கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்

Page 1
Ele
A =
Taimi Text for it
University E.
計
上 孪
-
V. K{
ΝΑΥΑΤ
K
V a
口*雪置
 
 

File:F
he English H. S. C.
atrale e Frans
菁
PURRAINAMI
『エsS)
*亨、
置
೨
B |N__ 鬥
i Aruamunga Navalar
ANTHASAMY,
AR BOOK DEPOT.
K. S. ROAD. т на тр оп на і- 冉
斯
萱萱

Page 2


Page 3

@-
பெரிய புராண வ ச னம் முதல் நான்கு சருக்கங்கள்
്ൿ റ്റൂ. ಕ್ಲಿ இவை | #tóir 蠱 "ಕ್ಲಿ 1947-ம் ஆண்டு நிகழும் கீழ்ப்பாடி ཨ་མ་པོ་མ་ ஆங்கில H. S. C. மாணவர்க்கும் இலங்கைச் சர்வகலாசாலைப் பிரவேச பtகைடி மாணவர்க்கும்
உபயோகமாகும் வண்ணம்
பூரீலபூரீ ஆறுமுகநாவல ரவர்கள் இயற்றிய பெரியபுராண வசனத்தி விருந்து
தொகுத்து.
■nfà」。 சிதம்பரம் (gr. బ9EFF; சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகரான
அநுமதிப்படி (ခြီ)
வண்ணுர்பண்ணை ஆறுமுககாவலர் புத்தகசாலை யதிபர் வே. கந்தசாமியால் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திசாலையில் அச்சிடுவிக்கப்பெற்றது.
திரு. சு. திருஞானசம்பந்தப்பிள்ளை B.A
வியடு) கார்த்திகைமட
C +{ 17 دا لې خو
ཅིག། །
s
விலை ருபா 1-75 `

Page 4
གཙོ་
a
 

. -ாவா
PUBLIC Y
A. JAFFNA,
"6
முதலாவது தில்லைவா ழந்தணர் சருக்கம் 一盏a爱=一
தில்லைவா ழந்தணர் புராணம்
ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா ugori១ மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேகமாகிப் பெண்ணுமா யானுமாகிப் போதியா நிற்குச்தில்லைப் பொது5டம் போற்றி போற்றி.
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுக் திருச்சிற்றம் பலத்து ணன்று
பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங் கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுணுநாடியும், பிரமாண்டத்தி லுள்ள பரத கண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லைவனமும், சமமாகும்.
சாந்தோக்கியோபநிடதத்திலே பிரமபுரத்தி லுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாச மத்தியில் விளங்கும் அதி சூக்குமசித்தை அறிதல்வேண்டு மென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரம புரமென்றது இச் சரீரத்தையும், புண்டரிக வீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பரா சத்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென் றறிக. புறத்தும், இப்படியே இப் பிரமாண்டம் பிரமபுரமெனவும், இப் பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீகவீடெனவும, தில்லைவனத்தி லிருக் கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத் திருச்சிற்றம்பலத்திலே கிருத்தஞ் செய்யும் பரப்பிரம

Page 5
2 தில்லைவாழந்தணர் புராணம்
சிவம் அதிகுக்குமசித் தெனவும் சொல்லப்படும். இவ் வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம்; ஆதலால், சிதம்பரமெனப்படும். இச் சிதம்பரம் எங்கா ளும் நீக்கமின்றி விளங்குந் தானமாதலால், தில்லைவன மும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.
இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும்பொருட்டுத் திருமூலத்தானமாகிய சிவ லிங்க வடிவமாய் எழுந்தருளி யிருப்பார். அந்தத் திரு மூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடி வாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபை யின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவ பிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுவர்.
திருமூலத்தான லிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிரா மணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவார் கள். அவர்கள் மூவாயிரர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லா தவர்கள்; புண்ணியங்க ளெல்லாம் திரண்டு வடிவெடுத் தாஸ் போன்றவர்கள். கிருகத்தாச்சிரமத்தில் ஒழுகுகின் றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னு நான்கு வேதங்களையும், சிகைஷ வியாகரணம் சந்தோவிசிதி கிருத் தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதி யுணர்ந்தவர்கள். ஆகவனியம் தகஷிணுக்கினி காருகபத்தியம் என்னும் மூன் றக்கினிகளை யும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறு தொழிலினலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்தி
 

"
, , ,
| JAFN
麗 ------- *Para KATIA ARAUMAWARA MONROJ KAJKAJKAJA
திருநீலகண்ட நாயனுர் புராணம் 3
ராகவும் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தை யோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே இடையருரது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.
அவர்கள் சமயதீசைஷ விசேஷதீசைஷ நிருவான தீசைஷ ஆசாரியாபிஷேகம் என்னு நான்கும் பெற்றவர் கள். கா மிக முதல் வாதுள மிறதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதி யுணர்ந்தவர்கள். அச் சைவாக மங்களால் வீட்டுநெறிகள் இவையென உணர்த்தப்படுஞ் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங் களையும் வழுவாவண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.
அவர்கள் சபாநாயகர் 'இவ்விருடிகளில் நாம் ஒரு
வர்' என்று அருளிச்செய்யப்பெற்ற பெருமையை யுடைய
வர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்தி நாயன ருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச் செய்தபோது ‘தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்” என்று அவர்களைத் தமது அருமைத் திருவாக்கினலே எடுத்துச் சொல்லியருளினர். இங்ங்ணமாயின், அவர்க ளுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்,
திருச்சிற்றம்பலம்.
திருநீலகண்டநாயனர் புராணம்
சிதம்பரத்திலே, குயவர் குலத்திலே, பொய் சொல் லல் சிறிதுமின்றித் தரும நெறியிலே வாழ்கின்றவரும், இல்லறத்திலே நிற்பவரும், சிவபத்தி அடியார்பத்திகளிலே
சிறந்தவருமாகிய தொண்டர் ஒருவர் இருந்தார். அவர்
தம்முடைய குலத்துக்கு ஏற்ப மட்கலங்களை வனைந்து விற் றுச் சீவனஞ் செய்தும், திருவோடுகளைச் சிவனடியார் களுக்குக் கொடுத்தும் வந்தார். அவர் 'ஆதிகாலத்திலே
பரமசிவன் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலாகல

Page 6
4 திருநீலகண்டநாயனுர் புராணம்
விஷத்தை உலகம் உய்யும்பொருட்டு உண்டபொழுது, அவருடைய கண்டமானது, அவர் தம்மை அடைந்தவர்க ளுக்கு வரும் இடையூறுகளை நீக்கியருளுவார் என்பதை நாமெல்லாம் அறிந்துகொள்ளும்படி ஒரறிகுறியாய் விளங் கும்பொருட்டு, அதனை உள்ளே புகவொட்டாமல் தடுத் துத் தானே தரித்துக்கொண்டது' என்று நினைந்து, அக் கடவுளுடைய கண்டத்தைத் திருநீலகண்டம் என்று எப் பொழுதும் சிறப்பித்துச் சொல்லுவார். அதனல் அவ ருக்குத் திருநீலகண்டநாயனர் என்னும் பெயர் உண்டா யிற்று.
ஒருநாள் அவர் அவ்வூரிலே ஒரு வேகியிடத்துச் சென்று வீட்டுக்குத் திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து, அதைக் குறித்துத் தம் முடைய மனசிலே தோன்றிய கோபத்தை அடக்கிக் கொண்டு, இல்வாழ்க்கைக்குரிய மற்றப் பணிகளெல்லாஞ்
γ. செய்தும், புணர்ச்சிக்கு மாத்திரம் இசையாதவரானர்.
நாயனர் தம்முடைய மனைவியார் கொண்ட புலவியைத் தீர்க்கும்பொருட்டு அவர் சமீபத்திலே போய், வேண்டிய இரப்புரைகளைச் சொல்லி, அவரைத் தீண்டும்படி சென் ரூர். அப்பொழுது மனேவியார் “நீர் எம்மைத் தீண்டுவீ ராகில் திருநீலகண்டம்’ என்று ஆணேயிட்டார். அதைக் கேட்ட நாயனுர், பரமசிவனுடைய திருநீலகண்டத்திலே தாம் வைத்த பத்தி குன்ரு வண்ணம், அம்மனைவியாரைத் தொடாமல் நீங்கி, 'இவர் ‘எம்மை என்று பன்மையாகச் சொன்னதனுல் இவரைமாத்திரமன்றி மற்றப் பெண்களை யும் நான் மனசினல் நினைத்தலுஞ் செய்யேன்' என்று உறுதி கொண்டார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டி னின்றும் புறப்படா தொழிந்து, அவ் வீட்டிலேதானே இருந்து, இல்லறத்திற்குரிய பிற செய்கைக ளெல்லாஞ செய்துகொண்டு, புணர்ச்சியின்மையைப் பிற ரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப் பருவத்தையுடைய இருவரு அவ்வாணையைப் பேணிக்கொண்டு, பல வருஷங்கை செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத் முற்றர்கள். உற்றும், சிவபத்தி சிறிதும் குறையாதவர் ளாகி இருந்தார்கள்.
 
 

திருநீலகண்டநாயனர் புராணம் 5
இப்படியிருக்கும் காலத்திலே, காருண்ணிய ஸ்வரூபி
"யாகிய பரமசிவன், அவ்வடியாருடைய மகிமையை உலகத்
தவர்கள் ஐயந்திரிபற அறிந்து அவருடைய தொண்டை அனுசரித்து உய்யும்பொருட்டு, ஒரு சிவயோகி வடிவங் கொண்டு, அவ்வடியார் வீட்டுக்குச் சென்ருரர். அவ்வடியார் அவரைக்கண்டு எதிர்கொண்டு வீட்டினுள்ளே அழைத்துக் கொண்டுபோய், ஆசனத்தில் இருத்தி அவருக்கு விதிப்படி அன்பினேடு பூசைசெய்து, நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலி செய்து நின்று, 'சுவாமீ, அடியேன் தேவரீருக்குச் செய்யவேண்டிய குற்றேவல் யாது’ என்று வினவ, சிவ யோகியார் “இந்தத் திருவோட்டை வைத்திருந்து, நாம் கேட்கும்போது தா. இந்த ஓடு தனக்கு வேருெரப்பில்லா தது; தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றை யும் சுத்திசெய்வது; பொன்னிலும் இரத்தினத்திலும் பார்க் கக் காப்பாற்றப்படத்தக்கது. இப்படிப்பட்ட மேன்மை யுள்ளதாகிய இந்த ஒட்டை நீ வாங்கி வைத்திரு” என்று அருளிச் செய்தார். அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட் டிலே ஒருபக்கத்தில் சேமித்துவைத்துவிட்டு, திரும்பிவந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினர்.
நெடுநாட்கள் கழிந்த பின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக்கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லாதொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மை βl3συσωIι 1ι ι பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன்போ லச் சிவயோகிவடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந் தருளினர். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, ‘சுவாமீ, தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடி யேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினுற்போலும்?
என்று விண்ணப்பஞ்செய்து நிற்க, சிவயோகியார் ‘நாம்
முன்னுளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்
பொழுது தா’ என்றர். அடியவர் அதைக் கொண்டுவந்து
கொடுக்கும்பொருட்டு உள்ளேபோய்ப் பார்த்துக் காணு மையாலே திகைத்து, அங்கு கின்றவர்களிடத்திலே கேட் டும் பிறவிடங்களிலே தேடியும் காணுதவராகி, சிவயோகி

Page 7
6 திருநீலகண்டநாயனர் புராணம்
யாருக்கு உத்தரம் சொல்வதற்கு ஒன்றுமின்றி அங்கே நின்ருரர். சிவயோகியார் உள்ளே நின்ற அடியார் கேட் கும்படி, "நொடிப்பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் தாழ்த்து நிற்கின்றாய்? என்று கேட்க, அடியவர் வந்து சிவயோகியாரை வணங்கி, ‘சுவாமீ, தேவரீர் தந்த திருவோட்டை வைத்த இடத்தி லும் பிறவிடங்களிலும் தேடிக்காணேன். பழையதாகிய அந்தத் திருவோட்டைப் பார்க்கினும் புதிதாகிய வேருெரு திருவோடு தருவேன். அதை ஏற்றுக்கொண்டு, அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளல்வேண்டும்’ என்று சொல்லிப் பிரார்த்தித்து நின்றர். உடனே சிவயோகியார் அவரைக் கோபித்துப்பார்த்து, 'நீ யாது சொன்னுய்? நான் வைத்த மண்ணுேட்டையேயன்றிப் பொன்னேட் டைத் தந்தாயாயினும் நான் வாங்கேன். நான் முன்னே உன்னிடத்தில் தந்த ஒட்டையே கொண்டுவா’ என்று திருவாய்மலர்ந்தருள, அடியவர் ‘சுவாமீ, தேவரீர் தந்த ஒட்டைத் தேடியுங்காணேன். வேறே நல்ல ஒடு தருகின் றேன் என்று சொல்ல; அதற்கு உடன்படாமல், என் னேட்டையே கொண்டுவா என்று சொல்லுகிறீர். இந்தச் சொல்லு என்னறிவுமுழுவதையும் ஒழித்துவிட்டது' என் முர், அதற்குச் சிவயோகியார் ‘நான் உன்னிடத்திலே வைத்த அடைக்கலப்பொருளை நீ கவர்ந்துகொண்டு, பாவதி துக்குச் சிறிதும் அஞ்சாமல், பல பாவகங்கள் செய்கின் முய். சகலரும் அறியும்படி உன்னைத் தப்பவொட்டாம6 மறித்து என்னேட்டை வாங்கிக்கொண்டேயன்றி நான் போகேன்? என்று சொல்ல; அடியவர் 'சுவாமீ, தேவரி தந்த ஒட்டை நான் கவர்ந்தவனல்லன். அடியேனிடத்ே களவில்லாமையை எப்படித் தெரிவிப்பேன்? சொல்லும் என்ருரர். சிவயோகியார் ‘உன் புத்திரனைக் கையிே
பிடித்துக்கொண்டு குளத்திலே முழுகி, நான் கவரவில்?
என்று சத்தியம் பண்ணித்தா' என்று சொல்ல; அடியவி
'அப்படிச் செய்தற்கு எனக்குப் புத்திரன் இல்லைே
யாது செய்வேன், சொல்லும்? என்ருரர். சிவயோ கிய
*உன் மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் ப
ணித்தா? என்று சொல்ல; அடியவர் ‘நானும் என்மனை
யும் எங்களிடத்துண்டாயிருக்கும் ஒரு சபதத்தினு'
 

At
திருநீலகண்டநாயனர் புராணம் 7
ஒருங்கு முழுகுதல் கூடாது. நான்மாத்திரம் குளத்திலே முழுகிச் சத்தியம்பண்ணித் தருகிறேன், வாரும்’ என்றர். அதற்குச் சிவயோகியார் ‘நான் முன்னே தந்த ஓட்டைத்
தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் உன்
மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியஞ்செய்து தராமலும், மனம் வலித்திருக்கின்ருரய். தில்லைவாழந்தணர்கள் கூடி யிருக்கும் பெரிய சபையிலே இவ்விஷயத்தைக் குறித்துப் பேசப்போகின்றேன்’ என்று சொல்லி, அந்தச் சபைக் குப்போக, திருநீலகண்டநாயனரும் அவருக்குப்பின்னே போனர். சிவயோ கியார் அந்தப்பிராமணர்களைப் பார்த்து, 'இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும் படி கொடுத்த ஓட்டைத் தருகின்றனில்லை. அதனை இழந் தானுயின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே
முழுகிச் சத்தியம்பண்ணித் தருகின்றனுமில்லை’ என்ருரர். உடனே பிராமணர்கள் அடியவரை நோக்கி, 'திருநீல கண்டரே, நடந்த சமாசாரத்தை நீர் சொல்லும்? என்று கேட்க, அவர் 'சுவாமிகாள், இவர் தந்த திருவோடு நான் வைத்த இடத்தினின்றும் மறைந்துபோய்விட்டது. நான் தேடிப்பார்த்துங் காணேன். இதுவே நடந்த சமாசாரம்? என்ருரர். அதற்குப் பிராமணர்கள் "இவர் தந்த ஒட்டை நீர் இழந்தீரா கில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவி யைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியஞ்செய்து கொடுத்தலே நீதி’ என்ருரர்கள். அடியவர் அதைக் கேட்டு, தாம் அம்மனேவியாரைத் தீண்டாதிருத்தலைக் குறித்துப் பேசமாட்டாதவராகி, 'தகுந்தபடி குளத்திலே முழுகிச்
சத்தியஞ்செய்து தருகிறேன், வாரும்' என்று சொல்லி, சிவ
யோகியாரோடு தம்முடைய வீட்டுக்குப் போய், மனைவியா ரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலிச்சரத்துக்கு முன் னிருக்கின்ற திருக்குளத்திலே போய், ஒரு மூங்கிற்றண்டை ஒரு புறத்திலே மனைவியார் பிடிக்க, மற்றப்புறத்திலே தாம் பிடித்துக்கொண்டு, இறங்கினர். அதைக் கண்ட சிவ யோகியார் 'உன் மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு' என்று சொல்ல; திருநீலகண்டநாயனர், அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்ன ளிலே தாஞ்செய்த வேசிகமணமும் அதனலுண்டாகிய சபதமும் அந்தப்பிரகாரம் தவருமல் நடந்துவருதலும்
ܐܛܠ

Page 8
8 இயற்பகைநாயனுர் புராணம்
சொல்லி, முழுகினர். முழுகிக் கரையிலேறிய திருநீலகண்ட நாயனரும் மனைவியாரும் மூப்புப்பருவம் நீங்கி, இளமைப் பருவம் உடையவர்களாய்ப் பிரகாசித்தார்கள் உடனே தேவர்களும் முனிவர்களும் அங்காயனர் மீது ஆகாயத்தி னின்றும் புஷ்பமாரி பொழிந்து, அவரது பெருமையை எடுத்துத் துதித்தார்கள். அவ்வதிசயத்தைக் கண்ட சமஸ் தரும் அங்கு கின்ற சிவயோகியாரைக் காணுதவர்களாய், மயங்கி நின்ருரர்கள். சிவபெருமான் பார்வதி தேவியா ரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளி னர். அப்பொழுது திருநீலகண்டநாயனரும் மனைவியாரும் பூமியிலேவிழுந்து அவரை நமஸ்கரித்து, எழுந்து ஸ்தோத் திரஞ் செய்துகொண்டு நின்ருரர்கள். சிவபிரான் அவர்களே நோக்கி, ‘ஐம்புலங்களை வென்றதனுலே மேன்மையடைந்த அன்பர்களே, எக்காலத்தும் இவ்விளமை நீங்காமல் நம்மி டத்தில் இருங்கள்’ என்று சொல்லி மறைந்தருளினர். பத்திவலிமையையுடைய திருநீலகண்டநாயனரும் மனைவி யாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ் செய்கையைச் செய்து, சிவலோகத்தை அடைந்து, பேரின்பத்தை அனு பவித்து வாழ்ந்திருக்தார்கள்.
திருச்சிற்றம்பலம்
இயற்பகைநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, காவேரிBதி சமுத்திரத்தோ கலத்தலால் காவேரிசங்கமம் எனப் பெயர்கொண் விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம் பட்டினத்தி:ே வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிற தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகைய
ரென்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராகூ தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லா6 றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங் கா தில், ஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்ப யார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்:
* இக் காரணத்தினுல் இத் திருக்குளம் இளமைகாயனர் குள.ெ பெயர்பெற்றது.
 

பும் பற் த்
55
றை
னப்
இயற்பகை நாயனர் புராணம் 9
மருது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு,
ஒரு பிராமண வடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே
பிரகாசிக்க, தூர்த்தவேடமுங் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினர். இயற்பகை நாயனர் அன்பினேடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக் கொண்டுபோய், விதிப்படி அருச்சித்து, 'சுவாமீ, தேவரீர் இங்கே எழுங் தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினற் போலும்’ என்ருரர். அதுகேட்ட ஐயர் இயற்பகைEாய னுரை நோக்கி, ‘சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மருரமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர் தருதற்கு இசைவீராயில், அந்தப் பொருள் இன்னது என்று சொல்லுவேன்” என்ருரர். அதற்கு இயற்பகை நாயனர் ‘எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப் பொருள் நமது கடவுளாகிய பரம சிவனுடைய அடியார்களுக் உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்கவேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியரு ளும்’ என்று சொல்ல; ஐயர் 'உம்முடைய மனைவியை
விரும்பி வந்தேன்' என்ருரர். அப்பொழுது இயற்பகை
நாயனர் முன்னிலும்பார்க்க மிக மகிழ்ந்து வணங்கிநின்று, "சுவாமீ, தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்’ என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, “நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டேன்? என்ருரர். உடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, 'பிராணநாயகரே, நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறென்று உண்டோ? இல்லை? என்று சொல்லி, அவரை வணங்க, அவர் தமது மனைவி யாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியாகைபற்றி, வணங்கினர். மனைவியார் போய், அவ்வையருடைய பாதங் களிலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து மின்ருர், அது கண்ட இயற்பகைநாயனர் மனமகிழ்க்கு அவ் வையரை வணங்கி, ‘இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணி
2

Page 9
10 ܡ இயற்பகைநாயனுர் புராணம்
யாது’ என்று வினவ, ஐயர் 'இந்தப் பெண்ணே நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற் அறுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்கும்வரைக்கும் அவர்களால் எனக்கு ஓர் இடையூறும் உண்டாகாதிருக் கும்படி, நீர் துணேயாக வரவேண்டும்? என்ருரர். இயற் பகைநாயனுர் அதைக் கேட்டு, 'இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக் குற்றேவலைச் செய் யாமல், இவர் சொல்லும்வரைக்கும் தாழ்த்து நின்றது குற் றம்’ என்று நினைத்துத் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும் ஏங் திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து, தாம் பின்னே போனுர்,
அப்பொழுது இயற்பகைநாயனருடைய சுற்றத்தவர் களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் “இயற் பகை பைத்தியத்தினலே தன் மனைவியைக் கொடுத்தா ணுயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா? என்று தங்கள் மரபுக்கு வரும் பெரும் பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம்போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இரு பக்கத்திலும் நெருங்கி, ஆரவா ரித்து, ஒ 'துட்டனே, எங்களுக்குப் பழி வராதபடி எங் கள் குலப் பெண்ணே விட்டுப்போ' என்று சொல்லி, அவரை வளைத்துக்கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனருடைய மனைவியா ரைப் பார்க்க; அம்மனைவியார் 'சுவா மீ, நீர் பயப்பட வேண்டாம். இயற்பகைநாயனர் அவர்களை வெல்லுவார் என்ருரர். இயற்பகைநாயனர் அதைக் கேட்டு, ‘அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்றுபோடு கிறேன். தேவரீர் அஞ்சவேண்டாம்' என்று சொல்லி அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, நீங்கள் என் வாளுக்கு இரையாவிர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நி3 லாமல் ஓடிப் பிழையுங்கள்’ என்று கூற; அவர்கள் *ஏடா இயற்பகை! நீ என்ன காரியஞ் செய்தாய்? ஊரவ கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்க
 

\
இயற்பகைநாயனர் புராணம் 11.
நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றுயினும் வெட்கப்பட வில்லை. மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது. நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணேப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்" என்ருரர்கள். உடனே இயற்பகைநாயனர் அதிக கோபங் கொண்டு, 'உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின் றிப் போக விடுவேன்' என்று சொல்லி எதிர்க்க, அவர் கள் அந்நாயனுரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டு செல்கின்ற ஐயருக்கு முற் பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனர் கோபங்கொண்டு, வாளினலே, இட சாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து, அவர்க ளுடைய தோள்களையும் கால்களையும் த லை க ளை யு ம்
துணித்து விழுத்தி, பின் ஒவ்வொருவ்ராய் வந்து எதிர்த்த
வர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினர். பின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த காயனர் ஐயரை நோக்கி, ‘சுவாமீ, தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்’ என்று சொல்லி அவரோடு போனர். திருச்சாய்க்காடு என்னுஞ் சிவஸ்தலத்துக்குச் சமீபத்திலே போனபொழுது, ஐயர் இயற்பகைநாயனுரை நோக்கி, ‘இனி நீர் திரும்பிப் போகலாம்' என்று சொல்ல; நாயனர் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ் சலி செய்து ஸ்தோத்திரம்பண்ணிக்கொண்டு திரும்பினர். அப்பொழுது ஐயர் 'இயற்பகையே இங்கே வா’ என்று சொல்லி ஒலமிட்டார். நாயனர் அந்த ஓசையைக் கேட்டு, 'அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு செய்பவர்கள் உண்டாகில், கொன்றுபோடு வேன்' என்று சொல்லிக்கொண்டு வர; ஐயர் மறைந் தருளினர். வந்த நாயனர் அவ் வையரைக் காணுமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண் டா ர். ஆராமையினலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம் பண்ணினர்.

