கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாவதும் புதுவதன்றே: அமரர் குணரெத்தினம் குணசிங்கம் அவர்களின் நினைவு வெளியீடு

Page 1


Page 2

@i୍gୋ
s.

Page 3
நூல் சாவதும் புதுவதன்றே
6LUB மரணம் பற்றிய கவிதைகள் மற்றும் கவிதைசார் எழுத்துக்கள்
L56
5cy
தொகுப்பாசிரியர் செல்லத்துரை சுதர்சன்
வெளியீடு அமரர் குணரெத்தினம் குணசிங்கம் குடும்பம்
முகவரி கொம்மந்தறை, வல்வெட்டித்துறை.
ஆண்டு 2O1Օ լpng&gմ

áFampuríb
அமரர் குணவரத்தினம் குணசிங்கம்
தோற்றம் : 1969.11.13 ԼD6006) 2010.1127
திதி : மார்கழி அபரபக்க அட்டமி
9 is
மூன்றெழுத்து மந்திரம்,
മിuസ്ക06്) வரமெழுதும் தெய்வம்
தோள்மீது தாங்கவைத்து ஆளாக்க. அருங்கதையாம் விதைவிதைத்த அறிஞன்
ബ ബിംബ ബ எம்வாழ்வு வேர்வைக்க உழைத்த பெரும் கடவுள்,
கண்ணுக்குள் எமை வைத்துக் காத்திருந்தீர். கண்ணை மூடிவிட்டீர் உமக்குள் உலவுகிறோம் உலகம் தெரியவில்லை)
உம் கண்களே எமக்குப் பார்வை
உம் அன்புப் பிள்ளைகள்
அUர்ணா, கஜதால், கிருபதால்

Page 4

அமர் குணவரத்தினம் குணசிங்கம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
காலமழை நம்பிக் கடவுளையும் நம்பிக் கமம் செய்யும் யாழ்ப்பாணக் கிராமங்களில் ஒன்று நாவலடி. ஈழத்திருநாட்டில் இயற்கை கைகுலுக்கும் வல்வை மண்ணின் வளமிகு குறிச்சிகளில் இதுவுமொன்று. நீரினால் மட்டுமன்றித் தம் வியர்வையாலும் பார்வையாலும் பயிர் வளர்க்கும் மக்கள் குடியில், பதின்மூன்றாந் திகதி கார்த்திகைத் திங்கள் 1969ஆம் ஆண்டு பண்பால் உயர்வு பெற்ற குணரெத்திரனம் தங்கேஸ்வரி தம்பதியினரின் பெயர் விளங்கும் மகவாகப் பிறந்தவரே, அமரர் குணசிங்கம். ஏகபுத்திரனாகிய இவர், தன் மூன்று வயதில், உயிர் கொடுத்த தன் அன்னை இறைவனடிசேர, சால்பு மிக்க தந்தை குணரெத்தினத்தின் அன்பின் நிழலில் வளர்ந்து, அன்பினால் தானும் நிழல் கொடுத்தார்.
அன்பும் பண்பும் அமரரின் அணிகலன்கள். காற்றிலே இனிய வார்த்தையைக் கலக்கும் கைவண்ணம் கொண்டவர். எவரையும் ஏற்று உபசரிக்கும் உயர்ந்த பண்பாளர். ஏழ்மைக்காய் இரங்கும் உயர் உள்ளம், இவர் உள்ளம். சிவனடி மறவாச் சிந்தையராகி அவனியில் நடந்த அவதார மனிதர். பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் மகன். இல்லாளுக்கேற்ற இனியன். மக்கட்கேற்ற தந்தை. உற்றார்க்கு உளமகிழ்வுடையன். கற்றோர் களிக்கும் கனியன்.
இவர் தம் கல்வியைச் யா/சிவகுரு வித்தியாலயத்திற் பெற்றார். க.பொ.த (சாத)வரை கற்ற இவர் கமத்தின்மேல் நாட்டம் கொண்டு மண்ணைப் பதப்படுத்தி மக்களை வாழ வைக்கப் புறப்பட்ட பெரும்மனிதன். பாறை பிழந்து பயன் விளைத்த பெரும் உழைப்பாளி. நாற்று வாழத் தன்ஆவி வழங்கியோன். மொழி மீதும் இனம் மீதும் இறை மீதும் தீராத பற்றுடையோன்.
விளையாட்டுத்துறையின் புகழ்பெற்ற வீரன். காற்பந்தும் கரப்பந்தும் கண்டோரைக் களிக்க வைக்க எதிரணியை நடுங்கவைக்க ஆடி, புகழ்சூடிய வீரபுருஷன். அவர் கால்களிலும் கைகளிலும் பந்து படும்பாடு சொல்லுந்தரமன்று. காற்றைக் கிழிக்கும் வேகம் பந்துக்குக் கொடுத்தவர் இவர். கழுகுகள் விளையாட்டுக்கழக உபதலைவராய் இருந்து பதவிக்குப் பெருமை சேர்த்த பெருவீரன்.
i

Page 5
அழகையா பூமணி தம் பதியின் புதல் வியாம் மங்கையர்திலகம் எனும் மங்கையை 23.06.1993 அன்று மனைத்தக்க மாண்புடையள் ஆக்கியோன். மங்கையர்திலகமும் மனையறம் போற்றும் மாட்சிமையுடையராகினள். யாழ்ப்பாண மன்னர் காலத்துப் படையினரின் கொம்பன் யானைகள் மேய்ந்த தரையாம் கொம்மந்தறையில் இல்லறம் அமைத்து நல்லறம் நடத்தினர். இல்லறப் பயனாய் அபிர்னா என்ற ஏகபுத்திரியும் கஜதாஸ், கிருபதாஸ் என்றிரு புத்திரரும் வந்துதித்தனர். பெற்றோரின் குணமறிந்து ஒழுகும் பிள்ளைகள் கல்வியில் கலையில் சிறந்து விளங்கி, நாளைக்கு ஒளியூட்டும் நம்பிக்கை நட்சத்திரங்கள். சமூகத்தேரின் தங்க அச்சாணிகள்.
இல்லறம் இனிதே நடத்தி வருகையில் 2005 சித்திரை பதினைந்தாந் திகதி தன் இரண்டு கண்களும் பார்வை இழந்தாலும் தந்தையை, மனைவியை, பிள்ளைகளை அகத்தால் பார்த்து அன்பு செய்தார். காலன் பல வடிவங்களில் மனிதரை நாடுவான். வாழ்வின் காலத்தை முறித்துப போடுவான். இவரிடம் மாற்ற முடியாப் புற்றுநோயாய் காலன் அணுகினான். காலனின் கைகள் இவரை நோக்கி இறுகப் பற்றின. மருத்துவர்கள் எல்லோரும் தங்கள் கையை விரித்துக் கடவுள் கைக்கு இவரை மாற்றினர். கடவுள் இவரை 2010.1127 அன்று தன்னுடன் அனைத்துக்கொண்டார்.
ii.

சாவதும் புதுவதன்றே
மண்ணில் மரணம் மகத்துவமானதே. அது பெருந் தத்துவம் வாழ்வுப் பெருங்கதையின் முடிவு மட்டுமல்ல தொடக்கமும் அதுவே. பிறந்து இறந்து - இறந்து பிறந்து பொருள் முடியாக் கவியாய்த் தொடர்கிறது மரண வாழ்வு. எதுவும் புதிதில்லை. சாவதுந்தான். சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் “சாவதும் புதுவதன்றே" என்று கூறினார். அழைக்காமல் வருவதும் சொல்லாமல் போவதும் உயிருக்குச் சிறப்பு மரணமும் அழைக்காமல் வந்து சொல்லாமல் போகிறது. மரணத்தை நிறுத்தி வைத்தவர்கள் யார்? மரணத்திற்கு அஞ்சி பக்தனானால் கர்மம் தின்னாமல் விடுமா? சாவின் வாய்க்கு மனிதர்கள் எல்லோரும் கவளமாகத்தான் வேண்டும்.
இறப்பதே உலகின் உயர்ந்த பெருமை. வள்ளுவப் பெருஞானி கூறுகிறான், “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு.” மரணிப்பதே உலகின் மிகப்பெரும் புகழ். “இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதி உண்டோ” என்கிறார் கம்பநாட்டாழ்வார். “பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்” என்கிறது மணிமேகலை. “தோற்றம் சால் ஞாயிறு நாளியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாளுண்ணும்” என்று நாலடி செப்புகிறது. நாம் வாழும் நாள்களெல்லாம் காலத்தை அறுக்கும் ஒரு வாள் என்பதை “வாள்களாகி நாள்கள் செல்ல” என்று திருச்சந்த விருத்தமும் “நாளடியிடுதல் தோன்று நம்முயிர் பருகும் கூற்றின் வாளின் வாய்த் தலைவப்பதர்க்குச் செல்கின்றோம் வாழ்கின்றோமே” என்று குண்டலகேசியும் உரைக்கின்றன.
மரணம் உயிர்க்கில்லை. உடலுக்காயின்? உடல் மாற்றமுறும். மாற்றமுறுவதே மரணம். நில்லாத தன்மையே நிலையாமை. “இளமையும் நிலையாவாம் இன்பமும் நின்றவல்ல வளமையும் அ.தே போல் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக்கென்றும் என்றும் விளைநிலம் உழுவார் போல் வித்துநீர் செய்துகொண்மின்” என்று செப்பும், வளையாபதி.
iii

