கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒட்டுமா

Page 1

~~ TT디디디
|-
:

Page 2

3? I (6 L DIT
சாந்தன்
வரதர் ിഖങ9 (

Page 3
ஒட்டு மா
முதற் பதிப்பு: டிசெம்பர் 1978
ஆக்கம்: சாந்தன்
மேலட்டை ஓவியம்: ரமணி வெளியீடு: வரதர் வெளியீடு அச்சுப் பதிவு: ஆனந்தா அச்சகம், யாழ்ப்பாணம்.
விற்பனையாளர்: ஆனந்தா புத்தகசாலை,
226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
விலை ரூ. 4-20
சாந்தனின் பிற நூல்கள்:
1. பார்வை (சிறுகதைத் தொகுதி-1970) 2. கடுகு (குறுங்கதைத் தொகுதி-1975) 3. ஒரே ஒரு ஊரிலே. (சிறுகதைத் தொகுதி)
ن

1972-ல் எழுதப்பட்ட இந் நாவல் 1976ல் 'தினகரன்-வார மஞ்சரி'யில் தொடராக வந்தது. இப்போது சில மாற்றங்களுடன் நூலாக வெளிவருகிறது. தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவ குருநாதன் அவர்களுக்கும், நூலாக வெளியிட அனுமதித்த "லேக்ஹவுஸ்" நிறுவனத்தினருக் கும்,இப்போது நூலுருக்கொடுத் துள்ள "வரதர் வெளியீட்டின ருக்கும் என் நன்றி.
- ஐ சஈநதன

Page 4

ராஜா, இரண்டாவது தடவையாகவும் மெல்லத் தட்டி
கதவைத் திறந்தவர், ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக் கக்கூடிய ஒரு பெண்மணி, குள்ளமான பருத்த உருவம், வெள்ளை வெளேரென்ற நிறம், தங்க ஃபிரேம் போட்ட மூக்குக் கண்ணுடி முகத்திலிருந்தது. "இங்கே வாடகைக்கு அறைகளிருப்பதாகக் கேள்விப் பட்டோம்.' நரேன் ஆங்கிலத்தில் சொன்னுன் அவரின் முகம் மலர்ந்தது.
**ஆம்; உள்ளே வாருங்கள் ."
உள்ளே போஞர்கள்,
"உட்காருங்கள்' "தாங்ஸ் ' மூவரும் உட்கார்ந்தார்கள். அவரும் உட் கார்ந்தார்.
"நீங்கள் மர்ணவர்களா? - இவர்களின் கையிலிருந்த புத்தகங்களில் பார்வையைப் பதித்தபடி கேள்வி வந்தது. 'யெஸ், கட்டுபத்தைக்கு வந்திருக்கிருேம்" 'தமிழர்களா?"
"ஆமாம்"
அவரின் முகம் மேலும் மலர்ந்தது.
**நல்லது, நாங்களும் தமிழ் மாணவர்களாகத்தான் தேடிக்
கொண்டிருந்தோம். 9 சதாவுக்கு வியப்பு இடைமறித்துக் கேட்டான்* மன்னிக்கவும். ஏன் அப்படி என்று சொல்வீர்களா?" நரேனும் சதாவைப் பார்த்து மெல்லச் சிரித்தான் அவர் சொன்னர் :

Page 5
6 ஒட்டுமா
"தமிழ்ப் பையன்களென்ரு ல், எங்கள் பக்கத்துப் பையன் களைப் போலல்லாமல் அமைதியர்யிருப்பார்கள். தொல்லை கலாட்டா இல்லாமல் இருக்கமுடியும்.' நரேன் முகத்தில் பெருமிதம் படர்ந்தது, ராஜாவைப் பார்த்து முறுவலித்தான், "என்னுடைய கணவர் வெளியே போயிருக்கிறர். அவர் வந்ததும் நீங்கள் பேசிவிட்டு அறைகளையும் பார்க்கலாம். தாமதமாகி விடுமென்று நினைக்கிறீர்களா? வருகிற சமயந் தான்."
"பரவாயில்லை; நாங்கள் இருக்கலாம்' ராஜா வீட்டைக் கவனித்தான். புதிதாயிருந்தது. நவீன மாயும் எளிமையாயும் அலங்கரித்திருந்ததால் அழகாயு மிருந்தது. இவர்கள் பேசிக்கொண்டிருந்த வரவேற்பறை யின் இடதுபுறம், அடுத்தடுத்து இரண்டு அறைகள், வலப் பக்கம் நாலு நாலாக, இரண்டிடத்தில், ஆளுயர ஃபிரெஞ்சு ஜன்னல்கள்கு தொங்கலில், சமையலறைக்குப் போகிற வழி தொடங்குகிறது: "ஒ எவ்வளவு முட்டாள் நான். என்னை இன்னும் அறி முகப் படுத்திக் கொள்ளவில்லை-இல்லையா?-' அவரைப் பர்ர்த்தார்கள். "-நான், மிஸிஸ் பீரிஸ். என்னுடைய கணவர் அர சாங்க சேவையிலிருக்கிருர் - தனது கணவர் வேலைபார்க் கும் அலுவலகத்தின் பெயரையுஞ் சொன்னுர், "நான் நரேந்திரன்-' நரேன் அறிமுகப்படுத்தினன். **-இவர் சதானந்தன், அவர் ராஜநாயகம்' அகலத் திறந்திருந்த கண்ணுடி ஜன்னல்கள் வழியே, புற் றரையில் ஒரு வெள்ளை மணற்கு வியலும், கம்பி வேலிக்கு அப்பால் ஒரு வாழைத் தோட்டமும் சதாவின் கண்களிற் LJL-L- GðI • திரும்தி பீரிஸ், "எக்ஸ்கியூஸ் மி , ' என்றபடி எழுந்து உள்ளே போனுர்,

ஒட்டும்ா 7
* டேய், தேத்தண் ணி வரப்போகுது!’ என்ருன், ராஜா மெல்ல, வெளியே சத்தங் கேட்டது. பதினறு பதினேழு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வெகு ஆர்ப்பாட்டமாக உள்ளே ஒடி வந்தான், இவர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் அமைதியான புன்னகையுடன் தாண்டிப் யோனுன்
* மகனுக்கும்.' திருமதி பீரிஸ் திரும்பி வந்தபோது, கையில் ஒரு தட்டு இருந்தது. அதில் மூன்று தேனீர்க் கோப்பைகளும் பிஸ் கற்றுகளும் இருந்தன.
* எடுங்கள், பிள்ளைகளே .
தேனீரை அருத்திக் கொண்டிருக்கையில் அவர் கேட்டார்
'நீங்கள் எந்த ஊர், யாழ்ப்பாணம்ா? .'
ʻ ʻ G) u 6ñ) ,.. ° ° ராஜா தலையாட்டினன்.
கேற் திறக்கும் ஒலி கேட்டது. வந்தவர்தான், பிரிஸ்
இவர்கள் எதற்காக வந்திருக்கிருர்களென்பதை அறிந்த தும், மகிழ்ச்சியுடன், -
'ஒ, நல்லது. இதோ வருகிறேன் .' என்றபடி கையி
லிருந்த பையுடன் உள்ளே போனர் மனைவி பின்
தொடர்ந்தார். திரும்பி வரும்போது, 'உங்களை எங்களுக்குப் பிடித்திருக் கிறது. இனி உங்களுக்கு இந்த இடம் பிடிக்க வேண் டுமே -என்றபடி வந்தார், பீரிஸ். 1. வாருங்கள், அறைகளைப் பார்க்கலாம்" இரண்டு அறைகள், வெளிப்புறமாயிருந்த அறை ஒன்று, அதையொட்டி வர
வேற்பறைக்கு அடுத்தாற் போலிருந்த முதலறை, மற்றது;
இரண்டும் நன்ற கவேயிருந்தன.

Page 6
岛 ஒட்டும்ா
"இரண்டு அறைகளிலும் நான்கு பேர் இருக்கலாம். இன் ணுெரு பையனையும் பிறகு சேர்த்துக் கொண்டீர்களானுல் நல்லது' என்ருர் பீரிஸ் - *குளியலறையையும் காட்டி விடுங்கள்." என்மூர், அவர் மனைவி, குளியலறை, சமையலறையைத் தாண்டிப் பின்புறமாக இருந்தது
அசைவக் கறிகளை ஒதுக்கிவிட்டுச் சதா சாப்பிட்டபோது பரிமாறிக்கொண்டிருந்த திருமதி பீரிஸ் கேட்டார்: "ஏன் அந்தக் கறிகள் நன்ரு யில்லையா?" சதா மெல்லச் சிரித்துவிட்டு சொன்னன்: **இல்லை, நான் சைவக்கறிகள்தான் சாப்பிடுவேன் -வெஜிற் றேரியன்' مه ه ! (g * * **வெஜிற்றேறியனு' - பீரிஸ் கேட்டார். 'மீன்சு, டச் சாப்பிடுவதில்லையா?* * 'இல்லை'சதாவுக்குச்சிரிப்பு வந்தது, அதென்ன சைவமா? *முட்டை?' - திருமதி பீரிஸ்.
• 3) ουδου "மாசி? கருவாடு? - "மரக்கறிச் சாப்பாட்டுக்கும் இந்த உடம்பு வருமா? "அப்படியானுல், மரக்கறிகள் ஒன்றிரண்டு அதிகமாகச் சமைத்து விடுகிருேமே!’ என்ருர் பீரிஸ். *அதெல்லாம் வேண்டாம். வழக்கமான கறிக ளே போதும், எனக்கென்று அதிகமாக ஒன்றுமே செய்யாதீர்கள்- தயவு செய்து' சாப்பாட்டு மேசையின் வலதுபுறம் நிழலாடிற்று. பீரிஸின் பிள்ளைகள். அந்தப் பையனும் மூன்று பெண்களும். தனது சைவ உணவுபற்றித்தான் பேச்சு நடக்கவேண்டும்; பெண்களின் விழிகள் வியப்பால் விரிந்ததை சதா கண்

ஒட்டுமா 9
டான். அது அவனுக்கும் கொஞ்சம் பெருமையாயுமிருந்
**வாருங்கள், இப்படி உட்கார்ந்து பேசுவோம் கொஞ்ச நேரம். படிக்கப்போகிறீர்களா இப்போது? - என்ருர் பீரிஸ் சாப்பிட்டு முடிந்ததும். * சி. உங்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்லவேண் டும் ' என்றவர், * . பிள்ளைகளே நீங்களும் வாருங்கள்' என்று மக்களை யும் அழைத்தார். "என்ன சொல்லப் போகிருரோ?' என்று வியந்தான், நரேன். எல்லோருக்கும் நடுவில் இப்படிப்போய் இருப் பது ராஜாவுக்குப் பெரிய அந்தரமாயிருந்தது. பீரிஸ் சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். உங்க ளூர் சுருட்டுத்தான்.' என்று இவர்கள் மூவரையும் பார்த் துச் சிரித்தார். பிறகு சொன்னர் : "நீங்கள், உங்கள் ஊரை-பெற்ருே ரை விட்டு இங்கே வந்திருக்கிறீர்கள். படிப்பதற்காக இவ்வளவுதூரம் வந்த நீங்கள், அதில் மிகவுங் கவனமாக இருக்கவேண்டும். உங் கள் மூவருக்குந் தேவையான வசதிகளைச் செய்து தருவது எங்கள் கடமை , ' சதா, பீரிஸையே பார்த்துக்கொண்டிருந்தான். உயர்ந்து ஒல்லியாயிருந்தாலும் இறுக்கமான உடற் கட்டுக் கொண் டவராயிருந்தார், பீரிஸ் , மனைவியைப் போலவே மூக்குக் கண்ணுடி, அந்த லென்ஸ்கள் ஏற்கெனவே பெரிதா யிருந்த விழிகளை மேலும் பெரிதாக்கிக் காட்டுவனபோ லிருந்தன. * வரும்படிக்காகத்தான் நாங்கள் உங்களை இங்கே குடி யமர்த்தியிருப்பதாகத் தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள். இதற்குமுன் நாங்கள் யாரையும் வாடகைக்கு இருத்தவு மில்லை. நீங்கள்தான் முதன்முதலில் இங்கே குடிவந்திருக் கிறீர்கள். அதற்கொரு காரணமுண்டு .'-இந்த இடத்

Page 7
10 ஒட்டுமா
இல் அவர் சற்று நிறுத்தி, அந்த மூன்று பெண்களேயும் பையனையுங் காட்டியபடியே தொடர்ந்து கூறினர் *.@店画 நாலுபேரும் எங்கள் பிள்ளைகள். இவர்களை விட இன்னெரு மகன்-மூத்தவன்-லண்டனில் படிக்கிறன் ." "அவன் வயதுதாணிருக்கும் இவர்களுக்கும், இல்லையா? - திருமதி, பீரிஸ் குறுக்கிட்டு கணவரைக் கேட்டார்,
'உங்களுக்கு என்ன வயது?"
இந்தக்கேள்விக்கு un ffrir பதில் சொல்வது என்று மூவரும் கொஞ்ச நேரம் யோசித்தார்கள், பிறகு சதா சொன்னன்: எனக்கு இருபது வயது. நாற்பத்தேழில் பிறந்தேன்' அப்படியா? .' - திருமதி பீரிஸ் வியந்து சொன்னுர், . லாலுக்கும் அதே வயதுதான், நாற்பத்தேழில்தான் அவனும் பிறந்தான்' சதாவுக்கு அந்த-முன்பின் அறிந்திராத-லாலில் சாடை யான பொருமை வந்தது,
.எங்கள் பிள்ளை எங்களை விட்டு, வேற்று நாட்டில் தனியாக இருப்பதால் அவனைப் போன்ற இல பிள்ளைகளை நாங்கள் இங்கே கவனமாகப் பார்த்தால், அவனுக்கு அங்கே நல்லவை நடக்கும் என்று நம்புகிருேம் - உங்களுக்கு இது சிலவேளை வேடிக்கையாகப் படலாம். ஆனல் நாங்கள் அப்படி நினைக்கிருேம்.' "இல்லை நாங்களும் அந்த எண்ணத்தை மதிக்கிருேம்'- சதா சொன்னன்
'. நன்றி. '-அவர் தொடர்ந்தார்: ". இது உங்கள் சொந்த வீடுமாதிரி. எங்களை உங்கள் பெற்றேர் போல நினையுங்கள். இதோ இவர்கள் உங்கள் சகோதரிகள் '-தன் மூன்று பெண்களையும் காட்டி அவர் சொன்னுர், 'இவள், மூத்தவள்-லலிதா, அடுத்ததுதான் லால், பிறகு இவள் நிலாந்தி, அது நிமாலி - சின்னவள், இவன் ரஞ்சித் - கடைக்குட்டி'

ஒட்டும்ா ill
*கல்லூரிக்கு, தூரங் கொஞ்சம் அதிகமாயிருக்குமே, என்ன செய்யப்போகிறீர்கள்??-திருமதி, பீரிஸ் கேட்டார். "ஊரிலிருந்து எங்கள் சைக்கிள்களை எடுக்கலாமென்று நினைக்கிருேம். அவற்றை இங்கே வைக்க இடமிருக்குமா?, "ஓ! நிச்சயமாய். அது நல்ல யோசனை. நேரம் வீணுகா மல் போய் வரலாம்'
3. -
வீட்டை விட்டுவிட்டு வந்த தவிப்பு மட்டும் இருந்திருந்து விட்டுத் தலைகாட்டவே செய்தது என்ருலும், கல்லூரிப் பாடங்களும் புது நண்பர்களுமாக வாழ்வு சந்தோஷமா கப் போய்க் கொண்டிருந்தது. அழகான புதிய அறைகள், உள்ளே வசதியாகக் கட்டில் களும், மேசைகளும். திரைச்சீலை அசைகின்ற அகன்ற ஜன்னல்கள் வசதிகள் கொண்ட குளியலறைகள், சொல்லி வைத்த நேரத்திற்குச் சாப்பாடுந் தேநீரும், பீரிஸ் இவர் களை மிக அக்கறையாகவே கவனித்துக் கொண்டார். நரேனும் ராஜாவும் முன்னறையிலிருந்தார்கள் : சதா, பக்கத்து அறையில் தனியே இருந்தான், புதிதாக ஒருவ ருங் கிடைக்கவில்லை. ܨ ܘܐ : ܡ̄ . . " ஒழுங்காக, அமைதியாக இருப்பவனையே தேடினர்கள்: "பரவாயில்லை; யாராவது வருகிற நேரம் வரட்டும்' என் முர் பீரிஸ், - சதாவின் அறை ஜன்னல்களைத் திறந்தால், வெளியே தென்னந் தோட்டம், வீட்டின் பின்புறம் அது, அடர்ந்த புற்றரையும் வெயிலே படவிடாமல் கவிந்திருக்கிற தென் னைகளும் மிகவும் அழகாயிருந்தன. - "இந்த ஊரில், எப்படி இந்தப் புல்லு சணைக்கிறது. -கம்ப ளம் மாதிரி!" சதாவின் அறைக்கு வலப்புறம், நரேனும் ராஜாவும் இருக் கிற முன் அறை இருந்தது இரண்டிற்குமிடையே இருந்த கதவு ஒருபோதும் பூட்டப் படுவதில்லை என்பதால், இரண்டு அறைகளும் ஒன்று போலவே இருந்தன,

Page 8
1 και ஒட்டுமா
அந்த மாலை நேரங்கள் மிகுந்த மனேரம்மியமானவைா கல்லூரியிலிருந்து வந்து உடைமாற்றி தேநீர் குடி த் து விட்டு மீண்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் ஏதோ, ஒரு புது உலகத்தில் புகுந்ததுபோலிருக்கும் சதா வுக்கு இயற்கையுஞ் செயற்கையுந் தத்தமது உச்சங்களில் இணைந்திருந்த அந்தப் பிரதேசத்தில், சைக்கிளை மெல்ல மிதித்தபடி போவதே தனிஇன்பம், புதுப் பாதைஞடேஒழுங்கைகள் தெருக்கள் என்று எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து வருவான், சதா, ராஜாவும் நரேனும்கூட சில சம யங்களில் சேர்ந்து கொள்வார்கள். மரங்களடர்ந்த லுணு வைப் பகுதியில் ஒர் அழகென்ரு ல், கடற்கரை நீ ன் ட மொறட்டுவைப் பக்கம் ஒர் அழகையும், வெட்டவெளி யாகப் பரந்திருந்த இரத்மலானைப் பகுதிகள் ஒர் அழகை யும் கொண்டிருந்தன; கட்டுபெத்தை சந்திக்கு வந்தால், கூட்டம் கூட்டமாய் நிற் கும் நண்பர்கள், அரட்டையும் கும்மாளமுமாய்த் திருவிழா மாதிரிப் பொழுதுபோகும். போதாக்குறைக்கு, பக்கத்துக் கடையிலிருந்து எப்போதுமே ஒலிக்கிற சினிமாப்பாடல் கள் வேறு. அதைக் கேட்கவென்றே கூடுகிற பையன்களு மிருந்தார்கள் பொழுது மங்குகிற நேரத்தில் திரும்பினுனென்ருல் ஏழு மணிக்கு முன் வீடு வந்துவிடுவான்; அந்த நேரத்தில் வழி யெங்கும் ஒரு புதிய நறுமணம் பரவி வரும், முதலில் அது என்னவென்றே புரியவில்லை, யாரையேர் கேட்டபோது ஏதோ ஒரு செடியிலிருந்து அந்த வாசனை கிளம்புவதாய்ச் சொன்னர்கள், மைம்மல் பொழுதுகளில், முன்னிரவின் அமைதியில் அந்த வாசனையை நுகர்வதற்காகவே அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றுவான். அந்த நேரங்களி லெல்லாம், உடலிலும் மனதிலும் புத்துணர்வொன்று பூரித்து வியாபிக்கும். பீரிசின் பெண்கள் ஒவ்வொருத்திபற்றியும் சதாவின் உள் ளத்தில் வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் உருவாகி யிருந்தன. லலிதா அடக்கமும் குடும்பப் பாங்கும் நிறைந்

ஒட்டுமா 18
தவள் என நினைத்தான். இவர்களை அவள் கவனித்துக் கொள்கிற அந்த அக்கறையும் அதிலிருந்த பவ்வியமுமே இப்படியான ஒர் எண்ணத்தைத் தோற்றுவித்தன. நிம்ாலி இன்னமும் உலகம் புரியாதவள். பாடசாலையும் பாடமுமே கதி என்று கிடப்பவள், தங்களைக் கண்டு ஒதுங்கிக்கொள் பவள் என்ற எண்ணம். நிலாந்தி கர்வம் பிடித்தவள், மற்றவர்களை மதிக்கத் தெரி யாதவள் என்று பட்டது. "இப்படிப்பட்ட அன்பான பெற் ருேருக்கு இந்த முரட்டுப்பெண் எ ப் படி ப் பிறந்தாள்? என்று நினைக்க வைத்தவள்
4. வழக்கமாக காலைச் சாப்பாட்டின்போது ரேடியோவும் அரு கில் இருக்கும், அது பீரிஸ்செய்த ஏற்பாடு. இவர்களின் காலை உணவு வேளையான எட்டுமணிக்கு அ வ ர் வீ ட் டி லிருக்கமாட்டார். லலிதா எல்லாவற்றையுந் தயார்பண்ணி விட்டு அழைப்பாள். தங்களுக்காகத்தான் ரேடியோ அங்கே வைக்கப்பட்டிருக் கிறது என்பதை அறிந்த நரேன் கேட்டான்* 'ஏனடா, எங்களுக்காகத்தானே இதிலை  ைவ ச் சி ரு க் கினம்? பிறகு ஏன் சிங்களப்பாட்டு?. தமிழ் மீற்றரிலை மாத்திவிட்டா என்ன?' "ஒமடா தமிழ்ப்பாட்டுக் கேட்டு எத்தினை நாளாச்சு. !' ராஜாவும் சொன்னன். *மாத்தினு ஏதும் பிழையா நினைப்பினம். வேண்டாம் சும்மாயிரு . ' என்ருன் சதா, "ஒண்டுஞ் சொல்லமாட்டினமடா. ' என்றபடி மீற்றரை மாற்றிவிட்டான் நரேன். இரண்டு நிமிடங்கூட ஆகியிராது. சமையலறையில் ஏதோ வேலையாயிருந்த நிலாந்தி விறு விறென்று மேசையடிக்கு வந்தாள். நரேந்திரன் விட்டிருந்த மீற்றரை மாற்றிற்

Page 9
14 ஒட்டுமா
பழைய இடத்திலேயே பாட விட்டாள்; வந்தது போல போய் மறைந்தாள்,
。
**நீங்களெல்லோரும் ஒரு தடைவை யாழ்ப்பாணத்திற்கு
வந்தாலென்ன? -என்ருன், நரேன் 'வரலாந்தான், இப்ப நீங்கள் மூன்றுபேரும் இருக்கிறீர் களே, தொல்லையில்லாமல் வந்து திரும்பலாம் ' என்ருர் பீரிஸ்,
'நீங்கள் ஒருக்காலும் யாழ்ப்பாணத்திற்குப் பேர்யிருக்க வில்லையா, முன்பு?' என்று சதா கேட்டான். * 'இல்லை, நானே அநுரதபுரத்திற்கு அந்தப் பக்கம் இன் னமும் போகவில்லை!' -பீரிஸ் சொன்னர், "இவருக்கு ஒரு தரம் யாழ்ப்பாணத்திற்கு வேலைமாற்றம் கிடைத்தது '
* பிறகு-?" 'போகவில்லை! யாழ்ப்பாணத்திற்குப் போகப் பயந்து போகவில்லை ? ?
= கணவனும் மனைவியும் சிரித்தார்கள்
"ஏன்??? * அங்கே சிங்களவரை மதிக்கமாட்டார்கள் என்ருர்கள்.' "யார் சொன்னது? -சதா தி  ைக த் துப் போய்க் கேட்டான்,
'இல்லை, இப்போது எனக்குத் தெரியும். ஆனல் அந்த நேரம் மற்றவர்கள் சொன்னதை நம்பிவிட்டேன்' இவ்வளவு நேரமும் மெளனமாயிருந்த லலிதா கேட்டாள்: "அங்கே எங்கள் ஆட்கள் வந்தால் சிரட்டையில்தான் தண்ணீர் கொடுப்பார்களாமே? 'இதென்ன பைத்தியக் காரக் கதை? இப்படியெல்லாம் யார் சொன்னது உங்களுக்கு? இந்த எண்ணங்களை நீக்கு வதற்காகவாவது, நீங்கள் ஒருதரம் யாழ்ப்பாணத்திற்கு வந்தாக வேண்டும்!"

