கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 2005.11

Page 1
பால்நிலை கற்கை
இதழ் 10
பெண்கள் கல்விகு
 

தினரி
வநறிச் சஞ்சிகை
கார்த்திகை 2005
ஆய்வு நிறுவனம்

Page 2

நீவேதினி
பால் நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 3
தொகுப்பு
உதவி
நூற்பதிப்பு
பதிப்புரிமை
பிரதிகள்
அளவு
பக்கங்கள்
கடதாசி
வெளியீடு
அச்சுப்பதிப்பு
ISBN
நூற்பதிப்புத் தரவுகள்
நிவேதினி
செல்வி திருச்சந்திரன், சி.எஸ்லவுமி (அம்பை)
திருமகள் தில்லைநாதன்
2005
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
300
1/8
ஒவ்செற்
viii +- 80
70 கிராம் வெள்ளைத் தாள்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட், 48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு 13.
ரூபா 125/-
1391-0353

முன்னுரை
இந்த நிவேதினி இதழ் இரு தொணிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது. கலைகளும் அதன் வெளிப்பாடுகளும் எப்படிப் பெண்நிலை நோக்காக அமைந்துள்ளன என்பது ஒன்றாகவும் அடுத்துப் பண்பாடு பால்நிலை வெளிப்பாடு மற்றும் தணிக்கை என்ற தலைப்பில் முனைப்பான கருத்தாக்கத்தையும் கொண்டுள்ளது.
Art is not an end in itself but a means of addressing Humanity
- Moussorgsky -
கலை என்பது முடிந்த முடிபல்ல. அது மானிடத்தைக் கூறும் அல்லது குறியாகக் கொள்ளும் ஒரு வழிமுறை என்று மேற்கூறிய அறிஞர் கூறியிருப்பது மானிடத்தை அடிப்படையாக்கும் ஒரு கூற்று. இனம், பால்நிலை, வர்க்கம், சாதி, நாடு, பிராந்தியம் என்ற பிரிவுகளை மையப்படுத்தும் பேதங்களை அகற்றிய, அவற்றின் எல்லை தாண்டிய ஒரு பக்குவம் கலைகளுக்குத் தேவை; வேண்டும் என்பது இதனால் பெறப்படுகிறது. கலையும் அதன் வெளிப்பாடுகளும் பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளன. இலக்கியம், ஓவியம், சிற்பம், கூத்து, கிராமிய நாடகம், சங்கீதம், சமயக் கிரிகைகள் என்று விரிவடையும் இலக்கிய வடிவங்கள் உருவம், உள்ளடக்கம், தொனி, நிறம், பாவம் என்ற கலைக் கள்த்தாக்களின் சிருஷ்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இவற்றின் நோக்கில் ஒரு சிறு வேறுபாடு இருப்பதாகக் கொண்டு கலையும், இலக்கியமும் எனப் பிரித்தும் இவற்றை நாம் பார்க்கலாம். அதே நேரம் கலை வடிவங்களை நுகர்வோர் ஐம்புலன்களின் வழியாகப் பார்த்தல், கேட்டல், போன்றவற்றால் அவற்றை அனுபவிக்கிறார்கள். அவை மனதை ஈர்க்கும் ஒரு தொழிலையும் செய்கிறது. அதேநேரம் அை உணர்ச்சிகளில் பல பேதங்களை உண்டுபண்ணும், தாக்கங்கை ஏற்படுத்தும், சிந்திக்கவைக்கும். இந்நிலையில் கலையும், இலக்கியமும் ஒரு சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களாகவும் கருதப்படும். கலைகளின் உள்ளார்ந்ததும் இறுதியான முடிந்த முடிவாக இருப்பது பிரஞ்ஞை நிலையே. உணர்ச்சிகளைத் தூண்டுவதும், அதை அனுபவிப்பதும் மனதிலேயே நடக்கின்றன.
இவற்றின் வெளிப்பாடுகளில் வர்க்க பேதம், சாதிய நிலையின் பேதங்கள், பால்நிலையில்த் தோன்றும் பேதங்கள், இனத்துக்
குழுமங்களின் பேதங்கள் என்று பலவாகப் பேதங்களும், முரண்பாடுகளும்
iii

Page 4
பிரதிபலிக்கும், மாக்சிய வாதிகள் ஒரு Materialist நோக்கில் இதனைப் பார்ப்பதும் உண்டு. Materialist நோக்கை இயற்பொருள் வாதம் அதாவது பணம், செல்வம், உடல், செளகரியம் போன்ற இயற்பொருள்களிற்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்று விளங்கிக்கொள்ளலாம். உயர்மட்டோர் கலை கீழ்நிலை மக்கள் கலை என்ற பிரிவுகளும் இவற்றிற்கு உண்டு. வர்க்கம், சாதி, இனத்துவ சாயல் கொண்ட முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். உதாரணமாக சமஸ்கிருத நாடகங்களின் அரசர், பிரபுக்கள், தளபதிகள் போன்றோர் சமஸ்கிருதம் பேறுகுடியானவன், சேவகள், பெண் தோழிகள் பிராகிருதம் பேசினர். ஒருபக்கம் நாட்டுக்கூத்து, கிராமிய நாடகங்கள், ஒப்பாரியும், பழமொழி போன்றவையும் மறுபுறத்தில். இதிகாச புராணங்கள் போன்றவையில் இந்த முரண்பாடுகளின் வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள முடியும். மொழிப் பிரயோகத்திலும் வர்க்க சாதிய வெளிப்பாடுகளைக் காணலாம்.
சமூக நிலைப்பாடுகளுடன் அதன் முரண்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும், ஒத்துப்போகும் வெளிப்பாடுகள் கலைவடிவில் வரும்போது பொதுவாக மேலோர்கலையாகவே அவை இருக்கும். இதை Affirmative Culture 666, B. Marcuse Herbert Jngj6)ir. Felp35 6jigb5 தாழ்வுகள் அடங்கிய நிறுவனங்களையும், கருத்தியல்களையும், ஸ்திரப்படுத்தும் வழிவகைகளையே அவை முன் வைக்கும். பொதுவாக சமூக அவலங்கள், போராட்டங்கள் போன்றவற்றை அவை கண்டு கொள்ள மாட்டா. அரசு சமய நிறுவனம் போன்றவற்றைத் துாக்கிப் பிடிப்பவையாகவும் அவற்றின் பேதங்களைக் கேள்விக்குள்ளாக்காமலும் பெரும்பாலும் இவை இயங்கும். எதிர்க்கலாச்சாரம், மாற்றுக் கலாச்சாரம் (Radical Culture) என்ற கோட்பாட்டு ரீதியான கலாச்சார வெளிப்பாடுகளில் ஒரு முறிவு இருக்கும்.
நவீனக்கலை, பாரம்பரியக்கலை
பாரம்பரியக்கலை வடிவங்களில் நவீனத்தினைப் புகுத்தல். ரவிவர்மாவின் பெண் படைப்புக்களிலிருந்து வேறுபடும் நவீன ஓவியங்கள் நாட்டுக்கூத்து மரபு - தொழிலாளர் கலை வடிவங்கள், தலித் மக்களின் கலை வடிவங்கள் போன்றவற்றின் எழுச்சி பல புதிய வடிவங்கள், உருவங்கள் தொனிப்பொருள் என்று விரிந்துவிட்டன. இவை தேசிய கலை இலக்கியப் பேரவையினால் அண்மையில் உருவாக்கப்பட்ட சீதை என்ற நாடகம் இராமனை இகழ்ந்து விலக்கி இராவணனைப் புகழ்ந்து ஏற்றுக்கொள்ளும் ஒரு மீளுருவாக்க கதாபாத்திரமாகச் சீதையைப் படைத்துள்ளது. கைதராபாத்தில் இயங்கும் அஸ்மிதா என்ற நிறுவனம் சூர்ப்பனகை என்ற பாத்திரத்தை மறு வாசிப்புச் செய்து மீள்
iw

உருவாக்கத்தில் இராமன் என்னும் ஆணினால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணாக அவளைப் பார்க்க முயற்சித்துள்ளது. இவற்றின் தொனிப் பொருட்களும், கருத்துக்களும், கருத்தியலும் ஆழ்ந்து நோக்கற்பாலது. பெண்ணினது உடல் தற்போது முக்கியம் பெற்று இலக்கியங்களில் சர்ச்சைக்கு உட்பட்டு வருகிறது. பெண்களும் அவர்களது உடல் உறுப்புக்களும் கலைப் பொருட்களாக வடிவமைக்கப்பட்டன. ஒவியம், சிற்பம், இலக்கியம் போன்ற கலை வடிவங்கள் அவளது உணர்ச்சிகளை மறைத்து அழகு உருவாக்கமாக அவளது உடலை வெளிப்படுத்தியபோது, அந்த அழகுகள் ஆபாசமாகவும் துய்த்துணரப்பட்டன. இனக்கவர்ச்சி- பாலுறுப்புக்களில் அவர்களுக்கு இருந்த மோகம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இனக் கவர்ச்சியினால் தூண்டப்பட்டபொழுது இந்த உருவாக்கங்கள்
வெளிப்பட்டன என்றும் நாம் இதைக் கொள்ளலாம். இவையாவும்
இயற்கையின் அம்சங்களே. இதைப் பார்க்கிற மாதிரிப் பார்த்தால் அங்கு ஆபாசம் இல்லை என்கின்ற வாதத்திலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் வரலாற்றில் பெண்கள் இத்தகைய கவர்ச்சிகளுக்கு மோகங்களுக்குட்பட்டு கலை படைக்கவில்லை. ஆணினது தோள் அழகையும், மார்பழகையும் ஆண்களே பெண்களின் வாய்மொழியாக வெளிக்கொணர்ந்தனர். உள்ளடக்கிய உணர்ச்சிப் பிரவாகங்களுக்கு உட்பட்ட பெண் இங்கு மெளன விரதத்தைக் கடைப்பிடித்தாள். அவ்வெழுதாச் சட்டத்தை அவள் மீறினால் அவள் விலைமகளிர் நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஆண்டாள் இதற்கு ஒரு விதி விலக்கு. சங்க காலப் பெண் ஒருத்தி ஆண்மகனில் காதல் கொண்டு அவனது அழகைப் பாடிய படியால் அகத்துணைப் பாடல் ஒன்று புறத்திணைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது இந்த விதி பெண்களால் மாற்றப்பட்டுள்ளது. உதாரணம் சல்மா, மாலதி முலைகளைப் பற்றியும், யோனியைப் பற்றியும் பெண்களும் பேசலாம் என்ற தன்வய இலக்கியப் படைப்புகள் இப்போது தோன்றியுள்ளன.
பெண் கவிஞர்கள், பெண் சிறுகதை ஆசிரியர்கள், பெண் நாவலாசிரியர்கள் வரலாற்றின் தொடக்க காலத்திலே தோன்றியிருக்க இப்போது பெண் நாடக இயக்குனரும், பெண் ஒவியர்களும் தோன்றிவிட்டனர். இதனால் கலை வடிவங்களின் தொனிப் பொருளில் முக்கியமான மாற்றங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. பெண்நோக்கில் ஆண் மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் இலக்கியங்களும், ஏனைய கலைவடிவங்களும் படைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒளவை, ஆழியான், சல்மா, அம்பை, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்கள் மங்கை என்போர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

Page 5
ஒரு பெண் தன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது உடல், தன் உடலை மீள் வாசிப்புச் செய்வது அதன் முதல் கட்டம். இம்முயற்சியில் இறங்கும்போதுதான் மீள் வாசிப்புச் செய்வதற்கு உடலை மீட்டெடுப்பது அவசியம் என்பது தெரிகிறது. மீட்டெடுப்பது சாதாரண வேலை இல்லை. காரணம் முள் படுக்கையில் கிடத்தி முட்களால் போர்த்திய உடல், பண்பாட்டு முட்கள், மொழி முட்கள், இலக்கண முட்கள், சம்பிரதாய முட்கள், சடங்கு முட்கள், அரசியல் முட்கள், வேலி என்று நினைத்துத் துளைக்கவிட்ட முட்கள், அரண் என்று நினைத்து அரவணைக்கவிட்ட முட்கள் என்று ஓராயிரம் முட்கள். உடலுக்கு உரிமை கொண்டாடும்போதே தொடங்கிவிடுகிறது கீறல்களும், காயங்களும்.
தன் உடலைப் பஞ்சு போல் மெல்லியதாக மாற்றிப் பறக்கவிட வேண்டுமென்று ஒரு பெண் நினைக்கும்போதுதான் எத்தனை கனத்தை அந்த உடல் தாங்கி உள்ளது, எத்தனைத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது புலனாகிறது. தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட உடலைச் சுமப்பது குரிசைச் சுமப்பது போல. இந்தக் குரிசைச் சுமக்கும் அனுபவம் வெளிப்பாடு என்ற வேலையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பெண் படைப்பிலைக்கியவாதிக்கும் நேரும் ஒன்று.
இந்த நிவேதினி இதழுக்கான மையக் கருத்து பற்றித் தீர்மானித்தபோது தணிக்கை பற்றிய விவாதங்கள் தமிழ் இலக்கிய உலகில் மிகத் தீவிரமாகவும், மிகக் கொச்சையாகவும், மிகவும் ஆங்காரத்துடனும், ஆபாசமும் அகங்காரமும் கூடிய மொழியில் நடைபெற்று வந்துகொண்டிருந்தன. இத்தகைய விவாதங்கள் பெண்களின் வெளிப்பாடு குறித்து அமையும்போது அவை இலக்கியம் பற்றிய சர்ச்சையாக இல்லாமல் தனிப்பட்ட தணிக்கைச் செயல்களாக அமைகின்றன. அவை ஒழுக்கம் சார்ந்த கண்டனங்களாக, "ஒழுக்கம் இல்லாதவர்களை’ கழுவேற்றும் முயற்சியாக, அவர்களை எள்ளி நகையாடும் செயலாக, அவர்களை அவமானப்படுத்தும் ஆரவாரங்களாக மாறிவிடுகின்றன. இத்தகைய தணிக்கை குறித்துத் தீவிரமாகப் பேசி எழுதவேண்டிய அவசியம் உள்ளது. அதனால்தான் பண்பாடு, பால்நிலை, வெளிப்பாடு மற்றும் தணிக்கை என்ற கருத்தை மையமாக்கி இந்த இதழை உருவாக்கத் தீர்மானித்தோம். இதை ஒட்டி இதில் வந்துள்ள கட்டுரைகள் இந்த விவாதத்தை முன்னிலைப்படுத்தும் கட்டுரைகள்தான். இந்த விவாதத்தை மேலும் விரிவுபடுத்த இன்னும் கட்டுரைகள் வரும்
என்று எதிர்பார்க்கிறோம்.
அம்பை, செல்வி திருச்சந்திரனி
vi

9 LT ........ அந்தக் கடிதம்
உடலெனும் வெளி
Subsoo
தூரத்து கோடை இடிகள் - மதிப்புரை
ஏ. இக்பால்
உயிர் நசுக்கப்படுதல்
குட்டி ரேவதி
திரிகொண்ட வெங்கமாம்பா
ஜெகாதா
ஈழத்துப் பெண் போராளிகளது படைப்புக்கள்
6F. Guinasunrefit
பக்கம்
15
20
28
37
47
wii

Page 6

cØYLLAre-- cØMögsážšasq2øõl
ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். இத்துடன் இணைத்துள்ள 15.05.1978 தேதியிட்ட தங்கள் கடிதத்தின் நகலில் உள்ள பெறுநர் சீதாலட்சுமி பாலசுப்பிரமணியன் நான்தான். கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட இந்தப் பழுப்பேறிய கடிதம் சமீபத்தில்தான் எனக்குக் கிடைத்தது. காரணம், அஞ்சல்துறை அல்ல!
வயதான மாமியார், மாமனார், நாத்தனார் எனக் கூட்டுக் குடும்பத்தில் இல்லறம் தொடங்கியவள் நான். பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, இளம்பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாததொரு மனோநிலைக்குப் பழக்கப்பட்ட சூழ்நிலை. வாராவாரம் நான் வாசிக்க அளிக்கப்பட்ட ஒரே பத்திரிகை ஆனந்த விகடன்தான்.
பிறந்த வீட்டிலேயே விகடனின் பிரிய வாசகியாக இருந்த
எனக்குப் புகுந்த இடத்திலும் ஒரே மன ஆறுதலாக இருந்தது விகடன்தான்.
கூட்டுக் குடும்ப மூச்சுத் திணறலில் இருந்து சிறிது நேரமாவது ஆனந்தமாக சுவாசிக்க விரும்பி, ஆனந்த விகடனுக்கு கதை எழுதிப் போட்டாலென்ன என்று யோசித்தேன். என் கணவரும் அவரது நண்பரும் விவாதித்த ஓர் அலுவலக சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, 'எடைக் கற்கள்' என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி விகடனுக்கு அனுப்பினேன். அது 25.12.1977 ஆனந்த விகடன் இதழில், 'சிந்தாமணி’ எனும் புனைபெயரில் பிரசுரமாயிற்று. அதுவே என் முதல் கதை. அப்போது நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தக் கதைக்குச் சன்மானமாக அப்போது விகடனிலிருந்து நான் பெற்ற தொகை, என் கணவரின் அப்போதைய மாத வருமானத்தில் பாதி. எனவே, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கு நானும் உதவலாமே என்று ஆசைப்பட்டேன். ஆனால், இதை இப்படியே வளரவிட்டால் எங்கே தனிக்குடித்தனத்தில் போய் முடியுமோ? என்று அப்போது குடும்பத்தில் சிலர் வீணாகப் பயந்ததன் விளைவு - என் முதல் கதையே இறுதிக் கதையாகவும் முடிந்தது.

Page 7
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று குடும்பத் தளைகளிலிருந்து விடுபட்டு, பாரதி பாடியது போல 'விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவி போல்' சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோதுதான், தற்செயலாகத் தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது.
ஒரே ஒரு கதை எழுதிய என்னையும் ஒரு எழுத்தாளராக மதித்துப் பெருமைப்படுத்தி, பெண் எழுத்தாளர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளக்கூடிய சிறுகதைப் போட்டியில் பங்குபெற அழைத்திருக்கும் அந்தக் கடிதத்தைப் படித்ததும் உள்ளம் நெகிழ்ந்தேன். என் கண்கள் குளமாகின. என் முதல் கதை வெளியான அதே இதழில் எழுதிய அனுராதாரமணன், இன்று எழுத்துலகில் பிடித்துள்ள இடத்தைப் பார்க்கும்போது, எனது இழப்பின் பிரமாண்டம் என்னை அழவைத்துவிட்டது.
தங்களின் கடிதம் இன்றும் சஞ்சீவியாக உற்சாகமூட்ட, பெண்மையின் நிலை குறித்து எனது வேதனையின் வெளிப்பாடுகளையே ஒரு சிறுகதையாக்கி, ‘மாயத்திரை’ என்கிற பெயரில், மகளிர் தினமான இன்று (08.03.05) தங்களின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளேன். இதுவே என் இரண்டாவது கதை.
சென்ற நூற்றாண்டில் தாங்கள் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கு இந்த நூற்றாண்டில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, தங்களின் அன்றைய கடிதத்துக்கு எந்தவித பதிலும் தராமல் விட்டுவிட்ட என்னுடைய இயலாமைக்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
என்றும் நன்றியுடன்,
"affignup6oof' (U. சீதாலட்சுமி)

consaokayr
- sf45muosof
ஒரு கையில் ரோஜாப்பூ மாலையுடனும், மறு கையில் 'புதுமைப் படைப்பாளி திரு. மெய்கண்டானுக்கு நல்வரவு' என எழுதப்பட்டிருந்த வரவேற்பு அட்டையுடனும் மத்திய சிறைச்சாலைக்கு எதிரிலிருந்த மேம்பாலத்தில் நின்றிருந்த வேதா, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாள்.
வேதாவின் மேனியை விழிகளால் மேய்ந்துகொண்டு இருந்தவர்களில் ஒருவன், "மெய்கண்டான் யார் தெரியுமாடா..? பலான கேஸ்ல சிக்கி, ஜெயில்ல கம்பி எண்ணிட்டிருக்கிற பொம்பளப் பொறுக்கி! பாரேன், இப்பவும் அவனுக்காக ஒரு சூப்பர் ஃபிகரு காத்திட்டிருக்குது. மெய்கண்டான் மெய்யாலுமே மச்சக்காரன்தாண்டா! நமக்குத்தான் ஒண்ணும் படியமாட்டேங்குது!” என்று உரத்த குரலில் அவள் காதுபடச் சொல்ல, அதைத் தொடர்ந்து எழுந்தது மற்றவர்களின் கேலிச் சிரிப்பொலி! ஆனால், வேதா எதையுமே லட்சியம் செய்யாமல், தன் விழிகளை சிறைச்சாலை வாசலிலேயே பதித்திருந்தாள்.
சில ஆண்டுகளுக்கு முன், மெய்கண்டான்மீது தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கும், அதை வைத்துப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உருவான பலவிதமான சர்ச்சைகளும், விமர்சனங்களும் நாட்டின் தலையாய பிரச்சனைகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, மக்களின் முழுக் கவனத்தையும் தன் பக்கம் இழுத்திருந்தன.
அதுவரை மெய்கண்டானை மேம்போக்காக ஓர் எழுத்தாளன் என்று மட்டுமே அறிந்திருந்த வேதா, இந்த வழக்கு தந்த பரபரப்பில் மெய்கண்டானின் அனைத்துப் படைப்புகளையும் சேகரித்துப் படித்து, ஒரு விமர்சகனின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தாள். அவருடைய எழுத்தின் பல்வேறு பரிமாணங்கள் அவளை வியக்க வைத்தன. ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியான அவருடைய 'அங்கயற்கண் ணியின் பிரகடனம்’ என்ற நாவல் , பலத்த கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி, பத்திரிகையின் விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியது. பின்பு, அந்த நாவல் புத்தகமாகி பல பதிப்புகளைக் கண்டதுடன், பிற மொழிகளிலும் மாற்றம் செய்யப்
سے 3سحصہ

Page 8
பெற்று, மெய்கண்டானை அகில இந்திய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இந்த நாவலைப் படித்த வேதாவுக்கு அவர் மேல் ஒரு பெருமதிப்பும், மரியாதையும் ஏற்பட்டது. பெண்மையை இந்த அளவுக்குப் போற்றி எழுதும் அவரா, ஒரு பெண்ணிடம். அதுவும், மாற்றான் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்? அவளால் நம்பவே முடியவில்லை.
இந்த வழக்கு சம்பந்தமான தகவல்களை ஆராய்ந்தாள். சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டாள். மெய்கண்டானையும் சந்தித்து, அவருடைய தரப்பு நியாயங்களையும் அவள் அறிய விரும்பியதன் விளைவே, வேதாவின் இந்தச் சிறைச்சாலை வாசல் தவம்!
இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின், புகைப்படங்களின் மூலமாக மட்டுமே அவளுக்குப் பரிச்சயமாகியிருந்த மெய்கண்டானின் உருவம், சிறைச்சாலைக் கதவருகில் தெரியவே, அவளைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
முடி நீக்கப்பட்ட மழுமழுப்பான கன்னங்கள், தூக்கிவாரப்பட்ட தலைமுடியின் நடுவில் ஓரங்குல அகலத்துக்கு வெள்ளைப் பட்டை தீட்டியது போல ஒடிய நரைமுடித் தொடர், கறுப்பு நிற "ப்ரேமுடன் மூக்குக் கண்ணாடி, தொளதொளவென்று இருந்த சந்தன நிற ஜிப்பா, பைஜாமா. சிறைவாசம் அவருடைய உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருந்தது தெரிந்தது. தோளில் தொங்கிய ஜோல்னா பையில், இட நெருக்கடியில் சிக்கிய தமிழ் நூல்கள், நடையில் தளர்ச்சி.
அவர் கழுத்தில் வேதா அணிவிக்க முயன்ற மாலையை நாகரிகமாகத் தடுத்துக் கைகளில் பெற்றுக் கொண்டார் மெய்கண்டான். அவர் முகத்தில் வியப்பின் வரிகள். மனதில் 'யார் இவள்? என்ற கேள்வி.
“வணக்கம். நான் வேதா. உங்கள் விசிறி. உங்களைச் சந்தித்து பேசனும்கிற என்னோட தவம் இன்னிக்குதான் பலிச்சு இருக்கு!” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
"உங்களை இதுக்கு முன்னாடி.”
-4-

கலகலவெனச் சிரித்த வேதா, “கண்டிப்பாகப் பார்த்திருக்க முடியாது. இதுதான் நம்முடைய முதல் சந்திப்பு. இதைச் சிறப்பாகக் கொண்டாட நான் விரும்புவதை நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? ப்ளிஸ்!” என்று கேட்டாள்.
சில நிமிடங்கள் தயங்கிய அவரின் மனதில், அவரது நெருங்கிய நண்பர்கள், அவரால் அடையாளம் காட்டப்பட்டு, எழுத்துலகத்துக்கு அறிமுகமாகிப் பின் பிரபலமான இளம் எழுத்தாளர்கள், தன்னை வலம் வந்த வாசகள்கள் எனப் பெருந்திரளான கூட்டம் தன்னை வரவேற்க மாலைகளுடன் காத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதற்கு மாறாக அறிமுகமே இல்லாத யாரோ ஒர் இளம் பெண் மட்டுமே வந்திருப்பதில் ஏமாற்றமும் உண்டானது. எனினும், வேதாவின் உரிமையான அணுகுமுறை அவருடைய நொந்த உள்ளத்துக்கு இதம் தரவே, ஒரு புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்தார். ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்த வேதா, அவரைத் தன் பக்கத்தில் இருத்தினாள்.
நகரின் பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில், யாருடைய கவனத்தையும் ஈர்க்காவண்ணம் ஒரு மூலையான பகுதியைத் தேர்ந்து எடுத்து, அவரை இருக்கையில் அமரச் செய்து எதிரில் உட்கார்ந்தாள். பேரர் வந்து ஆர்டரைக் குறித்துக் கொண்டு சிறிது தொலைவு செல்லும்வரை உரையாடலைத் தவிர்த்தாள். பேரர் மெய்கண்டானைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றதையும், சக ஊழியர்களிடமும் அவரைச் சுட்டிக் காட்டி கிசுகிசுத்ததையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
“சார், என்னைப் பத்தின விவரங்களையும், உங்களை நான் சந்திச்சுப் பேச விரும்பினதன் காரணத்தையும் கார்ல வர்றப்பவே சொல்லிட்டேன். இனிமே நீங்கதான்.”
சில நிமிடங்கள் வேதாவையே உற்றுப் பார்த்தவர், மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்துவிட்டு, யோசிப்பது போல் புருவங்களைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.
“சின்ன வயசுலயே ஒரு விபத்துல அப்பா, அம்மாவை இழந்த நான் அநாதை விடுதியிலதான் வளர்ந்தேன். அங்கே ஒரு வயசுக் குழந்தைலேர்ந்து, வயசானவங்கவரை இருநூறு பேருக்கு மேல இருந்தாங்க. விடுதிக் காப்பாளரை எல்லாரும் பெரிய அய்யானுதான் கூப்பிடுவாங்க. அவருக்கு உதவியாகவும், சமையல் வேலையையும்
جس 55 سیسہ

