கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இராப்பகலற்ற இடத்தே அறிதுயில்

Page 1
發
இராப்பகலற்
੭। (MEDIT
...G திரு. நா.
- (சித்திரச் til G. அவர்களின் အန္၅)
நிறை வ
(ச ஷ் டிய ப்
 
 
 
 
 
 
 
 

క్టె
ATION) .
யான் :
ராளி ஆசிரியர்) ་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་ — பதாவது ஆண்டு
6) if த பூர்த் தி)
േ அச்சகத்தினர் ஞ்சர் விதி ம்பு-12
1977
鄭
కక్ష్

Page 2

プ 3ణ.
وہ ہاتھ باہمی
స్థ
နှိုး
இராப்பகலற்ற இடத்தே அறிது யில்
(MEDITATION)
ஆக்கியோன் :
திரு. நா. செல்லப்பா
(சித்திரச் சுடரொளி ஆசிரியர்)
அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறை வு மலர் (ச ஷ் டியப் த பூர்த் தி)
இலவச பதிப்பு : தாளை யான் அச்சகத்தினர் 115, மெசஞ்சர் வீதி, கொழும்பு-12.
7-7. 1977
డ్లే
赛

Page 3
ワ、 阿才 Q 夏
திப்பு
முதற ப
 
 
 
 
 
 
 
 
 
 

10.
ll.
12.
l3.
14.
15.
16.
17.
18.
உ ள் ஞ  ைற
முன்னுரை
அறிவு அறியாமை
மனமெனும் மாயக்குரங்கு
புனிதமான பக்தி
சிவோ கம் பாவனை
அறிதுயிற் தியானம்
உள்ளொளி
சிவஞானபோத சாதனை
சவிகல்ப தியானம்
மனத்தின் அறிவு திரிபுடி ஞானமாகும்
இல்வழி ஒரு கலையாகும்
யோகம் ஒரு கலையாகும்
தத்துவஞான விளக்கம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
திருவருட்சக்தி பாய்தல்
சிவலிங்க தியானம்
நிர்விகல்ப தியான சாதனை
முடிபுரை
Luddih
(i)
10
13
14
15
16
17
18
18
19
22

Page 4
(i) இராப்பகலற்ற தரிசனம்
மு ன் னு  ைர
இந்நூல் தியான சாதனைக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. பல வருடங்களாக அடியேன் தியான சாதனையிலீடுபட்டு வரும் பயனுக இதைச் சுருக்கமாக வரையலானேன். சொந்த அனுப வத்தைக்கொண்டு ஆங்காங்கே சில தியான நுட்பங்களை இயன்றளவு தெளிவுபடுத்தியுள்ளேன். அடியேனுக்கு உறுதுணை யாக நின்று வழிகாட்டிய மூன்று பெரியோர்களை இவ்விடம் குறிப்பிடுதல் பொருத்தமாகும். அவர்கள் யாழ்ப்பாணத்து ய்ோகர் சுவாமிகளும், திருவண்ணமலை ரமண மகரிஷிகளும், உலக ஞானமேதை J. கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். நூல் களுள், திருக்குறளும், திருமந்திரமும், சிவஞானபோதமும் சிறந்த கலங்கரை விளக்கம் போன்றுள்ளன. தியான சாதகர்கள் முக்கிய மாகத் தெளிந்து உணரவேண்டியது, மனேவிருத்தியும் சிந்தனை யோட்டமும் அறிவு வளர்ச்சிக்கு மட்டும் சாதனமாகும் என்பதும், மெய்யுணர்தல் ஒரு புறவளர்ச்சிப்பொருள் அல்லவென்பதும், அது திருவருட் சக்தியினல் சுயமாகவே மலரும் நறுமணமுள்ள ஒரு பூப்போன்றதென்பதுமாகும். இதனல் அறிவு வளர்ச்சியை அசட்டைசெய்ய வேண்டியதில்லை. அறிவு வளர்ச்சி மெய்யுணர் தல் மலர்ச்சியாகிய இராப்பகலற்ற தரிசனத்துக்குக் காரணமாகு மெனும் நம்பிக்கை நம்மைவிட்டு நீங்குதல் வேண்டும்.
அடியேனுடைய அறுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நூலை ஒரு தரும கைங்கரிய இலவச வெளியீடாக நேயர்கள் முன்பு சமர்ப்பிக்கத் துணிந்தேன். எனது ஆன்மீக நண்பருபி: தாளையான் அச்சக அதிபருமாகிய அப்துல் கரீம் சாஹிப் அவர் களை நாடினேன். அவர்கள் எவ்வித தயக்கமுமின்றித் தாராள மனப்பான்மையுடன் தமது ஆதரவை நல்கினர்கள்.
இந்நூலை அவர்கள் இலவசமாக அச்சிட்டதுடன் நில்லாது இதிலேற்பட்ட அச்சுப்பிழைகளை இயன்றளவு திருத்தியும் மற்றும் சில சிறு பிழைகளைச் சுட்டிக்காட்டி அடியேனைக்கொண்டு திருத்துவித்தும் ஒத்தாசை புரிந்த எனது உளம்கனிந்த த9' ரவர்களுக்கு மிகு நன்றியுள்ளவ்னக இருக்கிறேன். இவ்வேளையில் வள்ளுவன் கூறிய, "செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது'; எனும் குறளை மட்டும் நினைவு கூரு கிறேன்.
நேயர்கள் இந்நூலைப்பற்றிக் கூற விரும்பும் அபிப்பிராயங் களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். மேலதிக விளக்கம் வேண்டுவோர் கீழ்க்காணும் விலாசத்துக்கு எழுதுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
to do 127, பிறவுண் வீதி, நா. செல்லப்பா யாழ்ப்பாணம். 7-7.77 இலங்கை,

இராப்பகல் அற்ற இடத்தே அறிதுயில்
அறிவு அறியாமை
இரவு இருளினல் ஆகுவது, பகல் ஒளியினல் ஆகுவது, இவை இரண்டும் ஒன்று சேர்ந்ததே ஒரு நாளாகும். இருளை அறியாமை என்றும் ஒளியை அறிவென்றும் கொள்வது நமது மரபாகும். அறிவும் அறியாமையும் ஒன்று சேர்ந்ததே உலக வாழ்வாகும். ஆன்மீக வாழ்வென்பது அறிவு அறியாமை இரண்டும் அற்ற ஒரு தூய நிலைப்பேருகும். சத் தி ய சொரூபியாகிய பரம்பொருள் பூரணமாக உள்ளது. அதற்கு அறிவு அறியாமை யென்னும், இருமை, எவ்விதமேனும் இருப்பதில்லை. எனவே பரம்பொருளே நாம் அத்துவைதம் என அழைக்கிருேம். பரம்பொருளை உண்மையாகத் தரிசிக்க வேண்டின், நாம் இராப்பகல் அற்ற இடத்தே இருத்தல் வேண்டும் என அருணகிரிநாதர் ஒதுகிருர், -
அறிவு அறியாமை இரண்டும் அகற்றிச் செறிவறிவாய் எங்கும் நிற்பவன் சிவன். அவனைத் தரிசிப்பதற்கு வேண்டிய தன்னிகரற்ற உத்தமசாதனை, நாம் இராப்பகல் அற்ற இடத்தே அறிதுயில் பெறுதலாகும். இதனைத் துயிலில் அறிதல் எனச் சிலர் கருதுகின்றனர். துயில் நிலையில் அறிதல் சத்தியதரிசனம் ஆகாது. விழிப்புமின்றித் துயிலுமின்றிக் கனவுமின்றி இவை யாவையும் கடந்த அறிவிழந்த நிலையில் நிகழ்வது அறிதுயிலாகும். இது மரணத்தை ஒத்த ஒரு நிலையாகும். சரீரத்தின் எல்லாத் தத்துவங்களும் அடங்க, உயிர் மட்டும் மேலோங்கி விழிப்பு நிலையடைதல் அறிதுயிலாகும்.
பரம்பொருளைச் சுத்த சக்தியென வழங்குகிருேம். இதை நாம் பெறுதல் பெறுதற்கரிய பேருகும். நமது ஆன்ம சக்தி, மன விருத்தியில் பிரிவினைப்பட்டு இருமைப்பாட்டில் வலுவிழந்திருக்கும்போது, அதனல் சுத்த சக்தியைப் பெறு தல் இயலாததாகும். எனவே இருமையிற் கூறுபட்டு வீணில் விரயமாகும் நமது ஆன்ம சக்தியை, ஒருமைப்பாடு அடையச் செய்யும்போது, நாம் சுத்த சக்தியைப்பெறலாம். ஆன்ம சக்தி விரயத்துக்கு மனத்தின் சிந்தனை விருத்தி ' தான் முக்கிய காரணமாகும். கூறுபடுத்துதலே சிந்தனை விருத்தியாகும். பரம் பொருளாகிய பூரணத்தைக் கூறுபடுத்தி அறிதல்முடியாது. பூரணத்தைப் பூரணத்தினலேதான் உணரமுடியும்.
நமது அறிவு, சிந்தனைகளின் தொகுதியாகும். அது எவ்வளவு ஆழமாகவும் விசாலமாகவும் இருந்தபோதும், அதனுடைய இருமைத்தன்மை (Duality) நீங்காது. அறிவுள்ள இடத்து அதன் மறு கூருகிய அறியாமை மறைந்து இருந்தேதீரும். இருபக்கங்கள் இல்லாத நாணயம் இல்லை. அறிவு அறியாமை இல்லாத மனம் இல்லை. ஒரு பக்கம் புரள மறு பக்கம் புலப்படும். இரு பக்கங்களும் ஒரே பொழுதில் புலப்படுவதில்லை. நாம் பரம்பொருளை அறி வால் அறியோம் என்பது முழுதும் உண்மையாகும்.
உலகப் பொருள்கள் யாவும் பூரணமற்றவையாகும். பூரணமற்ற பொருட் களை அறிவதற்குப் பூரணமற்ற அறிவே போதும். நமது வாழ்க்கை உலகைச் சார்ந்ததாகத் தென்படுகிறது. உலக வாழ்க்கைக்கு உலக விவகார அறிவு

Page 5
- 2 -
மிகவும் அவசியமாகும். அறிவின்றி, தொழில் நுட்பம், பொருட் சம்பாத்தி யம், சரீரசுகம், மனநலம், முதலியவற்றை நாம் பெற்று அனுபவித்தல்
இயலாது. ஆனல் இவைகளின் சிக்கலினல் நமது வாழ்க்கையில் நிரந்தரமான
ஆன்ம சாந்தியும், சமாதானமும், சத்தியத் தெளிவும் இல்லாது அல்லல் உறும் போது, அறிவு அமைதியைக் கொடுப்பதாக நமக்குப் புலப்படவில்லை. அறிவுக்கு அப்பாற்பட்ட மெய்யுணர்தல் என்னும் புனித சக்திதான் நமக்குச் சாந்தி, சமாதானம், தெளிவு ஆகியவற்றை நல்குவதை உணர்கிருேம். மெய்யுணர்தல் அறிதுயில் நிலையில் நமக்கு நிச்சயமாகத் திருவருளால் மலரும்.
விவேக விசாரணை, மந்திர செபம், அறிதுயிற் தியானம் ஆகியவைகள் மெய்யுணர்தல் பெறுதலுக்கு வேண்டிய சிறந்த சாதனைகளாகும். இவற்றில் நாட்டம் பெறுவதற்கு நம்மிடம் அதிக ஈடுபாடு வேண்டும். சாதாரண ஈடு பாடு நம்மை உயர உந்திச்செல்லமாட்டாது பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணமாகும் விண்கலம், ஏவுகணையின் உக்கிர சக்தியால், பூமியின் ஈர்ப்புச் சக்தியை விட்டு நீங்கி வெற்றியடைதல் அவசியமாகும். இந்திரியமன உலகி லிருந்து சிதாகாசமான மெய்யுணர்தல் வெளிக்குப் பயணமாகும் நமது ஆன்மா பக்தி சிரத்தையாகிய ஏவுகணையின் உக்கிர சக்தியால், மன இந்திரிய அறிவு ஈர்ப்புச் சக்தியை விட்டு நீங்கி வெற்றியடைதல் அவசியமாகும் பக்தி சிரத்தை இல்லாதவர்கள் புஸ்வாணம் போன்றவர்கள். அவர்கள் மன ஈர்ப்புச் சக்தியி லிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளெல்லாம் புஸ்வாணம் போன்று புகைத் துப் பொசுங்கிவிடும்:
தரையில் ஒடும் ஒரு இயந்திர வாகனத்தில் நாம் இருக்கும்போது, அதன் சக்கரங்கள் தரையில் உரோஞ்சுவதால் இயக்கம் தடைப்படுவதை நாம் உணர்வ தில்லை. ஆனல் அந்த வாகன இயந்திரத்தின் அதிர்வில் ஒருவிதமான கிளு கிளுப்பை அடைகிருேம். உலக விடயங்களில் ஈடுபட்டிருக்கும்போது ஆன்ம சக்தி. இருமையாகிய உரோஞ்சுதலினல் தடைப்படுவதை நாம் உணர்வதில்லை. ஆனல் மனத்தில் விருத்தியாகும் சிந்தனை அதிர்வில் ஒருவிதமான கிளு கிளுப் படைகிருேம். வான வெளியில் இயங்கும் விண்கலத்தில் இருக்கும்போது உரோஞ்சுதலற்ற அதன் சுதந்திரமான ஒட்டம் எவ்வித கிளு கிளுப்பையும் உண்டாக்குவதில்லை. அதன் அதிர்வு மிக நுண்ணியதாக இருப்பதனுல் நிசப்தம் நிலவும். உலக விவகாரங்களை விட்டு மெய்யுணர்வெனும் சிதாகாசத்தில் நமது ஆன்மா செயற்படும்போது, அதற்கு மன உரோஞ்சுதலால் உண்டாகும் கிளு கிளுப்பு உணர்வு புலப்படாது. அதன் அதிர்வு மிக நுண்ணியதாக இருப்ப தால், மெளனமும் சாந்தியும் நிலவும். ஆனல் அதன் இயக்கச் சக்திவேகம் மிக உக்கிரமாகும். பருப்பொருள்களின் அதிர்வை நாம் சுலபமாக அறிகிருேம். மிக நுண்ணிய கருப்பொருள்களின் அதிர்வு நமக்குப் புலப்படுவதில்லை. புறப் பூசைகளின் அதிர்வை நாம் சுலபமாக அறிந்து கிளுகிளுப்படைகிருேம். அகப் பூசையின் நுண்ணிய அதிர்வு நமக்குப் புலப்படுவதில்லை. அதனல் நாம் கிளு கிளுப்பு அடைவதில்லை. கிளு கிளுப்பையே பெரிதும் விரும்பும் மனம் புறப் பூசையை நாடுவதில் ஆச்சரியமில்லை. அறிதுயிற் தியான சாதனை செய்யும் நாம், மெளன நிலைதான் ஆன்மீக சக்தியின் உக்கிரவேகம் உடையதென்றும், இந்நிலையிற்ருன் நாம் சுத்த சக்தியுடன் தொடர்புகொண்டு மெய்யுணர்தல் மலரப் பெறுகிருேம் என்றும் உண்மை விளக்கம் பெறுதல் அவசியமாகும்.