ஒட்டுமரி Í5
*நாகதீபத்திற்குக் கடலைத் தாண்டித்தானே போக வேண் டும்?' - நிமாலி கேட்டாள்.
**ஆமாம்' * தம்மதிப? எங்கேயிருக்கிறது?' -லலிதா கேட்டாள்; * தம்மதீப வா? -இவர்கள் மூவருக்கும் விளங்கவில்லை. *இலங்கையோ, இந்தியாவோ தானே, தம்மதீப? அப் படி வேறென்று இருக்கிறதா? -சதா நினைத்தான். என்ருலும், இவர்கள் அது தெரியாம்லா கேட்டிருப் பார்கள்? - அவன் நினைத்ததைக் கேட்டான், 'இல்லையில்லை, அது நாகதீப போல ஒரு சிறுதீவு!' -என் ருள் லலிதா.
'இல்லை- இலங்கைதான் தம்மதீப -அப்படி வேருெரு
தீவு இல்லை' 'உனக்குத் தெரி யாது.'' -லலிதா, நிலாந்தியை முறைத்தாள்,
* ஏன் பிள்ளைகளே சண்டை பிடிக்கிறீர்கள்?' -என்ருர், தாய், **இலங்கைதான் தம்மதீப' -நிலாந்தி மீண்டும் சொன் ஞள் -அலட்டிக் கொள்ளாமல், ஆனல் உறுதியாக,
சதா திரும்பி அவளைப் பார்த்தான்,
6 முதலாந் தவணைக்கு இன்றுதான் நில அளவை-வெளிக் களவேலை- கடைசிப்பாடமாக இருக்கக்கூடும். அடுத்த இரண்டு வகுப்புக்களிலும் அளந்ததை வரைகிற வேலை ஒருபடியாக வேலையை முடித்த திருப்தியோடும் களைப்
போடும், தலையிலிருந்த ஒலைத் தொப்பியைக் கழற்றி விசி
றிய படி கல்லொன்றில் குந்தினன், சதா. காலம் மிக வேகமாக ஒடி விட்டதாகப் பட்டது, அவனுக்கு இன் னும் இரண்டு கிழமைகளில் முதலாந்தவணை முடிந்து

Page 10
ஒட்டுமா
விடும் வீட்டுக்குப் போகிற எண்ணம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. "எப்போது வருகிருய்?" என்று கேட்டெழுதி யிருந்த கடிதத்திற்குப் பதில் போட வேண்டும்: வழக்கம்போல இரத்மலான "ஃப்ளையிங் கிளப்' பைச் சேர்ந்த ஹெலிகொப்டர் தலைக்கு மேலே வானத்தில் வட்டஞ் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ரீங்காரத்தை விட வெறெந்த (சப்தமு மில்லாமல் எங்கும் அமைதி தோய்ந்திருந்தது, "ஃபீல்ட் வேர்க் குக்காக இவர்கள் வந்து நிற்கிற இந்தத் திடலுக்கு எதிரே, சரிவெல்லாம், காட்டுச் சூரியகாந்தியும் தொட்டாற் சிணுங்கியும் மண் டிக் கிடக்கின்றன. நிலத்தின் விளிம்புகளில் ஆங்காங்கே தெரிகிற இடை வெளிகளிலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிற கபூக் கற்கள், எங்கும் பரவி மணக்கிற பச்சைப் புல் வாசனை. மூன்று மணித்தியால அலைச்சலுக்குப் பின் கொஞ்ச ஒய்வு, "இருந்தாச் சரிவராது.வா, போவம்." என்ருன் ராஜா
நல்லகாலமாக, ராஜாவும் சதாவும் ஒரு குறுரப்பில் இருக்க நேர்ந்தது. நரேன் வேறு கோஷ்டி ஒவ்வொரு குழுவிலும் ஐந்தைந்து பேர். இவர்களோடு இன்னும் காமினி, சம் ரக்கோன், சரத். "சரி, வா '-சதா எழுந்து தங்கள் முன் கிடந்த சாமான் களைத் தூக்கப் போனுன். "இவங்கள் எங்கைபோய்ச் சேர்ந்தாங்களோ தெரியேல்லை' ராஜா சிரித்தான்; "சமரக்கோன் அப்போதையே சறுகிவிட்டான். ' பற்றைகளே த் தாண்டிப் பாதைக்கு வந்தபோது ஹொஸ் ரல்பக்கமிருந்து காமினியின் குரல் கேட்டது, இருவரும் திரும்பினர்கள் காமினியும் சரத்தும், "இங்கே வா’ என்று சதாவுக்குக் கையைக் காட்டி கூப் பிட்டான் காமினி, பாதைக் கரையில் தன்னிடமிருந்த செயினையும் ரேப்பையும் வைத்தான் சதா, “ஃபீல்ட் புக் கை மாத்திரம் எடுத்துக்கொண்டு ராஜாவிடம்,

ஒட்டும்ா 17
"நீ இதிலை நில்லடாப்பா, காமினி கூப்பிடுகிருன் - என் னெண்டு பாத்திட்டு வாறன். ' என்றபடி போனுன் , நூறுயார் தூரம்: *ஆனந்தன் ஹொஸ்ரலில் இருக்கிருன், உன்னை வந்து சந் திக்கச் சொன்னன்' என்ருன் காமினி கைக்கடிகாரத்தைப் பார்த்தான் சதா, பதினென்றரை, *சரிமச் சான். நீ ராஜாவைப் போகச் சொல்லு" இன்னும் இருநூறு யாராவது நடக்கவேண்டும். சதா புறப்பட்டான். “இரண்டு லஞ்ச் உனக்கு இன்றைக்கு' என்று சிரித்தான் காமிணி, ' என்ன இருந்தாலும் உன்னைப்போல வருமா? வீட்டுச் சாப்பாடு!' - காமினிக்கு வீட்டிலிருந்தே தினசரி கல்லூரிக்கு வந்து போக முடிகிறது. சொந்த ஊர், மொறட்டுவைதான். வெளிநாட்டுக்குப் போய்விட்ட பீரிசின் மூத்த மகன் லால், தன் நெருங்கிய நண்பனென்றும், பிரிஸ் குடும்பம் தங்களுக்கு தூரத்து உறவினர்கள் என்றும், காமினி சதா வுக்குச் சொல்லியிருந்தான். * சிங்களவனென்னடா, தமிழனென்னடா- இந்த இலங் கையில் ஒருவனைப் பார்த்தவுடனே, அவன் திங்களவனுதமிழன என்று, யாராலுஞ் சரி, சொல்லிவிட முடியுமா? -என்று அடிக்கடி சொல்வான் காமினி, தமிழர்களில் நிறைய அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தான். காமினி யைப் போலவும், பீரிசைப் போலவும் ஒவ்வொருத்தரும் இருந்தால், இந்த நாட்டின் தலைவிதியே வேறு மாதிரி இருக்கும் -என்று சதா நினைத்தான். ஹொஸ்ரலுக்கு வந்தபோது, ஆனந்தன் அறையிலில்லை சாப்பாட்டு மண்டபத்திற்கு போய்க்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும்,
வாடாப்பா. இப்ப அஞ்சாறு நாளா ஆளை யே கரனேல்லை-என்ன சங்கதி?' என்று ன்

Page 11
18 ஒட்டுமர்
சதா நேர்முகப் பரீட்சைக்கு வந்தபோதும், அதன்பின் கல் லூரிக்கு வந்த புதிதிலும் அவனை ருக்” பண்ண முயன்ற இரண்டு பேரில் ஒருவன் ஆனந்தன். சதாவுக்கு இரண்டு வருடம் வினியர். அதோடு அவன் ஐந்தாண்டுக்கால எஞ்சினியறிங் பிரிவுக்காரன். இவ்வளவு இருந்தும், இந் தக் குறுகியகால அளவிற்குள், "வாடா-போடா வரைக் கும் அவர்கள் பழக்கமும் நட்பும் வளர்ந்திருந்தன. ஆனந் தன் பல விஷயங்களில் இவனுடன் ஒத்துப்போகக்கூடியவ ஞக இருந்தான். எத்தனையோ மாலைப் பொழுதுகளை, டீஸெர்ய்ஸா பார்க்கின் மதில்மேல் அமர்ந்தபடி, இலக் கிய சர்ச்சைகளிலும் அரசியல் விவாதங்களிலும் இரு வ ருங் கழித்திருக்கிருர்கள். தன்னுடைய முதல் கேள்விக்குப் பதிலை எதிர்பாராதவனுக ஆனந்தன் அடுத்த கேள்வியைக் கேட்டான், 'இந்தத் தவணையோட நான் ஹொஸ்ரல் விடுறன். அடுத்த "ற்றே மிலை இருந்து அறைதான். இரத்மலானையிலை ஒரு நல்ல அறை கிடைச்சிருக்கு நீ வாறியா என்னுேட?'
சதா ஒரு கணம் தயங்கிவிட்டுப் பிறகு செர்ன்னன்:
எனக்கு இப்பஇருக்கிற இடமே பரவாயில்லையடாப்பா. ' *ஒ1 பரவாயில்லா மத்தா னிருக்கும். சிரித்தான் ஆனந்
தன்.
* எண்டாலும், அந்த இடத்தை விட்டு நீ மாறுறது நல்ல தெண்டுதான் எனக்குப்படுகுது."-இப்ப அவன் குரலில் சிரிப்பு போய், கனம் ஏறியிருந்தது. 'ஏன், நான் அங்கை மாட்டிக்கொள்ளுவன் எண்டு நினைக் கிறியோ??
ஆனந்தனுக்கு சூடேறி விட்டது. "பேய்ப்பகிடி விடா தையடா . இதை நீ ஸிரியஸாகத் தான் சொல்லியிருந்தாலும் ஒண்டை ந ல் லா ஞாபகம் வைச்சுக்கொள்-ஆரோ பெரியவன் சொன்னது மாதிரி,

ஒட்டும்ா 9
இந்த மாதிரிக் கலப்புத் திருமணங்களாலே இன ஒற்றுமை பிறக்காது, பிள்ளைதான் பிறக்கும்3
விடுமுறைக்கு முதல் நாளே நரேனும் ராஜாவும் புறப்பட்டு விட்டார்கள். தான் ஆனந்தனுடன் மறுநாள் வருவதா கக் கூறி சதா நின்றுகொண்டான். ‘இன்றைக்கு வகுப்புகளில்லையா, சதா?'-காலையில் சாப் பிடும்போது, திருமதி பீரிஸ் கேட்டார்.
"இருக்கிறது **இந்த முட்டாள் பிள்ளைகள், ஏன் பாடங்களை வி ட் டு விட்டு வீட்டுக்கு அவசரமாய் ஒடுகிறர்கள்?' லலிதா அங்கே வந்தாள். கையில் ஏதோ து னி  ைய வைத்து தைத்துக் கொண்டிருந்தாள். 'நீ பிந்தி விட்டாய், பிள்ளை.' -திருமதி, பீரிஸ், திரும்பி ம்களைப் பார்த்துச்சொன்னனர், லலிதாசிரித்தாள் . *சரி, சதா புறப்படுவதற்கு முன்பாவது முடித்து விடு' * என்ன?’ என்பது போலப் பார்த்தான், சதா, 'நீங்கள் இந்த விடுதலைக்கு வீட்டுக்குப் போகும் போது தந்துவிட என்று, இவள் மூன்று கைலேஞ்சிகள் தைக்கத் தொடங்கினுள் . ராஜவும், நரேனும் போயாயிற்று, நீ போவதற்கு முன்பாவது முடிக்கச் சொன்னேன்.' *நான் என்ன செய்ய? விடுதலை விடுவதற்கு முன்னுலயே அந்த இரண்டு பேரும் ஒடி விடுவார்களென்று யாருக்குத் தெரியும்? . நான் மத்தியானமே முடித்து விடுவேன்' மாலையில் திரும்பியபோது, சதாவின் அறை மேசையின் மேல், அழகான வெள்ளைக் கைக்குட்டைகள் மூன்று மடித்து வைக்கப்பட்டிருந்தன. மேலேயிருந்ததில், பளிச் சென்று சிவப்பு நூலால் தைக்கப்பட்டிருந்த முதலெழுத் துக்கள்- எஸ். எஸ். ஸை விட மற்றிரண்டிலும் எந்த இனிஷியல்களும் இல்லை. -
9

Page 12
20 ஒட்டும்ா
இதென்னடா, புதுக்கோளாறு. என்றிருந்தது, ஏனே, ஆனந்தனின் நினைவு வந்தது. உடுப்புகளை மாற்றிக்கொண்டு குளியலறைக்குப் போன போது, லலிதாவை எங்காவது காணமுடிகிறதா? என்று கண்களை ஒட்டிஞன். பாத் ரூமுக்கு முன்னுல், சற்றுத் தள்ளி யிருந்த வெளியிடத்தில், நிலாந்தி தேங்காய் உரித்துக் கொண்டிருந்தாள். செங்குத்தாக நட்டிருந்த அலவாங் கில் அநாயாசமாக அவள் தேங்காய்களை உரித்துத் தள்ளிய விதம் அவனுக்குத் வியப்பூட்டியது. தன்னல்கூட அந்த வேகந்தில் உரிக்கமுடியாது என்றுபட்டது,
துவாயால் முகத்தை ஒற்றிக்கொண்டு குளியலறைக்கு வெளியில் வந்தபோது, வாசலுக்கு நேரே, சமயலறைச் சுவர் முடக்கில் நிலாந்தி நிற்பதைக் கண்டான், ஒரு புன் முறுவலுடன் அவளைத் தாண்டிச் செல்ல முற்பட்டபோது. 'உங்களுடைய இனிஷியல் எஸ். எஸ். என்ருல் சரி தானே? -என்ற கேள்வி அவனை நிறுத்தியது. முகமெல்லாம் முறுவலும் அதில் இழையோடிய நாணமு மாய் அவள் நின்ருள். 'ஓம் நீங்கள்?.' -சதர்வுக்கு உருப்படியாக வார்த்தை கள் வரவில்லை. ஒருபடியாய்க் கேட்டான்: 'நீங்கள்தானு அதைத் தைத்தது?' நெஞ்செல்லாம் படபடத்தது. இந்த மூலையில் இவளுடன் தனியே பேச்சுக்கொடுப்பதை யாராவது கண்டுவிட்டால் அது வேறு சரியில்லை. **ஆமாம் நான்தான். '-புன்னகை மாரும்லே அவள் பதில் சொன்னுள். * தாங்ஸ். '-அவன் அவசரமாக அ  ைற  ைய நோக்கி நடந்தான். என்ருலும் அந்தக் கிளர்ச்சி அவன் முகத்தில் தெரிந்துதானிருக்கும். வெகுநேரமாகியும் பதட்டம் அடங்கவில்லை. இனந்தெரி யாத மகிழ்ச்சியும் பயமும் அவனை ஒன்ரு கப் பற்றிக்கொண் -೧೮: -

ஒட்டும்ா 2及
இரவுச் சாப்பாட்டின் போது, பீரிஸ் கூடவே உட்கார்ந் தார். 'இந்த விடுமுறையில் வீட்டில் என்ன செய்வாய்?" “எத்தனையோ வேலைகள் -கூட்டாளிகளுடன் திரிவதிலி ருந்து, வீட்டுத் தோட்டத்தைக் கவனிப்பது வரை. இந் தப் புது வாழ்க்கைக்குப் பிறகு அந்தப் பழைய வாழ்க்கை மீண்டும் புதிதாயிருக்கும்.’’ என்ருன், சதா, *தோட்டங்கூடச் செய்கிருராமா?' -த ள் விரி உ ட் கார்ந்து ஏதோ தைத்துக்கொண்டிருந்த நிலாந்தி எழுந்து வந்தாள். பரிமாறிக் கொண்டிருந்த தாய்க்குப் பக்கத்தில் நின்று ஏதோ சொல்வது கேட்டது திருமதி பீரிஸ் சிரித்தார். ** என்னவாம்?' என்ருர், பீரிஸ். அதற்குப் பதில் செர்ல்லாமல் மகளைப் பார்த்து, "நீயே சொல்லிவிடேன்." என்ருர் அவர் மனைவி. *முடியாவிட்டால் வேண்டாம்" -தாயிடம் பட்டென்று சொல்லி விட்டு அடுக்களைப் பக்கம் சென்று மறைந்தாள், நிலாந்தி, பீரிஸ் திரும்பவும் கேட்டார்: "என்னவாம்?" *சதா தோட்டஞ் செய்வதாகச் சொன்னதும், தன்னு டைய தோட்டத்தில் போடுவதற்காக மரக்கறி விதைகள் கொண்டு வரச்சொல்லிச் சொல்கிருள். திருமதி பீரிஸ் சதாவைப் பார்த்துச் சிரித்தார். * அதைத்தான் உன்னிடமே சொல்லும்படி சொன் னேன். அவள் போய்விட்டாள்!" அன்றிரவு, அதன்பின் அவள் அவன் கண்களிற் படவே யில்லை. குளியலறைக்குப் போகிறசாட்டில் இரண்டு மூன்று முறை சமையலறையைத் தாண்டியதுங் கூட வீணுய்ப் போயிற்று.
S
மூன்று நான்கு மாதங்களின் பின்பு அண்ணனைச் சந்தித்
昌

Page 13
岛盈 ஒட்டுமா
தது தங்கைகளுக்குந் தம்பிக்கும் ஒரே கொண்டாட்ட மாயிருந்தது. "என்ன மாதிரி உடம்பு மெலிஞ்சு போச்சு . ஆயிரந் தடவை சொல்லியிருப்பார், தாய். "அங்கையும், இங்க சாப்பிடுகிற மாதிரித்தான் சாப்பிடு கிறன் .' என்று சொல்லிச் சிரித்தான் சதா,
9
-என்று,
"தண்ணி வாசி, ஒத்துக்கொள்ளேல்லை." அப்பா, 'எப்ப திரும்பவுங் கல்லூரி திறக்கிருர்கள்?" என்று விசாரித்தார். வீட்டிலிருக்கும்போது மேற்சட்டையைக் கழற்றி விட்டு இருக்கிற இந்தச் சுதந்திரத்தை சதா அநுபவித்தான், ரேடி யோவைப் பாடவிட்டு, ஜன்னலடியில் சாய்ந்து, பார்வையை வெளியே - தூரத்தே, மர உச்சி களுக்கு மேல் தெரிகிற விரிந்த வானில்- லயிக்க விடுகிற சுகம் அவன் வழமை, இன்று, இந்த ஜன்னலும் பீரிஸ் வீட்டில் தன்னறையின் ஜன்னலும் ஒரே மாதிரி இருப்பதை அவன் இருந்தாற் போலக் கவனத்திற் கொண்டான். அங்கே அடர்ந்திருக் கிற தென்னை மரங்களுக்குப் பதில் இங்கே மாமரங்கள் சடைத்திருக்கின்றன. * நிலாந்தி என்னசெய்துகொண்டிருப்பாள்? பீரிஸ் குடும்பத்தைப் பற்றி அம்மர்விடஞ் சொல்லவேண் டும்போலிருந்தது எழுந்துபோனன். அம்மாவுக்கு அடுப்படி வேலை மும்முரம், தம்பி - தங்கை கள் பள்ளிக்கு. அப்பா கந்தோருக்கு.
அம்மா நான் போகேக்கை ஒரு போத்தல் ஊறுகாய் கொண்டு போகவேணும். ' "அதுக்கென்ன ராசா. கவனம்ா அன்பாய் பார்க்கிற ஆக்களுக்குக் கொண்டுபோய் குடுக்கத்தானே வேணும்: கொஞ்ச முருங்கைக் காயும் ஆய்ஞ்சுதாறன், கொண்டு போய்க் குடு, அவையஞக்குப் பிடிக்கும் . ' என்ற

ஒட்டும்ா 23
அம்மா, பிறகு கேட்டார்: 'அவையஞக்கு எத்தனை பிள்ளையன்?'
9
'வாடா, கோவிலடிக்குப் போயிருந்து ஆறுதலாகப் பேசு வோம் . ' -என்றபடி செல்வம் பின்னேரம் வந்தான். சிறு வயது முதலே சதாவின் நெருங்கிய நண்பன்: அம்மன்கோவிலடித் தேர்முட்டிக்கு வந்தபோது நிழல் மறைகிற நேரமாய்விட்டது. "எங்கட இந்தத் தேர்முட்டி மாதிரி இடம் வேறை ஒண் டுமே இல்லையடாப்பா. அங்க இருக்கேக்கை ஒவ்வொருநா ளும் பின்னேரங்களிலை இந்த ஞாபகந்தான் வரும்.'சதா தன்னை மறந்து சொன்னன். **இந்தாபார், இந்தளவு உயரமான தேர்முட்டி, சுத்திவர இவ்வளவு பெரிய வயல்வெளி, இந்த மகிழமரம், ஐயர் வீட்டு ரேடியோவிலை தூரத்திலை கேட் கி றபாட்டு, இந் தக்காத்து-இதெல்லாம் வேறை எங்கை இருக்கு?" செல்வம் சிரித்தான்.
ஏனடா சின்னையாவை நீ வரச்சொல்லேல்லையா?* இல்லை ம்ச்சான்; நீ வந்திருக்கிருயெண்டு சொன்னணுனே யொழிய, இப்ப இஞ்ச வரச்சொல்லிச் சொல்லேல்லை ?? செல்வம் தொடர்ந்து கொஞ்சம் ஸிரியஸாகச் சொன்னுன் "...நான் உன்னுேட சில விஷயங்கள் தனியாய்ப் பேசவே ணும். அதுதான். ' ** என்னடா உங்களுக்குள்ளே ஏதுங் கெர்முவலோ?' "சீச்சீ, அப்பிடியொண்டுமில்லை. ஆன அவனை, முன்னுக்கு வைச்சுக்கொண்டு கதைக்கக்கூடிய விஷயமில்லை, இது ' * சரி சொல்லு!"
ஒண்டுமில்லையடாப்பா, வீட்டிலை நான் மெல்ல விஷயத் தைச் சொன்னன்-சரசுவை நான் கல்யாணங் கட்டப்
போறனெண்டு '

Page 14
ஒட்டுமா
o o(o)ge TGVGS) uLufTigerir?” o "ம்ம்! எல்லாருங் குதிகுதியெண்டு குதிச்சினம். "அந் தச் சின்னையனுேட திரியேக் கையே திரியர்தை எண்டு சொன்னதையுங் கேளாமல் திரிஞ்சாய், இப்ப அவன் ரை தங்கையைக் கட்டப்போறனெண்டு சொல்லுருய் எங்கட சாதியென்ன, அவங்கட சாதியென்ன? இப்படியொண்டை நீ செய்தா நாளைக்கு இந்த ஊரிலை நாங்கள் தலைகாட்டி றேல்லையோ?” எண்டு அப்பர் கத்துருர், அம்மா எண்டா, *பிடி, கழுத்திலை கயிறு போடுறன் எண்டு நிற்கிரு ' "அப்ப, சரசு கதை அவ்வளவுதானே?" 'போடா, முட்டாள். நான் அப்பிடியொண்டுஞ் செய்ய மாட்டன். அவளை விடவும் என்னுலை ஏலாது!' ** அப்ப-??? "எப்படியுங் கட்டுறது கட்டுறதுதான் வீட்டிலை வேண்டா மெண்டால், இரண்டு பேரும் எங்கையாவது போறது!" "எங்கையாவது (என்ன, கமத்தோடையே போவன் - வன்னிக்கு?*
**அதுதான் நானும் நினைக்கிறன்' 'அடி சக்கை! எல்லாம் முற்ருக்கிப் போட்டாய். வீட்டுக் காரரை ஒரேயடியா விடுகிற நோக்கமோ?* "சீச்சி, அதென்னகதை? நான் விட்டாலும் அவை விடு வினமே? சும்மா ஒரு இரண்டு வருஷம் கத்துவினம், பிறகு எல்லாஞ் சரியாயிடும்' 'அதுசரி; உன்ர பிளான்களை எல்லாம் சரசுவுக்குச் சொல் லிப்போட்டியோ? அவள் என்னவாம்?' *அவள் எந்த நிமிஷம் எண்டாலும் வரத் தயார்தான்! ஆன, தமையன்தான். '
ஏனடா, சின்னையா என்னவாம்?" *அவன் இதுக்கு எதிர் எண்டில்லை. எண்டாலும் என் னென்னவோ தத்துவமெல்லாம் பேசுறன். '
*" என்னவாம்-???