Page 9
பார்த்துட்டு இருந்தாங்க பார்கவிங்கற ஒரு பெண். நல்ல சிவப்பு நிறம். உருண்டை முகம். நீண்ட தலைமுடி, நெத்தியில ரெண்டங்குல நீளத்துக்கு மெல்லிசா சந்தனக் கீற்று. அதன் கீழே குங்குமப் பொட்டு. வெள்ளை வெளேர்னு புடவை, சந்தனக் கலர்ல ரவிக்கை. எப்பவும் இதான் அவங்க டிரஸ். அவங்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ மனசுல ஓர் இனம் புரியாத ஆனந்தமும், நிம்மதியும் தோணும். என் மேல அவங்களுக்கு ரொம்பப் பிரியம்.
எனக்கு அவங்க மலையாளம் சொல்லிக் கொடுத்தாங்க. அதனால, சின்ன வயசுலயே மலையாளக் கதைகள் படிக்கிறதுல எனக்கு ஏற்பட்ட ஆர்வம், தகழி, கேசவ் தேவ், எஸ்.கே.பொற்றேக்காட், வைக்கம் முகம்மது பஷீர்னு அப்ப மலையாளத்துல ரொம்பப் பிரபலமான எழுத்தாளர்களோட படைப்புகளையெல்லாம் அந்த மொழியிலேயே படிச்சு ரசிச்சேன். தமிழ்லேயும் கல்கி, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன்னு தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களின் படைப்புகள், இன்னும் மொழி பெயர்ப்பு நூல்கள் மூலமா மராத்தியில வி.எஸ்.காண்டேகள், வங்காளத்துல தாகூர், சரத்சந்திர சாட்டர்ஜி, இந்தியில பிரேம்சந்த்னு என் படிப்பார்வம் பெருகிட் டே போச் சு! அவங்களைப் போல் நானும் ஒரு எழுத்தாளனாகனும்கிற ஒரு வெறி ஏற்பட்டது.
வருஷங்கள் ஓடிச்சு. அப்ப எனக்குப் பதினேழு வயசிருக்கும், மொட்டை மாடியில் உட்கார்ந்து பல்ஸாக் ஸ்டோரீஸ்ங்கிற புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தேன். ராத்திரி பதினோரு மணி இருக்கும். பார்கவி அங்க வந்தாங்க ராஜா கொஞ்சம் என் கூட வா!'னு கூப்பிட்டு, என் கையை பிடிச்சுத் தரதரனு இழுத்துட்டுத் தன்னோட அறைக்குப் போய்க் கதவைச் சார்த்தித் தாழ் போட்டாங்க. (அந்த விடுதியில் எனக்கு வெச்ச பேர்தான் ராஜா. அப்புறம் பின்னாடி கதைகள் எழுத ஆரம்பிச்சப்புறம் நானா சூட்டிக்கிட்ட பேர் மெய்கண்டான்) என் உடம்புல ஒரு படபடப்பு ஏறிடுச்சு. விபரீதமா ஏதோ நடக்கப் போகுதணு புரிஞ்சுது. அது அதுவா இருக்குமோங்கிற பயமும், அதே சமயம் அப்படி இல்லாம போயிடக் கூடாதேங்கற வேட்கையுமா ஒரு ரெண்டுங்கெட்டான் மன நிலையில் தவிச்சிட்டிருந்தேன். கடைசியில் அதுதான் நடந்தது. பெண் சுகத்தை வாழ்க்கைல முதன்முதலா அனுபவிச்சேன்.
அதுக்கப்புறம் பார்கவியைப் பார்க்கறதைத் தவிர்த்தேன். எனக்கு மேற்கொண்டு படிப்புல நாட்டமில்லாம போச்சு. அதனால ஒரு நாள்
அந்த விடுதியிலிருந்து வெளியேறி, ஏதாவது வேலை கிடைக்குமானு அலைஞ்சேன். என் அதிர்ஷ்டம், நான் ரொம்ப மதிக்கிற வாரப் பத்திரிகைல
-6-

தினக்கூலி வேலை கிடைச்சுது. ஏஜென்ட்டுகளுக்கு அனுப்பவேண்டிய பிரதிகளைக் கட்டி பேக் பண்ணி, அட்ரஸ் ஒட்டி, வேன்ல ஏத்தற வேல.
சமயம் கிடைச்சப்ப எல்லாம் அங்கே வேலை பார்க்கிற ஆர்ட்டிஸ்ட், பிழை திருத்தறவங்க, உதவி ஆசிரியர்களுக்கான எடுபிடி வேலைகளை நானே வலிய இழுத்துப்போட்டு செஞ்சு, ஒவ்வொரு வேலையின் நுணுக்கத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் ஒரு நாள் கன்னி முயற்சியா ஒரு கதை எழுதி, ஆசிரியர் பார்வைக்கு அனுப்பினேன். ஆச்சர்யம். அடுத்த வாரமே அது பத்திரிகையில பிரசுரமாச்சு!
அப்புறம் என்னோட வளர்ச்சி அசுர வேகத்துல இருந்தது. ஆசிரியர் என்னை அழைத்து, என் எழுத்துத் திறமையை மனசாரப் பாராட்டி, என்னை ஆசிரியர் குழுவுல வேலைக்குச் சேர்த்துகிட்டார். பெண்களோட பிரச்சனைகளை, அதுவும் வெளியில் யார்கிட்டேயும் சொல்ல முடியாம மனசுக்குள்ளே வெச்சுப் புழுங்கி வேதனைப்படற உணர்வுகளை கருப்பொருளா வெச்சு நிறைய கதைகள் எழுதினேன். அதற்கெல்லாம் வாசகர்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைச் சுது. பத்திரிகை விற்பனையும் சிகரத்தை எட்டத் தொடங்கியது. ஆசிரியர் என்னை ஒரு தொடர்கதை எழுதச் சொன்னார். பாரதிக்கு ஒரு 'புதுமைப் பெண் மாதிரி எனக்கு 'அங்கயற்கண்ணி' பிறந்தாள்.
அதுவரை புழக்கத்தில் இருந்த 'கல்லானாலும்.கிற வரம்புகளை. ஆணாதிக்கத்தால் உருவான வேலைகளைத் தூள் தூளாக்கி அங்கயற்கண்ணி எடுத்த முடிவுகள் வாசகர்களிடம் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தின தாக்கம், எனக்குப் பெரிய புகழைக் கொடுத்தது. என்னைப் பார்க்கப் பெண்கள் தேடி வர்றது, அவங்க பிரச்சனைகளை மனம்விட்டுப் பேசறதுணு எனக்குப் பெரிய ரசிகைகள் பட்டாளமே உருவாச்சு. இந்தச் சந்தர்ப்பத்துலதான் 'அவ’ (அதான், அவ யாருணு இப்ப ஊள், உலகத்துக்கெல்லாம் தெரியுமே என்றார் மெய்கண்டான் ஒரு விரக்திப் புன்னகையுடன்) ஒரு நாள் என்னைப் பார்க்க ஒரு ரசிகை என்னோட அறைக்கு வந்தா.
‘சார்! அங்கயற்கண்ணி நீங்க படைச்ச கற்பனைப் பாத்திரமா, இல்ல உண்மையிலேயே ரத்தமும் சதையுமா? அப்படி யாராவது இருக்காங்களா?னு கேட்டா. அப்படி உயிரோட இருந்தா, அவங்களை நான் உடனே சந்திக்கணும். கற்பனையா இருந்தா, நானே ஒரு அங்கயற்கண்ணியா மாறணும். நீங்கதான் என்னை அப்படி மாத்தனும்ன்னா.
இப்படி ஆரம்பிச்ச அறிமுகம் சில மாதங்கள்ல ரொம்ப நெருக்கமா வளர்ந்தது. அவளை ஒரு நாள் பார்க்காட்டாக்கூட எனக்குத் தவிப்பா
= 17 ہے۔

Page 10
இருக்கும். அவ சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்ட தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. கல்லூரிப் படிப்புக்காக இங்கே வந்திருந்தா. செல்வச் செழிப்பான குடும்பம்.
கல்யாணம்கிற அமைப்புல எனக்குச் சுத்தமா நம்பிக்கை கிடையாது. குடும்ப வாழ்க்கை நடத்தறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் தங்கள் குழந்தைகளோட எதிர்காலம், பொருளாதார நிர்ப்பந்தம், சமூகம் தன்னைப்பத்திக் கேவலமா பேசிடுமோங்கிற பயம், பாதுகாப்பு. இந்த நாலு கட்டாயங்களாலதான் கணவனும் மனைவியுமா வாழறதா வேஷம் போடறாங்களே தவிர, அவங்களுக்குள்ள உண்மையான பாசமோ. அன்போ ஏற்படுத்திய பிணைப்பு கிடையாதுங்கிறது என் கருத்து. ஆனாலும், ஒரொரு சமயம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும்.
அன்னிக்கு ஒரு சுகமான மாலைப்பொழுது. பனிச்சிதறலா வெளியில் மழைச்சாரல்கள். இதமான காத்து. வெளிநாட்டு விஸ்கியை ரசிச்சு உறிஞ்சியபடி, உமர்கய்யாமில் மூழ்கியிருந்தேன். தபதபணு அவள் உள்ளே நுழைஞ்சாள். மினி ஸ்கர்ட் பனியன்ல என்னை ரொம்பவே சங்கடப்படுத்தினாள்.
அன்னிக்குத் தினசரில வந்த ஒரு செய்தியை, கல்லூரி மாணவர்கள் நாலு பேர், கூடப் படிக்கிற மாணவியை, அவள் கல்லூரி முதல்வரிடம் தங்களை மாட்டிவிட்டாள்ங்கற கோபத்துல, கடத்திட்டுப் போய்க் கெடுத்த விவரங்களை என்கிட்ட காண்பிச்சு, அவள் சரமாரியாகக் கேட்ட கேள்விகள் என்னை நெத்தி அடியாத் தாக்கிச்சு.
சார், கற்புன்னா என்ன? பேப்பர்ல மாறி மாறிக் கற்பழிச்சாங்கனு எழுதறாங்களே. மாறி மாறினு அது என்ன வார்த்தை? கற்புங்கிறது என்ன சிலேட்டுல எழுதின எழுத்தா? அழிச்சிட்டு மறுபடியும் எழுதறதுக்கு?
ஆம்பளைங்களுக்குள்ளே விரோதம் வந்து பழிவாங்கற அளவுக்குப் போச்சுன்னா, அடிக்கறது, கையைக் காலை உடைக்கிறது. இல்ல. ஆளையே தீர்த்துக் கட்டறதுனு போய் முடியுது. அதுவே ஒரு பெண்ணைப் பழிவாங்க நெனச் சா, மொதல்ல அவ கற்பைக் கெடுக்கறதைத்தான் செய்யறாங்க. ஏன் ஸார் அப்படி?
கற்புங்கிறது ஒழுக்கம் சம்பந்தப்பட்டதுனு நினைச்சுட்டிருந்தேன். ஆனா, பெண்களை தண்டிக்கறதுக்கு கற்பழிப்புதான் சரியான வழினு
-8-

ஆம்பளைங்க யோசிக் கிறதைப் பாக் கறப்ப, Sg5) 2–L–LÖ L சம்பந்தப்பட்டதுனுதான் தோணுது என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டாள்.
நான் சொன்னேன். கற்புங்கறது என்னங்கறதுல ஒரு தெளிவான சிந்தனை பெண் களுக்கு வரணும் . தங்களோட ஒழுக்கமும், உயிர்நிலையும் அதுலதான் இருக்குங்கிற மனோபாவம் மாறாதவரை, ஆண்களின் இந்த அட்டகாசம் தொடரத்தான் செய்யும்.
‘அப்படின்னா, கற்பழிப்பை ஜஸ்ட்லைக் தட்னு எடுத்துக்க சொல்றீங்களா?
நிச்சயமா இல்லை. அதுக்குக் காரணமானவர்களை கூண்டுல ஏத்தித் தண்டனை வாங்கிக் கொடுங்க. அதேசமயம், தனக்கு இப்படி ஆயிடுச்சேனு மனசுக்கு உள்ளே புழுங்கி அணு அணுவா சித்ரவதைப் படறதை நிறுத்துங்க. கூடவே, இந்தமாதிரி பாதிப்புக்குள்ளானவங்களை மத்த பெண்களே கேவலமா பார்க்கறதையும், பேசறதையும் கைவிட்டுட்டு, அவங்களுக்கு பக்க பலமா நிக்கணும்.
பேச்சு பல திசைகளிலும் மாறினதுல, நேரம் ராத்திரி ஒன்பது மணி ஆனதே தெரியலே. அன்னிக்கு அவ என் கூடவே தங்கிட்டா. இரவு எங்களுக்குள் அந்த உறவு ஏற்பட்டது. அது பத்தின எந்தவிதக் குற்ற உணர்வும் எனக்கோ, அவளுக்கோ ஏற்படவே இல்லே. அதனால, அந்த உறவு இயல்பா, அடிக்கடி தொடர்ந்துட்டிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத் துல தான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணினேன். இது பத்தி அவ கூடப் பேசி முடிவு எடுக்கணும்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் அவ வரவும் இல்லே, அவகிட்டேர்ந்து எந்தத் தகவலும் இல்லே! அம்மாவுக்கு ரொம்ப சீரியஸ்னு போன் வந்து சிங்கப்பூர் போனவதான். திரும்பி வரவே இல்லே. கல்லூரிப் படிப்பையும் தொடரலேனு தெரிஞ்சுது.
மொதல்ல ரொம்ப சங்கடப்பட்டேன். ஆனா, நாளடைவுல அவளைக் கிட்டத்தட்ட மறந்துட்ட நெலமைதான். தொலைக்காட்சி,
சினிமானு, நான் பிஸியாகவும், மேலும் பிரபலமாகவும் ஆயிட்டேன்.
சிற்றுண்டி முடிந்து பில்லுக்கான பணத்தை பேரருக்கான டிப்ஸ"டன் வைத்துவிட்டு எழுந்தாள் வேதா. மெய்கண்டான் அவளைப்
سس 9 س~ہ

Page 11
பின்தொடர்ந்தார். காரில் அமர்ந்து இன்ஜினை உயிர்ப்பித்து, மெல்லச் செலுத்திக்கொண்டே கேட்டாள். “சொல்லுங்க சார் அப்புறம் என்ன ஆச்சு?”
ஒரு நாள் போனின் அலறல், எடுத்தேன். மறுமுனையில் அவள். அவளேதான்!
மெய்கண்டான் சார் தானே?
அ. ஆமாம்! பரவசத்தில் எனக்கு வார்த்தையே வரலே. சுதாரிச்சுக்கிட்டுப் பேசினேன்.
உடனே நேரில் வர்றதா சொல்லி போனை வெச்சுட்டா. எனக்கு கலர் கனவுகள். ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமா ஊர்ந்தது.
அவள் வந்தாள். அந்தச் சந்திப்பு என் மனசுல ஏற்படுத்தின உணர்ச்சிகளை முழுமையாக வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அவ உடம்பு இளைச்சிருந்தது. கண்களில் ஏதோ சோகம்.
மெதுவா தன் கதையைச் சொன்னா. சினிமாத்தனமா இருந்தது. அவ சிங்கப்பூர் போய்ச் சேர்ந்ததும், அங்கே சாகக் கிடந்த அவ அம்மா, உள்ளுர் தொழிலதிபர் மகனுக்கு அவளை மனைவி ஆக்கிட்டுக் கண்ணை மூடிட்டா. இதையெல்லாம் சொல்லிட்டு, 'ஆனாலும், என்னால உங்களை மறக்க முடியலை சார்! பச்சையா சொல்றேன். அவர்கூட செக்ஸ் வெச்சுக்கும்போது எல்லாம் உங்களோடு இருக்கிறதாத்தான் நெனச்சுப்பேன்னா.
ஒரு பிஸினஸ் விஷயமா மெட்ராஸ் போறேன். அங்கே ரெண்டு வாரம் தங்கும்படியா இருக்கும். நீயும் வரியானு அவர் கூப்பிட்டதும், உங்களைப் பார்க்கணும்கற வெறியில உடனே அவர்கூட கிளம்பி வந்துட்டேன். இப்பவும் ஷாப்பிங் போறதா பொய் சொல்லிட்டுதான் வந்திருக்கேன்னா.
அவள் என்னை நெருங்க, என் மனச்சாட்சி தன் கண்ணை கெட்டியாக முடிக்கொள்ள, அந்த உறவு மறுபடி நிகழ்ந்தது. நேரம் போனதே தெரியலை. திடீர்னு எழுந்தவள், நடந்த செயலின் தாக்கத்தை அப்பதான் உணர்ந்தவள் மாதிரி, சார் நான் தப்புப் பண்ணிட்டேனா?னு கேட்டாள்
'நீ என்ன நெனக்கிறே?ன்னேன்.
سے 109 ساحہ

பறிபோன உரிமை திரும்பக் கிடைச்சதுபோல சந்தோஷமா உணர்றேன்’னா.
"அப்ப வேறெந்தக் குழப்பமும் உனக்கு வேண்டாம்னேன்.
அடுத்தடுத்த நாளும் அவ வந்தா. எங்கள் உறவு தொடர்ந்தது. அவ சிங்கப்பூர் திரும்பறதுக்கு நாலு நாள் முந்தி. வழக்கம் போல எங்களை மறந்திருந்த நேரம். கதவைத் தட்டற சத்தம், அரக்கப் பரக்க எழுந்து, எங்களைச் சரி பண்ணிகிட்டுக் கதவைத் திறந்தால், வெளியே நாலஞ்சு போலீஸ்காரங்களோட அவள் கணவன்.
நிலமையை எப்படிச் சமாளிக்கிறதுனு தெரியாம நான் குழம்பி நின்னப்ப. அவ திடீர்னு பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிச்சா, "சார் நீங்க மாத்திரம் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா, இவன் என்னை ரேப் பண்ணியிருப்பான். என்னைக் காப்பாத்திட்டீங்கனு ஓடிப்போய் அந்த போலீஸ் அதிகாரிக்கு நன்றி சொன்னா. வாசகிங்கிற முறையில அவள் என்னைச் சந்திக்க வந்ததாகவும், தனிமையைப் பயன்படுத்திக்கிட்டு அவளிடம் நான் தகாத முறையில் நடந்து, அவளைக் கெடுக்க முயற்சி பண்ணினதாகவும் தேம்பி அழுதுக்கிட்டே கணவன்கிட்டே சொன்னா. அவார்ட் வாங்கின நடிகைகூடத் தோத்துப் போயிடுவா. அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நான் இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டேன்.
அட்டெம்ப்ட்டு ரேப்னு எஃப்.ஐ.ஆர்..பைல் பண்ணி, என்னைக் கைது பண்ணி லாக்-அப்ல வெச்சாங்க.
எதனால அவ அப்படி நடந்துக்கிட்டா? அவ சம்மதத்தோட. ஏன். அவளோட வற்புறுத்தலால நடந்த இந்தச் சம்பவத்துக்கு என்னை மட்டுமே முழுக் குற்றவாளியாக்கினாளே, ஏன்? என்னதான் ஒரு பொண்ணு பணம், படிப்பு, பதவினு இருந்தாலும், சமுதாய அமைப்புல தனக்கு இருக்கிற கெளரவத்துக்குப் பங்கம் வந்துடக்கூடாதுங்கிற எச்சரிக்கை உணர்வினாலயா? கணவன்கற பாதுகாப்பு, குடும்ப பந்தம். இப்படிக் காலங்காலமாகப் பழகிப்போன வட்டத்துக்குப் பயந்து, போட்ட நாடகமா?
சில வருடங்களுக்கு முன்பே அவளுக்கும் எனக்கும் உறவு இருந்தது என்பதற்குச் சாட்சியா அவள் எனக்கு எழுதின கடிதங்கள் என் கிட் டே பத்திரமா இருந்தது. இருந்தாலும் நான் அதை உபயோகப்படுத்திக்க விரும்பலை. எவ்வளவோ ரசிகர்கள், பெரிய பதவிகள்ல இருந்த வாசகர்கள், ஏன். காவல்துறையில இருந்த உயர்
سے 1 1 ہے۔

Page 12
அதிகாரிகள்கூட எனக்கு உதவி செய்யறதுக்கு முன் வந்தாங்க. நடந்த உண்மையைச் சொல்லச் சொல்லி வற்புறுத்தினாங்க. ஆனா, நான் மறுத்துட்டேன். அவளோட நிலமையை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது. எதிர் வழக்காடி, குறுக்கு விசாரணைங்கற போர்வையில, ஒரு பெண்ணோட மனசை அத்தனை பேர் மத்தியில நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்தறதை என் மனசு அனுமதிக்கலே!
ஏழாண்டு கடுங்காவல் தண்டனை கிடைச்சுது. இன்னிக்கு விடுதலை. இதுதான் என் கதை. இதுல எதையும் நான் மறைக்கலை. வேற ஏதாவது கேக்கணும்னா கேளுங்க!
மெய்கண்டான் சொல்லி நிறுத்தவும், "சார், இதுதான் என் வீடு” என்றபடி ஓர் அழகிய பங்களா முன் வேதா காரை நிறுத்தவும் சரியாக இருந்தது.
“உள்ளே வாங்க சார்!” என்று வரவேற்று அழைத்துப் போனாள் வேதா.
ஹாலில் நுழைந்ததும், அங்கே. திடுக்கிட்டார் மெய்கண்டான். சோபாவில் அமர்ந்திருந்தாள் அவள். இளைத்துத் துரும்பாகிப்போன உடல், ஒளியிழந்த முகம், மூப்பு எய்திவிட்டது போன்ற தோற்றம். பார்க்கவே ரொம்பப் பரிதாபமாக இருந்தாள்.
இருந்தாலும், மனதில் அவரையும்மீறி எழுந்த கோபம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, வேதாவை அவர் பார்த்த பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டே வேதா, "சார் உங்க அனுமதி இல்லாம இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க..” என்று ஏதோ சொல்லமுற்படுவதற்குள், அவள் ஒரு விசும்பலுடன் எழுந்து தடாலென அவர் காலில் விழுந்தாள்.
"என்னை மன்னிச்சுடுங்கனு கேக்கமாட்டேன். எனக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணும். அதுவரை உங்க காலை விடமாட்டேன்” என்று கண்ணிரால் அவர் கால்களை நனைத்தாள்.
அவளைத் தோளில் தட்டி ஆறுதல்படுத்தி எழுப்பியவர்,
அருகிலிருந்த இருக்கையில் அமரச் செய்தார். சில நிமிடங்களுக்கு அங்கே அசாதாரணமான மெளனம் நிலவியது.
~ I 22 ~

G6
வேதாவே பேசினாள். “சார், நடந்ததை நானே சொல்றேன். நீங்க ஜெயிலுக்குப் போனப்புறம் கணவனோடு சிங்கப்பூர் திரும்பின இவளுக்கு வாழ்க்கையே நரகமாயிடுச்சு! ஒவ்வொரு நிமிஷமும் வார்த்தையால அவளைக் குத்திக் குதறி, அணு அணுவா அவளைச் சாகடிச்சான் அவள் புருஷன். அவனோட டார்ச்சர் தாங்காம டைவர்ஸ"க்கு ஒப்புக்கிட்டா. விவாகரத்து ஆனபிறகு, அவன் வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கைல ஆனந்தமா இருக்கான். ஆனாலும், இவளை நிம்மதியா இருக்க விடலே. இவள் போகும்இடமெல்லாம் தொடர்ந்து, தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்திக் கேவலப்படுத்தினான். ஒரு தடவை பொறுக்க முடியாம இவ தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணி, அதுவும் நடக்கலே. உங்களுக்குச் செஞ்ச துரோகத்துக்கு அவ மனசாலும், உடம்பாலும் அனுபவிச்ச தண்டனை ஆண்டவனுக்குதான் சார் தெரியும்.
உங்களைப் பார்த்து, நீங்க கொடுக்கிற தண்டனையை அனுபவிச்சாதான், செத்தாலும் தன் நெஞ்சு வேகும்னு இப்ப உங்க முன்னாடி நிக்கிறா. இனிமே நீங்கதான் சொல்லணும்!”
சொல்லிவிட்டு வேதா மெய்கண்டானின் விழிகளை ஆவலுடன் எதிர்நோக்கினாள்.
"வேதா, உங்ககிட்டேர்ந்து எனக்கு ஒண்ணு தெளிவா தெரியணும். கற்புங்கறது என்ன? எக்குத்தப்பா மாட்டிக்கிட்டா தப்பிச்சுக்க உபயோகப்படுத்தற தற்காப்புக் கவசமா? வேண்டாதவனை மாட்டிவைக்கப் பயன்படுத்தற ஆயுதமா? இல்லே, ஆசைகாட்டி வலையில் போட்டுக்கற கவர்ச்சிப் பொருளா?”
“சமுதாய நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பொறுப்போட வாழறதுக்காக விதிக்கப்பட்ட ஒழுக்கம்னுதான் நான் நினைக்கிறேன்!”
"ஒழுக்க நெறிமுறைனா, அது உடம்பு சம்பந்தப்பட்டதா. மனசு சம்பந்தப்பட்டதா?”
"ஏன், ரெண்டுமேதான்!”
"அப்ப அதை நடைமுறைப்படுத்த முடியாது, வேதா?”
"ஏன் முடியாது?”
سنہ 13 سیسہ