Page 6
நிலையற்றதில் நிலைக்காது. நிலையானதில் நிற்பின் மரணமேது? “இன்றுனார் நாளையில்லையெனும் பொருள் ஒன்றும் ஓராது” என்று அப்பர் சுவாமிகள் கூறும் நிலை இருக்காது.
இருப்பினும் மரணத்தின் தன்மையை யார் அறிவார்? “உடம்பொடு உயிரிடை நட்பறியாதார்” மரணத்திற்குக் கலங்குவர் என்று திருமூலர் செப்புகிறார். “மின்னின் நிலையில மன்னுயிர் யாக கைகள் பிறந்தார் பெயரும் தன் மை பிறராலி அறிதற்கெளிதோ” என்று திருவாய்மொழி உரைக்கிறது. மரணத்தின் தன்மையை யார் அறிவார்? மரணத்தை வென்றோரே அறிவர். “பக்தன் சாவதில்லை, முன்பே செத்துப்போனவன்” என்கிறார் ரமண மாமுனிவர். “இனி நான் வருவதாயின் புதிய உடலோடு வருவேன்” என்றார் அரவிந்தர். “நான் இறந்து அடக்கம் செய்வதற்குமுன் என்னைக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுங்கள்” என்றார் சோக்கிரட்டீஸ். இவர்கள் மரணத்தை வென்றவர்கள். சாவது புதிதல்ல என்பதை அறிந்தவர்கள். மரணம் அமைதியின் கீதமாய் இவர்களுக்கிருந்தது.
இத் நூல் மரணம் பற்றிய முக்கியமான எழுத்துக்களைக் கொண் டது. பல நூல் களிலிருந்தும் பத் திரிகைகள் சஞ்சிகைகளிலிருந்தும் தெரிவுசெய்து தொகுக்கப்பட்டது. சமய ஞானிகளிலிருந்து சமகாலக் கவிஞர்கள் வரை, தமிழ்ச் சூழலிலிருந்து பிறமொழிச் சூழல்வரை மரணம் தொடர்பாகச் சிந்தித்த சிந்தனைகளின் கவிதை நிலைத் தொகுப்பிது. சிந்தனையாளர்களுக்கு எம் நன்றிகள். நூல்கள் தந்துதவிய பெரியோர்க்கும், அழகுற அச்சேற்றிய ச. ராஜ்குமார் அவர்களுக்கும், பயன்மிகு தொகுப்பை உலகுக்கு தந்த அமரர் குணரெத்தினம் குணசிங்கம் குடும்பத்தினர்க்கு நன்றிகள்.
- தொகுப்பாசிரியர் -
iv

சாவதும் புதுவதன்றே
வநருப்பு வீட்டில் நுழைகிறான்
நசிகேதன் தந்தையிடம் அப்பா என்னை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள்? என்று இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான்
தந்தை கூறினார் 'உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன்
பல விஷயங்களில்
முதல் நிலையிலும்
பல விஷயங்களில் இடைநிலையிலும் இருக்கிறேன் எமனுக்கு என்னால் என்ன செய்யப் போகிறார்
'பாருங்கள்
முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே இப்போதுள்ளவர்கள்
சிந்தியுங்கள் மனிதன் செடி கொடிகளைப் போல் அழிகின்றான் மீண்டும் செடி கொடிகளைப் போலவே பிறக்கிறான்' என்றான் நசிகேதன்.
‘விருந்தினனான தூயவன் நெருப்பு வீட்டில் நுழைகிறான். தூயோர் அவனை உபசரித்து அமைதிப்படுத்துகின்றனர் எமதர்மனே! நீயும் அவனுக்கு நீர் கொடுத்து உபசரி மந்திரிகள் கூறினர் -
கடோபநிஷதம்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 7
புதிய துணிகள் கொள்ளுமாறு
இவன்
பிறப்பதுமில்லை எக்காலத்திலும் இறப்பதுமில்லை இவன்
ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை இவன் பிறப்பற்றான், அனவரதன் இவன்
சாசுவதன், பழையோன் உடம்பு கொல்லப்படுகையில் இவன்
G35T6)6) "LILT66
இப் பொருள் அழிவற்றது,பிறப்பற்றது, என்றுமுளது இங்ங்னமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
நைந்த துணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல் ஆத்மா
நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறது.
சாவதும் புதுவதன்றே
பகவத்கீதை
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

3 சாவதும் புதுவதன்றே கனிவுற்ற கனிகள் கீழே விழலாம்
உறக்கதில் ஆழ்ந்துள்ள கிராமத்தைப் பெரிய வெள்ளம் அடித்துக் கொண்டு போகிறது
அது போல் மனிதன் மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் வேளையில் மரணம்
அைைன அடித்துக்கொண்டு போய்விடுகிறது
மனிதன் மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவன் இன்பங்களில் திருப்தியடையுமுன் மனம் கலக்கமுற்றிருக்கும் போதே மரணம் அவனை வென்றுவிடுகிறது.
மனிதன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது தப்பித்துக்கொள்ளும் இடம் பரந்த வானத்திலும் இல்லை ஆழ்ந்த கடலிலும் இல்லை மலையின் குகைகளிலும் இல்லை
எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது தந்தையும் தமர்களும் காக்க முடியாது உற்றாரை நம்பியும் பயனில்லை
கனிவுற்ற கனிகள் விரைவிலே கீழே விழலாம். அது போல் பிறவியெடுத்துள்ள மனிதர்கள் எந்த நேரத்திலும் மரணமடைந்துவிடக்கூடும்.
தம்மபதம் அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 8
அரிதாள் நடுவே தீப்பொறி
நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன
கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது
அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள்
நீதிமான்களின் பிரிவு
பெரும் துன்பமாகக் கருதப்பட்டது
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது
அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்
கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள் அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்
சாவதும் புதுவதன்றே
திருவிவிலியம்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

இவ்வுலகில் தங்கியிருக்கவில்லை
நபியே!
மறுமையைப் பற்றி அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்
அதைப்பற்றி நீர் நினைவூட்டுவதைத் தவிர சொல்வதற்கு என்ன இருக்கிறது?
அதன் முடிவெல்லாம் உமது இறைவனிடமே இருக்கிறது.
அதைப் பற்றிப் பயப்படக் கூடியவர்களுக்கு நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோரே அன்றி வேறில்லை. அது வருங்காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.
அதனை அவர்கள் கண்ணால் காணும் நாளில் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு சொற்பநேரமே அன்றி இவ்வுலகில் தங்கியிருக்கவில்லை. என்றே அவர்களுக்குத் தோன்றும்.
சாவதும் புதுவதன்றே
குர்ஆன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 9
... 6 சாவதும் புதுவதன்றே
சுடுகாடு வாழி
களரி பரந்து கள்ளி போகிப் பகலும் கூவும் கூகையொடு பிறழ்பல் ஈம விளக்கிற் பேய் மகளிரோடு அஞ்சு வந்து அன்றியும் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணிர் என்பு படு சுடலை வெண்ணிறு அவிப்ப எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக்கு எல்லாம் தானாய்த்
தன் புறம் காண்போர் காண்பறி யாதே
Լ!!!) IBIT 50)!TԱյl
உறங்குவது போலும் சாக்காடு
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை கடை
நாள்என ஒன்று போல் காட்டி உயிர்ஈரும் வாள்.அது உணர்வார்ப் பெறின்
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல
குடம்பை தனித்துஒழியப் புட்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு
திருக்குறள் அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