- 3 -
மனமெனும் மாயக்குரங்கு
மாரீசன் மாய மானகவந்து சீதாதேவியை மயக்கியதாக இராமாயணம் கூறுகிறது. இந்த வருணனையில் நாம் கிளுகிளுப்படைகிருேம். நமது மனம் அந்த மாயமான் போன்றதாகும். ஆன்மாவே சீதாதேவியாகும். மனத்தின் மாயாஜாலத்தில் மயங்கி, நமது வாழ்க்கையை ஒரு இராமாயண யுத்தம் ஆக்கு தல் கூடாதெனத் தெளிவுறுகிருேம். கானலை நீரென மயங்கும் மான் அவ் வளவு மோசமானதல்ல. தாகமுள்ளபோதுதான் அது ஏமாறுகிறது. எனவே உண்மை விளக்கம்பெற்ற மெய்ஞ்ஞானியர் மனதை ஒரு மாயக் குரங்குக்கு உவமை கூறுகின்றனர். குரங்கின் இயல்பு ஒரு மரத்தைவிட்டு வேறு மரம் தாவுதலாகும். மனத்தின் இயல்பும் ஒருமையத்தைக்கொண்ட எண்ணங்களே விட்டு, வேறுமையத்தைக்கொண்ட எண்ணங்களுக்குப் பாய்தலாகும். உண் மைப் பொருள் அல்லவற்றை மெய்ப்பொருளென மையமாகவைத்து மருளில் தாவும் மனச்செயற்பாட்டினல் அறியாமை பிறக்கிறது. மெய்யுணர்தல் பெற வேண்டின், இந்த மருள் மனத்தாவுதல் நம்மைவிட்டு நீங்குதல்வேண்டும்.
தாவித்திரியும் அமைதியற்ற மனத்தினுல் நமக்கு எவ்வித பாதுகாப்பும் உண்டாவதில்லை. ஆனல் சிந்தனை விருத்தியிலும் கற்பனையிலும் அது தாவித் திரிந்து நமக்கு ஏதோ பாதுகாப்புப் தேடித்தருவதாக நம்மை நம்பச்செய்கிறது. தாவித்திரியும்போது நிரந்தரமாக எதையும் மனத்தினற் பெறமுடியாகென் பதை நாம் தெளிவுறுகிருேம். நேரத்துக்கு நேரம் நிறம்மாறும் பச்சோந்திக்கு நிரந்தரமான நிறமேது? பிரிவினையையே மையமாகத் தாவித்திரியும் மனத் திற்கு கிரந்தரமான பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கும்? சத் என்னும் சத்தியம் வேறுபடாத நிலையுள்ள பொருளாகும். அது ஒப்புவமைக்கு உட்படாத தாகும். எதையும் ஒப்புநோக்கி அறியும் மனத்திற்கு, ஒப்புநோக்காது தெளி யும் மெய்யுணர்தலைப்பெறும் ஆற்றல் இல்லை. ஒப்புநோக்கற்ற நிலையில் சிவ பரம்பொருளை இன்பமும் நன்மையும் நிறைந்ததென வேதாகமங்கள் கூறு கின்றன. உலகியலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒப்புநோக்கி அறியும் மனம், பேரின்பத்தைத்தான் அறிவதாகக் கருதுகிறது. அதற்கு உவமைகூடக் காட்டுகிறது. மனம் காட்டும் உவமைகளை உண்மையென நம்பி. நாம் புத்த கங்களைப் படித்தும், பிரசங்கங்களைக் கேட்டும் நிரந்தரமான இன்பத்தைப் பெறுவதாகக் கற்பனை செய்கிருேம். உண்மையில் இவ்விதம் பெறும் இன்பம் புத்தகத்தைப் படிக்குமட்டும் அல்லது பிரசங்கத்தைக் கேட்குமட்டும் உண்டா கும் கிளுகிளுப்பேயன்றி, மெய்யுணர்தலால் வரும் பேரின்பமல்லவென்பதை அவதானிக்கிருேம்.
புனிதமான பக்தி
நிரந்தரமான பாதுகாப்பு உலகில் எந்தப்புறப் பொருள்களிலும் இல்லை யென்பதை உணர்ந்த நாம், மனத்தின் மாயாஜாலங்களை நம்பி ஏமாழுது இறைவனின் திருவருட் சக்தி ஒன்றுமட்டுமே நமக்குப் போதிய பாதுகாப்பளிக் கக்கூடியதென அதைப் பக்தி சிரத்தைமூலம் இறுகப்பற்றுகிருேம். அதுவும் இந்த மனவிருத்தியால் உண்டாகும் பற்றுவிடும் பொருட்டேயாகும். இறை வனிடம் பக்தி சிரத்தை கொள்ளும் இந்நேரத்திற்கூட மனம் குறுக்கிடுகிறது, நூல்களிற் படித்து அறிந்த பக்தியின் பல்வேறு நிலைகளும் நினைவுக்கு வரு

Page 6
-- 4: سس
கின்றன. தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம்,
என்றெல்லாம் பக்தியைப்பற்றிய மனவாசகவிளக்கம் புலப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நான்கு நெறிகளையும் பின்பற்றி வெற்றிகண்ட நாயன்மார் களின் சிந்தனை விருத்தியாகிறது. நால்வர் காட்டிய நன்நெறிகளில் எது சிறந்ததென ஒப்புநோக்கி அறிந்து, அவற்றுள் நல்லதை நாம் பின்பற்றலாம் என நினைக்கிழுேம். இறைவனிடம் புனிதமான பக்தி செலுத்தும் சாதன யைச் செய்யும்போது, நமது மனம் பக்தியைப்பற்றிய பல கொள்கைகளை மையமாக வைத்து, ஒன்றைவிட்டு வேறென்றுக்குத் தாவுவதை அவதானிப் பது உண்மை விளக்கத்துக்கு ஆதாரமாகும்.
நமது இதயத்தில் சிறிதாக மலரும் பக்தி, இந்தச் சிந்தனை விருத்திப் பிரவாகத்தில் இழுபட்டு வேகமாகச் செல்வதை உணர்கிருேம். ' சுவாமீ ! நமது அன்பையெல்லாம் ஆற்றிற் கரைத்த புளியாக்கிவிடாது பாதுகாத் தருளும்” எனப் பிரார்த்திக்கிருேம். இதயத்தில் ஒர் உள்ளொளி பிறந்து பரவுகிறது இறைவன் புறப்பொருளல்ல. ஆன்மாவும் புறப்பொருளல்ல அவன் நம்மிடம் அந்நியமின்றிச் செறிந்துள்ளான். நம்மிடமிருந்து அவனைப் பிரித்து 'நாம்வேறு, அவன் வேறு என்ற எண்ணத்தை வளர்ப்பது, மன மாகும். இந்தக் குரங்கு மனப்பிடியிலிருந்து விடுபடுதல் புனித பக்திக்கு வித்தாகும்".
உண்மையான பக்தி பிரிவினையற்றதாகும். பிரிவினைக்கு இருப்பிடமான சிந்தனைகள் எவ்வளவு தூயனவாக நமது அறிவுக்குப் புலப்பட்டபோதும், புனிதமான பக்தியைச் சிதற அடிப்பனவாகும். எனவே சிந்தனைகளால் ஆக்கப்படும் பக்தி இறைவனையடையும் ஒருமைப்பாட்டை நமக்கு ஒருபோதும் நல்கமாட்டாது. இற்றை நாள்வரையும் நமது எண்ணங்களில் விருத்தியாகிய பக்தி, ஆற்றிற் கரைத்த புளிபோல் பிரயோசனமற்றுவிட்டதைத் தெளிகிருேம். சிந்தித்துப் பெறுவது புனிதமான பக்தியல்ல, மடைதிறந்த ஆறுபோல் இதயத்தி லிருந்து பொங்கி எழுவதே தூய பக்தியாகும். நம்மிடம் பக்தி மடைதிறந்து பாயாது தடைசெய்வது நமது சிந்தனை விருத்தியேயாகும் நாம் நினைப்பது போலப் புனிதமான பக்தியை அவ்வளவு சுலபமாகப் பெறுதல் இயலாது. சிந்தித்துச் சிந்தித்து மிகவும் சுலபமாகப் பெறப்படும் பக்தி புனிதமானதல்ல. இறைவனுக்கும் நமக்கும் நேரடித் தொடர்பை உண்டுபண்ணும் தூய பக்திக்கு ஈடு இணையேது? ஒப்புவமையேது? பக்திப்பெருக்கு நிரந்தரமாக நமது இதயத்தில் ஊற்றெடுக்கவேண்டுமாயின், அந்நியமின்றி நம்முடன் கலந்துள்ள இறை வனின் தொடர்பைத் தடைசெய்யும் மனவிருத்தி அறுதல் வேண்டும்.
சிவோகம் பாவனே
புனிதமான பக்தி நமது இதயத்தில் பாய்வதற்கு நாம் என்ன தவம் செய்திருத்தல் வேண்டும்? தூய பக்தியைவிட்டுத் தூர விலகிஒட எத்தனிக்கும் மனத்தின் கேள்வி இதுவாகும். ஏனெனில், நமக்கு நன்கு புலப்படாத விதி யைத் தவத்துடன் தொடர்புபடுத்தி, இறந்த காலத்துக்கு இட்டுச்செல்வது மனவிருத்தியின் இயல்பாகும். எண்ணங்கள் யாவும் இறந்தகாலத்தை அடிப் படையாகக் கொண்டே விருத்தியடைகின்றன. இறந்த காலத்தில் நாம் என்ன செய்திருத்தல் வேண்டும் என்ற ஆராய்ச்சியைவிட்டு, இப்பொழுது

- 5 -
என்ன தவம் செய்தல் வேண்டும்? என்பதே பயனுள்ளதாகும். மெய்கண்ட தேவர் காட்டிய சிவோகம் பாவனையை இப்பொழுது ஒரு தவச்சாதனையாக தொடங்கும் பாக்கியத்தைத் திருவருளாற் பெறுகிருேம்
நாமும் சிவமும் வேறல்ல. வெறும் எண்ணங்களால் மனத்தை நிரப்புதல் உண்மையான சிவோகம் பாவனையாகாது. குரங்கு மனத்தின் இயக்கத்தை ஒவ்வொரு கணமும் அவதானித்தல் சிவோகம் பாவனைக்கு அத்தியாவசிய மாகும். புற உலகில் மன எறிவை (Projection) செய்து காணும் பல தெய்வங்களும் சிவோகம் பாவனைக்கு உகந்ததல்ல. மெய்ஞ்ஞானியரும், புனித பக்தர்களும் மன எறிவைச் செய்யாது, மாசறு காட்சியாக மெய்யுணர்தல் மூலம் பரம்பொருளே இதயத்திலே தரிசித்தனர். அதை நாம் நூற் கல்வியறிவு எறியவையினல் ஊனக் கண்காட்சியாகக் காணுதல் எங்ங்னம்? சித்தவிருத்தியின் முடி பிலே சிவதரிசனம் சுயமாக அவன் அருளாற் கிடைக்கும் எனச் சைவ் சித்தாந்தம் தெளிவுறுத்துகிறது. நாமோ 'சைவ சித்தாந்தக் கொள்கைகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளன; அக்கொள்கை முடிபுக்குள் நின்று சிவதரிசனம் பெறுதல் வேண்டும்" என வலியுறுத்துகிருேம், கொள்கை என்பது எண்ணத்தை மையமாகக்கொண்ட எல்லைக்குட்பட்ட ஒரு வட்டமாகும். இந்த வட்டம் பெரிதாக இருக்கலாம். இதன் பெரிய அளவைக்கொண்டு நாம் பெருமைப்படலாம். இது ஒரு எல்லைக்குட்பட்ட வட்டமென்பதைத் தெளிதல் அவசியமாகும். மெய்யுணர்தல் எந்த ஒரு வட்டத்தையும் மையமாகக் கொண்ட கொள்கை விருத்தியல்ல. அது சிவோகம் பாவனையில் இயற்கை யாகவே உள்ளிருந்து மலர்வதாகும். புறக்கட்டளைகளேயிட்டுத் திணிக்கும் சாதனையால் மெய்யுணர்தல் பொலிவதில்லை. அமைதியற்று அலையும் மனம் சாந்தியும் சமாதானமும் அடைவதற்குச் செய்யப்படும் சாதனை சிவோகம் பாவனையாகும்.
இவ்வித தெளிவுடன் சிவோகம் பாவனை செய்யும் பயணுக “பூவினிற் கந்தம் பொருந்தியவாறுபோல, சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது' எனத் திருமூலர் நம்மைச் சிவநெறிப்படுத்துகிருர், நமது அறிவை இறைவன் வசமாகும்படி அர்ச்சித்துப் பரித்தியாகம் செய்து, அவனுடைய சிவமணமாகிய வியாபக மெய்யுணர்வில் உறைத்து நிற்றல் சிவோகம் பாவனையாகும். இதை இன்னும் விளக்கமாக கூறுவதாயின், சுட்டறிவாற்கண்ட பொருள் ஒவ்வொன் றையும் இது சத்தன்று, இது சத்தன்று எனக்கழித்து, உயிருடன் அந்நியமின்றி நிற்கும் இறைவனை அத்துவிதமாகப் பாவித்தலாகும். இதனல் மனவிருத்தி நீங்கும் இதன் பெறுபேருக மெய்யுணர்தல் சுயமாக மிளிரும் நிலை உண்டா கும். இந்நிலையே உபாய அறிதுயிலாகும். நிலையான அறிதுயிலைப்பற்றிய உண்மை விளக்கத்தையும் சாதனையையும் இப்பொழுது அவதானிப்போம்.
அறிதுயிற் தியானம்
தியானம் சிந்தனைகளைச் சிதற விடாது ஒருமுகப்படுத்தும் சாதனை எனச் சிலர் கருதுகின்றனர். இவ்விதம் சிந்தனையை ஒருமுகப்படுத்துதல் தாரணை எனப்படும். தியானத்துக்குத் தாரணை ஒரு வகையில் ஆதாரமாகுமேயன்றி அது தியானமாகாது. “ பதார்த்தங்கள் பாரார்; பரமே பார்த்திருப்பர் " எனச் சிவஞானசித்தியார் கூறியவண்ணம், பிரிவினையுண்டுபண்ணும் உலகப்