Page 13
"உடம்போட ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது, மனசு செல்லாக்காசு! கம்பராமாயணத்துல, அகலிகை சாப விமோசனத்துல இது தெளிவா சொல்லப்பட்டிருக்கு. தன்னோடு சேர்ந்தது தன் கணவர் இல்லேங்கற விஷயம் ஆரம்ப கட்டத்திலேயே அகலிகைக்குத் தெரிஞ்சுடுச்சு. ஆனாலும் அவள் விலகலைங்கறதை உணர்ந்தாள். ஓராள்ங்கற வார்த்தைகளில் கம்பள் தெளிவா எடுத்துக் காட்டறார்.
கற்பு மனசு சம்பந்தப்பட்டதுன்னா, மனசுல வரிச்சவனையே கல்யாணம் பண்ணி, கடைசிவரை எந்தவிதமான சபலத்துக்கும் இடம் கொடுக்காம அவன்கூட வாழனும். ஆனா, நெனச்சவனையே கல்யாணம் பணி னிக் கறது பெரும் பான் மையான வங்க விஷயத் துல சாத்தியமாகிறதில்லை. மேற்கத்திய கலாசாரத்தோட பாதிப்பும், கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு அறிவியல் வசதிகளோட பெருக்கமும், பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்பட்ட அசுர முன்னேற்றமும் சேர்ந்து, பாரம்பரியப் பண்புகளைப் பாதுகாக்கணும்கிற எண்ணத்தைச் சிதைச்சு, திருமணம்கிற அமைப்போட அடிப்படையையே அலட்சியப்படுத்தற மனோபாவத்தை ஜனங்ககிட்டே வளர்த்துடுச்சு! கற்புங்கறதே இப்போ அர்த்தமில்லாத வார்த்தையாயிடுச்சு
“என்ன சொல்ல வர்றிங்க? மிருகங்கள் மாதிரி யாரும் யார்கூடவும் உறவு கொள்ளலாம். பிடிக்கலேன்னா பிரியலாம்கற வாழ்க்கை முறையை ஆதரிக்கறிங்களா?”
"அப்படி இல்லை வேதா! சமுதாய நன்மைக்காக உடம்பு ப்ளஸ் மனசு சம்பந்தப்பட்ட ஒழுக்கத்தை வலியுறுத்துவதுதான் கற்புங்கறது ஒகே. ஆனா, அது பெண்களுக்கு மட்டும்தான்னு ஆணும், அதை சமயத்துக்குத் தகுந்தாய்ல தங்களோட தற்காப்புக்கான ஆயுதமா பெண்களும் நினைக்கிற மனோபாவம்தான் கூடாதுங்கறேன். என்னைப் பொறுத்தவரை கற்புங்கற வார்த்தையே தேவையில்லாத ஒண்ணு. கிழிச்சுத் தூக்கி எறியவேண்டிய மாயத்திரை!”
திகைத்து நின்றாள் வேதா.
“சரி, வேதா. எனக்குப் பசிக்குது! சாப்பிடலாமா!' என்ற மெய்கண்டான், சோபாவில் கூனிக் குறுகி அமர்ந்திருந்த அவள் கண்களைத் துடைத்து, ‘கமான் பேபி” என்றபடி, அவளை எழுப்பி, அவள் தோளை அணைத்தபடி டைனிங் டேபிளை நோக்கிச் செல்வதைக் கண்ட வேதா, மகிழ்ச்சியுடன் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.
~4-

உட7ேனுைம் 67வணி
- அம்பை
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆண் எழுத்தாளர் ஒரு மூத்த எழுத்தாளருக்கு என் கதைகளைப் பற்றி எழுதியிருந்தார். என் கதைகளைப் படிக்கும்போது உடலுறவில் திருப்தியுறாதவளாக நான் தெரிவதாக அவர் எழுதியிருந்தார். என்னைத் திருப்தி செய்ய அவரால் முடியும் என்ற தொனியும் கடிதத்தில் இருந்தது. கடிதத்தைப் படித்த மூத்த எழுத்தாளரும் என் கதைகளைப் படித்தவர்தான். இந்தக் கடிதமும் அதன் தொனியும் அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. அவர் அந்தக் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியிருந்தார். தான் உடலுறவில் திருப்தி அடைந்தவன் என்று நினைக்கும் அந்த எழுத்தாளரின் கதைத் தொகுதி ஒன்றைப் படித்தேன். ஒரு கதையிலும் இலக்கிய நயம் இல்லை. உடலுறவில் திருப்தி அடைந்துவிட்டால் இப்படி உப்புச்சப்பற்றக் கதைகளைத்தான் எழுதமுடியும் என்றால் நான் திருப்தியுறாதவளாக இருப்பதே மேல் என்று தோன்றியது!
ஒரு பெண் எதைச் செய்தாலும் அது காமம் நிறைவேறல்/ நிறைவேறாமை என்பதன் வெளிப்பாடுதான் என்று கருதப்படுகிறது. பாலுணர்வு பற்றி எழுத வேண்டுமென்றால் ஆண்டாளை விட்டால் இவர்களுக்கு வேறு உதாரணமில்லை. ஆண்டாளும் மதுசூதனன் தன் முலைகளைக் கசக்க வேண்டுமென்று சொல்கிறாள். அது பிழையே இல்லை. ஏனென்றால் அவள் காதலிப்பது கடவுளை இல்லையா? முதலில் பாலுணர்வு பற்றி எழுதுவது காமத்தை எழுதுவது இல்லை என்று இவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். காமத்தை எழுதுவது தவறேதும் இல்லை. ஆனால் பாலுணர்வு என்பது காமம் மட்டும் அல்ல. அது உடல் பற்றிய பட்டுணர்வு சார்ந்தது. உடல் எனும் அரசியலைச் சொல்வது. உடலை அதன் விளக்கங்கள், குறுகல்கள், இலக்கணங்கள் இவற்றிலிருந்து வெளியே எடுத்து அதை ஒரு வெளியாக்கி, அதன் மேல் நின்று எழுதுவதுதான் பாலுணர்வை எழுதும் செயல். உடலையே ஒரு இயற்கைக் காட்சியாகத் தீட்டி அதை விஸ்தரிப்பதுதான் பாலுணர்வை எழுதுவது.
தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை இருவகைப் பெண்கள்தான் உண்டு - சோரம் போனவள், சோரம் போகாதவள். இலக்கியத்தை நோக்கும் அளவுகோலும் அதுவாகவே உள்ளது. இப்படி
- 1, 5ം

Page 14
எழுதுபவர்களை அண்ணாசாலையில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தவேண்டும். இவர்கள் எழுத்தில் அழைப்புக் குரல் கேட்கிறது என்றெல்லாம் விமர்சித்தது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் "படுக்க வரியா?” என்ற ரீதியில் இந்தக் கவிஞர்களைத் தொந்தரவு செய்து, கொச்சையான மொழியில் இது பற்றி பேசி, எழுதிய, அத்தனை ஆண்களும் தமிழ் சினிமாவில் வரும் குண்டர்களோ, வில்லன்களோ அல்ல. அத்தனை பேரும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மூழ்கியுள்ள இலக்கியப் பொறுக்கிகள். அறிவுஜீவிப் பொறுக்கிகள். முலைகள் என்று ஒரு கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பிட்டதாலேயே அக்கவிஞரின் முலைகள் பற்றிப் பேச அனுமதி கிடைத்துவிட்டது என்று நினைக்கும் கயவர்கள்.
ஒரு கவிஞரிடம் "முலைகள்’ கவிதைத் தொகுப்பு பற்றிக் கேட்டபோது, "பெரிதாக இருக்கும் என்று நினைத்தேன். ரொம்பச் சின்னதாக இருக்கிறது” என்று இருபொருள்படப் பேசி தன் மேதா விலாசத்தைக் காட்டிக்கொண்டார். இளம் படைப்பாளிகளுக்கான மேடை என்ற அறிமுகத்துடன் தொடங்கப்பட்ட ஒரு சிறு பத்திரிகை கவிதாயினிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது.
நீங்கள் கதை, கவிதை, கட்டுரைகள் அனுப்பலாம். தயவுசெய்து முலைக் கவிதைகளையெல்லாம் அனுப்பி எங்கள் தாலி அறுக்க வேண்டாம். "முலைகளே இல்லாத, அல்லது சிறிதாக இருக்கிற நம் பெண் கவிதாயினிகள் அதைப் பற்றி எழுதுகிறார்கள். உங்களுக்கென்ன இவ்வளவு கோபம்?” என்றார் நண்பர் ஒருவர். “அது சரி. அதற்கு கவிதை ஏன் எழுத வேண்டும்? பேசாமல் நாயுடு ஹாலுக்குப்போய் ஒரு உருப்படியை வாங்கி மாட்டிக்கொண்டோ அல்லது தங்கள் பின்புறச் சதையை அறுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டோ ஒழிய வேண்டியதுதானே?’ என்றேன் நான். இன்னொரு நண்பர் சொன்னார்.
“போர்னோ எழுத்துக்களைப் படிக்கும்போது என்னவிதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ அதே உணர்வுகள்தானே, பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்கிற ஹோதாவில் எழுதப்படுகின்ற இந்தவித முலைக் கவிதைகளைப் படிக்கும்போது ஏற்படுகின்றது. அப்படியிருக்க இப்படிப்பட்ட கவிதைகளை எழுதிவிட்டு எப்படி இவர்கள் விரும்பும் பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களை உருவாக்குவார்கள்?"
- 6

இதுபற்றி எழுதிய இன்னொரு இலக்கியப் பத்திரிகை முழு அறிவிப்பையும் பற்றி எழுதாமல் கவிதாயினிகளின் முலைகள் பற்றிய விமர்சனத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு ஒரு சுவையான வம்புச் செய்திபோல் வெளியிட்டது. இப்படியெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன என்பதைக் காட்டும் ஆதங்கத்துடன் அது வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் தாக்கம் என்னவோ அத்தகைய விமர்சனத்தை ஒட்டி எழும் தாக்கமாகவே இருந்தது.
அப்படி அந்த முலைகள் கவிதை என்னதான் சொல்கிறது? ஒரு அருமையான கவிதை அது.
gp6D6D66t
ഗ്രങ്ങബക്ക് சதுப்புநிலக்குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில் மெல்ல அவை பொங்கி மலர்வதை அதிசயித்துக் காத்தேனர்
எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே எப்போதும் ՍՈ(Եá86ծiՈD607
ഖിbഗ്രങ്ങബ
bT9ങ്ങബ
போதையை.
மாறிடும் பருவங்களின் நாற்றங்கால்களில் கிளர்ச்சியூட்டஅவை மறந்ததில்லை
தவத்தில்
திமிறிய பாவனையையும் காமச்சுண்டுதலில் இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அண்Uையும் சிசு கண்ட அதிர்வில் குருதியினர் பாலையும் சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில் துடைத்தகற்ற முழயாத இருகண்ணிர்த்துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன.

Page 15
கடுமையாக விமர்சிக்கப்பட்ட இன்னொரு கவிதை சல்மாவுடையது. வாழ்க்கையில் நாம் செய்துகொள்ளும் பலவகை ஒப்பந்தங்களில் ஒன்றாக உடலுறவைப் பார்க்கும் கவிதை.
ஒப்பந்தம்
ஒவ்வொருமுறையும் அம்மா நாகுக்காய்ச் சொல்வதை அக்காகோUமாய்ச் சொல்வாள் Ս(Եձ60)ՖԱJ60)ՈDԱՔ60* தவறுகளைல்லாம் என்னுடையதென
தினமும் படுக்கையறையில் எதிர்கொள்ளும் முதல் பேச்சு ‘இன்றைக்கு என்ன? அநேகமாக
இறுதிப் பேச்சும் இதுவாகவே இருக்கும்
வேசைத்தனத்தினை சுட்டும் விரல் ஒளிரும் கோழநட்சத்திரங்களிலிருந்துமீள நடுங்கும் இரவுகளில் மிதக்கும் அறிவுரைகள்
குட்டிக்கு உணவூட்ட இயலாப்பூனையின் தேம்பியழும்குழந்தைக்குரல் கவ்விப் பிடிக்கிறது ஈரலை
உனக்கும்கூடப் புகார்கள் இருக்கலாம் எனர் நிலைப்பாடு காலத்தாலும் வரலாற்றாலும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது
உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும் சிறிது அன்பைப் பெற
سے 18 سے

உனதுகுழந்தையின் தாய் எனினும் பொறுப்பை நிறைவேற்ற
வெளியுலகில் இருந்து சானிட்டரிநாப்கினர்களையும் கருத்தடை சாதனங்களையும் பெற இன்னும் சிறுசிறு உதவிகள் வேண்டி ср,2щот6отт60 உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவுஅதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள
எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி,
இத்தகைய விமர்சனங்களால்தானோ என்னவோ சல்மாவின் நாவலில் ஒரு அடக்கி வாசித்த தன்மை இருக்கிறது. மற்றவர்கள் ஏதாவது கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் தானே சுய தணிக்கை செய்துகொண்டது தெரிகிறது.
இந்தச் சுய தணிக்கை வேறுவிதத்திலும் செயல்படுகிறது. உமா மஹேஸ்வரியின் கவிதை ஒன்றுக்குக் காலச்சுவடு பரிசு ஒன்று கிடைத்தது. கவிதையில் ஆணுறுப்பு என்ற சொல் வருகிறது. பிறகு இக்கவிதை தமிழினி வெளியிட்ட உமா மஹேஸ்வரியின் கவிதைத் தொகுப்பில் இடம்பெறுகின்றது. ஆணுறுப்பு என்ற சொல் அகற்றப்பட்டு ஆண்வலிமை என்ற சொல் சேர்க்கப்படுகிறது. கவிதாயினியின் அனுமதி எல்லாம் வேண்டாம். பதிப்பாளருக்கு தெரியும் கவிதை பற்றி. அதுவும் ஆணுறுப்பு என்றால் அது ஆண்வலிமைதான் என்று கட்டாயம் தெரியும்.
இப்படிப்பட்டத் தணிக்கைகள் உள்ள இலக்கிய உலகில் கவிதைகள் படைக்கப்படும்போது அதில் அழைப்புக் குரலன்றி வேறு குரல் எப்படி மற்றவர்களுக்குக் கேட்கும்? இருந்தாலும் இக்குரலை செவிமடுப்பவர்கள் எதற்கும் செவி, தொண்டை, கண் மருத்துவரிடம் சென்று உடல்நிலை பற்றி உறுதி செய்துகொள்வது நலம். உடல் பற்றிய அரசியல் கண்ணில் படாமல் போவது, அதன் தொனி செவியில் விழாமல் போவது, அதன் உள்ளடக்கம் தொண்டைக்குழியில் இறங்காமல் போவதற்கு ஏதாவது நிவாரணத்தை அந்த மருத்துவர் சொல்லலாம். எனக்குத் தெரிந்த சில நிவாரணங்கள் உண்டு. இவர்கள் உ.ம்பு அதைத் தாங்குமா என்று தெரியவில்லை.
ہے۔ 19 سے

Page 16
துரத்து கோடை இழகன் - பற்றிய ஒரு மதிப்புரை -
. ஏ. இக்பால்
1983ஆம் ஆண்டுக்குப்பின் இந்நாட்டில் படிப்படியாக அதிகரித்து வந்த யுத்தம் மக்களிடை உளப்பாதிப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களது வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்கியது. இச்சந்தர்ப்பம் புலப் பெயர்வை ஏற்படுத்தி மக்களைப் புலம் பெயரச் செய்தது. கலாசார வடுக்களும், இரக்கமற்ற தன்மையும், சுயநலப் போக்கும் அதிகரித்ததினால் மரபு மாற்றமே ஏற்பட்டதெனலாம். யுத்த சூழலின் பிற்பகுதியில் எழுந்த வாழ்க்கை முறையை மையமாக வைத்து எழுதப்பட்ட இயல்பு நவிற்சி (Realism) யாகப் பதியப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுதிதான் சி.மாதுமையின் துணிச்சலால் வெளிவந்திருக்கும் “தூரத்து கோடை இடிகள்” எனலாம்.
இந்நூலின் ஆசிரியர் குமரப் பருவத்தில் - குமரப்பருவமான 14-19 வயதுக்குள் இக்கதைகளை எழுதியுள்ளார். ஆபத்தான அதிர்ச்சி தரும் நெருக்கீடுகள் மனச்சமநிலையைக் குழப்பி உணர்ச்சி அலைகளைத் தூண்டிவிடும், ஆபத்தான அதிர்ச்சியின் பின்னிகழ்ந்த சம்பவங்களே இவரது கதைகளின் கருக்கள் எனத் துணியலாம். சி.மாதுமையின் இப்பயங்கரச் சூழல் ஒரு பலம் மிக்க சிறுகதை எழுத்தாளராக்கியுள்ளது. அல்லது வீட்டில் சிறுகதை எழுத இப் பின்னணி இவரை ஊக்குவித்துயர்த்தியுள்ளது. சிறுபிள்ளை பயமறியாது. அதனால்தான், இங்கே ஒரு சரித்திரத்தில் சமயாசமயச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, உணர்ச்சி என்பனவற்றை அடக்கி நிற்கும். சரித்திரமோ விஞ்ஞானம், அறிவு என்பனவற்றை அடக்கி நிற்கும். இவரது கதைகளோ இலக்கியம் சிலவேளைகளில் உணர்ச்சி, அறிவு இரண்டையும் தரும் வல்லமைக்குள்ளாகி இருக்கின்றன. இலக்கியத்தில் அகலத்தை இவரது கதைகள் இன்னும் கூட்டி நிற்கின்றன.
கடுமையான நெருக்கீடுகளின் அதிர்ச்சியால் அறிவாற்றலில் குழப்பம் ஏற்படும். அவ்விதம் குழப்பம் ஏற்பட்ட பாத்திரங்களின் மாறுபட்ட தன்மைகளை விபரிக்கும் கதைகளாகவே "தூரத்து கோடை இடிகள்” தொகுதியிலுள்ள கதைகள் தென்படுகின்றன. இவ்வாசிரியர் அறிவாற்றல் சம்பவங்களையும், நெருக்கீடுகளையும் தமது குறிப்பிட்ட குமரப்பருவத்துள்
سحر (20 2 میسح

அறிவு வல்லமையால் அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறார். இவரது கதைகளில் சொல்லப்பட்டிருப்பதைவிட, சொல்லாமல் வாசகர்களே புரிந்துகொள்ளும்படியான சம்பவங்கள் அதிகமுள்ளன. சிறந்த கதைகளுக்குரிய அறிகுறி இதுதான்.
"தூரத்து கோடை இடிகள்” 112 பக்கங்களைக் கொண்டது. இதிலுள்ள பதினைந்து சிறுகதைகள் 98 பக்கங்களையே கொண்டுள்ளன. 98 பக்கங்களில் 15 சிறுகதைகள். இக்கதைகளைத் தனித்தனியே வாசித்து நோக்குதல் அவசியம். வாசித்துச் சுருக்கமாகவே கதையைக் கூறமுடியும்.
முதலாவது கதை “பயணம்'. இக்கதை ஒரு தகப்பனைத் தனிமைப்படுத்துகிறது. அவரது இறப்பிலும் யாருமில்லை. அவரது மனைவி மக்கள் அவரிடம் அணைய எத்தணிக்கின்றார்கள், செயற்பாட்டிலில்லை. மனித மனமாற்றம் எவ்வித மனப்பாதிப்பை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது என்பதை இக்கதையை வாசிக்கும்போது அறியலாம்.
இரண்டாவது கதை “விடிவு', கனடாவுக்கு உழைக்கப் போன மகன் உழைப்பால் சகோதரிகளை நிறைவேற்றிக் கரைசேர்த்துத் தாய் தந்தையரையும் கனடாவுக்கெடுக்கிறான். இக்கதையின் கதாநாயகன் ஜி.ஸி.ஈ. சாதாரண தரம் சித்தியடைந்த கையோடு தான் கனடா சென்றான். அந்தப் பச்சைப் பிள்ளைதான் இத்தனை வேலையும் செய்கிறான். சொத்துரிமை என்ற ஒரு சட்டம் தமிழர் வாழ்க்கையில் எப்படி? என்பது எனக்குத் தெரியாது. தந்தையின் சொத்தில் ஆணுக்குரிய பங்கு, பெண்ணுக்குரிய பங்கு எப்படிப் பிரிபடுகிறதென்பதும் எனக்குத் தெரியாது. இங்கே வீட்டில் குமர்களைக் கரைசேர்த்தபின், சகோதரன் சீதனம் பெறுவதென்றால், சொத்துரிமை இங்கே பேணப்படுவதில்லை என்பது அர்த்தமாகும். ஆண் என்பவன் விற்பனைப் பொருள்தான். இவ்விதம் இக்கதை சிந்திக்க வைக்கின்றது. இன்னும் பல கோணத்தில் சிந்திக்க வைக்கின்றது.
மூன்றாவது கதை "அசை’ இக்கதை ஒரு வரலாற்றுப் பதிவு. வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம், தமிழர் முஸ்லிம்களின் உறவின் தாக்கம் என்பன பேசப்படுகின்றன. உண்மையில் முஸ்லிம்களின் வெளியேற்றம் மட்டுமல்ல, ஆகக்குறைந்தது ஒரு தலையணை, படுக்கும் பாய், ஒரு டோர்ச் லைட் தொடக்கம் ஆகக் கூடியது பல உழவு மெஷின்கள், கார்கள், லொறிகள், பொருளாதாரத் தலங்கள் எனப் பலகோடிக் கணக்குப் பெறுமதியான செல்வத்தை நாகரீகமாகக் கொள்ளையிட்ட சம்பவங்களுக்கு இப்பதிவிலிருந்து பெற முடியும்.
- 2 -

Page 17
நான்காவது கதை 'கானல்’. கல்யாணம் செய்தவன், அவனுக்காகக் காத்திருந்த காதலியை இரண்டாம் தாரமாக ஏற்க வந்த கதை. இது தமிழர் கலாசாரமல்ல. போர்ச் சூழலில் புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட கலாசாரம். ஏன்! இப்போது கலாசாரமாகிவிட்டது.
ஐந்தாவது கதை “தூரத்து கோடை இடிகள்”. உண்மையான இக்கதையை உண்மைதானா? என ஏற்க முடியாத மனநிலை ஏற்படுகிறது.
ஆறாவது கதை "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்? இக்கதை தற்கால உண்மைகளைப் படம் பிடித்துக்காட்டுகிறது.
ஏழாவது கதை “வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா’. இக்கதையில் கமலா சாகிறாள். அது நடந்திருக்கக் கூடாது. அவளை ஆசிரியர் வாழ வைத்திருக்க வேண்டும். வாழ்க்கையை அறிய இலக்கியமும், இலக்கியத்தை அறிய வாழ்க்கையும் உதவுவதால், முற்போக்கு இதயம் கொண்ட ஆசிரியர் கமலாவை வாழ்வித்து ஒரு முன்மாதிரியைக் கதையில் திருப்பி இருக்கலாம்.
எட்டாவது கதை "இழப்பு" போர், அதற்குரிய காரணிகள், காரணத்துக்குரியவர்கள் என ஆய்வு செய்து முடிவெடுக்க வாசகனைத் தூண்டும் கதையிது.
ஒன்பதாவது கதை “விழிப்பு" இது ஒரு சிறு சம்பவம். என்னைப் பொறுத்தளவில் கதை பூர்த்தியாகவில்லை என்பதே!
பத்தாவது கதை “நிதர்சனமான விடியல் ஒன்று உதயமாகின்றது” இச்சம்பவம் முடிந்து இன்னொரு கதையின் தொடக்கமாகக் கதை திரும்புகிறதாகத் தெரிகிறது.
பதினோராவது கதை ‘கலைந்து போன கோலங்கள்” தன்னை ஈன்று வளர்த்துக் கற்பித்து உயர்ந்தோனாக்கிய பெற்றோரை, தான் வேலை செய்யும் காரியாலயப் பியோன் வீட்டில் அமர்த்திய கதை. தனது வீட்டில் அமர்த்தச் சமநிலை இடம் கொடுப்பதாகத் தெரியவில்லை. தாங்க முடியாத மனவேதனைக்குரிய இக்கதை நம்மிடையே இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.
سہ 222 2 سسہ

பன்னிரண்டாவது கதை “தியாகச் சுடர்" டாக்டர் பூரீதரன் போன்ற தியாகிகள் இரக்க சிந்தனையுடையவர்கள் இன்றும் எம்மிடையே மருத்துவ சேவகம் புரிகின்றார்கள். இக்காலம் சுனாமியினால் ஐம்பதிற்கு மேற்பட்ட இளம் டாக்டர்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர். இவர்களில் அநேகமானவர்கள் முஸ்லிம் இளம் டாக்டர்கள். இந்த அவலம் பற்றி மிக வேதனைப்பட்ட வேளை, ஒரு சாதாரண மனிதன் என்னிடம் கூறினார். "இரக்கமற்ற பண ஆசை கொண்ட, பெஐரோ சீதனம் இவர்கள் அழியத்தான் வேண்டும்” என்று. மிகவும் சிந்தனைக்குட்பட்ட இவ்விடயம் "மெய்யியல்' சார்ந்தது. இதுபற்றி ஒரு முடிவுக்குவர என்னால் முடியவில்லை.
பதின்மூன்றாவது கதை “குருபிரம்மா" நல்ல கதை. நான் ஓர் ஆசிரியனாக இருந்தவன். மிகவும் என்னைச் சிந்திக்க வைத்த கதை. நான் சிறுவனாக இருந்தபோது, என் தந்தையார் சொன்ன கதையிது. அரசாங்க ஏஜண்டாக பதவி வகித்து மக்களுக்கு உச்சத்திலிருந்து மகத்தான சேவை செய்த ஜி.ஏ.நேசையா அவர்கள் லண்டனில் கல்வியை முடித்து அக் காலத்தில் இரத்மலான விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அவரை அதியுயர் பேராசிரியர்கள், சமூகமட்டத்தில் உயர்வானவர்கள், உற்றார், உறவினர்கள் வரவேற்க விமான நிலையம் வந்திருக்கின்றார்கள். விமானத்தளத்திலிருந்து வெளியேறி மண்டபத்துள் வந்த நேசையா அவர்கள் அக்கட்டடத்தை உற்று நோக்குகிறார். அங்கே, ஒதுக்கமான ஓர் இடத்தில் மேல்சட்டையில்லாமல் சால்வையால் மூடிக்கொண்டு நின்ற அம்மனிதரை கூர்ந்து பார்த்த நேசையா அவர்கள் நின்றவர்களை விலக்கி அவரிடம் சென்று அவரின் காலில் விழும் காட்சி எல்லோரையும் கலங்க வைக்கின்றது. அம்மனிதருடைய கண்களும் கலங்கி நின்றன. திரு.நேசையா அவர்களுக்கு ஆனா, ஆவன்னா, ஒன்று, இரண்டு, என அடியெடுத்துக் கற்பித்த ஆசிரியர்தான் அம்மனிதர். அவரைச் சாஷடாங்கம் செய்த பின்தான் மேற்படிப்புப் படிப்பித்த பேராசிரியர்களைப் பின்னோக்கினார். ஆசிரிய மகிமை ஆரம்ப ஆசிரியர் ஒருவரை வைத்துப் பின்னப்பட்ட இக்கதை அறிவியல் உலகத்தையும், பாமர உலகத்தையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
பதின்நான்காவது கதை "அஸ்தமனம் என்பது முடிவுகளல்ல”. வேலையில்லாத வாழ்வு. அதே நேரம் ஆண்பிள்ளையாக இருக்கிறான் என்பதைக் காட்டுகின்றது. கற்றதிற்கேற்றதைச் செய்யாமல் துணிவற்றிருக்கும் ஒரு படித்தவர் பற்றிய கதைதான் இது.
பதினைந்தாவது கதை "அம்மா நான் படிக்கோணும்”. சிக்கலான சம்பவமொன்று கதையாகியுள்ளது. இச்சிக்கலை வாசகர்களே தீர்க்க வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.
صحصہ 223 بہہ

