கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்ச் செல்வம்

Page 1


Page 2


Page 3

தமிழ்ச் செல்வம்
இலக்கியக் கட்டுரைகள்)
புலவர் ம.பார்வதிநாதசிவம்
லுெளியீடு பரமேஸ்வரி பதிப்பகம், மயிலங்கடல், இளவாலை,

Page 4
தலைப்பு -
ஆசிரியர்
ബൈബിu്
2-flooDLD
666OD6D
அச்சிட்டோர் :
Title
Subject
Author
Copy Right :
First Edition:
Page
Price
Printed by
தமிழ்ச்செல்வம் (இலக்கியக் கட்டுரைகள்)
புலவர் ம.பார்வதிநாதசிவம்
பரமேஸ்வரி பதிப்பகம், மயிலங்கூடல், இளவாலை.
பாரதி சேந்தனார், மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி,
475/-
கரிகணன் பிறிண்டேர்ஸ்,
காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
: THAMIL CHIELVAM
: Collection of literary articles
: Pulavar M.Parvathinathasivam
Parathy Senthanar, Mahalingasivam, Ilango, Palamurali
March 2008
: xii -- 172
: 475/-
: Harikanan printers,
K.K.S. Road, Jaffna.

UFDif JU600lb
உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையின் கல்வி மரபில் வந்து, நாவலர் நெறிநின்று. தமிழ், சைவம் வளர்த்த தமிழ்மலை, இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்குச் 8FL Driftiau 600TLib.

Page 5

அணிந்துரை
ஈழத்தின் மரபுவழித் தமிழ்ப் புலமையின் அடையாளமாக எம்மிடையே வாழ்ந்து வரும் முதுபெரும் தமிழ்ப் பேரறிஞர் புலவர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம் அவர்களுடைய "தமிழ்ச்செல்வம்" என்ற நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறேன்.
சொல்லுக்கும் செயலுக்குமிடையே பாரிய இடைவெளியை விட்டு, போலியாக நடித்துத் திரியும் கற்ற கயவருக்குள்ளே சத்தியமாய் வாழ்ந்து பிறருக்கெல்லாம் ஒரு உதாரணபுருஷனாக வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் மனிதனுடைய கனதியான படைப்பிற்கு அணிந்துரை வழங்குவது பெருமைப்படவேண்டிய விடயம்.
புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள் ஈழத்தின் வளமானதொரு இலக்கியப் பாரம்பரியத்தினுடாக வந்தவர். உரையாசிரியர் என்ற பட்டத்தினை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை அவர்களிடம் பெற்றவரும், நாவலரின் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை யாசிரியராக விளங்கியவரும் நாவலரின் தலைமாணாக் கருள் ஒருவருமான மட்டுவில் க.வேற்பிள்ளை அவர்களின் வாரிசாக வந்தவர் புலவர்.
புலவர் அவர்களின் தந்தையார் ‘குருகவி' மகாலிங்கசிவம் அவர்கள் தமது கவித்துவ ஆற்றலால்
V

Page 6
ஈழத்து இலக்கியப்பரப்பில் இன்று வரை நினைவில் கொள்ளப்படுபவர். இவ்வாறான ஒரு புலமைச் சூழலில் வந்தவரான பார்வதிநாதசிவம் அவர்கள் சிறுவயதிலேயே தமிழ் இலக்கியம், இலக்கணங்களையெல்லாம் மரபுவழித் தமிழறிஞர்களிடம் துறைபோகக் கற்றுத் தெளிந்தவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதுபெரும் பேரறிஞர்களான மு.அருணாசலம்பிள்ளை, தண்டபாணி தேசிகர் முதலானோரிடமும் கற்ற பெருமைக்குரியவர். அது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிக் கணிப்புக்குரிய பல நூற்றுக்கணக்கான கவிதை களைத் தமிழுலகுக்கு வழங்கிய கவிஞரும் கூட. இவ்வா றான பல்வேறு விதமான புலமைப் பின்னணிகளிருந்தும் அடக்கமே உருவாக, சாதாரண துவிச்சக்கர வண்டியில் பிறரை வருத்தாத சீவியம் நடத்தும் ஒரு கருமயோகி. கல்வி என்பது பெரிய அறிவு மூட்டையைச் சுமப்பது அல்ல. பண்போடு வாழ்வதுதான் கல்வி என்பதன் இலக்கணமாக வாழ்ந்துவரும் மனித உன்னதம். இவ்வாறான பல்வேறு சிறப்புக்களுக்கெல்லாம் உரியவரான புலவர் பார்வதி நாதசிவம் அவர்களுடைய பல்வேறு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கவிதைத் தொகுதிகள். புலவரவர்கள் கவிதைகள் மட்டுமல்லாது காத்திரமான பல்வேறு இலக்கியக் கட்டுரைகளையும் அவ்வப்போது பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் ஆண்டு மலர்களிலும் எழுதி வந்துள்ளார்கள். அவ்வாறு வந்தவற்றுள் சிலகட்டுரைகள் தொகுக்கப்பட்டு "தமிழ்ச்செல்வமாக"நூலுருப்பெற்றுள்ளன.
Vi

புலவர் பார்வதிநாதசிவம் அவர்களைச் சிறந்த ஒரு கவிஞராகவே பெரிதும் பார்த்திருந்தவர்களுக்குத் "தமிழ்ச் செல்வம்" என்ற இந்நூல் அவர் ஒரு சிறந்த கட்டுரையாளர், சிந்தனாவாதி என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது. மரபு வழித் தமிழிலக்கியங்களில் ஆழ்ந்த புலமைப்பரிச்சயம் உடையவரான புலவர், அவ்விலக்கியங் களினூடே அறியவரும் அரும்பெரும் கருத்துக்களை யெல்லாம் இந்நூலில், இன்றைய இளந்தலைமுறையினரும் கவனத்தைக் குவித்துப் படிக்கும்படி மிகவும் எளிமைப் படுத்தித் தந்துள்ளார்கள். இக்கட்டுரைகளினூடே பண்டைத் தமிழர்தம் வீரம், காதல், உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு அமிசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. கூடவே இனப்பற்று மற்றும் பொழிப்பற்றையும் இவை ஊட்டுவனவாக அமைந்துள்ளன.
புலவரின் கட்டுரைகளைக் கருத்தூன்றிப் படிப்பவர்கள் அவற்றால் உந்தப்பட்டு மூலநூல்களை நாடிச் செல்வர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமேயில்லை. சங்க இலக்கியங்கள் குறித்த பயிற்சி வேகமாகக் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் புலவரின் "தமிழ்ச்செல்வம்" என்ற நூல் காலத்தின் தேவை எனில் அது மிகையாகாது.
நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் அனைத்தும் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியவை. இக்கட்டுரைகள் எல்லாம் காலவெள்ளத்தில்
vii

Page 7
அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளுண்டு போகக் கூடாது என்ற நினைப்பின் விளைவே இந்நூல்.
புலவரின் நட்பு எனக்குக் கிடைத்ததை வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறாகவே நான் கருதுகிறேன். என்னையும் தமது பிள்ளைகளில் ஒருவரைப் போலவே வாஞ்சையுடன் நடத்தி வரும் புலவரின் அன்பு உருக்கத்தில் நான் பலதடவைகள் என்னை மறந்திருக்கிறேன். புலவரின் பிள்ளைகளான மகாலிங்க சிவம், இளங்கோ, பாலமுரளி ஆகியோர் எனது மாணாக் கர்கள். புலவரைப் போலவே அறிவிலும் அடக்கத்திலும் பிறருக்கு உதாரணமாக விளங்கிவருபவர்கள் இவர்கள்.
தமது தள்ளாத வயதிலும் தன்னலம் கருதாது தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் புலவரின் பண்பை வியந்து போற்றுகிறேன். புலவரின் பிற கட்டுரைகளும் நூலுருவம் பெறவேண்டும் என்பது எனது பெருவிருப்பு. அதுவும் ஈடேறும். புலவர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம் அவர்கள் வாழும் காலத்தில் வாழ்ந்தோம் அவருடன் நட்புக் கொண்டிருந்தோம் என்பதே ஒரு பெரிய விடயம்.
கலாநிதி கி.விசாகரூபன், முதுநிலை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
viii

முன்னுரை
உலக முதன்மொழி தமிழே என்று சான்றுகளுடன் நிறுவினார் பன்மொழிப்புலவர் தேவநேயப்பாவாணர் அவர்கள். உலக முதல் மொழியாய தமிழில் எண்ணற்ற
செல்வங்கள் உள்ளன.
சங்கத்தமிழும், வள்ளுவர் தமிழும் தமிழின் தலையாய செல்வங்கள். இச் செல்வங்களைக் காலத்துக்கேற்ற இலகு நடையில் இக்கால இளையோர்க்கு வழங்க வேண்டியது தமிழறிந்தோர்க்கெல்லாம் கடனாகும். அக்கடனை நிறைவேற்றும் ஆர்வத்தின் விளைவே தமிழ்ச்செல்வம் என்னும் இந்நூல்.
தமிழ்ச்செல்வம் என்னும் இந்நூல் தமிழின் பெருமையை விளக்குகிறது. தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, காதலை, வீரத்தை விளக்குகின்றது. தமிழ் இனப்பற்றையும் தமிழ்மொழிப்பற்றையும் கற்போர்க்கு ஊட்டுகின்றது.
கைம்மாறு கருதாது தமிழ்ப் பணிபுரியும் தமிழ் அறிஞர்கள் நம் மத்தியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பது; நமக்கெல்லாம் பயன் தருவது. அத்தகைய
அறிஞர்களுள் என் பேரன்புக்கும், பெருமதிப்புக்கும் உரிய
iX

Page 8
கலாநிதி கி.விசாகரூபன் (முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்) அவர்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாக இந்நூலை வெளியிடு கின்றார். அவருடைய அன்புள்ளமும், முயற்சியும் இல்லாவிட்டால் இந்நூல் வெளிவந்திருக்கமுடியாது. இந்நூலுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிறந்ததோர் அணிந்துரையும் வழங்கியுள்ளார். அவருக்கு எனது நன்றி.
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளிற் பெரும்பாலானவை உதயன், சஞ்சீவியில் வெளிவந்தவை. ஏனையவை முரசொலி பத்திரிகையில் வெளிவந்தவை. இக்கட்டுரைகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எனது நன்றிகள்.
இந்நூலுக்கு அட்டைப் படம் வரைந்த ஓவியக் கலைஞர் கலாபூஷணம் ச.சபாநாயகம் அவர்களுக்கும், நூலை அழகுற அச்சிட்ட கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தினர்க்கும் எனது நன்றி.
புலவர் ம.பார்வதிநாதசிவம்

பொருளடக்கம்
1) திருவள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு
2) காலத்தை வென்றுநிற்கும் கவிதைகளில் உணர்ச்சிகள்
3) காப்பியம் தரும் சிலம்பும் கதையில் வரும் நெக்லெஸிம்
4) காதல் நெஞ்சிற் கனிந்த காட்சிகள்
5) குண இயல்புகளை விளக்கும் இலக்கியமாமேதைகள்
6) கவிச்சக்கரவர்த்திபாடலில் கனிமொழியார்நீராடல்
7) அன்புநிலை காட்டும் கதையும் கவிதையும்
8) பாத்திரப்படைப்பில் இளங்கோவின் சாதனை
9) வில்லாண்ட காவலரும் சொல்லாண்டபாவலரும்
10) முத்தான திருக்குறளும் முத்தொள்ளாயிரமும்
11) இன்பத்துள் இன்பம் இலக்கிய இன்பம்
12) ஈத்துவக்கும் இன்பம்
13)தமிழறியாக் காவலரும் தன்மானப் பாவலரும்
14) கன்னியைக் கொன்ற நன்னனும்
கனி கொடுத்த மன்னனும்
15) தனிப்பாடல் திரட்டில் இனிப்பான பாடல்கள்
16) குருவைப் போற்றிய புதுவைப் பாவலன்
xi
-7
18一26
27-35
36一组
42一48
49-56
57-6
67-74.
75-8
83-87
88-93
9-99
00-09
110一芷8
9-27
28-35

Page 9
17)அன்பின் வழியிலே ஒன்றிணைந்து மகிழ்தலும்
மகிழ்வித்தலுமே காதல்
18) காதலுக்கு விளக்கம் கூறிய கவின்மிகு இலக்கியங்கள்
19) தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்
20)கவிதையின் அணிகளும் கன்னியர் அணிகளும்
21) பஞ்சினும் மெல்லியபாவலர் உள்ளங்கள்
22)இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக்
காட்டியமகாகவி பாரதியார்
xii
136-141
142一l48
149-52
53-59
160-64
165-72

திருவள்ளுவர் காட்டும் காதல் வாழ்வு
மனித வாழ்வின் விளக்கமாக அமைந்துள்ளது திருக்குறள். இல்லறம் மனித வாழ்வு என்னும் வண்டியின் அச்சாக அமைந்துள்ளது. எனவே, இல்லறம் - திருமண வாழ்வு மனித வாழ்விற் சிறப்பு அம்சம் வகிக்கிறது என்று துணிந்து கூறலாம்.
திருமண விஷயத்தில் நம் முன்னோர் அதிக கவனம் செலுத்தினர். நீண்டகாலம் எடுத்துத் தாம் ஆராய்ந்தும்
பிறரை ஆராயச் செய்தும் மணமகன் - மணமகள் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமானவரா என்பதைத் தெரிந்த பின்பே திருமணத்தை நிச்சயித்தனர்.
இக்காலம் அவசரகாலம், வெளிநாட்டில் இருந்து ஒருவன் வருவான். இரண்டு வார விடுமுறையில் வந்திருக் கிறேன். திருமணம் செய்து கொண்டு போகவேண்டும் என்பான். பெற்றோர் தரகரை நாடுவர். இரண்டு வாரத்துக்குள் திருமணம் முடிந்து மணமகன் மணமகளுடன் வெளிநாடு சென்று விடுவான். இத்தகைய அவசர திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று வாய்க்கலாம். பெரும்பாலானவை பொருந்தாமணமாகவே முடிகின்றன.
திருவள்ளுவர் மணமகன் மணமகள் மீதும், மணமகள் மணமகன் மீதும் வைக்கும் அன்பையே இல்லறத்தின் உயிர்நாடியாகக் கொள்கிறார். அன்பில்லாத மணமகனும், மணமகளுமோ அல்லது அன்பில்லாத மணமகளும்
01

Page 10
மணமகனுமோ சேர்ந்து வாழ்வது பாலை நிலத்திற் பட்டமரம் தளிர்ப்பது போன்றது என்கிறார். வெளி உலகினர் இவர்கள் ஒன்றாக வாழ்வதாகக் கருதலாம். ஆனால் இவர்கள் வாழ்வது பொருந்தா வாழ்வே
"அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த் தற்று"
என்பது திருக்குறள்.
பாலைநிலத்திற் பட்டமரம் தளிர்க்குமா? அது போலத் தான் அன்பில்லாத மணமகனும் அன்பில்லாத மணமகளும் சேர்ந்து வாழும் வாழ்விலும் இன்பம் தளிர்க்காது.
நெஞ்சக் கலப்பே திருமணம்
"அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்பது குறுந்தொகைப் பாடல் அடி. நெஞ்சம் கலவாது உடல் கலந்து வாழ்தல் இன்ப வாழ்வாக முடியுமா?
திருமணத்துக்கு அன்பே பிரதானம் என்பதை ஒளவையார் கூறும்போது "காதல் இருவர் கருத்தொரு மித்து ஆதரவுபட்டதே இன்பம்" என்கிறார்.
ஒத்த அன்பை விளக்க வந்த திருவள்ளுவர், தராசை உவமை கூறுகிறார். சரியான தராசில் தட்டு இரண்டும் சமனாக இருக்கும். இரண்டு தட்டும் சமமாக இல்லாவிட்டால் அது தராசு அல்ல. அது போலத்தான் மணமகனிடத்தும் மணமகளிடத்தும் அன்பு சமமாக இல்லாவிட்டால் அது திருமண வாழ்வு அல்ல.
02

"ஒருதலையான் இன்னாதுகாமம் காப்போல் இருதலை பானும் இனிது"
என்கிறார்.
ஒரு பக்கத்தில் மட்டும் அன்பு இருப்பது இன்பமாகாது. தராசுபோல மணமகன் - மணமகள் இருவரிடமும் சம அன்பு இருக்க வேண்டும் என்கிறார்.
திருமணம் பேசும் போதே எத்தனை லட்சம் கொடுப் பார்கள் என்று கேட்கிற மணமகனும் எவ்வளவு பெருந் தொகை சம்பளம் என்று கேட்கிற மணமகளும் திருமண அவசரத்தில் இந்த இரண்டையுமே அவதானிக்கின்றனர். பொருள் வாழ்க்கைக்குத் தேவை ஆகும். அன்பு பொருளை விடப்பிரதான தேவை ஆகிறது.
அன்பு இருக்கும் இடத்தில்தான் இரக்கமும் இருக்கும். மனைவியின் கண்ணிரைக்கண்டு துடி துடிக்காத கணவன் ஒரு பெண்ணுக்குக் கணவனாக இருக்கும் தகுதியை இழந்து விடுகிறான். அதேபோலக் கணவனுக்குத் துன்பம் வரும்போதும் மனது துடிதுடிக்காத பெண், மனைவி என்ற தகுதியை இழந்து விடுகிறாள்.
"துடியாப்பெண்டிர் மடியில் நெருப்பு"
என்றார் ஒளவையார். ஒருவருக்காக ஒருவர் துடிக்கும் நிலை அன்பும் இரக்கமும் கொண்ட மணமகன் மணமகளுக்கே ஏற்படும். திருவள்ளுவர் கூறிய மணமகன் - மணமகள் அன்புக்கு விளக்கம்போல அமைந்திருக்கிறது அமெரிக்கச் சிறுகதை ஒன்று.
03

Page 11
காதலன் ஒருவனும் காதலி ஒருத்தியும் ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொள்கிறார்கள். வாழ்வு வறுமையிலேயே தொடர்கிறது. ஆனால் அன்போ
ஒராண்டு நிறைவு பெறுகிறது. ஒராண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட இருவரும் விரும்புகின்றனர். ஒருவருக்கு ஒருவர் அன்று பரிசளிக்கவும் விரும்புகின்றனர். ஆனால், பரிசுப் பொருளை வாங்கக் கையில் பணம் இல்லை. என்ன செய்யலாம் என்ற ஏக்கத்தோடு காலை வெளியே சென்ற காதலன், தனது காதலியின் அழகிய நீண்ட கூந்தலை நினைக்கிறான். அந்த நீண்ட கூந்தலிற் சூடுவதற்கு பொன்னாலான மலரமைந்த 'புறோச்" ஒன்றை வாங்குகிறான்.
தன்கையில் இருந்த கடிகாரத்தை விற்று அந்தக் காசிற்குப் "புறோச்"சை விலைக்கு வாங்கினான் "புறோச்" வாங்கிவிட்ட சந்தோஷத்தில் வீடு திரும்புகிறான்.
காதலியும் காலையிற் கடைவீதிக்குச் செல்கிறாள்.தன் காதலனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று எண்ணுகிறாள். காதலனின் கடிகாரம் தோலினால் ஆன பட்டியுடன் தானே இருக்கிறது. தோற்பட்டிக்குப் பதிலாகத் தங்கத்தினால் ஆன "செயின்" ஒன்றை வாங்கிக் கொடுக்கலாமே என நினைக்கிறாள். அதற்குப் பணம் வேண்டுமே! அழகிய நீண்ட கூந்தல்களை விலைகொடுத்து வாங்கி அதன் மூலம் ஆடம்பரமான முடிமயிர் தயாரிக்கும் கடைக்குச் சென்றாள். தனது நீண்ட கூந்தலை விற்றாள்.
04

அந்தப் பணத்தில் காதலனின் கைக் கடிகாரத்துக்குச் "செயின்" வாங்கினாள். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள். என்ன ஏமாற்றம்? காதலி கொண்டு வந்த தங்கச் செயினைக் கட்டுவதற்குக் காதலன் கையில் கடிகாரம் இல்லை; காதலன் கொண்டு வந்த தங்கப் "புறோச்"சை அணிவதற்குக் காதலியின் நீண்ட கூந்தல் இல்லை. அவர்களுக்கு ஏமாற்றமானாலும் அன்பு என்னும் தராசில் இருதட்டுகளும் சமமாகிவிட்டனவே.
இன்சொல்லையே விரும்பும் மாதர்
அன்பு இதயத்தில் உண்டாவது, அன்பைப்போல பிறரை எளிதிற் கவரும் சக்தி இன்னும் ஒன்றுண்டு. அது நாவில் உண்டாவது. அதுதான் இன்சொல். காதல் என்ற செடி செழித்து வளர்வதற்கு இன்சொல் இன்றிமையாதது. காதல் செடி என்றால் இன்சொல் குளிர்ந்த நீராகும். சுடுசொல் சுடுநீர் போன்றது. காதற் பயிரை வாடச்செய்துவிடும். பெண்கள் நகைகளை விரும்புவதாக ஆடவர்கள் சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் நகைகளைவிட இன் சொல்லையே அதிகமாகப் பெண்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆண்கள் உணரவேண்டும்.
குறந்தொகைப் பாடல் ஒன்று இன் சொல்லில் மகிழும் தலைவியைக் காட்டுகிறது. காதலனும் காதலியும் பெற்றோர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள் கின்றனர். தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். இருவரிடத் திலும் திருவள்ளுவர் சொல்லும் அன்பு இருந்தது. திருவள்ளுவர் சொல்லும் இன்சொல்லும் இருந்தது.
05

Page 12
காதலன் தொழில் அலுவலாக வெளியிற் சென்றிருந் தான். நண்பகல் உணவுக்கு வீடுதிரும்பி விடுவான். காதலிக்குச் சமையற்காரியின் சமையலில் நம்பிக்கை இல்லை. அதனால் அவளே அடுப்படிக்குச் சென்று சமைக்கத் தொடங்கினாள். நன்றாகச் சமைத்தாள். சமையல் முடிவில் காதலனுக்குப் பிடித்த தயிர்க்குழம்பு சமைக்க விரும்பினாள். நேரம் நண்பகல் ஆகிவிட்டது. காதலன் வரும் நேரமும் நெருங்கிவிட்டது. அதனால் அவசர அவசரமாகச் சமைக்கத் தொடங்கினாள். தயிர்க்குழம்புக்கு வேண்டிய தயிரைப் பிசைந்தாள். தாளிப்பதற்கு வேண்டிய பொருள் களை எடுத்தாள். தயிர்க்குழம்புக்குத் தாளிக்கத் தொடங்கி னாள். அந்தநேரத்தில் அவளது ஆடை சிறிது நெகிழ்ந்தது. தயிர் பிசைந்த கையைக் கழுவிவிட்டுத் தாளித்தால் தாளித்த பொருளின் பதம் கெட்டுவிடும். எனவே தயிர் பிசைந்த கையாலேயே தனது ஆடையைச் சரிசெய்தாள். தொடர்ந்து தாளிக்கத் தொடங்கினாள். தாளித்த புகை கண்ணைக் கலங்கச் செய்தது. புகைக்குத் தயங்கினால் சமையற் பதம் கெட்டுவிடும். எனவே புகை கண்ணை வருத்தவும் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து சமைத்துச் சுவையான தயிர்க் குழம்பைக் காதலனுக்கு எடுத்துவைத்தாள்.
மெல்லச்சுவைத்துக் கறிகளின் சுவையைப் புகழ்ந்தான். தயிர்க் குழம்பை உண்ணும் போது அதன் சுவை ஏற்படுத்திய மகிழ்ச்சியில் ஒரு முறை அன்று இருமுறை "இனிது இனிது" என்றான். அவள் உள்ளம் இந்த இன்சொல்லைக் கேட்டு மகிழ்ந்தது. முகம் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மலர்ந்தது.
06

திருமணம் புரிந்து கொள்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் இன்சொல் தேவை. விருந்தினரை, உறவினரை, உபசரிக்கவும், இன்சொல் தேவை ஆண்களிற் சிலரும் பெண்களிற் சிலரும் விருந்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் இன்சொல் வழங்குவார்கள். ஆனால் தமக்குள் சுடுசொல்லையே அள்ளி வீசுவார்கள்.
திருமணம் புரிபவர்கள் சின்னச் சின்ன விஷயங் களுக்குக் கூட ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். பாராட்டத் தொடங்கினால் நாவில் சுடுசொல் வரமுடியாது. இன்சொல்லே வரும். திருமணமான தொடக்கத்திலேயே இன்சொல்லைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நாவில் மறந்தும் சுடுசொல் வராது.
"இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந் தற்று"
என்கிறார் திருவள்ளுவர். இனிய சொற்கள் ஏராளம் இருக்கின்றன. இனிய சொற்களை விட்டுவிட்டு வன்சொற்களைப் பயன்படுத்துவது எது போன்றது என்றால் கனி இருக்கக் கூடியதாக காயைப் பயன்படுத்துவது போன்றதாகும் என்கிறார். அன்பு என்னும் அத்திவாரத்தில் எழுந்த காதல் மாளிகையில் இன்சொல்லே ஒலிக்க வேண்டும். அங்கு வன்சொல் ஒலிக்கக்கூடாது. நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். எனவே, திருமணம் புரிபவர்கள் இன்சொல்லின் பெருமை தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.
07

Page 13
ஒற்றுமையின் பிரதான பண்பு விட்டுக்கொடுத்தல் ஆகும். இது காதலன் காதலி ஆகிய இருவரிடத்தும் அவசியம் இருத்தல் வேண்டும். விட்டுக் கொடுத்தலைத் திருவள்ளுவர் தோற்றுப்போதல் என்கிறார்.
சால்பு என்கின்ற பொன்னுக்கு உரைகல்லாக இருப்பது தனக்குச் சமம் இல்லாதவரிடத்தும் தோற்றுப் போதல் என்கிறார்.
"சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்னும் கொளல்"
என்பது திருக்குறள்.
அன்பினால் ஒன்றுபட்டுத் திருமணம் புரிந்தவர்கள் உனது குடும்பம் எனது குடும்பம் என்று பிரித்துப் பேசுவதை விட்டுவிட வேண்டும். கணவன் ஒருவன் தனது குடும்பம், செல்வம், கல்வி, சாதி, இவற்றினால் மேம்பட்டது என்று வாதாடி அதை நிலை நாட்டுவதில் விடாப்பிடியாக நின்றால் அது மனைவியின் மனதைப் புண்படுத்தும். இல்லறத்தைச் சந்தோஷம் அற்றதாக்கிவிடும். அதே போலத் தான் மனைவி ஒருத்தியும் தனது குடும்பம், கல்வி, செல்வம், சாதி இவற்றினால் உயர்ந்தது என்று வாதாடினால் இல்லறத்தின் அமைதியைக்கெடுத்துவிடும்.
சேர அரசனின் காதல்
சின்னச்சின்ன உரையாடல்களிற் கூட ஒருவரை ஒருவர் வென்றுவிட நினைக்காது தோற்றுவிடும் போதே
08

உண்மை அன்பு நிலைக்கும். சேர அரசன் ஒருவன் வீரருக்கெல்லாம் வீரனாகத் திகழ்ந்தான். அவன் போர்க் களத்தில் இறங்கினால் சோழபாண்டியர் மட்டுமல்ல ஏனைய மன்னாதி மன்னர்களும் அஞ்சுவர். அத்தகைய சேர மன்னன் ஒருநாள் இரவு அந்தப்புரம் சென்றான். அந்தப்புரத்தில் அரசி மட்டுமே தனிமையில் இருந்தாள். அரசன் மீது சிறிது கோபம் உடையவளாகவும் இருந்தாள். அதனால் அரசனைக் கண்டதும் தனது கூந்தலில் இருந்த பூவை எடுத்துக் கோபத்துடன் அரசன் மீது ஓங்கி எறிந்தாள். அரசன் அரசியைப் பார்த்துப் போர்க்களத்திற் சோழபாண்டிய அரசர் களோ ஏனைய அரசர்களோ என்னைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். நீ ஒரு பெண் சிறிதும் அஞ்சாமல் அரசன் என்றும் பாராமல் என்மீது மலரை ஓங்கி எறியலாமா? என்று சினந்தானா? அதுதான் இல்லை. பிறரிடம் என்றுமே கை ஏந்தி அறியாத அரசன் அரசி சினத்தினால் எறிந்த மலரை இருகையினாலும் ஏந்திக்கொண்டான். அது மாத்திரமா? அரசி முகத்திலே சினக்குறியைக் காட்ட, அவன் முகத்திலே புன்முறுவலைக்காட்டினான். அரசியின் சினத்துக்குத் தோற்றவனாகி மலரை ஏந்திய கையுடன் அரசியின் பக்கம் சென்று பணிமொழி கூறினான். அவன் அரசியிடம் தோற்றே விட்டான். போர்க்களத்தில் துணிந்தவருக்குத்தான் வெற்றி. காதற்களத்தில் பணிந்தவருக்குத்தான் வெற்றி. "பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை" என்று தலைவி கூறுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். பெண்மையைச் சுடுமொழிகளோ அல்லது கடுமொழிகளோ அசைத்துவிட மாட்டாவாம். ஆனால் தலைவனின் பணி மொழி பெண்மையை நெகிழச் செய்து
09

Page 14
விடுமாம். எனவே நான் பெரிது நீ சிறிது என்று வாதாடுவதோ என் குடும்பம் பெரிது, உன் குடும்பம் சிறிது என்று வாதாடுவதோ இல்லற இன்பத்தை அனுபவிக்க வழி செய்யமாட்டாது. மெல்ல மெல்ல வெறுப்பை வளர்க்கவே செய்யும்.
இரண்டு சட்டத்தரணிகள் எதிர் எதிராக நின்று வாதாடுவது நீதிமன்ற வழக்கில் வெற்றிக்கு உதவியாகலாம். ஆனால், குடும்பத்தில் கணவனும் மனைவியும் வாதாடு வதை விட்டுப் பிடிவாதத்தை விட்டு ஒருவரிடம் ஒருவர் தோற்றுப்போதலே வெற்றிதரும்.
ஒருவரை ஒருவர் மதிக்கும்போதுதான் ஒருவர் உரிமையில் ஒருவர் குறுக்கிடமாட்டார். கணவனுக்குத் தன் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்களிடத்துத் திருமணத்தின் பின்பும் அன்பு செலுத்தும் உரிமையும், அவர்க்கு உதவும் உரிமையும் உண்டு அதே போல மனைவிக்கும் திருமணத்தின் பின்பும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்களிடத்து அன்பு செலுத்தும் உரிமையும், அவர்க்கு உதவும் உரிமையும் உண்டு இதனைக் கணவன் உணரவேண்டும்.
அன்பு வாழ்வில் சர்வாதிகாரம் இல்லை
கணவனுக்கு மனைவியின் பெற்றோருடனோ சகோதர ருடனோ பகை ஏற்படலாம். அதற்காக "நீ உன் பெற் றோரையோ சகோதரர்களையோ பார்க்கக்கூடாது" என்று தடுப்பது முழுச்சர்வாதிகாரம் அல்லவா? அன்பு
10

வாழ்வில், சர்வாதிகாரத்துக்கு இடம் கொடுக்கலாமா? கொடுத்தால் அது அன்பு வாழ்வாகுமா? அது இல்லறமா குமா? அது மல்லறமாகத்தான் அமைய முடியும். இல்லறம் என்றால் என்ன? அதன் இயல்பு என்றால் என்ன வென்று திருவள்ளுவர் விளக்கிக் கூறி இருக்கிறார். இல்லறத்தின் இயல்புக்கு விளக்கமாக அன்பு - பண்பு நாகரிகம் என்பவற்றைக் கூறலாம். எனவே அன்பும் பண்பும் நாகரிக மும் உடைய கணவன் துறவு நெறியில் புலனைவிட முயல் வாருள்ளும் சிறந்தவன் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். "இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை" இல்வாழ்க்கைக்குரிய இயல் போடு வாழ்பவன் புலன்களைவிட முயலும் துறவு நெறியினரிலும் மேலாகிறான்.
திருமணத்துக்கு முன்னர் மணமகனுடைய வருவாய் எவ்வளவு என்பதை மணமகள் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பின்னர் மன மகனின் வருவாய்க்கு ஏற்ப மணமகள் வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். இதனைத் திருவள்ளுவர் "வளத்தக் காள் வாழ்க்கைத்துணை" என்கிறார். கணவனுடைய வருவாய்க்குத் தக்கபடி வாழத்தெரிந்தவள் மனைவி என்கிறார்.
ஆனால், இன்று பெரும்பாலும் நடப்பது என்ன? பல
இடங்களிலும் திருமணம் பேசிக் களைத்தவர்கள்
எப்படியாவது மணமகன் ஒருவன் கிடைத்தால் போதும் என்ற
நிலைக்கு இறங்குகிறார்கள். வருவாய் குறைந்த ஒருவனைத்
திருமணம் செய்கிறார்கள். திருமணம் முடிந்துவிட்டதே
11

Page 15
என்ற மகிழ்ச்சி மெல்ல மெல்லக் குறையும். வருவாய் குறைவாக இருக்கிறதே என்ற கவலை மெல்ல மெல்ல அதிகரிக்கும். மனைவி கணவனுடைய சம்பளத்தையும் தன்குடும்ப ஆடவர்களுடைய சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பாள். "அக்காவின் கணவன் பதினையாயிரம் சம்பளம் எடுக்கி றான். அண்ணன் இருபதாயிரம் சம்பளம் எடுக்கிறான். அயல் வீட்டிலுள்ள தம்பியின் நண்பன் பதினையாயிரம் சம்பளம் எடுக்கிறான். எனது கணவர் ஐயாயிரம் மட்டும்தானே சம்பளம் எடுக்கிறார். இதை வைத்துக் கொண்டு எப்படி இந்தக்காலத்தில் குடும்பத்தை நடத்துவது" என்றெல்லாம் மனதுக்குள் ஏங்குவாள். குறிப்பாகக் கணவனுக்கும் புலப்படுத்துவாள். வாழ்க்கையில் சண்டையும் சச்சரவும் மெல்ல மெல்லத் தலையெடுத்து இவர்களை வெல்ல முயற்சி செய்யும். குடும்ப அமைதி பறந்து விடும்.
இல்லறமாளிகையில் சந்தேகப் புயல்
அமைதி இன்றி வாழ்வதற்குத்தானா இருவர் திருமணம் புரிவது? இதற்குத் தீர்வு திருவள்ளுவர் காணும் "வளத்தக்காள் வாழ்க்கைத்துனை" என்பதே. கணவனின் வருவாய்க்கு ஏற்ப மனைவி வாழக்கற்றுக் கொள்வதே. இந்தக் குறைபாடு மனைவியிடம் ஏற்படுவது. இதைவிடப்பெரிய குறைபாடு ஒன்று உண்டு. அது கணவன் மனைவி இருவரிடமும் ஏற்படுவது. அதுதான் சந்தேகம். சந்தேகம் என்பது பெரும்பாலான குடும்பங்களில் இல்லை. மிகச் சில குடும்பங்களிலேயே உண்டு. இல்லறம் என்ற அழகிய மாளிகை சந்தேகப்புயலால் சேதமடைந்து
12