Page 7
- 6 -
பொருள் அறிவை நீக்கி, மெய்யுணர்தலில் தோய்ந்து நிற்றல் சிறந்த தியான மாகும். இங்ங்ணம் நிற்கும் நிலை நிலையான அறிதுயிலாகும். அறிதுயிலைப்பற்றிய மனவாசக விளக்கம் அறிதுயிலாகாது. மனவாசக விளக்கத்தால் அறிதுயிலை நாம் பெறமாட்டோம். அறிதுயில் அல்லாத, விழிப்பு நிலை, கனவு நிலை, நித்திரை நிலையாகியவற்றை நாம் ஒப்புநோக்கி அறியலாம். அறிதுயில் ஒப்புநோக்குதற்குரிய தொன்றல்ல. அறியக்கூடியவற்றை அறிந்து, அதுவல்ல வென நீக்குமிடத்துத் திருவருளால் அறிதுயில் சுயமாக மலரும்.
நமது மனத்தின் செயற்பாடு இரு கூறுகளாக அமைந்திருப்பதை விஞ்ஞான ரீதியில் ஆய்ந்து பல உண்மைகளை ஜெர்மன் உளவியல் ஆய்வாளராகிய Sigmund Freud சிக்மண்ட் ஃபரைய்ட் என்பவர் வெளியிட்டுள்ளார். அவர் மனத்தை நினைவுப்புலம் என்றும் அயர்வுப்புலம் என்றும் கூறுபடுத்தியுள்ளார். நினைவுப்புலம் என்பது நாம் விழித்திருக்கும்போது செயற்படும் பகுதியாகும். இது மூளையின் பத்தில் ஒரு பங்கை உடையதாகும். அயர்வுப்புலம் என்பது நாம் கனவு காணும்போதும் உறங்கும்போதும் ஓயாது செயற்படுவதாகும். இது மூளையின் பத்தில் ஒன்பது பங்கைக் கொண்டதாகும். மூளையின் அடிப் பாகத்திலிருந்து முதுகெலும்புக் கூடாகவும் இது செல்கின்றதெனக் கண்டுள் ளார்கள், நினைவுப்புலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இப்பகுதி சாதாரணமாக அமையவில்லை. இதைப்பற்றிய ஆய்வு முற்றுப்பெற்றதாக இல்லை. மன அயர்வுப்புலத்தின் பத்தில் ஒன்பது பங்கு சக்தியையும் சாதாரண மனிதன் பயன்படுத்தத் தெரியாது வீணில் விரயம் செய்கிருன். வீணில் விரயமாகும் அயர்வுப்புலச் சக்தியைச் சேமித்து நினைவுப்புலத்துடன் தொடர்புபடுத்தி அதில் இயலுமான அளவு சக்தியை உபயோகிக்கப்பயின்றவர்கள் தாம் உலகில் பல துறைகளிலும் மேதைகளாக உள்ளனர். மேதைகளுட் சிலர் பிறக்கும் பொழுதே இந்த ஆற்றலை இயற்கையாகப் பெற்றுள்ளனர். சிலர் உளவியற் பயிற்சியால் இதைப் பெறுகின்றனர். இன்னும் சிலர் திருவருட் சக்தியினல் இதை விருத்தி செய்கின்றனர்.
பிறக்கும்பொழுது நம்மிடம் இந்த மேதாவிலாசம் சிறப்புற அமைந்த தாகத் தெரியவில்லை. எனினும், வாழ்க்கையை வெற்றிகரமாகவும், சாந்தி, சமாதானம், இன்பம் உடையதாகவும் அமைத்துச் சிறப்புற மேலோங்கும் வாய்ப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இதற்குரிய சாதனை நெறியை இந்துசமய தத்துவ சாத்திரங்கள் வியத்தகு முறையில் ஆய்ந்து நமக்கு வழங்கியுள்ளன. பண்டைக்காலத்து முனிவர்கள் இவற்றை அநேகமாக மறைபொருளாகக் கூறியுள்ளனர். நமது முதல் நூலாகிய வேதத்தையே "மறை' எனக் கூறுதல் மரபாகும். மறைபொருள் நிறைந்த வேத சாத்திரங்களுக்கும் தேவார திருவாசகங்களுக்கும், மனவாசக விளக்கங் கூறுதல் பொருத்தமற்றதாகும். அவற்றின் உண்மை விளக்கம் பெறவேண்டின், அறிதுயில் நிலைக்கு நாம் சாதனை மூலம் உயருதல் வேண்டும். இச்சாதனைநெறி சிவத்தியானமாகும். இது ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் ஒரு பாலம் போன்றதாகும். உறங்கிக்கிடக்கும் குண்டலினி சக்தி தியானத்தினல் விழிப்புப்பெற்று மேலோங்கி இறைவனுடன் ஆன்மாவைத் தொடர்புகொள்ள உதவுவதாக யோகிகள் கூறுவர்.
 

--س--7 سس۔
உள்ளொளி
ஒரு பொருளின் உருவ அமைப்பை முழுமையாக அறிந்தாற்ருன் அதன் உண்மை விளக்கம் பெறலாம் என்பது (Gestalt psychology) உருவப் பூரண அமைப்புக் கொள்கையுடைய நவீன விஞ்ஞான ஆய்வாளர்களின் துணிபாகும். ஒரு பொருளைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு கோணங்களி லிருந்து ஆய்ந்து பார்ப்பதனல் அதன் பூரணத்தை உணர இயலாது. பூர்ணத்துவமானது அதன் பகுதிகளை ஒன்று சேர்ப்பதனுல் உண்டாகுவதில்லை. சீமெந்தையும் செங்கல்லையும் வைத்துக்கொண்டு ஒரு மாளிகையின் அமைப்பை நாம் பூரணமாகத் தெளிதல் முடியாது. சாதாரண கட்டடத் தொழிலாளிக் குப் புதிதாக அமைக்கப்படவேண்டிய ஒரு மாளிகையின் பூரணமான தோற்றம் சரிவரப் புலப்படாது. அது ஒரு கட்டடக் கலைஞனின் (Insight) உள்ளொளி யில் நிறைவாகத் தோன்றும்.
நம் எல்லோருடைய உள்ளத்திலும் இத்தகைய உள்ளொளி இயற்கை யாகவே அமைந்துள்ளது. இந்த உள்ளொளியை ஒரு படைப்புச் சக்தி அல்லது 69 G36 u 35th (creative energy or intelligence) GrGOTáš jinsip Gav Th. Luav DGMT Gí?uLu sið காரணங்களால் இது இயற்கையாக மலர்ந்து வெளிவராது நம்மிடம் தடைப் பட்டுள்ளது. உளவியற்றடைகளை நீக்குதலும், இதன் மலர்ச்சிக்குச் சாதக மான சூழ்நிலையையும் வாய்ப்பையும் சரிவர அளிப்பதுமே புதிய உளவியற் கல்வியாகும். மனவிருத்தியை உண்டுபண்ணும் பகுத்தறிவைப் புற உலகி லிருந்து மூளைக்குள் திணிக்கும் கல்விமுறை அருகிவருகிறது. இத்தகைய வியத்தகு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவரும் இக்காலத்தில், நமது மாணவர்களுக்குப் போதிக்கப்படும் சமயக் கல்வி, வெறும் சமய அறிவுத் திணிப்பாக இருத்தல் மிக வேதனைக்குரிய தொன்ரு கும். அதிகார தோரணை யில் சமயக் கட்டளைகளை இடுவதாலும், நரக துன்பத்தைக் காட்டிக் குழந்தை களின் தூய உள்ளத்தில் அச்சத்தை ஊட்டுவதாலும் சுட்டறிவைத் திணிக்க லாமேயன்றி, உள்ளொளியையோ, ஆன்மீக விவேகத்தையோ உள்ளிருந்து மலரச் செய்தல் ஒருபோதும் இயலாது.
சைவ சித்தாந்த உளவியல் இந்த உண்மையை அழகுறத் தெளிவுறுத்து கிறது. இருவினை ஒப்பு நிலையிலிருந்து, எவ்வித விருப்பு வெறுப்புச் சார்புமின்றி நாம் சைவ சிந்தாந்த சாத்திரங்களை விசாரணை செய்யக் கடமைப்பட்டுள் ளோம். உரையாசிரியர்களின் மன எறிவைக் கண்கொண்டு பாராமல், புனிதமான தியான நிலையிலிருந்து, இறைவனின் திருவருளே கண்ணுகக் கொண்டு உண்மை விளக்கம் பெறுவோம். நம்மை இறைவனுக்கு அணித்தாக இட்டுச்செல்வது காயத்திரி மந்திர செபதியானமென வேதம் விளக்குகிறது. விவேகத்தை மலரச் செய்யக்கூடியது இச்செபதியானமாகும். அதன் இறுதியி லுள்ள புனிதமான பிரார்த்தனையைமட்டும் உள்ளொளி பெறும்பொருட்டு இறைவனுடைய திருவடிகளில் பணிவன்புடன் சமர்ப்பிக்கிருேம்.
'" Bhargo !! Devasya dheemahi Dheo yo na Prachodayat !' 'unti Gast ! தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந பிரசோதயத் !”. பாசமலத்தை நீக்கி அருள்பவனே! உன்னுடைய மகிமையை நாம் பிரார்த்தனை செய்கிருேம்! நமது விவேகத்தை உள்ளொளிபெற்று மலரச்செய்வாயாக!

Page 8
- 8 -
நவீன விஞ்ஞான உளவியல் காட்டும் உள்ளொளி மலர்ச்சியைப்பற்றி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பண்டைய முனிவர்கள் தெள்ளத் தெளியத் தேர்ந்து சாதனை புரிந்து வாழ்க்கையில் வெற்றிபெற்ருர்கள். இத் தெளிவை இறைவனே அவர்களுக்கு நேரில் அருளியுள்ளார். வேதம் இறைவனல் அருளப்பட்டது உண்மை என ஏற்கும் வைதிகர்கள், அதன் நுண்ணிய பொருளை இறைவனிடமே தியான தவச்சாதனையிற் பெற முயற்சியாது, இரண்
விருத்தியாலும் சுலபமாகப்பெறலாம் எனப் பகற் கனவு காண்பதேன்? சுயம்பு வான சிவப்பிரகாசம், சுதந்திரமாகவே நமது இதயத்தில் சுயப்பிரகாசமாகச் சுடர்விட்டு மிளிரவேண்டும் என்பதே புனிதமான பிரார்த்தனையாகும். பள்ளியறையில் தலைவனும் தலைவியும் அன்புப்பெருக்கால் ஈருடல் ஒருயிராக இணையும்போது, கல்யாணத் தரகர்களுடைய தலையீடு இருக்கவேசுடாது. அதை எவரும் அனுமதிக்கமாட்டார்கள். திருக்கோயில் மூலஸ்தானத்திலே, ஆன்மாவாகிய தலைவியும், இறைவனுகிய தலைவனும், அந்நியமின்றி ஒருமைப் படவேண்டிய வழிபாட்டிலே பிறருடைய தலையீட்டையே பெரிதும் விரும்பும் நமது சமுதாயத்தில் உள்ளொளி மிளிராதிருப்பதில் ஆச்சரியமில்லை இளைஞர்களுடைய இதயத்தில் விவேக விழிப்புணர்ச்சியை (awakening of intelligence) மலரச்செய்யாத சுட்டறிவுத் திணிப்பாக உள்ள நமது பாட சாலைச் சமய பாடத்தால், இளைஞர் சமுதாயத்தில் உள்ளொளி பரவாதிருப்ப தில் ஆச்சரியமில்லை. நாம் வேண்டுவது இரத்தப் புரட்சியல்ல; இதயப்புரட்சி ஒன்றே போதும். அதுவே திருவருளால் நம்மை நிச்சயமாக முன்னேற்றும் !
விஞ்ஞானிகள் விளக்கும் உள்ளொளியைவிட அதிக நுண்சத்தியாகிய ஒன்றைச் சைவ சித்தாந்திகள், வியாபக அறிவு, மெய்யுணர்தல், சிதாகாசம், காரணச்சித்தம், மாசறுகாட்சி, தூக்கிய திருவடி, சிவஞானபோதம், பரமார்த் தம், பரஞானம், சுத்தபோத சுவரூபத்வம், எனப் பலவாறு கூறுகின்றனர். விஞ்ஞானிகள் கூறும் மனநினைவுப் புலப்பகுத்தறிவை நாம், சுட்டறிவு அல்லது விவகாரம் என வழங்குகிருேம். சுட்டறிவானது காரியச் சித்தத்தில் கட்டுண்டு இருக்கிறது. வியாபக அறிவு காரணச் சித்தமெனும் சிதாகாசத்தில் கட்டற்று வியாபித்துள்ளது. மன அயர்வுப்புலத்தில் நமது ஆற்றலில் பத்தில் ஒன்பது பங்கு மறைந்திருத்தல்போல, காரண சித்தத்தில் நமது ஆன்ம சக்தியில் பெரும் பகுதி சுத்த சக்தியாக மறைந்துள்ளது. நமக்குப் புலப்படும் சக்தியைத் திரோதான சக்தியென அழைக்கிருேம். புலப்படாத நுண்ணிய சக்தியைச் சுத்த சக்தியென்கிருேம். விஞ்ஞானிகள் மன ஆய்வுடன் நின்றுவிடுகின்றனர். நமது மெய்ஞ்ஞானிகள் இந்த ஆய்வை முப்பத்தாறு தத்துவங்களுடன் நிறுத்தி விட்டு அதற்கப்பாலுள்ள பூரண சக்தியாகிய பரம்பொருளை அடைவதற்கு வேண்டிய தவச்சாதனையை மட்டும் கூறுகின்றனர். பூரணமான பரம் பொருளை மெய்யுணர்தல் மூலம் அறிதுயிலில் தெளிய முடியுமேயன்றி தத்துவ ஆராய்ச்சியால் அறிய இயலாது. அறிதுயிலை வடநூலில் துரியாதீத தியானம் அல்லது நிஷ்டையெனக் கூறுவர். ஆங்கிலத்தில் Transcendental Meditation என வழங்குவர். நாம் இப்பொழுது இத்தியான சாதனை நுட்ப விளக்கத்தை உணர்ந்து அனுட்டிப்போம்.