Page 18
சி. மாதுமையின் சிறுகதைகள் பற்றிய சிறுகுறிப்புகளையே இங்கே தந்துள்ளேன். இந்தப் பதினைந்து கதைகளையும் குழப்பி, இன்றைய இலக்கியக் கோட்பாட்டொன்றுள் புகுத்தி ஒரு நாவலாகவும் எழுதிவிட முடியும். இக்கதைகளில் கருவைச் சுற்றிய பாத்திரங்கள், பாத்திரங்களுக்கேற்ற நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக்குரிய சூழ்நிலைகள் அப்பட்டமாகத் தென்படுவதால் வாசகர்களிடையே இக்கதைகள் எடுபடும் என்பதில் ஐயமில்லை.
தற்கால விமர்சனக் கோட்பாடுகளில் “பின் நவீனத்துவமும்" ஒன்று. சிக்கலான ஒரு தத்துவமிது. அநேகமான விமர்சகர்கள், ஏன் படைப்பாளிகள்கூட, இத்தத்துவத்தை ஏற்க விரும்புவதில்லை. அதிலொரு கோட்பாடுண்டு Deconstruction எனும் தகர்ப்பு முறைதானது. மாதுமையின் கதைகளைத் தகர்ப்பு முறைக்குட்படுத்தினால் அதனால் வரும் விளக்கங்கள் இப்புத்தகத்தின் அளவிலும் அதிக மடங்குகள் பெரிதாகலாம்.
சி. மாதுமையின் கதைகளுக்கு "தகள்ப்பு முறை” நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இம்மாதம் 16ஆந் திகதி இந்நூலுக்கு வெளியீட்டு விழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றிருக்கின்றது. அக்கூட்டத்தில் கதாம்சம் பற்றி தமிழ்மணி திருமதி ப. பாலேஸ்வரி ஆய்வு செய்திருக்கின்றார். சமுதாயப்பார்வை பற்றி திரு. க.சந்திரன் ஆய்வு செய்திருக்கின்றார். பெண்ணிலை பற்றி திருமதி என். பூரிதேவி ஆய்வு செய்திருக்கின்றார். கருவும் சொல்லாட்சியும் பற்றி திருமதி. சித்தி பத்மநாதன் ஆய்வு செய்திருக்கின்றார். இவை யாவும் இத்தொகுதியிலுள்ள கதைகளின் தகர்ப்பு முறைகள்தான். இப்பொழுது இங்கு நடக்கும் ஆய்வுகளும் தகள்ப்பு முறைக்குள் உட்படும்.
உலகப் பொருளின் சாயையும், களங்கமற்ற இதயமும், சத்தியத்தில் தோய்ந்த அறிவும், மனித சாதியின் சுகதுக்கமும் சிலாக்கியமாகக் காணக்கூடிய மனிதனுடைய பாவனை அல்லது நடிப்பு யாவும் இத்தொகுதியிலுள்ள கதைகளில் உட்பொதிந்துள்ளதால் உள்ளடக்க நிறைவுண்டு எனலாம். ஆனால், உருவ நீளம் இங்கு முழுமை பெற்றதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், நிறைந்த கலை வடிவத்துடன் இலக்கியமாக இக்கதைகள் இன்றும் உயரும். இன்றும் என்பதில் கவனம் செலுத்துதல் முக்கியம்.
"அக்காலகட்டத்தில் என் மனதைக் காயப்படுத்திய, பாதித்த சில அனுபவங்களை இயல்பாக எழுதியதால் அவற்றுக்குச் சிறுகதை என்று பெயர் சூட்டிட முடியாது’ என என்னுரையில் ஆசிரியர்
حسم 224 سح

கூறியிருப்பதை வைத்து இக்கதைகள் சிறுகதைகள்தானா? எனும் கேள்வியை அவரே எழுப்புகிறார். சிறுகதைகள் ஏராளமாக மலிந்துவிட்ட ஆங்கிலத்தில் கூடத் திட்டமாகச் சிறுகதை இப் படித்தான் இருக்கவேண்டுமென்று வரையறுக்கப்படவில்லை. அதனால், ஆசிரியர் இவை சிறுகதையா? இல்லையா? என அங்கலாய்க்கத் தேவையில்லை. வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் மறுக்கும் இலக்கிய சிருஷ்டிக்கு அமரத்துவம் கிடையாது. வாழ்க்கை இரசனைக்குட்படவும், வாழ்க்கையில் பிடிப்பேற்படவும் இலக்கியமே உறுதுணை செய்யும். இக்காரியத்தை எடுத்துச் செல்லும் அத்திவாரமாக 'துரத்து கோடை இடிகள்” இனம் காணுகின்றது. அதுமட்டுமல்ல, படைப்பாளியின் தெரிவில் இலக்கிய முயற்சி வெளிப்படுகின்றது. அறிந்த ஒன்றை, உணர்ந்த ஒன்றை, அனுபவித்த ஒன்றை பிறருக்குத் தெரிவித்தல்தான் அம்முயற்சி. அம்முயற்சியின் வடிவம்தான் இலக்கியமாகும். வடிவம் பிழையானால், இலக்கியமாகாது வேறுபக்கம் திரும்பும்.
ஓர் இலக்கியப் படைப்பு சிறப்புப் பெற படைப்பாளி மையக்கருத்தை நிதானித்தல், கதைக்களனை அமைத்துக் கதையைப் பின்னல், சம்பவத் தொடரமைப்பை உருவாக்கல், மோதுதல், உச்சநிலை அடைதல் ஏற்பட வேண்டும். இவைகள் சி.மாதுமையின் கதைகளில் நடந்துள்ளனவா? என நாம் உற்று நோக்கலாம். ஆம், அவை நடந்துள்ளன. இவற்றைப் பல்வகைப்பட்ட வாசகர்களும் பலதிக்கில் நிதானித்து நோக்கிக் கூறுவார்கள். அவைதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
“இக் கதைகள் என்ன கூறுகின்றன?’ என எழுதும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள், ஓரிடத்தில் “சமூகவாழ் நிலைகளை விவரண ரீதியில் தனது இளமைக்காலக் கனவுகளுடன் கதையாக இவர் எழுதியுள்ளார்” எனக் கூறுகிறார். சிறுகதைகள் விதம் விதமான ரூபத்தில் வெளிவரலாம். வியாசத்தன்மை, நடைச்சித்திரம், நிகழ்ச்சி வர்ணனை, பாத்திர வர்ணனை, விசித்திரக் கற்பனை, விவரணம் போன்ற பல்வேறு ரூபத்தில் வெளிவந்துள்ளதைக் காண்கின்றோம். இலங்கையர்கோனின் "வெள்ளிப் பாதசரம்” சிறுகதை விவரணமாகவே முன்பு எனக்குத் தெரிந்தது. சிவன்னியகுலம் அக்கதையின் உச்சங்களை எடுத்து விமர்சித்தபின்தான் நான் விழித்தேன். ஆகையினால், உருவத்தை வைத்துச் சிறுகதையா? இல்லையா? எனத் தீர்மானிக்க முடியாது. என்றாலும், இளம் எழுத்தாளர் சி.மாதுமையவர்கள் உருவத்தின் உத்திகளை அறிதல் மிகமுக்கியம். அ.முத்துலிங்கத்தின் "அக்கா" Stream OfConsciousness எனும் பிரக்ஞை ஓட்டத்தில் இருப்பதையும், இதேமாதிரி (Flash Back) பின்னோக்கல் கதைகளையும், Ringarden
-25

Page 19
எனும் உப பாத்திரம் மேலெழுந்து கதை சொல்லுகின்ற உத்தியையும், பத்திரிகைச் செய்தி போல் கதை சொல்லல் போன்ற ஹெமிங்வே ஸ்ரைலையும் அதிகம் படிக்க வேண்டும். அப்போதுதான், இவ்வுத்திகளில் அவரது அனுபவத்தைச் சோதனை செய்ய முடியுமல்லவா? அனுபவம், கூர்ந்து நோக்கல், கற்பனை என்பன எழுத்தாளரின் வெற்றிக்கவசியம். இதில் ஏதாவதொன்று குறையும்போது மற்ற இரண்டும் சமப்படுத்தும். எதையும் எழுதுவதற்குத் தனிப்பட்ட மனோநிலை தேவை. அதனால்தான் வெற்றி பெறலாம். வெற்றிக்குக் காலம் இடங்கொடுக்கும். சிலவேளைகளில் காலம் வெற்றியைத் தடுக்கும். எப்படியும் எழுத்துக்கள் செம்மையான ஆக்கமெனின் எப்போதோ கூர்ந்து கவனிக்கப்படும். இதனை எழுத்தாளர்கள் மறக்கலாகாது.
இலங்கையில் 1914இல் மங்களநாயகம் தம்பையா, 1924இல் செ.செல்லம்மா, 1929இல் இராசம்மா இவர்களைத் தொடர்ந்து குந்தவை, குறமகள், சித்திரலேகா மெளனகுரு, பவானி ஆழ்வாப்பிள்ளை, பேராதனை ஷர்புனிலா, நயீமா லித்தீக், கோகிலா மகேந்திரன், கோகிலாம் பார்கப்பையா, கமலா தம்பிராசா, நந்தினி சேவியர், புசல்லாவை இஸ்னாமிகா, நிவேதினி, பூர்னி, பாலரஞ்சனி சர்மா, ஸ்டெல்லா மேரி, ரூபராணி ஜோசப், ரோகிணி முத்தையா, திலகா பழனிவேல், சாந்தினி, சசிதேவி தியாகராசா, புதுமைப்பிரியை, பா.பாலேஸ்வரி, பாலாம்பிகை நடராசா, சிதம்பரபத்தினி, புஷ்பா, ராதினி, யோகாம்பிகை வல்லிபுரம், உமா, கு.பரமேஸ்வரி, ராணி, யாழினி, ம.தேவகெளரி, க.யோகேஸ்வரி, மண்டூர் அசோகா நிறைமதி, ஜாமினி, பத்மா சோமகாந்தன், ஹஸினா வஹாப், கவிதா, கெக்கிராவ சஹானா, புர்கான்பீ இப்திகார், சுலைமா ஏ சமி, றியாஸா ஆப்தீன், இர்பானா ஜப்பார், மரினா இல்யாஸ், எம்.ஏ.றஹரீமா, பாத்திமா றஜப், சித்திறிகா யகீன், ஸனிரா காலித், அன்ன லட்சுமி இராசதுரை, பேகம் ஸ"பைர்தானி, தாமரைச் செல்வி, மனோன்மணி சண்முகம், றவrமா ஹாபித், ஒளவை, சுல்பிகா, ஊர்மிளா, கலைமகள் ஹிதாயா, மலிதா புண்யமீன், றஸினா புஹாரி என எழுபதுக்கு மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் எழுதியுள்ளனர். அநேகமானவை நூலுருப் பெற்றிருக்கின்றன. ஸாஹித்திய மண்டலப் பரிசு பெற்றிருக்கின்றன. இவர்களில் அநேகள் திருமணத்தின் பின், எழுத்துலகிலிருந்து மறைந்தும் விட்டனர். என்றாலும், தேர்ந்த உச்ச நிலைக்காக்கும் உயர் படைப்புக்கள் இவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இவர்களிலும்விட, மாறுபட்ட தைர்யமும், படைப்பு வல்லமையுமுள்ளவராக இன்று வந்திருக்கும் சி.மாதுமையவர்களின் போக்கில் வித்தியாசமுண்டு. ஹெக்கை யேசுதாஸின் திறமையுடன் இவரை ஒப்பிடலாம். அவர் தொடர்ந்தும் இவ்வழியில் நடந்து செல்லும்போதுதான், இலக்கிய உலகம் எடைபோடும்.

வாழ்க்கையை அறிய இலக்கியமும், இலக்கியத்தை அறிய வாழ்க்கையும் உதவுகின்றபடியால், மனிதனும் இலக்கியத்தில் இணைந்து நிற்பதில் வியப்பில்லை. அதனால், சீர்மையான ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் உருவாகும். அந்த உருவாக்கத்தில் சி.மாதுமை தொடர்ந்தும் தமது வல்லமையைக் காட்டவேண்டும். இந்த வேண்டுகோளுடன், இச்சந்தர்ப்பத்தை அளித்தமைக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்.
உசாத்துணைகள் -
மனவடு - டாக்டர் தயா சோமசுந்தரன் தமிழ்ச் சிறுகதை வரலாறு - எம்.வேதசகாயகுமார் புனைகதை இலக்கிய விமர்சனம் - சிவன்னியகுலம் பின்னை நவீனத்துவம் கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் - தொகுப்பு தி.சு.நடராசா, அ.ராமசாமி கல்வி உளவியல் ஓர் அறிமுகம் - எஸ்.சந்தானம் எம்.ஏ.பி.டி.
سسہ 227 سسہ

Page 20
உயிர் நசுக்கப்படுதன்
. குட்டி ரேவதி
ஒருவரின் மொழி சமூகநிழல படிந்த அவரது குருதியோட்டத்திலிருந்து பிறப்பதாகவே நான் நம்புகிறேன். மொழி, தனிமனித அடையாளத்தைச் செம்மைப்படுத்தும் கருவியாகச் செயல்படுவதிலிருந்து இது நுட்பமாகப் புலனாகக் கூடும். அகச் சிந்தனையும், புறக்கருத்து வெளிப்பாடும் இணையும் தளத்தில் மொழியின் புலமை வெளிப்பட்டாலும், சிந்தனை இயங்கவே மொழியின் கனலுமகரி தேவைப்படுகிறது. ஒரு சொல்லின்மீது மற்றொரு சொல்லை அடுக்கிப் புரிதலின்பாற் மொழியைப் பிரவாகிப்பதெல்லாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ள சொல்லின் பொருள் கொண்டுதான்.
குருதியோட்டத்தில் பாயும் மூலகங்கள் மொழியின் வளத்திற்கும் சிந்தனைப் பாய்ச்சலுக்கும் ஆதாரமாய் அமைகின்றன. வரலாற்றின் சுவடுகளும், மனித வாழ்வியலின் கசடுகளும் படிந்து உருவானதே இன்றைய மொழியின் வேரோட்டமாயிருக்கலாம். ஒரு மொழியோ அம்மொழியில் எழும் கவிதையின் வழியாகவே தனது சட்டையை உரித்துக்கொள்கிறது. வளர்சிதைமாற்றம் அடைகிறது; தன்னையே புடம் போட்டுக்கொள்கிறது.
கவிதை, ஒரு பாடல் எனும் வாய்மொழி வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்திற்குத் தடம் மாறும்போது அது அதிக அதிகாரத்தைக் கோரிப்பெறுவதாக உணர்கிறோம். ‘அதிகாரம்' என்பது ஆண்மையின் மறுவடிவமாக உணரப்பட்டாலும், மொழியையும் நிலத்தையும் அதிகாரத்தின் முதன்மையான இரு வடிவங்களாக்கிய பொழுது, பெண்களின் சிந்தனையில் இதை எப்படி எதிர்ப்பது, எதிர்கொள்வது என்பதற்கான வெளி வழங்கப்படவில்லை. இருட்டறையில் சிந்தனைப் புழுக்கத்தில் சொற்களை உருட்டி உருட்டி வழவழப்பாக்கி ஒரு கூழாங்கல்லைப்போல் எல்லாப் பெண்களும் சேகரித்து வைத்திருக்கக் கூடும், அதை எழுத்தாக்க முடியாமற் போனாலும்.
ஆனால், குழந்தைகளுக்கான கதைகளாகவும் தாலாட்டுப் பாடல்களாகவும், மரபுத்தொடர்புகளாகவும் புழுக்கமான அறையிலிருந்து வெளிப்பட்டுக் காற்றில் பறந்துகொண்டேயிருந்திருக்கலாம். இப்படிச் சொற்கள் காற்றில் கலந்த தன்மையும்கூட, உலைக்களத்திலிருந்து
سیسہ 283 2 ستہ

எழும்பும் தீக்கொழுந்துகள், புகையாய் மாறி விடுபட்டதைப்போலத்தான், பெண்பாற்புலவர்கள் பாடிப் பரிசில் பெற்றார்கள். சிந்தனைப் பேரருவியில் உருட்டி உருட்டி கூழாங்கற்களாக்கிய சொற்கள், பாடல்களாய்ப் பரிணமித்த கணங்களில் வியப்புகளை எழுப்பியதுபோல் அவை எழுத்தாய்ப் பதிந்த தன்மை, அதிர்ச்சியைத் தட்டியிருக்கலாம். ஆண்களின் எழுத்து வெறும் அதிகாரமாகவும், ஆணைகளாகவும் எழும்பிய தருணத்தில் பெண்களின் எழுத்து அதை எதிர்க்கும் மெலிந்த குரலுடனும், அதிகாரத்தை அழிக்கும் உள்ளடக்கங்களையும் கொண்டு எழுந்து பூமியில் அமைதி நிலவுவதற்கான உயிர்களைப் பேணும் ஒப்பற்றதொரு தாய்மை நிலையினைத் தரித்துக்கொண்டது. எழுத்து சொல்லோடு சொல் கோர்த்துப் பழமொழிகளாகவும், நீதிகளாகவும் வெளியேறியதைப் போலவே மிகுந்த அழகியல் வயப்பட்ட கவிதைகளாகவும் ஆகியது. பெண்கள் எல்லாவகையான இலக்கிய வடிவங்கள் வழியாகவும் தங்களின் உளக்கிடக்கைகளை வெளிப்படுத்தினாலும், கவிதை என்ற இலக்கியப் பரப்பைத் தேர்ந்தெடுத்த காலவெளியும் அதிர்வும் மிகத் தீவிரமானது.
பெண்களின் எழுத்துக்கள் மிகுதியும் மரபுரிமையைப் பற்றியது. மரபுரிமை என்பது ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு வழங்கும் அனுபவச் சொத்து. உடல்வழி அனுபவமும் உயிர்வழி உவகையும் ஒவ்வொரு காலமும் ஒரு பெண்ணிலிருந்து இன்னொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. சத்தியமும், எதிர்ப்புணர்வும் உயிரைப் பேணுவதன் பேருவகையும், இதிகாசக் கதாப்பாத்திரங்களும் இந்த அனுபவத்திரட்டின் உருவே. அனுபவக்கடத்தலிலிருந்து துண்டித்துக் கொள்ளும் அதிகார மனோபாவம் கொண்ட ஆண்கள், இதைச் சுமக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் பெண்களைக் கீழ்த்தரமானவர்களாக, கேலிக்குரியவர்களாகக் காணும் மனோபாவம், உள்ளங்கை நெல்லிக்கனி, அநுபவ மரபு/அனுபவத்திரட்டு இதன் உச்சபட்சத் திரட்டே கண்ணகி போன்ற கதாப்பாத்திரங்கள். ஒளவையும், ஆண்டாளும் கூட இடைவிடாது தமது அநுபவப் பயணத்தையும் அதன் காட்சிவெளிகளையும் மொழியாகப் பதிவு செய்தனர்.
அநுபவ மரபைக் கடத்தும் பொறுப்பிலிருந்து ஆண்கள் விலகிக் கொண்டதன் காரணம், அது உயிர்விருத்தியோடு சம்பந்தப்பட்டதாலும் தான். ஆண்களின் உயிரியல் பங்கு இதில் கொஞ்சம் இயற்கையாகவே விடுபட்டிருப்பதால் இது வசதியாயிற்று. பொறுப்பை எதிராளிமீது திணிக்கும் மனோபாவம்தான் அதிகார மனோநிலை. இன்னும் பெண்கள் அநுபவ மரபை இன்னொரு சந்ததிக்குக் கடத்திக்கொண்டேயிருக்கிறார்கள். சூட்சுமமான சங்கதியாக, மண்ணடியே ஒடும் நீரோடையைப்போல, ஆனால்
-29

Page 21
அதில் என்ன பொதியப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க அவர்களுக்கு எந்த அவகாசமுமில்லை. இப்பொழுதும் பெண்களின் படைப்புகள், மரபுரிமைகளைப் பற்றிய உரிமைகளைக் கோரும் உள்ளடக்கங்களுடன் தாம் விளைகின்றன.
கவிதை மற்ற இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபட்டிருப்பது அதன் மொழிச் சிக் கனத்தில் மட்டுமன்று. வடிவம் மற்றும் முக்காலத்தையும் ஒரே எதிரொலிப்பில் பிரதிபலிப்பதாலும்தான். சிறுகதையோ, நாவலோ ஏதோ ஒரு குறிப்பிட்ட தற்காலிக கட்டத்திற்குள் குறுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், கவிதை முக்காலத்திற்கும் நகர்ந்து பொருளுணர்த்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. சொற்களுக்கு இடையேயான வெளியை வார்த்தைப்படுத்தி, சாம்பல் நிற தருணத்தையும் கூட வெளிச்சப்படுத்துகிறது. மேலும் வெறும் வார்த்தைகளைக் கோர்ப்பது மட்டுமல்ல, இதன் சித்து. ஆழ்மனநிலையில் உழலும் அநுபவங்களையும், அது கிளம்பிய சமூகக்கட்டமைப்புக்களையும் தனது தத்துவம் உள்ளடக்கி ஒன்றன்மீது ஒன்றாய்ப் போர்த்தி எழுந்த படிமம்தான் அதன் செப்பிடுவித்தை. இப் படிமம் காலத்தின் விழியாய் ச் சமைந்துவிடுகிறது. அங்கு வார்த்தைகளும், கவிஞனும் மறைந்து காலமும் கருவும் கவித்துவ எழுச்சியும் குழைந்த படிமமாய்த் திறக்கிறது. இத்தெளிந்த, திரட்சியான படிமத்தைக் கண்டடைந்த கவிஞன் சமூகத்தில் மிக நுண்ணிய உயிரி என்றாலும் படிமம் மிகப் பரந்த சமூகத்தின் அடையாளமாகிறது.
இன்றைய தமிழ்ச் சூழலில் நிறையப் பெண்கள் கவிதை எழுத வந்ததின் உள்ளார்த்தமும் இதுவாக இருக்கலாம். அநுபவ மரபைக் கடத்துதல், சமூகச் சம்பவங்களிலிருந்து படிந்த வண்டலில் படிமங்களைக் கட்டமைத்தல், கவித்துவ எழுச்சியினால் வெளிப்படும் நுகர்வு அனுபவம். என இந்தக் கவிதை, எழுதுவோருக்கும், வாசிப்போருக்கும் நிறைய வெளிகளைப் பயணித்தற்கான அநுபவத்தைச் சாத்தியமாக்குகிறது.
தமிழ்ப்பெண் கவிஞர்கள், தமது மேலோட்டமான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த கவிதை'யை ஒரு வெளியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்வரை, ஆண் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஒரு 'பெண்’ என்ற அளவில் தான் தங்கள் எழுத்துப்பரப்பில் இணைத்துக் கொண் டார் கள் என்பது, இப் பொழுதைய அவர் களது விமர்சனங்களிலிருந்தும், எதிர்ப்புகளிலிருந்தும் புலப்படுகிறது. எப்படிப் பல நூறு வருடங்களாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒடுக்கப்பட்டனரோ அவ்வாறே பெண்களும் எந்தவித சமூக
-30

உரிமையும் அளிக்கப்படாமல், மண்மீது ஆணின் அதிகாரப் போராட்டத்தில் அவ்வதிகாரங்களைப் பெற்றுத் தருவதற்கான உபகரணங்களாகத்தான் பயன்படுத்தப்பட்டனரே தவிர வேறு எந்தவித அறிவுத் தளப் பங்களிப்பையும் அவள் வழங்கமுடியாது.
"பெண்ணின் உரையாடல்கள் ரகசியமாகவும், ஆணின் உரையாடல்கள் வெளிப்படையாகவும் பெண்ணைப் பற்றிய ஆணின் உரையாடல்கள் பகிரங்கமாகவும் வெளிப்படுவதைச் சமூகத்தை நுணுகிப்பார்த்தால் புரியும். புதுக்கவிதை இயக்கம் தீட்டு' என்ற சாதிய மனோபாவத்திலிருந்து விடுபட முட்டிமோதும் விசையைப்போன்று, 'பெண் தீட்டு' என்ற இழிநிலையையும் அறுத்தெறிய பலமடங்கு குதிரைத்திறன் தேவைப்படும்.
தமிழகத்தில் தோன்றிய ஒவ்வொரு இயக்கமும் அவ்வியக்கம் சார்ந்த பிரச்சாரம், போதனைகளையும், ஆதாரமான தத்துவங்களையும் மட்டுமே படைப்பளிப்பது தான் இலக்கியமாகக் கருதப்பட்டது. இவ்வியக்கங்களில் பங்கெடுத்துக்கொண்ட பெண்கள்கூட அந்த இயக்கத் தத்துவங்களைப் போற்றி முழங்க வேண்டுமேயன்றி, அதன் அறிவுச் செயற்பாட்டில் பெண்களுக்கு இடமளிக்காததையோ, அது சார்ந்த விமர்சனத்தையோ கூட மொழியாக்குவது, படைப்பாக்குவது, விவாதத்திற்குள் இழுத்துவருவது அவ்வியக்கத்திற்கு எதிரானதாகத்தான் LJTÍTábö6ÜULL-göl.
இவ்வாறு ஒவ்வொரு இயக்கமும் அதனதன் போக்கில் வளர்ந்து வருவதற்கான மெனக்கெடுதல்கள் இருந்தாலும் அதன் உள்ளிடுகள் நிரப்பப்படாதவையாகத்தாம் வளர்கின்றன. விதைகளற்ற கனிகள் எப்படி விருத்தி செய்ய முடியும்?
இவ்வாறு பெண்ணின் எழுத்தை மறுப்பதன், விலக்குவதன் மூலம் நிதர்சனத்தின் படிமங்களை, யதார்த்தமான வெளிப்பாடுகளைப் புறக்கணிக்கும் மேட்டிமை மனோபாவம் தான் செயல்படுகிறது. பிராமணக் குடும்பங்களிலிருந்து மட்டுமே பெண்கள் எழுத வந்த சூழலை மாற்றி வேறு வேறு சாதி அமைப்புகளிலிருந்து பெண்கள் எழுதவரும் காலகட்டமிது. மேலும் இன்றைய நவீனப்பெண்ணியம் என்பதுகூட அம்பையோ, மாலதிமைத்ரியோ, சல்மாவோ, குட்டிரேவதியோ கூறும் ஒற்றைவரையறையில் அடங்கிவிடுவதில்லை. அவரவர் எழுதும் பெண்ணியத் தத்துவங்கள் அவரவரின் சமூகப் புலங்களில் ஊறிய விதையிலிருந்து வெடித்து விரியும் மலர்கள். ஏனெனில் அவர்கள் தேடிக்
سے 31 سےحصہ

