கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1958.10.01

Page 1

டி சுவாமிகள்

Page 2
எல்லா உலகிற்கும்
ஜோதி இறைவன் ஒருவன்
எல்லா உடலும்
JežZZSSN இறைவன் ஆலயமே. ஓர் ஆத்மீக மாத வெளியீடு * சுத்தானந்தர்.
சோதி 10 சுடர் 12. விளம்பி D ஐப்பசி 1-10-58,
பொருளடக்கம்
திருக்கூட்டச்சிறப்பு ... 353 பேரின் பத்தெள்ள முது ... 354 பூரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் ... 355 யோக ஆசனங்கள் ... 359 மரணத்தின் இரகசியம் ... 36 1 வழிகாட்டும் ஆத்மஜோதி ... 364 அன்பு ... 366 வேண்டுகோள் ... 368 புண்ணியாத்மாவுக்குப் பாராட்டு ... 375 பிரணவம் ... 379 பூரீல பூீ மகாதேவ சுவாமிகளும். ... 38 1
r O O ஆத்மஜோதி சந்தா விபரம் ஆயுள்சக்தா ரு. 75-00 வருடசர் தா ரூ. 3-00 - தனிப்பிரதி சதம் -30 - கெளரவ ஆசிரியர்: க. இராமச்சந்திரன். பதிப்பாசிரியர்: நா. முத்தையா.
ஆத்மஜோதி நிலையம்-நாவலப்பிட்டி(சிலோன்)
ஆத்மஜோதி ஆயுள் சந்தா ஆதரவாளர் திரு. ச. குகசோதி - கொழும்பு.
 
 

திருக்கூட்டச்சிறப்பு (பெரியபுராணம்)
பூங்கோயில் எனப் போற்றப்பெறும் திருவாரூரின் உளத் தாமரையாகிய அத்திருக்கோயிலின் எதிரே தேவாசிரியன் என் னும் திருமண்டபம் ஒன்றுளது. நான்முகன், இந்திரன்,
திருமால் முதலான தேவர்கள் புற்றிடங்கொண்டபெருமானை வணங்கவந்து தங்குமிடம் ஆகையால் அப்பெயர் பெற்றது.
அத் திருமண்டபத்திலே வீற்றிருக்கும் அடியார்களின் மெய்யிலே விளங்குந் திருவெண்ணிற்றின் ஒளியாலும், ஐந் தெழுத்தோசையாலும், தூயநிலைமையாலும் அது திருப்பாற் கடலெனத் திகழ்ந்தது!
அங்குள்ள அடியவர்கள் பிறைமுடிப்பெருமானுல் ஆட் கொள்ளப்பெற்றவர்கள்! உண்மையன் பினர்! திருத்தொண்டு செய்யுந் திருக்கையினர்/ திருவெண்ணிறு விளங்கும் மெய்யி னர்! வெள்ளையாகிய தூய உள்ளத்தினர்! உலகம் போற்றும் புகழினர்! உரைக்கமுடியாத பெருமையினர் ஐம்பெரும் பூதங்களும் நிலை கலங்கிலுைம் சிவபெருமான் மலரடியன் லே கலக்கமுருத திண்மையர்! இன்பதுன்பங்களைச் சம மாக எண்ணுவோர்! மண்ணுேடுகளையும் மாற்றுயர்ந்த பைம் பொற் பா ள ங் களை யும் ஒன்ருகவே உன்னுவோர்! அன்பினுல் வழிபடலன்றி அமரருலகத்தையும் விரும்பாத வீரர்கள்! அவர்கள் அணியும் ஆரம் உருத்திராக்கமே! உடுத்தும் உடை கந்தையே! செய்யும் வேலை சிவனுரடியை வணங்குவதே அவர்கள்கொண்ட அன்பு நெய்த்தாரைபோல இடைவிடாது நிகழ்வது எவ்வகையினும் குறைவிலாத அவர் வீரத்தை எப்படி எடுத்துக் கூறுவது?
தம் அடியார் விரும்பியவாறு வடிவங்கொள்ளும் கூத்தப் பெருமானர் அடியவர்களான அவர்களின் புகழையாரால் கூறமுடியும்? இந்தத்திருக்கூட்டத்தாரையே ஆலாலசுந் தரப் பெருமான் உலகிலே பிறந்து வணங்கிப்போற்றிப்பா டினர். அதற்குத் 'திருத்தொண்டத்தொகை" என்று
(ତluff.
ssissaxeyktyssaag:arven

Page 3
இத் பேரின்பத் தெள்ளமுது : .மகரிஷி சுத்தானந்தர்.
இன்னிய துணைவனுனை பல்லாமல் இவ்வுலகில்
எவருமிலே யாங்குமில்லே - ஈசவுன் முன்னிலையி லேந்தவித் தென்னையினி
தேகாந்தமாக்கி விட்டேன், தன்னிக ரில்லாத்தடங் கருணையே உன் பதந் தஞ்சம் புகுந் தெர ழிந்தேன்! சதானந்த யோகந் தழைத்திடற் காகிய தனிப்பெரிய மெளன உறவே!
கண்மங்கள் யாவையுங் கதிர் கண்ட பணியெனக்
காய்ந்திடுந் தவ நெருப்பே கட்டவிழ்த் தென் மனக் கவலேயினை முற்றுங்
களேந்த சுடர் ஞானவாளே! அன்னிய மெனு தசக சானந்த மருளுவாய்,
அன்பு நீ யாதரவுநீ! ஆன்மபரி பூரண வகண்டசுக வாசியே
அறிவான பர தெய்வமே! 9
எத்திசையும் உன்னண் பிருக்கவிலேயோ? சற்றும்
என் மேலுன் அன்பில் இலயோ? எல்லாமு ன் இச்சையின் படியே இயங்கியிங் கிவ்வுலகு சுழல விலேயோ? முத்துமுத் தாய்த் திகழு முத்தமிழ் மாலையை
முதிர்ந்தவுள் ளன்பர் சூட்டி முத்துநகை யோடுனது முத்தியமு துண் டென்று
மோனத் திருக்க விலேயோ! பத்தன்யான் இரவுபகல் பாடியாடிக்கூவி
பலபல தவம் பயின்றே பார்த்துள மடங்கியுன் பரிவலாற் கதியிலேன்
பரிகாரம் வேருென்று றிலேன்
அத்தனே யுன்னடிப் பித்தாகி நம்பினேன்
அனைத்துமுன் சித்த மென்றே அருள் பெருகு மறிவுவள மருவுதிரு மலைவளரும்
ஆனந்த மோன வடிவே! 10
※****令必必*夺必*必必必必岭令夺令*哆令*令令**** 够心夺**必必心必必必必必心必●
 
 

பூ சித்தானைக்குட்டி சுவாமிகள்
-- 6.
(ஆசிரியர்)
* பாம்பின்கால் பாம்பறியும்" என் ருெரு முது மொழி அன்று தொடக்கம் இன்று வரை வழக்கில் இருந்து வருகின்றது. இதேபோல் நம்மத்தியிலே எத் தனையோ மகான்கள் அன்று தொடக்கம் இன்றுவரை வாழ்ந்துகொண்டே இருக்கின்றர்கள். ஒருஞானியை ஒருஞானி தான் அறியமுடியும். ஒரு ஜீவன்முக்தனே ஒரு ஜீவன் முக்தன்தான் அறியமுடியும். மகான்கள் சாதாரண மக்களாகிய எங்களைப்போல் சாதாரண மக்களாகவே வாழ்வது போல் காட்டித் தெய்வீக வாழ்வு வாழ்ந்து மறைந்துள்ளார்கள். அவர்கள் உடல்கொண்டுலாவும் போது அவர்களை யறிந்து வாழ்ந்தவர்கள் பாக்கிய வான்கள். மற்றையோர் மனி தராகப் பிறந்தும் பிறப்பின் நோக்கத்தை நோக்கி அடி எடுத்து வைக்கவில்லை. இவர்கள் பெற்ற சுகம் விலங்குகள் அநுபவித்த இன் பத்தினும் குறைந்த னவே,
மகான்கள் முத்தியைப் பெற்ற பிறகுதான் இன் பம் அனுபவிப்பார்கள் என்பதில்லை. அ வர் க ள் இந்த உலகத்திலேயே நிலையான இன்பத்தை அனு பவிக்கின்றர்கள். ஒவ்வொரு கணமும் அமைதி யோடு வாழ்கின்றர்கள். வறுமை, நோய், கவலை என்பவற்றைக்கண்டு பயப்படுவதில்லை. அவர்கள் உள்ளம் எப்போதும் நோய் அற்றதாக, வறுமை அற் றதாக, கவலை அற்றதாக விளங்குகிறது. இறைவ னுடைய திருவருள் நிச்சயமாக நமக்குத்துணை இருக் கிறதென்ற நினைவு எப்போதும் உளத்தை விட்டு நீங்காதிருப்பதால் அவர்களிடம் பயம் என்பதே தலைகாட்டுவது இல்லை.
'அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை" என்று அப்பர்
சுவாமிகள் பாடுகின்றர். அவர்களைப் பார்த்தால் ஏழைபோல இருப்பார்கள். இடையில் கங்தையும்,

Page 4
356
கோவணமும் இருப்பினும் அவர்கள் உள்ளத்தில் உறுதிவைரம்போலப் பாய்ந்திருக்கிறது.
மேலேகுறிப்பிட்ட இலக்கணத்திற்கு இலக்கிய மாக வாழ்ந்தவர்கள் பூநீசித்தானேக்குட்டி சுவாமிகள். சுவாமிகள் இந்தியாவிலுள்ள திருவாங்கூர் மகாரா ஜாவின் ஏகபுத்திரராவார். சுவாமிகளுடைய இள மைப் பெயர் கோவிந்தசாமி என்பது, சுவாமிகள் பட்டத்துக்குரியவராயிருந்தும் அரச செல்வத்தை உதறித்தள்ளி துறவறத்தைமேற்கொண்டார். இலங் கையிலுள்ள வர்கள் துறவறத்தைமேற்கொள்ள இந் தியா செல்வது வழக்கம், அதேபோல் கோவிந்தசா மியும் துறவறத்தை மேற்கொள்ள இந்தியாவிலி ருந்து இலங்கைக்கு யாரும் அறியாது வந்திருந்தார். இளமை தொட்டே அவருடைய உள்ளம் துறவை காடி யிருந்தது. அதனுல் அரசமாளிகை, அவருக்கு துன் பவாழ்க்கையாகத் தென்பட்டது. ஒருநாள் யாரும் அறியாது அரசமாளிகையை விட்டுப் புறப்பட்டு திரு வருள் துணைகொண்டு கொழும்பைவந்து சேர்ந்தார்.
கொழும்புமுகத்துவாரத்தில் பெரியானைக்குட்டி சுவாமிகள் வாழ்ந்து வந்தார்கள். கோவிந்தசாமி உள்ளத்தில் அமைதி பெறவே அரசமாளிகையைவிட் டுப்புறப்பட்டார். இரண்டு மூன்று தினங்கள் தெருத் தெருவாக அலைந்தார். உணவு உண்பதிலும் விருப் பங் கொள்ளாதவரானுர், எதற்காகக் கொழும்புவங் தேன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அக்காலத்தில் பெரியானைக்குட்டி சுவாமிகளின் மகத்துவத்தை மக்களிற் பலர் அறிந்திருந்தார்கள். சுவாமிகளைத் தரிசிப்பதற்காகப் பலர் செல்வதுவழக் கம். இருவர் சுவாமிகளுடைய மகத்துவத்தைப்பற் றிப் பேசிக் கொண்டிருந்த பேச்சு கோவிந்தசாமி யினுடைய காதில் விழுந்தது. பெரியானேக்குட்டி என்ற சொல்லைக்கேட்டவுடனே கோவிந்தசாமியின் உள்ளத்தில் புல்லரித்தது. சுவாமிகளுடைய இடத் தைவிசாரித்தறிந்து உடனே முகத்துவாரம் போய்ச் சேர்ந்தார்.
 