Page 10
12 இளையான்குடிமாறநாயனுர் புராணம்
சுவாமி அவரை நோக்கி, ‘நம்மேலும் நம்முடைய அடி யார்கண்மேலும் கிஷ் களங்கமாகிய அன்பு வைத்த இய பகையே நீ, உன் மனைவியோடும் இம்முடனே வா' என்று திருவாய்மலர்ந்து, அந்தர்த்தானமாயினர். இயற்பை நாயனரும் மனேவியாரும் சிவலோகத்தை அடைந்து பேரின் பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்த திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்,ை அடைந்து இன்ப மனுபவித்தார்கள்.
திருச்சிற்றம்பலம்,
இளேயான்குடிமாறநாயனுர் புராணம்
இளேயான்குடியென்னும் ஊரிலே, வேளாளர் குல: திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரு குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும் சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்புகொண்ட சிந்தையையு உடையவராகிய மாறனர் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வ ணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண் அஞ்சலி செய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற் அழைத்துக் கொண்டுவந்து, காகநீர் கொண்டு அவர்க திருவடிகளை விளக்கி, அத் தீர்த்தத்தைச் சிரமே றெளித்து, உள்ளும் பருகி, அத் திருவடிகளை மெல்லி வஸ்திரத்தின லொற்றி, ஆசனத்தி லிருத்தி, சைவாச விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப் புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னு அறுவகைச் சுவையை யுடையனவாய், உண்ணப்படுவ தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என 15 வகைப்படும் உணவுகளை அவரவர் பிரிதிப்படி திருவரு செய்விப்பார். இப்படித் தினந்தோறும் மகேசுரபூ பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினுலே செல்வம் பூ விருத்தியாக, அவர் குபேரனே ஒத்து வாழ்ந்திருந்த அப்படி இருக்குங் காலத்திலே, சிவபெருமான், . விளையான்குடிமாற5ாயனர் இந்தச் செய்கையைச் ெ வம் வந்த காலத்திலன்றி வறுமை வந்த காலத்தி
 

鸟° ↑ ᏪᎭ ᎧᎧ
QLD SÒN $ N
இளையான்குடிமாற நாயனர் புராணம் 13
தளராது செய்ய வல்லவர் என்பதையும், தாம் நல்லோர்க ளுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின்
பொருட்டே என்பதையும், அங்கயம் இறுதியிலேயே
பலிக்கும் என்பதையும், அக் கருத்தறியாது அதற் குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய் தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங் கொண்டு, அங்காயனரிடத்தில் உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமையெய்தும்படி அருள் செய் தர்ர். அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனர் மகேசுர பூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குத லின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற் நூறும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும் முன்போலவே தாஞ் செய்யும் திருப் பணியை விடாது செய்துவந்தார்.
அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன் முழுதும் போசனஞ்செய்யா மையால் பசி அதிகப்பட்டு, வீட்டுக்கதவைப் பூட்டியபின்பு,
திருக்கைலாசபதியானவர் சைவவேடங் கொண்டு எழுங் தருளிவந்து, கதவைத்தட்டி அழைக்க; நாயனர் கதவைத்
திறந்து, அவரை உள்ளே அழைத்துக்கொண்டுபோய், மழையினல் மனைக்த அவருடைய திருமேனியை வஸ்திரங் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங்கொடுத்து, அவ ருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசைமிகுதியால் தம்முடைய மனைவியரை நோக்கி, 'இந்தச் சைவர் மிகப் பசிகொண்டு வந்திருக்கின்றர். நமக்கு முன்னமே போச னத்துக்கு ஒன்றுமில்லே. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்க வேண்டுமே. இதற்கு யாது செய்வோம்? என்ருரர். அதற்கு மனைவியார் 'வீட்டிலே ஒரு பதார்த்தமு மில்லை. அயலவர்களும் இனி உதவமாட்டார்கள், நெடு நேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கப்போவதற்கு வேறி டமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாதுசெய்வேன்" என்று சொல்லி, பின்பு 'இன்று பகற்காலத்திலே வயலில்
விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளை கொண்டிருக்
கின்ற 5ெல்லை வாரிக்கொண்டு வந்தால், இயன்றபடி அன்
も 4.j"f; سه Nང་

Page 11
4. இளையான்குடிமாறகாயனர் புராணம்
னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி வேருெரு வழியும் அறி யேன்” என்று சொல்லித் துக்கித்தார். இந்த வார்த்தை செவிப் புலப்படுதற்கு முன், இளையான்குடிமாற5ாயனர் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு, மிக மழைபொ கின்ற மகா அந்தகாரமயமாகிய அர்த்த ராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினுலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற் சென்று, அதிலே அதிக மழையினுல் நீர் மேலே மிதக் கின்ற நென்முளைகளைக் கையினலே கோலிவாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு, சீக்கிரம் திரும்பி வந்தார். அவரை எதிர்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறுபோம்படி நீரினலே கழுவி யூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, “அடுப்பிலே கெருப்புமூட்டுதற்கு விறகு இல்லையே' என்று சொல்ல; அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையி லுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினர். மனைவியார் அவைகளை முறித்து அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம்போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கிற உலையில் அதையிட்டு, சோருக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, 'இனிக் கறிக்கு யாது செய்வோம்' என்ருரர். உடனே நாயனர் புறக் கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற் படாத சிறுபயிர்களைக் கையினலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க, மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினுலேகழுவி, தமது சாமர்த் தியத்தினுல் வெவ்வேறு கறியமுதுகள் செய்துமுடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம்பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, 'சைவரை அமுது செய்விப்போம்” என்று சொன்னுர், நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற் சென்று, “சுவாமீ, அமுதுசெய்ய எழுந்தருளும்' என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதி வடிவமாய் எழுந்து தோன்றினர். அதைக்கண்ட இளையான்குடிமாற நாயனரும் மனைவியாரும் திகைத்து நின்றர்கள். பின்பு பரமசிவன் பார்வதி தேவியாரோடு
 

மெய்ப்பொருணுயனுர் புராணம் 5
இடபாரூடராய்த் தோன்றி, இளையான் குடிமாறBாயனரை நோக்கி, ‘அன்பனே, நம்முடைய அடியார்களை அமுது செய்வித்த நீ உன் மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின் பத்தை அனுபவித்துக்கொண்டிரு' என்று திருவாய்மலர்ந்தருளி, அந்தர்த்தானமாயினுர்,
- திருச்சிற்றம்பலம்.
மெய்ப்பொருணுயனர் புராணம்
சேதிநாட்டிலே, திருக்கோவலூரிலே, மலையமானட்டா ருக்கு அரசரும், வேதாகமங்களின் உண்மையை அறிந்த வரும், சிவனடியார்களுடைய திருவேடத்தையே மெய்ப்  ெப ா ரு ளெ ன ச் சிங்தை செய்பவருமாகிய மெய்ப் பொருணுயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம் முடைய இராச்சியத்தைத் தருமநெறி தவருமல் நடத்தியும், தம்மை எதிர்த்த பகைவர்களை ஜயங்கொண்டும், சிவால யங்களெங்கும் நித்தியநைமித்தியங்களைச் சிறப்பாக நடத்தி | யும், சிவபத்கர்கள் வந்தபொழுது மனமகிழ்ச்சியோடும் வேண்டிய திரவியங்களைப் பூர்த்தியாகக் கொடுத்தும் வந்தார்.
இப்படி நடக்குங் காலத்திலே, முத்திநாதன் என் கின்ற ஓரரசனனவன் அவரை வெல்லுதற்கு விரும்பி, யுத்த சன்னத்தனகி, அவரோடு பொருது, யானை குதிரை தேர் காலாள் என்னுஞ் சேனைகளைப் பலமுறை இழந்து, தோற்று, அவமானப்பட்டுப் போனன். பின்பு அவன் யுத்தத்தினலே அவரை ஜயிக்கமாட்டாதவனகி, அவரிடத்
திலே இருக்கின்ற அடியார் பத்தியை அறிந்து, விபூதி தரிக்
கின்ற அவ்வடியார் வேடங்கொண்டு அவரைக் கபடத்தி னுல் வெல்ல நினைந்து, சரீரமுழுதிலும் விபூதி தரித்து, சடைகளைச் சேர்த்துக்கட்டி, புத்தகக் கவளிபோலத் தோன்றுகின்ற ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கின்ற ஒரு கவளிகையை எடுத்துக்கொண்டு, திருக்கோவலூரிற்
GAశీg
* s)frs、 ' ? ' (

Page 12
6 மெய்ப்பொருணுயனுர் புராணம்
சென்று, மெய்ம்பொருணுயனருடைய திருமாளிகைவாயிலை அடைந்தான். அப்பொழுது வாயிற் காவலாளர் அவனை அஞ்சலிசெய்து, 'சுவா மீ, உள்ளே எழுந்தருளும்’ என்று சொல்ல; அம்முத்திநாதன் உள்ளேபோய், மற்ற வாயில் களையும் அப்படியே கடந்து சென்று, இறுதிவாயிலை அடைந்தபொழுது, அவ்வாயிற் காவலாளனுகிய தத்த னென்பவன் 'இப்பொழுது இராசா நித்திரை செய்கின் ருரர். நீர் சமயமறிந்து போகவேண்டும்’ என்ருரன். அதைக் கேட்ட முத்திநாதன் ‘நான் அவருக்குச் சாஸ்திரோப தேசஞ் செய்யப்போகின்றபடியால், நீ என்னேத் தடுக்க லாகாது’ என்று சொல்லி, உள்ளே புகுந்து, மெய்ப்பொரு ணுயனுர் கட்டிலிலே கித்திரைசெய்ய அவர் மனேவியார் பக்கத்திலிருக்கக் கண்டும், சமீபத்திலே சென்ருரன்,
அப்பொழுது, மனைவியார் சீக்கிரம் எழுந்து, மெய்ப் பொருணுயனுரை எழுப்ப; அவர் விழித்தெழுந்து, அவனை எதிர்கொண்டு வணங்கி நின்று, ‘சுவாமீ, தேவரீர் இங்கே எழுந்தருளுதற்குக் காரணம் யாது" என்று வினவினர். அதற்கு முத்திநாதன் 'உங்கள் கடவுளாகிய பரமசிவன் ஆதிகாலத்திலே அருளிச்செய்த சைவாகமங்களுள் எவ் விடத்துங் காணப்படாத ஒராகமத்தை உமக்குப் போதிக் கும்படி கொண்டுவந்தேன்’ என்ருரன். மெய்ப்பொருணுய னர் அதைக் கேட்டு 'இதைப்பார்க்கிலும் உயர்ந்த பேறு அடியேனுக்கு உண்டோ? அந்தச் சைவாகமத்தை வாசித்து அடியேனுக்கு அதன் பொருளை அருளிச்செய்ய வேண்டும்’ என்று பிரார்த்திக்க; முத்திநாதன் 'பட்டத் தரசி இல்லாமல் நீரும் நானும் வேறிடத்திருக்கவேண்டும்? என்றன். உடனே மெய்ப்பொருணுயனர் தம்முடைய மனைவியாரை அந்தப்புரத்துக்குப் போம்படி செய்து, பொய்வேடங்கொண்ட முத்திநாதனை ஆசனத்தின்மேல் இருக்தி, தாம் கீழே இருந்துகொண்டு, ‘இனி அருளிச் செய்யும்’ என்ருரர். முத்திநாதன் தன் கையில் இருந்த வஞ்சகக் கவளிகையை மடியின்மேலே வைத்து, புத்தகம்
 

மெய்ப்பொருணுயனர் புராணம் 17
அவிழ்ப்பவன்போல அவிழ்த்து, மெய்ப்பொருணுயனர் வணங்கும்போது, அக்கவளிகையில் மறைத்து வைத்த உடைவாளை எடுத்து, அவரைக் குத்த, அவர் சிவவேடமே மெய்ப்பொருளென்று, அவனை வணங்கினர். அம்முத்தி நாதன் உள்ளே புகுந்தபொழுதே, 'இராசாவுக்கு என்ன அபாயம் சம்பவிக்குமோ” என்று மனசை அங்கேயே செலுத்திக் கொண்டிருந்த தத்தனென்பவன் நொடியள வில்ே உள்ளே புகுந்து, தன்கைவாளினல் அப்பகைவனை வெட்டப்போனன். அதற்குமுன் உடைவாளினல்ே குத் தப்பட்டு இரத்தஞ்சொரிய விழப்போகின்ற மெய்ப்பொரு | ணுயனர், விழும்பொழுது 'தத்தனே, இவர் சிவனடியா ராதலால் இவருக்கு ஓரிடையூறும் செய்யாதே’ என்று கையினலே தடுத்து விழுந்தார். அப்பொழுது தத்தன் மெய்ப்பொருணுயனரைத் தலையினல் வணங்கி, அவரைத் தாங்கி, ‘அடியேன் செய்யவேண்டிய குற்றேவல் யாது? என்று கேட்க, மெய்ப்பொருணுயனர் “வழியிலே இவ ருக்கு யாவரொருவரும் இடையூறு செய்யாதபடி இவரை அழைத்துக்கொண்டுபோய் விடு' என்று சொன்னர். அப் படியே தத்தன் முத்திநாதனை அழைத்துக்கொண்டு போம் பொழுது அம்முத்திநாதன் இராசாவைக் குத்தின சங் கதியை அறிந்தவர்களெல்லாரும் அவனைக் கொல்லும்படி வந்து சூழச்சூழ, அவர்களெல்லாரையும், 'இந்தச் சிவபத் தருக்கு ஒருவரும் இடையூறுசெய்யாதபடி இவரை அழைத் துக்கொண்டுபோய் விடும்பொருட்டு இராசாவே எனக்கு ஆஞ்ஞாபித்தார்? என்று சொல்லி, தடுத்தான். அவர்க ளெல்லாரும் அதைக் கேட்டவுடனே பயந்து நீங்கிவிட: தத்தன் அவனை அழைத்துக்கொண்டு நகரத்தைக் கடந்து சென்று, அவனுக்குரிய நாட்டுவழியிலே அவனே விட்டு, நகரத்துக்குத் திரும்பி, சிவவேடங்கொண்ட முத்திநாதனை யாதொரு இடையூறும் வராமல் அழைத்துக்கொண்டுபோய் விட்ட சமாசாரத்தைக் கேட்பதற்கு விரும்பி முன்னேயே நீங்கிவிடக்கூடிய உயிரைத் தாங்கிக்கொண்டிருக்கும்
3

Page 13
18 விறன்மிண்டநாயன0 Lgr 6007th
மெய்ப்பொருணுயனருக்கு முன் و 0لئے آئ6 مئی 60 کر வணங்கி நின்று, :இவபத்தரை இ-ைழ்சி ஒன்றும் வராதபடி கொண்டு
இபாய் விட்டேன்’ என்று இசான்னன். அதைக்கேட்ட
மெய்ப்பொருணுயனர் இன்றைக்கு 房 எனக்குச்செய்த உபகாரத்தை வேருர் செய்ய துல்லவர்' என்று சொல்லி, பின்பு தமக்குப் சாளுததற்குரி குமாரர்களையும் மந்திரி முதலானவர்களையும் ஒநாக்கி, சைவாகமவிதிப்படி பாதுகாக்கும்படி போ
விபூதிமேல் வைதத அன்பை ' o தித்து, கனகசபையிலே ந்ைத தாண்டம் செய்தருளு கின்ற சபாநாதரைத் தியானம் பண்ணினர். அப்பொழுது 吁Lr历r函f ப்ேபொருணுயஆகு தோன்றி, அவ ரைத் தம்முடைய திருவடியிலே டூர்த்தருளினர்.
ஒரு சிற்றம்பலம்
سمس سے
விறன்மிண்டநாயனர் புராணம்
மஜலநாட்டிலே, செங்குன்று? வேளாளர்குலத் திலே, பரமசிவனுடைய திருவ 与于初 மனசில் இருத்தி உட் பற்றுப் புறப்பற்றுக்களே றத்தவரும் அடியார் பத்தி யிலே உயர்வொப்பில்லாதவருமா இய விறன்மிண்டநாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவ போனபொழுதெல்லாம், ഴങ്ങ് அடியார் திருக்கூட்டங் களுக்கு எதிரே போய், அவர்களே வணங்கிக்கொண்டே ஒவபெருமானே வனங்குகின்ற' அவர் தாம் வசிக் கின்ற மலைநாட்டை رg 60 كمر ويقرظ தலங்களினும் சஞ்சரித்து, ஒவனடியார்கள் ஒழுகும்ஒழுக்' அனுசரித்து, திருவா ஞ் செய்துகொண்டிருந்தார்.
f, சிவஸ்தலங்களுக்குப்
ரூரை அடைந்து, வாமிதரிச9
ஒருநாள் சுந்தரமூர்த்திநா9 தேவாசிரயமண்டபத் தில் எழுந்தருளியிருக்கின்றி சிவனடியார்களே அடைந்து asá5TD命 ஒருபிரகாரம் ஒதுங்கிச் சென்றதை அவ் விறன்மிண்டநாயனுர் கண்டு) அடியார்களே வணங்காமற் செல்கின்ற வன்றெண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு
 

அமர்நீதிநாயனுர் புராணம் 19
அவனை வலிய ஆட்கொண்ட பரமசிவனும் புறகு' என்ருரர். சுந்தரமூர்த்தி நாயனர் அவ்விறன்மிண்டநாயனரிடத்தி லுள்ள சங்கமபத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கண் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத் தைப் பாடினர். அதைக்கேட்ட விறன்மிண்டநாயனர் மிக மகிழ்ந்து, 'இவ்வன்ருெரண்டருடைய மனம் அடியாரிடத் திலே பதிந்திருக்கின்றது' என்று அருளிச்செய்தார். இங் தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனுர் அவ் விறன்மிண்டநாயனரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங் களுக்குத் தலைவராக்கியருளினர். -
திருச்சிற்றம்பலம்,
அமர்நீதிநாயனர் புராணம்
சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசி யர்குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும், சிவனடியார் களைத் திருவமுது செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கங்தை கீள் கோவணம் என்பவைகளைக் கொடுப்பவரு மாகிய அமர்நீதிநாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரி சனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவ னடியார்களைத் திருவமுது செய்வித்துக் கொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.
இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிரா மணவருணத்துப் பிரமசாரிவடிவங்கொண்டு, இரண்டு கெளமீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தத் திரு மடத்திற்கு எழுந்தருளிவந்தார். அது கண்ட அமர்நீதிநாய னர் மன மகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, ‘சுவாமீ, தேவரீர் இங்கே எழுங் தருளிவருதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்

Page 14
20 அமர்நீதிநாயனர் புராணம்
தேனே' என்று இன் சொற்சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, “நீர் அடியார்களைத் திருவமுதுசெய். வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கங்தைகளும் கீள் கெள பீனங்களும் கொடுக்கின்றிர் என்பதைக் கேள்வி யுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்’ என்றர். அதுகேட்ட அமர்நீதிநாயனர் 'இந்தத் திருமடத்திலே பிரா மணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம்பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்? என்று பிரார்த்தித்தார். பிரம சாரியர்னவர் அதற்கு உடன்பட்டு, 'நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். ஒருபோது மழை வரினும் தரித்துக்கொள்ளும்பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளட்பீனத்தை வைத்திருந்து தாரும்' என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெள பீனங் களில் ஒன்றை அவிழ்த்து, 'இந்தக் கெளட்பீனத்தின் மகி மையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக்கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்' என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்கானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனர் அந்தக் கெளமீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்துவைத்தார்.
ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர் நீதிநாயனர் சேமித்துவைத்த கெளட்பீனத்தை அது வைக் கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீங்கும்படி செய்து, ஸ்கா னஞ்செய்துகொண்டு, மழைபொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனர் அது கண்டு எதிர்கொண்டு, சேமையலாயிற்று' என்று சொல்லி வணங்க; பிரமசாரி யார், இனி அங்காயனருடைய அன்பாகிய ஜலத்திலே முழுகவேண்டி, அவரை நோக்கி, ‘ஈரம் மாற்றவேண்டும். தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளட்பீனமோ ஈரமாயிருக் கின்றது. உம்மிடத்திலே தந்த கெள பீனத்தைக் கொண்டு வாரும்' என்ருரர். அமர்நீதிநாயனர் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து கெளடபீனத்தைக் காணுதவராகி, திகைத்து, மற்றையிடங்களிலுங் தேடிக் காணுமையால் மிகுந்த துக்கங்கொண்டு வேருெரு கெளமீனத்தை எடுத்
 

அமர்நீதிநாயனுர் புராணம் 2.
துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன்சென்று, ‘சுவா மீ தேவரீர் தந்த கெளட்பீனத்தை வைத்த இடத்தி லும் பிறவிடங்களிலுங் தேடிக் கண்டிலேன். அது போன விதம் இன்னதென்று அறியேன். வேருெரு நல்ல கெளட்பீனம் கொண்டுவந்தேன். இது கிழிக்கப் பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளட்பீனத்தைக் களைந்து, இங் தக் கெளட்பீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற் றத்தைப் பொறுத்தருளும்’ என்று பிரார்த்தித்தார். அதைக் கேட்ட பிரம சாரியார் மிகக் கோபித்து, 'உம் முடைய நிலைமை நன்ரு யிருக்கின்றது. நெடுநாட் கழிந் ததுமன்று; இன்றைக்கே நான் உம்மிடத்தில் வைத்த கெள பீனத்தைக் கவர்ந்துகொண்டு, அதற்குப் பிரதியாக வேருெரு கெள பீனத்தை ஏற்றுக்கொள்ளுமென்று நீர் சொல்வது என்னே! சிவனடியார்களுக்கு நல்ல கெள பீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என் னுடைய கெள பீனத்தைக் கவர்தற்கோ? நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்ற யிருக்கின்றது' என்று சொல்ல; அமர்நீதிநாயனர் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, ‘சுவாமீ, அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண் டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக் கோவணமன்றி வெகு பொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன், ஏற்றுக்கொள்ளும்' என் ருரர். அதற்குப் பிரம்சாரியார் கோபந் தணிந்தவர்போ லத் தோன்றி, ‘பொன்களும் பட்டாடைகளும் இரத்தி னங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகி யாகிய கெளட்பீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளட்பீனம் தந்தாற் போதும்' என்று சொல்ல, அமர்நீதிநாயனர் மனமகிழ்ந்து, ‘எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெள பீனத்தைத் தரல்வேண்டும்' என்று கேட்டார். பிரமசாரி யார் 'நீர் இழந்த கெள பீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளட்பீனம் இது' என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெள பீனத்தை அவிழ்த்து, 'இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளரீ னத்தை நிறுத்துத் தாரும்’ என்ருரர். அமர்நீதிநாயனுர், 'மிக நன்று' என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டு

Page 15
22 அமர்நீதி நாயனர் புராணம்
வந்து நாட்ட, பிரமசாரியார் அந்தக் கெளமீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனர் தம்முடைய கையி லிருந்த நெய்யப்பட்ட கெள பீனத்தை மற்றத் தட்டிலே வைத்தார். அது ஒத்த நிறையிலே நில்லாமல் மேலெழுக் தது. அதைக் கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்க ளெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்ருரக இட இட, பின்னும் தூக் கிக்கொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பல வஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டு வந்து இட இட, பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப் பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத் தட்டு மேலே எழும்ப; கெள பீனத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அமர்நீதிநாயனர் அதைக் கண்டு மிக அஞ்சி, பிரமசாரியாரை வணங்கி, “எண்ணிறந்த வஸ்திரப் பொதிகளையும் நூற் கட்டுக்களையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத் திரவியங்களையும் இத் தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்’ என்ருரர். அதற்குப் பிரமசாரியார், ‘இனி நாம் வேறென்ன சொல் லுவோம்! மற்றத் திரவியங்களையும் இட்டுப் பாரும். எப் படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்க வேண்டும்’ என்ருரர். அமர்நீதிநாயனர் நவரத்தினங்களை யும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமை சுமையாக எடுத்துவந்து இட இட, தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனுர் அதைக் கண்டு பிரம சாரியாரை வணங்கி, ‘என்னுடைய திரவியங்களில் ஒன் றும் சேவுதியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின் ருேம். தேவரீருக்குப் பிரீதியாகில், இனி அடியேங்களும் இத் தட்டில் ஏறுவதற்கு அனுமதி தந்தருளும்' என்ருரர். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.
அதுகண்டு, அமர்நீதிநாயனர் மனமகிழ்ந்து, பிரம சாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திர ரோடும் தராசை வலஞ்செய்து, 'சிவனடியார்களுக்குச் செய்யுங் திருத்தொண்டிலே அடியேங்கள் தவருமல் இருந் தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்
 

அமர்நீதிநாயனுர் புராணம் 23
தட்டு மற்றத் தட்டுக்கு ஒத்துகிற்கக் கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி, பூரீ பஞ்சாகஷரத்தை ஒதிக்கொண்டு, மகிழ்ச்சி யோடு தட்டிலே ஏறினர். ஏறினவுடனே, பரமசிவ னுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளட்பீனமும் பத்தி யிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனருடைய அடி மைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற் புதத்தைக் கண்டவர்க ளெல்லாரும் அமர்நீதிநாயனரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகா யத்தினின்றும் கற்பகவிருகஷங்களின் புஷ்பங்களை மழை போலப் பொழிந்தார்கள். திருக்கைலாசபதி தாங் கொண்டுவந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத் திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி, தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத்தட்டிலேதானே நின்று கொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனுர் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர்மேலும் திருவரு ணுேக்கஞ் செய்து, “நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக் கொண்டிருங்கள்’ என்று அருளிச்செய்து, மறைந்தருளி னர். அமர்நீதிநாயனரும், அவர் மனைவியாரும், புத்திர ரும் அக்கடவுளுடைய திருவருளினல் அந்தத் தராசுதானே
தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோ கத்தை அடைந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்,
தில்லைவர் ழந்தணர் சருக்கம் pf றுப்பெற்றது.
grassa arma
,哆。

Page 16
இரண்டாவது, இலை மலிந்த சருக்க ம் qSASSSSSMMqMMeLS0YLMMMSeAASAAA AASAAAASSSSSS எறிபத்தநாயனர் புராணம்
கொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடி யார்களுக்குத் திருத் தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவ்வாபத்துக்குக் காரணரா யிருந்தவர்களை மழுவினல் வெட்டுகின்றவருமாகிய எறி பத்தநாயனர் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவர் தினந்தோறும் புஷ்பங் கொய்து, திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார். ஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்துபோய், ஸ்நானஞ்செய்து வாயை வஸ்திரத்தினலே கட்டி, திருநந்தனவனத்துக்குப் போய், புஷ்பங்களை அல ருஞ்சமயத்திலே கொய்து, திருப்பூங்கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏக்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித் தாமங் கட்டிச் சாத்தும்பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கிச் சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அங் நகரி லிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனுளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப் பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மே லேறிய பாகர்களோடும் ஒரு வீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின் ருெரடர்ந் தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது. அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக்
 

எறிபத்தநாயனர் புராணம் 25
கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டுபோக; சிவ காமியாண்டார் பதைபதைத்துக் கோபித்து, அந்த யானை
யைத் தண்டினல் அடிக்கும்படி அதற்குப் பின்னே போ னர். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகா கதிகொண்டு சென்றது. சிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவ ராகி, தவறி விழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதி துக்கங்கொண்டு, ‘தேவரீருக்குச் சாத்தும் படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா? என்று சொல்லி ஒலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனர் கேட்டு, மிகக் கோபித்து, மழுவை எடுத்துக்கொண்டு ஓடிவந்து, சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி, "உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய்விட்டது' என்று கேட்க, அவர் சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்தி விட்டு இந்தத் தெருவழியேதான் போகின்றது என்றர். உடனே எறிபத்தநாயனர் அதிக கோபங்கொண்டு அதி சீக்கிரம் ஒடிப்போய், யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனர்மேலே திரும்ப; எறிபத்தநாயனர் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணித்தார். அப்பொழுது யானை கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்தநாயனர் அதற்குமுன் னேடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன்மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று கின்ருரர்.
அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப் போய், புகழ்ச்சோழநாயனருடைய வாயிற் காவலாளரை நோக்கி, 'பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்றுபோட்டார்கள். இதை மகாராஜாவுக்கு விண் ணப்பஞ் செய்யுங்கள்' என்று சொன்னர்கள். உடனே

Page 17
26 எறிபத்தநாயனர் புராணம்
வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அர சர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங் கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைக ளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடங் தரித்த எறிபத்தநாயனுரை மாத்திரம் கண்டு, யானையைக் கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, 'யானை யைக் கொன்றவர் யாவர்? என்று கேட்டார். பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, “மழுவைத் தரித்துக் கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன் றவர்’ என்ருரர்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனர் ‘இவர் சிவபத்தாாகையால் அந்த யானே குற்றஞ்செய்தா லன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ் செய் ததுபோலும்' என்று நினைக் து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின் றும் இறங்கி, 'இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினலே இவருக்கு யாதொரு அபாயமும் சம் பவியாமல் இருக்கும்படி பூர்வ சன்மத்திலே தவஞ்செய்
திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்
ளும்படி என்ன பிழை உண்டாயிற்றே" என்று சொல்லிப் பயந்து, எறிபத்த5ாயனர் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, சுவாமீ, தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். இது நிற்க, இந்த யானே செய்த குற்றத்தின்பொருட்டு இதனைப் பாகரோடு கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லியரு ளும்' என்ருரர். எறிபத்த5ாயனர் புகழ்ச்சோழநாயனுரை நோக்கி, ‘சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினல், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதை விலக்காதபடி யால், அவர்களையுங் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்' என்ருரர். புகழ்ச்சோழநாயனா
 

எறிபத்தநாயனுர் புராணம் 27
அதைக் கேட்டுப் பயந்து, எறிபத்தநாயனரை வணங்கி,
உறையினின்றும் உருவி, 'இதினலே கொன்றருளும்’ என்று நீட்டினர். எறிபத்தநாயனர் அதைக்கண்டு, அவ ருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டிய வாளை வாங்காமல் சிறிது பொழுது தாழ்த்து நின்று, பின்பு அவர்கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக்கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினர். வாங்கிய எறிபத்த நாயனுரைப் புகழ்ச்சோழநாயனர் வணங்கி நின்று, 'இந் தச் சிவபத்தர் தமியேனை வாளினலே கொன்று என் குற் றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்’ என்ருரர். எறிபத்தநாய னர் அதைக் கேட்டு, மிக அஞ்சி, பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும் படி கேட்கின்ற புகழ்ச்சோழ ராசாவுக்குத் தீங்கு நினைத் தேனே' என்று எண்ணி, 'முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு’ என்று நினைத்து, அந்த வாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத்தொடங்கி னர். அதுகண்ட புகழ்ச்சோழநாயனர் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள, அவர் தம்முடைய எண்ணம் நிறை வேருமையால் வருந்தி நின்றார்.
அப்பொழுது அளவிறந்த அன்பினலே அவ்விருவ ருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினலே, 'அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும்பொருட்டு இன்

Page 18
28 ஏனுதிநாதநாயனர் புராணம்
றைக்கு யானை புஷ்பத்தைச்சிதறும்படி பரமசிவன் அருள் செய்தார்” என்று ஒரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுங் தது. உடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப் பொழுது எறிபத்தநாயனர் கழுத்திற்பூட்டிய வாளைவிட்டுப் புகழ்ச்சோழநாயனருடைய பாதத்திலே விழுந்து நமஸ் கரித்தார். புகழ்ச்சோழநாயனரும் அந்த வாளை எறிந்து விட்டு, எறிபத்தநாயனருடைய பாதத்திலே விழுந்து நமஸ் கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித் தார்கள். பரமசிவனுடைய திருவருளினலே திருப்பூங் கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமி யாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பாகர்கள் பட்டவர்த்தன யானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழ நாயனர் முன் வந்தார்கள். எறிபத்த5ாயனர் புகழ்ச்சோழ நாயனரை அஞ்சலிசெய்து, ‘அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச் செல்லும்' என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழநாயனர் அவரை வணங்கி, யானையின் மேலேறிக்கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகை யை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலேகட்டிச் சாத்தும் படி போனுர், எறிபத்தநாயனர் இப்படியே அடியார்க ளூக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக் குத் தலைவரானர்.
திருச்சிற்றம்பலம்.
f ബ
ஏனுதிநாதநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, எயினனூரிலே, சான்ருர்குல, திலே, விபூதியில் மகாபத்தியுடையவராகிய ஏனதிநாத என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசர்களுக்கு வா
 

܀
GJდ9) திநாதநாயனர் புராணம் 29
வித்தையைப் பயிற்றி, அதனல் வந்த வளங்கள் எல்லாவற் றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்து வந்தார்.
இப்படி நிகழுங்காலத்தில், வாள்வித்தை பயிற்றலிலே அவரோடு தாயபாகம் பெற்ற அதிசூரன் வாள்வித்தை பயிற்றுதலினல் வரும் ஊதியம் நாடொறும் தனக்குக் குறைதலையும் ஏனதி5ாதநாயனருக்கு வளர்தலையும் கண்டு, பொருமையுற்று, அவரோடு போர்செய்யக் கருதி, வீரர் கூட்டத்தோடும்போய், அவர் வீட்டுத் தலைக்கடையில் நின்று, போர் செய்தற்கு வரும்படி அழைக்க, ஏனதிநாத நாயனர் யுத்த சங்கத்தராகிப் புறப்பட்டார். அப்பொழுது அவரிடத்திலே போர்த்தொழில் கற்கும் மாணுக்கர்களும் யுத்தத்திலே சமர்த்தர்களாகிய அவர்பந்துக்களும் அதைக் கேள்வியுற்று, விரைந்து வந்து, அவருக்கு இரண்டுபக்கத் திலும் சூழ்ந்தார்கள். போருக்கு அறை கூவிய அதிசூரன் ஏனதிநாதநாயனரை நோக்கி, “நாம் இருவரும் இதற்குச் சமீபமாகிய வெளியிலே சேனைகளை அணிவகுத்து யுத்தஞ் செய்வோம். யுத்தத்தில் வெற்றிகொள்பவர் எவரோ அவரே வாள்வித்தை பயிற்றும் உரிமையைப் பெறல்வேண் டும்’ என்று சொல்ல; ஏனதிநாதநாயனூரும் அதற்கு உடன் பட்டார். இருவரும் தங்கள் தங்கள் சேனைகளோடு அவ் வெளியிலேபோய், கலந்து யுத்தஞ்செய்தார்கள். யுத்தத் திலே அதிசூரன் ஏனதிநாதநாயனருக்குத் தோற்று, எஞ் சிய சில சேனைகளோடும் புறங்காட்டி யோடினன்.
அன்றிரவு முழுதும் அவன் தன்னுடைய தெளர்பலி
யத்தை நினைந்து, நித்திரையின்றித் துக்கித்துக்கொண்டி
ருந்து, ஏனதிநாதநாயனரை வெல்லுதற்கேற்றஉபாயத்தை ஆலோசித்து, வஞ்சனையினலே ஜயிக்கும்படி துணிந்து,
விடியற்காலத்திலே 15மக்கு உதவியாக நம்முடைய ஊர
வர்களை அழைத்துக்கொள்ளாமல் நாம் இருவரும் வேறே
ரிடத்திலே ப்ோர்செய்வோம், வாரும்” என்று ஏனுதிநாதி
நாயனருக்குத் தெரிவிக்கும்படி ஒருவனை அனுப்பினன்.

