கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அவதாரபுருஷன் சுவாமி யோகநாதன்

Page 1
তীH6OJ@T] 36JTS (3)
முழுவதும்
சிவசுப்பிரம6
 

IBQai
2_aািতটোতেLD
2

Page 2

அவதாரபுருஷன் சுவாமி யோகநாதன்
ஆக்கம் சுவாமியின் சீடன் சிவசுப்பிரமணியசிங்கம்
நூலாக்கம் சமரசிங்கம்
மகா வாக்கியங்கள்
ஒரு பொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்த காரியம் நாம் அறியோம் முழுவதும் உண்மை

Page 3
யோக சுவாமிகள்
அருள்மொழிகள்
ஒழுக்கமாக இருந்துகொள்.
எல்லாஞ் சரியாக நடைபெறும்.
ஒழுக்கமே உயர்வைத்தரும்
கடவுள் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வேலையைச் செய்யுங்கள்.
கடந்த காலத்திற் செய்தனவற்றின்
பலனே இப்பிறப்பு. வருங்கால
வாழ்வை உருவாக்க இப்பிறப்பில்
மனிதனுக்கு முழு உரிமை உண்டு.
O. O. O. O.
பொறிவழியே போய்ப்புகுந்து புலம்பித் திரிவேனை நெறிவழியே நிறுத்தி நீயேநா னென்றுரைத்த பெரியவனைப் பித்தனெனப் பிறர் பேசும் பெருமானைச் செறிபொழில்சூழ் நல்லைநகர்த் தேரடியிற் கண்டேனே!
- நற்சிந்தனை
 

யோகசுவாமியின் சீடன் சிவசுப்பிரமணியசிங்கம்
சிவசுப்பிரமணியசிங்கம் எனது தமையனாரும் யோகசுவாமியின் சீடருமாவார். இவர் தனது புத்தகத்திற்கு “அவதார புருஷன் சுவாமி யோகநாதன்” என்னும் பெயரைக் கொடுத்துள்ளார். இந் நூலில் சுவாமி தனக் குப் போதித்தவைகளை எழுதியுள்ளார். இந்நூல் ஆத்மீக வாழ்க் கைக்கு இன்றியமையாத பொக் கிஷமாக அமைந்துள்ளது. சுவாமி கடவுள் என்று உணர்ந்த பின் சுவாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப் புத்தகத்திற்கு இப்பெயரைக் கொடுத்துள்ளார் போலும். சில விடயங்களில் கருத்துத் தெளிவாக இல்லாதிருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இப் புத்தகத்தில் உள்ளவை யாவும் மக்கள் ஆன்மீகத் துறையில் முன்னேற சுவாமி
- 3 -

Page 4
அருளியவைகளாகும் . தமையனார் சுவாமியின் போதனைகளையும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஒரு கொப்பியில் எழுதி வைத்திருந்தார். இவர் அவற்றைப் புத்தகமாக்கு முன் இறந்து விட்டார்.
எனது தமையனார் இயற்கையிலேயே உண்மையும், பயபக்தியும், நல்ல குணமும் உள்ளவர். எங்கள் தகப்பனார் இவர் H.S.C பரீட்சைக்குத் தோற்றச் சில நாட்கள் இருந்த பொழுது, பாரிய விபத்தில் அகப்பட்டு ஒரு மாதகாலம் வைத்தியசாலையில் இருந்து இறந்துவிட்டார். இவருக்கு 17 வயதாக இருந்தும் குடும்பச் சுமையைத் தாங்க வேலையில் சேர்ந்து கொண்டார்.
இவர் தனது மாமனார் மகளை விவாகம் செய்து நான்கு பிள்ளைகளுக்கு தகப்பனாகி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தித் தனது 58வது வயதில் 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி மாரடைப்பினால் சடுதியாகக் காலமானார். இளைப்பாறி வீட்டில் இருக்கும் பொழுது நிஷ்டை செய்வதும், நல்லூரை வலம் வந்து வணங்குவதும், சமூகசேவை செய்வதுமாகத் தொண்டாற்றி வந்தார்.
இவரின் ஆன்மீக சக்தியை 1994ம் ஆண்டு ஒரு சிறு விஷயத்தில் அறிந்து கொண்டேன். எனது குடும்பத்தினருக்கும் அண்ணன் குடும்பத்தினருக்கும் காணி விஷயமாகச் சில தப்பபிப்பிராயங்கள் 1994ன் முற்பகுதியில் ஏற்பட்டது. நான் யாழ்ப்பாணம் லீவில் சென்ற பொழுது அவர்களுடன் இதைப் பற்றி பேசித் தீர்க்க முடியவில்லை. இது குடும்ப உறவைப் பாதிக்கும், எப்படித் தீர்ப்பது என வருத்தமடைந்தேன்.
- 4 -

சுவாமிகள் அருளால் என்னிடத்திருந்த பகையுணர்வு, கோபம், பொறாமை என்னும் தீமைகள் மறைந்து விட்டன. எல்லார் மேலும் நல்லெண்ணமும் அன்பும்தான் மனதில் இருக்கின்றன. நடப்பனவெல்லாம் ஈசன் செயல் என்று சுவாமி சொன்னது உண்மை எனத்தெரிந்து கொண்டேன்.
கொழும்புக்குத் திரும்பி வந்து விட்டேன். 1994ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி றம்ழான் முஸ்லிம் திருநாள். நான் தனியாகத்தான் ஒரு சிறு வீட்டில் இருந்தேன். அன்று இரவு படுத்திருக்கும் பொழுது சடுதியாக எழுந்தேன். ஏனெழுந்தேன் என்று தெரியவில்லை. எனது அறையில் ஒரு விதமான அதிர்வு இருந்தது. அறையில் யாரோ இருக்கின்றார்கள் என உணர்ந்தேன். சில நிமிடங்கள் படுக்கையில் இருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. எழுந்து போய் சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் படுக்கையில் வந்திருந்தேன். அப்பொழுது அண்ணன் தெளிவான குரலில், “பிழையை உணர்ந்து வருவினம், எறிந்து விடாதே ஆதரி, உன் வருத்தம் எல்லாம் மாறிவிடும்’ இவ்வளவும் சொன்னபின் அதிர்வு மறைந்து விட்டது. அண்ணன் போய் விட்டார் என உணர்ந்து கொண்டேன். அப்பொழுது நேரம் (p.LJ.3.15
இந் நிகழ்ச்சி பற்றித் தம்பியிடம் சொன்னேன். அவர் நம்பவில்லை. இது ஒரு கனவு என்று சொல்லிவிட்டார். சில மாதங்களுக்குப் பின் ஒரு கல்யாண வீட்டில் அண்ணனின் பிள்ளைகளைச் சந்தித்தேன். கசப்பு உணர்வுகளை மறந்தவர்களாக என்னுடன் வந்து சீனியையா என்றழைத்து சந்தோஷமாகவும் அன்பாகவும்
- 5 -

Page 5
கதைத்து விட்டுச் சென்றார்கள்.
எனது பழைய அனுபவங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது உடம்பை விட்டுப்போனாலும் ஆத்மாக்களுக்கு வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற விஷயங்கள் தெரியும். எல்லா ஆத்மாக்களுக்கும் இந்தச் சக்தி இருக்குமோ எனக்குத் தெரியாது. சுவாமி சொன்னார் “தான் நினைக்கின்ற பொழுது தனது குருவுடன் பேசிக்கொள்வேன்’ என்று.
சி. சமரசிங்கம் (சுவாமியின் மாணாக்கன்)
தானந் தவமிரண்டும் சற்றுமிலாப் பாவியேன் ஞான முளேன் போல் நடிக்கின்றேன் - வானில் வளர்பிறையைச் செஞ்சடையில் வைத்த பிரானே! தளரவிடா தாளாய் நீ தான்.
இனியவனே எவ்வுயிர்க்கும் ஈசனே ஆளும் பனிமொழியாள் பாகனே! மாயோன் - நனி வருந்த நீண்ட சு ராகி நின்றாய் நினைவேனை ஆண்டருள வேண்டும் அறி.
- நற்சிந்தனை -

முகவுரை
அறியாமையால் மக்கள் அறவழி அறியாது துன்பத் துயரில் மூழ்கி அல்லலுற்றிருக்கும் காலத்தில் ஈசன் மானிட உருவம் தாங்கி மக்களோட மக்களாக இவர்கள் மத்தியில் வாழ்ந்து இவர்களின் அறியாமை இருளைப் போக்கி மெய்யறிவைப்
புகட்டி வாழ்க்கையின் பெரும் பயனாகிய பிறவித் துன்பத்தைத் துடைக்க அரும்பணியாற்றி வருவார் என்பது உலகறிந்த S. 60660)LD.
உடலில் ஏற்படும் நோய் கூடுதலாகி ஒருவனை பாரதூரமாகப் பாதிக்குமுன் உடம்பில் தோன்றுகின்ற நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து மருந்து கொடுத்துக் குணப்படுத்தும் வைத்தியனைப் போல சுவாமியும் உலகத்து மக்கள் துன்பசாகரத்தில் மூழ்காமல் இருக்க வழிகாட்டினார். புலன்களை ஒடுக்கிச் சிந்தனையைத் தொழிலில் செலுத்த வேண்டும். கைகளை கமத்திலும் தொழிலிலும் ஈடுபடுத்த வேண்டும். இப்படிச் செய்தால் மனம் சாந்திபெற்று, சிந்தனை அல்லாது அமைதிப்படும். இதயகமலத்தில் இறைவன் தோன்றுவான். அழியாத பேரின்ப நிலையை மனிதன் அடைவான். இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்தவே சுவாமி யோகநாதன் அவதரித்தார்.
இந்த உண்மையைப் பார்அறியச்செய்வதே சுவாமியின் சீடர்களின் பணியாகும்.
சி.சிவசுப்பிரமணியசிங்கம்.