 

357
அடியார் மத்தியிலே சுவாமிகளுடைய தோற்றப் பொலிவைக்கண்டார் கோவிந்தசாமி. சுவாமிகள் கோவிந்தசாமி தூரத்தே வருவதைப் பார்த்துவிட் டார். சித்தானேக்குட்டி வருகிறது எல்லாரும் வில குங்கள் என்று சுவாமிகள் கூறிஞர்கள். அடியார் கள் எல்லாரும் எழுந்து அஞ்சலிசெய்து கொண்டு கின்றர்கள். கோவிந்தசாமி முகமெல்லாம் கண்ணிர் வாரச் சுவாமிகளுடைய திருப்பாதங்களிலே வீழ்ந்து விம்மி விம்மி அழுதார். சுவாமிகள் தமது திருக்க ரங்களினுலே வாரியெடுத்த8ணத்து நீ எனது பிள்ளை தானே. தாயை அடைந்தபின் பிள்ளை ஏன் அழ வேண்டும். என்று கூறி அழுகையை மாற்றினர்கள். அன்று தொடக்கம் உருவை விட்டு நீங்கா நிழல்போல பெரியானேக்குட்டியைச், சித்தானைக்குட்டி பின் தொடர்ந்து உண்மைச் சீடரானுர்,
இக்காலத்திலேதான் நாவலப்பிட்டிக்கும், தல வாக்கொல்லைக்கும் மத்தியாக அமைந்த "குயீன்ஸ் பரி" என்ற தேயிலைத்தோட்டத்தில் நவநாதசித்தர் என்ற மகான் வாழ்ந்து வந்தார். இவர் இந்தியாவி லுள்ள கொல்லிமலையிலிருந்து வந்து குயீன்ஸ்பரி யில் வாழ்ந்த ஒரு சித்த புருஷர். இவருடைய சமா தியைத் தரிசிக்கக் குயீன்ஸ்பரிக்கு இன்றும் இலங் கையின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வருகின்றர் கள். பெரியானேக்குட்டி, சித்தானேக்குட்டி, நவ நாதசித்தர் ஆகிய மூவரும் ஒரேகாலத்தில் வாழ்ந்த சித்தர்கள், இம் மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த தாகவும், பல சித்துக்கள் விளையாடியதாகவும், வதக் திகள் உண்டு. பெரியானேக்குட்டி சுவாமிகள் தமது சமாதிரிலேயை உணர்ந்து சித்தானேக்குட்டியை அழைத்துப் பின்வரும் வாக்கியத்தைக் கூறிஞர்.
* புளியமரத்து வீட்டுக்காரி கள்ளன் பெண் பிள்ளையை எடுப்பாய் வம்பு வரும் வழக்கு வரும் கெட்டுக்கீரை விற்று மொச்சைக் கொட் டைவிற்று பறங்கித்துரை கோணமலை ஏஞ) வைப்பார்க்கிலும் பேணுவாய் இருப்பாய்.’

Page 5
358
பெரியானைக்குட்டி சுவாமிகளின் சமாதிக்குப்பின் சித்தானேக்குட்டி சு வா மி க ள் சிவஞெளிபாதம் சென்று சிலகாலம் தவத்தில் இருந்தார்கள். அதன் பின் குயீன்ஸ்பரிக்குப் போய் அத்தலத்திலும் சிலகா லம் தவம் இருந்தார்கள். பின்பு மட்டக்களப்பைச் சேர்ந்த காரைதீவிற்குப்போய் அங்கு "சேதம்மா’ என்னும் அம்மையாரோடிருந்தார், சேதம்மா சமாதி 1டைய சிந்தாமணித்தாயார் ஆதரித்து வந்தார். காரைதீவில் சுவாமிகள் பல சித்துள் விளையாடியதாக அன்பர்கள் கூறுகின்றனர். 10-3-51இல் சுவாமி 56ir சமாதி அடைந்தார்கள்.
இறைவன் திருவருாை நேரே பெறுவதென்பது அரியகாரியம். அந்த அருளேப் பெறுவற்கு எத்த னையோ தகுதிவேண்டும். செல்வத்தையும் செல்வம் படைத்தவர்களையும் கண்டு ம ய ங் கி அவர்களைப் போல நாமும் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் கவலைப்பட்டு, முயற்சிபண்ணி, அது பலித் தால் மேலும் செ ல் வ ம் ஈட்டவேண்டும் என்று கினைத்து, ஐயோ ஆசை நிறைவேறவில்லேயே என்று துன்புற்று வாழ்கிற வாழ்க்கையைப்போன்ற அவலம் வேறு இல்லை. இந்த அவலவாழ்க்கையில் பற்றுக் கொண்டவர்களுக்குத் திடீரென்று இறைவன் சார்பு கிடைத்துவிடாது. ஆனல் தொண் டர் களு டைய குழாத்தில் சேர்ந்து கொண்டார்களானல் அவர்களு டைய சேர்க்கைச் சிறப்பால் தெளிவு பெறுவார்கள். மெல்லமெல்லச் செல்வத்தின் பாலும், செல்வர்களின் பாலும் உள்ள பற்று கழுவிவிடும். இறைவன் திருவ ருள் இன்பம் ஏறும். இறைவன் 15மக்கு நேரே இன் பத்தைத் தருவதைக் காட்டிலும் தன் தொண்டர்கள் மூலமாகத் தருகிற இன்பம் பெரிது. -
எளிய வாழ்வு, உயர்ந்த நினைப்பு, பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு ஆகிய நான்குமே ஒரு மனிதனுக்கு இம் மண்ணுலகத்திலேயே விண்ணுலக வாழ்வு அளிக்கவல்லன.
 
 

யோக ஆசனங்கள்
(S. A. P. சிவலிங்கம்)
一米一
62. ஊர்த்துவ சிரசாசனம்.
(பழகும் விதம்)
சுத்தமானதும், காற்ருேட்டமானதுமான இடத்தில் சம தள விரிப்பின்மேல் (விரிப்பு கெட்டியாக இருக்கவேண்டும்.) சிரசாசனம் செய்யவும். சென்ற ஆத்மஜோதி" பத்திரி கையில் பார்வையிடலாம். ﷽”
பின்வலதுகாலைஇடது தொடை யி ன் மேலும், இடது கா ல் வலது தொடையின் மேலும் வைத்து பத்மாசனம் செய்யவும். மிகவும்வேக மின் றிச் செய்யவும். வேகத்துடன் செய்தால் கீழே விழ ஏதுவாகும். முழங்கைகள் நன்குகீழே பதிய வைத்திருக்கவும். சித்திரம் 62 பார்க்க வும். கண் மூடிஇருக்க வும். சுவாசம் சமநிலை யில் சுவாசித்து வெளிவி டவும். முதுகு, கழுத்து முதலிய பாகங்கள்நே ராய்இருக்கவும். இவ்வாறு தேவைக்குத்தக்கவாறு இருந்த பின் ஆசனத்தைக் கலைப்பித்து மீண்டும் செய்யவும். சுமார் சிறுகச்சிறுக நிமிடங்களாக பலவாரங்களில் 10 அல்லது 15 நிமிடங்கள்வரை இருக்கப்பழகவும்.

Page 6
360
கலைக்கும்விதம்
இடதுகாலை எடுத்து நேராய் மேலே நீட்டி பின் வலது
காலையும் எடுத்து நேராய் மேல் நீட்டி பத்மாசன நிலையைக் கலைக்கவும். இரண்டு கால்களையும் முன்பக்கம் மடக்கவும். தொடையுடன்; பின் கால்களே கீழே கொணர்ந்து வைத்து முழங்காலுடன் மடக்கி கைகளையும், தலைமையும் எடுத்து மல்லாந்து படுத்து சிரமபரிகாரம் செய்து கொள்ளவும்; அவ ரவர்களின் உடலுக்குத் தக்கவாறுபலதடவைகள் செய்யலாம்.
6) GT56:-
* கால்களின் மூட்டு, கழுத்து, தலை, மூளை, கண்பார்வை, புஜங்கள் முதலியவற்றிற்கு நல்ல இரத்தோட்டத்தையும், நீண்ட ஆரோக் கியத்தையும் கொடுக்கின்றது. மூளை தெளிவு றும், ஞாபகசக்தியதிகரிக்கும், அஜீரணத்தைக் குணமாக்கி ஜாடநாக்கினி விருத்தியாகி நல்ல பசியை யுண்டுபண்ணும். மலஜலம் நன்கு வெளியாகும்.
தலைவலி, பல்வலி, முதலிய வியாதிகளையும் குணமாக்கும். தலைப்பாரத்தையும் குணமாக் கும்.
ஆண், பெண் அனைவரும் செய்யலாம். பெண்மணி கள் கெற்பகாலம், ருது, மாதவிடாய் காலங்களில் செய்யலாகா, இந்த ஆசனம் செய்தபின் வஜ்ராசனம் செய்யவும்.
-பொன்மொழிகள்எளிய வாழ்வு, உயர்ந்த கினேப்பு, பரந்த உள்ளம், ஆழ்ந்த
அன்பு, ஆகிய நான் குமே ஒரு மனிதனுக்கு இம்மண்ணுலகத்தி லேயே விண்ணுலகவாழ்வை அளிக்க வல்லன.
 