அலங்கோலமடைய ஆரம்பிக்கும். அதற்கு என்ன செய்ய முடியும். அதற்கும் திருவள்ளுவரே வழி கூறுகிறார்.
"தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்கிறார். ஒருவன் தனது நிறுவனத்துக்கு உத்தியோகத் தரை எடுக்கும்போது நன்றாக ஆராய்ந்து எடுக்க வேண்டும். எடுத்து அவனிடம் பொறுப்பான பதவியைக் கொடுத்து விட்டுப் பின்னர் அவன் மீது சந்தேகப்படக்கூடாது. சந் தேகப்பட்டால் அது தீராத துன்பமாகவே முடியும். திருவள்ளு வர் நிர்வாகத்துக்குக் கூறியது குடும்ப வாழ்விற்கும் பொருந்தும். திருமணத்திற்கு முன்னர் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக ஆராய வேண்டும். ஆராய்ந்து தெளிந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும். மனைவி கணவனிடம் தன்னையும் கணவன் மனைவியிடம் தன்னையும் மனப்பூர்வமாக ஒப்படைத்தபின்னர் சந்தேகம் ஏற்படக் கூடாது. ஒருவருக்கொருவர் உரியவர் என்ற தெளிவு ஏற்பட வேண்டும். ஒருவரில் ஒருவருக்கு ஏற்படும் தெளிவே இல்வாழ்வை இன்பமயமாக்கக் கூடியது.
தமிழருடைய இல்லறப் பண்பாட்டைத் தலைவன் - தலைவி என்ற தமிழ்ச் சொற்களே தெளிவாகப் புலப்படுத்து கின்றன. அவன் குடும்பத்தின் தலைவன். அவள் அவனை விடச்சற்றும் குறைந்தவள் அல்லள் அவள் குடும்பத்தின் தலைவி. இல்லறத்தில் இருவரும் சம உரிமை உடையவர் களே. இருவரது நோக்கமும் இல்லறம் என்ற மாளிகையை இன்பமாளிகை ஆக்குவதுதான். தலைவன் - தலைவி இருவராக இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்று தான்.
13

Page 16
அதுதான் குடும்ப முன்னேற்றம். குடும்ப முன்னேற்றத் தையும் குடும்ப கெளரவத்தையும் பேணுவதிற் சம பங்கு கொண்ட இருவரிடையே உள்ளத்தெளிவுதான் இருக்க முடியும். சந்தேகம் இருக்க முடியாது. தலைவன் - தலைவி இருவருமே பிரம்மச்சரியம் என்றபடியைக் கடந்து சம்சாரம் அல்லது இல்லறம் என்னும் புதுப்படியை அடையும் போது இன்று நாம் புதுப் பிறப்பெடுத்துள்ளோம் என்று எண்ண வேண்டும். "இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர் எண்ண மதைத் திண்னமுற இசைத்துக்கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்" என்றார் சுப்பிரமணிய பராதியார். எனவே திருமணம் புரிபவர்கள் தாம் திருமணத்தன்று புதுப்பிறவி எடுத்ததாகக்கொள்ள வேண்டும். அந்தப் புதுப்பிறப்பில் இருவரும் மேற்கொண்டி ருக்கும் உறவு ஏனைய உறவுகளை விட மேலானது விசுவாசமானது என்று நம்ப வேண்டும். ஏனைய உடன் பிறந்தார். சுற்றத்தார் என்கின்ற உறவுகள் எல்லாம் இந்தத் தலைவன் தலைவிஉறவைப் பலப்படுத்த வந்தவையே என்று கொள்ள வேண்டும். அப்படிக் கொண்டால் தலைவன் - தலைவியின் அன்பு ஆட்சியில் இல்லறமாளிகை - இன்ப மாளிகையாகத் திகழும்.
தலைவன் தலைவியிடை ஏற்படும் இலட்சிய வாழ்வைத் திருவள்ளுவர் காமத்துப் பாலிலும் அறத்துப்பாலில் இல்லற இயலிலும் கூறுகிறார். காமத்துப்பாலில் அழகுதான் இருவரிடமும் கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்கிறார். அறத்துப்பாலில் அன்புதான் அந்தக்கவர்ச்சியை நிலை நிறுத்தி நிரந்தர வாழ்வுக்கு வழிசெய்கிறது என்கிறார்.
14

அன்பா? அழகா?
வானிற் பறக்கும் விமானம் வானிற் பறக்க உயர எழுவதற்குச் சிறிது நேரம் தரையில் ஒடவேண்டி இருக்கிறது. தரையில் ஒடுவதற்குச் சில்லும்தேவை. ஆனால் வானில் உயர எழுந்ததும் சில்லின் தேவை இல்லாமற் போய் விடுகிறது. அதுபோலத்தான் தலைவன் தலைவி இணை வதற்கு அழகு தேவைப்படுகிறது.அவர்கள் இணைந்த பின்னர் அன்பு என்ற வானிற் பறக்கும்போது அழகு என்ற சில்லு தேவையற்றதாகி விடுகிறது. அழகுக்கு வலிமை இருந்தால் முதுமை வந்து அழகு நீங்கும்போது கணவனும் மனைவியும் பிரிய நேர்ந்து விடுமே! அதனால் தலைவன் தலைவியை நிரந்தரமாக வாழச்செய்வது அன்புதான். காமத்துப்பாலின் முதற் குறளிலேயே திருவள்ளுவர் தலைவியின் அழகைச் சொல்கிறார்.
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோகனங்குழை
மாதர் கொல்மாலுமென்நெஞ்சு"
என்பது குறள். தலைவியைக் கண்ட தலைவன் இவள் தேவமகளோ! புதுமையாகப் படைக்கப்பெற்ற மயிலோ மனிதப்பெண்தானோ! என்று ஐயப்படுகிறான். இந்த ஐயம் தலைவியின் அழகினால் தலைவனுக்கு ஏற்பட்டது. தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து இல்லறம் நடத்துகிறார்கள். அந்த நேரத்தில் இல்லற வாழ்வில் மிகுந்து காணப்படுவது அன்பே
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது" என்கிறார் திருவள்ளுவர். இல்லறத்தின் உயிர்நாடி
15

Page 17
  

Page 18
காலத்தை வென்று நிற்கும் கவிதைகளில் உாைர்ச்சிகள்
கடவுளுக்கு வரைவிலக்கணம் கூறுவதும். கவிதைக்கு வரைவிலக்கணம் கூறுவதும் நிறைவுபெறாத முயற்சிகள். ஆயினும் விமர்சகர்கள் தமது தேவை குறித்துக் கவிதையின் தரம் காண நான்கு அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்.
கருத்து
கறபனை
உணர்ச்சி
நடை அல்லது வடிவம் என்பன அவை.
கருத்து
கருத்தாழம் அற்ற எதுவும் இலக்கியம் ஆகாது என்பது தமிழ்ச் சான்றோர் கருத்து. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன் என்பது நன்னூல். ஆனால் கருத்து மட்டும் இலக்கியம் ஆகிவிடவும் முடியாது. கருத்துடன் உணர்ச்சி, கற்பனை, இனிய வடிவம் அனைத்தும் சேர்ந்து இன்பம் பயக்கும்போதே அது இலக்கியம் ஆகிறது.
2 looobrirörfa
கவிதை படைத்தவன் படைக்கும்போது பெற்ற உணர்ச்சியை, கவிதை படிப்பவன் படிக்கும் போது பெறுவானானால் அது கவிதைக்கு வெற்றியாகும்.
சங்கப் புலவர்களுள் கபிலர் தனித்துவம்மிக்கவர். அவர் காலத்துப் புலவர்களாலும் பின்வந்த புலவர்களாலும்
18

பாராட்டப்பெற்றவர். அவருடைய கவிதை உயர்ந்திருப்பது போலவே அவருடைய உள்ளமும் உயர்ந்தது.
பாரியின் கொடை கபிலரைப் பெரிதும் கவர்ந்தது. பாரிக்கு நண்பரான கபிலர், சேர, சோழ, பாண்டியர் ஆகிய முப்பெரு வேந்தர்களும் இருப்பவும், பாரியுடனேயே நீண்ட காலம் வாழ்ந்தார்.
பாரி இறந்தபோது பாரியின் பிரிவைத் தாங்கமாட்டாது வடக்கிருந்து உயிர் துறந்தார். அத்தகைய கபிலரின் பாடல்களில் விமர்சகர்கள் எதிர்பார்க்கும் நான்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். நான்கு அம்சத்தில் ஒன்றாகிய உணர்ச்சிச் சிறப்பை ஒரு பாடலிற்பார்ப்போம்.
போரினால் இடம் பெயர்தல்
போரினால் இடம் பெயர்ந்த அனுபவம் நமக்கு உண்டு. இடம் பெயரும்போது பலரும் கண்ணிர் சிந்தியவாறு இடம்பெயர்வதைக் கண்டிருக்கிறோம். போர்ச் சத்தம் ஆரம்பமானதும் அவசர அவசரமாகப் புறப்படுவார்கள். கொண்டு போகக்கூடிய பொருள்களை அவசரமாக எடுப்பார்கள். தாங்கள் அன்பாக வளர்த்த ஆடு, மாடுகளைக் கலங்கிய கண்களோடு பார்ப்பார்கள். தங்களைத் தொடர முயற்சி செய்யும் நாயைப் பார்ப்பார்கள். கதவுகள் பூட்டப் பட்டுள்ளனவோ என்று மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். வீட்டைப்பிரிய மனமின்றிப்பிரிய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானவராகிக் கண்ணுக்கெட்டும் வரை வீட்டைத் திரும்பித்திரும்பிப்பார்த்தவாறு செல்வர்.
19

Page 19
இந்த அனுபவம் - இந்த உணர்ச்சி - கபிலருக்கும் ஏற்பட்டது. அவர் கவிஞராதலால் அது கவிதையாக வந்தது.
மூவேந்தரின் சூழ்ச்சியாற் பாரி இறந்துவிட்டான். பாரியை உயிரென மதித்த கபிலரும் தம் உயிரைவிட ஆயத்தமானார். ஆனால் அவர் பாரிக்குச் செய்யவேண்டிய நன்றிக் கடன் ஒன்று இருந்தது. பாரியின் புதல்வியர் இருவருக்கும் ஆதரவாக இருந்து அரசரை அவர்களுக்கு மணாளர் ஆக்கவேண்டும் என்பதே அது
பாரியின் புதல்வியர் இருவரையும் கூட்டிக்கொண்டு பறம்பு மலையைவிட்டுப் புறப்பட்டார் கபிலர். இன்று போரினால் இடம்பெயர்வது போலவே அவர்களும் அன்று போரினால் இடம்பெயர்ந்தார்கள். அவர்களின் கண்களிற் கண்ணிர் பெருகிக்கொண்டிருந்தது.
அவர்களும் கையில் எடுக்கக்கூடிய பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம்வரை தாம் மகிழ்ந்து வாழ்ந்த இடத்தைப் பார்த்துப்பார்த்துச் சென்றனர். இருந்த இடம் மறைந்துபோக, இருந்த நாடாகிய பறம்புமலை தெரிந்தது. பறம்பு மலையைத் திரும்பித்திரும்பிப்பார்த்தவாறு சென்றனர்.
கபிலருக்கு ஏற்பட்ட துன்ப உணர்ச்சி பாடலாக வந்தது. இருகை எடுத்துப் பறம்பு மலையைக் கும்பிட்டார். பறம்பு மலையைப் பிரிவதை நினைக்க நினைக்க அவருடைய கண்கள் கண்ணிர் சிந்தின. கபிலரின் உள்ளம் ஒரு
20

குழந்தையின் உள்ளமாக மாறியது. குழந்தை உள்ளத்தில் தான் சிறந்த கவிதை பிறக்கும்.
பறம்பு மலையோடு பேசத் தொடங்கி விட்டார். மலையோடு அல்லது மரத்தோடு பேசுவது குழந்தையின் இயல்பு அறிவு நிறைந்த சான்றோரான இக் கபிலர் குழந்தை உள்ளத்தோடு மலையைப் பார்த்தார்.
"பறம்புமலையே! எமக்கு விருப்பத்தைத் தருகின்ற சாடி நிறைந்த மதுவினைத் தந்தாய். சுவை பொருந்திய ஆட்டு இறைச்சியைச் தந்தாய். வயிறார உண்ணுதற்கு நல்ல சோற்றினைத் தந்தாய். இவை மட்டுமா? பெரிய வளம் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் தந்தாய்.
உன்னை நாம் மனமின்றிப் பிரிகின்றோம். எம்மோடு இவ் வளவு காலமும் நீ நட்பாக இருந்தாய். நட்பாக இருந்த உன் னைக் கண்ணிருடன் பிரிகின்றோம். எமக்கு இவ்வளவு நன்மைகளையும் செய்த உன்னை வாழ்த்துகிறோம்." என்றார்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கபிலராற் பாடப்பெற்ற இப்பாடல், கபிலர் அன்று அடைந்த உணர்ச்சியை - அனுபவத்தை இன்றும் நமக்குத் தருகிறது. போரினால் இடம்பெயர்ந்தவர்களைக் கண்டோருக்கும், இடம்பெயர்ந்தோருக்கும், கபிலரின் கண்ணிர்க் கவிதையை விளங்கிக் கொள்வது மிகச் சுலபமானதாகும்.
"பாரிமாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்னேந் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும் பெயர்ப்பறம்பே"
21

Page 20
காதலர் உணர்ச்சி
அன்பு எத்தகையது என்று சொல்வது சிரமமான ஒன்று. ஆயினும், தலைவனிடத்துத் தனக்கும் தன்னிடத்துத் தலைவனுக்கும் உள்ள அன்பு- காதல் - நட்பு எத்தகையது என்று கூறுகிறாள் தலைவி ஒருத்தி.
நான் தலைவனிடம் கொண்டுள்ள நட்பு நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்கிறாள் தலைவி.
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோட் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. இப்பாடலின் பொருள். மலைச் சாரலிடத்து குறிஞ்சிப் பூவின் தேன் கொண்டு வண்டுகள் கூடுகட்டும் நாட்டையுடையவனது நட்பு அகலத்தால் நிலவுலகத்திலும் பெரிது; உயரத்தால் வானிலும் உயர்ந்தது; ஆழத்தால் கடலினும் ஆழமானது என்றாள்.
நான்கு வரிக்குள் ஒரு பெண்ணுள்ளத்தின் அன்புப் பெருக்கைக் கூற எடுத்த முயற்சியே இக்குறுந்தொகைப்
பாடல். இத்தகைய அன்புள்ளம் கொண்ட பெண் தன் தலைவனை வரம் கேட்டால் என்ன வரம் கேட்பாள்?
22

குழந்தையின் உள்ளமாக மாறியது. குழந்தை உள்ளத்தில் தான் சிறந்த கவிதை பிறக்கும்.
பறம்பு மலையோடு பேசத் தொடங்கி விட்டார். மலையோடு அல்லது மரத்தோடு பேசுவது குழந்தையின் இயல்பு அறிவு நிறைந்த சான்றோரான இக் கபிலர் குழந்தை உள்ளத்தோடு மலையைப் பார்த்தார்.
"பறம்புமலையே! எமக்கு விருப்பத்தைத் தருகின்ற சாடி நிறைந்த மதுவினைத் தந்தாய். சுவை பொருந்திய ஆட்டு இறைச்சியைச் தந்தாய். வயிறார உண்ணுதற்கு நல்ல சோற்றினைத் தந்தாய். இவை மட்டுமா? பெரிய வளம் என்று சொல்லக்கூடிய அனைத்தையும் தந்தாய்.
உன்னை நாம் மனமின்றிப் பிரிகின்றோம். எம்மோடு இவ் வளவு காலமும் நீ நட்பாக இருந்தாய். நட்பாக இருந்த உன் னைக் கண்ணிருடன் பிரிகின்றோம். எமக்கு இவ்வளவு நன்மைகளையும் செய்த உன்னை வாழ்த்துகிறோம்." என்றார்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கபிலராற் பாடப்பெற்ற இப்பாடல், கபிலர் அன்று அடைந்த உணர்ச்சியை - அனுபவத்தை இன்றும் நமக்குத் தருகிறது. போரினால் இடம்பெயர்ந்தவர்களைக் கண்டோருக்கும், இடம்பெயர்ந்தோருக்கும், கபிலரின் கண்ணிர்க் கவிதையை விளங்கிக் கொள்வது மிகச் சுலபமானதாகும்.
"பாரிமாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்னேந் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும் பெயர்ப்பறம்பே"

Page 21
காதலர் உணர்ச்சி
அன்பு எத்தகையது என்று சொல்வது சிரமமான ஒன்று. ஆயினும், தலைவனிடத்துத் தனக்கும் தன்னிடத்துத் தலைவனுக்கும் உள்ள அன்பு- காதல் - நட்பு எத்தகையது என்று கூறுகிறாள் தலைவி ஒருத்தி.
நான் தலைவனிடம் கொண்டுள்ள நட்பு நிலத்தினும் பெரிது; வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்கிறாள் தலைவி.
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோட் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. இப்பாடலின் பொருள் மலைச் சாரலிடத்து குறிஞ்சிப் பூவின் தேன் கொண்டு வண்டுகள் கூடுகட்டும் நாட்டையுடையவனது நட்பு அகலத்தால் நிலவுலகத்திலும் பெரிது; உயரத்தால் வானிலும் உயர்ந்தது; ஆழத்தால் கடலினும் ஆழமானது என்றாள்.
நான்கு வரிக்குள் ஒரு பெண்ணுள்ளத்தின் அன்புப் பெருக்கைக் கூற எடுத்த முயற்சியே இக்குறுந்தொகைப்
பாடல். இத்தகைய அன்புள்ளம் கொண்ட பெண் தன் தலைவனை வரம் கேட்டால் என்ன வரம் கேட்பாள்?
22

ஒருவன் நன்மை பயக்கும் சொற்களை மனத்தால் ஆராய்ந்து சொல்வான் ஆயின் அவனது பாவம் கெட, அறம் பெருகும் என்பது இக் குறளின் பொருள்.
பேச்சு வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டே
வள்ளுவர் இக்குறளைப் படைத்தபோதும், தமது தனித்துவத்தை- கவித்துவத்தை - காட்டத் தவறவில்லை.
தேய்தல் என்பதற்கு எதிர்ச்சொல் வளர்தல் என்பதே. செய்யுள் வழக்கிலும் சரி, பேச்சு வழக்கிலும் சரி, தேய்தலுக்கு எதிர்ச்சொல் வரும் பொழுதுவளர்தலே எதிர்ச்சொல்லாக வரும்.
தேய்பிறை-வளர்பிறை'என்றே வரும்.
ஆனால் திருவள்ளுவரோ அல்லவை கேய அறம் வளரும் என்று கூறாமல் அறம் பெருகும் என்று கூறியுள்ளார்.
தான் நினைப்பதைப் புலப்படுத்த-தனது உள்ளத்தைப் புலப்படுத்த - வளரும் என்ற சொல்லைவிடப் பெருகும் என்ற சொல்லே பொருத்தமானது எனத் திருவள்ளுவர் நம்பினார்.
வளர்தல் என்ற சொல்லை விட பெருகுதல் என்ற சொல் ஒன்றன் வேகத்தைக் குறிப்பதற்குப் பெரிதும் துணை புரியும். குழந்தை வளர்கிறது, மரம் வளர்கிறது என்னும் போது நிதானமான வளர்ச்சி ஒன்றையே அது குறிக்கும். பெருகும் என்று சொல்லும்போது அது திடீரென ஏற்படும் பெருமாற் றத்தைக் காட்டும்.
25

Page 22
ஆறு பெருக்கெடுத்தது. குளம் உடைத்துப் பெருகியது என வரும் இடங்களில் பெருகும் என்ற சொல் வேகத்தையும், வலுவையும் கொண்டதாய் விளங்குகின்றது.
ஒருவன் மனத்திலிருந்து எழுந்த இன்சொல்லைப் பேசத் தொடங்கியதும் அவனது வாழ்வில் அறம் பெருகும் போது இல்லறம் இனிதாக அமையும்; வெளியுலகம் அமைதி தரும். அறம் பெருகும் வாழ்விற் குறையும் உண்டோ?
தமிழ் இலக்கியப் பரப்பிற் காலத்தை வென்று நிற்கும் உணர்ச்சி வாய்ந்த கவிதைகள் மிகப்பல. அவை தோன்றிய காலத்திற் பயந்த இலக்கிய இன்பத்தை இன்றும் பயக்கின் றன; என்றும் பயக்கும் இயல்புவாய்ந்தன.
26

காப்பியம் தரும் சிலம்பும் கதையில் வரும் நெக்லெளம்ை
ஆபரணத்தை வைத்துக் கொண்டு காப்பியம் படைத்தார் தமிழ்ப்புலவர் ஒருவர். அவர் கதைக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட ஆபரணம் சிலம்பு. சிலம்பை வைத்தே காப்பியத்திற்குப் பெயருமிட்டார். அதுதான் சிலப்பதிகாரம். இன்னொருவர் ஆபரணத்தை வைத்துக் கொண்டு சிறுகதை படைத்தார். அவர் சிறுகதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட ஆபரணம் நெக்லெஸ். நெக்லெஸ் (The Neklace) என்றே கதைக்குப் பெயரும் இட்டார். அவர்தான் பிரெஞ்சு சிறுகதை ஆசிரியர் மாப்பாசான். இந்த இருவருக்குமே கதையை நகர்த்திச் செல்ல ஆபரணங்கள் உதவின. இளங்கோவின் காப்பியமும் நிலைத்துவிட்டது. மாப்பா சானின் சிறுகதையும் நிலைத்து விட்டது.
சிம்ைபின் கதை
கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் நடை பெறுகிறது. குன்றனைய பொருள் கொண்ட செல்வக் குடியிற் பிறந்த கோவலன் இல்லறம் நடத்துகிறான். சில காலம் சென்ற பின் மாதவியை விரும்பி மாதவியை அடைகிறான். மாதவியின் தொடர்பால், குன்றனைய
பொருளை இழந்துவிடுகிறான்.
27

Page 23
இந்த நிலையில் மனமாற்றம் அடைந்த கோவலன், கண்ணகியின் துன்பத்துக்காக இரங்குகிறான். கோவல னது நிலையை அறிந்த கண்ணகி தன் காற்சிலம்பொன்றை அவனிடம் கொடுக்கிறாள். கண்ணகி கொடுத்த சிலம்பை விற்று இழந்த பொருளை ஈட்ட விரும்புகிறான் கோவலன்.
இனிச் சிலம்பே கதையை நகர்த்துகிறது. கண்ணகி யையும் கூட்டிக்கொண்டு கோவலன் மதுரைக்குச் செல்கிறாள். கண்ணகியை ஆயர் இல்லத்தில் தங்கச் செய்துவிட்டுச் சிலம்புடன் மதுரை நகருக்குச் செல்கிறான்.
அரசனின் பொற்கொல்லன் கோவலனின் கையில் இருந்த சிலம்பைப் பார்வையிட்டான். தான் முன்பு திருடிய அரசியின் சிலம்பும்கோவலனின் கையில் இருந்த சிலம்பும் உருவத்தில் ஒத்திருந்ததைக் கண்டான். கோவலனை மாட்டிவிட்டுத் தான் தப்பிக்கொள்ளலாம் என்று நம்பினான். அதற்குரிய முயற்சியைச் செய்தான். முயற்சியில் வெற்றியும் பெற்றான். கோவலன் கொலைத் தண்டனைக்கு ஆளா னான். கண்ணகி அரசன்முன் தோன்றித் தன்னிடம் இருந்த மற்றச் சிலம்பின் துணையோடு அரசனுடன் வாதாடி வழக்கில் வெற்றி பெற்றாள். கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்த கண்ணகி மதுரைக்கு எரிஉஊட்டினாள். சிலம்புசிலப்பதிகாரக் கதையை நகர்த்திச் சென்றது.
நெக்லெஸின் கதை
உலகின் அழகு எல்லாம் திரண்டு பாரிஸில் பெற்ற உருவமே அவளது தோற்றம். கவிஞர்களின் கற்பனையில்
28

வந்த வடிவம். ஒவியக் கலைஞர்களின் தூரிகையில் வந்த தோற்றம்- சிற்பக் கலைஞனின் கைத்திறன் பெற்ற உருவம்அனைத்தும் அவளே!
இளமை - அழகு - கவர்ச்சி அனைத்தும் இருந்தும் பொருள் வசதி இன்மையால் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் ஒரு சாதாரண இளைஞனைத் திருமணம் செய்தாள். அவள் செல்வச் செழிப்புள்ள உயர்ந்த குடும்பப் பெண்களைப்போல, வாழ ஆசைப்பட்டாள். ஆனால் பொருளாதாரம் ஆசைக்கு இடம் தரவில்லை. இதனால் முடிவில்லாத துன்பங்களுக்கு ஆளானாள். ஆடம்பர உடைகளோ அலங்கார நகைகளோ இல்லாத காரணத்தால் உல்லாசமாக வெளியிற் செல்வதை முற்றாக நிறுத்தி விட்டாள்.
பொருள் வசதி இல்லாவிட்டாலும்கூட அவளது கணவன் அவளிடத்து அன்பும் மதிப்பும் உடையவனாக இருந்தான். அவளது பேரழகை ரசிக்கத் தெரிந்தவனாக இருந்தான்.
ஒரு நாள் அவள் கையிலே அவளது கணவன் அழைப்பிதழ் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அந்த அழைப்புக் கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்தது. அவனும் அவளும் கல்வி அமைச்சின் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்துக்குச் சென்றால் அவள்தான் எல்லோரிலும் அழகியாக விளகுவாள் என்பது
29

Page 24
நிச்சயமே ஆனாலும் விருந்துக்குச் செல்வதற்கு வேண்டிய ஆடம்பர உடை, அலங்கார நகை அவளிடம் இல்லையே!
அதனால் அவள் கணவனைக் கேட்டாள் "இந்த அழைப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்று
அதற்குக் கணவன் "அப்படிச் சொல்லாதே, இந்த நிகழ்ச்சியில் சீமான்களும் சீமாட்டிகளும் கலந்து கொள்வார்கள். அவர்களின் அறிமுகம் கிடைக்கும். இந்த நிகழ்ச்சிஉனக்குமகிழ்ச்சிதரும்" என்றான்.
அதற்கு அவள் விருந்துக்கேற்ற உடை என்னிடம் இல்லையே என்றாள். எனது சொந்தத் தேவைக்காகச் சேர்த்த பணம் என்னிடம் இருக்கிறது. அதற்கு ஆடம்பர உடைவாங்கலாம் என்றான்.
"நகைக்கு என்ன செய்வது?" என்றாள். அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு "உனது சினேகிதி ஒருத்தி செல்வச் சீமாட்டியாக இருக்கிறாளே அவளிடம் நகை இரவல் வாங்கலாம்" என்றான்.
அதற்கு அவளும் உடன்பட்டாள். சீமாட்டி வீட்டுக்குச் சென்று கல்வி அமைச்சினால் விருந்துக்கு விடுக்கப்பட்ட
அழைப்பைப் பற்றிக் கூறி விருந்துக்குச் செல்வதற்கு நெக்லெஸ் ஒன்றுஇரவல் தரும்படி கேட்டாள்.
30

சீமாட்டி மகிழ்ச்சியுடன் உடன்பட்டு நகைப்பெட்டி ஒன்றைக் கொண்டு வந்து அவள் முன் வைத்து உனக்கு விருப்பமான ஒரு நகையைத் தெரிவுசெய்து எடுத்துக் கொள் என்றாள்.
அவள் எல்லா நகைகளையும் பார்த்துவிட்டுக் கண்ணைப் பறித்த வைர நெக்லெஸ் ஒன்றை எடுத்தாள். நகையை இரவல் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீடு திரும்பினாள்.
விருந்துக்குச் செல்லவேண்டிய நாள் வந்தது. அவளும் அவளது கணவனும் கல்வி அமைச்சின் விருந்துக்குச் சென்றனர்.
அவள் பேரழகி. அவள் உடுத்திய ஆடை மேலும் அழகு செய்தது. அவளது வைர நெக்லெஸ் தனியான அழகைச்
சேர்த்தது.
விருந்துக்கு வந்திருந்த ஆண்கள்- பெண்கள் அனைவரும் அவளது அழகை - ஆடையை - நெக்லெஸை ரசித்துப் பார்த்தனர். அவளே விழாவின் கதாநாயகியாகக் காணப்பட்டாள். அவளோடு பேசுவதை மற்றவர்கள் பெருமையாகக் கொண்டார்கள். அமைச்சரும் அவளது அழகை அவதானித்தார்.
31

Page 25
அவள் விருந்தில் மகிழ்ச்சியோடு கலந்தாள். நடனத்தில் மகிழ்ச்சியோடு பங்கு கொண்டாள். கற்பனை யுலகில் இருப்பது போன்ற மகிழ்ச்சியில் திளைத்தாள். பெருமகிழ்வோடு அவளும் கணவனும் வீடு திரும்பினர்.
அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவளது முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட கணவன் "ஏன் தடுமாறுகி றாய்?" என்ன நடந்துவிட்டது?" என்றான்.
நெக்லெஸ் தொலைந்துவிட்டதென்றாள் அவள். அங்கு தேடினார்கள். இங்கு தேடினார்கள். எங்கும் தேடினார்கள். என்ன செய்வது? நெக்லெஸ் தொலைந்தது தொலைந்ததுதான்.
அதே மாதிரி ஒருவைர நெக்லெஸ்ஸை வாங்கிச் சீமாட்டிக்குக் கொடுப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக் குத் தென்படவில்லை. ஆனால் புதிதாக ஒருவைர நெக்லெஸ் கடையில் விலைக்கு வாங்க அவர்களது பொருளாதாரம் இடம்கொடுக்குமா?
நெக்லெஸ்ஸில் சிறுதிருத்தம் செய்ய வேண்டியி ருக்கிறது. திருத்தம் முடிந்ததும் விரைவாக ஒப்படைக்கின் றோம் என்று சீமாட்டிக்குத் தெரிவித்தார்கள்.
பாரிஸில் உள்ள ஒவ்வொரு நகைக்கடையாக ஏறி
இறங்கினார்கள். எவ்வளவோ அலைச்சலுக்குப் பின்னர்
32

சீமாட்டியின் வைர நெக்லெஸ் போன்ற ஒரு நெக்லெஸை
நகைக் கடையிற் கண்டனர். அதன் விலையைக் கேட்டனர்.
விலையை அறிந்ததும் இருவரும் அதிர்ந்து போனார்கள். அந்த வைர நெக்லெஸின் விலை அவர்களின் பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்டது. எனினும் என்ன (փtջեւյլն?
சில நாள்களுக்கு அந்த நெக்லெஸை யாருக்கும் விற்காது தங்களுக்காக வைத்திருக்கும்படியும் தாங்கள் விரைவில் வாங்குவதாகவும் கடைக்காரனை வேண்டிக்
கொண்டனர். கடைக்காரனும் அதற்கு உடன்பட்டான்.
எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கடன் வாங்கியும் தம்மிடமுள்ள முழுப்பணத்தையும் கொடுத்தும் நெக்லெஸை வாங்கிச் சீமாட்டியிடம் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர்தான் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். நெக்லெஸ் வாங்குவதற்காகப்பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. வசதியான வீட்டைவிட்டுச் சிறிய இடத்தில் வசித்தார்கள். வேலைக் காரனை நிறுத்தினார்கள்.
அவன் அலுவலகத்தில் மேலதிக வேலை செய்தான். வீட்டில் வர்த்தகர்களுடைய கணக்குக்கொப்பிகளைக்
கொண்டு வந்து கணக்கு எழுதி அதன் மூலமும் சேர்த்தான்.
33

Page 26
அவள் தானே கடைக்குச் சென்று பொருள்களை வாங்கினாள். வீட்டிலுள்ள கஷ்டமான வேலைகள் அனைத் தையும் தானே செய்தாள். இப்படிப் பத்து வருடங்கள் தொடர்ந்துபாடுபட்ட பின்னர் கடனில் இருந்துவிடுபட்டனர்.
தொடர்ந்த உழைப்பினாலும் தரமான உணவின்மை யாலும் நிம்மதியற்ற வாழ்வினாலும் அவளது இளமை - அழகு - கவர்ச்சி எல்லாம் போய்விட்டன. ஏழைத் தொழிலாளிபோற் காட்சியளித்தாள்.
ஒருநாள் அவள் தெருவில் செல்லும்போது நெக்லெஸ் இரவல் தந்த சீமாட்டியைக் கண்டாள். சீமாட்டி பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த இளமையுடனும் அழகுட னும் காணப்பட்டாள். அவள் பெயர் சொல்லிச் சீமாட்டியை அழைத்தாள். சீமாட்டியால் அவளை அடையாளம் காண முடியவில்லை.
அவ்வளவு தூரம் அவள் மாறியிருந்தாள். அவள் தனது பெயரைச் சொன்ன பின்னர்தான் சீமாட்டி அவளை அடையாளம் கண்டுகொண்டாள்.
ஏன் இவ்வாறு மாறிவிட்டாய் என்று அவளைக் கேட்டாள். அதற்கு அவள் வைர நெக்லெஸ் தவறியது முதல் புதிதாக வைர நெக்லெஸ் வாங்கியதையும் அதற்காகக் கடன்பட்டதையும் கடனைத் திருப்பிக் கொடுக்கப்பட்ட
கஷ்டத்தையும் விளக்கிக் கூறினாள்.
34

சீமாட்டி மீண்டும் கேட்டாள் "தொலைந்த நெக்லெஸுக்காக நீவைர நெக்லெஸ் வாங்கினாயா?"
அவள் "ஆமாம்" என்றாள்
இப்போது சீமாட்டி அதிர்ந்து போனாள். பெரிதும் அனுதாபப்பட்டாள். கண் கலங்கினாள். அவளது இரண்டு கைகளையும் தனது கைளால் ஆதரவாகப் பிடித்தாள்.
"எனது பரிதாபத்துக்குரிய சினேகிதியே! நான் உனக்கு இரவல் தந்ததும் போலி நகையல்லவா? இமிற்றேஷன் அல்லவா? அது மிகக் குறைந்த விலையினது அல்லவா?" என்றாள்.
பிரெஞ்சுச் சிறுகதை ஆசிரியர் மாப்பாசான் இத்துடன் நெக்லெஸ் கதையை முடிக்கிறார். காப்பியச் சிலம்பு
கண்ணகியின்கணவனைப்பலிகொண்டது.
கதை தரும் நெக்லெஸோ ஒரு அப்பாவிப் பெண்ணின்
இளமை - அழகு - கவர்ச்சி- நிம்மதி அனைத்தையும் பலி கொண்டது.
35

Page 27
காதலர் நெஞ்சில் கனிந்த காட்சிகள்!
"நெஞ்சம்தாம் கலந்தனவே" என்றொரு தொடர் குறுந்தொகையில் வருகிறது. அத்தொடர் தமிழர் வாழ்வின் விளக்கமாக அமைந்துள்ளது. தமிழர் நாகரிகத்தைக் காட்டுகின்றது.
இக்காலத்திற் பெரும்பாலான திரு மணங்களில் சாதியும் சாதியும் கலக்கின்றன. சமயமும் சமயமும் கலக்கின்றன. லட்சங்களும் உத்தியோகங்களும் கலக்கின் றன. நெஞ்சம் கலப்பதில்லையே!
நெஞ்சக் கலத்தலின் அவசியம் பற்றிப் பெரும்பாலான பெற்றோர் கவலைப்படுவதில்லை. பின்னர் குடும்பங்களிற் பிணக்கும் பிரிவும் ஏற்படும்போதுதான் நெஞ்சக் கலப்பின் அவசியம் விளங்குகிறது.
நெஞ்சம் கலந்த தலைவன் தலைவி
காதல் வாழ்வு ஏழு பிறப்புக்கும் தொடர்வது; விதியோடு தொடர்புடையது; காதலர் சந்திப்பதும்கூட விதியின் விளைவே
அவள் கன்னியாகவும் அவன் காளையாவும்
இருக்கும் போது ஏற்படும் சில சந்திப்புக்கள். பெரும்பாலான
தலைவன் தலைவி சந்திப்புக்கள் சிறுவராக இருக்கும்
36