Page 22
கண்டடைவதும் அனுபவமலர்ச்சியும் ஆண் கட்டமைத்த சாதியத் துண்டாடல்களின் இடுக்குகளிடையே நிகழ்ந்து சுய நசிவினால் உயிர்த்த சொல்லாடல்கள். இதையே தான் அம்பை, இரத்தினச்சுருக்கமாக 'பெண்ணியம் பெண் உடல் சார்ந்ததா? என்ற பனிக்குடத்திற்கான குட்டிரேவதியின் நேர்காணலில், ‘எந்த வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தைப் புறக்கணிக்கும் செயல்' என்கிறார். வேறுபட்ட, துண்டுபட்ட நிலவெளியிலிருந்து வரும் அத்துணைக் குரல்களும் முக்கியம். அதுமட்டுமல்லாது மொழிக்கும் தத்துவத்திற்கும் இடையே ஊடாடும் சிக்கல்களை வடிவப்படுத்தும் முயற்சியும் கலை, இலக்கியத்தின் கடப்பாடு ஆகிறது.
பெண் பால்நிலை' என்பது தமிழக ஆண்களால் இலக்கியம் வழியாகப் புரிந்து கொள்ளப்படுவது சில வெகுதீர்வான வடிவங்களில் மட்டுமே. அதாவது ஆபாசம், அருவருப்பு, அவமதிப்பு, புறக்கணிப்பு அல்லது போற்றுதலுக்குரியது என்ற கூற்றுதல்களில்தாம். ஆனால், இடைப்பட்ட வெளிகளில் அது யதார்த்தத்தின் அர்த்தமற்று முறிந்து போகிறது. பெண் 'பால்நிலை சித்திர இயல்புகள் ஆண்கள் வாகாக அக்குளில் அடக்கிக்கொள்வதனையதுதான். ஏன் பெண் கவிஞர்கள் பசி, வறுமை என்பது பற்றிய சமூக அக்கறை கொண்ட கவிதைகள் எழுதுவதில்லை என்று கேட்கிறார்கள். இவர்களின் சமூக அக்கறை என்பது மிகவும் போலியானது. நிறையப் பெண்களின் கருப்பைகளைப் புற்றுநோயால் கொன்ற பசுமைப்புரட்சிதான், இவர்களின் சமூக அக்கறை. உணர்வுச்சிக்கல்களின் முடிச்சவிழ்க்காமல், சமூகத்தின்மீது அக்கறை செலுத்த முடியாது.
ரசனையை வளர்ப்பது என்பது சாதாரண முயற்சி அன்று. பிரபஞ்சத்தை நுணுகிப் பார்க்கவும், பிரபஞ்சமாய் விரியவும் தெரியவேண்டும். பிரபஞ்சவெளியில் ஒற்றை உயிராய் ஊசலாடவும் தெரியவேண்டும் எனும் வகையில் பெண்ணின் மொழியை வாசிக்கவும், புரிந்துகொள்ளவும்கூட முயற்சி அவசியம். ஓர் அறிவியல் விதியோ, சூத்திரமோ புரியவில்லை என்றால் தனது கற்றறிவின்மீது சந்தேகம் கொள்பவர்கள், இலக்கியவடிவம் புரியவில்லையென்றால் மட்டும் படைப்பின்மீதும், படைப்பாளியின்மீதும் சந்தேகப்படுவது என்ன நியாயம்? கண்மூடித்தனமாகப் படைப்பை மறுப்பதும், எதிர்ப்பதும் சமூகத்தின் ஒருபடித்தான குரலின் வளையை நெரிப்பதும் சமூக அக்கறைக்கான பண்பன்று.
-32

வெறுமனே பெண்கள் பொழுதுபோக்காக எதையுமே படைக்க வரவில்லை. பொழுதுபோக்குக்காக மட்டுமே படைப்புக்கலை வாழ்வது என்பது ஓர் ஆரோக்கியமான சமூகத்தில் சாத்தியமில்லை. பெண்களைப் பொறுத்தவரை தங்கள் உணர்வெழுச்சியை வெளிப்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்பாகவும் அது அமைகிறது. உலக அளவில் இலக்கிய வகைகளையும், அவற்றின் தர மதிப்பீடுகளையும் பற்றிய சரியான அறிமுகம் ஏதுமின்றியே நிறையப் பெண்கள் படைப்பாக்கப்பணியை மேற்கொண்டது அவர்களின் தவிரமான எழுச்சியும் , தமது அனுபவங்களின் மீதான அபிமானமும்தாம். முதலில் படைப்புகளின் நாடித்துடிப்பைக் கூர்ந்து கேட்பது அவசியம். புதியவகையான மனோவெளியின் தட்பவெப்பநிலைகளோடு புலனாவதன் அர்த்தங்களை அவர்கள் பதிவு செய்யப் பரப்பு வேண்டும். புதிய தொனியிலான சொல்லாடல்களையும், சொற்கோர்வைகளையும் உருவாக்கி அளிக்கும் பணிக்கு அவர்கள் திரும்பியதன் மூலம், மூளையில் இயங்கும் நெருக்கடியினைச் சரிசெய்யும் தளத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
கருத்தியல்' என்பது ஒரு புதிய மரபை உருவாக்குவது அன்று. பழைய மரபின் நீட்சியும் நவீன வாழ்வியலுக்குத் தேவையான சித்தாந்தமும் ஒன்றாய்க் குழைவதுதான். இவ்வகையான கருத்தியல் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்ட பெண்ணினத்திற்கு, "மொழிப்பகிர்வு என்ற உன்னதமான கருவி வழியாகத்தான் உருவாக்கம் பெற முடியும். பெண்ணுடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு சரித்திரத்தின் நழுவலிலும், ஓர் இயந்திரத்தின் ஒரு பகுதி வடிவமைப்பைப் பெறுவதைப் போல சமூக வாழ்வியலுக்குப் பணிக்கப்படும், இரும்பின் தன்மையை எய்தியுள்ளது. எதையும் விட பெண்ணுடலின் மீதான தாக்கம் நேரடியானது. உளச்செயல்பாடுகள், சிந்தனையோட்டங்களை அறுக்கும் முதன்மையான சமூகவோட்டமாக இத்தாக்கம் செயல்படுகிறது.
மனிதனின் சில உறுப்புகளே காலப்போக்கில் எந்தப் பயன்பாட்டிற்கும் உபயோகப் படாமல் போனதால் எப்படிச் சிறுத்துப்போகிறதோ - தனது இயங்கியல் மரபை இழந்துபோகிறதோ - அதுபோல பெண்களும் ஆகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பயனற்ற, சுருங்கிப்போன ஓர் உறுப்பு ஆனால் உயிர்த்தன்மை கொண்டிருக்கும். ஆனால், பெண்தன்மையெனப்படுவது, தனது சிக்கலைத் தானே விடுவித்துக்கொள்வது, அழகியல் உணர்வு மிக்கது. பூமியின் உயிர்த்துவத்திற்கான மூலகங்களைப் பேணிக்காப்பது, தாமரை இலைத் தண்ணிராய்க் குதூகலிப்பது.
-33

Page 23
இங்கு கவிதை என்பது ஓர் இயக்கமாக இல்லை. ஓர் அமைப்பாக நிறுவனமாக இருக்கிறது. உதிரியான, தன்னிச்சையான ஒரு கவிஞராகச் செயல்படவே முடியாது. ஒரு நிறுவனத்திற்குள் தமிழ் நவீனக்கவிஞள் எனப்படுவோர் தம்மைப் புகுத்திக்கொண்டே ஆகவேண்டும். அந்நிறுவனமே அதிகாரத்தின் பீடமாகச் செயல்படும். கவிஞன் ஓர் அதிகாரப்பலகையைச் சுமந்தால் தான் கவிதைகளை நுகரும் வாசகர்கள் கிட்டுவார்கள் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. பெண்கவிஞர் என்றால் இன்னும் மோசமான நிலை. முதலில் உங்கள் படைப்பு பதிப்பாளரால் 'வார்த்தைகளை வெட்டிவீசும் அரிவாளோடு தணிக்கை செய்யப்படும். பின் புத்தகமாக வந்துவிட்டால் அவர் விரும்பினால் தான் உங்கள் படைப்பை ஆதரித்து கோஷம் செய்வார்.
1999, எனது தாகம்' என்ற தலைப்பிலானதொரு கவிதையை நவீன விருட்சம் சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். அடுத்த மாதமே பிரசுரமானது. அது ‘கவிதை' என்ற அங்கீகாரத்தை எட்டியதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போதுமானதாயிருந்தது. அப்பொழுது நண்பர்களாயிருந்த சிலரிடம் அந்தக் கவிதை பிரசுரமானதைக் காட்டி மகிழ்ந்தாலும் எனது அந்தரங்களிப்பு பிரவாகமெடுத்துக் கொண்டேயிருந்தது. பின் எனது ஒரு கொத்துக் கவிதைகளைப் பிரசுரம் செய்தது 'புதுவிசை’ இதழ். அது என்னைக் 'கவிஞர்' என்ற பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தும் காலகட்டத்திலேயே நண்பன் சீனிவாசன் உதவியோடு தமிழினி பதிப்பக உரிமையாளர் வசந்தகுமாரைச் சந்திக்கவும், எனது படைப்புக்களைக் காட்டவும் வாய்ப்பு கிடைத்தது. வாசித்த சில தினங்களிலேயே அதைப் புத்தகமாக வெளியிடலாமா என்ற அனுமதி கோரினார். 'பெண்களின் படைப்புகளைப் பதிப்பிப்பதில்லை' என்ற எண்ணத்திலிருந்த அவரை எனது எழுத்துக்கள் மாற்றிவிட்டதாகவும் கூறினார். 'பூனையைப்போல அலையும் வெளிச்சம் வெளிவந்தது. ஆனால், அநநூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையில் 'முத்தம்' என்ற சொல் இடம்பெற்றதாலேயே தொகுப்பில் இடம்பெறச் செய்ய மறுத்துவிட்டார் பதிப்பாளர். நூல் கையடக்க அளவில் எளிமையான வடிவில் வந்தது.
வாழ்க்கையில் வீசிய உக்கிரமான புயலும் கசப்பும் வேதனையும் சுற்றிலும் நிலவிய சூழ்ச்சிகளும் மேலிருந்து வழிந்து வீழ்ந்து கொண்டேயிருந்த கண்ணிரும் என் கவிதைகளையும் பீடித்தன. அப்படி வளர்ந்தவை தாம் "முலைகள்' மீண்டும் தமிழினி வசந்தகுமாரே வெளியிடலாமோ? என்று கேட்டபோது, அதே தலைப்போடு என்றால் சரியெனச் சம்மதித்தேன்.
مسس 34 سیسہ

முலைகள் தொகுப்பு வெளிவந்தபோது அந்தக் கவிதைகளின் பலவகையான வடிவ முயற்சிகளுக்காகவும் வேறுபட்ட பெண்ணிய உள்ளடக்கங்களுக்காகவும் விவாதிக்கப்படும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்தேன். தற்பொழுதைய காலகட்டத்திற்கான நவீன பெண்ணிய விவாதத்தை, உடலரசியலை முன்வைக்கும் குறியீடாக "முலைகள் என்ற பிரதிமையை முன்வைத்தேன் என்றாலும், அதை ஒட்டிய எந்த விமர்சனமும் இன்றி எதிரான பெருங்கூச்சல்கள் எழும்பின. ஆணாதிக்கச் சிந்தனையும், பாலியல் வக்கிரமும் உடைய ஆண் எழுத்தாளர்களும் வாசகர்களும் நேர்நோக்கியது தொகுப்பின் தலைப்பு உணர்த்தும் வெளிப் படையான வடிவை மட்டுமே. ஆணின் எழுத்து அதிகாரப்பதிவாகவும் பெண்ணின் எழுதது அதிகாரமீறலாகவும் கருதப்படுவது எனக்குப் புரிந்தது.
வந்த விமர்சனங்களை அது எழும்பிய புலத்தையொட்டி வகைப்படுத்தலாம். குருட்டுத்தனமாக எந்த அழகியல் உணர்வுமில்லாத, பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுந்த சித்திரங்களும், கட்டுரைகளும் இணையதளத்தில் வெளியான பெண் பால்நிலையை - பெண்தன்மையைக் கேலி செய்யும் பிரச்சாரக் குறிப்புகள், எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபடுவோர், சம்பந்தமில்லாதோர் என எவரிடமிருந்தும் வந்தன, மற்றொரு விதம். சில பெண் எழுத்தாளர்கள் ஆண்மொழி/ பெண்மொழி என்ற வகைப்பாட்டை உருவாக்கி, அதையே சிதைத்தது. 'பெண்ணிய மொழியின் உள்ளிட்டை முற்றிலுமாகப் புறக்கணித்ததோடு, பெண் உடலரசியலின் விவாதத்தை எழுப்பக்கூடத் துணிச்சலின்றி அதை அப்படியே மூடிவைக்க நினைத்தது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது. இன்னொரு விதம் பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகப் போராடும் அமைப்புக்களும் இலக்கியத்தளத்தில் நிலவும் "பெண்ணிய மொழி’ பற்றிய விழிப்புணர்வே இல்லாமலிருப்பது. அவர்களின் பெண்ணியம்' என்பது வெறும் சமூக உரிமை என்ற ஏடுகளில் அடங்கிய கலை, ஊக்கமற்ற, உயிரோட்டமற்ற உரிமைப்போராட்டமே. எந்தக் காலத்திலும் நவீனப் பெண் இலக்கியத்திற்கும், பெண் இயக்கங்களுக்கும் இடையிலான ஊடகப்பகிர்வோ, கருத்தியற்பரிமாறலோ இருந்ததில்லை. இது உடலரசியலைப் புரிந்து கொள்ளாத மழுங்கல்தன்மையும், (குருட்டுத்தனமான ஒழுக்கவியலுமே. எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகத்தின் தீவிரமான விவாதங்களை முன்னெடுக்கும், தன்னை மிகவும் முற்போக்கானவர்கள் என்று காட்டிக்கொள்ளும் ஆண் எழுத்தாளர்கள் கூட பெண்படைப்பாளிகள்மீது எவ்வளவோ துர்வசவுகள் வீசப்பட்டபோதும் நீண்டகாலம் மெளனம் காப்பது.

Page 24
பெண்ணின் உடல், உயிர்மாண்பின் தன்மைகளோடு இயங்கும் ஒன்றன்று. மாறாக, காற்றில் நோக்கமிலாது அலைந்து கருவேலம் முள்ளேறி சிக்கிப் படபடக்கும் ஒரு பாலிதீன் பையே. நவீனப் பெண் எழுத்து இந்த இழி அரசியலை மாற்ற சொற்கள் வழியாகப் போராடிக் கொண்டேயிருக்கும். பெண்ணிய அரசியலை அடுத்த காலகட்டத்திற்குக் கடத்திச் செல்லும் திருப்புமுனையாக, இக்காலகட்டத்தின் போராட்டமாக அமையும்.
سب سے 36 سیسہ

glipaastrore 6262/ri/ascoirdur
. 8ெகாதா
இமை நரைத்துப் போயிருந்த கிருஷ்ணய்யாவின் விழிகளில் ஈரம் கசிந்திருந்தது தெரிந்தது. ஒவ்வொரு விடியலின்போதும் பயந்தபடி எதிர்பார்த்தது இன்று நடக்கவே போகிறது.
வீட்டு வாசலில் கூடியிருந்த திரிகொண்டா கிராமத்து மக்களை நோக்கி மடிப்பிச்சை ஏந்துவதுபோல கிருஷ்ணய்யாவும் அவரது துணைவியார் மங்கமாம்பாவும் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருந்தனர்.
கையேந்தும் வம்சமா இவர்கள்? கனலிவம்சம். வஷிட்டர் வம்சம். நந்தவரீகா சமயப் பிரிவின் வைதீக பிராமணர், ஆந்திர தேசத்து சித்துார் மாவட்டத்தில் வாயிற்பாடு ஊருக்கு அருகில் உள்ள திரிகொண்டா கிராமமே வெங்கமாம்பா எனும் வெங்கம்மாவின் வீட்டு வாசலில் படைதிரண்டு வந்ததுபோல வந்து நின்றது கண்டு அவளது பெற்றோருக்குத் தள்ளாத வயதின் நடுக்கமும் சேர்ந்து கொண்டது.
"அப்பா, நான் மொட்டையடித்து விதவைக்கோலம் கொள்ள வேண்டுமென்பதற்கான சாஸ்திர ஆதாரத்தை இவர்கள் யாராவது எடுத்துக் காண்பித்தால் நான் அவர்கள் சொற்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன். புறச்செய்கைகளில் விதவைக்கோலம் பூணுவதால் ஒரு பலனும் இல்லை. அகத்தளவில் மனத்தால் - மெய்யால் செயல்முறையால் நான் விதவையாக வாழ்வேன்.”
புருவமும், விழிகளும் நெளிந்து மிரட்டும் தொனியாய் கிருஷ்ணய்யாவின் புதல்வி வெங்கம்மா கூறியதைக் கேட்டு எல்லோருக்கும் சிலிர்ப்பெய்தியது.
வெங்கம்மா இப்போது சின்னஞ்சிறுமியல்ல; பருவத்தின் வாயிலில் யவ்வனப் பொய்கையாய் நிற்பவள்!
அறியாய் பருவத்தில் நிகழ்ந்த திருமணம் ஒரு கனவு. மாலை அணிவித்த கணவன் அந்தக் கனவில் திருடு போனவன். அவன் உயிர்

Page 25
துறந்தது நீர் மேல் எழுத்து போல் வெங்கம்மாவுக்குள் நினைவு. இந்த நிலையில் எப்போது பருவம் எய்துவாள் என்று காத்திருந்து வந்திருக்கிறது அந்த மூடமதியர் கூட்டம். சடங்குகள், சம்பிரதாயம் காப்பாற்றப்பட வேண்டுமாம்.
சாதிப் பிரதிஷ்டம் செய்வோம் என்ற ஊர் மக்களின் அச்சுறுத்தல் - பிரிய மகளின் அழுத்தமான ஆன்மீக அறைகூவல் - வெங்கம்மாவின் பெற்றோர் இப்போது மனஉரம் கொண்டவர்களாய் திடமாக நின்றனர்.
பூஞ்சையாகத் தோன்றிய அந்த பூணுால்காரரின் திடீர் உரம் கண்டு கூட்டம் கொந்தளித்தது. ஆந்திர தேசத்தின் புஷ்பகிரி பீடத்தின் தலைமை மடாதிபதியிடம் போய் ஊர் மக்கள் முறையிட்டனர்.
“சாத்திர வழிமுறையை இழித்துப் பேசுகிறாள். கடவுளே இல்லையென்று நாத்தழும்பேற நாத்திகம் பேசுகிறாள். அவமானம் அவமானம்.”
ஆற்றங்கரையில் முகாமிட்டிருந்த மடாதிபதி புருவத்தைச் சுருக்கினார். "போய் அந்தப் பெண்ணை இழுத்து வாருங்கள்.”
ஊர் கூடி வெங்கம்மாவின் சிகையைப் பற்றி தரதரவென இழுத்து வந்தது.
மடாதிபதி தன் முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்ட வெங்கம்மாவை கோபவரிகள் நெளிய நிமிர்ந்து பார்த்தார்.
“ஏ. பெண்ணே! சாத்திரம் பேசும் குலத்தில் பிறந்தவள்தானே நீ? சாத்திர விதியை அறிந்தவள்தானே நீ? கணவன் இறந்துவிட்டால் சிகை களைந்து, வெள்ளுடை தரித்தாக வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா. உடனடியாகச் சொன்னதைச் செய்.”
"மகா பெரியவரே, ஒரு விதவைக்குரிய நெறிமுறைகளை அறிந்து அணுவளவும் பிசகாது, இந்த சமூகத்தில் ஒழுக்கநெறி பிறழாது வாழ்ந்து வருகிறேன். நான் அறிந்த சாஸ்திரம் இதுதான். கணவனை இழந்த பெண் சிகை நீக்கி அலங்கோலம் செய்து கொண்டு, வெள்ளுடை தரித்துத்தான் வாழ வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில், எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது என்பதைத் தாங்கள் எனக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தாங்கள் தெளிவுபடுத் திய மறுகணமே நீங்கள் கூறியபடி செய்துவிடுகிறேன்.”
سیسہ38بہ

எவ்வளவு பெரிய மதத்தலைவர்! அவரையே எதிர்கேள்வி கேட்டுவிட்டாள் இந்தப் பெண் என்று கூட்டம் சினம் பொங்கி ஆர்ப்பரித்தது.
என்னிடம் சாஸ்திர விளக்கம் கோர உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் மதத்தலைவர். என்னுடைய வாக்கு தெய்வ வாக்குக்குச் சமம். என்னைக் கேள்வி கேட்பது கடவுளைக் கேட்பதற்குச் சமம். சொன்னதைச் செய் உடனே!
இப்போது மடாதிபதியின் புருவங்களும் துடித்தது. “கடவுளுக்கு ஒப்பானவரே, என்னை மன்னியுங்கள். இதோ இவர்களிடம் பலாத்காரம் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது. என் ஐயம் தீர்க்க, இறைவனைத் தவிர தகுதியுடையவர் இங்கு எவரும் இல்லை என்ற காரணத்தாலேயே தங்களிடம் இந்த வினாவை எழுப்பினேன். ஒன்றை அறிந்து அதன்பின் கீழ்ப்படிவதில் தவறில்லையே." வெங்கம்மாவின் சீண்டல் மடாதிபதியை ருத்ரதாண்டவத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
மடாதிபதியின் ஆத்திர எல்லையைப் புரிந்து கொண்ட அவரது அடியாட்கள் வெங்கம்மாவை முரட்டுத்தனமாய் பிடித்து இழுத்து மடாதிபதியின் முன்பாக நிறுத்தி சிகை நீக்குபவனை அழைத்து வெங்கம்மாவின் சிகையினை நிர்ப்பந்தமாக அகற்ற ஆணையிட்டது.
எல்லோர் முன்னிலையிலும் வெங்கம் மாவை தயவு தாட்சண்யமின்றி அலங்கோலப்படுத்த முடிவு செய்துவிட்டது. ஏற்கனவே அவமானப்பட்டிருந்த கூட்டம்.
வெங்கம்மாவைக் கதறக் கதற முடிசிரைத்தனர். அவளது ஆடைகளை பலர் முன்னிலையில் அந்த ஆற்றங்கரையில் உருவி எறிந்தனர்.
கெளரவர் சபையில் திரெளபதைக்கு நேர்ந்த துயருக்கிணையா யிருந்தது அது. ஆனால் 'ஹே பரந்தாமா' என்று கதறிய வெங்கம்மாவின் குரலுக்குத்தான் கிருஷ்ணன் வரவில்லை.
வெள்ளுடையை தன்மீது வீசி அமங்கலமாக்கும் மூர்க்கத்தின் வலி தாள முடியாது வெம்பினாள் அவள். 'ஹே பரந்தாமா! நான் சாதாரணமானவள். எனக்கு இத்தனை துயரா? சோதனையா? உன் பக்தை நான் என்பதற்கு ஒரு சிறிய அடையாளம்கூட இவர்களுக்கு உன்னால் காட்டுவதற்கு முடியாது போயிற்றா' என்று நெஞ்சம் ஊமத்தங்கள்ப்பம் கொண்டு முட்களால் கிறி ரணம் வழிந்தது.
~39പ്പ

Page 26
'நீ காப்பாற்றவில்லையெனும்போது என்னுடைய நிர்கதிக்கு நீள் சாட்சியாக இதோ முன்னால் ஓடிக்கொண்டிருக்கும் நதியே இனி என் அடைக்கலம்' என்று கூறிக்கொண்டே நதியில் யாவரும் பார்க்க இறங்கி ஆழத்துக்குச் சென்றாள் வெங்கம்மா.
இடுப்பளவு நீரில் கண்களை மூடி, உன்னை எப்படி மறப்பது கண்ணா - என் கடைசி மூச்சை கையேந்திப் பெற்றுக் கொள்ளவாவது நீ வா. என்னைப் பிரசவித்தவள் நீ. இந்நாள் வரை என்னுள் பிரசவமானவனும் நீ எப்படியாயினும் என் மூச்சுக் கொடி உன்னுடன்தான் என்று தியானித்த நிலையில் ஒருவித பரவசமாய் தன் மூச்சைத் தாரை வார்க்க நீரினுள் மூழ்கினாள்.
மூழ்கிய அவள் தலையை மூழ்கவிடாது ஏதோ ஒரு கரம் மேலே தள்ளியதும் எழுந்து நின்றாள் வெங்கம்மா.
என்ன அற்புதம்! என்ன அதிசயம்! அந்தக் கரையில் நின்று கொண்டு இருந்த மடாதிபதியும், மக்களும் கண்கள் விரியப் பார்த்து 'ஹோவெனத் தங்களையறியாது கூவி விட்டனர்.
வெங்கம்மாவின் சிரசில் சிகை அகற்றப்பட்ட அறிகுறியே இல்லை. முன்பைவிட எழிலாய் கருங்கடல் ஆர்ப்பரித்ததுபோல இப்படியொரு காந்த சக்திவாய்ந்த கேசப் படலை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.
மானுடக் கேசம் ஒரு ஆன்மீக அருட்செறிவாய் மாற்றம் கொண்டது. அந்த மடாதிபதியை மெய்சிலிர்க்கச் செய்தது.
காற்றில் அலைந்த வெங்கம்மாவின் சிகையின் ஒவ்வொரு இழையும் இறைக் காவியத்தின் நெடிய வரியாய் அர்த்தங் கொண்டது போல அவரை மிரட்டியது.
ஆற்றிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட ஒவ்வொரு அடியாய் தரையில் எடுத்து வைத்தாள் வெங்கம்மா. துச்சாதனத் துகிலுறந்து பெண்மையை அலங்கோலப்படுத்தி அவள்மீது சுற்றப்பட்ட வெள்ளுடையீது இத்தனை தெய்வீக வர்ண ஜாலமா! எல்லார் கண்களும் அந்த வர்ண மாயையில் கூசி மயங்கின.
- 40