- மரணத்தின் இரகசியம் :
ஒரு அந்தணன் மதுரைக்கு மாமனுர்விட்டிற்குப் போகும் வழியே தனது மனைவியுடன் ஒரு ஆலமரத்தில் கீழே தங்கி ன்ை. மனைவியை ஆங்கிருத்தித் தான் தாகத்திற்குத் தண்
யாரோ விட்ட அம்பு சிக்கிக்கொண்டிருந்தது. காற்றின் விசை பால் பெண்ணின் அடிவயிற்றிற் சுறீறென்று பாய்ந்தது, அங் தணன் வந்தான். அந்தோ! மனைவி பிணமாய்க் கிடந்தாள். அங்கு தற்செயலாக ஒருவேடன் நிழலுக்குஒதுங்கிஇருந்தான். அவனே மனைவியைக் கொன்றவன் என்று குற்றஞ் சாட்டிக் குலோத்துங்க பாண்டியனிடம் முறையிட்டான் அந்தணன். பாண்டியன் வேடனே ச் சிறையிட்டான். "ஐயோ யான் யாது மறியேனே’ என்று முறையிட்டான்வேடன். பாண்டியனுக்கு உண்மை விளங்கவில்லை. திருவருளாணை பால் ஒரு கலியா ண வீட்டிற்கு அந்தணனுடன்மாறுவேடம் பூண்டு சென்றன். வதுவரர் மனையில் உட்கார்ந்திருக்கின்றனர். அப்போது பாண் டியன் அருகே ஒருவன் இம்மணமகன் உயிரைக்கவர்வோம்? என்ருன், இன்னுெருவன் ஆள் கொட்டாப்புளிமாதிரி இருக் கின்ருனே எப்படிக்கொல்லமுடியும்? என்ருன், இன்று காலை காற்றின் விசையால் ஆலமரத்தம்பு அந்தப் பார் ப் பி னி வயிற்றில் பாய்ந்து உயிர்வாங்கியதுபோல, அதோநிற்கும்மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு இந்த மாப்பிள்ளையைக் கொம் பினுல் குத்திக் கொல்லச்செய்வோம் என்ருன் முன்னவன். இருவரும் எமதுரதர். மன்னன் கேட்டான். அந்தணன் கேட் டான். ஐயம் நீங்கியது. பாண்டின் வேடனை விடுதலை செய் தான், அந்தணனுக்கு மறுமணம் நடத்தினுன், உலகவாழ்வெ ன்னும் ஆலமரத்தின் கீழ் இருக்கிருேம். காலன்கணை அதில் எப்போதும் குறிவைத்திருக்கிறது. காற்று கொஞ்சம் பிசகி ல்ை கணை நம்மைக் கொல்லும். உள்ளமட்டும் பழி பாவங் களுக்கு அஞ்சி இன்னும் தீவினை பெருக்காது. தூயராகவா ழுவோம். நாள் தோறும வாழ்வின் ஒவ்வொரு பகுதியைக் காலன் வெட்டிவீழ்த்திக்கொண்டே வருகின்றன். இதனைநாம் ஒருவரும் உற்றுச் சிந்திப்பதில்லை.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்?

Page 7
362
என்பது வள்ளுவர் வாக்கு, உணர்ந்து அறியக்கூடியவர்க ளுக்கு நாள் என்பது ஒன்றைப்போலவே அடுத்தடுத்துப் பல நாள்களாகத்தோன்றிச்சிறுகச்சிறுக உயிரை அறுத்துவிடுகின்ற வாளாகும். மனிதனுக்கு வினத்தெரிந்ததிலிருந்து ஒருநாளைப் போலவே மறுநாளும் தோன்றுகின்றது. ஆணுல் ஒவ்வொரு நாளும் இளமை குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மரணம் நெருங்கிவருவதை அவர்கள் உணர்வதில்லை. மரமறுக்கும் வாளினுடைய கூரியபற்கள் ஒன்றுபோல ஒன்று ஒன்றன்பின் ஒன்ருக வந்து சிறுகச்சிறுக மரத்தைத்தேய்த்துப் பிளந்துவிடு கின்றன. வாளினுடைய ஒருபல் மரத்தின் மீது உராய்ந்து விட்டுப்போன உடன் ஒரளவு மரம் தேய்ந்துவிடுகிறது. அது போல மனிதனுக்கு ஒருநாள் வந்துபோனஉடன் அவன் உயிர் ஓரளவு தேய்ந்துவிடுகிறது. மனிதன் நாளை அதுசெய்வேன்
இதுசெய்வேன் என்று திட்டங்களிடுகின்ருன், தனது வாழ்
நாள் சுருங்கிவருவதைச் சிந்திப்பதில்லை.
எந்த எண்ணம் இறக்குந்தறுவாயில் மேல்எழுந்து நிற்கி றதோ அதுவே அடுத்த ஜன்மத்தில் வலுவுள்ளதாகிறது என் பது பெரியோரின் கோட்பாடு. இன்று பகலில் சம்பாதித்ததை எடுத்துக்கொண்டு உறக்கத்திற்குப்பின் நாளையதினத்தைத் தைத் தொடங்குகின்ருேம். அவ்வாறே இப் பிறப்பில்சேர்த்த சொத்துடன் மரணம் என்ற உறக்கத்திற்குப்பிறகு நமது யாத் திரை மீண்டும் தொடங்குகிறது. இந்த ஜன்மத்தின் இறுதியே வரும் ஜன்மத்தின் தொடக்கமாகிறது. ஆகையால் எப்பொழு தும் மரணத்தை நினைவில் வைத்துக்கொண்டே நடக்கவேண் டும். சாவைதினைத்துக் கொணடிருப்பதற்கு உள்ளமற்ருெரு காரணம், சாவினிடம் ஏற்படும்பயத்தைச் சமாளித்து அதைக் கடத்தல் நமக்குச் சுலபமாக வேண்டும் என்பது. ஏகநாத சுவாமிகளைப்பற்றிய ஒரு செய்தி உண்டு. ஒருவர் அவரிடம் ‘சுவாமி தங்கள் வாழ்க்கை எவவளவு சிக்கலற்றதாய் பாப மற்றதாய் இருக்கிறது! எங்கள்வாழ்க்கை ஏன் அவ்வாறில்லை. தாங்கள் எவரையும் கோபிப்பதில்லை. எவரிடமும் சண்டை சச்சரவோ, விரோதமோ, வழக்கோ இல்லை. தங்களுடைய சுபாவம் எவ்வளவு அமைதியும் அன்பும் பொருந்தியதாய் எவ் வளவு புனிதமாயிருக்கிறது" என்ருர், அதற்கு ஏகநாதர்
 

363
இப்பொழுதைக்கு என் விஷயம் இருக்கட்டும் உன்னைப்பற்றி என ககொரு விஷயம் தெரியவந்திருக்கிறது. இன்றிலிருந்து எழாம்நாள் நீ இறந்துபோவாய் என்ருர். ஏகநாதர் வாயிலி ருந்து வந்ததை யார் தான் பொய்யென்று எண்ணுவார்கள். ஏழுநாளில் சாவு நூற்றறுபத்தெட்டு மணிநேரந்தான் இருக் கிறது. எ கடவுளே! இதென்ன ஆபத்து-அந்தமனிதன் அவ சர அவசரமாய் வீட்டிற்கு ஒடோடியும்சென்ருன், அவனுக்கு ஒன்று'ம புரியவில்லை, இறுதிக்காலம்பற்றிய எல்லாவற்றை யும் முடித்துக் கொள்வதாய்ப் பேசிக்கொண்டிருந்தான். இப் பொழுது அவனுக்கு நோய் உண்டாய்விட்டது. படுக்கையில் நீட்டிட் படுத்துவிட்டான். ஆறு நாட்கள் கழிந்தன. எழாம்நாள் ஏகநாத அவனைப்பார்க்க வந்தார். அவன் வணங்கின்ை. ஏகநாதர் என்ன விஷேடம் என்ருர், அவன் எ ல் ல ள ம் ஆயிற்று இனிப் போகவேண்டியதுதான் என்ருன். ஏகநாதர் இந்த ஆறுநாட்களில் எவ்வளவு பாவம் செய்தாய்? எத்தனை பாவ எண்ணங்கள் மனதில் உதித்தன? என்ருர், மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் நாதரே தீய விஷயங்களைக் குறித்து எண்ணுதற்கு நேரமே கிட்டவில்லையே! மரணம்தான் சதா கண் முன் நின்றுகொண்டிருக்கிதே என்ருன் ஏகநாதர் என் வாழ்க்கை இவ்வளவு பாபமற்றதாய் இருப்பதறகுக் கார ணம் இன்னதென்று இப்பொழுது புலனுய் விட்டதல்லவா? மரணம் என்ற சிங்கம் எப்பொழுதும் எதிரேநின்று கொண் டிருக்கையில் எவருக்குத்தான் தீபளண்ணங்கள்தோன்றும்,
பொன்மொழிகள்
பெரும் நிலைமையொன்றில் யாரும் பெரியவராக ஆய்விடலாம். பலர் முன் கோழை ஒருவனுங்கூடத் தைரியம் பெறுகிருன். உலகத்தினர் தன்னைக் கவ னிக்கும்போது யாருடைய இருதயந்தான் உணர்ச்சி நிறைந்திராது போகும்? அமைதியாக உறுதியாக கிமிடத்திற்கு கிமிடம் தனது கடமையைச் செய்யும் புழு இருக்கிறதே அதனுடைய பெருமைதான் உண் மையான பெருமை.

Page 8
வழிகாட்டும் ஆத்மஜோதி செல்வி C-மதார் நாச்சியா
மனிதன் உலகில் தோன்றிய காள்முதல் ஒருகேள் வியைச் சதா கேட்டுக்கொண்டிருக்கிறன். அதுதான் உலகில் ஏன் பிறந்தோம் என்பது தெரிந்தோ தெரி யாமலோ இவ்வுலகில் பிறந்துவிட்டான். ஆனல் மனி தன் வாழும் போது எந்தவிதமான நோக்கத்துடன் வாழ்வது என்பதே முக்கிய பிரச்சினையாகும். மன தினிலே எழுகின்ற எண்ணப்படி வாழ ஆரம்பித்து விட்டால் மனிதன் பல ஹீனனு கி மி ரு க நிலைக்கும் கீழாகமாறிவிடுவான். ஆகவே இவ்வுலகில் சொற்ப காலம்வாழப்போகும் மனிதன் சிறந்த முறையில் உயர் வாக வாழ எத்தனிக்க வேண்டும். ஆசைகள் பல நிறைந்து மனதில் கணக்கற்ற போராட்டங்கள் ஏற் பட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையைச் சாந்தமாக வும் இனிமையாகவும் அனுபவிக்க முடியாது.
ஒழுங்காக வாழ முயற்சிக்கும் மனிதன் தனது மனதையே நன்கு ஆராயவேண்டும். ஏனெனில் மனி தன் தனது அந்தரங்க உள் மனதைச் சரியாக தெளி வாக விளங்காததினுல்தான் ஆசைகளுக்கு அடிமை யாகி வாழ்க்கையில் ஏமாற்றத்தையும் துயரத்தை யும் அடைகிருன். மனிதன் இன்பத்தைகாடியே அங் கும் இங்கும் சுற்றித்திரி கிருன் மட்டரகமான உலக இன்பங்கள் சிறிதுநேரம் கவர்ச்சிகரமாக இருந்தா லும் முடிவில் மறைந்துவிடும் அதிருப்தியிலே அக ப்பட்டு ஆடுகின்ற மனம்சலித்துச் சக்தியை இழந்து விடுகிறது. புலன்களினல் நுகரப்படும் இன்பங்கள் நிலையானதல்ல. மனிதன் ஐம்புல இச்சைகளில் மயங் கிக் கிடக்கும்வரையில் பரிசுத்தமான ஆனந்தத்தை ரசிக்கமுடியாது. அ ைமதியிழந்து ஆவேச உணர்ச் சிகளுக்கு அடிமையாகும் வரை யி ல் வாழ்க்கையில்
இன்பத்தை அடையமுடியாது. மனதினுடைய இய
ல்பு எதையாவது ஒன்றைநினைத்து சுழன்று கொண் டேயிருப்பதே யாகும். சென்ற காலத்தில் அனுப
 
 