... 9
துரியாதீத தியான சாதனை நுட்பத்தை வழுவற உணர்வதற்கு உத்தம வழிகாட்டியாக உள்ளது மெய்கண்ட தேவருடைய சிவஞான போத நூலாகும். பன்னிரண்டு சூத்திரங்களைக்கொண்ட இந்நூலின், ஏழாம், எட்டாம், ஒன்ப தாம் சூத்திரங்கள் சாதனை இயல் எனப்படும். இந்த இயலுக்கு இலக்கண விரிவுரையைப் படிப்பதுடன் திருப்தியடைந்து, சிவ நிட்டை எய்தாதும், அதற்குரிய சாதனைகளைப் புரியாதும் மெய்ஞ்ஞானம் அடைந்துவிட்டதாகப் போதனை செய்யும் சைவத் தொண்டர்கள் இன்று மலிந்திருப்பதை நாம் அவ தானிக்கிருேம். சைவ மக்களிடம் சிவஞானம் மிளிர்வதற்கு இதனுல் வாய்ப் பேது? சாதனை செய்வதற்கு முன்பு சாதனைக்குரியவர் யார்? என்பதை மெய் கண்ட தேவர் தெளிவுபடுத்துகிரு?ர். மனத்துடன் உயிர் கலந்திருப்பதால் மனம் சுட்டியறிகிறது. உயிர் இன்றேல் மனமானது தனிய எதையும் அறிய மாட்டாது. எனவே மனத்தை அசத்துப் பொருள்-அதாவது அறிவில்லாத நிலையற்ற பொருள்-என விளக்கி, இறைவனுடைய முன்னிலையில் மனம் விளங்கித் தோன்ருது என்றும் காட்டி, ஆதலால் மனத்தினற் சாதனை செய்து பரம்பொருளை உணரமுடியாதென நிச்சயப்படுத்துகிருர், மனமாக நீங்கிய ஆன்மாவே மெய்யுணர்தலைப் பெறுதற்கு உரியதென அவர் வலியுறுத்துகிருர், உடலுடன் உயிர் இரண்டறக் கலந்திருப்பது போல, உயிருடன் இறைவன் இரண்டறக் கலந்துள்ளான். எனவே இறைவனை வேறு உயிரற்ற பொருட் களிடம் தேடவேண்டியதில்லை.
தியானசாதனைக்கு மனப்பிரயத்தனம் தேவையில்லை யென்னும் நுட்பத்தை நாம் ஆரம்பத்திலேயே தெளிந்துகொள்கிருேம். அடுத்ததாக உயிருடன் அந்நியமின்றிக் கலந்துள்ள இறைவனே நமது இதயஸ்தானத்திலிருந்து நமக்கு நேரடியாக மெய்யுணரும் சுத்த சக்தியை நல்குவன் என்பதை ஐயமின்றி உணர்கிருேம். நமது பரமாசாரியன் நமது இதயத்திலே தோன்ருத்துணையாய் உள்ளான். இருவினை ஒப்பு சிவோகம் பாவனை, பஞ்சாட்சர செபதியானம் ஆகிய சாதனைகளை நாம் விதிமுறைப்படி செய்யப் பயில்கிருேம். அதனுல் பாசமீக்கம் தடையின்றி நிகழும். அவனை அந்நியமாகத் தேடியலையும் மனவிருத்தி விலகும். அவனே ' தம்முதற் குருவுமாய்த், தவத்தினிலுணர்த்த விட்டு, அந்நிய மின்மையின் அரன் கழல் செலுமே ' என நமக்கு உண்மை விளக்கம் நேரடியாகக் கொடுக்கும்போது, நாம் சமாதி நிலை அடைதல் நிச்சயமாகும்.
மன விருத்தியின் செயற்பாடுதான் இருவினையாகும். பாவமும் புண்ணியமும் ஆன்மாவைப் பந்தித்து, மெய்யுணர்தல் பெறமுடியாது தடைசெய்கின்றன. எனவே இவற்ருல் வரும் பயனைச் சமமாக நோக்குதல் நாம் செய்யும் இருவினை ஒப்புச் சாதனையாகும். இதற்கு வைராக்கிய பக்தி முக்கியமாகும். விருப்பு வெறுப்பற்ற (ாாக துவேஷ ரஹித) புனிதமான பக்தியே, வைராக்கிய பக்தியாகும். இத்தகைய பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து நமது சாதனையைத் தொடர்கிருேம், சிவோகம் பாவனையைப்பற்றி முன்பு போதிய விளக்கம் பெற்றுள்ளோம். இதற்கு அடுத்த தவச் சாதனையாகிய தியானத்தில் ஈடுபடுவோம். இத்தியான சாதனையை நினைவுடன் கூடிய-சவிகல்ப தியான

Page 9
|WAN
மாகவும், நினைவிழந்த நிட்டை நிலைபெறும் வகையில் நிர்விகல்ப தியானமாகவும் இயற்றலாம் எனச் சிவஞான முனிவர் வழிகாட்டுகிருர், இவ்விருதியான முறை களையும் வரவரத் தெளிவுற்றுச் சாதனையைத் தொடர்வோம்.
சவிகல்ப தியானம்
விழிப்பு நிலையில் நினைவுணர்வுடன் இத்தியான சாதனையைச் செய்யலாம். இதற்கென ஒரு தனியிடமோ, காலமோ தேவையில்லை. விழிப்புணர்வுடன் மனத்தின் இயக்கத்தை ஒவ்வொரு கணமும் திருவருள் கொண்டு அவதானித் தல் சவிகல்ப தியானமாகும். நாம் இப்பொழுது இத்தியானத்தில் மூழ்கிருேம். நமது கண்கள் இதோ ஒரு மரத்தைக் காண்கின்றன. அந்த மரத்தின் உருவம் கண்மணியிலே பதிகிறது. இவ்விதம் பதிவு செய்யப்பட்ட உருவம், உணர்வு நரம்புகளால் மூளையின் நினைவுப்புலத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நினைவுப்புலம் சிந்தனை விருத்தியின்றி அந்த மரத்தை எவ்வித வேறுபாடும் இல்லாது உணர்கிறது. இந்நிகழ்ச்சிகள் யாவும் ஒரு நொடிப் பொழுதுக்குள் நிகழ்கின்றன. இதற்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதை அவதானித்தல் ஆச்சரியமாகும். இந்த மரத்தைப்பற்றி நாம் முன்பு அனுபவமாகப்பெற்ற நினைவு முத்திரை மனத்தின் அயர்வுப்புலத்திலே பதிந்துள்ளது. இன்னும் புத்தக வாயிலாகவும் ஆசிரியர்கள் வாயிலாகவும், பிறர் வாயிலாகவும் பெற்ற மர நினைவுகள் யாவும் ஞாபக முத்திரைகளாக அயர்வுப்புலத்திலே பதிந் துள்ளன. நாம் இந்த மரத்தைக்கண்ட ஒரு நொடிப் பொழுதுக்குள் மன அயர்வுப்புலத்தில் இறந்தகால நினைவு முத்திரைகளாக உள்ள எண்ணங்களை மரத்தின்மீது மனம் எறிவை செய்கிறது. இதன் பயனுக இந்த மரத்தின் ஒளி நமது மனத்தை வந்தடைந்து தோற்றமளித்த காட்சி உணர்வைவிட்டு, மனத்தினுல் புறத்தே எறிவை செய்யப்படும் கற்பனைக் காட்சியைக்கொண்டு மரத்தை ஆராயத் தொடங்குகிருேம். இவ்விடம் அவதானிக்க வேண்டிய முக்கியமான மனத்தின் செயற்பாடு இரண்டு உள்ளது. ஒன்று மரத்தின் ஒளி உருவத்தை உள்ளபடியே ஏற்றல், மற்றது மரத்தின் பழைய எண்ணங்களே எறிவை செய்து மரத்தின் உருவத்தைத் திரித்துக் காட்டுதல்,
மரத்தின் உண்மையான அழகையும், இயற்கையான தன்மையையும் உள்ளபடியே உணரவேண்டின், மனத்தின் இரண்டாவது செயற்பாட்டின் விளைவாக எண்ண எறிவை செய்து காணும் திரிபுக் காட்சியை ஏற்காது, நீக்குதல் வேண்டும். மெய்கண்டதேவர் காட்டிய வழியில் நாம் தியானிக்கும் போது, இந்தப் ப்ொய்ப்புலனை-பல எண்ண எறிவைகளை-வேறுணர்ந்து, பொய் பொய்யா மெய்காணும் தெய்வீக விவேக சக்தியைப் பெறுகிருேம் பளிங்கிலே தோன்றும் பல்வேறு நிறங்களும் உண்மையாகப் பளிங்கில் உள்ள வைகள் அல்ல. மனவிருத்தியில் தோன்றும் எண்ண எறிவைகள் யாவும் ஒரு தோற்றமேயொழிய உண்மையல்ல என்னும் உண்மை விளக்கத்தைச் சவிகல்ப தியானம் நமக்கு இதயத்தில் மலரச் செய்கிறது.
எண்ணங்கள் யாவும் இறந்தகாலத்தைப் பற்றியனவாகும். உண்மை உணர்வு நிகழ் காலத்தைப்பற்றியதாகும். அதற்கு வேறு கால வேற்றுமைகளை உண்டுபண்ணி எண்ண எறிவை செய்வதனல், உண்மை நம்மை விட்டு நழுவு கிறது. உலக விவகாரங்களை ஒப்புநோக்கி அறியும் போது காலம் என்பது

- 1 1 -
சார்புடைய உண்மையாகும். இதை மறுத்தால் உலக விவகாரங்க% ஒழுங்குற உரிய காலத்தில் செய்து வாழ்க்கையில் வெற்றிபெற இயலாது. மெய்யுணர்தல் சுாலத்தைக் கடந்ததாதலின், அதைக் காலத்தைச் சார்ந்தோ அல்லது காலத்துடன் ஒப்புநோக்கியோ உணர முயல்வது சவிகல்ப தியான மாகாது. நாயன்மார்கள் உண்மையை உணர்ந்தார்கள் என்ற எண்ணத்தை நாம் மனதில் பதியவைத்துள்ளோம். அவர்களுடைய கூற்றையும் பல எண்ணங்களாக மன அயர்வுப்புலத்தில் பதிய வைத்துள்ளோம். சவிகல்ப தியான சாதனையை நாம் நிகழ் காலத்தில் செய்கிருேம். இங்ஙனம் தியானிக்கும்போது மனமானது நாயன்மார்களுடைய எண்ணங்களை எறிவை செய்கிறது. இந்த எண்ணங்கள் இறந்தகாலத்தைப் பற்றியனவாகும். இவற்றல் நாம் இந்நிகழ்காலத்தில் மெய்யுணர்தல் பெறுமாறில்லை. எனவே மனம் நிகழ்காலத்தை விட்டு எதிர்காலத்துக்குத் தாவிச் செல்கிறது. நாம் இன்ன முறையில், நால்வர்களைப்போல தியானம் செய்தால், இன்னமாதிரி மெய் யுணர்தலைப் பெறலாம் என வியாக்கியானம் செய்கிறது. இந்த வியாக்தி யானம் எதிர்காலத்தைப்பற்றியதாகும். எனவே இதனல் நிகழ்காலத்தில் நாம் மெய்யுணர்தலைப் பெறுதல் இயலாது. இப்பொழுதே நாம் இந்த உண் மையை உணர்ந்து, எண்ணக் காலச்சிக்கலில் மாட்டிக்கொள்ளாது, அதிலிருந்து விடுதலைபெற்று, அரன் கழல் செல்கிருேம். நிகழ் காலத்திலேயே நாமும் மணிவாசகரைப்போல " சிறை பெரு நீர்போற் சிந்தை வாய்ப்பாயும் திருப்பெருந்துறை உறைசிவனே! இறைவனே! நீ என்னுடலிடம் கொண்டாய்! இனியுன்னை என்னிரக்கேனே!” எனப் பிரார்த்திக்கிமுேம், இறந்தகால எண்ணங்களைப்பற்றிய விசாரணை போதும்,
தூக்கிய திருவடியைச் சரணகதியென அடைகிருேம். தூக்கிய திருவடி மெய்ஞ்ஞானத்தை உருவகப்படுத்திக் காட்டும் ஒரு வழிகாட்டியாகும். அது அடிமைத்தனத்தைக் குறிப்பதல்ல. அதைச் சேருவோர் அரஇயல் அடிமைகளைப் போன்றிலர். ஊனக்கண் பாசத்திலிருந்து விடுதலைப்பெற் ஞானியரே அடியாராவர். சுதந்திரமே மெய்யடியாரின் இலக்கணமாகும். பூரண சரணுகதி அடைந்தவருக்குச் சொந்த மனவிருத்தி ஏது? எண்ணங்கள் ஏது? கற்பனை ஏது? எனவே நாம் மெய்யடியார்களைப்போன்று அவன் அருளே கண்ணுகக் கொண்டு மெய்யுணர்தல் பெறுகின்ருேம். மனவிருத்தி எழுகின்ற போதெல்லாம் அழுக்கை அழுக்கால் நீக்குதல்போல, மனவிருத்தியாலேயே அதை நீக்கித் தியானிக்கிருேம். பக்தி வேறு ஞானம் வேறு, கிரியை வேறு என்னும் பிரிவினை எண்ணமேயற்று இவற்றிலேயும் ஒருமைப்பாட்டைக் காண்கிருேம். எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளை உணர்வதற்குப் பாதை என்று ஒன்று இல்லையெனவும் தெளிகிருேம். ஏனெனின் புறத்தே தூர விலதி யிருக்கும் பொருளை அடைவதற்குத்தான் பாதை வகுத்தல் வேண்டும். அந்நிய மின்றி ஆன்மாவுடன் கலந்துள்ள பரம்பொருளுக்குப் பாதை வகுத்துக் காட்டுவது மனவிருத்தியேயன்றி வேறல்ல. இதன் உண்மை விளக்கம் இதோ! சென்றிவன்முன் ஒன்றிற் சிவபூரணம் சிதையும் அன்றவன்ருன் ஒன்றுமெனில் அந்நியமாம்.' எனவே நாம் தேடிச் செல்லவேண்டிய புறவழியும் இல்லை; அவன் நம்மை நாடி வரவேண்டிய எந்த வழியுமில்லை. நிவர்த்தி மார்க்கமே நாம் காணும் மார்க்கம். தடைகளை நீக்குதலே நமது சாதன மார்க்கமாகும். சுயம்புவாக மலர்வதே திருவருளாகும்.

