கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனப் பிரச்சினை: ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

Page 1
sogoo), oloogilo omaeo
磷
 


Page 2

இனப் பிரச்சினை
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்
எம். ஏ. எம். மன்ஸ்?ர்
ශ්‍රිෂ්roෂ්නන්) 69//f/2

Page 3
Title
Language
No. of pages
Author
Copy Right
Cover Photo
Cover Design :
Typesetting
Edition
No.of Copies :
Publishers
Price
Inappirachchinai-Oar Islamiyak Kannoddam (Ethnic Crisis- An Islamic Perspective)
Tamil
40 -- IV
Ash-Sheikh M.A.M. Man Soor, Naileemi, B.A. (Hon)
Author
Janak Mayathunne
M.K.M.Shakeeb
M.R.M. Aslam
First (February-1999)
4000
Meelparvai Publishers, 63/5C, Stace Road, Colombo - 14

பொருளடக்கம்
முன்னுரை
ஒன்று : இனப் பிரச்சினைகளும் போராட்டங்களும்
இரண்டு : இஸ்லாத்தில் நாடு, இனம், மொழி.
மூன்று : இஸ்லாத்தில் தேசியம்
நான்கு : இஸ்லாத்தில் மனிதம்
ஐந்து : மதச்சார்பின்மையும் இஸ்லாமும்
egel, D : இஸ்லாமிய அரசில் சிறுபான்மையினர்
ஏழு : இஸ்லாமியவாதியின் நிலைப்பாடு
எட்டு : போராட்ட ஒழுக்கம்
ஒன்பது : முஸ்லிமை இயக்குவது எது?
O3
08
I6
21
25
30
33
37

Page 4

ഗുണബ്രബ്
இனப்பிரச்சினை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது என்ற கருத்து இங்கு எழுத முயற்சி செய்யப்படுகிறது. இதுவொரு வித்தியாசமான சிந்தனை. மதச்சார்பற்ற புத்திஜீவிகளுக்கு இதனை ஜீரணிக்க முடியுமோ என்னவோ? ஒரு மாற்றுக் கருத்தை அவர்களும் பார்க்கட்டும். இலங்கை நாட்டினுள்ளே வாழுகின்ற பல்லினங்கள் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது என்பதை இந்நூலில் நாம் விரிவாக ஆராயவில்லை. பொதுவாக இப்பிரச்சினையை இஸ்லாம் எப்படி நோக்குகிறது, இதன்போது ஒரு முஸ்லிமின் நிலைப்பாடு என்ன என்பதையே கூற முயல்கிறோம். இஸ்லாமியப் பூமியின் உள்ளே வாழும் அடுத்த இனங்கள் குறித்து இஸ்லாம் எவ்வாறு நோக்குகிறது என்பது மிக விரிந்த விடயாமாகும். அது தொடர்பாக நவீனஅறிஞர்கள் முற்றிலும் புதிய பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவற்றை விளக்க நாம் இத்தலைப்பைப் பயன்படுத்தவில்லை.

Page 5
ஆனால் முஸ்லிம்களோ இக்கருத்தைக் கவனமாகப் புரிந்துகொள்ளல் அவசியம். இதற்கேதும் விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பரிச்சயமுள்ள யாரும் அவற்றைத் தாராளமாக முன்வைக்கலாம். அடுத்தவர்களும்கூட இப்பிரச்சினை தொடர்பாக இஸ்லாமியக் கண்ணோட்டம் பற்றிய தம் அபிப்பிராயங்களை வெளியிடலாம்.
அன்புள்ள7 உங்கள் சகோதரன் 67 zb. 67. 67 Ló. LD6øž67 voří /222の2クグ
/06, குருகொட அக்குறணை,

இனப் பிரச்சினைகளும் பே7ர7ட்டங்களும்
அநியாயத்தை எதிர்ப்பது மனித இயல்பு மட்டுமல்ல. பொதுவாக மிருகங் கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. தனது உயிர், உடைமைகள் மீது அத்துமீறல்கள் நடக்கும்போது அதற்கெதிராக மனிதன் கிளர்ந்தெழுவது இயல்பு தனிமனிதனுக்கு இது பொருந்துவது போலவே சமூகங்களுக்கும் பொருந்தும். எனவேதான், இழைக்கப்பட்ட அநியாயங்களினால் அரசுகளே எழுந்துள்ளமையை வரலாற்றில் காண்கின்றோம். புரட்சிகளும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு ஊர்வலங்களும் இதன் காரணமாக எழுந்தவையே.
இந்தக் கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது மட்டுமல்ல, இத்த கைய போராட்டங்களை உயர்வாக மதித்தும் உள்ளது. புனித யுத்தத்தில் மரணித் தல்' என இதனை வர்ணித்தும் உள்ளது. "யார் தனது உயிருக்காகப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹிதாவார். யார் தன் செல்வத்திற்காகப் போராடி

Page 6
மணிக்கிறாரோ அவர் ஷஹிதாவார்" (ஆதாரம் : அஹ்மத்) என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அநீதியிழைக்கப்பட்டவனைப் பற்றிக் கூறும்போது, 'அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்துகொள்ளுங்கள்! ஏனெ னில், முஸ்லிம் அல்லாதவனாக இருந்தபோதும் அவனுடைய பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் திரை கிடையாது" (ஆதாரம் : ஸஹிஹ் முஸ்லிம்) என இறைத் தூதர் (ஸல்) விளக்கினார்கள்.
கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமைகள், தனிமனிதனுக்கான நியாய மான, போதிய வசதியுடனான வாழ்வு பற்றிய சிந்தனைகள் எல்லாம் நவீன காலத் தில் மிகவுமே வலியுறுத்தி விளக்கப்படுகின்றன. எனவே, மனிதன் இந்த உணர்வு களைக் கூரிய அளவில் பெற்றுள்ளான். அதனால் அநியாயங்களுக்கு எதிரான போராட்டங்கள் நவீன காலத்தில் மிக அதிகம்.
'தேசியம்' என்ற கருத்தும் நவீன காலத்தில் கடுமையாக வலியுறுத் தப்படுவதால் பெரும்பான்மையாக வாழும் ஒரு சமூகம், தான் வாழும் குறிப்பிட்ட தொரு நிலப்பரப்பைத் தானே ஆளவேண்டும் என்ற கருத்தையும், தன்மீது பிற ஆதிக்கம் படர்வதைச் சற்றேனும் சகித்துக்கொள்ளாத போக்கினையும் கொண் டுள்ளது. சிறுபான்மையினர் பிரச்சினை என்பது பெரும்பான்மை சமூகங்களின் அநியாயங்களால் உருவாவது என்பது உண்மை என்பதோடு, இந்த உணர்வின் கூரிய தன்மையும் அதற்குக் காரணமென்றால் அது மிகையாகாது.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் பல சமூகங்கள் அடுத்த சமூகம் பற்றிய பயத்துடன் வாழும் நிலை உள்ளது. சிறுபான்மை சமூகம் தன்மீது ஆதிக்கம் செலுத்திவிடுமோ என்ற பயம் பெரும்பான்மை சமூகத்திற்கு இருக்கிறது. பெரும் பான்மை சமூகம் தன் உரிமைகளையும் பறித்து, தனித்துவத்தையும் சிதைத்து விடுமோ என்ற பயம் சிறுபான்மைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல இதே பய உணர்வை பரஸ்பரம் முதலாம், இரண்டாம் சிறுபான்மைகளுக்கிடையேயும் காணமுடியும்.
எனவே சிறுபான்மைப் பிரச்சினை உலகெங்கிலும் ஒரு பெரிய பிரச்சினை யாக உருவெடுத்திருப்பதை அவதானிக்க முடியும். பலம்பெற்ற பெரும்பான்மை, சிறு பான்மை மீது அத்துமீறுவதையும் அநியாயங்கள் இழைப்பதையும் நவீன உலக வரலாற்றில் அதிகமாகக் காண்கிறோம். சர்வதேச ஒழுங்கு கூட இந்நிலைக்கு மாற்றமல்ல என்பதே உண்மை.
உலக சனத்தொகையில் ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமானோர் வாழுகின்றனர். அதிக பெளதீக வளங்களையும் ஆசிய நாடுகளே பெற்றுள்ளன. எனினும், உலகின் மீது ஆதிக்கம் செலுத்துவது மேற்கத்தேய நாடுகளே. ஐ. நா. சபையில் ஆசிய நாடுகளின் கை பலவீனமாகவே உள்ளது.
இவ்வாறு நவீன உலகம் சமநிலையை இழந்த நிலையிலும், பெரும் போராட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து வாழ்கின்றது. முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களால் ஏற்பட்ட அழிவுகளைவிட, பின்னர், நாடுகளுக்கிடையிலான இத்தகைய போராட்டங்களால் ஏற்பட்ட அழிவுகள் மிகக் கூடுதலாக உள்ளதாகத் தெரிகிறது.
போராட்டங்களின்போது மனிதன் காட்டுமிராண்டித் தனத்துக்குத் தள்ளப்
(){ / ജൂര11 ിക്റ്റിതങ്ങ്

படுவதைக் காண்கிறோம். ஒரு வயதே நிரம்பிய சின்னஞ்சிறுவன் நெருப்பில் போட்டு உயிருடன் சுடப்படுகிறான். பின்னர் அவனைத் துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள தாய் தந்தையரிடம் கொடுக்கிறார்கள். அந்த இறைச்சியை உண்ணுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். மறுக்கும்போது சித்திரவதை செய்யப்படுகிறார்கள். மிருகங்களே செய்யமுடியாத இக் கொடிய செயலை சேர்பிய மிருகங்கள் பொஸ்னியர்கள் மீது இழைக்கிறார்கள். உலகெங்கும் இப்பயங்கரச் செயல்கள் நிரம்பிவழிவதைத் தாராளமாகக் காணமுடிகிறது.
புரட்சிகளையும் போராட்டங்களையும் அடக்கும் வழியில் பெரும்பான்மை அரசுகள் மட்டுமல்ல, சிறுபான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலைப் போராளிகளும்கூட இக்கொடுமைகளை, கொடுரங்களை இழைக்கிறார்கள். இந்த அநியாயங்களும் கொடூரங்களும் எங்கிருந்து தோன்றின? மனித சமூகம் இன்று ஏன் போராட்ட சூழ்நிலையிலேயே வாழவேண்டியிருக்கிறது? மனித உடைமைகள், நலன்கள், மானுடம் போன்றன பற்றி அதிகம் வலியுறுத்தும் இக்காலத்தில்தான் இந்த
அவல நிலையா?
மனிதன் இயந்திரமானான். அவனது கல்வி நிறுவனங்களிலிருந்து ஆன்மாவை வளர்க்கும், அதாவது மனிதனை வளர்க்கும் பாடத்திட்டங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. தொழில்நுட்பம்சார் பாடங்களே முக்கியத்துவம் பெற்றன. உலக இன்பத்தை நுகர்வதைத் தவிர மனித வாழ்விற்கு வேறு அர்த்தத்தை நவீன மனித சிந்தனைகள் கொடுக்கவில்லை. மனிதனின் ஆன்மாவை வளர்க்கும் வணக்கவழிபாடுகள் சமூகக் கடமைகளாகக் கணிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றல் தனிமனிதக் கடமையாகக் கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றைக் கண்காணிப்பது அரசின் பொறுப்பாகவும் அமையவில்லை. வணக்க வழிபாடுகளை நிறைவேற்றாமை குற்றச் செயல்களாகக் கணிக்கப்பட்டு நீதி மன்றங்களில் அது விசாரிக்கப்படுவதோ, தண்டனைகள் வழங்கப்படுவதோ இல்லை. நிலைமை இப்படி மாறும் போது மனிதன் ஈரமற்ற இதயம் கொண்ட இயந்திரமானான். அநியாயம் செய்ய மிருகங்களிடம் நகங்களும் பற்களும் மட்டுமே உள்ளன. ஆனால் மனிதனிடத்திலோ பயங்கரக் கொலைக்கருவிகள் இருக்கின்றன. சமூகங்கள் மீதும் நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்துவது அந்த சமூகங் களது. நாடுகளது செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்கே என்ற நிலைமை உருவா கியது. மனிதனுக்கு வழிகாட்டும் கொள்கையொன்றைப் போதிக்கும் வழியில் தோன்றும் போராட்டம், யுத்தம் ஆகிய சூழ்நிலைகள் நவீன உலகில் இல்லா தொழிந்தன. கொள்கைகளும் சிந்தனைகளும்கூட கொள்ளையடிக்கும் கருவி களாகப் பயன்படுத்தப்படத் தொடங்கிற்று.
"அவர்கள் வந்திறங்கியபோது அவர்களின் கையில் பைபிள் இருந்தது. எமது கையில் நிலமிருந்தது. அவர்கள் எம்மைப் பார்த்து ஜெபிக்கச் சொன்னார்கள்.
ഉf ജൂൺഓസ്ഥി11് കരസ്ത1 || 1, 15

Page 7
நாம் கண்ணைமூடி ஜெபித்துக் கொண்டிருந்தோம். விழித்துப் பார்த்துபோது அவர்களின் கையில் நிலம் இருந்தது. எமது கையில் பைபிள் இருந்தது."
என்பது புகழ்பெற்ற ஆபிரிக்கக் கவிதையொன்றின் சில வரிகள்.
மனிதனுக்குப் பின்னால் இந்த உலகை விட உயர்ந்த கொள்கையில்லாத போது, அவன் ஆன்மீகரீதியாக வளர்க்கப்படாதபோது மனிதத் தன்மை அவனிட மிருந்து போய்விடுகிறது.
ஒரு முஸ்லிமிடம் இவ்வுலகைவிட்டு அவனை உயர்த்திவிடும் கொள்கை இருக்கிறது. நிலம், மொழி, இனம் இவற்றினுள்ளே குறுகிவிட அவனை அது விடுவ தில்லை. உலகச் செல்வத்தை மையப்படுத்தி வாழும் வாழ்வுமுறையும் அவனிடம் தோன்றுவதில்லை.
அவனது பாடத்திட்டத்தில் ஆன்மீகப்பகுதி முதலிடத்தை வகிக்கிறது. அவனது அரசின் முதற் கவனம் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதாகிறது.
"அவர்களுக்கு நாம் பூமியில் அதிகாரத்தைக் கொடுத்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள்." (22:41) என அவனது வேதம் கூறுகிறது.
கொள்கைக்காக நடாத்தப்படும் யுத்தம் மட்டுமே இஸ்லாத்தில் நியாயப் படுத்தப்படுகிறது. அதுவும் அநியாயக்கார அரசுகளுக்கெதிரான யுத்தமாக அமைகிறதேயன்றி, பொதுமக்களுக்கெதிரான யுத்தமாக அமைவதில்லை. தனிமனிதர்கள் யாரும் கொள்கையை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுவதையும் இஸ்லாம் ஏற்பதில்லை.
என்னதான் நியாயம் இருந்தாலும் வருடத்தில் குறிப்பிட்ட நான்கு மாதங் கள் (துல் க.தா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜய்) யுத்தம் செய்யக்கூடாத அமைதி நிலவும் மாதங்கள் என்று 9 : 5ஆம் அல்-குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது. இக்கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டால், வருடத்தில் நான்கு மாதங்களுக்காவது அமைதி நிலவும், சமாதானம் பேச அது வழியமைத்துக் கொடுக்கும்.
/ இந்தப் பின்னணியிலிருந்துதான் தனக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக் கெதிராக ஒரு முஸ்லிம் போராடுகிறான். கொள்கைப் பிரச்சினையே அடிப்படைப் பிரச்சினையென அவன் கருதுகிறான். இன உணர்வை அவன் அங்கீகரிக்கவில்லை. இனத்தின் பெயரால் மனித சமூகம் கூறுபோடப்படுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தான் பிறக்கும் நாட்டையோ இனத்தையோ மனிதன் தெரிவுசெய்ய முடியாது. அப்படியிருக்கும்போது இவற்றை மையப்படுத்தி மனித வாழ்வு அமைவது அறியாமை நிறைந்தது என அவன் கருதுகிறான்.
"மனிதர்களே ! உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகக் கோத்திரங்களாகவும் மனித இனங்களாகவும் பிரித்தமைத்தோம்" (49:13) என்று அல்-குர்ஆன் கூறுகிறது. இரத்த உறவு அடிப்படையிலான கோத்திர, இனப்பிரிவுகள் நெருங்கி, புரிந்து கொள்ள வழியமைக்கவேண்டுமே தவிர, அவற்றை மையப்படுத்திய வாழ்விற்கு வழி
()/, '/ ജൂിരീ ിസ്കിതര1