265
வித்த இன்பங்களைக் கற்பனை செய்து மனமானது நிகழ்காலத்தில் கலங்கிக்கொண்டிருக்கும்; அல்லது எதிர்காலத்தில் ஏதாவது செய்யவேண்டுமென ஏங் கிக்கொண்டிருக்கும்; ஆகவே மனதின் செயல்களைச் சம்பூரணமாக விளங்கிக் கொள்ளும் திறமை இருங் தால் தான் உலகில் உயர்தரமான நிலையை அடைய முடியும், ஊன்றிக்கவனித்தால் இந்த உலகம் மனதின் அசைவுகளுக்குத் தகுந்தவாறு மாறிமாறிக் காட்சிய ளிக்கும், எண்ணங்களின் தோற்றமேயாகும். எண்ண அலைகளின் ஒட்டங்களை ஒய்வு பெறச்செய்து, எந்த விஷயங்களையும் விருப்பு - வெறுப்பில்லாது தெளி வாக ஆராயும் ஆற்றல் நமக்கு ஏற்பட்டால் தான் வாழ்க்கையில் அவ்வப்போது நிகழும்பிரச்சினைகளைச் சமாளிக்கமுடியும்.
மனிதனுடைய மனம் பெரும்பாலும் காமரூபங்க ளில்கட்டுப்பட்டு அலைந்துதிரிகிறது. தினசரிவாழ்க் கையில் பலவிதமான ரூபங்களைக்காண்கிருன். அவை களில் சிலகுறிப்பிட்ட ரூபத்தை மட்டும் அதிக அக்க றையுடன் விரும்பி மோகிக்கின்றன். அந்த ரூபத்தில் மயங்கியமனமானது ஒயாக் கவலையினுல் சிக்குண்டு தடுமாறுகிறது.
மனிதனிடத்தில் தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆ த் மீ க சக்தியும், அற்புத அறி வும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் மன மானது கீழ்த்தர ஆசைகளினுல் அலைந்து திரிவதனுல் மறைந்து கிடக்கும் ஆத்மஜோதியின் மகத்துவத்தை உணரமுடியவில்லை. பரிசுத்த இதையத்திலே பரிண மிக்கும்மெளனத் தியானத்தினல்தான் ஆத்மஜோதி மங்காது பிரகாசித்து நிலையான வாழ்விற்குவழிகாட் டும் அதுவே சாசுவதமான அமைதியும் ஆனந்தமும் பரிபூரண விடுதலையும் நல்கவல்லது.

Page 9
e9160Il |
(காந்தி)
சேவை செய்ய விரும்பும் பொழுது உறவு கொண்டாடுவதும், உரிமை வேண்டும் பொழுது உறவைக் கூரு திருப்பதுமே உயர்ந்த ஒழுக்கமுறையாகும், இந்த முறையைக்கையாண்டால் மனிதர்களுக் கிடையில் சண்டை சச்சரவுகள் உண்டாகாமல் சங்தோஷமும் சமா தானமுமே உண்டாகும். இது என்னுடைய நீண்டகாள் அனுபவம்.
மிருக பலமானது ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆட்சி செய்துவருகிறது. அதன் கசப்பான மாசூலை அறுவடையும் செய்து வருகிருேம். ஆனல் அதனுல் உலகத்துக்கு விமோசனம் உண்டாகும் என்று தோன்றவில்லை. இருளிலிருந்து ஒளி உண்டாகுமானல்தான் பகைமையிலிருந்து அன்பு பிறக்கும்.
15ான் வாளே எறிந்து விட்டதால் என் னே எதிர்ப்போருக்கும் கொடுக்கக் கூடியது அன்பு நிரப்பிய கிண்ணம்மட்டுமேயாகும். அங் தக் கிண்ணத்தைக் கொடுத்தே அவர்களே என்னுடன் சேருமாறு செய்ய எண்ணுகிறேன்.
என்னுடைய இலட்சியம் எல்லோருடனும் கட்புக்கொள்வதே. அன்புசெய்வதற்கும் தீமையை எதிர்ப்பதற்கும் முரண்பாடு கிடை lj so g.
மனித தர்மமானது உயிர் நீக்கும் போட்டியன்று. உயிர்தரும் ஒத்துழைப்பேயாகும்.
எல்லோரும் ஒரேமாதிரி எண் ண முடியாது. ஒவ்வொருவரும் உண்மையின் அம்சம் ஒவ்வொன்றையே அறியமுடியும். அதனல் பரஸ்பரம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதே சிறந்த சிறந்த ஒழுக்கமுறையாகும்.
கோபத்தைக் கோபமின்மையால் வெல்லும் படி புத்தபெருமான் உபதேசிக்கிருர். 'கோபமின்மை” என்பது யாது? அன்புதான் அது, கோபம் அடைந்தவரிடம் சென்று கோபத்துக்குக் காரணத் தைக்கேட்டு அறிந்துகொண்டு, நீ தவறு செய்திருந்தால் அதற்காக
 

36 7
அவருக்கு ஈடுசெய்து, அவர் கோபம் நல்லதன்று என்பதை எடுத்துக் காட்டவேண்டும். இதுதான் "கோபமின்மை” இதை இதயத்தில் அன்புடையவரே அனுஷ்டிக்க இயலும். இந்த அன்பை இடைவிடா மல் முயன்று வள ர்க்கவேண்டும்.
எவ்வளவு மன் னித்த8 லும் 5ன்மையே உண்டாகும். பலவீனர் கண் மன்னிக்க முடியாது. பல வான்களால்தான் முடியும்.
அன் போடு உறுதியைச் சேர்த்து விட்டால் முடிவில் எதிர்ப்பவர் ஒருவர்கூட இல்லாமல் செய்து விடலாம். சீர்திருத்த விரும்புபவர் இரங்கவும் கூடாது, கோபிக்கவும் கூடாது.
பிறர் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று சீர்திருத்த விரும்பு பவன் கோபப்படக்கூடாது. கோபம் வந்தால் காத்திருக்கவும், கவ னிக்கவும், பிரார்த்திக்கவும் கற்றுக்கொள்வதற்காகக் காட்டுக்குப் GuíT & & &SIGAJ Gir.
க்ைராட்டினக்கடமை கடமைகளில் தலைசிறந்ததாகும். ஏனெ னில் அது அன்பினுல் எழுவது. அன்பே சுயராச்சியம்,
ஒத்துழையாமை இயக்கம் ஜனங்களைப் பலமும் தன்னம்பிக்கை யும் உடையவர்களாகச் செய்யும் நோக்கமுடையது. பகைமையை இரக்கமாக மாற்ற முயல்கிறது.
பொன்மொழிகள் முடிவிலாத பெருவாழ்வென்னும் சங்கிலியில் மனிதவாழ்க்கை ஒரு வளையமேயாகும். உலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதோடும் தூல உடைமைகளைப் பெருக்கிக்கொண்டு போவதோடும்
நின்றுவிடாது, அதற்கப்பாலும் செல்வது மனித வாழ்க்கையின் நோக்கம்.
உள்ளும் புறமும் தூய்மை உடையோரால், சிறத்தையோடும் அன்போடும் சமைக்கப்பட்டு, இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட உணவு நற்கு னத்தை வளர்க்கும் உணவாகும். வேள்வியால் தூய்மையாக்கப்படாத ஊணையுண்பவன் பாவத் தையே உண்கிருன் என்று பகவான் கீதையில் போதிக்கிருர்,

Page 10
நற்றவம் பொலிய வேண்டும்;
நலம்பல மலிய வேண்டும்:
குற்றங்கள் நலிய வேண்டும்;
குணம் பல குவிய வேண்டும்;
செற்றங்கள் நீங்க வேண்டும்;
சிவமணம் ஒங்க வேண்டும்;
பற்றற்ற உனது பாதம்,
பற்றிட வேண்டும் அன்னுய்! f
தன்னலம் ஒழிய வேண்டும்;
பொதுநலம் தழைக்க வேண்டும்;
இன்னுயிர்க் கருணை வேண்டும்;
இணையிலாப் பொறுமை வேண்டும்:
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
இன்னலில் இன்பம் காணும்
| ή
புனிதரின் இணக்கம் வேண்டும்;
புல்லரைத் துறக்க வேண்டும்:
வினைசெயும் திறமை வேண்டும்;
வீரியம் வேண்டும்; ஞானக்
கனிவளம் பெருக வேண்டும்;
கற்றவா ருெழுக வேண்டும்:
இதயம்தங் தருள வேண்டும்! 2
 

369
கனவிலும் மறவா துன்னைக்
கருதிடும் பேறு வேண்டும்! 3
அன்பு, அருள், அறிவு, சாங் தம்,
அழகு, பே ராற்றல், வாய்மை. தெம்பு, நல் லுறுதி, சுத்தம்,
தெளிவு, பே ராண்மை, வீரம், நம்பிக்கை, ஈவி ரக்கம்,
நற்பொறை, கருணை, ஞானம்,
இன்பநற் பண்ப னைத்தும்,
எளியனுக் கருள வேண்டும்! 4.
இகபரம் அருளும் உன்றன்
இணையிலா மலர டிக்கே,
அகங்கரைங் துருகி, கித்தம்
அருட்பாக்கள் பொழிய வேண்டும்;
சகமெலாம் ஈன்று, காத்துச் சங்கரித் திடும், ஒங் கார பகவதீ! உனயல் லால், இப்
பாலனுக் கருள்வார் யாரே?
5
"பரமஹம்ஸ் தாசன்'
கடவுட்கலப்புடன் வாழும் மனிதன்குரல் ஆற்றின் சலசலப்புப் போலவும் பயிர்களின் சிலுசிலுப்புப்போலவும் மிக இனிமையாயிருக் கும்.