7 சாவதும் புதுவதன்றே
காலம் என்று ஒரு வலை
உண்மை இல் பிறவிகள் உலப்பு இல் கோடிகள் தண்மையில் வெம்மையில் தழுவின எனும் வண்மையை நோக்கி அவ் வறிய கூற்றின்பால் கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ?
சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையும் சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ?
கண் முதல் காட்சிய கரை இல் நீளத்த உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ?
புண்ணிய நறு நெயில் பொரு இல் காலம் ஆம் திண்ணிய திரியினில் விதி என் தீயினில் எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
அண்ணலே! அவிவதற்கு ஐயம் யாவதோ?
கம்பராமாயணம்.
பிறந்திளைத்தேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
திருவாசகம் - சிவபுராணம்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 10
8 சாவதும் புதுவதன்றே
பேறினை நீக்கி
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே
திருமூலர்
O g-Tibia Osires 6
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடியாடி முடிந்தபின்பு செத்துக்கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள் கத்துங் கணக்கென்னகாண் கையிலாபுரிக் காளத்தியே
பட்டினத்தார்
மரணத்தை வெல்லும் வழி
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ புவிமீது நான்சாகா திருப்பேன் காண்பீர் மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் மடிந்தாலும் பொய் கூறேன் மானுடர்க்கே நலிவுமில்லை சாவுமில்லை கேளிர் கேளிர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின்சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை
பாரதியார்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

சாவதும் புதுவதன்றே
முத்தி
தோன்றி அழிவது வாழ்க்கை - இதில் துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும் மூன்றில் எதுவரு மேனும் - களி மூழ்கி நடத்தல் பரசிவ முத்தி
பாரதியார்
இதய கீதம்
நமனே குறித்துக்கொள் இம்மானிலத்தே இறவாது, பல்லாண்டு சும்மா கிடந்து சுகமாய் இருப்பதிலும், கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு நான் இங்கே
சூழ்வேன்
சுழல்வேன்
சுமப்பேன்
சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
மஹாகவி
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 11
10 சாவதும் புதுவதன்றே
உயிர்ஒய்தலற்று
அன்று பிறந்து இன்று இறப்பது ஆயதன்று நம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனாகி வளர்ந்து உயிர் ஒய்தலற்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை
மஹாகவி
ஒத்திகை
நின்னொடும் எவ்வணம் மென்மையதாய் உற வாடுதல் வேண்டுமெனும் உண்மையை இந்த உலகத்திடையான் ஒத்திகை பார்க்கின்றேன் இன்னும் சில நாள் உள, அக்கலையை இனிதே பயில்வேனேல் உன்னையடையும் திருநாள் வரும், உன் ஊரையடைவேனே
- நீலாவணன்
துயில் இயற்கையொடும் சாவியலை 666é
- நீலாவணன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

11
சாவதும் புதுவதன்றே
நான் வளர்ந்த கருப்பை
.அவ்வளவே அவ்வளவே அந்த நெடும்பனைகள் ஓங்கி உயர்ந்தே உலையும் சுடலையிடை நீங்கா நினைவுகளை நெஞ்சில் சுமந்திருந்து மாண்டோரின் சாம்பல் படிந்த அம் மேட்டினிலே மீண்டும் ஒரு மனிதன் அச்சாம்பல் திடலில் தனித்துத் தெரியவில்லை சாம்பலிலா உண்டு தனித்தன்மை? ஓ அந்தச் சாம்பலிலா உண்டு தனித்தன்மை?. எல்லாம் முடிந்தன எல்லாம் முடிந்தன காண்
எம்.ஏ.நு.மான்
காலனின் கடைவிரிப்பு
காலன் கடைதிறந்து விட்டான் எங்கள் பூமியில் காலன் கடைதிறந்து விட்டான்! காலன் கடை விரிக்கட்டும் அது விடுதலை விழாவின் அர்ச்சனைக் கடை.
மு. பொன்னம்பலம்
- அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 12
12 சாவதும் புதுவதன்றே
விமானம் எறுவதற்கு முன்னர்
BLD இருப்புக்குள் புகுந்துள்ள மரணத்தின் முடிச்சறிய உனக்குள் இருக்கும் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி! விமானத்தில் ஏறமுன் உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி இப்போ மரணம் உன் கைப்பொம்மை
(3LDG36)?
உட்சுடர்ப் பெட்டியின் குச்சிகிழி!
விண்ணெழுந்த நமது விஞ்ஞானக் கோலமெல்லாம் இமைப்பொழுதில் தரையிறங்கும் மரணத்தின் ஓர் அறைவில் நொருங்கி உள்ளாடிப் போகிறதா? பொறுக்க முடியவில்லை
பொறுக்க முடியவில்லை
இப் போதாமைச் சிறையை!
மு.பொன்னம்பலம்
வழக்கு
நேற்றி ருந்தவை இன்றிலை, ஆயினும் நெஞ்சி லிட்டவை சென்றதும் கொஞ்சமோ? ஈக்கொ டிந்தது போன்ற நிகழ்ச்சிகள் எறும்ப சைந்தது போன்ற அருட்சிகள் - தீத்து ணுக்கவை நெஞ்சக ஓரத்தில் திபிரி ளக்கிற பாறைகள் பாரத்தில்! ஏற்றி யேற்றி யித்தனை பொதிகளை எங்கி ழுக்கிறன் கொண்டுதான் போகவோ?
மு.பொன்னம்பலம் அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

சாவதும் புதுவதனிறே
சாலிவனும் காவியம்
முப்புரம் எரித்தோன் கோப முற்றனன் என்றான்! “அல்ல அப்படி யல்ல" வென்றே அங்கொரு மார்க்கண்டேயன் கொக்கரித் தெழுந்து காலன் கயிற்றினை வீசும் போது எச்சிறு பயமுமின்றி எதிர்த்தினி தாகச் செல்வான்
"தம்பிநீ சாவே" இந்தத் தரணியில் தோன்றும் யாவும் வந்துவந் திறப்ப தானால் வாழ்ந்திடும் உனக்குக் கூட இங்குசா வுண்டே" என்றான்
இறந்தது சாவும் அங்கு நின்ற அவ் ஒருவனுக்கு நன்றினி நாமும் பார்ப்போம்!
மு.பொன்னம்பலம்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 13
14 - சாவதும் புதுவதன்றே
இறப்பு
சிறிதில் பெரிதின் பளு பாழின் இருளைத் தொட்டுன் நுதலில் இட்ட பொட்டு பார்வைக் கயிறு அறுந்து இமையுள் மோதும் குருடு ஒன்றும் ஏதும் இன்றி இன்மை நிலவி விரிதல் வண்டியை விழுங்கும் பாலம் மஞ்சம் கழித்த பஞ்சு கூட்டை அழிக்கும் புயல் புயலில் தவிக்கும் புள் வாழ்வின் குழலைத் துறந்து
என்றோ இழந்த வாசக் காற்றுள் வீழும் ரோஜா துணியே நைந்து இழையாய் பஞ்சாய்ப் பருத்தித் திரளாய் பின்னே திருகும் செய்தி காற்றை விழுங்கும் சுடர் சுடரை உறிஞ்சும் திரி வினையில் விளைவின் விடிவு விளையா விடிவின் முடிவு தொடங்காக் கதையின் இறுதி நிறுத்தப் புள்ளிகளிடையே அச்சுப் பிழைத்து அழித்த வசனம் வெண்தாள்ச் சூன்யம்!
- பிரமிள் சிவராமு
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

15
சாவதும் புதுவதன்றே
தூக்கம்
அங்கத் தளர்வதனால் - விழியை அணையும் தூங்கமது தங்கக் கிண்ணத்திலே - பருகும் தண்மது வின் மணக்கோ?
மண்ணில் புதையும் வித்து - மண்ணிலே மலர்ச்சி காண்பது போல் கண்ணில் புதையும் துயில் - கண்ணிலே காந்தி விளைப்பது வோ?
அரசன் ஆண்டியையும் - சமமாய் ஆளும் அரசிது வோ? மரண மேடையின் முன் - விளங்கும் மெளனத் திரை யிதுவோ?
கனவுகாண் சாளரமோ? - விதியின் கன்னத் திடும் முத்தமோ? அன்னையின் மடியிலே - குழந்தை அழாதிருக் கின்றதோ?
கம்பதாசன்
இல்லாமல் இருப்பது
இருப்பதற்கென்றுதான் வருகிறோம் (S6)6)TLD6) போகிறோம்.
நகுலன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 14
16 சாவதும் புதுவதன்றே
முடிவற்ற பயணத்தின் முடிவிடம்
வாழ்வும் ஒரு ஊர்திதான் வடிவெடுத்த வினைகளின் சில்லுருள்தலில் வெள்ளோட்டமாகும் வாழ்வின் தேரோட்டம் தேய்ந்து தேய்ந்து பாடடையில் ஊர்கிற பயணமாகிறது. சாவும் ஒரு ஊர்திதான்
பயணத்தின் முடிவல்ல
வாழ்வென்பது ஓர் அசுரவித்து அதில் வளரும் உலகென்பது அசுரவிருட்சம் அதில் விழுது கட்டித் தொட்டிலாடும் ஆசைகளின் பிறப்பு ஒவ்வொன்றையும் அறுத்து ஊழிநடம் புரியும் ஒப்பற்ற பொருளிடம் ஒப்படைத்தால் எம் வாழ்வும் விடுதலையாகும்
சு.வில் வரத்தினம்
சாகாத வார்த்தை
് ിഞ്ഞpഖു
நீ நிம்மதி மெளனம் புடைசூழவரும் பெருஞ்சோலை சாகாத வார்த்தை அறவழி மாறிடா
அருந்தோட்டம் வாழ்விலெங்கனும் உனக்கு வாயில் வரும் எழில் காத்துக்கிடக்கிறேன்.
நவ . துவாரகன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