ஒட்டும்ா 25
'இப்பிடி நானுஞ் சரசுவும் கலியாணங் க்ட்டுறதால்ை சாதிப் பிரச்சினை தீர்ந்து போயிடாதாம். இது, சும்மாஇரண்டு தனி மனுசர் செய்யிற வேலை-ஒரு அவதி அவ்வளவு தான். சாதிப் பிரச்சினையைத் தீர்க்கிறதெண்டா, அதின்ர அடிவேரைத் தேடிப் பிடிச்சு, அதை ஒரு முழு சமூகமாற்ற மாக் கொண்டு வரவேணும்; இது பைத்தியக்காரவேலைஎண் டான். *
'நீ என்ன சொன்னுய்?? *நான் சாதிப் பிரச்சனையைத் தீர்க்கிறதுக்காக இதிலை இறங்கேல்லை, என்னைப் பொறுத்தளவிலை, சாதி எண் டெல்லாமில்லை; நான் பாக்கிறதுமில்லை. ஆன இது என்ர சொந்தப் பிரச்சினை, இதைத் தீர்க்கிறதுதான் என்ர முதல் கவலை-எண்டன். ' "அதுக்கு என்ன சொன்னன்? *எப்பிடியெண்டாலென்ன சேய்யுங்கோ - ஆன இண் டைக்கு இந்தச் சமுதாயம் இருக்கிற நிலைமையிலை, இது தற்கொலை முயற்சி உனக்குஞ் சரசுவுக்கும் மட்டுமில்லைஎங்கடை குடும்பங்கள் இரண்டுக்குங்கூட இதாலை எத் தினையோ பிரச்சினைகள் வரும்-எண்டு சொல்கிருன்'
**լbլb-?** *நான் அதுக்கெல்லாம் தயார்தானடா! நீதான் இவன் சின்னையாவைக்கண்டு இதுகளை ஒருக்கர் எனக்காகச் சொல்லு. ' *சரி எனக்கென்ன-சொல்லிப் பாக்கிறன், இப்ப அவ g-prC3LDIT?' - "தாங்ஸ் மச்சான். இப்ப அவசரமில்லை. ஒரு நாலைஞ்சு மாதம் போகத்தர்ன் செய்யவேணும்' வீடு திரும்பும்போது, எட்டுமணிக்கு மேலாகியிருந்தது; செல்வத்துடன் பேசிவிட்டு வந்த பின் அன்றிரவு முழுவதும் செல்வத்தின் காதலையும் தன் வாழ்க்கையையுமே யோசித்த வாறிருந்தான், சதாடு தான் நிலாந்தியைக் காதலித்தால்

Page 15
26 ஒட்டும்i
இதிலும் மோசமான ஒரு நிலை உருவாகும் என்பது நிச்சய மார்கத் தெரிந்தது, பரம்பரை பரம் ப  ைர யாக த் தமிழர்களாக வாழ்ந்து ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம் என்று வாழ்கிற இன்னுெரு குடும்பத்துடன் சம்பந்தஞ் செய்வதையே சாதி என்கிற பெயரால் தடுக் கிற இந்தச் சமூகம், இனம் மதம் மொழி எல்லாவற் றிலுமே வேறுபட்ட ஒரு பெண்ணை அவன் மணப்பதை அநுமதிக்கத் தயாரா யிருக்குமா?
அவளைக் காதலிக்கிற நினைவு எப்படி மனதில் புகுந்தது? என்று சதா பிரமித்தான் அவனுக்கே புரியாத நடப் பாகி விட்டிருந்தது அது.
*இந்த முரட்டுப் பெண் என்னில் எதைக் கண்டாள்? அவள் என்னை நெருங்க நெருங்க நானும் அவளை நெருங்குவது அதிகமாகிறதே" என்றுணர முடிந்தது, அவனுக்கு. அவள் தன்னில் காட்டுகிற அக்கறைக்கு ‘காதல்’ என்பதை விட வேறேதாவது அர்த்தம் இருக்க முடியுமா? இப்படி இருக்க முடியுமென்று சொல்வது வீண்கதையாகத்தானிருக்கும், ஏனென்ருல், "இது அந்தக் காதலின் முளையே" என்பதை அவனுக்கு அவள் தெரிந்துந் தெரியாமலும் பலதடவை கள் உணர்த்தியிருக்கிருள்.
"இந்த வெள்ளவத்தைக்குப் போய்வர, ஏன் பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நிக்கவேணும், மச்சான்? இங்கயிருந்து மிஞ்சின ஆறுமைல் கூட இராது. நான் சைக்கிளிலையே போயிட்டு வரப்போறன் -என்று ராஜாவுக்கும் நரே னுக்குஞ் சொல்லிவிட்டு சைக்கிளிலையே கொழும்புக்குப் போய் காய்ந்து களைத்துத் திரும்பி வருகிருன் சதா, வீட்டு வாசலடியில் நிற்கிருள், அவள். இ வ னை ப் பார்த்துக் கொண்டுதான் நின் ருளோ என்னவோ-கண்டதும் தாயி டம் போய் ஏதோ சொல்கிருள்,
"என்ன சதா நன்ருகக் களைத்துப் போஞயாம்-நிலாந்தி சொல்கிருள் ஏன், பஸ் ஸில் போய் வந்தாலென்ன??--

ஒட்டுமா ዷ?
என்றபடி தாய் வருகிருர், இவன் அவளைப் பார்த்தபோது, அவளும் இன்னமும் இவனையேதான் பார்த்துக்கொண்டு நிற்கிருள். இன்னுெருநாள்அவளுக்கு ஒரே காய்ச்சல், மூன்று நான்கு நாட்களாகச் சாப்பாடு வேறு இல்லாமலிருக்கிருள். எதையோ எடுப்பிப் பதற்காக சதா யாரையோ கூப்பிடுகிருன் சுரவேகத்தில் கன்றியமுகமும், சோர்ந்த உடம்புமாய் அவள் தா ன் அறைக்குள்ளிருந்து வருகிருள். இவன் பதைத்துப் போய், 'உங்களுக்கேன் வீண்சிரமம்?" என்று கேட்கிருள். சி? ஏன்? நான்செய்யக்கூடாதா?. ' என்கிருள் நிலாந்தி. கல்லூரி விடுமுறைக்காக வீட்டுக்குப் போவதாகச் சொல் கிருன் சதா, திருமதி பீரிசிடம் "ஒரு மாதமா விடுதலை?. ' தாயிடங் கேட்பதுபோலத் திகைத்துப்போய் கேட்கிருள், அவள், கண்களில் ஏக்கம் மிகுந்து நிற்கிறது. -அவற்றிற்கு வேறு அர்த்தங்களே இல்லை. தன் னு ட் கிளர்கிற அந்த இனம் புரியாத தவிப்பை அவன் ரசித் தான். நிலாந்தியை மனமேடையில் நிறுத்தி, அவளுடன் உல்லாசம் சல்லாபம் புரிவதான கற்பனைகளில் விளைந்த சுகம் அவனுக்கு மிக இதமாயிருந்தது. அது புதிய இன் பம், அதன் இழுப்பில் அந்த இன்ப வேகத்தில், அப்போதே பறந்துபோய் அவள் கைகளைப் பற்றி, "நான் உன்னைக் காதலிக்கிறேன்!!-என்று கூவவேண்டும் போல் அவதியுற் முன் அந்தக் கணத்தில், இந்த உலகமே தங்கள் காதலை எதிர்த்தாலும் அதைச் சமாளிக்கிற அசுரபலம் தனக்குள் உயிர்ப்பதை அவன் உணர்ந்தான். அந்த உயிர்ப்பின் உயிர், நிலாந்தியின் விழிச்சுடர்களிலேதான் தோன்று கிறதோ?
鱼直
தூக்கம் எப்போது தழுவிற்ருே- அடுத்தநாள் விழித்த போதுங் கூட, அரைவிழிப்பு நிலையிலும் அவள் நினைவே

Page 16
28 ஒட்டுமா
மனதில் மேவிநின்றது: *எப்போ திரும்பி மொறட்டு வைக்குப் போகலாம்? என்கிற தவிப்பு இப்போதே ஆரம் பமாயிற்று5
பிரிவு, கற்பனைகளையுந் தவிப்பையும் வளர்க்க வளர்க்க, அவன் திரும்புகிற நாட்களைக் கணக்கிடலானுன்
சிவந்த நீ, பொங்கலுக்கும் நிண்டிட்டுப் போகலாமே?* என்று அம்மா கேட்டபோது, *அங்கை வகுப்புகள் தொடங்கேக்கை நிக்கவேணும், ஒரு நாள் இரண்டு நாள் முந்திப்போனக்கூட நல்லது' என்று சொன்னன், *பிறந்து வளர்ந்த வீடு, தாய் தகப்பன், சகோதரங்கள்இவர்களுடன் இருப்பதை விட, யாரோ அந்நியப் பெண் ணுடன் இருப்பதை விரும்புகிறேனே" என்று தன் மேலேயே கோபமும் வந்தது. அவன் புறப்படுகிற நாள் நெருங்க நெருங்க, வீட்டில் கவலைப்பட ஆரம்பித்தார்கள். இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டுமே!
புறப்பட இரண்டு நாட்களுக்கு முன், யாரோ தந்ததர் கக் கொஞ்ச இராசவள்ளிக்கிழங்குகளைக் காட்டி, 'இதையும் முருங்கைக்காய், ஊறுகாய் அதுகளோட கொண்டு போய்க்குடு, ராசா, அவையஞக்குப் பிடிக்கும்' -என்று அம்மா சொன் ஞ,
நிலாந்தி கேட்ட மரக்கறி விதைகளை, ஏற்கெனவே பத்தி ரப் படுத்தி இருந்தான், செல்வத்திடஞ் சொல்லி, அவன் எங்கோ தேடித் தந்தவை. அந்தச் சரையை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாய் இருந்தான்.
புறப்படுகிற அன்று, என்னதான் நிலாந்தியுடன் இருக்கப் போகிறேன் என்கிற உற்சாகம் இருந்தாலும், வீட்டை விட்டுப் போகிறேனே என்ற தவிப்பும் இருக்கவே செய்தது. 'அடுத்த விடுதலைக்கு வாறதுதானே!' -என்று, மற்ற
 

ஒட்டுமா 29
வர்களைத் தேற்றுவது போலத் தனக்குஞ் சொல்லிக் கொண்டான்,
重冕
நரேனும் ராஜாவும் ஏற்கெனவே வந்திருந்தார்கள். பிரிந் திருந்த அந்த ஒருமாத காலத்தின் தவிப்பும் உந்த இங்கே வந்தபின், என்னவென்றில்லாத ஒர் ஆறுதலடைந்தான் சதர், அம்மா தந்திருந்த பார்சல்கள் எல்லாவற்றையும் திருமதி பீரிசிடம் கொடுத்தபோது, ஒரு குழந்தையின் ஆர்வத்து டன் அவற்றைப் பெற்றுக் கொண்டார்டு
* உன் அம்மாவுக்கு, நன்றி சொல்லி ஒரு கடிதம் எழுது வேன், சதா!' இராசவள்ளிக்கிழங்கு அவிக்கிற முறையைச் சொல்லிக் கொடுப்பது பெரும் பாடாயிருந்தது. ஒரும்ாதிரியாக நரேனின் உதவியோடு விளக்கி முடித்தான், லலிதர், கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்: 'இன்று மாலை செய்து பார்.' என்று தாய் சொன்னர் எப்போது அந்த மரக்கறி விதைப்பார்சலை நிலாந்தியிடங் கொடுக்கலாமென்ற அவதியில் இருந்தான், சதா, அவளே வந்து கேட்பாளா, அல்லது தானே கொடுக்கலாமா என் கிற தயக்கம். "நான் கொண்டு வந்தது அவளுக்கு எப்படித் தெரியும்?. நானேதான் கொண்டு போய்க் கொடுக்க வேணும்."
அடுக்களையில் கிழங்கைப் பற்றிச் சொல்லிக் கொண்டி ருந்த போது கூட, நிலாந்திக்காக அவன் கண்கள் அலைந்து கொண்டிருந்தன. கதவுடன் சாய்ந்து நின்று, இவனை அவள் பார்த்த பார் வையில் தெரிந்தது என்ன? கோபந்தான்! -ஆனல் அந்தப் பழைய கோபமில்லை.

Page 17
3υ ஒட்டும்ா
"இவர்களுக்கு கேட்காததையெல்லாங் கொண்டு வந்தது கொடுக்கிருயே, நான் கேட்டதை ஏன் கொண்டு வர வில்லை? -என்று பார்வையாலேயே கேட்கிற கோபம் திரும்பி அறைக்குப் போய் அந்தச் சரையைக் கொண்டு வந்தபோது, சமையலறையில் யாருமே இல்லை. கிழங்கு சீவ, பின்பக்கம் போயிருந்தார்கள். மெல்ல அங்கு போய்ப் பார்த்தான். அங்கும் அவளைக்காணவில்லை. ஏமாற்றத் துடன் திரும்பியபோது, அடுக்களையின் முன் வாசலில், கண் களிற் தெறிக்கும் குறும்பும் ஆர்வமுமாக அவள் நின்றிருந்தாள்! அவன் கையிலிருந்த சரையைப் பார்த்ததும், புன்னகை விரிந்தது. சதா, தயங்கியபடி முன்னல் அடி எடுத்து வைத் தான்; அவளைத் தேடியபோதிருந்த துணிவு இப்போது இல்லை. "தாயிடங் கொடுத்தே கொடுக்கச் செர்ல்லியிருக்கலாம் . அவனைப் பார்த்து அவள் செய்த முறுவல், தயக்கத்தை யெல்லாந் துரத்தி, பழையதென்பை அவனுக்கு ஊட் டிற்று. சரையை நீட்டினன்
தாங்க்ஸ். ?? '..தாங்க், யூ, வெரிமச் .' - அவள் திரும்பவுஞ் சொன் ஞள்.
சிே.நான் சொன்னதை நீங்கள் மறக்கவில்லையே!"
Ο
சொற்களில் குதூகலந் தொனித்தது- "என்னை நீ மறக்க வில்லையே!" என்பதைப் போல, அறைக்கு வந்து ஐந்து நிமிடங்சுட ஆகியிராது. பீரிஸ், கதவைத் தட்டியபடி உள்ளே வந்தார். 'சதா! என்ன இது?. நீ தந்த கிழங்கு என்ன, சாப் பிட முடியுமா?- இங்கே வந்து பார்.' அடுக்களைப் பின் முற்றத்திற்கு வந்தபோது, லலிதா ஒரு கல்லில் உட்கார்ந்து, கன்றிச் சிவந்த புறங்கைகளேத்
 

-ത്ത
ஒட்டுமா }
தேய்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தன. சதாவுக்குப் புரிந்து விட்டது.
'இதென்ன, இது? பார்த்தாயா. அதை வெட்டிய நேரத் திலிருந்து கையைச் சொறிகிறதென்கிருள்! இதை எப் படி வெட்டுவது? எப்படிச் சாப்பிடுவது?"
"ஐ ஆம் ஸொறி, மிஸ்டர் பீரீஸ். நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும்- இந்தக் கிழங்கு இப்படித்தான். உள்ளங்கையை விட வேறெங்கு பட்டா லுஞ் சுணைக்கும், கவனமாக வெட்டும்படி சொல்ல ந்ான் மறந்துவிட்டேன்." -ஒரு தோலை எடுத்துத் தன் உள் ளங் கையில் எடுத்துத் தேய்த்துக் காட்டினன் சதா, "அதுசரி, இதை எப்படிச் சாப்பிடுவது?" "தோலைச் சீவிவிட்டு அவித்தால், பிறகு இப்படி இருக் காது. ' **இந்தச் சுணைக்கு என்ன செய்யலாம்?' என்ருள் லலிதா.
"கொஞ்சத் தேங்காயெண்ணெய் எடுத்துத் தடவுங்கள்சரியாகிவிடும். ' என்று சதா சொல்லும்போதே,
**வேணும், வேணும்! உனக்கு நன்முக வேணும்!. '- என்று கத்தியபடி வந்தான் ரஞ்சித்
'சதா, எனக்கு ஒரு கிழங்கு வாங்கித் தாருங்கள். இவள் என்னுேடை சண்டைக்கு வருகிற நேரங்களில் தேய்க்க 6) Th!””
சிரித்தபடி திரும்பியபோது திருமதி பீரிஸ் சொன்னர்: *சதா, நிலாந்திக்குக் கொடுத்த மரக்கறி விதைகளையும் நீயே கொஞ்சம் போட்டுக் கொடுக்கிருயா இவள் செய் ததுபோல் அவளும் ஏதாவது. ' 'சதாவுக்கு வீண் சிரமம். ' என்ருர், பீரிஸ் " சிரமமா?' சதா தோட்டத்தை நோக்கிப் போஞன்,

Page 18
32 ஒட்டுமா
பாரையால் குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்த நிலாந்தி கேட்டாள் மெதுவாக: 'உங்கள் வீட்டில் பெரியதோட்டம் இருக்கிறதா? "ஒ இவ்வளவு பெரியது . '-அவர்களின் கொல்லைப்புற வளவைக் காட்டினுன். *மாமரங்கள் எல்லாங்கூட, அதற்குள்ளேதர்னு? 'நிலாந்தி என்ன கேட்கிருள் சதா?' என்றபடி பீரிஸ் வந்தார்.
சதா சொன்னன். 'யர்ழ்ப்பாணத்து மாம்பழத்துக்கு எப்படித்தான் அந்த ருசி வருகிறதோ!' என்ருர் பீரிஸ், 'இம்முறை உங்களுக் கொஞ்சப்பழம் கொண்டுவரத்தான் நினைத்தேன். ஆனல் இது ஸிஸனில்லை." சதா சொன்னன்? * . அடுத்த விடுதலைக்குப் போய் வருகிறபோது, நல்ல மாம்பழங் கிடைக்கும்" i * சதா, அதோபார். ஒருமாங்கன்று நிற்கிறதல்லவர்.?' -பீரிஸ் காட்டினர். சதாவுக்குத் தெரியும்; திரும்பிப் பார்த்தான். எப்போதோ, எப்படியோ முளைத்த கன்று, அது அவர்கள் மிகக் கவனமாகப் பார்த்துங் கூட, அது நாலைந்து அடிக்குமேல் வளராது, கருளை அடித்து நின்றது: '.அது நன்ருக வளருந்தானே?" ‘ஓ! வளரும். ஆனல், இப்படியே வளர்ந்தால் பழம் ருசி யாய் இராது.'
'பழம் ருசியாய் இருக்காதா ஏன்?" 'ஒட்டு மாம்பழந்தான் ருசிக்கும், ஒட்டாத மரத்துப் பழம் அவ்வளவு நல்லாயிருக்காது' 'ஒட்டென்ருல்? . இன்னுேர்இனத்தைஇதில் ஒட்டுவதா?' **ஆம்ாம் இரண்டு இனங்களை ஒட்டும்போதுதான், பழம் சுவையாயிருக்கும்.

ஒட்டுமரி ᎦᏰ
இதைச் சொன்னபோது, அவன் கண்கள் நிலாந்தியின் கண்களைச் சந்தித்தன, அவள் கண் களி ல் மின்வெட் டொன்று ஒளிர்ந்ததை அவன் கண்டான்.
13
5 T2s) ஆறுமணிக்கெல்லாம் ஆலையில் சங்கொலி கேட்கும். சதா கண் விழிப்பதற்கும், ஜன்னலருகில் ஒர் இரும லொலி-மெல்ல செருமுவதுபோலக் - கேட்பதற்குஞ் சரி யாயிருக்கும்3 ஜன்னலைத் திறந்தால், காய்கறிப் பாத்தியின் மூலையிலிருக்கும் மல்லிகைப் புதரின் பக்கத்தில், நைட் கவு ணும் விரிந்த கூந்தலுமாய் நிற்கும் நிலாத்தி வனமோகினி போலத் தெரிவாள்.
"நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி!” -என்று அவனை எண் ணிக்கொள்ளச் செய்கிற கோலம், அந்தச் சிரிப்பு-இரவு பதினெருமணியிலிருந்து காலை 6 மணிமட்டும் பிரிந்திருந்த வேகத்தின் விளைவு-பூரித்து வருகையில், தன் முன் இன் னுேர் இன்பநாள் விடிந்து வருவதான உற்சாகம் அவனுள் பீறிடும். அடுத்த நிமிடம், அறைவாசலில் தேநீர்க்கோப்பை யும் கையுமாய் அவள் நிற்பாள். பல்துலக்க பிரஷ்ஷ"டன் பின் முற்றத்துக்குப் போனல், தேங்காய் உரித்தபடி அல் லது காய்கறி ஆய்ந்தபடி நிலாந்தி.
குளித்துவிட்டு கல்லூரிக்குத் தயாராய் நரேனுடனும் ராஜா வுடனும் சாப்பாட்டு மேசைமுன் வந்தமர்கிறபோது, மற்ற இருவருக்குந் தெரியாமல் அறை மூலையில் நின்று அவனைக் கவ்வுகிற விழி வீச்சுக்கள்! சாப்பிடமுன்பே வயிறு நிறைந்த மாதிரி!
அறைக் கதவைத் தாண்டித புத்தகக் கட்டுடன் புறப்படு கிறபோது, அந்த ஏக்கந் தேங்கிய பார்வை-எட்டும்னி நேரப் பிரிவே என்ரு ? சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வாச லருகில் வரும்போது, லஞ்ச்" பார்சல்களை அவனிடமே கொடுக்கக் காத்திருக்குந் துடிப்பு.