வகுக்கக் கூடாது. கொள்கை வாழ்வதற்கே. நிலத்திற்கு என்று தனிப்பெறுமானம் கிடையாது என்கிறது இஸ்லாம். வெறும் நிலத்தின் பெயரால் மட்டும் அரசு தோன்று வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. ஓரினம் குறித்த ஒரு நிலத்தில் பெரும் பான்மையாக வாழ்கிறது என்பதற்காக அங்கு அவ்வினத்தின் அதிகாரமே நிலவ வேண்டும் என்றும், ஆனால் அவர்களுக்கும் அங்கு வாழும் ஏனைய இனங்களுக் கும் இடையில் சட்டத்திலும் கொள்கையிலும் எந்த வேறுபாடும் கிடையாது என்றால் அதனை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
எனவேதான் இஸ்லாம் ஆட்சிபீடத்திலிருந்தபோது பல்லின மொழி பேசுபவர்களும் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைப் பல்வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுமுள்ள னர். சிந்தனையிலும் நடத்தையிலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட்டுத் தூர மாகியுள்ள தற்காலத்திலும்கூட இந்த இன, நில, மொழி உணர்வுகள் அவர்களிடம் மிகக் குறைவாக உள்ளமையை அவதானிக்கமுடியும்.
இந்தப் பின்னணியில் நின்றுதான் இனம், நிலம், இவற்றின் பெயரால் எழும் போராட்டங்களை ஒர் உண்மையான முஸ்லிம் அவதானிக்கிறான். அவனால் இனம், நிலம், மொழி, என்பவற்றை மையப்படுத்தி எழும் போராட்டங்களை அங்கீகரிக்க முடிவதில்லை. அவற்றோடு நெருங்கி ஒத்துழைக்கவும் முடிவதில்லை.
இந்நிலையில்தான் அடுத்த சமூகங்களோடு ஒரு முஸ்லிம் எவ்வாறு உறவாடுவான்; இன, நிலப் போராட்டங்களின்போது அவனது நிலைப்பாடு எவ்வாறிருக்கும் என்ற கேள்விகள் எழுவதுண்டு. அடுத்த சமூகங்களை முஸ்லிம் இழிவுக்கண்கொண்டு நோக்குகிறான்; அவற்றை அழிக்கும் வெறித்தனமான போக்கு அவனிடம் உள்ளது; அவன் மத வெறியன், பயங்கரவாதி, அடிப்படைவாதி என்றெல்லாம் அவனை நோக்கிக் குற்றச்சாட்டுக்கள் குவிவதுண்டு.
ഉി ജിബിയെ സ്ഥിLൿ കീ011 || 1ി (17

Page 8
y°
இல்ைலாத்தில் /b/0b ജൂബ/, (ഥ/ഗ്ഗീ.
கொள்கையின் அடிப்படையில் மனிதர்களைத் திரட்டுவதும் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதுமே இஸ்லாத்தின் அடிப்படை சிந்தனை.
"விசுவாசிகள் என்போர் சகோதரர்களே" (49.10) என அல்-குர்ஆன் கூறுகி
/றது. கொள்கை மாறுபடும்போது இரத்த உறவைக்கூட இஸ்லாம் அங்கீகரிக்க
வில்லை. நூஹற் (அலை) அவர்களை நோக்கி அவர்களது மகன் குறித்து அத்தியாயம் ஹ?தில் குர்ஆன் இப்படிக் கூறுகிறது:
"அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். அவனது செயல்கள் நற்செயல்களாக இருக்கவில்லை" (11:46).
மதீனாவிற்குச் சென்ற ஆரம்ப காலப்பிரிவில் அல்-குர்ஆன் இரத்த உறவை விட்டு இஸ்லாம் என்ற கொள்கையடிப்படையில் குடும்ப உறவுகளை, சொத்துப் பங்கீடுகளை அமைத்தது. இதனை சூரா அன்ட/லின் இறுதி (8:72) வசனங்கள் காட்டுகின்றன.
இஸ்லாத்தின் இக்கருத்து மிக அடிப்படையானது என்பது மட்டுமல்ல, சாதாரண முஸ்லிம் பாமரனுக்கும் தெரிந்த எளிமையான உண்மை, இக்கருத்தைப் பொறுத்தவரை சிரமப்பட்டு ஆதரங்காட்டி விளங்கவைக்கும் தேவை கிடையாது. இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஒழுங்கில்தான் பல்வேறு இனங்கள் நீண்ட நெடுங்காலம் இணைந்து வாழ்ந்தன. அரபிகள் அல்லாத இனங்களும் இஸ்லாமிய சமூகத்தைப் பிரச்சினையின்றி ஆளமுடிந்ததும் இச்சிந்தனையின் பிரதிபலிப்பாகும். அரபு இனவாதமும் இஸ்லாமிய உலகில் தோன்றிய ஏனைய இனவாதங் களும் நவீன காலத்தில் தோல்வியடைந்த அதேவேளை இஸ்லாமிய எழுச்சி மாத்திரம் படிப்படியாக முஸ்லிம்களிடையே செல்வாக்குப் பெற்றமைக்கு இஸ்லாமியம்' முஸ்லிம் உள்ளங்களில் ஆழ வேரூன்றி இருப்பதே காரணம்,
எனவே, ஒரு முஸ்லிம் சர்வதேசப் பார்வை கொண்டவன். அவனால் குறுகிய இன, தேசிய சிறைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கமுடியாது. அது அவனது அடிப்படைச் சிந்தனைக்கு முரனாக அமையும்.
(); / ഭൂര1ി 1ിക്സിതര7
 

இப்படிக் கூறும்போது பின்வரும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியாது. எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு முன்னால் அவன் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது ?
நாட்டுப் பற்றுக் கொண்டவனாக ஒரு முஸ்லிம் இருப்பது தவறானதா ? இச்சிந்தனையின் பரிமாணத்தில் அவன் தேசத்துரோகி எனக் குற்றஞ் சாட்டப்பட முடியாதா ?
அடுத்த மக்களோடு அவன் உறவாடும் ஒழுங்கு யாது ? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒருநாட்டிலேயே இந்தக் கேள்வி களுக்கு மிகத் தெளிவான விடை காணவேண்டியது அவசியம். அந்நிலையில் சிறுபான்மையாக வாழும் நாட்டில் பிரச்சினை இன்னும் மோசமாகிறது. இக்கேள்வி களுக்கு மிகத் தெளிவான பதில் பெறுவது அத்தியவசியமாகும்.
எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று தீர்மானித்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை. அல்லது ஒரு முஸ்லிம் என்பவன் 'வணக்க வழிபாடுகள் ஊடாக மட்டுமே தனித்துவப்படுகிறான்; அடையாளப்படுத்தப்படுகிறான் என்று தீர்மானித்துவிட்டாலும் பிரச்சினை ஒரளவு இலேசாகும். குறிப்பிட்ட நேரத் தொழுகை, அதற்கான வசதிகள், நோன்பு, ஹஜ் போன்றவற்றிற்கான வசதிகள் என்பன செய்துகொடுக்கப்பட்டுவிட்டால், அப்போது அத்தகைய முஸ்லிம் திருப்திப்பட்டுவிடுவான்.
ஆனால் விடயம் அதைவிடப் பெரியது. முஸ்லிமுக்கு ஒரு சிந்தனை அடையாளம் இருக்கிறது: கலாசார நாகரிகத் தனித்துவமிருக்கிறது என்பது உண்மை. இந்நிலையில் அவனைச் சூழவுள்ள பிரச்சினைகள், கருத்துக்கள் சிந்தனைகள் தன்னை உறிஞ்சிவிடாமல், கரைந்து விடாமல் பார்த்துக்கொள்வது அவனது கடமையாகிறது.
இந்த விரிந்த கண்ணோட்டத்தில்தான் இப்பிரச்சினை அணுகப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இத்தகைய கண்ணோட்டத்தில் நிலம், மொழி, இனம் என்பவற்றிற்கு அவற்றின் சாதாரண, எளிய கருத்தே கொடுக்கப்படுகின்றது. அதாவது அது ஒரு யதார்த்தம் என்பதும், அவற்றின் மீது பற்றும் அன்பும்கொள்வது மனித இயல்பு என்பதும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. தன்னினத்திற்காக, நாட்டிற்காக, மொழிக் காக அந்தப் பற்றால் உந்தப்பட்டு மனிதன் உழைப்பான் என்பதும் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும். மக்களே உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துவாழக் கோத்திரங்களாகவும் கிளைகளாகவும் பிரித்தோம்' (49:13).
இங்கு ஆண், பெண் என்ற யதார்த்தத்தைப் போன்றே கோத்திரங்களாக, கிளைகளாக மனிதன் இருப்பதும் யதார்த்தம் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. அது ஒருவரையொருவர் புரிந்து ஒத்துழைத்து வாழ்வதற்கே காரணமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
"உங்கள் மொழிகள் மாறுபட்டிருப்பது இறை அத்தாட்சிகளில் ஒன்றாகும்" (30:22) எனவும் சூரா ரூம் இல் அல்லாஹ் கூறுகிறான்.
ഉി ജിബിയേസീ11:് സ്കൂ

Page 9
மொழிகள் மாறுபட்டிருப்பது ஆய்வுக்கும், அதனுடாக இறை ஆற்றலைக் காண்பதற்கும் காரணமாக இருக்கவேண்டும் என்பது இங்கு விளக்கப்படுகின்றது. அத்தியாயம் ஹஜராத்தில், மேற்குறித்த வசனத்திற்குப் பின்னால் அல்-குர்ஆன், 'உங்களில் இறைவனிடத்தில் மிகுந்த கண்ணியத்திற்குரியவர் தக்வா உடையவரே" (49:13) எனக் கூறுகிறது. தக்வா என்ற பிரயோகம் நற்பண்புகளின் மொத்த விளக்கமாகும். இறை பயம், வாய்மை, நீதி, நேர்மை, அருள், அன்பு போன்ற பண்புகள் அனைத்தும் கொண்டவரே தக்வர உடையவர் எனப்படுகிறார்.
எனவே குறிப்பிட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் உயர்வு தாழ்வு தோன்றிவிடுவதில்லை என இந்த வசனம் கூறுகின்றது. ஆரிய இனமே உயர்ந்தது என்ற வாதமோ, வெள்ளையனே உயர்ந்த சாதி என்ற கருத்தோ முற்றிலும் தவறானது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இன, குலப் பெருமை பேசி, எழும் சிந்தனைகளும், வளர்க்கப்படும் வெறியுணர்வுகளும் முழுமையாகத் தவறானது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு வெளியேற்றப்படு கிறார்கள். அப்போது கூறுகிறார்கள்: "மக்காவே 1 அல்லாஹ்வுடைய நாடுகளில் எனக்கு மிக விருப்பமான நாடு நீதான். மக்கள் என்னை வெளியேற்றி யிருக்காவிட்டால் நான் வெளியேறியிருக்கமாட்டேன்." (ஆதாரம் : இப்னு மாஜா)
மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவுக்கு நிர்ப்பந்தமாகச் சென்றுவிட்ட முஸ்லிம்கள் தமது தாய்நாட்டை நினைத்துக் கவலைப்படுகிறார்கள். அடிமையாக வாழ்ந்தும்கூட தமது நாடாகிய மக்காவை நினைத்து அங்கு ஒரு நாளாவது தங்கும் சந்தர்ப்பம் மீண்டும் வராதா என்று கவிதை பாடுகிறார்கள்.
இவையெல்லாம் தவிர்க்கமுடியாதவை. இந்த இயற்கை உணர்வை இஸ்லாம் மறுக்கவுமில்லை; ஒடுக்கவுமில்லை. ஏலவே கூறியது போல ஒரு வெறி யுணர்வாக அது வளர்க்கப்படுவதையும், அந்த, அடிப்படைகளில் மட்டும் குறுகி நின்று மனிதன் சமூகமாக ஒன்றுபடுவதையும் இஸ்லாம் ஏற்கவில்லை.
இப்பின்னணியிலிருந்து நோக்கும்போது கீழ்வரும் முடிவுகளுக்கு நாம் * வரலாம்: .ஒரு முஸ்லிமை முதலில் அடையாளப்படுத்துவது அவனது கொள்கையேیہ سے
கொள்கையின் பின்னரே இரத்த உறவும் நாடும் மொழியும் அவனால் நோக்கப்பட வேண்டும். - * கொள்கை வாழ ஒரு நிலம் வேண்டும். அதனை விளங்கவும் பேசவும் ஒரு மொழி
தேவை. இந்நிலையில்தான் மொழியும் நிலமும் மதிக்கப்படுகின்றன. * இயல்பான நாட்டுப்பற்றை, இனப்பற்றை, மொழிப் பற்றை இஸ்லாம் மறுக்கவில்லை.
அப்பற்றுகளால் உந்தப்பட்டு நாட்டுக்காகவும் இனத்துக்காகவும்
மொழிக்காகவும் உழைப்பதனையும் அது மறுக்கவில்லை.
எனவே ஒரு முஸ்லிம் தேசியம், இனம், மொழிவாதம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டு நிற்பானாயின், தேசத் துரோகியாகவோ மொழியைப் பழிப்பவனாகவோ இருக்கமாட்டான் என்பது கவனமாக விளங்கவேண்டிய உண்மையாகும்.
// / இனப் பிரச்சினை

(362d6)/2525%) தேசியம்
இஸ்லாம் இனம், நாடு என்பவற்றிற்கு அதன் சாதாரண பெறுமதியையே கொடுக்கிறது. இனத்தின் மீதும் நாட்டின் மீதும் சாதாரணமாகப் பற்றுக் கொள்வதை இஸ்லாம் மறுப்பதில்லை. மாற்றமாக, அவற்றின் அடிப்படையில் சத்தியம், அசத்தியம், நீதி, அநீதி என்பவை அமைவதில்லை. சத்தியம், அசத்தியம், நீதி, அநீதி போன்றவை இனம், தேசம் என்வற்றைக் கடந்த தனிப் பெறுமானங்களாகும்.
ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 11

Page 10
தன் இனம் அல்லது நாடு இழைத்த ஒரு செயல் என்பதற்காக அது எப்போதும் நீதி,
சத்த 11ம் என்பதாக அமையமுடியாது. இனம், நாடு என்ற ஒரே காரணத்திற்காக உ | | தாழ்வு கற்பிப்பதும் சாத்தியமானதல்ல. இவற்றையெல்லாம் ஏற்கனவே நாம்
/) எனத்தோம்.
இவை எல்லாம் உண்மையாயினும், இந்தப் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தை அவதானிப்பது மிக முக்கியம். சில வேளை சில இனங்களையும் மொழ களையும் கலாசாரங்களையும் கொண்ட சமூகங்களை அடக்கியவகையில் ஒரு நாடு தோன்றுவதுண்டு. அப்போது பல இனங்களையும் கலாசாரங்களையும் கொண்டமைந்த அந்தத் தேசியத்தை 'அரசியல் தேசியம்' என்று மட்டுமே குறிக்கலாம். அதாவது ஏதோ ஒரு வகையில் அத்தகைய பல்வேறு கலாசா ரங்களையும் இனங்களையும் ஆளும் நில அலகு ஒரமைப்பைப் பெற்று விடுகிறது. ஆனால் கலாசாரங்கள் பல வகைப்படுவதால் முழுமையானதொரு தேசிய உணர்வை அங்கு காண்பது மிகவும் கடினமாகும். இந்த வகையில், அந்த நாட்டைக் கலாசாரத் தேசமாக நோக்க முற்பட்டால் பலதேசமாக அதனைக் காண்பதே சரியாகும்.
ஒரு தேசம் உருவாவதற்கு மொழி, மதம், இனம், கலாசாரம், வரலாறு என்பவற்றின் ஒருமைப்பாடு குறிப்பிட்டதொரு மக்கள் கூட்டத்திலும் காணப் படுதல் காரணமாகலாம். எனினும் இவை அனைத்துமிருந்தும் குறிப்பிட்டதொரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு தேசமாகக் கொள்ளாதும் விடலாம். தேசம் ஒன்று தோன்று வதற்கான இத்தகைய வெளிக்காரணிகளைவிட மக்கள் கூட்டத்தின் அகநிலையும் அவதானிக்கப்படல் முக்கியம்.
அத்தோடு குறிப்பிட்டதொரு இனம் தனக்கு அநீதி இழைக்கப் படுவதை, தான் புறமொதுக்கப்படுவதை வலுவாக உணரும்போது அதனுள்ளே அமைதியற்ற நிலை உருவாகிப் படிப்படியாகப் போராட்டத் தேசமாக அது மாறுவதுண்டு.
இந்த வகையில், ஒரு தேசத்தின் தோற்றம் வரலாற்றுத் தற்செயல்நிகழ்வு என்று சில ஆய்வாளர்கள் கருதுவர். இது பொதுவாக உண்மையாக இருப்பினும் இக்கருத்தின் இன்னொரு பக்கத்தை நோக்குவோம்.
ஒரு சிந்தனையின் அடிப்படையில் அல்லது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு தேசம் உருவாதல் சாத்தியமா ?
மொழி, இனம், நிலம் என்பவற்றின் அடிப்படையில் மட்டுமல்ல, ஒரு
* அப்துந் நாளிர் 1960 களில் எகிப்தின் ஜனாதிபதியாக இருந்தவர்.இவரது தாய் மரணித்ததும் குழந்தைப் பருவத்தில் மெடம் யஃகூப் பரஜ் ஷாமுவேல் என்ற யூதப் பெண்ணே இவரை வளர்த்தார். இவரது தந்தை யூத இயக்கமொன்றின் தபால் ஊழியராகக் கடமையாற்றினார் எகிப்தில் உளவுவேலை பார்த்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு யூதர்களுக்கு அவரது யூத செவிலித் தாயின் பரிந்துரையின் பேரில் தண்டனையைக் குறைத்தார். அவர்கள் அப்துந் நாளின் பால் குடிச் சகோதரர்களாக இருந்ததே அம்மன்னிப்புக்கான காரணமாகும். எகிப்தில் இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபட்ட இருபதுணாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களையும் யுவதிகளையும் 1960 களில் வதைத்துக் கொன்ற பெருமையும் இவரையே சாரும் (ஆதாரம் அல் மஜல்லா, இதழ் 290, 1985.08, 28 எகிப்தின் யூதர்களின் பைல் )
1 ജി.11 1ി'06/