மடாதிபதி அந்த ஆற்றின் மணலில் படீரென விழுந்தார். “ஜெகன்மாதா. வெங்கம்மா. என் பிழை பொறுத்தருள்வாய். அகங்காரம் என் கண்ணை மறைத்துவிட்டது. மக்களின் பொய்யான புகழ்ச்சியில் என் இருக்கை எதுவென்று மறந்துவிட்டது. உன்னை ஒரு சாமானியப் பெண்ணாக நினைத்து ஆணவத்தில் அறிவிழந்து விட்டேன்.
மடாதிபதியே மண்ணில் சரிந்த பின் சாமான்ய மானுடம் என்ன செய்யும். மக்கள் கூட்டமெல்லாம் வெங்கம்மாவின் முன்பாக தரையில் விழுந்து எழுந்தனர்.
இப்போது வெங்கம்மா அவர்களிடமிருந்து மிரண்டவளாய் ஒதுங்கி நின்றாள்.
“வேண்டாம். இது அதீதம். என்னை தெய்வ நிலைக்குத் தள்ளாதீர்கள். பெண்ணுக்கு இயல்புக்கு மீறிய அதீதப் புகழ்ச்சி ஆபத்தானது. நான் சாமான்யமானவள். இந்நிகழ்வு என் கண்ணனின் அருட்கொடையே. அவனைக் காதல் செய்தால் எல்லோருக்கும் இது g Tg55uu(3LD!"
வெங்கம்மாவின் இத்தகைய துதி மறுப்பும் அவள்மீது மலை மலையாய் செல்வாக்கையும், புகழையும் சேர்த்தது.
மக்கள் கூட்டம் கூட்டமாய் வெங்கம்மாவின் வார்த்தைக்கு தவம் கிடந்தனர். முக்கியமாய் பெண்கள் வெங்கம்மாவுக்குள்ளிருந்த தீச்சுடரை தரிசிக்க அலைமோதினர்.
“யார் பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ, பெண்களைக் கொடுமைக்கு ஆளாக்குகிறார்களோ அவர்கள் நேரடியாக இறைவனின் பகைமைக்கு ஆளாகிறார்கள். பெண் இனத்துக்கு மதிப்பு அளிக்காத நிலையில் என்னதான் பக்தி செலுத்தினாலும் அந்த பக்தியை கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை.”
சுரீலென சாட்டையடியாக வெங்கம்மாவின் புரட்சிகர கருத்துக்கள் பெண் மக்களை உசுப்பியது.
சித்துார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களில் வெங்கம்மாவின் குரல் ஆண்களின் குரல் வளையை நெறித்தது.
-41 (അ

Page 27
பெண்கள் வெங்கம்மாவிடம் தெய்வ முறையீடு செய்வது போல தினந்தோறும் ஓடிவந்து அவரவர் இல்லத்து ஆணாதிக்க அவலங்களை முறையிட்டனர்.
அந்தப் பெண்களின் அப்பாவி நெற்றியில் துயில் கொண்டிருந்த விழிகளை வெங்கம்மா தன் கட்டை விரலால் திறக்கச் செய்தாள்.
வெங்கம்மாவுக்குள் ஞானம் தேடும் வேட்கையும் அலைந்தது. கால்கள் நிலை கொள்ளாது சக்கரமாய் சுழன்றன. கடைசியில் மதனபள்ளி எனும் ஊரில் ஒரு வீட்டு வாசலில் வெங்கம்மாவின் கால்கள் பூமியைப் பிளந்து ஊன்றியது போல நின்றன.
வெங்கம்மாவின் விழிகளில் ஒரு நீர்த்திரை படர்ந்தது. விழிக்கோலம் கலங்கி இமை புடைத்து கரகரவென வழிந்தது.
ஒரு நீண்ட சொப்பனத்தின் கதவு திறந்தது போல அந்த வீட்டின் கதவு திறந்தது.
அங்கே ரூபாவதாரம் சுப்ரமணிய சாஸ்திரி இந்த ஜென்மத்தின் வாஞ்சையெல்லாம் நெஞ்சில் நிறைந்து வழிந்தோட உள்ளே வா மகளே உனக்காகத்தான் காத்திருக்கிறேன். அறிவுப் புனலாட நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் என்றார் நா தழுதழுக்க.
குருவே சரணம் குருவே சரணம் என்று வெங்கம் மா நமஸ்கரித்தபடி உள்ளே வந்து தொழுதாள்.
எழுந்திரு மகளே, ஞான காவியங்களின் கர்ப்பநாடி உன்னுள் பேசத்துவங்கிவிட்டன. இனி உன் சுவாசம் முழுவதும் சரஸ்வதியின் வாசம்தான். நீ ஞான தீட்சை பெற நான் ஒரு கருவியானேன். நாளும் ஒரு கவிதா சொரூபம் உன்னுள் இனி பேசும்.
ரூபாவதாரம் சுப்ரமணிய சாஸ்திரி பேசப்பேச மாலை மாலையாய் கண்களில் கண்ணிர் வழிந்தோடியது வெங்கம்மாவுக்கு.
அறிவு தேடும் முயற்சியின் இலக் காக, இயங்குவது பரம்பொருளாம் பிரம்மமே என்ற பேருண்மையை என்னுள் புகட்டவிருக்கும் சுப்ரமணியப் பெருமானின் பாதகமலங்களே. என்று தியானிக்க தியானிக்க.
-42

வெங்கம்மா கவி மழை பொழிந்தாள். அற்புதக் காவியங்கள் நாவில் நதியாய் ஓடின. ஆந்திரதேசத்தின் ஆன்மிகக் களஞ்சியம் வெங்கம்மாவின் சொற்களால் நிறைந்தது.
ஞானகுரு பீடத்தின் கடமையனைத்தும் நிறைவடைந்தது போன்றதொரு நெகிழ்வு குருவின் கண்களில் ஒரு நாள் துலங்கியபோது யோக தியானநிலை பயிற்சிக்கான தருணம் இதுதான் என்று வெங்கம்மாவுக்குள் ஒரு பொறி தட்டியது.
அனுதினமும் பரம்பொருளை நெஞ்சினுள் தியானித்துக் கொண்டிருக்கும் அனுமன் திருக்கோயிலே யோக தியானநிலைப் பயிற்சிக்கு ஏற்றதொரு ஏகாந்தமான இடம் என்று வெங்கம்மா முடிவு செய்தாள்.
ரூபாவதாரம் சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் விடைபெற்று ஹனுமன் திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தை ஒட்டி ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் வெங்கம்மா ஏகாந்தமாக அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தாள்.
ஊண் உறக்கமின்றி வெங்கம்மா ஒரே நிலையில் அந்த ஒதுக்குப் புறத்தில் நாட்கணக்கில் தியான நிலையில் அமர்ந்துவிட்டாள்.
அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருந்ததால் வெங்கம்மா அங்கேயே தங்கிவிட்டது கோயில் பூசாரிக்குத் தெரியாமல் போய்விட்டது.
ஒரு நாள் தற்செயலாக வெங்கம்மாவை பூசாரி பார்த்துவிட்டார். "அம்மா! இந்த இடத்தில் வழிபாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதியில்லையம்மா. ஆகையால் நீங்கள் உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடுங்கள்” என்றார் பூசாரி.
இவ்வுலக பந்தங்களிலிருந்து அறுந்துபோய் இறைவனுக்கும் தனக்குமான அமானுஷ்ய உலகில் தியானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வெங்கம்மாவுக்கு இந்த மானுட சத்தம் கேட்குமா என்ன?
பூசாரி எத்தனையோ அதட்டிப் பேசியும் வெங்கம்மாவுக்குள் ஒரு அசைவும் இல்லை.
பூசாரிக்கோ சினம் சிரம் தாண்டி கொதித்தது. தன்னை அந்தப் பெண் இத்தனை அலட்சியப்படுத்தி அவமானம் செய்வதா!
مسیحہ 433 ب~ہ

Page 28
பேச்சு வலுவிழந்து போனது கண்டு பூசாரி வெங்கம்மாவை பெண்ணென்றும் பாராது அரக்கத்தனமாக கோவிலுக்கு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டார்.
அந்த ராட்சத மூர்க்கத்தில் வெங்கம்மாவின் நீண்ட நாளைய உறக்கம் கலைந்தது. பூசாரியின் அறியாமை புரிந்தது.
இறைவன் சந்நிதானத்தில் ஞானதியானத்தில் ஒரு பக்தை அமர்ந்திருப்பது கூடவா குற்றம் என்று மனம் வெதும்பினாள்.
உள்ளுரில் தன் தவநிலைக்கு இத்தனை பங்கமா? அமைதியற்ற இக்கிராமத்தில் இனி இருப்பது ஏற்புடையது அல்ல என்று மனம் சஞ்சலம் கொண்டாள்.
ஏற்கனவே பெற்றோரும் காலமாகிவிட்ட நிலையில், உற்றார் . உறவினர் வெங்கம்மா மந்திர தந்திரக்காரி என்று அச்சத்திற்கு ஆட்பட்டு அவளை சந்திக்கவே அஞ்சினர்.
இனி எனக்கு யார் கதி பரந்தாமா என்று பிறந்த கிராமத்தை விட்டு வெளியேறி நடந்தபோது வெங்கம்மாவின் கண்களில் திருப்பதி எனும் வேங்கடமலை தென்பட்டது.
இனி என் உயிரும் உறவும் வேங்கடாசலபதிதான் என்று முடிவு செய்தாள் வெங்கம்மா.
வேங்கடாசலத்தின் மேலே ஏறிச்சென்று வேங்கடாசலபதியைத் தரிசிக்கச் சென்றபோது எதிர்பாராத அதிசயம் ஒன்று அங்கே அவளுக்குக் காத்திருந்தது.
ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நிர்வாகிகள்
வெங்கம் மாவின் புகழையும் பெருமையையும் - ஏற்கனவே நன்கறிந்திருந்தனர்.
வெங்கம்மா சற்றும் எதிர்பாராத நிலையில் வேங்கடாசலத்துக்கே விஜயம் செய்திருப்பது கிடைத்தற்கரிய பெரும் பேறு என்று அவர்கள் கருதினர். கோவில் மரியாதையுடன் வெங்கம்மாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
-44,~

வெங்கம்மா வேங்கடநாயகனை வசதியாகத் தரிசிக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.
ஐயன்மீர்! நான் உங்கள் விருந்தாளியல்ல. இன்றோடு திரும்பும் யாத்ரீகரும் அல்ல. வேங்கடாசலபதி பக்தை நான் இங்கேயே தங்கி வழிபட விரும்புகிறேன்.
நிர்வாகிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தங்களுடைய வாக்கு எங்கள் பாக்கியம். தாங்கள் நிரந்தரமாக இங்கு தங்கலாம். எல்லா வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்.
வெங் கம் மா அதனைக் கேட்டு அகமகிழ் ந் தாள். வேங்கடாசலபதியின்மீதான காதலில் மூழ்கினாள். வேங்கடாசல மகாத்மியம் என்னும் காவியம் இயற்றினாள்.
வேங்கடமலையின் எழில் கொஞ்சும் இயற்கையழகை அந்தக் காவியத்தில் வரிவரியாய் படம் பிடித்துக்காட்டி வேங்கடாசலபதியின்
புகழை திக்கெட்டும் பரப்பினாள்.
கோயில் நிர்வாகிகள் வெங்கம்மாவை வேங்கடாசலபதிக்கு அடுத்து வணங்கினர்.
அப்போது வெங்கம்மா அவர்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தாள்.
“என் மூச்செல்லாம் நிறைந்த வேங்கடாசலபதியை தனிமையில் நான் துதிக்க வேண்டும். இறைவனின் நாட்டமும் அதுவே. ஆகையால்
அவனைத் தனியே ஆராதனை செய்ய எனக்கு உரிமை வேண்டும்.”
“இறைவன் விருப்பம் அதுவானால் தங்களது உரிமையைத் தாங்களே எடுத்துக் கொள்ளலாமே."
கோயில் நிர்வாகிகள் அதற்கும் ஒப்புதலளித்தனர்.
"நான் மற்றுமோர் உரிமை வேண்டுகிறேன்.”
“கூறுங்கள் எங்கள் சித்தம்.”
-45

Page 29
“என் வாழ்நாள் முடிந்துவிட்டாலும் என் பெயரால் இந்தத் தனி ஆராதனை தொடர்ந்து நடைபெற வேண்டும்.”
"அப்படியே செய்கிறோம்."
வெங்கம்மா வேங்கடாசலபதியை ஆராதனை செய்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சோதனை ஏற்பட்டது.
கோயில் நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். புதிய நிர்வாகிகள் வெறும் வரவு செலவு கணக்குப் புத்தகப் பூச்சிகளாய் இருந்தனர்.
ஆலயம் அவர்களுக்கு ஆன்மீகம் உணர்த்தவில்லை. வியாபார ஸ்தலம் போல எண்ணினார்கள்.
ஆலயத்தில் வெங்கம்மாவின் மதிப்பு மிகுந்த ஸ்தானம் அவர்களின் சிறுமதியை உறுத்தியது. அவளுக்கு பணம் செலவழிப்பது வீண் என்று கருதி முடிவெடுத்தார்கள்.
திடீரென ஒரு நாள் வெங்கம்மா வெளியேறுவதற்கு கால அவகாசம் கூட தராத நிலையில் அவளை பலவந்தமாக வெளியே அனுப்பி குடியிருப்பின் கதவைப் பூட்டிவிட்டனர். எந்த வேங்கடேசப் பெருமாளை சதம் என்று காதல் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தாளோ அதே பெருமாளின் சந்நிதியில் அனாதையாய் வெங்கம்மா நிற்கவேண்டி வநதது.
பரந்தாமனிடம் இன்னும் தன்னை நெருங்கச் செய்யவே இச்சோதனை என்று வேங்கடாசலத்தை விட்டு புறப்பட்டாள் வெங்கம்மா.
மனித சஞ்சாரம் அற்ற இயற்கையெழில் கொஞ்சும் துமுலுரு கோணம் என்னும் இடத்தில் வந்து நின்றாள் வெங்கம்மா.
இங்கு யோக நிஷ்டையில் ஈடுபட்டு இறைவனை வழிபட்டாள். ஞானக்களஞ்சியமாய் மானுட தேகத்துடனே வெங்கம்மாவைத் தன்னுடன் ஆட்கொள்ளவே கண்ணபிரான் அழைத்ததுபோல ஒரு தேவரகஸ்யம் வெங்கம்மாவின் காதில் கிசுகிசுத்தது.
(இக்கட்டுரை ஜெகதாவினால் 2003ல் எழுதப்பட்ட 'கடவுளைக் காதலித்த கணினியர்' என்ற நூலிலிருந்து அவருடைய சம்மதத்துடன் மறுபிரசுரம் செய்யப்படுகிறது)
〜46〜

ஈழத்து 67பண்போரானிகனது படைப்புக்கன் - சில அவதானிப்புக்கள் -
- 6сағ. б8штаьдттағт 1. அறிமுகம்
1.1 ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக் கால தமிழ்க் கவிதை பாரம்பரியத்திலே பின்வரும் குரல் அண்மைக்காலந் தொட்டே கேட்கிறது:
"என் இனிய தேசமே குறிப்பெடுத்துக் கொள் எரியுண்டு சிதையுண்டு போன என் தேசத்தின் காப்பகழி ஒன்றில் எழுகின்ற உணர்வு அலைகளைக் குறிப்பெடுத்துக் கொள்.'
1.2 நூற்றுப் பதினாறு ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் நாவல் உலகில், பின்வரும் சம்பவம் சமீபகாலமாகவே இடம்பெறுகின்றது :
"பாதைகளைக் குறுக்கறுத்து ஓடியும் அந்தச் சந்தேகத்துக் 'குரியவனைப் பின்புறமாகவே மடக்க முடிந்தது. அந்தச் சிங்களப் புலனாய்வாளனுக்கு எல்லாச் சிங்களப் படையினருக்குமுள்ளது போலவே ஒரு தற்பெருமை, செருக்கு இருந்தது. ஏதோ தாங்கள் தான் உலக அழகர்களாகவும், தங்களைக் கண்டதும் பெண்கள் தாமாகவே நட்புக் கொள்வார்கள் என்பதுமான எண்ணம். இந்த நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கிறது.
தன்னை "ஹலோ” என்று குழைவாக அழைத்த இளம் பெண்ணின் குரலைக் கேட்டவன், தேன்குடித்த நரி போலானான். தலையை ஒருக்களித்து சாய்த்து
"நங்கி மமத” தங்கச்சி நானா, "ம். உன்னைத்தான்"
سیہہ 47 س~۔

Page 30
'அவ் லஸ்ஸன கெல்ல மொனவா” என்றான் அதே வழிசலாக.
“எனக்கு இதுதான் வேணும்” என்ற சின்ன நிசாந்தி, மிதிவண்டியிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தன் கைத்துப்பாக்கியை உருவ, நிலைமையைப் புரிந்து கொண்டு அவன் காற்சட்டைப் பையில் கைவிட, அவன் திரும்பிய அக்கணத்திலேயே நிசாந்தியின் பிஸ்ரல் அவன் பிடரியில் ஒட்டை போட்டது. பூமணி அதிர்ச்சியில் சைக்கிளைக் கீழே போட்டாள். அவனுடைய கை அசைய நிசாந்தியின் பிஸ்ரல் இன்னொரு குண்டை அவன் மீது துப்பியது.”
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்காலம் ஒரு நூற்றாண்டளவானதே; எனினும், பின்வரும் நிகழ்ச்சியும், மன உணர்வுகளும், உரையாடலும் சிலகாலமாகவே இடம்பெற்றுவருகின்றன:
"இவர்கள் பதுங்கு குழி அமைத்திருக்கின்ற வளவிலுள்ள வீட்டினுள்ளும் அவன் வந்துவிட்டான் என்றால், பிறகு யாரையும் பார்க்காமல் சண்டையைத் தொடங்கவேண்டியதுதான். அந்த வீட்டுக்கு வரமுயலும் இராணுவத்தைச் சுடுவதற்கான தயார் நிலையில் பூங்காவும், அத்தியரசியும் ஆயத்தமாக நின்றார்கள். கயல்விழியின் நிலைமை சிக்கலாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராக வீரச்சாவடைந்து விழ விழ, நிலைமை சொல்லிக்கொண்டிருந்தாள். இப்போது வோக்கியில் அவளின் குரலைவிட, அவள் நின்ற பதுங்கு குழி வாசலுக்கு எதிரி அடித்த PKLMG அடிதான் பெரிதாகக் கேட்டது. தானும் மலரினியும் மட்டுமே எஞ்சி நிற்பதாகக் குறிப்பிடுகின்றாள். வாசலுக்கு இந்த மாதிரி அடி விழ, எப்படித் தான் இவ் வளவு நரிதானமாகக் கதைக்கின்றாளோ?
தன்னிலிருந்து பதினைந்து மீற்றரில் மதிலுக்கு
மறுபக்கம் இராணுவம் நிற்பதாகக் குறிப்பிட்டபோது, கெளரி இடை புகுந்தாள்.
سیسہ48 بس

“கயல்விழி, ஒண்டும் செய்து போடாதை கயல்விழி. அப்பிடியே நில் கயல்விழி. எங்கடை ஆக்கள் வந்து சேரும்வரை சமாளி கயல்விழி. நாங்களும் கிட்டத்தான் நிக்கிறம்.”
சிறிது நேர இடைவெளியின் பின் கயல்விழியின் பதில் அமைதியாக, மிக அமைதியாக வந்தது.
“சரி கெளரி பாப்பம்”
இவர்களின் பதுங்கு தழி இருந்த வளவு வீட்டினுள்ளே கல்போல எதுவோ ஒன்று விழுமோசை கேட்டது. தொங்கிக்கொண்டிருந்த கற்களில் ஏதேனும் ஒன்று ஷெல் அதிர்வில் விழுகின்றதோ? அல்லது அவன்தான் பின்பக்கத்தால் வீட்டுக்குள் வந்துவிட்டானோ? உற்று உற்றுப் பார்த்தாள் அத்தியரசி. ஒன்றும் தெரியவில்லை.
“ஒண்டும் செய்து போடாதை கயல்விழி"
கெளரி இடையிடையில் கயல் விழியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
திடீரென, வோக்கியில் கயல்விழியின் குரல் கேட்டது.
'மதலுக்கு இஞ் சாலை இருக் கற பங்கருக்குள்ளை குதிச்சிட்டான். என்னில இருந்து எட்டு மீற்றர்.”
கெளரியின் மனக்கண்ணில் கயல்விழியின் மெயின் பங்கரும், மதிலோர பங்கரும் ஒரு தரம் வந்துபோனபோதுதான், அது உறைத்தது. நேற்றுத்தானே இரண்டு பங்கள்களுக்குமிடையே நகள்வழி வெட்டி முடித்திருந்தார்கள். விறைத்துப்போனாள் கெளரி. கயல்விழியைக் கூப்பிட கெளரியின் வாய் எத்தனிக்கவும், வோக்கியில் அவளின் குரல் கேட்டது. மிக அமைதியாக, நிதானமாயிருந்தது அந்தக் குரல்.

Page 31
“இனி என்ரை தொடர்பிராது. இந்த நம்பரில நிக்கிற எல்லா நிலையங்களுக்கும் நன்றி. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.”
"கயல்விழி. கயல்விழி. கயல்விழி”
வோக்கியில் எல்லோரும் கத்தினார்கள். கெளரியும் கத்தினாள். கைக்குண்டுகள் வெடித்த ஓசையைக் கேட்ட பின்னரும், நம்ப இயலாமல் கத்திக்கொண்டிருந்தாள் கெளரி.”
மேற்கூறியவாறு, அண்மைக்காலமாக ஈழத்து நவீன தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுவரும் படைப்புக்கள் பெண்போராளிகளால் எழுதப்படுபவையாகும் . இத்தகையப் புதரிய குரல களை வெளிப்படுத்துபவர்கள் பலருளராயினும் கவிஞர்களுள் மேஜர் பாரதி, மேஜர் வானதி, மேஜர் கஸ்தூரி, அம்புலி, மலைமகள், சூரிய நிலா ஆகியோரும் சிறுகதை ஆசிரியருள் மேஜர் பாரதி, மலைமகள் முதலானோரும், நாவலாசிரியருள் தமிழ்க்கவியும் முக்கியமானவர்கள்.
2. “பெண்போராளிப் படைப்பாளர்கள்’
மேற்குறிப்பிட்ட படைப்பாளர்களின் ஆக்கங்கள் பற்றி, அவதானிப்பதற்கு முன்னர் பெண்கள் என்ற நிலை நின்று இவர்கள் பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டிய அவசியமுண்டு.
குடும்பப் பெண்கள், அலுவலகப் பெண்கள் ஆகியோரைவிட போராளிப் பெண்கள் வித்தியாசமானவர்கள்; தனித்துவம் மிக்கவர்களென்று கூறவேண்டியுள்ளது. (தாயக விடுதலை என்ற) இலட்சியத்தை உயிராகக் கொண்டவர்களாகவும், இலட்சியத்திற்காக உயிர்விடுபவர்களாகவும் சமரிலீடுபடுதல் என்ற கடின பணியில் ஈடுபடுபவர்களாகவும் தனித்த வாழ்வுடையவர்களாகவும் இவர்களிருப்பதனால் இவர்களை (தலித் பெண்கள் போல்) இன்னொரு நிலையில் - இன்னொரு வகைப்பாட்டில் - நோக்கவேண்டும். இவர்களது வாழ்க்கையும், இவர்களது உலகமும் இவர்களால் மட்டுமே உணரப்படக் கூடியது; உணர்த்தப்படக்கூடியது. இவ்விதத்தில் சுடரவளின் பின்வரும் கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது *
"போராளிகள் வித்தியாசமானவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ளவோ, இவர்களின்
- SO

உன்னதமான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ எல்லோராலும் முடிவதில்லை.
அத்தகைய நிலையிலேயே இவர்கள் படைப் பாளிகளாக மாறிவிடுகின்றார்கள். (ஏனைய பொதுவான பெண் படைப்பாளிகளைவிட, போராளிப் படைப்பாளிகள் எழுத்து முயற்சியிலிடுபடுவதுகூட அரிதான அபூர்வமான - செயற்பாடாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது) மலைமகளின் முன்னுரைப் பகுதியொன்றினை இங்கு எடுத்தாள்வது அவசியமும் பொருத்தமுடையது. அது பின்வருமாறு:
‘சொல்லாத செய்திகள்
சொல்லாமல் இதுவரை மறைவில் இருந்த செய்திகளைச் சொல்வதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன். நடக்க முடியாதது என்று சமூகத்தால் கருதப்பட்டவற்றையெல்லாம் நடத்திமுடிக்கும் வாய்ப்பு எங்கள் பெண்களுக்கு தலைவர் அவர்களாலேயே கிடைத்தது.
எங்களது விடுதலைப் போராட்டத் தேரை இழுத்துச் செல்கின்ற ஆயிரம், பல்லாயிரம், லட்சம் பேரில் ஒருவரான மலைமகள் யார் என்பது இங்கு முக்கியமல்ல. இந்த மண்ணின் பெண்கள் யார்? எத்தகையவர்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை உலகுக்குச் சொல்லவேண்டும். இதுவே நோக்கம். நிகழவுள்ள, நிகழ்ந்து முடிந்துள்ள அற்புதங்கள் பலவற்றின் அடிவேர்களாக இவர்களே இருக்கின்றார்கள். செயல்களைச் செய்த பின்பும் எந்த ஆரவாரமுமின்றி, அமைதியாகத் தம் அடுத்தடுத்த பணிகளிலே மூழ்கிப்போய் விடுவதால், இவர்களின் இருப்பு எவருக்கும் தெரிவதில்லை. இவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன்.
மரபுகளை மீறல் தடைகளைத் தாண்டி எல்லையற்ற வெளியில் உலவுதல் சிறு வயதிலிருந்தே என் இயல்பு வரையறைகளை நான் மீறியபோது விளைந்த பயிர்களின் தொகுப்பே இது. இவை சிறுகதைகளா, இல்லையா என்பது பற்றிப் பேச நான்
سے 551 سس

Page 32
முனையவில்லை. ஊகங்களுக்கும், திறனாய்வுக்கும் அப்பாற்பட்ட ஆற்றல்மிக்க மனிதர்களின் கதைகள் இவை என்பதே உண்மை. இவற்றை நான் பேசியே ஆகவேண்டும். எவருமே அறியாத என் தோழிகளின் வாழ்க்கையை நான் எழுதியே ஆகவேண்டும்.
நடைமுறை வாழ்வியல் அசைவியக்கத்தின் அச்சாணியாகப் பெண்கள் இருக்கின்றபோதும், அவர்கள் கெளரவிக்கப்படுவதில்லை, அவர்களின் இயல்பு மதிக்கப்படுவதில்லை என்ற கோபம் எனக்கு நிறையவே உண்டு. பெண்கள் என்ற ஒரேயொரு காரணத்துக்காக, விளைவை ஏற்படுத்தவல்ல செயல்களைச் செய்துவிட்டும் பேசாதிருப்பவர்கள் என்பதற்காக நாலாதிசையும் விரிந்து பரந்திருக்கும் தமிழீழப் போரரங்கில் ஓய்வெடுக்கவும் நேரமின்றி இப்போதும் விழித்திருக்கும் என் தோழிகள் பேசப்படாதவர்களாகப் போய்விடுவார்களோ என்ற பயத்தினாலேயே நான் எழுத முனைந்தேன்.
பார்வைக்குப் படைத்துறை வீரர்களாகத் தோன்றுகின்ற, செயற்படுகின்ற இவர்களின் ஈரம் நிறைந்த இன்னொரு பக்கத்தை நானறிவேன். முன்னேறி வருகின்ற எதிரிப் படைகளை முறியடிப்பவர்களாகவும், நிலம் மீட்பவர்களாகவும் மட்டும் இருக்கவில்லை என்பதையும் நானறிவேன். இவை யாவற்றுக்கும் அப்பால், இவர்கள் நல் ல மனிதர் களாக, மனிதர் களைப் புரிந்துகொள்கின்றவர்களாக இளகிய மனதுடன், சிரித்த முகத்துடன் எப்போதும் இருக்கின்றார்கள். எனவே இவர்களை நான் எழுதத் துணிந்தேன்.”
சுருங்கக் கூறின், பெண்கள் > போராளிகள் > படைப்பாளிகள் என்றான நிலையில் உருவாகும் பெண்களின் ஆக்கங்கள் - பெண் போராளிகளின் வாழ்வியல் கோலங்கள் - இரண்டாயிரமாண்டு தமிழ் (எழுத்து) இலக்கியப் பாரம்பரியத்திலும், இருநூற்றாண்டுக்கால நவீன இலக்கிய வரலாற்றிலும் முன்னர் கூறியது போன்று அண்மைக் காலமாகவே - அதுவும் ஈழத்திலிருந்து - வெளிப்படுகின்றன என்பதும் அதற்கான சூழலும் ஈழத் தில் அணி மைக் காலத்திலேயே ஏற்பட்டதென்பதுமே எமது கவனத்திற்குரியவை.
سسہ 522 ساحہ