போதே - காதல் உணர்வு ஏற்படுமுன்னரே நிகழ்வதும் உண்டு. அப்படி நிகழ்வது பெரும்பேறு. போன பிறப்பில் விட்ட தொடர்பு இந்தப் பிறப்பிற் சிறுவயதிலேயே தொடங்குவ தானால் பெரும்பேறுதானே!
அத்தகைய பேறுபெற்ற இருவர் சிறுவயதில் நண்பர்களாகப் பழகி வயது வந்ததும் காதலர்களாயினர். திருமணம் புரிவதற்குப் பெற்றோர் சம்மதம் பெறுவதில் தடை ஏற்படலாம் என அவர்கள் இருவரும் கருதினர். பெற்றோருக் குத் தெரியாமல் ஊரைவிட்டுப்புறப்பட்டு வேறுர் சென்றனர். இவர்களை இடைவழியிற் சிலர் கண்டனர். இவர்களைப் பற்றி அவர்கள் உரையாடினார்கள்.
"இவர்கள் இருவரும் சிறு வயதில் எந்நேரமும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள். சிறுவர்கள் ஆதலால் இவர்களுக்கிடையில் சிறு சண்டையும் வந்துவிடும்"
இவன் இவளுடைய கூந்தலைப் பிடித்து இழுப்பான். இவள் சும்மா இருப்பாளா? இவளும் இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துவிட்டு ஒடுவாள். இதனைக் கண்ட இவர்களது செவிலித் தாயர் இவர்களுடைய விளையாட்டுச் சண்டையைத் தடுப்பார்கள். தடுத்தாலும் இவர்கள் சண்டையை நிறுத்தமாட்டார்கள்.
அப்படிப் பட்டவர்கள் இன்று இயற்கை மணம் புரிந்துகொண்டு இரட்டை மலர் மாலை போன்று இணைந்துள்ளனர்.
37

Page 28
"இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன்தலை ஒரிவாங்குநர்பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந்தவிராது ஏதில் சிறு செருவுறுபமன்னோ நல்லைமன்ற அம்மபாலே மெல்லியல் துணைமலர்ப்பினையல் அன்ன இவர் மனம்மகிழ்இயற்கை காட்டியோயே"
இது அன்பு வாழ்வின் ஒரு காட்சி. அடுத்த காட்சியைப்
பார்ப்போம்.
திருமணம் புரிந்த தலைவனும் தலைவியும் தனிக் குடித்தனம் நடத்தினர். அன்பு வாழ்வு வாழ்ந்தனர். அன்பில் விளைந்த அமுதாக மைந்தன் பிறந்தான். இருவர் மகிழ்ந்த வீட்டில் இருவரையும் மகிழ்விக்க ஒரு புதல்வன். அன்பினால் இணைந்தவர்களை மேலும் இறுக்கமடையச் செய்யும் அன்புக் கயிறாகக் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம், பொருட் செல்வம் கொண்ட அவர்கள் பிள்ளைச் செல்வமும் பெற்றனர். மூவராகிய இக்குடும்பத்துக்கு என்ன குறை? எல்லாம் நிறைவே
வீட்டுப் பணியுடன் வாழ்வு முடிந்து விடுகிறதா? நாட்டுப் பணியும் இருக்கிறதே! பகை அரசர் படையெடுக்கின் றனர். அரசன் போருக்கு ஆயத்தம் செய்தான். தலைவனும் அரசனது படையில் இணைந்துகொண்டான்.
நாடு காக்கும் போர்ப்பணியில் ஈடுபட்டுப்போர்க்களம் செல்கின்றான். அவனது அரசன் பாராட்டும் விதத்தில்
38

தனது கடமையைச் செய்து அரசனுடைய வெற்றிக்குத் துணையாகிறான் அவன். இது அவனது புறவாழ்வு.
இனி அவனது அக வாழ்வைப் பார்ப்போம். காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இல்லறம். அந்த இல்லறத்தின் செல்வமாகிய அன்புக் குழந்தை. அழுக்காறற்ற அன்பு கொண்ட சுற்றத்தினர். இன்சொல் கொண்டு விருந்தை உபசரிக்கும் உயர்ந்த பண்பு எல்லாம் சேர்ந்த நல்வாழ்வு.
வீட்டு நினைவு வந்தது
இத்தகைய சிறப்பமைந்த வீட்டை நாட்டுப் பணிக்காகப் பிரிந்து இருந்தான். நாட்டுப்பணி முடிந்தது. வீட்டு நினைவு எழுந்தது. தேர்ப்பாகனை அழைத்தான்.
"பாகனே! நாம் இப்போதே ஊருக்குத் திரும்ப வேண்டும். வேகமாகத் திரும்பவேண்டும்.
தலைவியை உடனே காணவேண்டும். தலைவி எப்படிப்பட்டவள்? நெல்லிக்காயை உண்டவர் உடனே தண்ணிர் குடிக்கும்போது அந்தத் தண்ணிர் இனிக்குமே! அதுபோன்ற இன்சொல்லை உடையவள்.
முன்பெல்லாம் போருக்கு வரும்போது அவளை
மட்டுமே பிரிந்து வருவேன். இப்போது அப்படியில்லையே.
இப்போது அவளுடன் எனது அழகையும் அவளது
39

Page 29
அழகையும் சேர்த்துப் பிறந்த எனது புதல்வனும் இருக்கிறானே! நாம் போகும்போது இருண்டுவிடும். நிலவு வானில் தோன்றிவிடும். விண்ணக நிலவைக் குழந்தைக்குக் காட்டி மண்ணக நிலவாகிய எனது மனைவி, மகனுக்கு உணவு ஊட்டுவாள். அவள் உணவூட்டும் காட்சியை, தாயையும் சேயையும் ஒருங்கே காணும் காட்சியை நான் இழந்துவிடக் கூடாது. நீ சிறிது தாமதித்தாலும் எனது மகன் உறங்கி விடுவான். நான் இந்தக் காட்சியைக் காணமுடியாது. அதனால் விரைவாயாக!" என்கிறான்.
தலைவன் போர்ப் பாசறையில் இருந்து புறப்பட்டான். தேர் விரைந்து ஒடிக்கொண்டிருந்தது. தலைவனின் மனத்திரையில் ஒரு படம் ஒடிக்கொண்டிருந்தது. அந்தப்படம் எது?
விண்ணிலே தண்ணிலவு மண்ணிலே அழகுமய மான பெண்ணிலவு அந்தப் பெண்ணின் கையிலே ஓர் உயிரோவியம். அந்த உயிரோவியத்துக்குப் பெண்ணிலவு கொஞ்சியும் கெஞ்சியும் உணவூட்டுகிறது.
"கடவுக காண்குவம் unres...............
பண்ணன் சிறுகுடிப்படப்பை நுண்இலைப் புன்காழ் நெல்லிப்பைங்காய்தின்றவர் நீர் குடி சுவையின் தீவியமிழற்றி முகிழ்நிலாத்திகழ்தரும் மூவாத்திங்கள் பொன்னுடைத்தாலி
40

என்மகன் ஒற்றிவருகுவை ஆயின் தருகுவென்பால் என
விலங்கு அமர்க்கண்ணள் விரல்விளிபயிற்றித்
திதலை அல்குல் எம்காதலி புதல் வற்பொய்க்கும்
பூங்கொடி நிலையே"
"உணர்ச்சியைத் தூண்டும் அளவைப் பொறுத்தே ஒரு நூல் நிலைபேற்றை அடைகிறது. அதற்கேற்ற அளவில்தான் இலக்கியம் என்ற பெயரைப்பெறுகிறது." என்கிறார் விமர்சகர் ஒருவர்.
தமிழில் உள்ள அகப்பொருள் இலக்கியங்கள் காதல் உணர்வைச் சித்திரிக்கின்றன. அகநானூற்றுப் பாடல்கள் இரண்டாயிரம் வருடத்துக்கு முற்பட்டவை ஆயினும் அவற்றிற் காணப்படும் காதல் உணர்வு - அன்பு உணர்வு எக்காலத்துக்கும் சொந்தமானவை.
தலைவியைப் பிரிந்து போருக்குச் சென்ற தலைவனு டைய உள்ளத்தில் நாட்டுப்பணி நிறைவேறியதும் வீட்டு நினைவு உள்ளம் முழுவதையும் தன்வசப்படுத்துகின்றது. அவளையே நினைக்கும் அவனும் அவனையே நினைக்கும் அவளும் புலவர்கள் கண்ட அற்புதத்தம்பதியென ஆகின்றனர்.

Page 30
குண இயல்புகளை விளக்கும் இலக்கிய மாமேதைகள்
இந்த உலகில் எத்தனையோ அதிசயங்கள் உள்ளன. அவற்றுள் எல்லாம் தலையாய அதிசயம் மனித மனம்தான். மனிதர்கள் எல்லோரும் உருவத்தில் ஒற்றுமை உடையவர்க ளாக இருக்கிறார்கள். ஆனால் மனமோ சிலருக்குச் சிகரமாகவும் இன்னும் சிலருக்குப் படுபாதாளமாகவும் உள்ளது. இதனைத்தான் திருவள்ளுவர்
"உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு" என்றார்.
ஆனால் மிருகங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. சிங்கம், கரடி, மான், முயல், பசு என்று தோற்றத்தைக் கொண்டே அவற்றில் ஆபத்தானவைகளையும் சாதுவான வைகளையும் கண்டுபிடித்துவிடலாம்.
உருவ அமைப்பில் ஒத்திருந்து குணங்களில் முரண் படும் மக்களை இலக்கியங்கள் வெகு சிறப்பாகச் சிருஷ்டித் துக் காட்டுகின்றன.
கொடுமையின் சிகரம்
மகாகவி சேக்ஷ்பியரின் இன்பியல் இலக்கியம் வெனிஸ் வர்த்தகன் (Merchant of Venice) அதில் இரு வர்த்தகர்கள்
42

சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவன் அன்ரோனியோ மற்றவன், ஷைலொக், இருவருக்கும் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. அவர்களின் தொழிலே இதற்குக் காரணமாக இருந்தது.
ஷைலொக் வட்டிக்குப் பணம் கொடுக்கும் வர்த்தகன் அன்ரோனியோ வட்டி இல்லாமலே பணம் கடன் கொடுப் பவன். இது ஷைலொக்கின் தொழிலைப் பெரிதும் பாதித்தது. வேறு காரணங்களும் இருந்தபோதும் இக்காரணமே ஒருவரை ஒருவர் வெறுப்பதற்குத் தூண்டுகோலாகியது.
அன்ரோனியோவுக்கு வெனிஸில் நண்பர்கள் பலர். பஸானியோ உயிர் நண்பன். ஒரு நாள் பஸானியோ அன்ரோனியோவிடம் சென்றான். அவசர தேவையாக இன்னோரிடத்துக்குச் செல்லவேண்டி இருப்பதால் பணம் கடனாகத் தந்து உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான். அன்ரோனியோவின் கப்பல்கள் அந்த நேரத்தில் வெளி நாடுகளுக்குச் சென்றிருந்தன. அந்த நேரத்தில் அவனிடம் பணம் இல்லை. கப்பல்கள் திரும்பினால் பெரும் தொகைப் பணம் வரும் என்றும் அன்ரோனியோ கூறினான்.
ஷைலொக் என்ற வர்த்தகனிடம் பணம் கேட்குமாறு கூறினான். தானும் சென்றான். ஷைலொக் பணம் கொடுப்பதற்கு அதிகம் யோசித்தான். காரணம் அன்ரோனி யோவிடம் இருந்த வெறுப்பே. பின்னர் யோசித்துவிட்டு ஒரு பிணைப்பத்திரத்தில் அன்ரோனியோ கையொப்பமிட்டால் அவர்கள் கேட்கும் தொகையைத் தான் கொடுப்பதாக ஷைலொக் கூறினான். பிணைப்பத்திரம் தயாராகியது.
43

Page 31
அந்தப் பிணைப்பத்திரத்தில் குறித்த காலத்தில் பணம் கொடுக்கப்படாவிட்டால் பிணை நிற்கும் அன்ரோனியோ வின் உடலிலிருந்து ஒரு இறாத்தல் இறைச்சியைத் தான் விரும்பிய இடத்தில் வெட்டி எடுப்பதாக ஷைலொக் குறிப்பிட்டிருந்தான்.
இந்த நிபந்தனையை அன்ரோனியோவின் நண்பன் பஸானியோ விரும்பவில்லை. ஆனாலும் தனது கப்பல்கள் திரும்பி வந்ததும் இதைவிடப்பன்மடங்கு பணம் வரும் என்ற நம்பிக்கையில் அன்ரோனியோ கையொப்பமிட் டான், கடன் கொடுக்கப்பட்டது.
காலம் விரைந்தோடியது. பிணைப்பத்திரத்தின் காலம் முடிந்தது. அன்ரோனியோவின் கப்பல்கள் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி வரவில்லை. பிணைப்பத்திரக் காலம் முடிந்தமையால் அன்ரோனியோ கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டான். ஷைலொக் ஒரு இறாத்தல் இறைச்சியை வெட்டி எடுப்பதற்குக் கத்தி தீட்டி ஆயத்த மானான். ஒரு மனிதனின் இறைச்சி வெட்டி எடுப் பதற்கு இன்னொரு மனிதன் மகிழ்ச்சியோடு கத்தி தீட்டுகி றான் என்றால் அதுதான் மனிதமனக் கொடுமையின் சிகரம்.
கத்தி தீட்டிய ஷைலொக்கின் ஆசை நிறைவேறியதா என்றால் அதுதான் இல்லை. பஸானியோவின் காதலி போஷியா வழக்கறிஞராக மாறுவேடத்தில் வருகிறாள். ஷைலொக்கைப் பார்த்து ஒப்பந்தப்படி ஒரு இறாத்தல் இறைச்சியை வெட்டி எடுக்கலாம். சிறியதாயினும் அதற்குக் கூடவோ குறையவோ எடுக்கக்கூடாது. ஒரு சொட்டு இரத்தம் தானும் சிந்தக்கூடாது என ஒப்பந்தத்தை வைத்தே
44

நிபந்தனை விதிக்கிறாள். இந்த நிபந்தனைப்படி ஒரு இறாத்தல் இறைச்சி எடுக்க முடியுமா? ஷைலொக்கின் கொடுர ஆசை நிறைவேறவில்லை. அன்ரோனியோ விடுதலை ஆகிறான்.
கருணையின் சிகரம்
மனித மனத்தின் கொடுமையின் சிகரத்தைப் பார்த்தோம். இனிக் கருணையின் சிகரத்தைப் பார்ப்போம். சிபிச் சக்கரவர்த்தி உலாவரபுறப்படுகிறான். அந்த நேரத்திற் புறாவொன்று அடைக்கலமென்று கேட்பதுபோல் அவன் காலடியில் விழுகிறது. புறாவைக் கருணையோடு கையில் எடுத்தான். முல்லைக்குப் பாரி இரங்கியதுபோல் - மயிலுக்குப் பேகன் இரங்கியதுபோல-புறாவுக்குச் சிபிச் சக்கரவர்த்தி இரங்கினான்.
புறாவைத் துரத்தி வந்த பருந்தை சிபி பார்த்தான். "உனது பசியைத் தீர்க்க இறைச்சிதானே வேண்டும். இந்தப் புறாவுக்கு நிகரான நிறையுள்ள இறைச்சியை எனது உடலில், வெட்டித் தருகிறேன்." என்றான். சொன்னவாறே தராசின் ஒரு தட்டில் புறாவை வைத்து, மறு தட்டில் தனது உடலிலி ருந்து இறைச்சியை வெட்டி வைக்கத் தொடங்கினான். இது மனித மனத்தின் கருணையின் சிகரம்.
சமயோசிதத்தின் சிகரம்
மனித குண இயல்புகளை விளக்கும் மேதைகள், சம
யோசித அறிவில், சில சமயங்களில், ஆடவரையும் விஞ்சும்
45

Page 32
மகளிரையும் சித்திரிக்கின்றனர். சமயயோசிதமாகக் கருமம் ஆற்றுவதில் சில வேளைகளில் ஆண்களைப் பெண்கள் விஞ்சிவிடுகின்றார்கள். இதோ கலிங்கத்துப் பரணியில் ஒர் உதாரணம். திருமணமாகிச் சில நாள்களே ஆகியிருந்தன. தலைவன் போர்க்களம் சென்றான். போரில் வெற்றி பெற்றான். போர்க்களத்தில் வெற்றி பெற்ற தலைவன் காதல் களத்திலும் வெற்றிபெற ஆசைப்பட்டான்.
விரைந்து வீடு திரும்பினான்; சிறிது காலப் பிரிவே, தலைவிக்குச் சிறுகோபத்தை - ஊடலை - ஏற்படுத்தி விட்டது. ஊடலால் அவள் வாசற் கதவைத் திறக்கவில்லை. கற்பனைமிக்க உள்ளம் வாய்ந்த புலவர் தலைவனுக்கு இரங்கித் தலைவியை கதவு திறக்குமாறு பாடுவது போல் அமைந்த பாடல் அது. அன்பை விளைவிக்கக்கூடிய புணர்ச்சியால் ஏற்படும் காதல் மயக்கத்தில் இரவு முழுவதும் தலைவி உவக்கும் இன்ப வார்த்தைகளைத் தலைவன் கூறினான். தலைவி காதலிற் குறைந்தவளா! அவளும் விடிய விடியத் தலைவன் உவக்கும் இன்ப வார்த்தைகளைத் தானும் கூறினாள்.
இவர்களின் இன்ப உரையாடல்களைத் தலைவி செல்லமாக வளர்த்த கிளி விடிய விடியக் கேட்டது. அதற்கோ ஞாபக சக்தி அதிகம். ஒரு முறை கேட்டதை அப்படியே ஒலிப்பதிவு நாடாபோல ஒரு சொல்லும் விடாது திருப்பிச் சொல்லும் ஆற்றல் உடையது. பொழுது விடிந்தது. அவர்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் சிலர் வந்தார்கள். தலைவனின் போர்ச் சாதனை பற்றி எல்லாம் கேட்டு மகிழ்ந்தார்கள். தலைவனின் போர்க்களச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்த
46

அவர்களுக்குத் தலைவனின் காதற்களச் செய்தியைக் கூறியது கிளி.
கிளிக்குத் தணிக்கை செய்யத் தெரியாது. இரவிர வாகத் தலைவன் தலைவிபேசியதை அப்படியே ஒப்புவித்தது. தலைவன் தலைவிக்குத் தர்மசங்கடம் ஆகிவிட்டது.
ஆனால் சமயோசித சிகரமாக விளங்கிய தலைவி கிளியின் வாயைப் பொத்திப் பிடித்துக்கொண்டாள். கிளியால் எதுவும் பேசமுடியவில்லை. இதோ அந்தக் கலிங்கத்துப்பரணிப்பாடல்.
"நேயக்கலவிமயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளி உரைப்ப வாயைப் புதைக்கும்மடநல்லிர் மணிப்பொற் கபாடம் திறமினோ"
உளவியலில் சிகரம்
திருமணத்தின் பின்னர் காதல் வாழ்வில் - மன நிலையில் மாற்றம் ஏற்படுவதும் உண்டு. இந்த மாற்றத்தை - உளவியலை - கூறுகிறது ஒரு குறுந்தொகைப் பாடல். தலைவனிடம் ஊடல் கொண்டிருந்தாள் தலைவி. தலைவி யின் ஊடலை மாற்றத் தலைவன் தோழியின் உதவியை நாடினான். தலைவியிடம் செல்ல வழிசெய்யுமாறு வேண்டி னான். அதற்குத் தோழி தலைவனைக் குற்றம்சாட்டினாள்.
திருமணத்தின் முன் தலைவனுக்கு இருந்த அன்பு இப்பொழுது மாறி விட்டதென்றாள். விளக்கமும் கூறினாள்.
47

Page 33
திருமணத்திற்கு முன்பு தலைவி வேப்பங்காயைக் கொடுத்தாலும் தலைவன் கற்கண்டுபோல இனிக்கிறது என்பானாம். திருமணத்தின் பின்னரோ பாரியினுடைய பறம்புமலையில் உள்ள குளிர்ச்சிபொருந்தியநீரைத் தலைவி கொடுத்தாலும் நீர் சுடுகிறது- கசக்கிறது- என்கிறானாம்.
வேப்பங்காய் அன்றுபோல்தான் இன்றும் இருக்கிறது. பறம்பு மலை நீர்ச்சுனையும் அன்றுபோல்தான் இன்றும் இருக்கிறது. மாற்றம் தலைவனின் உள்ளத்தில்தான். அந்த உளவியற்சிகரமான பாடல் குறுந்தொகையில் வருகிறது.
குண இயல்பு.
வேம்பின்பைங்காய்
என் தோழிதரினே தேம்பூங்கட்டி
என்றணிர் இனியே பாரிபறம்பிற்
பணிச்சுனைத் தெண்ணிர் தைஇத்திங்கள்
தண்ணியதரினும் வெய்யஉவக்கும்
என்றணிர் ஐய அற்றால்
அன்பின்பாலே. உளவியல் நூல்கள் என்று இன்று தனியாகப் பலநூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் மகாமேதைகளின் இலக்கியங்களில் எள்ளில் எண்ணெய் இருப்பதுபோல உளவியற் கருத்துக்கள் கலந்துள்ளன.
48

கவிச்சக்கரவர்த்தி பாடலில்
கணி மொழியார் நீராடல்
மகளிர் நீராடலைச் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் காணலாம். சங்க இலக்கியத்துக்குப் பின் வந்த இலக்கியங்களிலும் பெரும்பாலானவற்றில் நீராடல் சிறப்பாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம். நீராடற் பாடல்கள் கற்பனை வளமும் அணிநலமும் கொண்டுவிளங்கும் அதே நேரத்தில் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துக் காட்டுகின்றன.
பெண்கள் பாதுகாப்பாகவும் அதேநேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ச்சியாகவும் வாழ்வது அந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்கும். பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமல் ஏக்கத்துடன் வாழும் ஆட்சியில் தர்மம் இருக்கிறது என்று சொல்வது பொருந்தாது.
மகளிர் நீராடல் இலக்கியத்தில் இடம்பெறுவது ஒருநாட்டின் மழை வளத்தையும் மக்களின் மன மகிழ்வையும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே மகளிர் நீராடற் பாடல்கள் கற்பவர்க்கு இனிமை சேர்ப்பவையாகவும் அந்த நாட்டின் ஆட்சிக்குப் பெருமையை சேர்ப்பவையாகவும் அமையும்.
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது ஆட்சியில் பெண்கள் உண்டு உடுத்து உறங்கிப் பாதுகாப்பாகவும் மகழ்ச்சியாகவும் வாழ்ந்ததை மாங்குடிக்கிழார் என்னும் புலவர் ஒரு பாடலிற் காட்டுகிறார்.
49

Page 34
பாண்டியனது ஆட்சியில் வாழும் மகளிர் பெரிய பனையின் நுங்கையும் பொலிந்த கரும்பின் சாற்றையும் தென்னையின் இளநீரையும் கலந்து குடிக்கிறார்களாம். இம்முந்நீரைக் குடித்து விட்டு முந்நீர் என்று சொல்லப்படு கின்ற கடலிற்குதித்துநீராடி மகிழ்கிறார்களாம்.
முண்டகக் கோதை ஒண்டொடிமகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும் பூங்கரும்பின் தீஞ்சாறும்
ஓங்கு மணல்குவவுத்தாழைத் தீநீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர்ப்பாயும் தாங்கா உறையுள் நல்லூர் என்று சிறப்பித்துப்பாடுகிறார்.
சங்க இலக்கியத்தில் நீராடலைப் பார்த்த நாம் சங்க இலக்கியத்துக்குப் பின்னர் காப்பிய காலத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பாடலில் நீராடலைப்பார்ப்போம்.
எத்தனையோ தமிழ்க் கவிஞர்கள் வாழ்ந்தபோதும் கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக் கம்பருக்கே உரியதாகி விட்டது. கம்பரிடத்துக் கவி ஒருவருக்கு வேண்டிய சிறப்புக்களாகிய கற்பனை, உணர்ச்சி, அணிநலன், எளிமை, கருத்தாழம் அனைத்தும் இயல்பாக அமைந்திருந்தன. கவிதைக்கு ஒசை பிரதானம் என்பதைக் கம்பரின் பாடல்களில் சிறப்பாகத் தெரிந்துகொள்ளலாம்.
50

ஒவியக் கலைஞர்கள் தூரிகையால் ஒவியந் தீட்டுவது போலக் கம்பரும் சொல்லால் ஒவியந் தீட்டி இருக்கிறார். கம்பரின் பாடல்கள் அனைத்தும் சொல்லோவியங்களே. பாடலை ஒருமுறை படிக்கும்போதே பாடலுக்குரிய காட்சி மனத்திரையில் தோன்றும்.
தேவதை போன்றாளின் சிந்தை தடுமாற்றம்
கம்பர் சொல்லினால் தீட்டிய சில ஒவியங்களைப்
பார்ப்போம்.
அந்தப் பெண் சாதாரண அழகி அல்ல. அவள் போன்ற அழகியை மக்களிடையே காணமுடியாது. தேவ உலகத்தில் தான் காணமுடியும். அவள் ஒரு தேவதைபோல விளங்கி னாள். அவள் குளக்கரையில் நின்று குளத்தைப் பார்த்தாள். அவளது நிழல் குளத்தில் தெரிந்தது. தனது தோற்றத்தை நிழலிற் கண்டு வேறொரு பெண் என்று நினைத்தாள். வேறொரு பெண் என்று இவள் சிரித்தாள். நிழற் பெண்ணும் சிரித்தாள். ஒருமுறை இருமுறை அல்லப் பல முறையும் இவள் சிரிக்கும் போதேல்லாம் அவளும் சிரித்தாள்.எனவே இவள் இந்த நிழற் பெண்ணைச் சிரிக்கின்ற காரணத்தால் தன் தோழி என்று நினைத்தாள். தோழிக்கு ஏதாவது பரிசு கொடுக்கவேண்டாமா?தனது முத்து மாலையைக் கழற்றிக்
கொடுத்தாள்.
51

Page 35
"தேன் நகு நறவமாலைச்
செறிகுழல் தெய்வம் அன்னாள்.
தானுடைக் கோலமேனி
தடத்திடைத் தோன்ற நோக்கி
நான் நக நகுகின்றாள் இந்
நன்னுதல் தோழி ஆம்"என்று ஊனம்இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும்.
அன்னத்தை ஆட அழைக்கும் அரிவையர்
விருந்தினரின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதைக் கூறும் திருவள்ளுவர் அனிச்சம் பூவினும் மென்மையானது என்கிறார்.
பெண்ணின் மேனி எவ்வளவு மென்மையானது என்பதைக் கூற வந்த கம்பர் அதற்கும் பூவின் உதவியைத் தான் நாடுகிறார். நீராடும் பெண்களின் மேனி மிக மென்மையானதாம் எப்படிப்பட்ட மென்மையானது? பெண்கள் நீராடும் போது பூ அவர்களின் தனங்களில் முட்டுகின்றதாம். பூதனங்களில் முட்டியதையே அவர்களால் தாங்க முடியவில்லையாம் பூ முட்டித்தனங்கள் நொந்தமை யால் அவர்கள் வருந்துகிறார்களாம்.
இன்னும் சிலர் நீராடும் போது குளத்தில் அன்னப்
பறவைகளைக் கண்டார்களாம்.அன்னப்பறவைகள்
நடையில் இவர்களுக்குத் தோல்வி அடையாமல் நடந்தன
52

வாம். அன்ன நடையும் இவர்களின் நடையும் ஒன்றை ஒன்று வெல்லா திருப்பது கண்ட பெண்கள் ஒர் உண்மையை அறிந்து கொண்டார்களாம் அதுதான் அன்னங்களுக்கு ஆடற்கலையில் தம்மோடு போட்டியிடத் தெரியாது என்பது.எனவே அன்னங்களைத் தங்களோடு போட்டி இடுவதற்கு அழைக்கிறார்களாம்.அழைப்பவர்கள் சாதாரண அழகிகளா? தேவதைகள் போன்றவர்கள் அல்லவா? அவர்களுடைய இடை மின்னலைப் போன்றதாம். தோள்கள் மூங்கிலைப் போன்றவையாகும். அவர்கள் நீரில் முழ்கி எழும்போது அவர்களது கூந்தல் அவர்களது முக அழகை மறைக்கிறதாம். அவர் மறைக்கும் கூந்தலைக் கையால் அகற்றுகிறார்களாம்.
மின் ஒத்த இடையினாரும்
வேய்ஒத்த தோளினாரும் சின்னத்தின் அளகபந்தி
திருமுகம் மறைப்பநீக்கி அன்னத்தை வருதி என்னோடு
ஆட'என்று அழைக்கின்றோரும் பொன்ஒத்த முலையின் வந்து
பூஒற்ற உளைகின்றாரும் தாமரை மலருக்கும் காதலி முகத்துக்கும் வேறுபாடு அறியாதவன்!
காதலனும் காதலியும் நீராட வந்தார்கள். இருந்தாற் போல் அவர்களுக்குள் ஊடல் (சிறு கோபம்) ஏற்பட்டது. கோபத்தால் அவளுடைய கண்கள் சிவந்தன. திடீரென்று
53

Page 36
குளத்தில் இறங்கினாள்.அவளது முகம் மட்டும் வெளியே தெரிய நீரில் மூழ்கினாள்.முகம் தெரிந்தும் அவளது காதலனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அது தாமரைக்குளம். தாமரை மலர்களிடையே அவளது முகம் ஒரு மலராகக் கலந்துவிட்டது. எது தாமரை எது முகம் என்ற சந்தேகத்துடன் பார்க்கிறான்.
அங்கு இடை உற்ற குற்றம்
யாவது என்று அறிதல் தேற்றாம் செங்கயல் அனைய நாட்டம்
சிவப்புறச் சீறிப்போன மங்கை ஒர் கமலச்சூழல்
மறைந்தனள்மறையமைந்தன் பங்கயம், முகம் என்று ஓராது
ஐயுற்றுப்பார்க்கின்றானும்.
கரும்பன்ன இனிய மாதம்
காதலனுக்கு இனிமை தருவதால் அழகிகளைக் கரும்பின் அன்னார் என்கிறார் கம்பர்.கரும்புத் துண்டைக் கையில் எடுத்துச் சுவைத்தால் கரும்புத்துண்டின் முழுப் பகுதியுமே இனிமை செய்யும். காதலியும் காதலனுக்கு அதே போல இனிமை செய்வதால் கரும்பின் அன்னார் என்றார் கம்பர். இனிமையில் கரும்பை ஒத்த அவர்கள் தோற்றத்தில் பவளத்தையும் கொவ்வைக் கனியையும் தாமரை பூத்தது போல இருக்கிறார்களாம். அவர்கள் சாதாரணமாகப் பேசினாலே அது சங்கீதம் போல இருக்குமாம். பண் உளர்
54

வண்ண வாய் என்கிறார். இப்படிப்பட்ட கண்ணுக்கும் செவிக்கும் மெய்க்கும் இனிய பெண்கள் குளத்தைப் பார்த்தார்களாம். அங்கே கயல் மீனைப் பார்த்தார்களாம். பார்த்து விட்டு, இதென்ன குளத்தின் கண்கள் ஒடித் திரிகின்றன என்று காதலனைக் கேட்டனராம்.
பண்உஊர் பவளத்தொண்டை
பங்கயம்பூத்தது அன்ன வண்ணவாய்குவளைவாள்,கண்
மருங்கிலாக் கரும்பின் அன்னார் உள்நிறைகயலை நோக்கி
ஓடுநீர்த்தடங்கட்கெல்லாம் கண் உள ஆம் கொல்?’ என்று
கணவரை வினவுவாரும்.
மனம் எரிந்த ஆடவர்கள்
நீர் விளையாட்டின்போது மகளிர் மார்பிற் பூசிய சந்தனம் அழிந்து விடுகிறது. சந்தனம் அழிந்தமையால் தனங்களில் நகக் குறிகள் தெரிகின்றன. தனங்கள் பொற்குடங்கள் போன்றிருக்கின்றன.நகக்குறிகள் வேள் விக்குரிய பொற்குடங்களில் சிவப்பு நூல் சுற்றி இருப்பது போல் இருக்கின்றன. இக்காட்சியைக் கண்ட ஆடவர்களின் மனம் எரிந்ததாம்.
எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ? அரிந்த கூர் உகிரால் அழி சாத்துபோய்

Page 37
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை வளிந்த பொற்கலசங்களை மானவே?
இதே போலக் கம்பரின் நீராடற் பாடல்கள் அனைத்தும் கற்பனை வளமும் சொற்சுவையும் பொருட் சுவையும் அணிநலனும் கொண்டு கற்போர்க்குப் பேரின்பம் நல்குகின்றன.
56

அன்புநிலை காட்டும் கதையும் கவிதையும்
வறுமை பற்றிச் சங்ககாலம் தொடக்கம் இன்று வரை பல கவிஞர்கள் பாடி இருக்கிறார்கள். ஆயினும் வறுமையின் துன்பத்தைத் திருவள்ளுவர் கூறியதுபோலச் சிறப்பாக மற்றவர்கள் கூறியிருக்கிறார்களா என்றால் இல்லை யென்றே சொல்ல வேண்டும்.
வறுமையைப்போலத் துன்பம் தரக்கூடிய ஒன்று
இவ்வுலகில் உண்டா என்ற கேள்வியை திருவள்ளுவர் எழுப்பினார். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு வறுமையோடு ஒப்பிடக்கூடிய ஒன்று உலகில் இல்லை என்பதைக் கண்டவர் வறுமைபோலத் துன்பம் தரக்கூடியது வறுமையே என்றார். தனக்கு நிகராகவும் தன்னை விஞ்சக்கூடிய அளவிலும் வேறு பொருள் இல்லையென்னும்படி கொடியது வறுமை என்றார்.
"இன்மையின் இன்னாது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது."என்றார்.
வறுமையிலும் நன்மை
இத்தகைய வறுமையிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது என்ன? அதற்குப்பதிலும் திருவள்ளுவரே சொல் லுகிறார். உண்மையான நண்பர் யார்? உண்மையான உறவினர் பார் என்று அறிவதற்கு வறுமை உதவுகிறதாம்.
57

Page 38
வறுமையைக் கண்டதும் சுயநலம் கொண்ட நண்பர்களும் உறவினர்களும் ஓடி விடுவார்களாம். உண்மையான அன்பு கொண்ட நண்பர்களும் உறவினர்களும் தான் கடைசிவரை நிற்பார்களாம்.
"கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்" நண்பர்கள், உறவினர்களை அளந்துகொள்ள வறுமை உதவியாக அளவு கோலாக இருப்பதால் வறுமையிலும் ஒரு நன்மை உண்டு என்கிறார். வறுமைக் காலத்திலும் அன்புகொண்ட தலைவன் தலைவியரை ஒரு கவிதையிலும் ஒரு சிறுகதையிலும் பார்ப்போம்.
கவிதையின் தலைவி செல்வக் குடும்பத்திற் பிறந்தாள். செல்லமாக வளர்க்கப்பட்டாள். அவளைக் கவனிக்கும் அவளது வளர்ப்புத் தாய் உணவு ஊட்டும் நேரத்தில் தங்கத்தினால் ஆகிய கோப்பையை எடுப்பாள். அதிலே வெண்சோற்றை இடுவாள். அத்துடன் தேனையும் பாலையும் சேர்த்துப் பிசைந்து அமுதமாகும்படி சுவைபடச் செய்வாள். அந்தப் பாற்சோற்றைச் சிறுமிக்கு ஊட்டச் செல்வாள். சிறுமி உண்ண மறுப்பாள்.
சிறுமியை அச்சுறுத்துவதற்காகச் சிறிய தடியை எடுத்து வளர்ப்புத்தாய் பொய்யாக வீசுவாள். சிறுமி காற்சிலம்பு ஒலிக்கும்படி விரைந்து ஒடுவாள். வளர்ப்புத் தாயால் சிறுமியுடன் ஒட முடியுமா? வளர்ப்புத்தாய் சிறுமியின் பின்னால் ஒடிக்களைத்து விடுவாள். தங்கக் கோப்பையில்
58