Page 10
- 12 -
தூககிய திருவடியாகிய உருவம் நமக்கு எங்ங்ணம் ஒரு வழிகாட்டியாக உள்ளதென்பதைத் தியானித்துத் தெளிவோம். இளம் பிறையைச் சுட்டிக் காட்டும் விரலை நாம் அவதானிக்கிருேம். அதனுரடே பிறையைக் காண்கிழுேம். பிறையைக் காணுகிறபோது சுட்டுவிரல் தெரியவில்லை. சுட்டுவிரலை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிறை தெரியவில்லை. சுட்டு உருவமாகிய தூக்கிய திருவடியை நாம் விழிப்புணர்வுடன் அவதானிக்கிருேம். அதனுரடே சிதாகாசத்தை-பரவெளியை-காண்கிருேம். சிதாகாசத்தை காணுகிற போது தூக்கிய திருவடி தெரியவில்லை. தூக்கிய திருவடியை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிதாகாசம் தெரியவில்லை சுட்டறிவும் வியாபக அறிவும் ஒரே பொழுதில் விளங்கித் தோன்றுவதில்லை. ஒன்றைப் பார்க்கின்ற போது மற்றது மறைகிறது. சுட்டறிவினுாடே, அதைவிட்டுப் பார்க்கும் நுண்கலைதான் இந்தச் சவிகல்ப தியானம் எனத் திட்டவட்டமாக உணர் கிருேம்.
சவிகல்ப தியானத்தினுல் நாம் பெறும் மெய்யுணர்தலை விசார ஞானம் என வழங்குதலுண்டு. இதற்கு ஆன்மீக விழிப்புணர்வு முக்கியமாகும். எண்ண உற்பத்தியின் மூலவேரை விசாரணை செய்து தெளிதல் ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும். ஆன்ம ஞானத்துடன் திருவருள் மேலிடும் தூய பிரார்த்தனை செய்தல் அவசியமாகும் இன்றேல் வெறும் ஆன்ம ஞானம் “யான் எனது' என்னுஞ் செருக்குக்கு வித்தாகும். மயக்கும் தன்மையுடைய மனம், தனது சித்த விருத்தியைக் கொண்ட அறிவே ஆன்மா என நம்மை மயக்குகிறது. மனமே ஆன்மா என்ற முடி பை மனம் எந்நேரமும் கொடுத்த வண்ணம் இருக்கிறது. பகுத்தறிவு ஆய்வையே ஆன்ம விசாரணையென நம்பச் செய்கிறது. திருவருட் சக்திகொண்டு சார்பற்ற நிலையில் விருப்பு வெறுப்பற்று அவதானிக் கிருேம். விசாரணை என்பது பகுத்தறிவு ஆராய்ச்சியல்ல எனத் தெளிகிருேம். அது விவேக விழிப்புணர்வுச் சக்தியால் மனத்தின் இயல்பையும், உலகப் பொருள்களின் தன்மையையும் உண்மைப் பொருள்கள் அல்ல என உணரும் மருள் நீக்கமாகும். அருளே அதன் அடிப்படையாகக் கொள்கிருேம். பகுத் தறிவினல் அறியும் ஆன்மாவும், கடவுளும் வெறும் மன எறிவையேயாகும். மெய்யுணர்தல் ஆகாது.
சவிகல்ப தியானத்தின் பயனக மன இயக்கத்தை மீண்டும் அவதானித்து விசாரணை செய்கிருேம். இறந்தகால எண்ணங்களின் தொகுதியாகிய மனம், தன்னல் அறிய இயலாத பூரணப் பரம்பொருளை ஏதோ அறிந்துவிட்டதாக முதலில் நிச்சயப்படுத்துகிறது. இவ்விதம் நிச்சயப்படுத்தியதைப் பின்பு சரிவர உணராது மயக்கத்தை உண்டுபண்ணும் வகையில் செயற்படுகிறது. தனது மயக்கத்தைத் தானே உணராது, முன்பு நிச்சயப்படுத்தியதற்கு முரணுக வும் மாறுபாடாகவும் விபரீத எண்ணங்களை மேலும் மேலும் விருத்தி செய் கிறது. மனவாசக விளக்கம் உண்மைப் பொருன் விளக்கமாகாதென உணர் கிருேம். வியாபித்து நின்று எல்லாவற்றையும் தெளியும் இறைவன் சுட்டி அறிவதில்லை. அச்சமற்ற இடத்தேதான் உண்மை அன்பு மலர்கிறதென நாம் உணரும்போது, மனவிருத்தி நமக்கு யாது புலப்படுத்துகிறதென இதோ அவதானிக்கிமுேம் "கடவுள் நம்மைப் பரிசோதிக்கிருர், அந்தப் பரி சோதனையிலிருந்து தப்ப வேண்டுமாயின், நாம் பயபக்தியுடன் பாவம்செய்யாது ஒழுகுதல் வேண்டும். அவர் எந்நேரமும் நம் ஒவ்வொருவரையும் சுட்டிப்
 

- 13 -
பார்த்துக்கொண்டிருக்கிருர். அவருக்கு மாருக நடந்தால் மீளா நரகத்துக்கு ஆளாவோம்'. இக்கட்டளைகள் யாவும் மன எறிவையாகும். இவற்றிலுள்ள உண்மையை விசாரணை செய்து தெளிவோம்.
மனம் அறிந்தது கல்விப் பரிசோதகரையாகும். கடவுளே அது அறியாது. மாணுக்கருடைய அறிவைப் பரிசோதகர் ஒரே பார்வையில் அறியமாட்டார். அவருக்கு வியாபக அறிவில்லை. எனவே அவர் மாணுக்கரைப் பரிசோதித்து அறிகிருர், கடவுளும் இவ்விதம் பரிசோதித்துச் சுட்டி அறிகிறர் என மனமானது சார்பு நிலையில், பரிசோதகரையும் கடவுளையும் ஒப்புநோக்கி அறிகிறது. இதை நிச்சயப்படுத்திக்கொண்டு, அச்சமாகிய குணத்தைப் பக்தியுடன் கலந்து மயங்குகிறது. வியாபகமான இறைவன் சுட்டிப் பார்க்கிருன் என்றும், பெருங்கருணைப் பேராருகிய பரம்பொருள், மீளா நரகத் தண்டனை செய்வான் என்றும் விபரீத எண்ணங்களை மனம் வலுவடையச் செய்கிறது. மீளா நரகம் என ஒன்றில்லை யென்பதும், இறைவன் நமது கரும பலனையே நமக்கு நடுவு நிலையிலிருந்து கொடுக்கிருன் என்பதும், அவன் தண்டிப்பதில்லை யென்பதும் விசாரணை மூலம் தெளிவுறுகிறது. கடவுளை ஒரு பரிசோதகராக்குதல் எத்தகைய விபரீதங்களே மக்களுடைய வாழ்க்கையில் உண்டாக்குகின்றதென்பதையும் உணர்கிருேம். இந்த அடிப்படையில், மன எறிவையால் ஆக்கப்படும் மதம் ஒருபோதும் மெய்யுணர்தலை மலரச்செய்யாது இந்த உண்மை விளக்கம் நம்மை இத்தகைய மன எறிவைகளிலிருந்து நீக்கு கிறது. அதனல் மெய்யுணர்தல் திருவருளால் மலர்கிறது. மனமானது இறைவனை ஆராய்ந்து அறிய முற்பட்டு நம்மை விபரீதத்துக்கு உட்படுத்துகிறது. நாமோ சவிகல்ப தியானத்தால் மனத்தின் விருத்திகளை விசாரணை செய்து, உண்மையை உணர்கிருேம்.
மனத்தின் அறிவு திரிபுடி ஞானமாகும்
கறுபடுத்தி அறிதல் மனத்தின் இயல்பாகும். திரிபுடி ஞானம் என்னும் பொழுது, அதில் மூன்று கூறுகள் (திரிபுடி) இருப்பதை நாம் அவதானிக்கிருேம். மனமானது "நான் கடவுளை அறிகிறேன்' என நம்புகிறது. இதை நம்பும் நாம் அறிவினல் கடவுளை அறியலாம் என முடிபு செய்கிருேம். * நான்' என்பதை ஆன்மாவாகச் சாதாரண சமய பாடத்தில் நாம் அறிந்தபடியால், மனத்தினல் அறிவதை, ஆன்மா அறிகிறதென விபரீதமாகக் கருதுகிருேம். சிவஞான போதத்தில் ஆன்மா சுட்டுப் பொருள்களையும் அறியும், வியாபகமான பரம்பொருளையும் அறியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனல் ஒரே வேளையில் இரண்டையும் அறியாதென்பதை மறந்து மனத்தைச் சார்ந்து அறியும்போது, கடவுளையும் அறிவதாகக் கற்பனை செய்தலை உண்மையென ஏற்றுக்கொள் கிருேம். மெய்யுணர்தல் மலரும்போது, இது விபரீதம் என்பதைத் தெளி இழுேம். ' நான் கடவுளே அறிகிறேன்” என்னும் மனவாசகத்தில் உள்ள மூன்று கூறுகளையும் விரிவாக விசாரணை செய்வோம். இதிலே அறிபவன், அறியப்படும் பொருள், அறிவு ஆகிய மூன்று கூறுகள் உள்ளனவாகும்
நாம் மனத்தைச் சார்ந்து இங்ங்ணம் கூறுபடுத்தி அறிவதைவிட்டு, பரம்பொருளை அந்நியமின்றிக் கலந்து மெய்யுணர்தலாக உணரும்போது இந்தக் கூறுபடுத்தும் அறிவு நீங்கிவிடுகிறது. ஒருமைப்பாடாகிய அத்துவித

Page 11
- 14 -
உணர்வைப்பெறுகிருேம். அத்துவித உணர்வில் எவ்வித கூறுபாடுகளும் இல்லை. ஆன்மா பரம்பொருளேயாய் விடுகின்றபோது, பிரித்து அறியும், அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்னும் மூன்று கூறுகளுக்கும் இடமேது? எனவே 'நான் கடவுளை அறிகிறேன்" என்பது பிரிவினேயுடைய மன எறிவையேயாகும் எனத் தெளிவுறுகிருேம். இதை உணர்ந்த மெய்ஞ் ஞானியர் " நாம் அறியோம் ' எனக் கூறுகின்றனர். இதனல் அவர்கள் மெய்யுணர்தல் மூலம் இறைவனை மாசறு காட்சியாகக் காணவில்லை என நாம் கருதலாகாது அறிதுயில் நிலையில் மெளனமாகத் தெளிதலே சிவஞானக் காட்சியாகும். சவிகல்ப தியானத்தில் நாம் இதை இல்வழியில் (Negative approach) நிகழ்காலத்திலே தெளிகிருேம், பரம்பொருளை உணரும் சாத&ன யில் மெளனமாகிருேமே தவிர உலக விவகாரங்களில் ஊமைகளைப் போன்றி ருக்கவேண்டிய அவசியம் இல்லை. பகுத்தறியவேண்டியவற்றைப் பகுத்தறி வதில் ஏதும் குறையில்லை பகுத்தறிய முடியாததைப் பகுத்தறியும் போதுதான் குறைவுண்டாகிறது. நாம் பகுத்தறியும்போது, மெய்யுணர்வும் ஆதாரமாக இருக்குமாயின் பகுத் கறிவினல் ஏற்படும் குறைகளை நீக்கும் சக்தி இயற்கையாகவே நம்மிடம் நிலைபெறும். நமது பணிவான பிரார்த்தனே சுத்த திருவருட் சக்தி நம்மிடம் நிலைத்துச் செயற்பட வேண்டும் என்பதாகும்,
இல்வழி ஒரு கலையாகும்
ga235 -2, iš SavjöS)ổiv “ Negative approach to realization is an art ” என விரிவாக விஞ்ஞான உளவியற் கல்வியாளர்கள் கூறுகின்றனர். சிவஞான போதத்தில் இதை இல்வழியென்றே கூறப்பட்டுள்ளது. இச்சொற்ருெடரைப் பிரித்து இல்லாத வழியெனப் பொருள் கொள்ளுதல் பொருந்தாது. ஆங்கிலத் தில் உள்ள Positive-உடன்பாடு என்னும் சொல்லுக்கு எதிரானதே. Negative -எதிர்மறை என்னும் சொல்லாகும். எனவே எதிர்மறை நிலையில் பெறும் உண்மை விளக்கம் ஒரு கலையெனத் துணிந்து சிவஞானபோதம் தெளிவு படுத்துகிறது. மெய்கண்டதேவர் கலையைப்பற்றிக் கூறும் விளக்கம் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆணவ மலத்தைக் கலைப்பதே உண்மையான கஃல யென அவர் கருதுகிருர், ஆணவமலத்தால் அகங்காரமுற்று சுட்டறிவே யாவை யும் உணர்த்தும் என மயங்கி நிற்கும் ஆன்மாவுக்கு, அந்த ஆணவமாகிய தடையை இல்லாது நீக்கி, அதனைத் தெய்வீக விவேகதத்துவத்தைப் பொருந் தும்படி செலுத்துவது தூயகலையாகும். இத்தகைய நீக்கற்கலையைத் தொழிற் படுத்துவது இறைவனுடைய சுத்த சக்தித் தத்துவங்களெனத் தெளிகிருேம். அதனல் இராப்பகலற்ற இடத்தே அறிதுயில்பெறும் நமது தியான சாதனை ஒரு தூய கலையென உணர்ந்து இதில் மாசு உண்டாகாது காப்பாற்றுதல் திருவருட் சுத்த சக்தியின் பொறுப்பு என அடிக்கடி பிரார்த்திக் துக் கொள்வ தில் எவ்வித தவறும் இல்லை
கல்வித் திட்டத்தைப்பற்றி இன்று மூன்று முக்கியமான கொள்கைகள்
விஞ்ஞானிகளிடையே நிலவுகின்றன. மக்களைப் பிரயோசனமுள்ள பிரஜை
களாக்குதல் பழைய கல்விக் கொள்கையாகும். பண்பை வளர்த்து ஆற்றலே
விருத்திசெய்தல் அடுத்த கொள்கையாகும். இது உடன்பாட்டு நிலையில்
கொடுக்கப்படும் கல்வி அறிவாகும் மூன்ருவது நவீன கொள்கையாவது,
இயற்கையாக மனிதனிடமுள்ள படைப்புச் சக்திக்குத் தடையாயுள்ள ஆதிக்

- 15 -
கத்தை நீக்கி அதன் இயற்கை வளர்ச்சிக்கு வேண்டிய வாய்ப்பை அளித்த லாகும். இப்பணி புனிதமான எதிர்மறைச் செயற்பாடாகும். இக்கல்விமுறை முன்னேற்றமுள்ள கல்வியாளர்களின் கவனத்தை நூசோ காலத்திலிருந்து ஈர்த்துவருகிறது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவன் வாயிலாக நந்திதேவருக்கு அருளப்பட்ட உண்மை விளக்கச் சாதனைமுறை இந்த நவீன கல்விக் கொள்கை போன்றதாகும். இதை ஒரு கலையாகச் சந்தான பரம் பரையாகப் பேணி வருகிறது சைவ சித்தாந்தம். ஆனல் இன்று இந்தத் தூய கலையின் மிலைமாறி சைவ சமய பாடம் அறிவைத் திணிக்கும் ஒரு கல்விமுறை யாகப் பாடசாலைகளிற் காட்சியளித்தல் நமது துரதிஷ்டமாகும். இந்நிலையில் நமது சமுதாயத்தில் படைப்புச் சக்தி மலருதல் எங்ங்னம் ?
யோகம் ஒரு கலையாகும்
தியான சாதனையிலீடுபட்டிருக்கும் நாம் யோகத்தின் எட்டு அம்சங்களைப் பற்றியும் ஆராயவேண்டிய அவசியமில்லை. அதன் முக்கியமான தாரணை, தியானம், சமாதி, ஆகிய மூன்று பகுதிகளைப்பற்றியும் சிந்தனை விருத்தியின்றிச் சுருக்கமாகத் தெளிவுபெற்ருற்போதும். தாரணை என்பது தொடர்ச்சியாக ஒரேமுகமாக தாரை தாரையாக ஒழுகும் சக்தியாகும். வேதங்கள் இத்தகைய ஒரு சக்தியை " தைலதாராவ" எனும் தெய்வமாக உருவகப்படுத்தியுள்ளன. எனவே இத்தெய்வீக சக்தியைப் புற உலகில் மன எறிவை செய்து காணுது, நமது இதயத்திலே தொடர்ந்து ஆன்ம சக்தியாக ஊற்றெடுத்துப் பாய்வதாகச் சிவோகம் பாவனே செய்கிருேம். சிதறி ஒழுங்கற்ற முறையில் கலைந்தோடு கின்ற சிந்தனேகளை அளவை முறைப்படி எடுத்த தனி விடயத்தில் ஒழுங்காகச் செலுத்தப் பயிலுதல், ஆன்மசக்தி விருத்தியாகும். இதனை ஆங்கிலத்தில் Concentration என வழங்குவர். தாரணையாகிய சிந்தனை ஒழுக்க நெறியை மூன்று F என்னும் ஒரு சூத்திரத்தில் அடக்கலாம். அதாவது Flash, Focus and Find-ஒளியிடுதல், ஒளியை ஒருமுகப்படுத்துதல், அதனுல் அவதானித்துத் தெளிதல் என இவை மூன்றையும் கூறலாம். சவிகல்ப தியான சாதனைக்குத் தாரணை அத்திவாரம் போன்றதாகும்.
யோக தியானத்தைப்பற்றிப் பதஞ்சலி முனிவர் கூறிய “Yogo Chitta y Nirodho” “யோகோ சித்த விருத்தி நிரோதோ' என்னும் மகா வாக்கி யத்தை நினைவுறுத்துகிருேம். இதன் பொருள்: "யோகம் என்பது மனவிருத் ஒயை நீக்குதலாகும்”, மெய்கண்டதேவர் பாச நீக்கத்தை ஒரு கலையாக்கி ர்ை. பதஞ்சலி முனிவரும் அவ்விதமே செய்கிருர், நமது வாழ்வையே ஒரு கஆலயாக்கும் இந்தத் தியான யோகக் கலையை நாம் இப்பொழுது அப்பியாசிக் இழுேம். மனவிருத்தியின் இறப்பிலே மெய்யுணர்தல் பிறக்கிறது, மன விருத்தியின் பிறப்பிலே மெய்யுணர்தல் இறக்கிறதென்பதைத் தெளிகிருேம். * பிறப்பெனும் பேதைமை நீங்கலே" நமது தியான சாதனையாகும். தியான சாதனையில் தியானிக்கும் முறை அவ்வளவு முக்கியமல்ல. தியானிப்பவன் யார்? என்பதுதான் முக்கியம். தியானிப்பவன் இறப்பானுயின் அதுவே தியானத்தின் சித்தியாகும். தியானிப்பவனைப்பற்றிய உண்மை விளக்கம் அவனை நீக்குவதற்குப் போதும். இதைப்பற்றிய உண்மை விளக்கம் திரிபுடி ஞானத்தில் பெற்றுள்ளோம்.