Page 19
30 ஏணுதிநாதநாயனுர் புராணம்
ஏனதிநாதநாயனர் அதைக் கேட்டு, அதற்கு உடன்பட்டுத் தம்முடைய சுற்றத்தவர்கள் ஒருவரும் அறியாதபடி வாளை யும் பரிசையையும் எடுத்துக்கொண்டு, தனியே புறப்பட்டு, அவ்வதிசூரன் குறித்த யுத்தகளத்திலே சென்று, அவ லுடைய வரவை எதிர்பார்த்து நின்ருரர். முன்னுெருபொழு தும் விபூதி தரியாத அதிசூரன், விபூதி தரித்தவர்களுக்கு ஏனதிநாதநாயனர் எவ்விடத்திலும் துன்பஞ்செய்யார் என் பதை அறிந்து, நெற்றியிலே விபூதியைப் பூசி, வாளையும் பரிசையையும் எடுத்துக்கொண்டு தான் குறித்த யுத்த களத்திற் சென்று, அங்கு நின்ற ஏணுதிநாதநாயனரைக் கண்டு, அவர் சமீபத்திலே போம்வரைக்கும் நெற்றியைப் பரிசையினல் மறைத்துக்கொண்டு, அவருக்கு முன்னே முடுகி நடந்தான். ஏனதிநாதநாயனர் அவ்வதிகுரனைக் கொல்லுதற்குச் சமயங்தெரிந்துகொண்டு அடிபெயர்த் தார். அப்பொழுது அதிசூரன் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த பரிசையைப் புறத்திலே எடுக்க; ஏனுதிநாத நாயனர் அவனுடைய நெற்றியிலே தரிக்கப்பட்ட விபூதி யைக் கண்டார். கண்டபொழுது 'ஆ கெட்டேன்! முன் ஒருபொழுதும் இவர் நெற்றியிலே காணுத விபூதியை இன் றைக்குக் கண்டேன். இனி வேறென்ன ஆலோசனை! இவர் பரமசிவனுக்கு அடியவராய்விட்டார். ஆதலால் இவ ருடைய உள்ளக்குறிப்பின் வழியே நிற்பேன்’ என்று திருவுள்ளத்திலே நினைந்து, வாளையும் பரிசையையும் விடக் கருதி, பின்பு ‘கிராயுதரைக் கொன்ற தோஷம் இவரை அடையாதிருக்கவேண்டும்’ என்று எண்ணி, அவைகளை விடாமல் எதிர்ப்பவர்போல நேராக நிற்க; பாதகனுகிய அதிசூரன் அவரைக் கொன்ருரன். அப்பொழுது LUETUD சிவன் அவருக்குத்தோன்றி, அவரைத் தம்முடைய திரு வடியிலே சேர்த்தருளினர்.
திருச்சிற்றம்பலம்,
ఆశాజాa====
 

கண்ணப்பநாயனர் புராணம்
பொத்தப்பி நாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவிபெயர் தத்தை; அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு, குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணிய சுவாமியுடைய சங் நிதானத்திலே சேவற்கோழிகளையும் மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டுவந்தார்கள். சுப்பிரமணிய சுவாமியுடைய திருவருளினலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத் திரனைப் பெற்ருள். அப்பிள்ளையை நாகன் தன்கையிலே எடுத்தபொழுது திண்ணென வாயிருந்தபடியால், அதற்குத் திண்ணன் என்றுபெயரிட்டான். அத்திண்ணனர் வளர்ந்து, உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகா சமர்த்தராயினுர், நாகன் வயோதிகனனபடியால், வேட்டை முயற்சியிலே இளைத்தவனகி, தன்னதிகாரத் தைத் தன் புத்திரராகிய திண்ணனருக்குக் கொடுத்தான்.
அந்தத்திண்ணனர் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினர். வேட்டையாடும்பொழுது, ஒரு பன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஒடியது. அதைக் கண்ட திண்ணனர் அதைக் கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்ருரர். நாணன் காடன் என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினர்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஒடிப்போய், இளைப் பினுலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனர் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடை வாளையுருவி அதனே இருதுண்டாகும்படி குத்தினர். காண னும் காடனும் இறந்து கிடந்த அந்தப் பன்றியைக்கண்டு, திண்ணனுரை வியந்து வணங்கி, 'நெடுந்தூரம் நடந்துவந்த படியால் பசி நம்மை மிக வருத்துகின்றது. நாம் இந்தப்

Page 20
32 கண்ணப்பநாயனர் புராணம்
பன்றியை நெருப்பிலே காய்ச்சித்தின்று, தண்ணீர் குடித் துக்கொண்டு, வேட்டைக்காட்டுக்கு மெல்லப் போவோம்? என்ருரர்கள். திண்ணணுர் அவர்களை நோக்கி, 'இவ்வனத் திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது' என்று கேட்க, Bாணன் 'அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனல், மலைப்பக்கத்திலே பொன்முக லியாறு ஓடுகின்றது” என் முன். அதைக் கேட்ட திண்ணனர் 'இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டுவாருங்கள். நாம் அங்கே தானே போ வோம்’ என்று சொல்லி, அதை நோக்கி, நடந்து, அரைக் காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக்கண்டு, நாணனை நோக்கி, நமக்கு முன்னகத் - தோன்றுகின்ற மலைக்குப்போவோம்' என்று சொல்ல; நாணன் 'இந்த மலையிலே குடுமித்தேவர் இருக்கிருரர். நாம் போனுற் கும்பிடலாம்' என்ருரன்,
s
திண்ணனர் "இந்த மலையைக் கண்டு இதை அணுக
அனுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்
றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்? என்று சொல்லி, அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரை ந்து சென்று, பொன்முகலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரகிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனை5ோக்கி, ‘தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு, நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு வந்து சேருவோம்? என்று சொல்லி, நாணனேடும் அந்தப் பொன்முகலிடுதி யைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச்சென்று, சிவலிங்கப்பெருமான் எழுந்தருளியிருத்த ஜலக் கண்டார். கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசன வேதியினலே உருவம் மாறிப் பொன்மயமானற்போல
 

கண்ணப்பநாயனுர் புராணம் 33 முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானர். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் ஞெமுங்கும்படி அக் கடவுளைக் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்று சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங் கொள்ள, இரண்டு கண்களினின்றும் நீர் சொரிய, வெயிலிடைப்பட்ட மெழுகுபோல மனங் கசிந்துருக, “இங் தச் சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரி யம்' என்று சொல்லி ஆனந்தங்கொண்டார். 'ஐயை யோ சிங்கம் யானை புலி கரடி முதலிய துட்ட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது’ என்று சொல் லித் துக்கித்து, தம்முடைய கையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறியாதவராகிப் பரவசமடைந்தார். பின் ஒருவாறு தெளிந்து, 'இவருடைய முடியிலே நீரை வார்த் துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ’ என்றர். அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் 'நான் முற் காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ଓଡ଼୯୭ பிராமணன் இவர் முடியிலே நீரை வார்த்து, இலையையும் பூவையும் சூட்டி, உணவை ஊட்டி, சில வார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன். இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான்போலும்' என்றன். அதைக் கேட்ட திண்ண னர் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு "ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சி கொடுப் பார் ஒருவரும் இல்லை. இவர் இங்கே தனியே இருக்கின் ருரர். இறைச்சி கொண்டுவரும்பொருட்டு இவரைப் பிரி யவோ மனமில்லை. இதற்கு யாது செய்வேன்? எப்படி யும் இறைச்சி கொண்டுவரவேண்டும்' என்று சொல்லிக் கொண்டு, சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் போவார். கன்றை விட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல -9|6ն
5

Page 21
34 கண்ணப்பநாயனுர் புராணம்
ரிடத்திற்குத் திரும்பி வருவார். கட்டி அணைத்துக்கொள் வார். மீளப் போவார். சிறிது தூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். *சுவாமீ, நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச் சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டுவருவேன்' என்பார். நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக் குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவும் மாட்டேன். ஐ யையோ நான் யாது செய்வேன்' என்று சொல்லிக் கொண்டு கண்ணிர் இடைவிடாதுபொழிய நிற்பார். பின்பு ஒருபிரகாரம் போய்வரத் துணிந்து, வில்லை எடுத்துக் கொண்டு, கையினலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி, நாணன் பின்னே வர, பிற விஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்பு மயமாகி, பொன்முகலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புகுந்தார்.
அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு, “நெருப் புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவய வங்கள் எல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்றுபோயிற்று. நீர் இவ்வளவுநேரமும் தாழ்த்தது என்னை' என்ருரன். நாணன் அதைக் கேட்டு 'இவர் மலை யிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப் பொங்தைப் பற்றி விடாத உடும்பைப்போல அவரை நீங்க மாட்டாதவராய் நின்றர். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோ ம்பொருட்டு வங் திருக்கிருரர். எங்கள் குலத் தலைமையை விட்டுவிட்டார். அந்தச் சுவாமிவசமாய் விட்டார்’ என்ற ன். உடனே காடன் 'திண்ணரே, நீர் என்ன செய்தீர்? என்ன பைத் தியங் கொண்டீர்’ என்று சொல்ல, திண்ணனர் அவன் மூகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி,
 

கண்ணப்பநாயனுர் புராணம் 35
அதினுடைய இனிய தசைகளை அம்பினலே வெவ்வேருகக் கிழித்து, அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பத மாக வெந்தவுடனே, சுவை பார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச் சிக ளெல்லாவற்றையும் தேக்கிலையினலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல் லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், 'இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றர். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினல் அதுக்கி வீணுக உமிழுகின்ருரர். மற்றை யிறைச்சியைப் புறத்திலே எறிந்துவிடுகின்றர். தாம் மிகப் பசியுடைய ரா யிருந்தும், அதனை உண்கின்ற ரில்லை. எங்களுக்குத் தருகின்றருமில்லை. இவர் தெய் வப் பைத்தியங் கொண்டிருக்கின்றரர். இதனைத் தீர்க்கத் தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்க வேண்டும். வேட்டைக் காட்டிலே நிற்கின்ற ஏவலாளரை யும் கொண்டு நாங்கள் போவோம்' என்று நினைத்துக் கொண்டு போனர்கள்.
திண்ணனர் அவ்விருவரும் போனதை அறியாதவ ராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துக் கொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயில்ை முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒரு கையிலே வில்லையும் அம்பையும், மற்றக் கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக் கல்லையையும் எடுத்துக் கொண்டு "ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினல் இளைத்தாரோ' என்று நினைந்து இரங் \ கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருத்து தற்குத் தாழா தோடுகின்ற பறவைபோல மனுேகதியும் பின்னிட ஒடிப்போய்க் கடவுளை அடைந்தார். அடைந்து, " அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய

Page 22
36 கண்ணப்பநாயனர் புராணம்
காற் செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனைேரத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின்மேல் உமிழ்ந்து, தம் முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேலே சாத்தி, தேக்கிலேயிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்து, 'சுவாமீ, கொழுமையாகிய இறைச் சிக ளெல்லாவற்றையும் தெரிந்து, அம்பினுலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினல் அதுக்கி நாவினுலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்ற யிருக்கின்றது. எம்பெருமானே, இதை அமுது செய்தருளும் என்று சொல்லி, உண்பித்தார். பின் பு சூரியன் அஸ்தமயனமாயிற்று. திண்ணனர் அவ்விரவிலே துஷ்ட மிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ் செய்தல் கூடு மென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டு, மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக் குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றர். அப்படி நின்ற திண்ணணுர் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும்பொருட்டு வேட்டையாடுதற்கு மலைச்சார லுக்குப் போனர். அது நிற்க;
அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைக ளெல்லாம் திரண் டொரு வடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் மோகிப்பிக்க வல்ல மகா செளந்தரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் 5 (լք வினும் பரமாணுப் பரிமாணமாயினும் சித்தங் திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக் காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகம விதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர், பிராமி முகூர்த்தத்திலே எழுந்து போய், பொன்முகலியாற்றிலே ஸ்நானம்பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டு, சுவாமி சங்கிதானத்திலே போனர்.
 

கண்ணப்பநாயனர் புராணம் 37
போம்பொழுது, அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக்கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினர். ஒடிகின்று, ‘தேவாதிதேவரே, தேவரீருடைய சங்கி தானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டு வப் புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும். அவர்கள் இப்படிச் செய்துபோதற்குத் தேவ ரீர் திருவுளம் இசைந்தீரோ’ என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார். பின்பு ‘சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது' என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லை யையும் திருவலகினுல் மாற்றி, சம்புரோகவுணஞ் செய்து, மீளப் பொன்முகலியாற்றிலே ஸ்நானஞ்செய்து திரும்பி வந்து, வேதமந்திரத்தினலே சுத்திசெய்து, உருத்திரசமக நமகத்தினல் சுவாமிக்கு அபிஷேகம்பண்ணி, பத்திரபுஷ் பங்களால் அருச்சனை செய்தார். செய்து, திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின் மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்தபாஷ் பஞ்சொரிய, திரு மேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட
மெழுகுபோல மனம் மிக உருகி இளக, நாத் தழும்ப, கீத
நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினர். பாடிய பின் பலமுறை பிரதகSணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ் கரித்து, அருமையாக நீங்கிப்போய், தபோவனத்தை அடைந்தார். அது நிற்க. w
முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணணுர் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக் கொன்று, அவைகளின் இறைச்சியை முன் போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற் றேனப் பிழிந்து அதனேடு கலந்து, முன்போலத் திருமஞ் சனமும் புஷ்பமுங் கொண்டு, மலையிலே ஏறி, சுவாமி சங்கி தானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து, 'இந்த இறைச்சி முன் கொண்டுவந்தது போலன்று. இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின்

Page 23
38 . கண்ணப்பநாயனர் புராணம்
இறைச்சி. இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த் திருக்கின்றேன். தேனும் கலந்திருக்கின்றது. தித்திக்கும்' என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றர். அப்பொழுது முதனட்போன நாண னும் காடனும் ஆகிய இருவராலும் தன் புத்திரராகிய திண்ணணுருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனுரைப் பற்பல திறத்தினலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிங்தைநொந்து, ‘இனி யாது செய்வோம்’ என்று சொல்லிக்கொண்டு, அவரை விட்டுத் திரும்பிப் போய்விட்டான்.
சிவபெருமானேடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைபணி யின் வழுவாது நிற்குந் திண்ணனர், பகற்காலத்திலே மிரு கங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும். இராக் காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அரு கே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். சிவ கோசரியாரும் தினந்தோறும் வந்து, சங்கிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்தி செய்து சைவாகம விதிப்படி அருச்சித்துக்கொண்டு, 'இந்த அரு சிதம் நிகழாமல் அருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்து வந்தார். திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரிய (15 GOL — ULU மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு, ஐந்தாBா? இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்ற *அன்பனே, அவனை வேடுவன் என்று நினையாதே அ னுடைய செய்கைகளைச் சொல்வோம், கேள், அவனுடை உருவமுழுதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவே அவனுடைய அறிவு முழுதும் நம்மை அறியும் அறிே அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகி செய்கைகளே. நம்முடைய முடியின் மேல் உன்னலே ச1 தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செ( படி நம்முடைய குமாரனுகிய சுப்பிரமணியனுடைய கா னும்பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகி றது. அவன் தன் வாயினல் நம்மேல் உமிழுகின்ற ஐ
 

கண்ணப்பநாயனுர் புராணம் 89
மானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்றபடியால், கங்கை முத லாகிய புண்ணியதீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரி சுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலை மயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழு கல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர் கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற் றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன் பினல் உருகி இளகிய மனசினேடும் மென்று சுவை பார்த் துப் படைக்கப்பட்டபடியால், வேத விதிப்படி யாகம் செய் கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமா யிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதானத் தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினுேடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவா யிருக்கின்றன. அவ
னுடைய அன்பினுல் ஆகிய செய்கைகளே உனக்குக் ir காட்டுவோம், நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளித் r : திருந்துபார்’ என்று சொல்லி மறைந்தருளினர். சிவ 5, கோசரியார் சொப்பனுவத்தையை நீங்கிச் சாக்கிராவத் | 605 GOL அடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தைகளே கினைந்து நினைந்து, 'அறியாமையே
நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாக மாதி சாஸ்திரங்களிலே மகா பாண்டித்
தியமுடைய மாமுனிவர்கள் தேவர்களிடத்திலுங் காணப்
r函 படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்புவந்தது,
1O yy o
நப் ಙ್ಗಾಲ'ಕಲ' GTQುಖGTQ|೨|೮೮೦೨೮ಠಾಲೂ" argory): ஆச்சரிய
மும், "இப்படிப்பட்ட பேரன்ப்ர் செய்த அன்பின் செய்கை களைப் புழுத்த நாயினும் கடையனகிய பாவியேன் அநு சிதம் என்று நினைந்தேனே! ஐயையோ இது என்ன

Page 24
40 கண்ணப்பநாயனுர்புராணம்
கொடுமை? என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம்பண்ணி மலை யில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக் குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.
சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடு தற்குச் சென்ற திண்ணனர் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக் கொண்டு, அதிசீக்கிரங் திரும்பினர். திரும்பி வரும்பொ ழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, 'இந்தச் சகுனங்க ளெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என் கண்மணி போன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித் ததோ! அறியேனே' என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார். அடியார்களுடைய பத்திவலையில் அகப்படு கின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணணுருடைய அன்புமுழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட் டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினர். திண்ணணுர் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார். வந்தவுடனே, இரத்த ஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ் சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ் கின்ற நாடகப்பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார். விழுந்தவர் எழுந்து போய், இரத் தத்தைப் பலமுறை கையினலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப் போய் விழுந்தார். நெடும்பொழுது உள்ளுயிர்த்தலின்றி இறந்தவர்கள் போலக் கிடந்தார். பின் ஒருவாறு தெளிந்து, 'இப்படிச் செய்தவர்கள் யாவர்” என்று சொல் லிக்கொண்டு எழுந்தார். எங்கும் பார்த்தார். வில்2 யெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு, ‘என்னுடைய
 

கண்ணப்பநாயனுர் புராணம் " 4.
சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ? இந்த வனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ? யாதென்று தெரியவில்லையே' என்று சொல்லி, மலைப் பக்கங்களிலே நெடுந் தூரமட்டும் தேடிப் போனர். வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணுதவராகி, திரும்பி வந்து, குறைவில்லாத துன்பத்தி னலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணிர் சொரிய அழுதார். ‘என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினலே பிரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே ஐ யையோ! இதற்கு என்ன செய்வேன்' என்ருரர். 'இந்த உதிரம் என்ன செய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலை மருந்துகளை மலையடிவாரத் திலே பிடுங்கிக் கொண்டுவருவேன்' என்று சொல்லிக் கொண்டு போனர். தன்னினத்தைப் பிரிந்து வந்த இட பம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினுல் வெருட் கொண்டு, வனங்களெங்குங் திரிந்து, பலவகையாகிய பச் சிலைகளைப் பிடுங்கிக்கொண்டு, சுவாமிமேல் வைத்த மன சிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார். அதினுல் அக்கண்ணி லிரத் தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவி சோர்ந்து, ‘இனி நான் இதற்கு என்ன செய்வேன்' என்று ஆலோசித் துக்கொண்டு நின்ருரர். நிற்க, 'ஊனுக்கு ஊனிடல் வேண்டும்? என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வங் தது. உடனே, ‘இனி என்னுடைய கண்ணே அம்பினலே) இடங்து அப்பினல் சுவாமியுடைய கண்ணினின்று பாயும் இரத்தம் தடைப்படும்’ என்று நிச்சயித்துக்கொண்டு மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பை யெடுத் துத் தம்முடைய கண்ணேத் தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினர். அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந் தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினலே கொட்டி ஆரவாரித்தார், கூத்தாடினர். ‘நான் செய்த
6
ܓ.
ז'", ו"## ח", 基 ایسا نہ۔

Page 25
42 கண்ணப்பநாயனர் புராணம் செய்கை நன்று நன்று? என்று சொல்லி வியந்து, அத்தி யந்த ஆனந்தத்தினலே உன்மத்தர்போலாயினர். இப் படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும்பொழுது, திருக் காளத்தி யீசுரர் அந்தத் திண்ணணுருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங் கொண்டு, தம்முடைய மற்றை யிடக்கண்ணிலும் இரத் தஞ் சொரியப்பண்ணினர். அது திண்ணணுருடைய அள வில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றே னுெருவன் பின்னும் அங்கிரயத்திலே வீழ்ந்தாற்போல, திண்ணணுர் உவகை மாறி, கரையில்லாத துன்பக் கட லிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து, *இதற்கு நான் அஞ்சேன். மருந்து கைகண்டுகொண் டேன். இன்னும் ஒரு கண் இருக்கின்றதே! அதைத் தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்’ என்று. துணிந்து, தம்முடைய கண்ணேத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்தி லிருக்கின்றது என்று தெரியும்பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக்கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தி யாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணேத் தோண் டும்படி அம்பை வைத்தார். தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்ருரதவராகி, வேதாகமங்கள் தோன் றிய தம்முடைய அருமைத் திருவாய்மலரைத் திறந்து, நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப - என்னன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப' என்று அருளிச்செய்து, அவருடைய கண்ணேத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தான மாகிய இலிங்கத்திற் ருேன்றிய திருக்கரத்தினலே பிடி துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரு வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமா. பெய்தார்கள். மகாஞானியாகிய சிவகோசரியார் இ தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரி மடைந்து, சுவாமியை வணங்கினர். அற்றை நாள் மு
 

குங்குலியக்கலய நாயனர் புராணம் 43
லாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லியபடியே அவருக் குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிருரர்கள் நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன்வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருங் தவம் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள், ஆறு நாளுக்குள்ளே பெருகிய அன்புமேலிட்டி னலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணே இடந்து அத்திருநயனத்தில் அப்புங் திண்ணணுருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினலே பிடித்துக்கொண்டு, “கிஷ்களங்க பத் தியை யுடைய கண்ணப்பா, நீ நமக்கு வலப் பக்கத்திலே நில்' என்று திருவருள் புரிந்தார். இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பெரும் பேறு யாது?
திருச்சிற்றம்பலம்,
குங்குலியக்கலய நாயனர் புராணம் .1
சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக் குத் தினந்தோறும் குங்குலியத் தூபம் இட்டுவந்தார். இட்டுவருங் காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினலே அவருக்கு வறுமை யுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுங் திருப்பணியைத் தவருமல் நடத்திவந்தார், வறுமை மிகுதியினலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவான மையால், அவருடைய மக்களும் சுற்றத்தார்களும் வருந்தி னுாக ள,
ஒருநாள் அவர் மனைவியார், அரிசி முதலியன வாங்கு தற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டு நாளாகப் பட்

Page 26
44 குங்குலியக்கலய நாயனர் புராணம்
டினி யிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாை யும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவ கையிலே கொடுத்து, 'இகற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்' என்ருரர். குங்குலியக்கலய நாயனர் அந்தத் தாலியை வாங்கிக்கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனர். போம்பொழுது, வழியிலே ஒரு வணிகன் கும் குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக் கண்டு மனம் மகிழ்ந்து, ‘சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலி யத்தைப் பெற்றுக்கொண்டேன். இதிலும் பார்க்க மேலாகிய பேறு உண்டே' என்று சொல்லி, தப் முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்கும் குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக் கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும் பசியினலே வாடி அன் றிராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யுட் பொழுது, கருணுகரராகிய கடவுள் அவவிடு முழுதிலும் பொற் குவியலும் நெற் குவியலும் அரிசிக் குவியலு பிற வளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள் செய்து அம்மனைவியாருக்குச் சொப்பனத்திலே தோன்றி, அநு இரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசி இணுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய் கொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலய ந/ ருைக்குத் திருவமுது பாகம்பண்ணப் பிரயத்தனஞ் ெ தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக்கலய ந னருக்குத் தோன்றி, 'நீ மிகப் பசிகொண் டிருக்கின்ற உன் வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு து பத்தை ஒழி' என்று திருவாய்மலர்ந்தருளினர். குங்கு யக்கலய நாயனர் அதைக் கேட்டுக் கைகூப்பி வண அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அ6 அதனைச் சிரசின்மேலே வகித்து, திருக்கோயிலினின்
 

குங்குலியக்கலய நாயனர் புராணம் 45
நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனர் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்
குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி, 'இந்தச்
சம்பத்துக்களெல்லாம் எப்படி வந்தன' என்று கேட்க, அவர் ‘எம்பெருமானுடைய திருவருளினல் வந்தன' என் ருரர். அது கேட்ட நாயனர் ‘ஒன்றுக்கும் பற்ற த சிறி யேனையும் ஆட்கொள்ளும்பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ’ என்று கடவுளை வணங் கினர். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடி யார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலய நாய னர் பரமசிவனுடைய திருவருளினலே பெருஞ் செல்வ முடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார். -
இப்படி நடக்குங் காலத்திலே, திருப்பனந்தா ளென் னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந் திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடு தற்கு விரும்பி, இராஜாவானவர் தம்முடைய யானைக ளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற் றிருந்தார். குங்குலியக்கலய நாயனர் அந்தச் சமாசாரத் தைக் கேள்வியுற்று, சுவாமி தரிசனஞ் செய்யும் பொருட் டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை
நிமிரப்பண்ண வேண்டு மென்கின்ற ஆசையால் இராஜா
வருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங் கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்ருமையால் பூமி யின் மேலே வலி குறைந்து விழுந்து இளைத் தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, ‘‘அடியேனும் இளைப் பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண் டும்' என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு
இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி

Page 27
46 மானக்கஞ்சாற நாயனர் புராணம்
நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்த அக் கயிற்றி னுலோ! அன்று; அகத்திலே கட்டி இழுத்த அன்புக் கயிற்றினலேயாம். அதுகண்டு, இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பை யடைந்தார்கள். இராஜா குங்குலியக் ğ5 @) uLI (B5 ITULu@0)6O) JT நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு, தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.
குங்குலியக்கலயநாயனர் சிலநாள் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு அங்கே இருந்து, பின் தமது வாசஸ் தானமாகிய திருக்கடவூருக்குப் போய், தாஞ்செய்யுங் திருப்பணியைச் செய்துகொண் டிருந்தார். இருக்கு நாளிலே, அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிவந்த திரு
ஞானசம்பந்தமூர்த்தி நாயனரையும் திருநாவுக்கரசு நாய
னரையும் எதிர்கொண்டு, தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், திருவமுது செய்வித்து, அவர்களுடைய திருவருளையும் பரமசிவனுடைய திருவருளையும் பெற்ருரர். பின்னுஞ் சிலகாலம் அன்பு மேன்மேலும் பெருகப் பல திருப்பணிகளையுஞ் செய்துகொண்டிருந்து, சிவபதமடைந் தார்.
திருச்சிற்றம்பலம்.
மானக்கஞ்சாறநாயனர் புராணம் கஞ்சாறு ரிலே, வேளாளர்குலத்திலே, அரசர்களிடத் திற் பரம்பரையாகச் சேனதிபதி கியோகத்தில் இருக் ஒன்ற குடியிலே, சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்த மானக்கஞ்சாற5ாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங் கொண்டு, 9ள்2ளப்பேற்றின் பொருட்டுப் பரமசிவனை ഉ_r +ാT பண்ணி, அவரு1ை-11 திருவருளினல் ஒரு பெண் குழந்தையைப் பெற்ருர், அந்தப்பெண் வளர்ந்து
 
 

மானக்கஞ்சாற நாயனுர் புராணம் 47
மணப்பருவம் அடைய; ஏயர்கோன் கலிக்காமநாயனர் சில முதியோர்களே மானக்கஞ்சாறநாயன ரிடத்தில் அனுப்பி, அந்தப் பெண்ணேத் தமக்கு விவாகஞ்செய்து தரும்படி பேசுவித்து, அவர் அதற்கு உடன்பட்டமையை அறிந்து, சோதிடர்களாலே நிச்சயிக்கப்பட்ட சுபதினத்
திலே மணக்கோலங்கொண்டு, சுற்றத்தார்களோடும்
கஞ்சாறுருக்குச் செல்லும்படி பிரஸ்தானமானர்.
அவர் கஞ்சாறுாருக்கு வருதற்குமுன்னே, கருணுநிதி யாகிய பரமசிவன் ஒரு மகாவிரதி வடிவங்கொண்டு மானக் கஞ்சாறBாயனர் வீட்டுக்குச் சென்ருரர். அங்காயனர் அவ. ரைக் கண்டு எதிர்கொண்டு, உபசார வார்த்தைகளைச் சொல்லி, வணங்கினர். மகாவிரதியார் அந்நாயனரை நோக்கி, "இங்கே என்ன மங்கலகிருத்தியம் நடக்கப் போகின்றது' என்று வினவ; நாயனர் ‘அடியேனுடைய புத்திரியின் விவாகம் நடக்கப்போகின்றது' என்ருர், மகாவிரதியார் 'உமக்குச் சோபனம் உண்டாகுக’ என்று ஆசீர்வதித்தார். நாயனர் உள்ளே போய், மணக்கோலங் கொண்டிருந்த தமது புத்திரியை அழைத்துவந்து, மகா விரதியாரை வணங்கும்படி செய்தார். மகாவிரதியார் தம்மை வணங்கி எழுந்த பெண்ணினுடைய கூந் தலைப் பார்த்து, மானக்கஞ்சாற5ாயனுரை நோக்கி, 'இந்தப் பெண்ணினுடைய தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்கு * உத வும்’ என்ருரர். உடனே நாயனர் தம்முடைய உடைவாளை உருவி, 'இவர் இது கேட்டற்குச் சிறியேன் என்ன புண் ணியஞ் செய்தேனே' என்று, அந்தப் பெண்ணினுடைய கூந்தலை அடியிலே அரிந்து, அம்மகாவிரதியார் கையிலே நீட்ட, கடவுள் தாங்கொண்டு வந்த மகாவிரதி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே உமாதேவியாரோடும் இடபாரூட ராய்த் தோன்றினர். அது கண்டு, மானக்கஞ்சாறநாயனர் பரவசமாகி, அடியற்ற மரம்போல விழுந்து நமஸ்கரித்து
* பஞ்சவடி யாவது மயிரினுலே அகலமாக ச் செய்யப்பட்டு மார்
பிலே பூனூலாகத் தரிக்கப்படும் வடமாம், பஞ்சம்-விரிவு, வடிவடம்,

Page 28
48 அரிவாட்டாய நாயனுர் புராணம்
எழுந்து, அஞ்சலியஸ்தராகி நின்ருரர். சிவபெருமான் அம் மானக்கஞ்சாற நாயனருக்குத் தம்முடைய சங் நிதானத் திலே தம்முடைய பெருங்கருணைத் திறத்தைப் புகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பேற்றைக் கொடுத்து அந்தர்த் தானமாயினர்.
கலிக்கர்மநாயனுர் கஞ்சாறுTரிலே வந்து சேர்ந்து, அங்கே நிகழ்ந்த சமாசாரத்தைக் கேள்வியுற்று, மன மகிழ்ந்து, திருவருளைத் துதித்து, 'முண்டிதஸ்திரியை விவாகம்பண்ணுதல் சாஸ்திரவிரோதமன் ருே' என்று மனந்தளர்ந்து, அதற்குச் சிவபெருமான் 'கலிக்காமா, நீ மனந்தளரவேண்டாம். இந்தப் பெண்ணுக்குக் கூந்தலை மீளக் கொடுத்தருள்கின்ருேரம் ' என்று அருளிச் செய்த திருவாக்கைக் கேட்டு, மனத்தளர்ச்சி நீங்கி, முன் போலக் கூந்தலைப் பெற்ற அப் பெண்ணே விவாகஞ் செய்து கொண்டு, தம்முடைய ஊருக்குப் போய்விட்டார்.
திருச்சிற்றம்பலம்,
அரிவாட்டாயநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, கணமங்கலம் என் கின்ற ஊரில்ே, வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனர் என்பவர் ஒருவர் இருந் தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெலரிசியும் செங்கீரை யும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவு ளுடைய திருவருளினல் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு 5ெல் அறுப்பவராகி, தாங் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திரு வமுது செய்வித்து, கார்நெல்லைக்கொண்டு தாஞ்சீவனஞ் செய்து வந்தார். செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரி லிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல் லாகும்படி அருள்செய்ய, தாயனர் மனமகிழ்ந்து, தினங் தோறும் வயல்களுக்குப்போய் நெல்லறுத்து, கூலிவாங்கி, 'இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத் தால்’ என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பா ராயினர்.

அரிவாட்டாய நாயனுர் புராணம் 49
இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில் லாமைபற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க, தாயனர் அதையுண்டு முன்போலத் தாஞ் செய் யுங் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட் டத்திலுள்ள இலைக்கறி யெல்லாம் அற்றுப்போக, மனை வியார் தண்ணிர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப் பணியைச் செய்துவந்தார். இப்படிச் செய்துவருநாளிலே ஒருநாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது ச்ெய்விக் கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடு வும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக, மனைவி யார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னக நடந் தார். முன் செல்கின்ற தாயனர் பசியினலே கால் தள் ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினல் அவரை அஃணத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே சிந்திப்போகக் கண்டு, தாயனூர், ‘இனித் திருக்கோயிலுக்குப் போவதினற் பயன் யாது’ என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங் கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தரு ளும் பேற்றைப் பெற்றேனில்லையே' என்று அரிவாளி னலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினர். அப் பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும்பொருட்டுச் சிக சித் துப் பிரபஞ்சமெங் கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக் கரமும் மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந் தன. தாயனூர், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்த பொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிக மகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம்பண்ணிக்கொண்டு நின்றர். சிவபெருமான் இடபாரூடராய்க் தோன்றி, 'நீ நம்மேல் வைத்த அன்பினலே செய்த செய்கை நன்முயிருக்கின்
7

Page 29
50 ஆணுயநாயனுர் புராணம்
றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு' என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினர். அந்தத் தாயரென்பவர் "இங்கே சிந்திய வைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில் லையே' என்று துக்கித்து, அரிவாளினலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால் அவருடைய பெயர் அரி வாட்டாய நாயனர் என்ரு யிற்று,
திருச்சிற்றம்பலம்,
yra
ஆனயநாயனர் புராணம்
மழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை இடையர்க ளோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக்கொண்டும், காந்தருவவேதத்திலே சொல்லிய படி செய்யப்பட்ட வேய்ங்குழலினலே பூரீ பஞ்சாகஷரத் தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினலே புகட்டிக்கொண்டும் வருவார். *
கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுகிரை களைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானுய நாயனர் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரை காக் கும்படி காட்டுக்குச் சென்றபொழுது, அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரம சிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றை மரத்துக்குச் சமீபத்திலே போய், அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினலே உருகி இளகிய மனசை யுடையவராகி, வேய்ங்குழலினலே இசைநூலிலே விதித்தபடி பூரீ பஞ் சாகஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாகவுரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ள மானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ தருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்க் தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்
 
 

ஆணுயநாயனர் புராணம் 51.
கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக்கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட் டுக்கொண்டு கின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டு மிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீ பத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற் கூட்டங்கள் ஆடுத லொழிந்து அவர்பக்கத்தை அடைந்தன; மற்றைப் பல வகைப் பட்சிகளும் தங்கள் செவித் துவாரத்தினலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து உருகி நின்றன; மாடு மேய்த்துக்கொண்டு நின்ற இடை யர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்ருரர்கள்; விஞ்சையர்களும் சாரணர் களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமா னங்களி லேறிக்கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசை யைக் கேட்டு அதன்வசமானபடியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின்மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக் கொம்புகள்தாமும் சலியாதிருந்தன. இப் படியே சரம் அசரம் என்னும் ஆன்ம வர்க்கங்களெல்லாம் ஆனயநாயனருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு இசைமயமாயின. அவ்விசையைப் பொய்யன்புக் ககப் படாத பரமசிவன் கேட்டு, பார்வதி தேவியாரோடும் இடபாரூடராய் ஆகாய மார்க்கத்தில் எழுந்தருளிவந்து நின்று, அவ்வானுயநாயனர்மீது திருவருணுேக்கஞ் செய்து, * மெய்யன்பனே, நம்முடைய அடியார்கள் உன்னுடைய
வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது
இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்? என்று திருவாய் மலர்ந்தருளி, அவ்வானுயநாயனர் வேய்ங்
குழல் வாசித்துக்கொண்டு பக்கத்திலே செல்லத் திருக் ܓ
கைலாசத்தை அடைந்தருளினர்.
திருச்சிற்றம்பலம்,
இலைமலிந்த சருக்க முற்றுப்பெற்றது.
pzxeszel

Page 30
மூன்ருவது
மும்மையாலுலகண்ட சருக்கம்,
மூர்த்திநாயனர் புராணம்
பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, வைசியர் குலத் திலே, சிவபக்தியே ஒரு வடிவெடுத்தாற்போலும் மூர்த்தி நாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஸ்தலத் திலே வீற்றிருக்கின்ற சோமசுந்தரக் கடவுளுக்குத் தரிக் கும் பொருட்டுக் தினந்தோறும் சந்தனக் காப்புக் கொடுத்துவருங் காலத்திலே, கருணுடதேசத்தரசன் சது ரங்க சேனைகளோடும் அம்மதுரைக்கு வந்து, பாண்டிய னேடு யுத் தஞ்செய்து அவனை வென்று, அந் நகருக்கு அரசனுயினன். அவன் புறச் சமயிகளாகிய சமணர்க ளுடைய போதனசக்தியினலே ஆருகதமதத்திற் பிரவே சித்து, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்வானுயினன். ஆயினும் மூர்த்திநாயனர் தாஞ்செய்யுங் திருப்பணியைத் தவருது செய்துவந்தார்.
அது கண்டு, அரசன் அவரை ஆருகதமதத்திலே 19. It வேசிப்பித்தற்கு உத்தேசித்து, அவருக்குப் பல கொடுஞ் செய்கைகளைச் செய்தான். செய்தும், அவர் தம்முடைய திருப்பணியினின்றும் சிறிதும் வழுவாதவராயினர். அது பற்றி அவ்வரசன் அவர் சந்தனக்கட்டை வாங்குமிடங்களி லெல்லாம் அவருக்குக் கொடுக்கவொட்டாமற் றடுத்தான். அதனுல் அவர் மனநொந்து, 'இப்பாண்டிநாடு துர்ச்சமய மாகிய ஆருகத சமயத்திலே பிரவேசித்துச் சிவபுண்ணியத் துக்கு இடையூறு செய்கின்ற அதிபாதகனகிய இவ்வர சன் இறக்க, சற்சமயமாகிய சைவ சமயத்தை வளர்க்கின்ற அரசரைச் சாருங்காலம் எக்காலம்' என்று நினைந்து துக் கித்து, பகற்காலமுழுதும் சந்தனக்கட்டை தேடித் திரிந்து, எங்கும் பெருமையால் ஆலயத்துக்கு வந்து, 'சுவா
 

மூர்த்திநாயனுர் புராணம் 53
மிக்குத் தரிப்பதற்குத் தேய்த்துக்கொடுக்கும் பொருட்டுச் சந்தனக்கட்டைக்கு இன்றைக்கு முட்டு வந்தாலும், அக் கட்டையைப் போலத் தேய்க்கத்தக்க கைக்கு ஒரு முட்டும் இல்லை' என்று ஒரு சந்தனக்கல்லிலே தம்முடைய முழங் கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பும் தேய்ந்து குறையும்படி தேய்த்தார். தேய்த்தலும், உதிரம் ஒழுகி நாற்புறத்திலும் பெருகி, எலும்பினுள்ளே இருக்கும் துவா ரங் திறந்து மூளை வெளியிலே வந்தது. அப்பொழுது 'அன் பனே, நீ பத்தியினது உறுதிப்பாட்டினுல் இப்படிப்பட்ட செய்கையைச் செய்யாதே. உனக்கு இடுக்கண்செய்த கொடுங்கோ லரசன் பெற்ற இந்த நாடு முழுதையும் நீயே கைக்கொண்டு, இதற்குமுன் இவ்விடத்திலே அவனலுண் டாகிய கொடுமைகள் யாவற்றையும் நீக்கி, பரிபாலனஞ் செய்து, உன்னுடைய பணியை நடப்பித்து, பின்பு நம் முடைய சிவலோகத்தை அடைதி’ என்று ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. மூர்த்திBாயனர் அதைக் கேட்டு, அஞ்சி, கையைத் தேய்த்தலே ஒழிந்து எழுந்தார். உடனே அவர் கையானது தேய்த்த தலைாகிய ஊறு நீங்கி முன்போ லாயிற்று.
அவ்விரவிலே அந்தக் கருணுடராஜன் இறந்து, சிவ னடியார்களுக்கு வருத்த ஞ்செய்த அதிபாதகத்தினலே கொடுமையாகிய நரகத்திலே விழுந்தான். மற்ற நாள் பிரா தக் காலத்திலே மந்திரிமார்கள் கூடி, தகனசம்ஸ்காரஞ் செய்து, பின்னர்த் தங்கள் அரசனுக்குப் புத்திரர் இல்லா மையால் வேருெருவரை அரசராக கியோகித்தற்கு 9D - IT யத்தை ஆலோசித்து, 'யானையைக் கண்கட்டி விடுவோம்! அந்த யானை எவரை எடுத்துக்கொண்டு வருமோ அவரே இந் நாட்டுக்கு அரசராவார்' என்று நிச்சயித்துக்கொண்டு, யானையை விதிப்படி அருச்சித்து, “நீ இந்த நாட்டை ஆளு தற்கு வல்ல ஒருவரை யெடுத்துக் கொண்டு வா' என்று சொல்லி, அதை வஸ்திரங் கொண்டு கண்ணைக் கட்டிவிட் டார்கள். அந்த யானே அந்தப் பட்டணத்து வீதிகளிலே

Page 31
ཡོད།
54 மூர்த்திநாயனர் புராணம்
திரிந்து சென்று, சொக்கநாத சுவாமியுடைய ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போயிற்று. மூர்த்திநாயனுர் இர விலே தமக்குச் செவிப்புலப்பட்ட அசரீரிவாக்கினுல் மனத் துயரம்நீங்கி, “நமது கடவுளாகிய பரமசிவனுக்குத் திருவுள மாகில் அடியேன் இந்த நாட்டை ஆளுதற்கு உடன்படு வேன்' என்று நினைத்துக்கொண்டு, திருக்கோயிற் புறத் திலே நின்ருரர். யானையானது அவர் திருமுன்னே சென்று தாழ்ந்து, அவரை எடுத்து, முதுகின்மேல் வைத்துக்கொண் டது. அதுகண்ட மந்திரிமார்கள் அவரை நமஸ்கரித்து, யானையின் முதுகினின்றும் இறக்கி, முடிசூட்டு மண்டபத் திலே கொண்டுபோய், ஒரு சிங்காசனத்தின்மேல் இருத்தி, முடிசூட்டுக்கு வேண்டும் மங்கல கிருத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். மூர்த்தி நாயனர் அவர்களை நோக்கி, ‘ஆருகதமதம் நீங்கிச் சைவசமயம் விருத்தியாயின் நான் இந் நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்’ என்ருரர். அதைக் கேட்ட மந்திரிமார்களும் சாஸ்திரபரிசயமுள்ள பிறரும் அவரை வணங்கி நின்று, 'சுவாமீ, தேவரீருடைய ஆஞ்ஞையின்படியே யன்றி அதற்கு மாருரக யாவர் செய் வார்கள்' என்று சொன்னர்கள். பின்பு மூர்த்திநாயனுர் 'நான் அரசாள்வேனகில், எனக்கு விபூதியே அபிஷேகத் திரவியமும், உருத்திராக்ஷமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக' என்றர். அவர்கள் ‘தேவரீர் அருளிச் செய்தபடியே ஆகுக' என்று சொல்லி, மகுடாபிஷேகத் துக்கு வேண்டுஞ் செய்கைகளைச் செய்து நிறைவேற்றி னர்கள்.
மூர்த்திநாயனர் சடைமுடி தரித்து ஆலயத்திற் சென்று சோமசுந்தரக் கடவுளை வணங்கிக்கொண்டு, யானையின்மேல் ஏறி, இராசமாளிகையைச் சேர்ந்தார். அங்கே அத்தாணிமண்டபத்திலே இரத்தின சிங்காசனத் தின் மேலே தவளச்சத்திர நிழலிலே வீற்றிருந்துகொண்டு,
பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய
சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணுசை சிறிது
"%.

உருத்திரபசுபதி நாயனர் புராணம் i55
மின்றி, நெடுங்காலம் விபூதி உருத்திராகவும் சடைமுடி என்கின்ற மூன்றினலும் அரசாண்டு, பின் சிவபதப் பிராப்தியானுர்,
திருச்சிற்றம்பலம்.
wmury
முருகநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, திருப்புகலூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவராகிய முருக நாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தினந்தோறும் சூரி யோதயத்துக்கு முன் எழுந்து ஸ்நானம்பண்ணிச் சந்தியா வந்தனம் முடித்துக்கொண்டு போய், கோட்டுப்பூ கொடிப் பூ நீர்ப்பூ நிலப்பூ என்கின்ற நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளில் இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, பலவகைப்பட்ட திருமாலைகள் செய்து, அந்த ஸ்தலத்திலுள்ள வர்த்தமானிச்சரம் என் னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், திவ்விய மந்திரமாகிய பூரீ பஞ்சா கஷரத்தைச் செபித்தும் வருவார்.
இப்படிச் செய்து வருங் காலத்திலே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனருக்குச் சிநேகராகிய பெருமையையும் பெற் ருரர். பெற்ற அம்முருக நாயனர் அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனருடைய திருமணத்திலே தம்முடைய சிவ பூசாபலத்தினலே போய், பரமசிவனுடைய திருவடிநிழலை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
உருத்திர பசுபதி நாயனர் புராணம்
சோழநாட்டிலே, திருத்தலையூரிலே, பிராமணகுலத் திலே, பரமசிவனுடைய திருவடிகளிலே, பதிந்த அன்பே தமக்குச் செல்வமெனக் கொண்ட பசுபதி என்பவர் ஒரு

Page 32
56 திருநாளைப்போவார் நாயனுர் புராணம்
வர் இருந்தார். அவர் தாமரைத் தடாகத்திலே அகோ ராத்திரம் கழுத்தளவினதாகிய தண்ணிரிலே நின்று கொண்டு, இரண்டு கைகளையும் சிரசின்மே லேறக் குவித்து, பரமசிவனுடைய திருவடிகளை ம்றவாத சிந்தனை யோடு வேதபுருஷனுக்குக் கண்ணுகிய பூரீ ருத்திரத்தை ஒதி, சிலநாட் சென்றபின் சிவபதத்தை அடைந்தார். அதனல் அவர் பெயர் உருத்திர பசுபதி நாயனர் என் முயிற்று.
திருச்சிற்றம்பலம்.
திருநாளைப்போவார்நாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, கொள்ளிடBதியின் பக்கத் துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத் திலே, நந்தனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரம சிவனுடைய திருவடிகளையே யன்றி மற்றென்றையும் மறந்தும் நினையாதவர்; அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக் காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவி னலே சீவனஞ்செய்துகொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகை முதலாகிய ஒருமுகக் கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக் கருவிகளுக்கும் தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின்மேலீட்டினுல் கூத்தாடிப் பாடுகின்றவர்.
அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரி சனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி அங்கே சென்று திருக்கோயில் வாயிலிலே நின்றுகொண்டு, சுவா மியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத் தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமகசூ முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவ ருக்குக் காட்சி கொடுத்தருளினர். நந்தனர் அந்த ஸ்தலத் திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரியகுளமாக வெட் டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினர்.
 
 

திருநாளைப்போவார்காயனுர் புராணம் ܢܠ ܼܲ b7
அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங் கித் திருப்பணி செய்துவந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத் திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ் வாசை மிகுதியினலே அன்றிரவு முழுதும் நித்திரை செய் யாதவராகி, விடிந்தபின் 'நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனல் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக் கியதை என் சாதிக்கு இல்லையே' என்று துக்கித்து, “இதுவும் சுவாமியுடைய அருள்தான்’ என்று சொல்லிப் போகா தொழிந்தார். பின்னும் ஆசை வளர்தலால் “நாளைக்குப் போவேன்’ என்ருரர். இப்படியே 1 நாளைக் குப் போவேன் நாளைக்குப் போவேன்' என்று அநேக நாட்கள் கழித்தார். அதனுல் அவருக்குத் திருநா?ளப் போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.
ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசைபிடித் துந்துதலால் தம்முடைய ஊரினின் றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந் தார். அத்திருப்பதியைச் சுற்றிய திருமதில் வாயிலிலே,
புகுந்து அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத் திருவெல்லையை வலஞ்செய்து கொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ்செய்து, உள்ளே போகக்கூடாமையை நினைந்து வருந்துகின்ற திரு நாளைப்போவார் ‘சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடை செய்கின்றதே? என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாதர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய் யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சங்கிதா னத்தில் வருவாய்' என்று அருளிச்செய்து, தில்லைவாழந் தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அங்கத் திரு
நாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்
8 .

Page 33
58 திருக்குறிப்புத்தொண்டநாயனர் புராணம்
ஞாபித்து, மறைந்தருளினர். தில்லைவாழந்தணர்கள் எல் லாரும் விழித்தெழுந்து, திருக்கோயில் வாயிலிலே வந்து கூடி, “சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்’ என்று  ெசா ல் லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று, ‘ஐயரே, சபாநாயகருடைய ஆஞ்ஞையினலே இப்பொ ழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்’ என்ருரர்கள். அதைக் கேட்ட திருநாளைப்போவார் ‘அடி யேன் உய்ந்தேன்’ என்று சொல்லி வணங்கினர். பிரா மணர்கள் தென் மதிற்புறத்திலே கோபுர வாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திரு நாளைப்போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திரு நாளைப்போவார் அந் நெருப்புக்குழியை அடைந்து, சபா நாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம்பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனர் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணியமயமாகிய பிராமணமுனி வடிவங் கொண்டு உப வீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அது கண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ் சலி செய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர்கள் உடன்செல்லச் சென்று, கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய்க் கணக சபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிரா மணர் முதலியோர் யாவரும் காணுமையால் ஆச்சரியங் கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திரு நாளைப்போவாருக்குத் தம்முடைய பூரீ பாத ங் களை க் கொடுத்தருளினர்.
திருச்சிற்றம்பலம்.
திருக்குறிப்புத்தொண்டநாயனர் புராணம்
தொண்டைமண்டலத்திலே, காஞ்சீபுரத்திலே, ஏகா லியர் குலத்திலே, சிவனடியார்களுடைய திருக்குறிப்பை யறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்கின்றமையால்

திருக்குறிப்புத்தொண்டநாயனர் புராணம் i59
திருக்குறிப்புத் தொண்டர் எனப் பெயர்பெற்ற ஒரு பெரி யவர் இருந்தார். அவர் மிகுந்த விருப்பத்தோடு சிவபத் தர்களுக்கு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்துவருங் காலத் திலே, ஏகாம்பரநாதசுவாமி குளிர்காலத்திலே ஒரு சிவ பத்தர் வேடங்கொண்டு மெலிந்த சரீரத்தையுடைய ஒரு வறியவர்போலாகி, அழுக்கடைந்த கங்தையுடன் அவரிடத் திற் சென்ருரர். திருக்குறிப்புத்தொண்ட நாயனர் அவ ரைக் கண்டு எதிர்கொண்டு வணங்கி, பல உபசார வார்த் தைகளைச் சொல்லி, அவருடைய குறிப்பை யறிந்து, 'உங் தக் கங்தையைத் தந்தருளும்; ஒலித்துத் தருகின்றேன்' என்ருரர். சிவபத்தர் வேடங்கொண்ட கடவுள் 'இந்தக் கங்தை அழுக்கு அதிகமாக ஏறப்பெற்றுத் தரிக்கப்படு தற்குத் தகுதியில்லாததா யிருந்தாலும், குளிர் மிகுதியி னல் வருத்தமுறுகின்றபடியால் கைவிடுதல் கூடாது. அஸ்தமயனத்திற்கு முன் தருவீராகில், கொண்டுபோய்ச் சிக்கிரம் ஒலித்துக் கொண்டுவாரும்’ என்ருரர். திருக்குறிப் புத்தொண்ட நாயனர் ‘அடியேன் தாழ்க்காமல் ஒலித்து அஸ்தமயனத்துக்கு முன் கொண்டுவந்து தருகின்றேன்; தந்தருளும்' என்று சொல்ல; சுவாமி 'விரைவிலே ஒலித்து உலர்த்தித் த ராதொழிவிராயில் இந்தத் தேகத் துக்குத் துன்பஞ் செய்தீர்' என்று சொல்லி, அக் கங் . தையை அவர் கையிற் கொடுத்தார்.
SJ SE SË திருக்குறிப்புத் தொண்ட நாயனர் அதை வாங்கிக் கொண்டு ஒரு குளத்திற் சென்று, முன் சிறிதழுக்குப் போக்கி வெள்ளாவியில் வைத்து, பின் ஒலிக்கப் புகுந் தார். அப்பொழுது பரமசிவனுடைய திருவருளினல் நண் பக லொழிந்து பின்பகல்போலத் தோன்றும்படி மேகங் கள் இருண்டு ஆகாயவெளியெல்லாம் மறைத்து மழை பெய்தன. அதுகண்டு, திருக்குறிப்புத் தொண்டர் சிவ பத்தருக்குத் தாம் வாக்குச் செய்ததை நினைந்து, இனி நான் யாது செய்வேன்' என்று கவலையுற்று, விரைவிலே மழை விடவுங் கூடுமென்று அங்கேதானே நின்ருர்,
*WGwerininiw
ܟ.