பிசைந்த அமுதொத்த சுவையுடைய வெண்சோற்றை உண்ண மறுத்த சிறுமி வளர்ந்து பருவம் அடைந்துவிட்டாள்.
மணம்முடித்து இப்போது இல்லறம் நடத்துகிறாள். அன்பைச் சோதிக்கும் வறுமை அவர்கள் வாழ்வில் வந்துவிடுகிறது. அவள் தேர்வில் வெற்றிபெறுகிறாள். தனிக்குடித்தனம் நடத்தும் தலைவி தான் பிறந்தவீட்டில் தங்கக்கோப்பையில் உண்ட சோற்றை அப்போது நினைத்து ஏங்கவில்லை. திருவள்ளுவர் கூறும் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ஆகிவிடுகிறாள்.
ஒருநேரம் பட்டினி
வறுமையை உவந்து ஏற்கிறாள். வீட்டிலுள்ள பொருளுக்கு ஏற்றபடி ஒரு நேரம் பட்டினி இருக்கிறாள். ஒரு நேரம் சாப்பிடுகிறாள். தலைவன் தலைவியின் அன்பைச் சோதிக்க வந்த வறுமை தோல்வியடைந்து விடுகிறது. தலைவன் தலைவியின் அன்புவென்று விடுகிறது.
தலைவியின் நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் புலப்படுத்தும் அந்தக் கவிதை நற்றிணையில் வருகிறது. பாடிய புலவர் போதனர். பிரசங்கலந்தவெண் சுவைத் தீம்பால் விரிகதிர்ப்பொற்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்னவென்று ஒக்குபுபுடைப்பத்தெண்ணிர்
59

Page 39
முத்தரிப்பொன் சிலம்பு ஒலிப்பத்தத்துற்று அளிநரைக் கூந்தல் செம்முதுசெவிலியர் பளிமெலிந்தொழியப்பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவினையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளது ஒழுகுநீர் நுணங்கறல் போலப்பொழுதுமறுத்துண்ணும் சிறுமதுகையளே
அகப்பொருட் கவிதைகளைத் தொகுத்து அவற்றுக்கு நற்றிணை என்று பெயரிட்ட சான்றோரைப் போற்றுவோம். நூலுக்குப் பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது. திணை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள். நற்றிணை நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கவிதை. இலக்கிய இன்பம் ஒருவிதம். ஒழுக்கத்தைப்போதிக்கும் சிறப்பு ஒருவிதம்.
இங்கு கூறப்படும் சிறப்பு-திணை-ஒழுக்கம்- என்ன?
"அறிவும் ஒழுக்கமும்
யாண்டுணர்ந்தனள் கொல்" என்ற அடி சுருக்கத்தில் கருத்துப் பெருக்கத்தைக் கொண்டது.
திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்திற் குறிப்பிடும் பெண்ணுக்குரிய இலக்கணம்
அனைத்தையும் இந்த அடிகொண்டுள்ளது. அறிவு
60

என்பதனால் தலைவியின் நுண்ணறிவும் ஒழுக்க
மென்பதனால்தலைவியின் ஆசாரமும் குறிக்கப்பட்டுள்ளன. ஆசாரம் என்பது கல்வியினாலும் வரலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகவே வருகிறது.
தந்தை வீட்டில் தங்கக் கோப்பையிற் செவிலித்தாய் உணவு ஊட்ட முயன்றபோது உண்ண மறுத்து விளையாடும் சிறுமி இன்று இல்லறம் என்ற நல்லறம் மேற்கொண்டதும் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை உணர்ந்து தந்தையின் சுவைமிகுந்த- அமுதனைய- சோற்றை நினைக்காது கணவன் வீட்டின் உணவு நிலை அறிந்து ஒருவேளை உண்ணாது பட்டினி இருந்து மறுவேளை உண்ணுகிறாள்.
புகுந்த குடும்பத்தின் வறுமை கண்டு புகுந்த குடும்பத்தை இகழ்ந்து பிறந்த குடும்பத்தைப் போற்றுவோர் உலகில் இருக்கும் போது கணவனின் வருவாய்க்கு ஏற்ற வளத்தக்காளாக, வாழ்க்கைத் துணையாக இருப்பவள் தெய்வமாகிறாள். அவள் பெய்யெனப்பெய்யும் மழை.
இந்த ஆசாரம் ஒரு பெண்ணுக்குப் பரம்பரை பரம்பரையாக வருவது. தாயின் கருவில் இருக்கும் போதே இரத்தத்திற் கலந்து வருவது. அதனால்தான் தாய் "யாண்டுகற்றாள்" என்று வினவாது" யாண்டு உணர்ந்த னள் கொல்" என்று கேட்டு வியப்படைகிறாள்.
வறுமையிலும் அன்பு நிலையிற் சிறிதும் குறைவுபடாத நற்றிணைக் கவிதை காட்டும் குடும்பத்தைப் பார்த்தோம்.
61

Page 40
இனிச் சிறுகதை ஒன்றில் வறுமையிலும் அன்பில் நீங்காத இனிய குடும்பம் ஒன்றைப்பார்ப்போம்.
Lýsla
சிறுகதை ஆசிரியர் "ஒஹென்றி" என்பவர் எழுதிய சிறுகதைகளில் மிகக் கருத்தாழம் கொண்டது பரிசு என்னும் சிறுகதை.
இளமையும் அழகும் வாய்ந்தவள் -இனிய குணங்கள் எல்லாம் தன்பாற் கொண்டவள் அவள் தான் சிறுகதையின் தலைவி.
அவளுக்கு நிகரான இளமை அவளுக்கு நிகரான அழகு அவளுக்கு நிகரான குணநலம் தன்பாற் கொண்ட வன் தலைவன்.
இருவரும் ஒருவரை ஒருவர் காண்கின்றனர். இதயத்தால் ஒன்று படுகின்றனர். காதல் கனிந்து திருமணம் புரிந்து இல்லறம் என்ற பூங்காவிற் சுகம் நுகர்ந்து வாழ்கின்றார்கள்.
அவர்கள் திருமணம் புரிந்து ஓராண்டு நிறைகிறது. ஓராண்டு நிறைவு தினத்தில் அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று அவன் விரும்புகின்றான். அவனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று அவளும் விரும்புகிறாள்.
62

அன்றுதான் திருமண ஆண்டு நிறைவுநாள். பொழுது விடிந்துவிட்டது. மாலையிற் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் அவனிடமோ அவளிடமோ சிறுதொகைப் பணம்கூட இல்லை. பரிசு கொடுக்க என்ன செய்யலாம் என்ற எண்ணத்தோடு அவன் காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டைவிட்டுப்புறப்படுகிறான்.
அவன் சென்ற பின்னர் பரிசுகொடுக்க என்ன செய்யலாம் என்ற எண்ணத்தோடு அவளும்வீட்டை விட்டுப் புறப்படுகிறாள்.
அவன் தெரிந்த பலரிடம் கடன் கேட்டுப் பார்க்கிறான். பணம் கிடைக்கவில்லை. அவன் கையில் அப்போது இருந்ததெல்லாம் பெறுமதி மிக்க கைக்கடிகாரம் மட்டும் தான். எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் அதை விற்கவில்லை. அப்படிப் பாதுகாத்து வந்தான். அந்தக் கைக்கடிகாரத்தை அவளுக்குப் பரிசளிக்க பயன்படாத கடிகாரத்தைப் பாதுகாத்து என்ன செய்வது என்று முடிவு செய்து கடிகாரத்தை விற்று அவளுக்கு அன்பளிப்புச் செய்வதற்குப் பிறந்த நாள் பரிசை அவன் வாங்கினான். அவள் பெண். மற்றவர்களைக் கடன் கேட்க முடியுமா? ஆனாலும் அவளும் அன்றே அவனுக்கு ஆண்டு நினைவுப் பரிசு வழங்க விரும்பினாள்.
அவள் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நாடகங்களுக்கு வேண்டிய உபகரணங்களும் தலைக்குவைக்கும் "விக்"கும் விற்பனை செய்யும் நிலையம்
63

Page 41
ஒன்று அவள் கண்ணில் தட்டுப்பட்டது. "விக்" தயாரிப்பதற்கு மகளிரின் கூந்தலை நல்ல விலை கொடுத்து வாங்குபவர்கள் அவர்கள்.
அவள் அந்தக் கடைக்குச் சென்றாள். நியாயமான ஒரு தொகைக்குத் தன் கூந்தலை வெட்டிக் கொடுத்தாள். அந்தப் பணத்திற்குத் தன் அன்பனுக்கு அன்பளிப்பு வாங்கினாள். வீடு திரும்பினாள். அவனும் மாலை வீடு திரும்பினான்.
அவன் அவளுக்கு அன்பளிப்புச் செய்யவெனத் தங்கத்தால் செய்த "புறோச்" ஒன்றை வாங்கி வந்தான். அவளுடைய அழகான நீண்ட கூந்தலில் அந்தப்புறோச்சைத் தானே தன்கையாற் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வந்திருந்தான். ஆனால் "புறோச்" சைச் சூட்டுவதற்கு இப்போது அவளிடம் கூந்தல் இல்லை.
அவள் தன் கூந்தலை விற்று அவனுடைய கைக்கடிகாரத்தில் உள்ள "பெல்ற்"றுக்குப்பதிலாகத் தங்கச் சங்கிலி ஒன்றைத் தன் கையாலேயே பூட்டிக் கொடுக்க
வேண்டும் என்று தங்கச் சங்கிலி ஒன்று வாங்கி வந்தாள்.
அவன் கொண்டு வந்த புறோச்சைச் சூட்டுவதற்கு அவளிடம் கூந்தல் இல்லை. அவள் கொண்டு வந்த தங்கச் சங்கிலியைப் பூட்டுவதற்கு அவனிடம் கடிகாரம் இல்லை.
கொண்டு வந்த பரிசுகளைக் கொண்டு வந்த
64

நோக்கத்துக்குப் பயன்படுத்த முடியாது அவர்கள் மெளனமாக ஒரு வரை ஒருவர் நீண்ட நேரம் பார்க்கின்றனர். இருவர் கண்களிலும் கண்ணிர் நிறைந்து பின்னர் கன்னத்தில் வழிகிறது.
கதையை முடிக்கிறார் சிறுகதை ஆசிரியர் ஒஹென்றி. பரிசைக் கொண்டு இருவர் அன்பை வறுமையிலும் மாறாத அன்பை சித்திரிப்பதில் ஒஹென்றி பெருவெற்றி அடைகிறார். வறுமையின் பிடியில் அகப்பட்ட போதும் அன்பு நிலையில் உயர்ந்த கவிதைத் தலைவியையும் சிறுகதைத் தலைவியையும் பார்த்தோம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட நற்றினையும் அண்மையில் தோன்றிய சிறுகதையும் வறுமையிற் செம்மை எது? வறுமையில் வாழ்வு எப்படி அமையவேண்டும் என்பதை அழகுறச் சித்திரிக் கின்றன.
பிரிவுத் துயரில் அன்புநிலை
வறுமைநிலையிலும் வறுமையின் சோதனைகளை வென்ற அன்பு நெஞ்சத்தினரைக் கண்டோம். இனி மரணத்திலும் ஒன்றுபடும் அன்பு நெஞ்சத்தைப் பார்ப்போம். சேரமான் மாக்கோதை என்னும் அரசன் பெருங்கோப் பெண்டு என்பவளை மணந்து அன்பிற் சிறந்த காதல் வாழ்வு வாழ்ந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் உயிரினும் மேலாக மதித்தனர். அந்த அன்புத் தம்பதியரின் வாழ்வு நீண்டு
65

Page 42
நிலைக்க வில்லை. அவள் நோயுற்றாள். நோயினால் இறந்தும் விட்டாள்.
சேரமான் துடிதுடித்துப் போனான். அவளைப்பிரிந்து வாழ்வது அவனுக்கு இயலாத பெரும் துன்பமாகப்பட்டது. தனது உயிரைவிடத் தீர்மானித்தான். இதை அறிந்த சான்றோர்கள் "அரசனே, காதலியின் பிரிவு பெரும் துன்பம் என்பதை நாம் அறிவோம். அரசனுக்குத் தனிவாழ்வை விடப் பொதுவாழ்வே பெரியது, அரசனுக்கு காதலைவிடக் கடமையே பெரியது. காவல் தொழிலை மேற்கொண்டிருக்கும் நீ உனது கடமையை மறந்து காதலுக்காக உயிர் விடுவது முறையன்று." என்று கூறி அவனை உயிரைமாய்க்க விடாது தடுத்தனர்.
அதற்குச் சேரமான் "நீங்கள் பல காரணங்களைக் கூறலாம்; நான் அடைந்திருக்கிற துன்பம் மிகப் பெரியது. அவள் விண்ணடைந்துவிட்டாள். நானும் அவளுடன் செல்லாது இன்னும் உயிருடன் இருக்கிறேனே. இது என்ன இயல்பு" என்கிறான்.
"ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வ கலன்னிதன்பண்பே " என்கிறான். உண்மை அன்பு நிலை வறுமையிலும் மாறாது. ஒருவரை ஒருவர் பிரிவதாகிய நிலையிலும்மாறாது.
66

பாத்திரப் படைப்பில் இளங்கோவின் சாதனை
பாத்திரப் படைப்பில் இளங்கோ அடிகள் பெருஞ் சாதனை புரிந்திருக்கிறார். பிரதான பாத்திரங்கள் முதல் சிறுபாத்திரங்கள் வரை அனைத்தையுமே செப்பமுறப் படைத்திருக்கிறார். கண்ணகி பாத்திரத்தைச் சிறப்புறப் படைத்தது போலவே கோவலன் பாத்திரத்தையும் சிறப்புறப் படைத்திருக்கிறார்.
கோவலனின் கருணையுள்ளத்தை இளங்கோ அடிகள் காட்டமுற்பட்டுப் பெருவெற்றி கண்டுள்ளார். "காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்" என்கிறார் ஒளவையார். இது இன்பத்துக்கு ஒளவையார் கூறிய வரைவிலக்கணமாகவும் வாழ்க்கை நியதியாகவும் உள்ளது. இந்த நியதியில் இருந்து விலகி ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும்போதுவாழ்க்கை துன்பமயமாகிறது.
கருணை உள்ளத்தில் கோவலன் குறைந்தவன் அல்லன். மணிமேகலை பிறந்தபோது மணிமேகலைக்குப் பெயர் இட்ட கோவலன், பெயரிட்டது குறித்துத் தானம் செய்கிறான். தானம் பெற வந்தவருள் ஒர் அந்தணனை மதம் கொண்ட யானை ஒன்று துதிக்கையால் தூக்கியது.
இதைக் கண்ட கோவலன் தன்னுயிரையும் பொருட் படுத்தாது மதயானையின் துதிக்கையை நோக்கி விரைந்து
67

Page 43
அந்தணனை மீட்டான். இதனால் இளங்கோ அடிகள் கோவலனைக் "கருணை மறவ" என்கிறார். இத்தகைய கருணை மறவன் கண்ணகியைத் திருமணம் செய்ததும்.
"மாசறு பொன்னே வலம்புரிமுத்தே காசறுவிரையே கரும்பேதேனே! அரும்பெறற்பாவாய்! ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெருமடமகளே!"
என்று பாராட்டினான். அப்போது கோவலன் மனத்தில் எந்தச் சபலமும் இல்லை. காதலிருவர் கருத்தொருமித்தவர் களாகவே இருந்தனர்.
மாதவிசந்திப்பு
மாதவியின் அரகேற்றம் கண்ட அரசன் ஆடற் கலையைப் பாராட்டி பச்சை மாலையும், தலைக்கோற்பட்டமும் ஆயிரத்தெண்கழஞ்சு பொன்னும் மாதவிக்குப் பரிசளித் தான். அம்மாலையை வாங்குவோன் மாதவிக்கு மணாளன் ஆவான் என்பதை அறிந்த கோவலன் ஆயிரத்தெண்கழஞ்சு பொன் கொடுத்து மாலையை வாங்கி மாதவியை அடைகிறான்.
கண்ணகி கண்ணிர் சிந்தவும், கண்ணகி- கோவலன் இருவரின் பெற்றோர் கலக்கமடையவும் கூடிய ஒரு கருமத்தைச் சற்றும் ஆராயாது கணப் பொழுதிற்செய்து விட்டான் கோவலன். இதைத்தான் சபலம்’ என்று குறிப்பிடுகின்றார்கள். கண்ணகிக்குத் துரோகம் செய்ய
68

வேண்டும் என்ற வண்ணம் கனவிலும் கொள்ளாத கருணை உள்ளம் கொண்ட கோவலன் கணப்பொழுதிற் சபலத்துக்கு
ஆளானான். இந்தச் சபலத்தில் இருந்து கோவலன் மெல்ல மெல்லத்தன்னை விடுவித்துக் கொண்டான்.
கானல் வரிப்பாடலாற்கருத்துவேற்றுமைகொண்டு திடீரென எழுந்து கண்ணகியிடம் சென்ற கோவலன், கண்ணகியின் வாடிய மேனியைக் காணுகிறான். கண்ண கிக்குத் தான் செய்த பெரிய துன்பத்தை நினைக்கிறான். கண்ணகியைப் பார்த்து-"வஞ்சகம் பொருந்திய பொய்யுடை யாளுடன் வாழ்ந்து பரம்பரையாக வந்த பெரும் பொருளைத் தொலைத்து விட்டேன். இது எனக்கு வெட்கத்தைத் தருகிறது" என்றான்.
"சலம்புணர்கொள்கைச்சலதியொடாடிக் குலம் தருவான்பொருட் குன்றத் தொலைத்த இலம்பாடுநாணுத்தரும்"
இது கேட்ட கண்ணகி தனது வாடிய முகத்திற் புன்னகையை வருவித்து "சிலம்பு ஒரு சோடி இருக்கிறது கொள்ளுங்கள்" என்றாள்.
அந்த நேரத்தில் கோவலனுடைய மனம் தனது
பரம்பரைச் செல்வம் முழுவதும் தொலைவதற்குக் காரண
மாக இருந்த மாதவியையும் அந்த நிலையிலும்
புன்முறுவலோடு மாதவிக்குக் கொடுக்க சிலம்பு இருக்கிறது
69

Page 44
என்று கூறும் கண்ணகியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. அந்தோ! கண்ணகிக்கு எவ்வளவு பெருந்துன்பத்தைப் புரிந்துவிட்டேன் என்று அவன் மனம் ஒலமிட்டது.
இரண்டு கேள்விகள்
"இந்தச் சிலம்பை மதுரைக்குக் கொண்டு சென்று விற்று அதனை முதலாகக் கொண்டு எனது வணிகத் திறமையால் இதுவரை தொலைத்த பொருளை எல்லாம் திரும்ப ஈட்ட விரும்புகிறேன். நீயும் என்னோடு இப்பொழுதே புறப்படு" என்றான். கண்ணகியும் மறுவார்த்தையின்றி இரவோடு இரவாகக் கோவலனுடன் புறப்பட்டாள்.
இந்த இடத்தில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி - ஏன் இரவோடு இரவாகப் புறப்பட வேண்டும்? இரண்டாவது கேள்வி ஏன் கண்ணகியையும்
கூட்டிக் கொண்டு புறப்படவேண்டும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலைச்சொல்லாமற் சொல்லியதன் மூலம் இளங்கோ அடிகள் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தைப் படைத்த மாபெரும் கவிஞன் தான் என்பதையும், அதேநேரத்தில் நிகரற்ற உளவியல் ஆசிரியர் தான் என்பதையும் நிரூபித்துள்ளார்.
தனது உண்மையான நிலை எது என்பதை ஒருவன் உணர்ந்துவிட்டால், அது ஒன்றே அவனது உயர்வுக்கு வழி வகுக்கும். தனது மனம் சபலமுள்ளது என்பதைக் கோவலன்
70

நன்கு தெரிந்து கொண்டான். உயிரினும் மேலாக மதித்த கண்ணகியைக் கணப்பொழுதிற் பிரிந்து மாதவியிடம் சென்றான் என்றால் அதற்குக் காரணம் அவனது சபல புத்தியே!
இப்போது அவனது மனச் சாட்சி அவனது சபல புத்தியோடு மோதி வெற்றிபெற்று அவனைக் கண்ணகியிடம் இழுத்துக் கொண்டு வந்து விட்டது. மனச் சாட்சியின் இந்த வெற்றி நிச்சயமானதா என்ற ஐயம் கோவலனுக்கு ஏற்பட்டு விட்டது.
பூம்புகாரில் இருந்தால் மாதவியின் நினைவு பழையபடி வலிமைபெற்றுக் கோவலனின் சபலபுத்தி வழியாக வந்து கோவலனைப் பழையபடி மாதவியிடம் இழுத்துச் சென்று விடவும் கூடும். இந்தச் சபலம் தனக்கு இருப்பதை அறிந்தே இரவோடு இரவாகப்புறபபட்டான்.
கண்ணகியோடு மதுரைக்குப் புறப்பட்டதேன்? இது இரண்டாவது கேள்வி.
கோவலனது பரம்பரையினர் வணிகத்துக்காக ஊர்விட்டு ஊர் செல்வதோ கடல் கடந்து நாடுவிட்டு நாடு செல்வதோ புதுமையானது அன்று. கோவலன் பரம்பரையில் வணிகத்துக்காக ஊர் விட்டு ஊர் செல்கையில் மனைவியை அழைத்துச் சென்ற முதலாம் ஆள் கோவலனே. அந்த வகையில் கோவலன் குலமரபை மீறினான். அப்படியானால் ஏன் கண்ணகியைத் தன்னுடன் அழைத்தச் சென்றான்? அதற்கும் கோவலனின் சபல புத்தியேகாரணம்.
71

Page 45
மதுரை சென்று சேர்வதற்கு இடையிலேயே தனது சபல மனம் தன்னை மாதவியிடம் இழுத்துச் சென்று விட்டால்என்ன செய்வது என்று அஞ்சினான். தன்னைத் தன் மனச்சலபத்திடமிருந்து காப்பாற்றிக் கொள்ளக் கற்பின் செல்வியாகிய கண்ணகி கூட இருப்பதே பெரும் பலம் என்று அவன் நம்பினான். அதனாலேயே கண்ணகியை உடன் அழைத்துச் சென்றான்.
கோவலனின் கருணை உள்ளம்
மனச்சபலம் காரணமாகக் கண்ணகியைத் தவிக்க விட்டு மாதவியே கதி என்று சில ஆண்டுகளைப் போக்கிய போதும் கோவலனின் கருணை உள்ளத்தைக் குறை கூற (plg. lll Tjl.
மதுரை சென்ற கண்ணகியையும் கோவலனையும் மாதரி என்னும் இடையர் குலப்பெண் புதிய மனையொன்றில் இருத்த கண்ணகி சமையல் செய்து கோவலனை உண்பித்து வெற்றிலை பாக்கும் கொடுக்கின்றாள். அப்போது கோவலனின் சபல உள்ளம் தோல்வியுறக் கருணை உள்ளம் வெற்றி அடைந்திருந்தது.
கண்ணகியைப் பெரும் துன்பத்தில் விட்டு மாதவியிடம் சென்றபோது கண்ணகியின் துன்பம் பற்றி யோசியாத கோவலன் இப்போது காட்டு வழியாக நடந்த கண்ணகியின் மெல்லிய அடிகள் பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டு வழியைக் கடப்பதற்கு சிறிதாவது வன்மை உடையனவோ என்று வருந்துகிறான்.
| 72

"கல்லதர் அத்தம் கடக்கயாவதும் வல்லுநகொல்லோ மடந்தை மெல்லடி" எனக் கவலைப்படுகிறான்.
தன் மனச்சபலத்தைத் தானே உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்ட கோவலன் தவறியபோதும் பின்னர் தன்னை உயர்த்திக் கொண்டு விட்டான்.
"எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமைநன்று"
என்றார் வள்ளுவர்.
என் செய்தேன் என்று இரங்கும் தவறு ஒன்றைக் கோவலன் செய்தான். ஆனால் மற்றன்ன செய்யாத நிலைக்கு உயர்ந்தான்.
கண்ணகியை நோக்கித் தன்னைப் பற்றிக் கோவலன் விமர்சிக்கும் போது "நான் இப்படியெல்லாம் தவறு செய்தது மாயமோ? முன் செய்த தீவினையின் பயனோ? என் பெற்றோர் எப்படித் துன்பப்பட்டனரோ? சிறு பருவத்திற் பெரிய அறிவினையுடைய உனக்கு தீமை செய்தேன். பயனில் சொல்வாரோடும் புதிய பரத்தமை உடையாரோடும் கூடி, இழிந்தோர் கூட்டத்தின் சிரிப்புக்கு உட்பட்டுப் பெரியோர் விரும்புகின்ற நல்லொழுக்கத்தினைக் கெடுத்தேன்" என்கிறான்.
73

Page 46
"மாயங்கொல்லோ!
வல்வினைகொல்லோ! யானுளங்கலங்கி
யாவதும் அறியேன்! வருமொழியாளரொடு
வம்பப்பரத்தரொடு குறுமொழிக்கோட்டி
நெடுநகைபுக்குப் பொச்சாப்புண்டு
பொருளுரையாளர் நச்சுக்கொன்றேற்கு
நன்னெறி உண்டோ?
74

வில்லாண்ட காவலரும் சொல்லாண்ட பாவலரும்
"சொற்களால் உலகை ஆள்பவர்கள் கவிஞர்கள்" என்றார் ஷெல்லி.
வில் கொண்டு உலகை ஆண்ட மன்னர்கள் மறைந்துவிட்டார்கள். ஆனாலும் சொல் கொண்டு உலகை ஆண்ட கவிஞர்கள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். கவிஞர்கள் என்றும் வாழ்பவர்களே.
வீரம் இல்லாத அறிவினாலோ அறிவு இல்லாத வீரத்தினாலோ பெரும் பயன் விளைவதில்லை.
இதனால் அன்றைய மன்னர்கள், புலவர்கள் சான்றோர்கள் பெரியோர்களின் அறிவைத் தமது வீரத்துக்குத் துணையாக்கிக்கொண்டார்கள். பெரியாரைத் துணைக் கொள்ளுதல் என்ற வள்ளுவரின் கருத்துக்குப் பொருந்த வாழ்ந்தனர்.
புலவர்கள் அறம் தெரிந்தவர்களாக இருந்தார்கள். புலவர்கள் கண்ட அறம் செங்கோலுக்கு-அரசுக்கு உரம்
என்று நம்பினார்கள்.
அப்படி நம்பிய அரசருள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன்.
75

Page 47
கோப்பெருஞ்சோழனும் புதல்வரும்
கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் வீரம் மிக்கவன். ஈரமும் உடையவன். பெரியோரைத் துணைக் கொள்ளும் பெரும்பண்பினனாகத் திகழ்ந்தான்.
அத்தகைய வீரமும் பண்பும் கொண்ட கோப்பெருஞ் சோழனுக்கு ஒரு தர்மசங்கடம் உண்டானது. தனது புதல்வர்களுடனேயே போர் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு குடும்பத்தைப் பிரிப்பதில் இன்பம் காண்பவர்கள், ஓர் இனத்தைப் பிரிப்பதில் இன்பம் காண்பவர்கள் என்றும் இருக்கத்தானே செய்வார்கள்?
ஓர் அரச குடும்பத்தைப் பிரிப்பதிற் பகை அரசர்களுக்கு எவ்வளவோ நன்மை உண்டு. கோப்பெருங்சோழனுக்கும் அவனுடைய புதல்வர்களுக்கும் போர் நடந்தாற் சோழநாட்டுப் படைபலம் குறையும்; சோழநாட்டுப் பொருள் வளம் வீழ்ச்சி அடையும். சோழநாட்டைக் கைப்பற்ற நினைக்கும் பகை அரசருக்கு இது பெரும் நன்மை அல்லவா? கோப்பெருஞ்சோழனையும் புதல்வர்களையும் தந்திரமாகப் பிரித்துப் போர்புரியும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் பகை அரசர்கள். கோப்பெருஞ்சோழன் ஒரு புறத்திற் போருக்கு ஆயத்தம் செய்தான். அவனுடைய புதல்வர்கள் இன்னொரு புறத்திற் போருக்கு ஆயத்தம் செய்தார்கள்.
76

புலவர் விரைந்தார்.
போர் பற்றிய செய்தியைப் புல்லாற்றுார் எயிற்றியனார் என்னும் புலவர் அறிந்தார். தந்தையும் மைந்தரும் செய்யப்போகும் போரினால் சோழநாட்டு வீரரிற் பலர் இறக்கப்போவதையும் சோழநாட்டு வளம் வீழ்ச்சியடையப் போவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே விரைந்தோடினார், கோப்பெருஞ்சோழனிடம். போரைத் தொடங்க வேண்டாம் என்று அரசனுக்கு அறிவுரை கூறினார்.
"கோப்பெருஞ்சோழனே பல போர்களில் வேந்தர் பலரை வென்ற வீரனே! வெண்கொற்றக் குடையினால் நிழல் செய்து புகழ் விளைக்கும் வேந்தனே! நீ இப்போது போர் செய்யத் தொடங்குவது யாருடன் என்பதைச் சிந்தித்துப்பார்.
இவர்கள் நின் பழம் பகையினராகிய சேரரும் அல்லர்; பாண்டியரும் அல்லர். நீ இப்போரைச் செய்து புகழை நிறுத்தி மறுமை அடைந்தால் அரசுரிமை அவர்களையே சென்றடை யும்.
இப்போரில் நின்னோடு போர் செய்து அறிவில்லாத நின் புதல்வர்கள் தோற்றுவிட்டால்- இறந்துவிட்டால்- இந்த அரசுரிமையை யாருக்குக் கொடுக்கப்போகிறாய்?
"எப்படிப் பார்த்தாலும் இந்தப் போர் வேண்டாத
ஒன்று. அவர்களே உனது வழித்தோன்றல்கள்" என்று கூறினார்.
கோப்பெருஞ் சோழனுக்குப் புலவர் சொல்வது நியாயமாகப்பட்டது. அதனால் போரைக் கைவிட்டான்.
77

Page 48
ஆயினும் மான உணர்ச்சி மிக்க கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விடமுடிவுசெய்தான்.
புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உணவு உண்ணாது தவம் செய்து உயிர் விடுதல் வடக்கிருத்தலாகும். வில்லாண்ட மன்னன் சொல்லாண்ட பாவலரின் அறிவுரை கேட்டதனால் ஒரு பெரும்போர் நின்றது.
மண்டமரட்டமதனுடைநோன்றாள் வெண்குடை விளக்கும் விறல்கெழுவேந்தே பொங்குநீர் உடுத்தஇம்மலர்தலை உலகத்து நின்றலை வந்த இருவரை நினைப்பின் தொன்றுறைதுப்பினிற்பகைஞருமல்லர் அமர்வெங்காட்சியொடுமாறெதிர்பெழுந்தவர் நினையுங்காலை நீயுமற்றவர்க் கனையையல்லை அடுமான்தோன்றல் உயர்ந்தோருலக மெய்திப்பின்னும் ஒழித்ததாயமவர்க்குரித்தன்றோ அதனால் அன்னதாதலும் அறிவாய் நன்றும் இன்னும் கேண்மதி இசைவெய்யோயே! நின்றதுப்பொடு நிற்குறித்தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே?
கோப்பெருஞ்சோழனும்பிசிராந்தையாரும்
வில்லாண்ட கோப்பெருஞ் சோழனும், சொல்லாண்ட
பிசிராந்தையாரும் நண்பர்களாக இருந்தனர். சாதாரண
78

நண்பர்களாக அல்ல; ஒருவருக்காக ஒருவர் உயிரையே
கொடுக்கக் கூடிய நண்பர்களாக இருந்தனர்.
புதல்வர்கள் போருக்கு ஆயத்தமானதால் விரத்தி
யடைந்திருந்த கோப்பெருஞ்சோழனுக்குப் புலவர் பிசிராந்தையாரின் நினைவு வந்தது. வடக்கிருந்தபோதும்
பிசிராந்தையாரை நினைத்தார்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கிறான் என்பதைக்
கேள்விப்பட்ட பிராசிந்தையார் கோப்பெருஞ் சோழனாகிய
தமது நண்பனைப் பிரிந்து உயிர்வாழ விரும்பாது தாமும் வடக்கிருந்துஉயிர்விட விரும்பினார்.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த இடத்திற்கு விரைந்தார். பிசிராந்தையார் சென்றடைவதற்கு முன்னரே கோப்பெருஞ் சோழன் உயிர்நீத்து விட்டான். தன்னுயிரைக் கோப்பெருஞ் சோழனின் உயிரோடு சேர்ப்பவர்போல, தாமும் வடக்கிருந்து உயிர்நீத்தார் பிசிராந்தையார்.
இச்செயலை வியந்து பாடினார் மற்றுமொரு புலவர். அவர் பெயர் கண்ணகனார். "பொன்னும் பவளமும் முத்தும் பெரியமலை தந்தமணியும் வேறு வேறு இடங்களில் தோன்றினவாயினும் நல்ல ஆபரணங்களைச் செய்யும்போது இவையாவும் ஒன்று சேரும். அதே போலத்தான் சான்றோர் களும் வேறு வேறு இடங்களிற் பிறந்தாலும் ஒத்த உணர்ச்சி காரணமாக ஒன்று சேர்வார்கள். கோப்பெருஞ் சோழனும்
79

Page 49
பிசிராந்தையாரும் வேறு வேறு இடங்களிற் பிறந்த போதும் வடக்கிருந்து உயிர் நீத்தலில் ஒன்றானார்கள்" என்று குறிப்பிட்டார்.
"பொன்னும் துகிரும் முத்தும்மன்னிய மாமலை பயந்த காமருமணியும் இடைபடச் சேயவாயினும் தொடைபுணர்ந்து அருவினை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித்தோன்றியாங்கு என்றும் சான்றோர். சான்றோர் பாலராபசாலார்சாலார் பாலராகுபவே"
நட்புக்கு அடிப்படை ஒத்த உணர்ச்சிதான் என்ற கருத்தைத் திருவள்ளுவர்.
"புணர்ச்சிபழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம்கிழமை தரும்"
என்ற குறளில் கூறிஇருக்கிறார். அக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் "கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தை யாருக்கு போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடனுயிர் நீக்கும் உரிமைத் தாய நட்பினைப் பயக்கும்" என்று வியந்து கூறி இருக்கிறார்.
வில்லாண்ட காவலனுக்குப் பெற்ற புதல்வர்களே பகைவர்களாகிப் போர் புரிந்து உயிர்போக்க முன் வந்திருக்கிறார்கள். சொல்லாண்ட பாவலர்களோ அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார்கள்.
80

ஒரு புலவர் அறிவுரை கூறிப் போரைத் தடுத்தார். இன்னொரு புலவர் அரசனுடைய உயிரோடு தன்னுயிரையும்
இணைத்து இவ்வுலகை நீத்தார்.