சிந்தனையின் அடிப்படையிற்சுட மக்கள் கூட்டமொன்று வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னர் தனது கொள்கையும் சிந்தனையும் வாழ்வதற்கு அது ஒரு நிலத்தைப் பெற்றுக் கொள்ளும், அப்போது அங்கு ஒரு கொள்கைவாத அரசு தோன்றும்.
கம்யூனிச சிந்தனையும் அதன் அடியாக ரஷ்யாவில் தோன்றிய கம்யூனிச அரசும் இக்கருத்திற்கு ஓர் உதாரணம்.
இனம், மொழி, நிறம் அனைத்தையும் மறந்து சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டம் என கம்யூனிசப் போராட்டம் அடையாளம் காணப்பட்டது. எனினும் கொள்கை வாத அரசாக ஆரம்பித்து சர்வதேசியப் பாட்டாளிகளின் தேசமாகத் தோன்றிய கம்யூனிசம் தேசியச் சேற்றில் புதைந்து போய்விட்டது. மக்களைக் கொள்கைமயப்படுத்தாமலும் பல்வேறு இன, கலாசாரங் களுக்கிடையே இணக்கமானதொரு முடிவுக்கு வந்து அவர்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க முடியாமல் போனமையும் அதற்குக் காரணமாக இருக்கலாம். சில வேளை செனUனியப் போராட்டம் இதற்கு உதாரணமாகக் கொள்ளப்படலாம்.
கொள்கையின் அடிப்படையில் உருவாகிய அரசுக்கு இஸ்லாம் மிகச் சிறந்த உதாரணமாகும். மத்திய அரசு பற்றிய சிந்தனைகூட இன்றி, இரத்த உறவு என்ற குறுகிய எல்லைக்குள் நின்று கோத்திரங்களாகப் பிரிந்து வாழ்ந்த அரபிகளை அரசாக்கி, சாம்ராஜ்யமாக்கிய பெருமை இஸ்லாத்திற்குண்டு. ரோமனுக்கு மட்டும் ஆளும் உரிமை கொடுக்கும் ரோம சாம்ராஜ்யம் போலன்றி இணையும் அத்தனை இனங்களையும் கொள்கை அடிப்படையில் வளர்த்தெடுத்ததன் காரணமாக குர்த்திய, துருக்கிய இனங்களும்கூட ஆளும் உரிமையை இஸ்லாமிய உலகில் பெற்றார்கள். மத்திய கிலாபத் மிகப் பலவீனமாகவிருந்த காலத்திற்கூடத் தம்மைக் கலீபா என்று சொல்லிக் கொள்ள எந்தச் சிற்றரசும் முற்படவில்லை. தம்மை கலீபாவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே கருதினார்கள்.
நவீன காலத்தில் அத்திலாந்திக் கரையோரம் முதல் சீனாவின் எல்லை வரைப் பரந்துவாழும் முஸ்லிம்கள் இஸ்லாமியத் தேசம் பற்றிக் கனவு காண்பதும், கிலாபத் நோக்கிய அவர்களின் உழைப்பும் இக்கருத்தையே காட்டும். பெளதீக எல்லைகளால் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகள் பிரிக்கப்பட்டிருப்பினும் அவற்றை இஸ்லாமிய சட்டம் அங்கீகரிக்கவில்லை. சாதாரண பொதுமக்களின் உள்ளமும் அதனை ஏற்பதில்லை. எனவேதான் இஸ்லாமிய உலகில் பல இடங்களில் தோன்றிய இனவாத சிந்தனைகள் செல்வாக்குப்பெற முடியாமற் போய்விட்டது. ஜமால் அப்துல் நாஸிர்* தோற்றுவித்த அரபுத் தேசியவாதம் அழிந்தொழிந்தது. இஸ்லாமிய எழுச்சி செல்வாக்குப் பெறக் காரணமும் இதுவே. லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் போன்ற கோஷங்களைப் போல் ஒரு முஸ்லிமின் உள்ளத்தை எந்த இனவாதக் கோஷமும் தேசியக் கோஷமும் தொட்டுவிடுவதில்லை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாததனால்தான் அரபு உலகின் மதச் சார்பற்ற சிந்தனைப் போக்குக் கொண்டோர் அதிகாரப் பலம் இருந்தும்கூட செல்வாக்கு அற்றுப் போனார்கள்.
ஒரு முஸ்லிம் தன்னையும் தன்னைப் போன்ற முஸ்லிம்களையும் சேர்த்து ஒரு உம்மத்-கொள்கை வாத சமூகம் என்று உணர்வான். அந்தக் கொள்கை
ஒர் இளப்லாமியக் கண்ணோட்டம் / 13

Page 11
யடிப்படையில் தம்மை ஒரு சமூகமாக-உம்மாவாக ஒழுங்கமைத்து வாழ்வது கடமை என்றும் காண்பான். இப்படி உம்மத் என்ற உணர்வு ஒரு முஸ்லிமிடத்தில் மிகவும் அதிகமாகும்.
அவன் தனது சட்டம், ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றாமையைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுவான்.
குடும்ப வாழ்வு சமூகத்தின் அடிப்படை. எனவே, அதன் உறவுகள் புனிதமானவை. அதற்குக் குந்தகம் விளைவிக்கும் ஆபாசச் சூழ்நிலைகளைக் கடுமையான பாவமாகக் கருதுவான்.
பொருளாதார வாழ்வில் அடுத்தவனை வீழ்த்தும் கழுத்தறுப்புப் போட்டி களும், இலாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் தொழிற்பாடும், அந்தவகையில் அபாயத்தை ஏற்காத வட்டிமுறையும் கடும் பாவங் கள் என நம்புவான். ஆட்சியமைப்பு என்பது இறை சட்டங்களை நடைமுறைப் படுத்தும் வெறும் நிருவாக ஒழுங்கு மட்டுமே. அதற்குப் புனிதத்துவம் எதுவும் கிடையாது. ஆட்சியாளனும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவனே. சட்டங்களை ஆக்குபவனல்ல. சாதாரணக் குடிமகனும் அவனை விசாரிக்கமுடியும். அவனுக் கெதிராக வழக்குத் தொடுக்கமுடியும் என்பது அவனது ஆட்சி பற்றிய சிந்தனையாகும்.
இவையெல்லாம் ஒரு முஸ்லிமைத் தனித்துவப்படுத்தும் சில சிந்தனைகள். எனவே அவனால் இன்னொரு சமூகத்தினுள்ளே வித்தியாசமான ஒரு சமூக ஒழுங்கை அங்கீகரித்து வாழ முடியாது.
ஒரு முஸ்லிமிடம் இந்த 'உம்மத்" என்ற உணர்வு மிகைக்கும் போது, அது பற்றி அவன் வெகுவாக உணரும்போது இஸ்லாமியத் தேசம்' என்ற உணர்வு இயல் பாகவே தோன்றுகிறது. அதாவது, ஒரு முஸ்லிம் அவனது கொள்கை வார்ப்பின் இயல்பான பிரதிபலிப்பாக தேசப் பிரக்ஞை கொண்டவனாக இருப்பான். எனினும், சில வரலாற்றுக் காரணங்களால் அவன் ஒரு முஸ்லிமின் உண்மை உருவில் வார்க்கப் பட்டிருக்கமாட்டான். அப்போது அவன் தேசப் பிரக்ஞை அற்றவனாக அல்லது குறைந்தவனாகக் காணப்பட முடியும். இந்நிலையிலும் கூட அவனை இன, மொழிநில உணர்வுகள் அடித்துச் சொல்லாது. அந்த அடிப்படைகளில் சமூகமாக, தேசமாக ஒன்று திரளல் குற்றம்' என்பது அவன் படிக்கும் அரிச் சுவடிப் பாடமாகும். இது முஸ்லிமின் மனோதத்துவம். இதனைப் புரிந்துகொண்டால்தான் முஸ்லிம் சமுகத்தை இயக்கமுடியும்.
முழுமையான ஒரு தேசமாக மாறுவதற்கு ஒரு தனி நிலம் முக்கியம். ஒரு சமூகம் ஒரு சிறிய நிலப்பகுதியிலாவது செறிவாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்வதும் முக்கியம். வரலாற்று நிகழ்வுகளால் ஒரு முஸ்லிம் பிரிவினர் சிதறுண்ட சிறுபான்மையாக இன்னொரு பெரிய சமூகத்தால் துண்டாடப்பட்டு வாழும்போது, இத் தேசப் பிரக்ஞையை வெளியிட்டுக் கொள்ளும் வழிதெரியாமல், இதற்கான கொள்கை ஒழுங்கையும் புரியாமல் குழம்புவர். இதுவே இந்த நாட்டு இஸ்லாமியப் புத்திஜீவிகளின் நிலையாக இருக்கமுடியும். எனவே புதிய இந்தச் சூழ்நிலைக்கு ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்காமல் ஹிஜ்ரத்-நாடு துறத்தல் என்ற
1 1 / (?)a0 // / / /h/ớef kODGØT

எதிர்மறை நிலைப்பாட்டிற்கு வருவதும் முஸ்லிமின் ஓர் அடையாளமாகும்.
தம்மை ஓர் உம்மத்தாக-தேசமாக முஸ்லிம்கள் காண்பது இயல்பாக இருப்பினும், ஒரு நிர்ப்பந்தச் சூழலில் தாம் இருப்பதாக சிறுபான்மையாக வாழும் நாடுகளில் தம்மை அவர்கள் கருதுகிறார்கள். போராட்டமொன்றை மேற்கொள்வது இத்தகைய சூழ்நிலையில் எப்படிச் சாத்தியம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை. எனவே தமது இருப்பை நியாயப்படுத்தி, தம்மால் இயன்ற கடமைகளைச் செய்து, அதற்கு உதவும் அரசுகளை ஆதரித்து வாழ்வது தவிர வேறு வழியில்லை என நினைக்கிறார்கள்.
இந்நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரை தமிழ் சகோதரர்களது போராட்டங்கள் அவர்களைச் சற்று எழுப்பிவிட்டன. தமது இருப் புக்கே அது அபாயமாக மாறுவதைக் கண்டபோது தனியானதொரு அரசியற் போராட்டத்தைத் தொடுக்க முற்பட்டார்கள். அவர்களது தலைமை தனி அலகுக் கோரிக்கையையும் முன்வைத்தது.
இது கொள்கைத் தெளிவாலும், இஸ்லாமிய சிந்தனைப் பிரதிபலிப்பாலும் உருவானதல்ல. அது ஒரு வரலாற்று ஒட்டத்தின் இயக்கம் மட்டுமே. எனவேதான். * குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் மட்டும் தொடர் நிலப் பரப்பைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தனி அலகைக் கோருவது எப்படிப் பொருத்தமாகும்? ஏனைய முஸ்லிம்களை என்ன செய்வது ? * வட-கிழக்கு முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு சில சிறப்பியல்புகளைக் கொண்டி ருப்பதானது அவர்களை வித்தியாசமானதொரு அரசியற் போராட்டத்திற்கு இட்டுச்செல்வது சரியானதுதானா ? அதனை எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம்? * பரந்து, சிதறிவாழும் இந்த முஸ்லிம் சமூகத்தில்தான் ஒரு தனியான உம்மத்-தேசம் என்ற பிரக்ஞையை நடைமுறைச் சாத்தியமாக்குவது எப்படி? இந்நிலையில் வடகிழக்கு என்றும், தெற்கு எனவும் முஸ்லிம் பிரிந்து நிற்பது எவ்வளவு தூரம் பொருத்தமானது? * சிங்கள, தமிழ், சகோதர சமூகங்களோடும் மோதுவதை, துவேஷ மனதோடு உறவாடுவதை ஒரு முஸ்லிம் இயல்பாக ஏற்பதில்லை. அது அவனது மார்க்கம் அவன் மீது விதித்த கடமை. எனவே தனது செயற்பாடுகளால் இந்த மோதல்களும் துவேஷ உணர்வுகளும் உருவாவதை அவன் விரும்புவதில்லை. இந்நிலையில் தன்னைத் தனியான உம்மத்தாகக் காண்பதற்கும், அடுத்த சமூகங்களோடு சேர்ந்து வாழ்வதற்குமிடையே எவ்வாறு இணக்கம் காண்பது ?
போன்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அரசியல் இயக்கத்திடம் தெளிவான எப்பதிலும் இல்லாமல் போயிற்று. படிப்படியாக அந்த அரசியல் இயக்கம் இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய அரசியல் நடைமுறைக்கே சென்று கொண்டு இருப்பதையும் அவதானிக்கமுடியும்.
எனினும், முஸ்லிம் சமூகத்தின் மீது அநீதி இழைக்கப்படும்போதும், அச்சமூகம் புறந்தள்ளப்படும்போதும் இயல்பாகவே உள்ள தனித்தேசிய உணர்வு அந்த சமூகத்திற்குள்ளே கூர்மையடையும் என்பதில் சந்தேகமில்லை.
ஓர் இளப்லாமியக் கண்ணோட்டம் / 15

Page 12
இனப் பிரச்சினையில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டின் ஒரு பகுதியை முன்னைய அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். தேசம், தேசியம் என்ற பிரயோகத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு எத்தகையது என்பது விளக்கப்பட்டது. தேசியம்' என்ற சொற்பிரயோகத்திற்குப் பதிலாக 'உம்மா' என்ற பிரயோகத்தை இஸ்லாம் பாவிக்கிறது எனவும், தனிப்பட்ட பண்புகளையும் சிந்தனைகளையும் நாகரிகத் தையும் கொண்டதே அந்த உம்மா எனவும் விளக்கப்பட்டது. எனவே, தாம் தனியானதொரு உம்மத் என்றே ஒவ்வொரு முஸ்லிமும் உணர்கிறான். அந்த உணர் வின் விளைவாகவே தேசம் உருவாகிறது. தேசம் என்ற பூகோள எல்லையை விட உம்மத் என்பது பரந்தது எனவும் விளக்கப்பட்டது.
ஒரு முஸ்லிம் என்பவன் தனிப் பண்புகள் கொண்டவன் என்ற உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் மிக ஆழமாக வேரூன்றி இருக்கும் நிலையில், அடுத்த மனிதர்களோடு எப்படி உறவாடுகிறான் என்பதை நோக்குவது முக்கியமானது. இது பற்றிய நடைமுறைச் சட்டங்கள், உறவுகளுக்கு அடிப்படையாக அமையும் மூன்று முக்கிய கொள்கைகளை இங்கு இஸ்லாம் முன்வைக்கிறது.
(1) மனித சமத்துவம் (2) மனித சகோதரத்துவம் (3) கருத்துச் சுதந்திரம்
மனித சமத்துவம்
மனிதனில் இஸ்லாம் மனிதத்தையே காண்கிறது. மொழி, நிறம், இனம், நாடு என்பவற்றை வைத்து அவனை அது கூறுபோட முனைவதில்லை. சிந்தனையில், கொள்கையில் வேறுபட்டவனையும் அது மனிதனாகவே கணிக்கிறது. அவனது வாழ்வுரிமை, பொருளாதார உரிமை, கருத்துச் சுதந்திரம், அவனது மானம், கண்ணியம் இவற்றையெல்லாம் அது மதிக்கிறது.
"மனிதர்களே உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும்
16 / இனப் பிரச்சினை
 