Page 34
60 சண்டேசுரநாயனர் புராணம்
அது விடவில்லை. பின் இராக்காலம் வர, திருக்குறிப்புத் தொண்டர் “குளிரிகுலே திருமேனி நடுங்குகின்ற சிவ பத்தருக்கு நான் செய்ய விரும்பிய பணிவிடை ஐயையோ தவறிப்போயிற்றே" என்று கிழே விழுந்தார். 'மழை விடாது, சிவபக்தர் சுட்டிய காலமோ நீங்கிற்று. முன் னேயே ஒலித்து வீட்டிலே காற்றினல் உலரும்படி கட்டி விட்டேனுமில்லை. சிவபக்த ரது திருமேனி குளிரினல் வருந்தும்படி தீங்கு செய்த சிறியேனுக்கு இனி யிதுவே செயல்’ என்று எழுந்தார். 'வஸ்திரங்களைப் புடைக் கின்ற கற்பாறையிலே எனது தலையைச் சிதறும்படி மோதுவேன்' என்று போய்க் கற்பாறையிலே தமது சிரசை மோத; சர்வ வியாபகராகிய பரமசிவனுடைய திருக்கரம் அந்தக் கற்பாறையின் பக்கத்திலே தோன்றி, அ வ  ைர ப் பிடித்துக்கொண்டது. ஆகாயத்தினின்று சொரிந்த நீர்மழை நீங்கிப் பூமழை பொழிந்தது. பரம சிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தருளினர். திருக்குறிப்புத் தொண்ட நாயனர் மிகுந்த அன்பினேடு விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ் சலி செய்துகொண்டு நின்ருரர். பரமசிவன் அவரை நோக்கி, "உனது பத்தி வலிமையை மூவுலகத்தார்களுக் குங் தெரிவித்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை யடைந்து பேரின்பம் பெற்று வாழ்ந்திரு” என்று திரு வருள் புரிந்து சென்றருளினர்.
திருச்சிற்றம்பலம்,
சண்டேசுரநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிரா மண குலத்திலே, காசிப கோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அவன் மனை வியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு, ஐந்து வயசிலே,
 
 
 

சண்டேசுரநாயனுர் புராணம் 61.
வேதங்களையும், வேதாங்கங்களையும், சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினலே கற்பிப்பார் இன்றித் தாமே அறியுமறிவு உண்டாயிற்று. தங்தை தாயர்கள் அவருக்கு ஏழு வயசிலே உபநயனச் சடங்கு செய்து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதாத்தியய னஞ் செய்விப்பிக்கத் தொடங்கினர்கள். அவ்வாசாரியர் கள் வேதங்களையும் பிற கலைகளையும் ஒதுவித்தற்கு முன் னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும் படி அமைந்திருக்கின்ற புத்தியின் றிறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.
பாலிய தசையிலே சான்றேர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம் மல சத்தியைக் கெடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும்பொருட்டுச் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அநுக் கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒரு பதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தரா தல், தூய வுடம்பினராதல், இயற்கை யுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களி னிங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை என்னும் எட்டுக் குணங்களும் இன்றியமையா தன என்பதும், அக்குணங்க ளெல்லாம் உடைய பதி சிவ பெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோ டொற்றுமையுடைய சிவசத்தியா லாகும் என்ப தும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரம பிதா மாதாக்கள் என்பதும், அதனல் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும், அவ்வன்பை மற்ருேரர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந் துள்ள இம்மானுடப் பிறவி பெறுதற் கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றுனே இன்னுஞ் சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப் பிறவி நீங்குமவதி அறிதற் கரியது என்பதும், அங்ங்னமாகையால் அவ்

Page 35
62 சண்டேசுரநாயனுர் புராணம்
வன்பு செய்தற்கேயன்றி மற்றென்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஒரு சாமர்த்திய முளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்யவேண்டும் என்பதுவே வேதாகம முதலிய நூல்க ளெல்லாவற்ருரனும் துணியப்படும் மெய்ப் பொருள் என்று சந்தேக விபரீதமறத் துணிந்துகொண் டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவ ருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன் பு கஜலதோறும் வளர்வதாயிற்று.
ஒருநாள் அவர் தம்மோடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசு நிரைகளுடன் கூட்டிச் சென்றபொழுது, ஒfற்றுப்பசு ஒன்று மேய்ப்பா ணுகிய இடையனைக் குத்தப் போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினல் அடித்தான். மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதைபதைப்போடும் அவன் சமீபத்திற் சென்று, மகாகோபங்கொண்டு பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின் றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப் புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும்
இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரா
ணுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும், சிந்தித்து, அந்தப் பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ் விடையனை நோக்கி, 'இப்பசு கிரையை இனி நீ மேய்க்க வேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்’ என்றர். இடை யன் அதைக் கேட்டுப் பயந்து கும்பிட்டுக்கொண்டு போய் விட்டான்.
விசாரசருமர் பசுக்களை அவ்வவற்றிற்குரிய பிராம ணர்களின் சம்மதி பெற்று, தினந்தோறும் மண்ணியாற் றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும், வயலோரங்களி

சண்டேசுரநாயனுர் புராணம் 63
லும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய், வேண்டுமட்டும் மேய விட்டும், தண்ணி ரூட்டியும், வெய்யி லெறிக்கும்பொழுது நிழலிருக்கு மிடங்களிலே செலுத்தி யும், நன்ற கக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக் கொண்டு, அஸ்தமயனத்துக்கு முன் அவ்வப் பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஒட்டிக்கொண்டுபோய் விட்டு, தம் முடைய வீட்டுக்குப் போவார்.
இப்படிச் செய்யுங் காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப் பெருகி, போசன பானங்களிலே குறை வில்லாமையால், மகிழ்ச்சி யடைந்து, இராப் பகல் மடி சுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஒமாகுதியின்பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக் காண்கையால் மிகுந்த சந்தோ ஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை உப சரிப்பிலுைம் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட் டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தா லும் சிறிதும் வருத்தமுரு தவைகளாகி, மிகுந்த அன்போடு தங்களை மேய்க்கின்ற விசாரசருமர் சற்ரு யினும் பிரிவா ராகில் அப்பிரிவாற்ரு மல் தாய்போல உருகி, அவர் சமீ பத்திலே சென்று கனைத்து, மடி சுரந்து ஒருவர் கறக்கா மல் தாமே பால் பொழியும். அது கண்ட விசாரசருமர் அப் பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாங் தகுதியுடை மையை நினைந்தார். நினையவே, அவருக்குச் சிவார்ச் சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையி லிருக்கின்ற ஒரு மணற் றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினலே ஒரு சிவலிங்கங் குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதி
லும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்
திரங்களும் பறித்துத் திருப்பூங்கூடையி லிட்டுக் கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிய குடங்களைத் தேடி வாங்கிக் கொண்டுவந்து, கறவைப் பசுக்கள் ஒவ்வொன்றினிடத்தி

Page 36
64 சண்டேசுரநாயர்ை புராணம்
ஞாை பு
லும் சென்று முலையைத் தீண்டினர். அவைகள் கனத் துப் பாலைப் பொழிந்தன. பாலினலே கிறைவுற்ற அக் குடங்களைக் கொண்டுபோய் ஆலயத்திலே வைத்துப் பத் திர புஷ்பங்களால் சுவாமியை அருச்சித்து, பாலினல் அபிஷேகஞ் செய்தார். பரமசிவன் அவ்விலிங்கத்தி னின்று அவ்விசாரசருமர் அன்போடு செய்யும் அருச் சனையைக் கொண்டருளினர். விசாரசருமர் சிவபூசைக்கு அங்கமாகிய திருமஞ்சனம் முதலிய பொருள்களுள், கிடை யாதவைகளை மானசமாகக் கிடைத்தனவாகக் கொண்டு நிறைவுசெய்து, விதிப்படி அருச்சித்து வணங்கிவந்தார். பசுக்கள் அபிஷேகத்தின்பொருட்டு இவ்விசாரசருமர் கொண்டுவரும் குடங்கள் நிறையப் பாலைச் சொரிந்தும், பிராமணர்க்கும் முன்போலக் குறைவுதீரப் பாலைக் கொடுத்து வந்தன.
இப்படி நெடுநாளாகப் பார்ப்பவர்களுக்கு விளையாட் டுப்போலத் தோன்றுகின்ற சிவார்ச்சனையைச் செய்து வரும்பொழுது, அதைக் கண்ட ஒருவன் அதின் உண் மையை அறியாதவனகி, அதை அவ்வூர்ப் பிராமணர்க ளுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதைச் சபையாருக் குத் தெரிவிக்க, சபையார் எச்சதத்தனை அழைத்து, :பிராமணர்கள் ஒமாகுதியின்பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உம்முடைய புத்திரனகிய விசாரசரு மன் அன்புடனே மேய்ப்பவன்போலக் கொண்டுபோய்ப் பாஜலக் கறந்து விருதாவாக மணலிலே சொரிந்து விஜள யாடுகின்றன்' என்ருரர்கள். எச்சதத்தன் அதைக் கேட் டுப் பயந்து, “சிறு பிள்ளையாகிய விசாரசருமன் செய் இன்ற இந்தச் செய்கையை இதற்கு முன் நான் சிறிதாயி ணும் அறிந்திலேன், அக் குற்றத்தை நீங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும்' என்று குறையிரங்து வணங்கி, 'இனி அவன் அப்படிச் செய்வானுயின், அக் குற்றம் என்மேல தாகும்' என்று சொல்லி அச் சபையாரிடத்திலே அது மதி பெற்றுக்கொண்டு, வீட்டுக்குப் போய்விட்டான்,
"
 

|
சண்டேசுரநாயனர் புராணம் 65
மற்றநாட் காலேயில் அந்தச் சமாசாரத்தைச் சோதித் தறிய விரும்பி விசாரசருமர் பசு மேய்க்கப் போன பின்பு, அவர் அறியாதபடி அவர்பின்னே சென்ருரன், விசார சருமர் பசுக்களை ஒட்டி மண்ணியாற்றின் மணற்றிட்டை யிலே கொண்டுபோனதைக் கண்டு, எச்சதத்தன் அருகில்
இருந்த ஒரு குராமரத்தில் ஏறி, அங்கே நிகழ்வதை அறி
யும்படி ஒளித்திருந்தான். விசாரசருமர் ஸ்நானம்பண்ணி முன்போல மணலினலே திருக்கோயிலுஞ் சிவலிங்கமுஞ் செய்து, பத்திர புஷ்பங்கள் பறித்துக் கொண்டுவந்து வைத்து, பின்பு பா ற் கு டங்க 2ள க் கொண்டுவந்து, தாபித்து, அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்து, மிகுந்த அன்பினேடு பூசைக்கு ஆரம்பித்து, சிவலிங்கத்துக்குப் பத்திர புஷ்பங்களைச் சாத்தி, பாற் குடங்களை எடுத்து அபிஷேகம் பண்ணினர். குராமரத் தில் ஏறியிருந்த எச்சதத்தன் அதைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டு, சீக்கிரம் இறங்கிப்போய்த் தன் கையி லிருந்த தண்டினல் அவ்விசாரசருமருடைய திருமுதுகிலே அடித்துக் கொடுஞ் சொற்களைச் சொல்ல; அவருடைய
மனம் பூசையிலேயே முழுவதும் பதிந்து கிடந்தமையால்,
அது அவருக்குப் புலப்படவில்லே. பின்னும் எச்சதத் தன் கோபங்கொண்டு பலமுறை யடிக்க, விசாரசருமர் அவ்வடியாலாகிய வருத்தங் தோன்றப்பெரு தவராகி, அபிஷேகத் திருத்தொண்டினின்றுங் தவரு திருந்தார். அவருடைய உள்ளன்பை அறியாத எச்சதத்தன் மிகக் கோபித்துத் திருமஞ்சனப் பாற்குடத்தைக் காலினுல் இட றிச் சிந்தினன். உடனே விசாரசருமர் அதைக் கண்டு அது செய்தவன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய
6ரச்சதத்தனென்பதை அறிந்தும், அவன் செய்தது அதி பாதகமாகிய சிவாபராதமாதலால், அவன் காலேத் துணிக் 5th கருதித் தமக்குமுன், கிடந்த ஒரு கோலை எடுக்க, அது மழுவாயிற்று. அதினலே அவன் கால்களை வெட்டினுர், சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கினவராகிய விசாரசரு
IŲ 9

Page 37
66 சண்டேசுரநாயனுர் புராணம்
மர் முன்போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமா தேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றியருளினர். விசாரசருமர் அதுகண்டு மனங்களித்து விழுந்து நமஸ்கரித் தார். பரமசிவன் அவரைத் தம்முடைய திருக்க ரங்களினல் எடுத்து, “நீ நம்பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினய், இனி உனக்கு நாமே பிதா' என்று அரு ளிச்செய்து, அவரை அணைத்து, அவருடைய திருமேனி யைத் தடவி உச்சிமோங் தருளினர். சிவபிரானுடைய திருக்கரத்தினலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திருமேனி சிவமயமாகித் திவ்வியப்பிரகாசத்தோடு விளங் கிற்று. பரமசிவன் அவரைநோக்கி, "நாம் நம்முடைய தொண்டர்களுக் கெல்லாம் உன்னைத் தலைவனுக்கி, நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் பு ஷ், ப மும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தங் தோம்’ என்று திருவாய்மலர்ந்து, தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினர். அவ்விசாரசருமர், சமஸ் தரும் ஆரவாரிக் கவும், எவ்விடத்தும் புஷ்பமழை பொழியவும், சிவகணங் கள் பாடியா டிக் களிகூரவும், வேதங்கள் கோஷிக்கவும், நானபேத வாத்தியங்கள் முழங்கவும், சைவசமயம் நிலை பெறும்படி பரமசிவனைக் கும்பிட்டு, அவராலே தரப்பட்ட சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தர் சிவத் துரோகஞ்செய்தும், சண்டேசுரநாயனுராலே தண்டிக்கப் பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவ லோகத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்,
ழம்மையா லுலகாண்ட சருக்க முற்றுப்பெற்றது.

நான்காவது தி ரு நி ன் ற ச ரு க் க ம்
திருநாவுக்கரசு நாயனர் புராணம்
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புகழனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கிற புத்திரி யார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணிக்கியார் என் கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மரு னிக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சி யுண்டாகும் படி, பல கலைகளையுங் கிரமமாகக் கற்று வல்லவராயினர்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆனபொழுது, அப்புகழனர் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவ பத்தியிலே சிறந்தவரும், இராஜாவிடத்திலே சேனதி பதியா யுள்ளவருமாகிய கலிப்பகையார் என்பவர், அப் புகழனரிடத்திலே சில முதியோர்களை அனுப்பி, திலகவதி யாருக்குங் தமக்கும் மணம் பேசுவித்தார். புகழனர் அதற்கு இசைந்தமைகண்டு, அம்முதியோர்கள் மீண்டு சென்று, கலிப்பகையாருக்குத் தெரிவித்தார்கள், கலிப் பகையார் தாம் விவாகஞ் செய்தற்கு முன், தம்முடைய அரசனது ஆஞ்ஞையினலே சேனைகளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத்தரச ரிருக்கு மிடத்தைச் சேர்ந்து, அவர்களோடு நெடுநாள் யுத்தஞ் செய்தார். அங்கே அப்படி நிகழுங்காலத்திலே, இங்கே புகழனர் தேக வியோகம் அடைந்தார். அப்பொழுது அவர் மனைவியா ராகிய மாதினியார் சககமனஞ்செய்தார். அவர்கள் பிள்ளை களாகிய திலகவதியாரும் மருணிக்கியாரும், சுற்றத்தார்க ளோடு மிக மனக்கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத்தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்யவேண்டும் அந்திய கருமங்களை முடித்தார்கள்.

Page 38
68 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்த களத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம் பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரங் திலகவதி யாருக்குச் செவிப்புலப்பட அவர் ‘என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்’ என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணிக்கியார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, ‘‘அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்த பின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்ருே உயிர்வைத்துக் கொண்டிருக்கின் றேன். அடியேனைத் தனியே கைவிட் டிறப்பீராயின், அடி யேன் உமக்கு முன்னமே இறந்து விடுவேன்' என்ருரர். திலகவதியார் அதைக்கேட்டு, தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும் என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி, வேருெருவரையும் விவாகஞ்செய்து கொள் ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி, வீட்டிலே தவஞ் செய்துகொண் டிருந்தார்.
மருணிக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் கினைந்து, தருமஞ்செய்ய விரும்பி, அன் புடனே திரவியங்களைச் செலவழித்து, அறச்சாலைகளையும் தண்ணிர்ப் பந்தர்களையும் அமைத்தார்; சோலைகளே வைப் பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரி பொழிந்தார். பிரபஞ்ச வாழ்வினது அகித்தியத்துவத்தை அறிந்து இல் வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். எல் லாச் சமயங்களுள்ளும் சற்சமயம் இது என்று அறியு மறிவு அவருக்குத் தலைப்படவில்லை. அவர் பாடலிபுத்திரம்
என்னும் நகரத்திற் சென்று, சமணர்களுடைய பள்ளியை
யடைந்து, அங்குள்ள சமணர்களுடைய போதனுசத்தி
யினலே அவர்கள் அநுட்டிக்கின்ற ஆருகத சமயமே முத் தியை அடைதற்குத் தகுந்த நெறி யென்று துணிந்து,
அந்தச் சமயத்திலே பிரவேசித்தார். பிரவேசித்த அம்
மருணிக்கியார் அந்தச் சமண சமய நூல்க ளெல்லாவற்றை யும் கற்று, அவைகளிலே மகாபாண்டித்தியம் உடையவ

ریبا دس. میل از
திருநாவுக்கரசுநாயனுர் புராணம் 69
ராயினுர், அதுகண்ட சமணர்கள் அவருக்குத் தரும சேனர் என்று பெயரிட்டு, அவரைத் தங்கள் மதாசாரிய ராகக்கொண்டு வழிபட்டார்கள். அவர் தமது வித்தியா சாமர்த்தியத்தினுலே பெளத்தர்களே வாதிலே வென்று புகழ்பெற்று, ஆருகத சமயாசாரியர்களுக்குள்ளே சிரேஷ் டராய் இருந்தார். அது நிற்க.
திருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானி டத்திலே பத்திமிகுந்து, சிவபுண்ணியங்கள் செய்யவிரும்பி, கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகைவிரட் டானம் என்னுந் திருப்பதியிற் சென்று பரமசிவனே வணங்கி, சிவசின்னங்களைத் தரித்து, தினந்தோறும் சூரி யோதயத்துக்கு முன்னே திருக்கோயிலின் உள்ளும் புற மும் திருவலகிடுதல், கோமயத்தினலே மெழுகுதல், திரு நந்தனவனங்களிற் சென்று புஷ்பங்களைப் பறித்துக் கொண்டுவந்து திருமாலை தொடுத்துச் சுவாமிக்குச் சாத் தக்கொடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்து
வந்தார். செய்துவருநாளிலே, தம்முடைய தம்பியாராகிய
மருணிக்கியார் க்படமார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவே சித்தமையை நினைந்து, துக்க சாகரத்தில் அமிழ்ந்தி,
வீரட்டானேசுரரை வணங்கி, ‘சர்வாபீட்டவரதரே, தேவ
ரிர் அடியேனே ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின், தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்துவிட்டு நின்றுகொண்டே உண்கின்ற சம ணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் கரப் பாற்றியருளல்வேண்டும்' என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியாருக்குச் சொப்பனத் திலே தோன்றி, 'தபோ தனியே, நீ உன் மனக்கவலையை ஒழி. உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருக்கின்ருரன்.
அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினலே அங்கிய மதத் திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினுல்
வருத்தி ஆட்கொள்வோம்’ என்று சொல்லி மறைந்தரு
ளினர்,
பரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவரு
டைய திருவருளினலே, தருமசேனருடைய வயிற்றிலே

Page 39
70 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனல் அவர் வருந்தி நடுக்கமுற்று, சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக் கைவந்த சமண சமய மந்திரோச் சாரணத்தால் தடுக்கவும், அச்சூலைநோய் தடைப்படாமல் மேற்கொண்டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக் கொண்டாற்போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, 'இந்தச் சூலைநோய் போலக் கொடிய நோய் முன்னெருபோதும் கண்டறி யோம். இதற்கு யாது செய்வோம்’ என்று துக்கமுற்று, பின் கமண்டலத்தில் இருக்கின்ற ஜலத்தை அபிமந்திரித் துக் குடிப்பித்தார்கள். அதனலே தனியாமையால், மயிற்பீலிகொண்டு காலளவும் தடவினர்கள். அதினுலும் தணியாமல், சூலைநோய் முன்னிலும் அதிகப்பட, தரும சேனர் அதைச் சகிக்கலாற்ருரதவராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு, "ஐயோ! இதற்கு நாம் யாது செய் வோம்’ என்று மனங்கலங்கி, 'இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்' என்று சொல்லிக்கொண்டு, —9] 6)J ரைக் கைவிட்டுப்போயினர்கள். பின் தருமசேனர் தம் முடைய சகோதரியாகிய திலகவதியாரை நினைந்து அவரே தமக்கு உதவி செய்யவல்லர் எனத் துணிந்து தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும்பொருட்டு, தம்மு டைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினர். அப்பாகு கன் திருவதிகையிற்சென்று, அத்திலகவதியாரை ஒரு திரு நந்தனவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, "நான் உம்முடைய தம்பியார் ஏவலினல் இவ்விடத்துக்கு வங் தேன்' என்று சொல்ல; திலகவதியார் 'தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா' என்ருரர். அதற்கு அவன் "ஆம், அவர் கொடிய சூலைநோயினுல் மிக வருந்துகின்ருரர். சமணர்களெல்லாரும் அங்நோயைத் தீர்த்தற்கு வன்மை யின்மையால், அவரைக் கைவிட்டு விட்டார்கள். அவர் அது கண்டு, என்னை நோக்கி அந்தச் சமாசாரத்தைச் சகோதரியாகிய உமக்குத் தெரிவித்து, தாம் உய்யும் நெறியைக் கேட்டுக்கொண்டு இரவிலே தம்மிடத்துக்கு வரும்பொருட்டு என்னை ஏவினர்' என்ருரன். திலகவதியார் *பதிதராகிய சமணர்களுடைய பள்ளிக்கு நான் வரேன், இதைத் தம்பிக்குச் சொல்லு' என்ருரர். அதுகேட்ட

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 71.
பாகுகன் மீண்டு தருமசேனரிடத்திற் சென்று, அதைத் தெரிவிக்க, தருமசேனர் ‘இனி இதற்கு யாதுசெய்வேன்’ என்று சோகித்தார்.
அப்பொழுது சிவபெருமானுடைய திருவருள் கூடுத லால், மருணிக்கியார் 'இந்தத் துர்ச்சமயமாகிய ஆருகத மார்க்கப் பிரவேசத்தால் என்னை வருத்தும் இந்நோய் நீங்கும்படி, சற்சமயமாகிய சைவசமயத்தை அநுட்டிக் கின்ற திலகவதியாருடைய திருவடிகளை அடைவேன்’ என்று கருதினர். அக்கருத்துப் பிடித்தெழுப்ப எழுந்து, சமணர்களுடைய ஸ்தானத்தைக் கடந்து, உடுத்த பாயை யும் உறியில் உற்ற கமண்டலத்தையும் மயிற் பீலியையும் நீக்கி வஸ்திரங் த ரித்து, தமக்குப் பற்றுக்கோடாகக் கை தந்து வருகின்றவர்களைப் பற்றிக்கொண்டு, ஒருவருங் காணுதபடி இரவிலே ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் தமக்குக் கிடைத்தவைகளில் சூலைநோய் ஒன்றுமாத்திரம் உடன் ருெடர, திருவதிகையிற் சென்று, திலகவதியாரு டைய திருமடத்தை அடைந்து, அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, 'நமதுகுலத்தார் செய்த தவப்பயனெல்லாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போலும் அம்மே, அடியேன் கொடிய குலைநோயைச் சகிக்கலாற்றுமையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித் தமியேன் உய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்’ என்று விண் ணப்பஞ் செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந்தார். திலக வதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச்செய்தபடி முடித்ததை நினைந்து, மனங் கசிந் துருகிக்கடவுளை அஞ்சலி செய்துகொண்டு, 'அறி யாமையினலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுங் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே எழுந்திரும்’ என் ருரர். தம்பியார் சூலைநோயுடனே நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலிசெய்தார். திலகவதியார் ‘இது பரமசிவனுடைய திருவருளே, தம்முடைய திருவடிகளை யடைந்த மெய்யன் பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளையே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்’ என உபதேசித் தார். உடனே மருணிக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக் கொண்டு, வணங்கி நிற்க, திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை பூரீ பஞ்சாக்ஷரத்தை ஓதிக் கொடுத்

Page 40
72 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
தார். மருணிக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி அவ் விபூதியை வாங்கி, சரீர முழுதிலும் அணிந்து கொண்டார்.
திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்கும் தோண்டியும் எடுத்துக்கொண்டு, திருக்கோ யிலுக்குத் தம்பியாரை அழைத்துக்கொண்டு போனர். மருணிக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதகSதிணஞ் செய்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளானலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ் சத்தி உண்டாகப்பெற்று, தம்முடைய குலைநோய் நீங்கும்பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஒதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும்பொருட்டும், சிவபெருமான் மேல் 'கூற்ருயின வாறு விலக்ககிலீர்? என்னுங் திருப்பதிகத் தைப் பாடியருளினர். உடனே சூலைநோய் நீங்கிற்று. அப் பொழுது மருணிக்கியார் தமக்கு உயிரையுங் தந்து முத்தி நெறியையும் தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கட லில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங் கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்தபாஷ் பஞ் சொரிய, நிலத்திலே விழுந்து, புரண்டு, ‘சமண சமயப் படு குழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவி யேன் சிவபெருமானுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின்ப வாழ்வைப் பெறும்படி செய்த சூலை நோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன்' என்ருரர். இப்படி நிகழும்பொழுது, வீரட்டானேசுரருடைய திருவரு ளினல், 'நீ அற்புத சின்மய மதுரமாகிய தேவாரப் பதி கத்தைப் பாடினபடியால், உனக்கு நாவுக்கரசு என்னும் பெயரே சத்தலோகங்களினும் வழங்குக' என்று சமஸ் தருக்கும் ஒரு வியப்புத் தோன்றும்படி ஒர் அசரீரிவாக்கு ஆகாயத்திலே தோன்றிற்று. அதைக் கேட்ட திருநாவுக் கரசு நாயனர் ‘சிவபெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெருவாழ்வைத் தந்தருளினரே' என்று களிகூர்ந்து, அத் தன்மையணுகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு வணங்கினர். 'திரு நாவுக்கரசு நாயனுர் சமண சமயம் பொய்மார்க்கம் என்பது யாவருக்கும் புலப்படும்படி சைவசமயத்திலே பிரவேசித்து

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 73,
அருள் பெற்றபடியால் உலகம் உய்ந்தது உய்ந்தது' என்று சொல்லி, திருவதிகையிலுள்ள சமஸ்த சனங்களுங் களிப்புற்ருரர்கள். திருநாவுக்கரசு நாயனர், மனம் வாக் குக் காயம் என்னுங் திரிகரணங்களாலும் திருத்தொண்டு செய்யவேண்டும் என்னும் ஆசை மிகுதலால், சிவசின்னங் களைத் தரித்துக்கொண்டு, தியானமருவுணர்வும் தடை யின்றி யெழுகின்ற துதிரூபமாகிய வாசகமும் உழவாரப் பணிவிடையும் உடையவராயினர். திலகவதியார் தம் முடைய வேண்டுகோளின்படி சிவபெருமான் தம் முடைய தம்பியாரை ஆட்கொண்ட பெருங்கருணைத் திறத் தை நினைந்து மகிழ்ந்து வணங்கினர்.
இந்தச்சமாசாரத்தைப் பாடலிபுத்திரத்தில் இருக்கின்ற சமணர்கள் கேள்வியுற்று, பொருர மைகொண்டு, 'மாறு பட்ட பல சமயங்களையும் வாதில்வென்று நமது சமயத்தை ஸ்தாபித்த தருமசேனர் தமக்கு வந்த சூலைநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திரு வதிகையிற் சென்று, முன்போலச் சைவத்திலே பிரவே சித்து, அந்நோய் நீங்கி உய்ந்துவிட்டார். இனி நமது சமயம் அழிந்தது அழிந்தது’ என்று துக்கித்து, தலையும் பீலியுங் தாழ ஓரிடத்திலே ஒருங்கு கூடினர்கள். கூடிய சமணர்கள் 'தருமசேனருக்கு வந்த சூலைநோய் 15ம்மொரு வராலும் நீங்காமல் சைவசமயப் பிரவேசத்தால் நீங்கி விட்ட உண்மையை நம்முடைய அரசன் அறிந்தானகில், நம்மேற் கோபங்கொண்டு, தானுஞ் சைவனகி, நம்முடைய விருத்தியையும் தவிர்ப்பான். இனி இதற்கு யாது செய் வோம்' என்று சொல்லித் தங்களுள்ளே ஆலோசித்து, வஞ்சனையாகிய ஒருபாயத்தைத் தெரிந்துகொண்டு, பல்லவ ராஜனுடைய நகரத்திற் சென்று, அரமனையினுள்ளே புகுந்து, அவ்வரசனை நோக்கி; 'மகாராஜாவே, எங்களெல் லாருக்குங் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற் கின்றபடியால், தாமும் அவர்போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற் சென்று, முன்போலச் சைவசமயத் திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை கிங்தை செய் தனர்' என்று சொன்னர்கள். உடனே பல்லவராஜன்
10