17
சாவதும் புதுவதன்றே
நான் இறந்து போகிறபோது
நான் இறந்து போகிறபோது என்ன நடக்கும்?
அது ஒரு காலைப் பொழுதானால் நிலவு எழும்
மாலையானால்
தேஉக்கால்கள் ஒடிந்து விழக் காத்திருக்கும் சூரியனின் கண்ணசைவில் காலத்தின் நிறம் பிரியும். இரவெனில் பறவைகள் தூக்கம் தொலைத்து விழ்த்தெழுந்து பாடும்
அந்தப் பாடலின் அலைகளில் சாக்குருவியின் இறகுகள் தீப்பட்டெரியும்.
சேரன்
உதிர்ந்த மலர்
முள்ளுடைச் சிறு செடியின் கனவாய் மூண்டு சிரித்தமலர் கள்ளெனும் பொக்கிசத்தால் விம்மியே கர்வமடைந்த மலர் . வீழ்ந்து கிடக்குதையோ உச்சி வெய்யில் சுடலையிலே
வாழ்வின் விருப்பங்களை
மண்ணில் வரைந்துளதோ வண்டே கம்பதாசன்
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 15
18
சாவதும் புதுவதன்றே
கதவுகள் பூட்டுகள் சாவிகள்
உள்ளே இருப்பது தெரியாமல் யாரோ பூட்டிவிட்டுப் போக வெளியேற முடியாமல் தவிக்கிறது ஏதோவொன்று தாழ்ப்பாள்களை நீக்கிவிட்டுக் பார்த்தால் ஒன்றுமே இல்லை உள்ளே பூட்டுப் போட்டு விட்டால் எவ்வளவோ இருக்கிறது வெளியே சத்தமாகத் திறப்பதை விட எளிதானது மெளனமாய்ப் பூட்டுவது ஒரு கம்பிதான் பூட்டு ஒரு கம்பிதான் சாவி வளைப்பதில் இருக்கிறது எல்லாம் பூட்டுக்களைத் தயாரிப்பவர்களை விட சாவிகளைத் தயாரிப்பவர்கள் பெருகி விட்டார்கள் சரியான இலக்கத்தை மறந்துவிட்டு வெவ்வேறு இலக்கங்களை பொருத்திப் பார்க்கிறார்கள் நம்பர் பூட்டுக்குச் சொந்தக்காரர்கள் சாவி கைவசமிருக்க தொலைந்த பொருளுக்கு ஈடாவதில்லை மாற்றுப் பொருள்கள் சாவியைத் தொலைத்து விட்டு தடுமாறுகிறவனின் கையில் மாற்றுச் சாவியைக் கொடுத்துப் பழக்கிய அந்த முதல் நபர் முக்கியமானவரல்ல முன் வாசலை மூடி விட்டு பின் வாசலைத் திறந்தே வைத்திருக்கிறது தனிமை
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு ബൈബിu്

19
சாவதும் புதுவதன்றே
ஒரே பூட்டுக்குப் பல சாவிகளையும் பல பூட்டுகளுக்கு ஒரே சாவியையும் இடுப்பில் தொங்கவிட்டிருக்கிறது ஜீவிதம்
பூமியால் பூட்டப்பட்டிருக்கிறது
பிரபஞ்சத்தின் மூன்றாவது அறை
உள்பக்கமும் வெளிப்பக்கமும் என ஒரே சமயத்தில் பூட்டப்படுகின்றன மரணத்தின் கதவுகள்
யாராலும் தயாரிக்க முடியவில்லை காலத்தின் கள்ளச் சாவியை
மா. காளிதாஸ்
uDgi
. நான் அறியேன் அவர்களும் அறியார்
உணர்வதன் முன்பு
அதுவும் நிகழ்ந்தது.
மரணம்
காரணம் அற்றது நியாயம் அற்றது கோட்பாடுகளும் விழுமியங்களும் அவ்வவ்விடத்தே உறைந்துபோக
முடிவிலா அமைதி.
சேரன் அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 16
20
சாவதும் புதுவதன்றே
(9tupg
மரணம் ஒரு முத்தம் கனிகளிடம் இல்லாத சுவை அது மலஉகளிடம் இல்லாத ஸ்பரிசம் அது மரணம் ஒரு நிச்சயம் எந்தக் கோட்டைகளும் அதனிடம் வீழ்ச்சயடைந்துவிடும் எந்தக் கைகளாலும் அதைப்பறித்துவிட முடியாது யாராலும் அதை இழக்கவும் முடியாது.
மரணம் ஒரு தீர்க்கம் அதன் வலிமையை நீ யுணரவில்லை அதன் வருகையை நீ அறியவில்லை அது ஓய்வு மற்ற பறவை நம் தலைக்குமேலே எப்போதும் பறந்து கொண்டிருக்கிறது சிரிப்புடனும் நம்மைப்பற்றிய கழிவிரக்கத்தோடும்.
நான் அதன் முகத்துக்காக காத்திருக்கிறேன் அதன் ஸ்பரிசத்தை நோக்கிப் பயணிக்கின்றேன்
மரணத்தின் முத்தும் என் கனவு
அதன் ஸ்பரிசம் என் காதல்
கருணாகரன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

21 சாவதும் புதுவதன்றே
விட்டுச் செல்லும் இருப்பிடம்
தனியனின் அறை மணம் மழை இரவின் மரங்களின் முடிவற்ற உரையாடல் கழற்றிக் கொடுத்து விட்ட சுமைகளின் விலைகள் 6T6)6) TLD
உறைந்து போக
ஈரமெளனம் உரைக்கிறது மூளைச் செல்களுக்கு: கூரையற்ற நெடுந்தெருவை நோக்கிப்போ உனக்கே யென.
பிரம்மராஜன் சுடுகாடு நோக்கி.
நானே கை கொடுப்பேன் காப்பேன் என்று கூறிவிடு. அப்புறம் எல்லோர் கையிலும் திருவோடு தேவாரம் உரைக்கொத்துக்கள் குறிப்பேடுகள் மலர் மாலைகள் கொடி வரிசைகள் இறுதியாக சுடுகாட்டை நோக்கி அமைதியான சவங்களில்
ஊர்வலம்.
ஞானி அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 17
22
சாவதும் புதுவதன்றே
துள்ளி விளையாடும் மரணம்
எனது மரணம் இருக்க இருக்கப் பெருக்கிறது. சொற்ப காலத்திற்கு முன்னர்தான் என் கண்முன்னே தெரியத் தொடங்கிய அது. இப்போது
என் வாசலில் வால் முறுக்கிய ஒரு கன்றுக்குட்டியைப் போல் தினம் விளையாடிக் களிக்கிறது.
முதன் முதலாக என் கண்ணுக்குத் தெரியும் போது அது சிறு
எறும்பைப் போன்றுதான்
இருந்தது
அதன் வளர்ச்சி
மிகவும்
வேகமான ஒன்று !
இந்தக் குறுகிய காலத்திற்குள்
அது வளர்ந்திருக்கும் விதம்,
LI u II ħ 1:35 J Lib !
மண்ணின் ராசி அப்படி, கேட்டீரோ !
கடலும் சுருங்கி ஒரு போத்தலுக்குள், ஊற்றி
மேசையிலே வைக்கும் அளவுக்கு,
அச்சம் நிறைந்த என் தரையில்
மரணம்:
மாடு மாதிரி என்ன,
யானையைப் போன்றும் கொழுக்கும்.
என் மரணம் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன்
துள்ளி ஓடி வந்து
சற்று
விலகிக் கொண்டு போகிறதுளு
நான் இன்று - பாவமென்று நினைத்திருக்கும்!
சோலைக்கிளி
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