Page 12
................ 16 =+ ۔
மெய்கண்ட தேவர் தெளிவுறுத்தும் இருவினை ஒப்பை, பதஞ்சலி முனிவர் சமாதி என விளக்குகிருர். இருவினையில் மதிமயங்காது, பாவ புண்ணியத்தை யும், இன்ப துன்பத்தையும் சமமாக நோக்கி நடுவு நிலையில் அமைதியாகவும், மெளனமாகவும் இருப்பதே உண்மையான சமாதியாகும். இதை உபநிடதங்கள் "சம திருஷ்டி’ எனச் சுருக்கமாக வழங்குகின்றன. நாம் சமநோக்குடன் சாந்தமாகத் தியானிக்கும்போது, திருவருளில் மூழ்கி, இதோ மன உணர்வு இழந்துவிடுகிருேம்.
தத்துவஞான விளக்கம்
நமது இந்திரியங்களுக்குப் புலப்படும் தூலவடிவமுள்ள சடப்பொருள்கள் யாவும் உருவிழந்து மிக நுண்ணிய, அளப்பரிய சக்தியாக இருப்பதை உணர்த் தும் அடிப்படைத் தெளிவேதத்துவமாகும். கல்லு, வில் லு, வாள்வேல், துவக்கு பீரங்கி, எறிகுண்டு, அணுகுண்டு என்றளவுக்கு ஆயுதசக்தி பெருகியிருப்பதை நாம் அவதானிக்கிருேம் இதன் தெளிவு யாது? பருப்பொருள் ஆயுத சக்தி யைக் காட்டிலும், கருப்பொருள் ஆயுதசக்தி மிக நுண்ணியதாய் வியாபிப்ப தாய் இலட்சம் பங்கு கூடியதாய் இருக்கின்றதென்பதாகும். வாய் பேசுகிறது மனம் பேசுகிறது, இதயம் பேசுகிறது, ஆன்மா பேசுகிறது, பரம்பொருள் பேசுகிறது. இவற்றுள் எந்தப் பேச்சு நமக்குக் கேட்கிறது? எந்தப் பேச்சு அளப்பரிய சக்தியுடையது? குடிவெறியில் மதியிழந்து ஒரு கயவன் பேசுகிருன், பரம்பொருளில் தோய்ந்து திளைத்து நெகிழ்ந்து உருகி மகாத்மா காந்தி பேசு கிருர். இவர்கள் இருவரும் வாக்குமூலமாகவே பேசுகிருர்கள். கயவனுடைய பேச்சைக் கேட்கும்போது அறிவாளிகள் காதைப் பொத்திக்கொண்டு விலகு இருர்கள், காந்தி மஹானுடைய பேச்சைக் கேட்க கோடானுகோடி மக்கள் திரளுகிருர்கள். கயவனின் வாக்குநாதம் தாமத குணத்துடன் கூடியதாகும். காந்தியடிகளின் வாக்குநாதம் சத்துவ குணத்துடன் கூடியதாகும். தாமத குணம் பருப்பொருளாகிய பிரகிருதி மாயையுடன் தொடர்புடையதாகும். சத்துவகுணம் நுண்ணிய கருப்பொருளாகிய சுத்த மாயையுடன் தொடர்புடைய தாகும். வில்லுக்கும் அணுகுண்டுக்கும் இடையேயுள்ள சக்தி வேறுபாட்டை விஞ்ஞானம் விளக்குகிறது. பிரகிருதி மாயைக்கும் சுத்த மாயைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைத் தத்வஞானம் விளக்குகிறது. அசரீரி வாக்கு புறச் செவிக்குக் கேளாது. புராணங்களில் அவ்விதம் கேட்பதாகக் கூறப் பட்டிருப்பின், அது மறைபொருளுடையதாகும் எனத் தெளிகிருேம்.
சிவஞானபோத இரண்டாஞ் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர் தெள்ளத் தெளிய விளக்குவது தத்துவஞானத்தையாகும். தூல பொருள்களாகிய பஞ்ச பூதத்திலிருந்து, மிக நுண்ணியதாய் வியாபகமாய் செறிந்துள்ள சுத்தவித்தை வரையுமுள்ள தத்துவங்களை முப்பத்தாருகப் பகுத்துக்காட்டுகிருர், அவற்றை யெல்லாம் மனனம் செய்து பிரயோசனமில்லை. தத்துவஞானம் நமது தியான சாதனைக்கு எவ்விதம் உதவுகின்றது? என்பதுதான் நமக்கு இப்பொழுது வேண்டிய காரியமாகும். தத்துவ ஞானமூலம் சத்துவகுண சத்தியின் திறமையை உணர்கிருேம். அதை எவ்விதம் பெறுதல் முடியும்? என்பது அடுத்த கேள்வி. தத்துவஞான விளக்கத்துடன் தியான சாதனை செய்யும் போது அதை நிச்சயமாகப் பெறலாம். சரீரியின் வாக்கு நமக்குக் கேட்கும்.

- 17 -
பரம்பொருளின் பேச்சு கேட்பதில்லை. தட்சணுமூர்த்தியினுடைய பேச்சு மெளனமாகும். நாம் செவியாற் கேட்பதுதான் நாதம் என்ற மூடநம்பிக்கை முதலில் அகலுதல் வேண்டும். செவியாற் கேட்கமுடியாத நாத அலைகள் மிக நுண்ணிதாக வியாபித்துள்ளன, அவற்றைச் செவியாற் கேட்கமுடியாது போயினும், பாசம் நீங்கிய ஆன்ம சக்தியால் உணர இயலும், பாசத்தாற் கட்டுண்ட ஆன்ம சக்தியின் அதிர்வு-Vibration-உயரமுடியாதிருக்கிறது. பாசக்கட்டு நீங்கிய ஆன்ம சக்தியின் அதிர்வு கோடி பங்கு உயர்ந்துவிடுகிறது. அதனல் செவிக்குக் கேட்கும் நாத அதிர்வைவிடக் கோடி பங்கு உயர்ந்த சுத்தநாத அதிர்வை ஆன்மா உணரக்கூடியதாக உள்ளது.
இந்தத் தத்துவ ஞானத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் நமக்குச் சங்கடமாக இருக்கிறது. எனவே பெளதிக விஞ்ஞானம் விளக்கும் ஒலியின் 95)ířay (D/L Lj Gosa ()strašov(o) (Technique of sound vibration) (3)65),5 6í967 šl கிக்கொள்வோம். சாதாரணமாக நமது செவிக்குக் கேட்கும் ஒலி அலைகளின் அதிர்வு ஒரு நொடிக்கு பதினயிரத்திலிருந்து நாற்பதினுயிரம் வரையும் ஆரோண அவரோணம் (ஏற்ற இறக்கம்) உடையதாகும். இதற்குக் கீழுள்ள அதிர்வுடைய ஒலி அலைகளையோ, மேலுள்ளவற்றையோ நமது செவியாற் கிரகித்துக்கொள்ள இயலாது. றேடியோ ஒலி அலைகள் சாதாரணமாகக் கேட்கும் ஒலி அலைகளை விட எத்தனையோ இலட்சம் பங்கு அதிர்வு கூடியன வாகும். இத்தகைய நுண் சக்தி வாய்ந்த அலைகள் செவிக்கு எட்டாது வியா பித்து விண்வெளியூடே பரவுகிறதென அறிகிருேம். நம்புகிருேம். அதை உபயோகித்து வெற்றி காணுகிருேம். தத்துவ ஞானம் விளக்கும், பிரகிருதி மாயா தத்துவம், வித்தியா தத்துவம், சுத்த மாயா தத்துவம், யாவும் படிப்படி யாக வியாபித்து அதிர்வுச் சக்தியைக் கோடி கோடி பங்குபெற்றிருப்பதை சரிவர அறிகிருேமில்லை. நம்புகிருேமில்லை. அவற்றை உபயோகித்து வாழ்க் கையில் வெற்றி காணுகிருேமில்லை. இயந்திரப் போக்கில் மனவிருத்திச் சக்கரத்தில் சுட்டறிவுச் சமய பாடத்தில் செயற்கை அறிவுத் திணிப்பில் சுழன்று கொண்டிருக்கும் நமது வாழ்வில் இயற்கையான மெய்யுணர்தல்விவேகப் படைப்புச் சக்தி-ஆன்மீக விழிப்புணர்ச்சி, மலர்வது எக்காலம்? அது உண்மையில் உள்ளதை உணரும் இக்காலத்திலேதான் ஆகும். பின்னை என்பதும் பிறகு என்பதும் இல்லை என்பதற்கடையாளம்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வள்ளுவன் உபதேசித்த இவ்வாக்கியம் சிந்தனைகளை விருத்திசெய்து, எண்ணங்களை உயர்த்துதல் வேண்டும் எனச் சிறிதளவேனும் பொருள்கொடுக்க வில்லை. சிந்தனைகளைக் கற்பனை உலகில் உயரப் பறக்கவிட்டு உண்மை உணர் தலைப் பெறுதல் இயலாது. கற்பனைத் திறமையினுல் பல்வேறு எண்ணங்களை மெருகுபூசி, நவரசம் பொருந்த வழங்குதல் வர்ண மாயாஜாலம்போல மனத்திலே ஒரு கிளுகிளுப்பை ஊட்டும். வள்ளுவனுடைய இலக்கியம் இத்த கையதல்ல. செவிப் புலப்பாடுள்ள ஒலியை உயர்த்தவேணடுமானல் அதை ஒரு நெறிப்படுத்தி மின் தாக்குதலுக்கு உட்படுத்துதல் வேண்டும். இச்செயற் பாட்டை (Stepping up of Vibration) ஒலி அதிர்வை உயர்த்துதல் என விஞ் ஞானம் விளக்கும். விஞ்ஞான முறையில் அதிர்வுயர்வுபெற்ற ஒலி அலைகள் றேடியோ அலைகளாக மாறுதல் போன்று, நமது சித்தசக்தி, சிதாகாச சக்தி யாக மாறுதல் வேண்டும் என்பதே வள்ளுவனுடைய உபதேசமாகும்.

Page 13
س- 18 - مس۔
மனக்கவலையை வெறும் எண்ணங்களால் மாற்றுதல் அரிது. மன விருத்தியே மனிதனுடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகும். “நன்றும் தீதும் பிறர்தரவாரா'. இவற்றிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின் இறை வனுடைய தாள்சேரல் வேண்டும். தாள்சேரல் என்பது தியானித்தலாகும். அதுவும் விஞ்ஞான ரீதியில் மின்தாக்கத்தால் றேடியோ அலைகள் வியாபித் தல்போன்று திருவருட் சக்தியின் தாக்கத்தால் மெய்யுணர்தல் வியாபித்தல் வேண்டும். தியான நெறியில் திருவருள் கூடும்போது இந்த உயர்வுள்ளல் சுயமாக மலர்வதை அவதானிக்கிருேம்,
திருவருட்சக்தி பாய்தல்
இயற்கையில் உள்ள ஒழுங்கான நியதியைக் கண்ட கிரேக்க தத்துவ ஞானி யாகிய பிளாட்டோ "இயற்கை பாய்தல் புரிதலில்லை"-" Natura mon fact Satum' என நிச்சயப்படுத்தினர். அணுசக்தியின் இரு கூறுகளாகிய Electron, Proton, எலக்ரோன், புறற்றேன் ஆகியவற்றின் இயற்கையான இயக்கத்தை நன்கு ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகள் எலக்ரோன் இயக்கம் இயற்கை நியதிக்குக் கட்டுப்படாது. சுயேச்சையான பாய்தலாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதன் இயக்கம் எந்த நியதிக்கும் கட்டுப்படாது ஆச்சரியமாக உள்ளது. எனவே பிளாற்றோ நிச்சயப்படுத்திய உண்மை இன்று பொய்த்துவிட்டது! திருவருட்சக்தி இதயத்திலே பாய்வதாக மாணிக்கவாசகர் அனுபவ ரீதியில் கூறுகிருர், திருவருட் சக்தியுடன் கூடிய மெய்ஞ்ஞானம், என்ன நியதியைக் கொண்டு எப்போது எப்படி உள்ளொளியாகப்பாயும் என நிச்சயப்படுத்திக் கூற எவராலும் இயலாது. ஆதலால் அதைப்பற்றி மன எறிவை செய்தோ, கற்பனை புரிந்தோ, அறிவாராய்ச்சி செய்தோ வீணில் ஆன்ம சக்தியை விரயம் செய்யாதே எனும் கருத்துப்பட 'ஒராதே ஒன்றையும் உற்றுன்னதே, நீ முந்திப்பாராதே' எனத் திருவருட்பயன் வலியுறுத்துகிறது. ஆகவே நாமி இதைப்பற்றிய மனப்பிரயத்தனம் செய்தலை நீக்குவோம்.
இறைவனின் இயக்கத்தை உருவகப்படுத்திய சைவ சித்தாந்திகள் இயற் கையான ஒரு நியதிக்கு உட்பட்டு நடனமிடும் ஆனந்த நடராஜனையும், இயற்கை நியதியைக் கடந்து சுயேச்சையாக நடனமிடும் ஊர்த்ததாண்டவ மூர்த்தியையும் பிளாற்ருே காலத்துக்கு முன்பே சித்தரித்துள்ளனர். நாம் இவ்விரு நடனமும் அந்நியமின்றி இயற்கையில் நிகழ்வதை அவதானிக்கிருேம். எலக்ரோன் இயக்கம் இயற்கையைமீறி நிகழ்வதை விஞ்ஞானம் விளக்கி. இயற்கைக் காரணகாரிய ரீதிகாட்ட இயலாது விளிக்கிறது. நாம் திருவருட் சக்திதான் அதற்குக் காரணம் என உணர்ந்து பணிசெய்து கிடக்கிருேம், பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்கிருேம்,
சிவலிங்க தியானம்
இளம் பிறையைச் சுட்டிக்காட்டும் சுட்டுவிரல் போல சிவலிங்கம் பரம் பொருளேச் சுட்டிக்காட்டும் வழிகாட்டியாக உள்ளது. விரலுக்குத் தத்துவ ஞான விளக்கம் வேண்டியதில்லை. சிவலிங்கத்துக்கு அற்புதமான தத்துவ விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கத்துடன் தியானிக்கும்போது கூடிய பலனுண்டு. இலிங்கம் என்பது குறியாகும். சிவலிங்கம் சிவத்தையும் சக்தி
1 ܒܥܢܐ