படைத்தோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காக உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் பிரித்தோம்" (49:13). உயர்ந்த இனம், தெரிவு செய்யப்பட்ட சமூகம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட பிரிவினர் என்பதெல்லாம் இஸ்லா மிய சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகும்.
இந்தப் பின்னணியிலிருந்தே மனிதனை முஸ்லிம் பார்ப்பான். மனிதனில் அவன் மனிதனையே காண்பான். இனத்தை, மொழியை நாட்டை அவன் பார்க்க மாட்டான். இச் சிந்தனையின் அடிப்படையில் எழுந்த ஒரு நடத்தைக்கு ஒர் உதாரணம் தரலாம்:
இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்ட ஒரு كما யூதனின் பிரேதத்திற்காக அவர்கள் எழுந்துநின்றார்கள். "ஏன் எழுந்தீர்கள்? அது யூதனின் பிரேதமல்லவா?" என்று கேட்கப்பட்டபோது, "அதுவும் ஒரு ஆன்மாவே" என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் : ஸஹிஹற் அல் புகாரி)
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மனித சமத்துவத்திற்கான நடைமுறை உதாரணங்கள் பலவற்றைக் காணமுடியும். ஓரினத்திலுள்ளேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் போக்கு இன்றுவரை மனித சமூகத்தில் உள்ளமை மிகவும் கவலைக் குரிய விடயமாகும். வெள்ளையன் தன்னை உயர்ந்தவனாகவும், கறுப்பனைத் தாழ்ந்தவனாகவும் நோக்குவது இன்றும் நிலைத்திருப்பது 20ஆம் நூற்றாண்டின் நாகரிகத்திற்கே அவமானமானதொரு அம்சமாகும். முஸ்லிமோ முஸ்லிம் அல்லா தவனோ யாரையுமே இன, மொழி, நிற அடிப்படையில் நோக்காமை முஸ்லிமின் சிறப்பம்சமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.
மனித சகோதரத்துவம்
முஸ்லிம் அல்லாதவருடனான உறவின் இரண்டாவது அடிப்படை மனித சகோதரத்துவமாகும். மனிதர்கள் அனைவரும் ஓர் ஆணிலிருந்தும் பெண்ணி லிருந்தும் தோன்றினார்கள். எனவே அடிப்படையில் அவர்களது தாயும் தந்தையும் ஒருவரே. இந்தவகையில் மனிதர்கள் அனைவரும் சகோதர்களாகிறார்கள். மனிதர் களை இனம், மொழி, நிறம், நாடு எனப் பிரித்து நோக்காது, மனிதம் என்ற பண்பினுடாக மட்டுமே நோக்கவேண்டுமென இஸ்லாம் கருதுவதாக முதலாவது அடிப்படையில் விளக்கினோம். இந்த அடிப்படை அதற்கு மேலும் பலம்சேர்க்கும் வகையில் அவனைச் சகோதரனாக நோக்கவேண்டும் என்கிறது.
இக்கருத்தை எவ்வளவு துாரம் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதற்குக் கீழ்வரும் திருமறை வசனத்தையும் இறைத் துாதர் (ஸல்) அவர்களது கருத்தையும் தருகிறோம்.
"மனிதர்களே ! உங்களை ஒரே ஆன்மாவலிருந்து படைத்து, அவர்கள் இருவர் மூலமும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் படைத்த உங்கள் இரட்சகனைப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹற் உங்களை அவதானித்தவனாகவே உள்ளான்" (04:01). மனிதர்களே' என மனித சமூகத்தை விழித்து, அவர்கள் எவ்வாறு ஒரே ஆன்மாவிலிருந்து தோன்றின்ார்கள் என்பதை
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 17

Page 13
விளக்கி, இரத்த உறவைப் பயந்து நடந்துகொள்ளுமாறு கூறி முடிவுறும் இந்த வசனம், மனிதப் பொது இரத்த உறவையே குறிக்கிறது. மனிதர்கள் அனைவரும் இரத்த உறவு கொண்டவர்கள் எனக் காட்டும் இவ்வசனம் மனிதனுக்கு மனிதன் எவ்வளவு நெருக்கமானவன் என்பதை அழகாக விளக்குகிறது.
'இறைத் துாதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு அர்கம (ரலி) என்ற ஸஹாபி அறிவிக்கிறார்: இறைத் துாதர் (ஸல்) அவர்கள் அனைத்து தொழுகைகளின் பின்னரும் கீழ்வருமாறு கூறுவார்கள்: "இறைவா எங்கள் இரட்சகனே! அனைத்தினதும் இரட்சகனே! அரசனே நீஅல்லாஹ், ஏகன், உனக்கு இணை ஏதுமில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மத் (ஸல்) உனது அடிமை, உனது துாதர் என்று நான் சாட்சி சொல்கிறேன். இறைவா ! எங்கள் இரட்சகனே ! அனைத்தினதும் இரட்சகனே 1 அரசனே மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சான்று பகர்கின்றேன்" ( ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸ°னன் அபீதாவுத்)
இந்தப் பிரார்த்தனை மூலம் இறைத் துாதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் இறைவனோடு பேசிவந்தார்கள். எனவே, இதனை ஒவ்வொரு முஸ்லிமும் ஒதுவானாயின் அது எU“ன்னா ஆகிறது. இந்தவகையில், இஸ்லாத்தின் தூதில் மனித சகோதரத்துவத்திற்கு உள்ள பெறுமானம் நன்கு தெளிவாகிறது. இப்பிரார்த்தனை தரும் பொருளை கலாநிதி யூசுப் அல்-கள்ளாவின் தமது இஸ்லாத்தின் பொதுப் பண்புகள்' என்ற நூலில் கீழ்வருமாறு விளக்கு கிறார்கள்: *முதலில் இப்பிரார்த்தனை அரபிகளுக்கிடையே மட்டுமல்ல, அனைத்து மனிதர் களுக்கிடையேயும், அவர்கள் இறைவனின் அடிமைகள் என்ற வகையில், சகோ தரத்துவ உறவை உறுதிசெய்கிறது. *தனது இரட்சகனோடு உறவாடும் பிரார்த்தனை வடிவில் இந்தச் சகோதரத்துவக் கொள்கை முன்வைக்கப்படுகிறது. தேசியத் தேவை குறித்தோ அல்லது சர்வதேசிய, இராஜதந்திர திருகுதாளங்களுக்கோ அல்ல. மாறாக, ஒரு மார்க்க உண்மையர்க இது முன்வைக்கப்படுகிறது என்பது இங்கு தெளிவாகும். *ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின்நபித்துவம் என்ற இரு அடிப்படை நம்பிக் கைகளோடும் இணைத்து இந்த மனித சகோதரத்துவம் இங்கு குறிக்கப்படுவ தானது அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. * வருடத்திற்கு ஒரு முறையோ மாதமொரு முறையோ கிழமைக்கொரு முறையோ அல்ல, ஒரு நாளில் ஐந்து தடவைகள் இக் கொள்கை முஸ்லிம்கள்
*கலாநிதி யூஸப் அப்துல்லாஹ் அல்-கர்ளவி என்பது இவரது முழுப் பெயர். 1926 ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார். இஸ்லாமியப் பொருளியலில் ஸ்காத் பகுதியில் தனது கலாநிதிப் பட்டத்தை முடித்துக் கொண்ட இவர் தற்போது கதர் பல்கலைக் கழக ஷரீஆ பீட வேந்தர் நவீன இஸ்லாமிய உலகின் மாபெரும் முஜ்தஹரித். அவரது நூல்கள் நூற்றையும் தாண்டி இண்டநெட்டுக்கும் வந்துவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய எழுச்சியை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் இணையற்ற ஒரு சிற்பி தனது 17 ஆவது வயதில் இஸ்லாமியப் பாதையில் காலடி வைத்த அவர் இந்த நிமிடம் வரை போராடிக் கொண்டே இருக்கிறார்.
18 / இனப் பிரச்சினை

அனைவராலும் பிரகடனப்படுத்தப்படுகின்றமை இக் கொள்கையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டப் போதுமானது. * மீட்டி மீட்டி ஒதப்படும் திக்ர் களில் ஒன்றாக, வணக்கங்களில் ஒன்றாக அமைக் கப்பட்டு தொழுகையோடு இணைக்கப்பட்டமை இக்கொள்கைக்கு ஒரு விஷேட அந்தஸ்தையும் புனிதத்துவத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. (பக்கம் 90, பதிப்பு 02, 1983, வெளியீடு: பெய்ரூத்)
மனித சகோதரத்துவத்திற்கு இவ்வாறு மிகுந்த முக்கியத்துவம் தந்து வணக்கவழிபாடுகளில் ஒரம்சமாக அதனை விளக்கும் எந்தக் கொள்கையையும், மதத்தையும் காண்பது கடினம். இஸ்லாம் இறைத் தூதாகவும், இறைவன் அனைத்து மனிதர்களதும் கடவுளாக இருப்பதும் இதற்குக் காரணமாகும்.
இச்சிந்தனையின் பின்னணியிலேயே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இன்னுமொரு முக்கிய உண்மையையும் குறிப்பிட்டார்கள்.
"படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவன் அவனது குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளவனே" (ஆதாரம் : ஸஹிஹ் அல்-புகாரி)
எனவே மனிதனுக்குப் பயன்தரும் வகையில் வாழ்தல், அவனுக்கு உதவுதல், அவனது தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல் என்பன இஸ்லா மியக் கண்ணோட்டத்தில் மிக உன்னத காரியங்களாகக் கொள்ளப்படுகின்றன.
கருத்துச் சுதந்திரம்
தான் விரும்பிய கொள்கையை, மார்க்கத்தைப் பின்பற்றுவது மனிதனது பிறப்புரிமை, அது மனிதம்' என்ற முதல் வெளிப்பாடு என இஸ்லாம் கருதுகிறது.
"இந்த அமானிதத்தை (பொறுப்பை) நாம் வானங்கள், பூமி, மலைகள் என்பவற்றிடம் முன்வைத்தோம். அவை அதனை ஏற்க மறுத்தன. ஏற்கப் பயந்தன. மனிதன் அதனைச் சுமந்துகொண்டான்" (33:72), இங்கு அமானிதம் (பொறுப்பு) எனப்படுவது செயற்சுதந்திரத்தை, கருத்துச் சுதந்திரத்தையே குறிக்கும் என்பது அல்-குர்ஆன் விரிவுரையாளர்களது முடிவாகும். ஆயத் அல்-குர்ஸி (சிம்மாசன வசனம்) இறை அதிகாரம் குறித்து விளக்குகிறது. பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்கள் மீதும் எவ்வாறு அதிகாரம் வியாபித்துள்ளது என்பதனை அது தெளிவாக விளக்குகிறது. அவ்வாறு விளக்கி முடிந்ததும் அவனது இந்த அதிகாரத்தைக் கூட மனிதன் மீது திணிக்கவில்லை எனவும் அடுத்த வசனத்தில் அது விளக்குகிறது. மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது" (2:256) என்று அந்த வசனம் கொள்கைச் சுதந்திரத்தை விளக்குகிறது.
இவ்வசனம் இறங்கியதற்குப் பின்னணியாக அமைந்ததொரு சம்பவம் உள்ளது. அச்சம்பவம் அல்-குர்ஆனின் இக்கண்ணோட்டத்திற்கு நடைமுறை ரீதியான தெள்ளிய உதாரணமாகும். மதீனாவாசிகள் முஹம்மத் (ஸல்) தூதராக வருவதற்கு முன்னால் தங்களது பிள்ளைகளை யூதர்களிடம் வளர்க்கக் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். யூதர்கள் வேதம் கொடுக்கப்
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 19

Page 14
பட்டவர்கள். எனவே அவர்கள் எம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற பொதுவான எண்ணம் மதினாவாசிகளிடம் காணப்பட்டது. வளர்ப்புக்கு எடுக் கப்பட்ட இப்பிள்ளைகளை யூதர்கள் தமது ஆசாரப்படி வளர்த்தார்கள். இவ்வகையில் அவர்களில் பலர் யூதர்களாகவே மாறியிருந்தனர். இந்நிலையில் மதீனாவிற்கு
இஸ்லாம் வந்தது. பலரும் புதிய மார்க்கத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்
தழுவினார்கள். தழுவியவர்கள் யூதர்களிடம் வளர்க்கவெனக் கொடுக்கப்பட்ட தமது பிள்ளைகளையும் தமது புதிய மார்க்கமான இஸ்லாத்திற்கு மாற்றிக் கொள்ள முயன்றார்கள். அதற்கு இறைத் துாதரிடம் வந்து கேட்டார்கள். இந்நிலையிலேயே மேற்குறிப்பிட்ட 'மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது" என்ற வசனம் இறங்கியது.இஸ்லாம் எந்தளவு தூரம் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இந்தக் கருத்தை விளக்கும் குர்ஆனிய வசனங்கள் மிக அதிகமாக உள்ளன. இங்கு விரிவஞ்சி இவற்றை மட்டும் குறிப்பிட்டோம்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் வளர்க்கப்பட்டதன் காரணமாகத் தான் வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் ஆழ்ந்த மதசகிப்புத் தன்மை கொண்டவர் களாக வாழ்ந்துள்ளார்கள். ரோம சாம்ராஜ்யத்தில் யூதர்கள் கொடுமைப் படுத்தப்பட்டபோது இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் அவர்கள் உண்மையான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் பெற்றனர். பலர் அந்த ஆட்சியின் கீழ் வாழுவதற் கென்று நாடு கடந்து வந்தனர். கிறிஸ்தவர்களை சிலுவைப் போர்களில் சந்தித்துக் கொண்டே அவர் களோடு மிகுந்த சகிப்புத் தன்மையோடும் உயர்ந்த பண்பாட்டோடும் ஸ்லாஹுத் தின் ஐயூபில் நடந்து கொண்டார் என்பது மேற்கத்தேய வரலாற்றாசிரியர்களே வியந்து பாராட்டும் அம்சமாகும்.
ஒரு முஸ்லிம் தனக்கு அருகில் உள்ள மனிதனில் மனிதத்தைக் காண் கிறான். மொழியை, நிறத்தை, இனத்தைப் பார்ப்பதில்லை. அவனை மனித சகோதர னாகவே பார்க்கிறான். இறுதியாக மாற்றுக் கருத்தை, சிந்தனையை வைத்திருக்க அவனுக்குச் சகல உரிமையும் இருக்கிறது எனக் காண்கிறான்.
எனவே, இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளின் மீதும் எழும்பும் முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதோரின் உறவு மிக உன்னதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய சிறந்த, உன்னத அடிப்படைகளை யாரும் முன்வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, நவீன மனிதன் கூட இந்தக் கொள்கை களை இவ்வளவு ஆழமாக விளக்கும் வழிகளைக் காணமுடியாது என்பதும் மறுக்கவியலாத உண்மையாகும்.
ஸ்லாஹுத்தீன் ஐயூபி ஹிஜ்ரி 532 இல் பிறந்தார். கலீபா உமர் (ரழி)அவர்களுக்குப்பின் பைத்துல் முகத்தளை) சிலுவை வீரர்களிடமிருந்து மீட்டெடுத்த பெருமை இவரையே சாரும் குர்திய வம்சத்தைச் சேர்ந்த இவர் நூறுத் தீன் மஹர்மூத் என்கீ -காத்தில் பாத்திமிய ஆட்சியின் முதலமைச்சராக இருந்தார். பலபெக், ஹரித்தீன் போராட்டங்களில் வெற்றிவாகை சூடிய வீரத் தளபதி இஸ்லாமிய வரலாற்றில் புகழ் பூத்த ஒரு முஜாஹித்
20 / இனப் பிரச்சினை

//2255-277/7/760/60)/O///f ജൂിങബ/ഗു
இனப்பிரச்சினை குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தை இதுவரை பொதுவான சில கொள்கைகள் ஊடாக விளக்கினோம். இஸ்லாம் சமத்துவம், ܝ சுதந்திரம், சகோதரத்துவம் என்ற தனது அடிப்படைக் கொள்கைகளை எந்த வகையில் முன்வைக்கிறது என்று இறுதியாக நோக்கினோம். இனி முழுமையாகவும் குறிப்பாகவும் இனப்பிரச்சினை குறித்த இஸ்லாமியக் கருத்தை நோக்குவது பொருத்தமானது. இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான ராஷித் அல்-கனுஷியின்ஸ் சிந்தனைகளைப் பின்னணியாகக் கொண்டு இக்கருத்து கீழே விளக்கப்படுகிறது. அதற்கு முன்னர் மதம் குறித்தும் மதச்
*ராஷித் அல்-கனூஷரி. டியூனிஷரியாவின் இஸ்லாமிய இயக்கத்தலைவர் சிறுபான்மை இனங்களின் அரசியல் பற்றிய இவரது சிந்தனைகள் சற்று வித்தியாசமானவை. இவரது அரசியல் சிந்தனைகள்
தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன.
ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 21