Page 50
முத்தான திருக்குறளும் முத்தொள்ளாயிரமும்
தமிழ் இலக்கியமாகவும் அதேநேரத்தில் உலக இலக்கிய மாகவும் திகழ்வது திருக்குறள். தமிழ் நாட்டில் தோன்றிய திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும் நாகரிகம் காட்டும் தனித்துவம் வாய்ந்தது. பெண்ணின்பெருமையை உலகுக்குக் கூற வந்த திருக்குறள், "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?"எனக் கேட்டுப் பெண்ணின் பெருமை பேசியது.
கல்வியால் - விருந்தோம்பலால் - வருவாய்க்கு ஏற்ப வாழும் உயர் பண்பால் - பெண் சிறப்படைந்தாள்; உலகியல் அறிந்து உலகத்தோடு ஒட்ட ஒழுகும் ஞானம் பெற்றாள்; அன்பும் அறனும் கொண்டு இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்தாள். குறள் காட்டும் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வமானாள்.
முத்தொள்ளயிரம்
முத்தொள்ளாயிரம் கற்பனை வளம் மிகுந்து, சுவை பயந்து, கற்போரை மேலும் கற்கத் தூண்டும் இலக்கியம். சேர, சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தருடைய வீரம், கொடை, அழகு பற்றிப் பாடியுள்ளது. இந்நூலிற் பேரழகு வாய்ந்த சேரமன்னனின் இயல்பு எவ்வாறு விளக்கப்
படுகிறது என்பதைப் பார்ப்போம்.
82

சேரமன்னன் உலா
மாலை நேரம் எப்படிப் பட்ட மாலை நேரம்? காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய் என்று குறள் சொல்கிறதே அப்படிப்பட்ட காதல் நோய் மலரும் மாலை நேரம். அந்த நேரத்தில் சேர அரசன் நகரில் உலா வருகிறான்.
சேர அரசனோ இளைஞன், இளைஞன் மட்டுமா? பேரழகு வாய்ந்த இளைஞனாகவும் உள்ளான். இதனால் சேர நாட்டுக் கன்னியர் அனைவரும் தத்தம் வீதி வழியாக அரசன் வரும்போது அவனைக் காணத் துடிக்கின்றனர்; வீட்டுக் கதவைத் திறந்துவெளியே வரவும் முற்படுகின்றனர்.
அரசனானாலும் அவனும் ஆண்மகன் தானே? ஆண் மகன் ஒருவனைக் கன்னிப் பெண் பார்ப்பது முறையா? இதனால் தாய்மார் தம் கன்னிப் பெண்களை அரசன் உலாவரும் நேரமானதும் அறையுள் விட்டுக் கதவைச் சாத்தி விடுகின்றனர்.
தாயார் கதவைச் சாத்தி விட்டனரே என்று அறைக்குள் ளேயே இருக்கக் கன்னிப் பெண்ணகளால் இயலுமா? அவர்கள்தான்அரசனின் அழகைக்கண்களாற் கண்டு இன்பம் கொள்பவர்கள் ஆயிற்றே! அதனால் தாயார் கதவைச் சாத்திவிட்டு அப்புறம் சென்றதும் கன்னியர் கதவைத் திறந்துவிடுகின்றார்கள்.
83

Page 51
பின்னர் தாயார் வந்து கதவைக் கோபத்துடன்
சாத்துகிறார்கள். பின்னரும் தாயார் அப்புறம் சென்றதும் கன்னியர் கதவைத் திறந்து விடுகிறார்கள். இப்படிப் பலமுறை நிகழ்கிறது. இந்தத் தர்மசங்கடத்தைக் கதவு எத்தனை முறைதான் தாங்கும்? அதனால் கதவின் குமிழ் பல முறை திறப்பதாலும் மூடுவதாலும் தேய்ந்து விடுகிறது. அந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது அந்த முத்தொள்ளாயிரம் LITL6)
தாயர் அடைப்பமகளிர் திறந்திட
தேயத்திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலா அம்கன்னிவயமான் தேர்கோதையை
கண்டுலாஅம் விதிக் கதவு.
கனவுகாணும் கன்னி
சேரன் மாலையில் உலா வந்தான். அத்தோடு நின்றானா? இரவிலும் கன்னிப் பெண்ணின் கனவில் உலாவருகின்றானே! கனவில் வந்ததைக் கன்னிப் பெண்ணே கூறுகிறாள்.
"புன்னையும் தென்னையும் சூழ்ந்த புனல்நாடன் ஆகிய சேரன் எனது கனவிலே வந்தான்; அன்புடன் அணைத் தான். பொன்னுடலைத் தன்கையால் தடவினான். கனவிலும் உலா வந்த சேரனின் செயல் இது.
புன்னாகச் சோலை
புனல் தெங்கு சூழ்மாந்தை
84

நல்நாகம் நின்றலரும்
நல்நாடன் - என் ஆகம்
கங்குல் ஒருநாள்
கனவினுள் தைவந்தான்
என்கொல் இவர் அறிந்தஅபூறு"
சோழநாட்டுக் கன்னி
சேரநாட்டுக் கன்னியர் தான் சேரனைக் கண்டு இந்தப்பாடு படுகிறார்கள் என்றால் சோழநாட்டுக் கன்னியர் எந்தப்பாடும் படாமல் இருந்துவிடுகிறார்களா? சோழ அரசர்கள் கருணை மிக்கவர்கள்; நீதி உடையவர்கள்; ஆனால் அந்த அரச மரபில் வந்த இந்தச் சோழனோ நீதி உடையவனாகத் தெரியவில்லை.
சோழன் உலாவரும்போது கண்களே அவன் அழகைப் பருகின. நெஞ்சோ அவன் நெஞ்சுடன் கலந்தது. குற்றம் செய்தவை கண்ணும் நெஞ்சமுமே. குற்றவாளிகள் கண்ணும் நெஞ்சமுமே. சோழன் நீதி உடையவனாக இருந்தால் கண்ணுக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும் பார்த்த குற்றத்திற்காக நெஞ்சுக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும் நினைத்த குற்றத்திற்காக. ஆனால் சோழன் அவ்வாறு செய்யாது தோள்களை அல்லவோ தண்டித்திருக் கிறான். அவனை நினைத்து ஏங்கியதால் தோள்கள் பொலிவிழந்து வாடிவிட்டனவே! இவ்வாறு துன்பப்படுகிறாள் சோழநாட்டுக் கன்னி.
85

Page 52
கண்டன உள்கள் கலந்தனநல்நெஞ்சம் தண்டப்படுவ தடமென்தோள்-கண்பாய் உலாமறுகில் sa apgi alaranibes. எலா அம்முறை disg
மன்னர்க்குப் பெருமை, கன்னியர்க்குச்
சிறுமை
ஒருவன் ஒருத்தி என்ற வாழ்வே தமிழர் வாழ்வு ஒருத்தி ஒருவனை நினைப்பதானால் அந்த ஒருவன் கணவனாக இருக்கவேண்டும். அல்லது எதிர்காலத்திற் கணவனாக வருபவனாக இருக்கவேண்டும். குறளில் வரும் தலைவன், தலைவியின் பண்பு பற்றிக் குறிப்பிடும்போது "யான் நோக்கும் காலை நிலன் நோக்கி நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்" என்கிறான். தலைவனையே - காதலனையே - நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு நிலத்தைப் பார்க்கிறாள் தலைவி இந்தத்தலைவிதான் தமிழர் பண்பாடு காக்க வந்த தலைவி. முத்தொள்ளாயிரத்துக் கன்னியரோ காமவசப்பட்டவராகக் காணப்படுகின்றனர். தாயார் அறைக்குள் விட்டுப் பூட்டவும் அடங்குகிறார்கள் இல்லை. முத்தொள்ளாயிரத்துக் கன்னியரின் காமநிலையை முத்தொள்ளாயிரம்
86

குடத்து விளக்கே போற்
கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி-புறப்படின் ஆபுகுமாலை அணிமலையில் தீயே போல்
நாடறிகெளவைதரும்.
என்கிறது. கன்னியரின் காமம் பகலெல்லாம் குடத்திலிட்ட விளக்குப்போல உள்ளுக்குள்ளேயே இருக்கிறதாம். பாண்டிய மன்னன் உலாவரும்போதுஅவனைக் காணும்போது - கன்னியர்கள் காமம் மலையில் ஏற்றிய தீயைப்போல பலரும் காணும்படி கொழுந்து விட்டு எரிகின்றதாம். முத்தொள்ளா யிரப் பாடல்கள் கற்பனைச் சுவை படைத்தவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அணி நலன் எவரும் ஏற்கத்தான் வேண்டும். கற்போரை மேலும் கற்கத் தூண்டுவன. அதுவும் உண்மையே. மூவேந்தரின் போர்ச்சிறப்பு, வீரம், கொடை என்பவற்றை விளக்குவன. அதுவும் நியாயமே. ஆனால் மன்னனின் பேரழகைச் சிறப்பித்துச் சொல்லுவதற்காகத் தமிழ்நாட்டுக் கன்னி யரைக் காமவசப்பட்டவராகக் காட்டுகின்றனவே! இது நியாயமா?
87

Page 53
இன்பத்துள் இன்பம் இலக்கிய இன்பம்
இவ்வுலகில் நிம்மதியாக வாழ்ந்து இன்பம் காண்பதற்கு இவ்வுலகைப் படைத்த இறைவனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோலத்தான் கவிதை உலகில் வாழ்ந்து கவி இன்பம் காண வேண்டுமானால் கவிதையைப் படைத்த கவிஞனின் நோக்கத்தைக்க காணவேண்டும்.
"அணி செய் காவியம் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவி உளம் காண்கிலார்" என்கிறார் பாரதியார். எனவே பாரதியார் கருத்துப்படி கவிதையிற் கவிஞனின் உள்ளத்தைக் காண முயல வேண்டும். கவிதையில் எங்களின் உள்ளத்தை ஏற்றிக் கவிதையைக் குழப்பக் கூடாது. கவிதை கற்புடையது. அதில் கவிஞனின் உள்ளத்துக்கே இடம் உண்டு.
உரையாசிரியர் பரிமேலழகர் உலகு போற்றும் உரையாசிரியராகத் திகழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் திருவள்ளுவருடைய உள்ளத்தைக் காணப் பல்லாண்டுகள் உழைத்த உழைப்பே.
சிலப்பதிகாரத்தில் இலக்கிய இன்பம்
சிலப்பதிகாரத்தில் நடந்தாய் வாழி காவேரி என்றொரு தொடர் வருகிறது. இளங்கோ அடிகள் ஆற்றைப் பார்த்து
88

நடந்தாய் என்பது புதுமையானது. ஆறு பாய்கிறது என்று படித்திருக்கின்றோம். ஆறு ஓடுகிறது என்று படித்திருக்கி றோம். ஆறு நடந்தது என்று படிக்கவில்லையே!
அப்படியானால் இளங்கோ அடிகள் ஏன் ஆறு நடந்தது என்றார்? காவேரி ஆற்றைப் பெண்ணாகக் கண்டார். இளங்கோ. அதனால்தான் நடந்தாய் வாழி காவேரி என்றார். பெண் ஒட்டப் போட்டியில் முதலிடம் பெறலாம். உயரப் பாய்தலில் சாதனை புரியலாம். இவை வரவேற்கத்தக் கனவே. ஆனால் ஒட்டப் போட்டியில் ஈடுபடும்போதும் உயரப்பாய்தலில் ஈடுபடும்போதும் அவளது இயல்பான அழகு குறைந்தே தோன்றும். ஆனால் அவள் நடந்து செல்லும்போது, அவளது இயல்பான அழகு இயல் பானதாகவே இருக்கும். இதனைக் கவிஞர்கள் அன்னநடை, பிடிநடை என வர்ணிப்பர்.
ஆறு நடந்தது என்று காவேரியை இளங்கோ அடிகள் கூறுவதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. காவேரி மேற்குக் குடகு மலையிற் பிறந்து - குடகு, மைசூர், கோவை, சேலம் வழியாகவே சோழநாட்டிற் புகுகிறது. குடகுமலையிற் பிறந்த காவேரி அங்கே சிறுமியாக இருக்கிறாள். அதனால் சிறுமி அங்கே குதித்துப்பாய்ந்தாள். மெல்ல மெல்ல வளர்ந்து காவேரிஒடினாள்.
சோழ நாட்டிற்கு வரும்போது காவேரி பருவப் பெண்ணாகிவிட்டாள். பருவப் பெண் நடப்பது தானே அழகு. அதனால் நடந்தாய் வாழி காவேரி என்றார்.
89

Page 54
காவேரியே இருபக்கத்தும் வண்டுகள்சிறந்து ஒலி செய்ய நடந்தாய்' என்றார். அழகிய பூவாடையைப் போர்த்து நடந்தாய் என்றார். கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாய் என்றார்.
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்கயற்கண்விழித்தொல்கி நடந்தாய்வழிகாவேரி"
புறநானுற்றில் இலக்கிய இன்பம்
புலவர்கள் அரசரைஇரந்து பாடிப் பரிசில் பெற்றார்கள் என்று கூறுகிறார்கள். பரிசில் பெற்ற புலவர்கள் அரசர்க்கு எதையுமே கொடுக்கவில்லையா? கொடுத் தார்கள். அரசர்கள் கொடுத்ததிலும் உயர்ந்த பொருளை அரசருக்குக் கொடுத்தார்கள். அரசர்கள் புலவர்களுக்குக் கொடுத்த பொருள் நிலையற்றது. ஆனால் புலவர்கள் அரசர்களுக்குக் கொடுத்த பொருள் நிலையானது. புலவர்களுக்கு அரசர் கொடுத்தது உடம்பைப் பாதுகாக்கும் பொருள். அரசருக்குப் புலவர் கொடுத்ததோ ஆத்மாவுக்கு உணவாகிய உயர்ந்த கருத்துக்கள். அரசர் கொடுத்த பொருள் எப்போதோ எங்கேயோ போய்விட்டது. புலவர் கொடுத்த பொருளே இன்றும் நிலைத்துள்ளது. இனியும் நிலைத்துநிற்கும்.
புலவர் பெருஞ்சித்திரனார் வறுமையால் உணவின்றி வாடினார். பல நாள்கள். அதுபற்றி அவர் கவலைப்பட
90
 

வில்லை. முதுமை அடைந்த தாய் பசியோடு இருந்ததை அவரால் சகிக்க முடியவில்லை. அதேபோலத் தன்னை நம்பி வாழும் தன் மனையாள் பசித்திருப்பதையும் அவரால் பொறுக்க முடியவில்லை. குமண வள்ளலிடம் ஒடோடிச் சென்றார்.
"என்தாய் முதுமை அடைந்து விட்டாள். வறுமையி னாலும் முதுமையினாலும் மனம் தளர்ந்து வாழ்வை
வெறுத்து இன்னும் உயிர் போகுதில்லையே என்று
பெருமூச்சு விடுகிறாள். முதுமையால் அவளது கண்பார்வையும் போய் விட்டது. நடப்பதற்குக் கால்கள் தளர்ந்து விட்டமையால் ஊன்றுகோலைக் காலாகக் கொண்டு நடக்கிறாள். எனது தாய்படும் இந்தத் துன்பத்தை
என்னாற் சகிக்க முடியவில்லை.
என்மனைவியோ, சமைப்பதற்கு அரிசி இல்லாமையால் மிகவும் வருந்திக் குப்பையிலே உள்ள கீரையைப் பறித்து உப்புத்தானும் இல்லாமல் காய்ச்சி மோரும் இல்லாது பலநாள் சோறு காணாது வருந்துகிறாள். இந்த இருவரும் மகிழ, இவர் பசி நீங்கப்பொருள் தா!" என்கிறார்.
தாய் பசித்துயரில் வாட அதை நீக்கமுடியாது ஒருவன் இருப்பதை விட உலகில் வேறு துன்பம் இல்லை என்பதை
தன் அனுபவத்தில் வைத்துக் கூறித் தாயின் பசி தீர்ப்பதை
விடப் பெரிய தர்மம் இல்லை என்பதை விளக்கிய
பெருஞ்சித்திரனார் புலவராகவும் சான்றோராகவும் நிமிர்ந்து
நிற்கிறார். அவர் கருத்தை விளக்கும் புறநானூற்று அடிகள். 91

Page 55
"வாழும் நாளொடுயாண்டுபல உண்மையின் தீர்தல் சொல்லாதென் உயிரெனப்பல புலந்து கோல் காலாகக் குறும் பல வொதுங்கி நூல்விரித்தன்னகதுப்பினள் கண்துயின்று முன்றிற்போகா முதிர்வினள்யாயும்"
நாலடியாரில் இலக்கிய இன்பம்
அழகை வியந்து பாடாத கவிஞர்கள் இல்லை. அழகைச் சித்திரத்தில் காட்டாத ஒவியக் கலைஞர்கள் இல்லை. அழகை விளக்காத சிற்பங்கள் இல்லை. சொல்லப்போனால் எல்லாக் கலைகளுமே அழகைப் போற்றுகின்றன. நாலடியார் பாடல் ஒன்று அழகுக்குப் புதுவிளக்கம் தருகிறது. கல்விக் குப் புதுவிளக்கம் தருகிறது; கல்வியையும் அழகையும் இணைக்கிறது.
"கல்வி அழகே அழகு" என்கிறது. வெறும் கல்விமட்டும் அழகாகி விடுமா? கல்வியும் வாழ்வும் இணைந்த போதே அழகாகும். கல்வியும் வாழ்வும் இணைந்தால் நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலை தோன்றும். அந்த நிலை - நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று நம்மனம் ஒத்துக்கொள்ளும் நிலை. கல்வியால் ஏற்படும் போது கல்வி அழகே அழகாகிறது. நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்களுக்கு உயர்வான அழகாகிறது.
"குஞ்சிஅழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்லி- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு"
92

கவலையற்ற வாழ்வு
மண்ணுலகப் பிறவிகளில் மனிதப் பிறவியே உயர்ந்த பிறவியாகக் கருதப்படுகிறது. ஆயினும் மனிதப் பிறவியெடுத்தும் கவலையற்று வாழ்வோர் எத்தனைபேர்? இதனைக் கருத்திற் கொண்டே மணிமேகலை ஆசிரியர் "பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்" என்கிறார். அவர்கூற்றுச் சரியானதே.
ஆயினும் நாலடியார் பிறந்தோர் உறும் பெருகிய துன்பத்தை வெல்ல வழிகூறுகிறது. அந்த வழிதான் என்ன?
நூல் வழக்கிலும், உலக வழக்கிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தர்மங்களைத்தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்ததுடன் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பழி, பாவங்களுக்கு அஞ்சவேண்டும். தமக்குச் சரியெனப் படுவதை சரியானதை - உலகம் பயனடைந்து மகிழும்படி செய்தல் வேண்டும். பெறுகின்ற வருவாய் அளவில் மகிழ்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும். இவற்றைப் பின்பற்றுவோர் வாழ்விற் சிறப்படையலாம். கவலையற்று வாழலாம்.
"அறிவது அறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி உறுவதுலகுவப்பச் செய்து-பெறுவதனால் இன்புற்றுவாழும்இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்றுவாழ்தல் அரிது"

Page 56
O ந்தம் இன்பம்
இன்பங்கள் எத்தனையோ? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றார் மகாகவி சுப்ரமணிய பாரதியார். கவிதையால் வரும் இன்பம், ஒவியத்தால் வரும் இன்பம், சிற்பத்தால் வரும் இன்பம், காதல் தரும் இன்பம், மழலை தரும் இன்பம், இயற்கைதரும் இன்பம் என்று கூறிக்கொண்டே போகலாம்.
இவற்றை விட இன்னும் ஒர் இன்பம் இருப்பதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். அதுதான் ஈத்து உவக்கும்இன்பம் ஒருவன் ஒன்றைக் கொடுக்க, பெற்றுக் கொண்டவன் உவப்படைய அந்த உவப்பைப் பார்த்து அடையும் இன்பம். பசித்தவர்க்கு உணவைக் கொடுக்க, பசித்தவர் உண்டதும் அவரது முகத்தில் மலர்ச்சி ஏற்பட அதைப்பார்க்கும்போது ஏற்படும் இன்பம்.இந்த இன்பத்தைக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பாரி முதலாகப் பல
பாரி வள்ளல் பறம்பு நாட்டை ஆட்சி செய்தான். அவன் ஆட்சியில் எல்லோரும் வயிறார உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். விலங்குகள், பறவைகள் கூட மகிழ்ச்சியாக வாழ்ந்தன. எல்லா உயிர்க்கும் இரங்கிய பாரிவள்ளல் ஓரறிவுயிராகியமுல்லைக் கொடிக்கும் இரங்கினான்.

முல்லைக்குக் தேர் ஈந்த இன்பம்
பாரிவள்ளல் ஒருநாள் தேர்மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தான். வீதியில் அவனைக் கண்ட மக்கள் எல்லாம் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார்கள். மான் முதலிய விலங்கினங்கள் எவ்வித துன்பமுமின்றி வாழ்ந்துகொண்டிருந்தன. பறவைகள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்து கொண்டிரு ந்தன. சிறுவர்கள் மைதானங்களில் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இளம் பெண்கள் பறம்புமலை அருவியில் நீராடியும் பாடியும் மகிழ்ந்திருந்தனர். அக்காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்த பாரிக்கு தன் ஆட்சி பற்றி உள்ளத்தே பெருமிதமும் இருந்தது.
அப்படிப் பெருமிதம் அடைகிற வேளையில் கொளுகொம்பின்றி முல்லைச்செடி ஒன்று நிலத்தில் வாடிக் கிடந்தது. இதனைப் பார்த்த பாரிவள்ளல் தனது ஆட்சியில் எல்லா உயிரும் இன்புற்றிருக்க முல்லைக்கொடி மட்டும் துன்புற்று வாடுவதா? என்று எண்ணினான். தன் ஆட்சியில் ஓர் உயிர் வாடினாற் கூடத் தன் ஆட்சிக்கு இழுக்கு என்று எண்ணிய அவன் தேரைநிறுத்தினான். தாயுள்ளத்தோடே முல்லைக் கொடியைப் பார்த்தான். தன் கண்ணிற்பட்ட ஒர் உயிரின் துன்பம் அந்தக்கணமே தீர்க்கப்பட வேண்டும் என்று எண்ணினான். ஏவலாளர்கள் வந்து முல்லைக் கொடிக்குப் பந்தலிடும் வரை கூட அந்தக் கொடி வாடக்கூடாது என்று எண்ணினான். கிணற்றில் விழுந்த குழந்தையைக் கண்ட, தாய் நீச்சல் தெரிந்தவர்கள் வந்து
95

Page 57
குழந்தையைக் காப்பாற்றட்டும் என்று நினைப்பாளா? பாரியின் தாயுள்ளத்துக்கு முல்லைக்கொடி குழந்தையாகத் தெரிந்தது. நிலத்திற் கிடந்த குழந்தையைத் தேர் என்ற மடியில் தூக்கிக் கிடத்தினான். முல்லைக்குக் கொளுகொம்பு கிடைத்தது. முல்லையின் துன்பம் தீர்ந்தது. முல்லைக்குத் தேர் ஈந்து அதனால் ஈத்துவக்கும் இன்பம் பெற்றான் பாரி.
அதியமானின் ஈத்துவக்கும் இன்பம்
சில செல்வர்கள் இருக்கிறார்கள். ஒரு நாள் போய் ஒருவன் பசி என்று கேட்டால் உணவு கொடுப்பார்கள். மறுநாளும் அதே ஆள் அவர்களிடம் போய் பசி என்று கூறினாற் சீறி விழுவார்கள். வேறு வீடுகள் இல்லையாஎங்கள் வீடுதான் கிடைத்ததா? என்று கேட்பார்கள். ஒரு நாள் கொடுக்கும் கொடையால் உடனேயே அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இதற்குக் காரணம் என்ன? “கொடையும் தயையும் பிறவிக்குணம்’ என்கிறார் ஒளவையார். அந்தப் பிறவிக்குணமாகிய கொடை இல்லாமைதான். பிறவிக்குணமாகிய கொடையும் தயையும் உள்ளவர்கள்தான் கொடுப்பதில் இன்பம் காண்பவர்கள். அவர்களுக்கு எத்தனைதரம் கொடுத்தாலும் அத்தனை தரமும் மகிழ்ச்சிதானே!
அதியமானின் கொடையைப் பற்றி ஒளவையார் கூறுகிறார். அதியமான் ஒரு நாள் சென்றாலும் மகிழ்ச்சியோடு கொடுப்பானாம். இரண்டு நாள் சென்றாலும் மகிழ்ச்சியோடு கொடுப்பானாம். அடுத்துப் பலநாள்
96

சென்றாலும் மகிழ்ச்சியோடு கொடுப்பானாம். பலரையும் உடன் கூட்டிச் சென்றாலும் மகிழ்ச்சியோடு கொடுப்பானாம். சலிப்படைவதே இல்லையாம். ஏன் அப்படி? அவன் ஈத்து உவக்கும் இன்பம் அறிந்தவன். தன்னிடம் வந்த வறியவர்கள் வயிறார உண்ணும்போது அவர்கள் முகத்தில் தோன்றும்
மலர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவன். அதனால் இன்பம் அடைந்தவன். புலவர்கள் பாடிவரும் பொழுதெல்லாம் பெரும்
பொருள் கொடுத்துப் புலவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவன்.
முதல் நாள் வறியவர்க்கும் புலவர்களுக்கும் காட்டிய அன்பையும் கொடுத்த கொடையையும் முதல்நாள் போலவே
எல்லா நாளும் தொடர்வானாம்.
அது மட்டுமல்ல அவனிடம் போனால் பரிசில் கிடைப்
பதும் நிச்சயமான ஒன்றாம். எதைப் போல நிச்சயமானது என்றால் யானை தனது கொம்பின் இடையே வைத்திருக்கும்
உணவு எப்படி அதன் வாய்க்குத் தப்பாதோ அப்படி
நிச்சயமாம்.
"ஒருநாட்செல்லலம் இருநாட்செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான் பரிசில் பெறுஉங்காலம் நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடைவைத்த கவளம் போலக்

Page 58
கையகத்துவது பொய்யாகாதே
அருந்தே மாந்த நெஞ்சம் வருந்தவேண்டா வாழ்க அவன்தானே!"
பெருஞ்சித்திரனார் ஈத்துவக்கும் இன்பம்
வள்ளுவர் கூறும் ஈத்துவக்கும் இன்பத்தை அரசர்கள் எய்தியதில் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால் அரசரிடம் சென்று பரிசில் பெற்ற புலவர் ஒருவர் அந்தப் பொருளை எதிர்காலத்துக்கு வேண்டுமென்று பாதுகாத்து வையாது, வறியவர்களது பசி தீர்க்கக் கொடுத்து, வறியவர்களது முகத்தில் மலர்ச்சி காண்பதை இன்ப மாகக் கருதினாரே அது புதுமையானது. அந்தப் புலவர் பெருஞ்சித்திரனார். அவர் பாடிப் பரிசில் பெற்றது குமணவள்ளலிடம். எதிர்காலத்துக்கு வேண்டுமென்று கூறாது எல்லோர்க்கும் கொடுக்கும்படி கூறியதுதனது துணைவிக்கு.
பெருஞ்சித்திரனார் தனது துணைவியைப் பார்த்துக் கூறுகிறார். "நின்னை விரும்பி வாழும் மகளிர்க்கும் கொடு. நீ விரும்பும் மகளிர்க்கும் கொடு, நினது உறவினர்களாகிய மகளிர்க்கும் கொடு. வறுமைக் காலத்தில் நமக்கு உதவிசெய்து திரும்பத்தருவோம் என்று நம்பி இருந்தவர் களுக்கும் கொடு. இன்னும் ஆரார்க்குக் கொடுக்க வேண்டும் என்று என்னோடு ஆராயாமலே கொடு, இந்தப் பொருளை வைத்திருந்தால் எதிர்காலத்தில் வசதியாக வாழலாம் என்று நினையாமலும் கொடு, இது குமண வள்ளல்
வழங்கிய சொத்து."
98

பெருஞ்சித்திரனாரது ஈத்துவக்கும் உள்ளம் எவ்வளவு பரந்ததாகக் காணப்படுகிறது. இவரது செயல் நமக்குச் சமயக்கருத்தையும் நினைவூட்டுகிறது.
இறைவனிடம் பெருங்கருணையை எதிர்பார்ப்பவர் தாம் ஏனைய உயிர்களுக்குக் கருணைகாட்ட வேண்டும் என்கிறதுசமயம்.
பெருஞ்சித்திரனாரும் குமணனிடம் பெற்ற பொருளைத் தான் அநுபவித்தது போலவே ஏனையவர்களும் அநுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
"நின்னயந்துறைநர்க்கும்
நீ நயந்துறைநர்க்கும் பன்மாண்கற்பினின்
கிளைமுதலோர்க்கும் கடும்பின் கடும்பசிதீர
யாழநின் நெடுங்குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும் இன்னோர்க்கென்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும்
என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே பழந்தூங்கு முதிரத்துக்
கிழவன் திருந்துவேற்குமணன் நல்கிய வளனே"
99

Page 59
தமிழறியாக் காவலரும் தண்மானப் Longib
தமிழினம் பெருமைப்படவேண்டிய விடயங்கள் இரண்டு. ஒன்று உலகு போற்றும் திருக்குறள் முதலிய நூல்களுக்கு உரிமையாக இருத்தல். மற்றது மானம் என்னும் ஒப்பற்ற பண்பினைப் பேணுபவர்களாக இருத்தல்.
மானம் உயிரினும் மேலானது என்பதை விளக்கத் திருவள்ளுவர் மானம் என்று ஒர் அதிகாரமே இயற்றியு ள்ளார்.
அன்பு, நாண்,ஒப்பரவுகண்ணோட்டம்,வாய்மை முதலிய நற்பண்புகளைத் தம்பாற்கொண்டவர்கள் சான்றோர்கள். அவர்களிடத்து மானம் என்னும் பண்பு சிறந்து விளங்கும். அத்தகைய பண்பெல்லாம் சிறந்தவராகவும் பாவன்மை நிறைந்தவராகவும் விளக்கியவர்கள் புலவர்கள்.
இளவெளிமானும் பெருஞ்சித்திரனாரும்.
வெளிமான் என்பவன் ஒரு கொடைவள்ளல். வரிசை அறிந்து வழங்கும் சிறப்பினன். வறுமைத் துயரால் வாட்டமுற்ற பெருஞ்சித்திரனார் பரிசில் பெற வெளிமானிடம் சென்றார். அப்போது வெளி மான் நித்திரையாக இருந்தான். வெளிமானின் தம்பியாகிய இளவெளிமான் மூலம் பெருஞ்சித்திரனாரின் வருகையை அறிந்து வெளிமான்தன் தம்பியாகிய இளவெளிமானிடம் பெருஞ்சித்திரனாருக்குப்
100

பரிசில் வழங்குமாறு பணித்தான். இளவெளிமான் தமிழின் பெருமையை அறியாதவன் தமிழை வளர்ப்பவர்கள் புலவர்கள் என்பதை உணராதவன். பெருஞ்சித்திரனாரின் பெருமைகளையோ புலமையையோ தெரிந்து கொள்ளும் திறன் இல்லாதவன்.
பெருஞ்சித்திரனாரை அலட்சியமாகப் பார்த்தான். இன்சொற் கூறினான் இல்லை. பெருஞ்சித்திரனாருக்குப் பொன்னும் மணியும் கொடுப்பது அவனுக்குப் பொறுத்துக் கொள்ளமுடியாத ஒன்றாக இருந்தது. வறுமையில் வாடும் பெருஞ்சித்திரனார் எதைக் கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போவார்என்று தவறுதலாகக் கணக்கிட்டான். சிறிதுபொருள் கொண்டு வந்தான்; அதையும் அலட்சியமாக கொடுத்தான்.
கோபமே கொள்ளாத சான்றோராகிய பெருஞ்சித் திரனாருக்கு இது புது அனுபவம்.அவரை வரவேற்காத நாடு இல்லை.பெருமதிப்புச் செய்யாத வேந்தர் இல்லை.இந்தப் புது அனுபவத்தினால் வெகுண்டெழுந்தார்.கண்கள் சிவந்தன. கை கால்கள் கோபத்தால் நடுங்கின. பரிசில் பெறாமலே அவ்விடத்தை விட்டகன்றார். நேராகக் குமண வள்ளலிடம் சென்றார்.
குமணன் பரிசில்
குமண வள்ளல் கல்விநலனும் கருணை உள்ளமும் வாய்க்கப்பெற்றவன் "கொடையும் தயையும் பிறவிக்குணம்"
| 101

Page 60
என்ற பாடல் அடிக்கு விளக்கமானவன். பெரியோரைத் துணையாகக் கொள்ளும் பெற்றியினன்.அறத்தைத் தெளிந்து கொள்ளவும் அறநெறியில் நிற்கவும் அரசர்க்குத் துணை செய்பவர் புலவர்களே என்பதை அறிந்தவன்.
பெருஞ்சித்தினாரைக்கண்டு பேரின்பமுற்றான் அவன். ஈதல் இசைபாட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என அறிந்த அவன் பெருஞ்சித்திரனாருக்கு நீராட்டுவித்து உணவு கொடுத்துச் சிலநாள் தன்னுடன் தங்கச் செய்தான்.
பெருஞ்சித்திரனார் தாமாகப் புறப்பட்டவேளை பொன்னும் மணியும் பெருமளவிற் கொடுத்தான். வரிசை அறிவதில் வல்லனாகிய அவன் மலையினை நிகர்த்த யானை ஒன்றையும் கொடுத்தான்.
மீண்டும் இளவெளிமானிடம்
குமணனிடம் பரிசில் பெற்ற பெருஞ்சித்திரனார் நேராகத்தம் வீட்டுக்குச் செல்லவில்லை. தம்மை அவமதித்த இளவெளிமானிடமே சென்றார். அவனைப் பார்த்து "அரசனே! இந்த உலகில் இரப்பவர்க்குக் கொடுப்பவன் நீ ஒருவன்தான் என்று நினைத்தாயா? உன் ஒருவனை நம்பி இரப்பவர்கள் வாழவில்லை. உலககெங்கிலும் புரவலர்கள், கொடைவள்ளல்கள் இருக்கிறார்கள்.
எனது தகுதி அறியாத நீ, சிறிய பொருள் கொடுத்து என்னை அவமதித்தாய்.கொடையும் தயையும் பிறவிக்
102

குணமாகக் கொண்ட குமணவள்ளலிடம் சென்றேன்.அவன் பொன்னும் மணியும் கொடுத்தான். அத்துடன் விட்டானா? தனது தகுதியும் எனது தகுதியும் விளங்க யானைப் பரிசிலும் வழங்கினான்.
இனியாவது இரப்போர் இருப்பதையும் இரப்பவர்க்கு ஈவோர் உலகெங்கும் இருப்பதையும் அறிந்து கொள்வாயாக! உனது காவல் மரத்தில் குமண வள்ளல் நல்கிய பரிசிலாகிய யானையைக் கட்டி இருக்கின்றேன்.எனது தகுதியையும் அறிந்துகொள். குமண வள்ளலின் குணநலத்தையும் அறிந்து கொள் நான் சொல்கின்றேன்" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
"இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர். இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி நின்னூர்க் கடிமரம் வருத்தத் தந்துயாம்பிணித்த நெடுநல்யானை எம்பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே!
நன்மாறனும் ஆவுர் மூலங்கிழாரும்
ஆவூர் மூலங்கிழார் என்பவர் சங்கப்புலவருள் ஒருவர். அவர் வறுமைத் துன்பத்துக்கு ஆளானார். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்னும்
மன்னனைப்பாடி பரிசில் பெற அவனிடம் சென்றார்.
103