Page 19
$4 ஒட்டுமா
'இது உங்களுக்கு-வெஜிடபிள்' மேலே 'எஸ்' போட் டது' என்னும்போது வருகிற அந்தக் கவனம், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனருகில் மெதுவாகச் சொல்லும் அந்த செரியோ"விற்குத்தான் எவ்வளவு சக்தி கல்லூரியில் அவனுக்குப் பாடத்தில் மனம் பாதிதானிருக் கும். இதை சதா ஒருநாள் அவளிடஞ் சொன்னபோது வந்ததே கோபம்! "நீங்கள் இங்கு வந்தது காதல்பண்ண அல்ல; படிக்க வகுப்பு நேரங்களிலாவது என்னை மறக்க லாமே?' -மனதுள் சிரித்தபடி இதை நினைவுக்குக் கொண்டு வரும்போதெல்லாம், பாடத்தில் கவனம் செலுத்த முனை ଈunt ଖାଁt. * லஞ்ச்" பக்கெட்டைப் பிரிக்கையில், "என்னடா, உனக்கு மட்டும் இறுக்கிக் கட்டியிருக்கா? -என்கிற ராஜாவின் கேள்வி. இந்தப் பயல் தெரியாமல்தான் கேட்கிருன?"
என்ற சந்தேகம் எழும்.
'நரேனுக்கும் ராஜாவுக்குமாவது சொன்னுலென்ன?' என்கிற கேள்விக்கு நிலாந்தி சொன்னது: 'இப்போதைக்கு ஒருத்தருக்குஞ் சொல்லவேண்டாம்; எங்க ளுடனேயே இருக்கட்டும்' சதாவுக்குத் தனி அறை என்பதால் எல்லாமே வசதியா யிருந்தன. நிலாந்தி வந்து பேசிக்கொண்டிருக்கும் இடம், நரேன்-ராஜாவின் அறையிலிருந்து பார்த்தால் தெரியாது. சகோதரிகளுக்கோ அல்லது பெற்ருேருக்கோ இவர்கள் பழக்கத்தில் எதுவித சந்தேகமும் ஏற்படாதபடி நிலாந்தி நடந்துகொள்கிற அந்தச் சாதுரியம்! எப்போது கல்லூரி முடியும் என்று துடித்துக்கொள்வான். கட்டுபத்தை சந்திவரை நண்பர்களுடன் வருபவன், சந்தி வந்ததும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி நின்று, ஒரு 10 சதம் சொக்லட் வாங்கிக்கொள்வான். இவன் வரவுக்காக அவள் பார்த்திருப்பாள்- வெளிவிரு ந் தையில், கையில் பூவேலை நூலும் துணியுமாய் - தையல் செய்கிற கோலம்,

ஒட்டுமா 8 ፩
ஒவ்வொரு நாளும் மாலை வேளை களி ல் லலிதா தான் தேநீர் கொண்டு வருவாள். முகங் கழுவுவதற்காக இவன் ஆறுதலாகத்தான் பாத்ரூமுக்குப் போவான் - நரேனும் ராஜாவும் சாவகாசமாக டீ குடித்துக்கொண்டு, அன்றைய கல்லூரிப் புதினங்களைப் பீரிஸ் வீட்டாரோடு பேசிக் கொண்டிருப்பார்களே, அப்போது, அடுக்களைக்கும் குளிய லறைக்கும் இடையேயுள்ள அந்த இடத்தில் ஏதோ வேலே யாய் நிற்பவள்போல நிற்கும் நிலாந்தி!
தன் கையிற் தயாராயிருக்கும் சொக்லட்டை அவள் கைக் குள் பொத்திவிட்டு பாத் ரூமுக்குள் நுழைந்தால், இவன் துவாயால் முகத்தைத் துடைத்தபடி வெளியே வருகை யில் கண்களில் கொப்புளிக்கும் குறும்பும் கையில் பாதி கடித்த-கடிக்கத்தான் வேண்டுமென்று அவன் சொல்லி யிருந்தான்-சொக்கலட்டுமாய் அவள் நிற்பாள். அதை இவன் கையில் திணிக்கும்போது தருகிற அந்தக் கிள்ளல், சொக்லட்டிலும் இனிக்கும்!
கையில் ஒரு புத்தகமும் பென்சிலுமாய், ஜன்னலடியில் கதிரையை இழுத்துவிட்டு உட்கார்ந்திருந்தானணுல்; கருக் கிட்டு வரும் வரையில் தோட்டத்தில் அவளும், கதிரையில் இவனுமாய் - மணித்துளிகள் இன்பத்தை வாரித் தெளித் துக்கொண்டு கழியும் ரஞ்சித்துட்ன் பட்மின்ரன்" விளை யாடுகையிலோ, பீரிசுடன் அரசியலை அலசுகையிலோ, பார் வியாளர் வரிசையில் அவளிருந்து இவன் விழிகளுடன் மோதிக்கொண்டேயிருப்பாள். 'த்தரைமட்டும்--ராஜா, நரேன் படித்துவிட்டுப் படுக்கும் வரை-பீரிஸ் வீட்டாரும் படுக்கைக்குப் போகும்வரை*தா படித்துக்கொண்டிருப்பான். நிலாந்திக்கும், சமைய சிறையில் ஏதோ வேலையிருக்கும். படுக்கு முன், இவன் 'திருமுக்குப் போகும்போது வழக்கமான இ ட்த்தி ல் அவள் நிற்பாள்,
ஓ! அது பிரம்ம வேளை ! இன்னும் ஏழுமணி நேரப் பிரிவு-"தூங்கவேண்டுமே" என் கிற தவிப்புடன் இருவரும் பிரிகையில் பதினெருமணிக்கு மேலாகி விட்டிருக்கும் ۔*
o

Page 20
6 ஒட்டும்ா
தவிக்கிற நீண்ட இரவின் பின் இன்னேர் இன்பநாள் விடி պլb! அவளின் அழகிலும் குணமே அவனைக் கவர்ந்தது. அக்கா ளுந் தங்கையுங் கூட இருந்தாலும், வீட்டுவேலையெல்லாம்சமையல், தையலிலிருந்து மாடு பார்ப்பது வரை - தன்மே லிழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிற சுறுசுறுப்பு. தன் னளவிலே ஒதுங்கியிருக்கிற தன்மை, அநாவசியமான பேச் சுப் பகிடியில்லாத அடக்கம். ஏன்?-அந்தக் கெடுபிடி, முரட்டுத்தனங்கூட அவனுக்கும் பிடித்திருந்தன. தன்னுள்ளே கனநாளர்ய் அரித்ததை ஒருநாள் கேட்டான்: ** என்மீது உனக்கெப்படி "இன்ட்ரெஸ்ட் வ ந் த து, நிலாந்தீ ??
அவள் நாணிச் சிவந்துபோனுள். "ஒரு காரணமா, சொல்ல?' * சரி; எப்போது ராஜா நரேனிலும் பார்க்க நான் வித்தி யாசமானவனக உனக்குப்பட்டேன்? அதையாவது சொல் லேன்-???
ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொன்னுள். சிெ அதைச் சொல்லலாம்; சொல்லவும் வேண்டும். ரஞ்சித் தனக்குத் தமிழ் தெரியுமெண்டு சொன்னனே ஒருநாள்ஞாபகமிருக்கிறதா.?'
"ம்ம்? அன்றைக்கு?
*1. நினைத்துப் பாருங்கள் என்ன நடந்ததென்று?'
重4
இரவுச் சாப்பாட்டு நேரம், சதா, நரேன், ராஜா-மூவருடனும் பீரிசும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிருர், திருமதி பீரிஸ் பரிமாறுகிருர், பிள்ளை கள் நால்வரும் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறர்கள், *ராஜர் சிங்களம் படிப்பது எந்த மட்டிலிருக்கிறது? .' பீரிஸ் சிரித்துக்கொண்டே கேட்கிருர், 1 ܥ

SSSS
ஒட்டும்ா 37
*1. சதா படிக்கிற வேகம் போதும் ராஜாவும் அப்படித் தானு?' ராஜா விழிக்கிருன் அவன் விழிப்பதைப் பார்த்து நரேன் சிரிக்கிறன். பீரிஸ் தொடர்ந்து சொல்கிருர், ராஜாவின் பதிலை எதிர் பார்க்காமலே, 'பிள்ளைகள்! இவர்கள் சிங்களம் படிக்கிறதுபோல, நீங்க ளுந் தமிழ் படிக்கத்தான் வேணும்.' 'ரஞ்சித்துக்கு சிங்களமே சரியாகத் தெரியாதே!'-லலிதா ரஞ்சித்துக்குச் சூடுபோடுகிருள். * எழுத, வாசிக்கத் தெரியாவிட்டாலும், பேசவாவது பழ கிக்கொள்ளுங்கள்-ராஜா, சதா, நரேன் எல்லோரும் இருக்கிருர்களே கேட்டுப் படியுங்கள் ' -தகப்பனர் முடிக்கமுந்தியே, ரஞ்சித் ஒரு குழந்தைத் தனமான ஆர்வ அவதியுடன் துள்ளி எழுகிருன்?எனக்குக்கூட இரண்டு தமிழ்ச் சொற்க்ள் தெரியுமே!’ ** என்ன, அது?'-பீரிஸ் கேட்கிருர், 'தலை!. '-கொச்சை உச்சரிப்புடன் உஷாராகச் சொல் கிருன் ரஞ்சித். * அது என்ன?' - தாய். "ஒழு வ. ' - நரேன் விளக்குகிறன். சிம்ம். மற்றச்சொல் என்ன? - பீரிஸ் மீண்டுங் கேட்கிருர் . '. ' - ரஞ்சித் முடிக்கவில்லை: ராஜாவும் நரேனும் வாய்க்குள்ளிருக்கிற சாப்பாடு சிதறுகிற மாதிரிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். சதாமட்டும் அமைதியாக இருக்கிருன், பீரிசின் முகம் சிவக்கிறது. கத்துகிருர்'ரஞ்சித்! மூடுவாயை!' "ஏன்? என்ன?. ’-தாய் திகைத்துப்போய் கேட்கிருர், சகோதரிகள் புரியாமல் விழிக்கிருர்கள்.
3

Page 21
38 ஒட்டுமா
'அது ஒரு கெட்ட வார்த்தை , தூஷணம் '-பீரிஸின் கோபம் மாரு மலே இருக்கிறது. 11.ஸொறி, பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்' "பரவாயில்லை; அர்த்தம் புரியாமல் சொன்னதுதானே." -என் கிருன் சதா. நரேனும் ராஜாவும் சிரிப்பை அடக்கி முடிக்கிற வேளையில், குற்ற உணர்வோடு தலைகுனிந்து நழுவுகிருன், ரஞ்சித் அன்று மத்திய னமே சதா வீட்டுக்கு வந்துவிட்டான். "என்ன சதா, வகுப்பில்லையா? எங்கே நரேனும் ராஜா வும்?' - திருமதி பீரிஸ் கேட்டார். சதா பதில் சொல்ல வாயெடுத்தான். "அதென்ன, கையில் கட்டு?'-அதற்குள்ளே அ ங் கே வந்த நிலாந்தி கத்தியபோதுதான், த ரா ப் சதாவின் கையைக் கவனித்தார். ** அதென்ன பிள்ளை, கையில்?'-திருமதி பீரிஸ் பரபரப் புடன் முன்னுல் வந்து அவன் கையை மெதுவாக எடுத் துப் பார்த்தார். உள்ளங் கையைச் சுற்றிப் 'பன்டேஜ்", சதா சிரித்தான். 'ஒன்றுமில்லை; முள்ளுக்கம்பி கீறிவிட்டது . " - காலையில் கல்லூரிக்குப் போகும்போது, வழியில் வந்த எருமைமாடு சைக்கிளோடு தன்னையும் மோதி வேலிமேல் வீழ்த்திய கதை யைச் சொன்னுன். 'ஐயையோ! பிறகு என்ன செய்தாய்?" 'லுணுவ ஆஸ்பத்திரிக்குப் போய், ஏ. ரி. எஸ் ஊசி போட் டுக்கொண்டேன் அவர்கள்தான் இதையுங் கட்டினுர்கள்' * ஐயோ ஊசிகூடப் போட்டாயா?. உன் அம்மாவுக்குந் தெரிந்தால். ' *காயம் பலமா? பாாழப்ப்போன எருமை!' கண்ணுற் காணுத அந்த எருமையையும் அதன் சொந்தக்காரனையும் திட்டித் தீர்த்தாள், நிலாந்தி,

ஒட்டுமா 39
"பழைய கம்பியா வெனிவல் கட்ட அவிக்கிறேன் - குடிக் கிருயா? அது நல்லது' அம்மா மாதிரியிருந்தது. அந்தப் பாசமுந் துடிப்பும், அவன் புன்னகைத்தான். 'என்ன சிரிக்கிருய், குடிக்கிருயா?' "ஐயோ, கசக்குமே எப்படிக் குடிக்கிறது?" எ ன் ரு ள், நிலாந்தி,
சதாவுக்குப் புரியவில்லை.
'அதென்ன, அது?' 'மஞ்சளாய், தடிப்பாய், வேர்மாதிரியிருக்கும். அவித்துக் குடித்தால் நல்லது.' "ஓ! மரமஞ்சள்" மாலையில், பீரிஸ் வந்ததும், ஆர்ப்பாட்டம் அதிகமாகி விட்டது. சதா விழுந்தது எப்படி என்று ராஜாவும் நரே னும் விவரித்தார்கள், ஊசிபோட்ட இடத்தைப் பார்த் தார் பீரிஸ். ', 'இரண்டு நாளுக்குக் குளியாதே' 'இரண்டு நாளுக்கா? * ஊசிபோட்ட இடத்திற்கு ஒத் தடங் கொடுத்தால் நல் லது, இல்லையா?'
-என்ருர் பீரிஸ் மனைவியிடம், **ஆமாம்! என்னுடைய முட்டாள் தனம் - அப்போதே கொடுத் திருக்கலாம். ' 'பிள்ளை, பேசினில் வெந்நீரும் பழைய துண்டுங் கொண்டு 2 صصے GalfT"P இவ்வளவு நேரமும் சதாவின் கையைப் பார்த்தவாறு
நின்றிருந்த நில சந்தி, சகோதரிகளை முந்திக்கொண்டு உள்ளே ஓடினள், * 。

Page 22
49 ஓட்டுமா
அவள் ஒடுவதைப் பார்த்தபடி நின்றன், சதா ‘எப்படி இருந்தவள், எப்படி மாறிவிட்டாள்! வந்த புதிதில், எடுத்த தற்கெல்லாம் எங்களுடன் சண்டை போட்டுப் பயமுறுத் திக்கொண்டிருந்த நிலாந்திதான , இவள்?"
அவர்களின் மாமன்- திருமதி பீரிசின் ஒன்று விட்ட தமை யன் - கண்டியிலிருந்து வந்திருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவன் நினைவுக்கு வந்தது.
அந்த மனிதருக்கு தமிழ் நன்முகப் பேசத்தெரியும். பேசி ணுல் சிங்களவரென்று யாருஞ் சொல்ல முடியாத படி, மலே நாட்டு உச்சரிப்புடன் மளமளவென்று பேசியதுடன், தியா கராஜ பாகவதரின் அந்தக் காலப் பாட்டுகளிலும் ஒன் றிரண்டு தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். மூன்று தமிழ்ப் பையன்களை இங்கு கண்டதால் மிகுந்த உற்சா கம்; தன்னுடைய தமிழ் அறிவை அவர் இவர்களுக்குக் காட்ட ஆரம்பித்தார். சிரிப்புங் கும்மாளமுமாய் ஐந்து நிமிடங்களாகியிராது
அறைக்கதவை யாரோ தட்டினர்கள். சதா போய்ப் பார்த்தான். நிலாந்தி நின்று கொண்டிருந்தாள்,
"அங்கிள் இருக்கிருரா?'
* அங்கிள்' போனுர்,
** அங்கிள், கொஞ்சம் மெதுவாகவே பேசுங்கள். இப்படி தமிழில் உரத்துப் பேசினுல் இங்கு அக்கம் பக்கத்தில் உள் ளவர்கள் என்ன நினைப்பார்களோ?*
-அவள்தானு, இவள்? நான் தமிழன்; தான் சிங்களத்தி என்றதெல்லாம் இப்போ மறந்து விட்டதா? அல்லது தன்னை விரும்புவதால், நான் என் சுயத்தை இழந்து தங் களினத்தவனுகி விடுவே னென்று எதிர்பார்க்கிருளா? எவ் வளவு பெரிய விஷயத்தை அவளுடன் பேசி முடிவெடுக் காமல் இருந்து விட்டேன் -எனத் திகைத்தான், சதா, ‘எப்படியாவது கூடிய கெதியில் இந்த விஷயத்தைப்பேசி

ஒட்டுமா 41
முடிவெடுத்து விடவேண்டும்" என்கிற முடிவுடன், அதற் கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தான், அவன்.
6 இறுதிப் பரீட்சைக்கு இன்னமும் ஒரு மாதந்தானிருந்தது) 'இரண்டு மாதந்தான் மீதி, இன்னமும்!.' - என்று போன மாதம் நிலாந்தியிடஞ் சொன்னபோது, "ராஜா, நரேன் மாதிரி இல்லையே, நீங்கள்? அவர்கள் தான் எக்ஸாம் முடிய ஊருக்குப் போய் விடுவார்கள் உங்களைப் படிப்பித்தது, உங்கள் டிப்பாட்மென்ற் தானே? பரீட்சை முடிய வேலைக்குப் போகவேண்டியிராதா? -அவள் அவதியுடன் கேட்டாள், "எக்ஸாம் முடிந்து அடுத்தநாளே வேலைதான்." "குறைந்தது நாலு வருடமாவது கொழும்பிலிருக்க விடு வார்கள்- இல்லையா?" *ஒ! உன்னைக் கட்டிக்கொண்டுதான் ட்ரான்ஸ்ஃபரில் போவேன்' - அவன் சிரித்தான். ராஜாவும், நரேனும் பரீட்சை முடிய ஊருக்கு திரும்பி3 வேலை கிடைக்கு மட்டும் அங்கேயே தங்கப் போவதாகப் பீரிசிடங் கூறியபோது, அவர் திடுக்கிட்டார்டு
காலந்தான் எவ்வளவு வேகமாய்ப் போகிறது. அதற் குள் நீங்கள் திரும்புகிறீர்களா? நீயாவது இருப்பாய்இல்லையா, சதா?’’ சதா, தன் முடிவைச் சொன்னன். ?ஒகே! நீ கொழும்பில் வேலைபார்க்கும் வரை இங்கேயே இருந்துகெர்ள், அதுதான் எங்களுக்குஞ் சந்தோஷம்!'
12
* சதா, எக்ஸாமுக்கு இன்னும் ஒரு கிழமைகூட இல்லை யடா! நீ இப்பிடியே இருந்தா என் ன செய்கிறது?" -- என்ருன், ஆனந்தன்.

Page 23
42 ஒட்டுமா
இரத்மலானையிலிருந்த ஆனந்தனின் அறை, அது, எங்கோ வெளியிலிருந்து வந்து கட்டிலின் மேல் சம்மணம்போட்டு அமர்ந்தான், அவன்,
'டேய் நீ அந்த வீட்டை விட்டு வந்து மூண்டுகிழமை யாச்சு பைத்தியக்காரன் மாதிரி இப்பிடியே யோசிச்சுக் கொண்டிருந்தா. ? எழும்பிப்படி! எக்ஸாமுக்குப் பிறகு ஏதாவது வழிபாப்பம்'
* எப்பிடியடா, படிக்கிறது? படிக்கிற நிலைமையா? இது'
* அப்பனே, நிலைமை யைப் பார்த்துக்கொண்டிருந்தாய் எண்டால், எக்ஸாம் முடிஞ்சு போகும். ஏதோ மன தைக் கட்டுப்படுத்திப் படிக்கப்பார். அதுவும் நீ வெறும் ஆளில்லை-வேலையிலிருந்துகொண்டு ஃபெயிலாப் போன, பிறகு வீண் பிரச்சனையாயிடும்'
சதா, பதில் பேசவில்லை. பெருமூச்சு விட்டு விட்டுப் பேசாம லிருந்தான். * நீ யோசியாதை சதா, நிலாந்தியைத் தனியா சந்திக்கிற துக்கு காமினி ஏதாவது வழிசெய்துதாறனெண்டு நேற் றுச் சொன்னவன்தானே!. எக்ஸாமுக்குப் பிறகு வீட்டை போய் வரேக்கை, உன்னுடைய பக்கத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டுவா. உன்ர அம்மா அப்பா-ஆவது சரி யெண்டா, அரைவாசிப் பிரச்சினை தீர்ந்ததுமாதிரி. ' 'மச்சான், அவளின்ர தாயுந் தகப்பனுங்கூட கட்டாயம் சம்மதிப்பினம் எண்டுதானே இரண்டு பேரும் நம்பியிருந் தம்! அதிலும் மிஸ்டர் பீரிஸ் பேசுகிறமாதிரி. ! அந்தாள் சொன்ன கதையளிலையிருந்து, நரேன்கூட என் னைப் பகிடிபண்ணுவான்-உன்னை அமத்தப்போகினமடா, கவனம்" -எண்டு. ஆணு ?'
-சதா தொடர்ந்தான்:
* உனக்குத் தெரியுமா, மச்சான் -சிலவேளை உனக்குக் கூடச் சொல்லியிருப்பன் - முந்தி ஒருக்கா, ஒரு இங்லிஷ்

ஒட்டும்ா 43
பேப்பரிலை ஒரு "ஃபோரம் -கருத்தரங்கு-வந்தது, ஞாப கமிருக்கா? இன்ர ரேஸியல் மரீஜஸ் -இனக்கலப்புத் திருமணங்கள் பற்றி?
*அதிலை, தமிழர் - சிங்களவருக்கான திருமணங்கள், சாதாரணமா நடக்கவேணுமெண்ட மாதிரிப் பலபேர் எழு திக் கொண்டு வந்தினம். எனக்கு அதிலே நல்ல ஆர்வமா யிருந்தது. மிஸ்டர் பீரிஸ்கூட அதைத் தொடர்ந்து படிச்சு வந்தார். அதைப்பற்றி- அதுக்காக - என்னுேட பேசு வார் என்னைப்பொறுத்த அளவிலை, நான் சொல்லுவன்*அது சரிதான், நீங்கள் சொல்லுறது எண்டாலும் அப் பிடி எல்லாருஞ் செய்யிறதாலை இரண்டு இனங்களுந் தங் கள் தங்கட தனித் தன்மையைக் காப்பர்ற்ற முடியாமல் போயிடும். இரண்டு இனங்களும், தங்களுடைய தனித் தன்மைகளைக் காப்பாத்திக் கொண்டு இணைஞ்சிருக்கிறது தான் நல்லது- வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது போல, இதுக்காக, நான் கலப்பு மணங்களே வேண்டா மெண்டு சொல்லேல்லை! விரும்புகிறவர்கள் எல்லாரும் அப்பிடிச் செய்ய சுதந்திரம் வரவேணும். ஆனல், எல்லா ருக்கும்ே கட்டாயமா வைக்கக் கூடாது! எண்டு.
*அதுக்கு, மிஸ்டர் பீரிஸ் சொல்லுவார் - சரிதான், சதா: ஆனலும் நீ அண்டைக்குச் சொன்னியே-ஒட்டு மாமரம்? அதைப்போல இனங்களுஞ் சேர்ந்தால்தான் நல்ல மனித இனம் உருவாக முடியும். எங்கட இந்த இலங்கையிலை, அடுத்த சந்ததியும் அதற்கடுத்த சந்ததிகளும் புதுவலிமை யும் திறமையுமுள்ளவர்களாகி, எங்கட நாட்டைச் சொர்க்க மாக்க முடியும்!
** என்னைப் பொறுத்த அளவிலை, எனக்கு இரண்டு சந்தே கங்கள் அப்ப-மிஸ்டர் பீரிஸ் இப்படிச் சொன்ன போதுவந்தது: ஒண்டு நரேன் சொன்னதுபோலை என்னே "மடக்கத் தான் இப்பிடிப் பேசுகிருரோ எண்டு. மற்றது: "நான் தமி ழன்’ என்கிறதாலை எழுந்த சந்தேகம்இப்பிடிக் - கட்டாயக் கலப்பு மணங்கள் வந்தா சிங்கள இனம் தன்ர சுயத்தை

Page 24
44 ஒட்டுமா
இழக்கிறதிலும் கெதியா, தமிழினம் தன்ர சுயத்தை இழந் திடும். என்னதான் நல்ல மனிதராயிருந்தாலும், பீரிஸ் தன்ர இனத்தின்ர நன்மைக்காகத்தர்ன் இப்பிடிப் பேசு ருரோ எண்டு நினைச்சன்**ஆணு, இப்ப பாரடா-அவரே சொல்ருர்: 'சதா, நீ தமி ழன்; நாங்கள் ‘சிங்களவர் எண்டு என்ன மாற்றம்-பாத் தியா?. உபதேசம் ஊருக்கா?' * 'இல்லை மச்சான்; என்னுலை அவரை விளங்கிக்கொள்ள முடியும்போல யிருக்கு அப்பிடியான ஒரு மாற்றத்தை, முழுச்சமூக தேசிய மாற்றமாகவே மிஸ்டர் பீரிஸ் எதிர் பார்த்திருக்கவேணும். ஆணு அந்த முயற்சியைத் தனியத் தான்மட்டும் செய்தா, அது ஒரு பைத்தியகாரத்தனமாகி விடும் என்று அவர் நினைச்சிருக்கவேணும். ஏன், அண்டைக் குத் தன்ர நிலைமையைப் ப்ற்றி அவர் சொல்லேக்கை, நான் கூட இருந்தேனே, உன்னுேட? தான், தன்னுடைய சமூகத்துக்கு, உறவுக்காரர்களுக்குத்தானே பயப்படுவதா கச் சொன்னர்? அவருக்கோ, அல்லது அவருடைய குடும் பத்தாருக்கோ உள்ளூர இதிலை விருப்பமிருந்தாலும் கூட, உலகத்துக்காக இதை எதிர்க்க வேண்டியிருக்கலாம்.' "எண்டர்லும், நல்லா சிந்திக்கிற-மிஸ்டர் பீரிசைப்போல உள்ள ஒருத்தருக்கு கொஞ்சமாவது சுயதைரியம் வேணு மடா! இப்பிடி ஒவ்வொரு தராத் தயங்கிக்கொண்டிருந்தா, எப்பிடி?' * எதுக்கும் கொஞ்சம் பொறுத்துப் பாப்பம்! நீ ஏன் இப் பிடி இடிஞ்சு போயிருக்கிருய்? இப்ப ஒ ண் டு மே நடக் கேல்லை! எக்ஸாம் முடிஞ்ச பிறகு, காமினிமூலமா மிஸ்டர் பீரிசை மாத்திறதுக்கு வழி ஏதுமிருக்கா எண்டு, தெண் டிச்சுப் பாக்கலாம். சரிவராட்டாப் பிறகு வேற வழியைப் பார்க்கவேண்டியதுதான். நீ ஒண்டுக்கும் மனதைத் தளர விடாதே! நான் இருக்கிறேன்? காமினியிருக்கிருன்' -ஆனந்தன் எழுந்து உடைகளை மாற்ற லானுன்
படிக்கும் மேசை முன் போயமர்ந்த சதாவுக்கு, நானிருக்