Page 41
74. திருநாவுக்கரசுகாயனர் புராணம்
கோபங்கொண்டு, 'இதற்கு யாதுசெய்யலாம்' என்றன். அதுகேட்ட சமணர்கள் 'உத்தமமாகிய நமது சமய மகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண் டிக்கவேண்டும்' என்ருரர்கள். அப்பொழுது அரசன் மக் திரிமாரை நேசிக்கி, 'இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக்கொண்டு வாருங்கள்’ என்று ஆஞ் ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதி கையை அடைந்து, திருநாவுக்கரசு நாயனரிடத்திற் சென்று, “எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத் துக்கொண்டுவரும்படி எங்களை அனுப்பினுன் வாரும்' என் ருரர்கள். அதுகேட்ட திருநாவுக்கரசு நாயனர் 'காமார்க்குங் குடியல்லோர்’ என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, “நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல் லேம்' என்ருரர். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங் கிப் பிரார்த்தித்து அழைக்க, 'அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக் கெல்லாம் சிவபெருமான் இருக்கின்ருரர்? என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டுபோய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி, ‘இனி இவனுக்கு யாதுசெய்வோம்’ என்று கேட்க, சமணர்கள் நீற்றறையில் இடல்வேண்டும்’ என் முரர்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, 'இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்’ என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந் நாயனரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினர்கள். திரு நாவுக்கரசு நாயனர் பரமசிவனுடைய திருவடி கிழலைத் தலைக்கொண்டு, ‘சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே து ன் ப ம் வருவதுண்டோ’ என்று அக்கடவுளைத் தியானித்து, 'மாசில் வீணையு மாலை மதியமும்’ என்னுங் திருக் குறுந்தொகையைப் பாடித் தொழுதுகொண்டு, அந்த நீற் றறையினுள்ளே எழுந்தருளி யிருந்தார். அந் நாயனர் சிவ பெருமானுடைய திருவடிநீழலாகப் பாவித்த அங்கீற்றறை, வீணு கானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும்
பொய்கையும் போலக் குளிர்ந்தது,

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 75
ஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைதது, 'நீற்றறையைத் திறந்து பாருங்கள்’ என்று சொல்ல; அவர்கள் நீற்றறையைத் திறந்து, நாயனர் யாதொரு ஊனமும் இன்றிக் களிப்புற்றிருத்தலைக் கண்டு,
ஆச்சரிய மடைந்து, அரசனிடத்திற் சென்று, 'அவன்
முன்னே நம்முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திர சாதகத்தினலே வேவாமற் பிழைத்துக்கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு ஊட்டுவதே தகும்’ என்ருரர்கள். அரசன் 'அப்படியே செய்யுங்கள்' என்று சொல்ல; அவர்கள் நாயனருக்கு நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள். நாயனர் அவர்களுடைய வஞ்சனையை அறிந்து, “நஞ்சை அமுதாகக் கொண்ட கடவுளுடைய அடியார்களுக்கு நஞ்சும் அமுதாம்’ என்று நஞ்சு கலந்த அந்தப் பாற்சோற்றை உண்டு இருந்தார். சமணர்கள் அதைக்கண்டு, 'இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று. இவ் விடத்திலே இவன் பிழைப்பானுயில் நமக்கெல்லாம் நாச முண்டாகும்’ என்று பயந்து, அரசனிடத்திற் சென்று, *நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம் முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந்திர வலி யினலே பிழைத்துவிட்டான். அவன் இறவாதிருப்பா
னுகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்கு
வது திடம்' என்ருரர்கள்.
அரசன் அதைக்கேட்டு, ‘இனி அவனைக் கொல்லு தற்கு உபாயம் யாது’ என்று கேட்க, சமணர்கள் 'உம் முடைய யானையை அவனுக்கு எதிரே விடுவதே உபாயம்' என்ருரர்கள். அரசனும் அப்படிச் செய்யும்பொருட்டு ஆஞ்
ஞாபிக்க, துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனருக்கு
எதிரே யானையைக் கொண்டுவந்து விட்டார்கள். நாயனர் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, ‘சுண்ணவெண் சந்தனச்
சாந்தும்’ என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி
தோறும், 'கெடிலப்புனலு முடையா ரொருவர் தமர்க!-மஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவது மில்லை' என்று பாடியருளி னர். யானையானது அந் நாயனரை வலஞ்செய்து, எதிராக கிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக;
அதின்மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினலே

Page 42
76 திருநாவுக்க ரசுகாயனர் புராணம்
குத்தித் திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பைக் காட்டினர்கள். அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினல் அவர்களை எடுத்து வீசிக் கொன்றுவிட்டு, வெவ்வே றிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித் தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந் நகரத்தில் உள்ளவர்க ளெல்லாரும் கலங் கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது.
அவ்யானைக்குத் தப்பிய சமணர்க ளெல்லாரும் மான மழிந்து மயங்கி மனம் வருந்தி, அரசனையடைந்து, 'தரும சேனன் நம்முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந்திரத்தின் பலத்தினுலே நாங்கள் விட்ட யானையைக் கொண்டே எங்கள் வலிமையைச் சிதைத்தான்' என்று சொல்லிப் புலம்பினர்கள். அரசன் கோபங்கொண்டு, ‘இனி அவனுக்கு யாது செய்யவேண்டும்' என்று கேட்க, சமணர்கள் 'அவனைக் கல்லோடு சேர்த்துக் கயிற்றினலே கட்டிக் கடலிலே தள்ளவேண்டும்' என்ருரர்கள். அரசன் கொலைத்தொழில் செய்வோரை நோக்கி, "தருமசேன னைக் காவலோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த் துக் கயிற்றினலேகட்டி ஒருபடகில்ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்’ என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத்தொழில்செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறிதுமில்லாத திருநாவுக்கரசு நாய னரைக் கொண்டுபோய், அரசன் சொல்லியபடியே கட லிலே தள்ளிவிட்டுத் திரும்பினர்கள்.
சமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசு நாயனர் ‘அடியேனுக்கு யாது நிகழினும் நிகழுக. அடி யேன் எம்பெருமானைத் தோத்திரம்பண்ணுவேன்? என்று நினைந்து, 'சொற்றுணை வேதியன்’ என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட, சமுத்திரத்திலே கல்லானது நாய னர் மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட் டிய கயிருே அறுந்துபோயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனரைத் தாங்கிக்கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான். நாயனர், அந்தத் திருப்பதியினின்றும் அர கரவென்னு மோசையுடன் தம்மை எதிர்கொண்ட சிவ
 

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 77
னடியார்களோடு, ஆலயத்திற் சென்று, சுவாமியை வணங்கி, 'ஈன்ருளுமாய்” என்னுந் திருப்பதிகம் பாடிக் கொண்டு, அங்கே சிலநாள் எழுந்தருளியிருந்தார்.
பின் திருவதிகைவிரட்டானேசுரரைத் தரிசிக்கவேண் டும் என்னும் பேராசையினுல் அவ்விடத்தினின்றும் பிரஸ் தானமாகி, திருமாணிகுழியையும் திருத்தினை நகரையும் வணங்கிக்கொண்டு, திருக்கெடில நதியைக் கடந்து சென் ருரர். அந் நாயனர் சமணர்கள் செய்த இடர்க ளனைத்தை யும் ஜயித்து வருதலைக் கேள்வியுற்ற திருவதிகை வாசிகள் சமஸ்தரும் அவ்வூரை மிக அலங்கரித்து, மங்கலவாத்தியங் கள் முழங்க அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்தார்கள். விபூதியை உத்தூளனஞ் செய்த திருமேனியையும் தாழ் வடத்தையும் சிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தை யையும் ஆனந்தபாஷ்பம் பொழிகின்ற கண்களையும் திருப் பதிகங்கள் தோன்றுகின்ற திருவாயையு முடைய நாயனர், தம்மை எதிர்கொண்ட சனங்களோடு ஆலயத்திற் சென்று, சுவாமியை வணங்கி 'வெறிவிரவுகூவிளம்” என்னும் ஏழைத் திருத்தாண்டகத்தை எடுத்து 'ஏழையேனுன் பண்டிகழ்ந்த வறே' என்று பாடினர்.
நாயனர் வீரட்டானேசுரர்மேலே பின்னும் பல திருப் பதிகங்களைப் பாடிப் பணிசெய்துகொண்டிருக்குநாளிலே, சமணர்களுடைய துர்ப்போதனைக்கு இசைந்து தீங்கு செய்துகொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே வந்து, நாயனுரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித் தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய்யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணருடையபள்ளிகளையும் பாழி களையும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகை யிலே கொண்டுவந்து, பரமசிவனுக்குக் குணத ரவீச்சரம் என்னுங் கோயிலைக் கட்டினன்.
அந்நாட்களிலே திருநாவுக்கரசு நாயனர் சிவஸ்தலங் கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாட விரும்பி, அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவ அலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பதிகம் பாடிக்

Page 43
78 திருநாவுக்கரசுநாயனுர்புராணம்
கொண்டு, பெண்ணுகடத்திற் சென்று, திருத்தூங்கானே மாடமென்னும் ஆலயத்திற் பிரவேசித்து, சுவாமியை வணங்கி, ‘சுவாமி, அடியேன் இழிவினையுடைய சமண சமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடியேன் றரிக்கும்பொருட்டுத் தேவரீருடைய இலச்சினை O யாகிய குலத்தையும் இடபத் தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்' என் னுங் கருத்தால் 'பொன்னுர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப் பம்’ என்னுந் திருப்பதிகம் பாடினர். உடனே பரமசிவ னுடைய திருவருளினல் ஒரு சிவபூதம் மற்றெருவருக்கும் தெரியாதபடி அவ்வாகீசருடைய திருத்தோளிலே சூலக் குறியையும் இடபக்குறியையும் பொறித்தது. நாயனர் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலச்சினை களைக் கண்டு மனமகிழ்ந்து, திருவருளை நினைந்து கண்ணிர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்த ஸ்தலத்தில் இருக்கின்ற நாளிலே, திருவரத்துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய், சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்கரையின் வழியாக நடந்து சிதம்பரத்திலே சென்று, கனகசபையிலே,
னந்த தாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு கைக ளும் சிரசின்மே லேறிக் குவிய, இரண்டு கண்களினின் அறும் ஆனந்தபாஷ்பஞ் சொரிய, அக்கினியிற்பட்ட வெண் ணெய்போல மனங் கசிந்துருக, என்று வந்தாய் என்னும் திருக்குறிப்போடு கிருத்தஞ் செய்கின்ற சுவாமியுடைய திருநயனத்தினின்றும் பொழிகின்ற திருவருளா லாகிய ஆனந்த மேலிட்டினலே “கருகட்டகண்டனை' என்னுங் திரு விருத்தமும் 'பத்தனுய்ப் பாடமாட்டேன்’ என்னுங் திருநே ரிசையும் பாடினர். அவர் சுவாமிதரிசனம் பண்ணி, திருக் கோயிற் றிருமுற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப் பணி செய்துகொண்டு சில நாள் அங்கே எழுந்தருளியிருந் தார். அப்பொழுது “அன்னம் பாலிக்குக் தில்லைச் சிற்றம்பலம’ என்னுந் திருக்குறுந்தொகை பாடினர். பின் திருவேட் களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதி கம் பாடி, திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமிதரிசனஞ்
o இலச்சினை - முத்திரை,

திருநாவுக்கரசுகாயனுர் புராணம் 79
செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள்
அங்கே இருந்தார். பின் அவ்விடத்தினின்றும் நீங்கி,
வழியிலே 'பனைக்கை மும்மத வேழ முரித்தவன்' என்று எடுத்து 'அம்பலக் கூத்தனைத்-தினைத்தனைப்பொழுதும் மறந்துய்
வனுே' என்னுங் திருக்குறுந்தொகை பாடிக்கொண்டு, சிதம்பரத்தை அடைந்து, 'அரியானை அந்தணர்தஞ் சிங்தை யானை' என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடிக்கொண்டு
திருக்கோயிலிற் சென்று, சபாநாதரைத் தரிசித்து வணங்கி, 'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்கும்’
என்னுங் திருநேரிசை பாடினர். * *
திருநாவுக்கரசு நாயனர் அங்கே பாடம் வாரத் தொண்டுஞ் செய்துக்ொண்டிருக்கு நாளில், ஒரு நாள், சீர்காழியிலே பரமசிவனது திருவருளினுல் உமா தேவியார் ஞானப்பா?ல ஊட்ட உண்டு வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞான சம் பந்தமுர்த்தி நாயனருடைய மகிமையை அடியார்கள் சொல் லக் கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை வணங்கல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியினல், சபாநாயகரைத் தொழுது அநுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு, திருவீதி யிலே அங்கப்பிரதகஷிணஞ் செய்து, அத்திருப்பதியின் எல்லையைக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடி, சீர்காழிக்குச் சமீபித்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாய ர்ை சீர்காழிக்குத் திருநாவுக்கரசு நாயனூர் வருதலைக் கேள்வியுற்று, அத்தியந்த ஆசையோடு அடியார்கள் பக் கத்திலே சூழ அவரை எதிர்கொண்டார். திருநாவுக்கரசு நாயனர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருடைய திருவடி களிலே விழுந்து நமஸ்கரிக்க; அவர் தம்முடைய திருக் கரங்களினுல் இவருடைய திருக்கரங்களைப் பிடித்துஎடுத்து, தாமும் அஞ்சலி செய்து, 'அப்ப'ே என்ருரர். அதற்குத் திருநாவுக்கரசு நாயனர் ‘அடியேன்” என்ருரர். அவ்விரு
வரும் தாங்கள் ஒருவரை ஒருவர் காணப்பெற்றதனல்
மிக மன மகிழ்ந்து, ஆலயத்திற் சென்று, சுவாமியை வலங்கொண்டு நமஸ்கரித்து எழுந்தார்கள். திருஞானசம்
பந்தமூர்த்திநாயனர் அப்பமூர்த்தியை நோக்கி, 'அப்பரே
1954 تقع مرات و
**Prevengeneringen

Page 44
80 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
உம்முடைய சுவாமியைப்பாடும்’ என்று சொல்ல இவர் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனு ருடைய திருமடத்திற் சென்று, அவரோடு அளவளாவிப் பலநாள் இருந்தார்.
ஒருநாள் திருநாவுக்கரசு நாயனர் சோழமண்டலத்தி லுள்ள சிவஸ்தலங்க ளெல்லாவற்றையும் வணங்கவேண் டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனருக்கு விண்ணப்பஞ் செய்து, அவரோடும் திருக்கோலக்காவிற்குச் சென்று, சுவாமிதரிசனம் பண்ணினர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அவ்விடத்தி னின்றும் மீண்டருளினர். அப்ப மூர்த்தி, திருக்கருப்புறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருகின்றியூர், திருநனிபள்ளி முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, காவேரியாற்றின் இரு கரை வழியாகவுஞ் சென்று, திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திரு வெதிர்கொள்பாடி, திருக்கோடிகா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சரம், திருப்பழையாறை என்கின்ற ஸ்தலங்களைப் பணிந்து பாடி, திருச்சத்திமுற் றத்தை அடைந்தார். அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கோவாய் முடுகி படுதிறற் கூற்றங் குமைப்ப தன்முன் - பூவா ரடிச்சுவடென்மேற் பொறித்துவை' என்னுந் திருப்பதிகம் பாட வும்; பரமசிவன் 'நல்லூருக்கு வா வா’ என்று அருளிச் செய்தார். அப்பமூர்த்தி திருநல்லூரிலே சென்று, சுவா மியை வணங்கி எழுந்தார். எழும்பொழுது, சுவாமி 'உன் னுடைய நினைப்பை முடிக்கின்ருேரம்' என்று சொல்லி, தம்முடைய திருவடிகளை அவர் சிரசின் மேலே சூட்டி யருளினர். அப்பமூர்த்தி 'கிணைந்துருகு மடியாரை" என்று திருத்தாண்டக மெடுத்து, திருப்பாட்டிறுதிதோறும் 'திரு வடி யென்றலைமேல் வைத்தார் கல்லூரெ பெருமானுர் நல்லவாறே என்று பாடியருளினர். இன்னுந் திருப்பதிகங்கள் பாடிக் கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். இருக்குநாட்களிலே, திருக்கருகாவூர், திருவாவூர், திருப்பாலைத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய், சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, திரு5ல்லூருக்குத் திரும்பிவிடுவார்.
 

திருநாவுக்கரசுகாயனுர் புராணம் 8
சிலநாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரினின் மறும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு, திங்க ளூரின் வழியாகச் சென்றர். செல்லும்பொழுது, அவ் வூரிலே அப்பூதியடிகனயனர் என்பவர் தம்முடைய புத் திரர்களுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித் தும், தம்முடைய அன்ன சத்திரம் கிணறு குளம் தண் ணிர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே “இது திரு Bாவுக்கரசு நாயனருடையது' என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று, அவருடைய வீட்டிற்கு எழுந்தருளினர். அப்பூதிBசயனர் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவி
யார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி, அங்கே திரு
வமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அங்காயனர் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திர ராகிய மூத்த திருநாவுக்கரசை நோக்கி, ‘தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்துகொண்டு வா' என்று சொல்லியனுப்பினர். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது, ஒருபாம்பு அவரைத் தீண்டிற்று, அதை அவர் பேணுமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும் படி குருத்தை அரிந்துகொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந் தலைக்கொள்கையால் மயக்கமடைந்து, வாழைக் குருத்தைத் தம்முடைய தாயார் கையிலே கொடுத்துவிட்டு, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு அப்பூதி நாயனரும், அவர் மனைவியாரும், "ஐயோ! இனி நாயனர் திருவமுது செய்யாரே' என்று துக்கித்து சவத்தை மறைத்துவைத்து, சிறிதும் தடுமாற்றமின்றி அப்பமூர்த்தியிடத்திற் சென்று, ‘சுவாமி, எழுந்துவந்து திருவமுது செய்தருளல் வேண்டும்? என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினல் அறிந்துகொண்டு, அவர்க ளுடைய அன்பை கினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின்முன் கொணர்வித்து, ' ஒன்றுகோலா மவர் சிந்தை' என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினர். உடனே அப்புத்திரர் உணர்வுபெற்று எழுந்தார். அப்பூதி நாயனர் தம்முடைய புத்திரர் பிழைத்ததைக் கண்டும்,
l
->

Page 45
82 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
அதைக்குறித்துச் சந்தோஷியாமல், அப்பமூர்த்தி திரு வமுது செய்யாதிருந்தமையைக் குறித்துத் துக்கித்து வருங் தினர். அவ்வருத்தத்தை நீக்கும்பொருட்டு, அப்பமூர்த்தி அவருடைய வீட்டிற் சென்று, திருவமுது செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார். சிலநாட் சென்றபின், திங்களுரி னின்றும் நீங்கி, திருப்பழனத்திற்குப் போய், சுவாமி தரி சனஞ் செய்து, 'சொன்மா? பயில்கின்ற" என்னுந் திருப்பதி கம் பாடினர். அத்திருப்பதிகத்திலே அப்பூதி நாயனரை *அழலேரம்பு மப்பூதி குஞ்சிப்பூவாய் கின்ற சேவடியாய்’ எனச் சிறப்பித்தருளினர். அங்கே எழுந்தருளியிருக்கு நாளிலே, திருச்சோற்றுத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்கும் போய் வருவார்.
வெகுகாட் சென்றபின் அப்பமூர்த்தி திருநல்லூருக் குச் சென்று, சிலநாள் அங்கே வசித்து, பின் திருவாரூ ருக்குப் போகக் கருதி, அதனை நீங்கி, பழையாறை, திரு வலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக் குடவாயில், திருநறையூர், திருவாஞ்சியம், பெருவேளுர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு, திருவா ரூரை அடைந்து சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகங் கள் பாடிக்கொண்டிருந்தார். ஒரு திருப்பதிகத்திலே, நமி நந்தியடிகள் நீரினல் விளக்கேற்றினமையைச் சிறப்பித் துப் பாடினர். அந்தத் திருப்பதியில் இருக்கின்ற அர னெறியென்னும் ஆலயத்தையும் வணங்கித் திருப்பதிகம் பாடினர். அங்கிருக்கு நாட்களிலே திருவலிவலம், கீழ் வேளுர், கன்ருரப்பூர் என்னும் ஸ்தலங்களுக்கும் போய், திருப்பதிகம் பாடிக்கொண்டு, அவ்விடத்திற்குத் திரும்பி விட்டார். திருவாதிரை நகஷத்திரத்திலே வீதிவிடங்கப் பெருமாளுடைய திருவிழாவை அடியார்களுடன் சேவித்து, மகிழ்ந்து இருந்தார். அந்நாட்களிலே திருப்புகலூருக்குப் போம்படி கருதி, திருவாரூரினின்றும் நீங்கி, பல தலங்களை யும் பணிந்து சென்ருரர். அந்நாளிலே திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் திருப்புகலூருக்கு வந்து சுவாமி தரிசனஞ்
 

திருநாவுக்கரசுநாயனுர் புராணம் 83
செய்துகொண்டு முருகBாயனருடைய திருமடத்தில் எழுச் தருளியிருந்தார். ஒருநாள் அப்பமூர்த்தி திருவாரூரினின் அறும் திருப்புகலூரை நோக்கி எழுந்தருளி வருகின்ருரர் என்று கேள்வியுற்று, அடியார் கூட்டத்தோடுஞ் சென்று, அவரை எதிர்கொண்டார். அப்பமூர்த்தி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனரை வணங்க, திருஞானசம்பந்தமுர்த்தி 5ாய னரும் அப்பமூர்த்தியை வணங்கி, ‘அப்பரே, நீர் வரும் நாளிலே திருவாரூரிலே நடந்த பெருமையைச் சொல்லும்’ என்ருரர். அப்பமூர்த்தி திருவாதிரைச் சிறப்பை, “முத்து
விதான மணிப்பொற் கவரி" என்னுந் திருப்பதிகத்தினலே
சொல்லியருளினர். திருஞானசம்பந்தமுர்த்தி நாயனர்
அதைக்கேட்டு, 'நான் திருவாரூருக்குப் போய்ச் சுவாமி
தரிசனஞ் செய்துகொண்டு இவ்விடத்திற்கு வருவேன்' என்று சொல்லித் திருவாரூருக்கு எழுந்தருள; அப்ப மூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார். திருச்செங்காட்டங் குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னுங் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு, திருப் புகலூருக்குத் திரும்பினர். சிலகாட் சென்றபின், திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனர் திருவாரூரினின்றும் நீங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளிவந்தார். அப்பமூர்த்தி அவரை எதிர்கொண்டு அழைத்துவந்து, முருகBாயனுரு டைய திருமடத்தில் அவரோடும் எழுந்தருளியிருக்தார். இருக்குநாளிலே, சிறுத்தொண்டநாயனரும், திருலே5க்க நாயனரும், அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு இருக் தார்கள்.
சிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்தி நாயன ரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீல 5க்கBாயனரும் சிறுத்தொண்ட5ாயனுரும் முருகBாயனரும் மற்றை யடியார்களும் அநுமதி பெற்றுக்கொண்டு போய் விட, திருவம்பர் என்னுங் தலத்தை அடைந்து வணங்கி,
திருக்கடவூரிற் சென்று வீரட்டானேசுரரைப் பணிந்து, குங்

Page 46
84 திருநாவுக்கரசுகாயனர் புராணம்
குலியக்கலயநாயனரால் அவருடைய திருமடத்திலே திரு
வமுது செய்விக்கப்பட்டு, திருக்கடவூர் மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளி யிருந்தார்கள். சிலநாட் சென்றபின், மழையின்மையாலும் காவேரிப் பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனல் உயிர்களெல் லாம் வருத்தமுற்றன. அக்காலத்தில்ே பரமசிவன் திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனுருக்கும் திருநாவுக்கரசு நாயன ருக்கும் தோன்றி, "காலபேதத்தினலே நீங்கள் மனவாட் டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார் களுக்குக் கொடுக்கும்பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக் காசு தருகின்ருேரம்’ என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயி லின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும், தினங் தோறும் படிக்காசு வைத்தருளினர். அவ்வடியார்களிருவ ரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங் கள் வாங்குவித்து, அமுது சமைப்பித்து, ‘சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசனம் பண்ணக்கடவார்கள்? என்று இரண்டுகாலங்களிலும் பறைசாற்றித் தெரிவித்து, அன்ன மிட்டார்கள். திருஞானசம்பந்தமூர்த்திகTயனர் தாம் பரம
சிவனுக்குக் குமாரரா கையாலும் பாடற்ருெரண்டுமாத்திரஞ்
செய்கையாலும் தாம்பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்ருரர். அப்பமூர்த்தியோ, தாம் அக்கடவுளுக்கு அடியாாாகையாலும், பாடற்ருெண்டோடும் கைத்தொண் டுஞ் செய்கையாலும், தாம் பெற்ற படிக்காசை வட்டங் கொடாது மாற்றப்பெற்ருரர். இருவருடைய திருமடங்களி னும், நாடோறுஞ் சிவனடியார்கள் போசனம்பண்ணி மகிழ்ந்திருக்குங் காலத்திலே எங்கும் மழைபெய்து, தானிய முதலியவைகள் மிக விளைந்தமையால், பஞ்சம் நீங்கிற்று.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனரும் திருநாவுக்கரசு நாயனரும் திருவீழிமிழலையினின்றும் நீங்கி, திருவாஞ்சிய முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, வேதாரணி
 

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 85
யத்தை அடைந்து, ஆலயத்திலே பிரவேசித்து வலஞ் செய்து, வேதங்கள் அருச்சித்துத் திருக்காப்புச்செய்த அங் Bாண்முதல் இந்நாள்வரைக்கும் அடைக்கப்பட்டேயிருக் கின்ற திருக்கதவுக்குமுன் வந்து, வேதங்களாலே திருக் காப்புச் செய்யப்பட்ட அத்திருக்கதவை அடியார்கள் நீக் கப்பெருமையினல் வேருேரர் பக்கத்திலே ஒரு வாயிலிட்டு அதன்வழியே செல்கின்றர்கள் என்பதைக் கேட்டறிந் தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அப்பமூர்த் தியை நோக்கி, ‘அப்பரே, நாம் எப்படியும் சுவாமியை அபி முகத்திருவாயில் வழியே சென்று தரிசிக்கவேண்டும். ஆத லால் இந்தத் திருக்கதவு திறக்கப்படும் பொருட்டு நீரே திருப்பதிகம் பாடும்’ என்ருரர். அப்பமூர்த்தி “பண்ணினேர் மொழியாள்' என்னும் திருப்பதிகத்தைக் கதவுதிறக்கப்படும் பொருட்டுப் பாட, அது திறக்கப்படாமல் தாழ்த்தது. அது கண்டு 'இரக்கமொன்றிலீர்' என்று திருக்கடைக்காப்பிலே பாடி வணங்கினர். உடனே வேதாரணியேசுரருடைய திரு வருளினலே திருக்கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நாயன்மாரிருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அடியார்க ளெல்லாரும் ஆனந்தகோஷி ஞ் செய்தார்கள். நாயன்மா ரிருவரும் பேரின்ப வெள்ளத்தில் அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகங்கள் பாடி அரிதில் வெளியே வந்தார்கள். அப்போது திருநா வுக்கரசு நாயனர் திருஞானசம்பந்தமுர்த்தி நாயனுரை நோக்கி, ‘சுவாமியுடைய திருவருளினலே இந்தத் திருக் கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் என்றும் வழங் கும்பொருட்டு, தேவரீர் இது அடைக்கப்படும்படி திருப் பதிகம் பாடியருளும்' என்ருரர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் திருப்பதிகத்திலே முதற் பாட்டுப் பாடியமாத்திரத் திலே திருக்கதவு அடைக்கப்பட்டது. அதுகண்டு, Bாயன் மாரிருவரும், திருவருளை வியந்து களிப்புற்று வணங்கினர் கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தாம் எடுத்த திருப் பதிகத்தை முடித்தருளினர். அன்றுதொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்