3. “பொருள் புதிது. சுவை புதிது’
இனி, பெண்போராளிகளின் வாழ்வியலின் பல் பரிணாமங்களும் - பரிமாணங்களும் - வெளிப்படுமாற்றினைச் சற்று விரிவாகக் காண்போம்.
3.1 பெண்போராளிகளின் முக்கியமான வேலைகளுள் உளவு பார்த்தல், 'சென்றியை பாதுகாத்தல், கெரில்லா தாக்குதல்கள், முகாம் தாக்குதல்கள் என்பன முதன்மையிடம் பெற்றுள்ளன. இத்தகைய விடயங்கள் அதிகமான ஆக்கங்களில் இடம்பிடித்துள்ளன. மலைமகள் எழுதிய பயணம்', 'முற்றுகை', 'யாரோ இவர்', 'இறுதி வணக்கம்' ஆகிய சிறுகதைகள் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கன. மேஜர் பாரதி எழுதிய கப்டன் அக்கினோ'வும் முக்கியமான படைப்பே. தமிழ்க்கவியின் 'இருள் இனி விலகும்’ நாவல் ஊர்களுக்குள் சென்று உளவுப் பணிகளிலும், கெரில்லாத் தாக்குதல்களிலும் ஈடுபட முனைந்த ஐந்து பெண்போராளிகள் பற்றி எடுத்துரைக்கிறது. இத்தகைய படைப்புகளுடே பெண்போராளிகளின் சமரிடும் ஆற்றல், மனோதிடம், விவேகம், சகிப்புத்தன்மை, கூட்டுறவு, நுண்ணறிவு, சாமர்த்தியம் என்பன தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக வெளிப்படுவதைக் கண்டு கொள்ளலாம். இவ்விடத்தில், வசதி கருதி, அம்புலியின் கவிதையொன்றினை மட்டும் கவனிப்போம்
நிலவே மறைந்துவிடு
“நிலவே மறைந்துவிடு உலவுவதற்கும் குலவுவதற்கும் இதுவோ நேரம்.
நேற்றிலிருந்து பற்றைக்குள்ளே நான் பதுங்கியிருக்கிறேன். கரிய பனைகளின் இடைவெளிக்குள் உருமறைந்தபழ கொழுயவர்களின் காவலரண்கள் இருப்பிடத்தையும் . அவர்களின் நடமாட்டத்தையும் அறிய நான் முன்னேற வேண்டும். நெடு வெளிக்குள் ஊர்ந்து சென்று உற்று நோக்க வேண்டும். ஏனர் வந்தாய்.
-53

Page 33
எனக்கு இடையூறு செய்யவா. கூவிவரும் எறிகணைகள் . சிலவேளை உண்குரல்வளையையும் அறுக்கலாம் ஏன் வந்தாய். மேகங்களால் மூழ - பின் முழுமுகம் காட்டி
ஒளித்துவிளையாட
இது நேரமில்லை.
உடைந்த வீடுகள் உருக்குலைந்த ஊர்கள் உழுதுவிட்ட வயல்களிலே கண்ணிவெடி விதைப்புக்கள் நான் எரிந்துகொண்டிருக்கின்றேன். ரீமட்டும் தண்மையாய் வானத் தடாகத்தில் விளையாடி மகிழ்கிறாய் நிலவே மறைந்துவிடு. நான் இருளுக்குள்ளால் ஒளி தேட வேண்டும். இரைதேடும் இயந்திரக் கழுகுகளுக்கும் குறிவைத்த துப்பாக்கிக்குழல்களுக்கும் நடுவில் சிதைந்துகொண்டிருக்கும் - எனது மண்ணைச் சிறைமீட்க இருளுக்குள்ளால் - நான் முன்னேற வேண்டும். நிலவே நீமறைந்துவிடு.” (பக்.20-2)
சிறுகதை, நாவல் ஆகியவற்றைவிட பெண் மன உணர்வுகளை நுணி மையாக வெளிப்படுத்துவதில் கவிதையே முதன்மை இடம்பெறுகின்றதென்பதனையும் மேலுள்ள கவிதை நமக்கு உணர்த்தி விடுகின்றதன்றோ!
3.2 போராளிகளின் நாளாந்த வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது என்பது போராளிகள் தவிர்ந்த வேறெவர்களாலும் ஊகிக்க முடியாதது; எவரது கற்பனைக்கும் அப்பாலானது. ‘ஒரு கோப்பை தேநீர் (மலைமகள்) என்ற சிறுகதை இதற்கு உன்னதமான சான்றாகும். அதன் ஒரு பகுதி பின்வருமாறு அமைகின்றது :
تحص5544 سے

“அலை ஓய்ந்திருந்தபோது,
காலையில் பிட்டும் கறியும், மதியம் சோறும் கறியும், இரவு பிட்டும் கறியும்.
பரவாயில்லை.
பின்னர்,
காலையில் பிட்டும் கறியும், மதியமும் இரவும் சோறும் கறியும்.
இதுவும் பரவாயில்லை.
கொஞ்ச நாளின் பின்,
மூன்று நேரமுமே சோறும் கறியும், அதுவும் எப்படியென்றால், காலையில் சோறும் கத்தரிக்காய்க் கறியும், மதியம் கத்தரிக்காய் கறியும் சோறும், இரவு சோறும் கத்தரிக்காய்க் கறியும், அதிலும் மதியமே இரவுக்குரிய உணவும் சேர்ந்து வரும்.
இன்னும் கொஞ்ச நாளின் பின்,
காலையில் கஞ்சி, மதியமும் இரவும் சோறும் கத்தரிக்காயும், கத்தரிக்காயும் சோறும்.
"கத்தரிக்காயைக் கண்டு பிடித்தவன் நாசமாய்ப் போக!”
'கத்தரித்தோட்டம் வைத்திருப்பவர்கள் தலையில் இடி விழ!”
என்றெல்லாம் உரத்த குரலில் சாபமிட்டவாறே ஒவ்வொரு கவளமாக விழுங்கினோம். நாவிலுள்ள சுவை மொட்டுக்களுக்கெல்லாம் கட்டாய ஓய்வு கொடுத்தோம். உணவு விடயத்தில் ஒருவாறு பற்றற்ற நிலைக்கு வந்த நாம் ஒரு கோப்பை தேநீருடன் திருப்தியடைந்தோம்.
- SS

Page 34
எங்கள் முழுக் கவனத்தையும் எதிர் முன்னரங்கிலுள்ள இராணுவம் மீதே திருப்பினோம்.
"உன்னால்தானே எங்களுக்கு இந்த நிலை. கொஞ்சம் பொறு பகைவனே, உன்னாலேயே நாம் பழைய நிலையை அடைவோம்’ என்று கறுவிக்கொண்டோம். கோப அலைகள் குமுறியெழ கடமைகளில் மூழ்கிப் போனோம்.
கத்தரிக்காயுடன் எங்கள் விருப்பத்துக்கு மாறாக கை கோர்த்துக் கொண்ட காரணத்தால், சோற்றுப் பைகள் கேட்பாரற்று தலைமேல் மரக் கிளைகளில் தொங்கின. அண்ணார்ந்து பார்த்தால் கோபம்தான் வரும். கூடவே கவலையும் வரும். இதைப்போய் எறிவதா? என்னவென்று? எம் மக்கள் ஒரு நேர உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கையில், இவ்வளவு சோற்றையும் வெட்டிப் புதைப்பதா?
மனம் கேட்கவில்லை. (மனம் மட்டுமென்ன? வயிறும் கேட்க வில் லை) அணி னார் ந் து பார்த்துக்கொண்டிருக்கையிலேயே புதிய சிந்தனை பளிச்சிட்டது. (சேர் ஐசக் நியூட்டனும் இப்படித்தானாமே. அப்பிள் பழத்தை அண்ணார்ந்து பார்த்துத்தான், பின் புவியீர்ப்பு சக்தியைக் கண்டு பிடித்தாராமே. நாங்களும் அப்படித்தான்.)
சிந்தனை வந்தால் பரிற கென் ன, செயலாற்றவேண்டியதுதானே. பரபரவென இயங்கினோம் காப்பரணைப் பலப்படுத்தவெனத் தரப்பட்டிருந்த உரப்பைகளுள் நல்லதாக ஒன்றை எடுத்துக் கழுவி உதறி வெயில் படக்கூடிய இடமாகப் பார்த்து, விரித்து, அதன்மேல் சோற்றுப் பருக்கைகளைப் பரப்பிக் காயவிட்டு, மீண்டும் அரிசியாக்கினோம். தேநீர் சுடவைக்கும் அலுமினியப் பாத்திரத்தில் அதைக் கொட்டிக் கிளரிச் சூடேற்றி, அடுப்பிலிருந்து இறக்கி, அந்தப் பாத் திரத் தில வைத்தே இடித் துப் பொடியாக்கினோம். வெகு அபூர்வமாக வந்த பிட்டையும்கூட காயவைத்து வறுத்தோம்.
〜56〜

அதில் ஒரு பிடி அள்ளி வாயில் போட்டால் நறுக் முறுக் என்ற ஒலியுடன் தேவாமிர்தமாக வாயிலே கரையும். இப்போது மாலை நேரத்துக்குரிய A-1 சிற்றுண்டி தயார். (மாலை நேரச் சிற்றுண்டியா? மண்ணாங்கட்டி. பசித்தபோதெல்லாம் ஒரு கோப்பை தேநீருடன் ஒரு பிடி மாவே வயிற்றை நிறைக்கும்.)
கை தவறிக் கூட ஒரு சோற்றைக் கீழே போடமாட்டோம். மூன்று நேரமும் எஞ்சிய சோற்றை சிற்றுண்டியாக்கும் திட்டம் உடனடியாகவே அனைத்துக் காவலரண்களுக்கும் பரவலாக்கப்பட்டது. ஒரு கோப்பைத் தேநீருடன் ஒரு தட்டுப் பொரிமா தரும் பலத்தில் ஒரு மணி நேரத்துள் ஒன்றரை அடி ஆழத்தில் காப்பகழி வெட்டலாம்.
கொழும்பிலிருந்து எவர் எதைத் தடுத்தாலும் எங்களுக்கென்ன? எங்களை ஒருவரும் அசைக்க இயலாது என்ற நிலையை காட்டுக்குள் நாம் தோற்றுவித்தோம்.
வெளியே உணவு நெருக்கடி அதிகரிக்க, எம் கையிருப்பிலுள்ள சீனியரின் அளவு குறையத்தொடங்கியது. தேநீரில் சீனி கலந்து குடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சீனியைத் தொட்டுத் தேநீர் குடிக்கத் தொடங்கி, அதிலும் நெருக்கடி ஏற்பட, கையிலிருந்த சீனியைப் பொரிமாவுடன் கலந்துவிட்டு, அதனோடு தொட்டுத் தேநீர் குடிக்கத் தொடங்கினோம். தேநீருடன் கொறிப்பதற்கான உப உணவாகச் செய்து வைத்திருந்த பொரிமா கடைசியில் தேநீருக்கான மூலப் பொருட்களுள் ஒன்றானது.
வீரைப் பழக் காலங்களில் வீரைப் பழப் பாணியுடனும், பாலைப்பழக் காலங்களில் பாலைப்பழப் பாணியுடனும் சிலநேரம் உலுவிந்தம்பழப் பாணியுடனும் என்று ஒரு கோப்பை தேநீரை, எங்கள் அபிமானத் தேநீரை விதம் விதமாகக் குடித்தோம்.
سب سے 57 جس

Page 35
ஒரு கோப்பை தேநீர் தரும் மன உற்சாகத்துடன், கஞ்சியும், கத்தரிக்காயும் தந்த பலத்துடன் கடமையில் கண்ணாயிருந்தோம்.’ (பக். 17-19)
3.3 போராளிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் - அதுவும் அவர்கள் "பெண்ணாயிருப்பதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனந்தம்.
3.3.1 பெண்கள் தமது உடலியல்பு காரணமாக பிறரது ஏளனப் பார்வைக்குள்ளாகின்றனர் "
“உந்தப் பெரிய இந்தியக்காரன் நடுச் சாமத்தில் முன்னாலை வந்து நிக்கேக்கை உந்தப் பொடிச்சியள் அவங்களைச் சுட்டிருக்குங்களோ?” சீக்கியப் படைப் பிரிவினரின் அரைப்பனை உயரமும், எங்களின் பெண்களின் ஐந்தடி உயரமும் அவரைக் கேள்வி கேட்க வைத்தன.
மேலுள்ள கேள்வி பொதுமகனொருவரால் கேட்கப் பட்டது
வியப்பிற்குரியதன்று. சில சந்தர்ப்பங்களிலே சக ஆண்போராளிகளும்
அவ்வாறுணர்வதுண்டு” :
"சரிதான் என்றாள் அவள். அவள் அவனைத் தீர்க்கமாகப் பார்த் தவாறே இன்னொன்றும் சொன் னாள் . நீங்களெல்லாம், மக்களோட எதிரி நிக்கிற இடத்தில் நிற்கிறியள். நாங்களும் ஏன் நிக்கக்கூடாது?”
அதுக்கில்லையக்கா. இந்தப் பயிற்சி கஷடம். நாங்கள் ஆம்பிளையஸ் சமாளிப்பம்."
நாங்கள் ஆம்பிளையஸ் இல்லத்தான்; சமாளிப்பம். அதென்ன ஆம்பிளை பொம்பிளை? அண்ணன் எங்களை அப்படிப் பாக்கேல்ல?” கொஞ்சம் கோபமாகக் கூறினாள் ജൂഖണ്.
3.3.2 சமகாலச் சமூக மாற்றங்களை - பெண்களது மாற்றங்களை
சமூகத்தில் பெரும்பாலோர் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பதற்கு இப்பகுதி உரைகல்லாகும்" !
سیس 583 سیسہ

“காட்சிப் புள்ளிகளோ, கோடுகளோ விழாமல் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கடலில் கொஞ்ச மனிதர்கள் நீந்துகின்றார்கள்.
அது தெரிகிறது. யார் அவர்கள் ? அரைக் காற் சட்டைகளை அணிந்திருக்கிறார்கள்.
"ஆம்பிளையளோ? தலையில் முழு கொண்டையிட்டிருப்பது போலவும் தெரிகிறது.
“GOLJITb60d6 Tuu(86TIT?”
‘என்ன பொம்பிளையளோ? 'அதுவும் காற்சட்டையளோடோ? கடல் பொங்கி ஊரை அழிக்கிறதுக்குத்தான் உந்தக் கூத்தெல்லாம் நடக்குது. அப்படியெண்டா வெள்ளைக்காரனின்ர கடலுமெல்லே பொங்கவேணும். அங்கே எல்லாரும்தானே குளிப்பினம். இது ஒருவர், 'அது ரோசமில்லாத கடல். பேசாமல் கிடக்கும். எங்கட கடல் அப்பிடியே?
இது மற்றவர்.
3.3.3 பெற்றோர்கூட சில சந்தர்ப்பங்களில் தமது
'பிள்ளைகளை’
வேறுபடுத்தித்தான் பார்க்கிறார்கள் என்று கூறத்தோன்றுகிறது. பின்வரும்
உரையாடற் பகுதியைக் கவனியுங்கள்'
"சாப்பிட்டவாறே பூமணி கேட்டாள்; எங்க நளினியையும்,
பிரசாந்தையும் காணேல்ல.
ஆ. வாழ்த்துக்கள். இது இப்ப வாழ்த்துக்குரிய விசயமில்லை. பூமணி அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஓம் பிள்ளை இது குமருகளை வச்சிருக்கக் கூடிய பாதுகாப்பான இடமில்லை. பிள்ளை பள்ளிக்குப் போக வர பாதுகாப்பில்லை. சுண்டிக்குழியில் மாமியார் வீட்டில நிண்டு படிக்கிறாள். பிரசாந்தையும் கொண்டல்ல விட்டிட்டம். சின்ன நிசாந்தி எதுவும் பேசாமல் இருந்தாள். என் றாலும் இப் போது அவளால் பேசாமல் இருக்கமுடியவில்லை.

Page 36
நாங்களும் குமர்தானே? என்றாள்.”
3.3.4 மேலுள்ளவாறான உரையாடற் பாங்கும், நுண்மையான அவதானிப்பும், அதனைப் பதிவு செய்யவேண்டுமென்ற எண்ணமும் ஒரு பெண் நாவலாசிரியரால் மட்டுமே இயலக்கூடியதென்று கருதுகிறேன்.
மேற் கூறியவற்றை விட. சிங்கள இராணுவத் தினரின் செயற்பாடுகளும் பெண்போராளிகளுக்கு பல்வேறு கஷடங்களை அளிக்கின்றமை இயல்பானதே. போர்க்காலத்தில் மட்டுமன்றி, சமாதான காலத்திலும் இது நிகழ்கின்றது. இவ்விதத்தில், மலைமகளின் 'முருங்கையை விட்டு இறங்காதவர்கள் என்ற சிறுகதை குறிப்பிடத்தக்கது. Sanitary Padஅணிந்து பெண் போராளியொருவர் சோதனைச் சாவடியில் அனுபவித்த சங்கடங்களை எடுத்துக் கூறுவது அது.
3.4 பொதுமக்களுக்கும் தமக்குமிடையிலான உறவுகள் பற்றியும், பெண் போராளிகள் தமது ஆக்கங்களுடே வெளிப்படுத்துகின்றனர்.
3.4.1 உணவு கொடுப்பது தொடக்கம் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுவதுவரை, போராளிகளுக்கு உதவி செய்கின்ற பொதுமக்களையே பெரும்பாலான படைப்புகள் படம்பிடிக்கின்றன. மேஜர் கஸ்தூரியின் கதைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
3.4.2 போராளிகள் பொதுமக்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளனர். பெரியவரொருவர் இராணுவத்தினரிடம் பறிகொடுத்த (தமது மகளுக்காக ஒதுக்கியிருந்த) சீதனக் காணியை மீட்டே ஆக வேண்டுமென்று உறுதிபூண்ட சுருதி என்ற போராளி பற்றிக் குறிப்பிடும் மலைகளின் 'விலை' என்ற சிறுகதை அவ்விதத்தில் விதந்துரைக்கப்பட வேண்டியதே.
3.4.2 போராளிகளைக் காட்டிக் கொடுப்போரும் எழுத்திலிடம் பெற்றுள்ளனர். மேற்குறிப்பிட்ட மேஜர் கஸ்தூரியின் கதைகளில் அத்தகையோரும் காணப்படுகின்றனர். 'இருள் இனி விலகும்’ நாவலில் வரும் தியாகராசன் என்ற பாத்திரமும் அவ்விதத்தில் அழியாத சித்திரமாகும்.
3.5 பெற்றோருக்கும் தமக்குமிடையில் நிலவிய அல்லது நிலவுகின்ற உறவு நிலையின் வெவ்வேறு கோணங்கள் போராளிகளது படைப்புகளில்
-60

குறிப்பிடத்தக்களவு இடம்பிடித்துள்ளன; தாய், மகள் பாசம் அடிக்கடி நினைவுகூரப்படுகின்றது. ‘அம்மா அழாதே' என்ற கவிதை, பொருத்தம் கருதி இங்கு முழுமையாகத் தரப்படுகின்றது
அம்மா அழாதே
"அம்மா,
ஏன் அழுகின்றாய். இன்னும் மீண்டு வராத எனக்காகவா? உன்னைத் தழுவிக்கொண்ட எனது நினைவுகளோடு விம்முகிறாயே காற்றுக் கூட ஒருமுறை உன்னைக் கண்கொட்டாமற் பார்க்கிறது. நேற்று உயிர்த்த செடியின் துளிரும் ஒருமுறை சிலிர்த்து நிற்கின்றதே. ஏன் இவைகளையும் கலங்கவைக்கின்றாய்?
மூலையில் சுருண்டு கிடக்கும் பூனையைப் பார்க்க இதயம் வலிக்கிறது அம்மா. நான் கரி பூசிக் கிறுக்கிய சுவர் மீதே என்னைக் கொழுவியிருக்கிறாய். நினைவுகளையும் நிதர்சனத்தையும் இணைத்துப் பார்ப்பதற்கா? அம்மா அழாதே. எத்தனை நாள் உன்னை வாட்டியிருப்பேனி உன்னை அழ வைத்திருப்பேன் அப்போதெல்லாம் நான் கலங்கவில்லையே உனது உதிரத்தில் உயிர்த்தவளல்லவா நாணி எனது விழிகள் வலிக்கின்றன. அம்மா அழாதே.
காலையில் மலர்ந்த பூக்களையும் உனது கண்ணிர்த்துளிகளையும் நான் எதிர்பார்க்கவில்லை. அம்மா எழும்பு. சுருண்டு கிடக்கும் பூனைக்குச் சோறு வை. உனது கைப்பதத்தில்
سے 61 سسہ

Page 37
கனிந்த உணவை எனது தோழிக்கு ஊட்டிவிடு. என்னைப்போல் இறுதிக்கணத்தை இறுகப்பற்றிக்கொண்டு முற்றத்துக்கு வரும் எம்மவரோடு கதைபேசு
களித்திரு.
பத்து மாதங்களல்ல
எத்தனை நாளானாலும் என்னை உன்மீது சுமந்துகொள். வசந்தத்தை வருத்தாத காற்றோடு கலந்திருக்கும் என்னை சுவாசித்துக்கொள். சுவரில் இருப்பவளல்ல நான் உன் சுவாசிப்புக்குள்ளே.
அம்மா. போய்ப்Uடலையைத் திறந்துவிடு’ (பக்.22-23)
தனது தாயிடம் ஆசீர்வாதம் கோருகின்றார் பெண்கவிஞரொருவர்?
“எந்த வேளையிலும் என்னை இழக்காதிருக்க என்னை ஆசிர்வதி அம்மா”
தாய் தனது மகளிடம்கொண்டுள்ள பாசமும் சில படைப்புகளில் தலைகாட்டுகின்றன
“ஒரு அழகிய காலையை உனக்குக் காட்ட முடியாத, வசந்த காலத்தில் விளையாட முழயாத, பாலைவன நாட்களையே உனக்குப் பரிசளிக்கிறேன்.”
என்கிறார் கவிஞர் அம்புலி°.
-62

தமிழ்க்கவியின் 'இருள் இனி விலகும் நாவலில் இடம்பெறுவது, பின்வரும் பகுதி :
“ஒருநாள் பக்கத்து வீதியில் குடியிருந்த மாலா வந்தாள். "அக்கா உங்கட சிவா நேற்றுக் கொஞ்சப் பெடியளோட வந்தவன்” பார்வதிக்கு நெஞ்சு கனத்தது. "அய்யோ உடன் தெரிஞ்சிருந்தா நான் ஓடி வந்து பார்த்திருப்பேன்.”
"வீட்டில ஒருத்தரும் இல்ல. நான் ஆரை விட்டு சொல்லுற.”
“எப்படி இருக்கிறான்?”
"ஆள் வளந்திருக்கிறான்.”
"D.'
சீருடையில் மகன் ஓடி வருவது போலவும் தான் அவனை வாரி அணைத்து முத்தமிடுவது போலவும் அவளுடைய கற்பனை விரிந்தது.
ஒருநாள் அவளுடைய பழைய கிராமவாசியான திருமனைக் கண்டாள். “எப்படியக்கா சுகம். உங்கட சிவாவைக் கண்டனான்.”
“எங்க எப்ப, கண்டனிங்கள்.”
“கல் மடு பேசில. உங்களட்ட சொல்லச் சொன்னவன் தான் அங்க நிக்கிறனெண்டு.”
“எப்ப சொன்னவன்.”
“இப்ப ஒரு நாலு நாள் இருக்கும்.”
உடனே புறப்பட்டாள். அவள் வீட்டிலிருந்து ஏழு
மைல் சைக்கிளோடு அங்கு போனபோது "அந்த குறுாப்" போயிற்றம்மா என்றான் சென்றி. மகனுக்கென்று கொண்டு
〜63〜

Page 38
வந்த பலகாரப் ப்ொட் டலத்தை அவனிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினாள். 'மூதேவி நேரத்தோட சொல்லியிருந்தா கண்டிருக்கலாம் ஐயோ’ எப்படி இருக்கிறான் என்று பார்க்க கிடைக்குதில்லையே. மனசு கணக்க வீடு வந்தாள்.
சில மாதங்களின் பின் ஒரு சமூக வேலையும் இல்லாமல் போகவே இயக்கத்துக்கு நாடகம், வில்லுப்பாட்டுப் போன்றவற்றை எழுதித் தயாரித்தும் கொடுத்து வந்தாள். இவள் மெல்ல மெல்ல இயக்கப் பெண்களுடன் வேலைகளில் ஈடுபட்டாள். அவளுடைய கவலையும் குறைந்தது. ஒருநாள் நொச்சிக்குளம் காட்டு வழியாகப் போகும்போது தெரிந்த நண்பர் ஒருவர் 6Ig6ỉILILLITĩT.
“உங்கட மகன் போறார்” என்றார்.
KK 99
‘எங்க.” ஆர்வத்துடன் கேட்டாள் பார்வதி.
"இப்பான் உதில போற ரக்ரறில” என்றார் அவர்.
முழுவேகத்துடன் சைக்கிளை உழக்கினாள் அவள். உழவு இயந்திரத்தின் சத்தம் கேட்டுக் கொணி டிருந்தது. ஆனால் ... g|ഖ ബ് I ന്റെ எட்டமுடியவில்லை. சோர்வுடன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள்.
வழியெங்கும் எதிர்படும் போராளிகளின் முகங்களை உற்று உற்றுப் பார்ப்பாள். இவன் சிவாவைப் போல, இவன் அவனை விட உயரம்.
இவனைப் போலத்தான் குழப்படி இவன்ர நிறம் தான் இருக்கும். அவளுக்கு கற்பனை மிகவும் உண்மையிலேயே பிடித்த விடயம். இந்தக் கற்பனை மட்டும் தான் அவளுக்கு மீதமோ?
காலம் தன் கடமையைத் தொடர்ந்தது. ஒருநாள் ஒரு போராளி அவளைக் கண்டு சொன்னான் "உங்கட
سیس4 6 س~