ஒட்டும்ா 望5
கிறேன், காமினியிருக்கிருன்-என்ற ஆனந்தனின் சொற் கள் புத்துணர்வூட்டின. காய்கறித் தோட்டத்துக்கு ஒரு புறத்தில் வெட்டிப்போ டப்பட்டிருந்த தென்னங்குற்றியில் உட்கார்ந்து, ச த ரா இருந்த அறையின் ஜன்னலை வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தாள், நிலாந்தி, ஜன்னல் திறந்துதா னிருந்தது. சதா அங்கே நின்று தன்னைப் பார்த்துப் புன்னகை புரிவதான பழைய சுகநினைவை இப்போது ஒருதரம் மீட்ட முயன்றதில் கிளர்ந்த தாபம், அவளைக் கொன்றே விடும் போன்றவேத னையைக் கொடுத்தது. அவன் அங்கு நின்று இருமல் ஒலி எழுப்பித் தன்னை அழைப்பதான பிரமை, கண்கள் கலங் கின. உலகத்தில் ஒன்றுமே இல்லை என அவள் உணர்கிருள். சதா வளர்த்த காய்கறிச் செடிகள்-அவர்கள் காதற்பயி ருடன் சேர்ந்தே வளர்த்த அச் செடிகள்-நிமிர்ந்து நின் றன. "அவர் வளர்த்த செடிகள்" என்கிற உணர்வு கிளர வும், அவைகளைத் த ட விக் கொடுக்க வேண்டும்போல உணர்ந்தாள். காய்கறிப் பாத்திக்கு அப்பால், இர ண் டு தென்னகளுக்குஇடையில் கட்டப்பட்டிருந்த கயிற் று க் கொடி கண்ணிற்பட்டதும், அத்துயரிலும் ஒரு சிறு முறு வல் எழுந்தது. எல்லோருமே-சதா, நரேன், ராஜா உட்பட - அ ந் த நீண்ட கொடியில்தான் தங்கள் துணிகளைக் காயப்போடு வது வழக்கம். சதாவின் துணிகளஞகில், தன் சகோதரி களின் துணிகளிருந்தாலோ, அல்லது தன் துணிகளருகில் நரேன்-ராஜாவின் துணிகளிருந்தாலோ, அ வ ளு க் கு ப் பொறுக்காது. அவற்றைத் தூர விலக்கி, தன் துணிகளை யும் சதாவின் துணிகளையும் ஒன்ருகத் தொங்கவிடுவதில் ஒர் ஆனந்தம் பிடிபடுவதற்குச் சிலநாட்கள் முன்புகூட, அவளுடைய அந்த அழகிய-பெரிய இளஞ் சிவப்புப் பூக்கள் போட்ட-கவு ணும், சதாவின் கறுப்புக் கோடுகள் போட்ட சாரமும் தனியே அந்தக் கொடியில் தொங்குவதை இரசித்து, காய்ந்துபோயிருந்த அந்தத் துணிகளை எடுக்க மனமில்லா

Page 25
ஒட்டுமா
மல் அப்படியே இரவு முழுவதும் விடுவதில் ஒரு திருப் தியை அவள் உணர்ந்து, விடிந்தபின் பார்த்தால், இரண் டுமே இரவு பெய்த மழையில் ஊறித் தோய்ந்திருந்தன! காலையில் சதாவிடம் அவற்றைக்காட்டி விஷயத்தைச் சொன்னபோது, விழுந்து விழுந்து சிரித்தான். ஒரு நிமி டத்திலேயே சிரிப்பு மாறி, அவளை உற்று நோக்கி;
'நீ ஒரு குழந்தை' என்ருன், குளியலறை வெளிச் சுவருடன் சேர்ந்திருக்கிற கூண்டுக் குள் வளரும் ரஞ்சித்தின் புருக்கள், 'உக்கும் கொட்டின. ஜன்னல்வழியே இவள் அவனைச் சந்திக்கிற நேரங்களி லெல்லாம், கூட்டினருகில் தங்கள் காதற் சேட்டைகளைக் காட்டி, இவளை நாணச் செய்கிற புருக்கள், சதா, குறும் புக்காரன்-இவள் பார்வையைத் திருப்பினலும் விடமாட்
птойт;
ஏய், நிலா, அங்கே பார்!’ என்று. அவள் நாணிச் சிவந்து போவாள். பொழுது மங்கிக் கொண்டு வந்தது. நிலாந்தி, எழுந் திருக்கப் போனள்,
"ஏய், நிலாந்தீ! இங்கே வா. -அக்காதான் கூப்பிட் டாள். அக்கா, நீ யமன்! "எங்களைப் பிடித்ததே இவள்தானே!-குரலை நோக்கிப் போனுள், லலிதா சமையலறையிலிருந்தாள். லலிதா சொன்ன வேலையைச் செய்து, முகங் கழுவி, வீட்டு விளக்குகளை ஏற்றி விட்டு, விருந்தையிலிருந்த கதிரையிற் சாய்ந்தபோது, தாய் வந்தார். "ஏன் நிலாந்தி, ‘பஹன்பல விளக்கேற்றினயோ??
பதில் சொல்லாமல் எழுந்தாள். வீட்டு முற்றத்தில்தெருவுக்கும் வீட்டுக்குமிடையில்- பொம்மை வீடுபோல, ஆளுயரக் கம்பத்தில் பெர்ருத்தப்பட்டிருந்த அந்தச் சிறு கோவிலின் முன் விளக்கேற்றிய போது, உள்ளம் வேண் டிக் கொண்டது,
 
 

ஒட்டுமா 47
சதா இருந்த அறைக்குள் -இப்போது லலிதாவும் அவ ளும் அந்த அறையிலிருக்கிருர்கள் -போனுள் ஜன்னல ருகில், அவன் சாய்ந்து நிற்கிற இடத்தில் போய் நின்ற போது, கண்களில் நீர் முட்டியது. சட்டென்று துடைத் துக் கொண்டாள். "இந்த இடத்தில் அவர் கடிதத்தை வைத்தபோதுதானே அக்கா கண்டு கொண்டாள்!" தன்னுடைய பிரதாபத்தை லலிதா கொட்டிக் கொண் டது, நிலாந்தியின் நினைவுக்கு வந்தது. சதாவும் நண்பர் களும் கல்லூரிக்குப் போவதற்காக, அவர்களுடைய சாப் பாட்டைக் கொடுத்துவிட்டு, லலிதா பாத்ரூமுக்குப் போன ளாம், பாத்ரூமுக்குத் திரும்புகிற மூலையில் நின்று பார்த் தால், வலைக்கம்பிக்கூடாக, சதாவின் அறை ஜன்னல் தெரியும், லலிதா அதில் நின்று பார்த்தபோது -எதற் காகப் பார்த்தாளோ? -சதா, ஜன்னலருகே நின்று யாருக்கோ ஏதோ சைகை காட்டினனும், லலிதாவுக்குச் சந்தேகம் வரவே, மெல்லக் குளியலறைக்குப் பின்புறம் வந்து பார்த்தபோது, பின் முற்றத்தில் நிலாந்தி நின்று பதில் சைகை காட்டியிருக்கிருள். சதா, தன் கடிதத்தை, மூடிய ஜன்னலிடுக்கில் சொருகிக் காட்டியது கூட, லலி தாவின் கண்களிற் பட்டிருக்கிறது. அவன் வெளியே போனதுதான் தாமதம், நிலாந்திக்கு ஏதோ வேலை சொல்லி அனுப்பிவிட்டு, தானே வந்து கடிதத்தை எடுத் திருக்கிருள், பிறகென்ன? நிலாந்தியை வெருட்டின வெருட்டும், சதாவின் மேசை யைக் குடைந்தபோது தனிக்கட்டாகக் கட்டி வைக்கப் பட்டிருந்த கடிதங்களும் எல்லா உண்மைகளையும்ே கக் கின! இந்தக் கடித விவகாரத்தை வைத்துக் கொண்டதற்கா கவும் நிலாந்தி அழுதாள், என்ன செய்வது? இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் மட்டும், நினைத்ததெல்லாம் பேசிவிட முடிந்து விடுகிறதான அதுவும் இத்தனை பேருக்கு நடுவில்?

Page 26
鲨& ஒட்டுமா
நினைவு தெரிந்த நாளின் பின், அம்மாவிடம் அடிவாங் கியது கூட, அன்று தான். அம்மா, அப்பா, அக்காமூவரின் திட்டுகளுக்கும் தப்பி, எங்காவது முகத்தைப் புதைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது,
தன் பெற்ருேரைப் பற்றி தான் போட்டிருந்த கணக்கு கள் பிழைத்ததை அவளால் நம்ப முடியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் எதிர்ப்புக் காட்டக் கூடும் என்று கூட அவள் எண்ணியதில்லை. தன்னைத் திட்டிக் கொண் டிருந்த தாயிடம் வந்த தந்தை, * சதா இன்றைக்கே போ கிருனம்' -என்றவுடன், இத யம்ே வெடித்து விடும் போலிருந்தது. தன் வாழ்வில் இது வரை சந்தித்த சந்தர்ப்பங்களில், மிகக் கொடூரமானதும் துக்ககரமானதும் அதுதான்.
என்னுடன் கோபித்துக் கொண்டுதான் போகிருரோ? எல்லா விஷயங்களும் அம்பலமானது என்னுல்தான் என்று நினைக்கிருரோ?-அவள் மலைத்துப்போய் கிடந்தாள். அறையை விட்டுப் புறப்பட முடியவில்லை. எல்லாமே கணவாகக் கரைந்துபோக, கண்ணிர்மட்டும் எஞ்சி நின்றது.
இப்படி வாழ என்னல் முடியாது, இனிச் செய்யப்போ வது, என்ன? - என்று சிந்திக்கத் தொடங்கியபோது, அவளே எதிர்பாராத விதமாக, ராஜாவும் நரேனுங் தேவ தூதர்களைப் போல வந்தார்கள் - சதா, இரகசியமாகக் கடிதம் அனுப்பியிருந்தான்! மீண்டும் நம்பிக்கை துளிர்க்க, அவள் தன்னைச் சமாளித் துக் கொண்டாள்; அந்த ராஜாவும் நரேனுங் கூட, நேற்றுப் போய் விட் டார்கள் -மூட்டை முடிச்சுகளோடு,
சதா, எக்ஸாம் எப்படிச் செய்திருப்பான் - இந்த மன நிலையில்? அந்த எண்ணம் வேறு பெரிய வேதனையாயிருக் கிறது.

ஒட்டுமரி 49
கடிதத்தை வைக்கச் சொல்லிச் சைகை காட்டி விட்டு வந்த அந்தக் காலைக்குப் பிறகு, அவனை அவள் காணவே முடியவில்லை. இன்றுடன் சரியாக முப்பத்தாறு நாட்கள்! இந்த ஒவ்வொரு நாளும் விடிகிறபோதும், புதிது புதிதா கத் துயரம் பிறந்தது. திட்டுகளைத் தாங்கிக்கொண்டு கழி கிற பொழுதுகள், தூக்கம் பிடிக்காத இரவுகள்! இன்னும் இப்படி எவ்வளவு காலம்?
19
பரீட்சை வந்தது, எழுதியது எல்லாங் கனவு போலிருந் தன, சதாவுக்கு. இரவில் தூக்கமுமில்லாமல், மனதில் நிம்மதியுமில்லாமல், அங்குமிங்குமாய் அலைந்து விட்டு, 'பரீட்சையும் பாஸ்பண் ணியாக வேண்டுமே" -என்ற கவலை உந்தப் பரீட்சை மண்டபத்துக்குப் போய், அதையே ஒரு தனி உல காக்கும் முயற்சி பயின்று, ஏதோ முற்பிறவி ஞாபகம் போல் படித்தவை நினைவுக்குவர, ஒரு வழியாய் ஒவ்வொரு பாடம்ாய் எழுதி விட்டு வந்தபோது, மனதில் நிறைவு ஒன்று - இனிப் பரீட்சை பற்றிய பயமில்லை" என்கிற துணிவு ஒன்று- ஏற்பட்டிருந்தது. கடைசிப் பேப்பரும் முடிந்ததும், காமினி வந்தான். “எப்பிடி சதா? நல்லாய்ச் செய்திருப்பாய் எண்டு நம்பு கிறேன் ."
"பரவாயில்லை; நம்பிக்கை இருக்கு' "அது போதும் . வகுப்பிலேயே முன்னுக்கு நிக்கிறவ னச்சே, நீ"
'எண்டாலும் மச்சர்ன், இந்தப் பிரச்சினை மட்டும் இல்லா மல் இருந்திருந்தா, எவ்வளவு நல்லாய்ச் செய்திருக்க லாம். உனக்குத் தெரியுமா, காமினி"நீங்கதான் முதலாவதாக வரவேணும் எண்டு சொல்லிச் சொல்லி என்னை எப்பிடிப் படிக்கச் செய்தாள் - தெரி யுமா ?

Page 27
50 ஒட்டும்ா
'கவலைப்படாதே சதா, எனக்கு நிலாந்தியை நன்ருகத் தெரியும், அருமையான பெண். என்னுலை உணரமுடி L/ğil - - 99 - 'காமினி, அவள் சொன்னுள்-நீங்கள் இந்த வீட்டைவிட் டுப் போனுல், பிறகு எனக்கு இங்கே என்ன வேலை?" எண்டு-இப்ப என்ன செய்கிருளோ? . ' 'மச்சான் உங்களிரண்டுபேருக்காக, நான் எதுவும் செய் யத் தயாராயிருக்கிறன். என்னுலை முடிஞ்சதெல்லாம் செய்யிறன் - நீ பயப்படாதே. ' 'நான் நாளைக்கு யாழ்ப்பாணம் போக லா மென்றிருக் கிறேன்.
கந்தோருக்கு வராமலா?' * வருவேன் வந்து ஒரு கிழமை லீவு போட்டுவிட்டுப் பின் னேரம் போகலாம்" 'நீ கவலைப்படாமல் போய்வா நிலாந்தியின் பெரியப்பா மகன் நிம்ால் என்னுடைய வலு நெருங்கின கூட்டாளி, நீகூட அவனைக் கண்டிருப்பாய், என்னேட- அவன் இந்த விஷயத்திலை உதவி செய்வான், உங்களுக்கு. ' 'காமினி, கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதேநிமாலை இந்த விஷயத்திலே நம்பலாமா?
* ஏன்??? * மிஸ்டர் பீரிஸ், அவனுக்குச் சித்தப்பா இல்லையா?' "ேஏன் நிலாந்திக்குக் கூடத்தான் அவர் அப்பா. ??- காமினி சிரித்துவிட்டு மேலே சொன்னன்:
சதா இந்த விஷயத்தை நம்பி என்னிடம் விடலாம்' "மச்சான், நாளைக்குக் கந்தோரிலை சந்திக்கிறபோது ஒரு கடிதம் தந்தால் அதை நிமாலிடம் கொடுத்து பத்திரமாக நிலாந்தியிடம் கொடுக்கும்படி சொல்லுவாயா?*
"நிச்சயமாக, நிமால் முடிந்தளவு தெண்டிப்பான்'

ஒட்டுமா 51
சதா, ஒரு நிமிடம் பேசாமல் நின்ருன், அந்த மெளனத் தைப் பார்த்து, காமினி சொன்னன்: "என்னை நம்புகிற அளவுக்கு, நீ நிமாலையும் நம்பலாம்' . "தாங்ஸ் மச்சான், காமினி ' - சதா கண்கள் பனிக்க, காமினியைப் பற்றிக்கொண்டான்.
காமினியும் நானும் ஒரே கந்தோரிலேயே வேலைசெய்ய வேண்டி வந்தது எவ்வளவு நல்லதாய்ப் போச்சு!" ஆனந்தனின் அறைக்கு வந்தபோது அவன் இவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். தன் திட்டங்களை அவனுக்குச் சொன்னுன் சதா,
"சரி, போயிட்டு வா, ஒண்டுக்கும் யோசியாதை ' என்ற ஆனந்தன், 'வீட்டிலை பிரச்சினைகளைப் பேசி முடிவெடுத்துக் கொண்டு வா. ' என்ருன்.
"அது சரியாயிடும் மச்சான். இங்கை இவள்தான் என்ன பாடு படுவாளோ, தெரியாது. எனக்காவது, பேசி ஆறிக் கொள்ள, உதவிசெய்ய நீங்களெல்லாம் இருக்கிறீங்கள் . ஆன அவளுக்கு -?* "எண்டாலும் உன்ர லெற்றர் அவளுக்குக் கட்டா யம் நம் பிக்கையைக் கொடுத்திருக்கும்."
ராஜாவும் நரேனும் தான் கொடுத்த கடிதத்தை இரகசிய மாக நிலாந்தியிடங் கொடுத்து வந்த உதவியை நினைத் தான், சதா, *அவர்களுக்கு எங்கள் விவகாரத்தை முதலிலேயே சொல் லாமல் ஒளித்து வைத்திருந்தது எவ்வளவு பிழை? தாங் கள் பிடிபட்ட அன்று நரேனையும் ராஜாவையும் தனியே அழைத்து வந்து, தனக்கும் நி லா ந் தி க் கும் உள்ள தொடர்பை ஆதியோடந்தமாகக் கூறியது; விழிகள் விரிய ராஜாவும், வியப்போ டு நரேனும் கேட்டுக்கொண்டிருந்த போது,

Page 28
ஓட்டுமா 52
'ஏனடா, முட்டாள்-அந்தக் காகிதங்களை ஒளிச்சுவைச் சுப் பூட்டியிருக்கக் கூடாதோ?'-என்று ராஜா திட்டியது, எல்லாம் நினைவுக்கு வந்தன.
சிடேய், உன்ர கெட்ட காலம். நாங்களும் எக்ஸாம் முடிய அந்த வீட்டை விடுகிறதா நோட்டிஸ் குடுத்திட்டம் , '
"அதுக்கிடையிலை ஏதாவது செய்யலாம். சதா, நீ லெற் றர் ஏதாவது தந்தாயெண்டால், கொடுத்திட்டு மறு ம்ொழி வாங்கப் பார்க்கலாம். ' என்ருன், நரேன்.
ஆனந்தனிடம் சதா சொன்னுன்
*ஆனந்தா நான் திரும்பி வர்றபொழுது எனக்கு வெள்ள வத்தைப் பக்கத்திலை ஒரு அறை கிடைச்சால் நல்லது? எங்கையாவது சந்திச்சா, சொல்லிவை . என்னுலை உனக்கு வீண் தொல்லை . ' *டேய், உன்னுலை எனக்கென்ன தொல்லை???
'இல்லை, மச்சான். நான் அந்தப் பக்கம் போன, கந்தோ ருக்குப் போக வரவும் சுகமாயிருக்கும்; இவடத்திலை பீரிஸ் வீட்டார் என்னை இனிமேல் காணுறதுஞ் சரியில்லை."
*அப்பிடியெண்டர் சொல்லு! அதை விட்டு ட்டு, "எனக் குத் தொல்லை கில்லை யெண்டு உளருதே, !' என்ருன், ஆனந்தன்.
286)
சந்தன சோப்பின் மணம் கும்மென்றடித்ததும், சதாவுக் குக் கண்கலங்கி விட்டது. நிலாந்தியின் தோகைபோன்ற கூந்தலிலிருந்து எழுகிறமணமல்லவா, இது? அவன் மார் பில் அடைக்கலம் புகும்போதெல்லாம் நாசிக்கு நேரே யிருந்து கிளம்புகிற அவள் கூந்தலின் மணமல்லவா இது? .
அவன், தண்ணீரை அள்ளி அள்ளி, மேலே ஊற்றிக்கொண் டேயிருந்தான்,

ஒட்டும்ா 53
*அண்ணை, இன்னுங் குளிச்சு முடியேல்லையோ?" -தங்கை யின் குரல், அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தர்ன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அம்மா கேட்டா : என்ன தம்பி ஒரு மாதிரியா இருக்கிருப்?. ' "ஒண்டுமில்லே . இராத்திரி, ரயிலிலே துப்பரவா நித்தி ரை இல்லை, அதுதான்.' அம்மா ஏதேதோ கேட்டுக்கொண் டிருந்தும், மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. 'போன முறை இங்கு வந்திருந்தபோது, எவ்வளவு சந்தோஷமாயிருந் தேன்? எப்போது திரும்பி அவளிடம் போவேன் எ ன் ற தவிப்புடன். ஆனல், இப்ப-? எவ்வளவு வேளைக்குத் திரும்பினுலும் அவளிடம் போகமுடியாது. '
'என்ன ராசா, ஒருமாதிரியாயிருக்கிருய்?. அம்மா, பிற குங் கேட்டா. சதாவால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. முகமே அவனைக் காட்டிக்கொடுத்துவிடும்போலிருந்தது. 'ஒண்டுமில்லை. ' குரல் அடைத்தது. 'இல்லை ஏதோ இருக்கு1. சொல்லு ராசா. அம்மாவுக் குச் சொல்லாமல் ஆருக்குச் சொல்லப் போருய் வேலை செய்யிற இடத்திலே ஏதேன் தொல்லையோ, அ ல் ல து சோதினை வடிவாச் செய்யேல்லையோ, எதெண்டா என்ன ஒளிக்காமல் சொல்லு . ' அவனல், இனிமேலும் பொறுக்க முடியாமலிருந்தது. எல் லாவற்றையுஞ் சொன்னுன், அடைக்கலந் தேடுகிற உணர்வு, கூச்சமெல்லாவற்றையும் அடித்துச் சென்று விட, அவன் ஒன்றையுமே ஒளியாமல் சொன்னுன் , சொல்லி முடிந்தபோது, கை காய்ந்து போயிருந்தது, அம்மா பதில் பேசவில்லே. எழுந்து கையைக் கழுவினன், சதாவின் பின்னலேயே அம்மாவும் வந்தா,
瓮

Page 29
34 ஒட்டுமf
"இதுக்கு நாங்கள் என்னசெய்யிறது, ராசா? அ ந் த த் தாய் தகப்பன் விரும்பாத இடத்திலை நாங்கள் என்ன செய்யேலும்? சொல்லு. ' "உங்கடை விருப்பம் என்ன? இப்ப அவை சரியெண்டு சொல்லிப்போட்டினம் எண்டு வைச்சுக்கொண்டா, உங்கட முடிவென்ன?" அம்மா ஒரு நிமிடந் தயங்கின, உடனேயே சீறிப்பாயா ததிலிருந்து, அம்மாவைச் சுலபமாகச் சம்மதிக்கச் செய்ய லாம் என்கிற நம்பிக்கை அவனுள் துளிர்த்தது. 'நான் என்னத்தைச் சொல்லுறது?. அப்பாவைத்தான் கேட்கவேணும் "
** அப்பாவைக் கேட்டா?. " "பின்னேரம் வரட்டும் ஆறுதலாகக் கேட்பம். நீ ஏன் இப்பிடிக் கலங்குகிருப்? ஆம்பிளைப் பிள்ளையா, உசாரார் இரு . '
அவன் பதில் பேசவில்லை. மாலையில், அப்பா திரும்புகிற நேரத்தில் வீட்டிலிருக்க விரும்பாமல் செல்வத்தைத் தேடிப் போனன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தாலாவது மனதுக்கு ஆறுதலாயிருக் கும். 'நீ ஏனடா, எனக்கொண்டும் எழுதாமல் இருந்தாய்?" "எல்லாத்தையும் நேரிலை செல்லலாமெண்டு இருந்தன டாப்பா ' -சதா, வி ப ர மா க முழுக்கதையையுஞ் சொன்னன்.
'ஏன், போன விடுதலைக்கு வரேல்லை? ' 'ஓம் மச்சான். வைகாசிக்கு வர முடியாமல் போச்சுஎங்களுக்கு ‘ Rலபஸ்" முடியேல்லை எண்டு, விடுதலையிலை வகுப்புகளிருந்தது.' -சதாவுக்கு, "வெசாக்" கின் ஞாபகம் வந்தது. பீரிஸ் வீட்டுக்காரருடன் சேர்ந்து கொண்டாடிய வெசக் பண் டிகை!