Page 6
1. யோகசுவாமிகளுடன் முதற் சந்திப்பு
பார்க்கப்போகிறவர்களை ஏசிப் பேசித் துரத்தும் சுவாமிகளை யார் தான் விரும்புவார்கள்? சுவாமிகளின் கோபக்குணத்தையும் ஏசித் துரத்தும் தன்மையையும் பலரும் கூறுவதைக் கேட்டுள்ளேன். மேலும் சுவாமி பணக்காரர்களுடன் தான் தன்மையாகப் பேசுவார், பழகுவார் என்றும் சிலர் கூறுவதை நான் நம்பியிருந்தேன். என் விளக்கப்படி “கடவுள் ஏழைகளுக்கு இரங்குபவர். ஏழைகளை ஏசித் துரத்துகிறவர் ஞானியாக இருக்க முடியாது’ என்பதாகும். இதனால் சுவாமிகள் மேல் எனக்கு விருப்பம் இருக்கவில்லை.
எனது ஆச்சி சுவாமிகள் மேல் பக்தியுடையவர். சுவாமிகளைச் சந்திக்க அடிக்கடி செல்வார். இவர் போகும் பொழுதெல்லாம் என்னையும் பலாத்காரமாக கூட்டிச் செல்வார். போகும் வழியெல்லாம் “சுவாமி ஆச்சிரமத்தில் இருக்கக் கூடாது’, என்று கடவுளை வேண்டிக் கொண்டே போவேன்.
நாம் நினைப்பது போல் எல்லாம் நடப்பதில்லை. எனது பதினோழாம் வயதினில் ஆச்சரியப்படும்படியாக சுவாமி என் கனவில் தோன்றி என்னைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இது அற்புதமா?, அதிசயமா?, உண்மையா? என்று என்னால் நம்பமுடியவில்லை.
வழக்கம் போல நான் வீட்டு ஹோலில் (Hall) இரவு
படுத்திருந்தேன். தூங்கிக்கொண்டிருந்த என்னை சுவாமி
தட்டி எழுப்பி தான் “கனகரத்தினம் வீதியும் நாவலர்வீதியும்
- 8

சந்திக்கும் இடத்திற்கு எதிரேயுள்ள தேநீர்க் கடையில் என்னைப் பார்ப்பதற்காக இருப்பதாகச்’ சொல்லிக் கடையின் வாசலில் வைத்திருந்த வாங்கில் தான் இருக்கும் விதத்தையும் காட்டினார். இது என்ன கனா என்று எழுந்து எண்ணிப்பார்த்து விட்டு மறுபடியும் படுத்தேன். மீண்டும் அதே சொப்பனம் தூங்கவிடாது குழப்பியது. மறுபடியும் விழித்துப் பார்த்துவிட்டுத் தூங்க முயன்றேன். கனா என்னை விட்டபாடில்லை. எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
படுக்கையில் இருந்து எழுந்து போய் எனது தந்தையிடம் கண்ட கனாவை எடுத்துக் கூறினேன். சுவாமி மேல் பக்தியுடையவரும் சுவாமியை நன்கறிந்தவருமாகிய என் தந்தை சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்துவிட்டுச் சொன்னார். “இது கனவல்ல சுவாமி உண்மையில் உன்னைக் கூப்பிடுகிறார் என்று தான் நினைக்கிறேன். எதற்கும் சீக்கிரம் வெளிக்கிட்டு வா, சுவாமி சொன்ன இடத்திற்குப் போய்ப் பார்ப்போம்”, என்றார்.
இருவரும் சுவாமி சொன்ன இடத்திற்கு விரைவாக நடந்து சென்றோம். என்ன அதிசயம் சுவாமி கனவில் தோற்றியவாறு அக்கடையில் இருப்பதைக் கண்டேன். என்னைக் கண்டதும் “சுவாமி உன்னைத் தான் பார்த்துக் கொணி டிருக்கிறேன் வா’ என்று அழைத்துக் கட்டியனைத்தார்.
அரைமணி நேரம் வரை எனது கல்வியைப் பற்றியும்
வேறு சம்பந்த்ப்பட்ட விடயங்கள் பற்றியும் கேட்டுத்தெரிந்து
கொண்டார். இதன் பின், “எனக்கு நேரமாகிறது போய்
வாருங்கள்”, என்று சொல்லி எங்களை அனுப்பிவைத்தார்.
- 9 -

Page 7
சுவாமியின் கருணையால் போலும் என் மனதில் “அறியாமைதான் எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம்”, என விளங்கிக் கொண்டேன்.
. சுவாமிகளுடன் இரண்டாவது சந்திப்பு
சுவாமியை முதன் முறை சந்தித்துப் பத்து மாதங்களின் பின் எனது தகப்பனார் பாரிய மண்சரிவு விபத்தில் அகப்பட்டுப் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இது எனக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் வேதனையைத் தந்தது. “சுவாமியைச் சந்தித்து அவரின் அருளைப் பெற்றால் தகப்பனார் உயிர் பிழைப்பார்’, என்னும் நம்பிக்கையுடன் அவரைச் சந்திக்கப் பலமுறை அவரின் ஆச்சிரமத்துக்குப் போனேன். அவரைச் சந்திக்க முடியவில்லை. சுவாமி யாழ்ப்பாணத்தை விட்டு வேறு இடத்துக் குச் சென்றுவிட் டார் . தகப் பனார் வைத்தியசாலையில் ஒரு மாத காலத்தின் பின் இறந்துவிட்டார்.
தந்தையின் ஈமச் சடங்குகள் முடிந்து இருவாரங்களின் பின் சுவாமியை பின்னேரப்பொழுது செம்மணி வீதியால் தன் ஆச்சிரமத்திற்குப் போய்க்கொண்டிருக்கும் வேளை சந்தித்தேன். சுவாமியைக் கண்டதும் சந்தோஷத்துடன் அவரை அணுகி ‘சுவாமி’ என்று அழைத்தேன். “என்ன” என்று கோபமாகக் கேட்டார். “ஐயா செத்துப்போனார்’ என்று சோகத்துடன் சொன்னேன். இரக்கமற்ற குரலில் “உன் ஐயா செத்தால் எனக்கென்ன?’ என்று சொல்லியது மாத்திரமல்ல என்னை ஏசிக்கொண்டே தன் வழியே போய்விட்டார்.
- 10 -

சுவாமிகளின் செயல் என்னை மிகவும் வருந்தச் செய்தது மட்டுமன்றி, சுவாமி மீது கோபத்தையும் உண்டு படுத்தியது. “எனது நிலையை உணராதவருடன் இனி எனக்கென்ன வேலை. கண்டாலும் இவருடன் இனிக் கதைக்க மாட்டேன்’ என்று சபதமெடுத்துக் கொண்டு அவரை ஏசியவாறே வீடுபோய்ச் சேர்ந்தேன்.
. சுவாமிகளுடன் மூன்றாவது சந்திப்பு
அவநம்பிக்கை, ஏமாற்றம், தப்பபிப்பிரயாம் இவை எல்லாம் மெய்யறிவு இல்லாத காரணமே. இதைச் சுவாமி அறியவைத்து உள்ளத்தில் உருவான கோபத்தைப் போக்கி நேசத்தை வளரச் செய்தார். சுவாமியின் செயல்கள் அற்புதமானவை.
மீண்டும் ஒருமுறை சுவாமியை முன்பு சந்தித்த இடத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர் எதிராக வந்துகொண்டிருந்தார். இவர் எனது மனது நோகச் சென்றமுறை பேசியதால் முகத்தைப் பார்க்கவே நான் விரும்பவில்லை. நான் தலையைக் குனிந்தபடி சுவாமியைப் பாராது விலகிச் சென்றேன். நான் பாராது போனதைக் கண்ட சுவாமி கைகளைத் தட்டி என் தந்தையின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். நான் திரும்பி சுவாமிகளைப் பார்த்து, “உது என் தந்தை பெயர்’ என்று சொன்னேன். சுவாமி புன்சிரிப்புடன், “உன் தந்தையார் இடத்துக்கு இப்ப தலைவனாக இருப்பவன் நீதானே. அதனால்தான் உன் தந்தை பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்’ என்றார். பின்பு, “எங்கே போகிறாய் இங்கே வா வா,’ என்று அழைத்தார்.
- l l -

Page 8
கிட்டப்போனதும் சுவாமி சிரித்த வண்ணம், “என்னுடன் கோபித்து நீ என்னை என்ன செய்யப்போகிறாய்.” என்று கேட்டார். பின்பு என் முதுகைத் தடவி, “ஒன்றுக்கும் யோசிக்காதே, கடவுள் உன்னுடன் கூட இருக்கிறார். ஒருவரும் இந்த உலகினில் இருக்க வரவில்லை. பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் வேண்டும். கடந்த ஞானிகள் என்று உலகம் போற்றியவர்கள் எல்லோரும் எங்கே சங்கரர், கிருஷ்ணர், புத்தர், கிறீஸ்து, முகமது, இவர்கள் எல்லோரும் எங்கே? செத்துப் போனார்கள். உன் தந்தை செத்துப்போனார் என்ற காரணத்தினால் நீயும் சாகப்போகிறாயா?” என்றார்.
பின்பு சொன்னார். “இதுவெல்லாம் ஒரு கனவு. உண்மையில் பிறந்தவன் யார்? இறந்தவன் யார்? நீயும் உன் ஐயா செத்துப் போனார் என்ற ஒரு கனவு கண்டு எழும்பித் துக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றாய். கனவை கனவாகப் பாவி, விழித்தெழு, இப்போது ஆகவேண்டியதைச்
99
செய்”, என்று சொல்லி மெளனமாக சில நிமிடங்கள் நின்றார்.
விழித்தெழு என்று உரத்த குரலில் சுவாமி சொல்லியதும் என் மனம் சாந்தி பெற்றது. பின்பு சொன்னார், “நீ வேலை பார்க்க சோதனைக்குப் போயிருக்கின்றாய் வேலை வரும் சந்தோஷமாகப் போய் வேலையைப் பார். வேலையானதன் பின் நான் உன்னைச் சந்திப்பேன்’ என்று சொன்னார். சுவாமி கூறியது போல சில மாதங்களின் பின் அரசாங்க உத்தியோகம் கொழும்பில் கிடைத்தது.
- 12 -