- 19 -
யையும் குறிக்கும் அடையாளமாகும். இக்குறியை ஆண்யோனியுடனும் பெண்யோனியுடனும் தொடர்புபடுத்தி வழிபடும் சிவபக்தர்கள் அநேகர் உளர். அவர்கள்மீது விருப்பு வெறுப்புக் கொள்ளுதல் தியானத்துக்குத் தடையாகும். அதி நுண்ணிய வியாபக பொருளாகிய சிவசக்திக்கு யோனி அவசியமில்லையெனத் தெளிகிருேம். நுண்ணிய சீவ அணுக்களாகிய அமீபா, பக்ரீறியா முதலியன யோனியின்றி வாழ்கின்றன. படைப்புத் தொழிலை யோனியின்றிப் புரிகின்றன. யோனியைப்பற்றி மண எறிவை செய்வதனல் விபரீதம் விளையுமேயன்றி உண்மை விளக்கம்பெற வாய்ப்பில்லை.
சிவபெருமான் யோனி வாயிலாக அவதரிப்பதில்லை யென்றும், முனிவர்கள் இயற்றும் வேள்வியிற்கூட அவர் வந்து முனிவர்களிடம் அவியை நேரில் ஏற் காது அக்கினி மூலம் ஏற்பாரென்றும் சிவாகமங்கள் கூறுகின்றன. இந்நிலையில் சிவனுக்கு யோனி அடையாளமிடல் பொருந்தாது. யாகம் செய்வோருக்கு அக்கினிமூலம் அருள்புரிகிருர் என்பதில் சிவலிங்கதத்துவம் உள்ளதெனத் தெளிகிருேம். யாகம் செய்யும்போது முனிவர்கள் ஒமகுண்டத்தில் சிறு விறகுகளையிட்டு முறைப்படி பூஜைசெய்து, அக்கினியை மூட்டுவார்கள். அக்கினி அடங்கும்போது விறகுக் குச்சுகளை இவ்விரண்டாக முறித்து இடுவார் கள். மேலோங்கும் பொருட்டு நெய்யை ஊற்றுவார்கள். மேலோங்கும் அக்கினியில் விலையுயர்ந்த பல பொருட்களைப் பலியிடுவார்கள். அதன் பயனகப் பெறுதற்கரிய பல பேறுகளைப் பெறுவார்கள்.
நாம் இப்பொழுது தியானத்திலீடுபட்டிருக்கிருேமேயன்றிப் புற யாகம் செய்வதில் அல்லவென உணர் கிருேம். எனினும் இத்தகைய ஒரு யாகத்தை அகப்பூசையாகச் செய்தல் புறப்பூசையிலும் ஆயிரம் பங்கு பலனேக் கொடுப்ப தாகச் சிவஞானபோதம் விளக்குவதை ஏற்று, அந்தர்யாக தியானபூசை செய் கிருேம். ஒமகுண்டத்தையும் அதில் மேலோங்கி எரியும் அக்கினியையும், சிவலிங்கமாகிய குறியாக நமது இதயத்திலே பிரதிஷ்டை செய்கிருேம். தவமாகிய அக்கிணிக்கனல் அடங்குவதைக் காண்கிருேம். பக்தி சிரத்தை யாகிய நெய்யை ஊற்றித் தவக்கனலை வளர்க்கிருேம். எண்ணங்களாகிய விறகுக் குச்சுகளை இவ்விரண்டாக முறித்துத் தவக்கனலில் இடுகிருேம். பிரிவினையுடைய இருமை மனவிருத்திகள் சிவாக்கினியில் எரிந்துவிடுவதையும் இவற்ற்ை எரிக்கும் சிவாக்கினி மேலோங்குவதையும் அவதானிக்கிருேம். நம்மிடம் பலியிடக்கூடிய புறப்பொருட்கள் இல்லை. “யான் எனது' என்னும் செருக்காகிய பொருளே உள்ளது. அதைச் சிவாக்கினியில் பரித்தியாகம் செய்கிருேம். நமது எண்ணங்கள், அகந்தைகள் யாவும் நீங்கிவிடுகின்றன. நாமும் இந்தச் சிவஜோதியில் கலக்கிருேம். விஞ்சியது யாது? சொல்லொனத மெளனமாகும்! மெளனகுருவே! நமது இதயகுருவே! வியோமமாக விளங்கும் மெய்ப்பொருளே! தட்சணுமூர்த்தியே! சரணம்! சரணம்! சரணம்! என மெய் மறந்து விடுகிருேம்.
நிர்விகல்ப தியான சாதனை
சவிகல்ப தியானம் சிந்தனைக்கு இடம்கொடுத்து மனவிருத்தியை அவ தானித்து, முள்ளை முள்ளால் எடுத்தல்போலச் சிந்தனையைச் சிந்தனையால் திருவருட் சக்திகொண்டு அமைதியுறச் செய்தலாகும். நிர்விகல்ப தியான
Y

Page 14
- 20 -
மாவது, பிரயத்தனப்பட்டு மனத்தை அடக்காது, மந்திர சக்தியினல் திருவருள் மேலோங்க மனத்தை ஒரளவு இயங்க்விட்டு இயற்கையாகவே அடங்கச் செய்தலாகும். இதற்கு ஒரு சற்குருவிடம் தீட்சைபெற்று மந்திர
செபநுட்பங்களைத் தெளிந்துகொள்ளுதல் உத்தமமாகும். இத்தியான முறை
யைக் காலையும், மாலையும், உணவருந்துமுன்பு ஒழுங்காக இருபது நிமிடங்கள் வரை சாதனை செய்தல் வேண்டும். மந்திரப் பொருளைம்பற்றித் தியானிக்கும் போது சிந்திக்கலாகாது. இதனுடைய பலாபலன்களைப்பற்றி சாதனை முடி விற் காணலாம். இப்பொழுது பின்வரும் பயிற்சி ஒர் உதாரணமாகக் கொடுக்கப்படுகிறது. கட்டளையிட்டு இன்னவிதம் செய்தல்வேண்டும் என நிற்பந்திப்பதிலும் பார்க்க, நாம் வேறுபாடின்றி அந்நியோந்நியமாக, சம நிலையிலிருந்து பயிலல் போன்ற உபாயம் கையாளப்படுதல் ஒருமைப்பாட் டைக் கொடுக்கும் என நம்புகிருேம்.
காலை ஐந்து மணியளவில் துயில் நீங்கி எழுகிருேம். நித்திய கடன்களே முடித்துக்கொண்டு தியான அறைக்குச் செல்கிருேம். புற்பாயை விரித்து அதன்மீது பத்மாசனமிட்டு அமர்கிருேம். விபூதியை உத்தூளனமாக அணி கிருேம். விபூதியைப்பற்றிய சிந்தனை எழுகிறது. இதைத் தாரணை செய்து தியானத்துக்கு இடவாய்ப்பழிக்கிருேம். ? விபூ ” என்பது வியாபகமான சிதாகாசமாகும். இதை அணிகலமாக நாம் பெறும்போது இது விபூதி யாகிறது. பசுவின் மலத்தை அக்கினியாற் சுட்டுத் திருநீறு பெறப்படுகிறது. நமது ஆன்ம மலத்தைச் சிவாக்கிணியாற் சுடும்போது சிதாகாசமாகி விபூதி பிரகாசிக்கிறது. விபூதியின் தன்மை வெண்மையாகும். நமது இதயத்தின் தன்மையும் கள்ளம் கபடமற்ற வெண்மையாகிறது. எனவே சிவ சிவ எனச் செபித்துக்கொண்டு விபூதியை மீண்டும் நன்கு அணிகிருேம்.
செப தியானத்தை ஆரம்பிக்குமுன் இறைவணக்கமாகப் பின்வரும் திருவாசகத்தைத் தோத்தரிக்கிருேம். இறைவனிடம் எதையும் வேண்டாது நிஷ்காமியமாக தோத்திரம் பண்ணுகிருேம்,
' குறைவிலா நிறைவே! கோதிலாவமுதே! ஈறிலாக் கொழுஞ்சுடர்க்குன்றே!
மறையுமாய், மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னியமன்னே! சிறைபெரு நீர்போற் சிந்தை வாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே! . இறைவனே! நீயென்னுடலிடங்கொண்டாய்! இனியுன்னை என்னிரக்கேனே!"
ஆம்! இறைவனே நமது இதயத்திலிருந்து இயங்கி ஒவ்வொரு இரத்த அணுவாகச் செறிந்திருப்பதாகச் சிவோகம் பாவனை செய்கிருேம். அதனல் நமது இதயம் கசிந்து உருகி நெகிழ்ந்து இதோ துடிக்கிறது. இத்தகைய பக்தி சிரத்தையுடன் கண்களை மூடிக்கொண்டு பஞ்சாட்சர மந்திரத்திலுள்ள 'சிவ' என்னும் இரு அட்சரங்களே மட்டும் செபதியானத்துக்காக எடுத்துக்கொள் கிருேம். இது சிவசக்தியைக் குறிப்பதாகும். புனிதமான சுத்த சிவசக்தி
ஒன்றே நம்மை ஆட்கொள்கிறது. வேறு மந்திரப்பொருள் விளக்கம் ஒன்றும்
இப்பொழுது தேவையில்லை. மெளனமான பைசந்தி வாக்குமூலம் சிவ மந்தி ரத்தை இடைவிடாது இதயத்திலிருந்து தொடர்ந்து உச்சரிக்கிருேம். தூல வாக்கிலும் பார்க்கச் சூக்குமமான வாக்கு அதிக சக்தி வாய்ந்தது; கூடிய பலனைத் தருவதாகும்.

- 21 -
இங்ங்ணம் சிவமந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் மனத்தில் குருவளிபோன்ற ஒரு குழப்பம் ஏற்படுவதை அவதானிக்கிருேம். ஒர் ஆலமரத்தில் இனிதரு கனிகளை உண்டுகொண்டிருக்கும் பல்வேறு பறவைக் கூட்டம், வெடிச் சத்தத்தைக் கேட்டுக் கலைந்து மரத்தை வட்டமிடுதல் போல, எத்தனை எத்தனையோ சிந்தனைக் கூட்டங்கள் கிளம்புகின்றன! சிவநாதத்தைக் கேட்டதும் சிந்தனே அடங்குமென எதிர்பார்த்தோம். அதற்கு மாருகப் படையெடுத்துக் கிளம்புகின்றனவே! பொருளாதார வளர்ச்சி, குடும்பநலம், சரீரசுகம், அறிவுத்தெளிவு, பிறர் நம்மை மதித்தல், பதவி உயர்வு முதலிய யாவும் இந்தத் தியான சக்தியால் வருமா? இன்றேல் ஏன் வீணுகப் பாடுபட வேண்டும்? என மனம் விலகி ஒடப்பார்க்கிறது. வெளிச்சத்தைக்கண்டு அஞ்சி ஒடி இருளையே தஞ்சம் புகும் ஆந்தை மனத்தின் இயல்பு இதுதான் சுவாமி ! இதைப்பற்றிய உண்மை விளக்கம் இங்ங்ணம் வரும்போது. எண்ணப் பறவை களிற் சில பறந்தோடுகின்றன. சில மீண்டும் அமைதியாக இதயமரத்தில் உட்காருகின்றன. மந்திர உச்சாடன நினைவு மீள்கிறது - இயற்கையாக! சுயமாக திருவருட்சக்தியாக! எனவே மனப்பிரயத்தனமின்றி மந்திர செபத் தைத் தொடர்கிருேம்.
இங்ங்ணம் தொடர்ந்துகொண்டிருக்கும்போது மந்திரத்துக்கும் சிந்தனை களுக்குமிடையே ஒரு மோதுதல் ஏற்படுவதையும், ஒன்றைவிட்டு மற்றது மேலோங்குவதும் தணிவதுமாகச் செயற்படுவதையும் நாம் அவதானிக்கிருேம். மெதுவாக சொற்பம் சொற்பமாக எண்ணங்களின் வலுக்குறைகிறது. எண் ணங்கள் மேலோங்கும்போது மனவிருத்தியின் இயல்பைப்பற்றிய தெளிவை மட்டும் ஆக்கிக்கொள்கிருேம். இத்தகைய மந்திர செப தியானத்தை இருக்கு வேதம் ‘மந்திரயோகம்’ என வியாக்கியானிக்கிறது. அது மன இயக்கத்தை ஒரு திருகுகல்லுக்கு உவமை கூறுகிறது. திருகுகல் சுழன்றுகொண்டிருக்கிறது. அதில் தானியங்களைப் போட்டுக்கொண்டிருந்தால், அது திரித்துக்கொண்டே செல்லும். தானியம் எதையும் போடாதுவிடின், அது சுழன்று தன்னையே தேய்த்துக்கொள்ளும். எனவே நாம் இப்பொழுது இந்த உண்மை விளக்கத் தைப்பெற்று எண்ணங்களாகிய தானியங்களை நமது மனமாகிய திருகு கல்லில் இடாது, சிவமந்திரத்தை அசைக்க இயலாத பக்தி சிரத்தையுடன் செபிக் கிருேம். இதோ! மனம் சுழல்வதையும், தன்னைத்தானே மெல்ல மெல்லத் தேய்த்துக்கொண்டு வருவதையும் அவதானிக்கிருேம். இவ்விதமான தெளி வைக் கொடுக்கும் ஆனந்த நடராஜனின் தூக்கிய திருவடிக்கீழ், நமது இதய மலரைச் சரணுகதியாக அர்ச்சிக்கிருேம், வேறு மலர்கள் நமக்கு எதற்கு? உயிருள்ள மரங்களின் மலர்களைப் பறிக்கும் பாவத்தை ஏற்கவேண்டியதில்லை.
“செம்மலர் நோன்ருள் சேரல் ஒட்டாது' நம்மைத் தடுக்கும் மலவாசனை -Vasana “வாசன' என உபநிடதங்களிலும், சிவஞான போதத்திலும் விளங்கப்படுத்தப்படும் -மனவிருத்தியாகிய சிந்தனைகள் சுயமாகவே அடங்கி வருகின்றன. இதற்கு ஆதாரமாக ஆலய பூசையை அந்தர்யாகமாகச் செய்து கொள்கிருேம். ஆலய பூசையென மெய்கண்டார் காட்டியது, நிச்சயமாகச் சிவலிங்க பூசையையாகும். சிவசெப தியான மகிமையால் நம்மிடம் உள்ள ஆறு அத்துவாக்களாகிய மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம், கலை யாவும் சுத்தமடைந்துள்ளன. சுத்தி செய்யப்பட்ட இதயபீடத்திலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசிக்கிருேம் - எண்ணங்களாலல்ல!