Page 61
அரசனுக்குப் பண்பு கூறிய திருவள்ளுவர் "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக் கூறும் மன்னன் உலகு" என்றார்.
அரசன் குடி மக்களால் எளிதிற் காணக்கூடிய எளிமையும் அதே நேரத்தில் இன்சொல்லும் உடையவனாக இருத்தல் வேண்டும் என்றார்.
இந்த இரண்டு பண்புகளையும் மேற்கொள்ளாது பாண்டியன் நன் மாறன் ஆவூர் மூலங்கிழாரை அலட்சியம் செய்தான்.புலவர் அரசனைக் காண்பதற்தாகச் சில நாள்கள் தங்கி இருந்தும் கூட அரசன் புலவர் தன்னைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை சந்தித்து போதும் பரிசில் கொடாதுகாலங் கடத்தினான். இச்செயல் ஆவூர் முலங்கிழாருக்குப் பெருஞ்சினத்தை ஊட்டியது. சந்தர்ப்பம் கிடைத்தபோது அரசனிடம் விரைந்து சென்றார்.அரசனைப் பார்த்து "அரசே! கொடுக்க இயலக்கூடிய பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத் தலும் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று மறுத்த லும் இரப்பவர் மனத்தைப் புண்படுத்தாத செயல்கள் ஆகும்.
கொடுக்க இயலாத பொருளைக் கொடுக்க இயலும் என்று சொல்லி நாள்களைக் கடத்தலும், கொடுக்க இயலும் பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலும், இரப்பவர் மனத்தைப் புண்படுத்துவன.அல்லாமலும் ஈவோருடைய புகழைக் குறைக்கும் வழிகளுமாகும். இப்பொழுது நடந்து கொண்டது அத்தகைய செயலே" ! என்று வெகுண்டு கூறினார்.
104

'ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கில் கேண்மைப்பாலே ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே இரப்போர்வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறைபடு உம் வாயில் அத்தை
மூவனும் பெருந்தலைச் சாத்தனாரும்
மூவன் என்னும் மன்னனைப் பாடிப் பரிசில் பெற விரும்பிய பெருந்தலைச்சாத்தனார் மூவனிடம் சென்றார்.
மூவன் போரில் வல்ல மன்னனாக இருந்த போதும் கல்வி நலனும் கவித்துவமும் மிக்க சான்றோரின் பெருமைகளை அறியாதவனாக இருந்தான். அதனால் மூவன் சாத்தனாருக்கப் பரிசில் கொடுக்கவுமில்லை, சாத்தனாரைக் கெளரவிக்கவுமில்லை.
தமிழறிந்த சான்றோரிடம் இருக்கும் தன்மான உணர்ச்சி சாத்தனாரிடம் பெரும் அளவில் இருந்தது. சாத்தனார் உளளங்கவர்ந்தெழும் ஒங்கு சினத்தைக் காத்துக்கொண்டு மூவனை நோக்கி 'மன்னா! பறவைகள் பழமரத்தை நாடிச் செல்வது இயல்பு. பழத்தைப் பெற்று உண்பதற்காகப் பறவைகள் எவ்வளவோ தூரத்துக்கு எல்லாம் செல்கின்றன.அவை சென்றடைந்த நேரம் பழமரத்தில் பழம் முடிந்தால் அவை வேறு மரத்திற்கு நாடிச்
105

Page 62
செல்லும்.புலவர்களும் அத்தகையவர்களே! தனி ஒரு மன்னனை நம்பி வாழ்பவர்கள் அல்லர். ஒரு மன்னன் ஆதரிக்காவிட்டால் புலவர்களை ஆதரிக்க வேறு எத்தனையோ மன்னர்கள் ஆயத்தமாக இருப்பார்கள். அதனால் எனக்குக் கவலை இல்லை. ஆனால் நீகவலைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறாய். சான்றோரை அவமதித்த வர்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாவர் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
என்னை அவமதித்த நீ துன்பம் அடையவேண்டும். என்று நான் விரும்பவில்லை. நீ துன்பம் இல்லாமல் இரு என்று நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார்.
மென்புல வைப்பின் நன்னாட்டுப்
பொருந பல்கனி நசைஇஅல்குவிசும்பு
உகந்து பெருமலை விடரகம் சிலம்பமுன்னி பழனுடைப்பெருமரம் தீர்ந்தெனக்
கையற்றுப் பெறாது பெயரும்புள்ளினம் போல
நின் நசைதரவந்துநின்இசைநுவல்
பரிசிலேன் ஈயாய் ஆயினும் இரவேன்
அல்லேன் நோயிலையாகுமதி
፹ንጂ

கவிச்சக்கரவர்த்தியும் சோழமன்னனும்
கவிச்சக்கரவர்த்தி கம்பரும் புவிச்சக்கரவர்த்தி சோழனும் நீண்ட காலம் நட்புடன் பழகினர். அப்படிப் பழகி இருந்தும் அவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விட்டது.
சோழன் கம்பரைப் பார்த்து "இன்று முதல் நீர் எம் நாட்டில் இருக்க வேண்டாம் நாம் உமக்குக் கொடுத்திருக் கிற விருதுகள் அனைத்தும் வைத்து விட்டு நாட்டை விட்டுப் போய்விடும் "எள்றான்.
கவிச் சக்ரவர்த்தி கம்பர் புவிச் சக்ரவர்த்திக்கு அஞ்சவில்லை.
அரசே என்னை உம் நாட்டை விட்டு போகச் சொன்னிர் அல்லவா?
உம்முடைய நாடு எவ்வளவு? இரு பத்து நான்கு காத தூரம் தானே! இந்த இருபத்து நான்கு காத தூரம் தவிர்ந்த பாண்டிநாடும் சேரநாடும் வடக்கில் உள்ள நாடுகளும் எங்கே போய்விட்டன?"என்று கேட்டார்.
காதம் இருபத்துநான் கொழியக்
காசியினை ஒதக்கடல் கொண்டொளித்ததோ?
-மேதினியில்
t07

Page 63
கொல்லிமலை நடாளுங்கொற்றவா நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்.
என்று பாடினார். அத்துடன் கம்பரின் சினம் தணியவில்லை.
"அரசே!உலகத்திலுள்ள அரசர்களுள் எல்லாம் நீர்தாம் சிறந்தவரா?"உம்முடைய நாடுதான் வளநாடா? உம்மிலும் சிறந்தவர்களான பாண்டியனும் சேரனும் இல்லையா? பாண்டிநாடும் சேரநாடும் வளமில்லாத நாடுகளா?
நான் உம்மை அறிந்துதானா தமிழை ஒதினேன்? என்னைப் போட்டியிட்டு விரைந்து மதித்து ஏற்றுக்கொள் ளாதவேந்தர்களும் இருக்கிறார்களா?" என்று கேட்டார்.
மன்னவனும் நியோ?
வளநாடும் உன்னதோ? உன்னை அறிந்தோ தமிழை
ஓதினேன் என்னை விரைந்தேற்றுக்கொள்ளாத
வேந்துண்டா?உண்டோ? குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு
என்ற பாடலைப் பாடிவிட்டு சோழ நாட்டை விட்டுச் சென்றார்.
மன்னர்கள் பல விதத்தினராக இருந்திருக்கிறார்கள். பாரி வள்ளலைப் போல புலவர் பெருமை தெரிந்தவராகப்
108

பலர் இருந்திருக்கிறார்கள்.சிலர் தமிழின் பெருமை தெரியாதவராகவும் தமிழ்ப் புலவரின் அருமை தெரியாத வராகவும் இருந்திருக்கிறார்கள். சிலர் தெரிந்தும் கர்வம் காரணமாகத் தெரியாதவர்போல நடந்திருக்கிறார்கள். ஆனால் புலவர்களோ தன்மானம் என்னும் குன்றின் உச்சியில் நின்று தாம் யார் தமது தகுதி என்ன என்பதை மன்னர்க்கும் உலகினர்க்கும் காலத்துக்கு காலம் உணர்த்தி யிருக்கிறார்கள்.
109

Page 64
கன்னியைக் கொன்ற நன்னனும் கனியைக் கொடுத்த மன்னனும்!
அந்த மங்கை ஆற்றுக்கு நீராடப் புறப்பட்டாள். அவள் இளமையும் பேரழகும் வாய்ந்தவள். பெற்றோரின் அன்புக்கும் ஊரோரின் நல்லெண்ணத்துக்கும் சொந்தக் காரியாக அவள் இருந்தாள். எதுவிதகுறையுமின்றி வளர்ந்தவள். அன்றுவரை துன்பம் என்பது என்னவென்று அவள் அறியாள்.
ஆற்றுநீர் மிக மெதுவாக ஒடிக்கொண்டிருந்தது. அவள் அச்சமின்றி நீராடக்கூடிய அளவுக்கு நிதானமாக ஒடிக்கொண்டிருந்தது. வெயிற் காலத்தில் ஆற்றுநீரில் நீராடும் சுகம் நீராடுபவர்க்கே புரியும். நீராடல் தரும் உற்சாகத்தில் அவள் மகிழ்ந்து நீராடும் போது மாங்காய் ஒன்று நீருடன் மிதந்து வந்தது. இளவயதினர்க்கு மாங்காய் தின்பதில் எப்போதுமே தனிவிருப்பம். அதுவும் வெயிற் காலத்தில் மாங்காய் தனிச் சுவையாக இருக்கும். அந்த அழகி மாங்காயை எடுத்துத்தின்றாள்;சுவைத்துத்தின்றாள்.
அவள் தின்று கொண்டிருக்கும் போது நன்னன் என்ற அரசனின் காவலர் சிலர் அங்கே வந்தனர். " தின்பதை நிறுத்து" என்றனர். அவளுக்கு எதுவுமே விளங்க வில்லை. திகைத்துப் போனாள். அவளது திகைப்பு நீங்கு முன்னரே "அரசனுக்கு சொந்தமான மாங்காயை உண்டு விட்டாய். வா அரண் மனைக்கு" என்றனர். ஒரு பாவமும் அறியாத அந்த
110

நங்கை நடுங்கினாள். அவர்கள் பின் அரண்மனைக்குச் சென்றாள். அந்த மாங்காய்க்கு அப்படி என்னதான் மகிமை
நன்னன் என்ற குறுநில மன்னன் ஆற்றங்கரையில் உள்ள சோலையில் அதிசய மாமரம் ஒன்றை வளர்த்தான். அந்த மாமரத்தின் கனியை உண்பவர்க்கு ஆயுள் நீடிக்கும். அதுவே மாமரத்தின் அதிசயம். நட்டுப் பல வருடங்களுக்குப் பின்னர் ஒரே ஒரு காய் அதில் காய்த்தது. அந்த ஒரே ஒரு காய்க்கு அரசன் காவலிட்டிருந்தான். காவலர் கவனக் குறைவாக இருந்த போது ஆற்றங்கரையில் இருந்த அந்த மாமரத்தின் காய் ஆற்றில் விழுந்தது. மாங்காயின் வரலாறு அறியாத அந்த இளமங்கை அதனை எடுத்து உண்டு விட்டாள்.
மரணதண்டனை
அவள் நன்னன் முன் நிறுத்தப்பட்டாள். அந்த அப்பாவிப் பெண்ணுக்கு நன்னன் என்ற கொடிய அரசன் அறியாது செய்த குற்றத்துக்கு மரண தண்டனை விதித்தான்.
இதை அறிந்த பெற்றோர் துடிதுடித்தனர். ஊரவர் கொதித்தெழுந்தனர். ஆயினும் அக்கால சமூகத்தில் மன்னனைக் குடிமக்கள் என்ன செய்துவிட முடியும்? ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்தார்கள். அந்த மங்கை உண்ட மாங்காய்க்கு ஈடாகப் பொன்னையும் பொருளையும் ஊரில்
it

Page 65
வீடு வீடாகச் சென்று சேர்த்தார்கள். பெருந்தொகையான பொன்னும் பொருளும் சேர்ந்தன. அதில் பெண்ணின் நிறையுடைய பாவை செய்தனர். வசதி படைத்தோர்
யானைகளையும் கொடுத்தனர்.
பொன்னாற்செய்த பாவையையும் யானைகளையும் கொண்டு உறவினரும் ஊரவரும் நன்னிடம் சென்றனர். " எங்கள் பெண் அறியாமற் செய்தவற்றை மன்னித்து அவளை விடுதலை செய், அவள் தின்ற ஒரு மாங்காய்க்கு ஈடாக நாம் கொண்டு வந்துள்ள பொன்னையும் யானை
களையும் ஏற்றுக்கொள்" என்றுமன்றாடினர்.
அந்தக் கொடிய மன்னன் நன்னன் அதற்கு இரங்க வில்லை. அந்த அப்பாவிப் பெண்ணைக் கொன்றே விட்டான். பாரி போன்ற வள்ளல்களைச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாராட்டும் உயர்ந்த குணம் கொண்ட புலவர்கள் நன்னன் போன்ற கொலைகார அரசர்களைக் கண்டிக்கவும் தவறவில்லை. கபில பரணர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இருபெரும் புலவருள் ஒருவராகிய பரணர் அந்தக் கொடிய அரசன் நன்னனை குறுந்தொகைப் பாடலொன்றில் உவமையாகப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குகிறார்.
மண்ணிய சென்ற
ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய்
தின்றதன் தப்பற்கு
首12

ஒன்பத்திற்றொன்பது
களிற்றொடவள் நிறை
பொன்செய்பாவை
கொடுப்பவுங்கொள்ளான்
பெண் கொலைபுரிந்த
இதன் பொருள் "ஆற்றில் நீராடச் சென்ற இளம் பெண் ஒருத்தி ஆற்றில் மிதந்து வந்த பசிய காயைத் தின்றதற்காக அவள் நிறை கொண்ட பொன்னாற் செய்த பாவையைக் கொடுக்கவும் எண்பத்தொரு யானைகளைகொடுக்கவும் அவற்றை ஏற்றுக்கொள்ளாது அவளைக் கொலை செய்தான்" என்பதாகும்.
பரணரின் சட்டஞானம்
புலவர்கள் விண்ணியல் ஆய்வாளர்களாக மாறித் தமது பாடல்களில் விண்ணியல் நுட்பங்களைக் கூறுவார்கள்; தத்துவஞானியாக மாறித் தத்துவஞானம் கூறுவார்கள்; அரசியல் அறிஞராக மாறி அரசியல் கருத்துக்களை விளக்குவார்கள்.
இந்தப் பாடலைப் பாடிய பரணர் சட்டத்தரணியாக மாறித் தமது சட்டஞானத்தைப் புலப்படுத்துகிறார். நன்ன னால் கொல்லப்பட்ட பெண் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க முற்பட்ட பரணர் "மண்ணிய சென்ற" என்றார்.
113

Page 66
மண்ணிய சென்ற என்றால் நீராடச் சென்ற என்பது பொருள், எனவே அவள் வீட்டில் இருந்து புறப்படும் போதோ அல்லது அதன் பின்னரோ மாங்காய் திருடும் எண்ணம் அவளிடம் இல்லையாதலால் அவள் குற்றவாளி இல்லை என்றார். அவள் நன்னனுடைய மாமரம் நின்ற இடத்துக்கோ அல்லது அதன் அயலிடத்துக்கோ கூடச் செல்லவில்லை என்பதை விளக்க ஆற்றிலேயே மாங்காயை எடுத்தாள் என்பதைக் கூறினார்.
"புனல்தரு பசுங்காய்" என்றதனால் அவள் மரத்திற் காயைப் பறிக்கவில்லை ஆறுதான் நீரோட்டத்துடன் கொண்டுவந்து கொடுத்தது என்றார். ஆறு எத்தனையோ கல்தொலைவில் இருந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது. ஆறுவரும் வழியில் எத்தனையோ மாமரங்கள் கரையில் நிற்கின்றன. நன்னனுடைய மாமரமும் இருக்கிறது.
அந்தப் பெண் தின்ற மாங்காய் மற்ற மாமரங்களில் இருந்து விழவில்லை. நன்னனுடைய மாமரத்தில் இருந்துதான் விழுந்தது என்று விழுந்ததைக் கண்ட சாட்சி இல்லாமற் கூறமுடியுமா?
எனவே பாடலில் வரும் இரண்டு தொடர்களைக் கொண்டே அப்பெண் குற்றமற்றவள் என்பதைப் பரணர் நிரூபித்தார். ஒரு மாங்காய்க்காகப் பெண்ணைக் கொன்ற பாதகனாகிய நன்னனைப் பார்த்தோம். இனி ஒரு பெண்ணுக்காக நெல்லிக்கனி கொடுத்த மன்னனைப் பார்ப்போம்.
114

நெல்லிக்கனி கொடுத்த அதியமான்
முதல் வள்ளலாகப் போற்றப்படுபவன் நளமகாராசன். இடைவள்ளலாகப் போற்றப்படுபவன் கர்ணன். கடைவள்ள லாகப் போற்றப்படுபவர்கள் ஏழுபேர். அவர்கள் கடையெழு வள்ளல்கள் என்று சிறப்பித்துக் கூறப்படு கின்றார்கள். அவர்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
அதியமான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். இடையில் ஒரு பெரியமலையைக் கண்டான். அந்த மலையில் ஒரு அதிசய நெல்லிமரத்தைக் கண்டான். அது காய்த்துக் கனிந்து நின்றது. அதன் கனியை ஒருவர் உண்டால் அவர் நீண்ட காலம் வாழமுடியும். இதனை அறிந்த அதியமான் அந்த நெல்லிக் கனியைப் பறித்துக் கொண்டுவந்தான்.
அவன் நாடு திரும்பும் போது அவன் வரவை எதிர் பார்த்து ஒளவையார் அரண்மனையில் இருந்தார். அந்த நெல்லிக்கனியின் சிறப்பை ஒளவையாருக்குச் சொன்னால் ஒளவையார் தாம் உண்ணாது தன்னையே உண்ணச் சொல்லுவார் என்பதை அறிந்த அதியமான் நெல்லிக் கனியின் சிறப்பைக் கூறாது ஒளவையாருக்குக் கொடுத் தான.
ஒளவையார் நெல்லிக் கனியை உண்ட பின்னர் தான் அரசன் நெல்லிக்கனியின் சிறப்பை ஒளவையாருக்குக்
கூறினான்.
115

Page 67
இதை அறிந்த ஒளவையார் உளம் நெகிழ்ந்து போனார். அதியமானென்ற வள்ளலின் கருணை உள்ளத்தை எண்ணிப் பார்த்த போது ஒளவையாரின் கண் கலங்கியது. ஒளவையார் உண்ட கனியை இனி அரசனுக்குத் திருப்பிக் கொடுக்க முடியுமா? அதனால் அந்த நெல்லிக் கனியிலும் பார்க்கச் சத்தி வாய்ந்த தனது மந்திர வார்த்தை களால் அவனை ஆசீர்வாதித்தார். ஒளவையாரின் ஆசீர்வாதம் வீண்போகுமா? இன்றும் அதியமான் சங்க இலக் கியத்தில் ஒளவையார் பாடலில் உயிர் வாழ்கிறானே.
"நீலமணிமிடற்று
ஒருவன் போல மன்னுகபெரும
நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து
அருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித்
தீங்கனிகுறியாது ஆதல் நின்னகத்து
அடக்கிச் சாதல் நீங்க
எமக்கு ஈத்தனையே"
'நீலமணி போலும் கரிய கண்டத்தையுடைய ஒருவனைப் போல நிலைபெற்று வாழ்வாயாக. பெரிய மலையின் உச்சியில் பறிக்கப்பட்ட நெல்லியின் தீங்கனியை பெறுதற்கரிதென்று
116

கருதாது அதன் பயனை எனக்குக் கூறாது சாதல் நீங்க எனக்குக் கொடுத்தாய் என்கிறார்.
நன்னன் போன்ற கொலைகாரர்கள் முடியாட்சியிலும் இருந்திருக்கிறார்கள். குடியாட்சியிலும் இருந்திருக் கிறார்கள். அதியமான் போன்ற கருணை உள்ளம் வாய்ந்தவர்களும் முடியாட்சியிலும் இருந்திருக்கிறார்கள். குடியாட்சியிலும் இருந்திருக்கிறார்கள்.
எந்த ஆட்சிக்கும் உயிர் தர்மமே. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் ஒருவர் பாடியிருக்கிறார். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை என்ற அரசனைக் காணக் குறுங் கோழியூர்க்கிழார் என்ற புலவர் சென்றார்.
புலவர் போகும் வழியிற் பரந்து விளைந்திருந்த நெற்பரப்பைக் கண்டார். ஒயாது உழைக்கும் உழைப்பாளி களைக் கண்டார். பல பொருள்களும் நிறைந்த வர்த்தக நிலையங்களைக் கண்டார். உயர்மாடிகளையும் வேறு பல கட்டடங்களையும் கண்டார். இவைகளை எல்லாம் கண்டும் அவர் மனம்மகிழ்ச்சி அடையவில்லை.
அரசனிடம் சென்றார். அரசனிடம் இருக்கும் செங் கோலைக் கண்டார். செங்கோலில் தர்மம் நிம்மதியாக நித்திரை கொள்வதைக் கண்டார்.
"அறந்துஞ்சும் செங்கோலையே" என்றார். பெரு மகிழ்ச்சியடைந்தார். என்ன குறை இருந்தாலும்
17

Page 68
அரசனின் செங்கோலின் ஆட்சியில் தர்மம் இருந்தால் மக்கள் இன்பமாக வாழமுடியும்.
எத்தகையவளம் நாட்டில் இருந்தாலும் எத்தகைய பிற சிறப்புக்கள் இருந்தாலும் ஆட்சியில் தர்மம் இல்லாவிட்டால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது.
118

தனிப்பாடல் திரட்டில் இனிப்பான
LIITLipsi
ஒரு காலத்தில் புலவர்களுக்கு உரைநடை எழுதுவதை விடக் கவிதை எழுதுவது இலகுவாக இருந்தது. இன்றும் கூட உரைநடை எழுதுவதிலும் பார்க்க வேகமாகக் கவிதை எழுதும் ஆற்றல் வாய்ந்தோர் நம்மத்தியில் வாழ்கிறார்கள். அதற்குக் காரணம் கவிதை ஆற்றினைப் போல் அமைந் திருப்பதே ஆகும். நீந்தத் தெரிந்தவன் ஆற்றில் இறங்கி விட்டால் ஆற்றின் வேகம் அவனை விரைந்து நீந்தத் தூண்டும். அதே போலத்தான் இயல்பில் கவிதை ஆற்றல் வாய்ந்த ஒருவன் மனத்தில் பாடலின் முதல் அடிதோன்றி விட்டால் மிகுதி அடிகளைப் பாடுமாறு அந்தக் கவிதை அடியே அவனைத் தூண்டும். அவனை இழுத்துச் செல்லும் என்று கூறினும் மிகையாகாது. அந்த நேரத்தில் அவனால் பாடாமல் இருக்க முடியாது.
அரசர் அவையிலும், தெருவிலும், திண்ணையிலும், கிராமத்திலும் நகரத்திலும் என்று பல இடங்களிலும் பல வேளைகளிலும் இயல்பாகக் கவித்துவம் வாய்க்கப் பெற்றோர் பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. அந்த நேரத்தில் அவர்களுக்குள்ளிருந்து எழுந்த தூண்டுதலினால் பாடாமல் இருக்க முடியாமையினால் அவர்கள் பாடிய பாடல்களில் பெரும் பாலானவை கற்பனைத் தேனில் ஊறிக்கனிந்த கனிகளாகும். அவற்றுள் சிலவற்றை நோக்குவோம்.
19

Page 69
ஒளவையார் பாடல்
இம்' என்னுமுள்னே எழுநூறும் எண்ணுாறும் 'அம் என்றால் ஆயிரமும் பாடும் புலவர் வரிசையைச் சேர்ந்தவர் ஒளவையார். இவருடைய பாடல்கள் அனைத்துமே கற்பனை வளமும்கருத்தாழமும் வாய்ந்தவை. ஒளவையார் பாடலில் பல வெண்பா யாப்பில் அமைந்தவை.
வெண்பாவுக்கு எத்தனையோ தனிச்சிறப்புக்கள் உண்டு. வெண்பாவின் உயிர் நான்கடியிலும் இருந்தாலும் கூட நான்காவது அடியில் ஈற்றடியில் உயிர்க்குணம் மிகுதியாகத் தோன்றும்.
சிறுவர்கள் குறும்பாகச் சில சமயங்களில் பல்லியின் வாலை வேறாகத் துண்டாடி விடுவார்கள். அந்த நேரத்திற் பல்லி ஓடிவிடும். துண்டாடப்பட்ட பல்லியின் வால் தனித்துக் கிடந்த துடிக்கும். அதில் துடிக்கும் தன்மை புலப்படும்.
வெண்பா என்னும் பல்லியின் வாலும் அதாவது
ஈற்றடியும் அத்தகையதே. ஈற்றடி தனித்து நின்றும் உயிர்க்குணம் காட்டும். தனித்துநின்றும் பொருள் தரும்.
ஒளவையாரின் பாடல் ஒன்றில் ஈற்றடி "பொற்றாலி யோடு எவையும்போம்" என்பதாகும். இந்த ஈற்றடியின் கருத்து பொன்னால் செய்யப்பட்ட தாலியினையுடைய மனைவி இறந்துவிடும் போது ஒர் ஆண்மகனின் எல்லா
நலன்களும் நீங்கிவிடும் என்பதாகும்.
120

விருந்தோம்பல்
"இருந்தோம்பி இல்வாழ்தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு" என்பது திருக்குறள். இல்லறத்தில் இருப்பது எதற்காக என்று கேட்டால் விருந்தோம்புவதற்கு என்கிறார் வள்ளுவர். உரையாசிரியர் பரிமேலழகரோ "வேறாகாத அன்புடை இருவர் கூடி அல்லது செய்யப்படாமையின்" என்கிறார். எனவே விருந்தோம்பல் மனைவி இல்லாதவன் செய்யமுடியாத அறமாகும். எனவே தான் ஒளவையார் பொற்றாலியோடெவையும்போம் என்றார்.
மங்கல கருமங்கள்
திருமண வைபவத்தில் முன்னின்று உபசரிக்கவோ தேங்காய் அடிக்கவோ அறுகரிசியிட்டு ஆசீர்வாதம் செய்யவோ மனைவியை இழந்தவன் தகுதியற்றவனாகி விடுகிறான். சமூக அந்தஸ்தில் என்ன தான் பெரியவனாக இருந்தாலும் மங்கல கருமங்கள் பலவற்றுக்குத் தகுதி அற்றவனாகி விடுகிறான். எனவேதான் ஒளவையார் சொன்னார் பொற்றாலியோடு எவையும்போம் என்று.
மனைவிக்கு விளக்காகிய வாணுதல
சங்க இலக்கியத் தொடர் ஒன்று மனைவியை வீட்டின் விளக்கு என்கிறது. விளக்கு அணைந்து விட்டால் வீட்டில்
ஒரே இருள்தான். காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு
121

Page 70
பட்ட வாழ்வில் மனைவி இறந்து விட்டால் கணவனைத் துன்ப இருள் வீட்டில் எதிர்பார்க்கும். தொலைவிடம் சென்றாலும் வேற்றுார் சென்றாலும் வீடு திரும்புமாறு அடிக்கடி தூண்டும் நினைவைத் தருபவள் மனைவியே! கணவனின் துன்பங்களில் பங்கு கொள்ள கணவன் வாழ்வில் நம்பிக்கை எற்பட ஆதாரமாக இருப்பவள் மனைவியே! எனவேதான் பொற்றாலி யோடெவையும் போமென்றார்.
இந்த ஈற்றடியைக் கொண்ட வெண்பாவின் முதல் அடியில் தாயோடு அறுசுவையும்போம் என்றார். தாயை இளம்வயதில் இழந்து பிறர் தயவில் வாழும் சிறுவர்களுக்கு இந்தத் தொடர் மிக எளிதாக விளங்கும்.
தந்தையோடு கல்விபோம் என்றார். அதனைத் தொடர்ந்து தந்தை இறக்கும்போது ஒருவன் கல்வி வசதிகளை எல்லாம் இழந்து விடுகிறான். இவ்வாறே இரண்டாம் அடியில் சேயோடுதான் பெற்ற செல்வம்போம் என்றவர், மூன்றாம் அடியில் வாழ்வு உற்றார் உடன்போம் என்றும் உடன் பிறப்பால் தோள்வலிபோம்' என்றும் கூறியவர் இவை எல்லாவற்றிலும் பெரியது, கொடியது மனைவியின் இழப்பு என்பதைக் கூறும் பொருட்டுப் பொற்றாலியோடெவையும்போம் என்றார்.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள?" என்ற வள்ளுவரின் குறளின் கருத்தாழத்தைத் தன்பாற்கொண்ட ஒளவையாரின்
ஈற்றடியைக் கொண்ட முழுப்பாடல் இது.
122

தாயோடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் சேயோடுதான் பெற்ற செல்வம்போம்-ஆயவாழ்வு உற்றார் உடன்போம் உடன் பிறப்பால் தோள்வலிபோம் பொற்றாலியோடெவையும்போம்.
இல்லறத்தில் இன்பம் பெற ஒப்பிலாமணிப்புலவர் அறிவுரை
குடும்பம் என்பது சோலை போன்றது. சோலையில் இனிய மலர்கள் பூத்துக்குலுங்க வேண்டும். சோலையில் இனிய ஒலிகள் ஒலிக்க வேண்டும். எந்தவகைத் துன்பமும் அணுகாத, இன்பமே அணுகும் இடமாக இருக்க வேண்டும். அங்கே தென்றல் வீச வேண்டும். புயல் வீசக்கூடாது. ஆனால் நடைமுறையிற் பல குடும்பங்களிலும் புயல் வீசுவதைத்தானே காண்கிறோம்!
ஆடவரிற் பலர் வீட்டில் எந்த நேரமும் டுசொற் களையே பயன்படுத்துகின்றனர். நல்ல உள்ளம் உள்ளவர் களுக்குக் கூட இன்சொற் பேசத் தெரிவதில்லை. பெண்கள் கணவனிடம் நகையை எதிர்பார்க்கிறார்கள். பட்டு உடையை எதிர்பார்க்கிறார்கள் என்பது எல்லாம் சரிதான். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஆண்களிடமிருந்து இதமான இனிமையான வார்த்தைகளைத்தான் எதிர்பார் கிறார்கள். இதை அறிந்தவர் ஒப்பிலாமணிப்புலவர் என்ற சான்றோர். இல்லறத்தில் இன்பம்பெற இவர் கூறும் அறிவுரை "மாதர்க்கு இதம்" என்பதாகும்.
இல்லறம் இன்பமாக விளங்குவதற்கு இதமான சொற்களும் பாராட்டுக்களும் இன்றியமையாதனவாக
123

Page 71
அமைகின்றன. இதனால் மாதர்க்கு இதம் என்று ஒப்பிலாமணிப்புலவர் சொன்னார்.
இலக்கியத் தலைவன்
கூடலூர்க்கிழார் என்ற புலவர் மாதருக்கு இதமாகப் பேசும் தலைவனைக் குறுந்தொகையிற் காட்டுகிறார். தலைவி ஒருத்தி சமையல் செய்கிறாள். புளிக்குழம்பு வைக்கிறாள். அந்த வீட்டில் சமைக்கத் தெரிந்த எத்தனை யோ பேர் இருந்தும் தலைவன் மீது கொண்ட அன்பு காரண மாகத் தலைவி தானே சமைக்கிறாள். தன்கையாற் சமைத்து கொடுத்தால் தான் அவளுக்கு நிம்மதி, அவனுக்கு மகிழ்ச்சி.
புளிக்குழம்பு பதமாக இருக்க வேண்டும் என்று தன்கையாலே தயிரைப் பிசைகிறாள். அவளுடைய அழகிய கண்ணை அடுப்பி லிருந்து எழும் புகை வருத்திய போதும் அவள் கவலைப்பட வில்லை. அவளுக்கு களைப்போ சோர்வோ தெரியவில்லை. அவள் நோக்கம் முழுவதும் கணவனின் நாவுக்குச் சுவைதரும் விதத்தில் குழம்பு அமைய வேண்டும் என்பதே. அவளது நோக்கம் போலவே குழம்பும் சுவையாக அமைந்தது.
கணவன் உணவு உண்ண வந்தான். அவள் உணவை அன்பும் கலந்து படைத்தாள். உண்ட கணவன் புளிக்குழம்பின் சுவை குறித்து "இனிது" என்றான். அந்தப் பாராட்டுரை அவளை உச்சிகுளிரச் செய்தது. பெருமகிழ் வடைந்தாள். மாதருக்கு இதம் என்பது சங்கத் தலைவனுக்கு
இயல்பாக அமைந்த ஒன்றாக இருந்தது.
124

மாதர்க்கு இதம் என்ற ஒப்பிலா மணிப் புலவரை விளங்கியவர்கள், இல்லறத்தில் அன்பாக வாழ்வதை விளங்கியவர்கள் அடிக்கடி மனைவியைப் பாராட்ட வேண்டும்.
வீட்டை எப்படிச் சுத்தமாக வைத்திருகிறாய் என்று பாராட்ட வேண்டும். அவளுடைய சமையலைப் பாராட்ட வேண்டும். அவளுடைய உடையை அழகைப் பாராட்ட வேண்டும்.
அவள் பிள்ளைகளை நல்லவர்களாக வளர்க்கும் திறனைப் பாராட்ட வேண்டும். அவள் விருந்தினரை உபசரிக்கும் பண்பைப் பாராட்ட வேண்டும். இப்படி வஞ்சகமின்றிப் பாராட்டி இன்சொற்கூறுதலையே ஒப்பிலா மணிப் புலவர் மாதர்க்கு இதம் என்றார். கூடலூர்கிழார் அவ்வாறு மாதர்க்கு இதம் கூறும் சங்ககாலத் தலைவனைக் காட்டினார்.
வீட்டில் இன்பமாக வாழ்வதற்கு "மாதர்க்கு இதம்" என்ற மந்திரத்தைக் கூறிய ஒப்பிலாமணிப் புலவர் வெளியில் நல்ல முறையில் வாழ்வதற்கும் சில மந்திரங்களைக் கூறியிருக்கிறார்.
கவிவாணர்க்குச் சாலவணக்கம்
குருநாதர்க்கு நீதியோடு ஆசாரம்
நண்பின் நயந்தவர்க்குக் கோதற்றவாசகம்’
'பொய்க்குப் பொய்
'கோளுக்குக்கோள்'
அறிவிலாதார்க்கு இரட்டி’ என்பன அவை.
125