Page 47
86 திருநாவுக்கரசுநாயனுர்புராணம்
றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்களெல்லாரும் ஆச்சரியங்கொண்டு, உரோமாஞ்சங் கொள்ள, கண்ணிர் சொரிய நாயன்மாரிருவருடைய திரு வடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
நாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின், திரு 15ாவுக்கரசுராயனுர், தாங் திருப்பதிகம் முழுவதும் பாடிய பின்னே திருக்கதவு திறந்த அருமையையும், திருஞானசம் பந்தமூர்த்திநாயனர் முதற்பாட்டைப் பாடினவுடனே கதவு அடைத்த எளிமையையும் நினைந்து, ‘சுவாமியுடைய திரு வுள்ளம் இதுவென்று அறியமாட்டாமல் அயர்கின்றேன்'
என்று கவன்று, மிக அஞ்சி, திருமடத்தில் ஒருபக்கத்திலே
போய், வேதாரணியேசுரருடைய திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டு அருகித்திரை செய்தார். அப்பொழுது பரம சிவன் அவரிடத்திற் சென்று, 'நாம் வாய்மூரில் இருப் போம். அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா’ என்று அரு ளிச்செய்தார். அப்பமூர்த்தி, “எங்கே யென்னை யிருந்திடக் தேடிக்கொண்-டங்கேவக் தடையாள மருளினுர்-தெங்கே தோன் றுந் திருவாய்மூர்ச் செல்வனு--ரங்கே வாவென்று போனுர தென் கொலோ’ என்னுங் திருப்பதிகம் பாடிக்கொண்டு எழுந்து, வேதாரணியத்தினின்றும் புறப்பட்டு விரைந்துபோக; சுவாமி அவருக்கு முன்னகத் தாம் அவருக்குமுன் காட்டி யருளிய திருக்கோலத்தோடும் நடந்தருளினர். நெடும் பொழுது பரமசிவனுக்குப் பின்னகச் செல்கின்ற அப்ப்
மூர்த்தி அவரைச் சமீபிக்கப்பெற்றிலர். சுவாமி சமீபத்
திலே காட்சி கொடுப்பவர்போல ஒருதிருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள, அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். திருஞானசம் பந்தமூர்த்திநாயனரும் அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் டோகின்றர் என்று கேள்வியுற்று, வந்து சேர்ந்தார். அப்பமூர்த்தி சுவாமி மறைந்தமையைக் குறித்துத் துக் கித்து, 'அடியார்களிற் சிறந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுரே திறக்கவேண்டும் என்பதை நினையாமல் திறந்து
 
 

,
திருநாவுக்கரசுகாயனுர் புராணம் 87
குற்றஞ் செய்த சிறியேனுக்கு ஒளிக்கலாம். ஒரு திருப் பதிகத்தின் முதற் பாட்டாலேயே திருக்கதவை அடைப் பித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் இங்கே வந்திருக் கின்றர். அவருக்கு எப்படி ஒளிக்கலாம்’ என்ருரர். உடனே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருக் குக் காட்சி கொடுத்தருளினர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தரிசித்து ஸ்தோத்திரம்பண்ணி, அப்பமூர்த்தியுங் காணும்படி காட்ட, அப்பமூர்த்தியும் தரிசித்து, 'பாடவடி யார் பரவக் கண்டேன்’ என்னுந் திருப்பதிகம் பாடினர். சுவாமி அத்திருப்பதிகத்தை ஏற்றுக்கொண்டு எழுந்தருள; நாயன்மா ரிருவரும் திருவாய்மூரை அடைந்து சுவாமி தரி சனஞ் செய்துகொண்டு, சிலநாள் அங்கிருந்து, பின் வேதா ரணியத்துக்குத் திரும்பிவந்து, அங்கே சுவாமி தரிசனஞ் செய்துகொண்டிருந்தார்கள்.
இருக்குநாளிலே, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர், மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை5ாயன ரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டிநாட்டிலே, ஆருகத சமயம் பரம்பச் சைவம் குன்றிய சமா சாரத்தைக் கேள்வி யுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொ ழுது திருநாவுக்கரசு நாயனர் சமணர்களுடைய கொடு மையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும்படி திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனரைத் தடுக்க, திருஞானசம் பந்தமூர்த்திகாயனர் அதற்கு இசையாமல் பாண்டிருாட் டுக்கு எழுந்தருளினர்.
திருநாவுக்கரசு5ாயனர் வேதாரணியத்திலே சிலநாள் இருந்து, பின் அதனை நீங்கி, திரு5ாகைக்காரோணம் முத

Page 48
88 திருநாவுக்கரசுBாயனுர் புராணம்
லிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சிலநாள் அங்கிருக்தி, பின் திருவாவடுதுறை யிற் சென்று, சுவாமிதரிசனம் பண்ணி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனருக்கு ஒரு திருப்பதிகத்தின் பொருட்டு ஆயி ரஞ் செம்பொன் கொடுத்தருளிய திறத்தை 'மாயிருஞால் மெல்லாம்” என்னுந் திருப்பதிகத்தினலே புகழ்ந்து பாடி, பழையாறையிற் சென்றார். அங்கே வடதளி என்னும் ஆல யத்தில் வீற்றிருக்கின்ற சிவலிங்கப்பெருமானைச் சமணர் கள் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று, சமீபமாகிய ஓரிடத் திற் சென்று, திருவமுது செய்யாமல் சுவாமியைத் தியா னித்து, 'சுவாமி, அடியேன் தேவரீருடைய திருவுருவைக் கண்டு வணங்கியன்றிப் போகேன். அந்தத் திருவுருவை மறைத்த சமணர்களுடைய செய்கையைக் கெடுத்தருளும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சிவபெருமான் அரச னுக்குச் சொப்பனத்திலே தோன்றி, ‘நாம் சமணர்களால் மறைக்கப்பட் டிருக்கின் ருேம். நாவுக்கரசன் நம்மை வெளிப்படக்கண்டு கும்பிடவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன். நீ அங் த ச் சம ண ர் க ளை அழித்து நமக்கு ஆலயஞ் செய்யவேண்டும்’ என்று அருளிச்செய்து, தாம் இருக்கின்ற இடத்தின் அடை யாளங்களைத் தெரிவித்து, மறைந்தருளினர். அரசன் விழித்தெழுந்து ஆச்சரியமடைந்து மந்திரிமாரோடும் விரை விலே திருக்கோயிலிற் சென்று, சுவாமி அருளிச்செய்த அடையாளத்தின் வழி கண்டு, சமணர்கள் செய்த வஞ் ச2ணயை உணர்ந்து, அப்பமூர்த்தியை வணங்கி, அந்தச் சமணர்களை யானைகளாலே மிதிப்பித்துக் கொன்று, பரம சிவனுக்கு விமானஞ்செய்து, நிபந்தங்கள் அமைத்தான். அப்பமூர்த்தி உள்ளே புகுந்து, சுவாமியைத் தரிசித்து, தலையெலாம் பறிக் குஞ்சமண் கையரு-ணிலையி னுன்மறைத் தான் மறைக் கொண்ணுமே-யலேயி னுர்பொழி லாறை வடதளி-நிலையி னுனடியே நினைக் துய்மினே' என்னுங் திருப்பதிகம் பாடி, சிலநாள் அங்கிருந்தார்.

திருநாவுக்கரசுநாயனுர் புராணம் 89
பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவானைக்கா, எறும்பியூர், திருச்சிராப்பள்ளி, கற்குடி, திருப்பராய்த் துறை என்னுங் தலங்களை வணங்கிக்கொண்டு, திருப்பைஞ் ஞலியை நோக்கிச் சென்ருரர். செல்லும் வழியிலே, பசி யினுலும் தாகத்தினுலும் மிக வருந்தி இளைத்தார். இளைத் தும் சித்தமலையாமல் நடக்க, பரமசிவன் அவருடைய வருத் தத்தை நீக்கும்பொருட்டு வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி, ஒருபிராமண வடிவங்கொண்டு பொதிசோறு வைத்துக்கொண்டிருந்தார். திருநாவுக்கரசு நாயனர் தமக்குச் சமீபத்தில் வந்தவுடனே ஐயர், அவரை நோக்கி, “நீர் வழிநடந்து மிக இளைத்துப்போனிர். என் னிடத்திலே பொதிசோறு இருக்கின்றது. புசித்து இந்தக் குளத்திலே சலபானம் பண்ணி இளைப்பு நீக்கிக்கொண்டு போம்' என்று சொல்லி, பொதிசோற்றைக் கொடுத்தார். அப்பமூர்த்தி அதை வாங்கிப் புசித்துச் சலபானம் பண் னிக்கொண்டு, இளைப்பு நீங்கி இருந்தார். சுவாமி அவரை நோக்கி, ‘நீர் எங்கே போகின்றீர்' என்று கேட்க, வாகி சர் ‘நான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்’ என்று சொல்லிப்போனர். சிவபிரான் 'நானும் அங்கேதான் போகின்றேன்’ என்று சொல்லி, அவருடனே கூடிச் சென்று, திருப்பைஞ்ஞீலியைச் சமீபித்தவுடனே மறைந் தருளினர். அப்பமூர்த்தி அதுகண்டு திருவருளை வியந்து, கண்ணிர் பொழிந்தழுது, விழுந்து, நமஸ்கரித்து எழுந்து, ஆலயத்திற்சென்று சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, கைத்தொண்டு செய்து கொண்டிருந்தார். சில நாளாயினபின், அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவண்ணு மலைக்குச் சென்று சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, தொண்டைநாட்டை அடைந்து திருவோத்தூரை வணங் கிக்கொண்டு, காஞ்சீபுரத்திற் சென்று, திருவேகம்பம், திருக்கச்சிமயானம், திருமேற்றளி, திருமாற்பேறு என்னுந் தலங்களை வணங்கிக்கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். பின் அங்குகின்றும் புறப்பட்டு, திருக்கழுக்குன்று, திரு வான்மியூர், திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரிகரை என்னும் தலங்களை வணங்கிக்கொண்டு, தென்கைலாசமாகிய திருக்காளத்தி மலையை அடைந்தார். அங்கே பொன்முகலியிலே ஸ்நா னஞ்செய்துகொண்டு, மலையின் மேல் ஏறி, சுவாமியை
12

Page 49
90 திருநாவுக்கரசுகாயஞர்புராணம்
வணங்கித் திருப்பதிகம்பாடி, அவருடைய வலப்பக்கத்திலே நிற்கின்ற கண்ணப்ப நாயனருடைய திருவடிகளே வணங்கி, சிலநாள் அந்தஸ்தலத்திலே வசித்தார்.
பின் உத்தரகைலாசத்திலே பரமசிவன் வீற்றிருக் கின்ற திருக்கோலத்தைத் தரிசிக்க விரும்பி, திருக்காளத்தி மலையினின்று நீங்கி, உத்தரதிசையி லிருக்கின்ற திருப் பருப்பதத்தை அடைந்து வணங்கி, திருப்பதிகம் பாடிச் சென்று, காசியை வணங்கிக்கொண்டு, அதற்கு அப்பால் இருக்கின்ற கற்சுரத்திலே சாகமூலபலங்கள் புசித்தலேயும் ஒழிந்து, திருக்கைலாச தரிசனஞ் செய்யல்வேண்டு மென் னும் பேராசையால் இராப்பகல் விடாது நடந்தார். அத னல் அவருடைய பாதங்கள் பாடுவரைக்குங் தேய்ந்தன. " தேய்ந்தும், ஆசை மேலீட்டினல் தம்முடைய இரண்டு கைகளையும் ஆதரவாகக்கொண்டு தாவிச்சென்ருரர். அங் தக் கைகளும் மணிக்கட்டு அசைந்து கரைந்து சிதைங் தன. பின்னும் ஆசை சிறிதுங் குன்றுதலின்றி மேலிடுத லால், கொடிய நெருப்பை யொத்த வெவ்விய பருக்கைக் கற்கள் பொருந்திய மார்க்கத்தில் மார்பினல் நகர்ந்துபோயி னர். மார்பும் தசை நைந்து சிங் த, எலும்புகளும் முறிய லுற்றன. பின் புரண்டு புரண்டு போயினர். அதனல் தேக முழுதும் அரைய, நாயனர் திருக்கைலாசகிரியி னிடத்தே பதிந்த அன்பின் உறுதியினல் மெல்ல நகருதற்கு முயன் றும், கூடாமையால் வழியிலே கிடந்தார். அப்பொழுது பரமசிவன், அப்பமூர்த்தியை மீளவும் தமிழ்நாட்டிற் செலுத்தி அந்நாட்டிலுள்ளோர் உய்யும் பொருட்டுத் தமிழ் வேதமாகிய தேவாரம் பாடுவித்தற்கும், அவ்வப்பமூர்த்தி யுடைய கருத்தையும் மாறின்றி முடித்தற்கும், திருவுளங் கொண்டு அவ்விடத்தில் ஒரு தடாகத்தை உண்டாக்கி, ஒரு முனிவர் வடிவங்கொண்டு, அந் நாயனருக்கு முன்வந்து கின்று, 'நீர் அங்கங்கள் எல்லாம் அழிந்துபோக வருத் தத்தோடும் இந்தக் கொடிய காட்டில் எதன் பொருட்டு வந்தீர்' என்று கேட்டார். அப்பமூர்த்தி மரவுரியாடையை யும் யஞ்ஞோ பவிதத்தையும் சடைமுடியையும் விபூதி தாரணத்தையு முடைய அந்த முனிவரைக் கண்ட பொழுதே பேசுதற்கு அற்பசத்தி யுண்டாக, அவரை, நோக்கி, 'முனிவரே, நமது கடவுளாகிய பரமசிவன் உத்
 

திருநாவுக்கரசுகாயனர் புராணம் 9.
தர கைலாசத்திலே உமாதேவி சமேதராய் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசித்து வணங்கும்பொருட்டு விரும்பி வந்தேன்’ என்ருரர். அதற்கு முனிவர் ‘தேவர்களாலும் அடையப்படுதற்கு அரியதாகிய திருக்கைலாசகிரி மனிதர் களால் அடையப்படுதற்கு எளிதா! நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என்செய்தீர்! இனித் திரும்பிவிடுதலே உத்தமம்' என்ருரர். உடனே அப்பமூர்த்தி 'திருக்கைலாச கிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத் தைத் தரிசித்தன்றி அநித்தியமாகிய இந்தத் தேகத்தைக் கொண்டு திரும்பேன்’ என்று மறுத்தார். சுவாமி அவ ருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி கின்று, 'நாவுக்கரசனே, எழுந்திரு” என்ருர், உடனே அப்பமூர்த்தி அழிந்த உறுப்புக்க ளெல்லாம் முன் போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, ‘சுவாமீ, தேவரீர் திருக்கைலாசகிரியில் எழுங் தருளியிருக்கின்ற திருக்கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும்பொருட்டு அருள்செய்யும்' என்று பிரார்த் தித்து, நமஸ்காரம் பண்ணினர். அப்பொழுது பரமசிவன் 'நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றை அடைந்து, நம்மைக் கைலாசகிரியில் வீற்றிருந்த படி அந்த ஸ்தலத்திலே தரிசித்து வணங்கு' என்று பணித் தருளினர்.
அப்பமூர்த்தி அப்பணியைச் சிரமேற்கொண்டு, பரீ பஞ்சாக்ஷரத்தை ஒதி, தடாகத்திலே முழுகி, திருவை யாற்றி லிருக்கின்ற ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையி லேறி, வழியிலே அந்தத் திருப்பதியிலுள்ள சரா சரங்கள் தங்கள் தங்கள் துணையோடும் பொலிதலைக் கண்டு, அவைகளைச் சிவமுஞ் சத்தியுமாகப்பார்த்து வணங் கிக்கொண்டு, ஆலயத்துக்கு முன்னே சென்ருரர். அவ் வாலயம் திருக்கைலாசகிரியாக, அதனிடத்தே, வேதங் களும் சிவாகமங்களும் இருபக்கத்திலும் வாழ்த்தவும், தும் புரு நாரதரென்னும் இருவரும் யாழ் வாசிக்கவும், பிரம விஷ்ணுக்க ளிருவரும் வஸ்திரத்தை ஒதுக்கி வரயைக் கையினலே, பொத்திக்கொண்டு, ஒதுங்கிகின்று தத்தங் குறைகளைச் சொல்லவும், பூதகணங்கள் கடைதோறும் காக்கவும், தேவர் சித்தர் அசுரர் சாரணர் காந்தருவர் கின்னரர் இயக்கர் விஞ்சையர் முதலாகிய கணத்தவர்கள்

Page 50
92 திருநாவுக்கரசுநாயனர் புராணம்
துதிக்கவும், திருநந்திதேவர் கையிலே பிரம்பைத் தரித் துக்கொண்டு பணிசெய்யவும், காருண்ணிய ஸ்வரூபியாகிய சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே அBந்த கோடி சூரியப் பிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற் றிருந்தருளினர். அப்படி யிருத்தலை அப்பமூர்த்தி கண்ட மாத்திரத்திலே விழுந்து நமஸ்கரித்து, உரை தடுமாற, உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்த வருவி சொரிய, கரை யிறந்த அருட்பெருங்கடலிலே அன்புருதி ஈர்த்துச் செல்ல, மிதந்து போய், தெவிட்டுத லில்லாத அளவிறந்த சிவா னந்தாமிர்தத்தைப் பருகி, சந்நிதானத்திலே ஆனந்தக் கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடினர். திருக்கைலாச பதியாகிய கடவுள் தம்முடைய திருக்கோலத்தை இப்படி அப்பமூர்த்திக்குத் தரிசிப்பித்து, பின் மறைந்தருள, அவ் வப்பமூர்த்தி மனம் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அந்தத் திருப்பதியில் இருந்தார்.
சிலநாட் சென்றபின், திருவையாற்றினின்றும் நீங்கி, நெய்த்தானம், மழபாடி முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருப்பூந் துருத்தியை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அங்கே ஒரு திருமடங் கட்டு வித்து, பல்வகைத் தாண்டகம், தனித் திருத்தாண்டகம், அடைவு திருத்தாண்டகம், திருவங்கமாலை முதலிய திருப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். இருக்கும்பொழுது, பாண்டிநாட்டிற் சென்று சமணர்களே வாதில் வென்று சைவ ஸ்தாபனம்பண்ணிப் பாண்டியராஜனுடைய கூனை நிமிர்த்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் அந் நாட்டினின்று நீங்கி, சோழமண்டலத்தை அடைந்து, அப்பமூர்த்தி திருப்பூந் துருத்தியி லிருத்தலைக் கேள்வி யுற்று, அதற்குச் சமீபத்திலே வந்தருளினர். அதை அப்பமூர்த்தி அறிந்து மனமகிழ்ந்து, அவரை எதிர் கொண்டு வணங்கும்படி சென்று, அவர் வரும் எல்லையை அடைந்து, திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு, அவ ரைத் தரிசிக்கும்படி சூழ்ந்த அடியார்களுடைய நெருக் கத்தினலே, தம்மை ஒருவரும் இன்னரென்று அறியாத படி உட்புகுந்து, அவர் ஏறிவரும் முத்துச் சிவிகையைத் தாங்குகிறவர்களோடு தாமும் ஒருவராய்த் தாங்கிக்
 

திருநாவுக்கரசுநாயனுர் புராணம் 93
கொண்டு வந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாய்னர் திருப்பூந்துருத்திக்கு மிகச் சமீபித்தவுடனே, "அப்பர் எங்குற்றர்” என்று வினவ, அதைக் கேட்ட அப்பமூர்த்தி ‘அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் பெருவாழ்வைப் பெற்று இங்குற்றேன்’ என்ருரர். உடனே திருஞானசம் பந்தமூர்த்தி நாயனர் அதிசிக்கிரஞ் சிவிகையினின்றும் இறங்கி, மனப்பதைப்போடு அப்பமூர்த்தியை வணங்க, இவரும் தம்மை அவர் வணங்குதற்கு முன் தாம் அவரை வணங்க, அதுகண்ட அடியார்க ளெல்லாரும் வணங்கி, ஆனந்தகோ ஷஞ் செய்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் வாகீசரோடும் திருப்பூங் துருத்தியிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டிருந்தார். திருஞான சம்பந்தமூர்த்திநாயனுர் தாம் பாண்டிநாட்டிற் சென்று சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்ததையும், அந் நாடெங்கும் விபூதியை வளர்த் ததையும், பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் மந்திரியாராகிய குலச்சிறை நாயனர் என்கின்ற இருவ ருடைய பெருமையையும், வாகீசருக்குச் சொல்லியருளி னர். வாகீசர் தாங் தொண்டைநாட்டுக்குச் சென்று அங் குள்ள சிவஸ்தலங்களை வணங்கியதைத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனருக்குச் சொல்லியருளினர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தொண்டைநாட் டுக்கு யாத்திரைசெய்ய விரும்பித் திருப்பூங் துருத்தியினின் றும் புறப்பட வாகீசர் பாண்டிநாட்டுக்கு யாத்திரைசெய்ய விரும்பிப் புறப்பட்டு, அப்பாண்டிநாட்டை அடைந்து, திருப்புத்தூரை வணங்கிக்கொண்டு, மதுரையிற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, பாண்டிமா தேவியாரும் கூனிமிர்ந்த பாண்டியரும் குலச்சிறை நாயன ரும் வணங்கித் துதிக்கச் சிலநாள் அங்கிருந்தார். பின் மதுரையை நீங்கி, திருப்பூவணம், இரேமேச்சரம், திரு நெல்வேலி, திருக்கானப்பேர் முதலாகிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, சோழமண்டலத்துக்குத் திரும்பி வந்து, திருப்புகலூரை அடைந்தார்.
திருப்புகலூரிலே தினந்தோறும் சுவாமிதரிசனம் பண்ணி திருமுன்றிலிலே கைத்தொண்டு செய்துகொண் டிருந்தார். இருக்குநாட்களிலே, கின்றதிருத்தாண்டகம்,

Page 51
a
94. திருநாவுக்கரசுகாயனர் புராணம்
தனித்திருத்தாண்டகம், கேஷத்திரக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திருநேரிசை, நினைந்த திருநேரிசை,
ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணத்த டைவு, பாவநாசப்
பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்
o o களைப் பாடினர். பரமசிவன் அங் நாயனருடைய வைராக் கியத்தை யாவருக்கும் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு,
அவர் திருமுன்றிலிலே கைத்தொண்டு செய்யும்பொழுது
உழவாரம் நுழைந்த விடங்களெங்கும் பொன்னும் நவரத் தினங்களும் பிரகாசித்துக் கிடக்கும்படி அருள் செய்தார். நாயனர் அவைகளைக் கண்டு, அவைகளே அங்கே கிடக் கின்ற பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி உழவாரத் தில் ஏந்திக் குளத்திலே விழ எறிந்துவிட்டார்.
பின்பு கடவுளுடைய திருவருளினல் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கி வந்து, நாயனர் திருமுன் னின்று, இசைபாடியும், கூத்தாடியும், அவர்மேற் பூக் களைப் பொழிந்தும், அவரை அணை பவர்கள் போலச் சமீ பித்தும், அளகம் அவிழ இடை நுடங்க ஒடியும், திரும்பி யும், வஸ்திரம் அசைய நின்றும், இப்படி அவரை மோகிப் பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரா னுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்த நிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ் செய்யுங் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முத லியவைகளை முன்னிலைப்படுத்தி ‘நான் திருவாரூரில் வீற் விருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்' என் னுங் கருத்தால், 'பொய்ம்மயப் பெருங்கடலில்' என்னும் திருத்தாண்டகத்தைப் பாடினர். அரம்பையர்கள் தங்கள் கருத்து முற்றுமையால், அவரை நமஸ்கரித்துக்கொண்டு போய்விட்டார்கள். இந்த கிலேமையைச் சமஸ் த லோகத் தார்களும் அறிந்து துதிக்கலுற்ருரர்கள்.
வாகீசர் புகலூரர் என்னை இனிச் சேவடிக் கீழிருத் திடும் என்று எழுகின்ற ஞானத்தினுல் திருவிருத்தங்கள்
 

பெருமிழலைக்குறும்பகாயனர் புராணம் 95
பலவற்றைப் பாடி, ஒரு சித்திரை மாதத்திலே சதயநகஷத் திரத்திலே 'எண்ணுகே னென்சொல்லி யெண்ணு கேனுே’ என்று திருத்தாண்டக மெடுத்துக் திருப்பாட்டிறுதி தோறும் "உன்னடிக்கே போது கின்றேன் பூம புகலூர் மேவிய
புண்ணியனே’ என்று பாடி, சிவபெருமானுடைய திரு
வடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
குலச்சிறை நாயனர் புராணம்
பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறை நாயனர் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி
உருத்திராகஷங் த ரிக்கின்றவர்களும் பூரீ பஞ்சா கஷரத்தை
ஒதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களே, உயர்குலம் இழி குலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல், வணங்
கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர் கூடிவரினும்,
ஒருவர் வரினும், அன்பினேடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடி களை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்ற வர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன் மந்திரியாராயினவர். அந்தப் பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத் தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சம ணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும்பொருட்டு, பரசமய கோளரியாகிய் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அங் நாயனருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்தி நாயனராலே திருத்தொண்டத் தொகையிலே 'பெருகம்பி’ என்று வியந்துரைக்கப் LILLG) IT.
திருச்சிற்றம்பலம்,
ress
பெருமிழலேக்குறும்பநாயனர் புராணம்
-
மிழ2லநாட்டிலே, பெருமிழ8ல யென்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழ8லக்

Page 52
காரைக்காலம்மையார் புராணம்
96
குறும்பகாயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவ னடியார்களைக் காணுந்தோறும் விரைந்தெதிர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்ப வர். அவர்களை நாடோறும் திருவமுது செய்வித்து, அவர் களுக்கு வேண்டுங் திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனருடைய பெருமையை அறிந்து, அவ ருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினலே சிங் தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடி களை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனல் அவர், அணிமா, மகிமா, இலகிமா, கரிம்ா, பிராத்தி, பிராகாமியம், இசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து,
பூரீ பஞ்சாகஷரத்தை ஜபித்து வந்தார்.
இப்படி நிகழுங் காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம் பாடுஞ் சுந்தரமூர்த்திநாயனருக்குப் பரமசிவனுடைய திருவருளினலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப்பிரத்தியகஷத்தால் அறிந்து, 'சுந்தர மூர்த்திநாயனர் உத்தரகைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழமாட்டேன்’ என்று நினைந்து, 'இன்றைக்கு யோகத்தினலே சிவபிரானுடைய திரு வடியை அடைவேன்' என்று துணிந்து, யோக முயற்சி யினலே பிரமரந்திரங் திறப்ப உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்,
Yamumuhammessaan men
காரைக்காலம்மையார் புராணம்
சோழமண்டலத்திலே, காரைக்காலிலே, வைசியர் குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருக்கான்.
அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார்
பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகபட் டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திர
s
 
 

காரைக்காலம்மையார் புராணம் 97
கிைய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்துகொடுத்து, தனக்கு வேறு பிள்ளை யின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போக விடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே வீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கண வனேடும் அதிலிருத்தினன். பரமதத்தன் அந்தச் செல் வத்தை விருத்திசெய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார், பரம சிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன் மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வா ராயினர். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டிய படி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.
இப்படி நிகழுங் காலத்தில், ஒருநாள், பரமதத்த னிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங் கொடுக்க, அவன் அவைகளை வாங்கிக் கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனை வியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவை
களை வாங்கி வைத்த பின்பு; சிவனடியார் ஒருவர் பசியினல்
வருந்தி, அவர் வீட்டிற் சென்ருரர். புனிதவதியார் அவ் வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பா கம்பண்
ணப்படாமையால், 'சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே இதைப்பார்க்கிலும் பெற வேண்டிய பேறு நமக்கு ஒன் 2 ம் இல்லை’ என்று
நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து படைத்து, அவ்வடியவரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய
செய்கையை உவந்து போயினர்.
போயபின், பரமதத்தன் நடுப்ப கலிலே வீட்டுக்கு
வந்து போசனம் பண்ணும்பொழுது, மனைவியார் எஞ்சி
யிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்
தார். பரமதத்தன் மிக இனிய அந்தக் கனியை உண்டு
அதன் இனிய சுவையினலே திருப்தியடையாமல் மனைவி
யாரை நோக்கி, 'மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை'
3

Page 53
98 காரைக்காலம்மையார் புராணம்
என்ருரன். மனைவியார் கொண்டுவரச் செல்பவர்போலப் போய் கின்றுகொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக் கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரம சிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக் கடவுளுடைய கருணேயினுல், அதி மதுரமாகிய ஒரு மாங்கனி அவர் கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய கலத்திலே படைக்க; அவன் அதனை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப் பார்க்கிலும் சிறந்தமையால் 'இது முன் 5ான் தந்த மாங் கனியன பூ இது மூ அலகங்களிலும் பெறுதற்கு அரியது. இதனை நீ எங்கே பெற்றுய்” என்ருரன். மனைவியார் அதைக் கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று கினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கண்வனுக்கு உண் மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைக் தமையால் அதனைச் சொல்லாது விடமாட்டாதவருமாய், வருக்தி நின்று, பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணிந்து, 'நீர் தந்த கனிகளில் ஒன்றை ஒ ரடியா ருக்குக் கொடுத்துவிட்டமையால், அதற்கு நான் யாது செயவேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு கின்றேன். அவருடைய திருவருளினுல் இந்தக் கனி என் கையில் வந்திருந்தது’ என்ருரர். பரமதத்தன் அதை நம்பாதவணுகி, மனைவியாரை நோக்கி, 'இந்தக் கனி சிவபெருமானுடைய திருவருளினலே கிடைத்ததா யின், இன்னும் ஒரு கனி அவருடைய திருவருளினலே அழைத்துத் தா’ என்ருரன், புனிதவதியார் அவ்விடத்தை விட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, 'இன்னும் ஒரு கனி தந்தருளிராகில், அடியேனுடைய வார்த்தை பொய் யாய்விடும்' என்று விண்ணப்பஞ் செய்ய; சுவாமியுடைய திருவருளினலே ஒரு மாங்கனி அவர் கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டுவந்து, கணவன் கையிற் கொடுக்க; அவன் ஆச்சரியமடைந்து வாங்கினன். வாங்கிய பழத் தைப் பின் காணுதவனகி, மிகுந்த பயங்கொண்டு, மனக் தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன் கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல் அவரோடு, தொடர்பின்றி ஒழுகினன்,
 