Page 15
சார்பின்மை குறித்தும் சில கருத்துக்கள் வருமாறு:
மதத்தின் ஆட்சி, மதச்சிந்தனை எனும் போதே மேற்கத்திய சிந்தனையில் ஊறிப்போனவர்களுக்கு ஒரு வெறுப்புணர்வு தோன்றுவதுண்டு. சமூகவாழ்க்கைக்கு மதப்பின்னணி பொருத்தமற்றது என்பது பலரது எண்ணம். ஐரோப்பாவில் குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் கிறிஸ்தவத்தின் பெயரால் நடந்த அநியாயங்களே இதற்குக் காரணமாயின. எனினும் ஏற்கனவே ஒரு சிந்தனைப் போக்கை உருவாக் கிக் கொள்ளாது, நடுநிலைமையில் நின்று சிந்தித்தால் மதங்கள் அனைத்தும் அன்பை, விட்டுக்கொடுத்தலை உபதேசிக்கின்றன. மனித உயிரை மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் மிகவும் போற்றுகின்றன என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
எனினும் சமூகவாழ்விற்கான தெளிவான, வரையறுத்த சட்டங்களும் கொள்கைகளும் பல மதங்களில் நன்கு காணப்படாமை ஒரு பொது உண்மையே. அந்த மனப்பதிவோடு இஸ்லாத்தைப் பார்க்கும்போதுதான் பலரும் தவறி ழைக்கிறார்கள். மறைவான உலகு, ஆன்மா பற்றி இஸ்லாம் கரிசனை செலுத் துகிறது என்றவகையில் மதங்களோடு அது ஒற்றுமைப்படுகிறது. அதேவேளை சமூக வாழ்வுக்கான தெளிவான வரையறுத்த சட்டங்களையும் கொள்கை களையும் கொண்டிருப்பதால் அது அடுத்த சிந்தனைகளோடும் கொள்கை களோடும் வைத்து நோக்கப்படவேண்டும். அங்கும் ஒரு பிரச்சினை இருப்பதாகப் பலர் கருதுகின்றார்கள்:
இஸ்லாம் கடவுளின் வார்த்தைகள் . எனவே பகுத்தறிவுரீதியான ஆய்வுக்கோ நெகிழ்ந்து கொடுக்கும் தன்மைக்கோ அங்கு இடம் இருக்காது. இஸ்லாமியவாதிகள் என்பவர்கள் இறுகிய சிந்தனையும் விட்டுக்கொடுக்காத இறுக் கமும் கொண்டிருப்பர் என்றெல்லாம் வாதிக்கின்றனர்.
உண்மையில் இறைவசனங்களோடு சேர்ந்து அவற்றை ஆய்வுசெய்யும் மனிதப்பகுத்தறிவும் செயற்படுகிறது என்பதையும், அந்தவகையில், சமூக வாழ் வின் பல்வேறு பகுதிகளில், ஒரே விடயத்தில் பல கொள்கைகள் இஸ்லாமிய சட்டத் துறையில் காண்படுகின்றன என்பதனையும் இவர்கள் அறியமுற்படுவதில்லை. முற்றுமுழுதாக மதத்திற்கப்பால் நின்று சிந்தித்தவர்கள் வெளியிடும் சிந்தனை களோடு கூட பல இஸ்லாமிய அறிஞர்கள் ஒத்துப்போகிறார்கள் என்பதை இவர்கள் அறிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். அரசு என்பது ஒரு சமுதாய ஒப்பந்தம் என்ற ரூஸோவின்ஸ் சிந்தனையை அப்படியே அதே வசனத்தில் இமாம் இப்னு ஹஸ்ம்*
* Jean Jacques Rousseau ஒரு பிரான்ஸிய எழுத்தாளர் கி பி 172 இல் பிறந்தார் நவீன
ஜனநாயகத்திற்கு இவரது அரசியல் கருத்துக்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன. இவர் கிபி 1778 இல் மரணித்தார். இவர் எழுதிய ‘சமுதாய ஒப்பந்தம் இமாம் இப்னு ஹளப்ம் இன் முஹல்லாவை முழுமையாக ஒத்திருக்கிறது என்பது அண்மைய ஆய்வு முடிவுகளாகும். *அலி பின் அஹமத் பின் ஸஈத் இப்னு ஹளப்ம் என்பது இவரின் முழுப் பெயர். ஹிஜ்ரி 384 இல் பாரசீகத்தில் பிறந்தார் எப்பெயினில் வளர்ந்தார். அல்-முஹல்லா, அல்-இஹர்காம் எனும் பிரசித்தி பெற்ற நூல்களைஏழுதியுள்ளார் ழாஹரிரி சட்ட மரபின் எப்தாபகரும் இவரே ஹரி 456 இல் மரணித்தார்.
) (1ി 1ിക്റ്റിങ്ങ്

என்ற இஸ்லாமிய சட்ட அறிஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்-முஹல்ல7 என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளமையை இன்றும் வாசிக்கமுடியும். இது ஒரு உதா ரணம் மட்டுமே. அவற்றை விளக்கமாகக் குறிப்பிடுவது இங்கு நோக்கமல்ல. இஸ்லாத்தை மதம் என்று ஒதுக்காது அதன் சிந்தனைகளை நெருங்கிவந்து படிப்ப தன் மூலம் முஸ்லிம் அல்லாதோரும் பயன் பெறமுடியும் என்பதற்காகவும், நாம் எடுத்துக்கொண்ட தலைப்பை மத ரீதியாக விளக்க முனையும்போது ஒரு வகை வெறுப்புணர்வோடு நோக்காது இருக்கவுமே இதனைக் குறிப்பிட்டோம்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் மத, இன மோதல்களைத் தவிர்க்கவும் மதச்சார்பற்ற சிந்தனைப்போக்கு உதவும் எனப் பரவலாக நம்பப் படுகிறது. 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் செல்வாக்குப்பெற்ற இச்சிந்தனைப் போக்கு 20ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் உலகம் முழுவதும் பரவலான செல் வாக்குப்பெற்றது. இன்றும், பாரிய நெருக்குதல்களுக்கும் கடுமையான விமர்சனங்க ளுக்கும் அதன் சாதனைகள் என்ன என்றவாறான கேள்விகளுக்கும் மத்தியிலும் அது, செல்வாக்குடனேயே திகழ்கிறது.
மதச்சார்பற்ற சிந்தனை கம்யூனிச உலகில் மத எதிர்ப்பு வடிவத்தைப் பெற்றது. இன்னும் பல நாடுகளிலும் இந்நிலை காணப்படுவதனை நன்கு அவதா னிக்கமுடியும். பொதுவாக இக்கொள்கை நிலவும் அனைத்து நாடுகளிலும் மதம் سميس\ சமூகவாழ்வை விட்டு ஒதுக்கப்பட்டதாகவும், அந்நாட்டு மக்களில் லோகாயத, பெளதீக விதிகள்சார் சிந்தனைப்போக்குக் கொண்டவர்கள் மதம், ஆன்மா, ஆன்மீக ஒழுங்குகள் என்பவற்றை எள்ளிநகையாடுபவர்களாகவும், எதிர்ப்ப வர்களாகவும் இருப்பது கண்கூடு.
மதச்சார்பின்மை என்பதன் பொருள் மதச்சார்பின்மை' என்பது மட்டுமல்ல. இனம், மொழி, கலாசார சார்பின்மை என்ற கருத்தையும் அது குறிக்கும். எந்த மதத் தையும் இனத்தையும் கலாசாரத்தையும் சாராது நடுநிலைமை வகிப்பது என்பதும் இதன் பொருளன்று. இந்த மதச்சார்பின்மைக்கென்று சிந்தனை, கலை, கலாசாரம். அனைத்தும் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, மதச்சார்பற்றோர் சில போது தமக் கென ஓர் இனத்தையும் அமைத்துக்கொள்வர்.
இந்தவகையில், மதச்சார்பின்மை ஒரு நாட்டில், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த முனையும்போது அது அந்நாட்டு மக்கட்பிரிவினரின் மதம், கலாசாரம், சிந்தனைப்போக்குப் போன்றவற்றின் தனித்தன்மைகளை அழித்து, 'ஒருமைப் படுத்தலை நோக்காகக் கொள்கின்றது. பல்லினங்கள், மதங்கள், கலாசாரங்கள் வாழும் நாட்டில் தோன்றும் என எதிர்பார்க்கப்படும் மோதல்களுக்கு இவ்வழிமுறை ஊடாகத் தீர்வு காணமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தவகையில் பல இன, மதங்களிலுமுள்ள இ(ம்மதச்சார்பின்மை)ச் சிந்தனைப்போக்குக் கொண்டவர்கள் ஒன்றாகிவிட்ட மதச்சார்பின்மை என்ற கொடியின் கீழ் ஒன்றிணையும்போது இந்த உயர்ந்த நோக்கத்திற்காக உழைப்பர். இறுதியில் மதச்சார்பின்மை தவிர்க்கமுடியாமல் பெரும்பான்மை இனத்தின் அபிலா ஷைகளை நிறைவேற்றும் சாதனமாக மாறிப்போகின்றது. ஆனால் சிறுபான்மை யினர் மட்டுமே மதச்சார்பில்லாதவர்களாகவும், தமது சொந்த மொழி, இன, மத
ஒர் இளப்லாமியக் கண்ணோட்டம் / 23

Page 16
அடையாளங்களை இழந்தவர்களாகவும் வாழவேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றனர். -
மதச்சார்பின்மையின் நவீனகால வரலாறு தற்போது இவ்விடத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. போதாமைக்கு மனித இனம் படிப்படியாக இன, மத, மொழி அடையாளங்களை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இந்தவகையில் மதச்சார்பின்மை பல நாடுகளிலும் தோல்வியடைந்து, பின்வாங்கி விடுவதனை அவதானிக்கமுடிகிறது.
மதச்சார்பின்மைக் கருத்துக்கொண்டோரில் பலரால் தமது கொள்கைக்கு நேர்மையானவர்களாக இருக்கமுடியவுமில்லை. அத்தோடு அக்கொள்கையும் மனித இனத்தின் இன, மத, மோதல்களைத் தவிர்க்கப்பயன்படாதது மட்டுமல்ல மானுட சமாதானத்திற்கேனும் வழிவகுக்கவுமில்லை.
மத வெறி உணர்வும் அதன் காரணமாக வரலாற்றில் ஏற்பட்ட மோதல் களையும் நாம் மறுக்கவில்லை. வெறி உணர்வு எந்த உருவத்தில் வந்தாலும் அது தவறு, பிழை என்பதில் சந்தேகமில்லை. மதச்சார்பின்மை ஒரு நல்ல மாற்றீடாக அமைந்து, மனித இன மோதல்களைத் தவிர்க்கவில்லை என்றே இங்கு விளக்க முனைகிறோம்.
வெள்ளை இனத்தவன் இன்று வரை கறுப்பனை இழிவாகவே பார்க்கின்றான். தன்னை விடத் தாழ்ந்தவன் என்றே நோக்குகின்றான். மதச் சார்பின்மை அவனை எந்தவகையிலும் இந்நிலைமையிலிருந்து மாற்றவில்லை. மேற்கு நாகரிகத்தில் ஊறிப்போயுள்ள மேலாதிக்க உணர்வு, பிறரை ஒழிக்கும் போக்கு, பலவானுக்கே ஆளும் உரிமை உண்டு என்ற உணர்வு இன்னும் நீங்கிய தாயில்லை. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டமையும், அவுஸ் திரேலிய சுதேச குடிகள் ஒழிக்கப்பட்டமையும், தென் ஆபிரிக்காவின் நீண்ட காலப் போராட்டமும், உலகம் முழுவதும் இந்த நிமிஷம் வரை ஆதிக்கம் செலுத்தும் நவகாலனித்துவமும் இதற்கு மிகத் தெளிவான சான்றுகளாகும். எனவே மதச்சார்பின்மை என்ற கொள்கையால் பிரச்சினையை தீர்க்கமுடியவில்லை என்ற உண்மை மிகத்தெளிவானது.
இப்போது ராஷித் அல்-கனுாவழியின் சிந்தனைகளுக்கு வருவோம். இஸ்லாம் மனிதர்களை அவர்களது மார்க்கம், கலாசாரம், போன்ற அடையா ளங்கள் ஊடாக இனங்காண்கிறது. அந்த மத, கலாசார, அடையாளங்களை ஏற்றுக்கொள்கிறது. அந்த வேற்றுமைகளை முழுமையாக ஒழித்து விடமுடியும் என்று அது கருதவில்லை. மதச்சார்பின்மை போன்ற தன்னடையாளங்களை ஒவ்வொரு இனமும் இழந்துவிட்டு, தேசியம்' என்ற உருவற்ற 'பொதுவில் கரைந்து விட வேண்டும் என்று அது கேட்கவில்லை. ஒவ்வொரு மனிதனும், அவனது மதத்தையும் கலாசாரத்தையும் தனித் தன்மைகளையும் பாதுகாக்கவும், வளர்த்துக்கொள்ளவும் அது இடமளிக்கிறது.
இதுவே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இனப்பிரச்சினை குறித்த ரவின் சுருக்கமாகும்.
f இனப் பிரச்சினை

(366)///5// 9//576i /7/760760)/O///60/7
சிறுபான்மையினர் எவ்வாறு கவனிக் கப்படவேண்டும், அவர்களது உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு இஸ்லாமே முதலாவது முன்மாதிரியாக இருந்துள்ளது என்று துணிந்து கூறமுடியும், இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் தலைமையை ஏற்றுக்கொண்டதும் செய்த முக்கிய பணிகளில் ஒன்று அங்கு வாழும் அடுத்த சமூகத்தினர் பற்றிய மிகத் தெளி வான முடிவுக்கு வந்தமையாகும். இந்தவகையில், வரலாற்றில் பிரசித்தி பெற்ற மதீனா சாசனத்தை வரைந்தார்கள். உலக வரலாற்றிலேயே முதலாவது அரசியல் யாப்பாக இது கருதப்படுகிறது. அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த யூதர்க ளுக்குரிய அனைத்து உரிமைகளையும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மதீனா சாசனத்தில் உத்தரவாதப்படுத்தினார்கள்.
அவர்களை சமவுரிமைகள் கொண்ட நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக் கொண்டமையை, மத சுதந்திரம் போன்ற அனைத்தையும் (மதீனா சாசனம்)
ഉി ജിബിയെ/ഥിLൿ കയ്തേ11 Lഥ / 25