Page 11
நமது நெறி (ஹரிஹர கிருஷ்ணமூர்த்தி)
சமயம் என்ருல் என்ன? சமயம் எப்பொழுது
உள்ள தொடர்பு யாது? என்பது போன்ற வினுக்க ளுக்கு அறிவின் துணை கொண்டு விடைகாணின் ஒர 6IT 62լ Լվ 60(59G5 Լ0.
மனித அனுபவங்களில் ஒருமுக்கியப் பகுதியைச் சமயம் என்று கூறுவர் அறிஞர் சமயம் ஒழுக்கத் திற்கு அடிப்படை. மனிதன் விலங்குகளைப் போல் வாழாது நன்மை, தீமை பரவ, புண்ணியம் போன்ற வைகளைப் பகுத்துணர்ந்து தன்னிலும் மேலான ஒன்றை அடையக் கருது கினுன் அதற்கென ஓர் வழியைக் கண்டான். அவ்வழியே சமயமாகும். சம யம் அப்பழுக்கில்லாதது. தீமையும், பொய்மையும் காணப்படாத ஒன்று உலகிலே இருக்குமேயானுல் அது சமயம் தவிர வேறு இல்லை. சமயமே அறிவுத் துறைகள் அனைத்திற்கும் உயர் 15ாடியாக உள்ளது. உலகில் ஒவ்வொரு சமயமும் தனக்கே உரிய சில அடிப்படைத்தத்துவங்களை வித்தாகக்கொண்டு நிலை பெற்று நிற்கிறது. தத்துவங்களுக்கு ஏற்ற வாறு சமயச்சடங்குகள் பல பின்னிக் காணப்படுகின்றன. இச்சடங்குகள் சமய வளர்ச்சிக்கு ஒரு சாதனமேயா கும். இவையே சமயக்குறிக்கோளாக மாறின் தீங்கு விளைவிக்கும் என்பதாக அறிஞர் கூறுகின்றனர்.
மேலும் உலக வரலாறு தொடங்கிய காலத்திலி ருந்தே சமயஉணர்ச்சியும் தோன்றிவிட்டது. சமய உணர்ச்சி மக்களால் பல வகை நிலைகளில் வளர்க்கப் பட்டது. ஆதி மனிதன் காடுகளில் காட்டுமிராண்டி களாக வாழ்ந்த காலத்தில் இயற்கைப் பொருள்களை யும். அதன் செயல் களையும் கடவுளாகக்கருதி வழி பட்டனர். இங்கிலை மாறித் தம்மைச் சுற்றிலும் கண் ணுக்குப் புலப்படாத ஆவிகளையும், தெய்வமெனக் கருதி அதற்குரிய சடங்குகளைச் செய்து தொழுதனர். இன்று கல், மண் போன்றவற்றல் செய்யப்பட்ட பற் பல உருவங்களைச் சக்தி வாய்ந்த கடவுளின் தன்மை யாக மனதிற் கொண்டு வழிபட்டுக்கொண்டுவருகின் றனர். பொதுவாகப் பார்க்கும்போது சமயம் என் பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் அப்பாற்பட்ட
 

37
தாகக் கருதப்படும் சக்திக்கும் உள்ள தொடர்பை இணைப்பதாகும். இன்று சமயத்தால் பல இடையூறு கள் ஏற்படுகின்றன எனக் கூறப்படுகிறது. இ.து ஓரளவு உண்மை யாயினும் சமயத்தால்விளையக்கூடிய நன்மைகள் பலவேயாகும். இன்றையஉலகம் பிணக்கு களாலும், பூசல்களாலும், வேறுபட்ட மனப்பான்மை யாலும், வஞ்சம் பேராசை, பொருமை போன்ற வற் ரு லும் மூடிக்கிடக்கின்றது. இத்துணையும் கிளம்பு தற்குக் காரணம் யாது? மக்கட் சமுதாயத்தையே ஏன் உலகத்தையே அழிக்கக்கூடிய சர்வ வல்லமை வாய்ந்த அணுகுண்டுகளையும், ஹைடிரஜன் குண்டுக ளையும் பயன்படுத்தலாம் என்ற நினைவு வல்லரசுகளி டத்தே தோன்றியதற்கு அடிப்படைக்காரணம் யாது? இவை போன்றவற்றை சற்று சிந்தித்தால் சமயத் தின் அடிப்படைக் கொள்கையான அன்பின்மையே காரணம் என்பது புலணுகும். ஆகவே சமயத்தின் அடிப்படைக் கொள்கை அன்பேயாகும் என்பதே ஆன்ருேர் கண்ட முடிவு.
உலகின்கண்ணுள்ள பல்வேறு மதங்களும் தங்க ளுக்கெனத் தனிச் சமயக் கொள்கையை வகுத்துக் கொண்டு அதற்குரிய சமயச் சடங்குகளைச் செய்து வருகின்றன.
சமயத்தில் தொடர்பு பெறும் இரு பொருள்கள் கடவுளும், மனிதனும் எல்லாத்தன்மையும் ஒருங்கு அமைந்த மனிதனே சர்வ வல்லமை படைத்த இறை வனின் தொடர்பைப் பெறமுடியும். இத்தகையத்தொ டர்பைப் பெறச் சமயம்தான் தக்கவழி எனப் பெரி யோர் பலரும் கண்டனர். அதற்கெனத் தங்கள் உடல் பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தனர். மேலும் சமயத்தையும் புனிதப்படுத்தினர்.
இந்தியாவில் வைணவம், பெளத்தம், சைனம் போன்ற பல சமயங்கள் இருந்தன. இச்சமயப்பெரி யார்கள் தங்களது சமயக்கொள்கைகளைப் பரப்பப் பாடு பட்டனர். சைனமும், பெளத்தமும் மன்னர்க

Page 12
37.2
ளால் ஆதரிக்கப்பட்டு வேகமாகவளர்ச்சியுற்றபோதி லும் நாளடைவில் மங்கி மறைந்துவிட்டன. இச்சம யங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிக்கோளைப் பிர தானமாகக் கொண்டு வளர்ந்தன. அதற்கென தனி நூல்களும் எழுதப்பட்டன. பெளத்தம் தன் சமயத் தைப் பரப்பும் நோக்குடன் மணிமேகலை நூலைத் தோற்றுவித்தது. சைனம் தன் சம ய த்  ைத ப் பரப்பும் நோக்குடன் சீ வ க சிங் த ர மணி  ைய இயற்றியது. வைணவ சமயத்தை உயர் நிலையில் நிறுத்தியவை ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய ருளிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்னும் நூல் ஆகும். இந்நூலும், சைவத் திருமுறைகளும் சைனத்தையும், பெளத்தத்தையும் பரவ விடாமல் தடுத்து நிறுத்தி உலக இலக்கியத்திலே சிறந்தது எனப் புகழ்பெற்றன. இத்தகைய சமயம் போன்று தமிழ் காட்டில் சைவம் தோற்றுவிக்கப் பட்டது. வைணவ மதத்திற்கு பன்னிரண்டு ஆழ்வார்கள் எப் படியோ அவ்வாறே சைவசமயத்திற்கு வித்தாய் இருந்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். வைணவ ஆசாரியர்கள் விசிட்டாத்து வைதத்தை வகுத்ததுபோல, சைவ ஆசாரியர்கள் சைவசமய சித் தாங் தத்தை வகுத்தார்கள். இவர்களுள் முதன்மை யானவர் மெய்கண்ட தேவர் ஆவர்.
உலகில் உள்ள எல்லாச் சமயங்களின் கொள்கை களையும் ஆராயுமிடத்து ஒரு சமயம் மற்றெரு சமயம் கூறும் கொள்கையை மறுக்கிறது. ஆனல் எல்லாச் சமயங்களின் அடிப்படைக்கொள்கைகளையும் தன்ன கத்தே கொண்டு விளங்குவது சைவசமயமேயாகும். இதனை எவரும் மறுக்க முடியாது என்பதைத் தாயு மான அடிகளாரின்,
வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்
விளங்குபரம் பொருளே நின் விளையாட்டு அல்லால் மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியின் நதித்திரள் போல் வயங்கிற்று அம்மா. என்னும் பாட்டை நோக்கின் விளங்கும்.
 

373
சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்தபெ ரியோர் பலரேயாயினும், சைவ சமயத்திற்குப் புத் துயிர்கொடுத்து பொலிவுறச்செய்தவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சம யக்குரவர்களே ஆவர்.
இக் குரவர் நால்வரும் காலத்திற்கும், கருத்திற் கும், சூழ்நிலைக்கும் ஏற்ப சமயத்தைப் புனிதப்ப டுத்தி அதன் வழியில் மக்களைப் பழக்கி நல் வழியில் இட்டுச் சென்றனர். உடல் வியாதிக்கு ஏற்ப மருந்து களைக் கொடுத்து வியாதியைப்போக்குவது போன்று உள்ளத்தில் குடிகொண்டுள்ள மன வியாதியைப் போக்கச் சமயத்தின்மூலம் கடவுள் நெறி யென்னும் சிறந்த மருங்தைப் பல் வகை ப் பட்ட பெயரால் கொடுத்து மக்களின் மனத்தில் உள்ள இருளைப்போக் கினர்.
அறமும், அன்பும் மக்களிடம் குடிகொள்ளவேண் டும். அன்பே சிவம். அதுவே சைவசமயத்தின் அடிப்படைக் கொள்கை. அன்பின் மூலம்தான் 'உண் மையுமாய் இன்மையுமாய் இருக்கின்ற ஆண்டவனை ஒளியாகவும், ஒலியாகவும் இருக்கின்ற ஆண்டவன, அகத்திலும் புறத்திலும் இருக்கின்ற ஆண்டவனைக் காணமுடியும் என்பதை எடுத்துக்காட்டிச் சமய இரு ளைப் போக்கினர். இவ் இருளைப் போக்கும் சக்தி இன் றல்ல, நேற்றல்ல - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் னரே சமயம் காண்பித்தது. ஆணுல் அதனை மக்கட் சமுதாயம் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத நிலை யிலே இருந்தகாலத்தில்தான் சமய குரவர்கள் கண்டு "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என் றும் சமயம் வளர்த்தால்தான் சமுதாயமும் வாழமுடி யும் என்ற உயரிய கொள்கைகளை பரப்பினர். நிற்க பழந்தமிழ்ப் பழமொழியைத்தான் பாருங்களேன். "கடவுளை நம்பினுேர் கைவிடப்படார்" என்றும் அவனன்றி ஓரணுவும் அசையாது' என்றும் கடவுள்

Page 13
374
தன்மையைத்தான் எவ்வளவு அழுத்திக் கூறுகி றது. கடவுளின் நெறி வாழ்ந்தால் காம் வாழ்வோம். படைத்தல், காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் ச க் தி யு ம் அவனுக்குத் தான் உண்டு. எனவே எத்துணைசிறந்த கல்வியறிவு பெற்றிருப்பினும் சர்வ வல்லமையும் படைத்த கடவுளேத் தொழாமல் இருப் பின் தான் பெற்ற கல்வியினல் எவ்விதப் பயனையும் அடைய முடியாது என்பதனை வள்ளுவர்;
கற்றதனுல் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்ருள் தொழா அர் எனின். என்றும்,
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. என்றும் இரு குறள்களின் மூலம் எடுத்துரைக்கின் ருர், நிற்க.
விதையும் மண்ணும் கூடினுல்தான் செடிவளரும். நல்லவிதை தானுக முழைத்துவிடாது. சிறந்த மண் தானுகச் செடியை உண்டாக்கிவிடாது. அதுபோ லவே சமயம் இல்லாவிடில் சமுதாயம் வாழ முடியாது. சமுதாயம் இல்லாவிட்டால் சமயம் வாழ முடியாது. சமயம் ஆண்டவனை அடைய ஒரு ஊன்று கோல் போன்று உதவும் தன்மையது என்பதனை உணர்ந்து அதன்மூலம்கடவுளைக்கான நினைத்தால் அது வெற்றி பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. -
15மது சமயம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பண் பட்டு உயர்ந்து செம்மை சான்றது. அடிப்படை வலி மைகள் நிறைந்தது. அழிக்கும் எதிராற்றல் களை மாய்த்து விட்டு நிலைத்து நிற்க வல்லது. ஒழுங்கிற் கும், கட்டுப்பட்ட வாழ்க்கைக்கும் நெறிதுறைகளை வகுத்துக் கொடுக்கும் நமது சமய மரபிற்கு வணக்கம் செலுத்தி அதைக் கடைப் பிடிப்போம். அதுவே அதற்கு நாம் அளிக்கும் பெருமை.
 