ஒட்டுமா * 55
வைகாசிப் பூரணையில், நிலாந்தியுடன் இணைந்து மற்றவ கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தென்னஞ் சோலே யில் உட்கார்ந்து பேசிய அந்தப் பேச்சுக்கள். அது சொர்க்கம் போலிருந்தது.
வெசக்குக்குப் பிறகு வந்த "பொசன் பண்டிகை -தெரு வெங்கும் நடந்த 'ஜாத்தகக் கூத்துக்கள் . எல்லோரு டனுஞ் சேர்ந்தே போயிருந்தாலும், அவனும் அவளும் மற்றவர்கள் அறியாமல் தாங்களாகவே சிருஷ்டித்துக் கொண்ட தனிமையில் தேடிய இன்பங்கள்.
நகரின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கியிருந்த வாய்க்கால் கரையை அடுத்த ஒரு திடலில், தீப்பந்தங்களும் நிலவுந் தந்த ஒளியில், அவனும் நிலாந்தியுமாய்ப் பார்த்த ஒரு ஜாத்தக நாடகம், அவன் நெஞ்சில் ஒரு நித்திய இன்ப மாய் உறைந்து போயிற்று! அதன் பிறகு, கொழும்பில் ஆடிவேல் விழா.
அம்மன் கோவிலடியின் நிசப்தம், நண்பர்களுக்கிடையி லும் படர்ந்திருந்தது. சதா, ஏதோ நினைத்தாற் போலக் கேட்டான்.
**செல்வம், இப்ப நான் அவளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இங்க கூட்டிவாறன் எண்டு நினைச்சுக்கொள். ஊரிலை என்ன சொல்லுவினம்?"
செல்வம் பெரிதாகச் சிரித்தான் ,
*முட்டாள் பயல்! உன்னை நான் பயப்படுத்திறன் எண்டு நினையாதை- இங்க எனக்கு நடக்கிற நடப்பைப் பாத் திட்டும், இந்தக் கேள்வியா கேட்கிருய்? . நான் என் னடா எண்டா, சரசு வைக் கூட்டிக்கொண்டு வன்னியோட போற வழியைப் பார்க்கிறன். நீ அவளையுங் கூட்டிக் கொண்டு இங்க வர வழி கேக்கிருய்!'
சதா பேசாமலிருந்தான், செல்வம் திரும்பவுஞ் சொன் ன்ை;

Page 30
5cm ஒட்டுமா
'சதா, உன்னை நான் அதைரியப் படுத்திப் போட்டன் எண்டு நிளையாதை. உண்மை நிலையை உனக்குத் தெரி யப் படுத்த வே னு மெ ண் டு தா ன் சொன்னேனே யொழிய." -
**தெரியுமடா, எனக்குகை'
*சதா, உலகம் பெரிசு. இந்த ஊர் இல்லையெண் டா, இன்னுெரு ஊர்! ஊருக்குப் பயப்பிட்டா ஒண்டுஞ் செய்ய ஏலாது. உன்ர அப்பா அம்மா, சரியெண்டால் போதும். எல்லாரையுந் திருப்திப்படுத்தவோ, அல்லது ஊருக்காக வாழவோ, உன்னுலை முடியாது."
冕盘
சதா வீட்டுக்குத் திரும்பியபோது, மணி ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. தம்பி தங்கைகள் சாப்பிட்டுவிட்டுத் தூங்கியாயிற்று. அப்பாவும் அம்மாவும் சாப்பிடாமல் அவனுக்காகக் காத்திருந்தார்கள். 'அம்மா சொல்லியி ருப்பா" என்ற எண்ணம், அவனுக்கு அப்பாவின் எதிரில் போகவே கூச்சத்தைத் தந்தது. சாப்பிடும்போது நிலவிய மெளனம் கனமானது. 'அம்மா சொல்லியிருக்க வேணும் என்பது நிச்சயமாகி விட்டது. "அம்மாவே மெளனத்தைக் கலைக்கக் கூடும் என்று சதா எதிர்பார்த்தான். ஆனல் அப்பாதான் கேட்டார். *அதென்ன, என்ன நடந்தது?" தயங்காமல் எல்லாவற்றையுந் திரும்பவுங் கூறினன், கூறிமுடியும் வரை மெளனமாயிருந்த அப்பா, "நாங்கள், "என்ன செய்வம் எண்டு கேட்டியா ம், நாங் கள் என்ன செய்ய வேணுமெண்டு நீ நினைக்கிருய்?? -- என்று கேட்டார். எக்கச் சக்கமான கேள்வி. அவர் அமைதியாகத்தான் கேட்டாரென்ருலும், அவனுல் பதில் சொல்ல முடியவில்லை, அம்மாதான் உதவிக்கு வந்தா,

ஒட்டும்ா 5 ή "அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வந்தா, நாங்கள் சம்மதிப்பமோ, எண்டு." " "கூட்டிக் கொண்டு -எண்டா..?' அவன் பேசாமலிருந்தான். பதிலை எதிர்பார்த்துக் கேள்வி கேட்கப்படவில்லையாதலால், அப்பா மேலே தொடர்ந் தார். *ஊருலகம் என்ன சொல்லுமெண்டு யோசிச் சியே??? 'எனக்கு ஊருலகத்தைப் பற்றிக் கவலையில்லை. நீங்கள் சரியெண்டால், சரி." அவர் சிரித்தார். 'ஊருலகத்தைப் பற்றிக்கவலைப் படேல்லை எண்டு சொல் லுறது, சொல்ல வடிவாயிருக்கும். ஆன. அந்த ஊருல கத்துக்குள்ளை, ஊருலகத்தோடதான் நாங்கள் வாழவேண் டியிருக்கு ' அவன், குறுக்கிட்டு எதுவுஞ் சொல்லாம்ல், வட்டிலையே பார்த்தபடி சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தான். 'நீ இப்படியொண்டைச் செய்தா, நாளைக்குத் தங்கச்சி யவையின்ர கதி என்ன ஆகுமெண்டு யோசிச்சியோ?"
அந்தக்காலத்திலை உலகம் நல்லா மாறிவிடும். இதுகளைப் பெரிசா ஒருதரும் எடுக்க மாட்டினம். இப்பிடியானதெல் லாம் வழக்கமாகிவிடும்.'
அப்பா சிரித்துவிட்டுப் பிறகு சொன்னுர்,
'தம்பி, உலகம் நீ நினைக்கிறதுபோலே அவ்வளவு வேகமா
மாறுகிறதில்லை. அது தானுக மாறுகிறது எண்டது, ஒரு வலு ஆறுதலான விஷயம் '
சதாவின் மெளனத்தை அவர் பொருட்படுத்தவில்லை. "இப்ப நீ ஏன் இவ்வளவு அந்தரப்படுகிருய்."
"இதில் அந்தரப்படாமலிருக்க முடியுமா? இப்படிக் கேட் கிருரே" என அவன் சாம்பினுன்

Page 31
58 ஒட்டுமர்
* அப்பிடி நீ அந்தரப்படுகிறபடி ஏ த ர் வது நடந் திட்டுதோ?”
அவனுக்கு அவரின் கேள்வி புரியவில்லை. * அப்பிடி ஏதாவது பிழையா நடந்திட்டா, சொல்லு, நானே போய்ப் பேசிப் பார்க்கிறன்-அவயளோட. '
* அப்பா நீங்கள் எவ்வளவு பெரியவர்! - அவர் கேட்ட, * ஏதும் பிழையாக நடந்திட்டுதோ’ என்ற கேள்வி, இப் போதுதான் அவனுக்குப் புரிகிறது-உடலெங்கும் ஒரு கூச் சம் பரவியது. என்ருலும், 'ஓம் எண்டு சொன்னல், அப் பாவே போய்ப் பேசிப் பார்ப்பார்’ என்கிற எண்ணம் அவ னுள் ஒரு தைரியத்தையும் இன்பத்தையும் ஊட்டிற்று. அப்படி ஒன்றும் 'பிழையாக நடக்காமல், "பிழையாக நடந்தோம் என்று பொய் சொல்வதா? * பிழையாக நடக்கிறதெண் டா, எத்தினை தரம் எத்தினை * பிழை விட்டிருப்போம்!" அப்பாவிடம் பொய்சொல்வதா?-அவன் திணறினன். அது வும், ஆயிரத்தில் ஒர் அப்பனுக இப்படிக் கேட்கிறவரிடம் பொய்சொல்வதா? அவன் உசாராகச் சொன்னுன்: "அப்பிடியொண்டும் நடக்கேல்லை!" அம்மா பெரிதாகப் பெருமூச்சு விடுவது கேட்டது.
"அப்ப, அவசரப்படாதை, பாரத்தைக் கடவுளிலை போட் டிட்டு, நீ கொஞ்ச நாளைக்குப் பேசாமலிரு' - இவ்வளவு தான். அப்பா இதற்குமேல் எதுவுஞ் சொல்லமாட்டாரென் பது அவனுக்குத் தெரியும். ஆழமான ஆழம். அவர் புது நம்பிக்கை எதையுந் தரவில்லையென்ருலும், இருந்த நம் பிக்கையைத் தகர்க்கவுமில்லை. அந்தளவில் போதும், அடுத்த பயணம் வந்து பார்த்துக்கொள்ளலாம். என்று தனக்குள் சமாதானஞ் செய்துகொண்டான்.
அலுவலகமும் வேலையுமாய் நாட்கள் ஓடின. இடையருது

SS
அவள் நினைவும் அதன் விளைவான கலக்கமும் சதாவின் இதயத்தில் நிரம்பி இருந்தன. ஜனவரியில் ஒரு தலையிடி தீர்ந்தது-பரீட்சை முடிவுகள் வெளியாகின. அவன் பாஸ், "ரிஸல் டை அறிவித்து, வீட் டுக்குக் கடிதம் போட்டான். *சந்தோஷமான சங்கதி. சதா, நான் முதலிலை கொஞ்சம் பயந்துகொண்டிருந்தேன். ' என்ருன், ஆனந்தன். **இது அவளுக்குத் தெரிஞ்சா எவ்வளவு சந்தோஷப்படு வாள்!. '-சதா பெருமூச்செறிந்தான். "இப்பவுந்தான் என்ன! அடுத்த காயிதத்திலை எழுதி நிமா லிட்டைக் குடுத்து விடன்' எத்தினை நாளைக்கு இந்த வழி? நிமால் இல்லையெண்டா எங்கட தொடர்பும் இல்லை - என்கிற அளவுக்கு நிலைமை இருக்கேடா!' 'நீங்கள் இரண்டுபேரும் நேரடியாய்ச் சந்திக்கிறதுக்கு ஏதாவது வழி இல்லையா?" **அதுக்குத்தான் நான், அவள், நிமால்- எல்லாருந் தெண் டிக்கிறம். ஆணு, தாய் தகப்பன் சரியான எச்சரிக்கையா இருக்கிறதாலை ஒண்டும் சரிவருகுதில்லை' 'ஏதோ தையல் வகுப்புக்கு இப்ப அவள் போறதெண்டு அண்டைக்கு நிம7 ல் சொன்னுனே. ?"
** அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறன், மச்சான். அது சரிவந்தது எண்டால் அரைவாசிக் க வலை தீர்ந்துபோ
யிடும்
リ。
நிமால் சொன்ன அந்த நாளுக்காகக் காத்திருந்து ஒவ் வொரு நாளாக "இன்றுடன் ஒருநாள் முடிந்தது -என்ற துடிப்புடன் கணக்கிட்டு, அந்த நாள்-பீரிஸ் வீட்டை விட்டுப் புறப்பட்டபின், நி லா ந் தி யை முதன் முதலில் நேருக்கு நேர் சந்திக்கப்போகிற அந்த நாள்-வந்ததும்,

Page 32
60 ஒட்டும்ா
“இத்தனை நாட்களுக்குப் பிறகு, இண்டைக்கு அவளைச் சந்திக்கப் போகிறேன்" என்ற பரபரப்பு காலையிலிருந்தே பிடரியைப் பிடித்து உந்த; அவன் "எப்போது பகல் இரண்டு மணியாகும் என்று காத்திருந்து புறப்பட்டான். அன்று, சனிக்கிழமை, பிறிப்போயா நாள். பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் முடிவடைந்ததும், சாப்பிட்டது பாதி, சாப் பிடாதது பாதியாக, சதா தெகிவளை ரெயில்வே நிலேயத் துக்கு வந்தபோது ம்ணி ஒன்று. இன்னமும் ஒரு மணி நேரம் இருந்தது. நிலாந்தி நிமாலியுடன்தான் வருவாள் என்று நி மா ல் சொல்லியிருந்தான். 'திருமதி பீரிஸ் நிலாந்தியுடன் வர மாட்டார்" என்பதே அவனுக்குப் பெருத்த ஆறுதலாக இருந்தது. *நிமாலியை எப்படியாவது சரிப்பண்ணிவிட்டால், அவ ளையே எங்கள் தொடர்புக்குத் துணையாக்கிக்கொள்ளலாம்" என்று சதா நம்பினுன், நிமாலி பள்ளிக்குப் போய் வருபவ ளாதலால் அவளைச் சந்திப்பதில் சிரமமிருக்காது என்பது அவன் துணிவு. நிலாந்தியும் நிமாலியும் மொறட்டுவைப் பக்கத்திலிருந்து வருகிறவண்டி எதிலாவது வருவார்களென்றுதான், சதா எதிர்பார்த்தான். ஆணுல், அவர்கள் காலிவீதிப் பக்கத்தி லிருந்து ரெயில்வே நிலயத்தை நோக்கி வருவதை, அவன் பாலத்தின் மேலிருந்து கண்டான்.
"தற்செயலாகச் சந்திப்பதுபோலச் சந்திக்கும்படி நிமால் சொல்லியிருந்தது ஞாபகம் வரவே, தனக்குள்ளேயே ஒரு சமாதானத்தை-நிமாலிக்குச் சொல்வதற்காகத் - தேடி வைத்துக்கொண்டான். மெல்லப் படியிறங்கி, மொறட்டு வைக்கு ஒரு "ரிக்கற் வாங்கிக்கொண்டு திரும்புகையில் அவர்களிருவரும் படியிறங்கி வருவதை அவன் கண் டான். இதயத் துடிப்பு அதிகமாகியது,
சதா வைக் கண்டதும் சந்தோஷமுந் துக்கமும் ஒன்ருய்க் கிளர்ந்து, நிலாந்தியைத் திக்குமுக்காடச் செய் த ன. *சதா வை நிமாலியே கண்டு கொள்ளட்டும்’ என்பவள்

ஒட்டும்ா 6.
போல, தங்கை பக்கம் பார்வையை ஒட விட்டாள். நிமாலி திடுக்கிட்டது தெரிந்தது. அவனைப் பார்த்து ஒரு புன்சிரிப்புச் சிரித்துவிட்டு, தமக்கையின் பக்கம் பார்வை யைச் செலுத்தினுள், அவள் என்ன செய்யப்போகிருய்? என்பதைப் போலிருந்தது, அந்தப்பார்வை.
ஒரு புன்சிரிப்பை மட்டுமே சிந்திவிட்டு, தன்னைத் தாண்டி நிமாலி போக முற்பட்டதும் சதாவுக்கு ஏமாற்றமாகி விட்டது. அவன் முன்னல் ஒரடி எடுத்து வைத்தான் **எங்கே, இந்தப் பக்கம்?" "சும்மாதான், இங்கே.' -நிமாலி முடிக்காமல் இழுத் தாள். முகம் இறுகியிருந்தது; தங்கை சொன்ன பதிலில் ஏதாவது நம்பிக்கைக்கு இடமிருக்கிறதா என்ற ஆவலில் -கண்கள் வேறுதிசையைப் பார்த்திருந்தாலும் -காதைத் தீட்டிக் கொண்டிருந்த நிலாந்தி, ஏமாந்தாள். "இந்தச் சின்னவளுக்கு இவ்வளவு கோபமா? முகத்துக் காக ஆவது இரண்டு சொல் சொல்கிருளில்லையே' என்று சதா மணஞ் சுருங்கினன். இவளேச்சமாதானப் படுத்த நினைத்தால், எங்கள் பொழுதே சரியாகி விடும். நேரேபோய் நிலாந்தியுடன் பேசலாம் -என்று முடிவெடுத்த போதுகூட, ‘நிமாலிக்குப் பயந்து அவளும் பேசாமல் விட்டு விட்டால்?’ என்கிற பயமுந் தலை காட்டவே செய்தது. வருவது வரட்டும் என்று, நிலாந்தி யைப் பார்த்துக் கேட்டான்: * எப்படி? சுகமா?." -குரல் தடுக்கியது: நிலாந்தி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை மிக ஆழமானதாக இருந்தது. கண்கள் கலங்கின. 'ஏதோ, இருக்கிறேன். நீங்கள் இப்போது எங்கேயிருக் கிறீர்கள்?' -குரல், மெதுவாக- ஆனல், அவனை அணைப் பது போல- வந்தது. அதில் ஊறியிருந்த சோகத்தை அவன் உணர்ந்தான். பதில் சொல்ல வாயெடுக்கு முன்னே, நிலாந்தியைப் பார்த்து;

Page 33
ஒட்டுமா
"வா அந்தப் பக்கம் போய்நிற்கலாம்." என்று, கையைப் பிடித்து இழுத்தாள், நிமாலி. **நான் வரவில்லை. நீ வேண்டுமானுல் போய் நில்!'-நிமாலி யின் கையைத் தள்ளிய படியே நிலாந்தி சொன்னுள்.
நிமாலியின் முகங் கன்றிச் சிவந்தது. 'நீ வா, வீட்டுக்கு. ' ** என்ன செய்வாய்?" - செய்கிறதைச் செய்து கொள்!" என்கிற உறுதி நிலாந்தியின் குரலில் தொனித்தது. சதா வைப் பார்த்து, "இங்கே வாருங்கள்" என்பது போலத் தலையசைத்தாள். அவன், அவள் முன்னுற் போய் நின்றன்.
நீங்களும் இப்போது மொறட்டுவைக்குத்தான் போகிறீர்
haTIT?' ' - **ஆமாம், கட்டுபத்தைக்கு'
'நீங்களும் என்னுடனேயே வாருங்கள். உங்க ளு க் கு ச் சொல்ல நிறைய விஷயங்களிருக்கின்றன.'
ரயில் வந்து நின்றது. நெருக்கியடித்துக்கொண்டு ஏறிய கும்பலினுள், நிமாலி எப்படியோ துளைத்துக்கொண்டு, இரண்டு இடங்களைப் பிடித்துக்கொண்டாள். தமக்கை தன்னருகில் உட்கார்ந்துவிட்டால் சதாவால் ஒன்றுஞ் செய்யமுடியாது என்ற அவள் நினைப்பு, பொய்யாய்ப் போயிற்று. ஆறுதலாக சதாவுடன் சேர்ந்து ஏறிய நிலாந்தி இவள் அழைத்ததையே பார்க்காதவள் போல அவனருகி லேயே நின்றுகொண்டாள். கதவருகில் கைப்பிடிக் கம்பி யைப் பிடித்தவாறே நின்றுகொண்டிருந்த இவர்களுக்கு எதிர்-வரிசையில் நிமாலி இருந்தாள். இடையிலுங் கூட்ட மாகச் சனங்கள் நின்றதால், அவளால் இவர்களைப் பார்க் கவும் முடியாமற் போயிற்று. வெய்யிலின் கொடூரத்தைக் குறைக்கவென்றே வீசுவது போல் காற்று வேகமாக வந்து முகத்திலடித்தது. தாழம் புதர்களுக்கப்பால் வெள்ளித் தகடாய்க் கடல் பளபளத்தது.

ஒட்டுமா
கைகள் ஒன்றையொன்று உராய அவர் க ள் நெருங்கி நின்றுகொண்டிருந்தார்கள். அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்
* நிலாந்தி , ' ஒருதரம் நிமாலியைத் திரும்பிப் பார்த்துவிட்டு நிலாந்தி சட்டென்று சொன்னுள்: "என்னுல் அங்கிருக்கமுடியாது. என்ன உங்களுடன் கூட் டிக்கொண்டு போய்விடுங்கள்." சதா, இருவித உணர்ச்சிகளின் எல்லைகளை ஒரே சமயத் தில் தொட்டான். மகிழ்ச்சியின் எல்லைக்கும் திகைப்பின் எல்லைக்கும் அவன் போய் வந்தான். அவனுல் நம்பமுடிய வில்லை.
'உண்மையாகத்தான் சொல்கிருயா, நிலா? ஏன், என்ன நடந்தது?’’
எத்தனையோ .' - எல்லாவற்றையுமே சொல்லிவிட வேண்டும் என்பதற்காக நிதானிப்பவள் போல அவள் மெளனமாயிருக்கையில், அவன் கேட்டான்:
** என்னுடன் வர, எந்தநேரமென்ருலும் நீ த யா ரா நிலாந்தி?"
*எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும்வர நான் தயார்? 'இப்போதே கூட-?' 'ஒ! நிச்சயமாய்-இப்போதே நான் தயார்!" சதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நிலாந்தி தன்னுடன் வரத் தயாராயிருக்கிருள் எ ன்ற எண்ணமே, இன்பத்தில் இன்பமாய்த் தெரிந்தாலும், திடீர் என்று இப் படி ஒன்றைச் செய்யவேண்டி இருக்கிறதே என்று அவன் தயங்கினன், *அம்மா-அப்பா, இருந்தாற்போலை இவளையுங் கூட்டிக் கொண்டுபோய் நிண்டா, என்ன சொல்லுவினம்? ஊரிலை * கிளப்பிக்கொண்டு வந்திட்டான்-என்ற பேர் தா ன்

Page 34
64 ஒட்டுமா
கிடைக்கும். அந்தப் பேர் கிடக்கட்டும்-இவள் என்னுேட வந்தா, இங்கே பீரிஸ் என்ன செய்வார்? கொண்டுபோய் விட்டான்' எண்டு பொலிசிலை அறிவிப்பாரோ?. அதாலை ஒண்டுக்கும் பயமில்லை-இரண்டு பேரும் வயது வந்த ‘மேஜர்" கள் எண்டபடியாலை. - கணப்போதுக்குள் அவன் மன தில் இத்தனை எண்ணங்களும் எழுந்து ஆடின. "என்ன, நான் வருகிறேன் என்றதும், பயந்துவிட்டீர் களோ?-நிலாந்தி உலுக்கினுள். ரயில், கல்கிசையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. 'எனக்கும் பயமில்லை-நான் இந்த நிமிஷமே தயா ! இப் படியே இரண்டு பேரும் போவோமா?? 'இப்படியே என்ருல்?" 'அடுத்த ஸ்ரேசன்-இரத்மலானை, அதிலேயே ്. ங்கி திரும்பி பம்பலப்பிட்டிக்குப் போகலாம் . ' “ of Lifòb? ’ ” *. போய், பொலிஸ் ஸ்ரேஷனிலை ஒரு என்றி போட்டு விட்டு-பிழையாக நடக்கக் கூடாது, பார் - அப்படியே நேரே, யாழ்ப்பாணம்! நீ தயாரா?'
*நான் தயார்! ஆன நாங் க ள் ஏன், கள்ளர் போலச் சொல்லாமற் கொள்ளாமல் ஒளித்துப் போகவேணும்? நேரே எங்கள் வீட்டுக்குப் போய், உங்களுடன் நான் வரு கிறேன்-என்பதை அவர்களுக்குச் சொல்லிவிட்டே வரு கிறேனே!" * நிலா, உனக்குப் பைத்தியமர்? சொல்லிவிட்டுப் போக உன்னை வீட்டில் விட்டு விடுவார்களா?
அவர்கள் என்ன செய்ய முடியும், எங்களை?. '-அவள் தைரியமாகச் சொன்னுள். *. உங்களோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவர் கள் முன்னலேயே வருகிறேனே!"
அது சரி, நிலாந்தி. அவர்கள் உன்னைப் பிடித்து வைத்துக் கொண்டால்?
 