Page 17
வழங்கியமையை அதனை வாசிக்கும் எவரும் இயல்பாகப் புரிந்துகொள்ள முடியும். அல்-குர்ஆன், ஸ"ன்னாவின் வழிகாட்டலின் பின்னணியிலும், மேற்குறிப்பிட்ட அரசியல் யாப்பைக் கவனத்திற் கொண்டும் பல்லின மக்கள் வாழும் ஒரு சமூகத்தில் சிறுபான்மை இனத்திற்கு கீழ்வரும் உரிமைகளை இஸ்லாம் வழங்குவதாக இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கருதுகின்றனர்:
சம அந்தஸ்துள்ள நாட்டுப் பிரஜைகளாக அவர்களைக் கருதுதல். இஸ்லாம் இறைவனின் வழிகாட்டல் என்பது உண்மையானது என்றவகையில், ஒரு முஸ்லிம் தான்நம்பும் கொள்கைகளையும் சட்டங்களையுமே மிகச்சரியானது எனக் கருதுவான். இந்த எண்ணமும் நம்பிக்கையும் தன்னோடு வாழும் அடுத்த மதத்தவர் களையோ ஏனைய கொள்கையாளர்களையோ எவ்வகையிலும் பாதிக்காத முறையிலேயே அமைந்திருக்கும். ஏனெனில் இஸ்லாம் என்பது ஒரு கொள்கைவாத அரசு.இனம், மொழி என்பவற்றின் பெயரால் அது எழுந்ததல்ல. அத்தோடு அனைத்து மனிதர்களுக்கும் திறந்துவிடப்பட்ட கொள்கை அது. விரும்பும் யாரும் அக்கொள் கையில் இணைவது மிக இலகுவானதாகும். கொள்கைத்திணிப்பை அது கடுமை யாக வெறுக்கிறது. சத்தியத்தைக் கூட அடுத்தவர் மீது பலவந்தப்படுத்தக்கூடாது என்பது அதன் அடிப்படைச் சிந்தனை. இதனடிப்படையிலேயே தனது நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் அது சம அந்தஸ்தும் உரிமையும் கொண்டவர் களாகக் கருதுகிறது.
ஒவ்வோர் இனத்தினதும், மதம் சார்ந்தவர்களினதும் நம்பிக்கைகள் வணக்கவழிபாடுகள், திருமணம் போன்ற தனிநபர்நடவடிக்கைகள் உணவு,உடை, குடியிருப்பு போன்ற கலை கலாசார நடவடிக்கைகள் யாவற்றிற்கும் இஸ்லாம் பூரண சுதந்திரத்தை வழங்குகிறது. மதுபானம் அருந்துவது ஒரு சமூகத்தின் அனுமதிக் கப்பட்ட விடயமாயின், அந்த விடயத்திற்கூட இஸ்லாம் தலையிடாது. இவ்வுண் மையை இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் அவதானிக்கமுடியும். இஸ்லாமிய சிந்தனையையும் சட்டங்களையும் முழுமையாகவும் நுணுக்கமாகவும் பேணாத பிற்கால இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கூட இதில் கவனமாக இருந்ததையே அவதானிக்கமுடியும். மிக மோசமாக விமர்சிக்கப்படும் இந்திய முகலாய சாம்ராஜ்ய ஆட்சியாளர்களில் ஒருவரான ஒளரங்கவதிப்பின வரலாற்றை நேர்மைக் கண் கொண்டு பார்க்கும் யாரும் இந்துக்களின் தனிப்பட்ட மத, கலாசார விடயங்களில் அவர் மிகத் தாராளமாக நடந்துகொண்டார் என்பதை ஏற்றுக்கொள்வர்.
இஸ்லாத்தின் இத்தகைய போக்கே அதன் சிறப்பம்சமாகும். அது ஆட்சி செய்யும் நாட்டில் வாழும் அனைத்து இனங்களதும் தனித்தன்மைகளையும் சிறப்பம் சங்களையும் பாதுகாத்துக் கொடுக்கிறது. இவற்றை அழித்துவிட அது முனைவ தில்லை. மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கினர் செய்வது போல் மதத்தக்குப் புறம்பானதொரு சமூக சூழலை, கல்வியமைப்பை அது உருவாக்குவதில்லை. படிப் படியாக அனைத்து இன மக்களையும் இன அடையாளமற்ற மக்களாக மாற்றும் பலாத்காரங்கள் எதிலும் அது இறங்குவதில்லை.
சமூக வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இரு முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடமுடியும்.
26 / (2011 || | |bjócikÖ)GOT

1.தமது சிந்தனை, மதம், கலாசாரம் என்பவற்றைக் காத்துக்கொள்ள எழுதவும் பேசவும் ஒன்றுகூடவும் இயக்கங்கள் அமைத்துக்கொள்ளவும் இஸ்லாம் அவர்க ளுக்கு அனுமதிக்கின்றது. மட்டுமன்றி, கீழ்த்தரமாக அல்லாமல் கண்ணியமான முறையில் இஸ்லாத்தை விமர்சிப்பதைக்கூட அது அனுமதிக்குமென சில இஸ்லா மிய சட்ட அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வகையில்தான் அப்பாஸ்யக் காலத் தில் பல மதத்தவர்களும் இஸ்லாமிய அறிஞர்களோடு வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளமையைக் காண்கிறோம். 2.தமது குறைகளையும் உரிமைகளையும் எடுத்துச்சொல்ல சந்தர்ப்பமளிக்கும் வகையில் பாராளுமன்ற அங்கத்துவத்தையும் அவர்களுக்கு இஸ்லாம் வழங்கு மென நவீன இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.
சமூக வாழ்வைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான இன்னொரு அம்சம் பொருளாதார வாழ்வாகும். பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகளுக்கும் ஆயுதம் தூக்கியப் போராட்டத்திற்கும் இட்டுச் சென்றுவிடுவதுண்டு. இந்த விடயத்தில் இஸ்லாத்தின் ஒரு முக்கிய சிந்தனையைக் கருத்திற் கொள்ளல் அவசியம். இஸ்லாமிய அரசு தனது ஆட்சியின் கீழ் வாழும் அனைத்துப் பிரஜை களும் தங்களது அத்தியவசியத் தேவைகள் நிறைவேற்றப்பட்டவர்களாக வாழ் கிறார்களா என்பதை முதலில் கவனிக்கிறது. பின்னர், போதுமானளவு வாழ்க்கை வசதி கொண்டவர்களாக அவர்கள் வாழ்கிறார்களா எனவும் அவதானித்து அதற் கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது. இந்த விடயத்தில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவன் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. இந்தப் பகுதியில் குறிப் பிடத்தக்கதொரு அபிப்பிராயம் இஸ்லாமிய சட்டப்பகுதியில் காணப்படுகிறது. ஸகாத் என்பது இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதியாக்கும் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அது வணக்க வழிபாடுகளோடு இணைத்துக் கருதப்படுகிறது. அப்படி யிருந்தும் கூட ஸ்காத்தைப் பெறத் தகுதியானவர்களில் ஒரு பகுதியினரான 'ஏழைகள்' முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் ஸ்காத் கொடுக்கலாம் என உமர் (ரழி) அவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்தை இக்ரிமான், இப்னு ஸிரீன்,* எUஹற்ரில் போன்ற தாபியீன்களான இஸ்லாமிய சட்ட அறிஞர்களும்
*இக்ரிமா பின் அபீஜஹர்ல் என்பது இவரது முழுப் பெயர். இவர் மஹர்ஸ்சிமிய குறைவரி வம்சத்தைச் சேர்ந்த ஒரு ஸஹாபி இப்னு அப்பாளப் (ரழி) அவர்களின் நேரடி மாணவன் புகழ்பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளர் ஹரி 13இல் முளைபலமா"விற்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டு 'யர்மூக்" இல் ஷஹிதானார்.
* அபூ பக்ர் முஹம்மத் இப்னு எபீன் பளப்ராவில் புகழ்பெற்ற ஒரு சட்ட அறிஞர் 'கனவுகளின்
விளக்கம்” என்ற நூலின் மூலம் அவர் எழுத்துலகில் அறிமுகமானார். ஹரி 10 இல் மரணித்தார்.
* இமாம் ஸஹர்ரி இப்னு வரிஹாப் முஹம்மத் அளப்ள"ஹற்ரி என்பது இவரது முழுப் பெயர் மதீனத்து தாபீபீன்களில் புகழ்பெற்ற முஹத்திளப் இறைத் துரதரின் என்னாவை அழியாமல் பாதுகாத்த முதலாவது பெருமை இவரையே சாரும் பிற்காலத்தில் ஷாமில் தங்கியிருந்த இவர் ஹரி 124இல் மரணித்தார்.
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 27

Page 18
கொண்டுள்ளனர். இஸ்லாம் மத சகிப்புத்தன்மையை எந்தளவுக்குக் கடைப்பிடிக் கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது கடுமையாக எதிர்த்த மக்கத்தினர் அவரை நாட்டைவிட்டே விரட்டி விட்டார்கள். மதீனாவுக்கு வந்து ஓர் அரசை ஆரம்பித்தபோதும், மக்கத்தினர் விடாது போரா டினர். இவ்வளவு கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும் மக்காவில் ஒரு முறை பஞ்சமேற்பட்ட போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அம்மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைத்தார்கள். இது இஸ்லாம் மக்களை எவ்வாறு நோக்குகிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தனது எதிரிகளையே இப்படி நோக்கும் இஸ்லாம் தனது சொந்த நாட்டு மக்களை எவ்வளவு கண்ணியத்துடன் நோக்கும் என்பதை விளக்க வேண்டியது அவசியமற்றதாகும்.
இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க இன்னுமொரு முக்கியவிடயம் இருக்கிறது. அதுவே இஸ்லாத்தின் பாரபட்சமற்ற நீதி, அநியாயத்தை மிகக் கடுமை யாக எதிர்க்கும் இஸ்லாம் தன் சமூகத்தில் நீதி நிலவுவதை மிக அடிப்படைப் பண்பாகக் கொண்டுள்ளது.
"எமது தூதர்களை நாம் ஆதாரங்களுடன் அனுப்பினோம். அவர்களோடு வேதங்களை இறக்கிவைத்தோம். அதனை விளங்கும் அறிவையும் கொடுத்தோம் மக்கள் மத்தியில் நீதி நிலவவேண்டும் என்பதே இதற்குக் காரணமாகும்" (57 : 25).
நபிமார்களும் வேதங்களும் அனுப்பப்பட்ட நோக்கமே மனிதர்களுக்கு மத்தியில் நீதி நிலைபெறவேண்டும் என்பதாகும் என இந்த வசனம் விளக்குகிறது. "குறிப்பிட்ட பிரிவினர் மீது கொண்டிருக்கும் எதிர்ப்பு மனப்பாங்கு உங்களை நீதி செலுத்தாதிருக்கத் தூண்டிவிட வேண்டாம். நீதி செலுத்துங்கள். அது இறை பயத்திற்கு மிக நெருங்கிய செயலாகும்" (5:2) என மேலும் இக்கருத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இந்தக் கருத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது, நடைமுறை உதாரணம் ஒன்றின் மூலமும் அல்லாஹ் ஆரம்பகால முஸ்லிம் சமூகத்திற்கு இதை உணர்த்தினான். அந்நிகழ்ச்சி வருமாறு:
மதீனாவில் ஒரு களவு நிகழ்ந்துவிடுகிறது. திருடியவர் ஒரு முஸ்லிம், அவரைக் காப்பாற்ற எண்ணிய சிலர் தந்திரமாக ஒரு யூதரைத் திருடியதாகக் காட்டிவிட முயல்கின்றனர். திருடியது யூதரே என்பதற்கான ஆதாரங்கள், சான்று கள் பலமாக முன்வைக்கப்படுகின்றன. யூதரும் தண்டனை பெறவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது யூதர்நிரபராதி என்று விளக்கும் இறை வசனங்கள் இறங்கு கின்றன. இன்றுவரை சூரா நிஸாவின் 105-113 வரையுள்ள அல்-குர்ஆன் வசனங்கள் இச்சம்பவத்தை முஸ்லிம்களுக்கு ஞாபகப்படுத்தி நிற்கின்றன.
யூதர்கள், மதீனாவுக்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் வந்தது முதல் இறுதி வரை இஸ்லாத்திற்கெதிராக சூழ்ச்சி செய்தவர்கள். இறைத் தூதரையே கொல்ல முற்பட்டவர்கள். எனினும் நீதியின் மூலம் எதிரி, நண்பன் என்ற எந்தப் பாகு பாட்டையும் இஸ்லாம் காட்டுவதில்லை. இஸ்லாமிய வரலாற்றில் ஆட்சியொழுங்கு பிர்காலப்பிரிவுகளில் பல தவறுகளைக் கொண்டமைந்ததுண்டு. எனினும், அதன்
· N 2 (ფ),0/// | }}/,#ტ#kთრor

நீதித்துறை கடைசிவரை வழுவாமல் நின்று நிலைத்தமையை வரலாறு நெடுகிலும் அவதானிக்கமுடியும்,
இஸ்லாமிய சட்டங்களுக்குரிய இன்னொரு சிறப்பம்சத்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். இஸ்லாமிய சமூகத்தில் சட்டமியற்றுகின்ற அதிகாரம் தனி மனிதர்களிடமோ பாராளுமன்றத்திடமோ கொடுக்கப்படவில்லை. அங்கு குர்ஆனும் எU“ன்னாவுமே சட்டமியற்றும். அதன் வரையரைகளுக்குட்பட்டே பாராளுமன்ற சட்டமியற்றும் அதிகாரமும் இயங்கும். எனவே பெரும்பான்மை சமூக நலன்கள், ஆசைகள், அதிகார உணர்வுகள், எதற்கும் அங்கு இடம் கிடைப்பது சாத்திய மில்லாது போகும். எனவே அரசு இஸ்லாமிய சட்ட வரம்புகளை மீற முயன்றால் பெரும் பான்மையிடமிருந்தே எதிர்ப்புக் கிளம்பும். உதாரணமாக அல்-குர்ஆனும், எUன்னாவும் சிறுபான்மைக்குக் கொடுத்துள்ள உரிமைகளை அரசு மீறினால் சிறு பான்மைக்கு முன்னர் பெரும்பான்மையே எதிர்ப்புக் கொடிதுக்கும்.
முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் அல்லாதோர் என்ற தலைப்பு இஸ்லாமிய சட்டத்தில் மிக விரிவானது. அவற்றை மிகச் சுருக்கியே இங்கு நாம் விளக்கி யுள்ளோம். இப்பிரச்சினையை ஒரு முஸ்லிம் எவ்வாறு நோக்குகின்றான் என்ற கருத்தை விளக்குவதே இதன் நோக்கமாகும்.
சிறுபான்மைப்பிரச்சினைக்கு மதச்சார்பின்மை ஒரு தீர்வாக முன்வைக் கப்பட்டாலும், பல வளர்ச்சியடைந்த நாடுகளிற்கூட அது தீர்வாக அமையவில்லை என்பது நிரூபணமாகிவரும் இக்காலப்பிரிவில் இச்சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறோம்.
மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒரு மதத்தையோ இனத்தையோ சாராதுநிற்றல் என்பது மட்டுமல்ல, ஆன்மா, கடவுள், மறுமை வாழ்வு அனைத்தையும் மறுக்கும் சடவாத சிந்தனைப் போக்கையே அது குறிக்கிறது. இந்நிலையில் உலகப் பற்றும் ஆன்மீக வறுமையுமே மனிதனுக்கு எஞ்சுகிறது. அன்பை, கருணையை, குற்றங்கள் செய்யாது தடுக்கும் உணர்வை அவனில் ஏற்படுத்த முடியாது போகிறது. மதச்சார்பின்மை இன, மதப்பற்றை ஒழிப்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்ல, மனிதனின் ஆன்மாவை அழித்து அவனை மிருக நிலைக்கு அண்மையில் கொண்டு வந்தும் விடுகிறது. இந்த இஸ்லாமியக் கண்ணோட்டமானது இஸ்லாமிய சமூகம், அரசு என்பவற்றுக்குட்பட்டே பொருந்தும். எமது நாட்டின் இனப்பிரச்சினை குறித்து அடுத்து நோக்குவோம்.
ஓர் இளப்லாமியக் கண்ணோட்டம் / 29

Page 19
ജൂബ്ബ//ി/ബ/ക്രി/ീഞ്ഞ് நிலைப்பாடு
ஓர் இஸ்லாமியவாதி எப்பிரச்சினையையும், அவன் எத்தகைய சூழ் நிலையில் வாழ்ந்தாலும், தனது சொந்த இஸ்லாமியக் கோணத்திலிருந்தே நோக் குவான். கால, இட, சமூக நிர்ப்பந்தங்கள் அவனது கொள்கையை விட்டும் அவனை விலகச்செய்யாது. இது இஸ்லாமியவாதிக்கு மட்டுமேயுரிய பண்பல்ல. எனவே இஸ்லாமியவாதிகளை 'வெறியர்கள்' என்றால், கொள்கைப்பற்றுள்ள அனை வரையும் வெறியர்கள் என்றே கருதவேண்டியிருக்கும்.
மாற்றுக் கருத்துக்கு இடம் தராதவன், அக்கருத்துக்குக் காதுகொடுக்கக் கூட விரும்பாதவனுக்கு மட்டுமே வெறியன்' என்ற சொல் பொருந்தும், சரியானதொரு இஸ்லாமியவாதி ஒரு போதும் அப்படியிருப்பதில்லை. இந்தப் பின்னணியில் இனப்பிரச்சினையை ஒர் இஸ்லாமியவாதி கொள்கைரீதியாக கீழ்வருமாறு நோக்குவான்.
} () (1ി 1)/**ിബ
 