புண்ணியாத்மாவுக்குப் பாராட்டு (திவான் பகதூர் சிறீ. கே. எஸ். ராமஸ்வாமி சாஸ்திரிகள்-சென் &ன)
சுவாமி பூநீ சிவானந்த சரஸ்வதி அவர்கள் தங்கள்
நினைப்புப் பேச்சுச் செயல்களின் மூலம் உலகிலே பரப்பிவ ரும் தெய்வீக மூச்சைச் சுவாசிக்கும் அருமையான வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்துள்ளது. இத் தெய்வீக மூச்சு சுவா மிகளின் பஜனை நாமசங்கீர்த்தனங்களிலுைம், அவர்தம் அரு ணுேக்கம் அருள் நகை என்பவற்றினுலும் ஆசிகள் ஆசீர்வா தங்களாலும் சுவாமிகள் சந்நிதியினுலும் சகவாசத்தினுலும் நன்குபரப்பப்பெற்று வருகிறது.
ஆண்டவன் அடியேனை எண்பதாண்டளவும் வாழச் செய்து ஆத்மீக ஞானியொருவரின் ஆத்மஞான உண்மைக ளைக் காணவும் கேட்கவும் கற்று அதிசயமுறவும் செய்து வைத் தமையை நினைந்து பெரிதும் மகிழ்கின்றேன்.
நம்மைப் போலவே, பல்லாண்டுகளாகச் சுவாமிக்குச் சீடராயிருந்து அவர்தம் குணநலச் சிறப்புகளை நயல்பவராகிய பூநீஹரிடிக்மன் என்பவர் சமீபகாலத்தில் தாம் வெளியிட்ட *யோக சக்கரவர்த்தி" என்னும் நூலிலே சுவாமிகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் தூய்மை வாய்ந்த ஒரு ஜீவாத்மா இந் நாள் நம்மத்தியிலே வாழ்ந்து வருகின்றது. அதன் அருளுக்கோ எ ல் லை யி ல் லை. சாதி வித்தியாசத் தையோ வர்ண பேதத்தையோ அது பாராட்டுவ தில்லை. இந்துவும், கிறீஸ்தவனும் அதற் கொன்றே. முஸ்லீம் சீக்கியன் பெளத்தன் என்னும் சமயவேறு பாட்டையோ அது கவனிப்பதில்லை. அனைவரும் ஆண்டவனின் ஆசீர்வாதத்திற்குரிய ஜீவான் மாக்கள் என்ற அளவில் ஒரேதன்மையர் என்பது அதன் கொள்கை. அ. த ஞ ல் த ர ன் அவரை ஒரு மனி தன் என்ற ரீதியிற் குறிப்பிடாது ஒரு "ஆன்மா" என்று குறி ப் பி டு கி ருே ம். ஞானி என்னும் பெயருக்குரிய உண்மையான அர்த்தத்தில்வைத் துப் பார்க்கையில் அவர் மானுஷீகத் ததுவத்தின்

Page 14
376
எல்லையைக் கடந்து நிர்மலமான தன் புகழோடு திகழ் கின்றர். ஒரு வித் தகனக-மகாத்மாவாக - மகாபுருஷ ஞக காட்சியளிக்கின்றர்.
சுவாமி சிவானந்தா என்பது நவ இந்தியாவில் மிகப் பிரசித்தமான ஒரு திரு காமம். இந்தியாவில் மட்டுமன்று, ஆபிரிக்கா அமெரிக்கா ஐரோப்பா ஆகிய தேசங்களிலும் இத்திருகாமம் வரவரப் பிர சித்து பெற்றுக் கொண்டு வருகின்றது.
அவருடைய இந்த விமர்சனம் உண்மை நிறைந்த தும் வியக்கத்தக்கதுமாகும் அன்றியும் சுவாமிகளை ஜீவாத்மா என்று அழைப்பதில் நான் தவறிழைத்து விடவில்லை என்று நிரூபிப்பதற்கு நான் பிறிதோர் மன்னிப்பு வேண்டிக் கொள்ளாதிருக்கும் அளவிற்கு என் உள்ளத்துணர்ச்சியை நன்கு புலப்படுத்துவது
• LD שLDITG
புத்தபகவான் த மது தியான நிலையிலிருந்து நீங்கி அஷ்டசீலத்தை உபதேசிப்பதன் மூலம் எங்ங் னம் உலகிற்கு உபகாரியாகத் திகழ்ந்தாரோ அங்ங் னமே சுவாமிஜி அவர்களும் தமது சாதனை நிலையிலி ருந்து நீங்கி எல்லோருக்கும் நண்பன் என்ற முறை யில் **விஸ்வாமித்திரன்’ பெயருக்குத் தகுதியுடை யவராத் திகழ்கின்றர். அவர் சங்கியாச நிலைபெற்று ஞான சாதனையையும், அத்யாத்ம வித்தையையும் வட இந்தியா முழுவதிலும் பயிற்றி வருகின்ருர், அன்று பூநீ சங்கராச்சாரிய சுவாமிகள் தெற்கே ம8ல யாள நாட்டிலிருந்து வடக்கே காசிநகர் வரை சென்று உலக முழுவதற்கும் ஆத்மீக ஞான ஒளியைப் பரப் பியவாறே, சுவாமி அவர்களும் திராவிடத்திலிருந்து ரிஷிகேசம்வரை சென்று உலகம் முழுவதற்கும் ஆத்ம ஞானத்தைப் பரப்பி வருகின்றர்.
1924-ம் ஆண்டு வரை சுவாமிகளின் வாழ்க்கை, கம்முட் பலர் வாழ்க்கையைப் போன்று சுயநலங்

3 7 7
கொண்டதாகவேயிருந்திருக்கும் என்று நாம் கற்பனே பண்ணிவிடுதல் கூடாது. அவர் மேன்மை தங்கிய அறிஞரும் வித்தகருமாகிய அப்பைய திசுஷிதர் அவர்களின் மரபிலே உதித்தவர். மல்யுத்த வீரன் ஒருவனுக்குரிய தேக திடம் உள்ளவராய் இருந்தபோ திலும் அவர் கருணை பூத்த இளகிய மனப்பான்மை யுள்ளவராயிருந்தார். இயல்பிலேயே உல்லாசப்பொழு துபோக்குக்காரன் போலக் காணப்பட்டாலும் அவர் எல்லோரின் நன்மதிப்பையும்பெற்றுள்ளார் மலாயா வில் வகித்துவந்த டாக்டர்"உத்தியோகம் அவர் தம் மனநிலைக்கும் இயற்கை சுபாவத்திற்கும் உகந்ததாக அமைந்துவிட்டது, தம்முடைய வருவாயைப் பற்றிச் சிறிதும் கவலைகொள்ளாமல் வியாதியாளரைத் திற மையாகப் பரிபாலிப்பதிலேயே உன்னத மகிழ்ச்சி யுற்ருர், ஆபத்தான நிலையிலிருக்கும் நோயாளிகட் குத் தாதியின் வேலையையும் தாமே மேற்கொண்டு செய்வார். சங்கீத சாதனைசெய்து பஜனை பண்ணும் வழக்கமும் அவரிடம் உண்டு. தம் சூழலில் வாழ்பவர் க்கெல்லாம் தாமே ஒரு இலகூகியவடிவாகத் திகழ்ந்
5 ITIᎱ .
கங்கையையே தமக்குத் தாயென்றும் இமயமே தமக்குத் தந்தையென்றும் கங்காதேவியே தமக்கு உடநிடத்துண்மைகளைப் போதித்தாளென்றும் குரு தேவர் கூறுகின்ருர்,
இயற்கையின் அற்புதங்கள் இறைவனிடத்தில் ஈடுபாடு கொள்ளு மள வுக்கு அவர்தம் உள்ளப் பண்பை உயர்வுபடுத்தின. உபநிடத உண்மைகளைக் கற்றுணர்வதில் அவர் மட்டற்ற மகிழ்ச்சியுற்றர்.
4

Page 15
37.8
கீதை பாகவதம் யோகவாகிட்டம், அவதூதசீதை, சங்க்ாராச்சாரியார் நூல்கள் ஆதியவற்றிலும் அவ் வாறே.
பலனற்ருேர், உதவியற் ருேர் துன்புற்றேர், துய ருற்றேர், வறிஞர், வியா தியாளர், தாழ்ந்தோர் என் போருக்குச் சேவை புரிவதில் அவர் ஈடிணையற்ற பெரு மகிழ்ச்சியுறுவாராயினர். சாதுக்களுக்கும் சந்நியா சிகளுக்குஞ் சேவை புரிவதிற் பரம திருப்தியுற்ருர், பஜனை செய்வதிலும் காம சங்கீர்த்தனம் புரிவதிலும் அற்புதமான மகிழ்ச்சியை அனுபவித்தார்.
இன்றைய உலகில் ஒரு ஆத்மீக வழிகாட்டியாக வும் தெய்வீக வாழ்வை உயர்வடையைச் செய்பவனு கவும் ஆண்டவனல் தெரிந்தனுப்பப்பட்டுத் தன் தவ முயற்சியினுல் உயர்கிலையடைந்த ஒரு தனிப்புருஷர் அவர். சுவாமிஜி அவர்களின் நூல்களைப் பற்றியும் அவர்கள் அமைத்த கழகங்களைப் பற்றியும் விரிவாகப் பல்வேறு நூல்களில் விளக்கியுள்ளேன். ஆதலால் அவைபற்றி ஈண்டு யாதுங் குறிப்பிடாது அமைவுறு கின்றேன்.
சேவையும் ஆத்மீகமுமே அவர்தம் லட்சியார்த் தங்கள் என்பதில் நாம் திருப்தியுறுவோமாக. \
一米一
பெ ான்மொழிகள்
ஆத்மன் இன்புருவாயது. துன்பம் என்பது உண்மையானதல்ல. பேரானந்தம் ஒன்றே உண் மைப் பொருள். அதனை மறந்து அறியாமையால் நாம் சித்தும் சடமுங்கலந்த பொருளென நம்மை நினைத்து, வீனில் கஷ்டப்படுகிருேம்.
 