Page 15
-- " 22 س
புனிதமான பக்தி சிரத்தையினலாகும். மந்திர செபமும், அந்தர்யாக சிவலிங்க தியானமும் அந்நியமின்றிக் கலந்து, ஒமகுண்டத்தில் எழும் அக்கினிபோல்
சிவாக்கினியாக - சுத்ததேஜஸாக - மேலோங்கி, எண்ணங்களை முழுமை
யாகத் தகனம் செய்வதாக உணர்கிருேம்.
பைசந்திவாக்கு மந்திரஒலி மெதுவாக மறைகிறது. பூரண மெளனமான சுத்த சூக்குமைக்கும், பைசந்திக்குமிடையே மந்திர ஒலி ஊசலாடுகிறது ! சுவாசம் குறைந்து குறைந்து வருகிறது. பிரக்ஞை அற்று விடும்போலிருக் கிறது. மனம், தான் இறக்கப்போவதாகப் பதறுகிறது. மேலோங்க முயற்
சிக்கிறது. எங்கிருந்தோ ஒரு மின் தாக்குதல்! ஒரேவெளி! வெறும் தனி!
சுவாமீ! இதோ பிரக்ஞையற்று விடுகிருேம்.
மறுபடியும் பிரக்ஞை வருகிறது. எத்தனை நிமிடங்கள் இவ்விதம் சென்ற னவோ தெரியவில்லை. அதிக நேரம் கொடுத்துவைக்கவில்லை. இந்தச் சொற்ப நேரத்தில் என்ன நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. உணர்வு வந்த பிற்பாடு சொல்லக்கூடியது இவ்வளவுதான்:- வாக்கும் வடிவும் முடிவும் இன்றி ஒன்றுவந்து தாக்கிற்று; மனவிருத்தியை இறக்கச்செய்திற்று. நம்மைத் தன் வசத்தே ஆக்கிற்று. இன்பதுன்பப் போக்குவரவு அறுத்திற்று. இராப் பகலற்ற இடத்தே நம்மை வைத்திற்று; மீண்டு எங்கோ மறைந்துபோயிற்று. சுவாமி சொல்லொணுது இந்த ஆனந்தமே! அதுவே, 'உருவன்று, அருவன்று, உளதன்று, இலதன்று, இருளன்று, ஒளியன்று என நின்றதுவே!” கண்களை விழித்துப் பார்க்கிருேம். தியான சாதனையில் 25 நிமிடங்கள் சென்றுள்ளதை மணிக்கூடு காட்டுகிறது.
முடிபுரை
நித்திரையின் சுகத்தை நாம் நித்திரையை அனுபவிக்கும்போது உண ரோம். நித்திரையின் நலத்தையும் பிரயோஜனத்தையும் நித்திரையின் போது இன்னதெனத் தெளியோம். தியான மாகிய அறிதுயிலின் பரம சிசத்தை நாம் நிஷ்டானுபூதியின்போது அறிவு கொண்டு அறியோம். அறி துயிலின் ஒப்பற்ற நலத்தையும், நிகரற்ற பிரயோஜனத்தையும், அதை அனுப விக்கும்போது ஆய்ந்து தெளியோம். நாம் யாவரும் நித்திரையை அனுப வித்து வருகின்றபடியால் விழிப்பு நிலையில் அதன் சுகத்தையும், நலத்தையும் பிரயோஜனத்தையும் உணர்கிருேம். அறிதுயிலை நாம் எல்லோரும் சரிவரப் பெற்று அனுபவித்து வராமையினல், விழிப்பு நிலையில் அதன் பரமசுகத்தை யும் நிகரற்ற நலத்தையும் பிரயோஜனத்தையும் உணர்கிருேமில்லை. அதை இங்ங்னம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோமாயின் பூவுலக வாழ்க்கையே சுவர்க்கமாகிவிடும். மனிதரே தேவரிலும் மேலாகிவிடுவர்.
இதைச் சாதனை செய்வோர் சந்தேகத்துக்கு இடமின்றித் தெளியவேண் டிய சில உண்மைகள் உள்ளன. அவற்றை நினைவிருத்திக்கொள்வோம். போதிய உண்மை விளக்கமின்றி இயந்திரப்போக்கில் இதை நீண்டகாலம் செய்வதைவிட, இதன் சாதனைச் செயல்முறை நுட்பங்களைத் தெள்ளத்தெளிய விளங்கிக்கொண்டு, தூய இதயத்துடனும், அயராத பக்தி சிரத்தையுடனும் சொற்ப காலம் செய்தாலே போதும், இதன் பயனை நிச்சயம் பெற்று உணர

س-, 23 س
லாம்; இது விற்பனைக்குரிய ஒரு சந்தைப்பொருளல்ல. பணம் கொடுத்துப் பிறரிடமிருந்து இதைப் பெறுதலரிது. புற உலகில் தேடியலையவேண்டிய தில்லை. திறம் வாசனையுள்ள புனுகு நாவியிடமேயுள்ளது. இதையறியாத நாவி என்ன செய்கிறது? புனுகின் வாசம் புற உலகில் வேறெங்கோ இருந்து வருகிறதென நினைந்து அதைத்தேடி அலகிறது. சத்தியசிவ பூரண சக்தி மணம் நம் ஒவ்வொருவரிடமும் மறைந்துள்ளது. அதை வெளிக்கொணர்வதே நமது பொறுப்பு அதுவே இந்தச் செபதியான சாதனையாகும். வெறும் நூற்படிப்பில்ை இது சாத்தியமாகாது. இறைவனுடன் நேரடித் தொடர்பு கொள்வதேைலயே இது சாத்தியமாகும்.
குழப்பமற்ற சொகுசான நித்திரைகொள்ள விரும்பும் நாம், அதற்காக எத்தனேயோ ஆயத்தங்களைச் செய்கிருேம். நல்ல காற்றேட்டமுள்ள அறை: கண்ணேக் கவரும் கட்டில், மிருதுவான பஞ்சணை மெத்தை; மனேரம்மியமான மலர் மணம்; குளிர்ந்தால் இறுக்கிப் போர்த்தக் கம்பளியாடை, வேர்த்தால் மின் விசிறி தாலாட்டி உறங்கச்செய்ய நீலாம்பரி ராகம்; கைகால் உளைந்தால் பிடித்துவிடுவதற்குப் பருவ மங்கையரின் மலர்க்கை; என்றெல்லாம் நித்திரை பெறுதல் வேண்டி எத்தனித்துப்பெறும் நாம், அறிதுயிலை இயற்கையாகவே விரும்பாது விலகி ஓடுவதேன்? தியானம் செய்து பழக வேண்டும் என ஆவல் கொள்கிருேம், அதில் ஏதோ வினுேதமும் அற்புதமும் இருப்பதாக அதை அனுபவிக்க விளேகிருேம். சொற்ப நாட்கள் தியானித்துப் பார்க்கிருேம். அதில் எவ்வித கிளுகிளுப்போ, களியாட்டமோ, கனிரசமோ காணவில்லை. மனதுக்குத் தியான சாதனையென்ருல் அச்சம்கூட உண்டாகிறது. இந்த உதா சீனம் ஏன்? அஞ்சி விலகும் இயல்பேன்?
மனத்தின் மாயாஜால விபரீதப் போக்குத்தான் இதற்கு முக்கிய காரண மாகும். நித்திரையில் உல்லாசமாக ஒய்வெடுக்கும் மனதுக்கு, அறிதுயில் கிலேயில் தற்காலிக மரணம் உண்டாவதை நமது மனம் இரகசியமாக உணர்ந்துகொள்கிறது. அதன் உண்மை விளக்கம் பெருத நாம் ஏதோ மீண்டும் முயற்சிக்கிருேம். மனத்தை வெற்றிபெற முடியவில்லை. மனம் சொல் கிறது 'பூர்வ புண்ணியம் செய்திருக்கவேண்டுமே! பிராரப்தபலன் நம்மை விடுகிறதில்லை. இது சரிவராது. விட்டுத்தள்ளுவோம்’ என்று. மனத்துடன் ஒத்து நாம் தியான சாதனையை விட்டுச் சுலபமாக விலகிவிடுகிருேம், மயக் குறும் மனம், நமது கருமபலனை அறிந்ததுபோல் நடித்து, நம்மைத் திசை திருப்பும் விந்தையை மெய்யுணர்தல்மூலம் திருவருளால் தெளிகிருேம். நமது கண்முன்னே நடப்பதையே ஐயந்திரிபற உணராத மனம் தெரியாத பழைய வினையைப்பற்றி இவ்வளவு சுலபமாக அறிந்து அறிவுறுத்தும் ஆற்றல்பெற்றது எவ்விதம்? பூர்வ புண்ணியத்தினலேதான் இந்த மானிட பிறவியை நாம் எடுத்துள்ளோம். பூர்வ புண்ணிய பலனுலேதான் இவ்வளவு தூரம் உண்மை உணர்தல் பெற விரும்பி இவற்றையெல்லாம் அவதானிக்கிருேம். வேறு பழைய புண்ணியம் எதற்கு? இராப்பகலற்ற இடத்தே இருத்தல் மனதுக்கு மரணமாகும். மாயமனமே! அன்று சீதா தேவியை மயக்கியதுபோதும். இன்று நம்மை ஏமாற்ற இயலாது. நமது இதயத்திலே திருவருளால் தீட்டப்பட்ட விவேகவாள் உள்ளது. உன்னை இதோ வெட்டி வீழ்த்துகிருேம், நமது தியான சாதனையை இனி உன்னுற் தடைசெய்ய இயலாது என உறுதி பூணுகிருேம். -

Page 16
- 24 -
தியானத்திற்கென ஒரு தனி இடமும் காலமும் தேவையில்லாத நிலையை அடைந்து வருகிருேம். விழிப்புணர்வுடன் எதையும் ஊன்றி அவதானிக்கும்
சக்தி மேலோங்குகிறது. பிரயாணம் செய்யும்போதும், கலை நிகழ்ச்சிகளை
ரசிக்கும்போதும், சிறந்த நூல்களே வாசிக்கும்போதும், இதய சுத்தமுடையவர் களுடன் சம்பாஷிக்கும்போதும், இந்த விழிப்புணர்வு ஆற்றலால் இடை யிடையே அற்புதமான ஒரு மனேலயம் உண்டாகிறது. நம்மை இறைவனி !-த்தே வசமாக்கும் இந்த மனேலயம், சுயமாக மலருதல் வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும். அதை நாம் வருந்தி அழைத்தாலும் வாராது. எப்படியோ வந்ததை வலியுறுத்தி நில்லென்ருலும் நில்லாது. இரு சிந்தனை களுக்கிடையே ஒரு இடைவெளி ஏற்படுகின்றபோது, இது மின்வெட்டுப் போல் தோன்றி மறைவதை உணர்கிருேம். பூரணமான ஒளி கண்ணைப் பறித்து இருட்டிவிடும். அறிதுயிலும் இங்ங்ணம் இடைவெளியில் மனக்கண் ணேப்பறித்து இருட்டடித்து விடுகிறது. அதனல் நமது வாழ்வில் மனேலயம் ஏற்படும் போதெல்லாம் சுயாதுபூதி சிதாகாசமாகத் தோன்றி மறைகிறது. இவற்றையெல்லாம் மனவிருத்தியால் நாம் அறிவதில்லை. மன வாசகத்தால் பரம்பொருளுடன் தொடர்புகொள்ள இயலாது. அறிதுயிலில் மலரும் மெய் புணர்தலே நம்மை இறைவனுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் ஆதாரப் பொருளாகும். சுத்த மெளனத்தில் மெய்யுணர்தல் மலருகிறது. தியானத்தின் பலன் மெய்யுணர்தல் மலர்ச்சியாகும்.
இந்த ஆற்றல் மலர்ச்சியால், தீராத தொல்லைகளைத் தீர்த்துக்கொள் கிருேம். புரியாத பிரச்சனைகளைப் புரிந்து நிவர்த்திக்கிருேம். துயரக்கடலில் மூழ்கும்போதெல்லாம் இது ஒரு தெப்பம்போல் உதவுகிறது நன்மையாக எண்ணியபொருளெலாம் எளிதில் முற்றுப்பெறுகிறது. நீதியான வழியில் பொருட் சம்பாத்தியம் வருகிறது. பகைவர்களும் நண்பர்களாகிருர்கள். எல்லாவற்றிலும் மேலாக வாழ்க்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ வழி வகுக்கிறது. உடல் உளநலம் பேணப்படுகிறது. தவிர்க்கமுடியாத நோய் விந்தால் அதைத் தாங்கும் இதயசக்தி பிறக்கிறது. அறிதுயிலிற்பெறும் இந்த ஆன்மீக ஆற்றலைக்கொண்டு விழிப்பு நிலையில் எதையும் சிந்தித்துத்தெளிந்து சுலபமாகச் செயற்படுகிருேம். குருடர்களாய், ஊமைகளாய், செவிடர்களாய்
ஒரு மூலைக்குள் ஒதுங்கியிருந்து தனி வாழ்வு வாழவேண்டியதில்லை. மெய்யுணர்
தலைப்போன்ற ஒர் உற்ற நண்பன் வேறு யாரும் இலர். இதைவிட வேறு பாக்கியம் எதற்கு ?
நமது இதயத்தில் நீங்காது ஒலிக்கும் ஒரு வேத வாக்கியத்தை இப்பொழுது நினைவு கூர்ந்து நிற்கிருேம்.
' Yatra Naanyat pasyati; Yatra Naanyat Sranoti; Sa Bhuma ”
யத்ர நான்யத் பஸ்யதி; யத்ர நான்யத் சிரணதி; ஸ பூமா.
ஒருவன் எங்கே, வேறென்றையும் காணவில்லையோ, ஒருவன் எங்கே வேறென்றையும் கேட்கவில்லையோ, அங்கே பூமாவாகிய பூரணம் பொலியும். அதுவே தில்லை வெளியாகும். அதுவே சிற்றம்பலமுமாகும். அதுவே நமது இராப்பகலற்ற தரிசனமாகும்.
ஓம் சாந்தி,


Page 17
115, Messenger St Sri Lanka
 
 
 
 
 
 
 

ed at Printing Works reet, Colombo-12. } (Ceyion)