23 சாவதும் புதுவதன்றே
கன்னட வீரசைவ வசனங்கள்
யாருக்குத் தெரியும்? இது உடலின் உடலா?
உயிரின் உயிரா உணர்வின் உணர்வா?
இது தூரமானது, அண்மையானது, இங்கில்லை, அங்குண்டு.
என்று எண்ணி எண்ணி தமக்குள்ளேயே அவர்கள்
களைத்துப் போகிறார்கள்.
அல்லம்ம பிரபு
அதோ அவர்களைப் பார் நீர்க்குமிழி ஒன்றைப் பாதுகாக்க இரும்புச் சட்டகம் ஒன்றை ஆக்குகிறார்கள் சுறுசுறுப்பாக,
உடலின் உறுதியை நம்பாது வாழ,
அனைத்தும் வழங்கும் பிரபுவை வணங்கு.
பசவண்னா
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 18
24 சாவதும் புதுவதன்றே
நாளை வரவிருப்பது இன்றே வரட்டும்
இன்று வரவிருப்ப இப்பொழுதே வரட்டும்.
மல்லிகார்ஜினா இப்பொழுதுகளையும் அப்பொழுதுகளையும் எங்களுக்கு தராதே
மகாதேவியக்கா
மரத்து நெருப்பு மரத்தை எரித்தது போல நான் எரிந்தேன்.
பெருவெளிக் காற்று நறுமணம் நாசித்துளையை நிறைத்ததுபோல நான் நிறைந்தேன்.
மெழுகுப் பாவை தீக்கொழுந்தானது போல நான் தீக்கொழுந்தானேன்.
பிரபுவே நான் உம்மை வணங்கினேன்.
உலகத்தை இழந்தேன்.
அல்லம்ம பிரவு - தமிழில்: இ.கிருஸ்ணகுமார்
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

25 சாவதும் புதுவதன்றே
நிலையாமை
மகிழ்வோ, அல்லது வருந்துதலோ எதுவென்றாலும் ஒன்றேதான்! புறப்படும் பாதை அதனுக்கு இன்னும் திறந்தே இருக்கிறது! மனிதனின் நெருநல் எப்போதும் நாளை போன்று இருக்காது: வெறுமை பொறுத்துக் கொண்டிடலாம், ஆனால் அந்தோ, நிலையாமை
ஷெல்லி தமிழில்:இரா.சுப்பராயலு
அற்ப்பணஞ் செய்வனே
மரணமுன் சேவகன் வாசலில் நின்றான் தெரிவதறி யாதவத் தெண்கடல் தாண்டியே உன்னுடை யோலைகொண் டென்னிடம் வந்தான் இரவு கறுத்ததென் னுள்ளம் பயந்தேன் ஆயினென் னவனைநான் அன்புடன் வாவெனத் தீபமேந்தியே சென்று வணங்குவேன் வாயிலில் நிற்பதுன் சேவக னன்றோ ஏந்திய கையுடன் இருகண்ணிஉ மல்கவே போந்தவன் பாதத் துளஞ்சரண் வைத்தே அஞ்சலி செய்வேன் அவன்தொழில் முடிந்ததும் எஞ்சிட்ட வென்னைவிட் டேகுவன் காலையில் கருநிழல் மட்டுமென் கண்முன்னின் றிடுமே தனிமனை யிருந்துநான் உன்வர வெதிஉபா உத் தென்னையு முன்பதத் தர்ப்பணஞ் செய்வனே.
இரவீந்திரநாத் தாகூர் - தமிழில் சோ. நடராசா
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 19
26 சாவதும் புதுவதன்றே மணாளனென் கையது பிடித்து
மரணம்நீ யென்றன் வாழ்வின் நிறைவன்றோ மரணம் வாவெனக் கொன்றுரை காதினில் மரண மேயுனக் கேயிரவு பகல் திரணமா யின்ப துன்பங்கள் தாங்கினேன்.
அந்தரங் கத்தி லேயுனக் காகவென் சிந்தை யும்பொருளும்மற்று மாசையும் சொந்த மாகவெ லாமென தன்புமே தந்து வைத்தனன் இத்தனை நாளுமே.
கடைக்கண் ணாலொரு பாஉவை கடாட்சித்தால் கிடைத்த வாழ்விதென் சொந்தம தாக்குவேன் தொடுத்த கண்ணி மணாளனென் கையது பிடித்துச் சூட்டியுன் னோடிருள் போவனே.
இரவீந்திரநாத் தாகூர் - தமிழில் சோ. நடராசா
மரணத்தைப் பற்றிலியாரு கவிதை
வானுடன் கடல் இணையும் இடத்தில் ஒரு தேவ அமைதி ஒளிவிடுகிறது என் கண்ணிரையெல்லாம்
சுமந்து சென்றுவிட்டன
அலைகள். சீனக் கவிதை
தமிழில் - கல்பனா
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

27 சாவதும் புதுவதன்றே எனது வாழ்க்கை
எனது வாழ்க்கை திரும்ப வரப்போவதில்லை அது பாடல் அல்ல, நீ மறுபடியும் பாட எனவே ஒரு நாள் - விதியை ஏமாற்ற முடியாதென்பதால்
மரணத்தின் ஆளுகைக்குள் நானும் செல்ல வேண்டும். ஆனால் வாழும்போது நான் எது செய்த போதும்
நான் இறப்பதற்கு முன் வாழ்வை வேண்டுகிறேன். தண்ணிரைப் போல என்னை இருக்க விடு புயலான வானிலையை உணர்வதற்காக இரவு நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக உதயசூரியனை வாழ்த்துவதற்காக மகிழ்ச்சி என்னை அழைக்கவும், அற்புதமான உணர்வுகளைத் தடையின்றித் தரவும்
விரும்புகிறேன். மரணம் என்னை விடுதலை செய்யும் என்பது உண்மையானால் எப்படி நான் சிந்திக்கவும் வாழவும் அறியாமல் போவேன்.
லியோனிற்பட் வில் கோமிர்
சரி அப்புறம்
குழம்பிப் போகாதே ஒரே நேரத்தில் இரண்டு நகரங்களில் என்னைக் காண நேர்ந்தால் கிரெம்ளின் தொழுகையிடத்தில் கூட்டுத் தொழுகைப் பாடல்களைக் கேட்கையில் அல்லது நியூயார்க் விமானதளத்தில் நெருப்பில் வாட்டிய இறச்சியை உண்கையில் இரண்டு இடங்களிலும் நான் ஒரே மனிதன்தான் இது அபத்தமாய்த் தோன்றினாலும் நான் அதே மனிதன்தான்
நிக்கனார் பாரா
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 20
28 - சாவதும் புதுவதன்றே
மரணம் மட்டும்
மரணம் ஒசைக்குள் ஒடுங்குகிறது
பாதங்களற்ற ஒரு செருப்பு போல
உடுப்பவனில்லாத உடை போல
கல்லில்லாது, விரலுமில்லாது மோதிரம் போல
கதவைத் தட்டுகிறது மரணம்.
வாயில்லாத, நாக்கில்லாத, குரல்வளையுமில்லாது
அலறுகிறது மரணம்.
என்றும் அதன் காலடிகள் ஒலிக்கின்றன.
என்றும் அதன் உடைகள்
மரங்களைப் போல எதிரொலிக்கின்றன.
எனக்குத் தெரியாது. நான் ஒன்றுமறியாதவன்.
நான் சரியாகப் பார்க்கவில்லை
ஆனால் எனக்கு தோன்றுகின்றது
அதன் பாடல்களுக்கு நனைந்த ஊதா மலர்களின் நிறம்
பூமிக்கு இணக்கமான ஊதா மலர்களின் நிறம்
இருப்பினும் மரணத்தின் முகம் பச்சை இருப்பினும் மரணத்தின் பார்வையும் பச்சை ஊதா மலர்களின் இலையின் ஈரம் பதிந்திருக்கின்றது குளிர்காலத்தில் கம்பீர நிறம் மரணம் ஒரு துடைப்பத்தின் மீது சவாரி செய்து பூமி எங்கும் போகிறது பிணங்களைத் தேடி நிலத்தை நக்குகிற துடைப்பம் மரணம் துடைப்பத்திலிருக்கிறது அது இறந்தவர்களைத் தேடுகிறது மரணம் நமது கட்டில்களில் கிடக்கிறது சோம்பற் படுக்கைகளில் கறுப்புப் போர்வைகளில் நீட்டி நிமிர்ந்து வாழ்கிறது பின்பு திடீரென்று முழங்குகிறது பிறகு படுக்கைகள் ஒரு துறைமுகம் நோக்கி மிதந்து போகின்றது அங்கே மரணம் காத்துக் கொண்டிருக்கிறது ஒரு படைத்தலைவனின் உடைகளை அணிந்து
பாப்லோ நெரூதா - தமிழில் சுகுமாரன்
அமரர் குணரைத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