I J 6MI HI f :
(u r iiu Li, T. M. P. Lungstr Giggis 6D 6ir, M. A. Pho.)
ஓம் என்னும் ஒலிக்குப் பெயர் பிரணவம் என்பது எவ்வாறு இந்த ஒலி எழுந்தது என்று சொல்வதற்கில்லை. வேள்விகளிலே கூறப்படுகிற மந்திரங்களோடு இது உச்சரிக்கப்படுகின்றது. ஆம் என்ற பொருளும் இதற்குண்டு. ஒம் என்ற ஒலிக்குப் புனிதமாக்கும் தன் மையுண்டு என்ற கம்பிக்கை நம்மிடையே உண்டு. உபநிஷதங் களிலே ஒம் என்பது பரம்பொருளைக் குறிக்கும். அது வேதங்களே யும் உலகையுங்கூடக் குறிக்கும் சொல்லாகக் கருதப்படுகிறது. ஓங் காரத்திலிருந்து எல்லசம் தோன்றுகின்றன. ஓங்கா ரத்தில் மறுபதி யும் ஒடுங்குகின்றன.
தைத்திரீய உபநிஷதம் “ஓம் என்பது பிரமம். ஓம் என்பது இது வெல்லாம்' என்று கூறிப் பிறகு ஒம் என்ற ஒலி வேத மந்திரங் களோடு உச்சரிக்கப் படுவதைப் பற்றியும் சொல்கிறது. "வேதங்கள் 7 ல்லாம் எந்தப் மதத்தைக் குறித்து முறையிடுகின்றனவோ, தவங் கள் எல்லாம் எதைச்சொல்லுகின்றனவோ மனிதர் எல்லோரும் எதை விரும்பிப் பிரமசரியவழியில் நடக்கின்றனரோ, அதை உனக்குச் சுருக்கமாகக் கூறுவேன், இது தான் ஓம்.’’ என்று கடோபநிஷதம் கூறிகிறது. “ஓம் என்பது இது வெல்லாம். அதனுடைய விளக்கம் இது, எவையெவை இதுவரையில் இருந்தனவோ, எவையெவை இப்பொழுது இருக்கின்றனவோ, எவையெவை இனி இருக்கப்போ கின்றனவோ அவையெல்லாம் ஓங்கா ரமே. மற்றும் எது முக்காலத் திற்கப்பால் இருக்கின்றதோ அதுவும் ஒங்காரமே.’ என்று மாண்க்டு கிய உபநிஷதம் சொல்லுகிறது.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிருர், ஆயிலும் நாம் அவரைக் குறிப்பாக கோயில்களிலுள்ள உருவச்சிலைகளிற் காண்கிருேம். அவ் வாறே வேதங்களிலுள்ள பல சொற்கள் பரம்பொருளைக் குறித்த போதிலும் அவற்றுள் ஒம் என்பது முக்கியமானது. கடவுளின்
மூன்று செயல்களாகிய ஆக்கல், காத்தல், அழித்தல் என்பவற்றை
ஓங்காரத்தின் அ, உ, ம, என்னும் மூன்று ஒலிகள் குறிக்கின்றன. இம் மூன்று ஒலிகள் ஒங்கார மாத்திரைகள். இவற்றை மும் மூன்ரு கத் தோன்றும் அநேக பொருள் களுக்கு அடையாளங்களாகக் கருத லாம். காற்று, தீ, சூரியன், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், பூலோ கம், புவர் லோகம், சுவர்லோகம், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலம்; இவ்வாறு பல முப்பொருள்களை அ, உ, ம, என்ற ஒலிகள் குறிக்கின்றனவென்று மைத்திராயணி என்ற உபநிஷதத்தில் காணப் படுகின்றது. சில உபநிஷத வாக்கியங்களில் அ, உ, ம, என்ற

Page 16
38O
மாத்திரைகளுக்கப்பால் ஒரு மாத்திரையுண்டு என்று சொல்லப் படுகிறது. இதற்குப் பாதி மாத்திரையென்றும் அமாத்திரை யென்றும் பெயர்கள் உண்டு.
பரம்பொருளே யடைய விதிக்கப்படும் உபாசனைகளுள் பிரண வ உபாசன மிகவும் முக்கியமானது. 'பிரணவம் வில். ஆத்மா அம்பு; அதன் குறி பிரம்மம். குறித வருத ஒருவனுல் அது அடையப்பட
வேண்டும்; அம்புபோல அதனுடன் ஒன்ருக வேண்டும்” என்று
முண்டக உபநிஷதம் கூறுகின்றது. சுவேதா சுவதர உபநிஷதம் உடலைக் கீழ் அரணிக்கட்டைக்கும், பிரணவத்தை மேல் அர60ணிக்கட் டைக்கும் ஒப்பிட்டு இரண்டையும் தியானம் என்ற முறையினுல் கடைவதால், மறைந்து நிற்கும் கடவுளைக் காணலாம்" என்று கூறு கின்றது, பிராணுய மத்தோ டு பிரணவத்தைப் பிணைத்திருக்கிருர் கள் உபநிஷதங்களின் உண்மையைக் கண்ட பெரியோர்கள். பிரா ண &ன யடக்குவதற்கும், அதன் மூலமாக மனதைப் பிரசாங்தநிலைக்குக் கொண்டுவருவதற்கும் பிரணவத் தியான மும் பிரணவ உச்சாரண மும் உபயோகப்படுகின்றன. சைப்யசத்யகா மன் என்பவர் பிப்ப லாத முனிவரிடம் "மரண பரியக்தம் ஓங்க: ரத்தியானத்தில் ஈடுபட் டவர்கள் எந்த உலகத்தை யடைவார்கள்?’ என்று கேட்டார். அதற்கு மறுமொழியளிக்கையில் ஓங்கா ரத்தின் முதல் மாத்திரை யாகிய அக ரத்தைக் தியா னிப்பவா இறந்தபிறகு மறுபடியும் இவ்வு லகத்தையே அடைவர். முதலிரண்டு மாத்திரைகளாகிய அகார உகாரங்களைத் தியானிப்பவர் சந்திர லோகத்திற்குச்செல்வா, அகா ரம் உகாரம் மகாரம் என்ற மூன்றையும் தியானிப்பவர் சூரியமண்டலத் திற்குச் சென்று பிறகு பிாம லோகத்தைய டைவார்' என்று அம்முனி வர் சொன் ஞர்.
மாண்டுக்கிய உபநிஷத்தில் பிரணவத்தியான த்தின் முறை ஒன்று காணப்படுகிறது. ஆத்மா வின் நிலைகள் விழிப்பு, கன வு, ஊக்கம், துரியம் என கான்கென்று அந்நூல் கூறுகிறது. ஆத்மாவிற்கு விழிப்புநிலையில் விசுவன் என்றும், கன வுநிலையில் தை ஜசன் என்றும் உறக் நிலையில் பிராஞ்ஞன் என்றும் பெயர். இவை மூன்றிற்கும் ஆதாரமாகவும்; இவற்றைக்கடந்தும் உள்ள நிலையே துரியம் என் பது இங்51 ன்கும் ஆத்மாவின் 5ான்கு பாதங்கள் எனப்படும். அவற் றிற்குக் குறிகள் ஓங்க* ரத்தின் மாத்திரைகளாகிய அ, உ, ம, அமாத் திசை என்ற நான் கும் ஆகும் பாதங்களேயும் மாத்திரைகளையும் தியானத்தால் ஒன்றுபடுத்தும் முறையைக் கெளடபாதர் 'மாத்ரா ஸம்ப்ரதி பகதி’ என்று அழைக்கிருர், அகாரத்தை உகாரத்திலும் த காரத்தை மகாரத்திலும், பிறகு இவையெல்ல சவற்றையும் அமாத்
திரையிலும் மறையைச்செய்யவேண்டும். அதுபோலவே, விசுவனே
தைஜசனிலும்,  ைகஜசனே பிராஞ்ஞனிலும், பிறகு இம் மூன்றையும் துரீயத்திலும் ஒடுங்கச்செய்ய வேண்டும். துரீயத்தையடைந்தால் பிறப்பிறப்பு ஒளியும் என்று இவ்வாறு கெளடபாதர் இந்த யோகத் தைப் புகழ்ந்திருக்கிருர், ஓங்கர ரவழி வேதாந்தம் தந்திரம் முதலிய சாஸ்திரங்களில் பிரசித்தமானது.

நீலநீ மகாதேவ சுவாமிகளும், ஈழத்துக்குருபீடமும்.
*குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென்து குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோணுமாய் நிற்கும்
குருவே உரையுனர் வற்றதோர் கோவே'
குருவணக்கம் செய்தல், குருபாரம் பரிய வாழ்க்கை முறை என்பன இக்காலத்தில் காண்ப தரிது. குரு சிஸ்: முறையில் கல்விபயில்வதும் முற்ருய் அருகிவக் துவிட்டது. குருவின் பெருமையைப் போற்றி குருவே சிவமெனக்கொண்டு தமது வாழ்வைப் புனிதப்படுத் தும் குருகுலவாழ்க்கைமுறை என்று கைவிடப்பட்டதோ அன்றுதொட்டு உலகில் நாஸ்திகம் பரவி பல்வேறு கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் பல்கிப் பெ ருகி இன்று உலகம் ஒர்பெருங் குழப்பநிலைக்குள்ளாகி இருப்பதைக் காணக்கூடியதா யிருக்கிறது. இக்கிலே யையுணர்ந்த பேரறிஞர்கள் உலகின் பல பாகங்களி லும் இதற்குப் பரிகாரம் தேடும் முயற்சியில் ஆத்மீ கத்துறையில் கண்ணுேட்டம் செலுத்தி வருகிறர்கள்.
*இந்த உலகின் வளர்ச்சிக்கு ஒரு புதிய ஒழுங்கு முறை எப்பொழுதெல்லாம் வேண்டுமோ அப்பொ ழுதெல்லாம் வல்லமை வாய்ந்த பேரலையொன்று எழுகின்றது' என்று விவேகானந்த அடிகள் கூறிய தையும் அறந் தேய்ந்து மறம் வளரும் காலேயில் நான் அவ்வப்போது மனித வர்க்கத்தின் நன்மை யின்பொருட்டு அவதரிக்கிறேன்" எனப் பகவான் கீதை யில் அருளியிருப்பதையும் கோக்குங்கால் பண் டு தொட்டு காலத்திற்குக்காலம் இறையருட்தன்மை வாய்ந்த ஞான வள்ளல்கள் தோன்றி மனித வர்க் கத்தை உய்யும் நெறியில் உய்த்துவருவதை உணரமு டியும். -
உலகில் பல பேரறிஞர்கள் தோன்றி அரியசாத னேகளே ப் புரிந்திருக்கிருச்கள். அவர்களுள் ஆத்மீ கப் பெரியார்களாலேயே மக்களின் உள்ளத்தை மாற் றும் (உலகத்தைத் திருத்தியமைக்கும்) கா ரி யம் கிறைவேறி வந்திருப்பதை சாத்திரங்கள் வாயிலாக

Page 17
38.2
நாமறியலாம். இத்தகைய ஓர் பெரு நிகழ்ச்சி குரு பாரம்பரிய வாயிலாகவே நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சங்கராச்சாரிய சுவாமிகளின் குருபீடம் முதலாய பல குரு பீடங்களால் பரப்பப்பட்ட ஆத்மீ கப் பேரலை அகில உலகத்தையும் கன்னெறியில் பாது காத்து வந்திருக்கிறது. இலங்கையிலும், யாழ்ப்பா ணம் கந்தர்மடம் என்ற இடத்தில் சிவகுருநாதபீடம் என ஒர் ஆச்சிரமமும் அதில் ஓர் குருபரம்பரையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இக்குருபீடத்தை வேதாந்த மடம் என்றும் வழங்குவர். இதில் இன்றும் வேதாந்த அத்தியயனம் தொடர்ந்து 15டைபெறுகி றது. இது யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் வரப் பிரசா தமாகும். இக் குருபீடத்தை அமைத்த பெருமை பூநில பூநீ மகாதேவ சுவாமிகளையே சாரும்.
குரு என்றல் (கு - இருள், ரு - நீக்குபவர்) அஞ் ஞானத்தை நீக்குபவர் என்பது பொருள். எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ அதையறிந்த (பிரமத்தை) ஞானச் செல்வர்களே உலகை வழிநடாத் தவல்லவர். இதுகாறும் அவர்களே வழிநடாத்தியும் வந்திருக்கிருர்கள். இதை ‘இடலகமென்பது உயர்ந் தோர் மாட்டே" என்று தொல்காப்பியனரும்,
சுவையொளியூருேசை நாற்ற மென்றைத்தின் வகைதெரிவான்கட்டே யுலகு
என்று வள்ளுவர் பெருமானும் எடுத்தியம்பியதை நோக்குறுங்கால் புலணுகும். இத்தகைய ஒர் ஞான குருவாலன்றிப் பரப்பிரமதத்துவத்தை எவரும் அறி யவோண்ணுது சனகர் முதலாய முனிவர்களுக்கும் இறைவன் தட்சிணு மூர்த்தமாய் இருந்து இருந்தபடி இருக்தி பூரணத்துவத்தைக் காட்டியருளியமையை யும் காம் நினைவுகூரவேண்டியதாகும். இதிலிருந்து உலகில் தோன்றிய உத்தம குருமார் அனைவரும் தெட் சிணுமூர்த்தியின் அம்சமுடையவர்கள். கு ரு பரம்
 