 
 

காரைக்காலம்மையார் புராணம் 9月
ஒழுகு5ாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும் பண்டங்களே அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனுகிய வருணனேத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணி கஞ் செய்து, சிலகாளாயினபின், மீண்டும் அம் மரக்கலத்
தில் ஏறி, பாண்டிநாட்டிலுள்ள ஒரு நகரத்தை அடைக் து,
அங்குள்ள ஒரு வைசியனுடைய மகளை விவரகஞ் செய்து கொண்டு, பெருஞ் செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவன் தான் கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனேவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக் கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.
பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க; புனிதவதி யார் காரைக்காலிலே கற்பினுேடு இல்லறத்தை வழுவாது நடத்திக்கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டி நாட்டிலே ஒரு நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்து கொண்டு வாசஞ்செய்கின்ருரன் என்று கேள்வியுற்று, அவ னிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலைகூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவ னிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று கினைந்து, கிவிகையில் ஏறிக்கொண்டு சென்று, அவ னிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதி
யாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித்
தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்
SN
கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மக ளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, 'அடியேன் உம் முடைய கருணையினுலே வாழ்கின்றேன். இச்தப் பெண் ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்’ என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்க ளிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி 'நீ உன்னுடைய மனைவியை வணங்குவ தென்னே' என்
الياً ܐܓ؟

Page 54
00 காரைக்காலம்மையார் புராணம்
ரு ர்கள். அதற்குப் பரமதத்தன் '5ான் இவரிடத்திலே ஒரு "பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணே யன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுக் தெய்வம் என்று கொண்டமையால், 'நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்ருரன், அது கேட்ட சுற்றத் தார்கள் 'இது என்ன ஆச்சரியம்’ என்று திகைத்து நின் ருரர்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிங் தித்து, 'சுவா மீ, இவனுடைய கொள்கை இது. இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகுதங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவ ரீரைச் சூழ்ந்து கின்று துதிக்கின்ற பேய்வடிவை அடி யேனுக்குத் தந்தருளல்வேண்டும்’ என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினலே, மாமி சம் முழுதையும் இ-கறி, எற்புடம்பாக, மண்ணுலகமும் விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினர். அப் பொழுது தேவர்கள் பூCாரி பொழிந்தார்கள். தேவதுங் துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்க ளெல்லாரும் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவரு ளினலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத் திரு வந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக் கைலாசகிரிக்குப் போக விரும்பி, மனகிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத் திருக்கைலாசகிரி யின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினல் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினலே கடந்து போய் மலையிலேறினர். ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடபத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று கிந்திக்கச்செய்யும் பொருட்டுத் தாம் ஆச் சரிய முடையவராகி, அவரது பத்திமகிமையை உயர்வொப் பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினலேயே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு,
 
 
 

அப்பூதியடிகனுயனர் புராணம் 101 -
அக்கடவுளே வணங்கி நின்று, ‘சுவாமீ, இங்கே தலையினல் 15டந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்ன? என்று விண்ணப்பஞ் செய்ய, பரமசிவன் ‘இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி. இந்தப் பெருமை பொருந்திய வடிவத் தையும் வேண்டிப்பெற்ருள்? என்ருரர். பின் புனிதவதியார் சமீபத்தில் வக்தவுடனே, உலகமெல்லாம் உய்யும்பொருட்டு, அவரை நோக்கி, ‘அம்மையே’ என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் 'அப்பா? என்று சொல்லிக்கொண்டு, அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந் தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது’ என்று வினவ; புனிதவதியார் வணங்கி நின்று, ‘சுவாமி, அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனிப் பிறவாமை வேண்டும்; பிறக் கினும் தேவரீரை ஒருகாலமும் மறவாமை வேண்டும்; இன் னும் தேவரீர் திருகிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரி ருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனுகி, தேவரிரைப் பாடிக்கொண்டிருத்தல் வேண்டும்' என்று விண்ணப்பஞ் செய்தார். சுவாமி அவரை நோக்கி, "நீ தென் றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக் கொண் டிரு’ என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்கா லம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக் கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினுல் நடந்து சென்று, சுவாமிபுடைய திருநடனத்தைத் தரிசித்து, 'கொங் சைதிரங்கி' என்னும் மூத்த திருப்பதிகத்தையும், “எட்டியில்வமீகை' என்னுங் திருப்பதிகத்தையும் பாடினுர், அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந் தத்தை அனுபவித்துக்கொண்டு எக்காலமும் இருக்கின்றர்.
శ్యా
Ꭿ இகிே டிeerதிய ாகு அப்பூதியடிகளுனுயனர் புராணம்” 4.
Jim Jğí Lum *.
திருச்சிற்றம்பலம்
சோழமண்டலத்திலே, திங்களுரிலே, பிராமண குலத் | திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லா

Page 55
O2 அப்பூதியடிகனுயனர் புராணம்
வற்றையும் நீங்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப் பட்டவைக ளெல்லாவற்றையும் தாங்கினவரும், கிருகஸ் தாச்சிரமத்தையுடையவரும், சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவருமாகிய அப்பூதியடிகனுயனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவானுபூதிமானகிய திருநாவுக்கரசு 15ாயனருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்புகூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள்
தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருடைகள் முதலிய எல்லா
வற்றிற்கும் அந்நாயனருடைய பெயரையே சொல்லி வரு வார். இன்னும் அவர்மே லாசையினலே, திருமடங்கள் தண்ணிர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியவற்றை அங்காயனர் பெயரினுற் செய்துகொண் டிருB தாா.
இருக்குநாளிலே, அத் திருநாவுக்கரசு5ாயனர் திருப் பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு, பிற தலங் களையும் வணங்கும்பொருட்டு, அக்தத் திங்களுருக்குச் சமீ பமாகிய வழியே செல்லும்பொழுது, ஒரு தண்ணிர்ப் பங் தரை அடைந்து திருநாவுக்கரசு நாயனர் என்னும் பெயர் எங்கும் எழுதப்பட்டிருத்தலேக் கண்டு, அங்கு நின்றவர் கள் சிலரை நோக்கி, 'இந்தத் தண்ணிர்ப் பந்தரை இப் பெயரிட்டுச் செய்தவர் யாவர்” என்று வினவ, அவர்கள், 'இப்பந்தரை மாத்திரமன்று, இவ்விடத் தெங்கும் உள்ள அறச்சாலைகள் குளங்கள் திருநந்தனவனங்கள் எல்லாவற் றையும் அப்பூதியடிகனுயன ரென்பவர் இத்திருநாவுக்கரசு நாயனர் என்னும் பெயராலேயே செய்தனர்' என்ருரர்கள்.
அதைத் திருநாவுக்கரசு காயனர் கேட்டு, “இங்ஙனம் செய்
தற்குக் காரணம் யாதோ’ என்று நினைந்து, அவர்களே நோக்கி, ‘அவர் எவ்விடத்தில் இருக்கின்றவர்? என்று வினவ, "அவர் இவ்வூரவரே. இப்பொழுதுதான் வீட்டுக் குப் போகின்ஞரர். அவ்வீடும் தூரமன்று, சமீபமே’ என் ருரர்கள். உடனே திருநாவுக்கரசு நாயனர் அப்பூதியடிக ணுயனருடைய வீட்டுத் தலைக்கடைவாயிலிற் செல்ல; உள் ளிருந்த அப்பூதிBாயனர் ‘சிவனடியார் ஒருவர் வாயிலில் வங்து நிற்கின்ருர்’ என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவ ரும் வணங்கினர். அப்பூதிநாயனச் 'சுவாமீ, தேவரீர்
 

அப்பூதியடிகனயனர் புராணம் 103 இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்' என்று வினவ;
திருநாவுக்காசுBாயனர் ‘நாம் திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண் னிர்ப்பந்தரைக் கண்டும், அப்படியே நீர் செய்திருக்கின்ற பிற தருமங்களைக் கேட்டும், உம்மைக் காண விரும்பி இங்கே வந்தோம்’ என்று சொல்லி, பின்பு, 'சிவனடி யார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம் முடைய பெயரை எழுதாது வேருெரு பெயரை எழுதியதற் குக் காரணம் யாது’ என்று வினவ, அப்பூதிநாயனர் *நீர் நல்ல வார்த்தை அருளிச்செய்திவீர். பாதகர்களா கிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கி னங்களைச் சிவபத்தி வலிமையினலே ஜயித்த பெருங் தொண்டாது திருப்பெயரோ வேருெரு பெயர்? என்று
கேFபித்து, பின்னும், 'பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என் போலும் அறிவிலிகளும் தெளியும்பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசு5ாயருைடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன் னிர். கற்ருேரணியைக் கொண்டு கடல் கடந்த அந்த நாய னருடைய மகி ை யை இவ்வுலகத்திலே அறியாதார் யாரு ளர்! நீர் சிவ வேடத்தோடு நின்று இவ் வார்த்தை பேசினீர், ர்ே எங்கே இருக்கிறவர் சொல்லும்' என்றர்.
திருநாவுக்கரசுBாயனர் அவ்வப்பூதியடிக ஞடைய அன்பை அறிந்து, ஆருகத சமயப்படுகுழி யினின்றும் ஏறும்பொருட்டுப் பரமசிவன் சூலேநோயை வருவித்து ஆட் கொள்ளப் பெற்ற உணர்வில்லாத சிறுமை:ேன் யான்? என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனுர், இரண்டு கைகளும் சிரசின் மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திரு5ாவுக்கரசு நாயனருடைய பூரீ பாதாரவிந்தங் களைப் பூண்டார். திருநாவுக்கரசு நாயனூர் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப் படைந்து கூத்தாடினர்; பாடினர்; சந்தோஷமேலீட்டி ல்ை செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் பிறகற்றத் தார்களுக்கும் திருநாவுக்கரசு5ாயனர் எழுந்தருளிவந்த

Page 56
O4. அப்பூதியடிகளுயனர் புராணம்
சந்தோஷி சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத் துக்கொண்டு வந்து, நாயனரை வணங்கும்படி செய்து, அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரசஷாளனஞ் செய்தார். அங்ஙனஞ் செய்த தீர்த்தத்தை அவர்க ளெல் லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனுரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, 'சுவா மீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தரு ளல்வேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவரும் அதற்கு உடன்பட்டருளினூர், அப்பூதிBாயனர் திருவமுது சமைப் பித்து, தங்கள் புத்திரராகிய மூத த திருநாவுக்கரசை வாழைக்குருத்து அரிந்து கொண்டு வ ரு ம் பெ ா ரு ட் டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற் சென்று, வாழைக்குருத்து அரியும்பொழுது, ஒருபாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது. அவர் அதை உதறி வீழ்த்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினுலே வீழுமுன், கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடிவந்து, விஷம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம்வேகத்தினலே பல்லும் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து, உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார் கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார். அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனர் திருவமுது செய்யாரே' என்று துக்கித்து, சவத்தை வீட்டுப்புறத்து முற்றத்தின் ஒரு பக்கத்திலே பாயினுல் மறைத்து வைத்துவிட்டு, அப்பமூர்த்தியிடத்திற் சென்று, 'சுவா மீ, எழுந்துவந்து திருவமுதுசெய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி எழுந்து, கைகால் சுத்திசெய்துகொண்டு, வேருே ராசனத் தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிBாயனருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதிகொடுத்து, புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனுரை நோக்கி, ‘நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி 2 -ti (pool lull சேட்ட புத்திரரை வருவியும்’ என்ருரர். அப்பூதிகாயனர் 'இப்போது அவன் இங்கே உதவான்' என்ருரர். அப்ப மூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திரு வருளினலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றங் தோன்ற, அப்பூதிநாயனரை நோக்கி, “அவன் என்செய் தான்? உண்மைசொல்லும்' என்ருரர். அப்பூதிநாயனர்
 

திருநீலநக்கநாயனுர் புராணம் 105
அஞ்சி நடுக்குற்று, வணங்கி கின்று, நிகழ்ந்த சமா சாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக் கேட்டு, 'நீர் செய்தது நன்ரு யிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்’ என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று, சவத்தை அங்கே கொணர் வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன் மேலே திருப்பதிகம் பாடினர். உடனே அப்புத்திரர் உயிர் பெற்று எழுந்து, அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளி னர். அப்பூதிBாயனரும் மனைவியாரும் தங்கள் புத்திரர் பிழைத்தமையைக் கண்டும் அதைக் குறித்துச் சந்தோஷி யாமல், நாயனர் திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித் துச் சிங்தை நொந்தார்கள். அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திரு வமுது செய்தருளினர். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினர்.
அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக் கரசு நாயனருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வ மெனக் கொண்டு வாழ்ந்திருந்து, சில காலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
திருநீலநக்கநாயனர் புராணம்
சோழமண்டலத்திலே, காத்தமங்கையிலே, பிராமண குலத்திலே, திருநீலநக்க நாயனர் என்பவர் ஒருவர் இருந் தார். அவர் வேதத்தின் உள்ளுறையாவது பரமசிவனையும் அவருடைய அடியார்களையும் அன்பினேடு அருச்சித்து வணங்குதலே என்று துணிந்து, தினந்தோறுஞ் சைவா கம விதிப்படி சிவார்ச்சனே பண்ணி, சிவபத்தர்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பன்னி களையுஞ் செய்வார்.
14

Page 57
t
106 திருநீலநக்கநாயனர் புராணம்
அப்படிச் செய்யுநாளிலே, ஒரு திருவாதிரை நகஷத்தி ரத்திலே, சிவபூசையை முடித்துக்கொண்டு, அந்த ஸ்தலத்திலுள்ள அயவந்தி என்னும் ஆலயத்தில் வீற்றிருக் கின்ற சுவாமியையும் அருச்சிக்க விரும்பி, தம்முடைய மனைவியார் பூசைக்கு வேண்டும் உபகரணங்களைக் குறை வறக் கொண்டுவர, அவ்வாலயத்திற் சென்று, பூசைபண் னிப் பிரதகSணஞ் செய்து, சங்நிதானத்திலே நமஸ் கரித்து, இருந்துகொண்டு, வேதாகமாதி சமஸ்த சாஸ்திரங் களின் உண்மைப் பொருளாகிய பூரீ பஞ்சாகஷரத்தை ஜபித்தார். ஜபிக்கும்பொழுது, ஒரு சிலம்பி ம்ேலே கின்று, வழுவி, சிவலிங்கத்தின்மேல் விழுந்தது. அதைச் சமீபத்திலே நின்ற மனைவியார் கண்டு, அச்சமடைந்து, விரைந்து, குழந்தைமேல் விழுஞ் சிலம்பி நீங்கும்படி ஊதித்துமிபவர்போல அன்பு மிகுதியினலே அந்தச் சிலம்பி நீங்கும்படி ஊதித் துமிந்தார். திருநீலBக்கநாயனர் அதைக் கண்டு, தம்முடைய கண்ணேப் புதைத்து, 'அறி வில்லாதவளே, நீ இப்படிச் செய்ததென்னை' என்று சொல்ல; மனைவியார் ‘சிலம்பி விழுந்தபடியால் ஊதித் துமிந்தேன்' என்ருரர். நாயனர் மனைவியாருடைய அன் பின் செய்கையை நன்குமதியாமல், அது, அது சிதம் என்று நினைந்து, அவரை நோக்கி, “நீ சிவலிங்கத்தின் மேலே விழுந்த சிலம்பியை வேருெரு பரிசினலே நீக் காமல், முற்பட்டுவந்து, ஊதித் துமிந்தாய். இந்த அநுசிதத் தைச் செய்த உன்னை நான் இனித் துறந்தேன்; நீங்கி விடு' என்ருரர். அப்பொழுது சூரியாஸ் தமயன மாயிற்று. மனைவியார் நாயகருடைய ஏவலினலே ஒருவழி நீங்க; நாய கர் பூசையை முடித்துக்கொண்டு, வீட்டிற்குத் திரும்பி விட்டார். மனைவியார் அஞ்சுகின்ற உள்ளத்தோடும், அவ ரிடத்திற் செல்லமாட்டாதவராகி, ஆலயத்தில் இருந்தார். நாயனர் நித்திரை செய்யும்பொழுது, பரமசிவன் அவருக் குச் சொப்டனத்திலே தோன்றி, தம்முடைய திருமேனி யைக் காட்டி, "உன் மனைவி மனம்வைத்து ஊதித்து மிந்த இடமொழிய, இப்புறம் சிலம்பியின் கொப்புளம்’ என்று சொல்லியருளினர். நாயனர் அச்சத்துடனே அஞ்சலி செய்துகொண்டு விழித்து எழுந்து, கூத்தாடினர்; பாடி னுர், சிவபிரானுடைய திருவருளை வியந்து நின்று அழு தார். விடிந்தபின், ஆலயத்துக்குப்போய், சுவாமியை
 

திருநீலநக்கநாயனர் புராணம் 107
நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ் செய்து, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினர். அதற்குப் பின், முன்னிலும் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு, சிவார்ச் சனையையும் மாகேசுர பூசையையுஞ் செய்துகொண் டிருந்தார். ܡ
அப்படியிருக்குநாளிலே, பரமாசாரியராகிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவருடைய பூரீ பாதாரவிந்தங்களைத் தரிசிக்கவேண்டும் என்னும் அத்தியந்த ஆசையையுடையராயினர். அப்படி யிருக்கும்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்திBாயனர் அய வந்திநாதரை வணங்கும்பொருட்டுத் திருக்கூட்டத்தோடும் சாத்தமங்கைக்கு எழுந்தருளி வர, திருநீல5க்க நாயனர் கேள்வியுற்று, மிகுந்த மகிழ்ச்சியோடும் நடைப்பந்த ரிட்டு, வாழைகளையும் கமுகுகளையும் நாட்டி, தோரணங்கள் கட்டி, நிறைகுடங்களும் தூப தீபங்களும் வைத்து, தம் முடைய சுற்றத்தார்கள் சமஸ்தரோடும் அவரை எதிர் கொண்டு நமஸ்கரித்து, தம்முடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய், திருவமுது செய்வித்தார். திருஞானசம் பந்தமூர்த்திBாயனர் அன்றிரவிலும் அங்கேதானே திரு வமுது செய்து, திருநீல5க்க நாயனரை அழைத்து, 'திரு நீலகண்டப் பெரும்பாணருக்கும் விறலியாருக்கும் இன்று தங்குதற்கு ஓரிடங்கொடும்’ என்று சொல்லியருள; திரு நீலநக்க நாயனர் வீட்டுக்கு நடுவிலிருக்கின்ற வேதிகையின் பக்கத்திலே அவர்களுக்கு இடங்கொடுத்தார். பெரும் பாணர், அவ்விடத்திலே வேதிகையிலுள்ள நித்தியாக்கினி வலஞ்சுழித்து ஓங்கி முன்னையிலுஞ் சிறந்து பிரகாசித்து, வருணமன்று பத்தியே மகிமை தருவது என்பதை விளக்க வும், அதுகண்ட திருநீலநக்கநாயனர் மகிழ்ச்சி யடையவும், விறலியாரோடு நித்திரைசெய்தார்.
la திருஞானசம்பந்தமூர்த்திநாயனர், விடிந்த பின், அய வந்தியிற் சென்று சுவாமிமேலே திருநீலநக்க நாயனரைச் சிறப்பித்துத் திருப்பதிகம்பாடி, சிலநாள் அங்கிருந்து, பின் திருநீலB க்க நாயனருக்கு விடைகொடுத்து, அந்தத் திருப்பதியினின்றும் நீங்கியருளினர். திருநீலநக்க நாயனுர் திருஞானசம்பந்தமூர்த்திBாயனர் மேலே பதிந்த அன்பும் அவருடைய கேண்மையும் அவருக்குப் பின் செல்லும்படி

Page 58
108 நமிநந்தியடிகனுயனர் புராணம்
தம்மை வலிந்தனவாயினும், தாம் அவருடைய ஆஞ் ஞையை வலியமாட்டாமையால், அந்தத் திருப்பதியிலே அவருடைய திருவடிகளைத் திய ரிைத்துக் கொண்டிருந் தார். திருஞானசம்பந்தமூர்த்திBாயனர் செல்லுந் தலங் களிலே இடைநாட்களிற் சென்று அவரோடிருந்து, பின் திரும்பிவிடுவார். இப்படி நெடுநாட் சென்ற பின், திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனருடைய திருமணத்தைச் சேவித்துச் சிவபதமடைந்தார்.
/* * * o திருச்சிற்றம்டலம்
ܡܫܟ ܚ
நமிநந்தியடிகனுயனர் புராணம்
சோழமண்டலத்திலே, ஏமப்பேறு ரிலே, பிராமண குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மிகுந்த அன் போடும் ஒழியாதே அகோராத்திரம் வழிபடுதலே இன்ப மெனக் கொண்ட 15மிகந்தியடிகள் என்பவர் ஒருவர் இருந் தாா.
அவர் பலநாளுங் திருவாரூருக்குப் போய் வன்மீகநாத ரை வணங்கினர். ஒருநாள் வணங்கிக்கொண்டு, புறப்பட் டுத் திருமுன்றிலை அடைந்து பக்கத்தில் இருக்கின்ற அர நெறி என்னும் ஆலயத்துட் புகுந்து, சுவாமியை நமஸ் கரித்து, அங்கே செய்யவேண்டிய பல தொண்டுகளைச் செய்து, இரவிலே அங்கே எண்ணில்லாத தீப மேற்று தற்கு விரும்பி, எழுந்தார். எழுந்த பொழுது, மாலைக் காலமாதலைக் கண்டு, அப்பாற் செல்லிற் பொழுது செல் லும் என்று நினைந்து, சமீபத்திலே ஒரு வீட்டில், அது சமணர் வீடென்று அறியாமையினலே புகுந்து, 'சிவால யத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்’ என்று கேட்டார். அதற்கு அவர்கள் 'கையிலே சுவாலிக்கின்ற அக்கினியை யுடைய பரமசிவனுக்கு விளக்கு மிகை யன்ருே? இங்கே நெய்யில்லை. விளக் கெரிப்பீரா கில், நீரை முகந்து எரியும்’ என்ருரர்கள். நமிநந்தியடிகனுய னர் அந்தச் சொல்லைப் பொரு தவராகி, அப்பொழுதே மிகுந்த மனவருத்தத்தோடும் திரும்பிப் போய், சுவாமி சங்கிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது
 

நமிநந்தியடிகனயனர் புராணம் 109
ஆகாயத்திலே ‘நமிநந்தியே, நீ உன்னுடைய கவலையை நீக்கு. இதற்குச் சமீபத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டுவந்து விளக்கேற்று' என்று ஒரு அச ரீரி வாக்குத் தோன்றிற்று. நமிநந்தியடிகனுயனர் அதைக் கேட்டு, மன மகிழ்ந்து திருவருளை வியந்து கொண்டு எழுந்து போய், குளத்தில் இறங்கி, சிவ5ா மத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு, திருக்கோயி லிலே வந்து, அகலிலே முறுக்கிய திரியின் மேலே அங் நீரை வார்த்து, விளக்கேற்றினர். அது சுடர்விட் டெழுங் தது. அது கண்டு, அவ்வாலயம் முழுதிலும் சமணர்க ளெதிரே மிகுந்த களிப்புடனே நாடறிய நீரினலே திரு விளக் கெரித்தார். திருவிளக்கு விடியுமளவும் நின்று எரி யும்படி, குறைகின்ற தகழிகளுக்கெல்லாம் நீர் வார்த்து இரவிலேதானே தம்முடைய ஊருக்குப் போய், சிவார்ச் சனை பண்ணி, திருவமுது செய்து, கித்திரை கொள்வார். உதயகாலத்திலே பூசையை முடித்துக்கொண்டு, திருவா ரூரை அடைந்து, அரநெறி என்னும் ஆலயத்திற் சென்று, சுவாமிதரிசனம் பண்ணி, பகன் முழுதினும் திருத்தொண் டுகள் செய்து இரவிலே எங்கும் விளக்கேற்றுவார்.
இப்படி நிகழுங் காலத்திலே, தண்டியடிகளாலே சம ணர்கள் கலக்கம் விளைந்து நாசமடைய; திருவாரூர் பெருமை யடைந்து விளங்கியது. சோழமகாராஜா, நமி 15ந்தியடிகனுயனரே அத்தியகஷராக, வன்மீக நாதருக்கு வேண்டும் நிபந்தங்கள் பலவற்றையும் வேதாகமவிதி விளங்க அமைத்தார். நமிநந்தியடிகள் வீதிவிடங்கப் பெருமாளுக்குப் பங்குனிமா சத்திலே மகோற்சவம் நடத்து வித்தார். நடத்துவிக்கும்பொழுது, சுவாமி ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள சகல சாதியார்களும் ஒருங்கு சேவித்துப் போனர்கள். நமிநந்தியடிகனயணுரும் சேவித் துப் போய், அங்கே சுவாமியுடைய திருவோலக்கத்தைக் கண்டு களிப்படைந்தார். பொழுதுபட, சுவாமி திரும்பித் திருக்கோயிலிலே புக, 15 மி B ங் தி யடிகள் வணங்கிக் கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, வீட்டினுள்ளே புகாமல்; புறக்கடையிலே படுக்க, மனைவியார் வந்து,
'உள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் அக்கினிகாரி
யத்தையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளும்’ என்

Page 59
ios 110 நமிநந்தியடிகனயனர் புராணம்
ருரர். நமிநந்தியடிகள் 'இன்றைக்குச் சுவாமி திருமண லிக்கு எழுந்தருளியபோது நானும சேவித்துப் போ னேன். சகல சாதியும் கலந்து வந்தபடியால், தீட்டுண்டா யிற்று. ஆதலால் ஸ்நானம்பண்ணிப் பிராயச்சித்த ஞ் செய்துகொண்டே உள்ளே புகுந்து சிவார்ச்சனையைத் தொடங்கல் வேண்டும். அதற்கு நீ ஜல முதலாயின கொண்டுவா’ என்று சொல்ல; மனைவியாரும் கொண்டு வரும்பொருட்டு விரைந்து சென் ருரர். அப்பொழுது Ibшѓ9 நந்தியடிகனுயனர் சிறி துறக்கம் வர, நித்திரை செய்தார். செய்யும்பொழுது வீதிவிடங்கப்பெருமாள் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, 'திருவாரூரிலே பிறந்தவர்க ளெல்லாரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்” என்று சொல்லி மறைந்தருளினர். நமிநந்தியடிகனுய னர் விழித்தெழுந்து, தாம் நினைத்தது குற்றமென்று கருதி, எழுந்தபடியே சிவார்ச்சனை முடித்து, மனைவியா ருக்கு நிகழ்ந்ததைச் சொல்லி, விடிந்த பின் திருவாரூருக் குப் போனர். போனபொழுது, அந்தத் திருப்பதியிலே பிறந்தவர்களெல்லாரும் சிவசாரூப்பிய முள்ளவர்களாய்ப் பிரகாசிக்கக் கண்டு பூமியிலே விழுந்து நமஸ்கரித்து, அவர்கள் அவ்வுருவம் நீங்கி முன்போலாயினமையையுங் கண்டு, 'அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தரு ளும்’ என்று சுவாமியைப் பிரார்த்தித்தார்.
பின்பு திருவாரூரிலேதானே குடிபுகுந்து, தம்மு டைய திருத்தொண்டுகளைச் செய்துகொண் டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தமையால், தொண் டர்களுக்கு ஆணிப்பொன் என்று, திருநாவுக்கரசு நாயன ராலே, தேவாரப் பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட் டார். இவர் இந்தப்பிரகாரம் சமஸ் த லோகங்களும் தொழும்படி திருப்பணிகளைச் செய்துகொண் டிருந்து,
சிவபதத்தை அடைந்தார்.
திருச் சிற்றம்பலம்,
- mostro mau
K Ο ί திருநின்ற சருக்க முற்றுப்பெற்றது.
سیاش اتصال
-CONÇA 942 YS
 


Page 60


Page 61