4. கொழும்பில் வேலை கிடைத்தது.
யுத்தகாலம் இட நெருக்கடி நல்ல உணவு கிடைப்பது கடினம், என் வருமானத்திற்கு ஏற்ப நல்ல இருப்பிட வசதி கொழும்பில் கிடைக்கவில்லை. எனது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது, நோய்வாய்ப்பட்டேன். ஒருவருடமும் ஏழு மாதங்களும் கழிந்தன. இறைவன் கருணையால் 1947ம் ஆணி டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைப்பது முடியாத காரியம் என்றுதான் சொல்லவேண்டும்.
யாழ்ப்பாணம் வந்து புது இடத்தில் வேலை ஏற்பதற்கு இரு தினங்களின் முன் சுவாமியின் ஆச்சிரமத்திற்குச் சென்றேன். அங்கு அவர் தனியாக இருந்தார். என்னைக் கணி டதும் , “வா வா உன் னை நான் தான் யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவித்துள்ளேன். உனக்கும் எனக்கும் இடையில் பல அலுவல்களுண்டு. இவை நிறைவேறும் வரை நீ இவ்வூரில் தான் இருக்கவேண்டும்”, என்று சொல்லி அவர் முன்னிலையில் என்னை இருக்கவைத்து நடக்கவேண்டிய விஷயங்களைக் கூறினார். பின்பு “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் இங்கு நீ வர வேண்டும்”, என்று சொல்லிவிட்டு என்னை வீட்டுக்குப் போக அனுமதித்தார்.
5. மானிட தத்துவம்
சுவாமி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நான் அடுத்த
- 13 -

Page 9
ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்குச் சுவாமியின் ஆச்சிரமத்திற்குச் சென்றேன். சுவாமி காலைக் கடனை முடித்துவிட்டு என் னை அழைத்துக் கொணி டு நாயன்மார்கட்டு வீதியால் சென்றார். சடுதியாக நின்று, “மனிதனுக்கு எவ்வளவு தத்துவங்கள் உண்டென்று உனக்குத் தெரியுமா?’ என்று என்னைக் கேட்டுவிட்டு தொடர்ந்து சொன்னார், “உன்னை எதிர்நோக்கி வரும் அலியன் யானைக்கு முன்னால் அச்சமில்லாமல் நின்று அதன் கண்களுக்குள் நீ பார்ப்பாயானால் அது அஞ்சி நடுங்கி உன்னை வணங்கி அமைதியாக நிற்கும். மலை யைக் கூட தள்ளிப் போகும் படி நரீ ஆணையிடுவாயானால் மலை தள்ளிப்போகும். ஈசனுக்கு எவ்வளவு தத் துவங்கள் உணர்டோ அவி வளவு தத்துவங்களும் மனிதனுக்கு உண்டு. ஆனால் மடையர்கள் இவற்றை அறியமாட்டார்கள்”, என்றார்.
இதன்பின் இருவரும் மெளனமாக நடந்தோம். சில நிமிடங்களுக்குப் பின் சுவாமி மேலும் சொன்னார். “மனிதன் தன் சிந்தனைகளைப் பல திசைகளிலும் விரயம் செய்வதன் காரணமாகத்தான் அவன் தத்துவங்களற்ற பலவீனனாக விருக்கின்றான். சிந்தனைகளை அடக்கி தனக்குள் கட்டி வைக்கவேண்டும். சிந்தனையை அடக்கத் தெரிந்தால் நினைப்பது கைகூடும்”, என்றார்.
சிறிது நேரத்தின் பின் மேலும் பேச்சைத் தொடர்ந்தார்.
“சிந்தனைகளை அடக்கி மனதைத் தெளிய வைத்தால்
சிவத்தைக் காணலாம். ஒவ்வொருவரும் தன்னை அறிய
வேண்டும். தன்னை அறிந்தால் தான் தத்துவங்களை
அறியலாம். உன்னை உன்னால் அறிய முடியும். உன்னை
- 14 -

உன்னால் அறியும் வித்தையைச் சொல்லுகிறேன் கேள்.” என்று கூறிவிட்டுச் சிறிது நேரம் மெளனமாக நடந்தார்.
பின் சுவாமி சிரித்துக்கொண்டே சொன்னார். “தம்பி! விடியற்காலையில் எழுந்தவுடன் படுக்கையில் ஒரு மணி நேரம் நிமிர்ந்திருந்து பழகி வா. இப்படிப் பழக சிந்தனைகளை அடக்கும் வித்தையைக் கண்டுபிடித்து விடுவாய்”, என்றார்.
6. தன்னம்பிக்கை
இதமான ஞாயிறு காலை சுவாமியின் காலடியில் அமர்ந்தபொழுது என்னைப் பார்த்து “தம்பி! தன்னம்பிக்கை வேண்டும். எல்லோரிலும் பார்க்க உனக்குத் தான் கூடுதலாக தன்னம்பிக்கை வேண்டும்”, என்றார். என் அபிப் பிராயப் படி எல்லாவற்றிலும் வைக் கும் நம்பிக்கையிலும் பார்க்க இறைவன் பால் வைக்கும் நம்பிக்கைதான் சிறந்ததென்பதாகும். சுவாமி தன்னம்பிக்கை அவசியம் என்று சொன்னதும் எனக்கு வியப்பாக இருந்தது. சுவாமி சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, “ஈசன் மேல் வைக்கும் நம்பிக்கைதான் தன்னம்பிக்கை” என்றார்.
பின்பு கேட்டார், “நீ உடலா அல்லது ஆத்மாவா? உன் உடல்தான் நீ என்று எண்ணுவாயானால் ஈசன் மேலுள்ள நம்பிக்கை தான் தன் நம்பிக்கை’, என்று சொல்லிவிட்டுக் கூரையைப் பார்த்தார். கூரையில் ஒரு சிலந்திக் கூடு இருந்தது. சிலந்தி கூட்டில் அங்கும் இங்குமாக ஒடிக் கொண்டிருந்தது. சுவாமி ஒரு தடியைத் தந்து சிலந்திக் கூட்டை அகற்றும்படி சொன்னார். சிலந்திக்
- 15 -

Page 10
கூட்டை அழித்துவிட்டேன். ஆனால் சிலந்தி எங்கோ ஒழித்துக் கொண்டது.
பின்பு சுவாமிகள் அரை மணித்தியாலம் வரை என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கூரையைப் பார்த்தார். நானும் கூரையைப் பார்த்தேன். சிலந்தி மீண்டும் கூட்டைக் கட்டிவிட்டு வலையில் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. கூட்டை உடைப்பதற்குத் தடியை எடுத்தேன். சுவாமி “அது இருக்கட்டும் விடு’, என்று சொல்லிவிட்டுச் சிலநிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்தார்.
சுவாமிகள் கண்களைத் திறந்து, “பார்த்தாயா தம்பி! இச் சில நீதி க்குத் தனி கூடு இல லாமல் இருக்கமுடியவில்லை. தான் கட்டிய கூட்டினில் தான் மறியல் இருக்கின்றது. கூட்டை உடைத்து அதைச் சுதந்திரமாக விட்டாலும் அது சீக்கிரம் ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு அதற்குள் சிக்கிக்கொண்டுதான் இருக்கும். இரை தேடுவதற்கு உதவியாகவிருப்பதற்குத் தானே கட்டிய கூட்டில் தானே சிக்கிக்கொண்டு தவிக்கின்றது. இப்படித்தான் மனிதனும் தன்னை மையமாக வைத்துத் தனக்கு உதவிக்காகத் தேடிய பந்தங்களில் இருந்து அவனால் விலக முடியவில்லை. என்று சிலந்திக்குக் கூடில்லாமல் இருக்க முடியும் என்னும் நம்பிக்கை வருகிறதோ அன்றுதான் சிலந்திக்குக் கூட்டைவிட்டு வெளியேற முடியும். இதே போல மனிதனுக்கும் என்று தான் பந்தங்கள் இல்லாமல் இருக்க முடியும் என்னும் நம்பிக்கை வருகின்றதோ அன்று தான் அவனால் பந்தங்கள் இல்லாமல் இருக்க முடியும்.
- 16 -

தன்னம்பிக்கை இல்லாவிட்டால் பந்தங்களில் இருந்து மனிதன் விலக, முடியாது. சுருங்கச் சொன்னால் மனிதன் தன் மனதிலுள்ள அபிப்பிராயத்துக்கு அடிமையாகி விட்டான். தன்னம்பிக்கை வேண்டும். பந்தங்களில் இருந்து விலக, மெய்யறிவு வேண்டும். மனத்திலிருந்து அபிப்பிராயத்தை நீக்க, உலக கருமங்களிலும் பார்க்க இறைவனைக் காண்பதற்குத் தான் தன்னம்பிக்கை கூடுதலாக வேண்டும். எவனுக்குத் தன்னால் இறைவனைக் காணமுடியும் என்னும் தன்னம்பிக்யுைம் வைராக்கியமும் மனதில் ஏற்படுகின்றதோ அவன் இறைவனை நிச்சயம் காண்பான். இறைவனை என்னால் காணமுடியும் என்னும் தன்னம்பிக்கையுடன் தியானம் செய் நிச்சயம் காண்பாய்”, என்றார். இதன் பின் சுவாமி வீடு செல்ல விடை தந்தார்.
. ஈசனை அறிய தியானமே சிறந்த வழி
தேவாரங்கள் படிப்பது எனது அபிலாசை, தேவாரம் படிப்பது எனது பொழுதுபோக்காக அமைந்துவிட்டது. கோளறு பதிகம், கந்தரலங்காரம் முதலிய தேவாரங்களை நான் விரும்பிப் படிப்பேன். அக்காலத்தில் அரசாங்கக் கந்தோர்கள் சனிக்கிழமைகளில் அரைநாள் வேலை செய்யவேணி டும். நான் சனிக் கிழமை அன்று விரதமிருப்பது வழக்கம். வேலைமுடிந்து வந்து சனிக்கிழமை விரதத்தை முடித்து விட்டுப் பின்னேரம் 3.00 மணியில் இருந்து கந்தரலங்காரத்தை இரவு 10.00 மணி வரையும் சிறுசிறு பொழுது ஒய்வுகளெடுத்துக் கொண்டு பாடினேன்.
வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமியின்
- 17