29
சாவதும் புதுவதன்றே
மரண சகி
எனது சத்தியங்களையெல்லாம் உன்மீதான காதல் தோற்கடித்தது. இரவு நீண்டுதொடர்ந்து பின்னர் விடிகையில் எனக்கான கதிர்களைச் சுமந்து நீ வருவையாயின் என் வாழ்வு பூரணமெய்தும். காத்திருத்தல் - உனக்காகவே. காற்றைப்போல நேசமானவளே! சகியே! புலப்படா வருகையே நின் மென்மையின் வலிமை இரவின் கணமெலாம் பகலின் கணமெலாம் நின் வருகைப் பொழுதொன்றிகாய் காலமீதிலே கண்களால் அமர்கிறேன். சகியே!
வருவாய் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆனால் எப்போதென்பதே தெரியாது.
செ. சுதர்சன்.
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 21
30 சாவதும் புதுவதன்றே
மரணச் சடங்கு
அதுவே இரவின் ஆழ் உறைவாகும் இருளும் அதுவேயாகும்.
அந்த மனிதன் உண்பான், உறங்குவான், இறந்திடுவான் ஆழ உறைந்து போவான்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும்
இருளும் அதுவேயாகும்.
கபொன் பிக்மி நாட்டார் பாடல் - தமிழில் எண். சண்முகலிங்கன்
தரப்பட்டுள்ள அவகாசம்
சர்வத்தையும் காற்றுத் தழுவுகிறபோது எழும் சுகத்தை யார் தருவர் r. பெருவெளியில் சஞ்சரிப்பதே சுதந்திர (Մ)(ԼՔ60)LD அதனால்தான் சுமைகள் தவிர்த்துக் கட்டுக்களை விடுவிக்கத் துடிக்கிறேன் விழுதல் தொடர்ந்து நேரிடினும் மூச்சை இழக்கத் தரப்பட்டுள்ள அவகாசத்தை முயல்தலுக்கே தந்துவிடுகிறேன்.
ஜபார்
- அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு .

31 சாவதும் புதுவதன்றே
நீஏதாவது செய்துகொண்டிருக்கும்போது
நீ ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது யாராவது ஒருவன் இறந்துகொண்டிருக்கிறான். உன்பாதணிகளை நீ பிரகாசிக்கச் செய்யும்போது, நீ வெறுக்கும்போது, ஓர் அழகிய கடிதத்தை உன்னுடைய ஒரே அல்லது ஒன்றேயல்லாத காதலிக்கு எழுதும்போது யாராவது ஒருவன் இறந்துகொண்டிருக்கிறான். ஏல்லா மூலைகளையும் திரட்டவும், ஆவரை வெறுத்துப் பார்க்காமலிருக்கவும் ஆன வீண் முயற்சியில் ஒன்றுமே செய்யாமல் நீ சாதனை புரிந்தாலும் யாராவது ஒருவன் இறந்துகொண்டிருக்கிறான். பிரத்யேகமான ஒரு நிமிடத்தில் இறக்கவேண்டும் என்ற உன் நியாயமான ஆசையையும்மீறி வேறொருவனும் இறந்துகொண்டிருப்பான் நீயே இறந்து கொண்டிருக்கும்போது. எனவே, உலகத்தைப் பற்றி உன்னைக் கேட்டால்
சுருக்கமாகச் சொல். யாராவது ஒருவன் இறந்துகொண்டிருக்கிறான்.
ராபர்டோ ஜீவாரோஸ் தமிழில்: ஆர். சிவகுமார்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 22
32 சாவதும் புதுவதன்றே
மரணம் பற்றிய சுருக்கமான பிரதிபலிப்புக்கள்
இன்னும் பிறக்காதது போலவே பலர் செயல்படுகிறார்கள். இருந்தாலும் இடையில் வில்லியம் பர்ரோஸ், மரணத்துக்குப்பின் உள்ள வாழ்வில் நம்பிக்கை உண்டா என அவரிடம் ஒரு மாணவன் கேட்டபோது பதிலளித்தார்: அது சரி, நீ இன்னும் இறக்கவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்?
மிராஸ்லாவ் ஹோலுப் தமிழில்: பிரம்மராஜன்
சாவும் தீயும்
எனக்குப் பதிலாக சாவதற்கு ஒருவருமில்லை ஆகவே நானே சாகவேண்டும் வேறு எவரின் எலும்புகளுமில்லை நான் என்னுடையதேயான எலும்புகாளாய் ஆவேன்
(8ਲT85Lib
நதியின் வழிந்தோட்டம் மனிதர்களின் வம்பளப்பு காலைப்பனியில் நனைந்திருக்கும் ஒரு சிலந்திவலை இதில் எது ஒன்றையும் என்னுடன் நான் எடுத்துச்செல்ல முடியாது வேண்டுமானால் நான் விரும்பும் ஒரு பாடல் எனக்கு அளிக்கப்படும் கேட்கப்படும் பொருட்டு எனது எலும்புக் காதுகளால்
ஷன் டாரோ தனிக்காவோ தமிழில்: பிரம்மராஜன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

33 சாவதும் புதுவதன்றே நினைவு
இந்தக் கணத்தில் பிரபஞ்சத்தில் யாரும் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது நான் ஒருவனே என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் இப்போது நான் இறக்கவேண்டியிருந்தால் கூட யாரும், நானேசுவட, என்னை நினைக்கமாட்டார்கள் இங்குதான் படுபாதாளம் துவங்குகிறது நான் தூங்கப் போகும்போது நிகழ்வது போல. எனக்கு நானே ஆதரவு. அதை என்னிலிருந்து விலக்குகிறேன். எல்லாவற்றையும் என் இயலாமையால் மூடி மறைக்கிறேன். இதனால்தான் யாரைப்பற்றியாவது நீங்கள் நினைக்கும்போது அவனைக் காப்பாற்றுவதுபோல் ஆகிறது
ராபர்டோ ஜீவாரோஸ் தமிழில்: ஆர். சிவகுமார்
வருதல் கனவு காண்கிறேன் ஒரு பிற்பகலின் குறுகலான பாதி ஒளியில் செத்துக் கிடக்கிறது வருடம் பத்துவருட நினைவுகள் அலைநிலத் தொடுவானத்தின் ஒரம் இறந்த கிராமத்தவர்களின் ஊர்வலத்தைப்போல பொய்ப்படிமங்களில் தோய்க்கப்பட்ட அதே சூரியன்தான், மறைவான ஆவிகளால் உறிஞ்சப்பட்ட அதே வானம்தான், இறந்தவர்களோடு கணக்கு வைத்திருக்கிறவர்களால் அஞ்சப்படுகிற அதே வானம்தான் பார் எப்படி வருகிறார்கள் என, என்னிடத்தில் என்னுடைய இறந்தவர்கள்.
எல்.எஸ்.செங்கோர் தமிழில்: நாகூர் ரூமி
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 23
34 சாவதும் புதுவதன்றே
எதுவும் இல்லை
சுவர்களில்
கடிகாரங்கள் இல்லை
காலமும் இல்லை!
தரையின் குறுக்காக
விடியல்முதல் அந்திவரை
எந்த நிழலும் இல்லை.
கதவுக்கு வெளியே
இருளும் இல்லை
ஒளியில் இல்லை. ஒ!
கதவும் இல்லை!
வாழ்வதும்
சாவதும் பற்றி நான் வியப்பது வழக்கம்
வித்தியாசம்
புன்னகைக்கும்
கண்ணிருக்கும் இடையேதான்
என்று நினைக்கிறேன்
இங்கு.
அங்கு. என்றெல்லாம்
சொல்வது பற்றி நான் வியப்பது வழக்கம்
எங்கும் அவற்றுக்கு இடையே தூரம் என்பது
இல்லை என்றே நான் நினைக்கிறேன்
வாங்ஸ்டன் ஹற்பூக்ஸ் தமிழில்: தமிழன்பன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

