலாபூஷணம், எஸ்.எம்.ஏ. ஹஸன் எழுதிய
வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்
1999 ல் அல்லாமா இக்பால் ஓர் அறிமுகம் -
எஸ்.எம்.ஏ.ஹஸன்
2000 ல் யசஹாமி சிறுவர் நாவல், சிங்களத்தில்
எஸ்.எம்.ஏ. ஹஸன்
2008 ல் ஒறாபிபாஷா பற்றிய அறிமுகநூல்
அல்ஹாஜ் எச்.எம். சலீம்தீன்.
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன் -75

Page 40
0.
02.
O3.
04.
05.
O6
07.
O8.
O9.
எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களின் நூல்கள்
பதியுத்தீன் மஹற்மூத் (சிஸ், சோஷலிஸ முன்னணி)
அருள்வாக்கி அப்துல் காதிர்புலவர்
நான் கண்ட பண்டாராநாயக்கா (கல்வி வெளியீட்டுத் திணைக்களம்)
கலாநிதி பதியுத்தீன் மஹற்மூத் (மெய்கண்டான் - சாஹித்தியபரிசு பெற்ற நூல்)
நெஞ்சத்தாமரையின் இன்ப நினைவுகள்
கம்பன் கவியமுதம் (கவிதை விளக்கம்)
அமெரிக்க கறுப்பு இன முஸ்லிம்கள் (வெளியீடு சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்)
யசஹாமி - குறுநாவல் (வெளியீடு சிறுவர் ஆணடு)
அருள்வாக்கி - (இரண்டாம் பதிப்பு) (கல்ஹின்னை தமிழ் மன்றம்)
வைத்தியர் திலகம் அப்துல் அஸிஸ்
(வெளியீடு ஒறாபி பாஷா கலாசார நிலையம்)
அல்லாமா இக்பால் ஓர் அறிமுகம்
(வெளியீடு ஒறாபி பாஷா கலாசார நிலையம்)
. இக்பாலின் இதயப்புதையல்
(அஷராகுல் முஹம்தி மொழிபெயர்ப்பு)
யசஹாமி (சிங்கள மொழியில்) குறுநாவல்
· ീൈീy ബൗറ ) ضه مرو زریریه 7 الی ് ട്ര ഭ' = (e
இலங்கையில் ஒறாபி பாஷாவும் சகாக்களும் / எஸ்.எம்.ஏ. ஹஸன்
1969
1973
1975
1976
1976
1978
1979
1989
1997
1998
1999
2000
-76


Page 41
ஆசி
ஆசிர விரிவுரையாளராகவும் அதிகாரியாகவும், பிர உயர்ச்சியடைந்து 198 ஓய்வு பெற்றபின்னர் க
நிலையத்தில் 19 வரு
கடமையாற்றிவர்.
பேராதனையில் பிறந்த நல்ல பேச்சாளர், வா சொற்பொழிவுகளையு விமர்சனத்துறையில் இலங்கை இஸ்லாமிய
உபதலைவராக இருந் தன்னடக்கந்தான். இ எழுதியுள்ளார்.
ஒறாபி பாஷா பெள6 கண்டி,
 

ஸல் உலூம் அல்ஹாஜ் எம்.ஏ. ஹசன் 1944ம் ஆண்டு ரியராகப் பணியைத் தொடங்கி
ரிய கலாசாலை
கடமை புரிந்து கல்வி தம கல்வி அதிகாரியாகவும் 7 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றவர். 5ண்டி ஒறாபி பாஷா கலாசார
உங்கள் பணிப்பாளராக
த இவர் நாடறிந்த எழுத்தாளர், 660IITGóliíleið LIGo
ம் நிகழ்த்தியவர். கலை இவருக்கு ஈடுபாடு உண்டு.
எழுத்தளார் இயக்கத்தில் த இவரின் முதுசொம் இவர் இதுவரை 14 நூல்கள்
ன்டேஷன்