1)இனம், மொழி என்பவற்றிக் குப் பாரிய பெறுமானத்தைக் கொடுத்து அதனடிப்படையில் நாடு, சமூகம் எழும்புவதை அவனது சிந்தனை ஏற்றுக்கொள்ளாது. 2) தேசம் என்ற சொல் இஸ்லாமிய வழக்கில் உம்மத் என்ற சொல்லில் அடங்குகிறது. தேசம் என்து பூகோள எல்லையை மாத்திரம் குறிக்குமாயின், 'உம்மத்' என்ற கருத்தின் முன் அது தனது பெறுமானத்தைக் குறைத்துக் கொள்கிறது. கொள்கையின் நடைமுறைக்கே நிலம் அவசியம். அப்போதுதான்நிலத்திற்குப் பெறுமானம் கிடைக்கிறது. இந்தவகையில் ஒரு முஸ்லிம், தவிர்க்க முடியாத காரணத்தால், இஸ்லாம் நடைமுறையாகும் நிலத்திற்கு வெளியே வாழவேண்டி வந்தாலும் கூட அவன் அந்த முஸ்லிம் உம்மத்தின் அங்கத்தவனாகவே கொள்ளப்படுவான். 3) இன, மொழி அடிப்படையில் மனித சமூகம் பிரிந்துள்ள யதார்த்தத்தை இஸ்லாம் மறுக்கவில்லை. தனது இனத்தோடும் மொழியோடும் பற்றுக்கொள் வதையும் அது மறுக்கவில்லை. ஆனால், முழுப் பெறுமானத்தையும் அவற்றிற்கே வழங்கி, அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் சமூகமும் நாடும் தோன்றுவதையே அது பிற்போக்கான சிந்தனையாகக் கருதுகிறது. குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் வறையறுத்துக் கொண்டு, அதன் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் வாழ்வும் மரணமும் நிர்ணயிக்கப்படும்போது அத்தகைய தேசியத் தையும் இஸ்லாம் ஏற்க மறுக்கின்றது. ஏனெனில், அதுவும் ஒரு பிற்போக்குத் தனமாகும்.
குறிப்பிட்ட நிலத்தில் வாழும்போது அந்நிலத்தோடு இயல்பான ஒரு பற்றும் நெருக்கமும் உருவாகும். அதனை இஸ்லாம் இயல்பான மனித உணர்வாகக் கருது கிறது. அதனை அது மறுப்பதில்லை. அவ்வாறே இஸ்லாம் நடைமுறையாகும் நிலத் திற்கு வெளியே இன்னொரு நிலத்தில் வாழும் ஒரு முஸ்லிம் அக்குறிப்பிட்ட நிலத் தின் மீது பற்றுக் கொள்வதையும் அன்பு வைப்பதையும் அது மறுப்பதில்லை. மேலும் அவன் அந்நிலத்திற்கு அந்நியமாக வாழவேண்டுமென்றோ, அதற்குத் துரோகம் செய்யவேண்டுமென்றோ அது போதிப்பதில்லை. ஒரு முஸ்லிம் மிகவும் நேர்மை யானவன், தெளிவானவன். துரோகமோ, முதுகில்குத்தும் பண்போ அவனிடம் ஒரு போதும் இருக்கமுடியாது.
இம்மூன்று கருத்துக்களின் பின்னணியில் நோக்குகையில் வெறும் நிலத் திற்காக, அந்நிலத்தின் அடிப்படையில் உருவாகும் அரசொன்றிற்காக நடக்கும் போராட்டத்தை ஓர் இஸ்லாமியவாதி தனது சிந்தனைக்கு அந்நியமானதாகவே கருதுவான். அவனால் அத்தகைய போராட்டத்துடன் உறவாட முடிவதில்லை. வெறும் இன உணர்வால் மட்டும் உருவாகும் போரட்டம் முற்றிலும் இதை ஒத்ததே. மனித உயிர்கள் இத்தகைய அற்பக் காரணங்களுக்காக அழிக்கப்படுவதை அவன் அங்கீகரிப்பதில்லை. சத்தியத்திற்காக-கொள்கைக்காக என்ற ஒரு நியாயம் மட்டுமே இருக்கமுடியும் என இஸ்லாம் கருதுகின்றது. அப்போதும் கூட இயன்றளவு ஆயுதப் போரட்டத்தைத் தவிர்த்துக்கொள்ளவே அது முனைகிறது.
எனினும், இன்னொரு உண்மையை இஸ்லாம் இங்கு முன்வைக்கிறது. "யார்
ஒர் இளப்லாமியக் கண்ணோட்டம் / 1

Page 20
தனது உயிர், செல்வம், மானம் என்பவற்றிற்காகப் போராடி மரணிக்கிறாரோ அவர் ஷஹிதாவார்" (ஆதாரம் எUனன் அத்திர்மிதி) என இறைத் துாதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டாள்கள். எனவே, அநியாயங்கள் நிகழும்போது அது ஒரு போராட்டத்தைத் தோற்றுவித்துவிட முடியும், அந்நிலையில் நடக்கும் போராட்டமும் நியாயமானதே என இஸ்லாம் கருதுகிறது.
எனவே, அநியாயங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இஸ்லாமிய சிந்தனைக்கு மிகவுமே நெருக்கமானது என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய போராட்டங்களோடு ஒரு முஸ்லிம் நெருங்கி உறவாடுவது சாத்தியமே. "ஓர் அநியாயக்காரனைப் பார்த்து, அநியாயக்காரனே ' என்று சொல்ல எனது சமூகம் பயந்தால் அது கைவிடப்படுகிறது" (ஆதாரம் : ஸஹிஹற் முஸ்லிம்) என்ற இறைத் தூதர் (ஸல்) அவர்களது கருத்து அநியாயத்துக்கு எதிராகச் செயற்படத் தூண்டும் பல ஹதீஸ்களில் ஒன்றாகும்.
இறைத் தூதர்(ஸல்) அவர்கள் ஹில்புல் புழுல் என்ற ஒப்பந்தத்தில் கலந்து கொண்டார்கள். அநியாயம் இழைக்கப்படுபவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க சில குறைஷித் தலைவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமே அது. நபித்துவத்துக்கு முன்னர் இறைத்தூதர் இதில் கலந்துகொண்டார்கள். நபித்துவம் கிடைத்த பின்னரும், "அவ்வாறானதொரு ஒப்பந்தத்திற்கு இப்போது நான் அழைக்கப்படினும் கண்டிப் பாகச் செல்வேன்" (ஆதாரம் : அல் பைஹகீ, தல்கிளUல் கபீர் 3, 118) என்றார்கள்.
எனவே அநியாயங்களை எதிர்ப்பவர்களோடு ஒத்துழைப்பது, அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாய் இருந்தாலும், ஒரு முஸ்லிமின் பொறுப்பு என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஓர் அநியாயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான தீர்வு, ஓரினம் தனக்கென்று தனியான ஒர் அரசைக் கோருவதாக மாறும் எல்லைக் கும் செல்லமுடியும் என்பதையும் மறுக்கமுடியாது. அதிகாரத்தில் பங்கு, தனி அதிகார அலகுக் கோரிக்கை, தனிநாட்டுக் கோரிக்கை என சமூகரீதியான அநியா யங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான தீர்வுகள் பரிணாமம் அடையலாம். ஒர் இஸ்லாமியவாதியைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையில் இன்னுமொரு பகுதி இருக்கிறது. அதுவே போராட்ட ஒழுக்கமாகும்.
}) | ((1ി 1ിക്സിബ്

(67/////// 622/235.25/5
இவ்விடத்தில் இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்தும்' (இது மார்க்சிய சிந்தனை) என்ற கொள்கையை இஸ்லாம் முற்றாக ஏற்றுக்கொள் வதில்லை. இலட்சியம் உயர்ந்ததாக, தூய்மையானதாக, நியாயமானதாக இருப்பது போன்றே அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகவும் நேர்மை யானதாகவும் இருக்கவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. வழிமுறைகள் நேர்மையற்றனவாகவும் பிழையானவையாகவும் அமைந்துவிடின் அவை, அடையவேண்டிய இலட்சியப் பாதையையே குழப்பிவிட முடியும். சிலவேளை வழிபிறழ்ந்து இலட்சியத்தை அடையாதுபோகவும் முடியும். அல்லது இடைநடுவே வழி முறைகளே இலட்சியமாக மாறிவிடும் அபாயமும் தோன்றிவிடலாம்.
ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 33

Page 21
ஆயுதப் போராட்டத்தைக் கடைசி வழிமுறையாகவே இஸ்லாம் கருதுகிறது. மிகுந்த நிர்ப்பந்தத்திற்குட்படும்போதே அதனை அது மிகக் கவன மாகப் பாவிக்க அனுமதிக்கிறது. பதின்மூன்று வருடகாலம் மக்காவில் தமக் கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டமையும், மதீனா வுக்கு வந்தபோதும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் யுத்தங்களைத் தவிர்க்க முனைந்தமையும், கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே சமாதான உடன் படிக்கைக்கு (ஹ”தைபியா உடன்படிக் கைக்கு) உடன்பட்ட மையும் இங்கு உதாரணங்களாகும்.
ஆயுதம் ஏந்தாத யாரோடும் போராடாமை, எந்தத் தனிநபருக்கும் அநியா யம் இழைக்காமை இயன்றளவு தாவரங்கள், மிருகங்களைக் கொல்வதைக்கூடத் தவிர்த்துக் கொள்ளல்; பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் போன்றோரைக் கொல்லாது தவிர்த்தல் என்பனவெல்லாம் இஸ்லாம் காட்டுகின்ற போர் ஒழுக் கங்களாகும்.
வெறும் அதிகார ஆசை, போரின் பின்னால் வேறு பிழையான நோக் கங்களை வைத்திருத்தல் போன்ற உளத் தூய்மையற்ற போக்குகளைக்கூட நீக்கியிருத்தலும் இஸ்லாமியப் போர்க்கள ஒழுக்கங்களில் முக்கியமானவையாகும். இந்த உண்மைகளின் பின்னணியிலிருந்துதான் எரியும் இனப் பிரச்சினையை ஓர் இஸ்லாமியவாதி நோக்குவான். இதில் எந்தப் பக்கத்தைத் தான் எடுப்பது என்பது முதலாவது பிச்சினையாகும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை களை அடையாளம் காண்பதும், அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிச் சிந்திப்பதும் அடுத்த நடவடிக்கையாகும். இப்போது நாம் இந்த இஸ்லாமிய சிந்தனைகளை எமது நடைமுறை உலகின்மீது பிரயோகிப்பது இலகுவானது.
இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம்களின் சர்வதேசப் போராட்டங்களும் நோக்கப்படுகின்றன என்பதனைக் கவனத்திற் கொள்ளல் சிறந்தது. யாஸிர் அரபாத்தின் போராட்டத்தை இஸ்லாமியப் போராட்டம் எனக் கருதாமையும், முஜிபுர் ரஹற்மானின் விடுதலைப் போரை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்த போராட்ட மாக ஏற்காமையும் அக்காரணத்தினாலேயேயாகும்.
எனவே, தமிழ் சகோதரர்களின் போராட் டத்தோடு முஸ்லிம்களிடம் கெள்கைரீதியான ஒரு முரண்பாடு காணப்படுகின்றது என்பதில் சந்தேகப்படுவதற்கு எதுவுமில்லை. எனினும், அநீதிகளுக்கெதிரான ஒரு போராட்டம் என்றவகையில் முஸ்லிமுடைய சிந்தனை அதனை நெருங்குதல் சாத்தியமாகலாம்.
அப்போது கீழ்வரும் உண்மைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்: * பேரினவாதத்தால் அநீதிக்குட்படுகின்றவர்கள் என்றவகையில் முஸ்லிம்களும் தமிழர்களோடு இணைகின்றனர். எனவே ஆரம்பத்தில் சாத்வீக வழியில் போராட்டம் ஆரம்பித்தபோதே முஸ்லிம்கள் அதுபற்றியதொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கவேண்டும். அந்நிலைப்பாடு நடுவர்களாக நிற்பதன்று. மாறாக, தமக்கும் சேர்த்திழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராகப் போராடும் வழிமுறை பற்றியதொரு இணக்கப்பாட்டுக்கு வருவதே அதுவாகும். * சிங்களவர்கள் பேரினம் என்று நோக்கப்படுவதுபோன்றே முஸ்லிம்களைப்
}{ / ജൂിരIL Lിക്റ്റിങ്ങ്

பொறுத்தவரையில் தமிழர்களும் பேரினமாகவே நோக்கப்படவேண்டியுள்ளது. இந்நிலையில் பேரின உணர்வு தமிழர்களிடமும் மேலோங்கி, தற்போது முஸ்லிம் கள் அநீதியிழைக்கப்படும் நிலைக்கு உட்பட்டுள்ளனரா, அல்லது எதிர் காலத்தில் அது தோன்ற இடமுள்ளதா என்பது நன்கு அவதானிக்கப்பட வேண்டும். * இழைக்கப்படும் அநீதிகள் யாவை? சிங்களவர்கள் எமக்கு எத்தகைய அநீதிகளை இழைக்கிறார்கள் என்பதைப் புள்ளி விபரங்களோடு மிகச்சரியாகக் கணிப்பிட வேண்டும். வெறும் பிரமையாகவோ, இருப்பதை மிகைப்படுத்திக் காட்டுவ தற்கோ அப்போது இடமிருக்காது. ஏன் இக்கருத்தை வலியுறுத்துகிறோ மெனில், ஒரு போராட்டம் பொதுமக்கள் போராட்டமாக எழுவதே மிகச்சிறந்த ஒழுங்காகும். குறைந்தது போராட்டம் மக்களாதரவு கொண்டதாக அமைய வேண்டும். இக்கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் விளைவாக இன்னொரு கருத்தையும் ஏற்கவேண்டியவர்களாகிறோம். அதாவது பொதுமக்கள் தம்மீது மிகப் பாரிய அநீதிகள் இழைக்கப்படும்போதுதான் கிளர்ந்தெழுவர். அத்தோடு தம்மீது அநீதி இழைக்கப்படுகின்றது என்ற பிரக்ஞையும் அவர்களிடம் கூர்மைபெறுதலும் மிக முக்கியம். * மிக எளிய சாதாரண அநீதிகளுக்கெல்லாம் மக்களை கிளர்ந்தெழச் செய்வது மிகக் கடினம். அவ்வாறு மக்களைப் போராட்ட அழிவுகளைத் தாங்கிக் கொண்டே போராடவைப்பதும் மிகக் கடினம். இங்கு நாம் குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தையே என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டும். அழிவுகள் குறைந்த சாத்வீகப் போராட்டத்துக்கு நிச்சயம் மக்களிடம் மிகுந்த ஆதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. *நாம் வாழும் நாட்டில் பேரினம் எந்த அளவு தூரம் இன உணர்வு- வெறி கொண்டது என்பதும் சரியாக விளக்கப்படவேண்டும். இன வெறி கொண்டோர் அந்தச் சமூகத்தில் எத்தகைய அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள்? அவர்களது செல்வாக்கு எவ்வளவுதூரம் அரசியல், பொருளாதார, சமூக மட்டங்களில் காணப்படுகிறது என்பது பற்றிய தெளிவும் எம்மிடம் இருக்கவேண்டும். அவ்வாறில்லாதபோது இனரீதியான ஒரு போராட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம் இன வெறி பயங்கரமாகத் தூண்டப்பட்டு முடிவற்ற போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் நிலை தோன்றமுடியும். * போராட்டத்தின்போது அநீதிகளுக்கு எதிரான போராட்டமே அது என்பது முதன்மைப்படுத்தப்படவேண்டும். ஓர் இன உணர்வின் போராட்டமாக அடையா ளப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது. என்னதான் நியாயப் படுத்த முற்படினும் வெறுமனே தேசியம், இனம் பற்றிய உணர்வு பிற்போக்கு வாதம் என்பதில் சந்தேகமில்லை. இந்தவகையில், ஒரு போராட்ட இயக்கம் பேரினத்திற்குள்ளேயும் மனிதாபிமானிகளையும் நேர்மையானோரையும் கண்டு கொள்ளும், அத்தகைய தனி மனிதர்களை மட்டுமன்றி இயக்கங்களைக்கூட அது காணமுடியும்.
அநதகளுக்கெதரான போராட்டம் என்ற பிரயோகத்தின் விரிந்த
ഉി ജിബ_ഥ / 35