35
அமைதி
மெளனப் பாடம் வண்ணத்துப் பூச்சியொன்று கொஞ்சம் வேகமாய் இறக்கை மடக்க நேர்ந்த போதெல்லாம் ஒரு குரல் எழுந்தது: ஸைலன்ஸ் ப்ளீஸ்! திடுக்கிட்ட பற்வையின் ஒரேயோர் இறகுமட்டும் சிலுப்பப்பட்ட போதெல்லாம் ஒரு குரல் எழுந்தது: 'ஸைலன்ஸ் ப்ளீஸ் சப்தமின்றி எப்படி நடப்பதென இந்தமாதிரித்தான் கற்பிக்கப்பட்டனர்! யானை தன் முரசின் மீது மனிதன் தன் மண்ணின் மீது ஊமைகளாய் நிலங்களுக்கு மேலே மரங்கள் எழுந்துகொண்டிருந்தன பயந்து நடுங்குபவனின் மயிர்கள் எழுவதுபோல்
சாவதும் புதுவதன்றே
டிமோத்யூஸ் அக்கிரிப் போவிச்
தமிழில்: இக்பால்
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 24
36 சாவதும் புதுவதன்றே
காயம்பட்ட ரோஜாவுக்குக் களிம்பு தேடி
ஓ! தோழனே! மக்கள் விழித்தெழுந்த கதையைச்சொல் தூக்கம் தரும் ஜாம்ஷெட், அலெச்சாந்தர் கதைகளில் இன்னும் எத்தனை காலம் ஏமாந்து கிடப்பாய்? பூட்டிய தளைகள் அத்தனையையும் மனித இயற்கை பொடிப்பொடியாய் நொறுக்கிவிட்டது இழந்த சுவர்க்கத்தை எண்ணி இன்னும் எத்தனை காலம் ஆதாம் வழிகள் நீரைப் பொழியும்? இன்றின் கர்ப்பத்திலிருந்து புதிய சூரியன் பிறந்துவிட்டான் முழுகிப்போன நட்சத்திரங்களை எண்ணி இன்னும் எத்தனை காலம் ஆகாயம் துக்கம் அனுசரிக்கும்? பறக்க வேட்கை படைத்தவர்கள் நதிகளையே ஒப்புவதில்லைஷ உனது ஆற்றல்களை உணராது எத்தனை காலம் பனித்துளிகளைச் சட்டைப்பையில் நிரப்பிக்கொண்டிருப்பாய்? பூக்களும் கனிகளும் கொண்டுவரும் வசந்த அலை காத்திருக்கும் தோட்டகாரனிடம் கேட்கும்: "காயம்பட்ட ரோஜாவுக்குக் களிம்பு தேடி எத்தனை காலம் இன்னும் அலைவாய்?
இக்பால் தமிழில்: தமிழன்பன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

37 சாவதும் புதுவதன்றே
புன்னகை புரிபவன் யான்
அஞ்சியவர்க்குச் சத மரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவர் என்றறிந்தும் சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை புரிபவன் யான்
ஷேக்ஸ்பியர்.
தமிழில் - சுவாமி விபுலானந்தர்.
புல்லின் இதழ்களிலிருந்து.
இவையாவும் உண்மையாகவே ஏல்லா காலங்களிலும் எல்லா நாட்டிலுமுள்ள இவை எல்லாமே, என்னிடமுள்ள சுயமான சிந்தனைகளல்ல ஏன்னுடையவை போலவே இவ்வெண்ணங்கள் யாவும் ஊங்களுடையவையாக இல்லாமற்போகுமானால் இவை பயன் அற்றனவே ஆல்லது அவற்றோடு வைத்தெண்ணத்தக்கனவே இவையாவுமே ஒரு புதிராகவும் புதிரை விடுவிக்கும் விடையாகவும் இல்லையெனில் பயனற்றளவே! இவை தொலைவிலிருப்பது போலவே அண்மையிலும் இல்லையெனில்
பயனற்றவையே இது நிலமும் நீரும் எங்கெங்கே உண்டோ அங்கெல்லாம் விளைகின்ற பசும்புல் இதுவே பூமிக் கோளத்தினைக் குளிப்பாட்டுகின்ற பொதுக்காற்று
வால்ட் விட்மன் தமிழில்: நலங்கிள்ளி - அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 25
38 சாவதும் புதுவதன்றே
அன்னாவின் கவிதையிலிருந்து
தீனமானது எனது குரல் நலிவடையவில்லை எனது சித்தம் அன்பு இல்லாமல் இருப்பது என் நிம்மதியை கூட்டத்தான் செய்கிறது நெடியவானம், மலைக்காற்று வீசுகிறது என் எண்ணங்களோ களங்கமற்றவை உறக்கமின்மை என்றகாதி எங்கோ போய்விட்டாள் சாம்பலாய் எரிந்தவற்றை எண்ணி நான் உருகுவது இல்லை மணிக்கூண்டிலுள்ள அந்தக் கோணலான கரம் ஒரு நஞ்சு தோய்ந்த அம்பாக இனி தோன்றுவதில்லை இதயத்தின் மீதான கடந்தகாலத்தின் பிடிப்புதான் எவ்வளவு நகர்ந்துவிட்டது! ஆண்மித்துவிட்டது சுதந்திரம் அனைத்தையும் நான் மன்னிப்பேன், வுசந்தகால மழையில் நனைந்த பாசியின்மீது ஓடிவிளையாடும் ஒளியை இரசித்தவாறே
அன்னா அக்மதோவா
- தமிழில் - எஸ்.வி.ராஜதுரை அன்னாவின் கவிதையிலிருந்து
எப்படியும் நீ வருவாய்
இப்போது ஏன் வரக்கூடாது?
உனக்காகக் காத்திருப்பது
எனக்கு மிகவும் கடினமாக உள்ளது நான் விளக்கை அணைத்து விட்டு எளிமையான அற்புதமான உனக்காகக் கதவைத் திறந்து வைத்திருக்கிறேன் எந்தவடிவத்தை வேண்டுமானாலும்
நீ மேற்கொள்ளலாம். அன்னா அக்மதோவா
தமிழில் - எஸ்.வி.ராஜதுரை
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

39 - சாவதும் புதுவதன்றே
வெண்ணிறத்தில் ஒரு தோற்றம்
சாவதே மேல். நான் உடலைச் சாய்க்கிறேன். எண்கண்களை முடுகிறேன். பாராட்டுகின்றனர் பெரும் தேவதூதர்கள்
பெர்டோல் ப்ரக்ட் தமிழில் பிரம்மராஜன்
மரணத்தின் விபர்லின் நடனம்
நகரங்கள் சூழ்ந்திராத கல்லறைகள் காட்டுகின்றன ஒருவித மட்டுமீறிய பெருக்கத்தை நிலக்காட்சியில் அங்கே பொருத்தப்பட்டு நிரூபிக்கின்றன அவை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும் மரணத்தை என்று: நம் அண்டைப் புறத்தை இட்டு நிரப்புமளவிற்குப் போதுமான சவங்கள் நம்மிடம் இருக்கின்றன. மேலும் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதை விட காற்றின் அலைவில் சிறு முடிக்கற்றைகள் படபடக்கும் வெளுக்கப்பட்ட எலும்பு அடுக்குகள் கொண்டு போர்த்திவிடாமல் நாம் புவி முழுவதையும்: மறக்கப்பட்ட நீதியின் திசையில் பிரபஞ்சத்தினூடே நாம் மேற்கொள்ளும் பயணத்தில் நீதியின் முன் நாம் பரப்பி வைப்போம் நம் எலும்புகளை, கருணைப் பிச்சை கேட்டு.
குந்தர் கூநர்ட்
தமிழில் பிரம்மராஜன்
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 26
40 சாவதும் புதுவதன்றே மரணத்தின் ஃபியுக் இசை
அவன் கத்துகிறான் இன்னும் இனிமையாய் வாசியுங்கள்
மரணத்தின் இசையை
மரணம் வருகிறது
ஒரு எஜமானனைப் போல
ஜெர்மனியிலிருந்து
அவன் கத்துகிறான் தந்திகளை அழுத்தமாய் மீட்டுங்கள்
மேலும் புகையைப் போல விண்ணுக்கு உயர்வீர்கள்
பிறகு மேகங்களில் உங்களுக்கு ஒரு சவக்குழி இருக்கும்
பால் ஸெலாண் தமிழில் பிரம்மராஜன்
எங்கள் பயம்
6TIElassт шu II b ஒரு இறந்த மனிதனின் முகத்துடனிருப்பதில்லை இறந்தவர்கள் எங்களுடன் இதமாய் இருக்கிறார்கள் அவர்களை எங்கள் தோள்மீது சுமந்து செல்கிறோம் அதே போர்வைக்குள் உறங்குகிறோம் அவர்களின் கண்களை மூடுகிறோம் உதடுகளைச் சரியாக வைக்கிறோம் உலர்ந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் அதில் புதைக்கிறோம் மிகவும் ஆழமாகவும் இல்லாமல் மிகவும் மேலோட்டமாகவும் இல்லாமல்.
ஸ்பிக் நியூ ஹெர்பர்ட் தமிழில் பிரம்மராஜன்
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