Page 11
ஆச்சிரமத்தை அடைந்தேன். சுவாமிகள் என்னைப் பார்த்து, “இரவிரவாக தேவாரம் பாடினாய் என்னத்தைக் கண்டாய்?” என்று கேட்டுவிட்டு “கத்தினது தான் மிச்சம் கனவுகூட இல்லை”, என்றார். அவர் சொன்னது உண்மை என்று நினைத்துச் சிரித்தேன்.
சுவாமி சொன்னார். “ஒரு மணித்தியாலம் தியானம் செய்வதற்கும் ஒருநாள் முழுக்க தேவாரம் படிப்பதற்கும் கிடைக்கும் பலன் ஒன்றுதான். ஆகையினால் நீ நிமிர்ந்திருந்து தியானம் செய். அமைதியில் தான் இறைவனைக் காணலாம் . தேவாரம் மனதை அமைதிப்படுத்த உதவுமே தவிர அதற்குமேல் கிடைக்கக் கூடிய பலன் ஒன்றுமில்லை. உனக்குள் இருக்கும் பொருளைக் காண்பதற்குப் பூரண அமைதி வேண்டும். ஆகையினால் அமைதியாக இருந்து தியானம் பண்ணி உன்னை அறி, ஈசனை அறிவாய்”, என்றார்.
. இருவினை தீர்க்கும் வழி
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமியுடன் மெளனமாக ஒரு மைல் தூரம் வீதியால் நடந்திருப்பேன். சுவாமி சடுதியாக நின்று, “சொல்லிலும் செயலிலும் பார்க்க அதன் ஞாபகமே மிகக்கொடியது. சிந்தித்துப்பார் தம்பி எது உண்மையில் ஒருவனைப் பாதிப்பதென்று. சொல், நாம் சொல்லி முடிந்ததும் காற்றுடன் போய் விடும். செயல், செய்து முடிந்தவுடன் முடிந்துவிடும். ஆனால் இவைகளின் ஞாபகங்களோ ஒருவனோடு இருந்து அவனுக்குக் கிடைக்கவேண்டிய சந்தோஷத்தையும் துக்கத்தையும் கொடுக்கும். ஞாபகங்கள் ஒருவனோடு
- 18 -

இல்லாவிட்டால் அவனுக்கு இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. இருவினைப் பயன்கள் அவனுக்கில்லை. ஆகையால் இருவினைப் பயன்கள் இல்லாதொழிக்க ஞாபகத் தொடரை இல்லாது பண்ணுவதுதான் சிறந்த உபாயம். சொன்னதையும் செய்ததையும் மனதில் வையாது அவ்வப்போதே மறந்துவிடவேண்டும்”, என்றார்.
இவற்றைக் கூறிவிட்டு மெளனமாக நடந்தார். சுவாமி கூறியவற்றைச் சிந்தித்துப் பார்த்தேன். செய்த வினைகளின் ஞாபகம் இல்லாவிட்டால் அவ் வினைகளின் பலாபலன்கள் இல்லாது போய்விடும் என்கிறார். இது சரிபோல எனக்குத் தோன்றவில்லை. பின் சுவாமிகள் என்னைப் பார்த்து, “உன் மனதில் இருப்பதா அல்லது என் மனதில் இருப்பதா உன்னைப் பாதிக்கின்றது?’ என்று கேட்டார்.
“என்மனதில் இருப்பது ஒன்றுமே உனக்குத் தெரியாது. அதைப்பற்றி உனக்கு சிந்தனையுமில்லை. உன் மனதில் இருப்பதைப் பற்றித் தான் உன் சிந்தனைகள் உன் மனதில் இருப்பது தான் உன்னைப் பாதிக்கின்றது. ஆனபடியால் கேட்டவைகளை, நடந்தவைகளை, செய்தவைகளை சொன்னவைகளை உன் சிந்தனையில் இல்லாதவாறு அவ்வப்போதே மறந்துவிடு. எல்லோரையும் அவரவர் மனதில் உள்ளது தான் பாதிக்கின்றது”, என்றார்.
“இந்தப் பூலோக வாழ்க்கையில் ஒருவரேனும்
பேசாமலும், தொழில் புரியாமலும் இருக்க முடியாது.
இவைகள் இரண்டுமில்லையேல் உலக வாழ்க்கையே
அற்றுப்போம் . உணர்மையில் வாழ்க் கை ஒரு
ஞாபகத்தொடர் இத்தொடர் அறுபட்டபின் பிறப்பு இல்லாமற்
- 19 -

Page 12
போகும். இது ஒரு சிக்கலான காரியம். செயல் ஞாபகத்தின் வித்து. செயலிலிருந்து ஞாபகமும், ஞாபகத்திலிருந்து செயலும் பிறந்த வண்ணமே இருக்கும். இவைகளே ஒருவனின் உலக வாழ்க்கையை உருவாக்கும் வித்தாக அமையும். இங்குள்ள சிக்கல் என்னவென்றால் உலகில் வாழும் வரையும் ஏற்படும் சொற்செயல்கள் மனதில் ஞாபக சிந்தனைகளை உருவாக்காத வண்ணம் தடுக்க வேண்டும். இது சாதாரணமான காரியமல்ல.
ஞாபகம் ஆசையாகவும், ஆசை செயலாகவும் உருக்கொண்டு மன அமைதியைக் குலைத்து மனிதனுக்கு உபத்திரவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். இதைத் தடுக்கும் வழி ஒருவரினுள்ளிருந்து தான் வரவேண்டும். தியான சாதனை தான் இதற்குச் சிறந்த வழி. தியானம் செய்யச் செய்ய பிறப்பறுக்கும் வழி தானாகத் தோன்றும், முத்தியும் கிடைக்கும்’ என்றார்.
. மார்க்கங்கள்
அதிகாலையில் ஒரு சிங்களக் குடும்பம் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தது. அவர்களைக் கண்டதும் சுவாமி, “புத்தம் சரணம் கஜ்ஜாமி”, என்னும் தோத்திரத்தை ஆரம்பிக்க இவர்களும் முட்டுக் காலில் இருந்து சுவாமியுடன் தோத்திரத்தைச் சொல்லி முடித்தனர். பின் சுவாமி முன் அமர்ந்தனர். சுவாமிகள் இவர்களுக்குத் தேநீர் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.
- 20 -

இவர்கள் போனபின் சுவாமி சொன்னார், “சமயங்கள் எல் லாம் ஒன்று, தேடும் பொருளும் ஒனர் று மதகுருமார்களின் செயல்களால் பலது போல் தோன்றுகின்றது”, என்றார். “தெரிந்து கொள்ளாத பொருளைப் பற்றிப் போதிப்பவன் அப்பொருள் எப்படி இருக்கலாம் எனக் கற்பனை பண்ணி, செய்யும் வருணனை தான் எல்லாரும் செய்கின்ற உபதேசம். இறைவனை முதலில் ஒதியுணரவேண்டும். அதன் பின்தான் உபதேசம் செய்யவேண்டும்”, என்றார். “தெரிந்தவன் பேசாமல் விட்டாலும் விடுவான். ஆனால் பண்டிதர்மார்கள் தான் பெரிய குழப்படி, சமயசாஸ்திரங்களுக்கெல்லாம் தாங்கள் எண்ணுகின்ற கருத்துக்களைக் கூறி அவைகளைப் பிழை படுத்துகின்றார்கள்.
சமயங்கள் யாவும் கடலில் செல்லும் கப்பல்கள் போன்றன. எல்லாக் கப்பல்களும் ஒரு திசையை நோக்கித் தான் செல்லுகின்றன. வித்தியாசம் என்னவென்றால் சில கப்பல்கள் குறிப்பிட்ட பாதையால் செல்லும் சில குறிப்பிட்ட பாதையை விட்டு இரண்டு பாகை கீழாகச் செல்லும். மேலும் சில குறிப்பிட்ட பாதைக்கு இரண்டு பாகை மேற்புறமாகச் செல்லும்.
இக் காரணத்தால் மேற்பாதையால் செல்லும் கப்பலில் உள்ளவர்களுக்கு கீழ்ப்பாதையால் செல்லும் கப்பல் எங்கே போகின்றது எனத் தெரியாமலிருக்கலாம். ஆனால் கரையை அடைந்ததும் அவர்கள் எல்லோரும் தாம் ஒரு இடத்திலிருந்து வெளிக்கிட்டு ஒரே திசையில் பயணம் செய்து ஒரு இலக்கை அடைந்தது தெரியவரும். இதே
- 21 -

Page 13
போலத் தானி மெய் யறிவை அடைந்தவர்கள் மெய்ப்பொருளை அடையும் பாதை ஒரு திசையில் தான் இருக்கிறதென்பதை அறிவார்கள்’.
சுவாமிகள் தொடர்ந்து கூறினார். “எல்லா மார்க்கங்களும் பக்தியின் அடிப்படையில் தான் உருவாகியுள்ளது. அன்புதான் உண்மையான பக்தி எல்லா உயிரினத்திலும் சிவனே சீவனாக இருக்கின்றான் எனவே எலி லா இனங்களையும் அணி போடு பார்க்கவேண்டும். அன்போடு நடத்த வேண்டும். இது தான் உண்மையான சிவபூசை எதற்கும் அன்போடு சேவை செய்தால் அங்கே சீவனாக இருக்கின்ற சிவனே அச் சேவையை ஏற்றுக் கொள்கின்றான்.
உன் தாயிலும் சிவன் இருக்கின்றான். உன் மனைவியிலும் சிவன் இருக்கின்றான், நாயிலும் சிவன் இருக்கின்றான் எல்லாவற்றிலும் சிவன் இருக்கின்றான் என்று எண்ணி, உன் மனைவியை வைத்துப் பார்க்குமிடத்தில் தாயை வைத்துப் பார்க்கலாமா? அல்லது தாயின் இடத்தில் நாயை வைக்கலாமா? நாயை நாயின் இடத்திலும், தாயைத் தாயின் இடத்திலும், மனைவியை மனைவியின் இடத்திலும் வைத்து அன்பாகப் பார்க்கவேண்டும். எல்லாவற்றையும் அதற்குரிய இடங்களில் வைத்துத் தான் பார்க்க வேண்டும். இது ஒரு பெரிய ஒழுங்கு’, என்றார்.
10. சித்து வரும் சிக்கிக் கொள்ளாதே
அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி தேவாரம்
- 22