சிவா ஓமந்தையில நிக்கிறான்.” பார்வதியின் சைக்கிள் தாமதமின்றி விரைந்தது.
சாப் பரிட்ட இலைகளை நாய் நக் கரிக் கொண்டிருந்தது. ‘ஒரு அஞ்சு நிமிசத்துக்கு முதல் தான் போகினம். இனி எப்ப வருகினம் எண்டு தெரியா என அந்த வீட்டுப் பெண் கூறினாள். பார்வதி சோர்வுடன் வந்தாள். "நீங்கள் ஏன் அலையுறிங்க அவன் வரட்டன்” என்றான் சுதன்." (பக்.177-179)
தாயொருத்தியின் மன உணர்வுகளை வெகு இயல்பான முறையில் மேலுள்ள இருபகுதிகளும் வெளிப்படுத்துகின்றமைக்கு சிறப்புக் காரணமுமுண்டு. போராளிப்படைப்பாளிகள் இருவரும் தாய்மாரென்பதே அதுவாகும்.
3.6 பெண் போராளிகளது பெரும் பாலான படைப்புகளில் தனிப்பொருளாகவோ, ஒரு கூறாகவோ இடம்பெற்றுள்ள விடயங்கள் இரண்டினுளொன்று, (மற்றொன்று 3.7ல் கூறப்பட்டுள்ளது) சக போராளிகளுடனான தொடர்பு அல்லது உறவு பற்றியதாகும். இ.'து, மரியாதை, நட்பு, நேசம், கீழ்ப்படிவு, பிரிவிரக்கம், அழியாத நினைவு எனப் பன்முகங்கள் கொண்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள் தருவது நீண்ட பட்டியாகிவிடும். எனினும், சிறுகதைகளுள், மலைமகளின் ‘ஒரு கோப்பைத் தேநீர்', 'விலை', 'புதிய கதைகள்', 'யாரோ யாரிவர் யாரோ? முதலியனவும், கவிதைகளுள், அம்புலியின் 'பூமி ஒருநாள் இச்சரிதம் படிக்கும்', புதிய தோழி எம் பின்னால் வருகிறாள்' முதலியனவும் கவனிப்பிற்குரியன. வடிவ இயல்பு காரணமாக நாவலொன்றிலே பல விடயங்களை வெளிப்படுத்த முடிவதனால் மேற்குறித்த விடயங்கள் யாவும் 'இருள் இனி விலகும்’ நாவலில் நன்றாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் அழுத்திக் கூறவேண்டிய விடயமொன்றுண்டு. அதாவது போராளிகள் அனைவரும் தாம் பெற்ற உயர்நிலையினால் தமது தலைவர்மீது அதிக மரியாதையும், பாசமும் கொண்டிருப்பது மட்டுமன்றி; சிறந்த முறையில் அதனை வெளிப்படுத்தவும் முயல்கின்றனர்; அம்புலியினது மனந்திறந்த மலைகள் என்ற கவிதையின் ஆரம்பப் பகுதி, இங்கு தரப்படுகின்றது : -
-65~

Page 39
மனநீதிறந்த மலைகள்
“பறக்க முழயாதென இயலாமைப்பட்ட இறக்கைகள் ஓர் நாள் நெருப்பணிந்து பறந்த அதிசயத்தை சுமந்தது இந்த நிலம். இதயக் கண்ணிரும் நெஞ்சப் புகையும் நிரந்தரச் சாபமாகிப் போய்விட்ட காலங்களிலிருந்து ஒரு சூரியன் புறப்பட்டது எமது வானில், வாய் பேசமுடியாது இறுகிக் கிடந்தவர்களே வழிநடத்திச் செல்கின்ற துணிவு மலர்ந்தது. எதறகும எவரையும் எதிர்பார்த்துத் தங்கிக் கிடந்த இதயங்கள் தமக்கென்ற வாழ்வைப் படைக்கத் தொடங்கிய வரலாற்றிலிருந்து புறப்படுகின்றன இவ்வரிகள். ஈழத்தில் பிறப்பெடுத்ததற்காய் பெருமைப்படுகின்றன உயிர் வாழ்வனவற்றின் பெண்பாற்களெல்லாம் உறங்கிக் கிடந்த எரிமலைகளுக்கு உயிர்ப்பூட்டி உயிருறிஞ்சும் காலத்திடையே உலவ விட்டான் ஓர் தலைவன் தற்காத்துக் கொள்ளெனக் கருவிகளையல்ல எமது கரங்களின் பலங்களையே எமக்களித்தான்
-66

அசுர் பலம் பொருந்திய அவற்றினால் கட்டப்படுகின்றது - எம் சரித்திரக் கோபுரம் விண்ணைத் தொடும்படி உயர உயர வளரத் தொடங்கியே அதன் ஒவ்வொரு கற்களிடையேயும் உயிரும் உணர்வும் கற்பனைகளும் கனவுகளுமே கலவைகளாக இறுகியுள்ளன. இந்த இயமத் துணிவுக்கு இறக்கை பூட்டி விட்ட தலைவனின் தங்கைகளானதில் நாங்கள் தலைநிமிர்ந்து கொள்கின்றோம்." (Uеѣ.lб-7)
3.7 போராளிகளது பெரும்பாலான படைப்புகளில் இடம்பெறுகின்ற மற்றொரு விடயம், தமிழீழ விடுதலை என்ற இலட்சியமாகும். அது உயிர்மூச்சாக, பெருமிதமாக, தூண்டலாகத் தொடரும் பயணமாக, தணியாத தாகமாக, அணையாத நெருப்பாக அவர்தம் படைப்புகளுடே வெளிப்படுவது இயல்பானதே. வடிவ இயல்பு காரணமாக (உணர்ச்சி வெளிப்பாட்டின் சிறந்த ஊடகமென்ற விதத்தில்) கவிதைகளிலேயே அது அதிகமாக வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய படைப்புகள் பலவும் தவிர்க்க இயலாதவாறு உணர்ச்சித் தீவிரத்துடனும், பிரச்சாரப் பாங்குடனும் வெளிப்பட்டாலும் கூட அண்மைக்காலமாகக் குறிப்பாக ‘அம்புலி’யின் கவிதைகள் கவினுற அமைவது விதந்துரைக்கற்பாலது.
4. பெண்போராளிகளது படைப்புகளில் இடம்பெற்றுள்ள - இதுவரை கூறப்பட்ட - விடயங்களனைத்தும் போர் பற்றியதாயும், போர்சார்ந்த பிரச்சினைகள், உணர்வுகள், உறவுகள் பற்றியதாயும் அமைந்திருக்கக் காணலாம். இவைதவிர, வேறுவிடயங்கள், குறிப்பாக (படைப்பாளிகள் பெண்களாதலின்) பெண்கள் சார்ந்த பிற பிரச்சினைகள் பற்றி இவர்கள் எழுதுவதில்லையா என்றொரு கேள்வி எழுவது இயல்பானதே. இ.'து குற்றச் சாட்டாகக் கூட முன்வைக் கப்படுவதுண்டு. இத்தகைய குற்றச்சாட்டிலுண்மை யுண்டெனினும் பெண்களான இவர்கள் தங்களது பிரச்சினைகள் பற்றி எழுதவேயில்லை என்று கூறமுடியாது; ஆழ்ந்து
~67

Page 40
ஆராயும்போது கவனத்திற்குரிய படைப்புகள் சிலவற்றைக் கண்டுகொள்ள முடிகின்றது. இவ்விதத்தில், முதிர்கன்னி' பற்றிப் பேசும் (அம்புலியின்) ‘என்று விடியும்?, மூட நம்பிக்கைகள் பற்றிப் பேசும் (செந்தணலின்) நம்பிக்கை ஒளி சிசுக்கொலை பற்றிய (மேஜர் பாரதியின்) சிசுக்கொலை முதலிய கவிதைகளும் பெண்விடுதலை பற்றிப் பேசும் (மலைமகளின்) கதவுகள் திறந்துதான் உள்ளன அவலம் மிக்க குடும்ப வாழ்க்கை பற்றிப் பேசும் (மேஜர் கஸ்தூரியின்) 'நிர்ப்பந்தங்கள்’ முதலான சிறுகதைகளும் சிறந்த படைப்புகளாகும். நம்பிக்கை ஒளி' என்ற கவிதையின் ஒரு பகுதி, எடுத்துக்காட்டாகக் கீழே தரப்படுகின்றது"
“ஒடுக்குமுறைகள் என் குரல்வளையை நெரிக்கின்றன. மூடநம்பிக்கைகளோ என் மேனியிது பாம்புகளாக நெளிகின்றன சாக்கடை நாற்றத்தை விஞ்சிய துர்வாடை என் நாசிகளை மூச்சுமுட்ட முனைகின்றது”
5. சர்வதேச அரசியல் விவகாரங்களும், போராளிகளின் படைப்புகளில் அவ்வப்போது பேசப்பட்டுள்ளன. மேஜர் பாரதியின் கவிதைகள் சில, இதற்குச் சிறந்த உதாரணங்களாகின்றன :
89.15st.éF6DU (8U
கோழிகளின் செட்டைக்குள்
குஞ்சுகள் தானி பாதுகாக்கப்படும்
ஆனால் இங்கோ
பருந்துகள் தானே
பாதுகாக்கப்படுகின்றன’ (பக்.28)
6. மதிப்பீடு
6.1 எவ்வாறாயினும் இதுவரைகூறிய விடயங்கள் பற்றித்தொகுத்து, சிந்தித்துப் பார்க்கும்போது, பெண்போராளிகளின் படைப்புகளிலே பெண்கள் சார்ந்த பிரச்சனைகளோ, பெண்விடுதலைசார்ந்த விடயங்களோ பெருமளவு பேசப்படவில்லை என்பதுண்மை. இவ்வாறாயின் இத்தகைய படைப்புகளின் முக்கியத்துவம் யாது? முற்குறிப்பிட்டது போன்று 2000 ஆண்டுக்கால தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திலே பெண்களின் அரசியல் உலகத் தொடர்புகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை. இன்றுபோலில்லாவிடினும் முன்னரும் ஓரளவாவது பெண்கள் அரசியலில் ஈடுபடாதிருந்திருக
سمہ 63 سہہ

கவியலாது. ஆயினும் , வரலாற்றுருவாக்கம் − ஆண் களால் கட்டமைக்கப்படுகையில் இவற்றை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதே உண்மை. ஏனெனில்; வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்தில் ஆங்காங்கே சில தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. வன்னியில் வழங்கும் 'ஆனையை அடக்கிய அரியாத்தை பெண் வீரம் பற்றிப் பேசுகிறது. மட்டக்களப்பில் இன்றும் நடைபெற்றுவரும் அல்லி அரசாணி’ கூத்து, பெண்ணின் போர்க்களவீரம் பற்றியதே. முஸ்லீம் மக்கள் மத்தியிலே பாடப்பட்டுவரும் 'சைத் துTன் கிஸ் ஸாவும் அத்தகையதே; ஆக ஈழத் தில் எண்பதுகளிலேற்பட்ட அரசியல் மாற்றங்கள் பெண்களை அரசியலில் ஈடுபடுத்த, பெண்கள் தமது சமத்துவ நிலையினை போர்ச்சாதனைகளில் செயலில் காட்ட முனைந்து, அவற்றைப் படைப்புகளுடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள். இத்தகைய அரசியல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்படவில்லையாதலின், ஈழத்துப் பெண்போராளிகளின் இத்தகைய படைப்புகள் நவீன தமிழ் இலக் கியத் திற்கு முற்றிலும் புதுமையானவையாக - புதியனவாக - விளங்குகின்றமை விதந்துரைக்கப்பட வேண்டியதே.
6.2 இவர்களது படைப்புகளில் பிரச்சாரம், ஆக்ரோஷம் என்பன ஓங்கிருப்பதாகவும் 'வெறும் பதிவுகளாக உள்ளன’ என்றும் விமர்சகள்களால் கூறப்படுவதுண்டு. பெண்நிலைவாத நோக்கிலெழுதும் ஏனைய படைப்பாளிகளிடம்கூட இத்தகைய குறைபாடுகள் இடம்பெறவே செய்கின்றன. வேலைப்பளு, ஓய்வின்மை, வாசிப்புச் சூழலின்மை என்பன பெண் எழுத்தாளரிடம் காணப்படும் ஆரோக்கியமற்ற நிலையில் படைப்புலகப் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில் மேற்குறித்த குறைபாடுகள் தவிர்க்க இயலாதனவாகின்றன. இத்தகைய ஆரோக்கியமற்ற நிலைமை பெண்போராளிகளிடம் அதிகரித்துக் காணப்படுவதும் இயல்பானதே. ஒய்வும், வாசிப்புச் சூழலும், எழுத்துப் பயிற்சியும் காணப்படுமாயின் இவர்களிடமிருந்து கலைப்பாங்கான படைப்புகள் உருவாகுமென்பதற்கு, முறையே அம்புலியின் கவிதைகளும், மலைமகளின் சிறுகதைகளும், தமிழ்க்கவியின் நாவல்களும் சான்றுபகள்கின்றன.
6.3 ஈழத்துப் பெண்போராளிகளின் இத்தகைய படைப்புகளுடாக நவீன தமிழ் இலக்கியம் இத்தகைய உலக இலக்கியங்களுக்குச் சமமாகக் கருதப்படுகின்ற நிலையினை எட்டியுள்ளதென்று கூறுவதில் தவறில்லை. சாவோ கடற்கரையில் ஒரு பெண்’ என்ற பெண் போராளி ஒருவரது
-69

Page 41
வியட்னாம் நாவல் இவ்வேளை நினைவு வருகிறது. இதனை தமிழ்க்கவியின் நாவல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரஸ்யமானது என்று கூறத்தோன்றுகிறது. இவ்வாறான ஒப்பீடு படைப்பாளிகளின் ஆளுமை வேறுபாடுகளைப் புலப்படுத்துகிறது என்பதற்கப்பால், போருக்குட்பட்டுள்ள இரு வேறு சமூகங்களின் வேறுபாடுகளை குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தின் பலவீனங்களை வெளிப்படுத்தி நிற்பதாக என்னால் கருத முடிகின்றது.
سب سے 70 سسہ

அடிக்குறிப்புக்கள்
மேஜர் பாரதி, காதோடு சொல்லிவிடு, வெளியீட்டுப்பிரிவு விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு (இடம் தரப்படவில்லை) cğp.U.1999, q/gÜʻlUlfTé5°, UV.I
தமிழ்க்கவி, இருள் இனி விலகும், அறிவமுது பதிப்பகம், é96f6)qBsTéởóf, cp.U.83°6O6) Pooq, U.65
மலைமகள், புதிய கதைகள், காப்டன் வானதி வெளியீட்டகம், 666f6)qBsféřófo, p.U.Pooq, ófélég6Oog, U.I25-26
இவர்களோடு, மேஜர் துளசிரா என்பவரும் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். (பார்க்க : பதிப்புரை, எழுதாத உணி கவிதை) எனினும், இக்கட்டுரையாளருக்கு அவர் பற்றிய தகவலெழுதுவும் கிடைக்கவில்லை. ஆர்வலர்கள் அறியத் தருக.
மேஜர் பாரதி, காதோடு சொல்லிவிடு, முன்னுரை, முகுநூ (பக்கம் தரப்படவில்லை)
மலைமகள், புதிய கதைகள், முகுநூ, பக் x-xi
ஈழத்தின் - தமிழுலகின் - பெண்கவிஞர்களின் முதற் தொகுப்பினது தலைப்பினை ஒத்தே இத்தொகுப்பின் தலைப்புமுள்ளமை ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
மலைமகள், புதிய கதைகள், முகுநூ, U.32 தமிழ்க்கவி, இருள் இனி விலகும், முகுநூ, ப.15
மலைமகள், புதிய கதைகள், முகுநூ, U.33 தமிழ்க்கவி, இருள் இனி விலகும், முகுநூ, பக்.77-78
மலைமகள், எழுதாத உணி கவிதை, தமிழீழப் பெண்களின் கவிதைகள், கப்டன் வானதி வெளியீட்டகம், கிளிநொச்சி, மு.ப. 200 ஆவணி, பக்.29
அம்புலி, மேகுநூ,பக்.23
செந்தணல், மேகுநூ. பக்.2
-7 I

Page 42
உசாத்தனை நால்கள்
தனித்சிதாகுப்புகள் :
கவிதைத் தொகுப்பு :
கப்டன் கஸ்தூரி, கஸ்தூரியினி ஆக்கங்கள், வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் மு.ப.மே 1992.
மேஜர் பாரதி, காதோடு சொல்லிவிடு, வெளியீட்டுப் பிரிவு, விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு, மு.ப. 1992 புரட்டாதி.
அம்புலி, மீண்டும் துளிர்க்கும் வசந்தம், மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகள், மு.ப. தை 2004,
சிறுகதைத் சிதாகுப்பு :
மேஜர் பாரதி, காதோடு சொல்லிவிடு, மு.கு.நூ (இத்தொகுப்பில் கவிதைகளும் உள்ளன)
கப்டன் கஸ்தூரி, கஸ்தூரியினி ஆக்கங்கள், முகுநூ. (இத்தொகுப்பில் கவிதைகளும் உள்ளன)
மலைமகள், புதிய கதைகள், கப்டனி வானதி வெளியீட்டகம், கிளிநொச்சி, சித்திரை, 2004,
நாவல்கள் :
தமிழ்க்கவி, இனி வானம் வெளிச்சிடும், அறிவமுது பதிப்பகம், கிளிநொச்சி, மு.ப.செப். 1992.
தமிழ்க்கவி, இருள் இனி விலகும், அறிவமுது பதிப்பகம், கிளிநொச்சி, Gp.U.836O)6) 90Oc.
கூட்டுத்சிதாகுப்புகள் (கவிதைகள்)
வெளிச்சம் கவிதைகள், வெளிச்சம் வெளியீடு 2, விடுதலைப் புலிகள் கலைப்பண்பாட்டுக்கழகம்,நடுவப்பணியகம்,தமிழீழம்,முபவைகாசி996
செம்மணி, வெளிச்சம் வெளியீடு 3, செப்.1998 ஆனையிறவு, வெளிச்சம் வெளியீடு, ஜூன் 2000.
எழுதாத உன் கவிதை, (தமிழீழப் பெண்களின் கவிதைகள்) கப்டன் வானதி வெளியீட்டகம், கிளிநொச்சி, 200 ஆவணி
سیسہ 722 سے

(சிறுகதைகள்)
• வாசல் ஒவ்வொன்றும், வெளிச்சம் வெளியீடு 5, ஆழ 20o.
9 கனவுக்கு வெளியேயான உலகு, கப்டனி வானதி வெளியீடு, பங்குனி
2O09.
9 வேர்கள் துளிர்க்கும் (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) 2003,
Uங்குனி

Page 43
இந்நூல்களை எம்மிடம் பெற்றுக்
கொள்ளலாம்.
கருத்தியலும், பண்பாட்டுக் கோலங்களும், கட்டவிழ்க்கும் சமயக் கொள்கைகளும், கிரியைகளும் :
பெண் கள் கல விரி ஆபப் வு நிறுவனத் தாலி நடாத் தப்படும் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளிலப் தகுதரியானவை தேர்ந்தெடுக்கப்பட்டு நூல் உருவம்
பெறுவது வழமையாக எம் மால முன்னெடுக்கப்படும் செயல். எம்மால் ஜனவரி மாதம் 18ம், 19ம் திகதிகளில் பெனர்களும் மதமும் 51 Fai 13 || ||
தொனிப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பல முக்கிய செப்தரிகள் அடங்கிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அதனை எழுதியோப் அக்கருத்தரங்கில் பங்குபற்றியோரால் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் சிலவற்றை
i l i Luf dr-Lii
LLLTT LLTLTLS T L TTT TT LL LLL LL கரு.பாங் கட்ட4ரும்
நரு பாதிாா நோக் து
st i hii i, ir i niini
"سير
உளர் வாங் கசி கட்டுரைகளைச் செம்மைப்படுத்தியுள்ளார்கள்.
தமிழ் வரலாற்றும் பழமங்களில் ஒரு பெண்நிலை நோக்கு:
இந் நூல் வரலாறு, மானிடவியல் , சமூகவியல் என்ற பல் சங்க கற்கை நெறிப் பாங்குடைத்தாயிருப்பதை அவதானிக்கலாம். மாக்சிச அடிப்படை ஒன்று இருந்தாலும் அதை மீறிய ஒரு தேடலும் உண டு. சமுகப் பரிமானங்களை, பொருளாதார அரசியல் உருவாக்கங்களினூடாக விளக்க முற்படுகிறது. அதே சமயம் வர் க்கம் , சாதி என்ற பிரிவுகளுக்கூடாகக் கலாசார கட்டுமானங்களை இனம் கண்டு, அரசியல் பொருளாதார உருவாக்கங்களுக்கும், கலாசார கட்டுமானங்
س-4 T--
ہیں۔ ]
हैं।
 
 

களுக்கும் உள்ள தொடர்பினையும் தொட்டு நிற்கிறது. தமிழ் கலாசார இயல்புகளையும், நியதிகளையும் கட்டவிழ்த்து ஆண் சார்ந்த நோக்கினையும் ஆனை மேல் நிலைப்படுத்திய ஆதிக்க அதிகார சமுக கட்டுமானங்களையும், கருத்தியலையும் தொடர்புபடுத்துகிறது. வரலாற்றையும், மானிடவியலையும் இனைத்து மாக்சிச நெறிமுறையில் பெண்நிலை நோக்கில் செய்யப்பட்ட இவ்வாய்வு ஒரு முதல் நிகழ்ச்சியாகவே கொள்ளப்பட வேண்டும்.
வய்க்கம், சாதி, பெண்நிலைய் பண்பாடு :
பெரியாரியம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஒழுங்குபடுத்தி இருந்தோம் ஆறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவற்றின் தலைப்புக்கள் ஒரு தர்க்கரீதியான அடிப்படையில் தெரிந்தெடுக் கப்பட்டன. பெரியாரின் ஐம் பெருங் கோட்பாடுகளை ஆய்வு செய்யும் ஒரு முயற் சரியாக அது அமைந்தது. பெண் விடுதலை, சாதியம், நாத்திகம் , மொழியியல், அரசியல் போன்றவை பற்றிய பெரியாரின் கருத்தியல் கோட்பாடுகள், அவற்றின் விளக்கம், முரண்பாடுகள் போன்றன அக்கட்டுரைகளில் வெளிவந்தன. இவையாவும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
at , is
* பெரியாரியத்தின் தோற்றுவாய்க்கு களமாக அமைந்த தமிழ்நாட்டு
சமுக அரசியல்நிலை.
* தேசியவாத கருத்தியலும், பெரியாரின் தேசியவாதமும்,
ஓ, தமிழ் கலாசாரத்தில் பெரியாரின் கோபாவேசமான கடவுள் மறுப்புக்
கொள்கையின் தாக்கம்.
* பெரியாரின் பெண்நிலைவாத கொள்கை.
நீ வர் க்க முரன்ை பாடுகளைப் புறக் கண்ணித் து சாதரியத் தை அடிப்படையாகக் கொண்டு பெரியார் வேண்டி நின்ற சமூக உருமாற்றம் சாத்தியப்படுமI?

Page 44
9. பெரியாரின் மொழி இலக்கியம் பற்றிய கொள்கை. போன்ற தலைப்புக்களில் கட்டுரைகள் அமைந்தன.
பெண்நிலைவாதமும், கோட்பாட்டு முரண்பாடுகளும் - ஒரு சமூகவியல் நோக்கு -
இந்த நூல், பெண் நிலைச்
* சிந்தனையை அறிவார்ந்த தளத்தில் அறிமுகம் செய்வதோடு தமிழ்ச் சமூகநிலையில் அதனைப் பிரயோகரித்து, தமிழர் களினி வாழ்வியலைப் பல தள நிலைகளில் மறு வாசிப்புச் செய்ய முற்படுகின்றது.
இன்று பெண்ணியச் சிந்தனை சமூகத்துக்கான மாற்றுச் சிந்தனையாகவும், பெண்நிலை நின்று அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, ஆண்சார்ந்த அனைத்து மதிப்பீடுகளுக்கும், விழுமியங்களுக்கும் எதிரான, மாற்றம் ஒன்றை அவாவி நிற்கிறது. இந்த நூலும் இந்த நிலையில் எமக்கு பயனளிக்கிறது. மேலும் நடைமுறை சார்ந்த விவகாரங்களை நோக்கி நகர்த்தி ஊடாட வைக்கின்றது.
--" té----
 

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : US$ 15 UK & Europe : US$ 10 India, S.Asia : US$ 05 Sri Lanka : SLR 150
சந்தா விண்ணப்பம் 2005
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்
S LL LLLLLLLLSLLSSLSLLSLLSLSLLSLSLSLLLLLSSLS SSSSSLLSSLSLL S LL LL LLLLLLLLS
G||||T
6.6) TEFb.
திகதி
இத்துடன் காசோலைமணிஓடரை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women’s Education and Research Celler 58, Dharmarama Road, Wellaw atta, Colombo - 06, Sri Lanka.

Page 45
5 TAMOS
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன இல, 58, தர்மராம வீதி, கொழும் தொலைபேசி: 2595296, 25909
பெண்கள் கல்வி ஆய்
1. மலையக மக்களுடைய இன
கமலினி கணேசன்
2. சமூகக் கோட்பாட்டுத்தள
3. வர்க்கம் சாதி பெண்நிலைப்
செல்வி திருச்சந்திரனர்
4. பெண்நிலைச் சிந்தனைகள்
சித்திரலேகா மெளனகுரு
5. பெண்களின் வாய்மொழி இது ஒப்பாளி தாலாட்டு பற்றிய ச. செல்வி திருச்சந்திரனி
6. Gendered Subjects (Engl Ed. By Selvy Thir uch andı
7. Feminine Speech Transm
An Exploration into the
By Selvy. Thiruchandran
8. Writing an Inheritance :
1860-1948, Vol.
9. Celebrating Sri Lanka Wc
Wolume II
PRIFTEDEYJNIE AR: SPYT

வெளியீடு கள்
τιά,
W 06. 85
நிறுவன புத்தக வெளியீடுகள்
|த்துவ இருப்பில் பால்நிலை
த்தில் பால்நிலை
பண்பாடு பற்றிய நோக்க
0க்கியம் முகவியல் நோக்க
ish)
issions Lullabies and Dirges of Women
Women's Writing in Sri Lanka
omen's English Writing
LTI). COLOMB) 11. TEL: 233095