4. சாவதும் புதுவதன்றே
மரணம்
"தோற்றுவிக்க வேண்டும் கடவுளரை நாம்,
கோல்ல வேண்டும் கடவுளரை நாம் இல்லை இறந்தொழிய வேண்டும்" தொலைந்து போன கற்கள் கிசுகிசுக்கின்றன தம் இழந்த ராஜ்யத்தில்
அடோனிஸ்
இல்லை என்றால் இறந்தொழிய வேண்டும்.
தமிழில் எதிராஜ் அகிலன்
வெளிச்ச நிழல்
ஒரு நுண்ணிய மரணம் தன் முதலடிகளைப் பயில்கிறாள் விரைந்து மலர்கிறாள்
வளர்கிறாள் இரவில் அவள் சாய்ந்துகொள்கிறாள் என் மார்பின்மீது உதடுகளின்மீது கறுப்புப் பாறையில் செதுக்கிய ஒரு கடல் போல
நீ வீறிட்டலறினாய் இரவில் என் மனைவி சொல்கிறாள் பயங்கரமாய் பீதியடையும்படி
அது மரணம்தான் நான் உயிருடன் இருக்கும்போதே எனக்குள் பாதைகளைச் செதுக்கிக்கொண்டிருக்கிறது.
ததயுஸ் ரோஸ்விட்ச்ட்
தமிழில் பிரம்மராஜன்
- அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 27
42 சாவதும் புதுவதன்றே அவர்கள் அருகருகாய் இறந்தவிகாண்டிருந்தார்கள்
அவர்கள் மரணத்தோடு போராடினார்கள்
வியர்வை பெருக,
அவர்கள் அருகருகாய் இறந்துபோனார்கள்
ஒருவரையொருவர் ஒரு சிறிதும் பார்க்காமல்
அன்னா ஸ்விர்ஸைனிஸ்கா தமிழில் லதா ராமகிருஷ்ணன்
அவன் போய்விட்டான் மரணத்தின் விரல் என்னைத் தீண்டியது. உலகம் என்மீது உருண்டு விழுந்தது. நான் அந்த இடிபாடுகளின் அடியில் கிடக்கிறேன். என் மனதிற்கு மிகவும் நெருங்கியவன் வருகிறான் ஒரு கணம் பார்க்கிறான். ஒன்றும் புரிவதில்லை அவனுக்கு.
போகிறான்.
அவன் மென் மனம் படைத்தவன். மற்றவர்களை ஆறுதல்படுத்தச் சென்றிருக்கிறான்
அன்னா ஸ்விர்ஸைனிஸ்கா தமிழில் லதா ராமகிருஷ்ணன் வரைபடம்
என் புலன்களாலும் ஐந்து கண்டங்களாலும் தினமும் இரண்டு வட்டங்கள் வரைகிறேன்: சூரியனைச் சுற்றி ஒரு குடைராட்டினச் சுற்று மற்றும் மரணத்தின் குடைராட்டினமும். ஏறக்குறைய இதுதான் என் உலகின் வரைபடம் இன்னும் சிறிது நேரம் உங்கள் கண் முன்னால் இது விரிந்திருக்கும். மாரின் ஸோரெஸ்க்யூ
தமிழில் ஆனந்
- அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

43 சாவதும் புதுவதன்றே
மரண முகமூடிக்கு
உன்னுடைய தூக்கத்தின் குழந்தை நீ
அதனால் தூக்கமில்லாதிருக்கின்றாய்,
உனக்காகக் கண்ணாடி மலைச்சரிவில் திரிபவர்கள்
ஒருபோதும் இளைப்பாறுகிறதில்லை,
பறவைக்கு
ஒருபோதும் தன் கூட்டுக்குத் திரும்பிச் செல்ல
வழி தெரிகிறதில்லை,
இறைவணக்கம் பொறித்த சூழல் சக்கரத்தைச் சுழற்றும் காற்று
உன் சொற்களை,
உன்னை விழித்திருக்கச் செய்யும்
தடையில்லாத் தாலாட்டில்,
திரும்பத் திரும்பக் கூறுகிறது.
கனவு காண்பவர்கள் விழித்தெழுந்து
புகுந்து செல்லும் வழியில்
பதிக்கப்பட்ட வாயில் போல்
நீ இருக்கிறாய். ஆனால் அதன் வழியாய்
நீ செல்ல ஒரு போதும் அனுமதிக்கப்படுவதில்லை.
உறங்குபவர்களின் குழந்தை நீ
அவர்கள் பொருட்டு நிரந்தரமாய் நீ உறங்காதிருக்கிறாய்.
ஹைன்ரிக் நார் பிராண்ட் தமிழில் மே. சு. இராமசுவாமி
அமரர் குணரெத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 28
44 - சாவதும் புதுவதன்றே மரணத்தின் மரம் பிடித்திருக்கிறது மரணத்தின் கூட்டினை
மரணத்தின் மரம் பிடித்திருக்கிறது மரணத்தின் கூட்டினை
ஆனால் எந்தப் பறவையும் இல்லை அதில்
பிற சமயங்களில்
எதையும் வரையாத கை
தானே மாறுகிறது
ஒரு கூடுதல் அதிகப் படிமமாய்
ஒரு பறவையின் வடிவில்
ஒரு மரத்தின் வடிவில்
ஒரு கூட்டின் வடிவில்
பிறகு, அதற்கு பிறகுதான்,
எதுவுமே குறைபடுவதில்லை,
எதுவுமே மிச்சம் விடப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக:
இரு பறவைகள்
வாழ்வின் கூட்டினில் இடம்பிடித்துள்ளன.
மரணத்தின் மரத்தில்
அல்லது வாழ்வின் மரம்
இரண்டு கூடுகளைக் கொண்டிருக்கிறது
அவற்றினுள் ஒரே ஒரு பறவை மட்டும்
அல்லது ஒற்றைப் பறவை
வாழ்கிறது ஒரு கூட்டினுள்
வாழ்வின் மரத்தில் மேல்
மற்றும் மரணத்தின் மரத்தில் மேல்
ராபர்டோ யூவாரோஸ் தமிழில் பிரம்மராஜன்
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

சாவதும் புதுவதன்றே
45
çų911@TI@soọ1911@838与9冯丕 199 TJ90909) 1991(9Q9ĐU9|(9GIGÍTÍTnoco9fgjqi
| qī£09@smogooof¡IGT十 Ússions@) giorgis?Q9@1091149) (ĴGIR@) glosglę09@GICŨg)Ųı (ų9Ų9ī£) UĵL9ĐƯ9rnos 9 + glossus?Q9@GIĶĒ (ĝ9qIssog) upo9II19ņoto + glossus?Q9@gusēqī£191.91009@ sosiosmoCQ91ĝIGT + glossuņ91009@之 之Į(9ņ1993)ņJoã gọ09qsoi十 十quos@@1(91009@ LimoCQ9đfio
[Ĵísto11.gqísto
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு

Page 29
46 சாவதும் புதுவதன்றே
நன்றிகள்
எங்கள் குடும்பத் தலைவரின் மறைவுச்செய்தி கேட்டு உடன் வந்து உதவியவர்களுக்கும் தொலைபேசி வாயிலாகவும் நேரிலே வந்தும் ஆறுதல் கூறியோருக்கும் மரணச் சடங்கில் இருந்து இறுதி ஊர்வலம்வரை கலந்துகொண்டோருக்கும் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டோருக்கும் ஆலயம், கல்வி நிலையம், சமூக நிறுவனங்கள் என்பவற்றைச் சார்ந்தோருக்கும் கம்பர்மலை வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் முதலியோருக்கும் அமரரின் அந்தியேட்டிக் கிரியைகளிலும் சபிண்டீகரண நிகழ்விலும் கலந்துகொண்டோருக்கும் குறுகிய காலத்தில் பயன்மிக்க இந்நூலை தனது வேலைப்பழுவின் மத்தியிலும் ஆக்கித் தந்த தொகுப்பாசிரியருக்கும் இம் மலரை அழகுற அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் மற்றும் பல வழிகளில் உதவிய அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள்.
- குடும்பத்தினர் -
X ീ%- േ
அமரர் குணவரத்தினம் குணசிங்கம் நினைவு வெளியீடு


Page 30
சாவதும் புதுவதன்ே
அமரர் குனரெத்தினம் குணசி மலரும் பயன்மிகு தொகுப்பே இந் இயற்கையின் நியதி வைத்து DIT GODIGODOVINE, G3, ilioji, gloi Ib/60Ա9 க்கும் மற்றோர்க்கும் பெரிதும் ப பாதுகாக்கத்தக்கது. அன்பால் இறையடி சேர்ந்த அமரரின் நி உலகில் உயர்ந்த தத்துவமாம்
எழுத்துகளே சாவதும் புதுவதன்
 

ன்பெறும் இந்நூல் பேணி ண்பால் வாழ்வை நிறைத்து னைவாய்த் தொகுப்பாகும் potiö- பற்றிய உயரி
ப் பூடாய் புழுவாய் மரமாகிப்
நகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களம்
ராகி முனிவராய்த் தேவராய்ச் அ நின்ற இத்தாவர சங்கமத்துள் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
திருவாசகம் - சிவபுராணம்