பாடுவதை நான் அவர் முன்னிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவர் வந்து ஆச்சிரமத்தினுள் போகாமல் வாசலில் நின்றார். சுவாமி அவரை உள்ளே வரும்படி அழைத்து, கால்மாட்டில் இருக்க வைத்தார். “காலடியில் இருப்பவர் பக்கம் கிருஷ்ணர், தலைமாட்டில் இருப்பவருக்குப் படை” என்று பரிகாசமாகக் கூறினார். பின்பு அவரைப் பார்த்து, “உப்படிப் போறிர் சித்து வரும் சிக் கிக் கொள்ளாதையும் சித்திற்குள் சிக்கிக் கொண்டீரானால் நீரும் முன்னேறிய பாடில்லை. மக்களும் உம்மைச் சும்மா இருக்கவிடமாட்டார்கள். மக்கள் கொஞ்சம் வெளிச்சத்தைக் கண்டால் மொய்த்து விடுவார்கள். உம்மைக் காட்டிக் கொள்ளாமல் முன்னேறிச் செல்லும்”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
வந்தவர் போனபின் சுவாமி சொன்னார், “சிலர் சரியான பாதையில் போவார்கள். சிலர் இடையில் சறுக்கி விடுவார்கள். சிலருக்குச் சித்தைக் கண்டவுடன் ஆணவம் வந்துவிடும். நான் பெரியவன் என்று காட்டவேண்டும் என்னும் எண்ணம் வந்துவிடும். கடைசியில் எல்லாம் போய்விடும். வந்தவர் பெரிய மனிதர் சித்தில் சிக்கமாட்டார். இருந்தாலும் இப்பவே சொல்லி வைக்காவிட்டால் பலவீனம் வந்தாலும் வந்துவிடும்” என்றார்.
“பலவீனம் யாரைத் தான் விட்டுவைத்தது. இந்தப் பெரிய
யேசுக் கிறீஸ்துவைக் கூடப் பிடித்து உலைக்கப் பார்த்தது.
ஆனால் அவர் அதற்கு இடமளிக்கவில்லை. இருந்தும்
அவரையும் அது தொட்டுத்தான் பார்த்தது. ஆசையும்
ஒரு பலவீனத்தின் விளைவுதான். அதனால்தான் அது
- 23 -

Page 14
11.
மனிதனைப் படாதபாடு படுத்துகிறது. பலவீனத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது’, என்றார்.
உண்மையான ஞானி எங்கிருந்து உதிப்பான்
சுவாமி விவேகானந்தர் தனது சொற்பொழிவொன்றில் “பிரமச்சரியம் தெய்வீக வாழ்க்கைக்கு உகந்தது என்னும் கருத்துப்படக் கூறியுள்ளார். அப்படியாயின் சுவாமி ஏன் என்னை விவாகம் செய்யும்படி சொல்லுகின்றார்? ஏன் என்னைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு திரிந்து தன் நேரத்தை என்னுடன் வீணாகச் செலவு செய்கின்றார்? விவாகம் செய்துகொள்ள விரும்பாத ஒருவரைத் தெரிந்தெடுத்துப் பழக்குவாரானால் அவன் சுவாமிக்கு நல்ல சீடனாக இருப்பதுடன் மக்களுக்கு வழிகாட்டும் ஞானியாகவும் இருப்பான்”, என்ற எண்ணம் சனிக்கிழமை இரவு முழுவதும் என் மனதைக் குழப்பியது.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வழமை போல் ஆச்சிரமத்திற்குப் போனேன். சுவாமி என்னைக் கண்டவுடன் புன்சிரிப்புடன் கேட்டார். “உன்னாணை சொல்லு தம்பி! ஒரு ஞானி எப்படிப் பட்டவர்களில் இருந்து உதிப்பான் என்று? என் பதிலை எதிர்பாராமல் சொன்னார், “குசேலர் திருமணம் செய்து இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்றவர், ஒரு கடந்த ஞானி; எத்தனையோ பேர்களின் கழுத்தை அறுத்த கொள்ளைக்காரன் வால்மீகி, ஒரு கடந்த ஞானி; புத்தர் மனைவியையும் பிள்ளையையும் தவிக்கவிட்டுச் சென்றவர், கடந்தஞானி; கிருஷ்ணர் எட்டுப் பெண்டாட்டிக் காரன், கடந்த ஞானி; அருணகிரிநாதன் வேசை மாடி
- 24

12.
எல்லாம் நடமாடிய வீரன், கடந்தஞானி, நந்தன் ஒரு புலையணி , கடந்த ஞானி; திருஞானசம்பந் தனி விவாகமாகாதவன், ஒரு கடந்தஞானி; இராமக்கிருஷ்ணர் விவாகமாகி போகம் செய்யாதவர், கடந்தஞானி; நபி பல திருமணம் முடித் தவன் , கடந்த ஞானி; எப்பேர்ப்பட்டவர்களில் இருந்து ஒரு கடந்தஞானி தோன்றுவான் என்பது யாருமறியாத இரகசியம். ஏன் இவர்கள் இளமையில் இப்படி நடந்தார்கள் என்பதுவும் யாரும் அறியமாட்டார்கள். தற்காலத்தில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டோரிலும் கடந்த ஞானிகள் இருக்கலாம் என்பதற்கு சான்று வேண்டும். ஆகையால் தான் உன்னை அழைத்துள்ளேன். மக்கள் ரிஷி பத்தினிகளாக வாழவேண்டும். ஆண்கள் ரிஷிகளாகவும் பெண்கள் பத்தினிகளாகவும் இருந்தால் தான் வாழ்க்கையில் நிம்மதி இருக்கு”, மென்றார்.
தொழில்
ஞாயிறுதோறும் சுவாமியிடம் நான் பகல் வேளைகளை ஒன்றாகக் கழிப்பது வழக்கமாகப் போய்விட்டது. சுவாமி செல்லுமிடமெல்லாம் என்னைக் கூட்டிச் செல்வார். பிற்பகல் ஆறு மணியளவில் தான் வீடு செல்லவிடுவார். ஞாயிறு காலை திருநெல்வேலிக்குச் சென்றோம். அங்கு இளைஞர்கள் சிலர் கூட்டமாக நின்றார்கள். சுவாமி அவர்களைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள்”, என்று கேட்டார். அவர்கள் “எஸ்.எஸ்.ஸி (S.S.C) சோதனை முடித்து விட்டு வேலைக்கு மனுப் பண்ணியிருக்கின்றோம் என்றார்கள். “வேலைக்காக மனுச் செய்கிறீர்கள் கமத் தொழில் பழகிக் கமம் செய்யுங்கள. இது
- 25 -

Page 15
நல்லதென்றார்.” சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டதும் இளைஞர் கூட்டம் சொற்ப பொழுதில் ஒன்றும் பேசாமல் கலைந்து விட்டது.
இளைஞர்கள் நழுவியதைக் கண்ட சுவாமி சிரித்துவிட்டு, “கமம் செய்யென்றால் கேட்க மாட்டார்கள். வேலைக்காக அரசியல்வாதிகளின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவார்கள். மடையர்கள்! கமம் செய்தால் கால்சட்டை சேட்டுபோட இயலாது என்று நினைக்கின்றார்கள். இப்போ கமச் செய்கையில்தான் காசு. கமம் செய்கின்றவன் ஒரு வருக் கும் பயப் படமாட் டானி பயப் படத் தேவையுமில்லை”, என்றார்.
“எந்தத் தொழிலைச் செய்தாலும் எல்லாப் புலன்களையும் அவ்வேலையில் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் தொழில் விருத்தியடைந்து ஆதாயமும் ஏராளமாகப் பெறலாம். மனம் அங்கலாய்ப்புப் பட்டால் தொழில் விருத்தியுமில்லை. ஆதாயமுமில்லை. அனேகமானவர்கள் தொழிலில் கையையும், ஆதாயத்தில் மனதையும் வைத்துக் கொண்டு உலைதலினால்தான் தொழிலும் கெட்டு நிம்மதியும் கெட்டுக் கலங்குகிறார்கள். இது ஒரு இரகசியம்’ என்றார்.
“புலன்களைச், செய்யும் தொழிலில் செலுத்தி, செயல்புரிவது ஒரு பெரிய யோகம். மேல்நாட்டவர்கள் எங்கிருந்து நவீன கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் என்று நினைக்கின்றாய்? எல்லாம் அவர்களுக்குள் இருந்துதான் வந்தது. பெரிய விஞ்ஞானிகள் சரித்திரத்தை படித்தால் தெரியும்.
- 26 -

13.
குளத்து நீர் அசைவற்றிருந்தால் தான் குளத்தின் அடியில் இருப்பது தெரியும். இதேபோல் மனம் அசைவற்றிருந்தால் தனக்குள் இருப்பது என்னவென்பது தெரியும். அது காட்டுவதைக் காணலாம். அது சொல்வதைக் கேட்கலாம். இதைவிடப் பெரிய பூஜை என்ன இருக்கின்றது. புலன்களை ஒடுக்கி வேறு சிந்தனைகள் இல்லாமல் தொழில் புரிய உள்ளிருக்கின்ற பொருள் என்ன செய்யவேண்டும் என்பதைக் காட்டும். அது காட்டுவதைச் செய்து போட்டு இருக்க வேண்டியது தான். இவ்வாறு தொழில் செய்பவன் ஞானி. இவ்வாறு தொழில் புரிபவன் தான் தன்னில் ஒன்றும் இல்லை, எல்லாம் அவன் செயல், என்கடன் பணி செய்து கிடத்தலே, என்று சொல்லத் தகுதியுடையவன்.
தொழிலால் சிவத்தைக் காண முடியாதென்று நினைக் கின்றாயா? ஒரு முனையில் எல்லாப் புலன்களையும் செலுத்தினால் சிந்தனை தானாக அடங்கிவிடும். சிந்தனை அடங்கினால் சிவன் தானாகத் தோன்றுவான்’ என்று சொன்னார்.
சுவாமி காட்டிய அற்புதம்
சுவாமியைச் சந்திப்பதற்கு காலை 5.00 மணிக்கு முன் நான் வெளிக்கிட வேண்டும். பிந்தினால் அவரைக் காணமுடியாது. அக்காலத்தில் எங்கள் வீட்டில் மணிக்கூடு இல்லை. கந்தசுவாமி கோவில் முதல் மணி கேட்டதும் நான் வெளிக்கிடுவது வழக்கம். காலையில் எழுந்து போவதற்கு வசதியாக நான் சனிக்கிழமை இராப்பொழுது வீட்டு ஹாலில் படுப்பது வழக்கம். அந்தச் சனிக்கிழமை 9 DT6) T60)3F.
- 27