 
 

383
பரை இறைவனிலிருந்து தொடர்பருவகையில் தொ டர்ந்து வருவதை அருள் நோக்குடையார் உணரமுடி պ th,
குருமாரை வேதசாஸ்திரங்களில் எண்வகையின ராகக் கூறப்படுகிறது. அவை 1. போதககுரு, 2. வேதகுரு, 8. நிஷத்தகுரு, 4. காமியகுரு, 5. சூசககுரு, 6. வாசககுரு, 7. காரககுரு, 8. விகிதகுரு. இவர்களில் நிவழித்தகுருவும், காமி யகுருவும் மக்களை துக்கசம்பந்தமுடைய விருத்தி மார்க்கத்தைக் காட்டாகிற்பர். ஏனைய அறுவகைக் குருமாரும் பின்வரும் நிலைகளில் விளங்காங்ற்பர்.
போதககுரு:- மாணவர்க்குச் சுருதி, மனுநீதியை உரைப்
L ) fT.
வேதகுரு:- தத்துவார்த்தங்களை மாணவருக்குத் திரம்
@学み@@:ー மாணவர்க்கு நித்திய விவேகமளித்து நாசத் தைவருவிக்கும் அகக் கரணம், புறக்கரணம் அடக்கல் வாயிலாக உலக விவகாரங்களில் சிறிது சிறிதாக விடுவித்து பொறுமையை உண்டாக்கி ஈஸ்வர விஷயத்தைக் கேட்கு மாறு செய்வர்.
வாசக குரு:- மாணவர்க்கு உடல் முதல் உலகப்பொரு
ளனைத்தும் அழிவுடையதென்று ஆத்ம வில் விருப்புண்டாக்குவர்.
5TTó@@:ー சீவனும் சிவனும் ஒன்று என்னும் ஐக்கிய
ஞானத்தை உண்டாக்குவர்.
விகிதகுரு:- மாணவனை நித்திய மோட்ச நிலையிலே
60) (6) LLL ) TT
மேற்காட்டிய அறுவகை அம்சங்களில் ஓர் சில
அமைந்திருக்கும் குரவர்களைக்காண்பதரிது. எல்லா
அம்சங்களும் பொருந்திய குரவர்கள் உலகில் சிரேட்
டமானவர்கள். பூநில பூநீ மகாதேவ சுவாமிகள் அறு

Page 18
38.4
Y
வகைக்குருத்துவாம்சமும் அமைந்தவர் என்று அன்ன ருடன் உடனிருக் துகற்ருேரும் அவர்காலத்து அறிஞர் களும் கூறியிருக்கிருரர்கள். எனினும் சு ( r மி க ள் தம்மை வெளிக்கா ட்டாது ஆடம்பரமின்றி மிக மிக அடக்கமாக இருந்து தாம் இப்பு விக்கண் வங் த கோக் கத்தை நிறைவேற்றிப் பூதவுடல் நீத்துப் பூரண மெய் திரு ர்.
இத்தகைய உத்தமகுருவாகிய ஞானவள்ளல் குரு பீடத்தின் நான்காவது வாரிசு ஆவார். காசிகானந்த சுவாமிகள் இந்தியாவில் உள்ள ஓர் உத்தமப்பெரி யார். இவரின் மாணுக்கர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த சாசன் சுவாமி என்றழைக்கப்படும் சின்னத்தம்பி சுவாமிகள் ஆவர். சாசன் சுவாமிகளின் மாணுக்கர் பெரியசுவாமி என்று அழைக்கப்படும் கனகரத்தி னம் சுவாமிகளாவர் 15ாம் இங்கு கூறப்புகும் மகாதேவ சுவாமிகள் பூரீ கனகரத்தினம் சுவாமிகளின் உத்தம மாணுக்கராவர். கங்கைப்பிரவாகம்போன்று இந்தி யாவிலிருந்து ஈழம்வரை ஒர் குருபாரம்பரியம் வளர் ந்து மக்களை உய்விக்கும் உயர்கெறிகாட்டி கிற்கும்விங் தையை நோக்கி கோக்கி இறைவன் திருவருளை வியந்து இன்புறற்பாலது.
மகாதேவ சுவாமிகள் ஊர்காவற் றுறையைச் சேர்ந்த கரம்பனில் திரு. நா. இராமநாதர் அவர்க ளுக்கும் அவரது உத்தம பத்தினி அன்னபூரணி அம் மையார் அவர்களுக்கும் யுவடு ஆவணி மீ" 12-ங்வு திருவாதிரைகாளன்று மெய்ஞ்ஞானச்சுடர்கொழுத்த மேதினியில் திருவவதாரம் செய்தார். இவர் தம்பிள் ளைத்திருநாமம் தம்பையா. பாலிய வயது தொடக்கம் மூதுரை, நன்னெறி, முதலாம் கருவி நூல்களில் தேர்ச் சிபெற்றுவிளங்கினர். நாளடைவில் பெரியபுராணம் கந்தபுராணம் முதலிய புராணங்களை நன்கு கற்றுத் தெளிந்து ஆலயங்களில் கேட்போர் உளங்கனிய புரா ணங்களுக்கு உரை கூறிவரலாஞர். இவர் ஒர் பிரம வித்து ஆவார் என்பதும், பலரையும் உய்ய வைக்கும் பரமாசாரியராவார் என்பதும் அன்னரின் இளமை அடுத்த இதழில் முடியும்.
瀏
 

- சர்க்கரை கொல்லி சூரணம் - (DIA, BETES) என்னும் நீரிழிவு மதுமேகத்திற்கு மிகச்சிறந்த சூரணம். யாவும் மூலிகையில்ை பித்தர்களின் அனுபவ முறைப்படி தயாரிக கப்பட்டது. சர்க்கரை வியாதியிஞல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அற்புத ஒளடதம். தபாற்சிலவுட்பட டின் ரூபா 6-75. 1s' SAMBU INDUSTRIES - SALEM (S.I.) இலங்கையில் கிடைக்குமிடம்:
ஆத்மஜோதி நிலையம்
நாவலப்பிட்டி - சிலோன்.
- )l Lil J52)IID - உஷ்ண வாய்வு, முழங்கால் வாய்வு, இடுப்பு வாய்வு, மலக்கட்டு மல பந்தம், ஆஜீரணம், கைகால் அசதி, பிடிப்பு பசியின் மை, வயிற் றுவலி, பித்த சூலை, பித்த மயக்கம், புளியேப்பம், நெஞ்சுக்கரிப்பு, முதலிய வாய்வு ரோகங்களை நீக்கி ஜீரண சக்திக்கும் தேக ரோக்கியத் திற்கும் மிகச்சிறந்த குரணம்.
உபயோகிக்கும்முறை:- இந்தச்சூரணத்தில் தோலா அளவு எடுத்து அத்துடன் த்தோ லா சீனி அல்லது சர்க்கரை கலந்து ஆகா ரத்துக்குமுன் உட்கொண்டு கொஞ்சம் வெங் நீரும் அருந்தவும். காலை மாலை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். தேகத்தை அனுசரித்து உட்கொண்டு வரும்பேரது அளவைக் கூட்டியும் குறைத்தும் உட்கொள்ளலாம். நெய், ப 1 ல், வெண்ணெய் நிறை யச் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை எண்ணெய் ஸ்நானம் செய் யலாம். மூலிகையினல் தயாரிக்கப் பெற்றது. (பத்தியமில்லை)
தபாற்செலவு உட்பட டின் 3 ரூபா 75 சதம். சம்பு இண்டஸ்ரீஸ், சேலம். (எஸ். ஐ.) மலாயாவிற்கு ஏஜண்டுகள் தேவை. இலங்கையில் கிடைக்குமிடம்:-
9.5, IDG) is 62, List நாவலப்பிட்டி - (இலங்கை)

Page 19
Registered at the G. P. O. as a
சந்தாநே
இம்மாதத்தோடு ஜோதிச் கின்றது என்பதை மகிழ்வுடன் மானுபூதிச் செல்வர்கள் ஜோதி கருத்துமாக உழைத்துள்ளார்க எமது இதயங்கனிந்த வனச் கந்தாநேயர்கள் தத்தமதுச உரியகாலத்தில் அனுப்பிவை கின்ருேம்.
இந்தியாவிலுள்ள சந்தா நேராக இவ்விடம் பணம் அனு பதால் அவர்கள் தமது சந்தா6 அனுப்பிவைப்பதோடு இவ்வி | (3(Uյլք:
இந்தியாநேயர்கள் பணம் , R. WEERASAMBU, SAMB
மலாயா, தென்னுயிரிக்கா, ட சந்தாவை வழக்கம்போல் பி மூலமே அனுப்பிவைக்கலாம்.
}៣៤% ប៉ា
கலைகள் பலவளர்க்கும்
சிறு கதைகள், கட்டு விமர்சனப்போட்டி வளரும் எழுத்தாளர்
சந்தாதாரர்கள் விற்பனைய கலைச்ேெவி: கந்த Printed by N. Muthiah at thes and Published by N. Muthiah. At Hony. Editor K. Ramachandra. A

News Paper, M. L. 59,300
பர்களுக்கு
குப் பத்தாண்டு நிறைவுபெறு அறியத்தருகின்ருேம் பல ஆத் யின் வளர்ச்சிக்குக் கண்ணுங்
ள். அவர்கள் எல்லாருக்கும்
கத்தைச் செலுத்துகின்ருேம், தொப்பணத்தைச் சிரமம்பாராது க்குமாறு அன்புடன் வேண்டு
நேயர்கள் இந்தியாவிலிருந்து
வப்புவதில் சில தடைகள் இருப்
வைப் பின்வரும் விலாசத்திற்கு
டமும் அறியத்தர வேண்டுகின்
அனுப்பவேண்டிய விலாசம் U INDUSTRIES, SALEM 2.
பர்மாவிலுள்ள நேயர்கள் தமது ரிட்டிஸ் போஸ்ரல் ஒடர்
நாவலப்பிட்டி சிலோன்)
೧೩.೧೧
கன்னித்தமிழ்ச் செல்வி
ரைகள், கவிதைகள், மாணவர்போட்டி பகுதி இன்னும் பல ாளர்கள் உடனே எழுதுக ரோடை, சுன்னுகம்.
龚
ா
ri Murugan Printers - Punduloya himajothi Nili yam, Nawalapitiya thmajothi Nili yam, Nawalapitiya