Page 72
இத்தொடர்களின் பொருள், கவிஞர்க்குப் பணிவு காட்டுதல், குருநாதருக்கு மெய்யன்புடன் வழிபாடு செய்தல், நட்பிற் சிறந்தவர்களுடன் குற்றமற்ற தன்மையில் அன்புடன் பேசிப் பழகுதல், பொய்யனுக்குப் பொய்யனாதல், புறங்கூறு வோனுக்கு புறங்கூறுவோனாதல், அறிவிலாதவர் களிடத்து அவரைப் போன்று இரண்டுமடங்கு அறிவில்லா மூடன்போல் இருத்தல் அறிவுடையோர் செய்யக் கூடிய சிறந்த செயல்கள் ஆகும்.
இத்தொடர்களின் முழுப்பாடல்: மாதர்க்கு இதம் கவிவாணர்க்குச் சாலவணக்கம் குரு நாதர்க்கு நீதியோடு ஆசாரம் நண்பின் நயந்தவர்க்குக் கோதற்ற வாசகம் பொய்க்குப் பொய்கோளுக்குக்கோள் அறிவிலிலாதார்க்கு இரட்டி அறிவுடையோர் செய்யும் ஆண்மைகளே.
விருந்தினரை உபசரித்தல்
விருந்தோம்பலின் சிறப்பைத் திருவள்ளுவர் விருந் தோம்பல் என்ற அதிகாரத்திற் கூறினார். தனிப்பாடல் திரட்டில் ஒருபாடல் விருந்தினரை உபசரிக்கும் முறையை விளக்கிக் கூறுகிறது.
ஒருவர் விருந்தினராக நம்மிடம் வந்தால் அவரைக் கண்டது குறித்து மகிழ்ச்சி காட்ட வேண்டும். உபசாரமாக நல்ல இனிய சொற்களைப் பேச வேண்டும். அன்புகனிந்த முகத்தோடு அவரைப் பார்க்க வேண்டும். வீட்டிற்கு வரும்
126

போதுவாருங்கள் என்று வரவேற்க வேண்டும். இருக்கையில்
இருந்தால் எழுந்து வரவேற்க வேண்டும். விருந்தினருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சொற்களைக் கூறவேண்டும். அன்புடன் உண்டி கொடுத்து உபசரிக்க வேண்டும் விருந்தினர் "போய்
வருகிறேன்" என்று சொல்லிப் புறப்படும் போது அவர்
பின்னே சிறிது தூரம் செல்ல வேண்டும் என்ற கருத்தைக்
கூறுகிறது.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தநன்மொழி இனிது உரைத்தல் திருந்துறநோக்கி வருக’என உரைத்தல் எழுதல் முன்மகிழ்வன செப்பல் பொருந்துமற்று அவன்தன் அருகுறஇருத்தல் ‘போம்எனில் பின்செல்வதாதல் பரிந்துநன்முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும்பண்பே
காலங்கள் மாறலாம். புறநாகரிகங்கள் மாறலாம். விஞ்ஞானம்பல மாற்றங்களைக் கொண்டு வரலாம். எனினும் மனிதப்பண்பு, மனிதநேயம் மாறக்கூடாது என்பதே தனிப்பாடல் திரட்டின்சாரமாக உள்ளது.
கற்பனைநயம், பொருள்நயம், அணிநயம், நகைச்சுவை
முதலிய சுவைகள் அனைத்தையும் தன்பாற்கொண்ட
தனிப்பாடல் திரட்டில் இனிப்பான பாடல்கள் பலவுண்டு.
127

Page 73
குருவைப் போற்றிய புதுவைப் பாவலன்
"குருபக்தி குருபக்தி 'என்று மேடைகளில் முழங்குகிறார்கள். ஆனால், குருவை மனத்தால் வணங்கு வோர் இன்று மிகவும் அருகிவிட்டனர். குருவைத்துக்கி எறிந்து விட்டுக்குருவின் ஆசனத்தைப் பிடிக்கப் பலரும் முயலும் இந்தக் காலத்திற் குருபக்தியால் உயர்ந்த
ஒருபாவலனைப் பார்ப்போம்.
அந்தப் பாவலன் வேறுயாரும் அல்லன் . மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சீடனாகிய பாரதிதாசன் தான். குருவே வியக்கத்தக்க கவித்துவத்தைப் பெற்றிருந்தும் அந்தச் சிஷ்யன் குருவுக்குத்தான் அடிமை என்ற பணிவு டைமையுடன் வாழ்ந்தான். பாரதிக்குத் தாசன், பாரதிதாசன் ஆனான்.
கல்கியும் ராஜாஜியும்
சமகாலத்தில் வாழும் அறிஞர்களைப் போற்று வதற்கும் புதுமைக்கருத்துக்களை உடனே ஏற்றுக்கொள் வதற்கும் கற்றவர்களாற்கூட முடிவதில்லை. தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு இலகு நடையை தந்தவர்கள் கல்கியும் ராஜாஜியும். ஆனால், இவர்களாற்கூடப் பாரதியாரை ஆரம்பத்தில் புரிந்துகொள்ள முடியவில்லை. இவர்கள் பாரதியாரை மகாகவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. கல்கி
128

அவர்கள் ஆனந்த விகடனிற் பாரதி உலககவி அல்லர் என்றும் அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதியிருந் தார். இதைப் படித்த குருபக்தி மிக்க சிஷ்யனாகிய பாரதிதாசன் வெகுண்டெழுந்தார்.
"பாரதியார் உலககவி
அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் ஒரூருக்கொருநாட்டுக்
குரியதான ஓட்டைச் சாண் நினைப்புடையார்
அல்லர் மற்றும் வீரர் அவர் மக்களிலே மேல் கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார் சீருயர்ந்த கவிஞரிடம்
எதிர்பார்க்கின்ற செம்மை நலம் எல்லாமும்
அவர் பாற்கண்டோம்"
என்று பதிலடி கொடுத்தார்.
பாரதியாரின் பெருமையை அறிந்திராதது கல்கி, ராஜாஜி போன்றோரின் பெருந்தவறு என்றார். மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.
129

Page 74
"அழகொளிசேர்பாரதியார்
கவிதை தன்னை அறிந்திலதே புவி என்றால் புவிமேற் குற்றம்" என்றார்.
உலக கவி அல்லர் பாரதியார் என்று கூறியவர்களைப் பார்த்து,
"உலககவிஅல்லர்
அவர் எனத் தொடங்கி ஐயர் கவிதைக்கிழுக்குக்
கற்பிக்கின்றார் அழகாக முடிச்சவிழ்த்தால்
விடுவார் உண்டோ?" என்று கேட்டார்.
பாரதி தமிழும் பாரதிதாசனும்
பாரதிதாசன் கன்னி ஒருத்தியின் கட்டழகை வர்ணிக்கும்போது " இள வெயில் ஆடி ஒளி விடுமாந்தளிர்
மேனி" என்றும், " மழைவீழ் அருவிக் கூந்தல்" என்றும், "அழகுக் களஞ்சியம்" என்றும், சிரிப்பு, "துன்ப ஆடவர் இன்புறும் மாணிக்கச் சிரிப்பு" என்றும், "அவளது கன்னம் பளிங்கு" என்றும்,
"அவள் இயற்கை அன்னையின் கையிருப்பு" என்றும், பலவாறு அழகுறக்கூறுகிறார்.
130

அவளது சொல்லினிமை எத்தகையது என்று சொல்லும்போது, தான்புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்பதை நினைவுபடுத்துகிறார்.
பழைய பாடலிற் பெண்ணின் குரலைக் குயிலோடு
ஒப்பிட்டிருக்கிறார்கள், தேனோடும் அமுதோடும் ஒப்பிட்டிருக் கிறார்கள், பாலோடும் கரும்போடும் ஒப்பிட்டிருக்கிறார்கள்; கிளியின் குரலோடும், கருப்பஞ் சாற்றோடும் ஒப்பிட்டிருக் கிறார்கள்.
ஆனால், குருபக்தி மிக்க சிஷ்யனாகிய பாரதி தாசனோ அவற்றோடு எல்லாம் ஒப்பிடாமல் அந்த அழகியின்
குரலை.
"மண்டு புகழ்ப்பாரதிதமிழ் போன்ற சொல்லாள்
இன்சொல்லாள்" என்று அந்தக் கன்னியின் குரல் பாரதி தமிழ் போன்ற இனிமையுடைது என்கிறார்.
அந்தக் கன்னியின் குரலை குயிலோடோதேனோடோ-அமுதோடோ-பாலோடோ-கரும்போடோஒப்பிட முடியாதாம். அவற்றிலும் உயர்ந்த ஒன்றுடன்தான் ஒப்பிட முடியுமாம். அந்த உயர்ந்த ஒன்றுதான் பாரதிதமிழ்
"பாரதி தமிழ் போன்ற சொல்லாள்; இன் சொல்லாள்" என்கிறார்.
131

Page 75
ஆங்கிலேயர் கசின்ஸ்
கவிதா ரசனையும் ஆங்கிலப் புலமையும் மிக்க கசின்ஸ் என்பவர் பாரதியாருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் நீங்கள் எனக்குக் கவிதை எழுதி அனுப்புங்கள். நான் கவிதைகளை ஆங்கிலத் தினசரிகளில் பிரசுரிக்கிறேன் என்று எழுதி இருந்தார்.
பாரதியாரும் கவிதை எழுதி கசின்ஸ் என்பவருக்கு அனுப்பினார் . கசின்ஸ் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரித்துப்பாரதியாரின் புகழை உலகறியச் செய்தார்.
கவிதை வேண்டாம் கட்டுரை அனுப்புங்கள் என்று பாரதியாரைக் கேட்டுக்கொண்ட சென்னைத் தமிழ்ப் பத்திரிகைகள் கூடப் பின்னர் பாரதியாரைக் கவிதை அனுப்புங்கள் என்று கேட்டு எழுதினவாம்.
தமிழனின் திறமையைத் தமிழனே அறிந்து கொள்ளாமல் ஆங்கிலேயன் சொன்ன பின் புரிந்து கொள்ளும் அறியாமையை எண்ணிப் பாரதியார் கவலைப்பட்டாராம். இதனைப்பாரதிதாசன்
"ஆங்கிலவர் பாரதியார்
ஆர்ந்த கவித்தேனை வாங்கியுண்ணக் கண்டபின்னர்
வாயூறிச் சென்னைத் தினசரியின் ஆசிரியர்
தேவையினித்தேவை
132

இனிய கவி நீங்கள்
எழுதுங்கள் என்றுரைத்தார் தேவையில்லை என்று முன்
செப்பிட்ட அம்மனிதர் தேவையுண்டு தேவையுண்டு
தேன் கவிகள் என்றுரைத்தார்" என்கிறார்.
சொல்வேறு செயல்வேறு இல்லாத பாரதியார்
பாரதியாருடைய தமிழ்ப் பற்று எத்தகையதென்பதை உலகறியும். நாட்டுப் பற்றுத் தேசப்பற்றையும் அறியும். அவற்றுக்கு எல்லாம் மேலாகச் சொல்வேறு செயல் வேறு என்று இல்லாமல் வாழ்ந்தார். "உள்ளத்தே உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று
சொன்னவர் அவர்.
சாதிபேதம், இனபேதம் இருக்கக் கூடாது என்பவர் பாரதியார் அதை மனதார நம்பியவர் பாரதியார். சிறு குழந்தை மனத்திலே-வெள்ளை உள்ளத்திலே-சாதி நம்பிக்கை இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் "சாதிகள்
இல்லையடி பாப்பா'என்று பாடியவர்.
அப்படிப்பட்ட பாரதியார் பார்ப்பன குலத்திற் பிறந்தவர். குல ஆசாரத்தின்படி வேறு குலத்தவர் வீட்டிலோ வேறு மதத்தவரிடமோ உணவு உண்ணக்கூடாது.
133

Page 76
எனவே சாதிகள் இல்லை என்ற பாரதியாரின் கொள்கை உறவினரின் வெறுப்பையும் அவரது ஊரவரின் வெறுப்பையும் தேடிக்கொடுத்தது. எனினும் பாரதியார் மனதுக்குச் சரிஎன்று பட்டதை மற்றவர்களுக்கு எடுத் துரைத்து நீதியைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை.
பாரதியாருடன் பத்து வருடங்கள் நெருங்கிப் பழகிய பாரதிதாசன் பாரதியாரின் சொல்லும் செயலும் ஒன்றான பண்பைப்பாடுகிறார்.
"தேசத்தார் நல்லுணர்வு
பெறும் பொருட்டுச் சேரியிலே நாள் முழுவதும்
தங்கி உண்டார் காசுதந்து கடை முழுதும்
துலுக்கர் விற்கும் சிற்றுணவு வாங்கி அதைக்
கனிவாய் உண்டார் பேசிவந்த வசை பொறுத்தார்
நாட்டிற்பல்லோர் பிறப்பினிலே தாழ்வுயர்வு
பேசுகின்ற மோசத்தை நடக்கையினால்
எழுத்தால் பேச்சால் முரசறைந்தார் இங்கிவற்றால்
வறுமை ஏற்றார்" என்கிறார்.
134

சாதிபேதம் வேண்டாம் என்ற பாரதியார் அதைச் செயலிலும்
காட்டுவதற்காகச் சேரியிலே நாள் முழுவதும் தங்கி அவர்களது உணவை உண்டார். இன பேதம் இல்லை என்பதைக் காட்டுவதற்காக முஸ்லீம்களது கடையில் உணவு வாங்கி உண்டார்.
எழுத்து, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருந்த தன்மையைப் பாரதிதாசன் மிக அழகாக " நடக்கையினால் எழுத்தால் பேச்சால் முரசறைந்தார்" என்றார்.
குருவைப் போற்றிய புதுவைப் பாவலன் பாரதிதாசன் குருவின் பாடல்களை இரசித்தார். அவற்றுக்கு விளக்கம் சொன்னார். குருவின் தன் மானம் - நேர்மைதமிழ்ப்பற்று- நாட்டுப்பற்று- நிறைந்த உயர்ந்த வாழ்வையும் இரசித்தார். அதற்கும் விளக்கம் சொன்னார்.
135

Page 77
அன்பின் வழியிலே ஒன்றினைந்து மகிழ்தலும் மகிழ்வித்தலுமே காதல்
அன்பு என்பது வற்றாத பேராறு. ஆண்டவன் அடியவர் பத்தியும் தலைவன் தலைவியர் காதலும் பெற்றோர் பிள்ளைகள் பாசமும் இந்தப் பேராற்றின் வழி வந்த சிற்றாறுகளே. அன்பு என்னும் வற்றாத பேராற்றின் சொந்தக்காரர் பற்றிக் கூற வந்த திருவள்ளுவர் "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்று விளக்கி னார். அன்புடையவர்கள் அன்பு கொண்டவர்களுக்காகத் தம் உடைமைகளையும் ஏன் தம்மையும் கூடக் கொடுக்கப் பின்னிற்கமாட்டார்களாம். அத்தகைய அன்புடையார் பற்றிகாதல் உடையார்பற்றிக் கபிலர் ஒரு பாட்டில் கூறுகிறார்.
எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் சிறப்பாகப் பாடுவதில் வல்லவர் கபிலர். சமகாலப் புலவர்களாலேயே பாராட்டப் பெற்றவர் கபிலர். மதுரை நக்கீரனார் கபிலரைப் பற்றிக் குறிப்பிடும்போது "உலகெங்கும் பரவிக்கொண்டி ருப்பதும் பலரும் புகழ்கின்றதும் ஆகிய நல்ல புகழையும், வாய்மை தவறாத மொழியினையும் உடைய கபிலன்" என்று பாராட்டியிருக்கிறார்.
"உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை வாய்மொழிக்கபிலர்"
என்று பாடியிருக்கின்றார். அத்தகைய கபிலர் காதல் எப்படி உண்டாகும் என்று விளக்குகிறார்:
136

ஒருவன் ஒருத்தி வாழ்வு
அந்தச் சோலையில் புல்லாங்குழல் இசை காதுக்கு விருந்து வைத்தது . ஆராவது புல்லாங்குழல் வாசித்தார் களா? இல்லை காற்று மூங்கில் துவாரங்கள் வழியே புறப்பட்டுச் செல்லும்போது ஏற்பட்ட இயற்கை ஒலி அது. புல்லாங்குழல் இசைக்குப் பக்க வாத்தியம் வேண்டாமா? வீழ்ந்து கொண்டிருக்கும் அருவியின் ஒலி மிருதங்க ஒலியாகப் பக்கவாத்தியமானது. இந்தக்கச்சேரியுடன் சோலையின் இனிய ஓசை முடிந்துவிடவில்லை . வண்டு களின் ரீங்காரம் யாழாக ஒலித்தது.
இத்தகைய இனிய சோலையில் திணைப்புனக் காவலுக்கு நின்ற இளம் பெண்கள் பலர் கூடி இருந்தனர். மான்கூட்டம் என நின்ற மகளிர் கூட்டத்தை நோக்கிக் காளை ஒருவன் ஏறுநடையுடன் எதிர் வந்தான். அவன் அழகிய மலர்மாலை அணிந்திருந்தான். அச்சம் தரும் வில்லைக் கையில் வைத்திருந்தான். அம்பறாத் தூணியில் சிறந்த அம்புகளைத் தெரிந்தெடுத்து வைத்திருந்தான்.
அங்கு நின்ற மகளிரை நோக்கி"என்னால் அம்பு எய்யப் பெற்றயானை ஒன்று இவ்வழியாகச் சென்றதா? " எனக் கேட்டான். எல்லா மகளிரும் அவனை நோக்கினர்.
யானைக்கு அம்பு எய்த அக்காளை மான்கூட்டத் துக்கும் அம்பு எய்வானா? அம்பு எய்யவில்லை. அன்பு எய்தான் ஒருத்திக்கு மட்டுமே அன்பு எய்தான். ஏன் அப்படி? தமிழரின் ஒருவன் ஒருத்திக் கொள்கையை ஒழுக்கத்தை
இப்பாடலில் வற்புறுத்துகிறார் கபிலர்.
| 137

Page 78
தலைவியே நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுகிறாள். "மலர்மாலை பொருந்திய தலைவன் அங்கு நின்றான். என்னுடன் நின்ற மகளிர் பலரும் அவனைக் கண்டனர். அவர்களுக்கெல்லாம் அவன் மீது காதல் ஏற்படவில்லை. எனக்கு மட்டுமே ஏற்பட்டது. அவன் பிரிவால் நான்மட்டுமே துன்பமுற்றுதலையணையோடு முகஞ் சேர்த்து நீர் சொரியும் கண்களையும் மெலிந்த தேர்ளையும் உடையவள் ஆனேன் என்கிறாள்.
"மலர்தார் மார்பான்
நின்றோற் கண்டோர் பலர்தில் வாழி-தோழி
அவருள் ஆர் இருட்கங்குல்
அணையோடுபொருந்தி ஒர்யான் ஆகுவது
எவன்கொல் நீர்வார்கண்னொடு நெகிழ்தோளேனே!
பல பிறப்புக்களின் தொடர்பு
ஒருவன்-ஒருத்தி வாழ்வை-ஒழுக்கத்தை இப்பாடலில் கபிலர்மிக நுட்பமாகக் கூறுகிறார். பல மகளிர் நின்ற போதும் ஒருத்தியின் மனதிலேயே அவன் குடிபுகுந்தான். அவன் மனத்திலே அந்த ஒருத்தியே குடிபுகுந்தாள். அதற்குக் காரணம் பல பிறவிகளில் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்களே இந்தப்பிறவியிலும் கணவன் மனைவியாகி றார்கள். அந்த ஒழுங்கு ஒரு பிறப்பில்மாறினாற் கூடப்
138

பெருமையாகாது என்ற குறிப்பை இந்தத் தலைவன் தலைவி சந்திப்புக் காட்டுகிறது.
திருமணநாளிற்போல் என்றும் அன்பினர்
பெரும்பாலான தம்பதிகள் திருமண நாளில் அன்புள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். காலம் செல்லச் செல்ல அன்பு குறைகிறது. ஒரு குழந்தைபிறந்து சில ஆண்டுகளில் அவர்கள் அன்பு குறைகிறது. ஒருவரை ஒருவர் எதிரியாக நினைத்து எந்நேரமும் சண்டை யிடுகிறார்கள். பெரியோர்கள் நிச்சயித்த திருமணங்களிலும் சண்டைதான். காதல் திருமணங்களிலும் சண்டைதான். விவாகரத்தில் முடிவதும் உண்டு. ஆனால் கபிலர் காட்டும் தலைவன் தலைவியர் என்றும் ஒரே அன்பினராகக் காட்சி தருகின்றனர். காலத்தைவென்ற அன்பினராக விளங்குகின் றனர். அவர்களுடைய அன்பு திருமணத்தன்று எப்படி இருந்ததோ அப்படியே முதுமைக் காலத்தும் சிறிதும் குறையாது இருக்கும். வாழ்நாள்முழுக்கச் சிறிதும் குறையாமல் இருக்கும்.
பெண்பாற்புலவர் விளக்கம்
கபிலர் காட்டிய அன்பு எத்தகையது என்பதைப் பெண்பாற் புலவராகிய அஞ்சியத்தைமகள் நாகையார்
என்பவர் தலைவி கூற்றாகவே விளக்குகிறார்.
தலைவனின் அன்பைப்பற்றிக் கூறும் தலைவி தலைவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூறுகிறாள்.
139

Page 79
"தலைவன் பண்பமைந்த குடும்பத்திற் பிறந்தவன். தன்னுடன் சேர்ந்தவரை இன்பம்-துன்பம் எந்த நிலையிலும் பிரியாதவன். அவன் நாவிற்கெடுசொற்களோ-சுடுசொற் களோ வருவதில்லை. இன்சொற்கள் மட்டுமே வரும். என்றும் ஒரேமாதிரியான அன்புடையவன். திருமண நாளிற் போலவே என்றும் இனியவன்" குடிநன்கு உடையன் கூடுநர்ப்பிரி யலன் கெடு நாமொழியலன் அன்பினன் வதுவை நாளினும் இனியனால் எமக்கே" இந்த அகப் பொருட் பாடல்களைப் பாடிய புலவர்கள் வெறும் இலக்கிய இன்பத்தை மட்டும் தரவில்லை. குடும்ப அன்பு திருமண நாளில் இருந்ததுபோல வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையினதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வற்புறுத்தியுள்ளார்கள்.
மாறாத அன்பினர் பற்றித் தோழி கூறுவது
தொழில் மேற்கொண்டதலைவன் வெற்றிகரமாக தொழில் முடித்து வீடுதிரும்பினான். தொழில்காரணமாக அவன் பிரிந்தபோதும் தலைவியின் நினைவுடனேயே இருந்தான். தலைவியும் அவன் நினைவுடனேயே இருந்தாள். இப்போது தலைவன் வந்ததனால் தலைவிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் இதுவரை பிரிவினால் கலங்கி இருந்த தலைவியின் முகத்தில் உவகை ஏற்பட்டதைக் கண்டதனால் தனக்கு உண்டாகிய மகிழ்ச்சியையும் தோழி கூறுகிறாள். தலைவியைப் பற்றித் தோழி கூறும் வார்த்தைகள்
140

பொருட்பெருக்கமும் சொற் சுருக்கமும் இலக்கிய நயமும் கொண்டவை.
"கடவுட் கற்பொடு
குடிக்கு விளக்காகிய புதல்வன் பயந்த
புகழ்மிகு சிறப்பின் நன்னராட்டிக்
கன்றியும் எனக்கும் இனிதாகின்றால்
சிறக்கநின் ஆயுள்"
என்கிறார்.
14

Page 80
காதலுக்கு விளக்கம் கூறிய கவின் மிகு இலக்கியங்கள்
"காதல் காதல் காதல் காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்-என்றார் பாரதியார்.
காதலின் மென்மையைப் பாரதியார் தமது கவிதையில் அழகாகக் காட்டியுள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் காதலுக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு விளக்கத்தை திருவள்ளுவருக்கு முன்னரோ பின்னரோ எவரும் கொடுக்கவில்லை.
"மலரினும் மெல்லிதுகாமம் சிலர் அதன் செவ்விதலைப்படுவார்"
என்பதே அந்தவிளக்கம். (திருவள்ளுவர் காலத்தில் காமம், காதல் என்னும் இரு சொற்களும் ஒரே பொருளில் வழங்கின. பின்னரே காதல் என்பது தன்னலம் கருதாத அன்பு என்னும் பொருளிலும் காமம் என்பது தன்னலம் குறித்த ஆசை என்னும் பொருளிலும் வந்தன.)
மலரை விட மென்மையானது காதல் உணர்வு. அதனை உணர்ந்து அதன் பயனை அடைபவர் சிலரே என்கிறார் திருவள்ளுவர். காதல் என்ற போர்வையில் இன்றும் நாம் காணும் பலவும் காமமே, சிலவே காதல் ஆகும்,
142

ஆயினும் இலக்கியங்கள் பல திருவள்ளுவர் கூறும்தன்னலம் கருதாத அன்பை -காதலை -சிறப்பாகக் காட்டியுள்ளன.
ஆங்கில நாவலில் காதற் சிறப்பு
"sJ Gy6d o61 e5 eflstgjsso" (Atale of two Cities) 6T6örg நாவல் மூலம் ஆங்கிலமொழிக்குப் பெருமையையும் தமக்குப் புகழையும் சேர்த்துக்கொண்டவர் சார்ள்ஸ் டிக்கன்ஸ் என்ற நாவலாசிரியர். அழகு-இளமை-மென்மை-அனைத்தும் நிரம்பிய ஒரு பெண்ணைப் படைத்தார். டிக்கனஸ். அந்தப் பெண்ணுக்கு "லூசிமனெட்" எனப் பெயரிட்டுத் தனது நாவலின் கதாநாயகி ஆக்கிக் கொண்டார்.
மதுவைத்தவிர இனிய பொருள் எதுவும் இவ்வுலகில் இல்லை என்று நம்பினான் ஓர் இளம் வழக்கறிஞன். நீதிமன்றத்திற்குச் செல்லும் நேரம் தவிர மற்றைய நேரம் எல்லாம் மதுவிலே மூழ்கி இருக்கும் "சிட்னிகாட்டன்" என்ற அந்த வழக்கறிஞன் நீதிமன்றத்திற்குச் சாட்சி சொல்ல வந்த "லூசிமனெட்" என்னும் இளம் அழகியைக் காணுகிறான். மதுவை விட இன்பம் தரும் பொருளும் இவ்வுலகில் உண்டு என்ற முடிவுக்கு வருகிறான்.திருவள்ளுவர் கூறியதன்னலம் கருதாத பரிசுத்தமான அன்பு-காதல்-அவனிடம் உண்டாகி
Dġbil
சிட்னிக்காட்டன் லூசிமனெட் என்ற அந்த அழகியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான். மிக நாகரிகமாகப் 143

Page 81
பேசினான். மிக நாகரிகமாக நடந்துகொண்டான். இக்காரணத்தால் அவனை அவள் கற்றறிந்த நண்பனாகவும் நாகரிகம் மிக்க விருந்தினனாகவும் மதித்துப் பழகி வந்தாள்.
ஒரு நாள் சிட்னிகாட்டன் தனது தன்னலமற்ற அன்பினை-காதலினை லூசிமனெட்டுக்கு மிகவும் நிதானத் துடன் தெரிவிக்கிறான். அதற்கு அவள் சார்ள்ஸ்டானே என்பவனைத் தான் விரும்புவதாகவும் திருமணம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கிறாள்.
இந்த இடத்தில் தான் சிட்னிகாட்டனின் மலரினும் மெல்லிய காதல் உணர்வு சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. தன் காதலை அவள் ஏற்கவில்லை. தன் மகிழ்ச்சியை விடத் தன்னால் காதலிக்கப்பட்டவளின் மகிழ்ச்சி பெரிது என்று எண்ணுகிறான் சிட்னிக்காட்டன். லூசிமனெட்டைப்பார்த்து "உனக்கோ உனது அன்புக்கு உரியவர்களுக்கோ எப்போ தாவது ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அதை உயிரைக் கொடுத்தும் விரைந்து நீக்க நான் இருக்கிறேன். என்பதை நினைவில் வைத்துக்கொள்" என்று கூறுகிறான்.
கூறியவாறே அவளது காதலனை மரண தண்டனை யில் இருந்து காப்பாற்றுவதற்காகத் தன்னைத்தியாகம் செய்து தான் மரண தண்டனையை ஏற்கிறான்சிட்னி
காட்டன்.
திருவள்ளுவரின் காதல் இலக்கணத்துக்குச் சிட்னி காட்டன் இலக்கியமாகத் திகழ்வதைக் கண்டோம்.
144

எட்டுத் தொகையில் விலங்குகள் காதல்
இனித் தன்னலம் கருதாத காதலை எட்டுத் தொகை யில் ஒன்றாகிய கலித்தொகையில் காண்போம்.
அந்தப் பாடல் தன்னலம் கருதாத காதலை மனிதருக்கு காட்டுவதற்காக ஓர் ஆண்மானையும் பெண்மானையும் எடுக்கிறது. பாலை நிலத்தில் ஆண்மானும் பெண்மானும் செல்கின்றன. வெயிலோ மிகவும் உஷ்ணமாக இருக் கின்றது.
இருமான்கள் வெயிலால் மிகவும் களைத்து விடுகின் றன. தங்குவதற்குச் சிறு மரநிழல் கூட இல்லை. அந்த நிலையில் ஆண்மான் வெயிலால் தான் வாடுவது பற்றிக் கவலைப்படவில்லை. பெண்மான்வெயிலாற் பதை பதைக் கின்றதே என்று கவலைப்படுகிறது. பெண்மானின் துன் பத்தை உடனே நீக்க வேண்டுமே என்று துடி துடிக்கிறது. அந்த நெருக்கடி நிலையில் பெண்மானுக்குத் தன் நிழலை கொடுக்கும் கலைமான் காதற் கலைமானாக விளங்குகிறது.
மலரினும் மெல்லிது காமம் என்ற வள்ளுவரின் கருத்தை கலித்தொகை மானில் வைத்துக்காட்டியுள்ளது.
"இன்னிழலின்மையான்
வருந்தியமடப்பினைக்கு தன்னிழலைக் கொடுத்தளிக்கும்
கலையெனவுமுரைத்தாரே"
145

Page 82
காட்டிடத்தே தகலைமான் இனிய நிழலில்லாத படியால்
வருந்திய பிணைக்குத்தான் நின்று தன் நிழலைக் கொடுத்தது என்கிறார்.
இலக்கியங்கள் காதலின் மென்மையைக் காட்டும் அதேநேரத்தில் காதலைப் பெற்றோர்கள் எவ்வாறு எதிர்க்கின்றனர் என்றும் காட்டுகின்றன.
காதலும் பெற்றோரும்
காதல் என்ற வார்த்தையைக் கேட்டதுமே சீறிப்பாயும் இயல்பு பெற்றோர்களுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காதல் என்று ஆரம்பித்ததோ பெற்றோரின் எதிர்ப்பும் அன்றே ஆனது.
இந்த உண்மையை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மிக அழகாகக் கூறுகின்றார்.
நாடகத்திற்காவியத்திற்காதலென்றால்
நாட்டினர்தாம் அதைவியந்தே நன்றாம் என்பார்
ஊடகத்தே வீட்டினிலே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றாற் பலருங்கூடிப்
பாடைகட்டி அதைக் கொல்ல முயலுகின்றார் என்கிறார்.
பெற்றோர்பற்றிய பாரதிதாசன்
தோள் வலியும் நல்லுளமும் கொண்ட இளையன் ஒருவனும் பண்பும் அழகும் பொருந்திய பாவை ஒருத்தியும்
146

ஒருவரை ஒருவர் உயிரினும் மேலாகக் காதலித்தனர். இது பெண்ணின் தந்தைக்கும் தமையனுக்கும் தெரிந்து விட்டது.
இதனை அறிந்ததும் தந்தையும் தமையனும் என்னபாடுபட்டனர் என்பதைக் காதலியே கூறுவதாக அமைந்த பாரதிதாசன் பாடலைப்பார்ப்போம்.
"குடும்பத்தின் பெயர்கெடுக்கத்
தோன்றிவிட்டாய் கொடியவளே விஷப்பாம்பே
என்று தந்தை தடதட என்றிருகையால் தலையில் மோதித் தரையினிலே புரண்டழுதார்
அண்ணன் அங்கு மடமட வென்றே கொல்லைக்
கிணற்றில் வீழ்ந்தே மாய்வார் போல் ஓடிப்பின்
திரும்பிவந்தே "பாடுபாவி "என்றுரைத்தார் என்கிறாள்.
தகப்பனார் மகளின் காதலை அறிந்ததும் கெளரவமான எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்கத்தான் பிறந்தாய் என்றாராம். கொடியவளே! விஷப்பாம்பேlஎன்றாராம் அவருக்குக் காதல் விஷமாகத் தெரிகிறது. தனது தலையிலே தடதடஎன்று அடித்துக் கொண்டாராம். தமையன்
147

Page 83
தங்கையின் காதலை அறிந்ததும் மடமடவென்று கிணற்றுள் வீழ்பவர் போல் கிணற்றுக்குக் கிட்ட ஒடித்திரும்பி வந்தானாம்.
காதலைப் பெற்றோர் எதிர்ப்பது இன்று நேற்று ஏற்பட்ட தன்று. காதல் என்று தோன்றியதோ எதிர்ப்பும் அன்றே தோன்றியது. எதிர்ப்பதற்குப் பெற்றோர்கள் பல காரணங் களைக் கூறுவார்கள். ஆயினும் எதிர்ப்புஎதிர்ப்புத்தான்.
148

தமிழ்க்கவிதையும் காலமாற்றமும்
வயலுக்கு வரம்பு அவசியம் தேவை. அனால் வரம்பு மட்டும் வயலாகிவிடாது. நீர்வளமும் செழித்த நெற்பயிரும் கொண்ட பரப்பே வயலாக முடியும். கவிதைக்கு இலக்கணம் அவசியம் ஆனால் இலக்கணக் கட்டுக்கோப்புக்குள் இருக்கும் வார்த்தைகள் மட்டும் கவிதைகளாக முடியாது. உணர்ச்சி என்ற நீரும் கருத்து என்ற செழித்த நெற்பயிரும் சேர்ந்தே கவிதைப் பரப்பாக அமையமுடியும். எனவே தான் இலக்கண நூலார் அறம், பொருள், இன்பம், வீடு என்று கருத்தையும் நகை, அழுகை இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று உணர்ச்சியையும் கவிதைக்கு வற்புறுத்தினர். தனிக்கருத்து மட்டும் கவிதையாவதும் இல்லை. தனி உணர்ச்சியும் கவிதை யாகிவிடுவதில்லை. இரண்டும் அளவு பொருந்த அமைவதே கவிதையாகின்றது. மரபு இலக்கியக்காரர்கள் வயலுக்கு வரம்பு வேண்டும் என்கிறார்கள். ஏரிக்கு அணை வேண்டும் என்கிறார்கள். இது நியாயமே. எந்த மரபு இலகியகாரரும் காலத்தின் தேவையை மறந்தவர்கள் அல்லர். புதுமையைக் கண்டு அஞ்சியவரும் அல்லர். சங்ககாலத்தில் ஆசிரியப்பா பெருவழக்கில் இருந்தது.
இளங்கோ அடிகள் சங்கப் புலவர்கள் ஆசிரியப் பாவிற் பாடினார்கள் என்பதற்காக சிலப்பதிகாரம் முழுவதை யுமே ஆசிரியப் பாவிற் பாடிவிடவில்லை. சங்ககாலத்தில் இல்லாத புதிய யாப்பில் அமைந்த வரிப்பாடல்களையும்
149