Page 16
அன்றிரவு படுத்திருந்த பொழுது நல்லூர் மணி கேட்டதும் எழுந்து பார்த்தேன். தாயாரும் கதவைத்திறந்து வெளியே பார்த்துவிட்டு “இப்ப சாமம் என்னும் விடியவில்லை படு’ என்றார். நானும் படுத்து விட்டேன். மீண்டும் சிறிது நேரத்தின் பின் கோவில்மணி அடித்தது. நான் இரண்டாம் தடவையாக எழுந்தேன். இம்முறையும் தாயார் எழுந்துவந்து வெளியே பார்த்தார். கும்மென்ற இருட்டு விடியவில்லை. “நீ போய்ப்படு” என்றார். சிறிது நேரத்தின் பின் மூன்றாம் முறையாக மணிகேட்டது. எழுந்தேன். தாயார் வெளியில் சென்று பார்த்துவிட்டு சொனி னார். “இது உண் நினைவே ஒழிய வேறொன்றுமில்லை. இன்னும் விடியவில்லை படு, மணியடித்ததும் நான் எழுப்பி விடுகின்றேன்’ என்று சொல்லிப் படுக்கவைத்தார்.
இம்முறை அம்மாவின் காதில் மணியோசை கேட்டது. வெளியில் சென்று பார்த்தார். நல்லவெளிச்சம், நேரம் போய்விட்டதே என்று ஒடிவந்து எழுப்பிவிட்டார். நானும் சீக்கிரமாக வெளிக்கிட்டு ‘நல்லாக நேரம் போய்விட்டதே இன்று சுவாமியைப் பார்க்க முடியாது’ என்று நினைத்து வேகமாக நடந்து சென்றேன். வெளிச்சம் கூடிக்கொண்டே போனது “ஆறரை மணிக்கு மேலாச்சுப் போலிருக்கே மூன்றாம் மணியுடன் வெளிக்கிட்டிருக்கவேண்டும். பிழை செய்துவிட்டேன்”, என்று எண்ணிக் கொண்டு சுவாமியின் படலையை அடைந்தேன். படலையைத் தொட்டதும் அக்கம் பக்கம் எல்லாம் இருளாகி விட்டது. “அடே அப்பா! நல் லகாலம் நேரம் போகவில்லை சுவாமியைப் பார்க்கலாம்” என்று சந்தோஷப்பட்டேன்.
- 28 -

படலை பூட்டியிருந்தது. “திறக்கட்டும் உள்ளே போகலாமென” நினைத்து நின்றேன். சுவர் மணிக்கூடு ஒருதரம் அடித்தது. படலை திறபடும் என்று நினைத்து அவ்விடத்திலே நின்றேன். மணிக்கூடு இரண்டுதரம் அடித்தது. பாதையைத் திரும்பிப் பார்த்தேன். கும்மென்று இருட்டு அவ்விடத்தில் நிற்க எனக்குப் பயமாக இருந்தது. பாதையைக் கடந்து எதிரே உள்ள இலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலுள் போய்க் கிணற்றுக் கட்டில் இருந்தேன். மீண்டும் மணிக்கூடு ஒரு தரம் அடித்தது. சுவாமி விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
மணிக்கூடு இரண்டுதரம் அடித்தது. இரண்டுமணி எனப் புரிந்து கொண்டேன். அப்பொழுது சுவாமி படலையைத் திறந்தார். ‘இனி ஆச்சிரமத்திற்குள் போகலாம்’ என மகிழ்ந்தேன். ஆனால் வெளியே வந்த சுவாமி (உரத்த குரலில், “யார் இந்த நேரம் இங்கு உன்னை வரச்சொன்னது. உனக்கு வீட்டில் வேலை இல்லையோ’, என்று ஏசினார். நான் பயந்து வீட்டுக்குப் போக எண்ணி நடக்க ஆரம்பித்தேன். சுவாமி கனிவுடன் “தம்பி வா போகாதே நான் உன்னை நினைத்துக் கூப்பிடா விட்டால் நீ நினைத்தாலும் இந்த நேரத்தில் உன்னால் வரமுடியாது. நான் தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆகையால் தான் நீ வந்திருக்கிறாய் உள்ளே வா”, என்று ஆச்சிரமத்திற்குள் அழைத்துச் சென்றார்.
நான் அவர் காலடியில் இருந்தேன். அவர் தன்
படுக்கையில் இருந்து என்னைப் பார்த்த வண்ணம்
மெளனமாக இருந்தார். நான் அவரைப் பார்த்த வண்ணம்
இருந்தேன். கந்தசுவாமி கோயில் மணியடித்ததும் சுவாமி
- 29.

Page 17
14.
எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு என்னைக் கூட்டிக்கொண்டு நாயன்மார்க்கட்டுக்கு வந்து ஒரு கடைக்குள் போயிருந்தோம். சுவாமியின் கட்டளைப்படி எமக்கு கோப்பி தரப்பட்டது. நான் கோப்பியை சுறுக்காக் குடித்து விட்டேன். சுவாமி மிகவும் ஆறுதலாகக் குடித்துக் கொண்டிருந்தார். பின் எனக்குத் தோசை கொடுக்கும்படி சொன்னார். நான் தோசையைச் சாப்பிட்டு முடித்தபின்பும் சுவாமி கோப்பியை வைத்துக் கொண்டிருந்தார். நான் கைகழுவி வந்தவுடன் தன் அருகில் இருத்தி மிச்சமாக வைத்திருந்த கோப்பியைக் குடிக்கும் படியாக என்னிடம் தந்தார். அதன் பின் இருவரும் உடுவிலுக்குப் போனோம்.
உன்னிலும் பெரிய ஞானியா?
நல்லூர்த் தேர்த்திருவிழாவன்று இலேசாக மழை துமித்தது. வீதியில் நின்றவர்கள் நனையாதிருக்க ஒதுக்கிடம் தேடி ஓடினார்கள். அங்கு நின்ற ஜேமன் சுவாமி ஓடுகின்றவர்களைப் பார்த்து “நீங்கள் என்ன சீனியா சர்க்கரையா மழை நீரில் கரைந்து போக. ஏன் ஒடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
தேர்த் திருவிழாவுக்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை சுவாமியைச் சந்தித்த பொழுது என்னை அறியாமல் ஜேமன் சுவாமியின் கதையைச் சொல்ல, ஜேமன் சுவாமி என்று ஆரம்பிக்க யோகசுவாமி கோபாவேசம் கொண்டு, உன்னிலும் பார்க்கப் பெரிய ஞானியாடா அவன். இந்த யாழ்ப்பாணத்தார் போல நீயும் ஏமாந்து நிற்கின்றாய். வெள்ளைத் தோலையும் வேட்டியையும் கண்டவுடன் பின்னால் ஓடுவான்கள், இந்த யாழ்ப்பாணத்து மடையர்கள்.
- 30 -

அவர் அள்ளிக் கட்டி விடுவார். நாங்கள் மடிக்குள் கொண்டு வந்துவிடுவோம். உனக்கு அவன் எண் ன தர வைத்திருக்கின்றான். நீயும் ஏன் இந்த மடையர்கள் போல ஏமாந்தவனாக இருக்கின்றாய்”, என்றார்.
சுவாமியின் கோபத்தைக் கண்டு திகைத்துப் போனேன். பின்பு சுவாமி சொன்னார். “உன்னிலும் பெரிய ஞானி இந்த உலகத்தில் உண்டா? உனக்குள் இருப்பது என்னவென்று அறி. தன் னை அறிந்தவன் தான் தத்துவஞானி அவன் தான் முக்தன். அவன் தான் எல்லாம் வல்ல இறைவன். தன்னை அறிவதை விட்டுவிட்டு அவர் சாமி, இவர் சாமி என்று சொல்லிக்கொண்டு தடம் புரழுகின்றாய்,” என்று சொல்லி முடித்ததும் யாரோ ஒருவர் வந்தார்.
சுவாமி அவரை இருக்கச் சொன்னார். நான் சுவாமிக்கு என்ன சொல்ல நினைத்தேனோ அவற்றை வந்தவர் சொல்லி முடித்தார். சுவாமியும் கவனமாகக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ‘நான் சொன்னால் ஏச்சு பிறர் சொன்னால் சிரிப்பா’, என்று நினைத்தேன்.
வந்தவர் போனபின் சுவாமி, “எவருக்கும் அவரவர் செய்யக்கூடியதற்கு மேல் சொல்லுவதில் பயனில்லை. அவருக்கு உன்னை அறி என்று சொன்னால் அதனால் அவர் அடையக்கூடிய பயன் ஒன்றுமில்லை. அவர் நிலையில் அவர் செய்யக் கூடியதைத் தான் அவருக்குச் சொல்ல வேண்டும். உன் நிலையில் நீ செய்யக் கூடியதைத் தான் நான் உனக்குச் சொல்லி வருகின்றேன்,” என்றார்.
- 31 -