ஒட்டும்ா 65。
**நடவாத காரியம்! நீங்கள் வாருங்கள்'
நிலாந்தி, இப்போது அவன் கண்களுக்குப் பழைய நிலாந்தி "Tக-அந்தப் பிடிவாதமும் துணிச்சலுமுள்ள வளாகத்தெரிந்தாள். சதா, உடலும் மனமும் ஒரேயடியாகப் பர பரக்க, ஏதோ பெரிய நிகழ்வு ஒன்றை எதிர்பார்த்து நின்
(? ST
4
தினசரி எத்தனையோதரம் குறுக்கும் நெடுக்கும் அளந்த அந்தத் தெருவில் இப்போது கால்பதிக்கும்போது, என் னவோ மாதிரியிருந்தது. நிமாலி வானம்போல் முன்னுள் போய்க்கொண்டிருந்தாள். சதா, ஏன் தங்களுடன் வரு கிருன் என்பதே அவளுக்குப் புரியாமலிருந்தது.
தனது சொந்த வீடுபோலவே ஒரு காலத்திற் கருதியி ருந்த அந்த வீட்டின் கேற்றருகில், சதா படபடக்கும் இதயத்துடன் நின்முன், நிமாலி, குரு வளி போல் உள்ளே போனதும், அவள் பின்னுல் நிலாந்தியும் - உடனே வரு கிற துணிவுடன் உட்சென்றதும். ஏதோ நடக்கப் போகி றது” என்ற எச்சரிக்கையை அவனுள் ஏற்படுத்தியிருந் தன. "இதோ, வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு நிலாந்தி உள்ளேபோய் இரண்டு நிமிடம் ஆகியிராது.
"ஐயோ, வேண்டாம்! போகவேண்டாம்!" என்று இரண்டு மூன்று பெண் குரல்கள் அலறியது கேட்டது.
நிமர்லி உள்ளே போன வேகமும், அவளுக்கேற்பட்டிருந்த கோபமும், பீரிஸையோ ரஞ்சித் தையோ தனக்கெதிரா கத் தூண்டி விடக்கூடும் என்ற நினேவில் உழன்று கொண் டிருந்த சதா திடுக்கிட்டான் பீரிசோ அல்லது ரஞ்சித்தோ தன்னைத் தாக்க வருகிருர்கள் என்று பட்டது, அவனுக்கு, "தெருவில் நின்று மல்லாடி, மானங்கெட வேண்டாம்" என்ற எச்சரிக்கை உணர்வு உந்த, வருவது வரட்டும் என்று, கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்தான்,

Page 35
66 gol (LDIT
வாசற் கதவருகில் சதா வரவும், சாத்தியிருந்த கதவு சட் டென்று திறக்கவுஞ் சரியாயிருந்தது. திடுக்கிட்டு நிமிர்ந் தான்.
பீேரிசா? ரஞ்சித்தா? நிலாந்திதான் நின்று கொண்டிருந்தாள்! சதா வைக் கண்டதும், வந்த வேகத்தைக் குறைத்து அவள் நின்ருள். பின்னல் வந்த தாயுந் தம்க்கையும், கதவருகில் அவனைக் கண்டதும், திகைத்து விறைத்துப் போயினர். அவனை எப்போதும் அன்போடு நோக்கும் திருமதி பீரிசின் விழிகளில் இப்போது- கோபமல்ல-பயங் கலத் திருந்தது! அந்தப் பார்வை அவனை வேதனைக் காளாக்கியது. "நீயா, சதா!.'
சதா புன்னகைத்தான்.
"நான்தான் சொன்னேனே, -பின்னுல் வந்த நிமாலி சீறினுள். "ஏன் வந்தாராம் என்று கேள்' என்ருள் மூத்தவள், தாயைப் பார்த்து. அந்தக்குரலில் பகைமை தெரிந்தது. சதாவுக்கு மீண்டும் ஏமாற்றம். அதில் பயத்தின் சாயலும் படிந்திருந்தது. "இந்தப் பெண்ணுெருத்தியின் காதலுக்காக, இந்தக் குடும்பம் முழுவதுமே- என் சொந்தக்காரர் போலிருந்த இவர்கள் எல்லாரும்ே- என்னை வெறுக்க நேரிடும் என்று தெரிந்தால், இந்தக் காதலே வேண்டாமென்றிருந்திருக் கலாமே!" என, அவன் அந்தக்கணத்தில் நினைத்தான்.
‘போவோமா? ஏன் நிற்கிறீர்கள்??? -நிலாந்தி, படியி றங்கியபடி அவனைப் பார்த்தாள். "ஐயோ, நில்!.’-தாய், எட்டி வந்து அவள் கையைப் பிடித்தார்.
**போகாதே!'
 

ஒட்டும்ா 67
சதாவுக்குப் புரிந்தது- போகாதே’ என்று கத்தியது. பீரி சுக்கோ ரஞ்சித்துக்கோ அல்ல. நிலாந்திக்காகத்தான்! "பீரிஸ் எங்கே?' என்ற கேள்வி அவனுள் எழுந்தது. நிலாந்தியின் கைகளைப் பிடித்திருந்த தாய் சதா வைப் பார்த்து
'உள்ளே வா, சதா, உன்னுடன் நிறையப் பேசவேண் டும்' என்ருர், அவர் அழைத்த விதத்திலிருந்து அவரது மனப்போக்கை அவனல் புரிந்துகொள்ள முடியவில்லை. வாசற்படியிலிருந்து உள்ளே நகர்ந்தவாறே, திருமதி பீரிஸ் மீண்டுங் கூப்பிட் டார்.
**வா, சதா! உட்கர்ர்!' பிள்ளைகளுந் தாயின் பின்னுல் நகர்ந்தார்கள்-நிலாந்தி யைத் தவிர, தான் அழைத்தபோதும் சதா நகராமல் நின்றதாலும், எதிர்பாராத விதமாகத் தன் தாயே அவனை வீட்டுக்குள் அழைத்ததாலும் வியப்புற்ற நிலாந்தி, தன் னைப் பிடித்திருந்த தாயின் கரங்களை உதறிவிட்டு சதா வின் பின்னலேயே நின்றுகொண்டிருந்தாள். சதா, மெல்ல உள்ளே போனன். தானும் அமர்ந்தவாறே "உட்கார்' என்ருர் நிலாந்தியின் தாய். அவன் உட்கார்ந்தான். சதாவின் பின்னலேயே வந்த நிலாந்தி ஒருவரை யொருவர் பார்த்தபடி உட்கார்ந் திருந்த தாய்க்கும் சதாவுக்கும் நடுவில் போய் நின்று கொண்டாள். * கதவைச் சாத்து. ' என்ருர், திருமதி பீரிஸ் லலிதா வைப் பார்த்து. ".பயப்படாதே, நாங்கள் பேசுவது வெளியே கேட்கக் கூடாது என்பதற்காகத்தான்'
சதா சிரித்தான். "சரி; நீ ஏன் இப்போது இங்கே வந்தாய்?"

Page 36
6感 ஒட்டுமா
'நிலாந்தி அழைத்ததால் வந்தேன்'
"ஏன் அழைத்தாள்?"
**சொல்லியிருப்பாளே!' *சொன்னுள்!."- நிலாந்தியைப் பார்த்து முறைத்து விட்டு, தாய் சொன்னுர்: ". அவள் தகப்பன் வரட்டும். வருகிற நேரந்தான்". மிரட்டுவது போலிருந்தது, அந்தத் தொனி. சதா, நிலாந்தியை நிமிர்ந்து பார்த்தான். *ஒன்றுக்கும் பயப்படாதீர்கள்'- என்றன, அவள் கண்கள். 'சதா, நான் உன்னைச் சில கேள்விகள் கேட்கப் போகி
றேன்."
* கேளுங்கள்.' லலிதா, நிம்ாலி, ரஞ்சித் - எல்லோருங் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், ஆளுக்கு ஒரு கதிரையை இழுத்துப்போட்டபடி, தாய் கேட்டார்; **இந்த-உங்கள்-விவகாரத்தை யார் முதலில் தொடங்கி Gö*f56访?”” அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது-என்ன அசட்டுத்தன மான கேள்வி: 'இதிலே யாரும் முதலில் தொடங்கவோ, யாரும் இரண் டாவதாகத் தொடங்கவோ முடியாது! இரண்டுபேரும் ஒன்ருகத் தொடங்கினுல்தான், விவகார'மே தொடங் கும்!" "சரி: இப்படி ஒன்று தொடங்கிய பின், நீ ஏன் எங்க ளுக்கும் அதைச் சொல்லவில்லை.?' அவன் பேசாமலிருந்தான். ** என்ருலும் இந்தப் பெண்களை உங்கள் சகோதரிகளாக நினைத்துப்பழகும்படிதானே கேட்டுக்கொண்டோம்? எங்கள் பையன்களைப் போலல்லாமல் நீங்கள் அடக்கமாகப் பழகு
: | بلب
 

ஒட்டுமா ●9
வீர்கள் என்றுதானே, உங்களை விரும்பி இங்கே வைத்துக் கொண்டோம்? இது நம்பிக்கைத் துரோகமில்லையா?" இந்தக் கேள்வி, அவன் மனதைத் தைத்தது. வீட்டில் போய் இந்த விசயத்தைச் சொன்னபோதுகூட, அம்ம1 (3 g5 L. L. FrG3 EJ?-- * உன்னை அவர்கள் நம்பி நடத்தினதுக்கு நீ இப்பிடிச் செப் திருக்கலாமா - என்று! * என்ருலும், இதில் துரோகம் என்று என்ன இருக்கிறது? அவளை நான் ஏமாற்றினேனு? உங்களுக்குத் தீமை செய்ய வேணுமென்று நினைத்து இதைச் செய்தேனு? நீங்களும் வர வேற்கக் கூடும் என்ற நினைப்பில்எங்களையும் அறியாமலே நடந்துவிட்ட ஒரு விவகார ந் தானே, இது? இப்படி - நினைத்துக்கொண்டானுயினும் சதா பேசாமலிருந்தான். 'உன் வீட்டில் தெரியும்ா, இது?' **தெரியும்!" ** தெரியுமா? எப்படி?' *நான் சொல்லிவிட்டேன்'
என்ன சொன்னுர்கள்'- அவர்களுக்கும் இது பிடித் திருக்காதுதானே 1 என்கிற எதிர்பார்ப்பு. *அவர்களுக்கு இதில் ஆட்சேபணை இல்லை. விருப்பம்" என்று இல்லாவிட்டாலும், 'ஆட்சேபணை' என்றும் இல்லை! இப்படி ஒன்று நடந்தால் அதை வரவேற் கள விட்டாலும், ஒப்புக்கொள்ளவர்வது செய்வார்கள்,' -அவன் நிமிர்ந்து நிலாந்தியைப் பார்த்தான். அவள் கண்களிற் திருப்தி பளிச்சிட்டது. * அவர்கள் பேசாமலிருக்கலாம். ஆனல் எங்களுக்கு விருப்ப LA)|მწე%ე). „ * ? கதவு தட்டிக்கேட்டது.
莎

Page 37
70 ஒட்டுமா
* அப்பாபோலிருக்கிறது ? - லலிதா கதவைத் திறந்தாள். பீரிஸ்தான்! காய்கறிப் பையுங் கையுமாய் நுழைந்தார்: "என்ன, எல்லாம் சாத்தியிருக்கு?'-என்றபடி வந்தவர், உட்கார்ந்திருந்த சதாவைப் பார்த்துத் திகைத்தார். "ஏன் இங்கு வந்தாய்?" என்று அந்தப் பெரிய விழிகள் கேட்பது போலிருந்தன. சதா முறுவலித்தான் பீரிஸ், ஒன்றும் பேசாமல் சமையலறைப் பக்கம் போனுர், லலிதா பின் தொடர்ந்தாள். அங்கு அமைதி நிலவியது. மெல்ல நிலாந்தியைப் பார்த்தான், சதா, அதே உறுதி யும் அமைதியுமாய் நின்றுகொண்டிருந்தான். -பீரிஸ் திரும்பி வந்து, அவனெதிரே-மனைவியினருகில்ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு உட் கார்ந்தார். லலிதா எல்லாஞ் சொல்லியிருப்பாளா என்று தெரியவில்லை. * சதா, உனக்குச் சொல்லியிருக்கிறேன் - பெண்கள் பல வீனமானவர்கள், நிலாந்தியை உனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுதே. ' பீரிஸ் சாதாரணமாகப் பேச முயன்ருலும், குரலில் சூடே றிக்கொண்டிருந்தது. பெரும் புயலொன்றை எதிர்பார்க் கிறவனின் மனே நிலையில் சதா இருந்தான்.
** நிலாந்தியை உன்னேடு வரச்சொல்லிக் கேட்டாயா?* "அவர் கூப்பிடவில்லை. நான்தான் வருவதாகச் சொன் னேன்! - இவ்வளவு நேரமும் மெளனமாயிருந்த நிலாந்தி பட்டென்று சொன்னுள். அடிபட்ட வேங்கையாய் எழுந்தார், பீரிஸ், "பிசாசே நீ இங்கே வா' - பாய்ந்தெழுந்து, அ வ ள் கையைப் பிடித்துப் பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்ற

ஒட்டுமா 7.
போது, அவள் அவனைப் பார்த்த பார்வை, நீங்கள் சொன் னது சரியாகி விடும்போலிருக்கிறதே என்பது போலிருந் தது. நிலாந்தியை அந்த அறைக்குள்-முன்பு ராஜாவும் நரே னும் இருந்த அறை-விட்டு லலிதாவையும் கூடவிட்டு கதவைப் பூட்டியவாறு வந்த பிரிஸ், அவனெதிரே வந்து நின்ருர், கதிரையில் இருக்காம்லே, அவனைப் பார்த்துச் சொன்னர்: *சதா நீ இந்தப் பக்கங்களிலே புழங்குகிறது சரி-ஆனல் நிலாந்தியின் வாழ்வில் குறுக்கிட முயலாதே! ஒன்றை மட் டும் ஞாபகம் வைத்துக்கொள் -எங்கள் இரத்தங்கள் வெவ் வேறு; அவை கலக்கமுடியாது!'
露5
ஏதோ கனவு கண்டு விழித்ததுபோலிருந்தது. தான் முற் றிலும் ஏதிர்பாராத விதமாக நிலாந்தி, உடனேயே என்னை உங்களுடன் கூட்டிக்கொண்டு போய்விடுங்கள்’ என்ற்து, ! அவர்கள் வீட்டில் பீரிஸ் நடந்து கொண்ட விதம் - எல்லாம் இப்படித் திடும் என்று நடந்து முடிந்துவிடுமென்று சதா வால் நம்பமுடியவில்லை. பீரிசின் போக்கை நினைக் கையில், ஒரு மனிதர் இப்படியும் மாறமுடியுமா என்கிற கேள்வியே எழுந்து நின்றது. மொறட்டுவையிலிருந்து பஸ் ஏறி, நேரே இரத்மலானையில் வந்திறங்கினன். 'ஆனந்தன் இந்த நேரம் இருப்பானே இல்லையோ?” என்கிற சந்தேகத்துடன் ஆனந்தனின் அறைக் குப் போனன். இப்போது அவனை அவசியம் சந்திக்க வேண்டியிருந்தது. நல்ல வேளை, ஆனந்தன் இருந்தான்.
என்ன மச்சான், எப்பிடி வெற்றியா?' நடந்ததை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான், சதா, *அவள் விசர்ப்பெட்டை. பிறகேன் உன்னேயுங் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனவள்? - ஆனந்தன் அங்கலாய்த் தான்

Page 38
72 ஒட்டுமா
என்னிலைதான் பிழை. '- சதா முணுமுணுத்தான் முகங் குழம்பிப்போயிருந்தது, கொஞ்சநேரத்தின் பிறகு அவன் சொன்னுன் "ஒரு ஆள் இப்பிடி மாற முடியுமாடா?' ** அந்தாள் மாறவேயில்லே, மச்சான், முந்தியிருந்த மாதிரித் தான் இருக்கிருர் எண்டு எனக்குப் படுகுது. முந்தி, உன்னுேட, இன ஒற்றுமையைப் பற்றிப் பேசினபோதும், கலப்புத் திருமணங்களை ஆதரித்துப் பேசினபோதும், அது களெல்லாம் பொதுவான - பரந்துபட்ட - மாற்றங்களா யிருக்கவேனும் எண்ட நோக்கத்திலேதான் பேசியிருக்க வேணும். இப்ப, இந்த விஷயத்திலே, தான் மட்டும் இப்பிடி யான ஒண்டைச் சமூகத்திலையிருந்து மீறிச் செய்தா, அது தங்களைப் பாதிக்கும் எண்ட உணர்வோட பேசியிருக்கிருர், இதிலே மிஸ்டர் பீரிஸ் மாறினதாகச் சொல்ல ஒண்டும்ே பில்லே! ??
**ஆனந்தன், இதுகளேயெல்லாம் பார்க்கிறபோது எனக்கு. காமினி, நிமால் இவங்கட உறவுங்கூட இப்பிடித்தானே எண்டிருக்குதடா? பார் இப்ப உதாரணத்துக்கு, நான் நிலாந்தியை விரும்பினமாதிரி, இவன் காமினிக்கு ஒரு தங்கச்சியிருந்து, அவளேக் காதலிச்சிருந்தா, காமினியும் இப்பிடித்தான் பேசியிருப்பானுே, தெரியாது. "
"இதுகளெல்லாங் கிடக்கட்டும். இப்ப, நீ என்ன செய்யப் போகிருய்?
-ஆனந்தன் கேட்டான்.
* அதுதானடா யோசிக்கிறன் என்ன செய்கிறதெண்டே தெரியேல்லே முந்தி, அவையளின்ர வீட்டைவிட்டு வெளிக் கிட்ட நேரத்திலே எல்லா வழியுமே அடைபட்டு அவளுக் கும் எனக்குமிடையிலே ஒரு பெரிய சுவர் எழும்பி நிக்கிறது மாதிரி ஒரு உணர்ச்சியிருந்தது. இப்பவும் - இண்டைக்கு அவளை அங்க விட்டுட்டு வந்ததிலேயிருந்து-அதே உணர்ச்சி தான். எல்லாமே ஒரு இருட்டுமாதிரி இருக்கடா. என்ன
 

ஒட்டும்ா 73
செய்கிறதெண்டே தெரியேல்லை. ' - என்று கலங்கிய சதா வைப் பார்த்து ஆனந்தன் சொன்னுன்:
"பயப்படாதே சதா, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு வழியிருக் கும். இப்ப உள்ள நிலைமையிலே, நீ என்ன செய்யப்போ கிருய் எண்டு சொல்லு-நிலாந்தியைக் கூட்டிக்கொண்டு போக நீ தயாரா?"
"இப்ப உள்ள நிலைமையிலே, அது ஒண்டுதானேயடா வழி? *உங்களோடை சுட்டிக்கொண்டு போங்கோ எண் டு அவள் சொல்லேக்கை, ஏதோ ஒரு குழந்தைத் தனத்திலே, என்னே விட்டிட்டிருக்கிற க வ லை தாங்காம சொல்லுருளாக்கு மெண்டு கூட யோசிச்சன். ஆணு, அங்க போய்ப் பார்த்த பிறகுதான், அவள் அவசரப்பட்டு இந்தி மு டி வுக் கு வரேல்லையெண்டும், இந்த நிலைமையிலே அதைச் செய்தால் தான் நாங்கள் ஒருதருக்கொரு தர் கிடைப்பமெண்டதும் தெரிய வந்தது. ஆனபடியாலே, இப்ப உடனடியாய்ச் செய்ய வேண்டியது அதுதான்.'
"சரி; அப்ப, அதுக்காக வேண்டிய விஷயங்களைத்தானே, இனிப்பாக்கவேணும்? முதலிலே உங்கட வீட்டுக்கு விஷ யத்தை முழுதாக அறிவிக்கவேணும் என்னதான் சரி? எண்ட மாதிரிக் கதைச்சாலும், அறிவிக்காமல் இதுகளை யெல்லாஞ் செய்யக் கூடாது.' *நாளைக்கு விளக்கமாக ஒரு தபால் எழுதிப் போடுறன். மச்சான்,' "
**அதோடை, நீயே ஒருக்க நேரிலேபோய்க் கதைச்சிட்டு வர ஏலும் எண்டா, இன்னும் நல்லது.' என்ருன் , ஆனந்தன்,
26
தேய்பிறையின் வெளிறிய ஒளியில், கூதற் காற்று முகத்
தில் மோதியது. விளக்குகளே இல்லாமல் இருண்டு கிடந்த அந்த யாழ்ப்பாண மெயில் வண்டியின் மூன்ரும் வகுப்புப

Page 39
74 ஒட்டுமா
பெட்டியொன்றின் மூலை இருக்கையில் உட்கர்ர்ந்து, ஜன் னல் விளிம்பில் தலைசாய்ந்திருந்தான், சதா, மணி ஒன் றுக்கு மேலாகியிருந்தது. வண்டி மாகோவைக் கடந்துவிட் டதா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை இத்தனைக்கும், யாழ்ப்பான ஸ்ரேஷனில் ஏழு மணிக்கு இந்த ரயிலில் ஏறியதிலிருந்து, ஒரு நிமிடமாவது அவன் கண்ணுறங்கவில்லை. முந்தநாள் வெள்ளிக்கிழமை மெயிலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போன அசதியே இன்ன மும் முற்ருக மாருமலிருந்தது. சனி ஞாயிறு-இரண்டு முழு நாட்களிலும் வீட்டில் நின்று கண்ட பலன், உருப்படியாக ஒன்றுமேயில்லை. தனது பெற் ருேரும், பீரிஸ் வீட்டுக்காரரைப் போலத்தான் இருக்கிருர் கள் என்பதை இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் அவ னுக்குப் புரிய வைத்துவிட்டன. சொல்லாமல் கொள்ளாமல் சனிக்கிழமை காலை வீட்டில் வந்திறங்கிய மகனேப் பார்த்ததுமே, பெற்ருே ரின் குழப் பம் அதிகரித்தது. மத்தியானம் வரை-அப்பா கந்தோ ருக்குப் போய் வந்து சாப்பிடுகிற வரை-ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் அம்மா வந்து கூப் பிட்டா. அப்பா கூடத்திலிருந்தார். 'என்ன மாதிரி, உன்ர பிரச்சினையெல்லாம்? எப்படித் தொடங்குவது என்று அவன் தயங்கி நிற்கை யில், அப்பாவே திரும்பவுங் கேட்டார்: ** அதென்ன அந்தக் காயிதத்திலை எழுதினதுதான், உன்ர முடிவோ?’ குரல் இறுகியிருந்தது. * அதை விட வேற வழி இல்லையெண்டுதான் தெரியுது. ' -சதா, மெதுவாகச் சொன்னன். சூடேறிய குரலில்; * அது கட்டாயம் செய்யத்தான் வேணுமே?' எ ன் று கேட்டார், அவர், சதா திகைத்தான்-எதிர்பாராத அடி! என்ன பதிலைச் சொல்வது? அம்மாவைப் பார்த்தான்,
 

ஒட்டும்ா 75
'அதுதானே, ராசா? இப்பிடி அவசரப்பட்டு ஒரு பெரிய காரியத்தைச் செய்யலாமே? இதுகளெல்லாம் தாய், தகப் பன் பார்த்துச் செ ய் ய வே ண் டி ய காரியமெல்லே?" -அம்மா கேட்டா, . 'தாய் தகப்பன் 'மாட்டேன்’ எண்டு சொன்னுல், வேற என்ன செய்யிறது? இப்பிடித்தான்-' சதா வை அப்பா, முடிக்க விடவில்லை:
அந்தளவுக்கு வந்திட்டீங்களோ? தாய் தகப்பனை மிஞ் சின பிள்ளையஸ்! அவளின்ர ஆக்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் இதிலை விருப்பமில்லைத்தான்! இதை நீங்கள் விட்டிடுறதுதான் எல்லாருக்கும் ந ல் ல து!' -அப்பா, அறுதியிட்டுக் கூறினர் **விட்டிடுறதோ?’- சதாவுக்கு அழுகையுங் கோபமுங் குமுறின.
.அண்டைக்கு மறுக்காம்ல் பேசினியள் இண்டைக்கு இப்பிடிச் சொல்லுறியள்?'-குரல் விம்மிற்று. 'அண்டைக்குங் கூட, நான் ஒமெண்டு சொல்லேல்லை, * பிறகு பாப்பம்’ எண்டுதான் சொன்னனுன் .'- பழைய கோபத்தொணியை விட்டு, அப்பா அமைதியாகச் சொன் ஞர்: "...இப்ப, நல்லா யோசிச்சுப் பார்த்த அளவிலே, இது செய்யக் கூடாதவேலை எண்டுதான் தெரியுது. ' சதா இடைவெட்டினன்.
"ஏன் ???
* ஏ னே? உனக்குப் பின்னுலையிருக்கிற சகோதரங்களை யோசிச்சியா? நீ இப்பிடி ஒண்டைச் செய்தா, அதுகளின்ர காலத்திலே என்ன நடக்கும்? 'தமையன் வேறு இனத்தா ளைக் கட்டினவன் எண்ட பேரே போதும். எங்களுக்காக வேண்டாம், அதுகளை மனதிலே வைச்சு யோசி!'
-அப்பாவின் குரலில் உருக்கம் இழையோடியது.