Page 22
பொருளை நோக்கினால் சிறுபான்மையில் மட்டுமல்ல பெரும்பான்மை இனத்திலும் இந்த அநீதிக்கு உட்படுவோர் காணப்படுவர். சிங்கள மக்களுக்கு மத்தியில் எழுந்த சில ஆயுதப் போராட்டங்களும் இந்த உண்மையையே எமக்குக் காட்டின. இந்நிலையில் அநீதிகளுக்கெதிரான பாரிய போராட்ட மொன்று இனங்களுக்கு அப்பால் நின்று தொடங்கப்படும் அவசியமும் உள்ளது. அது மிகச் சரியாக அமையும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஹில்புல் புழுல் ஒப்பந்தத்திற்கு மிக ஒப்பானதாக இருக்கும். இது பற்றி இத்தகையதொரு சிறு பான்மை நாட்டில் முஸ்லிம்களே மிகவும் சிந்திக்கக் கடமைப்படுகிறார்கள்.
* ஆயுதப் போராட்டம் பயங்கரமானது. அதுவும் நவீன காலப்பிரிவின் ஆயுதங்கள்
மிகப் பாரிய அழிவையே கொண்டுவந்து சேர்க்கும். போராட்டம் முடிந்ததன் பின்னர் வென்றவனும்கூடப் பிச்சை வாங்கும் நிலையை அது தோற்றுவிக்கவும் கூடும். ஒரு தீமையை எதிர்ப்பதால் அதனை விட மோசமானதொரு தீமை தோன்ற இடமுண்டாயின் எதிர்ப்பது பற்றிக் கவனமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நலன்கள், தீமைக ளிடையே ஒப்புநோக்கி முடிவுக்கு வருதல் இஸ்லாமிய சட்டத்தில் வலியுறுத் தப்படும் ஒரு கருத்தாகும். இந்தப் பின்னணியில் ஆயுதப்போராட்டம் எப்படியான பாரிய அழிவுகளைத் தோற்றுவிக்கமுடியும் என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டும். இத்தகைய நிதானமும் கவனமும் இல்லாதபோது அநீதிக் கெதிராகப் போராடப்போய் அதனைவிடவும் பாரிய அழிவைத் தேடிக் கொண்ட தாக முடிவுற இடமுண்டு.
*போராட்ட ஒழுக்கம் இஸ்லாத்தில் முக்கிய அம்சமாகும். சொந்த விருப்பு வெறுப்புக்
களை போராட்டத்தின்போது காட்டிக்கொள்வதைக்கூட இஸ்லாம் ஒழுக் கத்துக்கு புறம்பான செயலாகக் கணிக்கிறது. இந்நிலையில் ஒரு முஸ்லிம் போராட்ட ஒழுக்கமற்ற ஒரு பிரிவினரோடு தன்னை இனைத்துக்கொள்ள ஒரு போதும் விரும்பமாட்டான்.
*இலங்கையில் முஸ்லிம்கள் சிதறிய சிறுபான்மையினர். இந்த யதார்த்தத்தை
அவர்கள் மறந்துவிட்டு எத்தகைய போராட்டத்தைப் பற்றியும் சிந்திக்க முடியாது. கிழக்கு முஸ்லிம்கள் ஒரளவு செறிந்து வாழ்ந்தபோதும் அவர்களும் தாம் வாழும் பிரதேசங்களில் சிறுபான்மையினரே. எனவே ஏனைய பிரதேசங் களில் வாழும் தமது சகோதரர்களை விட்டுவிட்டு தமது வட-கிழக்குப் பிரச்சினை தனியானது என்று நியாயப்படுத்தி ஒதுங்கிநின்று போராட முனைவது கிழக்கு முஸ்லிம்களுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று கூறுவது மிகக்கடினம்.
எரியும் இந்த இனப்பிரச்சினைக்கு முன்னால் ஒரு முஸ்லிமின் சிந்தனை
எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கமுடியும் என்பதை விளக்கவே சில விடயங்களைக் மேலே கோடிட்டுக்காட்டினோம்.
} ()
/ இனப் பிரச்சினை

முஸ்லிமை இயக்குவது எது?
நவீன காலப்பிரிவில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முஸ்லிம்களின் அனைத்துத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் எடுத்துநோக்குவோம். வட ஆபிரிக்காவின் ஸ்னூஸிய இயக்கம், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம், இந்திய முஸ்லிம்களின் கிலாபத் போராட்டம் என எதனை எடுத்துநோக்கினாலும் அங்கெல் லாம் ஓர் அடிப்படைப் பண்பை இலகுவாக இனங்காணமுடியும். அதுதான் அப்போராட்டங்கள் அனைத்தின் பின்னாலும் இஸ்லாமிய உணர்வும் இஸ்லாமியத் தலைமைத்துவமும் நின்று செயற்பட்டமையாகும்.
ஒரு சமூகத்தை இயக்கும் சக்தியை இனங்காணாமல் அச்சமூகத்தை வழி நடாத்தமுடியாது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாம் அல்லாத தலைமைத்துவங்களையும், அவை நடாத்தும் போராட்டங்களையும் அது வெறும் ரசிகனாக நின்றே பார்க்கும். மிகக் குறைவாகவே அப்போராட்டங்களில் கலந்து கொள்ளும், மேடையில் தோன்றும் அத்தியவர்களின் சாகசங்களைக் கண்டு சிலபோது அது கைதட்டும், ஆரவரிக்கும். ஆனால் அச்சமூகம் இயங்காது. உற்சா
ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 37

Page 23
கத்தோடு கலந்துகொள்ளாது. போராடவும் மாட்டாது. இது நாம் வாழும் காலத்து வரலாறு நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களை உன்னிப்பாகக் கவனிப்பவருக்கு இது தெளிவாக விளங்கும். முஸ்லிம் சமூகத்தின் இப்பண்பை இனங்காணாது அச்சமூகத்தை வேறு வழிகளுக்கு இழுக்க முனைந்த தலைமை கள் தோல்விகண்டமை வரலாறாகும்.
யாராவது முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து, 'உங்கள் நிலம் பறிபோகிறது, உங்கள் சொத்துப் பறிக்கப்படுகின்றன. பொருளாதாரம், கல்வி போன்ற பகுதிகளில் உங்கள் மீது அநீதிஇழைக்படுகிறது" என வெறுமனே அநீதிகளைப் பட்டியல் போட்டுக்காட்டுவதோ, சுயநிர்ணய உரிமைவேண்டும் என்ற வெற்றுக் கோஷங் களோ முஸ்லிம் சமூகத்தை இயக்க, அல்லது எழுச்சிபெறச் செய்யப் போதுமானவையல்ல.
ஹராம், ஹலால் போன்ற சொற் பிரயோகங்களோடு ஆழ்ந்த தொடர்பு கொண்ட இச்சமூகத்தை இஸ்லாமிய சட்ட விதிகளுக்குட்பட்டு அமையாத இயக்கங்களில் இணைப்பது மிகவும் கடினமாகும். அதுவும் கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் அங்கீ காரம் கிடைப்பதென்பது அசாத்தியமானது. அது முஸ்லிம்களால் அமைக்கப்படும் இயக்கங்களாக இருந்தபோதிலும் சரியே.
மறுமை வாழ்வு ஒரு முஸ்லிமின் இதயம் முழுவதையும் ஆட்கொண்டுள்ள நம்பிக்கையாகும். மரணத்தின் பின் எவ்வாறு கேள்வி கணக்கு கேட்கப்படும் ? மஹற்ஷர் என்றால் என்ன? அங்கு செயல்களின் பட்டோலை வெளியாக்கப் படுவதையும் சுவர்க்கம், நரகம் என்பவற்றின் காட்சிகளையும் விபரமாக ஒரு முஸ்லிம் அறிந்துவைத்துள்ளான். இந்த விபரங்கள் அவனிடம் மிகத் தெளிவாக இருக்கும். சுவர்க்கத்தையும் நரகத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்தவன் போன்று ஒரு முஸ்லிம் விபரிப்பான். அது பற்றி எந்தத் தடுமாற்றமும் மங்கலும் குழப்பமும் அவனுக்குக் கிடையாது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உலக வாழ்வின் நிலையாமை, அற்பத்தன்மை எனும் ஆழப்பதிந்த அபிப்பிராயம் அவனிடம் காணப் படும். உலகத்தைச் சம்பாதிப்பதில் ஆழ்ந்து ஈடுபடும் முஸ்லிமிடம்கூட பொருளாதார ஸ்திர நிலை இருக்குமானால் தொழுது, வணங்கி அமைதியாக இருக்கலாமே என்ற மனோநிலையைக் கொண்டிருப்பான். ஆழமான இஸ்லாமிய அறிவும் உணர்வும் கொண்ட உயர்ந்த முஸ்லிமை இங்கு குறிப்பிடவில்லை. சராசரி முஸ்லிம் ஒருவரையே குறிப்பிடுகிறோம். ஒரளவு பக்தியுணர்வு கொண்ட முஸ்லிமிடத்தில் இந்த உணர்வு ஒரு படி மேலோங்யிருக்கும். இந்நிலையில்தான், மிகப் பெரும்பாலான முஸ்லிம்களிடத்தில் உலக விவகாரங்களைப் பொறுத்தவரையில் ஒரு வகை அசட்டை' ப் போக்குக் காணப்படுவதை, கூர்ந்து அவதானித்தால், காணமுடியும், உலகத்தில் ஏற்படும் பாரியநஷ்டத்தைக்கூட இந்த நம்பிக்கை இருப்பதாலேயே ஒரு முஸ்லிம் தாங்கிக் கொள்கிறான். தற்கொலை முஸ்லிம் சமூகத்தில் மிகக் குறைவாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். முஸ்லிமின் உள்ளத்தில் இருந்து உலகம், மறுமை பற்றிய இந்த நம்பிக்கையைப் பிடுங்குவது அசாத்தியம். இத்தகைய முஸ்லிமொருவனை இயக்கவைப்பதற்கு அல்லாஹ், மறுமை நாள் என்ற
}; / ജൂിര11 (ിക്സിതരT

நம்பிக்கைகளின் புறத்திலிருந்தே வரவேண்டும் என்பது மிகத் தெளிவாகும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் முஸ்லிம் சமூகத்தின் மீது இழைக்கப்படும் அநீதிகளை மட்டும் இனங்காட்டியோ, சுய நிர்ணயப் போராட்டம், முஸ்லிம் தேசம் போன்ற அவனது நம்பிக்கையோடு தொடர்பற்ற, வெறுமனே அவனது உள்ளத்தின் உணர்வு களோடு உறவாடாத கொள்கைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தோ முஸ்லிம் சமூகத்தை வீறுகொண்டதாக எழுப்பிவிடுவது கடினமாகும்.
இத்தகைய கருத்துக்களுக்கு முஸ்லிம் சமூகம் ஒரளவு செவிசாய்க்கும். ஆனால், அவற்றால் முழுமையாக இயக்கவைக்கமுடியாது. மார்க்கத்தை விட்டுத் தூரமாகி, அந்நிய சிந்தனைகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுத்துவிட்ட சில தனி நபர்கள் இச் சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்ல முனையலாம் . ஆனால், அவர்கள் முஸ்லிம் சமுகத்தை இயக்குவதென்பது ஒரு போதும் சாத்தியமில்லை. உணவு உண்ணும்போது 'பிஸ்மில்லாஹ்' வையும் சேர்த்தே முஸ்லிம் சாப்பிடு கின்றான். அவனது இரத்தத் தோடு கலந்துவிட்ட வார்த்தை அது. ஸ°ப்ஹா னல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ” அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹற் இவைகள் அவன் உணர்வில் கலந்துவிட்ட கோஷங்கள். இவற்றை அவனது உள்ளத்தை விட்டுப்பிடுங்குவதென்பது நடவாத காரியம். இந்த வார்த்தைகளோடு உறவாடாத தலைவன் அவர்களை இழுத்துச் செல்லமுடியாது.
மனித உள்ளத்திற்கு ஏதாவதொரு நம்பிக்கை வேண்டும். தொழுகை தேவை. அத்தகைய நம்பிக்கையில், கொள்கையில் பற்றும் அன்பும் கொண்டு உழைப்பது மனித உள்ளத்தின் தவிர்க்கமுடியாத இயல்பு. அநீதிக்கும் தீமை களுக்கும் எதிராகப் போராடுவது மனித இயல்பு. அவை பற்றிய கண்ணோட்டம் எவ்வாறு இருக்கிறது என்பது இங்கு முக்கியமானதல்ல. அந்தப் பாதையில் தனக்கு ஒரு கொள்கையை, இலட்சியத்தை மனித மனம் சிருஷ்டித்துக் கொள்ளும், முஸ்லி மின் உள்ளம் ஓர் இலட்சியத்தைக் கொண்டுள்ளது. வாழ்வு பற்றிய ஒரு பரந்த கருத்து அதனிடம் இருக்கிறது. அந்தக் கொள்கையின் காரணமாகவே வேறொரு கொள் கையை அந்த உள்ளத்தில் திணிப்பது கடினம். நவீன காலப்பிரிவில் மதங்களின் செல்வாக்கு மிகப் பலவீனப் பட்ட நேரத்தில், தேசியம, ஜனநாயகம், கம்யூனிஸம் போன்ற இலட்சியப்பாதைகள் மத நம்பிக்கைகளின் இடத்தைப் பிடிக்க முற்பட்டன. முஸ்லிம் சமூகத்தை இது ஒரளவு பாதித்தபோதிலும் முழுமையாக ஆட்கொள்ள முடிய வில்லை. அடுத்த சமூகங்களில், குறிப்பாகப் புத்திஜீவிகளிடத்தில் இவை இலட்சியங்களாயும் கொள்கைகளாயும் மாறிப்போயின. ஒரு வித நம்பிக்கை களாயும் இவை அமைந்துவிட்டன. அவர்களின் உள்ளத்தின் வெறுமையை நிரப்ப இவை மிக அவசியமாயின. பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அவை பற்றிய சிந்தனைகளையும் தேசியம் பற்றிய கருத்துக்களையும் வாதப் பிரதி வாதங்களையும் படிக்கும்போது இந்த அபிப்பிராயமே எனக்குத் தோன்றுவதுண்டு. ஜனநாயக சமூகம், கம்யூனிஸ் சமூக ஒழுங்கு, தேசியம் போன்ற நிலமும் திசையுமற்ற இலட்சியவாதங்கள், யதார்தமும் தசையும் எலும்பும் உருவமும் கொண்ட இஸ்லாமியக் கொள்கைகளை, நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் உள்ளங்களைப் எட்டிப் பிடிப்பது மிகவும் கடினம். இந்தவகையிலேயே
ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் / 39

Page 24
முஸ்லிம் சமூகம் வித்தியாசமானதொரு இயங்கு விதியைக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறோம்.
முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளை தனது சொந்தக் கண்ணோட் டத்தில் நின்று அணுகும்போது, தனது சொந்த ஒழுங்கில் அதற்கான உழைப்பைப், போராட்டத்தைத் தொடங்கும்போதுதான் வெற்றிபெறுவது சாத்தியமாகும் என்பதையே மேற்கூறிய விளக்கங்களிலிருந்து கூற விரும்புகிறோம். இதன் பொருள் முஸ்லிம் சமூகம் அடைபட்ட சமூகமாக வாழ்வது என்பதல்ல. தனது சொந்தப் போக்கில் தேசிய பிரச்சினைகளை பற்றி, முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சினைகள் குறித்து ஒரு கருத்துருவை சொந்தமாக உருவாக்கிக்கொண்டு, அதற்கான போராட்டப் பாதையை வகுத்துக் கொண்டதன் பிறகு, அந்த சொந்த கொள்கைநிலத்தில் நின்று கொண்டு அடுத்த சமூகங்களோடு, அவற்றின் போராட்டங்களோடு உறவாடமுடியும். எங்கே சந்திக்கமுடியும், எங்கே பிரியவேண்டும் என்றெல்லாம் கருத்துப்பரிமாறுவது அப்போது சாத்தியமாகலாம்.
இந்த அடிப்படை உண்மைகளை மறந்து முஸ்லிம் சமூகத்தை இயக்கு வதோ காப்பதோ சாத்தியமில்லை. நடந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினை, அதனால் உருவான ஆயுதப் போராட்டம் குறித்து முஸ்லிம் சமூகம் எத்தகைய நிலைபாட்டை எடுக்கமுடியும் என்பதனை தொடர்ந்த எம் விளக்கங்களினூடே புரிந்து கொண்டிருக்கமுடியும் என நம்புகிறோம்.
40 / இனப் பிரச்சினை


Page 25
ஓர் இஸ்லாமியவாதி எப்பிரச்சினையையும், அவன் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தாலும், தனது இஸ்லாமியக் கோணத்திலிருந்ே நோக்குவான். கால இட, சமூக நிர்ப்பந்தங்கள் அவனது இச்சிந்தனையை விட அவனை விலகச்செய்யாது. இது இளம்லாமியவாதிக்கு மட்டுமல்ல, கொள்கைப் பற்றுள்ள எவருக்கும் பொருந்தும். இதை யாரும் வெறி' என்று குறிப்பிடுவதில்லை. அவ்வறு குறிப்பிட்டால் கொள்கைப் பற்றுள்ள அனைவரையுமே வெறியர்கள் கருதவேண்டிவரும் மாற்றுக் கருத்துக்கு இடம்கொடுக்காதவ அக்கருத்துக்குக் காதுகொடுக்க விரும்பாதவன் ஆகியோருக்கு மட்டுமே வெறியன் என்ற சொ பொருந்தும். சரியானதோர் இஸ்லாமியவாதி ஒருபோதும் அப்படியிருப்பதில்

என்று
5க்க/
O6).
ISBN 955-8226-00-9