Page 18
15.
மீண்டும் சொன்னார். “உன்னை அறி உன்னை அறிந்தால் தான் உன்னிலும் பெரிய ஞானி இந்த அவனியில் உண்டோ என்பது தெரியும். தன்னையறிந்தவன் தத்துவ ஞானி. தன்னையறிந்தவன் கடவுளை அறிந்தவனாவான்”, என்று கூறி முதுகில் தட்டி விட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
செல்வம்
சுவாமியும் நானும் ஆச்சிரமத்தை விட்டு சொற்ப தூரம் வீதியால் சென்றபொழுது வீதியோரத்தில் ஒரு பெண் நின்றாள். அவளுக்கு 50 வயது மதிக்கலாம், நாங்கள் கிட்டப்போனதும் எங்களைப் பார்த்து, “சுவாமிமார் என்றால் என்ன, அவர் கள் கொணர் டாட் டம் பணக்காரர்களுடன் தான, செல்வந்தரைத் தான் கூட்டிக்கொண்டு திரிவர், செல்வந்தர் வீடுகளுக்குத்தான் போவர். அவர்கள் வீடுகளில் தான் விருந்துண்ைபர், எங்களைப் போல ஏழைகளைக் கண்டால் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்”, என்றாள். பக்தியுள்ள பெண்ணாக இருக்கவேண்டும், பயமில்லாமல் தன் எண்ணத்தைக் கூறுவதற்கு.
சுவாமி அப்பெண்ணைப் பார்த்து, “அம்மா சிந்தித்துப் பாருங்கள். நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சுவாமிக்குச் சாப்பாடு கொடுக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். நான் சாப்பிடாமல் விட்டால் நீங்கள் மனவருத்தப்படுவீர்கள், உங்களுக்கோ சாப்பாட்டுக்குக் கஷ்டம், நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டைத் தான் எனக்குத் தரவேண்டும். உங்கள் சாப்பாட்டை எனக்குத் தந்துவிட்டு நீங்கள் பட்டினி இருக்க
- 32

வேண்டும் என்று நினைக்கின்ற போது என் மனதுக்கு வருத்தம்.
ஒரு செல்வந்தன் வீட்டில் எப்போதும் சாப்பாடு மிஞ்சி இருக்கும். நாய்க்குப் போடுகின்ற மிஞ்சிய சாப்பாட்டில் எனக்கும் கொஞ்சம் தருவான். எனக்கும் கஷ்டமில்லை அவனுக்கும் கஷ்டமில்லை”, என்று கனிவாகச் சொன்னார். அப்பெண்ணும் சிரித்துக் கொண்டு ‘அதுவும் சரிதான்’ என்று சொல்லிவிட்டுத் தன் வழியே சென்றார்.
அப்பெண் போனபின் சுவாமி சிரித்துவிட்டுச் “செல்வம் என்றால் என்ன “வென்று கேட்டுச் சொன்னார்’. தங்கம், பொன், வெள்ளி, செப்பு முதலிய உலோகங்கள் செல்வம் என்கிறார்கள். வீடு, நிலம் முதலியவற்றையும் செல்வம் என்கிறார்கள். இவை எல்லாம் எங்கிருந்து வந்தன. மண்ணில் கலந்து மண்ணில் புதைந்து கிடந்தது தானே. உதாரணத்துக்குத் தங்கத்தை எடு. தங்கம் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணோடு கலந்து இருக்கும் வரைக்கும் யார் அதற்கு மரியாதை கொடுத்தார்கள். அதற்கு மேல் மலசலம் கழித் திருப்பார்கள். அதை மிதித்து நடந்திருப்பார்கள். மண்ணில் இருந்த தங்கத்தைப் புடம் செய்து கட்டித்தங்கமாக எடுத்தவுடன் அது பெரிய செல்வம்.
ஐம்பூதங்களாகிய ஆகாசம், மண், நீர், காற்று, நெருப்பு
ஆகியவைகளுடன் விளையாடிக் கொண்டுதான் மனிதன்
செல் வம் , செல் வம் என்று சொல் லி
சந்தோஷப்படுகின்றான். மண்ணைச் செல்வமாக்கியது
என்ன? மனிதனிலுள்ள அறிவும், சக்தியும் தான். இந்த
-33 -

Page 19
அறிவும் சக்தியும் ஆன்மாவிலிருந்து தான் வந்தது. ஆன்மா அகன்று விட்டால் உடலுக்கு அறிவுமில்லை சக்தியுமில்லை. ஆன்மா உடலில் இருந்துகொண்டு பூதங்களுடன் விளையாடும், பயனாக வருவதைத் தான் மனிதன் செல்வமென்று சொல்லி மகிழ்கின்றான்.
ஆன்மா தான் பெரிய செல்வன். ஆன்மாவில் தான் இப்பூதங்கள் யாவுமுண்டு. தான் ஆன்மா என்று உணர்ந்தவர்கள் இப்பூதங்களினால் ஏமாற்றப்பட மாட்டார்கள். தான் நினைத்தவைகளைத் தன் சக்தியைக் கொண்டு இப் பூதங்களிலிருந்து உருவாக்குவான் என்று சொன்னார்.
பின் சொற்ப நேரம் மெளனமாக நடந்தார். பின் கூறினார். “செல்வம் நாணமற்ற வேசியிலும் பார்க்கக் கெட்டது. சிந்தித்துப் பார். ஒரு வேசிக்கு செல்வன் இல்லாமல் அவள் விரும்பியவாறு அலங்காரமாக வாழமுடியாது. அவள் வசிக்கும் மாளிகை, உண்ணும் உணவு, உடுக்கும் பட்டாடை, அணியும் நகைகள், சவாரி செய்யும் வண்டில், எல்லாமே செல்வன் பணத்தால் பெறப்பட்டது. அவளின் ஏவலாட்களும் அவன் பணம் தான். அப்படி இருந்தும் அவளுக்கு நன்றி உண்டா? செல்வன் பணத்தை அணைத்துப் பறிப்பாள். அவன் பணம் முடிந்ததும் அவனைத் தெருவில் துரத்தி விடுவாள். இதன் பின் இவன் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்க வேண்டியதுதான்.
இவ்வாறே செல்வமும், செல்வத்தில் மையல்
கொண்டால் அது அவனை ஆட்டிவைத்துவிடும்.
-34

கள்வருக்குப் பயம், செல்வம் அழிந்து போகும் என்ற பயம். பயத்தால் நித் திரை இல்லை. மனதில் நிம் மதியில் லை. சிந்தனை அங்கும் இங்கும் ஒடிக்கொண்டிருக்கும் கரைச்சலால் சாப்பிட மனமில்லை. தேகம் பலவீனப்படும். நோய்க்காளாவான், ஆழ்ந்து சிந்திக்க முடியாது. புத்தி மழுங்கிப்போம், இறுதியில் வேதனையுடன் மரணமாவான்.
பதிலுக்கு ஒரு செல் வண் தன் வலிமையை உணர்ந்திருக்கின்றான் என்று வை. அவன் தன் இன்பத்திற்காக ஒரு வேசி வீட்டுக்குப் போனான். வேசியும் உபசரித்து, அனைத்து, இன்பம் கொடுத்தாள். இருந்தாலும் அவள் கவனம் முழுவதும் இவன் பணத்தில் தான். சிலநாட்களின் பின் “இவன் தன்னில் மயங்கி விட்டான். இனி இவன் தன்னை விட்டுப்போக மாட்டான் என்று எண்ணி', இவனுக்குக் கொஞ்சம் சுடச்சொல்லி அவமதித்தால் இவன் பணத்தை அதிகமாகத் தருவான்’ என்று நினைத்தாள். செல்வன் வாங்கிவந்த அன்பளிப்பைப் பார்த்து பரிகாசமாக “இதுவும் ஒரு அன்பளிப்பா”, என்று எறிந்து விட்டு இகழ்ச்சியாகப் பேசினாள்.
பணக்காரன் சிரிப்புடன் “என் பணம் உனக்கு இந்த அதிகாரத்தைத் தந்திருக்கும்”, என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் வெளியே போய்விடுகின்றான். அவன் பின்பு அவள் வீட்டுக்கு வரவில்லை. வேசிக்குத் தெரியும் “பணக்காரன் இல்லாவிட்டால் தனக்கு அலங்கார வாழ்வு இல்லை’ என்று. சில நாட்கள் பொறுத்துப் பார்த்தாள். பணக்காரன் வரவில்லை பின்பு சில ஆட்களை அழைத்து செல்வனைச் சமாதானம் செய்து கூட்டிவரும்படி
-35 -

Page 20
அனுப்பினாள். சென்றவர்களைப் பார்த்து “உங்கள் அழைப்புக்கு நன்றி எனக்கு அவள் வீட்டில் வேலை இல்லை போங்கள்”, என்று திருப்பி அனுப்பிவிட்டான்.
தனது அழைப்புக்கு செல்வன் வரவில்லை எனக் கண்ட வேசி தானே செல்வனிடம் காலை போகின்றாள். வேசியைக் கண்டதும் தனது ஏவலாளை அனுப்பி, 'ஐயா இப்ப வேலையாக இருக்கின்றார். அவரைப் பார்க்க வேண்டுமானால் இருங்கள் என்று சொல்லும் படி செய்தான்’. அவளும் மணிக்கணக்காக இருந்தாள். செல்வனைக் காணமுடியவில்லை. அவள் பயத்துடன் தான் இருக்கின்றேன் என்ற காட்ட தன் முகத்தை செல்வனுக்குக் காட்டினாள். அவளைக் கண்டதும், “எனக்கு வேலை அதிகமாக இருக்கின்றது 2.00 மணிக்கு முன் சந்திக்கமுடியாது. உனக்கு வேறு வேலையிருந்தால் போய்ப்பார்த்து விட்டு வா’, என்று அதிகாரத் தொனியில் சொல்லிவிட்டான். வேசி பயத்துடன், “பிரபு எனக்கு ஒரு வேலையுமில்லை இங்கு இருக்கின்றேன்”, என்றாள்.
சாப்பாட்டு நேரம் வந்தது ஏவலாளைக் கூப்பிட்டு “அவள் இருந்தால் சாப்பாடு கொடு’, என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்காமலே போய்விட்டான். செல்வன் திரும்பி வந்ததும் அவளைக் கவனியாது தன் வேலையில் ஈடுபட்டான். 2.00 மணிக்குச் சந்திப்பேன் என்றவர் 4.00 மணியாகியும் சந்திக்கவில்லை. மறந்து விட்டாரோ என்று எண்ணிப் பயந்து தன் முகத்தைக் காட்டினாள். செல்வன், “உனக்கு ஒரு அவதியுமில்லைத் தானே என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அமைதியாக இரு. என் கருமங்களை முடித்தபின் சந்திக்கலாமென்றான்.
- 36