Page 84
சேர்த்துக் கொண்டார். திருத்தக்கதேவர் சங்க காலத்தில் இல்லாத புதிய விருத்த யாப்பைக்கையாண்டார். புகழேந்திப்புலவர் வெண்பா யாப்பைக் கையாண்டார். எனவே மரபு இலக்கியப் புலவர்களைக் காலத்தின் தேவை தெரியாதவர்கள் என்றோ காலத்திற்கு காலம் யாப்பில் எற்படும் மாற்றங்களை வரவேற்காதவர்கள் என்றோ மொழியை இலகுபடுத்தத் தவறுபவர்கள் என்றோ கூறுவது பொருத்தமற்றதாகும். யாப்பில் ஏற்படும் மாற்றங்களை வரவேற்காதவர்கள் என்றோ மொழியை இலகுபடுத்தத் தவறுபவர்கள் என்றோ கூறுவது பொருத்தமற்றதாகும்.
காலத்தின் தேவை அறிந்து துணிந்துமாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் மகாகவி சுப்பிரமணியபாரதியார் அவர்கள். அவர் தமது பாஞ்சாலிசபத முன்னுரையில் எளிய பதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய, சந்தம் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்துதருவோன். நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகின்றான்' என்கிறார். சொல்லப்படும் விஷயம் எளிமையாகச் சொல்லப்
பட வேண்டும். என்பதை வள்ளுவரும் '
எண் பொருள வாகச் செலச்சொல்லி" என்றார். எளிமையாகச் சொல்ல வேண்டும் புதுமையாகச் சொல்லவேண்டும் என்ற நோக்கம் புலவர் எல்லோருக்கும் இருந்தமையால்தான் காலத்துக்கு காலம் தமிழ்நடை வேறுபடநேர்ந்தது. சங்க இலக்கியத் தைவிட ஐம்பெருங் காப்பியங்களை விடக் கந்தபுராணம், கம்பராமாயணம் எளிமையானவை. இவைகளை விட
150

இவைக்கு பின்வந்த நூல்கள் எளிமையானவை. எனவே காலத்திற்குகாலம் காலத்தேவை அறிந்து இலக்கியத்தில் எளிமையை இலக்கியகர்த்தாக்கள் கையாண் டிருக்கி றார்கள். எனவே தாய் கிணற்றிள் வீழ்ந்தபோது " என்றாய் கூவலில்" என்று ஒரு பண்டிதர் கூறினார். என்பதுபோன்ற கதைகள் மரபு இலக்கியத்தை மதிப்போரை நையாண்டி செய்ய உதவும் கற்பனையே அன்றி உண்மையாகாது. மரபு இலக்கியகாரர்களோ பண்டிதர்களே உளவியல் அறியா தவர்கள் அல்லர்.
தமிழ்ப் புதுக் கவிதையை ஆரம்பித்து வைத்தவர் பாரதியார் எனக் கூறலாம். பாரதியார் பெருமளவில் மரபுக் கவிதைகளையும் ஓரளவு புதுக்கவிதைகளையும் இயற்றி இருக்கிறார். பாரதியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் மக்களிற் பலர் ஆங்கிலம் படிப்பதையும் ஆங்கிலத்தில் பேசுவதையும் பெருமையாகக் கருதினார்கள். பெரும்பாடுபட்டாயினும் பிள்ளைகளை ஆங்கிலக் கல்லுரிகளில் சேர்க்க முயன்றனர். இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மரபு தெரிந்த, தமிழ் யாப்பு தெரிந்த பாரதியார் இலக்கிய வழக்குச் சொற்கள், பேச்சு வழக்கு சொற்கள் என்றெல்லாம் ஆராயாது உயிர்த்துடிப்புள்ள எல்லாச் சொற்களுக்கும் தமது படைப்புக்களில் இடமளித்தார். ஆறுமுகநாவலர் காலத்தின் தேவையறிந்து ஆங்கிலக் குறியீடுகளைத் தமிழ் உரை நடையில் சேர்த்துக் கொண்டதுபோல் பாரதியாரும் காலத்தின் தேவையறிந்து ஆங்கிலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த புதுக் கவிதைக்குத் தமிழில் உருவம்
151

Page 85
கொடுத்தாரோ என்று எண்ணத்தோன்றும். பாரதி யாருடைய வசன கவிதைகள் ஒசைநயம் வாய்ந்தவை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. "பா" என்பது "பரந்துபட்ட ஒசை" என்று பாவுக்கு விளக்கம் கூறிய உரையாசிரியரும் செவி நுகர் கனிகள் என்று கவிதையை குறிப்பிட்ட கம்பரும் ஒசை நயம் இல்லாவிட்டால் ஒரு போதும் அது கவிதையாக முடியாது என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளனர். மரபுக் கவிதைகளைப் படைப்பவர் களால்தான் புதுக்கவிதை படைக்க முடியும் என்பதற்கு நா. பிச்சமூர்த்தி போன்றோரைக் குறிப்பிடலாம். விதிவிலக் காக இன்று சிலர் மரபு இலக்கியம் படைக்காமலேயே ஒசைநயம் வாய்ந்த புதுக்கவிதைகள் படைக்கின்றனர் என்பதையும் மறந்து விட முடியாது. இன்று வசனங்களைக் துண்டாக நறுக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக பரப்பி விட்டால் அது வசன கவிதையாகும் எனப் பலர் நினைக்கின்றார்கள். அப்படிச் சொல்வோரால் செய்யப் படும் வசன கவிதைகள் கம்பர் கூறியது போல செவி நுகர் கனிகளாக இருக்க முடியாது. கணிநுகர் சித்திரங் களாகத்தான் இருக்கமுடியும்.
152

கவிதையின் அணிகளும் கண்ணியர் அணிகளும்
கன்னியர் தம் அழகை மேலும் சிறப்புறச் செய்வதற்கு ஆபரணங்களை நாடுகின்றனர். ஆபரணங்களை அணிகள் என்று சொல்கின்றோம்.
கவிஞர்களும் தங்கள் கவிதைக் கன்னியரை மேலும் அழகுபடுத்த அணிகளை நாடுகின்றனர். அவை உவமை முதலிய அணிகள் ஆகும். கன்னியர்கள் தம்மை அழகு படுத்த அணிந்து கொள்ளும் அணிகளுக்கும் அவர்களுக் கும் எந்தவிதத்தொடர்புமில்லை. ஆனால் கவிதைக் கன்னியைப் பொறுத்தவரை அணிகள் கவிதையின் அங்கமாகின்றன. கவிதைக்கும் கவிதை அணிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கவிதைக் கன்னியின் குணஇயல்புகளை விளங்கிக்கொள்ளக் கவிதை பெரிதும் உதவுகின்றது.
ஒளவையும் உவமையும்
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் போரிற் பேராற்றல் வாய்ந்தவன்; கொடையிற் பெருவள்ளல்; அன்பில் மிகச் சிறந்தவன். அவனைப் பாடிப் பரிசில் பெறச் செல்கின்றார் ஒளவையார்.
அவனிடத்துப் பல சிறப்புக்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு சிறப்புக்களை ஒளவையார் பாராட்ட
153

Page 86
விரும்பினார். ஒன்று போர்க்களத்தில் அவன் கடுங்கோபம் உடையவனாக, பகைவர்மேற் பாய்ந்து, பகைவரை அஞ்சிச் சிதறி ஒடவைக்கும் வீரச்சிறப்பு மற்றது புலவர்கள், சான்றோர்கள், நண்பர்கள், சிறுவர்கள் ஆகியோருடன் சேர்ந்து தான் அரசன் என்ற அந்தஸ்தை மறந்து அளவளாவுதற் சிறப்பு. இவ்விரண்டு சிறப்புக்களையும் அழகாக - இனிதாக- சிறப்பாகக் கூற ஒளவையாருக்கு உதவுகிறது உவமை அணி
அரசன் ஒருவனே போர்க்களத்திற் கொடுமையாகவும் ஊர்மக்களிடத்து இனிமையாகவும் நடந்து கொள்கின் றான். எனவே உவமானமாகக் கொள்வது ஒரு பொருளாக இருக்கவேண்டும். அந்தப் பொருள் ஒரு நிலையிற் கொடியதாகவும் இன்னொரு நிலையில் இனியதாகவும் இருத்தல் வேண்டும். இங்கு ஒளவையாருக்கு யானையின் நினைவு வந்தது.
யானை மதங்கொண்ட நேரத்தில் எதிர்ப்பட்ட பொருளை எல்லாம் தூளாக்கி எதிர்ப்பட்டோரை எல்லாம் அஞ்சிச் சிதறி ஓடச்செய்கிறது.
மதம் இல்லாத தனது இயல்பான நிலையில் அது குளத்தில் குளிக்கிறது. குளத்தில் குளிக்கும் சிறுவர்கள் யானையுடன் விளையாடுகின்றனர். அதன் தந்தத்தை தண்ணிர் எற்றிக் கழுவுகின்றனர். அச்சிறுவர்களுடன் யானை மிகவும் அன்பாகவும் இனிமையாகவும் நடந்து கொள்கிறது.
154

யானையை உவமானமாகக் கொண்டு அதியமான்
நெடுமான் அஞ்சியைப் பாராட்டுகிறார் ஒளவையார்,
"ஊர்க்குறுமாக்கள்
வெண்கோடுகழாலின் நீர்த்துறைபடியும்
பெருங்களிறு போல இனியை பெரும
வெமக்கே மற்றதன் துன்னருங்கடா அம்போல இன்னாய் பெரும நின்னொன்னா தோர்க்கே.
ஊரிலே உள்ள சிறு பிள்ளைகள் தனது வெண்மை யான தந்தத்தை நீர்த்துறையிற் கழுவும்போது யானை அவர்களுடன் இனிமையாக நடந்து கொள்ளும். அதே யானை மதங்கொண்டபோது கொடுமையாக நடந்து கொள்ளும். நீயும் பகைவர்க்கு மதங்கொண்ட யானையாய் நின்பால் அன்புள்ள நமக்கு மதம் நீங்கிய இயல்பான குணமுடைய இனிய யானையாய் விளங்குகிறாய் என்றார்.
பாரதிதாசனும் உருவகமும்
கன்னி ஒருத்தி குளத்தில் நீராடிக்கொண்டிருக் கிறாள். இளமை தவழும் அவளுடைய முகத்தில் மகிழ்ச்சி விளையாடுகிறது. ஏதோ ஏதோ நினைவுகளால் அவள் முகம் குங்குமமாகச் சிவக்கிறது. அவளது முகப்பொலிவைக் கண்ட ஒருவன், கண்டதும் தனது உள்ளத்தைக் கொள்ளை
155

Page 87
கொடுத்து விடுகிறான். இந்தக் காட்சியைப் பாடுகிறார் பாரதிதாசன்.
"தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்- அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான்
குப்பன் கொள்ளை
கொடுத்தனன் உள்ளத்தினை"
குளம் நிறையச் செந்தாமரைப்பூ பெண் நீராடுகிறாள். இவளுடைய முகமும் தாமரைப் பூக்களோடு இன்னுமொரு தாமரைப் பூவாக மலர்ந்து அழகு செய்கிறது. தாமரையின் பொலிவு முகத்தில் உண்டு. எனவே "முகத்தாமரை" என்று உருவக அணியால் விளங்குகிறார்.
குழவிகொள்பவரின் ஓம்புமதி
கோப்பெரும் சேரல் இரும்பொறை என்ற அரசனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார் நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர். ஒர் அரசன் நாட்டு மக்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதனை அரசனுக்குக் கூற விரும்பினார்.
நாட்டு மக்கள் எல்லோருக்கும் அடிப்படைத் தேவையாகிய இருப்பிட வசதி, உணவு, உடை நிறைவு
156

செய்யப்படவேண்டும்; அவர்கள் நோயுறும்போது மருத்துவ வசதி வேண்டும் ; போர் பற்றிய அச்சமின்றி அவர்கள் வாழ வேண்டும்; அவர்களின் மொழி வளம், கலைவளம் பெற்றுச் சிறப்படைய வேண்டும்; அவர்களுடைய சமய நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும். அரசனுடைய அன்பு எந்த நேரமும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் . இந்தளவு கருத்தையும் விளக்கப் புறநானூற்றுப் பாடலில் ஒர் அடியே போதுமானதாக இருந்தது. அவ்வளவு சுருக்கமாகச் சொல்லியது உவமை அணி. "குழவி கொள்பவரின்
ஒம்புமதி"
என்பது அந்த அடி. குழந்தையை வளர்க்கும் தாய் போல, நாட்டு மக்களைப் பாதுகாப்பாயாக என்கிறார். இந்தக் கருத்தைப் புலவர் கூறி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. முடியரசுக்குக் கூறிய இக் கருத்துக் குடியரசுக்கும் பொருந்தும். ஜனநாயகம் பேசப்படும் நாடுகளிலே நாட்டுமக்களைத் தாய்போலப் பேணுகிறார் களா என்பது கேள்வியாகவே இருந்து வருகிறது.
உவமையை அடுக்குவதில் அழகு
உவமையைகளை ஒன்றுக்கு மேற்பட அடுக்கிச் சொல்வதிலும் தனி இன்பம் உண்டு. கபிலர் குறிஞ்சிக் கலியில்,
"ஆய்துவி அனமென
அணிமயிற் பெடையென
157

Page 88
தூதுனம் புறவெனத்
துதைந்த நின் எழில் நல மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார் பேதுறுஉமென்பதை
அறிதியோ? அறியாயோ?
கண்டவர் காதல் கொள்ளத்தக்க மான் போலும் நோக்கினையும் அன்னம் போலும் நடையினையும் மயில் போலும் சாயலினையும் புறாவைப் போன்ற இயல்பினை யும் கொண்ட நின் அழகு மயக்கமடையச் செய்யும் என்பதனை நீ அறிவாயா? அறியமாட்டாயா?
வள்ளுவர் தனித்துவம்
ஒரு பயனுள்ள செய்தியை விளக்க இன்னொரு பயனுள்ள செய்தியைப் பயன்படுத்துவது வள்ளுவரின் தனிச்சிறப்பு. வள்ளுவரின் உவமானத்திலும் கருத்தாழம் இருக்கும். வள்ளுவரின் உவமேயத்திலும் கருத்தாழம் இருக்கும். உவமானத்திலும் சிறந்த கருத்தை வைப்பது வள்ளுவரின் தனித்துவம். உதாரணத்துக்கு ஒரு குறளைப் பார்ப்போம்.
தலைவியைத் தழுவிய தலைவன். தலைவியைத் தழுவும் இன்பம் எத்தகையது என்று கூறுகிறான்.
158

"தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு"
என்கிறான்.
தலைவியைத் தழுவும் இன்பம் எது போன்றது என்றால் தமது சொந்த உழைப்பினால் வந்த பொருளைத் தமது சொந்த விட்டில் இருந்து விருந்தினர் சுற்றம் முதலியாருடன் பகுத்து உண்ணும் போது ஏற்படும் இன்பம் போன்றது என்று கூறுகிறான்.
உவமேயத்தில் காதற் சிறப்பை வைத்த வள்ளுவர். அதை விளக்க உவமானத்தில் விருந்தோம்பல் சிறப்பை எடுத்தாள்கிறார். உவமேயத்தில் எவ்வளவு கருத்தாழம் இருக்கிறதோ உவமானத்தில் அவ்வளவு கருத்தாழம் இருக்கிறது.
159

Page 89
பஞ்சினும் மிக மெல்லிய பாவலர்
உள்ளங்கள்
"பசுமையான நிலத்தில்தான் பயிர் வளரும். மென்மையான உள்ளத்தில்தான் கவிதை பிறக்கும்." இக்கூற்று முற்றிலும் சரியே.உண்மையானகவிஞர்கள் மெல்லுள்ளம் வாய்ந்த மேன்மக்களாகவே வாழ்ந்திருக்கி றார்கள். மெல்லுள்ளம்தான் மனிதாபிமானத்தின் பிறப்பிட மாகவிளங்குகிறது.
கவிஞர் ஷெல்லி
ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி தமது கவி வளத்தால் ஆங்கில மொழிக்குப் பெருமை சேர்த்தவர். அவரது கவிதை நயத்தில் ஈடுபட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியார், அவர்மேற் கொண்டிருந்த பெருமதிப்பால் ஷெல்லிதாசன் என்ற புனை பெயரிற் பல விடயங்கள் எழுதி உள்ளார். ஜிவகாருண்யம் மிக்க ஷெல்லி குளிர் தேசத்தில் பிறந்து வாழ்ந்தபோதும் சைவ உணவையே உண்டுவந்தார்.
இயற்கை அழகை ரசிக்கும் ஷெல்லி காலையில் எழுந்ததும் நதிக்கரைக்குச் செல்வார். அங்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். கூடையில் மீன் துடி துடித்துக் கொண்டிருப்பதை ஷெல்லியாற் சகிக்கமுடி வதில்லை. மீனின் பெறுமதியை மீனவரிடம் கொடுத்துத் துடி துடிக்கும் மீனை நதியில் விட்டுவிடச் செல்லுவார். அத்தனை
மென்மை உள்ளது அவரது உள்ளம்.
160

கவிஞர் பாரதி
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எல்லா மக்களும் வயிறார உண்ண வேண்டும் என்ற ஆர்வத்தால் " தனியொருவனுக் குணவிலை யெனிற் சகத்தினை அழித்திடுவோம்" என்று பாடினார். எல்லா மனிதருக்கும் இரங்கிய அவரது மெல்லுள்ளம் பறவைகளுக்கும் இரங்கியது. பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் சமையலுக்காக அரிசி எடுத்துவைத்து விட்டு அப்பாற் சென்றிருந்தார். அவ்வேளை பாரதியார் வீட்டுக்குவந்த சின்னஞ்சிறு குருவிகள் சத்தமிட்டன. குருவிகள் பசியால் வாடுவதாக பாரதியார் எண்ணினார். அவரது மெல்லுள்ளம் குருவிகளின் பசியைப் போக்கவிழைந்தது. சமையலுக்கு வைத்த அரிசி முழுவதையும் பறவைகளுக்குப் போட்டு விட்டார்.
அகநானுற்றுப்புலவர்
ஷெல்லி மீனுக்கு இரங்கினார். பாரதியார் பறவைக்கு இரங்கினார். அகநானூற்றுப்புலவர் வண்டுக்கு இரங்கு கிறார். குறுங்குடி மருதன் எனும் புலவர் காதலன் ஒருவனில் வைத்துத்தன் கருணை உள்ளத்தைக் காட்டுகிறார்.
தொழில் காரணமாகத் தன் காதல் மனையாளைப் பிரிந்து செல்கிறான் தலைவன். எப்போது தொழில் முடியும், எப்போது காதல் மனையாளிடம் திரும்பிச் செல்லலாம் என்ற ஏக்கம் தலைவனின் அடிமனதில் இருந்து கொண்டே
161

Page 90
இருக்கிறது. அவன் மேற்கொண்ட தொழில் வெற்றியாக முடிவுற்றது. வெற்றி மகிழ்ச்சி ஒரு புறம் காதல் மனையாளைக் காணப்போகிறேன் என்ற உவகை மறுபுறம். விரைந்து செல்லக்கூடிய நெடுந்தேரிற் புறப்படுகிறான் தலைவன். திருப்பிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் பெருமரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. மரங்கள் போதாதென்று மரங்களைப் படர்ந்த கொடிகளும் பூத்துக் குலுங்குகின்றன.
கண்ணுக்கு அழகையும் காற்றுக்கு நறுமணத்தையும் கொடுக்கும் மலர்கள் அத்துடன் நின்றுவிடுகின்றனவா? வண்டுக்குத் தேனையும் அல்லவா கொடுக்கின்றன? இதனால் மலர்களில் எல்லாம் ஆண்வண்டும் பெண்வண்டு மாகச் சோடி சேர்ந்து இருந்து தேனை உண்கின்றன. தேரின் மணிஓசையால் வண்டுகள் தேன் உண்பதை விட்டுச் சோடி பிரிந்து கலக்க முறுமே என்று எண்ணுகிறான் தலைவன். உடனே தேரை நிறுத்துகிறான்.
மணியினுடைய நா, மணியுடன் அடிபட்டு ஓசை எழாதவாறு மணியின் நாவைக் கயிற்றினால் இழுத்துக் கட்டுகிறான். இப்போது மணியிற் பேரொலியும் இல்லை. வண்டுக்குத் தொல்லையும் இல்லை. இதனை அகநா னுாற்றுப்பாடல்,
"பூத்த பொங்கர்த்துனையொடுவதிந்த
தாதுண்பறவையேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்தமாண்வினைத்தேரன்" என்கிறது.
162

புறநானூற்றுப்புலவர்
மீனுக்கும், குருவிக்கும், வண்டுக்கும் இரங்கும் பஞ்சினும் மெல்லிய பாவலருள்ளத்தைக் கண்டோம். இனி அரசன் என்றும் பாராது ஒரு மனித உயிரைக் காப்பாற்ற அரசனுடன் வாதாடும் கவிஉள்ளத்தைக் காண்போம்.
இளந்தத்தன் என்னும் புலவர், சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனிடம் செல்கிறார். சோழன் நலங்கிள்ளி இளந்தத்தனின் பாடலைக் கேட்டு உவகை அடைகிறான். பொன்னும் பொருளும் கொடுக்கிறான். தன்னுடன் சிலகாலம் தங்கச்செய்து உபசரிக்கின்றான். சில நாள்களின் பின் இளந்தத்தன் என்னும் புலவர், சோழன் நெடுங்கிள்ளி அரசனைப் பாடி, பரிசில் பெறச் செல்கிறார். அப்போது சோழன் நலங்கிள்ளியும் சோழன் நெடுங்கிள்ளியும் ஒருவருடன் ஒருவர் பகைகொண்டிருந்தனர்.
இக்காரணத்தால் இளந்தத்தன் என்னும் புலவரைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றன் என்று சோழன் நெடுங்கிள்ளி தீர்மானித்தார்; மரண தண்டனையும் விதித்தான். கோவூர்க்கிழார் இதனைக் கேள்விப்பட்டார். "ஒரு பாவமும் அறியாத புலவர் ஒருவர் சோழன் நெடுங் கிள்ளியாற் கொல்லப்படுவதா?" என ஏங்கினார்; இரங் கினார்; விரைந்து சோழன் நெடுங்கிள்ளியிடம் சென்றார். நெடுங்கிள்ளியை நோக்கி
163

Page 91
"அரசே புலவர்களை ஒருபோதும் ஒற்றர்களாகக் கருதாதே ! பாடிப் பரிசில் பெறும் புலவர்கள் ஒருபோதும் ஒருவருக்கும் தீங்கு நினைப்பதில்லை. புலவர்கள், கொடை வள்ளல்களை நினைத்து. பழமரத்தைத் தேடிச்செல்லும் பறவைகளைப் போல அவர்கள்பாற் சென்று தமது ஆற்றலாற் கவி பாடிப் பரிசில் பெறுபவர்கள். பெற்ற பரிசிலைக் கூடத் தமக்கென ஒளித்து வைப்பவர்கள் அல்லர். பொருளைப் பாதுகாக்காது தாமும் உண்டு தமது உறவினர் களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்து அவர்களது பசிப் பிணியை மாற்றுபவர்கள். இளந்தத்தனும் அத்தகைய கருணை உள்ளம் வாய்ந்த புலவரே. அதனால் அவருக்கு வழங்கிய மரண தண்டனையை நிறுத்தி அவரை விடுதலை செய்" என்கின்றார். கோவூர்க்கிழாரின் இந்த வேண்டு கோளைக் கேட்ட சோழன் நெடுங்கிள்ளி, கோவூர்க் கிழாரின் கல்விநலன், கவிநலன், நீதி, நேர்மை வாய்ந்த அனைத்தும் அறிந்தவன். ஆதலின் இளந்தத்தனென்னும் புலவரை விடுதலை செய்கிறான். கோவூர்க்கிழாரின் கருணை உள்ளத்தைக் காட்டும்பாடல் இதோ.
"வள்ளியோர்ப்படர்ந்து புள்ளிற் போகி நெடிய என்னாது சுரம்பல கடந்து வடியாநாவின் வல்லாங்குப்பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றமருத்தி ஒம்பாதுண்டு கூம்பாதுவீசி வரிசைக்கு வருந்துமிப்பரிசில் வாழ்க்கை பிறர்க்குதீதறிந்தன்றோவின்றே, திறம்பட நண்ணார் நாண அண்ணாந்தேகி ஆங்கினி தொழுகி னல்லதோங்குபுகழ் மண்ணாள் செல்வமெய்திய நும்மொரன்ன செம்மலுமுடைத்தே."
164

இருபதாம் நூற்றாண்டுக் கவிதைநடை இதுவெனக் காட்டிய மகாகவி பாரதி
இருபதாம் நூற்றாண்டுக்குரிய கவிதைத் தமிழைஉரைநடைத் தமிழை - பத்திரிக்கை தமிழை- எழுதிக் காட்டியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று விமர் சகர்கள் கூறுவார்கள். அதுமுற்றிலும் உண்மையே.
இருபதாம் நூற்றாண்டுக்குரிய கவிதை நடை இப்படித்தான் இருக்கவேண்டும்மென்று தெளிந்த பாரதியார் சிந்து, கும்மி, கண்ணி என்று பல வடிவங்களிற் பாடினார். அதே நேரத்தில் ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறைகளிலும் பாடினார். ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகியவற்றையும் இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப இலகுபடுத்தி அதிற் பெருவெற்றியும் கண்டார்.
அறுசீர் விருத்தங்களையும், எண் சீர் விருத்தங் களையும், யாப்பு இலக்கண அறிவு இல்லாதவர்கள் கூட ஒசையை வைத்துக்கொண்டே இயற்றக்கூடிய அளவுக்கு யாப்பை இலகுபடுத்தினார்.
வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் யாப்பு இலக்கணஅறிவின்றி இயற்றுவது கடினமானது. இலக்கண நுட்பம் அமைந்த வெண்பா, கட்டளைக் கலித்துறைகளைக் கூட ஒசையைக் கொண்டே பிறர் இயற்றச் செய்த வித்தகர்
மகாகவிசுப்பிரமணியபாரதியார்.
165

Page 92
பாரதியாரின் கவிதை நடைதான் இருபதாம் நூற்றாண்டுக் கவிதை நடை என்பதைப் பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர்களிற் சிலரே தெரிந்திருந்தனர். தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் தமது பதினேழு வயதுக்குள்ளேயே கற்றுத் தெளிந்த பாரதிதாசன் அவர்கள் பாரதியாரின் கவிதை நடைதான் இருபதாம் நூற்றாண்டுக்குரிய கவிதை நடை என்பதை முற்றாகத் தெரிந்துகொண்டார்.பாரதியார் அமரராகிப் பல வருடங்களின் பின்னரே பாரதியாரின் கவிதை நடைதான் இருபதாம் நூற்றாண்டுக்குரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
வெண்பா
இலக்கண நுட்பம் நிறைந்த வெண்பாவை எப்படி இலகுவாகவும் இனிமையாகவும் ஒசை நயம் தோன்றவும் பொருள் நயம் சிறக்கவும் பாடினார் என்பதைப்
பார்ப்போம்.
செய்கதவம் செய்கதவம் நெஞ்சேதவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை.அன்புடையார் இன்புற்றுவாழ்தல் இயல்பு.
இந்த வெண்பாவின் ஒசை இனிமை பலமுறை பாடிப் பார்க்கத்தூண்டும். எளிமை வெண்பா எழுத ஆசைப்படு பவரை துணிந்து எழுதத்துரண்டும். இதுகொண் டிருக்கும் பொருட் சிறப்பு எவரையும் சிந்திக்கத் துண்டும். செய்கதவம் 166

செய்கதவம் என்று பாரதியாருக்கு முன்னரே சான்றோர்ச பலர் மக்களைத் தூண்டி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பாரதியார் முன்னோர் மொழிந்தவாறே எற்றுக்கொண் டுள்ளார். ஆனால் எது தவம் என்பதை விளக்குவதில் முன்னோரில் இருந்துவேறுபடுகிறார்.
அன்புதான் தவம் என்கிறார். வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை என்று அடித்துக் கூறுகிறார். தவம் எது என்பதற்குப் பாரதியார் கொடுக்கும் விளக்கம் . பாரதியார் பாடலைப்போலவே தனிச்சிறப்புடையது. அன்பு என்கிறதவத்தின் பயனை ஈற்றடியிற் கூறுகிறார்.
இன்புற்று வாழ்தல் இயல்பு என்ற ஈற்றடி, அன்பாகிய தவம் செய்தவர்கள் இவ்வுலகில் இன்புற்று வாழ்தல் இயல்பு என்ற பொருளைத் தருகிறது. ஆழ்ந்து பார்க்கையில் அன்பாகிய தவத்தைச் செய்தவர்கள் பிறவிப் பயனாகிய வீடுபேறு உற்று இன்புற்று வாழ்தல் இயல்பு என்ற சிறப்புப்பொருளும் இருப்பதைக்காணலாம்.
பாரதியார் இவ்வுலகில் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தார். அந்த முப்பத்தொன்பது ஆண்டு வாழ்வில் உலகம் உள்ளவரை நிலைக்கும் பாடல்களைப் பாடினார். உலகம் உள்ளவரை நிலைக்கும் புகழைப்பெற்றார். இவற்றுக் கெல்லாம் காரணம் என்ன?
பாரதியார் கவிதையைத் தொழிலாகக் கொண்டது தான் காரணம். ஆசிரியத்தொழில், ஏர்த்தொழில், வணிகத் 167

Page 93
தொழில் என்று பல தொழில்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் கவிதையும் ஒரு தொழில் என்பதைப் பாரதியார் சொன்னபிறகே நாம் தெரிந்து கொண்டோம். கவிதையைப் பொழுது போக்காகக் கொள்ளாமல் கவிதையைத் தொழிலாகக் கொண்டமையால்தான் பாரதியாரால் முப்பத் தொன்பது ஆண்டுகால இவ்வுலக வாழ்வில் இவ்வளவு தொகையான கவிதையை அற்புதமான கவிதையை எழுதமுடிந்தது.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்-உமைக்கினிய மைந்தன் கனநாதன் நங்குடியை-வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றுஞ்செய்.
நமக்கு தொழில் கவிதை என்றார். கவிதைத் தொழிலோடு பிறந்தநாட்டின் அடிமை விலங்கொடிக்கும் பணியையும் சேர்த்து நாட்டிற்கு உழைத்தல் என்றார். கவிதைத் தொழிலும் நாட்டிற்குழைத்தலும் சிறப்பாக நடைபெற இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் வேண்டும் என்றார். முயற்சியில் வெற்றிபெறவும் நல்வாழ்வு பெறவும் கணநாதன் துணை என்பதை உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் என்றார்.
எண்சீர் விருத்தம்
எண்சீர் விருத்தத்தை எவரும் எழுதச் செய்த பெருமை
பாரதியாருக்கும் அவரது சிஷ்யனாகிய பாரதிதாசனுக்குமே
168

சொந்தம் என்று சொல்லலாம். பாரதியார் பாடிய விருத்தங்கள் அனைத்துமே இலக்கணச் சிறப்பும் ஒசை நயமும் கொண்டவை. எளிமை நயத்துக்கு இரு பாடல்களைப்
பார்ப்போம்.
பேரறமும் பெருந்தொழிலும்
பிறங்கு நாடு பெண்களெலாம் அரம்பையர் போல
ஒழிரும் நாடு வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள்
கல்வி வேள்வி எனும் இவையெல்லாம்
விளங்கும் நாடு சோரமுதற் புன்மையெதும்
தோன்றா நாடு பாரதர் தம்நாட்டினிலே
நாசமெய்தப் பாவியேன் துணைபுரியும்பான்மை
என்னே
இந்த எண்சீர் விருத்தம் மலையிலிருந்து விரைந் தோடும் அருவிபோல தங்கு தடையின்றி ஒடிச்செல்கிறது. ஒசைச் சிறப்புடன் காலத்துக்கேற்ற எளிமையும் கொண் டுள்ளது.
பொருட் சிறப்பென்று பார்க்கும்போது மலையென நிமிர்ந்து நிற்கிறது. ஒருநாட்டின் உயர்வுக்கு முதல் 169

Page 94
தேவையானது தர்மம் என்பதை விளக்க அறம் என்றார். அற வழியில் நிற்பினும் உயர்வுக்கு உழைப்புத் தேவையென்பதை விளக்கப் பெருந் தொழில் பிறங்கும் நாடு என்றார். தமது நாட்டைக் காத்துக்கொள்ள வீரம் தேவையென்பதையும் வீரத்தோடு விவேகமும் மெய்ப் பொருள் அறிவும் தேவை யென்பதை விளக்க வீரமொடு மெய்ஞ்ஞானம் உடைய நாடு என்றும் கூறினார். அத்துடன் கல்வி அவசியம் என்றும் குறிப்பிட்டார். திருட்டும் பிற குற்றங்களும் இல்லாத நாடு என்றும் கூறி நிறைவு கொண்ட ஒரு நாட்டை அழகுறக் காட்டினார்.
அறுசீர்திருத்தம்
தேவிநின்னொளிபெறாத
தேயமோர் தேயமாமோ? ஆவியங்குண்டோ? செம்மை
அறிவுண்டோ? ஆக்கமுண்டோ காவிய நூல்கள் ஞானக்
கலைகள் வேதங்கள் உண்டோ? பாவியரன்றே நின்தன்
பாலனம் படைத்திலாதோர்?
இது பாரதியார் இலகு நடையில் தந்த அறுசீர் விருத்தம். இலகுபடுத்தியபோதும் இலக்கண அமைதியோ, ஒசை நயமோ சிறிதும் பிசகவில்லை. மரபுக் கவிதையாகவே விளங்கும் இக்கவிதையில் பேச்சு மொழியின் இயல்பும்மருவி நிற்பதைக் காணலாம்.
170

சுதந்திரதேவியின் ஒளி பெறாத தேசம், தேசம் இல்லை யென்றும், அத்தேசத்தில் உயிர் இல்லையென்றும், பொருட் செல்வமோ, கலைச்செல்வமே இல்லையென்றும் கூறி, ஈற்றில் அங்குவாழ்பவர்கள் பாவியர் என்றும் கூறித் தான் சிந்தனைக் கவிஞன் என்பதை நிலைநாட்டுகின்றார் மகாகவி சுப்பிரமணியபாரதியார்.
இருபதாம் நுாற்றாண்டுக் கவிதை நடை தந்த பாரதியாரை அவரது சிஷ்யர் பாரதிதாசன் பாராட்டும்போது
"உய்வகை காட்டும் உயர்த
மிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவன் பாரதி" என்றும் தமிழரின் உயிர் நிகர் தமிழ்நிலை
தாழ்ந்ததால் தலைவனை எண்ணித்
தவங்கிடக்கையில் இலகுபாரதிப்புலவன் தோன்றினான்"
என்றும் "பழைய நடைபழங்கவிதை பழந்தமிழ்நுால் பார்த்தெழுதிப்பாரதியார் உயர்ந்தார்
இல்லை பொழிந்திடு செவ்விய உள்ளம்
கவிதைஉள்ளம் பூண்டிருந்த பாரதியாராலே இந்நாள்
171

Page 95
அழுந்தியிருந்திட்ட தமிழ்
எழுந்ததென்றே ஆணையிட்டுச்சொல்லிவிடுவோம்
அன்னை மீதில் அழகொளிசேர்பாரதியார் கவிதை
தன்னை அறிந்திலதே புவி என்றால் புவி
மேற்குற்றம்"
என்றும் சிறப்பித்துக் கூறினார். காலத்தின் தேவை அறிந்து தமிழ்மொழிக்கு - தமிழ்க் கவிதைக்குப் புதுவடிவம் வழங்கிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழுக்குத் தொண்டு செய்த சான்றோருள் ஒருவர் ஆகின்றார்.
172


Page 96


Page 97
ஆசிரியரின் பிறநூல்கள் காதலும் கருணையும் இருவேறு உலகம் | Զր:G օրն (BolotnGմ:
இன்னும் ஒரு திங்கள்
Gi மானங்காத்த மறக்குடிவேந்தன்
 
 

3:85:;"", 1,zzzz-z,
역명을활약ii용환(星野之宣ug원