Page 40
76 ஒட்டுமா
"இதுமாதிரித்தானே ராசா, அந்தப் பிள்ளையின்ர சகோ தரங்களுக்கும் நடக்கும்? நீ, அவளைக் கூட்டிக்கொண்டு, தாய்தகப்பன்ர விருப்பத் துக்கு மாருகப் போனுல், ஒடிப் போனவளின்ர சகோ தரங்கள்' எண்டு சொல்லி, அந்த மற்றப் பிள்ளையளின்ர வாழ்க்கையும் அநியாயமாய்ப் போ யி டு ம் '-அம்மா இப்படிச் சொன்னபோது, இந்த நிலையிலுந் தன் தாயின் பெருந்தன்மையை மெச்சாமலிருக்க அவனுல் முடியவில்லை. அவன் சொன்னன்:
"நீங்கள் சொல்லுற தெல்லாஞ் சரி, ஆணு, காலம் எப்ப வும் இதே மாதிரி யிராது. அந்தக் காலத்திலே உலகம் இப்படியிராது' *உதுக்குத்தான் மு ந் தி யும் ஒரு மறுமொழி சொன்ன ஞன்.' - அப்பா சொன்னுர்: ". நீ இந்த விஷயத்தை மறந்திடு அல்லது மறக்கேலாது எண்டு சொல்லுவாயெண் டால், நாங்களும் பிறகு அதுக் கேத்த மாதிரித்தான் நடக்க வேண்டியிருக்கும்! ஏதோ, நல்லா யோசிச்சு நட!' - அப்பா, அறுத்துறுத்துக் கூறி விட்டு எழுந்து போய் விட்டார், எல்லாம், மொட்டையாக-ஏமாற்றத்தில்-முடிந்த அவதி யில், சதா அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தான்:
என்னம்மா? இது?
**நான் என்ன செய்யிறது, ராசா? அப்பா இ ப் பி டி ச் சொன்ன பிறகு, நான் மீற முடியுமோ? ஏதோ பெரியவை சொல்லுறது நன் மைக்குத்தான். அதை யோசிச்சு, நல்ல பிள்ளையா, புத்திசாலித்தனமா நடந்துகொள்ளப் பார்." இதற்கு மேல் பேசிப் பலனில்லை என்றுபட்டது, சதாவுக்கு, முட்டுத் தீர, செல்வத்துடனுவது பேசிப் பார்க்கலாமென்று, அவனைத் தேடிப் போஞன். செல்வம் வீட்டிவில்லை ஞாயிற்றுக்கிழமை காலைதான் செல்வம் கமத்திலிருந்து வந்தான். இருவருமாக அம்மன் கோவிலடிக்குப் போய்,
 

ஒட்டும்ா ሃ?
பகல் முழுவதுங் கோயில் மேடையிலேயே கழித்தார்கள். எந்த வழியுமே புலப்படவில்லை. செல்வம் மிகவும் இரக்கப் Lil - L- IT GOfa
*உன்ர அப்பா சொன்னதிலும் உண்மையிருக்கு, சதா: என்ர நிலைமைக்கும் உன்ர நிலைமைக்கும் கன வித்தியாச மிருக்கு. நான் உன்னிலும் பார்க்க வ ச தி குறைஞ்சவன் எண்டாலும், சகோதரங்கள் இல்லாததாலே, பொறுப்பும் குறைஞ்சவன்! உன்ர நிலைமை இப்பிடியில்லை. எங்கட இந் தச் சமூகத்திலே, ஒரு தன் எவ்வளவு வசதி வாய்ப்பு உள்ள வனுயிருந்தாலும், சகோதரங்கள் - அதுவும் பெண் சகோ தரங்களோட பிறந்தா, அவன் ஒரு பொறுப்பாளியாபும் சமூகத்துக்குப் பயந்தவஞயுந்தான் ந ட க் க வேண் டி யிருக்கு. '
சதா பேசாமலிருந்தான்; 'வீணுக, தைரியத்தை விட்டுக் குழம்பாதே' என்று தேறுதல் சொன்னுன், செல்வம்: 'எல்லாம் எங்கட கையிலேதான் இருக்குது. ஒண்டுக்கும் பயப்படாதே, பாப்பம்!' என்ருன்.
மாலையில் ஸ்ரேசனுக்குக் கூட்டி வந்து வழமைபோல வழியனுப்பியும் வைத்தான்.
23"
அலுவலகத்தில்தான், தூக்கம் தன் கை வரிசையைக் காட்டிற்று. மெயில் அன்று நேரத்திற்கே வந்து விட்ட தால், சதா தன் அறைக்குப் போய்க் குளித்து உடை மாற்றி, வேலைக்கு வர நேரஞ் சரியாக இருந்தது. கடந்த இரண்டு மூன்று இரவுகளிலும் வராத நித்திரை, இன்று தான் பழிவாங்கப் பார்த்தது. மனதை அரிக்கிற கவலை யும், இந்த அசதியுந் தூக்கமுமாய்- நரக வேதனையை அநுபவித்தான்,
காமினி, அன்று லிவு அவன் இருந்தாலாவது பேசிப் பார்த்திருக்கலாம். என்னதான் களைப்பாயிருந்தாலும்

Page 41
7& ஒட்டுமா
மாலையில் இரத்மலானைக்குப் போய் ஆனந்தனைச் சந்திப் பது என்கிற முடிவுடன், வேலையிலிருந்து அறைக்குத் திரும்பினுன், சதா, அறையில், ஆனந்தனே சதாவை எதிர்பார்த்துக் காத்தி ருந்தான். 'நீ எப்பிடியாவது இண்டைக்கு வந்திருப்பாயெண்டு தெரியும். எப்பிடி விஷயம்?" அழாக்குறையாக, எ ல் ல | வ ற் றையுங் கொட்டித்தீர்த் தான், சதா, சிறிது நேரம் ஆனந்தன் ஒன்றும் பேச வில்லை.
பிறகு சொன்னன்- - *சதா, நான் சொல்லுறன் எண்டு கோவியாதை உனக்கு, முந்தி ஒருக்கா - கட்டுபத்தையிலை வைச்சுச் சொன்னது ஞாபகமிருக்கா? இப்பிடியான ஒரு பிரச்சினைக்குள்ளே போய்ச் சிக்கப்போருய் எண்டு, அப்பவே சொன்னன் நீ கேக்கேல்லை." -ஆனந்தன் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிருன் என்பது புரியாமலேயே, சதா தலையை அசைத்தான்;
*மச்சான், இப்பவும் அதைத்தான் உனக்குச் சொல்லு றது நல்லது எண்டு எனக்குப் படுகுது!" ‘என்னடா, பீரிஸ், அப்பர்- ஆக்கள் போலை நீயும் இப் பிடிச் சொல்ல வெளிக்கிட்டிட்டியா?* "அதுதான் சொன்னனே, கோவியாதை எண்டு; மச்சான், உன்ர நன்மைக்குத்தான் சொல்லுறன் --நீ இந்த விஷ யத்தை மறந்திட்டா நல்லது எண்டுதான் எனக்கும் இப்ப படுகுது.' *உனக்கென்னடா, விசரா?. இருந்தாப்போலே இப்பி டிச் சொல்லுறியே? இவ்வளவு நாளும் எங்களுக்கு எவ்வ ளவு உதவியாயிருந்தாய்." 'உண்மைதான், சதா, உங்களுக்கு நான் உதவியாயிருந் ததுக்கு இரண்டு காரணங்கள் - ஒண்டு, நீ படுகிற பாட்
 

ஒட்டுமா 79
டைப் பாத்துக்கொண்டு என்னுலை சும்மா இருக்கமுடி யேல்லே. மற்றது உன்ர வீட்டிலையாவது இந் த விஷயத் துக்கு ஆ த ர வு இருக்குமெண்டு- அப்பிடித்தானே, நீ சொன்ன நீ?-நான் நினைச் சது. இப்ப உன்ர வீட்டிலையும் இதை விரும்பேல்லையெண்டு நீ சொன்னதன் பிறகு, இனி யும் இந்த விஷயத்திலே உன்னை ஊக்குவிக்கிறது, உன்னைப் பிழையான வழியிலை கொண்டுபோறது மாதிரித்தான் இருக்கும். '
சதா, இப்படியான ஒரு பேச்சை ஆனந்தனிடமிருந்து எதிர்பார்க்காததால், இடிந்துபோய் உட்கார்ந்திருந்தான். இந்த உலகத்தில் யாருமே தனக்கு உதவி செய்ய இல்லா மல், தான் மட்டும் தனித்துப் போய் நிற்பதாக அவன் பயங்கரமாய் உணர்ந்தான். அவனது முகத்தோற்றத்தி லிருந்தே மன நிலையைக் கணித்துக் கொண்டாலும், அதற் காகக் காத்திராது, ஆனந்தன் மேலே பேசிக்கொண்டே போனுன்
*சதா, துவக்கத்திலையிருந்தே நான் இந்த விஷயத்தை விரும்பேல்லை. எண்டாலும் அந்த இரண்டு காரணங்களுக் காகத்தான் இவ்வளவு நாளும் யோசிச்சன். இப்ப உள்ள நிலையிலை, நீ இந்த விஷயத்தை இதோடு விட்டிடுறது தான் எல்லாருக்கும் நல்லது. இப்பிடியான ஒண்டுக்காக, நீ அநாவசியமாய் உன்ர முழு வாழ்க்கையையுமே நிஸ்க்" எடுக்கிறது பைத்தியகாரத்தனம். இது இல்லாமல் கூட, நீ சந்தோஷமா வாழ முடியும்- ஒரு உண்மையான சிநேகிதன் எண்டமுறையிலை, நான் இவ்வளவுதான் சொல்லுவன்.'
ஆனந்தன் இதைச் சொல்லி முடித்துவிட்டு சதாவைப் பார்த்தபோது, சதா பேயறைந்தவன் போல இருந்தான்; கண்கள் கலங்கி இருந்தன. சட்டென்று எழுந்து ஆனந் தனின் கைகளைப் பற்றிக்கொண்டான்,
**ஆனந்தன்! ப்ளீஸ், நீ இப்பிடிச் சொல்லாதை மச்சான். மற்றவை சொல்லட்டும். நீ சொல்லாதை, ப்ளீஸ்"

Page 42
80 ஒட்டுமா
2S கதவு தட்டும் ஒலி கேட்டது. வேலை முடிந்து வந்து உடை மாற்றி ஆனந்தனிடம் புறப்பட்டுக் கொண்டிருந்த சதா, கதவைத் திறந்தான். நிமால்! ‘எங்கோ புறப்பட ஆயத்தமா, சதா? அப்படியே என்னு டன் வா--நிலாந்தி உனக்காக ஸ்ரேசனில் காத் து க் கொண்டிருக்கிருள். ' நிலாந்தியா, ! அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டான். * எந்த ஸ்ரேஷனில்? "இங்கேதான் - பம்பலப்பிட்டியில். ' - நிமால் எட்டி நடந்தான், ஆயிரங் கேள்விகள் மனதில் சுழன்றெழுந்தன. ‘எப்படி வந்தாள்? அதுவும் இந்த நேரத்தில்? வீட்டில் தெரியுமா? என்ன அவசரம்? எல்லாவற்றையும் நிமாலிடங் கேட்டான். * லால் கல்யாணம் முடித்துக்கொண்டான். லண்டனில் ' ** லால்? யாரை??? *வெள்ளைக்காரி. முந்தநாள் நியூஸ் வந்தது. சித்தப்பா வீடு ஒரே அப்ஸெற். ' என்ருன், நிமால். அதுபற்றி ஏதோ பேசத்தான், இங்கேயுள்ள ம்ற்றச் சித் தப்பா வீட்டுக்கு வந்துவிட்டுப் போகிருர்களாம், அவனும் நிலாந்தியும், - ஸ்ரேசனில், பெண்கள் அ  ைற யி ல் உட்கார்ந்திருந்த நிலாந்தி, இவர்களைக் கண்டதும் எழுந்து வந்தாள். தன் குழப்பங்களையும் கவலைகளையுங் கூட, அவளேக் கண்டபோது சதா மறந்தான். அவளுக்காக எதையும்-எந்தத் துன்பத் தையும்.அதுபவிக்கலாமென்றிருந்தது. நி லா ந் தி யி ன்
 

ஒட்டுமரி 8.
முகம் வாடியிருந்தது. பார்த்துக்கொண்டு நின்றன் என்ன பேசுவதென்று புரியவில்லை. *வா, இந்தச் சுவருக்கு அந்தப் பக்கம் போய்க் கடற்கரை யில் நின்று பேசலாம். '-ஸ்ரேசனைக் கடற்கரையி லிருந்து பிரித்து நின்ற நெடுஞ்சுவரைக் காட்டி, சதா கூறி ஞன், தண்டவாளத்தைத் தாண்டி, இருவரும் அந்தப்பக் கம் போனர்கள். நிமால் மேடையிலேயே நின்றுவிட் டான். அன்றைக்கு அவர்கள் வீட்டுக்குப்போய்க் கோளாறு பட்டு, ஒரு மாதந்தாகிையிருக்கிறது. அதற்குள் அவளைச் சந்திக்கிற சந்தர்ப்பமொன்று கிட்டும் என்று சதா நினைத் திருக்கவில்லை. கடற்கரையில் அங்குமிங்குமாக இர ண் டொருவர் மட்டும் நின் ருர்கள். சுவரையொட்டியிருந்த நீண்டகல்லில் இருக்கப் போனுன். * வேண்டாம்; அப்படி வாருங்கள். ' -என்று, $(typ அடுக்கடுக்காகக் கிடந்த கரும்பாறைகளைக் காட்டினுள். நிலாந்தி, இறங்கிப்பேர்ய், வசதியான ஒர் இடுக்கில் இரு வரும் அமர்ந்து கொண்டார்கள். அலையடித்த போதெல்லாம், நீர்த்துளிகள் பூஞ்சிதறலாய் உடலெங்குந் தெறித்தன. கடல் விளிம்பில், முக்கால் வாசி நீருக்கடியில் அமிழ்ந்து விட்ட சூரியன் தெரிந்தது. இன் னுங் கொஞ்ச நேரத்தில் அது முற்ருக மறைந்து விடும். இருத்தாற்போல, சதாவின் மடியில் விழுந்து விம்மினுள், நிலாந்தி! "என்னை மன்னித்து விடுங்கள், சதா என் மீது கோபி யாதீர்கள் ' ** என்ன இது, நிலா?' - ஒன்றும் புரியாதவனுக, அவ ளேத் தோளைப் பிடித்துத் துரக்கினன். விம்மிக் கொண்டே நிலாந்தி சொன்னுள்: * என்னைக் கோபிக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். சொல்லுகிறேன்" 'உண்மையாக உன்னைக் கோபிக்க மாட்டேன்.சொல்லு, நிலா." - அவள் கன்னத்து நீரைத் துடைத்தான்,

Page 43
82 ஒட்டும்ா
*சதா, நான் உங்களுடன் வரமுடியாது! என்னை மறந்து விடுங்கள்! "
அவள், அவன் பிடியிலிருந்து திமிறி, மீண்டும் அவன் மடியில் விழுந்து குலுங்கினுள். யாரோ தலையில் அடித்தது போலிருந்தது, அவனுக்கு! ஆவேசமாக, நிலாந்தியின் முகத்தை நிமிர்த்தின்ை -
'நிலா! உனக்கென்ன, பைத்தியமா? ஏன் இப்படிச் சொல்லுகிருய்? உண்மையாகத்தானு?" அவள், தலையை மேலுங்கீழுமாய் ஆட்டினுள், உதடுகள் துடித்தன. தரையதிர, வெகுவேகமாக வந்த ரயிலொன்று, ஸ்ரேஷ னில் நின்றது. அது, தன் தலைமீது ஒடுவதாகப்பட்டது, அவனுக்கு பள்ளத்தில், பாறை இடுக்கில் இருந்தபடியால் யாரும் பார்க்க முடியாது என்ற துணிவில், சதா அவள் முகத்தைக் கையில் ஏந்தி; *உண்மையாகத்தான் சொல்கிருயா, நிலா?' என்று கெஞ்சியவாறே, அவள் கன்னத்தில் தன் உதடுகள் அழுந்த, முகத்தைப் பதித்தான், கண்ணிர் மணிகள் அவன் உதட் டில் உப்புக்கரித்தன. நிலா, தன் முகத்தை விலக்கி, கண்களைத் துடைத்
தாள். 'உண்மையாகத்தான், சதா! என்னை மன்னித்து விடுங்
கள்." -ஏதோ சொல்ல முயன்றவளே. மீண்டும் அழுகை தடுத்தது.
*உன் வீட்டில் இப்படிச் சொல்லச் சொன்னர்களா?" -கோபந் தொனிக்கக் கேட்டான். * 'இல்லை; யார் சொல்லித் தந்தும் நான் இதைச் சொல்ல வில்லை'-அவள் கண் களைத் துடைத்து, குரலைச் செருமிய படி உறுதியாகப் பேச ஆரம்பித்தாள். * யார் சொல்லித் தந்தும் நான் இதைச் சொல்லவில்லை.
بر
 

ஒட்டுமா &3
நீங்களுங் கூட எந்தவிதமான பிழையுஞ் செய்யவில்லைஎன் சதா-1 நீங்கள் எனக்கு எந்தப் பிழையுஞ் செய்யமாட் L(o.s. 56T. ' -அவன் கையை எடுத்து, அவள் முத்தமிட்டாள். *.நான், நானுகவே சொல்கிறேன். எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை, சதா நான் ஏன் இப்படிச் சொல்கி றேன், தெரியுமா? எங்கள் அண்ணன் விஷயத்தை நிமால் அண்ணன் சொல்லியிருப்பார். அம்மா, முந்த நாள் இரவி லிருந்து இன்னமுஞ் சாப்பிடவில்லை. அப்பாகூட எப்படி யிருக்கிருர், தெரியுமா? நான் பிறந்ததற்கு, இப்போது திான் அவர் கண்களில் கண்ணிரைப் பார்த்தேன்! எங்கள் பிள்ளைகளெல்லாம் இப்படிச் செய்கிருர்களே' எ ன் று சொன்னர். அந்த மனங்கள் எவ்வளவு நொந்திருக்கும் என்று எனக்கு இப்போது புரிகிறது. நீங்களே சொல்லுங் கள், சதா-நானும் உங்களுடன் வந்திருந்தால் இதே நிலை தானே அப்போதும் ஏற்பட்டிருக்கும்? அது பரவாயில்லை என்று பட்டாலுங்கூட இனி-இந்த நிலையில்-அந்த அண் ணன் இப்படிச் செய்த பிறகு-நானும் அதையே நினைக்க முடியுமா? சொல்லுங்கள் சதா!. நானும் அப்படிச் செய் தால், என் பெற்ருேருக்குப் பைத்தியம் தான் பிடிக்கும் ' -நிலாந்தி மீண்டும் அழ ஆரம்பித்தாள். உறைந்து போய் உட்கார்ந்திருந்தான், சதா, 'எவ்வளவு துன்பம்' -நிலா திரும்பவும் பேசினுள், "...உங்கள் மனம் எப்படித் துடிக்கும் என்று எனக்குப் புரிகிறது. ஏனென்ருல் என் மனமும் அப்படித்தான் துடிக்கிறது! என்னுல் உங்க ளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியிலும், துன்பந்தான் அதிகம் என்னை மன்னித்து விடுங்கள், சதா . என் நிலைமை புரி கிறதா, உங்களுக்கு?'
சதா தலையசைத்தான். *உன்மீது எனக்கு எந்தவிதமான கோபமுமில்லை நிலா! ஆனல், எங்கள் வாழ்க்கை இப்படியாகி ' "அது என்னுல்தான், சதா என் சுயநலத்திற்காக உங் கள் வாழ்க்கையையும் பாழடிக்கிறேன். '

Page 44
岛4 ஒட்டுமா
பின்புறமிருந்து நிம்ால் கூப்பிடுவது கேட்டது; சுவரருகில் அவன் நின்றுகொண்டிருந்தான். 'எக்ஸ்கியூஸ், மீ. நன்ரு க இருட்டிவிட்டடது. நிலா ந் தியை வீட்டில் தேடுவார்களே. ' உண்மையாகவே இருட் டித்தானிருந்தது.
நான் போகவர், சதா?" தன் வாழ்வே அவளுடன் போவதான உணர்வில் சதா செயலிழந்து இருந்தான். மெல்ல எழுந்த நிலாந்தி, நிமால் தங்களைப் பார்க்கிருணு என்பதைக் கூடக் கவனியாதவளாய், சதாவின் கழுத்தைக் கட்டி முத்தமிட்டாள்.
*நான் போகிறேன்.' -குரல் தளுதளுத்தது. சதாவும் எழுந்தான். என்னசொல்ல இருக்கிற்தென்று புரியவில்லை. அவளைப் பின்பற்றி, ஒவ்வொரு பாறையாகத் தாண்டி மேலே வந்தான். கைக்குட்டையை விரித்து, முகத்தை அழுந்தத் துடைத் தவள், திரும்பியும் பாராமல் விறுவிறென்று நடந்தாள். 'உன்னைப் பிறகு சந்திக்கிறேன், சதா! குட்நைட்' - என்றபடி நிமாலுந் திரும்பினுன் அவனுக்கு நிலாந்தி யின் முடிவு தெரிந்திருக்க நியாயமில்லை. சுவரைத்தாண்டி, அவர்கள் ஸ்ரேஷனுக்குள் நுழையும் வரை பார்த்துக் கொண்டிருந்த சதா, 1ெ8ல்லத் திரும்பி, கடற் கரையோரமாகத் தன் அறையை நோ க் கி நடந்தான். உடம்பே கணத்தது. அதே சமயம், ஏதோ பாரங் கழன்றது போல, இனம் புரியாத உணர்வு ஒ ன் று ம் ஏற்பட்டது. தூரத்தே, ஒளிப்புள்ளிகள் மின்னிக் கொண்டிருந்தன.
eyronnotargarese
 

ܢ

Page 45


Page 46
*篷 FJI
ക്ലബ് ().g யற்பட்டுவருகிருர்,
இவரது மூ ன்று கதைத் வெளியாகியுள்ளன : "பார் ஒரு ஊரிலே .
"ஒரே ஒரு ஊரிலே. 1971 பரிசைப் பெற்றது.
"ஒட்டுமா சாந்த னின் நான் வது நாவல். 1972ல் எழு
ஈழத்தின் மல்லிகை"யிலும் யாழி'யிலும் சாந்தனது எழு இடம் பெறுகின்றன.
முப்பத்தொரு வயது நிரம் கொழும்பு கட்டிட்த் திணைக் ளராகப் பணியாற்றுகிருர்,
இவரது இயற்பெயரும் இது
 

66ல் கலைச் செல் வி”யில் மது முலி த லா வது சிறு தயை எழு தி ய த ன் லம் இலக்கிய உல கி ல் வேசம் செய்த சாந்தன் ன்று வரை குன்ருத உற் கத்துடன் எழுத் துல
தொகுதிகள் இதுவரை வை "கடுகு, ஒரே
5ல் சாகித்ய மண்டலப்
காவது நூல் முதலா தப்பட்டது.
தமிழகத்தின் 'கணே
ழத்துக்கள் அ டி க் க டி
பிய இந்த எழுத்தாளர் களத்தில் வரை வல்லா
தான் ஐ. சாந்தன்.