பின் எல்லாக் கருமங்களையும் முடித்த பின் சந்தித்தான். வேசிக்குத் தெரிந்து விட்டது. “செல்வன் இனி தன்னில் மயங்கமாட்டான் என்று. அவன் இல்லாமல் தன்னால் சிவிக்கமுடியா தென்பதும் தெரியும். இனி தனக்குக் கிடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவனோடு இருக்கப் பார்க்கவேண்டும். இனிப் பயந்து, அன்பு காட்டி, சொல்லுகிற ஏவல்களை எல்லாம் செய்து இருக்கச் சித்தமானாள்.
இப்படித்தான் செல்வமும், கருமத்தில் புலன்கள் யாவையும் ஒரு நிலைப்படுத்தி ஊக்கத்துடன் தொழில் புரிந்தால் செல்வம் அவன் காலடியில் நிற்கும். நாளுக்கு நாள் அவனுக்குக் கூடுதலாகச் சேவைசெய்யும்”, என்றார்.
பின்பு சுவாமி, “வேசியைக் கவனிக்காமல் விட்டால் அவள் இருப்பாள் என்று எண்ணுகிறாயா?" என்று கேட்டார். அவள் இருக்கமாட்டாள். அவளால் இருக்கமுடியாது. அதே போலத்தான் செல்வமும். செல்வத்தைக் கவனியாது விட்டால் அது அழிந்துவிடும். செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அதில் மோகம் கொள்ளக்கூடாது. அதில் மயங்கி அதற்கு அடிமைப்பட்டால் தான் அது உபத்திரவம் கொடுக்கும். மனிதன் உண்மையையுணர்ந்து செல்வத்திற்கு அடிமைப்படாமல் அதற்குரிய இடத்தைக் கொடுத்துப் பாதுகாத்தால் அது வேண்டிய சேவை செய்துகொண்டு மனிதனோடிருக்கும்”, என்றார்.
“மனிதனின் உண்மையான நிலை அவன் ஆன்மா மனிதனுக்கு ஆன்மாவை உணரத் தேகம் வேண்டும்.
- 37 -

Page 21
மனிதன் தொழில் புரியாமல் தேகத்திற்கு உண்டி கொடுக்க முடியுமா? தொழில் புரியப்புரிய தேகம் பலக்கும். பணத்தைப் பாதுகாப்பதற்கு உகந்த வழி தொழில் புரிவதேயாகும். தொழில் புரியப் புரிய தேகம் வலிமை பெறுவதுடன் பணமும் வலிமை பெறும். உண்மையில் மனிதன் தன் ஆன்மாவுக்கு செய்யக்கூடிய பெரிய சேவை தொழில் புரிவது தான். தொழில் தான் சிறந்த சிவபூஜை. ஆன்மா தான் சிவம். சிவத்தில் எல்லாப் புலன்களையும் செலுத்தாமல் சிவத்தியானம் செய்ய முடியாது. மனதைப் பூரணமாக சிவத்தில் பதிய வைத்தால் தான் சிவத்தையடையலாம்”, என்றார்.
“சிந்தித்துப்பார் உண்மையில் எது தொழில் புரிகிறது. எது கொடுக்கிறது? எது அனுபவிக்கிறது என்று ஆன்மா தான் கொடுப்பதும், தொழில்புரிவதும். அனுபவிப்பதும். ஆன்மா உடலிலிருந்து பிரிந்து விட்டால் அது பிணமாகி விழுந்து விடும். ஆன்மா சக்தியை ஐம்பூதங்களில் தொழில் புரிய விட்டால் தான் அது செல்வமாக மலரும். சிந்தனை எல்லாப் பக்கங்களிலும் சிதைவு அடையாமலிருந்தால் தான் அறிவு சுரக்கும். புலன்கள் யாவும் ஒருமுனையில் செலுத்தப்பட்டால் தான் சக்தி விருத்தியடையும். அறிவுடன் சேர்ந்து சக்தி தான் ஐம்பூதங்களிலிருந்து செல்வத்தைத் திரட்டுகின்றது. ஆகையினால், சிந்தனையைச் சிதறவிடாமல் எல்லாப் புலன்களையும் தான் செய்யும் தொழிலில் நிலைநாட்டித் தொழில் செய்யவேண்டும். இப்படிச் செய்வார்களானால் செல்வம் பெருகும், அறிவு சுரக்கும், மனம் நிம்மதி அடையும், இறுதியில் தன் ஆன்மா தான் சிவன் என்னும் உணர்வு வரும்.
- 38 -

16.
சிவத்துக்குரிய பூசையாகிய தொழிலைச் செய்து அது கொடுக்கும் வரமாகிய செல்வத்தைப் பெறத் தெரியாமல் அவன் செல்வன், இவன் ஏழை என்று சொல்லிக்கொண்டு நிற்கின்றார்கள் மடையர்கள்”, என்று சொன்னார்.
சுவாமி காட்டிய மாபெரும் காட்சி
ஆச்சிரமத்திலிருந்து சுவாமி என்னைக் கூட்டிக்கொண்டு வீதியால் சிறிது தூரம் போய் பின் ஒரு ஒழுங்கையால் திரும்பி நடத்திச் சென்றார். சிறிது தூரத்தில் ஒரு பழைய ஒலை வேலி வந்தது. சுவாமி அவ்வேலியில் ஒரு உக்கல் ஓலையைப் பிய்த்து “இதில் உயிர் உண்டா? இல்லையா’வென்று கேட்டார்?” “உக்கல் ஒலையில் உயிர் இருக்கிறதோ’ என்று கேட்கிறாரே என்ன சொல்வது என்று நினைத்துக் கொண்டு நிற்கையில் சுவாமி என்னைப் பார்த்து ஒலையை என் முகத்தின் முன் பிடித்து மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். நான் ஒலையை நிமிர்ந்து பார்த்த பொழுது சுவாமி என் கண்களுக்குள் பார்த்தார். அவ்வளவு தான், நான் மலைத்துப்போய் நின்றேன். அக்கம்பக்கத்தில் உள்ள பொருட்கள் மரங்கள் வீடுகள் போன்றவை எல்லாமே கரைந்து புகைப் படலமாக எழுந்து பின் அப்புகைப்படலமும் மறைந்து ஒன்றுமிலாத நிலை தோன்றியது. இந்நிலையில் எவ்வளவு நேரம் என்னை நிறுத்தி வைத்திருந்தாரோ தெரியாது. பின் அவர் தன் பார்வையை எண் கணி களிலிருந்து எடுத்தபின் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து திரும்பினேன். மறைந்தவைகள் யாவும் படிப்படியாக உருப்பெற்றன. சுவாமி நடக்கத் தொடங்கினார். நான் பின் தொடர்ந்தேன். சிறிது நேரத்தின் பின் சுவாமி “நீ கண்டவைகள் யாவையும் எங்கே கண்டாய்”, என்று கேட்டார்.
- 39

Page 22
“பின் எல்லாம் உனக்குள் தான் கண்டாய். எதைக் கண்டாலும் மனிதன் தனக்குள் தான் காண்கின்றான். தனக்கு வெளியே அவன் ஒன்றுமே காண்பதில்லை. இந்த உண்மை எல்லோருக்கும் தெரியாது. அதனால்தான் அங்கே கண்டேன். இங்கே கண்டேன் என்று சொல்லித் தடுமாறுகின்றார்கள்”, என்றார்.
இதன் பின் சுவாமி சொன்னார். “பார்த்தாயா உள்ளது ஒன்று தான். அதுதான் உயிர், அதிலிருந்து தான் எல்லாம் தோன்றியது. அதற்குள் தான் எல்லாமுண்டு. உண்மையை உணந்தவருக்கு உயிர் இல்லாது ஒன்றுமே இல்லை. அது தான் சகலதும், இந்த உண்மையை உணரவேண்டும் என்றார்.
ஈசனடி வாழ்க.
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி வஞ்சம்பொ றாமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு)
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஒங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (6)l(b)
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (6) (5)
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னாலறியத் தியானத்தில் நீழுழ்கு (6)(5)
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள் (வரு)
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணாக்கன்
திருவாளன் சொன்னசொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி (வரு)
- 40

குருநாதனின் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராயிருப்பவர் கடவுளே ஆகையால் நாம் அவருடைய உடைமை
g)6(560)Lul 9, 1960) LD நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது நமக்கு ஒரு குறைவுமில்லை
நாம் என்று முள்ளோம் எங்கும் இருக்கின்றோம்
எல்லாம் அறிவோம்
இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.
- நற்சிந்தனை
- பக்கம் 370
- 41 -

Page 23
அடைக்கலம்
உவமையொன் றில்லா ஒன்றே அடைக்கலம் சமயங் கடந்த சங்கரா அடைக்கலம் அமையு மடியார் அன்பே அடைக்கலம் உமையாள் மகிழும் ஒருவா அடைக்கலம் எந்தாய் அடைக்கலம் இறைவா அடைக்கலம் சிந்தனைக் கரிய சிவமே அடைக்கலம்
- நற்சிந்தனை
கொழும்பு - 13 லஷ்மி அச்சகத்து உரிமையாளர் திருநீலகண்டனின் அன்புச் சேவைக்கு ஆழ்ந்த நன்றியைச் சுவாமியின் சீடனின் பெயரால் தெரிவித்துக் கொள்கின்றேன்
- 42 -


Page 24


Page 25
ஒரு நாமம் ஒருருவம்
@@6uTā GUBā(56DD、 வையாமல் வைது வரந் 2) UIU IITLD60 9 U.
|L ல5ஷ்மி அச்சகம், 195, ஆட்டு 0g5II.8uafl: 0
 
 
 

ஒன்றுமிலான் நல்லூர்க் நீர்த்தான் - வருவாரை தருவான் நாமெல்லாம் வோம் உவந்து
- நற்சிந்தனை
திப்பு பட்டித் தெரு, கொழும்பு-13.
1-244.8545